Powered By Blogger

Sunday, June 10, 2018

ஒரு புலன்விசாரணை !

நண்பர்களே,

வணக்கம். வடக்கே – தெற்கே என்று ஏகமாய் பில்டப்பெல்லாம் தராமல், நேராகவே விஷயத்தை அணுகுகிறேன் இம்முறை ! ஒரு புலன் விசாரணை.......!

சமீப நாட்களில் – ஒற்றை இதழுக்காக இரு பக்கங்களிலிருந்தும் இத்தனை குரல்கள் ஒலித்ததாக சத்தியமாய் எனக்கு நினைவில்லை ! “நீ என்ன பண்ணுவியோ – ஏது பண்ணுவியோ தெரியாது ..ஆனா ஆடலும், பாடலும் போட்டேடடட தீரணும்!” என்றொரு அணியும்; “சவுண்ட் கொடுத்துத் தான் ஒரு இதழை வாங்க வேண்டுமா? ச்சை… எனக்கு சவுண்டும் புடிக்காது… அதன் பலனான இதழும் புடிக்காது!” என்று இன்னொரு அணியும் இந்த இதழுக்கென கொடி பிடித்து வந்ததில் இரகசியங்களில்லை ! And இந்த இதழினைப் பொறுத்தவரை எனது பெர்சலனலான நிலைப்பாடு என்னவென்பதிலும் ஒளிவு மறைவுகள் இருந்ததில்லை ! ஆனால்  ரசனை சார்ந்த விஷயங்களில் each to his / her own எனும் போது நான் அட்வைஸ் ஆராவுமுதனாக அவதாரமெடுப்பது குடாக்கு வேலை என்பது புரியாதில்லை ! அதே சமயம் கண்முன்னிருக்கும் சோலைகளை விட, கண்சிமிட்டித் தொலைவில் தென்படும் கானல்நீர்கள் மீதான மையல் என்றைக்குமே ஒரு விதப் புதிரான ஈர்ப்புடையது என்பதும் எனக்குப் புரியாதில்லை ! So  ‘வேண்டாமே...!‘ என்று நான் சொல்வதெல்லாம் – "ஏன் வேண்டாமாம் ?" என்ற வினாவை ஒரு மிடறு அதிகப்படுத்துவதாகவே இருப்பது புரிந்தது. சர்ச்சைகளை வளர்ப்பது யாருக்கும் ஆதாயம் தரப்போவதில்லை என்பதால்  அப்போதைக்கு அடுத்த பணிக்குள் நுழைந்து விட்டிருந்தாலும் – ஆகஸ்ட்டுக்கு முன்பாக இந்தச் சமாச்சாரத்துக்கொரு தீர்வு கண்டாக வேண்டுமென்பதில் தீர்மானமாகவே இருந்தேன்!

And இதோ – எங்கள் திட்டமிடல்களின்படி : இரத்தப் படலம் x 3 புக்குகளுமே அச்சாகி விட்டன ; அட்டைப்படங்களும் அச்சாகி விட்டன ; slipcase-க்கான டிசைனும் தயாராகி விட்டதால் அதனைத் தயாரிப்போரிடம் ஒப்படைத்து விட்டோம் ! இனி எஞ்சியிருப்பது பைண்டிங் வேலைகள் மாத்திரமே என்பதால் "நாளைக்குப் பாத்துக்கலாம் ; நாளான்னிக்குப் பாத்துக்கலாம் !" என்று தள்ளிப் போட்டு வந்த "பு.வி."இதழுக்கான மொழிபெயர்ப்புக் கத்தைகளை மேஜைக்கு வரவழைத்திட தடை லேது என்பது புலனானது ! And இதன் தமிழாக்கப் பணியில் நண்பர்கள் மூவர் ஈடுபட்டிருந்தனர் என்பதில் no secrets !! அந்தத் திட மனதுக்காரர்களின் பட்டியல் பின்வருமாறு : 
  • - திரு.கார்த்திகைப் பாண்டியன், கோவை
  • - J. என்ற திரு.ஜனார்த்தனன், குடந்தை
  • - திரு.கணேஷ்குமார், பெங்களுர்

"இந்த இதழை நனவாக்கிடலாமா ?" என்ற சிந்தனைக்குள் நுழைய இன்றைக்கு எனக்குக் கொஞ்சமேனும் சாத்தியமாகிறது என்றாலே அதன் ஒட்டுமொத்த க்ரெடிட்ஸ் மேற்படி மூன்று ஜென்டில்மென்களையே சாரும் ! 

நண்பர் கணேஷ்குமார் 59 பக்கங்களை மாத்திரமே எழுதி அனுப்பியிருந்தார் – நாம் தந்திருந்த அவகாசத்தினில் ! இது போன்ற பணிகளில் அனுபவம் குறைவு என்ற போதிலும் விடாப்பிடியாய் அவர் போட்டுள்ள முயற்சிகளுக்கு நாமெல்லாம் எழுந்து நின்று பாராட்ட வேண்டுமென்பேன் guys ! அசாத்திய விடாமுயற்சி !
முதலிரண்டு இடங்களுக்கு மல்லுக்கட்டியுள்ள நண்பர்கள் கா.பா. & J பற்றி என்ன சொல்லவென்று தெரியவில்லை! அவர்களது பணிகளின் நிஜப் பரிமாணத்தை புரியச் செய்வது வாய் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதொரு காரியம் என்பேன்! “கொஞ்சூண்டு கட்டுரைப் பக்கங்கள்; நிறைய காமிக்ஸ் பக்கங்கள் – இதை மொழிபெயர்க்க வலிக்குதாக்கும்?” என்று கணிசமான மைண்ட் வாய்ஸ்கள் – புலன் விசாரணை சார்ந்த சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருந்த வேளையில் ஒலித்ததை நாமறிவோம் ! “ப்பூ… இதை என்கிட்டே தந்தாக்கா பின்னிப்புடுவேன்லே !!” என்ற எண்ணங்களும் ஓடியிருக்கக் கூடும் தான் ! ஆனால் take it from me guys : வருஷம் முழுக்க இதே ஜோலியாய் இருக்கும் இந்த ஆந்தை விழியன் சொல்கிறேன் – இதுவொரு extraordinary effort ! சத்தியமாய் இந்தப் பணியை என்னால் செய்திருக்கவே முடியாது என்பதில் எனக்குச் சந்தேகமே கிடையாது  ! இதனை நான் ஆரம்பத்திலேயே வெளிப்படையாய்ச் சொல்லியிருந்த போதுமே, அல்வா கிண்டிட இதனை ஒரு காரணமாய்க் காட்டி நான் ஜகா வாங்குகிறேன் என்று நண்பர்கள் கருதி வந்ததில் ஏது இரகசியம் ? But இந்த நொடியில், கையில் 2 கத்தை மொழிபெயர்ப்புகள் தயாராக இருக்க, இரண்டையும் மாறி மாறி நான் பரிசீலிக்க – எனது நம்பிக்கை இருமடங்காகிறது – “ஆத்தாடியோவ்… இது நமக்குச் சுட்டுப் போட்டாலும் சரிப்பட்டிருக்காது!” என்று! நண்பர் கணேஷ்குமாருக்கு எழுந்து நின்று கரகோஷமெனில் – நண்பர்கள் கா.பா. & J-வுக்கு – சேர்கள் மீதோ ; சோபாக்கள் மீதோ; மேஜைகள் மீதோ; கட்டில்கள் மீதோ எழுந்து நின்று கைதட்டுவதே பொருத்தமாகயிருக்குமென்பேன் !! இந்தத் தருணம் வரையிலும் என்னுள் இரு மாதிரியான சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது நிஜமே ! இதையும் வெளியிட்டு, கிட்டங்கியின் வலுவை மேற்கொண்டும் பரிசீலிக்கத் தான் வேண்டுமா ?  என்ற தயக்கம் என்னுள் நிலவவே செய்தது தான் !  ஆனால் நண்பர்களின் ஒட்டுமொத்தப் பணிகளின் பரிமாணங்களைத் தரிசித்த பின்பாக இப்போது மனதில் ஓடுவதைச் சொல்கிறேன்  : "புலன் விசாரணையை" எதற்காக வெளியிடுகிறோமோ இல்லையோ – இந்த உழைப்பு வீண் போகிடக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்துக்காகவாவது நிச்சயம் வெளியிட்டே தீர வேண்டும் ! 

So – "Project புலன் விசாரணை” is on for sure ! 
  • என்ன சைஸில்? 
  • என்ன பக்க அளவில்? 
  • என்ன விலையில்? 
  • எப்போது? 
  • வண்ணத்திலா? 

என்பதற்கெல்லாம் “in due course சொல்கிறேனே…!” என்பது தான் இந்தத் தருணத்தில் எனது பதிலாக இருக்கும் ! 2018-ன் இறுதிக்கு முன்பாக என்பது மட்டும் எனது promise !
  • ஜெனரல் காரிங்டன் எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தார் ? 
  • ஷெரிடன் குடும்பத்தின் பெருசு முதல் சிறுசு வரையிலும் எங்கே வளர்ந்தார்கள் ? 
  • அவர்களது பழக்க வழக்கங்கள் என்ன ? 
  • கால்வின் வாக்சின் ஊர் எது? பூர்வீகம் எது ? 
  • கர்னல் ஆமோஸின் STD என்ன? பூகோளம் என்ன? 
  • ஜட்ஜ் ஆலன்பை பிழைப்புக்கு என்ன செய்தார் ? 
  • மேக்காலுக்குப் பிள்ளை குட்டிகள் உண்டா – கிடையாதா? எங்கே பணியாற்றியிருக்கிறார் ? 
  • ஜெனரல் ஸ்டாண்ட்வெல்லின் பட்டப்பெயர் என்ன ? 
  • அட்மிரல் ஹைடெஜர் எந்த வருஷம் முதல் அமெரிக்கப் பிரஜையானார் ? 
  • கிம் காரிங்டன் பள்ளிக்கூடத்தில் என்னவெல்லாம் படித்தாள் ? 
  • லெப்டினெண்ட் ஜோன்சின் இனிஷியல்கள் என்ன ?

உப்ப்ப்ப்….!! இது போன்ற தகவல்கள் ஓராயிரம் உள்ளன இந்தக் கட்டுரைப் பக்கங்களில்! டி.வி.யில் அடியில் ஓடும் scrolling news-களை முழுதாய்ப் படிக்கக் கூடப் பொறுமையில்லாத இந்நாட்களில் இது போன்ற XIII trivia தகவல்களை வாசிக்கவோ, நினைவில் இருத்திக் கொள்ளவோ நம்மில் எத்தனை பேருக்குப் பொறுமை இருக்குமோ – சொல்லத் தெரியலை எனக்கு ! ஆனால் இவை சகலத்தையுமே கர்மமே கண்ணாய் தமிழ்ப்படுத்தியுள்ள நண்பர்களின் பொருட்டாவது நீங்கள் படித்தீர்களானால் மகிழ்வேன் ! 

கையில் 2 மொழிபெயர்ப்புகள் இருக்க – அதனில் எதைப் பயன்படுத்துவது என்ற குழப்பம் எனக்குள் ! “பூ” என்று ஒருவரும்… “மலர்” என்று அடுத்தவரும் எழுதியிருக்க – “புய்ப்பம்” எங்கேயாச்சும் கண்ணில்படுமா ? அதைக் காரணமாக்கி எதையாவது இரண்டாமிடத்துக்கு அனுப்பிடலாமா ? என்று பரக்கப் பரக்க நான் முழித்தது தான் மிச்சம் ! But இறுதியில் நதீநீர்ப் பங்கீட்டுத் திட்டத்தை போன்றதொரு உலகத்தை ஸ்தம்பிக்கச் செய்யப் போகும் மகாதிட்டத்தை வகுக்கத் தீர்மானித்தேன் ! அதாவது கட்டுரைப் பகுதிகளை நண்பர் கா.பா.வின் ஸ்க்ரிப்டிலிருந்து எடுத்துக் கொள்வதென்றும் ; காமிக்ஸ் பக்கங்களை நண்பர் J-வின் ஸ்க்ரிப்டிலிருந்து இரவல் வாங்கிக் கொள்வதென்பதே அந்த மகா சிந்தனை ! இது சரியா ? தப்பா ? என்றெல்லாம் ஓடவிருக்கும் பட்டிமன்றத்துக்கு  தீர்ப்புச் சொல்லத் தெரியவில்லை எனக்கு ! ஆனால் இரு இமாலயப் பிரயத்தனங்கள் முன்னிருக்க – அவையிரண்டையுமே இயன்றமட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள எனக்கு வேறு மார்க்கம் தென்படவில்லை ! அதிலும் நண்பர் கார்திகைப் பாண்டியன் ஒட்டுமொத்தத்தையுமே டைப்செட் செய்து அழகாய் அனுப்பி வைத்திருக்க, அது icing on the cake என்பேன் !  
போட்டியின் கடுமையையும், பங்கீட்டாளர்களின் முயற்சிகளின் மும்முரத்தையும் கணக்கில் கொண்டு, பரிசுத்தொகையை பத்திலிருந்து, பதினைந்தாயிரமாய் மாற்றிடத் தீர்மானித்தேன் ! அப்புறம் மொழிபெயர்த்தது மட்டுமன்றி, அதனைத் தட்டச்சும் செய்து அனுப்பிய நண்பர் கா.பா.வுக்கு நமது அன்பும், பரிசின் முக்கிய பங்காய் ரூ.9000/- ம் அறிவிப்பது பொருத்தமென்று நினைத்தேன். விடாப்பிடியாய் சகலத்தையும் அழகான கையெழுத்தில் எழுதியனுப்பியது மட்டுமன்றி, ஆங்காங்கே குட்டிக் குட்டிப் படங்களும், டிசைன்களும் போட்டு அனுப்பிய நண்பர் J-க்கு ரூ.6000/-ம் என்று சொல்ல  எண்ணினேன் ! ஈரோட்டில் நண்பர்களுக்கு நமது நன்றிகளுடன், இந்தக் காசோலைகள் இரண்டையும் தந்திடுவது சிறப்பாகயிருக்குமென்று என் தலையும் ; தற்சமயமாய் காற்று வாங்கி வரும் நமது வங்கிக் கணக்கும் முன்மொழிகின்றன ! ஓ.கே.வா all ? And congrats writers !!

நிறைகளைப் பார்த்த கையோடு – சன்னமாய்க் கண்ணில் பட்டதொரு குறை பற்றியும் சொல்லி விட்டால் தராசின் முள் நடுநிலையில் நின்றது போலாகிடும் என்றும் நினைத்தேன் !  அது வேறொன்றுமில்லை – காமிக்ஸ் சார்ந்த பக்கங்களில் நண்பர்கள் இருவருமே அவ்வப்போது – “உள்ளது உள்ளபடியே” என்ற பாணியில் தமிழாக்கம் செய்திருந்தனர். வார்த்தைகளை இடம் மாற்றுவது ; ஒரிஜினல் ஸ்கிரிப்டின் பொருளைத் தக்க வைத்துக் கொண்டு, வரிகளை / டயலாக்குகளை நமது பேச்சு வழக்குகளுக்கு ஒத்துப் போகும் விதமாக லேசாக மாற்றி அமைப்பது என்பனவெல்லாம் கதையின் ஓட்டத்துக்கு உதவிடும்  என்பது என் அபிப்பிராயம். அதனை மாத்திரம் நண்பர்களின் காமிக்ஸ் பக்கங்களின் translation-களில் அவ்வளவாய்ப் பார்த்திட முடியவில்லை. So ஆங்காங்கே மிகச் சன்னமான டிங்கரிங் மட்டும் நான் பார்த்து வருகிறேன் ! But "குறையென சுட்டிக் காட்ட ஏதேனும் இருந்தாகணுமே!” என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் மாத்திரமே இதுவெல்லாம் ஒரு விஷயமாகிடும். மற்றபடிக்கு  இதுவொரு  அதகளப் பணி என்பதில் இம்மியும் சந்தேகம் அவசியமில்லை  !!

சீக்கிரமே இதை நனவாக்கிடும் பொறுப்பு இனி என்னது ! அது வரையிலும் பொறுமை ப்ளீஸ் ! And ரைட்டோ – தப்போ இந்த ஒற்றை இதழின் பொருட்டு எழுந்துள்ள சலனங்கள் இதற்கு மேலேயும் வேண்டாமே – ப்ளீஸ் ? So – தொடர வேண்டிய திட்டமிடல்களைச் செய்யும் சுதந்திரத்தை என்னதாகத் தக்க வைத்துக் கொண்ட கையோடு, திட்டமிட, செயலாற்ற அவகாசமும் எடுத்துக் கொள்கிறேன் ; trust me guys – you won’t have reasons to be disappointed ! அதே போல - "சவுண்டுக்கு இதழா ? ச்சை..எனக்குப் புடிக்கவே புடிக்காது !" என்று இந்த இதழினைப் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ள நண்பர்களுக்கும் ஒரு கோரிக்கை : ஆகஸ்ட் சந்திப்பு வரைக்கும் இது மீதான உங்கள் தீர்ப்புகளை ஒத்தி வையுங்கள் - ப்ளீஸ் ! சந்திக்கும் வேளையில் இதுபற்றி பேசலாம் - நிச்சயமாய் !  ஏற்கனவே ஒற்றை ரூபாய் ஆமை வடை போல் சன்னமாயிருக்கும் நம் வாசக வட்டத்தை , ஏதேதோ காரணங்களுக்காய் எட்டணா உளுந்த வடை சைசுக்கு நாமாய்க் கொண்டு செல்ல அனுமதிப்பானேன் guys ? நம்புவோம்...நல்லதே நடக்கும் ! 

மீண்டும் சந்திப்போம் all ! Have a lovely weekend !! See you around !!

221 comments:

  1. வாழ்த்துகள்...

    திரு.கார்த்திகைப் பாண்டியன், கோவை
    - J. என்ற திரு.ஜனார்த்தனன், குடந்தை
    - திரு.கணேஷ்குமார், பெங்களுர்

    ReplyDelete
  2. திறமைசாலி நண்பர்களே
    கார்த்திகை பாண்டியன் ஜி
    ஜனார்த்தனன் ஜி
    கணேஷ் குமார் உங்களுக்கு மனதார பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பாகுபலி தேங்க்ஸ்

      Delete
  3. வாழ்த்துக்கள்
    - திரு.கார்த்திகைப் பாண்டியன், கோவை
    - J. என்ற திரு.ஜனார்த்தனன், குடந்தை
    - திரு.கணேஷ்குமார், பெங்களுர்

    ReplyDelete
  4. கார்த்திகை பாண்டியன் , J. என்ற திரு.ஜனார்த்தனன், குடந்தை - கணேஷ்குமார், பெங்களுர் ஆகியோருக்கு பாராட்டுகள்!வாசகர்களின் கனவு மெய்பட உறதி அளித்த எடிட்டருக்கு நன்றி!

    ReplyDelete
  5. 7வது.. வெகு மாதங்களுக்கு பிறகு

    ReplyDelete
  6. எழுத்தாளச் சகோதரர்கள் மூவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.!

    ReplyDelete
  7. இரவு நேர வணக்கம் 🙏

    ReplyDelete

  8. - திரு.கார்த்திகைப் பாண்டியன், கோவை
    - J. என்ற திரு.ஜனார்த்தனன், குடந்தை
    - திரு.கணேஷ்குமார், பெங்களுர்

    @ உங்கள் முயற்சி மற்றும் உழைப்பிற்கு வாழ்த்துகள்/நன்றிகள் @

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்
    - திரு.கார்த்திகைப் பாண்டியன், கோவை
    - J. என்ற திரு.ஜனார்த்தனன், குடந்தை
    - திரு.கணேஷ்குமார், பெங்களுர்

    ReplyDelete
  10. வாழ்த்துகள் திரு.கார்த்திகைப் பாண்டியன், கோவை, J. என்ற திரு.ஜனார்த்தனன், குடந்தை, திரு.கணேஷ்குமார், பெங்களுர்.

    உங்கள் கனவு விரைவில் நினைவாக...
    மற்றும் உங்கள் உழைப்பிற்இஉ ராயல் சல்யூட்.

    ReplyDelete
  11. மூவருக்கும் வாழ்த்துகள் :
    - திரு.கார்த்திகைப் பாண்டியன், கோவை
    - J. என்ற திரு.ஜனார்த்தனன், குடந்தை
    - திரு.கணேஷ்குமார், பெங்களுர்

    ReplyDelete
  12. Congrats friends. . It is artwork that 99% makes XIII story wonderful. Information about imaginary characters matters this much?

    ReplyDelete
  13. Possible to add it with xiii collecter edition sir

    ReplyDelete
  14. காலை வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  15. வாழ்த்துகள் ...
    - திரு.கார்த்திகைப் பாண்டியன் கோவை,
    - J. என்ற திரு.ஜனார்த்தனன் குடந்தை,
    - திரு.கணேஷ்குமார் பெங்களுர்.

    ReplyDelete
    Replies
    1. எப்பயும் போல வாழைப்பூ வடை தான் kok

      Delete
  16. கார்த்திகைப் பாண்டியன்,
    ஜனார்த்தனன்,
    கணேஷ்குமார்


    உங்கள் முயற்சி மற்றும் உழைப்பிற்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.

    ReplyDelete
  17. // இரத்தப் படலம் x 3 புக்குகளுமே அச்சாகி விட்டன ; அட்டைப்படங்களும் அச்சாகி விட்டன ; slipcase-க்கான டிசைனும் தயாராகி விட்டதால் அதனைத் தயாரிப்போரிடம் ஒப்படைத்து விட்டோம் ! இனி எஞ்சியிருப்பது பைண்டிங் வேலைகள் மாத்திரமே //

    திட்டமிட்டப்படி வேலைகள் நடைபெறுவது சந்தோஷம். இதன் பின் உழைத்த நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  18. புலன் விசாரணை கனவை நிஜமாக்கிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் சொல்லும் சில வரிகளிலேயே தெரியாத பல இரகசியங்கள் ஒளிந்துள்ளது. அப்போ புத்தகத்தில் (புலன் விசாரணை) இன்னும் எவ்வளவு இரகசியங்கள் ஒளிந்துள்ளனவோ? சுவாரஸ்யமான பல தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே புலன் விசாரணையை வாங்கி படித்தாக வேண்டும் போல. போட உறுதியாக முடிவெடுத்தமைக்கு நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. பொறுமையாக படிக்க வேண்டிய விஷயம்

      ஆனால் அச்சுவை பிடிக்கமா காலம் சொல்லும் பதிலை.

      Delete
  19. வாழ்த்துகள் ...
    - திரு.கார்த்திகைப் பாண்டியன் கோவை,
    - J. என்ற திரு.ஜனார்த்தனன் குடந்தை,
    - திரு.கணேஷ்குமார் பெங்களுர்.

    ReplyDelete
    Replies
    1. கரூர்கார் நன்றி

      Delete
  20. வாழ்த்துகள் ...
    - திரு.கார்த்திகைப் பாண்டியன் கோவை,
    - J. என்ற திரு.ஜனார்த்தனன் குடந்தை,
    - திரு.கணேஷ்குமார் பெங்களுர்.

    ReplyDelete
    Replies
    1. அறிவு சார் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்

      Delete
  21. வாழ்த்துகள் ...
    - திரு.கார்த்திகைப் பாண்டியன் கோவை,
    - J. என்ற திரு.ஜனார்த்தனன் குடந்தை,
    - திரு.கணேஷ்குமார் பெங்களுர்.

    ReplyDelete
  22. எழுத்தாளளர்கள் கா.பா, J ஆகியோருக்கு ஈ.வியின் இதயம் கனிந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும்!! அறிமுக எழுத்தாளர் கணேஷ்குமாருக்கும் எனது வாழ்த்துகள்!!!

    உங்களின் இந்த அசாத்திய உழைப்பும், மொழிபெயர்ப்பு புலமையும் ஆச்சரியப்பட வைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. அசத்திய எடிட்டருக்கே அனைத்தும்

      Delete
  23. அட்டகாசமான அறிவிப்பு சார். நண்பர்கள் கார்த்திகைப் பாண்டியன் ஜெ கணேஷ்குமார் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும். கானல் நீர் மீதான மையலைக் கூறி கவிதாசிரியர் போன்று சிறப்பாக எழுதியுள்ளீர்கள். மொழிபெயர்ப்பில் வட்டாரத்துக்கேற்ப மாற்றங்களும் அவசியமே என்பதில் சந்தேகமில்லை. இதற்கான இமாலய பொறுமையை கைக்கொண்ட அனைவருக்கும் நன்றி..

    ReplyDelete
    Replies
    1. அன்பான நன்றி சார்

      Delete
  24. - திரு.கார்த்திகைப் பாண்டியன், கோவை
    - J. என்ற திரு.ஜனார்த்தனன், குடந்தை
    - திரு.கணேஷ்குமார், பெங்களுர்

    எட்டா கனியை கைக்கு கிடைக்க வைத்த உங்கள் மூவருக்கும் நன்றிகள் & வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. வாழ்த்துகள் ...
    - திரு.கார்த்திகைப் பாண்டியன் கோவை,
    - J. என்ற திரு.ஜனார்த்தனன் குடந்தை,
    - திரு.கணேஷ்குமார் பெங்களுர்.

    ReplyDelete
  26. புத்தகத்தின் பின்னட்டையில் மொழிபெயர்ப்பாளர்கள் நண்பர் கா.பா.மற்றும் திரு.ஜனார்த்தனன் இருவரது வண்ண புகைப்படங்களையும் போடுங்கள் சார்.

    இருவருக்குமே நமது பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விஜயன் சார்.

      Delete
    2. ஏற்கனவே போட்ட படத்திலயே ஐயா ரஜினி மாதிரி சால்ட் அண்டு பெப்பர் வேஷத்துல இருந்தேன்.

      இப்ப வேறயா

      கண்ணுபட்ரும்

      Delete
  27. சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன். நண்பர்களுக்கு நன்றி கலந்ந வாழ்த்துகள். சார் இபவோட ஏதாவது ஒரு அட்டைய கண்ணுல காட்டுங்களேன். சிலர் பார்ப்பார் சிலர் படிப்பார் நான் பார்த்துக் கொண்டே படிக்கின்றேன்

    ReplyDelete
  28. சார் கலரில் ,பெரிய சைசில் , தேவைப்படும் எண்ணிக்கையில் அல்லது இப. எண்ணிக்கைக்கு ஏறெப வந்தால் சிறப்பாயிருக்குமே

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. // பெரிய சைசில் // -1
      இந்த புத்தகம் வருவதே பெரிய விஷயம. இதில் பெரிய சைசு அது இது என்று பேசாமல் இருல.

      Delete
    3. எல தம்பி ஒரே முறை வரவிருக்கும் அதுவும் சிறப்பா இருக்கட்டுமலே

      Delete
    4. ஸ்டீல் @ வாழ்கையும் ஒரு முறை தான், கிடைப்பதை கொண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கையே நன்றாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும் மக்கா.

      Delete
  29. திறமைசாலி நண்பர்களே
    கார்த்திகை பாண்டியன் ஜி
    ஜனார்த்தனன் ஜி
    கணேஷ் குமார் உங்களுக்கு மனதார பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்
    கண்டிப்பாக புலனாய்வு வெளியிடுங்கள் சார் ....

    ReplyDelete
    Replies
    1. தேங்க்யூ யாழ் சார்

      Delete
  30. அன்பின் நண்பர்களுக்கு அன்பினிய வாழ்த்துகள்..!

    ட்ரீட்ட மறந்துடாதீங்கப்பா..!

    ReplyDelete
    Replies
    1. கிடா வெட்டி கீர குழம்பு குடுத்துடுவோம்

      Delete
  31. மூவருமே வெற்றியாளர்கள் என்ற ஆசிரியரின் கருத்தை வழிமொழிகிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே.

    ReplyDelete
  32. புலன் விசாரணையை கையில் எடுக்க உள்ள தங்களுக்கு முதற்கண் நன்றி. ...மொழிப் பெயர்ப்பில் அசத்தி வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். ..
    பங்கு கொண்ட மூன்றாவது நண்பருக்கு ஏதேனும் பரிசு கொடுக்க முடிகிறதா என்று பாருங்களேன்...ப்ளீஸ்

    ReplyDelete
  33. பேட்டை பிஸ்தாவான நம் எடிட்டருக்கே முழி பெயர்க்க வைத்து பெப்பே காட்டின புலன் விசாரணையை தங்கள் முழி பெயர்ந்தாலும் பரவாயில்லையென்று சளைக்காமல் மொழி பெயர்த்து எடிட்டர் வசம் ஒப்படைத்த மூன்று ஜாம்பவான்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அருமையாக எழுதியுள்ளீர்கள்.

      Delete
    2. உழைப்பே உயர்வு சார்

      Delete
    3. என் விஷயத்தில் அது நேர்மாறாய் போனது சார்.

      Delete
  34. Congratulations pulan visaranai friends.

    ReplyDelete
  35. Wonderful! Thank you Sir. Best wishes to them. I am eagerly awaiting to read!!

    ReplyDelete

  36. - திரு.கார்த்திகைப் பாண்டியன்
    கோவை,
    - J. என்ற திரு.ஜனார்த்தனன்
    குடந்தை,
    - திரு.கணேஷ்குமார் பெங்களுர்.

    மூவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  37. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். ஒரு விடுமுறை நாளின் மகிழ்ச்சியை உங்களுடைய இந்தப் பதிவு பன்மடங்காகப் பெருகச் செய்கிறது. என் மனமார்ந்த நன்றி. இதே போன்றதொரு ஞாயிற்றுக்கிழமையில்தான் பெங்களூரைச் சேர்ந்த நண்பர் பரணி அழைத்தார். “புலன் விசாரணையை நண்பர்கள் யாரேனும் மொழிபெயர்க்க முடியுமா என்று ஆசிரியர் கேட்கிறார். நீங்கள் இதைச் செய்தால் சரியாக இருக்கும் என நம்புகிறேன்.” இப்படித்தான் நான் இந்த மொழிபெயர்ப்புக்குள் வந்தேன். நண்பர் பரணிக்கு என் நன்றியும் அன்பும். பரிசுத்தொகை என்பதைக் காட்டிலும் நான் பெரிதும் மதிக்கிற (என்னுடைய சிறுகதைகளுக்கான உந்துசக்தியென நம்புகிற) லயன்-முத்து காமிக்ஸில் பங்குபெறும் வாய்ப்பென்பதே எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது. நம் காமிக்ஸ் வரலாற்றில் ஓரமாய் நமக்கும் ஒரு இடம் என்பதை விடப் பெரிய விசயம் ஏதும் இருக்க முடியுமா என்ன?

    சின்னதாய் ஒரு நினைவலையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1990 அல்லது 1991. எனக்குப் பத்து வயதிருக்கக்கூடும். மதுரையில் என் மாமாவின் கல்யாணம். பழங்காநத்தத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நிகழ்ந்தது. காலை உணவாக இட்லி போட்டிருந்தார்கள். எனக்குச் சுத்தமாகப் பிடிக்காத உணவென்பதால் அழுது அடம்பிடித்த என்னை பிரியத்துக்குரிய என் தாத்தா அருகிலிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பூரி வாங்கித் தந்தார். சாப்பிட்டு வெளியே வந்தபோது அருகிலிருந்த பெட்டிக்கடையில் படம்போட்ட ஒரு கதைப்புத்தகம் தொங்கிக் கொண்டிருந்தது. வாசிப்பில் இருந்த ஈடுபாடு காரணமாக அடம்பிடித்து அந்தப் புத்தகத்தையும் வாங்கினேன். அந்தப் புத்தகம் - சைத்தான் சாம்ராஜ்யம். அன்று தொடங்கிய என் காமிக்ஸ் காதல் இன்று அதே காமிக்ஸில் நானும் பங்குகொள்ளும் இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியை உண்மையில் வார்த்தைகளில் அடக்க முடியாது என்பதே உண்மை.

    மொழிபெயர்ப்பு பற்றி - இலக்கியத்தின் அடிப்படை விதி எந்த விதத்திலும் மூலப்பிரதியின் சுதந்திரத்துக்குள் மொழிபெயர்ப்பாளன் நுழையக்கூடாது என்பதே. ஆனால் அந்த விதி காமிக்ஸ் மொழிபெயர்ப்புகளுக்குப் பொருந்தாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சுவாரசியத்தைக் கூட்ட நீங்கள் சேர்க்கும் சங்கதிகள் நம்முடைய காமிக்ஸுக்கு வளம் சேர்ப்பதை வாசித்து உணர்ந்திருக்கிறோம். ஆனால் புலன் விசாரணையைப் பொறுத்தமட்டில் அதன் ஆவணத்தன்மை மாறிவிடக்கூடாது என்கிற கவனத்தோடு மொழிபெயர்த்தேன். அதே வழிமுறையைத்தான் காமிக்ஸ் பக்கங்களுக்கும் பின்பற்றினேன். அவற்றில் தேவைப்படும் மாற்றங்கள் எதையும் நீங்கள் செய்து கொள்ளலாம். அது இந்தப்பிரதியை இன்னும் செழுமையாக்கும் என்றே நம்புகிறேன்.

    நண்பர்கள் கணேஷ்குமார் மற்றும் ஜெ சார் ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். தங்களுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.

    இறுதியாகப் பரிசுத்தொகை பற்றி, வாசகர்களின் உழைப்பைப் பாராட்டும் வகையில் பரிசுத்தொகையை உயர்த்தியுள்ள ஆசிரியரின் நல்ல மனதை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. புலன்விசாரணை மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட தைரியத்தால் நான் இதுவரைக்கும் இரத்தப்படலம் புத்தகத்துக்கான முபதிவைச் செய்யவில்லை. ஆசிரியர் தவறாக எடுத்துக் கொள்ளவில்லையெனில் பரிசுத்தொகையைப் பணமாகப் பெற்றுக்கொள்வதை விட புத்தகங்களாக வாங்கிக் கொள்ளவே நான் விரும்புகிறேன். இது பற்றி உங்களுடைய கருத்தைத் தெரிவித்தால் மகிழ்வேன் சார்.

    மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.

    பிரியமுடன்,
    கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. பெங்களூர் நண்பர் பரணி காமிக்ஸையே சுவாசமாக வைத்திருக்கிறார் போல்..வாழ்க அவர்தம் தொண்டு .அவர் வழிகாட்டுதலில் புலன்விசாரணை மொழிபெயர்ப்பில் இறங்கி சாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள் .

      Delete
    2. பரிசுத்தொகையை புத்தகமாக வாங்கிக்கொள்ளும் உங்கள் முடிவு பாராட்டத்தக்கதே அருமை கா.பா

      Delete
    3. 😄அருமை நண்பரே,,,எல பரணி என்ன கேக்கலியலே,,,

      Delete
    4. @ கார்த்திகைப் பாண்டியன் : அட....பணிக்கான சன்மானமாய் பணப்பரிசும் ; நம் அன்பின் அடையாளமாய் "இ.ப." புக்கும் என்று வைத்துக் கொள்வோம் சார் !

      Delete
    5. கா.ப அவர்களுக்கும் ,ஆசிரியர் அவர்களுக்கும் மேலும் பாராட்டுகள்

      :-)

      Delete
    6. திரு.கார்த்திகைப் பாண்டியன் அவர்களின் கோரிக்கையை ஏற்று பரிசுத் தொகைக்கு பதிலாக புத்தகத்தை வழங்கி சந்தோஷப்படுத்தி இருக்கலாம் நம் எடிட்டர்.
      ஆனால் அன்பின் அடையாளமாய் இ.ப. புத்தகத்தை வழங்கி கா.பா.அவர்களை மேலும் சந்தோஷப் படுத்தியிக்கிறார் நம் எடிட்டர்.சூப்பர். எடிட்டர் சார் வாசகர்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு புரிகிறது. பாராட்ட வார்த்தைகளே இல்லை.

      Delete
    7. Selvas @

      // பெங்களூர் நண்பர் பரணி காமிக்ஸையே சுவாசமாக வைத்திருக்கிறார் போல்..வாழ்க அவர்தம் தொண்டு .அவர் வழிகாட்டுதலில் புலன்விசாரணை மொழிபெயர்ப்பில் //

      ரொம்ப ஓவர்.தயவு செய்து இப்படி எழுதாதிங்க‌. இதில் எனது பங்கு எதுவும் இல்லை என்பது தான் உண்மை.; அவரிடம் இதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் எனச் சொல்ல மட்டுமே செய்தேன். மறுப்பு கூறாமல் முழு ஈடுபாட்டுடன் செய்து முடித்தது அவரின் பெருந்தன்மை. இதற்கு எனது நன்றிகள் நண்பா.

      இந்த பாராட்டுக்கு முழுத்தகுதி கொண்டவர் நண்பன் கார்த்திகை பாண்டியன்.

      Delete
    8. ஸ்டீல் @ // எல பரணி என்ன கேக்கலியலே,,,//

      நீ முதல்ல கமெண்ட்ட ஒழுங்கா போடப் பழகுல.... அப்புறம் மத்ததப் பற்றி பேசலாம்ல.

      Delete
    9. பரணி சார்
      நம்ம ஸ்டீல் கிட்ட இ.ப. மொழி பெயர்ப்பை கொடுத்து அதில் திருத்தம் ஏதும் செய்யாமல் அப்படியே புத்தகமாக்கியிருந்தால் எப்படியிருந்திருக்கும்!!! நினைக்கும் போதே சும்மா அதிருதில்லே!( புலன் விசாரணை கேட்டு போராட்டம் பண்ணியவர்களெல்லாம் ஆளுக்கொரு பக்கமாக ஓட்டம் பிடித்திருப்பார்கள்!!)
      நீங்கள் கா.பா. சார் கிட்ட கேட்பதற்கு முன் நம்ம ஸ்டீல் கிட்ட கேட்காமல் விட்டதற்குதான் அவர் வருத்தமுடன் //எல பரணி என்ன கேக்கலியலே,,,// என்று வருத்தத்துடன் கேட்கிறார்.
      திரு.ஸ்டீல் வருத்தம் வேண்டாம்.உங்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்காமல் போகாது!!

      Delete
    10. // நினைக்கும் போதே சும்மா அதிருதில்லே!( புலன் விசாரணை கேட்டு போராட்டம் பண்ணியவர்களெல்லாம் ஆளுக்கொரு பக்கமாக ஓட்டம் பிடித்திருப்பார்கள்!!) //

      அட ஆமால. நல்ல யோசனை. சே.just missed.

      அடுத்த முறை வச்சி செய்திடுவோம்.

      Delete
    11. அன்பின் ஆசிரியருக்கு,

      திக்குமுக்காடிப் போய் நிற்கிறேன். உங்கள் அன்புக்கு எப்படி நான் நன்றி சொல்ல? ஆதுரமாய் உங்களை கைகளைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன். மனமார்ந்த நன்றி சார்.

      பிரியமுடன்,
      கா.பா

      Delete
  38. முழு வண்ணத்தில் பெரிய சைசில் வரவிருக்கும் புலன்விசாரணை புத்தகத்தைபெரிதும் எதிர்பார்க்கிறேன் .புத்தகம் வருவதற்கு உறுதுணையாக உழைப்பை நல்கிய காமிக்ஸ் காதலர்கள் கார்த்திகைபாண்டியன்,கணேஷ்குமார், ஜே மூவருக்கும் ஜே !இப்படை தோற்கின் எப்படை வெல்லும் .. வாழ்த்துக்கள் நண்பர்களே ..

    ReplyDelete
  39. /ஏற்கனவே ஒற்றை ரூபாய் ஆமை வடை போல் சன்னமாயிருக்கும் நம் வாசக வட்டத்தை , ஏதேதோ காரணங்களுக்காய் எட்டணா உளுந்த வடை சைசுக்கு நாமாய்க் கொண்டு செல்ல அனுமதிப்பானேன்/! சிவகாசியில் இன்னுமா ஒரு ரூபாய்க்கும் எட்டணாவுக்கும் வடை போடுகிறார்கள் ?அதற்காகவே ஒருதபா சிவகாசி போய்ட்டு வரலாமே ..

    ReplyDelete
    Replies
    1. அதுவும் நம் ஆபீசுக்குப் பக்கத்திலேயே !!

      Delete
    2. தூத்துக்குடியிலும் ஒரு ரூபாய் வடை இன்னும் கிடைக்கிறது.

      Delete
  40. - திரு.கார்த்திகைப் பாண்டியன்
    கோவை,
    - J. என்ற திரு.ஜனார்த்தனன்
    குடந்தை,
    - திரு.கணேஷ்குமார் பெங்களுர்.

    மூவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  41. PLEASE PUBLISH RATHAPADALAM SECRET ENQUIRY PART IN BIGSIZE, COLOUR,HARD BOUND WITH NO EDITING AND NO CUTTING.
    2019 JAN BOOK FAIR WAS THE BEST TIME TO RELEASE. ANYWAY CHOICE IS YOURS. AND VERY WELL. WE ALWAYS SUPPORT ALL YOUR DREAM PROJECTS. EXPECTING THAT TEX WILLER MBHISTO STORY ( more than 700 pages ) NEXT YEAR.

    THANKS AND REGARDS

    V.SUNDARAVARADAN
    LITTLE KANCHEEPURAM
    CELL:: 7667291648.

    ReplyDelete
  42. ஜூன் இதழ்கள் அனைத்தும் படித்துவிட்டேன். புத்தகங்கள் கைக்கு கிடைத்த நாளிலிருந்து லார்கோவின் அட்டைப்படத்தை பார்த்துக்கொண்டும், தடவிக்கொண்டும், ரசித்துக்கொண்டும் இருந்தேன். இந்த ஆண்டின் தரமான கதைகளுள் ஒன்று என்றும் நினைத்தேன். முழு ரசனையோடு படிப்பதற்காக அரை நாள் லீவு தினத்தை எதிர்பார்த்து புத்தகத்தை படிக்காமல் வைத்திருந்தேன். ஆனால், தளத்தின் கமென்டுகளில் லார்கோவின் கதை விமர்சனங்களை பார்த்ததும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். அப்படி என்னதான் கதை மோசமாக இருக்கிறதோ பார்க்கலாம் என்று படித்துவிட்டேன்.

    சென்ற வருடம் வந்த லார்கோவின் கதை கூட பிரம்மாண்டமாகவும், படிக்க உற்சாகமாவும் இருந்தது. சில்கி சாங் கூட சாகசம் புரிந்து கைத்தட்டல் பெற்றாள். ஆனால் அடுத்த கதையில் லார்கோ, கோக்ரைன், பென்னி விங்கிள் இவர்களின் நற்பண்புகளை பாதிக்கும் அளவுக்கு இதன் ஆசிரியர் எப்படி முயன்றாரோ தெரியவில்லை. ஒரு நிழல் நிஜமாகிறது கதையில் கூட கோக்ரைனை வைத்துக் கொண்டு சைமன் அடிக்கும் கூத்துக்கள் அடல்ட்ஸ் ஒன்லி ரகத்தில் இருந்தது. ஆனால் அது சிறிதும் முகம் சுளிக்க செய்யாமல் ரசிக்கவே செய்தது. ஆனால் இந்த பி.ஒ.பி'யில் வரும் கோக்ரைனின் அ.ஒ சமாச்சாரங்கள் அருவருக்க செய்கிறது. தன் அறைக்கு வரும் பெண்ணை பார்த்து ''பெர்குஸ் உன்னை நியமித்தாரா?" என்று கேட்டதற்கு அந்த பெண் "நீங்கள் இருவரும் கீழே பேசியதை ஒட்டு கேட்டேன். சான்ஸ் கேட்டு வந்திருக்கிறேன்." என்கிறாள். ஒரு உலக நிறுவனத்தின் தலைமை அதிகாரி அவள் சொல்வதைக் கேட்டு, அவளை உள்ளே வர அனுமதிக்கிறார். இது கதையில் மிகப்பெரிய சொதப்பல். அதன் பிறகு நிகழும் காட்சிகள் கோக்ரைன் என்ற ஒரு உலக நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் நடத்தைகளா என்று சந்தேகம் உண்டாக்குகிறது. பென்னி விங்கிள் ஒரு படி மேலே. வான் ஹாமே அவர்கள் சுயமாக இந்த கதையை உருவாக்கியதாக இருக்காது. கதையை வெளியிடுபவர் அல்லது ஸ்பான்சர் இப்படி யாரோ ஒருவரின் தூண்டுதலால் விருப்பமில்லாமல் கதையை கொண்டு சென்றிருப்பார் என்று நினைக்கிறேன்.

    நமது ஆசிரியரும் பௌன்சரின் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் அவரது கடைசி கதையை தடை செய்தது போல, இந்த கதையையும் வெளியிடாமல் w குழுமத்தின் மதிப்பை காப்பாற்றியிருக்கலாம்.

    ReplyDelete
  43. இந்த மாதம் டெக்ஸின் இரண்டு கதைகளுமே டாப். இவை இரண்டில் எந்த கதைக்கு முதலிடம் கொடுப்பது என்ற குழப்பமும், எந்த கதையை பின்னுக்கு தள்ளுவது என்றும் முடிவெடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். 'இரவுக் கழுகின் நிழலில்' சும்மாவே அதிர்ந்தது. 'நடமாடும் நரகம்' சும்மாவே புரட்டி எடுத்துவிட்டது.

    ஆயினும் 'இரவுக் கழுகின் நிழலில்' கதைக்கே முதலிடம். டெக்ஸ் கதைகளில் புதிய ஃபார்முலா. இதுவரை கிடைக்காத விருந்து. கதையின் ஆசிரியர் டெக்ஸ் வில்லரை கதையில் நேரடியாக கொண்டுவராமல் வில்லனின் பிரமை தோற்றத்திலேயே உலாவ செய்து ஒரு வெறியாட்டம் ஆடியிருக்கிறார். ரோஜரின் கனவிலும், பிரமையிலும், கொஞ்சம் நேரம் ஃப்ளாஷ் பேக்கில் மட்டுமே டெக்ஸ் வருகிறார். அந்த மொட்டை மாடியிலிருந்து சுடுவது கூட நகர ஷெரீஃபாக இருக்கக்கூடும். கடைசி பக்கத்தில் டெக்ஸ் பேசும் "உன் ஆன்மா சாந்தியடைவதாக" என்ற வசனம் கூட ரோஜரின் பிரமைதான். அடுத்து வந்த கடைசி படம் டெக்ஸ் அந்த இடத்திலேயே இல்லை என்று காட்டுகிறது.

    இதுவரை துப்பாக்கியாலேயே எதிரிகளின் உயிரை குடித்த டெக்ஸ் இதில் கண் பார்வையாலேயே குடிக்கிறார். கோர்ட் தண்டனையிலிருந்து தப்பி வெளியே வந்த குற்றவாளிக்கு, தன் பார்வையாலேயே அந்த தண்டனையை கொடுத்துவிடுகிறார். அது பார்வையல்ல, பாசவலை. டெக்ஸோடு போட்டியிட்டால் எமன் கூட தோற்றுப் போய்விடுவான். ஆசிரியரும், ஓவியரும் ஒரு தீப்பெட்டியும், தீக்குச்சியும் போல ஒன்றாக உரசி ஒரு மின்னலை பற்றவைத்திருக்கிறார்கள்.

    டெக்ஸின் 70-வது ஆண்டில் இந்த குட்டிக் கதைகளே இந்தப் போடு போடுகிறது என்றால், இன்னும் அந்த டைனமைட் எப்படி போட போகிறதோ! அனுகுண்டே மேலே வந்து விழுந்தது போல அதிரடிக்கப்போகும் போல தோன்றுகிறது.

    ReplyDelete
  44. நடமாடும் நரகமும் அதன் பயணிகளை குலுக்கி எடுத்தது போல, பக்கம் பக்கமாக புரட்டியபோது என் உணர்வுகளையும் குலுக்கி எடுத்துவிட்டது.

    எப்போதோ ஒருநாள் நியூஸ் பேப்பரில் படித்து பதறிப் போயிருக்கிறேன். 'ஓடும் பஸ்ஸில் சீட்டுக்கடியில் இருந்த சூட்கேஸில் உடல் வெட்டப்பட்டு ஒரு பிணம்' என்று. ஆனால் இந்த கதையில் தலையை சுமந்துக் கொண்டு ஒருவன். அதை பார்த்துக் கொண்டு பயணிகள். 'வன்மேற்காலே இதெல்லாம் சகஜமப்பா' என்று கதை நம் தலையிலடித்து சொல்கிறது. செக்யூரிட்டியின் மரணமும், அவன் கல்லறை முன்னால் டிரைவர் பேசும் வசனமும் நானும் அந்த சடங்கில் கலந்துக் கொண்டது போல ஒரு உணர்வை தோற்றுவித்தது. உடனிருப்பவர்களை ஏமாற்றுவதற்காக நடித்தேன் என்று காலின் சேஸ் சொன்னதை கேட்டதும் லிட்டில் உல்ஃப் உடனே ஒரு ஈட்டியால் அவனை கொல்லும்போது பகைவர்களின் நடத்தையிலும் ஒரு சுத்தத்தை எதிர்பார்க்கும் லிட்டில் உல்ஃபின் குணத்திற்கு சல்யூட் வைக்கலாம். அக்னி நட்சத்திர வேகத்தில் போன இந்த கதையில் முடிவு மட்டுமே நமுத்துப்போன பட்டாசாக சப்பென்று ஆகிவிட்டது. செவ்விந்தியர்களின் வெற்றி நூறு சதவீதம் என்று தீர்மானம் ஆகும் வேளையில் வித்யாசமான முடிவை எதிர்பார்த்தேன். சென்ற ஆண்டு வந்திருந்த 'ஒரு தலைவன் ஒரு சகாப்தம்' கதையில் செவ்விந்தியர்களின் வெற்றி நிச்சயம் என்ற நிலையில் டெக்ஸ் அவர்கள் தலைவனின் மண்டைத்தொலியை உரித்தெடுப்பாரே... அதைப்போல வித்யாசமான ஒரு க்ளைமாக்ஸை எதிர்பார்த்தேன். ஆனால் எல்லா கதைகளிலும் வருவது போல ராணுவம் வந்துவிட்டது.

    Claudio Nizzi என்ற அந்த ஆசிரியரின் டெக்ஸ் கதைகள் அனைத்தும் செம விறுவிறுப்பாக விருந்து வைக்கிறது. ஆசிரியர் அவரது கதைகளை தேடி பிடித்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    நமது ஆசிரியர் கூட இந்த கதை விஷயத்தில் மிகப்பெரிய பிழை ஒன்று செய்துவிட்டார். அது இந்த கதையை காலதாமதமாக வெளியிட்டதுதான். அப்போதே வெளியிட்டிருந்தால் இந்த நிமிடத்தில் இந்த கதை மறுபதிப்பாக வந்து நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கும். செவ்விந்தியர்கள் துரத்தும் ஒவ்வொரு படமும் வண்ணத்தில் நம் கண்களுக்கு 3டி போல பிரகாசமாக அமைந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான விமர்சனம்.

      Delete
  45. டியூராங்கோ.


    'அதிரடிக் காட்சிகள் பரபரப்போடு லோடு துப்பாக்கிகளும், தோட்டாக்களும் இருந்தால் போதும் .வலுவான கதைக்கருவும், வழுக்கிவிழும் லாஜிக் கையும் வாசகர்கள் கணக்கில் கொள்ளமாட்டார்கள் ' என்றே கதாசிரியர் எண்ணியிருப்பார் போலும்.
    கதையில் தெறிக்கும் தோட்டாக்களால் ஏற்ப்பட்ட ஓட்டைகளை விட லாஜிக் ஓட்டைகளே அஅதிகமாக உள்ளன.


    டார்ரெஸின் மாளிகையில் ஹாயாக பிக்னிக் வந்த கெஸ்ட் போல நுழைவது, முன்பின் தெரியாத அந்நியனை மெஷின் கன்னை சோதிக்க அனுமதிப்பது, டெல் ரியோ கோட்டையில் கத்துக் குட்டி போல அமோஸ்&கோ மாட்டுவதும் என பொறுமையைச் சோதிக்கும் இடங்கள் நிறையவே உள்ளன.

    மூன்று மாத காலமாக சிறையில் கடுங்காவல் தண்டனை அனுபவிக்கும் ஹீரோ 'தப்பிக்க ஏதும் முயற்சி செய்யாமல் தேமே என காட்சியளிப்பது பரிதாபம்.

    மின்னும் மரணம் புகழ் 'டகோமா ' முக்கிய பங்கு வகித்தாலும், வண்டி திக்கித் திணறியே பயணிக்கிறது

    சுருக்கமாகச் சொன்னால்,
    டகோமாவிலிருந்து கிளம்பி, மீண்டும் டகோமாவிற்கு திரும்புவதே முதல் சாகஸம். நடுவில் ரெண்டு மூணு 'பூம்ம்ம்ம் ' 'டமாமால்ல் ', நாலஞ்சு 'டகடகடக ' 'ரட்டட்ட்ட் ' ஆறேழு 'ஆஆஆஆஆ ' பத்து பதினஞ்சு 'டூமில் டூமில் ' சேர்ந்தால் போதும்.

    ReplyDelete
  46. இன்று, தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல புத்தகம் மறுபடியும் படித்து முடித்தேன்.அருமையான கான்செப்ட்.முள் மீது நடப்பது போன்ற கதை. இதை படித்தபின் ரோசபால் லைன் பற்றி அஷ்வின் சாங்கி எழுதிய ரோசபால் லைன் நாவலின் தமிழாக்கம் தேடினேன் கிடைக்கவில்லை. இது போன்ற வித்தியாசமான கதைகளை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  47. நீண்ட நாட்களாக தொடர்பு கொள்ளாத மவுனப்பார்வையாளர் ஒருவர் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார் .வரலாற்று சிறப்புமிக்க அந்த சம்பாஷணையை அப்படியே தந்திருக்கிறேன்
    வணக்கம் நான் செல்வாஸ் பேசுகிறேன் நீங்கள் அந்த ....தானே ?
    மவுனம்
    உங்கள் மவுனத்தில் புரிந்து கொண்டேன் .புலன்விசாரணை கலரில் வேண்டும் அப்படித்தானே ?
    மவுனம்
    வெரிகுட் ..பெரியஸைசில் ஹார்டகவர் பைண்டிங்கில் ?
    மவுனம்
    சபாஷ் ஈரோடு ரத்தப்படல வெளியீட்டின்போதே இதுவும் வேண்டும் ?
    மவுனம் ..அத்தோடு பெருமூச்சு
    புரிகிறது.மறுபதிப்பில் நீங்கள் எதிர்பார்த்த புத்தகங்கள் வரவில்லை ?
    மவுனம்
    சிறைமீட் டிய சித்திரக்கதை மற்றும் விங்கமாண்டர் ஜார்ஜ் கதைகள் ?
    மவுனம்
    உங்கள் தேவையை எடிட்டரிடம் சொல்கிறேன் நன்றி
    டொக் .
    நடந்ததை சொல்லிவிட்டேன் ..இனி எடிட்டர்பாடு

    ReplyDelete

  48. selvam abirami9 June 2018 at 19:34:00 GMT+5:30
    நடமாடும் நரகம் ..
    முன்குறிப்பு ;
    இப்பதிவை எழுத துவங்கிய நாளன்றுதான் கதையில் குறிப்பிடப்படும் கோசைஸ் மரணித்த நாள் ஜூன் 8 ,1874,அதாவது நேற்று ....
    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    நண்பர் காபா அவர்கள் லிட்டில் வோல்ப் தனது குழுவை விட்டு வெள்ளையர்களை வேட்டையாடுவதன் காரணம் கதையில் குறிப்பிடப்படவில்லை என எழுதியிருந்தார் .....
    சிரிகாகுவா அபாச்சேக்களை பொறுத்தமட்டில் அமெரிக்கர்களை தாக்க காரணங்கள் பல உண்டு ....
    பல பதின்ம ஆண்டுகளாகவே சிரிகாகுவா அபாச்சேக்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் கடும்பகை நிலவி வரத்தான் செய்தது..
    ஆரம்பத்தில் அபாச்சேக்களின் வாழ்விட ஆக்கிரமிப்பு ,உணவு ஆதாரங்களை கைப்பற்றுதல் ஆகியவற்றால் அமெரிக்கர்களுடன் துவங்கிய போர் குடும்ப நபர்களின் இழப்பால் பகையுணர்வுடன் பழி வாங்கும் வெறியும் சேர்ந்து கொண்டது ..
    கோசைஸ் ,ஜெரோனிமோ இவர்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கர்களுடன் வன்முறையுடன் கூடிய போர் தொடுத்ததற்கு காரணம் குடும்ப நபர்கள் இழப்பே ...
    ஜெரோனிமோ பற்றி அனைவரும் அறிவர் ....
    கதையில் சமாதானம் செய்வதற்கு நாடும் கோசைஸ் மெக்சிக்கன்கள் மேல் இருந்த கோபத்தை அமெரிக்கர்கள் பக்கம் திருப்ப வலுவான காரணம் உண்டு .
    சரித்திரத்தில்
    பாஸ்கம் சம்பவம் என ஒன்று நிகழ்ந்தது ....
    வருடம் 1861
    அரிசோனாவின் சாண்டா க்ரூஸ் பகுதியில் ஜான் வார்டின் பண்ணையை தாக்கிய சில அபாச்சேக்கள் பண்ணையை சூறையாடி ஜானின் மகன் பெலிக்ஸ் –யையும் கடத்தி சென்று விட்டனர் ...
    ஜான் வார்ட் தனது மகனை மீட்டு தருமாறு வேண்டுகோள் வைக்க வேண்டுகோளை ஏற்ற புச்சனன் கோட்டையின் கமாண்டர் கர்னல் மோரிசன் தனக்கு கீழ் பணிபுரிந்த லெப்டினன்ட் பாஸ்கம் –ஐ அழைத்து எவ்வழியை கடைபிடித்தாகிலும் பெலிக்ஸ் –ஐ மீட்கும்படி உத்தரவிட்டார்
    சிரிகாகுவா அப்பாச்சேக்கள்தான் பெலிக்ஸ் –ஐ கடத்தியிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்த பாஸ்கம் கோசைஸ் –ஐ விருந்துக்கு அழைத்தார் ...
    தனது மனைவி ,மகன்கள், சகோதரர்கள் , மருமான்கள் ஆகியோருடன் வந்த கோசைஸ் அனைவருடனும் சிறை வைக்கப்பட்டார் ..
    பெலிக்ஸ்-ஐ கொண்டு வர செய்தால் அனைவரும் விடுவிக்கப்படுவர் என்று கோசைஸ் –இடம் சொல்லப்பட்டது ..
    பெலிக்ஸ் கடத்தலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என கோசைஸ் கூறியதை பாஸ்கம் தரப்பு ஏற்கவில்லை ..
    தான் சிறை வைக்கப்பட்டு இருந்த கூடாரத்தை கிழித்து தனியே தப்பிய கோசைஸ் பல அமெரிக்கர்களை சிறைப்பிடித்து அவர்களை விடுவிக்க தனது குடும்ப உறுப்பினர்களை விடுவிக்க சொன்னார் ..
    பாஸ்கம் தரப்பு மறுக்க சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர் ...
    1861 பிப்ரவரி –யில் கோசைஸ் –ன் சகோதரர்கள் ,மருமான்கள் தூக்கிலிடப்பட்டனர் ..மற்றவர்கள் கதி தெரியவில்லை ..
    இவர்களின் உடல்களை கண்ட கோசைஸ் –ன் கோபம் உச்சம் அடைந்தது...அதற்கு பின் சுமார் 25 ஆண்டுகள் இக்கோபத்தின் பலனை அமெரிக்கர்கள் அனுபவிக்க நேர்ந்தது....
    கோசைஸ் –ன் கோபம் நியாயமானது ..
    ஏனெனில் பெலிக்ஸ் –ஐ கடத்தியது கோயோட்ரோ இன அபாச்சேக்கள்....இவ்வின அபாச்சேக்களுடன் வாழ்ந்து வந்த பெலிக்ஸ் இளைஞனாக பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்க ராணுவத்தின் ஸ்கவுட்டாக மாறினான் ..
    தான் செய்யாத தவறுக்கு தண்டிக்கப்பட்ட கோசைஸ் போலவே பல அபாச்சேக்களும் குடும்ப உறுப்பினர்கள் இழக்க நேர்ந்தால் அதிக வன்மத்துடன் அமெரிக்கர்களை தாக்கினர் ..
    லிட்டில் வோல்ப் –க்கும் இதுபோல் ஏதேனும் காரணம் ஏற்பட்டு இருக்கலாம் ..
    அமெரிக்கா ராணுவத்தால் சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு கடைசியாக சமாதானத்துக்கு ஒத்து கொண்டவர்கள் சிரிகாகுவா அபாச்சேக்கள் என்பதை நினைவில் வைத்து கதையை படிக்கவும் ...
    லிட்டில் வோல்ப் –ன் மேல் கோபம் கொள்ளாது அவன் தரப்பிலும் நியாயம் இருக்க கூடும் என்பதை ஒருகணம் யோசித்து பார்த்தால் கதாசிரியர் அவனை கொல்லாமல் அவன் வேறு ஒரு போர்க்களத்தை எதிர்கொள்ளப்போகிறவனாக காண்பிப்பதை நம்மால் ஏற்று கொள்ளமுடியும் ...
    /// இது அப்பிடியே ரத்த கோட்டையை நியாபக படுத்துதே டாக்டர்... Any coincidence??

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ரம்மி..

      //The conflict plays a central role in Jean-Michel Charlier and Jean Giraud's (a.k.a. Moebius) graphic novel series Blueberry, particularly in the first three episodes (Fort Navajo, Thunder in the West, and Lone Eagle, first published in French magazine Pilote between 1965–67; English translations by Egmont/Methuen in 1977 and 1978). The plot and characters differ from the actual historic events (i.e. name of the kidnapped child, tribe of captors, rank of Bascom, name of fort, etc.).//

      உண்மை சம்பவங்கள் சிறிதே கற்பனை கலந்து பெயர் மாற்றங்களுடன் சார்லியர் எழுத்துகளில்...

      Delete
    2. கதையில் சிரிகாகுவா அபாச்சேக்கள் தலைவர் கோசைஸ் குறிப்பிடப்படுகிறார் என்பதாலும் கோசைஸ் மரணித்த நாள் ஜூன் 8 என்பதாலும் இப்பதிவு எழுதப்பட்டது..

      கதையில் வில்லனாக சித்தரிக்கப்படும் லிட்டில் உல்ப் மெஸ்கலாரோ அபாச்சே இனத்தை சேர்ந்தவன்...

      பொதுவாக சிரிகாகுவா அபாச்சேக்கள் மேல் மற்ற எல்லா அபாச்சேக்களுக்கும் -அவர்கள் வீர உணர்வு காரணமாக- பெரும் மரியாதை உண்டு....

      Delete
  49. சார்! ஜம்போ எப்போது டேக ஆஃப் ஆகிறது.
    எனக்கு டெக்ஸ் மற்றும் 007 மட்டும் வேண்டும்.

    ReplyDelete
  50. வணக்கம் நண்பர்களே.

    உங்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    புலன் விசாரணை என்ற ப்ராஜக்ட் எடிட்டர் அவர்களால் நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

    எமது நெடிய தமிழாக்கம் , காமிக்ஸ் பக்கங்களில் என்று கூறி எம்மை கௌரவப்படுத்தியமைக்கு நன்றிகள் கோடி.

    நிற்க.

    ஆனால் பரிசுத்தொகையை உயர்த்தி இனிய அதிர்ச்சி கொடுத்த நீங்கள் ,அடுத்த வரியிலேயே 6000ரூ J க்கு வழங்க நினைத்தேன் என்று கூறியுள்ளீர்கள்.

    ஆனால் அதற்கு நீங்கள் கூறியுள்ள காரணம் தான் எமக்கு ஏற்புடையதாக இல்லை.

    மொழிமாற்றம் செய்ய தான் போட்டியே தவிர டைப் செட்டிங் என்பது உங்கள் பக்கப்பணி என்றே அடியேன் நினைத்திருந்தேன்.

    அல்லது நீங்களாவது அதை போட்டி விதியாக கூறியிருக்கலாம்.

    இதை நான் ஏற்க மறுக்கின்றேன்.

    நீங்கள் டைப்செட்டிங் - icing on the cake என்று கூறி எவ்வாறு கூடுதலாக
    பரிசாக தருவதாக அறிவிக்கலாம்?

    இது எம் படைப்பை , எம்மை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது.

    J

    ReplyDelete
    Replies
    1. நண்பரே விக்கிரமாதித்தனின் யார் சிறந்த நட்டியக்காரிதான் யநினைவுக்கு வருது. இரண்டு பேரின் பணியும் சிறப்பு, யாரை தேர்வு செய்ய என திகைப்பு, அதனால் கொஞ்சம் கூடுதல் கவனத்தை ஈர்த்த அவரின் Presentaton தன்மைக்கு பாரராட்டு . உங்க படைப்பு சிறுமைபடவில்லை; மாறாக இருவரையும் உபயோகபடுத்தி உள்ளார் இருவரின் படைப்பும் நிகரில்லை என கூறி,,,,,கொண்டாடுங்கள்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ///புலன்விசாரணை வேண்டாம் என்று சொன்னவர்கள் அமைதியாகி விட்டார்கள். ///

      ஒரு சிறிய தெளிவுரை தரவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது ஷெரீப்.!

      புலன் விஜாரனை வேண்டாம்., வரவேக்கூடாதுன்னு யாரும் சொல்லவே இல்லை. ! கேட்ட விதத்திலும் உபயோகித்த வார்த்தைகளிலும் பயண்படுத்திய விசயங்களிலும்தான் கோளாறு என்று தெரிவித்தோம்.!
      ஆனாலும் இங்கும் வெளியிலும் (ரொம்ப மோசமாக) நம்மை தொடர்ந்து வசைபாடியே வந்தார்கள்.! செய்திராத ஒரு பிழைக்கு சாதூர்யமாக பழியை நம்மீது போட்டுவிட்ட நபர்களைப் பற்றி நாம் அக்கரை கொள்ளத் தேவையில்லையெனினும்., பிற நண்பர்களின் பொருட்டு நாம் பட்ட மனத்துயருக்கு அடையாளமாக தெரியட்டுமே என்ற ஒரே காரணத்திற்காகவே புலன் விசாரனை சும்மா குடுத்தாலும் வாங்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம்.!
      நன்றாக கவனியுங்கள் தோழர்களே ...வாங்க மாட்டோம் என்பதற்கும் வரக்கூடாது என்பதற்கும் துளியும் ஒற்றுமை கிடையாது.!
      புலன் விசாரனை அட்டகாசமாய் வந்து வெற்றிபெறட்டும்.!
      சார்ந்தோருக்கு வாழ்த்துகள் ..!!

      Delete
    4. @கி. ஆ. க. நீங்கள் சொல்றது சரிதான். அதே மனநிலை தான் எனக்கும்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. @ j : சார்...மொழிபெயர்ப்பினில் இது தான் தர அளவுகோல் ; இவைதான் தேர்வுகளின் வரையறைகள் என்று எதுவுமே கிடையாதெனும் போது - ஒவ்வொருவரின் படைப்புகளும் அவர்களது அளவில் உச்சங்களே ! ஆனால் காலங்களும், கண்ணோட்டங்களும் மாறும் போது அவற்றின் மீதான நமது அபிப்பிராயங்களுமே மாறுவது இயல்பு ! எனக்கே "இரத்தப் படலம்" தொகுப்பில் ஓராயிரம் குறைகள் கண்ணில்படுகின்றன இன்றைக்கு !! அவ்விதமிருக்கையில் "எனது ஆக்கம் எவ்விதத்தில் குறைந்து போனது ?" என்ற உங்கள் கேள்வியின் பின்னணி புரிகிறது ; ஆனால் ஒரு பாட்டுப் போட்டியிலோ ; ஒரு ஓவியப் போட்டியிலோ தீர்ப்புகளை சொல்வதன் பின்னணியில் இருக்கக்கூடிய அதே காரணங்களே எனது தீர்மானத்திலும் இருந்தன என்பதைத் தாண்டி நான் என்ன சொல்ல முடியும் ?

      "தேர்வாகியுள்ள ஸ்கிரிப்ட் பிழையின்றியா உள்ளது ?" என்று ஏகமாய் கேள்விகள் எழுப்பியிருந்தீர்கள் என்னிடம் ! அதே ரீதியில் நானும் உங்களது எழுத்துக்களில் என்னளவுக்குத் தென்பட்ட குறைபாடுகளை பட்டியலிட்டால் அது உங்கள் உழைப்பின் மகிமையை குறைத்து எடை போட்டது போலாகி விடுமன்றோ ? அந்தக் குறைகளை ஓசையின்றி செப்பனிட்டு விட்டு, உங்களது உழைப்புகளை சிலாகிப்பது மாத்திரமே எனது நோக்கம் ! ஆனால் நீங்கள் நண்பர்களிடமும் சரி, என்னிடமும் சரி, ஏகமாய் விசனப்பட்டுள்ளதால் மட்டுமே இங்கே நான் இந்தச் சங்கடமான தலைப்பை திறந்திடும் அவசியம் எழுந்துள்ளது !

      இருவரது மொழிநடைகளிலுமே காமிக்ஸ் பக்கங்களில் ஏகமாய் திருத்தங்கள் அவசியப்பட்டுள்ளது என்பதே நிஜம் சார் ! ஒரே பிரேமில் ஒரு நபர் தூய தமிழில் பேச, அடுத்தவர் பேச்சு வழக்குத் தமிழில் பதில் சொல்வதும் பார்க்க முடிந்தது ! வசனங்களில் கதையை நகற்றிச் செல்லும் கோர்வை குறைவாகவே இருந்தது ! ஆனால் ஒரு எடிட்டராய் அவற்றை சரி செய்வதை நானொரு சிரமாகவே கருதவில்லை ! ஒட்டு மொத்தத்தில் நீங்கள் இருவரும் செய்துள்ள பணிகளின் பரிமாணத்தின் முன்னே இவையெல்லாமே கடுகளவுக் குறைகளாக மாத்திரமே எனக்குப் பட்டன !

      "எனது எழுத்திலிருந்தும் சம பங்கைப் பயன்படுத்திக் கொள்ளலாமே ? "என்ற உங்கள் வினவலுக்கு பின்னுள்ள மனவலி எனக்குப் புரியாதில்லை சார் ! ஆனால் இந்த இதழின் ஒவ்வொரு புள்ளியும், கமாவும் நாளை அலசலுக்கு உட்படப் போவது நிச்சயம் எனும் போது - பாராட்டுக்கள் யாரைச் சென்றடைவது ? விமர்சனங்களின் முகவரி யாருடையதாக இருக்குமோ ? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லையே சார் ! At least கட்டுரைப் பக்கங்கள் / காமிக்ஸ் பக்கங்கள் என்றதொரு சிறு பிரிவோடு களம் கண்டால் - அந்தந்த நிறை-குறைகள் சார்ந்த நண்பர்களின் சிந்தனைகள் அவரவருக்கு சரி வரச் சென்றடையுமல்லவா ?

      And டைப்செட்டிங் செய்து அனுப்பியதால் தான் தராசின் முள் மறு பக்கமாய் சாய்ந்ததா ? என்ற கேள்விக்கே இடம் கிடையாது ! அப்படிப் பார்த்தால் நண்பர் கணேஷ்குமாரின் ஸ்கிரிப்ட் கூட டைப்செட் செய்யப்பட்டது தானே ?

      அஷ்டமத்து சனியின் ஆதிக்கத்தில் நானிருக்கும் போது நெஞ்சையே திறந்து காட்டினாலும் என் எண்ணங்கள் தவறாகப் புரிபடுவது வியப்பை ஏற்படுத்தக் கூடாது தான் ; ஆனால் அந்த நடைமுறைக்குப் பழகிக் கொள்ளத் தான் சிரமமாக உள்ளது !

      Delete
    7. டியர் எடிட்டர் சார்


      இதை நீங்கள் ஏன் சார் எதார்த்தமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

      எமது மனக்குறைகளை உங்களிடமன்றி வேறு யாரிடம் சொல்வது.

      உங்களை மட்டுமல்ல
      என்னையும் சனீஸ்வரன் நன்றாகவே ஆதிக்கத்தினுள் வைத்துள்ளார்.

      ஆனால் நான் பல முறை கேட்டதை சொல்லியுள்ள நீங்கள் ஒரே முறை எமக்கு சொல்லியிருக்கலாமே.

      மற்றும் குறைகள் களையப்படத்தான் வேண்டும்.

      எமது குறைகளை சுட்டிக்காட்டினால் அடியேன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவனே.

      உங்கள் அளவு நானும் வருந்துகிறேன்.

      எனினும் இது என்னால் விளைந்ததல்ல.

      நான் இரண்டு நாட்கள் காத்திருந்தது தாங்கள் அறிந்ததே.

      Delete
    8. ஞாயிறு மாலை ஒரு கத்தையாக நீங்கள் அனுப்பிடும் வாட்சப் தகவல்களுக்கு துரித பதில் அவசியமென்று உங்களுக்குத் தோன்றுவதில் தவறில்லை சார் ; ஆனால் ஒரு ௫௧வயதுச் சாமான்யனுக்கும் - சொந்த வேலைகளென்றோரு சமாச்சாரமும் இருக்கக் கூடுமல்லவா ? அதன் முன்னே இரத்தப் படலங்களும், இன்ன பிற புலன்விசாரணைகளும் அத்தனை அவசரமானதாய்த் தோன்றாது போவது அத்தனை பெரிய மாபாதகமாகிப் போகுமா சார் ?

      நான் எடிட்டராக மாத்திரமே வலம் வருபவனல்ல சார் ; இன்னமும் தமக்கைகளுக்குச் சகோதரனாகவும், மருமக்களுக்குத் தாய்மாமனாகவும் உலவும் கடமையும் கொண்டவன் தானே !

      Delete
    9. உரலுக்கு ஒரு பக்கம் ; மத்தளத்துக்கு இரு பக்கங்கள் இடி என்று கேள்விப்பட்டுள்ளோம் ...! ப்ப்பூ ..அதெல்லாம் எம்மாத்திரம் ?

      மேலே....கீழே... பக்கவாட்டில்... குறுக்குவாட்டில்..நீளவாக்கில்.. அடிவாக்கில்...என்று சகலவாக்குகளிலும் சாத்து வாங்கும் ஜால வித்தைக்கு உலகளாவிய குத்தகையைத் தான் நம்பள் எடுத்திருக்கோமே !!

      Delete
    10. MAP,Steel.KoK,தலீவர் நன்றிகள் கோடி

      Delete
    11. செ அனா சாரக்காணோமே.

      Delete
    12. அது தான் சொல்லி விட்டீர்களே எடிட்டர் சார்.

      நன்றி for your belated reply.

      Whatever it may be , you have all powers, to justify yourside.

      God bless my dear sir

      Thank you

      Warm regards
      J

      Delete
    13. ஆகா நம்ப எடிட்டர் சார் வாடஸ் அப் எல்லாம் வைத்திருக்கிறார் போல. :-)

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. This comment has been removed by the author.

      Delete
  51. ஒரு புத்தகத்தை படிப்பதில் கூட பாலிடிக்ஸ்... ம்...

    கற்றதினால் ஆய பயனென் கொள்....

    ReplyDelete
    Replies
    1. குறள் யாருக்காக என்று தெளிவாக சொல்லலாமே எஸ். வி. வி அவர்களே ..!?

      Delete
    2. படிப்பவர் மற்றும் பாலிடிக்ஸ் செய்பவர் ஆகியோருக்காகத்தான் கி.ஆ.க. ...

      Delete
    3. மகிழ்ச்சி எஸ் வி வி அவர்களே! பாலிடிக்ஸினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பழிசுமப்போர் சார்பாக உங்களுக்கு வாழ்த்துகள் ..!!

      Delete
    4. சாத்து வாங்குவோர் சங்கத்தின் " நிரந்தரக் கொ .ப.செ வை மறந்து விட்டீர்களே மேச்சேரிக்கார் ?

      Delete
    5. அச்சச்சோ..!

      மறக்கவோ மறுக்கவோ முடியாத அளவுக்கு இஸ்ட்ராங்கான போஸ்டிங் ஆச்சே சார் அது..!! -:)





      Delete
    6. எனக்கென்னவோ அந்த சங்கத்துல ஆசிரியருக்கு கொ. ப. செ. மட்டுமல்ல தலைவர், பொது செயலாளர், பொருளாளர், நிரந்தர உறுப்பினர்னு எல்லா போஸ்டும் குடுத்துட்டு மத்தவங்க எஸ்கேப் ஆயிட்டாங்கன்னு தோணுது.

      Delete
    7. விஜயன் சார், // சாத்து வாங்குவோர் சங்கத்தின் " நிரந்தரக் கொ .ப.செ வை மறந்து விட்டீர்களே மேச்சேரிக்கார் ? //

      அதனை என்றும் என்னால் மறக்க முடியாது சார்.

      Delete
  52. மொழிபெயர்த்த மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
    - திரு.கார்த்திகைப் பாண்டியன், கோவை
    - J. என்ற திரு.ஜனார்த்தனன், குடந்தை
    - திரு.கணேஷ்குமார், பெங்களுர்

    ReplyDelete
  53. பகிர்வுக்கு நல்ல வேலை நன்றி

    Best WordPress Security Plugins 2018

    ReplyDelete
  54. மொழிபெயர்த்த நண்பர்கள் கார்த்திகை பாண்டியன், ஜனார்த்தனன் மற்றும் கனேஷ்குமார் ஆகிய மூவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  55. உலக நாட்டாமை ட்ரம்பை தான் பஞ்சாயத்து பண்ண கூப்பிடணும் போலிருக்கே!

    ReplyDelete
    Replies
    1. அவரும் கு கிளாஸ் கிளான் தான்.

      Delete
  56. சாத்து வாங்குவோர் சங்கத்தின் " நிரந்தரக் கொ .ப.செ வை மறந்து விட்டீர்களே மேச்சேரிக்கார் ?

    ######


    சார்...நான்தான் சொன்னேனே புவி பதிவுன்னா கொஞ்சம் சூடாகும்ன்னு.ஆனா சூடு நானே எதிர்பாராத இடத்தில் இருந்து வந்துவிட்டது தான் சர்ப்ரைஸ்..:-)


    இப்பொழுது புரிந்து கொண்டாரே .அதுவரையிலும் மகிழ்ச்சி :-)

    ReplyDelete
    Replies
    1. கோபம் தீரவில்லை போலுள்ளது. விரைவில் தணிந்து சரியாகிவிடும்.

      Delete
    2. அப்புறம் மொழிபெயர்த்தது மட்டுமன்றி, அதனைத் தட்டச்சும் செய்து அனுப்பிய நண்பர் கா.பா.வுக்கு நமது அன்பும், பரிசின் முக்கிய பங்காய் ரூ.9000/- ம் அறிவிப்பது பொருத்தமென்று நினைத்தேன்.

      Delete
    3. தலீவர மற்றும் ஜெகாங் இதை என்ன வென்று சொல்வீர்கள்.

      Delete
    4. அன்பின் ஜெ சார்,

      வணக்கம். நீங்கள் இத்தனை மனக்கசப்பு அடைய வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். இருவரில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மற்றவர் மனம் சுணங்கக்கூடாது என்பதற்காகவே ஆசிரியர் நம் இருவருடைய ஆக்கங்களையும் பயன்படுத்த விழைகிறார். நாம் பெரிதும் மதிக்கும் காமிக்ஸில் பணிபுரிந்திருக்கிறோம் என்பதைக் கொண்டாட வேண்டிய சமயத்தில் தேவையின்றி ஏன் சங்கடப்பட வேண்டும்? பதிவு முழுக்க நம் இருவருடைய பங்களிப்புகளையும் சமமாகப் பாவித்தே ஆசிரியர் எழுதி இருக்கிறார். பரிசுத்தொகையைப் பகிர்ந்தளப்பதில் இந்த வித்தியாசத்துக்கான அடிப்படை காரணங்கள் என்னவென்பதை ஆசிரியர் மட்டுமே அறிவார். நிச்சயமாகத் தட்டச்சு செய்ததற்காக இந்தக் கூடுதல் தொகை இல்லை என வெளிப்படையாகவே அவர் சொல்லவும் செய்து விட்டார். இதற்குப் பிறகும் இந்த மனக்கசப்பை நீடிக்க விட வேண்டுமா? “உனக்கென்ன.. பேசுவாய்.. கூடுதல் தொகை என்கிற திமிரில் பேசுகிறாய்” என்றெல்லாம் தயவு செய்து நினைக்காதீர்கள். என்னை அறிந்தவர்களுக்கு என் இயல்பு நன்றாகத் தெரியும். எழுத்தின் வழியாக நான் இதுவரை ஒரு பைசா சம்பாதித்தது கிடையாது. சொல்லப்போனால் எழுத்துக்காக எனக்குக் கிடைக்கும் இரண்டாவது சன்மானம் இதுதான். இலக்கியம் என்பது பணம் சம்பாரிக்க அல்ல எனத் தீவிரமாக நம்புகிறவன் நான். எனவே இந்தப் பரிசுத்தொகை விவகாரத்தைச் சுட்டி இனிமேலும் நீங்க மனம் வருந்த வேண்டாம் என்று வேண்டுகிறேன். உங்கள் இளவல் நான் என்று எண்ணுவதாலேயே உரிமையோடு கேட்கிறேன். காமிக்ஸில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். ஆசிரியரோடு இந்தப் பயணத்தில் சேர்ந்து பயணிப்போம் என்கிற நம்பிக்கையோடு. உங்களுக்கு என் அன்பும் நன்றியும்.

      பிரியமுடன்,
      கா.பா

      Delete
    5. இல்லவே இல்லை கா பா

      எம் எழுத்தை விட நுமது தமிழ் அவரை க் கவர்ந்து விட்ட மன வருத்தமேயன்றி கசப்பெல்லாம் ஒன்றுமே இல்லை ஐயா.

      Delete
  57. சார்! டைமண்ட் ஸ்பெசலில் இடம்பெறும் கதைகள் பற்றிய விவரங்களை ஜூலை இதழ்களில் காண முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. (தூக்கம் முழுவதும் கலையாத காலை நேரம் டைப் செய்ததில் தவறாகிவிட்டது)

      டைனமைட் ஸ்பெஷலுக்கு டைமண்ட் ஸ்பெஷல் என்று டைப்படித்துவிட்டேன்.

      Delete
    2. அதில் தவறேதும் இல்லை.dynamite special இதுவரை வந்துள்ள டெக்ஸ் கதைகளில் வைரம்தான்.

      Delete
  58. ஜம்போ ஸ்பெஷல் முதல் இதழைக்காண ஆவலாய் இருக்கிறேன்.15 தேதியில் கிளம்பிவிடும்தானே ..எப்படியும் கைக்கு கிடைக்க 18 ஆகிவிடும் ..பார்ப்போம் .

    ReplyDelete
  59. யப்பா சாமி!

    ஒரு வழியாக பற்பல நெருக்கடிகளுக்குப் பிறகு "இரத்தப்படலம்" பாக்கி பணம் கட்டியாச்சு!!

    ReplyDelete
    Replies
    1. இனி ஜம்முனு ஈரோடு புக் ஃபோ்க்கு கெளம்ப தயாராகிடலாம்!!

      Delete
  60. பிரியமுடன் ஒரு பிரளயம் - அமைதியான லண்டன் நகரம் அடுத்த சில காட்சிகளில் பூம் பூம் பூம் அடுத்த காட்சியில் ஏர்போர்ட் இரண்டு பெண்களுக்கு இடையிலான சந்திப்பு அதற்கு அடுத்த காட்சியில் லார்கோ லாரெண்ட் உடன் சந்திப்பு. இந்த ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத காட்சிகள் எப்படி ஒரு நேர்கோட்டில் சந்திக்கிறது என்பதை பிரியமுடன் சொல்லி உள்ளார் ஆசிரியர். இந்த கதையில் பிரியமான சந்திப்புதான் கதையின் திருப்புமுனையாக உள்ளது. எனவே அந்த பிரியமுடன் உள்ள காட்சிகளை ஒதுக்கி வைக்க முடியவில்லை.

    பெரிய ஆக்சன் காட்சிகள் இல்லை என்றாலும் கதை விறுவிறுப்பாக செல்வது போல அமைத்தது சிறப்பு.

    லார்கோ இருக்கிறார் ஆனால் தாடி இல்லாத தேவதாஸாக. வழக்கமான லார்கோவை எதிர்பார்க்காமல் வாசித்தால் ரசிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. சில்கி மற்றும் சைமன் இந்த கதையில் ஒரு தேவையில்லாத இடைச்சொருகல்;

      டொமெனிக்கோ வடித்த சிலையை லார்கோ அலுவலகத்திற்கு வானில் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வருவது அட்டகாசமான கற்பனை.

      Delete
    2. கதை பற்றி ஒன் லைன் - லார்கோ மற்றும் ஒரு லேடி S

      Delete
    3. ///கதை பற்றி ஒன் லைன் - லார்கோ மற்றும் ஒரு லேடி S///

      நச்!!

      Delete
  61. பிரியமுடன் ஒரு பிரளயம் - கேள்விகள்
    1. லாரெண்ட் லார்கோ வின்ச் கம்பெனியில் சேராமல் திடீர் என விலகியது ஏன்?

    ReplyDelete
    Replies
    1. 2. லாய்டீ உண்மையில் யார்?

      3. கோக்ரைனை மிரட்டிய புகைப்படங்களை மிஸ் பென்னி எப்படி மீட்டுக் கொண்டு வந்தார்.

      Delete
    2. /// 1. லாரெண்ட் லார்கோ வின்ச்
      கம்பெனியில் சேராமல் திடீர் என
      விலகியது ஏன்? ///

      எனக்கும் அது புரியவில்லை. எனக்கு 3 சந்தேகங்கள் இருந்தது.
      1. அந்த லாரெண்ட்டின் செய்கையில் சந்தேகம். ஒருவேளை அவர் எதிர்தரப்பு ஆளாக இருப்பார்.
      2. லாரெண்ட் வேறு சாகசத்தில் தோன்றுபவர். ஆதலால் அவரையும் லார்கோவையும் இணைக்க விரும்பாமல் ஆசிரியர் அவரை கௌரவ தோற்றத்தில் சேர்த்திருக்கலாம்.
      3. லார்கோவின் W குழுமத்து நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து அவர் விலகியிருக்கலாம். லார்கோ கதை விஷயத்தில் தனக்கே அதிருப்தி ஏற்பட்டு தான் விலகுவதை ஆசிரியர் அந்த கதாபாத்திரத்தின் மூலம் உணர்த்தியிருக்கலாம்.

      /// 2. லாய்டீ உண்மையில் யார்? ///
      CIA-வுக்காக வேலை பார்ப்பவள்.

      /// 3. கோக்ரைனை மிரட்டிய
      புகைப்படங்களை மிஸ் பென்னி
      எப்படி மீட்டுக் கொண்டு
      வந்தார். ///

      கதையில் பென்னி விங்கிள் இரண்டாம் முறையாக ஆர்தரின் வீட்டிற்கு செல்வாரே.. அந்த சம்பவத்தை மறந்துவிட்டீர்களோ! (அல்லது) நீங்கள் கதையை ஒருமுறை மட்டுமே படித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. அந்த பக்கத்தின் எண்ணை சொல்ல புத்தகம் இப்போது என்னிடம் இல்லை. பென்னி விங்கிள் தன் தந்தையின் அறையில் இருப்பது தெரியாமல் ஈவா உளறிவிடுவாள். பிறகு அம்மணி ஸ்டண்ட் செய்து அந்த படங்களை மீட்டிருப்பார்.

      Delete
    3. // கதையில் பென்னி விங்கிள் இரண்டாம் முறையாக ஆர்தரின் வீட்டிற்கு செல்வாரே //
      இரண்டாவது முறை செல்லும் போது தான் அவள் காதலனின் மகள் இந்த விபரத்தை சொல்லி கொண்டு வீட்டில் நுழைவாள். ஆனால் என்ன சாகசம் செய்து அவைகளை மீட்டு வந்தார் என்பது எனது கேள்வி.

      Delete
    4. /// 1. லாரெண்ட் லார்கோ வின்ச்
      கம்பெனியில் சேராமல் திடீர் என
      விலகியது ஏன்? ///

      Jagath Kumar13 June 2018 at 23:54:00 GMT+5:30

      லார்கோ கதை விஷயத்தில் தனக்கே அதிருப்தி ஏற்பட்டு தான் விலகுவதை ஆசிரியர் அந்த கதாபாத்திரத்தின் மூலம் உணர்த்தியிருக்கலாம்./////

      மெத்த சரி !!!
      லாரண்ட் கதாபாத்திரம் வான் ஹாமேவின் மனக்குரல் ---இக்கதையை பொறுத்தவரை ...
      Dupuis மற்றும் பிலிப் பிராங்க் இருவருக்கும் செய்தி சொல்ல வந்தவர் போல் தோன்றுகிறது ..


      Delete
    5. /// 2. லாய்டீ உண்மையில் யார்? ///
      CIA-வுக்காக வேலை பார்ப்பவள்.///////////////

      அல்ல !!!!

      சாய்டி கேவல் சி ஐ ஏ – க்காக வேலை பார்ப்பவள் அல்ல ..
      சி ஐ ஏ –க்காக வேலை பார்ப்பதாக ரெய்னால்ட்ஸ் மூலம் நம்ப வைக்கப்பட்டவள் ...

      ( ராபர்ட் லட்லம் –ன் ஒரு நாவலின் மூலமே இதுதான் ...ஒரு பெரிய ஏஜன்சி ..அதில் பல உளவாளிகள் , நிர்வாகிகள் அனைவருமே அமெரிக்கர்கள் ..தாய்நாட்டுக்காக அனைவரும் ரகசிய பணியில் ஈடுபடுவதாக நினைத்து செயல்புரிய கதை வேறு மாதிரி போகும் )
      சாய்டி கேவல் பெயர் அதிகாரப்பூர்வமாக சி ஐ ஏ ரெக்ரூட் லிஸ்டில் இல்லை என கதையில் சொல்லப்படுகிறது ...
      லண்டனில் உள்ள ஒரு ஜிகாத் குழுவில் போலி தகவல்கள் மூலம் சி ஐ ஏ ஏஜன்ட் ரெய்னால்ட்ஸ் மூலம் ஊடுரிவியவள்....
      ரெய்னால்ட்ஸ் –ன் இச்செயல் அவனது சுய லாபத்துக்காகாக செய்யப்பட்டது ...

      Delete
    6. 3. கோக்ரைனை மிரட்டிய புகைப்படங்களை மிஸ் பென்னி எப்படி மீட்டுக் கொண்டு வந்தார்.///



      Corporate espionage என்பதில் honeytrap என்பதை உபயோகபடுத்துவதில் எந்த நாடும் சளைத்தது அல்ல ..சீனர்கள் இதில் அதிகம் ஈடுபடுவார்கள்
      ஹனி ட்ராப் என்பது ஒரு கவர்ச்சியும் வனப்பும் மிக்க ஆண் அல்லது பெண்ணை பயன்படுத்தி எதிர்பாலினத்தை சேர்ந்த ஒருவரை மயக்கி தனக்கு உகந்த செயல்களை செய்ய செய்வது ..

      (ஆணுக்கு ஆண் என்ற விஷயத்தையும் சீனர்கள் உபயோகப்படுத்தியிருப்பது இணையத்தில் உள்ளது )
      வால்டர் & சுசி பேக்ஸ்டர் ஜோடி இதில் கரை கண்டவர்கள் .
      ஏற்கனவே மணமான ஆண் அல்லது பெண்ணை மயக்கி அதற்கான சாட்சியங்களை காட்டி அவர்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள் ..
      பொதுவாக இத்தகைய நபர்கள் வன்முறையாளர்கள் அல்ல ..
      பணத்தை வாங்கி கொண்டு சாட்சியங்களை கொடுத்துவிட்டு ஓடி விடுவார்கள் ..
      கோக்ரைன் கூட தான் இருக்கும் அலங்கோல நிலை போட்டோக்களை சுசி எடுப்பது இந்த பணம் பறிக்கும் நோக்கத்தில்தான் .
      (சீனர்கள் பணம் கொடுக்க போகிறார்கள் என்ற நிலையிலும் தொழில் புத்தி சுசிக்கு போகவில்லை )
      பென்னி விங்கிள் எந்த சாகசமும் செய்ய தேவையில்லை ..
      பிளாக்மெயிலை பொறுத்தவரை சம்பந்தபட்ட நபர்களுக்கு மட்டுமே விஷயம் தெரிந்து இருக்க வேண்டும் ..
      மூன்றாம் நபருக்கு தெரிந்துவிட்டால் அந்நபர் பணத்தில் பங்கு கேட்பார் ..
      இங்கு விஷயம் தெரிவது பென்னிவிங்கிளுக்கு ...பணம் கொடுத்து –பங்கு கொடுத்து சரிக்கட்ட முடியாது – பென்னிவிங்க்கிள் மேல்மட்ட வர்க்கம் –அதிகாரமும் பணபலமும் உள்ள ஒரு கம்பனியின் மிக மிக மேல்மட்ட அதிகாரி ...ஒரு போன் செய்தால் போதும் சுசியை அள்ளி கொண்டு போய்விடுவார்கள் போலிஸ்காரர்கள் ..
      பென்னியின் வால்டர் மீதான மோகம் மட்டுமே அதை செய்யாமல் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் ..
      வால்டர் தனது வயதினால் கிடைத்த அறிவின் மூலம் இதை உணர்ந்து சுசியிடம் உள்ள போட்டோக்களை வாங்கி பென்னியிடம் கொடுத்து இருக்க வேண்டும் ...( வால்டர் & சுசி வன்முறையை கடைப்பிடிப்பவர்கள் அல்ல )
      பென்னியின் அண்மையால் தனக்கு பல சங்கடங்கள் விளையும் என்பதை அறிந்திருக்கும் வால்டர் சுசியை கூட்டி கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனதில் வியப்பில்லை ...

      Delete
    7. // ஒரு போன் செய்தால் போதும் சுசியை அள்ளி கொண்டு போய்விடுவார்கள் போலிஸ்காரர்கள் ..//

      இதற்கு முன் பிடிபட்ட போது ஆனால் அடுத்த நாளே அவர்கள்/அவள் தப்பிவந்து மறுபடியும் கோக்ரைனை மெரட்டி பணம் பறிக்கவந்தாளே? அதனால் தான் எங்கு இங்கு சந்தேகம், பென்னி சாகசம் ஏதாவது செய்து அதனை பறித்து வந்து இருக்கலாமோ என!??

      Delete
    8. ///இதற்கு முன் பிடிபட்ட போது ஆனால் அடுத்த நாளே அவர்கள்/அவள் தப்பிவந்து ///

      தப்பவெல்லாம் இல்லை ....

      அவர்கள் மேல் புகார் கொடுத்தால் முழுக்க என்ன நடந்தது என்பதை சொல்ல வேண்டி வரும் , பத்திரிகைகளில் வெளியாகும் ,அதனால் லார்கோ குழுமத்துக்கு அவப்பெயர் வருமென்பதாலேயே லார்கோ போலீசில் புகார் கொடுக்கவில்லை ..
      ஆனால் போலிசுக்கு நடந்தது தெரியும் .( ஸ்கார்ட்லாண்ட் யார்ட் ) லார்கோ கேட்டு கொண்டதின் பேரிலேயே போலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை ...

      ஆனால் இங்கு பாதிக்கப்படபோவது கோக்ரைன் ...

      பென்னியால் கோக்ரைன்னுக்கு பாதிப்பு ஏற்படுவதை பார்த்து சும்மா இருக்கமுடியாது

      பென்னியின் மோகம் வால்டர் மேல்தான் ..

      சுசியை போலீசில் போட்டு கொடுத்து சும்மா மிரட்டி வையுங்கள் என்று சொன்னாலே போதும் ..

      வேறு ஏதாவது கேசில் அவர்களை உள்ளே வைத்துவிடுவார்கள் ..

      பென்னியின் சமுதாய அந்தஸ்து அப்படி ...

      Delete
    9. // லார்கோ கேட்டு கொண்டதின் பேரிலேயே போலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை ...//
      Agreed.

      Delete
  62. சேர நாடு பகுதியிலிருந்து நண்பர் கா பா சார்
    சோழ வள நாடு பகுதியிலிருந்து நண்பர் ஜனா சார்
    பல்லவ நாடு பகுதியிலிருந்து நண்பர் கணேஷ்குமார் சார்
    மூன்று எழுத்து வேந்தர்களுக்கும் மனப்பூர்வமான பாராட்டுகள் !!!!!!

    ReplyDelete
    Replies
    1. வாவ் !!!

      எப்பேர்ப்பட்ட சிந்தனை இது.வித்தியாசமான முறையில் சிந்தித்து, அதை சுவையான முறையில் வெளிப்படுத்தும் அழகு அபாரமானது.

      Delete
    2. செ அ எப்பொழுதும் போலவே மானசீகமாக உங்களை கட்டி அணைக்கிறேன்.

      Delete
    3. @ செனா அனா

      செமனா அருமைனா

      Delete
  63. மிகுந்த பணிவுடன் உங்கள் உள்ளம் நிறைந்த பாராட்டுகளை ஏற்றுக் கொள்கின்றேன்.

    தமிழ் தரு திருவே
    திருவின் உருவே
    செல்வமிகு அபிராமியே
    தலை தாழ்கிறேன்

    ReplyDelete
  64. டெக்ஸ் வில்லர்.

    கொளுத்திப் போட்ட பட்டாசு, பரபரவென பற்றிக் கொண்டதைப் போல, எடுத்த எடுப்பிலே 'திடும் 'மென ஆரம்பிக்கும் வேகம் , கடைசி வரை 'நான் ஸ்டாப் 'பாக பறக்கிறது.

    கோச்சு வண்டியே மையமான ஒற்றைப் புள்ளியாக இருந்தாலுமே.அதைச் சுற்றியும் தோட்டாக்கள் பறக்க, புழுதி பறக்க ,குதிரை பறக்க, உண்டான 30 புள்ளி கோலம் போல தகதகக்கிறது.

    டெக்ஸ் வில்லர் கொஞ்சம் அடக்கி வாசிப்பது மிகவும் ஈர்க்கிறது.

    வில்லரும் லிட்டில் உல்ஃபும் நேருக்கு நேர் சந்திக்காமல் இருந்தாலுமே, அந்தக் குறை தெரியவில்லை

    ReplyDelete
  65. சார் ஜம்போ எப்போ ஜம்பிங் ஆகும்.

    ReplyDelete
  66. இனிமையான குணங்களை ஒருங்கே கொண்டவரும்,
    எல்லோருக்கும் பிடித்தவரும்,
    இரத்தத்தில் ஊறிய நகைச்சுவை உணர்வால் நம் எல்லோரையும் கலகலக்கச் செய்பவரும்,
    மேச்சேரியின் தாதாவுமாகிய

    கிட் ஆர்டின் கண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணன்.

      Delete
    2. // மேச்சேரியின் தாதாவுமாகிய //
      தாதாவா,ஹி,ஹி,வேற மாதிரி படிச்சிட்டேன்.

      Delete
    3. ஹிஹி!! எப்படிப் படிச்சாலும் சரியா பொருந்திப் போவாரு நம்ம கண்ணரு!!

      Delete
    4. திரு.KiD ஆர்டின் KannaN சார்@ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார்...💐

      Delete
    5. திரு.கிட் ஆர்டின் கண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.

      Delete
    6. திரு.KiD ஆர்டின் KannaN சார்@ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார்...💐

      Delete
    7. நல் வாழ்த்துகள்

      வாழ்க வளர்க

      Delete
    8. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணன்!

      Delete
    9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்ணரே...:-)

      Delete
    10. கண்ணன் சார் அவர்களுக்கு
      இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத்
      தெரிவித்துக்கொள்கிறேன்!

      Delete
  67. நகைச்சுவை மன்னன் கிட் ஆர்ட்டின் கண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

    ReplyDelete
  68. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணன்

    ReplyDelete
  69. இறுதியாக வந்த இம்மாத லார்கோ சூப்பரோ ,சுமாரோ இல்லை பரவாயில்லை ரகமோ எதுவாக இருப்பினும் இந்த இதழ் வருவதற்குள் இதுவரை வந்த மொத்த லார்கோ கதைகளையும் படித்து விட வேண்டும் என்ற எண்ணமும் ,ஆர்வமும் வந்ததே எனக்கு மகிழ்ச்சிதான் எனலாம்.இம்மாத லார்கோ இதழை படிப்பதற்குள் அனைத்து இதழ்களையும் படித்து ரசிக்க நேரம் போதாமை காரணத்தால் அந்த இதழை படித்து முடித்து பின்...., முன் இதழ்களை வாசிக்க நேர்ந்தது.

    என்பெயர் லார்கோ முதல் கடன் தீர்க்கும் நேரம் வரை தொடர்ந்து அந்த பில்லியனருடன் சுற்றிய அனுபவத்தில் சைமன் ,பென்னி ,சில்க்கி ,சல்லீவன் ,பழைய பைலட் நண்பன் என்றில்லாமல் ஒட்டுமொத்த W குழும உறுப்பினர்களும் கூட ஏதோ நெருங்கி பழகியவர்கள் போல் ஓர் உணர்வு.ஒவ்வொரு சாகஸத்திலும் லார்கோவிற்கு வரும் சோதனைகளும்,எதிர்பாரா வில்லன்களும் ,அதில் இருந்து அவர் தப்பித்து நினைத்ததை முடிப்பதும் வாவ் அட்டகாஸம் .முன்னர் ஓரிரு இதழ்கள் முதல்முறை படிக்கும் பொழுது கொஞ்சம் மெதுவாக செல்கிறதோ என்ற எண்ணம் ஏற்பட்ட இதழ் கூட இப்பொழுது பரபர வென நகர்ந்து சென்றது உண்மை.இம்மாத பல நாட்களில் லார்கோவுடன் பல நாடுகளுக்கு பயணம் செய்த அனுபவம் சத்தியமாக சொல்கிறேன் சார் இன்றைய எனது பல நெருக்கடிகளை மறக்க செய்தது எனில் மிகையல்ல.

    முன்பாக இதழ்களை போல இம்மாதம் லார்கோவின் அதிரடி சாகஸம் எதுவுமே இல்லை என்றாலும் ,மதிப்பிற்குரிய பென்னியின் சாகஸங்கள் அவர் மதிப்பை குறைப்பது போல காணப்பட்டாலும் ,சைமன் இந்த படைப்பில் எதற்கு தலைகாட்டினார் என புரியாவிட்டாலும்

    ஐ லவ் லார்கோ ....


    பழைய பன்னீர்செல்வமா திரும்ப வாங்க லார்கோ சார்...



    ஐயம் வெயிட்டிங்..

    ReplyDelete
    Replies
    1. தமில் நாடு துனா முனாவா ஆயிட்டவர போயி பழைய பனா செனாவா வாங்கன்னா , அவர் பாட்டுக்கு தியானம் பண்ணப் போயிடப்போறாரு சாமியோவ்....

      Delete
  70. வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி ..!!

    😍😍😍🙏🙏🙏😍😍😍

    ReplyDelete