Powered By Blogger

Sunday, September 08, 2013

ஞாயிறும், ஞானோதயமும்... !

நண்பர்களே,

வணக்கம் ! புது பாணிகள் ; கிராபிக் நாவல்கள் என்றெல்லாம் ஏதேதோ சமீப சமயங்களில் குப்பை கொட்டியான பின்னே திருவாளர் XIII புதிதாய் அப்படி என்ன சவாலைத் தந்திடப் போகிறாரென்று ஒரு வித மிதப்போடு நம்பி அமர்ந்தேன் - XIII ன் எடிட்டிங் பணிகளுக்கு! 
ஞாயிறு அதிகாலைகள் எப்போதுமே கொண்டு வரும் ஒரு ரம்மியத்தோடு மப்பும்,மந்தாரமுமாய்க் காட்சி தந்த சென்னையின் வானமும் எழிலூட்ட விறு விறுவென பக்கங்களைப் புரட்டிக் கொண்டே சென்றேன் ! நல்ல நாளைக்கே XIII -ன் கதைச் சங்கிலியை நினைவில் இருத்திட எட்டு ஊருக்கு பல்டி அடிப்பது அவசியமாகும் ....இந்த அழகில் NBS -ன் பொருட்டு பாகம் 20 -ன் பணிகள் சென்றாண்டே நிறைவாகி இருந்தததால் முழுவதையும் மீண்டும் ஒரு முறை பொறுப்பாய்ப் படிக்க அவசியமானது ! துவக்கப் பக்கங்கள் நிறைய ஆக்ஷன் கொண்டவை என்பதால் பக்கத்து இல்லத்துப் பெரியவர் ஓரிரண்டு சுற்றுக்கள் நடை போட்டு முடிப்பதற்குள்ளாக நான் 30 பக்கங்களை எட்டிப் பிடித்திருந்தேன் ! 'ப்பூ....ரெண்டு பாகங்களையும் 10 மணிக்குள்ளாகவே முடித்திடலாம் போலத் தோணுதே !' என்று சீட்டியடித்துக் கொண்டே மேலே தொடர ....வசனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் 'மனோஹரா' திரைப்படத்தில் நடிகர் திலகம் பேசிடும் நீளங்களை எட்டிப் பிடிக்கத் தொடங்குவதை உணர முடிந்த போது லேசாக வியர்க்கத் தொடங்கியது ! அடிப்படை மொழியாக்கம் நமது கருணையானந்தம் அவர்களது ! கதையின் மையங்கள் நெருங்கிடும் வேளையில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும் உடன் வைத்துக் கொள்ளாவிடில் சிக்கலாகிப் போகுமென்பதால் ஒரு பக்கம் பிரெஞ்சு ஸ்கிரிப்ட் ; இன்னொரு பக்கம் கம்ப்யூட்டரில் கதையின் சித்திரங்கள் ; மறு பக்கம் கருனையானந்தம் அவர்தம் ஸ்கிரிப்ட் + நடுவில் கலர் printouts ; ஓரத்தில் எனது script + writing pad என்று சந்தையில் கடை பரப்பாத குறை தான் ! வினோதமான ஒற்றைப் பார்வைக்குப் பின்னே தன வேலைகளைக் கவனிக்க மனைவி நகன்று விட - ஒரு வழியாய் நிறைய மல்லுக்கட்டல்களுக்குப்  பின்னே  பாகம் 20-ஐ முடித்த திருப்தியில் நிமிர்ந்தால் 'முனியாண்டி விலாசில் பிரியாணிக்கு 'தம்' போட்டு முடித்திருக்கும் நேரமிது தம்பி' ! என்று கடிகாரம் தகவல் சொன்னது ! 'XIII -ஐ குறைச்சலாய் மதிப்பீடு செய்வோருக்கு பூவா கிட்டாது' என்பது தான் கதையின் கருத்து போலும் என்ற ஞாயிறு ஞானோதயத்தோடு இரண்டாம் பாகத்தைக் கையில் தூக்கும் முன்னே சோற்றுத் தட்டைத் தூக்கிட்டால் நலம் என்று தீர்மானித்தேன் ! இடையே XIII உடனான யாத்திரைகளைத் தொடரும் முன்னே இங்கொரு attendance + பதிவு எண் 111 -ஐ அரங்கேற்றினால் என்னவென்று தோன்றியது ! So, here I am !

XIII -ன் இந்த இரண்டாம் இன்னிங்சில் இப்போதைக்கு எனக்கு striking ஆகத் தென்பட்ட சங்கதிகளைப் பற்றி லேசாய் ஒரு outline மட்டும் :
  • சித்திரத் தரம் அசாத்தியம் !! வில்லியம் வான்சே பெருமைப் படக் கூடிய வகையில் உள்ளது overall ஓவியப் பாணி !  XIII ; கர்னல் ஜோன்ஸ் ; பென் காரிங்டன் என முந்தைய பாகங்களின் தொடர் பாத்திரங்களில் துளியும் வேற்றுமை பார்த்திட இயலவில்லை !  Simply superb ! 
  • ஏற்கனவே சொன்னது போல வண்ணக் கலவையும் இவ்விருகதைகளுக்குமே நேர்த்தியோ நேர்த்தி !! பொதுவாக இது போன்ற சீரியஸ் ரகக் கதைகளுக்கு பளிச் என வர்ணங்களை அனுமதிப்பதில்லை ! விதிவிலக்கு - COMANCHE தொடர் ! இனி அந்தப் பட்டியலில் XIII -ஐக் கூட இணைத்துக் கொள்ளலாம் ! கண்ணுக்கு ரொம்பவே குளிர்ச்சி தரும் அதே வேளையில் - 'தெய்வமே...அச்சில் இதற்கு நியாயம் செய்தாக வேண்டுமே !' என்ற பிரார்த்தனையும் ! 
  • கதைப் போக்கைப் பொருத்த வரை - ஏற்கனவே முடிச்சவிழ்க்கப் பட்டதொரு கருவை புதிதாய் ஒரு angle லிலிருந்து அணுக முயற்சித்துள்ளனர் ! சுவாரஸ்யம் தரும் துவக்கம் என்றே சொல்லுவேன் !   தொடருமாண்டுகளில் XIII எனும் இந்தப் பசு மாட்டை இன்னமும் எவ்வளவு பாகங்களுக்குக் கறக்க எண்ணி இருக்கிறார்களோ - நானறியேன் ! But -  இந்தப் புது ஆசிரியர் -ஓவியர் கூட்டணியில் பரபரப்புக்குப் பஞ்சமிராது என்பதை மட்டும் பட்சி சொல்லுகிறது ! பாருங்களேன்....!
  • இது போன்ற கதைகளை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கும் சமயங்கள் எத்தனை சிரமமானவை என்பதை மீண்டுமொருமுறை உணர முடிந்தது ! திரைமறைவிலிருக்கும் அவருக்கு ஒரு salute ! தமிழில் இறுதியாய்  எழுதி பெயர் தட்டிப் போகும் எங்களின் பின்னே ஓசையின்றி அரங்கேறும் இந்த உழைப்பின் பரிமாணம் அசாத்தியமானது !
November 2013 -ல் பிரான்சில் வெளியாக உள்ள பாகம் 22 !

இந்த ஞாயிறை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கொண்டதாய் ஆக்கிட - சமீபமாய் நண்பர் சுஸ்கி-விஸ்கி தெரிவித்த suggestion -ஐ நடைமுறைப்படுத்தினால் என்னவென்று தோன்றியது ! இதோ ஒரு 7 பக்க மினி திகில் கதை ! இதனை தமிழில் மொழிபெயர்த்து அடுத்த ஓரிரு நாட்களுக்குள் அனுப்புங்களேன் guys ! சமீபமாய் "கேப்டன் பிரின்ஸ்' இதழில் வெளியாகி இருந்த 5 பக்க திகில் த்ரில்லரை அச்சுக்குச் செல்லும் 3 மணி நேரங்களுக்கு முன்னே அவசரம் அவசரமாய் எழுதிய போதே இரு விஷயங்கள் மனதில் தோன்றின ! Filler pages -க்கென கார்டூன்களை மாத்திரமே மையப்படுத்திடாது, இது போன்ற திகில் கதைகளையும் பரீட்சை செய்து பார்த்தால் என்னவென்று தோன்றியது - சிந்தனை # 1 ! அதேபோல ஒரு quick gun மொழிபெயர்ப்பு முயற்சியையும் எத்தனிப்போமே என்று தோன்றியது thought # 2 !  So give it a rapid crack folks ?






போட்டிகள் இன்னும் முடிந்தபாடில்லை ! சமீபமாய் நண்பர் Podiyan புண்ணியத்தில் ஒரு மௌனப் பக்கத்திற்கு (XIII ) வெடிச் சிரிப்பு டயலாக் எழுதி ரசிக்கும் வாய்ப்பை தரிசித்த போதே - 'புதிய போட்டி 114 காத்துள்ளது !' என்று நான் சொல்லி இருந்தேன் ! இதோ - ஒரு முழுப் பக்கமல்ல - ஒரே ஒரு frame -க்கு அழகாய் வசனம் எழுதிட ஒரு போட்டி ! நமது நேற்றைய ஜாம்பவான்கள் ஸ்பைடரும் - இரும்புக்கை மாயாவியும் இப்படி சந்தித்துக் கொண்டால் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் ?
 உங்கள் கற்பனைகளை கட்டவிழ்த்து விடுங்களேன் ? வெற்றி பெரும் சூப்பர் டயலாக் அடுத்த இதழில் வெளியாகும் என்பதோடு - அதன் author -க்கு ஒரு FLEETWAY ஒரிஜினல் காமிக்ஸ் புத்தகத்தையும் பரிசாய்ப் பெற்றுத் தரும் ! So get those rib ticklers out ! 

XIII உடனான எனது ஞாயிறைத் தொடரச் செல்லும் முன்னே வழக்கம் போல் குட்டியாய் சில updates :
  • இம்மாதம் E -bay -ல் நமது புது இதழ்களுக்கான வரவேற்பு செம fast  ! அதில் highlight என்னவெனில் - லார்கோவை விட பிரின்ஸ் & கோ. பெற்றுள்ள வரவேற்பு அதிகம் !
  • ஈரோட்டுத் திருவிழாவைத் தொடர்ந்து, கொங்கு மண்டலத்தில் நமது இதழ்களுக்கு நிறையவே புது சந்தா வினவல்கள் + லக்கி லுக் முந்தைய இதழ் purchases !
  • அடுத்த பதிவில் அக்டோபெரின் புது கார்ட்டூன்  வரவை உங்களுக்கு நிச்சயம் அறிமுகம் செய்து வைப்பேன் ! +6 வரிசையில் இதழ் # 3 இது !
  • 2014-ன் புது இதழ்களின் அட்டவணை ஏறத்தாள முடிந்தது என்று சொல்லலாம் ! மறுபதிப்புப் பட்டியலை மாத்திரமே இப்போது அணுக வேண்டியுள்ளது ! "கார்சனின் கடந்த காலம்" பற்றிய உங்களின் உத்வேகம் நான் அறிந்ததே ! அது தவிர வண்ணத்தில் 2014-ல் நீங்கள் பார்த்திட விரும்பும் 'டாப் 5' கதைகளை மட்டும் பட்டியலிடுங்களேன் - ப்ளீஸ் ? 
  • நமது முந்தைய நாயகர்களைத் தாண்டியதொரு தமிழ் காமிக்ஸ் உலகையே அணுகிட விரும்பாது நின்ற நண்பர்களும் கூட, மெது மெதுவாய் புது யுக நாயகர்களை ரசிக்கத் துவங்கியுள்ளனர் ! நிஜமாக சந்தோஷமாக உள்ளது !! 
Take care guys...மீண்டும் சந்திப்போம் !

P.S : நண்பர்களுள் உறையும் திறமைகள் நித்தமும் மூச்சு வாங்கச் செய்கின்றன ! பாருங்களேன் இன்று கிடைக்கப் பெற்ற காஞ்சிபுரம் ரமேஷ் குமாரின் வர்ண சேர்க்கை முயற்சிகளை ! நமது லயன் டாப் 10 ஸ்பெஷலில் வாசகர் ஸ்பாட்லைட் பகுதியில் ஸ்பைடர் குட்டிக் கதையொன்றினை உருவாக்கியவர் இவரே என்பது உபரித் தகவல் !

229 comments:

  1. kindly reprint all the prince,lucky, and johny stories

    ReplyDelete
    Replies
    1. lion ganesh : A Top 5 selection would help...! Reprinting ALL the older stories is beyond the realms of possibilities !

      Delete
    2. ரிப்போட்டர் ஜானி top 5
      இரத்தக் காட்டேரி மர்மம்,ஓநாய் மனிதன்,பிசாசுக் குகை,நள்ளிரவுப் பிசாசு,தலைமுறை எதிரி
      பிரின்ஸ் top 5
      சைத்தான் துறைமுகம்,கொலைகார கானகம்,பயங்கரப் புயல்,நதியில் ஒரு நாடகம், கொலைகார கோமாளி
      சிக் பில் top 5
      தேவை ஒரு மொட்டை,கொலைகார காதலி,இரும்பு கௌபாய்,விசித்திர ஹீரோ,நீலப்பேய் மர்மம்

      Delete
  2. ஸ்பைடர் : டேய் இரும்புக்கை, உன்னோட நீ.....ள ள மான வளவளா கதையை போட்டதாலத்தாண்டா சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ஊத்திக்கிச்சு ?

    இரும்புக்கை மாயாவி : போடா வீ ஷேப் மண்டையா, நீ ஆர்டினி கிட்ட தர்ம அடி வாங்கியதாலத்தான் என்னையும் மூட்டை கட்டிட்டாங்க ; போடா போ, போய் உன் புள்ள குட்டிங்கள காமிக்ஸ் படிக்க வை !

    ReplyDelete
  3. ஸ்பைடர் : மிஸ்டர் இரும்புக்கை, என் வலைக்கு ஈடாகுமா உன் துருப்பிடித்த இரும்புக்கை ?

    இரும்புக்கை மாயாவி : மின்னலென என் மறையும் தன்மைக்கு, நீ ஈடேது என் பழைய சிலந்தி நண்பா ?

    ReplyDelete
  4. ஸ்பைடர் : வாடா வா, உன்ன அழிச்சாத்தாண்டா நா மறுபதிப்புக்கு என் பேர குடுக்க முடியும் !

    இரும்புக்கை மாயாவி : போடா போ, வாழ்க்கை ஒரு வட்டம்டா; இங்கே தோக்கறவன் ஜெய்ப்பான், ஜெயிக்கறவன் தோற்பான் !

    ReplyDelete
  5. ஸ்பைடர் : டேய் இரும்பு, நாமளும் வந்துட்டோமுல்ல இந்த வலைக்கு ?!

    இரும்புக்கை மாயாவி : ஆமா ஸ்பைடரன்னே, இப்படியே கொஞ்சம் கொஞ்சமா உள்ள நுழைஞ்சிட்டா இன்னொரு ரவுண்டு நாமளும் கலக்கிபுடலாம் :)

    ReplyDelete
  6. ஸ்பைடர் : மிஸ்டர் மாயாவி, ஒரே உரையில ரெண்டு வாள் இருக்கிறது எனக்கு புடிக்காதுனு உனக்கு தெரியுமா தெரியாதா ?

    இரும்புக்கை மாயாவி : மிஸ்டர் ஸ்பைடர், என் ஊர்ல வில்லனுக்கு எடமே கிடையாதுன்னு உனக்கு யாருமே சொல்லலையா இல்ல உனக்கு செலக்டிவ் அம்னீஷீயாவா ?

    ReplyDelete
  7. ஸ்பைடர் : போதும்டா மரமண்ட , இப்படியே நீ எழுதி தள்ளுனா நம்ப பாஸ் விஜயன் எல்லாத்தையும் தூக்கிடப் போறார் ;)


    மிஸ்டர் மரமண்டை : ஆமா தல, உனக்கு தெரியாத விஷயமா, நேத்து வந்த எனக்கு தெரியப்போவுது :(

    ReplyDelete
  8. டாப் 5எனது சாய்ஸ் 1.ஆப்பிரிக்கா சதி 2.பவள சிலை மர்மம் 3.கார்சனின் கடந்த காலம் 4.உலக போரில் ஆர்ச்சி 5.மின்னும் மரணம்

    ReplyDelete
    Replies
    1. ranjith ranjith : நான் கோரியது வண்ணத்தில் மறுபதிப்புக்கான தேர்வுகளை... :-)

      Delete
  9. மறுப்பதிப்பில் நான் விரும்பும் 5 இதழ்கள்:
    1.பனிக்கடல் படலம்.(டெக்ஸ் வில்லர்)
    2.ஒநாய் மனிதன்.(ரிப்போர்டர் ஜானி)
    3.பவளச்சிலை மர்மம்.
    4.கேப்டன் பிரின்ஸின் கதைகள் அனைத்தும்.
    5.இரத்தப்படலம்(வில்லியம் வான்ஸ்)

    ReplyDelete
  10. //வண்ணத்தில் 2014-ல் நீங்கள் பார்த்திட விரும்பும் 'டாப் 5' கதைகளை மட்டும் பட்டியலிடுங்களேன் - ப்ளீஸ் ? //

    ஸார், நீங்கள் எதை தேர்வு செய்தாலும் அது என்னுடைய டாப் 5 யாகத்தான் இருக்கும் !

    ReplyDelete
  11. சார் சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸ் தவிர வேறு எந்தந்த இடங்களில் நம் காமிக்ஸ் புக் கிடைக்கிறது
    தற்போதைய வெளியீடுகள் அங்கு வந்துவிட்டனவா...?

    ReplyDelete
    Replies
    1. Guru Rejendran : அனைத்து லேண்ட்மார்க் கடைகளிலும் கிடைக்கும் ! But - புது இதழ்கள் அங்கு கிடைக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் !

      Delete
    2. தகவலுக்கு நன்றி சார்

      Delete
  12. மாயாவி;ஆ ஆ ஸ்பைடர் என்னாச்சி உனக்கு என் கையை ஏன் உன் வலையினால் பிடித்தாய். ஸ்பைடர்;ரொம்ப நாளாச்சி சும்மா நூல் உட்டுபார்த்தேன் வேலை செய்யுதா இல்லையா என்றுஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
  13. டியர் விஜயன் சார்,

    //திரைமறைவிலிருக்கும் அவருக்கு ஒரு salute ! தமிழில் இறுதியாய் எழுதி பெயர் தட்டிப் போகும் எங்களின் பின்னே ஓசையின்றி அரங்கேறும் இந்த உழைப்பின் பரிமாணம் அசாத்தியமானது !//
    ANS-ல் திரு.கருணையானந்தம் அவர்களின் பெயர் உட்பட, அந்தந்த கதைகளின் மொழிபெயர்ப்பாளர்(கள்) பெயர்களை, கதையின் இறுதிப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தீர்கள்! ஆனால், அதற்குப் பிறகு வந்த இதழ்களில் அது மிஸ்ஸிங். இம்மாத லார்கோ இதழில், ஜூனியர் எடிட்டர் மொழி பெயர்த்த கதையில் கூட அவர் பெயர் போடப்படவில்லை!

    படைப்பாளிகள் & ஓவியர்களின் புகைப்பட அறிமுகங்கள் (குறைந்தபட்சம் பெயர்கள்), இத்தோடு மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களையும் ஒவ்வொரு இதழிலும் தவறாமல் வெளியிட்டால் நன்றாக இருக்கும். இன்னும் ஒருபடி மேலே போவதென்றால் "வெளியிடுவோர்" விபரங்கள் இருக்கும் அந்த பெட்டியில்:

    கலரிங் ஆர்டிஸ்ட்: ?
    கிராபிக் டிசைனிங் & லெட்டரிங்:திரு.பொன்னன் மற்றும் ?
    அட்டை ஓவியம்: திரு.மாலையப்பன்

    போன்ற விவரங்களை இணைத்தால் கிட்டதட்ட அனைவருக்கும் கிரெடிட் கொடுத்தது போல இருக்கும்! வெளியீடு எண்ணைப் தவறாமல் போடுவது போல இதையும் consistent ஆக போடலாமே?!

    ஜூனியர் எடிட்டர் விக்ரமின் மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது! ஒரு காலேஜ் மாணவரின் சகஜமான பேச்சு நடை தெரிகிறது (உம்: முருங்கைக்காய் மாதிரி இருந்துட்டு பேய் உதை உதைக்கிறான்)! இவரது பங்களிப்பு அதிகரிக்க அதிகரிக்க நமது இதழ்களில் இன்னொரு ரவுண்டு freshness-ஐ நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்!

    //"கார்சனின் கடந்த காலம்" ... தவிர வண்ணத்தில் 2014-ல் நீங்கள் பார்த்திட விரும்பும் 'டாப் 5' கதைகளை மட்டும் பட்டியலிடுங்களேன் - ப்ளீஸ் ? //
    மறுபதிப்புகள் 6*₹100 புத்தகங்களா அல்லது 6*₹50 புத்தகங்களா? 6*₹100 என்றால் மொத்தம் 12 கதைகள் அல்லவா?!

    //KBT-3 அறிவிப்பு அட்டகாசம். முதல் பரிசு "நாடோடி ரெமி" புத்தகம் வெற்றியாளருக்கு!/ & //வெற்றி பெரும் சூப்பர் டயலாக் .. author -க்கு ஒரு FLEETWAY ஒரிஜினல் காமிக்ஸ் புத்தகத்தையும் பரிசாய்ப்//
    உங்களிடம் இருக்கும் காமிக்ஸ் கலெக்ஷனில் இருந்து சில அரிய புத்தகங்களை பரிசாக வழங்கலாம் என்ற கோரிக்கையை நடைமுறைப் படுத்தியதற்கு மிக்க நன்றி சார்! Fleetway ஒரிஜினல் இதழ்கள் கூட பிளாட்பார கடைகளில் கிடைத்தாலும் கிடைக்கும். ஆனால், நமது பழைய இதழ்கள் கிடைப்பது மிக மிக அரிது! எனவே, பரிசுகள் நமது பழைய வெளியீடுகளாக மட்டும் இருந்தால் இன்னமும் சூப்பர் ஆக இருக்கும்!!!

    பி.கு.: நாடோடி ரெமி என்னிடம் இல்லை! :)

    //இந்த ஞாயிறை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கொண்டதாய் ஆக்கிட - சமீபமாய் நண்பர் சுஸ்கி-விஸ்கி தெரிவித்த suggestion -ஐ நடைமுறைப்படுத்தினால் என்னவென்று தோன்றியது !//
    வாழ்த்துக்கள் விஸ்கி-சுஸ்கி! :)

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : //மறுபதிப்புகள் 6 x 100 புத்தகங்களா அல்லது 6 x 50 புத்தகங்களா ? 6 x 100 என்றால் மொத்தம் 12 கதைகள் அல்லவா?!//

      நிச்சயம் 12 மறுபதிப்புக் கதைகளுக்கு வாய்ப்பில்லை ! Maybe 8 !

      Delete
    2. //போன்ற விவரங்களை இணைத்தால் கிட்டதட்ட அனைவருக்கும் கிரெடிட் கொடுத்தது போல இருக்கும்! வெளியீடு எண்ணைப் தவறாமல் போடுவது போல இதையும் consistent ஆக போடலாமே?!//

      GOOD POINT !

      //மறுபதிப்புகள் 6*₹100 புத்தகங்களா அல்லது 6*₹50 புத்தகங்களா? 6*₹100 என்றால் மொத்தம் 12 கதைகள் அல்லவா?!//
      //நிச்சயம் 12 மறுபதிப்புக் கதைகளுக்கு வாய்ப்பில்லை ! Maybe 8 !//

      ஆறுன்னு சொல்லீட்டு இருந்தவரை எட்டு ன்னு சொல்ல வைச்சுட்டீங்க ! அபாரமான திறமை உங்ககிட்ட இருக்கு. அடுத்த பதிவுள்ள இன்னொரு ரவுன்டு போட்டு தாக்கி அவர இதே மாதிரி குழப்பி பத்துன்னு( ஹி ஹி முடிஞ்சா 12 ) சொல்ல வைசுடுங்க ! இந்த தமிழ் கூறும் காமிக்ஸ் உலகம் உங்க உதவிய என்னைக்கும் மறக்காது! : )

      //வாழ்த்துக்கள் விஸ்கி-சுஸ்கி! :)//

      நன்றி கார்த்திக்! நண்பர் பொடியான மறந்துட்டீங்க! என்னை பொறுத்தவரை இப்படி INDIVIDUAL பெயர்கள ஆசிரியர் குறிப்பிடறத தவிர்கறது நலம். இந்த சிறு நண்பர்கள் குழுவுக்குள்ள தேவையில்லாம UPS & DOWNS உருவாக வாய்ப்புகள் அதிகமா இருக்கு!

      Delete
    3. //நன்றி கார்த்திக்! நண்பர் பொடியான மறந்துட்டீங்க!//
      அட, ஆமாம்ல?! :( நண்பர் பொடியன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)

      //என்னை பொறுத்தவரை இப்படி INDIVIDUAL பெயர்கள ஆசிரியர் குறிப்பிடறத தவிர்கறது நலம். இந்த சிறு நண்பர்கள் குழுவுக்குள்ள தேவையில்லாம UPS & DOWNS உருவாக வாய்ப்புகள் அதிகமா இருக்கு!//
      ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துதான் விஸ்!!! அதுக்காக வாழ்த்துக்களை திரும்பப் பெற முடியாது! :)

      Delete
    4. என்னை பொறுத்தவரை இப்படி INDIVIDUAL பெயர்கள ஆசிரியர் குறிப்பிடறத தவிர்கறது நலம்.//

      இது உங்க பெருந்தன்மையை, நேர்மையைக் காட்டுது. எல்லோரும் அப்படி இருந்துட்டா பிரச்சினையே இல்லையே!

      Delete
    5. @ ஆதி

      நிச்சயமாக விஸ்கி-சுஸ்கி ஒரு பெருந்தன்மையான மனிதர் தான்! இப்படிப் பெருந்தன்மையானவர்கள் ஊருக்கு ஒருத்தர்தான் இருப்பாங்க! எங்க ஊரிலே நான். ஹி ஹி! :)

      Delete
    6. @ஈ.விஜய்,
      சுய எள்ளல் என்பது ஒரு அழகிய கலை. இடம், பொருளறிந்து செய்யப்படவேண்டியது அது. பின்னுறீங்க.. உங்க ஃபேனாகவே ஆயிட்டேன். என் போன்றோர் கொஞ்ச காலம் முன்னாடி பிளாக் எழுதிகிட்டிருந்த காலத்துல நீங்களும் அங்க வந்திருந்தீங்கன்னா தூக்கி சாப்பிட்டுருப்பீங்க!

      Delete
    7. @ ஆதி
      இதுக்கு முன்னாடி கமெண்ட்'ல நீங்க போட்ட பந்துல நம்ம முன்னால் கி.பூ.கு விஜய் என்னை சிக்ஸர் அடிச்சுட்டார். யாரும் கண்டுக்காம போயிடுவாங்கன்னு பாத்த நீங்க அதுக்கு கமெண்டரி வேற கொடுக்கறீங்க. இப்போ ப்ளாக் நல்ல தானே போயிட்டிருக்கு?? : )

      என்னை யாரோ குறுகுறுன்னு முதுகுக்கு பின்னாடி மொறச்சு பாக்கறமாதிரியே ஒரு பிரம்மை. : ) : )

      Delete
    8. இப்போ ப்ளாக் நல்ல தானே போயிட்டிருக்கு??//

      ப்ளாக்கா? ஹிஹி.. புது தலைமுறை வந்து எங்களைத் தொறத்திடுச்சு.. ஸ்டைலா விஆரெஸ் வாங்கிட்டோம்னு சொல்லிகிட்டு திரியுறோம். நான் மட்டும் ஏதோ கடை ஒட்டடை படிஞ்சிடாம அப்பப்போ திறந்து வைச்சு, யாரும் இல்லாட்டியும் டீ ஆத்திக்கிட்டு இருக்கேன். :-))

      Delete
    9. @ வி-சு
      // என்னை யாரோ குறுகுறுன்னு முதுகுக்குப் பின்னாடி மொறச்சுப் பாக்கறமாதிரியே ஒரு பிரம்மை //

      ஆங், Same blood!

      @ ஆதி
      சுய எள்ளலோ, ஓவரா துள்ளலோ - என்னவோ பாராட்டுறீங்கன்னு மட்டும் தெரியுது. ஆனா ஒன்னு மட்டும் என்னால் உறுதியாச் சொல்லமுடியும்;
      " நான் அவ்வளவு வொர்த் இல்லீங்கோ " :)

      Delete
  14. டியர் எடிட்டர்,

    * குட்டியான updates அத்தனையும் மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக, Ebay விற்பனையும். ஈரோட்டிலிருந்து வரும் சந்தா பற்றிய வினவல்களும்!

    * 'கார்சனின் கடந்த காலம்' மறுபதிப்புப் பற்றிய உங்களது அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. :) வண்ணத்தில் வராது என்பது சிறு குறையே! :(

    * ஏழு பக்க சிறு கதைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் 'ஓரிரு நாட்கள்' கால அளவு (என்ன ஒரு தாராள மனது!) இந்த பிஸியான முகூர்த்த நாட்களில் (நிறைய ஓசி சாப்பாடு காத்திருக்கிறதே!) எனக்கு ஒத்துவராது என்பதால் நான் போட்டியிலிருந்து இப்போதே வெளிநடப்புச் செய்கிறேன். ஒரு உலகத்தரம் வாய்ந்த மொழிபெயர்ப்பை நம் வாசகர்கள் இழக்கிறார்கள் என்பதை நான் சொல்லிடவும் வேண்டுமோ? :D

    * ஸ்பைடர்-மாயாவி பற்றிய கமெண்ட்டுக்கு அதிக மெனக்கெடல் தேவையில்லையென்பதால் (சாப்பிட்டு ஓய்வெடுக்கும் பொழுதுகளில்) அவ்வப்போது இங்கே உள் நடப்பு செய்திடுவேன்.

    * XIIIன் புதிய ஓவிய கூட்டணி பற்றிய உங்களது சிலாகிப்பு எங்களது எதிர்பார்ப்பையும் ஏகத்துக்கும் அதிகரித்திருக்கிறது. இம்முறை அச்சுத்தரம் நிச்சயம் அனைவரையும் அசர வைத்திடும்; கவலை வேண்டாம்!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : //இந்த பிஸியான முகூர்த்த நாட்களில் (நிறைய ஓசி சாப்பாடு காத்திருக்கிறதே!) எனக்கு ஒத்துவராது என்பதால் நான் போட்டியிலிருந்து இப்போதே வெளிநடப்புச் செய்கிறேன்.//

      ஒஹ்...இது தான் பந்திக்கு முந்துவதா ?

      Delete
    2. ஆசிரியர் அவர்களுக்கு,

      'கார்சனின் கடந்த காலம்' இதழை பிரிக்காமல் ஒரே இதழாக போடவும்.

      நன்றி!

      இவண்,
      பூபதி L

      Delete
  15. spider: க்ராண்டல்! அட்டை படத்தில நான் மட்டும் தான் இருப்பேன்.

    மாயாவி: டேய் அவனுக சூப்பர் ஹீரோசே வேனாங்கிராங்க. இதுல உனக்கு அட்டைபடமா. ஊருக்கு போறவனை கைய புடிச்சு இழுத்து காமடி பண்ணாத.

    ReplyDelete
  16. ரத்தப்படலத்தை பற்றிய உங்களது தகவல்கள் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.

    ஏற்கனவே நாம் வெளியிட்ட பேட்மேன் கதைகளை நாம் மறுபதிப்பு செய்வதற்கு மீண்டும் பணம் செலுத்தவேண்டுமா.

    இல்லையென்றால் கண்டிப்பாக ஒரு பேட்மேன் ஸ்பெசல் கண்டிப்பாக வேண்டும் சார்.
    (சிரித்துக் கொல்ல வேண்டும்,பௌர்ணமி வேட்டை,சிரிக்கும் மரணம்,பேட்மேன் கிறுக்கனா?) இவை அனைத்தையும் ஒரு 100ரூ பதிப்பாக வெளியிடலாம்.

    2014 ஒரு ப்ருனோ பிரேசில் ஸ்பெசல் கலரில் கொடுங்கள் சார்.( முகமற்ற கண்கள், அப்பல்லோ படலம்,மர்மச் சவப்பெட்டிகள் )

    மற்றபடி வழக்கம் போல ஒரு பிரின்ஸ் மற்றும் ஜானி ஸ்பெசல்.

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ணா வ வெ : //2014 ஒரு ப்ருனோ பிரேசில் ஸ்பெசல் கலரில் கொடுங்கள்//

      நல்லதொரு suggestion தான் ! 'முகமற்ற கண்கள்" எனக்கும் ஒரு favorite !

      Delete
    2. பார்த்து ஏதாவது செய்யுங்கள் சார்.
      நான் 3 கதைகளையுமே படித்தது கிடையாது.

      Delete
    3. // 2014 ஒரு ப்ருனோ பிரேசில் ஸ்பெசல் கலரில் கொடுங்கள் சார்.( முகமற்ற கண்கள், அப்பல்லோ படலம்,மர்மச் சவப்பெட்டிகள் ) //

      +1

      Delete
  17. Lucky Luke spl,prince spl,bat man spl,Tex spl,chikbil spl

    ReplyDelete
  18. மறுபதிப்புக்கு எனது விருப்பங்கள்.

    1.திகில் 3
    2.இரத்தக்காட்டேரி மர்மம்
    3.சைத்தான் வீடு
    4.பயங்கரப் புயல்
    5.மரண வைரங்கள்

    ReplyDelete
  19. #1 தீனிக்காவலன் ஸ்பைடர்:
    ஸ்பைடர்: ரொம்பநாளாக டீக்கடையில் காணாமல் போகும் வடையின் மர்மம், உன்னுடைய மறையும் சக்தியால் விளைந்த விபரீதம் தானா? இதோ வருகிறது என் வலை உன் பாக்கெட்டிலிருக்கும் வடையை மீட்க!

    குறும்புக்கை மாயாவி: வடை போச்சே!

    ---------------------------------------------------------------------

    #2 நீதிக்காவலன் ஸ்பைடர்:
    ஸ்பைடர்: பல்லாண்டுகாலமாக நீடித்துவரும் மின் வெட்டுகளுக்கு காரணமான ஆசாமியைக் கண்டுபிடித்துவிட்டான் இந்த ஸ்பைடர்... இந்த நகரம் பிழைத்தது!

    இரும்புக்கை மாயாவி: தடை போச்சே!

    ReplyDelete
  20. Spider Vs Steel-claw  ***1***

    ஸ்பைடர் : ஹா ஹா ஹா! எஃக்கை விட உறுதியான இழைகளை உமிழும் என் வலைத் துப்பாக்கியைப் பிரயோகிச்சு உன் இரும்புக் கரத்தை முடக்கிப் போட்டுட்டேன் பார்த்தாயா?

    மாயாவி:  நம்ம படைப்பாளிகள் உனக்கு ஓய்வு கொடுத்ததும் நல்லதுக்குத்தான்னு உறுதியாயிட்டுது ஸ்பைடர்! நல்லாப் பாரு,  இரும்புக் கரம் என் வலது கையிலிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. @Erode Vijay
      // இரும்புக் கரம் என் வலது கையிலிருக்கு!//
      LOL - Good one

      Delete
  21. Spider Vs Steel-claw     **2**

    ஸ்பைடர் :  மரியாதையா அந்த இரும்புக்கையை கழட்டிக்கொடு! இதை பழைய இரும்பு கடைல கொடுத்தா குறைஞ்சது நாலு பேரிச்சம் பழமாவது கிடைக்கும்!

    மாயாவி: ஆவ்! நல்லா உறுதியான வலைதான்! இப்படி பேரிச்சம்பழத்துக்காக பழைய இரும்பு சேகரிப்பதையெல்லாம் விட்டுட்டு, நீ ஏன் ஒரு கொசுவலைக் கம்பெனி ஆரம்பிச்சுப் பொழைச்சுக்கக் கூடாது ஸ்பைடர்?

    ReplyDelete
  22. சும்மாவே வெயிட் பண்றது கஷ்டமா இருக்கு, இதுல.. அப்புடி இப்புடினு பில்டப் வேற கொடுக்குறீங்களே.. நியாயமா சார்?

    ReplyDelete
  23. நிரு, விஜய், ரமேஷ் கமென்ட்ஸ் இப்பவே கலக்குது! :-)))))))

    ReplyDelete
  24. Spider Vs Steel-claw ***3***

    ஸ்பைடர் : அப்படியே இந்த மணிக்கட்டையும் உடைச்சுட்டேன்னா ரெண்டு கையிலயும் இரும்புக்கையை மாட்டிக்கிட்டு ஏதாவது பஸ் ஸ்டாண்ட் பக்கமா துண்டை விரிச்சு உக்கார்ந்துக்க தகுதியாயிடுவே நீ!

    ஸ்டீல் க்ளா : அப்படியே சல்லுனு கீழே வா பெரிசு! என் இரும்புக் கரத்திலிருக்கும் கத்தியை வெளியே கொண்டுவந்து இப்படி செங்குத்தா பிடிச்சுக்கிட்டேன்னா, உன்னோட பைல்ஸ் பிரச்சினைக்கு ஒரு இலவச ஆப்பரேசன் ரெடி!

    ReplyDelete
  25. எனது டாப் 5 கதைகள்;
    1.டிராகன் நகரம்(டெக்ஸ்) 2. கார்ஸனின் கடந்த காலம்(டெக்ஸ்) 3. சைத்தான் துறைமுகம்(பிரின்ஸ்)
    4. மிண்ணும் மரணம்(டைகர்) 5.கொலைகார கானகம்(பிரின்ஸ்) இவை தவிர நதியில் ஒரு நாடகம், பயங்கரப் புயல், பிசாசுக் குரங்கு, தவளை மனிதனின் முத்திரை, முகமற்ற கண்கள், மர்மச் சவப்பெட்டிகள், இவை அனைத்தும் வண்ணத்தில் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. // தவளை மனிதனின் முத்திரை, முகமற்ற கண்கள், மர்மச் சவப்பெட்டிகள், //
      +1

      Delete
  26. REPRINTS REQUESTED
    1 Dragon Nagaram
    2 Irumbu Kai Norman story-Forgot the name
    3 Neethi Kavalan Spider
    4 Chekston Blake story-Forgot the name

    ReplyDelete
  27. சார் என் மீது வருத்தமேதுமில்லையே...

    ReplyDelete
    Replies
    1. ஐயோ ....நான் ஏன் சார் உங்களிடம் கோபப்படப் போகிறேன் ?? நிச்சயமாய்க் கிடையாது !

      Delete
  28. @Fleetway பரிசுப் புத்தகம்:
    தோ பாரு இரும்புக்கை மாயாவி, தமிழ்நாட்டுல உன் பேர் வேணா ரொம்ப பாப்புலரா இருக்கலாம். ஆனா, நான்தான் உன்னை விட பெரிய சூப்பர் ஸ்டார்!

    காமெடி பண்ணாம கீழ இறங்கு ஸ்பைடர்! நம்மளை பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு இறக்கி இவனுங்க பண்ற காமெடி போதாதா? போட்டியில ஜெயிச்சா அதுக்கு பரிசா சட்டித் தலையன் ஆர்ச்சியோட புக்கு வேற கொடுக்கறாங்களாம், அதான் எல்லாத்தையும் விட பெரிய காமெடி!

    ***
    @விஜயன் சார்:
    //P.S : நண்பர்களுள் உறையும் திறமைகள் நித்தமும் மூச்சு வாங்கச் செய்கின்றன ! பாருங்களேன் இன்று கிடைக்கப் பெற்ற காஞ்சிபுரம் ரமேஷ் குமாரின் வர்ண சேர்க்கை முயற்சிகளை ! நமது லயன் டாப் 10 ஸ்பெஷலில் வாசகர் ஸ்பாட்லைட் பகுதியில் ஸ்பைடர் குட்டிக் கதையொன்றினை உருவாக்கியவர் இவரே என்பது உபரித் தகவல் !//
    => மிக மிக அருமை விஜயன் சார்! கலரிங் ஆர்டிஸ்ட்களின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதற்கு ஒரு சிறு சான்று! வாழ்த்துக்கள் ரமேஷ் குமார்!

    //நிச்சயம் 12 மறுபதிப்புக் கதைகளுக்கு வாய்ப்பில்லை ! Maybe 8 !//
    => எப்படியோ ரெண்டு கதைகளை எக்ஸ்ட்ரா வாங்கியாச்சு! :)

    ***
    @ஈரோடு விஜய்:
    //இந்த பிஸியான முகூர்த்த நாட்களில் (நிறைய ஓசி சாப்பாடு காத்திருக்கிறதே!) எனக்கு ஒத்துவராது என்பதால் நான் போட்டியிலிருந்து இப்போதே வெளிநடப்புச் செய்கிறேன்.//
    => இந்த ஆதி கால பேய்க்கதை ட்ரான்ஸ்லேஷன் போட்டிக்கு பரிசுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பதால் உங்கள் பக்கத்தில் எனக்கும் ஒரு பெரிய இலையாக போட்டு வையுங்கள்! ;)

    ReplyDelete
    Replies
    1. @ கார்த்திக்

      // உங்கள் பக்கத்தில் எனக்கும் ஒரு பெரிய இலையாகப் போட்டு வையுங்கள் //

      பெரிய இலையா?! சாப்பிட்டுவிட்டு அதிலேயே ஒரு ஓரமாகப் படுத்துத் தூங்கப்போறீங்களா கார்த்திக்? :D

      Delete
    2. Super Karthik.. vijay அப்படியே..இன்னமும் கொஞ்ச நேரம் 12 அ 12 ஆஆ... கேட்டா ஆசிரியர் confuse ஆகி 10 சொல்லிடுவாரு...

      Delete
    3. பரிசுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பதால் உங்கள் பக்கத்தில் எனக்கும் ஒரு பெரிய இலையாக போட்டு //

      இப்பவே ரெண்டு டிக்கெட் அவுட்டு.. உள்ளாற புகுந்துடவேண்டியதுதான்! :-))))

      Delete
  29. காஞ்சிபுரம் ரமேஷ் குமாரின் வண்ணச் சேர்க்கை வேலைப்பாடுகள் நிஜமாய் மிரள வைக்கின்றன!

    அட்டகாசம் ரமேஷ் குமார்!!

    ReplyDelete
  30. Spider Vs Steek-claw ***4***

    ஸ்பைடர்: ஏம்பா தம்பி, நீதான் மாயாவியா? பார்க்கறதுக்கு கோட்டு-சூட்டு போட்ட மியாவி மாதிரி இருக்கியே?!!

    ஸ்டீல்-க்ளா : வாப்பா குற்றச் சக்கரவர்த்தி! நீ கூடத்தான் பாதியில அணைஞ்சுபோன ஊதுபத்தி மாதிரி இருக்க; நான் ஏதாவது சொன்னேனா?

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் ஏதோ ஒரு கமெண்டுக்கு பரிசைத் தட்டப்போறீங்க.. சிரிச்சி முடியலை.. நானும் ட்ரை பண்ணலாம்னு பார்த்தேன். இதுவரை வந்ததை விட பெட்டரா ஏதும் தோணும்னு தோணலை..

      Delete
    2. ஆதி,

      ம்ஹூம்! இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்க முடியாது நீங்க! இப் பிரபஞ்சம் போலவே கற்பனைகளுக்கும் எல்லை இல்லை அல்லவே? ;)

      Delete
  31. சார்,

    2014 மறுபதிப்பிற்கு என்னுடைய சாய்ஸ்:

    1. லக்கி ஸ்பெஷல் : புரட்சித் தீ & மேடையில் ஒரு மன்மதன்.
    2. ரோஜர் ஸ்பெஷல் : மர்மக் கத்தி & தவளை மனிதனின் முத்திரை.
    3. ஜானி ஸ்பெஷல் : ஓநாய் மனிதன் & தலைமுறை எதிரி / பிசாசுக் குகை
    4. பேட்மேன் ஸ்பெஷல்: சிரித்துக் கொல்ல வேண்டும், பவுர்ணமி வேட்டை, பேட்மேன் கிறுக்கனா?
    5. சிக் பில் ஸ்பெஷல் : இரும்பு கௌபாய் & நீலப்பேய் மர்மம்.
    6. பிரின்ஸ் ஸ்பெஷல் : பயங்கரப் புயல் & பனிமண்டலக் கோட்டை / சைத்தான் துறைமுகம்.

    xiii= பாகம் 20 & 21 களின் சித்திரம் அட்டகாச ரகம். 20-ல் சொல்லப்படும் பிளாஷ் பேக் பக்கங்கள் க்ரே கலரில் அழகு என்றால் 21-ல் வரும் அந்த ஆப்கானிஸ்தான் ஹெலிகாப்டர் ஆக்க்ஷன் இன்னுமொரு அதகளம்.

    கார்சனின் கடந்த காலம் முழுவதும் வண்ணத்தில் Portuguese மொழியில் வெளிவந்துள்ளது! அதன் டிஜிட்டல் கோப்பு கிடைக்கும் பட்சத்தில் நாம் வண்ணத்தில் வெளியிடுதல் சாத்தியமா?

    அப்புறம் original- ல் 300 பக்கங்களுக்கும் மேல் நீளும் இக்கதை எடிட்டர் நமக்கு 250 பக்கங்களுக்கு வழங்கியதன் பின்னணி கதை scrip-சாக இருக்க எடிட் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. @MH Mohideen
      யோசிச்சி நல்ல கதைகள் தேர்வு செய்துள்ளீர்கள்

      Delete
    2. நண்பர் Mohideen-ன் தேர்வுகள் அனைத்தும் அருமை. எப்பொழுதுமே பாலைவனங்களை களங்களாக கொண்ட நமக்கு ஒரு 'Snow'-ஸ்பெஷல் வந்தால் நன்றாக இருக்குமே...என்னுடைய தேர்வு "ஒரு பனிமலை பயங்கரம் (காரிகன்) + பனியில் புதைந்த ரகசியம் (விங் கமாண்டர் ஜார்ஜ்).

      Delete
    3. Am very eager to see BATMAN in our comics..

      Delete
  32. //வண்ணத்தில் 2014-ல் நீங்கள் பார்த்திட விரும்பும் 'டாப் 5' கதைகளை மட்டும் பட்டியலிடுங்களேன் - ப்ளீஸ் ? //
    பழி வாங்கும் புயல் - டெக்ஸ்வில்லர்
    புரட்சி தலைவன் ஆர்ச்சி - ஆர்ச்சி
    கத்திமுனையில் மாடஸ்டி - மாடஸ்டி
    ஏதவது - வேதாளர் கதை
    முத்து ஸ்பெஷல் - ஜெஸ்லாங்

    ReplyDelete

  33. திகில்ஸ்பெஷல் : first 5 books
    . ரோஜர் ஸ்பெஷல் : மர்மக் கத்தி & தவளை மனிதனின் முத்திரை.
    Mini lion:first 5 books
    Junior lion first 5 books

    ReplyDelete
  34. இரத்தப் படலம் " 1-18" முழு collection ஓகே
    இப்போது பாகம் 20-21 அப்படி ஏன்றால் ஏங்கே இரத்தப் படலம் 19???

    ReplyDelete
    Replies
    1. ரத்தப்படலம் 19 ஒரு கதையல்ல! அது ஒரு தொகுப்பு!
      13 வது பாகமாக ஒரிஜினலில் வெளியான இதழ் அது நண்பரே!

      Delete
  35. //.."கார்சனின் கடந்த காலம்" பற்றிய உங்களின் உத்வேகம் நான் அறிந்ததே ! ..//
    அப்ப மறுபதிப்பு உறுதியா? சூப்பர்

    //...நிச்சயம் 12 மறுபதிப்புக் கதைகளுக்கு வாய்ப்பில்லை ! Maybe 8 ! ..// இது இன்னுமும் Super
    1) கார்சனின் கடந்த காலம்
    2) டிராகன் நகரம்
    3) சிக்-பில் ஸ்பெஷல்
    4) லக்கி ஸ்பெஷல் : புரட்சித் தீ & பூம் பூம் படலம்
    5) அலிபாபா ஸ்பெஷல்: (அனைத்துக் கதைகளையும் சேர்த்து ஒரே புத்தகமாக)
    6) ப்ருனோ பிரேசில் ஸ்பெஷல்
    7) ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல்: (இரத்தக்காட்டேரி மர்மம் & ஓநாய் மனிதன்)
    8) ரோஜர் ஸ்பெஷல்

    முடிந்தால் இதுவம் :)
    -----------------------
    9) சுஸ்கி-விஸ்கி ஸ்பெஷல்
    10) பவளச்சிலை மர்மம்
    11) கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்

    ReplyDelete
  36. வண்ண மறுபதிப்பில் எனது சாய்ஸ்..
    1. அதிரடிப்படை & கொலைப்பசி
    2. சிக்பில் ஸ்பெஷல்
    3. ப்ருனோ பிரேசில் ஸ்பெஷல்
    4. ரோஜர் ஸ்பெஷல்
    5. சுஸ்கி விஸ்கி
    6. கார்சனின் கடந்த காலம்
    7. பேட் மேன் ஸ்பெஷல்
    8. ஜானி ஸ்பெஷல்

    ReplyDelete
  37. டியர் எடிட்டர்ஜீ!!!
    கார்சனின் கடந்த காலம் -வண்ணத்தில் வந்ததாக நண்பர் மொஹைதீன் குறிப்பிட்டுள்ள தகவல் சரிதானா...?
    முதலில் கருப்பு வெள்ளையில் வெளியிட்டு கதையின் பெரும் வெற்றியை தொடர்ந்து பிறகு வண்ணம் சேர்க்கப்பட்டு மறுபதிப்பாக வந்திருக்குமோ...?
    விளக்கம் ப்ளீஸ்...?

    ReplyDelete
  38. Spider Vs Steel-claw  ***5***

    ஸ்பைடர்: இங்கே பாரு க்ராண்டேல்! 'ஸ்பைடர் ஃபாஸ்ட் ஃபுட்' கம்பெனியின் அட்டகாசமான அடுத்த தயாரிப்பு; இந்த துப்பாக்கியின் விசையை நான் அழுத்தியதும் இதிலேர்ந்து சூடான நூடுல்ஸ் வெளிப்படுமாக்கும்!

    ஸ்டீல்-க்ளா : ஹூம்! இத்தனை நாளும் நீ நூல் விட்டுட்டு சுத்திட்டிருந்ததுக்குப் பதிலா இப்படி நூடுல்ஸாவது விட்டிருக்கலாம்! சரி சரி, துப்பாக்கியை என் வாய் பக்கமா திருப்பி, மறுபடி விசையை அழுத்து பார்க்கலாம்!

    ReplyDelete
  39. Top 8
    1. சுஸ்கி-விஸ்கி ஸ்பெஷல்
    2. அலிபாபா ஸ்பெஷல்
    3. சிக்-பில் ஸ்பெஷல்
    4. ரோஜர் ஸ்பெஷல்
    5. ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல்
    6. ப்ருனோ பிரேசில் ஸ்பெஷல்
    7. கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்
    8. editor's choice

    ReplyDelete
  40. ஸ்பைடர் : இரும்புக்கையாரே, இந்த கொடூர விழியாரை கண்டு பயம் வேண்டாம் தோஸ்த் ; என் முழியே அப்படித்தான் !

    இரும்புக்கை மாயாவி : பஞ்ச் டயலாக் பேசற நேரமா இது ? சீக்கிரம் என்னை மேலே தூக்குங்க சிலந்தியாரே !

    ReplyDelete
  41. ஸ்பைடர் : மொதல்ல உன்னை தூக்கறன் மாயாவி, அப்பத்தான் நான் கீழே வரமுடியும் !

    இரும்புக்கை மாயாவி : ஆமா கிழிச்சாரு, அதான் நம்ப எல்லாத்தையும் போனவருஷமே எடிட்டர் தூக்கிட்டாரே !


    கீழே = பரண் மேலிருந்து

    ReplyDelete
  42. ஸ்பைடர் : டேய் இரும்புக்கை, நாம கொஞ்ச நாள் காணாம போயிட்டதால அவ அவன் எப்படியெல்லாம் நம்பல கிண்டல் பன்றானுங்க பார்த்தியா ?

    இரும்புக்கை மாயாவி : மொதல்ல நீ, டேய் இரும்புக்கை, டேய் இரும்புக்கைனு நக்கல் பன்றத நிறுத்தி தொலை.. மத்தத அப்புறமா பாத்துக்கலாம் !

    ReplyDelete
  43. ஸ்பைடர் : நான் தாண்டா சூப்பர் ஹீரோ, இப்ப பாரு என்னோட வேலைய...

    இரும்புக்கை மாயாவி : வலைத்துப்பக்கியை கொஞ்சம் நிறுத்தி தொலை ஸ்பைடர், என்னோட மின்சாரம் பாய்ந்து அல்ப்பாயுசுல போயிடப் போற..

    ReplyDelete
  44. ஞாயிறும் ஞானோதயமும் என்று தலைப்பைப் பார்த்து விட்டு முதல் 'பாரா'வில் ரத்தப் படலம் புலம்பல்களைப் படித்ததும் "சரிதான்... ரத்தப் படலம் இந்த முறை இல்லை. அதற்குப் பதிலாக இன்னொரு இதழ்... " என்று வழக்கமான சரணம் (பல்லவி முதலில் தானே வரும்) தான் என்று நினைத்து விட்டேன் :)

    ReplyDelete
  45. To: Editor,
    உற்சாகம் தரும், வாசகர்களை சுறுசுறுப்பாக்கும் பதிவுக்கு நன்றிகள் சார்.

    //வசனம் எழுதிட ஒரு போட்டி ! நமது நேற்றைய ஜாம்பவான்கள் ஸ்பைடரும் - இரும்புக்கை மாயாவியும் இப்படி சந்தித்துக் கொண்டால் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் ?//

    இந்தப் போட்டிக்கான விடைகளை மின்னஞ்சலில் அனுப்பச் சொல்லிவிடுங்களேன்?
    இங்கே எல்லாரும் தங்களால் இயன்ற அளவு விடைகளை பின்னூட்டங்களாக இடும்போது பின்னூட்ட எண்ணிக்கை 200 ஐ மிக இலகுவாக எட்டி, Load More தொல்லையை ஆரம்பித்துவைத்துவிடும்.

    போட்டிகளுக்கென்று ஒரு பிரத்யேக மின்னஞ்சலை உருவாக்கிவிட்டால், அலுவலகத்துக்கு வரும் வேறு மின்னஞ்சல்களோடு குழப்பிக்கொள்ளவும் வேண்டியிருக்காது.

    ReplyDelete
  46. To Editor:

    நண்பர் ரமேஷ்குமாரின் வர்ணச் சேர்க்கை முயற்சியைப் பார்க்கும்போது 'குண்டன் பில்லி' கதை ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர் உங்களுக்கு அனுப்பிவைத்தது ஞாபகம் வருகிறது.

    பலூன்கள், சதுரங்களில் எழுத்துக்கள் இருக்கும் பகுதிகளை ஷேடிங் கொடுக்காமல் அப்படியே வெள்ளையாகவே விட்டுவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் அது 'குண்டன் பில்லி' அல்ல - மிஸ்டர் மியாவ்!

      Delete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. டியர் விஜயன் சார்,

    "ஸ்பைடரின் வழக்கமான அழகு(!) முகம் ஏன் இப்படி பயங்கர வில்லத்தனமாக இருக்கிறது, ஓவியம் பழைய பாணிகளில் இல்லையே?" என்று Google-ல் தேடிய போது, இது சமீபத்தில்தான் வரையப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது! Chris Weston என்ற காமிக்ஸ் ஓவியர் பல அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நாயகர்களை மிக அழகாக வரைந்துள்ளார்!

    http://chrisweston.blogspot.in/2013/06/a-round-up-of-recent-artwork.html

    மேற்கண்ட இணைப்பில் காணப்படும் ஸ்பைடர் Vs மாயாவி ஓவியங்கள் இதோ:

    * போட்டிக்கு அறிவிக்கப்பட்ட ஓவியத்தை விட இது தூள்!

    * இது நீங்கள் வெளியிட்டிருக்கும் ஓவியத்தின் High-res காப்பி!

    * பேட்மேன் காமிக்ஸ்களில் வரும் ஜோக்கரை நினைவு படுத்தும் ஸ்பைடரின், அட்டகாசமான solo ஓவியம் ஒன்று - சிரிக்கும் ஸ்பைடர்!

    இப்படி புதிய ஓவியர் ஒருவரின் அட்டகாசமான கைவரிசையில், பழைய நாயகர்கள் நவீனப் படுத்தப்பட்டு, புதிய கதைகள் வெளிவந்தால் நிஜமாகவே சூப்பராகத்தான் இருக்கும்!

    ***
    @ஈரோடு விஜய்:
    //ஸ்பைடர்: இங்கே பாரு க்ராண்டேல்! 'ஸ்பைடர் ஃபாஸ்ட் ஃபுட்' கம்பெனியின் அட்டகாசமான அடுத்த தயாரிப்பு; இந்த துப்பாக்கியின் விசையை நான் அழுத்தியதும் இதிலேர்ந்து சூடான நூடுல்ஸ் வெளிப்படுமாக்கும்!//
    => உங்கள் நூடுல்ஸ் கமெண்டுக்கு பரிசாக நிச்சயம் Fleetway புக்கு கிடைக்கும்! ஆனால், இது பற்றி அந்த ஓவியருக்கு தெரிய வருமானால் உங்கள் மூஞ்சியில் இலவசமாக ஒரு குத்தும் கிடைக்கும்! :) :)

    ReplyDelete
    Replies
    1. @ கார்த்திக்

      ஒவ்வொரு fleetway புத்தகத்துக்கும் ஒரு குத்து கிடைக்கும்னா, என் முகம் பூசனிக்காய் சைசுக்கு மாறும்வரை நான் குத்து வாங்கத் தயார்!
      குத்து வாங்கிக்கொண்டே "சார், என் நண்பர் கார்த்திக்கும் ஒன்னு-ரெண்டு புக்ஸ் குடுங்க சார்" வேண்டுகோள் விடுப்பேன். ;)

      Delete
    2. //குத்து வாங்கிக்கொண்டே "சார், என் நண்பர் கார்த்திக்கும் ஒன்னு-ரெண்டு புக்ஸ் குடுங்க சார்" வேண்டுகோள் விடுப்பேன். ;)//
      @ஈரோடு விஜய்:
      இதில் உள்குத்து ஏதும் இல்லையே

      Delete
    3. @ Krishnakumar

      // இதில் உள்குத்து ஏதும் இல்லையே //

      நீங்கள் இப்படி சந்தேகப்பட வேண்டியதில்லை நண்பரே! நிச்சயமாய் இது உள்குத்தேதான்! :)

      Delete
  49. டியர் சார்,
    உங்களது இந்த ஞாயிறு பதிவு மனதுக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது.

    "தி மேகிங் அப் XIII" ஷர்ட் பதிவு சூப்பர். ஒரு ஆக்கத்தின் பின்னே உங்கள் குழுவினருடைய கடின உழைப்பு பற்றி சிறியதாக தெரிந்து கொள்ள உதவியது மிக்க மகிழ்ச்சியே.

    நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கப்போகும் ஒரு ஆத்மா நண்பனை காண துடிக்கும் மனநிலை தற்போது.

    XIII பற்றிய ஒரு ஷர்ட் & ஸ்வீட் கதைசுருக்கம், இது வரை வந்த பாத்திரங்கள்,அவர்களின் படங்களுடன், அவர்களுக்கும் XIIIக்கும் உள்ள தொடர்பு, ஒரு FAMILY TREE,இது வரை நடந்த முக்கியமான நிகழ்வுகள், அவை வந்த பாகங்கள், அந்த SEQUENCE உள் ஒரு QUICK PEEK, இனி வரப்போகும் பாத்திரங்களை பற்றிய கதையை தொடர உதவும் முக்கிய தகவல்கள் , புதிய கதைகளை புரிந்துகொள்ள உதவும் பழைய நிகழ்வுகள்,...

    இந்த சாரத்தை ஆசிரியர் அல்லது XIIIனின் தொடரில் Phd பெற்ற நண்பர்கள் யாரவது ஆகமாக்கிட முயலுங்களேன் please! என்னை போல இங்கே பலர் இந்த தொடரின் பல முக்கிய அம்சங்களை மறந்திருக்கலாம். அவை இந்த புதிய கதைகளை ரசிக்க தடையாக இருந்துவிடகூடதே ...!! : (

    இதற்க்கு ஒரு போட்டி வைத்து வெற்றி பெற்றவருக்கு பரிசாக புதிய புத்தகங்களை தரலாமே??? : ) : )

    மொழிபெயர்ப்பு போட்டிக்கு எனது, மற்றும் நண்பர் பொடியனது சிறிய suggestion களை செயல்படுதியதற்க்கு நன்றிகள் சார். போட்டியின் அவகாசத்தை நீடித்தால் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும். நாங்கள் இன்னமும் இதில் நிறைய தேர்ச்சி பெறவேண்டியிருக்கிறது அல்லவா ???



    //இம்மாதம் E -bay -ல் நமது புது இதழ்களுக்கான வரவேற்பு செம fast ! அதில் highlight என்னவெனில் - லார்கோவை விட பிரின்ஸ் & கோ. பெற்றுள்ள வரவேற்பு அதிகம் !//

    ஹ்ம்ம்...நம்ம காமிக்ஸ் நண்பர்களுக்கு இளமைக்கால கதாநாயகர்களை விட்டு பிரிய இன்னமும் மனமில்லை போல தெரிகிறது!!

    //ஈரோட்டுத் திருவிழாவைத் தொடர்ந்து, கொங்கு மண்டலத்தில் நமது இதழ்களுக்கு நிறையவே புது சந்தா வினவல்கள் + லக்கி லுக் முந்தைய இதழ் purchases !//

    ஈரோடு நண்பர்கள் குழு ..குறிப்பாக விஜய் & ஸ்டாலின், நீங்கள் பெருமைப்படக்கூடிய தகவல். உங்களது கடின உழைப்புக்கு கிடைக்கும் பரிசு இதை விட பெரியதாக வேறு எது இருக்க முடியும். CONGRATS ! : )


    காஞ்சிபுரம் ரமேஷ் குமாரின் முயற்சி ஒரு PROFESSIONAL TOUCH உள்ள ஒருவரின் கைவண்ணம் தெரிகிறது. SIMPLY SUPERB! இந்த இங்கிங் துறையில் அனுபவம் உள்ளவர்களே சிலமுறை சொதப்பிவிடுகிறார்கள் என்பதற்கு சென்ற "சூரப்புலி சோ சோ " கதையில் செரிப்பின் சட்டைக்கு கட்டம் போட்டவரின் கைவண்ணத்தை பார்த்தல் புரிந்துகொள்ளலாம். கலரிங் அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. நண்பர் கலக்கிவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. @ வி-சு

      நன்றி நண்பரே! ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு நீங்கள் வரமுடியாமல்போனதன் காரணத்தை இரும்புக்கையாரிடம் கேட்டறிந்தேன். பரவாயில்லை; அடுத்த திருவிழாவில் சந்திப்போம்.
      என் வாழ்த்துக்களும், அட்வான்ஸ் வாழ்த்துக்களும்!
      முன்னது - 'விர்ரூரூம்ம்ம்' க்காக;
      பின்னது - உங்களது புதிய படைப்புக்காக! ;)

      Delete
    2. @ விஜய்
      வாழ்த்துக்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கும் நன்றி விஜய்! கம்படீசன்ல கலந்துக்கறத பத்தி இன்னமும் முடிவு பண்ணல. ஆதி சார் வந்தார்ன துணைக்கு ஆள் இருக்குமேன்னு பாக்கறேன்... : D !

      Delete
    3. விஸ்கி-சுஸ்கி : ஆதி சார் நேற்றிரவே முழு மொழிபெயர்ப்பையும், டைப்செட் செய்தே அனுப்பி விட்டார் !

      Delete
    4. @வி-சு,
      என்ன யோசனை இது சின்னப்புள்ளத்தனமா? கப்புனு கண்ண மூடிகிட்டு களத்துல குதிங்க..

      @விஜயன்,
      ஸார், இது ஆனாலும் அநியாயம்! நானே மண்ணுகவ்வ தயாராகிட்டு இருக்கேன், இதுல முதல் ஆளா மண்ணைக் கவ்வினாண்டா இவன்னு ஊருக்குள்ள போட்டுக்குடுத்துட்டீங்களே.. அவ்வ்வ்.. :-)))))))

      Delete
    5. //ஆதி சார் நேற்றிரவே முழு மொழிபெயர்ப்பையும், டைப்செட் செய்தே அனுப்பி விட்டார் //
      அட, "வாம்மா மின்னல்" ன்னு கூப்பிடறதுக்ககுள்ள தீயா வேலை செஞ்சி முடிச்சுட்டீங்களே ஆதி! !மலையார் மேல இந்த தடவ நீங்க நிச்சயம் ஏறிடுவீங்க! இப்போதான் நான் முத பக்கத்தையே நோட்டம் விட்டுடிருக்கேன்.

      அதுல்ல என்ன விஷ்யம்னா பூமியாருக்கு எமேல எப்போவும் ரொம்ப பாசம் பாத்துக்கோங்க! எனக்கும் அவர விட்டு பிரிய மனம் வரமாட்டேங்குது! : D

      Delete
    6. பை தி வே, இந்த ஸார் பிஸினெஸெல்லாம் வேண்டாமே.. பிச்சுபிச்சு! எங்க வீட்டு சுட்டி லக்கிக்கு அஞ்சறை வயசுதான் ஆகுது.. கணக்குப் பண்ணிக்குங்க!

      Delete
  50. இரும்புக்கை: மாயாவின்னாலே நடுங்கிட்டிருந்த பயலுகள மியாவின்னு என்னோட பெர மாதிரியே ஒரு அற்ப பூனைக்கு பெர வைச்சு காமடி பண்ண கார்திக்க போட்டு தல்லாம விடமாட்டேன்! கர்ர்...!

    ஸ்பைடர் : என்னையும் உன்னோட கூட்டிட்டு போ இரும்புக்கை. என்னோட துப்பாக்கியில இருந்து வர்றது நூடுல்ஸ் இல்ல! எஃகு போன்ற வலிமையான இரும்பு வலைன்னு அந்த விஜய்க்கு காட்ட வேண்டாமா. வர வர இங்கே சூப்பர் ஹீரோ ன்ன யாருக்கும் பயமே இல்ல!

    ReplyDelete
    Replies
    1. :D

      // வர வர சூப்பர் ஹீரோன்னா யாருக்கும் பயமே இல்லை //

      சே! சே! அப்படியெல்லாம் இல்லை! சூப்பர் ஹீரோன்னா எனக்கு பயங்கர பயம்! கார்த்திக்கும் தான்! ;)

      Delete
    2. ஒரு சிறு திருத்தம்: : D

      இரும்புக்கை: மாயாவின்னாலே நடுங்கிட்டிருந்த பயலுகள மியாவின்னு என்னோட பெர மாதிரியே ஒரு அற்ப பூனைக்கு பெர வைச்சு காமடி பண்ண கார்திக்க போட்டு தல்லாம விடமாட்டேன்! கர்ர்...!

      ஸ்பைடர் : என்னையும் உன்னோட கூட்டிட்டு போ இரும்புக்கை. என்னோட துப்பாக்கியில இருந்து வர்றது எக் நூடுல்ஸ் இல்ல, எஃகு நூடுல்சுன்னு அந்த விஜய்க்கு காட்ட வேண்டாமா. வர வர இங்கே சூப்பர் ஹீரோ ன்ன யாருக்கும் பயமே இல்ல!

      Delete
  51. வண்ண மறுபதிப்புகான எனது தற்போதைய 3தேர்வுகள்-1.சைத்தான் ஜெனரல் 2. ரத்தகாட்டேரி மர்மம் 3.ஊடுசூன்யம் மர்மம்

    ReplyDelete
  52. 4.கோச்சு வண்டியின் கதை 5. பரலோகத்திற்கு ஒரு பாலம்

    ReplyDelete
  53. எனது தேர்வில் மின்னும் மரணம் மற்றும் கார்சனின் கடந்தகாலம் இல்லாததற்கு காரணம் இத்தேர்வு வண்ணபதிப்பிற்கும் 2014க்கு மட்டுமே!

    ReplyDelete
  54. ரீபிரிண்டுகளைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனெனில் சின்ன வயதில் சில பல இதழ்கள் எனக்கு அறிமுகம் உண்டே தவிர, விடாது வாசிக்கும் வாய்ப்பும், சூழலும் கிடைக்கவில்லை. எனக்கு அது ஒரு ஏக்கமும் கூட. ஆக, எதை ரீபிரிண்ட் பண்ணினாலும் எனக்கு அது புதுசுதான், மீ ஒன்லி என்ஜாய்!!

    ReplyDelete
    Replies
    1. +1

      மேற்கண்ட பின்னூட்டத்தின் இடையே ஏதாவது ஒரு இடத்தில் 'ஏற்கனவே படித்திருந்தாலும் உடனே மறந்துவிடும் அற்புத வரமும் கிடைக்கப்பெற்றிருக்கிறேன்' என்ற வரியை இணைத்துக் கொண்டால், அதுவே என் கருத்து! :)

      Delete
  55. மின்னும் மரணம் reprint 2015 Janல் உறுதி என்பதலாலும், கார்சனின் கடந்த காலம் B&Wல் 2014ல் வெளிவர இருப்பதால் என் தேர்வில் இவை இல்லை.

    ReplyDelete
  56. My top 5
    1)பளிங்குச் சிலை மர்ம்ம் - டெக்ஸ்வில்லர்
    2)சிவப்புப் பாதை - ரிப்போட்டர் ஜானி
    3)இரும்பு கௌபாய்-சிக் பில்
    4)கொலைகார கானகம் - பிரின்ஸ்
    5)எழுந்து வந்த எலும்புக்கூடு-ஷெர்லக் ஹோம்ஸ் 
    Sir, Is there any possibility to re-print all Kodai and Diwali malar?

    ReplyDelete
    Replies
    1. 6) டிராகன் நகரம்
      7) லக்கி+Prince+Chick bill ஸ்பெஷல்
      8) அலிபாபா ஸ்பெஷல்: (அனைத்துக் கதைகளையும் சேர்த்து ஒரே புத்தகமாக)upayam: Periyar :)

      Delete
  57. sir பிரிண்டில் கவனம் தேவை, கடைசியாக வந்த மேற்கே ஒரு சுட்டி புயலையும் ரசிக்க முடியாமல் போய் விட்டது, இந்த மாதம் வந்த லார்கோவில் பர்மாவின் அழகை சுத்தமாக ரசிக்க முடியாமல் போய் விட்டது :( out of focus and blur images really made me embarassed while I was reading the book :(. Online lil மறுபடியும் அதே புத்தகத்தை ஆர்டர் செய்யவும் பயமாக இருக்கிறது. வர போகின்ற இதழ்களில் 100% கவனம் செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    ReplyDelete
  58. வண்ண மறுபதிப்புக்கு எனது விருப்பம்
    1.பிரின்ஸ் ஸ்பெஷல் 2கதைகள்
    2.ரோஜர் ஸ்பெஷல் 2கதைகள்
    3.ப்ரூனோபிரேசில் ஸ்பெஷல் 2கதைகள்
    4.சிக்பில் ஸ்பெஷல் 2கதைகள்
    5.லக்கி ஸ்பெஷல் 2கதைகள்
    6.ஜானி/பேட்மேன் ஸ்பெஷல் 2கதைகள்

    டியர் எடிட் சென்ற வருடம் 10 கதைகள் தந்து விட்டு இப்போது 8 ஆக குறைக்க வேணடாம். நான் இந்த வருடம் 12 கதைகள் எதிர்பார்த்தேன். நீங்கள் 10 கதையை 12 கதையாக்காவிட்டாலும் தயவுசெய்து 8ஆக குறைக்க வேண்டாம். நண்பர்களே உங்கள் ஆதரவை எனது பினனூட்டத்தை ஒட்டி பின்னூட்டம் இடவும்

    ReplyDelete
  59. வண்ண மறுபதிப்புக்கு எனது விருப்பம்
    1.பிரின்ஸ் ஸ்பெஷல் 2கதைகள்
    2.ரோஜர் ஸ்பெஷல் 2கதைகள்
    3.ப்ரூனோபிரேசில் ஸ்பெஷல் 2கதைகள்
    4.சிக்பில் ஸ்பெஷல் 2கதைகள்
    5.லக்கி ஸ்பெஷல் 2கதைகள்
    6.ஜானி/பேட்மேன் ஸ்பெஷல் 2கதைகள்

    டியர் எடிட் சென்ற வருடம் 10 கதைகள் தந்து விட்டு இப்போது 8 ஆக குறைக்க வேணடாம். நான் இந்த வருடம் 12 கதைகள் எதிர்பார்த்தேன். நீங்கள் 10 கதையை 12 கதையாக்காவிட்டாலும் தயவுசெய்து 8ஆக குறைக்க வேண்டாம். நண்பர்களே உங்கள் ஆதரவை எனது பினனூட்டத்தை ஒட்டி பின்னூட்டம் இடவும்

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள் சட்டை மாவீரன் sir, I agree with you.

      Vijayan sir,
      Please try to re-print more books in 2014.

      We expect 6 (Rs. 100) books (or 12 * Rs. 50 books). Thanks.

      Delete
  60. @Vijayan sir, thanks for sharing the coloring samples to our friends! Thanks for the appreciation friends! :)

    ReplyDelete
    Replies
    1. Ramesh Sir your work is amazing. I like to see how you guys ( artists ) work. Next time can you record and upload it in the youtube ?

      Delete
    2. I will try to take some recordings when I draw something in the future. But I am an hobbyist/amateur artist who seldom spends time for drawing, so I would suggest you to search on Youtube with keywords "comics creation" and penciling, inking, coloring for professional tutorials. I think this is one of the video that covers almost top-to-bottom of illustrator's work: http://www.youtube.com/watch?v=uYzOlgr_i20

      The traditional method is creating everything on paper using pencil, inks and paints. These days digital creations become popular and made using software like Adobe Illustrator, Photoshop etc. Some cases, even today penciling and inking process done on paper and then coloring part done through software.

      Delete
  61. @ஆதி தாமிரா:
    //இப்பவே ரெண்டு டிக்கெட் அவுட்டு.. உள்ளாற புகுந்துடவேண்டியதுதான்! :-))))//
    'ஆதி கால பீதி காமிக்ஸை' நேத்து நைட்டு பயந்துகிட்டே மொழிபெயர்த்து அனுப்பி வெச்சுட்டு, இங்க வந்த எதுவுமே தெரியாத மாதிரி உள்ளார புகுறீங்களே - இது உங்களுக்கே ஓவரா தெரியலியா ஆதி?! :) "இப்படிப் பெருந்தன்மையானவர்கள் ஊருக்கு ஒருத்தர்தான் இருப்பாங்க"-ன்னு விஜய் சொன்னது ரொம்ப கரெக்டு, சென்னைக்கு நீங்கதான் - இல்லியா?! ;)

    ***
    @Ramesh Kumar:
    //@Vijayan sir, thanks for sharing the coloring samples to our friends! Thanks for the appreciation friends! :)//
    "இப்படிப் பெருந்தன்மையானவர்கள் ஊருக்கு ஒருத்தர்தான் இருப்பாங்க"-ன்னு விஜய் சொன்னது ரொம்ப ரொம்ப கரெக்டு! காஞ்சிபுரத்துக்கு நம்ம ரமேஷ் குமார் தான்! :) நிஜமாகவே அட்டகாசம் ரமேஷ்!!!

    ***
    @Krishna Kumar:
    //இதில் உள்குத்து ஏதும் இல்லையே //
    சும்மா இருந்த விஜயை உசுப்பி விட்டு உள்குத்து வாங்க வச்சுட்டீங்களே?! இதானா சார் உங்க பெருந்தன்மை?! :)

    ***
    @விஸ்கி-சுஸ்கி & விஜய்:
    //என்னோட துப்பாக்கியில இருந்து வர்றது எக் நூடுல்ஸ் இல்ல, எஃகு நூடுல்சுன்னு அந்த விஜய்க்கு காட்ட வேண்டாமா//
    நூடுல்ஸ்னா உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப புடிக்குமோ?! :D

    ReplyDelete
    Replies
    1. சென்னைக்கு நீங்கதான் - இல்லியா?!//

      அதே அதே! ஹிஹி!

      அப்பால நான் ஜோக்குனு சொன்னாலே சிரிக்கத்தாயாராயிருவேன். பொதுவா அறிவுக்கு வேலையை கம்மி பண்ணிகிட்டு ஃபீலிங்ஸுக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுப்பேன். அப்போதான் எல்லா விஷயத்தையும் என்ஜாய் பண்ணமுடியும். ’பேமண்ட் இன் ஃபுல்’லில் பயப்புடத் தயாராத்தான் உள்ள போனேன், பாருங்க அந்த ஆவி பெருசா ஒண்ணுமே பண்ணலை, சுத்தமா பயமே வரலை. :-))))

      Delete
  62. சார் தீபாவளி மலர் டெக்ஸ் வில்லர் கதைகளை தரமான சாதா பேப்பரில் முயற்சி பண்ணலாமே..."தலைவாங்கிக்குரங்கு "ஆர்ட் பேப்பரில் ப்ரின்டிங் சிறப்பாக வரவில்லை.(குறை சொல்வதே வாடிக்கையாகிவிட்டது

    ReplyDelete
  63. //வண்ணத்தில் 2014-ல் நீங்கள் பார்த்திட விரும்பும் 'டாப் 5' கதைகளை மட்டும் பட்டியலிடுங்களேன் - ப்ளீஸ் ? //
    1.பழி வாங்கும் புயல் - டெக்ஸ்
    2. பனி மண்டல கோட்டை - பிரின்ஸ்
    3. புரட்சி தீ - லக்கி
    4. சைத்தான் ஜெனரல்-பிரின்ஸ்
    5. ட்ராகன் நகரம்- டெக்ஸ்

    ReplyDelete
  64. hee hee hee aavigalodu deal potta appadiye nadakkanum. Namma aalu aaviyodu podara dealai meerurathaala kidaikkara anubavaththai gavaninga....(karappu aayaa ippadithaan aarambipanga!!) neramillai engira kaaranathaal intha pottila kalanthukolla mudiyuma therila sir! anyhow best of luck nanbargale!

    ReplyDelete
  65. ஹீ ஹீ ஹீ ஆவிங்களோடு டீல் போட்டிங்கன்னா அப்படியே பாலோ பண்ணனும்! நம்ம ஆளு ஒரு ஆவியோட டீல் போட்டுட்டு படர அவஸ்தையை கொஞ்சம் கவனிங்க! ஹீ ஹீ ஹீ (கறுப்புக் கிழவி இருந்தா இப்படிதான் ஆரம்பிக்கும்!) சரி சரி பரிசை அமுக்க ரெடி ஆகுங்க நண்பர்களே! நான் விநாயகர் சிலை பாதுகாப்புப் பணியில இருப்பதால நம்ம பங்குக்கு முடிஞ்சது இதான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  66. Spider Vs Steel-claw ***6***

    ஸ்பைடர் : SHSSல் அந்த அரக்கன் ஆர்டினி என்னைப் புரட்டியெடுத்தபோது பக்கத்துலதானே சாகஸம் பண்ணிட்டிருந்தே? வலியில் துடிச்சிட்டிருந்த என்னைக் காப்பாத்தாம ஒரு மெகா வாட் மின்சாரத்தை உடம்புக்குள் பாய்ச்சிட்டு 'டஸ்'னு மறைஞ்சுபோன உன்னை இப்பப் பழிவாங்க வந்திருக்கேன் க்ராண்டேல்!

    ஸ்டீல்-க்ளா : எப்படியும் கடைசில 'ஆர்டினிகிட்ட அடிவாங்கியதெல்லாம் ஒரு டிராமா தான்'னு சொல்லி நீயே சமாளிச்சுடுவேனு தெரியும்; அதான் காப்பத்த வரலை. மன்னிச்சூஊஊ!

    ReplyDelete
  67. ஸ்பைடர்: சொன்னாக்கேளு, நாமெல்லாம் ரிடயர்டு ஆகிட்டோம். அங்கதான் இருக்கணும், வந்துடு!
    ஸ்டீல்: முதியோர் இல்லத்துக்கெல்லாம் வரமுடியாது, போடா!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா! சிப்பிளா இருந்தாலும் படு அசத்தல்! கலக்கீட்டிங்க ஆதி!

      @ எடிட்டர்
      சார், எனக்கு fleetway இல்லேன்னு தெரிஞ்சு போச்சு; ஏதாச்சும் பழைய ராணிக் காமிக்ஸாவது கொடுங்க சார்! ;)

      Delete
    2. அட, சும்மா விளையாடாதீங்க பாஸ்! :-))))

      இன்னும் கார்த்திக், விஸ்கி மாதிரி ஆட்களெல்லாம் மெயில்ல அனுப்பிட்டு கமுக்கமா இருக்கப்போறாங்க.. பை தி வே, மண்ணுகவ்வுறதுல எக்ஸ்பர்ட்ங்கிறதால அதைப் பத்தி எனக்கென்ன கவலை? ஹிஹி!

      Delete
    3. இது சிறப்பாக இருந்தாலும், ஆசிரியர் இதனை வெளியிட்டால் மாயாவி ரசிகர்கள் சிவகாசியை ரணகளப் படுத்தி விடுவார்களே! :-)

      Delete
    4. நான் குழந்தையா இருக்கும் போது அடிக்கடி மண் திண்பேனாம்; எங்க மம்மி சொன்னப்பக்கூட நான் நம்பலை! ஹூம்!

      Delete
    5. //இன்னும் கார்த்திக், விஸ்கி மாதிரி ஆட்களெல்லாம் மெயில்ல அனுப்பிட்டு கமுக்கமா இருக்கப்போறாங்க//

      நாங்கெல்லாம் அவ்வளவு வேகமா இருந்திருன்தொம்முன்ன என்ன ஆகறது! அந்த ஆதி காலத்து பீதி கதையோட மீதிய இப்போதான் முடிச்சேன் ஆதி ! : ). டைப் அடிச்சு ஆசிருயருக்கு அனுப்ப வேண்டியதுதான் மிச்சம். கதையில அந்த ஆவி பீதிய கிளப்புதோ இல்லையோ இந்த மொழிபெயர்ப்பா படிக்கறவங்க பீதில்ல பேதியாகனுங்கற குறிக்கோளோட வேலைய முடிச்சிருக்கேன். : ). இதனால எனக்கு கிடைக்கப்போறது மண்ணா இருக்கும் இல்லன்னா பன்னா இருக்கும். ஆசிரியர் படிக்கும்போது அவர்க்கு ஏற்படற பீதிய கற்பனை பண்ணி பார்க்கும்போது ஏற்படற சந்தோஷம்...ஆஹா ...! : D :D. PRICE LESS !!

      Delete

  68. ஸ்பைடர்:- மாயாவி மாட்டிக்கொண்டாய்! உன்னை பிடித்து கொடுத்தால் டபிள்யூ குழுமத்தின் மின் ஆற்றல் (Energy) பிரிவின் தலைவர் பொறுப்பு தருவதாக லார்கோ வின்ச் வாக்குறுதி கொடுத்துள்ளார்.


    ஸ்டீல்-க்ளா:- ரொம்பநாளாக வேலை இல்லாததால் எனது இரும்புக்கை டம்மி பீஸான விஷயம் அவருக்கு தெரிந்தால் நீ பலிகடாதான்!

    ReplyDelete
  69. ஸ்பைடர்:ஏய் மிஸ்டர், இது தமிழ்நாடு மேன்! இங்க மக்களே கரண்ட் இல்லாம இன்வெர்ட்டர்ல காலத்தை ஓட்டிகிட்டு இருக்காங்க? நீ என்னாத்துக்கு இப்ப கரண்ட குடிக்கிற?
    மாயாவி: கைய விடுயா! இந்த மாசம் பாக்கிய கேட்டுகிட்டு பால்காரன், மளிகைகடைகாரன்லாம் தொறத்தரானுங்க!

    ReplyDelete
  70. 1) பிரின்ஸ் கதைகள்
    2) ரிப்போர்ட்டர் ஜானி கதைகள்
    3) சிக் பில் கதைகள் .

    டிராகன் நகரம் , பவளசிலை மர்மம்.

    மறுபதிப்பை விரும்புகிறேன்

    ReplyDelete
  71. 'ஈடு இணையற்ற' என்ற வார்த்தைகளை நினைத்தாலே ஸ்பைடர்தான் நினைவுக்கு வருவான். பழைய இதழ்களில் இந்த வார்த்தைகள் கொண்டே ஸ்பைடர் அறிமுகம் செய்யப்படுவான்.
    ஸ்பைடரை ஒருமையில் அழைக்கும் அளவிற்கு மனதிற்கு மிகவும் நெருக்கமானவன். சிறு வயதில் என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தான்.
    தான் நினைப்பதை செய்து முடித்து; கதையை படிப்பவர் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்தான் .

    மாயாவியோ அற்புத ஆற்றல் நிறைந்த இரும்புக்கையை அடைந்தும்; அதை நல் வழியில் மட்டுமே பயன்படுத்தி நேர்மயின் அடையாளத்தை மனதில் பதிய செய்தார் .

    இரும்பு மனிதன் ஆர்ச்சி .,நவீன இயந்திரங்களையும் நல்வழியிலேயே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை பதிய செய்தது.

    கால சக்கரத்தில் இவர்களின் செயல்பாடுகள் பழையதாகி நின்றாலும் அவர்கள் விட்டு சென்ற நேர்மறை எண்ணங்கள் என்றும் உயிர்ப்புடையதே!

    இன்றைய நவீன உலகில் அவரவர் பிரச்சனையை அவரவரே, இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி எதிர்கொண்டு வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை பதிய செய்யும் இன்றைய 'லார்கோ'களுக்கு மத்தியில் இந்த சூப்பர் ஹீரோக்கள் அன்னியமாக தெரிவதில் ஆச்சர்யம் இல்லைதான் .


    எனினும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு நேர்மறை எண்ணங்களை போதிக்கும் நவீனகால சூப்பர் 'ஹீரோ' யாராவது தமிழ் காமிக்ஸ் உலகிற்கு தேவைதான் .

    ReplyDelete
    Replies
    1. @ Meeeran

      பத்திரிக்கையில் குட்டியாய் ஒரு கட்டுரை படித்த மாதிரி இருக்கிறது. க்யூட்! :)

      Delete
    2. மன்னிக்கவும்! உங்கள் பெயரில் ஒரு 'e' அதிகமாகிவிட்டது! :(

      Delete
    3. //எனினும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு நேர்மறை எண்ணங்களை போதிக்கும் நவீனகால சூப்பர் 'ஹீரோ' யாராவது தமிழ் காமிக்ஸ் உலகிற்கு தேவைதான்.//

      ஸ்பைடரின் attraction "ஈடு இணையற்றது" என்பது உண்மை!

      ஆனால் நேர்மறை எண்ணங்களை வளர்க்கக்கூடிய திறன் உண்மையில் சூப்பர் ஹீரோக்களல்லாத Normal Characterகளுக்கே உள்ளதாக தோன்றுகிறது. பொதுவாக சூழ்நிலை தனக்கு சாதகமில்லாமல் போகும்போது ஸ்பைடர் போன்ற ஹீரோக்கள் அதிகமாக அவமான உணர்வில் உழல்வதும், அடுத்த சில கணங்களில் வில்லனை சாபமிட்டு பழிதீர்க்க சூளுரைப்பதும் வாசகருக்கு ஒரு நல்ல பொழுதுபோக்காக அமையலாம், ஆனால் இதெல்லாம் inspiration ஆக மாறாமல் இருப்பது அவசியம்.

      கேப்டன் டைகர் போன்ற சகிப்புத்தன்மையும், தோல்விகளை சர்வசாதாரணமாக ஏற்றுக்கொண்டு move பண்ணும் Characters அவசியம்! சூப்பர் ஹீரோக்களின் Strategy பொழுதுபோக்கு மட்டுமே, inspiration அல்ல!

      Delete
    4. மீரானுக்கு ஒரு +
      ரமேஷ்குமாருக்கு ஒரு +

      (பட்டிமன்ற நடுவராக எனக்கு தகுதி வந்துடுச்சு போலயிருக்கே!)

      Delete
    5. Ramesh Kumar:-
      ஸ்பைடர் என்ற தனி கதாபாத்திரத்தின் மீதான பார்வை இது என்று எடுத்துக்கொள்ளலாமா ? அல்லது அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் பொருந்த கூடியதா?

      Delete
    6. ஸ்பைடர் பற்றிய அனுபவம் என் சிறுவயத்திலானது .
      ஆனால் ஸ்பைடர் மேனும் ,சூப்பர் மேனும் ,IRONமேனும் ,பேட் மேனும், உலகை காக்க அவதரித்ததாக சிறுவர்கள் நம்பும் ben10 ன்னும் இன்றைய சிறுவர்களிடத்தில் எற்படுத்தி இருக்கும் தாக்கம் அபரிமிததமானது. அவர்கள் வாயிலாக சொல்லப்படும் செய்திகளே சிறுவர்களை எளிதாக சென்றடைவதாக நம்புகிறேன். கேப்டன் டைகரின் செய்தியை
      அவர்கள் உணர்ந்து கொள்ளும் தூரம் அதிகமானதே.

      Delete
    7. //ஸ்பைடர் என்ற தனி கதாபாத்திரத்தின் மீதான பார்வை இது என்று எடுத்துக்கொள்ளலாமா ? அல்லது அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் பொருந்த கூடியதா?//

      உண்மையில் எல்லா சூப்பர் ஹீரோக்களுமே (Comics, Cinema and even our traditional story characters) நமது நிஜ வாழ்க்கையை போறுத்தவரையில் பொழுதுபோக்குக்கு மட்டுமே Fit என்பது என்கருத்து.

      நமது மற்ற சூப்பர் ஹீரோக்களை Compare பண்ணும்போது ஸ்பைடரிடம் சற்றே கூடுதலான Silliness + Bad guy குணாதிசயங்கள் அமைந்திருப்பதும் உண்மை. பொதுவாக கதாசிரியர்கள் ஹீரோக்களின் தனித்தன்மையை கூட்டவும் Commercial ஆர்வங்களுக்காகவும் பலவிதமான நல்ல/கெட்ட குணாதிசயங்களை சூப்பர் ஹீரோக்களுக்கு attach செய்வார்கள்! இதெல்லாம் சகஜம் - அதனாலேயே குழந்தைகளுக்கு Risk-ம் கூட! ;)

      Delete
    8. //சிறுவர்கள் நம்பும் ben10 ன்னும் இன்றைய சிறுவர்களிடத்தில் எற்படுத்தி இருக்கும் தாக்கம் அபரிமிததமானது. அவர்கள் வாயிலாக சொல்லப்படும் செய்திகளே சிறுவர்களை எளிதாக சென்றடைவதாக நம்புகிறேன். கேப்டன் டைகரின் செய்தியை அவர்கள் உணர்ந்து கொள்ளும் தூரம் அதிகமானதே.//

      உண்மைதான். இதனால்தான் ஒரு 12-13 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு பெற்றோரின் கண்காணிப்புடனான Entertainments தேவைப்படுகிறது - சாக்லேட் சாப்பிடும் அளவை காண்காணிப்பது போல!

      Delete
    9. ,Parani from Bangalore,Erode VIJAY,ஆதி தாமிரா:- நன்றி!

      Delete
    10. குழந்தைகளுக்கு கதை சொல்லும் வாயிலாகவே வாழ்கையின் தத்துவங்கள் இங்கே அதிகமாக சொல்லப்பட்டுள்ளன.பாட்டி வடை சுட்ட கதை முதல் நீதிக்கதைகள் வரை வெறும் பொழுது போக்கிற்காக சொல்லப்பட்டதில்லை.

      நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நம்மை கவரும் கதாபாத்திரம் எவ்வளவு பக்குவ பட்ட மனிதனிடமும் ஆளுமையை எற்படுத்தும் .

      சிறுவர்களை டைகர்‌கள் கவர்வதை விட அற்புத ஆற்றல் படைத்த கதாபாத்திரங்களே கவர்கிறார்கள்.

      சிறுவர்கள் படிக்கும் கதை விசையத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான் ஆனால் 'சூப்பர் ஹீரோக்களே வேண்டாம் என்பது அவர்களுக்கு காமிக்ஸே வேண்டாம் என்பதற்கு சமம்'.
      நான் குறிப்பிட்டு இருப்பது நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் சூப்பர் ஹீரோவை மட்டுமே .

      லக்கி லுக் வாயில் சிகரெட் அருகம் புல்லாக மாறியிருப்பதில் இருந்து ஸ்பைடர்மேன் பிஸ்ஸா டெலிவரி செய்பவனாக வருவதில் இருந்து வெறும் கதாபாத்திரங்களின் குண இயல்புக்காக மட்டுமே சொல்லபட்டதாக நான் நினைக்கவில்லை .

      சூப்பர் ஹீரோக்கள் கதைகள் பொதுவாக சொல்லும் விசயம் அநீதியை ஆதரிக்காதே., அதை எதிர், இந்த உலகம் பாதுகாக்க பட வேண்டியது, உலகம் அனைவற்கும் பொதுவானது என்பதாகும் .இதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

      சிறுவர்கள் காமிக்ஸ் பக்கம் வர வேண்டியது அவசியம் என்று நினைக்கின்றேன், அதற்கு அவர்களை கவரும் சூப்பர் ஹீரோக்கள் அவசியம் தேவை .

      Delete
    11. //சூப்பர் ஹீரோக்கள் கதைகள் பொதுவாக சொல்லும் விசயம் அநீதியை ஆதரிக்காதே., அதை எதிர், இந்த உலகம் பாதுகாக்க பட வேண்டியது, உலகம் அனைவற்கும் பொதுவானது என்பதாகும் .இதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

      சிறுவர்கள் காமிக்ஸ் பக்கம் வர வேண்டியது அவசியம் என்று நினைக்கின்றேன், அதற்கு அவர்களை கவரும் சூப்பர் ஹீரோக்கள் அவசியம் தேவை .//

      நமது காமிக்ஸ் வாசகர்களை (especially children) கவரும் சூப்பர் ஹீரோ யாராவது கிடைத்தால் வெளியிடுவது நல்ல விஷயம்தான் - நமது பழைய சூப்பர் ஹீரோக்கள் Outdate ஆகிவிட்டதனால்.

      ஆனால் சூப்பர் ஹீரோ கதைகள் எதிர்பார்த்த விளைவை குழந்தைகளுக்குத் தருகிறதா என்பது வேறுவிஷயம் - இது தனிநபரின் (பெற்றோர்) புரிந்துகொள்ளுதலை சார்ந்தது. சூப்பர் ஹீரோகதை வில்லன்களின் crazyஆன குணங்களும் (அநியாயத்தை இரசித்து செய்வது) unconsciousஆக குழந்தைகளை ஊடுறுவுவதை கண்காணிப்பது இயலாத காரியம். என்னைப் பொறுத்தவரையில் ஒரு குழந்தை ஏற்கெனவே சில கதைப்புத்தகங்களில் ஆர்வத்துடன் இருக்கும்பட்சத்தில் அந்தகுழந்தைக்கு சூப்பர் ஹீரோவை introduce செய்யாமலிருப்பது நல்லது. ஒருவேளை குழந்தைக்கு படிக்கும் ஆர்வமே இல்லாமலிருந்தால், சூப்பர் ஹீரோ கதைகளை try பண்ணலாம்.

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete

    13. //ஆனால் சூப்பர் ஹீரோ கதைகள் எதிர்பார்த்த விளைவை குழந்தைகளுக்குத் தருகிறதா என்பது வேறுவிஷயம் - இது தனிநபரின் (பெற்றோர்) புரிந்துகொள்ளுதலை சார்ந்தது.//

      நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நம்மை கவரும் கதாபாத்திரம் எவ்வளவு பக்குவ பட்ட மனிதனிடமும் ஆளுமையை எற்படுத்தும் .

      //சூப்பர் ஹீரோகதை வில்லன்களின் crazyஆன குணங்களும் (அநியாயத்தை இரசித்து செய்வது) unconsciousஆக குழந்தைகளை ஊடுறுவுவதை கண்காணிப்பது இயலாத காரியம்.//

      அநீதியை ரசித்து செய்வது தவறு அது கெட்டது என்ற கோணத்திலேயே சித்தரிக்க படுவதால் அது தவறு என்றே மனதில் பதியும். அதை எதிர்க்கும் மன நிலையையே உண்டு பண்ணும்.

      Delete
    14. எவ்வளவு பக்குவ பட்ட மனிதனிடமும் அவரை கவரும் கதாபாத்திரம் அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவரிடம் ஆளுமையை செலுத்தும்.

      Delete
    15. சூப்பர் ஹீரோ கதைகள் சிறுவர்களுக்கு ஒருவித உந்துதலையும் ,உற்சாகத்தையும் உண்டு பண்னுகின்றன.

      மாறுபட்ட கோணங்களில் சிந்திக்க தூண்டுகின்றன.

      புதுமையான விஷயங்களில் ஆர்வதை தூண்டுகின்றன.

      கற்பனையை தூண்டுகின்றன,உண்டுபண்ணுகின்றன.

      அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை தேடி கண்டுபிடிக்க தூண்டுகின்றன.

      சவால்களை எதிர்கொள்ளும் மன நிலையை உண்டு பண்னுகின்றன.

      விஞ்ஞானத்தில் ஆர்வம் ஊட்டூகின்றன.

      புதுமையான கண்டுபிடிப்புகளில் ஆர்வம்மூட்டூகின்றன.

      புத்திசாலிதனத்தின் அவசியத்தை உணர செய்கின்றன

      கஸ்டங்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ளும் மனஉறுதியை தூண்டுகின்றன.

      அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க சொல்கின்றன.

      ஆகவே என் ஆதரவு சூப்பர் ஹீரோக்களுக்கு!

      Delete
  72. விஸ்கி-சுஸ்கி & பொடியன் @
    //இந்த ஞாயிறை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கொண்டதாய் ஆக்கிட - சமீபமாய் நண்பர் சுஸ்கி-விஸ்கி தெரிவித்த suggestion -ஐ நடைமுறைப்படுத்தினால் என்னவென்று தோன்றியது !//

    Very good suggestion! Looks like you always think of our comics!
    வாழ்த்துக்கள் விஸ்கி-சுஸ்கி & பொடியன் ! :)

    ReplyDelete
  73. வாழ்த்துக்கள் ரமேஷ் குமார்! வண்ணச் சேர்க்கை அருமை!

    ReplyDelete
  74. ஸ்பைடர்: hiii..
    மாயாவி : நான் காலைலே போய்டேன், கைய விடுடா...

    ReplyDelete
  75. ஸ்பைடர்: உன்னோட இரும்பு கைக்கும் என்னோட வலை துப்பாக்கிக்கும் , ஜோடி போட்டுகுவோமா ஜோடி,,,
    மாயாவி: போடா லூசு.. ஷேம் ஷேம் பப்பி ஷேம்..

    ReplyDelete
  76. ஸ்பைடர்: குற்றவியலின் ஈடு இணையில்லா சக்கரவர்த்தி, மேதகு ஸ்பைடரின் பராக்கிரமத்தை பாரீர், மாயாவியின் "கை"யாகாலாகாதனத்தை பாரீர்... ஹ ஹ ஹா...

    மாயாவி; ஆமாமா எல்லாமே தெரியுது, சரி கிளம்பு காத்து வரட்டும்..

    ReplyDelete
  77. ஸ்பைடர் : டேய் மாயாவி உன் துருப் பிடிச்ச கையை என்ன செய்றேன்னு பாரு.

    மாயாவி : ஐயா குற்ற சக்கரவர்த்தி அவர்களே, எனக்காவது கை தான் துருப்பிடிச்சது, உமக்கு கண்ணே பீஸாப் போச்சே. நல்லாப் பாரும், எந்த கையிலே வலையை மாட்டி இருக்கேன்னு.

    ஸ்பைடர் : ச்சே, அடுத்து புத்தகத்தில் வர்றதுக்குள்ள, நாம தாத்தாவா ஆகிடப் போறோம்.

    ReplyDelete
  78. Why dose No one want to see Madesty in colour???

    ReplyDelete
  79. Why dose No one want to see Madesty in colour???

    ReplyDelete
  80. மாயாவி Vs ஸ்பைடர் 1

    மாயாவி: என்ன ஸ்பைடர் ரிட்டயர் ஆயாச்சே, செலவுக்கு என்ன பண்ற?
    ஸ்பைடர்: ஹெலிகாரை வச்சு பஞ்சு மிட்டாய் தயாரிச்சு விக்கிறேன்பா. நீ என்ன பன்ற?
    மாயாவி: இவ்விடம் செல்போனுக்கு பேட்டரி சார்ஜ் ஏற்றப்படும்னு ஒரு கடை போட்டாச்சுபா

    ReplyDelete
  81. //Why dose No one want to see Madesty in colour??? //

    அப்புறம் கலர் பாக்குரான்னு (சைட் அடித்தல் ) சொல்லிட்டாங்கன்னா? அதனால தான் எங்களுக்கு மாடஸ்டி கலரில் வேணாம் :D

    ReplyDelete
    Replies
    1. @ ரா. மு. கு
      // அப்புறம் கலர் பாக்குரான்னு (சைட் அடித்தல்) சொல்லிட்டாங்கன்னா?//

      'ஓவியப் பார்வை'ன்ற பேர்ல நீங்க சாதாரணமாவே உத்து உத்து பார்க்கிற ஆளாச்சே?! :D

      ஒருவேளை, மாடஸ்டிய கலர்ல களமிறக்கினாலும் டிசைனர் பொன்னனிடம் சொல்லி நிறைய கோடு போட்ட சட்டை மாட்டிவிடச் சொல்லணும்! உங்ககிட்டேயிருந்து மாடஸ்டிய காப்பாத்த நான் எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கு பாருங்க!

      Delete
  82. மாயாவி Vs ஸ்பைடர் 2

    ஸ்பைடர்: இப்படித்தான் 1972ல ஆக்ட்டோமேன்ங்கிற வில்லன் என்னை சண்டைக்கிழுத்தான்

    மாயாவி: தம்பி, டீ இன்னும் வரல

    ReplyDelete
  83. மாயாவி Vs ஸ்பைடர் 3

    ஸ்பைடர்: ஆர்ச்சிக்கு என்னாச்சுபா?

    மாயாவி : பய கவச டிரஸ்ஸை அயர்ன் பண்ணனும்னு புல்டோசருக்கு அடில படுத்துருக்கான். பாவம் இன்னிக்கு பத்து.

    ReplyDelete
    Replies
    1. @ Dr. அல்கேட்ஸ்

      ஹா ஹா ஹா! கலக்கல்!

      Delete
    2. செம கலக்கல் ! : D : D !

      Delete
    3. Spider Vs Steel-claw ***7***

      ஸ்பைடர் : 'உன் கவச உடை கசங்கியிருக்கு; அந்த புல்டோஸருக்கு அடியில படுத்து அழகா அயர்ன் பண்ணிக்கோ'ன்னு யாரோ ஒரு டாக்டர் சொன்னதை நம்பி அந்தப் பய ஆர்ச்சி மண்டையப் போட்டுட்டான், தெரியுமா உனக்கு?

      ஸ்டீல்-க்ளா : ம்! 'அணு உலையில் அள்ள அள்ள மின்சாரம் கிடைக்குது; அங்கே போய் கைய உடு'ன்னு அதே டாக்டர் எங்கிட்ட சொன்னதை நல்லவேளையா நான் நம்பலை!

      Delete
    4. ஹா ஹா ஹா! புல்டோசரை விட ரோடுரோலர் Smooth Finishing-ஐத் தரும்! :D

      Delete
  84. மாயாவி Vs ஸ்பைடர் 4

    ஸ்பைடர்: ஆமா இப்பலாம் கரண்ட் அடிச்சா நீ மறையறது இல்லையாமே. என்னாச்சு?

    மாயாவி: தெரியாம மழைல நனைஞ்சு ஒரு நாள் ஒயர்ல கைய வெச்சேன். இரும்புக்கை க்ஷார்ட் சர்க்யூட் ஆகிடிச்சி. இப்ப கரண்ட்ல கைய வுட்டா கண்ணு தெரிய மாட்டேங்குது.

    ReplyDelete
  85. மாயாவி Vs ஸ்பைடர் 5

    ஸ்பைடர்: என்னப்பா? அன்னிக்கி ஹோட்டல்ல தர்ம அடி வாங்கினியாமே. என்னாச்சு?

    மாயாவி: வழக்கமா பில் வரும் போது கரண்ட்ல கைய உட்டு மறைஞ்சுடுவேன். அன்னிக்கி பவர் கட். நான் மறைஞ்சுட்டேன் நினைச்சு வெளிய வரப் பாத்தேன். வெளுத்துட்டானுங்க.

    ReplyDelete
  86. //Erode VIJAY11 September 2013 15:39:00 GMT+5:30
    @ Raj muthu kumar

    wise பசங்க think alike! ;)
    //

    வயசுப் பசங்க think alike ன்னு சொல்லுறீங்கன்னு நினச்சு ஒரு நிமிஷம் சந்தோசப் பட்டுட்டேன் போங்க :D

    ReplyDelete
  87. //"நமது நேற்றைய ஜாம்பவான்கள் ஸ்பைடரும் - இரும்புக்கை மாயாவியும் இப்படி சந்தித்துக் கொண்டால் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் ?"//

    "லயன் காமிக்ஸ் அலுவலக புத்தககிட்டங்கியின் மின்சார இணைப்பை துண்டித்து தன்னை அரூபமாக்கும் முயற்சியில் மாயாவி ஈடுபட்டிருந்த போது...

    ஸ்பைடர்: ஹி ஹி ஹி ...நீ 'லயன் பழைய புத்தக' பொக்கிஷத்தை தேட்டை போடும்
    சரியான நேரத்தில் தான் வந்துவிட்டிருக்கிறேன் மாயாவி....ஸ்பைடரா கொக்கா.
    மாயாவி: ஹா ஹா ஹா...இந்த மின்சார கேபிளை பற்றும்போது ஏற்படபோகும்
    அறிவிக்கப் படாத மின்வெட்டில், நீயும் உன் சகாக்களும் அமிழும் நேரத்தில்,
    நான் அரூபமாகி தேட்டை பொக்கிஷத்துடன் நழுவி விடுவேன் ஸ்பைடர்."

    ReplyDelete
  88. Dialog எதுவுமே தோணமாட்டிகுதே...

    ReplyDelete

  89. ஸ்பைடர்: நமக்குத்தான் இங்கு வேலை இல்லையே! வா வேறு கிரகத்துக்கு ஓடிப்போய்விடலாம்!

    மாயாவி : எனக்கு சிவகாசியில் சிலை வைத்தால்தான் வேறு எங்கும் வருவேன்!


    (...ம்.. யார் யாருக்கோ தமிழ்நாட்டில் சிலை வைக்கிறார்கள் விஜயன் சார் முத்து காமிக்ஸ் 50வது ஆண்டிலாவது எனக்கு சிலை வைக்காமலா போய்விடுவார்? )

    ReplyDelete
  90. ஸ்பைடர் : யோவ் மாயாவி, உன்கூட ஒரு அரை டவுசர் பொடியன் ஒருத்தன் சுத்திகிட்டே இருப்பானே, எங்கயா அவனக்கானோம்?!

    மாயாவி : உன்கூடத்தான் ரெண்டு உதவாக்கர தடிப்பயலுவோ சுத்திகிட்டு இருப்பானுங்களே அவனுங்க எங்க அதசொல்லு மொதல்ல.

    ReplyDelete
  91. ஸ்பைடர் : அடே மாயாவி, மரியாதையா என் உதவியாளர்களை என்னிடம் ஒப்படைத்துவிடு!

    மாயாவி : அடே ஊசிகாது மண்டையா, முதலில் நீ அந்த சிறுவனை என்னிடம் ஒப்படைத்துவிடு. அந்த தடியர்களை பற்றி பிறகு யோசிப்போம்!

    ReplyDelete
  92. Spider Vs Steel-claw  ***8***

    ஸ்பைடர் : ஆந்தை விழியார் பரிசா கொடுக்கப்போற அந்த Fleetway புத்தகத்துக்காக அங்கே பலபேர் தங்களோட பட்டாணி சைஸ் மூளையை உருட்டிக்கிட்டிருக்காங்களாமே? வா, நாமும் போட்டில கலந்துப்போம்!

    மாயாவி: அட போப்பா! படிக்கவே முடியாத அளவுக்கு பயங்கரக் கடியான புத்தகத்தைத்தான் ஆந்தை விழியார் போட்டிங்கற பேர்ல யார்கிட்டயாவது தள்ளிவிடலாம்னு பார்க்கிறாராம்! ம்ஹூம், நான் வரல!

    ReplyDelete
  93. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி. ஆந்தை விழியார் என்பது யாருங்க சாமி


      அப்பாவி

      Delete
    2. @ R. Anbu

      ஆந்தை விழியார் என்பவர்...

      * ஒரே கேள்வியை எத்தனை வாசகர் கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்பவர்;
      * வாசகர்கள் விடுக்கும் பல வேண்டுகோள்களுக்கு ஒற்றை வார்த்தையில் "பார்க்கலாமே!" என்று பதிலளிப்பவர்;
      * சென்ற வருடம்வரை அவர்மட்டும் வண்ணத்தில் பல காமிக்ஸ் புத்தகங்களை ரசித்துப்படித்துவிட்டு, அதை நமக்கு கசமுசா கருப்பு-வெள்ளையில் கொடுத்தவர்;
      * புதிய பாணியை அந்நியமாய் பார்த்திடும் சில முத்துகாமிக்ஸ் ரசிகர்களின் கடுதாசிகளைப் படித்துவிட்டு அடிக்கடி மண்டையைச் சொறிபவர்;
      * காமிக்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் மொழியில் அர்த்தம் கொடுத்துக் கொண்டிருப்பவர்;
      * இங்கே இடப்படும் கமெண்ட்டுகளை ஒரு புன்னகையுடன் மெளனமாய் ரசித்துக் கொண்டிருப்பவர்!  ;)

      Delete
  94. இரும்புக்கை: ஆர்ச்சிகொரு ஆர்ச்சி, ஸ்பைடருக்கொரு மினி ஸ்பைடர், அப்படின்னு குட்டிசுவத்துல கூட சேந்து கும்மியடிசிட்டிருந்த பயலுக கூட சொல்லாமகொள்ளாம சைலண்டா செட்டிலாயிட்டானுகளே! நாம் இன்னமும் சின்ன பசங்க கூட கூட்டு சேந்து வெட்டியா சுத்திக்கிடிருக்கோமே! இதன்னை நாள் நம்ம சாகசத்துல ஒரு வயசு புள்ளைய கூட வரவிடாம துரோகம் பண்ணிட்டாங்களே! இனிமே அந்த மாடஸ்டி கதையிலையோ ஹோனஸ்டி கதையிலையோ தடாலடிய புகுந்து சாகசம்! பண்ணி ஒரு ஜூனியர் மாயாவிக்கு ரெடி பண்ணனும்!

    ஸ்பைடர்: அடேய் மெகாவாட் மண்டையா! நீ தொட்டாலே உன்னோட உடம்புல மீதி இருக்கற கொஞ்ச நஞ்ச மின்சாராமும் போயி நீ சீக்கா போயிருவே! உன்னோட சேந்து அவளுகளும் ஷாக் அடிச்சு சீக்கா போயிருவாளுக! பேசாம மோரிசுக்கு உன்னோட துருப்பிடிச்ச இரும்புக்கைய மாட்டிவிட்டு தத்துப்பிள்ளைய அறிவிச்சிடு! உடம்புல இருக்கற கொஞ்சம் நஞ்சம் மின்சாரத்த வைச்சு இருக்கற காலத்த தள்ளராத உட்டுட்டு சின்ன பொண்ணுங்களுக்கு ரூட்டு விடபோறரமுள்ள ரூட்டு !!

    ReplyDelete
    Replies
    1. // அடேய் மெகாவாட் மண்டையா //
      // மோரிசுக்கு உன்னோட துருப்பிடிச்ச இரும்புக் கைய மாட்டிவிட்டு தத்துப்பிள்ளையா அறிவிச்சுடு //
      :D :D

      இரும்புக் கையார் தொட்டாலே 'செமக் கட்டை'கூட மின்சாரம் பாய்சு கரிக்கட்டையா பூடுமே! ;)

      Delete
  95. ஸ்பைடர்: ஹையா திருடன் அகப்பட்டுட்டான்....ஹா ...ஹா ....ஹா ......
    மாயாவி : அறிவுகெட்ட முண்டம் கண்ணுதெரியலை நான் மயாவிடா. இரும்புகையை சர்வீஸ் செய்யக்கூட விடமாட்டேங்கறான் இந்த ஸ்பைடர்.

    ReplyDelete
  96. This comment has been removed by the author.

    ReplyDelete
  97. இரும்புக்கை: நேத்து ஆர்சியோட வீடு விஷேசத்துல நட்டு பொரியலும் போல்டு குருமாவையும் அளவுக்கு அதிகமா சாப்பிட்டதலேயிருந்ந்து வயித்துக்குள்ள கடமுட கடமுடான்னு ஒரே dts எபக்ட் சவுண்டா இருக்கு. அவசரமா டாயலேட் போயிட்டிருந்தவனே இப்படி வழிமறிச்சு டார்ச்சர் பண்றயே கோண மூஞ்சி குரங்கா! கைய எடு!

    ஸ்பைடர்: நாமெல்லாம் யாரு இன்வேர்ட்டர் மண்டையா! சூப்பர் ஹீரோக்கள் ஆச்சே! நாம எப்போவுமே நம்பர் ஒண்ணுக்கு மட்டும் தான் எய்ம் பண்ணனும். நம்பர் டூவுக்கு நாமளும் போறோமுன்னு வெளியில தெரிஞ்ச வருங்கால உலகம் நம்மள வசை பாடாதா ?? உன்ன போக உடமாட்டேன்!

    ஸ்பைடர் ( மைன்ட் வாய்ஸ் ) : இப்படி கண்டத திங்க வேண்டியது, நைட்டெல்லாம் ரூம்புக்குள்ள சத்தமில்லாம சாகசம் பண்ண வேண்டியது.மூச்சு விடக்கூட முடியல சாமி! நம்ம பட்ஜெட் கம்மியானதுக்கபுறம் பாசறை கோட்டையெல்லாம் வந்த விலைக்கு லீசுக்கு விட்டுட்டு இவனோட ஒரே ரூம்ல தங்க முடிவெடுத்தது தப்பா போச்சே! கரண்ட்டு கட்டாகும்போது இன்வேர்ட்டர் வாங்காம, இவனோட வாயிக்குள்ள பல்ப வைச்சு எரிச்சுக்கலாமுன்னு ஐடியா பண்ணது பேராசையா தெரியுது. இன்னைக்கு நாம இவனுக்கு கொடுக்கற டார்செர்ல பயலுக்கு புத்தி வரணும்

    ReplyDelete
  98. Spider Vs Steel-claw ***9***

    ஸ்பைடர் : ஹி ஹி! கொஞ்ச காலமாவே என்னைப் பார்த்தா யாருமே பயப்படறதில்லை; அதான், ஹெலிகாரை வித்து கிடைச்ச காசில என் முகத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வந்திருக்கேன்! இப்ப என்னைப் பார்த்தா பயம் வருதா, இல்லையா க்ராண்டேல்?

    மாயாவி : உன்னைப் பார்த்துப் பயம் வருதோ இல்லையோ; இப்படியே காலை விரிச்சுட்டு தொங்கிட்டிருந்தா எங்கே உன் பேண்ட்டு கிழிஞ்சுடுமோன்னுதான் கொஞ்சம் பயமாயிருக்கு ஸ்பைடர்!

    ReplyDelete
  99. Spider Vs Steel-claw  ***10***

    ஸ்பைடர் :  ஹோ ஹோ!  அந்த சட்டித் தலையன் ஆர்ச்சியின் கதையை முடிச்சுட்டேன். அடுத்ததா உன்னையும் தீர்த்துக்கட்டிடேன்னா அப்பறம் 'சூப்பர் ஹீரோ'ங்கற அசைக்க முடியாத இடம் எனக்கு மட்டும்தான், க்ராண்டேல்!

    மாயாவி :  ம்க்கும்! உங்கிட்ட இந்தக் கொக்கரிப்புக்கு மட்டும் குறைச்சலே கிடையாது ஸ்பைடர்! முதலில் லயன் காமிக்ஸின் ஃபில்லர் பேஜிலாவது இடம் கிடைக்குமானு பாரு; அப்புறமா அசைக்க முடியாத இடத்தைப்பத்தியெல்லாம் பேசுவியாம்!

    ReplyDelete
  100. ஸ்பைடர்: மாயாவி! உனக்கு 'மான் கராத்தே' எல்லாம் தெரியுமா...!? ஹா.. ஹா.. ஹா..

    மாயாவி: நாராயணா! இந்த கொசு தொல்ல தாங்க முடியல.. நாராயணா..

    ReplyDelete
  101. ஸ்பைடர்: மாயாவி.. நீயெல்லாம் 'அதுக்கு' சரிப்பட்டு வரமட்ட...

    மாயாவி: நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்..?! எடிட்டர் சார் சொல்லுங்க நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்.. நண்பர்களே.. நீங்க சொல்லுங்க.. நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்...

    ReplyDelete