Saturday, June 02, 2018

ஹல்லோ ஆய்வாளர்களே....!!

நண்பர்களே,

உஷார் : இது மாமூல் பதிவல்ல !!! 

வணக்கம். நொய்-நொய்யென்று பத்தி பத்தியாய் பதிவுகளை எழுதித் தள்ளிடும் பழக்கத்திலிருந்து இந்த வாரம் ஒரு சின்ன பிரேக் ;  படங்களே இம்முறை  நமக்குப் புகலிடமாக இருந்திடப் போகின்றன !! என்ன படங்களென்று கேட்கிறீர்களா ? சொன்னால்ப் போச்சு !! 

சமீப காலங்களில் நமது காமிக்ஸ் ரசனைகளை ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் வன்மேற்கின் முரட்டுக் கௌபாய்களே என்பதில் no secrets !! நம்ம உசிலம்பட்டிக்கு வழி தெரியுமோ இல்லையோ - நம்மில் பலருக்கு ஓக்லஹோமா எங்கிருக்கென்று தெரியும் ! இங்கிருக்கும் தாராபுரத்தைக் கண்ணில் கூடப் பார்த்திராதோருக்கும் டெக்ஸாஸ் ரொம்பவே பரிச்சயம் !  நெய்வேலிக்குப் பக்கத்து ஊரெது என்று தெரியாவிடினும், நமக்கு நெப்ராஸ்க்கா பற்றி நன்றாகவே தெரியும் ! So இந்த காமிக்ஸ் வன்மேற்கோடு ஊறிப் போன நமக்கு - அந்நாட்களது நிஜ வன்மேற்கையும் ஆராயப் பிடிக்குமென்று பட்டது !! அதன் பலனாய் நெட்டை நோண்டிய போது சிக்கியவைகளே  இந்தப் புகைப்படப் பொக்கிஷங்கள் !! ஜாலியாய் ஒரு ரவுண்ட் அடிப்போமா guys - ஸ்டேஜ்கோச் ஒன்றில் ஏறி ? 

சக்கரங்கள் 4 .....குதிரைகளும் 4 ...சவாரி செய்வோரோ....????

அமெரிக்கா ஒரு அகண்ட பூமி எனும் போது அங்கே பயணங்கள் துயரங்களுக்கான உத்திரவாதத்தோடு தான் வந்தன ! தண்டவாளங்கள் நிர்மாணிக்கப்பட்டு, அவற்றின் மீது ரயில் எஞ்சின்கள் தட தடக்கத் துவங்கிய வரையிலும், நெடுந்தொலைவுகளைக் கடக்க ஸ்டேஜ் கோச் ஒன்றே மார்க்கம் என்றாகிப் போனது !! காமிக்ஸ் கதைகளில் நாம் பார்த்து ரசிக்கும் சவுகரியமான சமாச்சாரங்களல்ல இவை என்பது தொடரும் போட்டோக்களைப் பார்க்கும் போதே புரிந்திடுமென்று நினைக்கிறேன் !! இம்மி இடம் கூட காலியிடம் இல்லாது - வண்டியின் உள்ளேயும் சரி, வெளியேவும் சரி ஜனம் நெருக்கியடித்து அமர்ந்திருப்பதைப் பாருங்களேன் ? "நடமாடும் நரகம்" இதழில் நமது 'தல' சிட்டிங்கில் வருவது ஏனென்று இப்போது புரிகிறது !!! கற்பனை பண்ணித் தான் பாருங்களேன் - இந்த முதல் போட்டோவிலுள்ள கோச்சு வண்டியில் நம்மவரை !! 

அது மாத்திரமன்றி, டாப்பில் ; டிக்கியில் என்று சரக்கு பண்டல்களைப் போட்டுக் குமிக்கும் இன்றைய நமது ஆம்னி பஸ்களுக்கு முன்னோடிகள் அந்நாட்களிலேயே இருந்ததும் தெளிவாகிறது ! வண்டியின் பின்பக்கம்  ஏற்றப்பட்டிருக்கும் பொதியினை பார்த்தாலே கிறுகிறுக்கிறது !! தகிக்கும் வெப்ப நாட்களில் பாலைவனங்களையும், பள்ளத்தாக்குகளையும் இவை லொடக்கு-லொடக்கென்று கடப்பதற்குள் அந்தப் பயணிகள் பட்டிருக்க வேண்டிய அவஸ்தைகளை கற்பனை செய்து பாருங்களேன் ? நாம் என்னடாவென்றால், இன்றைய AC ஸ்லீப்பர் பஸ்களில் மெத்தை சொகுசாயில்லை என்று விசனப்பட்டுக் கொள்கிறோம் !! 
 எத்தனை தபா ஜாலி ஜம்பரை இப்படிப் பார்த்துள்ளோம் ?!!


வன்மேற்கின் வசதிகள் !!

அதற்காக அந்நாட்களில் ஒட்டு மொத்தமாய் வாழ்க்கையே போராட்டமாய் இருந்ததென்றும் சொல்ல முடியாது போலும் ! பாருங்களேன் பளிச்சென்று டாலடிக்கும் அந்நாட்களது ஹோட்டல் ஒன்று ! Maybe டெக்ஸும், கார்சனும் இது போன்ற விடுதிகளில் தங்கித் தான் வறுத்த கறியை வெளுத்து வாங்குவரோ - என்னவோ ?


அந்நாட்களது வெள்ளையர் குடும்பத்தில் ஒன்று....! அபாச்சே பணியாளுடன் ! 
அன்றைய பள்ளிக்கூடம் !! இதில் தான் சுட்டி லக்கி படித்திருப்பானோ ?
சலூன்களில்....!

நகரங்களும், நாகரீகங்களும் வேர் விடத் துவங்கிய பிற்பாடு நமது கௌபாய்களுக்கு தாகசாந்தி முக்கியமன்றோ ? பொழுது போக்கென்று வேறெதுவும் இல்லா அந்நாட்களில் சலூன்களில் 'சரக்கடிப்பது' ; சீட்டாட்டம் ; சூதாட்டம் ; குத்தாட்டம் என்று ஏகமாய் ரகளை கட்டியுள்ளது ! அடுத்த முறை நமது கதைகளில் சலூனில் தகராறு அரங்கேறும் காட்சிகள் வந்தால், அவற்றை இன்னமும் தத்ரூபமாய் உருவகப்படுத்திட இந்த போட்டோக்கள் உதவிடுமென்று படுகிறது !! So ஒரு லக்கி லூக் பார் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே சுடுவதையோ  ; ஒரு டைகர் சீட்டாட்ட மேஜையிலிருந்து கொண்டே ஏழரையை இழுத்து விடுவதையோ ; நம்ம  'தல' கம்பீரமாய் சவால் விடுவதையோ இந்த நிஜங்களோடு இணைத்திடும் போது, நிச்சயம் ஒரு சதவிகிதமாவது த்ரில் factor கூடிடும் - at least எனக்காவது !அன்றைய டான்ஸ் அழகிகள் !!

சட்டமும்....குற்றமும்...!

அந்நாட்களில் பூமியும் கரடுமுரடாயிருந்தது ; போக்கிரிகளும் கரடு முரடாயிருந்தனர்  ; சட்ட பரிபாலனமுமே அதே லட்சணத்தில் தான் இருந்துள்ளது ! சிக்கிடும் முதல் புளிய மரத்திலோ, ஆலமரத்திலோ கழுத்தில் சுருக்கைக் கட்டித் தொங்க விடுவது மக்களுக்கொரு ஆதர்ஷப் பொழுதுபோக்காக இருந்து வந்துள்ளது ! கீழே உள்ள முதல் போட்டோவில் இருப்பது வன்மேற்கின் பிரசித்தி பெற்றதொரு நபரான ராய் பீன் எனும் நீதியரசரின் (!!!) நீதிமன்றம் ! அதாவது சலூனாய் இல்லாத நேரங்களில் நீதிமன்றமாக டபுள் ஆக்ட் கொடுத்ததென்று வைத்துக் கொள்ளலாம் ! சுவாரஸ்யமான இந்த ஆசாமியின் சட்ட ஞானமும் சரி ; தீர்ப்பு வழங்கும் துரிதமும் சரி - இன்றைய நீதியரசர்களைப் புல்லரிக்கச் செய்யும் ரகம் !! Revised Statutes of Texas என்ற ஒரேயொரு சட்டப் புத்தகம் மட்டுமே இவருக்குத் துணையாம் ; அதிலிருந்து மனுஷன் என்ன புரிந்து கொள்கிறாரோ - அதுவே அன்றைக்குத் தீர்ப்பு !! சட்டு புட்டென்று கேஸை முடித்து விட்டு சலூனை ஓட்டும் அவசரமோ - என்னவோ ? (இவர் சார்ந்ததொரு சாகசம் நமது லக்கி லூக் தொடரில் உள்ளது ; maybe அடுத்த வருஷம் அதை முயற்சித்துப் பார்க்கலாமா  ?) 
இந்த ஆசாமி யார் தெரியுமோ ? "கோச் வண்டியின் கதையில்" ஒரு வெள்ளை முகமூடி போட்டுக் கொண்டு கவிதை சொல்லியே கொள்ளையடிக்கும் ஒரு வில்லன் வருவானல்லவா ? அவனே இவன் ; இவனே அவன் !! பெயர் சார்லஸ் ஏர்ல் பௌல்ஸ் (அல்லது) ப்ளாக் பார்ட்)

ஜெஸ்ஸி ஜேம்ஸ்

1897 -ல் விர்ஜினியாவில் நடைபெற்ற கடைசி பொதுவெளித் தூக்குத்தண்டனை ! தூக்கு மேடைக்கு மேலேயும் சரி,,,கீழேயும் சரி, என்னவொரு கூட்டம் !!

வேகன் டிரெயின் ; அப்புறம் நிஜ டிரெயின் : 


ஒற்றை ஸ்டேஜ் கோச் பற்றாது ; குடும்பங்கள் மொத்த மொத்தமாய் இடம் பெயரும் அவசியங்கள் நேரும் போது - வேகன் டிரெயின்களே பயன்படுத்தப்பட்டன ! (லக்கி லூக் Newlook ஸ்பெஷலின் கதை நினைவுள்ளதா ?) வரிசை கோர்த்து வண்டிகளில் மக்கள் புலம் பெயர்ந்தது அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு கஷ்டப் பக்கம் ! அப்புறமாய் இரும்புக் குதிரைகள் தலைகாட்டத் துவங்கிய பின்னே, தூரங்களை ஓரளவேனும் சொகுசாய்க் கடக்க சாத்தியமானது ! அந்த ரயில் தடங்களை நிர்மாணிப்பதில் தான் எத்தனை போட்டி ? எத்தனை களேபரங்கள் ? எத்தனை பலிகள் ?!! 
தண்டவாளமிடுகிறார்கள்...!
1830 -ல் துவங்கியது அமெரிக்காவின் முதல் ரயில் சவாரி - பால்டிமோர் & ஒஹையோ ரெயில்ரோடு என்ற நிறுவனத்தின் புண்ணியத்தில் ! ஆரம்ப நாட்களில் - இந்த நீராவிப் பிசாசுகள் கடினமான ஏற்றங்களில் சொதப்பவே போகிறதென்று ஜனங்கள் ஏளனம் கொண்டிருந்தனர் ; ஆனால் விஞ்ஞானத்தின் வேகத்தில் அந்தக் கேலிச் சிரிப்புகள் சீக்கிரமே ஆச்சர்யக்குறிகளாய் மாறிப் போயின ! 


மண்ணைத் தேடி :

தொடர்வன நாம் ஓக்லஹோமா கதையிலும் சரி ; ஒரு பட்டாப் போட்டியிலும் சரி, பார்த்து ரசித்த அந்த நில முன்பதிவுக்கான முஸ்தீபுகள் ! தேசம் விரிந்து கொண்டே செல்ல, புதுப் புது பூமிகளை முதன்முதலில் சென்றடையும் மக்களுக்கே அவை சொந்தமாகிப் போயின ! பின்னாட்களில் ஏலம் கேட்கும் முறையும் அமலுக்கு வந்தது !! April 22' 1889 - வரலாற்றில் இடம்பிடித்த அந்த Oklohoma Land Run நிகழ்ந்த தினம் !!  
கலிபோர்னியாவில் ஏலம் - வருஷம் : 1904
"கௌபாய்"

இந்த வார்த்தையினை ஒரு லட்சம் தடவை உச்சரித்திருப்போம் தானே guys ? So இதோ சில நிஜ கௌபாய்க்கள் ! மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வது ; பத்திரமாய்த் திரும்பக் கொணர்ந்து தொழுவத்தில் அடைப்பது ; பண்ணையில் வேலை செய்வது ; விவசாயத்தில் ஒத்தாசை ; கால்நடைகளை விற்பனைக்குக் கொண்டு செல்வது ; காவல் காப்பது - என்று இவர்களுக்கு ஏகமாய் முகங்களுண்டு !! தளரா மனங்களுக்கும் , அயரா உழைப்புக்கும் சொந்தக்காரர்கள் இந்த தொப்பிவாலாக்கள் !! 
இந்தத் தேடலுக்குள், ஆராய்ச்சிக்குள் நுழைய-நுழையத் தான் நாமெல்லாம் வன்மேற்கின் வரலாற்றோடு எத்தனை தூரம் ஒன்றிப் போயிருக்கிறோம் என்பது புரிகிறது ! So அடுத்த தபா நீங்கள் காமிக்ஸ் படித்துக் கொண்டிருக்கும் போது யாரேனும் "ஹி..ஹி.." என்றால் - மூக்கோடு ஒரு குத்து வைத்து விட்டு - "American History-ல் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேனாக்கும் !!"என்று சொல்லி விடுங்கள் !! நாமெல்லாமே வன்மேற்கின் ஆய்வாளர்களாக்கும் !! 


விடை பெறும் முன்பாய் கொஞ்சமாய் காமிக்ஸ் சேதிகளுமே :

1 .நெடு நாள் கழித்த லார்கோ சாகசம் என்பதாலா ? அல்லது லார்கோவின் கடைசி வான் ஹாம் சாகசம் என்பதாலா ? அல்லது பொதுவான "லார்கோ வசீகரம்" என்ற காரணமா ? சொல்லத் தெரியவில்லை ; ஆனால் ஆன்லைனில் ரொம்ப காலம் கழித்து நிஜமான விறுவிறுப்பு !! 

2 .இரு தினங்களுக்கு முன்பாய்த் தான் நமது ஜூலை வெளியீடுகளுள் ஒன்றான TRENT மீதான பணிகள் நிறைவுற்றன !! "ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது " என்பது அனுபவப் பாடம் என்றாலும், இந்தப் புது நாயகரின் முதல் ஆல்பம் முகத்துக்கு ஏகமாய்ப் பிரகாசத்தைக் கொண்டு வந்தது என்பதை பகிர்ந்திடாது இருக்க இயலவில்லை !! ரொம்பவே ரசித்தேன் guys !! More of it later !!!

3 . நடப்பாண்டின் அட்டவணையை எடுத்துப் புரட்ட நேரமிருப்பின் முயற்சித்துப் பாருங்களேன் ? அறிவித்துள்ள 36 இதழ்களுள் ஒரு கணிசத்தை ஏற்கனவே போட்டுத் தாக்கி விட்டோம் ! ஆண்டின் இறுதியினில் ஜம்போ தான் கைகொடுத்தாக வேண்டும் போலும் - ஒரு (காமிக்ஸ்) வறட்சியைத் தவிர்த்திட !! ரெகுலர் சந்தாவில் வெகு சொற்ப இதழ்கள் எஞ்சி நிற்கின்றன !!

4 . And the big news : இரத்தப் படலம் முழுமையும் அச்சாகி விட்டது folks !! ராப்பர்களின் டிசைனிங்குமே நிறைவுற்று விட்டதால் தொடரும் வாரத்தில் அவற்றையும் அச்சிட்டு - பைண்டிங்கைத் துவக்கிடத் திட்டமிட்டுள்ளோம் ! அப்புறம் அந்த slip case டிஸைனுமே அழகாய் வந்துள்ளதாய் மனதுக்குப் பட்டது ! உங்களிடம் மொத்தத்தையும் ஒப்படைக்கும் நொடியில் உங்கள் முகங்களும் மலர்ந்திடும் பட்சத்தில் ஆண்டவனுக்கு நன்றி சொல்லத் தவற மாட்டோம் !! இனி அடுத்த வேலை அந்த "இரத்தப் படல" முதல் 200 Early Birds-களுக்கு ஒரு பேட்ஜை தயார் செய்வதே !!

5.  Lest I forget - அடுத்த வாரம் அந்தப் புலன்விசாரணை பற்றிச் சொல்கிறேன் !! நிறையவுள்ளது பேசிட !!

6 ஜூன் இதழ்களை review செய்திட நேரம் எடுத்துக் கொள்ளலாமே guys ? மூன்றுமே ஒவ்வொரு விதத்தில் பர பரப்பினை உண்டாக்கும் இதழ்கள் தானே ? For starters - நாளைய பொழுதை லார்கோவை அலசுவதில் செலவிடலாமா ஆய்வாளர்களே ? மாதந்தோறும் ஏதேனும் ஒரு புக்கைப் பிரதானமாய் அலசுவதை ஒரு வழக்கமாக்கிப் பார்த்தோமென்றால் பொழுதுகள் சுவாரஸ்யமாகிடக் கூடும் என்று நினைத்தேன் ! Let's try starting it off tomorrow - maybe பகலில்  ??

7.  ஜம்போவின் பணிகள் வேகமாய் நடைபெற்று வருகின்றன !! அட்டைப்படம் ரெடி ; கதையுமே !! எனது எடிட்டிங் நிறைவுற்று விட்டால் அச்சிட வேண்டிய வேலை மட்டுமே பாக்கி ! இந்த ஞாயிறை இளம் டெக்ஸோடு செலவிட வேண்டியது தான் !! இன்னும் சந்தா செலுத்தியிருக்காத பட்சத்தில் - இன்றே அதற்கென திட்டமிடலாமே - ப்ளீஸ் ? 


இப்போதைக்கு கிளம்பும் முன்பாய் ஒரு வித்தியாசமான போட்டி ! இதோ - ஆங்கிலத்தில் ஒரு கவிதையுள்ளது - ஸ்டேஜ்கோச் பயணங்களை சிலாகித்தும், கலாய்த்தும் !! இந்தத் தேடல்களின் போது கண்ணில் பட்டது !! இதனை அழகாய்த்  தமிழாக்கிப் பார்ப்போமா ? ஆய்வாளர்களுக்குள்ளே கவிஞர்களும் உறைகிறார்களா என்று பார்த்தது போலிருக்குமல்லவா ? Bye for now...see you around !! 

Riding in a Stage

Creeping through the valley, crawling o’er the hill, 

Splashing through the branches, rumbling o’er the mill; 


Putting nervous gentlemen in a towering rage. 


What is so provoking as riding in a stage?


Spinsters fair and forty, maids in youthful charms, 


Suddenly are cast into their neighbors’ arms; 


Children shoot like squirrels darting through a cage- 


Isn’t it delightful, riding in a stage? 


Feet are interlacing, heads severely bumped, 


Friend and foe together get their noses thumped; 


Dresses act as carpets-listen to the sage;


"Life is but a journey taken in a stage.”


---From: Six Horses by Captain William Banning & George Hugh Banning, 1928---

238 comments:

  1. மூன்றாவது... இரவு வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  2. டெக்ஸின் நிழலே அருமை தான்...

    ReplyDelete
  3. அற்புதமான பதிவு 👏👏👏

    ReplyDelete
    Replies
    1. ////இவர் சார்ந்ததொரு சாகசம் நமது லக்கி லூக் தொடரில் உள்ளது ; maybe அடுத்த வருஷம் அதை முயற்சித்துப் பார்க்கலாமா ?) ////

      கண்டிப்பாக சாா்!!

      Delete
    2. கண்டிப்பாக சார்..

      Delete
    3. முயற்ச்சிக்கலாம் சார்

      Delete
  4. வித்தியாசமான வரலாற்றுப்பதிவு அருமை சார்.இரத்தப்படலம் வண்ண இதழ் + புலன் விசாரணை எதிர் பார்ப்பில்.

    ReplyDelete
  5. ஒவ்வொரு புகைப்படமும் ஆயிரம் சேதி சொல்லும் அதிசயம் நிகழ்கிறது.அதிலும் நாம் பார்க்க விரும்பும் பூமியின் கடந்த கால நினைவுகள் மேலும் விஷேசமானவை.

    எல்லையில்லா எதிர்காலம் இரு கை நீட்டி அழைத்தாலும், நம் உள்ளம் அலைபாய்வதோ கடந்த காலத்தின் பசுமையான எண்ணங்களே.

    கால இயந்திரத்தில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ,நான் கடந்த காலத்தையே தேர்வு செய்வேன்.

    ReplyDelete
  6. 19 ஆம் நூற்றாண்டில் அநேகமாக வெள்ளை அமெரிக்கர் அனைவருமே மீசை வைத்திருப்பதை நாமறிவோம். ஆனால், இருபதாம் நூற்றாண்டின் பின்பாதி காலக்கட்டத்திலிருந்து மீசையற்ற முகங்களே அமெரிக்க முகமாகிவிட்டது. மீசை மீதான மோகம் அமெரிக்கரிடம் ஏன் குறைந்தது ??? யாருக்கேனும் பதில் தெரியுமா ???

    ஈரோடு பூனையார் ஏடாகூடமாக ஏதேனும் பதிலளிப்பார் என்ற நப்பாசையில் எழுந்த கேள்வி இது. எனவே எடிட்டர் விஜயன் உள்ளிட்ட கட்டை மீசைக்காரர்கள் இதற்கு பதில் சொல்லக்கூடாது. ஆமாஞ் சொல்லிப்புட்டேன் :)))

    ReplyDelete
    Replies
    1. வாங்க சாத்தான் ஜி.

      Delete
    2. அந்த கட்டை மீசையை வைத்துக் கொண்டு மொழு -மொழு முக தேசங்களில் படும் அவஸ்தையைச் சொல்லி அழுக இன்றைக்கெல்லாம் போதாது !!

      "ஒழுங்கா சாப்ட்ரு...இல்லாட்டி அந்த மீசைக்கார பூச்சாண்டி கிட்டேப் புடிச்சு குடுத்திடுவேன் !" என்று பிள்ளைகளை கொரியாவில், ஜப்பானில் மிரட்டிய மம்மிக்கள் ஏகம் !!

      "இவன் முழியும் செரியில்லே.. .மீசையும் ஒரு மார்க்கமா வ்ய்ச்சிருக்கான் ! உள்ளே அனுமதிக்கலாமா ? இல்லே வந்த பிளைட்லேயே காத்தைச் சேர்த்து அடிச்சு திருப்பி அனுப்பிடலாமா ?" என்று பற்பல இம்மிகிரேஷன் அதிகாரிகளின் மைண்ட் வாய்ஸ் உரக்கவே ஒலிக்கக் கேட்டதுண்டு !

      "பய முரடான இருப்பானோ ? என்ற தயக்கத்தோடு நம் பக்கத்து காலி சீட்களை உதாசீனம் செய்து விட்டு, நெரிசலில் புகுந்து பயணிப்போரும் நிறைய இருப்பர் !!

      ஆனால் ஒரு கட்டத்தில் இது எல்லாமே பழகிப் போய் - "இப்போ இன்னாங்கறே ?" என்ற தெனாவட்டு ஏறிடும் பாருங்க..!!

      Note : இது பதில் இல்லீங்க யுவர் ஆனர் !! அனுபவம் மட்டுமே !

      Delete
    3. வாங்க சாத்தான் ஜி!!

      ///ஈரோடு பூனையார் ஏடாகூடமாக ஏதேனும் பதிலளிப்பார் என்ற நப்பாசையில் எழுந்த கேள்வி இது. ///

      ம்ஹூம், நான் மாட்டேன்பா!! நான் ஏதாவது ஏடாகூடமா பதிலளிக்கப்போய், நீங்கபாட்டுக்கு FBல எழுதறமாதிரி எதையாவது சொல்லிப்புட்டீங்கன்னா?!! ;) :P

      Delete
    4. வெரி சிம்பிள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து அவங்க முகத்திற்கு மஞ்சள் போட ஆரம்பிச்சுவிட்டாங்க. :-)

      Delete
    5. எல்லாரும் ஒண்ண மறந்துட்டீங்க.
      பார்பர்ட்ட போயி சவரம் பண்ணுமான்னு விஞ்ஞான மூளைகள் யோசிச்ச மாத்திரத்தில கத்திக்கு பதிலா பிளேட கண்டுபிடிச்சி அதை பொருத்த ரேசர கண்டுபிடிச்சாங்கே.

      வீட்ல இருந்தே செரச்சி முடிச்சிட்டு குளிச்சி செத்த நேரத்த மிச்சம்பண்ணினா அடுத்த வேலகள சுருக்க முடிக்கலாமேன்னு நெனச்சி கன்னா பின்னான்னு வளந்து கெடக்குற மேலொதட்டு கம்பிளிப் பூச்சிய வேணான்னேமுடிவு பண்ணிட்டாங்கே.

      நாய அடிப்பானேன்
      ____.. சொமப்பானேன்னு நெனச்சதுல வந்தது தான் மீசையோட திரிஞ்ச வெள்ளக்காரங்கே மீசை தியாகம்.

      இதயும் கமர்சியலா பிரிச்சி மேஞ்ச கார்ப்பரேட்டு கம்பேனி மொதலாளி மூளங்க யூஸ் அண்ட் த்ரோவ போட்டு அவங்கே பங்குக்கு கலர்கலரா வெளம்பரம் போட்டு யூத் பொம்பளங்க - அழகங்கே தவடய தடவி சொக்குற மாதிரி காட்டி மயக்கி நம்பள மொட்டயடிக்கலாம்னு அப்பயே போட்ட சதிதிட்டந்தான் மீசை போச்சி , ஆசை வந்திச்சி கத.

      Delete
  7. விஜயன் சார், மிகவும் வித்தியாசமான காமிக்ஸ் தகவல்கள் உள்ள பதிவு. மிகவும் சிரத்தை எடுத்து எழுதிய பதிவு இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சிரத்தை என்பதை விட, சுவாரஸ்யத்தோடு எழுதியது என்று சொல்வேன் சார் ! வரலாற்றின் மீது எப்போதுமே ஒருவித ஈர்ப்பு உண்டு எனும் போது இந்த மாதிரியான தேடல்கள் ஜாலியானவைகளே !

      பணிகளின் நிமித்தம் ஒருமுறை கான்சாஸ் நகருக்குச் சென்றிருந்த போது - அந்த விமான நிலையத்தின் சுவர்களில் அவர்களது நகர வரலாறைப் பதித்திருந்ததை வாசிக்க முடிந்தது !! கிட்டத்தட்ட விமானத்தைத் தவற விடாத குறை தான் - அந்த வாசிப்பின் லயிப்பில் ! இங்குமே நமது ரெயில் நிலையங்களில் நம் நகர்களின் கதைகளைப் பதிக்கலாமே என்று தோன்றும் !

      Delete
    2. உங்கள் ரசனைக்கு ஒரு ராயல் சல்யூட்.

      Delete
  8. Replies
    1. எத? பதிவையா? இல்ல புத்தகங்களையா?

      Delete
    2. ஐ யாம் கோயிங் டூ படிச்சிங் நௌ.

      Delete
    3. திஸ் மன்த் காமிக்ஸூஸ்ஸ தான்னு சொல்லிக்கிறேன் பரணி சார்

      Delete
    4. பதிவு தான் பரணி ஜி.காமிக்ஸ் திங்கள் தான்.

      Delete
  9. விஜயன் சார்,
    // ஆண்டின் இறுதியினில் ஜம்போ தான் கைகொடுத்தாக வேண்டும் போலும் - ஒரு (காமிக்ஸ்) வறட்சியைத் தவிர்த்திட //

    இல்லை என்பது எனது எண்ணம். இ.ப. வேலைகள் முடிவடைந்த பின்னர் சந்தா E கதைகள் பற்றி அறிவிக்கப் போவதாக சொன்னதாக ஞாபகம். சந்தா E அறிவிப்பு எப்போது வரும் என இந்த வருடத்தின் முதல் நாளில் இருந்து ஆவலுடன் காத்திருக்கிறேன். ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. அப்படிக் கேளுங்க PfB! சாதா காமிக்ஸை படிச்சுக்கிட்டு சத்தமில்லாமக் கிடந்த நம்மை, கி.நா சுவை காட்டி உசுப்பி விட்டுட்டு இப்போ சைலண்டா இருக்கறது நியாயமான்னு கேளுங்க! நீங்களே கேளுங்க! அவர்ட்ட கேளுங்க!!
      கேட்டுச் சொல்லுங்க!

      Delete
    2. ரெஸ்பெக்டட் சார்ஸ்,

      ஆஸ் ஐயாம் சப்பரிங் பிரம் "இரத்தப் படலம் பிசியோபிசியா " & "டமாளிக்கோ டைனமைடோபியா" அயம் அனேபிள் டு அட்டென்ட் சந்தா E ; F ; G etc பிரசன்ட்லீ !

      சொ ஐ கைன்ட்லி ரெக்வஸ்ட் யூ டு கிராண்ட் மீ டைம் டில் 2019 !

      தேங்கிங்க் யூ !

      யுவர்ஸ் சின்சியர்லி ,

      அவுல் ஐஸ் !

      Delete
    3. ///அவுல் ஐஸ் !///

      ஹா ஹா ஹா!! :)))))

      Delete
    4. // சொ ஐ கைன்ட்லி ரெக்வஸ்ட் யூ டு கிராண்ட் மீ டைம் டில் 2019 ! //

      நோ. :-)

      புரிந்து கொண்டேன் சார். அடுத்த வருடத்தில் இருந்து மெகா மறுபதிப்புகள் இல்லாத வருடமாக அமையட்டும்.

      Delete
    5. ரெஸ்ப்பெக்குடட் எடிட்டரு சாமியோவ்,

      அஸ் அ யாம் சின்சியர்,டெரர்லி சப்பரிங்கு ஃபிரம் சஞ்சய் பெல்ஜிய ராம்சாமி மறதி ஃபோபியோ ஃபிரம் லாஸ்ட்இயரு ஈரோடு புக்குஃபேர் அனவுன்ஸ்மெண்ட் ஆப் யுவரு எஸ்ட்டீம்டு இரத்தப்படல வெரிலாங்கு புராஜக்ட்டு , ஐ ஹேட் எர்னஸ்ட்லி டிசைடட் தேட் யூ வில் ஆல்ஸோ கோவித் தட் மறதி போபியோ.

      ஸோ ஆன் பிகாஃப் ஆப்பு அவர் மறதி காமிக்ஸூ ஃபிரண்ட்ஸ் வீ ஆல் ஃபெய்த்புல்லி ஃபர்காட் தேட்டு சந்தாஸ் ஈ ஏஃப் டூ இஸட்டு ஃபார் யுவரு ரெடி கன்னுவீனியன்ஸூ சாமியோவ்.

      தேங்க்கிங்கு யூ

      யுவர்ஸ்ஸூ மறதிஃபுல்லி,

      J

      Delete
  10. அந்த லாந்தர் விளக்குகளை விட்டு விட்டீர்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. சொல்ல இன்னமும் ஒரு நூறு விஷயங்கள் உள்ளன சார் ! செவ்விந்தியர்கள் ; தங்க தேடல் ; சுரங்கங்கள் ; மெக்சிக மக்களுடனான ஏழரைகள் ; இத்தியாதி.இத்தியாதி என்று ! ஓவராய் போட்டுத் தாக்கினால் வரலாற்று வகுப்பில் எழும் கொட்டாவிகளும் பலனாகிடக் கூடுமென்ற பயம் தான் !

      Delete
    2. தகுந்த இடைவெளிவிட்டு, நேரம் கிடைக்கும்போது ஒன்னொன்னாப் போட்டுத் தாக்குங்கள் சார்!! வரலாற்றையும் உங்கள் எழுத்துகளில் ரசித்திடுவது தனீஈஈஈஈ சுகமே!!

      Delete
    3. அதாச்சும் சொகம்மா தூங்கணுமாக்கும் ?

      Delete
    4. காமிக்ஸ் பின்னால் உள்ள வரலாறு என்றுமே போரடித்தது இல்லை சார் அதுவும் மொழியாக்கம் நீங்களாக உள்ள போது அது எப்படி போரடிக்கும்.

      Delete
  11. அருமையான பதிவு எடிட்டர் சார்!!
    ஒவ்வொரு படமும் வியப்பை ஏற்படுத்திவிடுகிறதென்றால், அதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் அழகான வர்ணணைகள் அட்டகாச ரகம்!!
    நூற்றுக்கணக்கான தடவைகள் நாம் சித்திரங்களாய் கண்டவைதான் எனினும், மரத்தில் தொங்கவிடப்பட்ட மனித உடல்களை நிஜ ஃபோட்டோக்களாய் காணும்போது நெஞ்சம் பதைக்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. கதைகளெனும் போது - " ஆங் ...அப்டி தான் ; போட்டுத் தள்ளுங்க தல....!! அதோ அங்கேயிருந்து ஒரு பயபுள்ளே முறைக்குது....மூக்கிலேயே குத்துங்க !! அங்கே கூரை மேலே ஒரு தடி தாண்டவராயன் இருக்கான்...சுட்டுப்புடுங்க !" என்றே குரல் கொடுக்கத் தோன்றும் ! ஆனால் நிஜத்தில் சிதறும் சில்லுமூக்குகளையும், பீறிடும் உதிரத்தையும் ;சரிந்து சாயும் கட்டைகளையும் ஜீரணிப்பது சாத்தியமற்றது !!

      Delete
    2. உண்மைகள் தான் சார்...ஏனோ இந்த கதையில் டெக்ஸ் வண்டியின் மீது ஏறி எதிரிகளை குறி வைக்கும் பொழுது சமீபத்திய நிகழ்வும் மனதுக்குள் வந்து கொஞ்சம் மனம் தடுமாறியது உண்மை..:-(

      Delete
  12. பள்ளத்தாக்கின் வழியாக ஊர்ந்து செல்லும்போது

    கிளைகள் வழியாக காற்று பிளவுபட்டு,
    மரங்கற் முணுமுணுக்கும்;

    ஒரு அதீத கோபத்தில் நரம்பு புடைக்கும் மனிதர்களை வைத்திருக்கும்.

    ஒரு கட்டத்தில் சவாரி செய்வதற்கு என்ன தூண்டுகிறது?

    இளய மற்றும் வயது மூத்த சரியான வயதில் திருமணம் செய்யாத வேலைக்காரிகள்,


    திடீரென அவர்கள் அண்டை வீட்டிற்குள் போடப்படுகிறார்கள்;

    குழந்தைகள் கூண்டு போன்ற ஒரு படகு மூலம் darting போன்ற சுட-

    ஒரு கட்டத்தில் சவாரி செய்வது மகிழ்ச்சிகரமானதாக இல்லையா?

    கால்களை ஒன்றோடொன்று இணைக்கின்றன, தலைகள் கடுமையாக மோதியது,

    நண்பரும் எதிரிகளும் ஒன்றாக மூழ்கி விடுகின்றனர்;

    ஆடைகள் கம்பளங்களாக செயல்படுகின்றன - முனிவருக்குச் செவிசாயுங்கள்;

    "வாழ்க்கை ஆனால் ஒரு கட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு பயணம்."


    (Google Translate ல இப்படித்தான் காட்டுகிறது எடி சார்)

    ReplyDelete
    Replies
    1. அட....அதை தட்டி எழுப்புவானேன் ? நமக்குள்ளிருக்கும் புலவர்களை ; கவிஞர்களை உசுப்பி, எழுப்பி விடுங்கள் சார் !

      Delete
  13. வரலாற்றில் எனக்கு சிறிது ஆர்வம் உண்டு.அதுவும் காமிக்ஸ் சம்பந்தமான இந்த புகை படங்கள் இனி நான் காமிக்ஸ் வாசிக்கும் பொழுது மன கண்ணில் கதை ஓட்டம் இன்னும் உயிர்ப்போடு இருக்க இந்த பதிவு உதவும் என்பதில் சந்தேகமேயில்லை நன்றி

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார் !

      Delete
    2. ///வரலாற்றில் எனக்கு சிறிது ஆர்வம் உண்டு.///

      டாக்டர்களுக்கு வரலாற்றில் ஆர்வம் இல்லேன்னாத்தான் ஆச்சரியம்!! :)

      Delete
  14. 38வது. இம்மாதம் பெரிய பதிவு

    ReplyDelete
  15. இரத்த படலம் 200 மெடலோட நிற்காமல் அனைவருக்கும் தரலாமே.

    ReplyDelete
  16. இந்த பதிவின் புகைப்படங்களை பார்த்ததும் ஏற்கனவே நமக்கு நெருக்கமான இடங்களை கண்டது போலவே ஓர் எண்ணம் சார்..

    போலவே ஒரு காலயந்திரம் கிடைத்தால் உடனடியாக அங்கே செல்லவும் தான் மனம் தூண்டுகிறது.

    ReplyDelete
  17. லார்கோ இன்று தான் படிக்கவுள்ளேன் சார்..ஆனால் புத்தகத்தை புரட்டி ரசித்ததில் அட்டைப்படத்தில் இருந்து அனைத்துமே இந்த இதழ் சாகஸம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்குமோ என தோன்றுகிறது.ஆரம்ப பல பக்கங்களில் லார்கோவை காண முடியவில்லை..தேவதைகளாகவே காண முடிகிறது :-)

    ReplyDelete
    Replies
    1. பரணி லார்கோவ பாக்க ஏலாது,,,,கதய நகர்த்தும் ஆசிரியரின் திறமையையும், நம்மவரின் அற்புத மொழி பெயர்ப்பயும் காணலாம்,,,ஆனா உங்கள மாதிரி குழந்தைகளுக்கு ஙிஙிஙிஙீஙீ

      Delete
  18. அடுத்த வாரம் புலன் விசாரனை பற்றி சொல்கிறேன்

    ####


    அடுத்த வாரம் செம சூடான பதிவு என கோவை பட்சி சொல்கிறது...:-)

    ReplyDelete
    Replies
    1. அட....குற்றால சீசனில் சூடுலாம் ஏது தலீவரே ?

      Delete
  19. அரிய புகைப்படங்களுக்கு நன்றிகள் பல !

    ReplyDelete
  20. Any comments about Tex willer movie?. How many of them available friends?

    ReplyDelete
    Replies
    1. 'தல' திரையில் சோபிக்கவே இல்லை சார் !

      Delete
  21. சார் நீ•••ண்ட நாட்களுக்கு பின் புத்தகத்த இரக்காம இரண்டம் பகத்த முடிக்கயில மணி பதினொன்னே முக்கால்,,,,,இருவது நொடிகள இருவதே நிமிடங்கள்ல முடிச்சாலும் கடந்ந நேரம் ஒன்றரை மணி நேரத்துக்கும் கூடுதல். லார்கோ காதல் என்னாகும்கிற ஒரே கேள்வியே கதய நகர்த்தினல் காட்சிக்கு காட்சி நகைச்சுவை அனஐவரின் காதல், கலாட்டா அருமை, காதலஅய கான்கிரீட் கானகத்ல போல கொன்னுடுவாரோன்னு பாத்தா , நல்லவேள அப்டி ஏதும் ஆகல , கடசில என்னதான் ஆகும்,,,,,

    ReplyDelete
    Replies
    1. கடசிலே லார்கோ புது ஊருக்கு கிளம்பி போயி அங்கே புதுசா பட்டாம்பூச்சி தேடி, புதுசா இக்கட்டில் மாட்டி, மறுக்கா சைமனைக் கூட்டி, அப்பாலிக்கா சில்கியெ ஜெட்லே வரவழைச்சு,சில பல பல்டிகளை அட்சி, அழகா கலர்லே, சூப்பரா சாகசம் பண்ணி, ......உப்ப்....

      மூச்சு வாங்குது சாமி !! உங்க எக்ச்பிரஸ் தந்தி ஸ்டைல் தமிழ் நமக்கு வராது !!

      Delete
  22. இரவக்கழுகின் நிழலில்

    "செம " என்றால்

    இரவுக் கழுகின் " நடமாடும் நரகம்"


    செம...செம...செம....    வாவ்....இது மட்டும் படித்து முடித்தவுடன் வெளிபடுத்தபட்ட எண்ணம் அல்ல.ஏற்கனவே நான் பலமுறை சொல்லியபடி ஒரு இதழை படித்து முடித்தவுடன் உடனே மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் வருமாயின் அது தான் சூப்பர்ஹிட் இதழ் .இந்த நடமாடும் நரகத்திற்கும் உடனே மீண்டும் பயணமாகலாம் என்ற அதே எண்ணமும் மனதில் வெளிப்பட்டதே இந்த இதழின் சிறப்பு.


    டெக்ஸ் பிடிக்காத(?) சில நண்பர்களின் எண்ணம் டெக்ஸ் கதையில் சும்மா சும்மா டூமீல் ,டூமீல் தான் வேறென்ன என்பார்கள்.அவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லி கொள்கிறேன் நீங்கள் நினைத்ததை விட இந்த நடமாடும் நரகத்தில் டுமீல் ,டுமீல் இரு மடங்கு அதிகம் காணப்படும்.ஆனால் இதுவே இந்த கதைக்கு மிக சிறப்பாக ,பரபரப்பாக ,விறுவிறுப்பாக கொண்டு சென்ற ஒன்று எனில் அது கண்டிப்பாக மிகை அல்ல என்பதை வாசிக்கும் பொழுது உணருவீர்கள்.

    மேலும் இந்த பயணத்தில் சில வித்தியாசங்களும் என்னளவில் உணரபட்டதும் உண்மை.எடுத்துகாட்டாக வில்லனிடம் நக்கலாக பதில் அளிக்கும் டெக்ஸ் அமைதியாக இருக்க , கார்ஸன் வில்லனிடம் தான் யார் என எடுத்துரைக்கும் அந்த நக்கலான உரையாடல் செமயான வித்தியாசம் எனில் எப்பொழுதும் அவநம்பிக்கையாக பேசும் கார்சன் அமைதியாக இருக்க டெக்ஸ் இதில் பல முறை அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் என்பதும் வித்தியாசமே.

    ஆனால் இந்த வித்தியாசமே கதையில் அடுத்து என்ன நடக்குமோ ,இவர்களின் கதி என்னவாகுமோ என்ற பதைபதைப்பும் படபடப்பும் நமக்குள் திக் திக்கென்று ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது.

    அதே சமயம் வழக்கமான டெக்ஸ் கதையின் ஊடே வரும் சில வசனங்கள் படிப்போரை புன்னகைக்க வைக்க செய்யும் இடங்கள் இதிலும் இல்லாமல் இல்லை.உதாரணமாக
    " இந்த முடிவுக்கு வந்ததன் பிண்ணனியில் டெக்ஸ்வில்லரென்று போதிமரம் இருக்கிறது அப்படிதானே ?ஹீஹீ.."
    என வண்டியோட்டி சொல்லும் பொழுது நமக்குள்ளும் ஹீஹீ தான் .

    இறுதியில் வண்டியோட்டி டான்னியிடம் டெக்ஸ் .."மறுபடியும் உன் வண்டியில் ஏற எங்களுக்கென்ன பைத்தியமா ? போதுமடா சாமீ " என்பதும், வண்டியோட்டி இனி விரட்டி போவதில் தூக்கி எறியப்பட்டு வெளியே விழுந்து விடுவோமா என்ற பயம் தான் எனக்கு " என பள்ளி மிஸ் கூறுவதும் உண்மையிலேயே எனக்கும் "ஹாஹா" தான்.

    பல நண்பர்களுக்கு ஏன் எனக்குமே இப்பொழுது மாதம் ஒரு டெக்ஸ் வந்தாலும் அப்பொழுது வந்த டிராகன் நகரம்,பழிக்குபழி ,பழிவாங்கும் புயல் போன்ற அந்த கால டெக்ஸின் அதிரடி சாகஸங்கள் தான் பெஸ்ட் என்பார்கள்.ஆனால் என்னை பொறுத்தவரை " நடமாடும் நரகம் " இவை அனைத்தையும் விட பெஸ்ட் என்று அடித்து சொல்லுவேன்.இன்னும் விவரித்து கொண்டே போக வேண்டும் என தோன்றுகிறது.ஆனால் படிக்காத நண்பர்களை நினைத்து அமைதியாகிறேன்

    எனிவே ஒன்று நிச்சயம்...ட்ராகன் நகரம், தலைவாங்கி குரங்கு போன்ற இதழ்களை மறுபதிப்பாக கொடுங்கள் என்று நண்பர்கள் ஆரவாரமிட்டது போல சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த "நடமாடும் நரகத்திற்கும் " ஏற்படும் என அறுதியிட்டு சொல்கிறேன் சார்.

    அட்டகாசமான ,அதிரடியான ,பட்டையை கிளப்பும் ஆக்‌ஷன் மேளா இந்த
    நடமாடும் நரகம்.

    மதிப்பெண்ணா பத்துக்கு பத்துமடங்கு பத்து போட்டுகுங்க... :-)

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் உங்க தயாள மனசு யாருக்கு வரும் ? பத்துக்கு - பத்து மடங்கு !! ஹை !!!

      Delete
  23. அப்படியே உங்களுக்கு பிடித்த டாப் 10 வெஸ்டர்ன் மூவீஸ் லிஸ்ட் குடுங்க அவுல் ஐஸ் சார்!
    நம்ம தலீவரோட தலையை அடமானம் வச்சாவது அந்த படங்களை பாத்துடறோம் :)))

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி தலீவர் தல பாவம் ; பொழச்சி போகட்டும் !!

      Delete
    2. நன்றி சார்..

      ;-)))))

      Delete
  24. சொதப்பிய லார்கோ

    எப்போதும் போல் லார்கோவைதான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். வான் ஹாம்மேயின் கதையா? இல்லை அவர் பேர் மட்டும் போ ட்டு கதையில் சிந்து பாடி விட்டார்களா தெரியவில்லை. லார்கோ கதை ரெண்டு அத்தியாயத்தில் முதல் அத்தியாயத்தில் தப்பிக்க முடியாது என்று நினைக்கும் அளவுக்கு மாட்டிக் கொள்வார். ரெணடாவது அத்தியாயத்தில் அதை உடைத்து எதிரிகளை தெறிக்க விடுவார்.
    இதில் அந்த மாதிரி எதுவும் இல்லை. லார்கோ மீது எதிரிகளும் கை வைக்கவில்லை. இவரும் எதிரிகள் மீது கை வைக்கவில்லை. அட ஒரு சண்டை கூட இல்லாமல் இருக்கும் ஒரே கதை இதுதான் என்று நினைக்கிறேன்.

    சரி சைமன்னாவது ஏதாவது செய்வார் என்று பார்த்தால் பிளைட் பிடித்து லண்டன் வந்து பப்பில் கூத்தடித்து விட்டு அடுத்த நாள் நடையை கட்டுகிறார்.

    சரி மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் பென்னி வின்கில் காலம் போன காலத்தில் ஒரு காதல் கதையை எழுதுகிறார். கோக்ரேன் ஒரு இளம் பெண்ணின் வலையில் விழுந்து கிடக்கிறார். சில்க்கி கண்ணில் படும் பெண்களை எல்லாம் காதல் செய்கிறார். புதிதாக வந்த ஒரு டிரைவர் வைஸ் president ஆகப் போகும் அம்மணியை காதல் பண்ணுகிரார்.

    அட லார்கோ என்ன பண்ண போகிறார் என்று பார்த்தால் ரெண்டு நாள் ஒரு பெண்ணுடன் தங்கிவிட்டு அவளை காணாமல் சோகத்துடன் அலைகிறார். சரி கடைசியில் அந்த பாமையாவது லார்கோ தூக்கிப் போடுவார் என்று பார்த்தால் அந்த அம்மணி தூக்கி போடுது. அடப் போங்கயா இதுல லார்கோவுக்கு என்னதான் வேலை. வான் ஹாம்மே வெளிய போனதில் தப்பே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ///லார்கோ மீது எதிரிகளும் கை வைக்கவில்லை. இவரும் எதிரிகள் மீது கை வைக்கவில்லை. அட ஒரு சண்டை கூட இல்லாமல் இருக்கும் ஒரே கதை இதுதான் என்று நினைக்கிறேன்.///

      முன்னட்டையில் லார்கோ சார் ஒய்யாரமாக மல்லாந்து கிடக்கும்போதே லைட்டா டவுட்டு ஆகியிருக்க வேண்டாமா நீங்க? ;)

      Delete
    2. சார்....கவனித்தீர்களா - இல்லையா என்று தெரியவில்லை ; but சில பதிவுகளுக்கு முன்பாய் -"வான் ஹாம் இந்தத் தொடரிலிருந்து விலகிக் கொள்வதன் காரணத்தையும் இந்த ஆல்பத்தில் புரிந்திடலாம்" என்பது போல் எழுதியிருந்தேன் ! புரிந்திருக்குமே ?

      Delete
    3. Dear Editor - yes - exactly my feeling after reading this final volume !

      Delete
  25. சார் அருமையான பதிவு, இப கலர்ஃபுல்லா ஒரு அட்டை ப்ளீஷ்...எல்லா நிறமும் இருக்றாப்ல பாத்து போடுங்க. சார் புத்தக எண்ணிக்கை இப்பவே குறைவு போல , இன்னமும் குறைந்தால் இன்னோழு சந்தா தொகுப்பு வில்லியம் வான்ஸ் சந்தா அந்த மரணம் மறந்த மனிதர்கள மறந்துறாதீங்க

    ReplyDelete
    Replies
    1. ஏலே.. அடுத்தவர்களுக்கு கொஞ்சமாவது புரிவது மாதிரி ஏழுதுலே.

      Delete
    2. அட...இப்போ தான் மனுஷன் full form-ல் இருக்கிறாப்டி !!

      Delete
    3. ஆனா ஸ்டீல் எப்படி எழுதினாலும் ஆசிரியர் எப்படிதான் புரிஞ்சுகீறாரோ...:-)

      Delete
    4. ///ஆனா ஸ்டீல் எப்படி எழுதினாலும் ஆசிரியர் எப்படிதான் புரிஞ்சுகீறாரோ...///

      ஃபோன் பண்ணிக் கேட்டுக்குவார்னு நினைக்கிறேன்! :D

      Delete
    5. அப்டீன்னா இப்டி எழுதினா தான் சாருக்கு பிடிக்கும் போல.

      Delete
  26. நடமாடும் நரகம்.

    இரண்டாம் பக்கத்தில் குற்றுயிராகக் கிடப்பவரை 'அட ரால்ஃப் 'என கண்டு கொள்கிறார் டெக்ஸ்.
    அடுத்த பக்கத்திலேயே 'நீசப்பயல் லிட்டில் உல்ஃபா? ' என வில்லன் என்று நம்பப்படுபவனை அடையாளம் அறிகிறார்.

    கோச்சு வண்டி டிரைவரை 'அடடே நம்ம டான்னி 'என புன்னகைகக்கிறார்.

    இவ்வளவு ஏன், அப்போதுதான் க்ளைமாக்ஸில் என்ட்ரி ஆகும் கர்னலையே 'கர்னல் ஹேட் பீல்ட் 'என நலம் விசாரிக்கிறார்.

    வில்லர் சார் உங்க ஞாபகசக்திக்கு ஒரு அளவே கிடையாதா? ???

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம்....

      நம்பளோட கியாபக சத்திய டெஸ்ட் பண்றாப்ல

      Delete
    2. 1948 முதல் அதகளம் செய்து வரும் மனுஷருக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா ?

      நமக்குத் தான் பந்தியில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரைப் பார்க்கும் போது ரின்டின் கேன் மாதிரியே சந்தேகமெல்லாம் எழுகிறது - "இவர் மாயாண்டி மாமாவோ ? இல்லே சித்தப்பா வீட்டுக்குப் பின்வீட்டு பெத்தப்பாவோ ? என்ற ரீதியில் !!

      'தல' - தல தான் !! சகலத்திலும் !!

      Delete
    3. ////நமக்குத் தான் பந்தியில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரைப் பார்க்கும் போது ரின்டின் கேன் மாதிரியே சந்தேகமெல்லாம் எழுகிறது - "இவர் மாயாண்டி மாமாவோ ? இல்லே சித்தப்பா வீட்டுக்குப் பின்வீட்டு பெத்தப்பாவோ ? என்ற ரீதியில் !! ////


      ஹா ஹா ஹா!! :))))

      Delete
    4. நாம சுதந்திரம் வாங்குன பெறவு
      அதான பாத்தேன்.

      நமக்கு த்தான் சுதந்திரம் வாங்குன ஒடனே அம்புட்டும் போச்சே.
      மறந்து போச்சுன்னு சொல்லவந்தேன்.

      Delete
  27. NADUNISI KALVAN.MEENDUM MANDIJUMA,MANDIJUMA.I THINK THIS NOVEL WAS CAME IN 1973.SWEET MEMOMRIES IN MY CHILD HOOD AGE.THANK U SIR.

    ReplyDelete
  28. அடியேன் பாட்டு போட்டியில கலந்துக்க
    அனுமதிப்பீங்களா சாமீஸ்

    ReplyDelete
  29. நடமாடும் நரகம் - நண்பர்கள் இருவரும் தங்கள் குதிரைகளை அப்பச்சோக்களிடம் சண்டையில் குதிரைகளை இழந்துவிட்டு கோச்சு வண்டியில் இடம் பிடித்தது அருகில் உள்ள கோட்டைக்கு சென்று லிட்டில் ஊல்ப் கும்பலில் மாட்டிக்கொண்டு உடன் உள்ளவர்களை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சுவாரஸ்யமான ஆக்சன் காட்சிகளுடன் உள்ள கதை.

    கோட்டையில் அடைபட்டு கிடக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சுவாரஸ்யமான பின்னணி. கோட்டையில் உள்ள நண்பர்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைவது. மனம் தட தட வைக்கும் காட்சிகள். நானும் அவர்களுடன் பயணித்த அனுபவத்தை கொடுத்தது.

    நடமாடும் நகரம் - டெக்ஸ் நர்த்தனம்.

    ReplyDelete
  30. இவ்ளோ நாளா என் பையனுக்கு பழைய காலத்து வழிமுறைகளை/ பயண முறைகளை, டெக்ஸ்/டைகர்/லக்கி கதைகளில் வரும் கோச், ஷெரிப், பாலைவனம், தந்தி, செவ்விந்தியர், பண்ணை ஆகியவற்றை கொண்டு விளக்கியுள்ளேன். இந்த (sabba mudiyale mobile le tamil typing) arputhamana pathivin moolam, naanum avanum indhae nija photokalai paarthu, neenda neram vivaathithu kondom.. Ovinyangalaga paarthavatrai, nijamana pugai padathil paarthathum, ennai vida avan viyandhu ponan..ivlo naal naan sonnadhu, puthagathil kaatiyadhu ellam kathai matrumey endru enni kondirundhavanuku, anaithum nijam endru konjam puriye aarambithathum, yega patta kelvigal...
    Enakum en maganukum oru aarokiyamana kalandhuraiyadaluku, indha pathivin moolamaga vazhivagai seitha vijayan sir ku nandrigal pala...
    Sorry for tamil english...i am in velankanni church with family so dont have time and patience to type in tamil.

    Yesterday, my son and myself spent nearly one hour for this post doscussion during our travel time..

    Thanks editor sir..

    ReplyDelete
    Replies
    1. நன்றிகளெல்லாம் அவசியமா சார் ? நான் ஜாலியாய் செய்யும் ஒரு விஷயம் - இள மனதிலொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற சந்தோஷமே போதுமே எனக்கு !!

      Delete
    2. இன்னும் சொல்லப் போனால் - காமிக்ஸ் சமாச்சாரங்கள் சார்ந்த சேதிகளின்றி இந்தப் பதிவினை எவ்விதம் ஏற்றுக் கொள்வீர்களோ என்ற பயமும் இக்ளியூண்டு இருந்தது நிஜமே ! Glad you liked it !

      Delete
    3. This post really helped us to analyze and realize the "நிழல்களின் நிஜங்கள்"

      Delete
  31. புத்தகப்பெட்டியைத்திறந்தால் மூன்றே புத்தகங்கள் அதிலும் ஒன்று மறுபதிப்பு.ஆக மார்ட்டின் போட்ட போ ட்டில் இருந்து மீண்டு ஒரு மாதம் காத்திருந்து படிக்க முனைந்தால் இருப்பது இரண்டே புத்தகங்கள் ..லார்கோ வும்,நம்ம டெக்ஸும்..டெக்ஸ் கதையில் வழக்கம்போல் குதிரைகள் பறக்கின்றன குண்டுகள் பறக்கின்றன கார்சன் நம்பிக்கையோடு பேச டெக்ஸ் அதைரியம் கொள்வது போல் பேச முடிவு..அபாச்சேக்கள் விலகி ஓட கதை சுபமுடிவு..லார்கோ கதையில் லார்கோவை சுற்றி என்னென்னமோ நடக்க அவரோ தேவதாஸ் கோலம் போட,நமக்கோ கதையில் வரும் மாந்தர்கள் அனைவருமே அந்த ஒரு விஷயத்திற்காக அலைவது போல்கா ட்சி அளிக்க என்னமோ போடா வான்ஹாம் .. அட்டையில் லார்கோ த்ரில்லர் என்பதை விட லார்கோ லவ்வர் என்ற வார்த்தை பொருத்தமாக இருந்திருக்கும். குட்டிக்கதை டெக்ஸ் பீடா போல...வரவர நம்முடைய எதிர்பார்ப்பு அதிகமாகிகொண்டேவருகிறதுஎன்றுநினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. //வரவர நம்முடைய எதிர்பார்ப்பு அதிகமாகிகொண்டேவருகிறதுஎன்றுநினைக்கிறேன்//

      அட...அதிலென்ன தப்பு சார் ?

      தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் அளவுகோல்கள் எத்தனை உசத்தியானவை என்று பெல்ஜியத்திலிருக்கும் நம் ஆலோசகர் அம்மணி வியந்து சிலாகித்துள்ளார் நிறைய தடவைகள் !

      நூறுக்கு நூறே வேண்டும் நமக்கு !! அந்தத் தேடலே சுவாரஸ்யம் எமக்கு !

      Delete
  32. அரிய புகைப்படங்களை அள்ளி வழங்கிய ஆசிரியர் வாழ்க ..அன்றய டான்ஸ் அழகிகள் போஸ் அமர்க்களம் .சலூன் என்றாலே சிறுவயதில் அப்பா தரதர வென்று இழுத்துக்கொண்டு போய் ஓட்ட வெட்டிவிடு என்று கடைக்கார கிங்கரனிடம் சொல்வதும் அவர் நீள நீள ஈட்டிமுனைகொண்ட ஒரு மிஷினை வைத்து கதறக்கதற பின்னந்தலையில் ஓடவிட்டு சிரை சேதம் செய்வதும் நாலணா காசில் நடந்தேறிய விஷயங்கள் .ஆனால் சலூன் என்பதற்கு இப்படி ஒரு அர்த்தமுள்ள கடை உண்டு என்று காமிக்ஸ் படித்துதான் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  33. சார் ஒரு சின்ன கேள்வி ஜம்போகாமிக்ஸ் இந்த மாதம் மட்டும்தானே 15 தேதிவரும்...அடுத்த மாதத்தில் இருந்து வழக்கமான சந்தா புத்தகங்களோடு அனுப்பப்படுமா ஏன் என்றால் புதன் கிழமை நீங்கள் அனுப்பிய கூரியர் மூன்று நாள் கழித்து சனி மாலைதான் எனக்கு கிடைத்தது ஒவ்வொரு முறையுமே இப்படித்தான் நடக்கிறது.. புத்தக பண்டிலை பார்க்கும்வரை மனம் அமைதி அடைவதில்லை .அதுபோக கூரியர் காரர்களுக்கு ஏன் தேவையில்லாமல் வேலைவைக்கவேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. அடுத்த தபா முதல் ஜம்போ ஒரே கூரியரே !

      Delete
  34. பள்ளத்தாக்குகளினூடாக ஊர்ந்து, மலைகளின் மீது தவழ்ந்தவாறு,
    மரக்கிளைகளின் நடுவே முண்டியடித்து, கடினமானப் பாதைகளின் வழியே தடதடத்தவாறு;
    பதற்றத்தில் இருக்கும் நற்பண்பாளர்களை அதிகரித்துக் கொண்டேயிருக்கும் கடுஞ்சினத்துக்குள் ஆழ்த்தியபடி.
    இந்த உணர்வுகளைத் தூண்டக்கூடியது வேறு ஏது, ஒரு கோச்சுவண்டியில் பயணிப்பதைத் தவிர?
    நாற்பதுகளை நெருங்கும் அழகிய கன்னிகளும், இளமையின் வசீகரம் பொருந்திய பணிப்பெண்களும்,
    திடீரென அருகிலிருக்கும் பயணிகளின் கரங்களுக்குள் தூக்கி வீசப்படுகிறார்கள்;
    கூண்டுகளுக்குள் அடைபட்ட அணில்களாய்க் குழந்தைகள் கதறுகிறார்கள்
    எத்தனை இன்பமாக இருக்கிறது, ஒரு கோச்சுவண்டியில் பயணிப்பது?
    கால்கள் பின்னிக் கொள்கின்றன, தலைகள் மோதிக் கொள்கின்றன,
    நண்பர்களும் எதிரிகளும் ஒன்றாகத் தங்கள் மூக்குககளை எதிலோ மோதிக் கொள்கிறார்கள்;
    உடைகள் வெறும் தரைவிரிப்புகளென மாறிப்போகின்றன – ஞானிகள் சொல்வதைக் கேளுங்கள்;
    “வாழ்க்கையென்பதும் கோச்சுவண்டியில் மேற்கொள்ளும் ஒரு பயணமே”

    ReplyDelete
    Replies
    1. @ கா.பா

      வாவ்!! பின்னிப் பெடலெடுத்துட்டீங்க பாஸ்!! செமயான தமிழாக்கம்!!

      ///நண்பர்களும் எதிரிகளும் ஒன்றாகத் தங்கள் மூக்குககளை எதிலோ மோதிக் கொள்கிறார்கள்;///

      'எதிலோ' என்பதற்குப் பதிலாக,
      'நண்பர்களும், அவர்தம் எதிரிகளும் மூக்கோடு மூக்காய் மோதிக்கொள்கின்றனர்' என்பது இன்னும் நன்றாகப் பொருந்திவரும் என்பது என் தாழ்மையான கருத்து!!
      அதாவது, கோச் வண்டி ஆடுகிற ஆட்டத்தில் நண்பன்-எதிரி என்ற வித்தியாசமின்றி தங்கள் மூக்குகளை பரஸ்பரம் உரசிக் கொள்கிறார்களாம்!!

      இன்று இம்மாதிரியான கோச் வண்டிகள் இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட இதே அனுபவத்தை நம்ம ஊர் ஷேர்-ஆட்டோக்கள் இன்றும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்று கூறிக் கொண்டு... ;)

      Delete
  35. லார்கோ வரும் வாரம்தான் படித்க வேண்டும். சோ ஜ கான்ட் பார்டிசிப்பேட் இந்திஸ் டிஸ்கசன யுவர் ஆர்னர்.

    ReplyDelete
  36. நடமாடும் நகரம் - டெக்ஸ் பஞ்ச் டயலாக் மற்றும் கார்சனை காலை வாருவது அதிகம் இல்லை. டெக்ஸ் ஒரு சமயத்தில் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தான் உண்டு என நினைக்க ஆரம்பித்து அவரை சாதாரண மனிதராக காட்டியது.

    ஆனால் படிக்க சுவாரசியமாக இருந்தது.

    ReplyDelete
  37. விஜயன் சார், போட்டோஸ் எல்லாம் பிரமாதம். இந்த நிஜ புகைப்படங்கள் கண்டிப்பாக நம் மாட்டு பயன்கள் கதை படிக்கும்போது நம் கற்பனையை நிஜத்தோடு ஒப்பிடுவதற்கு கண்டிப்பாக பயன்படும்.

    நான் இந்த வாரம் படித்து முடித்த கதைகள்

    பழையது:
    1 சுல்தானுக்கொரு சவால் - மோடி மஸ்தான் சுல்தானாக, சுல்தான் ஹாருன்னை ஒரு ஒற்றைக்கு ஒற்றை சவாலில் மாட்டி விட அது வழக்கம் போல சுற்றி வளைத்து மோடி மஸ்தானுக்கே வில்லங்கமாக வந்து சேர்ந்து விடுகிறது
    இதன் கூட ரிப் கிர்பியின் பிளாக் மெயில் என்றொரு நல்ல கதை.
    கண்ணாமூச்சி ரே ரே ... ஒரு புதிர் அரங்கத்தின் உள்ளே போனவர்கள் வெளியே வருவதே இல்லை. மோடி மஸ்தான் சுல்தானை அதன் உள்ளே அனுப்பி தானே சுல்தானாக முயற்சிக்கும் கதை.
    ஒரு ஏதேனும் ஒரு ஏமாளியும் - எல்லோருடைய favourite சிக் பில் கதை. ஒரு பைத்தியக்கார பொருட்கள் சேகரிக்கும் பணக்காரனுக்கு கிட அர்டீனின் தொப்பியை ஒரு எத்தன் விற்கும் கதை. வழக்கம் போல சிரிப்பிற்கு பஞ்சம் இல்லை

    புதியது:

    வாடகைக்கு கொரில்லாக்கள் - Passed with flying colors என்று சொல்லுவார்களே. அது தான் இந்த புதிய மேக் அண்ட் ஜாக்கிற்கு கொடுக்கப்படும் தீர்ப்பு. கலக்கல் வித்தியாசமான ஜானர். மேலும் இவர்கள் கதைகளை எதிர்பார்க்கிறேன்

    கடவுளரின் தேசம் - முதன் முதலில் விஜயன் சிருக்கு நன்றி, இந்த நான்கு கதைகளையும் ஒரே புத்தகமாக வெளியிட்டதற்கு. தனி தனியாக வந்திருந்தால் இந்த கதையின் மகத்துவம் கணிசமாக இறங்கி இருக்கும். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கற்பனை. இந்த கதையை படிக்கும்போது "கோனன் தி பார்பாரியன்" , "அபோகாலிப்டோ", "எமரால்டு பாரஸ்ட்" படங்களை பார்த்தது போல இருந்தது. கதையினுள்ளே போய் விட்டேன். கதை முடிந்தவுடன், அடடா அதுக்குள் முடிந்து விட்டதே என்று வருத்தமாக இருந்தது. இது வரை வந்த கதைகளிலே இந்த கதைகள் தான் நம்பர் ஒன்னு. ஒரேயடியாக கௌ பாய் கதைகளை படித்து புளித்து போன மனதிற்கு இது போன்ற பாண்டஸி கதைகள் வர பிரசாதம்.

    இதே போல சயின்ஸ் பிக்ஷன் ஜானர் எப்பொழுது வருமோ ?

    எனக்கு இது போல நிஜத்தில் சாத்தியம் இல்லாத கதைகள்.. உதாரணத்திற்கு
    தோர்கல், மார்ட்டின், ஸ்பைடர். ஆர்ச்சி, மாயாவி, திகில் கதைகள், சயின்ஸ் பிக்ஷன் மீது ஆர்வம் அதிகம்.

    நிஜத்திற்கு அருகாமையில் உள்ள கதைகள் என்றால், லார்கோ, ஷெல்டன், லாரன்ஸ் டேவிட், ரிப் கிரபிய, சார்லி, மாடஸ்டி, இரும்பு கை நார்மன், XIII இவர்கள் கதைகள் பிடிக்கும்.

    கௌ பாய் என்றால் டைகர் கதைகள் தான் நிஜத்திற்கு நெருங்கி இருப்பவை. டெக்ஸ் ஓவர்டோஸாக இருக்கிறது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் ஓவர்டோஸாக இருக்கிறது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து./////
      தெய்வ குத்தம் ஆகிவிடும். பார்த்து பிரபு.

      Delete
    2. அவரவர் கருத்துக்கள் சொல்வது வரவேற்கலாம் விவாதங்கள் செய்யலாம் ஆனால் நான் பிடித்த முயலுக்கு ஒரே கால் என விதண்டா வாதம் செய்வதுதான் முடியவில்லை நண்பர் கணேஷ் குமாருக்கு தெரிந்தது டெக்ஸையும் டெக்ஸ் ரசிகர்களை சீண்டுவது மட்டும்தான் கணேஷ் குமார் நாம் அனைவரும் காமிக்ஸ் ரசிகர்கள் ஒன்றாகவே இருப்போம் சந்தோஷமாகவே இருப்போம் வேண்டாமே பகடிகள் உங்களை நேரில் காண ஆவலாக உள்ளேன் ஈரோடு விஜயம் உண்டா

      Delete
  38. ////ஹல்லோ ஆய்வாளர்களே....!!////

    கூப்பிட்டீங்களா சார்...?!!

    ReplyDelete
    Replies
    1. முதல்லே எஞ்சினியர்ஸ் ; இப்போ ஆய்வாளர்ஸ் !! அடுத்து என்னவோ ?தெய்வமே !!

      Delete
  39. நுரைவாய் ததும்ப பரி பல இழுக்கும் பறக்கும் வண்டி
    திரைக்கடல் தன்னின் அகடு முகடென
    இன்றோ பள்ளம் ; நாளை மேடு செல்லும் வழிதான் செப்பென செப்பு
    நாணமில் நங்கையின் நடுவிரல் நகமென
    முகத்தை ,கையை முன்தொடை தன்னை
    மெதுவாய் கிழிக்கும் வழிநடை மரக்கிளை
    வறண்ட காற்று வதனம் மோதும்
    வாட்டும் கனலில் மனிதம் கூட ஆவியாகும்
    தவறி காலை மிதிக்க நேரின்
    காந்தியின் கையிலும் முளைக்கும் . கைத்துப்பாக்கி.


    பகடை எண்களின் அநிச்சயம் போல வண்டி
    சகடை உருள்திசை தெய்வமறியும்
    உருட்டல் ,புரட்டல் ,அங்கே ,இங்கே
    சட சட கட கட
    கடிதாய் விரையும் வண்டியின் ஆட்டம்
    மடிதனில் விழுவது பெதும்பையா ? அரிவையா?
    நும்தன் அதிர்ஷ்டம் அதை தீர்மானிக்கும்
    இளம்தாய் ,மங்கையர் இளம் குழந்தைகளை
    இடம்விட்டு கொஞ்சம் ஒதுக்கியே வைக்க !
    மீண்டும் அவர் கருப்பை புகாமலிருக்க
    மிரட்டும் வண்டியின் மேலான ஆட்டம் .


    மூன்றாம் பாதம் முளைத்தது எஞ்ஞனம்
    மோன சிந்தனை முகிழ்த்திட வேண்டாம்
    அது இடப்புற மனிதரின் வலப்புற பாதம்

    கவுனுக்கு மேலே காலர் கண்டு
    கன்னி பெண்ணே ! வேண்டாம் மிரட்சி
    அது கனத்த கனவானின் கோட்டின் நீட்சி ..
    பாடாய் படுத்தும் காற்றின் போக்கில்
    அங்குமிங்கும் நூலறு பட்டம்
    அதுபோல் சிரசு உரசும் வண்டியின் விட்டம்
    மொத்த நட்டம் அறியும் பிட்டம்
    கொடும்பகை எதிரி நகம் தொடும் தூரம்
    கொண்டு செல்லும் வண்டியின்பாரம்


    இலக்கினை அடைய இடர்கள் எத்தனை
    கலக்கமின்றி உயர்த்து உளத்திண்மை
    வன்மேற்கின் பாதையில் வண்டிப்பயணம்
    வழங்கும் உண்மை வாழ்க்கைப்பயணம்

    ReplyDelete
    Replies
    1. அம்மாடியோவ்!!!!!!

      செனாஅனா!!! விக்கித்துப் போய்விட்டேன்!!! ஆங்கிலக் கவிதையை தமிழ் படுத்துவதே சிரமம்! தமிழ் படுத்தியதோடு, செய்யுளாகவும் படுத்தி, படுத்தி... ப்பா!! என்னாவொரு அசாத்திய திறமை உங்களுக்குள்!!

      நீங்கள்லாம் எங்கிருந்து சார் வந்தீங்க?!! எந்த கிரகம்னேன்?

      Delete
    2. ///சிரசு உரசும் வண்டியின் விட்டம்
      மொத்த நட்டம் அறியும் பிட்டம் ///

      ப்பா... என்னாவொரு கவிதை நடை!! செம்ம!!

      Delete
    3. ///கடிதாய் விரையும் வண்டியின் ஆட்டம்
      மடிதனில் விழுவது பெதும்பையா ? அரிவையா?
      நும்தன் அதிர்ஷ்டம் அதை தீர்மானிக்கும்///

      இப்படியாப்பட்ட நல்ல வாய்ப்புகளை இழந்துட்டு டெக்ஸ், டைகர்லாம் ஏன்தான் தனியா குதிரையில பயணிச்சுக்கிட்டுக் கிடந்தாங்களோ?!!

      Delete
    4. ///மூன்றாம் பாதம் முளைத்தது எஞ்ஞனம்
      மோன சிந்தனை முகிழ்த்திட வேண்டாம்
      அது இடப்புற மனிதரின் வலப்புற பாதம்///

      வலப்புற மனிதனின் இடப்புற பாதத்தையும் சேர்த்துக்கிட்டீங்கன்னா.. மொத்தப் பாதங்களின் எண்ணிக்கை - நான்கு!! :D

      Delete
    5. எ எல்லாம் கடைய சாத்தீட்டு போங்கப்பா!?

      போட்டி முடிஞ்சுது!!??

      கெளம்பு! கெளம்பு!!

      Delete
    6. ////மடிதனில் விழுவது பெதும்பையா ? அரிவையா?////

      ஆனாக்க இதுதா மனசுக்கு புடிச்ச லைன்! 😍😍😍

      அப்டியே இதே மூடுல இம்மாத லாா்கோவுக்கும் கவிதை எழுதுனீங்கன்னா ??!!

      Delete
    7. செம செனா அனா ஜீ...

      ஆனா தமிழ்ல மொழிபெயர்த்து இருந்தா எனக்கு கொஞ்சம் புரிஞ்சு இருக்கும்...:-)

      Delete
  40. லார்கோ வின்ச் - பிரியமுடன் பிரளயம்

    நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் கதை என்பதால் ஆர்வத்துடன் முதலில் படிக்க எடுத்தேன்

    வழக்கமான action / வலுவான plot இதில் இல்லை. முழுவதும் ரொமான்ஸ் தூவலுடன் பயணிக்கும் கதையினில் plot மிகவும் மெல்லியதாய் அமைந்து விட்டது.

    மேலும் லார்கோ மற்றும் அவரது சக action குழாம் இக்கதையினில் 'சதை வேட்டையை' மட்டுமே சுற்றி வருவது - பலத்த பின்னடைவு.

    May be, லார்கோ கதைகளுக்கான அழுத்தமான பிளாட்கள் காலாவதியான feeling வந்ததால் ஷான் வான் ஹாம்மே ஓய்வறிவித்தார் போலும்.

    முதல் பாகம் இல்லாமலேயே இரண்டாம் பாகம் வாசித்தால் புரிந்து விடக்கூடிய கதையே. டாப் 3 கதைகளுள் ஒன்றல்ல.

    ReplyDelete
    Replies
    1. //May be, லார்கோ கதைகளுக்கான அழுத்தமான பிளாட்கள் காலாவதியான feeling வந்ததால் ஷான் வான் ஹாம்மே ஓய்வறிவித்தார் போலும்.//

      Exactly !!

      Delete
  41. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். இம்மாத வெளியீடுகளில் நடுநிசிக் கள்வனையும் நடமாடும் நரகத்தையும் வாசித்து முடித்திருக்கிறேன். உண்மையான show-stealer இந்த மாதத்தைப் பொறுத்தவரையில் மாயாவிதான் (அட்டைப்படம் - திருஷ்டிப் பரிகாரம்). ஆங்கிலத்தில் character building என்றொரு பதத்தினை பயன்படுத்துவார்கள். இந்தக் கதையின் எதிர்நாயகன் மாண்ட்ஜூமாவை எடுத்துக் கொண்டு பேசுவோம். அவனொரு வீரன் என்பது ஆரம்பகட்ட காளைமாட்டுச் சண்டையின் வழியே நிறுவப்படுகிறது. லட்சியத்தை அடைய எதையும் செய்யத் தயங்காதவன். நம்பிக்கைக்கு உரிய பணியாளனைப் பலிகொடுத்து தங்கத்தட்டைத் திருடிச் செல்கிறான். அவன் ஏன் அஸ்டெக்குகளின் ராஜ்ஜியத்தை மீட்க நினைக்கிறான் என்பது அவனுடைய தலைக்காயத்தின் வழியாகச் சொல்லப்படுகிறது. (உன்னுடைய முன்னோர்கள் என்னுடைய முன்னோர்களின் அனுமதியோடுதான் இவற்றைத் திருடி வந்தார்களா - பிளாக் பேந்தரின் கில்மாங்கர் நினைவுக்கு வருகிறானா?) இறுதியில் கண்பார்வ தெரியாத நிலையிலும் காளையோடு மோதத் தயாராகிறான், மாயாவின் அவனுடைய வீரத்தை வியந்து பாராட்டி அவனைக் காப்பாறுகிறார். எழுபதுகளில் வரையப்பட்ட கீச்சலான ஓவியங்கள், காதுலப்பூ கதை இவையெல்லாம் தாண்டி இந்தக்கதைக்குள்தான் எத்தனை அடுக்குகள்? இப்போது இந்தக் கதையைக் கொண்டு டெக்ஸைப் பார்க்கும்போது ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடங்கிப்போகும் கதை. ஏன் அந்தச் செவ்விந்தியர்கள் குழுவினைப் பிரிந்து வெள்ளையர்களோடு போரிடுகிறார்கள் - அழுத்தமாக ஏதும் சொல்லப்படாத காரணத்தால் கதையொடு பெரிதாக ஒன்ற முடியவில்லை. மற்றுமொரு சுட்டுக் கொண்டே இருந்தார்கள் பாணியிலான கதையில் கார்சனின் பகுதி மட்டும் களைகட்டுகிறது. டெக்ஸ் சாகசங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. லார்கோ இனிமேல்தான் வாசிக்க வேண்டும். மேலும் புலன் விசாரணை பற்றிய உங்கள் பதிவுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். நன்றி.

    பிரியமுடன்,
    கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
  42. பிரியமுடன் ஒரு பிரளயம் ..


    ஒரு ஆக்ஷன் ஹீரோ அட்டைப்படம் தமிழ்பட காதல் சினிமா போஸ்டர் போல காணப்பட்ட போதே நினைத்தேன் இதில் ஆக்‌ஷன் குறைவாக இருக்குமோ என்று.ஆக்‌ஷன் குறைவாக சென்றாலுமே கூட கதை என்னவோ விறுவிறுப்பாகவே சென்றதை மறுக்க முடியாது.

    ஆனால் அதே சமயம் லார்கோவிலிந்து கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே காதல் ,காதல் (?) என ஓடிகொண்டே இருந்ததை கூட ஓகே எனலாம்.ஆனால் லார்கோ வின் காரியதரிசி பென்னி பாட்டி கூட காதல் காதல் என ஓடுவது ஜீரணிக்கவே முடியவில்லை. வான் ஹாம் லார்கோ பயணத்தில் இருந்து விலகும் சமயம் இன்னும் பட்டாசான ஆக்‌ஷன் களத்தை நாடாமல் காதல் களத்தை தேர்ந்தெடுத்தது ஏனோ தெரியவில்லை.

    என் பெயர் லார்கோவிலிருத்து ஆதலால் அதகளம் செய்வீர் வரை மீண்டும் மறுவாசிப்பு முடித்து விட்டு ( அதன்பிறகான பாகங்கள் மீள்வாசிப்பு செய்ய நேரம் போதவில்லை )இந்த பிரளயத்தை பார்க்கும் பொழுது கொஞ்சம் சூடு ( ஆக்‌ஷன் சூடு ) குறைவே...

    ReplyDelete
  43. பிரியமுடன் ஒரு பிரளயம் !!!

    அட்டைப்படத்தில் லார்கோ விஞ்ச் & சைமன் கௌரவ வேடத்தில் கலக்கும்' னு போட்டுருக்கலாம் :))

    இருப்பினும் கதை நன்றாகவே இருக்கிறது என்பதையும்
    மறுப்பதற்கில்லை !!

    அதுவும் சில்க்கி பேசும் சில ஏடாகூட வில்லங்க வசனங்களை எடிட்டர் ஹியூமராக தமிழ் படுத்தியிருப்பதை ரொம்பவே ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மொழிபெயர்ப்பென்று பார்த்தால் இந்த ஆல்பத்தில் நெட்டி முறிக்கும் வேலையெல்லாம் நிச்சயமாக நஹி ; ஜாலியாகவே பணி செய்ய முடிந்தது ! ஆனால் W குழுமமே திக்குக்கு ஒன்றாய் செய்யும் காதல் களேபரங்களைக் கையாள்வது தான் கொஞ்சம் tough !

      அதிலும் இங்கிலீஷ் ஒரிஜினலை வைத்த்துக் கொண்டு படித்துப் பார்த்தால் நான் செய்ய வேண்டியிருந்த பாம்பு டான்ஸ் என்னவென்பது தெளிவாய்ப் புரியும் !

      Delete

  44. லார்கோ இன்னும் படிக்கவில்லை என்பதால் .......!!!!

    இரவு கழுகின் நிழலில் .....................
    எச்சரிக்கை !!!!!!
    கதையின் மூலக்கரு வெளிப்படுத்தப்பட்டுள்ளது !!!!!

    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    மறுபடியும் ஒரு schizophrenia கதை !!!

    ஒரு மூன்றாம் மனிதர் மூலம் டெக்ஸ் கதை சொல்லப்படுவது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன் ...
    ஆச்சர்யம் என்னவெனில் schizophrenia –ன் மூன்று முக்கிய பிரிவுகளையும் நமது காமிக்ஸ்களில் பார்த்துவிட்டோம் ..
    ஒரு மனநிலை மருத்துமனையில் நடைபெறும் கதையில் (பெயர் நினைவில் இல்லை ...? நிழல்களின் நிஜங்கள் )
    Catatonic schizophrenia பற்றி படித்தோம்

    கடந்த மாத மார்ட்டின் கதையில்
    Disorganized schizophrenia பற்றி படித்தோம்.

    இம்மாத டெக்ஸ் மினி
    Paranoid delusion of persecution type of schizophrenia என்பதனை அடிப்படையாக கொண்ட கதை....
    இவ்வகையில் auditory hallucination மிகவும் சகஜம் ...visual hallucination அபூர்வம் ..ஆயினும் வரக்கூடாது என்பதில்லை ....
    ஒரு உளவியல் மாறுபாட்டினை டெக்ஸ் கதையின் கருவாக வைக்க கதாசிரியர்-க்கு செம தில் இருக்க வேண்டும் ..
    கதையின் கடைசி பேனல் பளாரென்று முகத்தில் அறைகிறது ....

    டெக்ஸ் வில்லர் மீதான பயத்தில் ஒரு குற்றவாளி மன நோயாளியாக மாறுவது வெகு நாட்களுக்கு முன் கேள்விப்பட்டு இருக்கிறோம்

    கீழே பார்க்கவும்


    ///// ஊழல் அரசியல்வாதிகள் சிலர்உதவியோடு சிறையிலிருந்து வெளியேறும் பிரெட் பிரன்னன், ஜான் டெல்லர் இருவரும் மறுபடியும் ஆயுத கடத்தலில் ஈடுபட ஏதுவாக ராணுவ கிடங்குகளில் இருந்து திருடப்பட்ட பெரியம்மை நச்சு கிருமிகள் அடங்கிய போர்வைகளை நவஜோ பகுதியில் புழங்க விடுகின்றனர்...
    இதனால் பல நவஜோ கிராமங்களே அழிகின்றன.
    இதில் லிலித்-ம்அடக்கம் ....
    சம்பவம் நடக்கும்போது கிட்,டெக்ஸ் வேறு பிராந்தியம் சென்றுஇருப்பதால் தப்புகின்றனர்..
    மனைவி இறந்து சிலமணி நேரம் கழித்து அங்கு வரும் டெக்ஸ் அவரது கல்லறை அருகே அதற்கு காரணமானவர்களை அழிக்க சபதம் பூணுகிறார்.
    சில மாதங்களில் ஜான் டெல்லர் கொல்லபடுகிறார்...
    டெக்ஸ்-ஆல் எப்போது கொல்லப்படுவோமோ என்ற அச்சத்தில் வாழும் பிரெட் ப்ரன்னன் பைத்தியம்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு பல வருடங்கள் கழித்து டெக்சால் கொல்லபடுகிறார்.... //////


    கதை அருமையாக கொண்டு செல்லப்பட்டுள்ளது ...

    டெக்ஸ் மினி கதைகளில் மறுபடியும் ஒரு வைரக்கல் .....
    பின் குறிப்பு :
    பாரில் பீர் ஆர்டர் செய்யும்போது வூட்டுக்காரம்மா பிம்பம் தெரிவதெல்லாம் paranoid delusion அல்ல ..அது வெறும் பயப்பிராந்திதான்
    ReplyDelete
  45. கோச்சு அதிமதுரமாகிப் போச்சு!

    பள்ளமென்று பாய்ந்து போச்சு அம்மலை
    பிளவென்று ஊர்த லாச்சு

    மேலேற்றங் கண்டலாச்சு - அம்மலை
    மாற்ற மேங்கும் பெரு மூச்சு

    உட்பிரிவுகளில் நீச்சலடிச்சு - அரவை
    மில்லோசையுந் தணிஞ்சு போச்சு

    கொதிக்குமிக் கதிக்குமா - மனிதருமாச்சு
    மதிக்கு மது யரமாச்சு

    குதிரைச் சவாரி போலாச்சு - இவ்வண்டி
    பயணத்திற்கேன் ஏச்சு பேச்சு

    பேரிளமையாச்சு நாற் பத்தினாச்சு -இளங்கவர்வில்
    இதற்கிணை எது வென்றாச்சு

    அடுத்தமர்ந்தோர் தோளில ணியாச்சு - ஆங்கவர்
    கைகளுக்குள டைக்கலமாச்சு

    அணிற் வேகம் தோற்றுப்போச்சு - கோச்சுக்குள்
    குழந்தைகளா யாகிப் போயாச்சு

    இனிமைக் கிதிலக்கணமாச்சு - குதிரை
    ஏற்ற வண்டிப் பயணக்கோச்சு


    பாதங்கால்கள் பின்னிப் பிணையலாச்சு - தலைகளுக்குள் மோதியுடையும் பெருமூச்சு

    நட்பாயணச்சு மோதி சேர்ந்து பொருதியாச்சு -சோர்ந்து
    நாசிகளுரசி நவரசமாச்சு

    போர்வைகளுக்குள் பார்வைகளாச்சு - முற்றும்துறந்து முனிவனுமாயாச்சு

    வாழ்வென்பதோர் பயணமாச்சு -அது
    கோச்சு வண்டி குதிரையாயடங்கிப் போச்சு.

    J

    ReplyDelete
    Replies
    1. @ j

      (பாதி புரியலேன்னாலும்) பிரம்மிக்க வைக்குது உங்க தமிழ் ஞானம்!!

      Delete
    2. பாதி புரிஞ்சிடுச்சா குருநாயரே..!!??

      Delete
  46. கூச்சமில்லாம குந்திகினு போனோம் கோச்சுவண்டியிலே கோபாலும்நானும்
    போச்சுபோச்சு எங்கெல்லாமோ போச்சு
    மலைமேலே ஏறிப்போச்சு மரங்களுடே ஊர்ந்துபோச்சு
    பள்ளத்தாக்கில் பாஞ்சிபோச்சு பாதிதொண்டைகாஞ்சிபோச்சு
    மருவாதை ப்பட்டவனும் கருமாந்திரம்பிடிச்சவனும்
    ஒண்ணாவந்தான்சவாரி ஓன்னுவச்சான் ஒப்பாரி
    நேத்துசமைஞ்ச சோக்காளியும் நாக்குவரண்டசீக்காளியும் பாதம் உரச
    பக்கத்திலே பக்கத்திலே பாப்பா முகம் வெக்கத்திலே வெக்கத்திலே
    சோமாறியும் ஏற சொகவாசியும் ஏற
    பூமாரியா பொழியுது ?புழுக்கத்திலேகாயுது
    மண்டையும் மண்டையும்முட்டிக்குது மூக்கும் மூக்கும் ஒட்டிக்குது
    பாதையெல்லாம் குலுங்ககுலுங்க வண்டியிலே -அட
    பாதிச்சதையை காணோமடா ....ண்டியிலே !
    ஆனாலும் ஓடுது அதுபாட்டுக்கு காலமெல்லாம் மனுசப்பய வாழ்க்கைபோல
    மேடுபள்ளம்தாண்டி ..மேலேயிருக்கிறவனை வேண்டி !

    ReplyDelete
    Replies
    1. @ Selvas

      ஹா ஹா ஹா!! அபாரம் நண்பரே!!! இதைவிடவும் ஹாஸ்யமாய் எழுதுவது கடினம்!!

      செம்ம்ம்ம!! :)))))))))

      Delete
    2. அந்த ஆங்கிலக் கவிதையின் நயத்தையும் சிலாகிக்காது இருக்க இயலவில்லை !! என்னவொரு நையாண்டி ; யதார்த்தம் ; ரசனை ; குசும்பு !!

      Delete
    3. ஙொக்கா மக்கா தூள்

      Delete
    4. வெளுத்து கட்டிட்டீங்க. 👌👌👌

      Delete
  47. லூட்டி with லக்கிய பாக்க இன்னும் முழுசா ஒரு மாசம் இருக்கா?!!

    ம்ம்ம் 😚😚😚

    ReplyDelete
    Replies
    1. காா்ட்டூன் இல்லா மாதம்
      கலையிழந்த மாதம் 😫😫😫

      Delete
    2. சுட்டி லக்கி 2019ல் உண்டா??!!

      Delete
    3. லக்கி கிளாசிக்ஸ் - 2
      அதிரடிப் பொடியன்!
      மேடையில் ஒரு மன்மதன்!!

      Delete
    4. கேள்வியும் நீங்களே ; பதிலும் நீங்களேவா சார் ?

      Delete
    5. //சுட்டி லக்கி 2019ல் உண்டா??!!//

      Nopes...சுட்டி லக்கி எல்லாமே ஒற்றைப் பக்க gags என்றே திட்டமிட்டுள்ளனர் ; நமக்கு அது ரசிக்காதே !!

      Delete
  48. இந்த மாத இதழ்கள் ரேட்டிங்:
    1.இரவுக் கழுகின் நிழலில்-10/10,
    உளவியல் பிண்ணனியில் வித்தியாசமான பரபர ஆக்‌ஷன் கதை.
    2.நடமாடும் நரகம்-9/10,
    பரபரப்பான வாசிப்புக்கு உத்திரவாதமான ஆக்‌ஷன் மேளா,
    இறுதியில் வரும் திருப்பம் சுவராஸ்யம்.
    3.பிரியமுடன் ஒரு பிரளயம்-8.5/10,
    வழக்கமாக தடதடக்கும் லார்கோ எக்ஸ்பிரஸ் இந்த முறை சற்றே வேகம் குறைவு,
    கதையின் ஒவ்வொரு கேரக்டரும் ஒரு மார்க்கமாகவே திரிகிறார்கள்,
    லார்கோவோவுக்கு பெரிசா ஒன்றும் வேலையில்லை,லார்கோ கேரக்டர் இருக்கு ஆனா இல்ல பாணிதான்,
    கொஞ்சம் பிசகினாலும் கதை வேறு தடத்தில் மாறும் விடும் தன்மையுடைய கதை,
    ஆக்‌ஷன் குறைவாக இருப்பினும் ஒருமுறை வாசிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. லார்கோவுக்கு இந்தக் கதை நெடுகிலும் ஒரு காதல்வயப்பட்ட டீனேஜரின் அவதார் தான் !! பர்மாவின் கானகங்களில் அதகளம் செய்த மனுஷனுக்கு இதுவொரு timepass ஆல்பமே ! ஒருவாட்டி ஜாலியாக வாசிக்க என்பது சரி தான் சார் !

      Delete
  49. சந்தக்கவி செனா அனா மற்றும் கவி காபா அவர்களுக்கு

    அடேங்கப்பா...!!!

    ReplyDelete
  50. புதுச் செறுக்கின் துவக்கமின்று....

    எம் வாசகர் இவரெல்லாமென்று !!

    உள் செறுக்கின் அஸ்தமனமின்று...

    எம் வாசகர் இவரெலாமென்று !!

    அடடே..ஒற்றை நாளில் தான் எத்தனை உவகை....!!

    இந்த மகிழ்வுக்கு ஈடாய்த் தரலாம் உலகை !!

    ----இப்படிக்கு : பெரும் புலவனார் அவுல் ஐஸ் !-----

    ReplyDelete
    Replies
    1. சந்தக்கவி செனா அனா மற்றும் கவி கா.பா ; நண்பர்கள் j ; selvas என்று அத்தனை பேரும் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் !! Simply awe inspiring !!

      Delete
    2. இ.ப, டெக்ஸ்-70, பு.வி'னு மெகா மெகா புராஜக்ட்டுகளின் நடுவிலும் நம் தலைமைப் புலவர் அவுல் ஐஸுக்கு எப்படித்தான் இப்படி கவிதையெல்லாம் எழுத முடியுதோ?!!

      அடுத்தமாச 'ஹாட்-லைன்' கவிதை வடிவில் வெளியானாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை போலிருக்கே....

      Delete
    3. தலையில் மை பூசுவதாலே தலைமை புலவனோ ?

      அடடே.. !!

      இவண் : கேசத்தைக் கறுப்பாக்க முனைவோர் சங்கத்தின் சமீப உறுப்பினன்.

      Delete
    4. ////கேசத்தைக் கறுப்பாக்க முனைவோர் சங்கத்தின் சமீப உறுப்பினன்.////

      ஆனாலும் நம்ம எடிட்டருக்கு நகைச்சுவை உணா்வு ரெம்ப ஜாஸ்தி!

      சமீப உறுப்பினா்னு தமாஸ் பண்றாரு பாத்தீங்களா??

      நாங்க டவுசா் போட்ட காலத்திலயே எடிட்டராக கோலோச்சியவா்!!!😋😋

      Delete
    5. அப்டியா சேதி
      தாத்தா ஆவார்னு பாத்தா புலவர் ஆயிட்டாரு

      நாங்கள்ளாம் போய்ட்டு வர்றோம்.

      Delete
  51. தவக்களையப் புடிக்க பம்மிகினே போற பாம்பு கணக்கா பள்ளத்தாக்குல ஊர்ந்துகினும் ...

    லைட்டுப்பூச்சியப் புடிக்க மொல்லமா செவுத்துல நவுர்ர பல்லி கணக்கா மலைமேல ஏறிகினும் ...

    ரோட்டோராமா கெவுருமெண்டு வள்த்துகீற மரத்தோட கெளையெல்லாத்தையும் ஒட்ச்சிகினும் ...

    பேஜாரான ரோட்டுமேல போச்சொல்லோ மாவுமிசினு கணக்கா கரக்கு கரக்குன்னு சத்தம் குடுத்துகினும் ...

    ரொம்போவே சாப்டான ரீஜன்டான பெரீய்ய மன்சாளைகூட காண்டாக்கி பொறுக்கிமேரி கடுப்பேத்திகினும் ...

    தூத்தெறி...படா ரோதனைபா இந்த கோச்சுவண்டி பயணம்...!

    முன்னாடி பெஞ்சுல நெத்திலியும் வாலையுமா ஃபிகருங்க குந்திகினு இருந்தாலும்,
    வண்டி குலுங்கி தூக்கிப்போடசொல்லோ நம்ம மடீல வந்து வுயுவுறதெல்லாம் பொயலை மெல்ற கெய்விங்களாவே கீது ...கஷ்மாலம்....!

    இதாச்சும் பரவால்ல ..போனதபா தூக்கிப்போடசொல்லோ, பக்கத்துல இருந்த பெருசு சுருட்டை என்வாயில வெச்சிடுச்சி ...பேமானி..நெருப்பு கீற பக்கத்தை வெச்சிபுட்டான் போல ..வுன்னும் எரியுதுபா..!

    இந்த கொயந்தைங்க வேற பிளேடு போட்டு மாட்டிகினு செமுத்தியா வாங்கிகினா மேரி கத்தீனே கீதுங்க ...!

    இன்னா கலீஜா கீதுபா இந்த கோச்சுவண்டி பயணம்.!

    முன்னால குந்தினுகிற பேமானி என் வேட்டியில காலை வுடடுகினான்..பக்கத்துல குந்தினுகிற கசுமாலம் பாக்கெட்ல கைவுட்டு பீடிய பீராஞ்சிகினான்.!
    சோமாறிப்பய ஒர்த்தன் சுண்டக்ஞ்சி அட்சீனு வந்துகிறான் போல ..என் மூக்குலயே கொணாந்து வாய வெச்சிகினுகீறான் ..கொடல புடுங்கினு வருது...!

    கைலியவும் சொக்காயவும் பாயா விரிச்சி லங்கோட்டோட தூங்கிகினு வருது ஒரு பொறம்போக்கு ...!

    எங்க பேட்டை பீடிசாமியாரு இன்னா சொல்றாருன்னா ...
    'லைஃபுல ஆட்டம் போட்டுகினு இருந்தாலும் செரி...கோச்சு வண்டியில ஆட்டம் போட்டுகினு வந்தாலும் செரி... மவுனே உனுக்கு டிக்கெட்டு கன்பார்முடா ...'

    சர்தானபா ...!!!

    ReplyDelete
    Replies
    1. @ KOK

      ஹா ஹா ஹா!!! :)))))))))))))))))

      அல்டிமேட்!!! அட்டகாசம்!!!!

      சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது போங்க!! :))))))))))))

      Delete
    2. ஹாஹா அபாரம்.இந்தமாத கார்ட்டூன் காமெடி இல்லாத குறையை போக்கிவிட்டது..அதிலும் வேட்டியிலே காலை விடும் பேமானி சூப்பர்!நான் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் சினிமா கொட்டகையில் என் பின்னால் இருந்த ஆசாமி தூங்கி விழுபவன்போல் என் டவுசரை நோண்ட ஆரம்பித்தான் ..ஓடியே போய்விட்டேன் ..அது இப்போது ஞாபகம் வருகிறது..

      Delete
    3. ஹா...ஹா...ஹா..

      செமையா இருக்கு.

      Delete
    4. கண்ணன் செம்மையோ செம்ம

      Delete
  52. நடமாடும் நரகம் :

    முதலில் அட்டைப்படத்திற்கு பிடியுங்கள் பாராட்டுகளை.! சேணத்தை தோளில் சுமந்தபடி டெக்ஸ் நடந்து வரும் கெத்தே கெத்து ..! இக்கதையில் நடமாடும் நரகம் யார்? அட்டையில் நடந்துவரும் வில்லரா அல்லது மேலே அமர்ந்தபடி குதிரையை நடத்திவரும் குட்டி ஓநாயா (லிட்டில் வுல்ஃப்னா அதானே?)? அல்லது அந்த கோச்சுவண்டியா?
    சிறிது இடைவெளிக்குப்பின் செவ்விந்திய பின்னனியில் டெக்ஸ் வில்லர் சாகசத்தை பார்த்ததில் பெரிய திருப்தி.!
    அந்த வில்லன் பாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம்.! (வசனமும் சேர்த்திருக்கலாம் ..மொத்தக் கதையிலும் மூன்றுக்கு மிகவில்லை)

    ஒரு கோச்சுவண்டி, அதில் வெவ்வேறு காரணங்களோடு பயணிக்கும் சில பயணிகள் ..அவர்களோடு அகஸ்மாத்தாக வந்து சேரும் வில்லர் கார்சன் ஜோடி ..!
    அனைவரும் லிட்டில் வுல்ஃப் என்ற செவ்விந்திய புரட்சியாளனின் தலைமையில் இயங்கும் பெரிய குமபலிடம் வசமாக மாட்டிக்கொள்கிறார்கள்.!
    தப்பியோடி சிறு விடுதி ஒன்றில் தஞ்சம் புக., இச்சிறு குழுவை லிட்டில் வுல்ஃபின் பெரும்படை முற்றுகையிட்டு முடக்கிப்போட்டுவிடுகிறது.!

    இரு பெண்கள்., துப்பாக்கியே பிடிக்கத்தெரியாத ஒரு தையல்காரர்., செவ்விந்தியர்களின் கூட்டாளியான துரோகி ஒருவன்., விடுதி உரிமையாளர், ஒரு தேடப்படும் குற்றவாளி., ஒரு ரிட்டயர்டு கேப்டன் மற்றும் போலீசில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் தப்பியோடத்துடிக்கும் ஒரு கொலைக்குற்றவாளி என இச்சிறு குழுவை வைத்துக்கொண்டு முற்றுகையிட்டிருக்கும் செவ்விந்தியர்களை எதிர்த்து போரிடும் நிலையில் வில்லரும் கார்சனும். .!
    இப்படியொரு இக்கட்டிலிருந்து எப்படித் தப்புகிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.!
    டெக்ஸ் வில்லரின் கதைகளை பொறுத்தவரை எல்லாவற்றையும் யூகிக்க முடியுமென்றாலுமே கூட .... ... அதைப் படிப்பதே ஒரு அலாதி சுகம்தான் ..!!

    நடமாடும் நரகம் - துப்பாக்கி சொர்க்கம்

    ரேட்டிங் 9/10

    ReplyDelete
  53. செல்வம் அபிராமி ஜி,கார்த்திகை பாண்டியன் சார்,ஜெ சார்,செல்வாஸ் சார்,கண்ணன் ஒவ்வொருவரும் அவங்கவங்க பாணியில் கலக்கியிருக்கிங்க.
    அருமை,அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அறிவு சார்

      Delete
  54. 1. பிரளயம்( வாரி சுருட்டிக்கொண்டு செல்வது போன்று) .. லார்கோவை மையப்படுத்தி லார்கோ இல்லாமலே இக்கதை சோபித்திருக்கும். தலைப்பை மாற்றியிருக்கலாம்.

    2. மாயாவி .. அட்டகாசாமான நேர்த்தியான கதை.
    பக்கம் 39-ல் மேலுள்ள படத்திற்கு கீழ் உள்ள வசனமும் கீழ் உள்ள படத்திற்கு மேல் உள்ள வசனமும் இருக்க வேண்டும்.

    பக்கம் 44-ல் மேலுள்ள படத்திற்கு கீழ் உள்ள வசனமும் கீழ் உள்ள படத்திற்கு மேல் உள்ள வசனமும் இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் லார்கோவின் அதிரடி இல்லாமல் கதைகள் வந்தால் ஊற்றிக் கொண்டு விடும்

      Delete
    2. அதான் ஊஊஊத்திக்கிச்சே.

      Delete
    3. லார்கோவிந்தா

      Delete
    4. கோவிந்தா கோவிந்தா லார்கோவிந்தா

      Delete
    5. லார்கோ ஓகேதான் ஜெ சார்,அவ்வளவு மோசமாக எல்லாம் இல்லை.

      Delete
    6. அறிவு சார்
      பரபரப்பு மிஸ்ஸிங் சார்
      அந்த வெடி குண்ட மனுஷன் தொடக்கூட இல்ல.
      அந்த கேப்டன் லேடி தான் தூக்கி கடாசுது.

      ஒரே சோகம் அறிவு சார்.

      எப்ப பாத்தாலும் ஸாய்டிய காணோம்னு டயலாக் பேசுறாரு.

      அந்த லார்கோ டச் இல்ல பாருங்க......

      Delete
  55. நடமாடும் நரகம்:-
    நான் சமிபத்தில் ரொம்பவும் ரசித்த டெக்ஸ் கதை
    அட்டைபடம் மிகவும் அருமை
    அந்த சேனத்தை எடுத்து கொண்டு நரகத்துக்கு எற்ற அட்டைபடம்
    கதை கிட்டத்தட்ட டெக்ஸ்ஸின் நிலவோழியில் ஒரு நரபலி போன்று இருந்தது
    என்னை மிகவும் கவர்ந்தது சிறப்புஅம்சம் என்னவெனில் கோச்வண்டில் வரும் பலதரப்பட்ட பையனிகலே என்னை மிகவும் கவர்ந்தது
    பல மாதங்களுக்கு பிறகு டெக்ஸ் மிகவும் மிடுக்காக இறுந்தாா்


    என்னுடைய மார்க் 9.5/10
    எற்கனவே பார்த்த கதை ஓட்டம் என்பதால் 0.5 மைனஸ்

    ReplyDelete
  56. சார் லார்கோ சாகஸங்கள் இந்த பிரளயத்துடன் அங்கு ஒரிஜினலில் முடிவடைந்து விட்டதா ..அல்லது தொடர்கிறதா ..?

    வேறு சாகஸங்கள் தொடர்ந்து இருப்பின் மீண்டும் நமது இதழில் எப்போது தலைகாட்டுவார்?

    அந்த தொடரின் கதையாசிரியர் யார்..?வேறு நம் கதாநாயகர் கதைகளில் பணியாற்றி உள்ளாரா ?

    ReplyDelete
    Replies
    1. தலீவரே....முதல் சுற்று முற்றுப் பெற்று விட்டது. புது கதாசிரியர் - அதே ஓவியர் கூட்டணியில் அடுத்த சுற்று இப்போது தான் ஆரம்பம் கண்டுள்ளது ! கொஞ்ச காலம் முன்பாய் இது பற்றி விலாவரியாக எழுதிய ஞாபகம் உள்ளது !

      Delete
    2. உடனடி பதிலுக்கு நன்றி சார்..தாங்கள் ஏற்கனவே இதனை பற்றி சொல்லி இருந்தீர்கள்.ஆனால் இரண்டாம் சுற்றில் லார்கோ வெளிவந்து விட்டாரா இல்லையா என்பது நினைவில் இல்லா காரணத்தால் எனது கேள்வி சார்..

      Delete
  57. Wild west is the apple of my eye forever!!

    ReplyDelete
    Replies
    1. 🍎🍎🍎🍎🍎🍎

      👀👀👀👀👀👀

      💖💖💖💖💖💖

      Delete
  58. எனக்கு அந்த காலத்தில் ரோம்ப பிடித்த ஒரு விஷயம் கோச் வண்டி
    இந்த மாதம் வந்த டெக்ஸ் கதையில் கோச் வண்டியில் நானும் ஒரு பயணியாக இருக்கவேண்டும் என்று ஆசை!!!

    ReplyDelete
  59. சில சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் மறுவாசிப்பு இதழ்கள் என்றால் இரும்புகை மாயாவி,ஸ்பைடர் ,ஆர்ச்சி போன்றவர்களை தான் தேர்ந்தெடுப்பது வழக்கம்.அதுவும் பலப்பல முறை அவைகளை மறுவாசிப்பு செய்யும் காரணத்தால் அந்த கதைகளும் பள்ளி பாடம் போல மனப்பாடமே ஆகி விடும் .ஆனால் இப்பொழுது எல்லாம் மறுவாசிப்பு என்றால் அவர்களை தேடுவது கூட இல்லை என்பதால் ஆசிரியர் இப்பொழுது வெளியிட்டு வரும் மும்மூர்த்திகளின் சாகஸங்கள் வெளிவரும் சமயம் மட்டும் மறவாமல் கதை நினைவில் இருந்தால் கூட படித்து விடுவது உண்டு .என்ன தான் படித்த கதையாகவே இருப்பினும் ,கதை சிறிது சிறிது நினைவிற்கு எட்டினாலும் ஒரு மறுபதிப்பு இதழ் ஒரு புதிய தரத்தில் வெளிவரும் சமயம் ஒரு முறையாவது அதையும் படித்து முடித்து விட்டு வைத்தால் அந்த இதழுக்கு நான் செய்யும் மரியாதை என்பது எனது எண்ணம்.

    அதே எண்ண தூண்டுதலில் தான் இம்மாத நடுநசி கள்வனையும் படிக்க ஆரம்பித்தேன்.இந்த கதையை ஏற்கனவே பல முறை படித்த நினைவு . ஆனால் இப்பொழுது படிக்கும் பொழுது ஒரு புது இரும்புகை மாயாவியின் சாகஸத்தை படிப்பது போலவே படபட விறுவிறுவென படித்து முடித்து விட்டேன்.அந்த காளை மாடு ,அஸ்டெக் சாம்ராஜ்யம்,மாண்டிஜீமா ,படையெடுப்பு என சில சில ஒற்றைவார்த்தைகள் மட்டுமே பழைய கதை சம்பவங்களை நினைவுபடுத்தியதால் புதிதாய் படிக்கும் எண்ணம் வழக்கம் போல.அட்டைபட ஓவியம் பழைய பாணியை நினைவுபடுத்தினாலும் அந்த வண்ணங்கள் இதழுக்கு அழகை சேர்த்தது. என்ன ஒன்று மறுபதிப்பு காணா பழைய இதழ்கள் இது போல் எப்போது காண்போமா என்ற ஆசை மனதில் துளிர்விடுகிறது .ஆசை பலிக்குமா ? நிராசையாகுமா?
    என்பது தான் இப்போது புரியாத புதிர்

    ReplyDelete
    Replies
    1. // மறுபதிப்பு காணா பழைய இதழ்கள் இது போல் எப்போது காண்போமா என்ற ஆசை மனதில் துளிர்விடுகிறது .ஆசை பலிக்குமா ? நிராசையாகுமா?
      என்பது தான் இப்போது புரியாத புதிர் //

      கண்டிப்பாக கிடைக்கும்! கவலைவேண்டாம்!

      Delete
    2. கிடைக்கும் ஆனா கிடைக்காது

      Delete
  60. நடமாடும் நரகம்!

    நம் மக்காள் செய்த அதகள விமா்சனமும், கவிதையும், எடிட்டா் சாாின் வரலாற்று புகைப்படங்களும், டெக்ஸ் சந்தா கட்டாத என்னை ஈரோடு சென்று 'நடமாடும் நரகத்தை' வாங்கச் செய்துவிட்டது.

    டெக்ஸ் கோச் வண்டியை வந்தடைய நானும், டெக்ஸோடு சோ்ந்து பயணத்தை துவங்கிவிட்டேன்!

    5 மாத இடைவெளிக்கு பிறகு என்பதாலா? தொியவில்லை. கதை படு சுவாரஸ்யமாக போகிறது!

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸோடு சோ்ந்து பயணத்தை துவங்கிவிட்டேன்!//

      Happy journey !!

      Delete
    2. நானும் லார்கோவோடு பயணத்தைத் துவங்கியிருக்கிறேன்!!

      ப்பா!! என்னவொரு கிளுகிளுப்பான பயணம்!!! :P

      Delete
  61. இரவுக்கழுகின் நிழலில் :-

    ஹாஹாஹா..!! செம்ம பொருத்தமான தலைப்பு.! கதைமுழுக்க டெக்ஸின் நிழலுருவமே சாகசம் செய்கிறது.!

    ராண்டி த லக்கியை தன் மௌணத்தின் மூலமே கதறடிக்கும் வில்லர்.. க்ளைமாக்ஸில் மட்டும் அவனுடன் ஓரிரு வார்த்தைகள் வார்த்தைகள் பேசி., அந்த வில்லனின் மனப்பிராந்தியிலிருந்து விடுதலையளித்து அனுப்பி வைக்கிறார்.!

    டெக்ஸின் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட வித்தியாசமான சிந்தனை....அதற்கே கதாசிரியரை பாராட்ட வேண்டும்.! முழுநீளக்கதையாக இன்னும் பல சம்பவக்கோர்வைகளுடன் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.! லெக்பீஸின் சைஸ் சிறிதெனினும் ருசி பிரமாதம்தான்.!
    ஓவியங்களும் கலரிங்கும் அற்புதம்.!

    இரவுக்கழுகின் நிழலில் - நிழலோடு நிஜயுத்தம்.!!

    ReplyDelete
  62. ***** பிரியமுடன் ஒரு பிரளயம் *****

    வின்ச் குழும நிர்வாகிகளுடன் ஒரு உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் - லண்டனில்! அந்தக் கூட்டத்திலேயே வைத்து லார்கோவையும், அவரது நிர்வாகிகளையும் ஒரு தீவிரவாத இயக்கத்தின் உதவியோடு வெடிகுண்டுக்குப் பலியாக்கிவிட்டு, வின்ச் குழுமத்தின் பிஸினஸை ஆக்கிரமிக்க நினைக்கிறது அதன் போட்டிக் குழுமம் ஒன்று! அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் பரபரப்பான, கிளுகிளுப்பான நடவடிக்கைகளே - விறுவிறுப்பான மீதக் கதை!!

    வழக்கமான லார்கோவின் ஆக்ஷன் இதில் சுத்தமாக இல்லை எனினும், எந்தவொரு ஆக்ஷன் சீக்வென்ஸுமே இல்லாமலும்கூட இரண்டு பாகங்களை துளிகூடத் தொய்வின்றி, பரபரப்பாக நகர்த்திச் செல்லும் யுக்தி - வான் ஹாம்கே உரித்தானது!
    மிகத் துல்லியமான ஓவியங்களாலும், ரம்யமான வண்ணங்களாலும் லண்டன் நகரத்தின் தெருக்களில் நாமும் வலம் வருவதைப்போல அப்படியொரு சுகானுபவம்!! ஒவ்வொரு ஃப்ரேமும் மனதைக் கொள்ளை கொள்கிறது!! குறிப்பாக, இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அழகான வண்ணங்கள் நம் கண்களின் நிறமி செல்களுக்கு மெகா விருந்து படைக்கின்றன என்று கூறினால் - நிச்சயம் அது மிகையல்ல!! ஆஸம் ஆஸம்!!

    பாஸிடிவ் சைடிலிருந்து விலகி, அப்படியே நெகட்டிவ் சைடில் கொஞ்சம் ஒதுங்கினால்...

    கண்டவுடன் (அதுவும் பத்தடி தூரத்திற்கு அப்பாலிருந்து) காதல் வசப்பட்டு - கார்காலத்துக் கடுவன் பூனையாட்டம் முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் பின்னால் சுற்றித் திரியும் லார்கோவாகட்டும், அறிமுகமே இல்லாத ஒரு சின்னப் பெண்ணின் காதல் வலையில் நிபந்தனையின்றி விழும் 'கண்ணியவான்' கோக்ரைன் ஆகட்டும், தன் பால்ய காலத்து நண்பனாக அறிமுகமாகுபவனின் தன்னையே இழக்கும் 'பாட்டீம்மா' பென்னி விங்கிளாகட்டும் - முந்தைய பாகங்களில் இவர்களின் மீதான 'டீசன்ட் பார்ட்டி' இமேஜை சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறார்கள்!! உலகின் அந்தஸ்த்து மிக்க இந்த நபர்களிடம் வெகு சாதாரணமாக யாராலும் நெருங்கி, காதல் சரசமாடி ஏமாற்றிவிட முடியும் என்பதெல்லாம் நம்பமுடியாத லாஜிக் ஓட்டைகள்!!

    நம் DTP பணியாள நண்பர்களின் உதவியுடன் நீட்டிக்கப்பட்ட டயலாக் பலூன்களாலும், போர்த்தப்பட்ட போர்வைகளாலும், வரையப்பட்ட உள்ளாடைகளாலும் - முடிந்தமட்டிலும் விரசமான காட்சிகள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன என்றாலும்கூட, பெரிசுகள் அடிக்கும் காதல் லூட்டிகள் "கர்மம் கர்மம்" என்றே முணுமுணுக்க வைக்கின்றன! இன்னுமே கூட நம் சென்ஸார் அளவுகோல்களை அதிகரிப்பது நல்லதோ என்று (சற்று வருத்தத்துடன்) நினைக்கத் தோன்றுகிறது!

    'பிரியமுடன் ஒரு பிரளயம்' என்ற தலைப்பு சகட்டுமேனிக்கு மனதுக்குள் ஏற்படும் காதல் பிரளயத்துக்கானதே என்று புரியவரும்போது இந்தத் தலைப்பு 100% அழகாகப் பொருந்திப் போவது உண்மைதான்!! ஆனால் முந்தைய பாகங்களில் லார்கோ வலியச் சென்று ஏற்படுத்திக்கொள்ளும் பிரளயத்தை எதிர்பார்த்து இக்கதையைப் படிப்போருக்கு ஏமாற்றமே மிஞ்சிடும்! அந்த வகையில் லார்கோ தன் ரசிகர்களை இந்தக் கதையில் நிறையவே ஏமாற்றியிருக்கிறார்!! சைமனும், சில்க்கியும் கூட சாகஸம் ஏதும் செய்யாமல் ஏமாற்றியிருக்கிறார்கள்!!

    வழக்கமான லார்கோவின் ஆக்ஷன் கதையாக இதை எண்ணாமல், வின்ச் குழும நிர்வாகிகளோடு நாமும் லண்டனுக்கு ஒரு ஜாலி ட்ரிப் அடித்து, அவர்களின் அறைக்கதவை திறந்து பார்த்துவிட்டு வரப்போகிறோம் என்ற நினைப்பில் படித்தோமேயானால் - ஒரு உல்லாச அனுபவம் உறுதி!


    என்னுடைய ரேட்டிங் : 9/10

    ReplyDelete