நண்பர்களே,
புத்தாண்டு வாழ்த்துக்கள் + வணக்கங்கள் ! புதிதாய் ஒவ்வொரு ஆண்டு புலர்வதும் ; அதைக் காரணமாய்ச் சொல்லி கேக்குகளை ரவுண்ட் கட்டி அடிப்பதும் இம்முறை அறவே கூடாதென்பதே எனது புத்தாண்டுத் தீர்மானம் என்பதால் - பெரிதாய் சேதாரமின்றி ஜெயித்திட முடிந்தது ! வாரத்தின் மத்திய நாளைத் தேர்வு செய்து புது வருடம் புலர்ந்துள்ளதால் இங்கு வழக்கம் போலவே வேலை ! புத்தாண்டின் பெயரைச் சொல்லி ஆபீசுக்கு மட்டம் போட்டு விட்டு எங்கேனும் ஊர் சுற்றுவதை விட, 'அக்கடா'வெனப் பணிகளைப் பார்த்திடுவது not a bad deal at all என்பதை இன்றைய பொழுது உணர்த்தியது ! ஜனவரி நமக்கு நான்கு இதழ்களைக் கொணர வேண்டிய பொழுதென்பதால் அலுவலகத்தில் அனைவருமே இன்று செம பிசி ! அச்சுப் பணிகளும் ஒரு பக்கம் அழகாக நடந்து வருவது ஒரு சின்ன திருப்தியினைத் தந்திட - இம்மாதத்து ட்ரைலர்களை தொடரும் நாட்களில் உங்கள் பார்வைக்குப் படைத்தால் தேவலை என்று தோன்றியது ! இதோ - ஆண்டின் துவக்க மாதத்தின் 2 அட்டைப்படங்கள் !
நமது டிசைன்
இது ஒரிஜினல் அட்டையின் அப்பட்டமான மறுவார்ப்பு - நமது ஓவியர் மாலையப்பனின் கைவண்ணத்தில். செவ்விந்திய முகத்தின் details ; அவனது சிறகு அலங்காரத்தின் நுணுக்கங்கள் - ஒரிஜினலில் அத்தனை துல்லியமாய் இல்லாதது போல் எனக்குத் தோன்றியதால் - அதனைக் கணினியில் மெருகூட்டச் செலவழிக்கும் நேரத்தினில் -புதிதாகவே ஒரு ஓவியம் போட்டு விடச் சொல்லலாமே என்று நினைத்தேன் ! பின்னட்டையைப் பொறுத்த வரை அது நமது டிசைனர் பொன்னனின் பணியே ! பார்த்த மாத்திரத்திலேயே இந்த அட்டைக்கு படைப்பாளிகளின் ஒப்புதல் கிடைத்தது போல உங்களின் thumbs up கிடைக்குமா என்பதை அறிய ஆவலாய் இருப்போம் !
|
ஒரிஜினல் |
கதையைப் பொறுத்த வரை - இது கமான்சே தொடரின் அடுத்த லெவல் செல்லும் முயற்சி என்று சொல்வேன் ! ANS-ல் துவங்கிய முதல் அத்தியாயம் ஒரு அறிமுகப் படலம் போல் அமைந்திட - கதையின் pace இந்த அத்தியாயத்தில் ஜெட் வேகம் தான் ! டைகரின் சூட்சும பாணிகள் இன்றி நேர்கோட்டில் மாத்திரமே கதை பயணித்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யத்தைக் கொண்டு வர முடியுமென நிரூபிக்கும் கதாசிரியர் கிரெக் ஒரு salute பெறுகிறார் !
ஒளி வட்டத்தின் முக்காலே மூன்று வீசப் பார்வை இம்மாதம் அவர் மீதே நிலைத்திருக்கப் போவது ஒரு தற்செயலான ஒற்றுமையே ! ஏனெனில் இம்மாதம் வெளியாகும் 4 கதைகளுள் - மூன்றுக்கு கதாசிரியர் கிரெக் தான் ! இம்மாத மறுபதிப்பான கேப்டன் பிரின்சின் "பயங்கரப் புயல்" இவரது படைப்பே ! அதே போல முத்து காமிக்ஸில் இம்மாதம் வரக் காத்திருக்கும் "ப்ருனோ பிரேசில் " சாகசத்திற்கும் 'லூயிஸ் ஆல்பர்ட்' என்ற புனைப்பெயரில் கதை எழுதியது கூட நம் ஆசாமியே ! இதழ் # 4 (தோர்கல்) கதாசிரியர் வான் ஹாம்மேவின் கை வண்ணம் எனும் போது - இம்மாதம் நிஜமானதொரு பிரான்கோ-பெல்ஜிய ஜாம்பவான்களின் ஆராதனையாக அமைகிறது ! பற்றாக்குறைக்கு ப்ருனோ பிரேசிலுக்கு ஓவியங்கள் வில்லியம் வான்ஸ் எனும் போது - எனது கூற்றுக்கு வலு கூடுகிறது !
ஒளி வட்டத்தின் முக்காலே மூன்று வீசப் பார்வை இம்மாதம் அவர் மீதே நிலைத்திருக்கப் போவது ஒரு தற்செயலான ஒற்றுமையே ! ஏனெனில் இம்மாதம் வெளியாகும் 4 கதைகளுள் - மூன்றுக்கு கதாசிரியர் கிரெக் தான் ! இம்மாத மறுபதிப்பான கேப்டன் பிரின்சின் "பயங்கரப் புயல்" இவரது படைப்பே ! அதே போல முத்து காமிக்ஸில் இம்மாதம் வரக் காத்திருக்கும் "ப்ருனோ பிரேசில் " சாகசத்திற்கும் 'லூயிஸ் ஆல்பர்ட்' என்ற புனைப்பெயரில் கதை எழுதியது கூட நம் ஆசாமியே ! இதழ் # 4 (தோர்கல்) கதாசிரியர் வான் ஹாம்மேவின் கை வண்ணம் எனும் போது - இம்மாதம் நிஜமானதொரு பிரான்கோ-பெல்ஜிய ஜாம்பவான்களின் ஆராதனையாக அமைகிறது ! பற்றாக்குறைக்கு ப்ருனோ பிரேசிலுக்கு ஓவியங்கள் வில்லியம் வான்ஸ் எனும் போது - எனது கூற்றுக்கு வலு கூடுகிறது !
இம்மாதத்து வண்ண மறுபதிப்பில் செயலாற்றுவதும் கதாசிரியர் கிரெக் - ஓவியர் ஹெர்மன் கூட்டணியே ! முதன் முதலாய் "பனிமண்டலக் கோட்டை" வாயிலாக நமக்கு அறிமுகம் ஆன ஓவியர் ஹெர்மனின் அந்தக் கீச்சலான பாணி ; நாளடைவில் பார்க்கப் பார்க்கப் பிடிக்க ஆரம்பித்து விட்டதெல்லாம் பழங்கதைகள் ! இன்று அவரது பாணிக்கு நாம் வலுவான ரசிகர்கள் என்ற நிலையில் இரு மாறுபட்ட கதைக்களங்களில் அவரது சித்திர ஜாலங்களை தரிசிக்கவுள்ளோம் ! ஏறத்தாள 25 ஆண்டுகளுக்கு முன்பாய் வெளி வந்த "பயங்கரப் புயல்" - பிரின்ஸ் கதை வரிசைகளின் சூப்பர் ஹிட்களுள் இன்னும் ஒன்று ! முழு வண்ணத்தில் - பெரிய சைசில் பார்க்கும் போது படைப்பாளிகளின் உழைப்பின் முழுப் பரிமாணமும் பளிச் என highlight ஆகிறது ! பின்னட்டையினில் வரும் கதைச் சுருக்கம் மாத்திரமே நமது பணி என்பதைத் தாண்டி அட்டைப்படத்தின் டிசைன் நண்பர் பிரதீப்பின் கைவண்ணம் ! இதோ அச்சுக்குச் செல்லும் அந்த அட்டை டிசைன் !
நாளைய தினம் 2014 சென்னைப் புத்தக விழாவினில் ஸ்டால் ஒதுக்கீடு பற்றிய விபரங்கள் தெரிய வரும் என்பதால் ஆவலாய்க் காத்துள்ளோம் ! நமக்கென தனியாகவே ஸ்டால் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதி என்ற நிலையில் - இந்தாண்டுக்கான banners டிசைன் செய்திடும் பணி துவங்குகிறது ! வழக்கம் போலவே நண்பர்களின் கைவண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன ! பெரிய banner ஒன்றும் ; சின்னவை இரண்டும் நம் தேவைகள் ! நமது டிசைனர் பொன்னன் ஜரூராய் ஒரு பக்கம் அவற்றைத் தயார் செய்து வர, நீங்களும் உங்கள் திறமைகளைக் காட்டிடலாமே guys ?
அடுத்த வாரப் பதிவினில் "சாக மறந்த சுறா" + "தோர்கலின்" முன்னோட்டங்களோடு உங்களை மீண்டும் சந்திக்கிறேன் ! சித்திரக் கதை உலகின் ஜாம்பவான்களை ஒரு சேர ரசிக்கும் வாய்ப்புத் தந்துள்ள இந்த ஜனவரியைக் கொண்டாடுவோமே அது வரையிலும் !சின்னதாய் ஒரு நினைவூட்டலும் கூட - சந்தாக்கள் புதுப்பித்தல் தொடர்பாய் ! புத்தாண்டும் துவங்கி விட்ட நிலையில் - இது வரையினில் சந்தா செலுத்திட மறந்திருக்கும் நண்பர்கள் மேற்கொண்டும் தாமதிக்க வேண்டாமே ப்ளீஸ் ? ! Bye for now !
Writer Greg |
Illustrator : Hermann |
Writer Jean Van Hamme |
Illustrator : William Vance |
hi I am first
ReplyDeleteHappy new year to you and your family and also your team editor sir
ReplyDeleteHappy New Year guys :-)
ReplyDeleteaiyaa i'm 4th :-D
ReplyDeleteஅஹா...
ReplyDeleteஅருமையான புத்தாண்டு விருந்து...
how many days we need to wait for this new year dinner?....when books are released?
DeleteDear Vijayan sir, Happy new year wishes to OUR TEAM.. C ya @ chennai Book fair 2014
ReplyDeleteCheers,
Selva K
இரண்டு அட்டைப்படங்கலுமே மிக அருமை, நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டே போகிறது !!!
ReplyDeleteWe are kicking start the new year in a great fashion :-)
I'm 8th....
ReplyDeleteWish you all to have a peaceful n joyful new year!
ReplyDelete9th
ReplyDeleteHappy new year
ReplyDeleteWish you a Happy New Year sir!!!!!!
ReplyDeleteWish u happy new year to all sir mathiilla mandria -give him a chance
ReplyDeletemy choice is also same!
Deleteஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு நன்மையும் நல் ஆரோக்கியத்தையும் தரும் இனிய ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteதமிழ் காமிக்ஸ் உலகில் நமது காமிக்ஸ் மேலும் பல சிகரம்களை தொட்டு சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.
ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருட புத்தக விழாவிலும், பக்கத்து ஸ்டால்களை எல்லாம் ரவுண்ட்-அப் செய்து, ஸ்டால் ஓனர்களை பீதி கிளப்ப வாழ்த்துக்கள்! :-) ஓகே பை, அடுத்த வாரம் சந்திப்போம்... பதிவுல தான், பதிவுல தான்! :)
ReplyDeleteKarthik Somalinga : இந்த வருஷம் புத்தக ரிலீஸ் என்றெல்லாம் நம் அலப்பரை ஏதும் கிடையாதென்பதால் பக்கத்து ஸ்டால்கள் கோபத்தை சம்பாதிக்க அவசியம் இராது என்றே நம்புகிறேன் ! சென்றாண்டு நம் பக்கமாய் பாய்ந்த கொலை வெறிப் பார்வைகள் ஒரு மாமாங்கத்துக்குப் போதுமே !
Deleteஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :))
ReplyDeleteநமது ஆசிரியருக்கு கிடைத்தது போல அனைவருக்கும் லயன் முத்துவின் பழைய இதழ்கள் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக :))
.
Cibiசிபி : "சின்ன சின்ன ஆசை...சிறகடிக்கும் ஆசை... !"
Deleteட்யூன் மட்டும் தான் சார் மிஸ்ஸிங் உங்கள் பின்னூட்டத்தில் :-)
நமது சன் ஷைன் கிராபிக் நாவல் லோகோவை மற்றும் லயன் 30 மலருக்கான பெயரை இந்த பதிவில் அறிமுகபடுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்!
ReplyDeleteகாமிக்ஸ் ஜாம்பவான்களின் படம்களை இங்கு இடம் பெற செய்து சிறப்பித்தது அருமை!
இந்த மாத நான்கு புத்தகம்கள் என்று கிடைக்கும் என கூறினால் நன்று.
Parani from Bangalore : லயனின் 30-வது ஆண்டுமலருக்கு இன்னமும் ஏராளமாய் அவகாசம் உள்ளதே ! So ஏப்ரலில் இதன் அறிவிப்புகள் வந்திடும் ! ஜனவரி இதழ்கள் அனைத்துமே ஜனவரி 10-ல் கிடைக்கும் என்பதை டிசம்பர் ஹாட்லைனில் எழுதி இருந்தேனே !
Deleteவிஜயன் சார், தமிழ் நாட்டில் நிலவும் மின்வெட்டின் காரணமாக புத்தகம் வருவதில் ஏதாவது மாற்றம் உண்டா என அறிந்து கொள்ளவே இதனை கேட்டு இருந்தேன்! நன்றி முன்னர் கூறியது போல் 10 தேதி கிடைக்கும் என உறுதி செய்தமைக்கு! Count down starts.....
Deleteஅட்டைப்படங்கள் இரண்டுமே மிக அருமையாக வந்துள்ளன சார்
ReplyDeleteவாழ்த்துக்கள் மாலையப்பன்,பொன்னன் மற்றும் நண்பர் பிரதீப் அவர்களே :))
.
உள்ளேன் ஐயா...!
ReplyDeleteஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDelete// பெரிய banner ஒன்றும் ; சின்னவை இரண்டும் நம் தேவைகள் ! நமது டிசைனர் பொன்னன் ஜரூராய் ஒரு பக்கம் அவற்றைத் தயார் செய்து வர, நீங்களும் உங்கள் திறமைகளைக் காட்டிடலாமே guys ? //
ReplyDelete@ Vijayan Sir: பேனர்களின் தோராயமான அளவையும் (Width & Height) தெரிவித்தீர்களென்றால் எளிதாக இருக்கும். மேலும் பல நண்பர்கள் தனிப்பட்ட முறையில் Content message-ஐ சேர்ப்பதைவிட, தாங்களே பொருந்தக்கூடிய வாசகங்களை தந்துவிட்டால், நண்பர்கள் அதிலிருந்து முயற்சிக்கும்போது பலன் அதிகமாக இருக்குமல்லவா? மேலும் புதுவரவான தோர்கல் & க்ராபிஃக் நாவலுக்கென பிரத்யேகமான பேனர்கூட தயாரிக்கலாமே - இம்மாதிரி முயற்சிகள் ஒரு Plan-உடன் ஆரம்பிக்கப்படும்போது பயன் கூடுதலாக இருக்கும்.
Ramesh Kumar : வழக்கமான பாணியில் நாம் எழுத நினைப்பதை வாசகர்களின் வாய்சாக உருமாற்றிடுவதை விட - அவர்களது taglines க்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போமே ? அதில் சின்னதாய் பட்டி-டிங்கரிங் அவசியமாகும் பட்சத்தில் செய்து விட்டால் போச்சு !
Deleteபேனரின் அளவுகளை நாளை அறிவிக்கிறேன் !
WISH YOU HAPPY NEW YEAR 2014 Editor Sir.
ReplyDeleteWe witnessed the Revival of the comics saga in 2012. This year we expect it will be expanding full reach in Tamilnadu andhow it creates another comics generation like 70s and 80s.
Senthil Kumar : நம்பிக்கையோடு முன்செல்வோம் ! நல்லதே நடக்கும் !
DeleteComanche front cover mallayappan detailing work excellent, our cover is far better than original.
ReplyDelete@Editor – when we will be getting books for Jan? In the last post few people commented that books will be sent only around Jan 10, is that true?
டியர் எடிட்டர்
ReplyDeleteஅட்டை படங்கள் இரண்டும் அருமை.
புத்தாண்டு புத்தகங்கள் எங்கள் கைகளில் எப்பொழுது தவழும் என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
Durango Kit இதழ்களை தாங்கள் வாசித்ததுண்டா?
இதுபற்றி தங்கள் கருத்து என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.
Regarding filer pages my vote is for black and white stories, because that's not an option :(
ReplyDeleteI would prefer madhiyilla mandhiri for comedy main stories and Steele body for serious main stories.
சென்னை புத்தக திருவிழாவில் நமக்கு ஸ்டால் கிடைத்தது இந்த ஆண்டின் மிகவும் சந்தோசமான செய்தி.
ReplyDeleteஇந்த கேள்வி கேட்பதற்கு கோபமடைய வேண்டாம்....
சென்னை புத்தக திருவிழாவில் ஏதேனும் சிறப்பு வெளியீடு உண்டா?
Mugunthan kumar : ஒரு வரையறுக்கப்பட்ட சந்தா நிர்ணயம் செய்வது அவசியமாகிடும் போது இடையிடையே out of the blue பாணியில் புது இதழ்களை வெளியிடுவது நடைமுறைக்கு சரி வராதே ! அதனால் லெப்டில் இன்டிகேடரைப் போட்டு விட்டு, ரைட்டில் கை காட்டி விட்டு - நேராய் செல்லும் option இப்போதைக்குக் cut !
Delete4 books as planned only !
பில்லர் பேஜீக்கு மதியில்லா மந்திரிதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.
ReplyDeleteஎன்னாது... ஸ்டீல்பாடியா... எஸ்கேப்!!!
ReplyDeleteஅவருக்கு மதியில்லா மந்திரியாரே பெட்டர்! :)
+1
Deleteபில்லர் பேஜீக்கு பழைய மாயாவி, ஸ்பைடர், ஆர்ச்சி கதைகளை தொடர்களாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
ReplyDelete+1
Delete+2
DeleteOne more suggestion sir, Instead color filler pages, pls try the last year b/w filler pages style with our yesteryear heroes...
I beleive, this will attract the people who left our comics reading nowadays
udhay : Please scroll down for my reply on the same topic !
Deleteடியர் எடிட்டர்,
ReplyDeleteஇரு அட்டைப்படங்களுமே அருமை! நண்பர் பிரதீப்பின் அட்டைபட ஆக்கம் அசத்தப்போவது மகிழ்ச்சியளிக்கிறது. நேரில் கண்டு பிரம்மிக்கவும் ஆசை!
சமீப காலமாக ஏதாவது ஒரு கர்ண கடூரமான முகத்தை அட்டைப்படத்தில் 'க்ளோஸ்-அப்'பில் வரைந்து பயமுறுத்துவது ஒரு ட்ரெண்ட் ஆகிவருகிறது. இந்த இரு அட்டைப்படங்களையும், சென்றமாத 'வேங்கையின் சீற்றம்'த்தையும் அதற்கு உதாரணங்களாகக் கூறலாம். ஆனால் 'வேங்கையின் சீற்றம்' அளவுக்கு இந்த இரு அட்டைப்படங்களின் க்ளோஸ்-அப் முகங்களும் என்னை பயமுறுத்திவிடவில்லை என்பது லேசாய் ஒரு ஆறுதல்! ;)
இந்தப் பதிவை நேற்றிரவோ அல்லது இன்று காலையிலோ போட்டிருந்தால் கூட உற்சாகம் எக்கச்சக்கமாய் இருந்திருக்கும். இப்போது அது கொஞ்சம் மிஸ்ஸிங்! காரணம் - தாமதம்! :(
ஃபில்லருக்கு எனது சாய்ஸ் ம.இ.மந்திரியே!
உங்களிடம் லேசானதொரு உற்சாகக் குறைச்சல் ஏற்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுவது வெறும் பிரம்மையே என உணர்ந்தால் சந்தோசமடைவேன்...
Erode VIJAY : Closeup படலங்கள் இன்னமும் முடிந்த பாடில்லை ; so உஷார் !!
Deleteஎக்கச்சக்க ஹாட்லைன்கள் ; பதிவுகள் என்று சகல விஷயங்களையும் நாம் அவ்வப்போது போட்டுத் துவைத்து எடுத்து விடுவதால் பகிர்ந்திட புதிதாய் சேதிகள் அதிகம் இல்லை என்பதால் பூனையாருக்கு அது உற்சாகக் குறைவின் ஒரு அடையாளமாய்த் தெரிந்திருக்கலாம் ! தவிர இப்போதெல்லாம் ஒரு இதழினை வெளியான இரண்டொரு நாட்களுக்குள் நாம் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவதால் - what next ? என்ற தலை சொறிதல் அடுத்த மாதத்து இதழ்கள் வரும் வரை நேர்வது இயற்கையே ! டிசம்பர் இதழ்கள் வெளியாகி 30 நாட்கள் ஆகி விட்டபடியால் ஒரு சின்ன வெற்றிடம் தோன்றுவதும் உங்கள் சிந்தனைக்கொரு காரணமாய் இருந்திடலாம் !
மற்றபடிக்கு all's well !
Happy New Year to all the comic lovers.
ReplyDeleteGood news that we have got a stall in CBF.
Already in Chennai advt boards are being displayed.
**** Small suggestion *****
Can we try a standing banner one or two using a iron rod frame. That would attract more crowd to our stall.
RAMG75 : அவ்வகை விளம்பரங்களுக்கு அனுமதி கிடையாதே !
DeleteMy Hearty New year wishes to Editor and Friends!
ReplyDeleteஸ்டீல்பாடியார் கதைகள் வேண்டவே வேண்டாம் ஒன்றும் புரியல
ReplyDeleteஅதற்கு பதில் மதியில்லா மந்திரியே போதும்
// இவ்விரு இதழ்களோடும் filler pages-ல் லக்கி லூக்கின் 2 புதிய குட்டிக் கதைகள் இடம் பிடிக்கின்றன ! இவற்றோடு தற்சமயம் நம் கைவசமுள்ள fillers காலி என்பதால் தொடரும் மாதங்களில் மீண்டும் மதியில்லா மந்திரியாரைத் தேடிச் செல்வது ஒரு option ! இல்லாவிடின் இருக்கவே இருக்கிறார் -"ஸ்டீல்பாடியார் " ?!! What say folks ? //
ReplyDeleteமதியில்லா மந்திரி option அல்ல, அத்தியாவசியம்!
மதியில்லா மந்திரி option அல்ல, அத்தியாவசியம்!
Deleteஸ்டீல்பாடியார் அனாவசியம்
நம்ம பெருமை புரிஞ்சா சரி ..........
Delete// ஸ்டீல்பாடியார் அனாவசியம் //
Deleteஸ்டீல்பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளனைத்தையும் Digest-ஆக ஒரு இதழில் வெளியிட்டு... அதன்பின் முழுக்குப்போட்டுவிடலாம் ஹி ஹி! காமெடியாக இருந்தாலும் ஷெர்லாக் ஹோம்ஸ்க்கு நமது Regular வாசகர்களைத் தவிர்த்து மற்றவர்கள் மத்தியில் வரவேற்பு ...
...இருக்கக்கூடும் (அல்லது)
...இருந்தாலும் இருக்கும் (அல்லது)
...இருக்கலாம் (அல்லது)
...தப்பித்தவறி இருக்கலாம். ஹி ஹி!
இந்த பதிவை இடும் முன் ஸ்டீல்பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதுதான் இந்த குழப்பம்
Deleteஹி ஹி!
டியர் எடிட்டர்
ReplyDeleteசித்திரமும் பேசிடுமே என்ற பதிவில் 2013/ல் வெளிவருவதாக அறிவித்திருந்த
திசையில்லா பறவைகள், மரணம் மறந்த மனிதர்கள்,
லக்கி/ன் மகாபிரபு பராக், ராகம் பாடும் கம்பிகள் போன்ற கதைகளின் நிலை என்ன?
Mugunthan kumar : சீரியஸ் ரக கிராபிக் நாவல்களுக்கு இந்தாண்டு ஒரு பிரேக் என்ற முடிவு அவசியமானதால் மரணம் மறந்த மனிதர்களை தற்காலிகமாய் மறத்தல் அவசியமாகிறது !
Deleteலக்கி லூக் கதைகளைப் பொறுத்த வரை ஏராளமான choices உள்ளதால் 'மிகச் சிறந்தவை ' என்பவற்றைத் தேர்வு செய்ய முனைகிறேன் ! கானம் பாடும் கம்பிகளும் next on the priority list !
Happy New Year sir
ReplyDeleteHappy New Year
ReplyDeleteto
Vijayan Sir,
Prakash Publishers team
and all our blog friends!
எடிட்டர் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! Jan issues 10 தேதிக்குள் கிடைக்க வாய்ப்புண்டா எடிட்டர் சார்?
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil : நிச்சயம் கிடைக்கும் !
Deleteஇந்தாண்டின் முதலிதழாக மலரவிருக்கும் லயனின் அட்டைப்படம் அசத்தலாக வந்துள்ளது. லயனின் லோகோ B & W வந்துள்ளதே! வண்ணத்தில் போட மறந்தாச்சா....? அல்லது இப்படியே தொடருமா?
ReplyDeletefiller pages கொஞ்சக்காலத்திற்கு B & W-க்கு திரும்பினால் என்ன...? ஒரு 15 பக்கத்திற்கு தொடர் கதைக்களை நம் 4 இதழ்களில் வெளியிட்டு விரைவாக நிறைவு செய்யலாமே...? டெக்ஸ் & டையபாலிக் B & W நாயகர்களைத் தவிர்த்து மற்ற B & W நாயகர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்! (Daylight-டை பார்க்க இதைவிட நல்ல வாய்ப்பு அமையா...?) Pls. think b4 print.
MH Mohideen : இரண்டு நாட்களுக்கு முந்தைய "தினமலர்" செய்தித் தாளில் வெள்ளைத் தாள்களின் இந்தாண்டு விலை விபரம் பற்றியதொரு செய்தி வெளியாகி இருந்ததை கவனித்தீர்களா- தெரியவில்லை ; ஆனால் ஷாக் அடிக்க இனிமேலும் மின்சாரத்தில் கை வைக்கத் தேவையே கிடையாதென்ற நிலையை காகித உற்பத்தி மில்கள் உருவாக்கி விட்டன ! வெள்ளைத் தாளை ஒவ்வொரு மாதமும் கொள்முதல் செய்ய நினைத்தால் மட்டுமே போதும் - 1440 வோல்ட் ஷாக் இலவசமாய்க் கிட்டும் ! So black & white இணைப்புப் பக்கங்கள் என்பது சாத்தியமில்லா ஒரு விஷயம்.
Deleteதவிர, ஒரு ரெகுலர் கதையினை நம் வசதிக்காகப் பிரித்துத் தொடர் கதையாக உருமாற்றிட இன்று எந்தவொரு பதிப்பகமும் உரிமைகளை வழங்கப் போவதில்லை ! So it's just not an option at all !
@ FRIENDS : வாழ்த்துச் சொன்ன ; சொல்லவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நமது நன்றிகள் ! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக !
ReplyDeleteHappy New year to All
ReplyDeleteஎடிட்டர் சார் அவர்களுக்கும், அவர்களது அனைத்து பணியாளர்களுக்கும் மற்றும் இங்கு வரும் நம் நண்பர்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDelete64th
ReplyDeleteவிஜயன் சார் , இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் டீமுக்கும். முன் அட்டை மற்றும் பின் அட்டை நன்றாக வந்திருக்கிறது கொமாஞ்சேயில்.
ReplyDeleteபுத்தாண்டு புது உத்வேகத்துடன் பூக்கட்டும் சார்! என் வாழ்த்துக்கள்! கலக்கல் கமான்சேயுடன் துவங்கும் இவ்வருடம் விற்பனையில் பின்னிப் பெடல் எடுக்க வாழ்த்துகிறேன்!
ReplyDeleteWishing a happy new year to everybody
ReplyDeleteஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.....
ReplyDeleteஇந்த புத்தாண்டு எனக்கு உண்மையில் சந்தோசமான ஆண்டு தான் .
ReplyDeleteகாரணம் 1. நான்கு புத்தங்கள் ( குட்டி புத்தகம் என்பதில் வருத்தம் உண்டு தான் )
காரணம் 2 :ANS இல் நான் ரசித்த ஒரே நாயகரின் மறு வரவு ...
காரணம் 3 :இது வரை வந்த அனைத்து மறுபதிப்பு கதைகளும் ஒன்று என்னிடம் உள்ளதாக இருந்தது அல்லது என்னிடம் இல்லாத ஆனால் படித்ததாக இருப்பது தான் வந்துள்ளது .முதன் முறையாக என்னிடம் இல்லாத ..,படிக்காத " பயங்கர புயல் " வருவதில் மிகுந்த மகிழ்ச்சி .
அடுத்து இரண்டு அட்டை படங்களும் அட்டகாசமாக உள்ளது .வாழ்த்துகள் .
மதி இல்லா மந்த்ரிக்கு எப்பொழுதும் ஆதரவு உண்டு .வெல் கம் மந்த்ரி .
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... இந்த புத்தாண்டின் உறுதிமொழி கட்டை விரலுக்கு ஓய்வு என்பதாக தெரிகிறது.. வழக்கம் போலவே உறுதிமொழிகள் காப்பாற்றுவதட்க்கு அல்ல என்பதால் +6 அல்லது +10 என்று ஏதாவது வரிசையில் ஆட்டத்தை ஆரம்பித்தால் களை கட்டும்...
ReplyDeleteஅட்டைப்படங்கள் அருமை.
ReplyDeleteகனகராஜன், பொள்ளாச்சி.
அன்பு ஆசிரியர் அவர்களுக்கும்,அவரது சகாக்களுக்கும் இனிய, வண்ணம்நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.வலைபூ நண்பர்களுக்கு புத்தாண்டு வணக்கம் மற்றும் வாழ்த்துகள்.
ReplyDelete.//லெப்டில் இன்டிகேடரைப் போட்டு விட்டு, ரைட்டில் கை காட்டி விட்டு - நேராய் செல்லும் option இப்போதைக்குக் cut ! //
@ ஆசிரியர் புத்தாண்டு சபதங்களை கண்டிப்பாக கடைபிடிக்கும் பழக்கத்தை கற்றுத்தரும் வாத்தியார் கார்த்திக் இடம் நீங்கள் கற்றுக்கொள்ள வா.வ சங்கத்தினர் இலவசமாக ஏற்பாடு செய்து தரக்காத்திருப்பதாக உளவு தகவல் வந்துள்ளதால்(அது எங்களுக்கும் ஏற்புடையதுதான்) உஷார்!!!
ஏதாவது கிசு கிசு சொல்லலேண்ணா தூக்கம் வராதே...........
Deleteஇரண்டு அட்டை படங்கள் மற்றும் இரண்டு சாம்பிள் பக்கங்களும் அருமையாக உள்ளன.
ReplyDeleteஅந்த கலர் கலவைகள் மிக அருமையாக இருக்கின்றன. ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
புத்தகங்கள் இந்த முறையாவது எந்த பிரிண்டிங் தவறுகளும் இல்லாமல் இருக்க வேண்டும்.
நீங்கள் போன பதிவில் சொன்னது போல வேங்கையின் சீற்றத்தின் தரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்.
ஸ்டாலின் விவரம் மற்றும் உங்களது வருகை விவரம் குறித்து அடுத்த பதிவு இடுவீர்கள் என்று
நினைக்கிறேன்.
பில்லர் பக்கங்களுக்கு மந்திரி ஓகே.அவர் அல்லாது வேறு ஆப்சன் முயற்சி செய்யுங்கள் சார்.
அவரே வந்து கொண்டிருந்தாலும் போர் அடித்துவிடும்.
ஆசிரியருக்கும்,
ReplyDeleteஅவரோடு பணிபுரியும் நண்பர்களுக்கும், காமிக்ஸ் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கமான்சே அட்டை வடிவமைப்பு அருமை. நான் எப்போதும் நமது ஓவியர்கள் வரையும் அட்டைகளின் ரசிகன் என்பதால், இம்முறை மாலையப்பன் அவர்கள் வரைந்திருக்கும் அட்டைப்படமும் பிரமாதமாகவே தோன்றுகிறது. அவருக்கும் வடிவமைத்த பொன்னன் அவர்களுக்கும் விசேடமான வாழ்த்துக்கள்!
பிரின்ஸ்இன் 'பயங்கரப் புயல்' க்கு வடிவமைத்த அட்டையில் பின்புறத்தில் கதைச்சுருக்கம் மட்டுமே உங்கள் பணி என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், அதில் செய்யப்பட்டிருக்கும் நகாசு வேலைகளே அதற்கு மெருகைத் தந்திருக்கின்றன என்பதே உண்மை. இது அச்சில் வந்து பார்க்கும்போதுதான், வடிவமைப்புக்கும் - அச்சிற்கும் இடையிலான தொடர்பும், வர்ணங்கள் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற தெளிவும் எனக்கு ஏற்படும் என்று எதிர்பார்த்திருக்கிறேன்.
சென்னை புத்தகத் திருவிழாவில் கடந்த வருடம் போலவே இவ்வருடமும் நமது காமிக்ஸ்கள் வெற்றிவாகை சூட மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ap nu ear 2 al.. (இது எனக்கு ஒரு வாண்டுவிடம் இருந்து வந்த watsapp msg , ஹாப்பி நியூ இயர் டு ஆல் ஆமா, forwarding, நாங்களும் யூத் தாம்லே )
ReplyDeleteSir, மரணம் மறந்த மனிதர்கள் (Histoire sans héros) is NOT a bad option at all for GN. Pictures are colorful & awesome.
புதிய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் அற்புதமான தருணங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteDear Editor,
ReplyDeleteDo you have any idea to publish western graphic novels like "Durango" & "Wanted" in Lion Comics?
Thanks,
Amar
இன்னும் எட்டே நாட்களில் சென்னை புத்தக கண்காட்சி நடக்க இருப்பதால் அங்கே செல்லும் நண்பர்களுக்கு எங்கள் போராட்ட குழுவின் சார்பாக ஆசிரியர் இடம் பேட்டிக்கு வினாக்கள் இல்லாமல் தடுமாறும் நிலைக்கு ஆளாகாமல் இருக்க சிறு உதவி .....
ReplyDelete1 ) சந்தா தொகை தாங்கள் அறிவித்து விட்டாலும் இந்த வருடம் + 6 வரிசை வெளி இடும் எண்ணம் தங்களுக்கு உண்டா ...?
2) வாக்கெடுப்பிலும் "டெக்ஸ் " வெற்றி பெற்றுள்ளதால் அவருக்கு கூடுதல் சான்ஸ் கொடுக்க மனது வைப்பிர்களா....?
3) அதே போல இந்த வருடம் "டயபாளிக் " அவர்களுக்கும் சான்ஸ் கொடுக்கலாமே ?
4) சிறிது விலை அதிகரித்தாலும் இனி "ஓம குச்சி நரசிம்மர் "போல வரும் புத்தகம் "குண்டு கல்யாணம் " போல வரா விட்டாலும் பரவாயில்லை "சூப்பர் ஸ்டார் " போல எப்பொழுதும் ஒரே மாதிரி வருவதற்கு தயவு செய்து மனம் வைப்பிர்களா ?
5) " கார்சனின் கடந்த காலம் " மறு பதிப்பு என்பது நண்பர்கள் வண்ணத்தில் மட்டுமே வேண்டுவது ...வண்ணத்தில் சாத்தியம் உண்டா ?
6) வண்ணத்தில் சாத்தியம் இல்லை எனில் ஏற்கனவே வந்த வேறு பழைய "டெக்ஸ் " கதையை யோசிக்கலாமே ..?
7)இணையத்தில் நண்பர்களுக்கு போட்டி வைத்து புத்தகம் பரிசு அளிப்பது போல என்னை போல இணையம் அதிகம் அறிந்திராத நண்பர்களுக்கு புத்தகத்திலும் ஏதாவது போட்டி வைக்கலாமே ? ( விமர்சன போட்டி போல )
8)வாசகர்களை வைத்து சிவகாசியில் "காமிக்ஸ் மாநகரம் " நடத்தும் எண்ணம் உண்டா ? நண்பர்கள் ரெடி .. ( இது சீரியஸ் வினாதான் )
9)" ஆண்டு மலர் " கண்டிப்பாக குண்டாக உண்டு என்ற நம்பிக்கை உண்டு .அதில் அகில உலக காமிக்ஸ் ரசிகர்கள் எதிர் பார்க்கும் " சிங்கத்தின் சிறு வயதில்" தொகுப்பு புத்தகம் வரும் சாத்தியம் உண்டா ? ( சாத்தியம் இல்லை எனில் சாத்தியம் ஆக நாங்கள் என்ன செய்ய வேண்டும் )
10) கடைசியாக சென்னை புத்தக கண்காட்சியில் உதவும் நண்பர்களுக்கும் ,கலந்து கொள்ளும் நண்பர்களுக்கும் எங்கள் போராட்ட குழுவின் சார்பாக மாபெரும் ஒரு பகிரங்க சவால் .........
ஈரோடு புத்தக கண்காட்சியில் " மின்னும் மரணம் "முழு தொகுப்பு சாத்தியம் இல்லை என்ற ஆசிரியரின் முடிவை மாற்ற வைத்த ஈரோடு குழுவினர் மற்றும் கலந்து கொண்ட நண்பர்களை போல சென்னை நண்பர்களால் " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பை ஆசிரியர் மூலமாகவே உறுதி படுத்த வைக்க உங்களால் முடயுமா ? அப்படி தாங்கள் செய்து விட்டால் "போராட்ட குழுவின் " சார்பாக ஒரு மாபெரும் பரிசு காத்திருகிறது ..!
பின் குறிப்பு :
இந்த "சி.சி.வயதில் " போராட்டத்திற்கு அனைத்து நண்பர்களும் வந்து ஒத்துழைப்பு கொடுக்கவும் .இதை விரும்பாதவர்கள் தயவு செய்து "மௌன விரதம் "கடை பிடித்து வாழ்வில் எல்லா வளமும் பெற எங்கள் சங்கம் வேண்டி கொள்கிறது .
போராட்டக்குழு தலைவரின் சவாலை முறியடிப்பவர்களுக்கு சிறப்புப் பரிசோடு, பத்துப் பக்கங்களுக்கு தலைவரே தன் கைப்பட எழுதிய பாராட்டுக்கடிதமும் உண்டு. இந்த அரிய வாய்ப்பைத் தவரவிடாதீர்கள்! ;)
Delete// ( சாத்தியம் இல்லை எனில் சாத்தியம் ஆக நாங்கள் என்ன செய்ய வேண்டும் ) // +1.
Deleteஆமா ஸார் நாங்க உங்களை எப்படி கவுக்கறது .........?
Delete11) இம்முறை நண்டுவறுவல் வேண்டாம், சலித்துவிட்டது... வேறொரு Variety-ஐ போராட்ட குழு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
Delete// வேறொரு variety-ஐ போராட்டக்குழு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது //
Deleteபோராட்டக்குழு உறுப்பினர்கள் என்றாவது தங்களுக்கான உத்தரவுக்காக காத்திருந்ததுண்டா? இப்படி வெரைட்டியாக உண்டு-களிப்பதிலேயே (அப்புறம் கழிப்பதிலேயே) தொடர்ந்து கவனம் செலுத்திவந்தால் நம் கொள்கைகளை வென்றெடுப்பது எப்படியாம்? கிர்ர்ர்...
// வெரைட்டியாக உண்டு-களிப்பதிலேயே (அப்புறம் கழிப்பதிலேயே) // +1
Deleteவெரைட்டியாக உண்டு-களிப்பதிலேயே (அப்புறம் கழிப்பதிலேயே)?
Deleteஅதாவது நேரத்தை வீணாக கழிப்பதிலேயே என்று பொருள்.
-- (கோனார் உறை) அடியேன் போட்டது. :-)
விஜயன் சார்,யுத்தம் உண்டு எதிரி இல்லை பின் அட்டையில் "30வது ஆண்டில்" சிங்கதுடைய படம் உடன் அச்சிட்டது அருமையான யோசனை! முடித்தால் இதனை முன்பக்க அட்டையில் இடம் பெற செய்யவும், புத்தக கடைகளில் (அ) லேன்ட் மார்க் போன்ற இடம்களில் அடுக்கி வைத்து இருக்கும் போது (அ ) தொங்கும் போது இன்னும் பலரை (புதிய மற்றும் பழைய நண்பர்களை) சென்று அடையும். இந்த ஆண்டு வெளிவரும் அனைத்து லயன் வெளிஈடுகளிலும் இதனை தவறாமல் இடம் பெற செய்யவும் !
ReplyDeleteA very very happy and prosperous new year to dear editor and comrades
ReplyDeleteசோ ..................மந்திரி வேணும் மந்திரி வேணும்னு ..சின்ன புள்ளயாட்டம் ............அதான் இங்கே தானே இருக்கேன் ..................................அப்புறம் என்ன ....?
ReplyDelete..................................................................................................................................................................................................................................அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா ................
Cover pages are well designed, fantastic work! Hope the printing reflects the same!
ReplyDelete@ ALL : நண்பர்களே, சந்தோஷச் சேதி ! 2014 சென்னைப் புத்தகக் திருவிழாவில் நமக்கு ஸ்டால் உறுதியாகி விட்டது ! ஸ்டால் எண் : 748. இதன் பொருட்டு சளைக்காது செயலாற்றிய நண்பர் விஷ்வாவுக்கு நம் நன்றிகள் !
ReplyDeleteவாவ்! அட்டகாசம் சார்! வாழ்த்துக்கள்!
Deleteநண்பர் விஸ்வாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. நண்பருக்கு என் வாழ்த்துக்களும், நன்றிகளும்!
Grt News.I hope we can meet you on that weekend.
Deleteஅற்புதம்......
Deleteநண்பர் விஸ்வாவுக்கு நன்றிகள் பல
அட்டகாசம் ...
Deleteகாத்திருக்கிறோம் ஜனவரி 10 ஆம் தேதிக்காக .... நண்பர் கிங் விஸ்வா அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ....
வாழ்த்துகள் சார் ....
Deleteஇதற்காக உழைத்த விஸ்வா சார் அவர்களுக்கும் நன்றி ...
அப்படியே எங்கள் போராட்டத்திற்கும் துணை நின்று வெற்றி பெற அவரை அன்போடு அழைக்கிறோம். .
டியர் எடிட்டர் ,
ReplyDeleteசென்னை புத்தக திருவிழாவில் எமது காமிக்ஸ் நிறுவனத்துக்கு தனி ஸ்டால் கிடைத்ததினை இட்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . நண்பர் விஷ்வா இன் இடை விடாத முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . சும்மா புகுந்து கலக்குங்க சார் . இம் முறை கலெக்சன் கல்லா கட்டும் பாருங்கள் .
ஜனவரி மாத இதழ்களான "யுத்தம் உண்டு எதிரி இல்லை ", மற்றும் நண்பர் பிரதீப் இன் புண்ணியத்தில் "பயங்கர புயல் " இரண்டின் அட்டை படங்களும் அருமையாக வந்துள்ளன .ஓவியர் மாலையப்பனுக்கும் , டிசைனர் பொன்னனுக்கும் நன்றிகள் பல உரித்தாகுக .செவிந்திய தலைவரின் அலங்காரம் , ஒரிஜினலில் உள்ளத்தினை விட ஒரு படி மேல்தான் . ஓவியர் வில்லியம் வான்ஸ் அவர்கள் எமது அபிமான XIII இன் சித்திரங்களின் பின்னணியில் கம்பீரமாக போஸ் கொடுத்திருப்பது கண் கொள்ளா காட்சி .
சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது காமிக்ஸ் நிறுவனத்திற்கு தனி ஸ்டால் கிடைத்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தமிழில் சித்திரக்கதை வாசிப்பை மேலும் ஊக்கப்படுத்தும்விதமாக இது அமையும். வாசகத்தளமும் விரிவாக அமைய வாய்ப்புள்ளது. வாழ்த்துக்கள்...
ReplyDeleteகனகராஜன், பொள்ளாச்சி.
Hope this time at least all the books come out without - missing pages,color overflow,bad prints, damaged edges, poor packing etc.
ReplyDeleteEditor does not reply to these sort of queries. But he is always stressing for more subscriptions in all his recent posts.Why should someone subscribe with all the above issues not sorted out ?
சென்னை புத்தக கண்காட்சியில் நமது ஸ்டால் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி . விஷ்வாவுக்கு நன்றிகள் பல.
ReplyDelete@ மதியுள்ளமந்திரி!! நிஜமாகவே நேற்று துக்கம் பிய்த்துக்கொண்டு வந்தது.இதிலாவது தங்களது பதிவு தொடர்ச்சியாக வந்ததே!
@பரணிதரன் கேள்விதாள் அவுட் ஆகிவிட்டதால் மேலும் 10 கேள்விகள் தயார் செய்யவும்
@ ஈ.விஜய் 10 பக்க கடிதமா (இது தலைவரின் முயற்சியை முறியடிக்க செயலாளரின் திட்டம் போலிருக்கிறதே!) சென்னைக்கு ரிசர்வேஷன் செய்த டிக்கெட் ஐ பாதி விலைக்கு விற்க வேண்டியதுதானா?
@ Senthil Madesh
Deleteபோராட்டக்குழுவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் சென்னைக்குப் பயணமாவது குறித்து பெருமகிழ்ச்சியடைகிறேன். போராட்டத்தை முன் நின்று நடத்தி வெற்றி வாகை சூடுங்கள். அசைவ உணவுகளைக் கண்டு அசந்துவிடாதீர்கள். நண்டுகளின் மீது நாட்டம் கொள்ளாதீர்கள். மட்டன் மீது மையல் கொள்ளாதீர்கள். சிக்கனைக் கண்டு சிலிர்த்துப் போகாதீர்கள்.
நமது முக்கிய நோக்கங்களாவன:
* வருடம் ஒரு முறையாவது (குறிப்பாக புத்தகத் திருவிழா சமயங்களில்) தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருப்பு-வெள்ளை கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிடவேண்டும். இதன்மூலம், விரக்தியிலிருக்கும் பல பழைய வாசகர்களையும் சற்று சமாதானப்படுத்த முடியும்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட ஓரிரு காமெடி கதைகளை பள்ளிச் சிறுவர்களுக்கான மலிவுவிலை பதிப்பாக (முடிந்தால் வண்ணத்தில்) புத்தகக் கண்காட்சிகளில் விற்கப்படவேண்டும்.
* எடிட்டர் தரப்பிலிருந்து நியாயமான பல காரணங்கள் எடுத்துரைக்கப்பட்டாலும், நண்பர்கள் பலரும் சுட்டிக்காட்டிவரும் அச்சுக்குறைபாடுகள் அறவே நீங்க, இயன்ற அளவுக்காவது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
* பேக்கிங் குறைபாடுகள் களையப்படவேண்டும். அடிக்கடி அட்டை கிழிந்தும் மடங்கியும் புத்தகம் கிடைக்கப்பெற்று அவதியுறுவோர்க்கென புதிய மேம்படுத்தப்பட்ட பேக்கிங்கில் (இதற்கான கூடுதல் செலவை அவர்களிடமிருந்தே கூட வசூலித்துக் கொள்ளலாம்) அனுப்பப்பட வேண்டும்.
* வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு புத்தகங்கள் அனுப்பப்படும்போது ஒரு முறைக்கு இரு முறையாக எல்லாப் பக்கங்களும் (ரிபீட் பக்கங்கள் அல்லது விடுபட்ட பக்கங்கள் இருக்கின்றனவா என்று) சரிபார்க்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும்.
* டெக்ஸ், டயபாலிக்கிற்கு அதிக வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
* 2013ஐ போலவே ஒவ்வொரு வருடமும் 'டெக்ஸ் தீபாவளி ஸ்பெஷல்' குண்ண்டாக வெளியிடப்பட வேண்டும்.
* 'லயன் 30 வது ஆண்டு மலர்' 600 பக்கங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
* 'சிங்கத்தின் சிறுவயதில்' ஒரு தொகுப்பாய் வேண்டும்.
போராடுவோம்! வெற்றி நமதே!
@Senthil Madesh: வாருங்கள் நண்பரே ... எந்த தேதி வருகிறீர்கள் ?
Delete@Erode Vijay & சேலம் ஈரோடு கோவை நண்பர்கள்:
சென்ற வருடம் ஈரோடு நண்பர்கள் அனைவரும் சென்னை புத்தக திருவிழாவிற்கு வர முயற்சி செய்தீர்கள் ஆனால் சில காரணங்களால் முடியவில்லை. இந்த வருடம் முயற்சி செய்யலாமே ? விழா இன்னும் சிறப்புறும் உங்கள் வரவால் ....
//* வருடம் ஒரு முறையாவது (குறிப்பாக புத்தகத் திருவிழா சமயங்களில்) தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருப்பு-வெள்ளை கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிடவேண்டும். இதன்மூலம், விரக்தியிலிருக்கும் பல பழைய வாசகர்களையும் சற்று சமாதானப்படுத்த முடியும்.///...............................
Deleteயாரு பெத்த புள்ளையோ .............நல்ல இரு தம்பி ................
ஐயையோ ................நான் வாழ்த்தினதா சரித்திரம் இல்லையே .....................
Deleteஐயோ பாவம் இந்நேரம் அந்த பூனை எந்த காரின் குறுக்கே போய்கிட்டு இருக்கோ............
காமிக்ஸ் ஆசான் பூனையின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றவும் ...............
மந்திரியையே மெய்மறந்து வாழ்த்தச் செய்த இந்தப் பூனைக்கு அரசவையில் இடம்கொடுத்து அழகு பார்க்காமல் இப்படி காருக்கு அடியில் போட்டு அரைத்து, சவமாக்கப் பார்க்கிறீரே மந்திரியாரே? :)
Deleteபூனைக்கு 9 ஜென்மாமே......
Delete// பூனைக்கு 9 ஜென்மாமே...... //
Deleteஅப்போ ஒன்றன்பின் ஒன்றாக 9 கார்கள் சென்றால்தான் உண்டு... ஹும்...
கொலைகாரர்கள்...
Deleteகொலைகார்காரர்கள்...
Delete:D
நமக்கு தேவை புத்தகம் .................
Deleteஇதற்கு வடை தலைவர் தான் இன்னுயிரை கூட தரவில்லை என்றால் அந்த பதவியை விட சொர்க்கலோக பதவி சால சிறந்தது...............சபாஷ் ரமேஷ்
யாரங்கே சைரன் இல்லாத எட்டு கார்கள் கொண்டு வாருங்கள்
Deleteஅ .கொ .தீ .தலைவராக ரமேஷ் நீடிப்பார்.........................எம்மே எத்தன கொலைவெறி
Delete:-)
ReplyDeleteபோராட்டத்தின் அடுத்த கட்டம் :
ReplyDeleteசெயலாளர் அவர்களே .....நண்பர்களை "மௌன விரதம் " இருக்க சொன்னால் ஆசிரியர் அதை கடை பிடிக்கிறார் .இனி நாமே களத்தில் இறங்க வேண்டியது தான் .உடனடியாக வயர் லஸ் நான்கு செட்டோடு தாங்களும் சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு வேண்டி எதை இழந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் நான்கு நண்பர்களும் உடனடியாக வரவும் ....
தலைவரே ...வந்து விட்டேன் .வயர் லஸ் செட் நண்பர்களுக்கு வாங்கி கொடுத்து விட்டேன் .அதுக்கு காசு கொடுங்க ...?
ஷு..செயலாளர் அவர்களே ...காசை பத்தி பைனான்ஸ் மீட்டிங்கில் பார்த்துக்கலாம் ...அவர்கள் எங்கே ?
தலைவரே ..அவர்கள் "நண்டு வறுவல் "சாப்பிட்டு வருகிறார்களாம்...நீங்க காசை கொடுங்க ..ஆத்தா வையும் ...?
என்ன "நண்டு வறுவலா.."..மோசம் போயிட்டேன்...லைனை போடுங்க ....
மைக் 1 எங்கே இருக்க ..?
உங்க தலைக்கு பின்னாடி தான் இருக்கேன் பாஸ் ..
வந்துட்டியா ...வெரி குட் ...நீ உடனடியா சிவகாசி போய் லயன் ஆபீஸ் வாசலில் நில்லு ...
ஓகே பாஸ் ...பஸ்சுக்கு காசு கொடுங்க ...
ஸ்....முடியல ...முதல வேலைய முடி ...பில்லை அப்புறம் பாஸ் பண்றேன் .
மைக் 2 நீ எங்கே இருக்க ..?
பாஸ் ரூமுல தான் இருக்கேன் பாஸ் ..
ஏய் ..என் ரூமுல என்னடா வேலை ...?
ஐய.....நான் சிவகாசி "பாஸ் " ரூமுல இருக்கேன் பாஸ் ....
ஹா ...நீ தாண்டா என் சிங்க குட்டி ...அந்த ரூமுல என்ன இருக்கு செல்லம் ....?
பாஸ் ...பெரிய டேபில்...பேன் ....சேர் நாலு .....பீரோ ...அப்பறம் கம்ப்யூட்டர் எல்லாம் இருக்கு பாஸ் ...!
அட ...கிராபிக் நாவல் மண்டையா.....கொள்ளை அடிக்க போறவன் மாத்ரி சொல்றானே ..?டேபில் மேல என்ன இருக்கு ..அதை சொல்லு ....
ஓகே பாஸ் ...ஒரு கவர்ல செக்கிங் ஓகே ...பிரஸ் ..அப்படின்னு ஒரு பார்சல் இருக்கு பாஸ் ...
வெரி குட் ...நீ என்ன பண்ணற ...அந்த கவர் உள்ள இருக்கறதை எடுத்துட்டு நேத்து நான் கொடுத்த பார்சல உள்ள வை ...
வச்சுட்டன் பாஸ் ...யாரோ ரூமுக்கு வராங்க...அது "மைதீன் " ஆக தான் இருக்கும் ....
நல்லதா போச்சு ..ஒளிஞ்சுக்க ....அவரே போய் அச்சுக்கு கொடுக்கட்டும் ..அப்ப தான் யாருக்கும் சந்தேகம் வராது ....நீ..வந்துரு ...
மைக் 3 நீ எங்க இருக்க ?
நான் பிரஸ் ல தான் இருக்கேன் பாஸ் ...ஆனா பஸ்சுக்கு சங்கத்தில காசு யாருமே கொடுக்கலை..காசு கொடுங்க ...
சரி ..சரி ..நீ வந்து அப்புறம் அதை பாத்துக்கலாம் ..மைதீன் வந்து அங்கே ஒரு கவர் கொடுப்பார் ...அதை அச்சடித்து பைண்டிங் பண்ற வரைக்கும் கரக்டா பாத்துக்க ...
ஓகே பாஸ்..அவர் வந்துட்டார் ...பிரஸ் பண்ண கொடுத்துட்டார் ...ஆனா பாத்துட்டு முழிக்கிறாங்க...!
ஹா ..ஹா ...கவர்ல ஆசிரயர் ஷைன் இருக்கு...அதனால நோ வெர்ரி...புக்கா வருது பாரு..சிங்கத்தின் சிறு வயதில் ...ஆசிரியருக்கே தெரியாம ...ஹா ..ஹா ...போராட்ட குழுவா ..கொக்கா ......
சிங்கத்தின் சிறு வயதில் புக்கா ....அது எப்படி பாஸ் வரும் ....
அட ..சன் ஷைன் மண்டையா ....நான் கொடுத்தது இது வரைக்கும் வந்த சி.சிறு வயதில் கட்டுரை கிழிச்சு கொடுத்தது ....ஹா ..ஹா ....
ஆனா ..பாஸ் ....அது...நல்லா இருக்குனு நானே வச்சுகிட்டேன் ...நான் வச்சது "கந்த சாமி " பாட்டு புத்தகம் தலைவரே ....
என்னது "கந்த சாமி " பாட்டு புத்தகமா .....
டமால் ........
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை ........................ஆனா நாலு பேரும் இப்பிடி சொதிப்பினா எப்படி ............?
Deleteha ha ha....:~))))))))))))))))
Deleteenjoyed !
ஹா ஹா! நல்ல கற்பனை! முடிவுமட்டும் நமது போராட்டக்குழுவுக்கு சாதகமாக இருந்திருந்தால் இன்னும் ரசித்திருப்பேன். :)
Deleteசிங்கத்தின் சிறு வயதில் வேண்டுவோருக்கு எடிட்டரை சம்மதிக்க வைக்க ஒரு சிறந்த வழி
ReplyDeleteஸ்டாலில் போராட்டக் குழுவினர் எடிட்டரை சுற்றி நின்று கொண்டு ஓவென்று கதறி அழவும்
வேறு வழி இல்லாமல் எடிட்டர் சம்மதித்து விடுவார்.
குறிப்பு = அந்த சமயம் ஸ்டாலில் கூட்டம் அதிகமாக இருக்க வேண்டும்.
போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் நண்டு மசாலாவுடன் மதிய விருந்து காத்துள்ளது.
@ Mugunthan kumar
Delete//ஓவென்று கதறி அழவும் வேறு வழி இல்லாமல் சம்மதித்துவிடுவால்//
ஹா ஹா! நல்ல ஐடியா! இந்த புதுமையான போராட்ட முறையையும் உடனே சங்கத்தில் இணைத்துக்கொள்ளச் சொல்லி இன்றே தலைவருக்கு கடுதாசி எழுதிவிடுகிறேன். :)
http://www.bapasi.com/wp-content/uploads/2013/11/byStallNumber.pdf
ReplyDeleteStall Number 748 - MUTHU COMICS
இடம்: YMCA மைதானம்
ReplyDeleteNo.333, அண்ணா சாலை,
நந்தனம்,
சென்னை – 600 035
நாள்: 10, ஜனவரி – 22, ஜனவரி, 2014
நேரம்:
விடுமுறை நாட்களில்: காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை
வேலை நாட்களில்: மதியம் 2:30 முதல் இரவு 8:30 மணி வரை
http://www.bapasi.com/
1. முதலில் சென்னை புத்தகத்திருவிழாவில் ஸ்டால் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி! அதன் பின்புலமாக செயல்பட்ட விஸ்வாவுக்கு அன்பான அன்பு. இதுதான் ரியல் ஈடுபாடு!
ReplyDelete2. ஏதோ வழக்கமாக 10ம் தேதிதானே புக் வரும் என்பது போல ஆசிரியர் கூலாக இந்தப்பதிவை எழுதியிருப்பதைக் காணமுடிகிறது. இதை செ.புக் பேருக்காக என கருத்தில் கொண்டு பொறுத்துக்கொள்கிறோம். இதை வழக்கமாக்கிவிடாமல் பிப்ரவரியில் ஒன்றாம் தேதியே கமிட் செய்ததைப்போல 4 புத்தகங்களும் கைக்குக் கிடைக்குமாறு ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். (என்னடா இது புதுசா சந்தாதாரர் ஆனாலும் ஆனாங்க, இவங்க இம்சை தாங்கலையே -ஆ.)
3. சந்தா ஒருபுறம் இருந்தாலும், சந்தாவுக்கு வெளியே சிறப்பிதழ்களை அவ்வப்போது சூழல் பார்த்து குண்டு குண்டாக வெளியிடலாம் என்பது என் கருத்து. குறிப்பாக செ.புக் பேர் விற்பனையில் இதுபோன்ற குண்டு புத்தகங்கள் சரமாரியாக விற்பனையாகும். (அவர்கள் புதிய வாசகர்களாகவும் ஆகக்கூடும் என்பது போனஸ்!)
4. முடிவு பண்ணிவிட்டீர்கள், ஆக 2014ல் ஒல்லிப்புத்தகங்கள்தான் என்று. சரி, இதனால், விற்பனையோ, புதிய வாசகர்களின் எண்ணிக்கையோ அதிகமாகிறதா என்பதை நன்கு கவனிக்கவும். பயனிருந்தால் மகிழ்ச்சி. இல்லையெனில் 2015ஆவது மீண்டும் 2013ஆக மலரவேண்டும் என வேண்டுகிறேன். என்னதான் நாம் செண்டிமெண்டாக பேசிக்கொண்டாலும், வாசகர்களின் பொருளாதாரச் சிக்கல்களை கணக்கில் கொண்டாலும் தரமான காமிக்ஸ் என்பது ஓரளவு பொருளாதார தன்னிறைவு பெற்றவர்களுக்குத்தான். இதுதான் ரியாலிடி. இதை முதலில் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
100 பக்கங்களுக்குக் குறைவாக காமிக்ஸ் புத்தகங்கள் ஒரு நிறைவைத் தரவே முடியாது. (அப்பட்டமான குழந்தைகள் கதைகள் தவிர்த்து). என்னைப் பொருத்தவரை புத்தகங்களின் சைஸ் பற்றியோ/ வண்ணம்- க&வெ பற்றியோ/ கதைத் தேர்வு பற்றியோ/ ரீப்பிரிண்டுகள் பற்றியோ எந்தக் கவலையுமில்லை. ஒரே கவலை பக்கங்கள் மட்டும்தான். பக்கங்கள் குறைந்தது 100ஆவது இருக்கவேண்டும். 60 விலையில் வரும் 50 பக்க வண்ண இதழ்களை ‘நிலவொளியில் நரபலி’ சைஸில் 100 பக்கங்களாக தரக்கூடிய வாய்ப்பிருக்கிறதா? கொஞ்சம் ஆறுதலாகவாவது இருக்கும்.
5. புதிய வருடம், புதிய வேலை, தூரத்தில் அலுவலகம் என்பதால் நீண்ட போக்குவரத்து நேரம், போனில் மட்டுமே நெட் என இயங்கிக்கொண்டிருப்பதால் அடிக்கடி இங்கு வரமுடிவதில்லை. இனியும் கொஞ்ச காலத்துக்கு இப்படித்தான் நிலை இருக்கும். ஆனால் தினமும் ஒரு முறை பார்த்துவிடுகிறேன். போட்டியில் கலப்பதுதான் கொஞ்சம் சிக்கலாகும் போல இருக்கிறது.. ஹிஹி! மண்ணு கவ்வுவதும் குறையும். (அதற்காக ரொம்பவும் சந்தோஷப்படவேண்டாம். வீக் எண்ட்களில் வந்து நிச்சயம் கருத்து தெரிவிக்கப்படும். கருத்து சொல்லாமல் எல்லாம் இருக்கமுடியாது. ஹிஹி!)
6. மீண்டும் ஒரு முறை நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
நண்பரின் நான்காவது பாயிண்ட் இல் 2 வது பத்திக்கு
Delete+ 2014....
@ஆதி
Deleteகொஞ்சம் லேட் என்றாலும் செம ஹாட்! புதிய பணி மாறுதலைக் கொடுத்த இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பல புதிய சந்தோசங்களை அள்ளித்தர என் வாழ்த்துக்களும்!
குண்டு புத்தகங்களை ஆராதிப்பவன் என்ற முறையில் உங்கள் கருத்துக்களுக்கு பலமாக உடன்படுகிறேன். ஆனால் ஒல்லியை ரசிப்பதும், குண்டை ரசிப்பதும் அவரவர் ரசணை சார்ந்த விசயங்கள் என்பதால் நாம் கொஞ்சம் விட்டுப்பிடிப்போமே; இந்த ஆண்டு மட்டுமாவது! கார்த்திக் போன்ற 'குண்டு புக்' எதிர்ப்பாளர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? (குண்டாக எதைப் பார்த்தாலும் ஆத்திரமடைந்து, ஓடிப் போய் ஜன்னல் கம்பியைக் கடிக்கிறாராம் அந்த மனிதர்!) ஹி ஹி!
// இதை வழக்கமாக்கிவிடாமல் பிப்ரவரியில் ஒன்றாம் தேதியே கமிட் செய்ததைப்போல 4 புத்தகங்களும் கைக்குக் கிடைக்குமாறு ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். //
Deleteபிப்ரவரியில் நான்கா, மூன்றா அல்லது இரண்டா என்பது தெரியவில்லை, ஆனால் 1ஆம் தேதி அல்லது அதற்கு முன்பே வெளிவரும் நடைமுறை பலவகையிலும் சிறந்தது.
60 விலையில் வரும் 50 பக்க வண்ண இதழ்களை ‘நிலவொளியில் நரபலி’ சைஸில் 100 பக்கங்களாக தரக்கூடிய வாய்ப்பிருக்கிறதா?
Delete+1..
நண்பர் வழியே என் வழி(லி)யும்.. Want to see BIG BOOK!!!!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசார் ...இந்த சின்ன பதிவால் நண்பர்கள் இடைய உற்சாகம் குறைந்துள்ளது போல உள்ளதால் உடனடியாக ஒரு சந்தோசமான சேதியொடு மீண்டும் வரவும் ..
ReplyDelete+1
Deleteஇந்தமாதப் புத்தகங்கள்தான் ஒல்லிப்பிச்சான்களாக வரயிருக்கிறது என்றால், பதிவுகளுமா?
ஒல்லிப் புத்தகங்களும், ஒல்லி பதிவுகளும் என்றுமே உற்சாகத்திற்கு எதிர் வினை புரிபவை! :)
This comment has been removed by the author.
ReplyDeletereally amazing cover Arts
ReplyDelete60 விலையில் வரும் 50 பக்க வண்ண இதழ்களை ‘நிலவொளியில் நரபலி’ சைஸில் 100 பக்கங்களாக தரக்கூடிய வாய்ப்பிருக்கிறதா?
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு தயார் தோழர்களே!
ReplyDeleteஒரு கூட்டணி கனவு படிக்க செல்லுங்கள்.