Powered By Blogger

Sunday, May 20, 2018

ஒரு படகு...ஒரு தீவு...ஒரு பயணப்பை...!

நண்பர்களே,

வணக்கம். ஒன்றிரண்டு பதிவுகளுக்கு முன்பாக - டெக்ஸ் கதைக் குவியல்களுக்குள் உலாற்றிய வேளையில் கண்ணில் பட்டதொரு தொகுப்பு பற்றி எழுதியிருந்தேன்! “நான் பயணம் போகும் படகு, கடலில் மல்லாந்து போய், ஆளில்லாத் தீவில் நான் ஒதுங்க நேரிட்டால் – கையோடு எடுத்துப் போக விரும்பும் காமிக்ஸ் இதழ்கள்” என்பது அந்தத் தொகுப்பின் தலைப்பு! ஏகப்பட்ட டெக்ஸ் ஆல்பங்களை அதனில் மனுஷன் பட்டியலிட்டிருந்தார்! அதையே லயித்துப் படித்துக் கொண்டிருந்த போது – அட… நாமும் இப்படியொரு லிஸ்ட் ஒன்றைத் தயாரிக்க முனைந்தாலென்னவென்று தோன்றியது! “எனது Top 10" என்ற ரீதியில் – வெவ்வேறு தேர்வுகளை இதற்கு முன்பாய் நான் செய்துள்ளது நினைவுள்ளது தான்! ஆனால் நமது மறுவருகைக்குப் பின்பாய் இது போன்றதொரு memory lane பயணத்தில் ஈடுபட்டதாய் ஞாபகமில்ல! அது மட்டுமன்றி, வயது ஏற ஏற – நமது ரசனைகளிலும் மாற்றங்கள் புகுவது இயல்பெனும் போது – 10 ஆண்டுகளுக்கு முன்பாய் ரசித்த சமாச்சாரம் இப்போது ‘ஙே‘ என்று முழிக்கச் செய்யவும் வாய்ப்புண்டல்லவா? So – இதனை எனது “நவீன பட்டியல்” என்று எடுத்துக் கொள்ளலாம்! அதாவது 2012-க்குப் பின்பாய் வண்ணம்; பெரிய சைஸ் என்ற தரங்களைத் தொட்டதன் பிற்பாடு வெளியான இதழ்களுள் எனது favourites! (அட… இதைத் தெரிந்து இப்போது எந்த மாநிலத்து சட்டசபையைத் தூக்கி நிறுத்தப் போகிறோமோ? என்று கேட்கிறீர்களா? நமக்கும் பொழுது போக வேண்டுமல்லவா guys?)

இந்த யோசனை வெள்ளிக்கிழமை மாலை தோன்றிட – நமது சென்றாண்டின் காமிக்ஸ் பாஸ்போர்ட்டைப் புரட்டியெடுத்து – சமீப இதழ்களின் பெயர்களை மேயத் தொடங்கினேன்! நிஜத்தைச் சொல்வதானால் – நிறைய கதைகளின் பெயர்களை மட மடவென்று வாசிக்கும் போது – ”ஙே… இது யாரோட கதை? எந்த ராப்பரை இதுக்குப் போட்டோம்?” என்று மலங்க மலங்க முழிக்க வேண்டியிருக்குமோ? என்ற பயமிருந்தது என்னுள்! ஆனால் surprise… surprise… ஒன்றிரண்டு இதழ்கள் தவிர்த்து பாக்கி எல்லாமே ‘சட்‘டென்று நினைவுக்கு வந்து விட்டன ! ஒவ்வொரு இதழையுமே நாமிங்கு preview செய்வது; அப்புறமாய் surf excel போட்டு துவைத்துக் காயப் போடுவதெல்லாமே வழக்கமாகி விட்டதால் ஒவ்வொன்றும் ஏதேனுமொரு வகையில் மண்டையில் தங்கி விட்டன என்பேன்! அரை மணி நேர பட்டியல் அலசலின் முடிவில் நான் ‘டிக்‘ அடித்து வைத்திருந்த இதழ்களின் எண்ணிக்கை 12 ஆக நின்றது! அட… தீவுக்குப் போகும் போது 2 புக் கூடுதலாயிருந்தால் குடியா முழுகிடப் போகிறதென்ற எண்ணத்தில் – எனது “Top 12” என்று லிஸ்டின் தலைப்பை மாற்றிக் கொண்டேன்! And தொடரும் வரிசையானது எனக்குப் பிடித்தவைகளின் தரவரிசையில் என்றாகாது; நினைவுக்கு வர வர எழுதியவைகளே! So இது நம்பர் 1; இது நம்பர் 2 – என்ற வரிசைக்கிரமங்களில் பார்த்திட வேண்டாமே? Here goes:

பழசிலும் இடம்பிடித்து; புதுசிலும் இடம்பிடித்திடும் வாய்ப்பு நிறைய இதழ்களுக்கு வாய்ப்பதில்லை! ஆனால் கேப்டன் டைகரின் பல சாகஸங்களுக்கு அந்த சான்ஸ் சுலபமாய் கிட்டியுள்ளது – வண்ணத்தில் மறுபதிப்புகளாக நாம் வெளியிட்டதால்! தங்கக் கல்லறை; மின்னும் மரணம்; இரத்தக் கோட்டை என 3 ஸ்பெஷல் தொகுப்புகள் இந்த வரிசையில் வெளிவந்திருப்பினும் என்னைப் பொறுத்தமட்டிலும் போட்டி முதலிரண்டு இதழ்களுக்கு மத்தியிலேயே! And நிறையவே யோசித்தாலும் இவற்றுள் ஏதேனும் ஒன்றை இரண்டாமிடத்துக்கு அனுப்ப எனக்கு மனம் ஒப்பவில்லை! So நான் கரை ஒதுங்குவதாயின் கையோடு எடுத்துப் போக விரும்பும் முக்கிய இதழ்களுள் தங்கக் கல்லறை & மின்னும் மரணம் நிச்சயம் இடம்பிடிக்கும்!

 தங்கக் கல்லறை:

ஒரு லட்சம் தடவை நாம் அலசி முடித்து விட்டிருக்கக் கூடிய கதையிது என்பதால் புதுசாய் நான் இதனில் சேர்ப்பதற்கு ஏதுமிராது தான்! ஆனால் இந்த ஆல்பத்தினை கலருக்குக் கொணரப் பணியாற்றிய சமயம் தான் வன்மேற்கின் கொடூரங்களை நேரில் உணர்ந்தது போல் மனதுக்குப் பட்டது. ஆங்கிலத்தில், கலரில் படிக்கும் போது இதெல்லாம் வழக்கமான சமாச்சாரங்கள் தானே என்பதைப் போல பக்கங்களைப் புரட்ட முடிந்தது! ஆனால் நாம் கலருக்குள், உயர்தரத்துக்குள் கால் வைக்கத் துவங்கிய பிற்பாடு வெளியான முதல் கமர்ஷியல் கௌபாய் ஆல்பம் தங்கக் கல்லறையே என்ற போது – இதனை வழக்கத்தை விட நுணுக்கமாய்க் கவனித்ததன் பலனோ என்னவோ தெரியலை – லக்னரும், ஜிம்மியும், டைகரும் உழன்று திரிந்த பாலைவனத்தின் வெப்பமும், புழுதியும் என்னையும் தாக்கியது போலிருந்தது!

பொதுவாய் டெக்ஸ் கதைகளில் கதையின் மாந்தர்களுக்கும், கதையில் ஓட்டத்துக்குமே நிரம்ப முக்கியத்துவமிருக்கும்! ஆனால் டைகர் கதைகளில், அந்தக் களத்துக்குமே அதீத கவனிப்புக் கிட்டுவது வாடிக்கை! பாலைவன இரவுகளின் நடுங்கும் குளிர்; உரித்தெடுக்கும் வெப்பம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த வனாந்திரங்களின் தனிமையை இந்த ஆல்பத்தில் கதாசிரியர் சொல்லியுள்ள விதம் எனக்கு அட்டகாசமாய்ப் பட்டது! அந்தப் புராதன செவ்விந்தியக் குடியிருப்பில் லக்னரும், குஸ்டாவும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு அசாத்திய ஸ்க்ரிப்ட்-ரைட்டருக்கு மட்டுமே சாத்தியமென்பேன்! அதிலும் குடிதண்ணீருக்குள் ஒரு முரட்டுப் பல்லி மிதக்கும் சீனும் சரி, பாடம் செய்யப்பட்ட ஒரு அபாச்சேயின் சடலத்தோடு கட்டிப் போடப்பட்டிருக்கும் ராட்சஸப் பல்லி தென்படும் ஃப்ரேமும் சரி, மனதை விட்டு லேசுக்குள் அகலா கணங்கள் – இந்த ஆல்பத்தைப் பொறுத்தவரையிலும்! So வண்ணத்தில், இந்த அதகளத் த்ரில்லரை வெளியிட்ட நாட்கள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! Of course – “மாப்பிள்ளை இவர் தான்… ஆனாக்கா அவர் போட்டிருக்கிற சட்டை அவரது இல்லை” என்ற கதையாக – தங்கக் கல்லறையின் திருத்தப்பட்ட தமிழ் வசனங்களுக்குக் கிடைத்த சாத்தல் படலங்களுமே எனது நினைவுகளுக்கு spice சேர்த்திடும் காரணிகள்!

மின்னும் மரணம் !

ரூ.2200/- என்ற நம்பரையெல்லாம் பார்த்துப் பழகி விட்டுள்ள இந்நாட்களில் ரூ.1000 என்பது அத்தனை பெரிய சமாச்சாரமாய்த் தோன்றாது தான்! ஆனால் முதன்முறையாக ஒரு நாலு இலக்க விலையை நமது இதழ்களுக்கு நிர்ணயம் செய்யச் சாத்தியமாக்கிய அந்த “மின்னும் மரண” நாட்களை மறக்கவாவது முடியுமா? ஈரோட்டில் பந்தாவாய் அறிவித்த கையோடு, அன்றைக்கே 100+ முன்பதிவுகளையும் பார்த்திருந்தாலும், உள்ளுக்குள் என்னமோ ஏகமாய் பயமிருந்தது! And பணியின் பரிணாமம் இன்னொரு பக்கம் செமையாக உடுக்கை அடிக்கச் செய்தது! ஆனால் அந்தக் கதைக்குள் மறுபடியும் நுழைந்த நொடியில் எல்லா பயங்களுமே கரைந்து போனது போன்றதொரு உணர்வு! அந்த மெக்ஸிகன் புதையல்; தங்கத் தேட்டை; confederate gold என்ற கதைக்கரு நிஜ சம்பவங்களின் பின்னணியே எனும் போது – Charlier போன்றதொரு அற்புதக் கதாசிரியருக்கு ரவுண்டு கட்டி அடிக்க சூப்பரான மைதானம் ஆகிப் போகிறது! வடக்கத்திய – தெற்கத்திய உள்நாட்டுப் போர்; மெக்ஸிகன்கள்; அபாச்சேக்கள்; அமெரிக்க பிரஸிடெண்டைக் கொலை செய்ய முயற்சி; ரயில் வண்டிகள்; பிடிவாதங்கள்; இராணுவத் தளபதிகள்; சிகுவாகுவா சில்க்; வெகுமதி வேட்டையன்; முதிர்ந்த செவ்விந்தியத் ‘தல‘ என்று கதைநெடுகிலும் நாம் பார்த்திடக் கூடிய ஒவ்வொரு சமாச்சாரத்திலும் வன்மேற்கின் வரலாறு அட்சர சுத்தமாய் ஒட்டிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது! எந்தவொரு இடத்திலுமே இதுவொரு மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகப்படவேயில்லை எனக்கு! முழுசுமாய் எடிட் செய்து இந்த இதழை அச்சுக்கு ரெடி செய்ததே ஒரு நாக்குத் தள்ளச் செய்த அனுபவமாயிருந்தாலும் – இந்தக் கதையை ஒட்டு மொத்தமாய், ஒரே ஆல்பமாய்க் கையிலேந்திப் புரட்டிய போது – பிரான்கோ பெல்ஜியப் படைப்புகளின் உச்சங்களுள் ஒன்றை வெளியிட்டுள்ள அதிர்ஷ்டம் நமதாகியுள்ளது புரிந்தது! 

இந்த இதழின் தயாரிப்பின் போது எனக்கு ரொம்பவே மண்டை காய்ந்து போனது அட்டைப்படத் தயாரிப்பினில் தான்! இதற்கென மொத்தம் 3 பெயிண்டிங்குகள் போடச் சொல்லியிருந்தேன் நம் ஓவியரிடம்! ஆனால் எதிலுமே எனக்கு அவ்வளவாய்த் திருப்தி இல்லை! அதிலும் NBS ராப்பருக்குக் கிடைத்திருந்த பல்புகள் நினைவில் பசுமையாயிருக்க – மின்னும் மரணத்துக்கும் அதே கதியாகிடக் கூடாதென்று விழைந்தேன்! Of course – மின்னும் மரணம் ராப்பருக்குமே நண்பர்களுள் சிலர் – “யார் அந்த அட்டைப்படத்திலுள்ள கூர்க்கா?” என்று வாரியிருந்தனர் தான்! ஆனால் என்னளவுக்கு அந்த டிசைனில் நிறைவே! And அந்த மினுமினுக்கும் அட்டைப்படத்தை அச்சிடும் பொருட்டு – சிவகாசியிலுள்ள ராட்சஸ அச்சகமொன்றில் படையெடுத்த நாட்களும் நினைவில் நிற்கின்றன! நமக்கே அந்த டெக்னாலஜி கொஞ்சம் புதுசு என்பதால் – ‘ஆஆ‘வென்று பராக்குப் பார்த்துக் கொண்டே பணிகளின் பரிமாணத்தை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்தேன்! பொதுவாய் இது போன்ற பெரிய அச்சகங்களில் உள்ளே இயந்திரங்களிருக்கும் ஹால் பக்கமே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அந்த அச்சக உரிமையாளரோ நம்மிடம் நிறைய மிஷின்கள் வாங்கிய கஸ்டமர் என்பதால் தாராளமாய் உள்ளே போய்ப் பார்க்க அனுமதித்தார்! அந்த ராப்பர் அச்சாகிய தினம் வீட்டுக்கு ஒரு தாளை எடுத்து வந்து அதனை நடுக்கூடத்தில் தரையில் போட்டு விட்டு, நடுச்சாமத்தில் இந்தப் பக்கம் நின்றும், அந்தப் பக்கம் நகன்றும் பார்த்துப் பார்த்து ரசித்த கதையும் நிகழ்ந்தது. அவ்வப்போது இந்த நள்ளிரவு பாலே நடனத்தை நான் சோலோவாய் அரங்கேற்றுவது வாடிக்கையே என்பதால் என் இல்லாள் – “ரைட்டு… பௌர்ணமி நெருங்குதுடோய்” என்றபடிக்கு அகன்று விடுவதுண்டு! ஆனால் காலையில் எழுந்த போது எனக்கு அந்த மினுமினு ராப்பரில் லேசான நெருடல்! டைகரின் பின்னணியில் pure white பேக்கிரவுண்ட் இருப்பது போல டிசைன் செய்திருந்தோம்! ஆனால் அந்த மினுமினுப்பு effectன் மோகத்தில் ஒட்டுமொத்தமாய் போட்டுத் தாளிக்கச் செய்திருந்தேன்! காலையில் எழுந்து அதே தாளை மறுக்கா தரையில் போட்டுப் பார்க்கும் போது – “கொஞ்சம் ஓவராத் தான் போய்ட்டோமோ?‘ என்றுபட்டது! அப்புறமென்ன – இருக்கவே இருக்கிறது dust jacket! இம்முறை பின்னணியை ‘மொழுக்கடீர்‘ என்று வெள்ளையாக விட்டு, அச்சிட்டு – அரும்பாடும் நிறைய செலவும் செய்து அச்சிட்ட டாலடிக்கும் ராப்பரை கவர் செய்தோம்! இன்றைக்கு உங்களில் எத்தனை பேரிடம் இந்த dust jacket மிஞ்சியிருக்கிறதோ தெரியவில்லை; ஆனால் அன்றைக்கு எனக்கு ரொம்பவே அத்தியாவசியப்பட்ட விஷயமிது! So டஸ்ட்-கவரோடோ; இல்லாமலோ – தீவில் ஒதுங்கும் சமயம் எனது பெட்டிக்குள் ”மின்னும் மரணம்” நிச்சயமாயிருக்குமென்பேன்!

சிகப்பாய் ஒரு சொப்பனம்!

‘தளபதி‘ பையிலிருக்கும் போது – ‘தல‘ இல்லாது போவாரா- என்ன? But எனது இந்தத் தேர்வு பலருக்கு ஆச்சர்யமூட்டுவதாய் இருக்கலாம் தான்! ”சர்வமும் நானே”; ”Lion 250”; ”தீபாவளி with டெக்ஸ்” என்று பல டெக்ஸ் ஹிட்கள் இருக்கும் போது – இந்த நார்மலான ஆல்பத்தைத் தேர்வு செய்வானேன்? என்று தோன்றலாம்! சன்னமான காரணம் உள்ளது அதன் பின்னணியில்! 

நமது டெக்ஸ் கதைகளுள் செவ்விந்தியப் புரட்சி; ஆயுதக் கடத்தல் இத்யாதிகள் புதிதேயல்ல தான்! இந்த ஆல்பமுமே ஹுவால்பைகளின் தலைவனின் இரத்தவெறி சார்ந்தது என்றாலுமே – கதை துவங்கும் விதமே செம dramatic! அது மட்டுமல்லாது ரேஞ்சர்களின் முழு அணியுமே கதைநெடுக ஆரவாரமாய் – ஓவியர் மாஸ்டாண்டுவோலோவின் சிம்பிள் & neat சித்திரங்களில் மிளிர்வதை நான் ரொம்பவே ரசித்தேன்! எப்போதும் போல நேர்கோட்டுக் கதை; தெறிக்கும் க்ளைமேக்ஸ் என சலிப்பே ஏற்படுத்தாவிதத்தில் 224 பக்கங்களுக்குத் தடதடப்பதை இந்த ஆல்பத்தில் உணர முடிந்தது! இவையெல்லாவற்றையும் விடவும், இந்த ஆல்பம் எனக்கு ஸ்பெஷலாகப்படுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு! அது தான்- டெக்ஸ் கதைகளைக் கையாள்வதிலான பாணியில் நாம் கொண்டிருந்த மாற்றம்! அதுவரைக்குமான நமது முதல் இன்னிங்ஸ் டெக்ஸ் கதைகளில் – ஒரிஜினல்களின் டயலாக் பாணிகளைப் பின்பற்றியே நமது மொழிபெயர்ப்புகளும் இருந்திருந்தன! ஆனால் post 2012 – நமது வாசகவட்டம் மிகச் சிறிதே என்பதும் அந்த வட்டமானது முதிர்ந்த வாசகர்கள் நிரம்பியதே என்பதும் புரியத் தொடங்கிய போது – டெக்ஸ் கதைகளைக் கொஞ்சம் வித்தியாசமாய்க் கையாண்டால் தேவலாமோ? என்று எனக்குத் தோன்றத் தொடங்கியது! வலைப்பதிவில் உங்களோடு நான் செய்யத் துவங்கியிருந்த interactions இதற்கொரு முக்கிய க்ரியா ஊக்கி என்பேன்! எது எப்படியோ- TEX the hero-வுக்கு வரிகளில் அழுத்தமும்; கார்சனுக்கு சகஜமான humour-ம்; அதே சமயம் தன் நண்பன் மீது அசாத்திய பிணைப்பு உள்ள விதமாய் டயலாக்குகள் இருந்தால் – அந்த வன்மேற்கின் வறண்ட களங்களை இன்னும் சுவாரஸ்யமாக்கிடலாமோ என்று பட்டது! So முதன் முறையாக கதையின் முக்கியப் பகுதிகளில் டெக்ஸ் & கார்சனின் வரிகளைத் தனியாக எழுதும் பணி / பாணி தொடக்கம் கண்டது இந்த ஆல்பத்திலிருந்தே!

- Tex : குறைந்துள்ளது உன் முடியின் நிறம் தானே தவிர, உன் நெஞ்சின் உரமல்ல நண்பா!

- Tex : மிகப் பணிவாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில் - உயிரை பணயம் வைப்பது எங்களுக்கு ஒரு உற்சாகமான பொழுதுபோக்கு!

கார்சன் (மைண்ட் வாய்ஸ்) : ஆங்! பொழுது போகவில்லையெனில் போக்கர் ஆடிவிட்டுப் போவது தானே?

- கிட் வில்லர் : அங்கிளின் பசி ரொம்பப் பிரசித்தமானது! செய்தி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் சுக்காவில் குறை வைக்க மாட்டார்!

 - கார்சன் : விரியன் பாம்புகளுக்கிடையே வெறும் காலோடு நடந்து செல்வதில் உள்ள ஆபத்து இதில் உண்டல்லவா?

Tex : நம்மைக் கிளர்ந்தெழச் செய்வதே ஆபத்தின் நெடி தானே தோழா?

 - கார்சன் : என்றைக்காவது ஒரு நாள் உன் தந்தையை ஓங்கி மண்டையில் நான் ஒரு போடு போட்டால்- ஏன், எதற்கென்று கேள்வி கேட்கக் கூடாது! புரிந்ததா?

கிட் வில்லர் : அதற்குள் டாடி உங்கள் மீசையினை, பூட்ஸ் கயிற்றோடு முடிச்சுப் போட்டிருப்பாரே அங்கிள்? பரவாயில்லையா?
------------------------------------------------------------------------------------------------------------
இது மாதிரியான டயலாக்குகளை கதையின் ஒரு ஓட்டத்துக்குப் பயனாகும் உத்தியாக நான் கையிலெடுக்கத் தொடங்கியது சி.ஒ.சொ. முதலாய் தான்! “எக்ஸ்ட்ரா நம்பர் கேட்டேனா?” என்று நண்பர்களுள் சிலர் கேள்வியெழுப்புவது நிச்சயம் என்பது புரியாதில்லை! 'ஒரிஜினல் வரிகளை ‘சிவனே‘ என்று அப்படியே போட்டுப் போக வேண்டியது தானே?' என்று அவர்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது! ஆனால் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளே ஒவ்வொரு ஆக்கமும் எனும் போது – அவற்றை இக்ளியூண்டு கலர்புல்லாக்கிட இது பிரயோஜனப்படுவதாய் நான் பார்க்கிறேன்! Anyways – இந்த இதழ் முதலே டெக்ஸ் & கார்சன் டயலாக்குகளில் ஒரு பன்ச்; கொஞ்சம் கலாய்ப்பு; நிறைய நேசம் என்று அலங்கரிக்க முயன்று வருகிறோம் ! அதற்கு பிள்ளையார் சுழி போட உதவிய இதழ் என்ற வகையில் “சிவப்பாய் ஒரு சொப்பனம்” எனது பயணப் பைக்குள் இடம்பிடிப்பது உறுதி!

ஆகாயத்தில் அட்டகாசம் !

மறுபடியும் ஒரு புருவத்தை உயரச் செய்யும் தேர்வு தான் guys!! ப்ளுகோட் பட்டாளத்தின் நம்மிடையிலான அறிமுகம் இந்த இதழ் மூலமாகத் தான்! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஜோடியின் கதைகளை முயற்சித்துப் பார்க்கலாமே என்று நண்பர் ரபீக் & இன்னும் சிலர் என்னிடம் சென்னையிலோ; பெங்களுரிலோ சொல்லியிருந்த போதெல்லாம் நான் தயக்கத்தையே பதிலாக்கியிருந்தேன். Oh yes – இன்றைக்கும் இந்த ஜோடியை நம்மில் ஒரு பகுதி வாசகர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்; இன்னமுமே நிறையப் பேருக்கு இவர்களை அத்தனை பிடிக்கவில்லை தான்! ஆனால் Cinebook இவர்களது கதைகளை இங்கிலீஷில் வெளியிட உள்ள தகவலும்; ஆங்கில மொழிபெயர்ப்பின் ஒரு அட்வான்ஸ் பிரதியும் படைப்பாளிகளிடமிருந்து நமக்குக் கிடைத்திருந்தது. “சிறைக்குள் சடுகுடு” கதையின் இங்கிலீஷ் ஒரிஜினலது! அதைப் படித்துப் பார்த்த போது – ”முயற்சித்தால் தப்பில்லை!” என்றுபட்டது! அப்புறமாய் நெட்டில் இந்தத் தொடரின் இதர ‘ஹிட்‘ கதைகளைப் பற்றிய தேடலைச் செய்த போது, ஒரு பெல்ஜிய ரசிகையின் பரிச்சயம் கிட்டியது! அவரொரு diehard ப்ளுகோட் விசிறி! தொடரில் வெளிவந்துள்ள ஒட்டுமொத்த ஆல்பங்களையும் கரைத்துக் குடித்தவர்! அவரிடமே இந்தக் கேள்வியை முன்வைத்தேன் – “ஒரேயொரு ப்ளுகோட் கதையை மட்டும் பயணத்தின் போது கையில் எடுத்துப் போக முடியுமென்றால் எதைத் தேர்வு செய்வீர்களோ?” என்று! தயக்கமின்றி – ”ஆகாயத்தில் அட்டகாசம்” என்ற பெயரில் நாம் வெளியிட்ட கதையின் ஒரிஜினல் பிரெஞ்சுப் பெயரைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பியிருந்தார். இந்தக் கதையின் ஆங்கில version எனக்கு எப்படியோ கிட்டியிருந்தது (scanlation ? cinebook ?) என்பதால் அதைப் படித்த கணமே ‘டிக்‘ போட்டு விட்டேன் – இந்தப் புது வரவுகளை அறிமுகம் செய்திட இது உருப்படியான ஆல்பமே என்று! 

எழுதத் தொடங்கும் போது – சுத்தமான தமிழா? பேச்சு வழக்குத் தமிழா? என்ற கேள்வி எழுந்தது! இரண்டு மாதிரியும் முதல் 4 பக்கங்களை எழுதி, டைப்செட்டும் செய்து படித்துப் பார்த்த போது – சுத்தத் தமிழ் சுகப்படுவது போலத் தெரியக் காணோம்! பேச்சுவழக்கே ஓ.கே. என்ற மட்டில் வண்டியை ஓட்டத் துவங்க – சிறுகச் சிறுக அந்தக் கதைகளத்துக்குள் ஐக்கியமானேன்! அதுவரையிலும் லக்கி லூக் & சிக் பில் தான் நமது கார்ட்டூன் பட்டியலில் heavyweights எனும் போது இந்தப் புதுப்பாணி கார்ட்டூனுக்குப் பேனா பிடிப்பது வித்தியாசமான அனுபவமாய் இருந்தது. ஓவராக slapstick காமெடியாக எழுதிடவும் கூடாது; காமெடி வறட்சியும் தட்டுப்பட்டு விடக் கூடாது என்று மனதில பட, தத்தா-பித்தாவென்று தட்டுத்தடுமாறி manage செய்த இதழ்! And கதையைப் பொறுத்தவரை மெய்யாகவே அந்த பலூனில் வேவு பார்க்கும் பாணி; ஸ்கூபியும், ரூபியும் மேலே-கீழே என்று அடிக்கும் கூத்துக்கள்; கோமாளித்தனமான இராணுவ கர்னல்கள் என்று ரசிக்க ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருப்பதாய் எனக்குத் தோன்றியது! அதிலும் அந்த அரை லூசு கர்னல் ஸ்டார்க் கதையின் மூன்றாவது ஹீரோவாக என் கண்களுக்குத் தோன்றினார்! பலூனின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டே “சார்ஜ்ஜ்ஜ்” என்று முழங்கும் மனுஷனை என்னவென்பது? ரொம்பவே மாறுபட்ட காமெடி என்ற காரணத்தினால் எனது பைக்குள் இந்த இதழுக்கும் ஒரு ஓரமிருக்கும்!

 ஆதலினால் அதகளம் செய்வீர் !

லார்கோ தொடரில் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதத்தில் மாஸ் ஹிட் தான் என்றாலும் – என்னைப் பொறுத்தமட்டில் நண்பன் சைமனுக்காக பர்மாவின் கானகத்தினுள் லார்கோ செய்யும் அதகளம் a class apart! Oh yes – NBS-ல் வெளியான கான்க்ரீட் கானகம் நியூயார்க் ஆல்பமும் ஒரு அட்டகாச த்ரில்லரே; “துரத்தும் தலைவிதி” செம racy சாகஸமே! ஆனால் கோடீஸ்வரக் கோமகன் அந்தப் பெருநகரங்களிலிருந்து வெளியேறி வனாந்திரத்தில் சுற்றித் திரிவதில் ஒரு இனம் சொல்லத் தெரியா த்ரில் இருப்பதாய் எனது அபிப்பிராயம்! பற்றாக்குறைக்கு கதை நெடுக சைமன் வளைய வருவது கதையை இலகுவாக்கிட உதவியதென்பேன்! And அந்த க்ளைமேக்ஸில் அரங்கேறிடும் action sequences – ஜேம்ஸ் பாண்ட் பாணிக்குத் துளி கூடக் குறைச்சலில்லாதது தானே guys? வழக்கமாய் கதையில் கவர்ச்சிக்கோசரம் பெண்கள் தலைகாட்டுவது வாடிக்கை; ஆனால் இந்த ஆல்பத்தில் லார்கோவோடு தோள் சேர்த்து நிற்கும் மாலுனாய் ரொம்பவே வலுவானதொரு கதாப்பாத்திரம்! மெலிதான காதல்; கடமையுணர்வு; தேசபக்தி என்று அவருக்குக் கதாசிரியர் தந்துள்ள வர்ணங்கள் எக்கச்சக்கம்! நாம் ரசிக்கும் கதைகளை மொழிபெயர்ப்பது எப்போதுமே ஒரு ஜாலியான அனுபவம்! அந்த வகையிலும் இந்த ஆல்பம் சார்ந்த என் நினைவுகளில் சகலமும் சந்தோஷமானவை! Icing on the cake – இந்த ஆல்பத்தின் பின்பகுதியில் வெளிவந்திருந்த 7 பக்க லக்கி லூக் சாகஸத்தை மொழிபெயர்த்தது ஜுனியா எடிட்டர்! அது மிதமோ – சொதப்பலோ – அன்றைக்கு எனக்கு அசாத்தியமாய்த் தென்பட்டதென்னவோ – நிஜமே!

 நிஜங்களின் நிசப்தம் !

‘ஙே‘ என்று சிலரையும்; ‘ஙே...ஙே...ஙே...‘ என்று பலரையும் கிறுகிறுக்கச் செய்த இந்த கிராபிக் நாவல் இல்லாது எனது பயணப்பை முழுமை காணாது! வெகு சமீப இதழ் என்பதால் எக்கச்சக்க அலசல்கள் இதன் மீது அரங்கேறி விட்டன என்ற போதிலும் இது பற்றியும் லேசாகவேணும் எழுதாது விட மனதில்லை! நான் சிறுவயதில் ரசித்துப் படித்த War Comics இதழ்கள் தான் காரணமாவென்று சொல்லத் தெரியவில்லை; ஆனாலும் உலக யுத்தங்கள் சார்ந்த தகவல்கள்; நிகழ்வுகள்; கதைகள் மீது எனக்கு எப்போதுமே எக்கச்கக்க அபிமானமுண்டு! மிஷினரி தொழில் காரணமாய் ஒரு காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவுக்கு அடிக்கடி பயணிக்க வேண்டியதிருந்துள்ளது! செக் குடியரசு; போலந்து; கிழக்கு ஜெர்மனி; ரஷ்யா ஹங்கேரி என்று முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளுக்குள் கால்பதிக்கும் போதெல்லாம் வரலாற்றின் ஒரு பக்கத்துக்குள் நுழைந்து பார்ப்பது போலொரு உணர்வு எழும்! ஊர்களில் ஒரு மெல்லிய சோகம் கப்பிக் கிடப்பது மாதிரியே எனக்குத் தோன்றும். அங்கே கொஞ்சமாய் ஓய்வு நேரம் கிடைத்தால் – போரில் சிதிலமடைந்த தேவாலயங்கள்; கைதிகளை அடைத்துப் போட்ட கொட்டடிகள் போன்ற landmark-களை மௌனமாய்ப் பராக்குப் பார்த்து நிற்பேன்! So யுத்தம்... அது சார்ந்த இருண்ட நாட்கள் என்றாலே எனக்கொரு soft corner உண்டு! கதைத் தேர்வுகளின் போது அந்த ரசனை என்னையுமறியாது கலந்துவிடுவது உண்டு தான்! “விண்ணில் ஒரு வேங்கை” போன்ற விளக்குமாற்றுச் சாத்து அனுபவங்கள் அரங்கேறினாலும் எனக்குள்ளிருக்கும் அந்த noir tales-களின் ரசிகன் முழுசுமாய் ஜகா வாங்குவதில்லை! அந்த விதத்தில் “நிஜங்களின் நிசப்தம்” எனக்கு செம பிடித்தமானதொரு ஆல்பம் ! அதில் பணியாற்றியது; கதைப் பின்னணிகள் என்று நிறையவே பேசிவிட்டேன்! So மேற்கொண்டும் அதையே மறுஒலிபரப்பு செய்யப் போவதில்லை! ஆனால் இந்தக் கதைக்கு இன்னுமொரு காரணமும் உண்டு – எனக்கு ரொம்பப் பிடித்தமானதாய் அமைந்து போக! அது 2013 வரை பின்னே போகுமொரு காரணம் & அதனில் ஒரு முக்கிய பங்குண்டு உங்களுக்குமே! என்றேனும் ஒரு சந்திப்பின் போது அது பற்றிச் சொல்கிறேன்!

சரி, நீண்டு செல்லும் பதிவுக்கு இங்கே தற்காலிக ‘சுப மங்களம்‘ போட்ட கையோடு கிளம்புகிறேன் folks! Top 12-ல் அடுத்த அரை டஜன் பற்றி அடுத்த வாரம் ! அதற்கு மத்தியில் நீங்களும் ஒரு பயணப் பையை ‘பேக்‘ செய்து ஒத்திகை பார்க்கலாமே – யாருக்கு எது அத்தியாவசியப்படுகிறது? என்ற ஆராய்ச்சிகளோடு!

Before I sign off - இதோ - ஜூன் மாதத்து டெக்சின் அட்டைப்பட முதல் பார்வை ! நம் ஓவியரின் பெயின்டிங் இது - போனெல்லியின் போஸ்டர்களில் ஏதோவொன்றின் inspiration-ல் ! And கதையைப் பொறுத்தவரை அனலாய்ப் பொரிந்து தள்ளப் போகும் அக்மார்க் த்ரில்லர் இது ! ஒரு ஸ்டேஜ் கோச் பயணம் ; நம்மவர்களின் entry ; அதகள ஆக்ஷன் ; தெறிக்கும் கிளைமாக்ஸ் என்று ஒரு full meals காத்துள்ளது guys !! அப்புறம் ரொம்ப நாட்களுக்குப் பின்னே ஓவியர் காலப்பினியின் clean ஓவிய பணிகளோடு டெக்ஸ் & கார்சன் செம handsome ஆகத் தோன்றுவதாக  எனக்குப்பட்டது ! நடமாடும் நரகம் - a fireball !! Bye guys! See you around!

135 comments:

  1. Replies
    1. டெக்ஸ் அட்டை படம் பட்டையை கிளப்புகிறது ! செம !

      Delete
  2. ரசனைகள் பலவிதம்
    நிஜங்களின் நிசப்தம் 😊

    ReplyDelete
  3. நான் அப்படி ஒரு தீவில் தங்க நேர்ந்தால் அத்தனை டெக்ஸ் & டைகர் கதைகள் அள்ளிச்சென்று விடுவேன். தனிமையில் நெஞ்சுரத்தை கொடுப்பவை இவர்கள் கதைகளே!

    ReplyDelete
    Replies
    1. கூட லார்கோ விஞ்ச்சும் சார்.

      Delete
    2. பெளன்சர்,
      டியூராங்கோ&
      அண்டர்டேக்கர் யும் சேர்த்து கொள்ளுங்கள் ஜி....

      Delete
  4. //Tex : குறைந்துள்ளது உன் முடியின் நிறம் தானே தவிர, உன் நெஞ்சின் உரமல்ல நண்பா!

    - Tex : மிகப் பணிவாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில் - உயிரை பணயம் வைப்பது எங்களுக்கு ஒரு உற்சாகமான பொழுதுபோக்கு!

    கார்சன் (மைண்ட் வாய்ஸ்) : ஆங்! பொழுது போகவில்லையெனில் போக்கர் ஆடிவிட்டுப் போவது தானே?

    - கிட் வில்லர் : அங்கிளின் பசி ரொம்பப் பிரசித்தமானது! செய்தி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் சுக்காவில் குறை வைக்க மாட்டார்!

    - கார்சன் : விரியன் பாம்புகளுக்கிடையே வெறும் காலோடு நடந்து செல்வதில் உள்ள ஆபத்து இதில் உண்டல்லவா?

    Tex : நம்மைக் கிளர்ந்தெழச் செய்வதே ஆபத்தின் நெடி தானே தோழா?//
    இது போன்ற வசனங்கள் தான் டெக்ஸ் உடன் எங்களை நெருக்கமாக வைத்துள்ளன.

    ReplyDelete
    Replies
    1. ஒரு மௌன விரதத்தில் நம்மவர்கள் இருந்தாலுமே நமக்கு அவர்களை பிடிக்கும் சார் !

      Delete
  5. கதையைப் பொறுத்தவரை அனலாய்ப் பொரிந்து தள்ளப் போகும் அக்மார்க் த்ரில்லர் இது ! ஒரு ஸ்டேஜ் கோச் பயணம் ; நம்மவர்களின் entry ; அதகள ஆக்ஷன் ; தெறிக்கும் கிளைமாக்ஸ் என்று ஒரு full meals காத்துள்ளது guys !! அப்புறம் ரொம்ப நாட்களுக்குப் பின்னே ஓவியர் காலப்பினியின் clean ஓவிய பணிகளோடு டெக்ஸ் & கார்சன் செம handsome ஆகத் தோன்றுவதற்கு எனக்குப்பட்டது ! நடமாடும் நரகம் - a fireball !!

    இத இதத்தான் எதிர் பார்க்கிறோம் சார்.
    நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம் சார்...!
    ஹாய் நட்பூஸ்...!

    ReplyDelete
  7. 2012 ல் வெளிவந்ததில் எனது டாப் 12
    1. எமனின் திசை மேற்கு
    2. தலையில்லா போராளி
    3. மின்னும் மரணம்
    4. பவுன்சர் 1.2.3
    5. இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்
    6. என் பெயர் லார்கோ
    7. டியுராங்கோ
    8.இனி எல்லாம் மரணமே
    9.ஜேஸன் ப்ரைஸ் 1.2.3
    10.வாராதோ ஓர் விடியலே
    11.நின்று போன நிமிடங்கள்
    12. அண்டர் டேக்கர்

    ReplyDelete
    Replies
    1. தேர்வுகள் # 10 & 11 - very interesting !

      Delete
  8. ஞாயிறு காலை வணக்கம்
    விஜயன் சார் மற்றும் நண்பர்களே 🙏
    .

    ReplyDelete
  9. டெக்ஸ் அட்டைப்படம் - பட்டையைக் கிளப்புகிறது! ஓவியர் மாலையப்பன் அவர்களுக்குச் சங்கத்தின் சார்பாக - ஒரு உண்மையான பூச்செண்டு!

    சேனத்தைத் தூக்கித் தோள்மேல போட்டுக்கிட்டு, பாலைவனத்துல தல தனியா நடந்துபோறார்னா... எவனோ ஒரு பயபுள்ள குதிரையச் சுட்டுப்புட்டான்னு அர்த்தம்!

    தல...
    நீ நடந்தால் நடையழகு...
    நீ முறைத்தால் முறைப்பழகு...
    நீ பேசும் பஞ்ச் அழகு...
    நீ ஒருவன்தான் அழகு...

    ReplyDelete
    Replies
    1. Bouquet வாங்கும் அளவுக்கு சங்க நிதிநிலைமை தேறிடிச்சு போலிருக்கே ; not bad !!

      Delete
  10. நிஜங்களின் நிசப்தமா ஆஆஆ..(சைலன்ட் மோடில்தானுங்) டெக்ஸ் மயக்குறார்.

    ReplyDelete
  11. இந்த டெக்ஸ் அட்டைபடம்

    ஆல்ரெடி போட்டிருந்தீங்களா சார்... 😱😱
    ஏதோவொரு கதையில் கண்டதாய் ஞாபகம்.
    மறுபடியும் போட்டிங்கன்னா குழப்பங்கள்தானே வரும்...

    மற்றபடி நன்றாகத்தான் உள்ளது
    😉😍

    ReplyDelete
    Replies
    1. * போட்டிருந்தீங்களே சார்

      Delete
    2. நண்பரே இந்த டெக்ஸ் போட்டோ லயன் 300 க்கு முயற்சி செய்த அட்டைகளில் ஒன்று. ..கையை மாற்றியதால் நன்றாக உள்ளது. .

      Delete
    3. Oh ஆமாம்ல
      மறந்து போயி சாரே... 😉

      Delete
    4. டெக்ஸ் கதைகளில் ஒரு வசதியுண்டு ; எதையும், எந்தக் கதைக்கும் தூக்கிப் போட்டுக் கொள்ள முடியும் - பெரும்பாலுமே ! So நம்மிடம் எப்போதுமே டெக்ஸ் பெயிண்டிங்குகள் ஒரு அரை டஜன் ரெடியாக இருக்கும் ! இதழ்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்து எதை - எங்கே களமிறக்குவது என்று தீர்மானிப்போம் ! So இது அந்த வரிசையில் பொதுவாய் உருவாக்கப்பட்ட டிசைன் !

      15 வருஷங்களுக்கு முன்னே போட்ட 3 டெக்ஸ் டிசைன்கள் கூட இன்னமும் நம்மிடம் பத்திரமாக உள்ளன !

      Delete
  12. அருமையான பதிவு ! எம்களையும் மீள்வாசிப்புக்கு ஆட்படுத்தும் வாய்ப்பு அதிகம் ஆசிர்யரே !

    ReplyDelete
    Replies
    1. பார்த்திருக்க, நாட்கள் நிறையவே ஓடிவிட்டன என்பதே இதுபோன்ற தருணங்களில் தான் strike ஆகிறது சார் !

      Delete
    2. By any count, it is unbelievable - incredible that 5 months of 2018 have passed by almost at lightning speed, for an example !

      What's happening? Earth's gravitational pull loosening off ?!

      Delete
  13. 1. எமனின் திசை மேற்கு
    2. தலையில்லா போராளி
    3. மின்னும் மரணம் & தங்க கல்லரை
    4. தோர்கல்
    5. லக்கி லூக் - ஒற்றை கை பகாசுரன் & திருடனும் திருந்துவான்
    6. சிகப்பாய் ஒரு சொப்பனம்
    7. ப்ரின்ஸ் மறுபதிப்பு - கொலைகாரக்கானகம்
    8.இனி எல்லாம் மரணமே
    9. க்யூபா படலம்
    10.நின்று போன நிமிடங்கள்
    11. அண்டர் டேக்கர்
    12.ஆல் நியூ ஸ்பெசல்

    ReplyDelete
    Replies
    1. லக்கி லூக்கில் எதிர்வீட்டில் எதிரிகள், ஒரு பட்டாப் போட்டி

      13. ப்ளூகோட் அனைத்து கதைகள் அதிலும் குறிப்பாக சேற்றுக்குள் ஒரு சடுகுடு மற்றும் ஆகாயத்தில் அட்டகாசம்.

      Delete
  14. 1.மினா.மாணா
    2.தனா.போனா
    3.அனா.டேனா

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. விஜயன் சார், டெக்ஸ் கதையின் முன் மற்றும் பின் அட்டைப் படங்கள் அவரின் பழைய கதையின் அட்டைப் படங்களை ஞாபகப்படுத்துகிறது.

    டெக்ஸ் கதையின் உட்பக்க டீசர் செம. ஒரு பக்கம் முழுவதும் வசனம் இன்றி ஆக்சன் என்பதை பார்க்கும் போது இது டெக்ஸின் அக்மார்க் கதை எனத் தெரிகிறது. ஆவலுடன் காத்திருக்கிறேன் படிக்க.

    ReplyDelete
    Replies
    1. முன் அட்டை காலன் தீர்த்த கணக்கை நினைவு படுத்துகிறது.

      Delete
    2. தெறிக்கும் ஆக்ஷன் மேளா இது !!

      Delete
  17. ஆஜராயிட்டேன் ஆசிரியரே

    ReplyDelete
  18. டெக்ஸ் அட்டை பட்டையை கிளப்புகிறது லயன் 300 க்கு முயற்சி செய்த அட்டை தானே இது

    ReplyDelete
  19. 1. Thangak Kallarai - Color Reprint
    2. IravE .. IrulE .. KollAthE
    3. LMS - Italian Hardcover
    4. BOOM BOOM PADALAM - Reprint
    5. AAGAAYATHIL ATTAGAASAM - Bluecoats first volume
    6. RATHTHAK KOTTAI - Reprint
    7. BOUNCER 1,2,3
    8. KANAVUGALIN KATHAIYITHU (Lion Graphic Novel)
    9. Leonardo Volume 1
    10. DYLAN DOG - That London Clock - Murder Story

    ReplyDelete
    Replies
    1. நம்பர் 9 & 10 செம வித்தியாசமான தேர்வுகள் !

      Delete
  20. // என் இல்லாள் – “ரைட்டு… பௌர்ணமி நெருங்குதுடோய்” என்றபடிக்கு அகன்று விடுவதுண்டு! //

    ஹா ஹா.

    ReplyDelete
  21. என்னிடம் 2012 மற்றும் 2013 வருடங்களின் இதழ்கள் அவ்வளவாக இல்லை என்பதால், என்னிடம் உள்ள கதைகளின் படி என்னுடைய டாப் 12

    1 மின்னும் மரணம்
    2 வர போகும் மெகா XIII அல்டிமேட் கலெக்ஷன்
    3 பவுன்சர் 1.2.3
    4 தலையில்லா போராளி
    5 தோர்கல்
    6 இனி எல்லாம் மரணமே
    7 இரவே இருளே கொல்லாதே
    8 தீபாவளி வித் டெக்ஸ்
    9 நில் கவனி சூடு
    10 ஜேஸன் ப்ரைஸ்
    11 கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்
    12 இரும்பு குதிரையில் ஒரு தங்க புதையல்

    ReplyDelete
  22. முன் பின் டெக்ஸ் அட்டைப்படங்கள் ஏற்கனவே கண்டது போல இருப்பினும் ( காலன் தீர்த்த கணக்கு ,இரத்த வெறியர்கள்..? )அழகாகவே அமைந்து உள்ளது .

    ஓவியருக்கு மனமார்ந்த பாராட்டுகள் சார்...

    ReplyDelete
  23. பழைய கதைகள்

    1 இரத்த காட்டேரி மர்மம் - ரிப்போர்ட்டர் ஜானி ஒரு பெரிய கோட்டையில் நிகழும் சம்பவங்களும், கொலையும் துப்பறியும் வழக்கமான பாணி கதை. எப்பொழுதும் போல் நன்றாக உள்ளது.

    2 மனித எரிமலை - இரும்புக்கை நோர்மனின் முதல் கதை. பொங்கல் ஸ்பெஷல். அந்நாளில் நான் கோவப்படும் போது எல்லாம் நான் தான் இரும்பு கை நார்மன் என்று எண்ணிக்கொண்டு விறைப்பாக திரிவேன். அப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்திய இதழ்.

    3 பிசாசு குரங்கு - அட்டையில் பிசாசு குரங்கு என்று இருந்தாலும், உள்ளே அதன் கதை இல்லை. உள்ளே இருந்த கதைகள் அனைத்தும் அத்தனை ஈர்ப்பில்லை
    a ) பனிமலை பூதம் - அமெரிக்கர்களும் பிரிட்டிஷ்காரர்களும் பனி மலையில் எண்ணெய் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்ய போட்டி போடுகிறார்கள் அந்த சமயத்தில் ஒரு பூதம் வருகிறது. பூதத்தின் பின்னணி என்ன, இந்த இரு அணிகளும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதி கதை
    b ) பிசாசு நடனம் என்ற ஒரு சிறு திகில் கதை
    c ) நாளை உனது நாள் - ஜான் ஸ்டீல் தோன்றும் ஒரு தொடர் கொலை புலனாய்வு கதை

    புதியது:

    1 என் நண்பேன்டா - ரின் டின் கேன் மற்றும் ஒட்டகத்தின் கூட்டணி. இவற்றுடன் பாவ்லோவ் படும் பாடு ... வயிற்றை பதம் பார்த்தது. டயலாக் எல்லாம் கலக்கல்.

    2 மரணம் ஒரு முறையே - வெய்ன் ஷெல்டன் கதைகள் எல்லாமே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் அது கொஞ்சம் குறைவு அப்புறம் கத்திரி போட்ட இடங்கள் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. //பிசாசு குரங்கு//

      இது திகில் இதழ் # 4 ; ஆனால் நீங்கள் விவரிக்கும் கதைகள் திகில் # 5-ன் கதைகள் !! எப்படியென்று புரியவில்லையே ?

      Delete
    2. பிசாசு குரங்கு மார்ஷல் சாகசக் கதை தானே சார்.
      ஹிப்னாடிசம் பற்றிய முதல் கதை சரியா சார்.

      Delete
  24. சார்...உங்களின் டாப் 6 பற்றி ...


    தங்க கல்லறை ...உண்மை மறக்க முடியா இதழ் .பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் இதழாகவும் இருக்கும் .நானும் இதை தேர்ந்தெடுப்பேன் மறவாது ஆனால் இன்னும் முன்னராக வந்த கறுப்பு வெள்ளை தங்க கல்லறையை :-)


    மின்னும் மரணம் :

    மீண்டும் டைகர் .ஆனால் மறக்க முடியாத ,மறுக்க முடியாத படைப்பு என்பதில் மாற்று கருத்து இல்லை.அதே டஸ்ட் கவருடன் பத்திரமாக உள்ள இந்த மின்னும் மரணமும் பலர் தேர்வாக தான் இருக்கும்..

    ஆகாயத்தில் அட்டகாசம் ...

    நகைச்சுவை நாயகர் கார்ட்டூன் நாயகர் எனும் பொழுது ப்ளூகோட் பட்டாளம் எங்களுக்குமே பிடித்தவர்கள் எனும்பொழுது லக்கியோ ,சிக்பில்லோ தேர்ந்தெடுக்காமல் தாங்கள் இதனை தேர்ந்தெடுத்தது சர்ப்ரைஸ்.இதற்காகவே மீண்டும் இதனை மறுபடிப்பாக படிக்க எண்ணுகிறேன் .

    ஆதலினால் அதகளம் செய்வீர் .லார்கோ

    எனது தேர்வு ஒட்டுமொத்த லார்கோ தொகுப்பு சார் .மேலும் இன்று காலை தான் என் பெயர் லார்கோ இதழை எடுத்து அலுவலக பையில் வைத்தேன்.காரணம் லார்கோ படைப்பாளிகளில் ஒருவர் நமது அடுத்த இதழுடன் விலகுவதால் இரத்தபடலம் 1 டூ 18 மட்டுமே முழுமையான தொகுப்பு என்பது போல் மனம் இப்பொழுதும் பறை சாற்றுவதால் இதுவும் அடுத்த இதழுடன் அவ்வாறே அமைந்து விடுமோ என்ற எண்ணத்தில் அந்த இதழை படிக்கும் முன்னரே மீண்டும் ஒட்டுமொத்தமாக லார்கோ உலகில் புக எண்ணியுள்ளேன்.காலை நேரத்தில் அப்போதைய அறிமிக நாயகரான லார்கோ வை பற்றி தங்களின் இரண்டு பக்க ஹாட்லைன் படித்து ,திகில் இதழின் ஒரிஜினல் மறுபதிப்பான முதல் இதழையும் சிலமணி நேரங்களுக்கு முன்னரே ரசித்து வந்தேன்.:-)


    டெக்ஸ்...

    நான் ஒட்டுமொத்தமாக அள்ளி கைக்கு வருவதை தேர்ந்தெடுப்பேன் சார்..:-)


    நிஜங்களின் நிசப்தம்..


    :-)

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஒதுங்கியிருக்கும் தீவு கிட்டக்கே இருந்தால் என்னோட "நிஜங்களின் நிசப்தம்" புக்கை ஒரு நடை வந்து குடுத்திட்டுப் போயிடுறேன் தலீவரே !

      Delete
    2. பாவம் தலைவர் எஸ்கேப்.

      Delete
    3. நான் ஒரு காப்பி எடுத்துட்டு வந்துட்டேன் சார்..:-)

      Delete
  25. My Top 17:

    XIII
    மின்னும் மரணம்
    தங்க கல்லறை
    பௌன்சர்
    அண்டர்டேக்கர்
    சிப்பாயின் சுவடுகளில்
    ஒரு முடியா இரவு
    இரவே இருளே கொல்லாதே
    தேவ ரகசியம் தேடலுக்கல்ல
    டியுராங்கோ
    தோர்கல்
    ஜேஸன் ப்ரைஸ்
    கேப்டன் பிரின்ஸ் கதைகள்
    சிக் பில் கதைகள்
    ஜானி கதைகள்
    நிலவொளியில் ஒரு நரபலி
    என்னிடமுள்ள அணைத்து குண்டு புத்தங்கங்களும்

    ReplyDelete
    Replies
    1. உங்க பயணப்பை பெருசு போலும் சார் ; 12 க்குப் பதிலாய் 17 பிடிக்கிறதே !

      Delete
  26. 13. இரத்த படலம் என் லிஸ்டில் உண்டு.

    ReplyDelete
  27. முன் பின் டெக்ஸ் அட்டைப்படங்கள் ஏற்கனவே கண்டது போல இருப்பினும் ( காலன் தீர்த்த கணக்கு ,இரத்த வெறியர்கள்..? )அழகாகவே அமைந்து உள்ளது .

    ஓவியருக்கு மனமார்ந்த பாராட்டுகள் சார்...

    ReplyDelete
    Replies
    1. "காலன் தீர்த்த கணக்கு" வெயிலின் உக்கிரத்தைக் காட்டும் மஞ்சள் பேக்கிரவுண்ட் அட்டைப்படம் தலீவரே...! ப்ளஸ் அது நேராக நம்மைப் பார்க்கும் விதத்திலான 'தல' போஸ் !

      Delete
    2. அட ஆமாம் சார்...:-)

      Delete
  28. Yes all books is special no split top 10

    ReplyDelete
  29. விமானத்தில் பயணம் செய்யும் போது இத்தனை கிலோ தான் எடுத்து செல்ல வேண்டும் என்ற கட்டுப் பாடு இல்லையென்றால்
    1.அனைத்து டெக்ஸ் கதைகளும்
    2.டைகர்ககதைகளும்
    3.லார்கோ&ஷெல்டன்
    Top 12 என்பதால். இதோ my list:
    1.மின்னும் மரணம்-தொகுப்பு
    2.இரத்தக் கோட்டை-தொகுப்பு
    3.லயன் 250
    4.இரத்தப் படலம் தொகுப்பு
    5.டெக்ஸ் 70.சிறப்பு வெளியீடு
    6.தீபாவளி with டெக்ஸ்
    7.கார்சனின் கடந்த காலம்
    8.NBS
    9.கடவுளரின் தேசம்(தோர்கல்)
    10.ஜேஸன் 1,2,3(ஒரே புத்தகமாக வைத்து கொள்வோமே)
    11.பழி வாங்கும் புயல்
    12.ஆகாயத்தில் அட்டகாசம்

    ReplyDelete
  30. 1 ; மின்னும் மரணம்

    2 ; இரத்தக் கோட்டை

    3 ; எமனின் திசை மேற்க்கு

    4 ;வல்லவர்கள் வீழ்வதில்லை

    5 ; தேவரகசியம் தேடலுக்கல்ல

    6 ; இறந்த காலம் இறப்பதில்லை

    7 ; ஜேஸன் ப்ரைஸ் 1,2 &3

    8 ; லார்கோவின் அனைத்து கதைகளும்..

    9 ; மார்டினின் " பழிவாங்கும் ரா , பேழையில் ஒரு வாள் & காலத்திற்கு ஒரு பாலம்..

    10 ; NBS

    11 ; ஒக்லஹோமா , சர்வமும் நானே & சட்டம் அறிந்திரா சமவெளி, துரோகத்திற்க்கு முகமில்லை

    12 ; டியுராங்கோ..

    ReplyDelete
  31. 1.மின்னும் மரணம்
    2.சர்வமும் நானே
    3.லார்கோ வின்ச் கதைகள்
    4.க்ரீன் மேனர்
    5.இனி எல்லாம் மரணமே
    6.பௌன்சர்
    7.தங்க கல்லறை
    8.நில் கவனி சுடு
    9.7நாடகளில் எமலோகம்
    10.கர்னளுக்கோரு சிறுத்தை

    ReplyDelete
  32. MY TOP 12
    .................

    1. தங்ககல்லறை

    2. விதி போட்ட விடுகதை

    3. ஆ. அ. செய்வீர்

    4. ட்யூராங்கோ (ஆல்)

    5. மின்னும் மரணம்

    6. ஒரு பட்டாப் போட்டி

    7. ரின் டின் னின் முதல் கதை

    8. வல்லவர்கள் வீழ்வதில்லை

    9. பௌன்சர் (ஆல்)

    10 . ஷெல்டனின் முதல் இரண்டு கதைகள் (NBS)

    11. சர்வமும் நானே

    12. தோர்கல் (ஆல்)

    ReplyDelete
    Replies
    1. Again ரொம்ப வித்தியாசத் தேர்வுகள் !

      Delete
  33. பிரளயத்தின் பிள்ளைகள் போன்ற அழுமூஞ்சி காவியங்கள் தவிர்த்து மற்ற அனைத்து லயன்,முத்து ,மினி லயன் ,ஜூனியர் லயன் ,திகில் காமிக்ஸ் கதைகள் என்னுடைய சாய்ஸ் ..

    ReplyDelete
    Replies
    1. பிரளயத்தின் பிள்ளைகள் என்னை பொறுத்தவரை மனதை கனக்கசெய்யும் நாவல்.

      Delete
    2. //பிரளயத்தின் பிள்ளைகள் என்னை பொறுத்தவரை மனதை கனக்கசெய்யும் நாவல்.//

      +1

      Delete
  34. விஜயன் சார்,
    // கார்சனுக்கு சகஜமான humour-ம்; அதே சமயம் தன் நண்பன் மீது அசாத்திய பிணைப்பு உள்ள விதமாய் டயலாக்குகள் இருந்தால் – அந்த வன்மேற்கின் வறண்ட களங்களை இன்னும் சுவாரஸ்யமாக்கிடலாமோ என்று பட்டது //

    உங்களின் இந்த முயற்சி எங்களை டெக்ஸ்ஸுடன் இணைந்து பயணம் செய்ய வைத்ததற்கு மற்றும் ஒரு காரணம். அதேநேரம் இவர்கள் காமிக்ஸ் பாத்திரங்களாக எண்ணாமல் சக மனிதர்கள் போல் நேசிக்க மற்றும் ஒரு காரணம் உங்களின் உயிரோட்டமான வரிகளே.

    ReplyDelete
    Replies
    1. என்ன தான் நாம் மறுத்தாலும் தமிழ் சினிமாவின் தாக்கங்கள் நம்மிடையே இல்லாதில்லை என்பது நிஜமே ! So டெக்ஸ் போன்றொரு சர்வ வல்லமை கொண்ட ஹீரோவுக்கு - வரிகளின் வீரியம் ஓசையின்றி ஒரு பூஸ்ட் ஆகிறது போலும் !

      Delete
  35. எனது டாப் 12

    1.வல்லவர்கள் வீல்வதில்லை

    2.தங்கக் கல்லறை

    3.மின்னும் மரணம்

    4.தலையில்லாப் போராளி

    5.சட்டத்திற்கொரு சவக்குழி

    6.என் பெயர் லார்கோ

    7.பௌன்சர்

    8. லயன் 250. ஒக்லஹோமா

    9.பவளச் சிலை மர்மம் (கலர்)

    10.N.B.S.

    11. L.M.S.

    12..சிக்பில் கிளாசிக்ஸ்.
    இன்னும் பல நூறு உண்டு 12 என்பதால் மிகுந்த சிரமத்தோடு தேர்வு செய்தேன்

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யமான தேர்வு தான் சத்யா !

      Delete
  36. My choices::
    1. RATHA PADALAM FULL STORY
    2. SINGHATHIN SIRU VAYADHIL- EDITOR FLASH BACK STORY
    3. MINNUM MARANAM
    4. ALL SPIDER MAN STORIES
    5. ALL ARCHIE STORIES
    6. BOUNCER ALL PARTS
    7. ALL LATEST REPRINTS
    8. 2013 DEEBAVALI MALAR
    9. ALL LUCKY LUKE STORIES
    10. ALL PHANTHOM STORIES IN OLD MUTHU
    11. ALL LATEST GRAPHIC NOVELS
    12. JEREMIAH STORIES.

    VERY WELL EXPECTED RATHA PADALAM FULL STORIES IN COLOUR VERSION AND TEX 70 NOT OUT.

    I.V.SUNDARAVARADAN
    LITTLE KANCHEEPURAM
    CELL :: 7667291648

    ReplyDelete
    Replies
    1. சார்....இங்கே தேர்வுக்கான சிலபஸ் 2012 க்கு அப்புறமான இதழ்கள் மட்டும் தானே ?!

      Delete
  37. என்னுடைய பயணப்பையில் இடம்பெறும் கதைகள்.

    மின்னும் மரணம்.
    தங்கக் கல்லறை.
    துரத்தும் தலைவிதி + கான்க்ரீட் கானகம்
    கடவுளரின் தேசம்
    லக்கி க்ளாசிக் 1,2
    மெல்லத் திறந்தது கதவு +கனவின் குழந்தைகள்.
    கார்சனின் கடந்த காலம்
    LMS
    இரும்புக் குதிரையில் தங்கப் புதையல்.
    தேவ ரகசியம் தேடலுக்கல்ல.
    தங்கம் தேடிய சிங்கம்.
    வல்லவர்கள் வீழ்வதில்லை.

    ReplyDelete
  38. 1. நிஜங்களின் நிசப்தம்

    2. அண்டா்டேக்கா்

    3. என் பெயா் டைகா்

    4. பழிவாங்கும் புயல் (டெக்ஸ்)
    (நூறுவாட்டிக்கு மேல படிச்ச கதை)

    5. XIII இரத்தப் படலம்

    6. இரவே இருளே கொல்லாதே

    7. கேப்டன் பிாின்ஸ் ஸ்பெஷல்

    8. இரத்தக் கோட்டை

    9. மின்னும் மரணம்

    10. தங்கக் கல்லறை

    11. லக்கிலூக் (ஆல்)

    12. சிக்பில் (ஆல்)

    ReplyDelete
  39. விஜயன் சார்,
    // 15 வருஷங்களுக்கு முன்னே போட்ட 3 டெக்ஸ் டிசைன்கள் கூட இன்னமும் நம்மிடம் பத்திரமாக உள்ளன ! //

    முடிந்தால் இந்த பதிவில் அவைகளை கண்களில் காண்பியுங்களேன்.

    ReplyDelete
  40. ட்யூரங்கோ - நரகத்திற்கு நேர்பாதை

    இந்த கதையில் கடைசி சில பக்கங்கள் மனதை என்னமோ செய்து விட்டன. ஆமோஸ் இனி தான் பிழைப்பது கடினம் என்பதைப் புரிந்தபின் தனது நண்பர்களிடம் தன்னை கொன்று விட கேட்கும் இடம். ட்யூரங்கோ ஆமோஸூக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே எதிர்பாராத நேரத்தில் ஆமோஸூக்கு மரணத்தைக் கொடுக்கும் இடம் செம வித்தியாசமான சிந்தனை. அந்த இடத்தில் வரும் வசனங்கள் மற்றும் சித்திரங்கள் டாப்.

    இந்த இரண்டு பக்கங்களை மட்டும் எனது இல்லாளிடம் படிக்க சொன்னேன். அவள் படித்து முடித்த பின் என்னங்க இப்படி என ஆச்சரியப்பட்டாள்.

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 1. மின்னும் மரணம்
      2. ரத்தக் கோட்டை
      3. ரத்தப் படலம்
      4. கா. க. கா.
      5. தங்கக் கல்லறை
      6. லார்கோ அனைத்தும்.
      7. சட்டம் அறிந்திரா சமவெளி
      8. ஓக்லஹாமா
      9. கிட் ஆர்டின் அனைத்தும்
      10 லக்கி லூக் அனைத்தும்
      11. பவுன்சர் அனைத்தும்
      12. டியூராங்கோ அனைத்தும்
      13. அண்டர்டேக்கர்.

      (Bakers Dozen).

      Delete
  42. என்னோட பெட்டியில 12, அப்புறம் என்னோட கூட வர்றவங்க எல்லாரோட பெட்டியிலயும் 12-12ஆ எல்லா கதைகளையும் எடுத்துகிட்டு போக முடிஞ்சா இப்பவே கிளம்பலாம்...

    ReplyDelete
  43. இரவு முழுவதும் பலத்த யோசனைகளுக்கு பிறகு..

    தனி தீவில் ஒதுங்கும் சமயம் எனது கைகளில் தவழும் இதழ்களாக இருப்பவை...

    ஆல் நியூ ஸ்பெஷல்



    நெவர் பிவோர் ஸ்பெஷல்..

    L M S

    லார்கோ ஒட்டு மொத்த தொகுப்பு


    ஷெல்டன் அனைத்து இதழ்களும்



    ஈரோட்டில் இத்தாலி

    லயன் 300

    சர்வமும் நானே


    ட்யூராங்கோ

    அண்டர்டேக்கர்



    ப்ளஸ்

    நிஜங்களின் நிசப்தம் ( ஆளரவற்ற அந்த தனிமை தீவிலாவது இதழை முழுவதுமாக படித்து விடலாமா என்று சோதனை செய்வதற்கு :-)

    ReplyDelete
  44. My top 12
    1)operation சூறாவளி
    2)all tex stories
    3)all large stories
    4)ட்யுராங்கோ
    5)மர்ம கத்தி
    6)விண்ணில் ஒரு பொடியன்
    7)இனி எல்லாம் மரணமே
    8)நின்று போன நிமிடங்கள்
    9)ஆர்டினின் ஆயுதம்
    10)எஞ்சி நின்றவனின் கதை
    11)லேடி s(சுடும் பனி)
    12)தங்கம் தேடிய சிங்கம்
    13)பென்னி
    14)மேக் and ஜேக்
    15)காலனின் காலம்,பிரின்ஸ் மறுபதிப்புகள்

    ReplyDelete
  45. // கர்னல் ஸ்டார்க் கதையின் மூன்றாவது ஹீரோவாக என் கண்களுக்குத் தோன்றினார்! பலூனின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டே “சார்ஜ்ஜ்ஜ்” என்று முழங்கும் மனுஷனை என்னவென்பது? //

    நானும் இந்த கதையில் மிகவும் ரசித்த இடம் இது!

    ReplyDelete
  46. எனது விருப்பங்கள்

    1. அனைத்து கிராபிக்ஸ் (ஒரு சிப்பாயின் சுவடுகளில் இரவே இருளே கொல்லாதே தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல பிரளயத்தின் பிள்ளைகள் நிஜங்களின் நிசப்தம் etc )

    2. அனைத்து கேப்டன் டைகர் கதை

    3. xiii அனைத்தும் ( அன்பின் பாதையில் , விரியனின் விரோதி முதல் பெட்டி புரோனோவ்ஸ்கி வரை )

    4. அனைத்து லக்கி லூக் கதைகள்

    5. தற்செயலாய் ஒரு தற்கொலை சிவப்பு கன்னி மர்மம்

    6.மர்ம மனிதன் மார்ட்டின் கதைகள் அனைத்தும்

    7. அனைத்து லார்கோ வின்ச் கதைகள்

    8. டெக்ஸ் சில கதைகள் மட்டும்
    (கடைசி இடம் )


    இதுவே எனது வரிசை.
    இதில் மாடஸ்ட்டி, ஜானி, லேடி எஸ், ஜூலியா , மாயாவி, ஸ்பைடர், ஆர்ச்சி ஆகியோருக்கு இடம் இல்லை. இவர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும் .

    மற்ற படி எனக்கு இவர்கள் ஓகே.

    ReplyDelete
  47. டெக்ஸ் கதைகளில் என் நினைவில் நிற்பவை சில தான்.

    பழி வாங்கும் பாவை
    பவள சிலை மர்மம்
    கிங் ஸ்பெஷல் வல்லவர்கள் வீழ்வதில்லை
    கவரி மான்களின் கதை
    மனைவியை கொன்றவர்களை பழி வாங்கும் கதை மூன்று பாகம்

    துரோகியின் முகம் நான்கு பாகம்

    நீதியின் நிழலில்

    ReplyDelete
  48. இந்த மாதம் முதல் வார கர்நாடக 4 நாள் சுற்றுலாவின்போது நான் என்னுடன் எடுத்து சென்றது LMS. அதிலும் நான் ரசித்து படித்தது, சட்டம் அறிந்திரா சமவெளி. அதில் frame by frame ,artwork naan மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சட்டம் அறிந்திரா சமவெளி
      சூப்பரான ஆக்ஷ்சன் மேளா

      Delete
  49. 1. தங்க கல்லறை
    2. மின்னும் மரணம்
    3. ரத்த கோட்டை
    4. பவள சிலை மர்மம்
    5. சிகப்பாய் ஒரு சொப்பனம்
    6. பழி வாங்கும் புயல்
    7. லார்கோ ஆல் ஸ்டோரீஸ்
    8. கழுகு மலை கோட்டை
    9. கேப்டன் பிரின்ஸ் ரீபிரிண்ட்ஸ்
    10. லக்கி லூக் ரீபிரிண்ட்ஸ்
    11. சிக் பில் ரீபிரிண்ட்ஸ்
    12. கார்சனின் கடந்த காலம்

    ReplyDelete
  50. கமெண்ட்ஸ் ரொம்ப ஸ்லோவாக போவது போல் பீலிங். எல்லோரும் பிஸியா இருக்காங்க போல.

    ReplyDelete
  51. 1.இரத்தப்படலம்.
    2.தங்க கல்லறை.
    3.மின்னும் மரணம்.
    4.கிரீன் மேனர் 1&2.
    5.LMS.
    6.லயன் 250.
    7.சர்வமும் நானே.
    8.தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல.
    9.பவுன்சர் collections.
    10.Largo collections.
    11.மார்ட்டின் கதைகள்.
    12.இரவே இருளே கொல்லாதே.
    .... இன்னும் உண்டு. ஆனால் 12 என்று தடா போட்டதால் , மற்றவை மனதில்.




    ReplyDelete
  52. என் பெயர் லார்கோ


    இந்த இதழ் வெளிவந்த சமயம் நன்கு நினைவுள்ளது .அப்பொழுது தான் ஆசிரியர் அவரின் தனிப்பட்ட அலைபேசி எண்ணை பகிர்ந்து ஞாயிறு குறிப்பட்ட மணி நேரங்களுக்கு வாசகர்களோடு உரையாடிய நேரம் அது .அன்றும் அவருடன் அலைபேசியில் பேசிய பொழுது இம்மாதம் வந்த லார்கோவின் அந்த வெள்ளை நிற பிண்ணனியில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் அந்த அட்டைப்பட ஓவியம் செம அழகு சார் என்றதும் அதே சமயம் வெள்ளை நிற பிண்ணனி என்பதால் விரைவில் அழுக்காகி விடுமே சார் என்றதும் அப்பொழுது ஆசிரியரின் பதிலாக அது ஓர் லேமினேஷன் அட்டை போல எனவே அழுக்கு படியாது அப்படியே பட்டாலும் அப்படியே லைட்டாக துடைத்து பாருங்கள் போய்விடும் என்றதும் இப்பொழுது இந்த இதழை வாசித்த பொழுது எழுந்த நினைவலைகள்.ஆசிரியர் சொன்னபடி இப்பொழுதும் என்பெயர் லார்கோ அட்டைப்படம் "பளீச் " என பளீரிடுகிறது.


    "ஓ...அப்படிதான் கண்டுபிடித்தீர்களா ?

    ஆமாம்..

    காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா ?

    நிச்சயமாக இல்லை.."


    பாத்திரங்களையோ ,சூழ்நிலைகளையோ ,கால கட்டங்களையோ என எந்தவித வர்னணைகளும் இல்லாமல் எடுத்தவுடன் ஆரம்பிக்கும் அந்த உரையாடல்களே இது ஒரு புது உலகிற்கு கொண்டு செல்ல போகும் அட்டகாச படைப்பு என உணர்த்தியதும் ,புகைப்படங்களோ என சிலிர்க்க வைக்கும் அந்த ஓவியங்கள் ஆம் அது உண்மையே என உணர்த்துவதுமாக இருந்தது அந்த உரையாடல்களில் ஆரம்பித்த பவர்

    இறுதியில் "ஆமாம்..ஆறு தினங்களுக்கு முன் உன் தந்தை இறந்து விட்டார் என்ற செய்தியை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன் மிஸ்டர் வின்ச் " என்ற உரையாடலுடன் முடியும் வரை சிறிது கூட குறையாமல் அடேங்கப்பா என்று அந்த பவரை கொஞ்சம் கூட குறையாமல் பார்த்து கொண்டது ஒரு புதுவித அனுபவம்.இந்த இடைப்பட்ட நிகழ்விற்குள் லார்கோவின் அறிமுகமும்,சிறைக்கு செல்லும் நிர்பந்தமும் ,சைமனின் அறிமுகமும் ,லார்கோவின் பிண்ணனி பலமும் ,தோழிகளின் அரவணைப்பும் ,அந்த தோழிகளின் ஒருத்தியின் மரணமும் ,பின் நாடுவிட்டு விமானம் மூலம் தப்பிபதும் வாவ்...ஆக்‌ஷன் திரைப்படம் தோற்றது போங்கள்.இந்த முதல் பாகம் படித்து முடித்தவுடனே அதன் இரண்டாம் பாகத்தை உடனே படிக்கவேண்டும் என்ற ஆவலையும் ,ம்ஹீம் இந்த முதல் பாக அனுபவத்தையை இன்னமும் மனதினுள் உலாவி கொண்டு இருக்க வேண்டும் என்றும் இரண்டாம் பாகம் இன்னும் எப்படி பரபரக்க வைக்குமோ நாளை வரை பொறுத்து சஸ்பென்ஸ் உடன் இருக்கலாமா என்றும் மனம் பட்டிமன்றம் நடத்தியதும் நினைவில்.

    பின் உடனே படித்தேனா ,அடுத்த நாள் படித்தேனா நினைவில்லை.ஆனால் இப்பொழுது உடனே படிக்க வைத்தது .

    "யாதும் ஊரே யாவரும் எதிரிகள் "

    தலைப்பே சூடு பறக்க லார்கோவின் முற்கால சம்பவங்களும் ,தற்போதைய நிகழ்வுகளுமாக மாற்றி ,மாற்றி படை எடுத்தாலும் எவ்வித குழப்பமும் இன்றி நகர்வதுடன் இரு சம்பவ நிகழ்வுகளும் திசைமாறும் சமயம் அந்த நிகழ்விற்கு பிறகு என்ன நடந்து இருக்குமோ என்ற பதைபதைப்பு ,ஆர்வம் இந்த இதழில் தான் முதல் முறையாக ஏற்பட்டது.லார்கோவின் திறைமையும் ,செயல் திறனும் ,நெரியோவின் அட்டகாசமான தந்திர ஏற்பாடுகளும் ,லார்கோவின் ஆக்‌ஷனும் ,மனம் நெகிழ வைக்கும் சம்பவங்களும்,கதையின் வழியே செல்லும் லார்கோ ,சைமன் வசன நகைச்சுவைகளும் ம்ஹீம் இது திரைப்படம் தான் என்று கூதுகலிக்க வைத்தது அன்று மட்டுமல்ல மீண்டும் லார்கோ உலகிற்கிள் புகுந்த இன்றும் தான்.

    கெளபாய் உலகின் சூப்பர்ஸ்டார் டெக்ஸ் வில்லர் தான் என்பது போல நவ நாகரீக உலகின் நிரந்தர சூப்பர்ஸ்டார் லார்கோ தான் என்று தனது முதல் சாகஸத்திலியே முத்திரை பதித்த ,அடுத்த மாதம் மீண்டும் நம்முடன் உலவ வரும் ஆக்‌ஷன் சூப்பர்ஸ்டார் லார்கோவின் முதல் இதழான


    " என் பெயர் லார்கோ " படித்துவிட்டீர்களா நண்பர்களே..?


    படிக்கவில்லையா உடனே தேடுங்கள் !


    படித்து விட்டீர்களா ?
    பரவாயில்லை ..மீண்டும் அவரின் அறிமுக உலகிற்கு சென்று வாருங்கள் அடுத்த மாதம் லார்கோவுடன் இன்னும் நெருக்கமாக உலாவ....!

    ReplyDelete
  53. சார் நமது புது அவதாரத்தில் எக்கசக்கமான ஹிட்டுகள் இருப்பதால் அவற்றுள் சிறந்தவற்றை மிக சிரமப்பட்டு நான் தேர்வு செய்தது.

    1. தங்கக்கல்லறை (REPRINT)
    2. என் பெயர் டைகர்
    3. மின்னும் மரணம் (REPRINT)
    4. பூம் பூம் படலம் (REPRINT)
    5. வல்லவர்கள் வீழ்வதில்லை
    6. சர்பங்களின் சாபம்
    7. இரவே இருளே கொல்லாதே
    8. ஜேஸன் ப்ரைஸ் (1-3)
    9. நிஜங்களின் நிசப்தம்
    10.ஆதலினால் அதகளம் செய்வீர்
    11.இனி எல்லாம் மரணமே
    12.தேவ இரகசியம் தேடலுக்கல்ல

    தவிர்க்க முடியாத சில கதைகள்

    13. பிரளயத்தின் பிள்ளைகள் (ALL NEW SPECIAL)
    14. நிலவொளியில் ஒரு நரபலி
    15. வரலாறும் வல்லூறும்
    16. ஒரு சிப்பாயின் சுவடுகளில்
    17. ஒரு கோச் வண்டியின் கதை (LUKYLUKE CLASSICS-1)
    18. கார்ஸனின் கடந்த காலம் (REPRINT)
    19. ஒரு நிழல் நிஜமாகிறது (LARGO)
    20. சாக மறந்த சுறா

    ReplyDelete
  54. நிஜங்களின் நிசப்தம். ஆனால் இங்கேயோ வாசகர்கள் நிசப்தம்.

    ReplyDelete
  55. Blog is not updating it seems, there are only 107 comments.

    ReplyDelete
    Replies
    1. புலவர்கள் எங்கே காணவில்லை.

      Delete
    2. ஏதாவது தீவுக்கு பயணப்பையுடன் கிளம்பிவிட்டனரோ

      Delete
    3. காமிக்ஸ் சங்கத்தின் தலைமைபுலவரையும் காணோம்

      Delete
    4. "நிஜங்"களின் நிசப்தம்..!!

      மெளனக் கதறல்...!!!

      Delete
    5. உள்ளூர் புலவர்களின்றி இந்த தருமிக்கு வேலையேது ?

      Delete
  56. பதிவு புரவலர்கள் இல்லாமல் இந்த நிசப்தம்.

    ReplyDelete
  57. நமது தளத்தில் முன் எப்போதும் இல்லாத பின்னூட்டம். 114.கடந்த வாரத்தில்....
    இன்றுடன்.

    ReplyDelete
  58. எதுனா பஞ்சாயத்த இழுத்தாத்தே கூட்டஞ் சேரும் போலிருக்கே??

    என்ன பண்ணலாம்??!!??

    ReplyDelete
    Replies
    1. இந்த மாடஸ்தியே புடிக்காதுனு ஒரு பஞ்சாயத்தக் கூட்டின என்ன??

      Delete
    2. இல்லெ டெக்ஸ் வில்லா் ஓவா்டோஸ்னு இழுப்போமா??!!

      Delete
    3. பேசாம அவரவருக்கு புடிச்ச பத்து சொன்னீங்கல்ல இப்ப புடிக்காத பத்த சொல்லுங்கன்னு ஒரு பொட்டிய போட்டா என்ன?

      Delete
    4. அட பத்து இல்லைனாலும் பரவாயில்ல ஒரு மூணாவது சொல்லுங்க??

      Delete
    5. ஒன்னு மாடஸ்தி
      இரண்டு மாடஸ்தி
      மூணு மாடஸ்தி

      Delete
    6. மாடஸ்டி வாழ்க

      Delete
    7. பிடிக்காத புத்தகங்கள்
      அனைத்து ஸ்மர்ப் புத்தகங்களும்

      Delete
    8. ச்சீச்சீசீசீ
      ஸ்மர்ப்பா


      தெறிக்க ஓடிடுவேன் நான்
      எனக்கு காமிக்ஸ்ல பிடிக்காத புக் னா அது ஸ்மர்ப்ஸ் கதைகள்தான்

      Delete
  59. ஒரு மலரும் நினைவுகள்.
    ஒரு கோடை விடுமுறையில் (1985) கரூரில் இருந்து திருச்சிக்கு என் பாட்டி வீட்டுக்கு வந்து இருந்தேன். ஒரு மாதம் முழுவதும். என் கையில் இருந்த புத்தகங்கள்
    1. புதையல் வேட்டை (ரிப் கிர்பி )
    2. பழி வாங்கும் பொம்மை (ஸ்பைடர்)
    3. சதி வலை (மாஸ்டர்)
    4. திசை மாறிய கப்பல்கள் (லாரன்ஸ் டேவிட்)
    5. மரண கோட்டை (மாடஸ்டி)
    இந்த 5 புத்தகங்கள் மட்டும்தான் எனக்கு துணை. தினமும் காலை முதல் இரவு 7 மணி வரை ஒரு நாளைக்கு எத்தனை முறை படித்திருப்பேன் என்று நினைவில்லை. ஒரு நாளும் ஒரு புத்தகத்தை எடுத்தால் முடிக்காமல் வைக்க மாட்டேன்.
    ஆனால் இன்று நான் படிக்காமல் வாங்கி மட்டும் வைத்திருக்கும் புத்தகங்கள் எண்ணிக்கை 40 தாண்டும். ஆர்ச்சியின் கால கோட்டைதான் வேண்டும் போல குழந்தை பருவத்திற்கு செல்ல.

    ReplyDelete
    Replies
    1. இது ஓடிக்கொண்டே இருக்கும் காலகட்டம்! குடும்பத்துக்காவும், சொந்த-பந்தங்களுக்காகவும், நட்புக்காகவும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் காலகட்டம்!! இந்த ஓட்டத்தின் நடுவே நமக்குத் தோதான ஒரு பொழுதை ஏற்படுத்திக்கொண்டு காமிக்ஸைக் கையிலேந்திடும் வாய்ப்புகள் சற்று குறைவே! மறுப்பதற்கில்லை!

      ஆனால்,

      60ஐ எட்டிப்பிடிக்கும் வயதுகளில் நம் ஓட்டத்தின் வேகம் சற்று மட்டுப்படும்... பொறுப்புகள் குறைந்து, நேரத்தைக் கஷ்டப்பட்டு கடத்தவேண்டிய காலம் வரும்!

      அன்று தேவைப்படும் - இன்று படிக்க நேரமில்லாமல் பரண்மேல் வைத்திருக்கும் அத்தனை புத்தகங்களும்!!

      "உங்கள் புத்தகங்களைப் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்"

      Delete
    2. S s s

      "உங்கள் புத்தகங்களைப் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்"

      காலச்சக்கரம் சுழன்றாலும்
      நம் குழந்தை பருவங்களை மீட்டெடுக்க ஒரு ஒரு துணை

      லயன் முத்து
      ஸாரி
      முத்து / லயன் மட்டுமே

      இன்புறுவோம் 😍😍😍

      Delete
  60. தற்போது வாசிப்பில் - "பெளர்ணமியிரவில் காலன் வருவான்" - கிரிமினாலஜிஸ்ட் ஜூலியாவின்... உணர்வுப்பூர்வமான, அதிரவைக்கும் த்ரில்லர்!!

    அழகான அந்த ஓவியங்களுக்கு ஒரு லட்சம் தரலாம்...
    அட்டகாசமான அந்த வசனங்களுக்கு ரெண்டு லட்சம் தரலாம்...
    இயல்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் ஜூலியாவின் காதல் உணர்வுகளுக்கு மூனு லட்சம் தரலாம்...

    ஆனால், நிதிநிலைமைகள் தற்போது சரியில்லை என்பதால்... உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் படைப்பாளிகளுக்குச் சங்கத்தின் சார்பில், வழக்கம்போல, ஒரு 'ரவுண்டு பன்னு + கட்டன் சாயா' அளிக்கப்படும் என்று சொல்லிக்கொண்டு....

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டாரய்யா!! வந்துட்டாரு!!

      Delete
  61. இன்றைய தமிழ் இந்து நாளிதழை பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நடுபக்கம் (பக்கம் . 9)

      Delete
    2. லிங்க் கொடுங்க சார்.

      Delete
    3. லிங்க் எப்படி கொடுக்க வேண்டும் என எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் இதனை கொடுக்கலாம்.

      Delete
  62. இனிமேல் யாராவது கேப்பீங்க மேயில் ஜுன் உண்டா சார்னு? கேப்பீங்க.

    ReplyDelete
  63. ஸ்கூல் பீஸ் ஜுரத்தால் எல்லோரும் தளத்தின் பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லையோ என்னவோ

    ReplyDelete
  64. பழசிலும் இடம்பிடித்து; புதுசிலும் இடம்பிடித்திடும் வாய்ப்பு நிறைய இதழ்களுக்கு வாய்ப்பதில்லை! ஆனால் கேப்டன் டைகரின் பல சாகஸங்களுக்கு அந்த சான்ஸ் சுலபமாய் கிட்டியுள்ளது – வண்ணத்தில் மறுபதிப்புகளாக நாம் வெளியிட்டதால்! தங்கக் கல்லறை; மின்னும் மரணம்; இரத்தக் கோட்டை என 3 ஸ்பெஷல் தொகுப்புகள் /// சத்தியமான வார்த்தைகள்... தங்க தலைவன்.

    ReplyDelete
  65. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    (ஈனா வினாவுக்காக )
    .

    ReplyDelete