Thursday, September 15, 2016

பெருமூச்சே மிச்சம் !!

நண்பர்களே,

வணக்கம். சமீபமாய் சந்தா E -வின் பொருட்டு 2 புதிய தொடர்களை சீரியசாகப் புரட்டிக் கொண்டிருந்தேன்   ! சும்மா தெறிக்கச் செய்த சித்திரத் தரத்தைப் பார்த்துத்  திறந்த வாயை மூடவே முடியவில்லை !! ஆனால் இரண்டு தொடர்களுக்குமே கதாசிரியர் - நமக்குப் பரிச்சயமனான (பெளன்சர்) புகழ் Alejandro Jodorowsky என்ற போதே சன்னமானதொரு மிரட்சியோடு தான் பக்கங்களை புரட்டினேன் ! சற்றைக்கெல்லாம் தலைகாட்டத் தொடங்கிய அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் வயிற்றில் புளியை கரைத்தன ! அட்டகாசமாய்த் தோன்றிடும் இந்த மினி தொடர்களில் இந்த நெருடல்கள்  மட்டும் இல்லாது போயின்  நிச்சயம் இவை இந்தாண்டு நம்மூருக்கு இறக்குமதியாகி இருக்கும் ! எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி கொஞ்சம் கத்திரி போட சம்மதம் வாங்கினால் தலை தப்பித்துவிடுமென்று பார்த்தால் - கதையின் போக்கோடே இந்தச் சமாச்சாரங்களும் இணைந்து ஓடுகின்றன  !! ஒரு அசாத்தியச் சித்திர விருந்தை தவற விடுகிறோம் என்ற சங்கடத்துடன் இரண்டையுமே ஓரம்கட்டி வைத்தேன் ! ஐரோப்பிய புது ஆக்கங்களில் இவையெல்லாமே மாமூலான விஷயங்கள் என்றாகிவிட்ட நிலையில் வரும் காலங்களில் இவற்றின் நடுவே வண்டி ஓட்டுவது ஒரு tricky அனுபவமாய் இருக்குமென்பது உறுதி !! ஷப்பா !! 
பாருங்களேன் - இந்த அசாத்தியதை !! பெருமூச்சோடு அடுத்த சிலநாட்களைக் கடத்திடுவேன் guys !! See you again on Sunday !!

P.S : "கை சீவம்மா..கை சீவு...!"  - இதுவும் 2017-ன் ஒரு கதையின் தலைப்பு !! (சும்மா ரைமிங் ஆக இருந்திட வேண்டுமென்று உண்டாக்கிய பெயரல்ல இது - கதையோட்டத்துக்கு ரொம்பவே பொருந்தும் தலைப்பு ! ) யாருடைய  கதைக்கென்று யூகியுங்களேன் ?

FLASH :
போனெல்லி குழுமத்தின் வலைப்பக்கத்தில் நமது TEX காதலுக்கு அசாத்திய மரியாதை செலுத்தியுள்ளனர் !! பாருங்களேன் : 
http://www.sergiobonelli.it/gallery/home/41214/tex-in-india.html


TEX IN INDIA!

Our indian licensor, passionate publisher of Tex's adventures in tamil language, sends us some snapshots that testify the enthusiasm that surrounds the local edition of the Bonellian Ranger!

Lion-Muthu Comics is the Indian publisher of Tex's adventures, translated in Tamil language. A recent comics convention hosted some panels about Lion-Muthu Comics publications. Take a look at our gallery, featuring many pictures showing some Tex fans from India, some of them holding the latest issues of their favourite hero's adventures, including the tamil language edition of the 27th "Texone", "La cavalcata del morto", by Mauro Boselli and Fabio Civitelli. As you can see, the passion for Tex knows no borders!

163 comments:

 1. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் முதல் இடத்தை பிடித்து விட்டான்.

  ReplyDelete
 2. கை சீவம்மா கை சீவு.. ஒருவேளை..ஜூலியா..அல்லது மாடஸ்டி ..உறுதியாக ஸ்மர்ப்ஸ் தான்

  ReplyDelete
 3. அன்புள்ள ஆசிரியருக்கு
  சந்தா ஈ என்பது வித்தியாசமான பரிட்சார்த்த முயற்சி என்பதால் எதையும் தள்ளாது வேண்டும் என்பவர்களுக்கு
  அனைத்தும் தரலாமே சார்

  ReplyDelete
 4. ஆசிரியர் அவர்களே மேல் உள்ள சித்திரத் தரத்தை பார்த்து பிளந்த வாய் மூட எவ்வளவு நாட்கள் ஆகுமோ? இது போன்ற சித்திரத்தை கண்ணில் காட்டிவிட்டு இப்படி புறந்தள்ளுதல் நியாயமா? தயவுசெய்து பிரிண்ட்ரன்னில் அட்டையின் மேல் பெரிதாக +18 என்றும் அடல்ஸ் only என்றோ எப்படியாவது அந்த கதையை எங்களிடம் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள். Please. நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஐடியா முயற்சி செய்யுங்கள் ஆசிரியரே சித்திரங்கள் பார்த்தவுடன் உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டது

   Delete
 5. ஏதோ ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் இருந்து ஒரு ப்ரேமை போட்டோ பிடித்துப் போட்டது போல் வாவ் !!!!
  கதாசிரியரின் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ளாலமா+போட்டோ .நன்றி

  ReplyDelete
 6. வணக்கம் சார்...
  வணக்கம் நட்பூஸ்...
  பைனலிஇஇஇஇ, பதிவு...

  ReplyDelete
 7. வணக்கம், வந்தனம்,நமாஸ்கார்.

  ReplyDelete
 8. சித்திரங்கள் கண்களுக்கு செம விருந்தாக உள்ளன சார்,அருமை,அட்டகாசம்.

  ReplyDelete
 9. வைகிங்ஸ்? வைகிங்ஸ் என்றால்அடல்ஸ் ஒன்லி இருக்காதே!எதற்கும் நீங்களே சொல்லிவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வைகிங்ஸ் என்றால் தலைகிாுடத்தில் கொம்பு இருக்கும் இதில் இல்லை.

   Delete
 10. எல்லாம் நீங்களே படிச்சுக்கோங்க எடிட்., எரிய இடத்தில பெட்ரோல் கிணறு தோண்டறீங்க ;P

  ReplyDelete
 11. ///அந்த "ஏதாவது" தான் என்னவென்று பிடிபட மாட்டேங்குதே சார் !! ///
  exclusive only to golden subscribers(subscribing all) அப்படினு ஒரு விஷயமாக இருத்தல் பலன் தரும் மற்றவை எல்லாம் பிம்பிளிக்கி தான். any way அவர்களுக்கு அது கடையில் எப்பவென கிடைக்கப்போகிறது என்றல் மவுசு குறைவுதான்.

  ReplyDelete
 12. யப்பா சித்திரங்கள் செம்ம

  ReplyDelete
 13. சார்! நீங்கள் 2015-ம் ஆண்டு ஆரம்பத்தில் ஒரு பதிவில் டெக்ஸ்சின் "ஒரு நாயகன்.. ஒரு சகாப்தம்." என்று ஒரு கதையை பற்றி தகவல் தந்தீர்கள். ( http://lion-muthucomics.blogspot.in/2015/03/blog-post_15.html ) அது 2015'திலும் வரவில்லை, 2016'லும் இடம்பெறவில்லை. 2017-ல் வருகிறதா?

  ReplyDelete
 14. // கை சீவம்மா..கை சீவு...! //

  மறுபடியும் அதே தவறை செய்கிறோமே சார்... ஒருவேளை ஒரிஜினலில் இதுபோன்ற ரைமிங்கான வில்லங்கம் இருக்கிறதா என்ன?

  Still கதைக்குள்ளே வன்முறை இருந்தாலும், தலைப்பை மட்டுமாவது கதையின் கான்செப்டை டச் பண்ணுமாறு அமைத்தால் இவ்வளவு கொடூரமாகத் தோன்ற வாய்ப்பில்லை - அட்லீஸ்ட் நமது ரெகுலர் ஹீரோ கதைகளைப் பொருத்தவரையில் தலைப்பு மேலோட்டமாக இருப்பினும் கொடூரங்களை டச் பண்ணாமல் இருப்பது நல்லது.

  ReplyDelete
  Replies
  1. PS: ஒருவேளை கையிலே முடிமுளைத்து அதனை சீப்பால் சீவும் கதையென்றால் தலைப்பு சூப்பர் ஹி ஹி!

   Delete
 15. அனைவருக்கும் வணக்கம்.
  எடி சார்.இதெல்லாம் ஓவியமா? என்ன மாயாஜாலம் சார் இது! நம்பவே முடியவில்லை!! ஆச்சரியத்தில் உறைய வைக்கிறது. முழு புத்தகமும் கையில் கிடைத்தால் மூச்சடைத்துவிடும் போலிருக்கிறது. இதனை காட்டாமலே இருந்திருக்கலாம். ஓவியங்களை வரைந்த மகாமனிதனின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்களை அடக்கிவாசித்து தனியே சந்தாவைத்து வெளியிடப் பாருங்கள் சார்.அல்லது மொத்த தொகுப்பையும் இரத்தக்கோட்டை மாதிரி தனியே வெளியிடவாய்ப்பிருந்தால் செயல் படுத்துங்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. ////ஓவியங்களை வரைந்த மகாமனிதனின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.///.

   @ATR.....

   DONGZI LIU( சீன தேசக்காரர்).

   கதை பெயர்...ROYAL BLOOD.(2014)


   எடிட்டர் குறிப்பிடும் இன்னுமொரு தொடர்...

   Showman killer....(?)

   நன்றி..: கூகுள்...

   Delete
  2. நன்றி சார். எடிட்டர் பயப்படுகிற அளவிற்கு அவ்வளவு மோசமான அடல்ஸ்ஒன்லி சமாச்சாரங்கள் உள்ளனவா சார்?

   Delete
  3. ஹி...ஹி...
   அலெக்சாண்டர் ஜோடரவ்ஸ்கினாலே அப்டி தான் இருக்கும் Atr sir...
   பெளன்சர் 8,9பாகங்கள் கூட இப்படி தான், கதையோடு கூடிய அடல்ஸ் சமாச்சாரங்கள்& அதீத வன்முறை...

   பெளன்சரையே விற்க முடியாமல் நிறைய தேங்கியுள்ளது போல..
   இதில் இன்னொரு சோதனை ஓட்டம் செய்து பிரதிகளை தேக்கவேணாம் ஆசிரியர் சார்.
   நம்முடைய சகல தரப்பு வாசகர் வட்டத்திற்காக இதுபோன்ற ஓரிரு கதைகளை தியாகம் செய்வதில் தவறில்லை சார்...

   Delete
  4. நானும் ஆபாசம் கூடாதென்ற குரல் கொடுத்தவன்தான் சார். ஆனால் அந்த சித்திரங்கள் அனைத்தையும் மறக்கடித்து விட்டது.நமது இதழ்களில் இம்மாதிரியான சித்திரங்களை பார்ப்பது இதுவே முதல்முறை. இதனை வெளியிடுவது சிரமம் என்கிற போது இதே ஓவியர் ஆபாசமில்லாமல் வேறு கதையில் தன் கைவண்ணத்தினை காட்டியிருப்பின் அதனை ஆசிரியர் வெளியிட்டாலும் சந்தோஷம்தான் டெக்ஸ்விஜய் சார்.

   Delete
  5. //இதே ஓவியர் ஆபாசமில்லாமல் வேறு கதையில் தன் கைவண்ணத்தினை காட்டியிருப்பின் அதனை ஆசிரியர் வெளியிட்டாலும் சந்தோஷம்தான் ///...+123456789.

   Delete
  6. தற்சமயம் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் இப்புத்தகம் விற்பனைக்கு கிடைக்கிறது. தேவைப்படுவோர் வாங்கி பயனடையலாம்.

   Delete
  7. புத்தகத்தை பற்றிய விமர்சனங்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.

   Delete
  8. ஒரே ஒரு புத்தகத்திற்காக நாற்பதாண்டுக்கும் மேலான நம் நிறுவனத்தின் நற்பெயரை இழப்பதைவிட அதனை மறந்துவிடுவது(என்னைப் பொறுத்தவரை) நல்லதென கருதுகிறேன்.

   Delete
  9. // நாற்பது ஆண்டுகளுக்குமேலாக நல்ல பெயரை இழழப்பதைவிட //

   உண்மை.! என் மனைவிக்கு எடிட்டர் மீது மலையளவு நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது.இதுபோல் நம் வட்டத்தில் மகளிர் எண்ணிக்கையும் நீருபூத்த நெருப்பாக உள்ளதுஉ.அதை ஒரு கதைக்காக கெடுத்துக்கொள்ள வேண்டாம்.!

   Delete
 16. அடேங்கப்பா .....சித்திரங்களா இவை ....சிறுவர்களுக்கான களம் இல்லை என்ற என்ற பெரிய அறிவிப்புடன் முன் அட்டையில் இதனை வெளியிடலாமே சார் ...


  ///அந்த "ஏதாவது" தான் என்னவென்று பிடிபட மாட்டேங்குதே சார் !! ///

  நோ ...ப்ராபளம் சார் ..இதுவரை வந்த சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பு சந்தா நண்பர்களுக்கு மட்டுமே என்ற அறிவிப்புடன் களம் இறங்குங்கள் ......

  வெற்றிவேல் ...வீரவேல் ....

  ReplyDelete
  Replies


  1. திருத்தம்....

   முன் அட்டையில் பெரிய அறிவிப்புடன் ...

   Delete
  2. Paranitharan K @ நீங்க சொல்லுறபடி எல்லாம் புத்தகம் வெளிஇட்டால் புத்தக திருவிழாவில் நமது ஸ்டால்ளுக்கு வரவங்க மற்றும் புதுசா புத்தகம் வாங்குபவர்கள் எண்ணிக்கை இன்னும் குறைய வாய்ப்புகள் அதிகம் சார்! நமது வாசகர் வட்டத்தை அதிகரிக்க முயற்சிக்கும் நேரத்தில் இது மாதிரி புத்தகம்கள் நமது டயர்களை பஞ்சராகிவிடும்.

   வேண்டாமே இது போன்ற கதைகள் நமக்கு!

   Delete
  3. தாரை பரணிதரன் ஆகிய நான் நண்பர் பெங்களூர் பரணிதரன் அவர்களின் கருத்துக்களை இப்போது வழிமொழிவதால் மேற்கண்ட எனது கருத்தை வாபஸ் வாங்கி கொள்கிறேன் ...

   Delete
  4. பரணி ஸ்கொயர்@


   +111111

   நானும் உங்கள் கட்சி.!

   Delete
 17. இது Royal Blood By Alejandro Jodorowsky and Dongzi Lui comics.ஆங்கிலத்தில் உள்ளது நமது எடிட்டரின் தமிழில் படிக்க கண்டிப்பாக நன்றக இருக்கும் . ஹ்ம் இப்போதைக்கு பெருமூச்சு மட்டுமே போல

  ReplyDelete
 18. இதை எல்லாம் பார்த்து ..........ம்ம்ம்.....
  வேறு எதுவும் செய்ய முடியாது.
  எடி சார் கொஞ்சம் மனசு வைத்தால் எல்லாம் கிடைக்கும்.

  ReplyDelete
 19. தலையில்லா போராளி இத்தாலிய மொழி தலைப்பு என்ன? திரு செனா அனா அவர்கள் தெரிவிக்க வேண்டும். நன்றி.

  ReplyDelete
 20. இங்கு புத்தகங்கள் வாசிக்கும் அனைவரும்எனக்கு தெரிந்து யாரும் சிறியவர்கள் இல்லை. உங்கள் பானியில் இலை மறை காயக கவனித்து E சந்தாவில் இடம் பெற செய்யாலாமே?

  ReplyDelete
 21. கை சீவம்மா கை தீவு
  ஜீலியா அல்லது டைலன்

  ReplyDelete
 22. மர்ம மனிதன் மார்டின் அல்லது டைலன் டாக். தலைப்பை தேர்வதில் உமக்கு நிகரில்லை.

  ReplyDelete
 23. டியர் எடிட்டர்

  இந்த மாதிரி புக்ஸை நீங்க மட்டும் படித்து விட்டு அடிக்கடி வெறுப்பேத்துவது எப்படி நியாயம் ? :-)

  சந்தா X ;-) என்று ஒரு தடம் போட்டா போச்சு .. ஹி ஹி ...

  ReplyDelete
 24. ராயல் ப்ளட். ஏமாற்றப்பட்டு அரச பதவியை இழந்து பின் விஸ்வரூபம் கொள்ளும் பாத்திரம். கொடூரம் அவனௌ நியாயம். மிரட்டல் கதை. தமிழுக்கு ஒத்துவராது.

  ReplyDelete
 25. வீட்டிலே பெண் பிள்ளைகளை வைத்திருக்கிறோம் என்றெல்லாம், பௌன்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்கள் ஞாபகம் வருகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. பொடியன் சார்.!

   எனக்கு இரண்டும் ஆண் குழந்தைகளே.இருந்தாலும் நம் நண்பர்களுக்கு புதல்விகள் உள்ளார்களே.!அவர்கள் வேறு நாம் வேறா.???

   Delete
  2. யாரையும் குறை சொல்லவில்லை சகோ. ஆசிரியரின் பெருமூச்செறியும் பதிவைப் படித்தபோதும், நண்பர்கள் சிலர் எப்படியாவது வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்ததை பார்த்தபோதும் சரமாரியாக இங்கே முன்பு நடந்த பதிவுகளின் வேகம் ஞாபகம் வந்தது. அதைத்தான் பதிவிட்டேன். இன்று தமிழில் வரும் வார இதழ்களையே குழந்தைகள் படித்துவிடுவார்களோ என்று பதறவேண்டிய நிலைதானே உள்ளது!

   Delete
 26. கதைக்கரு எவருக்குமே உகந்ததல்ல. முதல் பாகம் படித்துள்ளேன். நன்றி கஸ்கஸ்

  ReplyDelete
 27. கடுப்பேத்தும் ஆசிரியரை கண்டித்து ஸ்பாம் மெய்ல் அனுப்பும் போராட்டம்...

  ReplyDelete
 28. ஆசிரியர் 5சந்தாக்கள் என அறிவிப்பு...
  போன பதிவில் ஒரு கேள்வி 12X4=48+Eல் 6, ஆக மொத்தம் 54ஆ என???...
  54க்கெலாம் வாய்ப்பு இல்லை என ஆசிரியர் தெரிவித்து விட்டார்..
  எனவே Eல் இடம்பெறும் 6இடங்கள் எதில் இருந்து குறைக்கப்படும்???
  சந்தா Aல் ஏகப்பட்ட மைல்கல் இதழ்கள் இடம்பெற இருப்பதால் ,
  B,C,Dஇவற்றில் தலா 2இதழ்கள் கல்தா கொடுக்கப்படும் என நண்பர்கள் கருத்து தெரிவித்தனர்...
  ஒருவேளை இப்படி நடந்தால் சில இடங்கள் கட் ஆவது யாருக்கு என லேசான சிந்தனையும் எழுகிறதே???...
  உங்கள் கருத்து என்னவோ நண்பர்களே???...

  ReplyDelete
 29. சென்ற ஆண்டு ராயப்பேட்டை புத்தக விழாவினில் நமது கடைக்கு வருபவர்களிடம் சிறிது நேரம் பேசியபோது அவர்கள் சொன்ன ஒரு விஷயம் இப்போதும் உறுத்திகொண்டே இருக்கிரது. அதாவது, சந்தா கட்டாமல், இது போல புத்தக விழாவினில் வாங்கினால்
  1. 10% கழிவு கிடைக்கும் (5,000 ரூபாய்க்கு வாங்கும்போது 10% என்பது 500 ரூபாய்).
  2. உள்பக்கம் சேதமடையாத, கிழிந்து, கசங்கியிராத புத்தகமாக பார்த்து வாங்கலாம்.
  என்று சொன்னார்கள். இது ஒருவகையில் உண்மைதானே?

  2014ல் ஒரு முறை நீங்கள் “இனிமேல் சந்தாக்களுக்கு அனுப்பும் புத்தகங்களை சரிபார்த்து, ஓரிரு நாள்கள் தாமதமானாலும் பரவாயில்லை, நல்ல புத்தகமாக அனுப்புவோம்” என்று சொன்னதாக நினைவு.

  ஒரு வகுப்பினில் இருக்கும் அனைத்து மாணாக்கர்களும் புதிய நோட்டுபுத்தகங்களைப் பெறும்போது, தனக்கு மட்டும் டேமேஜ் ஆன புத்தகத்தைப் பெற்ற சிறுவனைப்போலத்தான் சரியில்லாத புத்தகங்களை சந்தாவில் பெறும் வாசகர்களின் நிலைமையும்.

  நான் ஒரு யோசனை சொல்கிறேன்: சிவகாசியிலேயே (உங்கள் அலுவலகம் இருக்கும் பகுதியில்) இருக்கும் யாராவது ஒரு / இரு பள்ளி மாணவர்களை அழைத்து, சந்தாவுக்கு அனுப்பப்படும் புத்தகங்களை ஒருமுறை புரட்டி அனுப்பச் சொல்லுங்களேன்? (மாதம் 4 x 500 = 2000 புத்தகங்கள்) 4 / 5 மணி நேரத்தில் புரட்டி பார்த்து விடலாம்.

  Form மிஸ் ஆகும் புத்தகங்களைத் தவிர, மடங்கிய, கசங்கிய, கிழிந்த, ஒரு பக்கம் அச்சிடப்படாத, கருப்பாக அச்சான புத்தகங்களை எல்லாம் இதிலேயே நிராகரித்து விடலாமே? சற்று யோசித்து பாருங்கள்: வங்கிகளில், itயில் பணி புரியும் நண்பர்களுக்கு இதுபோல ஒரு கசங்கிய புத்தகம் வந்து சேர்ந்தால், அதை திருப்ப அனுப்பி வைப்பது ஒரு வேண்டாத வேலை என்றால், சந்தா கட்டியும் நிராகரிகப்பட்டதை போன்ற ஒரு உணர்வு கொண்டு, அதனாலேயே சந்தாவை continue செய்யாதவர்கள் உண்டுதானே?

  அதே நேரத்தில், புத்தகங்களை சரிபார்க்கும் அந்த சிறுவர்களுக்கு நாளொன்றுக்கு இவ்வளவு என்று விலை பேசி அவர்களை நோகடிப்பதை விட, அவர்கள் விரும்பும் 5 புத்தகங்களை (ஸ்பெஷல் இதழ் நீங்கலாக) இலவசமாக கொடுக்கலாம். (ஒரே தோட்டாவில் இரண்டு குறி - புத்தகத்தை செக் செய்தது போலவும் ஆயிற்று, அடுத்த தலைமுறைக்கு புதிய வாசகர்களை சேர்த்தது போலவும் ஆயிற்று).

  ஆகவே, இந்த மாதம் 3 நாட்களுக்கு முன்பாக புக் அனுப்புகிறோம், 5 நாட்களுக்கு முன்பாக புக் அனுப்புகிறோம் என்றெல்லாம் செய்யாமல் (எக்ஸ்ட்ரா நம்பரை போடச் சொல்லி நான் கேட்டேனா?) 3 நாட்கள் தாமதம் ஆனாலும் பரவாயில்லை. நல்ல, சேதாரமில்லாத புத்தகங்களை அனுப்பலாமே?

  ReplyDelete
  Replies
  1. //சந்தா கட்டியும் நிராகரிகப்பட்டதை போன்ற ஒரு உணர்வு கொண்டு, அதனாலேயே சந்தாவை continue செய்யாதவர்கள் உண்டுதானே?///கசப்பான உண்மை...

   ஒரே தோட்டாவில் இரண்டு குறி - புத்தகத்தை செக் செய்தது போலவும் ஆயிற்று, அடுத்த தலைமுறைக்கு புதிய வாசகர்களை சேர்த்தது போலவும் ஆயிற்று///...+1

   ///3 நாட்கள் தாமதம் ஆனாலும் பரவாயில்லை. நல்ல, சேதாரமில்லாத புத்தகங்களை அனுப்பலாமே?////...+1...நானும் அந்த பார்சலை ஆவேசத்தடன் புரட்டி பார்ப்பது வழக்கம்,
   பிறகு கஸ்டமர்கள் இல்லாத போது பொறுத்து தான் படிக்க முடியும், தாமதம் நோ ப்ராப்ளம்...
   (அன்று ஏன்யா மொத நாள் வர்லனு ஆத்திரம் வந்தது என கேட்கப்படாது, அது புதிய புத்தகங்களை பார்க்கும் ஆவல்)

   அருண் சார்@ இந்த ஒரு மாதம் மட்டும் இன்னும் சில எக்ஸ்ட்ரா நம்பர்களை போடச்சொல்லி, விரைவாக வாங்குவோமே.அடுத்த ஆண்டு அட்டவணை என்னான்னு தெரிந்து கொள்வதில் கொஞ்சம் ஆவல் அதிகமாகிட்டது...

   Delete
  2. சௌமியன் சார்.!

   நான் தியேட்டரில் போய் படம் பார்ப்பது இல்லை.ஆனால் சில மாதங்களுக்கு பின் இந்திய தொலைக்காட்சியில் முதன்முதலாக ஒளிபரப்பும் போது பார்த்துவிடுவேன்.! அந்த படத்தையே முதல்நாள் முதல் ஷோ என்று பார்ப்பவர்களும் உண்டு.தியேட்டரில் மட்டுமே பார்ப்பேன் என்ற கோஷ்டியும் உண்டு,ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருந்துவிட்டால் கை பயன்படாமல் போய்விடும் அல்லவா .?


   (நான் காமிக்ஸ் , நாளிஇதழ் இவற்றைத் தவிர மற்ற புத்தகங்களை பழைய புத்தகக் கடையில்தான் வாங்கி படிப்பேன்.!(

   Delete
 30. சித்திரங்கள் தெறிக்குது !

  ReplyDelete
 31. @ ALL : போனெல்லி குழுமத்தின் வலைப்பக்கத்தில் நமது TEX காதலுக்கு அசாத்திய மரியாதை செலுத்தியுள்ளனர் !! பாருங்களேன் : http://www.sergiobonelli.it/gallery/home/41214/tex-in-india.html

  ஓராயிரம் நன்றிகள் போனெல்லி குழுமத்துக்கு !!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...இத்தாலியில் டெக்சால் நமது தமிழ் ....சூப்பர் சார்....இந்த சந்தோசத்த கொண்டாடும் வகையில் அந்த ஐநூறு பக்க டெக்ச...

   Delete
  2. //TEX IN INDIA!Our indian licensor, passionate publisher of Tex's adventures in tamil language, sends us some snapshots that testify the enthusiasm that surrounds the local edition of the bonellian Ranger!
   Lion-Muthu Comics is the indian publisher of Tex's adventures, translated in tamil language. A recent comics convention hosted some panels about Lion-Muthu Comics publications. Take a look at our gallery, featuring many pictures showing some Tex fans from India, some of them holding the latest issues of their favourite hero's adventures, including the tamil language edition of the 27th "Texone", "La cavalcata del morto", by Mauro Boselli and Fabio Civitelli. As you can see, the passion for Tex knows no borders!

   14/09/2016////....
   உய்ய்ய்....உய்ய்ய...அட்டகாசம் சார்...
   நம் டெக்ஸ் காதலுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து விட்டது...சூப்பர் சார்...
   வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்...
   நம் நண்பர்கள் டெக்ஸ் தேனிர் சர்ட்டிலும், தலை இல்லா போராளி செல்பியுடனும் கலக்குகிறார்கள்...

   Delete
  3. அருமை! மிகவும் சந்தோசம் தரும் விஷயம்!! நமது காமிக்ஸ் காதலுக்கு கிடைத்த மரியாதை!

   Delete
  4. இந்த மகிழ்ச்சியான செய்தி நம் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய செய்தி சார். வாழ்த்துக்கள்.இது சாத்தியமானதற்கு காரணமானவர்கள் அனைவருக்கும். இந்த மகிழ்ச்சியை கொண்டாட நீங்கள் தலையில்லா போராளி சைசில் வண்ணத்தில் ஒரு நீண்ட டெக்ஸ் சாகசத்தை வெளியிட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான விண்ணப்பம் சார்.செய்வீர்களா.....??

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. @ ஆசிரியர்....

   வுநஓ
   றுடைடநச!
   அடுத்தவருட 12-Tex கோச்சுகளில் ஒன்றா.
   நம்மவர்கள் கதைகளின் தலைப்பில் காரத்தை குறைக்க சொன்னாலும் சொன்னார்கள்....இனி இப்படியான தலைப்புக்கள் தான் மிஞ்சும் போலுள்ளதே.

   Delete
  7. டெக்ஸ் வில்லருக்கு உரிய மரியாதை
   மகிழ்ச்சி ஆசிரியரே

   Delete
 32. ஆஹா...இத்தாலியில் டெக்சால் நமது தமிழ் ....சூப்பர் சார்....இந்த சந்தோசத்த கொண்டாடும் வகையில் அந்த ஐநூறு பக்க டெக்ச...

  ReplyDelete
 33. டியர் எடிட்டர்

  INDEH "இறந்தவர்கள்"

  செல்வம் அபிராமி ரெகமெண்ட் செய்து இந்த அசாத்திய செவ்விந்திய க்ராபிக் நாவலை படிக்க நேர்ந்தது - ஹீரோ ஜெரோனிமோ !

  தமிழில் வந்தால் தலை கால் புரியாத வெற்றி அடையும் - ஆனால் விலை மிக மிக அதிகமாக இருக்க வேண்டிவரும்.

  ReplyDelete
  Replies
  1. Raghavan : நமது அமெரிக்க நண்பர்களுள் ஒருவர் இதனைப் பரிந்துரை செய்திருந்தார் சமீபமாய் !! ஆனால் நீங்கள் சொல்வது போல விலையில்தான் சிக்கலே எழுகிறது என்பதால் மோவாயைத் தடவிக் கொண்டே நகர்ந்திட வேண்டிப் போனது ! சென்றாண்டின் பட்ஜெட்டுக்குள் சகலத்தையும் இம்முறையும் அடக்கும் பிரயத்தனத்தில் விழி பிதுங்குகிறது !

   Delete
  2. ///பட்ஜெட்டுக்குள் சகலத்தையும் இம்முறையும் அடக்கும் பிரயத்தனத்தில் விழி பிதுங்குகிறது ///...
   இரத்த கோட்டை பட்ஜெட்டோடு சேர்த்து இதையும் அறிவிக்கலாமே சார்...
   ஒரு கெளபாய்புதுசு+
   ஒரு கெளபாய்பழசு...

   Delete
  3. செனா அனா சார் பரிந்துரைத்த புத்தகம் என்றால் நிச்சயமாக அது சோடை போக வாய்ப்பில்லை. எனவே டெக்ஸ் விஜய் அவர்கள் சொல்வதைபோல செய்யலாமே சார்.

   Delete
 34. விஜயன் சார்,
  // கதையின் போக்கோடே இந்தச் சமாச்சாரங்களும் இணைந்து ஓடுகின்றன !! ஒரு அசாத்தியச் சித்திர விருந்தை தவற விடுகிறோம் என்ற சங்கடத்துடன் இரண்டையுமே ஓரம்கட்டி வைத்தேன் //

  மிகவும் சரியான முடிவு! இதனை நான் ஆதரிக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. எடிட்டரின் இந்த முடிவை நானும் ஆதரிக்கிறேன்!

   Delete
  2. நானும் கூட ஆதரிக்கிறேன். அந்த எண்ணத்தை அத்துடன் முடிவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.அதற்கு பதிலாக செனா அனா சார் பரிந்துரைத்த புத்தகத்தை பற்றி பரிசீலிக்கலாமே சார்.நல்ல புத்தகத்தை இழக்க மனம் தயாராக இல்லை.

   Delete
  3. எடிட்டரின் முடிவு மிகச் சரியானது.!

   நானும் வோ ( நவஜோ ஸ்டையில் ) போடுகிறேன்.!

   Delete
  4. +1000 plus....
   நமது காமிக்ஸின் தரத்தினில் இன்றியமையாதது பாரம்பரியமிக்க துளியும் விரசமில்லாமை தான்... எந்த காலத்திலேயும் ஆபாசத்தை உள்ளே அனுமதிக்கவேண்டாம்.

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
 35. ஊஊஊஊ! பொனெல்லியின் தளத்தில் நம் நண்பர்களைக் காண்பது ஒரு அட்டகாசமான அனுபவம்! நிச்சயம் அந்த பிரேசில் பயபுள்ளைகளின் வயிற்றில் இந்நேரம் தீப்பற்றிக்கொண்டிருக்கும்! ;)

  ReplyDelete
 36. /// கை சீவம்மா கை சீவு ///

  ஒருவேளை, கதைக்கு மிகப்பொருத்தமான தலைப்பாக இருக்கலாம்தான்! ஆனால், படிக்கும் கணத்திலேயே ஒரு குழந்தையின் கையில் கத்தி பட்டு இரத்தம் கொட்டுவது போன்ற ஒரு பகீர் கற்பனை உருவாவதை இரசிக்க முடியவில்லை! எனக்கும், இங்கே வேறு சில நண்பர்களுக்கும் தோன்றிய அந்தக் கற்பனையைப் போலவே புத்தகக் கண்காட்சிகளில் இந்தத் தலைப்பைப் பார்க்க தேரிடும் தாய்மார்களுக்கும் தோன்றிவிட்டால் - கஷ்டம் தான்!

  இந்தத் தலைப்புக்கு எனது -111.

  ReplyDelete
  Replies
  1. இந்தத் தலைப்பு 'டைலன் டாக்' கதைக்கானது என்பது என் யூகம்!

   Delete
  2. உளவியல் ரீதியான கதை என்றால் இது ஜூலியாவுக்கான தலைப்பாகவும் இருக்கலாம்!

   Delete
  3. உறுதியாக எங்கள் இளவரசி யாக இருக்கவாய்ப்பில்லை.எங்க இளவரசி யின் இரக்ககுணம் இங்கே யாருக்கு இருக்கு.???

   Delete
 37. அடுத்த ஆண்டு பட்டியலில் இடம் பிடித்தவர்கள் யார். வெளியேறியவர்கள் யாரென சொல்லாமல் தலைப்பை சொல்லி யாருடைய கதை என்று கேட்கிறீர்களே சார்.இது நியாயமா? உங்களுக்கு அவசியம் பதில் தெரியவேண்டுமானால் அடுத்த மாத ஆரம்பத்தில் சொல்லிவிடுகிறேன்.கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் சார்.

  ReplyDelete
 38. This comment has been removed by the author.

  ReplyDelete
 39. இது காமெடி நாயகர்கள் யாருக்கேனும் வைத்த தலைப்பாக இருக்கக்கூடும்.

  ReplyDelete
 40. This comment has been removed by the author.

  ReplyDelete
 41. This comment has been removed by the author.

  ReplyDelete
 42. காமிக்ஸ் பயணம் தொடர்கிறது.

  ரஹ்மானியா பேப்பர் ஸ்டோர் கடையல்ல கடல் .காமிக்ஸ் சுரங்கம் என்னை சுற்றிலும் காமிக்ஸ்களின் அணிவகுப்பு (ராணி,லயன்,முத்து,அசோக்,மேத்தாete...)சொக்கா ஆயிரம் பொற்காசு வேணுமே இதை எல்லாம் வாங்குவதற்கு ஆனால் இருந்த ரூபாய் 1.50 க்கு எதை வாங்குவது பெரிய தடுமாற்றத்திற்கு பிறகு ராணி காமிக்ஸை வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பினேன்.வந்த பிறகும் அந்த மூஞ்சை என்னால் மறக்கமுடிய வில்லை ஆம் லயனின் தலையெழுத்தை மாற்றி எழுதிய ஸ்பைடரிடமிருந்து நான் மட்டும் தப்ப முடியுமா என்ன?(உயரமான 2 பில்டிங் இடையில் 1 கம்பியில் தொங்கி கொண்டு இருக்கும் ஸ்பைடரை மறக்க முடிய வில்லை. )
  புத்தகம் வாங்க அப்பா,அம்மா விடம் காசு கேட்டதற்கு உதை தான் கிடைத்தது. புக் தீர்ந்து விட்டால் என்ன செய்வது(5,10பைசவாக சேர்ப்பதுக்குள்)என்ற பயத்தில் முதல்முறையாக அம்மாவின் சுருக்கு பையிலிருந்து(புது வாசகர்கள் சுருக்கு பையை பார்த்தவுண்டா?)ரூபாய் 2.50 மட்டும் எடுத்துக் கொண்டு நடந்து அல்ல (களவும் கற்று மற)ஓடியே சென்று சுமார் 2 மணி நேரம் கடை வாசலில் உட்கார்ந்து இருந்து புத்தகம் வாங்கினேன். 1987 ம் வருடம் ஸ்பைடரின் கல்நெஞ்சன் மூலம் ஏற்பட்ட பந்தம் தொடர்கிறது. என் ஆயுள் வரை இந்த பந்தம் தொடர ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். எப்போது வீடு வந்தேன். எப்படி அடி விழுந்தது அப்பாவிடம் எதுவும் தெரியவில்லை. கொல்லைப்புறம் சென்று மாமரத்தின் அடியில் அமர்ந்து டவுசரில் இருந்து அழகாக எடுத்து படித்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.இதுபோல் புக் வாங்க அம்மாவின் சுருக்குப் பையினுள் பல தடவை கையை விட்டு உள்ளேன். வீட்டில் இருந்து கடைக்கு செல்ல சைக்கிள் வாடகை 0.50 பைசா தான்.புத்தக விலையை தவிர்த்து 1 பைசா கூட அதிகம் எடுத்ததிலலை.(திருட்டிலும் ஒரு நியாயம்.)
  (என் பணம் மாற்றவர்களிடம் இருக்கலாம். ஆனால் மற்றவர் பணம் என்னிடம் 1 ரூபாய் கூட இருக்கக்கூடாது என்பதில் மிக தெளிவாக இன்றுவரை இருக்கிறேன் இருப்பேன் .)
  இன்னிய வரையிலும் அடுத்தவரிடமிருந்து ஒரு ரூபாய் கூட திருடியது இல்லை. ஆனால் அன்றோ காமிக்ஸ் மீதுள்ள காதல் என்னை திருடனாக்கியது.கால ஓட்டம் என் தாய் தந்தையர் என்னை புரிந்து கொண்டு புத்தகம் வாங்க அவர்களே காசு கொடுத்தார்கள்.(அந்த சமயம் சாப்பாட்டிற்கே கொஞ்சம் கஷ்டம்தான்.என் அப்பா தாலுக்கா அலுவலகத்தில் (govt.)job பின்னே என்ன குறை என்கிறீகளா?ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை ஓட்டியது என்பார்கள்.அதுபோல் இன்றிலிருந்து சுமார் 60 வருடங்களுக்கு முன்பு வாடகை வந்தவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு வாடகை இருந்த வீட்டோடு எங்கள் வீட்டையும் சொந்தம் கொண்டாட அப்பா கோர்ட் படி ஏறினார். அன்று பிடித்தது எங்களை சனியன் அப்பா சம்பளம் அண்ணன் சம்பளம் எல்லாம் போனது
  வக்கீல் என்ற தெய்வத்திற்கு!!!!!!!)
  கல்நெஞ்சன் புக் வாங்கியதற்கு பின் எது வாங்கினேன் என்று தெரியாது.ஆனால் நமது லயனை மட்டும் எப்படியாவது வாங்கி விடுவேன் .அதில் சுவாரஸ்யம் தரக்கூடிய 3 புத்தகம் வாங்கியது இன்னமும் நன்றாக நினைவில் உள்ளது.(நாளை தொடர்கிறேன் .நன்றி வணக்கம்.)

  ReplyDelete
  Replies
  1. சூப்பர்... தொடருங்கள் சார்...
   அந்த 3புத்தகங்கள் பற்றி நாங்கள் அறிய சீக்கிரம், அடுத்த பார்ட் ப்ளீஸ்....

   Delete
 43. காமிக்ஸ் பயணம் தொடர்கிறது.

  ரஹ்மானியா பேப்பர் ஸ்டோர் கடையல்ல கடல் .காமிக்ஸ் சுரங்கம் என்னை சுற்றிலும் காமிக்ஸ்களின் அணிவகுப்பு (ராணி,லயன்,முத்து,அசோக்,மேத்தாete...)சொக்கா ஆயிரம் பொற்காசு வேணுமே இதை எல்லாம் வாங்குவதற்கு ஆனால் இருந்த ரூபாய் 1.50 க்கு எதை வாங்குவது பெரிய தடுமாற்றத்திற்கு பிறகு ராணி காமிக்ஸை வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பினேன்.வந்த பிறகும் அந்த மூஞ்சை என்னால் மறக்கமுடிய வில்லை ஆம் லயனின் தலையெழுத்தை மாற்றி எழுதிய ஸ்பைடரிடமிருந்து நான் மட்டும் தப்ப முடியுமா என்ன?(உயரமான 2 பில்டிங் இடையில் 1 கம்பியில் தொங்கி கொண்டு இருக்கும் ஸ்பைடரை மறக்க முடிய வில்லை. )
  புத்தகம் வாங்க அப்பா,அம்மா விடம் காசு கேட்டதற்கு உதை தான் கிடைத்தது. புக் தீர்ந்து விட்டால் என்ன செய்வது(5,10பைசவாக சேர்ப்பதுக்குள்)என்ற பயத்தில் முதல்முறையாக அம்மாவின் சுருக்கு பையிலிருந்து(புது வாசகர்கள் சுருக்கு பையை பார்த்தவுண்டா?)ரூபாய் 2.50 மட்டும் எடுத்துக் கொண்டு நடந்து அல்ல (களவும் கற்று மற)ஓடியே சென்று சுமார் 2 மணி நேரம் கடை வாசலில் உட்கார்ந்து இருந்து புத்தகம் வாங்கினேன். 1987 ம் வருடம் ஸ்பைடரின் கல்நெஞ்சன் மூலம் ஏற்பட்ட பந்தம் தொடர்கிறது. என் ஆயுள் வரை இந்த பந்தம் தொடர ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். எப்போது வீடு வந்தேன். எப்படி அடி விழுந்தது அப்பாவிடம் எதுவும் தெரியவில்லை. கொல்லைப்புறம் சென்று மாமரத்தின் அடியில் அமர்ந்து டவுசரில் இருந்து அழகாக எடுத்து படித்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.இதுபோல் புக் வாங்க அம்மாவின் சுருக்குப் பையினுள் பல தடவை கையை விட்டு உள்ளேன். வீட்டில் இருந்து கடைக்கு செல்ல சைக்கிள் வாடகை 0.50 பைசா தான்.புத்தக விலையை தவிர்த்து 1 பைசா கூட அதிகம் எடுத்ததிலலை.(திருட்டிலும் ஒரு நியாயம்.)
  (என் பணம் மாற்றவர்களிடம் இருக்கலாம். ஆனால் மற்றவர் பணம் என்னிடம் 1 ரூபாய் கூட இருக்கக்கூடாது என்பதில் மிக தெளிவாக இன்றுவரை இருக்கிறேன் இருப்பேன் .)
  இன்னிய வரையிலும் அடுத்தவரிடமிருந்து ஒரு ரூபாய் கூட திருடியது இல்லை. ஆனால் அன்றோ காமிக்ஸ் மீதுள்ள காதல் என்னை திருடனாக்கியது.கால ஓட்டம் என் தாய் தந்தையர் என்னை புரிந்து கொண்டு புத்தகம் வாங்க அவர்களே காசு கொடுத்தார்கள்.(அந்த சமயம் சாப்பாட்டிற்கே கொஞ்சம் கஷ்டம்தான்.என் அப்பா தாலுக்கா அலுவலகத்தில் (govt.)job பின்னே என்ன குறை என்கிறீகளா?ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை ஓட்டியது என்பார்கள்.அதுபோல் இன்றிலிருந்து சுமார் 60 வருடங்களுக்கு முன்பு வாடகை வந்தவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு வாடகை இருந்த வீட்டோடு எங்கள் வீட்டையும் சொந்தம் கொண்டாட அப்பா கோர்ட் படி ஏறினார். அன்று பிடித்தது எங்களை சனியன் அப்பா சம்பளம் அண்ணன் சம்பளம் எல்லாம் போனது
  வக்கீல் என்ற தெய்வத்திற்கு!!!!!!!)
  கல்நெஞ்சன் புக் வாங்கியதற்கு பின் எது வாங்கினேன் என்று தெரியாது.ஆனால் நமது லயனை மட்டும் எப்படியாவது வாங்கி விடுவேன் .அதில் சுவாரஸ்யம் தரக்கூடிய 3 புத்தகம் வாங்கியது இன்னமும் நன்றாக நினைவில் உள்ளது.(நாளை தொடர்கிறேன் .நன்றி வணக்கம்.)

  ReplyDelete
  Replies
  1. @Saran Selvi,
   உங்களுக்கு காரைக்காலா??

   இன்னும் அங்கேதான் வசிக்கிறீர்களா??

   Delete
  2. காரைக்கால் தான் எனது பூர்வீகம் .வீடு இடித்து விட்டதால் மனைவியை அவர்கள் தாய் வீடான கடலூரில் விட்டு. நான் சவூதியில் இருக்கிறேன்.hassan தாங்கள் எவ்விடமோ தெரியப்படுத்தினால் அடுத்தமுறை india வரும்போது வருகிறேன். நன்றி

   Delete
  3. பிரசன்னா சொன்ன சரவணன் நீங்கதானா?
   எனக்கும் பூர்வீகம் காரைக்கால்தான். ஆனால் பிரான்சில் வாழ்கிறேன். ஆனால் தற்போது காரைக்காலில்தான் உள்ளேன். அக்டோபர் முடியும்வரை...

   நன்றி

   Delete
  4. அய்யோ நான் டிசம்பர் வருவேன் போலிருக்கிறது.எப்போது சந்திப்போமோ? உங்களுக்கு காரையில் ஏந்த இடம்?பிரான்ஸில் என்ன வேலை குடும்பம் எல்லாம் எங்குள்ளது ? அனைவரும் நலம்தானே?லேட்ஆனாலும் பக்ரீத் நல்வாழ்த்துகள். நன்றி வணக்கம்

   Delete
  5. பிரசன்னா என்னை பற்றி எல்லாம் சொல்லி உள்ளார் என்றால் அவருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்ளுங்கள். அவரை தொடர்பு கொள்ள நம்பர் இருந்தால் கொடுத்து உதவமுடியுமா?நன்றி

   Delete
  6. I am in karaikal sir 1985,86,87... i have purchased lion comics in rahmania paper store now my home nedungadu

   Delete
  7. I am working govindasamy pillai high school karaikal my mobile no 9976924428 thank U

   Delete
 44. டியர் எடிட்டர்

  அப்டியே அந்த இத்தாலியர்களுக்கான ஸ்பெஷல் தமிழ் பதிப்பான 'வுனஒ றுடைடநச' நமக்கு எப்போ விற்பனைக்கு வருதுன்னு சொன்னீங்கன்னா .. ஹி ஹி .. :-p

  ReplyDelete
 45. சித்திர தரம் அசாத்தியம் சார். மலைத்து போய் விட்டேன் .சூப்பர் . "பௌன்சர் " போல வெளியிட முடியாதா சார்? உங்கள் நிலைமை புரிகிறது . ஒரு நப்பாசை .
  டெக்ஸ் என்ற மந்திர சொல் சாதித்த மிக பெரிய மரியாதை இது சார். வாழ்த்துக்கள் .
  "கை சீவம்மா , கை சீவு "- லைடன் டாக் இன் தலைப்பு என்றே நான் நினைக்கிறேன் .

  ReplyDelete
 46. http://www.sergiobonelli.it/gallery/home/41214/tex-in-india.html?refresh_ce

  நன்றிகள்
  விஜயன் சார்

  இத்தாலியும் ஈரோட்டுக்கு மக்கம்தான்னு போனெல்லி குழுமத்தாரையே சொல்ல வச்சிட்டீங்க

  வெல்டன் சார்


  ( போட்டோவில் நமது டெக்ஸ் ன் அதி தீவிர வாசகர்களை காணாமல் மனம் பரிதவிக்கிறது
  நண்பர்களில்லாமல் நாம் மட்டுமா ? என்கின்ற வினா மனதை குடைகிறது :( )

  ReplyDelete
 47. முன்னோட்ட இதழ்களை காண இன்னும். ....


  ப....த்........து.........நாட்.கள் ....,

  ReplyDelete
  Replies
  1. தலைவரே !

   மாடஸ்டி கதையை கேட்டு சுண்டு விரலை கூட உயர்த்தவில்லையே தலைவரே.! இது ரொம்ப மோசம் தலைவரே.! உங்களுடைய ஒருவரது ஆதரவு ஆயிரம் பேருக்கு சமமானது தலைவரே.! எடிட்டரை மிரட்டியோ உருட்டியோ 2017 ல் இரண்டு கதைகளாவது வாங்கி விடுங்கள்.இல்லையேல் சங்கம் உடைந்து போக வாய்ப்புகள் உள்ளது தலைவரே.!வருத்தம் இல்லா வாலிபர் சங்கம் உடைந்து எப்பவுமே வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆன மாதிரி நம் சங்கமும் ஆகிவிடக்கூடாது தலைவரே.இன்னும் எட்டு நாட்களே உள்ளது.சீக்கிரமாக போராட்டத்திற்கான முஸ்தீபுகளை ஆரம்பித்து விடுங்கள். இதை வேண்டுகோளாக எடுத்துக்கொண்டாலும் சரி,மிரட்டலாக எடுத்துக்கொண்டாலும் சரி தலைவரே.! நமக்கு மாடஸ்டி மாதிரி காரியம்தான் முக்கியம் வழிமுறைகள் அல்ல.!

   Delete
 48. காமிகஸ் வாட்ஸ்அப் நண்பர்களுக்கு ...எனது அலைபேசியில் வாட்ஸ்அப் செயலி சரிவர இயங்கா நிலையில் இருப்பதால் அங்கே என்னால் கலந்துரையாட வர இயலவில்லை என்பதை அறிவித்து கொள்கிறேன் ...:-)

  ReplyDelete
 49. சந்தா ABCD×12=48
  E×6=6
  ----------------
  54
  ---------------
  லயன் 300
  முத்து400
  முத்து 45 ஆண்டு மலர்
  தீபாவளி மலர்
  இந்த 4 கும் நல்லா குண்டாக வரனும்
  நன்றி

  ReplyDelete
 50. இந்த 4 புக்கும் நல்லா குண்டாக வரனும்

  ReplyDelete
  Replies
  1. நண்பரே நாளை உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். Bye gd ngd

   Delete
 51. // இந்த 4 புக்கும் நல்ல குண்டாக வரனும்.//


  ஹிஹிஹி......அதே!அதே!

  மாடஸ்டி , ஜுலியா எல்லாம் ஜீரோ சைசில் ஒல்லியா இருக்கோனும்.!ஆனால் காமிக்ஸ் மட்டும் பிந்துகோஷ் சைசில் ,உசிலை மணி சைசில் குண்டா இருக்கோனும்

  ReplyDelete
 52. நல்ல கனத தொடனர தயவுசெய்து னகவிட வேண்டாம்.....
  அட்னடயில் அடல்ஸ் ஒன்லி என்று போட்டு வெளியிடலாம் சார்......

  ReplyDelete
 53. நல்ல கனத தொடனர தயவுசெய்து னகவிட வேண்டாம்.....
  அட்னடயில் அடல்ஸ் ஒன்லி என்று போட்டு வெளியிடலாம் சார்......

  ReplyDelete
 54. "கை சீவம்மா கை சீவு" இந்த தலைப்பும் புத்தக விழாவின் போது நெருடலாக தோன்றுமென்றால் பேசாமல்"கை சூப்பம்மா கை சூப்பு" என்று வைத்து விடலாம். புத்தகவிழாவின்போது பார்ப்பவர்களுக்கும் எந்த நெருடலும் உண்டாகாது!!

  ReplyDelete
 55. சார், அதுவே - லார்கோ கதையாக இருந்தால் - ஆபாசமாக தோன்றாதா? :-)

  ReplyDelete
  Replies
  1. இது ஸ்மர்ப் மற்றும் இதர காமெடி நாயகர்களுக்கு.
   லார்கோவுக்கு கை வீசம்மா கை வீசு என்ற அசல் வரிகளையே வைத்துவிடலாம்.வரிசையாக
   கடைக்கு போகலாம் கை வீசு,
   மிட்டாய் வாங்கலாம் கை வீசு,
   இப்படியே வைத்துக் கொண்டு போகலாம்.
   ஏனென்றால் வழக்கமாக வைக்கும் தலைப்புகள் மாற வேண்டுமென்றால் ஆசிரியர் என்ன செய்யமுடியும். காமெடி நாயகரகள்தவிர்த்து மீதமுள்ள கதைகள் ஏறக்குறைய எல்லா கதைகளிலும் மரணம், ரத்தம், கொலை இவை எல்லாமே பரவிக்கிடக்கின்றன. உள்ளே உள்ள கதைக்கேற்ப ஆசிரியர் தலைப்புகளை தேடிவந்தார். தற்போது உள்ளே எப்படிப்பட்ட அசைவ கதையிருந்தாலும் தலைப்பு மட்டும் சைவமாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழும்போது ஒரு கட்டத்திற்கு பிறகு ஆசிரியர்பாடு திண்டாட்டமாக போய்விடும் இல்லையா நண்பரே. அப்புறம் அதுவும் போரடித்து டெக்ஸ், டைகர், மாடஸ்டி, ரிப்போர்ட்டர் ஜானி என்று கதாநாயகர்களின் பெயர் மட்டுமே அட்டையில் இடம் பெறும் காலம் வரலாம். கதாநாயகர்களின் பெயருடன் கதை வரிசை எண் 1, எண் 2 என்றும் போடவேண்டி வரலாம். நான் சொன்னது சும்மா விளையாட்டுக்காக. விவாதத்திற்காக அல்ல நண்பரே. எனக்கென்னவோ தலைப்பு சைவமாக மாறினால் விற்பனையில் பெரிய மாற்றம் வரும் என்றெல்லாம் தோன்றவில்லை.காமிக்ஸ் என்ற ஒன்றின்மீது துளிகூட ஈடுபாடு இல்லாதவர்களுக்கு நாம் என்ன பெயர் வைத்தாலும் பெரியமாற்றம் நிகழப்போவதில்லை என்றுதான் தோன்றுகிறது.

   Delete
  2. ஏடிஆர் சார்!

   எனக்கு என்னவோ தலைப்பை எடிட்டரே அவர் இஷ்டப்படியே வைப்பதுதான் சரி என்று தோன்றுகிறது.எது எப்படியோ கோழி குருடா இருந்தாலும் , குழம்பு ருசியாக இருந்தாலே எனக்கு போதும்.!

   Delete
 56. கார்வினை நான் ரசித்தது.!


  எனக்கு கார்வினை கத்தி வீசும் வேகம் ரொம்ப பிடிக்கும்.

  பொதுவாக மாடஸ்டியுடன் இணைந்து தாக்கும் முதல் தாக்குதலில் ,கத்திக்கு பதிலாக கழியைத்தான் வீசுவார்.கத்தியும் சரி கழியும் சரி துப்பாக்கியில் இருந்து பாயும் புல்லட்போல் சீறி பாயும்.இலக்கு கணகச்சிதமாக இருக்கும்.கார்வின் கத்தி வீசும் ஸ்டையிலும் அது எதிரி மீது "சதக் " என்று பாய்ந்து எதிரி ஓய்ந்துபோய் விழும் தத்ரூபமான ஓவியங்கள் உண்மையான காட்சிபோல் மெய்சிலிர்க்க வைக்கும்.!

  கார்வின் முதல் தாக்குதல் கழியாகத்தான் இருக்கும்.அதுவே இளவரசியை சீண்டிவிட்டால் அம்புடுதேன். கழி கத்தியாக மாறி தொண்டையில் " சதக் " என்று ஆழப்பாய்ந்துவிடும். புலி வேட்டையாடும்போது தன் இரையின் குரல்வலையை கடித்து எதிர்ப்பே இல்லாமல் வீழ்த்திவிடும்.அதுபோல கார்வினின் தாக்குதலில் இருக்கும்.!


  மாடஸ்டி என்ன சொன்னாலும் வேதவாக்காக எடுத்துக்கொள்ளும் கார்வின் ,மாடஸ்டிக்கு ஆபத்து என்றால் தன்னிச்சையாக செயல்படுவார்.!

  உதரணமாக ,புலி வருது கதையில் ,எதிராளி ஒரு மாமிசமலை.இதற்கு முன்னால் இவனை மாடஸ்டி ஜெயித்திருப்பார்.ஆணாதிக்கத்தின் மொத்த உருவமான இவன் மாடஸ்டியை வென்று கையாலையே கொல்வேன் என்று வெறியோடு மோதுவான்.இறுதியில் மாடஸ்டி சண்டையில் வென்று அவனை வீழ்த்திவிட்டு.கிளம்பும் சமயத்தில் ,அவன் மாடஸ்டியை பின்புறமாக வந்து கத்தியால் தாக்க வருவான்.அப்பொழுது கார்வின் வீசிய கத்தி தொண்டையில் "சத்" என்று பாயும்.கத்தி பாயந்த வேகத்தில் கத்தக்கூட வாய்ப்பின்றி சரிந்து விழுந்து விடுவான்.அதற்கு மாடஸ்டி " ஏன் கொன்றாய் காயப்படுத்தி இருக்கலாமே " என்று கார்வினை கடிந்து கொள்வார். அதற்கு கார்வின் ,"காயப்படுத்தினாலும் கத்தியால் உன்னை குத்த வாய்ப்புள்ளது எனவே வாய்ப்புதரவில்லை என்று மாடஸ்டியிடம் வாக்குவாதம் செய்வார்.!

  கமல் நடித்த மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி படம் முழுக்க நடிப்பில் வெளுத்து கட்டியிருப்பார்.ஆனால் க்ளைமேக்ஸில் ஒரே சீனில் கமல் நடிப்பில் ஸ்ரீதேவியை மிஞ்சிவிடுவார்.அதைப்போல கழுகு மலைக்கோட்டை கதையில் ,கதை முழுக்க மாடஸ்டி நட்புக்காக பெயர் வாங்கினாலும்.,க்ளைமேக்ஸில் மாடஸ்டியை
  மிஞ்சி கார்வின் பெயர் வாங்கிவிடுவார்.!


  ( 2017 ல் மாடஸ்டி கதையை அறிவிக்கும்வரை அறுவை தொடரும்................)

  ReplyDelete
  Replies
  1. M.V.சார்.அறுவை அல்ல.அருமை. தொடருங்கள் இளவரசியின் ஞாபகங்களை.புத்தகங்கள் கையிருப்பில் இல்லாவிட்டாலும் உங்களைப் போன்றவர்கள்தான் அப்புத்தகங்கள் நம்மை விட்டு எங்கும் போய்விடவில்லை என்று நம்ப வைத்துக் கொண்டிருப்பவர்கள்.நேரம் கிடைக்கையில் இளவரசியின் சாகசங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட பதிவுகளால் இதுவரை வெளியான அத்தனை மாடஸ்டி கதைகளின் தொகுப்பாக ஒரே குண்டு புத்தக ஆசை அதிகரிக்கிறது.அது நிகழ வாய்ப்பில்லை என்பதால் உங்களின் பதிவுகள் அந்த குறையை போக்குகிறது.
   ஒரே ஒரு வேண்டுகோள்.மாடஸ்டியை பற்றிய பதிவு முடிக்கையில் அறுவை தொடரும் என்பதற்கு மாற்றாக தொடரும் என்று மட்டுமே போடுவது சிறப்பாக இருக்கும்.

   Delete
  2. மாடஸ்டி & கார்வின் அமரத்துவமான அற்புத படைப்பு...அதிலும் கார்வினின் தூப்பாக்கி பயம், வைச்ச குறி தப்பாமல் கத்தி வீசுவது, ஆபத்து நேரங்களில் காது குடைத்தல், ஏராளமான கண்டுபிடிப்பு வித்தைகள், அழகு பொன் முடி,மாடஸ்டி யோடு உள்ள தெய்வீக உறவுமுறை என யாருக்குத்தான் கார்வினை பிடிக்காது?
   கார்வினின் மலரும் நினைவுகளுக்கு மிக்க நன்றி நண்பர், வெங்கட் அவர்களே

   Delete
 57. மடிப்பாக்கம் சார் ...

  இந்த ஊரு இன்னுமாடா நம்மளை நம்புது என்ற டயலாக் நினைவிற்கு வந்தாலும் ...:-))

  அதனை தள்ளி வைத்து விட்டு ...ஆசிரியரின் அறிவிப்பின் படி இளவரசியின் கழுகுமலை கோட்டை வண்ணம் ஒன்று உறுதி எனினும் ...அது அந்த 2017 சந்தாகான ஒன்றானது அல்ல என்பதால் அதனை தவிர்த்து ஆசிரியர் இளவரசிக்கு மற்றும் ஒன்றாவது வெளியிடுவார் என்ற நம்பிக்கை பலமாகவே உள்ளது ..இளவரசியின் ரசிகர் மன்ற நண்பர்கள் குறைவாகவே இருப்பினும் அந்த ஒரு இளவரசியின் நண்பர் நூறு டைகர் ரசிகர்களுக்கு சம்மானவர்கள் என்பதை ஆசிரியர் உணர்ந்தே உள்ளார் என்பதால் நம்மை ஏமாற்றி விட மாட்டார் என்ற நம்பிக்கை உண்டு ....

  காத்திருப்போம் .....இன்னும் விரல் விடும் நாட்கள் மட்டுமே ...:-)

  ReplyDelete
 58. ( 2017 ல் மாடஸ்டி கதையை அறிவிக்கும்வரை இளவரசியின் சிறப்புகள் தொடரும்................)

  என பிரதிமாற்றம் செய்து மடிப்பாக்கத்தாரை தொடருங்கள் ...தொடர்கிறோம் என வழிமொழிகிறேன் ...

  ReplyDelete
 59. பரணிதரன் சார் சென்ற பதிவில் ஒரு நண்பரின் வினா: அடுத்த ஆண்டு பட்டியலில் ரிப்போர்ட்டர் ஜானி இருக்கிறாரா, ஆர்ச்சி, மாடஸ்டி,இரட்டை வேட்டையர்கள் உள்ளனரா? என்பதற்கு ஆசிரியர் சிலபஸ்களிலே இல்லாத பாடங்களிலிருந்து கேள்விகள் வரமுடியுமா? என பதிலளித்ததிலிருந்தே அடுத்த ஆண்டு கழுகு மலைக்கோட்டை தவிர்த்து மாடஸ்டியின் கதை எதுவும் வராது என்ற எண்ணமே எனக்குள் ஏற்பட்டுவிட்டது. எதுவாக இருப்பினும் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.அதுவரை இளவரசியின் சிறப்புகளை தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. //Jegang Atq11 September 2016 at 08:10:00 GMT+5:30
   அன்புள்ள ஆசிரியரே

   மாடஸ்ட்டி¸ வேதாளர் மற்றும் காரிக்கன் ஆகிய கதைகளை நிறைய எதிர் பார்க்கிறேன்.


   Vijayan11 September 2016 at 08:43:00 GMT+5:30
   Jegang Atq : சாரி சார் ! திட்டமிடலிலேயே இல்லா இருவருக்கு கோப்பைகளும், மெடல்களும் எதிர்பார்த்தால் என்ன செய்வது ?///....

   ATR sir@ மேல உள்ள கேள்வி&பதில் கூட போன பதிவில் இருந்து எடுத்தது.
   மேலே உள்ள கேள்வியில் கேட்கப்பட்ட 3நாயாகர்களில் ஆட்டத்தில் இல்லாத இருவர் வேதாளர்&காரிகன் என்பது அனைவரும் அறிவர். எனவே...
   எனவே...
   எனவே...
   மாடஸ்தி இடம்பெறுவது உறுதி...
   சுவீட் எடுங்கள், கொண்டாடுங்கள் சார்...

   Delete
  2. டெக்ஸ் விஜயராகவன் .!

   வரவர நம் எடிட்டர் கி.நா. பாணியில் பதிலலிக்க ஆரம்பித்துவிட்டர்.! தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி.!

   Delete
  3. டெக்ஸ் விஜய் சார் நீங்கள் சொன்ன பதிலை நானும் கவனித்தேன். ஆனால் முன்னர் நீங்கள் சொன்ன பதில் வந்த போது நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அதன் பின்னர் அவருடைய பதில் (நான் குறிப்பிட்டது) வந்த போது சற்று குழப்பம் உண்டாகிவிட்டது. கழுகு மலைக்கோட்டை கதையை குறிப்பிட்டுத்தான் முந்தைய பதிலை அளித்திருப்பாரோ என்று.உங்கள் வாக்கு பலித்தால் உங்களுக்கு முன்கூட்டிய நன்றிகள்.

   Delete
 60. தலைவர் & ஏடி ஆர்.!


  நன்றி நண்பர்களே.!

  ReplyDelete
 61. ஏடிஆர் சார் அவர்களின் தலைப்பிற்கான கருத்தை வழிமொழிகிறேன் ..தலைப்பை பொறுத்து விற்பனை கூடும் ..குறையும் என்பது எல்லாம் மாயை ..அதுவும் இக்காலத்தில் ...

  மேலும் அந்த காலத்திலியே மரணம் ...கொலை போன்ற தலைப்புகள் வரும் பொழுது அதுதான் ஆக்‌ஷன் கதை என முன்னுரிமை கொடுப்பேன் ..
  காமிக்ஸ் இதழ்களுக்கு குடும்ப நாவல் டைப் தலைப்புகள் எல்லாம் சரிவராது என்பது எனது கருத்தும்

  ReplyDelete
 62. கை சீவம்மா கை சீவு தலைப்பு காமிக்ஸ்க்கு பொருத்தமாக இல்லை இது என் எண்ணம் மட்டுமே
  குற்றம் பார்க்கின்.
  விதி போட்ட விடுகதை.
  இது போன்ற தலைப்புகள் நன்றாக இருந்தது அதனைப் போல் முயற்ச்சிக்கலாம்

  ReplyDelete
 63. கை சீவம்மா கை சீவு தலைப்பு காமிக்ஸ்க்கு பொருத்தமாக இல்லை இது என் எண்ணம் மட்டுமே
  குற்றம் பார்க்கின்.
  விதி போட்ட விடுகதை.
  இது போன்ற தலைப்புகள் நன்றாக இருந்தது அதனைப் போல் முயற்ச்சிக்கலாம்

  ReplyDelete
 64. மற்றொரு உதாரணம் ...

  தேவ ரகசியம் தேடலுக்கல்ல...
  சிப்பாயின் சுவடுகளில்...
  விண்ணில் ஒரு வேங்கை ...

  அழகான கவித்துவமான சைவ தலைப்புகள் தான் ...விற்பனையில் ...?

  அது கிராபிக் நாவல்பா ....விற்பனை அப்படிதான் எனில்...

  அதே கிராபிக் நாவலில் எமனை அழைத்த லைட்டான அசைவ தலைப்பான

  எமனின் திசை மேற்கு ....  விற்பனையில் ..கதையில் பட்டய கிளப்பியதன் காரணம்.....

  எனவே ..
  எனவே ...

  எனவே என்றுடன் மட்டுமே முடித்து கொள்கிறேனே....:-)
  .

  ReplyDelete
  Replies
  1. கதையின் பெயர் விற்பனையை பாதிக்கிறதா - இல்லையா என்பது வேறுவிஷயம். தற்போது காமிக்ஸ் படிக்கும் பழைய வாசகர்களின் வீடுகளிலேயே, கூடுதலாக ஒரு நபராவது அதில் ஆர்வம்காட்ட அல்லது அதனை அப்நார்மலாகக் கருதாமல் இருக்கச்செய்ய, பெயரில் சின்னதொரு காம்ப்ரமைஸ் தேவையென்றால் ஓகேதான். ஓராண்டின் 48 கதைகளில் மிஞ்சிப்போனால் ஒரு 7-8 கதைகளுக்குதான் இந்த மாற்றங்கள் தேவைப்படும் - மற்றவை Already OK. Pulp Fiction'களின் நெடி தூக்கலாக அமைந்துவிடாமல் காப்பது கண்காட்சிகளில் பலனிக்கக்கூடும் எ.எ.க.

   PS: @Paranitharan K,
   "எமனின் திசை மேற்கு" என்ற தலைப்புடன் அந்த இதழ் வெளிவரவில்லை. இரண்டு கதைகளுடன் Wild West Special என்ற பெயரில் வந்த அந்த இதழின் முன்னட்டையில் பரிச்சையமான டைகரின் கதை தலைப்பே முன்னட்டையில் இருந்தது. இதனால் நான் சொல்லவருவது, விற்பனை கம்பேரிசன்களை துல்லியமாக செய்வது வாசகர்களுக்கு சாத்தியமில்லை, ஆனால் நமது தனிப்பட்ட ரியாக்க்ஷன்களை பகிர்வது உதவலாம் - உதாரணத்துக்கு தங்கள் வீட்டில் அல்லது சுற்றத்தில் உள்ளோரின் கண்ணோட்டம்! ;)

   Delete
  2. தேவ ரகசியம் தேடலுக்கல்ல மிகவும் அற்புதமான¸ ஆத்மார்தமான கதை பல பேருக்கு இக்கதை பிடிக்கவில்லை¸ என்ன செய்வது.

   Delete
  3. தேவ ரகசியம் தேடலுக்கல்ல மிகவும் அற்புதமான¸ ஆத்மார்தமான கதை பல பேருக்கு இக்கதை பிடிக்கவில்லை¸ என்ன செய்வது.

   Delete
  4. Jegang Atq
   தேவ ரகசியம் தேடலுக்கல்ல மிகமிக அற்புதமான கதையே. அதனை இன்னும் சில ஆண்டுக்கு பின்னர் பலர் தேடப்போவது மட்டும் நிச்சயம்.

   Delete
  5. //தேவ ரகசியம் தேடலுக்கல்ல மிகவும் அற்புதமான கதை.//

   +1222222111

   Delete
  6. // பல பேருக்கு இக்கதை பிடிக்கவில்லை.//

   இக்கதை கி.நா.என்பதால் எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை அதனால் பிடிக்கவில்லை. சிக்கல் விழுந்த நூள்கண்டைபோல் நிதனமாக பிரித்து ஆராய்ந்து படிக்க பல மாதங்கள் பிடித்தது.! எழத்துக்கள் உதவியுடன் முப்பது ஆண்டுகள் காமிக்ஸ் படித்த எனக்கு ஓவியங்கள் மூலமே புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன். ஓவியங்கள் மூலம் தவறாக பரிந்து கொண்டால்.தவறான புரிதல் ஏற்பட்டு கதை புரியாது.!

   Delete
 65. நண்பர்களே.!


  நமது எடிட்டர் பௌன்சர் புகழ் ஓவியர் வரைந்த டீசர் ஒன்றை இங்கு வெளியிட்டு இருந்தார்.(எடிட்டர் அடல்ஸ் ஒன்லி என்பதால் ஏறக்கட்டிவிட்டார்.அதனால் எதிர்மறையான விஷயத்தை கூறுகிறேன்.)பேஸ் புக்கிலும் சரி இங்கும் சரி ஆர்வத்துடன் ஓங்கி ஒலித்த ஆர்வமான குரல் எனக்கு குழப்பத்தை கொடுத்தது.(ஏங்க நான் சரியாத்தான் பேசறனா?)
  எனக்கு அந்த ஓவியங்கள் கவரவே இல்லை.இது எனக்கு மட்டும்தானா.? என்னத்த கன்னய்யா கூறுவதுபோல்.அவ்வ்வவளளவுவு சத்த்ததமாமாவாவா கேக்க்குகுதுது.என்று தோன்றியது.இதை எடிட்டருக்கு தெரிவிப்பது ஆரம்பத்திலே நல்லது என்றுதோன்றியது.எனவே கூறுகிறேன்.!

  ReplyDelete
  Replies
  1. ///////நமது எடிட்டர் பௌன்சர் புகழ் ஓவியர் வரைந்த டீசர் ஒன்றை இங்கு வெளியிட்டு இருந்தார்////


   ம வெ சார் @.... சிறு திருத்தம் மட்டும்

   பௌன்சர் தொடர் ஓவியர்............FRANCOIS BOUCQ( பிரெஞ்ச்காரர்)


   எடிட்டர் கொடுத்துள்ளது........ராயல் பிளட்..ஓவியர்....DONGZI LIU (சைனாக்காரர்)...

   இரண்டுக்கும் கதாசிரியர் .....ALEJANDRO JODOROWSKY
   மற்றபடி ஓவியம் பிடித்து இருக்கிறது / இல்லை என சொல்வது உங்கள் தனிப்பட்ட உரிமை...:-)

   Delete
  2. செனா அனா சார்.!

   திருத்தத்திற்கு நன்றி சார்.!நான் இப்பொழுதுதான் குழந்தையை போல் தவழ்ந்து கி.நா.ஸ்டையில் இயற்கை அழகையும் கதை மாந்தர்களையும் ரசித்து பழகியுள்ளேன்.உண்மையில் கி.நா.வை ரசித்து பழகிவிட்டால் அது நெஞ்சை பிராண்டுவதுபோல் உள்ளது.உபயம் மேச்சேரிக்காரர்.!.எடிட்டர் குறிப்பிட்ட ஓவியங்களை ரசிக்க இன்னும் வெகு தூரத்தில் உள்ளேன்.!சந்தா ஈ யை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.ஒரு கை பார்த்துவிடுவோம்.

   Delete
  3. எம் வி.
   ஓவியங்கள் மிகவும் அருமை. இந்த வெளியீடு வெளிவந்தால் வாங்கும் முதல் நானாகத்தான் இருப்பேன்.


   Delete
  4. ஈரோடு விஜயும், மேச்சேரியாரும் காணவில்லையே.? ரொம்ப பிஸியா ???

   Delete
  5. இந்தத் தளத்தின் அடிப்பக்க வலது மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டு அவ்வப்போது அரைக் கண்ணில் இங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் M.V சார்! (அல்லது) இந்த வாரம் வேலைப்பளு கொஞ்சம் கூடுதல்தான் M.V சார்!

   Delete
 66. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

  ReplyDelete
 67. ஆகா ! ஈரோடு விஜய் வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டாக வந்துவிட்டார்.!

  ReplyDelete