Powered By Blogger

Sunday, February 02, 2014

பொன்னுக்கு நிகராய் ஒரு புதன் !


நண்பர்களே,

ஞாயிறு வணக்கம். 'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதென்று' சொல்வது நிஜம் தானா ? என்று கண்டறிய ஒரு சின்ன வாய்ப்பு நம் முன்னே  ! அறிவித்தது போலவே பிப்ரவரியின் 2 இதழ்களும் தயாராகி விட்டன - நாளைய தினம் அனுப்பிட ! ஆனால் இதழ்கள் இரண்டையும் கையில் வைத்துப் புரட்டும் போது எனக்குள்ளே சின்னதாய் ஒரு நெருடல் ! கடந்த ஐந்தாறு மாதங்களாய் படிக்க ; ரசிக்க நிறையவே பக்கங்களையும், கதைகளையும் வழங்கியதன் மூலம் ஒரு வித  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு -இம்மாதம் 56 + 52 = 108 பக்கங்களோடு மங்களம் பாடுவது என்பது முறையாகுமா ? என்ற கேள்வி என்னுள் எழுவதை உணர முடிந்தது  !அதிலும் இம்மாத ஜில் ஜோர்டான் கதையோ இலகு ரகம் & சாகச வீரர் ரோஜரின் கதையானது more of a visual feast எனும் போது - இம்மாத வாசிப்பு மெனுவில் "I want more emotions ! ' என்ற நினைப்பு எட்டிப் பார்க்கத் துவங்கியது ! தலைக்குள் இப்படி ஒரு குடைச்சல் குட்டியாய்க் குடி கொண்டு விட்ட பின்னர் கேட்கவா வேண்டும்......? 'பரபர'வென்று அடுத்த மாதங்களுக்கென பணித்துவக்கம் கண்டிருந்த கதைகள் சகலத்தையும் எடுத்துப் போட்டு உருட்டும் படலம் துவங்கியது ! சற்றே வெயிட்டான கதைக்களத்தோடு நின்ற ரிப்போர்ட்டர் ஜானியின் "நினைவுகளைத் துரத்துவோம் !" - சாகசத்தினைப் போர்க்கால வேகத்தில் தயாராக்கும் வேலைகள் முடுக்கி விடப்பட, செவ்வாய் இரவுக்குள் இந்த இதழும் தயாராகிடும் என்ற நிலை ! So - புதன் வரை பொறுமை காத்திடும் பட்சத்தில் 3 இதழ்களுமே ஒரு சேர உங்கள் இல்லங்களைத் தேடி வந்திடும் folks ! செவ்வாயே பணிகளை முடிக்க ஆன மட்டிலும் முயற்சிப்போம் ; ஆனால் புதன் எனும் பட்சத்தில் சற்றே மூச்சு விட்டுக் கொள்ள அவகாசம் கிட்டிடும் என்பதால் பொன்னுக்கு நிகரான இந்நாளைத் தேர்வு செய்வது தேவலை என நினைத்தேன் ! தொடரும் மாதங்களில் - "குறைந்த பட்சம் 3 இதழ்கள் ; இயன்றால் 4 !" என்பதே நமது பார்முலாவாக இருந்திடிட வேண்டும் என்பதையும் தலைக்குள் பதித்துக் கொண்டேன் ! அதன் பலனாய் மார்ச் மாதம் - ரூ.120 விலையில் கேப்டன் டைகரின் இரு பாக இதழான "அட்லாண்டாவில் ஆக்ரோஷம் " (108 பக்கங்கள்) + ரூ.60 விலையில் ப்ளூகோட் பட்டாளத்தின் "கப்பலுக்குள் களேபரம் !" இதழ்களும் வெளி வந்திடும் ! எண்ணிக்கையில் இவை இரண்டே எனினும், கதைகளின் எண்ணிக்கைப்படி அவை 3 என்பதாலும், நெடியதொரு இடைவெளிக்குப் பின்னே நம் அழுக்கு நாயகரின் இரட்டை பாக சாகசம் ஒருசேர வெளிவருகிறது என்பதாலும் மார்ச்சில் உங்கள் காமிக்ஸ் நேரம் சுவாரஸ்யமாக அமைந்திட எவ்விதக் குறைச்சலும் இருந்திடாது என்றே நினைக்கிறேன் !  

இதோ இம்மாத இதழ்களின் நீங்கள் பார்த்திரா ராப்பர்கள் : 

ஜில் ஜோர்டனின் அட்டைப்படம் முழுக்கவே ஒரிஜினல் தான் ; லேசாய் நமது நகாசு வேலைகளோடு ! பின்னட்டையுமே படைப்பாளிகளின் ஆக்கமே ! So - இந்தாண்டின் இது வரையிலான வெளியீடுகளுக்கு ஒரிஜினல்கள் ; அல்லது அவற்றின் மெருகூட்டப்பட்ட பிரதிகள் மாத்திரமே அட்டைப்படங்களாய் அமைந்துள்ளன ! திடீர் inclusion ஆன ஜானியின் அட்டையும்  - ஒரிஜினலை ஆதாரமாகக் கொண்டு நமது ஓவியர் மாலையப்பன் வரைந்த முற்றிலும் புதிய ஓவியமே. ஜானியின் ஒரிஜினல் அட்டைகள் எப்போதுமே line drawing + color filling என்ற பாணியில் இருப்பதால் முகங்களில் ; உடுப்புகளில் தட்டையான வர்ணங்கள் மட்டுமே இருந்திடும் ! அவற்றில் லைட் & டார்க் வேறுபாடுகள் இருந்திடாது என்பதால் அதனைக் களையும் பொருட்டே    புதிதாய் நாம் ஒரு சித்திரத்தைத் தீட்டி விட்டோம். வழக்கமாய் துப்பாக்கியும் கையுமாய், பரபரப்பாய் ஓடும் பாணிகளில் போஸ் கொடுக்கும் ஆசாமி - புளிய மரத்தில் காரைச் சாத்தி விட்டு மல்லாக்க முழிக்கும் அந்த பாணி வித்தியாசமாய்ப்பட்டதால் அதனை அப்படியே நமது அட்டைக்கும் பயன்படுத்திக் கொண்டோம். இங்கு கணினிகளில் தெரியும் பின்புல ஆரஞ்சு வர்ணம் புக்கில் பார்த்திடும் போது இன்னும் depth கூடுதலாய் பளிச் எனத் தோற்றம் தருவதை சீக்கிரமே பார்த்திடப் போகிறீர்கள் ! கதையைப் பொறுத்த வரை ஜானியின் TOP 5 பட்டியலில் இடம் பிடித்த கதைகளுள் இதுவும் ஒன்று என்பதால் பரபரப்பிற்குப் பஞ்சமிராது ! இதோ முதல் பக்கமே ஒரு brisk pace-ல் துவங்குவதைப் பாருங்களேன் !

Original Cover
இன்றோடு நிறைவு பெரும் இராமநாதபுரம் புத்தகக் காட்சியில் ஒரு modest விற்பனை மட்டுமே சாத்தியமாகியுள்ளது நமக்கு ! பெரியதொரு எதிர்பார்ப்பு ஏற்படுத்திக் கொள்ளவில்லை எனினும், இத்தனை சன்னமான வரவேற்பே இருந்திடும் என்பதும் எதிர்பாராததே ! ஆனால் எண்ணற்ற பள்ளிகள் ; கல்லூரிகள் தத்தம் மாணாக்கர்களை புத்தகக் காட்சிக்கு வருகை புரியச் செய்து இங்கு நேரமும் செலவிட வைத்ததால் அவர்களின் அநேகர் நமது ஸ்டால்களுக்கு வந்து, இதழ்களைப் புரட்டினர்.  நமது மறு வருகையை இப்பகுதிகளுக்கு அறிவிக்கும் விதத்தில் பார்த்தோமேயானால் இந்தப் புத்தகக் காட்சி நிச்சயம் ஒரு success என்றே சொல்ல வேண்டும் ! அதிலும் நிறையப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளி நூலகங்களுக்கென நமது இதழ்களை வாங்கிச் சென்றுள்ளதாய் நம்மவர் இராதாக்ருஷ்ணன் சொன்ன போது நிறைவாய் இருந்தது.  வ(ள)ரும் தலைமுறைக்கு காமிக்ஸ் வாசிப்பெனும் உலகிற்குள் அடியெடுத்து வைக்க துளியேனும் வாய்ப்புக் கிடைத்திருப்பது a step in the right direction தானே ?!!

தொடரும் சங்கிலியாய் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் திருச்சி மாநகரில் ரோட்டரி சங்கம் சார்பாய் நடக்கவிருக்கும் புத்தக விழாவிலும் நாம் பங்கேற்கிறோம் ! அடுத்த ஞாயிற்றுக் கிழமைப் (9th) பொழுதை திருச்சியில் நமது ஸ்டாலில் செலவிட எண்ணியுள்ளேன் ! உங்களை அங்கு சந்திக்க வாய்ப்புக் கிடைப்பின் நிச்சயமாய் மகிழ்ச்சி கொள்வேன் ! Please do drop in folks ! திருப்பூர் புத்தக விழாவின் தேதிகளும், இராமநாதபுரம் + திருச்சி தேதிகளும் உதைப்பதால் இந்தாண்டு திருப்பூரில் ஸ்டால் அமைக்க இயலவில்லை ! நிச்சயம் கிடைக்கும் அடுத்த வாய்ப்பினைத் தவற விட மாட்டோம் ! தொடரும் நாட்களில் உங்கள் பகுதிகளில் நடைபெறவிருக்கும் புத்தக விழாக்கள் பற்றிய தகவல்களை நமக்கு அனுப்பிடவும் கோருகிறேன் ! மக்கள் நம்மை நாடி வர வேண்டுமென தவம் செய்வதை விட, நாமே மக்களை நாடிச் செல்வதும் உற்சாகமானதாய் இருப்பதை உணர்ந்து வருகிறோம் ! 'அட...நான் சின்ன வயசிலே படிச்ச முத்து ; லயன் காமிக்ஸ் எல்லாம் இன்னும் வருதா ?" என்ற அந்த மத்தாப்பூ புன்னகைகளைப் பற்பல முகங்களில் பார்த்திடும் சந்தோஷம் ஒன்றே - எங்கள் செலவுகளையும், சிரமங்களையும் ஈடு செய்து விடுகின்றது ! அப்படிப் பார்க்கையில் கிடைக்கும் விற்பனை முழுக்க ஒரு போனஸ் மாத்திரமே ! நமது எட்டுக்கள் சிறிதாய் இருப்பினும், அவை தரும் சந்தோஷங்கள் மலையளவு அன்றோ ?! Enjoy the Sunday !! Catch you soon ! 

432 comments:

  1. அருமையான பதிவு சார்

    ReplyDelete
    Replies
    1. மூணு புக் .............அப்புறம் நாலு புக் ...........அப்புறம் .........அஞ்சு புக் .............அப்புறம் .......அப்புறமே

      Delete
    2. காளி சூலி நீலி ..............யாராவது கையில மை தடவி பார்த்து .........அந்த கருப்பு வெள்ளை புத்தகங்கள் எப்ப வரும்னு....சொன்னா பரவாயில்லை .........

      Delete
    3. அப்பிடி அந்த தேதி வரும் சேதி தெரிஞ்சிட்ட்டா ...............................................
      இங்க உள்ள யாராவது ஒருத்தர் கையில தீ பந்தத்தை ஏந்தி ..........
      ''கிழக்கே போகும் ரயில் ராதிகா'''............. மாதிரி...........
      சிவகாசிய..........
      சுத்தி வர சொல்லுறேன் தாயீ ..............
      சுத்தி வர சொல்லுறேன் தாயீ ..............
      சுத்தி வர சொல்லுறேன் தாயீ ..............
      இத எல்லாரும் சீரியசா படிங்க சாமியோவ்

      Delete
    4. மதியில்லா மந்திரி : ஏப்ரலில் நல்லது நடக்கும்ணு ஆத்தா சொல்லி இருப்பதாய் தகவல் மந்திரியாரே !

      Delete
    5. சூப்பர்! அப்ப ஏப்ரலில் கோடை மலர் கருப்பு வெள்ளைல வருதுன்னு சொல்லுங்க! நன்றி விஜயன் சார்!

      Delete
    6. மெத்த மகிழ்ச்சி

      Delete
    7. அப்போ மார்ச் வரை ஆத்தா வையுமே சார் ! சீக்கிரம் கொடுங்க சார் !

      Delete
    8. எடிட்டரிடம் மேட்டரைக் கறந்த மந்திரியார் வாழ்க வாழ்க! :)

      Delete
    9. சூப்பர் மந்திரி !!! மந்திரி கிட்ட ஜால்ராபாய் வேலைக்கு சேர அப்ளை பண்ணலாம் போலிருக்கே

      Delete
    10. ஓவரா புகழ்வதே .................ஓவரா வாரத்தானே .................!!!!!!!!!!
      வாங்க செந்தில் ...இந்தாங்க ராதிகா தீவட்டி .............................சிவகாசிய சுத்தணும் ..........ஸ்டார்ட் மியூசிக் ..........ஹி ஹி

      Delete
  2. நானும் 10க்குள் வந்து விட்டேன்

    ReplyDelete
  3. மாதம் மூன்று இதழ்களாகக் களமிறக்க 2014 பட்டியலில் அத்தனை இதழ்கள் இருக்கிறதா என்ன? இல்லை அறிவிக்காத புது இதழ்களும் வருமா?

    ReplyDelete
  4. Dear editor,
    I remember last year i had suggested participating many book fairs in tamil nadu & you rejected that idea. Now happy that you have also understood that for spreading wings, we have to explore many such possibilities. I feel hppy that i had injected this idea into your mind first
    Kuberan

    ReplyDelete
  5. Replies
    1. Podiyan : ஆண்டு கொஞ்சம் கொஞ்சமாய் புலரட்டுமே...! தானாய் விஷயங்களும் புலருமே !

      Delete
  6. டியர் எடிட்டர்,

    இம்மாதம் 3 புத்தகங்கள் வருவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியே; எனினும் அவசர கதியில் தயாரிக்கப்படும் புத்தகங்களில் எழுத்துப் பிழைகள் வந்துவிடுமோ என்ற பயமும் கொஞ்சம் எட்டிப் பார்க்காமலில்லை. ஓரிரு நாட்கள் தாமதமாயிடினும் பிழைகளற்ற புத்தகத்தை கையில் ஏந்திடவே நம் நண்பர்களில் பெரும்பான்மையினர் விரும்புகிறார்கள் என்பதும் நாம் அறிந்த உண்மையே. கடந்த இருமாதங்களில் வெளிவந்த புத்தகங்களில் மலிந்துகிடக்கும் எழுத்துப் பிழைகளே இந்த என்னுடைய அச்சத்திற்குக் காரணம்.

    திருச்சி புத்தகத் திருவிழாவில் நாம் பங்கேற்பது குறித்த தகவல்கள் முன்பே என் காதுகளை எட்டியிருப்பினும், நீங்கள் அங்கே ஆஜராக இருப்பது எதிர்பாரா இன்ப அதிர்ச்சி! 'நண்டு ப்ரை' செய்வது குறித்த சமையல் குறிப்புகளை உங்களிடம் நேரில் வந்து தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : "நாற்பது நாட்களில் நண்டு வறுவல் !" என்றொரு இதழ் புதிதாய் வெளி வந்துள்ளதாம் ; ஆளுக்கொரு பிரதி ஆர்டர் செய்வோமா ?

      Delete
    2. அந்த "நாற்பது நாட்களில் நண்டு வறுவல் !" புத்தகம் கூட வந்துவிடும்... ஆனால் நிஜ நண்டு வறுவல்

      கிடைக்காது போலிருக்கே( ஈ.விஜய் ,வாங்க சாப்பிடலாம்)

      Delete
  7. டியர் விஜயன் சார்,

    எதிர்வரும் திருச்சி புத்தகக் கண்காட்சியில் - நம் காமிக்ஸ் வாசகர்கள் வட்டம் விரிவடையவும் ; புதிய சந்தாதாரர்கள் கிடைக்கவும் ; விற்பனையில் சாதிக்கவும் இறைவனை வேண்டுகிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  8. டியர் விஜயன் சார்,

    மூன்று அட்டைப்படங்களும் இம்முறை வித்தியாசமாக ஆனால் மிகவும் அழகாக இருக்கிறது. குறிப்பாக ஜானியின் அட்டைப்படம் ஒரிஜினலை விட சூப்பராக வந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அட்டைப் படங்களை பற்றி மட்டும் அபிப்பிராயம் சொல்ல வேண்டும் என்றால் - நாம் ISO 9001 லெவலுக்கு வந்து விட்டோம் என்றே சொல்லத் தோன்றுகிறது. பின்னட்டையில் வெளிவரும் கதாசிரியர், ஓவியர் - நிழற் படங்களும் ; கதைச் சுருக்கமும் அற்புதம் செய்வதாக இருக்கிறது. தொடர்ந்து இது போலவே வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் !

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மரமண்டை : ISO முத்திரைகள் என்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் மாலைகளே ! ஓராண்டின் முழுமைக்குமுவாது அனைத்து நண்பர்களையும் கவரும் விதத்தில் அட்டைகளை டிசைன் செய்வதென்பதே எனது இந்தாண்டின் அவாக்களுள் ஒன்று !

      Delete
  9. டியர் எடிட்டர்ஜீ!!!

    இனி மாதம் மூன்று கதைகளா...? பலே.பலே.அடுத்த ஆண்டு மாதம் நான்கு இதழ்கள் எதிர்பார்க்கிறோம்.எழுத்துப்பிழைகளை கழைய கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    காவியில் ஒரு ஆவி முன்னட்டை அருமை.பின்னட்டையில் ஜோர்டானின் நிழல் விழும் இடத்தில் சிவப்பு நிறம் ஏன்..? முழுக்க பச்சை நிறத்தில் இருந்திருந்தால் நன்றாக அமைந்திருக்கும்.

    அப்புறம்,மார்ச் மாதம் கேப்டன் டைகர் இடம்பெறும் இதழை தயவு செய்து "டைகர் விரோத சக்தி"களுக்கு (மட்டும்) அனுப்பாதீர்கள்.ஹிஹி!!!

    ReplyDelete
    Replies
    1. கழைய அல்ல... களைய :) - எழுத்துப் பிழை சாத்தான் அவர்களே.. ஹி ஹி :)

      Delete
    2. ஆமாம் சார் டைகர் விரோத சக்திகளுக்கு மட்டும் அனுப்பி விடாதீர்கள் ! டைகர் வாழ்க !

      Delete
    3. @ ஸ்டீல்

      டைகரையும் மிஞ்சி விட்டீர்கள்...

      Delete
    4. ஹ ஹ ஹா நண்பரே நம்பி விட்டீர்களா !
      அப்புறம் ஆசிரியர் நமக்கு அனுப்பாமல் விட்டு விட்டால் , அதனை படித்தால்தானே டைகரை தாக்க முடியும் டெக்ஸ் ய் தூக்க முடியும் !
      என்னை போய் சந்தேக பட்டு விட்டீர்களே !
      உங்களுக்கு தெரியாதா , கார்சனின் கடந்த கால கிலெம்மண்ட்ஸ் போலவே நானும் ,
      எனக்கு பிடித்த வரி நண்பனுக்காக எதையும் செய்வேன் என்பது தாங்கள் அறியாததா !

      Delete
    5. Mr.ஸ்டீல் ( வலதுகரம் மட்டும் )

      //அதனை படித்தால்தானே டைகரை தாக்க முடியும் - டெக்ஸ் ய் தூக்க முடியும்//

      வேண்டாம் ஸ்டீல் இந்த குரூர எண்ணம் ; டைகரைப் போலவே டெக்ஸ்/யும் தாக்கினாலே போதுமானது. டெக்ஸ்/ஐ தூக்க வேண்டாம் ; அவர் நமக்கு உயிருடன் வேண்டும். மீதியுள்ள 573 சொச்சம் கதைகளை நாமும் படிக்க வேண்டும் அல்லவா ?

      Delete
    6. mr. மரம் (மண்டை தவிர )
      நாங்கள் தூக்குவோம் என்பது அவற்றின் புகழை உயரே !

      Delete
  10. டெக்ஸ் புக் எல்லாரும் படிச்சு இன்புற வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். மற்றவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. அதே போல அடுத்தவர்கள் துயர் கண்டு இன்புறும் ஆட்கள் நாங்கள் இல்லை..

    ReplyDelete
    Replies
    1. balaji ramnath :

      டியர் பாலாஜி, டைகர் vs டெக்ஸ் - கலாய்த்தல்/காலைவாருதல் பதிவுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நம்மை பொறுத்தவரை டைகரும் டெக்ஸ்/ம் - காமிக்ஸ்/உள் அடக்கம் ; நாம் காமிக்ஸ்/உள் அடக்கம் அவ்வளவு தான் :)

      டைகர் vs டெக்ஸ்/ஐ - நாம் போதுமானவரை அலசி விட்டதால் புதிய பாடத்திற்கு/subject ற்கு தயாராகுமாறு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம். இருவருமே பெரியவர்கள்/வல்லவர்கள் என்று தீர்ப்பு கூறிய பட்டிமன்ற நடுவர் திரு.சாலமன் பாப்பையா அவர்களின் கருத்தை முழுமனதாக ஏற்போமே :)

      Delete
    2. பாலாஜி ராம்நாத் இங்கு நடைபெற்ற வாதங்கள் அனைத்தும் யார் பெரியவர் என்ற கோணத்தில் தானே ஒழிய இவர்தான் வேண்டும் இவர் வேண்டாம் என்ற நோக்கில் அல்ல......

      உங்களைத்தவிர காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த விசயம் தெளிவாக தெரியும். இங்கு நடந்த விவாதத்தை டைம்பாசாக எடுத்துக் கொள்ளவும். நான் வாரம் ஒரு எந்த நாயகரின் காமிக்ஸ் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் ரகம்.

      Delete
    3. டியர் பாலாஜி ராம்நாத்!!!

      "டைகர் விரோத சக்தி"களுக்கு"-என்று அடியேன் குறிப்பிட்டது சும்மா தமாஷ்:-)

      மற்றபடி ,அது "தமாஷ்" என்று விளக்கவேண்டிய நிலை அடியேனுக்கு ஏற்பட்டது மற்றொரு தமாஷ் ;--)

      Delete
    4. // மற்றபடி ,அது "தமாஷ்" என்று விளக்கவேண்டிய நிலை அடியேனுக்கு ஏற்பட்டது மற்றொரு தமாஷ் ;--) //

      hahaha!

      Delete
    5. நண்பர் பு.பே அடியேன், அடியேன் என்று குறிப்பிடுவது செந்தில்,கவுண்டமணி காமெடியில் வரும்

      "அடிவிழுது" போலவே காதில் விழுகிறதே

      Delete
  11. இந்த மாதம் 3 புத்தகங்கள் வருவது எதிர்பாரத இன்ப அதிர்ச்சி!!!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. விஜயன் சார் ......................பார்த்து................................ வாலிப வயோதிக அன்பர்கள் உள்ள இந்த காலத்தில் இன்ப அதிர்ச்சியில் (அதாவது நிறைய புத்தகம் )................எங்களுக்கு நெஞ்சு வலி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை

      Delete
    3. ஜால்ரா பாய் ஐயோ நெஞ்சு வலிக்குதேடா ..........
      மாஸ்டர் எத்தன தடவை தான் பிளான் போட்டு .....பிளான் போட்டு சொதப்புவீங்க ..............

      Delete
  12. இரும்புக் கையாருக்கு ஒரு புத்தகம் மட்டும் தொக்கி நிற்கிறது ஜி!! காமிக்ஸ் எக்ஸ்ப்ரெஸ் தொடரில் வெளியாகி பின் பரணில் அடைக்கலம் புகுந்த கதை அதை மட்டுமாவது கொண்டு வாங்களேன்??? நிறைய வாசக பெரியோர்கள் தங்கள் குடும்பத்துடன் நம் ஸ்டாலில் புகுந்து கேட்ட கேள்வி இரும்புக் கை மாயாவி புத்தகம் இருக்கா????? என்பதுதான்!!!! கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க!!!

    ReplyDelete
    Replies
    1. John Simon C : அட..கறுப்புக் கிழவியைக் கை விட்டாச்சா சைமன் சார் ?!!

      Delete
    2. சார் அந்த இரும்பு கரத்தான் கரம் பிடித்து கருப்பு கிழவியும் வந்தால் சைமன் என்ன வேண்டாம் என்றா கூற போகிறார் !

      Delete
  13. Erode VIJAY :

    //Erode VIJAY2 February 2014 12:07:00 GMT+5:30
    This comment has been removed by the author//

    அருமையான பதிவு ; நம் இமைகளின் ஓரம் உள்ள ஈரத்தை உணரச் செய்யும் பதிவு. எதனால் நீக்கி விட்டீர்கள் என்று தெரியவில்லை ; புதிய பதிவில் பதிவிடும் அளவிற்கு மதிப்பு வாய்ந்தது என்பதால் மீண்டும் அதே பதிவை ஆசிரியரின் பொன்னுக்கு நிகராய் ஒரு புதன் ! - தற்போதைய பதிவில் பதிவிடவும்..! காத்திருக்கிறோம்...!

    டெக்ஸ் வாழ்க !
    டெக்ஸ் வாழ்க !
    டெக்ஸ் வாழ்க !

    ReplyDelete
    Replies
    1. @ மி.மரமண்டை

      நன்றி நண்பரே! அச்செய்தியை இங்கே பதிவிடுவதற்கான 'காப்பிரைட்'ஐ என் நண்பனிடம் முன்பே பெற்றிருந்தாலும், சற்றே சென்சிடிவ்வான விசயமென்பதால் அந்த நண்பனுக்கு ஒரு முறை படித்துக்காட்டிவிட்டு (இன்டர்நெட் தொடர்பில்லாதவன் என் நண்பன்) பிறகு இங்கே பதிவதுவே முறையானதென்று தோன்றியது. எனவேதான் அங்கே அழித்துவிட்டேன். நண்பனிடம் பேசி ஓரிரு திருத்தங்களையும் செய்து இங்கே பதிவிடவிருந்த அதே நேரத்தில் எடிட்டரின் புதிய பதிவு வந்ததால் 'இது தருணமல்ல' என்று அடங்கிவிட்டேன்.
      எடிட்டரின் புதிய பதிவுக்கான ஆரம்பகட்ட களேபரங்கள் சற்றே அடங்கியபிறகு அந்த 'ஃபில்லர் பேஜ்'ஐ (வில்லர் பேஜ் என்றும் சொல்லலாமில்லையா? :)) இங்கு பதிகிறேன்.

      உத்வேகமளிக்கும் நினைவூட்டலுக்கு மீண்டும் நன்றிகள்!

      Delete
    2. விஜய் உங்கள் பதிவை படிக்க தவறிவிட்டேன். மேலும் மரமண்டை பதிவை படித்தவுடன் படிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

      Delete
    3. Erode VIJAY : அட...நானும் தான் படிக்கவில்லை !

      Delete
    4. சீக்கிரம் , எதிர்பார்ப்புகள் இந்த பதிவில் எகிறி கொண்டே இருக்கிறது !
      புதன் என்றாலே பொன் கிடைக்கும் போல !

      Delete
  14. டியர் எடிட்டர் ,
    இம் மாதம் 3 இதழ்களா ? பேஷ் பேஷ் சூப்பர் சார் ! உங்களுக்கும் உங்கள் டீம்க்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் . அட்டை படங்கள் எல்லாமே கண்ணை கவருகின்றன . கூடுதலாக ஒரு இதழ் , அதுவும் ரிப்போட்டர் ஜானி இதழ் வரபோகின்றது எனும்போது , புதன் என்ன, கூடுதலாக மேலும் இரு நாளும் காத்திருக்க தயார் . இதையே அடுத்தடுத்த மாதங்களும் தொடரவும் . ஏனெனில் சீக்கிரமே வாசிப்பு முடிந்து விடுவதாக ஒரு பீலிங் . புத்தகங்கள் சிறிதாகி விட்டதனால் இந்த எண்ணப்பாடோ தெரியவில்லை .

    ReplyDelete
  15. சார் அந்த சிறகுகள் முளைத்து பறப்பது எப்போது ? அது ஒரு தொடரா? அல்லது ஒரே கதைதானா ? மேலும் "கார்சனின் கடந்த காலம் " மறு பதிப்பு - அதுதான் அந்த நண்டு வறுவல் சாப்பிடுவது எப்போது ?

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : குளத்திலும், ஆற்றிலும் 'தேமே' எனத் திரியும் அந்த நண்டுகள் இன்னும் கொஞ்ச காலமாவது நலமாய் தீர்க்காயுசாய் குப்பை கொட்டி விட்டுப் போகட்டுமே !

      Delete
  16. ஆச்சரியங்கள் தொடர வாழ்த்துகள்! திருச்சி வருகை தர இருக்கும் எடிட்டரை திருச்சி வாசகர்களின் சார்பாக வரவேற்கிறோம்!:-)

    ReplyDelete
  17. what about டெக்ஸ் வில்லர் Vs . கேப்டன் டைகர் polls??

    ReplyDelete
    Replies
    1. மொத்தம் பதிவான ஓட்டுக்களைவிட வேட்பாளர்கள் வாங்கியுள்ள ஓட்டுக்கள் அதிகமாக உள்ளது.
      நிஜ தேர்தல்கூட ஒழுங்காக நடக்கும்போல் உள்ளது.

      Delete
    2. Mugunthan kumar : வாழ்க ஜனநாயகம் !

      Delete
  18. அட்லாண்டிவில் ஆக்ரோஷம் மூலமாக கேப்டன் டைகர் சில காலமாக சில வாசகர்களிடம் இழந்த நன்மதிப்பையும் செல்வாக்கையும் மீட்டிடுவார் என நம்புகிறேன்!:-)

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : ஒவ்வொரு சாகசமும் ஒரு மின்னும் மரணமாய் இருத்தல் அவசியமென்ற நம் எதிர்பார்ப்புகள் மட்டுப்படும் பட்சத்தில் டைகர் தடுமாற மாட்டார் ! எதிர்பார்ப்புகளின் சுமையினை அவர் தோள்களில் சுமத்தும் போது தான் சிக்கலே ஆரம்பிக்கிறது !

      Delete
  19. நினைவுகளை துரத்துவோம் அட்டைபடத்தில் ரிப்போர்டர் ஜானி வெளிப்படத்தும் பீதி எதிர்பார்ப்பினை அதிகரிக்கிறது!:-o

    ReplyDelete
  20. விருமாண்டி திரைப்படத்தில் திரு. கமல்ஹாசன் அவர்கள் ஒரு புதுமையான யுக்தியை கையாண்டிருப்பார். நடந்த சம்பவத்தை இரு மாறுபட்ட கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தில் விவரிப்பது போல் திரைக்கதை அமைக்கபட்டிருக்கும்.

    இது வரை இணையதள நண்பர்களின் கருத்துக்களை மட்டும் கேட்டு வந்த ஆசிரியர் , இப்போது இணையத்திற்க்கு அப்பார்பட்டவர்களின் கருத்துக்களையும் கேட்டிருக்கிறார். கருத்து கணிப்புக்கள் கொஞ்சம் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய எண்ணத்தை பிரதிபலிப்பது போல் இருக்கிறது.

    காகிதத்தின் தரம் , மற்றும் சைஸ் குறைந்தாலும் பரவாயில்லை , நூறு பக்கங்களுக்கு மேற்பட்டு கொஞ்சம் தடிமனாக நமது காமிக்ஸ் வெளிவந்தால் நன்றாக இருக்கும். ( விலை பற்றி கவலையில்லை) நடுவில் பின் அடிக்கப்பட்ட ஒல்லி புக் படிக்கும் போது காமிக்ஸ் படிக்கும் உணர்வுக்கு பதிலாக “ குழந்தைகளின் கலரிங் புக், ஒரு நிறுவனத்தின் விலை பட்டியல் அடங்கிய catalog, " போன்றவற்றை படிக்கும் உணர்வு தான் எழுகிறது.

    சாக மறந்த சுறா மற்றும் பயங்கர புயல் ஆகிய கதைகளில் தென்படும் எழுத்து, வார்த்தை, மற்றும் கருத்து பிழைகளை பார்க்கும் போது , ஆசிரியரின் கவனத்திற்க்கே வராமல் , final proof பார்க்காமல் புத்தகம் அச்சுக்கு போகிறதோ என்று எண்ண தோன்றுகிறது.(ஜூனியர் எடிட்டரின் கைவண்ணமா? ....)

    Reply

    ReplyDelete
    Replies
    1. sundaramoorthy j : பாராட்டுக்கள் எனில் அது எனக்கும், குட்டுக்கள் எனில் அது பிறருக்குமென உத்தி பிரித்துக் கொடுக்கும் பாங்கில் ஆர்வம் காட்டாதவன் நான் ! So உங்கள் சந்தேகத்துக்கு அவசியமே கிடையாது !

      தவிர "தரம் குறைப்பு" என்பது இனி ஒரு பொழுதும் நம் பாதையின் அங்கமாய் இருந்திடப் போவதில்லை என்பதில் தெளிவாக உள்ளேன் ! பக்கங்களைக் கூடுதலாக்குவது அவசியமாகும் நாளினில் - விலையையும் எற்றிடுவது பற்றிச் சிந்திப்போமே ! திரும்பவும் ரிவர்ஸ் கியர் போட்டுக் கொண்டு துவங்கிய ஸ்தலத்திற்கே பயணம் செல்வது வேண்டாமே !

      Delete
  21. விஜயன் சார், ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல் உங்களால் உங்கள் கால் கட்டை விரலை எடுத்து வாயில் வைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகி விட்டது!

    இந்த மாதம் 3 புத்தகம்கள் என்ற முடிவு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி! ஆனால் கூடவே கடந்த மாத புத்தகம்களில் அதிகமாக தென்பட்ட எழுத்து பிழைகள் மனதில் நிழலாடுவதை தவிர்க்க முடியவில்லை! இதனை மனதில் கொண்டு வரும் இதழ்களை தயாரிக்கவும்.

    இவரு பாஸ்-ஆ இல்ல லூசா என நமது அலுவலக தோழர்களின் மைன்ட் வாய்ஸ் இங்கு வரை கேட்கிறது. உங்களின் இந்த முடிவு காமிக்ஸ்-ன் வசந்த காலம் மீண்டும் திரும்பிவிட்ட உர்ணர்வை தருகிறது! உங்கள் காமிக்ஸ் காதல் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்!

    காவியில் ஒரு ஆவி- முன் அட்டையில் உள்ள கருமை நிறத்திற்கு பதில் வேறு வண்ணம் கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும்!

    நண்பர்கள் கூறியது போல் நமது காமிக்ஸ் கதைகளின் தலைப்புகளில் கவனம் தேவை; அனைத்து தரப்பு வாசகர்களையும் மனதில் கொண்டு தலைப்புகளை தேர்வு செய்யவும்!

    புதிய இடம்களில் நடைபெறும் புத்தக திருவிழாகளில் (சாத்தான் சொன்னது போல்) பள்ளி குழந்தைகளை கவர்பதற்கு டைம் டேபிள் அல்லது லேபில் போன்றவைகளை தொடர்ந்து கொடுப்பது மாணவர்களின் பெற்றோரயும் நமது காமிக்ஸ் பக்கம் கொண்டுவரும்!

    ReplyDelete
    Replies
    1. ///////////////////////புதிய இடம்களில் நடைபெறும் புத்தக திருவிழாகளில் (சாத்தான் சொன்னது போல்) பள்ளி குழந்தைகளை கவர்பதற்கு டைம் டேபிள் அல்லது லேபில் போன்றவைகளை தொடர்ந்து கொடுப்பது மாணவர்களின் பெற்றோரயும் நமது காமிக்ஸ் பக்கம் கொண்டுவரும்!//////////////////////////////////////////////////

      +9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

      Delete
    2. Parani from Bangalore : கதைகளுக்கு நியாயம் செய்யும் கடமையே தலைப்புகளின் தலையாய நோக்கம் என்பது எனது அபிப்ராயம் ! அதன் பின்னரே வியாபார யுக்திகளும் இன்ன பிற விஷயங்களும் ! கதையினைப் படிக்காமலே அதன் தலைப்பின் பொருத்தத்தைப் பற்றிய கருத்து சரியாகிடாதே !

      The Red Spirit என்று பொருள்படுவதே ஒரிஜினலின் தலைப்பும் கூட ! ஆவிக்கு rhyming ஆக காவி மாத்திரமே நமது மாற்றம் !

      Delete
    3. சிவப்பாய் ஒரு சரக்கு ....................ஹி ஹி ஹி

      Delete
    4. சரக்கிலே ஒரு சிவப்பு

      Delete
    5. // The Red Spirit //
      // சிவப்பாய் ஒரு சரக்கு //

      சிவப்பு சாராயம்! ஹா ஹா ஹா! :D

      Delete
    6. இந்த நாட்டு TURTLE சிரிப்பில் ஒரு சிவப்பு தெரிகிறதே ...............................
      சிவப்பு நிற சிரிப்புக்கு காரணம் லிப்ஸ்டிக்கா இருக்குமோ ............???????

      Delete
    7. என்ன பொறமையா மந்திரி!

      லைட்டா!

      Delete
    8. செந்தில் ......அட்ட கத்தி படம் பார்க்கலையா...........................

      Delete
  22. ஜானி சித்திரக் கதையின் அட்டைப் படம் மிக அருமை!
    3 இதழ்களா!! பலே!!!

    ReplyDelete
  23. இந்த மாதம் 3 இதழ்கள் என்பது அற்புதமான செய்தி. விரைவில் வாரம் ஒன்று என வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. சமீபத்தில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் மாயாவி காமிக்ஸ் கேட்டு பழைய (VIP)வாசகர்கள் நச்சரித்ததில் சிவகாசி சிங்கமுத்து வாத்தியார் ஏகத்திற்கு குழம்பி போயுள்ளாராம். பழைய மறுப்பதிப்புகளை போட்டால் புதிய புத்தகங்களின் விற்பனை பாதிக்கக்கூடுமோ...?என நினைக்கிறாராம்.ஆனாலும், விஷயத்தை ஆறப்போடாமல் சூட்டோடு சூடாக அதிரடி முடிவுகள் சிலவற்றை அறிவிக்க இருக்கிறாராம்.அநேகமாக அடுத்த வருடம் சென்னையில் "மாயாவி" மறுபதிப்புகளை வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம்.

    மாயாவியோடு லாரன்ஸ்&டேவிட்,மாண்ட்ரேக்,காரிகன்,வேதாளர் போன்ற ரிட்டயர்ட் ஆசாமிகளும் ரிட்டர்ன் ஆகிறார்களாம்.விஷயத்தை "பரம ரகசியமாக"வைத்திருக்கும்படி தனது தோஸ்த்களான ஜூலியன் அசாஞ்சே,எட்வர்ட் ஸ்னோடென்,தூய பேயார் ஆகியோரிடம் சிங்கமுத்து வாத்தியார் சொல்லியிருக்கிறாராம்.அவர்களும் ரகசியம் காக்கப்படும் என உறுதி கூறியுள்ளார்களாம்.

    என்னமோ நடக்குது....மர்மமாய் இருக்குது... என்கிறீர்களா..? .ஹிஹி!!!

    ReplyDelete
    Replies
    1. saint satan : ஒற்றை வரி : கிசு கிசுக்களைப் படித்த கையோடு காமிக்ஸ் க்ளாசிக்ஸ்களில் நாம் ஒரு நூறு முறை மறுபதிப்பு செய்த கதைகளை நூற்றியோராவது தடவையாய்ப் படித்து விட்டால் பிசு பிசுத்து விடும் - கிசு கிசுக்கள் !

      Delete
    2. நாங்கள் கேட்பது காமிக்ஸ் கிளாசிக்கில் வராத ரிப்கிர்பி,காரிகன்,வேதாளர் கதைகள் சார் .இது

      புரியாத மாதிரியே மெயின்டைன் பண்ணுவதில் நீங்கள் எபோதும் இப்படிதானா? அல்லது

      இப்படிதான் எப்போதுமேவா?

      Delete
    3. செந்தில் ஆசிரியர் திடீரென இன்ப அதிர்ச்சி கொடுப்பதில் வல்லவர்தானே !
      அதனால்தான் இப்போது தாவி செல்கிறார் !
      அவர் பதில் கொடுத்துட்டார்ணா அவர் பேச்ச அவரே கேக்க மாட்டார் ....
      நிச்சயம் வேதாளர் குறித்த அறிவிப்பு திடுமென நிகழும் என பட்சி கூறுதே !

      Delete
  25. மாதம் தோறும் இதழ்கள் வருவதே பெரிய விசயமாக இருந்தது, ஆனால் இப்பொழுது மூன்று அல்லது இரண்டு இதழ்கள் ஆவது வந்து கொண்டு இருகின்றன. இதை எப்படி சாதித்தீர்கள்

    ReplyDelete
    Replies
    1. lion ganesh : ரொம்பவே சுலபம் ! பரஸ்பர நம்பிக்கை !

      எத்தனை சொதப்பி இருப்பினும் , என்றோ ஒரு நாள் நமது காமிக்ஸ் கனவுகள் நிஜமாகுமென எங்கள் மீது நீங்கள் வைத்த தளரா நம்பிக்கையும் ;

      தண்ணீரில் எழுதிய எழுத்தாய் ஏக வாக்குறுதிகள் கொடுத்திருந்த பின்னரும் - 2012-ல் yet another திட்டமிடலைத் துவக்கும் வேளையில் கூட வாசகர்கள் நம்மைக் கை விட மாட்டார்கள் என நாங்கள் உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையுமே இன்றைய நிலைக்கு பிரதான காரணங்கள் !

      செல்லும் தூரம் நிறைய உள்ளதெனும் போது காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள அவகாசம் எது ? Let's march on..!

      Delete
  26. திருச்சி வாசகர்கள் நிறைய பேர் இருக்கிறோம். ஆனால் அறிமுகம்தான் இல்லை. எல்லோரும் 9th பிப்ரவரி அன்று ஒன்று கூடி திருச்சி புத்தக கண்காட்சியை ஒரு கலக்கு கலக்குவோம். என் செல் நம்பரை நோட் பண்ணி முடிந்தவரை எல்லோரையும் கோ ஆர்டினேட் பண்ணலாம். என் செல் நம்பர் 9865275007.

    ReplyDelete
    Replies
    1. வாழைப்பூ வடை, நண்டு வருவல் எல்லாம் ரெடி பண்ணுங்கள்.
      விழாவை சிறப்பித்து விடுவோம்

      Delete
    2. ஒரு மாறுதலுக்கு திருச்சியில் நண்டு வடையும், வாழைப்பூ வறுவலுமாம் ! !

      Delete
  27. Dear Vijayan Sir,

    Good initiative for 3 or 4 books per month. Tiger "kundu" book in next moth is another surprise for us :)

    All the very best for Trichy Book Fair and upcoming book fairs ... Guys well prepare your questions to meet our Editor in TBF 2014.

    Next time don;t miss our Tiruppur book fair Sir !!!

    Regards
    Tirupur Blueberry (a) Nagarajan

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : நிச்சயமாய் 2015 திருப்பூர் புத்தகக் காட்சியில் நாம் மண்டையை நுழைத்திடுவோம் !

      Delete
  28. கேப்டன் டைகரின் இரு பாக இதழான "அட்லாண்டாவில் ஆக்ரோஷம் "

    ஏதாவது கதையின் தொடர்ச்சியா

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : டைகரின் இளம் பருவக் கதைகள் ஒரு தொடராய் செல்லும் சங்கிலிகள்..! முந்தைய பாகங்களுக்குப் பெரிதாய் ஏதும் சம்பந்தம் இல்லையெனினும், நீண்டு செல்லும் ஒரு படலத்தின் வெவ்வேறு அத்தியாயங்களைப் போல இவை !

      Delete
  29. காமிரேட்ஸ்,

    திருச்சியில் 27வது ரோட்டரி புத்தக கண்காட்சி இந்த வார இறுதியில் இருந்து துவங்குகிறது.

    Dates: Feb 8 To Feb 16th

    Venue: St Johns Vestry School Grounds, சென்ட்ரல் பஸ் நிலையம் அருகில்.

    Timing(s): தினமும் மதியம் 2.30ல் இருந்து இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த திருவிழா, விடுமுறை நாட்களில் 11 மணிக்கே துவங்கி விடும்.

    நமது லயன் முத்து காமிக்ஸ் சார்பாக தனியாக ஒரு ஸ்டால் எடுத்து இருக்கிறோம். நமது காமிக்ஸ் எடிட்டர் திரு விஜயன் அவர்களும் இந்த வார ஞாயிற்று கிழமை அன்று நமது ஸ்டாலுக்கு வருகை தர இருக்கிறார்.

    இந்த வருடமும் இந்த புத்தக கண்காட்சியுடன் இணைப்பாக உணவுத் திருவிழாவும் நடைபெற இருப்பது மற்றுமொரு சிறப்பு தகவல். காமிக்ஸ் தான் உங்களை கவரவில்லையெனில் விதவிதமான அறுசுவை விருந்துமா உங்களை கவராது?

    காமிரேட்ஸ்,

    தயவு செய்து இந்த நிலைதகவலை Facebook, Twitter, Mail போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்யவும்.

    திருச்சி மற்றும் அதன் அருகாமையில் இருக்கும் நண்பர்கள் நமது காமிக்ஸ் ஸ்டால் பற்றி தெரிந்து கொள்ளவும், ஒரு பெரிய காமிக்ஸ் சந்திப்பு நடத்தவும் இந்த ஷேரிங் ஏதுவாக இருக்கும்.

    ஷேர் செய்யப்பொவதர்க்கு முன்கூட்டிய நன்றி.

    திருச்சியில் இருக்கும் காமிக்ஸ் நண்பர்கள் யார் யார் வரப் போகிறீர்கள்? என்று தெரிந்தால் நன்றாக இருக்கும். நமது திருச்சி காமிரேட் திரு விஜயஷங்கர் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த காமிக்ஸ் சந்திப்புக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்: 9865275007 (திருச்சி விஜயஷங்கர் சாரின் மொபைல் நம்பர் இது)

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஸ்வா சார்...

      நான் யாரிடம் திருச்சி புத்தக கண்காட்சிக்கு விலாசம் கேட்பது என்று இருந்தேன்.. நீங்கள் வழி காட்டி விட்டீர்கள்...

      வாய்ப்பு இருந்தால் ஞாயிறு சந்திப்போம்... நண்பர்களே...

      Delete
  30. இம்மாதம் மூன்று புத்தகங்கள்
    மூன்றாவது புத்தகம் ஜானி
    இனி ஒவ்வொரு மாதமும் முன்று புத்தகங்கள்
    Good news one after another

    ReplyDelete
  31. இனிமையான surprise கொடுத்ததற்கு நன்றிகள் சார் ! அட்டைப்படங்கள் இரண்டும் eye catchy யாக உள்ளது.

    //ஜானியின் TOP 5 பட்டியலில் // பட்டியல் ??? மட்டற்ற கதைகளை நாம் பதிப்பித்து விட்டோமா ??

    ஒரு சின்ன suggestion. மாதத்திற்கு முன்று அல்லது நான்கு புத்தகங்கள் என்று பிக்ஸ் செய்யும்போது, இரண்டு புத்தகங்களை ஒன்றாம் தேதியன்றும் மீதி ஓன்று அல்லது இரண்டு புத்தகங்களை பதினைந்தாம் தேதியன்றும் கிடைக்குமாறு செய்தால் நமது காமிக்ஸ் passion மாதம் முழுவதும் lively யாக இருக்கும். குரியர் செலவு கூடும் என்றாலும் இந்த சிறிய உயர்வு மற்றதன் முன்னே ஒரு பொருட்டாக தெரிவதில்லை.

    வாசகர்கள் / நண்பர்களின் கருத்துகளை கேட்டு பாருங்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி : கூரியர் செலவுகள் ரொம்பவே உறுத்தலாய்த் தெரியத் துவங்கிடுமே என்ற பயம் தான் காரணம் ! அஞ்சல் துறையின் பார்சல் சேவைகள் மாத்திரம் நம்பகமாய் இருப்பின், மாதம் இரு despatches என்று சுலபமாய்த் திட்டமிட்டிட முடியும் !!

      Delete
    2. விஸ்கி-சுஸ்கி : அது சரி....இளவல் நலமா ?

      Delete
    3. //அது சரி....இளவல் நலமா ?//
      Thanks for the wonderful blessings from you and friends, his surrounding is always lively and cheerful.

      Delete
    4. யாருக்கும் உபயோகமில்லாமல் ,அதிகரிக்கும் கொரியர் செலவு வீணே !

      Delete
    5. //யாருக்கும் உபயோகமில்லாமல் ,அதிகரிக்கும் கொரியர் செலவு வீணே ! //

      நண்பா, ஒரே நாளில் நான்கு புத்தகங்களையும் தயார் செய்து விநியோகம் செய்வது என்பதை விட, மாதத்திற்கு இரண்டு முறை ஐந்து(?) புத்தகங்களை சீரான இடைவெளியில் தயார் செய்வது சுலபம். முதலில் ஆசிரியரை இந்த டீலுக்கு சரி செய்து விட்டால் பின்பு "மாதத்தின் முதல் தேதியில் முன்று புத்தகங்களையும் பதினைதாம் தேதி இரண்டு புத்தகங்களையும்" என்ற டீலுக்கு அவரை தலையசைக்க செய்வது சுலபம்! : ). இந்த பின்னணி அர்த்தத்தை ரகசியமாக புரிந்து கொள்ளவும்! : )!!!

      Delete
    6. ம்ம்ம் புரிகிறது....ஆகா மொத்தம் காமிக்ஸ் செழித்து வளர நீங்கள் நடத்தும் புரிகிறது !

      Delete
    7. எனக்குப் புரியலையே ஸ்டீல். யாராவது விளக்கினால் தேவலை!

      Delete
    8. Erode VIJAY : எனக்கும் தான் !

      Delete
    9. எனக்கு புரிந்தது. எடிட்டர் புரியாத மாதிரி நடிக்கிறார் என்று நினைக்கிறேன்.

      Delete
    10. சார் நண்பர்களே எனும் பதம் உங்களையும் சேர்த்திதான் என தங்களுக்கு புரியும் என நினைக்கிறேன் ! அது புரிந்தால் எல்லாமே புரிந்து விடுமே !

      Delete
  32. Super news 3 stories in a month. Always looking forward to reporter Johnny stories, just now read " vuudo suniyam " what a story, thrill, action, suspense, wow.

    ReplyDelete
  33. மரியாதைக்குரிய ஆசிரியருக்கும் அன்பிற்கு உரிய நண்பர்களுக்கும் என்னுடைய முதல் வணக்கம் . இது வரை அன்பு நண்பர் ஈரோடு விஜய் மூலம் ஒலித்த என் குரல் இனி என் கைவண்ணத்தில் தொடரும். 3இதழ் என்பதை உற்சாகமாக வரவேற்கிறேன் . 3அட்டைகளில் ஜானி அட்டை அட்டகாசம் சார் . அக்கதையே அசத்தும் என்பது என் எண்ணம். திருச்சி திருவிழாவில் விற்பனையில் அசத்தல் புரிய
    ஆண்டவனை வேண்டுகிறேன் சார் . சேலம் Tex விஜயராகவன் .

    ReplyDelete
    Replies
    1. புதிய ஆண்ட்ராய்டு மொபைலுக்கும், இங்கே 'கன்னி' கமெண்ட் இட்டதற்கும் வாழ்த்துக்கள் விஜயராகவன்!
      இனி உங்கள் கருத்துக்களால் இவ்வலைப்பூ நிறைந்து கிடக்கட்டும்.:)

      Delete
    2. நன்றி நண்பா. நினைவுகளை துரத்துவோம் திருச்சி திருவிழா ரிலீஸ்ங்ளா சார் ?

      Delete
    3. @ சேலம் டெக்ஸ் விஜய்

      உங்களோட புது மொபைலை எடிட்டர் பார்க்க ஆசைப்படுறாராம். திருச்சிக்கு வாரியளா?

      Delete
    4. சேலம் Tex விஜயராகவன் : 3 இதழ்களுமே வரும் புதனன்று அனுப்பிடப்படும் ; திருச்சியில் ரிலீஸ் செய்வதெற்கென காத்திருந்தால் இங்குள்ள அனைவரையும் தேவையின்றிக் காக்கச் செய்தது போலாகி விடுமே !

      Delete
  34. எடிட்டர் சார்,
    இம்மாதம் மூன்று புத்தகங்கள் என்பது நிஜமாலுமே ஒரு இன்ப அதிர்ச்சிதான். சூப்பர் சார். இனி வரும் மாதங்களில் இது போல் நிறைய இருக்கும் என்று நம்புகிறேன் :-)

    ReplyDelete
  35. வாவ் .....எங்கள் எதிர் பார்ப்பை இப்பொழுது தாங்களே புரிந்து கொண்டீர்களே சார் ..அது போதும் எங்களுக்கு .இப்பொழுது மூன்று புத்தகம் ....இல்லையல் இனி நான்கு புத்தகம் .இதற்கு தானே காத்திருந்தோம் .மிக்க மகிழ்ச்சி சார் .புத்தகம் அதிகரித்தால் சந்தா தொகை அதிகரிக்கலாம் .மீண்டும் எவ்வளவு சந்தா கட்ட வேண்டும் என்று அறிவித்தால் மகிழ்ச்சியுடன் விரைவில் பணத்தை கட்டுகிறோம் சார் .

    இம்முறை அட்டை படங்கள் அனைத்தும் அட்டகாசம் சார் .மகிழ்ச்சியுடன் எதிர் பார்க்கிறோம் .அடுத்த மாதம் ஆவது " டைகர் " நண்பர்களை ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில் நானும் காத்திருக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : //மீண்டும் எவ்வளவு சந்தா கட்ட வேண்டும் என்று அறிவித்தால் மகிழ்ச்சியுடன் விரைவில் பணத்தை கட்டுகிறோம் சார் .//

      நிதானமாய்ச் செல்வோம் பரணி சார் ! உங்கள் ஒவ்வொருவரின் உற்சாக வார்த்தைகளுக்குமே - காந்தித் தாத்தாவின் நோட்டுக்களை விட வலிமை ஜாஸ்தி ! So இப்போதைக்கு அவற்றின் மீதே சவாரி செய்து வண்டியை ஓட்டிடுவோம் !

      Delete
  36. ஜானியின் அட்டைபபடமும், மொழி பெயர்ப்பும் பழைய காலத்தை நினைவு படுத்திக்கின்றன... திடீரென்று கட்டை விரலுக்கு வேலை தந்த ஆசிரியரின் சிந்தனை ஓட்டம் வாழ்க... பிப்ரவரி இதழ்களை விடவும் மகிழ்ச்சி தருவது தங்க தலைவன் டைகர் ஆக்ரோசமான வருகையே... மீண்டும் ஒரு முறை வாக்கெடுப்பு நடப்பது உறுதி.

    கருப்பு வெள்ளை நாயகர்களின் பற்றி பரம ரகசியம் ஏன்??

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : முழு ஆண்டின் அட்டவணையையே உங்கள் கைகளில் திணித்தான பின்னே பரம ரகசியங்கள் என்றும் ஒன்று இருத்தல் சாத்தியமோ ? கதைகளை வெளியிடும் வரிசையினை மாத்திரம் எனது வசதிக்கேற்ப முன்னும், பின்னுமாய் நகற்றிக் கொள்ளும் சுதந்திரத்தை தக்க வைத்துள்ளேன் ! அவ்வளவே !

      Delete
  37. ஓட்டு மொத்த தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் ஒரே விருப்பமான த்ங்க தலைவன் டைகர்இன் மின்னும் மரணம் மறுபதிப்பை சென்ற ஆண்டு ஈரோட்டில் அறிவித்தது போல இந்த ஆண்டு ரத்த கோட்டை 5 பாகமும் மறுபதிப்பு அறிவிப்பை எதிர் பார்க்கலாமா??

    ReplyDelete
    Replies
    1. @ Rummi xiii

      செம டீல்! :)

      Delete
    2. +999999999999999999999999999999999999999999999999999999999999999999999

      Delete
    3. @ FRIENDS : தங்கத் தலைவர் ஓவராய் ஓடியாடினால் நலத்திற்கு நன்மை செய்யாது என்பதால் மின்னும் மரணத்தோடு தனது மறுபதிப்பு படலத்தை மூட்டை கட்டி வைக்கவிருப்பதாய் டெக்சாஸ் தலைமையகம் தகவல் சொல்லியுள்ளது !

      Delete
  38. மீண்டும் சந்தா அல்லாது , கடைகளுக்கு நமது புத்தகங்களை அனுப்பிடும் எண்ணம் ஏதேனும் உள்ளதா ?
    ஏனென்றால் சமீபத்தில் நான் ஈரோடு ரயில் நிலையத்தில் , பேருந்து நிலையத்தில் (நான் வாடிக்கையாக புத்தகம் வாங்கும் இடங்கள் ) உள்ள விற்பனையாளர்களிடம் பேசிய போது , 'லயன் காமிக்ஸ் ஆ , நல்லா தான் ஸார் இருக்கும் , அதெல்லாம் இப்போ வரது இல்லயே , முனெல்லாம் வந்தா சீக்கிரம் போய்டும் ' என்று சொல்ல கேட்டேன் .

    ReplyDelete
    Replies
    1. @ satranlove

      ஈரோடு ரயில் நிலையத்தில் தற்போது நமது காமிக்ஸ்கள் கிடைப்பதில்லை என்றாலும், பஸ் நிலையத்தில் உள்ள புத்தகக் கடையில் தற்போது சிவகாசியில் ஸ்டாக்கில் உள்ள அனைத்து புத்தகங்களுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. வண்ணத் தோரணங்களாய் இரு முழு வரிசைகளில்! என் சிறுவயது முதல், இத்தனை புத்தகங்களையும் ஒருசேரக் கண்டதில்லை நான்.

      ஆனந்தமான காட்சி! :)

      Delete
    2. satranlove : முன்பணம் அனுப்பிடும் எந்தவொரு முகவருக்கும் நமது புக்குகளை அனுப்புவதில் சிரமமேது ?தற்சமயம் ஈரோட்டில் பஸ் ஸ்டாண்ட் முகவர் மாத்திரமே எடுத்து வருகிறார் !

      Delete
    3. விஜய் மதுரையில் நமது புத்தகங்கள் பஸ் ஸ்டாண்டில் தொங்கும் அழகை வெகுவாய் ரசித்திருக்கிறேன் ! புத்தகம் வாங்கி விட்டாலும் அந்த வழியாக செல்லும் போது ஒவ்வொரு முறையும் அந்த காட்ச்சியை காண என்றே பேருந்தில் இருந்து இறங்கி பார்ப்பது வழக்கம் ! அதையும் மிஞ்சி விட்டது போலும் ஈரோடு ! ஈரோடு திருவிழா வரும் பொது அந்த கடையை எனக்கும் காட்டுவீர்கள் என நினைக்கிறேன் !

      Delete
  39. ஆஹா ! முதலில் அட்டை படம் தூள் சார் ! நமது ஓவியர் ஜானிக்கு lightning effect கொடுத்துள்ளார் போலும் ! மின்னல் வெட்டுவது என் கண்ணிலும் தெரிகிறது ! ஜோர்டானின் அட்டை படம் வெகு ஜோர் ! அருமை !
    அதிலும் இந்த முறை விறுவிறுப்பாய் ஜானியை கொண்டு வந்தது எனது எதிர் பார்ப்பிலும் விருவிருப்பை விதைத்து விட்டது !
    மேலும் விறுவிறுப்பாய் மாதம் மூன்றிலிருந்து நான்கு வரை எனும் வாசகம் , இதைத்தானே எதிர்பார்த்தோம் என மேலும் ஒரு சபாஷ் !
    மார்ச்சின் எதிர்பார்ப்பில் வெடி வைத்து போட்டு விட்டாலும் , டைகர், ப்ளூ கோட் என இரண்டு ப்லூக்களையும் ஜோடியாய் விட்டு அதகள படுத்த போகிறீர்கள் என்றதும் மார்ச்சின் மேல் சுவாரஸ்யத்தை கூட்டி விட்டீர்கள் !
    நன்றி நன்றி நன்றி சார் !!!

    ReplyDelete
    Replies
    1. நமது ஆஸ்த்தான ஓவியருக்கு எனது வாழ்த்துக்களையும் , நன்றிகளையும் தெரிவித்து விடுங்கள் !

      Delete
    2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நிச்சயமாய் !

      Delete
  40. 6 கலர் ரீபிரிண்ட் போடும் போது ஒரு b/w போட்டால் என்ன சார், எவ்ளோ பேர் கேட்கரங்க, புக் fairஇல் / இங்கு கேட்டவங்களுக்காக மட்டும் போட்டிருந்தா கூட, சந்தா qty விட அதிகமாக விற்பனை ஆகிஇருக்கும் அல்லவா.. அட்லீஸ்ட் 1 b /w Reprint போடலாம்.
    Super hero Spl இல் சூடு வங்கிய காரணம், கதைகளின் நீளம் மட்டுமே அன்றி, மாயாவி, ஸ்பைடர் பிடிக்காமல் இல்லை. b/w ரீபிரிண்ட் போடும் போது, 1 கதை மட்டும் போடலாம் ;) பாக்கெட் சைசில் கூட ட்ரை செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. அதேபோல் தொர்கல் மினி லயன் இல் வெளியிடுங்கள், GN is for எ.தி.மே / சி.சு / பி.பி டைப் கதைகளுக்கு தான். அதற்கு தானே GN என்று தனியாக ஆரம்பித்தீர்கள், தொர்கல் / XIII என்றால் லயன் இல் லே வெளியிட்டிருக்கலமே.. (or is this marketing strategy for getting the GN subscription).

      Delete
    2. சூப்பர் விஜய் : நிறைய முறைகள் நாம் அலசி ஆராய்ந்து விட்டதொரு தலைப்பு இந்த b&w மறுபதிப்புகள் பற்றிய விஷயம் ! எனினும் மீண்டுமொருமுறை சுருக்கமாய் :

      ஆண்டுக்கு ஒரே ஒரு மறுபதிப்பு ; பாக்கட் சைஸ் என்பன நடைமுறை சாத்தியமற்ற விஷயங்கள். இப்போது நாம் எட்ட வேண்டியது - சைஸ்களில் ; விலைகளில் ; தரங்களில் ; கதைக்களங்களில் ஒரு consistency யினையே! ஒவ்வொரு கதைத்தொடருக்குமொரு அளவு ; விலை என்ற நமது ஆராய்ச்சிகள் எல்லாமே முந்தைய நமது சொற்ப விலைகளுக்கு ஒ.கே. தான் ; ஆனால் இன்று அந்தப் பாதைகளைத் திரும்பவும் முயற்சிப்பது சரியாகாது !

      So - மீண்டும் மறுபதிப்புகள் ; b &w என்றெல்லாம் நமக்கு அவா எழும் பட்சத்தில் - அதற்கென ஒரு முறையான அமைப்பு ; முதலீடு ; சந்தாக்கள் தேறினாலும், தேறாவிடாலும் தொடர்ந்திடும் திடம் ; அப்பிரிவின் விற்பனையினைக் கண்காணிக்க பலம் என சகலமும் தேவை ! 'எடுத்தோம்.. கவிழ்த்தோம்' என ஒரு வேகத்தில் ஒவ்வொரு முயற்சியிலும் இறங்கி விட்டு, அதனை sustain செய்திடும் ஆற்றல் இல்லாது ஓசையின்றி ஓரம் கட்டுவதெல்லாம் நமது புராதன அனுபவங்களாய் மாத்திரமே இருந்து விட்டுப் போகட்டுமே ?! மறுபதிப்புகளுக்கும் ஒரு காலம் வரும் ; அதனையும் சுமக்கும் ஆற்றல் நமக்கு ஆண்டவன் அருளும் நாளன்று !

      Delete
    3. சூப்பர் விஜய் : இதுவும் கூட ஏக விவாதங்களைச் சந்தித்த தலைப்பு தானே ?

      கனமான கதைக்களங்களுக்கு நம்மில் நிறையப் பேர் தயாராக இல்லை என்பதாலேயே இந்தாண்டு அவற்றிற்கு பின்சீட்டில் இடம் தந்துள்ளோம். தவிர - கிராபிக் நாவல் என்றாலே 'அழுகாச்சிக் காவியங்கள்' மட்டுமே என்பதான முத்திரை குத்தப்படும் நிலை எழுவதும் long run -ல் நிச்சயம் நலம் தராது ! So சற்றே மாறுபட்ட fantasy ; ஹாரர் ; sci-fi போன்ற கதைகளை GN வரிசையில் கொஞ்சம் கொஞ்சமாய் அறிமுகம் செய்வது தான் long term திட்டம். தொடரும் மாதங்களில் ; ஆண்டுகளில் பார்க்கத் தான் போகிறீர்கள் !

      Delete
    4. தொடரும் வாரங்களில்........... தொடரும் நாட்களில்................

      Delete
    5. // So சற்றே மாறுபட்ட fantasy ; ஹாரர் ; sci-fi போன்ற கதைகளை GN வரிசையில் கொஞ்சம் கொஞ்சமாய் அறிமுகம் செய்வது தான் long term திட்டம். //
      சீக்கிரம் அறிவிப்புகளை வெளியிடுங்கள் சார் !
      மாதம் மும்மாரி நமது காமிக்ஸ்கள் பொழிய இருக்கும் வேலையில், வசந்தத்தின் வெளிப்பாடாய் புதிய தளிர்கள் முளைப்பது குறித்து குயில் கூவுவது போல உள்ளது தங்களது இந்த வரிகள் !

      Delete
  41. A graphic novel is a type of comic book, usually with a much more lengthy and complex storyline similar to those of novels, having many more pages and content than a comic book and often aimed at mature audiences (but not always). The term also encompasses comic short story anthologies, and in some cases bound collections of previously published comic-book series or chapters of manga. Graphic novels are typically bound in longer and more durable formats than familiar comic magazines, using the same materials and methods as printed books, and are generally sold in bookstores and specialty comic book shops rather than at newsstands.

    ReplyDelete
  42. நண்பர்களே,

    சென்றவாரத்தின் ஒரு மாலைப்பொழுதில், என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் ஒருவனைச் சந்திக்கச் சென்றிருந்தேன். சென்ற ஈரோடு புத்தகத்திருவிழாவில் நம் எடிட்டர் பங்கேற்றபோது நீண்ட நேரம் நம்முடனிருந்து எடிட்டரை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தவர்களில் அவனும் பிரதானமானவன்.

    அவனுக்கொரு அண்ணன். சில வருடங்களுக்கு முன்பு குவைத்தில் வேலை செய்துவந்த அவருக்கு, பணியிடத்தில் நிகழ்ந்த ஒரு மோசமான சம்பவத்தால் கைவசமிருந்த பணத்தையும், வேலையையும் இழந்து வெறும் கையோடு நாடு திரும்பியிருக்கிறார். இழப்பாலும், ஏமாற்றத்தாலும் நொடிந்துபோன அவர், தாளமுடியாத மன இறுக்கத்தால் பீடிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே பல மாதங்களாக முடங்கிக் கிடந்திருக்கிறார். அவரது மனநிலையை சீராக்க குடும்பத்தாரால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு முயற்சியும் பெரிதாய் பலன் ஏதும் அளிக்கவில்லை.

    இந்நிலையில், ஒருநாள் என் நண்பன் தன் அண்ணனிடம் ஒரு டெக்ஸ்வில்லர் புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறான். இதற்குமுன்பு காமிஸ்களில் துளியும் பரிட்சயமில்லாத அவர், அதைப்படிக்க முதலில் ஈடுபாடு காட்டவில்லை. தொடர்ந்த வற்புறுத்தலின் பேரில் ஒரு டெக்ஸ் கதையைப் படித்து முடித்தவர் 'இவரது கதைகள் வேறு ஏதாவது வைத்திருக்கிறாயா?' என்று கேட்கவே; என் நண்பனும் சந்தோசமாகத் தன்னிடமிருந்த டெக்ஸ் கதைகளை ஒவ்வொன்றாக அவரிடம் படிக்கக் கொடுத்திருக்கிறான். அத்தனை கதைகளையும் சுவாரஸ்யமாகப் படித்து முடித்தவர், அவனிடம் இல்லாத மற்ற டெக்ஸ் கதைகளும் வேண்டும் என்று அடம்பிடித்து, எப்படியோ மற்ற நண்பர்களிடமிருந்து புத்தங்களைக் கடன் வாங்கி, அதுவரை வெளிவந்திருந்த அத்தனை டெக்ஸ் கதைகளையும் படித்துமுடித்து, இறுதியில் தன் மன இறுக்கத்திலிருந்து முழுவதுமாக மீண்டிருக்கிறார்.
    "சோதனைகள் வரும்போது துவளாமல் வாழ்கையை வெற்றிகரமாக்கிக் கொள்ளும் மன தைரியத்தை நான் இந்த டெக்ஸிடமிருந்து பெற்றிருக்கிறேன்" என்று தன் குடும்பத்தாரிடம் இன்றும் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருகிறார். நமது காமிக்ஸ்களில் டெக்ஸ் கதைகளை மட்டும் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது ஈரோடு பஸ் நிலையம் அருகே சொந்தமாக ஒரு 'ஹார்டுவேர் & டூல்ஸ்' கடையை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

    இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவம் நண்பர்களே!  டெக்ஸின் புகழ்பாட என்னால் புனையப்பட்டதல்ல என்று உறுதிகூறுகிறேன்.

    'அடுத்த ஈரோடு புத்தகத் திருவிழாவின்போது அவசியம் உன் அண்ணனையும் அழைத்துவர வேண்டும்' என்று என் நண்பனிடம் அன்புக் கட்டளை இட்டிருக்கிறேன்.

    காமிக்ஸ்கள் சத்தமின்றி நிகழ்த்திவரும் இப்படிப்பட்ட ஆச்சரியங்களில் வெளிச்சத்திற்கு வராதவை இன்னும் எத்தனையோ!!!

    :)

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் .........உண்மை ....

      .இது தான் காமிக்ஸ் மகிமை .......

      ..இது தான் டெக்ஸ் வில்லரின் திறமை ......

      இது புரிந்தவர்களுக்கு பெருமை .....

      அனைவருக்கும் சொல்வது நம் கடமை ...

      வில்லரை பழிப்பவர்கள் அடைவார்கள் சிறுமை ...





      Delete
    2. @விஜய், Thanks for sharing! டெக்ஸின் கதைகளிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலலாம்; அவற்றுள் முக்கியமானது, சோர்வுக்கு இடம் தராமலிருப்பது. அதே நேரம் ஓய்வின் அவசியத்தையும் புரிந்து செயல்படுவது.

      //..இது தான் டெக்ஸ் வில்லரின் திறமை ......
      இது புரிந்தவர்களுக்கு பெருமை .....//

      இது கொஞ்சம் ஓவர். சிக்பில் கதைகளிலிருந்துகூட நாம் நிறைய கற்றக் கொள்ளமுடியும். அது ஆளைப்பொருத்தது. எல்லாவற்றையும் டெக்ஸிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடாது. உதாரணத்திற்கு சோதாக்களை நையப்புடைப்பது... :D

      Delete
    3. ஒருவருக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய காரியத்தை யார் செய்தாலும் பாராட்டுக்குரியதே.
      அந்த அண்ணனின் தம்பியாக நான் இருந்திருந்தால் மின்னும் மரணம் கதையை மட்டும் படிக்க கொடுத்து ஒரே நாளில் அவருக்கு தன்னம்பிக்கை கிடைத்து, சோதனைகள் வரும்போது துவளாமல் வாழ்கையை வெற்றிகரமாக்கிக் கொள்ளும் மன தைரியத்தை பெற்றிருப்பார்.

      Delete
    4. @ முகுந்தன்

      //மின்னும் மரணம் மட்டும் படிக்கக் கொடுத்து ஒரே நாளில் அவருக்குத் தன்னம்பிக்கை கிடைத்து //

      ஹா ஹா ஹா! 'மின்னும் மரணம்' அவரிடம் இல்லாதிருந்திருக்கக் கூடும், நல்லவேளையாக! :D

      Delete
    5. @ FRIENDS : அறுவை சிகிச்சையினை சந்திக்கும் முன்னே எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொள்ள மாடஸ்டி கதையினைப் படித்தேன் - என என்னிடம் சொல்லியுள்ள நண்பரும் உண்டு ; ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் நம் நாயக /நாயகியர் உத்வேகம் தருவதை உணர முடிகின்றது ! டெக்ஸ் அந்த வகையில் முழுக்க முழுக்க பாசிட்டிவான நாயகர் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க இயலாது !

      Delete
    6. மார்க்கெட்டில் எத்தனையோ தன்னம்பிக்கை புத்தகங்கள் விற்கின்றன. அவற்றிற்கு எல்லாம் பாஸ் மின்னும் மரணம்தான். 8 அல்லது 10 வயதில் ஒரு சிறுவன் மின்னும் மரணம் படித்தால் அவன் வாழ்க்கையில் ஒரு சிறந்த வெற்றியாளனாக வருவான் என்பதில் சந்தேகமில்லை.

      அதே டெக்ஸ் கதையை படித்தால் மாப்பிள்ளை படத்தில் வரும் விவேக்போல் இருப்பான் என்பதில் ஐயமில்லை.

      Delete
    7. /////உதாரணத்திற்கு சோதாக்களை நையப்புடைப்பது... :D/////...........COUNTRY ஆமை லொள்ளு தாங்கலை ..........

      Delete
    8. //டெக்ஸின் கதைகளிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலலாம்; அவற்றுள் முக்கியமானது, சோர்வுக்கு இடம் தராமலிருப்பது. அதே நேரம் ஓய்வின் அவசியத்தையும் புரிந்து செயல்படுவது. //
      //அறுவை சிகிச்சையினை சந்திக்கும் முன்னே எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொள்ள மாடஸ்டி கதையினைப் படித்தேன் - என என்னிடம் சொல்லியுள்ள நண்பரும் உண்டு ;//
      இதே வரிசையில் லார்கோ கதைகள் , பதிமூன்று, ஷெல்டன் என காமிக்ஸ் நாயகர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் நம்பிக்கை விதைக்கின்றனர் ! சிறு வயதில் இருந்து இப்போது வரை நான் எதற்கும் சோர்ந்து போனதில்லை , அதற்கு காரணம் நமது நாயகர்களே மும்மூர்த்திகளில் இருந்து அவர்களையும் மிஞ்சிய தற்போதைய லார்கோ வரை ! இவர்கள் ஒவோவ்ருவரும் சுய முன்னேற்ற வரிசை நூல்களுடன் வைத்து படிக்க கூடிய உத்வேக புத்தகங்கலாய்தான் இப்போது வரை காண்கிறேன்

      Delete
    9. டைகர் என்பவர் நல்ல கதைகளை அளித்துள்ளார் ! ஆனாலும் அவர் கனவு நாயகனாகும் தகுதியை இழந்து விட்டார் துரோகம் செய்து என்பது தவிர அவர் மேல் குறையில்லை ! டெக்ஸ் உடன் தயவு செய்து அவரை ஒப்பிடாதீர்கள் ! சிங்கத்துடன் சினத்தை ஒப்பிடலாம், சின்னவனை ஒப்பிடலாமா ! சாகசங்கள் சரிதான் ! ஆனால் நல்ல மனதினால் உயர்ந்த இமயமான டெக்ஸ் உடன் எந்த தைரியத்தில் மீண்டும் மீண்டும் கடுகை விட குறுகிய குரூர மனம் கொண்ட டைகரை ஒப்பிடுகிறீர்கள் என புரியவில்லை முகுந்தன் ! அவதாரை மாற்றியது போல மனதையும் மாற்றி கொள்ளுங்கள் !
      டெக்ஸ் ன் கிடைத்த அனைத்து புத்தகங்களையும் கொடுத்து அவர் அண்ணன் மனதை மாற்றினார் , உங்களால் டைகரின் அனைத்து புத்தகங்களையும் கொடுக்க முடியுமா மன நிலை தேற ! டைகரின் கொடூர மனம் குறித்து கூறும் ரத்த குருதி படிந்த ரத்த தடம் ஒருவர் கையில் கிடைத்தால் அவர் மனம் வெறுத்து விட மாட்டாரா ! இந்த உலகமே இப்படிதான் போலும் என உலக வாழ்வில் இருந்து ஒதுங்கி கொள்வோம் என நின் ஐக்க மாட்டாரா ? டெக்ஸ் என்பவர் எப்போதும் நியாயங்களையும் , நம்பிக்கை அற்றவர்க்கு நம்பிக்கையும் அளித்து அவர் உடனே பயணிக்கும் அனுபவம் தருகிறார் கார்சனுக்கு முக்கியத்துவம் அளிப்பது போல ! நான் படிக்கும் ஒவ்வொருவாட்டியும் கார்சன் போலவே என்னையும் நினைத்து கொள்வேன் ! அந்த அளவுக்கு .....சொன்னால் புரியாது எனும் பந்தம் அல்ல....படித்த அனைவருக்கும் புரியுமே !

      Delete
    10. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //டைகரின் கொடூர மனம் குறித்து கூறும் ரத்த குருதி படிந்த ரத்த தடம் ஒருவர் கையில் கிடைத்தால் அவர் மனம் வெறுத்து விட மாட்டாரா//

      சும்மா காமெடி செய்யாதீர்கள் ஸ்டீல் ;)

      டெக்ஸ்/ன் பூதவேட்டை, நிலவொளியில் ஒரு நரபலி, துயிலெழுந்த பிசாசு எல்லாம் படித்தால் நமக்கு சித்தம் பேதலித்து போய்விடுமா என்ன ? உங்களுக்கு தலைவலி என்றால் தலைவலி மாத்திரை தானே போட வேண்டும் ? அதை விட்டு விட்டு வயித்துவலி மாத்திரை போடுவீர்களா என்ன ?

      ராணுவத்தில் டிஸ்மிஸ் ஆன நபருக்கு ராணுவ ஒழுங்கைப் பற்றி தெரிந்துக்கொள்ள இரத்தத் தடம் - புத்தகத்தை படிக்கத் தருவோம் ; துரோகிகளாலும் எதிரிகளாலும் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் ஒருவருக்கு - மின்னும் மரணம் படிக்கத் தருவோம் ; ஞாயம், நீதி, நேர்மை, தர்மம் என வாழ நினைப்பவருக்கு - இரத்தக் கோட்டை புத்தகத்தை படிக்கத் தருவோம் ; காதலில் - காதலியின் துரோகத்தால் தோற்றுப் போகும் ஒருவருக்கு - அரிஸோனா லவ் - படிக்கத் தருவோம் ; வீரத்தால், தன் கடமையால் சாதிக்க நினைக்கும் ஒரு போலீஸ்காரருக்கு, சகாயம் போன்ற கலெக்டருக்கு - தோட்டா தலைநகரம் படிக்க கொடுப்போம் !

      Delete
    11. ஹ ஹ ஹா காமெடி யார் செய்கிறார்கள் !
      //டெக்ஸ்/ன் பூதவேட்டை, நிலவொளியில் ஒரு நரபலி, துயிலெழுந்த பிசாசு எல்லாம் படித்தால் நமக்கு சித்தம் பேதலித்து போய்விடுமா என்ன ? //
      யாருக்குஆவது சித்தம் பேதளித்ததா ?
      //ராணுவத்தில் டிஸ்மிஸ் ஆன நபருக்கு ராணுவ ஒழுங்கைப் பற்றி தெரிந்துக்கொள்ள இரத்தத் தடம் - புத்தகத்தை படிக்கத் தருவோம் ;//
      உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் ஒழுங்கீனம் காரணமாக சிறைக்கு மேலதிகாரிகள் கண்டனம் பெற்று சிறைக்கு செல்லும் டைகரயா இப்படி சொல்கிறீர்கள் !
      துரோகிகளாலும் எதிரிகளாலும் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, ஞாயம், நீதி, நேர்மை, தர்மம் என வாழ நினைப்பவருக்கு,காதலில் - காதலியின் துரோகத்தால் தோற்றுப் போகும் ஒருவருக்கு., வீரத்தால், தன் கடமையால் சாதிக்க நினைக்கும் ஒரு போலீஸ்காரருக்கு, சகாயம் போன்ற கலெக்டருக்கு
      என அனைவருக்கும் தரக்கூடிய தரமான ஒரே நண்பர் டெக்ஸ்தானே !
      அனைவரும் படிக்க கூடிய புத்தகம் தானே இப்போது நமக்கு தேவை ! சிலர் மட்டுமே படிக்க என தேர்வு செய்து படிக்க காலம் கனியட்டும் ! அதுதானே நமது வளர்ச்சிக்கும் தேவை !
      டைகர் கடமை வீரரா, மனசாட்சிக்கு கட்டு பட்டு நடப்பவரா என அவருக்கே தெரியாத அளவு அவரது கேரக்டரை பதிவு செய்த கதாசிரியர் பரிதாபத்துக்குரியவரே ! ஆனாலும் டைகரிடமும் ரசிக்க சில உண்டு என்பதை போனால் போகிறது என எடு கொள்கிறேன் ! மின்னும் மரணம் வந்தால் வந்து விட்டு போகட்டும் !





      Delete
    12. //துரோகிகளாலும் எதிரிகளாலும் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, ஞாயம், நீதி, நேர்மை, தர்மம் என வாழ நினைப்பவருக்கு,காதலில் - காதலியின் துரோகத்தால் தோற்றுப் போகும் ஒருவருக்கு., வீரத்தால், தன் கடமையால் சாதிக்க நினைக்கும் ஒரு போலீஸ்காரருக்கு, சகாயம் போன்ற கலெக்டருக்குஎன அனைவருக்கும் தரக்கூடிய தரமான ஒரே நண்பர் டெக்ஸ்தானே//

      நன்றி ஸ்டீல் ;)

      இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன் - நன்றி. நீங்கள் மேற்கூறிய அனைவரும் படிக்க ஏதுவாக அவர்களுக்கான சந்தாவை கட்டி விடுங்களேன்... [ டெக்ஸ் வில்லர் புத்தகங்களுக்கு மட்டும் ] :D

      Delete
    13. // டெக்ஸ் வளர பிறர் உதவி தேவை இல்லை ! //

      ஏன்னா.. அவரோட கொள்கை, "அடி உதவரமாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்" என்பது... :P

      Delete
  43. திருச்சி நண்பர்கள்- 2015 கோடை மலருக்கு இரத்தக்கோட்டை சீரியஸ் மறு பதிப்பு அறிவிப்பு பெறுதல் உங்கள் பொறுப்பு. ஏமாற்ற மாட்டீர்களே ?

    ReplyDelete
  44. இரத்தகோட்டைக்கு முழு ஆதரவு
    +9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய ஆதரவும்!

      ஏனென்றால்,
      எப்படி இருக்கவேண்டும் என்பதை 'தல' டெக்ஸிடமிருந்து கற்றுக் கொள்கிறேன்...
      எப்படி இருக்கக்கூடாது என்பதை 'கேப்டன் புலி'யிடமிருந்து கற்றுக்கொள்கிறேன்.

      'இரத்தக் கோட்டை' வண்ண மறுபதிப்பு - அவசியம் வேண்டும்! ;)

      Delete
    2. விஜய்
      மார்க்கெட்டில் எத்தனையோ தன்னம்பிக்கை புத்தகங்கள் விற்கின்றன. அவற்றிற்கு எல்லாம் பாஸ் மின்னும் மரணம்தான். 8 அல்லது 10 வயதில் ஒரு சிறுவன் மின்னும் மரணம் படித்தால் அவன் வாழ்க்கையில் ஒரு சிறந்த வெற்றியாளனாக வருவான் என்பதில் சந்தேகமில்லை.

      அதே டெக்ஸ் கதையை படித்தால் மாப்பிள்ளை படத்தில் வரும் விவேக்போல் இருப்பான் என்பதில் ஐயமில்லை.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. வாழ்க்கையில் எல்லாவற்றையும் பாசிடிவ் ஆக பார்க்கலாமா(டெக்ஸ்) அல்லது வாழ்க்கையில்

      எல்லோரையும் சந்தேகத்தோடு பார்க்கலாமா (டைகர்) என்பதை முடிவு செய்துவிட்டு இந்த

      விவாதத்தை தொடரலாமே

      Delete
    5. @ முகுந்தன்

      // 8 அல்லது 10 வயதில் ஒரு சிறுவன் மின்னும் மரணம் படித்தால் அவன் வாழ்க்கையில் ஒரு சிறந்த வெற்றியாளனாக வருவான் //

      அப்படியென்றால்,
      * 8, 10 போன்ற இரட்டைப்படை வயதில் படித்தால்தான் வெற்றியாளனாக வர இயலுமா?

      * அந்த வயதுகளில் நீங்கள் ஏன் படிக்கவில்லை?

      (கோச்சுக்காம உண்மையைச் சொல்லணும் ஹி ஹி)

      Delete
    6. எட்டு பத்து வயதில் அவர் ஏன் படிக்கவில்லை ! எட்டு பத்து நம்பிக்கை வேண்டும் வயது ! அதற்க்கு டைகர் சரி பட்டு வரமாட்டார் !

      Delete
    7. விஜய் உங்க காத கொடுங்க ! மொன மொன மோன ....அதுக்கு டைகர் சரி பட்டு வர மாட்டார்

      Delete
    8. Erode VIJAY:

      //8, 10 போன்ற இரட்டைப்படை வயதில் படித்தால்தான் வெற்றியாளனாக வர இயலுமா?//

      அப்படியிருக்காது விஜய்.. ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை இலக்க வயது என எல்லாவற்றிற்கும் ஒரே பலன் தான். சிறிய வயதில் - ஆத்திச் சூடி, திருக்குறள் ஆகியவற்றை ஒழுங்காக படித்திருந்தால் கூட நமக்கு தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்ற புத்தகங்கள் அவசியப்படுவதில்லை.

      அந்த சிறிய வயதில் முகுந்தனுக்கு மின்னும் மரணம் - புத்தகம் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதனால் தான் அவர் அனைத்து சிறுவர்களும் மின்னும் மரணம் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆவல் கொண்டு அதற்காக ஆசிரியரிடம் மறுபதிப்புக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் ;)

      Delete
    9. சிறுவர் சீர் திருத்த பள்ளியில் வைக்க சிறந்த புத்தகம் டெக்ஸ் ஆ /டைகரா ???????????????

      Delete
    10. //அப்படியிருக்காது விஜய்.. ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை இலக்க வயது என எல்லாவற்றிற்கும் ஒரே பலன் தான். சிறிய வயதில் - ஆத்திச் சூடி, திருக்குறள் ஆகியவற்றை ஒழுங்காக படித்திருந்தால் கூட நமக்கு தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்ற புத்தகங்கள் அவசியப்படுவதில்லை. //
      //அந்த சிறிய வயதில் முகுந்தனுக்கு மின்னும் மரணம் - புத்தகம் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதனால் தான் அவர் அனைத்து சிறுவர்களும் மின்னும் மரணம் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆவல் கொண்டு அதற்காக ஆசிரியரிடம் மறுபதிப்புக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் ;//
      அதற்க்கு டைகர் சரி படுவாரா !

      Delete
    11. // 8, 10 போன்ற இரட்டைப்படை வயதில் படித்தால்தான் வெற்றியாளனாக வர இயலுமா? //

      7, 9 வயதுகளில் டெக்ஸ்... 8, 10 வயதுகளில் டைகர்... வாழ்வில் வெற்றிபெற அவசியம், ரொம்ப துல்லியமான ஆராய்ச்சிகள்...

      Delete
    12. சீர்திருத்தம் என்றாலே எங்குமே டெக்ஸ்தான் !
      தன்னம்பிக்கை இல்லாத சிறுவர்களின் புகலிடம்தான் அது ! அங்கே டெக்ஸ் சென்றால் அவர்களை வெளியேற்றி விடுவார் நம்பிக்கை விதிகளை தூவி !

      Delete
    13. Ramesh Kumar: //7, 9 வயதுகளில் டெக்ஸ்... 8, 10 வயதுகளில் டைகர்... வாழ்வில் வெற்றிபெற அவசியம், ரொம்ப துல்லியமான ஆராய்ச்சிகள்...//

      7, 9 வயதுகளில் டெக்ஸ்/ஐ படித்து வளர்ந்தப்பின் மேற்படிப்புக்காக 10 வயதில் டைகர்/ஐ படித்தால் மட்டுமே வாழ்வில் வெற்றிபெற முடியும் - என்ற துல்லியமான ஆராய்ச்சியின் முடிவுகளை தக்க சமயத்தில் இந்த சபையின் முன் வைத்துள்ள நாட்டாமைக்கு சலாம் சொல்லிக்கிறான் இந்த மரமண்டை :)

      Delete
    14. //சீர்திருத்தம் என்றாலே எங்குமே டெக்ஸ்தான் ! தன்னம்பிக்கை இல்லாத சிறுவர்களின் புகலிடம்தான் அது //

      கவலை வேண்டாம் ஸ்டீல் - அனைத்து சீர்திருத்தப் பள்ளிகளிலும் டெக்ஸ் வில்லர் கிடைக்க ஆவன செய்வோம் ;)

      Delete
    15. //அனைத்து சீர்திருத்தப் பள்ளிகளிலும் டெக்ஸ் வில்லர் கிடைக்க ஆவன செய்வோம் //
      அனைத்து பள்ளிகளிலும் வைத்தாலே சீர்திருத்த பள்ளிகள் வேண்டி இருக்காதே !
      படிக்காத சிறுவர்களும் பள்ளிக்கு வருவார்களே துள்ளி !

      Delete
  45. அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து "ஏனுங், நீங்க பழைய காமிக்ஸு எதனாச்சும் வெச்சுருக்கீங்களா?" என்று விசாரித்து வந்த கார்த்திக் சோமலிங்காவை கடந்த பல நாட்களாகக் காணவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. //கடந்த பல நாட்களாகக் காணவில்லையே... //
      விட்டா, "உயிருடன் அல்லது உயிரோடு"-ன்னு, ஆயிரம் ரூபாய்க்கான ரிவார்ட் போஸ்டர் ஒட்டி, தேடுறதுக்கு டெக்ஸ் "கில்லரை" அனுப்பி வச்சிடுவீங்க போல?! :D

      //ஏனுங், நீங்க பழைய காமிக்ஸு எதனாச்சும் வெச்சுருக்கீங்களா?" என்று விசாரித்து வந்த//
      'அமெரிக்க அதிபர்' ஒபாமா அவர்கள், தனது ஒட்டு மொத்த தமிழ் காமிக்ஸ் கலெக்ஷனையும், அவற்றை வெளியிட்ட 'பத்திரிக்கை அதிபரிடமே' விற்று விட்டாராம்! சிவகாசியைச் சேர்ந்த அந்த பிரபல தொழிலதிபர், தனது அமெரிக்கப் பயணத்தின் போது, ஐந்தே ஐந்தாயிரம் கொடுத்து அவற்றை வாங்கிக் கொண்டாராம்! :) "ஐந்தாயிரம் அமெரிக்க டாலர்களா?!" என்று மறுபடி மறுபடி ஒபாமாவிடம் கேட்டதிற்கு, "இல்லை... இல்லை... ஐந்தாயிரம் இந்திய ரூபாய்கள் மட்டுமே!" என்று அடித்துச் சொல்லி விட்டார்!!! ஜஸ்ட் மிஸ்!!! :D

      அடுத்த இலக்கு, சீன ப்ரீமியர் லீ க்க ச்சியாங்! அங்கும் தேறவில்லை என்றால், உங்கள் வீட்டில் தான் தேட்டை போட வேண்டும் மிஸ்டர் விஜய் வில்லர்! ;)

      Delete
    2. ஹா ஹா ஹா! லேட்டா வந்தாலும் ஆர்ப்பாட்டமாத்தான் வந்திருக்கீங்க கார்த்திக்! :D

      நல்லது. 'சென்டர்-பின்' அடிக்கப்பட்ட 60 ரூபாய் புத்தகங்களைப் பற்றி என்ன நினைக்கறீங்க கார்த்திக்? ;)

      @ எடிட்டர்

      அந்த 500 புத்தகங்களையும் பத்திரமா வச்சிருக்கீங்கதானே? வச்சிருப்பீங்க. உங்கள் மேல் நம்பிக்கை உள்ளது. சமயம் வரும்போது நானே வந்து வாங்கிக் கொள்கிறேன்.

      Delete
    3. டியர் கார்த்திக்!!!

      "டெக்ஸ் கில்லர்" ...? அந்த (தலைக்கனம் பிடித்த)டெக்சாஸ் ரேஞ்சருக்கு பொருத்தமான பெயர் ;--)

      "விஜய் வில்லர்"...? இதைவிட "ஈரோடு விஜய் வில்லன்" என்பது பொருத்தமான பெயர் ;--)

      ஹ்ம்ம்ம்ம்ம்.....நாங்கள்ளாம் இப்பவே இப்படி...ஹிஹி!!!

      Delete
    4. டெக்ஸ் வில்லர் = டெக்ஸ் வில்லன்
      டெக்ஸ் கில்லர் = டெக்ஸ் கில்லன்

      ஹிஹி!

      Delete
    5. அன்பே உருவான சாத்தான்ஜி,

      டெக்ஸ்-டைகர் என்ற கொள்கையினால் நாம் வேறுவேறு பாதையில் பயணித்தாலும், 'பவர் ஸ்டார்'ன் தீவிர ரசிகர்கள் என்ற ஒத்த ரசணையின்பால் நாம் ஒரே புள்ளியில் சங்கமிக்கிறோம் என்பதை எங்ஙனம் மறந்தீர்கள்?

      Delete
    6. டியர் விஜய்!!!

      நான் எப்படி அதை மறப்பேன்...?வருங்கால அமெரிக்க அதிபர்,மனித இனத்தின் மாபெரும் தலைவர்,சீரும் சிங்கம்,பாயும் புலி,பதுங்கும் நரி,ஒதுங்கும் ஓநாய்,பிளிரும் யானை,கத்தும் கரடி,தூங்கும் சிறுத்தை,நீந்தும் நீர்யானை- அண்ணன் "பவர் ஸ்டாரை" மறந்தால் அடியேனுக்கு மோட்சம் கிடைக்குமா...?

      வாழ்க பவர் ஸ்டார்! ஓங்குக அவர் புகழ்! ஹிஹி!!!

      Delete
    7. யாருப்பா அந்த பாவம் ஸ்டார்?! டெக்ஸைவிட பெரிய ரௌடியோ?

      Delete
  46. @ ஆசிரியர் எப்படியோ கோடை ஸ்பெஷல் இருக்கிறது என்று ஒ.வா.உ யாக சொன்னதற்கு நன்றி...

    காரிகன், வேதாளர்,ரிப்கிர்பி போன்றோரின் மறுபதிப்பு கதைகளாக இருந்தால் எங்களது நன்றி உரித்தாகும்

    ReplyDelete
  47. Surprise Post. It's good to get 3 books to enjoy this month.
    Expecting more surprises! What happened to "THIGIL NAGARIL TEX" Sir?

    ReplyDelete
  48. 'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதென்று'

    பொண்ணு கிடைததாலும் புதன் கிடைக்காது எனறு தானே சொலவார்கள்

    ReplyDelete
  49. நாகர்கோவிலில் இருந்து குடும்பஸ்த்தர் யாராவது திருச்சிக்கு தனியாக வந்தால் அப்படியே துரத்தி விடுங்கள் bros.

    ReplyDelete
  50. கேப்டன் டைகருக்கு விட்டுகொடுக்காமல் வாதாடும் நண்பர் மிஸ்டர் மரமண்டை அவர்களுக்கும் நண்பர்களுக்கும் பாராட்டுகளுடன் வாழ்த்துகள்!:-)

    ReplyDelete
  51. சகோ ஜீலியட் குடும்பசமேதராய் திருச்சியில் நடைபெறும் புத்தகதிருவிழாவில் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்! அனைத்து வாசகஅன்பர்களும் குடும்பசமேதராய் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. 'குடும்பசமோசா'ன்னா?

      Delete
    2. அதையாவது வாங்கி கொடுத்தனுப்புங்க........

      Delete