Powered By Blogger

Monday, September 23, 2013

காதலர் தேசம் !

நண்பர்களே,

வணக்கம். நிறைய உள்ளூர் பயணங்கள் ; ஒரு தந்தையாய் சில பொறுப்புக்கள் ; இம்மாத இதழ்களின் பணிகளென - எனது கடந்த வாரம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டதால் இங்கே attendance போட இயலவில்லை ! Sorry folks ! இடைப்பட்ட நாட்களுள் ஒன்று வெகுவே சுவாரஸ்யம் கொண்டதாய் அமைந்தது எனது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும் ! நமது அயல்நாட்டுப் பதிப்பகங்களில் பல ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி விட்டு தற்சமயம் ஓய்வில் இருக்கும் ஒரு முதிய நண்பர் விடுமுறைப் பயணமாய் இந்தியா வந்திருந்திருக்கிறார் ! ராஜஸ்தான் ; கோவா என டூர் அடித்து விட்டு, ஸ்ரீ லங்கா செல்லும் முன்னே சென்னையில் 2 நாட்கள் டேரா போட்ட மனுஷன் எப்படியோ எனது மொபைல் நம்பரைத் தேடிப் பிடித்து என்னோடு பேசிய போது எனக்கு சந்தோஷ ஆச்சர்யம் ! நானும் அன்றைய தினம் சென்னையில் இருந்ததால் மாலைப் பொழுதை அவரது ஹோட்டல் அறையில் சாவகாசமாய் அரட்டையடிப்பதில் அழகாய் செலவிட முடிந்தது ! நண்பர் வெவ்வேறு பிரெஞ்சு / பெல்ஜிய நிறுவனங்களில் விற்பனைப் பிரிவுகளிலும் ; வேற்று மொழி உரிமைகளைக் கையாளும் பொறுப்புகளிலும் ஆண்டாண்டு காலமாய்ப் பணியாற்றியவர் என்ற முறையில் பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ் பின்னணியைக் கரைத்துக் குடித்தவர் என்று சொல்லலாம் ! கடைசியாய் அவர் பணியாற்றியது நமது ரசனைகளுக்கு ஏற்பில்லா  ரகக் கதைகளை வெளியிடும் ஒரு பதிப்பகத்தில் என்ற காரணத்தினால் 2010-க்குப் பின்னர் அவரோடு தொடர்பு இருந்திருக்கவில்லை ! நமது நியூஸ்பிரிண்ட் + black & white பாணிகளைப் பார்த்துப் பழகி இருந்த மனுஷனுக்கு நமது தற்சமய வண்ண இதழ்களின் முழு வரிசையையும் நான் காட்டிய போது நிஜமாய் திகைப்பு ! தர மேம்பாட்டை விட அவர் மிகவும் ஆச்சர்யப்பட்டது நமது நண்பர்களின் வாசிப்புகளின் variety-ஐ கண்டே !! 'சுட்டி லக்கியை ரசிக்கும் கையோடு - கிரீன் மேனரையும் ; 'பிரளயத்தின் பிள்ளைகளையும் ' ரசிக்கும் ஆற்றல் கொண்டவர்களா உங்கள் வாசகர்கள் ? வாவ் !' என ஆச்சர்யம் காட்டினார் ! அங்கே இங்கே எனப் பயணித்த அன்றைய காமிக்ஸ் அரட்டையினை கொஞ்சமாய் தொகுத்து இதோ ஒரு பதிவாக்குகிறேன் !  

'பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ்' என்பதே ஒரு விதத்தில் தவறான வார்த்தைக் கோர்வை என்று சொன்னார் நண்பர் ! அது ஏனோ என நான் வினவிய போது - ' அளவில் பிரான்சை விட பெல்ஜியம் சிறிதென்ற போதிலும், காமிக்ஸ் படைப்புகளில் ; உருவாக்கத்தில் பெல்ஜியம் தான் சீனியர் ! ஒரு கோடி ஜனத்தொகை கொண்ட தேசத்தில் கிட்டத்தட்ட 900 காமிக்ஸ் ஓவியர்கள் வெற்றிகரமாய்ப் பணியாற்றி வருவது பெல்ஜிய மண்ணில் தான் ! உலகளவில் இது ஒரு மிகப் பெரிய எண்ணிக்கை ! So - பெல்கோ-பிரான்ஸ் காமிக்ஸ் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்   " என்று சொன்னவரின் குரலில் ஒரு பெருமிதம் இழையோடியது ! ஆனால் மார்கெட் அளவில் பிரான்ஸ் பெல்ஜியத்தை விட மிகப் பெரிது என்பதை புள்ளி விபரங்களோடு சுட்டிக் காட்டினார் ! உலகின் மூன்றாம் பெரிய காமிக்ஸ் மார்கெட் (நமது தமிழகத்தின் அளவை ஒத்த) பிரான்ஸ் தானாம் ! ஆண்டொன்றுக்கு சுமார் நாலரைக் கோடி காமிக்ஸ் ஆல்பம்கள் இங்கு மட்டும் விற்பனையாகிறதாம் ! நண்பர் ஒய்வு நாடிய ஆண்டான 2011-ல் பிரான்சில் நடந்த காமிக்ஸ் விற்பனையின் கிரயம் சுமார் 350 மில்லியன் யூரோவாம் !! கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் அவர்களை அருகாமையிலிருந்து பார்த்து வரும் எனக்கே - இது இத்தனை தலை சுற்றச் செய்யும் ஒரு அசுரத் தொழில் என்பது தெரிந்திருக்கவில்லை !  நண்பர் கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்லி இருப்பாரோ என்ற சிறு சந்தேகத்தில் வீட்டுக்கு வந்த பின்னே -இணையத்திலும் கொஞ்சமாய்த் தேடித் பார்த்த போது கிறுகிறுத்துப் போனேன் ! "ஒன்பதாம் கலை" என இப்போதெல்லாம் அறியப்படும் காமிக்ஸ் கலையானது - ஐரோப்பாவில்,  குறிப்பாய் பிரான்சில் ஒரு அதகளத் தாண்டவமே நடத்தி வருவது புரிந்தது ! 

ஆண்டொன்றுக்கு சராசரியாய் வெளியாகும் ஆல்பம்களின் எண்ணிக்கை சுமார் 4300 (3300 new releases + an average of 1000 reprints) என்று அவர் சொன்ன போது எனது தாடைகள் தொய்ந்து போயின ! 1960 முதல் - tintin கதைகள் போட்டுத் தந்த ஒரு சிறு விதையை 2 நாடுகளுமாய்ச் சேர்ந்து இன்று எத்தனை ராட்சச ஆலமரமாய் வளர்த்துள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது பிரமிக்கச் செய்தது !  ஆந்தை விழிகள் இன்னும் விரிந்து எனது சுவாரஸ்யத்தை நண்பருக்கு வெளிக்காட்ட - அவரும் உற்சாகத்தில் பரபர வெனப் பேசிக் கொண்டே சென்றார் ! "ஒவ்வொரு ஆல்பத்திலும் சராசரியாய் எவ்வளவு விற்பனையாகும் ?" என நான் வினவிய போது அவர் நிறைய தொடர்களின் பட்டியலைச் சொன்னார் ! அவற்றில் முக்காலே மூன்று வீசம் நாம் கேள்வியே பட்டிரா தொடர்களாய் இருந்தன எனும் போது எனக்குள் சொல்ல இயலா சங்கடம் ! 'காமிக்ஸ் உலகையே கரைச்சுக் குடித்தது போல் தலைக்குள் சிந்தனைகள் இருந்தால் அவற்றை இன்றோடு மூட்டை கட்டி விடு தம்பி !!" என எனது mindvoice சொன்னது ! அவர் போட்ட லிஸ்டில் நமக்கு பரிச்சயம் ஆன கதைகளும் இல்லாதில்லை !
  • இரத்தப் படலம் XIII -ன் இறுதி இரு ஆல்பம்கள் (17 & 18) - தலா 550,000 பிரதிகள் !!
  • லார்கோ வின்ச் - 455,000 பிரதிகள் ! (ஒவ்வொரு ஆல்பமும்)
  • ப்ளூ கோட் பட்டாளம் - 170,000 பிரதிகள் (ஒவ்வொரு ஆல்பமும்)
  • ASTERIX & OBELIX - தலா 400,000 பிரதிகள் ! 
ஆண்டுக்கு 4300 ஆல்பம்கள் எனும் போது - இவற்றின் இலக்கு அனைத்துமே நிச்சயமாய் சிறார்களாய் இருப்பது சாத்தியமாகாது என்பதை உணர்ந்திட நாம் ஐன்ஸ்டீன்களாய் ; அப்துல் கலாம்களாய் இருத்தல் அவசியமில்லை என்பதால் அடுத்த கேள்வியைக் கேட்டு வைத்தேன் : " இந்த 4300-ன் உத்தேச breakup என்னவாக இருக்கும் ?" என்று...! இதற்கு அவர் சொன்ன பதில் நிஜமாய் என்னை கதிகலங்கச் செய்தது ; 'இத்தனை அறியாமையில் இத்தனை காலமாய் குப்பை கொட்டி வந்திருக்கிறோமே !' என்ற ஆதங்கம் அலையடித்தது ! ஆண்டுதோறும் பிரான்ஸ்  & பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டு விற்பனையாகும் காமிக்ஸ் ஆல்பம்களில் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் - நமது ஆசியத் துணைக்கண்டத்திலிருந்து 

பயணமாகும் மங்கா ரகக் கதைகளின் மொழிபெயர்ப்புகள் தானாம் !! "மங்கா ; மன்ஹ்வாஸ் ; மன்ஹுஆ " என வெவ்வேறு காமிக்ஸ் கதை ரகங்கள் உண்டாம் !!!! இவற்றின் பெரும்பான்மை ஜப்பானிலும்  ; ஒரு சிறிய பங்கு ஹாங்காங்கில் ; கொரியாவில் ; சீனாவில் இருந்து உற்பத்தி ஆகின்றனவாம் ! இவற்றின் பிரெஞ்சு மொழி உரிமைகளைப் பெற்று - ஐரோப்பாவில் வெளியிடும் பதிப்பகங்கள் சக்கை போடு போடுகின்றனவாம் ! குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டாம் இந்த மங்கா ; மங்காத்தாக்களுக்கு !! 'உலகின் இரண்டாம் பெரிய காமிக்ஸ் மார்கெட் ஜப்பான் என்பதாவது தெரியுமா - இல்லையா ? ' என நண்பர் என்னைக் கேள்வி கேட்ட போது - ஆந்தையாரின் திரு திரு விழிப் படலம் தொடர்ந்தது ! 

பிரான்சில் விற்பனையாகும் மூன்றில் ஒரு காமிக்ஸ் இதழ் மங்கா தான் !' என நண்பர் சொன்ன போது - ஜப்பானின் மீதான எனது அபிமானம் எக்கச்சக்கமாய்க் கூடிப் போனது ! 1990 முதல் சிறுகச் சிறுக ஐரோப்பிய ரசிகர்களைக் கவர்ந்திடத் துவங்கிய இந்த 'மங்கா கலாச்சாரம்' இன்று கோடி கட்டிப் பறக்கிறது என்று சொன்னார் ! கிஷிமொடோ எனும் படைப்பாளியின் "நறுடோ" எனும் தொடர்- ஆண்டின் டாப் 20 ஆல்பம்களுள் - குறைந்தது 5 இடங்களை எப்போதுமே கைப்பற்றி இருக்குமாம் ! ('ஆஹா-ஓஹோ ' என நண்பர் புகழ்ந்த இந்தத் தொடரை சனியிரவு கொஞ்சமாய் பரிசீலனை செய்து விட்டு இன்னும் அந்தத் திரு திரு முழிக்கு விடை கொடுத்த பாடைக் காணோம் !  இவற்றில் உலகளாவிய மங்கா ரசிகர்கள் கண்டிடும் வசீகரம் என்னவாக இருக்குமென்று இன்னமும் மண்டையை உருட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது கிளைக் கதை !)  


மங்கா மொழிபெயர்ப்புகளுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது பிரான்கோ-பெல்ஜியப் படைப்புகளாம் ! மார்கெட்டின் 40 சதவிகித விற்பனைக்கு பொறுப்பேற்கும் இவை - சிறார்கள் ; teenagers ; முதிர்ந்தோர் என சகல வயதினருக்கும் ஏற்ற வெவ்வேறு ரகக் கதைகளை கொண்டவை ! இவற்றுள் நகைச்சுவைக்கு முதலிடமாம் (சுமார் 30%) ; fantasy ரகக் கதைகளுக்கு இடம் # 2 (சுமார் 25%) ; மூன்றாம் இடத்தில் Polar ரகமென்று அவர்கள் குறிப்பிடும் த்ரில்லெர் கதைகள் (இவற்றுள் டிடெக்டிவ் கதைகளும் சேர்த்தி !) ! இன்டர்நெட் ; கம்பியூட்டர் விளையாட்டுக்கள் ; திரைப்படங்கள் ; பிரபல டி.வி. தொடர்கள் - இவற்றைச் சார்ந்த பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட சிறார்களுக்கான படைப்புகளுக்கு இடம் நான்காம் ! 

கிராபிக் நாவல்கள் என்ற வரையறைக்குள் விழும் கதை வரிசைகள் எஞ்சி இருக்கும் இடத்தை - அமெரிக்கக் காமிக்ஸ் படைப்புகளின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளோடு பகிர்ந்து கொள்கிறதாம் ! ஆண்டுக்கு சுமார் 250 ஆல்பம்கள் BATMAN ; SANDMAN : இத்யாதி அமெரிக்க சூப்பர் ஹீரோக்களின் சாகசங்களைத் தாங்கி வருவதுண்டாம் ! 

பிரபலத் தொடர்களின் மறுபதிப்புகள் ; ஒரு தொடரின் மொத்தக் கதைகளையும் மூன்றல்லது நான்கு தொகுப்புகளுக்குள் அடக்கி INTEGRALES என்ற பெயரில் வெளியிடுவதும் அங்கே ஹிட்ஸ் என்றும் நண்பர் சொன்னார் ! இது ஏற்கனவே நாம் அறிந்த தகவல் என்பதால் வேக வேகமாய் மண்டையை ஆட்டி வைத்தேன் ! எப்போதுமே நம்பர்கள் மீது ; புள்ளி விபரங்கள் மீது நமக்கிருக்கும் காதல் விடாது தானே - so எனது அடுத்த கேள்வி - அங்குள்ள பதிப்பகங்களின் தோராய எண்ணிக்கை பற்றி இருந்தது ! சின்னதும் பெரிதுமாய் சுமார் 250 நிறுவனங்கள் உண்டாம் ! ஆசியக் கதைகளை இறக்குமதி செய்து மொழிபெயர்த்து வெளியிடுவது ஒரு புறமெனில் - ஆசிய ஓவியர்களையே பணிக்கு அமர்த்தி - பிரான்சில் வைத்தே புதுத் தொடர்களுக்கு சித்திரங்கள் தீட்டுவது இன்றைய பாணியாம் ! திறமைக்கு எல்லைகள் ஒரு பொருட்டாகாது என்பதை உணர்ந்திட இயன்றது ! 

ரொம்ப காலமாய் நம் அனைவருக்குமே மண்டைக்குள்ளே ஒலிக்கும் அடுத்த கேள்வியை கேட்ட போது நண்பரது முகம் லேசாக இருண்டு போனது ! "இத்தனை தரமான பிரான்கோ-பெல்ஜியக் காமிக்ஸால் அமெரிக்க எல்லைகளை ஊடுருவ இயலாது போவது எதனால் ? " என்பதே அந்தக் கேள்வி ! பெருமூச்சோடு பதில் சொன்னார் நண்பர் : " டின்டின் திரைப்படத்தைப் பார்த்தாயா நீ ? " என்று கேள்வி கேட்டார் என்னை ! "ஆம்...'பிரபல டைரெக்டர் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வந்தது தானே ?" என்று பதில் சொன்னேன் ! ஆமாம் என்பதாகத் தலையாட்டியவர் - 'திரைப்படத்தில் பார்த்த டின்டினுக்கும் ; நாம் காலம் காலமாய் ஆராதித்து வரும் காமிக்ஸ் நாயகன் டிண்டினுக்கும் துளியாவது சம்பந்தம் கண்டிட முடிந்ததா உனக்கு ? " என்று கேட்டவரின் குரல் சற்றே உயர்ந்திருந்தது ! மௌனமாய் நான் அமர்ந்திருக்க - நண்பரே தொடர்ந்தார் - " காமிக்ஸ் என்பது எங்கள் மக்களின் கலாச்சாரத்தில் ; வாழ்க்கை முறைகளில் ஒரு அங்கமாய் ஊறிப் போன விஷயம் ! எங்களது தேசம் உற்பத்தி செய்யும் சாக்லேட்டும் சரி ; சித்திரக் கதைகளும் சரி - உலகளாவிய சந்தோஷத்தைத் தரும் சங்கதிகள் ! அவற்றை ரசிக்க ; உணர்ந்திட ; போற்றிட ஒரு பக்குவம் அவசியம் ! வெறும் பொழுதுபோக்குக் கலையாய் காமிக்ஸைப் பார்த்திடும் அமெரிக்கர்களுக்கு எங்களது காமிக்ஸ் பாரம்பர்யம் ஒரு விநோதமாய் தெரிவதில் வியப்பில்லை ! For us, comics is a way of life....for them it's no different from a hamburger or a soda or a pool game !" என்று அவர் சொன்ன போது எனக்கு பதில் சொல்லத் தெரிந்திருக்கவில்லை ! காமிக்ஸ் காதலர்கள் என்று பட்டம் இந்தப் புவியில் வேறு எவருக்கும் நிச்சயம் பொருந்தாது என்பது நிதர்சனமாய்த் தெரிந்தது !

பேச்சை கொஞ்சம் சீராக்க மீண்டும் மன்காக்களைப் பற்றி வினவத் துவங்கினேன்..! 'மங்கா..மன்ஹுஆ என்றெல்லாம் சொன்னீர்களே - அவற்றுள் என்ன வேறுபாடு ? ' என்று கேட்டேன் ! ஜப்பானியப் படைப்புகளுக்கு மங்கா என்று பெயராம் ! இந்தப் பாணிகளுக்கு முன்னோடிகளும், வழிகாட்டிகளும் அவர்களே ! கொரியாவில் உருவாகும் கதைகளுக்கு மன்ஹ்வா என்று பெயராம் ! இவை பிரெஞ்சில் சராசரியாய் இதழ் ஒன்றுக்கு 25,000 - 30,000 விற்பனை ஆகுமாம் ! சீனாவின் தயாரிப்புகளுக்கு மன்ஹுஆ எனப் பெயராம் - இவை கொஞ்சமாய் (5000-7000 வரை) விற்பனையாகுமாம் ! புதிய தலைமுறையினரிடம் பழம் பெரும் பிரான்கோ-பெல்ஜிய படைப்பாளிகளை விட இந்த மங்கா ஆசிரியர்களால் ஒரு வித சுலபப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடிவதால் - இன்றைய தலைமுறை மங்கா வெறியர்களாய் இருபதைக் காண முடிகிறது என்று நண்பர் சொன்னார் ! 2010 -ல் நண்பர் பண்கேற்றதொரு வித COMIC CON திருவிழாவில் பிரத்யேகமாய் ஜப்பானியப் படைப்புகளும், பதிப்பகங்களும், படைப்பாளிகளும் பங்கேற்ற போது - 3 நாட்களில் சுமார் ஒரு லட்சம் காமிக்ஸ் காதலர்கள் அங்கே குழுமினார்களாம்  !
அமெரிக்கக் காமிக்ஸ்களுள் SPIDERMAN : XMEN மற்றும் BATMAN நிரம்பப் பிரசித்தமாம் ! இதழ் ஒன்றுக்கு சராசரியாய் 50,000 இதழ்கள் விற்பனை காண்பவையாம் இவை !  இவை தவிர கொஞ்சமாய் டெக்ஸ் வில்லர் ; மர்ம மனிதன் மார்டின் ; டயபாலிக் போன்ற இத்தாலியப் படைப்புகளும் ; மிகச் சிறிய அளவிலான ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன் படைப்புகளும் பிரெஞ்சினில் மொழிபெயர்க்கப்படுகின்றனவாம் !   இன்னும் எத்தனை பேசினாலும் நம் ஆவல் அடங்காது என்ற எண்ணம் தலை தூக்காமல் இல்லை என்னுள் ! ஆனால் ஒரேடியாக மனுஷனைப் பேட்டி எடுக்கும் பாணியில் கேள்விகளால் துளைத்து எடுக்க வேண்டாமே என்று தோன்றியது ! மெரினா பீச்சைப் பார்த்திட அவர் ஆவலாய் இருந்ததை தொடர்ந்து அங்கே இட்டுச் சென்று ஜனத்திரளை ரசிக்கச் செய்தேன் ! "இந்தக் கடற்கரை மட்டும் எங்கள் நாட்டில் இத்தனை பிரம்மாண்டமாய் இருந்திருந்தால் - நிலவொளியில் ஒரு காமிக்ஸ் திருவிழாவே நடத்தி அசத்தி இருப்போமே !" - என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்ன போது - பெருமூச்சு தான் விட முடிந்தது எனக்கு !

P.S :
  1. சிவகாசிக்குச் சென்றே ஒரு வாரம் ஆகி விட்டதால் - "ஸ்பைடர்-மாயாவி கலாயப்ஸ்' போட்டியில் வெற்றி பெற்ற  நண்பர்களுக்கான பரிசுகளை இன்னும் அனுப்பிட இயலவில்லை ! இன்று திரும்பவும் வேறொரு திக்கில் பயணம் என்பதால் - வரும் சனிக்கிழமை அலுவலகம் திரும்பியான பின்னே அனுப்பிடுவேன் ! Apologies guys !
  2. அதே போல் KBT - 3 மொழிபெயர்ப்புப் போட்டியின் பக்கங்கள் வரும் திங்களன்று அனுப்பிடப்படும் ! so - இன்னமும் பெயர் கொடுக்காது இருந்து வரும் நண்பர்களுக்கும் அவகாசம் உள்ளதே !
  3. அக்டோபர் புதிய இதழ்கள் முதல் வாரத்தில் தான் தயாராகும் ! சற்றே பொறுமை ப்ளீஸ் ! 
  4. சிக் பில் ஸ்பெஷலில் - "விண்வெளியில் ஒரு எலி" கதையின் இடத்தில் "இரும்புக் கௌபாய்" இடம் பிடிக்கிறது ! (வி.ஒ.எ. ஒரிஜினலாய் வெளி வந்த மொழியாக்கம் தூய தமிழில் உள்ளதால் அதனை மாற்றி அமைக்க வேண்டி வருமென சுட்டிக் காட்டி இருந்த நண்பர் கிரிக்கு நன்றிகள் ! புதிதாய் மொழிபெயர்த்து fresh -ஆகத் தயாரிக்க அவகாசம் இல்லையென்பதால் கதைகளை switch செய்துள்ளேன் ! 
Take care people...catch you soon ! 

127 comments:

  1. ஏகப்பட்ட புது விவரங்கள்.. சாவகாசமாக இரண்டு, மூன்றுதடவை படித்தால்தான் புரியும் போலிருக்கிறது! lol :D

    ReplyDelete
  2. இரும்பு கொளபாய் படிக்கதாக கதை .

    ReplyDelete
  3. வணக்கம் சார்!
    ஆச்சர்யப்படத்தக்க தகவல்கள்! நம்ம தமிழ் காமிக்ஸ் தாண்டி உள்ள ஒரு காமிக்ஸ் உலகம் மிக பிரம்மாண்டமானது என்பதை பற்றி தோராயமாக தெரிந்திருந்தாலும் நீங்க கொடுத்திருக்கற புள்ளி விவர கணக்கு படு அசத்தல்! இனி யாரவதுகிட்ட காமிக்ஸ் பத்தி விவாதம் பண்ணும்போது நம்ம விஜயகாந்த் பாணியில் சும்மா புள்ளிவிவரமா சொல்லி அவங்க காமிக்ஸ் அறிவ வளப்படுத்த ரொம்ப உதவிய இருக்கும். : )

    //2011-ல் பிரான்சில் நடந்த காமிக்ஸ் விற்பனையின் கிரயம் சுமார் 350 மில்லியன் யூரோவாம்//

    அம்மாடி....! ஒரு தக்கனூண்டு நாட்டுலயே இவ்வளவு பெரிய....... வியாபார தொகைன்னுமபோது நம்ம நூத்தி முப்பது கோடி மக்கள் காமிக்ஸ் வாங்க ஆரம்பிச்ச நாம காமிக்ஸ் கோடி கோடீஸ்வரர்கள் ஆகமாட்டோமா?? நாம எங்கேயோ எதையோ மிஸ் பண்றோம் சார். ஏதோ ஒரு மிஸ்ஸிங் லிங்க்கை சரியாய் இணைச்ச நம்ம தேசத்தோட காமிக்ஸ் வறட்சியை சரி பண்ண முடியும்.

    //'காமிக்ஸ் உலகையே கரைச்சுக் குடித்தது போல் தலைக்குள் சிந்தனைகள் இருந்தால் அவற்றை இன்றோடு மூட்டை கட்டி விடு தம்பி !!" //

    ஏந்த ஒரு பில்ட் அப் இல்லாத வெளிப்படையான பேச்சு,.... GEM OF A CHARACTER! உங்க மிகப்பரிய பலம்!

    நீங்களே இப்படி சொன்ன மாசம் ஒரு காமிக்ஸ் படிச்சுட்டு ஏதோ உலக மகா காமிக்ஸ் விமர்சகர்கள் மாதிரி இந்த ப்ளாக்ல நாங்க பண்ற அலப்பரைய என்னன்னு சொல்றது சார்?? : ) . பட் அதுக்காக அவ்வளவு சீக்கரம் நாங்க திருந்திட மாட்டோம் பாத்துக்கங்க! : D

    // 'உலகின் இரண்டாம் பெரிய காமிக்ஸ் மார்கெட் ஜப்பான் என்பதாவது தெரியுமா - இல்லையா ? ' என நண்பர் என்னைக் கேள்வி கேட்ட போது - ஆந்தையாரின் திரு திரு விழிப் படலம் தொடர்ந்தது ! //

    எங்களையும் உங்களோட "திரு திரு விழிப் படலம்" தொட சேர்த்து "கிறு கிறு தலை படலத்தையும்" அடிசனலா எங்களுக்கு சேர்த்துக்குங்க! : )

    ஜப்பானின் மங்கா உலக புகழ் பெற முடிஞ்சா நிச்சயம் நம்ம " சோட்டா பீம் " மாதிரி படைப்புகள் சரியா மார்க்கெட்டிங் பண்ணா உலக அளவுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்முன்னு தோணுது.

    ReplyDelete
  4. சிக் பில் ஸ்பெஷலில் - "விண்வெளியில் ஒரு எலி" கதையின் இடத்தில் "இரும்புக் கௌபாய்" இடம் பிடிக்கிறது /// Supeeeeeerrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr!!!!!!!!!! Choice sir :)

    //(வி.ஒ.எ. ஒரிஜினலாய் வெளி வந்த மொழியாக்கம் தூய தமிழில் உள்ளதால் அதனை மாற்றி அமைக்க வேண்டி வருமென சுட்டிக் காட்டி இருந்த நண்பர் கிரிக்கு நன்றிகள்// :) :) :)

    ReplyDelete
    Replies
    1. சிக் பில்லின் "இரும்புக் கௌபாய்" கதையை ரசித்த மாதிரி வேறு எந்த ஒரு சிக் பில் கதையையும் ரசித்தது இல்லை :). பெர்பெக்ட் சாய்ஸ் :).....

      Delete
    2. பிரமிப்பூட்டும் புள்ளி விவரங்கள் sir :)

      Delete
    3. //வி.ஒ.எ. ஒரிஜினலாய் வெளி வந்த மொழியாக்கம் தூய தமிழில் உள்ளதால் அதனை மாற்றி அமைக்க வேண்டி வருமென சுட்டிக் காட்டி இருந்த நண்பர் கிரிக்கு நன்றிகள் ! //

      சரியான நேரத்துக்கு சுட்டிக்காட்டிய உங்களோட ATTENTIVENESS பாராட்டுக்குறியது! நன்றிகள்!

      Delete
    4. @ Giridharan
      //மாற்றி அமைக்க வேண்டி வருமென சுட்டிக் காட்டி இருந்த நண்பர் கிரிக்கு நன்றிகள்!!//

      நல்ல வேலை செய்திருக்கிறீர்கள் கிரிதரன்! நல்ல வேளை! :)

      Delete
    5. விஸ்கி-சுஸ்கி & Erode VIJAY - :)

      Delete
    6. ஐயகோ... இது என்ன தமிழுக்கு வந்த சோதனை? என் (நம்) தமிழறிவு வளர காரணமாக இருந்த கதைகளை / மொழி பெயர்ப்பை நாமே புறக்கணிக்கலாமா? சற்றே சிந்திப்பீர் :-) :

      கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டனோ?

      Delete
    7. //ஐயகோ... இது என்ன தமிழுக்கு வந்த சோதனை? என் (நம்) தமிழறிவு வளர காரணமாக இருந்த கதைகளை / மொழி பெயர்ப்பை நாமே புறக்கணிக்கலாமா? சற்றே சிந்திப்பீர் :-) //

      உண்மைதான்! நாமக்கு சிறுவயதில் கிடைத்த விஷயங்களை நாமே நமது அடுத்த தலைமுறைகளுக்கு கொடுக்க மறுக்கும் விஷயங்களுள் ஒன்றுதான் தூய தமிழ் - துரதிருஷ்டவசமாக. (இதுவே 1950sகளில் நிலைமை தலைகீழாக இருந்தது. குழப்பமான கலப்படமான நிலையிலிருந்த எழுத்துத் தமிழை மீட்டெடுத்து செம்மைப்படுத்திய புண்ணியம் பத்திரிகைகளையும், எழுத்தாளர்களையுமே சாரும்)

      ஆனால் காமிக்ஸ் என்று வரும்போது கவனிக்கவேண்டிய விஷயம் - கதைக்கு ஏற்ப வசன நடை பொருந்துவது. சிக்பில் & Co கதைகள் சற்று கவுண்டமணி வகை நகைச்சுவைக்கு ஒத்துப்போவதால் வசனநடை மாற்றம் அவசியம் என்றே தோன்றுகிறது. சரியான கதைக்களங்கள் அமையும்போது மட்டுமே தூய தமிழ் பலம் சேர்க்கும் என்பதே உண்மை! :)

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. @ Giridharan

      உண்மைதான்! தெளிவாகப் புரிகிறது! :D

      Delete
    10. @Erode VIJAY
      முதலில் உங்களுக்கு மட்டும் எப்படி புரிந்தது என்று நினைத்தேன், பிறகு :D பார்த்தவுடன் தெளிவாகிவிட்டது

      Delete

  5. பிரமிப்பூட்டும் புள்ளி விவரங்கள் ..

    ஆனால், famous ஆக இருந்தாலும், தயவுசெய்து "மாங்கா" பக்கம் சென்று விடவேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  6. // For us, comics is a way of life....for them it's no different from a hamburger or a soda or a pool game !" //

    நெத்தியடி! இனி யாருக்கும் அந்த சந்தேகம் வராது! நம்மோட சிறு வாசகர் கூட்டமும் ஐரோப்பா மக்களோட COMICS PASSION னை ஷேர் பண்ணுதுன்னு தோணுது.

    ReplyDelete
  7. I have "IRUMBU COWBOY".anyway wait to read in colour print.who is that new comedy hero you hv planed to release on 2014 sir?

    ReplyDelete
  8. // வி.ஒ.எ. ஒரிஜினலாய் வெளி வந்த மொழியாக்கம் தூய தமிழில் உள்ளதால் அதனை மாற்றி அமைக்க வேண்டி வருமென சுட்டிக் காட்டி இருந்த நண்பர் கிரிக்கு நன்றிகள் ! //

    "நறுடோ"-வை கார்ட்டூன் தொடராக மட்டுமே பார்த்து இருக்கின்றேன். எனக்கு பிடித்து இருந்தது.
    ஜப்பானின் காமிக்ஸ் காதல் மிக பிரசித்தமானது.

    ReplyDelete
  9. பிரமிக்கவைக்கும் பதிவு! நம் தேசம் காமிக்ஸ் படைப்புகள் மற்றும் விற்பனையில் வளரும் நாள் எப்போது என்று ஏக்க பெருமூச்சுதான் விடமுடிகிறது !

    ReplyDelete
  10. இரும்பு கௌபாய் இதுவரையில் படித்திராத கதை !

    ReplyDelete
  11. ஸ்ஸ்ப்ப்பா... இப்போவே கண்ண கட்டுதே ...
    தமிழ் காமிக்ஸ் நமது முயற்சியில் வெளிச்சம் பெற ஆரம்பித்தால், பல பதிப்புலக ஜாம்பவான்கள் காமிக்சை கையில் எடுக்கலாம், இந்த மங்கா, ஜட்டிman எல்லாம் அவர்கள் கையாள நிரம்பவே வாய்ப்புள்ளது. நாம் எப்பொழுதும் போல தமிழ் காமிக்ஸ் உலகின் pioneer களாக ரியல் quality காமிக்ஸ் உடன் + ஒரு decent run உடன் "எப்பொழுதும்" இருப்போம். நமது பலமே selection இல் தான் உள்ளது, எவளவு modest ஆக நீங்கள் இருந்தாலும்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விஜய் சார், உங்களோட "சுமார் மூஞ்சி குமார்" என்ற பழைய பெயரை
      "இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா" என்ற படத்தில்
      ஹீரோவின் பெயராக வைத்திருக்கிறார்கள். Newspaper ல பார்த்தீங்களா?

      Delete
  12. எடிட்டரின் இப்பதிவு...

    பிரம்மிக்க வைக்ககிறது...
    பெருமூச்சு விட வைக்கிறது...

    எடிட்டர் சார், உங்களோட அந்த பிரான்கோ-பெல்ஜிய நண்பர்கிட்டே சொல்லி அந்த ஊர்ல ஏதாச்சும் வேலை கிடைக்குமான்னு கேட்டுச் சொல்லுங்க சார். பழைய புத்தகக் கடையில் வேலைன்னாலும் பரவாயில்லை! :)

    ReplyDelete
    Replies
    1. விஜய்...இப்பத்தானே சொல்லிக்கொடுத்தோம்.....அதுக்குள்ள மறந்துட்டீங்களே?...எங்கே சொல்லுங்க.....பெல்கோ - ஃப்ரென்ச்........பெல்கோ - ஃப்ரென்ச்...........

      Delete
  13. பிரமிப்பூட்டும் புள்ளி விவரங்கள்

    ReplyDelete
  14. டியர் விஜயன் சார்,

    //For us, comics is a way of life....for them it's no different from a hamburger or a soda or a pool game !"//
    இதை உங்கள் பெல்ஜிய (பிரெஞ்சு?) நண்பரின் தனிப்பட்ட பார்வையாகவே நான் பார்க்கிறேன். அமெரிக்காவின் காமிக்ஸ் காதலும் அளப்பரியது தான். ஐரோப்பிய காமிக்ஸ்களோடு ஒப்பிடுகையில், அமெரிக்கர்களின் கதைக்களங்கள், ரசனைகள் வெவ்வேறாக இருப்பினும், காமிக்ஸ் மீதான காதலை ஒப்பிடுகையில் அவர்களும் சளைத்தவர்கள் இல்லை என்றே நினைக்கிறேன்!

    //உலகின் இரண்டாம் பெரிய காமிக்ஸ் மார்கெட் ஜப்பான்//
    //உலகின் மூன்றாம் பெரிய காமிக்ஸ் மார்கெட் பிரான்ஸ்//

    ஆனால், உலகின் மிகப்பெரிய காமிக்ஸ் மார்கெட் அமெரிக்கா தான்!!! வட அமெரிக்காவில் நடந்த காமிக்ஸ் விற்பனை, 2012-ம் ஆண்டில் மட்டும் தோராயமாக 715 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணித்திருக்கிறார்கள்! டிஜிட்டல் காமிக்ஸ் விற்பனை நிலவரத்தையும் சேர்த்தால், இது 800 மில்லியன் டாலர்களைத் தாண்டுமாம்! ஃபிரான்சின் மக்கள் தொகையை விட, ஐந்து மடங்கு அதிக மக்களை பெற்ற நாடு அமெரிக்கா என்ற வகையில் வேண்டுமானால் இந்தத் தொகை சற்றே குறைவாகத் தோன்றலாம்! ஆனாலும், இது மிகப்பெரும் தொகையே!

    அத்தோடு அமெரிக்க காமிக்ஸ்கள், வேறு பல நாடுகளிலும் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன! இந்தியாவில், லேண்ட்மார்க் / கிராஸ்வோர்ட் போன்ற பல புத்தக மையங்களில் காணக் கிடைக்கும் பெரும்பாலான காமிக்ஸ்கள் அமெரிக்க காமிக்ஸ்களே! (டின்டின், ஆஸ்டெரிக்ஸ் போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து).

    //'திரைப்படத்தில் பார்த்த டின்டினுக்கும் ; நாம் காலம் காலமாய் ஆராதித்து வரும் காமிக்ஸ் நாயகன் டிண்டினுக்கும் துளியாவது சம்பந்தம் கண்டிட முடிந்ததா உனக்கு ? "//
    ஒரு நாவல் அல்லது காமிக்ஸ், திரைப்படமாக்கப் படும் போது நேரும் இவ்வித விரும்பத்தகாத மாற்றங்கள் ஒன்றும் புதியதல்லவே! மூலப் படைப்புக்கு நேர்மையாக இருப்பதும், இல்லாததும் அல்லது அந்த மூலப்படைப்பையே விஞ்சும் அளவுக்கு கதையில் சுவாரசியம் கூட்டுவதும், அப்படத்தை இயக்கும் இயக்குனரின் கைகளில் தான் இருக்கிறது! உதாரணத்திற்கு, பேட்மேன் கதாபாத்திரத்தின் பிரபல்யம் உலகெங்கும் பன்மடங்கு அதிகரிக்கக் காரணம் 'Dark Knight' திரைபடம் தானே? அதே சமயம் காமிக்ஸ் வடிவில் புகழ் பெற்ற 'சூப்பர் மேன்' கதாபாத்திரம் அதன் திரை வடிவில் இன்றுவரை பெறும் வெற்றி ஈட்டவில்லையே?! (70-களில் வெளியான ஓரிரு பழைய சூப்பர்மேன் படங்களைத் தவிர்த்து!).

    அவ்வளவு ஏன், "Blueberry (Renegade)" திரைப்படத்தை இயக்கியது பிரெஞ்சுக்காரர்கள் தான் என்றாலும் அந்தப் படம் வெற்றி பெறாதது ஏன்? 'ப்ளூபெர்ரி காமிக்ஸ் கதைகளுக்கு சற்றும் தொடர்பில்லாத கதையம்சதைக் கொண்ட வெகு சுமாரான படம் அது' என்று காமிக்ஸ் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்! எனவே, இவ்வாறான ஒப்பீடுகள் சரியாகாது என நான் கருதுகிறேன்.

    பொதுவாகவே பிரெஞ்சுகாரர்களுக்கு, அமெரிக்கர்கள் என்றால் ஆகாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! ஆனால், ஃபிரான்ஸைப் போலவே, அமெரிக்காவிலும் மங்கா காமிக்ஸ்கள் வெகு பிரபலம் என்பது தான் ஆச்சரியத் தகவல்! காமிக்ஸ்களைப் பொறுத்த வரையில் இந்த ஒரு விஷயத்திலாவது அவர்கள் இருவரும் ஒத்துப் போகிறார்கள் என்ற வகையில் மகிழ்ச்சியே!

    தமிழைப் பொறுத்த வரை, நாம் பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பியக் கதைகளை படித்த அளவுக்கு அமெரிக்க காமிக்ஸ்களின் பால் கவனத்தை செலுத்தியதில்லை (அதற்கான காரணங்கள் என்னவாக இருப்பினும்!). சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் அந்த மேன், இந்த மேன் என்பவற்றைத் தாண்டியும் அங்கே பல விதவிதமான சுவாரசியமான காமிக்ஸ் கதைகள், கிராபிக் நாவல்கள் இருக்கத்தான் செய்கின்றன! நமக்கு அவற்றின் அறிமுகம் துளியும் இல்லை என்பது தான் உண்மை!

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக 10பேர் 5 ரூபாய்க்கு வாங்கறதும், 20 பேர் 8 ரூபாய்க்கு வாங்கறதும் ஒண்ணா சார்... அப்புறம் 'அந்த மேன், இந்த மேன்' களை விட பிரளயத்தின் பிள்ளைகளும், ப்ளூபெர்ரியுமே நெஞ்சில் ஒட்டும் என்பது என் கருத்து... (முன்னிருப்பவை ச்சும்மா டைம்பாஸ்... பின்னிருப்பவை .....Well, உங்களுக்கே தெரியும்...)

      Delete
    2. சாரி, தப்பா இருந்தா மன்னிச்சுக்கங்க... எனக்குப் புள்ளி விவரமோ, வேறு காமிக்ஸ்களோ தெரியாது... நம்ம தமிழ் காமிக்ஸ் தான் என் பிள்ளைப் பருவங்களை நிரப்பியது..! (லைன் & முத்து தான் 90%. இப்பதான் கஸ்குஸ் வந்திருக்கேன்...!)

      Delete
    3. எனது கருத்துக்களை நான் பகிர்ந்துள்ளேன்! உங்கள் கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து இருக்கிறீர்கள்! இதில் சரியென்ன, தவறென்ன அருண்?! காமிக்ஸ் பற்றி நட்புடன் உரையாடத்தானே இந்தத் தளம்?! :) புள்ளி விவரங்கள் மற்றும் வேறு காமிக்ஸ் பற்றிய தகவல்கள் கூகிளைத் தட்டினால் யாருக்கும் கிடைக்கும்! உங்களைப் போலவே எனக்கும் ப்ளூபெர்ரி மற்றும் கிராபிக் நாவல்கள் "மிகவும்" பிடிக்கும்! நான் படித்த அமெரிக்க காமிக்ஸ்கள் வெகு சில மட்டுமே என்பதால், அவற்றைப் பற்றி எனக்கும் அதிகம் தெரியாது! ஆனால், அங்கேயும் சுவாரசியமான கதைகள் இருக்கின்றன என்றே நம்புகிறேன்! சூப்பர் ஹீரோ கதைகளிலும் பல நல்ல கதைகள் நிச்சயம் இருக்கும். அமெரிக்க காமிக்ஸ்களும் தமிழில், லயனில் வர வேண்டும் என்பதே என் ஆசை!

      Delete
    4. @ கார்த்திக் சோமலிங்கா // சூப்பர் ஹீரோ கதைகளிலும் பல நல்ல கதைகள் நிச்சயம் இருக்கும். அமெரிக்க காமிக்ஸ்களும் தமிழில், லயனில் வர வேண்டும் என்பதே என் ஆசை! // எனது ஆசையும் அதுவே.

      //[[தமிழைப் பொறுத்த வரை, நாம் பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பியக் கதைகளை படித்த அளவுக்கு அமெரிக்க காமிக்ஸ்களின் பால் கவனத்தை செலுத்தியதில்லை (அதற்கான காரணங்கள் என்னவாக இருப்பினும்!)]] ,
      நமக்கு அவற்றின் அறிமுகம் துளியும் இல்லை என்பது தான் உண்மை!// சரியான கருத்தே நண்பரே!

      Delete
    5. @Siva Subramanian:
      மிக்க நன்றி நண்பரே!

      @Arun Kamal:
      //அப்புறம் 'அந்த மேன், இந்த மேன்' களை விட பிரளயத்தின் பிள்ளைகளும், ப்ளூபெர்ரியுமே நெஞ்சில் ஒட்டும் என்பது என் கருத்து... (முன்னிருப்பவை ச்சும்மா டைம்பாஸ்... பின்னிருப்பவை .....Well, உங்களுக்கே தெரியும்...)//
      ஒரு சிறிய விடுபட்ட கருத்து, கீழே:

      //ஆண்டொன்றுக்கு சராசரியாய் வெளியாகும் ஆல்பம்களின் எண்ணிக்கை சுமார் 4300 (3300 new releases + an average of 1000 reprints)//
      இவற்றில் இருந்து மிகச் சிறப்பான மற்றும் நமது ரசனைக்கு ஏற்புடைய கதைகளை மட்டும் மிகக் கவனமாக தேர்ந்தெடுத்து விஜயன் சார் அவர்கள் தமிழில் வெளியிட்டு வருகிறார்! ஆனால், ஆண்டு தோறும் வெளியாகும் அந்த 3300 புதிய வெளியீடுகளில், நமக்கு ஏற்புடைய கதைகளின் சதவிகிதம் மிகக் மிகக் குறைவாகவே இருக்கும் என எண்ணுகிறேன்! அமெரிக்க காமிக்ஸ்கள் பற்றி நான் சொல்ல விரும்புவதும் இதைத்தான்! வதவதவென்று பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சூப்பர் ஹீரோ கதைகளாக வெளியிட்டுத் தள்ளும் காமிக்ஸ் இண்டஸ்ட்ரி அமெரிக்காவுடையது என்று நினைத்து அதைப் புறக்கணித்திடாமல், அவற்றில் இருந்து நமக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து வெளியிட முயற்சிக்கலாம் என்பது என் கருத்து! என்றோ மினி லயன் மற்றும் திகிலில் படித்த வால்ட் டிஸ்னி மற்றும் பேட்மேன் கதைகள் இன்றளவிலும் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன என்பதுதான் உண்மை! இது, பலவிதமான காமிக்ஸ்களை தமிழில் படிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தின் வெளிப்பாடே அன்றி - இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று ஒப்பிட்டுச் சொல்லும் முயற்சி அல்லை!

      Delete
    6. //உலகின் மிகப்பெரிய காமிக்ஸ் மார்கெட் அமெரிக்கா தான்!!!//

      பொதுவாக அமெரிக்க மார்க்கெட்டில் popularity / அந்தஸ்துக்கு கிடைக்கும் வரவேற்பு சிறப்பான படைப்புகளுக்கு சென்றுசேர்வதில்லை என்கிற முனுமுனுப்பு எல்லா creative industry - களிலும் உள்ளது. அதனாலேயே அமெரிக்க மார்க்கெட்டின் trend வாசகரின் இரசனையை / விருப்பத்தை பிரதிபலிக்காமல் marketing செய்பவர்களின் commercial ஆர்வத்தை/திறமைகளை பிரதிபலிக்கிறது என்றும் கொள்ளலாம்.

      அதற்குக்காரணமும் உள்ளது, கதைக்களங்கள் நிஜவாழ்க்கைக்கு அருகிலிருக்கும்போது (examples: Blueberry, Tex, lucky etc) வாசகர் அதற்கென ஒரு mental space ஐ உருவாக்காமல் கதையை இரசிக்கமுடியாது. ஆனால் fantacy, sci-fi கதைகள் வாசகரை strain பண்ணாமலேயே ஓரளவுக்கு இரசிக்கவைப்பதால் அவை popular ஆவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். அதனால் அந்த வகைக்கதைகளில் மட்டுமே மாங்கு மாங்கென்று அமெரிக்க நிறுவனங்கள் உழைத்து qualityஐ உயர்த்தியிருப்பார்கள் போல் தெரிகிறது! :D

      Delete
    7. // சூப்பர் ஹீரோ கதைகளிலும் பல நல்ல கதைகள் நிச்சயம் இருக்கும். அமெரிக்க காமிக்ஸ்களும் தமிழில், லயனில் வர வேண்டும் என்பதே என் ஆசை!//
      நிச்சயமாக நண்பரே! சில பேட்மேன், ஹல்க், ஸ்பைடர் மேன் தொடர்கள் அற்புதமான சித்திரத் தரத்தையும் விறு விறுப்பான கதையமைப்பையும் கொண்டவையாக இருக்கும் என்பது எனது நம்பிக்கையும். அப்படி சில கதைகளை கஸ்குஸ் போன்றவற்றின் மூலம் படிக்க வாய்ப்பும் கிடைத்தது. ஆனாலும், ஆசிரியர் சொல்வதுபோல எல்லா கதைகளும் சிறப்பானவையாக இருப்பதில்லைத்தான். பல கதைகள், ஏதோ வெளியிட்டாகவேண்டும் என்பதற்காகவே வருவதாக தென்படும். அதேநேரம், பேட்மேன், ஸ்பைடர்மேன், ஹல்க் போன்ற சூப்பர் ஹீரோக்கள் உருவான கதையை ஒவ்வொரு கதாசிரியரும் வேறு வேறு விதமாகச் சொல்வதைப் படிக்கும்போது எமக்கு தலை கிறுகிறுத்துப்போகும் அபாயமும் உண்டு!

      Delete
  15. வணக்கம் சார் ,

    நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் மிகவும் ஆனந்தமாக உள்ளது , இந்த மாதரியான நம்பர்கள் நம் ஊரிலும் வர சில காலம் ஆகலாம் , நம் முயற்சி தொடருமானால் ....

    ReplyDelete
  16. NBSல் வந்த கேப்டன் டைகரின் இருளில் ஒரு இரும்புக்குதிரையின் தொடர்ச்சி இந்த ஆண்டு வருமா?

    ReplyDelete
  17. @Karthik Somalinga, நன்றி... ஆகக்கூடி நாமிருவரும் ஒரே கயிறை, ஒரே திசையில், ஆனால் வெவேறு இடங்களில் இருந்து இழுத்திருக்கிறோம் என்று புரிகிறது... நீங்கள் சொன்னது போல், அமெரிக்கக் காமிக்ஸ்களிலும், நெஞ்சை நிரப்பும் (தொடும்) காமிக்ஸ்களை நம் விஜயன் சார் தேர்ந்தெடுத்து நம்மை செல்வந்தர்களாக்கிடுவாரென நம்புவோம்..! (பின்னே, நம்ம காமிக்ஸ்லாம் பெரிய்......ய புதையல்கள் ஆச்சே..!)

    ReplyDelete
  18. @ Karthik Somalinga & Ramesh kumar

    ச்சும்மா அமெரிக்க காமிக்ஸ் பற்றி எல்லாம் தெரிஞ்சமாதிரி பேசறீங்களே; உங்களுக்கு ஜப்பானிய காமிக்ஸ் சந்தையைப் பற்றி என்னத்தை தெரியும்? கர்... புர்...

    (மக்களே, இவங்களை இப்படி உசுப்பேற்றிவிட்டாத்தான் கூகுலில் தேடிப் பிடித்தாவது மாங்கு மாங்கென்று படித்து அதை தமிழில் ட்ரான்ஸ்லேட் பண்ணி நமக்கு இங்கே கொடுப்பாங்க. நாமும் நாலு விசயம் தெரிஞ்சுக்கிட்டமாதிரி இருக்குமில்லையா? ஹிஹி!)

    ReplyDelete
  19. Good Q and A Blog.

    @ Karthik Somalinga and others who want American comics -

    Reasons why Franco-Belgian-Italian (F-B-I) comics should get a higher preference than american comics

    1. At least american comics we can buy (if you have enough money :) and read it in English. But F-B-I we can't because of the language barrier, so in that sense F-B-I comics gets a small edge in publishing them in Tamil.

    2. Most of the American comics stories were made into movies (from superman, iron man to batman, avengers, watchman and the list is endless). Again you can get to know american comics through movies but how many of us have watched largo winch or blueberry? (this movie is so bad, don't even try)

    3. F-B-I has variety of stories and plots than american counterpart - this is purely based on my experience it could vary based on each individual taste.

    இப்படிக்கி
    Franco-Belgian-Italian Comics Fan Club :)

    ReplyDelete
  20. எனக்கு தெரிஞ்ச காமிக்ஸ்லாம் லையன் மற்றும் முத்துதான்!!! சோ இந்த ஆட்டத்துக்கு நான் வரலை...

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா எனக்கு ஒரு கம்பெனி கிடைச்சாச்சு.. just for fun la!!

      Delete
  21. எனக்கென்னவோ நமக்குக் கிடைத்த காமிக்ஸ் எல்லாம் யானைப் பசிக்குச் சோளப் பொரியாட்டம் உள்ளது. ஆனால் ஒண்ணு மட்டும் நல்லாத் தெரியுது, நாமெல்லாம் இங்க இருக்கவேண்டிய ஆளேயில்ல?

    ReplyDelete
    Replies
    1. //எனக்கென்னவோ நமக்குக் கிடைத்த காமிக்ஸ் எல்லாம் யானைப் பசிக்குச் சோளப் பொரியாட்டம் உள்ளது. ஆனால் ஒண்ணு மட்டும் நல்லாத் தெரியுது, நாமெல்லாம் இங்க இருக்கவேண்டிய ஆளேயில்ல?//

      இது சற்று தவறான கணிப்போ என்று தோன்றுகிறது. காமிக்ஸ் என்பது commercial success க்கு உட்பட்ட பொருளாக மாறிவிட்ட நாடுகளில் நம்மை மிரளச்செய்யும் Quantity இருக்கலாம் ஆனால் நமது limited இரசனைக்கு அவை பொருந்தாதபட்சத்தில் அவையெல்லாம் கணக்கில் சேராது!


      Delete
  22. பிரெஞ்சு நண்பரின் ஆதங்கம் புரிகிறது. அதை குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு பாரம்பரியம் மிக முக்கியம் என்பது புரிகிறது. ஆனால் வணிகம் என்பது வரும்போது மக்களை எப்படி கவர்ந்து விற்பது என்பது மிக முக்கியம் அல்லவா?

    டின் டின் போன்ற உலக பிரசித்தி பெற்ற கதா பாத்திரங்கள் படமாக எடுப்பதில் originality வேறுபட்டு இருக்கலாம். ஆனால் டின் டின் என்றால் யார் என்று தெரியாதவர்களும் பார்த்து ரசித்த படமாக இருந்தது உண்மை. அந்த திரை படம் அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகம் முழுக்க வசூலை குவிக்கவில்லையா? So Originality vs Commerciality arguments will stay forever.

    ReplyDelete
  23. ஐயகோ... இது என்ன தமிழுக்கு வந்த சோதனை? என் (நம்) தமிழறிவு வளர காரணமாக இருந்த கதைகளை / மொழி பெயர்ப்பை நாமே புறக்கணிக்கலாமா? சற்றே சிந்திப்பீர் :-) :D

    கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டனோ?

    ReplyDelete
  24. காம்பினில் பசும்பால் கறந்தால் அதுவா சாதனை?
    கொம்பினில் நான் கொஞ்சம் கறப்பேன் அதுதான் சாதனை…!
    சமுத்திரம் பெரிதா?
    தேன்துளி பெரிதா?
    தேன்தான்……!
    அது நாம்தான்…!

    ReplyDelete
  25. என் சிறுவயது காமிக்ஸ் வாசிப்பே இப்போது தடுமாறாமல் தமிழில் எழுதவும் தமிழில் கற்பனை செய்யவும் உதவுகின்றது. ஆனாலும் நம் சொந்த மொழியில் தயாரானவற்றைவிட அன்னிய மொழியில் தயாரான காமிக்ஸ்களைப் படிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி நிச்சயம் அதிகமே…! நமக்கே இப்படி இருக்கும்போது தங்கள் தாய்மொழியில் நேரடியாக வெளியிடப்படும் காமிக்ஸ்களை பெருமிதத்துடன் படிக்கும் ஜப்பான்,அமெரிக்கா,ஃபிரான்ஸ் மக்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது சார்!

    ReplyDelete
  26. அப்படியே asterix&oblix கதைகளையும் வெளியிட முயற்சியுங்களேன் சார்! திகில் கதைகளையும் ஒரு சேஞ்சுக்கு இடையில் வெளியிட்டால் சூப்பரா இருக்கும்! போர் சம்பந்தப்பட்ட (இரும்புக்கை நார்மன் போன்ற) ஆக்சன் கதைகளை வெளியிட்டால் அட்டகாசமான அனுபவமா இருக்கும் சார்!

    ReplyDelete
  27. தலைவா ....அப்ப "விண்வெளியில் ஒரு எலி " இனி வராதா ...? :-(

    ReplyDelete
  28. ஆசை காட்டி மோசம் பண்ணாதே தலைவா ...ப்ளீஸ் ..

    ReplyDelete
  29. பல நண்பர்கள் பல வருடங்களாக 'இந்த வட்டத்துக்குள் இருந்து வெளியே வாருங்கள்' என்று அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தபோதிலும் இப்போதுதான் நமது காமிக்ஸ்கள் லேசாக தலையை நீட்டிப் பார்த்திருக்கின்றன. ஆசிரியரின் நண்பர் குறிப்பிட்ட பரந்த காமிக்ஸ் கடலில் நீச்சலடிக்கும் வாய்ப்பு மிகச்சிறிய இந்தத் தமிழ் காமிக்ஸ் வாசக எண்ணிக்கைக்கு இப்போது கிடைக்கும் வாய்ப்பு இல்லையென்றே தெரிகிறது.

    ஆனால், அமெரிக்க சூப்பர் ஹீரோக்களை களமிறக்கி விட்டால், வீடியோ கேம்களில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இளைய தலைமுறைகளின் பார்வை நமது காமிக்ஸ்கள் மீதும் விழுந்து, பெரியதொரு சர்குலேஷன் டார்கெட்டை எட்டவும் வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. +1 I need x men,avengers,Spider-man,black widow all in tamil

      Delete
  30. //சிக் பில் ஸ்பெஷலில் - "விண்வெளியில் ஒரு எலி" கதையின் இடத்தில் "இரும்புக் கௌபாய்" இடம் பிடிக்கிறது ! (வி.ஒ.எ. ஒரிஜினலாய் வெளி வந்த மொழியாக்கம் தூய தமிழில் உள்ளதால் அதனை மாற்றி அமைக்க வேண்டி வருமென சுட்டிக் காட்டி இருந்த நண்பர் கிரிக்கு நன்றிகள் ! புதிதாய் மொழிபெயர்த்து fresh -ஆகத் தயாரிக்க அவகாசம் இல்லையென்பதால் கதைகளை switch செய்துள்ளேன் ! //

    அறிவிப்பு வெளியிடும் முன்பே இவற்றினை பரிசீலித்துவிட்டு அறிவிப்பை வெளியிடுவதே நல்லது. அதுவும் பல இதழ்களில் 'விண்வெளியில் ஒரு எலி' கதையை விளம்பரப்படுத்திவிட்டு இப்போது (காரணம் நியாயமானதாகவே இருக்கலாம்!) இப்படி சட்டென்று மாற்றுவது நமது இதழ்களின் முன்னைய 'குழப்பல் ஷெட்யூல்' காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

    கடந்த சில மாதங்களில் இந்த 'அந்தர் பல்டி' மாற்றங்கள் சில நடந்துள்ளது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கக்கூடும். இந்த விடயத்திலும் சற்று கவனம் எடுங்கள் ஆசிரியரே!

    ReplyDelete
  31. Replies
    1. விஜயன் சார், புள்ளி விபரம்களை படிக்க ஆர்வமில்லை ;-(, ஆனால் வருடம் 12-20 புத்தகம்கள் மட்டும் வெளி இடும் நாம் விரைவில் (2014) அந்த எண்ணிக்கையை 30-50 புத்தகம்கள் என உயர்த்த வேண்டும் மேலும் இன்னும் பல உலக புகழ் பெற்ற சிறப்பான காமிக்ஸ்களை நமது காமிக்ஸ் விரைவில் நீங்கள் வெளி இட வேண்டும் என ஆசை, நிறைவேற்றுங்கள்.

      மாதம் சில ஆயிரம் உள்ள நமது காமிக்ஸ் circulation இலட்சமாக உயர்த்த நீங்கள் ஜூ.வீ கொடுத்த விளம்பரம் அருமை (நன்றி:-விடாது குரல் கொடுத்த நமது வாசகர்களின் குரலுக்கு செவி சாய்த்து) ! இது போல் பிற பத்திரிக்கைகளிலும் வரும் தீபாவளி முன்னாள் வரும்மாறு செய்து நமது circulation 10 இலட்சமாக உயர்த்த வாழ்த்துகிறேன்.

      கடைசியாக மங்கா மற்றும் மாங்கா சித்திரம்கள் என்னை கவரவில்லை. இது போன்றவைகளை கருப்பு வெள்ளையில் சிறுவர்களுக்கு என தனியாக வெளி இடலாம்; ஏன்னா இது போன்ற கார்ட்டூன்கள் சித்திரம்கள் நம்ப ஊர் பொடிசுகளுக்கு சுட்டி & சித்திரம் டிவி சேனல் மூலம் அறிமுகம் ஆகி இருக்கும் என நினைக்கிறன்!

      Delete
  32. @Erode VIJAY
    //மாங்கு மாங்கென்று படித்து அதை தமிழில் ட்ரான்ஸ்லேட் பண்ணி நமக்கு இங்கே கொடுப்பாங்க//
    நீங்கள் உசுப்பேற்றியவுடன், மங்கா பற்றி மாங்கு மாங்கென்று படித்து அதைப் இங்கே எழுத நான் என்ன மக்கா?! :D படிக்காமலேயும் விவரங்களை 'அள்ளி' விட முடியுமாக்கும்! ;) ஜப்பானின் மக்கள் தொகை 12 கோடி, அதில் மங்கா வாங்குபவர்கள் மூணு கோடி, மாங்கா வாங்குபவர்கள் ரெண்டு கோடி. மாங்கா சாப்பிட்டுக்கொண்டே மங்கா படிப்பவர்கள் ஒரு கோடி! இவ்வாறாக ஜப்பானில் மங்கா புகழ் பெற்று விளங்குகிறது மங்கா! :P தமிழில் மங்கி காமிக்ஸ் வந்துள்ளது, மங்காத்தா திரைப்படம் வந்துள்ளது; ஆனால் இதுவரை மங்கா காமிக்ஸ் மட்டும் வந்ததில்லை. இங்கே மாங்கா மற்றும் தேங்கா வேண்டுமானால் எப்போதும் கிடைக்கலாம், ஆனால் மங்கா மட்டும் ஒருபோதும் கிடைக்காது! ;)

    @Podiyan:
    //ஒவ்வொரு கதாசிரியரும் வேறு வேறு விதமாகச் சொல்வதைப் படிக்கும்போது எமக்கு தலை கிறுகிறுத்துப்போகும் அபாயமும் உண்டு!//
    ஆமாம், நண்பரே! இது ஒரு பெரிய பிரச்சினை! நானும் எங்கே இருந்து படிக்க ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் தான் இருக்கிறேன்! :( ஒவ்வொரு தொடருக்கும் ஏதாவது ஒரு சிறந்த கதாசிரியர் + ஓவியர் கூட்டணியை தேர்வு செய்து, அங்கே இருந்து தொடங்க வேண்டும்!

    //அமெரிக்க சூப்பர் ஹீரோக்களை களமிறக்கி விட்டால் ... இளைய தலைமுறைகளின் பார்வை நமது காமிக்ஸ்கள் மீதும் விழுந்து, பெரியதொரு சர்குலேஷன் டார்கெட்டை எட்டவும் வாய்ப்பிருக்கிறது//
    +1

    @Ramesh Kumar:
    //காமிக்ஸ் என்பது commercial success க்கு உட்பட்ட பொருளாக மாறிவிட்ட நாடுகளில் நம்மை மிரளச்செய்யும் Quantity இருக்கலாம் ஆனால் நமது limited இரசனைக்கு அவை பொருந்தாதபட்சத்தில் அவையெல்லாம் கணக்கில் சேராது!/
    உண்மைதான்! நாம் படித்துள்ள பிராங்கோ-பெல்ஜியன் காமிக்ஸ்கள் கடலின் ஒரு துளி மட்டுமே! மீதமுள்ள அனைத்து கதைகளும் நமக்கு ஏற்றவாறு இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு துளியும் இல்லை!

    @V Karthikeyan:
    டியர் கார்த்திகேயன்,
    //இப்படிக்கி Franco-Belgian-Italian Comics Fan Club :)//
    FBI காமிக்ஸ்களின் ஆதரவாளரான நீங்கள், FBI-யின் தாயகமாம் அமெரிக்காவில் வசித்துக் கொண்டு, அமெரிக்க காமிக்ஸ்கள் தமிழில் வெளிவரும் நல்வாய்ப்பை இப்படி தடுக்கலாமா?! ;)
    இப்படிக்கி,
    FBI, CIA & CBI ஆதரவாளன்!

    FBI = Franco-Belgian-Italian Comics
    CIA = Comics Industry of America
    CBI = Comics of the British Islands

    பி.கு.: ஐரோப்பிய காமிக்ஸ்களின் ஆங்கிலப் பதிப்புகள் (Cinebook) கூட இந்தியாவில் சல்லிசாக கிடைத்து விடும்! ஆனால், அமெரிக்க காமிக்ஸ்கள் மட்டும், அவற்றின் இந்தியப் பதிப்புகள் இல்லாத காரணத்தால் 'எதை எடுத்தாலும் 1000 ரூவா' என்ற ரேஞ்சில் தான் இருக்கின்றன! :( ! நூறு ரூபாய்க்கும் குறைவாக Gotham காமிக்ஸ்கள் வெளிவந்த சமயம், அவற்றை வாங்க / படிக்கத் தவறி விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. @ Karthik

      ஹா ஹா ஹா! மேற்கண்ட உங்க பதிலைப் படிச்சப்போ முதலில் சாதாரணமாத்தான் சிரிச்சேன்; அப்புறம் உங்களை 'புள்ளி விவரப் புலி' விஜயகாந்த் மாதிரி கற்பனை பண்ணிட்டு மறுபடி படிச்சப்போ என்னால் சிரிப்பை அடக்கமுடியலை. ஹா ஹா ஹா! நாக்கை மடிச்சு 'அங்ங்'னு ஒரு சவுண்ட் மட்டும் பாக்கி! :D

      ஹம், எப்படியோ 'மாங்கா மாங்கா'னு பேசி நாக்கிலே ஒரு மினி அருவியை உண்டாக்கிட்டீங்க! ;)
      (ஜப்பானில் மாங்கா சாப்பிட்டுக்கொண்டே மங்கா படிப்பவர்கள் ஆண்களா, பெண்களா?) ;)

      Delete
    2. CIA = Comics Industry of America
      CBI = Comics of the British Islands

      Good one, ha ha ha


      Delete
    3. எனக்கு கூட மாங்கா புடிக்கும் பாஸ். ஹி ஹி நல்ல புளிப்பா இருக்கும். உப்பும் மொளகாப் பொடி தொட்டு சாப்டா சூப்பரா இருக்கும்.

      Delete
    4. Karthik Somalinga,

      //ஆனால் இதுவரை மங்கா காமிக்ஸ் மட்டும் வந்ததில்லை//
      A small correction boss.
      A manga comics named நரகத்தை பார்த்தேன் (in english: "I saw it" ) has been published in Lion/Muthu comics.

      Delete
  33. தலைவா ...உன் கால்ல கூட விலரன் .தயவு செய்து சொன்னபடி "விண்வெளியில் ஒரு எலி "விடுங்கள் .ஒரு தோழர் "தூய தமிழ் "என்று சொன்னதற்கு புக்கை மாற்றினால் என்னத்தை சொல்ல .அப்ப "இரும்பு கௌ பாய் " இப்போதைய பீட்டர் இங்கிலிஷா .அதுவும் தமிழ் தான் .இதுவும் தமிழ் தான் ."நம்ம புக்கை நாமே கேவல படுத்த வேண்டாமே .இங்கே வரும் தோழர்கள் தயவு செய்து இதற்கு குரல் கொடுங்கள் ."இரும்பு கௌ பாய் "கண்டிப்பா வருணுமானா அடுத்த ஸ்பெஷல் புக்குல விடுங்க .இத்துணை நாள் விளம்பர படுத்தி ஆசையோட காத்திருந்தா வாரதுனா எப்படி இருக்குனா தலைவா ? கடா விருந்துக்கு கூப்ட்டு இலை போட்ட பின்னாடி சாம்பார் சாதம் போட்ட மாதிரி இருக்கு .

    ReplyDelete
    Replies
    1. +1
      I also don't like these kind of last minute changes in the story, I sent a mail to him a mail instead of posting my view here.

      Delete
    2. எனுக்கும் கூட புடிக்கலப்பா! ஆனா நாம என்னதான் கரடி மேரி கத்தனாலும் வாத்யாரு அவரு இஷ்டப்பட்ட மேரி தான் புக்க வுடுவாரு.

      Delete
    3. எனக்கும் இதில் உடன் பாடில்லை.

      Delete
    4. +1 . Strongly disagree with this change . If you take majority , many people wanted "விண்வெளியில் ஒரு எலி". No doubt it is one of the best Kit artin story and i never found the language to be that difficult . Please go by majority voice .

      Delete
    5. +1 தூய தமிழ் நா அவ்வளோ பிரச்சனையா?? குறைந்த விலை - நியூஸ் பிரிண்ட் ல் ஓடிக்கொண்டு இருக்கும் போது இது போன்று மாற்றி வெளியிடுவது பெரிதாக தெரியவில்லை. தற்போது 100 ரூபாய் கொடுத்து வாங்கும் போது இது மனதை upset செய்கிறது.

      Delete
    6. //தூய தமிழ் நா அவ்வளோ பிரச்சனையா??//

      சமீபத்தில் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்குப்பின் Cartoon கதைகளுக்கு இருக்கும் வரவேற்பு அந்தப்பக்கமாக கூடுதல் கவனம் செலுத்தவைத்துள்ளது தெரிகிறது. சிக்பில் கதைகளின் வசனம் தற்கால காமெடி Trendஐ பிரதிபலிக்கும்பட்சத்தில் கூடுதல் வாசகர்களை கவரக்கூடியதாக அமையலாம். அதேநேரம் தூய தமிழில் டாக்புல்-ஆர்டின் பேசும்பட்சத்தில் (பழைய மொழி பெயர்ப்பு) சிக்பில் கதைகளனைத்துமே "போர்" என்று ஒதுக்கப்பட்டுவிடவும் வாய்ப்புள்ளது (குறுகிய அளவிலேயே கார்ட்டூன் கதைகளைக் கொண்டுள்ள நமக்கு இது ஒரு பெரிய lossதான்). Atleast this what I guessed about the reasons behind.

      பழைய / Regular வாசகர்களுக்கு இதெல்லாம் பெரிதாக தோன்றாமலிருக்கலாம் ஆனால் புது வாசகர்களைக்கவர வேண்டுமெனில் இந்த சிறு சிறு முயற்சிகளும் priorityயும் அவசியப்படும். தூய தமிழ் தற்போதும் தேவையான கதைகளில் நல்லநிலையில்தான் உள்ளது. இங்கே ஒரே பிரச்சனை அறிவித்த கதையை மாற்றுமளவுக்கு செல்லும் situationதான்.

      Delete
  34. NBSல் வந்த கேப்டன் டைகரின் இருளில் ஒரு இரும்புக்குதிரையின் தொடர்ச்சி இந்த ஆண்டு வருமா?
    2013? அல்லது 2014 லிலா?

    ReplyDelete
  35. புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா - 2013
    ****************************************************************************************
    அக்டோபர் 2 முதல் 6 வரை ஐந்து நாட்கள் நடக்கிறது

    புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல இயக்கத்தின் சார்பில் இரண்டாம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா வருகின்ற அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறி இருபதாவது. இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முதல் புத்தக திருவிழாவை விடியல் சமூகநல இயக்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா வருகின்ற அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    புத்தக கண்காட்சியின் சிறப்பம்சங்கள் :
    *****************************************************
    இக்கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் , விகடன் பதிப்பகம், அருணா பதிப்பகம், கற்பகம் பதிப்பகம், பாவை பப்ளிகேசன்ஸ், கிழக்கு பதிப்பகம், சிக்ஸ்த் சென்ஸ், ஏகம் பதிப்பகம், ஸ்மைல் புக்ஸ், விடியல் பதிப்பகம் உள்ளிட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம் பெறுகின்றன. 500 இக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில கிடைக்க உள்ளது.கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது. ருபாய் 100 இக்கு புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு புத்தக ஆர்வலர் என்ற சான்றிதழ் வழங்க படுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இது தவிர மாணவ மாணவியர்களிடம் சேமிப்பு மற்றும் புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி புத்தக சேமிப்பு உண்டியல் திட்டம் அறிமுகபடுத்த படுகிறது. புத்தக நன்கொடை திட்டமும் செயல் படுத்த பட உள்ளது. படித்ததை பிறருக்கு கொடுப்போம் என்ற வகையில் வாசகர்கள், பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய புத்தகங்களை விடியல் சமூக நல இயக்கத்திடம் வழங்கலாம். இவ்வாறு சேகரிக்கப்படும் பழைய புத்தகங்கள் புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்றுபுறத்தில் உள்ள கிளை நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.

    சிறப்பு பேச்சாளர்கள் :
    *********************************
    தினசரி மாலை 6 .00 மணிக்கு பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. அக்டோபர் 2 ஆம் தேதி பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் "புத்தகம் பேசுது " என்ற தலைப்பிலும், கொங்கு புயல் சாந்தாமணி அவர்கள் "கற்போம், கற்பிப்போம் " என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். அக்டோபர் 3 ஆம் தேதி பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் " படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு " என்ற தலைப்பிலும், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் " கதை அனுபவம் " என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். அக்டோபர் 4 ஆம் தேதி கவிஞர் புவியரசு அவர்கள் " நான் ஒரு வாசகன் " என்ற தலைப்பிலும், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் " இன்னமும் தேடி! தேடி!!" என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். அக்டோபர் 5 ஆம் தேதி பேராசிரியர் எம்.ராமசந்திரன் அவர்கள் " மனச பாத்துக்க நல்லபடி " என்ற தலைப்பிலும், கவிஞர் நந்தலாலா அவர்கள் " மனிதனாக வாழ்ந்திடல் வேண்டும் " என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். அக்டோபர் 6 ஆம் தேதி கவிஞர் கவிதாசன் அவர்கள் " முயற்சிகள் வெல்லும் " என்ற தலைப்பிலும், பேராசிரியர் சூரியநாராயணன் அவர்கள் " எல்லாம் இன்ப மயம்! " என்ற தலைப்பிலும், மகேஸ்வரி சத்குரு " கற்றலும் கேட்டலும்" என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள்.

    தகவல் தொழில்நுற்ப வளர்ச்சியின் காரணமாக நமது நேரத்தை செல் போன்களும் , இண்டர்நெட்டும் ஆக்ரமித்து கொண்டுள்ளது. சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த புத்தகங்களால் முடியும். அறிவு திருகோவில்களாக புத்தகங்கள் திகழ்கின்றன. எனவே இளைய தலைமுறையினர் புத்தக வாசிப்பில் தனது கவனத்தை திருப்ப வேண்டும். புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவின் ஐந்து நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும், பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்

    ReplyDelete
    Replies
    1. சமுதாய நலப் பணிக்கான உங்களது உழைப்பிற்கும், புத்தகத் திருவிழா வெற்றி பெறவும் எனது வாழ்த்துக்கள்!

      Delete
    2. // ... என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்//

      நீங்கள்தானே சார் ஜெயகாந்தன்... அப்புறம் ஏன் "ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்" என்று உங்களையே 2nd person ஆக project செய்கிறீர்கள்?! வேறொன்றுமில்லை, Machine தனமாக செய்யப்படும் எந்த நல்ல காரியமும் internet என்ற ஊரில் spam ஆகவே கருதப்பட்டுவிடும்!

      Delete
    3. ஈரோடு விஜய் சார் தங்களின் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி.
      ரமேஷ்குமார் சார், இங்கே பதிவிட்ட செய்தி நாளிதழுக்கு அனுப்பட்ட செய்தி. அதை எடிட் செய்யாமல் விட்டு விட்டேன். தகவலுக்கு நன்றி.

      Delete
  36. ஹா ......ஆவ்.....ம்ம்ம்ம்ம்ம்.....கொர்ர்ர்ர்ர்.......கொர்ர்ர்ர்ர்ர்ர் ..................

    ReplyDelete
  37. அது என்னங்க அது "கஸ்குஸ்"

    அமெரிக்கன் சூப்பர் ஹீரோ காமிக்ஸ் சுத்த பொர் .

    ஆனால் ரிப் கிர்பி வகையறா சூப்பர் தானே!


    கிடைப்பவர்கள் jeff smith "Bone" சீரீஸ் படித்து பாருங்கள் - அது ஒரு தனி உலகம்

    சென்னையில் Eloor லைப்ரரியில் இருக்கிறது ஆனால் 8th பார்ட் மட்டும் மிஸ்ஸிங்:-(

    ஸோ நான் செவென் வரையே படித்துள்ளேன்


    மேலும் என் (கால்வின் அண்ட் ஹோப்ஸ்) காமிக்ஸ் ட்ரை செய்யுங்கள்
    4 அல்லது 5 கட்டங்களுக்குள் பில் வாட்டேர்சன் ஆட்டம் காட்டி இருப்பார்..

    ReplyDelete
  38. WE WANT NEW ANOUNCEMENTS NO STATISTICS

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி! ஒவ்வொரு வாரமும் புது announcement எதிர்பார்ப்பது சற்று பேராசைதான்!

      மேலும் காமிக்ஸ் குறித்த பொதுவான தகவல்கள் அவசியம்தானே? இல்லாவிட்டால் நாம் திரும்பத் திரும்ப மறுபதிப்புகளை குறித்தே பேசிக்கொண்டிருப்போம்... :D

      Delete
  39. நமது பிளாக்கில் ஒரு மந்தமான போக்கு தெரிவது எனக்கு மட்டும் தானா?

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவில் நமது ப்ளாக் பரபரப்பாகிவிடும் என்று நினைக்கிறேன், Bro!

      Delete
    2. haha, புரிகிறது. உங்களுடைய அடுத்த கேள்வி இதுதானே?

      "Hello Ragavan sir...r u there?"

      Delete
    3. @ Ramesh kumar

      ஹா ஹா ஹா! இது அட்டகாசம்! என்னை நடுராத்திரியில் சிரிக்க வச்சுட்டீங்க! :D

      Delete
    4. @ AHMEDBASHA

      இத்தளத்தின் செயல்பாடு எடிட்டரின் மனதை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பேன்!! அவர் உற்சாகமாயிருந்தால் இங்கும் அப்படியே! அவர் பிஸியாக இருந்தால் இங்கிருப்பவர்களும் அவ்வாறே! :)

      நாஞ் சொல்றது சரிதானுங்களே?

      Delete
    5. Hello prasanna,meeran,L.A run...wr r u guys..?

      Delete
    6. //Hello prasanna,meeran,L.A run...wr r u guys..?//

      @AHMEDBASHA TK இது ஒரு தவறான அணுகுமுறை நண்பரே! இங்கே உரையாடும் நண்பர்களனைவரும் எப்படியும் குடும்பப்பொறுப்பும், தொழில் கடமைகளும் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் relaxஆகும்போது இயல்பாகவே வந்து உரையாடுவார்கள். நட்பின் காரணமாக கொஞ்சம் வற்புறுத்தி அழைப்பது OK ஆனால் அதற்காக எல்லாம் மந்தமாக இருக்கிறது என்று புலம்புவது logic ஆக இல்லை.

      எனக்குப்புரிந்தவரையில் இங்கே comment இடுபவர்களைவிட பார்வையாளராக Blog-ன் main பதிவை படித்துவிட்டு செல்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். நம்முடைய conversation அவர்களையும் மனதில் கொண்டு பொதுப்படையானதாகவும் புதியவர்களை invite செய்யும்வகையிலும் இருப்பதுதான் சிறந்தது. இல்லாவிட்டால் ஒட்டுமொத்த comment section-ம் ஏதோ 10-12 நண்பர்களின் தனிப்பட்ட உரையாடல் Range-ல் நின்றுபோய்விடும்.

      Delete
    7. // நம்முடைய conversation அவர்களையும் மனதில் கொண்டு பொதுப்படையானதாகவும் புதியவர்களை invite செய்யும்வகையிலும் இருப்பதுதான் சிறந்தது //

      "இத்தளத்திற்கு பொதுப்படையானவரும், புதியவருமான 'ஸ்டீல் க்ளா' என்ற பெயருடையவர் யாராவது இருப்பின் இங்கே வருமாறு அன்போடு invite செய்கிறேன்"

      இ..இப்போ சரிதானுங்களே, ரமேஸ் குமார்? :D

      (அடேய் விஜய், உனக்கு இப்போ நேரம் சரியில்லைன்னு கீரனூர் கிளிஜோசியர் சொன்னது சரிதான்போலிருக்கேப்பா?!)

      Delete
  40. சூப்பர் விஜய் சார், உங்களோட "சுமார் மூஞ்சி குமார்" என்ற பழைய பெயரை
    "இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா" என்ற படத்தில்
    ஹீரோவின் பெயராக வைத்திருக்கிறார்கள். Newspaper ல பார்த்தீங்களா?

    ReplyDelete
    Replies
    1. "சுமார் மூஞ்சி குமார்" இன் காபி ரைட் சென்னை -600028 படத்தில் "படவா கோபி" உடையது. கமெண்ட்ரி சொல்லும்போது "ஐஸ்வர்யா ராய் வந்து நம் "சுமார் மூஞ்சி குமார்" இடம் ஐ லவ் யு சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ஷார்க்க்ஸ் டீம் வின் பண்ணும் என்பது" என்று கூறுவார். அதை தான் நான் use பண்ணினேன். இருந்தாலும் "சுமார் மூஞ்சி குமார்" ல இருந்த கிக் சூப்பர் விஜய்ல இல்ல ல?...

      Delete
    2. //"சுமார் மூஞ்சி குமார்" ல இருந்த கிக் சூப்பர் விஜய்ல இல்ல ல?... //

      நண்பரே எனக்கு என்னமோ சூப்பர் விஜய் தான் நன்றாக உள்ளது :)

      Delete
  41. விஜயன் சார்,

    நாம் கொஞ்சம் கொஞ்சமாக நமது பழைய தவறுகளை மீண்டும் செய்ய ஆரம்பிக்கிறோம் என நான் நினைக்கிறன்!

    1. கடந்த சில மாதம்களாக நமது புத்தகம்கள் 1 தேதி வராமல் சில நாட்கள் தாமதமாக வருவது (இதில் சந்தோஷமான விஷயம் மாதம் தவறாமல் நமது புத்தகம் எங்களுக்கு கிடைப்பது)
    2. அறிவித்த கதைகளுக்கு பதில் புதிய கதைகளை கடைசி நேரத்தில் மாற்றி வெளி இடுவது!

    இதனை உடன் சரி செய்யுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. நமது பழைய காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் நம்முடன் கைகோர்க்க முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ள நேரத்தில் இது போன்ற செயல்பாடுகள் சரியாக தெரியவில்லை! இவைகளை உடன் சரி செய்யவில்லை என்றால் நாம் மீண்டும் 2010 முந்தைய கால கட்டத்திற்கு செல்ல வாய்ப்புகள் அதிகம் என கருத்தில் கொள்வது நலம்.

      Delete
    2. //நமது பழைய காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் நம்முடன் கைகோர்க்க முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ள நேரத்தில் இது போன்ற செயல்பாடுகள் சரியாக தெரியவில்லை!//

      உண்மை. புத்தகத்தைத் தயாரிக்க எவ்வளவுதான் உழைத்தாலும் விற்பனையாளர் மற்றும் முகவர்களுக்கு எதிர்பார்த்த routine-ல் கிடைக்காதபட்சத்தில் விழலுக்கிறைத்த நீராகிவிடும்.

      Delete
  42. @Mahesh kumar S:
    //A manga comics named நரகத்தை பார்த்தேன் (in english: "I saw it" ) has been published in Lion/Muthu comics.//
    Yes, you are right Mahesh!! :)

    @Erode VIJAY:
    //நாக்கை மடிச்சு 'அங்ங்'னு ஒரு சவுண்ட் மட்டும் பாக்கி!//
    நாக்கை மடிச்சு 'அங்ங்'னு சவுண்ட் விடலாம்னு ட்ரை பண்ணதில, நாக்கைக் கடிச்சுக்கிட்டு 'ஆவ்வ்'னு கத்துனதுதான் மிச்சம்! :(

    //(ஜப்பானில் மாங்கா சாப்பிட்டுக்கொண்டே மங்கா படிப்பவர்கள் ஆண்களா, பெண்களா?) ;)//
    இந்தக் கேள்விய... இந்த சொப்பன சுந்தரி டைப் கேள்விய... அத ஏன் சார் என்னப் பார்த்து கேட்டீங்க? ;)

    @Ramesh Kumar:
    //ISI = Impossibly Strange Indian Comics Industry//
    ICICI = Ideologically Confused Indian Comics Industry :P

    @Giridharan V:
    // ெமா ெபய உள கைதகைள ேத எப எப ற காயமா ???//
                ..!!! :D

    @விஜயன் சார்:
    //புதிதாய் மொழிபெயர்த்து fresh -ஆகத் தயாரிக்க அவகாசம் இல்லையென்பதால்//
    சிக்பில் ஸ்பெஷல் நவம்பரில்தானே வருகிறது?! இந்த இரண்டு சிக்பில் கதைகளையுமே படித்த(து) ஞாபகம் இல்லை என்பதால், என்னைப் பொறுத்தவரை எந்த கதை வந்தாலும் ஓகே தான்! இருந்தாலும், கடைசி நேர திடீர் மாற்றங்களையும், தொடர் கதைகளை நீண்ட நாட்களுக்கு இழுப்பதையும் தவிர்ப்பது நலம்!

    ReplyDelete
    Replies
    1. // கடைசி நேர திடீர் மாற்றங்களையும், தொடர் கதைகளை நீண்ட நாட்களுக்கு இழுப்பதையும் தவிர்ப்பது நலம்!//

      எனது கருத்தும் இதுவே நண்பரே .....

      Delete
  43. அறிவித்த கதையினை கட்ட கடைசி நேரத்தில் மாற்றுவது எரிச்சலை தான் கிளப்புகிறது. சந்த தமிழோ எந்த தமிழோ கதையினை மாற்றும் பழைய வரலாறு திரும்புகிறதோ??? பழைய மொழி பெயர்ப்புடன் வருவது தான் "மறு பதிப்பு " என்று இத்தனை நாளும் நினைத்து கொண்டு இருந்தது தவறோ??? என்ன கூறி என்ன பயன்??? மீண்டும் துயில் கொள்ள வேண்டியது தான் இங்கு :(

    ReplyDelete
  44. மங்காவின் சித்திரங்கள் தலைவலியினை உண்டு பண்ணும் வகையில் இருக்கின்றன. கிழக்கே ஜப்பானில் காட்டும் ஆர்வத்தை மேற்கே அமெரிக்க காமிக்ஸ் உலகில் காட்டலாம். சூப்பர் ஹீரோக்கள் ''சரவெடி'' என்றால், வால்ட் டிஸ்னியின் நவீன கதாபாத்திரங்கள் கொண்டாட்டமான மனநிலையை உண்டுபண்ண வல்லமை பெற்றவைகளாக உள்ளன.

    ReplyDelete
  45. நேற்று பணி நிமித்தம் மேற்கொண்ட சிறு பயணத்தினிடையே டீ சாப்பிட எங்கள் குழு வண்டியை நிறுத்தியபோது அருகே கண்ணில் பட்ட ஒரு சிறு பழைய புத்தகத் தள்ளு வண்டிக் கடையில் நான் எதேட்சையாக "காமிக்ஸ் கிடைக்குங்களா?" என்று விசாரிக்கவே, கடைக்காரர் எடுத்துக் காட்டிய புத்தகமோ லயன் 2003 கோடைமலரான டெக்ஸின் 'இருளின் மைந்தர்கள்'!!
    ஒரிஜினலாக ரூ.20க்கு வெளிவந்த அப்புத்தகத்தை ரூ.10க்கு வாங்கிச் சென்றதொரு குதூகலம் தந்த அதிர்ஷ்ட தினம் நேற்று!

    யாருக்கெல்லாம் வயிறெரிகிறது நண்பர்களே? ;)

    ReplyDelete
    Replies
    1. வயிறு குளிர்ந்துவிட்டது! :P சிலதடவை பஸ்ஸில் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென்று தட்டுப்படும் பழைய புத்தக்காகடைக்காக அடுத்த Stopலேயே இறங்கி Jackpot அடித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.

      அதேநேரம் காமிக்ஸ் புத்தகங்களுக்கு முழுக்குப்போட்டுவிட்டு Regularஆக சென்றுகொண்டிருந்த அதே பழைய புத்தகக்கடையில் Engineering booksஐ மட்டும் வாங்கப்பழகிய தில்லாலங்கடியாக்கும் அடியேன்! சில நேரங்களில் சூப்பர் சர்க்கஸ் மாதிரி புத்தகங்கள் கண்ணில் பட்டாலும், அதை வாங்காமல் வந்தவேலையை sincere ஆக முடித்தவிட்டும் நகர்ந்திருக்கிறேன்! இன்னும் heart attack வரவில்லையா? :D

      Delete
    2. புத்தகத்த எங்க வெச்சுருக்கீங்க ... ஆபீஸ் ? வீடு ? கொஞ்சம் சரியாய் அடையாளம் சொன்ன வசதியாயிருக்கும் :)

      Delete
  46. ரமேஷ் சார்,தளத்திற்கு வருமாறு நண்பர்களை அழைப்பது தவறான போக்கா?
    நடிகர் வடிவேலு சொல்லுவது போல்...
    " புதுசா இருக்கு"...!!!

    ReplyDelete
    Replies
    1. நமது Blogக்கு இது பழகிய நடைமுறையாக இருந்தாலும் புதியவர்களுக்கு இது தேவையில்லா புதிராகிவிடும்.

      நண்பர்கள் நேரம் கிடைக்கும்போது தானாகவே வந்துவிடுவார்களல்லவா? பொழுதுபோக்கு/ விஷயங்கள் வற்புறுத்தலாக மாறாத வரையில்தான் பொழுதுபோக்கு.

      Delete
    2. மாயி பட பாணியில்...
      அஹமத்:அப்படியா.......?
      ரமேஷ்:அப்...படித்தேன்.......

      Delete
  47. நண்பர்களே, எடிட்டரின் புதிய பதிவு 'ஒரு சகாப்தமும் - ஒரு சாம்ராஜியமும்' ரெடி! :)

    ReplyDelete