நண்பர்களே,
வணக்கம். ஆண்டின் அட்டவணைகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்வதில் ஒரு வசதியுமுண்டு ; சிக்கலுமுண்டு என்பதை ஒவ்வொரு வருஷமும், ஒவ்வொரு விதத்தில் உணர்ந்து வருகிறேன் ! வசதி என்று அடையாளம் காட்டுவதானால் - திட்டமிடக் கிடைக்கும் அவகாசத்தையும், பட்ஜெட் போட முடியும் சாத்தியத்தையும் சொல்லலாம் ! சிக்கலென்று சொல்வதானால் - கீழே வரவேண்டிய கூட்டுத்தொகையினை முதலில் எழுதி வைத்துக் கொண்டு, அதற்கேற்ப மேலே இடம்பிடிக்க வேண்டிய இதழ்களை அமைத்திட முனைவதைச் சொல்லலாம் ! அந்தக் கட்டுப்பாட்டின் அவசியமில்லாது, ஓரிரண்டு மாதத்துத் தொலைவுக்கு மாத்திரமே பார்வைகளை ஓடச் செய்யும் நாட்களில், மண்டைக்குள் அவ்வப்போது உதயமாகும் மகா சிந்தனைகளையெல்லாம் 'ஜாலிலோ-ஜிம்கானா' என்று சுடச் சுடக் களமிறக்கும் வாய்ப்புகள் இருந்திடும் ! கட்டிலிலிருந்து மேற்காலே பார்த்துக் கீழே இறங்கினால் - "மேற்காலே ஸ்பெஷல்" என்றும் ; கிழக்காலே பார்த்திறங்கினால் - "கிழக்குச் சீமை ஸ்பெஷல் !" என்றும் எதையாச்சும் செய்யத் தோன்றும் ! பட்ஜெட் போட்டுத், திட்டமிட்டு, சீராய் வண்டி ஓட்டும் இன்றைய நாட்களில் நான் மிஸ் பண்ணும் ஒரே சமாச்சாரம் - அந்த go as you please சுதந்திரத்தைத் தானென்பேன் ! அந்த சுதந்திரம் மட்டுமிருந்திருப்பின், காத்திருக்கும் மைல்கல் தருணங்கள் ஒவ்வொன்றுக்குமே பிரித்து மேயும் ஸ்பெஷல் இதழ்களை all the way through போட்டுத் தாக்கியிருப்பேன் ! ஆனால் பட்ஜெட் என்றதொரு கால்கட்டு மாத்திரமின்றி - கார்ட்டூன் ; கவ்பாய் ; கிராபிக் நாவல் ; மறுபதிப்புகள் என்று வெவ்வேறு பாணி இதழ்கள் என்ற சமாச்சாரமும் நம் நேரங்களை நிறைய எடுத்துக் கொள்வதால் - 'பப்பரக்கா' என்று அகலமாய் கால்களை விரிக்க பயமாகிப் போகிறது ! Anyways - ஓவர் ஆசையும், ஆர்வக் கோளாறும் உடம்புக்கு ஆகாதென்பதால் வாயோரம் பொங்கும் H2O-வை லைட்டாக துடைத்துக் கொண்டே ஆகவேண்டிய வேலைகளுக்குள் மூழ்கிட முனைகிறேன் !
ஜூலை நமக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷல் மாதமே என்றாலும், காத்திருக்கும் இந்த ஜூலையானது ஒரு three-in -one தருணமென்பேன் ! நம்பர்களுடனான நமது காதல் ஒருநாளும் ஓயாதென்பதாலோ - என்னவோ இந்தாண்டின் ஆண்டுமலர் தருணத்தை ஒரு 300 + 400-ன் தருணமாகவும் சேர்த்து அமைத்திட பிரயத்தனம் மேற்கொண்டேன் ! So லயனின் 33 வது ஆண்டுமலர் + லயன் இதழ் # 300 + முத்து காமிக்ஸ் இதழ் # 400 என்று 'ஏக் தம்' மைல்கல் moments இன்னமும் 20 நாட்களில் நம்மை சூழ்ந்து நின்றிடும் !!
சாவகாசமாய்த் திரும்பிப் பார்க்கையில், ரெண்டு விஷயங்கள் எனக்கே ஒரு உறுத்தலாய் உள்ளதை நான் ஒத்துக் கொண்டே தீர வேண்டும் ! முதலாம் சமாச்சாரம் - முத்து காமிக்ஸ் சார்ந்தது ! 1987 க்குப் பின்னே என்னிடம் பொறுப்புகள் கைமாறின ! ஆனால் NBS வெளியிட்ட 2013 வரைக்கும் முத்துவின் ஆண்டுமலரை நாம் கொண்டாட பெரிதாய் முனையவே இல்லை என்பது நிதர்சனம் ! நமது கவனங்கள் அந்நாட்களில் தீபாவளி மலர் ; கோடை மலர் என்றே பெரும்பாலும் லயித்து நின்றதாலோ-என்னவோ முத்து காமிக்ஸ் ஆண்டுமலருக்கு சிந்தனை தரவே தோன்றியிருக்கவில்லை ! And அன்றைக்கு என் நடுமூக்கில் குத்த உங்களுக்கும் மார்க்கங்கள் லேது என்பதால் - சிவன் போக்கு ; சித்தன் போக்கென்று என்னால் தொடர முடிந்தது ! உறுத்தல் # 2 - லயனிலுமே பெயரளவிற்கு "ஆண்டுமலர் " என்று பீலா வீட்டுக் கொண்டு, கேக் முன்னே குந்தியிருக்கும் சிங்கத்தை உங்கள் கண்ணில் காட்டியிருந்தாலும் - சீரியஸான ஸ்பெஷல் இதழ் எதுவும் ஆண்டுமலரென ஜொலித்ததாய் ஞாபகமில்லை !
லயனின் first ever ஆண்டுமலரை நமது துவக்கநாட்களது வாசகர்களுக்கு மறந்திருக்காது - simply becos அந்நாட்களது பாகுபலியும், பல்லாளதேவனுமாய் நம் உலகினில் உலாற்றி வந்த கூர்மண்டையரும், சட்டித் தலையனும் ஒருங்கே ஒரே இதழில் சாகசம் செய்ய நேரிட்டது- நமது முதன்முதல் ஆண்டுமலரினில் தான் ! (அது பற்றி முந்தைய ஆண்டுகளில் ஏதேனும் ஒரு தருணத்தில் நானிங்கு பதிவிட்டிருக்கவும் கூடும் தான் ; so மறு ஒலிபரப்பாக இருப்பின் பொருத்தருளக் கோருகிறேன் ! நம்மள் கி ஞாபக சக்தி அப்பப்போ foreign டூர் போயிடுறான் !! ) தண்ணீரிலும் நடக்க முடியும் ; ஆகாசத்திலும் றெக்கையின்றிப் பறக்க முடியுமென்ற தெனாவட்டு என்னுள்ளே ஊற்றெடுத்த நாட்களவை ! ஒரு சிகப்பு உடுப்பையும், முதுகில் ஒரு கொசு மருந்து டப்பியையும் மாட்டிக் கொண்டு நானே அட்டைப்படத்தில் குந்திக் கொண்டிருந்தாலுமே அந்த இதழ் சூப்பர்-டூப்பர் ஹிட் தான் என்று கணிக்கும் அளவிற்கு ஸ்பைடர் மேனியா நம்மை ஆட்கொண்டிருந்தது ! And அண்ணன் ஆர்ச்சியுமே ஓட்டப் பந்தயத்தில் அதிக தொலைவில் பின்தங்கியிருக்கவில்லை ! So அன்றைய காலகட்டத்தில் இந்த ஜோடியை ஒரே இதழில் - அதுவும் நமது ஆதர்ஷ பாக்கெட் சைசில் களமிறக்குவது அரை நொடி யோசனையைக் கூட அவசியமாக்கிடா தீர்மானமாகிப் போனது !
அட்டைப்படங்கள் இரண்டுமே கலக்கிட வேண்டுமென்ற ஆர்வத்தில் நமது ஓவியர் மாலையப்பனுக்கு ஊக்க போனஸும் தருவதாய் வாக்களித்திருந்தேன் ! எல்லாமாய்ச் சேர்த்து - டிசைன் ஒன்றுக்கு ரூ.200 என்பது தான் 3 x 10 ஆண்டுகளுக்கு முன்பான சன்மானம் !! மாதச் சம்பளங்களே ரூ.300 என்றிருந்த நாட்களில், ஒரு வார உழைப்பிற்கு இருநூறு ரூபாய் ஈட்ட முடியும் வாய்ப்பு அசாத்தியமானது என்றே நினைப்பேன் அப்போதெல்லாம் ! சும்மா அதிரடியாய் 2 டிசைன்கள் பத்தே நாட்களில் தயாராகி என் முன் நின்ற போதே எனக்கு இந்த இதழ் சார்ந்த எதிர்பார்ப்புகள் உச்சத்தைத் தொடத் துவங்கின ! சும்மா கட்டம் போட்ட கலர் சொக்காயும், வெண்புரவியுமாய் ஆர்ச்சியைப் பார்க்கும் போது எனக்கே 'பிகில்' அடிக்கணும் போலத் தோன்றியது ! ஸ்பைடரை கருணையானந்தம் அவர்களும், ஆர்ச்சியை நானும் எழுதியது ; பர பர வென அச்சுக் கோர்த்து ; நமது ஆர்டிஸ்ட்களிடம் ஒப்படைத்தது ; கடைசி 32 பக்கப் பணிகள் நிறைவானது இரவு 12-30 மணிக்குத் தானென்றாலும், அதுவரையிலும் (எனது அண்ணனின்) அச்சகத்தில் வேறு வேலைகளை அவர்கள் துவங்கிடாதிருக்க லஞ்சமாய் அனைவருக்கும் சுடச் சுட புரோட்டா வாங்கி கொடுத்து காத்திருக்கச் செய்து, சுடச் சுட அச்சிட்டது - என்று எல்லாமே ஸ்பஷ்டமாய் நினைவில் நிற்கின்றன ! அந்த 32 பக்கங்களை நெகட்டிவ் எடுக்க மொத்தமே ரூ.100 ஆகியிருக்கும் ; ஆனால் அதன் பொருட்டும் இரவு 12-30 வரையில் வெளியிலுள்ள பிராசசிங் கூடத்தினர் நமக்காகக் காத்திருப்பர் !! ஒரு சைடில் அச்சாக வேண்டிய 16 பக்கங்களை நெகட்டிவ் எடுக்க அனுப்பி விட்டு, அதனை அவர்கள் முடிக்கும் அவகாசத்திற்குள் பின்பக்க 16 பக்கங்களை பிழைதிருத்தம் செய்து ; டமால்-டுமீல் களை இணைத்து, ஓட்டமும், நடையுமாய் நம்மவர்கள் தூக்கிக் கொண்டு ஓடுவார்கள் ! எத்தனை எத்தனை கரங்கள் இந்தப் 18 வயதுப் புள்ளையாண்டானை அன்றைக்கு ஏந்திப் பிடித்திருக்கின்றன என்பதை இப்போது யோசித்துப் பார்க்கும் போது- அவர்கள் ஒவ்வொருவரின் திசைக்கும் நமஸ்கரிக்கத் தோன்றுகிறது ! எத்தனையோ நாட்கள், கையில் போஸ்டர் கலர் white & brush சகிதம் அந்நாட்களது ஓவியரான காளிராஜன் பிராசசிங் கூட்டத்திலேயே போய் கடைசி நிமிஷத் திருத்தங்களையும் செய்ததுண்டு ! எனது சமவயதுக்காரன் ; எனது முதன்முதல் ஊழியன் என்ற வகையில் எனக்கு என்றைக்குமே அவன் மீதொரு தனி வாஞ்சையுண்டு !! ஓரிரு மாதங்களுக்கு முன்பாய் பஜாரில் அவனைப் பார்க்க முடிந்த போது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது ! 3 குழந்தைகளோடு வாழ்க்கை சகஜமாய் ஓடுவதாய்ச் சொன்னதைக் கேட்ட போது மனதெல்லாம் நிறைவாய் உணர்ந்தேன் !
2 டக்கர் கதைகள் ; அப்புறம் நிறைய filler pages என்று இதழ் அமைந்திருப்பதை நம்மிடமுள்ள file copy -ஐப் புரட்டும் போது தெரிகிறது ! "கொலைகாரக் குரங்கு" என்ற பெயரோடு விளம்பரப்படுத்தப்பட்ட TEX கதை ; அப்புறம் டயபாலிக் விளம்பரம் என்பதோடு சில பல பரிசுப் போட்டிகளின் முடிவுகளும் உள்ளன ! சித்தர் A .முகமது ஹனீபா என்ற நெல்லை வாசகரின் மினி கவிதைக்கு பரிசும், அவரது போட்டோ பிரசுரிப்பும் செய்திருக்கிறோம் ! பாருங்களேன் !!
அது மாத்திரமின்றி CID ஜான் மாஸ்டரை சிலாகித்து எழுதியிருந்த வாசகர் D .சோமசுந்தரம் - ரூ.25 பரிசை தட்டிச் சென்றிருந்தார் ! நமது சாத்தான்ஜியா அது ?? அப்புறம் 2 பக்கங்களுக்கு "வாசகர் கடிதம்" + பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த "யார் அந்த மினி-ஸ்பைடர் ?" விளம்பரம் என அதிரடிகள் தொடர்ந்துள்ளன !! அந்நாட்களது கை அச்சுக்கோர்ப்பையும், ஓவியர்களின் கைவண்ணங்களையும் பார்க்கும் போது மூன்று decades க்கு முன்பான human skills எத்தனை அசாத்தியமானவை என்பது புரிகிறது ! இயந்திரங்கள் சகலத்தையும் கபளீகரம் செய்வதற்கு முந்தைய அந்த இறுதித் தலைமுறை ஆற்றலாளர்களோடு தோளோடு தோள் நின்று பணியாற்றியதை இப்போது நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது ! இன்றைய நவீன உலகினில் 'லொஜக்-மொஜக்' என்ற நொடிப் பொழுதய மவுஸின் திருகல்களில். வர்ண ஜாலங்கள் கம்பியூட்டரில் விரிவதை நான் பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்ப்பது போல பராக்குத் தான் பார்க்க முடிகிறது ; ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பான நாட்களில் என்னாலும் பணிகளின் ஒவ்வொரு நிலைகளிலும் பங்கெடுத்துக் கொள்ள சாத்தியப்பட்டது ! ஹ்ம்ம்ம்....பழைய நினைப்பு பேராண்டி ...!! என்று தான் முணுமுணுக்கத் தோன்றுகிறது இப்போது ! தொடர்ந்த ஆண்டுகளில் ஏதேதோ இதழ்கள் ஆண்டுமலராய் வெளிவந்திருந்தாலும் - என்னளவிற்கு நினைவில் பிரதானப்படுவது இந்த first ever முயற்சியே !
உங்களுக்கு எனது 3 கேள்விகள் இங்கே guys :
1 .இந்த இதழினை ஒரிஜினலாய் வாசித்த அனுபவம் உங்களுள் எத்தனை பேருக்கு ?
2 . அதன் பின் வந்த லயன் ஆண்டுமலரில் - உங்களது TOP 3 இதழ்களென்று ஏதேனும் தேறுமா ? (அதாவது நமது மீள்வருகைக்கு முன்பான காலகட்டத்திலிருந்து)
3 . அன்றைக்கு மட்டும், இப்போதுள்ளது போல, உங்கள் குரல்களும் கேட்கப்படும் ஒரு சூழல் நிலவியிருப்பின், 1985 -ல் எனக்கு நீங்கள் சொல்ல விளைந்திருப்பது என்னவாக இருந்திருக்கும் ? (ஏதேனும் washing & pouring சமாச்சாரமாயிருந்தால் லேசாய் கோடி மட்டும் காட்டுங்கள் - புரிந்து கொள்வேன் !!)
Back to the present - இதோ காத்திருக்கும் முத்து காமிக்ஸின் இதழ் # 400 -ன் அட்டைப்பட first look !
இந்தாண்டின் பாணித் தொடர்ச்சியாய் ஒரிஜினல் டிசைன்களே இம்முறையும் அமலில் ; சின்னச் சின்ன நகாசு வேலைகளோடு ! LADY S -என்ற எழுத்துக்கள் கிட்டத்தட்ட இந்தத் தொடருக்கொரு trademark போலாகிவிட்டதால் - அதனை ஆங்கிலத்திலேயே தொடரச் செய்ய நினைத்தேன் ! கண்ணை உறுத்தா விதத்தில் தலைப்பையும், இதர text களையும் அமைப்பது மட்டுமே பாக்கி வேலையாக இருந்தது ! So கொஞ்சமாய் நமது inputs + 90 % ஒரிஜினல் artwork என்ற கூட்டணியின் பலனான ராப்பர் இது !
And இதோ - உட்பக்கத்திலிருந்து preview -ம் கூட !!
இதனை ஏற்கனவே ஆங்கிலத்திலோ, பிரெஞ்சிலோ படித்திருக்கக்கூடிய நண்பர்கள் வான் ஹாம்மேவின் கைவண்ணத்தை நிச்சயமாய் ரசித்திருப்பார்களென்பது உறுதி ! Spythrillers என்று வந்து விட்டால் மனுஷன் வேறொரு லெவெலுக்குப் போய் விடுகிறார் தான் ! கதையைப் பொறுத்தவரை - பில்டப் அவசியப்படாது என்பதே எனது அபிப்பிராயம் ! ஒற்றை வரியில் சொல்வதானால் - watch out இளவரசி !!
ஒரே மாதத்தில் மூன்று பெண்புலிகளும் களமிறங்குவதுமே ஒரு சந்தோஷ coincidence !! So ஆற்றலில் யார் டாப் ? என்ற கேள்வியை ஜூலைக்கான பட்டிமன்றமாய் வைத்துக் கொள்ளலாம் தான் ! Maybe இப்போதைக்கு "கண்ணுக்குக் குளிர்ச்சியில் யார் டாப் ?" என்ற மகா ரோசனைக்குள் மூழ்கிட முனையலாமோ ?
Before I sign off - சமீபமாய் வந்ததொரு வாசக மின்னஞ்சலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேனே ? நடப்பாண்டின் ஒரு பொதுவான அலசலாய் பார்த்திடலாமே ? Bye all ! See you around !
------------------------------------------------------------------------------------------------------------
ஜனார்தனன்.ஜ மேட்டூர் அணை-1
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு மற்றும் உங்களை சார்ந்து உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் மற்றும் முகமன் கூறுகிறேன்...
ஜனவரி தொடக்கத்தில் 'ட்யுராங்கோ'அதிரடி என்று வந்தார். தூங்கு மூஞ்சி சாயலோடு கதை ஆரம்பம் ஆனது.எங்கும் ஒற்றை ஆளாக ஆஜர் ஆகும் ஆசாமி.துப்பாக்கிகளை அசாரதணமாக கையாளும் ஆசாமி, யுவதிகளை கவர்ந்திழுக்கும் காந்த கண்ணழகன். திறமையே இவருக்கு துணை! முதல் கதையை ஒரு 'மாதிரியாக ' முடித்துக் கொண்டு சூரிய வெளிச்சத்தில் இரண்டாவது ஆல்பத்தில், சுமாரான சாகசமாகத்தான் இருந்தது. இரண்டு கதைகளுக்கும் மெல்லிய நூலிழை தொடர்பு மட்டுமே இருந்தது உண்மைதான்!மூன்றாவது ஆல்பம் அதிரடி தொடக்கமாக ஆரம்பமானது. பாலைவனம் மட்டுமே வன்மேற்கை வசந்தமாக காட்டும்?இரயிலில் வந்து இறங்கியவர் பல தடைகளை தகர்த்து ஆல்பம் நான்கில் வெறி கொண்டு துரத்திய வெகுமதி வேட்டையர்களுக்கே டிமிக்கி கொடுத்து கைகளில் விலங்கிட்டு 'மரியாதை' பெற்று செல்கிறார்!!ஓவியர் (கதாசிரியர்) இரண்டுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி உள்ளார் இத்தொடரை... ஆனால் சித்திரங்கள் ஒரு படி மேலே கதையை விடவும்!தரம் என்று சொன்னால் இவர் ஒரு தனி ஜாதி தான். இந்த அழுத்தக்கார நாயகரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அடுத்த முறையும் இது போல நான்கு ஆல்பம் ஒரே புத்தகம்...
ஜேசன் ப்ரைஸ் பிப்ரவரியில் வந்தார்...
ஆனாலும் தாங்கள் கடைசி வரை இறுதி பாகம் இன்னும் படிக்கவில்லை என்றே சமாளித்து காலத்தை ஓட்டியது ஒரு புறம் அப்புறம் அச்சுக்கு செல்லும் முன்புதான் உங்களுக்கு சஸ்பென்ஸ் தெரிந்தது என்று ஏக பில்ட்-அப்..நானும் மீண்டும் இரண்டு பாகங்கள் படித்து மூன்றாவது பாகமும் படித்து முடித்த போது'ஙே' என்றுதான் கிளைமாக்ஸ் இருந்தது... ஆனாலும் கம்சனை டெக்னிக்காக உயிர் எடுக்கும் அதே யுக்தி இந்த கதையிலும் மிக சுலபமாக கையாண்டு முடித்தது...என்னுடைய கை தட்டல்களை அள்ளிக் கொண்டது."விதி உன் பக்கம் ஒரு வாளை வீசினால் பயந்து நடுங்காதே அதன் கைப்பிடி-ஐ பற்றிக் கொண்டு போராடு" என்று வசனம் பேசிய அவருக்கே ஆப்பாக அமைந்து போனதுதான் பரிதாபம். இந்த கதையில் நாயகனை விட வில்லன் ஒரு படி மேலே நிற்கிறார்! அவர் ஆஜராகும் இடம் எல்லாம் ஒரு மாஸ் இருக்கிறது.வாழ்வில் நிறைவேறாத ஆசை,விரக்தி என்று வாழ்வின் எல்லையில் இருக்கும் அனைவரையும் மீட்டு எடுத்து மறுவாழ்வு கொடுப்பது, நச் என பேசும் வசனங்கள்... ஜேஸன் ஆஜராகும் போதெல்லாம் சிடு சிடு வென்றும்.. உர்ரர்ரர..எனவும் தான் இருக்கிறார்...நானும் பெருமை பட்டு கொள்கிறேன். ஜே.பி...ஆல்பம் படித்து விட்டேன் என்று..தமிழில் வெளியிட்டு சத்தமில்லாமல் சாதணை புரிந்து உள்ளீர்கள்.
TEX @ தல...
இவர் மீது முதல் இரண்டு மாதம் நீங்கள் சரியாக டார்ச் அடிக்கமால் விட்டது போல் இருந்தது. ஒளி வட்டம் ஒன்றும் அவ்வளவு பிரகாசமாக இல்லை.
"ஆவியின் ஆடுகளம்"-குடும்ப கதை இங்கே கௌபாய்க்கு துப்பாக்கி உயர்த்தும் வேலை அதிகம் இல்லை.இறுதி அத்தியாயம் செம விறுவிறுப்பு கதவை எல்லாம் இழுத்து மூடி விட்டு முடிச்சு விடுவிப்பது.இங்கு அறவே துப்பாக்கி தூக்கும் வேலை இல்லாமல் போனது. கண்ணீர் வரவழைக்கும் ஒரு முடிவு என அமைந்து விட்டது.கனத்த இதயத்துடன் நம்மவர்கள் கிளம்புவது போல நானும் கதையை முடித்தேன்.. அக்மார்க் முத்திரை கொண்ட தரமான கதை.
"அராஜகம் அன்லிமிடெட்.." தலைப்பு தேர்வு செய்யும் நேரத்தில் ஏதாவது லிமிடெட் கம்பெனியில் இருந்தீர்களா? புத்தகத்தை மேலோட்டமாக புரட்டினால் சித்திரங்கள் பழைய பாணியில் இருந்தன. ஒரு ஒற்றை கண்ணன் மட்டுமே கதை முழுதும் இருக்கிறானே? டெக்ஸ் எங்கே என்று சலிப்போடு படிக்க ஆரம்பித்தேன்... ஆரம்பமே டுமீல்,டுமீல் என்று உற்சாகம் கிளம்பியது.. கதையும் களை கட்டியது...ஒற்றை கண்ணன் யார் என்று பார்த்தால் நம்ம தல அவதாரம் தான்.திருடர் நகரம் என்று பேச்சு கிளம்பிய போதே எனக்கு சிரிப்பும் கிளம்பி விட்டது..கதை முழுதும் ஏட்டிக்கு போட்டியாகவே செய்து கொண்டு,பேசி கொண்டு திரிவது...என்று ஒரு நகைச்சுவை ஓட்டம் கதை முழுவதும் இருந்தது.. நான் மிகவும் ரசித்தேன்.. தல தனிஆளாக செல்வது... கார்ஸன் நண்பனை நினைத்து விசனப்பட்டு கொண்டே இருப்பது...வங்கி கொள்ளைக்கு உதவுவது..."ஆக வங்கியில் கொள்ளை அடிப்பது எல்லாம் சந்தையில் கத்தரிக்காய் வாங்கும் சமாச்சாரம் உனக்கு""அதை விட சுலபமானது" விழுந்து விழுந்து சிரித்தேன்.வில்லன் அநியாயத்திற்கு ஜென்டில் மேனாக இருந்தார். ஒரே காமெடி கதைதான்....இங்கேயும் டெக்ஸ் பொருட்டு ஒரு அப்பாவி பலியாவது.நெருக்கடி முற்றுவது என அனைத்தும் இருந்தது...
சுமார் கதைகளிலும் டெக்ஸ் முத்திரை பதிப்பார் என்பதை புரிந்து கொண்டேன்...
'பனியில் ஒரு கண்ணாமூச்சி' ; இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்...அட்டைப்படம் அடி தூள்,புரட்டி கதை வாசிக்க ஆரம்பித்த போது அதை விட தூள்..நறுக்கியது போல் இருக்கும் குறைவான வசனங்கள்.சித்திரங்கள் அதிகம் கதை சொல்லின.. கார்ஸன் தன் பங்கு காமெடியை சிறப்பாக செய்து இருக்கிறார்.சீரியஸ் மூடிலும் கலகலப்பாக்கி விடுகிறார்.தல,தாத்தா?வை போலவே நானும் கதை முழுக்க மூச்சிரைக்க பயணித்தேன்..
அப்புறம் கார்ட்டூன் கதைகள் :
மாமன்னர் கலீபா நேரடியாக களத்தில் இறங்கிய கதை. அந்தண்டை,இந்தண்டை... நானும் கலீபாதான்..காரட் வாங்கி வர..சமையல்காரர் சொதப்ப..நல்ல கலகலப்பாக இருந்தது. அயல்கிரக வாசிகள் கதை நான் ஏற்கனவே படித்து விட்டேன்.. மறு வாசிப்பு,
இதே போல் 'தோர்கல்' கதையும் நான் ஏற்கனவே படித்து விட்டேன்.. முத்து காமிக்ஸ் அல்லது ராணி காமிக்ஸ்-ஆ என்பது நினைவு இல்லை..கடைசி கதை 'மனத்தொலைநோக்கி' படித்தது போல் நினைவு இல்லை. 'தோர்கல்' புதிய ஆல்பம் இருந்தால் மட்டும் வெளியிடவும்.
புளூ கோட் பட்டாளம்.. 'டாஸ் மாக்' சரக்கு கலந்த ரகளைகள் ஏகமாக இருந்ததால் கதை ஏக வெற்றி அடைந்து விட்டது நன்றாகவே தெரிகிறது! இந்த கதையில்தான் கறிக்கடை, வீடு,தெரு,குடும்பம், 'சிஸ்டர்' என எல்லாவற்றையும் காண முடிந்தது. இல்லை என்றால் பீரங்கி முழக்கம், சீருடைகள், கூரான வாள்கள் என்றுதான் இருந்து இருக்கும்.
சுட்டி பயில்வான் பென்னி...மோசமில்லை,
லக்கி லூக்..சரியான களம் அமையாது போய் விட்டதால் இந்த கதை கச்சா எண்ணெய் போலவே அமைந்து விட்டது. ஆனாலும் லக்கியை பார்க்கும்போது எப்போதுமே எனக்கு சந்தோஷமே(இதை ஈடுகட்டும் விதமாக அப்சல்யூட்லி கிளாசிக்ஸ் அமர்க்களப்படுத்தி விட்டது)
கார்ட்டூன் கதைகள் மட்டும் மாதம் தவறாமல் பொலிவோடு வந்து விடுவது,கொஞ்சம் சிரிக்கவும் செய்கிறது.
அட்டவணை பார்க்கும்போது ஏதோ கனம் குறைவாக உள்ளது போல் தெரிந்தாலும் சூப்பர் 6, அப்ஸல்யு.கிளாசிக்ஸ் என சேர்ந்து கொள்ளும் போது கனம் கூடுதலாகத்தான் உள்ளது?அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் விமர்சனம்!!!???
ஜெரமயா...
கிட்டத்தட்ட நான் எனது எட்டு வயதில் இருந்தே படிக்கும், வாசிக்கும் பழக்கம் உடையவன்.. எட்டனா விற்கு வெளி வந்த ************நாவலில் இருந்து(ரொம்ப மட்டமான எழுத்தாளர்)யார்,யார் எழுதிய கதைகள் விதவித gener கள். எல்லாம் எழுத்து வடிவம்தான்..கற்பனையில் காட்சிகளை பார்த்துக் கொள்ளலாம். அது தலையனை மொத்த ஆங்கில நாவலாக இருந்தாலும் இந்த நிலைதான். ஆனால் காமிக்ஸ் என்பது அப்படி அல்ல,அதனால்தான் இன்றும் புதிது புதிதாக அவதாரம் எடுத்து வளர்ந்து வரும் துறை.. கற்பனைகளை ஓவியங்களாக வடிக்கலாம் அதில் மனதிற்கு பிடித்தது போல் உருவங்கள் வரைந்து பேச வைக்கலாம், எல்லைகள் இல்லாமல் பயணித்து கொண்டே இருக்கலாம்....இதனுடன் ஒப்பிடுகையில் சினிமா ஒரு படி பின் தள்ளப்பட்டு தான் உள்ளது இல்லையெனில் சார்ந்து நிற்கிறது (தமிழ் காவியங்களுக்கும்! மேற்கண்ட சமாச்சாரங்களுக்கும் துகள் அளவு கூட சம்பந்தம் கிடையாது)
ஜெரமயா-இத்தொடரை பொறுத்த வரை வரையரைகளுக்கு உட்படுத்த முடியாது.. கதையில் வர்ணங்கள் கூட ஒரு normal mode இல்லை.இப்பொழுதே இது அப்படி, இப்படி என்று பேசுவதை விட மேற்கொண்டு மீதம் உள்ள கதைகளையும் படித்து விட்டு ஒரு நான்கு சுற்றுக்கு பிறகு(தொடரின் மத்தியில் இருப்போம்) அப்பொழுது பேசினால்,ஜெரமயா பற்றி ஒரு புரிதல் இருக்கும். So now no comments, I want moorrrreeee.
சரி...2018?
-மறுபதிப்புகள் இந்த ஆண்டே கடைசி என்று எதிர்பார்த்து இரண்டு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டுதான் உள்ளேன். அதுதான் option உள்ளதே தம்பி ? D வேண்டாம் என்றால் விட்டு விடலாமே என்பீர்கள்? அதில் 'டிராகன் நகரம்' சேர்ந்து உள்ளதே எப்படி விடுவது?இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை ஒரு போன் கால் போதும்,ஆர்டர் கொடுத்தால் அனுப்பி வைத்து விடுவார்கள். ஆனால் புகைப்படம் அச்சிட்டு வருமா?என்று குழப்பம்.. சரி என்று டிக் அடித்து விட்டேன் சந்தாவில்.
ஜானி நீரோ கதைகள் இப்பொழுது தான் எனக்கு அதிகம் பரிச்சயமாக உள்ளது.அவர் மீது உங்களுக்கு என்ன 'காண்டு' என புரியவில்லை தாளித்து தள்ளுகிறீர்கள். எனக்கு நன்றாக இருக்கிறது படிக்க..அதிலும் 'காணாமல் போன கைதி' AWESOME!
பற்றாக்குறைக்கு 'ஜான் சில்வர்' அறிமுகம்..பல ஆண்டுகளாக வாசக நண்பர்கள் (என் அவாவும்) ஆர்ச்சி -ஐ களம் இறக்க சொல்லி போராடி வருகிறார்கள். எந்த பதிலும் செல்லாமல் மவுனமாக இருந்து வருகிறீர்கள்.
ஒரே புத்தகம் ஆர்ச்சியின் மூன்று மெகா கதைகள்
புரட்சி தலைவன் ஆர்ச்சி, ஆர்ச்சியோடு மோதாதே..மற்றும் இன்னொரு கதை நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டு விடலாமே!பரிசீலிக்கவும்.
-சந்தா A ஒன்றும் அவ்வளவு பலமான நாயகர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ட்யுராங்கோ இந்த ஆண்டுதான் அறிமுகம் மற்றபடி லார்கோ ஒரு வெளியீடு தான்.வேய்ன் சிங்கிள் ஆல்பம் சிங்கிள் கதை,மர்ம மனிதன் மார்ட்டின் என்று எல்லோரும் தனி தனி தீவுகளாக நிற்கிறார்களே தவிர...லேடி S ? பெண் பிள்ளையாக இருக்கிறாரே! போதாது, ஜானி புது தொடர், ஷெர்லக் ஹோம்ஸ் புது தொடர் என்று பெரும்பாலும் டபுள் ஆல்பங்கள் ஆக வெளியிடுங்கள்.கமான்சே வை விட பெரிய தாதாக்கள் எல்லாம் களத்தில் உள்ளதால் விரைவில் முடிக்க பார்க்கவும்.
-சந்தா B டெக்ஸ் எப்போதும் தனித்து நின்றாலும் மாமலை போலதான் நிற்பார்.
-சந்தாC கொஞ்சம் குறைக்கலாம் என்கிறேன். இரண்டு கதைகளாக ஐந்து இதழ்கள் என்று வெயிட்டாக வெளியிடலாம்.
-சந்தாE இந்த ஆண்டு முடிவில் தீர்மானம் செய்யலாம். ஆறு கதைகளும் சைக்கோ திரில்லர் என ஒரே ரகமாக படுகிறது.
'ஒரு முடியா இரவு' நன்றாக இருந்தது. அடுத்து என்ன என்று புத்தகத்தை கவிழ்த்து வைக்க முடியாமல் என்னை கண் விழித்து படிக்க வைத்தது.வேகமாக பக்கங்களை புரட்டினாலும் சித்திரங்கள் மீண்டும் திருப்பி பார்க்க வைத்தது. கறுப்பு வெள்ளையிலும் அவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள்.
-ஆண்டுக்கு 40 இதழ்கள் வந்தாலும் 'வெயிட்' ஆக இருக்க வேண்டும் நமது வெளியீடுகள்.
நான் இங்கு என்னதான் மேதா(ஆ)வி போல் ஆலோசணை கொடுத்தாலும் நிதர்சனம் என்று ஒன்று உண்டு. மற்ற மற்ற ஏனையோரின் விருப்பங்களும் உண்டு.எது நல்லதோ உங்களுக்கு சரியாக வருகிறதோ பார்த்து செய்யுங்கள்!இந்த ஆண்டின் ஆறாவது மாதம்தனில் வந்து விட்டோம்.ஆச்சர்யப்பட எல்லாம் எதுவும் இல்லை.நம் காலத்தோடு நம் காரியத்தை சரியாக செய்து முடிப்போம்.
அப்புறம் என்ன ? ஜூலை மாதம் லயனிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி.தீபாவளி வாழ்த்துக்களும் அட்வான்ஸாக(ரொம்ப அட்வான்ஸாக உள்ளதா?) சொல்லிக் கொண்டு...'ஒரு தலைவன்,ஒரு சகாப்தம்' இருக்கும் நம்பிக்கையில் விடை பெற்று கொள்கிறேன்.
JANARTHANAN. J

(மலேசியா)

Hai
ReplyDeleteபழைய ஆண்டு மலர்களோடு ஒப்பிடும்போது இம்முறை....
ReplyDeleteஆண்டு மலருக்காக விசேடமாகத் தயாராகிய காலமது. இப்போது அந்த மாதத்தில் செட்டாகும் இதழ் சும்மா அப்படியே ஆண்டு மலராகிவிடுகிறதே...
ReplyDeletePodiyan : திருத்தம் : 512 பக்க இதழ்கள் "அப்படியே" அமைவதில்லையே !
Deleteஉங்கள் முயற்சிகளையும் பணிகளையும் குறை சொல்லிடவில்லை சார். ஆனால், நீங்களே மேலே பதிவில் குறிப்பிட்டிருப்பதுபோல - அட்டை வரைவதில் ஆரம்பித்து, அதற்கு முன்னரான மாத இதழ்களில் வரும் ஆண்டு மலர் அறிவிப்புகள் என்று அந்தக் கல்யாணக் களை இல்லாமலிருக்கிறதே என்ற ஆதங்கம்தான். அடுத்த ஆண்டில் முன்கூட்டிய திட்டமிடலென்றாலும், ஆண்டு மலருக்கு அவசியம் சிறப்புச் செய்திடுங்கள்!
Delete+1
DeleteI am 5 th good morning friends
ReplyDelete300,400 ,500 ட்டும் ஆகட்டும்
ReplyDeleteLady S விடைகொடு சானியா ஆங்கிலத்தில் படித்துள்ளேன் வித்தியாசமான spy thriller. பழைய ஆண்டு மலர்களின் richness இப்போது வரும் ஆண்டு மலர்களில் missing என்பது எங்களை போன்ற வாசகர்களுக்கு ஏமாற்றம்தான் என்றாலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்று ஏற்று கொள்ளவேண்டியுள்ளது.
ReplyDeleteசார் ஆண்டு மலர் அப்ப்டின்னலே கதம்ப கதைகள் தான் நியாபகம் வருகிறது. 80 களில் special என்றால் அது ஒரு கதம்ப special தான்.அப்படி ஒரு 7- 8 கதைகள் போட்டு ஒரு special போட்டிங்கனா இந்த கட்டை வேகும் .NBS க்கு அப்புறம் அந்த மாதிரி முயற்சி நீங்கள் பன்னவேயிலா அதா கொஞ்சம் try பண்ணலாம்.
ReplyDeleteHai
ReplyDeleteஅதிகாலை வணக்கம்
ReplyDelete13வது
ReplyDeleteஉள்ளேன் ஐயா.. அனைவருக்கும் காலை வணக்கங்கள்
ReplyDeletePresent Sir
ReplyDeleteHi..
ReplyDeleteDear Edi,
ReplyDeleteSad to see another Muthu landmark issue not being honored with a special like Lion milestone issues. Moreover, Lady S is a lame series even to Van Hamme's legacy.
Yes I agree, I too mentioned the same in the post where edit introduced her. I tried many times but could cross 10 pages in English.
Deleteடியர் எடிட்டர்
Deleteமுத்து 400 இதழுக்கு இரண்டு மாயாவி கதைகள் - அல்லது ஒரு மும்மூர்த்தி ஸ்பெஷல் போட்டு celebrate செய்திருக்கலாம்.
2016 ஜனவரியில் நமது சென்னை கண்காட்சி ஸ்டாலில் நான் வாங்கிய லேடி S கதைகளில் (ஆங்கிலம்) முதல் பாகத்தை தவிர மற்றவை பளபளா கவர் பிரிக்கப்படாமல் அலமாரியில் உறங்குகின்றன. "நண்பரே" என்று ஏதாவது எனது ஒரு கமெண்டுக்கு யாரவது ஆதரவு தெரிவித்தால் பரிசாக அனுப்பி அவரை "எதிரி"யாக்க திட்டம் ! (கூரியர் செலவு நண்பர்களது :-) )
மற்றபடி அடுத்த மாத ரெகுலர் மற்றும் சூப்பர் SIX வெளியீடுகளுக்கு waiting.
@ Raghavan
Deleteநண்பரே... ( இது புக்ஸுக்கு)
அருமை நண்பரே... ( இது கொரியர் செலவுக்கு)
( அப்படிக்கிப்படி அனுப்பிவச்சுடாதீங்க காமிக் லவரே... இங்கிலீச்ல படிக்கிற அளவுக்கு நேரமோ, பொறுமையோ, நல்ல டிக்ஸனரியோ இப்ப எங்கிட்ட இல்லை!) ;)
///இங்கிலீச்ல படிக்கிற அளவுக்கு நேரமோ, பொறுமையோ, நல்ல டிக்ஸனரியோ இப்ப எங்கிட்ட இல்லை!) ;)///
Deleteஅட.! சும்மா வாங்கிப்போடுங்க குருநாயரே..! படமாச்சும் பாத்துட்டு இருப்போம். .!
" நண்பரே "
Deleteஇன்னும் துல்லியம "நண்பரே"
DeleteMe2
ReplyDeleteMe2
ReplyDeleteமாடஸ்டி பிளைசி
ReplyDeleteஜனார்த்தனன் நன்றாக எழுதியுள்ளார்.
ReplyDeleteநன்றி சகோதரரே....
DeleteGood morning sir&my dear friends 😃🌹🌼🍀🌻🌼🌹🌸
ReplyDeleteவாசக நண்பரின் கடிதம் அழகு...:-)
ReplyDelete*********
ஆண்டுமலரோ ..கோடை மலரோ ...தீபாவளி மலரோ எந்த மலராக இருந்தாலும் பல மலர்கள் இணைந்த பூங்கொத்தாக இருந்தால் மட்டுமே அதனை ஆண்டு மலராக நினைத்து மனம் கூதுகலிக்கிறது அன்று முதல் இன்று வரை....:-)
நன்றி நண்பரே,நீங்கள் தாரமங்கலம் தானே? நீங்கள் லயன் தீவிர வாசகர் , என் கடிதம் அழகு என்ற பாராட்டுக்கு மகிழ்ச்சி அடைகின்றேன்.நீங்கள் ஆரம்ப காலத்தில் கடிதம் மூலம் ஒவ்வொரு மாதம் தவறாமல் விமர்சனம் எழுதுவீர்கள், படித்து இருக்கிறேன்
Deleteகுடாப்டர்நூன் சார். .!
ReplyDelete(எவ்ளோ பெரிய்ய மாத்திரை)
ஜனார்தனன் சாரின் அரையாண்டு விமர்சனம் அட்டகாசம். .!!
ReplyDeleteநன்றி நண்பரே...அப்படியே எனக்கு பெருமை தேடி தந்த ஆசிரியருக்கும் நன்றிகள் பல
Deleteஉற்சாகம் தெறிக்கும் ஞாயிறு வணக்கங்கள் - அனைவருக்கும்!
ReplyDeleteநண்பர் ஜனார்த்தனனின் முழுநீள கடுதாசி - அருமை! பாராட்டுகிறாரா, டோஸ் விடப்போகிறாரா என புரிந்துகொள்ள முடியாமல் ஒவ்வொரு பாராவையும் சஸ்பென்ஸாக நகர்த்தியிருக்கும் அந்த நடை - பாராட்டுக்குரியது! ( உங்கள் கருத்துகளை அவ்வப்போது இங்கே இந்தத்தளத்திலும் பதிக்க முயற்சியுங்கள் நண்பரே!)
லேடி-எஸ் அட்டைப்படம் ஸ்தம்பிக்கச் செய்கிறது. குளிர்ச்சியான நீல வண்ணம் ஆக்கிரமித்துக்கொள்ள, பின்னணியில் நட்சத்திரங்களின் நடுவே ஓரப்பார்வையில் அழகே உருவான அந்த முகம் - அடடா...அடடடடா!! ( கண்மூடும் வேளையிலும் களை என்ன களையே... கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!)
//( கண்மூடும் வேளையிலும் களை என்ன களையே... கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!)//
Deleteசாா், காலையிலே படு கஜாலா இருப்பிங்க போலிருக்கே!!
/// கண்மூடும் வேளையிலும் களை என்ன களையே... கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!)///
Deleteகண்மூடும் வேளையிலும் களைகண்டு மயங்கும்
கண்ணா உன் கற்பனையின் விலை இந்த உலகே
///கண்மூடும் வேளையிலும் களைகண்டு மயங்கும்
Deleteகண்ணா உன் கற்பனையின் விலை இந்த உலகே///
ஆஹா!! ஆஹ்ஹஹ்ஹா!!
நன்றி ஈரோடு விஜய் அவர்களே... உங்களிடம் இருந்து கிடைக்க பெற்ற இந்த பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது
Deleteஎனக்கும் பேராவல் உண்டு..இங்கே சுட சுட விமர்சனம் செய்ய ஆனால் மாதம் 20 ஆம் தேதி புத்தகம் கிடைக்கும்.. அதன் பிறகு விடுமுறை நாளில் வாசித்து தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும் முன் அடுத்த மாத புத்தகம் அனுப்பி விட்டதாக ஆசிரியர் பதிவிடுவார் அடுத்த நாளே ஒரு சுற்று விமர்சனம் ஓடி விடும் அதனால் இந்த மாதிரி ஒரு முழு நீள கடிதம் ஆசிரியருக்கு அனுப்பி விடுவேன்விடுவேன்,இந்த முறை இன்ப அதிர்ச்சி தந்து விட்டார்..
ஈரோடு விஜய் Avl,
Deleteஇந்த பாடல் எனது Favorite. இதை பதிவிட்டதற்கு தங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Bonjour monsier
ReplyDeleteஹாய்
ReplyDeleteHappy Sunday friends
ReplyDeleteகாலை வணக்கம் நண்பர்களே....
ReplyDeleteகாலை வணக்கம் நண்பர்களே....
ReplyDelete///ஒரே மாதத்தில் மூன்று பெண்புலிகளும் களமிறங்குவதுமே ஒரு சந்தோஷ coincidence !! So ஆற்றலில் யார் டாப் ? என்ற கேள்வியை ஜூலைக்கான பட்டிமன்றமாய் வைத்துக் கொள்ளலாம் தான் ! Maybe இப்போதைக்கு "கண்ணுக்குக் குளிர்ச்சியில் யார் டாப் ?" என்ற மகா ரோசனைக்குள் மூழ்கிட முனையலாமோ ? ///
ReplyDelete'கண்ணுக்குக் குளிர்ச்சியில் யார் டாப்?' - போட்டியிலிருந்து ஜூலியா விடைபெற்றுக்கொண்டு உடனே வெளியேற, பலத்த போட்டி மாடுவுக்கும் - லேடுவுக்கும்!
தீர்ப்புச் சொல்றது ரொம்ப்ப்பக் கஷ்டம் போலிருக்கே...
நம்ம ஓட்டு எப்பவுமே ஜூலியாவுக்குதாம்பு. வேறு எந்த அழகிகளும் தேவையில்லைப்பு.
Delete///LADY S -என்ற எழுத்துக்கள் கிட்டத்தட்ட இந்தத் தொடருக்கொரு trademark போலாகிவிட்டதால் - அதனை ஆங்கிலத்திலேயே தொடரச் செய்ய நினைத்தேன் ! ///
ReplyDeleteTEX போலவே Lady Sஎழுத்துருக்களும் அம்சமாகவே இருக்கிறது சார். (எழுத்துரு எழுத்துரு - குருநாயர் கவனத்திற்கு) .
உட்பக்க டீசரில் கிளிப்பச்சையும் இளமஞ்சளும் இணைந்து கண்களை சுண்டியிழுக்கின்றன.
முதல்கதையின் தலைப்பே விடைகொடு என்று இருக்கிறதே என்று இல்லாத ஆறாம்அறிவை கசக்கிப் பிழிந்ததில் ஷானியாவுக்கு விடைகொடுத்து Lady S உதயமாகிறார் என்பதால் இப்படி தலைப்பு அமைந்திருக்கக்கூடும் என்று விடை கிடைத்தது..!
சரியான கணிப்புதானா சார். .!
///ஒரே மாதத்தில் மூன்று பெண்புலிகளும் களமிறங்குவதுமே ஒரு சந்தோஷ coincidence !! So ஆற்றலில் யார் டாப் ? என்ற கேள்வியை ஜூலைக்கான பட்டிமன்றமாய் வைத்துக் கொள்ளலாம் தான் ! Maybe இப்போதைக்கு "கண்ணுக்குக் குளிர்ச்சியில் யார் டாப் ?" என்ற மகா ரோசனைக்குள் மூழ்கிட முனையலாமோ ? ///
ReplyDeleteஆற்றலில் யார் டாப்பென்று கேட்டால் டக்கென்று சொல்லிவிடலாம்.!
கண்ணுக்கு குளிர்ச்சியெனும்போது ஜூலியா தானாகவே விலகிக்கொள்வார். மாடஸ்டியை பலமுறை சித்திரங்கள் சுமாராகவே காட்டியிருக்க, ஒரேயொரு பக்க டீசரில் வந்திருந்தாலும் இப்போதைக்கு எனது ஓட்டு ஷானியாவுக்கே..!
எப்படியெல்லாம் தீர்ப்பு சொல்ராங்கப்பா. இந்த குரூப் மெஜாரெட்டிய இப்பவே பிடிஞ்சிருச்சு போல.
Deleteஅன்பு எடி,மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்
ReplyDeleteநான் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது 1990 அப்புறம் தான். மூன்று கேள்விகளில் ஓரு கேள்வி கூட என்னால் பதில் கூற இயலாது.
ReplyDeleteஎடிட்டா் அதர பழைய வாசகா்கள் யாா் யாருன்னு தொிஞ்க்கலாம்னு நெனைக்கிறாா் போலிருக்கு.
Deleteஇம்புட்டு ஈசியான கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்றது. கேள்வி டெரரா இருக்க வேண்டாமா.
Deleteபோன வாரம் திங்கட்கிழமை மேலே தான் புத்தகம் படிக்க முடிந்தது. திங்கள் இரவு படிக்க ஆரம்பித்து செவ்வாய் அதி காலை மூன்று மணிக்கு அனைத்து இதழ்களும் முடிந்து விட்டது.
ReplyDeleteUnDERTAKER இரண்டு முறை படித்து முடித்தாகி விட்டது.
ரகசியமாக வைச்சுகங்க. இங்க 3 வது ரவுண்டு போயிக்கிட்டு இருக்கு. என்னமா கதை எழுதுராங்க.
Deleteவெள்ளிக்கிழமை தா புக்கை வாங்கினேன். என்னமா பின்னி பெடலு எடுக்குறாறு அன்டர்டேக்கரு.ஆசிரியருக்கு கண்டிப்பா பரிசு கொடுத்தே ஆகணும். குருவி மிட்டாய் ok தானே.
Deleteஇன்று என்ன புதுமை நிகழ்த்தலாம்? என்று வலையில் படுத்துக்கொண்டே ஸ்பைடா் பேசும் டயலாக். இன்றும் எனக்கு காமிக்ஸை அறிமுகப்படுத்திய நண்பரும் நானும் சந்திக்கும் போதேல்லாம் பேசிக் கொள்ளும் டயலாக்காக உள்ளது.
ReplyDeleteவிஜயன் சார், ஆண்டுமலர் பற்றிய இந்த பதிவு சுவாரசியமாக அருமையாக உள்ளது.
ReplyDeleteமுத்து ஸ்பெஷல் அட்டைபடம் சூப்பர்ராக உள்ளது, அதுவும் அந்த அட்டையில் உள்ள ப்ளூ கலர் (மயில் கழுத்து ப்ளூ) படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து உள்ளது.
This comment has been removed by the author.
ReplyDeleteஇனிய காலை(மாலை) வணக்கம் எடிட்டர் சார்!!!
Deleteஇனிய காலை(மாலை) வணக்கம் நண்பர்களே!!!
உல்லாசமான ஒரு பொழுதில், ரயிலிலே சென்று கொண்டிருந்த இரு அமொிக்கா்கள், ரயிலை மிஞ்சும் வேகத்தோடு தங்களுக்குள் விளையாட்டாக, யாா் முதலில் ரயிலை முந்துவாா் என்று போட்டிபோட்டு வந்து கொண்டிருந்த செவ்விந்தியா்களை சுட, செவ்விந்தியா்களும் தங்களைத் தற்காக்க அம்புகளை விட, வெறி அமொிக்கா் இருவரும் மொத்த செவ்விந்தியக் கூட்டத்தையும் காலி பண்ண, அதில் எப்படியோ தப்பித்த ஒரு செவ்விந்தியன் நடந்ததை தன் தலைவரிடம் சொல்ல, நியாயம் கேட்கப் புறப்படுகிறாா் தலைவா்
ReplyDeleteஒற்றை ஆளாய் ஒரு ராணுவத்தை எதிா்த்து !!
டெக்ஸ் வில்லாின்
"பழி வாங்கும் புயல்"
என் வாழ்நாளில் 100 முறைக்கும் மேலாகப் படித்த கதை ஒன்று உண்டென்றால் அது இதுதான். இதற்கு முன்பும் சாி இதற்குப் பின்பும் சாி வெறெந்தக் கதையும் இப்படியொரு நிறைவைக் கொடுத்ததில்லை.
My All Time Favorite இதுதான் !!
நண்பா்களே!
Deleteஇதுபோல அற்புதக் கதையமைப்பைக் கொண்ட டெக்ஸ்ன் கதைகள் இருந்தால் சொல்லுங்களேன் !!
ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல....
Deleteநள்ளிரவு வேட்டை
இரத்த நகரம்
இருளின் மைந்தர்கள்
சாத்தான் வேட்டை
பழிவாங்கும் பாவை
மரண தூதர்கள்
(இப்போதைக்கு.. . ஹிஹி)
கார்சனின் கடந்தகாலம் (சொல்லவே வேண்டியதில்லையே)
டெக்ஸ் மலை சிங்கங்களோடு மோதுவாக அது என்ன கதை kok.தன்னுடைய மேலாக்குல டைனமைட்ட சுத்தி ரைபிள்ள சுட்டு வேட்டையாடுவாக.top 10 ஸ்பெஷல்ல வந்தது.
Deleteடெக்ஸ் மலை சிங்கங்களோடு மோதுவாக அது என்ன கதை kok.தன்னுடைய மேலாக்குல டைனமைட்ட சுத்தி ரைபிள்ள சுட்டு வேட்டையாடுவாக.top 10 ஸ்பெஷல்ல வந்தது.
Deleteபாலைவனப் பரலோகம்.
Delete(இரண்டு கதைகளுக்குள் சின்ன குழப்பம் இருந்தது. தெளிவுபடுத்திய நண்பர் மாயாவிக்கு நன்றி.)
// ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல...//
Deleteவல்லவர்கள் வீழ்வதில்லை இதை விட்டுட்டிங்களே கண்ணன்.
வல்லவர்கள் வீழ்வதில்லை மட்டுமா இன்னும் நிறைய இருக்கே ரவி..!
DeleteThis comment has been removed by the author.
Delete@Mithun ...அட நீங்க நம்ம குரூப்பா...!
Deleteஅப்படியே 'மரணத்தின் நிறம் பச்சை'யும் பட்டியலில் இடம் பெற தகுதியானதே. ஆனால் அந்த வேற்றுகிரகவாசி கடைசி வரை பிடிபடாமல் போவதே சற்று ஏமாற்றம்.
மேலும் பல முறை வாழ்த்து கூற வேண்டும் நினைத்து மறந்து விடுகிறேன்.
ReplyDeleteஅந்த சிங்கம் லோகோ நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Hi!
ReplyDelete57
ReplyDelete@Janarthanan, well said.
ReplyDelete+1
விஜயன் சார் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் குண்டு புக்கிற்காக ஒரு கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்து விட்டு அட்டவணையை தயாரிக்கவும். இல்லையென்றால் குண்டு புக் போராட்ட குழு ஆரம்பிக்கபடும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொல்கிரேன்.
YES YOUR HONOR!!
Delete//குண்டு புக் போராட்ட குழு ஆரம்பிக்கபடும்//
//////குண்டு புக் போராட்ட குழு ஆரம்பிக்கபடும்/////
Delete'கு.பு.போ.கு'வை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன். 'ஒல்லிப்பிச்சான்களே இல்லாததொரு காமிக்ஸ் உலகு வேண்டும்' என்பதே கொள்கையாக இருக்கட்டும்!
சாா்,
Deleteமாதம் ஒரு குண்டு புக்!
அதுவும் மெகா சைஸிலே!!
எப்புடி நம்ம ஐடியா!!! ???
இல்லைன்னா "குண்டு புக் சந்தா - F"
Deleteஆரம்பிச்சுடுங்க???
FAT BOOK சந்தா - F !!!
Deleteஅட, சாா் பேரு கூட பொருத்தமா வருது.
F...+1
DeleteThank you Mr.mahesh
Deleteஆண்டு பலர் என்றாலே கதம்ப இதழ் மனதில் வருவது ஒரு அருமையான உணர்வு. நமது பால்யத்துடன் நெருங்கிய, அதை மீட்டெடுக்கும் அம்சங்களில் அதுவும் ஒன்று.
ReplyDeleteஅதை நாம் தற்போது இழந்திருப்பது சோகமான விஷயம்தான்...
சாா்,
ReplyDeleteமாதம் ஒரு குண்டு புக்!
அதுவும் மெகா சைஸிலே!!
எப்புடி நம்ம ஐடியா!!! ???
FAT BOOK சந்தா - F !!!
Deleteஅட, சாா் பேரு கூட பொருத்தமா வருது.
எனக்கு ஒரு டவுட்டு!
ReplyDelete////ஜனார்தனன்.ஜ மேட்டூர் அணை-1
(மலேசியா) ////
மலேசியாவிலும் ஒரு மேட்டூர் அணை இருக்கிறதா...? அல்லது இத்தனைநாளும் நான் மலேசியா'னு நினைச்சுக்கிட்டிருந்தது உண்மையில் மேட்டூர்அணையைத் தானா?!!
ரொம்பக் குழப்புதே...?
( தலீவருக்கு மலேசியாவை சுத்திக்காட்டறேன்னு சொல்லி பொருளாளர் செனாஅனா கிட்டேர்ந்து சிலபல லட்சங்களை அவுக்..அவுக்..)
////மலேசியாவிலும் ஒரு மேட்டூர் அணை இருக்கிறதா...? அல்லது இத்தனைநாளும் நான் மலேசியா'னு நினைச்சுக்கிட்டிருந்தது உண்மையில் மேட்டூர்அணையைத் தானா?!!////
Deleteவிலா நோக சிாிச்சுட்டிருகேன்!!!
தூள் !!!
அருமை நண்பரே!!
😂😂😂😂😂😂
///
Delete( தலீவருக்கு மலேசியாவை சுத்திக்காட்டறேன்னு சொல்லி பொருளாளர் செனாஅனா கிட்டேர்ந்து சிலபல லட்சங்களை அவுக்..அவுக்..)///
என்னாது லட்சங்களா.. . .!?!?!?
நம்ம சங்கத்துலயா .. . .??!!?!?!?
என்னது நமது சங்கத்தில் லட்சமாகவா ... முழு பொய்.... வட பஜ்ஜி கொடுக்க முடியாமல் பல மாதங்களாக மீட்டிங் நடத்த முடியாமல் தினறிக்கொண்டு இருக்கிறோம் என்பது சிறு பிள்ளைகளுக்கு கூட தெரியும் யுவர் ஆனர். சங்கத்தின் கஜானால கூட கடைசியாக சாப்பிட்ட பஜ்ஜி பேப்பர் மட்டுமே உள்ளது என்பதை வெட்கத்தை விட்டு சொல்கிறேன் 😁
Deleteஅதுவும் செயலாளரே தலைவர் மேல் குற்றம்சாட்டுகிறார்... என்ன கொடுமை சார், தலைவரே அவசரப்பட்டு உங்கள் ஒரே சொத்தான காமிக்ஸை யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீங்க... நாங்கள் இருக்கிறோம் 😎
Delete///கஜானால கூட கடைசியாக சாப்பிட்ட பஜ்ஜி பேப்பர் மட்டுமே உள்ளது என்பதை வெட்கத்தை விட்டு சொல்கிறேன் 😁///
Delete:D lolz
பாராட்டு கூறி விட்டு பின் உடனே கலாய்த்து விட்டீர்களே ஈரோடு விஜய் அவர்களே(உங்கள் பெயரை மீண்டும் சொல்லிக் கொள்ளவும்)
Deleteஇன்று தமிழ்நாட்டில்(மட்டுமே) கலாய்ப்பது என்பது ஒரு கலாச்சாரம் போல் ஆகி விட்டது.
ஏதோ என் வாழ்க்கையின் வடிவம் அயல் நாட்டில் வேலை செய்து பொருள் தேடும் நிலை..எனது அடையாளம், எனது பெருமை என் ஊரின் பெயரே அந்த நினைவு எப்போதும் என்னிடம் இருக்க வேண்டும் என்றுதான் கடிதத்தில் அப்படி குறிப்பிட்டேன்.இது ஒரு நகைச்சுவையா? நண்பர் KID விலா நோக சிரித்தாராம் ? பக்கத்து ஊர்க்காரன் என்று கூட பார்க்காமல் இப்படி ஓட்டுகிறீர்களே!
ரொம்ப சென்ட்டிமென்ட் பேசி விட்டோனோ?நீங்கள் மட்டும் அல்ல இந்த நாட்டில் குடி நுழைவு அலுவலகம் போனாலும் அதிகாரிகள் என் கடப்பிதழ் முகவரியை பார்த்தால் விழிப்பார்கள் ஒன்று எனது ஊரின் பெயர்
METTUR DAM, இரண்டாவது என் ஏரியாவின் பெயர் HOSPITAL COLONY, நீ வசிப்பது வீடுகள் இருக்கும் தெருவா இல்லை மருத்துவமனையா? என்று விளையாட்டாக கேட்பார்கள்.
அப்புறம் இந்த பகுதியில் நான் மௌனமாக உங்களுடைய சுவாரசியமான விமர்சனங்கள் படித்து கொண்டுதான் இருப்பேன்..
Jana Krishna என்பது ஒரு சென்ட்டிமென்ட் ஆக நான் வைத்து கொண்டு இருக்கும் பெயர், என்ன ஏது என்று அதற்கும் வினா எழுப்பி விட வேண்டாம்?
நன்றி நண்பர்களே...
///பாராட்டு கூறி விட்டு பின் உடனே கலாய்த்து விட்டீர்களே ஈரோடு விஜய் அவர்களே///
Deleteஹிஹி... தொட்டில் பழக்கம்!
முடிந்தால் இந்தவருடம் EBFக்கு வர முயற்சியுங்கள் நண்பரே! நண்பர்களோடு அளவளாவிட நல்லதொரு வாய்ப்பு என்பதோடு, அடுத்த காலாண்டுக்கான உங்களது பிரத்யேக விமர்சனக் கடுதாசியை எடிட்டரிடமே நேரடியாக ஒப்படைக்கவும் நல்லதொரு வாய்ப்பில்லையா?
அந்த காலத்தில், ஆண்டு மலர்/தீபாவளி மலர் என்றால் ஒரு 6 முதல் 10 கதைகளுடன் ஒரு குண்டு புக் இருக்கும். அட்டைபடம் கலக்கலாக இருக்கும். கண்டிப்பாக ஒரு மெகா ஸ்பைடர் கதையும், மாடஸ்டி கதை உண்டு. பிறகு தலை டெக்ஸ் இருப்பார். இவர்களோடு தொட்டுக்க, மினி ஆர்ச்சி கதை, இரட்டை வேட்டையர்கள், லாரன்ஸ் கதை, மற்றும் அறிமுகம் செய்கிறேன் என்று மொக்கையான ஒரு புது வரவும் மற்றும் பில்லர் பேஜஸ் இருக்கும்.
ReplyDeleteகருப்பு வெள்ளை கதைகள் எனும் போதும் அந்த ஒரு பரபரப்பு சந்தோஷம் அந்த சின்ன வயதில் அனுபவித்தது போல் இன்று எனோ இருப்பதில்லை. வயதாகி விட்டதினாலா இல்லை சின்ன வயதில் ஆர்வம் அதிகமாக இருந்ததினாலா என்று தெரியவில்லை.
ஆனால் நான் இப்பொழுது பழையது புதியது என்று மிஃஸ் பண்ணி படித்து வருகிறேன்.
இந்த வாரம் படித்தது
கிளாசிக்: புயல் பெண்: ராபினின் சாகசம். இந்த முறை ஒரு பெண் போலீசை ஒரு டானின் கோட்டைக்குள் ஊடுர செய்து அவன் கோட்டையை மடக்கும் கதை. எனக்கு ராபினின் கதைகள் அவ்வளவு பிடிக்காது. ஆனால் இந்த கதை பரபரப்பாக இருந்தது.
லேட்டஸ்ட்:
1 எத்தர்களின் எல்லை - இது வரைக்கும் படித்த ராபின் கதைகளிலே இது தான் பெஸ்ட். சித்திரங்களும் கலக்கலாக இருந்தன
2 தரைக்கடியில் தங்கம் - ரொம்ப நாட்களுக்கு அப்புறம் லக்கி லுக் கதை ரொம்ப திருப்தியாக இருந்தது. வெடி சிரிப்பு தோரணம்.
3 துரோகத்திற்கு முகமில்லை - இதை படிக்க இப்பொழுது தான் வாய்த்தது. தெளிவான கதை எபோழுதும் போல. பழைய காலத்து சித்திர பாணி என்ற போதும், கதையின் விறு விறுப்பு அதை மறக்கடிக்க செய்து விட்டது.
//வயதாகி விட்டதினாலா//
Deleteசந்தேகமே வேண்டாம் நண்பரே,
வயதாகி விட்டதால் தான் மனதிற்கு!
மனதில் உள்ள குப்பைகளை நீக்கிவிட்டால் கண்டிப்பாக இளமையாகி விடுவோம் !!
உடலைப் பற்றிய கவலையே வேண்டாம். அது தன்னைத்தானே பாா்த்துக் கொள்ளும்.
இதுகூட நல்லா இருக்கும் போலிருக்கே..!!
ReplyDeleteஒரு வருசம் முழுக்க சிங்கிள் ஆல்பமே கிடையாது. மாதம் ஒரு குண்டு புக்கு மாத்திரமே, சகல சந்தாக்களும் உள்ளடக்கி ஒரே குண்டு புக்.
ஆண்டு மலர் தீபாவளி மலர்னா குண்ண்ண்ட்ட்டு புக்கா போட்டுவிட்ருவோம்..எப்பூடி..!!
எத்தனையோ பரிட்சிதார்த்த முயற்சிகளை பார்த்த நமக்கும் எடிட்டர் சாருக்கும் இந்த குண்டு வருடம் எந்த கலக்கத்தையும் உண்டுபண்ணாது என்று நம்புவோமாக..!
//குண்ண்ண்ட்ட்டு//
Deleteஇன்னும் 4 5 ண் சேத்துங்க!!
அப்ப வந்த இதழ்களில் வருகிறது விளம்பரங்கள் சூப்பரா இருக்கும் அது மட்டுமல்ல பில்லர் பேஜசும் தான் ஆனா காமிக்ஸ் கலெக்ட்டர்களின் புனித நூலான மின்னும் மரணத்தில் பில்லர் பேஜ்ஜிற்கு கவிதை போட்டது தான் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
ReplyDeleteசார் லேடி s அட்டைப்படம் இது வரை வந்ததிலேயே டாப்பாய் தெரிகிறதே ... அட்டகாசம் .அப்டியே அதே ஸ்டைலில் தமிழில் அதே டிசைனிலும் இரண்டும் கலந்து அச்சிட்டால் அள்ளுமே . நமது ஆண்டு மலர்களிலேயே மிகச் சிறந்த கதை இதுதான் ... இந்த கதய நான் கோயிலுக்கு போகயிலே...போகயிலேன்னு ஏக முறை மறு பதிப்பு செய்திட்டேன் ....யார் அந்த மினி ஸ்பைடர வருகிறது விளம்பரம் இதிலென்றால் மறக்க ஏலாதே....அந்த வகயிலும் டாப் . குதிரை வீரன் என்ற வார்த்தை ஏக உற்சாகத்தை கிளப்பிய நாட்களவை . அதிலும் குதிரை வீரன் ஆர்ச்சி எனும் வார்த்தயும் , குதிரயில் ஆர்ச்சி கட்டம் போட்ட ச்ட்டயில் பயணித்ததும் இன்னும் விசிலடிக்குது மனத்தடத்தில் அன்று பயணித்த ஆர்ச்சியின் காலடிகள் .
ReplyDelete2 .ஆனா ஊனான்னா ஆண்டு மலர்கள் மாடஸ்டிய கொண்டு வந்ததாய் நினைவு ...அப்படித்தானா...அதனால் பெரிதாய் ஏதும் கவரலை...ஆனா இப்ப அக்கதைகள வெகுவாய் ரசிப்போரில் நானுமுண்டு . நம்ம டெக்ஸ் அதில இரத்த முத்திரை அதிலென்றால் அதும் , அதிரடி படையும் , இரத்தபடலமும் அட்டகாசம் ...பிற ஆண்டு மலர்கள் நினைவில்லை ..ஆண்டு மலர் லிஸ்ட் தந்திருந்தா நண்பர்கள் தேர்ந்தெடுக்க உதவியாயிருந்திருக்கும் .ஆர்ச்சியின் மிச்ச மீதி , ஸ்பைடரின் அந்த மெகா கதைய வச்சிகிட்டு என்ன பன்றீங்கங்ற மெகா கேள்விக் கணைகளில் நானும் ஒருவனாயிருந்திருப்பேன் .வருடம் ஒரு மெகா சைஸ் இரு வண்ண இதழ கேட்டிருப்பேன் . விளம்பரம் வாயிலா வெகுவா கவர்ந்த ஸ்கார்பியோவ் வ கேட்டு நச்சிருப்பேன் ,மாயாஜால உலக டெக்ஸா ....ஏன் விட மாட்டேங்றீங்கன்னு அதிரடி கேள்விகள் .....ரிப் கெர்பி , காரிகன்,மாடஸ்டினு ,ஜார்ஜ் இவங்கள விட்டு ஒரு மாதத்தையே முழுசா வேஸட் பண்ணிட்டீங்களேன்னு கோவபட்டிருப்பே்ன் ... ஆனா இப்ப ரசிப்பேன் அக்கதைகளயும்...டெக்ஸ் வற்றாத ஜீவ நதின்னா அத பாய விட்டு மாதந்தோறும் பாய விட்டு ஆர்ச்சி , டெக்ஸ் கதைகளின் இழப்ப ஈடு செய்யலாமே அதிரடியான்னு தாக்கிருப்பேன் .சார் வருடம் ஒரு தலையில்லா போராளி சைஸ் இதழ் வேண்டும் என இம்மாதம் நினைத்த படி இருந்த எனக்கு டெக்ச புரட்டுனா மெகாசைசில் என தீபாவளி விளம்பரம் இது வருடம் தோரும் தொடரட்டும் . அடுத்த வருட இரத்தப் படலத்தினூடே அட்டகாசமாய்...
அதும் இம்மாத லேடி sஅட்டைபடம் தரும் சந்தோச உணர்வு அபரிதமே ...அட்டகாசம் சார்
ReplyDeleteதடை பல தகர்த்தெழு :-
ReplyDeleteஎதுவுமே இருக்குற இடத்துல இருந்தாத்தான் மரியாதைன்னு பெரியவங்க சொல்வாங்க.! அப்படி இல்லாமப்போனா என்னென்ன கூத்து நடக்கும்னு இந்த கதையை படித்தால் தெரிந்து (சிரித்து) கொள்ளமுடியும்.!
வேலைன்னா வீசை என்ன விலைன்னு கேக்குற நம்ம ரின்டின் கேன் அகஸ்மாத்தா ஒரு ஆபீசர்கிட்ட முறைச்சிகிடுறதாலே பணியிடமாற்றம் (அதானுங்க ட்ரான்ஸ்பர்) பெற்று, ஜெயிலை ஜெயிலாவே வெச்சிருக்கிற ஒரு கெடுபிடியான அதிகாரியிடம் போய் சேர்ந்திடுது. அதே நேரத்துல ரின்டின்னோட இடத்துக்கு உண்மையிலேயே கெட்டிக்காரத்தனமான ஒரு நாய் வந்து சேருது.!
புதுசா வந்து சேர்ந்த டெர்ரர் நாயிடம் ( பேரும் டெர்ரர்தான் ) இங்கிருக்கும் ஆபீசர்கள் மாட்டிக்கொண்டு முழிக்க, அங்கேயோ ரின்டின்னோட அலப்பறைகளால் நொந்துபோகும் ஸ்ட்ரிட் ஆபீசர்கள் தலையலடித்துக்கொண்டு தவிக்க, ஒரு கலகலப்பான காமெடிக் கொண்டாட்டம் அரங்கேறுகிறது. .!
ரின்டின்னும் டெர்ரரும் மீண்டும் எவ்வாறு தத்தம் இடங்களுக்கே போய் சேருகிறார்கள் என்பதை கிச்சுகிச்சு மூட்டி சொல்லியிருப்பதே மிதிக்கதை..!
தடைபல தகர்த்தெழு - தடையின்றி சிரித்திடு
சாா்,
Deleteகதைச் சுருக்கம் சூப்பருங்க.
கதை விமா்சனம் எங்கேங்க???
அண்டர்டேக்கர் :-
ReplyDeleteநம்ம ஊருல கால்நூற்றாண்டுக்கும் மேலா ஃபேமஸான டயலாக் ஒண்ணு உண்டு..
"நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா? " அப்படீன்னு..!
அந்த கேள்வி ஜோனாஸ் க்ரோங்குற அண்டர்டேக்கருக்கு கனகச்சிதமா பொருந்திவருது. கையில் பணமின்றித் தவிக்கும் ஏழைக் குடும்பமொன்றின் சவஅடக்கத்திற்கு ஒரேயொரு சுக்காரொட்டி மட்டும் வாங்கித்தந்தால் போதுமென்று சொல்லுமிடத்தில் அடடே பய ரொம்ப நல்லவன் போலிருக்கேன்னு நினைக்கத்தோணுச்சு.
புதையலை சுலபமாக அடைய வழியிருந்தும் ஒப்பந்தத்தை மீறாமல் ரோஸ் மற்றும் லின்னுடன் கடமையைச்செய்ய கிளம்பறச்சே.. அடடா என்ன ஒரு நேர்மையான மனுசன்னு நினைக்கத்தோணுச்சு.... இப்படியே போய்ட்டு இருக்கையிலே திடீர்னு ஷெரீப் வந்து இவனொரு கிரிமினல், 32 கொலைகளுக்காக தேடப்பட்டு வரும் குற்றவாளின்னு சொல்லி போஸ்டரை காட்டறச்சே, அடப்பாவி அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீன்னு கேக்கத் தோணுச்சு.. என்ன திமிரு இருந்தா என் முன்னாடி துப்பாக்கிய நீட்டுவேன்னு சொல்லி பெண் என்றும் பாராமல் லின்னை அடிக்கப் பாயும்போது , அடப்பாவி இரக்கமேயில்லாத கிராதகனா நீன்னு கேக்கத் தோணுச்சு. . .!
விரட்டி வரும் கிராம மக்களை அனுபவித்து கொல்லும் இடங்களில் எல்லாம் அடேய்! மனசாட்சியே இல்லாத கொடூரமிருகமா நீன்னு கேக்கத்தோணுச்சு..!
அண்டர்டேக்கருக்கு இணையாக முரண்பாடுகளை கொண்டதொரு கேரக்டர் அந்த ரோஸ் புள்ள.! அடுத்த சீன்ல இப்படி முடிவெடுக்கும்னு பாத்தா, அது ஆப்போசிட்டா பண்ணுது.! அந்த சைனா ஆன்ட்டி லின்னும் அதே மாதிரிதான். அதுவும் அந்த பிணைக்கைதி சஸ்பென்ஸை உடைக்கும்போது லின் ஆன்ட்டி என்னா கெத்து செம்ம செம்ம..!!
இப்படி கதைமுழுக்க நம் யூகத்திற்கு ஏற்றமாதிரி எதுவுமே நடக்காமல் முற்றிலும் புதுமையானதொரு இலக்கணத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறது இந்த பிணத்தோடு ஒரு பயணம்.
கலரிங் பாணியில் ஒரு இனம்புரியா வசீகரம் இருக்கிறது. சித்திரங்கள் பல இடங்களில் கேரக்டர்களின் உணர்ச்சிகளை அட்டகாசமாய் வெளிப்படுத்துகின்றன.
கிராம மக்கள்
தங்கத்தை பின்தொடர்ந்து போய் கைப்பற்றினாலும், அனுபவிக்க முடியாமல் வாழ்க்கையே முடிந்துவிடுகிறது.
இது மிகப்பெரிய வாழ்க்கைத்தத்துவம் அல்லவா? காலம் முழுதும் பணத்தைத்தேடியே ஓடிக்கொண்டிருந்தால் பணத்தை சேர்த்து முடிக்கும்போது வாழ்க்கை மிச்சமிருக்காது என்பதை இக்கதையின் கருத்து சொல்லாமல் சொன்னதாக எனக்குத் தோன்றுகிறது..!
சந்தா Eயின் இரண்டாவது கதையும் சென்சூரி அடித்திருக்கிறது என்றால் மிகையாகாது. .!
எலே அண்டர்டேக்கரு.!
நீ செயிச்சுட்டலே செயிச்சுட்ட..!
சூப்பர்!கலக்கலான விமர்சனங்கள்!!.
DeleteKid ஆர்டின் கண்ணன்,
Deleteஅண்டர்டேக்கர் விமர்சனம் செய்ய ஆவலாய் இருந்தேன். கடந்த வெள்ளிக்கிழமைதான் புக்கை வாங்கினேன். Sunday-ள் 3 முறை படித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் புதிதாய் படிப்பதாகவே இருக்கிறது. இது எப்படி.அதை விமர்சனம் செய்ய நினைத்தால்,அதன் ஒவ்வொரு பக்கத்தையும் நான் நோக்க வேண்டி உள்ளது. அப்படி ஒரு பிரமிக்கதக்க நாவல். It's totally amazing. I can't judge.
டெக்ஸ் & கேப்டன் டைகர் தாண்டி மாபெரும் Heroவை நான் காண்கிறேன். இதை நான் சொல்கிறேன் என்றால், அன்டர்டேக்கர் குறித்து விமர்சனம் செய்ய 20 பக்கத்திற்கு நோட்ஸ் எடுத்து வைத்திருந்தேன். ஏனெனில் அந் நாவலில் அத்தனை விசயங்கள் உள்ளன. It's totally amazing. I have to give thank to எடிட்டர்,one who did very பெப்பைக்ட் on his responsibility.
/// CID ஜான் மாஸ்டரை சிலாகித்து எழுதியிருந்த வாசகர் D .சோமசுந்தரம் - ரூ.25 பரிசை தட்டிச் சென்றிருந்தார் ! நமது சாத்தான்ஜியா அது ?? ///
ReplyDeleteஅது நானில்லை சார்.அந்த பரிசை நான் வாங்கியிருந்தால் இந்நேரம் ஊர் உலகம் பூரா டமாரம் அடிக்காத குறையாக அலப்பறை செய்திருப்பேன் :)))
வணக்கம் சோமசுந்தரம் சார்.
Deleteபழகுவதற்க்கு இனிமையானவராய் தென்படுகிறீர்.
புனித சாத்தான் என்ற பெயர் உங்களுக்கு அந்நியமாகப்படுவதாக என் மனதுக்கு படுகிறது.
அதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதோ?
///புனித சாத்தான் என்ற பெயர் உங்களுக்கு அந்நியமாகப்படுவதாக என் மனதுக்கு படுகிறது.///
Deleteஹாஹாஹா..!!
அவருக்கு இன்னும் சகுணி, பயங்கரப்பிசாசு, மோடி மஸ்தான் என பல பெயர்கள் உண்டு..!
கோவிந்தராஜ் சார் ,சோமசுந்தரம் என்ற ஒரிஜினல் பெயரில் ரூ.25 பரிசை வாங்கியவர் யார் என்றே தெரியவில்லை.அந்த பெயரின் ராசி அப்படி.இதே அவர் ஏதேனும் புனை பெயரில் வாங்கியிருந்தால் பலருக்கும் அவரை தெரிந்திருக்குமோ என்னவோ :))) just for joke !
Deleteமற்றபடி saint satan என்ற பெயரை முதலில் password ஆக மட்டுமே பயன்படுத்த நினைத்தேன்.ஆனால் அதில் ( வழக்கம்போல ) சின்ன குளறுபடி ஆகிவிட்டது . google account கிரியேட் செய்தபோது பெயருக்கு பதிலாக ஞாபக மறதியாக password ஐ டைப்பிவிட்டேன் :)))
சோமசுந்தரம் சார் அவர்களுக்கு,
DeleteSaint satan என்ற பெயரை மாற்றுவீர்களா.அது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறது. என் வேண்டுகோளை ஏற்பீர்களா.
///ஒரே மாதத்தில் மூன்று பெண்புலிகளும் களமிறங்குவதுமே ஒரு சந்தோஷ coincidence !! So ஆற்றலில் யார் டாப் ? என்ற கேள்வியை ஜூலைக்கான பட்டிமன்றமாய் வைத்துக் கொள்ளலாம் தான் ! Maybe இப்போதைக்கு "கண்ணுக்குக் குளிர்ச்சியில் யார் டாப் ?" என்ற மகா ரோசனைக்குள் மூழ்கிட முனையலாமோ ? ///
ReplyDelete"ஆற்றலில் யார் டாப் ?" என்ற ஜூலைக்கான பட்டிமன்றத்தில் போட்டியிடப்போவது கண்டிப்பாக ஜூலியாவும், LADY S-சும் தான். ஆனால், கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரிவது LADY S மட்டுமே. Background'ல் தெரியும் அந்த முகத்தை மட்டும் பெரிதாக ஒரு பேனர் தயாரித்து புத்தக விழா ஸ்டாலில் வைத்துவிடுங்கள். புதிதாக இளம் வாசகர்கள் கிடைப்பார்கள்.
//யுவதிகளை கவர்ந்திழுக்கும் காந்த கண்ணழகன்//
ReplyDeleteநான் மட்டும் பெண்ணாக இருந்தால் ட்யுராங்கோவை லவ் பண்ணியிருப்பேன்.
ரௌத்திரம் பழகு டைட்டில் பக்கத்தில் உள்ள படம் கிடைக்கும்ங்லா எடிட்டா் சாா்.
எனது கடந்த வாரப் பதிவிலிருந்து
Delete////ட்யுரங்கோவின் முதல் பக்க போஸ் பிரம்மாதம்.
பெரியபிரேம் போட்டு வீட்டுல மாட்டலாம்.
அந்தப் பாா்வையே ஆயிரம் கதை சொல்கிறது. அந்த மனிதனுடைய கேரக்டரை இந்த ஒரு படமே விளக்கிவிடுகிறது. என்னவொரு அழுத்தம். என்னவொரு தீட்சண்யம்.////
////சித்திரங்கள் ஒரு படி மேலே கதையை விடவும்!தரம் என்று சொன்னால் இவர் ஒரு தனி ஜாதி தான். இந்த அழுத்தக்கார நாயகரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அடுத்த முறையும் இது போல நான்கு ஆல்பம் ஒரே புத்தகம்... ////
ReplyDeleteநான் சொல்ல நினைத்ததெல்லாம் இவா் சொல்லி விட்டாா்.
NEXT வெளியீடு 4 ஆல்பம் ஒரே புக் OK வா எடிட்டா் சாா். Please!!!
///NEXT வெளியீடு 4 ஆல்பம் ஒரே புக் OK வா எடிட்டா் சாா். Please!!!///
Deleteஅது எப்பவோ முடிவான விசயம் மிதுன் சார்.!
நம்ம சைடு தீர்ப்பான பஞ்சாயத்துக்கே போராட்டம் பண்ணுவிங்க போலிருக்கே..!! :-)
அப்புடியா?
Delete4 வாரம் முன்னாடி இங்கே வந்தவனுக்கு, 4 மாசம் முன் நடந்த விஷயம் எப்புடிங்க தொியும்?
எதுக்கும் பழைய பதிவுகளை எல்லாம் ஒரு நாள் லீவ் போட்டு படிக்கணும்னு நெனைக்கறேன்
ஆசிரியர் அவர்களுக்கு;
ReplyDeleteSuper 6 சந்தாவில்,டிராகன் நகரில் வாசகர்களுடைய புகைப்படம் அச்சிட்டு தருவதாக கூறியிருந்தீர்கள்.அதற்கு செல்பி எடுத்து email செய்ய வேண்டுமா?.என்னுடைய புகைப்படத்திற்கு பதிலாக என்னுயிரினும் மேலான எங்களுடைய இதய தெய்வத்தின் புகைப்படத்தை அச்சிட்டு தருவீர்களா ஐயா!ஒரு சகோதரனா கண்ணீர் துளிகளோடு உங்களிடம் இறைஞ்சுகின்.
இதய தெய்வம்.... உங்களுடைய தாயார் புகைபடமா?...
DeletePlease send the photos Sri Ram. I understood that he wants to print the subscribers photos, it can be anyone from your family.
Deleteசிலந்தியின் வலையில் :-
ReplyDeleteரிப்போர்ட்டர் ஜானி கதைகளுக்கும், அந்த சித்திரங்களுக்கும் எப்போதுமே நான் ஆறு றெக்கை கொண்ட விசிறி. அதுவும் கலரில் வெளிவரத் தொடங்கியபிறகு கேட்கவே வேண்டாம். .!
முதல் பக்கத்திலிருந்தே தொடங்கும் மர்மம் 46ஆம் பக்கம் வரை கணிக்கவே முடியாதபடி விறுவிறுப்பாக பயணித்து, கடைசி இரண்டு பக்கங்களில் அனைத்துக்கும் தெளிவான பதிலளிக்கிறது.
இம்முறை ஜானியே பலிகடாவாக்கப்பட்டு அவரைச் சுற்றியே வலை பின்னப்பட, மனிதர் அதிலிருந்து எப்படி தப்புகிறார் என்பதை அழகான சித்திரங்களுடனும் சுவாரஸ்யமான நடையுடனும் சொல்லியிருக்கிறார் கதாசிரியர்.
நிறைவானதொரு ஜானி சாகசம்..!
KOK +1
Deleteகூடவே,
சவாலான குழப்பமுடிச்சுகளைக் கொண்ட கதையை திறம்பட மொழிபெயர்த்திருக்கும் நண்பர் ஆதி(?). மொழிபெயர்த்தது எடிட்டரா அல்லது வேறு யாரேனுமா என்று இனங்காண முடியாத அளவுக்குச் செய்திருப்பதற்கே எழுந்து நின்று கைதட்டலாம்! வெல்டன் ஆதி!
குழப்ப முடிச்சுகள் அவிழ்க்கப்படும் கடைசிப் பக்கங்களில், குற்றங்களுக்கான பின்னணி பற்றி ஆழமில்லாமல் சொல்லப்பட்டிருப்பது கொஞ்சம் சப்பென்று முடிந்த உணர்வைத் தருகிறது. மற்றபடி செம்ம்ம!
அச்சச்சோ!!!
Deleteஆதியை மறந்ததற்கு அடியேனை ஆதி சமிக்கணும். .!
///
சவாலான குழப்பமுடிச்சுகளைக் கொண்ட கதையை திறம்பட மொழிபெயர்த்திருக்கும் நண்பர் ஆதி(?). மொழிபெயர்த்தது எடிட்டரா அல்லது வேறு யாரேனுமா என்று இனங்காண முடியாத அளவுக்குச் செய்திருப்பதற்கே எழுந்து நின்று கைதட்டலாம்! வெல்டன் ஆதி! ///
அதே.. அதே. .!!
///கடைசிப் பக்கங்களில், குற்றங்களுக்கான பின்னணி பற்றி ஆழமில்லாமல் சொல்லப்பட்டிருப்பது கொஞ்சம் சப்பென்று முடிந்த உணர்வைத் தருகிறது. ///
Deleteஆமாம்..! ஒரே வசனத்திலேயே சூத்ரதாரி யாரென்று விளக்கிவிட்டு, அப்படியே விட்டிருக்கிறார்கள். ஒருவேளை பார்ட் 2 The conclusion எழுதும் ப்ளான் இருக்கிறதோ என்னவோ??
புதையல் பெட்டியை கைப்பறியாச்சு . நன்றிகள் எடிட்டர் சார் . ஆண்டு மலர் கதம்ப இதழாக வருவது , நீண்ட காலம் நினைவினில் நிலைத்து நிட்கும் என்பது , எனது தாழ்மையான கருத்து . ஆரம்ப கால இதழ்கள் எமது மனதை விட்டு அகலாமல் இருப்பது அது ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன் . லயனின் முதல் ஆண்டு மலர் என்னிடம் இல்லை சார். அதனை நான் இன்னும் படிக்கும் பாக்கியம் வரவில்லை .
ReplyDeleteLady S னுடைய அட்டை படமும் உட்பக்க preview உம் எதிர் பார்ப்பை தூண்டி விடுவது போல் உள்ளன .
ReplyDeleteஅண்டர்டேக்கர்: ஒரு சவ ஊர்வலப் படலம்:
ReplyDeleteஆரம்பமே அட்டகாசம். அனோகி சிடி நகரின் செல்வந்தரான சுரங்க முதலாளி கஸ்கோ, தன் ஒரு கால் இல்லாததாலும் மற்றும் தன் உடலின் அவஸ்தைகளாலும், வெறுப்புற்று தான் இறந்துவிட்டதாக வெட்டியானுக்கு அழைப்பு விடுக்கிறார். அதன் பெயரில் அங்கு செல்லும் அன்டர்டேக்கர் அங்கு கஸ்கோ உயிருடன் இருப்பதைக்கண்டு திகைக்கிறார். அதற்கு, கஸ்கோ இனிமேல் தான் தன் உயிரை மாய்த்து கொள்வதாகவும், அதன் பின் நடக்கும் சவ சடங்குகளுக்கு அண்டர்டேக்கருடன் ஒரு பேரம் பேசி முடிக்கிறார். அன்றிரவு, தான் சேகரித்த தங்கக்கட்டிகளை கேக்குடன் சேர்த்து விழுங்கிவிட்டு உயிரை விடுகிறார். அதற்கு முன், தன் பணிப் பெண் பிரைரியிடம் தன் உயிலை ஒப்படைத்து, தன் மரணத்திற்கு அப்புறம், தன்னை, தான் முதன் முதலாக தங்கத்தை கண்டெடுத்த ரெட் சான்ஸ் சிட்டியில் அடக்கம் செய்ய வேண்டுமென்றும், மூன்று நாட்களுக்குள் அதை செய்ய தவறினால், பெயர் குறிப்பிடாத பிணைக்கைதியை செவ்விந்தியன் கொன்று விடுவான் என்று தன் உயில் மூலம் அறிவிக்கிறார். பின்பு, அன்டர்டேக்கர் உதவியுடன், பிரைரி மற்றும் மற்றொரு சீன பணிப் பெண்ணுடன் ரெட் சான்ஸ் நகருக்கு கஸ்கோவின் டெட் பாடியோடு கிளம்புகிறார்கள். இவர்கள், ரெட் சான்ஸ் நகரை அடைந்தார்களா...? கஸ்கோவை அடக்கம் செய்தார்களா...? இவர்களை பின்தொடர்ந்து வரும் ஊரின் ஒரு கும்பலை சமாளித்தார்களா...? அவர்கள் இவர்களை தொடர்வதின் காரணமென்ன...? போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாக பதிலளிக்கிறது.
இரண்டு முறை வாசித்தும் இந்த க்ளைமாக்ஸ் மட்டும் என் மண்டைக்கு ஏறவில்லை.
அன்டர்டேக்கர் ரெட் சான்ஸ் நகரில் லிஃப்ட்டில் ஏறி மேலே போவதுவரை ஓகே. அதற்கப்புறம், நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே எனக்கு சரியாக புரியவில்லை.
1. லிஃப்ட்டில் பின் தொடர்ந்து வரும் ஒரு கும்பல், மேலே ஏறி வந்ததும் அங்கிருப்பவைகளை பார்த்து திகைக்கின்றனர். அவைகள் என்ன பொருள்கள்..?
2. மூன்று நாட்களில் ரெட் சான்ஸ் நகரை அடையாவிட்டால், பிணைக்கைதி கொல்லப்படுவார் என்று கஸ்கோ சொல்வது, சும்மா பீலாவா?
3. பிரைரியை சஸ்பென்சாக பிணைக்கைதி என்று சொல்லக் காரணமென்ன..?
4. பிணைக்கைதியை ஒரு செவ்விந்தியன் கொல்வான் என்றால், கிளைமாக்ஸ்சில் அவன் வராதது ஏன்?
5.அன்டர்டேக்கர் சவப்பெட்டியை மேலிருந்து கீழே இறக்கியவுடன், அதில் கஸ்கோ இல்லாமல் வேறொருவன் இருப்பது எப்படி..? அவன் சவைப்பெட்டியில் வந்ததன் மாயம் என்ன..? அப்படி அந்த சவப்பெட்டியில் இருப்பவன் யார்...?
போன்ற சந்தேகங்கள் எழுவதைப் பார்த்தால், ஒரு அஃக்மார்க் கிராபிக் நாவலுக்கு உண்டான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
கஸ்கோ தான் சேமித்த ஐஸ் க்யூப் அளவில் உள்ள ஒரு 40 - 50 தங்கக் கட்டிகளை கேக்வுடன் சேர்த்து சும்மா லபக், லபகென்று விழுங்குவது சாத்தியாமாவென்று சொல்லத் தெரியவில்லை. அதைப்போல், அண்டர்டேக்கர் ஒரு கிரிமினல் என்று சொல்லப்பட்டாலும், எப்படி கிரிமினல் ஆனார் என்பதற்கான காரணம் சொல்லப்படவில்லை, அதைப்போல், க்ரிமினல் ஏன் வெட்டியான் ஆனார் என்பதற்கும் காரணம் சொல்லப்படவில்லை. இவையாவும் வரவிருக்கும் அடுத்த ஆல்பங்களில் சொல்லப்படும் என்பதால், எதிர்பார்ப்புகள் எகிறி நிற்கின்றன.
கதாசிரியர் சேவியர் டோரிசன் & ஓவியர் ரால்ஃப் மேயர் நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்கள்தான் என்றாலும், இக்கதையில் அரங்கேறும் வன்முறையும், அடாவடியும் ஒரு படி மேலே. இடதுக்கைக் பழக்கமுள்ள ஓவியர் ரால்ஃப் மேயர், இக்கதை சித்திரத்தில் அதகளப்படுத்தியுள்ளார். வன்மேற்கின் வானுர்ந்த பாறைகளாகட்டும், ஒரு மலையிலிருந்து மற்றொரு மலையை இணைக்கும் தொங்கும் மரப்பாலங்களாகட்டும் அட்டகாச ரகம்.
அதிலும், கஸ்கோ தன்னைத்தானே அழித்துக்கொண்டு மல்லாக்க விழுந்து கிடக்கும்போது, top angle ஷாட்டில் அவர் முகத்தில் மட்டும் கண்ணாடிக்கதவின் வழியாக படரும் வெளிச்சம் சிம்ப்ளி சூப்பர்.
அதைப்போல இக்கதையில் வரும் வெட்டியான் அன்டர்டேக்கரின் காஸ்ட்யூமைப் பார்த்தால் அசந்து போவீர்கள். வெட்டியானா, லுங்கி கட்டிக்கிட்டு, தோளில் துண்டப்போட்டுகிட்டு, தலையில முண்டாசு கட்டிக்கு, இருப்பேன்னு நினைச்சிங்களா...? அன்டர்டேக்கர் டா,,,,,! என சொல்லும் அசத்தல் ரகம். உனக்கு ஏனிந்த உடை என்று ஷெரிப் அண்டர்டேக்கரிடம் கேட்கும் போது, அதற்கு அன்டர்டேக்கரின் பதில் awesome.
இக்கதையின் மொழிபெயர்ப்பு நிறைய இடங்களில் ரசிக்க முடிந்தது.. இக்கதைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு இடத்திலும் நச்சென்று நிறைவாக அமைந்துள்ளது.
இதன் மூன்றாம் பாகம் கடந்த ஜனவரியில் தான் ரிலீஸ் ஆகியது. அடுத்தாண்டு நான்காம் பாகம் வந்தவுடன், இதைப்போல் அடுத்தாண்டு டபுள் ஆல்பமாக நமக்காக வெளிவருமென்று நம்பலாம்.
மொத்தத்தில் அண்டர்டேக்கர் ஒரு smash ஹிட்.
அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்!
Delete@ MH மெய்தீன்
Deleteவழக்கம்போல் அட்டகாசமான விமர்சனம் எழுதியுள்ளிர்கள்...அதற்கு என் பாராட்டுகள்.! உங்களின் அத்தனை சந்தேகங்களும் விடை சொல்ல முயல்கிறேன்..!
மொய்தீன் சார்...
Deleteசெம்ம!!
///உங்களின் அத்தனை சந்தேகங்களும் விடை சொல்ல முயல்கிறேன்..///
Deleteஉண்மையான கி.நா இனிதான் ஆரம்பம்! :D ;)
எனக்கு உங்களுடைய கேள்விகளுக்கெல்லாம் பதில் போட விருப்பம் உள்ளது. அதற்கு அந்த கதையை நான் இரண்டாம் முறை படிக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த புத்தகத்தை என் தம்பி ஊருக்கு கொண்டுபோய்விட்டதால், 2 வாரங்கள் கழித்துதான் புத்தகம் என்னிடம் வரும். ஆனால், உங்களுடைய 5-ஆவது கேள்விக்கு பதில் சொல்கிறேன். அந்த கேள்வி:
Delete/// 5.அன்டர்டேக்கர் சவப்பெட்டியை மேலிருந்து கீழே இறக்கியவுடன், அதில் கஸ்கோ இல்லாமல் வேறொருவன் இருப்பது எப்படி..? அவன் சவைப்பெட்டியில் வந்ததன் மாயம் என்ன..? அப்படி அந்த சவப்பெட்டியில் இருப்பவன் யார்...? ///
மேலே அண்டர்டேக்கர் கஸ்கோவின் ஆடைகளை இரண்டு பெண்களுக்கும் அணிவித்து அவர்களை பெட்டியில் அடைத்து கீழே அனுப்பிவிடுகிறான். கீழே வந்த சவப்பெட்டியை திறக்கும் பொருப்பை மாக்கெல்லன் 2 பேரிடம் ஒப்படைத்துவிட்டு மேலே செல்கிறான். அந்த இரண்டு பேரும் பெட்டியை திறந்ததும் பெட்டியில் இருந்த 2 பெண்களும் அவர்களை கொன்று ஒருவனின் உடலை பெட்டியில் தள்ளிவிடுகிறார்கள். அந்த 2 பேரில் ஒருவன்தான் பெட்டியில் இருப்பது.
இந்த அண்டர்டேக்கர் கதை என்னை ரொம்பவே Impress செய்துவிட்டது. புக்கு வந்து இந்த 10 நாளில் ஒரு 4 - 5 தடவை புரட்ட வைத்துவிட்டது. சமீபத்தில் வேறு எந்த இதழுக்கும் நான் இந்தளவு கேர் பண்ணல. இந்தப் பக்கம் டெக்ஸ் கண்ணு காட்றாப்ல, அந்த பக்கம் ஜானி கையைப் பிடித்து இழுக்குறாப்ல, ம்ம்ஹூம், நானா அசருவேன். அண்டர்டேக்கரை கெட்டியா பிடிச்சிண்டு இருக்கேன்!. பார்ப்போமே, இந்த கூத்து இன்னும் எத்தனை நாளென்று.?
Delete@ ஜெகத்குமார் - தங்கள் பதிலுக்கு நன்றி..
@ PFB : / ஈ .வி : நன்றி
@ மாயாவி சிவா : டீ இன்னும் வரல?!!!
@ ஜெகத் குமார்
Deleteஉண்மையில் சரியான பதில்...புத்தகம் கையில் இல்லாமலேயே பதில் சொல்ல ஒரு தனிதிறமை வேண்டும்.! என் பாராட்டுகள்..!ஆனால் எத்தனை பேருக்கு இது புரியும் என்பதே கேள்வி.! :P
@ MH மொய்தீன்
உங்கள் கேள்விகள் எல்லாமே எல்லாரும் தோன்றுபவை அல்ல.அத்தனையும் அட்டகாசமான கேள்விகள்....இதற்கு பதில்களை ஒருதனி பதிவாகவே போடலாம். காரணம் இந்த கதையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நான் பார்கிறேன்.!
பதிவின் டிரைலர் பார்க்க... இங்கே'கிளிக்'
சாரி சார்! இரண்டு பெண்களுக்குமே அல்ல.! இரண்டு பெண்களில் யாரோ ஒருவர் கஸ்கோவின் சடலத்தில் இருந்த ஆடைகளை அணிந்திருப்பார்கள். அது யார் என்று பார்க்க புத்தகம் தற்போது என்னிடம் இல்லை. நீங்களே பாருங்களேன்!!
Delete@ ஜெகத்குமார் :
Deleteகஸ்கோவின் ஆடை இரண்டு பெண்களுக்குமா ...? பலே, ஹா ஹா ஹா ! ஒரு கஃபின்ல 2 பேர் ஷேர் பண்றதுக்கு இடமிருக்குமா..? அந்த சீனப் பொண்ணு வேற கொஞ்சம் பூசினாப்ல இருக்கே ?
/// கஸ்கோ தான் சேமித்த ஐஸ் க்யூப் அளவில் உள்ள ஒரு 40 - 50 தங்கக் கட்டிகளை கேக்வுடன் சேர்த்து சும்மா லபக், லபகென்று விழுங்குவது சாத்தியாமாவென்று சொல்லத் தெரியவில்லை ///
Deleteஇன்னொறு விஷயத்தை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே மொய்தீன் சார்! மாக்கெல்லன் சுரங்கம் சரியும்போது பாறை இடுக்கில் மாட்டிக்கொண்ட தனது மூன்று விரல்களையும் தன் பற்க்களாலேயே கடித்து தனது கைகளை விடுவித்தான் என்றது சாத்தியமா?
/// ஒரு கஃபின்ல 2 பேர் ஷேர் பண்றதுக்கு இடமிருக்குமா..? ///
Deleteஇரண்டு பேரையும் ஒருக்களிச்சி படுக்க வெச்சா காஃபின்லே இடம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே...
Mayavi siva Sir,
Delete//பதிவின் டிரைலர் பார்க்க... இங்கே'கிளிக்'//
இறுதியில் வென்றது மனமே
ஒரு நுட்பமான விரிவுரையில் ஒரு பகுதி....
Deleteசவப்பெட்டியில் உள்ள காஸ்கோ எந்த உடையில் இருந்தார் என்பது கடைசியில்...அவரின் உடல் எரியூட்டும் போதுதான் காட்டபடுகிறது. அவர் சமீபமாகதான் தனது வலது காலை இழந்தவர். அவர் சவபெட்டியில் அவருடைய முழுகால் கோட்&பேன்ட் போட்டு படுக்கவைக்கப்பட்டார். பார்க்க 99-பக்கம்.
அவரது முழுகால் பேண்ட்டை அந்த சீனாகாரிக்கு போட்டுவிட்டு,அவரது சூவையும் போட்டுவிட்டு....அடியில் பிரைரி படுத்துக்கொள்ள மேலே சீனக்காரி படுத்துகொள்கிறாள். கீழே விழுந்த சவபெட்டியின் மூடி உடைந்து (முன்பே உடைத்தது பார்க்க பக்கம்-89...உடைந்த பகுதி அப்படியே உள்ளதை பார்க்க..பக்கம்-94) ஸூ உடன் கால் தெரிய உள்ளே இருப்பது காஸ்கோ பிணம் என நினைகிறார்கள். கஸ்கோ உடையை போட்டுக்கொண்டுள்ளது சீனாகாரி தான் என்பதை உறுதி செய்ய பார்க்க பக்கம்-100 ல் முதல் படம்.
சவபெட்டி திறக்கும் ஸ்டேன் (பெயர் எப்படி தெரியும் என்கிறீர்களா..? அவன் கழுத்தில் உள்ள சிகப்பு கர்சீப் தான். பார்க்க...பக்கம்-97 ல் நடுபேனல்) நெஞ்சில் கத்தியை குத்தி பிரைரி அவனை வீழ்த்துகிறாள். அது எப்படி பிரைரி தான் குத்தினாள் என சொல்கிறிர்கள்? என்பது தானே உங்கள் கேள்வி...பக்கம்-95 ல் கத்தியை ஆவேசமாக குத்தும் பிரைரியை பாருங்கள் புரிந்துவிடும். மேலும் சீனாக்காரி காயமுற்று இருக்கிறாள்.
இன்னுமொரு உறுதிக்கான இடம் "அழாதே பிரைரி...இதெல்லாம் சகஜம்தான்..!" என்ற வரிகளை பக்கம்-100 முதல் வரிகளை கவனிக்க..!
டைனமைட்களுடன் வரும்லூயிஸ்யும் பிரைரி அவனுடைய துப்பாக்கியாலேயே சுட்டுகொள்கிறாள்.இங்கு அந்த லூயிஸ் என நீங்கள் சொல்பவரும் சிகப்பு கர்சீப் கழுத்தில் கட்டியுள்ளாரே..? ஏன் அது ஸ்டேன் ஆக இருக்க கூடாது? என நீங்கள் கேட்கலாம்...அதற்கும் என்னிடம் பதில் உள்ளது...அது என்ன..? யாரேனும் முயற்சிக்கலாம்...! :P
@ பாலா
Deleteதர்மத்தை வாழ்வுதன்னை சூது கவ்வும்...மறுபடியும் தர்மமே வெல்லும் என்பது சின்ன வரிகள்.! ஆனால் அதன் பின்னால் உள்ள மகாபாரதம் மிகபெரிது...பொறுத்திருந்து பதிவை பாருங்களேன்..! [கண்ணடிக்கும் ரின்டின் கேன் படம் மூன்று]
அடேங்கப்பா "மாயாஜீ"...:-)
Deleteஅட டே...மொய்தீன் ஜீ...:-)
Deleteஎனது மின்னஞ்சலுக்கு தனியே வந்த இங்கே முகம் காட்ட விரும்பாத ஒரு நண்பரின் கடிதம்...
ReplyDelete"I don't always like the easy life," he said.
"That's why I took a risk and I'm very happy. It
was the right decision"- கால்பந்து உலகில் இந்தாண்டின் சிறந்த கருத்துக்களில் ஒன்று.
ஆகா சூப்பர், தூள், பிரமாதம்னு போட்டா அவுங்க மிகப்பெரிய காமிக்ஸ் ரசிகர்?
அது நொல்ல இது நொல்லனா அவிங்க கெட்டப் பசங்க...!!!
எதையும் சொல்லாமல் நல்ல பேர் வாங்கி மிகப்பெரிய ரசிகர்கள் என்ற லிஸ்ட்ல இருப்பதை விட உள்ளதை சொல்லி,
கெட்டப் பையனாகவே இருந்துடலாம்.
இந்த விசயத்தில் நீங்கள்
சொன்ன முறை தவறாக இருக்கலாம். ஆனால் கருத்தில்???
"ஒரு முடியா இரவு"- போன்ற கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும் என சொல்ல முடியாதல்லவா!!!
உடனே அதை வாங்காமல் தவிர்த்து விடலாமே என்ற கல்லை எறிய கூடாது. எதையும் தாங்கும் எடிட்டர் அவர்களிடமிருந்து இந்த வார்த்தைகளை துளியும் நான் எதிர்பார்க்கவில்லை நண்பரே!
உங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள எதிர்ப்பு என்ற தனிமனித தாக்குதல், கருத்து சுதந்திரத்திற்கு இந்த தளத்தில் உள்ள அச்சுருத்தலை மீண்டும் ஒருமுறை தெள்ளத் தெளிவாக நிரூபிக்கிறது.
"கருத்துக்கு மாற்றுக் கருத்து"
என்பதை சகிக்க இயலா கூக்குரல்களை, எடிட்டர்
வேடிக்கை பார்ப்பது அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அல்லவா அமையும். மாற்றுக் கருத்து கொண்டிருப்போர் இதை நினைத்து வேதனைப்படுவதை தாண்டி வேறு என்ன செய்ய இயலும். ஆரோக்கியமான விவாதம் என்பதை இந்த தளத்தை விட்டு விலக்கி வைக்குமல்லவா???.
ஏற்கெனவே மாற்றுக் கருத்து கொண்டோர் பலர் ஒதுங்கிய நிலையை தான் எடிட்டரும் மௌனமாக ரசிக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு இப்பொழுது எழுகிறது...ஹூம்...
SV VENKATESHH : சார்...அவரவர் பார்வையில் அவரவரது கருத்துக்களில் ஒருநாளும் பிழை இருப்பதில்லை ! அதற்கு நானும் விதிவிலக்கல்ல ; நீங்களும் விதிவிலக்கல்ல ; உங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ள நண்பரும் விதிவிலக்கல்ல !
DeleteSo - இங்கு கண்டனத்தை ஈட்டியது உங்களின் "கழிப்பறை" உவமையே அன்றி - உங்கள் கருத்தல்ல என்பதை நான் லவுட் ஸ்பீக்கர் போட்டுக் கூப்பாடு போட்டாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை ! அப்படியிருக்கையில் தங்கள் நண்பரின் "தனிமனித தாக்குதல், கருத்து சுதந்திரத்திற்கு இந்த தளத்தில் உள்ள அச்சுருத்தல்" என்ற சமாச்சாரங்களுக்கெல்லாம் விளக்கம் சொல்ல நான் புறப்படுவது வியர்த்தமாகவே இருக்குமென்பது நிச்சயம் !
அது மாத்திரமின்றி, இங்கு பதிவிடப் பிரியம் கொள்ளாது உங்களுக்கே உங்களுக்கென அவர் மின்னஞ்சல் செய்துள்ள நிலையில் அதனை இங்கே பகிர எண்ணுவதன் லாஜிக்கும் புரியாப் புதிரே எனக்கு !
ஐயா, கதையைப் பற்றிய விமா்சனம் இருந்தால் சொல்லுங்கள்.
Deleteநோ்த்தியான வாா்த்தைகளோடு!!
இது வெங்கடேஷ் சாருக்கு அல்ல...அவருக்கு தனது கருத்தை அனுப்பிய நண்பருக்கு..,
Deleteநண்பரே...இங்கு இதழ்களை பாராட்டி மட்டும் எழுதி நாங்கள் மிக ப்பெரிய காமிக்ஸ் ரசிகர் என யாருக்கு காட்ட வேண்டும்...காமிக்ஸ் படிப்பவர் அனைவருமே காமிக்ஸ் ரசிகர் தான்..இதில் பெரிய காமிக்ஸ் ரசிகர் சிறிய காமிக்ஸ் ரசிகர் என எவருமே பிரித்து பார்க்க போவதில்லை...நண்பர் வெங்கடேஷ் அவர்கள் கதை எனக்கு பிடிக்க வில்லை ..இந்த கதை அனைவருக்குமானது அல்ல போன்ற கருத்துக்களை இங்கு யாருமே எதிர்க்க வில்லை..அனைவருமே .நண்பர்களாக புழங்கும் இந்த இடத்தில் அவர் சொன்ன அதே " கவுச்சி நாடை "இங்கு வேண்டாமே என்பதற்கான நண்பர்களின் எதிர்ப்பு குரல் மட்டுமே அது என்பதை தாண்டி அந்த எதிர்ப்பு அவருக்கானது அல்ல. அந்த வாடையான உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டாமல் இருந்தாலோ அல்லது வேறொரு நல்ல உவமையை காட்டி விமர்சித்து இருந்தாலோ அவரின் கமெண்டை அனைவருமே தாண்டி சென்று இருப்பர்...
பாராட்டு பத்திரம் வாசித்து நண்பர்கள் மிக பெரிய காமிக்ஸ்ரசிகர்கள் என்ற பெயர் பெறுவதால் அந்த நண்பர்களுக்கு இலவசமாக காமிக்ஸ் கிடைக்க போவதில்லை...இதழை பிடிக்காமல் விமர்சிப்பதால் அவர்களுக்கு கூடுதலாக விலைக்கு காமிக்ஸ் கொடுக்க போவதும் இல்லை..
எனக்கு சாப்பாடு பிடிக்கவே இல்லை ..நல்லாவே இல்லை என சொல்வதற்கும் சோறாடி இது .." ........." ட்டம் இருக்கு என சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு நண்பரே..
ஒரே கருத்து...ஒன்று திருத்துவதற்கு சொல்வது...ஒன்று திட்டுவதற்கு சொல்வது...நமது விமர்சனங்கள் திருத்துவதற்கு இருக்கட்டும் ..திட்டுவதற்கு வேண்டாம் என்பதே இங்கே கூடும் நண்பர்களின் எண்ணம் நண்பரே...அவ்வளவு தான்...
இந்த கருத்து கூட உங்கள் கருத்துகளுக்கான பதிலே தவிர உங்களுக்கானது அல்ல நண்பரே...தாங்களும் அழகாக அவருக்கு பதில் அனுப்பி உள்ளீர்கள்..நிறையோ குறையோ இதே நாகரீக எழுத்தில் தாங்களும் இங்கே தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாருங்களேன் நண்பரே...
வரவேற்க காத்திருக்கிறோம் ...
இங்கே " திருத்துவதற்கு " என்பது கூட தவறான பொருள் தான் படும்...காரணம் சரியான முறையில் சமைத்த உணவு கூட நமக்கு பிடிக்காமல் இருக்கலாம் காரணம் நமது டேஸ்டை பொருத்தது அல்லவா அது....:-)
Delete///So - இங்கு கண்டனத்தை ஈட்டியது உங்களின் "கழிப்பறை" உவமையே அன்றி - உங்கள் கருத்தல்ல என்பதை நான் லவுட் ஸ்பீக்கர் போட்டுக் கூப்பாடு போட்டாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை ! ////
Delete+1
உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்ற நமக்கெல்லாம் ஒரு கழிப்பறை தேவைப்படுவதைப்போல, மனதினுள் தேங்கிக்கிடக்கும் வக்கிரம், கோபம், ஏமாற்றம், பகை, பொறாமை போன்றவற்றை வெளியேற்றவும் ஒரு கழிப்பறை இருந்துவிட்டால் நன்றாகத்தான் இருக்கும்!
///இங்கு கண்டனத்தை ஈட்டியது உங்களின் "கழிப்பறை" உவமையே அன்றி - உங்கள் கருத்தல்ல என்பதை நான் லவுட் ஸ்பீக்கர் போட்டுக் கூப்பாடு போட்டாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை ! அப்படியிருக்கையில் தங்கள் நண்பரின் "தனிமனித தாக்குதல், கருத்து சுதந்திரத்திற்கு இந்த தளத்தில் உள்ள அச்சுருத்தல்" என்ற சமாச்சாரங்களுக்கெல்லாம் விளக்கம் சொல்ல நான் புறப்படுவது வியர்த்தமாகவே இருக்குமென்பது நிச்சயம் ! ///
Delete+101
மாற்றுக்கருத்து என்றால் என்ன அர்த்தம் என்பதையே சிலர் புரிந்துகொள்வதேயில்லை..!
இங்கே தொடர்ந்து உற்சாகமாக பதிவிடும் நண்பர்களை மட்டம்தட்டியும், எடிட்டர் சாரை குறைகூறுவதையுமே மாற்றுக்கருத்து என்று புரிந்துவைத்துள்ளனர். .!!
So. . . . .!!
திரு.S.V.வெங்கடேஷ் சார்
Deleteகதைகளை பற்றி விவாதிக்கத்தானே இத்தளம். உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் சார். எதிர்கருத்து கொண்டவரெல்லாம் எதிரிகள் என நினைப்பவர் இங்கு யாருமில்லை சார். ஆனால் கதை பிடிக்காமல் போன ஒரு காரணத்தைகூட நீங்கள் சொல்லாமல் கழிவறை உதாரணத்துடன் கூறியதுதான் விவாதத்திற்கே வித்திட்டது என்பதை இன்னமும் உணராமல் இருக்கிறீர்களே.அதுதான் வியப்பாக இருக்கிறது!
எரிகிற கொள்ளியில் எண்ணெயை வேறு ஊற்றியிருக்கிறார் ஒரு நண்பர்!
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.
ஒவ்வாமை(அலர்ஜி) காரணமாக மருத்துவரிடம் போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்ன உணவினை சாப்பிட்டால் அலர்ஜி உண்டாகிறது என மருத்துவர் தெரிந்த பின்பு முதலாவதாக அவர் கூறுவது "அலர்ஜியை உண்டாக்கும் அந்த உணவை இனி சாப்பிடாதீர்கள்" என்பதாகத்தானே இருக்கும். மருந்து மாத்திரைகளெல்லாம் அப்புறம் தானே.
நம் எடிட்டரும் அதைத்தானே செய்தார். குறிப்பிட்ட அந்த கதையை படித்தபின் சுகாதாரமற்ற கட்டண கழிப்பறைகளை கடந்து செல்கையில் காது வழியே புகுந்து நாசிவரை வந்து சங்கடப்படுத்திய அனுபவம் ஏற்பட்டதென்று கூறுகிறீர்கள். அதுவும் அந்த சங்கடம் ஒரு நாள் முழுக்க நீடித்தது என கூறுகையில் நமது எடிட்டர் மருத்துவர் கூறுவதுபோல அந்த கதை வரிசையில் இன்னும் வரப்போகும் கதைகளை படித்து சங்கடப்பட வேண்டாம் என்ற எண்ணத்தில்தானே அந்த கதை வரிசைகளை தவிர்த்து விடக்கூறினார். ஆசிரியர் கூறியது தவறானால் மருத்துவர் சொல்வதும் தவறென்று கூற முடியுமா? வேறு என்ன பதிலை எதிர் பார்த்தீர்கள் என தெரியவில்லை!
முகம் தெரியாமல் இங்கு வருகிறோம். அதுவும் குறைவான எண்ணிக்கையில். புத்தக விழா என்று வருமானால் அங்கு நாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமானால் இது போன்ற விவாதங்களால் நம் மனது அந்நியப்பட்டு விடக்கூடாது. எனவே நடந்ததை மறந்துவிடுங்கள். வரவிருக்கும் அடுத்த மாத ஆச்சர்யங்களுக்கு மனதை தயார் படுத்துங்கள்.
உங்களை காயப்படுத்த நினைப்பவர் இங்கு யாருமில்லை என்பதை நினைவூட்டி விடைபெறுகிறேன். நன்றி.
திரு.ATR,
Deleteஅருமையான கருத்துகள்! தெளிவான சிந்தனை!
நன்றி திரு.விஜய்.
Deleteநண்பருக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்க எத்தனைபேர் போராட வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா?
இனியும் நாம் கோடுப்பது அழுத்தமல்ல அரவணைப்புதான் என நண்பர் புரிந்து கொண்டால் சரிதான்.
நாம்" கொடுப்பது" என படிக்கவும்.
Deleteஅன்டர்டேக்கர்:
ReplyDeleteபொதுவாய் எந்த ஓர் இதழும், சிறப்பான விமர்சனத்தை கண்டுவிட்டால் வேறு ஒரு விமர்சனம் தேவையில்லை. ஆனால் இந்த நாவலில் ஒவ்வொரு பக்கத்தும் விமர்சனம் செய்யலாம். நாவலின் ஒவ்வொரு கேரக்டரையும் விமர்சனம் செய்யலாம். இந்த நாவலை பீட் செய்து ஓர் நாவலை வெளியிட ஆசிரியர் பல குட்டிக்கரணம் அடித்தாக வேண்டும். இந்த நாவலை பற்றி வரும் Comments-களை ஓர் இணைப்பு இதழாக வெளியிடலாம்.XIII ஓர் ஆய்வு இதழை வெளியிட சில பத்து சந்தித்தது. ஆனால் அன்டர்டேக்கரோ Just two slot ஏற்படுத்திய மாயஜாலமோ பிரமிக்கதக்கது. பல கேள்விகள் இருந்தாலும் அவைகள் ஒரு பொருட்டாகவே இல்லை அதோடு அது விவாதத்திற்கு நமது சிந்தனைக்கு விருந்து தருவதாக உள்ளது. நமது தானைதலைவர் ஆசிரியருக்கு ஓர் விழா எடுத்து அவரை கௌரவிக்க வேண்டும்.
+1
DeleteShinesmile Foundation : சார்...விழா எடுப்பதாயிருப்பின், அது 8000 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள இரு ஆற்றலாளர்களுக்கே இருந்திட வேண்டும் ! அவர்களது கற்பனையின் குழந்தைக்குப் புதுசாய் சொக்காய் மாட்டி, கடைவீதி பக்கமாய்த் தூக்கி வந்தவன் மட்டும் தானே நான் ?
DeleteUNDERTAKER
Deleteமிரள வைத்த கதாபாத்திரங்களின் படைப்பு
கஸ்கோ: தான் சேர்த்து வைத்த தங்கம் யாருக்கும் கிடைக்க கூடாதென்று அதை விழுங்குவதிலாகட்டும்
லின்: தவறு என்று அறிந்தும் நன்றி கடனுக்காக கஸ்கோ வின் கட்டளைக்கு அடிபணிவதிலாகட்டும்
பிரைரி: கஸ்கோ விடம் பணிபுரிந்த காரணத்தினால் கஸ்கோவிடமிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டுவதற்காக முகம் அறியா பிணைக் கைதிக்காக ஆபத்தான பணியை மேற்கொள்வதிலாகட்டும்
ஜார்ஜ்: தங்கத்தை தேடி தன குடும்ப வறுமைக்கு ஆளானதால் ஊர் மக்களுடன் சேர்ந்து தங்கத்தை மீட்க குடும்ப நலனுக்காக அரைமனதுடன் சென்று அவ்வப்போது இரக்கத்தை காட்டி இக்கட்டில் மாட்டிக்கொள்வதிலாகட்டும்
மாக்கெல்லென்: கஸ்கோவிடம் அடிமையாக இருந்ததற்கு ஊதியமாக கஸ்கோவின் வயிற்றில் இருக்கும் தங்கத்திற்காக இறுதி வரை விரட்டி போவதிலாகட்டும்
அண்டர்டேக்கர்: அணைத்து கதாபாத்திரங்களுக்கும் ஈடு கொடுத்து கடைசி வரை தன்னை முழுமையாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் கதாபாத்திரங்களோடு சேர்த்து நம்மையும் ஒருவிதமான எதிர்பார்ப்புக்கு உள்ளாக்குவதிலாகட்டும்
பிணை கைதி யார் என்ற ரகசியம் உடைவதிலும் அந்த பிணை கைதி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் விதத்திலாகட்டும்
இவ்வாறு ஒவ்வொரு கதாபாத்திரமும் தனி தன்மையுடன் அமைக்கப்பட்டு இருந்த படைப்பாற்றல் கதையை படித்து முடித்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் மனதை விட்டு நீங்க மாறுகின்றன.
கதையை படித்து முடிக்கும் போது அண்டர்டேக்கர் குறித்து நமது மனதில் என்ன தோன்றுமோ அதை பிரைரி மூலமாக சொல்லவைத்து முடித்திருப்பது நச்!
@ Dasu Bala
Deleteஅருமை அருமை!
திரு.Dash Bala sir
Deleteமுதன் முறையாக மிக நீண்ட அருமையான விமர்சனத்தை பதிவுசெய்திருக்கிறீர்களென நினைக்கிறேன்.சூப்பர் சார். இத்தனை நாள் கணக்கு வாத்தியாராக +100, -100 என பதிவு செய்வீர்கள்.
அப்படியில்லாவிட்டால் மணிரத்னம் பட வசனங்களைப் போல சுருக்கமாக முடித்துக் கொள்வீர்கள். முதன் முறையாக இயக்குநர் விசு படங்களைப்போல சற்று நீண்ட விமர்சனம். (விளையாட்டுக்காக சொன்னேன் சார். தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களென நம்புகிறேன்.)அந்த அளவு Undertaker உங்களை பாதித்திருக்கிறாரென தெரிகிறது. சமீப காலத்தில் நமது ஆசிரியரின் அறிமுகங்களில் Undertaker க்குதான் முதலிடம் கிடைக்கும் என நினைக்கிறேன். இப்படி ஒரு மாறுபட்ட கதைவரிசையை அறிமுகம் செய்துவைத்த ஆசிரியருக்கு நன்றி.
Dasu Bala : //கதையை படித்து முடிக்கும் போது அண்டர்டேக்கர் குறித்து நமது மனதில் என்ன தோன்றுமோ அதை பிரைரி மூலமாக சொல்லவைத்து முடித்திருப்பது நச்!//
Deleteபிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் இரு டாப் படைப்பாளிகளின் கூட்டு முயற்சியின் முத்திரை அது சார் !
தடைபல தகா்த்தெழு !!
ReplyDeleteசுவத்துல 'வாழைப் பழம்'னு எழுதியிருந்தாலே அதை 'வாய்யா.. போய்யா..'ன்னு படிக்கற ஆள் நீங்க!
சங்கேக பாஷையை அப்படியே புாிஞ்சுட்டாலும்!
வாக்கிங் கூட்டிட்டுப் போற நேரமாய்யா இது? "தாடி பத்தி எாியுறச்சே லேடிக்கு லிப்ஸ்டிக் வாங்கற கதையால்லே இருக்கு?"
மசாலா நாய் சின்ன பிளேட்டுக்கு வாடிக்கையாளா்கள் ஏலம் கேட்கலாம்!
ஆரம்ப விலை "மாியாதைக்குாிய இரண்டு டாலா்கள்"
விஜயன் சாா்,
இந்தக் கதையிலே வசனத்துக்கும், மொழி மாற்றத்துக்கும் 200 மாா்க்!!!
இந்த கதையில் மட்டுமல்ல விஜயன் சாா்! கார்ட்டூன் வரிசையில் வந்த ஒவ்வொரு கதைகளிலும் மொழி மாற்றத்துக்கும் 200 மாா்க்தான்.!!
Deleteமேதகு திருவாளா் அடுமனை மேலே தயாராக உள்ளாா்..
Delete"ஒரு வார தண்டனை!"
ஹை!
எடிட்டா் சாா் உங்களுக்கு ஒண்ணும் ஆகலியா??
இப்படி குடாக்குத்தனமாக் கேள்வி கேட்பேன்னு தொிஞ்சுதான் முன்கூட்டியே தண்டனையைச் சொல்லி வச்சேன்.
சாா்,
குடாக்குத்தனமாக் கேள்வி கேப்பாங்கன்னு தொிஞ்சேதான் கதை நெடிகிலும் தண்டனையை வாாி வழங்கீட்டீங்களோ!
சங்கேத பாஷை!!!
எல்லாத்தையும் விட ஹைலைட்..!
Deleteசைனாக்காரங்ககிட்ட இருந்து காப்பாத்த மாறுவேசத்துல வர்ர அஸிஸ்டென்ட்டுகிட்ட சொல்லுவாரே..
"சீருடையை சீரழிச்சதுக்கு நாலு வாரம் கடுங்காவல் தண்டனை " ன்னு
அப்போ அஸிஸ்டென்டோட மூஞ்சி போற போக்கு ஹாஹா..!!
பாஸ்வோ்ட்?
Deleteஆண்ட்ரூ ஜாக்சன்..
ஆபிரகாம் லின்கன்..
யுலிசஸ் க்ராண்ட்!
தப்பு!
துப்பாக்கி..
தோட்டா..
பீரங்கிங்கிறதுதான் சாியான பாஸ்வோ்ட்!
மெய்யாலுமே உனக்கு லீவு அவசியம் தான்பா..
ரொம்பவே குழம்பிப் போயிருக்கே!
Mithun Chakravarthi & Friends : ரின்டின் கேன் கதைகளில் ஒரு பெரிய வசதியுண்டு - பேனா பிடிப்போர்க்கு ! ரின்டின்னின் முகபாவங்களையும், கதைச் சூழல்களையுமே பிரதானமாகக் கொண்டே ஒரிஜினலில் நகைச்சுவைக் கோட்டாவைப் பெரும்பாலும் பூர்த்தி செய்திருப்பார்கள். ஆகையால் மொழிமாற்றம் செய்யும் போது. நமக்குத் தோதாய் எதையாவது எழுதிட நிறையவே சுதந்திரமிருக்கும் ! So நமது அரசியல் சூழல்களையோ ; இன்ன பிற சமாச்சாரங்களையோ உள்ளே நுழைத்துக் கொள்வது சுலபமே !
Deleteமந்திரியார் கதைகளோ இதற்கு நேர் மாறு !! கதையோடு பின்னிப் பிணைந்து ஓடும் நகைச்சுவை வரிகளை தமிழுக்கு மாற்றம் செய்ய முனைவது - ரின்டின் கேனுக்கும், ஜாலி ஜம்பருக்கும் மத்தியில் வெள்ளைக் கொடி பறக்க விடுவதை விடவும் சிரமமான காரியம் !
அண்டர்டேக்கர் வெற்றிக்கு பின்னால ஒன்று மட்டும் தெரியுது மஞ்சள் நிற உலோகமும் குதிரையும் இருந்தா அத் தொடர் வெற்றி தான்
ReplyDeleteசாா்,
Deleteமஞ்சள் நிற உலோகம் தான் இன்னுமும் மொத்த உலகத்தின் வெற்றி தோல்விகளை நிா்ணயிக்கிறது சாா்.
கவரிமான்களின் கதையை படித்துக்கொண்டு இருக்கையிலே, அந்த ரபேல் எருதை அடக்கும் காட்சிகளை பார்த்தபோது நம்மஊரு ஹீரோக்களின் சாகசங்களோடு ஒப்பிட்டு பார்க்கத் தோண்றியது.
ReplyDeleteரபேல் கையில் ஈட்டியை வைத்துக்கொண்டு எருதை தூரத்திலிருந்து குத்துவதையே கைதட்டி பாராட்டுகிறார்களே,
நம்மாளுக, சினிமாவுல , வேட்டியை குறுக்கால மடிச்சி கட்டிகிட்டு, கொம்பு ரெண்டையும் புடிச்சி மாட்டை கீழே சாய்ப்பாங்களே, அதையெல்லாம் பாத்தா என்ன பண்ணுவாங்க..!
அதுவும் முரட்டுக்காளையில க்ளோஸப்ல காட்டுறப்போ மாடு கண்ணே சிமிட்டாம இருக்கும்.! (பெயிண்டுல வரைஞ்ச பொம்மை எப்படி சிமிட்டும்னு தலீவர் கேக்குறாரு :-))
சேரன் பாண்டியன்ல ஒரேகையால நெக்கித்தள்ளி மாட்டை பின்னுக்கு தள்ளிகிட்டே போவாரு..!
அப்புறம் , பேச்சி பேச்சி ன்னு பாட்டுப்பாடியே,
மாடு அதுவா வந்து கழுத்துல இருக்குற பரிசை கழட்டிக்கொடுத்து நல்லா இருப்பான்னு ஆசிர்வாதம் பண்ணவச்ச கதையும் உண்டு..!
இதையெல்லாம் விட பெத்த மேட்டரு சமீபத்துல வந்துச்சே .., நம்ம பல்லாளத்தேவன் காட்டெருமையோட மண்டையில ஒரே அடிதான்.. . .அது அங்கனக்குள்ளயே சாணியப்போட்டு சாஞ்சிடுது. .!!
இப்படி பாத்து பழகுன எங்ககிட்ட போய் ரபேல் பண்றது பெரிய சாதனைன்னு சொல்லி சிரிப்பு காட்டாதிங்க ஆம்மா..! :-)
இப்ப நீங்க சொல்றத கேட்டா தா சிரிப்பா வருது. வீண் பெருமை தவிர்போம்.
Deleteவீண் பெருமை மட்டுமல்ல
DeleteShainesmile Foundation நண்பரே!
அதில் சில உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. சினிமாவைப் போல் இல்லையென்றாலும், நாம் இந்த விளையாட்டை வெறும் கையால் விளையாடுகிறோம். ஸ்பானிஷ்காரா்களைப் போல ஈட்டியை வைத்துக் குத்துவதில்லையே!
என்றவகையில் மேச்சோியாா் சொன்னது தமாஸுக்காக என்ற போதிலும், தமிழா்களின் மரபு ஸ்பேனீஸாரோடு ஒப்பிடும் போது நிச்சயமாக வீண் பெருமை அல்ல!
மேலும் ஐரோப்பியா்கள் கால்நடைகளைக் கையால்வதற்கும், நம்மவா்கள் கையால்வதற்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது.
KiD ஆர்டின் KannaN : //பெயிண்டுல வரைஞ்ச பொம்மை எப்படி சிமிட்டும்னு தலீவர் கேக்குறாரு :-))
Delete//
"நாம்பாட்டுக்கு 'சிவனே'ன்னு யார் வம்பு தும்புக்கும் போகாம பதுங்கு குழிலே கிடக்கேனே....என்னை ஏன் கோர்த்து விடணும்னுகிறேன் ? அது ஏன்கிறேன் ? "
-ஒரு பதுங்கு குழியில் கேட்ட குரல்"
கிட் ஆர்டின் சார்,
Deleteசினிமாவை ஒப்பிட்டு தாங்கள் சொன்னதால்,மாய உலகின் பிம்பங்களை காரணிகளாய் காட்டியதால் அப்படி சொன்னேன். ஆனால் தமிழின் கலாச்சார உணர்வுகள் உலக நாகரீகத்துக்கு முன்னோடியாக அமைந்தவை. என்றும் ஏறு தழுவுதல் நமது உரிமையாகும்.அதற்காய் மாபெரும் யுத்தம் மெரினா புரட்சியாய் வெடித்தது. உலகின் அனைத்து எல்லைவரை பெரும் சூராவளியாய் வெடித்தது. தமிழன் அடையாளம் அவனது உணர்வுகளாலே,மாய பிம்பங்களால் அல்ல.நமது தமிழ்வள வரலாற்றில் உலகின் முன்னோடிகள் என்பதற்கு பல்லாயிரம் சான்றுகள் இப்புவியெங்கும் இருக்கின்றன.
மிதுன் நண்பருக்கு,
Deleteஎனது வார்த்தைகள், சினிமா என்ற மாயபிம்பத்தை பற்றியதே.தமிழன் வீரம் குறித்து உலகின் பல நாடுகளில் சான்று விஞ்ஞானம் தொழில்நுட்பம் அறிவியல் மேம்படா காலகட்டத்தில் கப்பல் செய்து உணர்வுகளால் திசை அறிந்து கடல் அலைகளை பற்றிய ஞானம் கொண்டு இயற்கையை வென்றெடுத்து அன்னிய தேசங்களில் தமிழ் நிலைநாட்டி பல அந்நிய மணிமகுடங்களை தன் காலடிகளில் கிடத்தியவன்.
...சான்று உள்ளது. விஞ்ஞானம் ...
Deleteசார் ....பதுங்கு குழிக்குள்ள இருக்குற என்னை எப்படியாவது வெளியே கொண்டு வந்து சிக்க வைத்து விடலாம் என மனமில்க் கட்டுகிறார் மேச்சேரி ரவிகண்ணர் ..
Deleteஎங்கிட்ட நடக்குமா ...:-)
இப்படி ஓர் நாவலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இதற்கு காமிக்ஸ் படிப்பவராயிருக்க வேண்டிய அவசியம் தேவையே இல்லை. எந்த ஒரு வாசிப்பாளரும் இதை படிக்கலாம்.
ReplyDeleteஆனால் இது கொடுக்கும் அனுபவமோ பிரமிக்க தக்கது. எனது காமிக்ஸ் 45 வருட உலக வரலாற்றில் இப்படி ஓர் நாவலை நான் சந்தித்ததே இல்லை. Just 2 slots இது போதித்த பாடமோ உலக நீதி. நாம் எப்படி பட்டவர் என்று நமக்கு தெரியும். ஆனால் உலகமோ நம்மை குறித்து வேறு வரலாறை சொல்லும். நம்மோடு இடையில் பயணிப்பவரோ உலக அனுபத்தை கொண்டு நம்மை அனுமானிப்பர். இதையும் கடந்து நமது உணர்வுகள் மூன்றாம் மனிதர்களை வென்றெடுக்கும். இது நமது உளவியல் உணர்வுகளை கொண்டு புணைய பட்ட நாவல்.
இது அன்டர்டேக்கரை குறித்த என் முழு அனுபவம்.
Deleteதிங்கள் இரவுக்குள் 4 நாட்களுக்குள் 5 முறை படித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் புதிதாய் படிப்பது போல் அனுபவத்தை தருகிறது. இந்த நாவலில் எங்கோ,எந்த விதத்திலோ நாம் இதனுள் மெய்மறந்து போவோம். நமது வாழ்க்கையே எதையோ தேடிய நிலையில் தான், அதை வென்றெடுக்கிறோமா தோற்கிறோமா என்பதல்ல ப்ரட்சனை. நம்மோடு பயணம் செய்பவர் நம்மை புரிந்து கொண்டு நம்மோடு பயணம் செய்வதே உலக வாழ்வியல் தத்துவம். இந்த நாவல் இதை திறம்பட செய்கிறது.
DeleteShinesmile Foundation : உங்களுள் அண்டர்டேக்கர் ரொம்பவே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது புரிகிறது சார் ! ஆழமான வரிகள் !
Delete"தடை பல தகர்த்தத்தெழு" கதையில் கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சிகள் சரியான தமாஷாக இருந்தன. சுவரேரி குதிக்க வசதியாக முடிச்சுப்போட்ட பெட்ஷீட்டுகளும், பற்றாக்குறைக்கு சரியான பாதையை காட்ட அம்புக்குறிகளும், "ஹை! பயலுக பெட்ஷீட் நீட்ட தயாராயிட்டாங்க" என்ற வசனமும், சிரித்து சிரித்து கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது. இப்போது கூட காபி குடிக்கும்போது அந்த காட்சி நினைவுக்கு வந்து குபீரென சிரிப்பு வந்து புறையேறிவிட்டது.
ReplyDeleteதொப்ளா குட்டியின் கதைகள் தொடர்ந்து வரவேற்பைப் பெற்றுவருவது ஏதோவொரு 'இனம் புரியாத' மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது!
Delete// சுவரேரி குதிக்க வசதியாக முடிச்சுப்போட்ட பெட்ஷீட்டுகளும், பற்றாக்குறைக்கு சரியான பாதையை காட்ட அம்புக்குறிகளும், "ஹை! பயலுக பெட்ஷீட் நீட்ட தயாராயிட்டாங்க" என்ற வசனமும், சிரித்து சிரித்து கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது. //
Deleteகதையில் நான் மிகவும் ரசித்த இடம்கள்!
Jagath Kumar & Friends : ஜாலியான கதை தானே....ஜாலியாய் எழுதும் சுதந்திரம் கிடைத்துப் போகிறது நண்பரே !
Deleteஆசிரியருக்கு நன்றிகள் பல..என் மின் அஞ்சலை பதிவில் கொடுத்து எனக்கு நண்பர்களின் பார்வையையும்,பாராட்டுகளையும் பெற்று கொடுத்து இருக்கிறீர்கள்.இன்று இந்த பதிவு பக்கத்தில் தூர நின்று பார்த்து கொண்டு இருந்த நான் உள்ளே நுழைந்து அனைவருடனும் கை குலுக்கி கொண்டு இருக்கிறேன்
ReplyDeleteநன்றி ஐயா,நன்றி ஐயா..
வாங்க நண்பரே! தயங்காமல் தொடர்ந்து பதிவிடவும்!
DeleteJana Krishna : More the merrier sir ! Welcome !
DeleteJana krishn;நல் வரவு நண்பரே.தெடரட்டும் உங்கள் பதிவு.
Deleteவணக்கம்.
Deleteநல்வரவு நண்பரே.
நண்பர் திரு.ஈ.வி. அவர்களுக்கு ஒரு சந்தேகம். அதனை தீர்த்து வைப்பீர்களென நம்புகிறேன்.
////"மலேசியாவிலும் ஒரு மேட்டூர் அணை இருக்கிறதா...? அல்லது இத்தனை நாள் நான் மலேசியா'ன்னு நினச்சிக்கிட்டிருந்தது உண்மையில் மேட்டூர் அணையைத்தானா?////
இந்த சந்தேகத்தை தீர்த்து வைத்திடுங்களேன்.Please...
Vijayan : // இங்கு கண்டனத்தை ஈட்டியது உங்களின் "கழிப்பறை" உவமையே அன்றி - உங்கள் கருத்தல்ல என்பதை நான் லவுட் ஸ்பீக்கர் போட்டுக் கூப்பாடு போட்டாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை !//
Deleteசார் நீங்கள் அந்தக் கதையை வெளியிட்டது சந்தா - E ல் தான். மேலும் உங்கள் கூற்றுப்படியும் அது மீன்நாற்றம் தான். முட்டை கலந்த பட்சணம் என்பதால் கேக் மற்றும் பிஸ்கட்களையும் தவிர்க்கும் எனக்கு மீன்நாற்றம் மட்டும் என்னவாக இருக்கும்? மேலும் நீங்களே கூட அதனை மீன்வாசம் என்று குறிப்பிடவில்லையே?
-------------------------
// தங்கள் நண்பரின் "தனிமனித தாக்குதல், கருத்து சுதந்திரத்திற்கு இந்த தளத்தில் உள்ள அச்சுருத்தல்" என்ற சமாச்சாரங்களுக்கெல்லாம் விளக்கம் சொல்ல நான் புறப்படுவது வியர்த்தமாகவே இருக்குமென்பது நிச்சயம் !//
விளக்கம் நீங்கள் அளிக்கத் தேவையேயில்லையே சார். எனது கதை பற்றிய கமெண்ட் உங்களை நோக்கியே, உங்களது தளத்திலேயே வைக்கப்பட்டது. தாங்கள் அதை மிகவும் ஈஸியாக எடுத்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளீர்கள். எனக்கும் உங்கள் பதில் மிகவும் ஏற்புடையதாகத்தான் இருந்தது. ஆனால் உங்கள் பதில் வருவதற்குள்ளாக எனக்கு இரு நண்பர்கள் மட்டுமே பதில்வினை ஆற்றினார்கள். ஈவி அவர்கள் தவிர்த்த மற்றவர் ஏன் எடிட்டரை சீண்டுகிறீர்கள் என்பதாய் பதிவிட்டிருந்தார். அது எவ்வகையில் சரி? நீங்கள் தானே அட்மின். தவறிருந்தால் எனது பதிவை நீக்கிவிட்டிருப்பீர்கள் அல்லவா? 1970 களில் இருந்தே உங்களை காமிக்ஸ்கள் வழியாய் தொடர்ந்தே வந்திருக்கிறேன் சார். கடந்த இரண்டு வருடங்களாய் புத்தக திருவிழாவிற்கு நீங்கள் வந்து சென்ற பிறகே வருகை தருவதை வழக்கமாய் கொண்டவன் சார் நான். நண்பர்கள் நீங்கள் வரும் தினத்திற்கே வர வேண்டும் என்று வற்புறுத்தியும் வர மறுத்தவன் சார் நான். காரணம் கேட்ட அவர்களுக்கு நான் சொன்ன பதில், "எடிட்டர் மேல் இருக்கும் கிரேஸ், அருகில் சென்றால், பழகிவிட்டால் குறைந்து விடும்..." என்பதுதான். அதற்கு நண்பர் சொன்ன பதில், "இல்லை... நீங்கள் அவருடன் பழகினால் அது இன்னும் அதிகரிக்கும்..." என்பதுதான். எனது நிலை இவ்வாறிருக்க மிகப்புதிதாய் தளத்திற்கு வந்தவர், வியாபார நோக்கத்தை முன்னிறுத்தியவர், ஏன் சீண்டுகிறீர்கள் என்பதாய் என்னை நோக்கிக் கேட்பதை நான் எளிதாக எடுத்துக் கொள்கிறேன். ஆனால் மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது நீங்கள் அறியாததா சார்?
//அது மாத்திரமின்றி, இங்கு பதிவிடப் பிரியம் கொள்ளாது உங்களுக்கே உங்களுக்கென அவர் மின்னஞ்சல் செய்துள்ள நிலையில் அதனை இங்கே பகிர எண்ணுவதன் லாஜிக்கும் புரியாப் புதிரே எனக்கு !//
சார், தளத்தின் அட்மின் ஆகிய தாங்கள் தங்களுக்கு வந்த வாசகர் மெயில்-ஐ பதிவிட்டிருப்பதைப் போல, தளத்தின் பார்ட்சிபேட்டர் ஆகிய நான் எனக்கு தளம் சம்பந்தமாக மட்டும் வந்த மெயில் -ஐ பதிவிடுவதற்கு தார்மீக உரிமை இருப்பதாகவே கருதினேன் சார்.
Xlll(இரத்தப் படலம்) சென்னை புத்தக விழாவில் வெளிவருமா?என்பது புரியவில்லை. இப்போதைக்கு palanivel arumugam மட்டுமே உறுதியாக உள்ளார்.நானும் என் மூலமாக லயன் மற்றும் முத்து காமிக்ஸ்ன் மீள் வருகையை உணர்ந்த ஒரு சில நண்பர்கள் மட்டுமே ஓர் அணியாக உள்ளோம்.Xlll ன் நிலையை நினைத்தாலே பரிதாபமாக உள்ளது.
ReplyDeleteSri Ram : சார்..உங்களது பின்னூட்டமொன்று தவறுதலாய் delete ஆகிப் போய் விட்டது ; சிரமம் பாராது அதனைத் திரும்பவும் டைப் பண்ணிடுங்களேன் ?!
Deleteஅண்டா்டேக்கா்ல
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம்!!
ஒரு தங்க சுரங்க முதலாளி தன் வாழ்நாள் முழுவதும் 1 கிலோ தங்கம் தான் சம்பாதிச்சாரா?
1 கிலோவுக்கு மேலயா அவரு கேக்குல வச்சு சாப்பிட முடியும்?
சுமாா் 1 கிலோ தங்கம் தான் அவா் சம்பாதிச்சாா்னா தற்போதைய இந்திய மதிப்பில் சுமாா் ரூ.30 லட்சம் ஆகுது.
தலைக்கு 50000 கூட கெடக்காத பிசாத்து காசுக்குதான் ஒரு ஊரே, உயிரைப் பணயம் வைத்துத் தொரத்தீட்டு போகுதா?
எங்கேயே லாஜிக் இடிக்கற மாதிாி தொியுதே!!!
IN 1947ல் 1 US DOLLAR = 1 RUPEE
DeleteTODAY 1 GRAM GOLD = 40 USD
1 KILO GOLD= 40X1000 = 40000 USD
1800 களில் நம்ம வெகுமதி வேட்டையா்களுக்கே சுமாா் 5000 டாலா்கள் (பாா்க்க ட்யுராங்கோ) வழங்கி வந்த வேலையில் 40000 டாலா் 8 பேருக்கே போதாதே!!
எப்புடி ஒரு ஊரே இந்த அல்ப பணத்துக்கு தொரத்துது.
எப்பிடி கணக்கு சாியா வல்லையே??
என்னப்பா இது? யாரும் என் கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டேன்ங்குராங்க?
Deleteஎன்ன கொடுமை சாா் இது???
@ மிதுன் சக்கரவர்த்தி
Deleteகொஞ்சம் பொறுங்கள்...நான் விளக்குகிறேன்.சற்று பணிசுமை...டைம் ப்ளிஸ்...
ஜனா கிருஷ்ணா சார்...
ReplyDeleteஉங்கள் அழகான கருத்துக்கள் இனி இங்கும் தொடரட்டும் ...உங்களை காமிக்ஸ் தளம் காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம் ...
அப்புறம் நான் அதே தாரமங்கலம் பரணிதரன் தான் நண்பரே..நன்றி..
அப்புறமா செயலர் கிண்டல் அடிச்சதுக்கு வருத்தம் எல்லாம் படாதீங்க ...புத்தக காட்சிக்கு வாங்க ...நம்ம ஏடிஆர் சாருக்கு கொடுக்க வேண்டிய தண்டனை அப்படியே இருக்கு ..அதை செயலருக்கு கொடுத்துட்டு போயிருங்க ....:-))
////நம்ம ஏடிஆர் சாருக்கு கொடுக்க வேண்டிய தண்டனை அப்படியே இருக்கு.அதை செயலருக்கு கொடுத்திட்டுப் போயிருங்க...////
Deleteஇத இத இதத்தான் எதிர்பார்த்தேன் தலீவரே!
இப்பத்தான் புரியுது! நீங்க எப்புடி தலீவரானீங்கன்னு!!
தீர்ப்ப மாத்தி எழுதற உரிமை உங்களை விட்டால் யாருக்கு
இருக்கு!! செயலரை நெனச்சாத்தான் கொஞ்சம் அழுகை
அழுகையா வருது!!
சார்..
ReplyDeleteலயன் கிராபிக் நாவலின் தற்போதைய வெற்றிகள் இனி அடுத்தவருடம் மாதாமாதம் லயன் ..முத்து போல வெளிவருவது போல லயன் கிராபிக் நாவலும் வெளிவரும் சூழலே தற்போது ...
பட்டையை கிளப்புங்க....முரசு அடிக்க நாங்க ரெடி ...:-)
மிகமிகப் புதிதாய் தளத்திற்கு வந்த ஒருநபர் காமிக் உலகிலேயே நேற்று முளைத்த காளான் சொல்லப்போனால் இந்த உலகிற்கு வந்தே வெறும் முப்பதாண்டுகளே ஆன ஒரு நபர் நம்முடைய Kid Artin Kannan சொன்னதுபோல இதற்கென்று கோர்ஸ் முடிக்காமல் வந்து பதிவிடும் நபர் , வியாபார நோக்கோடு இத்தளத்தில் விளம்பரம் செய்து பல ஆயிரங்களையும் லட்சங்களையும் ஈட்டியவர் காமிக்கைப் பற்றி எழுதாமல் சர்ச்சைக்கு மட்டும் முதல் ஆளாய் மூக்கை நுழைப்பவர் தலை இருக்கும்போது வாலை ஆட்டும் அதிகப்பிரசங்கி எங்களுக்குப் பதில் சொல்வதா..? நெவர்..நெவர்..நண்பர் வெங்கடேஷ் அவர்களே ஒரு விமர்சனம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு நண்பர் ஜனார்த்தனனுடைய பதிவு ஒரு எடுத்துக்காட்டு.அதில் நம்முடைய ஸ்டைலில் கொஞ்சம் காரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்..ஒரு விமர்சனம் எப்படி அமையக்கூடாதென்பதற்கு முழுக்கமுழுக்க உங்களுடைய பதிவே ஒரு எடுத்துக்காட்டு..கன்னாபின்னாவென்று எழுதுவதெல்லாம் விமர்சனமாகாது..!
ReplyDelete