Powered By Blogger

Sunday, December 03, 2017

அந்த 2 நாட்கள் !

வணக்கம் நண்பர்களே,
  • சில சந்தோஷங்கள் உற்சாகத்தில் கூவச் செய்யும்.... சிலவோ உள்ளுக்குள் நிறைந்தோடும் ஒரு உணர்வோடு மௌனத்தை நாடச் செய்யும் ! 
  • சில தருணங்கள், பக்கத்துவீட்டு பசுமாடு கன்று போட்ட விஷயத்தைக் கூட , கூரை மேலேறி நின்று கொண்டு ஊருக்கே சொல்லிடும்  நமைச்சலை ஏற்படுத்தும் ; சிலவோ சொல்ல நூறு விஷயங்கள் இருந்தாலுமே அமைதியையே தேர்ந்தெடுக்கும் ! 
  • சில சூழல்கள்  கரும்புச்சாறு மிஷினிலிருந்து பிரவாகமெடுக்கும் கரும்பு ஜுஸைப் போல தத்துவங்களை பொழியச்  செய்யும் ; வேறு சிலவோ, ஒரு மோன நிலைக்கு அழைத்துச் சென்று, வாழ்க்கையையே தத்துவார்த்தமாய்ப் பார்க்கச் செய்யும் ! 

இவை அத்தனையுமே ஒரே நேரத்தில், ஒரே ஆசாமியை  ஒரே தாக்காய்ப் போட்டுத் தாக்கினால் விளைவு என்னவாக இருக்கும் ? தொண்டை அடைத்து, கண்கள் வேர்த்து, நாக்கு 'தன்னன்னான்னா" என்று தாளம் போட்டு என்னென்னவோ கூத்துக்கள் அரங்கேறும் ! அவற்றையெல்லாம் சமனப்படுத்த  ஒரு சொம்புத் தண்ணீரை மடக்கு மடக்கென்று குடிப்பதைத் தாண்டி வேறு என்னதான் செய்ய முடியும் ? So அதை அட்சர சுத்தமாய்ச் செய்த கையோடு இங்கே ஆஜராகிறேன் !  

எங்கே ஆரம்பிப்பது ? எதை விவரிப்பது ? எதை விட்டுத் தள்ளுவது ? என்று துளியும் புரியா ஒரு 'பெப்பப்பே' மனோநிலையில் இருப்பதால் -  டைப்படிக்கும் விரல்களின் போக்கிலேயே இந்தப் பதிவினைகொண்டு செல்கிறேன் ! டிசம்பர் இதழ்களை பேக்கிங் செய்து கொண்டு நம்மவர்கள் ஆபீசில் பிசியாக இருந்த அதே கணத்தில் திருமணத்திற்கான பேக்கிங் பணிகள் வீட்டில் நடந்து கொண்டிருந்ததுவரைக்கும் ஸ்பஷ்டமாக நினைவில் உள்ளது ! இம்மாத free gift-ல் கையெழுத்தையும் சேர்த்தே பிரிண்ட் செய்து விடவா ? என்று நமது டிசைனர் கோகிலா கேட்டதும் நினைவுள்ளது ; "முடியவே முடியாது....கோட்டைச்சாமி கைப்பட கையெழுத்து போட்டே தீருவான் !" என்று சொன்னதும் நினைவுள்ளது ; ஒரு முரட்டு பண்டலை மைதீன் கொணர்ந்து வீட்டில் ஒப்படைத்ததும் நினைவுள்ளது ; அதைத் தொடர்ந்து - 'பூட்ட கேஸ் இது' என்பது போலான பார்வையோடு,வீட்டிலுள்ள முக்கால்வாசிப் பேர் முறைத்ததைக் கவனிக்காதவன் போலவே casual ஆகப் பேசிக்கொண்டே கையெழுத்தைப் போட்டுத் தள்ளியதும் நினைவுள்ளது ; "இல்லியே...கைலாம் வலிக்கவே இல்லியே..!!" என்ற பாவ்லாவோடு அவ்வப்போது வாசலுக்குப் போய் இல்லாத போஸ்ட்மேனையும், கூரியர் பையனையும் தேடும் சாக்கில் விரல்களை உருவு உருவு என்று உருவிக் கொண்டதும் நினைவுள்ளது ! அதன் பின்பாய் நடந்த அத்தனையுமே லைட்டான புகை மூட்டத்தில் ; பாலு மகேந்திராவின் காமெராவில், இளையராஜாவின் பின்னணி இசையோடு  ஏதோவொரு கனவு sequence போலவே மண்டைக்குள் நிழலாடுகிறது ! 

செவ்வாயிரவே ஆபீஸிலும் சரி, வீட்டிலும் சரி, பேக்கிங் முடிந்த நிலையில் - புதனின் காலையும்  புலர்ந்தது ! முதன்முறையாக டி.வி. பேட்டிக்குச் செல்லும் முன்பாய், தன்னிச்சையாய் ஒரு கதக்களி நடனம் நடத்திய முட்டிங்கால்கள்  திரும்பவும் அன்றைக்கொரு ரிகர்சல் நடத்திப் பார்க்கத் துடிப்பதை உணர முடிந்தது ! என்னதான் நமக்கு அந்த 'சூனா-பானா' அவதாரமெல்லாம்  அத்துப்படி என்றாலுமே, காத்திருந்தது ஒரு மெகா இதழின் ரிலீசோ ; வாசக சந்திப்போ கிடையாது - வாழ்க்கையின் ஒரு defining moment என்ற புரிதல் தந்த வயிற்றுக் கலக்கலானது  - ஒரே நேரத்தில் அரை டஜன் பன் பரோட்டாக்களை உள்ளே தள்ளினால் ஏற்படும் கட-முடாக்களை விட வீரியமாயிருந்தது ! போதாக்குறைக்கு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் - வெறும் ஒற்றை ரூபாயை மட்டும்  தட்சணையாய் தட்டில் வைத்து விட்டு, ஜலதோஷத்துக்கு கஷாயம் போட கணிசமாக துளசி தரக் கேட்டு வைத்தால் கறுப்பாகிப் போகும் குருக்களின் வதனங்களை விடவும் இருண்டு காட்சி தந்தது வானம் ! எந்த நிமிஷமும் பொத்துக் கொண்டு மழை ஊற்றும் போலிருக்க, கூகுளை அடித்து "SIVAKASI WEATHER" என்று தேடினால் அங்கே திரை முழுக்க இடியும், மழையும், குடையுமான படங்கள் மட்டுமே என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டின ! "ச்சை...எனக்கு கூகுளே புடிக்காது" என்று மனசுக்குள் ஓடிய அந்த நொடியில் -   வருண பகவானின் திடீர் கரிசனம் ஊருக்கு நன்மையே என்று புரிந்தாலும் , அப்போதைக்கு சுயநல smurf அவதாரமே எனக்கு சாத்தியமானது ! 'சாமி..கடவுளே...ஏதோ கொஞ்சம் கருணை காட்டுங்கள்" என்று  மனசுக்குள் நினைக்கத் தொடங்கும் போதே வானம் மடை திறந்திருந்தது ! தொடர்ந்த ஒரு முக்கால் மணி நேரம் மழை சாத்தியெடுக்க, சாலையையே இலக்கின்றிப் பராக்குப் பார்த்துக் கொண்டே நின்றேன் ! ஆனால் surprise !! அடித்த வேகத்துக்கே திடீரென வெளிச்சமும் வானில் விரவ, மழை கடையை  மூடிக் கொண்டது ! தட தடவெனக் கிளம்பி, திருமண மண்டபத்துக்கு ஓட்டமாய் ஓடினால் அங்கே சமையல் அணியினர் ஏற்கனவே ஆஜராகி, பலசரக்குகளும், காய்கறிகளும் ; பாலும், இன்ன பிற சமாச்சாரங்களும் வந்திறங்கும் வேகத்துக்கு ஈடாய் வேலையினில் ஆழ்ந்திடத் துவங்கிருந்தனர் ! ஒரு முட்டையை வேக வைப்பதற்குள் Youtube-ல் ஒரு நூறு ஆராய்ச்சிகள் செய்திடும் எனக்கு - இந்த சமையல் அணிகளின் ஜாலங்கள் என்றைக்குமே  குன்றா வியப்பினை வழங்கத் தவறியதில்லை ! தொடர்ந்த மணி நேரங்களில், பணிகள் துரிதமாய் அரங்கேறத் துவங்க, மாலையும் புலரும் வேளையில் சிறுகச் சிறுக உறவினர்கள் வரத் துவங்க - கைகூப்பும் படலம் துவங்கியது ! 

அதற்கு முன்பாக மண்டப வாசலில் இரு பணியாட்கள் ஒரு முரட்டு ப்ளெக்ஸ் பேன்னரைக் கட்டிக் கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது ! 'இது என்ன சமாச்சாரம் ? நாம் எதுவும் தயார் பண்ணவில்லையே ?' என்றபடிக்கு அங்கே போய்ப் பார்த்தால் தூக்கிவாரிப் போட்டது எனக்கு ! 'ஜொய்ங்' என கம்பளத்தில் பறக்கும் கிட் ஆர்டினும், ஸ்டைலாக நிற்கும் லார்கோவும், டைகரும் இடம் பிடித்திருக்க, அதன் மத்தியில் "இளவரசரே....etc etc " என்ற வாசகங்களோடு ஒரு தினுசான வரவேற்பு வாசகங்கள் !! இது சீனியர் எடிட்டரின் வேலையோ ? என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றிட - அங்கே நின்ற பணியாளர்களிடம் - "இதை யார் மாட்டச் சொன்னது ?" என்று கேட்டேன். அவர்களோ லேசான எரிச்சல் கலந்த தொனியில் "எங்க பாஸ் மாட்டிட்டு வரச் சொன்னார் !" என்றார்கள் ! "சாமிகளா.. இங்கே பாஸ்.. வில்லன்.. நம்பியார்...பொன்னம்பலம்...ஷண்முகசுந்தரம் ...ஜெமினி கணேசன் ... நாகேஷ் ..சுருளிராஜன்  சிரிப்பு பீஸ்... குணச்சித்திர நடிகர் என்று சகல வேஷமும் போடுவது நான் தான் ! யார் இந்த ப்ளெக்ஸை மாட்டச் சொன்னது ?" என்று குரலை உயர்த்திட - "கமல் நற்பணிமன்றத் தலைவர் மாட்டிட்டு வரச் சொன்னார் !" என்று பதில் சொன்னார்கள் ! ஒரு கணம் தலையும் புரியவில்லை, தூரும் புரியவில்லை !  "பெயரில்லா / முகமில்லா அந்தத் தலைவரின் அன்புக்கு நன்றி ; ஆனால் இந்த பேனருக்கு இக்கட இடம் நஹி !" என்பதை அவர்களுக்குப் புரியச் செய்த கையோடு அதனை அகற்றி, தூக்கி ஓரமாய் கவிழ்த்துப் போடவும் செய்தேன் ! நாமாய், நமக்கே ஊதிக் கொள்ளும் பீப்-பீப்பிக்கள் என்றைக்குமே ரசனைகளுக்குரியவைகளல்ல என்பதில் எனக்கும், ஜுனியருக்கும் என்றைக்குமே மாற்றுக் கருத்துக்கள் கிடையாது ; and ஒரு குடும்ப விழாவின் போது இதுபோன்ற சமாச்சாரங்கள் வேண்டவே வேண்டாமே என்பதிலும் உறுதியான எண்ணங்கள் எங்களுக்கு ! So அந்த பேனரை ஏற்பாடு செய்திருந்த நண்பர் யாராக இருப்பினும், அதன் பொருட்டான  உழைப்பும், பணமும் விரயமாகிப் போனது குறித்து வருந்தியிருக்கலாம் ; ஆனால் இத்தகைய முயற்சிகளுக்கு இது களமல்ல என்பதைப் புரிந்து கொள்ளக் கோருகிறேன் ! 

உறவினர் ; நண்பர்கள், தொழில்முறைப் பழக்கங்கள் என்று திரள் சிறுகச் சிறுகக் கூடத் துவங்கிய மாலைப் பொழுதினில் - எனது போனில் வாட்சப் சேதியின் கிணுகிணுப்பு கேட்டது ! பார்த்தால் - நமது சேந்தம்பட்டி வித்வான்கள் குழுவின் கார் எட்டு மணிவாக்கில் உருண்டு வந்து சேர்ந்திடுமென்ற சேதி ! அதற்கு முன்பாகவே  சில நண்பர்களும் ஆஜராகியிருக்க,  சொப்பனசுந்தரியின் பிரசித்தி பெற்ற அந்த வாகனமும் ஒரு வழியாய் மண்டபத்துக்கு வந்து சேர்ந்த போது களை கட்டியது ! "வேதாளர் எப்போ சார் ?" என்ற ரீதியிலான கேள்விகள் அங்கே எழுப்பப்பட்டிருந்தாலும் நான் ஆச்சர்யம் கொண்டிருக்க மாட்டேன் தான் ; ஆனால் நண்பர்கள் குழு 'திருமண விழா' மூடில் இருந்ததால் சந்தோஷங்களின் பரிமாற்றங்களே அங்கே நிறைந்து காணப்பட்டது ! தலீவர், செயலாளர், பொருளாளர் - என்று சங்க பிரதிநிதிகள் அத்தனை பேருமே ஆஜராகியிருந்தது ஒரு ஆச்சர்ய ஹைலைட்டும் கூட ! நிச்சயதார்த்தம் ; ரிசப்ஷன் ; போட்டோ படலம் என்று தொடர்ந்திட, இயன்றமட்டிலும் நண்பர்களோடும் நேரம் செலவிட முயன்றேன்! பந்தியில் சைவம் சாப்பிட்ட நண்பரணி அப்புறமாய் சிவகாசி பரோட்டாவின் மகாத்மியத்தை பரிசோதனை செய்தார்களா ? என்பது தெரியவில்லை ; ஆனால்  இரவு திரும்பவும் மழை வெளுத்து வாங்கத் துவங்கிய போது அதற்கெல்லாம் நேரம் இருந்திராது என்றே நினைக்கிறேன் ! ஒரு மாதிரியாய் அடித்துப் பிடித்து வீடு வந்து சேர்ந்ததே பெரும்பாடாகிப் போக - டி-வியைப் போட்டால் "வருது புயல்" என்று பிரெஷாக ஒரு சட்டிப் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தார்கள் ! தூக்கம் கண்களை கட்டிப் போட - விடியும் பொழுது நலமாய் விடியுமென்ற நம்பிக்கையோடு கனவுலகத்தினுள் புகுந்தேன் ! 

விடிய விடிய மழை கொட்டித் தள்ளும் ஓசை நிஜத்திலா ? கனவிலா ? என்பது கூட சரிவரத் தெரியா நிலையில் ஒரு தினுசாய்த் தூங்கி எழுந்த போது, வாளியில் தண்ணீரைப் பிடித்து வானத்திலிருந்து ஊற்றிக் கொண்டிருப்பது போல கொட்டிக் கொண்டிருந்தது மழை ! And surprise again !! சரியாய் எட்டுமணிவாக்கில் மழை கொஞ்சம் ஓரம்கட்ட - சூரியன் சன்னமாய் எட்டிப் பார்க்க, மண்டபத்துக்கு ஓட்டமாய் ஓடினேன் ! பள்ளிகள் சகலத்துக்கும் லீவு அறிவிக்கப்பட்டிருக்க, மாணவர்கள் செம குஷாலாய் வீடு திரும்பிக் கொண்டிருப்பதை வழிநெடுகப் பார்க்க முடிந்தது ! ஒரே இடம் ; ஒரே சூழல் ; ஒரே நிகழ்வு - ஆனால் அதன் தாக்கம் தான் ஆளுக்கு ஆள் எத்தனை மாறுபடுகிறது ?!! என்ற மகா சிந்தனையோடே சென்றவன் மறுபடியும் அந்த வணக்கம் வைத்து வரவேற்கும் படலத்தினுள் ஆழ்ந்து போனேன் ! பொதுவாய் எனக்கு இந்த மாதிரியான விஷயங்களில் சங்கோஜம் சற்றே அதிகம் ; ஓசையின்றிப் பின்னணியில் இருந்துவிட்டு, ஒதுங்கி கொள்வதையே நாடுவேன் ! ஆனால் தனக்கென்று வரும் போது நம்மையும் அறியாதே ஒரு பற்றுதல் உண்டாவதை அன்றைக்கு உணர்ந்திட முடிந்தது ! மெய்யாக அனைவரையும் வரவேற்று, பந்திக்கு இட்டுச் சென்று, அங்கே அவர்களை பசியாறச் செய்யும் படலத்தில் எத்தனை ரம்மியம் உள்ளதென்பதை முழுமையாய் உணர்ந்தேன் ! பரிச்சயம் குன்றிப் போயிருந்த உறவினர்களோடு சேரனின் வாடகை சைக்கிள்களை எடுத்துக் கொண்டே டபுள்ஸ் போய், பழம் நினைவுகளை மீட்டெடுப்பதும் ; நண்பர்களோடு அரட்டை அடிப்பதுமே "குண்டு புக்குகள்" தயாரிக்கும் ஏகாந்தத்துக்குச் சளைத்தவையல்ல என்று அழுத்தமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தது ! 

எத்தனையோ நாட்கள், எத்தனையோ மணவிழாக்களில் - கூட்டத்தோடு கூட்டமாய் அமர்ந்தபடிக்கே அருகாமையில் உள்ள டி-வி-க்களில், மேடையில் நடக்கும் திருமண சடங்குகளை கொட்டாவி விட்டபடிக்கே பராக்குப் பார்த்தவனுக்கு - முதன்முறையாக மேடையில் ஏறியமர்ந்து அந்தச் சடங்குகளின் ஒரு அங்கமாகிட நேர்ந்த போது 'திரு திரு'வென்று விழிக்கத் தான் முடிந்தது ! "ஆயிரம் பக்கத்துக்கு ஒரு அயல்தேச மொழியின் படைப்பை தமிழில் தயாரிக்கணுமா ? -செஞ்சுட்டா போச்சு !" என்று அசால்ட்டு காட்ட தெரிந்தவனுக்கு - ஐயர் சொல்லும் மந்திரங்களின் முதல் வரி கூட லத்தீன் பாஷை போலவும், பாரசீக மொழி போலவும் தெரிந்த கணத்தில் - ஞான் குதிரை ஒட்டி வந்துள்ள குண்டுச் சட்டியின்பரிமாணம் எத்தனை குட்டி என்பது புரிந்தது ! ஹோமகுண்டத்தின் முன்னே எழுந்த புகை மூட்டத்தைப் பார்க்கும் போது -'டைகர் ஜாக் புகை மூட்டம் போட்டு சேதி அனுப்புவது இப்படித் தானோ ?" என்று மண்டைக்குள் ஓட - 'அட பேப்பயலே....இது உன் புள்ளைக்கு கல்யாணம்டா..!!" என்று மண்டையின் மறு பாதி குட்டு வைத்து நினைவூட்டியது ! ஐதீகங்கள் ; சம்பிரதாயங்கள் என்று ஏதேதோ தொடர - மண்டையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருந்தவனை ஒரு கட்டத்தில் எழுந்து நிற்கச் சொல்லி ஒரு தாம்பாளத்தினுள் கால்பதித்து நிற்கச் செய்துவிட்டு, மணமகனை முன்னே அமரச் செய்து, என் பாதங்களைக் கழுவிடச் சொன்ன போது என் ஈரக்குலையே வாய்க்கு வந்தது போலுணர்ந்தேன் ! தொடர்ந்த நிமிடமானது அறுபது வினாடிகளாய்த் தோன்றாது, அறுபது யுகங்களாய்த் தோன்றியது !! திருமணமும் அரங்கேறிட , தொடர்ந்த க்ரூப் போட்டோ படலங்களில் நண்பர்களின் அணியையும் இணைப்பதில் நிறையவே பிரயத்தனம் அவசியமாகியது எனக்கு. மேடை ஏறத் தயங்கிய நண்பர்களை வம்படியாக மேலே அழைத்துச் சென்றான பின்பாய், மத்திய விருந்தினில் அவர்கள் சைவத்தோடு சண்டை போடும் அழகை மீண்டும் ரசித்தேன் ! ஜுனியர் குப்பண்ணாக்களிலும் , அஞ்சப்பர்களிலும், அயராது அதகளம் பண்ணிய அணியானது பட்டர்பீன்ஸோடும், சாம்பாரோடும் கைகுலுக்கியது கண்கொள்ளாக் காட்சியே ! 

ஒரு மாதிரியாய் நண்பர்கள் விடைபெற்றுக் கிளம்ப, கொஞ்சம் கொஞ்சமாய் மண்டபமும் காலியாகத் துவங்கியது ! ஒற்றை நாளுக்கு முன்பாய் இதே இடத்தில ஒரு எதிர்பார்ப்பும், பரபரப்பும் குடி கொண்டிருந்ததையும், அதே இடத்தினில் -  சகலமும் நன்றாய், நலமாய் அரங்கேறிய சந்தோஷம் தற்போது நிலவுவதையும் உணர முடிந்தது ! விடைபெற்றுச் சென்ற உறவினர்கள் முகங்களில் சந்தோஷமும், 'அட..அதற்குள் விழா முடிந்து விட்டதே !' என்ற சோகமும் சம பங்காகி நிற்பதை கவனிக்க முடிந்த போது - உள்ளுக்குள் ஒரு மெலிதான பெருமிதம் ஓடியது : விருந்தோம்பலும் பழகிக் கொள்ளமுடிந்ததொரு கலை தான் போலும் என்று !! நம்மையும், நம் அழைப்பையும் மதித்து, விருந்தினராய் ஆஜராகிடுவோரை இயன்றமட்டிலும் கவனித்திட வேண்டுமென்ற எங்களது அவா ஓரளவேணும் ஜெயித்திருந்ததென்பதை சில பல கனிவான வார்த்தைகள் உணர்த்தின ! இது வரையிலும் ஒரு பாரமாய், பெரும் சுமையாய்த் தோன்றிய பணிகள் சகலமும், அந்த கணத்தில் சுகமானவைகளாய்  உருமாற்றம் கண்டது போலுணர்ந்தேன் தலைக்குள் ! "எப்படா சாமி - எல்லாம் நல்லபடியா முடியும் ?" என்று 5 மாதங்களாய்ப் பாயைப் பிறாண்டியவனுக்கு - "அட ...ஒரு 150 நாள் கனவை சந்தோஷமாய் வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பை ஆண்டவன் தந்திருக்கிறார் !!" என்ற புரிதல் பிறந்தது !  

'வீட்டைக் கட்டிப் பாரு... கல்யாணத்தை செஞ்சு பாரு' என்று சொல்லி வைத்த புண்ணியவானின் எண்ணவோட்டம் என்னவென்று சத்தியமாய் எனக்குத் தெரியாது ! அவை சார்ந்த சிரமங்களையும், செலவுகளையும் எண்ணி அவர் அலுத்துக் கொண்டாரா என்றெல்லாம்  எனக்குத் தெரியவில்லை  ! ஆனால் திருமணம் எனும் வைபவம் நம் உயரத்தையும் ; நம் குள்ளத்தையும் ஒற்றைச் செயலில் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது என்பதே நான் படித்திருக்கும் பாடம் ! வாழ்வினில் நாம் ஈட்டியுள்ள சொந்தங்களும், பந்தங்களும் ஒரே நாளில் அணி திரளும் போது நம் உயரத்தை நாமே புரிந்து கொள்ள முடிகிறது ! அதே நொடியில் - ஒரு கூட்டு முயற்சியின்றி ; குடும்பத்தினரின் முழு உறுதுணையுமின்றி - இந்தத் தேர் எல்லையை விட்டே நகர்ந்திடாது என்பதைப் புரிந்து கொள்ளும் நொடியில் நாம் எத்தனை சின்னவர்கள் என்பதும் புலனாகிறது ! வாழ்க்கைக்கொரு புது அர்த்தம் ; உறவுகளின் பலனுக்கொரு புது விளக்கம் - இவற்றைப் புரிந்து கொள்ளவே "கல்யாணத்தைச் செஞ்சு பார்" என்று சொல்லியுள்ளார்கள் என்பேன் நான் ! தலைவணங்குகிறேன் அந்த முதுமொழிக்கு !! 

வாழ்க்கை மறுபடியும் வழக்கமான தடத்துக்குத் திரும்பத் துவங்கிவிட்டது எனக்கு !  "தோர்கல் ராப்பர் என்னாச்சு ? " ; "ஸ்பைடர் டைப்செட்டிங் ஆச்சா ?" என்றபடிக்கே சனிக்கிழமை நம்மவர்களை துளைக்க ஆரம்பித்து விட்டேன் ! "ஆங்...யெஸ்ஜி...மிஷின் available ஹை ஜி...ஓகே.ஜி... வாங்கிடலாம் ஜி" என்று இன்னொருபக்கம் போனில் மாட்லாடத் தொடங்கியும் விட்டேன் ! தொடரும் நாட்களில் தாண்டி வந்துள்ள திருமண ஏற்பாட்டு நாட்கள் சகலமும் சன்னம் சன்னமாய் மறந்து போயும் விடக்கூடும் தான்  ! ஆனால் ஒரு இயந்திரகதியான வாழ்க்கைக்கு உறவுகளின் மகத்துவத்தை உணர்த்திய இந்த 2 நாட்களின் வீரியம் மட்டும் என்றைக்கும் அகலாது !  சின்னவனாய் இருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன் - மெய்யாக ! 

தம் வீட்டு விசேஷமாய்க் கருதி நேரில் வந்திருந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் சரி ; உளமார்ந்த வாழ்த்துக்களை சொல்லியுள்ள தொலைவிலுள்ள நண்பர்களுக்கும் சரி - நெஞ்சார்ந்த நன்றிகள் !! உங்கள் அன்பே எங்களை வளரச்  செய்யும் அடைமழை ! மீண்டும் சந்திப்போம் guys ! தொடரும் வாரம் முதல் காமிக்ஸ் தடத்தில் தட தடப்போம் - as usual !! Bye now ! See you around !

December ஆன்லைன் லிஸ்டிங் இங்கே : http://lioncomics.in/monthly-packs/462-december-2017-pack.html

206 comments:

  1. நானும் வந்துட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. ///ஹோமகுண்டத்தின் முன்னே எழுந்த புகை மூட்டத்தைப் பார்க்கும் போது -'டைகர் ஜாக் புகை மூட்டம் போட்டு சேதி அனுப்புவது இப்படித் தானோ ?" என்று மண்டைக்குள் ஓட - 'அட பேப்பயலே....இது உன் புள்ளைக்கு கல்யாணம்டா..!!" என்று மண்டையின் மறு பாதி குட்டு வைத்து நினைவூட்டியது ! ///

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

      Delete
  2. முதன்முறையாக முதல் இடம்.
    இரவு வணக்கம் ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு!!!!!!!!

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  4. யப்பா எவ்ளோ பெரிய பதிவு படிச்சுட்டு வாரேன்

    ReplyDelete
  5. காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு,வணக்கம்.

    ReplyDelete
  6. நீங்க எத்தனையோமுறை சந்தோசமாக சிரித்ததை பார்த்திருக்கிறேன் சார் ஆனால் திருமணம் முடிந்து விக்ரம் தம்பதிகள் மாலைமாற்றும் போது உங்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அருமை .
    உங்கள் கவனிப்பு ஏற்பாடுகள் மிக அருமை

    ReplyDelete
  7. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
    Replies
    1. தங்கத்தலைவி மாடஸ்டி வாழ்க!
      வாழ்க! வாழ்க! வாழ்க!

      Delete
  8. ஆச்சரியம்.. இன்ப அதிர்ச்சி..பரவசம்..., பிரின்ஸ் புத்தகத்தில் போட்டோவை பார்த்ததும் இதுவே என் நிலை..

    Really superb and fantastic work Vijayan Sir…Hats off to You.

    டெக்ஸ் புத்தகத்தை மிகுந்த ஆர்வத்துடன் திறந்து பார்த்தபோது எவ்வளவு ஏமாற்றம், அதிருப்தி ஏற்பட்டதோ, அதைவிட பன்மடங்கு சந்தோஷத்தையும், திருப்தியயையு்ம் தற்போது ஏற்படுத்தி விட்டிர்கள்.

    எங்களின் அதிருப்தியை கருத்தில் கொண்டு, பிரின்ஸ் புத்தகத்தில் போட்டோ போட்டு விடுகிறேன் என்று நீங்கள் கூறிய போது, “தேவை இல்லாத வேலை இது என்றே என் மனதிற்கு பட்டது, பெருசா என்ன பிரிண்ட் பண்ணிட போறாரு, அதான் BW நல்ல இருக்காதுனு சொல்லறாரு, பிறகு எதற்கு இந்த தேவை இல்லாத வேலை, முன்கூட்டியே சொல்லி இருந்தா, இரு தரப்பிலும் சங்கடத்தையும் மற்றும் இந்த இரெட்டிப்பு வேலையயையும் தவிர்த்திருக்கலாமே, இது ஒன்னும் ஆகுறதுக்கு இல்லை, இனிமே என்னத்தை செய்ஞ்சு என்ன ஆகப்போறது” அப்படினு தான் நினைத்து கொண்டுருந்தேன். இதனாலேயே பிரின்ஸ் புத்தகத்தில் போட்டோ போடுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தேன்.

    ஆனால், காமிக்ஸ் காதலர்களின் அதிருப்தியை போக்கும் விதமாக, BW போட்டால் நன்றாக இராது என்று, கலரில் அதுவும் போட்டோவுக்கு என்று தனியாக ஒரு தாளில் அட்டகாசமாக போட்டோவை அச்சடித்து கொடுத்து எங்களை அசரடித்து விட்டிர்கள். மகனின் திருமணத்தை வைத்து கொண்டு, திருமண வேலைகளின் மத்தியில், எங்களை திருப்தி படுத்துவதற்காக தாங்கள் மெனக்கெட்டிருப்பது எங்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது மட்டுமல்லாமல், காமிக்ஸ் காதலர்களின் Lion King நீங்கள் என்பதை நிரூபித்து விட்டிர்கள்.

    தவறிய ஒரு விஷயத்தை சரி செய்வதற்காக, கடமைக்கே என்று ஒப்புக்காக செய்யாமல், மனமுவந்து செய்து எங்களை மனநிறைவடைய செய்துவிட்டிர்கள்

    நன்றி
    மட்டற்ற மகிழ்ச்சி..

    முடிவுரை:

    இந்த தடவையும், என் பையனிடம், நம்பிக்கையுடன் surprise என்று கூறி எடுத்து கொடுத்தேன்(நான் பார்ப்பதற்கு முன்பாகவே).

    Jack: (என் மகன்): ஹே என்ன சின்ன போட்டோ பெருசா ஆகிடுச்சு, யாரு செய்ஞ்சா இப்படி..
    நான்: டேய் நல்ல பாருடா இது வேற புக்கு
    Jack: ஆமா, ஹை, லியோ(என் மகள்) இங்க பாரு அப்பாக்கு இன்னொரு புக்கு அனுப்பி இருகாங்க நம்ம போட்டோ பெருசா போட்டு..

    என்று சொல்லிக்கொண்டே ஓடிவிட்டான் எல்லோரிடமும் காமிப்பதற்கு.

    உடனே, என் மகள் என்னிடம் ஓடி வந்து, "அப்பா போட்டோலே எல்லாரும் கண்ணாடி போட்டு இருகாங்க எனக்கு மட்டும் இல்ல” என்று கூறி அழுகை...அய்யயோ திரும்பவும் முதலில் இருந்தா, ஆளை விட்டா போதும்னு அங்கிருந்து நான் எஸ்கேப்...

    ReplyDelete
  9. கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில், கதாநாயகி ஒரு காமிக்ஸ் பிரியை.

    ஒரு காட்சியில் நமது லயனில் வெளியான மாஜிக் விண்ட் இன் "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" புத்தகமும், இன்னொரு காட்சியில் முத்துவில் வெளியான ப்ளூ கோட் இன் "காதலிக்க குதிரையில்லை" இதழையையும் வைத்திருக்கிறார்..

    நமது காமிக்ஸை வெள்ளித்திரையில் கண்டது அளவில்லா மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. Yes, I observed it too. In a shot sequence you can see in the background her bookshelves. XIII, Rathakottai and few more books, a bit blurry.

      Only one logic issue, those scenes are flashback as per story in circa 1995 to 2005 but those comics books are published after 2012.
      No problem. Seeing our book in big screen is great.

      Delete
    2. In a Motta maadi shot, she hides a TeX Willer book inside other book and about to drop and a split second you can see it is TEX book

      Delete
  10. நேரில் கலந்து கொள்ள இயலாத நிலையில் ஜூனியர் எடிட்டரின் திருமண வைபோகத்தை கண் முன் கொணர்ந்தற்கு நன்றி எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. +10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

      Delete
  11. தொடர்ந்து பெய்த மழை என் போட்டியை எடுத்துக் கொண்டிருந்தாலும் வேட்டியை கட்டிக் கொண்டு திருமணத்திற்க்கு கிளம்பினேன் அன் ரிசர்வேஷனில் அடித்து பிடித்து பல சிரமங்களுக்கிடையே திருமண மண்டபத்தில் நுழைந்தேன் வாங்க வாங்க என்று சந்தோஷ குரலோடு ஆசிரியர் உற்சாகமாக கட்டியனைத்து என்னை
    வரவேற்க நான் பட்ட சிரமங்கலெல்லாம் பனித்துளியாக சிதறியது உற்சாகத்தோடு உள்ளே நுழைந்து நம் நண்பர்களின் குழுவில் இனைந்தேன் ஆசியர் மண மேடையிலும் பந்தியிலும் உறவினர்கள் & வாசக நண்பர்களை கவனிப்பதிலும் பம்பரமாக சுற்றினார் அவருக்கு சற்றும் சளைக்காமல் சகலகலா வல்லவராக சீனியர் எடிட்டரும் எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்தார்
    ஆசிரியரின் அன்னை எங்கள் கையை பிடித்துக் கொண்டு நீங்கள் அனைவரும் வந்தது மிகவும் சந்தோஷம் என்று கூற கண்களில் ( ஆனந்த) கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது ஆசிரியர் சகோதரிகள் அன்பாக பேசிய போது இது நம்ம வீட்டுக் கல்யாணம் என்ற என்னம் நிரந்தரமானது ஆசிரியரின் பனியாளர்கள்
    ராதா கிருஷ்ணன் அண்ணாச்சி. மைதீன்.கண்ணன். பொண்ணன். ஸ்டெல்லா.வாசுகி. அனைவரும் வாசக நண்பர்கள் அனைவரையும் சிறப்பாக கவனித்தார்கள். இனையற்ற ஓவியர் மாலையப்பன் அவர்களுடன் புகைப்படம் எடுத்தது மறக்க முடியாது நண்பர்களுடன் ஆட்டமும் பாட்டமுமாக திருமணம் திருவிழாவை போல் தோன்றியது இது போல் இன்னொரு நாள் எப்போது வரும் என ஏக்கமாக உள்ளது இவ்வளவு அலைச்சலிலும் புத்தகங்களை சரியான நேரத்திற்க்கு அனுப்பிய ஆசிரியரின் காமிக்ஸ் காதலுக்கும் உழைப்பிற்க்கும் ஒரு பெரிய சல்யூட் மொத்தத்தில் நெஞ்சம் முழுக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டற்ற மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியரே உங்கள் உபசரிப்பு க்கும் கவனிப்பிற்க்கும் என் நன்றிகள்

      Delete
  12. நண்பர்கள்
    ஈரோடு விஜய்.மாயாவி சிவா. பரணிதரன். பெங்களுர் பரணிதரன்.
    செல்வம் அபிராமி ஜி. சி.பி.ஜி. பரிமேலழகன் சார்.
    K.V. கணேஷ் சார் .கிட் ஆர்ட்டின் கண்ணன். கரூர் சரவணன்.ராஜா ராம் சார்.மணிகண்டன்.மாரிமுத்து விஷால்.சுசி.அறிவரசு ரவி.பழனி வேல்.ரம்மி.பிளைசி பாபு.சைன் ஸ்மைல் பவுண்டேசன்.கொண்டை சாமி.ராஜசேகர் வேதிகா.பால சுப்பிரமணியம்.அனைவரையும் சந்தித்ததும் புகைப்படம் எடுத்ததும் ஆனந்த நினைவுகள்

    ReplyDelete
  13. பிரிண்ஸ் ஸ்பெஷலில் எனது குடும்ப புகைப்படம் மிகவும் அருமை சூப்பர் சாதித்து விட்டீர்கள் ஒரு சின்ன வேண்டுகோள் இரத்தப்படலத்திலும் இதே போல் வாசகர்களின் புகைப்படம் வெளியிட முடியுமா ஒரு சரித்திரம் மிக்க இதழில் எங்களின் புகைப்படம் வெளி வந்தால் அருமையாக இருக்கும் ஆவண செய்வீர்களா

    ReplyDelete
    Replies
    1. நான் பேச நினைப்பதெல்லாம்
      நீ பேச வேண்டும்.

      Delete
  14. அன்புள்ள ஆசிரியர், அவர்களுக்கு
    நமது டிசம்பர் மாத காமிக்ஸ் ,நவம்பர் மாதமே கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்சியே!எனது Super 6,Sub.No.219,
    சென்ற முறை டிரேகன் நகரத்தில்,நான்,எனது மனைவி,மற்றும்,எனது இரு புதல்வர்கள், மற்றும் எனது வளர்ப்பு குழந்தைகள் (GSD )Family photo sticker -ரில் இடம் பெற்றிருந்தது,இந்த மாத பிரின்ஸ் புத்தகத்தில், தாங்கள் கூறியபடி, எனது குடும்ப புகைபடத்தினை பிரிண்டிங்கில்,பார்க்க மிக ஆவளுடன் எதிர்பார்த்து எனது மனைவி,எனது மகன்களிடம் மிகவும் பெருமையாக,புத்தக பார்சல் கையில் கிடைக்கும் வரையிலும் ,சொல்லிக்கொண்டு இருந்தேன்.இதற்கும்,முந்தைய sticker photo-வில் எனது வளர்ப்பு மகன்களின் ஒருவர் போட்டோ missing,(முந்தைய,Photo,JPG,Format அனுப்பினேன்)அதனால், தாங்கள் சொல்லியபடி,Photo correction,னில்,எனது Family Photo-JPG to PNG Convert செய்து , தங்களுடைய,Mail ID,க்கு அனுப்பி வைத்தேன். பார்சல் என் கைக்கு வந்தவுடன், அதை பிரிக்கும் முன் அனைவரிடம் மிக பெருமையாக,இது எவ்வளவு பெரிய project, தெரியுமா?ஒவ்வொருடைய போட்டாவும்,தனித்தனியா பிரிண்ட் செய்து ,அதையும் சரியாக,அவர்அவர்,முகவரிக்கு அனுப்புவது,மிக பெரிய சாவல் என்று பேசியபடி,பிரின்ஸ் புத்தகத்தை பிரித்த பின்பாக தான் எனக்கு தெரிந்தது,இதற்கு முன் sticker-ரில் வந்த Photoவும் இல்லை, இரண்டாவது முறையாக Photo correction-னில் அனுப்பிய எனது Family Photo-வும், புத்தகத்தில் இடம் பெறவில்லை, என்று.
    எனது Family உறுப்பினர் முன்பு மிகவும் ஆவளுடன் புத்தக பார்சலை பிரித்து மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அது போக திரு.மாயாவி சிவா கூறியது போல,எனக்கு சான்றிதழ் பரிசு + நன்றி சொல்லும் அட்டை,எதுவும் எனக்கு அனுப்பி வைக்கபடவில்லை.ஒரு வேலை அது,தேர்ந்து எடுத்த சில நபர்களும் மட்டுமா?என்பது எனக்கு தெரியவில்லை.
    (முதல் பக்கத்திலேயே கலர் போட்டோ பிரசுரமும்,இந்த வருட நிறைவில் கொடுத்த சான்றிதழ் பரிசு+நன்றி சொல்லும் அட்டை மிகசரியாக அடுத்த வருட பயணத்திக்கு ஆர்வமாய் அடுத்ததலைமுறையும் அடியெடுத்து வைக்கசெய்து அழாக வென்றுள்ளது.! மாயாவி சிவா)
    எனக்கு இந்த ஏமாற்றத்தை தாங்க இயலவில்லை.நான் இந்த வயதில்,எத்தனையோ,ஏமாற்றங்களையும் சந்தித்துள்ளேன்.ஆனால் எனக்கு காமிக்ஸ் என்றால்,நான் இன்றும்,என்றும் சிறுபிள்ளைதான்.நான் இந்த மாத புத்தக பார்சலை, பிரிக்கும் போதே என் மனைவிடம், இந்த வருடம் காமிக்ஸ் வருவது இத்துடன் கடைசி ,அடுத்தது 2018-க்கு சந்தா பணம் அனுப்பினால் மட்டுமே இனி வரும்,
    என்று நான் கூறிய போது,(சில காரணங்களால் நான் தற்சமயம் என்னால் உடனடியாக சந்தா +XIII, முன் பணம் இன்னும்அனுப்ப இயலவில்லை. பணம் அனுப்ப காலம் உள்ளதால்,பிறகு பணம் அனுப்பலாம் என்று இருகிறேன். என் மனைவி,என்னிடம் பணம் அனுப்பிட வேண்டியதுதானே.நீங்கள் காமிக்ஸ் மிகவும் விரும்பி படிப்பீர்கள் தானே,பணம் தற்சமயம் தங்களிடம் இல்லையென்றால் சந்தா பணம் நான் கொடுக்கிறேன் என்று கூட கூறினார்கள்.
    எனக்கு இருக்கும் மனநிலையில்,மன உளைச்சல்லால், இப்போது அடுத்த ஆண்டு சந்தா பணம் அனுப்பகூட மனம் வரவில்லை.

    எனது மூத்த சகோதரர் மிகவும் கவலைகிடமாக இருந்த சமயாத்தில் கூட,எனது இளைய சகோதரிடம், பேசி நமது காமிக்‌ஸில்,ஒரு சந்தாதாரர்யாவது புதிதாக சேர்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்காக முதலில், நான் சந்தா பணம் கட்டினேன்.

    எனக்கும் தெரிகிறது இதற்காக
    இவ்வளவு மன கஷ்டம் படவேண்டாம் என்று,அட ஒரு Photo-வும்,ஒரு சான்றிதழ் பரிசும்,நன்றி சொல்லும் அட்டையும் தானே, என்று இருந்தாலும்,என்னால் மனம் அமைதி கொள்ள முடியவில்லை.
    இந்த மாத எந்த ஒரு காமிக்ஸ் புத்தகங்களையும், படிக்கவோ ரசிக்கவோ, கூடிய
    மன நிலை எனக்கு இல்லை,பார்சலை திறந்து பார்த்ததுடன் சரி.
    இதை என்னால் பின்னர் கூட படிக்க முடியுமா?என்று கூட எனக்கு தெரியவில்லை. எனக்கு, நமது காமிக்ஸ் குடும்பத்தில்,என்னை மட்டும் தனிமைபடுத்தபட்டது போல் நான் உணர்கிறேன்.என்னை பொறுத்த வரையில்,இந்த வருட முடிவு,டிசம்பர் மாதம்,மிகவும்,ஏமாற்றமும்,மனவேதனையே,
    ஆகையால் இந்த மாத காமிக்ஸ் தங்களுடைய அலுவலக முகவரிக்கு நேற்றே DTDC கூரியர் மூலமாக தங்களுக்கே திருப்பி அனுப்பிவிட்டேன்.
    நான் இவ்வாறு நடந்து கொண்டதுக்கு என்னை மன்னிக்க வேண்டுகிறான்.
    மிக மன வருத்தத்துடன்
    காமிக்ஸ் தீவிர ரசிகன்.

    ReplyDelete
    Replies
    1. Dear friend u expressed ur feeling frankly and decently. Surely our editor will do the necessary.

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. பதிவை படிக்க ..,படிக்க மகிழ்ச்சியும்,நெகிழ்ச்சியும் ,ஆனந்தமும் ,பெருமிதமும் ஒருங்கே ஏற்படுகிறது சார்.இது எங்கள் இல்ல திருமண விழா அல்லவா ..இந்த சமயத்தில் லயன் குழுவினர் அனைவரையும் சந்திக்க நேர்ந்த்தில் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.

    ReplyDelete
  17. இளம் மக்கள் கை கோர்த்து நடக்கும் பாதையெல்லாம் ஆனந்த,ஆரோக்கிய,சகல சம்பத்துகளையும் மலர்களாய் தூவி இறைவன் அருள் புரியட்டும்

    ReplyDelete
  18. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  19. உணர்வுகளை அப்படியே வார்த்தைகளில் பிரதிபலிப்பது என்பது சற்று சிரமமான காரியமாகும்.!
    எப்படி எழுதினாலும் முழுதாய் வெளிப்படுத்திய திருப்தியே ஏற்படாதது போலவே தோன்றும்.!
    ஆனால் உங்களுடைய எழுத்துக்கள் நேரில் காண்பதுபோன்ற உணர்வை தரவல்லன சார்.!
    ஜுனியர் எடிட்டரின் திருமண வைபவத்தில் கலந்துகொண்டதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் ..!

    மணமக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.!

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  20. ///வீட்டிலுள்ள முக்கால்வாசிப் பேர் முறைத்ததைக் கவனிக்காதவன் போலவே casual ஆகப் பேசிக்கொண்டே கையெழுத்தைப் போட்டுத் தள்ளியதும் நினைவுள்ளது ; "இல்லியே...கைலாம் வலிக்கவே இல்லியே..!!" என்ற பாவ்லாவோடு அவ்வப்போது வாசலுக்குப் போய் இல்லாத போஸ்ட்மேனையும், கூரியர் பையனையும் தேடும் சாக்கில் விரல்களை உருவு உருவு என்று உருவிக் கொண்டதும் நினைவுள்ளது !///

    ஹா ஹா ஹா! செம சார்! :))))))))


    ////இது சீனியர் எடிட்டரின் வேலையோ ? என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றிட - அங்கே நின்ற பணியாளர்களிடம் - "இதை யார் மாட்டச் சொன்னது ?" என்று கேட்டேன். அவர்களோ லேசான எரிச்சல் கலந்த தொனியில் "எங்க பாஸ் மாட்டிட்டு வரச் சொன்னார் !" என்றார்கள் ! "சாமிகளா.. இங்கே பாஸ்.. வில்லன்.. நம்பியார்...பொன்னம்பலம்...ஷண்முகசுந்தரம் ...ஜெமினி கணேசன் ... நாகேஷ் ..சுருளிராஜன் சிரிப்பு பீஸ்... குணச்சித்திர நடிகர் என்று சகல வேஷமும் போடுவது நான் தான் ! யார் இந்த ப்ளெக்ஸை மாட்டச் சொன்னது ?" என்று குரலை உயர்த்திட - "கமல் நற்பணிமன்றத் தலைவர் மாட்டிட்டு வரச் சொன்னார் !" என்று பதில் சொன்னார்கள் !/////


    :)))))))))



    ////ஹோமகுண்டத்தின் முன்னே எழுந்த புகை மூட்டத்தைப் பார்க்கும் போது -'டைகர் ஜாக் புகை மூட்டம் போட்டு சேதி அனுப்புவது இப்படித் தானோ ?" என்று மண்டைக்குள் ஓட - 'அட பேப்பயலே....இது உன் புள்ளைக்கு கல்யாணம்டா..!!" என்று மண்டையின் மறு பாதி குட்டு வைத்து நினைவூட்டியது ! ////


    :)))))))))) ஹா ஹா ஹா! செம!!!

    ReplyDelete
  21. திருமண விழாவில் கலந்து கொண்டது,பல நண்பர்களை சந்தித்தது,நம்ம காமிக்ஸ் படைப்புகளுக்கு பல்வேறு விதமான உழைப்புக்கு காரணமான அய்யா இராதாகிருஷ்ணன் அண்ணாச்சி,மாலையப்பன், கருணயானந்தம்,மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் அனைவரையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியான தருணங்கள்.வீட்டிற்கு வந்தால்
    இவற்றுக்கெல்லாம் கிரீடம் வைத்தது போல் பிரின்ஸ் இதழிலும் அருமையான முறையில் போட்டோவுடன் இதழ்,மொத்தத்தில் இந்த வாரம் முழுவதும் மகிழ்ச்சி மழைதான்.

    ReplyDelete
  22. திருமண விழாவிற்கு நேரில் வந்து கலந்து கொண்ட உணர்வினை உண்டாக்கிய பதிவுக்கு நன்றி சார்.
    மாதாமாதம் எங்களையெல்லாம் சந்தோஷப்படுத்த பல சவால்களை எதிர் கொண்டு வரும் நீங்கள் உங்களது சந்தோஷத்தை எங்களுடன் உணர்வு பூர்வமாக பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்.
    அனைவரின் வாழ்த்துக்களையும்,ஆசிகளையும் பெற்ற ஜூனியர் எடிட்டர் அவரது மணவாழ்க்கையில் அத்தனை செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்வார். அதுவும் எங்களுக்கெல்லாம் நல்ல ஆசானாக திகழும் உங்களை தந்தையாக அடையும் பேரினை பெற்ற அவருக்கு இனி வரும் காலங்களில் வாழ்க்கை முழுவதும் வசந்தமாகத்தான் இருக்கும்.வாழ்க மணமக்கள்.

    ReplyDelete
  23. புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. சமர்ப் ன் விண்ணில் ஒரு பொடியன்...


    இது ஒரு குழந்தைகளுக்கான படைப்பா என்றாலும் குழந்தை மனதுடைய பெரியவர்களுக்கான படைப்பா என்றாலும் ..,அல்லது இருவருக்குமான இணைந்த நகைச்சுவை படைப்பா என்றாலும் ..ஒரே வார்த்தையில் ஆம் என அறுதியிட்டு சொல்லலாம் .ஆல் இன் ஆல் பொடியன் ..,விண்வெளி பொடியனிடம் " உனக்கு வேணும்ங்கிறதை எடுத்துட்டு போ " என சொல்லி விட்டு வெளியே சென்று மீண்டும் திரும்பி வந்து பார்க்கும் இடமாகட்டும்..,ரகசியத்தை பாதுகாப்பாக வைத்திருக்க சொல்லிவிட்டு உண்மையை கசிய வைத்த அரைமணி நேரத்திற்குள் நிகழும் சம்பவமாகட்டும் ,தடுப்பு வேலி ஓட்டையில் நிகழும் சம்பவமாகட்டும் ..விண்வெளி சமர்ப் சவால்களை வெல்லும் சம்பவமாகட்டும் ..சீனியர் சமர்பை பற்றி நிஜத்திலும் ..,நிழலிலும் அவரை பற்றி அவரிடமே பகிரும் இடமாகட்டும் என பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்தன என்றால் உச்சகட்டமாக சவால்களை சமாளித்த பொடியனிடம் வேறு வழி இன்றி இறுதி சவால்களை ஒவ்வொன்றாக ஒவ்வொருவரும் பகிரும் இடமும் ..அதை கேட்டு இல்லை..இல்லை நான் எனது உலகத்திற்கே திரும்புகிறேன் என்ற பதறும் இடமும் வயிறுவலிக்க சிரிக்க வைத்தன.அட்டகாசமான நகைச்சுவை படைப்பு .மீண்டும் பொடியன்கள் மனதை கவரும் விதத்தில் அமைந்து போனதில் எனக்கும் மகிழ்ச்சியே..

    இந்த சமயத்தில் ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும் ..சிறு குழந்தைகளுக்கான படைப்பான கார்ட்டூன் என விமர்சிக்கபடும் இந்த சாகஸ நாயகர்கள் ..முக்கியமாக கார்ட்டூன் பிடித்தாலும் இவர்களின் சாகஸம் பலருக்கு ( எனக்குமே முன்னர் ) கசக்கும் கனியாக இருப்பினும் இதை தாண்டி இவர்களை மனதில் ஒன்ற வைக்க சித்திரத்தை தாண்டி அதன் மொழிஆக்கமும் வெகு சிறப்பாக அமைய வேண்டும் என்பது கண்கூடான உண்மை .அது உங்கள் மொழி ஆக்க குழுவினருக்கு வெகு சிறப்பாக கை வருகிறது என்பதும் மறுக்க முடியா உண்மை .


    மொத்தத்தில் அட்டைபடத்தில் இருந்து கடைசி அட்டைப்படம் வரை ரசிக்க வைத்த இதழ் .நணபர் மிதுன் அவர்களின் கடுதாசியும் வெகு அருமை .பாராட்டுகள் நண்பர் மிதுன் அவர்களே ..

    ReplyDelete
    Replies
    1. ///இது ஒரு குழந்தைகளுக்கான படைப்பா என்றாலும் குழந்தை மனதுடைய பெரியவர்களுக்கான படைப்பா என்றாலும் ..,அல்லது இருவருக்குமான இணைந்த நகைச்சுவை படைப்பா என்றாலும் ..ஒரே வார்த்தையில் ஆம் என அறுதியிட்டு சொல்லலாம் .///

      செமயா சொன்னீங்க தலீவரே!

      Delete
    2. அருமையான விமர்சனம்

      Delete
  25. ////நணபர் மிதுன் அவர்களின் கடுதாசியும் வெகு அருமை .பாராட்டுகள் நண்பர் மிதுன் அவர்களே////

    ஙே கடுதாசியா??

    புாியலையே!!

    ReplyDelete
    Replies
    1. ///ஙே கடுதாசியா??

      புாியலையே!!///

      போஸ்ட் பாக்ஸ் (வாசகர் கடிதம்) பகுதியில் உங்களுடைய, கார்ட்டூனைப் பற்றிய ரெண்டு பக்க கடிதம் இடம்பெற்று இருக்கிறது மிதுன் ..!

      சூப்பரா எழுதியிருக்கீங்க ..பாராட்டுகள் ..!!

      Delete
    2. ///கார்ட்டூனைப் பற்றிய ரெண்டு பக்க கடிதம் இடம்பெற்று இருக்கிறது மிதுன் ..!

      சூப்பரா எழுதியிருக்கீங்க ..பாராட்டுகள் ..!!///

      உண்ம மற்றும் செம!

      Delete
  26. காலை வணக்கம் நண்பர்களே
    மற்றும் ஆசிரியரே.
    ஜு எடி விக்ரமின் திருமண விழாவிற்கு
    வாசலில் நின்று வரவேற்று மகிழ்ச்சியுடன்
    உபசரித்த ஆசிரியர் விஜயன் சார் நன்றி.
    காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும்
    கண்டவுன் சீனியர் கண்களில் தெரிந்த
    ஆர்வம் அன்பு பாசம் மகிழ்ச்சி எல்லாம்
    ஒருசேர பார்க்க முடிந்தது. திருமணம்
    இனிதே நடந்தது.
    நண்பர்கள் பலரை பார்க்க முடிந்தது
    பலரை பார்க்க முடியவில்லை.
    நான்கு நாள் தாமதமாக இன்றுதான்
    புத்தகம் எனக்கு கிடைத்தது.மகிழ்ச்சி.
    வருத்தம் என்னவென்றால் பிரின்ஸ்
    ஸ்பெஷல் உள்ளே பக்கங்கள் பல
    டபிள் பிரின்டுடன் இருந்ததே.
    விஜயன் சார் முடிந்தால் வரவிருக்கும்
    இரத்தபடலத்தில் இதுபோல் சிறப்பாக
    வாசகர்படம் வெளிவந்தால் மிகவும்
    சந்தோஷமாக இருக்கும். விஜயன் சார்
    இது ஒரு கோரிக்கையே.

    ReplyDelete
  27. ஜூனியர் எடிட்டரின் திருமண விழாவில் நண்பர்களின் கொண்டாட்டம் பார்க்க..இங்கே'கிளிக்'

    ReplyDelete
  28. ஸ்மர்ஃப்ஸ் சிறுபிள்ளைகளுக்கானது என்ற தவறான புரிதல் சில நண்பர்களிடம் இருக்கிறது. ஆனால் இந்த சின்னஞ்சிறிய பொடியர்களை வைத்து மனிதர்களின் வாழ்க்கையையே ஒவ்வொரு கதையிலும் விவரித்து இருக்கிறார்கள் என்பதே உண்மை.!
    எனக்கு ஸ்மர்ஃப்ஸே பிடிக்காது என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு உள்நுழைந்தால், நம்முடைய குணநலன்களைத்தான் ஸ்மர்ஃப்ஸ் பிரதிபலிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும்ம்! முயன்றுதான் பாருங்களேன் நண்பர்களே!

    விண்ணில் ஒரு பொடியன் :

    நண்பன் ஒருவனின் விண்வெளிப்பயண ஏக்கத்தை போக்க வேண்டி, அனைத்து பொடியர்களும் எத்தனை அக்கறையுடன் கஷ்டங்களை தாங்கிக்கொண்டு, அவனை குணப்படுத்துகிறார்கள் என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்காறார்கள்.!
    ரிப்பேரான ராக்கெட்டோபொடியை எப்படி சரிசெய்தாய் என்ற கேள்விக்கு, சமாளிக்க தடுமாறியபடி ஆல்இன்ஆல் உளறுவது செம்ம காமெடி.!
    யாரென்று தெரியாமல் சீனியரிடமே அவரைப்பற்றி கிண்டலடிப்பது கலகலப்பு.
    ஜீனியஸ் ஸ்மர்ஃப் வரும் இடங்களில் எல்லாம் வாய்விட்டு சிரிக்க முடிந்தது.!
    நெகிழ்ச்சியானதொரு கதை நகைச்சுவையோடு சொல்லபட்டு இருக்கிறது.!

    மாயாவியோடு ஒரு மோதல் :

    அழுக்குப்படிந்த கிராமத்தை அழகாக்க பெயிண்ட் அடிக்கும் பராமரிப்பு பணிகளை செய்யும் ஸ்மர்ஃப்களை, மாயபெயிண்ட் மூலம் பிடிக்க நினைக்கும் கார்கமெல்லை, பொடியர்கள் எப்படி விரட்டியடிக்கிறார்கள் என்று இந்த எட்டுப்பக்க சிறுகதையில் சிரித்து தெரிந்துகொள்ளலாம்.!
    சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்பதுபோல, ஸ்மர்ஃப்வில்லாவில் மியூசிக் வாசிக்கிறேன் பேர்வழின்னு எல்லோரையும் டார்ச்சர் செய்யும் பீப்பீ பொடியனை உபயோகித்து கிராமத்தை அழகாக்குவதோடு, கார்காமெல்லையும் விரட்டியடிக்கின்றனர்.!
    கார்கமெல்லை துரத்திவிட்டு விட்டதைகூட அறியாமல், அவனை தோற்கடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும் சீனியரும் .. அந்த கடைசி வசனமும். ஹாஹாஹா .. செம்ம.!!

    விண்ணில் ஒரு பொடியன் - நம்மில் ஒரு மனிதன்

    ரேட்டிங் 10/10

    ReplyDelete
    Replies
    1. விண்ணில் ஒரு பொடியன்
      அசத்தல்
      10/10
      தகுந்த மதிப்பெண்

      Delete
    2. ///எனக்கு ஸ்மர்ஃப்ஸே பிடிக்காது என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு உள்நுழைந்தால், நம்முடைய குணநலன்களைத்தான் ஸ்மர்ஃப்ஸ் பிரதிபலிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும்ம்! முயன்றுதான் பாருங்களேன் நண்பர்களே!///

      உண்மை உண்மை!
      ஒவ்வொரு புத்தகம் வெளியாகிடும்போதும் அந்த தம்மாத்துண்டு நீலப்பொடியர்களின் மீதான நெருக்கம் அதிகரித்துக்கொண்டே போவதை உணரமுடிகிறது!

      Delete
  29. ///முக்கால்வாசிப் பேர் முறைத்ததைக் கவனிக்காதவன் போலவே casual ஆகப் பேசிக்கொண்டே கையெழுத்தைப் போட்டுத் தள்ளியதும் நினைவுள்ளது ; "இல்லியே...கைலாம் வலிக்கவே இல்லியே..!!" என்ற பாவ்லாவோடு அவ்வப்போது வாசலுக்குப் போய் இல்லாத போஸ்ட்மேனையும், கூரியர் பையனையும் தேடும் சாக்கில் விரல்களை உருவு உருவு என்று உருவிக் கொண்டதும் நினைவுள்ளது !///


    உங்களுடைய ஈடுபாடு .. .. .. சான்ஸே இல்லை சார்.!! 🙏🙏🙏

    ReplyDelete
  30. கமான்சே வின் ஓநாயின் சங்கீதம்...


    ஓரே வார்த்தையில் சொல்வது என்றால் செம...கமான்சே சாகஸம் என விளம்பர படுத்தினாலும் முன்னிலை வகிப்பது என்னவோ ரெட் டஸ்ட் தான் .ஆனால் இம்முறை அவரையும் பின் தள்ளி விட்டு முன்னிலை வகிப்பது செவ்விந்திய நண்பரே..ஒரு சஸ்பென்ஸ் நாவலை போல கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை .மேலும் கதை நடக்கும் கால சூழல் 80% இரவு நேரமே என்றாலுமே சித்திரங்களும் ,வண்ணங்களும் படைக்க பட்ட விதம் அட்டகாசம் .அதற்குமே தனிப்பட்ட முறையில் பாராட்டுகள்


    கமான்சே சாகஸம் என்னை பொறுத்தவரை எப்பொழுதும் பாஸ்மார்க்கே .ஆனால் விற்பனையில் அவர் பின் தங்குவதால் அடுத்தவருடம் காணமல் போகும் சூழல் .அதே சமயம் கமான்சேவை விரும்பாத நண்பர்கள் இந்த ஓநாயின் சங்கீத்த்தை படித்து விட்டால் இந்த குழுவினரின் ரசிகராக மாறி போவது நிச்சயம் .


    அட்டைபடமும்..,சித்தர தரமும் ,வண்ண தரமும் ,அச்சு தரமும் இந்த இதழிற்கு மேலும் மணிமகுடத்தை சூட்டுகிறது எனில் மிகையில்லை.

    ஓநாயின் சங்கீதம் நிஜத்தில் எப்படியோ நானறியேன் .ஆனால் இந்த

    ஓநாயின் சங்கீதம் இனிமை.

    ReplyDelete
  31. நண்பர்களே ஞாயிறு ஆபீசுக்குத்தான் லீவு
    ப்ளாக் 24 /7 உண்டு.
    இன்னும் பல நண்பர்கள் வரவில்லையே.
    நான் சொன்னது ப்ளாக்கிற்கு.
    திருமணத்திற்கு வர இயலாத
    நண்பர்கள் நம் மாயாஜியின் லிங்க்கில்
    கண்டு களிக்கலாம்.
    இன்னும் இம்மாத புத்தகம் படிக்கவில்லை
    புதிய அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  32. Replies
    1. நேரில் வர இயலாமை மனதை பிசைகிறது.

      ஆனால் அதை உங்கள் பதிவு நிவர்தித்தது.

      நன்றி
      J

      Delete
    2. இது வரை நிஜங்களின் வாழ்க்கை

      இனி நிஜங்களின் நிசப்தம் மட்டுமே பாக்கி

      Delete
  33. பிரின்ஸ் ஸ்பெஷல் மறுக்க முடியாத ,மறக்க முடியாத படைப்பு .நதியில் ஒரு நாடகம் கதையை பொறுத்தவரை முன்னர் படித்தேனோ ,இல்லையோ என்ற சந்தேகமே மேலோங்கி நின்றதால் கதையை பற்றி சொல்லவும் வேண்டுமா ..இப்பொழுது தான் புதிதாக படித்த அனுபவம்.செம அட்டகாசமான படைப்பு .வண்ணத்தில் ,அட்டகாசமான சித்திர தரத்தில் நதியிலும் ,கானகத்திலும் பிரின்ஸ் குழுவினருடன் நானும் இனைந்ததில் பெருமகிழ்ச்சி மட்டுமல்ல வெகு சுவராஸ்யமான அனுபவமும் கூட.


    கொலைகார கானகம் ஏற்கனவே கறுப்பு வெள்ளையில் படித்து இருப்பினும் இப்படி ஒரு தரத்தில் ,இப்படி ஒரு வண்ணத்தில் மீண்டும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் .இனிதான் கானகத்தில் புக வேண்டும் .இறுதி பக்கத்தில் கடல் காதலனின் அனைத்து அட்டைபடங்களையும் அதுவும் வண்ணத்தில் இடம் பெற வைத்ததற்கு மிகப்பெரிய நன்றிகள் சார்.வெகு அழகு .

    ஹாட்லைனில் தாங்கள் குறிப்பிட்ட அந்த ஒரே ஒரு வெளிவராத சா௧ஸம் எதுவோ எதனலோ என தெரியவில்லை சார் .ஆனால் அந்த சாகஸத்தையும் வெளியிட முயற்சியுங்கள் சார் .ப்ளீஸ் .


    பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷத்தை ...பாதுகப்பாக வெகு அழகாக எங்களிடம் ஒப்படைத்த தங்களுக்கு மிக பெரிய நன்றி...

    ReplyDelete
    Replies
    1. //ஹாட்லைனில் தாங்கள் குறிப்பிட்ட அந்த ஒரே ஒரு வெளிவராத சா௧ஸம் எதுவோ எதனலோ என தெரியவில்லை சார் .ஆனால் அந்த சாகஸத்தையும் வெளியிட முயற்சியுங்கள் சார் .ப்ளீஸ் .
      //
      +1

      Delete
  34. இந்த ஞாயிறு அனைவரும் இதழ்களை ரசிப்பதிலும் ,படிப்பதிலும் மும்மரமாக இருக்கிறார்கள் போல ..:-)

    ReplyDelete
  35. உங்கள் தொழிலில் பல வில்லங்கங்களை சமாளிக்கும் திறன் பெற்றவர் நீங்கள் என்பதை உங்கள் வெற்றி பறைசாற்றுகிறது. இருப்பினும் உங்களிடமிருக்கும் ஒருவிதமான கூச்சசுபாவம் ரொம்பவே ஆச்சரியமானது மற்றும் ரசனைக்குரியது. அத்தனை உறவுகள் சூழ, 'சூனாபானா சிரிடா சிரி' என்றபடி உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு அழகுற அலைந்து கொண்டிருந்தது ரசனை. எனக்கு வேறு என்ன வேலை? உங்களைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சேந்தம்பட்டிக்குழு வேறு சேண்டியடித்துக் கொண்டு தாமதமாகவல்லவா வந்து சேர்ந்தது. இங்கேயும், உங்கள் அனுபவங்களை ரசிக்கும்படி தந்திருக்கிறீர்கள். அழகு.

    திருமணத்தில் கலந்து கொண்டது, பின்னர் நண்பர்கள் பலரையும் கண்டு மகிழ்ந்தது என அழகானதொரு அனுபவம். நான் ஏதோ திட்டத்தில் பாதி தொலைவு வரை பைக்கில், மழையில், கிராமப்புறங்களில் பயணித்தது வந்தது வேறு வகையான அனுபவமாக இருந்தது. கூடுதலாக வரவேற்போடு கிளம்ப எத்தனித்தவன், நம் நண்பர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு இரவு சிவகாசியில் தங்கவும் நேரிட்டது. இரவு நீண்ட நேரம் மழைத்தூறலோடும், சற்றே கொசுக்கடியோடும் நிறைய பேசிக்கொண்டிருந்ததும் மறக்க இயலாத நிகழ்வுதான். நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியும், அன்பும்!

    ReplyDelete
    Replies
    1. இதைக் கேளுங்க ஆதி... உங்களுக்காண்டி ஸ்பெஷலா போட்ட ட்யூன் :

      ம்க்க்க்கும்... ( இது ட்யூன் இல்லைங்க... தொண்டையைச் செறுமினேன்)

      தாலலலே லாலாலே
      தாலலலே லாலாலே
      தாலல லாலல லாலா லாலலேஏஏஏ...

      எப்படி இருக்குங்க ஆதி? கொஞ்சம் தேறிட்டேனா? :D

      Delete
    2. அடப்பாவி மக்கா.. இந்தக்கூத்தை சொல்லவே இல்லையே.. பப்ளிக்கா சொல்லவேணாமேனு பார்த்தேன். நீங்களே வாலண்டியர் பண்றதால வேற வழியில்லை.

      எடிட்டர் சார்,

      சேந்தம்பட்டிக்குழுவில் இரண்டு பாடகர்கள் வேறு இருக்கிறார்கள். புதிதாக வருபவர்களை கட்டிவைத்து வலுக்கட்டாயமாக பாடிக் காண்பிக்கிறார்கள். இப்படி ஒரு நவீன வன்கொடுமை இனி நடக்காமல் நம் அடுத்த சந்திப்பில் பஞ்சாயத்து வைத்து தீர்ப்பு சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு.

      Delete
    3. ஹிஹி!

      அடுத்த சந்திப்பில் எடிட்டருக்கும் இப்படியொரு வன்கொடுமை நிகழ்த்திடலாம்னு இருக்கோம். கிட்ஆர்டின் கண்ணன் இப்போலேர்ந்தே இரவும் பகலுமா ப்ராக்ட்டீஸ் பண்ண ஆரம்பிச்சுட்டார்! :)

      Delete
    4. EBF க்கு வாங்க ஆதி.!

      லைவ் டூயட் ப்ளான் ஒண்ணு இருக்கு.! வெச்சி செய்யாம உங்களை விடுறதா இல்லை! :-)

      Delete
    5. அருமை ஆதி அவர்களே ..:-)

      Delete
    6. நல்ல வேளை ..வெளிநாடு வந்தாலும் நான் வழக்கம் போல உறங்கிவிட்டேன் .இல்லையெனில் ஆதி அவர்களின் கதி ..?

      Delete
    7. ///நான் வழக்கம் போல உறங்கிவிட்டேன் .இல்லையெனில் ஆதி அவர்களின் கதி ..?///

      உங்க கதிதான் அதோகதி ஆயிருக்கும் தலீவரே.! தூங்கிட்டதால தப்பிச்சீங்க ..!
      விடியவிடிய நடந்த ஆதியோட சொற்பொழிவை கேட்டுட்டு சிவகாசி கொசுக்களெல்லாம் தென்காசிக்கு போயிடுச்சாம்.!! :)

      Delete
    8. அடங்கொப்பரான , இம்பூட்டு நடந்தும் யாரும் கொலவை போடலியாக்கும்

      Delete
  36. பிரின்ஸ் இதழில் நண்பர்களின் புகைப்படம் இருப்பதாய் இங்குள்ள பின்னூட்டங்களை காண்கையில் அறிந்து கொள்ள முடிகிறது. எனக்கு வந்த புத்தகத்தில் என் புகைப்படம் இல்லை. அது முக்கியமில்லைதான். இருப்பினும் நான் விளையாட்டாக கூறியபடி ஒருவேளை அச்சடிக்கப்பட்டு தவறுதலாக இதழ் மாற்றியனுப்பிப்பிட்டிருந்தால் என் இதழை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். மற்றபடி வேறு காரணங்களால் படம் விடுபட்டிருந்தால் பரவாயில்லை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கவலைவேண்டாம் ஆதி அவர்களே! அட்டைப்படத்துல கரடிக்குட்டியை தூக்கிக்கிட்டு ஓடிவர்றவரைப் பார்த்தால்கூட அசப்புல உங்களை மாதிரியேதான் இருக்கு! ;)

      Delete
    2. ///கவலைவேண்டாம் ஆதி அவர்களே! அட்டைப்படத்துல கரடிக்குட்டியை தூக்கிக்கிட்டு ஓடிவர்றவரைப் பார்த்தால்கூட அசப்புல உங்களை மாதிரியேதான் இருக்கு! ;)///

      உங்களுக்கு அப்படியா தெரிஞ்சுது குருநாயரே!?!

      எனக்கு ஓடிவர்ரவர் தூக்கிட்டு வர்ரதுதான் ஆதி மாதிரி தெரியுது!;)

      Delete
    3. நல்லா உத்துப் பாருங்க கிட்! அந்தக் கரடிக்குட்டியின் முகம் எம்புட்டு க்யூட்டா இருக்கு!! நிச்சயமா அது ஆதியா இருக்க வாய்ப்பில்லை. தூக்கிட்டு வர்றவர்தான் ஆதியா இருக்கணும். ;)

      Delete
    4. அப்ப தலகீழா அம்மணகு...... போஸ் குடுத்தது

      Delete
  37. எப்போதும் போல் உங்கள் மொழி நடையில் திருமண வைபவத்தை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள் சார். டிசம்பர் மாத புத்தகங்ககள் இன்னும் கிடைக்கவில்லை. எல்லோரும் சொல்வதை பார்க்கும் போது பிரின்ஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தை காணும் ஆவல் கூடியுள்ளது. fingers Crossed :D

    ReplyDelete
  38. ஜனவரியில் வ௫ம் இதழ்கள் பற்றிய விவரம் தா௫ங்கள் நண்பர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் ,தோர்கல் நான்கு பாக இதழாக இனைந்து குண்டு மலராக ,ப்ளூகோட் பட்டாளம் ,ஸ்பைடர் மறுபதிப்பு விசித்திர சவால் ..:-)

      Delete
  39. I got the followings
    1. Prince Book Mark.
    2. Thanks Card.
    3. International World Comics Fan Certificate.
    4. Subscription requesting Form.
    5 Captain Prince Classics.
    6. Marmatheevil Mayavi
    7. Vinnil Oru Smurf.
    8. Oonayin Snageetham.

    My ranking this month:
    1. Smurf
    2. Oonaayin Sangeetham
    3. Marma Theevil Mayavi
    4. Prince Classics.

    ReplyDelete
    Replies
    1. ///
      My ranking this month:
      1. Smurf
      2. Oonaayin Sangeetham
      3. Marma Theevil Mayavi
      4. Prince Classics.///

      👌👌👌👏👏👏

      Delete
    2. அடடே! முதல் இடத்தில் ஸ்மர்ஃப்!!

      Delete
  40. ஓநாயின் சங்கீதம் :

    தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அறியப்படும் எம்கேடி பாகவதருக்கு., அவருடைய ஒவ்வொரு படத்திலும் கண், கை, கால்னு ஏதோ ஒண்ணை டேமேஜ் பண்ணிவிட்ருவாங்களாம். ! (பாட்டுதான் அவருடைய ஷ்பெசல் என்பதால் ஊமையாக மட்டும் ஆக்காமல் விட்டுவிடுவாங்க 😝) ஒவ்வொரு படமும் செம்ம ஹிட் ஆனதால பெரும்பாலான படங்களில் பாகவதருக்கு இந்த அங்கஹீனம் தொடர்ந்ததாம் .

    நம்ம கமான்சே தொடரிலும் அதேமாதிரியான சென்ட்டிமெண்ட் ஏதோ இருக்கும்போல.! ஒவ்வொரு கதையிலும் ரெட் டஸ்ட்டுக்கு ஏதாவது ஒரு காயத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள் ..! அவ்வகையில் இக்கதையில் டஸ்ட்டுக்கு கொஞ்சநேரத்துக்கு கண்ணு போயிடுது.!

    கௌபாய் தொடர்களிலேயே மிகவும் யதார்த்தமானதொரு தொடர் என்றால் அது கமான்சே தான்.! எல்லா ஆல்பங்களும் வெளியானபிறகு மொத்தமாக பைண்டிங் செய்து ரசித்து ரசித்து படிக்கவேண்டும்.!

    இனி கதைக்குள் -

    நீண்ட நாட்கள் கழித்து க்ரீன்ஸ்டோன் ஃபால்ஸ்க்கு வரும் டஸ்டுக்கு இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்ட் அடிஸனுடன் மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில் ஊரைச்சுற்றியுள்ள பண்ணைகள் ஒவ்வொன்றாய் தீக்கிரையகிக்கொண்டே வரவும், டஸ்டின் சந்தேகம் அடிஸன் மீது திரும்புகிறது. !
    அடிஸனோ செவ்விந்தியர் மீது பழிபோட..... செயன்னீ மார்க் ஆஃப் மூனும், ரெட் டஸ்டும் இணைந்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கிறார்கள்.!

    இரவில் நடக்கும் சம்பவங்களுக்கு கொடுத்திருக்கும் வைலட் கலந்த இளநீல கலரிங் அட்டகாசம்.!
    தீப்பற்றி எரியும் காட்சிகளில் ஆரஞ்சு கலந்த மஞ்சளும் அட்டகாசம்.! ஓரீரு இடங்களில் மட்டுமே வந்தாலும் அந்த கானகத்து இயற்கை காட்சிகள் இளம்பச்சை + இளமஞ்சள் + பச்சை கூட்டணியில் கண்ணைப் பறிக்கின்றன.!

    ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான கதையோட்டம்.
    தீவைப்பு சம்பவத்திற்கு காரணமாக யார்யாரையோ சந்தேகித்து முடிவில் முற்றிலும் எதிர்பாராத வகையில் குற்றவாளி கண்டறியப்படுவது சுவாரஸ்யம்.!
    அடுத்தவருடம் கமான்சே இல்லையென்பது லேசான ஏமாற்றம்தான்.! கௌபாய் உலகின் யதார்த்த பிரதிநிதிகளான கமான்சே குழுவினரை அடுத்த சாகசத்தில் உடனே சந்திக்கவேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது இந்த ஓநாயின் சங்கீதம் ..!

    ஓநாயின் சங்கீதம் - Western classic.

    ReplyDelete
    Replies
    1. நைஸ் ரிவியூஊஊ!

      இன்னிக்கு ராவுல நானும் ஓநாயின் சங்கீதத்தைக் கேட்டுடவேண்டியதுதான்!

      Delete
    2. ///இன்னிக்கு ராவுல நானும் ஓநாயின் சங்கீதத்தைக் கேட்டுடவேண்டியதுதான்!///

      தாரமங்கலத்துல விடுற குறட்டை சேலம் வரைக்கும் கேட்குமா????

      Delete
    3. மெளன உறக்கமே தாரை சிறப்பு ..:-)

      Delete
    4. ச்சும்மா சொல்லப்படாது
      ஓநாய் சங்கீதம் பேஷ்பேஷ் நன்னாருக்கு

      Delete
  41. ////ஹோமகுண்டத்தின் முன்னே எழுந்த புகை மூட்டத்தைப் பார்க்கும் போது -'டைகர் ஜாக் புகை மூட்டம் போட்டு சேதி அனுப்புவது இப்படித் தானோ ?" என்று மண்டைக்குள் ஓட - 'அட பேப்பயலே....இது உன் புள்ளைக்கு கல்யாணம்டா..!!" என்று மண்டையின் மறு பாதி குட்டு வைத்து நினைவூட்டியது ! ////...............

    அடடா .........கெக் கெக் கெக் ........ஹா ஹா ஹா

    ReplyDelete
  42. கல்யாண வருணனை மிக அழகாக இருக்குது ....

    வாழ்த்துக்கள் புதிய தம்பதிகளுக்கு .......

    ReplyDelete
  43. விண்ணில் ஒரு பொடியன்:
    அமைதியாக உள்ள பொடியர்கள் குடியிருப்பில் ஒருவருக்கு மட்டும் விண்ணிற்கு செல்ல வேண்டும் என்பது தனியாத ஆசை! அவர் தூங்க ஆரம்பித்து விட்டால் அவர் கனவு எல்லாம் விண்வெளியை பற்றித்தான்! இவரின் கனவு நனவாகிறதா இல்லையா என்பதுதான் கதை!

    இந்த விண்வெளி பொடியனின் ஆசையை மற்ற பொடியர்கள் அனைவரும் சீனியரின் வழிகாட்டுதலின் பெயரில் செய்வதை சிரிக்க வைக்கும் நகைசுவையுடன் சொல்லி இருப்பது சிறப்பு! நம்ப விண்வெளி பொடியனின் ஆசையை மற்ற பொடியர்கள் நிறைவேற்ற உறுதுணையாக இருப்பது இந்த பொடியனின் தூக்கம்தான் :-)

    விண்வெளியில் உள்ள நமது பொடியர்கள் உபயோகபடுத்தும் பாஷை கடிபாஷை; இங்கே பொடிபவர்கள் அங்கே கடிக்கிறார்கள் :-)

    சீனியர் சொல்லுக்கு கட்டுப்படும் இவர்களின் குணத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை! அதுவும் விண்வெளி பொடியனின் ராக்கெட்டை பிரித்து அதனை புதிய இடத்திற்கு கொண்டு சென்று அதன் பின் புதிய இடத்தில் ராக்கெட் செய்து மீண்டும் அதனை பிரித்து மீண்டும் அதனை தாங்கள் வசிக்கும் இடத்திற்கு கொண்டு வந்து.. அப்ப அப்பா (பொடியர்களின் புலம்பலுக்கு இடையே)


    விண்வெளியில் இருந்து பொடியனை விரட்ட அவர்கள் வைக்கும் போட்டிகள் குழந்தைத்தனமாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது!

    இந்த பொடியர்களை கார்ட்டூன் கதையாக படித்தால் அனைவர்க்கும் பிடிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ///சிரிக்க வைக்கும் நகைசுவையுடன் சொல்லி இருப்பது சிறப்பு! ///

      அ..ஆனால் PfB, நகைச்சுவை'ன்னாலே சிரிக்க வைப்பதற்குத்தானே?!!

      Delete
    2. ///இந்த பொடியர்களை கார்ட்டூன் கதையாக படித்தால் அனைவர்க்கும் பிடிக்கும்!///

      இந்த போயிண்டை மறந்துட்டீங்க குருநாயரே! ;)

      Delete
    3. ///விண்வெளியில் இருந்து பொடியனை விரட்ட அவர்கள் வைக்கும் போட்டிகள் குழந்தைத்தனமாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது!///

      +1

      Delete
    4. ///இந்த போயிண்டை மறந்துட்டீங்க குருநாயரே!///

      ஹிஹி! அடுத்து நான் கேட்கப்போற கேள்வியை கவனியுங்களேன்...

      @ PfB

      இன்னும் சித்தநேரத்தில் 'ஒநாயின் சங்கீதம்' படிக்கலாம்னு இருக்கேன்... அதை கெளபாய் கதையாகப் படித்தால் எனக்குப் பிடிக்குமா PfB? :P

      Delete
    5. ஞான் காமிக்ஸ் புக்காவே படிச்சு

      Delete
  44. விண்ணில் ஒரு பொடியன் கதையை எனது மகள் மற்றும் மகள் இருவரும் என்னை கதை சொல்ல சொல்லி ரசித்தார்கள்! இதுவரை இரண்டு முறை சொல்லிவிட்டேன்!

    விண்வெளி பொடியன் ராஸ்பெரி ஜூஸ் குடிக்கும் படத்தை பார்த்து எனது மகன் மிகவும் ரசித்தான்; அதவும் ஹெல்மட்டை கழற்றாமல் ஜூஸ் அழகு!

    விண்வெளி என்றால் என்ன என கேட்டவனிடம் "Space" என்று சொன்னவுடன் "Space" பற்றி அவன் எனக்கு கொடுத்த விளக்கம் அட... எப்படிடா இது தெரியும் என்று கேட்டால் சுட்டி டிவியில் வரும் ஜாக்கி- சான் மூலம் தெரியும் என்றது மற்றொரு அட போட வைத்தது!

    ReplyDelete
    Replies
    1. ///விண்ணில் ஒரு பொடியன் கதையை எனது மகள் மற்றும் மகள் இருவரும் என்னை கதை சொல்ல சொல்லி ரசித்தார்கள்! இதுவரை இரண்டு முறை சொல்லிவிட்டேன்! ///

      மூனாவது தடவையாவது அவங்களுக்குப் புரியறாப்ல சொல்லுங்க PfB! :D

      Delete
    2. ///மூனாவது தடவையாவது அவங்களுக்குப் புரியறாப்ல சொல்லுங்க PfB! :D///

      கி..கி...கி...!!😂

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. சொல்லியாச்சு சொல்லியாச்சு... என் மகள் கேட்டாளே ஒரு கேள்வி:?? விண்வெளி பொடியனுக்கு போட்டி வைப்பதற்கு பதிலாக ராஸ் பெர்ரி ஜூஸை கொடுத்து தூங்க வைத்து அவனை ஊருக்கு ஏன் அனுப்பவில்லை? ம்ம் அதுவா உங்களுக்கு கதை சொல்லத்தான் இப்படி போட்டி எல்லாம் ஹி ஹி.

      எனது மகன் ரிடையர் ஆன எரிமலைய பார்த்து இதுல லார்வா வருமா? யார்டா உனக்கு சொல்லி கொடுத்து லார்வா பற்றி என்றால்.. டோரா :-)

      இன்று இரவு மீண்டும் ஒருமுறை கதை சொல்லனும் :-)

      Delete
    5. //////
      விண்வெளி என்றால் என்ன என கேட்டவனிடம் "Space" என்று சொன்னவுடன் "Space" பற்றி அவன் எனக்கு கொடுத்த விளக்கம் அட... எப்படிடா இது தெரியும் என்று கேட்டால் சுட்டி டிவியில் வரும் ஜாக்கி- சான் மூலம் தெரியும் என்றது மற்றொரு அட போட வைத்தது!
      /////
      For me, Doremon and Nobitha. My son explanation was "another earth"

      Delete
  45. Hi,
    Please share the lion-muthu office phone number here. My parcel did not arrive and no response to my emails. I tried these two but no response :-(
    Tel : 04562 - 272649
    Cell 98423 19755

    Thanks

    ReplyDelete
    Replies
    1. Red Coat : இரண்டுமே சரியான நம்பர்கள் தான் சார் & காலையிலிருந்து ஐம்பது / அறுபது போன்கள் பேசியிருப்பார்கள் நம்மவர்கள் ! இன்றைக்கு அழைத்திருப்பின் பதில் இல்லாது போக வாய்ப்பே கிடையாது !

      நாளை காலை 10 மணிக்கு போன் அடியுங்களேன் ; அல்லது உங்கள் பெயர் & சந்தா நம்பரை அனுப்பினால் காலையில் கூப்பிடச் சொல்கிறேன் !

      Delete
    2. Dear Sir,
      Thanks. I will try to call tomorrow again. I guess today I called too late in the evening after office closed.

      Delete
  46. ***** ஓநாயின் சங்கீதம் ******

    கதை : ஒருகாலத்தில் தான் டெபுடி-ஷெரீப்பாக பதவி வகித்த கிரீன்ஸ்டோன் ஃபால்ஸ் நகருக்கு சுமார் 10+ வருடங்களுக்குப் பின்னே மீண்டும் தலைகாட்டுகிறான் ரெட் டஸ்ட்! நிறைய நாகரீக மாற்றங்களைச் சந்தித்திருந்த அந்நகரத்தையொட்டிய பண்ணைகள் ஒன்றன்பின் ஒன்றாக திடீர் தீ விபத்துகளில் சிக்கி நாசமடைய, இன்ஷூரன்ஸ் அதிகாரியாக அறிமுகமாகிடும் அடிஸன் என்ற அசலூர்காரனின் மீது ரெட் டஸ்டின் சந்தேகப் பார்வை விழுகிறது. தொடர்ந்த தீ விபத்தில் (இத்தொடரில் அவ்வப்போது கெஸ்ட்ரோலில் வந்து போகும் கமான்சே'யின்) 666 பண்ணையும் சிக்கிக்கொள்ள, அந்த இன்சூரன்ஸ் அதிகாரி தன் உதவியாளனோடு ஊரை விட்டே ஓடியப் போகவேண்டிய நிர்பந்தம் எழுகிறது. ஓடுகிறார்கள். ரெட்டும், அவனுடைய செவ்விந்திய நண்பன் மார்க் ஆப் மூனும் துரத்துகிறார்கள். புதிரான சில சம்பவங்களின் இறுதியில் இந்தத் துரத்தல் ஒருவழியாக முடிவுக்கு வரும்போது இன்சூரன்ஸ் ஆசாமிக்கும், தீ விபத்துப் பின்னணிகளுக்குமான உண்மையான தொடர்பு புரியவருகிறது!

    ஒரு மனிதநேய நிகழ்வுடன் கதை முற்றுப்பெறும்போது - எனக்குள் எழுந்த ஒரு கலவையான உணர்வுடன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பக்கங்களைப் புரட்டி சில விசயங்களை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது!

    நிறைகள் :
    * சித்திரங்களும், வியப்பிலாழ்த்தும் வண்ணக் கலவைகளும்! குறிப்பாக, இரவு நேரக் காட்சிகளை இவ்வளவு அழகாக முன்னெப்போதும் நான் ரசித்திருப்பேனா தெரியவில்லை! ஆஸம் ஆஸம்!! ( சில பேனல்களில் வரும் பகல்நேரப் பசுமைக் காட்சிகளும் - கண்களுக்கு விருந்தே!)
    * தொய்வின்றி நகரும் கதை! குற்றவாளி குறித்து பின்னப்பட்டிருக்கும் மர்ம முடிச்சுகள்!

    குறைகள் :
    * இயற்கையை மிக அழகாக வரையத் தெரிந்த ஹெர்மனுக்கு மனித முகங்களின் மீது அப்படி என்னதான் துவேசமோ!! கிழடுதட்டிய ரெட் டஸ்டின் முகம், வாலிபத்தைத் தொலைத்த கமான்சே உள்ளிட்ட பலரது முகங்களை பல பேனல்களில் ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நோக்கவேண்டியிருக்கிறது!
    * குற்றத்திற்கான பின்னணி ஏற்றுக்கொள்ளும் விதமாக இருந்தாலும் கூட, குற்றவாளியின் characterization தெளிவாக இல்லை!

    மனித முகங்களை மட்டும் நீக்கிவிட்டால் இந்த முழுப் புத்தகமுமே ஒரு அழகான ஓவிய ஆல்பம் தான்!

    என்னுடைய ரேட்டிங் : 9.5/10

    ReplyDelete
    Replies
    1. ///குற்றத்திற்கான பின்னணி ஏற்றுக்கொள்ளும் விதமாக இருந்தாலும் கூட, குற்றவாளியின் characterization தெளிவாக இல்லை!///

      குற்றவாளி, முந்தைய ஆல்பங்கள் சிலவற்றில் வந்திருக்கிறானே!?
      பணத்துக்காக எதையும் செய்பவனாக அவனுடைய கேரக்டர் ஏற்கனவே நமக்கு அறிமுகமானதுதானே??
      ஒருமுறை பணத்துக்காக கமான்சே பண்ணையில் இருக்கும் மாடுகளை கொல்ல முயற்சி செய்வான், இன்னொருமுறை அவனை நம்பி ஒப்படைக்கட்ட பணத்தை ஆட்டையைப்போட்டு எஸ்கேப் ஆக முயற்ச்சித்திருப்பான்.! கதைகளின் பெயர் சரியாக நினைவிலில்லை!
      இந்தக்குற்றவாளி பணத்தாசை பிடித்தவன் என்பதால் Characterization தெளிவாக இருப்பதாகவே படுகிறது குருநாயரே!!

      Delete
    2. ஆங்! இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் வர்தூ!

      ஆனாலும், முந்தைய பாகங்களில் வரும் ஒரு கேரக்ட்டரை இதன் கடைசி பக்கங்களில் மட்டும் புகுத்தியிருப்பது என்னைப் போன்ற ஞாபகமறதி பார்ட்டிகளுக்கு ஒரு தெளிவான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்காது. இதுவும் ஒரு குறை மாதிரி தானே?!! :)

      Delete
    3. இந்த கதையின் வில்லன் கமான்சே தொடரில் சகுனி வேலைகள் செய்வதில் பிரபலமானவன். இவன் கமான்சேயின் 3 கதைகளில் வருகிறான்.
      #1.தோட்டா தேசம்,
      #2. யுத்தம் உண்டு எதிரி இல்லை,
      #4. செங்குருதி சாலைகள்.

      'தோட்டா தேசம்' கதையில் பண்ணைக்கு வரும் 50 காளை மாடுகளுக்கு தடுப்பூசி போடுவதாக பொய் சொல்லிக்கொண்டு விஷ ஊசி போட வருவான்.

      'யுத்தம் உண்டு எதிரி இல்லை' கதையில் செவ்விந்திய முகாமில் இருந்து ஏதோ ஒரு செவ்விந்திய நலத்துறை அதிகாரியை பார்க்க டஸ்ட் போய்க் கொண்டிருக்கும்போது, வழியில் தென்படும் ஒரு வழிப்போக்கனாக இவன் வருவான். அப்போது பண்ணைக்கு ஒரு செய்தியை டஸ்ட் இவனிடம் சொல்லி அனுப்ப, இவன் பண்ணைக்கு போய் செய்தியை வேண்டுமென்றே திரித்து கூறி, அமெரிக்கர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள பிரச்சனையை வலுப்படுத்திவிடுவான்.

      'செங்குருதி சாலைகள்' கதையில் வில்லனின் பார்ட்னராக இவன் வருவான்.
      அந்த கதையில் ஒரு சம்பவம். வில்லன் பெயர் டோப்ஸ் என்று ஞாபகம். ஒரு சண்டையில் கால் ஒடிந்து போன இவனை ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்கு கூட்டிப்போவான் டோப்ஸ். டாக்டருக்கான 'ஃபீஸ்'ஸாக 2000 டாலரை கொடுத்துவிட்டு டோப்ஸ் போய் விடுவான். டாக்டரும் இவனுக்கு மாவு கட்டு போட்டு குணப்படுத்தி நடக்க வைப்பார். உடனே தன்னை குணப்படுத்திய டாக்டரையே சுட்டுவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவான். வன்மேற்கில் உள்ள காட்டான்களின் பழக்க வழக்கங்கள் எவ்வளவு கொடூரமானமானது என்பதை ஒரே காட்சியில் உணர்த்துகிறது அந்த கதை.

      [#3'ஆவது கதை 'ஓநாய் கணவாய்.' 18 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததால், அதை நான் படித்ததில்லை. அதில் இவன் வருகிறானா என்று தெரியாது.]

      Delete
    4. @ Jagath Kumar

      என்னவொரு ஞாபக சக்தி!! என்னவொரு இன்வால்வ்மென்ட்!!

      இப்போ எனக்கு அந்த கேரக்டரை இன்னும் நல்லா வந்துடுச்சு. நன்றிகள் பல!

      ( அவ்வப்போது இதுபோல எழுத முயற்சி செய்யுங்கள் நண்பரே!)

      Delete
    5. @ Jagath Kumar

      // என்னவொரு ஞாபக சக்தி!! என்னவொரு இன்வால்வ்மென்ட் //

      +100000

      Delete
    6. அருமை நண்பரே....செம நினைவு ...பாராட்டுக்கள் ..

      Delete
  47. Happy married life vira anna
    BY DAIBOLIK AKKIL

    ReplyDelete
  48. சார் எனக்கு இம்மாத புத்தகப் பார்சலில் மாயாவியை காணவில்லை... அடுத்த மாத பார்சலில் சேர்த்து அனுப்பினால் போதும் சார்.

    மேலும் நான் இன்னும் புதிய சந்தாவை செலுத்தவில்லை. சற்று நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதால் சற்று தாமதமாக, அதாவது ஜனவரி மாத இறுதிக்குள் செலுத்தி விடுகிறேன் சார். தாமதத்திற்கு மன்னியுங்கள் சார்.

    ReplyDelete
  49. Dear Edit,

    So good to see you sharing a big moment from your life. Wish a Happy Married Life for Vikram. Couldn't make it due to some personal commitments. But felt the vibe with your usual down to earth reminiscent.

    Was pleasantly surprised to see the December parcel reaching a day ahead, with goodies. Missed to see my photo on the collector edition, due to me sending it to wrong email. But, seeing it has come out so fine for other friends was fulfilling.

    Hoping that 2018 would be another milestone year for our Comics and all our Friends.

    ReplyDelete
    Replies
    1. ///Hoping that 2018 would be another milestone year for our Comics and all our Friends.///

      +1

      Delete
  50. ஓநாயின் சங்கீதம்
    அந்திசாயும் நேரத்தில் மலையடிவாரத்தில் ரெட் நண்பர்களுடன் கீரின் ஸ்டோன் வரும் வழியில் எரிந்து கிடக்கும் பண்ணையில் ஆரம்பிக்கும் கதை. ஊருக்குள் வந்த பின் அடுத்தடுத்து பண்ணைகள் எரிந்து நாசமாவதும் அதற்கு அந்த ஊரில் புதிதாக வந்த இன்சூரன்ஸ் ஏஜென்ட் என நினைக்கும் ரெட் அவனை பிடிக்க செல்வதில் ஆரம்பிக்கும் வேகம் இறுதிவரை மூச்சிரைக்க நம்மை படிக்கச் செய்கிறது.

    மார்க் ஆப் மூன் முதலில் இருந்தே குற்றவாளி வேறு யாரோ என உறுதி பட நம்புவது, ரெட் யோசிக்காத திசையில் இவன் யோசிப்பது அருமை, எதார்த்தமாக உள்ளது. கதையின் இறுதியில் வில்லன் கால்நடை மருத்துவர் என்பது எதிர்பாராத திருப்பம்!

    கடைசி பக்கத்தில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் செய்யும் மனிதாபிமான உதவி கண்களை ஈரமாக்கி விட்டது! அதே போல் தனது சலூனை காப்பாற்றிய ரெட்டை மறக்காமல் இருக்கும் அந்த அழகு சீமாட்டியின் நல்ல மனமும், அவர் பண்ணையை இழந்தவர்களுக்கு தன்னால் முடித்த உதவி செய்வதில் எனது மனதில் ஒரு ஓரத்தில் சிம்மாசனம் தயாராகிவிட்டது.

    இந்த முறை வழக்கத்தை விட கதையுடன் சித்திரங்கள் என்னை ரொம்பவே ரசிக்க செய்தது!

    ReplyDelete
    Replies
    1. நைஸ் ரிவியூ PfB!

      ஆனால், புத்தகம் வெளியாகி நமது நண்பர்கள் பலரும் இக்கதையைப் படித்திராத இந்த குறுகிய காலகட்டத்தில் எழுதப்படும் விமர்சனங்கள் கதையின் முக்கிய முடிச்சுகளை கட்டவிழ்க்காமல் இருப்பது பல வகைகளிலும் நன்மை பயக்கும் ( குறிப்பாக, குற்றவாளி யார் என்பது போன்ற முக்கியத் தகவல்களை).

      ஏனுங்.. நாஞ்சொல்றது சரிதானுங்களே?

      Delete
    2. குருநாயர் ஒண்ணு சொல்றாருன்னா அது சரியாத்தான் இருக்கும்!!

      (என்னைப் பாத்து ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கேன்னுகூட சொல்லியிருக்காரே!!) ;)

      Delete
    3. @ KOK

      ///என்னைப் பாத்து ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கேன்னுகூட சொல்லியிருக்காரே!!///

      தெரியாமச் சொல்லியிருப்பேன். மனசுல எதையும் வச்சுக்காதீங்க ப்ளீஸ்! :D

      Delete
  51. ஓநாயின் சங்கீதம் அட்டகாசமான சித்திர விருந்து:-

    1. 8-ம் பக்கத்தில் முதல் படம் அந்த சலூனை முழுமையாக காண்பித்தது; சிகரெட் புகை மண்டலம், ஒரு ஓரத்தில் நடனமங்கையின் ஆட்டம். அதுவும் அந்த படத்தில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் செயல்களையும் வசனங்கள் இல்லாமல் சித்திரம் முலம் வெளிபடுத்தியது.

    2. 15-ம் பக்கம் காமன்சே பண்ணையில் தீ பிடித்ததை கேள்விபட்டு நிலவொளியில் கிளம்பும் ரெட்டுடன் குதிரையின் ஊர் மக்கள் கிளம்பும் இடம்!

    3. 18-ம் பக்கம் இரண்டாவது வரிசையில் ரெட்டின் முகபாவனையை அடுத்து அடுத்து வெளிபடுத்தும் அந்த மூன்று படங்கள், அதில் ரெட்டின் பின்னால் இருக்கும் அந்த மனிதனின் முகபாவனை (கவனித்து பார்க்கவும்)

    4. 23-ம் பக்கம் முதல் படத்தில் லிசாவின் பண்ணை எரிவது; நெருப்பு எரியும் இடம் பிரகாசமாகவும், அதனையொட்டி பண்ணையில் மீதம் உள்ள பொருட்களை அருமையாக காட்டி உள்ளது ரசிக்க செய்தது. அதே படத்தில் பண்ணை எரிந்த இடத்தில் ஒரு மனிதர் தலையை தொங்க போட்டு கொண்டு சோகத்துடன் இருப்பது.

    5. 28-ம் பக்கம் உள்ள அனைத்து படம்களும் என்னை முழுமையாக மயக்கி விட்டது. அதில் ரெட் குதிரையில் பாயும் படம், பின் பக்கத்தில் பச்சைபசேல் காடு!

    6. 30-ம் பக்கம் முதல் படத்தில் பிக் பார்ட் இறந்து கிடக்கும் இடத்தை ஒட்டிய ஆறு, அருகே குதிரைகள் ஆற்று பாலம் மனதை என்னமோ செய்தது.

    7. 35-ம் பக்கம் நிலவொளியில் ரெட் மற்றும் மார்க் ஆப் மூன் ஆற்றில் படகில் செல்லும் காட்சி நமக்கு காணகிடைக்காத ஒன்று.

    8. 42-ம் பக்கத்தில் கடைசிக்கு முந்தைய படத்தில் நிலவொளியில் நீரில் கிட்டங்கி எரிவதால் அதன் நிறம் மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்தில் காட்டியிருப்பது ரசிக்க செய்தது.

    9. 43-ம் முதல் படத்தில் தூரத்தில் கிட்டங்கி எரிவது அதே நேரத்தில் படகை விட்டு நிலவொளியில் வேகமாக இறங்கும் ரெட் மற்றும் நண்பர்கள் செமையாக வரைந்து இருக்கிறார் ஓவியர்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா....இதுவரை பின்தங்கிய கமான்சே அடுத்த வருடம் காணாமல் போகும் நிலையில் இந்த முறை முதலிடம் பிடித்து ஆசிரியருக்கு தலை சுற்றலை வர வைக்கிறாரே :-)))

      Delete
    2. கமான்சே என்றுமே எனக்கு பிடித்த தொடர். முதல் சில பக்கங்கள் மெதுவாக செல்வதாக இருக்கும்... அதன் பின்னர் கதையின் இறுதிவரை என்றுமே புயல் வேகம்தான்.

      Delete
    3. @ PfB

      செம!

      இவ்வளவு எழுதியிருக்கீங்கன்னா, எவ்வளவு ரசிச்சுருப்பீங்க!!!

      ஹெர்மனின் தூரிகை ஜாலம்!

      Delete
    4. உண்மைதான்.!!
      ஓவியர் ஹெர்மனின் கைவண்ணத்தில் நிறைய காட்சிகள் ரசிக்கவைக்கின்றன..!!

      சூப்பர் PFB.. !

      Delete
  52. இந்த வருடத்தின் கடைசியாக வந்த காமிக்ஸ் அனைத்துமே கண்களுக்கு விருந்தளித்துள்ளது. எப்போதும் போல பொடியர்கள் அட்டகாசபடுத்திவிடார்கள். எனக்கு காமிக்ஸை அறிமுகபடுத்திய என் தந்தையின் புகைபடத்துடன் வந்த பிரின்ஸ் புத்தகம் காமிக்ஸ் வாசம் இல்லாத உறவினர்களையும் ஆச்சரியபடுத்திய மகிழ்ச்சியான தருணமது. என் சகோதரர் மகனுக்கு 6 வயது, இப்போதே டெக்ஸ், லக்கிலூக் போன்றவர்களை அடையாளம் கண்டுகொள்கிறான். மகிழ்ச்சி, அடுத்ததலைமுறைக்கு காமிக்ஸ் ரசனையை கடத்திவிட்டேன் என்ற ஒரு நிம்மதி மனதில் ஏற்பட்டுள்ளது. அவன் எங்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் ஏதேனும் ஒரு டெக்ஸ் அல்லது லக்கிலூக் கதையை சொல்லசொல்லி கேட்க ஆரம்பித்துள்ளான். :) மிக்க நன்றி சார் காமிக்ஸ் உலகில் எங்களை போன்ற தமிழ்வாசகர்களுக்காக தரமான கதைகளை வெளியிட்டு வருவதற்கு. 2018 காமிக்ஸ்கள்களை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு வாசகன்.

    ReplyDelete
    Replies
    1. @ KPS MANI

      ஆத்மார்த்தமான வரிகள்! அருமை நண்பரே!

      Delete
  53. அற்புதம் திரு மணி அவர்களே.நன்று.

    ReplyDelete
  54. *** கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் : நதியில் ஒரு நாடகம் ****

    மான்டெனாவானா நாட்டின் எல்லைக்குட்பட்ட கடல் பிராந்தியத்தில், பிரம்மாண்டமாய் தங்களைக் கடந்துசெல்லும் அந்த அழகான சொகுசுக் கப்பலை ரசித்தபடியே கழுகில் பயணிக்கிறார்கள் நம் பிரின்ஸ் குழுவினர்! பார்த்துக்கொண்டிருக்கும்போதே சற்றும் எதிர்பாராத வகையில் சுக்குநூறாக வெடித்துச் சிதறுகிறது அந்த சொகுசுக் கப்பல்! அந்தப் பிரளயத்திலிருந்து தப்பிப்பிழைத்து கழுகு சேர்பவர்கள் மூன்றுபேர் மட்டுமே! அது - அந்நாட்டின் பிரஸிடென்ட் வாக்கரும், அவருடைய இரு மெய்க்காப்பாளர்களும்!

    நிகழ்ந்த வெடிவிபத்தின் பின்னணியில் ஒரு பயங்கர சதிவலை பின்னப்பட்டிருந்ததும், அதன் சூத்ரதாரி - பிரஸிடென்ட்டின் வலதுகரமாக செயல்பட்டுவந்த அதிகாரி மண்டோஸா என்பதும் ரேடியோ செய்தியின் மூலமாகத் தெரியவருகிறது நம் குழுவினருக்கு! அவசரநிலையைப் பிரகடனப் படுத்தி அதிகாரத்தை கைப்பற்றியதோடு, ராணுவத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மண்டோஸாவுக்கு, பிரஸிடெண்ட் 'கழுகில்' உயிருடன் இருப்பது தெரியவருமானால், கழுகிலிருக்கும் அனைவருக்குமே 'கழுகோடு கைலாசம்' என்ற இக்கட்டான சூழ்நிலை இப்போது!

    ஓடிப் பதுங்க அருகே ஒரு சதுப்புநிலம்! ஆனால் அதில் ஆயிரம் ஆபத்துகள்!
    அடர்ந்தகாடு, கொடிய விலங்குகள், விஷ ஜந்துகள், நரமாமிசத்திற்கு அலையும் காட்டுவாசிகள்...

    இவைகள் போதாதென்று ஒருகட்டத்தில் பிரஸிடென்ட் உயிரோடிருக்கும் செய்தி எதிரியின் காதுகளுக்கு எட்டிவிட, நம் குழுவினரை வேட்டையாட இப்போது இராணுவமும் சேர்ந்துகொள்கிறது!

    அடர்ந்த காட்டில், நதியின் பாதையில் ஒரு ஜீவமரணப் போராட்டம்!

    * நம் குழுவினரின் கதி என்ன?
    * பிரஸிடென்ட் தப்பித்தாரா? மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினாரா?

    என்பதையும், இன்னபிறவற்றையும் - ஒரு ஹை-வோல்ட்டேஜ் வாசிப்பு அனுபவத்தின் மூலமாக நீங்களும் - கழுகில் ஒருவராய் பயணித்து - தெரிந்து கொள்ளுங்கள்!!

    18 ஆல்பங்களோடு நிறுத்தப்பட்டுவிட்ட இத்தொடரை மறுபடியும் தொடரச்செய்ய இதன் படைப்பாளிகளான க்ரெக் மற்றும் ஹெர்மனின் கால்களில் யாராவது விழுந்துதான் ஆகவேண்டுமென்றால் - நான் ரெடி!

    ReplyDelete
    Replies
    1. //18 ஆல்பங்களோடு நிறுத்தப்பட்டுவிட்ட இத்தொடரை மறுபடியும் தொடரச்செய்ய இதன் படைப்பாளிகளான க்ரெக் மற்றும் ஹெர்மனின் கால்களில் யாராவது விழுந்துதான் ஆகவேண்டுமென்றால் - நான் ரெடி!//

      கதாசிரியர் கிரெக் மேலுலகம் போய் ஆண்டுகள் 18 ஓடிவிட்டன !!

      So அவரது கால்களைத் தேடுவது கொஞ்சம்...இல்லை.. இல்லை.. ரொம்பவே வில்லங்கமான விஷயமாக இருக்கக்கூடும் ! பரால்லியா ?

      Delete
    2. அ..அப்படியானால் இந்த காலில் விழும் வேலையை நான் தலீவரிடம் ஒப்படைக்கிறேன்! :D

      Delete
    3. /////அ..அப்படியானால் இந்த காலில் விழும் வேலையை நான் தலீவரிடம் ஒப்படைக்கிறேன்! :D/////

      ....ஹ ஹ ஹ

      Delete
    4. இந்த மாதிரி சின்ன வேலைகளுக்கு எல்லாம் தலைவர் தேவையில்லை ஈ.விஜய்யே போதும் என்று தலைவர் சொல்லி விட்டார்.

      Delete
    5. நான் செய்யவேண்டிய அளவுக்குக் கூட இல்லாமல் இது ரொம்பவே புக்ளியூண்டு வேலை என்பதால்... என் சிஷ்யபிள்ளை KOK இடம் இப்பொறுப்பை ஒப்படைக்கிறேன்!

      குருநாயர் 'எள்ளு'னா எண்ணெய் சட்டியோட நிற்பார் என்ட சிஷ்யபிள்ளை; அதுவும் ஈஸ்வரன் கோயில் எண்ணெய் சட்டியோட!

      Delete
    6. ///குருநாயர் 'எள்ளு'னா எண்ணெய் சட்டியோட நிற்பார் என்ட சிஷ்யபிள்ளை; ///

      எள்ளு கேட்டா எள்ளுதானே கொண்டுவரணும்... அதைவிட்டு எண்ணெய்சட்டிய கொண்டுவர்ரது என்ன மாதிரியான வேலை., அதிகப்பிரசங்கித்தனம் இல்லியோ ..!

      "ஆன்ட்டி இஞ்சி (கறிக்குழம்பு வைக்க) இருக்கான்னு கேட்டா., இதுல இஞ்சி ஏலம் அதிமதுரம் எல்லாம் இருக்குன்னு டீத்தூள் குடுக்குமே ஒரு பெரீம்மா..,அப்படி ஒரு புத்திசாலிதான் உங்க சிஷ்யப்புள்ள.!


      நீங்க எள்ளுருண்டை பிடிக்கவேண்டிகூட எள்ளு கேட்டுருக்கலாம்.! அப்போ எண்ணெய் சட்டியோட நிக்கிறது முட்டாள்தனம் இல்லையா?? அப்படியொரு அதிமேதாவியான சிஷ்யப்பிள்ளைய நம்பி இப்படிப்பட்ட காரியத்தை ஒப்படைப்பது நேக்கு சரியாப்படலை..!

      Delete
    7. என்னாவொரு புத்திசாலித்தனம்!!

      இப்படியொரு விளக்கத்தைப் படிச்சதுக்கப்புறம் என் மூஞ்சி தான் ஈ.கோ.எண்ணெய் சட்டி மாதிரி ஆகிடுச்சு! :D

      Delete
  55. கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்
    ========================

    அட்டகாசமான இருகதை
    1. நதியில் ஒரு நாடகம்
    2. கொலைகாரக் கானகம்

    அத்துடன் முன்பதிவு செய்த வாசகர்களின் வண்ண புகைப்படம் அச்சிட்டு உள்ளது( எனது போட்டோ உள்ளது)

    1.நதியில் ஒரு நாடகம்

    நதியில் நளினமாக நர்த்தனமிடுகிறாள் கழுகு அவ்வேளையில் சொகுசுக்கப்பல் எதிரே திடீரென வெடித்துச் சிதற அதிலிருந்து மாண்டெனாவானா நாட்டின் ஜனாதிபதி வாக்கர் நதியில் தத்தளித்து கொண்டிருக்க விரைந்து சென்று கேப்டன் பிரின்ஸ் குழு அவரை மீட்கிறது.

    சிறிது நேரத்தில் விமானம் வெடித்து சிதறிய கப்பலை நோட்டமிடுகிறது அதன் விஷமம் என்னவென தேட அவர்களது ரேடியோவை இடைமறித்து கேட்கும் போது வாக்கரை கொல்ல நடந்த சதி வெளிச்சத்திற்கு வருகிறது.

    விமானத்தின் பார்வையிலிருந்து தப்ப எண்ணி புதருக்குள் மறைவாக கழுகுகை நிறித்தி வைக்க அங்கே வனவிலங்கு வடிவில் வில்லன் தலைதூக்க,
    பிரின்ஸ் சிறுத்தையின் பிடியிலிருந்து மயிரிலையில் ரகசிய போலீஸின் அதிரடி கத்திவீச்சுக்கு சிறுத்தை பழியாக பிரின்ஸ் தப்புகிறார்.
    சற்று இளைப்பாறும் வேளையில் செவ்விந்திய கும்பல் சுற்றிவளைக்க
    ஜீவ மரணப்போராட்டத்திற்கு பின் ஒருவழியாக கழுகை மீட்டு
    ரியோவில் உள்ள கர்னல் ஓர்ஜெடாவின் உதவியைப் பெற ஸான்அண்டோனியோ நீர்வீழ்ச்சி, திறந்த வெளி சிறைக்கூடம் அதை அடைவதற்கு இடையூறாக எதிரி ராணுவ விமானத்தின் தாக்குதல் மேலும் வாக்கர் உயிருடன் இருக்கும் செய்தி தெறிந்துவிட பிரச்சனை பூதாகரமாகிறது.

    இடையில் இராணுத்தின் பிடியில் பிரின்ஸ் குழு அகப்பட ஒருவழியாக வாக்கர் உயிருடன் வெளிப்பட்டு ரியோ சென்று சேர கதை சுபமாகிறது.

    பழங்குடி வேட்டையர்களிடம் அகப்பட்ட நண்பன் பார்னேவை காப்பாற்ற பிரின்ஸ் மேற்கொள்ளும் தற்கொலைக்கு ஒப்பான முயற்சியில் நட்பின் தோல் வளிமை அசத்துகிறது.
    உயிர்காப்பான் தோழன்.!

    2. கொலைகாரக் கானகம்

    கானகத்தில் பற்றியெறியும் தீயில் 500 மேற்பட்ட மக்கள் அகப்பட்டு ஜீவ மரணப்போராட்டத்திற்கு உள்ளாக அதனை தடுக்க விளைந்து முராகோவின் கேப்டன் போத்தம் அனைத்து கப்பல்களும் மீட்புப்பணியில் ஈடுபட அழைப்பு விடுக்க கழுகு வந்து சேர்கிறது.

    தீபகற்பம் முழுமையும் தீ பற்றி எரிகிறது.
    நுழைவாயில் செல்ல முடியாது எனவே குறுகலான கரோனோ வழியாக சிறிய கப்பல்களான கழுகு, டொரண்டோ, ஜீலி மட்டும் செல்ல முடிவாகிறது.
    இம்முடிவில் உள்ள பிரச்சனை ஆராயும் பிரின்ஸ் தீயிலிந்து தப்ப அதன் எதிர் திசையில் உள்ள கூம்புப் பாறையில் மக்கள் இருப்பார்கள் எனவே அவர்களுக்கு நம்பிக்கை தர மீட்பு கப்பல் மூன்றும் வறுமுன்னர் தான் தனியே செல்ல கேப்டன் போத்தமிடம் தெரிவித்துவிட்டு கிளம்புகிறார்.
    உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழல் தெரிந்தும் பிரின்ஸ் உதவ விரைகிறார்.

    வழிநெடுக எரிந்து சம்பலான குவியலுக்கு ஊடே தகிக்கும் நெருப்பு பிளம்பை கடக்கும்போது வெறிகொண்ட கரடியின் ஆக்கோரசத்தை தடுக்க அதனை கொல்கிறார் ஆனால் அது தீயில் அகப்பட்ட தன் குட்டிக்கரடிக்காகவே தீயின் ஊடே ஆக்ரோஷமாக சென்றது தெரிய வர குட்டிக்கரடியை மீட்டு செல்லும்போது தீச்சூவலையை கடக்கிறார் அவ்வேளையில் மீட்பு விமானம் தன்னிரை நெருப்பில் கொட்ட அந்த புகை யின் ஊடே தப்பிக்கிறார் பிரின்ஸ்
    பற்றியெறியும் மரம் மேலே விழுந்து அவரை சாய்க்க வேறுவழியின்றி பார்னே தந்த டைனமைட்டை கொழுத்தி முனிப்பகுதிக்கு எறிய அதனை கரடி குட்டி வாயில் கவ்விக் கொள்ள பிரின்ஸ் அதனனை கீழே போட சொல்லி பதறும் காட்சி அடடடா என்ன சொல்ல....
    ஒரு வழியாக அந்தப்பக்கம் வந்த நபர் பிரின்ஸ்சை காப்பாற்ற தப்பி யொடும் மக்களிடம் தனது வரவின் நோக்கத்தை விளக்குகிறார்.
    இதற்கிடையில் டோரண்டோ கப்பல் எதிர்பாரத விதமாக பாறையில் மோதி உடைய கடலில் விழுந்துவர்களை மீட்க ஜின் உதவி படகில் செல்ல முடிவில் ஜின் கடலுக்குள் விழ அவர்கள் வேறுவழியின்றி கழுகிற்கு தகவல் தர பார்னே வந்து போராடி ஜின்னையும் மற்றவர்களையும் காப்பாற்றுகிறார்.

    மீட்புகப்பலுடன் பார்னே வர பிரின்ஸ் ஆபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீண்டனர்.

    இரண்டு கதைக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது......

    1. நதி தான் இரண்டு கதையிலும் முக்கிய மையம், முதல் கதையில் நதியில் கப்பல் எரிகிறது,
    இரண்டவாது கதையில் கானகம் எரிகிறது.
    2. மனிதாபிமானம் தான் பிரதானம்
    முதல் கதையில் வாக்கர் காப்பாற்றுதல்,
    இரண்டாவது கதையில் குட்டிக்கரடி காப்பாற்றுகிறார்.
    3.முதல் கதையில் பார்னேவை பிரின்ஸ் காப்பாற்ற, இரண்டாவது கதையில் ஜின்னை பார்னே காப்பாற்றுகிறார்.

    ஓவியர் ஹெர்மானின் அசாத்தியமான உழைப்பு தெளிவாக தெரிகிறது.
    உயிர்காப்பான சித்திரம்.

    அசத்தலான கதை இரண்டும்.

    நதியோட்டம் போல் அழகான நடையில் மொழிபெயர்ப்பு.

    www.lioncomics.in

    டிசம்பர் 2017
    லயன்காமிக்ஸ் வெளியீடு.

    யாழிசை செல்வா
    06/12/2017

    ReplyDelete
    Replies
    1. ///1. நதி தான் இரண்டு கதையிலும் முக்கிய மையம், முதல் கதையில் நதியில் கப்பல் எரிகிறது,
      இரண்டவாது கதையில் கானகம் எரிகிறது.
      2. மனிதாபிமானம் தான் பிரதானம்
      முதல் கதையில் வாக்கர் காப்பாற்றுதல்,
      இரண்டாவது கதையில் குட்டிக்கரடி காப்பாற்றுகிறார்.
      3.முதல் கதையில் பார்னேவை பிரின்ஸ் காப்பாற்ற, இரண்டாவது கதையில் ஜின்னை பார்னே காப்பாற்றுகிறார். ///

      செம!

      Delete
    2. இது விரிவான விமர்சனம்..


      இது விளக்கமான விமர்சனம்..


      இது அட்டகாசமான விமர்சனம்...



      இது அருமையான விமர்சனம்...



      இது அழகான விமரசனம...



      இது சுவையான வமர்சனம் ..

      Delete
  56. சார்! ''நிஜங்களின் நிசப்தம்'' எப்போது கிடைக்கும்.??

    ReplyDelete
    Replies
    1. டிசம்பர்-15 வாக்கில்!

      Delete
    2. ஆமாப்பா எல்லாரும் டிசம்பர் 15 வாக்கிங் போங்க. அந்த வாக்கில் கிடைக்கும்

      Delete
  57. @ மாயாவிகாரு

    '250-வது (மைல்கல்) மாத்தியோசி'க்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    250 'இங்கே க்ளிக்'களுக்கு பின்னால் செலவிடப்பட்டிருக்கும் உழைப்பும், நேரமும் சாதாரணமானதல்ல!

    தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் பணி!

    (எழுந்துநின்று கைகளைத்தட்டும் படங்கள் ஏழாயிரம்!)

    ReplyDelete
  58. பிரின்ஸ் ஸ்பெசலில் அட்டையில் உள்ள வரிசைப்படி முதலில் கொலைகார கானகமும் இரண்டாவதாக நதியில் ஒரு நாடகமும் இருந்திருக்க வேண்டும்

    ReplyDelete
  59. ***** கொலைகாரக் கானகம் ******

    அப்பப்பா!! சமீப நாட்களில் இப்படியொரு உச்சபட்ச அதிர்வை ஏற்படுத்தும் சாகஸத்தை படித்ததில்லை!

    கதையின் இரண்டாவது பக்கத்திலிருந்து ஆரம்பிக்கும் பரபரப்பு கடைசி பக்கம் வரை - கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தபடியே சென்று - நான் மேற்கூறிய உச்சபட்ச அதிர்வில் கொண்டு போய் நிறுத்துகிறது! படித்துமுடித்தபோது பல கிலோமீட்டர்கள் ஓடியதைப் போல நமக்கும் மூச்சு வாங்குகிறது! கதையே நெருப்பைப் பற்றியதுதான் என்பதாலேயோ என்னமோ, படுத்தபடியே படித்த எனக்கும் கட்டிலுக்கடியில் நெருப்புப் பிடித்தமாதிரி ஃபீலிங்கு!

    சிறுவயதில் இக்கதையை ஓரிரு முறை மட்டுமே படித்தா மாதிரி இருக்கிறது. அதனால் கதையின் 90% சம்பவங்கள் என் ஞாபகத்தில் இல்லை. அதை என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் இப்படியொரு 'திக்திக்-தடக்தடக்' வாசிப்பு அனுபவம் கிட்டியிருக்காது!

    ஒரு தீவு - பற்றியெரியும் காட்டுத்தீ - அதில் மாட்டிக்கொண்ட மக்கள் கூட்டம் - அவர்களைக் காப்பாற்றக் கிளம்பும் நம் பிரின்ஸ் குழுவினர். இதுதான் கதை! எனினும் அதை நகர்த்தியிருக்கும் விதம் - மறுபடியும் ஒரு அப்பப்பப்பா! அன்றைய காலகட்டத்தில் இது 'திகில் காமிக்ஸ்' பேனரில் வெளிவந்தது மிக மிகப் பொருந்தும் - அப்படியொரு திகில் - கதை முழுக்க!

    இக்கதையில் பிரின்ஸ் ஆகட்டும், பார்னே ஆகட்டும், பொடியன் ஜின் ஆகட்டும் - ஒருவருக்கொருவர் சளைக்காமல் சாகஸம் செய்து அசத்தியிருக்கிறார்கள்!

    இதுபோன்று இயற்கையோடு சேர்ந்து செய்யப்படும் சாகஸங்களை இன்னும் நூறுவருசம் கழித்துப் படிக்க நேர்ந்தாலும் ( பழைமையின் நெடியறியாமல் ) யாரும் லயித்துப் படிக்கமுடியும் என்பது இதன் தனிச் சிறப்பு!

    ஓவியர் ஹெர்மனை சிவகாசிக்குக் கடத்திவந்து, நம்ம எடிட்டரை ஒரு சாகஸக் கதை சொல்ல வைத்து, கேப்டன் பிரின்ஸின் கதையை மறுபடியும் உருவாக்கிடுவது சாத்தியமென்றால், அந்தக் கடத்தல் கும்பலுக்கு தலைமை தாங்கிட - ஐ யாம் ரெடி!

    ReplyDelete
    Replies
    1. ////இதுபோன்று இயற்கையோடு சேர்ந்து செய்யப்படும் சாகஸங்களை இன்னும் நூறுவருசம் கழித்துப் படிக்க நேர்ந்தாலும் ( பழைமையின் நெடியறியாமல் ) யாரும் லயித்துப் படிக்கமுடியும் என்பது இதன் தனிச் சிறப்பு!////

      👏👏👏👏

      +111111

      Delete
    2. நண்பர் ஈரோடு விஜய் சொல்வது போல் ஹெர்மான் அட்டகாசமான ஓவியர் தான் அவரது படைப்பு வானவில் தோட்டம்....

      Delete
  60. 'கேப்டன் பிரின்ஸா? ரிப்போர்ட்டர் ஜானியா?' என்று ஓட்டெடுப்பு நடந்தபோது கள்ள வோட்டுகளாக குத்தோ குத்தென்று குத்திய அத்துனை நல்ல உள்ளங்களையும் இங்கே நன்றியோடு நினைவுகூர்கிறேன்! உங்களது அயராத உழைப்பின்றி(!) இந்த அட்டகாசமான மறுபதிப்பு ஸ்பெஷல் சாத்தியமாகியிராது! _/\_

    மக்கள்தொகைக்கு மேற்பட்ட வோட்டுகள் விழுந்தாலும் - இறுதியில் 'இரண்டு கதைகளும் பிரின்ஸுக்கே' என அருமையான முடிவெடுத்த அந்த டெல்லியிலிருந்து வந்த தேர்தல் அதிகாரிக்கும் நம் நன்றிகள் பல! _/\_

    ( இடைத் தேர்தல் நடத்தும் ஐடியா ஏதாவது இருக்குங்களா அதிகாரி சார்?) ;)

    ReplyDelete
    Replies
    1. பொட்டி பெரீய சைஸ் விஜய்.
      பிரின்ஸ் ஜெயித்ததுக்கப்புறம் இடைத்தேர்தல் தேவையா?

      Delete
    2. ///பிரின்ஸ் ஜெயித்ததுக்கப்புறம் இடைத்தேர்தல் தேவையா?///

      பூராவும் கள்ளவோட்டு கணேஷ் ஜி!

      நேர்மையான ஜானியையும் நியாயமான ஜானி ரசிகர்களையும் ஏமாத்திடுச்சி அந்த தேர்தல்.!!

      Delete
  61. நதியில் ஒரு நாடகம் : -

    வழக்கத்திற்கு மாறாக மிகமிக தெளிவான சித்திரங்களுடன் ஒரு பெர்னார்டு பிரின்ஸ் சாகசம்.! அதுவும் முதல் இருபது பக்கங்கள், கதையில் வரும் மான்டெனாவானா நாட்டின் பிரசிடென்ட் வாக்கரின் உச்சந்தலையைப்போல் அப்படியொரு தெளிவு. ! வண்ணக்கலவை பக்கத்தை புரட்டவிடாமல் கட்டிப்போட்டுவிட்டது என்றால் மிகையாகாது.!
    கடலும் கப்பலும் கானகமும்.., ஏன் பிரின்ஸும் பார்னேவும் கூட ரொம்பவே அழகாக காட்டப்பட்டுள்ளனர்.!

    ஏகாந்தமாக கடலை ரசித்தபடி கழுகில் தேமேவென்று பயணித்துக்கொண்டிருக்கும் பிரின்ஸ் குழுவினரின் கண்முன்னே ஒரு சொகுசுக்கப்பல் வெடித்துச்சிதறுகிறது.! விபத்திலிருந்து தப்பும் ஆசாமியை காப்பாற்றும் பிரின்ஸ் குழுவினருக்கு, அந்த ஆசாமி மான்டெனாவானா நாட்டின் ஜனாதிபதி என்றும், அவரை கொல்ல மான்டெஸா என்னும் நபர் செய்த சதியே அந்த வெடிவிபத்து எனவும் தெரியவருகிறது.!
    அவசர அவசரமாக பதவியேற்கத் துடிக்கும் மான்டஸாவின் கண்களில் மண்ணைத்தூவி, வாக்கருக்கு விசுவாசமாக இருக்கும் படைப்பிரிவிடம் அவரை எப்படி கொண்டு சேர்க்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாக பிரின்ஸ் ஷ்பெசல் வாங்கிப் படித்தால் தெரிந்துகொள்ளலாம்.!

    நரமாமிசம் சாப்பிடும் காட்டுவாசிகள், மன்டெஸாவின் படையினர், கடுமையான கானகம் .. இத்தனையும் தாண்டி வாக்கரை பத்திரமாக அந்த ராணுவப்பயிற்சி முகாமில் பிரின்ஸ் குழுவினர் கொண்டு சேர்க்கும்போது, நமக்கே ஷ்ஷ்ஷ் அப்பாடா ..! என்று சொல்லத்தோன்றும்.!

    கொலைகார கானகம் :-

    காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள தீவில் இருக்கும் மக்களை காப்பாற்றுவதற்காக, அந்த கடற்பிராந்தியத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் அனைத்து கப்பல்களுக்கும் தகவல் வருகிறது. ! அங்கேஇங்கே கொஞ்சமாய் அடிவாங்கி, சைசில் சின்னதாக இருந்தாலும்கூட
    தங்களுடைய கழுகையும் ஒரு கப்பல் என்று நினைத்துக்கொண்டு பிரின்ஸ் குழுவினரும் அங்கு செல்கின்றனர்.!

    தீவிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருவதை தெரிவித்து வழிநடத்த பிரின்ஸ் தனித்து முன்னதாக கடினமான பாதையில் கிளம்புகிறார்.! கழுகை இழுத்துக்கொண்டு பார்னேவை பின்னே வரச்சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு தனியாக காட்டுத்தீ கப்ளீகரம் செய்து கொண்டிருக்கும் தீவில் களமிறங்கும் பிரின்ஸோடு சேர்ந்து நாமும் அந்த பயங்கரப் பயணத்தில் (வழியில் ஒரு கண் தெரியாத கரடியை வேறு போட்டுத்தள்ளிவிட்டு) பங்கெடுத்த உணர்வு கதையை படிக்கும் போது ஏற்படுகிறது. !

    ஹெர்மன் வழக்கம்போல அதகளப் படுத்தியிருக்கிறார். (பிரின்ஸைவிட அந்த பற்றியெரியும் தீவை அழகாக வடித்திருக்கிறார்.)
    பிரின்ஸ் ஷ்பெசலின் இரண்டு கதைகளும் ஒன்றொக்கொன்று சளைத்தவை இல்லை. !

    ஹார்டு பவுண்டில் செம்ம லுக்காக இருக்கும் பிரின்ஸ் ஷ்பெசலுக்கான

    ரேட்டிங் 9/10

    ReplyDelete
    Replies
    1. இது விரிவான விமர்சனம்..


      இது விளக்கமான விமர்சனம்..


      இது அட்டகாசமான விமர்சனம்...



      இது அருமையான விமர்சனம்...



      இது அழகான விமரசனம...



      இது சுவையான வமர்சனம் ..


      Delete
    2. சமீபத்துல வீராச்சாமி படம் பாத்தீங்களா தலீவரே ..! ;)

      Delete
  62. இன்று பிறந்தநாள் கானும் இனிய தோழி கடல் யாழ் என்கிற ரம்யா ஸ்ரீ க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து காமிக்ஸ் சுவை காலம் முழுவதும் அவருக்கு கிடைத்திட வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அப்படியே விரைவில் திருமணம் நடக்க விருக்கும் கடல் யாழின் உயிர்த்தோழி காமிக்ஸ் நண்பி விஷ்னுப்பிரியா விற்க்கு இனிய திருமண வாழ்த்துக்கள் காலம் முழுவதும் தம்பதி சகிதமாய் ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள்

      Delete
    2. கடல் யாழ் என்கிற ரம்யா ஸ்ரீ க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

      விஷ்னுப்பிரியாவுக்கு அட்வான்ஸ் - திருமண வாழ்த்துக்கள்!

      Delete
    3. கடல் யாழ் என்கிற ரம்யா ஸ்ரீ க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!!

      விஷ்னுப்பிரியாவுக்கு அட்வான்ஸ் - திருமண வாழ்த்துகள்..!!

      Delete
    4. கடல் யாழ் என்கிற ரம்யா ஸ்ரீ க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!!

      விஷ்னுப்பிரியாவுக்கு அட்வான்ஸ் - திருமண வாழ்த்துகள்..!!

      Delete
    5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
      கடல் யாழ்.

      Delete
    6. கடல் யாழ் என்கிற ரம்யா ஸ்ரீ க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!!

      விஷ்னுப்பிரியாவுக்கு அட்வான்ஸ் - திருமண வாழ்த்துகள்..!!

      Delete
    7. கடல் யாழ் அவர்களுக்கு கடல் அளவு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

      Delete
    8. @Senthil Sathya
      Iniya vazhthukalukku nanrigal Thozhare ☺

      Delete
    9. @Erode Vijay
      Nanri Sagotharare
      Appuram sivakasiyilirunthu eththanai books eduthutu vantheenga

      Delete
    10. @Kid Artin Kannan
      Nanrigal pals Sagotharare ☺

      Delete
    11. @Govindraj Perumal
      Kadal alavukku nanrigal sagotharare
      ☺☺☺

      Delete
  63. இனிய தோழி கடல்யாழ் இற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர்களது தோழியான சகோதரி விஸ்ணுபிரியாவுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  64. சகோதரி கடல்யாழ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
    வாழ்க பல்லாண்டு....

    ReplyDelete
  65. விஜயன் சார் புதிய 13 முன்பதிவு
    பட்டியல் ப்ளீஸ்.

    ReplyDelete
  66. To Vikram & Keerthana
    Happy Married life
    Wishing U a joyous life ahead

    To Vijayan Sir
    Sorry sir could not make it to sivakasi
    I had my yearly review in my company on Nov 29

    ReplyDelete
  67. கடல்யாழ் அவர்களுக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
    இணைய பக்கமே வருகையில்லையே!
    வேளைப்பளுவா?
    தங்களது தாயார் நலமாயிருக்கிறார்களா?
    உங்களின் தோழிக்கும் எனது அட்வான்ஸ் மணநாள் வாழ்த்தினை தெரிவித்திடுங்கள்.

    ReplyDelete
  68. இன்று பிறந்தநாள் கானும் இனிய தோழி கடல் யாழ் என்கிற ரம்யா ஸ்ரீ க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து காமிக்ஸ் சுவை காலம் முழுவதும் அவருக்கு கிடைத்திட வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  69. கடலயாழ் அவர்களின் தோழி விஷ்ணுபிரியா அவர்களுக்கு அட்வான்ஸ் திருமண வா்ழ்த்துக்கள் ..

    ReplyDelete