Powered By Blogger

Sunday, September 29, 2013

ஒரு சகாப்தம் - ஒரு சாம்ராஜ்யம் !

நண்பர்களே,

வணக்கம். புதியதொரு திக்கில் மூட்டைகளைக் கட்டிக் கொண்டு இவ்வாரத் துவக்கத்தில் புறப்பட்ட போது எனது இலக்குகள் ஐரோப்பாவின் இரு பேஷன் தலைநகரங்களாய் இருந்தன ! திரும்பிய திசையெல்லாம் மிரளச் செய்யும் designer brands ; perfumes என்று உலகுக்கே உச்ச ஸ்டைலையும் ; நவநாகரீகத்தையும் அடையாளம் காட்டும் பெருமை இத்தாலியின் மிலான் நகருக்கும் , பிரான்சின் பாரிசுக்கும் உண்டு ! ஆனால் நமக்கோ இவ்விரு நகரங்களுடனான பந்தமோ முற்றிலும் மாறுபட்ட ரகம் !ஐரோப்பியக் காமிக்ஸ்களின் 'வண்ணத் தலைநகர்'-  பாரிஸ் என்று சொன்னால் - அதன் 'black & white தலைநகர்' நிச்சயமாய் மிலான் தான் ! 

எனது இதர பணிகளின் நிமித்தம் பிரான்சுக்கு ஷண்டிங் அடிக்கும் வாய்ப்புகள் சற்றே அதிகம் என்பதால் அங்குள்ள நமது பதிப்பகங்களில்  நான் தலையைக் காட்டும் வாய்ப்புகளும் ஜாஸ்தி . ஆனால் நமது இத்தாலியப் படைப்பாளிகளை பெரும்பாலும் மின்னஞ்சல்கள் மார்க்கமாய் தான் தொடர்பு கொள்வது வாடிக்கை என்பதால் - அவர்களை நேரில் சந்தித்து நிறைய காலம் ஆகி இருந்தது ! தவிரவும், டெக்ஸ் வில்லர் கதைகளின் தாய் வீடான செர்ஜியோ போனெல்லி நிறுவனத்தினில் பெரியவர் செர்ஜியோ காலமாகி 2 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் அவர்தம் புதல்வர் டேவிட் பொறுப்பில் உள்ளார் ! 'புதிய தலைமுறையோடு ஒரு பரிச்சயத்தை உருவாக்கிக் கொண்டது போலவும் ஆச்சு ; நமது தீபாவளி மலரில் வரவுள்ள டெக்ஸ் வில்லரின் பின்னணிகள் குறித்ததொரு  நேர்காணலையும் நடத்தியது போலவும் ஆச்சு !' என்ற சிந்தனை என்னுள் இருந்தது ! ஆனால் -'பெரியவர் செர்ஜியோ பற்றியதொரு ஆவணப் படம் உருவாகும் தருணம் என்பதால் போனெல்லி நிறுவனத்தில் அனைவருமே இப்போது படு பிஸி ; உங்களுக்கு நேரம் வழங்குவது சந்தேகமே ! ' என்ற ரீதியிலான பதிலே கிட்டியிருந்தது ! 'சரி - கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பி, பதில் வாங்கி விட்டு - டேவிட்டின் ஒரு போட்டோவையும் போட்டு விட்டு  'நானும் ரவுடி ; நானும் ரவுடி ; புதுசாய் form ஆகி இருக்கேன் என்று மார்தட்டிக் கொள்ள வேண்டியது தான் போலும் ! ' என்ற நினைப்போடு சென்னை விமான நிலையத்தில் அமர்ந்து பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த போது எனது blackberry-ல் சந்தோஷ சேதி வந்தது ! 'புதன் காலையில் முதல் வேலையாக வந்திட முடிந்தால் கொஞ்ச அவகாசம் ஒதுக்கிட முடியும் ..அவசியம் வாருங்கள் !" என்று போனெல்லியின் மின்னஞ்சலை வாசித்த போது சந்தோஷம் + குழப்பம்  மண்டைக்குள் ! 'ஆஹா...! கேள்விகள் என்று எதையும் உருப்படியாய் தயார் செய்திடவில்லையே..!" என்ற குடைச்சல் ஒரு பக்கமெனில் வித்தியாசமான பிறாண்டல் சிரத்தின் இன்னொருபுறம் ! நமது இதர பணிகள் இயந்திர இறக்குமதி தொடர்பானவை என்பதால் நான் பயணிப்பது அவற்றை சோதித்திடவும் , அவற்றினை நாம் வாங்கும் பட்சத்தில் லோடிங் மேற்பார்வை செய்திடவுமே என்பதால் எனக்கு எப்போதுமே ரெண்டு பழைய ஜீன்சும் ; சட்டைகளும் போதுமானவையாக இருப்பது வழக்கம். லார்ட் லபக்தாஸ் ரேஞ்சில் கோட்-சூட் என்பதெல்லாம் இந்தப் பணிகளுக்கு ஒத்து வரா சங்கதிகள் என்பதால், இம்முறையும் எனது பையில் அவற்றிற்கு இடமோ / அவசியமோ இருந்திருக்கவில்லை ! ஆனால் திடு திடுப்பென போனெல்லியை சந்திக்கும் வாய்ப்பு என்ற போது பிரான்க்பார்ட் புத்தகத் திருவிழாக்களில் ஒவ்வொரு பதிப்பகப் பெரும்தலையும் அணிந்து வரும் உயர்ரக சூட் வகைகள் என் மனத்திரையில் விறுவிறுப்பாய் ஓட, 'ஜீன்ஸில் போய் ஏளனத்தை சம்பாதிக்கப் போகிறாய் மகனே !' என்ற எச்சரிக்கைச்   சங்கை ஊதியது எனது மண்டை ! செல்லும் இடத்தில் ஒரு சூட் வாங்கிக் கொள்ளலாம் தான் ; ஆனால் ஒரு கால் மணி நேரக் கூத்திற்காக கால் லட்சத்தை சூறை போட்டு விட்டு, வீடு திரும்பிய பின்னே பாச்சான் உருண்டைகளோடு தோஸ்த்தாக்கி விடுவதைத் தாண்டி அந்தக் கோட்டுக்கு உருப்படியாய் வேறு உபயோகம் எதையும் ஒதுக்கிட இயலாதே !என்ற உறுத்தல் உள்ளுக்குள் ! 'சரக்கு..முறுக்கு...செட்டியார்..'என்றெல்லாம் ஏதேதோ தலைக்குள் ஓடினாலும் ; 'சரி, ஆக வேண்டியதைக் கவனி !' என்ற கட்டளையையும் ஒலிக்கச் செய்தது சிரம் ! 

டயரியை எடுத்துக் கொண்டு டெக்ஸ் தொடர்பாய் நாம் கேட்கக்கூடிய கேள்விகளை கொஞ்சம் கொஞ்சமாய் உருவகப்படுத்திடத் தொடங்கினேன் ! முன்அறிமுகம் இல்லா இளைஞர் என்ற விதத்தில் - டேவிட்டிடம்  'தொண தொண'வென கேள்விகளைக் கேட்டு வைத்து கடுப்படித்து விடக் கூடாதென்பது முக்கியமாய்த் தோன்றியது ! தவிரவும், டேவிட் சமீபத்தைய வரவு எனும் போது அவருக்கு டெக்சின் சரித்திரம் ; பின்னணி எத்தனை தூரத்திற்குத் தெரிந்திருக்குமோ என்ற சின்ன சலனமும் என்னுள் இல்லாதில்லை ! So - துவக்க நாட்கள் பற்றிய கேள்விகளைக் கேட்டு வைத்து அவரை நெளியச் செய்ய வேண்டாமே என்றும் தோன்றியது ! இங்கு நண்பர்கள் பலரும் எழுப்பி இருந்த கேள்விகளையும் கொஞ்சம் இணைத்துக் கொண்டு ஒரு வழியாய் 18 questions கொண்டதொரு பேப்பரைத் தயார் செய்திருந்தேன் !

செவ்வாய் பகலில் எனது மற்ற பணிகளை நிறைவு செய்து விட்டு, புதன் காலையில் வெகு சீக்கிரமே போனெல்லியின் அலுவலகத்தை எட்டிப் பிடித்து விட்டேன் - வெள்ளாவியில் வைத்தெடுத்ததொரு ஜீன்ஸில் ! முதல் மாடியில் விசாலமான அலுவலகம்....சின்ன தயக்கத்தோடு காலிங் பெல்லை அழுத்தினேன் - இன்னொரு கையில் நம் விசிடிங் கார்டோடு ! 'படக்' கெனக் கதவைத் திறந்த ஆசாமி ஒரு கையில் குட்டியான espresso காபி சகிதம் சகஜமாய் என்னை உள்ளே வரவேற்றார்- 'Hi ...I am David !" என்று சொல்லியவாறே ! "இத்தனை சீக்கிரமாய் வருவீர்களென எதிர்பார்க்கவில்லை !" என்று சொன்ன அந்த ஆஜானுபாகுவான உருவமும் ஒரு ப்ளூ ஜீன்ஸில் casual ஆக இருந்ததைப் பார்த்த போது எனக்கு கொஞ்சமாய் மூச்சுத் திரும்பியது ! ஆறடிக்குக் கொஞ்சம் கூடுதலான உயரம் ; ரொம்பவே நேசமான கண்கள் ; கையில் ஒரு tattoo அடையாளம் என துளி பந்தாவுமின்றி என் முன்னே நின்ற அந்த நபர் தான் இத்தாலிய காமிக்ஸ் சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியா சக்கரவர்த்தி என்பதை மெதுவாய் ஜீரணம் செய்தது எனது மூளை !
Tex # 636 !!
கொஞ்சமும் தயக்கமின்றிப்  பாலங்கள் அமைப்பது இன்றைய தலைமுறைக்கு எத்தனை சுலபம் என்பதை சகஜமான தனது பேச்சில் எனக்குப் புரியச் செய்தவர் அவர்களது மீட்டிங் அறைக்கு என்னை இட்டுச் சென்ற அதே கணத்தில், அவர்களது தலைமை நிர்வாகியான ஒரு பெண்மணியும் மிடுக்காய் அங்கே வந்து சேர்ந்தார் ! முகத்தில் புன்சிரிப்பு என்பதைத் தாண்டி அந்தக் கண்களும் புன்னகைப்பதை இருவரிடமும் என்னால் உணர்ந்திட முடிந்தது ! அவரது தந்தை செர்ஜியோவின் இரண்டாம் நினைவு நாள் சரியாக மறு தினம் என்பதால் - அவரது நினைவாய் அவருக்கு ரொம்பவே பிடித்தமான jukebox -கள் (காசு போட்டு பாட்டைத் தேர்ந்தெடுத்தால் பாடச் செய்யும் மிஷின்) வரவேற்பறையிலும், உள்ளறைகளிலும் ஒய்யாரமாய் அமர்ந்திருப்பதை டேவிட் எனக்குச் சுட்டிக் காட்டினார் ! இந்தியாவில் நீங்கள் இருப்பது எங்கே ? என்று அவர் வினவிய போது நான் ஒரு பேனாவை எடுத்து சின்னதாய் தென்னிந்தியாவை படம் வரைந்து - 'இது சென்னை..இது பெங்களுரு' என பாகங்கள் குறிக்கும் போது -"மதுரைக்கு நீங்கள் எத்தனை அருகாமை ? " எனக் குறுக்கிட்டார்  மனுஷன் ! அப்புறம் தான் தெரிந்தது இந்தியா அவருக்கும்,அவரது தந்தைக்கும் ஒரு பிடித்தமான விடுமுறைக்களம் என்றும் ; 2003-ல் வருகை புரிந்திருந்த போது - சென்னை ; மாமல்லபுரம் ; பாண்டிச்சேரி ; மதுரை ; கொடைக்கானல் ; திருச்சி  என செம ரவுண்ட் அடித்திருந்த விஷயம் ! 'ஹி..ஹி.' என அசடு வழிந்து கொண்டே நான் தலையை ஆட்டி வைக்க, உடனிருந்த அந்தப் பெண்மணி இந்தியாவுக்கு தான் வந்ததில்லை என்ற போதிலும், பிரபல யோகா மாஸ்டரான B.K. அய்யங்காரின் எண்ணற்ற சிஷ்யைகளுள் தானும் ஒருவர் என்று சொன்ன போது பெருமையாக இருந்தது ! ஊசிப்   போன மசால்வடையைப் பார்வையிடும் தோரணையோடு  'இந்தியாவா ?" என 1985 / 86-ல் பல பெரும் பதிப்பகங்கள் புருவத்தை உயர்த்திய காலங்கள் மலையேறி விட்டன ;  நம் தேசம் உலக அரங்கில் இன்று ஒரு தவிர்க்க இயலா அங்கம் என்ற அங்கீகாரத்தோடு உலவுகிறோம் என்ற உணர்தல் ஒரு வித போதையாய் இருந்தது !

டெக்ஸ் பொம்மைகள் ; போஸ்டர்கள் ; ஓவியங்கள் ; ஆல்பம்கள் !
அங்கும் இங்குமாய்ப் பயணித்த பேச்சு - நமது டாப் கௌபாய் டெக்சை எட்டிப் பிடிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை ! 'நித்தமும் நாங்கள் டெக்சுக்கு ஒரு மானசீக சலாம் போட்டு வைக்கத் தவறுவதே இல்லை ! 'என டேவிட் சொன்ன போது அது ஒரு பேச்சுக்காகச் சொல்லப்பட்ட மிகைப்படுத்தலாகத் தோன்றவே இல்லை ! டெக்ஸ் வில்லரைத் தாண்டி போனெல்லியின் பண்ணையில் உருவாகும் பாத்திரங்கள் ஏராளம் என்ற போதிலும், அவர்களது அலுவலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் பிடரியில் அறைவது டெக்சின் எண்ணற்ற சித்திரங்கள் ; உருவ பொம்மைகள் ; போஸ்டர்கள் இத்யாதிகளே ! அவர்களது அண்டம் சுழல்வது டெக்ஸ் வில்லர் எனும் இரவுக் கழுகைச் சுற்றியே என்பதை துளி சந்தேகமும் இன்றிப் புரிந்திட முடிகிறது ! எங்கிருந்தோ நமது "சிகப்பாய் ஒரு சொப்பனம் & நிலவொளியில் ஒரு நரபலி " இதழ்களை எடுத்து வந்த Ms .ஆர்நெல்லா - நமது புதிய சைஸ்கள் ; அமைப்புகளைச் சிலாகித்துப் பேசிய போது டேவிடும் ஆர்வமாய் தலையாட்டிட - எனக்குக் கொஞ்சமாய் நெளியத் தோன்றியது ! Hardcover editions ; அட்டகாசமான மெகா சைஸ் ஆல்பம்கள் என போட்டுத் தாக்கும் அவர்களின் படைப்புகளின் முன்னே நாம் நோஞ்சான் கோழியாய் தோன்றினாலும், அவர்களது பரிவு நமது இதழ்களையும் 'தேவலை' என்ற ரகத்திற்குத் தூக்கி நிறுத்துவதை உணர்ந்திட முடிந்தது ! நம் ரசிகர்களின் அசாத்திய டெக்ஸ் காதல் அவர்களுக்கு துல்லியமாய்த் தெரிந்திருப்பது நிறையவே ஆச்சர்யத்தைத் தந்தது எனக்கு ! சின்ன விற்பனை எண்ணிக்கை என்பதையும் தாண்டி நாம் காட்டும் இந்தக் காமிக்ஸ் நேசம் அவர்களை எக்கச்சக்கமாய் குதூகலம் கொள்ளச் செய்வதைப் புரிந்திட முடிந்தது ! Pat yourself on the backs amigos!


ஆசியாவில் டெக்ஸ் வில்லரை வெளியிடும் ஒரே பதிப்பகம் நாமே ! என்று அவர்கள் சொன்ன போது ஆந்தை விழிகள் - பெட்ரோமாக்ஸ் லைட்களாய்  மாறுவதைத் தவிர்க்க இயலவில்லை ! அது மட்டும் இல்லாது - இத்தாலியில் Naples நகரில் 2010ல் நடைபெற்ற COMIC CON திருவிழாவின் போது - போனெல்லி குழுமத்தின் வளர்ச்சி ; நாயகர்கள் அணிவகுப்பு இத்யாதிகளைப் பற்றி பிரத்யேகமாய் L"AUDACE BONELLI என ஒரு 246 பக்க இதழ் வெளியாகியுள்ளது என்றும்; அந்த புக்கில் நமது லயன் காமிக்ஸ் பற்றிய குறிப்பும் உள்ளது என்று சொன்ன போது பெட்ரோமாக்ஸ் லைட்கள் - பிலிப்ஸ் ட்யூப்லைட்களாக மாறிப் போயின ! "பவளச் சிலை மர்மம்" அட்டைப் படத்தோடு காட்சி தரும் அந்தப் பக்கத்தைப் பாருங்களேன் !


நாங்கள் அமர்ந்திருந்த அறையின் சுவற்றிலொரு பெரிய போர்ட் ஒன்றில் தொடரும் மாதங்களது வெளியீட்டு அட்டவணைகளைக் குறித்து வைத்திருந்தனர் ! தலை சுற்றச் செய்யும் எண்ணிக்கையிலான இதழ்கள் ; துல்லியமான திட்டமிடல்கள் ; அசாத்திய விற்பனை வழிமுறைகள் ; அனைத்துக்கும் மேலாய் இத்தாலிய மக்களின் காமிக்ஸ் காதல் என்று அந்தப் பலகையில் எனக்குப் புலப்பட்ட விஷயங்கள் ஏராளம் !

ஒரு சாம்ராஜ்யத்தினை நிர்மாணிப்பதும் ; அதனை நிர்வகிப்பதும் அதிக வேற்றுமை கொண்டவைகள் அல்லவென்பது புரிந்தது ! இரண்டுமே அசாத்திய உழைப்பும், ஆற்றலும் கொண்டோர்க்கு மாத்திரமே சாத்தியமாகும் என்பதை போனெல்லி உருவாக்கி விட்டுச் சென்றுள்ள இந்த ராஜ்ஜியம் எனக்குக் கண் முன்னே காட்டியது ! கடைசி பத்து ஆண்டுகளாய் அங்கேயே வாழ்ந்து ; அங்கேயே பணியும் செய்து வந்த அந்த முதியவரின் அறையைப் பார்வயிட முடிந்த போது பிரமிக்கச் செய்தது அவரது வேற்று மொழி கௌபாய் காமிக்ஸ்களின் சேகரிப்பு ! சாகசப் பிரியரான செர்ஜியோவின் பயணங்கள் அவரை பூமியின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் இட்டுச் சென்றுள்ளதை  அங்குள்ள souvenirs  பறைசாற்றின !
Mr.Sergio Bonelli's room !
அலுவலகத்தின் ஒவ்வொரு பாகத்தையும் சுற்றிக் காட்டினார்கள் ; மர்ம மனிதன் மார்டின் கதைகளின் எடிட்டர் தனது அறையில் என்னை சந்தித்த மறு கணம் "லயன் காமிக்ஸ் ? மார்டின் கதைகள் தமிழில் வெளியிட்டு உள்ளீர்கள் அல்லவா ? " என்று நெற்றியடி அடித்தார் ! சாணித் தாளில் ; சுமாராய் குப்பை கொட்டிய நம்மையே நினைவு வைத்திருக்கும் அவரை ஆர்வமாய் நலம் விசாரித்து விட்டு அடுத்த அறைக்குள் நுழைந்த போது ஆர்டிஸ்ட் ஒருவர் JULIA என்ற கதை வரிசையின் பக்கமொன்றுக்கு சித்திரம் தீட்டிக் கொண்டிருந்தார் ! பெரும்பான்மையான ஓவியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி பக்கங்களை அனுப்பிடுவார்களாம் ; அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் வெகு சொற்பமே என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன் ! மணியைப் பார்த்த போது பக்கென்று இருந்தது - கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடி விட்டு இருந்தது ! 'அவர்களது இதர வேலைகள் கெட்டு விடக் கூடாதே !' என்ற உறுத்தல் என்னுள் இருந்த போதும் அவர்கள் இருவருமே மிகுந்த ஈடுபாட்டோடு என்னோடு நேரம் செலவிட்டது மிகுந்த நிறைவாய் இருந்தது !  நான் கேட்க வேண்டிய கேள்விகளை பேச்சின் இடையே கேட்டுக் கேட்டு பதில்களைக் கறந்திருந்தேன் என்பதால் ஒரு போட்டோ எடுத்து விட்டு புறப்படலாம் என்று தீர்மானித்தேன் ! சுவர் எங்கிலும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பின்னணியில் டேவிட்டும் நானும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் !

புறப்படும் முன்னர் அவர்களது புதிய முயற்சிகளின் மாதிரிகள் ; விளம்பரங்கள் என நிறையக் காட்டினார்கள் ! Sci -fi ரகக் கதைகளுள் கால் பதிக்கும் முயற்சி - வண்ணத்தில், அட்டகாசமான ஓவியங்களோடு இருந்தது ! பிரமிப்பு அகலாமல் அவர்களிடம் விடை பெற்று விட்டுப்  புறப்பட்ட போது வாசலிலும் புன்னகைத்தார் டெக்ஸ் - பெரியதொரு போஸ்டரில் ! இதழ் # 636 -ஐ எட்டிப் பிடித்திருக்கும் இந்தக் கௌபாயும் ; இவரது சாம்ராஜ்யமும் 65 ஆண்டுகள் முதிர்ந்தவை எனினும் - இன்றைய புது வரவுகளுக்கு சளைக்காது சவால் தந்திடும் அந்த ரகசியம் தான் என்னவோ ? என்ற சிந்தை தான் தலைக்குள் ஓடியது ! உங்களுக்காவது பதில் தெரியுமா guys ?

போனெல்லியின் பதில்கள் நம் தீபாவளி மலரில் என்றாலும் -   நான் கேட்ட கேள்விகளின் பட்டியல் மாத்திரம் இதோ :
  1. டெக்ஸ் வில்லர் ஒரு சகாப்தம் என்பதை அறிவோம் ! இத்தாலிய மக்கள் அவரை ஆராதிக்கும் விதம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்....! 
  2. குறைந்த பட்சம் 3 தலைமுறைகளைப் பார்த்திட்ட பெருமை டெக்ஸ் வில்லருக்கு உண்டு ! இன்றைய இளைய தலைமுறை இவரை ரசிக்கும் விதத்தில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா ?
  3. உலகெங்கும் காமிக்ஸ் களம் ஏராளமாய் மாறியுள்ளது ! மங்கா ; கிராபிக் நாவல் என்றெல்லாம் ரசனைகள் பயணிக்கும் இந்தப் புதிய மேடையில் டெக்ஸ் வில்லரின் கௌபாய் பாணிக்கு வெற்றி வாய்ப்புகள் எவ்விதம் என்று கணிக்கிறீர்கள் ?
  4. டெக்ஸ் கதைகளின் பின்னணியில் தற்சமயம் உள்ள creative டீம் பற்றிச் சொல்லலாமா ?
  5. 635 இதழ்கள் வெளியான பின்னரும் கூட , உங்களின் கதாசிரியர்களால் Wild West-க்குள் சலிப்பூட்டா புதுக் கதைக்கருக்களை கொணர இயல்வது எவ்விதம் ?
  6. ஒரு 114 பக்க டெக்ஸ் சாகசத்தை உருவாக்க அவசியமாகும் கால அவகாசம் எவ்வளவோ ? இந்த ஆக்கத்தின் வெவ்வேறு கட்டங்களைப் பற்றிக் கொஞ்சமாய்ச் சொல்லுங்களேன் ப்ளீஸ் ?
  7. ஒரு தொடர் லேசாய் பிரபலம் பெற்று விட்டாலே - அதன் சக பாத்திரங்களைக் கொண்டு தனிப்பட்டதொரு கதை வரிசையை வெளியிட நிறைய பதிப்பகங்கள் எத்தனிப்பது இன்று வாடிக்கை ! இது போன்ற spinoff முயற்சியில் போனெல்லி குழுமத்திற்கு ஏதேனும் ஆர்வம் உண்டா ?உதாரணத்திற்கு டெக்சின் மகன் கிட் or கார்சனைக் கொண்டே ஒரு தனி கதை வரிசை உருவாக்குவது சாத்தியம் தான் அல்லவா ?  
  8. இது டெக்ஸ் வில்லரின் ஆண்டு # 65 ! ஆசாமிக்கு ஏதேனும் ஒரு புதுவித லுக் வழங்கும் சிந்தனைகள் உண்டா ? 
  9. இத்தாலி தவிர உலகின் வேறு எந்த தேசங்களில் டெக்ஸ் பிரபலம் ? 
  10. ஒரு காமிக்ஸ் ஜாம்பவான் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அனுபவம் எவ்விதம் இருந்துள்ளது ? காமிக்ஸ் பொறுப்பேற்க வேண்டுமென்ற ஆர்வம் உங்களிடம் சிறு வயது முதலே இருந்ததா ?
  11. உங்களின் favorite காமிக்ஸ் ? 
  12. இத்தாலியில் உருவாகிய டெக்ஸ் வில்லருக்கு தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சின்னதாய் - ஆனால் அற்புத உத்வேகமானதொரு ரசிக அணி இருப்பது உங்களுக்குத் தெரியும் ! மொழி ; தேசம் என்ற தடைகளைத் தாண்டி டெக்ஸ் ஜெயிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள் ? 
  13. போனெல்லி குழுமத்தின் வளர்ச்சியினில் டெக்ஸ் வில்லரின் பங்கு எத்தனை சதவிகிதம் இருக்குமென்று சொல்வீர்கள் ?
  14. சமீபத்திய டெக்ஸ் விற்பனை எண்ணிக்கைகள் பற்றிச் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ? 
  15. போனெல்லி குழுமத்தின் TOP 3 தொடர்கள் எவை ? விற்பனை /பிரபல்யம் என்ற கண்ணோட்டங்களில் சொல்லுங்களேன் ? 
  16. டெக்ஸ் வில்லருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாசகியரும் உண்டா ?
  17. டெக்சின் இளமைக் கால சாகசங்களை வெளியிடும் திட்டங்கள் ஏதேனும் ?  
  18. ஆங்கிலத்தில் டெக்ஸ் தொடர வாய்ப்பு ஏதேனும் ?
இன்னும் சில சமீபத்திய updates உள்ளதால் - நாளைய பகலில் எழுதுவேன் ! தவிர சென்ற பதிவிலும் எனது பதில்கள் இடம் பெறச் செய்வேன் ! இப்போதைக்கு கனவுலகம் கூப்பிடுவதால் - adios amigos !

Updates :

கடந்த பதிவிலேயே செய்திருக்க வேண்டிய acknowledgement இது - ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் எப்படியோ விடுபட்டுப் போய் விட்டது ! கடந்த வார ஜூனியர் விகடனில் வந்திருந்த நமது விளம்பரத்தின் டிசைன் உபயம் - நண்பர் கார்த்திக் சோமலிங்கா ! இதோ அவர் அனுப்பி இருந்த ஒரிஜினல் !  As always, great job Karthik and thanks indeed !


நண்பர் ரமேஷ் குமாரின் அன்பு அதகளத்தைப் பாருங்களேன்....!




AWESOME Ramesh Kumar ! Thanks a ton !

போனெல்லியில் பேசிக் கொண்டிருக்கும் சமயம், அவர்களது இதர வெளியீடுகள் பற்றியும் பேச்சு எழுந்தது ! சமீப மாதங்களாய் அவர்களது சீனியர் ஓவியர்கள் / கதாசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாய் - ஒரு புது வரிசையினை அறிமுகம் செய்துள்ளனராம் ! ஒவ்வொரு கூட்டணிக்கும்  மாதம் ஒரு 114 பக்க black & white கதையினை தயாரிக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது - எந்தவொரு குறிப்பிட்ட நாயகரையும் முன்னிலைப்படுத்தாமல் ! In fact இந்தக் கதைகளில் ஹீரோவென யாருமே கிடையாது ! கௌபாய் கதைகளாய் எழுதி / வரைந்து தள்ளும் ஒரு கூட்டணிக்கு ஒரு சமகாலத்துப் படைப்பை உருவாக்கும் ஆசை இருந்திடலாம் ; மர்ம மனிதன் மார்டினுக்குப் பணியாற்றும் கூட்டணிக்கு ஒரு வரலாற்று சம்பவத்தைப் பற்றிய கதையை உருவாக்கும் ஆசை இருந்திடலாம் ! So - இது போல் அவர்களது ஆர்வங்களை வெளிப்படுத்த இந்தப் புது வெளியீடுகளை போனெல்லி பயன்படுத்துகிறது ! சிப்பாய் கலகம் ; பிரெஞ்சுப் புரட்சி ; ஒரு தொடர் கொலையாளியின் வேட்டை - என வெவ்வேறு genre களில் உருவாகி இருக்கும் அந்தக் கதைகளைப் பார்த்தேன் - பளிச் சித்திரங்களுடன் ரொம்பவே வித்தியாசமாய் தெரிந்தது ! அவற்றின் ஒரு சிலகதைகளை மொழியாக்கம் செய்து படித்துப் பார்த்து விட்டு - ஓகே என்றானால் நமது இதழ்களில் அவ்வப்போது வெளியிடலாம் என்ற எண்ணம் உள்ளது !

மிலான் நகரில் இதர பணிகளையும் முடித்துக் கொண்டு இரவு பாரிஸ் சென்றடைந்த போது இரவு 11 ஆகி இருந்தது ! மறு நாள் மதியமே ஊருக்குத் திரும்பும் அவசரம் என்பதால் அரக்கப் பரக்க ஓடினேன் நமது பதிப்பகங்களைத் தேடி ! இது அவர்களது பிஸி சீசன் என்பதால் அலுவலகமே 'ஜிவ்' வென்று துரித கதியில் இயங்கிக் கொண்டிருக்கக் கண்டேன் ! அவர்களுடன் அதிக நேரம் செலவிடவில்லை என்றாலும், நிறைவாய் நிறைய விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள முடிந்தது ! அது பற்றி இன்னொரு பதிவில் ! (மெகா சீரியல்களின் பாதிப்பு ?!) திரும்பும் வழியில் தமிழர்கள் நிறைந்திருக்கும் பாரிசின் முக்கிய வீதியில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டினுள் நுழைந்த போது 'பளிச்' என பல்லைக் காட்டினார் திருவாளர் ஸ்பைடர் !! நண்பர் திருச்செல்வத்தின் முயற்சிகளால் பாரிசை எட்டிப் பிடித்துள்ள "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" + சுட்டி லக்கி இத்யாதிகளில் ஒவ்வொரு பிரதியினைப் பார்த்திட முடிந்த போது சந்தோஷமாய் இருந்தது :-)

வரும் மாதத்துக்கு குமுதம் ரிப்போர்டர் இதழினில் அரைப் பக்க விளம்பரம் செய்யவுள்ளோம் ! As always நண்பர்களது டிசைன் உதவிகள் வரவேற்கப்படும் !  Please do give it a shot guys ?

181 comments:

  1. sir,
    one question for you.

    the mind voice behind the looks on the photo with david? (its no ordinary look)

    ReplyDelete
    Replies
    1. Mahesh : அந்த நேரத்தைய mind voice : "தொப்பை போட்டோவில் தெரியக் கூடாது....மூச்சை இழுத்துப் பிடி !!" :-)

      Delete
    2. ஹா ஹா ஹா! உண்மையான மைன்ட் வாய்ஸ்! :)

      Delete
  2. டெக்ஸ்-ன் இடத்தில் நமது ஆசிரியர்! ஏதோ நானே அந்த இடத்தில் இருப்பது போன்று ஒரு உணர்வு. பதிவை படித்துக்கொண்டு இருக்கும் போது திடும் என முடிந்து விட்டதே. ஒ ஒ இன்னும் எழுதுகிறேன் என்று முடித்து இருக்கிறீர்கள் காத்திருக்கிறேன் ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. Karnan L : பிரியமான தலைப்பில் எதைப் படித்தாலும் ; எவ்வளவு படித்தாலும் போதாது தான் :-)

      Delete
  3. Superb Posting Sir!
    Convey our besh wishes to Bonelli Publishers..
    Thanks for giving us the live update..
    Take care.

    ReplyDelete
  4. அருமையான பதிவு. உங்களுடைய முயற்சிக்கு உலகளாவிய அங்கிகாரம் இது!

    ReplyDelete
    Replies
    1. Electron Karthick : சிறு திருத்தம் ...

      நமது முயற்சிகளுக்கு என்று சொல்லிடலாமே...! ஒரு கை மாத்திரமே ஒரு நாளும் உரக்க ஒலி எழுப்பப் போவதில்லை அல்லவா ?

      Delete
  5. அருமையான பதிவு

    ReplyDelete
  6. டெக்ஸின் மியூசீயத்தைச் ஒரு வசீகரமான கைடின் உதவியுடன் சுற்றிப் பார்ததுப்போன்ற நிறைவைத் தந்துள்ளது தங்களின் இந்த பதிவு. டெக்ஸை நாம் சும்மா டைம் பாஸ்க்கு ரசிக்கிறோம் அவர்களோ உயிராகவே நேசிக்கிறார்கள். டெக்ஸை உணவாகவே சாப்பிடுவர்கள் மத்தியில் நாம் அட்லீஸ்ட் ஊறுகாய்ப் போலாவது தொட்டுக்கொள்கிறோம் என்கிற வகையில் திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. MH Mohideen : ஆண்டுக்கு 4 கதைகள் வெளியானாலே "ஓவர்டோஸ் " என்று நாம் அபிப்ராயம் கொள்ளும் வேளையில் - பிரத்யேகமாய் டெக்ஸ் கதைகளை மாத்திரமே மாதம்தோறும் வெளியிட்டு, வெற்றியும் ஈட்டும் ரகசியம் தான் புரிபட மாட்டேன்கிறது !

      Delete
    2. டைம்பாஸ்கு டெக்ஸ்.அ?? யாருங்க அப்பிடி நெனைக்கிறது?

      Delete
  7. Thanks for the live updates. David looks real simple and cool.

    ReplyDelete
  8. Kit Carson appears alone in some rani comics books.im not sure whether it's from same publishers or not,what is your answer sir?

    ReplyDelete
    Replies
    1. Jude roshan BLUTCH : No....that was just a random western series...in no way related to the Bonelli group !

      Delete
  9. ந்தாப்பா டெக்சு வில்லர்
    நீ தீயவர்களை சிதைத்திடும் கில்லர்
    இத்தாலிய காமிக்ஸை தாங்கிப் பிடித்திடும் பில்லர்
    தமிழிலும் நீயே பெஸ்ட்-செல்லர்
    உன் கதைகளுக்கு என்றுமே நாங்கள் ஜொள்ளர்!

    ஹி ஹி!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY :
      பூனைகளின் காதலர் நீர்....!
      வசிக்குமிடங்களில் கவலைகளோ கானல் நீர் !
      ரசிப்பதென்னவொ பிட்சாக்களின் இத்தாலி ...
      வருகை தந்தால் நிச்சயம் மகிழ்வார் போனெல்லி !
      ஹி ஹி!

      Delete
    2. ஆ! யாருங்க அது; என் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுறது? :D

      Delete
  10. அங்கே போனெல்லியின் அலுவலகத்தில் 'ஆபீஸ் பாய்' வேலை எதனாச்சும் காலி இருக்கா சார்? ;)

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே application போட்டுத் தான் வந்திருக்கேன் சாமி ! :-)

      Delete
    2. ஹம்... அங்கேயாச்சும் நிம்மதியா நாலு புக்கு படிக்கலாம்னு நெனச்சேன்... :D

      Delete
  11. Tex.... tex.... Tex....
    These people are doing a great job which will be ever green for next generations. So as you. The contribution you are doing to our tamil language is truly great. History will remember you Vijayan sir....

    ReplyDelete
    Replies
    1. KUBERAN : History will remember TEX sir... I am just a privileged postman !

      Delete
  12. நமது favorite + hit கதை ஹீரோவின் படைப்பு நிறுவனம் இந்தளவுக்கு உயிர்ப்புடனும், நமது வாசகர் வட்டத்தின்மீது ஆர்வத்துடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனுபவங்களை இந்தளவுக்கு ஆர்வத்தோடு பகிர்வதற்கு மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  13. // இன்னும் சில சமீபத்திய updates உள்ளதால் //

    காத்திருக்கிறோம். சீக்கிரம் சார்!

    ReplyDelete
  14. வாவ்!!! அந்த ஜூ.வி விளம்பரமும் நம்ம கார்த்திக் வேலைதானா?!!!!!! தூள் பண்றீங்க கார்த்திக்! ஆல்-இன்-ஆல் அழகு கார்த்திக் என்று தமிழ் காமிக்ஸ் உலகம் இனி உங்களை இனம் காணட்டும்! :)

    ரமேஷ் குமார், ஒரு தலைசிறந்த கலரிங்-ஆர்ட்டிஸ்ட் எங்களுக்கு நண்பராய் கிடைத்திருப்பதில் ஏகத்துக்கும் மகிழ்ச்சி எனக்கு! :)

    ReplyDelete
    Replies
    1. கலரிங்-ஆர்ட்டிஸ்ட் என்ற Title பொருந்துமளவுக்கு எனக்கு அனுபவமில்லை விஜய்! என்னுடைய முழுநேரப்பணி Web மற்றும் Graphic Design என்பதால் இந்த output ஓரளவுக்கு extra learning-உடன் சாத்தியப்படுகிறது :)

      @கார்த்திக் Thanks for the contribution Karthik! :)

      Delete
  15. 0.1 million hits taking 3 months ,remaining .9 million 27 months??? oohhh thought new special will come next year for reaching million...

    ReplyDelete
  16. தல!!! இங்கையும் டெக்ஸ்கு தனியா ஒரு புக் போட்டா நாங்களும் வாங்குவோம்ல!!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி கிட்..

      Delete
    2. balaji ramnath : பிரத்யேகமாய் இருப்பதன் தாக்கம் - மாதம்தோறும் என்றாகி விட்டால் ஒரு மாற்று குறைவாகவே இருக்கும் பாஸ் ! புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளும் வேலை நமக்கு எதற்கு ?

      Delete
    3. லையனே இப்டி சொன்ன நாங்க எங்க போவம்?? அட்லீஸ்ட் கவ்பாய்காக தனியா ஒரு புக்கு..... ....

      Delete
  17. ரமேஷ் குமார் தலைவரே தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. விஜயன் சார், பிரமிக்கவைக்கும் செய்திகள்! டெக்ஸ் கதைகள் இன்னும் 600 மேல் உள்ளதால் டெக்ஸ்க்கு என தனியாக புதிய பெயரில் மாதம் மாதம் ஒரு கதையை நீங்கள் வெளி இட்டால் என்ன? மற்ற கதைகளை போல் மொழி பெயர்ப்பு சென்சார் என டெக்ஸ் கதைகளுக்கு சிரமப்பட தேவை இல்லை! மேலும் டெக்ஸ் அனைத்து தரப்பட்ட நமது வாசகர்களால் ஏற்று கொள்ளபட்டதால் "circulation" பிரச்சனை இருக்காது!

    ஆனா ஒண்ணு, டெக்ஸ் ஓவர் டோஸ் அப்படி இப்படி-ன்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அடுத்த வருடம் டெக்ஸ் கதைகளை குறைத்து மட்டும் விடாதிங்க !!

    இந்த பதிவில் "போனெல்லி" பெயரை படிக்கும் போது "விண்ணில் ஒரு எலி" என வருகிறது, எல்லாம் தங்களின் கடந்த பதிவின் பாதிப்பு :-)

    நல்ல வேலை "போனெல்லி" சந்திபதற்கு என புதிதாக "கோட்" எது வாங்கவில்லை, மேலை நாடுகளில் தற்சமையம் அனைவரும் ஜீன்ஸ் கலாச்சாரத்திற்கு மாறி வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதது இல்லை :-)

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : //நல்ல வேலை "போனெல்லி" சந்திபதற்கு என புதிதாக "கோட்" எது வாங்கவில்லை, மேலை நாடுகளில் தற்சமையம் அனைவரும் ஜீன்ஸ் கலாச்சாரத்திற்கு மாறி வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதது இல்லை :-)//

      நாலு காசு மிச்சம் பிடித்தும் கெத்தாய் நிற்கும் கலையில் நாமெல்லாம் மன்னர்களன்றோ ?!! :-)

      Delete
  19. நம் ஆதர்ஷநயாகன் டெக்ஸ் வில்லரை உருவாக்கியவர்களைப்பற்றி இன்னும் நிறைய தெரிந்துக்கொள்ள ஆவலாக உள்ளோம் சார்..கடந்த சில நாட்களாக இங்கு இருந்த ஒரு வித தோய்வு விலக அருமையான பதிவு.

    ReplyDelete
  20. தலைவா ....உம் அழகான வினாக்களும் ..,அவரின் பதில்களும் படித்திட காத்திருக்கிறான் இந்த கரடி .

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் இருக்கோம்ல...

      Delete
  21. தலைவா ...பல தோழர்களின் விருப்பத்திற்கு உட்பட்ட "விண்வெளியில் ஒரு எலி " மறுமுறை ஆவது மறுபதிப்பாக வருமா ..?

    ReplyDelete
    Replies
    1. comicskaradi... : நிச்சயம் வரும் கரடியாரே !

      Delete
    2. மிக்க மிக்க நன்றி ...தலைவரே ....

      Delete
  22. டியர் சார்,
    இது ஒரு மைல் கல் பதிவு. நமது காமிக்ஸ் பிரம்மாக்களை பத்தி பக்கத்தில இருந்து தெரிஞ்சுக்கனும்கறது என்னோட நீண்ட நாள் கனவு. இன்னைக்கு உங்க மூலம் நிறைவடைஞ்சிருக்கு. நீங்க திரு.போனெல்லியோட இருக்கற அந்த புகைபடத்த பாக்கும்போதெல்லாம் ஏதோ நானே அங்கே ஒரு மூலையில இருந்து எட்டி பாக்கறமாதிரி ஒரு உணர்வு. இந்த அனுபத்தையும் புகைப்படங்களையும் பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிகள் சார்.

    இந்த தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் பிரதிநிதியான உங்களுக்கு நேரத்தை ஒதுக்கி நம்ம கேள்விகளுக்கும் பதில் சொன்ன போனெல்லி & அவர்கள் அலுவலக பணியாளர்களுக்கும் நன்றிகள்.

    THANKS A TONNE FOR THIS FRIENDLY GESTURE AND WARMTH HOSPITALITY MR.BONELLI!

    என்னை பொறுத்தவரை இந்த சந்திப்பு நனது காமிக்ஸ் பயணத்தின் ஒரு TURNING POINT ஆகா தெரிகிறது. ஏன் என்ற காரணத்தை சொல்ல தெரியவில்லை! : )

    @கார்த்திக் இப்படி சைலண்ட்டா சிக்ஸர் அடிக்கறதா எங்க கத்துகிட்டீங்க??அருமையான LAYOUT டிசைன்! EYE CATCHING ! ஆசிரியர் சொன்ன தான் நீங்க CREDITSசை ஏத்துக்குவீங்களா ?? " நாங்களும் பெரிய ரவுடி!!!!,நாங்களும் பெரிய ரவுடி!!!!" கிளப்ல இருந்து உங்கள விளக்கி வைக்கணும் போல தெரியுதே! : ) !

    @ரமேஷ்குமார் உங்கள் திறமை WAITING TO EXPLODE போல தெரிகிறது. அருமையான முயற்சி! ஏதாவது ஒரு FULL FLEDGED ஆக்கத்துக்கு தயாராகறமாதிரி தெரியுது. உங்க முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் !

    @திருச்செல்வம் உங்க முயற்சி பாராட்டுக்குறியது.உலக அரங்குக்கு நம்ம தமிழ் காமிக்ஸ்சை கொண்டு செல்வதற்கு நன்றிகள் சார்!

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி : இந்தப் பயணங்கள்..பரிச்சயங்கள் அனைத்துமே சாத்தியமாவது நண்பர்களின் உந்துதலால் தானே ? நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அனைவரது சுவடுகளும் அடங்கியுள்ளது ! So this is a moment that we all can take credit for !

      Delete
    2. //@ரமேஷ்குமார் உங்கள் திறமை WAITING TO EXPLODE போல தெரிகிறது. அருமையான முயற்சி! ஏதாவது ஒரு FULL FLEDGED ஆக்கத்துக்கு தயாராகறமாதிரி தெரியுது. உங்க முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் !//

      நன்றி விஸ்கி-சுஸ்கி! வாசகர் ஸ்பாட்லைட்-க்கு ஓரிருபக்க கார்ட்டூன் கதைகள் வரையும் plan உள்ளது. Spare time கிடைக்கும்போது படம் வரைய வேண்டுமென்று கை விறுவிறுவென்கிறது! :D

      Delete
  23. பதிவைப்படித்ததும் மனசுக்குள்' ஒரு கெத்தான' ஃபீலிங்...

    கார்த்திக்: எல்லா ஏரியாவுலயும் ரவுண்டு கட்டி ஆடறீங்க...

    ரமேஷ்: நீங்க பின்னுறீங்க..

    ReplyDelete
    Replies
    1. நன்றி புதுவை செந்தில்!

      உண்மையில் பின்னியது 29-30 வருடங்களாக withstand பண்ணுமளவுக்கு Original Logo சித்திரத்தை வரைந்த ஓவியர் தான்! :) Redraw செய்யும்போது இது எளிதாக புலப்பட்டது!

      Delete
  24. சார் வரும் மாதம் எத்தனை புத்தகங்கள் வருகிறது?

    ReplyDelete
    Replies
    1. ranjith ranjith : இரத்தப் படலம் - ரூ.100 + ப்ளூகோட் பட்டாளத்தின் "ஆகாயத்தில் அட்டகாசம் !" - ரூ.50

      Delete
    2. Wow.. XIII is BACK to ACTION. I hope its just beginning, Lots to come!!!

      Delete
    3. தலைவா ....அப்ப சிக் பில் கிளாசிக் ...

      Delete
  25. டைகரின் 2ம் பாகம் அடுத்த மாதம் வருமா?

    ReplyDelete
    Replies
    1. டைகரின் 2ம் பாகம் அடுத்த வருடமாவது வருமா? ;-((

      Delete
  26. எங்க தல டெக்ஸின் அருமை-பெருமைகளை நேரில் போய் பிரம்மிச்சுப்போய் வந்த பின்னரும் வருசத்துக்கு 3 தபா தான் புக்கு உடுவேன்னு சொல்றது கொஞ்சம்கூட நல்லா இல்லே, எடிட்டர் சார்!
    போராட்டக் குழுவைக் கூட்டி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினாத்தான் சரிப்படும் போலிருக்கே?!

    (ப்ளைட் டிக்கட்டுக்கு ஒரு ஆயிரம் ரூவா பத்தலை; இல்லாட்டி நான் என்னிக்கோ இத்தாலிக்கு பறந்திருப்பேனாக்கும்)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY :
      நீர் கேட்பதோ ஆண்டுக்குப் பன்னிரெண்டு...!
      ஓவர்டோஸ் ஆகிடும் ஆபத்தும் அதிலுண்டு...!
      (இரவுக்) கழுகுக்கு எல்லையில்லை...!
      அளவு மீறாத வரை நமக்கும் தொல்லையில்லை !

      Delete
    2. :D
      சார், உண்மையைச் சொல்லுங்க; நீங்க இத்தாலிக்குப் போகும்போது பக்கத்து சீட்டில் நம்ம விஜய.டி.ராஜேந்தர் இருந்தார்தானே? ;)

      Delete
    3. கடைசியாக ஒரு 'ஏ டண்டனக்கா... ஏ டனக்குனக்கா' மட்டும் பாக்கி! :D

      Delete
    4. போரட்ட குழுல நானும் இணைய விரும்புகிறேன்!!

      Delete
    5. Erode VIJAY :
      பக்கத்து சீட்டில் இருந்தவரோ பருமனான லேடி !
      நிச்சயம் அவருக்கு இல்லை தாடி..!
      திரும்பிய போது இருந்ததோ குட்டிப் பாப்பா...!
      அந்தை விழிகளைப் பார்த்துச் சிரித்ததே டாப்பா !

      Delete
    6. அட்ரா சக்கை , அட்ரா சக்கை, அட்ரா சக்கை ....

      Delete
    7. அச்சச்சோ! நம்ம எடிட்டரின் உடம்புக்குள் ஒரு மோசமான கவிஞரின் ஆவி புகுந்துடுச்சே போலிருக்கே?!
      சரி பரவாயில்லை! 'அரக்கன் ஆர்டினி'யை ஒரு தபா படிச்சா எல்லாம் சரியாகிடும்! :D

      // ஆந்தை விழிகளைப் பார்த்து சிரித்ததே டாப்பா //
      அந்த விழிகளைப் பார்த்து பாப்பா அலறாமல் இருந்ததே பெரிய ஆச்சர்யம்தான்! நானாக இருந்திருந்தால் பாராசூட்டை கட்டிட்டு குதிச்சிருப்பேன். :D

      Delete
    8. டியர் எடிட்டர் ,
      கவிதையில் அடி பின்னுறிங்க , எதுகை மோனை எல்லாமே தூக்கலாக உள்ளது."லேடி , தாடி , பாப்பா - டாப்பா "போங்கள் சார் , தங்கள் பாரிஸ் வருவது பற்றி சிறு கோடி காட்டியிருந்தால் , நேரில் வந்து உங்களை சந்தித்து இருப்போமே . எனக்கெல்லாம் நீங்கள்தான் சார் ரியல் ஹீரோ . அடுத்த முறையாவது தயவுசெய்து அறியத்தாருங்கள் சார் ப்ளீஸ் ?."ஆதலால் அதகளம் செய்வீர் ", கப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் , - இரண்டுமே கலக்கிடிங்க சார் , சூப்பர் ! ஆயிரந்தான் பிரெஞ்சில் படித்தாலும் , உங்களின் மொழிபெயர்ப்பில் - எனது தாய்மொழி தமிழில் அள்ளி பருகுவது , தனி சுகமே ,
      சார், பாரிசில் எமது வெளியீடுகளை நேரில் பார்த்தது , ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் , மறுபுறம் தயக்கமாகவும் உள்ளது . இது தொடர்பாக ஏதும் ஆலோசனைகள் சார் ப்ளீஸ் ?

      Delete
    9. Thiruchelvam Prapananth : விற்பனையில் ஆலோசனை சொல்ல மிகக் குறைச்சலான தகுதி கொண்டவன் அடியேன் என்பது எனது திட நம்பிக்கை !

      எனினும் அந்தக் கடைகளில் display செய்திட சில விளம்பர போஸ்டர்கள் artpaper-ல் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது ! உங்களுக்கு மட்டுமன்றி - நமது தமிழக விற்பனையாளர்களுக்கும் இதனை இனி செயல்படுத்தலாமென்று உள்ளேன் !

      Delete
    10. நல்ல முடிவு! ஆகட்டும்! :)

      Delete
    11. Certainly sir,
      I will do it early as possible . I think to use our friends creativity in Comics Con. What do you think about this sir. Can I do it myself with your permission?

      Delete
  27. அருமையான விவரிப்பு எடி சார்.... ஏதாவது ஒரு வாய்ப்பு கிட்டினால் மொத்தமாக சில நூறு பிரதிகளாவது வாங்கிவிடலாம்... ஆனால் அதன் பின்பு படம் பார்த்து கதை சொல் ரேஞ்சுக்கு , வெறுமணே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடியும்....

    காலம் கடந்த யோசனை தான்... பேசாம இத்தாலியன் மற்றும் பிரெஞ்சு மொழி கத்துகிட்டா???

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு டெக்ஸ் வில்லர் கிட்ட போங்க. அதாங்க நம்ம ஸ்ரீராம் கிட்ட போங்க.

      Delete
  28. இங்கு அதகளம் செய்யும்
    ஈரோடு பூனையாருக்கு
    இனிய பிறந்தநாள்
    வாழ்த்துக்கள்.
    இதை நினைவு
    படுத்திய
    நண்பருக்கு
    நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு பூனையாருக்கு virtual Birthday Gift ;)

      http://www.youtube.com/watch?v=HECa3bAFAYk

      Delete
    2. நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...


      தினம் தினம் பழைய புத்தக கடையில் நமது பழைய காமிக்ஸ்களை (பத்து ரூபாயில்) பெற்று படித்து மகிழவும், விரைவில் ஆயிரம் ரூபாய் சேர்த்து இத்தாலி பறந்திடவும் வாழ்த்துக்கள் ...

      'ஏ டண்டனக்கா... ஏ டனக்குனக்கா' :)

      Delete
    3. @ ஷல்லூம், எடிட்டர், Ramesh kumar, ப்ளுபெர்ரி

      நன்றி நண்பர்களே! :)

      fbயில் எப்படியோ மோப்பம் பிடித்து வாழ்த்திவிட்டு, உடனே ஒரு நோட்டீஸ் போர்டாக மாறிப்போன 'காமிக் லவர்' ராகவன் அவர்களுக்கும் நன்றி! ;)

      Delete
  29. எனக்கு ஒரு டவுட்டு, நம்ம டெக்ஸ் எப்ப பாரு ஒரு காலை வளைச்சு ஒருமாதிரியா ஒக்காந்துட்டு (பூத வேட்டை,636) துப்பாக்கிய நீட்டிட்டு இருக்காரு

    ReplyDelete
    Replies
    1. @ ஷல்லூம்

      பின்னே? எதிரிகளைச் சுடும்போது மல்லாக்க படுத்துக்கொண்டா சுடமுடியும்? நல்லா கேக்கறாங்கப்பா டீடெய்லு!! :)

      Delete
    2. நம்ம சினிமாக்காரங்க எல்லாம் பறந்து பறந்து சுடுறத பார்த்ததில்லையா

      Delete
  30. பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்

    ReplyDelete
  31. என்ன விஜய் பிறந்தநாள்ன்னு சொல்லவேயில்லை. பரவாயில்லை happy birth day vijay

    ReplyDelete
  32. சொய்ங்.....சர்ர்ர் .....என்னா தலைவா.....சூப்பரா என்னோட சூப்பர் ஸ்டார் டெக்ஸ் வில்லரை சந்திச்சிட்டு வந்து சும்மா அட்ராசக்க....அட்ராசக்கன்னு தூள் கெளப்பீட்ட தலைவா.....இன்னும் நெறைய சொல்லு தலைவா....விடிய விடியன்னாலும் நான் கேப்பேன் தலைவா.....வருசத்துக்கு 6 புக் போடு தலைவா.......ஒரு பெரிய தொடரை ஒரே புக்கா சும்மாஅட்ராசக்க....அட்ராசக்கன்னு போடு தலைவா ...... (யாராவது வேண்டான்னீங்க அப்புடியே மேல தூக்கிட்டு போய் கீழ போட்டுடுவேன் ஆமா சொல்லிபுட்டேன்......ஆஆஆ....யாருப்பா என்ன கீழ தள்ளினது.....)

    ReplyDelete
    Replies
    1. Audio, Video, Special Effects, Animation, Camera Movement எல்லாத்தையும் எழுத்துவடிவத்தில் இப்பதாங்க முதன்முதலா பார்க்கிறேன்! :D

      Delete
  33. Many many Happy Returns of the day Vijay. Happy Birthday to you.

    ReplyDelete
  34. பூனையாருக்கு (ஈரோடு விஜய்) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  35. விஜயன் சார்,
    // தவிர சென்ற பதிவிலும் எனது பதில்கள் இடம் பெறச் செய்வேன் ! //
    எப்போது பதில்கள்? இது போல் முந்தைய சில பதிவுகளில் சொலிவிட்டு பதில் போடாமல் இருந்தாக ஞாபகம்! தவறமல் பதில் போடும்கள் சார்!

    ReplyDelete
  36. விஜயன் சார்,
    அப்ப அக்டோபர் மாதம் 2 புத்தகம்தானா? தீபாவளிக்கு 3-ஆ இல்லை 4-ஆ? அதான் எத்தனை புத்தகம்ன்னு கேட்டேன் :-)

    ReplyDelete
  37. நண்பர் கார்த்திக் சோமலிங்கா & ரமேஷ்குமார், வாழ்த்துக்கள்! சும்மா சொல்லகூடாது அடி பின்னுறிங்க... என்ன திறமை.... உங்க திறமைக்கு நீங்கள் எல்லாம் குட்டி ஜப்பான்-ல (அதாங்க சிவகாசி-ல்) இருக்க வேண்டியவங்க :-) மனமார்ந்த வாழ்த்துகள் நண்பர்களே!

    ReplyDelete
  38. @ கிருஷ்ணா வா.வெ, AHMEDBHASHA, karnan L, Udhay, Thiruchelvan prabhananth, Parani from Bangalore

    வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே! :)

    ReplyDelete
  39. Dear Erode Vijay...
    Wish you a Happy Birthday and Many More Happy Returns of the day...

    ReplyDelete
  40. வழக்கம் போல் travelogue எழுதுவதில் நீங்கள் மன்னர் என நிருபித்து விட்டீர்கள். நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. Dr. அல்கேட்ஸ் : "வழக்கம் போலா" ? ஆஹா...!

      பயணக் கட்டுரைகள் என்றைக்குமே எனக்குக் கிலியை ஏற்படுத்தும் விஷயங்கள்...! விவரிப்புகளின் அழகு / அளவு கொஞ்சமாய்க் கூடி விட்டாலும் சுயபுராணமாய், ஆயாசத்தைக் கொண்டு வரும் ஆபத்து உண்டு !

      நம் கதைகள் / படைப்பாளிகள் ஒட்டு மொத்தமாய் "made overseas" என்பதால் இந்தப் பயண விபரங்களும் தவிர்க்க இயலாது போகிறதே தவிர - உலக உருண்டை ஏகக் குட்டியாய் ஆகி விட்ட இந்த நவீன உலகில் travelogues கொட்டாவியை மாத்திரமே கொண்டு வரக் கூடுமென்பது எனது அபிப்ராயம் !

      Delete
  41. @ ஈரோடு விஜய் // நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...


    தினம் தினம் பழைய புத்தக கடையில் நமது பழைய காமிக்ஸ்களை (பத்து ரூபாயில்) பெற்று படித்து மகிழவும், விரைவில் ஆயிரம் ரூபாய் சேர்த்து இத்தாலி பறந்திடவும் வாழ்த்துக்கள் ... //

    நண்பர் ரமேஷ்குமார் மற்றும் கார்த்திக் சோமலிங்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள். இன்னும் நிறைய எதிர்பார்க்க செய்கிறீர்கள் , ஒவ்வொரு முறையும்!

    ReplyDelete
  42. Erode Vijay:
    Many More Happy Returns of The Day

    ReplyDelete
  43. அப்படியே அடுத்த வருட சந்தாவுக்கும் ஒரு பிட்டு போட்டுடீங்கன கொஞ்சம் வசதியா இருக்கும் . ஏன்னா இப்போ இருந்தே ரெடி ஆகிக்கலாம் . இட்ஸ் நாட் டூ ஏர்லி .

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : நவம்பரில் காத்திருக்கும் ஒரு கத்தை வெளியீடுகளைத் தாண்டி விட்டால் - எனது மண்டை கொஞ்சம் இலகுவாகிடும் ! So - இன்னும் ஒரே மாதம் தான் காத்திருப்பு !

      Delete
    2. நவம்பர் விட்டா அடுத்து டிசம்பர்ல தான சார் சொல்லுவீங்க..? அல்லது இடையிலயே இங்க ப்ளாக்ல சொல்லுவீங்களா?? இதுவே லேட் தான் சார்..!

      Delete
  44. டியர் விஜயன் சார்,

    சுவாரசியமான போட்டோ பதிவு! 2007-ல் முதன்முறையாக லயன் அலுவலகத்தை பார்வையிட்ட போது தலைதூக்கிய சிறியதொரு ஏமாற்றம், இப்போது போனெல்லி அலுவலகத்தை பார்க்கும் போதும் ஏற்படுகிறது! IT கார்பரேட் அலுவலகங்களைப் போன்று மிரட்டலாக இல்லையென்றாலும், ஒரு பெரிய அழகிய வீட்டை, அலுவலகமாக மாற்றியது போன்ற ஒரு ஹோம்லி & ஃப்ரண்ட்லி லுக் நிச்சயம் இருக்கிறது! மாதந்தோறும் லட்சக்கணக்கான பிரதிகளை வெளியிட்டுத் தள்ளும் அவர்களின் அச்சகம், இதற்கு நேர்மாறாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

    //அந்த நேரத்தைய mind voice : "தொப்பை போட்டோவில் தெரியக் கூடாது....மூச்சை இழுத்துப் பிடி !!" :-)//
    டேவிட் அவார்கள் ரிலாக்ஸ்ட் ஆக சிரித்துக் கொண்டிருக்க, நீங்கள் மூச்சை இழுத்துப் பிடித்து நின்று கொண்டிருக்கும் அந்த "தம்பிடியானந்தா" போஸ் அருமை! :) இந்த புகைப்படம் அவர்களுடைய அடுத்த L'Audace Bonelli இதழில் வெளியாகும் போது, அதைப் பார்பவர்கள் இந்தியர்கள் தீவிரமாக யோகா பயிற்சி செய்து ஒட்டிய வயிற்றுடன், எப்போதும் ஃபிட்டாக இருக்கிறார்கள் என்று சிலாகிக்கப் போகிறார்கள்! :) இதற்குப் பெயர் 'தம் பிடி ஆசனம்" என்ற உண்மை அவர்களுக்குத் தெரியவா போகிறது?! ;) சமீப காலமாக நானும் இந்த தம்பிடியாசனத்தையே பயின்று வருகிறேன்! :D

    போட்டோ சொல்லும் சேதி: Bonelli பயன்படுத்துவது Navigator 80gsm தாள்களையே! :) :)

    //ஆங்கிலத்தில் டெக்ஸ் தொடர வாய்ப்பு ஏதேனும் ?//
    அதை இந்தியாவில் நீங்களே செய்தால் என்ன? ஒரு சோதனை இதழை வெளியிட்டுப் பாருங்களேன்!

    //ஜூனியர் விகடனில் வந்திருந்த நமது விளம்பரத்தின் டிசைன் உபயம் - நண்பர் கார்த்திக் - and thanks indeed !//
    You're welcome sir! சிறு வயதில், கல்கண்டு இதழில் ஸ்பைடர் குதிப்பது போன்ற ஒரு போஸுடன் வந்து கொண்டிருந்த விளம்பரம் எனக்கு மிகவும் பிடிக்கும்! பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் வெளியாகி இருக்கும் இந்த முத்து / லயன் காமிக்ஸ் விளம்பரத்தில் எனது பங்களிப்பு சிறிய அளவில் இருப்பது, அந்த சிறு வயது கார்த்திக்கின் பழைய நினைவுகளுக்கு நிறைய மகிழ்ச்சி அளிக்கிறது! :)

    ரமேஷ்குமார் மெருகேற்றியிருக்கும் லயன் லோகோ மிக மிக அருமை! இதையே இனி லோகோவாக பயன்படுத்தலாமே?! லயன், முத்து & சன்ஷைன் இவற்றிக்கு ஒரே அளவில், ஒரே Font-ல் லோகோக்களை லேசாக மாற்றி அமைத்தால் அருமையாக இருக்கும்! லயன் "சிங்கம்" மற்றும் அந்த முத்து "M" சிம்பல் அப்படியே தொடர வேண்டும்! ரமேஷ்குமார் லயனிற்கு வண்ணம் சேர்த்து புதுப்பித்தது போல, முத்துவின் "M"-ஐயும் நீங்கள் புதிப்பித்தால் நன்றாக இருக்கும்!

    பாரிஸில் ஸ்பைடர் :) நண்பர் திருசெல்வத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

    @ரமேஷ்குமார்:
    BRILLIANT REMASTERING OF THE LION LOGO! Congrats!

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga // IT கார்பரேட் அலுவலகங்களைப் போன்று மிரட்டலாக இல்லையென்றாலும், ஒரு பெரிய அழகிய வீட்டை, அலுவலகமாக மாற்றியது போன்ற ஒரு ஹோம்லி & ஃப்ரண்ட்லி லுக் நிச்சயம் இருக்கிறது! மாதந்தோறும் லட்சக்கணக்கான பிரதிகளை வெளியிட்டுத் தள்ளும் அவர்களின் அச்சகம், இதற்கு நேர்மாறாக இருக்கும் என்று நினைக்கிறேன்!//

      அமெரிக்கப் பதிப்பகங்களின் அலுவலகங்களில் நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் அந்த glitz நிறையவே இருக்கக் கண்டிருக்கிறேன் - ஆனால் ஐரோப்பாவில் அந்த ஆடம்பரங்கள் பெரும்பாலும் கிடையாது ! ஆண்டுக்கு சுமார் 500 ஆல்பம்கள் வெளியிடும் டெல்கோர்ட் நிறுவனத்தின் பாரிஸ் ஆபீசை (முதல்முறை) நான் அடையாளம் காண்பதற்குள் - நாக்குத் தள்ளி விட்டது - ஒரு முட்டுச் சந்துக்குள் துளியும் பந்தா இல்லா பழைய வீடு போன்ற முகப்போடு இருப்பது தான் அந்த அலுவலகம் என்று நம்பிடச் சிரமமாக இருந்தது !

      அப்புறம் இன்னொரு சேதி - போனெல்லி நிறுவனத்துக்கு சொந்தமாய் அச்சுக் கூடம் எதுவும் கிடையாது ; அனைத்துமே outsourcing தான் ! பிரெஞ்சு ஜாம்பவான்களில் பெரும்பான்மைக்கும் இதே நிலைமை தான் ! எவரும் அச்சுக்கூடங்களில் முதலீடு செய்ய விரும்புவதில்லை !

      Delete
    2. //லயன், முத்து & சன்ஷைன் இவற்றிக்கு ஒரே அளவில், ஒரே Font-ல் லோகோக்களை லேசாக மாற்றி அமைத்தால் அருமையாக இருக்கும்! லயன் "சிங்கம்" மற்றும் அந்த முத்து "M" சிம்பல் அப்படியே தொடர வேண்டும்! //

      முத்துவின் லோகோ Simple ஆகவும் அதிக பரிச்சயமானதாகவும் உள்ளதால் அதன் Font-ஐ இயன்றவரை மாற்றிடாமலிருப்பதே நல்லதென்று தோன்றுகிறது (40+ ஆண்டுகால continuity-ஐயும் விட்டுவிடக்கூடாது!).

      தற்போது முத்துவின் High Res லோகோவையும் ஆசிரியருக்கு அனுப்பியிருக்கிறேன். Clarity-க்காக Font வித்தியாசப்படுவதைத் தவிற்க இயலவில்லை. இதில் ஒருவேளை வாசகர்கள் உணருமளவுக்கு வித்தியாசம் அதிகமாக இருந்தால் அட்டைப்படத்திற்கு பழைய லோகோவையே continue பண்ணலாம். Book Fair-க்காக செய்யப்படும் Banner போன்ற Large Size Design-க்கு மட்டும் இந்த High Res version-ஐ பயன்படுத்தலாம்.

      //ரமேஷ்குமார் லயனிற்கு வண்ணம் சேர்த்து புதுப்பித்தது போல, முத்துவின் "M"-ஐயும் நீங்கள் புதிப்பித்தால் நன்றாக இருக்கும்!//
      முத்துவின் லோகோவுக்கு Color சேர்த்தால் அதன் அடையாளம் ரொம்பவே மாறிவிடுகிறது! அதனால் Black version மட்டுமே அனுப்பியிருக்கிறேன்.

      சன்ஷைனின் லோகோ ஏற்கெனவே High Res இல் செய்திருப்பது தெரிகிறது. So அதில் புதிய touchups தேவைப்படாது!

      Thanks again Karthik!

      Delete
    3. @Ramesh Kumar:
      தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்! நான் கேட்டுக் கொண்டதிற்காக, நேரம் ஒதுக்கி, முத்து லோகோவையும் மெருகேற்றியதிற்கு மிக்க நன்றி ரமேஷ்!!!

      //முத்துவின் லோகோ Simple ஆகவும் அதிக பரிச்சயமானதாகவும் உள்ளதால் அதன் Font-ஐ இயன்றவரை மாற்றிடாமலிருப்பதே நல்லதென்று தோன்றுகிறது//
      உண்மையில் நான் Font மாற்ற வேண்டும் என்று சொன்னது, நடுவில் இருக்கும் அந்த பெரிய M சிம்பலுக்கு அல்ல! அதை சுற்றி எழுதப் பட்டிருக்கும் "முத்து காமிக்ஸ்" என்ற பெயருக்கு!

      மூன்று லோகோக்களையும் சுற்றி இருக்கும், "லயன் காமிக்ஸ் / முத்து காமிக்ஸ் / சன்ஷைன் லைப்ரரி", என்ற காமிக்ஸ் பெயர்கள் ஒரே Font-ல் இருந்தால் Uniform ஆக இருக்குமே என்று தோன்றியது!

      என்னுடைய மிகப் பழைய பின்னூட்டங்கள் உங்கள் பார்வைக்காக:

      //இப்போதைய முத்து & லயன் லோகோக்களில் எழுத்துக்கள் கைகளால் எழுதப்பட்டுள்ளன. மேலும் முத்து காமிக்ஸ் லோகோ மட்டும் சதுரமாக உள்ளது!//

      //பார்டரில் வண்ணம் சேர்த்து, மூன்று லோகோக்களையும் ஒரே அளவில், ஒரே Font-இல் வடிவமைத்தால் மிகவும் நன்றாக இருக்குமே?! அப்படியே, லோகோக்களில் இடம்பெற்றுள்ள வடிவங்களில் / படங்களில் பிசிறுகள் களைந்தால் நன்றாக இருக்கும்!//

      //பழைய காமிக்ஸ்களில் உள்ள லோகோ, சமீபத்திய லோகோ & பேனர்களில் உள்ள லோகோ இவற்றின் நீள அகலங்களை ஒப்பு நோக்கினால் நான் சொல்வது புரியும். எழுத்து & படங்களில் உள்ள பிசிறுகளை களைய மட்டுமே கேட்டு இருக்கிறேன்! மற்றபடிக்கு அதே லயன் "சிங்கம்" & முத்து "M" நிச்சயம் எப்போதும் போல தொடர வேண்டும்!//

      ***

      //முத்துவின் லோகோவுக்கு Color சேர்த்தால் அதன் அடையாளம் ரொம்பவே மாறிவிடுகிறது!//
      ஓ! நீங்கள் சிங்கத்துக்கு உபயோகித்த இளமஞ்சள் நிறத்தை உபயோகித்தாலும் Odd ஆகத் தெரிகிறதா?!

      //சன்ஷைனின் லோகோ ஏற்கெனவே High Res இல் செய்திருப்பது தெரிகிறது. So அதில் புதிய touchups தேவைப்படாது!//
      உண்மைதான், Font மட்டும் uniform ஆக மாற்றப் பட்டால் அழகாக இருக்கும்! அதே போல, சன்ஷைன் என்ற சொல் சூரியனுக்கு மேலும், லைப்ரரி என்ற சொல் சூரியனுக்கு கீழும் இடம் மாற்றப் பட்டால் - காமிக்ஸின் பெயர் பெரிதாக, தெளிவாகத் தெரியும்!

      பி.கு: லயன் மற்றும் முத்துவின் கம்பீரமான லோகோக்களோடு ஒப்பிடுகையில் சன்ஷைன் லோகோ மட்டும் கொஞ்சம் நெருடலாகவே தெரிகிறது! இது என்னுடைய கருத்து மட்டுமே!

      நீங்கள் மெருகேற்றிய முத்து லோகோவைக் காண ஆவலுடன் இருக்கிறேன்! ஆசிரியரின், அடுத்த பதிவில் எதிர் பார்க்கலாம் என நம்புகிறேன்! நன்றி!

      Delete
    4. //தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்! //
      Same here! ;)

      நீங்கள் குறிப்பிடுவது போல நானும் "முத்து" மற்றும் "காமிக்ஸ்" ஆகிய வார்த்தைகளை மட்டுமே Alter செய்தேன். நடுவிலிருக்கும் "M" ஐ சிறிதும் மாற்றாமல் தமிழ் எழுத்துக்களின் Font-ஐ மாற்றினால் கூட Overall look மாறிவிடுவதைப்போல் நான் உணர்ந்தேன்! என்னுடைய கணிப்பு - இம்மாதிரி மாற்றங்கள் பழைய வாசகர்களை கொஞ்சம் Upset செய்துவிடும் என்பதே. ஆசிரியருக்கு அனுப்பிய version ஒரு 60 to 70% பழைய தமிழ் Font-ஐ ஒத்திருக்கும். As of now its upto Vijayan sir's choice :)

      //ஓ! நீங்கள் சிங்கத்துக்கு உபயோகித்த இளமஞ்சள் நிறத்தை உபயோகித்தாலும் Odd ஆகத் தெரிகிறதா?!//
      அப்படித்தான் என் கண்களுக்குப் புலப்பட்டது! முத்துவின் லோகோவை Designer ஆகப் பார்க்காமல் பழைய வாசகனாகப் பார்க்கும்போது வெளிர் மஞ்சள் போன்ற இலேசான கலர்கூட upset செய்கிறது! :D

      எல்லா லோகோக்களுக்கும் ஒரே Font என்கிற அணுகுமுறையை நாம் செய்வது பயனளிக்காது. ஏனென்றால் Sun Shine-ல் உள்ள எழுத்துக்கள் நேராக உள்ளது; ஆனால் லயன், முத்துவின் எழுத்துக்கள் வளைவாக உள்ளதால் ஒரே Font-ஐ உபயோகித்தாலும் கண்களுக்கு ஒன்றுபோல் (uniformity) தெரியாது!

      Delete
    5. PS: முத்து லோகோவின் color என்று வரும்போது, ஒன்று நல்ல attractive-ஆன color ஆக இருப்பது (Example: Solid Red, Blue etc) நல்லது. வித்தியாசத்தைத் தவிற்க light கலர் சேர்க்கும்போது attraction இருக்காது. கொஞ்சம் அவகாசம் விட்டு இதைப்பார்க்கும்போது Better ஆன solutions கிடைக்கலாம் - I will try again! :)

      Delete
    6. //என்னுடைய கணிப்பு - இம்மாதிரி மாற்றங்கள் பழைய வாசகர்களை கொஞ்சம் Upset செய்துவிடும் என்பதே//
      உண்மைதான்!! இட் இஸ் அப் டு த ஆசிரியர்! :)

      ஆனால் ஒன்று! பழைய காமிக்ஸ்களின் ஒரிஜினல் அட்டைப் பட ஓவியங்கள் பலவற்றை இங்கே அவர் வெளியிட்டிருக்கிறார்! அவற்றையே பத்திரமாக வைத்திருப்பவர், லோகோ டிசைன் ஒரிஜினல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாமலா இருப்பார்?! :) ஆல்டரேஷன்களை அந்த ஒரிஜினல் ஸ்கேன்களை அடிப்படையாக வைத்துச் செய்தால், இறுதி வடிவம் பழைய வாசகர்களுக்கும் பிடிக்கும் வகையில் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது! இந்த லோகோக்கள் உருவான கதை பற்றி ஆசிரியர் ஒரு பதிவு போட்டாலும் சுவாரசியமாக இருக்கும்!

      //முத்து லோகோவின் color என்று வரும்போது, ஒன்று நல்ல attractive-ஆன color ஆக இருப்பது (Example: Solid Red, Blue etc) நல்லது.//
      கரெக்ட்! முன்பு ஏதோ ஒரு இதழில் முத்துவின் கலர் லோகோவை பார்த்த ஞாபகம்!

      //கொஞ்சம் அவகாசம் விட்டு இதைப்பார்க்கும்போது Better ஆன solutions கிடைக்கலாம் - I will try again! :)//
      ஆல் த பெஸ்ட்! விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!!! :D

      Delete
  45. @ ஈரோடு விஜய்,
    //தினம் தினம் பழைய புத்தக கடையில் நமது பழைய காமிக்ஸ்களை (பத்து ரூபாயில்) பெற்று படித்து மகிழவும், விரைவில் ஆயிரம் ரூபாய் சேர்த்து இத்தாலி பறந்திடவும் வாழ்த்துக்கள் ... // //
    +
    வாழ்வில் சகல நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள் விஜய்!

    ReplyDelete
  46. Replies
    1. பிறந்த நாள் காணும் பூனையார் திரு.ஈரோடு விஜய் அவர்களுக்கு,
      வாழ்த்த வயதில்லை .வணங்குகிறோம். ;-)

      Delete
    2. நன்றி அமர்நாத் அவர்களே! :)

      //வாழ்த்த வயதில்லை//
      ஏன்? தீர்ந்துபோச்சா? :D

      Delete
    3. எஸ். இப்போதுதான் 8 வயது முடிந்து 7 துவங்குகிறது.
      உபயம். முத்து லயன் காமிக்ஸ். ஹிஹிஹி..

      Delete
    4. 8க்கு பிறகு ஒரு பூஜ்யத்தையும், 7க்குப் பிறகு ஒரு 9ஐயும் விட்டுட்டீங்க பாருங்க, அமர்நாத்! :D

      Delete
    5. வாழ்த்த வயதில்லை, வணங்கவும் மனமில்லை! :P கேக் எங்கே? :D

      Delete
    6. @Ramesh Kumar:
      //வாழ்த்த வயதில்லை, வணங்கவும் மனமில்லை! :P கேக் எங்கே? :D//
      நேற்றிரவு பத்ரி பட பாணியில், கேக்கின் தம்பியான Bun-ஐ, Blade-இன் (நான் அல்ல!) உதவியுடன் சோகமாக வெட்டிக் கொண்டிருந்தார். நாள் முழுக்க யாரும் இல்லாத டீக்கடையில் (அதாவது அவருடைய ஆபிஸ், ஞாயிறு என்பதால்) தனியாக டீ ஆற்றிக் கொண்டிருந்ததால் - ஆஃபிஸிலும், வீட்டிலும் எக்கச்சக்கமாக Bun-கள் கிடைத்து விட்டன என்று தனியாக புலம்பிக் கொண்டிருந்தார்! எனவே உங்களுக்கு கேக் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் "பன்" கிடைக்கும் வாய்ப்புக்கள் அதிகம்! ;)

      Delete
    7. @ Ramesh kumar

      இவரு மட்டும் 'Virtual gift' அனுப்பிவைப்பாராம்; இவருக்கு நாங்க சுடச்சுட கேக் தரணுமாம் கர்... புர்...
      உங்களுக்கு ஒரு 'பன்'னு கூட கிடையாது போங்க! ;)

      @ கார்த்திக்

      உங்களுக்கு ஒரு பத்து 'பன்'கள் பார்சலில் அனுப்பலாம்னு இருந்தேன்; என்னோட 'ஒன் லைன்' பன் ஸ்டோரிக்கு உங்க திரைகதை-வசனம்-நடிப்பு எல்லாத்தையும் பார்த்த பிறகு ஒரு ஆரஞ்சு மிட்டாய்கூட அனுப்பறதில்லைன்னு முடிவுபண்ணிட்டேன் கர்... புர்... ;)

      Delete
    8. @ஈரோடு விஜய்

      இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள் நண்பா..:-))

      Delete
  47. @ ஈரோடு விஜய்

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. நண்பரே..

    ReplyDelete
  48. எடி.சார்
    உங்களின் இந்த பதிவு சிங்கத்தின் சிறு வயதில் கலர் போட்டோக்களுடன் வெர்ஷன் அப்கிரேட் செய்ததை படிப்பது போலுள்ளது.
    அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  49. @ புதுவை செந்தில், texkit, siva subramanian, விஸ்கி-சுஸ்கி, Muthu kumaran

    வாழ்த்து மழைக்கு நன்றி நண்பர்களே! :)

    ReplyDelete
  50. சார், நீங்கள் ஒரு "உலகம் சுற்றும் வாலிபன்"...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விஜய் : "வாலிபராக இருந்தவர் !"

      Delete
  51. @Erode VIJAY:
    நன்றி விஜய்! ஆல்-இன்-ஆல் அழகு கார்த்திக் என்றெல்லாம் ஏகத்திற்கும் ஏற்றி விட்டு, என் பெட்ரோமேக்ஸ் மண்டையை - செந்தில் ஸ்டைலில் யாராவது அமுக்கும் படி செய்ய வைத்து விடாதீர்கள்! :D

    @விஸ்கி-சுஸ்கி:
    //என்னை பொறுத்தவரை இந்த சந்திப்பு நனது காமிக்ஸ் பயணத்தின் ஒரு TURNING POINT ஆகா தெரிகிறது. ஏன் என்ற காரணத்தை சொல்ல தெரியவில்லை! : )//
    ஆமாம், நண்பா! போட்டோவில் கூட விஜயன் சார் கொஞ்சம் டர்ன் செய்துதான் நிற்கிறார்! :D

    //கார்த்திக் இப்படி சைலண்ட்டா சிக்ஸர் அடிக்கறதா எங்க கத்துகிட்டீங்க??//
    இந்த பாராட்டுக்கு முழுத் தகுதி படைத்தவர் ரமேஷ் மட்டுமே! நாமெல்லாம் போட்டி என்று ஏதாவது வைத்தால்தான். அதுவும் பரிசோடு வைத்ததால்தான் விளையாடும் ரகம்! :D ஆனால், இந்த மனிதரோ சத்தம் போடாமல் சதம் அடிக்கிறார்! :) அந்த Re-mastered லயன் லோகோ நிஜமாகவே அற்புதம்!

    //அருமையான LAYOUT டிசைன்!//
    மிக்க நன்றி! நான் அனுப்பிய ஒரிஜினலுக்கும், ஜீ.வி. விளம்பரத்திற்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடிக்கும் போட்டி ஒன்றை வைக்கலாம் என்று இருக்கிறேன்! வெற்றி பெறுபவருக்கு பரிசாக ஆறு பவுன் தங்கச் சங்கிலியை ஆசிரியர் அவர்கள் அனுப்பி வைப்பார்! :P இருந்தாலும் அந்த ரொமான்டிக் லார்கோ போஸை சென்சார் செய்தது ரொம்ப அநியாயம்! :D ஆனால், அந்த tagline விஷயத்தில் நறுக்கென்று இரண்டே வரிகளில் அசத்தி விட்டார் ஆசிரியர்! :)

    //நாங்களும் பெரிய ரவுடி!!!!,நாங்களும் பெரிய ரவுடி!!!!" கிளப்ல இருந்து உங்கள விளக்கி வைக்கணும் போல தெரியுதே! : ) !//
    எப்படியோ, கிடைத்த கேப்பில் கொஞ்சம் 'த மேக்கிங் ஆஃப்' சுய புராணத்தை நுழைத்து 'நானும் ரௌடிதான்' க்ளப் மெம்பர்ஷிப்பை புதுப்பித்தாகி விட்டது! :P

    @Ramesh Kumar:
    //@கார்த்திக் Thanks for the contribution Karthik! :)//
    thank you and thank you the same! :D

    @tex kit, காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில், Parani from Bangalore & Siva Subramanian:
    உங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல நண்பர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கார்த்திக் சோமலிங்கா மற்றும் நண்பர் ரமேஷ்குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ....

      Delete
    2. சைலண்ட்டா சிக்ஸர்... சத்தம் போடாமல் சதம் என்பதெல்லாம் exaggeration பாஸ்...

      உண்மையில் என்னுடைய வழிமுறை மிகவும் சம்பிரதாயமான (sorry வேறு வார்த்தை கிடைக்கவில்லை lol :D ) பத்திரிகைக்கு படைப்புக்களை அனுப்புவது என்கிற பாணிதான் - புதிதல்ல. எவ்வளவோபேர் இதற்குமுன் இம்மாதிரி ஏதாவது வரைந்தனுப்பும் hobbyஐ செய்துகொண்டுதான் இருந்தார்கள் (வாசகர் ஸ்பாட்லைட் என்ற பகுதியை சிலநேரங்களில் பார்த்திருப்பீர்கள்) அதில் professional touch இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் தென்படும் பொதுவான முக்கியமான விஷயம்: ஆர்வம் அல்லது ஆர்வக்கோளாறு! :D

      Delete
    3. ஹா ஹா, உண்மைதான் ரமேஷ்! நண்பர்கள் வீசும் இது போன்ற பந்துகள் ரொம்பவே நாசூக்காக கையாளப்பட வேண்டிய ஒன்று - பெருமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது, அன்பாக சொல்வதால் மறுக்கவும் முடியாது, பதில் சொல்லாமல் இருப்பதும் நன்றாக இருக்காது). பழி வாங்க இருக்கும் ஒரே வழி - வாய்ப்பு கிடைக்கும் போது அவர்களையும் எக்குத்தப்பாக பாராட்டுவது தான்! :D அதனால்தான் எனக்கு வந்த பந்தை சத்தமில்லாமல் உங்கள் பக்கம் திசை திருப்பி விட்டேன்! ;) நன்றாகவே அடித்து ஆடி இருக்கிறீர்கள்! :) :) சத்தம் போடாமல் இரட்டைச் சதம் போட்டதிற்கு வாழ்த்துக்கள்! :P வர வர, "வாழ்த்து" மற்றும் "நன்றி" சொல்லிச் சொல்லி, இப்போதெல்லாம் எந்த கருத்து போட்டாலும் வாழ்த்து அல்லது நன்றியை பின்னிணைப்பாக சேர்க்கும் பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது! எனது தர்ம சங்கடத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி! :D (ரெண்டு சொற்களும் கரெக்டா வந்துருச்சா... வந்துருச்சா?!).

      இங்கே பரிமாறிக் கொள்ளப்படும் பிறந்த நாள் போன்ற மகிழ்வான சேதிகளுக்கும், திருமண நாள் போன்ற துக்ககரமான சேதிகளுக்கும் ;) என் வாழ்த்துக்களை பொதுவில் சொல்லாமல் இருப்பதன் காரணமும் இதுதான்! அறிந்த நண்பர் என்றால் தனியே வாழ்த்துக்களை பகிர்ந்து விடுவேன், அறியாத நண்பர் என்றால் மானசீகமாக மனசுக்குள்ளேயே வாழ்த்தி விடுவேன் - லா லா லா... லால லா லா லா என்று மியூசிக் உங்கள் மனதில் ஓடினால் நான் பொறுப்பல்ல ;) அப்படியாவது, இங்கே ஒரு "வாழ்த்துக்கள்" பின்னூட்டமும், அதற்கான ஒரு "நன்றி" சொல்லும் பின்னூட்டமும் குறையும் அல்லவா?! :)

      Delete
    4. கார்த்திக் & ரமேஷ், எனக்கு பொதுவாக யாரையும் வெளிப்படையாக பாராட்டும் பழக்கம் கிடையாது! ஆனால் பாராட்டவில்லை அல்லது வாழ்த்து சொல்லவில்லை என்றால்
      தவறாக எடுத்து கொள்வார்களோ என்ற பயத்தில் ஆரம்பித்தது இந்த பழக்கம்! மேலும் சிலருக்கு நமது பாராட்டு மேலும் நல்ல விஷயம்களை செய்ய தூண்டும் ஊன்று கோலாக (motivation?) இருக்கும் என்பதால் பழக்கபடுத்தி கொண்ட பழக்கம் இது.
      என்னை பொறுத்தவரை மனதில் ஒருவர் செய்த நல்ல விசயம்களை மறக்காமல் இருந்தால் போதும்.

      Delete
    5. @Parani, இயல்பான எளிய வாழ்த்துக்கள் தரும் easy feeling எல்லோருக்கும் ஏற்புடையதுதான்! :) இந்த Blogல் மட்டுமல்ல Global-ஆக!

      வாழ்த்துக்கள் & நன்றிகள் பற்றிய Research படலம் இத்துடன் முற்றிற்று :P

      Delete
  52. என்ன தலைவா... டெக்ஸ்-ன் மிகப்பெரிய தொடரை ஒரே புத்தகமாக வெளியிடுவீங்கதானே....? (என்ன ஒரு பேராசை.... கனவுகளுடன் காலரை தூக்கிக்கொண்டு நடக்கிறேனாம் ....."பட்டார்"...(ரோடு கம்பம் இடிக்கிறது)) யாரும் பார்க்கவில்லை....

    ReplyDelete
  53. Happy birth day to vijay
    happy bith day day to vijay
    எல்லோரும் சொல்லும் போது நாம் சொல்லா விட்டால் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் நன்றி சொல்லும்போது உங்களுக்குச் சொல்லலேன்னா எப்படி?!
      நன்றி 'அன்பு' நண்பரே! :)

      Delete
  54. @ரமேஷ் குமார்

    அப்படியே சிங்கத்தின் தலையில் 'M' முத்(து)திரை கிரீடத்துடன் சூரிய ஒளியில் (SUN SHINE) நிற்க வைத்து விட்டால் சூரிய ஒளியில் ஒரு முத்துச்சிங்கம் லோகோ வந்துடுமில்ல???


    ஹி ஹி

    ReplyDelete
  55. "எடிட்டர் சார் ....ஒரு நிமிஷம் ..ப்ளீஸ் "

    "baraniwithcomics .blogspot.com."

    ReplyDelete
  56. தீவிர காமிக்ஸ் அபிமானியும், போராளியுமான நண்பர் சேலம் பரணி அவர்களின் பதிவில் இருந்த கருத்துக்களை இங்கே பதிவிக்கிறேன். கண்டிப்பாக அனைவரும் படித்து தங்களது எண்ணங்களை தெரிவியுங்கள்.

    தமிழ் காமிக்ஸ் வாழ , வளர வைத்து கொண்டு இருக்கும் ஆசிரியர் திரு .விஜயன் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை கூறி கொண்டு ..,ஜூனியர் எடிட்டர் ஆக இப்பொழுது பொறுப்பு கொண்டுள்ள திரு .விக்ரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் கூறி கொண்டு "வாழையடி வாழையாக "தங்களால் "தமிழ் காமிக்ஸ் "வளரவும் அதனால் காமிக்ஸ் ரசிகர்கள் ஆகிய நாங்கள் எப்பொழுதும் இன்புறுவும் எங்கள் வாழ்த்துகளை முதலில் கூறி கொள்கிறோம்.

    2012 முதல் புது பொலிவுடன் கலக்கி கொண்டு இருக்கும் நமது லயன் ,முத்து 2014 முதல் இன்னும் ,இன்னும் கலக்க போகும் இந்த சமயத்தில் காமிக்ஸ் ரசனை மிக்க சில ரசிகர்களின் எதிர் பார்ப்பை ..,எனது சில தனி பட்ட எதிர் பார்ப்பை ஒரு காமிக்ஸ் ரசிகனாக (மட்டும் )தங்களிடம் கூற நினைக்கிறன்.

    அதன் சாதக ,பாதக அம்சங்கள் தங்களுக்கு மட்டும் அறிய படும் என்றாலும் இதனை நினைவில் கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.


    அடுத்த மாதத்தில் அடுத்த வருட "சந்தா " அறிவிக்க போகும் நாள் என்பதால் முதலில் அதனை பற்றிய எனது கருத்தை சொல்ல நினைக்கிறேன் .

    1. முதலில் சந்தா தொகையை தயவு செய்து மொத்தமாக அறிவித்து விடுங்கள்.

    2. லயன் ,முத்து ,சன்ஷைன் காமிக்ஸ் தனியாக ,ஆண்டு மலர் .,தீபாவளி மலர் ,புத்தக கண்காட்சி ஸ்பெஷல் மலர் என்று தனியாக இப்பொழுதே திட்டமிட்டு மொத்தமாக அறிவித்து விடுங்கள்.அதே சமயம் 500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் .

    3. சில நண்பர்களின் வசதிக்கு ஏற்ற படி தொகை அதிகமாக இருப்பின் இரு முறை தவணை யாக அதனை அனுப்பவும் வசதி செய்து தரவும்.

    ReplyDelete
    Replies
    1. தீவிர காமிக்ஸ் அபிமானியும், போராளியுமான நண்பர் சேலம் பரணி அவர்களின் பதிவில் இருந்த கருத்துக்களை இங்கே பதிவிக்கிறேன். கண்டிப்பாக அனைவரும் படித்து தங்களது எண்ணங்களை தெரிவியுங்கள்

      அடுத்து "மறு பதிப்பு "பற்றி எனது எண்ணங்களை கூற நினைக்கிறன் .(சிலருக்கு இது பற்றிய கருத்து வேறாக இருக்கலாம்.But எனது உறுதியான கருத்து இது ).

      1. மறு பதிப்பு புத்தகங்கள் என்பது ஆரம்பம் முதல் படித்து வரும் நண்பர்களுக்கும் ..,புதிதாய் இடையில் வந்த நண்பர்களுக்கும் என இருவருக்குமே பயன் அடையும் படி புத்தகம் வர வேண்டும்

      அப்படி இல்லாமல் இந்த கதை சூப்பர் .,இந்த கதை ஓவியம் சூப்பர் என்பதால் சில வருடம் முன்னரே வந்த கதையை...90%அனைவரிடம் உள்ள கதையை ... "மறு பதிப்பு "செய்வதை விட புதிதாய் வந்த நண்பர்கள் பார்க்காத புத்தகமாக ..,பழைய நண்பர்களிடம் அதிகம் காண கிடைக்காத புத்தகமாக "மறு பதிப்பு "புத்தகம் வந்தால் அனைவரும் கொண்டாடுவார்கள்.

      2. உதாரணமாக லயன் 1 முதல் 100 வரை உள்ள வரிசையில் ..,
      முத்து 1முதல் 200 வரை உள்ள வரிசையில் ..
      மினி லயன் ,திகில் அனைத்தும் பல வருடம் முன்னரே நிறுத்த பட்டதால் அதில் உள்ள சிறந்த கதைகளை (அனைத்தும் அருமை என்ற நிலையில் தான் மினி லயன் ,திகில் உள்ளது ) என வெளி இடலாம்.

      3. கலரில் மட்டும் வரும் கதைகளை தான் நண்பர்கள் விரும்புவார்கள் என்ற எண்ணத்தை தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள்.

      4. ஸ்பைடர் ,மாயாவி கதை யை கூட 75% வந்ததால் விட்டு விடுங்கள்.

      5. ஆனால் தாங்கள் அறிவித்த "டிடக்டீவ் ஸ்பெஷல் "..".மினி லயன் முதல் நான்கு கதை " ஸ்பெஷல் நிறுத்தியதில் எத்தனை நண்பர்களுக்கு வருத்தம் என்பதை தாங்கள் அறிவீர்களா?

      6. இன்னும் தங்கள் சந்தேகம் தொடர்ந்தால் அப்படிப்பட்ட புத்தங்களை "புத்தக கண் காட்சி "சமயத்தில் ஒரு முறை விட்டு பாருங்கள் .அப்பொழுது தாங்கள் உண்மையை உணருவீர்கள்.

      7. அதை விட்டு 90% காமிக்ஸ் ரசிகரிடம் இருக்கும் "கார்சனின் கடந்த காலம் "..."ரத்த படலம் "...."மின்னும் மரணம் "போன்ற கதைகளை தயவு செய்து தவிர்க பாருங்கள்.

      8. நான் சொன்ன இந்த மூன்று கதை களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.நானும் மறுக்க வில்லை.

      9. ஆனால் பலரிடம் இருக்கும் "கார்சனின் கடந்த காலத்தை " விட சிலரிடம் மட்டும் இருக்கும் "பவள சிலை மர்மம் ",பலி வாங்கும் புயல் " சைத்தான் சாம் ராஜ்யம் "போன்ற கதை களை வெளி இடலாமே?(நான் சொன்ன இந்த கதைகள் என்னிடம் உள்ளது என்பதையும் இங்கு கூறி கொள்கிறேன் ).

      10. அதே போலே டைகர் ரசிகர்களின் அபிமான" மின்னும் மரணம்" "ரத்த படலம் " தாங்கள் வெளி இடும் போது அது சமயம் அதன் விலை கண்டிப்பாக 700 ,800 என இருக்கும்.

      அத்துனை விலையில் ஏற்கனவே வந்த ஒரு புத்தகத்தை விட புதிதாய் அதே விலையில், அத்துனை பக்கத்திலே ஒரு முழு நீள டைகர் கதை அல்லது ஒரு மலர் வெளி இட்டால் நமக்கு தானே லாபம்? காமிக்ஸ் ரசிகர்களே ..இதை தயவு செய்து உணருங்கள்.

      Delete
    2. தீவிர காமிக்ஸ் அபிமானியும், போராளியுமான நண்பர் சேலம் பரணி அவர்களின் பதிவில் இருந்த கருத்துக்களை இங்கே பதிவிக்கிறேன். கண்டிப்பாக அனைவரும் படித்து தங்களது எண்ணங்களை தெரிவியுங்கள்.

      ஆசிரியருக்கு எனது தனி பட்ட சில வேண்டுகோள்கள்

      1. ஒரு பக்க மௌன சிரிப்பான "மியாவியை "விட வசனத்துடன் வரும் "சிரிப்பின் நிறம் சிவப்பு "..",ரத்த வெறியன் ஹேகர் "போன்றவை சிறப்பான சிரிப்பு

      2. வரும் காலத்தில் தாளின் விலை ஏற்றம் ,டாலரின் விலை ஏற்றம் என எவ்வளவு மாறினாலும் தயவு செய்து இனியும் பக்கத்தை குறைக்காதிர்கள்.

      3. ஏற்கனவே 200 பக்கத்தில் இருந்து பாதி படி இறங்கி விட்டோம் .இனியும் எறங்க வேண்டாம் சார் ..ப்ளீஸ்.

      4. அப்படி தவிர்க்க முடியாத சூழ் நிலை ஏற்படின் "மெகா ட்ரீம் ஸ்பெஷல் "இல் வந்த தரமான தாளில் லக்கி கதை வந்ததை போலே கூட வெளி இடுங்கள் .இன்னும் இளைத்தால் அது "என்னை " போல ஆகி விடும்.

      5. தாங்கள் அறிவித்த மாதம் ஒரு "லயன் ""முத்து " தவறாமல் கடை பிடிக்கவும்.
      முடிந்தால் கூட மாதம் ஒரு "சன் ஷைன் "இணைக்க பார்க்கவும்.

      6. "கிராபிக் நாவல் " என்னுடையை பார்வையாக அல்லாமல்: தொடர்ந்து மூன்று மாதம் எல்லாம் "கிராபிக் நாவல் "வேண்டாம் என்ற நல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம்.

      7. மாடஸ்தி கதையை சிலர் விரும்பா விடினும் அடுத்து மாடஸ்தி கதை தாங்கள் வெளி இட்டால் "மர்ம எதிரி "என்ற புத்தகத்தில் வந்த "மாடஸ்தி " வரலாற்று கதையை அதன் உடன் இணைத்தால் விரும்பாதவர் கூட மாடஸ்தி கதையை விரும்புவர்.

      ஆசிரியருக்கு ...இந்த கருத்துகளை ஒரு காமிக்ஸ் ரசிகனாக தான் தங்களுக்கு நினைவு படுத்துகிறேனே தவிர எல்லாம் அறிந்த "ஏகாம்பரம் "ஆக என்னை காட்டி கொள்ள அல்ல.

      காமிக்ஸ் ரசிகர்களுக்கு எனது இந்த கருத்தில் சிலர் உடன் படலாம் .பலர் மறுக்கலாம்.

      தங்கள் மாறு பட்ட கருத்தையும் இங்கே பதியலாம்.

      நன்றி.

      வணக்கம்

      Delete
    3. ஆசிரியரின் பதிவிற்க்கு சம்பந்தம் இல்லா கருத்துக்கள் என்பதால், பதில் இடக்கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால் #5 and #7 பார்த்தவுடன், பதில் பதிவிடமுடியாமல் இருக்க முடியவில்லை.

      //5. ஆனால் தாங்கள் அறிவித்த "டிடக்டீவ் ஸ்பெஷல் "..".மினி லயன் முதல் நான்கு கதை " ஸ்பெஷல் நிறுத்தியதில் எத்தனை நண்பர்களுக்கு வருத்தம் என்பதை தாங்கள் அறிவீர்களா?//

      வருத்தப்பட்டதில் நானும் ஒருவன்.

      //7. அதை விட்டு 90% காமிக்ஸ் ரசிகரிடம் இருக்கும் "கார்சனின் கடந்த காலம் "..."ரத்த படலம் "...."மின்னும் மரணம் "போன்ற கதைகளை தயவு செய்து தவிர்க பாருங்கள். //

      உண்மை, குறிப்பாக "ரத்த படலம்"...."மின்னும் மரணம்" வெளியாகி 10 வருடங்கள் கூட ஆகவில்லை

      Delete
    4. டியர் பரணி,
      உங்கள் INVOLVEMENT பாராட்டப்படவேண்டிய ஓன்று.உங்களை போன்ற வெளிப்படையான கருத்துக்களை தெரிவிக்கும் நண்பர்களை நம் குழு பெற்றிருப்பது நமது காமிக்ஸ் தர முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய உதவிக்கரமாக அமைகிறது. இது நிச்சயம் மிகைபடுத்தப்பட்ட உங்களை கவரவேண்டும் என்ற நோக்கில் பதியப்பட்ட கருத்து அல்ல. ITS A FACT !

      @விஸ்வா
      ஷேர் செய்ததுக்கு நன்றி. உங்க கருத்து என்னான்னு சொல்லவே இல்லையே??

      Delete
    5. //அடுத்த மாதத்தில் அடுத்த வருட "சந்தா " அறிவிக்க போகும் நாள் என்பதால் முதலில் அதனை பற்றிய எனது கருத்தை சொல்ல நினைக்கிறேன் .

      1. முதலில் சந்தா தொகையை தயவு செய்து மொத்தமாக அறிவித்து விடுங்கள்.//


      இது ஒரு TRANSITION PERIOD. பல விதமான புதிய விஷ்யங்களை முயற்சித்துக்கொண்டிருக்கும் வேலை இது. நமது புத்தகங்களின் வடிவங்களும், அளவுகளும் , எண்ணிக்கைகளும் என பல மாறுதல்களை, பல புதிய முயற்சிகளை நமது ஆசிரியர் தற்போது செய்துகொண்டிருக்கிறார். அதனால் சந்தா தொகையை முழுமையாக ஒரே சமயத்தில் வெளியிட சொல்வதிலும் , அதில் மாறுதல்கள் செய்யக்கூடாது என்று வழியுருத்துவதிலும் நாம் ஒரு கடினமான நிலைபாட்டை எடுக்காமல் ஆசிரியருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். தனது வசதிக்கேற்றபடி ஆசிரியர் முடிவு செய்யட்டும்.
      பெரிய செட்டில் ஆனா பதிப்பக நிறுவனங்களுக்கு இந்த முறை சாத்தியப்படலாம். நமக்கு நிறைய FLEXIBILITY தேவைபடுகிறது எனபது என் தனிப்பட்ட கருத்து.
      புத்தகங்களின் தரத்தை உயர்த்துவதற்கு இது உதவுவதோடல்லாமல் தற்போதைய நமது ரூபாயின் நிலையற்ற தன்மையால FLUCTUATE ஆகும் காகித விலையை சமாளிக்கவும் நமது பதிப்பகத்துக்கு உதவும்.

      6 மாதங்களுக்கு ஒரு சந்தா தொகை, என கொள்வது REASONABLE SOLUTION ஆகா தெரிகிறது.

      //2. லயன் ,முத்து ,சன்ஷைன் காமிக்ஸ் தனியாக ,ஆண்டு மலர் .,தீபாவளி மலர் ,புத்தக கண்காட்சி ஸ்பெஷல் மலர் என்று தனியாக இப்பொழுதே திட்டமிட்டு மொத்தமாக அறிவித்து விடுங்கள்.அதே சமயம் 500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் .//

      ஸ்பெஷல் வெளியீடுகளுக்கு INPUTS நிறைய தேவை படுகிறது. அன்றைய சூழ்நிலைகெற்றபடி பல மாறுதல்கள் இது போன்ற ஸ்பெஷல் களுக்கு தேவைப்படலாம். மூன்று மாதங்களுக்கு முன்னர் விலை,கதைகள், அளவுகளை FINALISE செய்து ஒரு அறிவிப்பு REASONABLE ஆகா தெரிகிறது. இந்த SUSPENSE கூட இல்லாவிட்டால் நம்முடைய எதிர்பார்ப்புகள் ரொம்பவே FLAT ஆகா இருக்கும். பட் ஒரு உத்தேச ஸ்பெஷல் புத்தகங்களின் லிஸ்ட், அதற்கான மாறுதல்களுக்குட்பட்ட உத்தேச சந்தா தொகை அறிவிப்பு நிச்சய தேவை.

      //500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் .//

      //தனியாக // +1 . அவ்வப்போது ஒரு SURPRISE ஸ்பெஷல் இருக்கட்டும் சார்!


      //3. சில நண்பர்களின் வசதிக்கு ஏற்ற படி தொகை அதிகமாக இருப்பின் இரு முறை தவணை யாக அதனை அனுப்பவும் வசதி செய்து தரவும்.//

      தற்போதும் இந்த வசதியுள்ளது. சந்தா பிரித்துகட்டும் விஷயத்தில் நாம் எப்போதுமே ரொம்ப FLEXIBLE!

      Delete
    6. //அடுத்து "மறு பதிப்பு "பற்றி எனது எண்ணங்களை கூற நினைக்கிறன் .(சிலருக்கு இது பற்றிய கருத்து வேறாக இருக்கலாம்.But எனது உறுதியான கருத்து இது ).//

      மறுபதிப்புகள் பத்தி பெரிய RESERVATION ஒன்னும் எனக்கு கிடையாது என்பதால் இங்க ஒரு பெரிய ஜம்ப்
      செய்து உங்களோட கடைசி கட்டத்துக்கு தாவிடறேன்.

      //1. ஒரு பக்க மௌன சிரிப்பான "மியாவியை "விட வசனத்துடன் வரும் "சிரிப்பின் நிறம் சிவப்பு "..",ரத்த வெறியன் ஹேகர் "போன்றவை சிறப்பான சிரிப்பு//

      ரத்த வெறியன் ஹேகர் உங்களுக்கு ரொம்ப பிடிச்சத இருக்கலாம். என்னை பொறுத்தவரை மியாவி டாப். ""ரத்த வெறியன் ஹேகர் '' அவ்வப்போது வெளியிட கோரலாம். பட் அது மியாவியை தூக்கிவிட்டு என்பதை ஏற்க முடியாது.

      //2. வரும் காலத்தில் தாளின் விலை ஏற்றம் ,டாலரின் விலை ஏற்றம் என எவ்வளவு மாறினாலும் தயவு செய்து இனியும் பக்கத்தை குறைக்காதிர்கள்.

      3. ஏற்கனவே 200 பக்கத்தில் இருந்து பாதி படி இறங்கி விட்டோம் .இனியும் எறங்க வேண்டாம் சார் ..ப்ளீஸ்.//

      +1. இதுக்கு நம்ம சந்தா தொகை கொஞ்சம் FLEXIBLE ஆக்க இருந்தால் சாத்தியப்படலாம்.

      //அப்படி தவிர்க்க முடியாத சூழ் நிலை ஏற்படின் "மெகா ட்ரீம் ஸ்பெஷல் "இல் வந்த தரமான தாளில் லக்கி கதை வந்ததை போலே கூட வெளி இடுங்கள் .இன்னும் இளைத்தால் அது "என்னை " போல ஆகி விடும்.
      //

      தாள்களின் தரத்தில் நாம் ஒரு நல்ல STANDARD டை எட்டிப்பிடித்துள்ளோம் பரணி. பழைய நிலைக்கு மீண்டும் செல்ல வேண்டாமே!

      //5. தாங்கள் அறிவித்த மாதம் ஒரு "லயன் ""முத்து " தவறாமல் கடை பிடிக்கவும்.
      முடிந்தால் கூட மாதம் ஒரு "சன் ஷைன் "இணைக்க பார்க்கவும்.//

      +10000000. ரொம்ப காலமாக ஆவலோட எதிர்பார்த்துகிட்டுருக்கற விசயம் இது.

      //"கிராபிக் நாவல் " என்னுடையை பார்வையாக அல்லாமல்: தொடர்ந்து மூன்று மாதம் எல்லாம் "கிராபிக் நாவல் "வேண்டாம் என்ற நல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம்.//

      நல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம்!! : )

      Delete
  57. விஸ்வா சார் பரணி கூறிய சில கருத்துக்கள் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதாவை? அதிலும் மின்னும் மரணத்தை வேண்டாம் என்று கூறியது.என் நெஞ்சில் ஈட்டி பாய்ந்து போல் வலிக்கிறது. இது எப்படி இருக்கிறது தெரியுமா?இச் செயல் தெளிந்த நிரில் கல்லை எறிவாதாற்க்கு சமம். கலங்கிய நிர் எதற்க்கும் உதாவாது,உங்உங்களிடம் உள்ள மின்னும் மரணம் புக் உங்களுக்கு உதவுமே?தவிர அவை புத்தகம் இல்லாதஎங்கஎங்களுக்கு உதாவாது

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சித் சார்,


      இவை எதுவுமே என்னுடைய கருத்துக்கள் அல்ல. நண்பரும், காமிக்ஸ் அபிமானியும், தீவிர போராளியுமான சேலம் பரணி சாரின் கருத்துக்கள் இவை.

      அவரது வலைப்பதிவில் எத்துனை பேர் சென்று படிப்பார்கள் என்று தெரியவில்லை. அதனாலேயே இங்கே அவற்றை Copy + Paste செய்தேன்.

      உங்களின் கேள்வி Re-Directed டு சேலம் K பரணிதரன் சார்.

      Delete
    2. விஸ்வா சார்....முதலில் இங்கு உங்களுக்கு மிக பெரிய நன்றியை கூற கடமை பட்டு உள்ளேன் .எனது ப்ளாக்ல் படிக்க முடியாத படி ஒரே பத்தியாக வந்து என்னாலய வருத்த பட வைத்த எனது பதிவை "சிறந்த முறையில் "இங்கு இட்டதற்கு எப்படி நன்றி சொல்வது என தெரிய வில்லை .மிக்க நன்றி .

      ரஞ்சித் சார் ..நீங்கள் சொல்வது உண்மை தான் .புத்தகம் இல்லாத வாசகர்கள் ,படிக்காத நண்பர்கள் இதனை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பது நான் அறிந்ததே .ஆனால் 80% அனைவரிடம் உள்ள புத்தகத்தை அத்துனை விலையில் மீண்டும் வாங்குவதை விட புதிதாய் அவ்வளவு பெரிய "குண்டு "புத்தகத்தை புதிதாய் ,புதிய கதையால் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதே எனது கருத்து .

      Delete
    3. மின்னும் மரணம் கடைசி 3 பாகம் தவிர மீதி பாகங்களை எனக்கு கொடுத்துதவ முடியுமா

      Delete
  58. ஆனால் அவர் அந்த பதிவை இங்கு போடவில்லை.போட்டது நிங்கள்? அவர் போட்ட கருத்துகளுக்கு 80சதவிதம் நடைமுறைக்கு கண்டிப்பாக வரவேண்டியவை.மிதம் 20சதவிதம் .மறுபதிப்பு பற்றி கூறியாவை. எனக்கு உடன்பாடு இல்லை ,மிண்னும் மரணம் கண்டிப்பாக 2015 ஜனவரி மாதம் வரவேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சித் சார் ..எனது கருத்தில் பலர் மாறு படலாம் என்பது நான் அறிந்ததே .அதே சமயம் 80% எனது கருத்தில் தாங்கள் ஒத்து கொண்டதில் மிக்க நன்றி .

      அதே சமயம் மாறு பட்ட கருத்தை கொண்ட பலர் இங்கு அழகாகவோ ,காட்டமாகவோ எப்படி கூறினாலும் "விஸ்வா "சார் அவர்களை இழுக்க வேண்டாம் .இங்கு வெளி இட்டது அவராகவே இருந்தாலும் இவை முழுக்க ,முழுக்க "என்னுடைய "கருத்து மட்டுமே...

      Delete
    2. பரணி அவர் எனக்கு எதிரியால்ல.நண்பர்தான்.

      Delete
    3. நண்பர் ரஞ்சித் ..அதை நான் அறிவேன் .
      நான் இப்பொழுது அதை குறிப்பிட காரணம் வேறு சிலர் இந்த பதிவை இங்குஅவர் வெளி இட்ட காரணத்தினால் தவறாக பேசி விட கூடாதே என்ற காரணத்தினால் மட்டுமே .இது போல ஒரு சில "வீண் பழி "என் மீது விழுந்த காரணத்தினால் தான் நான் இணையம் பக்கம் வருவதை தவிர்த்து வந்தேன் .

      Delete
  59. என்னங்க இது? மின்னும் மரணம் வேண்டாம் என்று திரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களே!

    அது காவியங்க!. ஈரோடு விழாவில் நான் கலந்து கொண்டு நான் நண்பர்கள் குழுவிடம் 'மின்னும் மரணத்தை பற்றி ஆசிரியரிடம் கேட்டீர்களா' எனக் கேட்ட போது அதற்க்கு அவர்கள் 'நாங்களும் காலையிலிருந்து கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம் ஆனால் எப்பொழுதும் போலத்தான் நழுவுகிறார்' என்றனர். சரி எப்படியாவது அவரை சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று ஆசிரியரிடம் மெல்ல மின்னும் மரணம் மறு பதிப்பை பற்றி பேச்சு கொடுத்தேன்

    அதற்க்கு அவர் சொன்ன முதல் வார்த்தை 'திரும்பவும் முதல்லேருந்தா' எனக்கேட்டு சிரித்தார். நானும் சிரித்துவிட்டு 'சார் வழக்கம் போல நீங்கள் பார்க்கலாம்/யோசிக்கிறேன் /அது பற்றி அப்புறம் பேசலாம் என்றெல்லாம் நீங்க சொல்லாதீர்கள் சார் தயவு செய்து மின்னும் மரணம் ரீ பிரிண்ட் செய்யப்போகிறீர்களா? இல்லையா? ஒன்று முடியும்/இல்லை ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் திரும்பவும் அது பற்றி நாங்கள் பேசப்போவதில்லை' என்று அன்போடு உரிமையாக கேட்டேன்.

    நண்பர்களும் உடனிருந்து மாறி மாறி கேட்டார்கள் நிறைய வற்புறுத்தலுக்கு பிறகு 'ஜனவரி 2015 மின்னும் மரணம் என்றார். நண்பர்களின் கரகோஷம் அங்கே வந்திருந்த அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

    எனக்குள் பெருமிதம் 'ஆஹா நாம் கேட்டு ஒத்துக்கொண்டார் போலிருக்கிறது' என்று. ஆனால் உண்மை அப்படியல்ல என்பது பிறகுதான் புரிந்தது எனக்கு முன்னால் எத்தனை பேர் கேட்டிருப்பார்கள், வற்புறுத்தியிருப்பார்கள் அது ஆசிரியருக்கு மட்டுமே தெரியும். சேலம் வந்து விஷயத்தை நண்பர்களிடம் சொன்னவுடன் 'ஆஹா மின்னும் மரணம் ரீ பிரிண்ட்டா சூப்பர்' என்று உற்சாக குரல் கொடுத்தனர்.

    நான் நமது காமிக்ஸை வாங்கி நண்பர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு தெரிந்தவரை யாரும் 'மின்னும் மரண'த்தை வேண்டாம் என்று ஒருவருமே கூறவில்லை. மாறாக எப்பொழுது முன் பணம் தருவது எனக்கேட்டவண்ணம் உள்ளனர். ஒருசிலர் இன்னும் மேலே போய் இப்பொழுதே பணம் தருகிறோம் வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.

    நல்ல சிறந்த கதை! அற்புதமான ஓவியம்! அதை ஏன் தடுப்பானேன். நிறைய நாட்களுக்கு முன் வந்தது அதுவும் தனித்தனியாக. ஒன்றாய் வரட்டுமே! வந்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறோம். காமிக்ஸை ஊறுகாவாகவா தொட்டுக்கொள்கிறோம் சாப்பாடாகத்தானே சாப்பிடுகிறோம். நாம் பெற்ற இந்த இன்பம் திரும்பவும் கலரில் ஒன்றாக புதிய வாசகர்கள் பெறட்டுமே!

    காமிக்ஸை சண்டையில் ஒரு cm கிழித்த மனைவியை தாய் வீட்டிற்கு துரத்திய வாசகர்களெல்லாம் எனக்குத் தெரியும். 'நான் வேண்டுமா? இல்லை காமிக்ஸ் வேண்டுமா?' என்ற மனைவியிடம் 'காமிக்ஸ் தான் வேண்டும்' என்று சொல்லி அ(க)டி வாங்கிய வாசகரும் தெரியும். இவர்களெல்லாம் மின்னும் மரணத்தின் ரசிகர்கள். இருங்க இருங்க அவங்களிடம் மின்னும் மரணம் ரீ பிரிண்ட் வேண்டாம் என்று சொல்லுபவர்களின் லிஸ்ட்டை கொடுக்கிறேன் அப்பபாருங்க 'ஆசிரியரே தயவு செய்து மின்னும் மரணத்தை ரீ பிரிண்ட் போடுங்க'ன்னு பின்னங்கால் பிடறியிலடிக்க சிவகாசிக்கே ஓடி நீங்களே சொல்றீங்களா இல்லையான்னு

    நல்லதை வரவேற்போம் என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே !

    ReplyDelete
    Replies
    1. கர்ணன் சார் ...காமிக்ஸ் வேண்டுமா ,மனைவி வேண்டுமா என்றால் "காமிக்ஸ் "வேண்டும் என்றவனும் நான் தான் .

      திரு மணத்திற்கு அடுத்த நாளே எனது முதல் மனைவி "காமிக்ஸ் "தான் .அடுத்து தான் நீ என்றவனும் நான் தான் .

      Delete
  60. இம்மாத புத்தகங்கள் எப்பொழுது கிடைக்கும் சார்.

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. சார்,
    மறுபதிப்புகள்:
    1. கார்சனின் கடந்தக் காலம் ஒரு cult classics, வண்ணத்தில் வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன்.
    2. ரத்தப் படலம் ஏற்கனவே முழுமையாக கருப்பு & வெள்ளையில் வந்துள்ளதால் வண்ணத்தில் மீண்டும் ஒருமுறை வெளியிட அவசியம் இராது!
    3. மின்னும் மரணம் அப்படியல்ல, பார்ட் பார்ட்டாக வந்ததாலும், கருப்பு & வெள்ளையில் வந்ததாலும் மறுபதிப்பு ஹிட் லிஸ்டில் முதன்மை பெறுகிறது. இப்பொழுது முழுமையாகவும், முழுவண்ணதிலும் வெளியிடுவது அவசியமாகிறது! அனாவசியமாக கையாளப்பட்டிருக்கும் சித்திர ஜாலமென்ன, முதுகெலும்பாய் வீற்றிருக்கும் கதையின் வீரியமென்ன., இவற்றுடன் முழுவண்ணமும் சேரும் போது ஒரு மறுபதிப்பு தவிர்க்க முடியாதொன்றாகிறது!

    மின்னும் மரணம் வண்ணத்தில் கிடைப்பது தங்கத்தைவிட சிறந்ததாகும்.

    ReplyDelete
  63. விஜயன் சார், இந்த மாத புத்தகங்கள் எத்தனை, எப்போது கிடைக்கும், நவம்பர் 2 தீபாவளி. எங்களுக்கு எப்போது புத்தகங்கள் கிடைக்கும்.

    ReplyDelete
  64. Paranitharan K : நண்பரே, ஏற்கனவே எனக்குக் கடிதமாய் எழுதி அனுப்பி இருந்த உங்களது அபிப்ராயங்களை இங்கே பின்னூட்டமாகவும் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி ! அபிப்ராயங்களும் ; ரசனைகளும் ஒவ்வொருவருக்கும் நிறையவே வேறுபடும் என்ற போதிலும், ஒரு பொதுவான புள்ளியில் பெரும்பான்மை இணைவதும் கூட அவ்வப்போது நடந்திடுவதும் உண்டு தானே ? மறுபதிப்புகளை தேர்வு செய்யும் போது நான் தேடுவது அந்தப் பொதுவான மையத்தை மாத்திரமே !

    'மினி-லயன் மறுபதிப்பு வராது போனதில் வருத்தம் ; டிடெக்டிவ் ஸ்பெஷல் நின்று போனதில் வருத்தம் ' என்ற உங்களின் ஆதங்கங்கள் எனக்குப் புரியும் அதே கணத்தில், அவை சொதப்பியதில் முதன்மை கவலை கொண்டவன் நானே என்பதை மறந்து விட்டீர்களே ? அந்த வெளியீடுகளின் பொருட்டு நாங்கள் செய்திருந்த பூர்வாங்க ஏற்பாடுகள் விரயம் என்பதை விட்டுத் தள்ளினாலும் - பிரமாதமாய் ஐந்தாறு மாதங்களாய் விளம்பரப்படுத்திய பின்னும், பரிதாபமான வரவேற்பே கிட்டியது என்பதைத் தொடர்ந்து அவற்றை மூட்டை கட்ட வேண்டிய சமயம் நான் நிச்சயமாய் மகிழ்ச்சியாக இல்லை ! அனுசரணையான நண்பர்கள் வட்டம் இது என்ற ஒரே காரணத்தால் அந்தத் திட்டத்தை பரணுக்கு அனுப்ப சாத்தியம் ஆனது -but அந்த தர்மசங்கடம் இன்னமும் என்னுள் உள்ளது !

    இங்கே இன்னும் ஒன்றை நான் சொல்லியாகணும் பரணி சார்..! 'புத்தகத் திருவிழாவில் விட்டுப் பாருங்கள் - விற்றுத் தீர்ந்து விடும்' என்பதெல்லாம் கேட்க ரம்யமாய் இருந்தாலும் நிதர்சனம் சொல்லும் கதையோ முற்றிலும் மாறுபட்டது ! சென்னை + ஈரோடு நீங்கலாய் சொல்லிக் கொள்ளும் விற்பனை சாத்தியமாகும் புத்தக விழாக்கள் நம்மூரில் கிடையாது ! சென்னையிலும் நமக்கு ஸ்டால் கிடைக்குமா - அல்லது யாரோடாவது கூட்டுக் குடித்தனம் செய்ய வேண்டி வருமா ; இல்லை அதுக்கும் ஆப்பு வைத்து விடுவார்களா ? என்பது ஒவ்வொரு ஆண்டும் எழும் கேள்விக் குறி ! இன்றைய நமது சக்கரங்களை சுழலச் செய்யும் நிஜமான சக்தி - நண்பர்களாகிய நீங்களும், உங்கள் சந்தாக்களும் மாத்திரமே ! புத்தக விழாக்களில் நடந்தேறும் விற்பனை ஒரு பூஸ்ட் என்றால் - பெட்ரோல் நம் சந்தாதாரர்களே ! So - நண்பர்களின் பெரும்பான்மைக்கு சந்தோஷம் தரா முயற்சிகளை புத்தக விழாக்களின் வெற்றி ஈடு செய்து விடுமென்ற கனவு கானல்நீரே ! Back to the future பாணியில் - ஸ்பைடர் ; மினி-லயன் ; முத்து காமிக்ஸ் ஆரம்ப வெளியீடுகள் என கனவுலகில் சஞ்சாரம் செய்வதை விட இன்றைய ரசனையை காதில் போட்டுக் கொண்டு செயல்பட நினைப்பது தவறாகாதே ? சமீபத்திய "CAPTAIN PRINCE ஸ்பெஷல் " இதற்கு அழகானதொரு உதாரணம் ! இந்தாண்டின் bestseller (இது வரை) மேற்படி இதழே !

    அப்புறம் - உங்களின் இன்னொரு ஆதங்கம் இதர மறுபதிப்பு இதழ்களைப் பற்றி...! மின்னும் மரணம் நீங்கலாக 2014-ன் வெளியீடுகள் (புதுசு + பழசு) பற்றி நான் இது வரை எங்கேயும் மூச்சு விடக் கூட இல்லாத போது - இரத்தப் படலம் ; கார்சனின் கடந்த காலம் பற்றிய உங்களின் ஆரூடம் கொஞ்சம் அவசரமானதாகத் தோன்றவில்லையா ? இரத்தப் படலம் இதழை மறுபதிப்பு செய்யும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு நிச்சயம் கிடையாது என்பதால் அதன் பொருட்டு நீங்கள் குழம்பிக் கொள்ள அவசியமில்லை !

    கார்சனின் கடந்த காலம் + மின்னும் மரணம் இதழ்களைப் பொருத்த வரை - இவற்றில் எதுவுமே சமீபத்திய இதழ்கள் அல்லவே ? தவிர நமது இரண்டாம் இன்னிங்க்ஸ் துவங்கிய ஜனவரி 2012 துவக்கம் இன்று வரை - என்னிடம் மிக அதிகமாய்க் கோரப்பட்ட இரு மறுபதிப்புத் தேர்வுகள் இந்த இரண்டு மாத்திரமே ! So ஒரு கட்டத்தில் அந்தக் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும் கடமை எனக்கு உண்டல்லவா ? 'நண்பர்கள் கோருகிறார்கள்' என்பதை ஒரு தேர்வின் முதுகெலும்பாய் நான் பார்த்திடும் அதே சமயம், எனது judgement எனும் சங்கதியையும் செயல்படுத்தாது இருப்பதில்லை ! நண்பர்களின் கோரிக்கையில் வலு உள்ளது என்பதை எனது சிந்தனையும் சந்தேகமின்றி ஏற்றுக் கொள்ளும் போது அந்த choice சுலபமாகிறது !

    அப்புறம் நீங்கள் அறிந்து கொள்ள இன்னுமொரு சேதி : கேப்டன் டைகர் தொடரில் இருந்த டாப் கதைகள் சகலத்தையும் நாம் ஏற்கனவே வெளியிட்டாகியாச்சு ! மீதம் இருக்கும் கதைகள் நாம் பழகிப் போன முந்தைய சுவாரஸ்யத்தில் இருக்கும் வாய்ப்புகள் குறைச்சலே ! So - மி.ம. குண்டு புக்கின் இடத்தில் - புதுக் கதைகளைத் தாங்கிய குண்டு புக் என்பதற்கு வாய்ப்பில்லை ! So let's enjoy this !

    ReplyDelete
    Replies
    1. தல கார்சனின் கடந்த காலம் பேரு மட்டுந்தான் கேள்வி பட்டிருக்கேன் !! மின்னும் மரணம் இரண்டு கதைகள் படித்த ஞபகம்.. ப்ளீஸ் கார்சன் புக்.எ டீல்ல விட்டுராதிங்க...

      Delete
    2. மின்னும் மரணம் மற்றும் கார்சனின் கடந்த காலம் மறுபதிப்பு உண்டு என்று உறுதிபடுத்தியதற்கு எடிட்டர் அவர்களுக்கு நன்றி!

      Delete
    3. "கார்சனின் கடந்த காலம்" வருங்காலத்தில் நிச்சயம் ...சூப்பர் news (அப்போ அடுத்த தீபாவளியும் அதிரடிதான் போல)...

      Delete
    4. I second Senthil.
      மின்னும் மரணம் மற்றும் கார்சனின் கடந்த காலம் மறுபதிப்பு உண்டு என்று உறுதிபடுத்தியதற்கு எடிட்டர் அவர்களுக்கு நன்றி!

      Delete
  65. எடிட்டர் சார்...

    இம்மாத இதழ்கள் என்னவாயிற்று.. அதை பற்றிய அறிவிப்பு ஒன்றும் காணோம்..

    ReplyDelete
  66. டியர் சார்,

    முதலில் உங்களுடைய பயணக் கட்டுரை சூப்பர். எப்பிடி இப்படி உங்களால் எழுத முடிகிறது. கல்கண்டு வார இதழில் லேனா தமிழ்வாணன் அவர்களின் பயணக் கட்டுரை எனக்கு மிக பிடிக்கும். வாங்கியதும் முதலில் புரட்டுவது அதைதான். பயணக் கட்டுரை அதுவும் மிகப் பிடித்த காமிக்ஸ் சம்பந்தமாக இருந்தால் வாவ். எனக்கு நீங்கள் சொன்னர்ப்போல் ஆயாசமும் வரவில்லை, கெட்ட ஆவியும் வரவில்லை. உலகப் புகழ் பெற்ற ஒரு காமிக்ஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய அவர்கள் அலுவலகத்துக்கு போவதே பாக்கியம். அதுவும் அந்த சாம்ராஜயத்தின் இளவரசனுடனும், CEO உடனும் உரையாடுவது ஆஹா. இந்த பதிவின் மூலம் எங்களையும் அழைத்துபோய் வந்து விட்டீர்கள். சற்று திரும்பி நிற்பதன் காரணம் எனக்கு உபயோகமாக இருக்கும் :D

    விளம்பரங்கள் தொடர்ந்து வர இருப்பது மகிழ்ச்சி.

    நாம் சிறிய நிறுவனமாக இருந்தாலும் நம்முடைய காமிக்ஸ் நேசத்தை புரிந்து கொண்ட அவர்களுக்கு ஒரு சல்யுட். நிறைய புத்தகங்களை அள்ளி (அல்லது குறித்துக் கொண்டு) வந்திருப்பீர்கள். 2014 லில் அவை எதாவது வருவதற்கு வாய்ப்புள்ளதா?

    ReplyDelete
  67. கார்த்திக் : சரியான அமுக்குணி நீங்க. வாயை திறக்கவே இல்லையே. நல்ல முயற்சி. அனாலும் எங்க ஸ்பைடரை மறந்ததுக்கு கடுமையான கண்டனங்கள். சுத்தி சுத்தி அடிப்போம்ல :D

    ரமேஸ் குமார் : லோகோவை டிங்கரிங் பார்த்து வரலாற்றில் இடம் பிடித்து விட்டர்கள்.வாழ்த்துக்கள்.ரொம்ப நல்லா இருந்துச்சு.

    ReplyDelete
  68. இம்மாத வெளியிடுகள் எப்போது எங்களுக்கு கிடைக்கும்?

    ReplyDelete
  69. ஹி ஹி! "கார்சனின் கடந்தகாலம்" என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டதால் கீழ்க்காணும் கேள்வியை தவிற்கமுடியவில்லை:

    "கிட் வில்லரின் எதிர்காலம்" என்ற concept-ல் ஏதாவது கதை வெளிவந்துள்ளதா சார்?! :D

    ReplyDelete
  70. டியர் காமிரேட்ஸ்,

    எடிட்டரின் லேட்டஸ்ட் பதிவு "நீலச்சட்டைகளுக்கு சிவப்பு கம்பளம்" வலையேறி இருக்கின்றது.

    படித்து இன்புறுங்கள்.

    ReplyDelete