நண்பர்களே,
வணக்கம். அக்டோபரின் வண்ண இதழ்கள் இரண்டுமே தக தகப்பதை ரசித்துக் கொண்டே இதை டைப்புகிறேன்! லக்கி லூக் எப்போதும் போலவே கலரில் கலக்குகிறாரெனில் - ஜேசன் ப்ரைஸ் ஒரு surprise package என்றுதான் சொல்ல வேண்டும் ! ரொம்பவே வித்தியாசமான கதைக் களம் மட்டுமன்றி - கலரிங்கிலும் ஒரு அதகளம் காத்துள்ளது நமக்கு ! இந்த பாணி வர்ணங்களுக்கு முழு நியாயம் செய்திடும் பொருட்டு பிரத்யேகமானதொரு shade -ல் சிகப்பு மை மட்டும் அவசியப்பட்டது ! இறக்குமதி செய்யப்பட இங்க் வகைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தைப் பிடித்து அந்தச் சிகப்பையும் வாங்கி விட்டதால் - "எழுதப்பட்ட விதி" கண்களுக்கொரு விருந்தாக அமைந்திருப்பதை அடுத்த சில நாட்களில் பார்த்திடவிருக்கிறீர்கள் ! ஏற்கனவே ஸ்பைடரார் அச்சாகித் தயாராகி விட்டார் என்பதால் - திங்கட்கிழமை பொழுதினில் "தற்செயலாய் ஒரு ஹீரோ" மாத்திரமே பிரிண்ட் காணக் காத்திருப்பார் ! So வியாழன் மாலை - பிரதிகள் நான்கு + 2017 அட்டவணை உங்களைத் தேடித் புறப்படும் ! அன்றிரவே இங்கே நமது பதிவிலும் அட்டவணையினை வலையேற்றம் செய்து விடுவோம் என்பதால் - சில வாரங்களாக நீடித்து வந்ததொரு சன்னமான சஸ்பென்ஸுக்கு மங்களம் பாடி விடும் வேளை நெருங்கிவிட்டது ! "அட..இதுக்குத் தான் இத்தனை பில்டப்பா ஒய் ?" என்ற கேள்விகளும் எழலாம் ; "அடடே ....2017-ன் நாட்கள் ரம்யமாய் அமையும் போலுள்ளதே !!" என்ற ஆச்சர்யக் குறிகளும் எழலாம் என்பதால் இரண்டையுமே சமாளிக்குமொரு ஜென் நிலை ஏதேனும் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்குமா ? என்று தேடித் கொண்டிருக்கிறேன் ! பற்றாக்குறைக்கு - அட்டவணையோடு அதன் பின்னணி பற்றிய (வழக்கமான) மெகா விளக்கவுரையினையும் இப்போதே மண்டைக்குள் தயாரித்துக் கொண்டு வருவதால் - ஆபீஸிலும், வீட்டிலும் உள்ள மோட்டுவளைகள் எனது பிரியத்துக்கு உகந்த காட்சிப் பொருட்களாய் ஆகி வருகின்றன ! உள்ளூர் கருப்பசாமி கோவிலுக்கோ ; அருகிலுள்ள தர்காவுக்கோ கூட்டிப் போய் எனக்கு மந்திரித்துத் தாயத்துக் கட்ட யாரேனும் தயாராகும் முன்பாக அந்த உரையினை முடித்து விட்டால் தேவலை என்று தோன்றுகிறது !
சாவகாசமாய் 2017-ன் அட்டவணையினைக் கையில் ஏந்திப் புரட்டும் இந்த நொடியினில் - "இதன் உருவாக்கத்துக்கு ஏன்டாப்பா இத்தனை அலம்பல் ?" என்ற கேள்வி என் முன்னே தலைகாட்டி நிற்கிறது! அட்டவணையின் புது வரவுகளையோ ; சந்தா E-ன் கதைகளையே யூகிக்க வாய்ப்புகள் சொற்பம் என்பதைத் தாண்டி - நமது "ரெகுலர்களின்" பட்டியலை நிச்சயமாய் டயபாலிக் அகில் கூடப் போட்டிருப்பான் !! 'ஆனால் இதற்கேன் இத்தனை சிந்தனை அவசியமானது அண்ணாச்சி ?' என்று என்னை நானே இப்போது கேட்டுக் கொண்டால் - "ஹி..ஹி"..என்று ஒருகாலத்தில் பளீர் வெள்ளையாயிருந்த முத்துப் பற்களை மாத்திரமே காட்சிப் பொருட்களாய் முன்னிறுத்த முடிகிறது ! ஆஞ்சநேயர் வாலின் நீளத்துக்குப் போட்டியாய் நமது நாயகர்களின் பட்டியல் இருக்கும் போது - மடியினில் இடம் யாருக்கு ? ; மனதினில் இடம் யாருக்கு ? என்ற சிந்தனைகளே நேரத்தை முக்கியமாய் விழுங்கியுள்ளது புரிகிறது ! எது எப்படியோ - வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களின் ரிசல்ட்டையே அன்றைக்கே அறிய சாத்தியமாகிவிட்ட இந்நாட்களில் - நமது "வெள்ளி ரிலீசுக்கு" உங்கள் மதிப்பெண்கள் என்னவாக இருக்குமோ ? என்பதுதான் எங்களது மில்லியன் டாலர் கேள்வி ! ஏதோ பார்த்து, அனுசரித்துக் கரைசேர்த்து விடுங்க பாஸ்.......!டெம்போ வாடகைலாம் ரொம்பவே கூடிப் போச்சு!! (MV சார் - நீங்க உரக்கப் புலம்புறீங்க ; நான் உள்ளாற புலம்புறேன் !! வேற்றுமை அவ்வளவே !!)
போதுமிந்த "அட்டவணை ஆலாபனை" என்பதால் - நடப்புக்குத் திரும்புவோமே ?! நமது வலைப்பக்கத்திற்கு இத்தாலியில் எத்தனை ரெகுலர் பார்வையாளர்கள் உள்ளனர் என்பதைக் கடந்த வாரம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது ! TEX IN INDIA என்று போனெல்லி தம் ஹோம் பேஜில் நமது இதழ்களைப் பற்றிப் போட்டது ஒருபக்கமிருக்க, அங்குள்ள டெக்ஸ் ரசிகர்கள் மட்டுமன்றி "டைலன் டாக்" ரசிகர் மன்றத்தினரும் சுறுசுறுப்பாகி விட்டனர் ! தங்கள் ஆதர்ஷ நாயகர் உள்ளார் என்ற ஒரே காரணத்துக்காக "ஈரோட்டில் இத்தாலி" இதழில் டை.டா. ரசிகர்கள் இதுவரை 45 இதழ்கள் வாங்கி விட்டனர் ! டெக்ஸ் ரசிகர்களோ - நமது பதிவிலுள்ள அட்டைப்படங்களைப் பார்த்து ; அவற்றை இணைத்தனுப்பி - "இதில் 5....அதில் 3.." என்று ஆர்டர் செய்துவருகின்றனர் ! இது பற்றாதென - பெல்ஜியத்தில் உள்ள 2 ரோஜர் ரசிகர்கள் 1987-ல் நாம் வெளியிட்ட ரோஜர் கதைகள் உள்ளனவா ? என்ற கேள்வியோடு துவங்கி - தற்போதைய வண்ண இதழ்கள் இரண்டிலும் தலா 20 பிரதிகள் வாங்கியுள்ளனர் !! காமிக்ஸ் காதலுக்கும், சேகரிப்பு ஆர்வங்களுக்கும் மொழி ஒரு தடையே ஆகாது போலும் !! புரட்டிப் புரட்டிப் பார்ப்பதைத் தாண்டி வேறேதும் சாத்தியமில்லை என்றாலும், அந்த குட்டியான சந்தோஷத்திற்காகவே சிலபல ஆயிரங்களை செலவிடும் ஆர்வங்களை என்னவென்பது ? அங்கே ஆயிரங்கள் செலவிடும் ஆர்வலர்கள் ஒருபக்கமெனில் - "நான் அதற்குச் சிறிதும் சளைத்தவனல்லவே !" என்று தொடர்ச்சியாய் நிரூபித்து வருகிறார் நமது நண்பர் ஒருவர் ! அவரது பணியிடம் ஓமான் நாட்டினில் மஸ்கட் ; துவக்க நாட்கள் முதலாய்த் தீவிர வாசகர் ; 2012 முதலான நமது மறுவருகையினில் ஒரு நம்ப முடியாப் பங்கெடுத்து வருபவர் !! யெஸ் - கடந்த 4 ஆண்டுகளாய் ஒவ்வொரு மாதத்து இதழ்களிலும் 2 பிரதிகள் வாங்கிடுகிறார் ! அதனில் 1 செட் எல்லோருக்கும் போலவே ஏர் -மெயிலில் பிரயாணிக்கும் ; இரண்டாவது செட்டோ ஒவ்வொரு மாதமும் சுமார் 3000 ரூபாய் செலவினில் கூரியரில் பறக்கின்றது மஸ்கட் நோக்கி !! ஆண்டொன்றுக்குத் தோராயமான கூரியர் செலவுக்கே ரூ.40,000+ செலவிடும் இந்தக் காமிக்ஸ் காதலை என்னவென்பது ?! Phew !!
சமீபமாய் நமது முந்தைய கிட்டங்கியொன்று மராமத்தின் பொருட்டு காலி செய்யப்பட - சிலபல சுவாரஸ்யமான முந்தைய இதழ்கள் கண்ணில்பட்டன ! அவற்றை இன்றைக்குப் பகலில் புரட்டிக் கொண்டிருந்த போது - ஏகப்பட்ட மலரும் நினைவுகள் படையெடுத்தன ! "சிங்கத்தின் சிறு வயதில்" - ஒரு பக்கம் ஓடினாலும், அங்கே குறிப்பிட்ட சில மைல்கல் இதழ்களைத் தாண்டி மற்றவையின் மீது பார்வைகளைச் செலுத்தப் பொறுமை இருப்பதில்லை ! So - ஜிகினாப் பூச்சில்லா சிலபல low key நாயகர்களின் கதைகளை பெரிதாய் நான் சிலாகித்ததில்லை அங்கும், எங்கும் ! வரும் நாட்களில் - மாதத்தில் ஏதேனுமொரு வாகான வேளையினில் வெளிச்ச வட்டமறியா நாயகர்கள் / இதழ்களை பற்றி இங்கே எழுதிடலாமென்று நினைத்தேன் !
என் கையில் சிக்கிய முதல் இதழ் - (முத்து காமிக்சின்) "ஆகாயக் கல்லறை" ! செம குட்டியான பாக்கெட் சைசில் ; ரூ.2-50 விலையில் 1988-ல் வெளியாகியிருக்கக் கூடிய இதழ் ! வெளியீடு நம்பர் 174 என்பதைத் தாண்டி வேறெந்த அடையாளமும் இல்லையென்பதால் - மங்கிவரும் எனது நினைவுகளை மட்டுமே நம்பி யூகம் செய்திருக்கிறேன் ! முத்து காமிக்சின் பொறுப்பு என் கைக்கு வந்த பிற்பாடு தயாரான இதழே என்பதால் நிச்சயம் 1988/89 -ஐ இது தாண்டியிருக்காது ! 128 பக்கங்கள் ; நியூஸ்பிரிண்ட்டில் black & white ; அச்சின்றிப் பின்பக்கம் காலியாகக் காட்சி தருமொரு மெலிதான ராப்பர் ; "காமிக்ஸ்டைம் " ; "வாசகர் கடிதம்" என்று மருந்துக்கு கூட ஏதுமிலா 'அட்டை டு அட்டை கதை' என்ற பாணி - என சகலத்தையும் குறு குறுவென்று பார்வையிட்டேன் ! 64 பக்கங்கள் வீதம் இரு முழுநீளக் கதைகள் உள்ளே இடம்பிடித்திருக்க - அவையிரண்டுமே ஏஜெண்ட் ஜான் சில்வரின் ஆக்ஷன் சாகசங்கள் !! Fleetway சரக்குகளை வளித்துத் துடைத்துக் கொண்டிருந்த நாட்களவை ! மாயாவி ; ஸ்பைடர் ; ஜானி நீரோ போன்ற "வெயிட் பார்ட்டிக்களின்" கதைகள் கிட்டத்தட்ட காலி என்றான நிலையில் - கிடைத்த அடுத்தநிலை நாயகர்களின் கதைகளை பயன்படுத்தி வந்தோம் ! அவர்களுள் ஒருவர் தான் "ஜான் சில்வர்" என்று நம்மால் பெயர்மாற்றம் கண்ட JOHN HAVOC !
பாவப்பட்ட மனுஷன் ஒரு பைலட் ; மேலதிகாரிகளின் குளறுபடியால் ஒரு சோதனையோட்டப் பணி சொதப்பலாய் முடிந்துபோக - சுலபமான பலிகடாவாவது ஜான் சில்வர் தான் ! அவரது பைலட் லைசன்ஸ் ரத்தாகிப் போக - "எங்களுக்கு இந்தக் காரியத்தை முடித்துக் கொடு ; உனது லைசென்ஸை மீட்டுத் தருகிறோம் !" என்று சொல்லியே உளவுத் துறை அவரைக் கொண்டு காரியம் சாதிக்கிறது ! இதுதான் கதைக் களம் ; அழகான சித்திரங்களோடு, விறுவிறுப்பாய்ப் பலகதைகள் TOPSECRET Library என்ற தொகுப்பினில் வெளியாகியிருந்தது ! எனக்கு ரொம்பவே பிடித்ததொரு தொடருது ! சுவாரஸ்யமான இந்தத் தொடருக்கும், இந்த நாயகருக்கும், எங்களது நகரோடு ஏதோவொரு பூர்வ பந்தம் உண்டோ - என்னவோ தெரியாது ; ஆனால் மனுஷன் எங்கள் ஊரில் மட்டும் 3 பதிப்பகங்களின் கைகளில் உலா போயுள்ளார் !
"விபரீத விளையாட்டு" ; ரவுடிக் கும்பல்" என்று 2 கதைகளோடு 1980-களில் முத்து காமிக்ஸில் இவர் தலைகாட்டிய போது ஆசாமியின் பெயர் "ஜான் ஹேவக்" தானா ? "ஜான் சில்வர்" என்று பெயர் மாற்றியது (பின்னாட்களில்) அடியேன்தானா ? போன்ற கல்வெட்டில் பதிக்க வேண்டிய வரலாற்றுத் தகவல்கள் என்னிடமில்லை ! ஆனால் கதைப் பஞ்சமென்று, போட்ட கதைகளையே மறுபதிப்பிட்டுக் கொண்டிருந்த நாட்களில் கூட இந்த நாயகரின் நினைவு அந்நாட்களது முத்து காமிக்ஸ் நிர்வாகத்தில் யாருக்குமே வந்திராது போனது ஏன் என்பது தான் புதிரே ! So முத்து காமிக்ஸ் இவரைத் தமிழ் பேச வைத்ததெனில் - "செல்சன்ஸ் காமிக்ஸ்" என்ற பெயரில் சிவகாசியிலிருந்து சிலகாலம் மட்டுமே வெளியானதொரு ஆங்கில காமிக்ஸிலும் இவர் தலைகாட்டினார் ! மூன்றாவதாய் ஜான் நடமாடியது "மேத்தா காமிக்ஸ்" என்ற இன்னொரு சிவகாசித் தயாரிப்பினில் !!
நாம் லயன் காமிக்ஸ் துவங்கிய அதே தருணத்தில் - அங்கே சென்று அடைக்கலமாகியிருந்த முல்லை தங்கராசன் - பதிப்பகத் துறைக்குப் புதியவர்களை கொண்டு இந்த இதழினை ஆரம்பித்திருந்தார் ! நமது ஓவியர் ; டைப்செட்டிங் ஆட்கள் ; டெஸ்பாட்ச் பிரிவினர் என சகல ஆட்களையும் லவட்டிச் சென்றது மட்டுமன்றி - டில்லியில் இருந்த fleetway ஏஜெண்ட் மூலமாக ஜான் ஹேவக் கதையின் உரிமைகளையும் தேற்றி இருந்தார் ! எனக்கு காதில் புகை வண்டி வண்டியாய் வெளியான நாட்களவை ! இதில் கொடுமை என்னவென்றால் - மேத்தா நிறுவனத்தின் இளைய மகன் எனது பள்ளி நண்பர் ; இன்று வரைக்கும் தொடரும் 45+ ஆண்டு நட்பு எங்களது ! அவரோ அந்நேரம் கல்லூரியில் இருக்க, சிவகாசியில் அவரது தந்தையும், மூத்த சகோதரரும் அச்சுக்கூடம் நடத்தி வந்தனர் ! அவர்களை எப்படியோ காமிக்ஸ் துறைக்குள் "மு.த" இழுத்து வந்திட - ஜான் ஹேவக் தனது மூன்றாம் (சிவகாசி) இன்னிங்சைத் தொடங்கியது இப்படித் தான் ! நமது ஏஜெண்ட்கள் ; தொடர்புகள் என சகலத்தையும் பயன்படுத்தி - அதே ரூட் பிடித்து மேத்தா பிரதிகளையும் விற்பனை செய்திட "மு.த." முயன்று, ஆரம்பத்தில் அதனில் வெற்றியும் கண்டார் தான் ! ஆனால் "ராணி காமிக்ஸ்" எனும் புயல் மார்கெட்டில் சுழற்றியடித்த அந்த நாட்களில் எவ்வித variety-ம் இல்லாது ஒரே தொடரின் / நாயகரின் கதைகளை போட்டுக் கொண்டே போனதாலோ-என்னவோ அந்த முயற்சி அதிக காலம் தொடர்ந்திடவில்லை ! சீக்கிரமே மூடுவிழா நடந்துவிடுமென்ற நிலை நெருங்கிய பொழுது "மு.த" நமக்குத் தூது விட்டார் - மீண்டும் தாய்க் கழகத்தில் ஐக்கியமாகிடும் ஆர்வத்தில் ! ஆனால் அந்நேரத்திற்குள் ஒரு மாதிரியாய் நமது லயன் காமிக்ஸ் காலூன்றியிருக்க, நான் குறுக்கே படுத்து விட்டேன் - இந்த இணைப்புப் படலத்துக்குத் தடையாக ! பணியாட்கள் ; வியாபாரத் தொடர்புகள் என சகலத்தையும் இங்கிருந்து கிளப்பிப் போயிருந்தாரென்ற அதிருப்தி எனது தந்தைக்கும் இருந்ததாலோ - என்னவோ நான் வைத்த சக்கையை மீறி அவரும் எதுவும் செய்திடவில்லை!
கிடைத்த அடுத்த முதல் வாய்ப்பின் போது டில்லிக்குப் பயணமானவன் - ஜான் ஹேவக்கின் உரிமைகளை வாங்குவதில் குறியாக இருந்தேன் ! அந்தக் கொள்முதலின் பலனே "ஆகாயக் கல்லறை" ! வாங்கி சில ஆண்டுகள் மேஜையினில் முடங்கியே கிடந்தன தான் இவை ; பிரான்க்கோ-பெல்ஜிய படையெடுப்பின் காரணமாய் ! ஆனால் இன்னொருமுறை இந்த உரிமைகளை கோட்டை விட்டிடக் கூடாதென்ற வேகத்தில் பணம் முடங்கினாலும் பரவாயில்லை என்று தீர்மானித்தேன் ! பின்னாட்களில் MC பொறுப்பு என்னிடம் வந்தான வேளையில் ஜான் சில்வர் ரொம்பவே கைகொடுத்தார் என்பதை மறக்க இயலாது ! Low key நாயகரே ; ஒரு லார்கோ வின்ச் ; ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு தடாலடி செய்பவரும் அல்லதான் ; பூப்போட்ட அண்டராயர்கள் இவருக்குப் பொருந்தாது - ஆனால் கனகச்சிதமான சாகச வீரர் இவர் !! இவரை நினைக்கும் போதெல்லாம் ஆரம்ப நாட்களது சடுகுடுக்களும் ஞாபகத்துக்கு வருமென்பதால் எனக்கு இவர் மீது கொஞ்சம் பிரியம் ஜாஸ்தியே ! இன்னமும் வெளியிடாது நாம் வைத்திருக்கும் இவரது சாகசங்கள் இரண்டோ ; மூன்றோ உள்ளன ! வேளை பிறப்பின் அவற்றை வெளிச்சம் பார்க்க அனுமதிப்போமா guys ?
See you around soon !! Bye for now !
P.S : அக்டோபர் இறுதியில் வெளியாகவுள்ள XIII Mystery தொடரின் ஆல்பம் # 10 !!
ஜாலி! ஜாலி!!
ReplyDeleteவாழ்த்துக்கள் பரணி....
Deleteஅட்டவணை இந்த வார இறுதியில் வர இருப்பது ஜாலியோ ஜாலி! அதே நேரம் கடந்த வாரம் எங்கள் நாட்டில் (பெங்களூர்) நடந்த கலவரத்தினால் இன்று வரை வாகன போக்குவரத்து சரி வர இல்லை. கொரியர் சர்விஸ் சரிவர இயங்கவில்லை. கடந்த வாரம் எனது வீட்டில் இருந்து DTDC கொரியரில் அனுப்பிய பார்சல் 5 நாட்கள் கழித்துதான் கிடைத்தது. எனவே இந்த மாத புத்தகம்கள் கைகளில் கிடைப்பதற்கு தாமதம் ஆகலாம், என்பதை பெங்களூர் நண்பர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவும்.
Deleteகவேரிய வேன நிங்களே வைச்சுகுங்க. காமிக்ஸ் ஸ மட்டும் சரியான நேரத்துக்கு வர வழிவிடுங்க கர்நாடகா மக்களே..
Deleteஎனக்கு வாழ்த்த வயதில்லாத தால் வணக்குறேங்க.,
Delete2
ReplyDelete1238764
DeleteXIII Mystery - பயம்முறுதாதிங்க!
ReplyDelete😁 கால்வின் வாக்ஸ் யார் தெரியுமா..ii
DeleteNO. II
Deleteஜேசன்vs ஜேனட் - சண்டை உடனடியாக ரசிக்க தக்கது...
Deleteமேலும், இத்தனை கொலைகள் செய்த பவுண்டேசன் ஆட்களை ஜேசன் ஏதும் செய்யாத மர்மம் என்ன என்பதும் சுவாரசியமான ஒன்றே!!!...
இன்னமும் இந்த மே ப்ளவர் சுற்று நிறைய பாகங்கள் வரும் என்பது உறுதி...
நானும் வந்தேன்
ReplyDeleteசெந்தில் மாதேஷ் ரொம்ப நாட்களாக ஆளையே கணோம் நலமா
Deleteநலமா செந்தில் மாதேஷ் சார்???
Deleteநலம்.நண்பர்களே நாடலும் அதுவே. நன்றி
Deleteநலம்.நண்பர்களே நாடலும் அதுவே. நன்றி
DeleteHi friends, in top 5
ReplyDelete10kullaaa vanthachuu
ReplyDeleteHai
ReplyDeleteஅருமையான ஐந்தாமிடம்..!
ReplyDeleteஅப்பிடீன்னு போட்டுட்டுப் பாத்தா பரவால்லைங்கிற மாதிரிப் பத்தாமிடம்..!
Deleteநடு இரவு வணக்கம்.
ReplyDeleteவணக்கம் ஆசிரியர் & நண்பர்களே
ReplyDeleteGood morning friends..
ReplyDeleteநள்ளிரவு கேள்வி.மாடஸ்டிக்கு மடியிலா அல்லது மனதிலா இடம் சார்?அட்டவணைக்கு முன்னே சின்னதாய் கோடிட்டு உறுதி செய்யுங்களேன்
ReplyDeleteராவணன் இனியன்.!
Deleteமடியில்தான் நண்பரே.!
" காமிக்ஸால் நான் காமிக்ஸுக்காக நான் " என்று வாழும் நமது எடிட்டர் நிச்சயமாக கைவிடமாட்டார்.!
இளவரசிக்கு இடம் இல்லாத அட்டவணையை அன்பின் ஆசிரியர் ஒருநாளும் வெளியிடமாட்டார் இனியரே!!!!...
Deleteஇடம்1 ஆ அல்லது 2ஆ என்பதே கேள்வி???
சேலம் இரவு கழுவாருக்கு வாயில் லட்டு கொடுங்க.!
Delete( இந்த ஆண்டு லட்டுடன் நிச்சயமாக வருவேன் நண்பரே.!)
M.V. இந்த ஆண்டு லட்டுடன் நிச்சயம் வருவேன் நண்பரே.
Deleteஏன்?
எங்கு?
எப்போது?
லட்டுடன் போகப்போகிறீர்கள் எனதெரிந்து கொள்ளலாமா சார்?
ரெகுலர் சந்தாவில் ஒன்றும், கழுகு மலைக் கோட்டை ஆக இரண்டு இடம் தான் இளவரசிக்கு அடுத்த ஆண்டு கிடைக்குமென தோன்றுகிறது. ஒன்றே ஒன்று கூடினால் நன்றாக இருக்கும்.
Deleteதங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே சேலம் டெக்ஸ் ஜி
Deleteஇன்னும் இளவரசியை நம்பினு கீர.....இன்னா தல
Delete17th
ReplyDelete//ஜான் ஹேவக்கின் சாகசங்கள் இரண்டோ ; மூன்றோ உள்ளன ! வேளை பிறப்பின் அவற்றை வெளிச்சம் பார்க்க அனுமதிப்போமா guys ? // நிச்சயமாக சாா்!!!
ReplyDeleteGood Morning friends
DeleteIf possible as digest
ஐான் சில்வர் ஐ கல்லறையிலிருந்து ??
ReplyDeleteதுயில்ழெப்பி மீட்டு வாருங்கள்..
பரிதாபத்திற்க்குரிய ஐீவன் ஆக இருப்பாா்
வேலை முடிந்தும் கூட இவருடைய லைசென்ஸை குடுக்க மாட்டாா்கள் உளவுத்துறையில்...
நீங்கள் குறிப்பிட்ட மாதிாி அவருடைய ஆக்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...
அப்படியே அந்த சில பல இதழ்கள் திருப்பூா் க்கு பாா்சல் அணுப்புங்கள் சாா்....
வணக்கம் சார்!
ReplyDeleteஜான் சில்வர் கதைகளை வெளியிட தயங்க வேண்டாம். அவருடைய எல்லா கதைகளும் ஹிட் கதைகள் தான். இன்னும் 2 அல்லது 3 கதைகள் தான் பாக்கி உள்ளன என்பதை நம்ப முடியவில்லை. மேத்தா காமிக்ஸில் நிறைய கதைகள் படித்ததாக ஞயாபகம்.
மனித வேட்டை போன்ற சூப்பர் ஹிட் கொடுத்த ஜான் சில்வருக்கு கண்டிப்பாக இன்னொரு வாய்ப்பு தருவதில் தப்பில்லை
ReplyDeleteபைலட் ஆக்குகிறேன் என்று சொல்லியே ஜான் சில்வரை எல்லா வேலைகளும் வாங்கி விட்டு கடைசியாக அவரை ஏமாற்றும் போது கஷ்டப்படுவது ஜான் சில்வர் மட்டுமல்ல நாமும்தான்
சார்¸ நான் ஜான்சில்வரை மறக்க வில்லலை. தங்களது காமிக்ஸ்-சில் நிறைய வெளிறு வந்த காரிக்கனுக்கே இடமில்லலை என்று கூறும் பொழுது மேத்தா காமிஸ்-ல் வெளிவந்த அதுவும் முல்லை தங்கராசன் அவர்களால் வெளியிடபட்ட இவருக்கு எங்கே இடமிருக்கும் என்றுதான் நான் ஞாபகபடுத்தவில்லை.
ReplyDeleteJegang Atq : எனது மனஸ்தாபம் ஜான் சில்வரோடு அல்லவே !!
Deleteஅதுவும் ஆசிரியரை குறைகூற ிதை கருவியாக வைத்த அந்த கர்த்தாவுக்காக ாசிரியர் மனம் திறக்கிறார்...
Deleteமுத்து காமிக்ஸ்ல் ஜான் சில்வர்: 1. விபரீத விளையாட்டு -1981
ReplyDelete2. ரவுடிக்கும்பல் -1981
3. ஆகாயக்கல்லறை + மரண ஒத்திகை -1989
4. இரத்தப்பாதை -1989
5. யுத்த வியாபாரி-1990
6. மனித வேட்டை-1990
7. கொலை வள்ளல்-1994. -பட்டியல் உதவி: கலீல் ஜி.
ஜான் சில்வர் இன் மிச்சம் உள்ள கதைகளையும் தைரியமாக வெளியிடலாம் சார். அப்படியே XIII Mystery இல் வரவிருக்கும் கால்வின் வாக்ஸ் இன் முன் கதையினையும் வெளியிட்டால் பேறு பெற்றவனாவேன்.
ReplyDelete+1
DeleteXIII பேரைக்கேட்டா சும்மா அதிருதில்ல. ! 2017 ல் XIII கு வாய்ப்பு எப்படின்னு ?
ReplyDeleteGood morning
ReplyDeleteஅதிகாலை வணக்கம்
ReplyDeleteஅந்த காலத்தில் சிறு வயதில் காமிஸ் வந்தவுடன் 5 பைசா 10 பைசா என சேர்த்து வைத்திருந்ததை கொடுத்து காமிக்ஸ் வாங்கி அதனை பாடப்புத்தகங்களுக்குள் வைத்துவீட்டுக்குத் தெரியாமல் படிக்கும் பொழுது அம்மாவிடம் மாட்டிக் கொண்டு அடிவாங்கியது ஞாபகம் வருகிறது. சிறு வயதில் இருந்த ஆர்வம் இன்றும் எனக்கு குறையவில்லலை. லார்கோ எப்படி தீடீர் பணக்காரர் ஆனாரோ அதே பொன்று தான் ஜானி நீரோ-வும் ஆனார். நீரோவுக்கு ஏற்பட்ட இடஞ்சலைப் போன்றே¸ லார்கோவிற்கும் ஆரம்பத்தில் தொந்தரவுகள் ஏற்பட்டன. ஜானி ஆரம்ப காலத்தில்ல உளவுத்துறையில் பத்தோடு பதினனொன்றாக பணிபுரியும் காலத்தில் ஒரு பெரிய சமுதாய விரோதிகளை வளைத்து பிடிக்க முக்கியமானவர்களுடன் ஆலோசித்து சமூக விரோதிகள் ஒன்று கூடும் இடத்தில் மாறு வேடங்களில் அனைவரும் கண்காணித்து¸ அவர்கள் ஒரு கட்டிடத்திற்குள் சென்று குழுமியவுடன் இவர்களும் உள்ளே நுழைவார்கள். ஆனால் சமூக விரோதிகள் அனைவரும் இவர்களுக்கு வலைவிரித்து கட்டிடத்தில் ஆங்காங்கே வெடிகளை வைத்துவிட்டு அவர்கள் அனைவரும் தப்பித்து வெளியேறி இருப்பார்கள். இந்நிகழ்வில் உளவுத்துறைக்கு பலத்த அடிவிழுந்து விடும். ஜானிதான் எதிரிகளுக்கு தகவல் கொடுத்தவர் என்று கருதுவார்கள். முடிவில் உண்மை தெரியவரும்¸
ReplyDeleteஅருமை. சுவாரசியமாக உள்ளது!
Deleteநன்றி!
Deleteஇக்கதையினை மறுபதிப்பு செய்ய ஆசிரியரை வலியுறுத்தலாம்
இந்த கதையின் பெயர் ஜானி IN லண்டன்.
Deleteஜானியை வில்லனாக கரனல் ஜாக்கப்பையே நம்ப வைத்த கரடுமுரடான வில்லனுடன் க்ளைமேக்ஸில் பனிமலையுச்சியில் மோதும் சூப்பரான க்ளைமேக்ஸ். இதே போல் ஜானி IN ஜப்பானும் கதையின் இறுதிவரை சாமுராய் வேடமிட்ட கொலைகாரன் யாரென தெரியாதவகையில் கதை நகரும்.இன்னும் தங்க விரல் மர்மம், கொலைக்கரம், மைக்ரோ அலைவரிசை 848 என நல்ல ஜானி கதைகள் நல்ல ஓவியங்களுடன் காத்து நிற்கின்றன.
மறுபதிப்பு காணவேண்டிய ஜானி கதைகள் இவை அனைத்தின் மீது ஆசிரியரின் கவனம் திரும்பட்டும்.
Delete//இக்கதையினை மறுபதிப்பு செய்ய ஆசிரியரை வலியுறுத்தலாம்//
Deleteகவலையே வேண்டாம் ! அத்தனை ஜானி கதைகளும் நிச்சயம் மறுபதிப்பாகிடும் ! பூப்போட்ட டிராயர்கள் ஏகமாய் ஸ்டாக் உள்ளன !
Super
Deleteஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி.
Deleteஅனைவருக்கும் முதலில் காலை வணக்கம். நன்றி
ReplyDelete35
ReplyDeleteDear Edi,
ReplyDeleteJohn Havoc will be a great addition to our classic reprint series. Please reprint all of his stories including his unpublished ones. Once a year one story should do the good.
Btw, knew the Back story of Mehta and MT.. but their younger kin and you being lifelong friends is indeed a revelation. Long Live your Friendship.
Best of Luck for 2017 calendar. We can count on you to make the right call in choices, like you have always done. Cheers !
P.S.: How many more unused godowns are out there with such classic relics hidden? :)
Rafiq Raja : மேத்தா நிறுவனத்திற்கும் முத்து காமிக்ஸுக்கும் தொழில்முறை உறவும் கூட உண்டு ; அவர்களது முதல் அச்சு இயந்திரம் அந்நாட்களில் நம்மிடம் வாங்கப்பட்டதே ! சின்னதொரு நகரம்தான் என்பதால் எல்லோருக்கும், எல்லோரையும் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் !
Deleteவணக்கம் சார்.
ReplyDeleteவணக்கம் நட்பூஸ்.
//வியாழன் மாலை - பிரதிகள் நான்கு + 2017 அட்டவணை உங்களைத் தேடித் புறப்படும் ! அன்றிரவே இங்கே நமது பதிவிலும் அட்டவணையினை வலையேற்றம் செய்து விடுவோம் ////.... இந்த வார்த்த கேக்க ஒரு வருசம் காத்திருந்தோம்....
வியாழன் இரவு வலைப்பதிவு அதிகம் எதிர்பார்க்கப்படும் பதிவாக இருக்க போகிறது, நிறைய F5கள் அன்று உடைய போவது உறுதி....
🙋 ME TOO
Deleteசேலம் டெக்ஸ்.!
Deleteநேற்று நீங்கள் கூறியபடியே வியாழனே அனுப்பப்படுகிறது. சந்தா அறிவிப்பும் வெளியிடப்படுகிறது.!நல்ல எடிட்டரின் மனவோட்டத்தை தெரிந்து வைத்து இருக்கீங்க.வெரிகுட் .! அப்படியே மாடஸ்டி விஷயத்திலும் நீங்கள் கணித்தது நடக்கட்டும்.!
XIII Mystery - மறுபடியுமா? எனக்கே ஞாபக மறதி வந்திடிச்சு. ஷ்ப்பா..............
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteTypical trade mark of Editor.
அன்பு ஆசிரியரே...
ReplyDeleteஜான் சில்வர் கதைகள் சிறிதும் போரடிக்காதவை.இன்றும் நிச்சயம் வெற்றி பெறும்.
ஒரு வேண்டுகோள். ஒரே ஒரு முறையாவது அந்த பழைய லயன் போல பாக்கெட் சைஸில் முயன்று பாருங்களேன்....ப்ளீஸ்
பாட்சா சார்.!!
Deleteபொடி எழத்துக்கள் தற்போது கண்ணுக்கு தெரிவதில்லை நண்பரே.! என்னைப்போன் 40+ வயதுடையவர்களுக்கு இதே பிரச்சினைதான்.நம் வட்டத்தில் 40+ வயதுடையவர்களே அதிகம்.!
தயவு செய்து பாக்கெட்ட சைஸ் போடுமாறு ஆசிரியரை வலியுறுத்த வேண்டாம்.
Deleteஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் தான் நண்பர்களே.....
Deleteஏதோ ஒரு ஏக்கம்.
ஹூம்ம்....!!!
ஏற்கனவே சார் எங்களை கிழடுகள்,தகடுகள் என கலாய்த்திருக்கிறார்.இதில் நாம கண்ணாடி மாட்டியிருக்குற விஷயம் வேற தெரிஞ்சிடுச்சி இப்போ....
Deleteஹாஹாஹா............
Deleteதற்போது மாடஸ்டியின் கழுகுமலைக்கோட்டை பாக்கெட் சைசில்தான் வருகிறது.ஆனால் பெரிய எழத்துக்கள் என்று உறுதி அளித்துள்ளார். நமக்கு புத்தகத்தின் சைசில் பிரச்சினைகள் இல்லை.பொடி எழத்துக்கள்தான் பிரச்சினை.என்னிடம் உள்ள பாக்கெட் சைஸ் புத்தகங்களை (மாடஸ்டி தவிர.!) எழ் அண்ணன் மகனுக்கு கொடுக்கலாம் என்று நினைத்துள்ளேன்!.
மாடஸ்டி சார் நான் உங்கள் அண்ணன் மகனாக இருந்திருக்க கூடாதா
Deleteஉள்ளேன் ஐயா.!
ReplyDeleteகும்பிடறேன் சாமியோவ்.!
Delete//ஆகாய கல்லறை புத்தகம் கிடைத்தது.//
ReplyDeleteஎடிட்டர் சார்.!
முன்பு வாசகர்களை தாராளமாய் குடோனுக்குள் அனுமதி அளித்து அதனால் நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்ப்ட்டதால் வாசகர்களுக்கு அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டேன்.
தற்போது எப்படி.?
ஏனென்றால் ,உங்கள் பணியாளர்களை பொறுத்தவரை காமிக்ஸ் என்பது செவ்விந்தியர்களை பொருத்த மட்டிலும் தங்கம் ஒரு மஞ்சள் உலோகம் மட்டுமே.!! அதுபோலத்த்தான் அவர்களுக்கு ,
என்னை அனுமதித்தால் நிச்சயமாக உங்கள் லிஸ்டில் வராத டைட்டில் குறைந்த பட்சம் 20 மேல் தேற்றிவிடுவேன்.
அனுமதி கிடைக்குமா சார்.???
மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : இல்லை சார் ! தற்போதைய மெயின் குடவுணில் 2012+ இதழ்கள் மட்டுமே இருப்பில் இருக்கும் ; அங்கு நம் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு. நான் குறிப்பிடும் இந்தப் பழைய இடத்தினில் அந்நாட்களது நெகட்டிவ்கள் ; பழைய ஆர்ட்ஒர்க் ; என்ற குவியலுக்குள் ஏதேனும் முந்தய இதழ்கள் கிடக்கும். அந்தப் பக்கம் நானே ஆடிக்கொரு முறைதான் போவதுண்டு !
Deleteஇந்த முறை டாபிக் ஒன்றும் இல்லையே அட்டவணை பற்றி (A B C D E)இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பற்றி சொல்வார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் லெப்டில் இன்டிகேட்டரை போட்டு ரைட்டில் சென்றதை என்னவென்று சொல்வது. பிரமாதம் அதிலும் ஜான் சில்வரை நோக்கி சென்றது.
ReplyDeleteமிக அழகான கதை தொகுப்பு இத்தனை காலம் கழித்து இப்படி யொரு கேள்வியா இந்நேரம் வெளியிட்டு இருக்க வேண்டாமா? ஏன் தாமதம் அடுத்த ஆண்டே ஏதேனும் ஒரு சந்து பொந்து பார்த்து நுழைத்து விட வேண்டியதுதான்.
பிறகு small வேண்டுக்கோள் அடுத்த முறை பராமத்து வேளை இருந்தால் எனக்கு மட்டும் ரகசியமாக தெரிவிக்கவும். ஹீ...ஹீ. ..😄😄😄😄 நன்றி
நானும் கூட வரேன்
Deleteவாருங்கள் சேர்ந்தே முடிப்போம்.வேலையை. என்ன நண்பரே நான் சொல்வது.
Deleteசார் சந்தாm for mystry உண்டா
ReplyDeleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : அட...இன்னமும் 25 எழுத்துக்கள் பாக்கியுள்ளனவே சார் ?
Delete25⁉
Delete"எனக்கு காதில் புகை வண்டி வண்டியாய் வெளியான நாட்களவை !"
ReplyDeleteஹீ ஹீ ஹீ|
முல்லை தங்கராசன் குறித்து மிக அதிகமாகப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சார். ஜான் ஹாவோக் திறமையான நாயகன். ஜென்டிலான அவர் கதைகள் நிச்சயம் வெற்றிக் கொடி நாட்டும். பாக்கியுள்ள கதைகளையும் வெளியிடுங்கள் சார். கால்வின் வாக்சுக்கும் கதையா. ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
2017 அட்டவணையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்! ஜான் சில்வர் மீண்டும் உயிருட்டும் நாளும் வந்திடாதோ? அவர் அந்நாட்களில் Spider,Archie இரும்புக்கை மாயாவிக்கு போட்டி போட்டு கொண்டு கவர்ந்த நாயகர் மறுபதிப்புக்களிலய் ஆவது ஒரு வாய்ப்பு கொடுங்கள் சார் !
ReplyDeleteXIII மர்மம் -கால்வின் வாக்ஸ் உடன் தீபாவளி ஸ்பெஷல் தயாராகி வரும் என நம்புகிறேன்!
ReplyDeleteஆனாலும் இது டூ மச் இல்லையா ? !
Deleteஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteநமது இதழ்களின் பின்புறம் நடிகர், நடிகைகள், தேசத் தலைவர்கள் (வேண்டாம் அவர்களின் படங்கள் இருந்தால் வாங்க நினைத்தவர்கள் கூட வாங்கமால் சென்று விடுவார்கள்)விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் படங்களை போட்டு உள்ளே அவர்களைப் பற்றி ஒரு பக்கச் செய்தி ஏதேனும் வந்தால். .....புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது. (இதில் எனக்கு 0.00001% கூட உடன்பாடு இல்லை. )ஆனால் விற்பனை சிறக்கும் என்றால் செய்யலாமே? ....நன்றி
Saran Selvi : விரல்நுனியில் உலகமே காத்துக் கிடக்கும் இந்த smart யுகத்தில் இவையெல்லாம் வேலைக்கு ஆகாது நண்பரே !
Delete///வெள்ளி ரிலீசுக்கு" உங்கள் மதிப்பெண்கள் என்னவாக இருக்குமோ ? என்பதுதான் எங்களது மில்லியன் டாலர் கேள்வி !///...10/10க்கு இப்பவே கொடுத்து விடுகிறேன் சார்.....
ReplyDeleteசேலம் Tex விஜயராகவன் : :-)
Deleteவிஜயன் சார், ஜான் சில்வர் கதைகளை இதுவரை படித்து இல்லை. தற்போது நண்பர்கள் அனைவரும் இவரின் கதைகள் நன்றாக இருக்கும் என சொல்லவதை கேட்கும் போது எனக்கும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது. இவரின் கதைகளை மறுபதிப்பு அல்லது புதிய கதைகளை வரும் காலம்களில் வெளி இட்டால் சந்தோஷபடுவேன்.
ReplyDeleteசினிமா கதாநாயகன் என்றால் பத்து பேரை ஒரே நேரத்தில் அடித்தது வீழ்த்துவான். அதுமாதிரி இல்லாமல் ஜான்சில்வர் போன்ற எதாதர்தமான கதாநாயகனை கதைகளில் பார்க்கும் பொழுது எனக்கு ஒருவித ஈhப்பு¸ திருப்தி உள்ளது.
Delete+2222433
DeleteJegang Atq //சினிமா கதாநாயகன் என்றால் பத்து பேரை ஒரே நேரத்தில் அடித்தது வீழ்த்துவான். அதுமாதிரி இல்லாமல் ஜான்சில்வர் போன்ற எதாதர்தமான கதாநாயகனை கதைகளில் பார்க்கும் பொழுது எனக்கு ஒருவித ஈhப்பு¸ திருப்தி உள்ளது.//
Deleteநிஜமே ! அதுமட்டுமன்றி - ஒவ்வொரு கதை முடிவிலும் நாயகன் மீது ஒருவிதப் பரிதாபம் எழுவது கண்கூடு ! "நார்மல் வாழ்கைக்குத் திரும்பிட அனுமதியுங்களேன்" - என சில்வர் ஒவ்வொருமுறை கோருவதும் அவரை நமக்கு நெருக்கமானவராக்கிடுதோ ?
பரணி!
Deleteஜான் சில்வர் மறுபடியும் வருகின்றாரா ..அருமை அருமை..அவருடைய கதைகள் அளவில் சிறியவை என்பதால் மும்மூணு கதைகளாய்ப் போட்டுத் தாக்குங்கள் ..ஹேய் போட்டு தாக்கு ..போட்டு தாக்கு ...
ReplyDelete// அளவில் சிறியவை என்பதால் மும்மூணு கதைகளாய்ப் போட்டுத் தாக்குங்கள். //
Deleteஇதனை சந்தோசமாக வழி மொழிகிறேன் :-)
ஜான் சில்வர், சார்லி, ரிப்கெர்பி, விங்கமான்டர் ஜார்ஜ், காரிகன் இவர்கள் எல்லோரும் இணைந்த ஒரே குண்டு புத்தகம் முத்து மினி காமிக்ஸ் சைசில்..?
Deleteஏற்கனவே ஜான் சில்வர் மீது ஆசிரியரின் பார்வை விழுந்து விட்டது. தரமான ஓவியங்களுடன் வெளிவந்த ரிப்கெர்பி கதைகளின் மீதும் காரிக்கன் கதைகளின் மீதும் ஆசிரியரின் கடைகண் பார்வை விழட்டும்.
Deleteஎனக்கென்னமோ 2017 காமிக்ஸ் அட்டவணையில் ஜான் சில்வரும் இடம்பெற்றிருப்பார் என்றே நினைக்க தோன்றுகிறது. கரெக்டுதானே விஜயன் சார்:-)
ReplyDeleteDr.Sundar,Salem. : குருவி உட்கார்ந்துள்ளது சார் ; பனம்பழம் விழவும் செய்யலாம் ; இல்லாதும் போகலாம் !
Deleteஎல்லா ஐஆனி பனம்பழங்களும் விழட்டுமே சார்
Delete//MV சார் - நீங்க உரக்கப் புலம்புறீங்க ; நான் உள்ளாற புலம்புறேன் !! வேற்றுமை அவ்வளவே !!//./....ஹா...ஹா...
ReplyDeleteநண்பர்களுக்கும், எடிட்டர்களுக்கும் ஞாயிறு வணக்கம்!
ReplyDeleteஜான் சில்வரை கூட்டணியில் சேர்த்துக்கிட்டு அடுத்த வருசம் போல ஒரு 'க்ளாசிக் டிடெக்டிவ் ஸ்பெஷல்' ஏற்பாடு பண்ணினா நாங்க வேணாம்னா சொல்லப்போறோம்? எடிட்டர் சமூகம் யோசிக்கணும்.
அட்டவணைக்காண்டி இன்னும் சிலபல நாட்கள் காத்திருக்கணுமா... ஹூம்! அந்த ஃபெவிக்கால் பெரியசாமியை நினைச்சாலே... கிர்ர்ர்ர்ர்ர்...
+1
ReplyDelete**** கேப்ஷன் போட்டிக்காண்டி(?) *****
ReplyDeleteXIII : உம்ம்மா... ம்ம்ப்ப்... ப்பச்சக்
ஒற்றை ஜடை அம்முணி : ம்ப்ப்...ம்ப்ப்...
( மேற்கண்ட கேப்ஷனைப் பாராட்டி, பழைய குடோனில் கண்டெடுக்கப்பட்ட அந்த ஜான் சில்வர் புத்தகம் ஒன்று சுவீட்டுடன் அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! ஹிஹி!)
Erode VIJAY : போட்டிக்காண்டியோ... ..லூட்டிக்காண்டியோ இல்லாதும் கடமைக்காண்டி எழுதப்படும் கேப்ஷன்களுக்கு "கடமை கண்ணாயிரம்" என்ற கவுரவப் பட்டம் மட்டுமே உண்டு !
Deleteஆஹா....
Deleteகேப்ஷன் எழுதுபவர்கள் இனி எனக்கு இன்னொரு பேர் இருக்குன்னு பெருமையாக சொல்லிக்கலாம்...!!
A கப்பட்ட எதிர்பார்ப்போடு இருக்கும் வேளையில் ஒரு A கிலாஸ் படத்தை A ன் வெளியிட்டீ ர்கள் என்று தெரியவில்லை.எனினும் என்னுடைய A கோபித்த பாராட்டு..இது போல இன்னும் A ரா ள பாராட்டு வாங்க வாழ்த்துக்கள்
ReplyDeleteVETTUKILI VEERAIYAN : A யப்பா......ஓவியரும், கதாசிரியரும் நம்ம AAளுக்கு இன்னும் என்னென்ன Aதகளங்களைத் திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு கோடி காட்ட இந்த Aர்ட்ஒர்க் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !!
Deleteநான் குடிச்சுட்டு வல்லேன்னு இப்பவாச்சும் நம்புறியா ...பச்சக்
ReplyDeleteஉங்கப்பா பெவிகால் கம்பெனி ஓனரோ ..பசை நல்லா வேலை செய்யுதே ..
ReplyDeleteSema. ROFL.
Deleteஇது கேப்ஷன் போட்டிக்கென்றால் அடிக்கவருவார்கள் என்பதால் ச்ச்சும்மா விளையாட்டுக்கு....
ReplyDeleteXIII போல் மாறுவேடம் பூண்டிருப்பவர் நம்ம ஃபெவிகால் பெரியசாமியேதான்!!!
அவரின் மைண்ட்வாய்ஸ்..
ஃபெவிகால் பெ.சா: அட்டவணை கேட்டு சிவகாசிக்கே வந்து தொல்லை கொடுக்கும் இம்சை அரசர்களிடமிருந்து தப்பிக்க வாயில் ஃபெவிகால் பூசி XIII போல் வேஷம்போட்ட நான் ஞாபகமில்லாமல் இந்த பெண்ணிடம் ரொமான்ஸ் பண்ணினது வம்பா போச்சே! சீனியர் எடிட்டர் வரும் நேரம் பார்த்து இப்படி ரெண்டுபேர் வாயும் பிரிக்க முடியாமல் ஒட்டிக் கிடுச்சே...!!!
ஒற்றைப் பின்னல் ஓவியத்தின்
மைண்ட்வாய்ஸ்:
பாவி மனுஷா... நானும் உன்னைப்போல ஆணேதான். இப்படி பெண் வேஷம்போட்டு ரொமான்ஸ் பண்ணியாச்சும் அட்டவணையை வாங்கிடலாம்னு பாத்தாக்கா நீ ஃபெவிகால் பூச்சுன்னு சொன்னதெல்லாம் சும்மான்னு நெனச்சா உண்மையிலே பூசியிருக்கியே...!
நெலம இவ்வளவு மோசமா பூடுச்சே!!
ஹா ஹா ஹா செம்ம . சூப்பர் AT.RAJAN சார் .
Deleteஎடிட்டர் சார்.
ReplyDeleteஅடுத்த ஆண்டுக்கான ட்ரைலர் புத்தகம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை இம்முறை மாற்ற முடியுமா என்று பார்க்க வேண்டுகிறேன். அது புத்தகம் வாங்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டியது மிக முக்கியம்.
அடுத்த மாத நான்கு புத்தகங்களில் டெக்ஸ் எல்லாராலும் நேசிக்கப்படுபவர் என்பதனால் கடைகளுக்கு அனுப்பும் பிரதியில் டெக்ஸ் புத்தகத்துடன் பின் அடித்து ட்ரைலர் புத்தகத்தை வழங்கினால் நல்லது. தனியே உள்ளே வைத்து அனுப்பினால் கடைக்காரர் ஞாபகமாக கொடுத்தால்தான் உண்டு. அல்லது தவறிப்போகவும் வாய்ப்புள்ளதால் டெக்ஸ் புத்தகத்துடன் பின் அடிக்கப்பட்டு வழங்கிட வேண்டுகிறேன்.
AT Rajan : கடந்த 2 ஆண்டுகளுமே சந்தாதாரர்கள் மாத்திரமின்றி - கடைகளில் வாங்குவோருக்கும் அட்டவணைகள் வழங்கியுள்ளோம் ! ஆனால் அதைக் கடைக்காரர்கள் தந்தார்களா ? இல்லையா ? என்பது தெரியவில்லை !
Deleteஅட்டவணை ஒரு சைஸ்....டெக்ஸ் இதழ் வேறொரு சைஸ் எனும் போது உள்ளே வைத்துப் பின் அடிப்பது சிரமம் ! தனி இதழாய் எப்போதும் போலவே அனுப்புவோம் - அக்டோபர் இதழ்களுடன் ! "கடைகளில் பெற்றுக் கொள்ளுங்கள்" என அட்டையிலும் ஒரு குறிப்பிருக்கும் !
நிறைய பேருக்கு கிடைக்கவில்லை என ஏற்கனவே கேள்விபட்டுள்ளேன் சார். 1972 முதல் நமது காமிக்ஸை வாசிக்கும் நண்பர் ஒருவர் தற்சமயம் சென்னையில் வசிக்கிறார். அவர் நமது இதழ்களைப் கடையில் மட்டுமே வாங்குபவர். அவருக்கு 2016 ம் ஆண்டிற்கான அட்டவணையை சென்ற வாரம் நான் காட்டியபிறகே தெரிகிறது. பின் அடிக்க வாய்ப்பில்லாததால் டெக்ஸ் புத்தகத்தை மட்டும் மெல்லிய பாலிதீன் கவரில் போட்டு அதனுடன் ட்ரைலர் புத்தகத்தை வைத்து அனுப்பலாமே சார். வார இதழ்கள் கூட சமயத்தில் இலவசங்களை வழங்குகையில் இம்முறையை பின்பற்றுகின்றன.கடைகளுக்கு அனுப்பும் பிரதிகளுக்கு மட்டும் இம்முறையை செய்யலாமே சார். ஒரு 10சதவிகிதம் பேரை இதனால் சந்தாவிற்குள் நுழைக்க முடிந்தால் நல்லதுதானே சார். இது ஒரு வேண்டுகோள் மட்டுமே சார்.
Delete'ஆகாயக் கல்லறை' அட்டைப்படத்தில் ஏஜென்ட் ஜான் சில்வர் ஏன் பாவாடைக்கு பெல்ட் கட்டியிருக்கார்னு தெரியலையே...? ஏதாச்சும் மாறுவேடத்துல போயி துப்பறியறாரோ என்னவோ? ;)
ReplyDeleteஒரு அசப்புல பார்த்தா, பீர் பேரலுக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரியும் இருக்கு! ;)
ஜான் சில்வர் ஒரு விமானம் ஓட்டுபவர் என்பதால் பாராசூட்டிலேயே பேண்ட் தைத்து போட்டிருக்கிறார். அவசரத்துக்கு விமானத்திலிருந்து அப்படியே குதித்து விடலாம் இல்லையா?
DeleteErode VIJAY : "பாவாடைகாந்த்" ஸ்டைல் அன்றைக்கு நடைமுறையில் இருந்ததோ - என்னவோ ?! நமது ஓவியரிடம்தான் கேட்டுப் பார்க்க வேண்டும் !
Delete//ஜான் சில்வர் ஏன் பாவாடைக்கு பெல்ட் கட்டியிருக்கார்னு தெரியலையே...? //
Deletegood question :D :D :D
எடிட்டரின் மலரும் நினைவுகள் என்றுமே சந்தோஷம்தான்.!
ReplyDeleteமாடஸ்டி வெங்கடேஸ்வரன் : ஓவர் செண்டிமெண்ட் சீன்லாம் தமிழ் சினிமாக்களிலேயே இப்போது வேலைக்கு ஆவதில்லை எனும் பொழுது நாமும் அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது என்று சிலபல காலம் முன்பாகவே தீர்மானித்து விட்டேன் சார் ! ஆனால் எப்போதாவது அதற்கொரு விதிவிலக்கு அமைந்தால் தவறில்லை என்று தோன்றியது !
Deleteஉங்கள் மலரும் நினைவுகள் என்றுமே போரடித்தது இல்லை.காமிக்ஸ் மீது உள்ள அபரிதமான ஆர்வம் காரணமாகவும்.,உங்கள் நினைவுகள் எப்போதும் காமிக்ஸை சார்ந்து இருப்பதால்.திகட்டுவதே இல்லை.
Deleteமேலும் தொலைதொடரபுகள் இல்லாத காலகட்டத்தில் .,தன்னந்தனியே தனித்தீவில் மாட்டிக்கொண்ட காமிக்ஸ் ரசனை உணர்வுக்கு உங்களது ஹாட்லைன் மட்டுமே கலங்கரை விளக்காக இருந்தது.மேலும் சிறு வயதில் மிக பிராமாண்டமாக தெரிந்த லயன் முத்து நிறுவனம், எனது மூத்த சகோதரர் வயதுடைய ஒருவரால் உருவாக்கப்பட்டது ,திறம்பட நடத்தப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளும்போது ஆச்சர்யங்களுக்கும் வியப்புகளுக்கும் எல்லையே இல்லை.அது இன்றளவும் கொஞ்சம் கூட குறைந்ததாக எனக்கு தோன்றவில்லை.
நமது தலைவரும் செயலாளரும் சி.சி.வ.வரவில்லை என்றால் ஏன் கொதித்து எழகிறார்கள் என்று இப்போதுதான் லேட்டாக புரிகிறது.நான் ஒரு ட்யூப்லைட்
Delete# நீங்கள் திகிலில் இருண்ட ஞாயிறு போன்ற திகில் தொடரை ஆரம்பித்த வேகத்திலே அப்படியே விட்டது.!
# சித்திரம் வரைவது எப்படி.,காமிக்ஸ் உருவானது எப்படி என்று அழகாய் விளக்கிய கட்டுரை எப்படி நின்றது என்று தெரியவில்லை.!
# கொடூர வனத்தில் டெக்ஸில் வந்த ஆஸ்டர்லிட்ஜ் நாசி முகாம் பற்றி எழதியது நைல் நதிபோல் கடைசியில் காணமல் போய்விட்டது.
வடிவேல் வின்னர் படத்தில் கூறுவரே.
" ஓப்பனிங் எலிலாம் நல்லாத்தான் இருக்கு பினிஷிங் சரியில்லையேப்பா " என்பது மாதிரி ஆகாமல் சி.சி.வ.தொடருக்கு இந்த அவப்பெயர் வரமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு.
நான் 1990 ல் கல்லூரி படிப்புக்காக மதுரை சென்றபோது காமிக்ஸ் படிப்பதை விட்டேன்.அதன் பின் படிப்பு ,வேலை,கல்யாணம்,குழந்தை என்று வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு கரை ஒதுங்கிய போது2003 ல் மீள் வருகை.அதுவரை எனக்கு காமிக்ஸ் இருண்ட காலம்தான்.என் வயதுடைய அனைவரும் என் சூழ்நிலையில் இருந்துருக்கக்கூடும்.! எது எப்படியோ
சிங்கத்தின் சிறுவயதில் ஆரமித்த கெத்தில் எப்படிச்சென்றதோ அப்படியே இன்றுவரை நடந்ததை உங்கள் பார்வையில் சொல்லி சிறப்பாக கொண்டு செல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு.!
திரிசங்கு சொர்ங்கம் இனி எந்த தொடருக்கும் வேண்டாவ்.
விஜயன் சார், ஒரு பழைய விண்ணப்பம். இனிமேலாவது மாதம் மற்றும் வருடத்தினை புத்தகங்களில் போடலாமே!, முன்பு தேதி போடதற்கான காரணத்தை சொல்லி இருந்தீர்கள். ஆனால் தற்பொழுது நிலைமை மாறியுள்ளதால் பரிசிலீக்கலாமே.
ReplyDeleteMakesh : "எப்போதும் படிக்கலாம்" என்பதே நமது இதழ்களின் தனித்தன்மை ! கடைகளில் நமது இதழ்களை ஸ்டாக் வைத்திருந்து விற்றிடும் விற்பனையாளர்களும் இதன்காரணமாய் அந்தந்த மாதமே விற்காத இதழ்களைத் திருப்பி அனுப்பாது - தைரியமாய்க் கையில் வைத்துள்ளனர் ; விற்றும் வருகின்றனர் !
Deleteதேதி..மாதம் என்று குறிப்பிடத் துவங்கினால் - casual readers பழசை புறம்தள்ளக் கூடும் வாய்ப்புகளுண்டு எனும் போது - நாமே நமக்கான வாயில்களை அடைத்துக் கொள்வானேன் ?
முன்பு சில புத்தகங்களில், ஹாட் லைனுடன் வருடம் குறிப்பிடப்பட்டிருப்பதுண்டு. அதுபோல, எங்காவது உள்ளே ஓரிடத்தில் சிறிய அளவில், சட்டென்று தெரியா வகையில் - பின்னாட்களின் தேடலுக்காக -வருடம், மாதம் - குறிப்பிடலாமே?
Deleteபல வருடங்களுக்கு முன் , ஐம்பது வயது மதிக்கதக்க சீனியர் காமிக்ஸ் வாசகர் ஒருவர் , அவருக்கு சொந்தமாகும் காமிக்ஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அவரது கையொப்பத்துடன் அன்றைய தேதி மாதம் வருடங்களையும் தெளிவாக எழதினார். அவருடைய செயல் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.அன்றைய நாளில் இருந்து நானும் அப்படியே சீனியர் வாசகரின் வழிமுறையை பின்பற்றி வருகிறேன்.!
Delete//Makesh : "எப்போதும் படிக்கலாம்" என்பதே நமது இதழ்களின் தனித்தன்மை ! கடைகளில் நமது இதழ்களை ஸ்டாக் வைத்திருந்து விற்றிடும் விற்பனையாளர்களும் இதன்காரணமாய் அந்தந்த மாதமே விற்காத இதழ்களைத் திருப்பி அனுப்பாது - தைரியமாய்க் கையில் வைத்துள்ளனர் ; விற்றும் வருகின்றனர் ! //
Delete:) good to know confidence is increasing we are still taping just a well near the ocean i guess.
ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteசென்றப்பதிவில் ஒரு நண்பருக்கு பதில் சொன்னபோது 'சந்தா கட்ட முடியாதவர்களையும் சேர்த்து எது செய்தாலும் ok என்றீர்கள்.உங்கள் நல்ல மனதிற்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் வலி இல்லாமல் உயிர் ஏது?துன்பம் இல்லாமல் இன்பம் ஏது?எல்லோரும் பயன் பெற ஒரு யோசனை பிடித்து இருந்தால் செயல் படுத்தலாமே!.....
அறிவிப்பு
____________
2017 ஜனவரி TEX இதழுடன் வரும் ஆல்பத்தை பத்திரப்படுத்தி (சென்ற நூற்றாண்டில் செய்தது போல்)ஒவ்வொரு மாதமும் ஏதேனும் 2 புத்தகங்களில் வரும் ஹீரோக்களின் படங்களை (மொத்தம் 24 ஹீரோ)ஒட்டி அனுப்புங்கள்.(ஆசிரியருக்கு பக்கங்களை சேதப்படுத்தாமல் ஹீரோ படங்களை கொடுக்கவும். )
2018 ல் மினிலயனில் வந்த அலிபாபா&முஸ்தபா கலர் கலெக்ஷன்(அல்லது)
சுஸ்கி&விஸ்கி கலர் கலெக்ஷன்(அல்லது)
பாக்கெட் சைஸில் வந்த Tex கலர் கலெக்ஷன் இப்படி ஏதாவது ஒன்றில்....
1.ஹீரோக்கள் படங்களை அனுப்பியவர்களுக்கு 50%(விலையில்)
2.அதில் சந்தா செலுத்தியவர்கள் இருந்தால் 75% discount
(இதில் உங்கள் தரப்பில் நஷ்டம் வராமல் என்ன செய்ய முடியுமோ பார்த்து செய்யுங்கள். )
ஒரு நல்ல முடிவாக எடுத்து காமிக்ஸை இன்னும் சிறந்த வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வீர்கள் என்று ஆசைப் படுகிறேன். நன்றி
Saran Selvi : "சென்ற நூற்றாண்டுச் சமாச்சாரம்" என்று நீங்களே சொல்லி விட்டீர்களே சார் ; அதனை இன்றைய தருணத்துக்குப் பொருத்திப் பார்ப்பானேன் ? அன்றைக்கு அரைநிஜார் அணிந்திருந்தோர் இன்றைக்கு அரை சதம் நோக்கிப் பயணிக்கும் அணியில் உள்ளனர் !
DeleteAnd இன்றைய IPhone தலைமுறையோ இந்த ஜிகினா வேலைகளுக்கு மயங்கும் என்று மெய்யாகவே எதிர்பார்க்கிறீர்களா ? அந்த gimmicks காலகட்டத்தைக் கடந்து ரொம்பத் தொலைவு பயணித்துவிட்டோம் அல்லவா ? அதுமட்டுமன்றி 50% discount ; 75% discount என்றெல்லாம் நான் வாக்குறுதி அளித்தால் - ஈமு கோழிப்பண்ணை கதையாகிப் போய்விடும் !!
கவலை வேண்டாம் - சின்னதொரு ஏற்பாடு இந்தாண்டு நடைமுறைக்கு வருகிறது - சந்தாதாரர்களை கெளரவிக்கும் விதமாய் !
ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
Delete///கவலை வேண்டாம் - சின்னதொரு ஏற்பாடு இந்தாண்டு நடைமுறைக்கு வருகிறது - சந்தாதாரர்களை கெளரவிக்கும் விதமாய் !///...உய்..உய்...உய்..
Deleteஇதுவும் இன்னொரு சஸ்பென்சா....!!எத்தன???
ஆசிரியரே சூப்பர்
DeleteThis comment has been removed by the author.
Deleteசந்தாதாரரை கெளரவிக்கும் விதமாய்-----
Deleteவரவேற்கிறேன் சார்
ஆஹா .. அடுத்த வாரம் முழுவதும் எனது யூனிட்ட்டின் ISO 9000 ஆடிட் பொருட்டு ஒரு வித anxiety ஒரு பக்கம் .. இன்னொரு பக்கம் நமது catalog 2017 குறித்த anxiety .. ம்ம்ம் ..
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteசென்றப்பதிவில் சொல்லப்பட்ட ரூ.5000/- பரிசுப்போட்டி ஆல்பம் நினைவுகள்…
ReplyDelete1990ம் ஆண்டு…. ஆசிரியர் ரூ.5000/- பரிசுப் போட்டியை எமனுக்கு எமன் இதழில் அறிவித்திருந்தார். வழக்கம் போல முதலில் காமிக்ஸை எனக்கு அறிமுகம் செய்திட்ட என் நண்பன் புத்தகம் வாங்கி அதில் இணைக்கப்பட்ட குட்டி ஆல்பத்தை என்னிடம் காட்டி வெறுப்பேத்த, நானும் என் அம்மாவிடம் ரூ.2.50/- காசு வாங்கி இந்த இதழை எப்படியோ வாங்கினேன். எப்படியும் போட்டியில் கலந்து கொள்வது என தீர்மானித்து ஒவ்வொரு படமாக ஒட்டவும் செய்தேன்.
மாதங்கள் கடந்தன, எல்லா இதழ்களும் வாங்க இயலவில்லை என்றாலும் எப்படியும் எல்லா படத்தையும் கலெக்ட் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும், மறுபக்கம், 1990ம் ஆண்டு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஈடுசெய்ய இயலா இழப்பு காமிக்ஸ் சேகரிப்பை சற்று மட்டுப்படுத்தியது… என்றாலும் கடகடவென்று போட்டியும் முடிந்து விரைவில் பரிசு பெற்றோர் விபரமும் வந்தது. என் நண்பனும் அனுப்பியிருப்பான் என்று நினைக்கிறேன், ஆனால் வெற்றி பெற்றது 10 பேர் மாத்திரமே. அதில் ஒருவர் எங்கள் அயனாவரம் பகுதியை சேர்ந்த, சக்தி என்பவர்.
அப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பொதுவாக அப்போதே காமிக்ஸ் படிப்பவரை அவ்வளவு சுலபமாக பார்த்திட இயலாது. எனவே அந்த சக்தியை தேடி விலாசத்தில் குறிப்பிட்டுள்ள அயனாவரம் மேட்டுத்தெருவெல்லாம் தேடினேன், சக்தியை கண்டுபிடிக்க முடியவில்லை.
சில மாதங்கள் பிறகு வேறு ஒரு நண்பன் தன் வீட்டில் குடியிருக்கும் காமிக்ஸ் சேகரிப்பாளர் சக்தியை பற்றி என்னிடம் சொல்ல, எனக்கோ போட்டியில் வெற்றி பெற்ற சக்தியாகத் தானிருக்கவேண்டும் என தோன்றியது. அந்த சக்தியை சந்தித்த போது, அது ஊர்ஜிதமானது.
போட்டியில் தான் வென்றது உண்மைதான் என்றும் ஆனால் பரிசு தொகை அதுவரை தன்னை வந்து சேரவில்லை என்றும் சொன்னார். என்னைப்போலவே சக்தியும் தந்தையை இழந்தவர் என்றும், தன் ஏழைத்தாய் வீட்டு வேலை செய்து தன்னை படிக்க வைக்கிறார் என்றும், தானும் அவ்வப்போது பகுதிநேரமாக வேலை செய்கிறார் என்பதும் அவர் மூலமாக சொல்ல கேட்டேன், தன்னுடைய ஓட்டு வீட்டிற்குள் கூப்பிட்டு ஒரு இரும்பு பெட்டியை திறந்து தன் காமிக்ஸ் சேகரிப்பை காண்பித்தார். வாயடைத்து தான் போனேன். லயன், திகில், மினி லயன், முத்து என எல்லா புத்தகமும், அட்டைப்படத்தோடு இருந்தது. விலைக்கு கிடைக்குமா என்று கேட்டேன், திட்டவட்டமாக கிடையாது என்றார்.
வேண்டுமானால் Exchange பண்ணிக்கலாம் என்றார்.
அந்த சமயத்தில் “சதிவலை” புத்தகம் மிகவும் அரிதான ஒரு கலெக்டர் புத்தகமாகயிருந்தது. அது அவரிடம் 2 பிரதிகள் இருந்தது என் நல்ல நேரம், ஆனால் exchange க்காக நான் 3 புத்தகங்கள் (டிராகன் நகரம் உட்பட என நினைக்கிறேன்) கொடுக்க வேண்டும் கறாராக சொன்னார். இப்படித்தான் முதல் முதலாக டென்னிஸ் துப்பறிவாளர் ஜான் மாஸ்டரின் முதல் சாகசமான “சதி வலை”யை வாங்கினேன். ஆசிரியர் போட்டி எனக்கு நேரிடையாக நன்மை பயக்காவிட்டாலும், இப்படி சக்தி மூலமாக ஒரு புத்தகம் கிடைக்க வழி செய்திட்டது.
அதன் பிறகு அந்த சக்தியை சில முறை பாத்திருக்கிறேன் என்றாலும் ஒரு கட்டத்தில் தொடர்பு முற்றிலும் அறுந்து போய்விட்டது. என் நண்பன் சொன்னான் அந்த சக்தி பின்பு மேலும் பணத்திற்காக மிகவும் சிரமப்பட்டு தன் படிப்பை தொடர தன் முழு சேகரிப்பையும் விற்றுவிட்டதாக சொன்னான். அது உண்மைதான் என்று பின்பு எனக்கும் தெரிந்தது, சக்தியின் ஒரு புத்தகமான "எமனோடு ஒரு யுத்தம்” 7வது ஆண்டு மலர், சக்தியின் பெயர் உடன், அழகாக பைண்டு செய்யப்பட்ட புத்தகம், எனக்கு ஒரு பழைய கடையில் விலைக்கு கிடைத்தது.
வெறும் காமிக்ஸ் புத்தகம் தான் ஆனால் பெற்றுக்கொள்ள எத்தனையோ பிரயத்தனம் செய்தும் ஒரு கட்டத்தில் சூழ்நிலை காரணமாக இழக்க நேரிடும் போது எவ்வளவு வேதனை தரும் என்று நண்பனிடம் கொடுத்து வைத்த 50க்கும் மேற்பட்ட இதழ்களை இழந்திட்ட எனக்கும் தெரியும். சக்திப்போல என்னைப்போல காமிக்ஸ் சேகரிப்புகளை இழந்தவர்கள் நிறையப்பேர் லிஸ்டில் இருப்பார்கள்…
அதனால் தான் தங்களின் இள வயதின் nastolgia உணர்வுக்காக அதே பழைய சித்திரதரத்தோடு, அதே அட்டைப்படத்தோடு மறுபதிப்பு வாசகர்கள் கேட்கிறார்கள். ஆனால் அந்த வேண்டு கோளின் பின்னே எத்தனை சோகமான இழப்புகள் இருக்குமென யாருக்கும் தெரியாது. யாரும் மொக்கை கதைகளை மறுபதிப்பாக கேட்கவில்லையே. இன்றைக்கு பழைய இதழ்களின் விலைகள் எவரும் வாங்கமுடியாத அளவுக்கு தறிகெட்டு போய்விட்டது.
மறுப்பதிப்பு மாத்திரமே அவர்களுக்கு முன் நிற்கும் ஓரே சாய்ஸ்.
Interesting.
DeleteThanq Parani...
Deleteஅட்டகாசம் உதய்...லேட்டா காமிக்ஸ் உலகம் வந்த என்னை போன்ற நண்பர்கள் உங்களுடன் பயணித்த உணர்வு. தொடருங்கள், அவ்வப்போது...
DeleteThis comment has been removed by the author.
Deleteநண்பரே . வலியுடன் கூடிய உங்களின் சிறு வயது ஞாபகங்கள் அருமையாக உள்ளது . நானும் காமிக்ஸ் சேகரிப்பை சிறு வயதினில் இழந்தவன்தான் .அந்த வலி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது .
Deleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள், விஜயராகவன்.
Deleteநண்பர்கள் விருப்பம் போல நிச்சயம் என் அனுபவத்தை போர் அடிக்காமல் பகிரவே விரும்புகிறேன்.
நன்றிகள் திருச்செல்வம் பிரபாநாத் நண்பரே, நானும் அவ்வப்போது மற்றவர்கள் அனுபவம் அறிந்த போது, என்னை விட காமிக்ஸ் இழந்தவர்களே அதிகம் என புரிந்து கொண்டேன்...
Deleteநம்மில் அநேகர் புதிய கதைகளை விட பழைவற்றில் தான் புதையல்களை அதிகம் தேடுகிறோம், உண்மைதானே..?
நண்பர் உதய் அவர்களே ...உங்கள் நினைவுகள் எனது பழைய நினைவுகளையும் கிளறி விட்டது ..எனக்கும் இதே போல சில அனுபவங்கள் ...:-)
DeleteUday super.....touching
Delete:)
Deletesuper Udhay.
நான் படிக்க ஆரம்பித்தது 1990 அப்பறம் தான். முதலில் படித்தது "கன்னி திவில் மாயாவி" அல்லது ராணி கமிக்ஸ் வந்த "ரிவால்வர் ரிட்டா" வா என்று தெளிவாக தெரியவில்லை.
Deleteஆரம்ப காலத்தில் லயன் முத்து காமிக்ஸ் திருச்சி சரியாக கிடைக்கவில்லை. எப்பொழுதாவது எதாவது ஓரு கடையில் தொங்கும் LM காமிக்ஸ் பார்த்து வங்கினால்தான் உண்டு. அதே கடையில் மறுபடியும் அடுத்த மாதம் LM காமிக்ஸ் வராது.
அப்படி எப்பொழுதாவது வங்கி சேர்த்த காமிக்ஸ் கலெக்ஷன் இன்று ஒன்று கூட இல்லை."தங்க கல்லறை" மட்டும் பூதம் பாதுகாக்க கிற மாதிரி இன்றும் பாதுகாத்து வருகிறேன்.
@பரணிதரன்,மிக்க நன்றி... ஆசிரியர் சென்ற பதிவில் இதை பற்றி சொன்னதால் பால்யத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.
Deleteஉங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்....
@பொன்ராஜ், மிக்க நன்றி!
Delete@சதீஷ், படித்தமைக்கு மிக்க நன்றி
@கணேஷ், நானும் உங்களை போன்றே தான்... வெகு சொற்ப சேமிப்பே கைவசம் வைத்துள்ளேன்....
@பரணிதரன்,மிக்க நன்றி... ஆசிரியர் சென்ற பதிவில் இதை பற்றி சொன்னதால் பால்யத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.
Deleteஉங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்....
உதய் சார் ...எனது அனுபவத்தை எல்லாம் ஏற்கனவே இங்கு ஆரம்பத்திலியே பகிர்ந்து தள்ளி விட்டேன் ...எனது ஆனாலும் சரி எனது அனுபவத்தை அறிந்து கொள்ள தான் வேண்டுமெனில் நானே மறந்து போன ...
Deletebaraniwithcomics.blogspot.com
என்ற தளத்தில் சென்றால் அறிந்து கொள்ளலாம் :-))
//baraniwithcomics.blogspot.com
Deleteஎன்ற தளத்தில் சென்றால் அறிந்து கொள்ளலாம் :-))///---- என்ன உங்களுக்கு தனி தளமா? அதில் மலரும் நினைவுகளா???..சூப்பரு...
"கடுவன் பூனை " என்ற பட்டபெயருடன் அமேசான் காட்ல 007ன் ராணி காமிக்ஸ் கதை ஒன்றின் வில்லன், தன் மாளிகை நடக்கும் கார்னிவல் விருந்தில் கலந்துகொள்ள ஜேம்சுக்கும்,,அவர் காதலிக்கும் அழைப்பு அனுப்பி இருப்பான்.007 பத்திரிகை நிருபராக இருப்பார்.
கார்னிவல் கூட்டாளியை தேர்ந்தெடுக்க பொம்மை துப்பாக்கியில் சுடுவாங்க. 007ன் காதலிக்குரிய எண்"ஐ ஜேம்ஸ் சுட, அது வீழாது. வில்லலன் சொல்வான்,"ஒரு பத்திரிகை நிருபரால் சரிவர சுட இயலாதுதான்.மறுமுறை சுடுங்கள்".என,
உடனே தன் கோட்டில் உள்ள கைத்துப்பாக்கியை எடுத்து குறிதவறாது அந்த நம்பரை சுடுவார் 007. வியந்துபோன வில்லன்,
"என்ன பத்திரிகை நிருபரின் கையில் துப்பாக்கியா, அதுவும் குறிதவறாது சுடுகிறாரா" என பேசுவான்.
அந்த வில்லன் பூனை நிலையில் இப்போது நாங்கள்....
(நாங்களும் பழைய காமிக்ஸ் படித்து இருக்கம்ல...)
கதையின் பெயர் சீன உளவாளி
Deleteடெக்ஸ் ...தனிதளமா ன்னு ஷட்டரை சாத்தி பல வருசமாகி இப்ப கேக்குறீங்களே ...க்கும்...:-((
Deleteநண்பர் செந்தில் சத்யா தாங்களும் ..நமது நட்பு வட்டாரங்களும் அங்கு நலமா ...நான் இங்கு நலமே ...
Deleteஇந்த வாரமாவது நமது நட்புகளை சந்திக்க வந்து விடுவேன் என்றே நம்புகிறேன் ..
என்றென்றும் அன்புடன் ..
நானே ...
யாவரும் நலமே
Deleteஸ்பைடர் படை...
ReplyDeleteசைத்தான் சாம்ராஜ்யம் டெக்ஸ்
மறு பதிப்பில் சேர்த்து விடுங்கள்
சார் ஜேசனுக்காக பிரத்யேக மை ...மேலும் ஆர்வத்தை கிளப்புகிறது...சென்றவார பக்கமே அதகளபடுத்திய நிலையில்....இந்தவார ம் இன்னும் ஐந்தேநாட்கள்...அடுத்தவருடம் முழுதும் நம் கையில்....... ஸ்பைடர் சோப்ரா ...சோப்புக்குமிழிகள்......1980கள்.......பின்னோக்கினாலும் மகிழ்ச்சி....முன்னோக்கினாலும் மகிழ்ச்சி.....q பிரான்ஞ் ஜானியின் கதை விமான ோட்டிகள் மேல் ஆர்வம் பிறக்க காரணம்.....அதிலும்ஜானி பைலட் லைசென்ஸை மீட்க மாட்டாரா என ேங்கிய நாட்கள் அதிகம்.....நீங்க ஏதோ ஏமாற்றியது போல கதை கிளப்பியவர்களுக்கான பதில்....சூரியன் சூரியன்தான்.....
ReplyDeleteஜானியின் கதைகளை உடனடையாக களமிறக்குங்கள்...பழய கதைகளை மீட்க முடிந்தால் அட்டகாசம்..அசோக் காமிக்ஸ் ஜானி கதைகள் இல்லாமல் வீழ்ந்ததும் காரணம்...
Delete:)
Delete//சார் ஜேசனுக்காக பிரத்யேக மை ...மேலும் ஆர்வத்தை கிளப்புகிறது...சென்றவார பக்கமே அதகளபடுத்திய நிலையில்....//
for me too...
ஜான் சில்வரின் ரவுடி கும்பல் நான் படித்த (அல்லது பார்த்த) போது என் வயது 6. அந்த புத்தகம் இப்பொழுது என்னிடம் இல்லை ஆனால் அதன் படம் சிலது என் ஆழ் மனதில் பதிந்து இருக்கிறது. ரவுடி கும்பல் காமிக்ஸில் ஜான் சில்வர் தான் நாயகன் என்று எனக்கு எடிட்டர் சார் சொன்னவுடன் தான் தெரிய வந்தது. எனக்கு தெரிந்து அதில் ஒரு ஊரே ஜான் சில்வரை போட்டு தள்ள அலையும், அவர்களிடம் இருந்து அவர் எப்படி தப்பிப்பார் என்பது தான் கதை என்று நினைக்கிறேன். இந்த கதையின் மறுபதிப்பு வந்தால் பட்டாசு என்று நினைக்கிறேன்.
ReplyDeleteJOHN SILVER coloril vanthal ennum sirappu
DeleteXIII mystery ல் மீதமுள்ள கதைகளையும் வெளியிடுங்கள்.
ReplyDeleteAmos and Calvin wax.
http://www.vikatan.com/news/miscellaneous/68754-comic-book-day-special.art
ReplyDeleteXIII mystery ல் மீதமுள்ள கதைகளையும் வெளியிடுங்கள்.
ReplyDeleteAmos and Calvin wax.
நண்பர்களே, நான் இதுவரையில் வந்த லயன் மற்றும் முத்து புத்தகங்களின் பட்டியல் ஒன்று தயார் செய்து வருகிறேன். என்னிடம் இல்லாத புத்தகங்களின் தேடும் வேட்டையில் ஈடு பட்டு வருகிறேன். கோவை புத்தக விழாவில் ஒரு 30 புத்தகங்களை அள்ளி வந்து இருக்கிறேன். இருப்பினும் விடு பட்டு போன கதைகள் ஏராளம்.
ReplyDeleteலயன் காமிக்ஸின் 135 வது இதழிலில் இருந்து கதைகளின் பட்டியல் தேவை. அதே போல் முத்துவின் முதல் பதிப்பில் இருந்து தற்போது வெளிவந்த புத்தகம் வரை இருக்கும் பட்டியல் தேவை.
அது வெளிவந்த வருடம் மற்றும் மாதம் தேவை. யாரிடமாவது இருந்தால் பட்டியலை வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன்.
நன்றி
நண்பரே நண்பர் கலீல் அவர்களின் முதலை பட்டாளம் என்ற தளத்தில் நமது அனைத்து காமிக்ஸ் இதழ்களின் அட்டவனைகளும் உள்ளன ...:-)
Deleteநன்றி பரணீதரன், நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் உதவியாக உள்ளது
Deleteஜான் சில்வரை மிகவும் உற்சாகத்துடன் வரவேற்கிறேன்.
ReplyDeleteமனிதவேட்டையில் பைனாகுலரில் பார்த்து, உதட்டசைவை வைத்தே உரையாடலை தெரிந்து கொள்ளும் அந்த மொட்டைத்தலை வில்லன் இன்னும் ஞாபகத்தில்...
ஆசிரியர் அவர்களுக்கு
ReplyDeleteமாயாவி இரும்புகையில் உள்;ள ஆயுதங்களுடன் மட்டுமே சாகசம் புரிந்த கதைகள் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பினைப் ;பெற்றது. அவருக்கு செப்பு தலைகவசம் மற்றும் ஆடையுடன் வெளிவந்த கதைகள் அவ்வளவு வரவேற்பினை பெறவில்லை. ஸ்பைடர் கதைகள் ஆரம்ப முதல் கடைசிவரை நன்றாக போய்கொண்டிருந்தன. ஆனால் ஆர்ச்சியின் கதைகள் ஆரம்ப கட்டத்தில் பெற்ற வரவேற்பினை பின்னர் பெறவில்லை. காரணம் படங்கள் சொதப்பலாக இருந்ததுதான். மும்மூர்த்திகளை தாண்டி மற்ற படைப்புக்கள் வெற்றி பெறுவது சிறிது கடினமாகத்தான் இருந்தது. அதை தாண்டி ஸ்பைடர் மற்றும் மாடஸ்ட்டி வெற்றி மிகவும் மதிப்பு வாய்ந்ததுதான்.
MV சார் - நீங்க உரக்கப் புலம்புறீங்க ; நான் உள்ளாற புலம்புறேன் !! வேற்றுமை அவ்வளவே
ReplyDelete#######
:-))))
2016 யே கலக்கி எடுத்து வருகிறீர்கள் ..இனி வரும் நாளை சொல்லவும் வேண்டுமா சார் ...:-)
**************
ஓர் அழகான சிங்கத்தின் சிறு வயதில் ஒரு பகுதியை படித்த மகிழ்ச்சியை அள்ளி தந்தது... இந்த பதிவு ...மிக்க நன்றி சார் ....:-)
***************
ஜான் சில்வர் எனக்கும் மிக மிக பிடித்த ஹீரோ ....ஒவ்வோர் கதை முடிவிலும் அவர் சோகமாக செல்ல அந்த உளவு துறை அதிகாரிகள் மீது அவ்வளவு கோபம் ஏற்படும் ...அவரின் சாகஸம் கை வசம் இருந்தால் கண்டிப்பாக 2017 ல் கூட இடம் கொடுங்கள் சார் ...வரவேற்க காத்திருக்கிறோம் ...
*****************
ஆசிரியருக்கும் ...நண்பர்களுக்கும் ...வாட்ஸ் அப் இல்லா காரணத்தால் .சில நாட்களாய் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் சேந்தம்பட்டி நண்பர்களுக்கும் எனது பணிவான இரவு வணக்கங்கள் ...:-)
ReplyDeleteதலைவரே.!
Deleteவருக.! வருக.!
புது உயிருடன் சாரி பெயருடன் வரவேற்ற மாடஸ்தி மடிப்பாக்கம் அவர்களுக்கு பதில் வணக்கம் ...:-)
DeleteWelcome John....He is impact full really...
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு
ReplyDeleteநான் பழைய கதாநாயகர்களின் புகழினைப் பற்றியே
புலம்பிக் கொண்டு இருக்கிறேன் என்று சலித்துக் கொள்ள வேண்டாம். புதிய நாயகர்களை பற்றி மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்து (அதில் கோடு மின்னல் இலலை என்று தாங்களே அறிவித்து விட்டீர்கள்) அவர்களில் என்னை கவர்ந்தவர்களில் உடைந்த மூக்கர் மற்றும் தன்னை மறந்தவர் இருவரும். அதற்கு காரணம் தாங்கள் தெரிவித்ததைப் போன்று அவர்களின் மேலுள்ள அனுதாபம்தான் காரணமோ?
present sir!
ReplyDeleteArticle in Vikatan site:
உங்களுக்கு இரும்புக்கை மாயாவியைத் தெரியுமா? #ComicBookDay
http://www.vikatan.com/news/miscellaneous/68754-comic-book-day-special.art
http://www.vikatan.com/news/miscellaneous/68754-comic-book-day-special.art
DeleteFrom article //காமிக்ஸ் விரும்பிகள் அனைவருக்கும் இந்த தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுவரை அதெல்லாம் வாசிச்சதில்லையே பாஸ் என்போர்கள், அடுத்து எங்காவது காமிக்ஸ் புத்தகத்தைக் கண்டால் உடனடியாக வாங்கிப் படித்துப் பாருங்கள். உங்களையே மறக்கச் செய்துவிடும் சுவாரசியமான தனி உலகம் பாஸ் அது!
//
happy #ComicBookDay friends ! :)
காமிக்ஸ் பயணம் தொடர்கிறது .பார்ட் 6
ReplyDeleteபழக்கடையில் சென்று விசாரித்த போது நண்பர் ஒருவர் கொடுத்து விற்கச் சொன்னதாகவும் நல்ல நிலையில் உள்ள புக் 10 மடங்கும் அட்டை இல்லாதது 5 மடங்கும் சிறிது சேதாரம் உள்ளது 2மடங்கும் விலை என்றார் .என்னிடமும் நண்பர்களிடம் இருந்த காசை கொண்டு எனது 2 வது இன்னிங்ஸை துவங்கினேன். TEX ன் தலைவாங்கியை ₹30 கொடுத்து வாங்கியதன் மூலம். அந்த கடையில் ராணி காமிக்ஸ் தான் அதிகம் இருந்தது நமது இதழ்கள் விற்று விட்டதாகவும் 15,20 புக் தான் உள்ளது என்றார்.
அவரிடம் சொல்லி அனைத்தையும் எடுத்து வைக்கச் சொன்னதும் ஒரு வாரத்திற்குள் அனைத்தையும் வாங்கியதும் அதற்காக அந்த கடைக்காரருக்கு டிப்ஸ் கொடுத்ததும் நன்றாக ஞாபகம் உள்ளது.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ராணி காமிக்ஸீம் வாங்கினேன். (இந்த 2 வது இன்னிங்ஸீல் லயன், முத்து, திகில்&மினிலயன் -இதுதான் என் முதல் TARGET. அது முடிந்த பிறகு வேண்டுமானால் அடுத்தது என்ற தீர்மானம்.)ராணி காமிக்ஸ் Exchange க்கு பயன்படுத்தலாம் என்று வாங்கினேன்.
காமிக்ஸ் சேகரிப்பு:
1.காரைக்காலை சுற்றியுள்ள பகுதியில் மீண்டும் எனது தேடலை துவங்கினேன். ஆனால் முன்னர் மாதிரி அதில் அந்த அளவு வெற்றி கிட்டவில்லை.யோசித்தேன் கிணற்று தவளையாக இருப்பது இனி வேலைக்குச் செல்லாது. வெளியே செல்வது என்று. முடிவு செய்தேன்.
2.சனி கிழமைகளில் நண்பனின் வீட்டிற்கு படிக்க செல்வதாக (முகவரில்லா நண்பன் வாழ்க)கூறி சாப்பாட்டை அவனை கொடுக்கச் சொல்லி விட்டு காரைக்காலை விட்டு தனியே வெளியே சென்றேன். (ஆசிரியர் போல் ஜெர்மனியோ,இத்தாலியோஅல்ல).தஞ்சாவூர். திருச்சி,கும்பகோணம் இங்கே எல்லாம் சைக்கிளில் நான் சுற்றாத பழைய புத்தக இரும்பு கடை கிடையாது. பலன் பூஜ்யம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் கொடுத்த நேரத்திற்கும் பணத்திற்கும் .அது பூஜ்யம் மாதிரி தான். ₹100 செலவு செய்தால் என்னிடம் உள்ள புக் தான் கிடைத்ததே தவிர புதிதாக எதுவும் கிடைப்பது அரிது. இருந்த போதிலும் முயற்சியை கை விடுவதாக இல்லை. இந்த தேடல் இப்படியே சென்றது 1 வருடமாக.
ஆரம்பத்தில் மும்மூர்த்திகள் ,அவர்களுக்கு பின்னால் அவர்களுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று நினைத்தோம்.....ஆனால் ஸ்பைடரும் ஆர்ச்சியும் வந்து கலக்கினார்கள்.......அதற்கு அப்புறம் யாரும் இல்லை என்றிருந்தபோது டெக்ஸும் டைகரும் வந்து அதகளம் புரிந்தனர்.......டைகர் இடத்தை யாராலும் நிரப்ப வாய்பில்லை என்று நினைத்தபோது சென்ற வருடம் வாம்மா மின்னல் என்றபடி பௌன்சர் வந்து சென்றுவிட்டார் ....................
ReplyDeleteஇனி........
லார்கோ ஷெல்டனுக்கு அப்புறம்.................ஒரே இருட்ட இருக்குதே........
2017 அதிரடியாக யாரை வைத்து சமாளிக்க போகிறாரோ............????????
ஆனாலும் ஏதாவது செய்வார்.........
அது யார் என்று நண்பர்களால் யூகிக்க முடிகிறதா...?
( எனக்கு தெரியவில்லை. "பகலிலேயே எனக்கு பசு மாடு தெரியாது இரவில் எருமை மாடா தெரியப்போகிறது.)
/அது யார் என்று நண்பர்களால் யூகிக்க முடிகிறதா//...MV sir@ படிப்பது ரசிப்பது மட்டுமே நம் வேலை...நமக்கெல்லாம் எது தேவைன்னு ஆசிரியருக்கு நன்கு தெரியும். முன்பை விட அதிகம் கருத்துக்களை நாம் சொல்வதால் நம் அனைவரின் ரசனை அவருக்கு பிங்கர் டிப்ல இருக்கும். முடிவெடுக்கும் வேலை அவருக்கு படித்து முடிக்கும் வேலை நமக்கு,
Deleteநாளை நமதே...
48ம்நமதே...!!!!
ரஜினி யை போல் ரூட்டை மாற்றினால் தான் வெற்றி காண முடியும் என்பதை உணர்ந்தேன்.ஒரு வெள்ளை பேப்பரில் தேவை, விற்பனை என்று விளம்பரம் போல் எழுதி அதில் 20 ஜெராக்ஸ் எடுத்து புத்தகங்களில் வரும் வாசகர்களின் முகவரிக்கு போஸ்ட் செய்தேன் .(இதை படிப்பவர்களில் சிலருக்கு அந்த கடிதம் வந்து இருக்கலாம்.ஞாபகம் வருகிறதா?)1 வாரத்திற்கு பிறகு ஒவ்வொன்றாக பதில் வர ஆரம்பித்தது. புத்தகம் அனுப்பி வை உனக்கு வேண்டியதை அனுப்புகிறேன் என்ற ரீதியில் .மீண்டும். ஏமாற தொடங்கினேன். ஒரு சிலர் நியாயமாக நடந்தனர். பலர் அடெங்கப்பா பெரிய தில்லாலங்கடி அதிலும் மதுரையை சேர்ந்த நண்பர் 30 புத்தகத்தை பெற்று கொண்டு திருப்பதி மலையையே நெற்றியில் இட்டார் .
ReplyDeleteமீண்டும் தொடர்ந்தேன் ஆனால் இம்முறை கடிதத்தில் கடைசியாக சில வார்த்தைகளை சேர்த்தேன்.மனசாட்சிக்கு பயந்தவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். ப்ளீஸ் என்று. என் காமிக்ஸ் பயணத்தில் எத்தனையோ மனிதர்களை சந்தித்து உள்ளேன். அதில் நான் மிகவும் நேசிக்கும் 2 நல் முத்துக்களில் ஒன்று பதில் கடிதம் போட்டதுவுடன் எனது அணுகுமுறை பிடித்ததால் இலவசமாக 3,4 புத்தகத்தை அனுப்பி வைத்தார் .
அவர்தான் சென்னை யை சேர்ந்த என் அருமை நண்பர் R.T.முருகன் அவர்கள்.(முதுகில் குத்தியது நண்பனாக இருந்தால் செத்தாலும் சொல்ல கூடாது. அதுவே என் நண்பனின் கை என் தோளில் இருந்தால் கவலைகள் என் காலடியில். அப்படி பட்ட நண்பரை குறிப்பிடாமல் சென்றால் எப்படி.
அவருடன். ஏற்பட்ட நட்பையும் இன்னொரு முத்தைப் பற்றியும் தொடரும் பயணத்தில் பார்க்கலாம் ....bye நண்பர்களே
Super
DeleteJohn silver varuvathai kurithu magizchi.
ReplyDeleteகாமிக்ஸ் கூறும் நல்லுலகின் அதிமுக்கிய கனவான்கள் அனைவருக்கும் அடியேனின் வணக்கங்கள்.!
ReplyDeleteரெண்டுமூணு வாரங்களா, எடிட்டரோட பதிவை மாத்திரம் அவசரஅவசரமா படிச்சிட்டு attendance போட்டதோடு சரி. .! எந்த ஒரு கமெண்ட்டையும் படிக்கவேயில்லை.
அதாவது எங்க தலைவர் ஸ்டைல்ல சொல்லணும்னா
"இங்க நான் ஒரே பிசி. . எட்டாந்தேதி சேலத்துல மாநாடு. ., ஒன்பதாந்தேதி ஊட்டீல ஊர்வலம். . பத்தாந்தேதி நான் எங்க இருப்பேன்னு எனக்கே தெரியலையே. .!!" ரேஞ்சுக்கு பிஷியோ பிஷ்ஷ்ஷி. . :-)
நான் போய் கடந்த நாலைஞ்சு பதிவுகளுல இருக்குற எல்லா கமெண்ட்ஸையும் படிச்சுட்டு அட்டவணை ரிலீஸ் ஆகுறதுக்குள்ள வந்திடுறேன்., வந்திடுவேன். ஓடின் தெய்வமும் புனித மானிடோவும் அருள் புரிந்தால் (அதாவது கமெண்ட்ஸ் அதிகமா இல்லேன்னா) சீக்கிரமே வந்திடுவேன்.!
இல்லையில்ல. . பொறுமையாவே வா. ., சீக்கிரம் வந்து மட்டும் நீ என்னெத்தை செஞ்சுடப்போறே ங்கிற உங்க மைண்ட் வாய்ஸையும் நான் கேட்ச் பண்ணிட்டேன். அப்படியெல்லாம் சுளுவா நண்பர்களை நிம்மதியா இருக்க விட்டுடுவேனா என்ன!? போன ஸ்பீடுல திரும்பி வருவேன். :-)
ஓ.....கிட் ஆர்ட்டின் சார் நீங்களும் இப்போது என்னை போலவே பிஸியோ பிஸி ஆயிட்டீங்களா ...
Deleteமகிழ்ச்சி...
நெக்ஸ்ட் சிங்கப்பூர் சின்ன தாவணி பஸ் ஸ்டேண்டில் சந்திப்போம் ...:-)
ஜான் சில்வர் - காமிக்ஸ் உலகின் என் ஆதர்ஷ நாயகர்களில் ஒருவர். சிறு வயதில் என்பெயருடன் ஜான் ஸ்பைடர் 007 என்று சேர்த்துக்கொண்டு சுற்றித் திரிந்தேன்! இவரது அனைத்து கதைகளும் சூப்பராக இருக்கும். அதிலும் முத்து காமிக்ஸில் வந்த இந்த ஆகாய கல்லறை (ஆஹா என்ன ஒரு அருமையான தலைப்பு), இவர் கதைகளில் ஒரு ஸ்பெஷல். அது என்னவென்று என்னைவிட நன்றாக எழுதக்கூடிய நண்பர்கள் யாரவது எழுதினால் நன்றாக இருக்கும் :-)
ReplyDeleteஇவர் மீண்டு(ம்) வருவது குறித்து மகிழ்ச்சி அடையும் பலரில் நானும் ஒருவன் !
ஜான் ஸ்பைடர் 007 - இத பாருடா! இது கூட நல்லா இருக்கே!
DeleteRadja : ஜான் ஸ்பைடர் 007 சார் ....தலைப்புகளில் சாத்வீகம் தலைதூக்கிடும் வேளையிது !
DeleteSo "ஆகாயக் கல்லறை" என்பதற்குப் பதிலாய் வேறேதாவது டெரர் குறைவான பெயரையே தேடியாக வேண்டும் - மறுபதிப்பிடும் பட்சத்தில் ! !!
சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்: "ஜான் சில்வர்" என்ற பெயரின் காரணம் JOHN HAVOC !
ReplyDeleteJOHN -> ஜான்
HAVOC -> சில்வர்! HAVOC என்பதை எப்படி சில்வர் என மாற்றம் செய்தீங்க?
H-s
ReplyDeleteA-I
V-l
O-v
C-er
உங்களுக்கு அறிவோ அறிவுன!
Deleteஎல்லோரும், மாயாவி,ஜானி நீரோ, டெக்ஸ், மாடஸ்ட்டி மற்றும் ஸ்பைடா் என்று சிலாகித்து எழுதுகிறாா்கள். ஆனால் மு்மமூா்த்திகளில் ஒரு ஜோடி லாரன்ஸ் மற்றும் டேவிட். இருவரும் அ.கொ.தீ.க.த்திற்கு எதிராக ஏகப்பட்ட போராட்டங்களை நிகழ்த்தியுள்ளாா்கள். அதிலும் ஆரம்ப காலக்கட்டத்தில் முதலில் ஒரு சிறு சாகசம் அதனைத் தொடாந்து வேறு ஒரு சாகசம் என்று கதைகள் ஒரு வித தனி பாணியில் பயணிக்கும். அதன் பிறகு மற்ற கதைகளைப் போலவே மாறிவிட்டது. இரும்புக்கை மாயவிற்கு செப்பு உடை மற்றும் தலைகவசத்தினை மாட்டி அழகுபாா்த்த படைப்பாளிகள் அதே போன்று டேவிட்டிற்கு அளப்பறிய உடல் வலுவும், லாரன்ஸ்-க்கு அளபறிய மன திறனு்ம் அளித்தாா்கள். ஆனால் ஜானி நீரோவிற்கு ஒன்று வழங்கவில்லை. டேவிட், லாரன்ஸ் உடன் சோ்ந்துதான் சாகசம் புாிவாா். சிறைகைதிகள் மற்றும் பனிக் கடலில் பயங்கர எாிமலை இரண்டிலும் அவரது தனித்தன்மை தொியவரும். அதுவும் திடமான டேவிட் சிறைக் கைதிகளில்இளகுவான மனம் உள்ளவராக சித்தாித்திருப்பாா்கள். இவா்கள் இருவரும் அழிவு கொள்ளை தீமை கழுகத்திற்கு எதிராக போராட்டங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும்(மாயாவியும் அ.கொ.தீ.க.த்திற்கு எதிராக போராட்த்தில் இறங்கியிருப்பாா்.) மாயாவிற்கு தலைவா் நிழற்படைத் தலைவா். ஜானிநீரோவிற்கு தலைவா் கா்னல் ஜேக்கப் ஆனால் லாரன்ஸ் டேவிட்- க்கோ தலைவா் என்று ஒருவா் இல்லாமல் ஒரு அமைப்பினை உருவாக்கிக இருப்பாா்கள். அது பின்னா் செம்மலா் 5 என சில கதைகளில் வரும்.
ReplyDelete30.8.2016 அன்று ஒரு இமெயில் ஆசிாியருக்கு அனுப்பி இருந்தேன். அதில் ஜான் சில்வா் கதைகளை வெளியிடுங்கள் என ஒரு கோாிக்கையினையும் சோ்த்திருந்தேன். அதனால்தானோ என்னவோ ஜான்சில்வா் வெளிவ்நதாரா என்று தொியவில்லை. எப்படியோ ஜான் சில்வாின் சாகசங்களை நாம் காண போகிறோம்.
ReplyDeleteJegang Atq : சார் ..சின்னதொரு வேண்டுகோள் ! மின்னஞ்சல்கள் அனுப்புவதாயின் எல்லோரையும் போல் ஏதேனுமொரு தமிழ் மாற்றுத் தளத்தில் டைப் செய்து அனுப்பினீர்களெனில் வாசிக்க சாத்தியமாகிடும். இதுவரைக்கும் நீங்கள் இணைத்து அனுப்பியுள்ள தமிழ் font -களில் பிரச்னை என்னவென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை - ஆனால் சகலமும் கோழி கீச்சல்களாய்த்தான் எங்களை வந்து சேர்ந்துள்ளன !
Deleteமன்னிக்கவும். ஆசிாியாின் பதிலை கவனிக்காமல் மற்றமொறு பதிவினை போட்டுவி்ட்டேன். பாமினி ஃபாண்ட்டில் தட்டச்சு செய்து மெயிலில் இணைத்திருந்தேன்.
ReplyDeleteநன்றி! வணக்கம்!!