நண்பர்களே,
வணக்கம். நேற்றைய தினமே டெஸ்பாட்ச் என எல்லா ஏற்பாடுகளும் செய்த கையோடு ஊர் சுற்றக் கிளம்பியிருந்தேன். இங்கோ கடைசி நிமிடத்தில் நமது பைண்டிங் பிரிவினில் புத்தகங்களைக் கட்டிங் செய்திடும் இயந்திரத்தில் பழுதாகிப் போக - நேற்றைய திட்டமிடல் பணாலாகிப் போய் விட்டது !! பழுது சரிசெய்யப்பட்டு பிரதிகள் நம்மை வந்து சேர்ந்த போது மாலையை நெருங்கியிருக்க - நிச்சயமாய் பேக்கிங் செய்து அனுப்புவதற்குள் கூரியர் டயமும் முடிந்து விடுமென்று தோன்றியது ! So இன்று காலையே கூரியர்கள் கிளம்புகின்றன ஒரு கத்தை இதழ்களோடு !
And இதோ- இதுவரையிலும் நீங்கள் பார்த்திராத ரிப்போர்ட்டர் ஜானியின் அட்டைப்படமும், உட்பக்க preview -ம் !! ஒரிஜினல் டிசைன் ; வர்ண மாற்றத்தோடு மட்டும் !! பளீரென்று உள்ளது இதழில் பார்க்கும் போது !!
நாளைக் காலை உங்கள் கூரியர்களை எதிர்பார்த்திடலாம் guys !! உங்கள் விமர்சனங்களுக்கு ஆவலாய்க் காத்திருப்பேன் ! Bye for now !
புத்தகங்கள் இன்றும் கிடைக்கவில்லை.
ReplyDeleteபராவாயில்லை. நாளையாவது கிடைத்தால் மிக்க சந்தோசமே!
ReplyDeleteஇனிய காலை வணக்கம்...
ReplyDeleteDear Editor,
ReplyDeleteJune release books not available in our website. Please update the link to buy the books.
Thank You.
சனிக்கிழமை officeக்கு leaveபோடலாம் என இருந்தேன் புத்தங்கங்களை கைப்பற்ற நாளை office செல்லவேண்டும் !
ReplyDeleteகாமிக்ஸ் நல்லதுன்னு சொன்னேனில்லையா ஹிஹி..!
Deleteஇந்த மாத இதழ்கள் ஆவலை மிகவும் கூட்டி இருக்கின்றன .... மிகவும் எதிர்ப்பார்ப்புடன் வெய்ட்டிங்....
ReplyDeleteகண்டிப்பாக
Deleteரெண்டு மாசத்துக்கு முன்னாடி பொருளார்கிட்ட ரெண்டு டீக்கு சங்கத்து கணக்குல காசு கேட்டப்ப போனவர் தான்
Deleteஇப்ப தான் வர்றார்..:-(
ஆவலுடன், எதிர்பார்ப்புடன் ,வழி மேல் விழி வைத்து....
ReplyDeleteI am 8 th
ReplyDeleteHai
ReplyDeleteHoping the parcel reaches in a couple of days, without ant dog corners.... Fingers crossed.
ReplyDelete
ReplyDeleteஇரண்டு நாள் சென்னை பயணத்திற்கு வழித்துணையாக கொண்டு செல்ல இருந்தனே
அப்ப திங்கள் கிழமைதான் பாக்க முடியுமா :(
.
///இரண்டு நாள் சென்னை பயணத்திற்கு வழித்துணையாக.///
Deleteரெண்டு நாளைக்கு வழித்துணையா???
நடந்தே சென்னைக்கு போறிங்களா சிபிஜி!?!?
Iam waiting....
ReplyDeleteHai
ReplyDeleteவாஆஆவ்..!!
ReplyDeleteஜானி செம்ம கலரிங்..!
கைவிரல்களை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்துக்கொண்டுள்ளேன். .! (Fingers crossed) :-)
ஜானியின் அட்டைப் படமே ஆர்வத்தைக் கிளப்புகிறதே... ( ஏம்ப்பா ஜானி.. உன்னை நீயே சுட்டுக்கொன்னுபிட்டு இப்படித் திருத்திருனு முழிக்கறியேப்பா... கொஞ்சம் பார்த்துச் சுட்டிருக்கப்படாதா?)
ReplyDeleteசுட்டது ஜானின்னா செத்தது ஜானியா இருக்காது..! ஒருவேளை செத்தது ஜானின்னா சுட்டது ஜானியா இருக்காது.!
Deleteஅடுத்த கதை வேணும்னா சுட்டது ஜானின்னு எடுத்துக்கலாம்..!
அடுத்த கதை வேணாம்னா செத்தது ஜானின்னு எடுத்துக்கலாம்..!
செத்தது ஜானின்னா அடுத்த கதையில சுடுறதுக்கு ஜானி இருக்கமாட்டாப்புல..!
சுட்டது ஜானின்னா அடுத்த கதையில செத்த ஜானி வரமாட்டாப்புல..!
துப்பாக்கி கையில இருக்குறதாலேயே சுட்டது ஜானிதான்னும் நம்பறதுக்கில்லே..!
மல்லாக்க கிடப்பதாலேயே செத்தது ஜானிதான்னும் நம்பறதுகில்லே..!
கோட்டு போட்டவரெல்லாம் ஜானின்னு சொல்லிட முடியாது, கோட்டு போடாத ஜானிய ஜானி இல்லேன்னும் சொல்லிடமுடியாது..
ஷ்ஷ்ஷப்பா சீக்கிரம் பொழுது போகணுமே..!
இதுக்கு ஜானி என்னையவே சுட்ருக்கலாம்! :)
Deleteஇல்லேன்னா உங்களையாவது! ;)
Deleteநீங்க எப்பவுமே இப்படித்தானா? இல்ல,இப்படித்தான் எப்பவுமேவா?ஹி,ஹி.
Delete///இதுக்கு ஜானி என்னையவே சுட்ருக்கலாம்! :)///
Deleteஜானிதான் உங்களை சுடணும்னு இல்லே அதேமாதிரி ஜானி உங்களைத்தான் சுடணும்னும் இல்லே.!
சரிசரி! வேண்டாம்னா நிறுத்திக்கப் போறேன். அதுக்கு ஏன்சார் பேட்வேர்ட்ஸ்ல்லாம் யூஸ் பண்றிங்க..!
இருக்கு ஜானியோட துப்பாக்கியவே நீங்க "சுட்டு " இருக்கலாம் ரவிகண்ணரே...:-)
Deleteகிட் ஆா்டின் கண்ணன் சாா்,
Deleteசுட்டது யாருன்னு கண்டுபுடிச்சுட்டேன்.
நம்ம ஞானசூன்யம் "ரின்டின்கேன்" தான்.
இல்ல இல்ல டெக்ஸ் வில்லரா இருக்கும் !!
Deleteஒருவேல அண்டா்டேக்டரா இருக்குமோ!
Deleteபய முழியே சாியில்லையே!
எதுக்கும் அடுத்தமாசம் வெளிவரும் கிட் ஆா்டின் மேலயும் ஒரு கண்ண வையுங்கப்பா.
Deleteஆா்டின் ஆயுதத்தோட வந்திருந்தாா்னு வையுங்க.
கச்சோி கலை கட்டீரும்.
எனக்கென்னவோ ஜானியை தவிர நம்ம எல்லோருமே சுட்டு இருப்போம்ன்னு தான் தோணுது..:-)
Deleteகொரியர் டெலிவரி எனக்கு எப்போதுமே லேட் தான்! இந்தத்தபாவாவது உடனே கிடைச்சுடுச்சுன்னா மாரியம்மனுக்குக் கூலூத்திக் குழவை போடுறதா வேண்டியிருக்கேன்! உலு..உலு..உலு.. ( ஹிஹி குழவை ப்ராக்டீஸ்) :)
ReplyDeleteஹா,ஹா,ஹா.
Deleteகுழவையா நல்ல வேளை செயலரே ..ஒரு நிமிசம் பயந்தே போயிட்டேன் ...குழுவையேன்னு படிச்சு போராட்ட குழுவையை மாரியம்மன் உண்டியல்ல போட்றுவீங்களோன்னு ஒரு நிமிசம் ஸ்டன் ஆயிட்டேன்..உஸ்...
Delete/// போராட்ட குழுவையை மாரியம்மன் உண்டியல்ல போட்றுவீங்களோன்னு ஒரு நிமிசம் ஸ்டன் ஆயிட்டேன்.///
Deleteஆமா தலீவரே, செல்லாத காசையெல்லாம் இப்படித்தான் உண்டியல்ல தூக்கிப் போட்டுடறாங்கன்னு பேப்பர்ல படிச்சேன். .!அதிலேருந்து கோயிலுக்குப்போன உண்டியல் பக்கமா நான் நிக்கிறதேயில்லை. நீங்களும் கொஞ்சம் உசாராவே இருங்க..!
ஙே...:-(
Deleteஜானி ஃபர்ஸ்ட் லுக் சூப்பர். நாளைக்கு முதல் வேலையா புத்தகங்களை கவர்ந்திடுறேன்.
ReplyDelete//உங்கள் விமர்சனங்களுக்கு ஆவலாய்க் காத்திருப்பேன்//
ReplyDeleteஎந்த இதழை முதலில் படிக்கறது,ஒரே குழப்பமா இருக்கே,இங்கி,பிங்கி,பாங்கி போட்டு பார்க்க வேண்டியதுதான்.
///இங்கி,பிங்கி,பாங்கி போட்டு பார்க்க வேண்டியதுதான்.///
Deleteஅதெல்லாம் பழைய மெத்தேடு ரவி. புதுசா ஒண்ணு சொல்றேன், செஞ்சு பாருங்க..!
எண்ணெய் வயல் படலத்துல வர்ரா மாதிரி அஞ்சி புக்ஸையும் தூக்கி தம்கட்டி மேல்நோக்கி வீசுங்க, எந்த புக்கு தலைமேல விழுதோ அதை முதல்ல படிங்க.! எதுவுமே தலைமேல விழலைன்னா எங்கிட்ட வாங்க, வேற ஐடியா தர்ரேன். .!
ஙே.
Deleteஅண்டர்டேக்கா் தலைமேலே விழுந்தா?
Deleteஅட்வான்ஸா பொட்டியும் ஒன்னு ஆா்டா் பண்ணியிருங்க.
///அஞ்சி புக்ஸையும் தூக்கி தம்கட்டி மேல்நோக்கி வீசுங்க, எந்த புக்கு தலைமேல விழுதோ அதை முதல்ல படிங்க.!///
Deleteஇதுவும் பழைய மெதெட் சார்.புதுசா ஒரு டெக்னிக் இருக்கு.
ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற குழப்ப நிலையில் டக்'கென்று முடிவு செய்ய ஏகப்பட்ட ஆய்வு செய்து ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அது "ரஷ்யன் ரூலே"
ரூல்ஸ் என்ன சொல்லுதுன்னா அஞ்சு புக்கையும் கிடைமட்டத்துல நேர்க்கோட்டுல இருக்கிற மாரி ரெண்டடி கேப்ல வச்சிடணும்.
அப்புறமா டெக்ஸ் அண்ணாச்சிட்ட டெரிஞ்சரை கடனா வாங்கி அதிலிருக்கிற எல்லா புல்லட்ஸையும் கடாசிட்டு ஒத்த புல்லட்ட மட்டும் போட்டு சுத்தி விட்டு
ரெண்டடி தள்ளியிருக்கிற (அப்பதான் குறி தப்பாது.) ஒவ்வொரு புக்க பாத்து சுடணும். ஒரு தோட்டா மட்டும் இருக்கிறதால ஒரு புக்க மட்டும் தாக்கும்.கடவுளா பாத்து செலக்ட் பண்ணிருக்காருனு சந்தோசமா அத மொதல்ல படிக்கணும்.
'அதுசரி பிஸ்டல்ல ஆறு துளையிருக்குமே புக் அஞ்சுதானே. அஞ்சிலேயும் தோட்டா வெடிக்காட்டி ஆறாப்பு தபா எங்க வெக்கிறது'
இது கூட யோசிக்க மாட்டாங்களா என்ன.
அதுக்குதான் எடிட்டர் டஸ்ட் கவர் கொடுக்கிறார்ல அதுதான் ஆறாவது புக்கு.
அறிவியல் விதி எல்லா நாட்டுக்கும் ஒண்ணுதான்.
கோவிந்த் ராஜ் பெருமாள் சார் சூப்பர் ஐடியா...:-))
Delete//நீங்கள் பார்த்திராத ரிப்போர்ட்டர் ஜானியின் அட்டைப்படமும், உட்பக்க preview//
ReplyDeleteஜானி அட்டைப்படம் சிறப்பாக அமைந்துள்ளது, கதையும் கலக்கும் என்று நம்புகிறேன்.
காத்திருக்கிறேன் சார்...:-)
ReplyDeleteகிட் ஆா்டின் கண்ணன் சாா்,
ReplyDeleteசுட்டது யாருன்னு கண்டுபுடிச்சுட்டேன்.
நம்ம ஞானசூன்யம் "ரின்டின்கேன்" தான்.
😁😁😁
Deleteகண்டிப்பாக சுட்டது மாடஸ்டி தான்
Deleteமாடஸ்டி புக் சமீபத்துல புது வெளியீடு ஏதும் இல்லையே?
அப்ப யாரு ஜானியை சுட்டிருப்பா?
🤔🤔🤔🤔
மாடஸ்டிக்கு இளகிய மனசு மிதுன் சார்.! தன்னை கொல்ல வர்ற வில்லனைக்கூட மன்னிச்சு விடுற குழந்தை மனசு அந்த புள்ளைக்கு . அந்த குழந்த புள்ளை சுட வாய்ப்பே இல்லை.!
Deleteமாடஸ்டி குழந்தைப்புள்ளையா?
Deleteஜானியை சுட்டது ஜானியே என்றால் ஒருவேளை ஜானி இரட்டைப்பிறவியோ?
Deleteஇது குறித்து கமிஷனர் போர்ட்டனிடம் விசாரித்தபோது 'ஜானி பெற்றோருக்கு ஒரே மகன் என்றும் இது தேவையற்ற வெற்று கற்பனை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒருவேளை யாரேனும் ஜானி போன்ற முகமூடியை அணிந்துள்ளனரோ என்று திரு.டயபாலிக் அவர்களை விசாரிக்க அவரோ 'நான் யாருக்கும் முகமூடி சப்ளை செய்து தரும் ஈனத்தொழிலை செய்யவில்லை. என் தேவைக்கு மாத்திரமே தயார் செய்யும் நேர்மையாளன் என்றும் கைவசம் தன்னிடம் உள்ள முகமூடிகளை காட்டினார்.
அப்படியானால் சுட்டது யார் சுடப்பட்டது யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.
நாளை காலையில் புதிர் விடுபடுமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Deleteச்சே போங்கப்பா.
எனக்கு சுடறதே புடிக்காது.
"புடிக்காது ஸ்மா்ப்"
44th
ReplyDelete45
ReplyDeleteசார் ஜானி வ்ண்ணச்சேர்க்கை லார்கோவ மிஞ்சிடுமோ..
ReplyDelete+1
Deleteநான் சொல்ல நேனச்சேன், நீங்க சொல்லிடீங்க :)
பொழுதெப்ப விடியும்
ReplyDeleteபூ எப்ப மலரும்
கூரியர் எப்ப வருவார்
புக் எப்ப தருவார்
கணேஷ் சார்... கலக்கறீங்களே!! உங்கள் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடுமோ? :) ;)
Deleteகம்பை கையில் வைத்திருப்பவர்
Deleteகம்பர் அல்ல..
காலை வணக்கம் ஈவீ
குருவும் சிஷ்யனும் தளத்தை
கலகலப்புடன் தளதளவென்று
கொதிப்புடன் வைத்திருக்கிறீர்கள்
KOK உங்களைத்தான்.
ஹைக்கூ!! தூள்!!
ReplyDelete👏👏👏
போன மாதம் அனைத்து கதைகளையும் ஒரே வாரத்தில் படித்து விட்டதால், இந்த மாத புத்தகத்திற்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
ReplyDeleteஒரு முடியாத இரவு கதையை படித்த பின்னர் மனதில் தோன்றியது - இதனை படமாக எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், அதுவும் மிஷ்கின் இயக்கத்தில் வந்தால் தமிழில் ஒரு மைல்கல் படமாக வாய்ப்புகள் அதிகம். தமிழில் படமாக்க மிகவும் சிறந்த வித்தியாசமான கதை இது.
ReplyDeleteஇந்த மாதம் கொண்டாட்டம் தான்.
ReplyDeleteஜானி அட்டை படம் அள்ளுது, உட்பக்கம் டீசரில் சஸ்பென்ஸை [one of the suspense, as johnny stories usually will have a knot for every couple of pages :) ] உடைச்ச மாதிரி இருக்கே சார் ?
இனிமே ஒரு வருஷம் காத்து இருக்கணும் அடுத்த ஜானி புக்குக்கு :(
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete12345 எத்தனையாவதோ.
ReplyDeleteஜானி கலரில் தூள்.
நான் இப்போ பொடியப் போறேன்.
ReplyDeleteகுட்நைட் !!
நாளை மட்டும் புக் கிடைக்கல....
ReplyDeleteரணகளமாயிடும்
வைகாசி மாசம் எவ்ளோ கல்யாணங்கள் !!! உஸ் ... அப்பாடா!!!!
ReplyDeleteபிளாக் படிச்சாலும் கமண்ட் பண்ண முடியல ..............
///////ஒரு பயணியின் டைரி குறிப்பு ////
அடுத்தவங்க டைரிய படிக்கபடாதுன்னு பெரியவா சொன்னத நம்பி செனா அந்த பதிவை படிக்கல ...அதுனால கமண்ட் பண்ணல..என்னா ஒரு ஜென்டில்மேன் அப்படின்னு யாரும் தப்பா நினைச்சுடபடாதுன்னுதான் இந்த கமண்ட் ..:)
ஐரோப்பிய பாட்டிகள் எல்லாம் நம்ம அப்புசாமி தாத்தாவோட ‘’ சீதா ‘பாட்டியாட்டம்’’இருப்பான்னு பாத்தா சுட்டி பென்னி கதையில வர்ற அடால்பின் ரோபோ கணக்கா மினி ‘’ தாதா பாட்டியாட்டம் ‘’ மாதிரின்னா இருக்கா ........
அசந்தர்ப்பமான நேரங்களில் அசர்ந்தப்பமான நிகழ்வுகள் அப்போதைக்கு தர்மசங்கட உணர்வுகளை ஏற்படுத்தினாலும் பின்னாளில் –எடிட்டர் கூறியது போல் – அசை போடுகையில் விசித்திர எண்ண குமிழிகளை பறக்கவிட வல்லதுதான் ....
இது போல கல்லூரியில் படிக்கும்போது ஸ்பெயின் , மற்றும் ஸ்விஸ், போன்ற நாடுகளுக்கு கல்வி சுற்றுலா சென்றபோது ( ஈனாவினாவின் மைன்ட் வாய்ஸ் குறுக்கிடுகிறது : செனா !!! மொக்கை போடனும்னு முடிவு பண்ணிட்டீங்க ..போடுங்க ..வேணாங்கலே!! ஆனா உங்க லெவலுக்கு போடுங்க !!!!) ....ம்..ம் ..சரி ...டில்லி , சிம்லா ,ராஜஸ்தான் போன்ற –தலீவர் பாஷையில் சொன்னால் – வெளிநாடுகளுக்கு சென்றபோது தொலைப்பதற்கு பாஸ்போர்ட் ஏதும் இல்லாதபடியால் நாங்களே தொலைந்து போய்விட்டோம் .
நாங்கள் என்றால் நானும் நண்பர்கள் இருவரும் மட்டும் ..
காலை உணவுக்கு டூர் பஸ் நிறுத்தியபோது சாப்பிட்டு வருவதற்குள் எங்களை விட்டுவிட்டு பஸ் போயே போய்விட்டது ...பேக் எல்லாம் பஸ்ஸில் இருக்க சொற்ப சில்லறை மட்டும் சட்டை பைகளில்..
முக்கால்மணி நேரம் உலகமே கசந்தது...முக்கால்மணி நேரம் மட்டுமே ...அதன்பின்னர் பூவுலகம் ரம்மியமாக தோன்றியது.
காரணம் எங்களோடு மூன்று வகுப்பு தோழிகளும் பஸ்சை மிஸ் பண்ணிவிட்டார்கள் ...
அதில்
ஒரு பெண் மிகவும் அழகான பெண் .
இரண்டாவது பெண்ணுக்கு ஹிந்தி புறங்கை மாதிரி ..
மூன்றாவது பெண்ணின் கைப்பையில் போதுமான பணம் இருந்தது...
பஸ்ஸை பிடிக்கிறோம் பேர்வழி என ஒவ்வொரு இடமாக செல்ல நாங்கள் செல்லுவதற்கு சில பல நிமிடங்களுக்கு முன் டூர் பஸ் கிளம்பி சென்று இருக்கும் ..
ஜந்தர் மந்திர். குதுப் மினார், லோட்டஸ் டெம்பிள், பார்லிமென்ட் என அறுவராக திரிந்தது வித்தியாசமான அனுபவம் ...
[ பின்னிரவு பதினோரு மணியளவில் டில்லி யூத் ஹாஸ்டலுக்கு திரும்பியபோது கேம்ப் பயர் நடந்து கொண்டு இருந்தது. ..டூர் கோ ஆர்டினட்டரிடம் எங்களை தேடவில்லையா என கேட்டோம் . அவன் பதில் :நீங்க மூணு பேரும் காணோம்னு சொன்னப்ப பதறி போய்ட்டேன் ..நீங்க தத்திங்க..ஆனா மூணு பொண்ணுங்களும் வரல அப்டின்னு தெரிஞ்சவுடனே கூலாய்ட்டேன் ..அவங்க ஸ்மார்ட்...உங்களை பத்திரமா கொண்டு வந்து சேத்துருவாங்கன்னு தெரியும் ....]
...................................................................................................................................................................
பின்குறிப்பு 1.......
ஈரோடு குமாரபாளையத்தில் கதிர்வேல் மகாலில் மகளின் சிறுவயதிலிருந்தே நெருங்கிய பள்ளித்தோழியின் திருமணத்திற்காக ஈரோட்டில் இருநாள் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது மனம் துள்ளி குதித்தது ...ஈனாவினாவுடன் குடும்பத்தோடு மதிய உணவு அருந்துவது குறித்த என் மனக்கோட்டைகள் மகளின் தோழிகளின் அலப்பறையான பல்வேறு திட்டங்களால் தவிடுபொடியானதால் ஏற்பட்ட ஏமாற்றம் நம்பர் ஒன்று ..
பின்குறிப்பு 2
வரும்போது கரூர் வழியே வந்தாலும் செல்லும்போது சேலம் பைபாஸ் வழியே சென்றதால் டெக்ஸ் விஜய் உடன் அவர் கடையில் டீ வடையுடன் பேசியே தீருவது என்ற எண்ணத்தை பைபாஸ் ரோட்டில் தோன்றிய பெரும் சுழிக்காற்றும்,தொடர்ந்த பெருமழையும் போக்குவரத்து நெரிசலும் ,காலதாமதமும் முடக்கிவிட அவரை சந்திக்க இயலாமல் போனது ஏமாற்றம் நம்பர் இரண்டு ...
.......................................................................................................................................................
ரின் டின் மற்றும் கீழிருந்திருந்து எடுப்பவரையும் (ஹி ..ஹி .அன்டர்டேக்கர்தான் ...மேச்சேரியாரின் சகவாச தோஷம் ..) ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ................
@ செனாஅனா
Delete///..என்னா ஒரு ஜென்டில்மேன் அப்படின்னு யாரும் தப்பா நினைச்சுடபடாதுன்னுதான் இந்த கமண்ட் ..,///
:))))))
///தொலைப்பதற்கு பாஸ்போர்ட் ஏதும் இல்லாதபடியால் நாங்களே தொலைந்து போய்விட்டோம் .///
:)))))))))
////...ஈனாவினாவுடன் குடும்பத்தோடு மதிய உணவு அருந்துவது குறித்த ///
ஆஹா.. ஆஹா.. என்ன தவம் செய்தனை...
//// என் மனக்கோட்டைகள் மகளின் தோழிகளின் அலப்பறையான பல்வேறு திட்டங்களால் தவிடுபொடியானதால் ஏற்பட்ட ஏமாற்றம் ///
புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
இந்த 'டில்லி சம்பவத்தை' படிச்சதுக்கப்புறம்தான் தெரியுது, உங்களை உங்க வீட்டம்மா ஏன் சென்னை புத்தகத் திருவிழாவுக்குக்கூட அனுப்பமாட்டேன்றாங்கன்னு! ;)
அப்புறம், நீங்க சொல்லாமவிட்ட ஒரு ட்விஸ்ட் : அன்று உங்கள் கரம் பிடித்து டெல்லி யூத் ஹாஸ்டலுக்கு பத்திரமாகக் கொண்டு சேர்த்த அந்த மூன்று தோழிகளில் ஒருவர்தான் இன்று உங்கள் 'வீட்டம்மா' - சரிதானே.. சரிதானே? ;)
68வது.
ReplyDeleteஜானியின் அட்டைபடமும்,உட்பக்க preview உம் பளீரென்று அட்டகாசமாக வந்துள்ளது. மாத இதழ்களுக்காக ஆவலுடன் waiting.
ReplyDeleteTexஐ எthir பார்த்து காத்து இருக்கிறேன்.
ReplyDeleteTexஐ எthir பார்த்து காத்து இருக்கிறேன்.
ReplyDeleteபுக் வந்தாச்சா?
ReplyDeleteஅட யாராவது சொல்லுங்கப்பா.
நான் கடைக்குப் (ஈரோடு) போய்தான் வாங்கணும்.
பார்ஷல் வந்திடுச்சேசேசேசே!!!!
ReplyDeleteபிரிச்சிட்டு மலைச்சிட்டு அப்பால வரேன். .!!
Deleteஇப்போதைக்கு ஒரே தகவல் மட்டும். என்னோட ஷ்கூல் புக்கு அட்டையில ஒட்டி அழகு பார்க்க நம்ம நாயகர்கள் இந்தமாத சர்ப்ரைஸா கிடைச்சிருக்காங்க..!
Deleteசூப்பர் சார். .!!
நோக்குமா?!
Deleteபுக் வந்துடுச்சு மக்களே !
ReplyDeleteஅய்யய்யோ, எனக்கு வரலையே?
ReplyDeleteபேசாம பழைய டைகா் புக் படிக்க வேண்டியதுதான்.
இந்த சன்டே ஊத்திகிச்சே!
Pramathama vanna thogupugal,stick labuludan.
ReplyDelete5 books parka malaipa ulladu.
ReplyDeleteஇதழ்களை கைப்பற்றியாச்சி,முதல் புரட்டலில் அனைத்தும் சிறப்பு,
ReplyDeleteஎனக்கென்னவோ தி அண்டர்டேக்கர் dust cover இல்லாமலேயே சிறப்பாக இருப்பதாக தோன்றுகிறது.
ReplyDeleteஏன் ரவி? டஸ்ட் கவர் தூசியா இருக்கா?
Deleteஹி,ஹி ஆமாம்.
Deleteஒரு சிலந்தியின் வலையில்..! - முதல் பக்கத்தின் முன்றாவது பிரேமில் ஆரம்பிக்கும் குழப்பம்/பரபரப்பு கடைசி பக்கம் வரை தொடர்கிறது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லா ஜானியின் மற்றுமோர் கதைக்களம்.
ReplyDeleteஜானியை வைத்து பின்னப்படும் சதிவலை தான் கதைக்களம் என்பதை பக்கம் 9 இல் 8 வது கட்டம் துல்லியமாக உணர்த்திவிடுகிறது. ஆனால் எப்பொழுதும் போல இறுதியிலே அணைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்படுகிறது
Deleteம்ம்ம்ம்..! அதுக்குள்ள படிச்சிமுடிச்சிட்டீங்களே..சூப்பர் சார்..!நானெல்லாம் ஃபர்ஸ்ட்லுக் விட்டதோட சரி..! டைம் ஒதுக்க முடியாம போயிடுத்து..! நைட் ரீடிங்தான்..!
Deleteஅதுக்குள்ளயா?!
Deleteஜானி(சிவப்பு மற்றும் மஞ்சள்)/அண்டர்டேக்கர்(அடர் நீலம்)/டெக்ஸ்(வெளிர் நீலம்) அட்டைப்படங்களின் வர்ண சேர்க்கை கண்ணைக்கவரும் விதமாக அட்டகாசமாக உள்ளது.
ReplyDeleteரின்டின்கேன் அட்டைப்படம் கார்ட்டூன் கதைக்கு ஏற்ப பொருத்தமாக நண்பர் பொடியனின் கை வண்ணத்தில் கச்சிதமாக அமைந்துள்ளது.
நாம் அச்சிட்ட இதழ்களை கைகளில் வைத்துப் பார்க்க பல வாரங்களாகும். உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.
Deleteவிஜயன் சார், புத்தகம்கள் கிடைத்துவிட்டன! லேபில் நல்ல ஐடியா. லேபிலை பார்த்த அடுத்த வினாடி எனது மனைவி கேட்ட அடுத்த கேள்வி சும்ர்ப் படம் இருக்கிற லேபில் இருக்கிறதா என பாருங்கள் என்பது தான், ஆனால் இல்லை :-(
ReplyDeleteசும்ர்ப் படம் இருக்கிற லேபில் இருந்தால் அனுப்பி வைக்கவும், எங்கள் வீட்டில் எனது மகள், மகன், மற்றும் எனது மனைவி சும்ர்ப் ரசிகர்கள் :-)
ஹைய்யா! புத்தகம் கிடைச்சுடுச்சு... மாரியம்மனுக்கு குழவை வேண்டுதல் வீண் போகலை!! ஆத்தா மகமாயி... உலு..உலு..உலு...
ReplyDeleteதலீவர உண்டியல்ல போடுறேன்னு வேண்டியிருக்கீங்க, மறந்துடாதிங்க..மாரியாத்தா துடியான சாமியாக்கும்..!
Deleteபரவாயில்லை... நீங்களே அவரை வைச்சுக்குங்கன்னு ஆத்தா கனவுல வந்து சொல்லிடுச்சு..
DeleteUndertaker ரிசல்டடுக்காக வெயிட்டிங்.
ReplyDeleteஅண்டர்டேக்கர்..! 9/10
Deleteகதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், அண்டர்டேக்கர் எப்படி பட்டவர் என்பதை கடைசி வரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரை பிடித்துள்ளது, அது ஏன் என்று கேட்டால் "சொல்ல தெரியலே" னு இறுதியில் பிரைரி சொல்வது போல தான் நானும் சொல்லனும்..
கஸ்கோ, லின், ஜார்ஜ் மற்றும் அண்டர்டேக்கர் போன்ற வித்தியாசமான மாந்தர்களை கொண்ட கதை இது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். பாத்திர படைப்புகள் அருமை.
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஸ்பீடு கூடாது சார்.
Delete@Dasu Bala..Thanks for the quick review...
Deleteசூப்பர் சிக்ஸ் ல இரண்டாவது சிக்ஸரும் நூறு மீட்டர் தாண்டி விழுந்த மாதிரி இருக்கு அண்டடேக்கர்...
ReplyDeleteஆனால் நீங்க சாென்ன மாதிாி பெளன்சர் மாதிாியான காெடுரமெல்லாம் இதில இல்லை சாா்...
இந்த கதையில வர்ற ஒரு சில இடங்கள் "வேன்ஹெல்சிங்" திரைபடத்தில வருகிற காட்சி மாதிாி அட்டகாசமா இருக்கிறது ...
பதிவக் காணலியே...
ReplyDeleteபாஸ்போர்ட்டை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரா?!!
பாட்டீம்மா..... பாட்டீம்மோஓஓவ்வ்...
நான் 3.00 மணியிலோ்ந்து வெயிட்டிங்!!
ReplyDeleteதடை பல தகர்த்திடு மிகவும் அருமை. ரின்டின்கேன் ஏமாற்றவில்லை !
ReplyDeleteபுதிய பதிவு எப்போது சார்
ReplyDeleteபுதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
ReplyDeleteஇம்மாத இதழ்களில் டாப் டெக்ஸ்தான். 60 or 70 பக்க கதைகளை விட 200 பக்க கதைகள்தான் படிப்தற்கு முழு திருப்தி தருகின்றன. இவ்வாறான முழுநீள கதைகள் அதிகம் வெளியிட வேண்டும்.
ReplyDeleteஅண்டர் டேக்கர் ..........ஆட்டம் ஆரம்பம்......முதல் பாகம் படிச்சாச்சு .......
ReplyDelete