நண்பர்களே,
வணக்கம். நேற்றைய பொழுது ஜனவரியின் இதழ் # 3 அட்டகாசமாய் அச்சாகி முடிந்தது என்பது தான் லேட்டஸ்ட் update ! இதோ நெடு நாள் கழித்து மறு பிரவேசம் செய்திடும் ப்ரூனோ பிரேசிலின் அட்டைப்படம் + உட்பக்க preview ! இதன் ஒரிஜினல் அட்டைப்படத்தினை ஓவியர் வில்லியம் வான்ஸ் வரைந்துள்ளது 1967-ல் !! பின்னாட்களில் அவர்களே இக்கதையை மறுபதிப்பு செய்த வேளையினில் உருவான இன்னொரு அட்டையும் உங்கள் பார்வைக்கு இங்கே ! சென்றாண்டில் "ப்ரூனோ -சீசன் 2" கூட பெல்ஜியத்தில் துவங்கியுள்ளதும் - 3 கதைகள் கொண்ட 2 மறுபதிப்பு அல்பம்கள் அட்டகாசத் தரத்தில் அங்கு வெளியாகி - பிரமாதமாய் விற்பனை ஆகி வருவதையும் அறிந்திட முடிந்தது ! நமக்கு வந்துள்ள இந்த இரு ஆல்பம்களின் மாதிரிகளையும் பார்க்கும் போது நம்பிக்கை பிறக்கிறது - தரமான கதைகளை இன்றைய தலைமுறையும் படித்து ரசிக்கும் போது இது போன்ற golden oldies தொடர்களை அவர்கள் மறுபடியும் உயிரூட்டக்கூடுமென்று ! அவ்விதம் நடக்கும் பட்சத்தில் நமக்குக் கொண்டாட்டமே !
|
1967-ல் ஓவியர் வான்ஸ் வரைந்த அட்டைப்பட டிசைன் |
|
90'களில் இக்கதை தனியாக மறுபதிப்பான சமயம் ! |
|
வண்ணத்தில் இப்போது... |
|
Black & white-ல் சித்திரங்களைப் பாருங்களேன்...! |
இது வரை முடிந்துள்ள 3 இதழ்களுமே அட்டகாசத் தரத்தில் நம்மாட்கள் அச்சிட்டுள்ளனர் என்பது மிகுந்த சந்தோஷம் தருகிறது ! பிழைகளைக் களைந்திட நாங்கள் எடுத்து வரும் முயற்சிகள் வெற்றி தருவதை உணர்ந்திடும் போது - அந்த சந்தோஷம் ஒரு படி அதிகமானது என்று கூடச் சொல்லலாம் ! தோர்கலும் தொடரும் நாட்களில் இதே தரத்தில் உருவாகி விட்டால் அற்புதமான மாதமாகிடும் இந்த ஜனவரி ! சென்னைப் புத்தக விழா கூப்பிடும் தொலைவுக்கு நெருங்கி விட்ட வேளையினில் அதன் பொருட்டு வேலைகளும் இன்னொரு பக்கம் நடந்து வருகின்றது ! ஸ்டாலில் நமக்குத் தேவையான banner களின் அளவு : 8 feet x 4.5 feet ! டிசைன் செய்திட விரும்பும் நண்பர்கள் இத்தனை பெரிய சைசில் தங்கள் டிசைனை தயாரிக்க வேண்டிய அவசியமில்லை ; ஆனால் இந்த proportion -ல் ஓரளவுக்கு உயர் resolution -ல் டிசைன் செய்து அனுப்பினால் நாம் அதனைப் பெரிதாக்கி அச்சிட்டுக் கொள்ள இயலும் ! Give it a try please ?
பரபரப்பாய் நவம்பர் இறுதியில் 2013-ன் இதழ்களை தயார் செய்தான பின்னே - ஜனவரி 10 வரை புது இதழ்களுக்கான அவகாசம் உள்ளதென்ற நினைப்போ என்னவோ - ஒரு மெல்லிய சோம்பல் என்னுள் குடி கொண்டு விட்டது என்பது தான் நிஜம். பற்றாக்குறைக்கு 2014-ன் கதைத் தேர்வுகள் ரொம்ப முன்பாகவே செய்து விட்டதால் 2013 செப்டெம்பர் முதலே அவற்றின் மொழிபெயர்ப்புப் பணிகளும் துவங்கி விட்டன ! So இந்தாண்டின் அறிவிக்கப்பட்டுள்ள சகலக் கதைகளின் பிரெஞ்சு + இத்தாலிய மொழிமாற்றங்கள் இப்போதே முழுமையாகத் தயார் ! தமிழாக்கங்களும் இன்னொரு பக்கம் ஓசையின்றிச் சென்று கொண்டிருப்பதால் சமீப மாதங்களில் முதன்முறையாக சற்றே டென்ஷன் இன்றி சுற்றி வந்தேன் ! ஆனால் இப்போது வண்டி திரும்பவும் தண்டவாளம் ஏறும் வேளையாகிவிட்டபடியால் அந்த விடுமுறை mode -க்கு டாட்டா காட்டி விட்டு - work mode -க்கு மீண்டும் கை குலுக்கியாச்சு!
தொடரும் மாதங்களுக்கான திட்டமிடல்கள் ஏற்கனவே உரிய இடத்தினில் இருப்பதால் நம் பார்வைகளை இந்தாண்டின் மெகா ப்ராஜெக்ட் ஆன LION 30--வது ஆண்டுமலரின் மீது தீவிரமாய்த் திருப்பிடும் வேளை மெதுவாகப் புலர்கிறது ! இது தொடர்பாய் மூன்று விஷயங்களில் தீர்மானமாகியுள்ளேன் ; இதழின் பெயர் ; விலை & வெளியீட்டு வேளை என்பதாக ! இதழின் பெயரை ஏப்ரலில் முன்பதிவுகள் துவங்கும் வேளையினில் அறிவிக்கும் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டு - பாக்கி 2 விஷயங்களைப் பகிர்ந்திட இப்பதிவை ஒரு துவக்கமாக்குகிறேன் !
லயனின் மெகா ஆண்டுமலர் - ரூ.500 விலையில் ; 2014 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவின் போது வெளியாகும் ! லயனின் முதல் வெளியீட்டுத் தேதி ஜூலை 15 தான் என்ற போதிலும், இத்தனை பெரியதொரு இதழை வெளியிட ஒரு வாகான platform அமைந்தால் சிறப்பாக இருக்குமென்ற ஆசையினில் இதனை ஆகஸ்ட் வரை சற்றே நீட்டிப்பது தேவலை என்று நினைத்தேன் ! சுலபத் தீர்மானங்களாய் இவை அமைந்து விட்டன ; அடுத்துக் காத்திருப்பதே இமாலயப் பணிகள் என்பதை உணர முடிகின்றது ! "
இந்தக் கதை....கதை தான் வேணும் !" என்று சுற்றித் திரியும் "காதலிக்க நேரமில்லை" நாகேஷைப் போல எனது தற்சமயத் தேடல் - தரமான கதைகள் ! வரவிருக்கும் நமது இந்த mega இதழினில் 464 வண்ணப் பக்கங்கள் இருந்திடும் - வழக்கமான பெரிய சைசில் ! திரும்பிய திசையெல்லாம் - '
அவர்கள் இவர்களோடு கூட்டணிப் பேச்சுவார்த்தை' ; 'இவர்கள் அவர்களோடு கூட்டணி உறுதி !' என்று தலைப்புச் செய்திகளாய் ஓடி வரும் இவ்வேளையில் நாம் ஏன் சளைக்க வேண்டும் ? நமக்கிருக்கும் 464 பக்கங்களை யாருக்கு - எவ்விதமாய் ஒதுக்குவது ? என்ற கலந்தாய்வில் இறங்குவோமே ?!
'
கூட்டணியே வேண்டாம் - மொத்தமாய் 464 தொகுதிகளிலும் ஒரே கட்சியே நிற்கட்டும் !' என்ற குரலெழுப்பும் அணியினரின் வாதங்களையும் ஒதுக்கிட மாட்டோம் ! ஆனால் அவ்விதம் சகல தொகுதிகளிலும் நின்று சோலோவாக தூள் கிளப்பும் ஆற்றல் கொண்ட ஒரே வேட்பாளர் மஞ்சள் சட்டை மாவீரர் மாத்திரமே என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை ! அவ்விதம் நமது கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள் சகலரும் நினைத்திடும் பட்சத்தில் - சுலபமாய் ஒரு தீர்மானம் நிறைவேற்றி விட்டு சுடச் சுட பிரியாணி சாப்பிடக் கிளம்பிடலாம் ! ஆனால் அது தொடர்பான வோட்டெடுப்பினில் ஒத்த கருத்து இன்றிப் போகும் பட்சத்தில் - கூட்டணி வைத்துக் கொள்ளக் காத்திருக்கும் கட்சியினர் அனைவரையும் நாம் முதலில் பொதுக் குழுவில் அறிமுகம் செய்தாக வேண்டியது அவசியம். நமது தற்சமய டாப் ஹீரோக்கள் வரிசையில் லார்கோ வின்ச் ; கேப்டன் டைகர் ஆகியோர் முத்து காமிக்ஸின் நாயகர்கள் என்பதால் அவர்களோடு நாம் பேச்சு வார்த்தை நடத்தப் போவதில்லை ! தவிர இம்முறை வரவிருக்கும் நம் மெகா இதழினில் ஒரு தொடராய்ப் பயணிக்கும் கதையின் இடைச் செருகல்கள் இடம்பிடித்திடாது என்பதால் மேற்படி 2 ஹீரோக்களுமே not in contention ! காமடி வரிசையில் ப்ளூகோட் பட்டாளமும், துப்பறியும் இலாக்காவினில் ரிப்போர்டர் ஜானியும் கூட முத்துவின் சொத்துக்களாய் இருந்து விட்டுப் போகட்டும் என்பதால் - அவர்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டாமே..! திருவாளர்கள் ஸ்பைடர் + ஆர்ச்சிக்கு இடம் நம் இதயங்களில் மாத்திரமே என்பதால் அவர்கள் பொருட்டு சீட்களைக் கோரிடும் வேண்டுகோள்களும் வேண்டாமே ? BATMAN ; ஜேம்ஸ் பாண்ட் ; Tintin போன்ற (தற்சமயத்து) எட்டாக்கனிகளைக் குறி வைத்து அம்பு விடவும் வேண்டாமென்பதும் அன்பான வேண்டுகோள் ! So - இவர்கள் நீங்கலாய் எஞ்சி நிற்கும் நாயகர்கள் + புது அறிமுகங்கள் என நம் தேர்வுக் களம் விரிந்து நிற்கின்றது ! ஒவ்வொரு (முழு) பிரெஞ்சு கதையும் 44 அல்லது 46 பக்க நீளம் கொண்டதென்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு உங்களின் தொகுதி ஒதுக்கீடுகளை....சாரி..சாரி... பக்க ஒதுக்கீடுகளைக் கொஞ்சம் நிர்ணயம் செய்திடுங்களேன் ! இறுதி முடிவு எனதாய் இருக்கும் தான் என்ற போதினிலும், பொதுக் குழுவின் கருத்துக்களே என் தேர்வுகளை செதுக்கிட உதவப் போகிறது என்பதில் ஐயமில்லை ! So - ஜல்தியாய் அந்தக் கரை வேட்டிகளையும் ; துண்டுகளையும் அணிந்து கொண்டு களப்பணியாற்ற விரைந்திடுங்களேன் folks ?!!
சென்னை புத்தக விழாவின் முதல் இரு நாட்களும் நான் நமது ஸ்டாலில் இருந்திடுவேன் ! எப்போதும் போல் உங்களின் வருகைகள் நம்மைப் பெருமைப்படுத்தும் ! The Welcome mat's always out !! Please do drop in guys !
|
Banner Designed by S.Sathish ! |
Wow!! Surprise post!!
ReplyDeleteடியர் சார்,
Delete//லயனின் மெகா ஆண்டுமலர் - ரூ.500 விலையில் ; 2014 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவின் போது வெளியாகும் !//
இந்த ஞாயிறு பொழுதை உங்களின் இந்த அதிரடி அறிவிப்பு மேலும் இனிய நாளாக ஆகியிருக்கிறது!
இம்முறை வரவிருக்கும் நம் மெகா இதழினில் ஒரு தொடராய்ப் பயணிக்கும் கதையின் இடைச் செருகல்கள் இடம்பிடித்திடாது //
இது ஒன்று போதும் சார்! உங்கள் கதைத் தேர்வுகள் சோடை போகாது ெஎன்ற நம்பிக்கை எனக்கு உள்ளது! அதனால் இது வேண்டும் அது வேண்டும் என்று உங்களிடம் கேட்கப்போவதில்லை!
மீண்டும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
hello iam the 2.
ReplyDeletehi
ReplyDelete3 புத்தகங்கள் தயார் எவ்வித குறைபாடும் இல்லாமல் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteமுதல் வெற்றி இந்த ஆண்டு முழுவதும் தொடர் வெற்றியாக இருக்கும்.
அற்புதம் அருமை
ReplyDeleteஆகா பொங்கல் பரிசு அறிவிப்பு 464 பக்கங்கள் 500 விலையில் 30 ஆண்டு மலர்
எடிட்டருக்கும், லயன் முத்து காமிக்ஸ் நிறுவன நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்.
ReplyDeleteலயன் காமிக்ஸின் முப்பதாவது ஆண்டுமலராக லயன் மெகா ஸ்பெஷல் 500 ருபாய் விலையில் வருவது குறித்தான அறிவிப்பை கண்டவுடனே எங்கள்
கண்கள் பனித்தது, இதயம் இனித்தது.
எங்கள் ஃஃபேவரிட் ஸ்பைடர் + ஆர்ச்சிக்கு இதயத்தில் மட்டுமே இடம், கூட்டணியில் இல்லை என்பதை நீங்கள் அறிவித்து விட்டதால்
இப்போதைக்கு புதிய ஹீரொக்களை மட்டுமே மனதில் வைத்து இந்த மெகா கூட்டணி தயாராகிறது என்பது புரிகிறது.
புதிய ஹீரொக்களை களமிறக்கும் எண்ணம் உண்டா சார்? அவர்களை பரிந்துரைக்களாமா?
King Viswa : கூட்டணி பேச்சுவார்த்தை மேஜைக்குப் புதியவர்களும் வந்திடலாம் தான் !
Delete4th
ReplyDeletei am in top five...
ReplyDeleteடியர் எடிட்டர்
ReplyDeleteஇது ஆண்டு மலர் என்பதால் கூட்டணி கதம்பம்தான் அற்புதமாக இருக்கும். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் பழைய நாயகர்களை ஒதுக்கிவிட்டு அனைத்தும் புது அறிமுகங்களாக இருந்தால் அற்புதமாக இருக்கும். அதுவும் கௌபாய், மாயாஜால கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
இல்லை ஒரே நாயகரின் இதழாக இருந்தால் நன்றாக இருக்கும் முடிவெடுத்தாலும் ஏதாவது ஒரு புது கௌபாய் நாயகரை அறிமுகப்படுத்தி முழுமையாக வெளியிடலாம்.
மொத்தத்தில் 30/ம் ஆண்டு தொடக்கம் புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்தால் நன்றாக இருக்கும்.
Mugunthan kumar : "சகலமும் புதுமுகங்கள்" என்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன ! ஏற்கனவே நம்மிடமிருக்கும் நாயகர்களுக்கு ஆண்டுக்கு ஒரு வாய்ப்பு-ரெண்டு வாய்ப்பு என்று ரேஷனில் வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போது - ஏராளமாய்ப் புதியவர்களை அறிமுகம் செய்து விட்டு - அப்புறம் அவர்களுக்கும் அட்டவணையில் இடம் ஒதுக்குவதில் முழி பிதுங்கிப் போகுமே !
Delete464 page tex story ,hurray
ReplyDeletehurray tex coming
Deleteபொறுமை ப்ளீஸ் ...இப்போதைக்கு அதுவொரு சிந்தனை மாத்திரமே !
Deleteடைகர், டெக்ஸ் கதைகளை தவிர்த்து மற்ற நாயகர்களின் கதைகளை மொத்தம் 464 பக்கங்கள் தனியாக படிப்பது என்பது ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்தும் என்பது என் எண்ணம்.
ReplyDeleteMugunthan kumar : வலுவான அபிப்ராயமே !
Deleteசார், லார்கோ ஷெல்டன் கூடவா .....
Delete928 1000
ReplyDeleteஇந்த நம்பர் அனைவரையும் இன்னும் அதிகமாக சந்தோசப்படுத்தும் என்று நினைக்கிறேன்.
30 ஆண்டுகளாக லயனில் வெளிவந்த டாப் ஹீரோக்களின் கலவையாக இருக்கவேண்டும். லயன் டாப் 10 ஸ்பெஷல் போல. ௐரே டெக்ஸ் கதை என்றால் அலுப்பு தட்டும்.
ReplyDelete+30
Delete+1
Delete+1
Deleteடியர் எடிட்டர்..
ReplyDeleteஎன்னுடைய ஓட்டு மஞ்சள் சட்டை மாவீரருக்கே.. இரண்டு அல்லது மூன்று மெகா டெக்ஸ் கதைகள், வண்ணத்தில் சரியான கொண்டாட்டமாக இருக்கும்.. நமது லயனின் 30 வது ஆண்டு மலருக்கு ஞாயம் செய்தது போலவும் இருக்கும்...
நண்பர்களே.. வாருங்கள்... வண்ணத்தில் டெக்ஸ்.. ஒன்று திரள்வோம்.. கொண்டாடுவோம்..
+1000
Deletei m with u guys..
Delete+30000
DeleteMY VOTE FOR TEX ONLY
Delete@ FRIENDS : ஒட்டு மொத்தமாய் டெக்சின் கதைகள் தான் என்று தீர்மானமானால் - எனது வேலை ரொம்பவே சுலபமே !! தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் சூட்சமங்கள் இருந்திடாது கதைகளில்...மொழிபெயர்ப்பில் வேறுபாடு காட்டிடும் அவசியம் எழாது.....கதையின் போக்குகளை நம் பாணிகளுக்கு ஏற்ப எடிட் செய்திடும் சிரமங்கள் நேராது ! So - ரொம்பவே சுலப ஸ்பெஷல் ஆகிப் போய் விடும் எனக்கு !
Deleteஆனால் பெரும்பான்மையினரைத் திருப்தி செய்ய டெக்ஸ் மாத்திரமே போதுமா ? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி !
டெக்ஸ் கதை தனியே வரட்டும் .....ஆனால் இந்த தொகுப்பில் வேண்டாம் சார் ,நமது சிங்கத்தை கட்டு படுத்தி இழுத்து வரும் சிறந்த ஜாம்பவான்களுக்கு இடம் தருவோமே !
Delete1.லக்கி லூக்
ReplyDelete2.சிக்பில்
3.டெக்ஸ்
4.புதிய காமெடி ஹீரோ
5.புதிய கெளபாய்
6.புதிய ஆக்ஷ்ன் ஹீரோ
7.பிரின்ஸ்
8.
எடிட்டர் சார், ஓரு 20 கதைகளை கொடுத்து அதில் 10 ஐ தேர்வு செய்ய poll வைக்கலாம்.
ReplyDelete+30
Delete+100
DeleteESS : நம் நாயகர்களின் பட்டியலை நினைவு வைத்திருப்பதில் என்னை விட நீங்கள் அனைவருமே சிறந்த ஆற்றலாளர்கள் அல்லவா ?
Deleteநண்பர்களே, லயன் ஆண்டு மலருடன் சிங்கத்தின் சிறுவயதில் இணைப்பாக கிடைக்க போராட்டம் ஆரம்பிப்போம்.
ReplyDelete+456
Deleteயாரங்கே ? - வாழைப்பூ வடை இன்னொரு தட்டு தயாராகட்டும் !
Deleteஅன்பு ஆசிரியருக்கு.....உங்களின் அற்புதமான தமிழில் எந்த கதை வந்தாலும் வரவேற்க நாங்கள் காத்துள்ளோம்......
ReplyDeleteதயவு செய்து நமது ஆரம்ப வண்ண தரத்திலும் அச்சுத்தரத்திலும் வெளியிடுங்கள்..
தங்களின் இந்தப்பதிவு உற்சாகத்தை தந்து உள்ளது....மீண்டும் பழைய தரத்தை ரசிக்க காத்துக்கொண்டிருக்கின்றேன்..
==இது வரை முடிந்துள்ள 3 இதழ்களுமே அட்டகாசத் தரத்தில் நம்மாட்கள் அச்சிட்டுள்ளனர் என்பது மிகுந்த சந்தோஷம் தருகிறது!==
ReplyDeleteசந்தோஷம் சார்.. ஆவலுடன் புத்தகங்களை எதிர்பார்த்திருக்கிறோம்!
== லயனின் மெகா ஆண்டுமலர் - ரூ.500 விலையில் ; 2014 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவின் போது வெளியாகும்!==
அட்டகாசம் சார்… குண்டு புக் க்ளப் மெம்பர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி :)
==தவிர இம்முறை வரவிருக்கும் நம் மெகா இதழினில் ஒரு தொடராய்ப் பயணிக்கும் கதையின் இடைச் செருகல்கள் இடம்பிடித்திடாது என்பதால் ==
கார்த்திக் ஹேப்பி!! :))))
கதைத்தேர்வைப்பொறுத்த வரை எதுவாக இருந்தாலும் OK சார்.. பக்கங்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது குறைந்தது 10 கதைகளாவது இருக்குமென்பதால், ஒவ்வொரு கதையும் புதிதாக விதவிதமான கதைக்களத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். நிறைய தரமான ONE SHOT கதைகள் இருக்கக்கூடும். இப்படி புதிதாய் ஏதேனும் முயற்சிக்கலாமே!
காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில் : Oneshot கதைகளின் பெரும்பான்மை நம் மாமூலான கவ்பாய் ; டிடெக்டிவ் ; காமெடி பாணிகளுக்கு விலகி நிற்கும் ஆக்கங்கள் ! அவற்றை ஒட்டு மொத்தமாய் இது போன்றதொரு லேண்ட்மார்க் இதழில் றிமுகம் செய்து விட்டு மீண்டும் ஒரு தர்மசங்கடத்தை வாசகர்களின் ஒரு பகுதிக்குத் தந்திடுவது முறையாகாது என்று நினைக்கிறேன் !
Deleteஅவ்வித oneshots நமது கிராபிக் நாவல் வரிசைக்குப் பொருத்தமாய் இருந்திடலாம் !
3 புத்தகங்கள் தயாரானது மகிழ்ச்சிகரமான சேதி! 30வது ஆண்டு மலர் பற்றிய அறிவிப்பு GREAT SURPRISE!
ReplyDeleteஆகா கார்சனின் கடந்த காலம் என் கண்முன்னே தெரிகிறது..
ReplyDeletebalaji ramnath : மார்கழிப் பனியில் எனக்குத் தெரியக் காணோமே..?
Deleteசார் கோவை அருகே பளிச்சென தெரிகிறார் , சிவகாசிக்கு ஈ விஜயுடன் வேக வைத்த ஆப்பிள் கொடுத்து அனுப்பி வைக்கிறோமே !
Delete30ம் ஆண்டு மலர் Tex willer, lucky luke தவிர மற்ற கதைகளின் நாயகர்கள், நாயகிகள் புதுமுகங்களாக அதிரடியில் அசத்துபவர்களாக இருந்தால் அதிரடி Surprise மலராக 30ம் ஆண்டு மலர் மலர வாய்ப்புண்டு!
ReplyDelete//லயனின் மெகா ஆண்டுமலர் - ரூ.500 விலையில் ; 2014 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவின் போது வெளியாகும் !//
ReplyDeleteமுன்பதிவுசெய்ய நான் இப்பவே ரெடி. ஹீரோக்கள் யார் என்றாலும் ஓகே. உங்கள் தேர்வு சரியாகவே இருக்கும்.
சிசி.வயதில் பார்ட் பார்ட்டாக (10,15 பக்கங்களாவது ) வெளியிட இதிலிருந்து ஆரம்பித்தால் அருமையாக இருக்கும்.
ReplyDeleteஇதற்கு பெயர் பொக்கிஷம்?
அருமையான அறிவிப்பு சார்! உங்க தேர்வுகள் மிக சரியாக பொருந்தும்!!! இது என் கருத்து! கலக்குங்கள்! முன்கூட்டிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆ...ஹா... 30-ஆவது ஆண்டு மலரா?
ReplyDeleteஅசத்தலுடன் தயாராகட்டும்...
முதல் விஷயம்: 464 பக்கங்கள் என்பதால் கிட்டதட்ட 10 கதைகளை வெளியிட வாய்ப்பு உண்டு (44 * 10 கதைகள்). இதில் டெக்ஸ் போன்ற ஜாம்பவான்கள் உள்ளே நுழையும்போது சில பல மாற்ற்ங்கள் நேரிடலாம்.
ReplyDeleteஇரண்டாவது விஷயம்: இது முழுக்க முழுக்க வண்ணத்தில் வரப்போகும் இதழ் என்பதால் மாடஸ்டி ப்ளேஸ், ரிப் கிர்பி, காரிகன் போன்ற (கடந்த 2 ஆண்டுகளில் வெளிவந்த) ஹீரோக்களுக்கு இடமில்லை.
மூன்றாவது விஷயம்: இது முழுக்க முழுக்க ப்ரென்ச்சு கதைகளை (ப்ரான்கோ-பெல்ஜியன்) கதைகளை கொண்டு உருவாக்கப்படவிருப்பதால் இத்தாலிய ஹீரோவாகிய டெஞ்சர் டையபாலிக்’கும் டைலன் டாக்கும் அவுட். (வண்ணத்தில் மட்டுமே என்றபோதே டையபாலிக் + டைலன் டாக் அவுட் தானே?).
ஆனால் இந்த ப்ரெஞ்சு கதை வரிசையில் டெக்ஸ் மட்டும் ஒரு விதி விலக்கு என்று கருத்தில் கொண்டே இந்த கமெண்டை படியுங்கள்.
லயன் காமிக்ஸின் தற்போதைய ஹீரோக்கள்;
1. டெக்ஸ் வில்லர் – இவருடைய கதைகள் அச்சாகும் புத்தக சைஸ் நமது தற்போதைய சைஸில் செட் ஆகுமா? என்று ஒரு கேள்வி உள்ளது. ஆனாலும்கூட ஏற்கனவே லயன் காமிக்ஸ் மெகா ட்ரீம் ஸ்பெஷல், ஜாலி ஸ்பெஷல், கௌ பாய் ஸ்பெஷல் என்று ஏற்கனவே பெரிய சைஸ் புத்தகங்களில் வந்துள்ளதால் அந்த அச்சம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இருந்தாலும்கூட டெக்ஸ் வில்லரின் கதைகள் தனியாக தீபாவளி மலர் போல வருவதையே எதிர்பார்க்கும் வாசகர்கள் பலருண்டு.
ஆனால் இதைப்போன்ற இதழ்கள் வெற்றி பெற டெக்ஸ் போன்ற பெரிய ஹீரோக்களின் பங்கு அவசியமே. So, டெக்ஸ் இஸ் இன். ஆனால் அப்படி டெக்ஸ் வரும்போது கண்டிப்பாக கலரிலேயே வரவேண்டும். இப்போதைய டெக்ஸ் கதைகள் முழு வண்ணத்தில் வருவதால் கலர் பிரச்சினையும்கூட கிடையாது.
2.லக்கிலூக் – லயனின் டாப் ஹீரொக்கள் பட்டியல் இவரின்றி முழுமை அடையாது என்பதால் இவரும் அத்யாவசியம். இதைப்பற்றி இதற்க்கு மேலும் பேச எதுவுமே இல்லை என்பதால் லக்கி இஸ் இன்.
3. கமான்ச்சே – சந்தேகமே இல்லாமல் இந்த சூப்பர் கூட்டணியில் இடம் பிடிக்கப்போகும் இரண்டாவது கௌ பாய் ஹீரோ இவர்தான். ஏற்கனவே இவரது கதைகள் அட்டகாசமான வண்ண ஒவியங்களில் வாசகர்கள் மனதை கொள்ளை கொண்டதால் இவருக்கு நல்ல வரவேற்ப்பு இருக்குமென்பதில் இருவேறு கருத்து இருக்காது.
4. சிக் பில் குழு (அல்லது டாக் புல், கிட் ஆர்டின் குழு): தமிழ் காமிக்ஸ் உலகின் கவுண்டமனி செந்தில் ஜோடியின் சாகசம் இல்லாமல் இந்த சிறப்பு இதழ் நிறைவடையாது. சிக் பில் & கோ இஸ் இன்.
5.டிடெக்டிவ் ஜில் ஜோர்டான் – சென்ற ஆண்டு அறிமுகம் ஆன இவர் முதல் கதையில் பலரையும் கவரவில்லை என்றாலும் கண்டிப்பாக இவருக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். அதுவுமின்றி இந்த மாதிரி ஹீரோக்களை பதிப்பிக்க இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. ஆகையால் ஜில் ஜோர்டான் இஸ் இன்.
மீதம் இருக்கும் 5 ஹீரோக்களை பற்றி நாளைக்கு விவாதிப்போம்.
ஒரு விஷயம் மறந்துவிட்டிர்களே விஷ்வா! டெக்ஸ் வில்லருக்தே 120 பக்கங்களுக்குமேல் தேவைப்படுமே, மீதி 9 ஹீரோக்களுக்கு எப்படி பக்கங்களை ஒதுக்கீடு செய்ய முடியும்? டெக்ஸ் வில்லருக்கு 40 பக்கங்கள் மட்டுமே என்றால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது சந்தேகமே!
Deleteமுதலில் பத்து கதைகள் என்ற கான்சப்டே தவறு என்பது என் கருத்து! டெக்ஸ் கதைக்கு சரிபாதி பக்கங்களில் பெரிய கதையாகவும், மீதி பக்கங்களில் மேலும் 4 அல்லது 5 கதைகளுடன் இந்த ஸ்பெஷல் இதழ் வெளியானால் முழு திருப்தி தரும் என்பதே என் கருத்து! பார்ப்போம் ஆசிரியர் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று!
//முதல் விஷயம்: 464 பக்கங்கள் என்பதால் கிட்டதட்ட 10 கதைகளை வெளியிட வாய்ப்பு உண்டு (44 * 10 கதைகள்). இதில் டெக்ஸ் போன்ற ஜாம்பவான்கள் உள்ளே நுழையும்போது சில பல மாற்ற்ங்கள் நேரிடலாம்.//
DeleteI think Comanche also series story,can't put it in special book
DeleteTrue, But unlike the Serials, it's a Series, whereby every story is a Stand alone in it's own. So........
Deleteஅட்டகாசமான சர்ப்ரைஸ் போஸ்ட்! ஆகஸ்டில் புத்தகம்! இன்னும் எட்டு மாசம்.. மூச்சு முட்டுது.. இப்பவே புக்கைக் காணும் ஆவலை அடக்கமுடியவில்லை. கூட்டணி, தனித்துப்போட்டி என சும்மாவே சாமியாடும் நம் வாசக நண்பர்களுக்கு உருமி வேறு அடித்திருக்கிறீர்கள். பின்னூட்டங்கள் களை கட்டப்போவுது. எனக்கு கதைத் தேர்வுகள் பற்றி பெரிய நாலெட்ஜோ, அனுபவமோ இல்லாததால், வேடிக்கைதான் பார்க்கமுடியும். எதுவானாலும் எனக்குப் பிடிக்கும் என்பதால் அந்தக் கவலையும் எனக்கு இல்லை. 464 பக்கம் என்ற ஒரே தகவலில்தான் என் கண்கள் நிலை கொண்டிருக்கின்றன. அதற்காக இந்த எட்டு மாதங்களைக் கண்ணை மூடிக்கொண்டு பொறுத்துக்கொண்டு காத்திருப்பேன். ரவுண்டாக (கொஞ்சம் B&W ஆவது சேர்த்து) 500 ஆக்கமுடியுமா என்று பாருங்கள். ஹிஹி! அடிக்க வராதீர்கள்.
ReplyDeleteப்ரூனோ பிரேஸில் அட்டை நன்று.
//90'களில் இக்கதை தனியாக மறுபதிப்பான சமயம் !// இது பிரமாதம்!!
/ So - ஜல்தியாய் அந்தக் கரை வேட்டிகளையும் ; துண்டுகளையும் அணிந்து கொண்டு களப்பணியாற்ற விரைந்திடுங்களேன்//
:-)))))))))))) நடக்கும் கூட்டணிக் களேபரங்களை காண மிக ஆவலாக இருக்கிறேன்.
ஆதி தாமிரா : உங்களுக்குக் கூட கரை வேஷ்டி பாந்தமாய் இருக்குமென்று தோன்றியது :-)
Deleteஎனக்குக் கரை வேட்டியா? வட்டச்செயலாளர் வண்டுமுருகன் மாதிரிதான் இருக்கும். :-)))))))))
Delete“என்னய்யா செஞ்சான் எங்க ஆளு? ஏதோ கடைசி கதையில கொஞ்சம் பம்முனாப்புல நடந்துகிட்டான். நீ நல்லவன்னா என்ன செஞ்சிருக்கணும். அவனோட முந்துன சாதனைய எடுத்துச்சொல்லி தேத்தியிருக்கணும். 2 தொகுதி இல்லைன்னாலும் 1 தொகுதியாவது குடுத்துருக்கணும். அத விட்டுட்டு எல்லாவனும் சேந்து ஒரு தொகுதி கூட குடுக்காம அவன விரட்டியிருக்கீங்க.. ஆளு அவுட்டுனு சொல்லி போட்டு சாத்தியிருக்கீங்க.. கேட்டா, மின்னும் 2015ல பாத்துக்கலாம்கிறீங்க.. என்ன கணக்கு இது? நாளைக்கி வர்ற பலாக்காய் இருக்கட்டும், இன்னைக்கி ஒரு களாக்காயாவது வேண்டாமா? என்னா அடி? ஒரு நாயம் வேண்டாமா? ஒரு நீதி வேண்டாமா?
வேணாம், எங்ககிட்ட வைச்சிக்காதீங்க.. எங்களுக்கும் போராடத்தெரியும். ஆனா நாங்க பண்ண மாட்டோம், ஏன்னா எங்களுக்குத் போராடத்தெரியாது!!”
ஆஹா, சூப்பரான அறிவிப்பு! கண்டிப்பாக டெக்ஸ், லக்கி, சிக் பில், கமான்சே, மதியில்லா மந்திரி, கருப்புக்கிழவி, ஜில் ஜோர்டான், வேய்ன் ஷெல்டன், சாகச வீரர் ரோஜர், டிடெக்டிவ் சார்லஸ்(விபரீத விதவை), கேப்டன் ப்ரின்ஸ்(விடுபட்டிருக்கும் ஒரு கதை-La Dynamitera) ஆகியவர்களின் கதைகள் வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் ஸார்!
ReplyDeleteWillerFan@RajaG : பிரின்ஸ் தொடரில் La Dynamitera விடுபட்டுப் போன கதையல்ல - அந்த ஒரு இதழின் பிரெஞ்சுப் பதிப்பு உரிமைகளை மட்டும் புதியதொரு நிறுவனம் அந்நாட்களில் வாங்கி இருந்தது ! அந்நிறுவனமும் தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதால் அக்கதையின் உரிமைகள் கதாசிரியர் + ஓவியரிடம் மீண்டும் தஞ்சமாகி விட்டது ! அதனை மாத்திரம் வாங்குவதென்பது சிக்கலான காரியம் !
Deleteஅதனால் தான் இத்தனை ஆண்டுகளாய் அந்த ஒரு கதையை விட்டு வைத்திருக்கிறோம் !
1 .டெக்ஸ் 2.லக்கிலுக் 3.காமன்சே,4.டைலான் டாக் 5.காரிகன் 6.சிக் பில் 7.டேஞ்சர் டாயாபாலிக். 8.தேர்கல்
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteஅட்டகாசமான அறிவிப்பு.
டெக்ஸ் வில்லர் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும், நமது 30வது ஆண்டு மலரில் பல நாயகர்கள் பங்கு கொண்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. மேலும் அதுவே நமது இந்த முப்பது வருட பாரம்பரியமும் கூட :-)
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நான் இந்தியா வரவிருப்பதால், ஈரோடு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. Fingers crossed!
Radja from France : Welcome mat's out ! நல்வரவு - இப்போதே !
Deleteசூப்பர் ந்யூஸ்! ஆண்டு மலர் அட்டகாசம் செய்யட்டும். டெக்ஸ், லக்கி லூக், சிக்பில் குழு கட்டாயம் இருக்கட்டும். கேப்டன் பிரிஸ் இன் புதிய கதை ஏதேனும் இருந்தால் இணைத்துக்கொள்ளலாமே? காணாமல் போன ஏஜெண்ட் காரிகனின் ஏதேனும் அட்டகாசமான கதைகள் இருந்தால் கொண்டுவந்து ஒரு ரீ-எண்ட்ரி கொடுங்கள் சார். ஃபில்லருக்கு மதியில்லா மந்திரி கட்டாயம் வேண்டும் சார்!
ReplyDeleteசாக மறந்த சுறாவின் அட்டையில் திரு.மாலையப்பனின் ஓவியம் கலக்கல். வான்ஸ் இன் சாயலில்லாமல் தனது பாணியையே கையாண்டிருப்பது ரசிக்கத்தக்கது. வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துவிடுங்கள் சார்!
Correction: //கேப்டன் பிரிஸ்//
Deleteகேப்டன் பிரின்ஸ்
Podiyan : சாக மறந்த சுறாவிற்கு நாம் வரைந்துள்ள ஓவியம் - வான்சின் ஒரு சித்திரத்தின் தழுவலே ! மாலையப்பன் நமது version -ல் தூள் கிளப்பி இருப்பினும் - எல்லாப் புகழும் வான்சுக்கே !
Deleteboss phatham story -ikku vaipu unda?
ReplyDeletekalaimaran elangkeeran : Not for now at least....
Deletecan i buy the new 3 books in chennai book fair?
ReplyDeleteKalaimaran elangeeran: Yes you can buy these 3 books in our stall on friday 10th Jan itself.
DeleteIn fact, you can also buy the 4th book Thorgal also there.
1. டெக்ஸ் இருக்கட்டும்! ஆனால் டெக்ஸ் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியவில்லை.
ReplyDelete2. டிடெக்டிவ் சார்லஸ் நல்ல தேர்வாக இருப்பார்.
3. லக்கி & சிச்பில்'m ஓகே!
4. கமான்சே தேர்வு செய்யலாம்.
5. XIII வாய்ப்பு கொடுக்கலாமே - ஆனால் அடுத்த episode வந்துட்டா தான் சேர்க்க முடியும்.
6. ஹாரர் - ட்ரை பண்ணலாமே சார்!
7. ஒன்று அல்லது இரண்டு புது அறிமுகங்கள் இருந்தால் யாரும் மறுக்க போவதில்லை!
நன்றி கிங் விஸ்வா!
நன்றி காமிரேட்.
Deleteடிடெக்டிவ் சார்லஸ் கதைகள் கலரில் இருக்கவேண்டுமே?
டியர் எடிட்டர்,
ReplyDelete400+ பக்கங்களில், 500 ரூபாயில் என்பது கிட்டத்தட்ட எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், ஒரு மாபெரும் மைல் கல் இதழில் 'தல' டெக்ஸை சோலோவாக பெர்ஃபாமன்ஸ் செய்ய அனுமதிப்பீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை. நிச்சயம் இது ஆனந்த அதிர்ச்சியே! ஒரு NBS சைஸ் புத்தகம் முழுக்கவே டெக்ஸின் கலர்ஃபுல் சாகஸங்களால் நிரம்பியிருக்கப் போகிறதென்பதை நினைத்தாலே இனிக்கிறது.
இந்த மகிழ்ச்சி ஒருபுறமிருக்க, ஆண்டாண்டு காலமாய் சிங்கத்துடன் கைகோர்த்து பயணம் மேற்கொண்டுவரும் மற்ற நாயகர்களை இப்படியொரு மைல் கல் இதழில் புறம்தள்ளி வைப்பதும் கொஞ்சம் நியாயக் குறைச்சலாகவே படுகிறது.
எனவே,
இங்கு மற்ற சில நண்பர்கள் சொல்லியிருப்பது போலவே -புத்தகத்தின் பெரும்பான்மையான பக்கங்களை டெக்ஸ் ஆக்கிரமிக்க, மீதப் பக்கங்களை இதுவரை VRS வாங்கிடாத மற்ற நாயகர்கள் அலங்கரிப்பது 30வது ஆண்டு மலருக்கு அழகு சேர்க்கும் என்பது என்னுடைய கருத்து! லக்கி, சிக்-பில் ஆகியோர்க்கு ஒவ்வொரு கதைகள் கொடுத்ததுபோக ஒரு திகில் கதையும், ஒரு டிடெக்டிவ் கதையும் இடம்பெறலாம்; வெரைட்டியாகவும் இருக்கும். (கதம்ப இதழை வெறுக்கும் கணவான்கள் மன்னிப்பார்களாக!) ;)
இல்லை.... 'அட்டை-டூ-அட்டை டெக்ஸ் மட்டும்தான்' என்றாலும் தனிப்பட்ட முறையில் ஏக குஷியே எனக்கு! :)
'தல' டெக்ஸின் புகழ் ஓங்குக!
+ 464
Deleteடியர் விஜய்,
Deleteஉண்மையிலேயே சென்ற வருடம் ஈரோடு புத்தக திருவிழா அருமையான கொண்டாட்டமாக அமைந்தது. இந்த வருடம் அதை எல்லாம் விட சூப்பர் ஆக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. சென்னை NBS ரிலீஸ் போல, இந்த வருடம் ஈரோடு லயன் மெகா ஸ்பெஷல் :)
கதை தேர்வை பொறுத்தவரை எண்கள் தலைவர் போட்டியில் கலந்து கொள்ளாமல், வெளியிலிருந்து ஆதரவு தருவதால் எனக்கும் FULL டெக்ஸ் அல்லது கதம்ப மாலை எதுவாக இருப்பினும் சம்மதமே :)
போராட்ட குழு தலைவரிடம் சொல்லி, சி.சி.வயதில் தொகுப்பையும் ஈரோடு புத்தக விழாவில் வெளியிட வேண்டி ஆசிரியருக்கு மடல் எழுத சொல்லலாமே ?
+500
Delete+1000
Deleteடியர் ப்ளூ,
Deleteஉண்மைதான்! சென்ற வருட ஈரோடு புத்தகத் திருவிழாவில் அறிமுகமான பல புதிய நண்பர்களும் இந்த வருடம் இன்னும் ஆர்வமாகப் புத்தகத்திருவிழாவில் பங்கேற்கக் காத்திருக்கிறார்கள் என்பதோடு, எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 'லயன் 30வது ஆண்டு மலர்' வெளியீடும் கொண்டாட்டத்தைப் பன்மடங்காக்கிடப் போகிறது. காலச் சுவடிகளில் பதிவு செய்யப்படவிருக்கும் இச்சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்தேறவிருப்பது என்னைப் போன்ற ஈரோடுவாசிகளுக்கு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் விசயமே! அந்த நாட்களுக்காகக் காத்திருக்கிறேன்.
'சி.சி.வயதில்' தொகுப்பு வெளியிடக் கோரிடும் போராட்டத்திற்கான அடுத்த கட்டம் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்த பின்பு தீவிரமாக்கப்படும்.
இதற்கிடையே, சென்னை புத்தகத் திருவிழாவில் கிடைத்த கேப்புகளில் எல்லாம் பங்குகொள்ளப் போகும் நமது போராட்டக் குழுவின் திருப்பூர் மாவட்டச் செயலாளரான தங்களுக்கு, எடிட்டரை சென்னையிலேயே மடக்கி 'சி.சி.வயதில்' உள்ளிட்ட இன்னும் சில கோரிக்கைகளை வென்றெடுப்பீர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையிலும் காத்திருக்கிறேன்...
சிங்கத்தை சீண்டி விளையாடுவோம். வெற்றி நமதே!
டியர் விஜய்,
Delete// சிங்கத்தை சீண்டி விளையாடுவோம். வெற்றி நமதே! //
கண்டியப்பாக :)
Erode VIJAY : //ஆண்டாண்டு காலமாய் சிங்கத்துடன் கைகோர்த்து பயணம் மேற்கொண்டுவரும் மற்ற நாயகர்களை இப்படியொரு மைல் கல் இதழில் புறம்தள்ளி வைப்பதும் கொஞ்சம் நியாயக் குறைச்சலாகவே படுகிறது.//
Deleteஅட...ஆமாம்லே ?
Erode VIJAY : சென்னை நந்தனம் பகுதிகளில் வாழைப்பூவிற்கும், வடை சுடும் எண்ணெய்க்கும் திடீர் மவுசாம்..! காற்று வாக்கில் கேள்விப்பட்டேன் !
Deleteஎனக்கு கண நேரத்தில் ஒரு அகுடியா தோணுது..
Deleteலயன் தேர்ட்டி டபுள் தமாக்கா ஸ்பெஷல்னு பேர் வைச்சி தலா 300 பக்கம்னு ரெண்டு குண்டு போட்டா எப்பிடி இருக்கும்? ஒண்ணுல தனி ஆவர்த்தனமா டெக்ஸ் தூள் கிளப்பட்டும். மற்றது ஒரு கதம்பமா மலரட்டும்!!
மில்லியன் ஹிட்ஸ் குண்டு, கிராஃபிக்ஸ் குண்டா இருக்கலாமே..மே..மே!! :-))))))))
(டைகர் கதை இதில் வரவேண்டாம். நாங்க கூட்டத்தோட கோயிந்தா போட விரும்பல.. மின்னும் குண்டுல சேர்த்துவைச்சி காமிக்ஸ் உலகை அதிரவைச்சுக்கறோம்!! போங்கப்பா!!)
(கிடைக்கிற கேப்புல எல்லாம் குண்டு வைக்கிறான்யா..அவ்வ்வ்! -ஆ)
டியர் எடிட்டர் சார்,
ReplyDelete//சென்னை புத்தக விழாவின் முதல் இரு நாட்களும் நான் நமது ஸ்டாலில் இருந்திடுவேன் ! //
சென்னை புத்தக திருவிழா ஜனவரி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிடும், தாங்கள் வெள்ளியன்று மாலை இருப்பீர்களா ?
// லயனின் மெகா ஆண்டுமலர் - ரூ.500 விலையில் ; 2014 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவின் போது வெளியாகும் ! //
உண்மையிலேயே மிக சந்தோசமான புத்தாண்டு பரிசு இதுவே ....
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : //ஜனவரி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிடும், தாங்கள் வெள்ளியன்று மாலை இருப்பீர்களா ? //
DeleteYes sir...!
1. லக்கி லுக்
ReplyDelete2. கிட் ஆர்டின்
3. டெக்ஸ் வில்லேர்
4. மினி லயன் சம்மர் ஸ்பெஷல்(கலரில் வெளியிட முடியும் என்ற கதைகள் மட்டும்)
5. கருப்பு கிழவி கதைகள்
6. மிக்கி, டொனல்ட் கதைகள்
7. கமான்சே
8. ?
9.?
10?
So, will the "million hits special" be after this and before "minnum maranam" right? (its a promise guys nu editor sollirukar,so million hits spl might be expected this diwali. Keeping tat in mind which can be tex spl, 30 yrs young spl can be a kadambam with 5 lion trademark heros and 5 new heros
ReplyDeleteசூப்பர் விஜய் : 'மில்லியன் ஹிட்ஸ்' நெருங்கும் வேளையினில் அதற்கான பணிகளைத் துவக்குவோமே....?! அது தொடர்பாய் சின்னதாய் ஒரு சிந்தனை ஏற்கனவே என்னுள் ஓடி வருகிறது ! நிச்சயம் அதுவொரு மிக வித்தியாச அனுபவமாய் இருந்திடும் என்பதை மாத்திரம் இப்போது என்னால் சொல்ல முடியும் ! Wait n' watch please..!
Deleteஆஹா நான் கண்டு பிடித்து விட்டேனே ! ஐநூறு விலையில் கருப்பு வெள்ளை கதைகள்தானே அவை !
Deleteசார் அட்டை படங்கள் அனைத்தும் தூள் !
ReplyDeleteபோங்க சார் ! வெறும் ஐநூறு ரூபாயிலா ....
ReplyDelete+1.குறைந்தது rs.700 or Rs.800/- இல் . NBS விட பெரிய (தடிமனான ) புத்தகமாகவே எதிர்பார்த்தேன்!
Deleteகதை தேர்வில் உங்கள் விருப்பம் எதுவானாலும் பெஸ்ட் ஆகவே இருக்கும்.
தயவு செய்து சிங்கத்தின் சிறுவயதில் -குறித்து ஏப்ரல்-இலாவது உறுதி செய்யுங்கள்.
அதனை ஆண்டு மலருடன் + தனி புத்தகமாக பெற 500+? செலுத்துவதாக இருந்தாலும் கூட சரி தான். விரும்பும் நண்பர்கள் மட்டும் வாங்கி கொள்ளலாம், விஜயன் சார்.
+1.குறைந்தது rs.700 or Rs.800/- இல் . NBS விட பெரிய (தடிமனான ) புத்தகமாகவே எதிர்பார்த்தேன்!
Delete//அந்த "நண்டு பிரை"- அதுதான் சார் "கார்சனின் கடந்த காலம் " அதை இடம்பெற வைக்க இதுதான் தருணம் . ப்ளீஸ் சார் ?//
Deleteபழைய மறுபதிப்பு இதில் முடியாது என்பதெல்லாம் வேண்டாம் சார் ! இதனை ஒரு remake என கொள்ளலாமே ! வண்ணம் மற்றும் பெரிய சைசில் வருவதால் ! விற்பனைக்கு ஐம்பது சதம் உதவட்டும் ! ஐநூறு +முன்னூறு விலையில் இதனை தனியாக கூட இடலாமே !
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : "" வெறும் ஐநூறிலா ?" என்பதையே.."ஐ ....-நூஊ ....று......ரூபாயிலா ?" என்ற modulation -ல் சொல்லிப் பாருங்களேன்..! பிரம்மாண்டம் கூடித் தெரியலாம் !
Deleteசார் அநியாயம் இது ஐநூறே என குறைத்திருக்க வேண்டும் MODULATIONஐ
Deleteடியர் எடிட்டர் ,
ReplyDeleteசூப்பர் அறிவிப்பு . லயனின் 30 வது ஆண்டு மலர் எமது கைக்கு எட்டும் தூரத்தில் . 7 மாதங்கள் என்பது சீக்கிரமே உருண்டோடி விடும் . ஒரு குண்டு புக் என்பதும் கூடுதல் சந்தோசம் ."சாக மறந்த சுறா " அட்டை படம் சூப்பர் . சித்திரங்களும் அருமை . வில்லியம் வான்ஸ் அவர்களுக்கு நன்றிகள் . 3 வெளியீடுகள் முடிந்ததும் , நான்காவது வேலைகள் நடைபெறுவதும் , எப்போது புத்தகம் 4ம் எனது கையில் தவழ போகின்றதோ என ஏக்கமாக உள்ளது . ஆண்டு மலருக்கான உங்களின் தெரிவுகள் என்றும் அருமையாகவே இருக்கும். ஒரு நாயகரின் முழு ஆதிக்கத்தில் விடாமல் N B S போல் சூப்பர் ஆக வெளியிடுங்கள் சார் . லார்கோ , கேப்டன் டைகர் , இல்லை என்றால் வெய்ன் ஷெல்டன் ஆவது வெளியிடவும் , மற்றும் என்றும் இரவு கழுகார் அச்சாணியாக இருப்பார் . அந்த "நண்டு பிரை"- அதுதான் சார் "கார்சனின் கடந்த காலம் " அதை இடம்பெற வைக்க இதுதான் தருணம் . ப்ளீஸ் சார் ?
//அந்த "நண்டு பிரை"- அதுதான் சார் "கார்சனின் கடந்த காலம் " அதை இடம்பெற வைக்க இதுதான் தருணம் . ப்ளீஸ் சார் ?//
Deleteபழைய மறுபதிப்பு இதில் முடியாது என்பதெல்லாம் வேண்டாம் சார் ! இதனை ஒரு remake என கொள்ளலாமே ! வண்ணம் மற்றும் பெரிய சைசில் வருவதால் ! விற்பனைக்கு ஐம்பது சதம் உதவட்டும் ! ஐநூறு +முன்னூறு விலையில் இதனை தனியாக கூட இடலாமே !
Thiruchelvam Prapananth & கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : மலையைக் குவிந்து கிடக்கும் கதைகளுள் எவற்றைத் தேர்வு செய்வதென்ற திக்குமுக்காட்டத்தினில் இருக்கும் வேளையில் - "மறுபதிப்பு அல்லது ரீமேக்" என்ற பெயரில் அரைத்த மாவை மீண்டுமொரு முறை அரைக்க இது களமாகாது நண்பர்களே ! A time for everything ...and everything in it's time..!
Deleteஇது போதும் சார் மயிலு ரயிலு வரும் வரை காத்திருப்பா !
Deleteடைகர் மாஸ் ஹீரோ. அவர் இல்லாமல் ஒரு ஸ்பெஷல் வெளியீட நம்ப முடியவில்லை. Even though he belongs to muthu comics he might be considered for this mega issue
ReplyDeleteVadivelu Manickam & discoverboo : தொடரின் சங்கிலிகளை நாம் இம்முறை தொந்தரவு செய்வதாக இல்லை நண்பர்களே...! டைகர் கதைகளில் எஞ்சியுள்ள சகலமும் ஒன்றுக்கொன்று தொடர்போடு நகரும் episodes !
Delete// போங்க சார் ! வெறும் ஐநூறு ரூபாயிலா ....// +1.
ReplyDeleteகுறைந்தது rs.700 or Rs.800/- இல் . NBS விட பெரிய (தடிமனான ) புத்தகமாகவே எதிர்பார்த்தேன்!
கதை தேர்வில் உங்கள் விருப்பம் எதுவானாலும் பெஸ்ட் ஆகவே இருக்கும்.
தயவு செய்து சிங்கத்தின் சிறுவயதில் -குறித்து ஏப்ரல்-இலாவது உறுதி செய்யுங்கள்.
அதனை ஆண்டு மலருடன் + தனி புத்தகமாக பெற 500+? செலுத்துவதாக இருந்தாலும் கூட சரி தான். விரும்பும் நண்பர்கள் மட்டும் வாங்கி கொள்ளலாம், விஜயன் சார்.
// விரும்பும் நண்பர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் //
Delete+1
Siva Subramanian : இரண்டே பின்னூட்டங்களுக்கு மேலே "அரைத்த மாவு" என்ற சங்கதி ஒன்றினை வேறொரு கேள்விக்குப் பதிலாய்ப் பதிவு செய்திருந்தேன் சார்...அதுவே இங்கேயும் கூடப் பொருந்துமென்று நினைக்கிறேன் !
Deleteசார் முன்பு லயன் மெக ட்ரிம் ஸ்பெஷலில் டைகர் வந்துள்ளார்.ஆதானல் லயன் வந்த காதநாயகர்களை மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளாமால் எல்லா heroes வருகிறார்போல் இருந்தால் தான் 30வது ஆண்டு மலர் சிறப்பாக இருக்கும் ட்ரை பண்ணுங்கள் சார் ஒரு டெக்ஸ் வில்லர் கதை.டைகர் கதை.சீக்பில்,லக்கி லுக்.மர்ம மனிதன் மர்டின்.காமன்சே. இவர்கள் எல்லாம் இருந்தால்தான் அந்த மலருக்கு சிறப்பாக இருக்கும்
ReplyDeleteடைகரின் கடைசி கதைகள் போரில்லாமல் போர் அடிக்க ஆரம்பித்து விட்டன ! விறு விருப்பான கதைகள் குறைந்தது போல உள்ளதே !
Delete+1
Delete+1
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : டைகரின் தொடரின் டாப் கதைகள் சகலமும் நாம் ஏற்கனவே வெளியிட்டு விட்டோம்..எஞ்சி நிற்பவை இளம் பிராயத்து டைகரை முன்னிலைப்படுத்தும் சாகசங்கள் மட்டுமே ! யதார்த்தம் இதுவே !
Deleteஅப்போ மாறிடுவோம் கமான்செவுக்கு !
Deleteஅல்லது அப்படி தரமுடியாது என்றால் முழுவதும் டெக்ஸ் வில்லரின் கதையாக கொடுத்து விடுங்கள்
ReplyDeleteranjith ranjith : பார்க்கலாமே - பெரும்பான்மையினரின் விருப்பம் என்னவென்று..!
Delete+1
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteஎன்னுடைய விருப்பம்:
எட்டு அல்லது பத்து பாகங்களில் முடிவுற்ற முழுநீளத் தொடர்கள், ஒரே இதழாக! உதாரணத்திற்கு:
1. The Metabarons : நாம் இதுவரை கால்வைக்கத் துணியாத Science Fiction - இந்த ஜானரை நமது வாசகர்களுக்கு அறிமுகப் படுத்த இது ஒரு சிறந்த தருணம்!
(அல்லது)
XIII / கமான்ச்சே போன்ற பெரிய தொடர்களின் முதல் பத்து பாகங்கள் / கதைகள்! உதாரணத்திற்கு:
2. The Bouncer : டெக்ஸ் வில்லர் மற்றும் ப்ளூபெர்ரிக்கு இணையானதொரு, வைல்ட் வெஸ்ட் ஆசாமி! அசத்தலான ஓவியங்கள் இந்தத் தொடரின் ப்ளஸ் பாய்ன்ட்; ஆனால், கத்திரிக்கு நிறைய வேலை வைக்கக் கூடிய கதை!
3. Jeremiah : நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ஹெர்மனின் ஓவியங்கள்; உலகப் பேரழிவுக்குப் பின் அமெரிக்காவில் நடக்கும் உள்நாட்டு போர் / கலவரங்கள் பற்றிய ஒரு சாகசப் புனைவு!
மேலே உள்ள தொடர்கள் ஒரு உதாரணத்திற்கு மட்டுமே! இவற்றைப் போன்ற வேறு புதிய தொடரை (தனித் தொகுப்பாக) அறிமுகப் படுத்தினாலும் ஓகே தான் - முடிந்தால் Hard bound அட்டையுடன், இடமிருந்தால் அந்தத் தொடர் பற்றிய Special Features உடன்!
அருமை !
Deleteஅருமையான யோசனை 30/வது ஆண்டு மலர் ஒரு புதுமையான மலராக இருக்கும்.
DeleteThe Bouncer /க்கு +9999999999999999999999999999999999
அந்த 'Bouncer'ஐ கண்டிடும் ஆவல் அதிகரிக்கிறது. இப்போதில்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது, மார்கெட் இழந்துவரும் கேப்டன் டைகருக்கு (நெசமாவே வருத்தப்படுறேன், நம்புங்க) ஒரு மாற்றாக இவர் அமைவார் என்ற நம்பிக்கை உள்ளது. 'கத்தரிக்கு நிறைய வேலை இருக்கும்' என்று கார்த்திக் கூறியிருப்பது ஆர்வத்தை அதிகரிக்கிறது. எப்படியும், ஆடை வரையும்போது சில இடங்களில் கவனிக்காமல் விட்டுவிடுவது நமது பணியாள நண்பர்கள் வழக்கமாகச் செய்யும் ஒன்றுதானே? ஹி ஹி!
Delete@ கார்த்திக்
நல்ல ஆலோசனைகளே! எனினும், முதன்முறையாக ரூ.500 விலையில் வெளிவரயிருக்கும் இந்த மெகா பட்ஜெட் இதழுக்கு, நமது வாசகர்களுக்கு துளியும் பரிட்சயமில்லாத ஒரு நாயகனின் குதிரையின் மேல் பந்தயம் கட்ட எடிட்டர் 'ரிஸ்க்' எடுக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். இத்தனை விலையிலான புத்தகத்தை காசு கொடுத்து வாங்கிடும் உத்வேகத்தை ஒரு (தீவிர ரசிகர் அல்லாத) சாமானியருக்கு 'ஸ்டார் வேல்யூ' அவசியமாகிறதே! :)
'உத்வேகத்தைப் பெற்றிட' என்று படிக்கவும்.
DeleteJeremiah series is a great one - But its for 18+ Age; and it will certainly needs censors for our audience. Even we can try the other series of Hermann "The Towers of Bois-Maury". Also there is lots of single-shot stories from Hermann which came in English like Afrika, Will Bill is Dead, Beach 1957, Zhong Guo, Abominations, Blood ties, etc). Nearly most of his latest stories are for mature readers; So it will be better for the Sunshine Graphic Novels.
DeleteMost of Karthik's wishes are perfect for our Sunshine Graphic Novels. Even you can include "The Incal" series from Jean Giraud in that.
Being for 30 years edition:- What about celebrating that with the best flavors of Lion/Thigil/Mini/Junior comics kind stories which people still likes a lot.
Example:
Thigil : Tales from the Crypt (from EC Comics)
விஜய் Bouncer ஒரு அருமையான தொடர் ஓவியங்கள் அருமையாக இருக்கும்.
Deleteஅமெரிக்காவில் இருந்து வரும் நண்பரை தொந்தரவு செய்து வாங்கிவர சொல்லி உள்ளேன் விலை நம் ஊர் பணத்திற்கு 1500 ரூபாய், அந்த அளவிற்கு பிடித்திருந்தது.
//ஆடை வரையும்போது சில இடங்களில் கவனிக்காமல் விட்டுவிடுவது நமது பணியாள நண்பர்கள் வழக்கமாகச் செய்யும் ஒன்றுதானே? //
ஆடைகளில் மட்டும் அல்ல கதைகளத்திலும் கத்திரி தேவைப்படும் ஆகையால் ஒத்து வருமா என்று தெரியவில்லை.
இவ்வளுவு நீங்கள் கூறிய பின்னர் பார்க்கும் ஆவல் அதிகரிக்கிறது நண்பர்களே !
DeleteKarthik Somalinga & friends : Sci-fi ரகக் கதைகளை நாம் முயற்சி செய்ய விரும்பும் பட்சத்தில் நமக்கு options ஏராளமாய் உள்ளன ! ஆனால் ஒரு புது ஜானரை அறிமுகம் செய்வதோடு 'ஏக் தம்மில்' அதனை 450+ பக்கங்களுக்கு ஒரே இதழில் அடைப்பது நிச்சயமாய் ஓவர்டோஸ் ஆகிட வாய்ப்புள்ளது ! Sci-fi நிச்சயம் 2015-ல் நம் திட்டமிடல்களில் இருக்கும் - சிறுகச் சிறுக !
DeleteBouncer தொடரைப் பொறுத்த வரை கதைக்களமோ, சித்திரங்களோ ஒரு சிரமம் என்பதைத் தாண்டி அதன் உரிமைகளைப் பெறுவது கிட்டத்தட்ட இயலாக் காரியம் என்பதை நான் ஓராண்டுக்கு முன்பாகவே புரிந்து கொண்டு விட்டேன் ! அவர்கள் விற்பனை செய்து வரும் ஆங்கில / பிரெஞ்சு மார்கெட்களின் செழுமையின் நூற்றில் ஒரு பங்கு கூட நமக்கு சாத்தியமாகாது என்பதை பெரும் பிரயத்தனத்திற்குப் பின் அவர்களுக்குப் புரியச் செய்த போதிலும், அவர்களது ராயல்டி எதிர்பார்புகளுக்கு நம்மால் கிஞ்சித்தும் ஈடு தர இயலவில்லை !
எனினும் முயற்சிகளைத் தொடரவே செய்வேன்...!
P.S: BOUNCER இதழினை நான் பார்த்திடும் பொருட்டு அமெரிக்காவிலிருந்து எப்போதோ அனுப்பி இருந்த நண்பர் நாச்சியப்பனுக்கு தாமதமான நன்றிகள் !
@ஈ.விஜய்,
Deleteகொஞ்சம் காதைக்கொடுங்க.. இவங்க போடுறப்ப போட்டுக்கட்டும். நெக்ஸ்ட் வீக் வர்ற ஃபிரண்டுகிட்ட ப்ளாக்லயாவது ரெண்டு பவுன்ஸரை வாங்கிவரச்சொல்லியிருக்கேன். அப்படி என்னதான் கத்தரிக்கு வேலையிருக்குனு பாத்துடுவோம்.. என்ன சொல்றீங்க? :-)))))))))))))
ஆகா ..ஆகா ....இதற்கு தானே காத்திருந்தாய் பரணி தரா .......
ReplyDeleteசூப்பர் சார் ....
என்னை பொறுத்த வரை தனி டெக்ஸ் சாகசம் சூப்பர் தான் .ஆனால் அவ்வளவு பெரிய புத்தகத்தில் "டெக்ஸ் " மட்டுமே என்றால் அனைத்து தொகுதி களிலும் அவர் வெற்றி பெறுவாரா என்பது மக்களின் கையில் .எனவே மக்கள் பெரும்பான்மை பெற்ற எங்கள் டெக்ஸ் அவர்களுக்கு முன்னுரிமை கொண்டு அதிக தொகுதிகளை ( பக்கங்களை ) ஒதுக்கி விட்டு மற்ற சிறு ,குறு தலைவர்களை அழைத்து கொஞ்சம் தொகுதிகளை ஒதுக்குவது தான் 40 சாரி 30 தொகுதிகளையும் நாம் சுலபமாக கைப்பற்ற முடியும் என்பது பொது குழுவின் முடிவு .அதே சமயம் நமது கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு கொஞ்சமாவது தொண்டர்கள் இருக்க வேண்டும் .எனவே முதலில் இணையும் கட்சி எந்த எதிர்ப்பும் இன்றி இடம் பிடிப்பவர் "லக்கி " கழகம் .இவர் இணைந்தாலே நமது கட்சிக்கு லக்கி தான் .
அடுத்து சிக் பில் அவர்களுக்கும் கொஞ்சம் இடம் ஒதுக்கலாம்.அவர்களிடம் தொண்டர்கள் அதிகம் இல்லா விட்டாலும் "தலைவர்கள் "அதிகம் இருப்பதால் அவர்கள் ஓட்டு நமக்கு அவசியமே ..குற்ற பின்னணி கொண்டவர்களும் ஆத்திர ,அவசியதிக்கு தேவை என்பதால் "டயபாளிக் "அவர்களுக்கு கஷ்ட பட்டு இடம் ஒதுக்கலாம் .ஆனால் அவர் "பழைய கருப்பு வெள்ளை " நோட்டு மட்டும் தான் கொடுப்பார் என்பதால் கொஞ்சம் யோசித்து தான் இடம் ஒதுக்க வேண்டி உள்ளது .ஆனால் ப்ளு கோட் தலைவர் இப்பொழுது எதிர் கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு தொண்டர் படை அதிகம் இருப்பதால் அவர்களை நமது கட்சியில் இழுப்பதற்கு கவலை பட வேண்டாம் .'டைகரை " கழட்டி விட்டதற்கு கவலை வேண்டாம் .அவர் நமக்கு அடங்க மாட்டார் .
ஜில் ஜோர்டன் ..பார்க்க பீகார் தலைவர்களை போல காமடியாக இருந்தாலும் தொண்டர்கள் சீரியஸ் ஆக வேலை பார்ப்பார்கள் என்பதால் ஒரு இடம் ஒதுக்கலாம்.அப்புறம் நம்ம ப்ருனோ அவர்களையும் இணைத்து கொள்ளலாம் .பிரசாரத்திற்கு உதவி செய்வார்.அப்புறம் புது கட்சி ஆரம்பித்தவர்கள் பற்றி இங்கே பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தாங்கள் ஒருவர் தான் என்பதால் "நல்லவர்களாக" பார்த்து தாங்கள் தான் கூட்டணியில் இணைக்க வேண்டும் .
இவ்வளவு "கூட்டணி " நமக்கு அமைந்தாலும் 30 தொகுதிகளிலும் நாம் சந்தேகம் இல்லாமல் வெற்றி பெற வேண்டுமானால் மக்களை "கவனித்து " தான் ஆக வேண்டும் .( என்ன செய்வது ? பழக்கி விட்டார்கள் ) எனவே அனைவருக்கும் "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பை நாம் முன்னரே கொடுக்கா விட்டாலும் "தேர்தல்" அன்று கொடுத்தால் கூட 30 தொகுதிகளும் நமக்கே நமக்கு தான் என்று உறுதியுடன் கூறி விடை பெறுகிறேன் வாக்காள பெரு மக்களே ....நன்றி வணக்கம் ...
டெக்ஸ், சிக்பில், ஜோர்டான், அந்த மாயாஜால கதை, ப்ரூனோ,விமானத்தின் கதை,ஏதேனும் யுத்த கதை ! தப்பி ஓடிய இளவரசி, அசொக்கில் வந்த புதிர் குகை போல சிறார்கள் தூள் கிளப்பும் ஒரு கதையும் இணைத்து வேண்டும் !
Deleteடைகர் இனி விறுவிறுப்பாய் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை !
Deleteடெக்ஸும், டயபாலிக்கும் ஒரே புத்தகத்தில் வர வாய்ப்பில்லை, போராட்டக்குழு தலைவர் அவர்களே!
Deleteப்ளூ-கோட் ஆசாமிகளுக்கு வாய்ப்பளிக்கலாம் என்ற உங்கள் கோரிக்கைக்கு என்னிடமிருந்து 100% ஆதரவு உண்டு.
Erode VIJAY : ஓரிரு மாதங்களுக்கு உங்கள் போராட்டக்குழுத் தலைவரை சென்னை பக்கமாய் அனுப்பி விஷப் பரீட்சை பார்த்திடாதீர்கள் ; நிஜமாகவே கரை வேஷ்டியை அவரது சன்னமான இடுப்பில் சுற்றி விட்டு பேச்சு வார்த்தைகளுக்கு ஹைஜாக் செய்து கொண்டு போய் விடுவார்கள் போல் படுகிறது !
Deleteமனுஷன் தேர்ந்த அரசியல்வாதியாய் காட்சி தருகிறார் சாமி - ஜாக்கிரதை !
இந்தாங்க பரணி, இந்த சோடாவை குடிச்சிட்டு இன்னொரு ரவுண்டு ஆரம்பிங்க.!!
Deleteநீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க, ஆந்தைவிழியார் சென்னை வருகிறார் இல்லையா? பாத்துடுவோம் ஒரு கை! என்னையப் பத்தி உங்களுக்குத் சரியாத் தெரியாது. ஆளு மிஸ்ஸிங்னு ஒரு தகவல்தான் வரும். புடிச்சி கட்டிவைச்சு, சுத்தி உக்காந்து நண்டுவறுவல் சாப்பிட்டு வெறுப்பேத்தி.. சி.சி.வ பாகம்-1 வெளியிட சம்பதிக்க வைச்சிடுறோம்.
:-))))))))))))
குதிரை உட்க்கார்ந்து போக சொன்னா நான் ரெடி
ReplyDeleteஆனா குண்டூசி மேல................நஹி நஹி ...........
கருத்து .........
விலை கொஞ்சம் ஜாஸ்தி பண்ணி
கதையை ஜாஸ்தி பண்ணவும்
பழைய முத்து முப்பதை போட்டுங்க அது போதும்
ReplyDelete2-3 பாகமாக வந்தாலே படிச்சு முடுக்கிறது பெரும்பாட இருக்கிறது.464 பக்கமும் டெக்ஸ் ஆ . ஆளை விடுங்க சாமீ.
ReplyDeleteஅடுத்த ஜென்மத்தில் நீங்கள் இத்தாலியில் பிறந்து, மாதம் இரு டெக்ஸ் கதைகள் படிக்கக் கடவது.
DeleteSaranya Karvendan : விஜய் உங்களுக்கு சாபம் தருகிறாரா - வாழ்த்துகிறாரா ?
Deleteசார் நீங்கள் கொடுத்துள்ள ஒரு பக்கமே தளரா முயற்சி உடைய மனிதனுக்கு எதுவும் சாத்தியமே என அருமையாக நாயன் குறித்து விளக்கி உள்ளது ! மொழி பெயர்ப்பு அருமை , கருத்துக்களும்தான் ! வான்சின் ஓவியகள் வண்ணத்தில் மிளிர்கின்றன ,அந்த தகதகக்கும் கதிரொளியில் மின்னும் அலைகள் அருமையான காட்சி , நீல வண்ணம் மனதை தாலாட்டுகிறது ! அட்டை படம் ஒரிஜினல் இன்னும் அருமை ! வித்தியாசமான அட்டைபடம் கிட்டியிருக்கும் ! நமது அட்டை படமும் தூக்கலே! முன்னட்டை பின்னட்டை என இரண்டயும் உபயோகித்திருக்கலாம் ! தற்போது நமது அட்டை படங்கள் மிளிர்கின்றன ! தரமான அச்சு , ஆகா என் பெயர் லார்கோ அச்சில் மிளிர்ந்து பரவசமாய் மனதிநை கொள்ளை கொண்ட இதழ் ! அது போன்றே இந்த நான்கு இதழ்களும் வர உள்ளது மகிழ்ச்சியே !
ReplyDeleteஆனாலும் வர உள்ள இதழில் லார்கோ, ஷேல்டனுக்கு இடமில்லை என்பது மனதை வாட்டுகிறது ! ஆனால் கார்த்தி போன்ற நண்பர்கள் குதிப்பார்கள் துள்ளி ! எப்படியோ அந்த இதழில் வரும் நாயகர்கள் அனைவரும் முன்னட்டையில் இடம் பிடிக்குமாறு பார்த்து கொள்ளுங்கள் !
ReplyDeleteமனதில் மட்டும் இடம் பிடித்த நாயகர்கள் யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வராதா என கேட்கிறார்கள் ! ஆனால் யானை யார் ! அன்று யானை ,இன்று பூனையாய் மாறி விட்டது ! காலத்தின் ஓட்டத்தில் அவர்களும் இணைவார்கள் எனும் நம்பிக்கை எப்போதுமுண்டு ! பார்ப்போம் !
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //மனதில் மட்டும் இடம் பிடித்த நாயகர்கள் யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வராதா என கேட்கிறார்கள் !//
Deleteஇத்தனை காலமாய் ; இத்தனை தினுசு தினுசான வில்லன்களோடு மல்லுக் கட்டி விட்டு - இப்போது வீட்டில் பேரப் பிள்ளைகளோடு காலம் தள்ளும் நாயகர்களை 'தேமே' என்றிருக்க அனுமதிப்போமே ?!!
இருந்தாலும் பேசி பாருங்களேன் ஸ்பைடரின் பேரனை மீட்டு வர படைப்பாளிகளிடம் !
Deleteஇந்த இதழில் ஜில்லுக்கு, சிக் பில்லுக்கு வேலை கொடுத்து நமது பல்லுக்கு ஓய்வை தடை செய்யுங்கள் ! வயிற்று வலி மாத்திரை தேடி ஓட வேண்டும் நாங்கள் ! ஒரு கதை டெக்சுக்கு நச்சென்று மனதை வருட கார்சனின் கடந்தகாலம் ! வேதாளனுக்கு ஒரு கதை , ரோஜருக்கு மட்றொன்று , சிறுவர்கள் களமிறங்கி கலக்கும் கதை இன்னொன்று ! ஒரு கிராபிக் நாவல் தோர்கள் ! அந்த மாயாஜால கதை ஒன்று முன்னே காட்டி இருந்தீர்களே அதுவும் இடம் பெற்றால் எனது மனதில் எப்போதும் போல இப்போதும் இடமுண்டு தங்களுக்கு !
ReplyDeleteகுண்டு புக்கா ஆஹான்னு நினச்சி முடிக்கிறதுக்குள்ளே டெக்ஸ்சுக்கு முழு புக்கையும் கொடுதுரலாம்ன்னு குண்டு போட்டுடீங்களே சார்.
ReplyDeleteசும்மாவே வாழைபூ வடை சாப்பிட்டு உண்ணாவிரதம் இருப்பார் பரணி. கிளப்பி விட்டுடீங்களே :D
முழுவதும் டெக்ஸ் வருவது ஒரு மைல் ஸ்டோன் தான் என்றாலும், கதம்பம் தான் திகட்டாமல் இருக்கும் என்பது என் கருத்து.
1) டெக்ஸ்
2) லக்கி லுக்
3) கோமான்சே
4) கிட் ஆர்ட்டின் & கோ
5) மினி லயனில் வந்த கதைகள் கலரில் போட முடிந்தால்
6) கிராபிக் நாவல் (ஹி ஹி சில பேர் தெறித்து ஓடுவது தெரிகிறது. அதனால் அழுகாச்சி காவியம் வேண்டாம்.)
7) மீதிக்கு புது கதாநாயகர்கள் / கதாநாயகிகளை இறக்கலாமே.
டைகரை தயவு செய்து ஒரு பிராண்டுக்கு சொந்தமாக்கி போடாமல் விட்டு விடாதீர்கள் என்ற கண்டனத்துடன் ~ ராஜ் குமார்
//டைகரை தயவு செய்து ஒரு பிராண்டுக்கு சொந்தமாக்கி போடாமல் விட்டு விடாதீர்கள் என்ற கண்டனத்துடன் ~ ராஜ் குமார்//
Delete+ 1000000000.........
உண்மையிலேயே, டெக்ஸ் போல நமது டைகருக்கு அதிகமான கதைகள் இல்லை என்பதே உண்மை.
கோவை ஸ்டீல் பட்சி சொன்ன ரகசியம் "ஆசிரியர் 2014 லயன் மெகா ஸ்பெசல் மலரில் கேப்டனுக்கு சீட் கொடுக்காத ரகசியம், அவர் சுயேட்சையாக 2015 இல் வருவதால் தான்..."
2014 - மெகா ஸ்பெஷல் - சுயேச்சை வேட்பாளர் டெக்ஸ் (அல்லது) கூட்டணி கட்சி வேட்பாளர்களா ?
2015 - மெகா ஸ்பெஷல் - சுயேச்சை வேட்பாளர் கேப்டன் டைகர் மட்டுமே ...
....... சிங்கம் தனியாகவே வரட்டும் :)
மினி லயனில் வந்த கதைகள் கலரில் போட முடிந்தால் ...............+30
Deleteடைகர் இனி விறுவிறுப்பாய் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை .............+30
சிங்கத்தின் சிறு வயதில் ஏப்ரல் இல் ஆவது உறுதி படுத்துங்கள் ...............+30
அதை தனி 500+ என கொண்டு வந்தாலும் சரி ...விரும்பும் நண்பர்கள் வாங்கி கொள்வார்கள் ...........+30
Raj Muthu Kumar S : //கிராபிக் நாவல் (ஹி ஹி சில பேர் தெறித்து ஓடுவது தெரிகிறது. அதனால் அழுகாச்சி காவியம் வேண்டாம்.)//
Deleteபோராட்டக் குழுத் தலைவரை ஒரு வழி பண்ண இந்த 'அஸ்திரம்" போதுமே.. :-)
ஹ ஹ ஹ
Delete"சாக மறந்த சுறா " அட்டை படம் சூப்பர் .பழைய முத்து காமிக்ஸ் அட்டைப்படத்தை பார்த்தது போல உள்ளது .நன்றி .
ReplyDeleteஆசிரியர் "ஆண்டு மலரை " உறுதி செய்து விட்டதால் சென்னை வாழ் நண்பர்கள் "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வேண்டி "பயங்கரமாக "போராடி அதையும் உறுதி செய்யுமாறு அழுது...அழுது .....புரண்டு ....புரண்டு .....எங்கள் சங்கம் மன்றாடி கேட்டு கொள்கிறது .
ReplyDeleteஎங்கள் சங்கம் மொத்தமாக அங்கே வந்து சாதித்து விடலாம் நண்பர்களே....ஆனால் ஏற்கனவே "சங்கம் " அபராதத்தில் ஓடி கொண்டு இருப்பதை அனைவரும் அறிந்து இருப்பதால் ....................
அபராத்தில் ஓடினாலும் தாங்கள் அதனை சாத்தியமாக்கி விட்டால் "பரிசு " கண்டிப்பாக உண்டு என்பதனையும் சங்கம் உறுதி படுத்துகிறது.
பரிசுக்கு ஆசை படாத நண்பர்களும் எங்கள் முயற்சிக்கு தோள் கொடுக்கலாம் ..
தமிழ் காமிக்ஸின் வரலாறு
Delete//சென்னை வாழ் நண்பர்கள் "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வேண்டி "பயங்கரமாக "போராடி அதையும் உறுதி செய்யுமாறு அழுது...அழுது .....புரண்டு ....புரண்டு //
Deleteஅடுத்தவர்களை போராட சொல்லும் வா.வ சங்கத்தின் தலைவர் அவர்களே
எப்போதுமே தாரமங்கலமத்துகாரர்கள் இப்படித்தனா? அல்லது இப்படித்தான் எப்போதுமேவா?
ஆகா ....இந்த இந்தி காரங்களே இப்படிதான் ...மாட்டி ..,மாட்டி விடுறாங்க .....ஹும்....
Deleteஎன்னது!! இந்திகாரனா? கிரீன்டமிலன் ஐயா நான்....ம்ஹூம் ஒரு காமிக்ஸ் நஷ்ட வழக்கு இன்டர்நேஷனல் கோர்ட்டில் போட்டால்தான் தலைவரை அடக்க முடியும் போலிருக்கே.சரி நமது பதிவர்களில் ஒரு வைக்கோல் ஸாரி வக்கீல் இருந்தால் உடனே அணுகவும். தக்க சன்மானம் வழங்கப்படும் ...வழங்குபவர் சிவகாசி வள்ளல் திரு.விஜயன் அவர்கள். முந்துபவற்க்கே முன்னுரிமை வழங்கப்படும்.இதற்க்கு பெயர்தான் C(OMICS). G(RAND) .
Deleteஹ ஹ ஹா கிரீன் சிரிப்பு தெரியலை போலும் !
Deleteசுஸ்கி,விஸ்கி , அலிபாபா , ஸ்க்ரூட்ஜ்,.....ஸ்பைடர்மேன்
ReplyDeleteசுஸ்கி,விஸ்கி , அலிபாபா , ஸ்க்ரூட்ஜ், :-)
Deleteஸ்பைடர்மேன் ?? ஆஹா...மறுபடியுமா ? முதல்லே இருந்தா ??
DeleteVijayan sir,
ReplyDeleteTex is a superstar (like Rajini). In each panel (frame), we want to see him.
A 400+ pages book, having only Tex willer stories in color, will be a collectors' dream in near future.
In available 500 + Tex stories, I believe you can get some gems for us.
Thanks in advance for making a fat book for Tex fans.
Regards,
Mahesh kumar S
Mahesh kumar S : Nothing is concrete yet ! We are just airing our thoughts ! Let's wait n' watch !
Deleteவாவ்!!! சூப்பர் இதை எதிர்பார்த்தே இருந்தாலும் இப்போதே அறிவிப்பு வந்தது இன்ப அதிர்ச்சிதான்.கதை தேர்வு கதம்பமாக இருப்பதே சுவாரஸ்யத்தை கூட்டும். டெக்ஸ் அதிக பக்கங்களை ஆக்ரமித்தாலும் , பிற நாயகர்களுக்கும் வாய்ப்பு தருவது புது வாசகர்களை ஈர்க்க பெரிதும் பயன்படும். சிக்பில்லின் கதைகள் தற்போது ஒரு சிறு புன்னகை கீற்றை கூட வரவழைப்பதில்லை.எனவே அவர்களை ஆண்டு மலரில் சேர்ப்பது திருஷ்டிக்கு வேண்டுமானால் உதவும். மர்ம மனிதன் மார்ட்டின் போன்ற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட கதைகள்,கார்ட்டூன் கதைகள்(லக்கி,ப்ளூகோட்) ,துப்பறியும் கதைகள்(ஜானி,காரிகன்),அமானுஷ்ய கதைகள்(டிடெக்டிவ் சார்லஸ்) அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்படுபவை உதாரணங்களே தவிர நாயகர்களை குறிப்பாக சுட்டிக்காட்ட அல்ல,என்று கலந்துகட்டி அடித்தால் இன்னும் 30 வருடங்களுக்கு நினைவில் நிற்கும் மலராக அமையும்
ReplyDelete3)
ஒரு கழுதையின் கதையை வாசித்தீர்களா !
Deleteலக்கிலூக்கின் ஒரு கோச்சு வண்டியின் கதையை பஸ்சில் அமர்ந்து படித்துகொண்டு வந்தேன். கதையை படித்து முடித்து லஞ்ச்பாக்ஸ் பேக்கில் வைத்து விட்டு சாதரணமாக நிமிர்ந்து உட்காரும் போது கவனித்தால் பஸ்சில் அனைவரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர். பின்னே ஒருவன் பஸ்சில் சிரித்துக்கொண்டே வந்தால் கவனிக்க மாட்டார்களா என்ன!!.அப்படி ஒரு அனுபவம் சிக்பில் கதைகளை படிக்கும் போது ஒரு நாளும் நடந்ததில்லை.ஒரு கழுதையின் கதை வாசிக்கும் போது கூட பெரிய அளவில் அதில் லயிக்க முடியவில்லை. ஒரு வேளை எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவோ என்னவோ?.
Deleteநான் 'ஒரு சிப்பாயின் சுவடுகள்' கதையைப் படித்தபோதே விழுந்து விழுந்து சிரித்தேன். பின்னே? போராட்டக்குழுத் தலைவர் பரணிதரன் இந்தக் கதையைப் படிக்கும்போது அவர் மூஞ்சி போற போக்கை நினைச்சா சிரிப்பு வராதா? ;)
Deleteஇதுவரை வந்த சிக்-பில் கதைகளிலேயே நான் மிகவும் ரசித்து, சிரித்துப் படித்தது 'ஒரு கழுதையின் கதை'யே! எடிட்டருக்குள் குடிகொண்டிருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு இது ஒரு சாம்பிளாகச் சொல்வேன். வசனங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அடுத்த சிக்-பில் (ஆர்டினி-டாக்புல் கதைன்னு மாத்திடலாம்) கதைக்காக ஆவலுடன் ஏங்கிக்கொண்டிருக்கிறேன்...
சிக்பில் கதைகளில் ஒன்றே ஒன்றே ஒன்றைதான் குறிப்பிட முடிகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதனே!! .பின் எதற்கு சிக்பில்..... சிக்பில் கதைகளுக்கு பதிலாக நமது ஈ.விஜயின் பதிவுகளை அச்சேற்றினால் வாய் விட்டு சிரிக்கலாம்
Delete@ Senthil Madesh
Deleteம்ஹூம்! உயரத்துக்கு தூக்கிவிட்டு 'பொதக்கடீர்'னு தள்ளிவிடுற விளையாட்டுக்கெல்லாம் நான் வரலை; ஆளை விடுங்க சாமி! :)
செந்தில் , விஜெய் லக்கியின் சிறு கதையில் வெளுத்து வாங்கினாரே ! அதிலும் கலக்குவார் ! சிக் சில கதைகள் சொதப்பல்தான் ! அது போல சில லக்கியும் உண்டு ! ஆனால் சிக்கின் கதைகளின் கதை செல்லும் போக்கு அருமையாக இருக்கும் லக்கியை விட ! சிக் பில்லா கொக்கான்னானாம்!
Delete@ ALL : அடுத்த online poll -க்கு தலைப்பு கிட்டியாச்சு ! சிக் பில் vs .லக்கி லூக் ! சபாஷ் சரியான போட்டி !
Deleteசிக்
Delete106th
ReplyDeleteஎன்னுடைய விருப்பம் கூட்டணிதான் .
ReplyDelete1. டெக்ஸ் வில்லர் - 240 பக்கங்கள்
2. வேதாளன் - 44 பக்கங்கள்
3. ரிப் கிர்பி - 44 பக்கங்கள்
4. காரிகன் - 44 பக்கங்கள்
5. லுக்கிலூக் - 44 பக்கங்கள்
6. சிக்பில் - 44 பக்கங்கள்
7. கபீஷ் - 4 பக்கங்கள்
ரிப்கிர்பி மற்றும் காரிகன் ஏற்கனவே வண்ணத்தில் இந்திரஜால் காமிக்ஸில் வந்துள்ளது.
கபீஸ் அருமை இடை நிரப்பியாக இது உதவும் !
Deleteமிகச்சரி Steel...TINKLE / பூந்தளிரில் 80-90 களில் வெளிவந்த பழைய கதைகளை filler-pages க்கு பயன் படுத்த முடியுமா. (உ.தா. வேட்டைக்கார வேம்பு, காக்கை காளி, கபீஷ், அனு கழகம், குஷிவாலி ஹரீஷ், சிறுத்தை சிறுவன் (தொடர்)).
Deleteஅட்டகாசமாய் இருக்குமே!
Deleteரத்னபாலாவில் வந்த விண்வெளி விதியண்ணல் யாராவது படித்துள்ளீர்களா நண்பர்களே ! பட்டய கிளப்பும் !
DeleteVIJAYA SANKAR : //ரிப்கிர்பி மற்றும் காரிகன் ஏற்கனவே வண்ணத்தில் இந்திரஜால் காமிக்ஸில் வந்துள்ளது.//
Deleteஅது அவர்களது சொந்தக் கைவண்ணம் !
என்னுடைய விருப்பம் கூட்டணிதான் .
ReplyDelete1. டெக்ஸ் வில்லர் - 240 பக்கங்கள்
2. வேதாளன் - 44 பக்கங்கள்
3. ரிப் கிர்பி - 44 பக்கங்கள்
4. காரிகன் - 44 பக்கங்கள்
5. லுக்கிலூக் - 44 பக்கங்கள்
6. சிக்பில் - 44 பக்கங்கள்
7. கபீஷ் - 4 பக்கங்கள்
ரிப்கிர்பி மற்றும் காரிகன் ஏற்கனவே வண்ணத்தில் இந்திரஜால் காமிக்ஸில் வந்துள்ளது.
வேதாலர் பாருங்கள் சார் ..இல்லையல் மறுபதிப்பு வேதாலர் கூட ........
Delete//இல்லையல் மறுபதிப்பு வேதாளர் கூட ........//
Deleteவேதாளர் மறு பதிப்பு என்றால் இன்னும் 1500 ரூபாய் சந்தா அதிகம் அனுப்பலாம்
Deleteஇரும்புக்கை மாயாவிதான் பரண்மேல் எனில், வேதாளருக்கு (முகமூடி மாயாவி) ஏன் பாராமுகம் ஆசிரியரே. ஒரு 'nostalgia /மலரும் நினைவுகள்/என்றும் இனியவை' என்று ஏதேனும் ஒரு இடஒதுக்கீட்டில் இவரை பங்கு பெற செய்யலாமே. புதிய கதை இல்லாவிடில் ஒரு பழைய classic-hit கதையை பரிசீலிக்கலாமே.
Deleteவேதாளர் என்ற பேரே கிக்கா இருந்தது அந்த காலத்தில் ! முத்து பழைய இதழ்களை வாங்கி பார்த்து இருவன்னத்தில் எப்போதாவது வருமா என ஏங்கியதுண்டு அன்று ! திடுமென மாயாவி என ராணி காமிக்ஸில் வந்த பொது துள்ளி குதித்தாலும் நாட்கள் செல்ல செல்ல மொழி பெயர்ப்பால் வெறுப்பாய் மாறியது !
Deleteநமது மொழி பெயர்ப்பு பட்டய கிளப்புமே !
ஒரு பழைய நினப்புடா பேராண்டி என்ற தொகுப்பில் இவை போன்ற காலம் அரித்த கதைகளை விடலாமே !
Delete////////////நாட்கள் செல்ல செல்ல மொழி பெயர்ப்பால் வெறுப்பாய் மாறியது/////////
Deleteஅனைத்து கதைகளையும் ஒதுக்கிவிட்டு மாயாவி கதைகளை மட்டும் ராணி காமிக்ஸ்/ல் மாதம் இருமுறை மற்றும் மாலை மலரில் தினசரி தொடர்ச்சியாக வெளியானதால் ஏற்பட்ட சலிப்பே ஒழிய மொழிபெயர்ப்பில் எந்த ஒரு குறைபாடும் கிடையாது.
இருக்கலாம் !
Deleteலயன் 30 years young ஸ்பெஷல் - கதம்ப ஸ்பெஷல் டாப் 10 ஹீரோஸ் (டெக்ஸ், சிக் பில், லக்கி, உடன் புது ஹீரோக்கள் அறிமுகம் )
ReplyDeleteமில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் - டெக்ஸ் ஸ்பெஷல் இன் கலர் or டயபாளிக் ஸ்பெசல்
மின்னும் மரணம் - Obviously டைகர் இன் கலர்
மூன்றும் அடுத்தடுத்து மூன்று மாத இடைவெளியில் வர இருப்பதால் ரூ.500 சரியான விலையே. இதற்கு அதிகம் ஆனால் கொஞ்சம் கஷ்டம் தான் . சந்தா உடன் ரூ.1500 + கொரியர அனுபிடலாமா சார் ?
it's me
Deleteஉங்கள் வாய்க்கு சர்க்கரை....
Deleteஎங்கிட்டே அரிசிதான் இருக்கு! :D
Delete@ Vijay & Steel...ரெண்டையும் சேர்த்து அடுத்த 'சர்க்கரை பொங்கல் ஸ்பெசல் 2015 - "மின்னும் மரணம்'' என்று பெயரிட்டுவிடலாம் தானே.
Deleteவாங்க விஜெய் பொங்கி திங்கலாம் ! ராஜவேல் தலைப்பு பொங்கலோ பொங்கல் ஸ்பெசல் என இருக்கட்டுமே !
Delete@ ALL : கட்டை விரலோ ..விரல் !!
Deleteஜென்டில் மேன் ரிப் எனக்கு ஓகே ..அவரின் அலட்டல் அல்லாத சாகசம் எனக்கு மிகவும் பிடிக்கும் .ஒரு முறை ஆசிரியர் கூட தான் ரிப் ரசிகன் என்பதை கூறி இருந்தார் என்பதை நன்றி உடன் நினைத்து பார்கிறேன் .
ReplyDeleteSir tex ,lucky ,Chick bill,Shelton and some new heros that will be nice for a Mega special
ReplyDeleteSir, It may be a NEW special, if ALL are NEW Heroes.
ReplyDeleteDurai Prasanna : அனைவரும் புது ஹீரோக்கள் என்றால் இந்த ஸ்பெஷல் முடிந்த மறு மாதம் அவர்களை எங்கே அமர்த்துவது என்ற மண்டைக் குடைச்சலும் தொடருமே பிரசன்னா ?
Deleteஅப்பா நலமா ?
அது என்னவோ தெரியவில்லை சமீபமாக பின் அட்டைகள் முன் அட்டையை விட அமர்களமாக உள்ளன.
ReplyDeleteஅவைகளை முன் அட்டைகளாக பயன்படுதிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
மூன்று புத்தகங்களின் தரத்தை பற்றி கூறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நண்பர்கள் பலரும் கூறி இருப்பது போல நமது பாரம்பரிய கதம்ப இதழ்களுக்கே எனது ஓட்டும்.
ஆனால் சிறிது டெக்ஸ்சின் கதை தேர்வில் சிறிதும் மேலும் கவனம் செலுத்துங்கள் சார்.
650+ இதழ்களில் நிறைய கார்சனின் கடந்த காலங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது, நமக்கும் நேரமிருப்பதால் மிகச்சிறந்த கதையினை தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.
வழக்கம் போல லக்கியும், ஆர்டினும் வந்துவிடுவார்கள். சமீபமாக இவர்களது கதைகளும் ஒரு வித ஈர்ப்பு இல்லாமல் இருப்பதை துடைக்க வேண்டும் சார்.(ஒரு கழுதையின் கதை நீங்கலாக)
புதுமுக அறிமுகத்திற்கு வாய்பிருந்தால் யகரி முயற்சி செய்து பாருங்கள் சார்.
கமான்சே ஒவ்வொரு புத்தகமும் தனிக்கதை என்பதால் வரலாம் என்று நினைக்கிறன்.
மற்றபடி உங்களது தேர்வுகளை கூறுங்கள் அதில் இருந்து நாம் தேர்வு செய்வோம்.
விஜயின் இக்கருத்துக்கள் மிக முக்கியமாக எனக்கு தோன்றியதால் மீண்டும் உங்கள் பார்வைக்கு மறுபதிப்பு.
//நமது முக்கிய நோக்கங்களாவன:
* வருடம் ஒரு முறையாவது (குறிப்பாக புத்தகத் திருவிழா சமயங்களில்) தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருப்பு-வெள்ளை கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிடவேண்டும். இதன்மூலம், விரக்தியிலிருக்கும் பல பழைய வாசகர்களையும் சற்று சமாதானப்படுத்த முடியும்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட ஓரிரு காமெடி கதைகளை பள்ளிச் சிறுவர்களுக்கான மலிவுவிலை பதிப்பாக (முடிந்தால் வண்ணத்தில்) புத்தகக் கண்காட்சிகளில் விற்கப்படவேண்டும்.
* எடிட்டர் தரப்பிலிருந்து நியாயமான பல காரணங்கள் எடுத்துரைக்கப்பட்டாலும், நண்பர்கள் பலரும் சுட்டிக்காட்டிவரும் அச்சுக்குறைபாடுகள் அறவே நீங்க, இயன்ற அளவுக்காவது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
* பேக்கிங் குறைபாடுகள் களையப்படவேண்டும். அடிக்கடி அட்டை கிழிந்தும் மடங்கியும் புத்தகம் கிடைக்கப்பெற்று அவதியுறுவோர்க்கென புதிய மேம்படுத்தப்பட்ட பேக்கிங்கில் (இதற்கான கூடுதல் செலவை அவர்களிடமிருந்தே கூட வசூலித்துக் கொள்ளலாம்) அனுப்பப்பட வேண்டும்.
* வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு புத்தகங்கள் அனுப்பப்படும்போது ஒரு முறைக்கு இரு முறையாக எல்லாப் பக்கங்களும் (ரிபீட் பக்கங்கள் அல்லது விடுபட்ட பக்கங்கள் இருக்கின்றனவா என்று) சரிபார்க்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும்.//
இரவு கழுகார் , எங்கோ நமக்கு தெரியாமல் பறந்து கொண்டிருந்தாலும் தனது லென்ஸ் பார்வையை நச்சென வீசி உள்ளார் ! தொடர்ந்து வாருங்கள் ஆதரவு தாருங்கள் நண்பரே !
Delete//வழக்கம் போல லக்கியும், ஆர்டினும் வந்துவிடுவார்கள். சமீபமாக இவர்களது கதைகளும் ஒரு வித ஈர்ப்பு இல்லாமல் இருப்பதை துடைக்க வேண்டும் சார்.(ஒரு கழுதையின் கதை நீங்கலாக)
புதுமுக அறிமுகத்திற்கு வாய்பிருந்தால் யகரி முயற்சி செய்து பாருங்கள் சார். //
உ ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............ய்ய்ய்
ஆனால் சமீப கால லக்கி மோசமில்லை !
Deleteடியர் எடிட்டர்ஜீ !!!
ReplyDeleteஅடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கேப்டன் டைகர் 11-கதைகளோடு மிக பிரம்மாண்டமாக பிரவேசிக்கவுள்ள நிலையில் லயன் 30ஆம் ஆண்டு மலரை டைகரின் சீனியரான இரவு கழுகாருக்கு அர்ப்பணம் செய்வதே சாலசிறந்த ஒரு முடிவாக இருக்கும் என்ற அடியேனின் கருத்தை கூறுகிற அதே நேரத்தில்,"கதம்ப சிறப்பிதழ்கள்"ஏற்கனவே நாம் காலம் காலமாக வெளியிட்டு வந்துள்ளதையும்,அவற்றில் நமது இரவு கழுகார் கூட்டத்தோடு கோவிந்தா போட்டு வந்ததையும், இம்முறையாவது இந்த "கதம்ப கன்றாவிகளை"தவிர்த்து இரவு கழுகாருக்கு உரிய மரியாதை அளித்து அவருக்கே அவருக்கென ஒரு மகா மெகா ஸ்பெசல் இதழாக 30ஆம் ஆண்டு மலர் வெளிவந்தால் அதுவே ஒரு மைல் கல் சாதனை இதழாக வரலாற்றில் இடம்பெறும் என்று சொன்னால் அது மிகை ஆகாது எனக்கூறி அடியேனின் கோரிக்கையை தயை கூர்ந்து ஆழ்ந்து பரிசீலித்து ஒரு நல்ல,நியாயமான,தரமான, சிறப்பான முடிவை கூறுவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் அனைவரிடமிருந்தும் விடை பெற்றுக்கொள்கிறேன்.நன்றி.வணக்கம்.பவர் ஸ்டார் நாமம் வாழ்க!
பல ஸ்டார் இருக்க பவர் ஸ்டார் மட்டும் போதுமா நண்பரே !
Deletesaint satan : ரசனைகள் பலவிதம் எனும் போது - நமக்கு ஒப்புதல் இல்லாதவைகளை "கண்றாவிகளாக" சாப்பா குத்துவது நியாயம் ஆகாதே !
DeleteI இருநூறு !
ReplyDelete30வது ஆண்டு மலர் full and full 'தல' டெக்ஸ் ஸ்பெஷல் ஆக வேண்டுகிறேன். மேலே வலது பக்கத்தில் உள்ள survey results (டெக்ஸ் வில்லர் கதைகள் overdose என்று தோன்றுகிறதா) majority வாசகர்களின் வாய்ஸ்! ஏற்கனவே இந்த ஆண்டு டெக்ஸ்க்கு ஒரே ஒரு வாய்ப்புதான் கொடுத்து உள்ளீர்கள். So please compensate that gap with 30th anniversary special!
ReplyDelete