Powered By Blogger

Wednesday, May 28, 2014

இது கூர்மண்டையர் வாரம் !!

நண்பர்களே,

வணக்கம். ஜெட் விமானம் ஏறி கண்டங்களைக் கடக்கும் கோமான்களும், குதிரைகளில் ஏறி அரிசோனா மாகாணத்தைக் குறுக்கும் நெடுக்குமாய் அளக்கும் கோமாளிகளும் ஒரே வாரத்தில் நம் நினைவுப் பெட்டகத்தினுள் புதைந்து போக - what next ? என்ற கேள்வியோடு காத்திருக்கிறோம் ! "காலம் தான் எத்தனை வேகமாய்க் குதி போட்டுச் செல்கிறது !!' என்ற தேய்ந்து போன டயலாக்கை எடுத்து விடாமல் -  ஜூலையில் நமக்குக் காத்திருக்கும் காமிக்ஸ் விருந்துகள் பக்கமாய் பார்வைகளை ஓடச் செய்வோமே என்று நினைத்தேன் ! (ஜூன் மாதமே இன்னும் புலராத நிலையில் - ஜூலையைப் பற்றிய preview என்பது எனக்கே கொஞ்சம் ஓவராகத் தான் தெரிகிறது - ஆனால் கால்களில் நாமே சக்கரங்களைக் கட்டிக் கொண்டான பின்னே மெதுநடை போடுவது சுலபம் அல்ல தானே ?!) ஜூலையில் நமக்குக் காத்துள்ள இதழ்கள் நான்கு ! அதன் முக்கால் பங்கை "குதிரை பையன்கள்" ஆக்ரமித்துக் கொள்கின்றனர் - வெவ்வேறு பாணிகளில் ! நமக்கு நன்றாகவே பரிச்சயமான ஆக்ஷன் பாணியைக் கையில் எடுத்துக் கொள்பவர் டெக்ஸ் வில்லர் - "காவல் கழுகு" வாயிலாக ! புது அறிமுகமான மேஜிக் விண்ட் தலைகாட்டும் "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" கதையும் ஆக்ஷன் தான் எனினும், இது சற்றே மாறுபட்ட ரகம் ! கொஞ்சம் அமானுஷ்யம் ; கொஞ்சம் மாந்த்ரீகம் ; கொஞ்சம் செவ்விந்திய நம்பிக்கைகள் என்ற கலவையில் வரும் ஒரு வித்தியாசப் படைப்பு இது ! மூன்றாம் கௌபாய் - நமது ஒல்லியார் லக்கி - "பூம்-பூம் படலம்" மறுபதிப்பு மூலமாக !  ஜூலையின் இதழ் # 4 தான் இந்தக் கூட்டணியின் highlight ஆக இருக்கப் போகிறதென ஒரு பட்சி என் காதில் சொல்வதை உணர முடிகின்றது ! So நமது preview படலங்களை சன்ஷைன் கிராபிக் நாவலின் இதழ் # 3 - விரியனின் விரோதியிலிருந்து தொடங்குவது தான் சுவாரஸ்யமாய் இருக்குமென்று தோன்றுவதால் here goes :

நிஜத்தைச் சொல்வதானால் - இந்த XIII தொடரின் spin-off கதைகளின் மீது எனக்கொரு பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை ! இரத்தப் படலம் தொடரையே ஜவ்வு மிட்டாயாய் இழுக்கிறார்களே என்ற ஆதங்கம் எனக்கு பாகம் 14 முதற்கொண்டே தோன்றிய நிலையில் - அதன் உப கதாப்பாத்திரங்களைக் கொண்டு தனிப்பட்டதொரு கதை வரிசையா ? - ஆளை விடுங்க சாமி ! என்பது தான் எனது initial reaction ! ஆனால் இரத்தப் படலம் தொடர் மறுபடியும் துவங்கியான பின்னே, புதியதொரு ஓவியர் - கதாசிரியர் கூட்டணியில் கதைக்களம் தம் கட்டிப் புறப்பட்டிருக்கும் சூழலில் -  கடந்தாண்டு நம் படைப்பாளிகளின் பாரிஸ் அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்த போது தான் "XIII மர்மம்" தொடரின் - "பில்லி ஸ்டாக்டன் " என்ற ஆல்பம் தயாராகி அதன் முதல் பிரதிகளை அவர்கள் பார்வையிடுவதைக் காண முடிந்தது ! ஏதேனும் பேச வேண்டுமே என்ற ரீதியில் "இந்த spin -off கதைகளுக்கான வரவேற்பு எவ்விதம் உள்ளது ?" என்று கேட்டு வைத்தேன் ! லேசான புன்முறுவலோடு - "XIII -கென உள்ள ரசிகர் படை இதனை பெரியதொரு வெற்றி கொள்ளச் செய்துள்ளது !" என்று சொன்னார்கள். அதிலும், சமீபமாய் (2012-ல் ) வெளியாகி இருந்த ஸ்டீவ் ரோலாண்ட் (காலனின் கைக்கூலி) ஆல்பம் பெரிய 'ஹிட்' என்று கேள்விப்பட்ட போது என் மண்டைக்குள்ளே சக்கரங்கள் சுழலத் தொடங்கின் ! இத்தொடரின் பிரதான ஆசாமிகளான ஸ்டீவ் ரோலாண்ட் + மங்கூஸ் தலை காட்டும் அல்பம்களின் மாதிரிகளை வாங்கிக் கொண்டு புறப்பட்டேன் ! ஊருக்குத் திரும்பியதும், இரண்டையுமே மொழிபெயர்க்கச் செய்து மேலோட்டமாய்ப் படிக்கத் தொடங்கிய போது தான் இவற்றின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் sink in ஆகத் தொடங்கியது !  ஊருக்குத் திரும்பிய ஜோரில் "காலனின் கைக்கூலி" இதழ் முதலில் வெளி வருவதாய் விளம்பரமும் செய்திருந்தோம் ; but  கதைகள் இரண்டையும் படிக்க முடிந்த போது தான் மங்கூசின் படலத்திலிருந்து துவக்கம் காண்பது தான் சரியாக இருக்குமென்பது புரிந்தது ! So விரியனின் விரோதி நம் திட்டமிடல்களுக்குள் அடியெடுத்து வைத்தது இவ்விதமாய்த் தான் ! இதோ இதழின் அட்டைப்படம் - ஒரிஜினலின் சிற்சிறு முன்னேற்றங்களோடு !



நடந்து முடிந்த சம்பவங்களைப் பின்னோக்கிப் பார்க்கும் முயற்சிகள் தான் கதை பாணியே என்பதால் முக்காலே மூன்று வீசம் flashback mode-ல் தான் உள்ளது ! மங்கூசின் பால்ய நாட்கள் ; அவனொரு கொலைகாரனாய் உருப்பெற்ற விதம் ; உலக யுத்தத்தின் முடிவைத் தொடர்ந்து 1950 -களில் உலகெங்கும் நிலவிய ஒரு வித இறுக்கம் ; அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி தீட்டப்பட்ட பின்னணி ; அதில் மங்கூசின் பங்கு என்று வெகு கோர்வையாய்க் கதையின் framework அமைக்கப்பட்டுள்ளது ! இவை அனைத்துமே மங்கூசின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளதால் சுவாரஸ்யம் இன்னமும் தூக்கலாய் இருப்பதை சீக்கிரமே நீங்களும் உணரப் போகிறீர்கள் ! சித்திரங்களும் ஒரு மெல்லிய வசீகரத்தைச் சுமந்து கதை முழுவதிலும் பயணமாகின்றன ! இரவின் நிசப்தத்தில் நியூயார்க் ரயில் நிலையத்தில் அரங்கேறும் கொலை ; பனி படர்ந்த பெர்லினின் வீதிகளில் மிளிரும் ஒரு மௌன பதைபதைப்பு என்று சிலாகிக்க ஏக விஷயங்களை ஓவியர் படைத்துள்ளார் ! வில்லியம் வான்சின் நுணுக்கங்களை நாம் எதிர்பார்க்காமல் திறந்த மனதோடு இதனுள் நுழைந்தால் நிச்சயம் எவ்வித நெருடல்களும் தோன்ற வாய்ப்பிராது ! பாருங்களேன் ஒற்றை பக்கத்தின் சின்னதொரு teaser !

இந்த இதழைத் தொடர்ந்து ஸ்டீவ் ரோலாண்டின் பார்வையிலான "காலனின் கைக்கூலி" வெளியாகும் போது - இரத்தப் படலத்தின் பின்னணி பற்றிப் புதியதொரு பரிமாணம் நமக்குக் கிடைக்கப் போவது உறுதி ! So இடியப்பம் தொடர்கிறது - புதியதொரு மணம் கமள !! Watch out guys !!

கடந்த (மினி) பதிவினில் நமக்கு காமிக்ஸ் மீதான மோகம் சற்றே குன்றி விட்டதோ ? என்பதானதொரு சிறு கேள்வியினை நான் எழுப்பி இருந்ததற்கு இங்கும், மின்னஞ்சல்களிலும் விளக்கமாய் நிறைய பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றிகள். ஆனால் எனது இந்த வினவல் - இங்கு நம் தளத்தில் சமீபமாய்க் குன்றி வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை மாத்திரமே மனதில் கொண்டு பின்னப்பட்ட ஒரு திடீர் கேள்வியல்ல ! மாமூலான பதிவுகளில் ; தொடரும் அதன் அரட்டைகளில் பங்கேற்கும் நண்பர்களது எண்ணிக்கை குறைந்து இருப்பின் அது எனக்குப் பெரியதொரு சங்கதியாகக் தெரிந்திருக்காது ; ஆனால் சமீப மாதங்களாகவே இதழ்கள் வெளியான பின்பு அதன் பொருட்டு அரங்கேறும் விமர்சனங்கள் ; விவாதங்கள் சிறிது சிறிதாய் ஈனஸ்வரத்தினுள் பயணிப்பதாய் தோன்றி வந்தது தான் சிக்கலே !அதிலும் நாம் ஆவலாய் எதிர்பார்க்கும் இன்றைய டாப் ஸ்டார் லார்கோவின் இதழ் வெளியான பின்பும் ஒருவித தேக்க நிலை நிலவிய போது அந்த வெறுமை highlight ஆகித் தோற்றமளித்தது ! 'இன்னும் இந்த இதழைப் படிக்க அவகாசம் கிடைக்கவில்லை ! ; புரட்டி பார்க்க மட்டுமே நேரம் கிட்டி இருந்தது " என்ற ரீதியில் நண்பர்கள் அவ்வப்போது frank ஆக நேரில் சந்திக்கும் போதும், பின்னூட்டங்களிலும் சொல்லிடும் போது  மாறி வரும் நாட்களின் தன்மையை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை ! '90-களின் நடுவாக்கில் நமது லயன் & முத்துவில்  வெளியான கதைகளின் பெரும்பான்மையை இன்று புரட்டிப் பார்த்தால் அவற்றுள் நிறைய 'செம சுமார்' ரகக் கதைகள் இருப்பது அப்பட்டமாய்த் தெரிகிறது. ஆனால் தட்டுத் தடுமாறி நாம் இதழ்களை வெளியிட்டு வந்த அன்றைய நாட்களில் - அந்த "சுமார்" சரக்கு கூட செம ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டவைகளாய் இருந்து வந்ததும், இன்றும் அவற்றைச் சேகரிக்க நண்பர்கள் முனைவதையும் நினைவு கூர்ந்த போது தான் "வாத்து பிரியாணி" சிந்தனை எனக்குள் முளைக்கத் தொடங்கியது ! ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூக்களும் 'நச்' என்று இனிக்க ; இன்று சற்றே விசாலமான ஸ்வீட் ஸ்டாலில் நிற்கும் ஒரு தருணம் கிட்டியுள்ள போது நமக்கொரு மெல்லிய திகட்டல் நேர்ந்திருக்குமோ என்ற ரீதியிலான சிறு சந்தேகம் தான் எனது கேள்வியின் பின்னணி ! காமிக்ஸ் வாசிப்புக்கென நாம் ஒதுக்கிடும் அவகாசங்கள் இன்றைய பணிச் சூழல்களோடும் ; குடும்பத்துக்குச் செலவிட அவசியமாகும் நேரங்களோடும் போட்டியிட வேண்டியுள்ள யதார்த்தத்தை நிச்சயமாய் நான் மறந்திருக்கவில்லை ! But அதனையும் மீறி - இலை நிறையப் பதார்த்தங்களைப் பார்க்கும் போது நேரும் துவக்க உற்சாகமும், போகப் போக நேரும் திகட்டலும் நம் கதையினில் நிஜமாகிடக் கூடாதே ! என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே எனது அந்தக் கேள்வி ! ஆனால் ஒருமித்த குரலில் நண்பர்கள் அனைவரும் அதனை மறுத்திருப்பது சந்தோஷமளிக்கிறது ! 'சலிப்புக்கு காமிக்ஸ் அகராதியில் இடமே கிடையாது' என்று அவரவர் பாணியில் பதிவிட்டிருப்பது தொடரும் நம் பயணத்துக்கு ஒரு உற்சாக பூஸ்ட் ! 

Moving on, நமது லயனின் 30-வது ஆண்டுமலர் வேளையில் வழக்கம் போலவே பின்னே திரும்பிப் பார்க்கும் "டாப் இதழ்கள் " விளையாட்டில்லாமல் போகலாமா ? என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. சாவகாசமாய் நமது 230 இதழ்களின் பெயர் பட்டியலையும் எடுத்து வாசித்த போது அவற்றிலிருந்து எனது TOP 6 இதழ்களைத் தேர்வு செய்ய முனைந்தேன் ! நிறைய குழப்பமிருக்கும் ; எதைத் தேர்வு செய்வது ? என்ற திணறல் தலையிடும் என்று எதிர்பார்த்து அமர்ந்த எனக்கு ஒரு சந்தோஷ ஆச்சர்யம் - வெகு சுலபமாய் எனது favorite 6 இதழ்களைத் தேர்வு செய்ய முடிந்தது ! 'இது தான் முதல் இடம் ; இரண்டாம் இடம் !'  என்றெல்லாம் வரிசைக்கிரமமாய் அவற்றை arrange செய்ய முனையாமல் அந்த 6 பெயர்களை வெறுமனே ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டேன் ! LMS வெளிவருவதற்கு முன்பாக இடைப்பட்ட நாட்களின் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு இதழைப் பற்றி எழுதலாமென்று நினைத்தேன் ! ஏற்கனவே அவ்வப்போது எனது choices பற்றி நான் எழுதியுள்ள போதிலும், ரசனை சார்ந்த விஷயங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுவது இயல்பே என்ற சால்ஜாப்பு என் கைவசம் இருப்பதால் - இவை எனது current choices என்று எடுத்துக் கொள்ளுங்களேன் ?! LMS இதழில் கூட இந்த TOP 6 இதழ்களுக்கென சில பக்கங்கள் ஒதுக்கவிருக்கிறேன் என்பதால் - உங்களது தேர்வுகள் ; உங்களுக்கு அவை ரசிக்கக் காரணம் என்ன என்பது பற்றி பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ? உங்களது all time favorite Top 6 இதழ்களைப் பட்டியலிடலாமே ? எனது பட்டியலின் முதல் இடத்தில் (தரவரிசையில் அல்ல!!) இருக்கும் இதழ் - இதோ இங்கே இளித்து நிற்கும் ஒரு ஆசாமியின் சாகசமே ! அது பற்றி - அடுத்த பதிவில் ! துவக்கம் மங்கூஸ் எனும் கூர்மண்டையனோடு என்றால் - ஸ்பைடர் எனும் இன்னுமொரு கூர்மண்டையனோடு இந்தப் பதிவுக்கு இப்போதைக்கொரு நிறைவைத் தருகிறேன் ! Catch you later folks ! Bye for now !

September 1984 release !
P.S: வாசக நண்பர் மகேஷ் கண்ணன் தன் இல்லத்துக் குட்டீஸ்களை படம் பிடித்து அனுப்பியுள்ளார் ! ஓரத்தில் இருக்கும் மஞ்சள் சட்டை மாவீரர் புரட்டும் பக்கத்தைப் பாருங்களேன் - கிரீன் மேனர் !! :-)


317 comments:

  1. என்ன 20 நிமிஷமா கமெண்ட் எதுவும் இல்லையா! நான் தான் 1st ஆ!

    ReplyDelete
  2. இல்லை! இல்லை! எனக்கு 2-வது இடம்!

    ReplyDelete
  3. லார்கோ & சிக் பில் கதைகள் அருமை.

    ReplyDelete
  4. //சலிப்புக்கு காமிக்ஸ் அகராதியில் இடமே கிடையாது'//
    Comics காதல் & தேடல் என்றும் ஓயாது

    ReplyDelete
  5. டியர் சார்,

    ஆவலைத்தூண்டும் அருமையான பதிவு!

    XIII mystery ஒரிஜினல் புத்தகத்தை ஒரு நண்பர் வீட்டில் பார்த்திருக்கிறேன். மொழி புரியாவிட்டாலும் (ஆங்கிலத்தில் அல்ல) நன்றாகவே இருக்கும் என்று தோன்றுகிறது!

    இந்த ஆண்டு இதுவரை வெளிவந்த இதழ்களில் இன்னும் நான்கு புத்தகங்கள் படிக்கவேண்டியுள்ளது. இதில் இந்த மாத இதழ்களும் அடக்கம்! இதற்கு காரணம், நேரமின்மையே தவிர, காமிக்ஸ் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது என்பதல்ல சார்!

    பி.கு. : சூப்பர் சிக்ஸ் சந்தா இன்று ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலம் தங்கள் அக்கவுண்டுக்கு செலுத்தியிருக்கிறேன்!

    ReplyDelete
  6. அட அதுக்குள்ள புது பதிவா நம்பவே முடியல

    ReplyDelete
  7. என்ன ஒரு ஆச்சர்யம் இரு தினங்களுக்கு முன தான் எத்தனுக்கு எத்தனை திரும்ப படித்தேன்

    ReplyDelete
  8. //காமிக்ஸ் வாசிப்புக்கென நாம் ஒதுக்கிடும் அவகாசங்கள் இன்றைய பணிச் சூழல்களோடும் ; குடும்பத்துக்குச் செலவிட அவசியமாகும் நேரங்களோடும் போட்டியிட வேண்டியுள்ள யதார்த்தத்தை நிச்சயமாய் நான் மறந்திருக்கவில்லை ! But அதனையும் மீறி - இலை நிறையப் பதார்த்தங்களைப் பார்க்கும் போது நேரும் துவக்க உற்சாகமும், போகப் போக நேரும் திகட்டலும் நம் கதையினில் நிஜமாகிடக் கூடாதே ! என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே எனது அந்தக் கேள்வி ! ஆனால் ஒருமித்த குரலில் நண்பர்கள் அனைவரும் அதனை மறுத்திருப்பது சந்தோஷமளிக்கிறது ! 'சலிப்புக்கு காமிக்ஸ் அகராதியில் இடமே கிடையாது' //


    ஆதலினால் அதகளம் செய்வோம் ஈரோடு புத்தக திருவிழாவில் :)

    ReplyDelete
  9. அன்பு எடிட்டர்

    என் காமிக்ஸ்! என் உரிமை! என்பது பற்றிய எங்களது குரல் உங்களை எட்டியது பற்றி மகிழ்ச்சி

    போன பதிவின் இறுக்கத்தை குறைத்ததற்கு நன்றி

    ReplyDelete
  10. மங்கூஸ் அறிமுகமே அசத்துகிறதே... டாப் 6 -ல் வரும் கதைகள் மறுபதிப்பாக வர வாய்ப்பு இருகிறதா எடிட்டர் சார்?

    ReplyDelete
    Replies
    1. தயவு செய்து ஒன்றாகவே வெளிவிட வேண்டும்.

      Delete
  11. நமது காமிக்ஸ் இதழ்கள் Advance ஆக வருவது போல், நமது எடிட்டர் அவர்களும் பதிவுகளை Advance ஆக பதிவிடுவது... கோடை மலரும், தீபாவளி மலரும் ஒரே நேரத்தில் கைகளில் கிடைத்தது போல் உள்ளது. எத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் என்றும் சூப்பர் ஸ்டார் ஸ்பைடர் தான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    ReplyDelete
  12. //அதிலும் நாம் ஆவலாய் எதிர்பார்க்கும் இன்றைய டாப் ஸ்டார் லார்கோவின் இதழ் வெளியான பின்பும் ஒருவித தேக்க நிலை நிலவிய போது அந்த வெறுமை highlight ஆகித் தோற்றமளித்தது ! 'இன்னும் இந்த இதழைப் படிக்க அவகாசம் கிடைக்கவில்லை ! ; புரட்டி பார்க்க மட்டுமே நேரம் கிட்டி இருந்தது " என்ற ரீதியில் நண்பர்கள் அவ்வப்போது frank ஆக நேரில் சந்திக்கும் போதும், பின்னூட்டங்களிலும் சொல்லிடும் போது //
    மிகப் பெரிய ஒரு விருந்து ஆகஸ்டில் காத்து கொண்டிருப்பதால் சிற்றுண்டிகளினால் வயிற்றை நிரப்பிக்கொள்ளாத ஒரு கட்டுப்பாடாக இருக்குமோ??

    மங்கூஸ் நிச்சயம் ஆர்வம் கிளப்பும் ஒரு கதையாக இருக்கும் என்று பட்சி கூவுகிறது...
    அதே சமயம் ஒவ்வொருவரின் கோணத்திலும் பார்க்கும் போது xiii ன் கடந்த காலம் இன்னும் குழப்பமாக இருக்குமோ என்று ஒரு பீதியும் கவ்வுகிறது....!!!

    ReplyDelete
  13. TOP 6 கதைகளை பற்றி ஒன்றும் சொல்ல தெரியவில்லை...
    காரணங்கள் 1. என்னிடம் பழைய புத்தகங்கள் ஏதுமில்லை...
    2. படித்த கதைகளில் எது லயன் , எது முத்து என்ற குழப்பம் வேறு...
    3. நான் தீவிர டைகர் ரசிகன்...!!

    ReplyDelete
  14. ஜூலையில் படிக்க ஏதாவது புத்தகங்கள் உண்டா சார்???
    இல்லை ஜூலையில் COMICS FASTING ?????

    ReplyDelete
    Replies
    1. I think in July, we will get August books and August will be cleared off for the Great LMS

      Delete
  15. 'விரியனின் விரோதி' எதிர்பார்ப்புகளை எகிறச் செய்கிறது. அட்டைப்படம் நன்று. குறிப்பாக, பின்னட்டையில் சிதறிக் கிடக்கும் அந்த ரத்தத்துளிகள் உண்மையானது போன்றே வசீகரிக்கின்றன. நேரில் பார்க்கும்போது முன்னட்டை இன்னும் நன்றாகக் காட்சியளிக்கக்கூடும்.

    லார்கோ விமர்சனம் எண்ணிக்கையில் குறைவாய் இருப்பதற்கான காரணமாய் நான் கருதுவது:
    * கனமான கதைக்களம் என்பதால் தொடர்ந்து படித்து முடிக்க சற்றே நிதானமான ஒரு ஓய்வுப் பொழுது தேவைப் படுகிறது.
    * 'தொடர்' என்பதால் முந்தைய பாகங்களை நினைவுகூற அவசியப்படுமோ என்ற ஐயம் படிக்கும் முன்பே ஏற்படுகிறது. அந்த நினைப்பே புத்தகத்தைப் பிரிக்க சற்று தாமதப்படுத்துகிறது.
    * 'அதான் எல்லாத்தையும் சென்ஸார் பண்ணீட்டிங்களே, அப்புறமா படிச்சா கெடக்குது' என்ற நினைப்பும் கொஞ்சம் ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. //'தொடர்' என்பதால் முந்தைய பாகங்களை நினைவுகூற அவசியப்படுமோ என்ற ஐயம் படிக்கும் முன்பே ஏற்படுகிறது. அந்த நினைப்பே புத்தகத்தைப் பிரிக்க சற்று தாமதப்படுத்துகிறது.//
      அதெல்லாம் மறந்து விட்டு தாராளமாக படிக்கலாம் ! ரசிக்க ஏராளம் உண்டு நண்பரே !

      Delete
    2. @Erode Vijay
      // * 'அதான் எல்லாத்தையும் சென்ஸார் பண்ணீட்டிங்களே, அப்புறமா படிச்சா கெடக்குது' என்ற நினைப்பும் கொஞ்சம் ஹிஹி! //

      Fact! Fact! Fact!

      Delete
    3. 'அதான் எல்லாத்தையும் சென்ஸார் பண்ணீட்டிங்களே, அப்புறமா படிச்சா கெடக்குது' என்ற நினைப்பும் கொஞ்சம் ஹிஹி!//

      :-))))))))))))))))))

      Delete
  16. மங்கூஸ் பற்றிய அறிமுக பக்கம் பரபரப்பை கிளப்புகிறது ! அவன் முகத்தில் தெரியும் innocence எப்படி ஒரு கொலைகாரனை மாறினான் என்பதே ஆவலை தூண்டும் விடயம்தான் !

    ReplyDelete
  17. top6 என்பது மிக குறைவு சார் வேண்டுமானால் டாப் 60 x2 என வைத்துக் கொள்ளலாம்

    ReplyDelete
  18. Dear sir,i am very happy for ur post.because xiii mystery.l like very much please continue steve rolland,colonel amose,irina,little jones another one doubt who is billy staoctan idnt pls explain.pls dnt change lms list.yesterday i read nil ksvani sudu veryy exclent i enjoy eavh and every frsm by fram athirady nayagan tex,bravefull thairianathan karson,ilam puyal kit and maveeran tiger jack very good job.lam very enjoy.today night once again i read this.pls sir separate track laid- tex.thank u

    ReplyDelete
  19. சார், அருமையான மீண்டுமொரு அற்புதமான பதிவு !
    கூர் மண்டயர்கள் என்றாலே உற்ச்சாகத்திர்க்கு பஞ்சமில்லை போலும் அன்று போலவே இன்றும் தொடரும் எண்ணங்கள் ! மங்கூசின் இந்த ஒரு பக்க கதை என்றோ ஒரு முறை நான் ரசித்த பாலகுமாரனின் , " குற்றம் என்பது மார்கழி மாதத்தின் முதல் சொம்பு தண்ணீர் போல , முதல் முறைதான் நடுங்க வைக்கும் , பின்னர் பழகி விடும் " எனும் வரிகள் நினைவில் வந்து போனது . அற்புதமான வரிகள் கட்டம் முழுதும் நிறைந்திருப்பதே பதிமூன்று என்பதனையும் தாண்டி ரசிக்க வைக்கிறது ! காத்திருக்கிறேன் ஆவலுடன் , இந்த ஒரு பக்க ரசிப்புடன் அடுத்த மாத டாப் வெளியீட்டுக்காக . அட்டை படம் இரண்டுமே அருமை ! அதிலும் நமது வண்ணச்சேர்க்கை இன்னும் தூக்கல் ! பின்னட்டையில் காயாமல் வடியும் ரத்தம் திகில் உணர்வை தருகிறது ! நான் பெரிதும் எதிர்பார்த்த காலனின் கைக்கூலியை விட விரும்பி எதிர் பார்க்கிறேன் ; உங்களது ஒரு பக்க வரிகளை ,அந்த 1950 பின்னணிகளில் எனும் உங்கள் பீடிகை வரிகளை படித்த பின் . மங்கூஸ் தன் பார்வையில் கூறப் போவது என்ன எனும் ஆவல் மனதில் தாளம் போடுகிறது , மீண்டும் ஒரு அற்புத பயணம் /உணர்வு தயார் என்று !
    சார் டாப் சிக்ஸ் என்று கூறுவது உங்களுக்கே அதிகமாய் படவில்லையா ! அற்புதமான கதைகள் ஐம்பதுக்கு மேல் இருக்குமே ! விரைவில் வரிசை படுத்துகிறேன் !
    பணி சுமை காரணமாயும் , திருமணத்திற்க்காக ஒரு நாள் வெளியூர் சென்றதாலும் இன்றுதான் அற்புதமான லார்கோவை படித்தேன் ! எப்போதும் பேருந்து பயணத்தில் கதைகளை முடித்து விடுவேன் , ஆனால் இந்த புத்தகம் கசந்கிடுமோ என்று எடுத்து செல்லவில்லை ! இப்போதைய இதழ் சிறிது கசங்கினாலும் , அட்டை மடங்கி கொடு விழுந்தாலும் மனதும் கசங்கிடுதே ஆசிரியரே ! கொஞ்சம் வேலை இருப்பதால் இன்று இரவு எனது பார்வையில் லார்கோ குறித்து இன்று எனது எண்ணங்களை பகிர்கிறேன் !

    அப்புறம் அந்த போட்டோ சொல்லும் சேதி எனக்கு மட்டும்தான் இவ்விதம் படுகிறதா ~! மஞ்சள் சட்டை வீரர் , ஏன் சார் இதெல்லாம் என கேட்பது உங்களில் யாருக்கேனும் புரிகிறதா நண்பர்களே !
    இந்த கூர் மண்டையன் இளிப்பு பவள சிலை மர்மம் வெளியான போது என்னிடம் சிறு வயதில் நான் பார்க்காத இது போன்ற புத்தகங்களை தந்து என்னிடம் இருந்த கதைகளை ஆட்டை போட்டு சென்ற சீனி வாசன் என்ற ஒரு நண்பரை(?) நினைவு படுத்த தவறவில்லை !
    அப்படியே பசுமையான நினைவுகள் !

    ReplyDelete
  20. sir, I dont remember which stories i read i didn't since from my childhood. But, I love comics.

    ReplyDelete
  21. டியர் எடிட்டர்,

    ரெண்டு புத்தகங்களையும் படித்து விட்டேன். பைங்கிளி படலம் நன்றாக இருந்தது. ஆனால் லார்கோ பழைய பாகங்களில் இருந்த இதில் விறுவிறுப்பு இல்லை. கிட்டத்தட்ட திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் நிலையில், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் லார்கோ இருப்பது பரிதாபமாக இருக்கிறது. அதனால் தெனாவட்டு வசனங்களும் இல்லை.

    நிறைய இடங்களில் எழுத்து பிழைகள் .

    1) வீடிnலி என்று நிறைய இடத்தில இருக்கிறது. இதை எப்படி வாசிப்பது

    2) செக்யுரிட்டி, செக்யுரிட்டி என்று கத்த வேண்டிய இடத்தில் கெய்யுரிட்டி என்று தவறாக வந்துள்ளது. இவ்வளவுக்கும் பெரிய பாண்ட் வேறு.

    3) உங்கள் போன பதிவிலேயே இருந்த படத்தில்இந்த தவறை சுட்டிக் காட்டினேன். அப்போதே அச்சாகிவிட்டதா என்று தெரியவில்லை. சேரிட்டி பாரிசில் என்று சொல்வதாக இருக்கிறது ஆனால் அவர்கள் இருப்பது வெனிசில் அல்லவா?

    4) பைங்கிளி படலத்தில் ஆம்பளை அம்பளை ஆகி இருக்கிறது.

    அச்சு தரம் மற்றும் பிழை களைவதில் கவனம் கொள்ளுங்கள் ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. டியர் எடிட்டர்,

      சென்ற சில பதிவுகளுக்கு முன்னர் நான் தெரிவித்த கருத்தும் இதுவே - அச்சுத்தரம் மேம்பட்டு இருப்பினும் (சென்ற வருடத்தை விட) - அச்சுப் பிழைகள் பெருகிவிட்டன. நம் மறுவரவு ஆகி இரண்டரை வருடங்கள் ஆன நிலையினில் இவ்வாறான தவறுகள் களையப்பட வேண்டும்.

      முன்பு proof read செய்ய ஒரு retired பள்ளி ஆசிரியரை பணி அமர்த்த இருப்பதாய் சொன்ன ஞாபகம்.

      இனி வரும் இதழ்களில் அச்சேறும் முன் ஒரு முறையும் DRAFT அச்சான பின் ஒரு முறையும் proof read செய்தல் நலம். magnum ஸ்பெஷல் இவ்வாறு வந்தால் ரசிக்காது.

      பணியாளர் பற்றாக்குறை இருப்பின் இணை மற்றும் துணை ஆசிரியர்களைக் கொண்டு ஒரு review committee அமைக்கலாமே.

      Comic Lover

      Delete
    2. //magnum ஸ்பெஷல் இவ்வாறு வந்தால் ரசிக்காது.//
      +1

      Delete
    3. //3) உங்கள் போன பதிவிலேயே இருந்த படத்தில்இந்த தவறை சுட்டிக் காட்டினேன். அப்போதே அச்சாகிவிட்டதா என்று தெரியவில்லை. சேரிட்டி பாரிசில் என்று சொல்வதாக இருக்கிறது ஆனால் அவர்கள் இருப்பது வெனிசில் அல்லவா? //
      நண்பரே 9ம் பக்கம் ஈஃபில் டவருக்கு கீழே ஒரு முறை சென்று விட்டு அந்த பக்கங்களை புரட்டுங்களேன் !

      Delete
    4. Raj Muthu Kumar S : சில வேளைகளில் உள்ளங்கையில் இருக்கும் விஷயங்கள் கூட அதையே தொடர்ந்து பார்த்து வருவோர்க்குத் தெரியாமல் போவதுண்டு ! தொடரும் இந்த embarassing எழுத்துப் பிழைகள் அந்த ரகமே ! நானும் சரி ; proof reader -ம் - சரி வாசித்த பின்பும் பிழைகள் தொடர்வதை சங்கடத்தோடு பார்க்கிறேன்....முயற்சிப்போம் இதனை ஒரு தொடர்கதை ஆகிடாமல் இருக்க !

      அப்புறம் ஸ்டீல் க்ளா சுட்டிக் காட்டியதை இந்நேரம் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். லார்கோவும், சாரிடியும் இணைந்திருப்பது பாரிஸ் நகரில்..! படகுச் சவாரி செய்வது செய்ன் நதியினில். இரவு ரயிலைப் பிடித்து சாரிட்டி வெனிஸ் செல்ல, கோமானோ ஜெட்டில் நியூ யார்க் திரும்புகிறார் ! லார்கோ வெனிசில் கால் பதிப்பதே முதல் அத்தியாயத்தின் கடைசிப் பக்கத்தில் !

      Delete
  22. TOP SI X ( my view)
    1.pavala silai murmum.- tex
    2.karson,s past color edition - tex
    3.vinveli pisasu - spider
    4.dragan nagaram - tex
    5.thigil nagaril tex
    6.minnum maranam full story.color edition.

    ReplyDelete
  23. ஜூனில் ஒரு ஜூலை ............

    ReplyDelete
    Replies
    1. தேனில் ஒரு ஆகஸ்ட் .......

      Delete
  24. டியர் எடிட்டர்ஜீ!!!

    உற்சாகமான பதிவு.விரியனின் விரோதி அட்டைப்படம் அழகாக அச்சுறுத்துகிறது.பின்னட்டை ரத்தம் வழிய....ஹி..ஹி...வெரி ஹாரிபிள் ;-)

    மற்றொரு கூர் மண்டையரான ஸ்பைடரின் எத்தனுக்கு எத்தன் வெளிவந்த 1984-இல் ட்ரவ்சர் பாக்கெட்டில் அப்புத்தகத்தை வைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தில் என்னைவிட காமிக்ஸ் வெறியனான ரவி என்ற நண்பனுடன் சேர்ந்து படித்தது நேற்று நடந்த நிகழ்வு போல் பசுமையாக நினைவிருக்கிறது. 30-ஆண்டுகள் ஓடிப்போனதே தெரியவில்லை.

    நடக்காது....நீங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். இருந்தாலும் ஒரு அற்ப ஆசையில் கேட்கிறேன்.ஒரே ஒருமுறை பாக்கெட் சைஸில்,குறைந்த பட்சம் 500 பக்கங்களில் ஒரு அருமையான ஸ்பெசல் இதழ் ஒன்றை வெளியிடுங்களேன்.இந்த ஆண்டில் முடியாவிட்டாலும் அடுத்த ஆண்டில் கோடைமலராக வெளியிட்டால் மிக மகிழ்வேன்.

    ஸ்பைடர் ,ஆர்ச்சி ,மாடஸ்டி பிளைசி,சார்லி சாயர்,சிஸ்கோ கிட் போன்றோரின் கதைகளை பாக்கெட் சைஸில் படிப்பதில் உள்ள சுகம் பெரிய சைஸில் நிச்சயம் கிடைப்பதில்லை.ஆதலால்தான் அடியேனின் இந்த பாக்கெட் சைஸ் கோரிக்கை!!!

    ReplyDelete
    Replies
    1. சினாரே , எனக்கு கூட ஒரு வாரத்திற்கு முன்னர் நிலவொளியில் ஒரு நர பலி படிக்கும் போது அதன் காம்பேக்ட் சைசால் உங்கள் எண்ணம் போலவே போல தோன்றியது ! அப்போதைய கால கட்டங்களில் நமது பாக்கெட் சைஸ் மிக சிறப்பாக தோன்றும் பிற காமிக்ஸ்கள் பெரிய சைசில் வந்த போது . அதிலும் நமது இரும்பு மனிதன் ஆர்ச்சி, கொலை படை ,சதி வலை/நதிக்கரை அரக்கன் போன்றவற்றில் முதலிரண்டும் இரு வண்ணத்திலும் , மூன்றாவது இதழ் கருப்பு வெள்ளை பெரிய சைசிலும் இருந்த போது அது போல பெரிய சைஸ் எப்போது வருமென ஏங்கியதுண்டு . இப்போது பெரிய சைஸை , ஒரே வண்ணமயங்களை பார்க்கும் போதும் அந்த கால கட்டத்தில் வந்த கதைகளை எண்ணி ஏங்குகிறோம் !
      இக்கரைக்கு அக்கறை கருப்பு வெள்ளை எனினும் பச்சை !


      நிச்சயமாக இப்போதைய எனது மன நிலையில்

      //ஒருமுறை பாக்கெட் சைஸில்,குறைந்த பட்சம் 500 பக்கங்களில் ஒரு அருமையான ஸ்பெசல் இதழ் ஒன்றை வெளியிடுங்களேன்.இந்த ஆண்டில் முடியாவிட்டாலும் அடுத்த ஆண்டில் கோடைமலராக வெளியிட்டால் மிக மகிழ்வேன்.

      ஸ்பைடர் ,ஆர்ச்சி ,மாடஸ்டி பிளைசி,சார்லி சாயர்,சிஸ்கோ கிட் போன்றோரின் கதைகளை பாக்கெட் சைஸில் படிப்பதில் உள்ள சுகம் பெரிய சைஸில் நிச்சயம் கிடைப்பதில்லை.ஆதலால்தான் அடியேனின் இந்த பாக்கெட் சைஸ் கோரிக்கை!!! //

      +1

      Delete
    2. இது இருந்தா அது இல்லே ...
      அது இருந்தா இது இல்லே ...

      Delete
    3. saint satan : 30 ஆண்டுகளுக்கு முன்பாக நமது டிரௌசர் பாக்கெட்களும் சின்னவை ; அவற்றினுள் நாம் நுழைக்க முயன்ற பர்ஸ்களும் கனத்தில் ரொம்பவே மெலிந்தவை ! இன்று ஜாக்கி ஜட்டியோ..பட்டாப்பட்டி டிரௌசரொ - பெரிய பாக்கெட்களும், அதற்கேற்ற பர்ஸ்களும் புழக்கத்தில் இருக்கும் போது - why go back ?

      Delete
    4. // why go back ? //

      For nostalgic sake + to read during travel :)

      Delete
    5. எப்படி வந்தது? எங்கிருந்து ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனாலும் உணவருந்தும்போது கண்டிப்பாக கையில் புத்தகம் இருந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கும் சிறார்களில் நானும் ஒருவன்.

      சாப்பிடும்போது படிப்பது தவறு, அது உணவுக்கு நாம் அவமரியாதை செய்வது போல என்றெல்லாம் சொல்லியும், மிரட்டியும் பார்த்துவிட்டார்கள். இருப்பினும் இந்த பழக்கம் மாறவில்லை.

      ஸோ, இப்படி சாப்பிடும்போது படிக்க எடுக்கும் புத்தகங்களில் பெரும்பான்மையானவை நமது காமிக்ஸ் புத்தகங்களே.

      ஆனால் தற்போதைய புத்தகங்களை இவ்வாறாக சாப்பிடும்போது படிக்க முடிவதில்லை (ஒரு கையில் இந்த புத்தகங்களை அவ்வளவு சுலபமாக பிடித்து படிப்பது கடினமான செயல்). ஆனால் நமது பழைய பாக்கெட் சைஸ் இதழ்களோ, அல்லது சமீபத்திய 10 ரூபாய் இதழ்களோ அப்படி அல்ல.
      அவற்றை சுலபமாக ஒரு கையில் பிடித்து படிக்க முடியும்.

      ஒருவேளை இதனால்தான் எனக்கு பாக்கெட் சைஸ் புத்தகங்களை பிடிக்கிறதோ என்னவோ?
      நண்பர்களுக்கும் இதுதானோ? புனித சாத்தானும் என்னைப்போல சாப்பிடும்போது புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்போல........

      Delete
    6. //எப்படி வந்தது? எங்கிருந்து ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனாலும் உணவருந்தும்போது கண்டிப்பாக கையில் புத்தகம் இருந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கும் சிறார்களில் நானும் ஒருவன். //
      நானும் கூட !

      Delete
    7. particularly I like 10 Rupees black and white books and 'gundu' books also.

      Delete
  25. my top 6இதழ்கள் : 1.லயன் சூப்பர் ஸ்பெசல், 2.கோடை மலர் 1987, 3.லயன் சென்சுரி ஸ்பெஷல், 4.லயன் கெளபாய் ஸ்பெஷல், 5.கோடை மலர் 1986, 6.தீபாவளி மலர் 1986.

    ReplyDelete
  26. டியர் ஆல்,

    ஒரு சைகோலாஜிகல் த்ரில்லருக்கான அனைத்து தகுதிகளும் இந்த வீரியனின் விரோதிக்கு இருப்பதாக எனக்கு படுகிறது. இது எனது அனுமானமே தவிர, இதன் தாக்கம் கதையில் எவ்வளவு தூரம் உள்ளது என்று தெரியவில்லை. அந்த நோக்கத்தில் கதாசிரியர் கதையை நகர்த்தியிருந்தால் படிப்பதற்கு இது ஒரு சுவையான விருந்தாக இருக்குமென்று சொல்லலாம். பார்பதற்கு அல்ல.

    சைகோலாஜிகல் த்ரில்லருக்கான ஓவிய பாணி நிச்சயம் மாறுபட்டிருக்க வேண்டும். ஓவியத்தில் ஒரு தனித்துவமான ஓவிய நளினம் (வான்சின் ஓவியத்தில் நளினத்தை விட நுணுக்கம்/perfection dominate செய்யும்) மற்றும் வண்ணங்களில் இன்னமும் கொஞ்சம் அழுத்தம் அவசியம்.

    இந்த ஓவிய பாணி ஒரு வரலாற்றை பரிமாற சிறந்த ஸ்டைல். offcourse ஒரே பக்கத்தை வைத்தும் விளம்பர ஓவியங்களை வைத்தும் இப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது தான். மற்ற பக்கங்களில் ஓவியங்கள் வீரியனின் விரோதியை விட இன்னமும் வீரியமாக இருக்கலாம். கடைசியாக சென்ற மாதம் சிக்பில் புத்தகத்தில் வந்த விளம்பரத்தில் ஓவியங்களில் லைட்டிங் effect வண்ணங்கள் அருமையாக இருந்தது.

    //சித்திரங்களும் ஒரு மெல்லிய வசீகரத்தைச் சுமந்து கதை முழுவதிலும் பயணமாகின்றன ! //

    :-),லெட்ஸ் வெயிட் & வாட்ச்! :-)


    அட்டைப்படம் அருமையாக உள்ளது. இதற்கு ஒரு மேட் பினிஷ் கொடுக்க முடியுமா சார்??


    //உங்களுக்கு அவை ரசிக்கக் காரணம் என்ன என்பது பற்றி பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ? //

    என்னை பொருத்தவரை நமது காமிக்சை பற்றி நினைக்கும் போது முதலில் தோன்றுவது மனதில் என்று அழியாமல் நிலைபெற்றிருக்கும் ஒரு சில புத்தகங்களில் வந்த ஒரு சில ஓவியங்கள் தான்.

    ஸ்பைடர், பஞ்சு போன்ற வடிவமுள்ள ஒரு குகையில் நுழையும் போது சிறிய,சிறிய அம்புகள் எங்கும் குத்தப்பட்டிருக்கும் போன்ற ஒருகாட்சி.

    லாரன்ஸ்-டேவிட்டின் கதையில் டேவிட்டை நிற்கவைத்து,கைகளை உயரத்தூக்கி, இரண்டு பெரிய இரும்பு உருண்டைகளை கொண்டு இரண்டு கைகளையும் பிணைத்து,
    சிறை வைத்திருக்கும் ஒரு காட்சி.

    மீண்டும் லாரன்ஸ்-டேவிட் கதையில் பாம்பை லாரன்ஸ் மேல் ஒரு சந்நியாசி எறிய, திறந்த வாயுடன் பாம்பு கடிக்க வரும் ஒரு காட்சி.

    மீண்டும் லாரன்ஸ்-டேவிட் கதையில் தென்னை மரத்தை வளைத்து கயிறுகளை கொண்டு இருவரையும் பிணைத்திருக்க, கயிறின் மேல் சர்க்கரை பாகை ஊற்றி எறும்புகளை கொண்டு கடிக்க வேடும் ஒரு காட்சி.

    மீண்டும் லாரன்ஸ்-டேவிட் கதையில் சிறைசாலையில் ஒரு கைதி மேசை மேல் எழுதிக்கொண்டிருக்கும்போது, தரையில் ஒரு கல் ஆடுவதும், அதனடியில் ஒரு புதையலுக்கான வரைபடம் இருப்பதுமான காட்சி.

    நாடோடி ரெமியில் பலூனில் பறக்கும் காட்சி மற்றும், நாயுடன் தப்பி ஓடும் காட்சி.

    இயந்திரப்படையில் கையெறிகுண்டை இரும்புக்கை பிடிக்கும் காட்சி.

    mr.jet டில் வில்லனின் ஷூவில் ஒட்டியிருக்கும் சிறிய மணல் துகளை தனது அனலைசர் கொண்டு ஆராய்ந்து அதனில் உள்ள கலவையை கண்டறியும் ஒரு காட்சி,

    தங்க நகரத்தில் ஒரு காண்டாமிருகம்(?) ஹீரோ மேல் பாய்வதை போன்ற ஒரு காட்சி

    பழிவாங்கும் பாவையின் வித்தியாசமான மேட் பினிஷ் அட்டை

    பவளச்சிலை மர்மத்தில் செவ்விந்தியர்களை நூற்றுக்கணக்கில் சுடும் காட்சி

    ஊடு சூன்யத்தில் ஜானி அணியும் வித்தியாசமான கண்ணாடி.

    பொடியன் பில்லி லுக்கியிடம் அடி வாங்கும் காட்சி.

    இன்னமும் சென்று கொண்டே இருக்கிறது நண்பர்களே. :-)

    ReplyDelete
    Replies

    1. இவற்றுள் எந்த புத்தகமும் தற்போது என்னிடம் இல்லை. ஒரு சில புத்தகங்கள் மறுபதிப்பில் வந்திருந்தாலும் முதல் முறை பார்க்கும் போது அவை ஏற்படுத்திய தாக்கத்தை மறுபதிப்பு சிதைக்கவே செய்தது.

      உதாரணத்துக்கு லாரன்ஸ்-டேவிட்டின் "மஞ்சள் பூ மர்மம்" நினைவுகளில் அங்கொரு காட்சியும் இங்கொரு காட்சியுமாக தங்கியிருந்தபோது அந்த கதையின் மேல் இருந்த ஒரு இனம் புரியாத ஈர்ப்பு, பிறகு மறுபதிப்பில் படிக்கும் போது முழுமையாக கரைந்து விட்டது. :-(!

      சிறுவயதில் நமக்கிருந்த புரிதலில் இந்த காமிக்ஸ் என்ற FANTASY உலகத்தை உள்வாங்கியபோது நம்கேற்பட்ட மகிழ்ச்சி,படபடப்பு,திகில்,ஆச்சர்யம் போன்ற உணர்சிகளால் ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக ஏற்பட்ட பிம்பம் ஒரு அருங்காட்சிப்பொருள் போல மனதினுள் பொத்தி,பொத்தி வைத்து ரசிக்கப்பட வேண்டிய ஓன்று.

      அந்த பிம்பத்தை புதிதாக கழுவி, பெயின்ட் பூசி அழகு பார்பதென்பது அதை சிதைப்பதை போன்றது.

      Delete
    2. விஸ்கி -சுஸ்கி ! லெட் என்ற பெயர் உள்ள வில்லன் ஹீரோ சிஸ்கோ கிட் என நினைக்கிறேன் (விந்தைதான் ! வில்லன் பெயர் நன்கு ஞாபகம் உள்ளது )
      புஸ்தகம் பெயர் உங்கள் நினைவுக்கு வருகிறதா ?

      Delete
    3. விஸ்கி-சுஸ்கி : //ஸ்பைடர், பஞ்சு போன்ற வடிவமுள்ள ஒரு குகையில் நுழையும் போது சிறிய,சிறிய அம்புகள் எங்கும் குத்தப்பட்டிருக்கும் போன்ற ஒருகாட்சி.// - பாதாளப் போராட்டம் ?

      //லாரன்ஸ்-டேவிட்டின் கதையில் டேவிட்டை நிற்கவைத்து,கைகளை உயரத்தூக்கி, இரண்டு பெரிய இரும்பு உருண்டைகளை கொண்டு இரண்டு கைகளையும் பிணைத்து,
      சிறை வைத்திருக்கும் ஒரு காட்சி.// - காணாமல் போன கடல் ?

      //மீண்டும் லாரன்ஸ்-டேவிட் கதையில் பாம்பை லாரன்ஸ் மேல் ஒரு சந்நியாசி எறிய, திறந்த வாயுடன் பாம்பு கடிக்க வரும் ஒரு காட்சி.// FLIGHT 731 ?

      //மீண்டும் லாரன்ஸ்-டேவிட் கதையில் தென்னை மரத்தை வளைத்து கயிறுகளை கொண்டு இருவரையும் பிணைத்திருக்க, கயிறின் மேல் சர்க்கரை பாகை ஊற்றி எறும்புகளை கொண்டு கடிக்க வேடும் ஒரு காட்சி.// FORMULA X-13 ?

      //மீண்டும் லாரன்ஸ்-டேவிட் கதையில் சிறைசாலையில் ஒரு கைதி மேசை மேல் எழுதிக்கொண்டிருக்கும்போது, தரையில் ஒரு கல் ஆடுவதும், அதனடியில் ஒரு புதையலுக்கான வரைபடம் இருப்பதுமான காட்சி.// தலை கேட்ட தங்க புதையல் ?

      பசுமையான நினைவுகளைக் கொணரும் இதழ்கள் தான் அனைத்துமே !

      Delete
    4. விஸ்கி-சுஸ்கி : //சிறுவயதில் நமக்கிருந்த புரிதலில் இந்த காமிக்ஸ் என்ற FANTASY உலகத்தை உள்வாங்கியபோது நம்கேற்பட்ட மகிழ்ச்சி,படபடப்பு,திகில்,ஆச்சர்யம் போன்ற உணர்சிகளால் ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக ஏற்பட்ட பிம்பம் ஒரு அருங்காட்சிப்பொருள் போல மனதினுள் பொத்தி,பொத்தி வைத்து ரசிக்கப்பட வேண்டிய ஓன்று.//

      நிறைய தருணங்களில் நான் பதிவிடும் சிந்தனைகளே !

      ஆனால் இது வரை அவற்றைப் படித்தேயிரா புதிய வாசக நண்பர்கள் ஒரு பக்கமும் ; படித்திருந்தாலும் - பரவாயில்லை மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணத்தின் பொருட்டு அவை மறுபதிப்பாக வரட்டுமே என நினைக்கும் நண்பர்களும் சூழ்ந்திருக்கும் வரை இந்த மறுபதிப்பு மோகம் குறையப் போவதில்லை என்பது உறுதி !

      Delete
    5. // படித்திருந்தாலும் - பரவாயில்லை மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணத்தின் பொருட்டு அவை மறுபதிப்பாக வரட்டுமே என நினைக்கும் நண்பர்களும் சூழ்ந்திருக்கும் வரை இந்த மறுபதிப்பு மோகம் குறையப் போவதில்லை என்பது உறுதி ! //

      ++++++++++++++++

      Delete
  27. யாரிடமாவது லயன் கௌபாய் ஸ்பெஷல் உள்ளதா? இருந்தால் வாங்கிக்கொள்ள நான் ரெடி...

    ReplyDelete
  28. ஹி ! ஹி ! எல்லாரும் கோச்சடையான் பாரத்துக் கொண்டு இருக்க. நான்பாட்ஷா. பார்த்து கொண்டு இருந்திருக்கிறேன் .refresh. செய்ய வில்லை போலும் .என்ன ஒரு அறியாமை . நன்றி திரு விஸ்கி. சுஸ்கி. விரைவில் ஜோதியில் ஐக்கியமாவேன். . நாள்

    ReplyDelete
  29. TOP 6
    My choices
    1. Tex Willer - Marana Thoothargal (one of my favorite Tex Willer story with his usual action)
    2. Iratha Padalam Complete Collection (It is a fantastic read especially with complete story without any cliffhangers)
    3. Tex Willer - Maranthin Munnodi (all 3 books) - i really loved the last fight between Tex and Swift Bear in Eamanin Ellail
    4. Lucky Luke - Manthil Uruthi Vendum (good and different story, only issue was it came only n 2 colors)
    5. Thotta Thesam from All New Special
    6. Mega Dream Special - Kattril Karintha Kootam - Captain Tiger ( it is one of the great story in Tigers's adventure.)

    These are just my choices from what are the books I have.

    ReplyDelete
  30. டெக்ஸ் வில்லரின் TRAGON நகரம் மற்றும் பவள சிலை மர்மம் & பழி வாங்கும் பாவை மற்றும் லாரன்ஸ் AND டேவிட் இன் காணாமல் போன கடல் AND ஸ்பைட்ர் கடத்தல் குமிழிகள் இவைகளையும் மறு பதிப்பு செய்யவும் .

    ReplyDelete
  31. பழி வாங்கும் பாவை
    மறு பதிப்பாக வந்துவிட்டது
    காணாமல் போன கடல் AND ஸ்பைட்ர் கடத்தல் குமிழிகள் மறு பதிப்பு செய்யவும்
    +1

    ReplyDelete
  32. பின்னூட்டம் அனைத்தையும் (ஆசிரியர் பதிவு
    மட்டும் அல்லாது ) ஒரு வரியும் விடாது கமா
    முற்றுப்புள்ளி வரை படித்து கருத்து தேன் அமுதை நாக்கு சப்பு கொட்டி அருந்திய பின்னரே தளத்தில் பதிவிடுவது என்பது எனது
    கொள்கை .(வேறு வழி ! சொந்தமாக கருத்து
    சொல்ல மண்டையில் சரக்கு வேண்டுமே? )

    ஆகவே தாமதம் என்று சொன்னால் அது மட்டுமே காரணம் என சொன்னால் திரு விஸ்கி சுஸ்கி அடிக்க வருவார் .

    விஸ்கி -சுஸ்கி ! மீண்டும் நன்றி பல்.நீங்கள் கொடுத்த link மூலமாகவே புது பதிவுக்கு வந்தேன் .இனி கைபேசியை மட்டுமே நம்பி இராது Landline broad band ஐயும் பார்த்து கொள்வேன் . cell phone ல் புது பதிவு load ஆஆகவில்லை . இரவு கலங்கி போன தேன்னவோ நிஜம் .மீண்டும் நன்றி .

    ReplyDelete
    Replies
    1. //(வேறு வழி ! சொந்தமாக கருத்து
      சொல்ல மண்டையில் சரக்கு வேண்டுமே? )//
      ஹி ஹி ஹி வாருமையா மரமண்டயாரே ; உமது கொண்டை உம்மை காட்டி கொடுத்து விட்டதே .

      Delete
  33. சார்,
    ஜூன் 20 முதல் 29 வரை திருநெல்வேலியில் புத்தகக் கண்காட்சி நடக்க இருக்கிறது. உங்கள் வருகை உண்டா?

    ReplyDelete
    Replies
    1. Bala K : அடடா..!! இது வரை நமக்குத் தெரியாதே இந்த அட்டவணை பற்றி ?!! முடிந்த விபரங்களைச் சேகரித்து அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ?

      Delete
  34. சினாரே ,
    ஏற்கனவே ஒரு நண்பர் இந்த கதை கத்தரி போடவே இயலாது எனும் படி வருந்தி எழுதி இருந்தார் . அருமையாக கையாண்டு கதைக்கு சேதம் வராமல் பார்த்து கொண்டதற்கு நன்றிகள் ! நண்பர் கர்ணனின் கண்ணோட்டம் எப்படி இருக்குமோ தெரயவில்லை . அவரது எண்ணங்களை அறிய காத்திருக்கிறேன் .
    புத்தக அச்சு தரம் பிரம்மாதம் ! ஆறாம் பக்கம் மட்டும் கொஞ்சம் கலர் டல்லாய் தெரிகிறது . பிற பக்கங்கள் வண்ணத்தில் முக்கி எடுத்தது போல அருமை .
    கதை வழக்கம் போல சீறி பாய்கிறது சைமன் துணை இன்றி . இதில் சைமன் இல்லாத குறையை அதாவது லார்கோவை காக்கும் பொறுப்பை பட்லர் ஏற்று கொண்டிருக்கிறார் . எனினும் சைமன் இல்லாமல் வெளி விட்டதற்கு நமது இந்திய துணை கண்டனத்தின் சார்பாய் வான் ஹெம்மேவிற்கு ஒரு கண்டன கடிதம் வரைந்திடுங்கள்.
    இதில் விஞ்ச் குழுமத்தை கட்டி காத்த அடுத்த ஒரு தலை பலியாகிறார் . லார்கோவை பழி வாங்க அவர் ஏற்படுத்திய ஹெய்ன்ஸ் பாத்திரம் அருமை . அதிலும் அந்த 62ம் பக்கம் அவர் கவிதை வாசித்து ,லார்கோவின் நன்றிகளை பெற்று ,பென்னி மேல் கொண்ட காதலை /அன்பை வெளி படுத்தி நெகிழும் போது ....திடுமென அவர் கொல்ல ப் பட ஒரு கணம் துடித்து விட்டேன் . கதாசிரியரை திட்ட தொடங்கி விட்டேன் என்றால் அந்த பாத்திரம் சாவதற்கு முன்னால் உள்ள அந்த ஒரே பக்கத்தில் கையை விரித்து கவிதை சொல்லி எனது மனதை கனக்க வைத்து விட்டார் . உங்கள் வசன நடையும் அதற்க்கு கை கோர்த்து உதவின என்றால் மிகை அல்ல ! அப்போது என் மனதில் தோன்றிய அடுத்த ஆறுதல் விஷயம் நல்ல வேளை இது சைமன் அல்ல என்றே ! வான் ஹெம்மேவிற்கு சைமன் நினைவிற்கு வராதது நமது பாக்கியம் . ஆமாம் பென்னிக்கு அவரின் இறப்பு தெரியுமா ?
    அழகிய பெண்ணின் அன்மைதனை உதறி காதலியை காக்க பர பரப்புடன் செல்லும் லார்கோ நச் !
    ஆனால் முடிவு சேக்ஸ்பியர் எனும் ஒரு வார்த்தையால் சப்பென முடிந்து விட்டது , ஆனால் அதற்க்கு அவர் போடும் சேசிங் சைமனுடன் பைக் சவாரி போவாரே அது போல பிரம்மாதம் ! இன்னும் கொஞ்சம் நீடித்திருந்தால் அதற்க்கிணையாய் இதுவும் இன்னும் அதிகமாய் தூள் கிளப்பி இருக்கும் !
    லார்கோ வழக்கம் போல லார்கோதான் . அடுத்த கதை சைமனுடன் என்பதால் இன்னும் ஏக பசியுடன் காத்திருக்கிறேன் ! விரைவில் வெளி விடுங்கள் .

    ReplyDelete
  35. பைங்கிளி படலம் வழக்கம் போல கார்ட்டூன் கதைகளின் அச்சு தரம் பக்கம் முழுவதும் அருமை ! சில பக்கங்களில் விழுந்து சிரிக்க வைக்கிறார்கள் ஓவியங்களாலும் , வரிகளாலும் ! சிக் பில் வரிசைகளில் மீண்டுமொரு அற்புதமான கதை ! ஆனால் இவர்களுக்கு பிரியாவிடை தர போகிறோம் என்பது ......

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : பிரியா விடை தரும் நேரமெல்லாம் அத்தனை சீக்கிரமாய் நெருங்கவில்லை நண்பரே...எதிர்பார்ப்புகளை சற்றே மட்டுப்படுத்திக் கொள்ளும் நிலை என்று வைத்துக் கொள்ளுங்களேன்...!

      Delete
  36. எடிட்டர். சார் !
    spin off -என்றதும் டிஸ்னி வெளியிட்ட
    Lion king ஞாபகம் வந்தது .அதில் Timon மற்றும் pumba என்ற உதிரி பாத்திரங்கள்
    ஆல்பம் மற்றும் டெலிசீரியலாக வந்து சக்கைப்போடு போட்டன .அக்கு நாம டாட்டா
    என்ற அப்பாத்திரங்களின் கொள்கை உலக
    பிரசித்தம் .

    அது போல் நமது வெளியீடுகளில் விரைவில்
    வர இருக்கும் ரின் டின் கேன் மற்றும் காலனின் கைக்கூலி மற்றும் விரியனின் விரோதி ஆகியன மூலவர்களை மிஞ்சிய மகத்துவம் உள்ளவர்களாக. இருப்பார்கள். என நம்புகிறேன் .
    இருபது

    ReplyDelete
  37. Attention guys, this is for you all golden oldies lovers, especially Mr. Steelclaw, do go to this link and you can download Mandrake, The Phantom and "THE SPIDER"
    Mandrake
    http://oldcomicsworld.blogspot.in/search/label/Mandrake%20Comics%20English
    The Phantom
    http://oldcomicsworld.blogspot.in/2014/05/updated-dead-links_13.html
    The Spider
    http://oldcomicsworld.blogspot.in/search/label/Fleetway%20Super%20Library
    Enjoy...

    ReplyDelete
  38. editor sir !
    favorite top 6 பற்றி சொல்ல என் போன்றோர்க்கு வாய்ப்பு இல்லை .

    ஆனால் நண்பர்களும் ஜாம்பவான்களும் சொல்வதை சுவாரஸ்யமாக கவனித்து கொண்டிருக்கிறேன் .

    எல்லோரும் சொல்வதை பார்த்தால் பவள சிலை மர்மம் top 6-ல் இடம் பிடிக்கும் போல்
    தெரிகிறது .

    positive side -ல் பார்த்தால் அவர்கள் பாவம் !

    படித்ததைதான் திரும்ப படிக்க போகிறார்கள் .

    நாங்கள் புதிதாக 6 கதைகள் படிக்க போகிறோம் .

    ReplyDelete
    Replies
    1. சார் !
      பயங்கர ஏமாற்றம் ! Top 6 favorites வெறும் பட்டியல் மட்டும் தானா ?

      அது மறு பதிப்பிற்கான அச்சாரம் என சந்தோஷ கனவில் மிதந்திருந்தேன்.

      90% இதழ்களாவது படித்து இருந்தால்
      தானே best choose செய்ய முடியும். என தப்பு கணக்கு போட்டுவிட்டேன்.

      படித்ததில் பிடித்தது !! என்றால் சொற்ப புத்தகங்கள் படித்து இருந்தாலும் விட்டேனா பார் நானும்
      ரேஸில் கலந்து கொள்வேன் .

      ரேஸில் கடைசியாக வந்தால் என்ன ?

      ரேஸில் இருக்க வேண்டியதுதானே
      முக்கியம் .

      Delete
    2. selvam abirami : படித்ததில் பிடித்ததைப் பகிர்வதிலும் தவறில்லையே ! ஒவ்வொருவரது கண்ணோட்டங்களும் மாறிடும் எனும் போது எனக்குக் கிடைக்கும் insight உபயோகமாய் இருக்கும் அல்லவா ?

      Delete
  39. Replies
    1. இதே மாதிரி சிவகாசி ஆபீசிலும் வரஞ்சு வைக்கலாம்ல ஆசான் ?

      Delete
  40. பின்னூட்டங்கள் குறைந்ததற்கான காரணங்கள்

    - கோடை விடுமுறைக்காக பலர் வெளி ஊர் சென்றிருக்கலாம். அதனால் இன்னும் புத்தகங்களைப் படிக்காமல் இருந்திருக்கலாம்.

    -அல்லது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்றிருப்பதால் தற்காலிக பிரம்மச்சாரிகள் சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் மூழ்கியிருப்பதால் காமிக்ஸ் படிக்க நேரம் கிடைக்காமலிருக்கலாம் :-)

    - 20 நாட்களுக்குள் அடுத்த அடுத்த மாத காமிக்ஸ்களை எங்களுக்கு நீங்கள் அனுப்புவதால் உங்களின் வேகத்திற்கு எங்களால் போட்டியிட முடியாமல் இருப்பது

    - லார்கோ ஒரு மெகா ஹிட் என்று ஏற்கனவே முடிவாகிவிட்ட நிலையில், இனி இந்தக் கதை நன்றாக இருந்தது என்று வெளிப்படையாக சொல்ல வேண்டிய நிலையில்லாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்

    எனது டாப் 5
    -------------------
    - மிஸ்டர் ஜெட்
    - உலகப்போரில் ஆர்ச்சி
    - பழி வாங்கும் பாவை (டெக்ஸ்)
    - கடத்தல் குமிழிகள்
    - ட்ராகன் நகரம் (டெக்ஸ்)

    ReplyDelete
    Replies
    1. RAMG75 : அட - ஒவ்வொரு காரணமுமே நியாயமானதொன்றாகத் தான் தெரிகிறது !

      மிஸ்டர் Z !! வித்தியாசமான தேர்வு தான் !

      Delete
  41. வாத்யாரே, சலாம் வாத்யாரே...

    நான் புத்சா வந்துனுக்கீறேன்.... அத்தொட்டு அல்லாருக்கும் வண்க்கம் சொல்க்கிறேன்...

    இப்பக்கி அப்பீட்டு... அப்பால நான் ரிப்பீட்டு

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோஸ்த் ! வாழ்த்துக்கள் ! !

      Delete
    2. வா வாத்யாரே !!! உன்ன மேரி ஆளுங்கதான் நம்ம பேட்டைக்கு வேணும் நைனா. இப்ப ரிப்பீட்டு கொடுத்துட்டு அப்பாலிக்கா சோக்கா நீ வா தொரெ. இம்மாம் பெரிய எணையத்துல தம்மாத்துண்டு கமெண்டு போடாம நீ பாட்டுக்கு நீட்டமா வூடுகட்டி அடி நைனா. நாஸ்டா துன்ன நாழியாச்சு.வரேன் வாத்யாரே!!!

      Delete
  42. சார் ...விரைவான பதிவிற்கு நன்றி .

    விரியனின் விரோதி அட்டைப்படம் கொள்ளை அழகு ...கதையில் சித்திரம் "ரத்தபடலம் " ஓவியரே வரைந்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் என்ற நினைவும் ஓரமாக வருவதை தவிர்க்க முடிய வில்லை .

    லயனின் டாப் 6 பற்றிய தங்களின் கருத்தை அறிய ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறோம் சார் .அதே சமயம் இங்கே தாங்கள் ஒவ்வொரு பதிவாக அதனை இட்டு பின்னர் புத்தகத்திலும் அதே பதிவு வருவது புத்தகத்தில் படிக்கும் போது சிறிது சுவாரஸ்யம் குறையும் என்பது ( எனது ) கருத்து .புத்தகத்தில் முதன் முறையாக உங்கள் டாப் 6 படித்தால் மகிழ்ச்சி கூடும் .

    இந்த ஜூலை மாத இதழ்கள் நான்கும் அடுத்த மாதம் கிடைக்குமா என்பதை தாங்கள் தெளிவு படுத்தினால் இன்னும் மகிழ்ச்சி கூடும் எனக்கும் ..,நண்பர்களுக்கும் ...

    எனக்கு பிடித்த லயன் டாப் 6 :

    1) ட்ராகன் நகரம் 2) கழுகு வேட்டை 3) பழி வாங்கும் பாவை 4) பழிக்கு பழி 5) ரத்த வெறியர்கள் 6) நில் கவனி சுடு மற்றும் பல டாப் 6 ...

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : ஜூலை மாத இதழ்கள் நான்கும் - ஜூன் 30-ம் தேதி !

      அப்புறம் LMS -ல் வெளியாகப் போவது எனது எனது டாப் 6 தேர்வுகள் அல்ல - நண்பர்களது தேர்வுகளே ! So நான் இங்கே எழுதுவது LMS -ல் repeat ஆகாது !

      Delete
  43. தனி இதழில் என்னுடைய டாப் 6: 1.பழி வாங்கும் புயல், 2.கார்சனின் கடந்த காலம் , 3.பவள சிலை மர்மம், 4.கழுகு வேட்டை, 5.இரத்தப்படலம்-5, 6.பூம் பூம் படலம் =உலகப்போரில் ஆர்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : "டெக்ஸ்" விஜயராகவனின் டாப் 6 தேர்வில் நான்கு டெக்ஸ் ! ஆச்சர்யமில்லை தான் !

      Delete
    2. ஹி ஹி ஹி ங் சார் . 6ம் Tex தான் நினைத்தேன் சார் , ஆனால் புள்ளைங்க பிழைத்து போகட்டும் என்று ஒரு 2சீட்டு கொடுத்துள்ளேன் சார்.

      Delete
  44. This month Largo plot too simple
    Largo looked stale for first time
    Also the printing not on par with en peyar largo
    Chick bill can go for retirement after this story

    ReplyDelete
  45. குற்ற சக்ரவர்த்தி ஸ்பைடர்

    சட்டத்தின் காவலன் ஸ்பைடர்

    என இதழ்களின் தரம் பிரித்து ஸ்பைடர்

    அபிமானிகள். யாரேனும் ஒரு பட்டியல்

    தாருங்கள் .

    ReplyDelete
  46. to whomsoever it may concern (1)

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். நீண்ட விடுப்பும் ; உழைப்பற்ற நாட்களும் நம் சந்தோஷத்தை இரு மடங்கு கூலியாக கேட்கின்ற காலமிது. கண் இமை மூடி கண் இமை திறக்கும் காலத்தில், ஒரு நாள் என்பது அடக்கமாகி வருகின்ற உணர்வை நித்தம் பெறும் மாயலோகமாகி விட்டது நம் பூலோகம். இதில் மாதங்களும் ; வருடங்களும் கூட சில நாட்களாய் மறைகின்றன ; நேற்றையப் பொழுது என்பதே இல்லாமல் போய்விடுமோ என்று அச்சப்படும் வகையில் நம் பூமியின் சுழற்சி வேகம் நம் புலன்களுக்குள் அடங்க மறுக்கிறது !

    இதில் நாம் அறிந்து செய்யும் தவறுகள் சில மட்டுமே என்றாலும் அறியாமல் செய்யும் பிழைகள் ஏராளம். செய்வது தவறு என்று நமக்கு புரியாத வரை நாம் அனைவருமே புத்தர்கள் தாம் - நம் மனதளவில். அது போன்றதொரு நிகழ்வை தான் இந்த மாதம் எனக்கு பாடமாக கற்பித்து நாளையோடு விடைப்பெறுகிறது. அது என்னவென்று அறிய, நீங்கள் காட்டும் ஆர்வத்தைப் போலவே நானும் அதை எழுதிட இங்கு சித்தமாக இருக்கிறேன்.

    அதற்கு முன் இந்த பதிவில் பதிவிட்டிற்கும் அண்ணன் arumugam s அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வணக்கம் :)

    ReplyDelete
    Replies
    1. தளம் எல்லோராலும் நிரம்பி வழிய வேண்டும் என்பது என் பேரவா .

      கருத்து சுமைகளின் கனம் தாங்காது
      தளத்தின் வேலி எல்லையை ஆசிரியர் விரிவுபடுத்த வேண்டும் என்பது என் பேராசை .

      அந்த வகையில் தங்கள் மீள் வருகை
      இத்தளத்தை குதூகலத்தில் ஆழ்த்தும்
      என்ற நம்பிக்கையுடன் அன்புடன்
      வரவேற்கிறேன் .

      Delete
    2. to whomsoever it may concern (2)

      நண்பர்களே, singathin.blogspot.in என்ற எனது சமீபத்திய வலைதளத்தில் - நமது ஆசிரியர் விஜயன் அவர்களின் படைப்பான ''சிங்கத்தின் சிறு வயதில்'' தொடரை பதிவிட்டு வந்தது உங்களில் சிலருக்காவது தெரிந்திருக்கலாம். ஆனால் ஒருவரின் எழுத்தையோ அல்லது அவரின் படைப்பையோ - அவரின் அனுமதியன்றி வலையேற்றம் செய்வதோ ; scanning செய்வதோ அல்லது scanlation செய்வதோ copyright சட்டப்படி தவறு என்று எனக்கு உணர்த்தப்பட்டதால், உடனடியாக 21 பாகங்கள் பூர்த்தியடைந்த நிலையில் அந்த வலைதளத்தை 15 நாட்களுக்கு முன்பாக டெலிட் செய்து விட்டேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

      மேலும், தவறான என் செயலுக்கு மிகவும் வருந்துகிறேன். நன்றி !

      அன்புடன்
      மிஸ்டர் மரமண்டை

      Delete
    3. selvam abirami :

      நன்றி நண்பரே. கவலையை விடுங்கள் அடிக்கிற அடியில் தாரை தப்பட்டையைக் கூட கிழித்து விடலாம் :)

      Delete
    4. டியர் மிஸ்டர்.மரமண்டை,
      நமது ஆசிரியர் சென்ற இதழ்கள் முதல் புதிதாக புத்தகத்தில் அறிவித்துள்ள copy-right அறிவிப்புக்கு மதிப்பளித்து, உங்களது பெருமுயற்சியில் நீங்கள் ஆரம்பித்த் சிங்கத்தின் சிறு வயதில் வலைத்தளத்தில் இருந்த பதிவுகளை பதிவிறக்கம் செய்தது பெரும் பாராட்டுக்குரியது.

      இதை உதாரணமாக கொண்டு பிற நண்பர்களும் புதிய புத்தகங்களின் ஹாட்-லைன் மற்றும் பிற பகுதிகளை scanlation செய்து தங்களது தளங்களில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

      ஆசிரியரே சிங்கத்தின் சிறு வயதில் தொடரின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு பகுதியாக தளத்தில் வெளியிட்டால் உரையாடலுக்கு வசதியாக இருக்கும்.

      உதாரணத்துக்கு இந்த தொடரின் சென்ற பகுதில் 1986 தீபாவளி மலருக்காக வெளியிட்ட கதைசுருக்க விளம்பரத்தில் வந்த ப்ளுரசென்ட் மையின் தன்மை தற்போது எவ்வாறு இருக்கிறது என, அதை தற்போது வைத்திருக்கும் நண்பர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கான பதில் ஆசிரியருக்கு கிடைததாவென்று தெரியவில்லை.

      Delete
  47. Sir,

    Please take kind attention of this note. I've already sent a note 6 months ago, but seems you may not have read it.
    I'm talking about a real problem about Foreign Subscription.

    1. It takes 20-25 days after you send the book, before I receive it in USA because of customs etc., Agreed We cannot do anything
    2. You keep announcing new books throughout the year. Great. We should continue doing this
    3. New announcements, Postal price changes quickly drain our account and subscription is close to Zero. Again out of your control
    4. You stop sending new books, but until 25 days I would not know that you haven't sent books. Completely avoidable
    5. After 25 days, I call your office and they say you account is low, please send money.
    6. Then I send money and wait another 25 days for the book, which is 45-60 days after the book is originally sent out to subscribers.

    Either send us an email when our account is lower than Rs.1000 or some other way so that we get seamless access to subscription.
    I'm open to any method, but want to make sure my subscription is sent out without fail.

    - Prem

    ReplyDelete
  48. Ratha padalam (due to its story) ,
    Ratha Bhoomi ( Story is the hero in this issue),
    Marana Mull & Mandira Mandalam ( just for Tex Willer, no need to add any reason) ,
    Coach Vandiyin Kathai (Lucky Luke),
    Yaar ande mini Spider & Kadathal Kumiligal.

    ReplyDelete
  49. எனது பேவரைட் இதழ்கள்
    1. அதிரடிப்படை
    2. சாத்தான் வேட்டை (டெக்ஸ்)
    3. ரத்தப்படலம் (XIII)
    4. கொலைகாரக்கானகம் (பிரின்ஸ்)
    5. புரட்சித்தீ (லக்கி)
    6. பௌர்ணமி வேட்டை (பேட்மேன்)

    ReplyDelete
  50. எனது டாப் 5:

    - கர்சனின் கடந்த காலம் - for the most complete comic by Lion
    - சூப்பர் சர்க்கஸ் - for the sheer novelty of those times - the best ever worth for Two Rupees !
    - மிஸ்டர் ஜெட் - for the pictures
    - சிரிக்கும் மரணம் - for the translated script (of The Killing Joke)
    - புரட்சி தீ

    ReplyDelete
  51. எனது டாப் 6:

    1.மனித எரிமலை
    2.எத்தனுக்கு எத்தன்
    3.மரண மண்டலம்
    4.பழிவாங்கும் புயல்
    5.ஒரு கோச் வண்டியின் கதை
    6. கார்சனின் கடந்த காலம்

    ReplyDelete
  52. விஜயன் சார், லார்கோ கதை இதுவரை வந்த லார்கோ கதைகளில் வெகுசுமார், முன் அட்டையில் குறிபிட்டது போல் ஆக்சன் கதை ஒன்றும் இல்லை; லார்கோவின் ஆக்சன் எங்கு உள்ளது என தேடவேண்டி உள்ளது. எல்லா கதாபாத்திரம்களும் பேசி கொண்டே உள்ளன.. காமிக்ஸ் கதைக்கு பதில் ஏதோ நாவல் படித்த உணர்வு.

    நண்பர்கள் அச்சுதரம் பற்றி கடந்த சில மாதம்களாக நண்பர்கள் கூறிவருவது போல் நாம் அவற்றை களைவது நல்லது. நமது காமெடி நாயகர்கள் கதைகளில் வண்ண கலவைகள் குறைவு என்பதால் அவைகளின் அச்சு தரம் நன்றாக உள்ளது. ஆனால் வண்ண கலவைகள் அதிகம் உள்ள லார்கோ, டைகர், மற்றும் தோர்கல் போன்ற கதைகளில் வண்ணம்கள் பல இடம்களில் சிதறி உள்ளன, உதரணமாக சில இடம்களில் கதை பாத்திரம்களின் முகம்களில் அதன் பின்னால் உள்ள (backdrop) பொருள்களின் வண்ணம் பிரதிபலிக்கின்றன. நீங்கள் இதனை களைவதற்கு முயற்சி செய்வது அறிந்ததே, நமது LMS வரும் வேளையில் இதனை உடன் சரிசெய்வது நன்று.

    ReplyDelete
    Replies
    1. இந்த அச்சு குறைபாடுகள் சற்று கவனித்து பார்த்தால் தான் தெரியும், இந்த முறைதான் இவைகளை என்னால் கவனிக்க முடிந்தது.

      Delete
    2. நண்பரே எந்த பக்கங்களில் , கட்டங்களில் அந்த குறைகள் உள்ளன என கூறுங்களேன் ! நானும் எனது புத்தகத்தில் அந்த குறைகள் உண்டா என்று பார்க்கிறேனே ! கீழே மரமண்டை கூறியது போல நானும் எட்டாம் பக்கத்தில் கீழ் கட்டத்தில் இரவு நீல நிறம் பக்கம் முழுதும் வியாபித்திருப்பினும் அந்த fax mcல் பச்சை ஒளி மினுக்கிடுவது தெரியும் ! அற்புதமாக சிறு சிறு நுணுக்கங்களும் ரசிக்க உண்டு !

      Delete
    3. ஸ்டீல், தமிழில் சரளமாக எழுத முடியாத காரணத்தால், நான் பெங்களூர் சென்றவுடன் உங்களுக்கு இது பற்றி போன் செய்து விளக்குகிறேன்.

      Delete
  53. குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ! [ வேட்டை நகரம் வெனிஸ் - விமர்சனம் (1) ]

    நீல நிறம்
    பச்சை நிறம்
    இள ஆரஞ்சு வர்ணம்

    என ஒவ்வொரு பக்கத்திலும் வியாபித்து நிற்கும் வர்ணங்கள் - ஹாலிவுட் படங்களின் Light Effects போன்று அதகளம் செய்கிறது. அதிலும் லார்கோ முகத்தில் பிரதிபலிக்கும் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் ஒளியாகட்டும் ; கப்பலின் உள் தளத்தில் ஒளிரும் விளக்கின் ஒளி பிரதிபலிப்பாகட்டும் ; ஓவியரின் கடின உழைப்பையும், வித்தியாசமான பாணியையும் நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது.

    ஒரு நிமிஷம், இதை அச்சுக் குறைபாடு என்று யார் சொன்னது ?

    பயணக் களைப்பும் ; உடல்நல குறைவும் கூட 'வேட்டை நகரம் வெனிஸ்'ஐ ஆர்வத்துடன் படித்து முடிப்பதை தடை செய்ய முடியவில்லை என்பதே உண்மை. உண்மை இப்படி இருக்க லார்கோ கதையில் முன்பிருந்த 3 ரோசஸ் [ திடம் ; மனம் ; சுவை ] இதில் குறைவு என்று பரவலான கருத்துகள் பதிவாவது எதனால் என்று யோசித்துப் பார்த்தேன். அதற்கு பிறகு வருவோம், அதற்கு முன் ;

    ஆசிரியரும் நண்பர்களும் தங்கள் பதிவில் கூறியுள்ளபடி சென்சார் விஷயம் எனக்கு உறுத்தலாக இருக்கவில்லை. அதிலும் பொம்மைக்கு உடை அணிவித்த விஷயம் என் கண்ணில் தென்படவேயில்லை என்பதும் ஆச்சரியம் தான். அதற்கு ஒரே காரணம் லார்கோ வைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

    ReplyDelete
    Replies
    1. வேட்டை நகரம் வெனிஸ் - விமர்சனம் (2)

      நண்பர்களே, 'யாரடி நீ மோகினி' என்ற படத்தில் வரும் ஒரு பாடல் மிகவும் பிரபலமான ஒன்று. 'எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த' என்ற பாடலில் நம் ஹீரோ 'தனுஷ்' தன் வாயில் ஈ போவதுக் கூட தெரியாமல் நயன்தாராவை வைத்தக் கண் வாங்காமல், நாடி நரம்பு என அனைத்தும் செயலிழந்து, உணர்விழந்து, மெய்மறந்து பாடல் முழுவதும் வழிந்து கொண்டிருப்பார்.

      அது போல பக்கம் 27 முதல், மிஸ்டர் ஜராமாலே 'ஏழு சகோதரிகள்' பற்றியும் காலனின் கைக்கூலியான 'கேஸ்பெ' பற்றியும் உயிரைக் கொடுத்து லார்கோ விற்கு விளக்கிக் கொண்டிருப்பார். ஆனால் நம் ஹீரோ லார்கோ வோ அழகானதொரு பெண்ணை இதற்குமுன் தன் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்பது போல் அந்த பணிப்பெண்ணிடம் பக்கம் 34 வரை தனுஷை விட மோசமாக வழிகிறார். என்ன கொடுமை லார்கோ இது ?! இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் லார்கோ கடைசியாக கூறிய வார்த்தை என்ன ? அதன் தொடர்ச்சி தான் என்ன ? எடிட் செய்யப்பட்டு விட்டதா ? என்று நம் மண்டைக்குள் குறுகுறுவென்று அல்லாடும் விடை தெரியா பல கேள்விக்கு இங்கு விடை அளிப்பவர் தான் யாரோ ?!

      கதையின் வேகத்திற்கும், ஆக்ஷனுக்கும், உச்சகட்ட பரபரப்பிற்கும் ஒரு சிறு உதாரணம் கூற வேண்டுமானால் - கதையின் இறுதியில் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் 'ஷேக்ஸ்பியர்' என்ற வார்த்தையை ஈமெயில் மூலம் லார்கோ தன் செகரட்டரி பென்னிக்கு டைப் செய்வதைக் கூறலாம். நண்பர்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், SHAKESPEARE என்ற வார்த்தையை பதட்டத்தின் காரணமாகவோ அல்லது ஸ்பெல்லிங் தெரியாமலோ லார்கோ தவறாக டைப் செய்திருந்தால் கதை என்னவாயிருக்கும் ? அப்பப்பா.. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது :)

      Delete
    2. வேட்டை நகரம் வெனிஸ் - விமர்சனம் (3)

      புத்தகப் பிரியன் :

      முன்பு ஒரு முறை நண்பர் புத்தகப் பிரியன் லார்கோ கதையப் பற்றி அபிப்ராயம் தெரிவிக்கும் போது - எதிர் வரப்போகும் லார்கோ கதைகளில் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத விஷயங்களை ஆசிரியர் எப்படி கையாளப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பதாக மார்ச் 2012 ல் பதிவிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட கதையில் இதுவும் ஒன்றா என்று அறிய விரும்புகிறேன்.

      அப்படி இருக்கும் பட்சத்தில் கதையின் கருவிற்கும் ; கதையோட்டத்திற்கும் சற்றும் நெருடல் இல்லாமல், அன்று புத்தகப் பிரியன் குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் எடிட்டிங் செய்யப்பட்டு உள்ளதாகவே நினைக்கிறேன். பாராட்டுகள் விஜயன் சார் !

      Delete
    3. மிஸ்டர் மரமண்டை !

      மதியில்லா மந்திரியின் பின்னூட்டங்களை பலமுறை படிக்கிறேன் அவற்றில் கொப்புளிக்கும்
      நகைச்சுவை உணர்வு காரணமாக.

      உங்கள் பின்னூட்டங்களையும் பலமுறை
      படிக்கிறேன் .

      ஆனால் காரணம் வேறு .

      1. உங்கள் தமிழ் நடையின் பிரவாளம் .

      சில இடங்களில் பண்டைய பொன்னி

      நதியின் ஆடிப்புனல் போல் ஆரவாரம்

      செய்து செல்கிறது .

      பிற இடங்களில் அதே நதியின் ஐப்பசி
      பிரவாகம் போல் குழைந்து செல்கிறது .


      2. இனம் புரியா கவர்ச்சியும் வசீகரமும்

      உள்ள. பதப்பபிரயோகங்கள்.

      அதிலும் முதல் பின்னூட்டத்தின் முதல் பகுதி ....... வாரே வா!! என்னை மிகவும் கவர்ந்த லாகவமான மொழி நடை .

      பின்னூட்டங்களின் கருத்தாழம் குறித்து

      என்னால் கூற இயலாது .ஏனெனில் எனக்கு inking ,coloring ,printing standard இது பற்றி எல்லாம் தெரியாது .


      எங்கு தமிழ் கற்றீர்கள் சார் ?

      அருமை !!அருமை !!






      பதப்படுத்தும்






      Delete
    4. இருவருமே தமிழில் விளையாடுகிறீர்கள் ! அருமை !

      Delete
    5. //ஆனால் நம் ஹீரோ லார்கோ வோ அழகானதொரு பெண்ணை இதற்குமுன் தன் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்பது போல் அந்த பணிப்பெண்ணிடம் பக்கம் 34 வரை தனுஷை விட மோசமாக வழிகிறார். என்ன கொடுமை லார்கோ இது ?! இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் லார்கோ கடைசியாக கூறிய வார்த்தை என்ன ? அதன் தொடர்ச்சி தான் என்ன ? எடிட் செய்யப்பட்டு விட்டதா ? என்று நம் மண்டைக்குள் குறுகுறுவென்று அல்லாடும் விடை தெரியா பல கேள்விக்கு இங்கு விடை அளிப்பவர் தான் யாரோ ?!//
      கதாநாயகியை விட அழகாய் காட்சியளிக்கும் அந்த பெண்ணிற்கு கொஞ்சம் இன்னும் அதிக சான்ஸ் தந்திருக்கலாம் !

      Delete
    6. >>>>>>>>>>கொப்புளிக்கும் நகைச்சுவை உணர்வு காரணமாக..........??????????
      அப்பிடியே மாத்தி படிங்க...........
      வாய் கொப்புளிச்சு துப்புர மாதிரி நகைச்சுவை .................ஹி ஹி

      Delete
    7. வேட்டை நகரம் வெனிஸ் - விமர்சனம் (4)

      பொதுவாகவே லார்கோ கதைகளில் சில விஷயங்கள் தவறாமல் இடம் பெறும். அதில் சிலவற்றை கீழே காண்போம்:

      1.உள்ளுக்குள் இருக்கும் பதற்றத்தை சிறிதும் முகத்தில் காட்டாமல், மகேந்திரசிங் தோணி போல் கூலாக காட்சி தருவது.
      2.கடைசி 36வது பந்தில் விளையாட வந்தாலும் டொக்கு வைத்து ஆடிவிட்டு கடைசி ஓவரில் சிக்சர் அடித்து ஜெயிப்பது.
      3. மகேந்திரசிங் தோணி போலவே அதிர்ஷடத்தை நம்பி ஒவ்வொரு கதையிலும் உயிர் பிழைப்பது அல்லது சாதிப்பது.
      4. வாரம் ஒரு ஹேர்ஸ்டைலில் கலக்கும் மகேந்திரசிங் தோணி யைப் போலவே வாரம் ஒரு அழகியுடன் காட்சியளிப்பது.
      5.எல்லா புகழும் லார்கோ வின்ச் என்ற தனி நபருக்கே. (எல்லா வெற்றியும் தோணி என்ற கேப்டனால் தான்)

      பொதுவாகவே லார்கோ கதைகளில் - லார்கோ வினச் ன் தனிப்பட்ட அதிரடி ஆக்ஷன் மிகவும் குறைவாகத் தான் இருக்கும் என்பதை வாசககர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் அவரின் புத்தி சாதூர்யத்திற்கும், தைரியத்திற்கும் ஈடு இணையிருக்காது. கதை நெடுக வரும் கதாப்பத்திரங்களின் செயல்பாடுகளும், கதைக் கருவும், திட்டங்களும், அதிரடிகளும், சூழ்சிகளும், அதன் மறைமுக சூத்திரத்திரியும் தான் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் காரணிகள். ஒவ்வொரு கதையிலும் நடந்தேறும் அனல் பறக்கும் ஆக்ஷன் என்பது - அதன் கதைக் களம் தான் என்பது அப்பட்டமான உண்மை. எனவே லார்கோ வின்ஸ்லாவ் என்ற தனி மனிதனின் இன்றைய வெற்றிக்கும் புகழின் உச்சத்திற்கும் லார்கோ வின்ச் என்ற வாரிசு உரிமை மட்டுமே முழுமுதற் காரணம் என்பதை வாசகர்கள் புரிந்து கொண்டு படிக்க ஆரம்பித்தால் லார்கோ வின்ச் ன் கதைகள் மாதம் 6 வந்தாலும் நமக்கு சலிப்பு என்பதே ஏற்படாது. மேலும்..

      Delete
    8. வேட்டை நகரம் வெனிஸ் - விமர்சனம் (5)

      கதையின் தொடக்கத்தில் நமக்கு அளிக்கப்படும் தகவல் சுரங்கம் மட்டுமே லார்கோ நம்மிடையே இன்று நம்பர் 1 ஆக காட்சியளிக்க காரணம். கதாசிரியரை பாராட்ட இங்கு வார்த்தைகளே இல்லை. எவ்வளவு உழைப்பு ; எவ்வளவு அர்ப்பணிப்பு; எவ்வளவு பின்னணிகள் ; சலிப்புத் தட்டாத wikipedia ; கதையோடு நம்மை ஒன்றிணைக்கும் மந்திர வசனங்கள் ; ஆணிவேர் முதல் உச்சி கிளை வரை அலசி ஆராயும் லாவகம் ; அத்தனையும் சுவாரசியம் ; என்றும் விலகிவிடாத காமிக்ஸ் வசியம் ; அடடா அனைத்தையும் எடுத்துச் சொல்ல வார்த்தைகளும், தெளிந்து தெளிவாக்கும் சிந்தனையும் எனக்கு மிகவும் குறைவாக இருப்பதே என் காமிக்ஸ் ரசனை இன்று எல்லையற்று பரந்து விரிந்து, தமிழ் காமிக்ஸில் குவிந்து கிடக்கக் காரணம் !

      எனவே எனதருமை சகோதர சகோதரிகளே, லார்கோ வின்ச் கதைகளில் வரும் நீளநீளமான வசனங்களே கதையின் உயிர்நாடி ; அதன் கதைக் கருவே கதையின் அழகான உருவம் ; அதன் வீரியம் சிறிதும் குறையாமல் மொழிபெயர்க்கும் நமது ஆசிரியர் விஜயனின் திகட்டாத தமிழே அதன் அனல் பார்க்கும் ஆக்ஷன் என்பதை உங்கள் முன் சத்திய பிரமாணம் செய்வதில் பெருமை அடைகிறேன். லார்கோ கதைகளில் என்னை மெய்மறக்கச் செய்து கதையோட்டத்தில் ஒன்றிணைப்பதே கதையில் வரும் தகவல் சுரங்கங்களும் ; நீளநீளமான வசனங்களும் ; அதை சுவாரசியமாக நமக்கு படிக்கத் தரும் தமிழ் மொழிபெயர்ப்பும் தான் என்பதே உண்மை.

      லார்கோ கதைகள் என்றாலே - ஞாயிறு காலை டயட் டிலிருந்து மதியம் லஞ்சிற்கு, சிக்கன் பிரியாணி வித் லெக் பீஸ் - சிக்கன் 65 போன்லெஸ் & மட்டன் சுக்கா என ஃபுல் மீல்ஸ் கட்டு கட்டுவது போன்று அது ஒரு அலாதியான சுகம் :)

      முடிந்தது.

      Delete
  54. வணக்கம் வாத்யாரே,

    அல்லாராட்டம் நானும் நமக்கு புட்ச்ச மொத ஆறு புக் இன்னான்னு ரோசனை பண்ணேன்... ஆனா ஒரே பேஜாரா பூட்ச்சு வாத்யாரே

    கதெல்லாம் ஞாவகத்துல கீது... ஆனா பேரெல்லாம் மண்டைக்ககுள்ள வரமாட்னுது தல...
    அத்தொட்டு நான் இன்னா முடிவு பண்ணிக்கீறேன்னா நமக்கு ஞாவகத்துல இருக்கறத ஸொல்வோம்... அத்தொட்டு அது இன்னா கதைன்னு வாதயாரே ஸொல்லுட்டும்...

    வாத்யார் ஸொல்ரதுக்குள்ளார யார்னா ஸொல்ட்டா அவிங்களுக்கு எஞ்சார்பா வாத்யார் பிரைஸ் தர்வார்...
    இன்னாமா கன்னுங்களா சர்தானா?

    மொதல்ல - தலவாங்கி கொரங்கு

    ரெண்டாவது - ஒரு மொட்ட பாஸ் வில்லன், அவனுக்ககு காதும் கேக்காது, வாயும் பேசாது... ஆனா பார்ட்டி படா கில்லாடி... யார்னா பேசுனா அவங்க ஒதடு அசயறத வச்சே, பார்ட்டி பலானது பேசுதுன்னு கண்டுபுட்ச்சு ஆள போட்டுறுவான் - கதைல பைனாகுலர்ல பாத்து ஆள் பேசறத கண்டுபுடிப்பான்பா...இது என்னா கதெ?

    3 வது - எம்மாம்பெரிய டிரக் ஒண்ண எட்த்துக்கின்னு ரெண்டு தோஸ்த்துங்க, அவிங்களோட இன்னோர் தோஸ்த்த போட்டுதள்னவன போடறதுக்கு கௌம்புவாங்க - இது என்னா கதெ?

    4 வது - நம்ம கிழவாடி கார்ரசனோட கயந்த காலம்பா

    5வது - நம்ம சருக்கு மண்ட பட்லர் டெஸ்மாண்டு புத்சா ஒரு லவ் மேட்டர்ல மாட்டி, அப்பால நம்ம பாசு ரிப்பு போய் காப்பாத்திகிட்டு இட்டுன்னு வருவாரு டெஸ்மாண்ட - இது என்னா கதெ?

    6வது - பிளைட் 731

    ReplyDelete
    Replies
    1. டாங்சு அண்ணாத்த...

      அப்ப ரண்டாதும், அஞ்சாதும் ?

      Delete
    2. அப்ப ரண்டாதும், அஞ்சாதும் ?...........சாய்ஸ்ல உட வேண்டியது தான்

      Delete
    3. ஜாலி ஜம்ப்பர் :

      மிஸ்டர் ஜாலி ஜம்பருக்கு, நீங்கள் இங்கு பதிவிட்டிற்கும் புதிர் கேள்விகளுக்கு கடந்த 30 மணி நேரமாக யாரும் சரியான விடை அளிக்கவில்லை என்ற ஒரே காரணத்தினால் தான் நான் இங்கு விடையளிக்க நேர்ந்தது. எனவே கிடைக்கும் பரிசு எதுவாக இருந்தாலும் அல்லது கொடுக்க நினைக்கும் பரிசு எதுவாக இருந்தாலும் அதை உங்களுக்கே அர்ப்பணிக்கிறேன். நன்றி.

      1.//மொதல்ல - தலவாங்கி கொரங்கு// சரியான விடை = King Kong

      2.//ரெண்டாவது - அவனுக்கு காதும் கேக்காது, வாயும் பேசாது... ஆனா பார்ட்டி படா கில்லாடி... யார்னா பேசுனா அவங்க ஒதடு அசயறத வச்சே, பார்ட்டி பலானது பேசுதுன்னு கண்டுபுட்ச்சு ஆள போட்டுறுவான்// சரியான விடை = வாலி - வில்லனாக வரும் அண்ணன் அஜித்திற்கு காதும் கேட்காது வாயும் பேசாது. ஆனால் படா கில்லாடி. அவங்க உதடு அசைவதை வைத்தே அடுத்தவர் பேசுவதை கண்டுப் பிடித்து விடுவான்.

      3.//எம்மாம்பெரிய டிரக் ஒண்ண எட்த்துக்கின்னு ரெண்டு தோஸ்த்துங்க, அவிங்களோட இன்னோர் தோஸ்த்த போட்டுதள்னவன போடறதுக்கு கௌம்புவாங்க - இது என்னா கதெ?// சரியான விடை = இணைந்த கரங்கள் - ராம்கியும், அருண் பாண்டியனும் ஒருடேங்கர் லாரியில் பாகிஸ்தான் சென்று பழி வாங்குவார்கள்.

      4.//நம்ம கிழவாடி கார்ரசனோட கயந்த காலம்பா// சரியான விடை = சேரனின் - ஆட்டோகிராப்

      5.//நம்ம பட்லர் டெஸ்மாண்டு புத்சா ஒரு லவ் மேட்டர்ல மாட்டி, அப்பால நம்ம பாசு ரிப்பு போய் காப்பாத்திகிட்டு இட்டுன்னு வருவாரு டெஸ்மாண்ட - இது என்னா கதெ?// சரியான விடை = காதல் கோட்டை - ஒருவர் முகம் ஒருவருக்கு தெரியாமல் காதலிப்பார்கள். பார்க்காமலே காதல்.


      selvam abirami : மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி நண்பரே !

      Delete
    4. 5 - காசில்லா கோடீஸ்வரன்? ?

      Delete
  55. ஊரிலிருந்து இன்றுதான் திரும்பினேன்.வெனிஸ், பைங்கிளிப் புத்தகங்களை இப்போதுதான் பார்க்கிறேன். இனிதான் படிக்கவேண்டும். அட்டைப்படங்கள் இரண்டும் இந்த தளத்தில் பார்த்த இமேஜ்களை விடவும் அருமை! குறிப்பாக இங்கு பார்க்கையில் பைங்கிளி ரொம்ப ப்ளைனாக இருப்பதாக தோன்றிற்று. அது தவறு, நேரில் வியப்பாக இருந்தது.

    இந்தப் பதிவின் அப்டேட்ஸ் தொடரும் இதழ்களுக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. அதிலும் விரியனின் விரோதி அட்டைப்படம் ஒரு கிளாசிகல் தரம் எனலாம். என் பர்சனல் ஒபீனியனில் தொடரும் ஒரு தேடல் ஜோன்ஸ் அட்டைப்படம் போன்ற மிகச்சிலவற்றுள் இந்த அட்டைக்கும் இடமுண்டு. செண்டர் செய்யப்பட்ட தலைப்பு, பொருத்தமான ஃபாண்ட். கேரக்டரின் துல்லியம், ஃபீல், பின்புல வண்ணம், வேறு கவனச்சிதறலின்மை என ஒரு முழுமையான அட்டை.

    டாப் 6 சொல்லுமளவுக்கு நான் சிறுவயதில் காமிக்ஸ் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றவனில்லை, ஆகவே எஸ்கேப்!!

    என்னதான் சமாளிபிகேஷன்ஸ் சொன்னாலும், பின்னூட்டமிட நிறைய ஆர்வமும், நேரமும் வேண்டும். இங்கே வசதியாக சில விவாதங்களும் ஓடவேண்டும். இல்லையெனில் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கத் தோன்றுகிறது. ஆகவே பின்னூட்டக்குறைவை ஒரு எதிர்மறையாக தாங்கள் எண்ணிக்கொள்ளவே வேண்டாம். வழக்கம் போல நம் காமிக்ஸ் எழுச்சியை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லுங்கள். எப்போதும் உடனிருப்போம்.

    நேரமின்மை ஒருபுறமிருப்பினும் எனது பின்னூட்ட ஆர்வக்குறைக்கு ஒரு காரணமும் உண்டு. இதனாலெல்லாம் என் காமிக்ஸ் ஆர்வம் குறையப்போவதில்லை எனினும் ஒரு சிறு மனக்குறை.. அதுதான், அதேதான்.. இந்த 60 ரூ ஸ்டேப்ளர் பின் அடித்த இதழ்களைப் பார்த்தாலே ‘அட போங்கப்பா’ எனும் எண்ணம் தோன்றிவிடுகிறது. வியாபார நோக்கில் அந்த இதழ்களே சாஸ்வதமாகிவிடப்போகின்றன என்ற உண்மையும் ஒரு சிறு சலிப்பை ஏற்படுத்திவிட்டது. அதுதான் காரணம். என் பெயர் லார்கோ, மரண நகரம் மிசௌரி தடிமன்கள் மனதிலாடுகின்றன.

    சரி, அதை விடுங்கள்!!

    காமிக்ஸ் பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி கேளுங்கள்.

    http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140530_new_amazon.shtml

    ReplyDelete
  56. நண்பர் முரளிதரன் அவர்களை ஆரம்பகால வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். 2012ல் நமது கம்பேக் ஸ்பெஷல் வந்தபோது இவர்தான் புதிய தலைமுறை டீவியில் முதல் பேட்டியை வெளியிட்டவர். இவர் தற்போது பி.பி.சி. தமிழில் பணிபுரிகிறார்.

    இவரது பேட்டியின் கட்டுரை எழுத்தாக்கம் ( நண்பர் லக்கி லிமட், கிருஷ்ணா வா.வெ & ஜான் சைமன் ஆகியோரது கருத்துக்களை உள்ளடக்கியது இந்த பேட்டி, ஆனால் எழுத்துருவில் இவர்களது பேட்டியின் சாரம்சம் சேர்க்கப்படவில்லை).

    தமிழகத்தில் காமிக்ஸ் பிரியர்களுக்கு அடித்த யோகம்: 10 மடங்கு மலிவாக கிடைத்த காமிக்ஸ் புத்தகங்கள்

    இணைய தளங்களில் பொருட்களை வாங்கினால் விலைகள் குறைவாக இருப்பது வழக்கம்தான். ஆனால், புத்தகங்களை விற்பனை செய்யும் ஒரு இணையதளம் நம்ப முடியாத, மிக மலிவான விலையில் காமிக்ஸ் புத்தகங்களை விற்பனைசெய்து, வாசகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய சம்பவம் இந்தியாவில் நடந்திருக்கிறது.

    புத்தகங்களையும் பிற பொருட்களையும் விற்கும் சர்வதேச இணையதளமான அமேசான் இந்தியாவுக்கென பிரத்தியேகமான இணைய தளம் ஒன்றை நடத்திவருகிறது.

    கடந்த மே 19ஆம் தேதி இரவு 9 மணியளவில் இந்த இணைய தளத்தைப் பார்த்த காமிக்ஸ் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. உலகப் புகழ் பெற்ற ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் வரிசையின் ஒட்டுமொத்த புத்தகங்களும் அதாவது 34 புத்தகங்களும் வெறும் 999 ரூபாய்க்கு கிடைக்கும் என இணைய தளம் கூறியது.

    ஒரு புத்தகமே 400 ரூபாய்க்கு மேல் விற்கும் நிலையில் 34 புத்தகங்களும் 999 ரூபாய்க்குக் கிடைப்பதில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். முகநூலில் காமிக்ஸிற்கென இருக்கும் குழுக்களின் மூலம் தகவல் பரவி, தமிழ்நாட்டில் பலர் இந்தப் புத்தகத்தை ஆர்டர் செய்தனர்.

    இப்படி புத்தகங்களை வாங்க பணம் செலுத்திய சிலருக்கு புத்தகங்களை அனுப்பினாலும் வேறு சிலருக்கு, தவறுதலாக இவ்வளவு குறைவான விலையை இணையதளத்தில் போட்டுவிட்டதாகவும், பணத்தைத் திருப்பி தந்துவிடுவதாகவும் அமேசான் இணைய தளம் மின்னஞ்சல் அனுப்பியது. இருந்தபோதும் அவர்களுக்கும் பிறகு புத்தகத்தை அனுப்பி வைத்தது அந்த இணையதளம்.

    இணையதளத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்
    மே 19ஆம் தேதியன்று வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே இந்த விலை இருந்தது. பின்னர், அந்த தவறு சரிசெய்யப்பட்டது. புத்தகங்களின் விலை 9,500 ரூபாய் என இணையதளம் குறிப்பிட்டது.
    ஆனால், மறுபடியும் அடுத்த நாள் அதாவது மே 20ஆம் தேதியன்றும் இரவு 9 மணிக்கு மீண்டும் 999 ரூபாயைக் குறிப்பிட்டது இணைய தளம். அப்போதும் சிலர் அந்தப் புத்தகங்களை ஆர்டர் செய்தனர். ஆனால், இந்த இரண்டு வாய்ப்புகளையுமே பெரும்பாலான காமிக்ஸ் ரசிகர்கள் தவறவிட்டுவிட்டனர். அவர்கள் இப்போது மீண்டும் அந்த இணையதளத்தையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் 80களில் காமிக்ஸ் படிக்கும் பழக்கம் உச்சகட்டத்தில் இருந்தது. 90களின் இறுதியில் வீழ்ச்சியைச் சந்தித்த தமிழ் காமிக்ஸ்கள் தற்போது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளன.
    பெரும்பாலும் ஐரோப்பிய காமிக்ஸ்கள் மொழியாக்கம் செய்யப்பட்டே தமிழில் வெளியாகின்றன. இருந்தபோதும். தமிழில் அந்த காமிக்ஸ்களைப் படிக்க ஆரம்பித்த வாசகர்கள், அதன் ஆங்கிலப் பதிப்புகளையும் தேடிச் செல்கின்றனர்.

    தமிழில் வெளிவராத ஆங்கில காமிக்ஸ்களையும் தேடி வாங்குகின்றனர். அப்படிப்பட்ட ஒரு தேடலில்தான் அவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. என்னதான் இருந்தாலும் காமிக்ஸ்

      ஆர்வம் கரை புரண்டு ஓடினாலும் பலர் ஏற்கெனவே சொன்னது போல்

      தாய் மொழியில் படிப்பது போல ஆத்மார்த்தமான சுகானுபவம் பிற

      மொழியில் படிக்கும்போது கிடைப்பதில்லை .

      Delete
    2. எதிர்பாராமல் அமேசான் கொடுத்த பரிசு.
      எங்களது குரல்களை பதிவு செய்து வெளியிட்டதற்காக நன்றி திரு முரளிதரன்.

      Delete
  57. ///பின்னூட்டமிட நிறைய ஆர்வமும், நேரமும் வேண்டும். இங்கே வசதியாக சில விவாதங்களும் ஓடவேண்டும். இல்லையெனில் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கத் தோன்றுகிறது. ஆகவே பின்னூட்டக்குறைவை ஒரு எதிர்மறையாக தாங்கள் எண்ணிக்கொள்ளவே வேண்டாம்.///
    +1 This is true....

    ReplyDelete
  58. எனது டாப் 6 தேர்வுகள் : சதுரங்க வெறியன் (spider), நீதிகாவலன் spider, பரலோகத்திற்கு ஒரு பாலம், தணியாத தணல் series, அதிரடி படை , கடத்தல் குமிழிகள்

    ReplyDelete
  59. ஸ்பைடரின் கதைகளே பத்துக்கு மேல் தேறும் ! என்ன செய்யலாம் !

    ReplyDelete
    Replies
    1. on the டூ திருச்செந்தூர்ல (பஸ்ல ஏறி 50 நிமிஷத்துல) அதுக்குள்ள என்ன திருச்செந்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் :-)

      இது எல்லாம் கள்ளாட்டம் :-)

      பாஸ் நம்ப ஊரு பக்கம் கொஞ்சம் கவனமா இருங்க.. பயபுள்ளைங்க ரொம்ப கோபகாரன்க..

      Delete
  60. My top 6

    #1 Maranamul -Tex
    #3 sirithu kolla vendum-Bat Man
    #3 Soolthnuku oru saval-marthi i.manthiri
    #4 Sarthan Vettai-Tex
    #5 Nizhal 1 Nijam2
    #6 Irathapadalam-2013

    ReplyDelete
  61. நிறைய நண்பர்கள் இங்கே தங்களது லயன் காமிக்ஸ் டாப் 6 இதழ்களை தெரிவிக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சி.

    ஆனால் அவற்றுள் பல திகில் காமிக்ஸ், மினி லயனில் வெளிவந்தவையாக இருப்பதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. உதாரணமாக பேட்மேன் கதைகள் (இங்கே நமது வாசகர்கள் குறிப்பிடுபவை) அனைத்துமே திகில் காமிக்ஸில் வெளி வந்தவை.

    கொஞ்சம் கவனியுங்கள் தோழர்களே, ஏனென்றால் வரலாறு மிகவும் முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. டியர் விஸ்வா!!!

      திகில்,மினி லயன்,ஜூனியர் லயன் மூன்றுமே அல்பாயிஸில் பூட்ட கேஸ் என்பதால் அந்த இதழ்களில் வெளிவந்த கதைகளையும் லயன் வகையறா பட்டியலில் சேர்ப்பதில் அடியேனால் தவறொன்றும் காணமுடியவில்லை. அந்த மூன்று இதழ்களையும் மறக்க இது ஒன்றுதான் வழி!!!

      "பழைய திகில்,மினி&ஜூனியர் லயன் காமிக்ஸ்களை படிக்கும்போதெல்லாம் துக்கம் தொண்டையை அடைக்கிறது.சான்ஸே இல்லை...என்ன அட்டகாசமான கதைகள்!!!"

      Delete
    2. //"பழைய திகில்,மினி&ஜூனியர் லயன் காமிக்ஸ்களை படிக்கும்போதெல்லாம் துக்கம் தொண்டையை அடைக்கிறது.சான்ஸே இல்லை...என்ன அட்டகாசமான கதைகள்!!!//
      Same blood....

      Delete
  62. //துக்கம் தொண்டையை அடைக்கிறது.//

    என்ன கொடுமை இது? வி,மு.வுக்கு நடந்த சம்பவங்களுக்கு பிறகும் நீங்கள் இந்த வார்த்தை பிரவாகத்தை உபயோகப்படுத்துவது ஆச்சர்யமூட்டுகிறது.

    ஒரே நிறுவனம் வெளியிட்ட, ஒரே எடிட்டர் தயாரித்த இதழ்கள் என்பதாலேயே இப்படி பேசுகிறோம். ஆனாலும் ஒவ்வொரு Brandன் தனித்துவத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதற்க்காகத்தான் கடைசி வரியில்

    ”வரலாறு மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளென்.

    பெறும்பான்மையான வாசகர்கள் இதையெல்லாம் மனதில்கொண்டு ஒரு லிஸ்ட் தயாரித்து அதை எடிட்டருக்கு மேக்னம் ஸ்ப்ஷல் இத்ழுக்காக அனுப்பி, எடிட்டரும் அதை படித்து பின்னர் தனியாக ஒரு விளக்கம் கொடுக்க வேண்டாம் அல்லவா?

    கொஞ்சம் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருந்தாலும் நீங்கள் விடமாட்டேன் என்கிறீர்களே அண்ணா?

    ReplyDelete
    Replies
    1. வி,மு என்றால் என்ன சார் ?

      Delete
    2. செல்வம் அபிராமி: வி.மு = விநாயக முருகன் (எழுத்தாளர்).

      இந்த மே மாதத்திய உயிர்மை இதழிலும் இவரது கதை வெளியாகி இருக்கிறது.

      Delete
    3. தகவலுக்கு நன்றி சார் . ஆர்வ மிகுதியால்

      தனிப்பட்ட விஷயத்தில் தலையிட்டு

      இருந்தால் மன்னிக்கவும் சார்

      Delete
    4. செல்வம் அபிராமி: முதலில் சார் என்பதை கட் செய்யுங்கள் காமிரேட்.

      இதில் எங்கே தனிப்பட்ட விஷயம் இருக்கிறது என்று யோசிக்க வைத்து விட்டீர்களே?

      இவர் (வி,மு) எழுதிய நாவலில் (ராஜிவ் காந்தி சாலை) இந்த ”துக்கம் தொண்டையை அடைக்கிறது” என்ற சொற்றொடரை பயன்படுத்த, ஒரு முன்னணி எழுத்தாளர் வி.மு.வை செமையாக கலாய்த்து விட்டார்.

      அதனால்தான் இந்த ”துக்கம் தொண்டையை அடைக்கிறது” என்ற சொற்றொடரை எங்கே பார்த்தாலும் உடனடியாக கமெண்ட் இட தோணுகிறது.

      Delete
    5. ok! Priyatel !!

      ஒரு எளிமையான விஷயத்தை தவறாக

      புரிந்து கொண்டோமே என நினைக்கையில். உண்மையாகவே

      எனக்கு துக்கம் தொண்டையை. அடைக்கிறது . ஹா! ஹா!.........

      Delete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. எனது டாப்-6 லயன் கதைகள்  :

    1. இரத்தப்படலம் - 'காமிக்ஸ் உலகின் இதிகாசம்' என்றே இதை நான் நினைப்பதால்!

    2. பழிவாங்கும் புயல் - செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அமெரிக்க ராணுவத்தையே தன் மதிநுட்பம் மிகுந்த போர் தந்திரங்களால் மண்டியிட வைத்த ஒரு அற்புதமான டெக்ஸ் வில்லர் சாகஸம் என்பதால்!

    3. கார்சனின் கடந்தகாலம் - அழுத்தமான கதைக் களம் கொண்ட ஒரு மெல்லிய சோகம் இழையோடும் காவியம் என்பதால்!

    4. தலைவாங்கிக் குரங்கு - கெளபாய் கதைகளின் மீது இப்போதுவரை குறையாத காதல் ஏற்படக் காரணமான, நான் படித்த முதல் கெளபாய் இதழ் என்பதால்!

    5. மனித எரிமலை - காதலியின் அன்பையும், நாஜிக்களால் தொலைந்துபோன தன் வாழ்க்கையையும் வீதிகளில் தேடி அலையும் ஒரு பரிதாப ஜீவனின் (இரும்புக்கை நார்மன்) கதை என்பதால்!

    6. திக்குத் தெரியாத தீவில் - ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகத் தங்கள் உயிர் பலமுறை நிஜமாகவே பணயம் வைக்கப்படுவதை அறிந்திராத 'இரட்டை வேட்டையர்களின்' பரபரப்பான சாகஸப் பயணம் என்பதால்!

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் நமக்கு கீதை ரத்தபடலம் தான் ....................

      ரத்தபடலம் மீது ஆணையாக..................................நான் சொல்லுவதெல்லாம் ..............

      Delete
    2. . இரத்தப்படலம் - 'காமிக்ஸ் உலகின் இதிகாசம்' its true sir. h r u.?

      Delete
  65. லயனில் எனது டாப் 6 இதழ்கள் :

    1. இரத்தப் படலம் complete collection : உலகளவில் பல மொழிகளில் வெளிவந்திருந்தாலும், தமிழில் மட்டும் தான் முழு தொகுப்பு வந்திருக்கிறது (Google ல் தேடி உறுதி செய்தாகிவிட்டது). ஏற்கனவே ஒவ்வொரு கதையும் ஒரு இடியாப்பச் சிக்கல், அதிலும் முழு தொகுப்பு எனும் போது கேட்கவே வேண்டாம். நாம் இதை படிப்பதற்கே இரண்டு மூன்று நாட்கள் ஆகும் போது, இதை தயாரிப்பதற்கு எவ்வளவு உழைப்பு தேவை பட்டிருக்கும். நினைக்கவே மிகவும் மலைப்பாக இருக்கிறது. அதற்காகவே எடிட்டர் & டீமுக்கு ஒரு ராயல் salute .

    2. கார்சனின் கடந்த காலம் : அதுவரை கார்சன் என்பவர் டெக்ஸ் வில்லரின் தோழன் என்ற இமேஜ் உடன் பார்த்த வந்த நான்(ம்), இந்தக் கதையில் தான் நமது வெள்ளி முடியாரின் கடந்த காலத்தை அறிய முடிந்தது. இக்கதையில் வரும் அவரது மென்மையான காதல் மற்றும் அதனால் ஏற்படும் சம்பவங்கள் என படிப்போரை கதையுடன் மிகவும் ஒன்றச் செய்துவிட்டது.
    இதுவரை இதுபோல் காதல் + action கதை வந்ததில்லை என்றே சொல்லுவேன்.

    3. கோடை மலர் 86 : முதன் முறையாக வந்த நமது லயன் கதம்ப ஸ்பெஷல். அதுவரை எந்த ஒரு காமிக்ஸ் நிறுவனமும் இதுபோல் வெளியிட்டதில்லை. இந்த புத்தகத்திற்கு பல ஸ்பெஷல்கள் உண்டு.
    முதன் முறையாக 5 ரூபாய்க்கு தடிமான ஒரு புத்தகம்.
    முதன் முறையாக முழு வண்ணத்தில் நமது லயனில் சில பக்கங்கள் (ஈகில் மேன் கதை)
    முதன் முறையாக புத்தகத்துடன் இலவச தாய விளையாட்டு.
    இதுபோல் பல இதழ்கள் பிற்பாடு வந்தாலும், முதல் முறையாக இந்த ஸ்டைலில் வந்த இந்த புத்தகத்தை என்னால் மறக்க முடியாது.

    4. தலை வாங்கி குரங்கு : நமது டெக்ஸ் வில்லரின் முதல் சாகசம். முதலில் கொலைகாரக் குரங்கு என்று விளம்பர படுத்தப்பட்டு பின்னர் தலைவாங்கிக் குரங்காக வெளிவந்தது. நான் காமிக்ஸ் படித்தாலே வெறுப்பாய் பார்க்கும் என் தந்தைக்கு, இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்ததால் நான் அந்த தீபாவளி திருநாளில் அவருக்கு படித்துக் காட்டியது நினைவுக்கு வருகிறது.

    5. லயன் சூப்பர் ஸ்பெஷல் : இந்த புத்தகத்திற்கான விளம்பரம் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. 12 சூப்பர் கதைகள், ஒரு காமடி (லக்கி லுக்) ஒரு சோகம் (XIII ) ஒரு suspense (ரிப்போர்ட்டர் ஜானி) என பல சுவைகள். அதிலும், இதில் இடம் பெற்ற பொடியன் பில்லி எனது ஆல் டைம் favorite . ஒரு முறை இந்தப் புத்தகத்தை தவற விட்டு, இரண்டாவது முறையாக பாண்டிச் சேரி காமிக்ஸ் agent மூலமாக கிடைத்தது. பொக்கிஷம்.

    6. கொலைப்படை : ஸ்பைடர் கதைகளில் பெரிய சைஸ்சில் வந்த இரு வண்ண இதழ். இதில் வில்லன் பலவித உருவங்களில் ரோபோக்களை உருவாக்கி அதை ஸ்பைடர் மேல் ஏவி விடுவான். அதை ஸ்பைடர் முறியடிக்கும் விதம் விறுவிறுப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.

    ReplyDelete
  66. Top six enpathai maru pathippu ena ninithuviten.itho enathu top six 1.thalaivangi kurangu texwilleri nan muthan muthalaga nan parthathu inru enathu top hero tex matume.
    2.pavala silai marmum.iraval kettu kenji koothadi padiththu saram sararamaga varum ehirigalai tex & co salaikamal potuthaluvathu spl. Hadan,hadanin kakam,malaisingam,villanin maruman kogar,kasino sil ipadi niraya solalam
    3.iratthapadalam.
    4.naliravu vettai- tex sol
    5.koduravanathil tex
    6.kanamal pona kadal -

    ReplyDelete
  67. எனது டாப்-6 லயன் கதைகள் :
    1. இரத்தப்படலம்
    2. பழிவாங்கும் புயல்
    3. கார்சனின் கடந்தகாலம்
    4. ட்ராகன் நகரம்
    5. தீபாவளி மலர் 1986
    6. கோடை மலர் 1987

    ReplyDelete
  68. நானு எல்லா காமிக்ஸ் படிக்குது ...........புடிக்குது
    1.பழிவாங்கும் பொம்மை
    2.கழுகுவேட்டை
    3.சிறுபிள்ளை விளையாட்டு
    4..ரத்தபடலம்
    5 .தங்க கல்லறை
    6 .சொர்கத்தின் சாவி .............எல்லாம் பாக்கெட் சைஸ்

    ReplyDelete
    Replies
    1. மந்திரியாரே! தங்க கல்லறை முத்து

      வெளியீடு அல்லவா ?

      Delete
  69. பிடிச்ச பிராணிகள்

    ரிண்டின் கேன்

    ஜாலி ஜம்பர்

    டைனமைட்

    டெவில்

    ReplyDelete
  70. பிடிச்ச ACCESSORIES

    ஸ்பைடர்
    வலை துப்பாக்கி
    வாயு துப்பாக்கி
    முடக்க துப்பாக்கி
    பாரிச வாயு துப்பாக்கி
    தூக்க துப்பாக்கி
    சிரிப்பு துப்பாக்கி
    BULLET REVERSE துப்பாக்கி
    ஹெலிகார்
    செர்வோ பாம்

    மாயாவி
    விரல் துப்பாக்கி

    இரும்புக்கை வில்சன்
    ரம்பம்

    லாரென்ஸ்
    பொய் பல் பாம்

    ஜானி நீரோ
    கண்ணாடி அண்ட் ஸ்டெல்லா (ஹி ஹி )

    ஆர்ச்சியின்
    மார்பு அறை

    கார்சன்
    தாடி

    ஜானி
    புள்ளி வச்ச கோட்

    மந்திரியின்
    கூர் தொப்பி

    மாடஸ்டி.............
    ஹி ..........ஹி..........
    ஹலோ ......காங்கோ பாஸ்

    வில்லியின்
    கத்தி

    அலிபாபா
    தலை பாகை

    லக்கி லுக்
    வாய் குச்சி.....

    டெக்ஸ் வில்லேர் வேண்டும் என்றே விடப்பட்டுள்ளார்







    ReplyDelete
    Replies
    1. :D
      கலீபாவின் சிம்மாசனத்தை விட்டுட்டீங்களே மந்திரியாரே?! வாழ்நாள் இலட்சியத்தை மறக்கலாமா? ;)

      Delete
    2. ஹா! ஹா!.....வாஸ்தவம்தான் .இதற்கு தான் எடுத்து கொடுக்க ஒரு பொடியாள்
      வைத்து கொள்ள வேண்டும் .

      Delete
  71. எனக்கு பிடித்த 6 இதழ்கள் .

    1.இரத்த படலம் -பாகம் 6 .(தனி இதழாக )

    2.மரண முள் (டெக்ஸ் )

    3.இருளின் மைந்தர்கள் .(டெக்ஸ் )

    4.சூ-மந்திரக்காளி (லக்கி லூக் )

    5.பறக்கும் பரலோகம் (மாடஸ்டி )

    6.கனவே கொல்லாதே .

    ReplyDelete
  72. Tex willer manjal satta,blue pant,brown shoe, capirandu pistal,thevaipattal rifile.nanbare tex vidappadavillai

    ReplyDelete
  73. அவசரத்தில் படிப்போர் top 6 favorites என்பதை மறுபதிப்பு என நினைத்து விடுகின்றனர் (நான் மற்றும் நண்பர் ஶ்ரீதர்

    ஶ்ரீதர் srithar போல .)

    முக்கியமான தருணத்தில் வெளியாகும்

    சிறப்பு இதழ்களில் பதிப்பிக்கப்படும்

    தரவு வரிசை பட்டியல் மட்டுமே அது

    என்பதை இதுவரை அறியாதவர் இதனால்

    அறிக .

    ReplyDelete
  74. chennai stallkalil books kidaikka ethavathu yerpadu seyyalame vijayan sir? Ingu oru periya rasigar koottame ullathu thangalum arinthathuthane?!!!!

    ReplyDelete
  75. chennai stallkalil books kidaikka ethavathu yerpadu seyyalame vijayan sir? Ingu oru periya rasigar koottame ullathu thangalum arinthathuthane?!!!!

    ReplyDelete
  76. ஒரு பைங்கிளிப் படலம் ( suspense thriller ) (1)

    முதல் பாதியை விட இரண்டாவது பாதி மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. சிக்பில் கதைகளில் இது ஒரு மாறுபட்ட பாணியிலான கதை. முதல் பக்கத்தில் தொடங்கும் suspense கடைசி பக்கத்தில் முடியும் வரை, சற்றும் நீர்த்துப் போகாமல் கதையோட்டத்தில் அழகாய் நீந்தி வருவது நாம் இதுவரை பார்க்காத ஒரு comedy thriller.

    அருமையான plot ; கதையின் தொடக்கம் முதலே தெளிவானதொரு கரு கொண்டு, சிக்கலின்றி சீரான வேகத்தில் பயணிக்கும் கதை தனது இரண்டாம் பாதியில், அடுத்து என்ன என்ற ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. வில்லனின் முகம் மட்டும் தான் பரிதாபகரமாக இருக்கிறதே தவிர அவனின் பழிவாங்கும் செயல்கள் அத்தனையும் கர்ண கொடூரமானவை. அதற்கான காரணமும் ; அதற்காக அவன் செலவிட்ட பணமும்; கற்பனைக்கு மிஞ்சிய திட்டங்களும் ; அதை நடைமுறை படுத்தும் தெளிவான சிந்தனையையும் வைத்துப் பார்க்கும் போது - நிச்சயமாக இது ஒரு சிக்பில் கதையே அல்ல என்று கூறும்படி அமைந்திருக்கிறது.

    என்னடா இது காமெடி கதையை இந்த மரமண்டை suspense thriller என்று கூறுகிறாரே என்று நினைக்க வேண்டாம் ; suspense thriller கதையை தான் நாம் காமெடி கலாட்டாவாக படித்து முடித்து விட்டு, கதையில் தொய்வும், தேக்கமும் உள்ளதாக வருத்தப்படுகிறமோ என்று வருத்தப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பைங்கிளிப் படலம் ( suspense thriller ) (2)

      கதையில் வரும் வசனங்கள் அனைத்துமே நக்கல் வகையை சார்ந்தவையாக இருக்கும் போது அதை நய்யாண்டியாக பாவித்து படித்தால் நிச்சயமாக இந்தக் கதை நமக்கு ஏமாற்றத்தையே தரும். ஒருவேளை வில்லனின் முகத்தை மட்டும் இவ்வளவு அகோரமாக அமைக்காமல் இருந்திருந்தால், இடையிடையே தடைப்படும் நம் உணர்ச்சி சிதறல்கள் காணாமல் போயிருக்கும் ; வில்லனின் அதிமேதாவித்தனமும் அளவில்லாமல் பிரகாசித்திருக்கும். அதுபோக அந்தப் ப்யூஸ் பற்றவைக்கும் வைபோகத்தில் வில்லன் அடிக்கும் கூத்தும் ; நெருப்புக்காக தீக்குச்சியைத் தேடும் காட்சிகளும் ; அதில் தென்படும் யதார்த்தமும் கதையின் highlight !

      ஒரு சமயம் இங்கு இடப்பட்ட பழைய பதிவுகளில் 'சுய எள்ளல்' பற்றி அடிக்கடி படிக்க நேர்ந்தது. அந்த பதிவுகளை படிக்க நேர்ந்த யாராயிருந்தாலும் படித்த கணத்தில், தனக்கு அந்த தகுதி இல்லையே என்று மிகவும் வருத்தம் அடைந்திருப்பார்கள். ஏனெனில் சுய எள்ளல் என்பது எவருக்கும் எளிதில் எட்டாத ஒன்று ; தவறி கைவரப்பெற்றால் அவர் வலைஉலகம் தனை சுயமாக ஆளும் தகுதி படைத்தவராவார் என்றும், இன்னும் கொஞ்சம் ஆஹா ஓஹோ என்றும் புகழப்பட்டிருந்தது. நான் கூட அன்று கொஞ்சம் அசந்து தான் போனேன். சுய எள்ளல் செய்பவருக்கு பேறும் ; சுய எள்ளலை கேட்பவருக்கு பேரும் ஒருங்கே கிடைக்கச் செய்யும் அற்புதமான கலை என்று ;)

      ஆனால் இந்த கதையில் டாக்புல் பேசும் வசனங்கள் பலவும் சுய எள்ளல் வகையைச் சார்ந்தது எனும் போது சுய எள்ளலின் மறு பரிமாணம் இன்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதன் உண்மையான பரிமாணத்தை குள்ளன் நமக்கு தெளிவு படுத்த தவறவேயில்லை. சபாஷ்டா குள்ளா ;)

      அழகு ; நளினம் ; அதிரடி ; வீரம் ; மதிநுட்பம் ; கருணை ; பாசம் ; கடமை ; சாதுர்யம் ; வேகம் ; நன்றி ; மன்னிப்பு ; அடைக்கலம் ; பெரும் செல்வம் என அனைத்தும் ஒருங்கே நிறைந்த ஹீரோயினி தான் 'ரோக்ஸானா' . கதையை தொய்வில்லாமல் நகர்த்திச் செல்வதோடு நம் மனதிலும் இடம் பிடிக்கிறார். நம் பெருமைக்குரிய அகில உலக மெகா ஸ்டார் கேப்டன் டைகரின் குணங்கள் அத்தனையும் இந்தப் பெண்ணின் குணத்தோடு ஒத்துப்போகிறது. யார் யாரையோ நம்பி மோசம் போகும் டைகருக்கு ரோக்ஸானா தான் சரியான ஜோடியாக பரிமளிக்க முடியும் என்பது டைகர் ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக இருக்க முடியுமா என்பது போகப் போகத் தெரியும் என்றே தோன்றுகிறது !

      முடிந்தது :)

      Delete
  77. வேட்டை நகரம் வெனிஸ் மற்றும் ஒரு பைங்கிளி படலம் இரண்டும் படித்தாகிவிட்டது.

    லார்கோ : வழமை போல கலக்கல்..ஒரு சில வருத்தங்கள் சில நீண்ட வசனங்கள்,எழுத்துப்பிழை,மற்றும் சில அச்சு தவறுகள்.

    கிட் ஆர்டின் : ஒரு சில இடங்களில் பலமாக சிரிப்பு மூட்டுகிறார். அதுவும் ஷெரிப் மற்றும் கிட்டின் வழியல்கள் பக்கா.

    ஒரு சிறு விண்ணப்பம் ஒவ்வொரு முறை நீங்கள் எழுத ஆரம்பிக்கும் போதும் நாம் அதிகமாக எழுதுகிரோம் நாங்கள் போர் என நினைப்போம் என்ற எண்ணத்தை விடுங்கள். அதை பல பதிவுகள் மற்றும் ஹாட்லயனில் எழுதிவிட்டீர்கள். அதனை முற்றிலுமாக தவிர்க்கவும்.

    இருக்கும் ப்ரொஜெக்டில் ப்ளாக்குகளை ப்ளாக் செய்ததால் முன்பு போல படிக்க முடியவில்லை. சீக்கிரம் வேறு ப்ராஜெக்ட் புடிக்கணும்.

    பிடித்த கதைகள்

    1. டெக்ஸின் அனைத்து கதைகளும். (தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை.)
    2. நான் முதன்முதலாக கடையில் வாங்கிய லயன் செஞ்சுரி ஸ்பெசல்
    3. லயன் டாப் 10 ஸ்பெசல்
    4. ஸ்பைடர் -பழிவாங்கும் பொம்மை,தவளை எதிரி,நீதிக்காவலன் ஸ்பைடர்,சைத்தான் விஞ்ஞானி
    5. லக்கி - ஜெஸ்சி ஜேம்ஸ்,பூம் பூம் படலம்,ஒரு கோச் வண்டியின் கதை
    6. மிஸ்டர் ஜெட்.(மிக மிக விருப்பமான கதை)

    வீரியனின் விரோதி அட்டை படம் மிக அருமை.அடர் பச்சை நிறம் நன்றாக உள்ளது.முன்னால் இருக்கும் மங்கூஸ் மேல் இருக்கும் இரத்தம் சரியாக தெரியவில்லை அவரது உருவம் மட்டும் ஒரிஜினல் போல சற்றே மங்களாக இருந்தால் நான்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  78. 0.92 million reached another 0.08 million to reach million...

    ReplyDelete
  79. 1. பழி வாங்கும் புயல் (tex) - செவிந்தியர்களுக்கு ஆதரவாக மனித நேய உணர்வு மேலோங்க டெக்ஸ் நடத்தும் விறுவிறுப்பான போராட்டம்..
    கிளாசிக் அட்டைப்படம்
    2. ரத்த படலம் (1-18) (XIII)- மிகப்பெரிய எதிர்பார்ப்பு, மிக நீண்ட காத்திருப்பு என அனைத்தையும் சமாளித்திட்ட ஒரு சாதனை இதழ்.
    3. பூம் பூம் படலம் (Lucky luck) - இன்று எந்த அளவு இக்கதை எனக்கு பிடிக்கும் எனத்தெரியவில்லை. ஆனால் வெளிவந்த புதிதில் பல முறை படித்திட்ட ஒரு இதழ்.
    4. லயன் மெகா டிரீம் ஸ்பெஷல் - இந்த இதழ் மூலம் லயனிலும் அண்ணன் டைகர் அட்டகாசம். காற்றில் கரைந்த கூட்டம் கதையில் வரும் கழுகை வீழ்த்தி செவிந்தியர்களில் ஒருவராக டைகர் இடம் பெரும் காட்சி மனதில் நீங்கா இடம் பெற்ற காட்சிகளில் ஒன்று. (ஏறக்குறைய இதே போல் ஒரு காட்சி 'அவதார்' படத்திலும் வரும்)
    5. மரணத்தின் முன்னோடி (1,2,3) (Tex)
    6. லயன் சென்சுரி ஸ்பெஷல்

    ReplyDelete
  80. சார் 200 + வரிசையில் டாப் 6 என்பது உங்களுக்கே சரியாக படுகிறதா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் .அட்லீஸ்ட் டாப் 10 என்றால் கூட பரவாயில்லை .சரி தாங்கள் வினவி விட்டதால் இதோ என் தேர்வு :

    டெக்ஸ் வில்லர் டாப் 6 : (ஏற்கனவே கூறி விட்டாலும் மீண்டும் ....மன்னிக்க )

    1) ட்ராகன் நகரம் 2)கழுகு வேட்டை 3) பழி வாங்கும் பாவை 4)பழிக்கு பழி 5) ரத்த வெறியர்கள் 6 ) நில் கவனி சுடு

    ஸ்பைடர் டாப் 6 :

    1) சைத்தான் விஞ் யானி 2) மிஸ்டர் மர்மம் 3) நீதி காவலன் ஸ்பைடர் 4) யார் அந்த மினி ஸ்பைடர் 5)மீண்டும் ஸ்பைடர் 6)பாட்டில் பூதம்

    காமெடி டாப் 6 :

    1)பூம் பூம் படலம் 2)கௌ பாய் எக்ஸ்பிரஸ் 3) ஒரு கோச் வண்டியின் கதை 4)பயங்கர பொடியன் ( மலரில் வந்த கதை ) 5) ஜெஸ்லி ஜேம்ஸ் 6 )தாய் இல்லாமல் டால்டன் இல்லை

    மலரில் டாப் 6 :

    1) ரத்த படலம் 2) கோடை மலர் -86 3) லயன் சூப்பர் ஸ்பெஷல் 4) லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷல் 5) லயன் கௌ பாய் ஸ்பெஷல் 6 ) லயன் கம்பேக் ஸ்பெஷல்.....

    பல நாயகர் டாப் 6 :

    1) மனித எரிமலை 2 ) கொலை பசி 3)சதி வலை 4) அதிரடி வீரர் ஹெர்குலஸ் 5)ஆப்பிரிக்க சதி 6) பயங்கர நகரம்

    இவற்றை குலுக்கி இதிலும் டாப் 6 எவை என எனது பார்வையில்
    1) ரத்த படலம்

    2 )ட்ராகன் நகரம்

    3 ) பழி வாங்கும் பாவை

    4 ) லயன் சூப்பர் ஸ்பெஷல்

    5 ) மனித எரிமலை

    6 )லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷல் .

    நன்றி ... ( இவை அனைத்தும் லயன் வெளியீடு மட்டுமே )

    ReplyDelete
  81. நண்பர்கள்

    கோடை மலர்

    தீபாவளி மலர்

    லயன் சூப்பர் ஸ்பெஷல்

    கௌபாய் ஸ்பெஷல் .....,,,,

    என பட்டியல் இடும்போது

    பெரிதான ஏக்க பெருமூச்சு வருவதை

    எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை .

    ReplyDelete
  82. மிஸ்டர் மரமண்டை :

    "மிஸ்டர் ஜாலி ஜம்பருக்கு, நீங்கள் இங்கு பதிவிட்டிற்கும் புதிர் கேள்விகளுக்கு கடந்த 30 மணி நேரமாக யாரும் சரியான விடை அளிக்கவில்லை"

    அக்காங்.. தல... ஆர சொல்லி இன்னாவுது பாரு? நானு ஒரு குத்ரையா போனதாங்காட்டி என்னிய ஒத்தரும்

    கண்டுக்க தாவல... அதே இத்தொட்டு ஜாலி ஜம்பருன்ற பேர்ல நியூஒர்லியன்சுல கீற செம்பட்ட தலகாரிதா நான்னு

    ஸொல்லிட்டுருந்தேன் வச்சுக்க... கண்டி இம்மாந்நேர்த்துக்கு நம்ம வாத்தியாருக்கு கூட பதில் ஸொல்ல ஒரு

    கமெண்டு ஒத்த ஆள் போட்ருக்க மாடடாங்க...

    அல்லாத்தையும் வுடு தல... சகஜம்... ஆனா நம்ம வாத்யாருகூட என்னிய கண்டுக்கலயே தொர...

    இவந்திங்கறது கொல்லு... நாம இன்னாத்துக்கு சொல்லணம் இவனுக்கு பதிலுன்னு நம்ம வாத்தியார் கூட என்னிய

    பகுள்ல மடிச்சு பீடாவா போட்னுடாரே...

    இதுல பிரைசு நீ வாங்கனா இன்னா, நான் வாங்னா இன்னா?

    ஸெரி தல....

    King Kong, வாலி, இணைந்த கரங்கள், ஆட்டோகிராப், காதல் கோட்டை - இதெல்லாம் இன்னாதிது? நக்கலு !!

    இதுக்கல்லாம் உன்க்கு நாஞ்சொல்ல மாட்டேன் பதிலு... எங்க பாசு, ஜாம்பஜார் ஜக்கு - அதான்பா நம்ம வாத்தியாரு

    ஸொல்வாரு கரீக்டா பதிலு.... கண்டி உனக்கு அப்ப கீது எங்கைல

    ReplyDelete
    Replies
    1. சோக ஜம்ப்பர் :

      மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசுவதில் நீங்கள் அந்த ஒரிஜினல் ஜாலி ஜம்பரையே மிஞ்சிட்டீங்க சார். உங்கள் ஆசை புரியுது, அதற்கான மூலக் காரணமும் தெரியுது. அதற்காக நீங்கள் சோக ஜம்பரா பதிவிடுவது மட்டுமே மனதிற்கு சங்கடமாக இருக்கிறது. கவலைப்படாதீங்க சார் உங்களுக்காக சில டிப்ஸ் கீழே ;

      //ஆர சொல்லி இன்னாவுது பாரு? நானு ஒரு குத்ரையா போனதாங்காட்டி என்னிய ஒத்தரும் கண்டுக்க தாவல//
      //இவந்திங்கறது கொல்லு... நாம இன்னாத்துக்கு சொல்லணம் இவனுக்கு பதிலு//

      *மிஸ்டர் ஜம்பர், நீங்கள் யானை இல்லை குதிரை, விழுந்தாலும் உடனே எழுந்து விடுவீர்கள்*
      *இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு*

      உங்கள் பாஸ் ஜாம்பஜார் ஜக்கு வை மிகவும் கேட்டதாக கூறவும். நன்றி.

      Delete
  83. 1) ரத்த படலம்
    2 ) லயன் சூப்பர் ஸ்பெஷல்
    3) லயன் மெகா டிரீம் ஸ்பெஷல்
    4 )கார்சனின் கடந்தகாலம்
    5) திக்குத் தெரியாத தீவில்

    ReplyDelete
  84. எனது TOP6
    மரண மண்டலம் ( மின்னல் படையினர்)
    பிணம் காத்த புதையல்
    பழி வாங்கும் புயல்
    பயங்கர பொடியன்
    எத்தனுக்கு எத்தன்
    ரத்த படலம் 10

    ReplyDelete
  85. நுங்கம்பாக்கம் லேண்ட் மார்க்கை மூடிவிட்டார்கள் , ஸ்பென்ஷர்ஸ் லேண்ட்மார்க் அழுது வடியுது ... சென்னையில் வேறு எங்கப்பா நம்ம லயன் காமிக்ஸ் கிடைக்குது?...

    ReplyDelete
  86. மிஸ்டர் மரமண்டை.......! வரும்போது நம்ம ரமேஷ்குமாரையும் கூடவே அழைச்சிகிட்டு வர வேண்டியது தானே.....?

    ReplyDelete
    Replies
    1. sundaramoorthy j :

      எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை நண்பரே. Notify me மட்டும் கொடுத்து விட்டு கமெண்டுகளை மொபைலில் மட்டுமே படிக்கிறாரா என்றும் புரியவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால், இங்கு என்னுடைய எல்லா கருத்தையும் மறுத்து மாற்றுக் கருத்தை பதிவு செய்பவர் அவர் மட்டும் தான். அப்படிப்பட்ட நாட்டாமையை காணாமல் நானும் சற்று தடுமாறித் தான் பதிவிடுகிறேன்.

      சன்னமாய் ஒரு கேள்வி :) நீங்கள் ஏன் எப்பொழுதும் லேண்ட்மார்க்/ல் மட்டுமே வாங்குகிறீர்கள் ?!

      Delete
    2. அங்கு மட்டும் தான் கொரியர் சார்ஜ் இல்லாமல் வாங்க முடியும்

      Delete
    3. ஆமா ,.... நீங்க எப்படி சில வார்த்தைகளை bold ஆக டைப் செய்கிறீர்கள்?

      Delete
    4. sundaramoorthy j : //ஆமா ,.... நீங்க எப்படி சில வார்த்தைகளை bold ஆக டைப் செய்கிறீர்கள்?//

      இதில் வரும் useful என்ற வார்த்தைக்குப் பதிலாக எந்த வார்த்தை bold ஆக தெரிய வேண்டுமோ அந்த வார்த்தையை டைப் செய்து விடவேண்டும். கமெண்ட் Publish ஆகும்போது bold ஆக மாறிவிடும்.

      //அங்கு மட்டும் தான் கொரியர் சார்ஜ் இல்லாமல் வாங்க முடியும்//

      நமக்கு கூரியர் சார்ஜ் இல்லாமல் கிடைத்தால் நீங்களும் சந்தாதாரர் ஆகிவிடுவீர்கள் அல்லவா ?! உங்களைப் போன்று எண்ணற்ற வாசகர்களும் சாந்தாதாரர்கள் ஆகிவிடுவார்கள் என்ற என் எண்ணம் சரியானதா ?!

      Delete
  87. This comment has been removed by the author.

    ReplyDelete
  88. நில்..கவனி...சுடு ! - அதிர்வெடி சரவெடி (1)

    ஆஹா.. அட்டகாசம். சமீபத்தில் இப்படி ஒரு டெக்ஸ் வில்லர் கதையை படித்ததே இல்லை. துப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் தோட்டா போன்றே கதையும் நகர்கிறது. அதிர்வெடி சரவெடி போல பத்தாயிரம்வாலா சரமாய் முதல் பக்கத்தில் வெடிக்க ஆரம்பித்து இடைவிடாமல் வெடித்து 225 ம் பக்கத்தில் தீப்பொறியும் ; தூசும் ; வெடிப் புகையும் சூழ்ந்து பறந்து நம்மை சற்று அந்தரத்தில் தூக்கியெரிந்துப் போன சூறாவளியாய், புத்தகம் நம் கையை விட்டு கீழிறங்குகிறது.

    (ஒரு நிமிஷம், நண்பர் sundaramoorthy j அவர்களுக்கு பதிலளித்து விட்டு மீண்டும் தொடர்கிறேன்..)

    ReplyDelete
    Replies
    1. நில்..கவனி...சுடு ! - அதிர்வெடி சரவெடி (2)

      டெக்ஸ் லில்லர் கதைகளின் மிகப் பெரிய வெற்றிகளுக்கு காரணமே அக்கதைகளை நாம் படிக்கும் போது நமக்கு கிடைக்கும் அலாதியான உணர்வே. உங்களை எவ்வளவு பெரிய கவலை பீடித்திருந்தாலும் ; உங்களை எவ்வளவு பெரிய பிரச்சனைகள் சூழ்ந்திருந்தாலும் - உங்களால் மட்டும் ஒரு டெக்ஸ் வில்லர் கதையில் ஒன்ற முடிந்தால் - நீங்கள் கதை முடியும் வரை இந்த உலகத்தை மறந்தே விடுவீர்கள். மனம் மட்டுமல்ல உடலும் இலேசாகி இலேசாகி எங்கோ பறப்பது போல் உணர்ந்து இறுதியில் அரிசோனா பாலைவனத்திலும் ; மரணக் கால்வாய்களிலும் ; சுட்டெரிக்கும் மலை முகடுகளிலும் ; புழுதி புயலிலும் உங்களை நீங்களே கண்டெடுப்பீர்கள். அப்படிப்பட்ட மந்திரசக்தி கொண்டதே டெக்ஸ் வில்லர் கதைகள். அதுவும் நில்..கவனி...சுடு ! போன்று அதிரடியான கதை மட்டும் உங்களுக்கு கிடைத்து விட்டால் அந்த நாள் உங்களின் நினைவடுக்கில் பொக்கிஷமாக பாதுகாக்கப்படும்.

      இந்தக் கதையில் கிட் கார்ஸன் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரின் செயலும் நடவடிக்கைகளும் வேகாஸையே அதிரவைப்பதாக இருக்கிறது. எதிரிக்கு எதிரி என அனைவருமே எதிரெதிரே சளைக்காமல் வலம் வந்து கண்ணாமூச்சி ஆடுகிறார்கள். என்னவொரு நெஞ்சழுத்தம் இருதரப்பினருக்கும்?! என்னை உனக்குத் தெரியும் உன்னை எனக்குத் தெரியும் என்ற நிலையிலும் விறுவிறுப்பாக நகரும் சம்பவங்கள் என கூறிக் கொண்டே போகலாம் தான். ஆனால் இது ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தின் வருகை என்பதால் இந்த விமர்சனமே அதிகமாக வாசகர்களுக்கு தெரியலாம். எனவே விமர்சனம் அவ்வளவு தான்.

      ஆனால் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் - கடும் வெப்பத்திலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், புழுதி பாதையில் நீண்ட குதிரை பயணத்திலும் ஏற்படும் நாவறட்சிக்கு விஸ்கி அருந்தினால் தாகம் தணிந்து விடுமா என்ன ?! கடும் கோடையில் நீங்கள் நாவறட்சிக்கு விஸ்கி அருந்தினால் நாக்கு தொங்கித் தானே போகும் ?! பிறகு ஏன் டெக்ஸ் வில்லர் கதைகளில் வரும் அனைவரும் தாகம் தணிக்க ; நாவறட்சி தீர்க்க என விஸ்கியை அளவின்றி ஊற்றிக் கொள்கிறார்கள் ;) (பார்க்க பக்கம் - 107)

      Delete
    2. நீங்கழ் ...ஹிக் !...ஷொல்வது ..ஹிக் !...

      ஜரிதான் .ஹிக் !....ஆனா தோளறே!

      அடிக்கிற வெயிலு ஹிக் !ஹிக் !....

      அரிசோனாவில் மட்டும் தானா?

      Delete
    3. நாவறட்சிக்கு தண்ணீர் பருகாமல்
      விஸ்கி அடிச்சு மட்டையாகி,
      அதனால் வரும் போதைத் தெளிந்தவுடன்
      தலைவலிக்கு தண்ணீரை எடுத்துத்
      தலையில் ஊற்றிக் கொள்ளும்
      ரகத்தைச் சேர்ந்தவர்களோ...?

      (உண்மையில் மது அருந்தினால் நாவறட்சி அதிகமேற்படும், போதையில் அதை உணர முடிவதில்லை. மூளைக்கு செல்லும் இரத்தவோட்டம் குறைவதால், போதை தெளிந்தப் பின் கடுமையான தலைவலி ஏற்படுவது இதனாலே...)

      Delete
    4. ஆசானே எங்களின் சில எண்ணங்கள் 1:
      1. புஸ்தகத்தை வெளி கடையில் வேறு எங்கும் கிடைக்க விடா வண்ணம் செய்துட்டால் நம்ம கிட்ட தானே பய புள்ளைங்க சந்தா கட்டி ஆகணும்!!! எப்புடி... (இப்போது இது ஏறத்தாழ நடைமுறையில் உள்ளது வேறு விடயம்) :P
      2. அது எப்புடி ஆசானே பல முறை ப்ரூப் திருத்தியும் இவ்ளோ எழுத்து பிழைகள்??? படத்துல பல இடங்களில் கலர் கலர் சுவற்றில் திட்டு திட்டாக வெள்ளை அடிப்பதற்கு செலுத்தும் கவனத்தை இதன் பாலும் திருப்பலாமே எங்கள் அன்பின் ஆசானே...
      3. /எதிர்பார்ப்புகளை சற்றே மட்டுப்படுத்திக் கொள்ளும் நிலை என்று வைத்துக் கொள்ளுங்களேன்...!/ இது நமது காமிக்ஸின் தரத்தை பற்றியதோ என்ற எண்ணம் எழுகிறது ஆசானே...
      4. /selvam abirami : படித்ததில் பிடித்ததைப் பகிர்வதிலும் தவறில்லையே ! ஒவ்வொருவரது கண்ணோட்டங்களும் மாறிடும் எனும் போது எனக்குக் கிடைக்கும் insight உபயோகமாய் இருக்கும் அல்லவா ?/ இது வரை நாங்கள் எல்லாம் கரடியாக கத்தியதில் ஏதும் உபயோகம் இல்லையே ஆசானே??? இனிமேலும் சொன்னால் தான் இருக்கும் போல...
      5. /அப்புறம் LMS -ல் வெளியாகப் போவது எனது எனது டாப் 6 தேர்வுகள் அல்ல - நண்பர்களது தேர்வுகளே ! So நான் இங்கே எழுதுவது LMS -ல் repeat ஆகாது !/ இந்த விடயம் எப்போதும் மறுபதிப்பு வகையறாவில் மட்டும் பொய்த்து போவது ஏன் ஆசானே??? புரியலையே...
      6. /அப்படி இருக்கும் பட்சத்தில் கதையின் கருவிற்கும் ; கதையோட்டத்திற்கும் சற்றும் நெருடல் இல்லாமல், அன்று புத்தகப் பிரியன் குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் எடிட்டிங் செய்யப்பட்டு உள்ளதாகவே நினைக்கிறேன். பாராட்டுகள் விஜயன் சார் !/ ஐயோ பாஸ், அவரு சொன்னது காமிக்ஸா இருக்க போவுது!!! இப்போ வந்து இருப்பது லார்கோ நாவல் தானே... குழப்புதே... உஸ்ஸ் அதுக்குள்ள கண்ண கட்டுதுப்பா... :P
      7. /SHAKESPEARE என்ற வார்த்தையை பதட்டத்தின் காரணமாகவோ அல்லது ஸ்பெல்லிங் தெரியாமலோ லார்கோ தவறாக டைப் செய்திருந்தால் கதை என்னவாயிருக்கும் ? அப்பப்பா.. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது :)/ உடுங்க பாஸ்... கதை தானே... இப்படி எல்லாம் டென்ஷன் ஆகறது உடம்புக்கு நல்லதல்ல... புக்குல இருக்குற ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பார்த்தால் தான் நெஞ்சு பதறுகிறது:P
      8. /ஒரு புத்தகமே 400 ரூபாய்க்கு மேல் விற்கும் நிலையில் 34 புத்தகங்களும் 999 ரூபாய்க்குக் கிடைப்பதில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். முகநூலில் காமிக்ஸிற்கென இருக்கும் குழுக்களின் மூலம் தகவல் பரவி, தமிழ்நாட்டில் பலர் இந்தப் புத்தகத்தை ஆர்டர் செய்தனர். இப்படி புத்தகங்களை வாங்க பணம் செலுத்திய சிலருக்கு புத்தகங்களை அனுப்பினாலும் வேறு சிலருக்கு, தவறுதலாக இவ்வளவு குறைவான விலையை இணையதளத்தில் போட்டுவிட்டதாகவும், பணத்தைத் திருப்பி தந்துவிடுவதாகவும் அமேசான் இணைய தளம் மின்னஞ்சல் அனுப்பியது. இருந்தபோதும் அவர்களுக்கும் பிறகு புத்தகத்தை அனுப்பி வைத்தது அந்த இணையதளம்./ அட போங்கப்பா... இதுவே எங்கள் அன்பின் ஆசானாக இருப்பின் அது கொரியர் சார்ஜ் மட்டுமே என்று சமாளித்து இருப்பார்... :P
      9. /உதாரணமாக பேட்மேன் கதைகள் (இங்கே நமது வாசகர்கள் குறிப்பிடுபவை) அனைத்துமே திகில் காமிக்ஸில் வெளி வந்தவை. கொஞ்சம் கவனியுங்கள் தோழர்களே, ஏனென்றால் வரலாறு மிகவும் முக்கியம்./ அட போங்கப்பு... நமது சிவகாசி ஸ்பெஷல் செஞ்சுரி ஸ்பெஷல் மார்பிங் பேட் மேன் "பனி பிரபு" கதையை மறைமுகமாக தாக்குவதாக யாரேனும் எண்ணி விட போகிறார்கள்!!! அது தான் எனது டாப் கதை.... அதை ஸ்பைடர் வரிசையில் சேர்க்கணுமா இல்ல பேட் மேன் வரிசையில் சேர்த்துக்கணுமா??? ஐயோ நான் இப்போ என்ன செய்யறதுன்னே தெரியலே ஆசானே... உதவிக்கு வாருங்களேன் ப்ளீஸ்...

      Delete
    5. ஆசானே எங்களின் சில எண்ணங்கள் 2:
      10. லயன் லயன் செஞ்சுரி ஸ்பெஷல் புக்கில் வந்த "பாட்மேன் vs பனிபிரபு" கதையினை உடனடியாக மறுபதிப்பு (கலரில், அதுவும் ஹில்டா மொத்தமும் சென்சார் செய்யப்பட்டு மட்டுமே) செய்ய போராட்ட குழுவினை இறைஞ்சி கேட்டு கொள்கிறேன்... பழைய புத்தங்களை தான் மறுபதிப்பு செய்ய தயக்கம். இதையாவது செய்வீரா ஆசானே???
      11. /இதை உதாரணமாக கொண்டு பிற நண்பர்களும் புதிய புத்தகங்களின் ஹாட்-லைன் மற்றும் பிற பகுதிகளை scanlation செய்து தங்களது தளங்களில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். / ஆமாம் நண்பர்களே... அதை (உதாரணம்:லயன் லயன் செஞ்சுரி ஸ்பெஷல் "பாட்மேன் vs பனிபிரபு") அவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும்... நீங்கள் செய்வது தப்பு... திருத்தி கொள்ளுங்களேன் ப்ளீஸ்...
      12. /நமக்கு கூரியர் சார்ஜ் இல்லாமல் கிடைத்தால் நீங்களும் சந்தாதாரர் ஆகிவிடுவீர்கள் அல்லவா ?! உங்களைப் போன்று எண்ணற்ற வாசகர்களும் சாந்தாதாரர்கள் ஆகிவிடுவார்கள் என்ற என் எண்ணம் சரியானதா ?!/ இந்த ஆசை வேறா??? அட போங்க பாஸ்!!! பல சந்தா கட்டுற வாசகர்களே அந்த இன்னொன்னு லைப்ரரிக்குன்னு பொய் சொல்லி தான் அந்த 10% கொரியர் கட்டண டிஸ்கௌண்ட் வாங்குறாங்க. இதுல நீங்க வேற. எத்தனை சந்தா எண்ணிக்கை இருந்தாலும் ஒரே சிங்கிள் கவரில் திணித்து அனுப்புவது தானே நமது ட்ரேட் மார்க். அதனால் கொரியர் பார்சல் எண்ணிக்கை குறையும் (கட்டணம்??? மூச்...), டெலிவரியும் துரிதமாக இருக்கும், பார்சலும் தொலையாது என்பது தானே லாஜிக்??? :P சரிதானே ஆசானே??? :P
      12. ஆனால் நமது காமிக்ஸ் எழுத்து பிழை களையப்பட்டு இருப்பது நிதர்சனம். அதற்கு ஒரே ஒரு உதாரணம்: "மியாவி". நான் பார்த்த வரை அதில் எதுவுமே இல்லை :P (சிலேடை அல்ல)
      13. பிரிண்டிங் தரம்??? ஆரம்பத்தில் நைட் பிரிண்டிங் தப்பு நடந்ததுன்னு சொன்னீங்க. நம்பினோம். அப்புறம் கரண்ட் இல்ல தப்பு நடந்ததுன்னு சொ.ந; ஆளுங்க தூங்கிட்டாங்கனு சொ.ந; இப்போ பிரிண்டிங் நல்லா தான் இருக்குனு சொல்லுறீங்க. நம்புவோம்... உள் அட்டை மேட்டர் முன் அட்டையில் தெரியும் பிரிண்டிங் மிக மிக அதி நவீனமாக உள்ளது ஆசானே இப்போது... நாம் இப்போது தரத்தில் பல படிகள் உயர்ந்து இருப்பது கண்கூடு...
      14. இன்னும் பல +12, +18 என் அதிகமாக வெளியிடுங்கள் ஆசானே... பிரிண்டிங் தரமோ, எழுத்து பிழையோ, கதையோ, ஹீரோவோ எங்களுக்கு முக்கியம் அல்ல. மாசத்திற்கு 30 புத்தகங்கள் எவ்வளவு விலையில் வெளி வந்தாலும் எங்களின் காமிக்ஸ் தாகம், ஆர்வம் தீராது... எங்களுக்கு காமிக்ஸ் என்று ஒன்று வெளி வந்தாலே போதும் ஆசானே...
      வழக்கம் போல நம் காமிக்ஸ் எழுச்சியை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லுங்கள் ஆசானே. எப்போதும் உடனிருப்போம் ஆசானே எங்கள் சந்தாவுடன்...

      Delete
  89. Ennakum athy doubt,wisky na varatchiyaithan yerpaduthum,analum sila vishayangalai sileydaiya solvstundu athai pola ithuvum...

    ReplyDelete
  90. ஆசானே எங்களின் சில எண்ணங்கள்:
    1. புஸ்தகத்தை வெளி கடையில் வேறு எங்கும் கிடைக்க விடா வண்ணம் செய்துட்டால் நம்ம கிட்ட தானே பய புள்ளைங்க சந்தா கட்டி ஆகணும்!!! எப்புடி... (இப்போது இது ஏறத்தாழ நடைமுறையில் உள்ளது வேறு விடயம்) :P
    2. அது எப்புடி ஆசானே பல முறை ப்ரூப் திருத்தியும் இவ்ளோ எழுத்து பிழைகள்??? படத்துல பல இடங்களில் கலர் கலர் சுவற்றில் திட்டு திட்டாக வெள்ளை அடிப்பதற்கு செலுத்தும் கவனத்தை இதன் பாலும் திருப்பலாமே எங்கள் அன்பின் ஆசானே...
    3. /எதிர்பார்ப்புகளை சற்றே மட்டுப்படுத்திக் கொள்ளும் நிலை என்று வைத்துக் கொள்ளுங்களேன்...!/ இது நமது காமிக்ஸின் தரத்தை பற்றியதோ என்ற எண்ணம் எழுகிறது ஆசானே...
    4. /selvam abirami : படித்ததில் பிடித்ததைப் பகிர்வதிலும் தவறில்லையே ! ஒவ்வொருவரது கண்ணோட்டங்களும் மாறிடும் எனும் போது எனக்குக் கிடைக்கும் insight உபயோகமாய் இருக்கும் அல்லவா ?/ இது வரை நாங்கள் எல்லாம் கரடியாக கத்தியதில் ஏதும் உபயோகம் இல்லையே ஆசானே??? இனிமேலும் சொன்னால் தான் இருக்கும் போல...
    5. /அப்புறம் LMS -ல் வெளியாகப் போவது எனது எனது டாப் 6 தேர்வுகள் அல்ல - நண்பர்களது தேர்வுகளே ! So நான் இங்கே எழுதுவது LMS -ல் repeat ஆகாது !/ இந்த விடயம் எப்போதும் மறுபதிப்பு வகையறாவில் மட்டும் பொய்த்து போவது ஏன் ஆசானே??? புரியலையே...
    6. /அப்படி இருக்கும் பட்சத்தில் கதையின் கருவிற்கும் ; கதையோட்டத்திற்கும் சற்றும் நெருடல் இல்லாமல், அன்று புத்தகப் பிரியன் குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் எடிட்டிங் செய்யப்பட்டு உள்ளதாகவே நினைக்கிறேன். பாராட்டுகள் விஜயன் சார் !/ ஐயோ பாஸ், அவரு சொன்னது காமிக்ஸா இருக்க போவுது!!! இப்போ வந்து இருப்பது லார்கோ நாவல் தானே... குழப்புதே... உஸ்ஸ் அதுக்குள்ள கண்ண கட்டுதுப்பா... :P
    7. /SHAKESPEARE என்ற வார்த்தையை பதட்டத்தின் காரணமாகவோ அல்லது ஸ்பெல்லிங் தெரியாமலோ லார்கோ தவறாக டைப் செய்திருந்தால் கதை என்னவாயிருக்கும் ? அப்பப்பா.. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது :)/ உடுங்க பாஸ்... கதை தானே... இப்படி எல்லாம் டென்ஷன் ஆகறது உடம்புக்கு நல்லதல்ல... புக்குல இருக்குற ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பார்த்தால் தான் நெஞ்சு பதறுகிறது:P
    8. /ஒரு புத்தகமே 400 ரூபாய்க்கு மேல் விற்கும் நிலையில் 34 புத்தகங்களும் 999 ரூபாய்க்குக் கிடைப்பதில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். முகநூலில் காமிக்ஸிற்கென இருக்கும் குழுக்களின் மூலம் தகவல் பரவி, தமிழ்நாட்டில் பலர் இந்தப் புத்தகத்தை ஆர்டர் செய்தனர். இப்படி புத்தகங்களை வாங்க பணம் செலுத்திய சிலருக்கு புத்தகங்களை அனுப்பினாலும் வேறு சிலருக்கு, தவறுதலாக இவ்வளவு குறைவான விலையை இணையதளத்தில் போட்டுவிட்டதாகவும், பணத்தைத் திருப்பி தந்துவிடுவதாகவும் அமேசான் இணைய தளம் மின்னஞ்சல் அனுப்பியது. இருந்தபோதும் அவர்களுக்கும் பிறகு புத்தகத்தை அனுப்பி வைத்தது அந்த இணையதளம்./ அட போங்கப்பா... இதுவே எங்கள் அன்பின் ஆசானாக இருப்பின் அது கொரியர் சார்ஜ் மட்டுமே என்று சமாளித்து இருப்பார்... :P
    9. /உதாரணமாக பேட்மேன் கதைகள் (இங்கே நமது வாசகர்கள் குறிப்பிடுபவை) அனைத்துமே திகில் காமிக்ஸில் வெளி வந்தவை. கொஞ்சம் கவனியுங்கள் தோழர்களே, ஏனென்றால் வரலாறு மிகவும் முக்கியம்./ அட போங்கப்பு... நமது சிவகாசி ஸ்பெஷல் செஞ்சுரி ஸ்பெஷல் மார்பிங் பேட் மேன் "பனி பிரபு" கதையை மறைமுகமாக தாக்குவதாக யாரேனும் எண்ணி விட போகிறார்கள்!!! அது தான் எனது டாப் கதை.... அதை ஸ்பைடர் வரிசையில் சேர்க்கணுமா இல்ல பேட் மேன் வரிசையில் சேர்த்துக்கணுமா??? ஐயோ நான் இப்போ என்ன செய்யறதுன்னே தெரியலே ஆசானே... உதவிக்கு வாருங்களேன் ப்ளீஸ்...

    ReplyDelete
  91. குளிர வைக்கப்பட்ட பியர் தான் நா வறட்சிக்கு நல்லது ....!!!

    ReplyDelete
  92. 10. லயன் லயன் செஞ்சுரி ஸ்பெஷல் புக்கில் வந்த "பாட்மேன் vs பனிபிரபு" கதையினை உடனடியாக மறுபதிப்பு (கலரில், அதுவும் ஹில்டா மொத்தமும் சென்சார் செய்யப்பட்டு மட்டுமே) செய்ய போராட்ட குழுவினை இறைஞ்சி கேட்டு கொள்கிறேன்... பழைய புத்தங்களை தான் மறுபதிப்பு செய்ய தயக்கம். இதையாவது செய்வீரா ஆசானே???
    11. /இதை உதாரணமாக கொண்டு பிற நண்பர்களும் புதிய புத்தகங்களின் ஹாட்-லைன் மற்றும் பிற பகுதிகளை scanlation செய்து தங்களது தளங்களில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். / ஆமாம் நண்பர்களே... அதை (உதாரணம்:லயன் லயன் செஞ்சுரி ஸ்பெஷல் "பாட்மேன் vs பனிபிரபு") அவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும்... நீங்கள் செய்வது தப்பு... திருத்தி கொள்ளுங்களேன் ப்ளீஸ்...
    12. /நமக்கு கூரியர் சார்ஜ் இல்லாமல் கிடைத்தால் நீங்களும் சந்தாதாரர் ஆகிவிடுவீர்கள் அல்லவா ?! உங்களைப் போன்று எண்ணற்ற வாசகர்களும் சாந்தாதாரர்கள் ஆகிவிடுவார்கள் என்ற என் எண்ணம் சரியானதா ?!/ இந்த ஆசை வேறா??? அட போங்க பாஸ்!!! பல சந்தா கட்டுற வாசகர்களே அந்த இன்னொன்னு லைப்ரரிக்குன்னு பொய் சொல்லி தான் அந்த 10% கொரியர் கட்டண டிஸ்கௌண்ட் வாங்குறாங்க. இதுல நீங்க வேற. எத்தனை சந்தா எண்ணிக்கை இருந்தாலும் ஒரே சிங்கிள் கவரில் திணித்து அனுப்புவது தானே நமது ட்ரேட் மார்க். அதனால் கொரியர் பார்சல் எண்ணிக்கை குறையும் (கட்டணம்??? மூச்...), டெலிவரியும் துரிதமாக இருக்கும், பார்சலும் தொலையாது என்பது தானே லாஜிக்??? :P சரிதானே ஆசானே??? :P
    12. ஆனால் நமது காமிக்ஸ் எழுத்து பிழை களையப்பட்டு இருப்பது நிதர்சனம். அதற்கு ஒரே ஒரு உதாரணம்: "மியாவி". நான் பார்த்த வரை அதில் எதுவுமே இல்லை :P (சிலேடை அல்ல)
    13. பிரிண்டிங் தரம்??? ஆரம்பத்தில் நைட் பிரிண்டிங் தப்பு நடந்ததுன்னு சொன்னீங்க. நம்பினோம். அப்புறம் கரண்ட் இல்ல தப்பு நடந்ததுன்னு சொ.ந; ஆளுங்க தூங்கிட்டாங்கனு சொ.ந; இப்போ பிரிண்டிங் நல்லா தான் இருக்குனு சொல்லுறீங்க. நம்புவோம்... உள் அட்டை மேட்டர் முன் அட்டையில் தெரியும் பிரிண்டிங் மிக மிக அதி நவீனமாக உள்ளது ஆசானே இப்போது... நாம் இப்போது தரத்தில் பல படிகள் உயர்ந்து இருப்பது கண்கூடு...
    14. இன்னும் பல +12, +18 என் அதிகமாக வெளியிடுங்கள் ஆசானே... பிரிண்டிங் தரமோ, எழுத்து பிழையோ, கதையோ, ஹீரோவோ எங்களுக்கு முக்கியம் அல்ல. மாசத்திற்கு 30 புத்தகங்கள் எவ்வளவு விலையில் வெளி வந்தாலும் எங்களின் காமிக்ஸ் தாகம், ஆர்வம் தீராது... எங்களுக்கு காமிக்ஸ் என்று ஒன்று வெளி வந்தாலே போதும் ஆசானே...
    வழக்கம் போல நம் காமிக்ஸ் எழுச்சியை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லுங்கள் ஆசானே. எப்போதும் உடனிருப்போம் ஆசானே எங்கள் சந்தாவுடன்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டம் முழுதும்

      satire பாணியில் உள்ளதால். படிக்க

      சுவையானதே .

      ஆனால் .....


      லார்கோ நாவல் ?........ வசனங்கள்

      பங்கு குறித்து. ஆசிரியர் ஏற்கெனவே

      எழுதி இருந்தும் .

      குறைகள் களைய படவேண்டியவையே.

      ஆனால் ....

      இதே பின்னூட்டம் தனில் ஆசிரியர்

      அது பற்றி வருத்தம் தெரிவித்த பின்னும் அதை குறித்து எள்ளி நகை
      யாடுவது ...????

      ரசிக்கும் வண்ணம் இல்லை .

      Delete
  93. 1. யார் அந்த மினி ஸ்பைடர்

    2.பவள சிலை மர்மம்

    3.ட்ராகன் னகரம்

    4.கழுகு வேட்டை

    5.இயந்திரப் படை

    6.காணாமல் போன கடல்

    ReplyDelete
  94. (நவீன வள்ளுவன்)
    புஸ்தகத்தை வெளி கடையில் வேறு எங்கும் கிடைக்க விடா வண்ணம் செய்துட்டால் நம்ம கிட்ட தானே பய புள்ளைங்க சந்தா கட்டி ஆகணும்!!! எப்புடி... (இப்போது இது ஏறத்தாழ நடைமுறையில் உள்ளது வேறு விடயம்)

    இந்த சந்தேகம் எனக்கும் உண்டு.

    ஆசிரியருக்கு..........
    இப்படி ஒரு புக் இருக்கிறதா? என்ற நிலையில் உள்ள புத்தகங்களே நமது மாநிலத்தில் பல இடங்களில் கிடைக்கும்போது நமது புத்தகம் மட்டும் ஏன் கிடைப்பதில்லை. யாரும் பணம் ஒழுங்காக தருவதில்லை என்ற சப்பையான ஒரு காரணத்தை நீங்கள் கூறுகிறீர்கள். இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு. உங்களின் திறமையின்மையினால் ஆடிக்கு ஒரு புத்தகமும், அம்மாசைக்கு ஒரு புத்தகமும் என்று வெளிவந்த காலகட்டத்தில் வேண்டுமானால் இதுபோன்று நடந்திருக்கலாம். ஆனால் இப்போது......

    மேற்கொண்டு வாசகர்கள் ஒவ்வொருவரும் ஆசிரியர் அறிவிக்கும் லோகோ போட்டி, பெயர் வைக்கும் போட்டி போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனமானது, விவேகமானது.

    ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு போட்டியை கூறி வாசகர்களை ஏமாற்றும் செயலில் ஆசிரியர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் வெளியிடும் இதழில் நமது தேர்வுதான் நிலைத்திருக்க வேண்டும் என்ற அற்ப எண்ணம் உள்ள தாங்கள் அதை மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் செய்துவிடலாமே? தயவு செய்து அடுத்தவர்களின் மனதை புண்படுத்தி ரசிக்கும் குருர எண்ணத்தை கைவிடுங்கள்.
    ஏதாவது ஒரு போட்டியை அறிவித்து வாசகர்களை சுற்றலில் விடவேண்டியது. பின்னர் ஐஸ்கிரீம், சாக்லெட் என்று ஏதாவது ஒரு பெயரை தேர்வு செய்வது. இதெல்லாம் ஒரு பெரிய மனிதர் செய்யும் காரியமா?
    ஒருசிலர் காமெடிக்காக சில பெயர்களை கூறியிருந்தாலும் பெரும்பாலான பெயர்கள் மிகவும் தரமாகதானே இருந்தது. ஒரு ஐஸ்கிரீம் நிறுவனத்தின் பெயருக்கு கொடுத்த முன்னுரிமையை நமது வாசகர்களுக்கு கொடுக்க உங்களுக்கு மனம் வரவில்லையே. உங்கள் மனசாட்சியை கேட்டு சொல்லுங்கள் கிராபிக் நாவல் லோகோ விசயத்தில் உங்கள் தேர்வு நியாயமானதுதானா என்று. இந்த பதிவை இடுவதுகூட இதை படித்து நீங்கள் திருந்துவீர்கள் என்ற எண்ணத்தில் அல்ல. நாம்தான் புத்திசாலி நாம் எதை செய்தாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற உங்களின் எண்ணத்தை உடைக்கத்தான்.

    வாசகர்கள் விசயத்தில் உங்களின் உண்மையான நிலைப்பாடு என்னவென்றால் நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் முட்டாள்கள் என்ற ரீதியில்தான் வைத்துள்ளீர்கள்.
    இன்னும் நிறைய எழுத வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் ஆனால் இந்த உண்மையே உங்கள் மனதை சுட்டிருக்கும் என்பதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்.

    ReplyDelete
  95. நவீன வள்ளுவனுக்core கடிதம் (1)

    //நவீன யுக வள்ளுவருக்கு இரண்டடிகள் பயன்படுகிறதோ , இல்லையோ - இரண்டு ஐ.டி.க்கள் பிரமாதமாகவே பயன் தருகின்றன ! ஜமாயுங்கள் ! - Vijayan27 April 2014 20:56:00 GMT+5:30//

    நண்பரே, இதன் அர்த்தம் என்னவாக இருக்க முடியும் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா ? உண்மைதான் நீங்கள் தற்போது நினைக்கும் எண்ணமே மிகச் சரியானது. ஆம் நீங்கள் யாரென்றும் ; உங்களின் உண்மையான id எதுவென்றும் - ஆசிரியருக்கு தெரிந்திருந்த காரணத்தினால் தான் இவ்வாறு பதிலளித்துள்ளார். அதே போல் உங்கள் நண்பர்களில் பலருக்கும் நீங்கள் தான் நவீன வள்ளுவன் என்பதும் தெரிந்தே தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை 2013 ஜூனில் - உங்களின் முதல் பதிவு வெளியான மூன்றாம் நாளே நீங்கள் யாரென்று அறிந்து கொண்டேன்.

    தொடர்கிறது..

    ReplyDelete
    Replies
    1. நவீன வள்ளுவனுக்core கடிதம் (2)

      நாம் ஒரு விஷயத்தை யாருக்கும் தெரியாமல் செய்ய நினைப்போம் ; அவ்வாறே தனியறையில், கும்மிருட்டில் ஒரு விஷயத்தை செய்வதாக வைத்துக் கொள்வோம். அச்செயல் வெற்றி பெறும்போது நாம் நம் புத்தி சாதுர்யத்தை எண்ணி அகம் மகிழ்வோம் ; அச்செயலை அடுத்தடுத்த சந்தர்ப்பத்திலும் செய்யத் துணிவோம். ஆனால் நம் ரகசியச் செயலை நான்கு பக்கமிருந்தும் பலரும் பார்த்துக் கொண்டேயிருந்தால் அவர்கள் மனதில் நம்மை பற்றிய அபிப்பிராயம் என்னவாயிருக்க முடியும்? நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு கோமாளியாகத் தானே தெரிவோம். அதுபோன்றதொரு நிலை நமக்கு எவ்விதத்தில் பெருமை சேர்ப்பதாக இருக்க முடியும்? அது போலவே நீங்கள் நவீன வள்ளுவன் என்ற பெயரில் பதிவிடும் ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போதும் உங்களின் ஒரிஜினல் id யும், உங்களின் உண்மையான முகமும் எங்கள் கண் முன்னே தோன்றி உங்களை கேலிப்பொருளாக்குகிறது :(

      ஒவ்வொருவருக்கும் சுயமரியாதையும் ; சுயகௌரவமும் நிச்சயமாக இருக்கும். அதிலும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் அதற்கு இழுக்கு ஏற்படவோ ; இழந்து அசிங்கப்படவோ இங்கு அவசியம் என்பதே இல்லை என்பதே என் கருத்து. சென்ற வருடம் உங்களின் கருத்துக்கு இருந்த பரவலான ஆதரவு இன்று நிச்சயமாக உங்கள் வட்டத்திலேயே இல்லை என்பதை உங்களாலேயே உணர்ந்திருக்க முடியும். ஏனெனில் உங்களின் கருத்துகள் சார்ந்த அபிப்ராயங்கள் அவர்களிடம் ஏற்கனவே நீர்த்துப் போய்விட்டன. இதுபோன்ற கருத்துகள் எங்குமே எடுபடாத போதும் அதை தொடர்வதும் ; அடிக்கடி கிளர்வதும் நம்மை நாமே ஏமாற்றி கொள்வது மட்டுமல்ல, கண்ணாடி முன் நின்று தலை வாரும் போது நமக்கு நாமே அசிங்கமாக அல்லவா தெரிய ஆரம்பித்து விடுவோம்?

      ஆசிரியர் உட்பட எங்களுக்கு, உங்கள் மேல் இருக்கும் மரியாதை காரணமாகவே இந்த பதிவு. நன்றி நண்பரே !

      Delete
  96. /SHAKESPEARE என்ற வார்த்தையை பதட்டத்தின் காரணமாகவோ அல்லது ஸ்பெல்லிங் தெரியாமலோ லார்கோ தவறாக டைப் செய்திருந்தால் கதை என்னவாயிருக்கும் ? அப்பப்பா.. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது :)/ உடுங்க பாஸ்... கதை தானே... இப்படி எல்லாம் டென்ஷன் ஆகறது உடம்புக்கு நல்லதல்ல... புக்குல இருக்குற ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பார்த்தால் தான் நெஞ்சு பதறுகிறது:P

    சரியான காமெடி...... ஏதையாவது சொல்லி பாராட்டு பத்திரம் வாசிக்க நினைப்பவர்களுக்கு சூடுபோட்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  97. கடுமையான கண்டணங்கள நண்பரே !

    உள்ள கருத்தை உரத்து சொல்லலாம் !

    அற்ப எண்ணம் .....

    குரூர எண்ணம் .....

    முட்டாள்கள் .....

    அடிமைகள் ......


    தவறான வார்த்தைகள். அவை யாரை

    நோக்கி வீசப்பட்டாலும் .

    ReplyDelete
    Replies
    1. குறைகளை கூறலாம் . அது

      அடிப்படை உரிமை .ஆனால்

      கண்ணியம் காப்பதும் நம் கடமை .


      Delete