Powered By Blogger

Sunday, September 18, 2016

அக்டோபரை நோக்கி....!

நண்பர்களே,

வணக்கம். கோடையில் காவிரியில் சொட்டுத் தண்ணீர் இருப்பதில்லை ; வைகை நதிப்படுகைகளோ கபடி மைதானமாய் உருமாற்றம் காண்பது வழக்கம் ; ஏரி... குளம்... கண்மாய் என சகலமும் முள்காடாகக் காட்சி தருவது நமக்குப் புதிதல்ல ! "என்றைக்காவது ஒரு நாள் கற்பனைகளுக்கும் இது போலொரு வறட்சி நேரிட்டால்- கிட்டத்தட்ட 675 ஆல்பங்களைத் தொடக் காத்திருக்கும் நமது இரவுக் கழுகாரின் கதி என்னாகுமோ ?" என்ற ரீதியிலான கோக்குமாக்கான சிந்தனைகள் மோட்டுவளையத்தை ஸ்டைலாகப் பரிசீலனை செய்யும் ஏதேனுமொரு ஓய்வான ஞாயிறின் போது அடியேனுக்கு எழுந்திடுவதுண்டு.......! அதே வன்மேற்கு ; அதே டெக்சாஸ்... அரிசோனா... நியூ மெக்ஸிகோ ; துளியும் மாற்றம் காணா அதே ரேஞ்சர்கள் ; "யாஹூ"...."வோ" ...என்று ஆழமான 'மணிரத்ன முன்னோடி' டயலாக் பேசிடும் செவ்விந்தியர்கள் ; புத்தியை புளியமரத்தின் உச்சியில் கழற்றி வைத்துத் திரியும் செம்பட்டைத்தலை ஜெனரல்கள் ; அமர்க்களமாய் வசனம் பேசி, அனாவசியமாய் சில்லு மூக்குகளுக்கு சேதாரத்தைக் கண்டுகொள்ளும் போக்கிரிகள் ; என்ற ரவுண்டுகளை ஏகமாய் அடித்தான நிலையில் இன்னமும் எதைத்தான் விட்டு வைத்திருப்பார்கள் – புதிதாய்க் கதைகளை உற்பத்தி செய்திடும் பொருட்டு ? என்று அவ்வப்போது ஆழமாய் 'ரோசனை' செய்யத் தோன்றும் !  ஆனால் போன மாதத்து ‘டெக்ஸ் கதைத் தேர்வுப் படலத்தின்‘ போது கிட்டத்தட்ட 75 கதைகளின் கருக்களைப் பரிசீலித்த போது – மனிதனின் கற்பனை சக்திக்கு எல்லைகளும் கிடையாது ; வறட்சிக்கு வாய்ப்பும் கிடையாதென்று புரிந்தது ! 

அதே காய்ந்து போன பாலைமண்ணில் நம்மவர்களை உலவச் செய்து போரடித்து விட்டதா ? ஒண்ணும் பிரச்சனையில்லை ; க்யூபா நாட்டுக்குக் கப்பலேற்றி விட்டால் போச்சு ! அர்ஜெண்டினாவிற்கு ‘பேக் அப்‘ செய்தால் போச்சு ! அடிதடி... புரட்சி... சலூன் சண்டைகள்... ஆயதக் கடத்தல்கள் என்ற மாமூலான plot-கள் சலித்து விட்டனவா ? கவலைப்பட அவசியமே கிடையாது – கோபம்... துரோகம்... பொறாமை... காதல்... நிறவெறி...பதவி வெறி... என்ற மனித உணர்வுகளை முன்நிறுத்திக் கதைகளை உருவாக்க படைப்பாளிகள் தயார் ! இம்மாதம் காத்திருக்கும் “தற்செயலாய் ஒரு ஹீரோ” இதற்குப் பொருத்தமானதொரு உதாரணம் என்று சொல்லலாம் ! சூழ்நிலைகள் ஒரு மனிதனை எவ்விதம் மாற்றுகின்றன ? ; ஒரு மனிதன் சூழ்நிலைகளை தனக்குச் சாதகமாய் எவ்விதம் உருமாற்றிக் கொள்கிறான் ? என்பதை 110 பக்கங்களுக்குள் compact ஆகச் சொல்லியிருக்கும் விதத்தைப் பார்க்கும் போது - ‘தல‘ என்றைக்குமே (கற்பனைப் பஞ்ச) ஆபத்துக்கு அப்பாற்பட்டவரென்பது புரிகிறது ! கடைசியாக போனெல்லிக்கு நான் விசிட் அடித்த சமயம் – ORFANI என்றதொரு எதிர்கால உலகுக் கதையின் வண்ண presentation ஒரு அறையில் ஓடிக் கொண்டிருந்தது. ஓரிரு நிமிடங்கள் மட்டுமே அங்கு நிற்க முடிந்தது ; அவர்கள் பேசிக் கொண்டதும் சுத்தமாய்ப் புரியவில்லை தான் ! ஆனால் ஓவியர் / கதாசிரியர் கூட்டணியின் பணியாற்றும் பாணிகள் ; அங்கே சிதறிக் கிடந்த சித்திரங்கள் ; ஒவ்வொரு frame-க்கும் அவர்கள் செய்துள்ள ஆய்வின் பின்னணிகள் ; நாயகனை / வில்லனை அவர்கள் ஓராயிரம் கோணங்களில் வரைந்து பார்த்திருப்பது என்பதையெல்லாம் பார்த்த போது மிரட்டலாக இருந்தது ! ஒரு ஹை-டெக் பாணிக்குப் படைப்பாளிகள் மாறி ஏககாலமாகி விட்டதென்று மட்டும் புரிந்தது ! So கதைக் கருக்களில் மாத்திரமின்றி ; கதை சொல்லும் விதங்களிலும் மாற்றங்கள் / புதுமைகள் சதா காலமும் back end-ல் அரங்கேறி வருகின்றன என்பதால் என் பயம் அனாவசியம் என்பது புரிகிறது ! இதோ- இம்மாத டெக்ஸ் சாகஸத்தின் அட்டைப்பட முதல் பார்வை!
இதுவொரு டெக்ஸ் போஸ்டரினை அடித்தளமாக்கிக் கொண்டு நமது ஓவியர் உருவாக்கியுள்ள சித்திரம் ! எழுத்துக்களை நுழைத்துள்ளதைத் தாண்டி இங்கே நமது டிசைனர்களுக்கு வேறு எந்த வேலையும் இருந்திருக்கவில்லை ! கதைகளுள் நாம் அடிக்கடிப் பார்த்திடும் புகைமண்டிய சலூன் காட்சியினை இதற்கு முன்பாக இத்தனை நேர்த்தியாக நாம் அட்டைப்படத்திற்குக் கொணர்ந்ததாய் எனக்கு ஞாபகமில்லை ! உங்களுக்கும் இந்த அட்டைப்படம் பிடித்திருப்பின் சூப்பர் ! And இதோ உட்பக்கத்தின் preview-ம் கூட! 

கதை நமது ஆதர்ஷ மௌரோ போசெல்லியினுடையது ! சித்திரங்கள் Andreucci என்றதொரு (புது) ஓவியர் ! போன மாதத்து “துரோகத்துக்கு முகமில்லை” ஒரு முழுநீள க்ளாசிக் சாகஸமெனில் – “தற்செயலாய் ஒரு ஹீரோ” புதுயுக டெக்ஸின் compact சரவெடி!
Boselli - The Boss !!
அக்டோபரின் நமது 4 இதழ் கூட்டணிக்குள் ஒரு புதியவரும் உண்டு ! ‘ஜேஸன் ப்ரைஸ்‘ ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே நமது ரேடாரில் தட்டுப்பட்டவர் தான் ; ஆனால் சற்றே முதிர்ந்த கதைக்களமென்ற காரணத்தால் இவரது கதைகளை நமது ஓடுதளத்தில் தரையிறங்க அனுமதி தரத் தயக்கம் காட்டி வந்தோம் - அந்நாட்களில் ! ஆனால் நமது ரசனைகளில் ‘பௌ.மு.‘; ‘பௌ.பி.‘ என்றதொரு நிலைப்பாடு உருவான பின்பாக ஜேஸன் ப்ரைஸ் கதைகளுக்கு ஷட்டர் போட வேண்டிய அவசியம் காணாது போய் விட்டது என்பேன் ! வித்தியாசமானதொரு டிடெக்டிவ் இந்த செம்பட்டைக்கேச மனிதர் ! அவர் உலா வரும் அரங்கமோ 19-ம் நூற்றாண்டின் துவக்க நாட்களது இலண்டன் ! வித்தியாசமான சித்திர பாணிகள் ; செம சுவாரஸ்யமான கதையோட்டம் என  இந்த 3 பாகத் தொடர் பயணிக்கிறது. தொடர்கதை போல அமைந்திடாதிருப்பதால் இவற்றைத் தனித்தனியாகவும் ரசிக்க முடிகிறது ! But still – பெரியதொரு இடைவெளியின்றி – அக்டோபர் ‘16 ; டிசம்பர் ’16 & ஜனவரி ’17 என்ற அட்டவணையில் இதனைத் தொய்வின்றி நிறைவு செய்திடவுள்ளோம் ! இதோ- “எழுதப்பட்ட விதி”யின் அட்டைப்பட முதல் look!
100% ஒரிஜினல் டிசைன்களே முன்னட்டைக்கும்; பின்னட்டைக்கும் ! இதிலொரு சுவாரஸ்யமான side track-ம் உள்ளது. இந்தத் தொடரை 2014-க்கு வெளியிடுவதென தீர்மானம் செய்து - இந்த ஒரிஜினல் அட்டைப்படத்தைப் பரிசீலனை செய்தேன் - 2013-ன் இறுதியின் போது ! டிசைன் ரொம்பவே இருண்டு போயிருப்பதாகவும் ; ‘டல்‘ ஆக இருப்பதாகவும் அன்றைய தேதிக்கு எனக்குத் தோன்றிட- நமது ஓவியரைக் கொண்டு இதே டிஸைனை அச்சு அசலாக வரையச் செய்தேன் - சற்றே ‘பளிச்‘ வர்ணங்களோடு ! அவரும் அதை நிறைவேற்றியிருந்தார் - ஒரு நுணுக்கமான பெயிண்டிங்கோடு ! ஆனால் தொடரையே அப்போதைக்கு பரணில் போட்டு விட்டதால் - பெயிண்டிங்கையுமே அதனோடு பேச்சுத் துணைக்கு அனுப்பி வைத்திருந்தேன் ! இந்தாண்டு ஏணியைப் போட்டு கதையைக் கீழிறக்கிய சமயம் - ‘உள்ளேன் ஐயா‘ என்று சித்திரமும் கைதூக்கி நின்றது. ஆனால் நமது தற்போதைய ரசனைகளுக்கு இந்த ‘எக்ஸ்ட்ரா நம்பர்‘ வர்ண மேம்பாடு அவசியப்படாதென்றுபட்டது. அதுமட்டுமன்றி கதையின் darkish mood-க்கு அந்த ஒரிஜினல் அட்டைப்படம் முழு நியாயம் செய்வதும் புரிந்தது. So பரணை மீண்டும் பெயிண்டிங்குக்குக் காட்டி விட்டு, ஒரிஜினலோடு கிளம்பி விட்டோம் ! இதோ கீழிருப்பது நமது ஓவியரின் கைவண்ணம் ! பாருங்களேன் - மனுஷனின் மெனக்கெடலை ! கம்பியூட்டரில் கொஞ்சம் நேரம் செலவிட்டிருந்தால் அதே ஒரிஜினல் டிசைனில் இருளைக் குறைத்து - வெளிச்சத்தை அதிகமாக்கிட சாத்தியங்கள் உண்டு என்ற ஞானம் கூட எனக்கு அந்நாட்களில் இல்லாதிருக்க - "எடுறா வண்டியை ! போடுறா டிசைனை !"  என்று சீறிக் கிளம்பியிருக்கிறேன் !! Phew !!!! 
And  இதோ உட்பக்கத்திலிருந்தும் ஒரு ட்ரைலர் ! எது மாதிரியும் இல்லாதொரு சுவாரஸ்யப் புது மாதிரி இந்தக் கதை என்பதால் அக்டோபரில் உங்களது வாசிப்புகள் களைகட்டப் போவது உறுதியென்று படுகிறது!
அப்புறம் போராட்டக் குழுவின் நிஜாரில்லாத் தலைவர்... சாரி... சாரி...... "நிகரில்லாத்" தலைவரின் அதிரடி சீற்றத்தை அடுத்த மாதமும் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தைத் தவிர்க்கும் பொருட்டு - சிங்கத்தின் சிறுவயதுக்குள் புகுந்து கொண்டிருந்த சமயம் ஒரு சுவாரஸ்யமான சமாச்சாரம் கண்ணில் பட்டது ! நமது துவக்க காலத்து வாசகர்களுக்கு இது நினைவிருக்கலாம்; எனக்கே கூட இதைப் பார்த்தான பின்பு – ‘அட... இப்படியும் ஒரு வேலை பண்ணினோம்லே!‘ என்ற நினைவு பளீரிட்டது! இதோ 1990-ல் நாம் விநியோகித்த ‘லயன் ஆல்பம்‘ ! ஒவ்வொரு மாத அட்டைப்படத்தின் பின்பக்கமும் இதனில் ஒட்டிடத் தேவையான (நமது) நாயகர்களின் படங்கள் இருந்திருக்கும். அவற்றை வெட்டியெடுத்து ஆல்பத்தில் ஒட்டி, அந்த நாயகரைப் பற்றி ‘நச்‘சென்று ஏதேனும் எழுதிப் பத்திரப்படுத்திட வேண்டும் ! 1990 டிசம்பரில் இவற்றை நமக்கு அனுப்பித் தந்தால் அதற்குக் குலுக்கலில் பரிசு! 'ஷப்பா... என்னவொரு அசகாய மார்கெட்டிங் யுக்தி !' என்று என்னை நானே முதுகில் அன்றைக்குத் தட்டிக் கொண்டேனோ இல்லையோ- பூர்த்தி செய்யப்பட்ட அந்த ஆல்பங்களில் ஒரு சிறு கத்தையினை பத்திரமாக நமது கிட்டங்கியில் கால்நூற்றாண்டு கழிந்த நிலையில் பார்க்க முடிந்த போது ஒரு இனமறியா சந்தோஷம் எனக்குள் ! இதோ மைலாப்பூரிலிருந்து நண்பரொருவர் அனுப்பியுள்ள ஆல்பத்தின் ஸ்கேன் ! 











இவற்றில் அந்நாளைக்குப் பங்கேற்றவர்கள் இங்குள்ளீர்களெனில் up your hands please !! இது சார்ந்த நினைவுகள் இன்னமும் இருப்பின் – நிச்சயமாய் அதைக் கேட்பதில் எல்லோருக்கும் ஆர்வமிருக்கும் தானே ? 

See you around all !! Have a great Sunday !

268 comments:

  1. Replies
    1. ஜேஸன் ப்ரைஸ். என்னைக் கவர்ந்த நாயகன். எடுத்த எடுப்பிலேயே ஆவி மோசடியைத் துல்லியமாக இனங்கண்டுரைப்பது புதுமை. மூன்றே பாகமே வந்துள்ளார் என்பதுதான் வருத்தமே. ஜேஸனுக்கு நம் அட்டை அருமையாக பொருந்தியுள்ளது மயிலை நண்பர் கலக்கியிருக்கிறார்.

      Delete
    2. அடடே! ,ஜேஸன் ப்ரைஸ் ரசிகர் மன்றமா.? பேஷ்! , பேஷ்.

      Delete
  2. டெக்ஸ் அட்டை படம் வித்தியாசமாக அதே நேரம் நன்றாக உள்ளது!

    ReplyDelete
  3. ஐந்தாவது. வணக்கம்.

    ReplyDelete
  4. வணக்கம் ஆசிரியரே & நண்பர்களே

    ReplyDelete
  5. காலை வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  6. ‘ஜேஸன் ப்ரைஸ்‘ கதை தொகுப்பை ஒரே புத்தகமாக கொடுத்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும். இதனை முழுவதும் படித்து முடிக்க 3 மாதம்கள் காத்து இருக்க வேண்டும் எனும் போது கோப பெரும்முச்சு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. பரணி,

      ஒரு மாதத்திற்க்கே கோபப் பெருமூச்சா! இங்கே ஒவ்வொரு ஆல்பத்திற்கும் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும்! இது மாதிரி அங்கே இருந்தால் என்ன செய்வீர்களோ :-)

      Delete
    2. Radja @ நாம் ஏற்கனவே பின்தங்கி உள்ளோம்! இந்த நேரத்தில் முழுவதும் முடிந்து தயாரக உள்ள கதையை நமக்கு பிரித்து கொடுப்பது என்ன நியாயம்! :-)

      Delete
    3. பரணி சார்.!

      எடிட்டர் என்ன சமாதானம் சொன்னாலும் ,தொடர் என்றாலே பந்தியில் சாப்பிடும்போது பாதியில் எழப்பிவிட்ட மாதிரி எரிச்சல் தான் தோன்றுகிறது.! +1

      மேற்கத்ய நாட்டில் அவர்களுக்கு பழக்கப்பட்டால் அவர்கள் பழக்கம் .,அப்படி.! நமக்கு என்டு கார்டு போட்டு முற்றும் என்ற வார்த்தையை போட்டால்தான் திருப்தி.!

      Delete
    4. அதெல்லாம் முடியாது Edi சர். எனக்கு நேற்றே எல்லா ஜோஸன் பிரைஸ் காமிக்ஸ் வேனும்.

      Delete
    5. //அதெல்லாம் முடியாது Edi சர். எனக்கு நேற்றே எல்லா ஜோஸன் பிரைஸ் காமிக்ஸ் வேனும்.//

      Edit mind voice: எனக்கு 2013லேயே எல்லா ஜோஸன் பிரைஸ் காமிக்ஸ் வேனும். ;P

      Delete
  7. அட்டை படம் நன்று!
    என்ன ஒன்னு !
    நம்ம தல, கார்சனுக்கு வச்ச வறுத்த கறிய ஓவர்'எ சாப்ட்டு...
    ஹ்ம்ம்....
    'நீ (நிஜமாலுமே) weightu தல' ;-)

    ReplyDelete
  8. அனைவருக்கும் வணக்கம். மலரும் நினைவுகள் என்னாலும் இனிமைதான்

    ReplyDelete
  9. அக்டோபரில் காமிக்ஸ் திருவிழா களைகட்டும் என தெரிகிறது ஏனினில் தீபாவளி மாதமும் கூட !

    ReplyDelete
  10. Replies
    1. ஒரு ஊரிலே: நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வை இந்த குட்டி மனிதர்களை கொண்டு ரசித்து/சிந்திக்கும் படி கொடுத்தமைக்கு கதாசிரியருக்கு ஒரு சபாஸ். இந்த குட்டி மனிதர்களுக்கு இடையே நடக்கும் அரசியலால் நாளுக்கு நாள் அவர்களிடையே பிரிவினை அதிகமாகும் போது இது எப்படி சுமுகமாக முடிய போகிறது என்று மனதில் சிந்தனை ஓட ஆரம்பித்தது இந்த கதையின் வெற்றி. இறுதியில் அவர்கள் உருவத்தால் சிறியவர்கள் மனதில் பெரியவர்கள் என்பது புரியும் படி கதை அமைந்தது சிறப்பு; இதுவரை அவர்கள்கிடையே இருந்த பிரிவினை செயல் மற்றும் உதட்டு அளவில் மட்டும்மே "மனதளவில் இல்லை" என்பதை இறுதி காட்சிகள் அமைந்து இருந்தன!

      இந்த கதையில் பொடி பாசையை பல இடம்களில் உபயோகபடுத்த வாய்புகள் இருந்து அதனை செய்யாமல் விட்டது குறை. இந்த பொடியர்களின் கதைகளில் பொடி பாசை மிகவும் முக்கியம் ஆனால் இந்த வருடம் வந்த இரண்டு கதைகளிலும் பொடி பாசைக்கு முக்கியத்துவம் இல்லாது குறை.

      இந்த முறையும் இவர்கள் ஹிட் அடித்து விட்டார்கள். மார்க் 8.5/10

      Delete
    2. இது வரையில் எனக்கும் நிலப் பொடியர்கள் பெரிதாக கவரவில்லை. ஆனால் இந்த மாதம் issue நேற்று தான் படித்தேன்.
      நீ நினைக்கும் அளவுக்கு நாங்க ஓன்னும் பொடிப்பயங்க கிடையாது.
      நாங்க ரொம்ப பெரிசுன்னு காமிச்சுடாங்க.
      அதுவும் கண்ணாடி போட்ட பொடியன் "சினியர் என்ன செல்வாருன்னா " என்று ஆரம்பிக்கும் இடமெல்லாம் குபிர் சிரிப்பு...

      Delete
  11. ஜேஸன் ப்ரைஸ்!
    Wow சூப்பர் சித்திரங்கள் !
    கலக்கலோ கலக்கல் !

    அட! 54'ல ஒரு question அவுட் ஆயிடுச்சு போல!
    Jan 2017 ஜேஸன் ப்ரைஸ் ;-)

    அப்புறம் !
    அந்த பழைய ஆல்பத்தை fill பண்ணி..
    உங்களுக்கு அனுப்பாம பத்திரமா நாமளே வச்சுருக்கோமில :-)

    ReplyDelete
    Replies
    1. // அட! 54'ல ஒரு question அவுட் ஆயிடுச்சு போல! //
      அட என்ன ஒரு கண்டுபிடிப்பு! நீங்க ஒரு விஞ்சானி!!

      Delete
  12. விஜயன் சார்,

    1.ABC யில் முதல் இதழ் தீபாவளியுடன் வரும் என்று சொன்னதாக ஞாபகம், அந்த இதழ் எது என சொல்ல முடியுமா?

    2. மில்லியன் ஸ்பெஷல் இதழ் எந்த மாதம் வர உள்ளது?

    ReplyDelete
  13. விஜயன் சார், சும்மா சொல்ல கூடாது நமது ஆஸ்தான ஓவியர் "ஜேஸன் ப்ரைஸ்" கதைக்கு மிகவும் அருமையாக வரைந்து உள்ளார்!

    ReplyDelete
  14. இரத்த படலம்: ஓவியம்கள் வழக்கம் போல் அருமை, கதை வழக்கம் போல் மேலும் சில கேள்விகளை விதைத்து விட்டு, அதனை கதாசிரியர் வேண்டும் என்றேதாண்டி சென்றுள்ளார் (அப்பதானே இன்னும் ஒரு சுற்று கதைகளை வெளி இட முடியும்). இந்த பாகம் முடிந்தாலும் எப்போதும் போல XIII முடிச்சு இன்னும் முழுமையாக அவிழ்கபடவில்லை என்பது குறை.
    இறுதி பாகம் ஓகே.

    இந்த 20 வருட கதை தொடருக்கு கதை சுருக்கம் கொடுத்த நமது கிட்-ஆர்ட்டின் கண்ணுக்கு வாழ்த்துக்கள். இவரது பெயரை இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கலாம்! வரும் காலம்களில் இதுபோன்ற நமது வாசகர்களின் பங்களிப்பை புத்தகம்களில் தவறாமல் குறிப்பிடவும்.

    மார்க் 7.5/10; வரலாறு எனக்கு கசக்கும், அதே நேரம் அதிகப்படியான கதாபாத்திரம்களை ஏன் நமது XIII கடந்த கால வரலாறும் என்னை குழப்பியதால் இந்த மதிப்பெண்!

    ReplyDelete
  15. Boselli - அணிந்து இருக்கும் T-ஷர்ட் நமது ஈரோடு விஜய்க்கு 2 பார்சல்!!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி என்ர மேல என்ர பாஸுக்கு அம்புட்டு பிரியமாக்கும்! :)

      Delete
  16. மைலாப்பூரிலிருந்து நண்பரொருவர் அனுப்பியுள்ள ஆல்பத்தில் ரசித்தது:
    விச்சு - கிச்சு - கிச்சு-கிச்சு
    அதிரடி படை - பகைவர்களின் பாடை

    ReplyDelete
  17. இன்னாப்பா விடிஞ்சிடுத்தா.....

    ReplyDelete
  18. பங்கு கொண்டவர்கள் மட்டுமல்ல இந்த collectors போட்டியில் தீவிர முயற்சி செய்தும் பங்கு கொள்ள முடியாமல் போன எனக்கும் ஒரு மலரும் நினைவு உண்டு தான்... டைப் அடிக்க முடிந்தால், பகிர நினைக்கிறேன்...

    ReplyDelete
  19. TEX டெக்ஸ் என்னும் வசீகரம், திரும்பி விட்டது...
    வாவ்...!  அடேங்கப்பா...!  அருமை... அருமை...!

    எங்கே சார் வைச்சிருந்தீங்க இந்த கதையை இவ்வளவு நாளா...?
    முன்னோட்டப் பக்க சித்திரத்தை பார்த்தவுடனே ரொம்பவும் எதிர்பார்க்க துவங்கினால், ஆனால் புத்தகம் எதோ குளறுபடியால் 5ம் தேதி வரை கைக்கு வரவில்லை... ஒரு போன் அடித்து நானும் சந்தாதாரர் தான் என்று நிரூபித்த பிறகே, சகோதரி ஸ்டெல்லா... எனக்கு புத்தகத்தை அனுப்பிவைத்தனர்...

    ஒரு விடுப்பு நாள் கிடைத்த போது தான் இரவில் படித்து முடித்தேன்... எவ்வளவு நாளாச்சு இந்த பழைய அதிரடி டெக்ஸை பார்த்து...
    இனி அடியேனின் விமர்சனம் தொடரும்

    ReplyDelete

  20. "துரோகத்திற்கு முகமில்லை" விமர்சனம் ...

    உண்மையில் இந்த கதையில் வழக்கத்திற்கு மாறாக சோர்ந்து, நம்பிக்கையிழந்த, எப்போதும் போல ஜெயித்து கொண்டே இருக்கும் டெக்ஸாக இராமல்  தோல்விமேல் தோல்வி கண்டு துவண்டு... கடைசியில் மட்டுமே ஜெயித்த டெக்ஸ் வில்லரும் என்னதான் இருந்தாலும் ஒரு சராசரி மனிதர் தான் என்றுணர்த்திய ஒரு புதுமையான கதை தான் எனினும்.... ஆரம்ப கால காலப்பினியின் சித்திரங்களில், டெக்ஸின் வியூகம் மற்றும் மதிநுட்ப பாணியில், நீண்ட நாட்களுக்கு பிறகு கச்சிதமான காமிக்ஸ் திரைக்கதையோடு வந்திருக்கும் அக்மார்க் டெக்ஸ் வில்லர் பாணி அதிரடி கதை தான் இது.

    2012 முதல் லயனின் மீள்வருகையின் பின் சமீபகாலமாக வந்த டெக்ஸ் கதைகள் பெரும்பாலும் காலத்திற்கேற்ற மாற்றத்தோடு, வேறு லெவல் கதை சித்திரங்களோடு, கிளாஸ் கதைகள், சூப்பர் ஹிட் அதிரடி கதைகள் சிலவையும் வெளிவந்திருந்தாலும் நாங்கள் ஆரம்ப காலத்தில் பார்த்து பூரித்த டெக்ஸ் கதைகள் இப்போது எங்கே? எனத்தான் கேட்கத் தோன்றியது.... பழிவாங்கும் பாவை, பழிவாங்கும் புயல் வரிசையில், தான் எப்போதும் வெள்ளையர்கள் கேவலமாக பார்க்கப்படும்  செவ்விந்தியர்கள் பக்கம் தான் என்று சொல்லும் இரவு கழுகின் அதிரடி கதை தான் "துரோகத்துக்கு முகமில்லை"

    தன் வெள்ளிமுடி நண்பனை திட்டிக்கொண்டே பாராட்டி பேசும் அந்த இடம் நன்றாக இருந்தது. நண்பர்கள் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் பேசி தத்தம் நட்பை கெளரவப்படுத்துகிறார்கள். Friendship day ஸ்பெஷல் என்று ஒரு இதழை வெளியிட நேர்ந்தால், கண்டிப்பாக டெக்ஸ் & கார்சன் கதையை வெளியிடுங்கள். ஆசிரியர் வசனங்களை மிகவும் ரசித்து தன் பங்கினை செய்திருக்கிறார் என தோன்றும் இடங்கள் அநேகம்.

    ஒரு குற்றத்தை செய்திட்ட ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை சட்ட ரீதியாக தண்டிக்காமல், தன் அதிகாரத்தை துஷ்ப்பிரயோகப்படுத்தி குற்றவாளிகளின் ஒட்டுமொத்த இனத்தையே அழிக்க நினைக்கும் குரூரப்புத்தி மேஜர் கார்ட்டர் போன்றோர்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகமெங்கிலும் ஏன் இந்தியாவில் கூட இருக்கவே இருக்கிறார்கள்... கொடுமையிலும் கொடுமை...

    இதுபோன்ற மனிதாபிமான கதைகளில் டெக்ஸ் சூப்பர் ஹீரோப் போல செயல்பட்டிருந்தால் கதை சோபித்திருக்காது. ஒரு சராசரி மனிதராகவே ஒரு புனிதமான நோக்கத் திற்காக அட்லீஸ்ட் கடைசியிலாவது யதார்த்தமான முறையில் ஜெயித்திருக்கிறார். உங்களின் உங்கள் டீமின் மொழிப் பெயர்ப்பு என்றைக்குமே சோடை போனதில்லை... பல இடங்களில் உங்களின் கைவண்ணம் மிளிர்கிறது.
    ஓவியரின் வழக்கமான டெக்ஸ் காதலில், கைவண்ணத்தில் அட்டைப்படம் ஆகா... ஓஹோ ரகம் தான்.

    குறைகளும் உண்டு தான்:
    சார் நாங்களெல்லாம் நேர்ப்பட பேசும் கதாப்பாத்திரங்களை படித்து வாய்ந்தவர்கள் தானே... அவசியம் திருத்திக்கொள்ளப்பட வேண்டிய விஷயம் என்று தோன்றுமானால் அதையும் சொல்வது தானே healthly criticism. இதழைப் பொறுத்தவரை தரத்தில் எந்த பிரச்னையும் இல்லை.

    பக்கங்கள் 5முதல் 14 வரை, 65 முதல் 84 வரை,112முதல் 120 வரை, 161முதல் 164 வரை, 221முதல் 234 வரை....இந்த பக்கங்களில் உள்ள வசனங்களை போல 100 சதவீத கருப்பு டின்ட் உள்ள ஒரிஜினல் சித்திரங்களை ஒரு லயன், முத்து, திகில், மினிலயன் காமிக்ஸ் சித்திரப்பிரியனாக மானசீகமாக காதலிக்கிறேன். 💐👌👍😊

    சரியான முறையில் final files டேக்னிக்கலாக convert ஆகாமல் பிசிறடிப்பதால்
    மற்றப் பக்கங்களை அப்படி காதலிக்க  முடியவில்லை, சாரி... சார். 😢💐

    ReplyDelete
  21. அட்டை படம், உட்பக்கம் எல்லாமே சூப்பர் . எனக்கென்னமோ ஓவியர் முன்பு வரைந்த ஓவியம் நன்றாக உள்ளதாக தோன்றுகிறது . ஜேசன் பிரைஸ் காக ஆவலுடன் காத்திருக்கிறேன் .லயன் ஆல்பம் இலுள்ள பழைய படங்கள் , எல்லாமே மலரும் நினைவுகளை தூண்டி விட்டன . அந்த பழைய இதழ்கள் மீண்டும் திரும்பி வருமா சார் ? ஹீம் . கனவுலகில் சஞ்சரிக்க தடைகள் இல்லைத்தானே .

    ReplyDelete
  22. அன்புள்ள ஆசிரியர் அவர்களுககு

    திகில் லைப்ரரி என்று இரு முயற்சிகள் செய்தது ஞாபகம் உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. Jegang Atq : சிங்கத்தின் சிறுவயதில் - அத்தியாயம் 48 படிக்கவில்லையா ?

      (தலீவரே : நீங்க சொன்னீங்கன்னு மாங்கு-மாங்குனு எழுதி வய்ச்சா அதை உங்க போராட்டக் குழுவைத் தாண்டி யாரும் சீண்டிய பாடையே காணோமே ?)

      Delete
    2. He..he.... (சில நண்பர்களது மைண்ட் வாய்ஸ் இப்படியிருக்குமோ?) கட்டம்போட்டு பலூன் இருந்தாதான் சார் நாங்களெல்லாம் வாசிப்போம்.... டெக்ஸ்ட் ஒன்லின்னா... ஸ்கிப்புதான்....

      Delete
  23. ///அப்புறம் போராட்டக் குழுவின் நிஜாரில்லாத் தலைவர்... ////

    ஹிஹி.. நீங்க எதை செஞ்சாலும் ஒரு அர்த்தமில்லாம இருக்காது தலீவரே! :D

    ReplyDelete
    Replies
    1. அடடே! இது எப்போ!
      ஒருவேளை இந்த போராட்டத்துக்கு அப்புறம்தான் சுட்டி லக்கி தமிழ் பேச ஆரம்பிச்சாரோ :-)
      இல்ல...
      ஸ்கூல் படிக்கும்போதே ஸ்பைடர் தனி சந்தா கேட்டு 'தலீவர்' போராட்டத்தை ஆரம்பிச்சிட்டாரோ ;-)

      Delete
    2. @ Mr.கேப்ஷன்
      நம்ம தலீவர் பிறக்கும்போதே 'இப்படிப்பட்ட' போராட்டத்தோட பிறந்தவர்னா பாத்துக்கோங்களேன்!! :P

      Delete
  24. வணக்கம் சார்...
    ஓரிரு நாட்களாக ஓராயிரம் கேள்விகள் எழுந்தும், அவற்றையெல்லாம் அசால்டாக ஜம்ப் செய்து பதிவை மட்டுமே போட்டு விட்டு எஸ் ஆகும் அசாத்திய கலையை செயல்படுத்தும் வித்தயை எங்கே கற்றீர்கள் சார்????....

    அவரவர் ஹீரோக்களுக்கு வாய்ப்புண்டா என சிகையை நோண்டி குழப்ப குழம்பு வைத்து கொண்டிருக்க, ஒரு துளி கூட அதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரியே பெவிகாலாரை களமிறக்கிட்டு தப்பித்த தனித்திறமைக்கு ஒரு தனிவந்தனம் சார்...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! செமயாய் கேட்டீங்க டெக்ஸ் விஜய்!!

      Delete
    2. டெக்ஸ் விஜயராகவன்.!


      சூப்பர் ! சூப்பர்.! " அப்படி போடுங்க அறுவால "

      Delete
    3. @ ALL : 2017...2018 என்ற யூகங்கள், கேள்விகள் ஒரு நூறு இருந்தாலும், வேளைக்குப் பந்தி பரிமாறிடும் பொறுப்பு பிரதானமல்லவா சமையல்காரருக்கு ? இப்போதைய உலை வேளைக்கு கொதிக்காது போனால் அக்டொபரின்பந்தியில் பசியோடு எல்லோருமே காத்திருக்க வேண்டிப் போகுமே ?

      Delete
  25. ஜேஸன் ப்ரைஸ் - சித்திரங்களும், வண்ணச் சேர்க்கைகளும் அசத்தலாக உள்ளன! ஒரு வித்தியாசமான அனுபவம் காத்திருப்பதாக பச்சி சொல்கிறது!

    அடுத்த வருடத்திற்கான 12 டெக்ஸ் கதைகளுக்கு சுமார் 75 கதைகளை அலசியிருப்பது நிச்சயம் பலனளிக்கும் எடிட்டர் சார்! அடுத்தவருடமும் தினுசு தினுசான கதைக்களங்களில் தல அனைவரையும் வசீகரிப்பார் என்பது உறுதி! இந்த வருடத்தில், (என்னதான் ஆயிரம்பேரைக் கொன்றிருந்தாலும்) படிக்காமலேயே டாக்டர் ஆகிட முயற்சிசெய்த தல'யைத் தவிர மற்ற கதைகள் எல்லாமே பட்டையைக் கிளப்பியுள்ளன - என்பதே உங்களது சென்ற வருடத் தேடலின் வெற்றியைப் பறைசாற்றுகின்றனவே?

    'தற்செயலாய் ஒரு ஹீரோ' - அட்டைப் படத்தில் அந்த சலூன் பின்னணி அட்டகாசம்! பின்னட்டையில் 'தோட்டாக்களே இவரது விசிட்டிங் கார்ட்' கேப்ஷன் - தல'யின் கீர்த்திக்கு மிகப் பொருத்தமாய் அமைந்திருக்கிறது! இரசணை இரசணை!

    ReplyDelete
    Replies
    1. செயலாளரே ...எனக்கு டாக்டர் டெக்ஸ் கதையுமே சிறப்பாக பட்டது ...வில்லனாகவே இருந்தாலும் அந்த நட்பிற்காக அவர்களின் சாகஸமும் ....க்ளைமேக்ஸில் அவர்களை வைத்தே இனிதே முடிவுற்றதும் எனக்கு நிரம்ப பிடித்தது....சிறு சாகஸம் என்பதாலேயே உங்களை போல சிலருக்கும் நன்கு கவரவில்லை போல ...:-)

      Delete
    2. //அடுத்த வருடத்திற்கான 12 டெக்ஸ் கதைகளுக்கு சுமார் 75 கதைகளை அலசியிருப்பது // அப்ப அந்த மீதி 63 கதைக்கு வாய்ப்பு இல்லையா...

      Delete
    3. எனக்கும் டாக்டர் மிகச்சிறந்த கதை வரிசைகளில் ஒன்றே

      Delete
  26. சார், சித்திரமும்பேசுதடி என்ற உங்கள் ொடர் ஞாபகம் உள்ளதா? காமிக்ஸ் எப்படி உருவாக்குவது என்ற தகவல்கள் ொட்டிக்கிடக்கும் ொடர் அது. காமிக்ஸ் உருவாக்கம் பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும் கட்டுரைகள். அந்த கட்டுரைகளை தனி இதழாக ொண்டு வந்தால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. SIV : ஏற்கனவே ஒரு கதிகலங்கச் செய்யும் அஸ்திரத்தை எடுத்துக் கொண்டு போராடி வரும் குழுவுக்கு - நீங்கள் புதுசாய் ஒரு பிடியை தயார் செய்து கொடுத்து விடாதீர்கள் சார் ! தமிழகம் தாங்காது !!

      Delete
  27. சார் ஒரு மன்னிப்பு கோரல்.
    சென்ற மாதம்,டெக்ஸ் இதழான துரோகத்துக்கு முகமில்லையின் அட்டைப்படம் முதல் பார்வைக்கு வந்த போது Thumbs down செய்திருந்தேன்.
    ஆனால் இதழை நேரில் பார்க்கும் போது மிகவும் அற்புதமாக வந்திருந்தது.
    சமீபத்திய டெக்ஸ் இதழ்களில் இது ஒரு அட்டகாசமான அட்டைப்படம்.

    ReplyDelete
    Replies
    1. பாசா சார் @ உங்கள் தங்க மனசு எல்லோருக்கும் தெரியும். ஃப்ரியா விடுங்க. இந்த ஆண்டின் டாப்3 சிறந்த அட்டைகளுக்கான போட்டியில் இதுவும் இருக்கும்...

      Delete
  28. ! உங்களுக்கும் இந்த அட்டைப்படம் பிடித்திருப்பின் சூப்பர் !

    #######

    போங்க சார் ...இந்த வருட ஒவ்வொரு டெக்ஸ் அட்டைபடத்தையும் பாராட்டி பாராட்டி சலித்து போய்விட்டது ....இந்த மாச அட்டைப்படம் தான் இந்த வருட டாப் அட்டைபடம் ன்னு முடிவெடுத்தா அடுத்த மாச அட்டை படம் அதுக்கும் மேலே ....அதுக்கும் மேலே என போய்ட்டே இருக்கீங்க ....நாங்க என்ன தான் பண்றது....

    ReplyDelete
    Replies
    1. வாசகர்களின் அட்டைப்பட எதிர்பார்ப்பை நாடிபிடித்து கண்டுபிடித்து விட்டார்கள் நம் ஆசிரியரும் அவர்தம் குழுவினரும்.
      வரும் ஆண்டில் அட்டைபடங்கள் இந்த ஆண்டை ஓரங்கட்டும்விதமாய் பட்டையை கிளப்பப்போவது நிச்சயம். அதுவும் டெக்ஸின் தோற்றம் அட்டையில் வரவர அழகாகிக்கொண்டே போகிறது.சூப்பர் சார். வாழ்த்துக்கள்.

      Delete
    2. @ ALL : ஒவ்வொரு மாதமும் ஒரு புதுப் பரீட்சை எழுதும் வித்தியாசமான படிப்பு எங்களது !! So ஒவ்வொரு முறையும் எதை எதையோ நோட்ஸ் எடுத்து ; ஜெராக்ஸ் எடுத்துப் படித்துவந்து உங்களை அசத்தும் உத்வேகம் தான் !!

      Delete
    3. சார் நீங்கள் ஜெராக்ஸ் மற்றும் நோட்ஸ் எடுத்ததாக அடக்கமாக கூறினாலும் சில நேரங்களில் ஒரிஜனலை மிஞ்சும் விதமாக உங்களது குழுவினர் சாதிக்கையில் முகம் தெரியா அந்த சகோதரர்களின் திறமைக்கு தலை வணங்குவதைதவிர எங்களால் என்ன செய்யமுடியும்? குறை கண்டு பிடிக்கும் எங்களது வாய்களை தங்கள் திறமையை காட்டி எங்களது வாய்களை அடைத்து வரும் சகோதரர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து விடுங்கள் சார்.வரும் ஆண்டிலும் அட்டைப்படங்கள் நிச்சயம் தூள் கிளப்பத்தான் போகிறது.அதற்கு இந்த ஆண்டின் மெருகேறி வரும் அட்டைப்படங்களே சாட்சி. அதற்கென அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

      Delete
  29. சார் ஒரு மன்னிப்பு கோரல்.
    சென்ற மாதம்,டெக்ஸ் இதழான துரோகத்துக்கு முகமில்லையின் அட்டைப்படம் முதல் பார்வைக்கு வந்த போது Thumbs down செய்திருந்தேன்.
    ஆனால் இதழை நேரில் பார்க்கும் போது மிகவும் அற்புதமாக வந்திருந்தது.
    சமீபத்திய டெக்ஸ் இதழ்களில் இது ஒரு அட்டகாசமான அட்டைப்படம்.

    ReplyDelete
    Replies
    1. பாட்ஷா ஜி, பிடிச்சிருக்கு! இந்த குணம் பிடிச்சிருக்கு!

      Delete
    2. பாட்சா & ஈரோடு விஜய்.!

      +11112222222229997765543321

      Delete
    3. T.K. AHMEDBASHA : இம்மாத ராப்பரும் கூட நேரில் பார்க்கும் போது கூடுதல் கலக்கலாய்த் தோற்றம் தரும் சார் !

      Delete
  30. வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  31. எழுதபட்ட விதி ...ஒரிஜினல் அட்டை படத்தை விட நமது ஓவியரின் அட்டைப்படம் பளிச் என கலக்கலாக உள்ளது சார் ...அதனையே பயன்படுத்தி இருக்கலாம் சார் ...அந்த இருண்ட அட்டைபடமும் தலைப்பும் அவ்வபோது காமிக்ஸை எட்டி பார்க்கும் நண்பர்களுக்கு கிராபிக் நாவல் பீலிங்கை கொடுத்து விடலாம் ...:-)

    ReplyDelete
  32. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  33. அந்திரிக்கி நமஸ்காரம்.! _/|\_

    ReplyDelete
  34. பின் அட்டை நாயகர் போட்டியின் காரணமாக அப்போது நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் சார் ...அப்போது எல்லாம் அவ்வபோது வாங்க முடியாமல் பணம் இருக்கும் சமயம் மட்டும் ...பிறகு பழைய புத்தக கடையில் என வாங்கும் பொழுது அப்போது நாயகரையும் ..முன் அட்டைபடத்தையும் தேர்ந்தெடுத்து வாங்கிய நிலை போய் அந்த போட்டியில் கலந்து பரிசு பணத்தை வெற்றியாக பெற பின் அட்டை படத்தை பார்த்து புத்தகத்தை தேட தொடங்கினேன் ....அப்படி தேடியும் முதல் போட்டியில் அதற்குண்டான புகைப்படத்தை ஒட்டும் அந்த பைலும் கிடைக்காமல் அலைந்தது தான் நினைவுக்கு வருகிறது ...:-(

    ReplyDelete
  35. எப்படியோ இந்த மாதம் சிங்கத்தின் சிறு வயதில் இடம் பெற்றது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது ...இது ஒவ்வொரு மாதமும் தவறாமல் தொடர வேண்டுகிறேன் சார் ...இல்லையெனில் தாங்கள் அறிவித்த படி போராட்ட குழு இனி நிஜாரில்லாத போராட்டத்தை செயலாளரின் தலைமையில் மிக தீவிரமாக ஈடுபடுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .....( ஹீஹீ..அன்னிக்கு நான் லீவு செயலாளரே ...)

    ReplyDelete
    Replies
    1. இந்தமாதிரியான போராட்டங்களை நாம வெயில்காலங்கள்ல வெச்சிக்கிடுவோம் தலீவரே!

      Delete
    2. !ஈரோடு விஜய்.!

      அது எப்படீங்க .? எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்க முடியுது.? ?

      Delete
    3. Paranitharan K : தலீவர் ஒரு பிரம்மாஸ்திரத்தைக் கையிலோ / இடுப்பிலோ வைத்திருக்க - தமிழகமே கிடு கிடுத்திடாதா ?

      Delete
  36. இந்த வருட TEX டாப் கதை நம்பர்1
    துரோகத்திற்கு முகமில்லை
    நம்பர் 2 குற்றம் பார்க்கின்ன

    ReplyDelete
  37. ஜேஸன் ப்ரைஸ் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.!

    ReplyDelete
  38. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
    Replies
    1. ராவணன் இனியன் சார்.!


      ஐ! இந்த போராட்டம் சூப்பரா இருக்கே.!, 2017 ல் மாடஸ்டிக்கு மனதில் மட்டுமே இடம் என்றால் நானும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வேன்.!

      தேர்தலுக்கு முன்னாடி ஆட்சியில் பங்கு.துணை முதல்வர் எங்களுக்கு என்று ஆரமித்து.,பின்னர் வேன் வெச்செல்லாம் கடததியிருக்கோம் கொஞ்சம் பார்த்து செய்யுங்கள் என்று கேட்கும் உதிரி கட்சியின் நிலமை நமக்கு ஆகிவிட்டது.! மாடஸ்டிக்கு தனி சந்தா , மாடஸ்டி டைஜஸ்ட் ,என்று ஆரவாரமாய் கிளம்பிய நாம் இன்று ஏதோ பார்த்து செய்யுங்கள் என்று கேட்குமளவிற்கு நம் நிலைமை ஆகிவிட்டது.! .ஒரு சீட் கூட கிடைக்கவில்லை என்றால் எதிர்கட்சிக் காரன் என்ன நினைப்பான்.ஹும் என்னமோ போடா மாதவா.!

      Delete
    2. @ இ.மு.க. :தொகுதி உடன்பாட்டில் பாடாய்ப் படும் கட்சிகளின் நிலைமையை யோசித்துப் பார்க்க வைத்தது உங்களது உரத்த சிந்தனை !! ஒரு கதைக்கே இந்தப் பாடெனும் போது - 5 ஆண்டு ஆட்சிக்கு கேட்கவா வேணும் ?

      Delete
  39. எடிட்டர் சார் இங்கு அனைவரும் 2017 அட்டவணை பற்றி பேசிக்கொண்டும், யோசித்துக் கொண்டும் இருக்க நீங்கள் சாமர்த்தியமாக எங்களை 1980களுக்கு கொண்டுபோய் இறக்கிவிட்டீர்களே!
    இது நியாயமா? கொஞ்சம் ஓட்டைவாய் உலக நாதனை களத்தில் இறக்கியிருக்கலாமல்லவா? எனக்கென்னமோ இந்த மாதம் ரொம்பவும் மெதுவாக நகர்வதைப் போல் உணர்வு. அட்டவணையை கண்ணால் பார்க்கும் ஆவல் அதிகரித்துக் கொண்டே போகிறது.

    ReplyDelete
    Replies
    1. AT Rajan : ஒரு பேப்பரும், பேனாவும் எடுத்துக் கொண்டு நீங்களாகவே ஒரு அட்டவணையை பொறுமையாய் வடிவமைத்துப் பாருங்களேன் சார் - ரொம்பவே சுலபமாய் 2017-ன் கதைகளை யூகித்து விடுவீர்கள் !

      Delete
    2. ஙே....ஙே........!!!!!?
      தலையை (நிறைய பேர் சொரிந்து விட்டதால்) பிச்சி பிச்சி...!!

      Delete
    3. ஙே....ஙே........!!!!!?
      தலையை (நிறைய பேர் சொரிந்து விட்டதால்) பிச்சி பிச்சி...!!

      Delete
    4. ஏடிஆர் சார்.!

      நம்ம இத்தாலிகாரு , மேச்சேரிகாரு ,டெக்ஸ்காரு இவர்களைப்போன்றவர்கள் 90% 2017 சந்தா கதைகளின் ஹீரோக்களை சரியாக யூகம் செய்திருப்பார்கள்.! அவர்களின் யூகம் தப்பாது.!

      Delete
    5. சின்னப்பய சார் இந்த இத்தாலிகாரு! ;)

      நான் பெருசா யூகமெல்லாம் பண்ணலை! ஆனா கடும் இடநெருக்கடி இருக்குன்றது மட்டும் நல்லாத் தெரியுது!

      Delete
    6. M.V. சார் உங்கள் வார்த்தை 100% அக்மார்க் உண்மை. அவர்கள் அடக்கத்துடன் மறுத்தாலும் நீங்கள் சொன்னதுதான் உண்மை.

      Delete
  40. அப்படி ஓன்னும் துரோகத்திற்கு முகமில்லை அட்டகாசமான கதை கிடையாது.
    சுமாருக்கும் கொஞ்சம் மேலே.
    ஏற்கனவே மிதமிஞ்சிய ஆபத்து இருக்கும் என்று தெரிந்தும் செவ்விந்திய தலைவரின் மகனை தனியாக அனுப்பும்

    தலயின் தலையில எதாவது இருக்கன்னு தெரியல...

    ReplyDelete
    Replies
    1. Ganeshkumar Kumar : அட...லாஜிக் சண்டையில் கிழியாத சட்டை ஏது சார் - ஹீரோக்களிடம் ?

      Delete
  41. பீட்சா, பர்கர் சாப்பிடுபவர்களுடன் அதுவும் அரையும் குறையுமாக சாப்பிடுபவர்களுடன் எங்களை ஒப்பிடுகிறார்களே! ஷாமியோவ்..நாங்களெல்லாம் பந்தியில் உட்கார்ந்தால் இருக்கும் இலையில் பெரிய சைஸ் இலையாக கேட்டுவாங்கி விரித்து தண்ணீர் அபிஷேகம் பண்ணி இலையை குளிப்பாட்டி இருக்கும் அத்தனை ஐட்டங்களையும் ஒன்றுவிடாமல் கேட்டு வாங்கி(சமையல்காரரே எத்தனை ஐட்டம் செய்தோமென மறந்தாலும் நாங்கள் மறக்காமல் கேட்டு தெரிந்துதானே பந்தியில் அமர்வோம்!) இலையில் பரப்பி (உப்பைகூட மறக்காமல் கேட்டுவாங்கி )சோற்றில் மலைகட்டி மலைக்கு நடுவில் குளத்தைவெட்டி தண்ணீருக்கு பதில் குழம்பை ஊற்றி இலையில் உள்ள அத்தனை ஐட்டங்களையும் ஒன்றாக பிசைந்து வாயில் நுழையாத அளவிற்கு உருண்டையாக உருட்டி வாயை காதுவரை பிளந்து (கோயில் யானைகூட எங்களைக்கண்டால் மிரளுமாக்கும்) லபக் கென விழுங்கி இப்படியே ஒரு நாலைந்து ரவுண்டு போய் நாலைந்து கிலோ சாதத்தையும் இருக்கும் அத்தனை ஐட்டங்களையும் உள்ளே அனுப்பி எழுந்து கைகழுவப்போகும் சமயம் ஒருபெரிய ஏப்பம் விட்டு பின் மறுபடி காற்று வெளியேறிய வெற்றிடத்தை நிரப்ப மறுபடி பந்தியில் வேறொரு வரிசையில் அமர்ந்து பரிமாறுபவரின் முறைப்பை எல்லாம் சட்டை பண்ணாமல் மறுபடி முதலில் இருந்து ஆரம்பிக்கும் வயிற்றுக்கு வஞ்சனை செய்யா வம்சத்தில் வந்தவராக்கும்!
    எங்களைப்போய் பீட்சாகாரர்களுடன் ஒப்பிடுகிறார்களே. இது நியாயமா? அடிச்சது லக்கி ப்ரைஸ்னு ஜேஸன் ப்ரைஸை ஒரே உருண்டையாக உருட்டி (sorry பழக்கதோஷம்) ஒரே குண்டு புத்தகமாக படிக்க முடியாமல் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது(மறுபடி sorry) கொஞ்சம் கொஞ்சமாக படிப்பது சங்கடமான காரியமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஊருக்குள்ள என்னைய மாதிரியே இன்னும் பலபேர் இருப்பது உற்சாகமளிக்கிறது! குறிப்பா, பந்தியில் தொந்தியை ரொப்பும் விசயத்தில்! ;)

      Delete
    2. அப்ப நீங்களும் வயிற்றுக்கு வஞ்சனை செய்யா வம்சத்தில் வந்தவரா!
      பேஷ்..பேஷ்....துணைக்கு ஆள் கெடச்சாச்சு!

      Delete
  42. இந்த அட்டைப்படத்தில் தான் என்ன சித்திர நுணுக்கம், ஏகப்பட்ட தி titan புத்தகத்தில் துவங்கி வரலாற்று, மர்ம பின்னணிகொண்ட கலைப்பொருட்கள் அட்டைப்படத்தில் நிரம்பி வழிகிறது. நிச்சயம் நமது history டாக்டரின் உதவி இல்லாமல் இந்த அட்டை படத்தை decode செய்வது கூட சுலபம் இல்லை.

    ஜேஸன் ப்ரைஸ்‘: நிச்சயம் ஒரு அதிரடி துவக்கம் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ///அட்டைப்படத்தில் நிரம்பி வழிகிறது. நிச்சயம் நமது history டாக்டரின் உதவி இல்லாமல் இந்த அட்டை படத்தை decode செய்வது கூட சுலபம் இல்லை.///

      ஹாஹாஹா! உண்மை உண்மை! எங்கே அந்த எஸ்டீடி டாக்டரை காணலையே...?

      Delete
    2. வரவேண்டிய நேரத்தில் சரியாக வந்துவிடுவார்.

      Delete
    3. Indeh அப்படினு ஒரு செவ்விந்திய புக், இல்லை ஒரு காமிக்ஸ் கடல் விஜய், முடியல அப்படி செதுக்கியிருக்காங்க அந்த அபிராமி சார் கண்டுபிடுச்சு சொன்ன கடல் தான் எங்கயாவது இந்த மாதிரி கடலை தேடிட்டுஇருப்பாரு இல்லை already இந்த அட்டைப்பட (இடியாப்ப)மர்ம முடிச்சை பொறுமையா அவிழ்த்துக்கொண்டிருப்பர். :P

      Delete
    4. Satishkumar S : //ஜேஸன் ப்ரைஸ்‘: நிச்சயம் ஒரு அதிரடி துவக்கம் எதிர்பார்க்கிறேன்//

      Me 2 !

      Delete
  43. intha matha tex attai super, jason praise kathai trailer super seekiram patikka thoontuthu.....

    ReplyDelete
  44. 1 .Abcde சந்தா செலுத்துபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மினி லயன் (முத்து காமிக்ஸ் வாரமலர் மாதிரி) ஒன்று இலவசமாக கொடுங்கள் சார்
    சந்தா எண்ணிக்கை அதிகரிகிக்கும்
    2 . இந்த வருட டிரைலர் புக் எப்ப கொடுப்பிங்க(புத்தக அட்டவணை)
    3.old ஹீரோக்களைப் போட்டு(ரிப் கெர்பி.காரிகன்.வேதாளர் .இரட்டை வேட்டையர்) ஒரு special issue போடுங்கள் சார் நன்றி வணக்கம்

    இலவசமாக

    ReplyDelete
    Replies
    1. Anandappane karaikal : சந்தா கட்ட இயலா வாசகர்களின் வருத்தங்களை சம்பாதிக்காது -சந்தாதாரகளுக்கு ஏதேனும் செய்ய சாத்தியமாகுமெனில் - I am all for it !!

      டிரைலர் புக் - October 1

      Delete
    2. லயன், முத்து சப்ஸ்க்ரைபர்ஸ் க்ளப் - னு ஆரம்பித்து, சந்தாதாரர்களுடைய புகைப்படங்களோடு - மாதம் ஒரு வாசகர்போல - அவர்கள் பற்றி, எப்போதிருந்து சந்தா செலுத்துவது, ஏன் சந்தா செலுத்துகிறார்கள்.. போன்ற விடயங்களை வெளியிட்டால் மற்றவர்களையும் அது ஊக்குவிக்கலாம்.

      Delete
    3. @ ALL : இது கூட நல்ல ஐடியாவாகத் தெரிகிறதே !! இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் guys ?

      ஒரு SUBSCRIBERS DIRECTORY மாதிரி முயற்சித்துப் பார்ப்போமா ?

      Delete
    4. இது பற்றிக்கூட ஏதாவது சலசலப்புகள் வரலாம் சார், மற்றைய வாசகர்களை புறக்கணிக்கிறீர்களா, என்பதுபோல.. ஆனால், எல்லோருக்குமே - மாதம் ஒரு வாசகர் - போல பகுதிகளில் வாய்ப்பளித்துள்ளீர்களே! அது மட்டுமல்லாமல், சந்தாதாரருக்கு விலைக்கழிவு, அவ்வப்போது பரிசுகள், இலவசங்கள், தள்ளுபடிகள் என்று ப்திரிகைளில் விற்பனை ஜாம்பவான்களே அள்ளித் தெளிக்கும்போது -

      Delete
    5. உங்களது மேஜையில் நீண்ண்ட காலமாக தூங்கிவரும் எங்களது நாயகர்களை முத்து மினி சைசில் ஒரு குண்டு புத்தகமாக கொடுத்து விடுங்கள் சார். சந்தையில் விலை போகாது என்று நீங்கள் கருதுவதால் வேறு வழியில்லாமல் இம்மாதிரி கோரிக்கையை வைக்க வேண்டியுள்ளது சார்.அதனில் எத்தனை பொக்கிஷங்கள் உள்ளனவோ? அது மட்டுமல்லாமல் காரிகன், ரிப்கெர்பி, விங்கமாண்டர் ஜார்ஜ், சார்லி இவர்களையெல்லாம் ஒரு சேர காணும் ஆவல்தான் சார். இப்படி கேட்க வைக்கிறது சார்.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. //சந்தா கட்ட இயலாத வாசகர்களின் வருத்தங்களை சம்பாதிக்காத.//

      இது இது இதுதான் எடிட்டரின் நல்ல குணம்.!

      சென்ற வருடம் சென்னை மழை வெள்ளத்தால் பாதிப்பு அடைந்து சந்தா கட்ட இரண்டு மாதங்கள் தாமதம் ஏற்பட்டு ,சந்தா ரயில் என்னைவிட்டு புறப்பட்டு சென்றபோது , அடைந்த வேதனை ,எடிட்டரின் இந்த வார்த்தைகளில் அடங்கி உள்ளது.!

      Delete
    8. பொடியன் அவர்களின் ஐடியா நன்றாக உள்ளது. மேலும் சந்தா வாசகர் கடிதம் எழுதி இருந்தாலோ அல்லது பிளக்கில் நல்ல விமர்சனம் எழுதி இருந்தால் அதயும் சேர்த்து பேடலாம்.
      இதில் உள்ள ஓரு சங்கடம் 1000 பேருக்கு மேல் உள்ள வாசகர்கள் எல்லோரும் எத்தனை வருடங்கள் ஆகும்.....

      Delete
  45. அட்டைப் படம் சூப்பர் நான் போன பதிவில் சொன்னது போல் இந்த வருடம் கதைகள் மட்டுமல்ல அட்டைப் படங்களும் அருமை

    ReplyDelete
  46. வணக்கம் விஜயன் சார் & நண்பர்களே _/\_
    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : போனெல்லி தடத்தில் உங்கள் ஜுனியரின் போட்டோ உள்ளதைக் காட்டினீர்களா சார் ?

      Delete
  47. இம்மாத கடும் பணி சுமை காரணமாக தாமதமான மதிப்பெண்கள் சார்...

    1.டெக்ஸ் 10/10

    யதார்த்தமான வன்மேற்கின் வன்களத்தில் சாதாரண ஒரு செவ்விந்திய நல அதிகாரியின் வாழ்வை டெக்ஸ் வாழ்ந்து காட்டியுள்ளார். ஆல்டைம் பெஸட்ல இடம் பிடிக்க தகுதியான சாகசம்.

    2.யுத்தமலர் (சமர்ப்பு) -9/10

    சிரித்து சிரித்து வயிறே வலி எடுத்ததால் உங்கள் சார்பாக காஸ்ட்ரோ கார்ப் ஒன்று பார்சல் சார். வருடம் 2வாய்ப்பாவது சின்ன சிரிப்பு டைனமைட்களுக்கு தாருங்கள் சார்.

    3.இரத்த படலம் 8/10

    ஒருவழியாக ஜேசன் ப்ளையின் சரித்திரத்தை முடிச்சவிழ்த்த பாகம் என்றவரையில் திருப்தி.
    பலபேரின் சாவுக்கு காரணமான பவுண்டேசன் ஆட்களை ப்ளை ஏதும் செய்யாமல் விட்டு விடுகிறார் என்பது இதற்கு முன்வந்த 22பாகங்களின் சாராம்சத்தையே புரட்டி போடுகிறது.
    ஜேசன்Vsஜேனட் போராட்டங்கள் அடுத்த ஓரிரு பாகங்களில் விறுவிறுப்பாக அமையும் என்பதில் துளியும் ஐயமில்லை சார்.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் 10/10 !


      ஹிஹிஹிஹி................

      நாட்டாமை : சாட்சி செல்லாது ! செல்லாது.!

      Delete
    2. @ Madipakkam Venkateswaran : அந்த மட்டிற்கு இரட்டை இலக்கத்திலேயே மார்க் போட்டார் என்று சந்தோஷப்படுங்கள் !! 100/10 என்று போட்டிருந்தாலும் நான் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டேன் !

      Delete
  48. சார் இரண்டே கேள்விகள்.தயவுசெய்து பதில் தாருங்கள்.
    1.அடுத்த ஆண்டு கழுகு மலைக்கோட்டை தவிர்த்து இளவரசிக்கு இடமுண்டா?
    2.தலையில்லா போராளி சைசில் மஞ்சள் சட்டை மாவீரர் வருகிறாரா?

    ReplyDelete
    Replies
    1. AT Rajan : சார்..இரண்டே கேள்விகளுக்கு ஒரேயொரு பதில் :

      29-க்கும் 31-க்கும் இடைப்பட்ட பொழுதினில் விடைகள் உங்கள் வசமாகிடும் !

      Delete
    2. சஸ்பென்ஸ் தாங்கவில்லை சார்.
      ஃபெவிகால் பூச்சு நன்றாகவே வேலை செய்கிறது சார்.சூப்பர்.

      Delete
  49. து.மு;
    இந்த டெக்ஸ் சராசரி போல் அல்லாமல் எதார்த்த ஹீரோவாக வலம் வருகிறார். தோய்வில்லாமல் மிக நேர்த்தியான கதைகளம் படிக்க நன்றாக இருந்தது.கனவாயின் கதையில் காலைவாரிவிட்ட டெக்ஸ் இதில் தாலாட்டிவிட்டார் நன்று.
    ஸ்மர்ப்;
    இந்த உலகம் வித்தியாசமாக நன்றாக உள்ளது.ஆனால் என்னால்தான் முழுமையாக அந்த உலகத்தினுல் செல்லமுடியவில்லை முழுமையாக செல்ல முயற்ச்சிக்கிக்கிறேன்.
    இரத்தப்படலம்;
    என்னமோ போடா மாதவா.
    கா.கைதி;
    கதையே இல்லை.படித்து முடிப்பதற்குள் உஸ் அப்பாடா என்று ஆகிவிட்டது.

    ReplyDelete
  50. இப்போது வரும் pure white paper போல இல்லாமல் பழைய வெளியீடுகள் போல tinted paper இன்னும் கொஞ்சம் quality paper ல் வெளியிட முடியுமா... புதிய கதைத் தேர்வுகளை முயற்சிப்பது போல் புதிய paperகளை முயற்சி செய்து நமக்கான paper ஐ. தேர்வு செய்தல் நலம். இப்போது வரும் பேப்பர் படிக்க ஆர்வம் தூண்டுவதாக இல்லை. ஆங்கில paperback novel படிக்க தூண்டுவதற்கு compact size & paper ம் ஒரு காரணம்.

    ReplyDelete
    Replies
    1. srini : கொஞ்சமே கொஞ்சமாய் யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் தருவோமே நண்பரே ? பாக்கெட்டில் உள்ளதோ பத்தணா என்றால் அதற்கேற்றதொரு ஷாப்பிங் பட்டியல் தானே நமக்கு சாத்தியப்படும்?

      இதனில் புதிய பேப்பர்களை முயற்சிப்பது ; நமக்குப் பிடித்ததைத் தேர்வு செய்வதென்பதெல்லாம் நடைமுறையாகிடுமா ? சர்வதேச விலைகளைத் தாங்கி நிற்கும் ஆங்கில paperbacks -க்கு எட்டும் சமாச்சாரங்கள் ; கிட்டிடும் choices நமக்கேது ? சரவண பவனில் STARBUCKS மெனு இராதுதானே சார் ?

      Delete
  51. எடி ஸார்.
    ஜெஸன் ப்ரைஸ் தொடரா ஸார். அப்படி இருந்தாலும் பரவாயில்லை ஷெல்டன் கதை போன்று அட்டகாசமாக பிரித்து போடுங்கள் விறுவிறுப்பாக வருமாறு.
    அவ்வப்போது மாதம் ஒரு காப்ஸன் போட்டி அறிவிப்பாவது கொடுங்கள் ஞாயிறு சுறுசுறுப்புக்கு அதுகொங்சம் பூஸ்ட் கொடுக்கிறது(பங்கேற்காவிட்டாலும்).
    ஜனவரி 17,ல் முதல் இதல் தோர்கலாக இருக்கவேண்டும் ஆமா அம்புட்டுதான்.

    ReplyDelete
    Replies
    1. Jaya Kumar : Caption போட்டிகளை அடுத்த வாரம் மீண்டும் தலைகாட்டச் செய்து விட்டால் போச்சு !

      Delete
  52. Edi சார், ஒரு டவுட்டு: இந்தக் கதை ஏதாவதொரு விதத்தில் வாசகர்களிடம் எடுபடாமல் போய்விட்டால், அடுத்த இரண்டு பாகங்களுக்கும் - பௌன்ஸ்சர் போலவே சங்கு ஊதிடுவீங்களா சார்?

    ReplyDelete
    Replies
    1. பிள்ளையார் சுழி போடுவதற்குள் சங்கு ஊதுவதற்கு நேரம் குறிப்பானேன் ? And பெளன்சரில் ஊதப்பட்ட சங்கு எதுவென்றும் தெரியவில்லையே எனக்கு ? நாம் அறிவித்தது 7 பாகங்கள்.... ; வெளியானதும் அதே 7 !

      Delete
    2. அடடே!

      நம் எடிட்டர் இரும்புக்கை மாதிரி மாயமாய் நம் கூடவேதான் இருக்கிறார் போலும்.!

      Delete
    3. MV சார்....எங்கள் நகரம் நேற்றைய பொழுது முழுவதும் மின்சாரமில்லாது இருளில் மூழ்கிக் கிடந்தது ! So சிவகாசியில் இருந்து கொண்டு மாயாவியாகிட நான் ஆசைப்பட்டால் நல்ல UPS ஒன்றைக் கழுத்தில் கட்டிக் கொண்டே தெரிந்தால்தான் உண்டு !

      Delete
    4. //நம் எடிட்டர் இரும்புக்கை மாதிரி மாயமாய் நம் கூடவேதான் இருக்கிறார் போலும்.!//

      ஹி..ஹி... அவரை வெளியே கொண்டுவர இம்மபதிரி கோக்குமாக்கான கேள்விகளை கேட்பது ஒரு டெக்னிக்! எப்பூடி......

      Delete
  53. September Tex is a distinction undoubtedly....10/10

    Martin is a super duper hit...not for this album but right from the 1st
    ..m a lover of Martin.
    .Thanks lion comics, my real breathe..

    ReplyDelete
  54. 'கை சீவம்மா கை சீவு' - எந்த ஹீரோக்காண்டி வச்ச தலைப்புனு சொல்லலையே எடிட்டர் சார்?

    ReplyDelete
  55. cinibook -ல் லக்கி கதையை தவிர்த்து மற்றவை இப்போதும் விற்பனை செய்கிறீர்களா சார்

    ReplyDelete
  56. எடிட்டர் சார், சென்ற ஆண்டுப்போலவே இந்த ஆண்டும் கடைகளில் புத்தகம் வாங்கும் என்னைப் போன்றவர்களுக்கும் அந்த மினி புத்தகம் (சந்தா அறிவிப்பு புத்தகம்)கிடைக்குமாறு செய்யுங்கள் சார்...
    (எப்படியும் நீங்க எங்களுக்கும் கொடுத்துவிடுவிங்கன்ற நம்பிக்கை இருக்கு) முன்கூட்டியே நன்றிகள் சார்......

    ReplyDelete
    Replies
    1. +11111 கன்டிபா வேண்டும் சாா்

      Delete
  57. (தலீவரே : நீங்க சொன்னீங்கன்னு மாங்கு-மாங்குனு எழுதி வய்ச்சா அதை உங்க போராட்டக் குழுவைத் தாண்டி யாரும் சீண்டிய பாடையே காணோமே?)

    #########

    ஆஹா ....யாருங்க அது கேட்டு போட வர்றது ...:-(


    அது வந்து சார் ....போராட்ட குழுவை போல உள்ள தீவிர ரசிகர்கள் சிங்கத்தின் சிறு வயதை நினைவில் கொண்டே இருப்பினும் மற்ற நண்பர்கள் அவ்வபொழுது நம்ம X11 அவதாரத்தை எடுத்து விடுவார்கள் ...மேலும் இரண்டு மூன்று மாதத்திற்கு முன் வந்த இரத்தபடலம் ..மற்றும் தொடர் நாயகர்களையே நம்மவர்கள் மறந்து விடுவது தாங்கள் அறியாதது அல்லவே....எனவே தான் இதுவரை வந்த சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பை ஒன்றாகவும் ...இனி வருபவைகளை தொகுதி இரண்டாகவும் கேட்கிறோம் ..இப்படி ஒரே தொகுப்பாக ஒரே மூச்சில் படிக்கும் பொழுது எங்கள் நினைவு பேழைகள் நீண்ட நாள்களுக்கு செயல்படும் சார்.....எனவே... :-)

    ReplyDelete
    Replies
    1. தலைவரே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சிங்கத்திற்கு இப்போது பெருவயதா?
      இன்னும் இருபது வருடம் கழித்து சிங்கத்தின் பெருவயது கேட்போமா.

      Delete
    2. எடிட்டர் சார்.!

      நான் புத்தகம் வாங்கி புரட்டி அழகை ரசித்தபின் முதலில் படிப்பது ,ஹாட்லைன்.!இரண்டாவது சிங்கத்தின் சிறுவயதில்... சி.சி.வ விரும்பி படிக்கும் வாசகன் நான்.!

      Delete
  58. ஜேசன் எப்போது வறும் என்று இறுகிறது இன்னும் இந்த மாத புக் அதனால் விமா்சனம் பிறகு
    இகில் மேன் வரவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. தம்பி சார் !

      நலமா.? ரொம்ப நாளா ஆளைக்காணோமே.???

      Delete
  59. சார் அட்டைபடம் சும்மா பட்டய கிப்புது...சென்ற வருடம் ஏக ெதிர்பார்ப்பில் இருந்த ஜேசன் நீங்க கைவிட்டதும் எதிர்பார்ப்பு குறைந்து விட்டது...மேலும் பிற கதைகளும் சிறப்பாய் இருந்ததும்..பிற நாயகர்களுக்கு இடம் போதாதே என்ற எண்ணமும் கூட... நேற்று வரை எனது எதிர்பார்ப்பு ரேடாரில் இல்லாத அது...இன்று வண்ணமயமான ொரு பக்கத்தை பார்த்ததும் லார்கோ அளவிற்கு ஈர்த்து விட்டது...அட்டைபடம் ஒரிஜினலே அட்டகாசம்...அதும் அடுத்த மாத டெக்சும் தூள்...அட்டவணையோட அட்டயாவது காட்டி இருக்கலாம்

    ReplyDelete
  60. இன்னும் முழுசா பத்துநாள் கெடக்கு - எடிட்டர் அட்டவணையை ரிலீஸ் பண்ண! மத்ததப் பத்திக்கூட கவலையில்ல; சந்தா-Eல என்னென்ன கதைகள் வரப்போகுது...? அப்புறம் அந்த குண்டூஸ் - எத்தனை கதைகளை தாங்கி வரப்போகுது? குண்டூஸ்ல துண்டுபோட்டு இடம் பிடிச்சிருக்கற ஹீரோஸ் யாரு? - இதெல்லாம்தான் ஒரேடியா மண்டைய குடையுது!

    எடிட்டரை கெஞ்சி/கொஞ்சி/மிரட்டி/ஏமாத்தி அட்டவணையை உடனே பெறும் வழி என்ன? ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன!

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய்.!

      ஐடியா.1

      எடிட்டரின் வாயை கிளற வாய்பே இல்லை. டெக்ஸின் செவ்விந்திய தோழன் டைகர் ஜாக்கை வாயை கிளற முயற்ச்சி செய்றமாதிரிதான்.!பழம் தின்று கொட்டை போட்ட நமது எடிட்டரிடம் நம் ஜம்பம் பலிக்காது.! வேண்டுமானால் எதையும் அலட்டிக்கொள்ளாத இந்த கால யூத் பிரதிநிதிஆன நமது ஜுனியர் எடிட்டரிடம் வேண்டுமானால் நாம் முகத்தில் மரு ஒட்டிக்கொன்டு மாறுவேடம் பூண்டு முயற்சி செய்து பார்க்கலாம்.!

      Delete
    2. ஐடியா 2

      நமது டேஞ்ஜர் டயபாலிக் மாதிரி ,எடிட்டர் மாதிரி முகமூடி உருவாக்கி அதை அணிந்து அவர் அலுவலகத்தில் நுழைந்து டிடிபி ஆபரேட்டரை வெங்கல குரலில் அதட்டி ஒரு செட் பிரிண்ட் வாங்கி வந்துவிடலாம்.!

      Delete
    3. MV sir@ நம்ம ஆசிரியர் சார்ட்ட கூட சில விசயங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஜூனியர், ஊஹூம். துளியும் வாய்ப்பில்லை. எல்லாவற்றிற்கும் சிறிய புன்னகை மட்டுமே உதிர்ப்பார், அதுவே அவரது பலமும் கூட...

      ஐடியா 2ஓகே, ஆனால் கடைசி இரு நாட்களுக்கு முன்பு கூட அட்டவணையில் ஏதாவது சிறப்பாக தர முடியுமா என ஆசிரியர் யோசித்து கொண்டு இருப்பார்,ஆகவே.....

      Delete
    4. ஐடியா 3

      நம் தலைவரை விட்டு நீண்ண்ண்ட கடிதம் எழதச்சொல்லுவோம் எடிட்டர் வழிக்கு வந்துவிடுவார்.ஆனால் பேப்பர் செலவுக்கு ஸ்பான்சரை பிடிப்பது செயலாளரின் பொறுப்பு.! இல்லாவிட்டால் பேப்பர் வாங்கும் செலவை நமது சங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.!

      Delete
    5. //கடைசி இரண்டு நாட்களுக்கு முன்கூட அட்டவணையில் மாற்றம்....//


      அது சரிதான் ஏனென்றால்.,

      " காமிக்ஸால் நான் காமிக்ஸுக்காக நான் என்று இருந்தால் லாஜிக் பொருந்தும் அல்லவா.?

      Delete
    6. எடிட்டரை குண்டுகட்டாக தூக்கிச்சென்று தனி அறையில் அடைத்து ஒருநாள் முழுக்க வீராசாமி படத்தை பார்க்க வைத்தால் முடிஞ்சது கதை. அன்றைய தினம் முழுக்க அவர்கண்ணை மூடாமல் படத்தை திரும்ப திரும்ப பார்க்க வைத்தால் இரண்டாவது ரவுண்டில் கதறி கண்ணீர்விட்டு 2017 அட்டவணையும்2018 க்கு ஏதாவது அட்டவணை கைவசம் இருந்தால் அதையும் சேர்த்து கொடுத்து நம்மை அனுப்பி வைப்பது நிச்சயம்.கூடவே ஆளுக்கொரு மைசூர்பாக் டப்பாவும் கிடைக்கலாம்.
      வீ்ராசாமி வைத்தியம் வேண்டாமென்றால் இருக்கவே இருக்கு பவர்ஸ்டாரின் லத்திகா படம்.அநேகமாக இந்த வைத்தியம் முதல் ரவுண்டிலேயே நம் வேலை முடிந்துவிடும்.

      Delete
    7. ஏடிஆர் கார்.!

      //வீராச்சாமி படம்//


      " என்ன கொடுமை சார்.! " தமிழ்நாட்டில் காமிக்ஸ் என்ற அறுசுவையை நமக்கு காட்டிய நம் எடிட்டருக்கு இந்த கொடிய தண்டனை அதிகம்.எனவே எடிட்டரை சந்தோசமாக விருந்தோம்பல் செய்து நைசாக லவட்ட முடியுமா என்று ஜடியா செய்யுங்களேன்.!

      Delete
    8. M.V. சார். ஆசிரியர் ஃபெவிகால் பூச்சு மூலம் தன் வாயை ஒட்டிவைத்துள்ளாரே.பிறகெப்படி விருந்தோம்பல் எல்லாம். அவரை எதிரே உட்காரவைத்து நாம் சாப்பிடுவது மட்டுமே சாத்தியம். வேண்டுமென்றால் தலைவரில் தொடங்கி வரிசையாக அனைவரும் அட்டவணையை கேட்டு கதறி அழலாம். ஒரு கட்டத்தில் அவருக்கும் அழுகை வந்து மனமிரங்கினால் அட்டவணை நம் கைக்கு வர வாய்ப்புண்டு. இந்த டீல் ஓ.கே.வா சார்.அறுசுவையை நமக்கு வழங்கிய அவருக்கு நம்மால் முடிந்த அளவு அழுதுகாட்டி நவரசங்களையும் வழங்கலாம்.

      Delete
  61. நண்பர்களே படித்து ரசித்து விட்டு வருகிறேன். நன்றி

    ReplyDelete
  62. சென்ற ஞாயிறு பதிவில் ஒரு கேள்விக்கு 54இதழ்கள் எல்லாம் கிடையாது என்ற பதிலை ஆசிரியர் சார் தெரிவித்து இருந்தார்.
    எனவே எண்ணிக்கை இப்படி இருக்கலாம்...

    சந்தா A-12இதழ்கள்
    சந்தா B,C,D-10 இதழ்கள் தலா
    சந்தா E-6(ஆசிரியர் சார் உறுதி செய்தது)
    ஆக மொத்தம் 48இதழ்கள்.

    தோர்கல் இம்முறை சந்தா Aல் இடம் பிடித்து இருப்பார்...

    சந்தா E- முழுவதும் வித்தியாசமான கி.நா.க்கள், திகில் கூட இருக்க கூடும்

    சந்தா D டெக்ஸ் வண்ண மறுபதிப்பு 1, இரும்புக்கையார்-3, ஸ்பைடர், லாரன்ஸ் & டேவிட்,ஜானிநீரோ-தலா2=10

    சந்தா Cல் பொடியர்களுக்கு 3இடத்தில்1குறைய கூடும், மந்திரி&லியனார்டோ தாத்தா மே பி இன் டேன்ஜர் ஜோன், பென்னி இரு இடங்கள் பெற கூடும்.மற்ற வழக்கமான காமெடி ஹீரோக்கள் தானாகவே இடம் பிடித்து இருப்பர்..

    சந்தா Bல் குறையும் டெக்ஸ் க்கான இடங்கள் , ஆண்டுமலர், லயன் 300ல் ஈடு செய்யக்கூடும்.

    சந்தா A தான் கடும் நெருக்கடியை தந்து இருக்க கூடும். லயன் 300, முத்து 400, முத்து 45ம் ஆண்டு மலர், தீபாவளி மலர், ஆண்டுமலர், ஈரோட்டில் இத்தாலி"2"-என ஏகப்பட்ட குண்டுகள் இருக்க கூடும்.
    6குண்டுகள் போனால் மாடஸ்தி, ஜேசன் ப்ரைஸ், லார்கோ, செல்டன், கமான்சே, , தோர்கல் - இடம்பெறக்கூடும்...
    எப்படி யோசித்தாலும் சில நாயகர்களை எப்படி மேனேஜ் செய்யப்போகிறாரோ என கன்ஃபியூஸ் தான், ஹி...ஹி...

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் விஜய ராகவன்.!

      சூப்பர்.! சூப்பர்.!

      Delete
    2. வண்ண மறுபதிப்பு இனிமேல் absolute classicல மட்டுமே என முடிவெடுத்து இருந்தால் , அந்த ஸ்லாட்ல தானை தலைவர் ஸ்பைடர் நிச்சயமாக வருவார்...

      Delete
    3. Good அனுமானம் விஜயரகவன்

      Delete
    4. டெக்ஸ் விஜய் சார்
      பாராட்டுக்கள் என்று என்னால் சுலபமாக சொல்ல முடிந்தாலும் இந்த உங்களது பதிவு ஏறக்குறைய எடிட்டர் அளவு நீங்களும் யோசித்திருப்பது மறுக்க முடியாத உண்மை.
      அதற்காக பாராட்டுக்களுடன் வாழ்த்தையும் சேர்த்தே தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
    5. Atr Sir @ யோசிக்க யோசிக்க ஆசிரியரின் பணி , அதாவது யாருக்கு எத்தனை இடங்கள் என்ற ஒரு விசயமே அசாதாரண காரியமாக படுகிறது.
      இடங்கள் ஒதுக்கீடு வெறும் பிள்ளையார் சுழி வைப்பது போலத்தான்.
      உண்மையான ப்ராஜக்ட் அதற்கு பிறகே ஆரம்பிக்கிறது.
      ஆசிரியர் பணியில் இந்த துவக்க புள்ளியே தலை சுற்ற வைக்கிறது, இந்த என்னுடைய அனுமானத்தில் 50% மேட்சிங் ஆனாவே , ஐ ஆம் ஹேப்பி அண்ணாச்சி..

      6குண்டு புத்தகங்கள் எனில் ஒரு மாதம் விட்டு ஒன்று தரணும், அது நடைமுறையில் எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை. இன்னும் இரத்தகோட்டை என்ற தனித்த குண்டு ஒன்றும் இருக்கு.
      அதிகபட்சம் 4குண்ட்டு புத்தகங்கள் எதிர்பார்க்கலாம்.
      இரத்த கோட்டையை முத்து400ஆவது இதழாக ,ஈரோட்டில் ரிலீஸ் செய்தால் ஒரே கல்லில் 3"குண்டு" மாங்காய்...
      இன்னும் 10நாள் இப்படியே யோசித்து யோசித்து விளையாடலாம்....

      Delete
    6. பெங்களூரு பரணி@ ஜனவரியில் வர இருக்கும் முத்து 45வது ஆண்டுமலரில் தோர்கல் சாகசங்கள் மட்டுமே கொண்ட மெகா இதழாக இருக்கும் என ஒரு பட்சி சொல்கிறதே நண்பரே...(நீங்கள் மட்டும் நிம்மதியாக வேலை பார்ப்பீங்களா இனி, தோர்கல் கனவே அடுத்த 10நாளும் உங்களுக்கு வரக்கடவது...)

      Delete
  63. தல தனியாக இல்லாமல் நண்பர்கள்,எதிரிகள், பாலைவனம்,காடுகள்,மலைகள் இப்படி அமைந்தால் மாஸ்ஸாக இருக்கும்.அந்த வகையில் பாரில இப்படி ஒரு angle ல் அட்டைப் படம் பட்டையை கிளப்புது wow👏👏👏👏👏👏

    ReplyDelete
  64. நண்பர்களே படித்து ரசித்து விட்டு வருகிறேன். நன்றி

    ReplyDelete
  65. என்னோட ஐடியா!

    நம்ம டேஞ்சர் டயபாலிக்கின் வழிமுறைதான்! ஆனால் எதிர்ப்படுகிறவங்களையெல்லாம் 'சதக்-புதக்' மட்டும் இல்லை!

    திட்டத்தைத் தெளிவாச் சொல்றேன் கேட்டுக்கோங்க!
    * அ..அதாவது, எடிட்டர் அசந்து தூங்கும் விடிகாலை 3 மணி சுமாருக்கு நம்மில் யாரவது ஒருவர் அவர் வீட்டின் சுவர் ஏறிக் குதிக்கவேண்டியது.
    * ஓசையில்லாம அவர் வீட்டு தினக் காலண்டர், மொபைல் ஃபோன், லேப்டாப், இன்னும் என்னென்ன இருக்கோ எல்லாத்துலயும் நைஸா தேதியை மட்டும் 'அக்டோபர்-1' னு மாத்தி வைக்க வேண்டியது.
    * மேசையிலிருக்கு பழைய மினிலயன் எதையும் ஆட்டையை போடாம, வந்த சுவடே தெரியாம அப்படியே எஸ்கேப் ஆக வேண்டியது.

    முடிஞ்ச்!

    * காலை 6 மணிக்கு நாம் யாராவது ஒருத்தர் எடிட்டருக்கு ஃபோன் செஞ்சு எழுப்பி "அக்டோபர் ஆகியும் அட்டவணையை வெளியிடாம இருக்கீங்களே? இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா?"னு கோவமா கத்த வேண்டியது!

    நிஜமாவே முடிஞ்ச்!

    அதிர்ச்சியாகி தேதியைப் பார்க்கும் எடிட்டர் "அடக்கடவுளே! பத்து நாளாவா தூங்கிட்டேன்?!!"னு அவசர அவசரமா லேப்டாப்பில் தயாராக இருக்கும் அட்டவணையை " அக்டோபரும்... அட்டவணையும்"ன்ற தலைப்புல ஒரு புதுப் பதிவாப் போட்றுவாரு!

    அப்புறமென்ன...? கெக்கபிக்கேனு சிரிச்சுக்கிட்டே அட்டவணையை ரசிக்கவேண்டியது தான்! ;)

    ReplyDelete
    Replies
    1. இது...இது நல்ல அகுடியா வா தெரியுது...
      இதுல உள்ள பெரிய ட்ராபேக், பழைய மினிலயன் எதையும் ஆட்டய போடாத நண்பர் கிடைப்பது கொஞ்சம் சிரமமான காரியமா தெரியுதே, அப்படி ஒரு நண்பர் கிடைப்பதற்குள் அக்டோபர் 1ஏ வந்து விடுமே...

      Delete
    2. அடடே! ரொம்ப சிம்பிள சூப்பரா இருக்கே.!
      ஆனா இந்த கமெண்ட்டை படித்துவிட்டு அலார்ட் ஆறுமுகம் ஆகிவிடுவாரே.??என்ன செய்வது.??

      Delete
    3. ///ஆனா இந்த கமெண்ட்டை படித்துவிட்டு அலார்ட் ஆறுமுகம் ஆகிவிடுவாரே.??என்ன செய்வது.?? ///

      ஹிஹி! அங்கதான் தப்பு பண்றீங்க. அட்டவணையை கேட்டு இங்கே போடப்படும் எந்தக் கமெண்ட்டையும் தான் எடிட்டர் படிக்கறதில்லைன்றது நமககு நல்லாத் தெரியுமே? தவிர, ஜேஸன் ப்ரைஸின் மூனாவது பாக மொழி பெயர்ப்புல இந்நேரம் மூழ்கிக் கிடப்பாருல்ல? ;)

      Delete
    4. // அட்வணையை கேட்டு போடப்படும் எந்த கமெண்டையும் எடிட்டர் படிப்பது இல்லை.//

      ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ..........

      Delete
    5. நண்பர் விஜர் அவர்களே பேசாமல் அந்த வேலையை நீங்களே செய்து விடுங்கள். ஏனெனில் அங்கு இருக்கும் புத்தகங்களை எடுக்காமல் வரக்கூடிய சத்தியசீலன் நீங்கள்தானே😜😜😜😜😜😜

      Delete
    6. //நண்பர் விஜர் அவர்களே பேசாமல் அந்த வேலையை நீங்களே செய்து விடுங்கள். ஏனெனில் அங்கு இருக்கும் புத்தகங்களை எடுக்காமல் வரக்கூடிய சத்தியசீலன் நீங்கள்தானே//.---joke of the year friend.

      ஜூன் மாதம் சென்னை விழாவிற்கு இரயில்ல சென்று கொண்டு இருந்த போது,நள்ளிரவில் பூனையாரின் திருவிளையாடலை "இங்கே க்ளிக்" ல மாயாவி சிவா சார், போட்டிருந்ததை நீங்கள் பார்க்கலயா நண்பரே!!!...
      கோவில்பட்டி கடலை மிட்டாயையே லபக்னவரு, மினிலயன.....ஹி..ஹி...

      Delete
    7. ஐடியா 4,

      நமது நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு மாறுவேடம் போட்டு( முரட்டு ஒட்டு மீசை ., மரு,அடர்த்தியான ஒட்டு புருவம் ,தலைமுடி விக் , குருந்தாடி சகிதமாக ) எடிட்டரின் ஆபிசில் புதுவாசகர்கள் போல் சந்திக்க வேண்டியது.நமது இத்தாலிகாரு வாட்டசாட்டமான தோற்றத்தை வைத்து எடிட்டர் அடையாளம் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளதால் ,அவர் வெளியே டிரான்பார்மர் அருகில் இருக்கவேண்டியது. உள்ளே நான் குலேபகாவலி என்று சொன்னதும் ,நமது செயலாளர் முப்பது செகண்ட் மின்சாரத்தை துண்டுடிக்க வேண்டியது.நமது தலைவர் இருட்டில் பாய்ந்து 2017 அட்டவணையை எடுத்து கையில் வைத்துக்கொள்ளவும். .கரண்ட் வந்ததும்., மாறுவேடத்தில் இருக்கும் தலைவர்.தாரமங்கலம் பரணி சில கடிதங்களை உங்களிடம் கொடுக்க சொன்னதாக கூறவேண்டியது. இதைக்கேட்டஎடிட்டர் ,பதறிப்போய் இத்தாலியில் இருந்து போனெல்லி நிறுவனத்தில் இருந்து அவசர அழைப்பு என்று உடனே கிளம்பி இத்தாலி போய்விடுவார். நாமும் குடோனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும்வரை சுற்றிபார்த்துவிட்டு.,சிவகாசியில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு பேஸ்புக்கில் நண்பர்களுடன் 2017 அட்டவணையை பகிர்ந்து கொண்டு சந்தோஷமாக அவரவர் ஊருக்கு கிளம்பிவிடலாம்.! எப்பூடி.?

      Delete
    8. ஹா...ஹா...சூப்பர் ஐடியா சார்...
      மாசமும் பொரட்டாசி,
      உண்பதும் பொரட்டா...நல்லா மேட்சிங்..

      Delete
  66. Subscriber's Directory மகத்தான யோசனை விரைவில் நடைமுறைபடுத்துங்கள் எடிட்டர் சார்! Subscriber's Directory தொடர்பாக மற்றொரு ஆலோசனை படிவத்தை onlineல் வடிவமைத்து விட்டால் மிகவும் எளிமையாகவும் நடைமுறையில் தங்கள் நிறுவனத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  67. காமிக்ஸ் பயணம் தொடர்கிறது. பார்ட் 4
    1.லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல்: தீபாவளிக்கு முதல் நாள் இரவு அப்பா,அண்ணனுடன் வெடி வாங்குவதற்கு மார்கெட் சென்று இருந்தேன். அப்படியே ஒரு பார்வை பார்த்தேன் ரஹ்மானியா வை .அய்யோ!ஸ்பைடரும் பேட்மேனும் போஸ் கொடுத்து கொண்டிருந்த அந்த அட்டைப்படம் (my all time favorite அட்டை)என் கண்களை கவர்ந்தது.ரூபாய் 10 ஆயிற்றே அப்பாவிடம் கேட்டதற்கு கையில் காசு இல்லை வெடி வாங்க தான் உள்ளது. உனக்கு வெடி வேண்டுமா புக் வேண்டுமா என்று கேட்டார். அடுத்த நொடியே புக் தான் வேண்டும் என்றேன். ஆனால் கூட வந்த அண்ணன் (1 வயது அதிகம்)`அப்பா நான் வெடிக்கும்போது என் வெடியை பிடுங்குவான் பிறகு சண்டை வரும் என்று ஏதேதோ கூறி புக் வாங்காமல் வீட்டிற்கு வந்தோம். வந்தவுடன் பெரிய அண்ணனிடம் `நாளை பலகாரம் கொடுக்கும்போது காசு கிடைக்கும். இப்போ 10 ரூபாய் ககொடுங்கள்'என்றேன்.கொடுத்தார்..சென்றேன்.....வாங்கினேன். ...வீடு வந்து சேர்ந்தேன். சாப்பிட்டு எல்லோரும் உறங்க ஆரம்பிந்தார்கள் .நான் வீட்டு வாசலில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தேன்.காலைநான் படித்து முடிக்க கோழி கூவ சரியாக இருந்தது. எத்தனையோ தீபாவளியை கொண்டாடிய போதிலும் அந்த தீபாவளிக்கு இணையாக இன்னொன்று அமைய வில்லை என்று தான்

    நினைக்கிறேன். Thank u lion.
    2.மீண்டும் ஸ்பைடர்: இதுவும் தீபாவளி மலர் என்றுதான் நினைக்கிறேன். (2,3 தினங்களுக்கு முன்பு வந்திருக்க வேண்டும். )அம்பகரத்தூரில் இருந்து ஒரு போலிஸ் மாமா என் தெருவிற்கு மாற்றல் ஆகி வந்தார்.ரேஷன் கார்டுமாற்றாத அந்த நேரத்தில் அ.கரத்தூரல் ம.எண்ணெய் போடுவதாகவும் சென்று வாங்கி வரச் சொன்னார்.ம.எண்ணெய் ₹+பஸ் டிக்கெட் ₹+எனக்கு 2₹கொடுத்தார். புத்தக விலை ரூ 5 ஆயிற்றே. ஆதலால் கொஞ்சத் தூரம் பஸ் கொஞ்சத் தூரம் நடந்து 3 ரூபாய் மிச்சம் செய்து 20 லிட்டர் கேனை தூக்கி கொண்டு 5 ரூபாய் புக்கை வாங்கி கொண்டு தான் வீடு வந்து சேர்ந்தேன்.
    3.இரத்த முத்திரை:தீபாவளி இரவுநன்றாக பெய்த மழை காலையில் விட்டது.எல்லோருக்கும் பலகாரம் கொடுத்து வசூல் சாதனை செய்து கொண்டு ரஹ்மானியா பேப்பர் ஸ்டோருக்கு பலகாரம் கொடுப்பதற்காக சென்றேன்.வழி எங்கும் பூச்சிகள் இறந்து பிதிங்கி மிகவும் அருவருப்பாக இருந்தது. எப்படியோ கடைக்கு சென்றால் அங்கு ஒரு ஆச்சரியம்! வருவதற்கு 3,4 நாட்கள் ஆகும் என்று சொன்ன புக் அப்போது அங்குஇருந்தது .இரத்த முத்திரை வாங்கியது தான் தடவி பார்த்து கொண்டே வீடு திரும்பினேன்.
    இந்த 3 புத்தகம் பற்றி சொல்ல காரணம்.தேர்வுக்கு கூட கண் விழித்து படித்ததில்லை. 20 லிட்டர் கேனை தூக்கிய கஷ்டம் தெரிய வில்லை.பூச்சிகளின் அருவருப்பு தெரியவில்லை. அதுதான் லயன்.
    என் வீட்டில் நான் படித்து முடித்தவுடன் 3 அண்ணன்கள் படிப்பார்கள்.இப்போது தனி தனியே உள்ளார்கள்.3 சந்தாதாரர்கள் ஆயிற்றே ஆனால் இல்லை ஏனெனில் ஓசியில் படிப்பவர்கள்.{இப்படி தானே பல வாசகர்கள் இருக்கிறார்கள்}.
    அப்படி வாங்கிய புத்தகங்களை படித்து முடித்தவுடன் வீட்டுப் பரணையில் அட்டைபாக்ஸ்(எனது வீட்டை சுற்றி 5 பார்கள் இருந்ததால் அட்டை பெட்டிக்கு பஞ்சம் கிடையாது. )அடுக்கி வைத்து விடுவேன். லீவு என்றால் என் வாசஸ்தலம் பரண் தான்.புது அட்டை பெட்டிக்கு மாற்றுவது சில பழைய புக்கை புரட்டுவது படிப்பது golden days.அப்படி பார்த்து பார்த்து சேர்த்தஎன்(பொக்கிஷம்) புத்தகங்கள் என்னை விட்டு சென்றது 2 சம்பவங்களால் ஒன்று விதியால் மற்றொன்று சதியால்......... எழுத கண்ணீர் தடையாக இருப்பதால் பிறகு தொடர்கிறேன்.😭😭😭😭😭

    ReplyDelete
    Replies
    1. சரன்,
      அருமை! அருமை!!
      தொடருங்கள், தொடர்கிறோம்..

      இங்குள்ளவர்களில் பாதிக்கு மேற்பட்டோர், பலவழி(லி)களில் காமிக்ஸை இழந்தோர்தாம்.

      Delete
    2. உண்மையிலேயே அருமையாக இருக்கிறது என்னுடைய சிறு வயது ஞாபகங்களும் கிளறப் படுகின்றன தொடர்ந்து தொடருங்கள்

      Delete
    3. அட்டகாசமான விவரிப்புகள்...அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே...நண்பனே

      Delete
    4. 1990களில் தீபாவளிக்கு நான் (பெரும்பாலான நண்பர்கள்) செய்ததை நீங்கள் 1987ல் செய்துள்ளீர்கள் சரண் சார்...
      சூப்பர்...
      தீபாவளி நெருங்கிட்டு, எனவே மற்ற சீனியர் நண்பர்களும் தங்கள் தீபாவளி வித் லயனை இங்கே போடலாமே...

      Atr sir@ உங்கள் தீபாவளி வித் லயன் அனுபவங்கள் ஆவலுடன் எதிர் பார்க்க படுகின்றன..

      Delete
  68. ஆசிரியருக்கு,
    இந்த வருட அட்டைப் படங்கள் பற்றி நமது நண்பர்கள் சிலாகிக்கிறார்கள். உங்களது தெரிவுகளும், அதற்கான உங்கள் டீமின் உழைப்பும் அங்கீகாரம் பெறுவதில் பெரும் மகிழ்ச்சி சார். இந்த வருடம் எஞ்சியுள்ள இதழ்களிலாகட்டும், அடுத்த வருட இதழ்களிலாகட்டும் - அட்டை வடிவமைப்பினில் வாசகர் கைவண்ணங்களுக்கு வாய்ப்பு உண்டா சார்?

    ReplyDelete
  69. ஹீரோக்களின் ஆல்பத்தைசேகரித்து ஒரு வாட்சை பரிசாக பெற்றவர்களில் நானும் ஒருவன் !

    ReplyDelete
    Replies
    1. லைட்டா தாமதமான வாழ்த்துக்கள் சார்...

      Delete
    2. ஹீரோக்களின் ஆல்பத்தை சேர்க்க வேண்டும் எனில் அட்டையை கிழிக்க வேண்டுமே.அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஒவ்வொரு ஹீரோக்கும் அடியில் திருக்குறள் எழுதிய ஞாபகம். முக்கியமாக டெக்ஸ் வில்லருக்கு "தோன்றின் புகழோடு தோன்றுக"எனும் குறள் எழுதியது இன்னும் பசுமையாக உள்ளது. நன்றி

      Delete
  70. காமிக்ஸ் பயணம் தொடர்கிறது பார்ட் 5.
    1991 TO 1992இந்த 2 வருடங்கள் என் புத்தக சேகரிப்பின் உச்சம் எனலாம்.என் தாயார் வீட்டிலேயே சாப்பாடு (மெஸ் ஆரம்பித்தார்கள்.அன்று முதல் சாப்பாட்டிற்கு மட்டுமல்ல கைகளில் காசுக்கும் கவலையில்லை வீட்டிற்கும் மற்றும் முக்கியமாக எனக்கும்.(ONGC யில் பணிபுரிந்த ஒரு 10 பேருக்கும்.,போலிஸ்காரர் கள் 10 பேருக்கும், பேங்கில் ஒரு 5 பேருக்கும் காலை, மதியம்,இரவு மூன்று வேளையும் சைக்கிளில் கொண்டு போய் சாப்பாடு கொடுப்பது அடியேன் மற்றும் இன்னொரு அண்ணன்)ஆதலால். மாத கடைசியில் எனக்கும், அண்ணனுக்கும் ஒவ்வொருவரும் 10,20 என்று கொடுப்பார்கள்.அண்ணன் அவனுக்கு வேண்டிய dress etc.but நானோ என் காமிக்ஸ் வேட்டையை தொடங்கினேன். காரைக்காலையும் அதனை சுற்றியுள்ள ஊர்களின் பழைய இரும்பு புத்தக் கடைகளை தேடத் தொடங்கினேன்.(இப்போது உள்ள காமிக்ஸ் வெறி எல்லாம் இல்லை. ஏதோ ஓர் ஈர்ப்பு கையில் காசு இருந்ததால் சாத்தியம் ஆனது).பழைய புத்தகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கிடைக்கவும் அமைதிப் படை சத்யராஜ் லெவலுக்கு ஒரு வித போதை வரத் தொடங்கியது. 1980 களிலிந்து வந்த அத்தனை காமிக்ஸ் களும் எனக்கு கிடைத்தது 2 வருடத்திலேயே.அத்தனை புத்தகங்களும் பரணில் அட்டைப்பெட்டிகளில் தஞ்சம் அடைந்தது. இப்படியே அழகாய் போய் கொண்டிருந்தது அந்த மழை நாளை சந்திக்கும் வரை.
    எப்பவும் அட்டைபாக்ஸை பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு மூடி வைப்பேன் .என் நேரம் சரியில்லை போலிருக்கு நான் மூடவில்லையோ அல்லது எலி அண்ணா அவர்களின் கைவரிசை யோ.ஒரு நாள் இரவில் பெய்த மழை 50% சேமிப்பு பொக்கிஷத்தை காலி.செய்து விட்டது.அதன்பிறகு பரணில் வைக்க மனமில்லாமல் பள்ளி புத்தகம் வைக்கும் ஷெல்பில் வைத்தேன் எப்போதும் என் பார்வையில் படும்படி. அதனால் வந்தது இன்னொரு சனி என் நண்பனின் ரூபத்தில்(பெயர் குறிப்பிட மனம் வரவில்லை) .
    1994 நான் +2 படித்து கொண்டு இருந்த சமயம் ரெக்கார்ட் நோட் கேட்டு வந்த நண்பன் என் காமிக்ஸ் சேகரிப்பை பார்த்து விட்டு தானும் காமிக்ஸ் வாசகன் என்று கூறி அவனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று காட்டினான்.அவன் புது வாசகன் சுமார் 3,4வருட புத்தகம் அவன் சேமிப்பில் இருந்தது.
    என்னுடைய சேமிப்பு சிறிது மழையாலும்,எலியாலும் சேதாரம் அடைந்திருப்பதை கண்ட அந்த நண்பன் என் புக்கோடு சேர்த்து உன் புக்கையும் என் வீட்டில் உள்ள கண்ணாடி ஷெல்பில் வைத்து படிப்போம் என்றான்(அந்த டீல் பிடித்திருந்தது) .சரி என்று எனது பொக்கிஷம் மாற்றல் ஆனது.
    லீவு நாட்களில் அவன் வீடுதான் என் வாசஸ்தலமாக மாறியது. நாட்கள் நன்றாக போய் கொண்டிருந்தது என் அப்பா புது பீரோ வாங்கும் வரை.பீரோ வந்தவுடன் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கினேன் புத்தகம் வைப்பதற்கு.
    மறுநாள் அந்த நண்பனை சந்தித்து என் புத்தகங்களை கேட்டேன்.உன் புத்தகமா ஏது?என்று கேட்டானே ஒரு கேள்வி.அதன் முடிவு அவன் அம்மாவால் எனக்கு அடிதான் கிடைத்தது. கண்களை துடைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் யாரிடமும் இதை பற்றி கூற வில்லை. அப்பா தான் புத்தகம் எடுத்து வரவில்லையா என்று கேட்டார். நண்பன் ஊரில் இல்லை. சாவி காணவில்லை என்று மழுப்பத் தொடங்கினேன்.
    1995 காரை TO T.R.பட்டினம் (சுமார் 7 KG/m).நான் ITI சேர்ந்த சமயம் பஸ்ஸில் சென்று வந்த நான். ஒரு நாள் நண்பர்களுடன் சைக்கிளில் சென்றேன். பழக்கதோஷத்தில் கடைகளை பார்த்து கொண்டு செல்வது வழக்கம். (அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது) .அப்படி திடீரென்று TEX ன் முகம் தெரிந்தது ஒரு பழக்கடையில் சென்று பார்த்தால் பழைய புத்தகங்கள் தொங்கி கொண்டு இருந்தன.விசாரித்ததில் ....(தொடரும்)நன்றி

    ReplyDelete
    Replies
    1. சரண் @ இந்த பாகம் செம்ம,நீங்கள் புத்தகம் தொலைத்த நிகழ்வு என் கண்ணில் நீரை வரவைத்துட்டது.
      1994ல் +2வா, நானு கல்லூரி முதலாண்டு- அட டே நம்ம செட்டு...
      😊
      நான் கொஞ்சம் தாமதமாக 1990க்கு பிறகே காமிக்ஸ் கனவுலகில் நுழைந்தேன். அந்த 1985டூ 1990 லயன் பொற்காலத்தை தவற விட்டுட்டேன்.
      விரைவில் தொடருங்கள் நண்பரேஏ...

      Delete
  71. காமிக்ஸ் பயணம் தொடர்கிறது பார்ட் 5.
    1991 TO 1992இந்த 2 வருடங்கள் என் புத்தக சேகரிப்பின் உச்சம் எனலாம்.என் தாயார் வீட்டிலேயே சாப்பாடு (மெஸ் ஆரம்பித்தார்கள்.அன்று முதல் சாப்பாட்டிற்கு மட்டுமல்ல கைகளில் காசுக்கும் கவலையில்லை வீட்டிற்கும் மற்றும் முக்கியமாக எனக்கும்.(ONGC யில் பணிபுரிந்த ஒரு 10 பேருக்கும்.,போலிஸ்காரர் கள் 10 பேருக்கும், பேங்கில் ஒரு 5 பேருக்கும் காலை, மதியம்,இரவு மூன்று வேளையும் சைக்கிளில் கொண்டு போய் சாப்பாடு கொடுப்பது அடியேன் மற்றும் இன்னொரு அண்ணன்)ஆதலால். மாத கடைசியில் எனக்கும், அண்ணனுக்கும் ஒவ்வொருவரும் 10,20 என்று கொடுப்பார்கள்.அண்ணன் அவனுக்கு வேண்டிய dress etc.but நானோ என் காமிக்ஸ் வேட்டையை தொடங்கினேன். காரைக்காலையும் அதனை சுற்றியுள்ள ஊர்களின் பழைய இரும்பு புத்தக் கடைகளை தேடத் தொடங்கினேன்.(இப்போது உள்ள காமிக்ஸ் வெறி எல்லாம் இல்லை. ஏதோ ஓர் ஈர்ப்பு கையில் காசு இருந்ததால் சாத்தியம் ஆனது).பழைய புத்தகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கிடைக்கவும் அமைதிப் படை சத்யராஜ் லெவலுக்கு ஒரு வித போதை வரத் தொடங்கியது. 1980 களிலிந்து வந்த அத்தனை காமிக்ஸ் களும் எனக்கு கிடைத்தது 2 வருடத்திலேயே.அத்தனை புத்தகங்களும் பரணில் அட்டைப்பெட்டிகளில் தஞ்சம் அடைந்தது. இப்படியே அழகாய் போய் கொண்டிருந்தது அந்த மழை நாளை சந்திக்கும் வரை.
    எப்பவும் அட்டைபாக்ஸை பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு மூடி வைப்பேன் .என் நேரம் சரியில்லை போலிருக்கு நான் மூடவில்லையோ அல்லது எலி அண்ணா அவர்களின் கைவரிசை யோ.ஒரு நாள் இரவில் பெய்த மழை 50% சேமிப்பு பொக்கிஷத்தை காலி.செய்து விட்டது.அதன்பிறகு பரணில் வைக்க மனமில்லாமல் பள்ளி புத்தகம் வைக்கும் ஷெல்பில் வைத்தேன் எப்போதும் என் பார்வையில் படும்படி. அதனால் வந்தது இன்னொரு சனி என் நண்பனின் ரூபத்தில்(பெயர் குறிப்பிட மனம் வரவில்லை) .
    1994 நான் +2 படித்து கொண்டு இருந்த சமயம் ரெக்கார்ட் நோட் கேட்டு வந்த நண்பன் என் காமிக்ஸ் சேகரிப்பை பார்த்து விட்டு தானும் காமிக்ஸ் வாசகன் என்று கூறி அவனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று காட்டினான்.அவன் புது வாசகன் சுமார் 3,4வருட புத்தகம் அவன் சேமிப்பில் இருந்தது.
    என்னுடைய சேமிப்பு சிறிது மழையாலும்,எலியாலும் சேதாரம் அடைந்திருப்பதை கண்ட அந்த நண்பன் என் புக்கோடு சேர்த்து உன் புக்கையும் என் வீட்டில் உள்ள கண்ணாடி ஷெல்பில் வைத்து படிப்போம் என்றான்(அந்த டீல் பிடித்திருந்தது) .சரி என்று எனது பொக்கிஷம் மாற்றல் ஆனது.
    லீவு நாட்களில் அவன் வீடுதான் என் வாசஸ்தலமாக மாறியது. நாட்கள் நன்றாக போய் கொண்டிருந்தது என் அப்பா புது பீரோ வாங்கும் வரை.பீரோ வந்தவுடன் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கினேன் புத்தகம் வைப்பதற்கு.
    மறுநாள் அந்த நண்பனை சந்தித்து என் புத்தகங்களை கேட்டேன்.உன் புத்தகமா ஏது?என்று கேட்டானே ஒரு கேள்வி.அதன் முடிவு அவன் அம்மாவால் எனக்கு அடிதான் கிடைத்தது. கண்களை துடைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் யாரிடமும் இதை பற்றி கூற வில்லை. அப்பா தான் புத்தகம் எடுத்து வரவில்லையா என்று கேட்டார். நண்பன் ஊரில் இல்லை. சாவி காணவில்லை என்று மழுப்பத் தொடங்கினேன்.
    1995 காரை TO T.R.பட்டினம் (சுமார் 7 KG/m).நான் ITI சேர்ந்த சமயம் பஸ்ஸில் சென்று வந்த நான். ஒரு நாள் நண்பர்களுடன் சைக்கிளில் சென்றேன். பழக்கதோஷத்தில் கடைகளை பார்த்து கொண்டு செல்வது வழக்கம். (அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது) .அப்படி திடீரென்று TEX ன் முகம் தெரிந்தது ஒரு பழக்கடையில் சென்று பார்த்தால் பழைய புத்தகங்கள் தொங்கி கொண்டு இருந்தன.விசாரித்ததில் ....(தொடரும்)நன்றி

    ReplyDelete