Powered By Blogger

Wednesday, June 21, 2017

நாங்களும் ஆட்டத்தில் உண்டுங்கோ...!

நண்பர்களே,

வணக்கம். ஆபிரஹாம் லிங்கனிலிருந்து, அமெரிக்க உள்நோட்டுப் போர் ; தங்க விலையேற்றம் ; டாலர் மதிப்பு ; பொருளாதாரம் ; அரசியல் என்று எங்கெங்கோ ரவுண்ட் கட்டியடிக்கும் விவாதங்கள், மூக்கும், மூக்கும் ஒட்டுமா ? என்ற விஞ்ஞான சிந்தனையையும் உள்ளடக்கி நிற்பதை நானுமே வாய் திறந்து வாசித்து வருகிறேன் ! ஒரு "பொம்மை புக்"கானது இத்தனை சிந்தைகளுக்கு இறக்கைகள் தருமா ? என்பதை இந்த உலகிற்கு தூரத்தில் உள்ளோர் அறிந்திட சத்தியமாய்  வாய்ப்பே கிடையாது ! நம் வட்டமானது சிறுகச் சிறுகக் கூடிடும் ஒரு நாளில் - அதகளம் எவ்விதமிருக்கும் என்று கற்பனை செய்து தான் பாருங்களேன் ? Phew !!

இந்த மாதம் மிஸ்டர் டெக்ஸ் வில்லர் என்றொருவருமே சந்தாப் பிரதிகளின் டப்பாவுக்குள் இடம்பிடித்திருந்தார் என்பதால்,  "அடியிலிருந்து எடுப்பவரை" அலசிடும் அதே கையோடு  - நவஹோ தலைவர்பாலும் சிறிதே கவனத்தைத் திருப்புவோமா ? 

Maybe தலையும் ஆட்டத்தில் இருக்கிறார் இம்மாதம் ; விரைவிலேயே தளபதியும் இணையவிருக்கிறார் அட்டவணையில் - என்பதை உணர்த்தும் இந்த டிசைனுக்கு caption எழுதுவோமா - ஞாயிறு வரைக்கும் ?
"இது பரிசு--அது பரிசு" என்று நான் கதைவிட்டு விட்டு , அடுத்த வேலைக்குள் மூழ்கிய கணமே மறந்து போக இம்முறை வழிதராது - இந்த caption போட்டியின் வெற்றி நாயகருக்கு ஈரோட்டில் ஒரு பெயின்டிங் (மோனா லிசாலாம் கிடையாதுங்கோ ; நம்ம மாலையப்பனின் கைவண்ணத்தில் ஏதோவொன்று தான் !!) அன்பளிப்பு ! So - விமர்சனங்களோடு, விவாதங்களோடு, caption-களும் களை கட்டட்டுமே ?!!  Bye all ! Catch you over the weekend !!

152 comments:

  1. Replies
    1. @ Govindaraj Perumal

      கொஞ்சம் முயற்சி பண்ணினால் கேப்ஷன் போட்டியிலும் '1st' தான்!

      Delete
  2. நான் போட்டிக்கெல்லாம் வரலைங்க
    நான் 4 வது.

    ReplyDelete
  3. ஆனாலும் அநியாயம் ஆசிரியரே
    தம்மாதூண்டு பிட்ட பதிவு என்று
    ஒப்புக்கொள்ள முடியாது.

    ReplyDelete
    Replies
    1. 'பிட்டு பதிவு' - அதானுங்களே?

      Delete
  4. Replies
    1. மூணுன்னு டைப்பாருக்கு முன்னாடி நாலு பேரு வந்துட்டாங்க!!!???

      Delete
  5. ////"பொம்மை புக்"கானது இத்தனை சிந்தைகளுக்கு இறக்கைகள் தருமா ? என்பதை இந்த உலகிற்கு தூரத்தில் உள்ளோர் அறிந்திட சத்தியமாய் வாய்ப்பே கிடையாது////

    எஸ் யுவா் ஹானா்!!

    ReplyDelete
  6. தலைவர் செயலாளர் பொருளாளர்
    மற்றும் நமது காமிக்ஸ் முன்னேற்ற கழக
    உடன் பிறப்புக்கள் அனைவரையும்
    மெரினாவில் கூடி சரியான பெரிய
    பதிவுகள் போடாத ஆசிரியரை கண்டித்து
    போராட்டம் துவங்க அழைக்கிறேன் .
    உடனடியாக நமது செயற்குழு மற்றும்
    பொதுக்குழுவை கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. @ ganesh kv

      ஏற்கனவே ஒரு மெரினா போராட்டத்தில் கலந்துகொண்டு மண்டை உடைபட்ட நம் கழகக் கண்மணி செந்தில் சத்யாவை அதற்குள் மறந்துவிட்டீர்களா?எனக்கென்னவோ நீங்க எதிரணித் தலைவரிடம் விலைபோய்ட்ட மாதிரியேஏஏஏ தோனறது! ;)

      Delete
  7. இந்ந தளத்திலேயே பாய விரிச்சு படுத்துக்கணுமோ.எப்ப என்ன நடக்கணும்னே புரிய மாட்டிங்கதே மக்கா.போன வாரம் முச்சூடுமே உப பதிவுக்காண்டி பாத்திருந்து ஏமாந்து போனம்.இந்த வாரம் அத்தி பூத்திருக்கு.

    ReplyDelete
  8. பிறந்தநாளு, தீவாளிலாம் வருடம் ஒரு தபா வரும்....
    கண்ணாலம், காதுகுத்துலாம் ஆயுளுக்கும் ஒரே தரம்தான்...

    "தல" டெக்ஸ் வருவது மாத பட்ஜெட் மாதிரி, தீவாளி மாதம் முடிந்தவுடன் அதற்கு கவனம் தந்துதானே ஆகனும்...

    இந்த மாதிரி அண்டார்ட்டிக்கா ச்சே அண்டர்டேக்கர் சலசலப்புக்குலாம் அஞ்சாத பாலைவன சிங்கம் தான் டெக்ஸ் எனும் சகாப்தம்...

    ReplyDelete
  9. நாங்களும் ஆட்டத்துல இருக்கோம்ல..!!

    ReplyDelete
  10. தங்களின் " உப கமெண்ட்ற்கு " நன்றி சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. இப்படியே போச்சுன்னா வெறும் '+1'ஐயே ஒரு பதிவா போடுவார் போலிருக்கு தலீவரே!

      Delete
  11. டைகர்;
    ""என்னப்பு க்ரோ, வந்த மொத சாகசத்திலயே எல்லாரையும் போட்டுத் தள்ளீட்டியே"".""இப்பிடியே போனா எங்க ஆட்டம் காலியாயிரும்"".
    ஜோனஸ்;
    "" இந்த தாடி,மீசக்குள்ள மூஞ்சிய ஒளிச்சு வெச்சுருக்கமே,மக்களுக்கு புடிக்குமோ?...புடிக்காதோன்னு நினைச்சேன்,பரவாயில்ல பிசிறில்லாம தப்பிச்சிட்டன்.
    டெக்ஸ்;
    " இவ்வளவு அடக்கமா சொல்றியே குரோ,ச்சே....ப்ரோ"".
    கார்சன்;
    ""அவுரு வேலையே அதான,போட்டத் தள்றதும்...அடக்கம் பன்றதும்"".

    ReplyDelete
    Replies
    1. தூள் கெளப்பிட்டீங்க போங்க!!

      Delete
    2. அம்மாடியோவ்!!! புயல்வேகத்தில் ஒரு கேப்ஷனா?!!

      Delete
    3. பரிசு உங்களுக்கே ஸ்ரீ...

      Delete
    4. இந்த மாதிரி கொசுறு கேப்சனையெல்லாம் தூக்கி அடிக்கிற விதத்தில பல நண்பர்கள் தயாராகிட்டு இருக்கிறதா; நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து உளவு பிரிவுக்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் கசிந்துள்ளது.

      Delete
    5. இந்த மாதிரி கொசுறு கேப்சனையெல்லாம் தூக்கி அடிக்கிற விதத்தில பல நண்பர்கள் தயாராகிட்டு இருக்கிறதா; நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து உளவு பிரிவுக்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் கசிந்துள்ளது.

      Delete
  12. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சின்ன கேப்ஷனா இருக்கே...!! ;)

      Delete
  13. மாலையப்பரின் ஓவியத்தைப் பரிசாகப் பெறப்போகும் நண்பருக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. அடடே.. புதுப்பதிவு..!

    உள்ளேன் ஐயா..!

    ReplyDelete
  15. ///இந்த caption போட்டியின் வெற்றி நாயகருக்கு ஈரோட்டில் ஒரு பெயின்டிங் (மோனா லிசாலாம் கிடையாதுங்கோ ; நம்ம மாலையப்பனின் கைவண்ணத்தில் ஏதோவொன்று தான் !!) அன்பளிப்பு.!///

    நிறைய நண்பர்கள் கமெண்ட்டுகளில் கலக்கி வருகிறார்கள்.!
    அவர்களில் வெற்றிபெற இருப்பவருக்கு என்னுடைய முன்கூட்டிய வாழ்த்துகளும்..!

    ReplyDelete
  16. ///
    இந்த மாதம் மிஸ்டர் டெக்ஸ் வில்லர் என்றொருவருமே சந்தாப் பிரதிகளின் டப்பாவுக்குள் இடம்பிடித்திருந்தார் என்பதால், "அடியிலிருந்து எடுப்பவரை" அலசிடும் அதே கையோடு - நவஹோ தலைவர்பாலும் சிறிதே கவனத்தைத் திருப்புவோமா ? ///

    அப்படியே அந்த நாலுகால் அண்ணாச்சியையும் கொஞ்சம். . ம்ம். .ம்ம்..!!

    ReplyDelete
  17. கேப்ஷன் போட்டில கூட - மிகப் பொருத்தமா - டைகருக்கு மட்டும் A போட்டு ரவுண்டு போட்டுவிட்ட உங்க சமயோஜிதத்தைப் பாராட்டாம இருக்கமுடியல எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி..!

      இன்னொன்னு கவனிச்சீங்களா குருநாயரே!
      எல்லாருக்கும் வட்டம் போட்டிருக்காங்க ., ஆனா அந்த பெரியவருக்கு மட்டும் போடமா விட்டுட்டாங்க..!

      ஒருவேளை அவரோட உச்சந்தலையே வட்டமா இருந்ததால தனியா எதுக்குன்னு விட்டுருப்பாங்களோ..! :-)

      Delete
  18. Not for போட்டி Just for லூட்டி :-

    A : சிவகாசியில இருந்து லயன் கிராபிக் நாவல்னு தனிவரிசை வெளியிடுறாங்களாமாம்..! ரெண்டு புக்கு வத்ததுருச்சாமாம்பா..! செம்ம வரவேற்புன்னு ஜனங்க பேசிக்கிறாங்க ..

    B : ஆமாமா! நான்கூட கேள்விப்பட்டேன்பா.! அதுவும் அண்டர்டேக்கரை அக்குவேறு ஆணிவேறா பிரிச்சி மேஞ்சதுல, போனவாரம் பூரா ப்ளாக்குல எக்னாமிக்ஸும் ஹிஸ்ட்ரியும் பூந்து விளையாடிச்சாம்.! இந்த ஆராய்ச்சியில ரெண்டுமூணு பேரு Phd வாங்கப்போறதா தகவல் வந்துச்சி..!

    C : எத்தனை அண்டர்டேக்கரு, முடியா இரவுன்னு வந்தாலும் என்னிக்குமே நாங்கதான் அங்கே சூப்பர்ஸ்டார்ஸ். .! இல்லையா கார்சன்..?

    D : அட நீ வேற ஏம்பா! நம்மளை யாருமே கண்டுக்கலை சொல்லித்தான், அய்யா இந்த மாசம் இவிங்களும் வந்திருக்காங்க, கொஞ்சம் இவிங்க மேலயும் கருணை காட்டுங்கன்னு எடிட்டரே கேக்குற அளவுக்கு ஆயிடுச்சி. .! ஆனா ஒண்ணு மட்டும் நிஜம் டெக்ஸ் ! இடியோ மின்னலோ அவ்வபோது வரும் போகும். ஆனால் சூரியனோ அப்படியேதான் இருக்கும். நாமல்லாம் அந்த சூரியன் மாதிரிப்பா..!

    ReplyDelete
  19. டைகர்;
    தமிழ்நாட்டுக்குள்ள சுற்றுப்பயணம் போனியளே க்ரோ...அங்கனக்குள்ள இருக்கற சனங்கல்லாம் எப்புடி?.
    ஜோனஸ்;
    நன்னாத்தாம் பழகறாக...அவுக அன்பும்...ஆதரவையும் பாக்கறச்சே அங்கனகுள்ளயே தொழில பாத்துட்டு ஒதுங்கலாமான்னு ரோசிக்க!
    டெக்ஸ்;
    புடிச்சு போச்சுனா அப்பிடித்தா நம்மளையே திணறடிச்சுடுவாக அன்புல.அதே கொஞ்சம் சொதப்பி வச்சம்னா ஒட்டுன சுவரொட்டி காயரதுக்குள்ள சாணி அடிச்சிருவாக
    கார்சன்;
    எதிர்ப்பு, போராட்டம்னு,வர்றப்ப ஒலகமே மிரண்டு போயரணும்.அதுவும் பாட கட்டி எடுத்து போயி...உருவ பொம்மைனு ஒண்ண எரிப்பாகபாரு...நமக்கு இரத்தரத்தமா வாயில ஊத்திக்கும் பாத்து நடந்துக்க.

    ReplyDelete
    Replies
    1. ////புடிச்சு போச்சுனா அப்பிடித்தா நம்மளையே திணறடிச்சுடுவாக அன்புல.அதே கொஞ்சம் சொதப்பி வச்சம்னா ஒட்டுன சுவரொட்டி காயரதுக்குள்ள சாணி அடிச்சிருவாக///

      ஹா ஹா ஹா! செம!! :)))

      Delete
    2. ஈ.வி இப்டியே சந்து பொந்துக்குள்ள ஆட்டோ ஓட்டி அலப்பறை செய்ஞ்சா எப்புடி.நாங்க எட்டு புள்ளில ஒரு கோலம் போட்டா நீங்க சில ரங்கோலிய தட்டி விட்டு தளத்த கலர்புல்லா மாத்துங்க.

      Delete
  20. Not for போட்டி Just for லூட்டி :-

    கேப்டன் டைகர் : நம்ம நாட்டுல சட்டம் ஒழுங்கு அநியாயத்துக்கு சிறப்பா செய்ல்படுது சார். .! தாகசாந்தி பண்றதுக்காக சலூன் போனப்போ, விஸ்கியில தண்ணிய கலந்து சாப்பிட்டதுக்கு, கலப்படம் பண்ணேன்னு சொல்லி காதுமேல அடிச்சி தூக்கிட்டு வந்து உள்ள போட்டுட்டாங்க..! அதுசரி, நீங்கல்லாம் என்ன செஞ்சிங்க?

    ஜோனாஸ் க்ரோ : அமரர் ஊர்தியை ஓட்டணும்னா இனிமே லைசன்ஸ் எடுக்கணும்னு சொன்னாங்களேன்னு அங்கே போனேன். குதிரை மேல உக்காந்து எட்டு போட்டு காட்டினாத்தான் லைசன்ஸ் தருவேன்னு சொன்னாங்க. சரின்னுட்டு நானும் குதிரை மேல ஏறி உக்காந்து ஒரு பேப்பர்ல பெரிய எட்டா எழுதி காட்டினேன். இதுல என்ன சார் தப்பு இருக்கு? படுபாவிங்க அதுக்காக கைய உடைச்சி தூக்கிட்டு வந்துட்டாங்க. .!

    டெக்ஸ் வில்லர் : ஹோட்டல்ல மட்டன் பிரியாணியும் சுக்கா ரோஸ்ட்டும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுகிட்டு இருந்தோம். சர்வரை கூப்பிட்டு, ஏம்பா நல்லி எழும்பு சரியா வேகலை போலிருக்கேன்னு கேட்டேன். அவ்ளோதாங்க! அதுக்காக வாயிலயே குத்தி "கெடா" சட்டத்துல தூக்கிட்டு வந்துட்டாங்க. !

    கிட் கார்சன் : ஹூம். .! நான் பெருசா எதுவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லைங்க. இவன் கூட இருந்தாவே போதும். எனக்கும் சேர்த்து இவனே எல்லா ஏழரையையும் இழுத்துட்டு வந்திடுவான். இப்பகூட இவன் பக்கத்துல உக்காந்து சாப்பிட்டதே குற்றம்னு சொல்லி பகுல்லயே வுட்டு தூக்கிட்டு வந்துட்டாங்க..!

    ReplyDelete
    Replies
    1. 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾 அதுவும் கடைசில வந்த காரசனோட பஞ்ச்👌🏿

      Delete
    2. @ KOK

      அமரர் ஊர்தி லைசன்ஸ் - ஹா ஹா ஹா செம! :))))

      Delete
  21. Sir, cowboy stories are not boring nowadays because they are a relief from this hi-tech world full of this or that gizmos .so pls boldly introduce any new cow boy series. I even welcome historical graphic novels from world literature!.

    ReplyDelete
  22. கவரிமான்களின் கதை...

    சிம்ப்ளி ஃபெண்டாஸ்டிக்...

    இந்த ஆண்டின் வித்தியாசமான கதைகளங்களின் தொடர்ச்சியாக கலப்பின மக்கள் எதிர்கொள்ளும் சவாலான வாழ்க்கை முறைகள், எருது சண்டை முறைகள், எவ்வளவு பீதியுடன் சாமானிய வாழ்க்கைக்கு அவர்கள் ஏங்குகிறார்கள் என நுட்பமாக விளக்குகிறது சார்.

    ஓவியங்கள் மிகவும் நுண்ணியமான வகையில் சிறு சிறு விசயங்களையும் உள்ளடக்கி கவருவது மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் சார்.

    இந்த வகையில் இது டெக்ஸின் 2வது சாகசம் நமக்கு. ஏற்கெனவே வெளிவந்த மெக்ஸிகோ படலத்திலும் இதே கதைக்கரு வேறொரு ஆங்கிளில் சொல்லப்பட்டு இருக்கும் சார்.

    கலப்பின இளைஞன், மெக்சிகோ பண்ணையார் மகள் காதல் என்பதே எப்போதும் கவர்ச்சியான (மனதுக்கு) கனமான கதைக்களம். அதில் கிட் வில்லரின் காதல் கைகூடாமல் போன வருத்தம் இந்த கதையில் ரஃபேல் & எல்விரா இணைந்ததில் காணாமல் போனது சார். இதைப்போன்ற வித்தியாசமான களங்களின் முயற்சி தொடருங்கள் சார். இந்த 2ம் இன்னிங்ஸில் இந்த கதைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு சார்.

    ReplyDelete
    Replies
    1. கேப்ஷன் போட்டியோடு சேர்த்து 'மேற்காணும் கமெண்ட்டில் எத்தனை "சார்" இடம்பிடித்திருக்கிறது?' அப்படீன்ற போட்டியும் வச்சிருக்கலாம்னு தோனுது! ;)

      Delete
    2. ஹி....ஹி....

      விஜய்@ நானே 3 இடங்களில் "சார்"- ஐ விட்டுட்டு டைப்பிட்டோமே என வருத்த பட்டுக் கொண்டுள்ளேன்....

      Delete
  23. நிச்சயமா வெடி குகைக்குள் வெடிக்கல...கீழே லின் வைத்த வெடி புகை மேலே கிளம்பும் போது வேகன் சீறிப்பாயும் போது விலகி பிரிகிறது . உள்ளே இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை . மேலும் நண்பர் விவரித்த அந்த தீவட்டி அணையும் காட்சியும் உறுதிப் படுத்துது .அடுத்து அவர்கள் சிலய பாத்து சந்தோசத்துல குதிக்கல ....கொதிக்கிறார்கள்...கஸ்கோ சிலை தங்கமா இருந்தா குதிக்கவல்லவோ செய்திருப்பார்கள் . கற்ச்சிலை நிறுவினால் அப்ப பணத்த வாரியிறைத்தால் கஸ்கோ ஏதும் சேர்த்து வைக்க வாய்ப்பில்லை என்ற கோவமே அது . அவர்கள் அந்த தங்கத்த பாத்துதான் அதாவது வயிற்றில் எடுத்தத ...பாத்துதான் புதயல் என கூவுவது . க்ரோ இவர்கள பெட்டியில் வைத்து அனுப்புவது ....எப்படியும் சாகத்தான் வேண்டும் . கீழே லின்னை அனுப்பினால் அவள் சமாளித்தால் பிழைக்க வாய்ப்பு ...மேலும் அவர்கள் ஏறி வரலாம் சிலர் வெறித்தனமாய் தன்னைத் தேடி என எண்ணலாம்...கீழேயோ நீருக்கான நெருக்கடி மட்டுமல்ல சுரங்கத்தில் ஏதேனும் இருக்கலாம் ..மூவரயும் பழி வாங்கும் வெறி கூட இவர்கள மேலேற்றுகிறது ...இதில் க்ரோ ரோஸை தைரியபடுத்தும் கட்டமும் , லின்னை ரோஸ் உன் இயல்பு அது அல்ல என கோவத்த தணிப்பதும் ஹீரோயிசத்தின் அடயாளங்கள் ....அதானால் நிதானமான தீர்மானமான முடிவெடுக்கிறார்கள் ஹீரோக்கள்..ஆனா வெறி கொண்ட கூட்டம் எதபத்தியும் கவலை கொளாது மூர்க்கமாய் பாய்கிறார்கள் வில்லன்கள் தோல்விய தழு வணும் என்பதற்காக.....அது போல லின் துப்பாக்கிய இறக்கியதும் க்ரோ குட்டச்சி என பாய்வதும் நகைச்சுவைக்காகவும் ..அந்த பாத்திரத்தின் தன்மைக்காகவும் செதுக்கி உடனை வில்லன்கள விட்டு திசை திருப்புகிறார்...அது போல தன் பல்லால் விரலை துண்டிப்பதாய் கூறும் காட்சி அந்த பாத்திரம் தன்னை பற்றி பீற்றிக் கொள்ள கூறிய காட்சி மட்டுமல்ல சிக்கிய விரல்கள் தொங்கி சிதைந்த நிலயில் மரத்து போயிருக்கும் ..தோலிலே ஒட்டியிருந்தால் கூட அத கடித்து துப்புவதாய் பீற்றிக் கொண்டிருக்கலாம் அல்லவா..

    ReplyDelete
    Replies
    1. ஒரு பதிவு லேட்டா வந்திட்டீங்க ஸ்டீல்!! இப்போ மழை ஓய்ந்தபின் தூவானம் மாதிரி ஆகிடுச்சு! :)

      Delete
  24. அண்டர் டேக்கர்
    பறவைகள் சிறகு இருந்தாலும் குஞ்சாக இருக்கும் போது பறக்க முதலில் பயப்படும்.சிறகுகள் வலிமையடையும் வரை இரைதேடும் போது உடன் அழைத்துச் செல்லும்.அவைகளும் கால்களால் தத்தி தத்தியே செல்லும்.சிறகுகள் பறக்கும் திறன் பெற்ற பின்பு அவற்றின் பயத்தைப் போக்க உயரத்திலிருந்து தள்ளிவிடும்.கீழே விழுந்து அடிபடுவதிலிருந்தோ,இறந்து விடுவதிலிருந்தோ தற்காத்துக்கொள்ள இயல்பாக சிறகை விரித்து பறக்கத் தொடங்கிவிடும்.
    மூன்று டாலர் கூலிக்காக ஒட்டுமொத்த கழுகு கூட்டத்தையே வேட்டையாடி விடுகிறான் க்ரோ.அனாதையாக விடப்பட்ட கழுகு குஞ்சை வேட்டை விலங்குகளுக்கு இரையாகாமல் பரிவோடு பராமரிக்கிறான்.ஆனபோதும் ஜெட்டுக்கு பறக்க தெரியாத சூழல்.
    87ம்பக்கம் உயரத்திலிருந்து சாய்கோணத்தில் கீழிறங்குகிறான் க்ரோ.அத்தகைய கீழ் நோக்கிய இழுப்பு விசையின்போது தோளில் அமர்ந்திருக்கும் ஜெட் நிலைதடுமாறி கீழே விழும். தற்காத்துக்கொள்ள இயல்பாகவே சிறகை விரித்து பறக்கத் தொடங்கும்.க்ரோ தரைத்தளத்தை வந்தடைந்த பின் மீண்டும் தோளில் வந்தமர்ந்து விடுகிறது.அந்த கும்பல் க்ரோவைத் தாக்கும்போது மீண்டும் பறந்து விடுகிறது.
    100வது பக்கத்தில்.ஜெட் ப்ரைரியை பறந்து வந்து காப்பாற்றுகிறது.""நீ""என்று,""பறக்கிறாயா""என்ற பொருளில் ஜெட்டை நோக்கி உச்சரிப்பதும் அதானால்தான்.
    ஈ.வி அவர்களுக்கு புத்தகத்தை "சரக்கூ,சரக்கூ"னு எடுத்து "பரக்குனு"அட்டையையும் கீழித்து விடாதபடி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
    நண்பர்கள் யாருக்கேனும் இந்த கதையின் அலசல்கள் சலிப்பை உண்டாக்கினால் வெளிப்படையாக பதிவிடுங்கள்.திறந்த மனதோடு ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Sri Ram @

      பலமுறை செனா அனா அவர்கள் கதைகளை அணுகும் விதத்தையும், அலசும் விதத்தையும் பார்த்து மெய்மறந்து போயிருக்கிறேன்.
      இப்போது அவருக்கு துணையாக உங்களைப் போன்ற நண்பர்களும் கதைகளை அலசுவது மிகவும் வரவேற்கத்தக்கதே. .!

      Delete
    2. //உங்களைப் போன்ற நண்பர்களும் கதைகளை அலசுவது மிகவும் வரவேற்கத்தக்கதே. .! //
      +1

      Delete
    3. அதே வேளையில் ராவணன் இனியன் தலீவர் பரணிதரன் போன்றோரின் கருத்துகளும் ஏற்கக்கூடியதே. .!!
      ஒரே கதையை ரொம்பவும் பிரித்து மேய்ந்ததில் லேசான சலிப்பு ஏற்பட்டதும் தவறென்று சொல்லிட முடியாதல்லவா?
      எனவே ஸ்ரீராம், நீங்க அடுத்தடுத்த கதைகளையும் உற்சாகம் குன்றாமல் கையில் எடுங்கள் நண்பரே . .!

      Delete
    4. Sri Ram @

      அண்டர்டேகரை விட்டுவிடுங்கள். போதும் போதும்டா சாமி!

      முடியல... ஒரே விஷத்தை பல பதிவுகளில் பேசுவது.... போதும்.

      நீங்க அடுத்தடுத்த கதைகளை ஆராயவும் நண்பரே . .!

      Delete
    5. ஒரே விசயத்தை....:-))

      Delete
    6. ///
      ஈ.வி அவர்களுக்கு புத்தகத்தை "சரக்கூ,சரக்கூ"னு எடுத்து "பரக்குனு"அட்டையையும் கீழித்து விடாதபடி கேட்டுக் கொள்ளப்படுகிறார்///

      :D

      இப்படியே போச்சுன்னா இனிமே என் சட்டையைத்தான் கிழிச்சுக்கணும்!


      Delete
    7. எதிர் கட்சியினரின் கருத்துக்களுக்கும் உரிய மதிப்பளித்து ஜனநாயகத்தின் மாண்பு கட்டிக் காப்பாற்றப்படும் என்பதை இம்மாமன்றத்திலே பதிவு செய்யும் வேளையிலே........எஅஒஒஎஎ

      Delete
  25. கேப்சன் :

    டைகர் (A): ஏம்பா டெக்ஸ், நீ மே மாசம்தான் லீவு கேட்ட..! ஆனா, ஜூன்லேயும் வரலைன்னு செய்தி வந்திருக்கு...?

    டெக்ஸ் (C): ஐயையோ...நாங்கதான் பொட்டிக்குள்ள பத்திரமா வந்தோமே...! ஆனா, இதோ இந்தா நிக்குறானே..! அண்டர்டேக்கரு, உள்ள பூந்து, பிரிச்சி மேய்ஞ்சி எங்களை ஓட விட்டதுல, சந்தா B யே அப்படியே ஆடிப்போய் கெடக்குது..?

    அண்டர்டேக்கர் (B): ஐயோ டெக்ஸ், எங்களுக்கு எப்போவுமே நீங்க தான் தல...!

    கார்சன் (D): டெக்ஸ், எப்பவுமே நீ தான் 'தல'ன்னு சொல்லிட்டாங்களே! இத சாக்கா வச்சி, ஆளுக்கு ஒரு நாலு பிளேட் வருத்தக் கறியை உள்ள தள்ளுவோமா..?

    ReplyDelete
  26. A டைகா் : பாா்த்தியா தல! மொத பந்தே சிக்ஸ் அடிச்சுட்டான் அந்த புதுப்பய!!

    B க்ரோ : என்ன அடிச்சாலும் விராட் கோலி மாதிாி சிாிச்சுட்டே இருக்கானுகளே!! இதுதான் அனுபவமோ!!

    C டெக்ஸ் : டைகா் தம்பீ... ஒரு பந்துல ஆறு அடிக்கரது பெருசில்ல, அறுபது வருஷமா நூறு அடிக்கரது தான் பெருசு!!

    D காா்ஷன் : யப்பா! ஒருவழியா டெக்ஸ், அவன் கெழவங்கிறத, அவன் வாயாலேயே ஒத்துக்கிட்டான்பா!!

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் ரூம் போட்டு யோசிப்போம்ல!!!

      Delete
    2. குறிப்பு : விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்து சாம்பியன்ஸ் கோப்பை 2017 ஐ இழந்த பிறகு நமது WILD WEST & CO பேசிக் கொள்வது!!!

      Delete
    3. சூப்பரப்பு..!
      இன்னும் சில புதிய நண்பர்களும் கலந்துகொண்டால் களைகட்டுமே..!!

      செனா அனா, குருநாயர் எல்லாம் கேப்ஷன் எழுதுவதில் வேற லெவல்..!! அவங்களும் கலந்துகிட்டா ஜோரா இருக்கும். .!
      குருநாயரே..!
      பரிசுக்கு பாட்டெழுதாவிட்டாலும் பரவாயில்லை. சும்மானாச்சுக்கும் எழுதுங்கோ. .!

      Delete
    4. ///குருநாயரே..!
      பரிசுக்கு பாட்டெழுதாவிட்டாலும் பரவாயில்லை. சும்மானாச்சுக்கும் எழுதுங்கோ. .!///

      மாட்டேன்!! அந்தப் படத்தைப் பாருங்க - அம்புட்டும் கடுவன்கள்!! எப்படி பாட்டெழுதவரும்ன்றேன்? எப்படி எனக்குள் ஊற்றெடுக்கும்றேன்?

      லெஃப்டில் உட்கார்ந்திருப்பவரைப் பார்த்தா ரொம்ப டீசன்ட்டா தெரியுது - கண்டிப்பா டைகரா இருக்க முடியாது!

      நின்னுக்கிட்டிருக்கும் தாடிவாலாவைப் பார்த்தா அசப்புல நம்ம பாட்ஷா ஜி மாதிரியே இருக்கு ( சீட்டுக் கட்டின் பிரின்ட்டிங் தரம் நல்லா இருக்கான்னு ஓரக்கண்ணுல பார்க்கிறார் பாருங்க)

      டெக்ஸுக்கு எதிர்த்தாப்ல உட்கார்ந்திருக்கற தாத்தாவைப் பார்த்தா புரஃபஸர் பெல்ஹாம் மாதிரியேஏஏஏ இல்லை?

      கொஞ்சநாளுக்கு மின்னாடி லேடி-Sன் அட்டைப் படத்தைப் பார்த்தப்போ போட்டி கீட்டினு எதுவும் வைக்காமயே கவிதை பொத்துக்கிட்டு வந்தது எனக்கு! அந்த நீலவானத்தின் பின்னணியில் நட்சத்திரங்கள் மின்ன - முழுநிலாப் போல ஒரு முகம் தெரிந்ததே... அடடா.. அடடடடா!! எடிட்டர் சார்... லேடி-Sன் அட்டைப் படங்கள் மட்டும் எனக்கு ஒரு நாலஞ்சு சேர்த்து அனுப்பிச்சுடுங்க... எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல!(அதான் பொருளாளர் இருக்காரில்ல..)

      Delete
    5. ///கவிதை பொத்துக்கிட்டு வந்தது எனக்கு! அந்த நீலவானத்தின் பின்னணியில் நட்சத்திரங்கள் மின்ன - முழுநிலாப் போல ஒரு முகம் தெரிந்ததே... அடடா.. அடடடடா!! எடிட்டர் சார்... லேடி-Sன் அட்டைப் படங்கள் மட்டும் எனக்கு ஒரு நாலஞ்சு சேர்த்து அனுப்பிச்சுடுங்க... எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல!///

      ஒரு நல்ல கவிதை படிக்கணும்னா எதுவுமே தப்பில்லை ...

      லேடி எஸ்ஸையே அனுப்பி வச்சாலும் பரவால்லை ...எத்தினி செலவான்னாலும் -விஜய் மல்லையாட்ட கடன் வாங்கியாவது சங்கம் ஈரோட்டு உமர்கயாம்மை தாங்கி பிடிக்கும் ...

      Delete
    6. ////விஜய் மல்லையாட்ட கடன் வாங்கியாவது சங்கம் ஈரோட்டு உமர்கயாம்மை தாங்கி பிடிக்கும் ...///

      88 கிலோ ஈரோட்டு உமர்கயாமைத் தாங்கிப் பிடிக்கணும்னா முதல்ல நீங்க ஒரு புல்டோசர் தான் வாங்க வேண்டியிருக்கும் பொருளாளர் அவர்களே!

      Delete
  27. A & B உள்ளது யாருப்பா, சொன்னா caption எழுதாம தப்பிக்க வசதியாக இருக்கும் :-)

    ReplyDelete
    Replies
    1. caption எழுத தெரியாது என்பதை மறைக்க நாங்களும் ரூம் போட்டு யோசிப்போம்ல :-)

      Delete
    2. ///A & B உள்ளது யாருப்பா, சொன்னா caption எழுதாம தப்பிக்க வசதியாக இருக்கும் :-)///

      உங்களுக்கு யார்யாரை பிடிக்குமோ அந்த நாயகர்களை A & B யா நினைச்சுக்கோங்க பரணி..!

      அதுக்காக லேடி S, ஜுலியான்னு நினைச்சுடாதிங்க..! :-)

      Delete
    3. அப்ப மாடஸ்டி & ஆர்சியான்னு நினைச்சுக்கிட்டு எழுதலாமா? :-)

      Delete
  28. ஸ்ரீ ராம் சார்...

    தங்கள் மற்றும் நண்பர்களின் அண்டர்டேக்கரின் அலசல்கள் முதலில் படிக்க அட டா ...அப்படியா என்று வியப்பை தந்தது உண்மையே...பிறகு அலசல்கள் எங்கெங்கோ பறக்க ஆரம்பித்தன்.. அவற்றை எல்லாம் படிக்க ,படிக்க தான் ஆஹா அண்டர்டேக்கர் புரியனும்னா கதையும் ..,சித்திரமும் மட்டும் அல்ல அரசியல்..,பொருளாதாரம் ..ஷேர் மார்க்கெட் போன்றவையும் தெரிஞ்சு இருந்தா தான் இந்த கதையை புரிந்து கொள்ள் முடியும் போல என்ற பயம் வந்தது உண்மை..கதை படித்து முடித்தவுடன் கதையின் "இதழின் பெயர்" நினைவுக்கு வரவில்லை...ஆனால் அலசல்களை விரிவாக ,விரிவாக போக தான் ஆமாம்பா இது கிராபிக் நாவல் தான் என புரிப்பட வைத்தது போல ஓர் எண்ணம்.தயவு செய்து தவறாக எண்ணி விடாதீர்கள் நண்பரே...என்னை பொறுத்த வரைக்கும் ஒரு காமிக்ஸ் இதழை படித்து முடித்தவுடன் அதன் தாக்கம் சில சில மணி நேரங்கள் கூட அல்ல சில நிமிடங்களாவது மனதில் நின்றாலோ அல்லது படித்து முடித்தவுடன் மனதிற்குள் ...சூப்பர்பா... நேரம் கிடைச்சா இன்னொரு தடவை இந்த கதையை படிக்கனும் அப்படின்னு மனதில் தோணும்..அதுதான் சிறந்த கதை (என்னை பொறுத்தவரை..)


    அதே போல் சித்திர கதை என்பது சித்திரங்களுக்கு பிறகே என்பதும் ஏற்று கொள்ள கூடியதே..எனவே சித்திரங்களையும் கூர்ந்து கவனித்து படிக்க வேண்டும் என்பதும் நிஜமே...ஆனால் என் அளவில் அது எந்த அளவிற்கு எனில் லக்கி லூக் துப்பாக்கியால் சுடும் பொழுது அவரின் நிழலின் சித்திரத்தை கவனிக்கலாம்..அல்லது அண்டர்டேக்கர் மூலம் நண்பர்களின் விவாதங்களை உதாரணமாக கொண்டால் அந்த தீவட்டி எரியும் திசையை வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் புரிந்து கொள்வதை சொல்லலாம்... என்னால் அந்த கதையில் எவ்வளவு தான் ஒன்றி படித்தாலும் ..சித்திரத்தை கூர்ந்து பார்த்து படித்தாலும் அந்த இடத்தில் தீவட்டி எரியுதுன்னா அது எரியுதா இல்லையா ன்னு மட்டுமே பார்ப்பேன்..அது வட திசையில் நோக்கி எரிகிறதா ..அல்லது தென் திசை நோக்கி எரிகிறதா எஎன்ற அளவிற்கு கூர்ந்து கவனித்து படிப்பது எனக்கு கடினம் நண்பரே...நம்ம ரிப்போர்ட்டர் ஜானி கதையை வேணா இன்னும் சித்திரங்களை கூர்ந்து படிப்பேன் ...ஆனாலும் அதிலும் இந்த அளவிற்கா என்றால் ம்ஹீம் தான் ..கதை படிக்கும் பொழுது கதை சொல்லும் பாணியில் படிப்பவருக்கு குழப்பம் இல்லாத வரை ஓகே தான் .ஜெராமியா கதை தொடரில் கூட முதல் இரண்டு பக்கங்களிலேயே ஏற்பட்ட குழப்பமே என்னை போன்ற பல நண்பர்களுக்கு அது கவராமல் போன காரணமாயிற்று.அதாவது ஆரம்பத்தில் ஒருவர் மிரட்ட பட அடுத்த கட்டத்திலேயே மிரட்டபட்டவர் மிரட்டி கொண்டு இருக்கிறார்.முக உணர்ச்சியை வைத்து நாமாக அதை உணர்ந்து கொள்ள வேண்டும் என நண்பர்கள் கூறி இருந்தாலும் என்னை போன்ற நண்பர்களுக்கு அது கதாசிரியரின் தவறாக தான் உணர்ந்து கொள்ள பட்டது.ஆரம்பத்திலியே ஏற்பட்ட அந்த குழப்பம் கதையின் ரசிப்பு தன்மைக்கே ஏமாற்றமளிக்க ஆரம்பித்து விட்டது .அது கதை ஆசிரியரின் உள் குறியீடு திறமை என பலர் பாராட்டினாலும் என்னை போன்ற சிறு பிள்ளைகளுக்கு அது குழப்பமான ஒன்றே...

    அது போல தான் நண்பர்கள் அனைவரும் அலசும் ஒரு சித்திரகதையில் இத்தனை அரசியல்..,பொருளாதாரம்..,ஏற்ற தாழ்வுகள்..இன்னும் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா வை அக்கு வேறாய் ஆணிவேராய் பிரித்து எழுதி..அதன் படியே புரிந்து கொண்டு ஒரு சித்திரகதையை படிக்கும் தங்களை போன்ற நண்பர்களை கண்டு வியந்து போனாலும் (கொஞ்சம் பொறாமையாக இருந்தாலும் ) கூட இந்த அளவிற்கு நாமும் உணர்ந்து ..தெரிந்து..அறிந்து படித்தால் உண்மையாகவே இப்போது கிடைக்கும் ஒரு குழந்தை தனமான காமிக்ஸ் மகிழ்ச்சி எனக்கு கிடைக்குமா என்றால் அது கஷ்டமே..அல்லது இந்த அளவிற்கு எல்லாம் அறிந்து தான் ஒரு காமிக்ஸ் கதையை படித்து ரசிக்க வேண்டும் அது தான் கதாசிரியருக்கு நாம் கொடுக்கும் சிறப்பு என்றால் சத்தியமாக சொல்கிறேன் சார் ..


    "நான் வளரவே மாட்டேன் மம்மீ " :-)

    ReplyDelete
    Replies
    1. கலக்கிப்புட்டீங்க தலீவரே! எதார்த்தத்தை பதார்த்தமா சொல்லி பாறையிலும் துளிர்விடவைக்க உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது!

      எங்கே இதே மாதிரியே சிவகாசிக்கும் ஒன்னை அனுப்பிடுவீங்களோன்னு மிரண்டுபோய் எதிரணித்தலைவரே இங்ஙனக்குள்ள எட்டிப்பார்த்துப் பாராட்டிட்டுப் போரார்னா பார்த்துக்கோங்களேன்!!

      Delete
    2. //எங்கே இதே மாதிரியே சிவகாசிக்கும் ஒன்னை அனுப்பிடுவீங்களோன்னு மிரண்டுபோய் எதிரணித்தலைவரே இங்ஙனக்குள்ள எட்டிப்பார்த்துப் பாராட்டிட்டுப் போரார்னா பார்த்துக்கோங்களேன்!!//

      ha ha ha :-))

      Delete
    3. செம தலீவரே !!!!! உங்க வெள்ளந்தியான பதிவு செமையா இருக்கு படிக்க ....

      இருபது வருடங்களுக்கு மேலாக எழுதி கொண்டிருக்கும்தலீவருக்கு இந்திய ஏகாதிபத்தியம் ஏன் கடித இலக்கியத்திற்காக ஞான பீட விருது இன்னும் வழங்கவில்லை ???

      Delete
    4. சிரிச்சு மிடில செனா அனா அவர்களே!!!.💐💐💐.

      Delete
    5. செனா அனா ஜீ....

      அது எதிர் நாட்டு "உதவியாக " கூட இருக்கலாம்...:-))

      Delete
  29. Replies
    1. Paranitharan K : வந்துட்டேன்னு சொல்லு....
      பதுங்கு குழியிலிருந்து பந்தாவா வந்துட்டேன்னு சொல்லு..! '
      பளிச்' என்ற அபிப்பிராயத்தோடு அசத்த வந்துட்டேன்னு சொல்லு...!!

      தலீவருக்கு ஸ்கிரிப்ட் எழுதும் வாய்ப்புக் கிட்டின் - maybe மேற்கண்ட வரிகளே இப்போது பொருத்தமானதாக இருக்குமோ ?

      Delete
  30. டைகர்:
    இன்னாபா க்ரோ கொஞ்சம் கூட யோசிக்காம இப்டி படுகுழில வுழுந்திட்டியே. நானும் டெக்ஸ் அண்ணாத்தே யும் எத்தினி வருஷமா இங்க குப்பை கொட்றோம்.நம்மகிட்ட ஒரு வார்த்தை கேக்கலாமில்ல. ஆரம்பத்துல இப்டிதான் இருக்கும். போகப்போக ரண கொடூரமா இருக்கும்.அப்பால மூக்க பஞ்சராக்குவாங்க.சேத்துல புழுதியில புரண்டு வரணும்.காலி வயத்தோட அலையணும். மாசக்கணக்கா குளிக்காம இருக்கணும்.சாவடி வாங்கணும் ஆனா சாகாம இருக்கணும்.ஹீரோயின்னு ஒருத்திய காட்டுவாங்க ஆனா அவளுக்கு இன்னொருத்தன்தன் ஹீரோவா இருப்பான். இதெல்லாம் தேவையா உனக்கு?.என்ன பிள்ளையோ போ..

    டெக்ஸ்:
    ஆமாம்பா கரைட்டா சொல்லியிருக்கே டைகர் தம்புடு. நானும் ஒவ்வொரு வில்லனோட சோலிய முடிச்சப்பறம், நம்ம கிட் டுக்கு கண்ணாலம் பண்ணாம்னு பொண்ணு பாக்க கிளம்புலாம்னு இருக்கிறப்பதான் கரைட்டா ரேஞ்சர் ஆபிஸிலிருந்து தந்தி வரும். இல்லாட்டி ரெட்ட வால் குருவிகிட்டேர்ந்து இல்லைனா சீறும் சிங்கம்II கிட்டேர்ந்து புகை சமிக்ஞை வரும்.இதாலே லேட்டாகி லேட்டாகி கிட்'டும் கிட் கார்ஷனாட்டம் ஆயிடுவானோன்னு நெனச்சாதான் கடுப்பாகுது...

    கார்சன்:
    அட விடுங்கப்பா. இத்தன நாளும் நம்மலால மண்டயபோட்டவங்கள நாமதானே பொதைச்சொம்.இப்பதான் வெட்டியான் இருக்கிறான்ல நமக்கு வேலை மிச்சம்னு சந்தோசப்படுங்கப்பு.
    ஏம்பா டைகர் அந்த சில்க் புள்ளையோட அட்ரஸ கொடேன்.ச்சும்மா ஜெனரல் நாலெஞ்சுக்குதான். ஹி..ஹி..ஹி.

    க்ரோ:
    அய்யோ ராமா! என்ன ஏன் இவங்ககூட கூட்டு சேர வச்சே?.
    இவிங்க நல்லவங்ளா? கெட்டவங்களா?
    கடவுளே!!!!

    ReplyDelete
  31. @ செல்வம் அபிராமி & மிதுன் சக்கரவர்த்தி

    நான் கணித்துவைத்துள்ளது நீங்கள் குறிப்பிவது போல இவ்வளவு அரசியல் பின்னணி கொண்டதல்ல.! ரொம்பவே சின்னது,நுட்பமானது,முக்கியமானது,ஆச்சரியமானது,மொத்த புதிரையும் அந்த சாவியில் தான் திறக்கமுடியும்.!

    ஆனால் பாருங்க...இரண்டு கட்சி தலைவர்களும் மேடை எங்களுக்கானது.! என அறிவித்து அமரசொல்லி விட்டபடியால்.... வழக்கம்போல் தரையில் அமர்ந்து, இரைச்சல்கள் அடங்கிய பின்னால் ஒருநாள் அலசுவோம்.! [சிரித்தபடி கையசைக்கும் மிஸ் பிரைரி படம் ஒன்று]

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தளத்தில் பதிவை தேடி தேடி கண்ணு ரெண்டும் பூத்து போச்சுங்களே மாயாசார்...

      Delete
    2. @ சேலம் இரவுகழுகார்

      போட்டு தாக்கிடலாம் பொறுங்கள்.! :))))

      Delete
    3. ///வழக்கம்போல் தரையில் அமர்ந்து, இரைச்சல்கள் அடங்கிய பின்னால் ஒருநாள் அலசுவோம்////

      ஷ்யூர் ...ஷ்யூர்....மாயாவிஜி !!!

      Delete
    4. மற்ற நண்பா்கள் சொல்வதுபோல அளவுக்கு மீறினால், அண்டா்டேக்கரும் நஞ்சுதான்! (இது தளத்துற்கு)


      அப்புறம் நாம EBFல தனியா ஒரு மீட்டிங் போட்ருவோம் மாயாவி & செனா ஜி
      (இது உங்க காதுக்குள்ள மட்டும் ரகசியமா??)

      Delete
  32. சார் போட்டோ எப்படி ? பாஸ்போர்ட் அல்லது கார்டு சைஸ் கலர் BW ?

    ReplyDelete
  33. A : அடடா இப்படிக் கூடிக்கூத்தடிச்சு எவ்வளவு நாளாச்சு? இதை சில வாரங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டிருந்தோம்தானே டெக்ஸ்? B : அது சரிதான்..ஆனால் அந்த வெட்டியான் அண்டேக்கர் பயல் ஆட்டத்தையே கலைச்சுட்டான்..போதாதற்கு அவன் எது செஞ்சாலும் ஆராய்ச்சி பண்றதுக்கு அஞ்சு ஜால்ரா பாய்ஸ் வேற..அவங்க ஆக்கிரமிச்சு வெச்சிருந்தஅந்தப்பகுதியை மீட்டு மிரண்டுபோன மக்கள்கிட்ட ஒப்படைக்கிறதுக்குள்ள..போதும்போதும்னு ஆயிடுச்சு.. C : புலம்பறத விடு ஜோ..நமக்கு நாலுபேர் கூட்டு இருக்கிற மாதிரி அவனுக்கும் ஒரு அஞ்சுபேர் அவ்வளவுதான்..என்ன வெள்ளிமுடித் தலையரே... D : ஆமாம்..அங்கமட்டும் வாழுதாக்கும்..? நாளைக்கே நம்ம "கிட்" பயலுக்குக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சா அடுத்த வருஷம் நீயும் தாத்தாதான்...

    ReplyDelete
    Replies
    1. ஓகே..சார்..ஓகே..அந்த வார்த்தையை நான் வாபஸ் வாங்கிக்கிறேன்..அதுக்குப்பதிலா "சப்போர்ட் மென்" அல்லது "பில்டப் மென்"என மாற்றிப்படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

      Delete
  34. A: டைகர்
    B: க்ரோசே
    C:. டெக்ஸ்
    D: வருத்த கறி ஒரு பெலேட் பிளீஸ்

    A: (மனதிற்குள்) இவன் தன் பெயரை சொல்லுறதுக்கு கூட வருத்த கறி கொடுக்கனும் போல, இதுக்கு பேசாமல் இவனுக்கு வறுத்த கறி மண்டையன்னு பெயர் மாற்றிவிடலாம்)

    ReplyDelete
  35. ஆனால் பாருங்க...இரண்டு கட்சி தலைவர்களும் மேடை எங்களுக்கானது.! என அறிவித்து அமரசொல்லி விட்டபடியால்.... வழக்கம்போல் தரையில் அமர்ந்து, இரைச்சல்கள் அடங்கிய பின்னால் ஒருநாள் அலசுவோம்.!


    ########


    :-)))))



    அது அப்படி அல்ல மாயாஜீ....

    அலசல்கள் கதை அலசல்களாக இருப்பின் படிக்க ..படிக்க ஆர்வம் வருவதுடன் புத்தகத்தையும் மேலும் புரட்ட தோன்றும்...ஆனால் இங்கே " கதை புரிதல்களுக்கே " இவ்வளவு அலசல்கள் எனப்படும் பொழுது என்னை போன்ற பாமர ரசிகனுக்கு கொஞ்சம் பயந்து வந்துருது அவ்வளவுதான்...:-)

    ReplyDelete
  36. A (Tiger) (நக்கலாக):
    என்னா.....!
    ..... தல!
    ஒரு மாசம் லீவு உட்டாங்க போல !
    ஹெ...ஹெ....ஹெ.!!!!

    C (டெக்ஸ்) (ஜாலியாக)
    என்னா...பண்றது புலி!
    உன்ன மாரி மாசம் மாசம் வந்து ஹிட் அடிக்க முடியுமா!

    D (கார்சன்) :
    ஆம ஆமா!
    இவுரு அப்படியே மாசம் ஒருக்கா வந்துட்டாலும்.....
    நாங்க எல்லாம் அப்படியே அசந்து தான் போயிருவோம்!

    B :
    இவன் வேற கோவம் வர மாதிரி காமெடி பண்ணிக்கிட்டு....
    நாமளே வருஷம் ஒருக்கா வர்றோம் !
    தக்காளி! இதுல தலக்கிட்ட ரௌசா !
    சட்னி ஆயிருவ புலி!
    புளி சட்னி ஆயிருவ !

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா...
      ஒஹோ..ஹே..ஒஹோ..😀😁😄😃😆😅😊
      செம பாஸ்...

      Delete
    2. நல்லாருக்கு சாரே!

      Delete
    3. நன்றி தல! Welcome Back :)

      @Govindaraj Perumal
      நன்றி பாஸ்!
      உங்க கமெண்ட்ஸ் தொடர்ந்து படிச்சுட்டு வரேன் !
      சும்மா கலக்கறீங்க போங்க!

      Delete
  37. என்னதான் நான்குபேர் பங்குபெறும் உரையாடலாக இருந்தாலும் ஒரு கெட்ட வார்த்தையை மருவி நிற்கக்கூடிய "த...."என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதெல்லாம் நாகரிகமான யெல் அல்ல. ஆஹா ஓஹோ என பாராட்டிச் சிரிப்பவர்களுக்கு இதைச் சுட்டிக்காட்டித் திருத்தவேண்டும் என்ற எண்ணம் ஏனோ தோன்றவில்லை. பெண் பார்வையாளர்கள் எழுதுவதிலிருந்து விலகிக் கொண்டார்கள் என அங்கலாய்ப்பவர்கள் இப்படியெல்லாம் எழுதினால் பெண் வாசிகிகள் இத்தளத்தில் எப்படிப் பங்குபெறுவார்கள் என்பதைச் சற்றே யோசித்துப்பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  38. entry 1

    டைகர்:இதுவரைக்கும் 340 பேரு என்கிட்ட தோட்டா வாங்கிருக்காணுங்க
    கார்சன்: 211 பா
    டெக்ஸ்: 14357 பேருக்கு டிக்கெட் தந்திருக்கேன்.
    க்ரோ: உங்களால நான் நல்லாருக்கேன். சேவை தொடரட்டும்.

    Entry 2:

    டைகர்: அதெப்படி டெக்ஸ், நம்ம உயிரைக் குடிக்கிற ஒரு தோட்டாவையும் எவனும் சுட்டதில்ல. எல்லோருமே சோதாக்களா?
    கார்சன்: என் ராசியான தொப்பி தான் காரணம். இதுவரைக்கும் 1453தடவ அது ஓட்டை ஆகியிருக்கு. ஆனா இன்னமும் புதுசு போல இருக்கு.
    டெக்ஸ்: யப்பா, நாம போயிட்டா அப்புறம் காமிக்ஸ் ரிலீஸ் ஆவாது. அதனால நமக்கு சாவே கிடையாது.
    க்ரோ: அடப்பாவிகளா? உங்களுக்கு சாவே கிடையாதா? அடிச்சிக்கிட்டு சாவீங்கனு ரெண்டு நாளா இங்க குந்தியிருக்கேனே. வட போச்சே

    entry 3


    டைகர்: என்னபா, பயர் அலாரம் அடிக்குது?
    கார்சன்: அது என் வயிருப்பா. நல்ல பசி.
    டெக்ஸ்: இல்லை, அது பயர் அலாரம் தான். வெளில பீர் சாப்பிட போனேனா, ரெண்டு பேரு நம்மள அட்டாக் பண்ணினாங்க. அவனுங்க வண்டிய கொளுத்திட்டு வந்தேன்.
    க்ரோ: அய்யா தர்ம துரைகளா. இது அடிக்கிறதுக்கு காரணம் நாம அடிக்கிற தம். நாலு பேரு மூச்சு முட்டி செத்து கிடக்குராணுங்க பாரு.

    entry 4


    டைகர்: இது ஒரு நோ லிமிட், நோ வால் கேம்.
    கார்சன்: அப்படினா?
    டெக்ஸ்: பண லிமிட்டும் கிடையாது, டைம் லிமிட்டும் கிடையாது.
    க்ரோ: உச்சா போக கூட எந்திரிக்க மாட்டானுங்களோ?

    ReplyDelete
  39. entry 5

    டெக்ஸ்:தலடா
    டைகர்: தளபதி டா
    கார்சன்: வறுத்த கறி டா
    க்ரோ: எனக்கும் ரெண்டு ப்ளேட்டுடா

    entry 6

    டெக்ஸ்: யாருப்பா டைகர் அது. உன் பக்கத்துல?
    டைகர்: பணம் நிறைய வச்சுருக்கார்னு சொன்னாரா, வாங்க சீட்டாடலாம்னு கூப்பிட்டேன்.
    கார்சன்: இன்னிக்கு மொட்டை ஆமைக் கறியா, பேஷ் பேஷ்
    க்ரோ: மொட்டைத்தம்பி உன் கடைசி ஆசை என்னா? பணம் இருக்கும் போதே சொல்லிடு.


    entry 7

    க்ரோ: புதுசா அன்டர்டேக்கர் + wishesனு புது கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன் கண்ணுங்களா. பாத்து செய்ங்க
    டெக்ஸ்: பெரிய அப்பாடக்கர் தான்யா நீ. செம ஐடியா
    கார்சன்:எங்க பின்னாடியே வா. யாவாரம் செமையா இருக்கும்.
    டைகர்: கமிஷன் வந்திடனும் ஆமா


    ReplyDelete
  40. டைகர் : என்ன டெக்ஸ் அண்டர்டேக்கர் காய்ச்சல் இன்னும் விடலையா..வில்லாதிவில்லனையெல்லாம் பார்த்த உனக்கு அண்டர்டேக்கர் பெரிய விஷயம் இல்லையே..? ஜோ : என்ன கிண்டலா டைகர்? "தக்....ளி"அந்த அண்டேக்கர் .................டெக்ஸ் : வாயை மூடு ஜோ..காடு மேடெல்லாம் சுத்திசுத்தி காட்டானாட்டம் பேசாதே..இந்த மாதிரி பேசுறதனாலதான் எந்தப் பெண்ணும் நம்மை நெருங்க விரும்புவதில்லை.. "கிட்"க்கு பெண் தேடுவதே பெரும் பாடா இருக்கு..என்னோடு இருப்பவர்கள் இம்மாதிரி பேசுவதை நான் விரும்புவதிலலை என்பது தெரியும்தானே ஜோ..விதவதமாய் சட்னியைத் தின்னுட்டு சரக்கை கழுத்துமட்டும் குடிச்சா மட்டும் போதாது ஜோ.. நாவடக்கமும் வேணும்..என்ன கார்ஸன்..?..................கார்ஸன் : சரிதான் டெக்ஸ் . கணப்பொழுதும் சட்டம் தவறாத வன்மேற்கின் வன்காவலன் நீதான். இத்தனை வருஷமா உன்னோடவே இருக்கும் எனக்கு நன்றாகவே புரிகிறது..ஆனால் எப்போ இண்டர்வல் கிடைக்கும் எப்போ உச்சா போலாம்னே காத்திருக்கும் எல்கேஜி குழந்தைகளுக்கு இது புரியாதுதான்....

    ReplyDelete
  41. ஜோ : டெக்ஸ் ..நீ மேலும் மேலும் எனக்கு ஆத்திரமூட்டுகிறாய்.............டெக்ஸ் : டெக்ஸாஸ் மண்ணுக்கு மேலே நின்றுகொண்டு டெக்ஸுக்கு எதிராக ஆத்திரப்பட்டவர்களெல்லாம் டெக்ஸாஸ் மண்ணுக்குக் கீழே நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிரும்கிருக்கிறார்கள்..தூக்கம் உன் கண்களையும் தழுவ வேண்டுமா..? எனது ரிவால்வரிடம் நீலாம்பரி ராகத்தை இசைக்கச்சொல்லட்டுமா..? டைகர் : நானும் பக்கவாத்தியமாக கலந்துகொள்ளலாமா..? கார்ஸன் : இது பக்க வாத்தியமல்ல..பக்கா வாத்தியம்..கச்சேரி களைகட்டும்....

    ReplyDelete
  42. A. டைகர் : என்ன பெருசுங்களா.. ஈரோட்டு திருவிழாக்கு என்ன ப்ரோக்ராம்..?

    B. ஜோனஸ் : க்கும் என்ன பெருசா பண்ணீடப் போறாங்க.. எப்பவும் போல ஒரு புக்க வெளியிடுவாங்க.. ஒரு மூணு நாலு மணி நேரம் விவாதிப்பாங்க.. அப்புறம் சாப்பிட்டு மறுபடியும் புத்தக திருவிழாவில போயி அதவே மறுபடியும் பேசுவாங்க..

    C. டெக்ஸ் : ஆனா இந்தத் தடவ வெள்ளிக்கிழமை இரவே ஏதோ விசேசம் இருக்கும் போல இருக்கே..

    D. கார்ஸன் : ஆமாம்பா.. வெள்ளிக்கிழமை ராத்திரி நிலாச் சாப்பாட்டோட காமிக்ஸ் கலந்துரையாடல்ன்னு புதுசா இந்த சேந்தம்பட்டி ஆளுங்க நடத்தப் போறதா புகைச் சமிக்ஞைல உளவுத் தகவல் வந்துருக்கு.. வறுத்த கறியும் கண்டிப்பா உண்டாம்.. இந்தாப்பா டைகரு.. எதுக்கும் ஒரு வாரம் நல்லா தேச்சு குளிச்சுட்டு வரப் பாரு.. நானும் ஒரு ரெண்டு வாரம் வறுத்த கறிய உள்ளே தள்ளி, நல்லா கொண்டாட ட்ரெய்னிங் எடுத்துக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. "வெள்ளிக்கிழமை ராத்திரி நிலாச் சாப்பாட்டோட காமிக்ஸ் கலந்துரையாடல்ன்னு"
      @கரூர் சரவணன் பாஸு !
      அது எங்கின்னு கொஞ்சம் சொல்லுங்க பாஸு!
      நெலா வல்லினாலும் நாங்க வாரோம்!

      Delete
  43. Caption: 2

    A (Tiger) :
    நிறுத்தணும்!
    எல்லாத்தையும் நிறுத்தணும்!

    C (டெக்ஸ்):
    நானும் அதத்தான் யோசிக்கிறேன் !

    D (கார்சன்) :
    இவங்க எத நிறுத்த போறாங்க !
    ஒரு வேல இந்த தல தளபதி சண்டையை நிறுத்த போறாங்களா?

    B :
    அட பெரியவரே!
    என்ன சொல்லி போடீங்க நீங்க!
    அத நிறுத்திட்டு....
    நம்ம தேசத்துல social மீடியா இல்லாம.....
    சோறு தண்ணி இல்லாம....
    நம்ம புள்ள குட்டிங்களா சாக சொல்றீங்களா !
    24 மணி நேரமும் facebook twitter ல இருக்கற நம்ம புள்ளிங்களா ஒரு நிமிஷம் நெனச்சு பார்த்தீங்களா!

    ReplyDelete
  44. Caption: 3

    A (Tiger) :
    அடாடாடா !
    போன வாரம் சைனா போயிருந்தன்!
    இந்த சைனீஸ் fans !
    ஐஐஐயோ !
    அடடடடடா!

    C (டெக்ஸ்):
    யாரு நீயி!
    சைனா போன....!
    அவங்க உன்ன…….கண்டுபுச்சுட்டாங்க!
    அடேய் !!!!
    புலி !
    ஆமா!
    உனுக்கு chinese தெரியுமா புலி!

    D (கார்சன்) :
    அட நீ வேறப்பா!
    கலைக்கு மொழி ஏதப்பா!
    அப்புறம் நீ ஜொள்ளு புலி!
    அங்க சரக்கு சரி கிக்க்கா இருக்குமாமே!

    B :
    உஹும் ! நல்லா வெச்சாங்கய்யா பேரு!
    மக்களே !
    நல்லா பாருங்க!
    அந்த மூக்கு இன்னைக்கு இன்னொருவாட்டி ஒடைய போகுது!

    ReplyDelete
    Replies
    1. :))))

      வித்தியாசமா யோசிக்கறீங்க சரவணன்! :)))

      Delete
    2. நன்றி செயலரே :-)

      Delete
  45. Caption: 4

    A (Tiger) :
    என்ன தல!
    ஸ்பைடர்ர வர சொன்னா...
    நம்ம பெல்கமா அனுப்பிச்சிருக்கார்!

    C (டெக்ஸ்):
    ஸ்பைடர் மூளைகாரணப்பா!
    நானும் நீயும் பேசிக்கும் போது...நம்ம கார்சனுக்கு அவரு ஏஜ் குரூப்ல ஒரு ஆளு வேணும்னு அனுப்பிச்சிருப்பாரு!

    D (கார்சன்) :
    அட! நீ வா பெல்கம்!
    இந்த இஸ்கூல் புள்ளிங்களோட நமக்கு என்ன வேல ?

    B :
    ஆஹா!
    அங்க பாட்டில் பாட்டில்லா குடிக்கறவங்களாம் கம்னு குடிக்கறாங்க!
    இந்த ஒரு பாட்டில்லா வச்சிக்கிட்டு இவங்க பண்ற ரௌசு தாங்க முடியலப்பா!

    ReplyDelete
  46. Caption:5

    A (Tiger) :
    தல!
    நானும் நீங்களும் சேர்த்து தெறிக்க விடணும்ன்னு மக்கள் விரும்பறாங்க!

    C (டெக்ஸ்):
    ஆஹா! நீ வா புலி!
    உன்னோடு சேர்த்து இன்று முதல் நாம் ஐவரானோம்!

    D (கார்சன்) :
    அட பாவி!
    இன்னும் ஆரம்பிக்கவே இல்ல !
    இவன் அதுக்குள்ள ராமாயணம் எல்லாம் பேசறானே!
    ஐயோ!
    ஒருவேள அடிச்சதுக்கு அப்புறமா நாக வள்ளி எல்லாம் பேச போறனோ!

    B :
    (மனதிற்குள்)
    அஆஹா!
    புலி வருஷம் பன்னண்டு ஸ்லாட் வாங்க போறேன்னு சொன்னது இப்படித்தானா!
    இப்போ நாம அதே டயலாக் சொன்னா "அறுவர் ஆவோமா ?"
    இல்ல "ஆறு" தோட்டா வாங்குவோமா !
    எதுக்கும் கொஞ்சம் தள்ளி நின்னு கேட்டு பாப்போம்!
    (முனகலாக) த..தல....தல..........!

    ReplyDelete
  47. சேலத்து சல்மான்கான் சேந்தம்பட்டியின் செல்லாக்குட்டி பேபிம்மா என்கிற சுசீந்தரகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழத்துகள். .!
    உங்கள் மழலைச்சிரிப்பு மாறாமல் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகிறோம்..!

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசிஜி..

      Delete
    2. காமிக்ஸ்க்காக ரத்தம் சிந்திய மாவீரர் திரு. சுசீந்தரகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழத்துகள்!

      Delete
    3. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் "பேபி ஸ்மர்ப்"...

      Delete
    4. சேலத்து சல்மான்கான் சேந்தம்பட்டியின் செல்லாக்குட்டி பேபிம்மா என்கிற சுசீந்தரகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழத்துகள். .!
      உங்கள் மழலைச்சிரிப்பு மாறாமல் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகிறோம்..!

      Delete
    5. சங்கத்தின் வெளியூர் பயணங்கள் ,இதர திட்டமிடல்கள் போன்றவற்றை செவ்வனே செய்து முடித்து சங்கத்தின் உண்மையான பொருளாளர் என திகழும் சேலம் சுசீ -க்கு கௌரவ பொருளாளரின்( டம்மி டிரஷரர் என்பதை இதை விட டீசன்ட்டா எப்படி சொல்றது :-)} கூடுதல் வெய்டேஜ் உள்ள இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!!!

      Delete
    6. சேலத்தின் "செல்லா குட்டி " சுசீஜீ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...:-)

      Delete
    7. நண்பர் சுசீந்திரகுமார் அவர்கட்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

      Delete
    8. பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைத்து அண்ணன்களுக்கும் நன்றிகள் __/\__/\_/\

      Delete
  48. ஜோ : டெக்ஸ் ..நான் உன்னோட சகஜமா பழகுறதால நீ என்னைக் கறைச்சு மதிப்பிடாத..எனக்குப் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு............டெக்ஸ் : கேட்டாயா கார்ஸன்..?இந்த எத்தனுக்குப் பின்னாடி ஒரு கூட்டமே இருக்காம்..இம்மாதிரி கைத்தடிகளையெல்லாம் என் வாழ்க்கையில் நிறைய பார்த்தாகி விட்டது..ஜோ..உனக்கும் உன்னுடைய கைத்தடிகளுக்கும் பயப்படுபவன்தான் டெக்ஸ் என்றால்சுற்றித்திரியும் சிட்டுக்குருவிகளின் சுதந்திரத்தை உன்னைப் போன்ற வல்லூறுகளிடமிருந்து பாதுகாத்திருக்க முடியுமா..?..................டைகர் : விடுங்க பாஸ்..பண்பற்ற வல்லூறுகளுக்கு சிட்டுக்குருவிகளின் சுதந்திரம் பற்றித் தெரியுமா..?...................கார்ஸன் : கேட்டாயோ ஜோ..?இனிமேலாவது உன் அழுகிய நாவை அடக்காவிட்டால் உன்னுடைய மோவாயை என்னுடைய முஷ்டி குசலம் விசாரிக்க வேண்டியிருக்கும்....

    ReplyDelete
  49. டெக்ஸ் : பொதுவாகவே என்னுடைய ரிவால்வர் தன்னுடைய முராரி ராகத்தை இசைக்க ஆரம்பித்தால் எதிரியின் உயிரை எமனுடைய கைகளில் ஒப்படைக்கும் வரை ஓயாது என்பது தெரியுமல்லவா ஜோ..?....................டைகர் (குறுக்கிட்டு): அதான் உலகத்துக்கே தெரியுமே.............டெக்ஸ் : அப்படியானால் ஜோ நீ பேசிய பண்பற்ற வார்த்தைக்காக வருத்தம் தெரிவிக்கிறாயா.அல்லது ஒரு நூறு ஈயத் தோட்டாக்களை உன் குரல்வளையில் இட்டு நிரப்பட்டுமா..?....................டைகர் : "முராரி ராகம்"னா என்னன்னு தெரியுமா ஜோ..கேள்விப்படாத வார்த்தையா இருக்கேன்னு கொரியன் பாஷைன்னு நினைச்சிடாத...........................கார்ஸன் : எப்படியோ ஜோ...சும்மாயிருந்த பாய்லரை சூடு பண்ணிவிட்டுட்ட...அண்டர்டேக்கர்கிட்ட சொல்லி உனக்கொரு பெட்டியை ரெடி பண்ணிவைக்கனும்....

    ReplyDelete
  50. தடை பல தகர்த்து எழு!!!!

    அட!! ஈவியின் ரின் டின் கேன் ரசிகர் சங்கத்தில் ஜாலியா சேர்ந்துகிடலாம் போல !!!! எனக்கு ரொம்ப புடிச்சுதான் இருக்கு !!!! நிறைய குட்டி குட்டி விஷயங்கள புன்னகைச்சுகிட்டே ரசிக்க முடியுது !!!

    ரிண்டின்னுடன் போட்டி போடுகிறார் சுறா தீவு சிறையிலுள்ள அந்த இளிக்க வைக்கும் இரும்புக்கை எத்தன் .....

    rating ....8/10

    ReplyDelete
    Replies
    1. அந்த அண்டர்டேக்கர் பயலையே ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்த குஷியில என்ர தொப்ளா குட்டியை இம்புட்டு நாளும் கண்டுக்காம விட்டுட்டீங்களே செனாஅனா...

      ////ரின் டின் கேன் ரசிகர் சங்கத்தில் ஜாலியா சேர்ந்துகிடலாம் போல !!!///

      சீக்கிரமே தொப்ளா செல்லத்துக்கு ஆளுயர கட்-அவுட் வச்சு, ஆரத்தியெடுத்து, எலும்பு மாலை போட்டு, சூப்பாபிஷேகம் பண்ற நாள் வெகுதொலைவில் இல்லை! இது ருக்குமணி மேல சத்தியம்!!

      Delete
    2. ஈ வி உண்மைய சொல்லுங்க
      யார் அந்த ருக்குமணி.
      பாட்டி என்று பொய் சொல்லக்கூடாது

      Delete
    3. ////ஈ வி உண்மைய சொல்லுங்க
      யார் அந்த ருக்குமணி///

      ஹிஹி! அது என்ர அஞ்சாப்பு கேர்ள் பிரண்டுங்க. ருக்குமேல சத்தியம் பண்ணா அத்தனையும் நெசமாகும் - ஆண்டாண்டு காலமா அப்படியொரு ஐதீகமுங்க!

      Delete
    4. ///எலும்பு மாலை போட்டு, சூப்பாபிஷேகம் பண்ற நாள் வெகுதொலைவில் இல்லை! ///

      ஹா ...ஹா...எப்படித்தான் உங்களுக்கு இப்படி தோணுதோ ????


      சூப்பாபிஷேகம் ....!!!! ஹா ..ஹா ...ஹா....

      Delete
  51. ஜோ : உனது உபதேசம் எதுவும் இங்கு தேவையில்லை டெக்ஸ்.............டைகர் : பயலுக்கு நல்ல விதமாய் சொன்னால் புரியாது போலும்..................டெக்ஸ் : இவன் மண்டையிலிருப்பது மூளைதானா அல்லது இரும்புக்குண்டா...?.................கார்ஸன் : அது சரி காட்டுப்பயலுக்கு இராமாயணமெல்லாம் புரியாதுதான்...ஒன்லி மண்டைத்தொலியை உரித்தெடுத்தல்தான்.....

    ReplyDelete
  52. டெக்ஸ்:
    ஹி...ஹி... என்ன டைகர் தம்பி பாத்து ரொம்ப நாளாச்சி ச்சே... ரொம்ப வருஷமாச்சு. எங்கேயாச்சும் வெளிநாடு டூர் போயிட்டியா? இல்ல வலுக்கட்டாயமா VRS வாங்கிட்டியா என்ன?

    கார்ஸன்:
    இதுக்குதான் நைனா எப்பவும் அப்டேட்டா இருக்கணும்'றது. எங்களப் பாரு 1980 ல வந்த கதையிலயும் இருக்கோம். 2020. வர்ற கதையிலயும் இருப்போம்.இன்னும் சொல்லப்போனா 2099 வரைக்கும் எங்க கால்ஷீட் டைரி புல்லாயிடுச்சி தெரியுமா? இன்னமும் அய்யாவுக்கு வொர்த் இருக்கு தெரியும்ல ஹா...ஹா...

    க்ரோ:
    இவரு அவர தம்பி'ன்றாரு.தாடிக்காரர் அவர நைனா'ன்றாரு .இவருக்கும் தாடிக்காரர்க்கும் என்ன சம்பந்தம்? அவருக்கும் இவருக்கும் என்ன லிங்க்? தாடிக்கு அவரோட என்ன கனெக்ஷன்?
    ஸ்ஸ்ஸப்பா...ஓவரா குழப்புதே.
    தெரியாம வந்து மாட்டிட்டேனோ கடவுளே!!!

    டைகர்:
    ஆடுங்கப்பா ஆடுங்க. இன்னும் முப்பதே நாள்தான் அதுவரை நல்லா ஆடுங்க. அதுக்கப்புறம் என்னோட ஆட்டம் ஆரம்பமாயிடும். பின்னாடி உங்களுக்கு ஆடற வாய்ப்பே வராது. ஏன்னா என்னோட என்ட்ரி அப்படிப்பட்டது.புரிஞ்சுதா? ஹா..ஹா..ஹா...
    உங்களையெல்லாம் நெனச்சா பாவமா இருக்கு. ஹா..ஹா..ஹா...

    ReplyDelete
  53. சார் ரின் டின் கேன் ஓவியம் , பளபளபளப்பு , நகைச்சுவை நச்...அட்டகாசம்...அமர்க்களம்.....ஆக மொத்தம் ஆனந்தம்...பரமானந்தம்..

    ReplyDelete
  54. தடை பல தகர்த்தெழு...

    இந்த மாதத்தில் நான் அதிகம் சிரித்து மகிழ்ந்தது ரின் டின் சாகசம் படித்தே சார்...

    மே20முதல் ஜூன் 15வரையில், லஞ்ச் பாக்ஸ் ஒரு 40மாடல்களில், வாட்டர் பாட்டில் ஒரு 50மாடல்களில், ஸ்பூன்லாம் கணக்கற்ற விதங்களிலும் வைத்தும் கூட, இந்த மாடல்ல இந்த அளவில் இந்த கலர்ரில் பாட்டில் வேணுமே சார் என்ற தலைநோவுகளில் இருந்த ஸ்ட்ரஸ் ரிலீவராக இருந்தது ரின் டின் பயலே சார்.

    முதலிரண்டு சாகசங்களை விட இதுவே என்னைக் கவர்ந்துள்ளது. அந்த ராசி பார்க்கும் கர்னல், திருட்டு பயலுடனான பிழைப்பு - 2ம் விட இது கொஞ்சம் வித்தியாசமாகவும் பரபரப்பாகவும் இருந்தது சார்.

    வாய்விட்டுச் சிரித்த இடங்கள் பல, சில வற்றை குறிப்பிடவில்லை என்றால் வரலாறு என்னை தூற்றுவது திண்ணம்....,

    1.பக்கம் 5ல் கடைசிவரிசை முதல் பிரேமில் இன்ஸை கவ்வும் காட்சி...

    2.காலை 9.30க்கு எழுப்ப முயற்சிக்கையில் "அண்ணாத்தே ..விடியட்டும்...அப்புறமா டிபன் சாப்பிட்டுக்கலாம்!கொர்ர்ர்.."- செம ஃபர்பெக்டான டயலாக்.(பக்கம்8 வரிசை1 பிரேம்3)

    3.கழுத்தை பிடித்து தூக்கும் சிப்பாயின் காலை "அவுக்"வது..(பக்கம்8 வரிசை3 பிரேம்3)

    4.அல்காட்ராஸ் சிறையில் அந்த கல் உடைக்கும் சீக்வன்ஸ்(பக்கம்11)

    5."குளிச்சிட்டு நாஷ்டாவா?.
    நாஷ்டாவுக்கு அப்புறம் குளியலா?."
    ரின்னின் முகபாவம்...செம. (பக்கம்12 வரிசை4 பிரேம்1)

    6.கல் உடைக்க ஆர்டர் தரும் சிப்பாயை ரின் டின் கவனிக்கும் சீக்வன்ஸ் (பக்கம்14 வரிசை4 & பக்கம் 15 வரிசைகள்1,2) உச்சமாக ரின் டின்னின் காமெடி டயலாக், "ஆத்தாடியோவ்! பூமியே அதிருதுடோய்"- வை சொல்லிட்டு அடுத்த பிரேமில் ரின் டின்னின் பார்வை செம கலக்கல்.

    7.டைனமைட் குச்சிகளைப் பார்த்த ரின் டின்னின் டயலாக், "அட..ஜலபுல ஜம்புளா! குழாய் புட்டு குமிச்சுக் கிடக்குதே!" (பக்கம்19 வரிசை2 பிரேம்2)

    8."இந்த ஊரலே பல்லி இம்மாம் பெருசா இருக்குதே..?"- முதலை முகம் (பக்கம்21 வரிசை3 பிரேம்2)

    9.கர்னலின் காதல் புலம்பல்
    (பக்கம்23 வரிசை4 பிரேம்3)

    10.முதலை உள்ளே வந்தபின் ரின்னை முதலையின் வாயில் துளவும்போது அது சமர்த்தாக பலகையில் துயில்வது& "இன்னிக்கு முதலைக்கு தலைக்கறி டோய்!!" (பக்கம்27 வரிசை3 பிரேம்3& அதற்கே கீழ் பிரேம்)

    11."ஐயோ ..சுனாமி..வெள்ளம்.. குற்றாலம்..!!--சீக்வன்ஸ் (பக்கம்34 வரிசை3 பிரேம்2)

    12."இவர் பேரு பாதுஷாவோ...பாலாடையோ தானே? ...ரின் & பாவ்லோ பாசங்கள்...(பக்கம்47 வரிசை1 பிரேம்1)

    ரின் டின் கேன் சங்கத்தில் சேர எனக்கும் ஒரு டோக்கன்...

    ReplyDelete
    Replies
    1. +1

      எனக்கும், என் வீட்டில் இருப்போருக்கும் மிகவும் பிடித்தது இந்த ரின்-டின்-கேன் கதைதான். விலங்குகள் பேசும் திரைப்படங்கள் நிறைய பார்த்து ரசித்திருக்கிறோம். அதெல்லாம் ஆக்ஸன். ஆனால், மனிதனிடம் பேசும் வழக்கமே இல்லாத ஒரு வாயில்லா ஜீவன் (அதுவும் ஒற்றை நாய்),. மனிதர்களோடு நாட்டு நடப்புகளை அளவளாவிக்கொண்டு அடிக்கும் லூட்டிகள் அட்டகாசமாக உள்ளது. காமிக்ஸ் சுவைகளில் தனிச்சுவையாக இருக்கிறது. அடுத்த ஆண்டு அட்டவணையை ஆசிரியர் திட்டமிடும்போது லக்கியை போல, ஸ்மர்ஃப்பை போல ரின்-டின்-கேனுக்கும் 2 புத்தகங்கள் வெளியிட்டால் சந்தோஷமாக இருக்கும்.

      Delete
    2. ஆம் ஜெகத் 2கதைகள் வந்தால் நல்லாத்தான் இருக்கும்..

      லக்கிலூக்...
      சிக்பில்...
      மந்திரி...
      க்ளிப்டன்...
      பென்னி...
      பொடியர்கள்...
      ரின் டின் கேன்...
      ப்ளூ கோட்ஸ்...

      ---என கார்ட்டூன் ஜானரில் நிலவும் போட்டி மிகக் கடுமையான ஒன்றாக இருக்கும் சூழலில் ஒரு இடம் என்பதே அரிதானது....

      Delete
    3. கொஞ்சம் சீரியஸ் டைப் ஆசாமிகளைக்கூட வாய்விட்டு சிரிக்க வைத்திருப்பதிலிருந்தே புரிகிறது - தொப்ளா குட்டியின் வெற்றி!

      Delete
  55. சங்கத்துக்கு இவ்ளோ லேட்டாவா வா்ரது!!

    நாங்கல்லாம் "மொத வாரமே" ரின்டின்கேனை ஆஹா ஓஹோன்னு பாரட்டி நெறைய வாங்கி கிட்டோம்!!

    தொனைக்கி வந்துட்டீங்களா??

    ReplyDelete
  56. (பாரில் அமைதியாக அனைவரும் மது அருந்தி கொண்டும் சிரித்து பேசி கொண்டும் இருந்தனர்.....அப்போது....)
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........ என்று அமைதியை சீர் குலைக்கும் சத்தம்.....
    B :
    அட! நாராயணா! இந்த கொசு தொல்ல தாங்க முடியல நாராயணா......யாரவது மருந்து அடிங்கப்பா.........!

    A (Tiger) :
    ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...

    C (டெக்ஸ்):
    ஒஹோ..ஒஹோ...ஒஹோ..ஒஹோ...

    D (கார்சன்) :
    ஒஹோ..ஹே..ஒஹோ...
    ஹா...ஹா...ஒஹோ..

    ReplyDelete
  57. (சாம்பியன்ஸ் ட்ரோபி பைனல் தோத்தபின் அனைவரும் கடுப்பில் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு Overenthusiastic ஈகோஸ்டிக் கிரிக்கெட் பேன்)

    பி (கிரிக்கெட் பேன்)):
    என்ன விளையாடறானுவ.... என்ன பால் போடறானுவ..... ஒரு அடி சைடுல போனா எல்லா பாலும் wide ஆயிடும்...ஒரு அடி மேல போனா எல்லா பாலும் நோ பால் ஆயிடும்...
    என்ன பாட்டிங்கு பண்றனுவ... ஒரு அடி மிஸ் பண்ணா எல்லா பாலும் bowled ஆயிடும்.....
    ஹ்ம்ம்.... நான்லாம் 6 பால் போட்டா 6 விக்கெட் தூக்குவேன்....
    பேட்டிங் பிடிச்சா 6 பால் 6 சிக்ஸர் அடிப்பேன்....
    என்ன தவிர யாருக்கும் அறிவு இல்ல....யாருக்கும் அறிவு இல்ல......

    D (கார்சன்) :
    (கவுண்டர் பாணியில்)
    வந்துட்டான்யா.....வூட்ல திங்க சோறு இருக்குமோ இல்லையோ....இங்க கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு வந்திருவாங்களே.....
    டெக்ஸ்....கொஞ்சம் என்னனு கேளுப்பா.......


    C (டெக்ஸ்):
    ஏய் தம்பி... இங்க வா.....! ஒரு பால் நேரா போட தைரியமில்லை...வக்கிலை....இதுல அடுத்தவன் போடற பால.... ஒரு அடில வைட் ஆயிடும்...ஒரு அடில நோ பால் ஆயிடும்னு கருத்து பேசிகிட்டு....! எகத்தாளம்ம்....எகத்தாளம்....பேசுவியா !....இன்னும் முளைக்கவே இல்ல....அதுக்குள்ள மாரல் போலீசிங்....ப்...போ...ப்...போ...போய் வீட்ல பெரியவங்க யாராவது இருந்தா கூட்டிட்டு வா.....

    A (Tiger) :
    அட விடு தல! அவனே கிரிக்கெட் முத்தி போய் தெரியறான்! தம்பி! உனுக்கு மட்டும் நேர வர்ற பால் கூட ஒரு அடி தள்ளி போற மாதிரி தெரிஞ்சா... வூட்ல பெரியவங்க கிட்ட சொல்லி ஒரு கண் டெஸ்ட் பண்ணிகோ... அப்புறம்…. கொஞ்ச நாளுக்கு இந்த கிரிக்கெட் பக்கமே போவத... என்ன.... சரியா....போ....இப்போ ஓடிரு......

    பி (கிரிக்கெட் பேன்)):
    (ஓடி கொண்டே) நான் கேப்பான்....நீ கேக்கமாட்டா...நான் கேப்பான்......என் தேசம்...என் உரிமை....நீ கேக்கமாட்டா...நான் கேப்பான்.....என் உரிமை....என் தேசம்.....

    D (கார்சன்) :
    ஒஹோ..ஹே..ஒஹோ...
    ஹா...ஹா...ஒஹோ..
    என்ன டெக்ஸ்! ஓவர்'எ கலாச்சு உட்ட....
    எப்டி இதோட சரியா......

    C (டெக்ஸ்):
    அட நீ வேறப்பா ! இப்போதான் கதறல் ஜாஸ்தி ஆகும் பாரேன்! சரி! அவனே கிரிக்கெட் முத்தி போய் அத பத்தியே பேசிட்டு திரியட்டும்....நமக்கு நெறய வேல கெடக்குது...நம்ம கிளம்புவோம்....

    ReplyDelete
    Replies
    1. 'கேப்ஷன்' சரவணன்,

      மேலே இருக்கறதை அஞ்சு தடவை படிச்சேன். 1,5 தடவைகள்ல கொஞ்சம் சிரிப்புக் கம்மியாத்தான் வந்துச்சு! ஆனா, 2,3,4வது தடவைகள் படிச்சப்ப வந்துச்சு பாருங்க சிரிப்பு... ஹா ஹா ஹா!! செம!!
      யோசிக்கறதுலயும் வித்தியாசம்... அதை எழுதறதுலயும் வித்தியாசம்!

      Delete
    2. ;-) ;-) ;-)
      உங்களுக்கு புடிச்சதுக்கு டபுள் தேங்க்ஸ் ஈ.வி ஜி :-)

      நானும் நம்ம விஜயன் பாஸ் நமக்கு அந்த பேர் வச்சதுக்கப்புறமா ஒரு தடவையாவது 'கேப்ஷன்' போட்டியில ஜெயிக்கணும்னு முயற்சி பண்றேன்....
      பாதி நேரம் நம்ம நண்பர்கள் ஜெயிக்கறாங்க....மீதி நேரம் நம்ம தல போட்டி வச்சதா மறந்து போய்....யாரு ஜெயிச்சாங்கன்னு சொல்லாம விட்டு நம்மள....'அதுக்கு சரி பட மாட்டேன்....அதுக்கு சரி பட மாட்டேன்னு ....' சொன்னா எதுக்குப்பா சரி பட மாட்டோம்னு வடிவேலு மாதிரி போல பொலம்ப விட்றாரு ;-)

      Delete
  58. ஜோ : ஹா...ஹா..ஹா...ஹோ...ஹோ...ஹோ...கார்ஸன் : இந்த அற்பப் பதரை....டெக்ஸ் குறுக்கிட்டு : கொஞ்சம் பொறு கார்சன்...அந்த லூசுப்பயல்தான் எதையாவது உளறிட்டு இருக்கிறான்னா ...அந்தக்காட்டுமிராண்டியோட லெவலுக்கு இறங்கிப்போய் நீயே உன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே...அதுதான் மனிதப்பிறவியே இல்லைன்னு முடிவாயிடுச்சே...ஊளையிடட்டும் விட்டுவிடு.....................டைகர் : டெக்ஸ் சொல்வது சரிதான்..அந்தக் கீழ்ப்பாக்கத்துக் கேஸை இப்பகுதியின் ஷெரிப்பிடமே விட்டுவிடுவோம்...அவரே பார்த்து கூண்டில் அடைக்கட்டும்....

    ReplyDelete
  59. மிகவும் புதிராகவும் விறுவிறுப்பாகவும் ஆரம்பித்த கதை பாண்டல் மாளிகை வரை அப்படியே தொடர்கிறது ....
    க்ளைமாக்ஸ் –ல் கதை கொண்டு செல்லப்பட்ட விதம் மிகவும் ஆச்சர்யம் அளித்தது ....
    மாபியா குழுவினரின் வரலாற்றில் ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் தோன்றுவதாக இதுவரை –குறிப்பாக சிசிலி குழுவில் –எங்கும் படித்ததாக நினைவிலில்லை ...
    அவர்கள் மோடஸ் ஆப்பரண்டி இப்படியானதல்ல ....
    எனவே க்ளைமாக்ஸ் விசித்திரமான உணர்வுகளை அளித்தது ....
    1967 –ல் இந்த அடிப்படையில் கதை எழுதப்பட ஏதாவது காரணம் ஒருவேளை இருந்திருக்க கூடும்.....
    ரேட்டிங் ....7/10

    ReplyDelete
    Replies
    1. தங்க விரல் மர்மம் ...மேலே குறிப்பிடப்பட்டது ...

      Delete
  60. ஈ.வி க்கு பதிலாக......
    புதிய பதிவு ரெடி நண்பர்களே ;-)

    ReplyDelete