Powered By Blogger

Sunday, September 11, 2016

ஒரு ஒப்பித்தல் படலம் !

நண்பர்களே,

வணக்கம். ‘ஒரு வாரமாய்க் காணவில்லை !‘ என்று போஸ்டர் அடிக்கத் தயாராகிக் கொண்டிருப்பின், அந்தச் செலவை மிச்சம் செய்திட இதோ ஆஜராகி விட்டேன் - புதிய பதிவுடன் ! ஆண்டின் மிக சுவாரஸ்யமான பகுதி மட்டுமன்றி ; மிகவும் முக்கியமான பகுதியும் தற்போதைய வேளையே என்பதால் குனிந்த தலை நிமிர நேரமிருக்கவில்லை இந்த வாரத்தின் முழுமைக்கும் ! So சமீபப் பொழுதுகளின்  ஒரு "ஒப்பித்தல் படலமே"  - இவ்வாரப் பதிவாகிறது ! 

"2017 கதைத் தேர்வுகள்" என்று மூழ்குவதற்கு முன்பாக எனது முதல் வேலை ஒரு பரவலான எல்லைக்கோட்டைப் போடுவதாக இருந்தது ! எத்தனை இதழ்கள் ? என்ன பட்ஜெட் ? என்று தீர்மானிக்க நேரம் எடுத்துக் கொண்டான பின்னே யாரெல்லாம் நிச்சயமாய் ‘உள்ளே‘ என்ற பட்டியலைப் போட்டுப் பார்த்தேன் ! அதில் சமீபத்து விற்பனைப் புள்ளி விபரங்களையும் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் போது கொஞ்சம் தடுமாறத் தான் செய்தது ! ‘விடு... விடு... சுனா... பானா...‘ என்று ஒருமாதிரி என்னையே நிதானப்படுத்திக் கொண்டு அடுத்தபடியாக ‘வெளியே‘ பட்டியலின் பார்ட்டிகளைப் பரிசீலனை செய்தேன் ! "இவர் வெளியேறினால் எங்கே பட்டாசு வெடித்துக் குஷிப்படுவார்கள் ? ; எங்கெல்லாம்  என் முதுகில் ஊத்தப்பம் போடத் தயாராவார்கள் ? என்ற சிந்தனை தலைக்குள் நீச்சலடிக்க – ஒரு மாதிரியாய் அந்தப் பட்டியலையும் இறுதிப்படுத்தினேன். அதன் பின்னே ஆரம்பித்தது கதைத் தேர்வுப் படலம் ! லார்கோ, ஷெல்டன், கமான்சே போன்ற வரிசைக்கிரம நாயகர்கள் இதனில் துளியும் சிரமம் தந்திடாது போக ; ஒரு லோடுக் கதைகள் கொண்ட நாயகர்களோ வசமாகச் சுளுக்கு எடுத்து விட்டனர் ! அதிலும் டெக்ஸ் கதைத் தேர்வில் சுத்தமாய் ஒரு வாரம் செலவிட்டிருப்பேன் என்று தான் சொல்ல வேண்டும் ! பற்றாக்குறைக்கு அவ்வப்போது பதிவிலோ ; நேரடிச் சந்திப்புகளிலோ நான் அள்ளி விட்டிருக்கக்கூடிய வாக்குறுதிகளை நினைவுகூர்ந்து கொண்டு, அவற்றையும் நடைமுறைப்படுத்திடும் அவசியமும் வந்தது ! So இரவில் எதையாவது ‘டிக்‘ அடித்து விட்டு, அதற்கான விளம்பரங்களையும் தயாரிக்கச் சொல்லி விட்டு மறுநாளே –‘இல்லே... இல்லே... கோட்டை அழி‘ முதல்லேர்ந்து புரோட்டா சாப்பிடுறேன் ! ‘ என்று அழிச்சாட்டியம் செய்த நாட்கள் ஏராளம் ! நமது DTP பெண்கள் அதிர்ந்து பேசக்கூடத் தெரியாத சாதுக்கள் ; கடந்த 10 நாட்களாய் அவர்களைக் கொலையாய்க் கொன்று வருகிறேன் தான் !! 

கதைத் தேர்வுகளில் முக்கியமென மனதுக்குப் பட்டது - புதுசுக்கும்-பழசுக்குமிடையே ஒரு ஆரோக்கியமான நிதானம் இருந்திட வேண்டுமென்பதே ! அரைத்த அதே மாவையே புதுசாய் அடுத்த வருஷத்துக்கு அரைக்க மனதில்லை ; அதே சமயம் இராமாயணமாய் நீண்டு செல்லக் கூடிய புதுக் தொடர்களை மேற்கொண்டும் இழுத்து விட்டு அவற்றை அந்தரத்தில் தொங்க விடவும் கூடாதென்ற உறுதியும் இருந்தது. So இந்த இரண்டுக்கும் நியாயம் செய்திட வேண்டிய கட்டாயம் இருப்பதாய் மனதுக்குப்பட்டது !  அட்டவணையில் "புதுமுகங்கள்" பளிச் என்று இருந்திட வேண்டுமென்ற ஆர்வமும் மேலோங்கியது ! இதன் பொருட்டு அவசியமான நெட் உருட்டல்கள் ஏராளமோ-ஏராளம் ! 

இந்தக் கதை தேடி ‘முத்துக் குளிக்கும்‘ படலம் ஒரு பக்கமெனில் – காத்திருக்கும் 2017-ன் மைல்கல்களுக்கென்ற திட்டமிடல்களையும் அட்டவணைக்குள் நுழைக்கும் பிரயத்தனம் இன்னொரு பக்கம் ! முத்து காமிக்ஸ் 45-வது ஆண்டு மலர்; லயன் # 300 ; முத்து # 400 ; தீபாவளி மலர் என்று முரட்டுச் சிங்கங்களாய் பல எதிரே காத்திருக்க – அதன்பொருட்டு கூட்டல் ; கழித்தல் ; பெருக்கல் ; வகுத்தல் என்று ஒரு வண்டிப் பேப்பரைக் காலி செய்திருப்பேன் ! அநேகமாய் கடந்த ஒரு மாதத்தில் நம் தலீவரையே மிஞ்சம் அளவுக்கான பேப்பரைக் கொள்முதல் செய்த பெருமையை நானே லவட்டியிருப்பேன் ! "குண்டூ புக்காகவும் இருக்க வேண்டும் ; பட்ஜெட்டும் எகிறி்டக் கூடாது ; தருணத்திற்கேற்ற நிறைவோடும் அமைந்திட வேண்டுமென்ற" கட்டாயங்கள் இருப்பதால் மோட்டுவளையை அங்குலம் அங்குலமாய் அளவெடுத்து முடித்தேன் கடந்த வாரத்தில் ! ஒரு மாதிரியாய் ஆர்வங்களுக்கு தீனி போடும் விதமாயும், பர்ஸுக்கு வெடி வைக்காத மாதிரியும் ஒரு தடம் போட முடிந்த திருப்தி தற்போதைக்கு ! விபரங்களை வெளியிட்டான பின்னே, நீங்களும் அவ்விதம் நினைப்பின் - 'உஷ்ஷ்ஹ்ஹ்ஹ்' என்றொரு பெருமூச்சு தப்பிக்கும் என்னிடமிருந்து ! 

ஒரு மாதிரியாய் இதழ்களின் எண்ணிக்கை ; சந்தாத் தொகை ; கதைத் தேர்வுகள் என்று முடித்து விட்டு – ‘தலைப்பு நல்கும் தருணத்தை‘எட்டிய போது இது தொடர்பாய்  உங்களது சிலபல எண்ணச் சிதறல்களைப் பார்க்க முடிந்தது ! அவை சொன்ன கருத்துக்களும் சரியாகவே பட்டதால் இந்த தபா – ‘இரத்தம்‘ ; ‘காட்டேரி‘; ‘மரணம்‘ ; ‘பிணம்‘ இத்யாதி... இத்யாதிகளை ஓரம்கட்டுவதென்று  தீர்மானித்தேன் ! ஆனால் சாத்வீகமான பெயர்சூட்டல் என்பது ‘தலப்பாக்கட்டி பிரியாணிக்கடை‘யில் அமர்ந்து கொண்டு மெனுவில் தக்காளிச் சாதத்தைத் தேடுவது போல படு சிரமமான பணியென்று அப்புறம் தான் புரிந்தது ! ஆண்டாண்டு காலத்துப் பழக்கத்தில் வாயில் வரும் முதல் பெயரானது கோங்குரா காரத்தோடே அமைந்து வர, கொஞ்சம் கொஞ்சமாய் அந்த மிளகாயைக் குறைத்திட நிறைய நேரம் எடுத்துக் கொண்டேன் ! இன்னமும் இங்கொன்றும், அங்கொன்றுமாய் உக்கிரமான தலைப்புகள் கண்ணில் பட்டால் – அவை கதைகளின் தன்மைக்கேற்ப அத்தியாவசியமானவைகளே என்று எடுத்துக் கொள்ளுங்கள் - ப்ளீஸ் !

நேரம் எடுத்துக் கொண்டேனும் இந்தப் பணிகளெல்லாம் நிறைவு பெற்றிட – கொடைக்கானல் மலையேறும் பலாப்பழ லாரியைப் போல ‘ட்ரான்... ட்ரான்... ட்ரான்ன்ன்‘ என்று இழுவையானது சந்தா Z-ன் கதைத் தேர்வுகளிலேயே ! (சந்தா Z-க்கு பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது தமிழகத்தைப் புரட்டிப் போடும் கொசுறுச் சேதி ! இனி அது சந்தா "E" என்று அன்போடு அழைக்கப்படும் !) கட்டுப்பாடுகளில்லா ஒரு தடம் ; "இது தான் போடலாம் ; இதைப் போட முடியாது !" என்ற வரையறுத்தல்கள் இருந்திடா சுதந்திரம் ; பரீட்சார்த்த முயற்சிகளுக்கு maybe இதுவே கடைசிச் சந்தர்ப்பம் என்ற புரிதல் – என ஏகமான factors இங்கே கைதூக்கி நிற்க ரொம்பவே சிண்டைப் பிய்த்துக் கொள்ள முகாந்திரமிருந்தது ! முதலில் ஒரு batch கதைகளைக் குறித்து வைத்துக் கொண்டு அவற்றுள் சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்தேன் ! வண்டி வண்டியாய் விமர்சனங்கள் ; ஒவ்வொரு மொழியிலும் அவை ஈட்டியிருந்த மதிப்பெண்கள் ; கதைச்சுருக்கங்கள் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டிய சமாச்சாரங்களும் ஏகமாய் நின்றன...! ‘கதை பிரமாதம்‘ என்று டிக் அடிக்க நினைக்கும் தருணத்தில் ‘திடு‘மென்று தலைகாட்டும் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ பக்கங்கள் கடுப்பைக் கிளப்பும் ! சரி... இன்னொரு கதையைத் தூக்கி வைத்து அதனில் கவனம் தந்தால் – அந்தக் கதைத்தொடர் இன்னமும் இரு ஆல்பங்களுக்காகக் காத்துள்ளது  என்ற தகவல் கிடைத்திடும் ! அரைகுறையாய் அயல்தேசத்திலேயே நின்று வரும் தொடர்களை அவசரமாய் இங்கே கொணர்ந்து உங்கள் சிரங்களில் வடாம் காயப் போடும் வேலை இனி வேண்டவே வேண்டாமென்ற தீர்மானம் எடுத்துள்ளதால் அத்தகைய தொடர்களைத் (தற்காலிகமாய்) கைகழுவி விட்டேன் ! இந்த ரீதியில் miss out ஆன கதைகளும் சிலபல..!  அதே போல – "ஒரேயடியாய் கலைச் சேவை செய்கிறேன், அவார்ட் வாங்கும் பிலிம் எடுக்கிறேன் பேர்வழி !” என்று பிரேமுக்கு பிரேம் பொறுமையைச் சோதிக்கும் படு slow கதைகளைத் தவிர்ப்பதிலும் குறியாக இருந்தேன். So இதன் காரணமாயும் சில பல கதைகள் ஜன்னல் வழியே எகிறிக் குதித்து விட்டன ! இறுதியாய் ஒரு சின்னதொரு பட்டியலை உறுதி செய்த போது – ‘இவை நிச்சயமாய் casual வாசகர்களைக் கூடக் கவர்ந்திடும் !‘ என்றே தோன்றியது ! இந்தத் தனித்தட முயற்சி ஆரம்பத்திலேயே ரொம்பப் பெரியளவில் இருந்து விட வேண்டாமே என்றும் பார்த்தேன்! சுருக்கமானதொரு எண்ணிக்கையுடன் ஆரம்பம் ; உங்களது அபிப்பிராயங்களைக் கருத்தில் கொண்டு அவசியத்திற்கேற்ப அப்புறமாய் விரிவாக்கம் செய்வதென்பதே தற்போதையத் திட்டமிடல் ! So புதுத் தடத்தில் துவக்க நாட்களில் தட தடக்கப் போவது 6 கோச் வண்டிகள் மாத்திரமே ! இந்த ஆறு கோச்களும் ‘புல்‘லாகி விட்டன ; இன்னமும் ‘டிமாண்ட்‘ உள்ளதென்று ஊர்ஜிதமானால் பெட்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டிடலாம் ! Hope for your understanding on this folks !!

ஒரு மார்க்கமாய் இந்தத் திட்டமிடலும் நிறைவு பெறும் வேளையில் காத்திருந்த அடுத்த மெகாப் பொறுப்பு அத்தனை கதைகளுக்குமான கான்டிராக்டுகளை சரி பார்த்தல் / புதுப்பித்தல் / புதுக் தொடர்களெனில், அவற்றிற்குப் புதிதாய் கான்டிராக்ட்டுகள் ஏற்பாடு செய்தல் ! முன்பெல்லாம் “பிழைக்கப் பிழைக்கப் பார்த்துக் கொள்வோம்” என்ற நம்பிக்கையில் வண்டி ஓடும் நாட்களில் ஓரிரண்டு மாதக் கதைகளைக் கையிருப்பில் வைத்துக் கொண்டே ‘தத்தக்கா-புத்தக்கா‘ என்று தவழ்ந்து விடுவோம் ! ஆனால் இப்போதோ 12 மாதத் தேவைகளும் முன்கூட்டியே ஸ்பஷ்டமாய்த் தெரியுமெனும் போது அதற்கான படைப்பாளிகளின் ஒப்புதல்களைப் பக்காவாகத் தயார் செய்திட ஏகப்பட்ட 'க்ளுகான் D' டப்பாக்களைக் கரைக்க வேண்டிப் போனது! சந்தா E–ன் 2 கதைகளுக்கான ஒப்புதல் நீங்கலாய் பாக்கி எல்லாமே இந்த வாரம் தான் ஓ.கே. ஆனது என்பதால் – சிறுகச் சிறுக மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறேன். படைப்பாளிகளின் லைசென்சிங் பிரிவின் நிர்வாகிகள் மாற்றி மாற்றி ஏதேனுமொரு தேசத்து புத்தக விழாக்களுக்குப் பயணமாவது ஒரு பக்கமெனில், அவர்களது கணிசமான விடுமுறைகளும் இன்னொரு பக்கம் ! ஏதேனும் ஒரு கதை பற்றிய சில பல கேள்விகளை சீரியஸாய் டைப் அடித்து மெயில் அனுப்பி விட்டு நிமிர்ந்தால் – ‘டொட்டடாய்ங்‘ என்று பதில் வந்திருக்கும் – ‘அடுத்த 10 நாட்களுக்கு நான் அலுவலகத்தில் இல்லை!‘ என்ற ரீதியில் ! அவர்களது அளவுகோல்களில் நாம் தந்து கொண்டிருக்கும் குட்டியூண்டுத் தொகைகளுக்கு அவர்கள் நமக்குப் பதில் போடுவதே பகவான் கருணை எனும் போது - பொறுமையாய் ; ரொம்பப் பொறுமையாய் பணிகளின் இந்தப் பகுதியை அணுகிட வேண்டி வரும் ! So இந்த வாரத்தின் பகல்களை படைப்பாளிகளுக்கெனவும் ; இரவுகளை அவர்களது படைப்புகளுக்கெனவும் பிரித்துச் செலவிட்டதில் blog பக்கம் தலைகாட்ட ‘தம்‘ மிஞ்சவில்லை !

"பார்த்தீங்களா மஹாஜனங்களே ? ...கம்பி மேலே நடக்குது....அல்லாரும் ஜோரா ஒருதபா கை தட்டுங்கோ !" என்ற நோக்கம் கொண்டதல்ல இந்த ஒப்பிப்புப் படலம் ! அதே போல, "இவ்ளோ கஷ்டப்பட்டு தயார் செய்யுது...கொஞ்சம் பாத்துப் போட்டுக் கொடுங்கோ ஷாமியோவ் !!" என்ற உண்டியல் குலுக்கும் முயற்சியுமல்ல இது ! மாறாக - தொடரும் 12 மாதங்களின் நமது (காமிக்ஸ்) வாசிப்புக் களங்கள் பற்றிய அறிவிப்புகள் திரை விலகும் வேளையினில் - அதன் பின்னணி லாஜிக் என்னவாக இருந்திருக்குமென்று உங்களுக்கு சொல்ல முனைந்திடும் முயற்சி மாத்திரமே இது ! புது வரவுகளின் அவசியம் ; இருப்போரில் சிலரது கல்தாக்களின் பின்னணி ; கூடுதல் இடம் / குறைவான இடம் வழங்கப்பட்டதன் thought process ; உங்கள் அவாக்களின் பிரதிபலிப்புகள் - என்று நிறைய விஷயங்களைக் கோடிட்டுக் காட்ட நினைக்கும் பதிவிது ! 

இதற்கு மத்தியில் மாமூலான மாதாந்திர இதழ்களின் வேலைகளும் சத்தமின்றி நடந்தேறிக் கொண்டிருக்க – இந்த மாதம் 25-ம் தேதிக்குள்ளாகவே 4 இதழ்களும் தயாராகி விடும் போல் படுகிறது ! இதோ- இம்மாதத்தின் எனது personal favorite ! 2016-ன் இரண்டாவது லக்கி லூக் சாகஸம், இந்தத் தொடரின் டாப் கதைகளுள் ஒன்றும் கூட! நோவு தெரியாமல் பணி செய்திட சாத்தியமாகும் சொற்பமான கதைகளுள் லக்கி தலையாயது என்பதால் செம ஜாலியாய் எழுதிட முடிந்தது ! ‘திருடனும் திருந்துவான்‘ இதழுக்கான நமது அட்டைப்படம் இதோ!

இது ஒரிஜினல் டிசைன் மீது நமது டிசைனர் பொன்னன் செய்துள்ள மெருகூட்டல் ; அழகாய் அமைந்துள்ளதென்று நினைத்தேன் ! உங்கள் மதிப்பெண்கள் என்னவோ guys? அடுத்தடுத்த வேலைகள் சீக்கிரமே ஆகிவிட்டால் – அக்டோபர் பிறப்பதற்கு வெகு முன்பாகவே இதழ்கள் நான்கும் உங்கள் கைகளில் இருந்திட வேண்டுமென்று எதிர்பா்க்கிறேன்!

And இதோ – இம்மாத மறுபதிப்பின் பிரதிநிதி – திருவாளர் ஸ்பைடர் – இம்முறை ஒரிஜினல் ராப்பரோடே! இந்த பெயிண்டிங் 31 ஆண்டுகள் கழிந்தும் பத்திரமாய் தாக்குப் பிடித்திருக்க - துளியும் மாற்றமின்றி முன்னட்டையாக்கி விட்டோம் ! சோப் முட்டைக்குள் புகுந்து சாகஸம் செய்த நமது வலைமன்னனின் இந்த இதழானது 1985 மார்ச்சில் வெளிவந்த போது கிட்டிய (விற்பனைப்) பரபரப்பில் நான்கிலொரு பங்கு தற்சமயம் சாத்தியமானாலும் சூப்பரென்பேன் ! Phew – பட்டையைக் கிளப்பிய இதழல்லவா இது அன்றைக்கு?!! 
இதெல்லாம் ஒரு பக்கமிருக்க – ‘தல தீபாவளி‘க்கென இப்போது பலகாரங்களும் தயாராகி வருகின்றன ! ‘சர்வமும் நானே‘ மெகாவோ-மெகா நீளமான டெக்ஸ் அதிரடி என்பதால் அதனையும் இயன்றளவுக்குச் சீக்கிரமாய்க் கரைசேர்க்கப் பல்டியடித்து வருகிறோம்! இந்தாண்டின் கதைகளை before schedule முடித்து விட்டால் 2017-க்குள் வேகமாய் பாய்ந்து விடலாமென்ற ஆசை தான் !எனக்கே நம்பக கஷ்டமாகத் தானுள்ளது ; ஆனால் 2017-ன் சந்தா A-வின் கதைகள் சகலமும் மொழிபெயர்ப்பு பூர்த்தி கண்டு நிற்கின்றன !! புத்தாண்டில் சந்தா E பக்கமாய்க் கவனம் தந்திடும் அவசியம் எழுமென்பதால் - "சீக்கிரம் சீனு"அவதார் எடுக்க முனைந்து வருகிறோம்!! 

ஓவர் பில்டப்போடு உலவி வரும் 2017-ன் அட்டவணையானது இம்மாத இதழ்களோடு உங்களை சந்திக்கப் புறப்படும் என்ற செய்தியோடு நான் இப்போது புறப்படுகிறேன் -  லியனார்டோ தாத்தாவுடன் கண்ணாமூச்சி ஆட  ! அட்டவணையைப் பார்த்த பின்பாக - "அட..இதுக்குத் தான் இத்தனை வாய்ப்பந்தலா ?" என்றோ ;"அட..பேஷ்..பேஷ்...சூப்பராகத் தெரிகிறது !" என்றோ உங்களது reactions இருந்திடலாம் தான் ! ஆனால் இரண்டாவது சிந்தனைக்கே வாய்ப்புகள் ஜாஸ்தி என்றதொரு மௌன நம்பிக்கை எனக்குள் குடியேறியுள்ளது !! திரை விலக பெரியதொரு காத்திருப்பில்லை என்பதால் சீக்கிரமே தீர்ப்பெழுதத் தயாராகிக் கொள்ளுங்களேன் ! மீண்டும் சந்திப்போம் ! நாளைய பொழுது பதிவினில் தான் உலாற்றிக் கொண்டிருப்பேன் ! Bye for now !

320 comments:









  1. dear Editor

    Viveli Pisasu (spitar) Reprint Pl/

    ReplyDelete
  2. விடுமுறை நாள் வணக்கம்
    ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  3. காலை வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  4. நாட்டாமை சார்.!


    வெளியே பட்டியலில் எங்க இளவரசி இல்லையல்லவா.? பார்த்து போட்டு விடுங்கள் சுனா பானா சார்.!.வேன் எல்லாம் வைச்சு கடத்தியிருக்கோம் கொஞ்சம் பார்த்து செய்யுங்கள் என்கிறமாதிரி கேட்டுக்கொள்கிறோம்.!

    இல்லாங்காட்டி டைகர் மாதிரி விலை அதிகமானாலும் பரவாயில்லை சார்.!மாடஸ்டி கதைகள் , குடத்தில் இட்ட விளக்காய் இருப்பதால்தான் இந்த பிரச்சினை.குன்றில் இட்ட விளக்காய் ஆன பின்னே விற்பனை நான்குகால் பாய்ச்சலில் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.!

    ReplyDelete
    Replies
    1. இளவரசி இல்லைன்னா இந்த நாட்டை விட்டு போறது தவிர எங்களுக்கு வேறு வழி கிடையாது.

      Delete
    2. குமார் சார்.!

      சரியா சொன்ணீங்க.!

      Delete
    3. கண்டிப்பாக தேவதைக்கு இடம் ஒதுக்குங்கள் ஆசிரியரே

      Delete
    4. 2017 ல் ஒரு அமர்க்களமான சாகஸத்தோடு இளவரசி நிச்சயமாய் நம்மை சந்திப்பார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

      Delete
    5. இறுதி எச்சரிக்கை , இன்னுமோர் இடம், இளவரசியின் இறுதி பட்டியல் காங்கோ இளவரசி.எதிரிகளோடு விளையாடு புதிர் அட்டவணை 2017 .இதை இளவரசி கதையின் தலைப்பாக எடுத்துக் கொண்டாலும் சரி எங்கள் தவிப்பாக எடுத்துக் கொண்டாலும் சரி. இளவரசிக்கு அடுத்த ஆண்டு எத்தனை இடம் சார்?

      Delete
    6. அடுத்த வருடம் நமது இளவரசியின் 2 கதைகள் வரும் என்று நினைக்கிறன்; 1 புதிய சாகசம் 2. கிளாச்சிக் மறுபதிப்பு (இளவரசியின் சிறுவயதில் கம்பி வேலிக்கு இடையில் புகுந்து வெளி ஏறி தப்பிக்கும் காட்சிஉள்ள அந்த கதை)

      Delete
    7. உங்கள் வாக்கு பலிக்கட்டும் நண்பரே. அந்த 'மாடஸ்டியின் கதை' வண்ணத்தில் வந்தால் மகிழ்ச்சியே

      Delete
    8. ஆயிரம் கௌபாய்கள் மறைத்து நின்றாலும் இளவரசி மறைவதில்லை. லயனில் இந்த சிங்கத்திற்கு எப்போதும் இடமுண்டு

      Delete
    9. பரணி சார்.!


      பழசோ , புதுசோ , லட்டோ, பூந்தியோ கிடைத்தால் போதும்.


      நீங்கள் குறிப்பிட்டது இரட்டை வேட்டையர் கதையுடன் வந்த பழிக்கு வாங்கும் புயல்.!!

      நீங்கள் கூறியது.,,அந்த கதையில், முன் அறிமுகமாக மாடஸ்டியின் கதை என்று ஆறு பக்கத்தில் வந்த குட்டிக்கதை.


      இந்த கதையை படித்தால் மட்டுமே மாடஸ்டி கதையை முழுமையாக ரசிக்க முடியும்.தாய் தந்தையே யார் என்று தெரியாத அப்பாவி சிறுமியாக, ஒரு ரொட்டித்துண்டுக்காக அடித்து கொலை செய்யும் அளவுக்கு கொடூரமான அகதி முகாமில் இருந்து தப்பித்து.உயிர் வாழ பிச்சை எடுத்தும் ,திருடியும் ,தன் முயற்சியால் புத்தகத்தை திருடி கல்வி கற்றும். நல்லது கெட்டது சொல்லித்தர யாரும் இல்லாத அனாதையாக, அரவணைக்க யாரும் இல்லாமல் ஒரு சமூகவிரோதி கூட்டத்தில் சேர்ந்து அதில் தலைவியாகி பெரும் பணம் சம்பாதித்தாலும் போதே பொருளையும் மனித தன்மையற்ற செயல்களை அறவே வெறுத்தும், இயற்கை விதியின் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு அது வரை சூழ்நிலை கைதியாக இருந்த இளவரசி சூழ்நிலையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தபின் பெரும் செல்வத்தை தன்னை மட்டுமே நம்பியிருந்த நெட்ஒர்கை சார்ந்தவர்களுக்கு பணம் கொடுத்து செட்டில்மெண்ட் செய்து , அவர்கள் வாழ்வை வளமாக்கி,தானும் வசதியாகிக்கொண்டு ரிட்டயர் ஆகிவிடும் கதை இது.!அமைதியான வாழ்வு அவர்களுக்கு கசக்கவே இதை மோப்பம் பிடித்த உளவுத்துறை தலைவர் ஜெரால்டு அவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்.!



      இக் கதையின்மூலம் புத்தி உள்ள பிள்ளை எப்படியாச்சும் பிழைத்துக்கொள்ளும் என்பது உறுதியாகிறது.இந்த கதையை படிக்காமல் மாடஸ்டி கதையை படிக்கும் புதிய வாசகர்கள் ,மாடஸ்டியை திருட்டு பொம்பள ,கொள்ளைக்காரி ,திமிர் பிடித்த பொம்பள ,பஜாரி,சொர்ணாக்கா என்று தவறாக கருதிவிடும் அபாயமும் உண்டு.வேறு ஒரு பதிப்பகத்தின் கார்வினையும் மாடஸ்டியையும் புருஷன் பொண்டாட்டி ஆக்கியமாதிரி அபத்தமாக இருக்கும். கதையின் ஆணிவேராணா மாடஸ்டி கார்வினின் நூள் இழை வித்தியாசமே மாடஸ்டி கதையை கோபுரத்தில் வைத்துள்ளது.


      ## காட்டேறி கானகத்தில் நெட்வெர்க்கில் டெக்னிக்கல் பிரிவில் பணிபுரிந்தவரின் மனைவி ஹில்டாவை காப்பாற்றும் கதையும் வந்துள்ளது.

      ### அதேபோல் பச்சை வன பாவையில் , தன் நெட் ஒர்க்கில் பணி புரிந்தவன் மீண்டும் கொள்ளையடித்து போலீசில் மாட்டிக்கொண்டு உதவி கோரும் போது மீண்டும் தவறுசெய்ததை கண்டு கோபப்பட்டு உதவ மறுத்து விடுவார்.(அவன் இறந்தபின் அவன் ஆசையை நிறைவேற்றி வைப்பார் )

      Delete
    10. Mv@ super. Wow.. more details about madasty .... eagerly waiting to read all of them. You are a dictionary for madasty.

      Delete
    11. @ FRIENDS : கோடு போட்டாலே ரோடு போடும் MV சாருக்கு - ஒரு தெருவையே ஒதுக்கிக் கொடுத்தால் வூடு கட்டி சிலம்பம் ஆடாது விடுவாரா -என்ன ?

      Delete
    12. Friends, buy seeing editor reply for one of the question, our ilavarasi will be on 2017 slot.

      Delete
    13. MV sir,
      மாடஸ்டியின் 6 பக்க கதையில், 60 பக்கத்துக்கான 'தீம்' உள்ளது. முன்பு படித்தது போல் தான் இருக்கிறது. ஆனால் உறுதியாக சொல்ல முடியவில்லை. என்ன உங்களை சந்திக்கும் போது உங்கள் முன்பே படித்து முடித்து விடுகிறேன்.
      அதோடு அதை அடுத்த ஆண்டு வரும் மாடஸ்டி கதையுடன் இணைத்து வெளியிட்டால் அது அனைத்து ரசிகர்களையும் சென்றடையும்.

      Delete
    14. mv இத முன்னுரையா மாடஸ்டி புத்தகங்களுக்கு வைத்தா ஒரு வேளை படிப்போர்க்கு பிடிப்பு அதிகரிக்கலாம்...சூப்பர்

      Delete
    15. உங்கள் வாக்கு பலிக்கட்டும் நண்பரே. அந்த 'மாடஸ்டியின் கதை' வண்ணத்தில் வந்தால் மகிழ்ச்சியே

      Delete
    16. இறுதி எச்சரிக்கை , இன்னுமோர் இடம், இளவரசியின் இறுதி பட்டியல் காங்கோ இளவரசி.எதிரிகளோடு விளையாடு புதிர் அட்டவணை 2017 .இதை இளவரசி கதையின் தலைப்பாக எடுத்துக் கொண்டாலும் சரி எங்கள் தவிப்பாக எடுத்துக் கொண்டாலும் சரி. இளவரசிக்கு அடுத்த ஆண்டு எத்தனை இடம் சார்?

      Delete
  5. பட்டியல் பட்டயகிளப்பும்னு நம்புகிறேன்.

    ReplyDelete
  6. கடத்தல் குமிழிகள் சிறுவயதில் படித்த போது, மெய் மறந்து ஆ வென்று வாயைபிளந்து படித்தது ஞாபகம் வந்தது.அதுவும்.அதுவும் விலை உயர்ந்த வைரங்கள் தோட்டத்தில் சிதறும் போது அதை பொறுக்கினால் தம் இமேஜ்ஜுக்கு இழுக்கு என்று விட்டுவிட்டு ஸ்பைடர் செல்லுவதை வெகுவாக ரசித்தேன்.!

    ReplyDelete
    Replies
    1. அதே அதே... சூப்பர் நண்பரே...!

      Delete
    2. Madipakkam Venkateswaran : அட..அவ்வளவு ஞாபகம் உள்ளதா ? நமக்கெல்லாம் அட்டைப்படமும், அதுசார்ந்த தயாரிப்பு நினைவுகளும் மாத்திரமே தலையில் தங்கிடும் !

      Delete
  7. ஆசிரியரே உங்களுடைய இரண்டாவது சிந்தனை தான் ஜெயித்திட வாய்ப்புகள் அதிகம்

    ReplyDelete
  8. முகமூடி வேதாளர் கதைகளை வெளியிட ஒரு வாக்கெடுப்பு எடுக்கலாமே......? Please!
    நிச்சயம் புது வாசகர்களைப் பெற்றுத்தரும்.
    இப்போதுள்ள சந்தா எண்ணிக்கை போதும் என்கிறீர்களா? அதிகரிக்கச் செய்வோமே....!
    விற்பனையில் முதலிடம் என்று அடிக்கடி சில இதழ்களை குறிப்பிடும்போது சந்தோசமாகத்தான் இருக்கிறது.
    வேதாளர் வெளியிட முயற்சி செய்யுங்கள். அறிமுகம் செய்து வைக்க அவசியம் ஏற்படாது.
    Ok..... 2017 அட்டவணை எப்படி இருப்பினும் ஆதரவு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. பாபு சார்.!

      வேதாளர் கதைகள் சூப்பர்தான்.ஆனால் காப்பிரைட் வாங்குவதில் சிக்கல்கள் உள்ளதாக எடிட்டர் கூறியதாக ஞாபகம்.( டிவி யில் பே சேனல்களில் சேனல்கள் பேக்கில் பணம் கட்டும்போது ஒரு சேனல் மட்டுமே நமக்கு பிடித்திருக்கும் ஆனால் அந்த சேனல் பேக்கில் தேயில்லாத பேஜ்பூரி மொழி சேனலை எல்லாம் தலையில் கட்டி அனுப்புவார்கள் அல்லவா அந்த மாதிரி பிரச்சினை என்று எடிட்டர் கூறியதாக ஞாபகம்.!)

      Delete
    2. @ ALL : சார்..போஜ்புரி சேனல் பார்க்கும் அவசியங்களெல்லாம் கிடையாது வேதாளரோடு !! மாறாக ஆண்டுக்கு ரெண்டு / மூன்று என்ற ஸ்லாட்கள் மாத்திரமே ஒதுக்கும் வேலை இங்கே சரிப்படாது ! TEX தனிச் சந்தா போல "வேதாளர் சந்தா" என்றொரு தடம் ஏற்படுத்தி ஏகப்பட்ட கதைகள் ஆண்டொன்றுக்கு வெளியிட்டதாக வேண்டும் ! அல்லது மொத்தமாய்க் கதைகளைக் கொள்முதல் செய்துவிட்டு சாவகாசமாய் அடுத்த ஏழு / எட்டு ஆண்டுகளுக்கு அவற்றைப் போட்டுக் கொள்ளலாம் ! ஆனால் அதனில் முடங்கிப் போகும் தொகை நம்மைப் பதம் பார்த்துவிடும் ! சிக்கலே இதுதான் !

      Delete
    3. வேதாளர் சந்தா ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதா?

      Delete
  9. வணக்கம் காமிக்ஸ் அன்பர்களே!படித்துவிட்டு வருகிறேன் !

    ReplyDelete
  10. கடத்தல் குமிழிகள் முன் அட்டை பிரமாதம் லக்கி லூக்கின் அட்டை பட்டயை கிளப்புகிறது இந்த வருடம் கதைகள் மட்டுமல்ல அட்டை களும் மிகப் பிரமதமாக இருக்கிறது பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. செந்தில் சத்யா : //இந்த வருடம் கதைகள் மட்டுமல்ல அட்டை களும் மிகப் பிரமதமாக இருக்கிறது பாராட்டுக்கள்//

      நம்மவர்கள் சார்பாய் நன்றிகள் சத்யா !

      Delete
  11. ஆசிரியரே சந்தா தொகை எவ்வளவு என்று கூற முடியுமா

    ReplyDelete
    Replies
    1. செந்தில் சத்யா : இம்மாதக் கடைசியில் அட்டவணையோடு சகலமும் !

      Delete
  12. Tex maரனத்திர்க்கு முகமில்லை சுபெர்.அடுத்த TeX waiting.சர்வமும் TeX i am waiting.

    ReplyDelete
  13. இந்த வருடம் போல் அடுத்த வருடமும் பட்டியல் சூப்பர் ஹிட்டடிக்கும் என உள் மனது சொல்கிறது

    ReplyDelete
  14. விடை அவிழாத மர்ம முடிச்சுகள்...

    அடுத்த ஆண்டு
    மொத்தம் எத்தனை இதழ்கள் ?
    டெக்ஸின் கதைகள் பட்டியல் ?
    சந்தா தொகை ?
    ஸ்பெஷல் இதழ்களின் கதைகள் பற்றிய விபரங்கள் ?
    வெளியேற்றபடும் & உள்ளே வரும் நாயகர்கள் ?

    ஆவல் தாங்கவில்லை
    விபரங்கள் எப்போ சாா் ?

    ReplyDelete
    Replies
    1. sivakumar siva : //விடை அவிழாத மர்ம முடிச்சுகள்...//

      இம்மாத ஜேசன் ப்ரைஸ் கதைக்கான ட்ரைலர் வரிகள் போலுள்ளதே நண்பரே !!

      Delete
  15. திருடனும் திருந்துவான் நமது wrapper original wrapperய்விட பிரமாதம்! டிசைனர் பொன்னனுக்கு பாராட்டுகள்! ஆவலுடன் எதிர் நோக்குகிறோம் அட்டவணையை!

    ReplyDelete
    Replies
    1. +1. உண்மை உண்மை! குறிப்பாக, டால்டன்களின் 'ஆத்தா நான் நல்லவனாகிட்டேன்' அவதாரத்தை சற்றே அதிர்ச்சி கலந்த முகபாவத்துடன் எட்டிப் பார்க்கும் லக்கி - ஜாலி படங்கள் ஒரு ரசணையான சேர்க்கை! ஐடியா கொடுத்தவருக்கும், அதைச் செயல்படுத்தியவருக்கும் பாராட்டுகள்!

      பின்னட்டையில் ரின்டின்கேனின் நிலையைப் பார்த்ததும் இந்த அதிகாலைப் பொழுதிலும் குபீர் சிரிப்பை அடக்க முடியவில்லை! :))))))

      Delete
    2. Erode VIJAY : //சற்றே அதிர்ச்சி கலந்த முகபாவத்துடன் எட்டிப் பார்க்கும் லக்கி - ஜாலி படங்கள் ஒரு ரசணையான சேர்க்கை//

      இந்த "எட்டிப் பார்க்கும்" ஸ்டில் எழுபதுகளில் வெளியான லக்கி அட்டைப்படங்களில் அவ்வப்போது தலைகாட்டிய சமாச்சாரம் ! நெட்டை உருட்டிக் கொண்டிருந்ததொரு நாளில் கண்ணில்பட - படைப்பாளிகளின் குடலை உருவி அதனையும் வாங்கியே விட்டோம் ! அவர்களுக்கே ஆச்சர்யம் - இதையெல்லாமா தோண்டித் தேடுவீர்கள் ? என்று !!

      Delete
  16. இனிய ஞாயிறு வணக்கங்கள் அனைவருக்கும்.

    ReplyDelete
  17. வணக்கம். மிகப் பரபரப்பான பதிவு, சார் இது...
    புத்தகத்தை விட அட்டவணையை அதிகம் எதிர்பார்க்கிறேன்.

    "முத்து காமிக்ஸ் 45-வது ஆண்டு மலர்; லயன் # 300 ; முத்து # 400 ; தீபாவளி மலர்"
    பலே பலே... தித்திக்கும் திருவிழா ஆண்டு தான் போல...

    "ஸ்பைடர் – இம்முறை ஒரிஜினல் ராப்பரோடே! இந்த பெயிண்டிங் 31 ஆண்டுகள் கழிந்தும் பத்திரமாய் தாக்குப் பிடித்திருக்க - துளியும் மாற்றமின்றி முன்னட்டையாக்கி விட்டோம் ! "
    உண்மையாக அருமையான சித்திரம் தான் சார்.
    ஆனால் bg பின்னணி மிகவும் லைட்டாக மாற்றிவிட்டீர்கள்... அட்டைப்படம்
    அச்சுக்கு போகாவிட்டால் ஒரிஜினல் போலவே டிசைன் செய்திடலாமே சார்...
    டைட்டில் கூட வெள்ளை அல்லது மஞ்சள் நிறமிருந்தால் தான் தூக்கலாக இருக்கும்...

    விற்பனையில் இந்த ஸ்பைடர் கதை ஒரு கலக்கு கலக்கி உங்கள் முகத்தில் புன்சிரிப்பை உண்டாக்கட்டும்...
    1984ல் வந்த இந்த கதையை 1989ல் புத்தகத்தை நான் அலைந்து தேடித் தேடி படித்திட்ட புத்தகமல்லவா இது..?

    இந்த கதையில் ஸ்பைடர் வில்லத்தனம் உச்ச லெவல்ல இருக்கும்.. செய்யும் சேஷ்டைகளும் ரசிக்கும்படி தான் இருக்கும்... இறுதியில் கொள்ளையடித்த வைரங்கள் வெடித்து சிதறிடும் போது, அவற்றை பொறுக்கி எடுப்பதை இழுக்கு என நினைத்து போலிசாருக்கே விட்டு கெத்து காட்டுவான். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல கடைசியில் இந்த வில்லன் பொதுமக்களுக்கு நன்மையே செய்வான். இப்படி ஒரு சூப்பர் கேரக்டர் ஐ திரைப்படமாக உருவாக்காதது ஹாலிவுட் காரர்களுக்கு தான் நஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. ///
      இந்த கதையில் ஸ்பைடர் வில்லத்தனம் உச்ச லெவல்ல இருக்கும்.. செய்யும் சேஷ்டைகளும் ரசிக்கும்படி தான் இருக்கும்... இறுதியில் கொள்ளையடித்த வைரங்கள் வெடித்து சிதறிடும் போது, அவற்றை பொறுக்கி எடுப்பதை இழுக்கு என நினைத்து போலிசாருக்கே விட்டு கெத்து காட்டுவான். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல கடைசியில் இந்த வில்லன் பொதுமக்களுக்கு நன்மையே செய்வான். இப்படி ஒரு சூப்பர் கேரக்டர் ஐ திரைப்படமாக உருவாக்காதது ஹாலிவுட் காரர்களுக்கு தான் நஷ்டம்.///

      +1

      Delete
    2. udhay : //bg பின்னணி மிகவும் லைட்டாக மாற்றிவிட்டீர்கள்...//

      Nopes....துளியும் கைவைக்கவில்லை ஒரிஜினல் பெயிண்டிங்கில் ! புத்தகமாய் வரும் போது பாருங்களேன் !

      Delete
    3. பதில் சொன்னமைக்கு நன்றி சார்...
      கூர்ந்து நோக்கும் போது, ஆமாம் சார் நீங்கள் சொல்வது சரிதான்...

      Delete
  18. ஆஹா அட்டவணை....சூப்பர் சார்...இன்ப அதிர்ச்சி....உண்மய சொன்னா ஸ்பைடர் , லக்கி தவிர பெரிய ெதிர்பார்ப்பில்லை என்னிடம்... அடுத்தவருட அட்டவணை இம்மாதமே ....ஜேசன் எப்படியோ....அட்டைபடம் ஆளை அசத்துது சார்..ஒரே நாளில் இரு புத்தகங்களை வாங்கச்செய்தது வலை மன்னனின் இந்தக்கதைதானே....அசத்தப் போவது நிச்சயம்.....

    ReplyDelete
  19. சந்தாzல் கூடுதல் பெட்டிகள் சுவாரஷ்யமான கதைகள் கிடைத்தால் இணையுங்கள் தடாலடியாய்

    ReplyDelete
    Replies
    1. // சந்தா இஸட் கூடுதல் பெட்டி //

      மெட்ராஸ் சென்னையாக மாறிய மாதிரி,பம்பாய் மும்பாய் என்று மாறிய மாதிரி......நமது இஸட் சந்தா வாஸ்து சரியில்லாத காரணத்தால் , சந்தா ஈ என்று மாறிவிட்டது நண்பரே.!

      Delete
    2. @ FRIENDS : கடைசி எழுத்தின் ராசியோ என்னவோ - தேர்விலும் கடைசியாகவே அமைந்து போய்விட்டது ! சென்றாண்டின் தவறை இம்முறை சரி செய்யும் முயற்சியின் முதல்படி இந்தப் பெயர்மாற்றம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !!

      Delete
  20. லக்கி அட்டை பிரமாதம். பொன்னன் அவர்களது ரசனை சூப்பர். சில புதிய வெளியீடுகள், ரீ பிரின்ட் பின்னட்டைகளை கறுப்பு - வெள்ளையில் வெளியிடுவது ஏனோ?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : இந்தாண்டின் TEX பின்னட்டைகளில் கூட இதேபோலவே black & white சித்திரங்களைத் தானே பயன்படுத்தி வருகிறோம் ?

      கதையின் பக்கங்களிலிருந்து படங்களைத் தேர்வு செய்து எடுக்கும் போது, அவற்றை ஒரிஜினலின் பாங்கிலேயே விட்டுவருகிறோம். இன்னும் சொல்லப் போனால் - B & W கதைகளுக்கான விளம்பரங்களில் கூட இதே யுக்தி தானே ?!

      Delete
    2. //B & W கதைகளுக்கான விளம்பரங்களில் கூட இதே யுக்தி தானே ?!//
      உள்ளே வரும்போது அவை அப்படியே இருத்தல் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், பின்னட்டையில் கொஞ்சம் கலர்புல்லாக இருக்கலாமே என்று தோன்றுகிறது சார்!

      Delete
  21. //
    "பார்த்தீங்களா மஹாஜனங்களே ? ...கம்பி மேலே நடக்குது....அல்லாரும் ஜோரா ஒருதபா கை தட்டுங்கோ !" என்ற நோக்கம் கொண்டதல்ல இந்த ஒப்பிப்புப் படலம் ! ///

    LOL :))))))))))

    ReplyDelete
  22. ஒரிஜினல் டிசைன் மீது நமது டிசைனர் பொன்னன் செய்துள்ள மெருகூட்டல்_நிச்சயம் பலத்த கைதட்டலுக்கு பொன்னன் அவர்கள் தகுதியானவர். வைரம் ஒன்றைப் பட்டை தீட்டுபவர் போன்ற நிதானமான முயற்சி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  23. கதைத் தேர்வுகள் நிச்சயம் தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் முயற்சியே. அதனை இத்தனை நகைச்சுவையுடன் பகிர்ந்த விதம் ஆர்வத்தைத் தூண்டி விட்டது. அடுத்த ஆண்டுக்கான பட்டியலை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம். விரைவில் வெளியிடுங்கள். நன்றி.

    ReplyDelete
  24. வரும் 2017-ன் அனைத்து இதழ்களும் ஆசிரியரின் Trade Mark கைவண்ணத்தில் அமைந்து நெஞ்சில் நீங்கா இடம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
    (நம் கவலை நமக்கு.....!)

    ReplyDelete
    Replies
    1. எல்லா புத்தகங்களின் அச்சுத் தரமும் பாட்ஷாவுக்கு பிடித்ததாய் இருக்கவேண்டுமென்று நாங்களும் இறைவனை வேண்டிக்கொள்கிறோம்! ;)

      Delete
    2. ஈரோடு விஜய்.!

      ஹாஹாஹாஹா..........நானும்.!

      Delete
    3. இந்த முறை அச்சுப்பிரிவில் நேரடியாக களமிறங்கும் பாட்ஷாஙுக்கு வாழ்த்துகள்

      Delete
  25. Waiting for 2017 catalog

    ReplyDelete
  26. விஜயன் சார்,
    இரண்டு கதைகளின் அட்டைபடம்களும் அருமையாக உள்ளது.

    அடுத்த வருட சந்தாபற்றி அறிவிக்கும் போது அடுத்தவருடம் திட்டமிட்டுள்ள இதழ்கள் அனைத்தையும் முழுமையாக அறிவித்துவிடுங்கள். பணம் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். இந்த வருடம் அறிவித்தது போல் முத்து மினி மற்றும் Absolute Classic போன்றவைகளை வருடத்தின் நடுவில் அறிவிக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. @ PfB
      பொருளாதார ரீதியாக சற்றே சிரமப்படுத்தும் என்றாலும், இதுபோன்ற திடீர் அறிவிப்புகளில் கிடைக்கும் 'கிக்'கே அலாதியானதுதானே? தவிர, ஆண்டின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிடும் காரணியாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்!

      Delete
    2. செயலாளரின் கூற்றை வழிமொழிகிறேன் ..

      Delete
    3. செயலாளரின் கூற்றை வழிமொழிகிறேன் ..

      Delete
  27. வணக்கம் வாங்கிக்கோங்க...!!!

    ReplyDelete
  28. கடந்த மாத வலை பதிவுகளில் ஆண்டு சந்தாவின் இரண்டாவது தொகையை செலுத்தாத நன்பர்களுக்கு ஆசிரியர் நினைவுட்டல் செய்து இருந்தார். அந்த நண்பர்கள் நமது நண்பர்களின் நண்பர்களாக இருந்தால் அவர்களிடம் உடனே சந்தா தொகையை செலுத்த சொல்லலாமே. ஆசிரியர் தன் பக்க முயற்சிகள் எல்லாம் (போன் மற்றும் sms செய்து நினைவூட்டிய பின்னும் எந்த விதமான முன்னேற்றுமும் இல்லாத காரணத்தினால்) எடுத்த பின்னே இந்த வலைபதிவில் நினைவுட்டல் செய்துள்ளார்.

    இரண்டாவது சந்தா தொகை செலுத்தாத நண்பர்கள் உடனே மிச்சம் உள்ள பணத்தை அனுப்பலாமே! ஒரு காமிக்ஸ் ரசிகனின் கோரிக்கை.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : கடுதாசி ; போன் ; SMS ; மின்னஞ்சல் - என்று அனைத்து முறைகளிலும் நினைவூட்டல்கள் இதுவரைக்கும் நல்கியுள்ள பலன் பூஜ்யத்துக்கு அருகில்தான் ! வேறு வழி தெரியாதுதான் இங்கே வலைப்பதிவில் அது பற்றி எழுத நேரிட்டது ! Sad to say - அதற்கும் பெரியதொரு பலனைக் காணோம் ! சுமார் ரூ.35,000 அந்தரத்தில் தொங்குகிறது !!

      2017-க்கு இந்த இரு தவணை payment முறையினை மறுபரிசீலனை செய்வதைத் தாண்டி வேறு மார்க்கம் தெரியவில்லை !

      Delete
    2. நண்பர்கள் தயவுசெய்து இனியும் காலதாமதம் செய்யவேண்டாம். நம் சங்கடம் குறையவே இந்த இரு தவணை சந்தா முறையை கொண்டு வந்தார் ஆசிரியர். அந்த முறையால் அவருக்கே சங்கடம் உண்டாக நாம் இடமளிக்கலாமா? தயவுசெய்து உடனடியாக மீதமுள்ள சந்தாதொகையை தோழர்கள் செலுத்திவிடலாமே.

      Delete
  29. Replies
    1. Warm welcome. Thorgal is coming in January 2017 according to our editor commitment.

      Delete
  30. வணக்கம்,
    லக்கி 70 பாா்த்தா அப்படியா தெதிரியுது
    அறுமையான அட்டைபடம் 100/10

    ReplyDelete
    Replies
    1. ஆமா அறுமையாக தெதிரியுது

      Delete
    2. அன்புள்ள ஆசிரியரே

      மாடஸ்ட்டி¸ வேதாளர் மற்றும் காரிக்கன் ஆகிய கதைகளை நிறைய எதிர் பார்க்கிறேன்.

      Delete
    3. Jegang Atq : சாரி சார் ! திட்டமிடலிலேயே இல்லா இருவருக்கு கோப்பைகளும், மெடல்களும் எதிர்பார்த்தால் என்ன செய்வது ?

      Delete
    4. So it confirmed that madasty stories are in 2017.

      Delete
    5. இ.மு.க.வினருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
      அடுத்த வருஷம் இளவரசி வருவது உறுதியாகிவிட்டது.சூப்பர் சார்.....!

      Delete
    6. இ.மு.க.வினருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
      அடுத்த வருஷம் இளவரசி வருவது உறுதியாகிவிட்டது.சூப்பர் சார்.....!

      Delete
    7. இ.மு.க.வினருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
      அடுத்த வருஷம் இளவரசி வருவது உறுதியாகிவிட்டது.சூப்பர் சார்.....!

      Delete
  31. /// முத்து காமிக்ஸ் 45-வது ஆண்டு மலர்; லயன் # 300 ; முத்து # 400 ; தீபாவளி மலர் என்று முரட்டுச் சிங்கங்களாய் பல எதிரே காத்திருக்க –//

    ஹைய்யா! ஐ லவ் குண்டூஸ்! :)

    ReplyDelete
    Replies
    1. உலக அழகிகள் ஜீரோ சைசில் அணிவகுத்து வருவதைவிட நம்ம குண்டூஸ் அணிவகுத்து வருவதே சூப்பர்.!

      Delete
    2. Erode VIJAY : யாரங்கே... ? "குண்டன் பில்லி"யைத் தூசு தட்டுங்கப்பா !!

      Delete
    3. //ஹைய்யா! ஐ லவ் குண்டூஸ்! :)//
      +11111111111111111111111111111

      Delete
  32. வணக்கம் சார்.//சந்தா Z-க்கு பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது தமிழகத்தைப் புரட்டிப் போடும் கொசுறுச் சேதி ! இனி அது சந்தா "E" என்று அன்போடு அழைக்கப்படும் !// :D உங்கள் எழுத்துநடையில் உள்ள ஸ்பெஷலே இது போன்ற நகைச்சுவை உணர்வுதான் சார் . வெய்டிங் ஃபார் 2017 லிஸ்ட். கண்டிப்பாக எங்களை குஷிபடுத்தும் வகையிலான ஒரு பட்டியலே தயாரித்திருப்பீர்கள். லக்கி அட்டை வசீகரிக்கிறது. இந்த மாத டெக்ஸ் கதை அசாத்தியம். அப்பனூஸா பற்றியும், ராணுவ ஒப்பந்தங்கள் பற்றியும் டெக்ஸ் ஒரு வெறுமையுடன் சொல்லும் போது இருந்த தடமே தெரியாமல் அழிந்து போன செவ்விந்திய இன மக்களை நினைத்து மனம் வேதனை பட்டது. ஜெர்மானிய யூதர்களின் இனபடுகொலையை அறிந்த இந்த உலகிற்கு அதற்கும் மேலான கொடுமையான செவ்விவிந்திய இனஅழிப்பு தெரியாமல் போனது ஆச்சரியம்தான்.

    ReplyDelete
    Replies
    1. cap tiger : டெக்ஸ் / கேப்டன் டைகர் கதைகள் ஒடுக்கப்பட்ட செவ்விந்திய மக்களின் பக்கமாய்ப் பரிவான பார்வை வீசுவதும்கூட, அவை நம்மிடையே வெற்றி பெறுவதற்கொரு காரணம் என்பேன் !

      இன அழிப்புகளுக்கு நாமும் புதியவர்கள் அல்லதானே சார் ? வரலாற்றின் சில கறுப்புப் புள்ளிகள்....!

      Delete
    2. சத்தியமான வார்த்தைகள்...

      Delete
    3. கசப்பான உண்மை . ஒரு வகையில் செவ்விந்தியர்கள் நம்மவர்களே. கலாசார ரீதியில் நம்முடைய சில பழக்க வழக்கங்கள் | மொழி அங்கே உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

      Delete
    4. //கலாசார ரீதியில் நம்முடைய சில பழக்க வழக்கங்கள் | மொழி அங்கே உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். //

      cap tiger நான் அறிந்தவரை இது புது தகவல் ,History doctor Sena Aana இந்த குறிப்பு குறித்து ஏதும் தெரியுமா

      Delete
  33. ஆசிரியருக்கும் ..நண்பர்களுக்கும் ...இனிய சிறு மழை தூரலுடன் காலை வணக்கம் ...:-)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : சுளீர் வெயிலுடன் எங்களது பதில் வணக்கம் தலீவரே !

      Delete
  34. அன்புள்ள ஆசிரியருக்கு,
    போன பதிவில் எனது ஆசையான, 2017 கேட்லாக்கை அக்டோபரில் ரிலிஸ் செய்ய வேண்டும் என்பதை செய்து காட்டபோவதற்க்கு முன்கூட்டிய நன்றிகள்.
    இம்முயற்சி பல நண்பர்களுக்கு சந்தாவை சரிவர செலுத்த பயன்படும் என்று நம்புகிறேன்.

    பல குண்டூஸ்+ஸ்பெசல் வெளியூடுகள் இருப்பதால், 2017 நிச்சயம் களைகட்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. விற்பனையும் அதிகரித்து குடோனும் சீக்கிரமே காலிஆகி, இன்னும் நிறைய கதைகள் வர ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
    👍 👍 👍

    ReplyDelete
    Replies
    1. Hassan MOUGAMADOU : நன்றிகள் சார் ! உங்கள் வாக்குப் பலிக்கட்டும் !! பாரிஸ் வரும் போது ஒரு கிலோ மைசூர்பாகு கையில் எடுத்துவருகிறேன் !!

      Delete
    2. ஸசனுக்கு நானும் திருவில்லிபுத்தூர் சர்வோதயா பால்கோவா ஆசிரியரிடம் கொடுத்து விடுகிறேன்....!

      Delete
    3. ஆஹா,மைசூர்பாகு பா???
      நண்பர்களே! சந்தாவை முழுமையாக கட்டுங்க!
      எனக்கு சுவீட் அனுப்புங்க!!!

      நன்றி ஆசிரியரே. நிச்சயம் நல்லதே நடக்கும்.

      Delete
    4. நன்றி shinesmile foundation sir.

      Delete
  35. ஆஹா ..அடுத்த வருட மெகா அறிவிப்புகள் நினைக்க நினைக்க இனிக்கிறது சார் ..

    ReplyDelete
  36. லக்கி அட்டைப்படமும் சரி வலை மன்னனின் அட்டைபடமும் சரி போட்டி போட்டு கொண்டு அசத்துகிறது சார் ...இம்மாத கடைசியிலேயே இதழ்கள் கைக்கு கிடைக்க இருப்பது இனிய அதிர்ச்சி...காத்து கொண்டே இருக்கிறோம் ..

    ReplyDelete
  37. போனவாரம் முழுமையாக காணாமல் போனதற்கு வட்டிக்கு வட்டியாக இம்முறை காலை முதலே ஆஜர் ஆனதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ் சார் ...

    போனமுறை டெக்ஸ் ...சமர்ப் இருவரும் பெற்ற மாபெரும் வெற்றியை பற்றி தாங்கள் ஏதும் பகிரவில்லையே சார் ..

    ReplyDelete
    Replies
    1. பரணி K,
      உங்கள் லோகோ-வில் இருப்பது...?

      Delete
    2. தலீவரே....நிற்க நேரமில்லாப் பயணமிது ! பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் 'ஜில்' லென்று இருப்பினும் அவற்றில் லயித்து நின்றுவிட்டேனெனில் அடுத்த மாத ஓட்டத்துக்குத் தாமதமாகி விடுவேனோ என்ற பயம் என்னுள் உண்டு !

      டெக்ஸும், நீலப் பொடியர்களும் கலக்கினார்களெனில், காத்திருக்கும் மாதத்தில் புதுவரவு ஜேசனும், லுக்கியும் தூள் பண்ணவிருக்கின்றனர் ! அதுவும் ரின்டின் கேன் இந்த லக்கி லூக் ஆல்பத்தில் கெஸ்ட் ரோலில் செய்யும் அழும்பு அதகள ரகம் !!

      Delete
    3. //அதுவும் ரின்டின் கேன் இந்த லக்கி லூக் ஆல்பத்தில் கெஸ்ட் ரோலில் செய்யும் அழும்பு அதகள ரகம் !! //

      :)

      Delete
  38. எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம். ரத்தம், பிசாசு, மரணம் இந்த மாதிரி இல்லாமல் ஆசிரியர் என்னவிதமான தலைப்புகளை தேட முடியும்? சிக்கலான காரியம்தான். "சில தலைப்புகள்!? " (சும்மா ஜாலிக்குத்தான்)
    1.டெக்ஸூம் கார்சனும் ஒன்னா
    வெடிச்சவுங்க!
    2.எங்க ஊரு வேட்டுக்காரன்!
    3. பென்னி நீ ரொம்ப Funny!
    4.உத்தம வில்ல(ர்)ன்...
    5.Gunஐ தாண்டி வருவாயா?
    6.Gun ம் Gun ம்
    கொள்ளையடித்தால்....?
    (சாதல் என்றே அர்த்தம்!)
    7.நாலு போக்கிரிகளும்
    நல்லா இருந்த ஊரும்..!
    8.Gun ஆல் முடியும் தம்பி!
    9.Gunஐ நம்பாதே!
    உன்னை ஏமாற்றும்!! 10.எதற்கும் துணிந்தவள்-
    மாடஸ்டி!!
    11.ஜூலியா நீ ரொம்ப
    ஜாலியா?
    12.வருவான் "வெடி" வேலன்!
    13.தூங்காத Gun கள்!
    14.கடமை கண்ணியம்
    தட்டுப்பாடு!
    15.வருத்தப்படாத வஞ்சகர்
    சங்கம்!
    16.வில்லனுக்கு வில்ல(ர்)ன்.
    17.பய(ண)ங்கள் முடிவதில்லை.
    18.All IN All அழகுராணி மாடஸ்டி!
    19.மாண்டவர் பூமி!
    20.தாளம் தப்பாத வேதாளம்!
    (விஜய் ரசிகர்களுக்கு சாக
    மறந்த சுறா.அஜித்
    ரசிகர்களுக்கு...?)
    21.மோதாமல் ஒரு நாளும்
    இருக்க வேண்டாம்!
    22.கண்ணா (வெடி) குண்டு
    தின்ன ஆசையா?
    23.வெடித்தால் மட்டும் போதுமா?
    24.அடிக்காத மேதை!

    இதற்கு மேலும் நண்பர்களின் பொறுமையை சோதிக்க கூடாது என்ற "நல்லெண்ணத்தில்" இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பிரமாதம் அண்ணா!

      Delete
    2. AT Rajan Sir,
      உங்கள் காமிக்ஸ் ரசனை, உங்கள் தலைப்புகளில் மிளிர்கிறது.
      தலைப்பு வைக்கும் குழுவில் நீங்கள் இடம் பெறலாம்.
      உங்களது தலைப்புகள் பதிப்பில் இடம் பெற தகுதியானவையே.இதில் தேவைப்படுவதை ஆசிரியர் எடுத்துக்கொள்ளமாட்டாரா என்ன.

      Delete
    3. Atr@....

      :-)))))

      சிரிச்சு மாளல...

      6,23 ...செம...செம...

      நீங்கள் ஆயிரம் தலை(ப்பு) கொடுக்கும் அபூர்வ சிந்தாமணி...:)

      Delete
    4. @ ALL : "சத்தமின்றி யுத்தம் செய் !"

      இதுதான் ஆண்டின் முதல் இதழின் தலைப்பு !

      Delete
    5. சத்தமின்றி யுத்தம் செய்

      + 1

      Delete
    6. திரு.ATR

      19 & 21 - செம! :)))

      Delete
    7. ஏடிஆர்.!

      ஹாஹாஹாஹாஹாஹா...............................!!!!!!!!

      Delete
    8. எடிட்டர்சார் மேலே உள்ள தலைப்புகளுடன் வேறு சில தலைப்புகளையும் எழுதியிருந்தேன். ஆனால் பதிவிடவில்லை. காரணம் எனக்கே சில குழப்பங்கள். ஏற்கனவே வேறு இதழ்களில் ஏதாவது வந்திருக்குமோ என்ற சந்தேகம்.ஆனால் அதனில் ஒரு தலைப்பு ஏறக்குறைய உங்களின் முதல் இதழுக்கான தலைப்புடன் சற்று பொருந்திவருவதுதான் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. அந்த தலைப்புகள்: 1.வேங்கையும் நானே
      வேந்தனும் நானே
      2.புரவி மேல் ஒரு புயல்
      3.வன்மேற்கின் வலியவன்
      4.இரவில் ஒரு சூரியன்
      5.சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
      6.நரகத்தின் திறப்பு விழா
      7.மரணத்தோடு மல்யுத்தம்.
      8.தூங்க மறந்த துப்பாக்கிகள்.

      Delete
    9. நண்பர்களே ஒரு ஜாலிக்காக எழுதப்பட்ட தலைப்புகள் இவைகள்.இவைகள் உங்களுக்கு பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

      Delete
  39. Sir, சிவிடெல் வரைந்த TeX கதை ஒன்று இட்டாலி மொழியில் இருப்பதால் பெயர் தெரியவில்லை கலரில் superaga ullathu அந்த கதை உங்கள் தேர்வில் உள்ளதா? என்பதை அறிய ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. Sridhar : ஓவியர் சிவிடெல்லி 21 TEX கதைகளுக்கு சித்திரங்கள் போட்டுள்ளார் ; நாமும் அவரது கதைகளை நிறையவே வெளியிட்டுள்ளோம் ! 'தலையில்லாத் போராளி" கூட அவரது கைவண்ணம் தானே ?

      Delete
    2. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, சிவிடெல்லை அறிமுகப்படுத்தியது எனக்கு அறிமுகப்படுத்தியது நீங்கள் தான்.நான் சொன்னது அவர் வரைந்த வேறு ஒரு கதை உங்கள் தெரிவில் உள்ளதா என்பதே என் ஆவல்.

      Delete
  40. //இதெல்லாம் ஒரு பக்கமிருக்க – ‘தல தீபாவளி‘க்கென இப்போது பலகாரங்களும் தயாராகி வருகின்றன ! ‘சர்வமும் நானே‘ மெகாவோ-மெகா நீளமான டெக்ஸ் அதிரடி என்பதால் அதனையும் இயன்றளவுக்குச் சீக்கிரமாய்க் கரைசேர்க்கப் பல்டியடித்து வருகிறோம்! //

    தீபாவளிக்கு ABC-மில்லியன் ஸ்பெஷல்னு சொன்னீங்களே எடிட் ரெண்டும் ரெடியாகுதா ?

    ReplyDelete
  41. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், முதலில் பிடியுங்கள் நன்றிகளை,
    1.சில பல பதிவுகளில் விற்பனை சரியில்லை .அது இதுவென்று கூறும்போது அடிவயிற்றில் புளியை கரைக்க தான் செய்தது.சந்தா E யை பார்க்கும் வரை.E யே உண்டு என்றால் A B C D இருந்தாக வேண்டும் தானே? நமக்கு காமிக்ஸ் அடைமழை இருந்துகிட்டே இருக்கணும்.என்ன நான் சொல்றது. ...
    2.விற்பனை பொருட்டு முத்து 45 வது ஆண்டுமலர், லயன் 300,முத்து 400,தீபாவளி மலர் போன்ற spl கள் வராமல் போய் விடுமோ என்ற பயம் நீங்கியதற்கு....
    3.special thanks.tex ஓவர்டோஸ் என்று நினைக்காமல் சந்தா B யை களம் காண வைத்ததற்கு (இருக்கு தானே டெக்ஸ் மேல் உள்ள நம்பிக்கையில் .12 மாதங்களும் டெக்ஸை கொடுங்களேன் தனியே.பிறகு spl லில் பார்த்து செய்துவிட மாட்டீர்களா என்ன? எங்களுக்கு சர்வமும் டெக்ஸ் அவ்வளவே தான் .
    4.கலரில் மிகப்பெரிய குண்டுபுக்கை அதிகம் இவ்வருடம் எதிர்பார்க்காலாமா? உள்ளுணர்வு சொல்கிறது 1000 பக்க குண்டுபுக் உள்ளது என்று (லயன் 300+முத்து400 சேர்ந்து வந்தால் எப்படி இருக்கும். )
    சர்வமும் நானே மெகாவோ மெகா சாகஸம் என்று கூறியிருந்தீர்கள்.(இப்போதெல்லாம் டெக்ஸின் 330 பக்க சாகஸமே. அந்த list ல் சேர அடம்பிடிக்கிறது .atleast 500 பக்கத்துக்கு மேலே சென்றால்தான் மெகா சைஸ் .டெக்ஸை பொறுத்தவரை வேண்டும் வேண்டும் இன்னும் நிறைய வேண்டும்) .
    இன்னும் 15 நாட்களில் வரப போகும் அட்டவணைக்கு மனது ஏங்கித் தவிக்கிறது.பேசாமல் அந்த ஓட்டைவாய் உலகநாதனின் வாயில். உள்ள பெவிகாலை எடுத்து விட்டு கொஞ்சமே கொஞ்சமாக அட்டவணை பற்றி ஒரு சின்ன முன்னோட்டம்.
    மேலே கூறியது அனைத்தும் என் ஆர்வத்தின் வெளிபாடே தவறாக இருந்தால் மன்னிக்கவும். (அட்டவணையை பார்ப்பதற்கு முன்பே இது கொஞ்சம் over தான் .என்ன செய்வது பழக்கத்தை விட முடியவில்லையே என்ன செய்வேன்.பரமபிதாவே எம்மை காத்தருளும் .நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார்.!

      பெவிக்கால் பெரியசாமியை நாடு கடத்துங்கள்.! ஓட்டைவாய் உலகநாதனுக்கு விசா கொடுத்து , ஆராத்தி எடுங்கள்.!

      Delete
  42. All the best for a great 2017 comics
    Bonanza!
    I am sure editor vijayan will rock!
    Only worry is consumers have narrowed down your range and we may not get real off beat books!
    But let lion taste commercial success for few years for it to survive forever!

    ReplyDelete
  43. ஆசிரியரே அந்த மெகா சைஸ் டெக்ஸ் கதை பட்டியலில் இடம் பெற்றுள்ளதா

    ReplyDelete
  44. பட்டியலில் ஜானி இருக்கிறாரா
    மாடஸ்டி இருக்கிறாரா
    ஆர்ச்சி இருக்கிறாரா
    இரட்டை வேட்டையர்கள் இடம் பிடிப்பார்களா ஐயோ இன்னும் 19 நாட்கள் எப்போது போகும் பட்டியலை காண மிக ஆவலுடன்

    ReplyDelete
    Replies
    1. செந்தில் சத்யா : சிலபஸிலேயே இல்லா பாடங்களிலிருந்து கேள்விகள் வர முடியுமா ?

      Delete
  45. ///So புதுத் தடத்தில் துவக்க நாட்களில் தட தடக்கப் போவது 6 கோச் வண்டிகள் மாத்திரமே ! இந்த ஆறு கோச்களும் ‘புல்‘லாகி விட்டன ; இன்னமும் ‘டிமாண்ட்‘ உள்ளதென்று ஊர்ஜிதமானால் பெட்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டிடலாம் !//

    :) :) :) :) :)

    //சந்தா E–ன் 2 கதைகளுக்கான ஒப்புதல் நீங்கலாய் பாக்கி எல்லாமே இந்த வாரம் தான் ஓ.கே. ஆனது என்பதால் – சிறுகச் சிறுக மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறேன்.//
    waiting for your update Edit sir, plz no if and but this year.

    //ஒரு மாதிரியாய் இதழ்களின் எண்ணிக்கை ; சந்தாத் தொகை ; கதைத் தேர்வுகள் என்று முடித்து விட்டு//
    அடிடாசக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை ...! :D

    // – ‘தலைப்பு நல்கும் தருணத்தை‘எட்டிய போது இது தொடர்பாய் உங்களது சிலபல எண்ணச் சிதறல்களைப் பார்க்க முடிந்தது ! அவை சொன்ன கருத்துக்களும் சரியாகவே பட்டதால் இந்த தபா – ‘இரத்தம்‘ ; ‘காட்டேரி‘; ‘மரணம்‘ ; ‘பிணம்‘ இத்யாதி... இத்யாதிகளை ஓரம்கட்டுவதென்று தீர்மானித்தேன் !//அவை கதைகளின் தன்மைக்கேற்ப அத்தியாவசியமானவைகளே என்று எடுத்துக் கொள்ளுங்கள்//
    waiting waiting எடிட் சார்வாள்..!

    //முத்து காமிக்ஸ் 45-வது ஆண்டு மலர்; லயன் # 300 ; முத்து # 400 ; தீபாவளி மலர்//
    குண்டு 2017என்று சொல்லுங்கள் ..! :)

    //அட்டவணையில் "புதுமுகங்கள்" பளிச் என்று இருந்திட வேண்டுமென்ற ஆர்வமும் மேலோங்கியது ! இதன் பொருட்டு அவசியமான நெட் உருட்டல்கள் ஏராளமோ-ஏராளம் !//
    :) waiting waiting... Edit sir, plz do give teaser once its confirm going to be in 2017 schedule .... no need to wait till schedule plz...

    //ஓவர் பில்டப்போடு உலவி வரும் 2017-ன் அட்டவணையானது இம்மாத இதழ்களோடு உங்களை சந்திக்கப் புறப்படும் என்ற செய்தியோடு//
    மிக்க நன்று அட்டவணை கையில் வரும் வரை நானும் waiting எடிட் !

    ReplyDelete
  46. டியர் எடிட்டர்

    ஐந்து தடங்கள் இருந்தாலும் 54 இதழ்களுக்கு குறைவாகவே எதிர்பார்க்கிறேன். வரும் வருடம் வேண்டிய தடங்களுக்கு சந்தாவும் (A,B,C) மற்றும் இதர தடங்களில் (D,E) கண்காட்சியில் வாங்குவதும் எனது பிளான்

    ReplyDelete
    Replies
    1. Raghavan : 54 இதழ்களா ? ஆத்தாடி !! நிச்சயமாய் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை !

      Delete
    2. அப்ப இதழ்களின் எண்ணிக்கை கூடவில்லை என சொல்லுங்கள்!!

      Delete
  47. @ ALL : ஒரு ஜாலி கேள்வி !

    "தடை பல தகர்த்தெழு !"

    இதுவும் 2017-ன் ஒரு ஆல்பத்தின் பெயர் ! யாரது சாகசத்துக்கு என்று யூகியுங்களேன் - பார்க்கலாம் ?

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் விஜயன் சார் ?

      Delete
    2. நீங்க ஜிரோமையா விருக்கு பட்ட கஷ்டங்களுக்கு இது சரியான பெயர் எடிட் இல்லை வேதாளர் இன்னும் சிரமப்படுத்தியதால் இந்த பெயர் ? ;P

      Delete
    3. தடைபல தகர்த்தெழ ஜெராமையா கதையின் டைட்டில்.!

      Delete
    4. லார்கோ வின்ச்(உறுதியாக. அப்படி இல்லைன்ன இப்ப இருக்கிற காமிக்ஸ் ஸூக்கு வேறு பெயர் வைத்து விட்டு இதை லார்கொ வின்ச் இந்த பொயர் வைக்கவும்.)

      Delete
    5. @ ALL : இல்லீங்கோ ! இது தானைத் தலைவர் ரின்டின் கேனின் ஆல்பத்தின் பெயர் !

      Delete
    6. லார்கோ அல்லது ஷெல்டன் சார் ..:-)

      Delete
    7. // இல்லீங்கோ ! இது தானைத் தலைவர் ரின்டின் கேனின் ஆல்பத்தின் பெயர் ! //

      'தொடை பல கடித்திழு' - ரின்டின் சாருக்குப்பொருத்தமாதான் கீது..

      Delete
    8. யே..யப்பா! ரின்டின்கேனுக்கே இப்படியொரு அதிரடித் தலைப்புன்னா... டெக்ஸு கதைக்கெல்லாம் கேட்கவா வேணும்?

      ஆ..ஆனா, ஒருவேளை... டெக்ஸ் கதைக்கு 'மோப்பம் பிடித்து முன்னேறு'னு வச்சிருக்காரோ என்னமோ?! ;)

      Delete
    9. Ada, sema. Thailvar varuvathu uruthiyaki vitathu.

      Delete
    10. //யே..யப்பா! ரின்டின்கேனுக்கே இப்படியொரு அதிரடித் தலைப்புன்னா... டெக்ஸு கதைக்கெல்லாம் கேட்கவா வேணும்? ///.---தலைப்ப கேட்டாலே சும்மா அதிருதில்ல...

      Delete
  48. போன வாரம்தான் 'குற்றம் பார்க்கின்' படித்தேன் .. ஒரு compact action அதகளம் - simple yet superb .. சித்திரங்களும் அருமை ... மறுபதிப்புக்கள் சிலவற்றை படித்ததில் எழுத்துப்பிழைகள் நீக்கப் பட்டிருப்பது மகிழ்ச்சி ..

    ReplyDelete
  49. /// இந்த தபா – ‘இரத்தம்‘ ; ‘காட்டேரி‘; ‘மரணம்‘ ; ‘பிணம்‘ இத்யாதி... இத்யாதிகளை ஓரம்கட்டுவதென்று தீர்மானித்தேன்///

    அச்சச்சோ! டைட்டிலில் இந்தமாதிரியான வார்த்தைகள் இல்லேன்னான்னா நம்ம காமிக்ஸை நமக்கே அடையாளம் தெரியாதே... ;)
    வேணுமின்னா... சுவையான இரத்தம், பாசக்கார காட்டேரி, ஆசையாய் ஒரு மரணம், அழகான பிணம் - இப்படி ஏதாச்சும் வச்சுக்கிடலாமே? ;)

    ReplyDelete
  50. வணக்கம்,
    மதிய வணக்கம்

    ReplyDelete
  51. குண்ண்ட்ட்ட்டு மழை பொழியும் 2017,
    30வருடம் முந்தைய மெகா குண்டுகள் விளைந்த்த 1987ஐ ஞாபகப்படுத்துகிறது சார்...
    Atrsir& மற்ற சீனியர் நண்பர்கள் அந்த ஆண்டின் நினைவுகளை இங்கே எங்களுக்காக நினைவு கூறலாமே...

    MV sir&இனியர்@ வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  52. விஜயன் சார், கோரிக்கை:

    // பழிக்கு வாங்கும் புயல்.!!

    முன் அறிமுகமாக மாடஸ்டியின் கதை என்று ஆறு பக்கத்தில் வந்த குட்டிக்கதை.

    இந்த கதையை படித்தால் மட்டுமே மாடஸ்டி கதையை முழுமையாக ரசிக்க முடியும்.தாய் தந்தையே யார் என்று தெரியாத அப்பாவி சிறுமியாக, ஒரு ரொட்டித்துண்டுக்காக அடித்து கொலை செய்யும் அளவுக்கு கொடூரமான அகதி முகாமில் இருந்து தப்பித்து.உயிர் வாழ பிச்சை எடுத்தும் ,திருடியும் ,தன் முயற்சியால் புத்தகத்தை திருடி கல்வி கற்றும். நல்லது கெட்டது சொல்லித்தர யாரும் இல்லாத அனாதையாக, அரவணைக்க யாரும் இல்லாமல் ஒரு சமூகவிரோதி கூட்டத்தில் சேர்ந்து அதில் தலைவியாகி பெரும் பணம் சம்பாதித்தாலும் போதே பொருளையும் மனித தன்மையற்ற செயல்களை அறவே வெறுத்தும், இயற்கை விதியின் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு அது வரை சூழ்நிலை கைதியாக இருந்த இளவரசி சூழ்நிலையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தபின் பெரும் செல்வத்தை தன்னை மட்டுமே நம்பியிருந்த நெட்ஒர்கை சார்ந்தவர்களுக்கு பணம் கொடுத்து செட்டில்மெண்ட் செய்து , அவர்கள் வாழ்வை வளமாக்கி,தானும் வசதியாகிக்கொண்டு ரிட்டயர் ஆகிவிடும் கதை இது.!அமைதியான வாழ்வு அவர்களுக்கு கசக்கவே இதை மோப்பம் பிடித்த உளவுத்துறை தலைவர் ஜெரால்டு அவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்.! //

    இந்த சிறுகதையை அடுத்தவருடம் வரவுள்ள மாடஸ்டியின் கதையுடன் இணைத்து தர முடியுமா? கோரிக்கை மட்டுமே! போராட விருப்பம் இல்லை :-)

    ReplyDelete
  53. Dear editor
    Any stories of tex vs proteus,an interesting villian who can change forms?

    ReplyDelete
  54. தலைப்புகள் சாத்வீகமாய் (அடோபர் மாத இதழ்களின் தலைப்புகளே சாத்வீகமாய்தான் இருக்கின்றன...) மாறிவரும்போது, வரவேற்பு எப்படி இருக்கும் என்பது கண்காட்சிகளில் அதன் விற்பனைகள் தான் நமக்கு உண்மையை புலப்படுத்தும்.

    வேதாளருக்கு ஒரு தனிசந்தா என்றால், எழுதிக்கங்கப்பா என்னோட சந்தாவை முதல்ல...

    ReplyDelete
  55. // சந்தா "E" - புதுத் தடத்தில் துவக்க நாட்களில் தட தடக்கப் போவது 6 கோச் வண்டிகள் மாத்திரமே! //

    Great!

    ReplyDelete
  56. பரணி K,
    உங்கள் லோகோ-வில் இருப்பது...?

    ######

    ஜீ ...அது டெக்ஸ்வில்லர் தான் ...:-)

    ஆசிரியருடன் நான் இருக்கும் லோகா வாஸ்து படி சரியில்லை போல ...போன வாரம் தான் அந்த புது லோகாவுடன் வருகை புரிந்தேன் ...ஆசிரியர் பதிவோடு சரி ..போன வாரம் இந்த பக்கமே எட்டி பார்க்க வில்லை ...சரி வழக்கம் போல டெக்ஸ் லோகாவுடன் வந்து சோதனை செய்து விடலாம் என்று மாற்றி வருகை புரிந்தால் பாருங்கள் ஆசிரியர் காலையே ஆஜராகி விட்டார் ...

    வாஸ்து உண்மை தான் போல ...:-)))

    ReplyDelete
    Replies
    1. தலைவரே வாஸ்து நல்லது.!


      நம் நாட்டில் போர் விமானங்களோ போர் கப்பல்களோ நாட்டுக்கு அர்பணிக்கும்போது கூட பூஜையை போட்டு தேங்காய் உடைத்துதான் ஸ்டார்ட் பண்ணுகிறார்கள்.!

      Delete
  57. எடிட்டர்சார் மேலே உள்ள தலைப்புகளுடன் வேறு சில தலைப்புகளையும் எழுதியிருந்தேன். ஆனால் பதிவிடவில்லை. காரணம் எனக்கே சில குழப்பங்கள். ஏற்கனவே வேறு இதழ்களில் ஏதாவது வந்திருக்குமோ என்ற சந்தேகம்.ஆனால் அதனில் ஒரு தலைப்பு ஏறக்குறைய உங்களின் முதல் இதழுக்கான தலைப்புடன் சற்று பொருந்திவருவதுதான் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. அந்த தலைப்புகள்: 1.வேங்கையும் நானே
    வேந்தனும் நானே
    2.புரவி மேல் ஒரு புயல்
    3.வன்மேற்கின் வலியவன்
    4.இரவில் ஒரு சூரியன்
    5.சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
    6.நரகத்தின் திறப்பு விழா
    7.மரணத்தோடு மல்யுத்தம்.
    8.தூங்க மறந்த துப்பாக்கிகள்.

    ReplyDelete
    Replies
    1. திரு. ATR
      அத்தனையும் அருமையான தலைப்புகள்!

      Delete
    2. ஏடிஆர் சார் சூப்பர் ...:-))

      Delete
    3. நண்பர்களே ஒரு ஜாலிக்காக எழுதப்பட்ட தலைப்புகள் இவைகள்.இவைகள் உங்களுக்கு பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

      Delete
  58. அன்புள்ள ஆசிரியரே

    ஸ்மார்ப் இந்த தடவை மிகவும் நன்றாக இருந்தது.
    தொடரட்டும்.

    ReplyDelete