Powered By Blogger

Sunday, June 25, 2017

க்யூபாவுக்குப் போவோமா..?

நண்பர்களே,
வணக்கம். என் தாய்வழித் தாத்தா ஒரு கதர் பிரியர். சொட சொட சொடக்கும் வெள்ளை கதர் சட்டையும், வெள்ளை வேஷ்டியும் அவருக்கொரு அடையாளமாகவே ஆகிப் போயின ! ஆனால் தமிழகத்தைத் தாண்டி, பணி நிமித்தம் பயணம் செல்ல நேரிடும் போதெல்லாம், வேஷ்டி, சட்டைக்கு வி்டைகொடுத்து விட்டு, பேண்ட் & ‘இன்‘ செய்யப்பட்ட சட்டைக்கு மாறி விடுவார். 1984-ல் என்னோடு டெல்லிக்கு இரயிலைப் பிடிக்கும் நேரத்தில் இந்த ‘மாடர்ன்‘ லுக்கில் அவரைப் பார்த்த போது ஒரு நொடிக்கு ‘பக்‘கென்றது எனக்கு ! அந்த நாட்கள் தான் நினைவுக்கு வந்தன- இம்மாதம் ! அதுவும் நமது ‘தல‘யின் புண்ணியத்தில் ! மடிப்புக் கலையாத மஞ்சள் சட்டை; கழுத்தில் டிரேட் மார்க் கறுப்பு ஸ்கார்ப் ; நீல ஜீன்ஸ் ; இடையில் பிஸ்டல் பெல்ட் என முக்காலே மூன்று வீச நாட்களில் மாறாத 'லுக்கில்' வலம் வருபவர், நவஹோ குடியிருப்புகள் பக்கம் தலைகாட்டும் போது அவர்களது பாரம்பரிய உடையோடும் காட்சி தருவாரென்பது நமக்குத் தெரியும் ! ஆனால் லார்ட் லபக்தாஸ் போல பேண்ட்; சட்டை; கோட்; தொப்பி; உதட்டில் சுருட்டு என்று மனுஷன் நம் முன்னே ஆஜரானால் - மெர்சலாகிப் போகாது என்ன செய்வதாம் ? ஓ... யெஸ்... காத்திருக்கும் “க்யூபா படலம்” சாகஸத்தில் தான் நம்மவர் இப்படித் தோரணையாய் அசத்திடக் காத்திருக்கிறார்!

நமது ஜுலை மாதப் பணிகளில் முக்கால்வாசி நிறைவுற்று விட்ட நிலையில்-  லயன் # 300 தான் மிரட்டலாய் இன்னமும் எஞ்சி நிற்கிறது ! சில பல சொந்தப் பணிகள் காரணமாய் இடையில் 4 நாட்கள் லீவு போடும் அவசியம் நேர்ந்திட- இப்போதோ நேரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடிய பிழைப்பாக உள்ளது - லயனின் இந்த 'லேண்ட்மார்க்' இதழினைப் பூர்த்தி செய்திடும் பொருட்டு ! And அதன் பிரதான highlight – இரவுக் கழுகாரின் “க்யூபா படலம்” தான் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது ! நடப்பாண்டில் டெக்ஸின் கதைகள் வைகையைத் தீப்பற்ற வைத்திருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் முதல் ஆள் நானே ! தெர்மோகோல் போட்டு மூடப்படாதது தான் காரணமா ? அல்லது சற்றே துவக்க நாட்களது கதைகள் பக்கமாய் ஷண்டிங் அடித்ததன் பலனாக கதைகளில் ஒரு fire குறைவாகத் தட்டுப்பட்டதா ? என்று தெரியவில்லை ; ஆனால் விட்ட குறையைத் தீர்த்திட “க்.ப”வில் நம்மவர் அடித்து ஆடியுள்ளார் !என்னவோ ஒற்றை வரிக் கதை தான்; ஆனால் அந்த ஒற்றை வரியைக் கதாசிரியர் போசெல்லி பதித்துள்ளதோ நமக்கு ரொம்பவே புதுசான க்யூபாவில்!! அமெரிக்காவின் வால் பகுதியில் குந்தியிருக்கும் மெக்ஸிகோ தேசமானது - நமது கௌபாய் கதைகளின் ஏகத்துக்குப் பின்புலமாக இருந்ததுண்டு ! போன மாதத்து டெக்ஸ் சாகஸமே கூட அதற்கொரு உதாரணம் தானே ? ஆனால் மெக்ஸிகோவுக்கும், கீழே – ஷேப் இல்லாத சப்பாத்தியைப் போல படர்ந்து கிடக்கும் க்யூபா தேசம் அத்தி பூத்தாற் போல் மட்டும் காமிக்ஸ்களின் களமாகியிருந்துள்ளது ! இம்முறையோ அந்த மண்ணின் பாரம்பரியம் ; வரலாறு; பூகோளம்; அரசியல்; மத நம்பிக்கைகள்; ஊடூ சூன்யத் தாக்கம் ; அடிமைக் கலாச்சாரம் ; சுதந்திரப் போராட்டம் என சகலத்தையும் துளி கூட நெருடலின்றி – ஒரு திகிலூட்டும் டெம்போவில் போசெல்லி நமக்குச் சொல்லவிருக்கிறார்! கதைக்களமே ஒரு இருண்ட மர்ம பூமி என்பது பற்றாதென்று – ஊடூ மாந்த்ரீக நம்பிக்கைகள் சார்ந்த அதிரடிகளோடு இந்தப் பயணம் தடதடக்கும் போது நம்மையும் அறியாமல் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு பக்கங்களைப் புரட்டப் போகிறோமென்பது உறுதி ! அதிலும் சித்திர பாணி – புதியதொரு ஓவியரின் கைவண்ணத்தில் அசாத்தியமாய் மிளிர்கிறது! 

‘கடல் சார்ந்த சாகஸம்‘ எனும் போது அந்த மாமூல் பாலைவன உடுப்புகளுக்கும், குதிரைகளுக்கும் விடை தந்து விட்டு, கப்பலில் கோட் சூட் சகிதம் சுற்றி வருவதும்; க்யுபாவில் ரயிலில் பயணம் செய்வதும் ஒரு பக்கமென்றால் – 'நீரும்-நெருப்பும்' எம்.ஜி.ஆரைப் போல வாள் சண்டையில் பட்டையைக் கிளப்புவது இன்னொரு பக்கம் ! தீவிர டெக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட  ட்ரீட் காத்துள்ளது! அதே நேரம் மேம்போக்கான ஆக் ஷன் கதையாக மட்டும் இருந்திடாது – உலகின் மறுகோடியிலுள்ளதொரு புதிர் தேசத்தைப் பற்றி மேற்கொண்டும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை நம்முள் கிளறிட இங்கே ஏகமாய் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன! So- ஊடூ ஆண்டவர் தேசத்தின் ஆராய்ச்சிக்கு, கூகுள் ஆண்டவரைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாமே ?

டெக்ஸின் அதிரடி ஒரு பக்கமெனில் பென்சில் இடையழகி ஜுலியாவின் த்ரில்லரோ முற்றிலும் வேறொரு பாணி! நம்மிடையே இந்த க்ரிமினாலஜிஸ்ட் இப்போது தான் சிறுகச் சிறுக மவுசு ஈட்டி வருகிறார்; ஆனால் இத்தாலியிலோ இவர் இப்போதொரு established சாதனையாளர்! 220+ ஆல்பங்கள் இவரது கதைத்தொடரில் இருந்திட – அங்குள்ள புக் ஸ்டோர்களில் பிரத்யேக “ஜுலியா ரேக்குகள்” ஏற்பாடாகும் அளவிற்கு இவரொரு அம்மாடக்கராகி இருப்பது தான் யதார்த்தம்! லயன் # 300-ல் இவரது கதை – பேசப்படும் ஒன்றாக அமைந்திடுமென்ற நம்பிக்கை நிறையவே உள்ளது எனக்கு ! "ஆ....இவரது கதையா ? மொக்கை தான் !! " என்ற தீர்மானங்களை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளாது - கதைக்குள் பொறுமையாய்ப் புகுந்திட ஒரு வாய்ப்பு தந்து தான் பாருங்களேன் ? 

ஒரு பெண் புலியின் பாணி ஓசையில்லா தாண்டவமென்றால் – கைகோர்க்கும் மற்றொரு பெண் வேங்கையோ அதிரடியின் மறு பெயர் ! யெஸ் – ஆண்டில் இரண்டாவது தடவையாகத் தலைகாட்டும் தங்கத் தாரகை மாடஸ்டி – “சிறையில் ஒரு சிட்டுக் குருவி”யில் வழக்கம் போல போட்டுத் தாக்குகிறார்! சித்திரங்களில் வழக்கம் போல ஏகக் காற்றோட்டம் மிளிர, நமது DTP அணி நொடியில் கண்ண பரமாத்மாவாக உருமாறி – போத்தீஸ் போகாமலே மீட்டர் மீட்டராய் துணியை வரவழைத்து விட்டிருந்தனர்! “ஆஹா... அந்த டெய்லர் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள்!” என்று சொல்லி, மறுபடியும் இளவரசிக்கு வியர்க்காத வகையில் ventilation-க்கு வழி செய்திருக்கிறேன்! நாளை தீர்மானிக்க வேண்டும் – திருப்பூரில் சிபிஜியிடம் சொக்காய் ஆர்டர் சொல்வதா ? வேண்டாமாவென்று !

முன்னூறின் – இறுதிக் கதையொரு ராபின் டிடெக்டிவ் த்ரில்லர்! நியூயார்க் எனும் பரிச்சயமான களம்... NYPD-ன் வழக்கமான துப்பறியும் அணி என்று crisp ஆன சித்திரங்களில், சுறுசுறுப்பாய் நகரும் கதையிது! And நிறைய காலம் கழித்தொரு அக்மார்க் டிடெக்டிவ் த்ரில்லர் நமது வாசிப்பிற்குக் கிட்டியிருப்பது highlight.

“டிடெக்டிவ் த்ரில்லர்கள்” என்ற topic–ல் இருக்கும் போது – எனக்குள்ளே லேசானதொரு ஏக்கப் பெருமூச்சும் கூட! Once upon a time – நமது இதழ்களுள் திரும்பின திசையெல்லாம் துப்பாக்கி ஏந்தும் டிடெக்டிவ்கள் சுற்றி வந்தது வரலாறு! ஆனால் அவர்களெல்லாமே பெருந்தலைவர் காலத்து அரசியல் நாணயத்தைப் போல காலாவதியாகிப் போய் விட்டது தான் இன்றைய நிலைமை ! இப்போதும் பிஸ்டல்கள் சரளமாய் கண்முன்னே நடமாடுகின்றன தான் - ஆனால் நமது வன்மேற்குப் பார்ட்டிகளின் கரங்களில் ! சமீபமாய் இந்தத் “துப்பறிவாளர்களின் பஞ்சத்துக்கொரு” தீர்வு காண ரூம் போட்டு யோசித்த போது சில பல டிடெக்டிவ் பெயர்கள் முன் நின்றன! அவர்களுள் முக்கால்வாசிப் பேர் வெவ்வேறு காரணங்களின் பொருட்டு சுகப்படாது போவது புரிந்த போது – “you are unselected!” என்று தான் சொல்ல முடிந்தது. இறுதியாய் எஞ்சி நின்றதொரு 'பிஸ்டல் பார்ட்டிக்கு' யாருமே மறுப்பு சொல்ல முடியாதென்று தோன்றியதால் – அவருக்கு மட்டும் “you are unrejected” என்று சொல்லி வைத்தேன்! So கான்டிராக்ட் போடும் படல சம்பிரதாயமும் சுபமாய் நடந்தேறிட  – 2018-ல் எதிர்பார்த்திடலாம் இந்த அழகரை !

அவருக்கு இம்மி கூட குறைவில்லா இன்னொரு அதிரடி நாயகருமே நம் தேடலில் தட்டுப்பட – அவரையும் தமிழ் 'மாட்லாட' அழைத்திருக்கிறோம். ஒரே சிக்கல் என்னவெனில் அவரது கதைத் தொடரில் இது வரையிலும் இரண்டே ஆல்பங்கள் தான் வெளியாகியுள்ளன ! # 3 ரிலீஸ் ஆகும் தினத்துக்கு மனுஷனை ஒரு கோணிச் சாக்குக்குள், மரத்தடிப் பிள்ளையாரைப் போல போட்டு அடைத்து தூக்கி வந்திட முஸ்தீபுகள் தயாராக உள்ளன! இந்தாண்டின் இறுதிக்கு ஆல்பம் # 3 ரிலீஸாகி விடும் என்று படுவதால் – 2018-ல் நம்மை மிரட்ட இவருமே தயாராகி விடுவாரென்று படுகிறது ! Fingers Crossed!

Back on track – லயன் # 300-ல் இம்முறை காத்திருக்கும் black & white விருந்தானது நிச்சயமாய் ரமலான் பிரியாணி போல சுவையாக இருக்குமென்ற நம்பிக்கை ஏகமாயுள்ளது ! என்ன ஒரே சிக்கல் – தயாரிப்பில் நாக்கு... மூக்கு.... காது.... என்று சகல அவயங்களும் தரையைச் சுத்தம் செய்யக் கிளம்பி விடுகின்றன! காத்திருக்கும் வாரமானது கோரிடும் பணிகளின் தன்மையை நினைக்கும் போதே மூச்சிரைக்கிறது ! Phew ! And இதோ – லயன் # 300 ன் அட்டைப்பட முதல் பார்வையும் :
இது வழக்கமான பெரிய சைஸ் அல்லாது – மாமூலான டெக்ஸ் சைஸிலான இதழ் எனும் போது முன்னட்டையில் அத்தனை நாயக / நாயகியரின் collage ஒன்றினை உருவாக்கத் தோன்றவில்லை - ஏகமாய் இடநெருக்கடி எழுந்து விடுமென்பதால் ! And முன்னட்டையில் இருக்க வேண்டியது நமது சூப்பர் ஸ்டாரே என்பதிலும் ஐயமிருக்கவில்லை ! So அவரது ‘ஹாயான‘ போஸ் ஒன்றினை நமது ஓவியரைக் கொண்டு உருவாக்கி அட்டைப்படமாக்கிப் பார்த்தோம் ! ஆனால் பின்னணியில் டிசைனர் பொன்னன் ரொம்பவே கைவண்ணத்தை காட்டிட – அத்தனை சோபித்தது போலப் படவில்லை !
தவிர, டிசைனை ஆற, அமர ஆராய்ந்த போது ‘தல‘யின் இடது கை – குளிருக்கு இழுத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது! அட... அரிசோனாவில் அடிக்கும் வெயிலில் கை இழுக்க வாய்ப்பு லேதாச்சே? என்ற ஞானத்தோடு இன்னொரு டிசைனைப் போடுமாறு ஓவியரைக் கோரினோம் ! இம்முறை கதையின் சம்பவங்களையுமே பின்னணியில் இணைக்கச் சொல்லி விபரம் சொல்லிட, ‘பச்சக்‘கென்று போட்டுத் தாக்கினார் மாலையப்பன். அந்த டிசைனை கொஞ்சம் மெருகூட்டி, எழுத்துக்களை இணைத்த போது – LION 300 ராப்பர் உருப்பெற்றது. வழக்கமான நகாசு வேலைகளும் இடம்பிடித்திடும் என்பதால் இதழைக் கையிலேந்தும் வேளையில் எப்போதும் போலவே அந்தத் 'தடவிப் பார்க்கும் படலம்' காத்திருக்கும் உங்களுக்கு!
அட்டைப்படப் பணிகளில் இதோ – ஆகஸ்டின் அதிரடிக்கும் இன்னொரு முயற்சி! கேப்டன் டைகரின் ”இரத்தக் கோட்டை”க்கென தொடர்ந்து முயற்சித்து வரும் அட்டைப்பட டிசைன்களுள் இதோ நமது லேட்டஸ்ட்! 
ஏற்கனவே 2 டிசைன்களைப் பார்த்திருக்கிறீர்கள்... and இது நம்பர் 3! இன்னமுமே ஓய்ந்தபாடில்லை நமது தேடல்கள்! So ஆகஸ்டில் ஈரோட்டில் நீங்கள் பார்த்திடவுள்ள ராப்பர் எதுவாகயிருக்குமோ என்பது இப்போதைக்கு எனக்கே தெரியாது !

சரி... இளவரசியின் பஞ்சாயத்தும், ஜுலியாவின் அதகளமும் அழைப்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன் ! See you around guys! Have a great Sunday! 

270 comments:

  1. வாவ்... அட்டைப்படங்கள் சிறப்பு.....!!!

    ReplyDelete
  2. அட்டைப்படங்கள் கலக்கல் ரகம். 3000+ காண வாழ்த்துக்கள் (சுயநலம் கூடத்தான்). நிறைய காமிக்ஸ் சீக்கிரமே படிக்க ஆசை. நிறைய வெளியிடுங்கள் சார்... இம்மாத tex கதை நேரில் எருது சண்டை பார்த்த உணர்வை தந்தது. படங்களும் அருமை. வழக்கம் போல ரின் டின் கேன் தூள் கிளம்பிவிட்டார் (கிளப்பிவிட்டது)...

    ReplyDelete
  3. Tex and Blueberry covers looks classy, especially the Tiger issue with 'Holi' like colors would be a break-away trend for our style.

    ReplyDelete
  4. லயன் 300 2 வது அட்டைபடம் அருமை ( முன் அட்டை மட்டும்).
    தங்க தலைவனுக்கு அட்டைப் படம் அருமை... பின்னட்டை மஞ்சள் வர்ணம் எடுபட வில்லை..

    ReplyDelete
  5. அட்டை படங்கள் எல்லாமே அதகளப்படுத்துகின்றன . அதிலும் லயன் 300 இன் அட்டை படம் சான்ஸே இல்லை . சூப்பர் சார் . இரத்த கோட்டை இன் அட்டை பட முயற்சியும், சிறப்பு .

    ReplyDelete
    Replies
    1. என்ன ரும்மி கொஞ்சம் நாளாக இந்த பக்கம் உங்களை பார்க்க முடியவில்லை?

      Delete
    2. அவர் டைகரை பத்தி பேசுனா தான் வருவாரு சார்...:-)

      Delete
    3. அப்ப சில்கி பத்தி பேசுனா வரமாட்டாரா....

      இவருக்கு காமிக்ஸ்னா டைகர் என்பதை மின்னும் மரணம் வெளியீட்டு விழாவில் வாஞ்சையுடன் அட்டைபடத்தை தடவி பார்த்த போதே புரிந்து கொண்டேன். இன்றும் பசுமையாக உள்ளது அந்த காட்சி..

      Delete
  6. வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்......
    லயன் 300 அட்டைப்படம் செம சார்.....
    டைகர் ட்ரஸ் கலரும் பட்டாசு....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஜி இவ்வளவு பெரிசா கொட்டாவி எல்லாம் விடாதீங்க... ஓ சாரி உங்களை ஏதேனும் கடிச்சிவிட்டதா... இல்ல இவ்வளவு பெரிசா சத்தம் கொடுக்கிறத பார்த்து பயந்து விட்டேன்.. ஐயோ போன வாரம் கொரியர்ல அனுப்ப சொன்ன பூரிக்கட்டை பறந்து வருதே....

      ஜோக்ஸ் போதும். புத்தகம் கையில் வந்த உடன் இதை விட பெரியதாக சத்தம் கொடுப்போம் ஜி.

      Delete
    3. ஹா...ஹா...
      பூரிக்கட்டை உண்டு, நிச்சயமாக என்னை மறக்க மாட்டீர்கள் அய்யா அதன் பிறகு...

      Delete
    4. உங்களை எப்படி மறக்க முடியும் ஜி

      Delete
  7. ""டெக்சின் ஹாயான போஸ்""...நான் கூட ஐ.நாவுல அரங்கேற்றம் பண்ணுண "'"டெக்சுனுடைய பரதநாட்டிய"""போசோனு மிரண்டு போயி பாக்க.

    ReplyDelete
    Replies
    1. நானும் தான். அப்படியே ஷாக் ஆகிட்டேன்...

      Delete
    2. ஸ்ரீராம் @ ஹா ..ஹா.ஹா.

      Delete
  8. வாவ்....
    நம்ம Tiger
    வந்துட்டேனு சொல்லு....திரும்ப வந்துட்டேனு சொல்லுனு அட்டைலயே சொல்லாம சொல்றரே!

    ReplyDelete
    Replies
    1. ஆமா எங்க போயிட்டு வந்தாருன்னு முதலில் சொல்லுங்கள்....

      Delete
    2. வேறெங்கே ஜெயிலுக்கு தான்...:-)

      Delete
    3. நானும் என்னமோ வருது வருது போயிட்டு வந்தாருன்னு நினைச்சிட்டேன் சாரே

      Delete
    4. சே..சே...ஒரு வருஷம் கழிச்சு குளிச்சிட்டு பிரெஷ்'ஆ வராரு ;-)

      Delete
    5. டெக்ஸ் கார்ஸனிடம்: வருஷம் ஓரு தடவை ஆகஸ்ட் புத்தக திருவிழால் துப்பாக்கி எடுத்து கிட்டு வந்தா, டைகர் பெரிய ஆளு நினைப்பா...?

      கார்ஸன்: மெதுவாக பேசு அவ காதுல விழப் போகுது...

      டெக்ஸ் :
      மிலிட்டரி ஆபிஸர்ணா தலையில என்ன ரெண்டு பிஸ்டலா முளைச்சு இருக்கு...

      டைகர்:
      அங்க என்ன சத்தம்.

      டெக்ஸ் :
      சும்மா பேசி கிட்டு இருக்கேன் சார்.

      டெக்ஸ் கார்ஸனிடம் :
      1000 ரூபாய்க்கு புத்தக ம் வெளியே வந்த திமிரு.

      டைகர் :
      மறு படியும் அங்க என்ன சத்தம்.

      டெக்ஸ் :
      சும்மா பேசி கிட்டு இருக்கேன் சார்.

      Delete
    6. இதுக்குதான் இந்த பில்டப்பா சரவணா.. என்னமோ போடா

      Delete
  9. விடிய காலை வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  10. இந்த நியூ லுக் செமயாக உள்ளது.

    ReplyDelete
  11. புத்தகங்கள் விரைவாக வெளிவர வேண்டும்

    ReplyDelete
  12. வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  13. டைகர் அட்டைப்படம் அருமை சார்.கண் பட்டுடும்..

    ReplyDelete
    Replies
    1. ME TOO

      சுத்திப் போட்ரலாம் வுடுங்க!!!

      Delete
  14. நமது ப்ளாக்கின் இந்த புதிய வடிவமைப்பு, பின்பக்க வண்ணகலவை (சுருக்கமாக சொன்னால் பரிமாணம் ) அட்டகாசமாக உள்ளது. கண்ணுக்கு இதமான வண்ணத்தில் மொபைலில் இருந்து படிக்க வசதியாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ரைமிங்கா கமெண்ட் போடுறிங்க ஜி.

      Delete
    2. கரீட்டா சொன்னீங்க பாஸ்!!

      Delete
  15. லயன் 300 அட்டைபடங்கள் இரண்டும் சுமாராக உள்ளது. அதுவும் முன் பக்க டெக்ஸ் சுமார், இதுக்கு இளவரசி படத்தை போட்டுவிடலாம் :-) உங்கள்கிட்ட இருந்து இன்னும் சிறப்பான அட்டைபடத்தை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ////இதுக்கு இளவரசி படத்தை போட்டுவிடலாம் :-) ////

      புக் விக்க வேண்டாம்னு முடிவு பண்ணீட்டீங்களா!

      டெக்ஸ் படம் இல்லாட்டி புக் வியாபாரம் கோவிந்தா ஆயிரும் சாா்!!

      Delete
    2. இளவரசி முரட்டு பக்தர்களே இந்த நண்பர் சொல்லுறது பார்த்திங்களா :-) இவர கொஞ்சம் காதுல ரத்தம் வராத மாதிரி விளக்கம் சொல்லுவோமா:-)

      Delete
    3. இளவரசியை அட்டையில் போட்டாலும் எடிட்டர் அவருக்கு சட்டையை போட்டாலும் விற்பனையில் பட்டையை கிளப்புவாள் மாடஸ்டி. போன பதிவில் டெக்ஸ்க்கு எடி சார்டப்பிங் கொடுத்தது மறந்து போச்சா?
      நாங்களும் இருக்கோமில்ல?.....!!

      Delete
  16. டைகர் முன் அட்டைப்படம லக்கி ஸ்பெஷல் அட்டைபடத்தை நினைவுபடுத்துகிறது, அதுவும் அந்த வெள்ளை மாளிகை பல வருடங்கள் முன்னால் வந்த XIIIன் குண்டு புத்தக அட்டைபடத்தை ஞாபகப்படுத்திவைக்கிறது. எனவே சாரி. பின்பக்க அட்டைப்படம் அட்டகாசம்.

    ReplyDelete
    Replies
    1. ////டைகர் முன் அட்டைப்படம லக்கி ஸ்பெஷல் அட்டைபடத்தை நினைவுபடுத்துகிறது, ////

      நான் கூட எங்கியோ பாத்த மாதிரியே இருக்குதேன்னு நெனைச்சேன்!!

      Delete
  17. இப்பதான் கவனிச்சேன், 300ன் முதல் அட்டையில் டெக்ஸூக்கு கொஞ்சம் லூசாக pant தைச்சிட்டாங்களோ ? பின்னர் என்ன சார் pantஐ ஒரு கையால் பிடித்து கொண்டு துப்பாக்கி வைத்து கொண்டு சண்டை போடுகிறார். அவரு pantக்கு எதாவது நடக்குறதுக்குள்ள வேற pant கொடுத்துவிடுங்கள்.

    ReplyDelete
  18. Replies
    1. எங்க? வீட்டுக்கு உள்ளேயா?

      Delete
    2. அது சரி இந்த வாரம்... பரணி வாரமா இருக்கமோ?!!!.

      Delete
    3. அடுத்த வாரம் வேலை டென்ஷன் எனக்கு அதிகமாகும் என்பதால் இப்போதில் இருந்து ரிலாக்ஸாக இருப்பது எப்படின்னு பிராக்டீஸ் பண்ணி கொண்டு இருக்கிறேன் ராம் ....:-)

      Delete
    4. அது சரி இந்த வாரம்... பரணி வாரமா இருக்கமோ?!!!.

      Delete
  19. Present sir...!!
    Best wishes to all my dear friends....

    ReplyDelete
    Replies
    1. இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள் பாஷா ஜி...

      Delete
    2. ரம்ஜன் வாழ்த்துக்கள்...

      Delete
    3. இனிய பெரு நாள் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

      Delete
    4. இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் ஜி !

      Delete
  20. Present sir...!!
    Best wishes to all my dear friends....

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஜி.

      Delete
    2. தங்களுக்கும் ..நண்பர்களுக்கும் இனிய ரம்லான் வாழ்த்துக்கள் பாஷா ஜீ....

      (ம்...பக்கத்துல இருந்திருந்தா சூப்பரா பிரியாணி சாப்ட்டு இருக்கலாம்..:-)

      Delete
    3. ம்ம் எனக்கும் தான்... ஆம்பூர் பிரியாணி கடையில் வாங்கி இன்னைக்கு சாப்பிட்ட வேண்டியதுதான்.

      Delete
    4. இனிய ரம்ஜான் வாழ்த்துக்ககள் பாஷா பாய். நாளைக்கு பிரியாணி சாப்பிடறச்சே எனக்கும் சேர்த்து சாப்பிடுங்க பாய்

      Delete
    5. ரமலான் வாழ்த்துக்கள் நண்ரரே!!!

      Delete
    6. இனிய ரமலான் வாழ்த்துக்கள் நண்பரே!!!

      Delete
    7. ×seaguitar ...we come back sister :)

      Delete
    8. @ கடல்யாழ் ...மீள்வரவு இனிதாக அமையட்டும் சகோதரி !!!!
      ( மொபைலில் டைப் செய்ததில் பிழைகள் இருப்பதால் தமிழ் வரவேற்பு )

      Delete
    9. ரமலான் வாழ்த்துக்கள் பாஷா பாய்

      Delete
    10. புனித இரமலான் திருநாள் வாழ்த்துக்கள் பாஷா ஜி.எல்லையில்லா கருணை பெருவொளி அல்லாவின் அருளால் உலகமெலாம் அன்பில் நிறைந்து விளைக!!!. ஒவ்வொருவர் வாழ்விழும் இருள் நீங்கி;மனிதம் உய்ய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

      Delete
    11. நன்றி நண்பர்களே..

      பெங்களூரிலிருந்து வழக்கமா Attend ஆகும் ஒரு சின்ன டீம் நாளை ஆஜராகிறார்கள்.நம் காமிக்ஸ் குடும்பம் சார்பாக நண்பர்கள் யாராச்சும் இந்த பக்கம் எட்டிபாருங்களேன்..
      ஒரு குட்டி வெள்ளரி ஆட்டை ,
      ஆட்டை போடுற பிளான் ஓடுகிறது நம் வீட்டில்....
      கம,கம பிரியாணியை ஒரு கை பார்க்கலாம்.

      Delete
    12. Whitefield பக்கம் சப்ளை செய்யும் ஐடியா எதுவும் உண்டா? பார்த்து செய்யுங்கள் ஜி, கை வலிக்க கமெண்ட் எல்லாம் போட்டு இருக்கேன்.

      Delete
    13. என்னது விருந்தா. ஒரு விலாசமில்லை, க்ம்னிகேசன் இல்லை. சரி ஈரோடு மீட்டிங்லே உங்க மனசு போல எங்களயெல்ல சந்திச்சு பேசுங்க. அது போதும். ( பிரியாணி போச்சே).

      Delete
  21. Replies
    1. ரெண்டு வார்த்தைல அருமையாக சொல்லிவிட்டீங்க.::-)

      Delete
    2. ஆனா ..பரணி சார்..கமெண்டஸ் இடும் பொழுது நாம் எழுதும் எழுத்துக்களை சரியாக பார்க்க முடிய வில்லை...எழுத்து பிழை வந்தால் கூட தெரியாதது போல் உள்ளது ஒரு குறைப்பாடு ..

      Delete
    3. கமெண்ட் செய்யும் போது screenஐ முன் பின் என கையால் நகர்த்தி கொள்ளலாம். நானும் முதலில் அப்படிதான் நினைத்தேன்.

      Delete
    4. கொஞ்சம் கீழே இழுத்துவிடுங்க தெரியும். .(ஹிஹி நானும் முதலில் கன்பூஸ் ஆனேன். :))

      Delete
  22. Biog design super sir.லயன் 300க்காக வெயிட்டிங். அட்டை படம் அத்தனையும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  23. ஒரு குண்டு இதழை கண்டு நிரம்ப நாட்களாகி விட்டது போல ஓர் எண்ணம்...(உண்மையும் தானோ ..) எனவே இதழை காண இப்பொழுதே ஆவல் பீறிட்டு கிளம்புகிறது சார்..:-)

    ReplyDelete
  24. கியூபா படலம் உள்பக்க டீசர் அருமை, அ அ அந்த ராட்சத சர்ப்பங்களை பார்க்கையில் லைட்டா "சைத்தான் சாம்ராஜ்ஜி"யத்தின் வாடை வீசுகிறதே சார்.
    அதிலும் அந்த மாஷை சூனியக்காரி, இதிலும் ஊடு சூனியம் இருக்கும் போல...
    அதில் ஒரு இளம் காதல் ஜோடிகள் உண்டு இதிலும் அப்படி இருக்குமோ...!!!!

    ReplyDelete
    Replies
    1. ////ஒரு இளம் காதல் ஜோடிகள் உண்டு இதிலும் அப்படி இருக்குமோ..////

      காதல் ஜோடின்னாவே குஷியாகிடுவீங்க போல!!!

      Delete
    2. காதல்னா என்னய மாதிரி யூத்லாம் குஷியாவது இயல்பு தானுங்களே...!!!

      Delete
    3. விஜயராகவன் ஜி, நீங்கள் இப்படி அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டாம். நீங்கள் யூத்துதான் என்பது தமிழ் நாட்டில் ஏன் இந்த வோல்ட்டுகே தெரியும்.

      Delete
    4. என்ன மாதிரி எலிமன்டரி school பசங்களுக்கு எல்லாம் விஜயராகவன் மாதிரி ஆட்கள் ஏன் காதல் கதை பார்த்து குஷி ஆகுராங்கன்னு தெரியவே மாட்டேங்குது...

      Delete
    5. அடங்கொப்பா கணேசா உலகமகா நடிப்புடா சாமி... (கவுண்டர் ஸ்டைலில், நட்பின் உரிமையில் ஒருமையில் அழைத்து உள்ளேன் நண்பரே)

      Delete
    6. தாராளமாக விஜயராகவன்...

      Delete
  25. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு-::-
    இரத்தப் படலம்Xlll{குண்டு புக்} யாரிடமாவது இரு பிரதிகள் உள்ளதா???.இரண்டில் ஒன்று விலைக்கு தருகிறீர்களா???.
    படிக்கத் தவறிய பொக்கிஷங்களில் அதுவும் ஒன்று. எனவே தயவுசெய்து பரிசீலனை செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. ஒன்று தான் உள்ளது. படிக்க வேண்டும் என்றால் தருகிறேன்...

      Delete
    2. எப்படியும் அடுத்த வருடம் color ல் வரப்போகிறது. தேவை சற்று பொறுமை நண்பரே...

      Delete
    3. பரணி உங்களுடைய பெருந்தன்மை புரிகிறது;வணங்குகிறேன்.வான் ஹோமாவின் ஆற்றலுக்கு நான் பரம இரசிகன்.அதனால்தான் இரத்தப்படலம் எனது கனவு இதழ்.சென்னைப் புத்தக விழாவில் இதன் மொத்த தொகுப்பும் வண்ணத்தில் வெளியிடப்படும் என நம்புவோமாக.தவரும் பட்சத்தில் உங்களுடைய சேவை உள்ளத்தை நாடுவேன்.முன்பின் அறியாத அடியவனுக்கு நீங்கள் உதவ முன்வந்தது உங்களுடைய மேன்மையான குணத்தை வெளிப்படுத்துகிறது.இதயம் நிறைந்த நன்றிகள் நண்பரே!!!.

      Delete
    4. ரொம்ப புகழாதிங்க ஜி.

      Delete
    5. புத்தகம் வாசிக்க தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள்.

      Delete
    6. நான் பரணி அவர்களிடம் இருந்துதான் இரத்த படலம் வாங்கி படித்தேன். அனுபவஸ்தன் என்கிற முறையில் சொல்கிறேன். இரத்த படலத்தை திருப்பி கொடுப்பது மிக மிக கடினமான காரியம்.

      Delete
  26. லயன் 300, இரண்டாவது அட்டைப்படம் சூப்பராக இருக்கு சார். .!!

    இரத்தக்கோட்டை முன்னட்டை அவ்வளவாக திருப்தியாக தெரியவில்லை சார். .!

    ReplyDelete
    Replies
    1. ஸாரி ஸாரி.. .!! இரத்தக்கோட்டையின் பின்னட்டை திருப்தியாக இல்லை சார். கலரிங் குறைவாக தெரிகிறது..!

      Delete
    2. செல்லாதது செல்லாதது மை லார்ட்

      Delete
  27. அஅனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. இவுரு 2 மாசமா வணக்கம் சொல்லரதோட நிறுத்திக்கறாரே!!

      ஏதும் பேச மாட்டாரோ!!

      Delete
    2. அவரை நேரில் பார்க்கும் போது தெரியும்.... ஜாக்கிரதை என்னை சொன்னேன்

      Delete
  28. இரத்த கோட்டை அட்டைப்படம் இந்த வண்ண ஸ்டைல் பட்டையை கிளப்புகிறது சார்....

    ReplyDelete
  29. ஹலோ.. செக்.. 1..2..3 ப்ளாக் டெஸ்ட்டிங்!
    இ..இது லயன் ப்ளாக்தானே?!!! தூக்க கலக்கத்துல பக்கத்து ப்ளாக்ல ஏதும் பூந்துடலயே?

    ReplyDelete
    Replies
    1. பக்கத்து ப்ளாக்குல புகுந்தா பரவாயில்ல ...
      பக்கத்து வீட்ல புகாம இருந்தா சரி
      ஹி ஹி ..

      Delete
    2. //பக்கத்து வீட்ல புகாம இருந்தா சரி //---ஹா..ஹா... செம ஷல் ஜி..
      இந்த வாரம் எல்லாரும் நகைச்சுவை யில் கலக்குவதால் "நகைச்சுவை நாயகன்"
      விஜய்க்கு சவாலாகவே இருக்கும் என நினைக்கிறேன்...

      Delete
    3. இவரு எப்ப சவுண்டு சர்வீசில் வேலைக்கு சேர்ந்தார்.. சொல்லவே இல்லை

      Delete
    4. பரணி சார் இன்னிக்கு ஜாலிலோ ஜிம்கானா மூட்'ல இருக்கீங்களே.

      Delete
    5. நான் ஜிம்முக்கு எல்லாம் போறது இல்லை என்பது நோக்கு தெரியாதா கோவிந்தா..

      Delete
  30. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மாடஸ்டியின் தலைமையின் கீழ் அணிவகுத்தவர்களுக்கு நன்றி

      Delete
    3. செம பதில் ராவணன்

      Delete
    4. ////This comment has been removed by the author.////

      இந்த ஹீரோ யாருங்க??

      அடிக்கடி வந்துட்டே இருக்காரு!!!

      பேரு வேறா ரொம்ப நீளமா இருக்கே!!!

      Delete
    5. ஒட்டு மொத்த காமிக்ஸையும் நேசிக்கிற என் போன்ற மடையர்கள் எங்க அணிவகுத்து நிக்கறதுனு தெரிலயே.

      Delete
    6. ராம் @ ரின் டின் பின்னால்தான்

      Delete
  31. லயன்-300 அட்டைப் படம் அருமை! தேர்வு செய்யப்படாத அட்டைப் படத்தில் டெக்ஸ் நடந்துவரும் ஸ்டைல் பட்டையைக் கிளப்புகிறது. எடிட்டர் குறிப்பிட்ட அந்த இடதுகை குறையைத் தவிர மற்ற பாகங்கள் அட்டகாசமாக வரையப்பட்டுள்ளது! இந்த நடந்துவரும் படத்திற்கு அந்த குடிசைகள் எரிவதுபோன்று அமைக்கப்பட்டிருந்தால் 'பாட்ஷா' பட தீம் ம்யூசிக்கில் ரஜினி நடந்துவருவதைப் போல ஒரு பிரம்மிப்புக் கிட்டியிருக்ககூடும்! தேர்வு செய்யப்பட்ட அட்டைப் படம் அமர்க்களமே என்றாலும்கூட அந்த 'பிரம்மிப்பு' மிஸ்ஸிங் என்றே தோன்றுகிறது!

    எனினும், அங்க அவையங்களில் ஏற்படும் சிறு கோணல்களையும் (இப்போதெல்லாம்) தீர்க்கமாகக் கவனித்து மாலையப்பரிடம் மறு-ஓவியம் வாங்கியதை பாராட்டாமல் இருக்கமுடியாது!

    லயன்-300ஐ கைகளில் ஏந்திட இப்போதே மனசு ஏங்குது! உள்ளங்கை அரிக்குது! கண்கள் துடிக்குது! இருதயம் கிடந்து அடிக்குது!

    ReplyDelete
  32. நண்பர் ரஃபீக் சொன்னதைப்போல அந்த ரங்கோலி பாணி வண்ணங்களுடன் 'இரத்தக் கோட்டை' மிளிருகிறது! டைகரின் பின்புலத்தில் அந்த கோட்டைக் கோபுரம் வித்தியாசமாக அழகு சேர்க்கிறது! டைகர் ரசிகர்கள் குத்தாட்டம் போடப்போவது உறுதி!

    ReplyDelete
  33. 300ன் முதல் அட்டையில் லயன் நடுவில் வருவது சட்டென்று பார்க்க 380 போல் தெரிவது எனக்கு மட்டும் தானா நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. கண்ணுக்கு நல்லா திறந்து பாருங்கள்... ஜோக்ஸ் போதும் - எனக்கும் அப்படித்தான் தெரிகிறது.

      Delete
    2. சரக் சரக்...
      நீங்க யாரும் சூப் குடிக்கிறதில்லன்னு தெரியுது .

      ஈரோட்டுல நம்ம ஆந்தை விழியார் மறக்காம ஐஸ் க்ரீம் கொண்டு வந்தார்னா வாங்கி ச nப்பிடுங்க அல்லாம் சரியாப் பூடும்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ம்ம் நாய் கால் சூப் எங்க கிடைக்கும்...

      Delete
    5. என்னது நல்லி சூப்பு ஈரோடு மீட்டிங்குலே காலை 10 மணிக்கா. அதுவு சங்க செலவுலயா. சூப்பருப்பு.

      Delete
    6. அப்பால மாயாவி சார்,
      நிம ஆற அமர்ந்து போடும் அன்டர்டேக்கர் மீட்டிங்கிலே கலந்துக்க நா ரொம்ப ரெடியா இருக்கேன். நா அதுல கலந்துகுறதுக்கு சின்ன கன்டிசன் தா இருக்கு, அதுவும் அன்பு கட்டளைதா. அன்டர்டேக்கர் சம்மந்தமா வந்த அனைத்து கமெண்ட்ஸ்சும் எனக்கு ஒரு பிரிண்டவுட் வேணும். ஆதுலே Phd யாரு பண்ணுராங்களோ இல்லையோ, நாம அத பிரிச்சு மேய தா வேணும். நமக்கு நம்ம லட்சியந்தா முக்கியம். எடிட்டரே குறுக்கே வந்தா கூட, போங்கப்புன்னு போயிக்கிட்டே இருக்கணும். நமக்கு நம்ம லட்சிய தா முக்கியம்.

      Delete
    7. நாம ஆற அமர்ந்து

      Delete
  34. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  35. நமது தளம் புதிய டிசைனில்(மொபைலில்) தூள் கிளப்புகிறது சார்!!!

    ReplyDelete
  36. ஆசிரியருக்கும் மற்றும் நம்
    நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய காலை வணக்கம்.
    ஒவ்வொரு நாளும்
    ஒவ்வொரு நிமிடமும்
    ஒவ்வொரு நொடியும்
    நமது காமிக்ஸுக்காக
    நம் தளத்துக்காக அயராது
    உழைக்கும் நம் ஆசிரியர்
    மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி
    மற்றும் பாராட்டுக்கள்.
    புதிய வடிவமைப்பு கண்களை
    மற்றும் மனதை கொள்ளை
    கொள்கிறது.

    ReplyDelete
  37. இன்று நம் நண்பர்கள்
    சந்திப்பு இனிதே நிகழ
    வாழ்த்துக்கள். தகவல்
    நம் மாயா ஜி.
    ஈ வி நீங்களும் உண்டா??

    ReplyDelete
    Replies
    1. @ganesh kv

      டெஃபனட்லி டெஃபனட்லி! :)

      Delete
  38. வாவ்...லயன் 300 அட்டைப்படம் அருமை சார்!!!
    ஒரு சின்ன வேண்டுகோள்...அந்த டிராகன் மட்டும் கொஞ்சம் செட் ஆக வில்லையோ என்று தோன்றுகிறது சார்...
    And இரத்தக்கோட்டையின் இந்த அட்டைப்படம் #3 சூப்பர் சார்!!!

    ReplyDelete
    Replies
    1. ஹலோ அது டிராகன் இல்ல க்யூபா என்பதை தெலுங்குல எழுதி இருக்காங்க... (எனக்கு தெலுங்கு தெரியாது என்பது கொசுறு தகவல்).

      Delete
    2. ///ஹலோ அது டிராகன் இல்ல க்யூபா என்பதை தெலுங்குல எழுதி இருக்காங்க... ///

      அடடா சரித்திரத்தை புரட்டிப்போடும் தகவலா இருக்கே!!!

      Delete
    3. கோவிந்தா @ இந்த தகவளை உங்களுக்குள்ளே வச்சிக்கோங்க....

      Delete
    4. வழக்கம் போல முற்றுப்புள்ளி வைக்காமல் ஏதாவது இரண்டு பக்கம் டைப்புல

      Delete
    5. வழக்கம் போல முற்றுப்புள்ளி வைக்காமல் ஏதாவது இரண்டு பக்கம் டைப்புல

      ######


      ஹாஹா...:-)))

      Delete
    6. @ PfB

      ///வழக்கம் போல முற்றுப்புள்ளி வைக்காமல் ஏதாவது இரண்டு பக்கம் டைப்புல///

      ஹா ஹா ஹா! செம டைமிங்!! :)))

      Delete
  39. இனிய காலை வணக்கங்கள் காமிக்ஸ் காதலர்களே...

    ReplyDelete
  40. தங்கத்தாரகை மாடஸ்டி முன் எத்தனை Lady s,&Ladies. வந்தாலும் மின்னப் போவதில்லை

    ReplyDelete
    Replies
    1. ஓஹோ அப்புடியா சேதி!!

      Delete
    2. எனக்கென்னமோ அடுத்த வார பதிவுல LADY S'ஐ பத்தி தான் நிறைய கமெண்ட் விழப்போகுதுன்னு தோணுது............

      Delete
    3. ஏற்கனவே அதிரடிப்படையில் தலைவியாக வந்து ஒரு பெண் புலி கலக்கினார். ஆனால் உண்மையில் உலகில் ஒரே பெண் புலி மட்டுமே உள்ளது. அந்த பெண்புலியின் கதையில் -- சாரி -- கதையில் இல்லை படத்தில் மாற்றம் செய்துள்ளது ஏற்புடையது அல்ல. அது விரசமாகக தெரியகூடியது இல்லை. பழைய மாடஸ்ட்டி கதைகளை தற்பொழுது எடுத்து புரட்டி பாருங்கள் நான் சொல்வது சரி என்பது தெரிய வரும்.

      Delete
  41. சார் முதன் மொறயா ...படிக்காம அட்டய பத்தி பேசுறேன்....இரத்தகோட்டை அட்டை கண்ணில் பட்டு திகைகக ....இது வர வந்ததிலே அட்ட,,காசமாய் தோண அசந்து போய் பதிகிறேன்...சென்ற அட்டயே அசத்த அத டஸ்டு கவராக்க லாமோ ...இனி படிச்சுட்டு வாரேன்

    ReplyDelete
    Replies
    1. ஏல ஸ்டீலு படிச்சுட்டு இன்னிக்கே பதில் போட்டுவிடுவேல்ல... அடுத்த பதிவில பதில் போடாதலே...

      Delete
    2. நீங்களே அசந்து போய்ட்டீங்களா!?! அப்ப அந்த புக்கோட அட்டய ஸ்டீலுல செஞ்சி போட்ர சொல்லாமா வாத்யார்ட்ட?

      Delete
    3. எலே மக்கா ஓன் சந்தோசத்த பாத்து நானும் ஹேப்பில... ஈரோட்ல பாப்பம்ல..ஜெகத் குமார் மெய்யாலுமே எப்பவும் போல ..நம்ம அட்டைக மெருகேறிட்டே இருக்கு..துருவேறா ஸ்டீலட்ட வந்தாலும்வருந்தான்.

      Delete
    4. ஏலே ஸ்டீலு முதல்ல அப்பாகிட்ட ஈரோடு போக பெர்மிஷன் கேட்டு லட்டர் கொடுத்திடுல இல்ல கடைசி நேரத்தில் பிரச்சனை ஆகிடப்போகுதுல

      Delete
    5. @Parani from Bangalore
      Semma brother😎

      @Steel claw
      Ksndipasga intha thadavai vanthu vidavum brother😊

      Delete
  42. முத்து/லயன் காமிக்ஸ் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த இனிய ரம்ஜான் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. இன்னிக்கு வூட்டுல இட்லியும் வந்தேமாதரம் சட்டினி அதான் ட்ரை கலர் சட்டினிப்பா

    ReplyDelete
    Replies
    1. //வந்தேமாதரம் சட்டினி //க்கே இவ்ளோ குஷி மூடா??

      ஒண்ணும் சாியா படுலையே!!

      இதுலே எதோ விஷயம் இருக்கு??

      Delete
    2. ஆமாலே சாப்பிட்டு சாப்பிட்டு கை வாய் எல்லாம் வலிக்கிறதுல

      Delete
    3. ஹா...ஹா...
      இந்த டைமிங்குக்கு ஒரு ஸ்பெசல் லெக்பீஸ் உண்டு பரணி உங்களுக்கு...

      Delete
    4. ஈரோடு வரும் போது மறக்காமல் வாங்கி கொள்கிறேன்.

      Delete
    5. என்ன நம்ம விஜயோட காந்தி கணக்கு டீ மாதிரி ஆகவில்லை என்றால் சரிதான்.

      Delete
    6. ச்சே சே...
      சொன்ன சொல் தவறமாட்டான் இந்த கோட்டைசாமி...
      தலைகீழாத்தன் குதிக்கப் போகிறேன்...

      Delete
    7. தம்பி எனக்கு இன்னும் டீ வரலை

      Delete
  44. அப்பாடா....! எப்படா தீம்'மை மாத்துவாங்கன்னு நேற்று கூட யோசிச்சேன். பழைய தீம் சிஸ்டம்ல லோட் ஆகவே 30 sec ஆனது. இந்த தீம் நல்லா இருக்கு.

    உங்கள் எல்லா அட்டைப்படங்களும் நல்லா இருக்கு. முதல் அட்டைப்படம் நீங்கள் போட்டால் 300க்கு நடுவில் இருக்கும் சிங்கத்தை தூக்கி 300க்கு மேல போட்டுடுங்கோ. 380 மாதிரி தெரிகிறது. 'இரத்தக் கோட்டை' அட்டைப்படம் போன வார பதிவுல நீங்கள் போட்ட அட்டைப்படமே அட்டகாசமாக இருந்தது. அதுவே என் சாய்ஸ். இந்த வார அட்டைப்படத்தில் பின்பக்கம் நல்லா இருக்கு. முன்பக்கம் 'இரத்தக்' என்ற வார்த்தையை சின்னதா போட்டு 'கோட்டை'யை பெரிதாக போட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  45. சார் சும்மா ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க...க்யூபா என்றாலே ஏனோ சேவும் , ஃபிடலும் நினைவுக்கு வரத் தவறலை...மக்களின் தேசத்தில்...மக்களுக்கான தேசத்தில் நம்மவர் மிரட்டலான ,அழகிய ஓவியங்களில் அச்சாவது மகிழ்ச்சி .....முதலட்டை பின்னி பெடலேடுக்க..இரண்டாமட்டயோ பின்னனி உறுத்த...முதலட்டை பின்னணிய இதுக்கு கொடுத்தா பிரம்மாதமா இருக்குமோ என கேள்விகளுடன்..டெக்ஸ் முதலட்ட மட்டும் அனல் கக்கல....டெக்சும்தேன்.......மேலும் கூடுதலா கதம்ப இதழில் பிற நாயக , நாயகிகளின் தலை அக்காலம் போல இடம் பெற்றிருக்கலாமோ எனும் கேள்விகளுடன் ..நானும் உள்ளேன் எனும் அரிய கேள்வியாய் ...ஸ்பெசல்...அதும் பிரம்மாண்ட ஸ்பெசலில் பல்லிளிக்கும் கூர் மண்டயன் ..கை தூக்கி கோர்த்த படி இரும்புத் தலையன் , டெக் ஸ் கார்சன் அணி ,லக்கி , சிக்பில், மாடஸ்டிக்கு வாய்ப்பிருந்தும் இல்லையேங்றப்ப கண் வேக்குது..ஆனா கதைகள் கூடுதல் சிறப்பா இருக்குமென எண்ணினாலும் அந்த ஈர்ப்பு ஏனோ இல்ல..இப்ப வர்ர கதயெல்லாம் ஸ்பெசலா இருப்பதால் ஸ்பெசல்னா சாதாரணமாயிருச்சில்ல....மின்னுவதெல்லாம் பொன்னல்லன்னாலும் மனக்கண் தேடுவது அதத்தானே..சரி தடவிபார்க்கும் படலத்தில் பிரம்மாண்டத்த பார்க்க காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  46. நம்மளும் போட்டு வெப்போம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜெகம். இப்படி பெரிய துண்டு எல்லாம் போடாதிங்க தாண்ட கஷ்டமாக இருக்கிறது.

      Delete
  47. டியர் எடிட்டர்,
    டைகரின் இரத்தக் கோட்டைக்கு இந்த பதிவில் கொடுத்திருக்கும் அட்டைபடத்தையே போடுங்கள். கண்ணே பட்டிரும் போல் அழகாக உள்ளது. ப்லீஸ் வேற மாத்தாதீங்க. வாசகர்களிடம் ஒரு போல் நடத்தி கேளுங்கள் சார். ப்லீஸ்... 🙏

    ReplyDelete
  48. லயன்காமிக்ஸ் 300வது இதழில் "" தல"" டெக்ஸ் அட்டை அடி தூள் சார்....
    டைகர் கதை அட்டையும் அட்டகாசம்.....
    உய்ய்ய்ய்....
    அதே நேரத்தில் 300 இதழின் பின் அட்டையில் இளவரசிக்கு துளியூண்டு படத்தை போட்டு எங்கள் தானை தலைவியை புறக்கணித்து எங்களை ஏமாற்றமாக உள்ளது....
    அடுத்தாண்டு வரும் சூப்பர் சிக்ஸ் வெளியீட்டில் இளவரசி கதை இரண்டு கார்டு பவுண்டில் வண்ணத்தில் வர சகல ரசிகமகா ஜனங்கள் கோரிக்கை வைக்க வேண்டும் என போராட்டம் தொடங்க கேட்டுக்கொள்கிறேன்.....

    தளம் புதிதாக அருமையாக உள்ளது வாழ்த்துகள் சார்....

    ReplyDelete
  49. ரொம்ப நாளைக்கு அப்புறம் குண்டு ஸ்பெஷல் அதுவும் முழுக்க B/W ல் எனும் போது சிலிர்ப்பா இருக்கு. இதுக்காகவே ஆசிரியருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கலாம்.
    ஆனா பாருங்க இப்ப பத்திர செலவு அதிகமாயிட்டதாலே பாராட்டை மட்டும் உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @Govindaraj Perumal

      ஹா ஹா ஹா! :)))

      Delete
    2. ஹா...ஹா...

      செம கோவிந்த்...

      எந்நேரம் வந்தாலும் இங்கே இன்று சிரிப்புக்கு உத்தரவாதம்👌👌👌👌

      Delete
  50. இப்பதான் நம்ம Blog கலர்புல்லா ஜெகஜோதியா இருக்கு.


    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. ஒரு வழியாக அண்டர்டேக்கர் படித்து முடித்து விட்டேன். பேராசையின் வீச்சு மலைக்க வைத்தது. ஜெயரமையா 3 ம் கதை படித்துவிட்டு வருகிறேன்!

    ReplyDelete
  53. அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துகள். உடையில் பூசிய சென்ட் மணத்தையும் மீறி நாளை வீசுமே பிரியாணி மணம் அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.தலையில் அணியும் குல்லாக்களின் அளவுகள்தான் மாறுபடும்.ஆனால் அவர்கள் காட்டும் அன்பும் பண்பும் மாறுபடாது. அந்த காலத்தில் எங்கள் ஊரில் இஸ்லாமிய தோழர்கள் பழகியே இருக்க மாட்டோம்.ஆனால் கையை அன்புடன் பிடித்து அழைத்து சென்று திகட்ட திகட்ட பிரியாணி பறிமாறுவாருவார்கள். அந்த நொடி நமக்குள் இருக்கும் மதவேறுபாடுகளெல்லாம் மறந்துபோய் உருகி விடுவோம். அத்தோடு விடமாட்டார்கள். ஆளுயரத்துக்கு ஒரு டிஃபன் கேரியர்.அது நிறைய பிரியாணி சுடச்சுட தால்ச்சா என்னும் குழம்பும், இனிப்புமாக எடுத்துக் கொண்டுவந்து நம் வீடுவரை நம்மை அழைத்து வந்து விடுவர். வீட்டுக்கு போவதற்குள் மறுபடி ஒரு இஸ்லாமிய தோழரை சந்தித்து விடக்கூடாது என்ற பயத்துடனே செல்வோம்.அப்புறம் மறுபடி ஒரு பிரியாணி விருந்து சாப்பிட நம் வயிறு இடம் கொடுக்காதல்லவா. அந்த பயம்.இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் நடந்திருக்கும் நிகழ்வுதான்.இன்று அந்த பகுதியை விட்டு வெகுதூரம் விலகிவந்தாலும் கூட அந்த இனிய நினைவுகள் மட்டும் மாறவேயில்லை. வாழ்க இஸ்லாமிய சகோதர சகோதரிகள்.

    ReplyDelete
    Replies
    1. AT RAJAN Sir,
      ஈரோடு திருவிழாவிலே நீங்க வாங்கி தரும் குருவி மிட்டாய்க்காகவே வர நான் காத்திருக்கிறேன். நீங்கள் அழைத்தால் மட்டுமே வருவேன். தானைத்தலைவரோ, செயலாளரோ, நான் விரும்பும் மடிப்பாக்கமோ, ஏன் நம்ம எடிட்டர் அழைத்தால் கூட வர மாட்டேன். நா ரொம்ப கோபத்திலே இருக்கேன். நீங்க ரொம்ப நாளா என்ன நலம் விசாரிக்கவே இல்லை. இதெல்லாம் நல்லா இல்லை, ஆமா சொல்லிப்புட்டேன்.

      Delete
  54. லயன் 300 அட்டைப்படம் 1 சூப்பர். அந்த ட்ராகனின் கலரை சில்வரில் இருந்து பிரவுன் அல்லது கோல்டனுக்கு மாத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    லயன் 300 அட்டைப்படம் 2 அவ்வளவு நன்றாக இல்லை.

    இரத்த கோட்டை பின் அட்டையில் வெறும் மஞ்சள் மட்டும் இருக்கிறது. கொஞ்சம் மற்ற கலர்களையும் சேர்த்தால் நன்றாக இருக்கும்

    இந்த வாரம் நான் படித்த கதைகள்

    அப்பொழுது:

    1 மிஸ்டர் முகமூடி
    சிக் பில்லின் தெறி காமெடி. வயிறு குலுங்க சிரிக்க வைத்தது

    2 வின்டர் ஸ்பெஷல்
    இது ஒரு கதை கதம்பம், பயங்கர போட்டி - லக்கி லூக்கின் கதை. சுமாராக இருந்தது. சித்திரங்கள் லக்கி லூக்கின் தரம் இல்லை.
    குதிரை வீரன் ரிங்கோ - ஒரு மினி கௌ பாய் கதை.
    குண்டன் ஹாரியின் 2 கதைகள்
    புதையல் பேட்டி என்று ஒரு கதை.
    இது அனைத்தும் சம்மந்தம் இல்லாமல் தனி தனியாக வேறு வேறாக இருந்தது
    இதை எந்த சூழ்நிலையில் இந்த தொகுப்பை தயாரித்தாரோ, எடிட்டருக்கு தான் தெரியும்.

    இப்பொழுது:
    1 ஒரு திரை விலகும் நேரம் - ஜேசன் ப்ரைஸின் இறுதி. அமர்க்களம் அட்டகாசம் இதை தவிர இந்த 3 பாகங்களுக்கும் வேறு என்ன கூற முடியும்.

    2 சதுரங்கத்திலொரு சிப்பாய் - லார்கோ வின்ச் முடிவுக்கு வருவது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. வெர்சன் 2.௦ சீக்கிரம் வர வேண்டும்

    3 என் ராஜ்யமே ஒரு கேரட்டுக்கு - மிக சிறப்பு. மதி இல்லா மந்திரி என்றும் தொடர வேண்டும்

    ப்ளாகின் பார்மேட் மாறி இருப்பது நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  55. தம்பி பிரபு,
    எந்த எந்த காலகட்டத்தில் இருக்கீங்க. இதை விட பேரின்பம் பல நீங்க காண வேண்டி இருக்கு. சீக்கிரமா ஜோதியில ஐக்கியம் ஆகுங்க.

    ReplyDelete
  56. Hi Sriram,

    Contact me in my whatsup no. 7667291648. I have two extra copies of RATHAPADALAM. I will give you

    From
    I.V.SUNDARAVARADAN
    LITTLE KANCHEEPURAM
    CELL : 7667291648

    ReplyDelete
  57. Hello ED sir,

    We are waiting for tex special CUBA PADALAM. I AM VERY SURPRICE ABOUT IUR NEW WEBSITE . WOW. GREAT. KALAKIRINGHA ED G. I am waiting for TEX SPECIAL.

    I.V.SUNDARAVARADAN
    LITTLE KANCHEEPURAM

    ReplyDelete