Powered By Blogger

Tuesday, January 28, 2014

ஒரு அமைதிப் படையின் உரத்த குரல்..!

நண்பர்களே,

வணக்கம். பிப்ரவரி இதழ்களின் பணிகள் நிறைவுறும் நேரமென்பதால் இங்கு சில நாட்களாய் வருகை சாத்தியமாகவில்லை ! இதோ - இம்மாத முத்து காமிக்ஸ் இதழின் அட்டைப்படம் + உட்பக்க preview !


அட்டைப்படம் துளியும் மாற்றம் செய்யப்படா ஒரிஜினல் சித்திரமே என்பதால் அந்த தத்ரூபம் + வர்ணக் கலவை அழகாய் அமைந்துள்ளதாய் எனக்குப்பட்டது ! சாகச வீர ரோஜரின் கதைவரிசையில் இது மிகச் சமீபமான ஆக்கம் என்பதால் சித்திரத் தரத்தில் ஒரு நவீனத்துவமும், அசாத்திய perfection-ம் மிளிர்கிறது ! அந்தப் பிணக்குவியலில் எலும்புக்கூடுகளின் மீதான வேலைப்பாட்டை உன்னிப்பாய்ப் பாருங்களேன் - ஓவியரின் உழைப்பின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள ! உங்களுக்கு நிஜமானதொரு visual treat காத்துள்ளது இம்மாதம் ! 

இம்மாதத்து இதழ் # 2 - NBS முதலாய் நமக்கு அறிமுகமான துப்பறியும் ஜில் ஜோர்டனின் "காவியில் ஒரு ஆவி !" சுலபமானதொரு கதைக் கரு ; டின்டின் பாணியில் artwork ; 'பளிச்' ரக வர்ணங்கள் என இதுவும் ஒரு வகையில் ஜாலியான வாசிப்பு அனுபவத்தை உங்களுக்குத் தரக் காத்துள்ளது ! ஜோர்டனின் உதவியாளன் அடிக்கும் நக்கல்கள் கதையின் சுலப ஓட்டத்துக்கு நிறையவே உதவியது எனில் - இன்னுமொரு கதாப்பாத்திரமும் சீரியசாக வந்தே கிச்சு கிச்சு மூட்டுவதையும் பார்த்திடப் போகிறீர்கள் !இதோ - ஜாலியான...சாரி...சாரி...காவியான ஆவியின் முன்னோட்டம் ! 

இவ்வார இறுதிக்குள் இதழ்கள் தயாராகி விடும் ; வரும் திங்கட்கிழமை உங்களுக்கு அனுப்பிடுவோம் ! இரு இதழ்களிலுமே , 'லொட-லொட' வென நான் நிறையவே எழுதிட நேர்ந்துள்ளது ! ஒரு ஹாட்லைன் ; ஒரு காமிக்ஸ்டைம் ; ஒரு சிங்கத்தின் சிறுவயதில் + ஒரு சிங்கத்தின் சிறுவலையில்" போதாதென - 2013-ன் நமது இதழ்களைப் பற்றிய வாசகர்களின் review -ஐ எனது எண்ணங்களோடு இணைத்தால் - அதுவொரு 3 பக்கங்களுக்கு ஆக்கிரமிப்பு செய்து விட்டது ! So - இம்முறை filler pages இருந்திடாது -blah blah blah நிறையவே இருந்திடும் என்று முன்கூட்டியே எச்சரிக்கை செய்திடுகிறேன் ! இதோ -இணையத்தில் இணைந்திருக்கா ; வலைப்பதிவின் பக்கம் வந்திருக்கா ;அப்படியே வந்திருப்பினும் இது நாள் வரை மௌனமாய், பார்வையாளர்களாய், அமைதியான வாசகர்களாய் மாத்திரமே இருந்து வந்துள்ள பல நண்பர்களின் குரல்களின் ஒரு பிரதிபலிப்பு ! இந்த அமைதிப் படைக்கும் ஒரு உரத்த குரலுண்டு என்பதை சந்தோஷமாய் ரசிக்க முடிந்தது ! பாருங்களேன்   : 



பொறுமையாய்ப் படித்து விட்டு - உங்களின் அபிப்ராயங்களையும் இங்கு ஒலிபரப்பிடலாமே ?! See you around ! Bye for now !

334 comments:

  1. தல டையபாலிக்க டீல்ல விட்டுராதிங்க!!! கருப்பு வெள்ளைக்கு தனி புக் தந்தா இன்னும் சந்தோசம்!!!!

    ReplyDelete
  2. அட்டை படம் சூப்பர் சார்

    ReplyDelete
  3. டியர் ஆசிரியர் அவர்களுக்கு விமர்சனங்கள் எங்கள் பார்வையையே பிரதிபலிததான என்ன ஒன்று கிரீன் manor முடிவுகள் ஏமாற்றம் தருகின்றன.anyway it is a good review.தலை ! எப்ப கார்ஸனின் கடந்த காலம் release.THEN 30 வது ஆண்டு மலர் கதைகள் பற்றிய அறிவிப்பு எங்கே ?

    ReplyDelete
    Replies
    1. kadbdhul : 30-வது ஆண்டுமலரின் கதைகள் பற்றிய அறிவிப்பு இதழ் வெளியாகும் வேளைக்கு 90 நாட்களுக்கு முன்பு வரும் என்பது அனைவரும் அறிந்தது தானே !

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. FIRST OF ALL, BEST COVER FOR ROGER. அற்புதம்.

      நீண்ட காலமாக பலரும் இங்கு சொல்லி சொல்லி அலுத்துப்போனபின் இப்பொழுது தான் உங்களுக்கு ஞானோதயம் ஆகியுள்ளது..
      சமீபமாக classics வேணும் என்றும் குரல்கள் பலமாய் ஒலிப்பதும் உங்களுக்கு கேட்டிருக்கும்.

      1. கிராபிக் நாவலை ஏரக்கட்டிவிட்டு, எப்போதாவது ஒன்று என கிராபிக் நாவல் விடலாம். (in முத்து or லயன் லோகோ)
      2. மினி லயன் கார்டூன் கதாநயகர்களுடன் ஆரம்பிக்கலாம் +6. தொர்கள் கூட மினி லயன் genre தான்.
      3. காமிக்ஸ் Classicsஇல் - detective ஸ்பெசல், jonny nero spl, ஸ்பைடர் /ஆர்ச்சி / மாயாவி ஸ்பெசல் ரூ.50 விலையில் வருடத்திற்கு 6 வெளியிடலாம்
      4. சன்ஷைன் லைப்ரரி இல் - 6 கலர் மறுபதிப்பு
      5. லயன் / முத்து வில் 2 மாதங்களுக்கு ஒருமுறை என b/w டெக்ஸ், மார்டின், டயபளிக் போன்ற வை
      6. 1 or 2 ரூ.200/500 ஸ்பெசல்

      இது 2015 schedule அக இருக்கலாம் உங்கள் மனதில், ஆனால் இப்போதே மாற்றினாலும் எங்களுக்கு சந்தோசம் தான். சந்தா கட்டுனவங்க சொல்லுங்கப்பா...

      போன பதிவுல நான் போட்ட கமென்ட் மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது...

      //சூப்பர் விஜய் has left a new comment on the post "சிந்தனைகளுக்கும் சிறகுண்டு...!":
      //நாங்க சொல்றத நல்லா ஆரப்போட்டு யோசிச்சு முடிவுஎடுகறீங்க, அதையே இப்போவும் பண்ணாம உடனே முடிவெடுங்க சர்.

      Delete
    2. க்ளாசிக்கில் மும் மூர்த்திகள் குறைவாகவும் மற்றவர்கள் அதிகமாகவும் வரவேண்டும் எனபது எனது கருத்து.

      Delete
    3. கிருஷ்ணா வ வெ : இன்றைய மும்மூர்த்திகள் : லார்கோ ; டெக்ஸ் & லக்கி லூக் தான் ! இவர்களை எவ்வளவு வேண்டுமெனினும் பயன்படுத்திக் கொள்ளலாமே !

      Delete
    4. //இன்றைய மும்மூர்த்திகள் : லார்கோ ; டெக்ஸ் & லக்கி லூக் தான் ! இவர்களை எவ்வளவு வேண்டுமெனினும் பயன்படுத்திக் கொள்ளலாமே ! //
      =============++++++++++++++++++++++++++++

      Delete
    5. //இன்றைய மும்மூர்த்திகள் : லார்கோ ; டெக்ஸ் & லக்கி லூக் தான்//

      காலத்தின் மாற்றம்..:D

      Delete
  5. ஜில் ஜோர்டான்! சூப்பர்!

    ReplyDelete
  6. அட்டைப்படமும் உள்பக்க சித்திரங்களும் அருமை...

    ReplyDelete
  7. Replies
    1. இரண்டு புத்தகங்களின் சித்திரங்களுமே அருமையாக உள்ளன.
      முதன் முதலாக ரோஜர் கலரில் படிக்க இருப்பது சந்தோசமாக உள்ளது.

      கிரீன் மேனர் தோல்வியின் காரணமாக நான் நினைப்பது அதன் மொழிமாற்றமே.
      ஆங்கிலத்தில் படிக்கும் பொழுது ஏற்பட்ட தாக்கம் தமிழில் படிக்கும் பொழுது ஏற்படவில்லை.

      30வது ஆண்டுமலரில் கருப்பு வெள்ளை பக்கங்கள் இருந்தால் அதனை தனிப்புத்தகமாக கொடுத்துவிடுங்கள்.
      கலரும் கருப்பு வெள்ளையும் கலந்து ஒரே புத்தகமாக வேண்டாம் என்பது எனது கருத்து.

      கலரில் வரும் டெக்ஸ் புத்தகங்கள் கண்டிப்பாக நிலவொளியில் ஒரு நரபலி அளவில் வேண்டாம்.
      60ரூ புத்தகங்களின் அளவிலோ அல்லது தீபாவளி மலரின் அளவிலோ இருக்கட்டும்.

      நல்ல ஆக்சன் நிறைந்த டெக்ஸ் கதைகளை இவ்வருடம் எதிர்பார்கிறேன்.

      கண்டிப்பாக இம்முறையும் தீபாவளி மலர் வேண்டும் சார்.

      Delete
    2. //கலரில் வரும் டெக்ஸ் புத்தகங்கள் கண்டிப்பாக நிலவொளியில் ஒரு நரபலி அளவில் வேண்டாம்.
      60ரூ புத்தகங்களின் அளவிலோ அல்லது தீபாவளி மலரின் அளவிலோ இருக்கட்டும்.//

      Delete
    3. கிருஷ்ணா வ வெ & கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : சின்ன சைசில் (வண்ண) டெக்ஸ் வேண்டாமெனும் பட்சத்தில் தீபாவளி ஸ்பெஷல் சைஸ் மட்டுமே சாத்தியமாகும்.

      தற்சமய லயன்-முத்து (பெரிய) சைசுக்கு டெக்சின் 228 பக்க நீளத்திலான கதைகளைக் கொண்டு சென்றிடும் பட்சத்தில் விலை எகிறி விடும் !

      Delete
    4. சார், தீபாவளி ஸ்பெஷல் சைஸ் டெக்ஸ் கதைகளை தனியாய் காட்டட்டுமே ! அந்த அளவு போதும் சார் !

      Delete
    5. //தீபாவளி ஸ்பெஷல் சைஸ் மட்டுமே சாத்தியமாகும்// //அந்த அளவு போதும் சார் !//

      அது போதும் சார்..சிறிய சைசில் கண்டிப்பாக வேண்டாம் என்பதே எங்களது வேண்டுகோள்.

      Delete
  8. விஜயன் சார்,

    முன்பு நமது இதழ்கள் மாதம் தோறும் சிறிய அளவில் வரும் பொழுது, கோடை மலர் / தீபாவளி மலர் போன்றவை கொடுக்கும் சந்தோசம் அளவில்லாதது. மாதம் தோறும் வெறும் சாதம் சாப்பிடும் ஒருவனுக்கு ஒரு நாள் விருந்து உண்டால் எப்படி இருக்குமோ அப்படி ...

    இப்பொழுதும் இந்த நினைவுகள் மாறவில்லை என்பதே உண்மை. என்னதான் மாதம் தோறும் இரண்டு, நான்கு புத்தகங்கள் படித்தாலும், கோடை மலர், தீபாவளி மலர் என்றாலே கிடைக்கும் சந்தோசம் அலாதியானது. எனவே வருடா வருடம் கோடை மலர் மற்றும் தீபாவளி மலர் அவசியம் ...

    சென்னை புத்தக திருவிழாவில் நான் கண்ட ஒரு விஷயம், தீபாவளி மலர் விற்பனை. நமது புத்தகம் வாங்கிய அனைவரும் தீபாவளி மலர் எடுக்காமல் இருக்கவில்லை.

    சென்ற வருடம் போலவே ஒரு +6 அல்லது +12 அவசியம் இந்த வருடமும் தேவை. எதற்காக இல்லாவிடிலும் கோடை மற்றும் தீபாவளி மலருக்காக :)





    ReplyDelete
  9. சில தகவல்கள்;

    **ராமநாதபுரத்தில் NBT சார்பாக புத்தக கண்காட்சி சென்ற சனிக்கிழமை முதல் ஆரம்பித்து இருக்கிறது. இந்த வாரயிருதி வரை இது தொடரும்.

    **மொத்தம் 200 புத்தக விற்பனையாளர்கள் பங்குபெறுகிறார்கள். அந்த வகையில் இது(வும்) ஒரு குறிப்பிடத்தக்க கண்காட்சியாக கணக்கில் வந்து விடுகிரது.

    **ராமநாதபுரம் புத்தக கண்காட்சியில் நமது லயன் முத்து காமிக்ஸ் பிரத்யேக ஸ்டால் அமைக்கப்பட்டு உள்ளது. ஸ்டால் எண் 105.

    **ராமநாதபுரம் அருகில் இருக்கும் நமது காமிரேட்டுகள் லயன் முத்து காமிக்ஸ் ஸ்டாலுக்கு சென்று 40 ஆண்டுகளாக நமது டெலிபோன் வாய்ஸாக இருக்கும் திரு ராதாகிருஷ்ணன் அண்ணாச்சியை நேரில் சந்திக்கலாம்.

    **இன்று மாலை 4.30க்கு பழுதடைந்த பாம்பன் பாலத்தை திறந்து வைத்த இந்திய முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் சரியாக 6.30க்கு ராமநாதபுரம் புத்தக கண்காட்சிக்கு வருவார் என்று தகவல்.

    **2 முதல் 3 மணி நேரம் அவர் இந்த புத்தக கண்காட்சியில் இருப்பார் என்றும், சில பல புத்தக ஸ்டால்களுக்கு அவர் விஜயம் செய்வாரென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. King Viswa : கட்டுக்கடங்கா கூட்டம் என்பதால் மேதகு.அப்துல் கலாம் அவர்கள் புத்தக விழா அரங்கினுள் நுழையவே சிரமம் ஆகிப் போனதாம் !

      Delete
    2. @Editor
      Why this was not advertised well ? It would have been if you had done a separate post about ramanathapuram book fair OR at least should have mentioned it in this post. So that people can spread the word out.

      Delete
  10. Dear Editor..
    According to me, Green Manor was the 2nd best thing that has happened on our comics next to Largo Winch in 2013 !! Danger Diabolic too was nice only.. Pls continue choosing based on your mindset alone.. It will be better for the greater good (which is changing the mindset of the readers as well eventually) !! :)

    ReplyDelete
    Replies
    1. Dinesh Thiagarajan : நம்பிக்கை வைத்தமைக்கும், நம்பிக்கையோடு முன்னே பார்த்திடுவதற்கும் நன்றிகள் ! Much appreciated !

      Delete
  11. டியர் எடிட்டர்ஜீ!!!
    இணையத்திற்கு அப்பால் உள்ள வாசக நண்பர்கள் பலர் டயபாலிக்கை நிராகரித்துள்ளது அடியேனுக்கு வருத்தம் கலந்த வியப்பை ஏற்படுத்துகிறது.

    வித்தியாசமான கதைக்களம்,யதார்த்தத்தை மீறாத ACTION, மாறுபட்ட ஓவிய பாணி,புதிரான FLASH BACK உத்தி போன்றவை நிறைந்த டயபாலிக் கதைகள் எங்களுக்கு வேண்டாம்.கையில் கரண்ட் ஷாக் அடித்தால் மாயமாய் மறையும் "பூ சுற்றல்"கதைகள்தான் வேண்டும் என்றால், நாம் இன்னும் "வளறா பிள்ளைகளாகவே" இருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது!

    பொதுவாக கருத்துக்கணிப்புகள் (நிச்சயமாக)குழப்பத்தையே ஏற்படுத்தும்.ஆகவே, இது போன்ற கருத்துக்கணிப்புகளை நீங்கள் தவிர்க்கலாமே ஸார் !!!

    ReplyDelete
    Replies
    1. //இணையத்திற்கு அப்பால் உள்ள வாசக நண்பர்கள் பலர் டயபாலிக்கை நிராகரித்துள்ளது அடியேனுக்கு வருத்தம் கலந்த வியப்பை ஏற்படுத்துகிறது.//

      +1

      Delete
    2. @ Friends : என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் !!

      Delete
    3. saint satan : வரும் நாட்களைப் பற்றிய ஆரூடம் சொல்லிடும் கருத்துக் கணிப்புகளை ஓரம் கட்டுவதில் தவறில்லை ; ஆனால் இவை நேற்றைய நிகழ்வுகளின் அலசல்கள் எனும் போது தவிர்த்தல் சுலப வழியாக இருக்கலாம் - ஆனால் சரியானதாக இராதே !

      அதற்காக இங்கு சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களின் சகலமும் எனது தீர்மானங்களை மாற்றியமைக்கப் போகின்றன ; நாளையே நான் முழுசாய் திசை மாறிடப் போகிறேன் என்றெல்லாம் எண்ணிடல் சரியாகாது !

      கறுப்பு - வெள்ளை இதழ்களுக்கு உள்ள குறையா மவுசு ; கனத்த கதைக் களங்களின் மீதான ஒரு வித அலர்ஜி ; காமிக்ஸ்களின் மீது செலுத்திட காலமாய்ப் பழகிப் போனதொரு மென்வாசிப்பு முறையினை சிறிதேனும் மாறுதலுக்கு உட்படுத்திக் கொள்ள நண்பர்கள் காட்டும் ஆர்வமின்மை - இவை 3 மட்டுமே எனது சிந்தையில் நிழலாடுகின்றன ! விடா முயற்சியாய் நாம் செய்திடக் கூடியது என்ன ? நம்மை நாமே சற்றே மாற்றிக் கொள்வது அவசியமாவது எதனில் ? என்பதைப் பற்றி மட்டுமே யோசிக்க விழைகிறேன் !

      Delete
    4. //விடா முயற்சியாய் நாம் செய்திடக் கூடியது என்ன ?//
      சார் , லார்கோ, ஷெல்டன் , டெக்ஸ் போன்ற அதிரடி நாயகர்களே என்றும் உத்தரவாதம் போல படுகிறது எனக்கு !~ இவர்களே டாப் த்ரீ நாயகர்களாய் தேர்வு பெற்றிருக்கிறார்கள் !

      Delete
    5. என்னது!! டயபாலிக் யதார்த்த நாயகனா!!

      முடியல .... அடுத்தவரைபோல் தோற்றமளிக்கசெய்யும் ரப்பர் முகமூடிகள் செய்வது எவ்வளவு

      சாத்தியம் ... டயபாலிக் கதைகளின் மற்ற அம்சங்களுக்காக (நெகடிவ் ஹீரோ அவர் ஒருவரே

      தற்போது) மட்டுமே ரசிக்கிறோம் என்பது எனது கருத்து ....ஆனால் அவர் ஒரு தவிர்க்கஇயலாதவர்

      அல்ல....

      Delete
    6. // என்னது!! டயபாலிக் யதார்த்த நாயகனா!!
      முடியல .... அடுத்தவரைபோல் தோற்றமளிக்கசெய்யும் ரப்பர் முகமூடிகள் செய்வது எவ்வளவு
      சாத்தியம் ... //

      கமலஹாசன் உட்பட பலபேருக்கு முகமூடி மீது அசாத்திய நம்பிக்கை இருப்பது ஆச்சரியம்தான்! ஹி ஹி - ஒருவகையில் அதுவே மற்றவர் பார்வையில் Low Standard என முத்திரை குத்தப்பட இலகுவாக வழிவகுக்கிறது. முகமூடி டயபாலிக் கதைகளின் Weakness!

      Delete
    7. Senthil Madesh : //என்னது!! டயபாலிக் யதார்த்த நாயகனா!! முடியல .... அடுத்தவரைபோல் தோற்றமளிக்க செய்யும் ரப்பர் முகமூடிகள் செய்வது எவ்வளவு சாத்தியம்//

      தசாவதாரத்தில் 10 விதமான கமலஹாசனை பார்த்து ரசித்து, யதார்த்த நாயகனாக கொண்டாடிய மண்ணில் தானே நாமும் இருக்கிறோம். இங்கே சாத்தியங்களைப் பற்றி எவரும் கவலைப்படுவதில்லை ; அது எப்படி சாத்தியமாகிறது என்ற வியப்பில் அல்லவா ரசனையின் பால் கட்டுப்படுகிறோம்?

      ஏற்கனவே ஆசிரியர் கூறியபடி டயபாலிக் கதைகள் - படிக்க படிக்கத் தான் பிடிக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இரண்டு கதைகளை மட்டுமே படித்து விட்டு அதன் தொடர் முழுமைக்கும் முத்திரை குத்துவது என்பது காமிக்ஸ் உலகில் சாத்தியமில்லை.

      பார்க்க பார்க்கத் தான் என்னை பிடிக்கும் என்று சொன்ன தனுஷை விட இக்கதைகள் நன்றாகவே இருக்கிறது :)

      Delete
    8. //இங்கே சாத்தியங்களைப் பற்றி எவரும் கவலைப்படுவதில்லை ; அது எப்படி சாத்தியமாகிறது என்ற வியப்பில் அல்லவா ரசனையின் பால் கட்டுப்படுகிறோம்? //
      அழகாய் சொன்னீர்கள்

      Delete
    9. டியர் செந்தில் மாதேஷ்!!!

      //என்னது!! டயபாலிக் யதார்த்த நாயகனா!! //

      டயபாலிக் யதார்த்த நாயகன் என்று அடியேன் எங்கு குறிப்பிட்டேன்...?

      யதார்த்தத்தை மீறாத ACTION-என்றுதானே எழுதியிருக்கிறேன்!

      அது சரி....காமிக்ஸுக்கும்,யதார்த்தத்திற்கும் என்ன அய்யா சம்பந்தம் ;-)

      Delete
    10. saint satan : //அது சரி....காமிக்ஸுக்கும்,யதார்த்தத்திற்கும் என்ன அய்யா சம்பந்தம் ;-) //

      காமிக்ஸ் பல்வேறு பரிமாணங்களை கொண்டது ; அதில் ஒன்று தான் யதார்த்தம்.
      அதற்கு வெகு சமீபத்திய உதாரணம் தான் 'ஒரு சிப்பாயின் சுவடுகள்' :)

      Delete
    11. //யதார்த்தத்தை மீறாத ACTION-என்றுதானே எழுதியிருக்கிறேன்!//

      இந்த ஸ்டேட்மெண்ட் ஒன்றே காமிக்ஸ்க்கும் யதார்த்ததிற்கும் உள்ள சம்பந்தத்தை சொல்கிறது

      யதார்த்தம் இல்லாத பிளாஷ்கார்டன் கதைகளை நாம் எந்த அளவுக்கு ரசிக்கிறோம் என்பது

      உங்களுக்கே தெரியும் ....நாம் ரசிக்கும் டயபாலிக் மனிதன்தானே?...

      மனித யத்தனத்தை மீறும் ஆக்ஷன்களைதான் யதார்த்தத்தை மீறியது என்று சொல்லுவோம்

      என்பது எனது கருத்து

      @ M.M கமல்ஹாசனை நாம் கொண்டாடியது புதுமைக்காக, ஒருவரே பல வேடங்களை செய்ய

      எடுத்துக்கொண்ட சிரமங்களுக்காக, ஆனால் ஒவ்வொரு வேடமும் கமலாக பார்க்க முடிந்ததே

      தவிர அந்தந்த கேரக்டராக பார்த்தோமா என்று தயவு செய்து யோசியுங்கள்

      வேதாளர் , மாண்ட்ரேக் போன்றோரை நாம் வியப்பின்பால்பட்டுத்தான் ரசித்தோம் என்பது

      ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்றுதான் ஆனால் காமிக்ஸ்க்கும் யதார்த்தத்திர்கும் சம்பந்தமே

      இல்லை என்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று . எனவேதான் இன்னொரு

      மனிதனாக தோற்றமளிக்க முகமூடி மட்டும் போதுமா? உடலமைப்பு அதேபோல் வேண்டாமா?


      அதனாலேயே டயபாலிக் பற்றி மாற்றுக்கருத்து நிலவுகிறது .. இதை எல்லாம் யோசித்தால்

      காமிக்ஸ்ஐ ரசிக்க முடியாமல் போகலாம் ...ஆனால் காமிக்ஸ்ஐ ரசிக்க ஒரு குழந்தையின் உள்ளமும்

      தேவைப்படுகிறதே என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டால் மாயாவிக்கு என்ன குறை? மாயாவியை

      கேட்பவர்கள் வளராபிள்ளைகள் எனும் கருத்து நல்லதா??

      Delete
  12. Pls do not discontinue Diabolik... Operation Sooravalli was simply fantastic...

    ReplyDelete
  13. ஆகா ......நான் மட்டும் தான் வளர வில்லை என்று பலர் நினைக்க இணையம் வராத எனது ஆருயிர் நண்பர்கள் எனது தோளுக்கு பின்னால் எத்துனை நண்பர்கள் .அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் .அட்சுரம் பிசுகாமல் எனது எண்ணத்தை அப்படியே வழி மொழிந்து உள்ளார்கள் .இனி இந்த முடிவின் படி ஆசிரியர் தொடர்ந்தால் எங்களுக்கு டன் டனாக்கு டக்கா தான் . என்னதான் வெளி நாடு போய் புரியாத வார்த்தையில் டூயட் பாடினாலும் அது மனதிலா நிற்கிறது .மரத்தை சுற்றி டூயட் ஆடும் அழகான தமிழ் பாடல்கள் தானே இன்றும் பலரது விருப்பம் .

    அந்த விண்ணப்பத்தில் ஒரே ஒரு குறை ...விடையில் அல்ல ....ஒரு வினா குறைந்ததில் குறை .அதாவது அதிலும் " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வேண்டுமா...வேண்டாமா என்ற வினாவை இணைத்து இருந்தால் எங்கள் போராட்ட குழுவின் பின்னால் எத்துனை ..,எத்துனை நண்பர்கள் உள்ளனர் என்பதை ஆசிரியர் உணர்ந்து இருப்பார் .இப்போது மட்டும் ஆசிரியர் அதை உணராமல் இல்லை என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை . ( எங்க வந்தாலும் கடமையில் கரக்டா இருக்கணும் அப்படி எங்க டெக்ஸ் வாத்தியார் சொல்லி கொடுத்து இருக்கார் )

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : மரத்தைச் சுற்றிப் பாடுவது டூயட்டாக இருக்கும் வரை ஓ.கே தான் ; "பழைய நினைப்புடா பேராண்டி" என்று பாடும் நிலை வந்திடக் கூடாதே என்பது தான் ஆதங்கமே !

      Delete
  14. சார் அட்டை படம் அருமை !
    ரோஜர் தோன்றும் இரவொளி பக்கங்கள் அந்த நீல நிறம் நமது கடந்த
    கால நினைவுகளில் வாழும் வேதாளனை நினைவு படுத்த தவறவில்லை !

    திங்கள் கிழமை இதழ்கள் கிடைக்கும் என்பது கூடுதல் சந்தோசம் ! ஒன்றாம்
    தேதியே வழக்கம் போல , அருமை !


    ReplyDelete
    Replies
    1. வேதாளனை நாம் மட்டும் தான் நினைவு வைத்திருக்கிறோம் . நமது போராட்டக்குழு தலைவருக்கு ஒரு வாழைப்பூ வடை பார்சேல் .

      Delete
  15. டாப் 3
    துரத்தும் தலை விதி !
    நெவெர் பிஃபோர் spl !
    ஒரு ஒப்பந்தத்தின் கதை !

    2013 ன் டாப் சொதப்பல்

    கிரீன் மனோர் 2

    2013 ன் டாப் அட்டை
    டெக்ஸ் தீபாவளி ஸ்பெசல்

    2013 ன் சுமார் அட்டை
    ஆதலினால் அதகளம் செய்வீர் !

    2013 ன் பெஸ்ட் நாயகர்
    லார்கோ

    வேண்டவே வேண்டாம் !
    கிரீன் மனோர் போல சிறிய துக்கடா கதைகள் !

    கருப்பு வெள்ளை இதழ்கள் குறித்து !
    சார், வண்ணத்தில் தொடர்ந்து பார்த்து திகட்டி விட்டது போல மனதிற்கு படுகிறது !
    டெக்ஸ், டயபாளிக் காணும் பொது ஏனோ மனது சிறகடித்து பறக்கிறது ! ஆகவே
    கருப்பு வெள்ளை இதழ்கள் காலத்தின் கட்டாயம் ! இப்போதும் கருப்பு வெள்ளை
    படங்களை ரசிப்பது போல !லார்கோ, ஷெல்டன்,,ஜில் ஜோர்டான் , பதின்மூன்று,
    பிரின்ஸ் , ப்ளூ , லக்கி போன்ற கதைகள் வண்ணத்தில் டாலடிக்கின்றன !
    அற்புதமான வண்ண கலவைகள் மூலம் ! அதிக வண்ணங்கள் இடம் பெரும்
    பக்கங்கள் மட்டுமே மனதை ஈர்க்கின்றன ! பிற பக்கங்கள் ....................


    2014 கதை தேர்வுகள்

    அருமை ! ஆனால் இட பற்றாக்குறை , இதழ்கள் குறைவால் ! எனவே டயபாளிக்
    மற்றும் டெக்ஸ், ஷெல்டன் , ப்ளூ ,ஜில் போன்றோருக்கு வாய்ப்புகள் இன்னும்
    கூட்ட பட வேண்டும் !


    டெக்ஸ் ஓவர் டோசா ?
    இல்லை ! இல்லவே இல்லை !

    இரத்த படலம் இரண்டு
    சான்சே இல்லை ! பட்டய கிளப்புது ! முதல் பாகங்களை கலரில் கேட்டு
    அடம் பிடிக்க சொல்கிறது மனதை !

    காமெடி ,டிடக்டிவ் , ஆக்சன் ,கௌ பாய் தாண்டி
    போர்கதைகள், மாயாலோக கதைகள் ,பேய் கதைகள் , வரலாற்று கதைகள் ...

    2013 சுருக்கமாய்

    அருமை !





    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : // வண்ணத்தில் தொடர்ந்து பார்த்து திகட்டி விட்டது போல மனதிற்கு படுகிறது !//

      ஒன்றரை ஆண்டாய்ப் பார்த்து வரும் வண்ணங்கள் திகட்டிடும் பட்சத்தில் - 40 ஆண்டுகளைப் பார்த்து வரும் B &W பாணியினை என்சொல்லுவது ?

      இங்கு நெருடலாய் அமைவது அன்றைய நமது B &W கதைகளின் வாசிப்பு அனுபவத்தோடு நாம் இணைத்துப் பழகிப் போன நம் பால்யங்களின் நினைவலைகளே என்பது எனது அபிப்ராயம் ! இன்று அந்நினைவுகள் missing எனும் போது அந்த இனம் புரியா குறைபாடு வெவ்வேறு விதங்களில் நம் மனங்களைப் பிறாண்டுகிறது !

      Delete
    2. இருக்கலாம் சார் லார்கோவோ , ஷேல்டனோ ,ஜில் ஜோர்டானோ வண்ணங்களில் பார்க்க பார்க்க பரவசபடுத்துகிறார்களே !

      Delete
  16. டியாபாளிக் கதை வரிசை சில நண்பர்களுக்கு பிடிக்காமல் இருப்பது தங்களை போன்றே
    எனக்கும் வியப்பளிக்கிறது !
    பார்னே அட்டை படம் இந்த வருட அட்டையில் என் மனதில் இரண்டாம் இடம் இதற்கே !

    ReplyDelete
    Replies
    1. டையபளிக் யாரு .....
      இந்த பக்கம் போன்னனே அவனா.........?
      இல்ல பக்கத்துல நிக்குரானே அவனா ..........?
      இல்ல நடுவில்ல உள்ளவனா .......?
      இல்ல ஆபீஸ் பாயா ........?
      இல்ல இன்ஸ்பெக்டரா ....?
      இல்ல வாசிக்கிற நானா ......?
      இப்பிடி தான் படிக்க வேண்டியுள்ளது.....?

      Delete
    2. டயபாலிக் யாருன்னா... முதல்ல எல்லாரும் 4 தடவை முகமூடியை கழட்டுங்க... அப்பரம் சொல்றேன், ஹி ஹி!

      Delete
    3. மதியில்லா மந்திரி:

      ஒரு காமிக்ஸ் கதையில் இத்தனை எதிர்பார்ப்புகளா ?
      ஒரு காமிக்ஸ் கதையில் இவ்வளவு சுவாரசியங்களா ?
      ஒரு காமிக்ஸ் கதையில் இத்தனை திக் திக் திருப்பங்களா ?

      அப்படியென்றால் அந்த கதை எனக்கும் வேண்டும் மந்திரியாரே :)

      Delete
    4. இரண்டாம் உலக போரில் இஸ்ரேலிய உளவாளிகள் இவராக கூட இருக்கலாம் , என முன் நிற்பவர் மேல் எண்ணம் ஊடுருவியதை போல உள்ளது ; உங்கள் எண்ணத்தில் டயபாளிக் குறித்து பார்க்கும் பொது !

      Delete
    5. மேலும் மூன்று டையபாலிக் கமெண்டுகள் .......................

      Delete
  17. Please continue Danger Diabolic. its simply superb and stylish. I agree with Green Manor kind of Graphic Novels may be discontinued. But give space for Thorgal like Graphic Novels. At least 30% BW with old heros and 70% with Colors go good. According to me best is Lucky Luke, Tiger, Tex, LargoVinch...

    ReplyDelete
  18. டியர் விஜயன் சார்,

    இம்முறை ஏனோ நீங்கள் சோகமாக இருப்பதாக தெரிவதால் என்னுடைய அபிப்ராயங்களை இங்கு பெரியளவில் தெரிவிக்க விரும்பவில்லை. இல்லையில்லை பணிச் சுமை தான் காரணம் என்று நீங்கள் கூற நினைத்தாலும் ஏதோ ஒரு சலிப்பு உங்களுக்குள் சயனம் கொள்வதாகவே எனக்குள் தோன்றுகிறது. தவறான கணிப்பாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி. இது நிற்க;

    ''ஆண்டியின் சொல் அம்பலம் ஏறாது'' என்ற பழமொழியின் தாக்கத்தால் பொதுவாகவே நான் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளில் பங்கேற்பதில்லை. இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் ''மனதில் மிருகம் வேண்டும்'' மற்றும் ''க்ரீன் மேனர்- கொலை செய்வீர் கனவான்களே'' இரண்டும் தமிழ் காமிக்ஸ் உலகின் அற்புதமான தேடல் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்களே இல்லை. இவைகள் இரண்டும் முதல் மாணவனாக தேறாவிட்டாலும் distinction ல் தேர்வான கதைகள் என்பது என்னுடைய அபிப்ராயமாகும்.

    இதில் ஆச்சர்யப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் பலருக்கும் விக்டோரியா காலத்து தமிழ் ஈர்க்காமல் போனதும் ஒரு காரணம் என்றால் எனக்கு மனதில் மிருகம் வேண்டும் - கதையின் எளிய மொழிநடை மிகவும் சுவாரசியத்தை குறைத்து விட்டது. இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க கதைகளில் அதன் கதைக்களத்திற்கு ஏற்றவாறு தாக்கத்தை ஏற்படுத்தும் மொழிநடை மட்டுமே காலத்தை கடந்து நிற்பதாக அமையும். இரண்டே இரண்டு புத்தகங்கள் என்பதால் க்ரீன் மேனர்-1 போன்றே மனதில் மிருகம் வேண்டும் கதையிலும் மொழிநடை அமைத்திருந்தால் அது ஒரு மைல் கல் போன்றே அமைந்திருக்கும் என்பது என் கருத்து. தற்போதைய கருத்துக்கணிப்பு போலவே பலராலும் ஏற்க படாமல் போயிருந்தாலும் நீங்கள் விரும்பியப்படி மொழிபெயர்த்த திருப்தி உங்களை சந்தோஷப்படுத்தி இருக்கும் அல்லவா ?!

    விரும்பும் வாசகர்களுக்காக மனதில் மிருகம் வேண்டும் ஒரு பறவை பார்வை :)

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மரமண்டை : சின்னதாய் ஒரு திருத்தம் - வாசக அபிப்ராயங்களில் கிரீன் மேனர் கதைகளின் சர்வமும் மொத்து வாங்கியுள்ளன ! அதன் முதல் பாகம் வெளி வந்த ANS -ல் இதர கதைகள் இருந்ததன பொருட்டு - அந்த இதழின் பெயரைக் குறிப்பிடாது - "மனதில் மிருகம் வேண்டும்" இதழினை நான் குறிப்பிட்டுள்ளேன் !

      So முதல் பாகம் தலை தப்பியது ; இரண்டாம் பாகம் உதை வாங்கியது என்ற நிலையில்லை ! மொத்தமாய் இவ்வரிசைக் கதைகளுக்கு ஒரு பெரிய thumbs down !

      Delete
  19. ரசனைகள் வேறுபடுவது சகஜம்தான். என்னைப் பொறுத்தவரை, 'க்ரீன் மேனர்' போன்ற கதைகள் ''கொலை'' என்பதை சர்வசாதாரணமாக அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதால், கொஞ்சம் குரூரத் தன்மையுடையவையாக இருப்பது இயல்பு. அது கொஞ்சம் வெறுப்பை வாசகர்களிடையே ஏற்படுத்தியிருக்கலாம். டேஞ்சர் டயபாலிக் பிடிக்காமல் போனதற்கும் இரசனை மாற்றங்கள் இன்னமும் நமது பெரும்பான்மை வாசகர்களிடத்தில் ஏற்படவில்லை என்பதையே காட்டுகின்றது.

    யாரையும் குத்திக்காட்டுவது எனது நோக்கமல்ல, ஆயினும் இத்தகைய ரசனை மாற்றமல்லாத நிலை தொடருமானால், நீங்கள் ஸ்பைடரையும், ஆர்ச்சியையும், இரும்புக்கையாரையும் ரீ பிரிண்ட் போட்டே கல்லா கட்டிவிடலாம் என்பது உறுதி!!! (போடுங்கள் சார் ரீ பிரிண்ட்டுகளை... பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறீர்களே!!!)

    ReplyDelete
    Replies
    1. Podiyan : கல்லா கட்டி விடலாமென்பது உறுதி....ஆனால் என்றோ ஒரு நாள் திரும்பிப் பார்க்கையில் - செக்கு மாட்டுக்கும் எனக்கும் பெரியதாய் வேறுபாடு ஏதும் தெரியாமல் போய் விடுமே !

      நமக்கு என்றைக்குப் பிழைக்கும் வழி தெரிந்திருந்தது - இன்று புதிதாய் ஞானோதயம் பிறந்திட ! :-)

      Delete
    2. பொடியன், பயங்கர புயல் அட்டை டிஸைன் சூப்பர். பரிசு கிடைத்துவிட்டதா?

      Delete
  20. Jill jordanக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்ததிற்கு நன்றி! இம்முறை வெற்றி வாகை சூடுவார் என நம்புவோமாக!:-)

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : நம்புவோமாக!:-)

      Delete
  21. Danger Diabolicஐ எக்காரணம் கொண்டும் discontinue செய்துவிடாதீர்கள்! அற்புதமான ஒவியங்கள் கொண்ட படைப்பு!

    ReplyDelete
    Replies
    1. மாஸ்க் போடாத டையபாலிக் கதை வந்தால் நன்றாக இருக்கும்

      Delete
    2. அதுதானே அவ அறிந் தனித்துவம் மந்திரியாரே !

      Delete
    3. ரெண்டு சந்தாதாரர் நீங்க சொன்ன ஓகே தான் ..................................!!!

      Delete
  22. விஜயன் சார், இராமநாதபுரம் புத்தக கண்காட்சியில் நமது புத்தக கடைக்கு திரு.அப்துல்கலாம் அவர்கள் விஜயம் செய்யும் நமக்கு பாக்கியம் கிடைத்ததா?

    ஆர்வமுடம் ஜில் ஜோர்டன் மற்றும் ரோஜெர் கதைகளை எதிர்பார்கிறேன்!

    2013 வாசகர்கள் கருத்துகளை கொண்டு கிரீன் மனோர் மற்றும் சிப்பாயின் சுவடுகள் போன்ற கதைகளை தவிர்க்க வேண்டாம், வருடம் ஒரு முறையாவது இது போன்ற கதைகளை வெளி ஈட வேண்டும்! டயபாளிக் என்னை பொறுத்தவரை பூ சுற்றலின் உச்சம்!

    அடுத்த தோர்கல் எப்போ சார்? வீட்டுல தொல்ல தாங்க முடியல, சீக்கிரம் வெளி இட்டு என்ன காப்பாத்துங்க!

    ReplyDelete
    Replies
    1. சொல்ல மறந்து விட்டேன், ரோஜர் கதையின் அட்டை படம் அருமை!

      Delete
    2. Parani from Bangalore : கட்டுக்கடங்கா கூட்டம் என்பதால் மேதகு. அப்துல் கலாம் அவர்கள் புத்தக விழா அரங்கினுள் நுழையவே சிரமம் ஆகிப் போனதாம் !

      தோர்கலின் இரண்டாம் பாகம் ஏப்ரலில் என்பதால் அது வரை தாக்குப் பிடிக்கப் பாருங்களேன் :-)

      Delete
    3. ஆஹா உடனடியாக வெளியிட முடிவு செய்ததற்கு நன்றிகள் சார் !

      Delete
    4. இது போதும் இதவச்சி சமாளிச்சி விட வேண்டியதுதான்!

      Delete
  23. வாசகர்களின் மன எண்ணங்களை வெளிக்காட்டியது அலசல் பகுதி. அருமை!

    ReplyDelete
  24. 2013 - ஓர் அலசல்: (என் கருத்துக்கள்)
    போன வாரம் தான் டயாபாலிக் கதையினை படித்து முடித்தேன்(????). "மனதில் மிருகம் வேண்டும்" இன்னும் 4 பக்கங்களை தாண்டவில்லை. என் காமிக்ஸ் வரலாற்றில்(10+ years), இதுதான் முதல் முறை, படிக்க அதிக நேரம் எடுத்து கொள்வது .(மனம் லயிக்கவே இல்லை இக்கதைகளில்).... புத்தகம் வாங்கிய அன்றைய இரவே படித்த கதைகள் ஏராளம். (இரத்தப்படலம் மட்டுமே 3 தினங்கள் பிடித்தது).

    ஹீரோக்களின் சாகசங்களை படிக்கும்போது வாழ்வில் உள்ள பிரச்சனைகளை சமாளிக்கும் சக்தி மனதிற்கு கிடைகின்றது. ஹீரோ ஒன்று பின்னே ஒன்றாக எவ்வளவு சவால்களை சந்தித்து தீர்க்கமாக யோசித்து செயல்படுகிறார்... நாமும் சிந்தித்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற மனத் துணிவு கிடைகின்றது.

    எனவே லார்கோ வின்ச், வெய்ன் ஷெல்டன், டெக்ஸ் , டைகர், லூக்,XIII கதைகளே அதிகமாக வெளியிடவும்.

    ReplyDelete
    Replies
    1. Makesh @ அப்ப தூங்கி போன டைம் பாம் படிசிட்டிங்களா ? நானும் அந்த புத்தகம் வெளி வந்த நாள்ல இருந்து இன்னும் படித்து முடிகல! முடிஞ்சா அதையும் முயற்சி செய்து பாருங்க நண்பரே!

      Delete
    2. நண்பர் மகேஷ் அவர்களுக்கு ......மிக்க நன்றி ...

      Delete
    3. அந்த பாம் கதை எனக்கு பிடிக்கும் ஆனால் ஏகப்பட்ட சித்திர இடைஞ்சல் .....கச மூஸா

      Delete
  25. முன் அட்டை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு !

    வண்ண இதழ்கள் என்னைப்பொருத்தவரை பிரியத்துக்குரியது.

    ஆனால் நான் வாசிக்கும் விதமோ பலவாறு இருக்கும்.

    அமர்ந்து கொண்டும், படுத்துகொண்டும், பயணங்களிலும் என்பதாக பல நிலைகளைக் கொண்டது.

    இது போன்ற சமயங்களில் வண்ண இதழ்களை கையாள்வது என்பது புது வெள்ளை சட்டை அணிந்துகொண்டு கார் ஸ்டெப்னி மாற்றுவது போன்ற மன நெருக்கடியை தருகிறது.

    ஆனால் வண்ண இதழ்களின் சித்திரங்கள் ஏற்படுத்தும் ஈர்ப்பு '' ஆஹா ! ''

    ReplyDelete
    Replies
    1. Meeraan : //வண்ண இதழ்களை கையாள்வது என்பது புது வெள்ளை சட்டை அணிந்துகொண்டு கார் ஸ்டெப்னி மாற்றுவது போன்ற மன நெருக்கடியை தருகிறது.//

      அழகான உவமை ! உண்மையும் தான் !!

      Delete
  26. @ FRIENDS : "அமைதிப் படையினரால்" சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களின் சகலமும் எனது தீர்மானங்களை மாற்றியமைக்கப் போகின்றன ; நாளையே நான் முழுசாய் திசை மாறிடப் போகிறேன் என்றெல்லாம் எண்ணிடல் சரியாகாது !

    கறுப்பு - வெள்ளை இதழ்களுக்கு உள்ள குறையா மவுசு ; கனத்த கதைக் களங்களின் மீதான ஒரு வித அலர்ஜி ; காமிக்ஸ்களின் மீது செலுத்திட காலமாய்ப் பழகிப் போனதொரு மென்வாசிப்பு முறையினை சிறிதேனும் மாறுதலுக்கு உட்படுத்திக் கொள்ள நண்பர்கள் காட்டும் ஆர்வமின்மை - இவை 3 மட்டுமே எனது சிந்தையில் நிழலாடுகின்றன ! இச்சூழலில் விடா முயற்சியாய் நாம் செய்திடக் கூடியது என்ன ? நம்மை நாமே சற்றே மாற்றிக் கொள்வது அவசியமாவது எதனில் ? என்பதைப் பற்றி மட்டுமே யோசிக்க விழைகிறேன் !

    So நாளைக்கே மாயாவிகளும், ஸ்பைடர்களும் b&w-ல் பரணிலிருந்து படையெடுத்து விடுவார்களென்ற பீதியோ ; நம்பிக்கையோ அவசியமாகாது ; அதே போல் கூர்மண்டையர் டயபாலிக் இத்தோடு நாடு கடத்தப்படுவாரா ? என்ற ஆதங்கமும் தேவையாகாது !

    ReplyDelete
    Replies
    1. //விடா முயற்சியாய் நாம் செய்திடக் கூடியது என்ன ?//
      சார் , லார்கோ, ஷெல்டன் , டெக்ஸ் போன்ற அதிரடி நாயகர்களே என்றும் உத்தரவாதம் போல படுகிறது எனக்கு !~ இவர்களே டாப் த்ரீ நாயகர்களாய் தேர்வு பெற்றிருக்கிறார்கள் !
      எனவே இது போன்ற நாயகர்களை விடா முயர்ச்சயுடன் தொடர்ந்து தாருங்கள் !

      Delete
    2. விஜயன் சார், நமது கறுப்பு வெள்ளை நாயகர்களின் சிறந்த கதை தொகுப்புகளை வருடம் 3-6 வரை வெளி இட வேண்டும்!

      Delete
    3. // அதே போல் கூர்மண்டையர் டயபாலிக் இத்தோடு நாடு கடத்தப்படுவாரா ? என்ற ஆதங்கமும் தேவையாகாது //

      Many Thanks.

      Delete
    4. டையபாலிக் இருக்கட்டும்

      Delete
  27. Replies
    1. நண்பர் ஆதி தாமிரா இட்டிருக்கும் இவ்வளவு பெரிய பதிவை படிக்க எனக்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும் போலிருக்கிறது.

      ஆகையால் படித்து விட்டு பிறகு வருகிறேன் :)

      Delete
    2. King Viswa: ஒரு பின்னூட்டத்தைப் பார்த்து வாய்விட்டு சிரித்தது இன்றுதான்! :-)

      Delete
  28. People don't like "Danger Diabolik" - That's definitely a big surprise, story, art work everything was great. May be people didn't like the negative hero aspect of it.

    ReplyDelete
  29. ஒவ்வொரு தனி மனிதனையும் திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கில் நீங்கள் சிந்திப்பது பாராட்டுக்குரியது. எனினும் தேர்ந்த அரசு இயந்திரத்தால் கூட இயலாத காரியம் அது. ஸ்டாண்டர்டான ஒரு தரம் . போரடிக்காத கதைகள் என்பதே செயள்பட எளிதாகவும், அனைவர்க்கும் பொதுவானதாகவும் இருக்கும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது மனிதனின் பொது பார்வை.

    ReplyDelete
    Replies
    1. Meeran : எல்லாக் கரைகளையும் பச்சையாக்கிப் பார்த்திடும் பேராசை தான் !!

      Delete
    2. தண்ணீர் (பணம்) செழிப்பாக வேண்டுமே சார் !

      Delete
  30. டயபாலிக் நாடு கடத்தப்படமாட்டார் என்பது மகிழ்ச்சியான விஷயம். கைவிடப்பட்ட லயன்,முத்து நாயகர்கள் விஷயத்தில் நான் உட்பட எனைய காமிக்ஸ் ரசிகர்கள் வளரவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது!;-)

    ReplyDelete
  31. கிரீன் மேனர் ஒரு அதி அற்புதமான படைப்பு . அதை விட சிறந்த படக் கதையை இதுவரை நான் படித்தது இல்லை என்றே சொல்வேன் . அதே போல் டயபலிக் ஒரு மொக்கை கதை வரிசை தான்.

    ReplyDelete
    Replies
    1. Saranya Karvendan : இத்தாலிய நண்பர்கள் ரூம் போட்டு அழுதிடப் போகிறார்கள் - தங்கள் ஆதர்ஷ டயபாலிக்குக்கு "மொக்கை" என்று நீங்கள் பெயர் சூட்டியுள்ளதைப் பார்த்து !

      Delete
  32. விஜயன் சார், நமது சந்தா எண்ணிக்கையை அதிகரிக்க கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் சந்தா தொகையில் தள்ளுபடி ஏதும் கொடுக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : பள்ளிகளுக்கும்,கல்லூரிகளுக்கும், நூலகங்களுக்கும் 15% சலுகை தருகிறோமே !

      Delete

    2. நான் சொல்லுறது சந்தாதார்கள், புதிய மற்றும் பழைய வாசகர்களுக்கு. முழுக்க முழுக்க சந்தா செலுத்துபவர்களில் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் தவிர வேறு ஒன்றும் இல்லை!
      தேர்ந்த அரசியல் மாதிரி பட்டும் படாமல் கேட்ட கேள்விக்கு வேறு திசையில் பதில் :-) நான் சரியாதான் சொல்லுறனா!

      Delete
    3. Parani from Bangalore : நீங்களும் சரியாகத் தான் சொல்கிறீர்கள் ; நானும் தவறாகச் சொல்லவில்லை :-)

      Delete
  33. Surprise only. I thoroughly enjoyed reading Diabolic stories. Particularly for the way it is told by diabolic himself. Big surprise for me is when the first diabolic story came iin 1980s I dint like the story. Diabolic co is reminds me English movies only like Ocean leven,12,13 etc.

    Next surprise is Green manor. These stories depict the other side of humans and how eroded it is. Except the pictures are looking like cartoons. Anyway those pictures also introducing us to a new style.

    Anyway everyone's taste is different.

    Also I want to tell others my ever liked comics hero is Vedalar only. How anyone forget the buildup given for Vedalar

    ReplyDelete
  34. Forgot to add. Sippayin suvadugal is really horrible. Neither enjoyable nor ignorable.

    ReplyDelete
    Replies
    1. Senthil Kumar : If it isn't ignorable, it must have something in it !

      Delete
    2. Yes I hinted it. As expected you got it. Thanks sir.

      Delete
  35. இன்று நேரமானாலும் சரி தமிழில் எழுத போகிறேன் (தயவு செய்து பிழைகள் இருப்பின் பொறுக்க வேண்டுகிறேன்)!

    2013 சர்வே முடிவுகள் உங்களை போலவே எனக்கும் கொஞ்சம் surprise ஆக உள்ளது. நிறைய வாசகர்கள் வாழ்க்கையை போல காமிக்ஸ் ரசனையிலும் ஒரு Non-Resilience (மாற்றம் விரும்பாமை) மனநிலையில் உள்ளதாக எனக்கு தோன்றுகிறது.

    Fantasy/Action Based கதைகளை பல வருடங்களாக ரசித்து பழகிய ஒரு சில வாசகர்களுக்கு பிரளயத்தின் பிள்ளைகள்/Green manor போன்ற Reality கதைகளை உடனடியாக பிடிக்காமல் போவதில் வியப்பில்லை. என்னைப் பொறுத்த வரை அம்மாதிரி கதைகள் என்னை மெய் மறக்க செய்தன, என்னுடைய காமிக்ஸ் ரசனையை ஒரு படி உயர்த்தியதாகவே உணர்கிறேன். மேலும் அது போன்ற முயற்சிகள் Fantasy/Hero based stories நாட்டமில்லாத பல புதிய வாசகர்களை நமக்கு உருவாக்கி கொடுக்க வாய்ப்பு உள்ளதே.

    அடியேனும் டெக்ஸின் தீவிர ரசிகன்தான். Cowboy கதைகள் என்னதான் best sellers ஆகினும் எப்போதும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரே ட்ராக்கில் வண்டி ஓட்ட முடியாது. ஏதாவது ஒரு நாள் டெக்ஸ், டைகர் கதைகள் தீர்ந்து விடலாம் அல்லது நின்று விடலாம்.

    கடைசியாக - சிவகாசியின் சிறிய காமிக்ஸ் அதிபரோ அல்லது அமெரிக்க அதிபரோ - புதிதாக என்ன முயற்சி எடுத்தாலும் எல்லா தரப்பினரையும் திருப்தி படுத்த முடியாது! opinions always differs. நீங்கள் அத்தகைய புதிய முயற்சிகளை யார் மீதும் திணிக்கவில்லயே, sunshine நாவல் ஒரு தனி தொகுப்பாக வரும்போது பிடிப்பவர்கள்
    மட்டும் வாங்கட்டும்.

    2013 என்னை பொறுத்த வரையில் உங்களுக்கு ஒரு சாதனை ஆண்டு. Records are made to be broken though! எனவே தயவு செய்து கிராபிக் நாவல்/Danger Diabolik போன்ற புதிய experimental முயற்சிகளை தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Electron Karthick : கருத்துக்களிலும், ரசனைகளிலும் ஒரு universal ஒற்றுமை நிச்சயம் சாத்தியமாகாது தான் ! ஆனால் சிறுகச் சிறுக நமது காமிக்ஸ் ஜன்னலின் விசாலத்தைக் கூட்டிக் கொண்டே தான் செல்கிறோம் என்பது ஒரு சின்ன திருப்தி தருகிறது ! நிச்சயமாய் கிராபிக் நாவலும், டயபாலிக் போன்ற புது வரவுகளும் தொடர்ந்திடும் !

      இன்றில்லாவிடினும், என்றோ ஒரு நாள் டெக்ஸ் வில்லரையும் ; லார்கோக்களையும் ரசிக்கும் அதே மூச்சில் - கனமான கதைகளையும் ஏற்றுக் கொள்ளும் பாங்கு புலர்ந்திடுமென்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை !

      Delete
  36. Perceptions my friends. What one enjoys is what some one dislikes. Ingredients need to be served in a perfect way. If we keep disliking the experimental ventures we will end up where we started. Since my childhood I was not a great fan of the Steel Claw, Modesty nor Lucky Luke, but I never stopped reading their adventures as and when they were made available. Today I see the majority of friends voicing for the trio of the season "Largo, Tex & Lucky". Just for a second if we pause and rewind our memories back to 80s, the same folks would have voiced for the original trio "Spider, Archie & Steel Claw" and over a period of time we felt its time for the original trio to go on to a temporary hibernation. The same will happen to our current trio if we continue avoiding new story lines and stars. In my opinion all the action heroes have their own style and luring power. Tiger is no less than Tex nor Largo is better than Prince. These guys are created for the purpose of entertaining just like how we accept different takes on Tamil or world cinemas. If we don't like a particular movie nor a star, what do we do? we just stay away from it, but we never insist the producers or director not to make movies as such nor demand that particular star(s) not to perform again. Similarly we have our choice to either enjoy or stay away from the various story lines presented in our regional language by our beloved editor. So why debate on this topic? Rather we can eagerly wait as what will be served next in our plate...

    ReplyDelete
    Replies
    1. Lakshmipathy Ramaiyan : கருத்துப் பரிமாற்றங்கள் நம் ரசனைகளையும் சரி ; காமிக்ஸ் மீதான இந்நேசத்தையும் சரி - உயிர்ப்போடு வைத்திருக்க உதவிடும் எனும் போது - let's enjoy the debate as well !

      Delete
  37. சார், டயபாலிகின் வெளிவந்த இருகதைகளுமே ஓவர் ஹீரோயிலம்.. போதாகுறைக்கு ஜப்பானிய மங்கா ஸ்டைல் ஓவியங்கள் என்னை ஈர்க்கவில்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த க்ரீன் மேனர் கதை தொகுப்பை பெரும்பாலானோர் ரசிக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. உளவியல்ரீதியாக மனிதனின் பல வகை உணர்ச்சிகளை வாசகனுக்கு உணர்த்திய ஒரு கிராபிக்நாவல் அது. வெறும் கொலைகளை பற்றிய கதைகள் அல்ல அது. காதல், நட்பு, தனிமை, அதிகார ஆசை, பொறாமை, தாழ்வுமனபான்மையின் போக்கு என பலவகை மனிதர்களின் குணங்களை அழகாக நமக்கு காட்டிய கதைகள். அமரர் சுஜாதாவின் சிறுகதைகளை காமிக்ஸாக பார்த்த ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது. இப்படிபட்ட கிராபிக் நாவலை எங்களுக்கு அறிமுகபடுத்தி , காமிக்ஸ் படிக்கும் எங்களை, எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் வித்தியாசபடுத்தி காட்டியமைக்காக நன்றிகள் பல!

    ReplyDelete
    Replies
    1. cap tiger : கிரீன் மேனர் - ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தூங்கும் அந்த எதிர்மறைக் குணங்களைப் பற்றியதொரு படைப்பு என்பதனால் கூட அதைப் பற்றிப் படிப்பது ஒரு வித அசௌகரியத்தைக் கொண்டு வந்திருக்கக் கூடும் என்று நினைக்கத் தோன்றுகிறது !

      பரவலாய் இதற்கொரு thumbsdown கிட்டியிருப்பினும், நினைவில் நிற்கும் ஒரு இதழாக எனக்கு இது நிச்சயம் இருந்திடும் ! ஏதோ ஒரு தயக்கத்தில் இக்கதையை வெளியிடாமல் விட்டிருந்தால் தான் நான் வருத்தப் பட்டிருப்பேன் !

      Delete
  38. ரோஜரின் அட்டைபடம் பிரமாதம்.காமிக்ஸ் பரிச்சயம் இல்லாத நபர்களையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு மாயன்பிரமிட் பின்னணியில் ரியலிஸ்டிக்கா அருமையாக உள்ளது.

    ReplyDelete
  39. இது பிற வாசகருடன் ஒத்து போகும் 2013 கண்ணோட்டம்.

    லார்கோ டாப், டெக்ஸ் சலிக்காது என்பதில் சந்தேகம் இல்லை.

    டையபலிக்;
    டையபலிக் நிச்சயம் மார்டின் போல் விரைவில் கலக்குவார்.முதல் கதையோ மிலெனீயம் ஸ்பெசலீல் வந்த நீதிதேவன் 2000 தந்த அதே பார்க்காத மெகா சீரியலில் திடீரென்று ஓர் எபிஸோட் பார்த்தது போல் ஒன்றும் புரியா உணர்வை தந்தது உண்மை.ராபின் கதைகள் மாதிரி மோத திறமையான ஓர் வில்லன் இருக்கவில்லை என்பது இன்னொரு மைனஸ்.

    கிராபிக் நாவல்;
    சோகம் இல்லா கிராபிக் நாவல் வந்தால் ஒழிய கிராபிக் நாவல்களின் அவபெயர் நீங்கா.க்ரீன் மேனர் கதைக்கு பொருந்தா கார்டூன் பாணிக்கு மேலதிகமாக அதுவும் சோகமயம் தானே!

    மோசமான அட்டை(?) ;
    பளிச் ஹீரொ லாற்கோவுக்கு அமுக்கமான அட்டை பொருந்தவில்லை.உங்கள் வலைத்தளத்தில் இருந்த அதே அட்டையின் நீல பின்னணி பிரதி அருமை.
    ப்ரின்சுக்கோ முன் அட்டையுடன் ஒப்பீட்டால் பின் அட்டை அழகாயிருந்ததால் அவை இரண்டையும் வாசகர் ஒப்பீடு செய்திருக்கலாம்.

    ReplyDelete
  40. சார் ..அமைதி படையனரின் முடிவு எப்படி இருந்தாலும் உங்கள் முடிவு இப்படி இருந்தால் சந்ஷோசம் ...

    * வண்ண புத்தங்கள் வரும் வேளையில் கருப்பு வெள்ளை புத்தகம் வரவும் தாங்கள் முயற்சிக்கலாம். நண்பர் மீரான் சொல்வது போல வண்ண புத்தகத்தை பழைய மாதரி வெளி இடங்களில் கையாள முடிவதில்லை .அழுக்காகி விடும் ..,மடங்கி விடும் என்ற பயம் வருவதால் படித்தவுடன் பீரோவில் வைக்க தான் தோன்றுகிறது .
    * கருப்பு வெள்ளை புத்தகம் என்றவுடன் அது ஸ்பைடர்.., மாயாவி ...ஆர்ச்சி என்று தயவு செய்து நினைக்க வேண்டாம் .அதை எல்லாம் தாண்டி நான் வளர்ந்து விட்டே ன் .நான் சொல்வது டெக்ஸ் ..,ராபின் ..மாடஸ்தி...,ரிப் ..போன்றவர்களை ...

    * இரண்டாவது வந்த " டயபாளிக் " சுமார் தான் என்றாலும் டயபாளிக் அவர்களை நான் விரும்புகிறேன் .நல்ல அதிரடி கதைகளாக பார்த்து வெளி இட்டால் நண்பர்கள் அவருக்கு ரசிகர்கள் ஆவார்கள் .

    * " கிராபிக் நாவல் " முடிவு எதிர் பார்த்தது தான் .நன்றி ..இனி வரும் " கிராபிக் நாவல் " தோர்கள் போல வந்தால் அவர்கள் ஆதரவும் கிடைக்கும் .நாங்கள் "கிராபிக் நாவல் " விரும்பாததன் காரணம்

    1) " அழுகாச்சி காவியங்கள் "

    2) பள்ளி வரலாறு புத்தகத்தை நினைக்க தோன்றும் "வரலாற்று கதைகள் "

    3) அதன் கச கசா ஓவியங்கள்....மற்றும் கதைக்கு சம்பந்தம் படாத ஓவிய பாணிகள்

    4 ) சிறு கதை பாணிகள்

    நான் ஏற்கனவே சொன்னது போல ..,நண்பர் மகேஷ் சொன்னது போல நாம் ஒரு கதையை படித்தால் அந்த கதை சூழ்நிலை நம்மை சந்தோஷ சூழ்நிலையில் தள்ளவும்...அந்த நாயகர்களின் மூலம் நமக்கு எந்த முடிவிலும் ஒரு தெளிவான நோக்கு ..,பயப்படாமல் ஒரு பிரச்சனையை சந்தித்தல் ..,வீரமான உணர்வு ...என கலந்து கட்டி அடிக்க வேண்டும் .அது நமது வாழ்க்கை யிலும் கடைபிடிக்க ஒரு உத் வேகம் தரும் .கிரீன் மேனர்...,சிப்பாயின் சுவடுகள் அதை தருமா ? சில நண்பர்கள் சிரிக்கலாம் .ஆனால் நான் ஆதாரத்துடன் சொல்கிறேன் .எனது அனுபவத்தை விட்டு விடுங்கள் .ஆனால் பல வருடங்களுக்கு முன் நமது இதழில் வந்த குமாரபாளையம் நண்பர் பாரதி நந்தீஷ்வரன் என்பவரின் வாசகர் கடிதத்தை எத்துனை நண்பர்கள் நினைவில் வைத்து உள்ளனரோ நான் அறியேன்.ஆனால் தாங்கள் அதை மறக்க கூடாது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ...மருத்தவ மனையில் தான் கிடந்த போது தனக்கு நம்பிக்கையும்..,தைரியத்தையும் அளித்தது " மாடஸ்தி " கதைகள் தாம் .அவர் சந்திக்காத சோதனைகளையா நாம் சந்தித்து விட்டோம் என்று கலங்காமல் அதனை சந்தித்தார்.அவரை போல இங்கு எத்துனை நபர்களோ ..? அந்த நம்பிகையை இங்கு சிலர் பாராட்டி கொண்டு இருக்கும் மனதில் மிருகம் வேண்டும் ..கிரீன் மேனர்...சிப்பாயின் சுவடுகளில் கதைகளில் கிடைக்குமா ? எங்களுக்கு வளர்ச்சியும்.., வேறு அனுபவங்களும் தேவை தான் .ஆனால் அது " இதுவல்ல ".

    ReplyDelete
    Replies
    1. கருப்பு வெள்ளை புத்தகங்கள் தான் வேண்டும் என்பதற்கு நண்பர்கள் கூறும் காரணங்கள் சில மிகவும் ரசிக்க வைக்கின்றன. அவற்றில் ஒன்று தான் நண்பர் பரணிதரனின் //நண்பர் மீரான் சொல்வது போல வண்ண புத்தகத்தை பழைய மாதிரி வெளி இடங்களில் கையாள முடிவதில்லை. அழுக்காகி விடும் .., மடங்கி விடும் என்ற பயம் வருவதால் படித்தவுடன் பீரோவில் வைக்க தான் தோன்றுகிறது // இதற்கு எனக்கு தெரிந்து ஒரு எளிய வழி இருகிறது :)

      பரணிதரன், மீரான், ஸ்டீல் க்ளா போன்ற வாங்கும் சக்தி படைத்த வாசக நண்பர்கள் இனிமேல் இரண்டு பிரதிகளுக்கு சந்தா கட்டி விடலாம். ஒன்று படிப்பதற்கும் மற்றொன்று பாதுகாப்பதற்கும் (collection) பெரிதும் உதவக்கூடியதாக அமையும். collection புத்தகத்தை மட்டும் அழகாக புத்தக ஷெல்பில் வைத்து விடலாம். இது நான் கூறும் யோசனை மட்டுமே என்பதால் இது பிடிக்காதவர்கள் என்னிடம் சண்டைக்கு வரவேண்டாமே ப்ளீஸ் :D

      Delete
    2. மிஸ்டர் மரமண்டை : இந்த 2 சந்தா suggestion-க்கு ஒரு பெரிய like !!

      Delete
    3. இதை நான் மெனக்கெட்டு எழுதினேன் என்று சிலர் கூறுவார்கள். அதுபோல் இங்கு நானும் மெனக்கெட்டு எழுதினால் என்னவென்று தோன்றுகிறது. கொலை, அதிகார மமதை, பொறாமை, க்ரூரம் ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதைகள் தான் க்ரீன் மேனர் - என அனைத்து வாசகர்களும் ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்துள்ளதாகவே தெரிகிறது.

      நாம் அன்னப்பறவையை போல் வாழக் கற்று கொள்ளவேண்டும். நீரும் பாலும் சேர்ந்திருந்தாலும் பாலை மட்டும் உறிஞ்சி உண்ணும் தனித் திறமை வாய்ந்ததாம் அன்னப்பறவை. அதுபோல க்ரீன் மேனர் - நமக்கு கற்று கொடுத்த நல்ல விஷயங்கள் எவையவை என்று இங்கு ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பித்தால் என்னவென்று தோன்றுகிறது ;)

      எனவே இன்று மாலை மீண்டும் ஒருமுறை க்ரீன் மேனர் புத்தகத்தை படித்து விட்டு அவை நமக்கு கற்று கொடுத்த தைரியமும், தன்னம்பிக்கையும், வாழ்க்கைக்கு உதவும் நல்ல பழக்கங்களும் எவையவை என சுருக்கமாக இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். வாசகர்களின் பேராதரவு எனக்கு கிடைக்காவிட்டாலும் க்ரீன் மேனர் - ன் அவப்பெயரை துடைக்கவாவது இது பயன்படட்டும் :D

      Delete
    4. Paranitharan K : வாழ்கையின் சகல பரிமாணங்களிலும் தோல்வியை மாத்திரமே சந்த்தித்திருந்தாலும், துவக்கியதொரு தேடலை எப்பாடுபட்டேனும் பூர்த்தி செய்திட எண்ணும் அந்த ரிப்போர்டரின் விடா முயற்சி ; 30 ஆண்டுகளாய் மகனைக் காணாது தவித்தாலும், என்றோ ஒரு நாள் மீண்டு(ம்) வருவான் என்ற நம்பிக்கை கொண்ட மூதாட்டி இவர்களும் கூடத் தான் நம்பிக்கையின் சின்னங்கள் பரணிதரன் ! வேதனைகளைச் சொல்லும் கதைகளிலும், அதனைத் தாண்டி வந்த சாதனை மனிதர்களின் பின்புலம் உள்ளதெனும் போது அவை ஒதுக்கத் தக்க படைப்புகள் ஆகாது !

      மிகைப்படுத்தப்பட்ட சினிமா நாயகர்களையும், காமிக்ஸ் ஹீரோக்களையும் நாம் காலம் காலமாய் ரசித்துப் பழகி விட்டதால் - யதார்த்தம் நமக்கு நமத்துப் போன பதார்த்தமாய்த் தெரிவதில் வியப்பில்லை !

      Delete
    5. //இந்த 2 சந்தா suggestion-க்கு ஒரு பெரிய like // மிக்க நன்றி விஜயன் சார் !

      Delete
    6. // யதார்த்தம்... பதார்த்தம்/// ஏதேது.... எடிட்டர் நல்ல பார்மில் இருக்கிறார் போல..?!! :D

      Delete
    7. மிஸ்டர் மரமண்டை:- கருப்பு வெள்ளை புத்தகங்கள் தான் வேண்டும் என்று நான் சொல்லவில்லை நண்பரே !

      Delete
    8. உண்மை தான் மீரான் ; நீங்கள் அப்படி கூறியதாக நானும் இங்கு குறிப்பிடவில்லை. அதே போல் கருப்பு வெள்ளை புத்தகங்கள் மட்டும் வெளியிட்டால் போதும் என்றும் எவரும் கூறவில்லை. வண்ண புத்தகங்களை பற்றிய பொதுவான அபிப்ராயங்களைச் சார்ந்தே என் கருத்தை இங்கு பதிவு செய்துள்ளேன்.

      Delete
    9. நானும் வைத்து படிக்க , சேகரிக்க என எங்குமே கேட்கவில்லையே !

      Delete
    10. கருப்பு , வெள்ளை இதழ்கள் கூட கலரில் வேண்டும் என நான் அடம் பிடித்ததுண்டு ! இப்போது இரண்டுமே அதனதன் பார்வையில் அழகு என உணர்ந்தே கருப்பு வெள்ளை கோருகிறேன் !

      Delete
  41. Sir, Any updates from Ramanathapuram Book Fair?.

    ReplyDelete
  42. Ezhil Arasu : நமக்கு முற்றிலும் புதியதொரு பிராந்தியம் இது என்பதால் - அப்பகுதிக்கு நம்மைப் பற்றிய சிறு அறிமுகமாக இருந்திடட்டுமே ! என்ற எண்ணத்திலேயே இங்கு ஸ்டால் போட்டுள்ளோம் ! அமைப்பாளர்கள் ஆர்வமாய்க் கல்லூரிகளில் இருந்தும், பள்ளிகளில் இருந்தும் மாணவர்களைக் கொணர ஏற்பாடுகள் செய்து வருவதும், மாவட்டக் கலெக்டர் அவர்கள் இதன் பொருட்டு ஆர்வம் எடுத்துக் கொள்வதும் ; அப்பகுதியின் மீடியாக்களில் புத்தகக் காட்சியைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த தம் பங்கிற்கு உதவுவதும் தொடரும் ஆண்டுகளில் இம்முயற்சி பலனளிக்க நிச்சயம் உதவிடும் எனத் தோன்றுகிறது . இப்போதைக்கு சிறு நகரம்....சின்ன விற்பனை !

    ReplyDelete
  43. சார் சென்னை புக்பேரில் நடந்த விற்பனை பற்றி எதுவும் கூற வில்லை,இதுவரை சந்தாரகள் எத்தனை பேர் இனைந்து உள்ளர்கள்,

    ReplyDelete
    Replies
    1. ranjith ranjith : கடந்த பதிவை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்களேன் - சென்னை புக்பேரில் நடந்த விற்பனை பற்றித் தெரிந்திட ! சந்தாக்களைப் பொறுத்த வரை இன்னமும் அதிகமாகிட அவசியம் கொண்டதொரு எண்ணிக்கை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! !

      Delete
  44. Dear editor Sir,
    Waiting for it , expecting more action & adventure stories

    One request
    buying option of either one of the book is not available in ebay , instead it is sold as Feb14 ,(I bought Jan 13 books) , also when we buy 10 books, shipping charges is added for each book
    Also keep a stock of atleast collectors edition for new people like me

    thanks
    keep rocking, continue you good work
    on

    ReplyDelete
  45. Dear Editor Sir,

    whether it is said or or not 'Green Manor' is one of the best comics series even for the english comics world also (I dont have much idea about the that comic world. So somebody have enough read proof/evidence for other green manor comics like series please excuse me). You tried introducing a different concept on behalf of comics promoting/ exposure to tamil comics readers irrespectve of or ignoring the business prospects. You won actually. Now readers got the exposure to existance of these variety of comics.

    Same for 'சிப்பாயின் சுவடுகள்' except it was going in slow pace with no expected adventures. the true feedback can be provided by only by a soldier/ his family members (Comic readers).

    As we are long familiar with adventure/detective/comedy kind of comics these comics which are almost projecting the real life We may get the initial reluctance to accept it.

    Thanks for reading.

    ReplyDelete
  46. Dear Editor Sir,

    With reference to Mr.King Viswa's comments:

    He met some comics readers of old generation who are still looking for the old era comic heroes for Nostalgia feel.

    Why dont we try 'Nostalgia series' at least yearly once. Of-course we all love Nostalgia. I afraid to name the old heroes as I know your opinion on this. 'Rip kirby' kind of heroes not yet fully explored. (My nostalgia awakens when I try to recollect 'Desmond the butler ' and his search for a bride).

    ReplyDelete
  47. diabolik எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம் ..... Green manor and சிப்பாயின் சுவடுகள் kind of stories can be published at least once every year... They are not that bad ...or they can be included like in NBS ....

    ReplyDelete
  48. I agree with 2013 reviews. I too hate Green manor, Diabolic and Jil Jordan. You can introduce Rip Kerby, Wing Commander George and Tin Tin.

    ReplyDelete
    Replies
    1. Dr.S.Deepa, B.N.Y.S : Welcome to lion's club :) //I too hate Green manor, Diabolic and Jil Jordan//

      காமிக்ஸ் ரசனைகளும் ஒரு வகையில் யோகாசனங்கள் போன்றவைதான். ஒவ்வொரு காமிக்ஸூம் ஒவ்வொரு விதமான ரசனையத் தருகிறது - ஒவ்வொரு ஆசனமும் ஒவ்வொரு விதமான பலனைத் தருகிறது. ஆனால் முடிவில் உடலுக்கும் மனதிற்கும் முழு அமைதியை தரும் யோகாசனம் போல் - காமிக்ஸின் பல்வேறு ரசனைகளும் மனதை இலகுவாக்கவே உதவுகிறது. நம்மால் உடலை வளைக்க முடியாதவரை அந்த ஆசனம் நமக்கு கடினமாகவும், அசௌகரியமாகவும் தோன்றுவதைப் போலவே நமக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கும் காமிக்ஸ் கதைகளும் நமக்கு வெறுப்பைத் தருவதாகவே அமைகிறது - முடிவில் அதுவும் காமிக்ஸ் கலையின் ஓர் அங்கமே என்பதை ஏற்க மறுக்கிறது :)

      Delete
  49. தான் எதிர்பார்த்த வாழைப்பூ வடை கிடைக்காததால் வலைப்பூ போராளி (அப்படீன்னா ) தார் ரோடு மன்னிக்கவும் ஈரோடு விஜய் நடு ரோட்டில் அமர்ந்து............... To be continue

    ReplyDelete
    Replies
    1. ஒரு கொள்கை வீரனுக்கு வந்த சோதனையை கண்டு கொக்கரிக்கும்.... எகத்தாளம் செய்யும்....

      கேவலமாய் சிரிக்கும் .... நண்பரது போக்கை கண்டு எனது ரத்தம் கொதிப்பதால் என்ன செய்வது

      என்றே தெரியவில்லை .... சரி சரி ஒரு நண்டு வறுவல் சாப்பிட்டுவிட்டு வந்து தெம்பாய்

      யோசிக்கிறேன் ...



      Delete
    2. ஒரு பூனை நடுரோட்டில் 2+ நிமிடங்கள் அமர்ந்தால் லாரிகள் அயர்ன் பண்ணிவிடும். So no நடு ரோட்டுப் போராட்டங்கள்!

      Delete
    3. IRON MAN........................இல்ல இல்ல ...................IRON CAT

      Delete
    4. அப்பாலிகா அந்த மண் ரோட்டார் சந்தா யாருக்கு போகும் நாட்டு TURTLE .............?

      Delete
  50. //மிகைப்படுத்தப்பட்ட சினிமா நாயகர்களையும், காமிக்ஸ் ஹீரோக்களையும் நாம் காலம் காலமாய் ரசித்துப் பழகி விட்டதால் - யதார்த்தம் நமக்கு நமத்துப் போன பதார்த்தமாய்த் தெரிவதில் வியப்பில்லை ! //

    மாயாவி , வேதாளர் , மாண்ரெக் ,மார்டின் போன்ற நாயகர்களை ரசித்தது போலவே யதார்த்த நாயகர்களான

    ரிப்கிர்பி , காரிகன் , ஜானிநீரோ ஆகியோரையும் ரசித்தவர்கள் நாங்கள் . கிரீன் மேனர் கதைகளை ரசிக்க

    பொழுது போகாத பணக்காரர்களின் மனோநிலை பற்றி தெரிய வேண்டும் . அனைவருமே அக் கதைகளின்

    போக்கை கண்டு அதிர்ச்சி அடைந்தோம் என்பது மிகையில்லை என்று நினைக்கிறேன் .. கிரீன்மேனர்

    கதை காமிக்ஸ் கதைகளுக்கு பல முகங்கள் உண்டு என்பதை உணர்த்த ஆசிரியர் எடுத்த முயற்சி

    என்றே கொள்ளவேண்டும் ... அந்த முயற்சியில் வெற்றியும்பெற்றுவிட்டார்

    ஆனால் கிரீன்மேனர் கதைகளை நம் குழந்தைகளோ மனைவியோ கண்டிப்பாக ரசிக்கமாட்டார்கள்.......

    நாம் அதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்

    அக்கதைகளை ரசிக்கவில்லை என்பதாலேயே நாம் செக்குமாடுகளோ அல்லது குழந்தைகளோ அல்ல

    அதுவும் ஒரு வாசிப்பு அனுபவம் என்ற விதத்தில் எடுத்துக்கொண்டு அதில் இருந்து நகர்ந்து விடுவோம்..

    மிகைப்படுத்தப்பட்ட ஹீரோக்களை ரசிப்பது என்பது நமது உள்மனதின் ரகசிய ஆசைகளின் வெளிப்பாடு

    (நாம் அனைவருக்கும் பாட்ஷா படம் போல சக்தியை வெளிபடுத்ததாத ஆனால் பவர்புல் ஹீரோவாக

    இருக்கத்தான் ஆசை..... அதை இப்படித்தான் தீர்த்துகொள்கிறோம் )

    அதனால் யதார்தத்தை ரசிக்க' மாட்டோம் என்றில்லை அப்படி ரசிக்காமல் இருந்திருந்தால் முத்து காமிக்ஸின்

    ஹீரோக்களை இன்றும் நினைவில் கொண்டு மறுபதிப்பு கேட்டுக்கொண்டிருக்கமாட்டோம் ... (நண்டு வறுவல்

    சாப்பிட்டுவிட்டு நடையை கட்டியிருப்போம் )



    ReplyDelete
    Replies
    1. +1

      க்ரீன்மேனரில் பெரியதொரு பிரச்சனையில்லை, ஆனால் "கொலை செய்வீர் கனவான்களே", "மனதில் மிருகம் வேண்டும்" போன்ற விவகார தலைப்புக்களும் கதையின் போக்கும் நமது வீட்டிலிருப்போருக்குப் பொருந்தாது என்பதால் ஒளித்து வைக்கவேண்டிய புத்தகமாகிவிடுகிறது.

      வீட்டின் ஹாலில் தைரியமாக வைக்கப்படமுடியாத புத்தகம் என்பதாலேயே - "ரிஜட்டட்" :P

      Delete
    2. Senthil Madesh :

      //கிரீன் மேனர் கதைகளை ரசிக்க பொழுது போகாத பணக்காரர்களின் மனோநிலை பற்றி தெரிய வேண்டும்//

      அப்படியென்றால் சூப்பர் மேன் கதையை நாம் ரசிக்க - நமக்கு பறக்கத் தெரிந்திருக்க வேண்டுமா? அல்லது டெக்ஸ் வில்லர் கதையை ரசிக்க பாலைவனத்தில் குதிரை ஓட்டத் தெரிந்திருக்க வேண்டுமா? அப்படியெல்லாம் இல்லை மாதேஷ் :)

      இப்படியெல்லாம் கூட நடந்திருக்குமோ என்ற ஒரு வியப்பு நமக்கு ஏற்பட்டாலே க்ரீன் மேனர் கதைகள் நமக்கும் பிடிக்கும் ; இப்படியும் கூட நடந்ததா என்ற அனுதாபம் நமக்கு ஏற்பட்டாலே பிரளயத்தின் பிள்ளைகள் நமக்கும் பிடிக்கும்.

      //ஆனால் கிரீன்மேனர் கதைகளை நம் குழந்தைகளோ மனைவியோ கண்டிப்பாக ரசிக்கமாட்டார்கள்//

      அதனால் மட்டும் நாம் ரசிக்க தடையேது. ஒவ்வொரு விஷயமும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும் என்பது தானே நாம் நடைமுறையில் கண்டு வரும் உண்மை. ஒரு ஹோட்டலுக்கு சென்றால் கூட உனக்கென்ன வேண்டும் என்று கேட்டு தனி தனியாகத் தானே ஆர்டர் செய்கிறோம். வீட்டில் மனைவி பார்க்கும் சீரியலை நாம் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அதுபோல் நமக்கு பிடிக்காததால் அவர் அதை பார்க்காமல் இருக்கப் போவதில்லை. எனவே க்ரீன் மேனர் நமக்குண்டான ரசனையின் விரிவாக்கமாக பார்த்தால் கூட போதுமானது.

      Delete
    3. Senthil Madesh: //ஆனால் கிரீன்மேனர் கதைகளை நம் குழந்தைகளோ மனைவியோ கண்டிப்பாக ரசிக்கமாட்டார்கள்//

      மிஸ்டர் மரமண்டை: // அதனால் மட்டும் நாம் ரசிக்க தடையேது. ஒவ்வொரு விஷயமும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும் என்பது தானே நாம் நடைமுறையில் கண்டு வரும் உண்மை. //

      @மிஸ்டர் மரமண்டை, இது அவ்வளவு எளிதல்ல. நாம் வாசிக்கும் புத்தகங்கள் நம்மைப் பற்றிய பிறரின் அபிப்ராயத்தை பாதிக்கக்கூடியது. அந்தரீதியில் பார்க்கும்போது, ஒரு மாதாந்திர காமிக்ஸ் புத்தகம் சில Minimum Restrictions-ஐ maintain செய்வது அவசியம். இல்லாவிட்டால் நஷ்டம் வாசகர்களுக்கல்ல; மாறாக குறுகிய வாசிப்பு வழக்கத்திலுள்ள நமது காமிக்ஸுக்குத்தான்.

      Delete
    4. //ஒரு மாதாந்திர காமிக்ஸ் புத்தகம் சில Minimum Restrictions-ஐ maintain செய்வது அவசியம். இல்லாவிட்டால் நஷ்டம் வாசகர்களுக்கல்ல; மாறாக குறுகிய வாசிப்பு வழக்கத்திலுள்ள நமது காமிக்ஸுக்குத்தான்.//
      இந்த கிரீன்மேனர் பரிசோதனைகள் நமது சந்தாக்கள் அதிகரிக்க துவங்கிய பின் வந்தால் நன்மை பயக்கலாம் !

      Delete
    5. அனைவரும் கேட்பது வரட்டும் ! அக்கதைகளுக்கு நிச்சயம் வாசகர்கள் இருக்கலாம் ! ஆனால் சிலர் மட்டும் வாங்கினால் வண்டி ஓடுவது சிரமம் அல்லவா !
      பிரளயத்தின் பிள்ளைகள் எனக்கும் பிடித்தது !
      சிப்பாயின் சுவடுகள் மோசமில்லைதான் !

      ஆனால் கீழே வைக்காமல் படிக்க முடிவது எது என்பதே கேள்வி !
      வெகு வாரியான வெற்றி பார்முலாவில் அனைத்தும் அடங்கி உள்ளது !
      அதற்கும் ஒரு காலம் வரும் ! காத்திருப்போம் !

      Delete
    6. Ramesh Kumar : //மாறாக குறுகிய வாசிப்பு வழக்கத்திலுள்ள நமது காமிக்ஸுக்குத்தான்//

      என்னுடைய பதிவின் சாரம்சம் என்னவென்றால்..

      1.நான் இதுவரை எந்த காமிக்ஸ் புத்தகத்தையும் ஒளித்து வைத்து படித்ததில்லை.
      2.க்ரீன் மேனர் இதழ் கூட பல நாட்கள் டைனிங் டேபிளில் தான் கிடந்தது.
      3.சிறுவர்களிடம் இருந்து மறைக்கும் அளவிற்கு க்ரீன் மேனர் பயங்கரமானது அல்ல.
      4.விவகார தலைப்புக்கள் பற்றி ஆசிரியர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பதில் இங்கும் பொருந்தும்.

      ஒவ்வொரு காமிக்ஸ் புத்தகமும் - குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் சுவாரசியம் தருவதாக அமைக்க வேண்டும் என்று நினைத்தால் நமக்கு கதைகள் கிடைப்பது கடினமாகி விடும். அப்படி அமைக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்க்கு வரும்போது தான் நம் காமிக்ஸ் வளர்ச்சி தேக்கம் அடையும் என்பது என் கருத்து.

      Delete
    7. @மிஸ்டர் மரமண்டை, வெளிஉலகத்துக்கு வாருங்கள்! :)

      சொற்பமான ஆனால் தீவிர வாசகர்கள் இருப்பதனாலேயே நம்மால் இந்தளவுக்கு Variety-ஐ வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த இயல்கிறது. தீவிர ஆர்வமல்லாத புதிய வாசகர்களின் எண்ணிக்கையை பெருக்கும்பட்சத்தில் நிச்சயமாக நாம் எல்லாவகைக் கதைகளையும் ஒரே Brand-ன் கீழ் மாதாமாதம் செயல்படுத்தமுடியாது.

      இத்தாலியில் வரவேற்பைப் பெற்ற டயபாலிக் இன்னொரு நாட்டில் சுத்தமாக வரவேற்பைப் பெறாமல் போவது சகஜம். லக்கி லூக், ப்ளூ கோட்ஸ் மற்றும் சிக்பில்லுக்காக மட்டுமே காமிக்ஸ் வாசிப்பை ஆரம்பிக்கும் வாசகர்கள் க்ரீன் மேனரை புரக்கணிப்பது இயல்பானதே.

      Variety அவசியமென்று கருதினால் மேற்கூறிய சௌகரிய / அசௌகரியங்களை கருத்தில் கொண்டு 4 Brand களும் (லயன், முத்து, சன்ஷைன் & கிராபிக் நாவல்) தனித்தனி வகைக் கதைகளுடன் செயல்பட்டால் தலைவலி இருக்காது. அயல் நாடுகளில் வெளிவரும் Original-கள் ஒரே Brand-ன் கீழ் பலவகைக் கதைகளை வெளியிடுவதில்லை - இதே வழிமுறையை நாமும் ஒருகட்டத்தில் தவிற்க இயலாது.

      Delete
    8. // 1.நான் இதுவரை எந்த காமிக்ஸ் புத்தகத்தையும் ஒளித்து வைத்து படித்ததில்லை. //
      இதுவரை நான் எந்தவொரு லார்கோவின்ச் கதையையும் மற்றவர் கண்ணெதிரில் open-ஆக படிக்க இயன்றதில்லை! :D

      // 2.க்ரீன் மேனர் இதழ் கூட பல நாட்கள் டைனிங் டேபிளில் தான் கிடந்தது. //
      இது அவரவருக்குக் குடும்பத்தில் கிடைக்கும் சலுகைகள் / புரிந்துகொள்ளும் தன்மையை சார்ந்தது. Circulation 10000 - 20000 என்ற Range-ஐத் தாண்டும்பட்சத்தில் கதைகளின் title-கூட பலருக்கும் ஒரு பெரிய issue-வாக மாறிவிடும்! ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைப்போல காமிக்ஸ் புத்தகங்கங்களின் தலைப்புக்கும் கிடைப்பது கஷ்டம்தான்

      // 3.சிறுவர்களிடம் இருந்து மறைக்கும் அளவிற்கு க்ரீன் மேனர் பயங்கரமானது அல்ல.//
      அதில் பிரச்சனையில்லை. அதே நேரம் நான் Dark Humor / Murder / Crime கதைகளை ரசிப்பவனாக மற்றவர்கள் கருதாமல் பார்த்துக்கொள்வது என் கடமை. இதுவும் நம்மூரில் பெரிய பிரச்சனைதான்! :D

      // 4.விவகார தலைப்புக்கள் பற்றி ஆசிரியர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பதில் இங்கும் பொருந்தும். //
      ஆசிரியரின் விளக்கம் நியாயமானதே. ஆனால் எல்லோரையும் நாம் விளக்கங்களின் மூலம் Convince பண்ணி புத்தக விற்பனையையோ ரசிப்பையோ உயர்த்தமுடியாது. நான் கூறுவது Consumer point of view-ல்.

      // ஒவ்வொரு காமிக்ஸ் புத்தகமும் - குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் சுவாரசியம் தருவதாக அமைக்க வேண்டும் என்று நினைத்தால் நமக்கு கதைகள் கிடைப்பது கடினமாகி விடும். அப்படி அமைக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்க்கு வரும்போது தான் நம் காமிக்ஸ் வளர்ச்சி தேக்கம் அடையும் என்பது என் கருத்து. //
      அதுதான் உண்மை என்றால் நாம் அதிலிருந்து Escape ஆகமுடியாது. ஒன்று வாசகர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு Variety-ஐ கட்டுக்குள் வைக்கலாம். அல்லது கதைகளின் குறைவால் Variety-ஐ உயர்த்தி வாசகர் எண்ணிக்கையை Compromise செய்யவேண்டியதாகிறது. Tough-ஆன position தான்! :D

      Delete
    9. Ramesh Kumar: //வெளிஉலகத்துக்கு வாருங்கள்// உங்களிடம் இருந்து மிகவும் ஆச்சரியமான பதில் ;)

      //நிச்சயமாக நாம் எல்லாவகைக் கதைகளையும் ஒரே Brand-ன் கீழ் மாதாமாதம் செயல்படுத்தமுடியாது//

      இதை நாம் கூறும் முன்பே ஆசிரயர் அதற்கு அச்சாரம் போட்டு விட்டதால் இது விவாதத்தின் பொருளை இழக்கிறது (சன்ஷைன் கிராபிக் நாவல்). ஒரு விஷயத்தை நாம் எல்லோரும் எளிதாக மறந்து விடுகிறோம் ; இப்படி Variety கொண்டு வர ஆசிரியர் நினைப்பது நமக்காக மட்டுமல்ல ; வெறும் சில நூறு தீவிர வாசகர்களுக்காக மட்டுமல்ல ; தற்போது உள்ள வாசகர்களைத் தாண்டி புதிய matured வாசகர்களை ஈர்க்கவும் தான். வெளியுலக புதிய வாசகர்கள் லக்கி லூக், ப்ளூ கோட்ஸ் மற்றும் சிக்பில் மட்டுமே விரும்புவாரக்ள என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது பூனை கண்ணை மூடிக்கொண்ட கதை தான் ;)

      தற்போது நடைமுறையில் உள்ள புத்தகக் கண்காட்சி பங்கேற்பில் வரக்கூடிய புதிய matured வாசகர்களும் காமிக்ஸை ஆவலுடன் புரட்டி பார்த்து வாங்க வேண்டும் என்றால் அதற்கு - க்ரீன் மேனர், பிரளயத்தின் பிள்ளைகள், ஒரு சிப்பாயின் சுவடுகள், லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டன், etc., etc., போன்று Variety நிச்சயம் வேண்டும்.

      Delete
    10. Ramesh Kumar: இது உங்களுக்கானது அல்ல ; விவாதத்தை சார்ந்து பொதுவான கருத்து :D

      Grand Theft Auto: San Andreas - பற்றி உங்களுக்கும் தெரியும். அந்த கம்ப்யூட்டர் கேம் விளையாடாத சிறுவர்கள் மிகவும் குறைவு. அதில் ஒரு சிறுவன் விளையாடும் போது போலிஸ் முதற்கொண்டு ரோட்டில் நடந்து வரும் அப்பாவி வரை எத்தனை கொலைகள் செய்கிறான் என்று தெரியுமா ? பொதுவாக பார்க்கும் போது இதெல்லாம் விளையாட்டு என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது போலத்தான் கதை, கதையின் தலைப்பு எப்படியிருந்தாலும் பொதுவாக காமிக்ஸ் என்ற அளவுகோலின் கீழ் வந்து விடுகிறது.

      நேற்றைய பேப்பரில் வந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தலைப்பு செய்தியில் வருகிறது, இது எவ்வளவு பெரிய கலாச்சார சீரழிவு என்று யாராவது நினைத்து பார்க்கிறார்களா? இல்லையே. மூடி மறைத்து கொளுத்திப் போடவேண்டிய சம்பவங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சமாக பரவச் செய்கிறார்கள் :(

      பொழுது போக்கு சாதனங்களான சினிமா, தொலைக்காட்சி, குமுதம், ஆனந்த விகடன் போன்று பிஞ்சியிலேயே பழுக்க வைக்கும் முயற்சிகள் தான் எத்தனை எத்தனை? பெண் 18 வயதிற்கு முன் திருமணம் செய்து கொள்வது குற்றச் செயல். ஆனால் அதே நேரம் 13-16 வயதில் சினிமாவில் ஹீரோயினாக நடித்து டுயட் பாடி கசமுசாவில் ஈடுபடலாம்.. அது தப்பில்லை :(

      டிவியில் பெரும்பான்மையான நிகழ்ச்சிகள், சீரியல்கள் என அனைத்தும் குடும்ப சீரழிவைத் தானே விதைக்கின்றன.. எனவே கெட்டுப்போக நினைப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் கெட்டுப் போகலாம் ; நல்லவர்கள் கடைசிவரை நல்லவர்களாகத்தான் வாழ்க்கையை முடிப்பார்கள்.

      உதாரணமாக ஒரு பரம்பரை குடிகாரனுக்கு பிறக்கும் மகன் இரு விதமாக வளரலாம். ஒருவன் தன் தந்தையை போல் குடித்து வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளக் கூடாது என்று வைராக்கியம் கொண்டு நல்லவனாக கடைசி வரை வாழலாம் ; மற்றொருவன் தன் தந்தையே குடிகாரன், நான் குடிப்பதில் என்ன தப்பு என்றும் வளரலாம். அடுத்த வாதம் செய்வதற்கு நீங்கள் கூறலாம், நான் குடிப்பதில்லை, அடுத்தவரைப் பற்றி கவலையில்லை என்று. ஆனால் அடுத்த வீட்டில் உள்ள குடிகாரரையும், வீதிக்கு வீதி உள்ள TASMAC கடைகளையும் உங்களால் உங்கள் குழந்தைகளிடம் இருந்து மறைத்து விட முடியுமா?

      Delete
    11. Mass Media-க்களிடம் இருக்கும் குறைகளை மக்கள் போனால் போகிறதென்று விட்டுவிடுவார்கள் (ஏனென்றால் அவை யார் கட்டுப்பாட்டிலும் அகப்படுவதில்லை.). நமது பிரச்சனை அதுவல்ல; காமிக்ஸ் / புத்தகம் வாசிக்கும் வழக்கமே ஓரளவுக்காவது Gentle-ஆன மக்களின் மத்தியில்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது (தொடர வாய்ப்புள்ளது). அந்தப் பார்வையில் பார்க்கும்போது சில கட்டுப்பாடுகளைத் தவிர்க்க முடியாது.

      Delete
  51. @ஆந்தை விழியார்,

    இராமநாதபுரம் புத்தக கண்காட்சி உறுதியானதை சொல்ல மறந்தாதால் நமது நண்பர்கள் சென்று விழாவை சிறப்பிக்க முடியாது போனது.
    அது போல் திருச்சி உறுதியானால் ஒரு பின்னூட்டத்திலாவது சொல்ல மறக்க வேண்டாம்.
    மறந்தால் மலைக்கோட்டை மாநகரில் மாபெரும் போராட்டம் நடத்துவதாக நம் நண்பர்கள் வழக்கம் போல் தீர்மானம் எடுத்துள்ளார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் வாழைப்பூ வடைக்கும, நண்டு வறுவலுக்கும் வணங்கமாட்டார்கள்.

      Delete
    2. விஸ்வா அளவிற்கு இல்லாவிட்டாலும் ராமருக்கு அணில் உதவியது போல திருச்சி வாசகர்கள் தயாராக உள்ளோம். திருச்சி ஒக்கரை வாத்தியார் சிவா ரேஸில் முதலில் நிற்கிறார்.

      Delete
    3. விஜய் சார்,

      அது என்ன விஸ்வா அளவுக்கு? உங்களின் காமிக்ஸ் காதலின் முன்பு நான் எல்லாம் எம்மாத்திரம்?

      திருச்சி புத்தக கண்காட்சி திறப்பு விழா அன்றுதான் (8th Feb) தில்லியில் காமிக்-கான் திருவிழாவும் ஆரம்பிக்க உள்ளது. மறுநாள் (09th Feb) சென்னையில் என்னுடைய நிறுவனம் நிகழ்த்தும் விழா ஒன்று இருப்பதால் என்னால் திருச்சிக்கு 11ம் தேதி அன்றுதான் வர இயலும்.

      நம்முடைய திருச்சி நண்பர்களை எல்லாம் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

      நீங்கள், கண்ணன், பாலா சார், திருமூர்த்தி சார், சரவணன் என்று அனைவரையும் 11ம் தேதி அன்று வந்து சந்திக்க முயல்கிறேன்.

      Delete
  52. //மிஸ்டர் மரமண்டை : இந்த 2 சந்தா suggestion-க்கு ஒரு பெரிய like !! //
    our friend CIBI follow this method

    ReplyDelete
  53. ஒரு கதையின் வெற்றியை சில நேரங்களில் அதன் அட்டைப்படம் கூட தீர்மானிக்குமோ என்று தெரியவில்லை!

    ReplyDelete
  54. Both the "Kodai Malar" and "Deepavali Special" can be dedicated to Tex Willer, every Year.
    What say Friends!

    ReplyDelete
  55. கார்சனின் கடந்த காலத்துடன் பவள சிலை மர்மம் வண்ண மறுபதிப்புக்கும் ஒரு போராட்டம் வேண்டாம் வேண்டாம் ஒரு விண்ணப்பம். தல டெக்ஸ் ரசிகர்கள் ரெடியா

    ReplyDelete
  56. இன்று பிறந்த நாள் காணும்

    பந்தா இல்லாமல் பழகும் பண்பாளர்,

    சின்ன குழந்தை போல சிரிக்கும் சிந்தனையாளர்,

    அஜித், சூர்யாவுக்கு போட்டியாக அழகுடன் இருக்கும் அண்ணன் திருப்பூர் ப்ளூபெர்ரி (என்கிற) நாகராஜன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    நண்பர் நாகராஜன் இந்த ஆண்டு(ம்) எல்லா வளமும் பெற்று சிறப்பாக அமைய வேண்டுகிறேன்.

    இந்த நன்னாளில் ...........................

    உதிப்பவை எல்லாம் உன்னதம் ஆகட்டும்,

    நீங்கள் விரும்பியது எல்லாம் உங்கள் வசம் ஆகட்டும்.

    எல்லா வளமும் பெற்று இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    என்றும் போல இன்றும் உங்கள் எண்ணங்கள் சிறக்கட்டும்.


    Many Many Happy Returns of the Day.

    May God give everything you deserve and many more.

    Have a Fantastic year Ahead.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ப்ளூ அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
      சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ்க நண்பா !

      Delete
    2. நண்பர் "திருப்பூர் ப்ளூ பெர்ரி" நாகராஜன் அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

      நண்பர் நாகராஜன் இந்த ஆண்டு(ம்) எல்லா வளமும் பெற்று சிறப்பாக அமைய வேண்டுகிறேன்.

      Delete

    3. ///நீங்கள் விரும்பியது எல்லாம் உங்கள் வசம் ஆகட்டும்./////...........காமிக்ஸா கேட்டு வைங்கோ

      Delete
    4. பிறந்தநாள் வாழ்த்துக்கள் "திருப்பூர் ப்ளூ பெர்ரி" நாகராஜன்!

      அப்புறம் பிறந்தநாள் அன்னைக்கு நம்ம ஆசிரியரிடம் புத்தகங்கள் சம்மந்தமா உங்களோட கோரிக்கைய வைங்க. அவரால மறுக்க முடியாது. இது ஒரு நல்ல சான்ஸ்! : )

      Delete
  57. தூக்கம் வராத்தால் சென்னை புத்தக கண்காட்சியில் இருந்து சில பல போட்டோக்களை இங்கே வழங்குகிறேன்

    1. கலைமகள் குழுமத்தில் இருந்து வெளிவரும் மஞ்சரி இதழின் ஆசிரியர், சிவகாசியை சேர்ந்த குரு தனபால் அவர்களை நமது Lion-Muthu Comics ஸ்டாலில் சந்தித்தது ஒரு இனிய அனுபவம்.

    இவர்தான் முதன் முதலாக சிவகாசியில் இருந்து வந்த பத்திரிக்கைக்கு எடிட்டராக இருந்தவர் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.

    2. நடிகர் அஜித் அவர்களின் மேலாளர் சுந்தர் அவர்கள் நமது லயன் முத்து காமிக்ஸின் அதி தீவிர ரசிகர்.

    அவர் தினகரன் குழும இதழ்களின் எடிட்டர் கே.என்.சிவராமன் ம்ற்றும் புதிய தலைமுறை இதழின் யுவ கிருஷ்ணாவுடன் தீவிர இலக்கியத்தில் காமிக்ஸின் பங்கு பற்றி சிறப்பாக விவாதித்து கொண்டு இருந்தபோது எடுத்த புகைப்படம்

    சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பாக (அப்போது நான் ஒரு சினிமா தயாரிப்பாளராக இருந்த நேரம்) திரு சுந்தர் அவர்களை சந்தித்த பிறகு இப்போதுதான் மீண்டும் அவரை சந்த்தித்தேன். பழைய நினைவுகள்…….

    3. ஒவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்களும், அவரது துனைவியாரும் நமது முத்து காமிக்ஸ் ஸ்டாலுக்கு வருகை தந்த போது எடுத்த புகைப்படம்.

    நீண்ட கால நண்பர் மருது சார் ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகர். மிக குறைந்த கால அவகாசத்தில் நிச்சயம் செய்யப்பட்ட நமது கம்பேக் ஸ்பெஷல் இதழை வெளியிட்டவர் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.

    4. எழுத்தாளர் நண்பர் சாரு நிவேதிதா நம்முடைய முத்து காமிக்ஸ் ஸ்டாலுக்கு வந்திருந்தபோது எடுத்த படம் (கையில் வைத்திருக்கும் புத்தகத்தை கவனியுங்கள்).

    நமது ஸ்டாலில் இருந்து 3 காமிக்ஸ்புத்தகங்களை சாரு நிவேதிதா வாங்கினார்.

    ReplyDelete
    Replies
    1. கலக்குறீங்க விஸ்வா !
      நீங்கள் சினிமா தயாரிப்பாளரா , தொடர்ந்து பல விசயங்களில் ஆச்சரிய படுத்துகிறீர்கள் !

      Delete
    2. Dear Viswa,

      It is so surprise to hear you were a cinema producer. nice. Expecting to hear more about that expereince in your blog.

      Delete
    3. விஸ்வா சார் ...தாங்கள் தயாரிப்பாளாரா ... சூப்பர். அப்படி என்றால் தாங்கள் இப்பொழுது நிறுத்தி விட்டது ஏனோ ? மீண்டும் வெற்றி பெற எனது வாழ்த்துகள் .

      அப்புறம் சார் ...ஹீரோ கால்ஷீட் சிக்க வில்லை என்றால் சொல்லுங்கள் . நான் இருக்கிறேன் :-)

      Delete
    4. சாரு நிவேதா கைல ''அந்த'' புக்

      Delete
    5. அப்புறம் என்ற படம் கொள்ளை அழகு

      Delete
    6. ///////////தூக்கம் வராத்தால் ////////////////.............................
      தூக்கத்துல மாடஸ்டி கனுவுல வருது...................
      பகல் கனவுல ஜோன்ஸ் வருது .................................
      நண்பர்களே சார் இது தான் காதலா ......?

      Delete
    7. மதி இல்லா மந்திரி ....உண்மை

      Delete
  58. நண்பர் மரமண்டை அவர்களுக்கு ..,இரண்டு புத்தங்கள் வாங்குவது ஓகே தான் .ஆனால் சில புத்தங்கள் என்றால் ஓகே .முன்னர் வந்த டபுள் திரில் ஸ்பெஷல் புத்தகத்தில் ஜானி கதையில் கார்..,ட்ரக்... ஜீப் என அதிக படங்கள் வந்ததால் எனது மகன் அந்த புக்கை எனக்கு கூட கொடுக்க வில்லை .அவனே புரட்டி ..,புரட்டி ஒரு வழி பண்ணி விட்டதால் ஈரோடு புத்தக திரு விழாவில் இன்னொன்று வாங்கி விட்டே ன் .வீட்டு இல்லத்தரசி சம்பள கணக்கை வினவாமல் இருந்தால் தாரளமாக இரண்டு சந்தா கட்டி விடலாம் .ஆனால் இப்பொழுதே வருடா வருடம் சந்தாவை தெரியாமல் கட்டி மூன்று வருடங்களுக்கு முன் சந்தா கட்டினே ன் இன்னமும் புத்தகம் வந்து கொண்டு இருக்கிறது என்று சொல்லி சமாளித்து கொண்டு இருக்கிறேன் . :-)

    ReplyDelete
    Replies
    1. அந்த செம்மண் ரோடுக்காரர் இத படிக்காம இருக்கனுமே ..............

      Delete
    2. Paranitharan K: //இல்லத்தரசி சம்பள கணக்கை வினவாமல் இருந்தால் தாரளமாக இரண்டு சந்தா கட்டி விடலாம்//

      புரிகிறது நண்பரே. இப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாத நண்பர்கள் இரண்டு சந்தா கட்டலாம் என்பதற்காக மட்டுமே அவ்வாறு பதிவிட்டுள்ளேன். இது கட்டாயம் என்பது எவருக்குமல்ல ; சௌகரியத்திற்காக மட்டுமே என்பதால் விருப்பம் உள்ளவர்களுக்கு இது தூண்டுகோலாக அமையட்டுமே.

      பரீட்சைக்கு இரண்டு பேனாக்கள் எடுத்துக் கொண்டு போவதைப் போலத் தான் இதுவும் :D

      Delete
  59. அந்த சென்னைக்கார ''விசால ராஜா'' ..............இது வரை வந்த லயன் முது திகில் மினி ஜூனியர் பட்டியலை நமது facebook ல் போட்டால் கொள்ளையாய் மகிழ்ந்து போவேன்

    ReplyDelete
  60. //அட்டைப்படம் துளியும் மாற்றம் செய்யப்படா ஒரிஜினல் சித்திரமே என்பதால் அந்த தத்ரூபம் + வர்ணக் கலவை அழகாய் அமைந்துள்ளதாய் எனக்குப்பட்டது ! //

    "காலத்தின் கால் சுவடுகளில்" அட்டைப்படம் ஒரு adventure கதைக்கு நம்மை பார்த்தவுடன் துரிதமாக தயார் படுத்துகிறது. சிகப்பு மஞ்சள் combination இல்லாததது ஆச்சர்யம். : )!

    //"காவியில் ஒரு ஆவி !" சுலபமானதொரு கதைக் கரு ; டின்டின் பாணியில் artwork ; 'பளிச்' ரக வர்ணங்கள் என இதுவும் ஒரு வகையில் ஜாலியான வாசிப்பு அனுபவத்தை உங்களுக்குத் தரக் காத்துள்ளது !//

    ஜில் மற்றும் ப்ளூ கோட்ஸ் நண்பர்களை அதிகம் எதிர்பார்கிறோம் சார்! ஒரு A TO Z காமெடி எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல்(லக்கி,சுட்டி லக்கி,ப்ளூ கோட்ஸ்,ஜில் ஜோர்டன்,சிக் பில்,அலிபாபா,சுஸ்கி-விஸ்கி,விச்சு-கிச்சு,பரட்டை தலை ராஜா,மதியில்லா மந்திரி,ஸ்டீல் பாடி) வந்தால் நன்றாக இருக்கும். ஒரு அறிவிப்பு ப்ளீஸ்..................!!!! : )

    //இவ்வார இறுதிக்குள் இதழ்கள் தயாராகி விடும் ; வரும் திங்கட்கிழமை உங்களுக்கு அனுப்பிடுவோம் ! //

    ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களை எண்ணி மனம் ஏங்குவது வழக்கம். சனி ஞாயறு வை எண்ணி மனம் மகிழ்ச்சிகொள்ளும். ஆனால் இந்த முறை திங்கள் அன்று புத்தகங்கள் வருவதால் ஞாயறு எப்போது கழியும் என்ற நிலை. எப்பவும் வெள்ளியன்று புத்தகம் அனுப்பப்பட்டால் WEEKEND ஸ்பாயில் ஆகாது.இரட்டிப்பு மகிழ்ச்சி அடையலாம். PLEASE CONSIDER!


    //இதோ -இணையத்தில் இணைந்திருக்கா ; வலைப்பதிவின் பக்கம் வந்திருக்கா ;அப்படியே வந்திருப்பினும் இது நாள் வரை மௌனமாய், பார்வையாளர்களாய், அமைதியான வாசகர்களாய் மாத்திரமே இருந்து வந்துள்ள பல நண்பர்களின் குரல்களின் ஒரு பிரதிபலிப்பு //

    இப்போதுள்ள வாசகர்களில் 95% நமது நெடுங்கால வாசகர்கள் தான் எனபது இதன் மூலம் தெரிகிறது. அனைத்திலும் புதுமைகளை,தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் நடைபெறும் தர முன்னேற்றத்தை விரும்பும் நாம் நமது காமிக்ஸ்சில் மட்டும் அதே பழைய நிலையையே தொடர வேண்டும் என விரும்புவது NOSTALGIA யாவின் அதீத தாக்கம் ஏற்படுத்தும் விளைவாகவே எனக்கு படுகிறது. கடந்துவிட்ட இளமைக்காலத்தை எப்படியாவது இன்னமும் ஒரு முறை முகர்ந்து பார்த்திட துடிக்கும் துடிப்பாக படுகிறது. : ). தொடர்ந்து புதிய தரமான கதைகளை பதிப்பிப்பதன் மூலமாகவும், புதிய வாசகர்களை அடைவதன் மூலமாகவும் மட்டுமே நமது ரசனையில் மாற்றத்தை கொண்டுவரமுடியும்.நிச்சயம் இது மாறும்.இது ஒரு WAIT AND PLAY விளையாட்டு! : ). தற்போது நமது கதைகளை தேர்ந்தெடுக்கும் முறை மிக சரியானது. CONGRATS சார்!

    அப்புறம் புதிய புத்தகங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும் இன்னமும் ஒரு வாசகன்! : )

    ReplyDelete
  61. காண வில்லை ......எங்கள் சங்க செயலாளர் ஈரோடு விஜய்..,மற்றும் பெங்களூர் கார்த்திக் ......

    ஒரு வேளை தாங்கள் மிகவும் எதிர் பார்த்த தொகுதி முடிவுகள் தபால் ஓட்டுகளால் சிதறி போனதால் வருத்தத்தில் உள்ளனரோ ....கவலை வேண்டாம் நண்பர்களே....எங்கள் தொகுதி உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது ....

    ReplyDelete