Powered By Blogger

Saturday, September 14, 2013

இந்தப் பட்டாளம் போதுமா - இன்னும் கொஞ்சம் வேணுமா ?

நண்பர்களே,

வணக்கம். திரும்பிய திசையெல்லாம் திருமண அழைப்பிதழ்கள் அழகாய் புன்னகைக்க - பஜ்ஜிக்கும்  ; பாயாசத்துக்கும் இடையே இது குட்டியானதொரு 'updates பதிவு' என்று சொல்லலாம்...! 

புது கார்ட்டூன் நாயகர்(கள்) பற்றிய அறிவிப்பு ஒரு வழியாய் இதோ உங்கள் முன்னே ! நெடு நாட்களாய் நண்பர்கள் பலரும் கோரி வந்த 'நீலச் சட்டை நாயகர்கள் ' - அக்டோபரில் உங்களை சந்திக்க நமது +6 வரிசையில் வரவிருக்கின்றனர் ! BLUECOATS என்ற பெயரில் Cinebooks நிறுவனம் இத்தொடரை வெளியிடத் துவங்கிய நாள் முதலாகவே நம் நண்பர்கள் இதனையும் நாம் முயற்சித்தால் என்னவென்று அவ்வப்போது வினவிடுவதுண்டு ! ஆனால் கார்ட்டூன் இலாக்கா - லக்கி லூக் & சிக் பில் வசம் பத்திரமாய் இருப்பதால் - இப்போதைக்கு அதுவே போதுமே என்ற சிந்தனையில் நானிருந்தேன் ! வீட்டிலுள்ள குட்டீஸ்களுக்கு கார்டூன்களை அறிமுகப்படுத்துவதில் உள்ள சுலபத்தைப் பற்றி சமீப  சமயங்களாய் நண்பர்கள் பலரும் எழுதி வந்தது என்னை சிந்திக்கச் செய்தது ! So 'ப்ளூகோட் பட்டாளத்தை '  நடை போடச் செய்ய வாகான வேளையினை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் ! நமது லயன்-முத்து அட்டவணையில் இனியும் டின்கெரிங்க் செய்து உதை வாங்குவதற்குப் பதிலாய் - ஆபத்பாந்தவனாய் காட்சி தரும் +6 வரிசையை இதற்குப் பயன்படுத்திடத் தீர்மானித்தேன் ! ஆங்கிலத்தில் இந்தக் கதைகளைப் படித்திருக்கா நண்பர்களின் பொருட்டு மாத்திரமே ஒரு குட்டியான அறிமுகம் ! 

அமெரிக்காவில் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் வெடித்த உள்நாட்டுப் போரே இந்தக் கார்டூன் தொடரின் backdrop ! அமெரிக்க அரசை எதிர்த்துப் போர் கோடி உயர்த்தும் தெற்கத்திய ராணுவத்தோடு மல்லுக் கட்டும் குதிரைப் படையின் வீரர்களே (!!) நமது ஹீரோக்கள் (ஜீரோக்கள் ?!) இவர்களும் குதிரை வீரர்களாய்த் தோற்றம் தந்தாலும், கதைகளின் பாங்கு - மாமூலான கௌபாய் பாணியில் இராது ; ராணுவம் ; போர் ; அதில் நம் நாயகர்கள் அடிக்கும் லூட்டிகள் என்று ஜாலியாய் சுற்றி வரும் ! ஒரிஜினல் அட்டைப்படத்தோடு வரவிருக்கும் இந்த இதழ் - குட்டீஸ்  + not so குட்டீஸ் என சகலருக்கும் ரசிக்குமென்ற நம்பிக்கை உள்ளது ! 


2014-ல் நமது அட்டவணையில் இடம் பிடிக்கக் காத்துள்ள இன்னுமொரு கார்ட்டூன் ஹீரோவோடு 'ப்ளூகோட் பட்டாளமும் ' ரெகுலராய் தலை காட்டுவார்கள் என்பது கொசுறுச் சேதி ! 

எனது பணிகள் நிறைவுற்று - இரத்தப் படலம் இரு பாகங்களும் அட்டைப்படத்திற்காக பொன்னனிடம் waiting ! ஒரு குட்டியான முன்கதைச் சுருக்கத்தின் பொருட்டு XIII -ன் முந்தைய பாகங்களைப் புரட்டும் போது - ரங்க ராட்டினத்தில் திரும்பவும் ஏறி அமர்ந்ததொரு உணர்வு..! ஜேசன் பிளை ; ஸ்டீவ் ரொலண்ட் ; ஸ்டண்ட்மேன் ; கெல்லி ; ஜேசன் மக்லேன் என தசாவதாரம் கமல்ஹாசனை நினைவூட்டும் விதம் விதமான flashbacks கிறுகிறுக்கச் செய்தன ! இந்தப் புது வரவு அத்தியாயங்களில் ஆசாமி யாரென்ற தேடலைத் திரும்பவும் ஆரம்பிப்பதாக இல்லாமல் வேறொரு தடத்தில் கதையைக் கொண்டு செல்வதால் அந்த மட்டிற்கு நிம்மதி என்று தோன்றியது ! 

சென்ற வாரத்து Quickie மொழிபெயர்ப்புப் போட்டிக்கு மொத்தம் 8 நண்பர்கள் மாத்திரமே தங்கள் நேரத்தைச் செலவிடத் தயாராகி இருந்தனர் ! அவர்களுள் மின்னல் வீரராய் திகழ்ந்த நண்பர் ஆதி தாமிராவின் எழுத்துக்களை  வெற்றி பெறும் ஆக்கமாய்த் தேர்வு செய்வதில் அதிக சிரமம் இருக்கவில்லை ! தனது மொழிபெயர்ப்பை டைப்செட் செய்து பலூன்களுக்குள்ளேயும் நுழைத்து விட்டதால் - இதோ இங்கே உங்கள் பார்வைக்கு அதனை சுலபமாய்ப் படைத்திட இயன்றுள்ளது ! வாழ்த்துக்கள் நண்பரே ! நண்பர் சுஸ்கி-விஸ்கி ((கோவை மணம் தூக்கலோ தூக்கல்!)  ; நண்பர் கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரின் முயற்சிகளும் வித்தியாசமாய் இருந்தன ! Good attempts folks !

மொழிபெயர்ப்பு : ஆதி தாமிரா ! 





நவம்பர் டெக்ஸ் டபுள் டமாக்காவின் ஒரு கதை கிட்டத்தட்ட பணிகள் நிறைவான நிலையில் உள்ளது ! கதை # 2 இன்னும் 10 நாட்களுக்குள் தயாராகிடும் ! "சிப்பாயின் சுவடுகள்" ஏற்கனவே ரெடி என்பதால் பாக்கி நிற்பது சிக் பில் ஸ்பெஷல் (மறுபதிப்பு) மாத்திரமே !  தீபாவளிக்கு முன்னதாக இதழ்கள் உங்களை வந்து சேர இப்போதே பணிகள் ஜரூர் ! As always, fingers crossed !

'ஸ்பைடர் - மாயாவி கலாய்ப்ஸ்' போட்டியில் நண்பர்கள் அனைவரும் பின்னிப் பெடல் எடுத்திருந்தனர் ! காலத்தின் மாற்றம் எவரையும் விட்டு வைக்காதென்பதை பிடரியில் அடித்தார் போல் பதிவு செய்துள்ளது புரிகிறது ! ஏராளமான சிரிப்பு வெடிகள் சிதறிக் கிடந்த போதிலும்,எனது சாய்ஸ் இந்த 2:

Muthukumaran
=========================================================
ஸ்பைடர்: மாயாவி.. இந்த அமெரிக்கன் ரிடர்ன் மாப்பிளை, ஹீரோவோட நண்பன், ஹீரோயின் னோட அப்பா.. இந்த ரோல் எல்லாம் வேண்டாமா..?

மாயாவி: ப்ச்..ப்ச்.. ப்ச்.. ஸ்ட்ரிட்டா 'ஹீரோ' தான்...

===========================================================
Dr. அல்கேட்ஸ் :
மாயாவி Vs ஸ்பைடர் 5

ஸ்பைடர்: என்னப்பா? அன்னிக்கி ஹோட்டல்ல தர்ம அடி வாங்கினியாமே. என்னாச்சு?

மாயாவி: வழக்கமா பில் வரும் போது கரண்ட்ல கைய உட்டு மறைஞ்சுடுவேன். அன்னிக்கி பவர் கட். நான் மறைஞ்சுட்டேன் நினைச்சு வெளிய வரப் பாத்தேன். வெளுத்துட்டானுங்க.

=============================================================
நண்பர்கள் இருவருக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படுகிறது ! (ஆளுக்கொரு Fleetway புக் தனித்தனியாய் :-)) Guys - உங்களின் முகவரிகளை மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்களேன் ப்ளீஸ் ? Congrats...great imagination !

அப்புறம் - நீண்ட நெடு நாட்களாய் நண்பர்கள் பலரும் சொல்லியிருந்ததொரு சங்கதியை செயலாற்றும் சமயம் இன்று தான் அமைந்தது ! நமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களுக்கென ஒரு official FACEBOOK பக்கமொன்றை உருவாக்கியுள்ளோம் ! இது ஒரு தகவல் பலகை போலவே செயலாற்றும் -  நமது இதழ்களின் வருகைகள் ; விற்பனை முறைகள் ; முந்தைய கையிருப்புகள் இத்யாதிகளைக் கொண்ட information page ஆக.... !

இதோ அதன் தள முகவரி : https://www.facebook.com/pages/Lion-Muthu-Comics/1388544204710093

எனக்கு இந்த facebook முயற்சியில் அதிகப் பரிச்சயம் கிடையாதென்பதால், இதனில் செய்திடக் கூடிய improvements ; மாற்றங்கள் பற்றி உங்களின் அபிப்ராயங்கள் பெரிதும் உதவும் ! Please do chip in folks ! 

180 comments:

  1. Keep rocking... I cant believe it.. AM THIRD!!!! Am overtaken all seniors!!!!! :-)

    ReplyDelete
  2. ஆதி... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. I already read bluecotes in tamil and english. Thanks to tangavel. Sir please publish bulecoates stories not published in english. To read this story in tamil visit facebook group.

    ReplyDelete


  4. பயணத்தின் நடுவே படித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  5. vanakkam, first time i waiting for rathabalam stories..

    ReplyDelete
  6. 'blue coat' வீரர்கள் எனக்கு பரிட்சயமில்லாதவர்கள் என்பதால் எந்த அளவுக்கு சந்தோசப்படுவதென்று உண்மையாகவே தெரியவில்லை! எனினும் சந்தோசமே! :)

    பின் அட்டையில் வரிசைப் படுத்தப்பட்டிருக்கும் கதைப்பட்டியலே சொல்கிறது இவர்களது சூப்பர்-டூப்பர் வெற்றிப் பயணத்தை!

    'நீல அங்கி வீரர்களை' வெள்ளை மனதுடன் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறேன்! :)

    ReplyDelete
  7. BLUECOATS - நமது இதழ்களில் வருவது மகிழ்ச்சிதான். ஆனால், இவற்றில் இரு கதைகளை ஏற்கனவே தமிழ்ப்படுத்தித் தந்திருக்கும் நண்பர் தங்கவேலையும் இந்தவேளையில் நிச்சயம் ஞாபகப்படுத்தியாகவேண்டும். நன்றிகள் நண்பரே.

    அண்ணன் ஆதிதாமிராவின் மொழிபெயர்ப்பும் வேகமும் அசத்தல். மற்றைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தக் கதை நமது இதழிலும் இடம்பிடிக்குமா ஆசிரியரே? இல்லை, இணையத்தில் மட்டும்தானா?

    ReplyDelete
  8. //சென்ற வாரத்து Quickie மொழிபெயர்ப்புப் போட்டிக்கு மொத்தம் 8 நண்பர்கள் மாத்திரமே தங்கள் நேரத்தைச் செலவிடத் தயாராகி இருந்தனர் !//
    அதற்காக போட்டிகளை நிறுத்திவிடாதீர்கள். வேலைப்பளு சில நேரங்களில் நண்பர்களுக்கு தடைக்கல்லாக இருந்துவிடுகிறது. ஆனால், சந்தர்ப்பம் வாய்க்கும்போது அனைவரும் நிச்சயம் கலந்துகொள்வார்கள். மொழி பெயர்ப்பு போட்டியில் 8 பேர் கலந்துகொண்டு (அதுவும் மிக குறுகிய கால அவகாசத்தில்) ஆர்வம் காட்டியது நிச்சயம் ஆரோக்கியமான எண்ணிக்கையே!

    ReplyDelete
    Replies
    1. Podiyan, I do agree with you...!
      This online translation seems a pretty good attempt...
      It offers a new (every) visitor to read online tamil comics free...

      Delete
  9. நண்பர்கள் விஸ்கி-சுஸ்கி, கார்த்திகை பாண்டியன் மற்றும் மொழிபெயர்ப்பில் பங்குகொண்ட நாளைய வெற்றியாளர்கள் அனைவருக்கும் இந்த நாளை-மறுநாள் வெற்றியாளனின் வாழ்த்துக்கள்! ;)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : நாளை மறுநாள் வெற்றியாளர் KBT -3 க்கு பெயர் கொடுத்தாச்சா ?

      Delete
  10. நல்ல செய்தி, நீல சட்டை நண்பர்களுக்காக காத்திருக்கிறோம்

    ReplyDelete
  11. ஸ்பைடர்: அண்ணே....! மாயாவி அண்ணே....! சௌக்கியமாண்ணே..! இந்த சிரியாக்காரனுங்க "அசின் வாயு"-ன்னு என்னமோ வச்சிருக்கானாமே..?அத எனக்கு வாங்கி தாங்கண்ணே...!!

    மாயாவி: அடே இன்டர்நெட் மண்டையா...! அது "அசின் வாயு"இல்லடா..."சரின் வாயு"....வேல வெட்டி எதுவும் இல்லாம டி.வி.ல ஹிந்தி படம் பாத்து பொழுத ஓட்டாதேடா ஒபாமா தலையா...!

    சாத்தான் ரொம்ப லேட்டு....ஹிஹி!!!

    ReplyDelete
  12. //2014-ல் நமது அட்டவணையில் இடம் பிடிக்கக் காத்துள்ள இன்னுமொரு கார்ட்டூன் ஹீரோவோடு 'ப்ளூகோட் பட்டாளமும் ' ரெகுலராய் தலை காட்டுவார்கள் என்பது கொசுறுச் சேதி!//

    அந்த அடுத்த கார்ட்டூன் 2014 ஆரம்பத்திலேயே அறிமுகம் ஆகுமா சார்? வாண்டுகள் படிக்கக்கூடிய (அல்லது ரசித்துப் படம் பார்க்கக் கூடிய) கதைகளின் எண்ணிக்கையை அடுத்த Book Fair க்கு முன்னால் உயர்த்திடுவது நல்ல Strategy!

    ReplyDelete
    Replies
    1. Ramesh Kumar : //வாண்டுகள் படிக்கக்கூடிய (அல்லது ரசித்துப் படம் பார்க்கக் கூடிய) கதைகளின் எண்ணிக்கையை அடுத்த Book Fair க்கு முன்னால் உயர்த்திடுவது நல்ல Strategy!//

      அட்டவணையினை அமைக்கும் போது புத்தக விழாக்களையும் மனதில் கொண்டுள்ளோம் :-) Thanks again for the thought !

      Delete
  13. ஆதிதாமிரா வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. welcome XIII am waiting in long long years come my man...!

    ReplyDelete
  15. விஜயன் சார், தீபாவளி அதிரடி சரவெடிகாக ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்கள் சொலுறத பார்த்தா தீபாவளி புத்தகத்த அக்டோபர் மாசமே அனுப்பி தீபாவளி கொண்டாட வச்சிடுவிங்க போல தெரியுது :-) புதிய காமெடி ஹீரோ அருமையான தேர்வு; இவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்.

    ReplyDelete
  16. "ப்ளூகோட் பட்டாளம்" - இன்னும் படிக்கஆரம்பிக்கவில்லை .. original அட்டைப்படத்துடன் வருவது மகிழ்ச்சி தரும் செய்தி!

    யாரது இன்னொமொரு கார்ட்டூன் ஹீரோ?

    போன பதிவில், 2014 மறுபதிப்பு பற்றிய எங்களது கருத்தைக் கேட்டிருந்தீர்கள். உங்களது முடிவைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் உள்ளேன்.

    மறுபதிப்பு specials எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால், தயவுசெய்து +6-யை +12 ஆக அதிகரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. +1. பவள சிலை மர்மம் மற்றும் சிக் பில்லின் இரும்பு கவ்பாய்க்கு ஏகப்பட்ட வோட்டுகள் விழுந்துள்ள்ன, பார்த்து கொள்ளுங்கள் சார் :)

      Delete
    2. சார் ரிப்போர்ட்டர் ஜானியின் சிவப்பு பாதை the best one amongst many Johnny stories. Please try to repint this too .

      Delete
    3. Periyar : அளவோடு (மறுபதிப்புகளை) வெளியிட்டு, வளமோடு வாழ்வோமே ?! :-)

      Delete
  17. super sir! welcome to blue coats!!!!!!!!!!! Valthukkal Adhi.Thamira Sir!

    ReplyDelete
  18. Blue coats wow wow wow wow!!!!!!!!! I can say this is the one of the best comic series. I believe our people would like as they like lucky, chick bill & iznogoud. You have made a great decision by taking this series in tamil. The image which you posted here is one of my all time favourite story in Blue coats series:). I have read this more than 10 times so far. Whenever I read this story, I feel like reading it in first time despite I have read this many times. Thank you sir, you are the best :)

    ReplyDelete
  19. ஓரிரு நாள் என்ற குறுகிய அவகாசத்தில் ஆதிதாமிராவின் முயற்சி அருமை!

    இதோ என்னால் முடிந்த Translation, கதையின் பெயர்மட்டும்: Payment in Full = முழு கட்டணம்

    நன்றி Google Translator! ஹா ஹா ஹா!

    ReplyDelete
  20. Congrats @adhi, very good translation.

    Blue coats - never read them before so not sure what to expect.

    ReplyDelete
  21. ஒரு வார்த்தையில் வாவ் உண்மையில் ப்ளுகோட்ஸ் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பு.
    மிகவும் மகிழ்ச்சி சார்.

    சமீபத்தில் தான் இதுவரை ஆங்கிலதில் வந்துள்ள 6 கதைகளையும் படித்து முடித்தேன்.
    தமிழில் படிக்க ஆர்வமாக உள்ளேன்.

    இதே போல "யகரி" கதையினையும் முயற்சி செய்து பாருங்கள்.

    ஆதி தாமிர அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    இனி வரும் அனைத்து இதழ்களுமே பெரிய ஹீரோக்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் போல பயங்கர எதிர்பாரப்பை ஏற்படுத்துகின்றன.(சிப்பாயின் சுவடுகள் தவிர)

    ReplyDelete
    Replies
    1. Krishna VV ://இனி வரும் அனைத்து இதழ்களுமே பெரிய ஹீரோக்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் போல பயங்கர எதிர்பாரப்பை ஏற்படுத்துகின்றன.(சிப்பாயின் சுவடுகள் தவிர)//

      இன்றைய trendsetters புது வரவுகளும், குட்டி பட்ஜெட் படங்களும் தானே ?! :-)

      Delete
    2. //இன்றைய trendsetters புது வரவுகளும், குட்டி பட்ஜெட் படங்களும் தானே ?! :-)//


      உண்மை தான் சார் ஆனால் பெரிய பட்ஜெட் படங்களுக்கு தானே ஒரு எதிர்பார்ப்பு சேர்ந்துவிடுகிறது.

      Delete
  22. வாழ்த்துகள் ஆதி தாமிரா! Blue coats படித்ததில்லை புது அங்கத்தினர்களை வரவேற்கிறோம்!

    ReplyDelete
  23. Hearty welcome to BLUECOATS team (நீலச் சட்டை நாயகர்கள்)

    ReplyDelete
  24. புது கார்ட்டூன் நாயகர்கள் எத்துனைப்பேர் அறிமுகமானாலும் ரெட் கார்பெட்டில் வரவேற்கத் தயாராகவேயிருக்கிறோம்! நீலச் சட்டையர்கள் நல்லதொருத் தேர்வு! 1972-ல் ஆரம்பித்து இதுவரை கிட்டத்தட்ட 53 வெளியீடுகள் என்பது உண்மையிலேயே மலைக்கச் செய்யும் விஷயம்!
    இந்த 53-ல் நாம் random மாக நாம் ரசிக்கவிருக்கும் கதை, முதல் கதை எதுவாகயிருக்கும்? ஆங்கிலத்தில் இதுவரை வெறும் 6 வெளியீடுகள் மட்டுமே! என்பது கொசுறு செய்தி மட்டுமல்ல மலைக்கு முன் மடு போல் தான்.?

    ReplyDelete
    Replies
    1. MH Mohideen : //புது கார்ட்டூன் நாயகர்கள் எத்துனைப்பேர் அறிமுகமானாலும் ரெட் கார்பெட்டில் வரவேற்கத் தயாராகவேயிருக்கிறோம்!//

      தரமான கார்டூன்களை ரசிக்கும் சுகமே அலாதி தான் ! நாம் ரசிக்கவிருப்பது Bluecoats # 8 - (தமிழில்) ஆகாயத்தில் அட்டகாசம் !

      Delete
    2. சார் தலைப்பு அதைவிட அட்டகாசம்!

      Delete
  25. 1) ஆதிதாமிராவின் மின்னல் வேக முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.. அற்புதமான மொழிப் பெயர்ப்பு!
    2) ஜூனியர் எடிட்டரின் லக்கி லுக் கதையின் மொழிபெயர்ப்பும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாததாக இருந்தது. குட்டி இன்னும் 16 அடி பாய வாழ்த்துக்கள்.
    3)last but not least., (better late than never feedback)
    கார்த்திக் சோமலிங்காவின் "ரசித்து கொல்ல வேண்டும்" (ஆண்டு மலர்) சூப்பர் ரகம். அற்புதமான, நடுநிலையான, பொறுப்பான மொழிப் பெயர்ப்பு.. ஆசிரியர் தேர்வினை 100% உங்கள் மொழிப்பெயர்ப்பு நியாயம் செய்தது.

    ReplyDelete
  26. "ப்ளூ கோட்ஸ்" நமது ஹிட் லிஸ்ட்-ல் அடுத்த வரவு என்பது நிச்சயம்! இது போல் புதிய புதிய நாயகர்களையும் கதைகளையும் அறிமுகப்படுத்தும் நமது ஆசிரியருக்கு நன்றிகள் பல!
    நண்பர் ஆதி தாமிரா அவர்களுக்கு ஒரு அட்டகாசமான வாழ்த்து!
    அக்டோபரிலேயே நமக்கு ஒரு தீபாவளி காத்துள்ளது போல் தெரிகிறதே..!

    ReplyDelete
  27. நீல சட்டை நாயகர்களுக்கு ஒரு சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுப்போம் தோழர்களே ! மொழிபெயர்ப்பு போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ஆதி தாமிரா அவர்கட்கு எனது வாழ்த்துகள் !

    ReplyDelete
  28. Even though I've started to write today I'm a big fan of your blog and comics from srilanka.happy to hear you are going to release bluecoats.please follow the order of French release sir.even sky riders is 3rd one from cine book,thank u

    ReplyDelete
    Replies
    1. Jude roshan BLUTCH : I am initially trying to pick the best of the lot to begin the series with..! Once our readers get into the flow of the tales, we shall stick to the publishers' order of releases ! Thanks for the suggestion !

      Delete
    2. Thanks muthukumaran and karthikeyan.vijayan sir,thanks for your reply.waiting for Blutch and Chesterfield.who is that new cartoon hero?

      Delete
  29. தமிழில் டைப் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்களேன்..

    மிக எளிதாக, பயனுள்ளதாக இருக்கிறது.

    http://tamil.changathi.com/

    ReplyDelete
  30. ஆத்தா, நான் பாஸாகிட்டேன்.!!

    ஹையா.. இது ஒரு அழகிய சண்டே எனக்கு. தேர்ந்தெடுத்த ஆந்தைவிழியாருக்கும், வாழ்த்திய, வாழ்த்தப்போகிற ஒவ்வொரு நண்பர்களுக்கும் என் நன்றியும், அன்பான அன்பும்!

    வெற்றி வேண்டும் என்ற விருப்பமும், நம்பிக்கையும் இருந்தாலும், வெற்றி தரும் மகிழ்ச்சியே தனியாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  31. @விஜய், கார்த்திக்,

    கடைசியா இந்த முறை மண்ணு என் வாயிலிருந்து தப்பிற்று போலிருக்கே.. :-)))

    ReplyDelete
  32. மொழிபெயர்ப்பின் பின்கதை:

    (வெற்றிபெற்றால்தான் இதையெல்லாம் சொல்லமுடியும் இல்லையா? :-)) )

    முதலில் முதல் ஆளாய் அனுப்பிவிடவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. ஓரிரு நாட்களே கால அவகாசம் என்றதாலும் மறு இரண்டு நாட்கள் கொஞ்சம் ட்ராவலிங் இருந்ததாலும் முதல் நாளே முயற்சித்துவிடுவோம் என்று ஆரம்பித்துவிட்டேன். கொஞ்சம் வேகமாகவும் முடித்துவிட்டதால், பொறுமையாக ரிவ்யூ கூட செய்துபார்க்காமல் ஆனது ஆகட்டும் என அனுப்பிவிட்டுதான் படுக்கப்போனேன். பலூன்களிலேயே நேரடியாக ட்ரான்ஸ்லேஷன் செய்தது என் வசதி கருதிதானே தவிர, மீண்டும் பர்ஃபெக்டாக டைப் செட் செய்வார்கள் என்றுதான் நம்பினேன். அதுவும் ஒரு ஆச்சரியமே! இப்படிச்செய்வார் எனத் தெரிந்திருந்தால் போட்டோஷாப்பில் இன்னும் நீட்டாகச் செய்திருப்பேன். இது சிம்பிளாக ‘பெயிண்டி’ல் செய்தது. பல இடங்களில் வசனம் பலூனுக்கு வெளியே வர முயற்சித்துக்கொண்டிருக்கிறது.

    ட்ரான்ஸ்லேஷனைப் பொறுத்தவரை சற்றே திருப்திக்குறைவுதான். காரணம் நேரமின்மையே.. அனுப்பிய பிறகு நேரம் கிடைத்து, ரிவ்யூ செய்த போதுதான் எத்தனை க்யூட்டான இடங்களை, விஷயங்களைத் தவற விட்டிருக்கிறேன் என்று புரிந்தது. இடையிடையே சில வார்த்தைகள் இல்லாததால், வார்த்தைகள் இடம் மாறியிருப்பதால் சுகமாக வாசிப்பதற்கான ஃப்ளோ எப்படித் தடைபடுகிறது என்பதையும் உணர்கிறேன். இரண்டு இடத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் வேறு(பக்கம் 4, பெட்டி 2: ’இது’ என்பது ‘ஒது’ என்றிருக்கிறது. பக்கம் 7, பெட்டி 1: ’நாம்’ என்பது ‘நம்’ ஆகிவிட்டது). ஒரு இடத்தில் ரிப்பீட் வார்த்தையும்! ஆனாலும் என்ன செய்ய? இருந்தாலும் ரேப்பிட் காம்படிஷன்தானே இது என்று மகிழ்ந்துகொள்ள வேண்டியதுதான்.

    மீண்டும் நன்றி நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே கலக்கிடிங்க போங்க...

      Delete
    2. நண்பர் ஆதி தாமிராவின் மொழிபெயர்ப்பு எந்த இடத்திலும் உறுத்தாமல் சீராக இருந்தது.
      வாழ்த்துக்கள் நண்பரே!

      Delete
    3. ஆதி தாமிரா : //நேரம் கிடைத்து, ரிவ்யூ செய்த போதுதான் எத்தனை க்யூட்டான இடங்களை, விஷயங்களைத் தவற விட்டிருக்கிறேன் என்று புரிந்தது.//

      எத்தனை சிரத்தை எடுத்து மொழியாக்கம் செய்தாலும், மறு முறை பார்க்கும் போது ஓராயிரம் குறைகள் நம் கண்களுக்குத் தெரிவது தவிர்க்க இயலாது ! Great job all the same !

      Delete
  33. வாழ்த்துக்கள் ஆதி தாமிரா...!

    ReplyDelete
  34. http://www.thaamiraa.com/2013/09/blog-post.html

    ReplyDelete
  35. எடிட்டர் சார்,

    தேர்வு செய்யப்பட்ட ஆதி தாமிராவின் மொழிபெயர்ப்பை தேவைப்பட்டால் கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து, (முடிந்தால்) வரயிருக்கும் ஏதாவது ஒரு இதழில் ஃபில்லர் பேஜாக போடும் எண்ணமிருக்கிறதா? அப்படியொரு எண்ணமிருந்தால் என்னுடைய இந்தக் கேள்வி அதைக் கொஞ்சம் வலுப்பெறச் செய்யட்டுமே!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : நிச்சயம் சிந்திப்பேன் !

      Delete
  36. சார் நான் முன்பே சொன்ன மாதிரி சிக் பில்லின் 'வின்வெளியில் ஒரு எலி" கதையை நிங்கள் மறுபடியும் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டி இருக்கும் எனென்றால் பழைய மொழி பெயர்ப்பு பேச்சு வழக்கில் இல்லாமல் சுத்த தமிழீல் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கும். கதையை படித்து பார்த்தால் உங்களுக்கே புரியும் .

    ReplyDelete
    Replies
    1. Giridharan V : "விண்வெளியில் ஒரு எலி" அட்டைப்படத்தைத் தாண்டி பாக்கி எதுவும் எனக்கு நினைவில் இல்லை ! திரும்பவும் ஒரு முறை மொழிபெயர்க்க நேரம் இருப்பது சந்தேகமே...!

      இதழைப் படித்துப் பார்க்கலாம் - அவசியமென்று தோன்றும் பட்சத்தில் இதன் இடத்தில் வேறொரு சிக் பில் கதையைப் போட வேண்டியதைப் பற்றி சிந்திப்போம் ! Thanks for the info !

      Delete
    2. வின்வெளியில் ஒரு எலி கதையை முதலில் படித்த போது தோன்றியது நிங்கள் இந்த கதையை மொழி பெயர்க்கவில்லை என்றுதான், மறுபடியும் மொழி மாற்றம் என்பது சிரமம், அதற்கு பதிலாக நீல பேய் மர்மம் அல்லது இரும்பு கவ்பாய்(

      Delete
    3. இரும்பு கவ்பாய்(

      Delete
  37. @ FRIENDS : 'ஸ்பைடர் - மாயாவி கலாய்ப்ஸ்' போட்டியில் நண்பர்கள் அனைவரும் பின்னிப் பெடல் எடுத்திருந்தனர் ! காலத்தின் மாற்றம் எவரையும் விட்டு வைக்காதென்பதை பிடரியில் அடித்தார் போல் பதிவு செய்துள்ளது புரிகிறது ! ஏராளமான சிரிப்பு வெடிகள் சிதறிக் கிடந்த போதிலும்,எனது சாய்ஸ் இந்த 2:

    Muthukumaran
    =========================================================
    ஸ்பைடர்: மாயாவி.. இந்த அமெரிக்கன் ரிடர்ன் மாப்பிளை, ஹீரோவோட நண்பன், ஹீரோயின் னோட அப்பா.. இந்த ரோல் எல்லாம் வேண்டாமா..?

    மாயாவி: ப்ச்..ப்ச்.. ப்ச்.. ஸ்ட்ரிட்டா 'ஹீரோ' தான்...

    ===========================================================

    Dr. அல்கேட்ஸ் :
    மாயாவி Vs ஸ்பைடர் 5

    ஸ்பைடர்: என்னப்பா? அன்னிக்கி ஹோட்டல்ல தர்ம அடி வாங்கினியாமே. என்னாச்சு?

    மாயாவி: வழக்கமா பில் வரும் போது கரண்ட்ல கைய உட்டு மறைஞ்சுடுவேன். அன்னிக்கி பவர் கட். நான் மறைஞ்சுட்டேன் நினைச்சு வெளிய வரப் பாத்தேன். வெளுத்துட்டானுங்க.

    ===========================================================

    நண்பர்கள் இருவருக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படுகிறது ! (ஆளுக்கொரு Fleetway புக் தனித்தனியாய் :-)) Guys - உங்களின் முகவரிகளை மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்களேன் ப்ளீஸ் ? Congrats...great imagination !

    ReplyDelete
    Replies
    1. வாவ்! போட்டியில் வென்று Fleetway புத்தகங்களைத் தட்டிச் சென்ற நண்பர்கள் Muthukumaran மற்றும் Dr. அல்கேட்ஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்! தொடர்ந்து கலக்குங்கள் நண்பர்களே!! :)

      Delete
    2. Dear Editor, at least, அது என்ன புத்தகம் (Fleetway books) என்று தெரிந்து கொள்ளலாமா? :)

      Delete
    3. வாழ்த்துக்கள் Muthukumaran & Dr. அல்கேட்ஸ்

      Delete
    4. @ எடிட்டர் சார்..

      // Congrats...great imagination !//

      தங்கள் ஆசிர்வாதம், நன்றி.

      @ Erode VIJAY..

      // நண்பர்கள் Muthukumaran மற்றும் Dr. அல்கேட்ஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்!//

      ஆசிரியரின் பரிசோடு உங்கள் வாழ்த்துக்களும் எனக்கு கிடைப்பது.. ஆஹா.. ஓஹா.. தான்..

      @ Periyar..

      //அது என்ன புத்தகம் (Fleetway books) என்று தெரிந்து கொள்ளலாமா? :)//

      அதை நான் சொல்கிறேனே.. ப்ளீஸ்..

      @ கிருஷ்ணா...

      //வாழ்த்துக்கள் Muthukumaran & Dr. அல்கேட்ஸ்//

      நன்றி.. நண்பரே..

      Delete
    5. @Muthukumaran & @Dr. அல்கேட்ஸ்

      மிக நன்று, cinema நகைச்சுவை வசனங்களைவிட ஒரு படி மேல்.

      Delete
    6. வாழ்த்துகள் முத்துக்குமரன், அல்கேட்ஸ்!

      அம்மையப்பனை சுற்றி வந்து பழத்தைப்பெற்று விட்டீர்கள். (பரிசு)

      நான் உலகம் சுற்றி வந்து டயர்டா உட்கார்ந்திருக்கேன். ஸார் அல்வா குடுத்துட்டார் போல.. :-))))))

      (ஜஸ்ட் ஃபார் ஃபன்!)

      @விஜய்,
      மெயின் டிஷ் இல்லைனாலும், உங்களுக்கு கம்பெனியா.. சைட் டிஷ்ஷா எப்பிடி மண்ணு கவ்வுனேன் பாத்திங்களா? இதெல்லாம் ஜகஜம்ப்பா..

      Delete
    7. வாழ்த்திய அணைவருக்கும் என் மன்மார்ந்த நன்றி.

      Delete
  38. ஆசிரியர் அவர்களே ...ப்ருனோ பிரேசில் மறுபதிப்புகள் எப்பொழுது கிடைக்கும் ?நமது காமிக்ஸ் வண்ண அவதாரங்கள் எடுத்த பின் நாம் இன்னும் ரசிக்காத வில்லியம் வான்சின் சித்திரங்களை காண மிகவும் ஆவலாக உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. Good.. so its confirmed that Bruno Brazil new stories (if any left out) & reprints will be available in 2014.

      Thanks for the update.

      Delete
  39. @ ALL : நீண்ட நெடு நாட்களாய் நண்பர்கள் பலரும் சொல்லியிருந்ததொரு சங்கதியை செயலாற்றும் சமயம் இன்று தான் அமைந்தது ! நமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களுக்கென ஒரு official FACEBOOK பக்கமொன்றை உருவாக்கியுள்ளோம் ! இது ஒரு தகவல் பலகை போலவே செயலாற்றும் - நமது இதழ்களின் வருகைகள் ; விற்பனை முறைகள் ; முந்தைய கையிருப்புகள் இத்யாதிகளைக் கொண்ட information page ஆக.... !

    இதோ அதன் தள முகவரி : https://www.facebook.com/pages/Lion-Muthu-Comics/1388544204710093

    எனக்கு இந்த facebook முயற்சியில் அதிகப் பரிச்சயம் கிடையாதென்பதால், இதனில் செய்திடக் கூடிய improvements ; மாற்றங்கள் பற்றி உங்களின் அபிப்ராயங்கள் பெரிதும் உதவும் ! Please do chip in folks !

    ReplyDelete
    Replies
    1. நல்ல விசயம் சார்! நண்பர்களின் வேண்டுகோளுக்குச் செயல்வடிவம் கொடுத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்!

      Delete
    2. வாழ்த்துக்கள் சார்

      Delete
    3. நல்ல விஷயம் ஸார். அங்கும் முடிந்தவரை ஆக்டிவாக இருப்பது, கொஞ்சமேனும் சர்குலேஷனை உயர்த்தக்கூடும்!

      Delete
  40. 'ப்ளுகோட்ஸ் தமிழ்ல பெரிய சக்ஸஸ் இருக்கும்னு எனக்கு நம்பிக்கையில்லை... ஏன்னா, அதில் அமெரிக்க சிவில் வார தாண்டி எதுவும் கிடையாது.' - இது ப்ளுகோட்ஸ் பத்தி நம்ம எடிட்டர் ஒரு தடவை சொன்னது.

    இந்த இணைப்பில் உள்ள விடியோவில் 5:20 இலிருந்து பாருங்கள்! (ச்சும்மா ஒரு டைம் பாஸ்க்கு தான்!)
    http://www.youtube.com/watch?v=8i0iqL3r5z4

    ReplyDelete
  41. நீலச்சட்டை நாயகர்களை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்! நண்பர்களின் நீண்ட நாள் கோரிக்கை இது! அறிமுகப்படுத்துவதற்கு நன்றிகள் சார்!

    ஆதி சார் ! இப்படி தனியா தவிக்க வுட்டுட்டு நீங்க மட்டும் எஸ்கேப் ஆயிடீங்களே?? : ). வாழ்த்துக்கள் சார் ! மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு! நீங்க வெற்றி பேருவீங்கன்னு எதிர்பார்தேன்.
    அப்புறம் நீங்க பாஸ் ஆகி போயிட்டீங்க! அரியர்ஸ் எழுத எனக்கு யார் அடுத்தமுறை கம்பெனி கொடுப்பாங்க ?? : )

    நண்பர்கள் முத்துக்குமரன் & அல்கேட்ஸ் , கலக்கிடீங்க ! அருமையான கற்பனை திறன்! இந்த தளத்துல தொடர்ந்து கலக்குங்க! எதிர்காலத்தில் உங்க அதிக அளவிலான பங்களிப்பை ஆவலுடன் ஏதிர்பார்கிறோம்!

    புதிய முகப்புத்தகம் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் சார்! ஜூனியர் எடிட்டர் கைகளில் அதன் பொறுப்புகளை ஒப்படைக்கும் எண்ணம் உண்டா சார்?? அவரின் நேரடியான இன்ட்ரேக்டிவ் பங்களிப்பை ஆவலுடன் ஏதிர்பார்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி : //புதிய முகப்புத்தகம் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் சார்! ஜூனியர் எடிட்டர் கைகளில் அதன் பொறுப்புகளை ஒப்படைக்கும் எண்ணம் உண்டா சார்?? அவரின் நேரடியான இன்ட்ரேக்டிவ் பங்களிப்பை ஆவலுடன் ஏதிர்பார்கிறோம்!//

      நன்றிகள் ! ஜூ.எ. வின் 'கற்கும் படலம்' முடிவுற இன்னமும் நிறைய நாட்கள் பாக்கியுள்ளன ! So அது வரை ஒரு முழு நேரப் பொறுப்பை சுமத்துவது பொருத்தமாய் இராது !

      தவிரவும் நமது Facebook பக்கம் ஒரு தகவல் தளமாய் மட்டும் செயல்படுமே தவிர, கலந்துரையாடல்கள் எப்போதும் போலவே இங்கு நமது வலைப்பூவில் அரங்கேறும்.

      Delete
    2. @வி-சு,

      அரியர்ஸ் எழுத எனக்கு யார் அடுத்தமுறை கம்பெனி கொடுப்பாங்க?//

      பாத்தீங்கள்ல.. கார்த்திக் கருத்தை! மெகா களம்! கூட்டமா நாம மண்ணு கவ்வ சான்ஸ் இருக்கு.. பீ கேர்ஃபுல்!

      Delete
  42. ஆஹா.. நானா.. எனக்கா.. சொக்கா..!

    மோதிர கையில் குட்டு வாங்கறதே பெரிசு.. நான் பரிசே வாங்கபோறேனா..

    நம்ப முடியல.. நம்பவே முடியலே..

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே ..உங்களால தான் நான் தமிழ்ல டைப் செய்றேன். ..

      Delete
    2. அப்படியா.. சந்தோசம் நண்பரே..

      Delete
  43. @ நண்பர்களே..

    வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும்... நன்றி..நன்றி.. நன்றி..

    வாழ்த்துக்கள் Dr. அல்கேட்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்துக்குமரன். வாழ்த்துகள் உங்களுக்கும்

      Delete
  44. @விஜயன் சார்,
    //நமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களுக்கென ஒரு official FACEBOOK பக்கமொன்றை உருவாக்கியுள்ளோம்//
    நேற்றிரவு பெங்களூர் திரும்பும் சமயம், இந்த FB அறிவிப்பைப் பார்த்து லைக் போட்டு வைத்தேன்! கிட்டத்தட்ட பத்து மணி நேரங்களுக்குள் 63 லைக்குகள்! வாழ்த்துக்கள் சார்!!! Better late than never! 1000 லைக்குகளை 10 - 15 நாட்களுக்குள் எட்டி விடுவீர்கள் என்று நம்புகிறேன். வெறும் லைக் எண்ணிக்கை என்பதைத் தாண்டி, இவ்வாறு பல வாசகர்களை FB வழியே சுலபமாக சென்றடைவதன் மூலம் விற்பனையும் நிச்சயம் அதிகரிக்கும்!

    Bluecoats சிறப்பான தேர்வுதான். லக்கி லூக், சிக் பில் வரிசையில் இப்போது ப்ளூகோட்ஸ் என மீண்டும் ஒரு cowboy காலகட்ட கதைஆ..வ்வ் என்ற ஒரு சிறு அயர்ச்சியை தவிர்க்க முடியவில்லை. சீரியஸ் ரகக் கதைகளில் சொல்லவே வேண்டாம், கௌபாய்களின் ஆதிக்கம் ஏற்கனவே சற்று அதிகம்தான்.

    //'ப்ளூகோட் பட்டாளத்தை ' நடை போடச் செய்ய வாகான வேளையினை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் ! //
    'நீலச் சட்டை நாயகர்கள்' என்ற பெயரை விட 'ப்ளூகோட் பட்டாளம்' என்ற பெயர் மிகப் பொருத்தமாக உள்ளது (ஆங்கிலத்தில் இருக்கிறது என்பதால் அல்ல!).

    //நவம்பர் டெக்ஸ் டபுள் டமாக்காவின்//
    டமாக்கா என்றால் என்ன சார்?! :P

    ***
    @ஆதி தாமிரா:
    வாழ்த்துக்கள் ஆதி! KBT3-யில் பங்கு பெற்று, பொறுமையாக மொழி பெயர்த்து, இதை விட மிகச் சிறப்பாக முத்திரை பதிக்க வாழ்த்துக்கள். :)

    //கடைசியா இந்த முறை மண்ணு என் வாயிலிருந்து தப்பிற்று போலிருக்கே.. :-)))//
    இம்முறை KBT3-க்கான ஆடுகளம் மிகப் பெரியது என்பதால் (இணையத்திற்கு அப்பாற்பட்ட வாசகர்களும் பங்கேற்கப் போவதால்), மண்ணைக் கவ்வுவது அப்படி ஒன்றும் சிரமான காரியமாக இராது! :) மூக்கிற்கு கீழே கர்சிப்பை கட்டிக் கொண்டு இறங்கினால்தான் மண்ணை தட்டி விட வசதியாக இருக்கும், வாயிலும் புகாது! :P நான் ஏற்கனவே பெரிய கர்சிப்பாக வாங்கி வைத்துள்ளேன், மெயில் அனுப்ப வேண்டியதுதான் பாக்கி! :D

    ***
    @Muthukumaran & Dr. அல்கேட்ஸ்:
    வாழ்த்துக்கள் நண்பர்களே!

    ***
    @udhay:
    //ஆசிரியர் தேர்வினை 100% உங்கள் மொழிப்பெயர்ப்பு நியாயம் செய்தது//
    மிக்க நன்றி உதய்!!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ்.. கார்த்திக்.. நீங்கள் தானே எங்களுக்கெல்லாம் முன்னோடி.. உங்கள் வழியில் நாங்கள்..

      Delete
    2. மூக்கிற்கு கீழே கர்சிப்பை கட்டிக் கொண்டு இறங்கினால்தான் மண்ணை தட்டி விட வசதியாக இருக்கும், வாயிலும் புகாது!//

      :-))))) அட போங்க ஃபிரெண்ட்! விஜயோட ஆராய்ச்சியைப் பார்த்தீங்கள்ல.. மண்ணு கவ்வுவது எமது பிறப்புரிமை என்பது மாதிரி மனத்திடத்தோட இருக்கணும்!

      Delete
    3. நன்றி கார்த்திக்

      Delete
  45. மொழிபெயர்ப்பில் வெற்றி பெற்ற ஆதி தாமிரா அவர்களுக்கும்,
    ஸ்பைடர் மாயாவி கமென்ட் -இல் வெற்றி பெற்ற முத்து குமரன் மற்றும் Dr.அல்கேட்ஸ் அவர்களுக்கும் &

    போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. ப்ளூகோட்ஸ் நாயகர்களை வரவேற்கிறோம்....

    ReplyDelete
  47. நண்பர் ஆதி தாமிராவுக்கு வாழ்த்துக்கள். fleetway புக்கையும் மொழி பெயர்த்து போட்டீங்கன்னா நல்ல இருக்கும். :D

    முத்து குமரன் மற்றும் Dr அல் கேட்ஸ்சுக்கு வாழ்த்துக்கள். நச்சுன்னு இருந்தது.

    அன்புள்ள எடிட்டருக்கு,
    ப்ளூ கோட்ஸ் போன்ற கதையை போடலாமே என்ற வினவல்களுக்கு செவி சாய்த்ததற்கு நன்றி. புது வழியில் சிறிது சிறிதாக ஆனால் திடமாக முன்னேறுகிறோம் என்பது உறுதியாகிறது. யகாரியையும் முயற்சிக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. //முத்து குமரன் மற்றும் Dr அல் கேட்ஸ்சுக்கு வாழ்த்துக்கள். நச்சுன்னு இருந்தது//

      நன்றி.. நண்பரே.

      Delete
  48. @ ஆதி

    * வாய் நிறையக் கவ்விட உகந்த மண் எது?
    * சத்துக்கள் அதிகம் நிறைந்த, சுவையான மண் வகை எது?
    * அடிக்கடி மண்ணைக் கவ்வுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் யாவை?

    பதில் ப்ளீஸ்...

    பின் குறிப்பு: KBT-3 க்கு பெயர் இன்று கொடுத்துவிட்டேன்! ;)

    ReplyDelete
    Replies
    1. அ..து!!

      பக்கவிளைவுகள்:

      இது ஒரு மிகச்சிறந்த பயிற்சியாகும். மண்ணுகவ்வுவது நமது மனோதிடம், சகிப்புத்தன்மை, பொறுமை, திறமை, உழைப்பு, பரந்த மனம் ஆகியவற்றை வளர்க்கக்கூடியது. ஆகவே இதில் நாம் அடிக்கடி ஈடுபடுவது சிறந்தது. நன்றாக பயிற்சி எடுக்க எடுக்க, மண்ணு கவ்வுவது சமயங்களில் முடியாமல் போகலாம். அப்போதும் அசராது கார்த்திக் சோமலிங்கா, புதுவை செந்தில், விஸ்கி-சுஸ்கி போன்ற திறமைசாலிகள் இருக்கக்கூடிய களங்களில் இறங்கி அவர்களோடு மோதி நாம் மண்ணுகவ்வ முயலலாம்.

      எனக்கு இதில் பல்லாண்டு அனுபவங்கள் உண்டு. KBTக்கு இவ்வளவு தாமதமாக பெயர் கொடுப்பது உங்களது மண்ணுகவ்வுவதில் இருக்கும் ஆர்வக்குறைவை காட்டுகிறது. சிலர் வாயில் கர்ச்சீப்போடெல்லாம் வந்து மண்ணுகவ்வ முயற்சிப்பார்கள், பயமுறுத்துவார்கள். நாம் இருவரும் இணைந்து பயணித்து தீய சக்திகளை விரட்டி, சிறப்பாக மண்ணுகவ்வ வேண்டும் என விரும்புகிறேன்.

      அ....தூ!!!!!

      :-))))))

      Delete
    2. //* வாய் நிறையக் கவ்விட உகந்த மண் எது?
      * சத்துக்கள் அதிகம் நிறைந்த, சுவையான மண் வகை எது?
      * அடிக்கடி மண்ணைக் கவ்வுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் யாவை?//

      ஹி ஹி! இது Mr.மண்புழுவிடம் கேட்க வேண்டிய கேள்வி! :D

      Delete
    3. @ Ramesh kumar

      'ஒரு புத்தகப் புழுவிடம் கேள்விகள் கேட்ட ஒரு அற்பப் புழு' என்று வைத்துக் கொள்ளலாமா? :D

      Delete
    4. @ ஆதி

      // சிலர் வாயில் கர்ச்சீப்போடெல்லாம் வந்து மண்ணுகவ்வ முயற்சிப்பார்கள் //

      :D
      முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கிட்டு வர்ரவங்களெல்லாம் மண்ணுகவ்வ வர்றவங்கன்னு தப்பா எடை போட்டுடாதீங்க! அப்படி வர்றவங்க தீவிரவாதியாவோ, கொள்ளைக்காரங்களாவோ கூட இருக்கக்கூடும்! எடிட்டர் கொடுக்கவிருக்கும் அத்தனையும் மொத்தமா அள்ளிட்டு போய்டுவாங்க; உஷார்!! ;)

      Delete
    5. @ விஜய்,
      ஆழமா மண்ணை கவ்வுனாலும் அஜீரன கோளாறுகள் வராம எப்படி கவ்வுவது?? மேம்போக்க மண்ணை கவ்வுன்னாலும் மீசையில மண் ஒட்டாமல் எப்படி கவ்வுவது ?? இந்த மாதிரி விஷயங்கள்ள புலமை பெற்ற வருத்தப்படாத வாசகர் சங்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்! : D !


      Delete
    6. @ வி-சு

      :D

      உயிர் - லயனுக்கு! வாய் - மண்ணுக்கு!
      ;)

      Delete
  49. Muthukumaran & Dr. அல்கேட்ஸ்: வாழ்த்துக்கள் நண்பர்களே...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி புதுவை செந்தில்...

      புதுவை என்றால் புதுச்செரியா..?!

      Delete
    2. @Muthu Kumaran: ==புதுவை என்றால் புதுச்செரியா..?!==
      ஆமாம் நண்பரே.. புதுச்சேரிதான்..!

      Delete
    3. @ காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில்

      நானும் புதுச்சேரியில் தான் இருக்கிறேன்.. முடிந்தால் சந்திப்போமா.. நண்பரே..

      Delete
    4. சந்திக்கலாம் நண்பரே.. உங்கள் மொபைல் நம்பரை இந்த முகவரிக்கு அனுப்புங்கள். நான் தொடர்பு கொள்கிறேன். ndsenthil@gmail.com

      Delete
  50. வாழ்த்துக்கள் Dr. அல்கேட்ஸ் மற்றும் முத்து குமரன் ....

    மொழிபெயர்ப்பில் வெற்றி பெற்ற ஆதி தாமிரா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ....

    //நமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களுக்கென ஒரு official FACEBOOK பக்கமொன்றை உருவாக்கியுள்ளோம் !//

    WELCOME SIR :)

    ReplyDelete
  51. வாழ்த்துகள் ஆதி...

    ப்ளூ கோட்ஸ் - சூப்பர்.. நீண்ட நாள் கனவு நிஜமானது.. .WOW! சூப்பர்...

    ReplyDelete
  52. தமிழ் புத்தகம் தாண்டி எதையும் படிச்சது இல்லை அதனால ப்ளூகோட் பட்டாளம் வருவதற்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  53. ஆதி தாமிராவுக்கு எனது வாழ்த்துக்கள். போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு எனது திறமையை வளர்த்துக்கொள்ளவில்லை என்று நினைக்கும் போது கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை நண்பரே, சில கமெண்ட்ஸுக்கு மேலே பாருங்கள். நானும், விஜயும் எப்படியான ஆராய்ச்சியை மேற்கொள்கிறோம் என்று. நீங்கள் புதியவர் என்று தெரிகிறது. வேண்டுமானால் எங்களோடு KBT-3 யில் கலந்துகொள்ளுங்களேன். மண்ணுகவ்வும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்! :-)))))

      Delete
  54. ஆன்லைன் மொழிபெயர்ப்பில் வெற்றி பெற்ற ஆதி தாமிராவுக்கு வாழ்த்துகள். நம்ம மொழிபெயர்ப்புல என்ன மிஸ் பண்ணினோம்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்.

    1. ஒரிஜினலுக்கு உண்மையா இருப்போம்னு பெரிய வரிகளாக எழுதி இருப்பது, கிரியேட்டிவா இன்னும் கொஞ்சம் நல்லா எழுதி இருக்கலாம்.

    2. பேச்சுத் தமிழைத் தவிர்த்து எழுத்துத் தமிழை பாவித்தது

    பரவாயில்லை. அடுத்து KBT-3 ல பார்த்துக்குவோம்.

    கமெண்ட் சொல்லு, காமிக்ஸ் அள்ளு போட்டியில் வென்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்..:-))

    ReplyDelete
    Replies
    1. //பேச்சுத் தமிழைத் தவிர்த்து எழுத்துத் தமிழை பாவித்தது//

      உண்மையில் அந்தக்கதைக்கு வெகுசில வசனங்களைத் தவிர அனைத்துக்கும் எழுத்துத் தமிழ் பொருந்தக்கூடியது தான். 40-50 வருட பிந்தைய கதைக்களம் என்றாலே தூய தமிழ்தான் என்கிற தமிழ் திரைப்படங்களின் எழுதப்படாத சட்டம் இங்கேயும் பொருந்தும் (பேசுவது ஆங்கிலேயராக இருந்தாலும்)! :D

      Delete
    2. வெல்கம் கா.பா ,
      முத முறையா போட்டியில கலந்துக்கிட்டிருந்தாலும் நீங்க டிஷ்டின்சன்ல வந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!
      நம்மள இத்தனை நாள் ஏன் இப்போகூட சந்தோஷப்படுத்திகிட்டிருக்கற நம்ம காமிக்ஸ் உருவாக்கத்தில நமளால முடிஞ்ச ஒரு சிறு பங்களிப்ப செஞ்சு அத யார் பாராட்டராங்களோ இல்லையோ, நாமளே நம்மளோட மொழிபெயர்ப்பா படிக்கும்போது கிடைக்கும் சந்தோசம் அலாதியானது!போட்டியில பரிசில் வாங்கறதை எல்லாம் இரண்டாம்கட்ட மகிழ்ச்சியாகவே எனக்கு தெரியுது.

      //ஒரிஜினலுக்கு உண்மையா இருப்போம்னு பெரிய வரிகளாக எழுதி இருப்பது, கிரியேட்டிவா இன்னும் கொஞ்சம் நல்லா எழுதி இருக்கலாம்.//
      உங்களுக்கு நா ஒரு உண்மைய சொல்ல போறேன். இந்த கதைய படிக்கும் போது எனக்கு கொட்டாவி வராத குறை. நேரடியா மொழிபெயர்தா பெருசா படிக்கும்போது சுவராஸ்யம் இல்லாதமாதிரி தெரிஞ்சது. கொஞ்சம் வட்டார மொழியை கலந்து ஒரு புதிய கதையை காட்சிகளுக்கு போருந்தற மாதிரி உருவாக்கி கொஞ்சம் நகைசுவை கலந்து நான் மொழிபெயர்த்தேன். இப்படி பண்ணா பன்னு தான் எனக்குன்னு நல்ல தெரியும். ஆனாலும் அதுல இருந்த ஒரு கிக் என்ன அப்படி செய்ய வைச்சது !: ): D

      //2. பேச்சுத் தமிழைத் தவிர்த்து எழுத்துத் தமிழை பாவித்தது//

      நான் டோட்டலா பாலோ பண்ணது பேச்சு தமிழ் தாங்க! அதுவும் வட்டார வழக்கு தமிழ்.வேலைய முடிச்சப்புறம் படிக்கும் போது இந்த மாதிரி புராதன கதைகளுக்கு நேரடியான மொழிபெயர்ப்பு கொடுக்கற ஒரு சுவராஷ்யத்தை காட்டிலும் இந்த முறை கொஞ்சம் ஸ்பைசியா எனக்கு தெரிஞ்சது. சிம்பிளா சொல்லணுமுன்னா குளேபகாவளி படத்த இப்போ பக்கசொன்ன நாம ஓடிபோயிடுவோம். ஆனா அந்த படத்துல்ல லூஸ் மோகன் மாதிரி வசனம் பேசுனா கொஞ்சம் நேரமாவது சிரிச்சுட்டு என்ஜாய் பண்ணுவோம்முன்னு தோனுச்சு! இந்த லாஜிக் நல்ல ஒதை வாங்குமுன்னு தெரிஞ்சாலும் ஒரு ஜாலிக்காக பண்ணேன்! : ))))

      அப்புறம் MR. ஆதி, நாங்க மண்ணை கவ்வுனாலும் "தி மேக்கிங் அப் " கதைகள நாங்களும் சொல்லுவோம்! தஞ்சாவூர் சிலைங்க கிட்ட இதுக்கு ஒரு கல்வெட்டு வைக்க முடியலைனாலும் இந்த ப்ளாக்லையாவது வருங்கால சந்ததிகள் என்ன பாத்து நாலு விஷயம் எத செய்யக்கூடாது அப்படிங்கறத கத்துக்கும் இல்லையா : ))))!

      Delete
  55. திகில் கதைகள்; கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட கதைகளாக இருப்பதால், அதற்கு பதிவு செய்யப்பட்ட பழைய ஆவணங்களை படிக்கும் உணர்வை எற்படுத்தும் வகையில் செய்யப்படும் மொழிப்பெயெர்ப்பே சரியானதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

    அதற்கு பேச்சு தமிழை விடவும் எழுத்து தமிழே பொருந்த கூடியதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    இது மொழிப்பெயர்ப்பின் மீதான என் புரிதலை பற்றிய பதிவே அன்றி வேறு யாருடைய கருத்துக்கும் எதிர் கருத்தை பதியும் நோக்கில் பதியபட்டதல்ல.

    ஆதி தாமிரா உங்களின் மொழி பெயர்ப்பு எனக்கு பிடித்துள்ளது.

    ஆசிரியர் தேர்வு செய்துள்ள இந்த கதை மிக சுமாரானதாக தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்களுக்கு நன்றி மீரான், உங்க கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன். பட் கண்டிசன்ஸ் அப்பளை! : )

      1. வரப்போற ஏதாவது புத்தகத்தில் நம்ம ஆக்கம் இடம்பெறும்முன்ன இப்படி ஒரு அர்தோடக்ஸ் நிலையை எடுக்கறது தான் சரி. இது ப்ளோக்ல வரப்போற கதை தானே மீரான். சீரியஸ்சா இல்லாம கொஞ்சம் விளையாண்டு பாத்தான் என்ன ???

      2.உண்மையிலயே நம்ம மொழிபெயர்க்கற கதை சீரியசா இருந்தா நீங்க சொன்ன மாதிரி செய்யலாம்.


      இந்த பர்ட்டிகுலர் புராதன கதை மொக்கையிலும் மகா மொக்கை. இதுக்கு போயி வரிக்கு வரி சீரியசா மொழிபெயர்த்தா அதுல ஒரு கிக் இருக்கறமாதிரியே எனக்கு தெரியல. சோ கொஞ்சம் out-of-the-box செஞ்சு பாப்பமேன்னு தோனுச்சு. ஆசிரியர் ரசிச்சிருக்காருங்கறது பெரிய சந்தோசம்.

      இந்த மாதிரி நம்ம வாழ்கையில நாம எடுக்கற ஒரு சில அன்அர்தோடக்ஸ் நிலைப்பாடுகள் சில வேலைகள் மண்ணை கவ்வுனாலும் ஒரு சில வேலை கிளிக் ஆகும்போது கிடைக்கற சந்தோஷம் பெறும் சுவராஸ்யமானது. அதுக்காக சில வேலை மண்ணை கவ்வுனாலும் அது வொர்த் கவ்விங்! : D :))))!!!

      Delete
    2. உங்கள் கருத்து ஏற்கதக்கதே.

      Delete
  56. 1. வாழ்த்திய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

    2. விஜயன் சார், என் முகவரியை lioncomics@yahoo.com ற்கு அனுப்பியிருக்கிறேன். என் பெயர் Dr. Hariharan. பரிசுக்கு நன்றி

    3. சிவில் வார் 19ஆம் நூற்றாண்டு. 18 என்று தவறாக வந்துள்ளது.

    4. ப்ளூகோட்ஸ் வருவது மிக்க மகிழ்ச்சி. கொஞ்சம் GROO காமிக்ஸ்களையும் consider செய்தால் மகிழ்ச்சி.

    5. ஆதி தாமிரா- வாழ்த்துகள்

    ReplyDelete
  57. வருகிறேன்..தலீவா .......

    ReplyDelete
  58. காமிக்ஸ் மகா ஜனங்களே .......

    புத்சா வர இந்த கரடிய வாழ்த்துங்கள் .....

    நாங்க எல்லாம் புதுசா வர ரஜினி படத்தை அடுத்தவன் தோள் மேல மிதித்து முத நாள் முத ஷோ பார்குற ஆளுங்க ...
    அதனால மறக்காம என்னை வர வேற்று தாரை ,தப்பட்டை யோட ..சே .....சாரி ....மாலை மரியாதை யோட வரணும்னு இந்த கரடி கரடியாய் கத்துறான் ....

    வரல .....

    பி கேர் புல் .....

    (நான் என்னை சொன்னேன் )

    ReplyDelete
  59. தலீவா ....

    இந்த மாசம் நீ விட்ட ரெண்டு புக்கும் சூப்பர் தலீவா ....

    படிக்காம விட்ட ரெண்டு திகில் புக்க இப்போ படிக்க வைத்ததக்கு நன்றி தலீவா ....அதிலும் பழைய அட்டை படத்தை உள்ள வச்சை பாரு தலீவா ...அங்கே தான் நீ நிக்குற ..இதை எப்பவுமே வுற்ற கூடாது தலீவா .சொல்லிபுட்டேன் ஆமா ...கதை ,கலரு ன்னு சூப்பர் டூப்பர் தலீவா ...

    லார்கோ பத்தி சொல்லுனுமா தலீவா ..
    அட்ரா சக்கை ...அட்ரா சக்கை ...அட்ரா சக்கை தான் ..
    படம் ,கதை ,வசனம் எல்லாம் சூப்பர் தலீவா ..அதுலயும் ஒரு இடத்துல லார்கோ "இங்கே உயிரோட வாழ ரத வீரம் தானே "......ஆகா ... நச்சுனு சொன்னாரு எங்க வாத்தியாரு ...

    என்ன சின்ன குறைனா தலீவா ...லார்கோ அட்டை படத்தை நீ" பாட்ஷா" மாதிரி போடாம "ஜானி " மாதரி போட்டுட்ட ..பாத்து தலீவா ..பிரின்ஸ் அட்டை படம் சூப்பர் தலீவா ...

    மொத்தத் தல ....
    என்ன சொல்றது தல ....
    இப்படி யே புக்கை விடு ..தல ..ரூட்டு மாறாத ..ஆமா ...



    ReplyDelete
    Replies
    1. //லார்கோ அட்டை படத்தை நீ" பாட்ஷா" மாதிரி போடாம "ஜானி " மாதரி போட்டுட்ட ..பாத்து தலீவா//

      ha ha ha!

      Delete
  60. தலீவா ....அப்றோம் அந்த" சிக்பில் "கதை ஸ்பெஷல் வர ரெண்டு கதை யை மாத்தி போடாதே ....ப்ளீஸ் ...தலீவா ...மொழி ஆக்கம் பழசா ..,பழைய விதத்தில் இருந்தாலும் பரவால ." விண்வெளியில் ஒரு எலி" காக இந்த கரடி காத்து கொண்டே இருக்கிறான் .வேற கதை எல்லாம் சிக் பில் -2 -வில் பாத்துக்கலாம் .

    ReplyDelete
  61. http://www.kalkionline.com/

    pls try for our reprint in this type

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிடுவது Classics பற்றியா? அது கல்கி நிறுவனத்தின் சொந்த படைப்பு என்பதால் online version-க்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நமது காமிக்ஸ் வெளியீடுகள் அனைத்தும் அயல் நாட்டு படைப்பாளிகளுடையதாகையால் online வெளியீட்டுக்கு உரிமம் கிடைப்பது doubt-தான்.

      Btw, thanks for the link! I just tried some olds issues of 1940s and Gokulam releases of 1970s. The old age illustrations done by famous artists, advertisement wordings and old cinema posters are epic! :D

      Delete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. நண்பர்களே..

    வணக்கம்.. என் வாழ்கையில் எத்தனையோ surprise கள்... அதில் கீழே இருப்பதுவும் ஒன்று...

    http://muthukumarandvp.blogspot.in/

    ReplyDelete
  64. புதுசா ஒரு ஒரம்பரை வந்து இருக்கனே ...ஒரு பய புள்ளை கூட வாழ்த்து சொல்ல வரலைய ...என்னடா உலகம் இது ...?

    அடேய் ...கரடி மண்டையா ....நீ உன் உண்மையான பேருல வந்து இருந்தா எல்லா பயலும் வந்து இருப்பாங்க ...நீ புனை பெயருல வந்தா எல்லாம் பயப்பட மாட்டாங்களா ..? அப்படி பல பேரு வந்து இங்கு கும்மி அடிச்சி குட்டையை குழப்பி விட்டுட்டு போனாங்க .அந்த க்ரூப்ல நீயும் ஒன்னு நினைச்சி தள்ளி நிக்குறாங்க ...புரியுதா ...

    அட ..தேவுடா ....இது வேற இருக்கா ...இது புரியாம இந்த I S டி ஓபன் பண்ணி சே ..ஹ்ய் டி ஓபன் பண்ணி வச்சுட்டன் .இப்ப என்ன பண்றது ...சரி ..சில உறுதியை நம்ம காமிக்ஸ் மகா ஜனகளுக்கு சொல்லி கொல்றேன் .

    ஒன்னு .....நான் இது வரைக்கும் எந்த புனை பேருல யும் இங்கு மட்டுமல்ல ...எந்த ப்ளாக் லும் வந்ததில்லை ..இப்ப தான் வரேன் .இது நான் படிக்கிற காமிக்ஸ் மேல சத்தியம் .

    இரண்டு ...ஒரு கைல சோறும் ..,ஒரு கைல நம்ம காமிக்ஸ் ம் இருந்தா நான் உலகத்தை மறந்துருவேன் .அப்படி உலகத்தையை மறக்க வைக்கிற நம்ம "விஜிய தலைவருக்கு "நான் உறு துணையா இருபனே தவிர இடைஞ்சலா இருக்க மாட்டன் .ஓகே .

    ReplyDelete
    Replies
    1. சாமி ...பாலாஜி ...வாப்பா ...

      நீர் ஆவது "வெல் கம் " பண்ண வந்தீரே ...

      நீர் வாழ்க ...உம் குலம் வாழ்க ...உம் கொற்றம் வாழ்க ...

      Delete
    2. தலைவா நமக்குள்ள எதுக்கு இதெலாம்.. ஒரு ஆட்டகாரன இனொரு ஆட்டகாரன் மதிக்கிறது தானே இயல்பு !!!

      Delete
  65. மொழிபெயர்ப்பில் வெற்றி பெற்ற ஆதி தாமிரா அவர்களுக்கும்,
    ஸ்பைடர் மாயாவி கமென்ட் -இல் வெற்றி பெற்ற முத்து குமரன் மற்றும் Dr.அல்கேட்ஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  66. Some questions to editor
    1)What is the status of Thigil nagaril tex which appeared in Comic Express?
    2) kaval kalgu :when it will be published ?
    3)A advertisement featuring tex appeared in vengai vettai [Lion Issue 163]as kanavaikollair.Is this story published in some other name or yet to come?
    4)Is it possible to reprint kollaikar car that came in minilion?.It is surely one of best in minilion
    5) 2014 another comic hero:Yakari or spirou?

    ReplyDelete
  67. நண்பர்களே நம் கோவை இரும்புக்கையார் பரணிலிருக்கும் இரும்புக்கரத்தை தேட மேலேறிவிட்டு இறங்க முடியாமல் தவித்து வருகிறார். யாராவது உதவுங்களேன்

    ReplyDelete
  68. நண்பர்களே, அக்டோபர் மாதம் எந்த புத்தகம்கள் வர போகுதுன்னு ஒரே குழப்பமாக இருக்கு! அக்டோபர் மாதம் வரக்கூடிய புதகம்கள் எவை என யாராவது கூறினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  69. லயன் 30 ம் ஆண்டுமலர் எத்தனைப் பக்கங்களில் எந்த ஹீரோக்களின் கதைகளுடன் வரவேண்டும் என்பது பற்றி வாசகர்கள் தங்கள் எண்ணங்களை பதிவிடலாமே.....

    எனது விருப்பம்

    ஒரே சமயத்தில் 5 தனித்தனி புத்தகங்களை ஒரு புக் 100 ரூ வீதம் மொத்தமாக வெளியிடலாம்!

    * 30ம் ஆண்டு சிறப்பு வெளியீடுகள் *

    [டைகர். லார்கோ. வேய்ன் ஷெல்டன். லக்கிலூக். ஜில்ஜோர்டான். சிக்பில். டிடெக்டிவ் ஜெரோம். கிராஃபிக் நாவல்கள்.]

    ReplyDelete
    Replies
    1. தோழரே ...நல்ல ஐடியா சொன்னீர் ..

      இந்த கரடி யை பொறுத்த வரைக்கும் 500 ரூபாய் அல்லது 1000 ரூபாயில் வந்தால் ஓகே .அது தனி தனியாய் வந்தாலும் சரி ..மொத்தமாக "குண்டு "புத்தகமாக வந்தாலும் சரி ...

      வண்ணத்தில் வந்தாலும் சரி ..கருப்பு வெள்ளையில் வந்தாலும் சரி ..இரண்டும் கலந்து வந்தாலும் சரி ..

      டெக்ஸ் ,லார்கோ ,டைகர் ,ஷெல் டன் ,லக்கி ,சிக் பில் ,மாடஸ்தி ,ரிப் ,ராபின் ,ஜானி என யார் வந்தாலும் சரி ...

      ஆனா ....

      இந்த "கிராபிக் நாவலை "மட்டும் நுழைக்காம இருந்தா கோடி புண்ணியம் ...

      காரணம் "29" ம் ஆண்டு மலரில் இன்னும் இரண்டு கதை படிக்காம பாக்கி இருக்கு ...

      Delete
    2. நானும் எத்தன நாளைக்கு தான் வலிக்காத மாதிரயே நடிக்கிறது???

      Delete
    3. தோழா ....இன்னும் உங்களை மாதிரி இங்கு எத்தனை பேர் ...?

      தலைவர் புரிந்து கொண்டால் சரி ...!

      Delete
    4. ஒரே சமயத்தில் 5 தனித்தனி புத்தகங்களை ஒரு புக் 100 ரூ வீதம் மொத்தமாக வெளியிடலாம்!

      சென்னை புத்தகத்திருவிழா சமயங்பளில்..

      Delete
  70. விஜயன் சார்
    வேதாளருக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் .....தோழா .....

      Delete
    2. நான் முதன்முதலில் படித்த புத்தகம் வேதாளர் அசத்திய விசித்திர கடல் கொள்ளையர்

      Delete
  71. இன்றைய ஜூ,வியில் எடிட்டர் கொடுத்த விளம்பரம் வந்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. @ எடிட்டர்
      'வெகுஜன பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்திடவேண்டும்' என்ற நண்பர்களின் நீண்டநாள் கோரிக்கை இன்று நிறைவேறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!
      முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

      @ Ranjith
      தகவலுக்கு நன்றி நண்பரே!

      Delete
  72. நண்பர்களே..

    ஜூ.வி.ல் வந்த நமது காமிக்ஸின் copy யை யாராவது இங்கு upload செய்து லிங்க் கொடுங்களேன்..

    ReplyDelete
  73. நண்பர்களே..

    ஜூ.வி.ல் வந்த நமது காமிக்ஸின் விளம்பர copy யை யாராவது இங்கு upload செய்து லிங்க் கொடுங்களேன்..

    ReplyDelete
  74. http://theranjithcomics.blogspot.in/?m=1 முத்து இதில் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. ரஞ்சித்..

      ஆனால் மிக சிறியதாக இருக்கிறதே.

      Delete
  75. என் மொபைலில் பிடித்தது

    ReplyDelete
  76. இந்த வாரம் ஜூ வி இதழில் நமது வெளியீட்டின் விளம்பரம்... ஒரு நல்ல முயற்சி, படங்களில் இன்னும் சற்று கவனம் செலுத்தி, பாடர் சற்று அடர்த்தியாக வந்திருந்தால், இன்னும் எடுப்பாக இருந்திருக்கும். :)

    ReplyDelete
  77. தலைவா ....

    அடுத்த பதிவிற்கு ஆவலோடு வந்தா ...

    சீக்கிரம் ....வாரீர் தலைவா ....

    ReplyDelete
  78. ஜூனியர் விகடன் விளம்பரம் கண்ணுக்கு குளிர்ச்சி தலைவா ...அதில் எங்கள் மாடஸ்தியை கொண்டு வந்ததற்கு ஸ்பெஷல் நன்றி தலைவா ...

    ReplyDelete
  79. Dear THALA(editor)!!! What about new post??? We are waiting sir!!!

    ReplyDelete
  80. 8 days why editor no come? go to other national?

    To editor:
    sir all friends your late post much angry sir. one week - one post NO sir, but one week - two post OK sir. we waiting, so immediate come please sir.
    advance thank you sir.

    ReplyDelete
  81. பில்லர் பக்கங்களில் சித்திரக்குள்ளன் சாம் வெளியிடலாமே..

    ReplyDelete
  82. ஹாய் நண்பர்களே! கிடைத்த கேப்பில் ஆசிரியர் வெளிநாடு சென்றுவிட்டாரா?? அப்பப்போ இங்க வந்து ஒரு அட்டென்டன்ஸ் போடுங்க சார்.

    வகுப்பறைகளுக்கு எங்களை போல மாணவர்கள் பங்க் அடிக்கலாம்! ஆசிரியரேரேரேரே............ இப்படி பங்க் அடிக்கலாமா??

    ReplyDelete
  83. ATTENTION நண்பர்களே...

    ஆசிரியரின் புதிய பதிவு....
    "காதலர் தேசம் ! "


    // நண்பர்களே,

    வணக்கம். நிறைய உள்ளூர் பயணங்கள் ; ஒரு தந்தையாய் சில பொறுப்புக்கள் ; இம்மாத இதழ்களின் பணிகளென - எனது கடந்த வாரம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டதால் இங்கே attendance போட இயலவில்லை ! Sorry folks ! இடைப்பட்ட நாட்களுள் ஒன்று வெகுவே சுவாரஸ்யம் கொ......//

    http://lion-muthucomics.blogspot.in/2013/09/blog-post_23.html?showComment=1379917752282#c6104057898979653895

    ReplyDelete