Follow by Email

Thursday, 9 January 2014

மதராசபட்டினமும்...ஒரு மாயாஜால லோகமும்..!

நண்பர்களே,

வணக்கம். இது நாள் வரை ஒரே இதழாய் வெளியானவற்றை இப்போது இரண்டாய்ப் பிரித்துப் போடுவது  மாத்திரமே மாற்றம் என்ற போதிலும் - 'பள பள' வென 4 புது இதழ்களை கையில் வைத்து ரசிப்பது ஒரு சூப்பர் அனுபவமாய் தோன்றியது எனக்கு ! "குண்டு புக்" ரசிக சிகாமணிகளுக்கு இக்கருத்தில் ஒப்புதல் இராதெனினும், கூரியரில் 4 இதழ்களும் ஒருசேர நாளை உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும் போது நீங்கள் சந்தோஷப்படாவிடின் ஆச்சர்யப்படுவேன் ! நான்கு இதழ்களின் அட்டைப்படங்களும், 4 இதழ்களின் அச்சும் அழகாய் அமைந்ததும் இம்மாத இதழ்களுக்கு மெருகூட்ட பெரிதும் உதவியுள்ளன என்பதில் ஐயமில்லை ! இதோ நீங்கள் இன்னமும் பார்த்திருக்கா ராப்பர் # 4 ! துளியும் மாற்றமின்றி ஒரிஜினல் டிசைன்களையே தோர்கலின் கதைவரிசையின் முழுமைக்கும் நாம் பயன்படுத்திட இருப்பதால் - அதன் முதல் episode இங்கே ! பின்னட்டை வழக்கம் போல் நமது தயாரிப்பு - கதாசிரியர் + ஓவியரின் போட்டோக்களோடு ! அட்டையில் சின்னதாய் காட்சி தரும் அந்த சன்ஷைன் கிராபிக் நாவல் லோகோவானது - லோகோ தயாரிக்கும் ஒரு நண்பரின் நிறுவனத்தின் கைவண்ணம் ! சிம்பிளாய் தோற்றம் தரும் அந்த சூரியன் ஏதேனும் ஒரு டிசைனின் தழுவலா என்பது தெரியவில்லை - ஆனால் பார்க்க அழகாய்த் தோன்றியது எனக்கு ! (இதன் நிறை-குறைகள் பற்றி ஆளுக்கொரு அபிப்ராயம் இருக்குமென்பதில் சந்தேகமே கிடையாது !) தொடரும் மாதத்து லோகோவில் எழுத்துக்களை தமிழுக்கு மாற்றிட உள்ளோம் ; நேரமின்மை காரணமாய் இம்முறை அதனை செயல்படுத்திட இயலவில்லை !


தோர்கல் கதையைப் பொறுத்த வரை - இது எனக்கும் first time என்றே சொல்ல வேண்டும் ! பொதுவாய் இது போன்ற fantasy கதைகள் என் ரசனைகளை அவ்வளவாய்க் கவர்ந்தது கிடையாது என்பதால் இது வரை  ஆங்கிலத்தில் வந்த Cinebook தோர்கல் தயாரிப்புகளை நான் படித்திட முனையவில்லை ! இக்கதை வரிசையினைக் கோரி வாசக நண்பர்களின் வற்புறுத்தல்கள் தொடர்ந்தது ஒரு பக்கமும் ; 'அழுகாச்சிக் கதைகளைத்' தாண்டிய சில புதுப் பாணிகளை 2014-ல் முயற்சிப்போமே ! என்ற சிந்தனை மறு பக்கமும் எழுந்த போது எனக்கு தோர்கலை பரீட்சிக்கும் சமயம் புலர்ந்து விட்டது என்று தோன்றியது. அப்போதும் கூட Cinebooks வெளியிட்டுள்ள கதைகளை மேலோட்டமாய் புரட்ட மாத்திரமே செய்தேன் ! அவர்கள் தோர்கலின் இளம் பிராயத்து சிறுகதையோடு தொடரினைத் துவக்கியுள்ளதைக் கவனிக்கவும், நாமும் அதே பாணியைப் பின்பற்றுவோமா ? என்று சிந்தனை எனக்குள் லேசாய் எழுந்தது ! But - 'எங்களது ஒரிஜினல் வரிசையையே பின்பற்றுங்கள் !' என நம் படைப்பாளிகள் சொல்லிட - அப்பீலே இல்லாமல் அதன்படியே தோர்கலின்தமிழ் இன்னிங்சுக்குத் துவக்கம் கொடுத்துள்ளோம் ! "வஞ்சிக்கப்பட்ட வசியக்காரி" + "ஏறத்தாள சொர்க்கம் " என்ற இரு கதைகளின் தொகுப்பு நமது இம்மாத கிராபிக் நாவல் ! கதைகளைப் பொறுத்த வரை - இது முழுக்க முழுக்க லாஜிக் பார்த்திடா ; ஒரு மாந்த்ரீக - மாயாஜால லோகத்தினில் சஞ்சாரம் செய்யும் முயற்சி   என்பதால் நமது சமீபத்திய 'இரத்தப் படலம்' ; 'கிரீன் மேனர்' ; 'சிப்பாயின்  சுவடுகளில்...' இத்யாதிகளில் இருந்து சுத்தமாய் விலகி நிற்கும் !  இக்கதையினை முதன் முறையாகப் படிக்கும் போது பெரிய complications இன்றி கதை நகர்ந்திடும் பாணி ஒரு refreshing change ஆகப்பட்டது ! எழுதுவதிலும், எடிட் செய்வதிலும் துளியும் சிரமமே தராத இக்கதை படிக்கும் போதும் உங்களை சுலபமாய் ஈர்க்கும் என்றே தோன்றுகிறது ! தவிர, வீட்டில் உள்ள இளம் காமிக்ஸ் வாசகர்களுக்கு இது ஒரு சூப்பர் ஆரம்பம் என்றும் பட்டது ! 1970-களில் உருவான கதை என்பதால் அன்றைய கலரிங் யுக்திகள் சற்றே பளிச் - பளிச் என ராமராஜன் வண்ணங்களில் இருப்பது கூட கவனத்தைக் கோரும் ஒரு யுக்தியாக இருந்திருக்கலாம் ! கிரைம் த்ரில்லர் கதைகளின் பிதாமகரான வான் ஹாமேவால் இப்படி ஒரு ஜானரிலும் கதை சொல்ல முடியும் என்பது கண்டு வியக்காது இருக்க இயலவில்லை ! The man is simply awesome...!

இன்றைய கூரியரில் சந்தாப் பிரதிகள் அனைத்தும் அனுப்பி விட்டோம் ; ST கூரியரின் நண்பர்கள் நாளையே அவற்றை உங்களுக்குப் பத்திரமாய்ப் பட்டுவாடா செய்திட - தோர்கலின் இஷ்ட தெய்வமான ஓடினை நானும் வேண்டிக் கொள்கிறேன் !  E -Bay லிஸ்டிங் கூட இப்போதே போட்டு விட்டோம் என்பதால் அங்கு வாங்கிடும் நண்பர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளைத் தயாராக்கிக் கொள்ளலாம் ! இதழ்கள் கிடைத்தான பின்னே உங்களின் அபிப்ராயங்கள் ; விமர்சனங்கள் பற்றித் தெரிந்திட ஆவலாய்க் காத்திருப்போம் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா - என்ன ?! As always, fingers crossed !

சென்னைப் புத்தக விழா நாளை (ஜனவரி 10 - வெள்ளிக் கிழமை) மாலை துவங்குவதால் - சென்னைக்கு நம்மவர்கள் ஏற்கனவே கிளம்பி விட்டார்கள் ! இன்றிரவு நானும் 'பட்டினப் பிரவேசம்' செய்கிறேன் - நாளையும், சனிக்கிழமையின் பெரும் பகுதியும் நமது ஸ்டால் எண் 748-ல் உங்களை சந்திக்கும் பொருட்டு  ! Please do drop in folks ! சென்னையில் இம்முறை நமது ஸ்டாலின் சுவர்களில் வண்ணத்தில் கண் சிமிட்டும் banner கள் இதோ :

பொன்னனின் டிசைன்கள்..


சென்றாண்டை விட இம்முறை அரங்கமும்,   பங்கேற்கும்   ஸ்டால்களும் அளவில் ; எண்ணிக்கையில் அதிகம் என்பதால்   நல்ல வரவேற்பிருக்கும்   என விழாக்குழுவினர் அபிப்ராயம்    கொண்டுள்ளனர் !      சென்றாண்டைப் போல NBS எனும் பயில்வான் நம்மிடம் இம்முறை   கிடையாதென்பதால் - அந்த விற்பனைத் தொகைகளை    எட்டிப்    பிடிப்பது     சிரமமே !   எனினும் காமிக்ஸ் எனும் நம் மாய உலகின் அறிமுகம் கொஞ்சம் கொஞ்சமாய் புது வாசக    வட்டங்களுக்குப்    போய்ச் சேர     இது     அற்புதமானதொரு களம் என்பதால்     ஆவலாய்க் காத்திருக்கிறோம் ! நாளைய பொழுது நன்றாய்ப் புலரும்     என்ற   நம்பிக்கையோடு இந்தப் பதிவிற்கொரு 'சுபம்' போட்டுப் புறப்படுகிறேன் ! See you around ! 209 comments:

 1. Replies
  1. appo naanthaan secondu hee hee hee hee sunshine logo super sir! english ileye continue pannungalen???

   Delete
 2. வாழ்த்துக்கள்! உங்கள் புத்தகங்களை வாங்குவது எப்படி? என்ன விலை? தயவு செய்து இந்த மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பிட முடியுமா? thalir.ssb@gmail.com. நன்றி!

  ReplyDelete
 3. Try this Link: http://www.ebay.in/sch/thecomicsstores2012/m.html?_nkw=&_armrs=1&_from=&_ipg=&_trksid=p3686

  ReplyDelete
 4. Really eager to meet u sir
  but dont kno if my work timings will allow
  till w time in evening will u be available in person sir?

  ReplyDelete
 5. All the Best for this year sales in Chennai Book Fair

  ReplyDelete
  Replies
  1. Come on guys please pay your subscription for this year books

   Delete
 6. தோர்கல் அட்டை அட்டகாஸம் போங்கள்.
  :)

  ReplyDelete
 7. Sir, I Prefered Professional Courier. Whether is it despatched?

  ReplyDelete
 8. Replies
  1. மாயஜாலம் நிகத்தி விட்டார்கள், மாயாஜால கதை கூட போலும் !

   Delete
  2. ஆஹா அருமை , தோர்கள் மூலம் எனது நீண்ட நெடும் நாள் ஆசை நிறைவேறியது !கடைசி மாயாஜால கதை ஸ்பைடரின் பாட்டில் பூதம் ,முதல் மாயாஜால கதை தங்க நகரம் இரண்டும் நினைவில் ! நீண்ட நெடும் ஏக்கம் நிறைவேறுகிறது உங்கள் அருளால் நன்றி நன்றி நன்றி ! அட்டை படம் அமர்க்களம் , மனதை தாலாட்டுகிறது அந்த பொன்னிற கூந்தலில்! அந்த வைகிங் கிழவனை பார்க்கையில் !
   இந்த முறை ஒத்தையாய் பார்க்கும் நான்கு புத்தகங்களும் கத்தையாய் நிச்சயம் தங்கலுக்கு தோன்றியதை போன்றே சந்தோஷ படுத்தும் என நினைக்கிறேன் ! நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரியர் கதவை நாளை தட்ட போகிறேன் !
   டெக்ஸ் ,டயபாளிக் அட்டை பட போஸ்டர் தூள் !
   இந்த முறை தேங்கிஉள்ள புத்தகங்கள் nbs இடத்தை நிறைவு செய்து விற்பனையை அப்போது போலவே தூள் கிளப்பும் என்ற நம்பிக்கையுடன் எனது வாழ்த்துக்கள் !

   Delete
  3. பொங்கல் நாளையே ! எப்படியா மகிழ்ச்சியின் பொங்கல் !

   Delete
 9. முன்னட்டையும், பின்னட்டையும் அட்டகாசம். வித்தியாசமான கதைக்காக காத்திருக்கிறேன் (றோம்).

  ஆசிரியர் பல நேரங்களில் 'ஏறத்தாள'-வென்று பயன்படுத்துகிறார். சரியாவென்று நண்பர்கள் விளக்கலாமே. என்னை பொறுத்தவரை ஏற்றம்-தாழ்வின் சுருக்கமே ஏறத்தாழ.

  ReplyDelete
  Replies
  1. ஏறத்தாழ = ஏறக்குறைய - சுமார் - குத்துமதிப்பாக - முன்பின்னாக - கிட்டத்தட்ட-கூடக்குறைச்சலாக - காரியத்தின் னெருக்கமாக.

   Delete
 10. எல்லா அட்டைப்படங்களும் சூப்பர்!

  நாளை தொடங்கும் புத்தக கண்காட்சிக்கு வாழ்த்துக்கள்.

  சென்ற முறை தற்சமயம் கைவசமுள்ள பிரதிகளின் அட்டவனை புத்தக கண்காட்சிக்கு பிறகு வெகுவாக குறைந்திருந்தது. தற்சமயம் 100 ரூபாய் பிரதிகளின் எண்ணிக்கை கூடியிருப்பது சிறிது வருத்தமாக உள்ளது. எப்பொழுதோ வெளியிடப்பட்ட லயன் New Look ஸ்பெஷல் இன்னும் விற்பனையாகாமல் இருப்பது ஒருவேளை Reprint செய்யப்பட்டதோ?

  அதிக புத்தகங்கள் ஒருவித மந்த நிலையை ஏற்படுத்தும். குறைவான புத்தகங்கள் காலியாகிவிடும் என்ற நினைப்பில் உடனே வாங்க தூண்டும்.

  எப்படியோ இந்த புத்தக கண்காட்சியில் தற்சமயம் கைவசமுள்ள பிரதிகளின் எண்ணிக்கை குறைய நான் வேண்டுகிறேன். அப்பொழுதுதான் மேலும் புதிய கதைகள் வெளிவர ஊக்கமாய் இருக்கும்.

  அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.

  ReplyDelete
 11. எனது பட்சி சொன்னது விஜெய்க்கும்,ரமேசுக்கும் கூட அடி சறுக்கும் !
  எச்சரிக்கை நண்பர்களே !
  தெசை வாரி விடும் டைகர் அவதார் படம் போட்ட நண்பரே உங்களுக்கு ! டெக்ஸ் குழு ! அதுவும் கார்சனை கிண்டல் செய்து பிழைப்பு ஓட்ட முயல்வது சற்று ஓவர்தான் ! இருளின் மைந்தர்கள் படித்து விட்டு வாருங்கள் நண்பரே ! சிரிப்போம்(பேசுவோம்) !

  ReplyDelete
  Replies
  1. பட்சி : 1
   பல்லி : 0

   :D

   Delete
  2. இந்த 1க்கு தானா இத்தனை அலட்டல்..... உருட்டல்...... மிரட்டல்.....
   நான் நினைத்தேன் ஆயிரக்கணக்கான புத்தகத்தில் ஒரு 10/வது தேறும் என்று?

   வெற்றி... வெற்றி.... என்று சொல்லி கொண்டிருந்தவர்கள் தோல்வி அடைந்தவுடன் சொல்லும் காரணங்களை கேட்டால் நகைப்பை உண்டாக்குகிறது.

   Delete
  3. அது ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்றுதான், ஜிம்மி இல்லாத டைகரும் , காசன் இல்லா டெக்சும் அவ்வாறே !

   Delete
  4. குறையுள்ள கதைகள் ஒன்றிரண்டு இருக்கலாம் , குறைந்த கதைகளே வந்துள்ள டைகரில் நிறையுள்ள கதைகள் குறைவே ...எங்க பாத்தாலும் ,எப்புடி பாத்தாலும் குறைகளே கதைகள் வெளிவந்த அளவில் கூட

   Delete
  5. அந்த டெக்ஸ், கார்சன் போஸ்டரை கண் குளிர பாருங்களேன் நம்பர் ஒன் யாரென அறிய !

   Delete
  6. பவர் ஸ்டார், சோலார் ஸ்டார் போஸ்டர் ம்ம்ம்ம்

   பாஸ் ரொம்ப உணர்ச்சிவசப்பட வேண்டாம் எனக்கும் டெக்ஸ் கதைகள் பிடிக்கும்.

   Delete
  7. // அந்த டெக்ஸ், கார்சன் போஸ்டரைக் கண் குளிரப் பாருங்களேன் //

   நல்லவேளையாக டைகரின் டைட்-க்ளோஸ்அப் முகத்தை புத்தகக் கண்காட்சியில் போஸ்டராக போடவில்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால், ஸ்டாலுக்குள் நுழையும் குழந்தைகள் 'வீல்' என்று கத்தியபடியே வெளியே ஓடியிருப்பார்கள். இதயம் பலஹீனமான யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இருந்திருக்காது.

   சென்னை தப்பியது! :D

   Delete
  8. நல்லவேளையாக டைகரின் டைட்-க்ளோஸ்அப் முகத்தை புத்தகக் கண்காட்சியில் போஸ்டராக போடவில்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால், ஸ்டாலுக்குள் நுழையும் குழந்தைகள் 'வீல்' என்று கத்தியபடியே வெளியே ஓடியிருப்பார்கள். இதயம் பலஹீனமான யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இருந்திருக்காது.

   என்ன பாஸ் செய்றது மேனாமினுக்கிகளத்தான் இந்த உலகம் ஆராதிக்கிறது.

   Delete
 12. Happy to see the post.also hope new readers will be added to our comics through book fair.

  ReplyDelete
 13. இவ்வருடத்தின் துவக்கமாக மலர்ந்திருக்கும் இந்த 4 இதழ்களும் அட்டகாசமாக அமைந்துள்ளன. இதழ்களின் தரம் இனி நிரந்தரம். ஒரு பானைச் சோற்றிக்கு ஒரு சோறு பதமல்லவா..தரத்திற்கான தாங்கள் மெனக்கெட்டிருப்பது கண்கூடு!

  கிராபிக் நாவல் சந்தாவில் இணைக்காத எனக்கு கூரியர்வாலா நாளை டெலிவரி செய்ய ஓடின் அருள் புரிவாரா..?
  அட்டையில் GN லோகோவை வலதுபுறத்தில் இடம்பெறச் செய்திருந்தால் இன்னும் எடுப்பாகயிருந்திருக்கும்?

  ஜாம்பவான்களின் ஜனவரி நாளை ஜாம் ஜாம்வென.....

  ReplyDelete
  Replies
  1. GN-ல் ஆசிரியருக்கான பக்கத்தின் தலைப்பு என்னவாகவிருக்கும்...? இந்தமுறை தலைப்பின் தேர்வை வாசகர்களிடம் திணிக்காமல் தாங்களே தலைப்பு வைத்துவிட்டீர்கள் என்பது மட்டும் தெரிகிறது! நிச்சயமாக ரணகள நேரம், குதிகாலும் பிடரியும், வலிக்கும் ஆனா வலிக்காது, கத்தியில்லை... ரத்தமுண்டு....போன்றவைகளாகயிராது என்று நம்புவோமாக?

   Delete
  2. ஆசிரியரின் தலைப்பு ஏமாற்றம்தான் ! பிம்பிளிக்கு பிளாபி

   Delete
 14. தலயா ? தளபதியா?? அப்டின்னு யோசிச்சிட்டு இருந்தேன்.. தல அப்படிங்கற முடிவிற்கே வந்துட்டேன்!!! என்னா நம்ப தல புக் அனுபிட்டாராமே?!! So no theater only BOOKS..

  ReplyDelete
 15. டியர் எடிட்டர்ஜீ!!!

  தோர்கல் அட்டைப்படம் அட்டகாசம்.நாளை தொடங்கவிருக்கும் புத்தக திருவிழாவில் நமது காமிக்ஸ்கள் நிச்சயம் மக்களின் வரவேற்பை பெறவும்,கொண்டு போகும் புத்தகங்கள் ஞாயிறு மாலைக்குள் விற்று தீரவும் அடியேனும் ஓடினை வேண்டிக்கொள்கிறேன்.சுபமங்களம் உண்டாகட்டும்.ததாஸ்து.

  ReplyDelete
  Replies
  1. // அடியேனும் ஓடினை வேண்டிக் கொள்கிறேன் //

   +1

   Delete
  2. அட சாத்தனும் வேதம் ஒதுகிறதே!!

   Delete
 16. டியர் எடிட்டர்,

  சென்னை புத்தகத் திருவிழாவில் இதுவரை எட்டியிராத புதியதொரு விற்பனை இலக்கை அடைய என் வேண்டுதல்களும், வாழ்த்துக்களும்!

  சென்ற வருடத்தைப் போல NBS போன்றதொரு ஜாம்பவான் இல்லாதுபோய்விடினும், வண்ணமயமான பல புத்தகங்களின் அணிவகுப்பு நம் ஸ்டாலை நிறைவாய் காட்டிடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஒருபுறம் பொன்னரின் நேர்த்தியான பேனர் டிசைன்கள் அழகு சேர்த்திட, மறுபுறம் நமது வாசக நண்பர்களும் தங்கள் திறமையை காட்டி ஸ்டாலின் அழகை மேலும் மெருகூட்டப்போவது நிச்சயம்!

  இம்முறை நிறையவே புதிய வாசகர்கள் கிடைத்திடவும் வாழ்த்துக்கள்! மறக்காமல் ஸ்டாலில் சிறிய அளவிலாவது 'சந்தா பெற்றுக்கொள்ளப்படும்' என்ற பேனரையும் வைத்துவிடுங்கள்.

  தோர்கல் அட்டைப்படத்தைப் பார்த்தவுடனே சட்டென்று உள்ளம் கொள்ளை போகிறது! இதைப் பார்த்த உடனேயே தோர்கல் தொடருக்குத் தொடர்ந்து அதன் ஒரிஜினல் அட்டைப்படங்களையே பயன்படுத்த நீங்கள் எடுத்திருக்கும் முடிவு மிகச் சரியானதென்று படுகிறது (விஸ்கி-சுஸ்கி உள்ளிட்ட நண்பர்களும் மகிழ்வார்கள்). அட்டகாசம்!!

  சற்றும் எதிர்பாராத புதிய லோகோ இந்த அட்டைப்படத்துக்குப் பொருத்தமாக, க்யூட்டாக அமைந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நண்பர்கள் வடிவமைத்த எந்தவொரு லோகோ டிசைனையும் பயன்படுத்தாமல் புதியதொரு டிசைனை அவசரமாகத் தேடியதற்கு சிறிதாகவேணும் கதை ஏதாவது இருந்தால் பிறிதொரு சமயத்தில் சொல்லுங்களேன் கேட்போம்?

  இம்முறை அச்சுக்குறைபாடுகள் அறவே இல்லாத 4 புத்தகங்கள் கிடைக்கப் போவதை எண்ணி மிக்க மகிழ்வாய் உணர்கிறேன். முடிந்தவரை இந்த ஆண்டு இப்படியே தொடர வேண்டுகிறேன்.

  நாளைமுதல் புத்தகத் திருவிழா கொண்டாட்டத்தில் பங்குகொள்ளப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! பங்குபெறும் நண்பர்கள் தங்களால் இயன்றவரை கொண்டாட்ட நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டால் மகிழ்வேன். எடிட்டரும் அடுத்த இரு நாட்களுக்காவது daily updates கொடுப்பார் எனில் எங்களைப் போன்று எட்டயிருந்து ஏக்கத்துடன் பார்ப்போருக்கு மொத்தக் கொண்டாட்டத்தின் ஒரு குண்டுமணி அளவாவது வந்துசேருமே!

  மீண்டும் ஒரு காமிக்ஸ் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவோம் நண்பர்களே! இனி எல்லாம் சுகமே! :)

  ReplyDelete
 17. விஜயன் சார், வருடத்தின் ஆரம்பத்தில் நான்கு புத்தகம்கள் அருமையான துவக்கம்! மாதம் மாதம் எங்களுக்கு நான்கு புத்தகம் கொடுத்து நமது காமிக்ஸ் மேலும் மேலும் வளர வாழ்த்துகள்! சென்னை புத்தக திருவிழா மேலும் பல ஆயிரம் வாசகர்களை நம்முடன் இணைக்கும் என நம்புகிறேன்!

  நமது புதிய லோகோ ரொம்ப ரொம்ப சுமார், உண்மைய சொன்னா லோகோ மாதிரியே தெரியவில்லை! என்னை பொறுத்தவரை இந்த புதிய லோகோ என்னை கவரவில்லை என சொல்லவதற்கு மனிக்கவும்!
  நமது காமிக்ஸ் நண்பர்கள் அனுப்பிய லோகோகள் இதனை விட மிக அருமையாக இருந்தது, குறிப்பாக வினோஜ், ரமேஷ், ஸ்ரீரங்கம் நண்பர். நமது காமிக்ஸ் நண்பர்களின் லோகோவை தேர்ந்து எடுக்காதது வருத்தமாக உள்ளது!

  ReplyDelete
  Replies
  1. இந்த புதிய லோகோ டிசைன் எங்கோ இதற்கு முன்னால் பார்த்த ஞாபகம்! இதனை லோகோ என எப்படி ஏற்று கொண்டீர்கள் ?

   Delete
  2. // நண்பர்களின் லோகோவை தேர்ந்து எடுக்காதது வருத்தமாக உள்ளது //

   +1 :(

   Delete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. விஜயன் சார், 2014 நமது காமிக்ஸ் அட்டவனை நல்ல தரத்தில் மீண்டும் ஒரு முறை தயாரித்து தருவதாக எழுதி இருந்தீர்கள், இம்மாதம் அவை கிடைக்குமா?

  ReplyDelete
 20. // மறக்காமல் ஸ்டாலில் சிறிய அளவிலாவது 'சந்தா பெற்றுக்கொள்ளப்படும்' என்ற பேனரையும் வைத்துவிடுங்கள். //
  Yes, please don't forgot to put that announcement.

  Graphic Novel Logo was very very ordinary and out of our usual square design.

  ReplyDelete
 21. வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 22. போதும் எழுந்திரிங்க ஸ்டீல். கொரியர் ஆபீஸை திறக்க இடைஞ்சலா இப்படி படுத்துக்கிடந்தா அப்புறம் எப்படி நேரம் காலத்தோட புக்கை வாங்கிட்டு வீடு போய்ச் சேருவீங்களாம்?

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹ ஹா அது சோமசுந்தரம் , ஆபீசில் யாரும் பயந்து ஓடி விட கூடாதே என முகத்தை மாற்றி படுத்திருக்கார் !

   Delete
  2. நான் கொரியர் ஆபீஸ்க்குள் மாட்டிக்கிட்டேன்... கதவ தொறக்க முடியாம யரோ ரெண்டு பேர் வாசலில் படுத்து கிடக்கிறார்கள் அவர்களில் ஒருவர் வலது கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்குதேன்னு பார்த்தா அது நம்ம ஸ்டீல் அண்ணாச்சி!! .வீட்டுக்கு போகணும் வழி விடுங்க

   Delete
  3. // வலது கை கொஞ்சம் வித்தியாசமா இருக்குதேன்னு பார்த்தா //

   தூக்க கலக்கத்தில் உருண்டுபோய் சாக்கடையில் கையை விட்டிருப்பார். :)

   Delete
  4. ஹ ஹ ஹா நன்றி விஜெய் , மறுபடியும் மாறுவேடம் அந்த அப்பாவி யார் நண்பரே ! நீங்களா அல்லது ஸ்டாலினா ?

   Delete
  5. டியர் ஸ்டீல் க்ளா!!!

   முகத்தையெல்லாம் மாற்றவில்லை.மேக்கப் போடாமல் வந்துவிட்டேன்.ஹிஹி!!!

   Delete
  6. ஹ ஹ ஹ மேக் up போட்டுத்தான் பாக்குறது ! அதுக்கு இது பெட்டர் !

   Delete
 23. // டெக்ஸ் ,டயபாளிக் அட்டை பட போஸ்டர் தூள் ! //+1.

  // நாளைமுதல் புத்தகத் திருவிழா கொண்டாட்டத்தில் பங்குகொள்ளப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! பங்குபெறும் நண்பர்கள் தங்களால் இயன்றவரை கொண்டாட்ட நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டால் மகிழ்வேன். எடிட்டரும் அடுத்த இரு நாட்களுக்காவது daily updates கொடுப்பார் எனில் எங்களைப் போன்று எட்டயிருந்து ஏக்கத்துடன் பார்ப்போருக்கு மொத்தக் கொண்டாட்டத்தின் ஒரு குண்டுமணி அளவாவது வந்துசேருமே! //

  கொரியர் ஆபீஸ்-க்கு தான் போயிட்டு இருக்கேன்,நான்!

  ReplyDelete
  Replies
  1. ஏமாறாமல் திரும்பி வர ஓடின் ஓடி வந்து அருளட்டும் !

   Delete
  2. ஏமாறாமல் திரும்பி வர என் இதய தெய்வம் ஓடின் ஓடி வந்து அருளட்டும் நண்பரே !

   Delete
 24. விஜயன் சார், தோர்கல் போன்ற புதிய கதைகளை வெளிஈடும் போது ஒரிஜினல் அட்டை படம்களை பயன்படுத்துவது மிகவும் நல்ல விஷயம்; தோர்கல் கதையை வேறு அந்நிய மொழிகளில் படித்தவர்கள் இந்த படம்களை பார்த்தவுடன் நமது காமிக்ஸ் பக்கம் சாயும் வாய்ப்பு அதிகம். புதிய ஹீரோகளின் கதைகளை வெளிஈடும் போது இது போல் ஒரிஜினல் அட்டை படம்களை பயன்படுத்துங்கள்

  ReplyDelete
 25. Replies
  1. வாழ்த்துக்கள் ஸ்டீல் க்ளா!

   Delete
  2. ஆபீஸ் பாய் இன்னைக்கு லீவ்! நான் தான் பேங்க் போறேன்.வரும் வழியில் தான் கூரியர் வங்க முடியும்! இன்னும் 30 நிமிடங்கள்!

   Delete
  3. முன்கூட்டியே பொங்கல் வந்ததுக்கு வாழ்த்துக்கள்

   Delete
 26. NBS போன்ற இதழ்கள் இல்லாவிட்டாலும் ..,போன வருட விற்பனையை எதிர் பார்க்கா விட்டாலும் ..,இப்பொழுது உள்ள பழைய இதழ்கள் அனைத்தும் இந்த புத்தக கண்காட்சியில் விற்று ஈரோடு புத்தக கண்காட்சிக்கு பழைய இதழ்கள் இல்லாமல் தடுமாற ஆசிரியர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் ...

  ReplyDelete
  Replies
  1. அப்படி நேர்ந்தால் புதிய இதழ்கள் அதிகரிக்கும் !

   Delete
 27. அட்டை படம் நான்கும் நேரில் கண்ட சொர்கம்தான் ! அருமை ! புத்தகம் ஒல்லிபிச்சானாய் இருந்தாலும் அருமையாக தோன்றுவது அட்டை படத்தின் ஈர்ப்பினால்தானோ ! நேரில் ,கையில் நீங்கள் பெற்று கொண்டதும் உணர்வீர்கள் என நினைக்கிறேன் ! பின்னட்டை தோர்கள், சாக மறந்த சுறா அளவிற்கு பிற இரண்டும் எடுப்பாய் இல்லை காரணம் வன்னத்தேர்வென நினைக்கிறேன் !ஆனால் மோசமில்லை என்பதை கூறி ஆக வேண்டும்;எடுப்பாய் இல்லை , அவ்வளவே ! தோர்கள், சாக மறந்த சுறா பின்னட்டை நிறத்தையே தேர்வு செய்யலாம் பின்னட்டைகளுக்கு !

  ReplyDelete
 28. நண்பர் விஜய்க்கு இந்த முறை அட்டை பட ஈர்ப்புக்கு காரணம் க்ளோஸ்அப் படங்களே என்பதை புத்தகத்தை வாங்கியதும் உணர்வீர்கள் !

  ReplyDelete
 29. நிச்சயம் இந்த நான்கு கதைகளும் அட்டை படம்,விலை சைஸ் என எகத்திலும் சிறுவர்களை ஈர்க்கும் !

  ReplyDelete
 30. நான்கு புத்தககங்களின் அட்டை படமும் சூப்பர். நமது காமிக்ஸ் விற்பனை இந்த புக் fair ல் சாதனை நிகழ்த்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
 31. டியர் விஜயன் சார்,

  தோர்கலின் அட்டைப்படம் மிக மிக அருமை! இதைப் போன்ற எளிமையான, அதே சமயம் நேர்த்தியான அட்டை வடிவமைப்புகளையே நமது இதழ்களில் எதிர்பார்க்கிறேன்! தோர்கலைப் பொறுத்த வரையிலாவது ஒரிஜினல் அட்டைகளையே உபயோகிக்க முடிவெடுத்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்!

  //லோகோ - இதன் நிறை-குறைகள் பற்றி ஆளுக்கொரு அபிப்ராயம் இருக்குமென்பதில் சந்தேகமே கிடையாது !//

  Sure...! ஏதோ ஒரு Sunflower Refined Oil கம்பெனி லோகோ போல இருக்கிறது! ;) Just for fun :)

  //"வஞ்சிக்கப்பட்ட வசியக்காரி" + "ஏறத்தாள சொர்க்கம் " என்ற இரு கதைகளின் தொகுப்பு நமது இம்மாத கிராபிக் நாவல்//

  பயங்கரப் புயல், யுத்தம் உண்டு எதிரி இல்லை & சாக மறந்த சுறா - இவற்றோடு தோர்கலின் ஒரு பாகம் என்று தானே அறிவித்து இருந்தீர்கள்?! 48 பக்கங்களிலேயே வ.வ. & ஏ.சொ. - இரு கதைகளும் அடங்குகின்றனவா?! அல்லது அந்த இரண்டவாது கதை தான் சென்னை சர்ப்ரைஸ் வெளியீடா?

  //வீட்டில் உள்ள இளம் காமிக்ஸ் வாசகர்களுக்கு இது ஒரு சூப்பர் ஆரம்பம் என்றும் பட்டது//

  நல்லவேளையாக அந்த இந்திரஜால் ஸ்டைல் தலைப்பை (வ.வ.) அட்டையில் போடவில்லை - இள வாசகர்கள் பீதி அடைந்திருப்பார்கள்! ;) வஞ்சிக்கப்பட்ட வசியக்காரி, பிரபஞ்சம், லோகம் என்று ஏறத்தாள கலவரப் படுத்தினாலும், (மாதிரி) உட்பக்கத்தில் அப்படிப் பட்ட தமிழ்ப் பிரயோகம் இல்லாதது ஆறுதல்! Just for fun :)

  //சென்றாண்டை விட இம்முறை அரங்கமும், பங்கேற்கும் ஸ்டால்களும் அளவில் ; எண்ணிக்கையில் அதிகம்//
  மாபெரும் புத்தக கண்காட்சி என்ற முறையில் அங்கே வந்து சுற்றிப் பார்க்க ஆசை தான்; அடுத்த ஆண்டாவது முடிக்கிறதா என்று பார்ப்போம்! புதிய வாசகர்கள் கிடைக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கார்த்திக் , வஞ்சிக்க பட்ட வசியகாரி பெயரே பிரம்மாதம் , சிறு வயது மாயாஜால கதைகளின் தலைப்புகளை நினைவு படுத்துகிறது ! வண்ண சேர்க்கை அருமை ! மாய லோகம்தானே அல்ல மாயலோகம்தான் !

   Delete
  2. சாலையோரத்தில் தேமேன்னு நின்னுக்கிட்டிருக்கும் அப்பாவிகளை வம்புக்கு இழுத்து காதை கடிச்சு வச்சுட்டு "ஹி ஹி just for fun" அப்படீன்னு சொல்றது இப்போல்லாம் பெங்களூரில் ஒர் ஃபேஷனாமே கார்த்திக்! அப்படியா? :D
   (உங்க நியூஇயர் ரெசல்யூசனை தகர்த்தெறியாம விடமாட்டோம்ல?)

   Delete
  3. டியர் கார்த்திக்!!!

   கிழிஞ்சது போங்க.தோர்கல் மொத்தம் 30 கதையா...?நம்ம கட்டை விரலார் வருடத்திற்கு 3 என்ற விகிதத்தில் இதற்கே 10 ஆண்டு நம்மை படுத்தி எடுத்துவிடுவாரே...?:-)

   Delete
 32. 4 புத்தகங்களும் வாங்கியாச்சு! அட்டைபடம் அனைத்தும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. முத்து காமிக்ஸ் - இன் போஸ்ட் பாக்ஸ்-இல் என்னுடைய கடிதம்! ஐயோ! நம்ப முடிய வில்லை!

   Delete
  2. நன்றிகள்,ஸ்டீல் க்ளா!

   Delete
  3. @ Siva subramanian

   XIIIன் 1-18 பாகங்களை இதுவரை நீங்கள் படிக்கவில்லை என்பதை உங்கள் கடுதாசி மூலம் அறிந்தேன். எப்படியாவது தேடிப்பிடித்து அதை முதலில் படியுங்கள் நண்பரே! உலகின் எந்தவொரு காமிக்ஸ் ரசிகரும் இழக்கக்கூடாத பிரம்மிக்க வைக்கும் அனுபவம் அது! காமிக்ஸ்களில் அது ஒரு இதிகாசம் என்றுகூடச் சொல்வேன். :)

   Delete
  4. @ ஈரோடு விஜய்!

   // உலகின் எந்தவொரு காமிக்ஸ் ரசிகரும் இழக்கக்கூடாத பிரம்மிக்க வைக்கும் அனுபவம் அது//

   உண்மையே! உங்கள் பழைய நினைவுகளை போலவே நானும் "சாத்தான் வேட்டை " புத்தகத்தை வாங்க முடியாமல் கடையை கடந்து போகும் போதெல்லாம் அட்டைப்படத்தை பார்த்தே கனவோடு நிறுத்தி கொண்டேன்.
   அதை போலவே எப்போதாவது வாங்க முடிந்த புத்தகத்தின் இறுதியில் XIII-இன் புத்தகத்தின் முன்பதிவு விபரத்தை எத்தனை முறை படித்தேன் என்பதே நினைவில்லை.
   அப்போது வாங்கமுடியத நிலை,என்னுடையது!
   இன்று ரத்த படலம் வண்ண புத்தகத்தில் முன்னோடம் படித்த போதே புரிந்தது நான் இழந்தது உண்மையான பொக்கிஷம் என்பது.

   அதனாலேயே NBS வாங்கிய போது எனக்கு மிக பெருமை.

   Delete
  5. @ Siva subramanian

   கவலைய விடுங்க பாஸ்! ஜனவரி 2016ல் மொத்த இரத்தப்படலமும் கலரில் கிடைக்க ஒரு போராட்டத்தை ஆரம்பிச்சுட்டாப் போச்சு! :)

   Delete
  6. //Siva subramanian

   XIIIன் 1-18 பாகங்களை இதுவரை நீங்கள் படிக்கவில்லை என்பதை உங்கள் கடுதாசி மூலம் அறிந்தேன். எப்படியாவது தேடிப்பிடித்து அதை முதலில் படியுங்கள் நண்பரே! உலகின் எந்தவொரு காமிக்ஸ் ரசிகரும் இழக்கக்கூடாத பிரம்மிக்க வைக்கும் அனுபவம் அது! காமிக்ஸ்களில் அது ஒரு இதிகாசம் என்றுகூடச் சொல்வேன். :) //


   @ Siva subramanian

   கவலைய விடுங்க பாஸ்! ஜனவரி 2016ல் மொத்த இரத்தப்படலமும் கலரில் கிடைக்க ஒரு போராட்டத்தை ஆரம்பிச்சுட்டாப் போச்சு! :)
   அவ்வளவு தொலைவு ஏன் போகணும் நண்பா ! 2015 மத்தியில் வேண்டுமென , இப்போதே கேட்போமே !

   Delete
  7. இரத்தப்படலம்...

   6 பாகங்கள் X 3 புத்தகங்கள் = 18 பாகங்கள்

   முழுவண்ணத்தில்...

   ரூபாய் 1000 விலையில்...

   2015 ஜனவரி - சென்னை புத்தகத் திருவிழாவில் முன்பதிவு ஆரம்பம்...

   போதிய அளவு முன்பதிவு கிடைக்காது போனால், செலுத்திய பணம் 2016 சந்தா கணக்கில் சேர்க்கப்படும்...

   2016 ஜனவரியில் சென்னை புத்தகத்திருவிழாவில் வெளியிடப்படும்...

   இன்னான்றீங்க அல்லாரும்? :)

   Delete
  8. இரத்தப்படலம் 6 பாகங்கள் X 3 புத்தகங்கள் = 18 பாகங்கள் முழுவண்ணத்தில்... ரூபாய் 1000 விலையில்...

   அட்டகாசம்...... அட்டகாசம்..... இந்த போராட்டத்திற்கு என் முழு ஆதரவு உண்டு.

   ஆமா சிங்கத்தின் சிறுவயதில் போராட்டம் என்ன ஆச்சு?
   இப்படி ஒவ்வொரு போராட்டத்தையும் அரைகுறையாக செய்தால்.......?

   Delete
  9. // கவலைய விடுங்க பாஸ்! ஜனவரி 2016ல் மொத்த இரத்தப்படலமும் கலரில் கிடைக்க ஒரு போராட்டத்தை ஆரம்பிச்சுட்டாப் போச்சு! :)
   அவ்வளவு தொலைவு ஏன் போகணும் நண்பா ! 2015 மத்தியில் வேண்டுமென , இப்போதே கேட்போமே !//

   ஆஹா! இந்த ஒரு (வண்ணக்)கனவு போதுமே! 1 -3 வருடம் கூட தாங்கும்!

   முதலில் சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பு வேண்டும்,ஆண்டு மலருடன்.

   அதன் பிறகு 2015/2016 -இல் ரத்த படலம் 1-18 பாகங்களும் வண்ணத்தில் கிடைக்கும் என்ற உறுதி மொழியை நமது விஜயன் அவர்களிடம் இருந்து பெற்றுவிடவேண்டும்,நண்பர்களே!
   (மின்னும் மரணம் - போலவே இதிலும் வெற்றி பெறுவோம்!)

   @ ஸ்டீல் க்ளா!

   2016 மத்தியில் இல்லை என்றாலும் 2017 -ஜனவரி -இலாவது?)

   NBS போலவே ரத்தபடலம்-மும் மெகா ஹிட் ஆகிடும்,இல்லையா?

   Delete
  10. ரத்தபடலம் வண்ண புத்தகத்தின் வெளியீடு -நமது லயன் சிவகாசி அலுவகத்தில்! அல்லது ஈரோடு புத்தக திருவிழாவில்! (லயன் ஆண்டுமலர் போலவே!)

   Delete
 33. தோர்கல் அட்டை மிகவும் அருமை. 4 புத்தகங்கள் வந்தாலும் எதிர்பார்ப்பு தோர்கல் மீதுதான் உள்ளது.
  2 கதையின் தலைப்புகளும் நன்றாக உள்ளது. பேனர் அனைத்தும் அருமை.
  லோகோ விசயம்தான் திருப்தி இல்லாமல் போய் விட்டது. இதைவிட அருமையாக நமது நண்பர்கள் டிசைன் செய்திருந்தார்கள்.

  ReplyDelete
 34. அட்டைப்படம் + பேனர் டிசைன்கள் அருமை... 16ஆம் தேதிக்கு மேல் புத்தகக் கண்காட்சிக்கு செல்கிறேன்.

  ReplyDelete
 35. பிரபஞ்சத்தின் புதல்வனை தமிழ் காமிக்ஸ் உலகிற்கு காமிக்ஸ் நண்பர்கள் சார்பில் வரவேற்கிறோம்! புது logo என்றிர்களே logo எங்கே உள்ளது???!

  ReplyDelete
  Replies
  1. மாய கதை என்பதால் சிலர் கண்களுக்கு தெரியா வண்ணம் அச்சிட்டுள்ளார்கள் ! மீண்டும் ஒரு முறை ஓடினை தொழுது விட்டு இடது புற மூலையில் பாருங்கள் !

   Delete
  2. ஹா ஹா ஹா! கலக்குறீங்க ஸ்டீல்! :D

   Delete
  3. சூப்பர் ஸ்டீல். கலக்குறீங்க

   லேட்டஸ்ட் கனவுகள் ஏதுமில்லையா? ;-)

   Delete
 36. சிங்கத்தின் சிறு வயதில் கராத்தே டாக்டரை கேவலமாய் விமர்சித்துள்ளீர்கள் என கோவ பட்டு உங்களிடம் கேள்வி கனைகளை எறியவிருந்தேன் ; ஆனால் வாசகர் கடிதங்கள் குறித்து நீங்கள் விவரித்த விதத்தால் தப்பித்தீர்கள் ! ஏன் உங்களை கவரவில்லை என்பது வியப்பு , நீங்கள் சொன்ன காரணங்கள் இருக்கிறதோ என்னவோ ஆனால் என்னை கவர்ந்த காரணம் பெயர், விறுவிறுப்பு , ப்ரூஸ்லி போன்றவர்கள் பாதிப்பு, உலக அங்கீகாரம்......

  ReplyDelete
 37. ஓடின் -

  தோர் திரைப்படத்தில் வரும் தோரின் தந்தை கதாபாத்திரத்தின் பெயர் அல்லவா? அவர் தானா இந்த ஓடின்?

  ReplyDelete
  Replies
  1. எல்லா ஓடினும் வீகிங்சின் ஆஸ்கார்ட் முதன்மை கடவுள் ஓடினே . அந்த மதம் பலநூறு ஆண்டுகள் முன்பே அழிந்தபடியால் விருப்பம் போல் fantasy,super hero கதைகளில் பாவிக்கிறார்கள்.

   Delete
 38. 4புக்ஸும் என் கையில்!
  முதலில் கமான்சே.
  கேப்டன் டைகருக்கு சரியான போட்டி இவர் தான்.

  இவரை ஏன் தான் எடிட்டர் இத்தனை நாள் ஒளித்து வைத்திருந்தாரோ? ;-)
  சூப்பர்ப்!!

  ReplyDelete
 39. ஒரிஜினல் அட்டையே பயன்படுத்த தீர்மானித்திருப்பது சூப்பர். லோகோ சுமாருக்கும் கீழே. புதிய அணுகுமுறை "சின்ன கல்லு பெத்த லாபம்" குறைவான விலையில் நிறைய புத்தகம் விற்க வாழ்த்துக்கள்.

  இன்று நான் கண்காட்சிக்கு போகிறேன். யார் வரீங்கன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்

  ReplyDelete
 40. இந்த முறை புதுவையிலிருந்து சென்னை புத்தக விழாவுக்கு நாங்கள் வர முடியாமல் போனதற்காக வருத்தப்படுகிறோம். ஈரோடு புத்தக விழாவை மிஸ் பண்ணாமல் கலந்துகொள்வோம். புத்தகங்கள் அனைத்தும் அருமையாக உள்ளன. கிராபிக் நாவல் லோகோ, நண்பர்களின் ஆக்கங்களில் ஒன்றை பயன்படுத்தியிருக்கலாமே, சார்!

  ReplyDelete
 41. இந்த வருடம் சென்ற வருடத்தை தூக்கி சாப்பிட்டுவிடும் என்ற புத்தகங்களை கையில் புரட்டும்போது எனக்கு தோன்றிய முதல் எண்ணம். : ))))))! இருக்கும் பணிச்சுமைகளுக்கு நடுவே நம்முடைய புதிய புத்தகங்களை கையில் ஏந்துவது....ஆஹா ரொம்ப சந்தோசமான ஒரு உணர்வு அது!

  இந்த மாதத்து புத்தகங்களை சொன்ன தேதியில் மெய்ப்பித்து காண்பித்ததற்கு நன்றிகள் விஜயன் சார். இந்த புத்தகங்கள் மாதமாதம் கொண்டுவரும் மகிழ்ச்சி SIMPLY PRICELESS! : ).

  இன்று முதல் மாதத்துக்கு முத்து ஒன்று லயன் ஒன்று என காமிக்ஸ் இதழ்களை நாம் பெறப்போகிறோம் என்று என்னும் போது ஒரு SATISFACTION வெளிப்படுகிறது. இது நமது பயணத்தில் ஒரு மெயில் கல். வாழ்த்துக்கள் சார்!

  அட்டைப்படங்கள் அனைத்தும் அருமை.

  சாக மறந்த சுறா - தொலைவில் இருந்து பார்த்தாலும் அட நம்ம லயன் காமிக்ஸ் என சொல்ல வைக்கும் TRADITIONAL ரகம்.

  கமான்சே-நமது சிவகாசி ஸ்டைலில் கண்ணை கவரும் ஒரு classical painting!

  பிரின்ஸ்- ஓவியங்களின் கூட்டணியில் நெருடல் இல்லாத ஒரு கலக்கல் போட்டோ ஷாப் ஆக்கம்.

  தோர்கல்- ஒரு classical oil பைண்டிங்.நமக்கு கிடைத்திருக்கும் ஒரு சர்வதேச தரம்.

  எல்லா அட்டைப்படங்களிலும் அதன் பின்னே போடப்பட்டுள்ள அதீத உழைப்பு/dedication வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள் சார்.

  முதலில் பக்கங்களை பிரிக்க ஆரம்பித்தது தோர்கல் இதழில்.கண்ணில் பட்ட வாக்கியம்

  "மலையுச்சியில் உள்ள ஒரு கோட்டையில ஒரு மாய பேழைக்கு ஒரு அசுரனும் ஒரு பயங்கர குள்ளனும் காவல் இருக்கிறான்கள் .....".

  ஆஹா... இத இததான் நாங்க ரொம்ப நாளா எதிர்பார்தோம். மாய உலகுக்குள் செல்கிறேன் நண்பர்களே...மீண்டும் சிந்திப்போம்! : ) ! happy reading !!!

  ReplyDelete
  Replies
  1. //சாக மறந்த சுறா - தொலைவில் இருந்து பார்த்தாலும் அட நம்ம லயன் காமிக்ஸ் என சொல்ல வைக்கும் TRADITIONAL ரகம். //
   //"மலையுச்சியில் உள்ள ஒரு கோட்டையில ஒரு மாய பேழைக்கு ஒரு அசுரனும் ஒரு பயங்கர குள்ளனும் காவல் இருக்கிறான்கள் .....".

   ஆஹா... இத இததான் நாங்க ரொம்ப நாளா எதிர்பார்தோம்.//

   Delete
 42. நன்பர்களே

  ஒரு சிறிய அப்டேட்:

  மதியம் உணவு இடைவேளையின் பொழுது நமது ஸ்டாலுக்கு சென்று இருந்தேன்.

  1) காலையிலேயே வந்திருந்த நண்பர் ஷல்லும் பெர்னாண்டஸ் நமது அண்ணாச்சி அவர்களுடன் சேர்ந்து ஸ்டாலில் புத்தகங்களை அழகாக அடுக்கிட உதவி செய்து இருந்தார்

  2) நண்பர் கிங் விஸ்வா நான் சென்ற பொழுது ஸ்டாலில் இல்லை (மூன்று மணி அளவில் வருவதாக கூறினார்)

  3) திருப்பூர் நண்பர் ஒருவர் கேட்டு கொண்டதற்கிணங்க அவருக்கு சென்ற வருடத்திய புத்தகங்கள் அனைத்தும் ஒரு செட் வாங்கி விட்டேன் (இந்த வருடம் சந்தா செலுத்த போகிறார்) .

  2014 புத்தக கண்காட்சி – முதல் வசூல் :)

  4) அடுத்து மாலை 7 மணிக்கு ....


  திருப்பூர் ப்ளுபெர்ரி


  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்பரே.. கமெண்ட் போஸ்ட் செய்து விட்டு பார்த்தால் உங்கள் அப்டேட் வந்து நிற்கிறது.. தொடருங்கள்.. நன்றி..

   Delete
  2. ஆஹா! முதல் அப்டேட்! முதல் விற்பனை (அதுவும் ஒரு முழு வருட புத்தகங்கள் அத்தனையும்!). நல்ல துவக்கத்திற்கு நன்றிகள், ப்ளூ!

   தொடருங்கள்; காத்திருக்கிறோம்...

   Delete
  3. நண்பர் ஒருவரை சந்தா செலுத்த வைத்தமைக்கும் காமிக்ஸ் உலகம் கடன்பட்டிருக்கிறது...

   Delete
  4. ஆஹா அருமை நண்பரே ! கலக்குங்கள் அள்ளி பருக காத்திருக்கிறோம் !

   Delete
 43. இந்த வருடம் புத்தகக்கண்காட்சிக்கு வரமுடியாமல் போனதில் மிகவும் வருத்தமே... சென்னையில் இருந்த வரையில் 10 வருடங்களில் ஒரு முறை கூட செல்லாமல் இருந்ததில்லை.. போனவருடம் கிடைத்த விடுமுறை இப்போது கிடைக்கவில்லை...ம்ஹூம்.. என்ன செய்வது நமது வேலை அப்படி...

  சரி நண்பர்களே.. கண்காட்சிக்கு சென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நமது ஸ்டால் விற்பனை சிறக்கவும், புதிய சந்தாக்கள் கிடைக்கவும் வாழ்த்துக்கள்...யாரேனும் STATUS UPDATE செய்தால் நன்றாக இருக்கும்..

  ReplyDelete
 44. புத்தக கண்காட்சியில் தீ விபத்து ஏற்பட்டதாக தொலைகாட்சி செய்தி ஒன்றில் பார்த்தேன்.நல்லவேளையாக உடனடியாக தீ அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

  பின் குறிப்பு: அடியேனுக்கு இன்னும் புத்தகங்கள் வரவில்லை.பூனையாரிடம் யாரும் கூறிவிடாதீர்கள்.ஹிஹி!!!

  ReplyDelete
  Replies
  1. பூனையாருக்கு புத்தகம் வந்தாச்சு பிசாசுத் தலைவரே! சிரிப்பது இப்போ என்னோட முறை ஹி ஹி! :D

   Delete
  2. டியர் விஜய் !!!

   திகு திகு திகு ....திகு திகு திகு...ஒன்றுமில்லை.வயிறு எரிகிறது:-)

   Delete
 45. Status update please friends,if you can please update some photos also!

  ReplyDelete
 46. Complaint:

  தோர்கல் புத்தகத்தை ஆர்வத்தோடு புரட்டியபோது ஒரு ஏமாற்றம்; கிராஃபிக் நாவல் என்கிற வார்த்தை அட்டைப்படத்தைத் தவிர வேறெங்கும் Emphasize செய்யப்படவில்லை. அட்டையிலும் சிறிய Size-ல் எளிதில் கண்டுகொள்ள முடியாத அளவில் உள்ளது. இதனால் "கிராஃபிக் நாவல்" என்கிற வார்த்தை போதுமான அளவுக்கு வலுவாக இல்லையே? இது போதாதென்று "ஒரு காமிக்ஸ் பயணம்" என்கிற Caption வேறு. இந்த ஒரு புத்தகத்துக்கு மட்டுமாவது "கிராஃபிக் நாவல்" என்கிற வார்த்தையை மட்டுமே உபயோகப்படுத்தலாமே please sir.

  குறைந்தபட்சம் முதல் வெளியீட்டிலாவது ஹாட்லைன் மாதிரி ஒரு Introduction page-ஐ சேர்த்திருக்கலாம் - with a welcome text and introduction about future stories on this series (atleast in the last 2 pages). அதற்கு பதிலாக ஒரு 5 பக்க Black & White filler page வீணாக இடத்தை அடைக்கிறது. கிராஃபிக் நாவல் வரிசையை மற்ற 3 புத்தகங்களிலிருந்த வேறுபடுத்திவிடலாமே சார்... காமிக்ஸ் அறிமுகமில்லாதவர்களை மனதில் கொண்டு.

  PS: அட்டையில் "பயனம்" என்கிற எழுத்துபிழை உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தயவுசெய்து B&W filler pages-ஐ தவிர்த்துவிடுங்கள் சார். Regular வாசகர்களுக்கு OK, ஆனால் புதிதாக வாங்குவோருக்கு, புத்தகத்தை முதல் முறையாகப் புரட்டும் அந்த 10-15 வினாடி நேரத்தில் நான்கு / ஐந்து கருப்பு வெள்ளைப்பக்கங்கள் பாதிப்புத்தகம் B&W ஆக இருப்பதுபோலத் தோன்றக்கூடும். Unconscious - ஆக buying decision கூட மாற்றிவிடும். B&W-ஐ கண்ணில் காட்டாதீர்கள் சார் - விலை 60 ரூபாய்! ;)

   Delete
  2. நாட்டாமையின் தீர்ப்புகளில் நியாயம் மிளிர்கிறது!

   Delete
  3. //குறைந்தபட்சம் முதல் வெளியீட்டிலாவது ஹாட்லைன் மாதிரி ஒரு Introduction page-ஐ சேர்த்திருக்கலாம் - with a welcome text and introduction about future stories on this series (atleast in the last 2 pages).//
   பூனைக்கு யார் மணி அடித்தது !

   Delete
 47. புத்தகம் நாலும் இப்பொழுதுதான் கையில் கிடைத்தது. தோர்கல் மீது ஆர்வம் இருந்தாலும், கௌபாய் கதையான கமான்சேவுக்கு முன்னுரிமை தந்து முதலில் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

  ReplyDelete
 48. புத்தக விட்பனை களை கட்டவும் ,விழாவில் கலந்து கொள்வோருக்கும் வாழ்த்துக்கள்.

  புத்தாண்டில் புதிதாக மேலை நாடுகளில் சிறார் முதல் பெரியோர் வரை சகலரையும் கவரும் வல்லமை படைத்த fantasy களத்திலும் இறங்கி விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

  வழமை போல் சீசன் வந்தபடியால் இனி நண்பர்களின் வலைப்பதிவுகளும் களை கட்ட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 49. டியர் ப்ரண்ட்ஸ்!

  நாளைய தினகரன் நாளிதழுடன் வரும் வசந்தம் புத்தகம் கமான்சேயின் "யுத்தம் உண்டு எதிரி இல்லை!" இதழின் அட்டைப்படத்துடன் எடிட்டரின் பேட்டியுடன் வெளிவருகிறது, வாங்கத்தவறாதீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி சாக்ரடீஸ்!

   Delete
 50. https://m.facebook.com/photo.php?fbid=10202940951794359&id=1520296693&set=a.4902614852782.2186267.1520296693&p=10&refid=13

  ReplyDelete
 51. கௌபாய் கதைகளில் எப்போதுமே எனக்கொரு grace. ஆகையால் இதழ்களைக் கைப்பற்றியதும் நாம் முதலில் படித்தது .... யெஸ், கரெக்ட்

  யு. உ. எ. இ. ஆரம்பமே அட்டகாசம், சும்மா பர பர வென நகரும் கதை. அதற்கேற்றாற்போல் ஓவியரின் கைகள் சித்திரத்தில் படைத்திட்டது ஒரு மாயாஜாலமே! ஆத்திரத்தில் அறிவிழந்து மூடர்களாக செயென்னிகள் வரும் காட்சிகள் செந்நிறத்தில் சொல்லப்பட்டவிதம் கிளாஸ்.

  லயன் 30-வது ஆ. ம-ரில் டெக்ஸ் உடன் நம்ம 'கமான்சே'வை கைகோர்த்து விடலாம். (கமான்சே part 4 ஏற்கனவே இந்தாண்டு schedule-ல் இருப்பதால் part 5 & 6 இணைத்து ஒன் ஷாட்-டாக வெளியிடலாம்) அப்படியே,, லக்கி லூக், சுட்டி லக்கி, சிக்பில் இணைத்தால் 30-வது ஆ. ம. கௌபாய் ஸ்பெஷல் ரெடிங்கோ..........

  ReplyDelete
 52. நேற்றைய புத்தகத்திருவிழா நிகழ்வுகளை கண்டுகளிக்க நண்பர் விஸ்வாவின் வலைப்பூவுக்கு ஒரு விசிட் அடியுங்களேன்...

  http://tamilcomicsulagam.blogspot.in/2014/01/chennai-book-fair-2014-day-01-photo.html

  நன்றி விஸ்வா அவர்களே! :)

  ReplyDelete
 53. Hi guys I need iratha padalam complete collection. If you have extra copies pls contact me. selvakumar.gurumoorthy@gmail.com.

  ReplyDelete
 54. கடந்த சில ஆண்டுகளாக வாங்கிய புத்தகங்கள் இன்னும் உறங்கிக்கொண்டிருப்பதால் 14 ஆண்டுகளாக சென்றுவரும் புத்தகக்கண்காட்சிக்கு இந்தாண்டு போகவேண்டாம் எனும் முடிவில் இருந்தேன். நம் ஸ்டாலை கண்குளிர பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இன்று செல்லவிருக்கிறேன். இன்றிரவு பொங்கல் விடுப்பில் ஊர் செல்லவிருப்பதால் மீண்டும் கடைசி 2 தினங்களில்தான் போக இயலும்.

  ஈரோட்டு நண்பர்களைப்போலவே தினமும் சென்று நம் ஸ்டாலில் களப்பணியாற்ற ஆசைதான். புதிய பணிச்சூழலும், பொங்கல் விடுப்பும் இடைஞ்சல். :-((

  இன்று ஒரு நாள் மட்டும் சந்திப்பதன் மூலம், ஆ.விழியாரை எப்படிக்கடத்தி, போராடி நம் கோரிக்கைகளை நிறைவேற்றப்போகிறேன் என்றுதான் தெரியவில்லை. :-))

  ReplyDelete
  Replies
  1. நண்பரே.....உங்களை போல பலரை நம்பி தான் நாங்கள் இங்கே இருக்குறோம் .ஆசிரியர் வாழை பூ..,வடை ஏன் நண்டு வறுவல் கூட காட்டி உங்களை மயக்க பார்க்கலாம் நமது உறுப்பினர்கள் யாரும் இம்முறை மயங்க மாட்டார்கள் என்பதை நிருபித்து சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு நிச்சயம் உண்டு என்ற உறுதி உடன் புத்தக கண்காட்சியை விட்டு வெளியேறி வாருங்கள் ..

   ஆசிரியர் மறுத்தால் "உள்ளிருப்பு போராட்டம் " நடத்துமாறு சங்கம் உங்களை பணிவுடன் வேண்டி கொள்கிறது .

   Delete
 55. போராட்டத்தின் அடுத்த படியாக எங்கள் சங்க செயலாளர் ஈரோடு விஜய் அவர்கள் அவரின் அழகான காதலியான "லேடி பூனை குட்டி " யை கூட இதயத்தில் இருந்து கழட்டி விட்டார் என்பதை உணர்ந்து ஆசிரியர் உடனடியாக சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பை உறுதி செய்து காதலர்களை ஒன்று படுத்த உதவ வேண்டும் என்பதை சங்கம் பணிவுடன் கூறி கொள்கிறது .

  ஆசிரியர் உறுதி படுத்தினால் மட்டுமே இனி "பூனை "காதலியை சந்திக்க முற்படுவேன் என்றும் அவர் சபதம் எடுத்துள்ளார் என்பதை நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் .

  ReplyDelete
  Replies
  1. 'வீரர்களே, முன்னேறிச் சென்று தாக்குங்கள். எதிரிகள் ஒருவர் விடாமல் நாசமாக்குங்கள்' என்று பதுங்கு குழிக்குள்ளிருந்து உரக்கக் குரல் கொடுக்கும் மன்னர் என் ஞாபகத்துக்கு வருகிறார்.

   அது எப்படி தலைவரே நீங்கமட்டும் குளத்தில் ஆழம் பார்க்கணும்னா எப்பவுமே ஊரான்வீட்டுப் பிள்ளைகளையே இறக்கிவிடுறீங்க? :D

   Delete
  2. // எதிரிகள் ஒருவர் விடாமல் நாசமாக்குங்கள்' என்று பதுங்கு குழிக்குள்ளிருந்து உரக்கக் குரல் கொடுக்கும் மன்னர் //

   ஹா ஹா! இங்கே எல்லா போராட்ட வீரர்களும் அந்தரகம்தானே, போராட்டக்குழுத்தலைவர் மட்டும் அதற்கு விதிவிலக்கா? வாழைப்பூ வடையும் நண்டு Fry-யும் இல்லாத பட்சத்தில் இங்கே போராட்டமே நிகழாது என்பதுதானே உண்மை :P

   Delete
  3. கிங் விஸ்வாவின் பதிவில் காணப்படும் அந்த 'Ramesh' நீங்கள்தானா நாட்டாமை அவர்களே?

   Delete
  4. ஈரோடு விஜய் &ரமேஷ் குமார் : தன் உயிரை கொடுத்தாவது "மன்னர் "உயிரை காப்பாற்றுவது படை வீரர்களின் கடமை அல்லவா .... ( D அல்ல S ).

   Delete
  5. // கிங் விஸ்வாவின் பதிவில் காணப்படும் அந்த 'Ramesh' நீங்கள்தானா நாட்டாமை அவர்களே? //

   அது நான் இல்லை; இங்கே பல ரமேஷ்கள் இருக்கிறார்கள்!

   அதுசரி... அந்த நாட்டாமைங்கறது யாருப்பா? பேரு கண்றாவியா இருக்கே? :P

   Delete
  6. // அந்த நாட்டாமைங்கறது யாருப்பா? பேரு கண்றாவியா இருக்கே? //

   உண்மைதான்! 'அப்படி' இருக்கவேண்டுமென்ற தீவிர சிந்தனையில் ஒரு மதியப்பொழுதில் மல்லக்கப்படுத்துக்கொண்டே யோசித்தபோது என் கடுகளவு மூளைப் பிரதேசத்தில் கணநேரத்தில் உதயமான பெயர் அது! ;)

   Delete
  7. // கிங் விஸ்வாவின் பதிவில் காணப்படும் அந்த 'Ramesh' நீங்கள்தானா நாட்டாமை அவர்களே? //

   //அது நான் இல்லை; //

   //அந்த நாட்டாமைங்கறது யாருப்பா? //

   :-))))))))))))))), அப்போ,ரமேஷ்...அது நீங்க இல்லைன்னு எதுக்கு reply கொடுக்கறீங்க ?? அவரு கேட்டது நாட்டாமை கிட்டே தானே ??? :-))))

   Delete
  8. @ வி-சு

   நாட்டாமை தனது கெளரவத்தின் அடையாளமாய் எப்போதும் தூக்கிக்கொண்டு திரியும் அந்த வெண்கலச் சொம்பை என் மீது வீசியெறிந்து கோபத்தைக் காட்டும் முன் கச்சிதமாய் வந்து காப்பாற்றிவிட்டீர்கள் நண்பரே! :)

   Delete
 56. ஈ ரோ டு விஜய் அவர்களுக்கும் விஸ்வா அவர்களுக்கும் நன்றி . பதிவு தமிழில் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் .

  ReplyDelete
  Replies
  1. மொத்த நன்றிகளும் அவரையே சாரும்!

   // பதிவு தமிழில் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் //
   நானும் அதையே நினைத்தேன். அனைவரும் படித்து ரசிக்கவேண்டிய சில நல்ல பதிவுகள் ஆங்கிலம் தெரிந்த சிலருக்கு மட்டுமே சென்று சேர்வது நியாயமா விஸ்வா சார்? தமிழில் பதிவிடுவதில்லை என்ற உங்கள் கொள்கையை (தற்காலிகமாகவாவது) கொஞ்சம் தளர்த்திக் கொள்ளக் கூடாதா?

   Delete
  2. இரு நண்பர்களின் கருத்தையும் "பரணிதரன் " என்று சொல்லி விஸ்வா அவர்கள் மீண்டும் படிக்கவும் .

   Delete
 57. நிறைகள் : ஒல்லி புத்தகமாக இருந்தாலும் நான்காக வந்தது ....

  அழகான அட்டை படங்கள் ...அருமையான சித்திர தரங்கள் ......

  குறைகள் :.................................

  கதை எதுவும் சொல்லாமல் விரிவான ..,சுருக்கமான இம்மாத இதழ்களின் கருத்து........

  barani with comics.blogspot.com.

  ReplyDelete
 58. தோர்கள் வண்ணத்தோரணம்! நிகலும் உலகிற்கும் ,கற்பனை உலகிற்கும் ஒரு வான வில் பாலம் !

  ReplyDelete
 59. தொர்கலின் பிரபஞ்சத்தின் புதல்வன் நமக்கு கிடைத்துள்ள ஒரு அருமையான SMASH HIT SERIES. மிகவும் எளிமையான கதை. அற்புதமான ஓவியங்கள். young readers சை கவரும் fantasy கதை களம்.

  இந்த இதழின் பிரிண்டிங் தரம் அருமை. மொழிபெயர்ப்பு நெருடல் இல்லாமல் அருமையாக செய்யப்பட்டுள்ளது. கதைகள் இரண்டும் நம்மை ஒரு மாயா உலகுக்கு திறமையாக அழைத்துச்செல்கிறது. அங்கே அந்த உலகத்தின் ஆச்சரியங்களில் நாம் சுலபமாக மூழ்கிவிடுகிறோம்.பிறகு அந்த effect டில் இருந்து வெளிவருவதற்கு நிறைய நேரம் பிடிக்கிறது.

  இதற்க்கு விளம்பரம் அதிகம் செய்யப்படாதது ஒரு பெரும் குறை.

  புத்தகத்திருவிழாவில் அதிகம் விற்கப்படும் புத்தகம் இதுவென்று எனது கணிப்பு.

  ReplyDelete
 60. Replies
  1. தோர்கல்:
   ------------
   நிறைகள்: Lord of the rings, Narnia, Van Helsing உள்ளிட்ட சில ஆங்கிலப் படங்களில் மட்டுமே பிரம்மித்துப் பார்த்த மாய 'லோகம்' முதன்முறையாக கண்முன்னே ஓவியங்களாக விரிவது அழகோ அழகு! கண்களை மூடி யோசித்தால் 'தோர்கல்' என்ற பெயர்கொண்ட நாயகன் நினைவுக்கு வருவதைவிட, கதைநெடுக வியாபித்திருக்கும் இயற்கையின் தோரணங்களே கலர்கலராய் வந்துபோகின்றன.

   குறைகள்: ஒன்றிரண்டு பக்கங்களில் மட்டும் வண்ணங்கள் மங்கலாக இருந்தது. அந்த B&W filler கதையால் பெரிதாக எந்தப் பிரயோஜமும் இல்லை - அது இல்லாமலேயே கூட இருந்திருக்கலாம் (ஒரு அழகான பெண்ணின் மூக்கில் எட்டணா சைஸுக்கு மச்சம் மாதிரி) அட்டையிலும்(பயனம்) தலைப்பிலும் (ஏறத்தாள) காணப்பட்ட அச்சுப்பிழைகள்.

   தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு மாறுபட்ட genreஐ புத்தாண்டு பரிசாக்கியிருக்கும் எடிட்டருக்கு நன்றிகள்!

   Delete
  2. நாயகன் நினைவுக்கு வருவதைவிட, கதைநெடுக வியாபித்திருக்கும் இயற்கையின் தோரணங்களே கலர்கலராய் வந்துபோகின்றன.

   Delete
 61. 'யுத்தம் உண்டு எதிரிகள் இல்லை'

  *அட! உண்மைதான் - எதிரிகளே இல்லை! ரொம்பவே யதார்த்தமான கெளபாய் படைப்பு.
  * செவ்விந்தியர்களை இன்னும் சற்று நெருக்கத்தில் பார்த்த உணர்வு.
  *பசிக்கொடுமையிலிருந்து ஒவ்வொரு இனமும் தங்களை பாதுகாத்துக்கொள்ள நடத்தும் போராட்டமே கதையாகிறது.
  * சடாரென்று கோபப்பட்டு அருகிலிருக்கும் செவ்விந்தியனை 'பொளேர்' விடும் அந்தக் கமான்சே பெண்ணின் கோபம்கூட அழகுதான்!
  * மிக அருகில் ஒரு யுவதி இருந்தும், எந்தவொரு ரெமேன்டிக் வழிமுறையையும் பின்பற்றாமல் பண்னையைக் காப்பாற்றுவதையே கருத்தில் கொண்டு உண்மையான ஊழியனாய் வலம் வரும் 'ரெட்' ஒரு மாறுபட்ட நாயகனாய் மனதில் நிற்கிறான்.
  * சில/பல இடங்களில் சித்திரங்கள் நம் விழிகளை ஸ்தம்பிக்கச் செய்துவிடுகின்றன. செவ்விந்தியர்களின் குடிசையைக்கூட இவ்வளவு அழகாய் வண்ணப்படுத்தி நான் வேறெங்கும் கண்டதில்லை (ரெடியா ராஜ் முத்து குமார்?).
  * சற்றே உணர்ச்சிகரமான கடைசி இரு பக்கங்கள் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. ஒரு நாய்குட்டி ஏற்படுத்தும் நேசத்தை அந்த கடைசி இரு க்ளைமாக்ஸ் பக்கங்களில் பாருங்களேன்...

  ஆங்! ஃபில்லராக வந்திருக்கும் லக்கி-லூக் கதை பக்கத்துக்குப் பக்கம் சிரிக்கவைத்து பட்டையைக் கிளப்புகிறது.

  குறைகள்: நிறைய எழுத்துப் பிழைகள் சீரான வாசிப்பு அனுபவத்திற்கு அவ்வப்போது தடைபோடுகின்றன.

  அடுத்தடுத்த பாகங்களை விரைவில் கண்டிட மனம் ஏங்குகிறது எடிட்டர் சார்!

  ReplyDelete
 62. ஒரு அவசர தகவல்:

  எடிட்டரின் பேட்டி இன்று பகல் 1 மணிக்கு 'சன் நியூஸ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. இதன் மறுஒளிபரப்பு மாலை 5 மணிக்கும், இரவு 10:30 க்கும் ஒளிபரப்பாகும். காணத்தவறாதீர்கள்.

   Delete
  2. தகவலுக்கு நன்றி விஜய்... பேட்டியை பார்க்க முடிந்தது. நிருபரின் கேள்விகளினால் சுட்டிகளுக்காக (சாந்தமான தலைப்புகளுடன்) 'மினிலயன்' போல் ஒரு series வந்தால் நலம் என்ற எண்ணம் வரவழைத்தது. ஆசிரியர் கவனிப்பாராக.

   Delete
  3. யாராவது you tube ல போடுங்கப்பா ................அப்பால பாத்துக்குறோம் ................

   Delete
 63. avasara seithi kodutha erode vujaykku nanri

  ReplyDelete
 64. தோர்கல் கதையை மட்டுமே முழுவதுமாகப் படிக்க நேரம் கிடைத்தது. அருமை!

  ஏதாவது ஒரு அற்புதம் நிகழ்ந்து, தோர்கல் Series-ன் மொத்தக்கதைகளும் மாதம் ஒருமுறையோ (அல்லது இருமுறையோ ஹி ஹி!) க்ராஃபிக் நாவல் Tract-ல் வெளிவர ஓடினை வேண்டிக்கொள்கிறேன்!

  ReplyDelete
 65. தோர்கல் ஏ ரத்தாள சொர்க்கம் கடைசி பக்கம் உ லுக்கி விட்டது .

  ReplyDelete
 66. பரிசின் பயங்கர புயல் கதையா சுத்தமாக மறந்திருந்தேன்,ஆகவே புதிதாய் படிக்கும் அனுபவம் கிட்டியது ,முடித்ததே தெரியலை ! என்னவொரு விருவிருப்பு , புயல் வேகம் கதையை முடிக்கும் போதும் ! அருமை சார் , ஆனால் சற்றே மனமிரங்கி லக்கி போன்றவர்களுடன் சுஸ்கி விஸ்கி ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கலாமே ! பழைய வேதாளர் !

  ReplyDelete
  Replies
  1. சுஸ்கி-விஸ்கி டிஜிடல் ஃபைல்களாக இல்லை என்று எடிட்டர் சொல்லியிருந்ததாய் ஞாபகம்...
   வேதாளர் வந்தால் பழைய வாசகர்கள் பலருக்கு உற்சாகம் ஏற்படும் என்பதோடு, இக்காலத்துச் சிறுவர்களில் கணிசமான எண்ணிக்கையினரை காமிக்ஸ் பிரியர்களாக்கிவிட வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. பேட் மேனும் அவ்வாறே!

   Delete
  2. அது அலிபாபா கதைக்கு கூறினார் என நினைக்கிறேன் நண்பரே !

   Delete
  3. அப்பிடியே கன்னிதீவும் .................மந்திரிக்கு ஒரு பார்சேல் .............

   Delete
 67. சென்னை புத்தக விழா .......நண்பர் ப்ளூ , பெர்னாண்டஸ் ,.....ஆசிரியர் எங்கே !

  ReplyDelete
 68. நண்பர்களே,

  அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


  கொஞ்சம் லேட்டான small அப்டேட் ...


  வெள்ளியன்று மாலை (சென்னை புத்தக திருவிழாவின் தொடக்க நாள்) புத்தக திருவிழாவிற்கு சென்று விட்டு அன்று இரவே திருப்பூர் செல்ல ரயில் முன் பதிவு செய்து இருந்ததால், கொஞ்ச நேரத்திலேயே திரும்ப வேண்டியதாயிற்று..


  * முதல் நாள் என்பதாலேயோ என்னவோ யாரும் என்னை நுழைவு சீட்டு வாங்க சொல்லவே இல்லை (பத்து ரூபாய் மிச்சம்)


  * சுமார் எழு மணியளவில் அரங்கினில் நுழைந்தவுடனே, நமது ஸ்டாலில் ஆசிரியர் இருப்பது தெரிந்தது (நான் சென்ற வழியில் நேர் எதிரே நமது ஸ்டால்)


  * ஜூனியர் எடிட்டர், கிங் விஸ்வா, ஷால்லும் ஆகியோர் நமது ஸ்டாலில் இருந்தனர்


  * சென்ற வருடம் இதே நாள், NBS எனும் குண்டு புத்தகத்தால் நிறைந்து இருந்த நமது ஸ்டால் இந்த வருடம் எந்த ஒரு குண்டு புத்தகமும் இல்லாமல் குறைவான கூட்டத்துடன் கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிந்த்தது


  * நமது ஓவியர் வரைந்து இருந்த பழைய புத்தகங்களுக்கு ஆன ஓவியங்கள் அரங்கில் வைத்திருந்தார் (ஈரோடு புத்தக திருவிழாவிலும் இதை எதிர்பார்க்கிறோம்)


  * நடு நாயகமாக டெக்ஸ் மற்றும் கார்சனின் போஸ்டர், என்னை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது (பின்னே காப்டன் டைகருக்கு 30 ஆவது ஆண்டு மலரில் இடம் இல்லை என்றாலும், இங்கே ஸ்டாலிலும் கூடவா ?)


  * ஸ்டாலில் டைகர் போஸ்டர் இல்லாததற்காக எங்களது கண்டனங்களை தெரிவிக்கிறோம்


  * சி.சி.வயதில் தொகுப்பு பற்றிய கேள்விக்கு “வாழை பூ வடை மற்றும் நன்று fry ஒரு டன் ஆர்டர் செய்திருப்பதாக ஆசிரியர் கூறினார் (ஓவர் டு போராட்ட குழு தலைவர்)


  * சிறிது நேரம் கழித்து நண்பர்கள் டெக்ஸ் ஸ்ரீராம், ரபீக், லக்கி லுக் தமிழ், சென்னைவாசி, ரமேஷ் ஆகியோர் வந்து ஜோதியில் ஐக்கியமானார்கள்.


  * காமிக்ஸ்டா ராஜ் குமார் நான் கிளம்பும் வரை வரவில்லை. போலீஸ் அதிகாரி ஜான் சனியன்று வருவதாக கூறி விட்டார்.

  * சென்ற வருடம் புத்தக திருவிழாவில் தொடக்க நாளன்று NBS ரிலீஸ் இருந்ததால் இருந்த நண்பர்கள் கூட்டம் இந்த வருடம் தொடக்க நாளன்று இல்லை (அனைவரும் சனி, ஞாயிறு வந்து இருக்கலாம்)


  திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்  ReplyDelete
  Replies
  1. //* நமது ஓவியர் வரைந்து இருந்த பழைய புத்தகங்களுக்கு ஆன ஓவியங்கள் அரங்கில் வைத்திருந்தார் (ஈரோடு புத்தக திருவிழாவிலும் இதை எதிர்பார்க்கிறோம்)//
   அனைவரும் சனி, ஞாயிறு வரலாம் > பொங்கல் விழாவிற்கு சென்றிருக்கலாம்

   Delete
  2. பரட்டை தலை ,சப்ப மூக்கன் ,குளிக்க மூஞ்சி போஸ்டர் இல்லையா ...............

   Delete
  3. Updatesக்கு நன்றி ப்ளூ!

   //நண்பர்கள் கூட்டம் இந்த வருடம் தொடக்க நாளன்று இல்லை //

   பல வேலைகளுக்கு நடுவே புத்தகக் கண்காட்சிக்கு நேரம் ஒதுக்க நமது நண்பர்களுக்கு (NBS வெளியீடு போன்ற) ஒரு உத்வேகம் தேவைப்படுகிறது. 'அதான் எல்லாத்தையும் சந்தாவிலேயே வாங்கிட்டேனே' என்ற நினைப்பு 'அப்புறமா சாவகாசமா போய்க்கலாம்ப்பா' என்ற  சோம்பலை ஏற்படுத்துகிறது. சில பழைய கருப்பு-வெள்ளை கதைகளைக் தேர்ந்தெடுத்து ஒரே புத்தகமாக ஒரு 'Book fair சிறப்பிதழ்' (சந்தாவில் அடங்காது) கொண்டுவருவாரானால் நம் நண்பர்களை துவக்க நாளன்றே நிறைய எண்ணிக்கையில் கண்டிட முடியும்.

   அடுத்தடுத்த புத்தகத் திருவிழாக்களில் சிறப்பு வெளியீடுகளும் பிரதானமென்பதால் இந்தக் குறை இருக்காது.

   Delete
 69. ஆசிரியருக்கு ...

  இந்த முறை வந்த "கிராபிக் நாவலை " மிகவும் ரசித்தேன் என்பதை மட்டும் தெரிவித்து கொள்வதுடன் ......

  புத்தக கண்காட்சிக்கு வரும் எங்கள் போராட்ட குழுவினரை வடையும் ...,நண்டு வருவலும் கொடுத்து திசை திருப்பி விடுவது கண்டு நாங்கள் அஞ்ச போவதில்லை . நண்பர்களே ...அனைத்து கட்சியிடமும் பணத்தை வாங்கி கொண்டு ஒரு கட்சிக்கு மட்டும் ஓட்டு போடுவது இங்கு புதிது அல்லவே ....

  எனவே அவர் கொடுக்கும் அனைத்தும் வாங்கி "திருப்தி "ஆக சாப்பிட்டு ஒரு பார்சலும் வாங்கி கொண்டு (எனக்கு ) உற்சாகமுடன் மீண்டும் போராடுங்கள்.....

  வடையும் நமதே .....

  நண்டு வருவலும் நமதே .....

  சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பும் நமதே ....

  வெற்றி நிச்சயம் ..வெல்வது சத்தியம் ...

  ReplyDelete
 70. டெக்ஸ் பத்து வோட்டு விழுந்தால் முன்னணியில் , ஆங்காங்கே யார் வந்தால் எங்களுக்கென்ன ,ரெண்டுமே வரட்டும் என காத்திருக்கும் அன்பு நண்பர்கள் டெக்ஸ் அவர்களுக்கு முத்திரை குத்துங்கள் ! எப்படியும் இனி வர போவது அவர்தானே ! எனவே வாய்ப்பு உள்ளவருக்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களியுங்கள் காமிக்ஸ் பெருவாசிப்பு மக்களே !

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் பத்து வோட்டு விழுந்தால் முன்னணியில்
   \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ இதெல்லாம் ஒரு மாயை நண்பர்களே \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

   ஆங்காங்கே யார் வந்தால் எங்களுக்கென்ன., ரெண்டுமே வரட்டும் என காத்திருக்கும் அன்பு நண்பர்கள்

   கடைசி நாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று இன்னும் ஓட்டளிக்காமல் காத்துக்கொண்டிருக்கும் கோடானு கோடிக்கணக்கான டைகர் ரசிகர்களே

   நல்லவருக்கு வாக்களித்தால் நன்மை வந்து சேரும்.
   நல்ல கதைக்களம், அட்டகாசமான அதிரடி திடீர் திருப்பங்கள் பல நிறைந்த நல்ல கதைகளை நாம் தொடந்து பெற்று இன்புற்றீருக்க நமது டைகருக்கு ஓட்டளித்து அவரை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

   வீண் அலட்டல், ஓசிக்கு பீன்ஸ், வறுத்த கறி வாங்கி கொடுத்து கூடவே ஜால்ரா கூட்டம் வைத்திருக்கும் நபர்களுக்கு ஓட்டளித்து உங்கள் பொன்னான வாக்குகளை வீணடித்திட வேண்டாம் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன்

   Delete
  2. //நல்லவருக்கு வாக்களித்தால் நன்மை வந்து சேரும்.//
   இதற்காகத்தான் டெக்ஸ் வேண்டுமென்கிறோம் !
   ரத்ததடம் படித்த யாரும் தைகரால் காவு கொடுக்கப்பட்ட செவிந்தியர்களை மறந்திருக்க முடியாது !
   அவர்களது ஆன்மா சாந்தி அடைய பரட்டைய விரட்டுவோம் !
   செவிந்திய பெண்ணை மணந்த , டெக்ஸ் ஓட்டு பெற முழு தகுதியானவர் என்று உணர்ந்தும் ஓட்டு போட்ட நெஞ்சங்கள் தங்கள் ஓட்டை மாற்றி போடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் !
   தேர்தல் வாக்குறுதி கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் என்று மட்டும் இப்போது சிறு கோடிட்டு காட்டி கொள்கிறோம் !

   Delete
  3. இவன்
   பரட்டை விரட்டுவோர் சங்கம் !
   நெற்றி கண் திறப்பினும் குமுறுவோர் சங்கம் !

   Delete
  4. // ரத்ததடம் படித்த யாரும் தைகரால் காவு கொடுக்கப்பட்ட செவிந்தியர்களை மறந்திருக்க முடியாது! //

   செவ்விந்தியர்களின் முடிவு பல சமயங்களில் அவர்களுடைய காட்டுமிராண்டித்தனத்தினாலேயே தேடிக்கொள்ளப்பட்டது. அதேபோல இராணுவ அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் டைகருக்கு அவப்பெயர்.

   டெக்ஸ்வில்லர் கதைகளில் செவ்விந்தியர்களின் நம்பிக்கைகள் கௌரவமாகக் காட்டப்படுவதால் டெக்ஸ் நல்லவர்போல தோற்றமளிக்கிறார். டெக்ஸைத்தூக்கி டைகரின் அதிகாரவரம்பில் வைத்தோமானால் அவருடைய அடாவடி காரணமாக இரண்டே நாளில் பதவியிழந்தும் செவ்விந்தியர்களால் வஞ்சிக்கப்பட்டும் வீழ்ந்துபோவார். அதேபோல டைகரை ஒரு ரேஞ்சராக மாற்றினால், கவனக்குறைவாக பேட்ஜை அணிய மறந்து ஒரு சாதாரண டெபுடி ஷெரிஃப்பால் போட்டுத்தள்ளப் படுவார். ஹி ஹி!

   Delete
  5. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ரத்ததடம் படித்த யாரும் தைகரால் காவு கொடுக்கப்பட்ட செவிந்தியர்களை மறந்திருக்க முடியாது ! அவர்களது ஆன்மா சாந்தி அடைய பரட்டைய விரட்டுவோம் !\\\\\\\\\\\\\\\\\\\\\\\

   முழுகதையையும் நன்றாக படித்தீர்களா நண்பர்களே......
   கொடுத்த வாக்கு, நண்பர்களைவிட நாடுதான் முக்கியம் என்று முடிவெடுத்து செவ்விந்தியர்களை கொன்ற நாட்டுப்பற்றுள்ள டைகர்தான் சிறந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதை யாரும் தவறாக திரித்து கூறினாலும் வாசக நண்பர்கள் ஏமாற மாட்டார்கள் என்பது நிச்சயம்.

   நாங்கள் வென்றாலும் கார்சனின் கடந்த காலம் கலரில் வர ஒத்துழைப்பு நல்குவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் வாரம் ஒரு காமிக்ஸ் வராதா என்று ஏங்குவோர் சங்கத்தில் உறுப்பினர் என்பதால் எந்த காமிக்ஸ் வந்தாலும் ஏற்றுக் கொள்ள தயார்.

   Delete
  6. @ Ramesh
   // டெக்ஸ் நல்லவர் போல தோற்றமளிக்கிறார் //

   என்னாது... 'போல'வா?... எனக்குக் கோவம் வந்து யாரும் பார்த்ததில்லையே? கிர்ர்ர்ர்ர்ர்ர்...

   Delete
  7. // என்னாது... 'போல'வா?... எனக்குக் கோவம் வந்து யாரும் பார்த்ததில்லையே? கிர்ர்ர்ர்ர்ர்ர்... //

   ஹி ஹி! பார்த்திருக்கிறேன் இந்தமாதிரி!

   Delete
 71. This comment has been removed by the author.

  ReplyDelete
 72. எடிட்டர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 73. Dear Vijayan Sir,
  I got my book only on today. I think Thorgal story published in our comics not the first one in the series. Why so?

  ReplyDelete
 74. நண்பர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க எடிட்டர் நேற்றும் (ஞாயிறு) புத்தகத் திருவிழாவில் நண்பர்களோடு உரையாடியதாக 'மைக்-1' மூலமாகத் தகவல் வந்தது. மூன்று நாட்கள் நிகழ்வுகளையும் எடிட்டர் இன்று பதிவிட்டு பொங்கல் வாழ்த்துக் கூறுவார் என்று எக்கச்சக்கமாக எதிர்பார்க்கப்படுகிறது...

  ஒரு பூனையின் சோகம் : 'சன் நியூஸ்' தொலைக்காட்சி எங்கள் பகுதி கேபிளில் ஒளிபரப்பாகவில்லை என்பதால் எடிட்டரின் பேட்டியைப் பார்க்க இயலாது போனது :(
  யாராவது ஒரு புண்ணியவான் யூ-ட்யூபில் ஏற்றினால் பார்த்து மகிழ்வேன்...

  ReplyDelete
  Replies
  1. Please try here
   http://www.youtube.com/watch?v=gAS23ko5Xlg&list=PLOrkKJBmKB7o8TfRovMThvIQ2Pqcf8xV6&feature=c4-overview-vl

   Delete