Sunday, June 16, 2013

பல கேள்விகளும் ; சில சிந்தனைகளும்...!

 நண்பர்களே,

வணக்கம். ஊருக்குத் திரும்பியதும், தொங்கலில் நின்று கொண்டிருந்த பணிகளை கொஞ்சமாய் கவனித்து விட்டு, நேற்றிரவே இங்கு ஆஜராக உத்தேசித்திருந்தேன் ; ஆனால் கும்பகர்ணனைத் தொற்றிக் கொண்ட   தூக்கம் எனது கண்ணிமைகளிலும் குடி கொண்டு விட்டதால் - சொப்பனங்களில் ஹாட்லைன் எழுதப் போய் விட்டேன் ! ஞாயிறு காலை login செய்து விட்டு எதைப் பற்றி எழுதலாமென்ற சிந்தனையோடு    தலையைச் சொறிந்த போது தான் சமீபமாய் நமது 'கேள்விகளின் நாயகர்' ஈரோடு விஜய் தொடுத்திருந்த கேள்விக் கணைகள் நினைவுக்கு வந்தன ! இயன்றதை பதிலாய் படைத்தாலே ஒரு பதிவு தயார் என்பதால் இதோ துவங்குகிறது எனது ஞாயிறு ! (கேள்விகள் சிகப்பிலும், எனது பதில்கள் black & white -ல் இருந்திடும் ! )

*அடுத்த சென்னை புத்தகத்திருவிழாவில் கருப்பு-வெள்ளை மறுபதிப்புகளுக்கு வாய்ப்பிருக்கிறதா?


ஆங்காங்கே எனது பின்னூட்டங்களில் மாத்திரமின்றி, சந்திக்கும் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போதும் இந்த "மறுபதிப்புப்   படலம்" பற்றிய எனது இப்போதைய நிலைப்பாட்டை  மெலிதாகக் கோடிட்டுக் காட்டி வருகின்றேன் ! சென்றாண்டு காமிக்ஸ் க்ளாசிக்சில் முந்தைய மும்மூர்த்திகள் ; டிடெக்டிவ்கள், வலம் வருவார்களென்று அறிவித்தது ; வெகு சுமாரான வரவேற்பு + சந்தா சேகரிப்பில் ஏக மந்தம் காரணமாய் அத்திட்டம் பரணுக்குப் பார்ஸல் ஆனது என அனைத்திற்கும் நாம் சாட்சிகள் தானே ! இந்நிலையில் மீண்டும் b&w மறுபதிப்பிற்கு உயிரூட்டுவது என்பது சிரமங்கள் நிறைந்த முயற்சியே ! 2013-ன் ஒரு பாதி நிறைவடைந்திருக்கும் இத்தருணத்தில் பாக்கியுள்ள 6 மாதங்களில் நாம் சந்திக்க / சாதிக்கக் காத்துள்ள இதழ்களின் பட்டியலைப் பார்ப்போமே :

லயன் & முத்து காமிக்ஸ் - புது இதழ்கள் : 7 இதழ்கள் 
( ரூ.200 ; ரூ.100 ; ரூ.50 ; ரூ.40 என வெவ்வேறு விலைகளில்)    

சன்ஷைன் லைப்ரரி - வண்ண மறுபதிப்புகள் : 3 இதழ்கள் (ரூ.100 வீதம்)

+6 வரிசையில் - 5 இதழ்கள் (ரூ.50 வீதம்)


ஆக, தொடரும் ஆறு மாதங்களில் நம் முன்னே 15 இதழ்களுக்கான அட்டவணை தயாராய்க் காத்துள்ளது ! இந்தப் 15 இதழ்களுக்கும் பணியாற்றுவது ஒரு பக்கமெனில், அவை அவசியப்படுத்தப் போகும்    தயாரிப்புச் செலவுகள் + முதலீடுகள் தலையைச் சுற்ற வைக்கும் ஒரு அசுரத் தொகை ! நாம் தயாரிப்பதில் 30 - 35 % மாத்திரமே முதல் 30 நாட்களில் போணியாகும் என்பதால் பாக்கி இதழ்கள் நம் கிட்டங்கிக் கஜானாவில் துயில் பயிலுவது அவசியம் - அவ்வப்போது தலைகாட்டும் புத்தகத் திருவிழாக்களையும் ; e -bay விற்பனையையும்  எதிர்நோக்கி ! இங்கே தேவைப்படுவது வலுவான முதலீடு மாத்திரமின்றி - விசாலமான கிட்டங்கியும் கூட என்பதை சமீப நாட்களாய் நமது godown சந்தித்து வரும் இட நெரிசல் உணர்த்திகிறது ! இந்நிலையில் - எதிர்நோக்கியுள்ள 15 இதழ்களோடு புதிதாய் (!!) மறுபதிப்பு சமாச்சாரங்களையும் நான் கையில் எடுத்தால் - அது ஒட்டகத்தின் குறுக்கை ஒடித்த கதையாய்ப் போய் விடும் அபாயமுண்டு ! So - 2014 சென்னை திருவிழாவில் மறுபதிப்புகளும் இடம்பெறுவது close to impossible ! (அதாவது நமக்கு இந்தாண்டும் சென்னையில் ஸ்டால் தரும் பட்சத்தில் !!)
========================================================================

* 'திகில் நகரில் டெக்ஸ்' எப்போது முழுவதுமாக வெளிவரும்?


ஏராளமான நண்பர்கள் இதே கேள்வியை பல்வேறு தருணங்களில் எழுப்பி விட்டனர் ! "திகில் நகரில் டெக்ஸ்" ஒரு நார்மலான டெக்ஸ் சாகசம் மாத்திரமே ! தலைப்பைப் பார்த்தோ என்னவோ , நண்பர்களிடையே இக்கதைக்கு அதீத பில்டப் உருவாக்கி விட்டதால், அதனைக் கோரி எழும் குரல்களும் கூடி விட்டன ! 2014-ல் பட்டியலிட்டிடுவோமா ?
========================================================================

* தற்போது அதிக வரவேற்பு பெற்றுவரும் 'கிராபிக் நாவல்' களுக்காக ஒரு தனி புத்தகம் ஆரம்பிக்கப்படுமா?


மாமூலான கதைக் களங்களுக்கு அப்பாற்பட்டு நின்றிடும் படைப்புகளை கிராபிக் நாவல் என்று வரிசைப்படுத்துவதெனில் - சமீபத்திய டயபாலிக் கூட அந்தப் பட்டியலில் தானே சேர்ந்திடும் ! Anyways , ஒரு கிராபிக் நாவலைத் தேர்வு செய்வது மிகச் சிரமமான பணி என்பேன் ! கதைக் களத்தில் வேற்றுமை ; சித்திர பாணிகளில் ஒரு நவீனம் ;வழக்கமான காமிக்ஸ்களைத் தாண்டியதொரு தாக்கத்தை நம்மிடையே உண்டு செய்யும் ஆற்றல் என இவற்றிற்கான தேர்வு அளவுகோல்கள் மிகக் கடுமையானவைகள் ! 'அடிக்கடி GN -களை வெளியிடுகிறேன் பேர்வழி' என்று நான் புறப்பட்டால் அந்த அளவுகோல்களில் ஆங்காங்கே சிற்சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டி வரும் ! So இப்போதைக்கு ஊறுகாயாய் பரிமாறப்படும் GN -கள் அவ்விதமே இருப்பது நமக்கும் நல்லதே ! இங்கே சின்னதாய் ஒரு இடைக்கதை ! சமீபமாய் ஒரு வேற்று மொழி   கிராபிக் நாவலைப் புரட்டும் வாய்ப்புக் கிட்டியது ! கோழிக் கீச்சலான அந்தச் சித்திரங்களிலும் ஒரு வசீகரம் தெரிந்ததால், மொழி புரியாது போயினும் பொறுமையாகக் கதையினை ரசிக்க முயற்சித்தேன். ஒரு சிறு நகரில் பிறந்து, வளர்ந்ததொரு ஆசாமி - பின்னாளில் தலை நகரத்தில் பணியாற்றும் போது ஒரு வார இறுதியில் தன சொந்த ஊருக்கு ஒரு ட்ரிப் அடிக்கிறான் ! தான் வளர்ந்த ; வாழ்ந்த தெருக்களை ; மைதானங்களை ; சுற்றித் திரிந்த புல்வெளிகளை ; நிதானமாய் ஒரு பார்வையிட்டு விட்டு, மறு நாள் மீண்டும் தலைநகர் நோக்கி ரயில் ஏறுகிறான் ! மிகச் சொற்ப வசனங்கள் ; பெரிதாய் ஒரு சுவாரஸ்யம் தரக் கூடிய கதையின்மை - ஆனால் இன்றைய நம் வாழ்வுகளில் ஒரு சின்ன ஒற்றுமையைக் கோடிட்டுக் காட்டும் பாணி என்று அமைந்திருந்தது இந்த GN ! வாழ்க்கையின் பக்கங்களைத் துடிப்போடு இன்று புரட்டும் நண்பர்களுக்கு இக்கதை "ஞே" என்ற முழிப்பை மாத்திரமே வழங்க வல்லது ; 40 s & 50 s இருக்கும் "பழங்களுக்கு" வேண்டுமெனில், கடந்து வந்த பாதையின் ஒரு வலி கலந்த சந்தோஷத்தை எங்கோ ஒரு சிறு மூலையில் நினைவுபடுத்தும் முயற்சியாக இது இருந்திடலாம் ! இவை போன்ற GN -கள் ஆங்காங்கே இருப்பினும் - அனைத்து ரக வாசிப்பு அனுபவங்களுக்கும் அவை  உகந்தவைகளாக அமைவது கஷ்டமே ! 
========================================================================

* 'சிங்கத்தின் சிறு வயதில்' ஒரு தொகுப்பாக வெளியாகுமா?


நினைவலைகளை நானே சிரமப்பட்டுப் பின்னோக்கித் திருப்பிட வேண்டியுள்ளது இந்தக் கால் நூற்றாண்டுக்கும்  முந்தையதொரு பயணத்தின் நதிமூலங்களைத் தேடிச் செல்லும் போது ! அப்படி இருக்கையில், இன்று நம் குடும்பத்தில் ஐக்கியமாகிடும் புது வரவுகளுக்கு "அந்த நாள் ஞாபகம் வந்ததே-வந்ததே " பாணியிலான மலரும் நினைவுகள் எத்தனை தூரம் ரசித்திடுமோ நானறியேன் ! இதழில் சில பக்கங்களை ஆக்ரமிக்க நீங்கள் அனுமதிப்பதே எனக்கு உச்ச பெருமிதம் ; நிச்சயமாய் இதனை தனியாய் ஒரு இதழாக வெளியிடும் உத்தேசமென்றும் கிடையாது ! 
========================================================================

* ஜூனியர் எடிட்டர் விக்ரம் தற்போது எந்தமாதிரியான பணிகளைக் கவனித்துவருகிறார்?


பொறியியல் கல்வியில் இரண்டாம் ஆண்டை முடித்து விட்டு மூன்றாம் ஆண்டுத் துவக்கத்தை எதிர்நோக்கியுள்ள ஜூனியர் எடிட்டர் தற்சமயம் கல்லூரிக்கு மாணவனாய் மாத்திரமே தனது கடமைகளைச் செய்து வருகிறார் ! காமிக்ஸ் எனும் சுவாசத்தை தாமதமாய் உணர்ந்துள்ள போதிலும், விட்டதைப் பிடிக்கும் வேகமும் ஆர்வமும் சமீபத்திய வரவுகள் அவருள் ! எனது ராடாருக்கு அப்பாற்பட்ட படைப்புகளைத் தேடித் பிடித்துப் படிப்பது ; அவற்றில் 'தேவலை' என்ற தொடர்களை எனது பார்வைக்குக் கொணர்வது ; எனது பொதுவான உரத்த சிந்தனைகளுக்கு ஒரு sounding board ஆக இருப்பது என்பது அவரது தற்சமயப் பொறுப்புகள். காமிக்ஸ் எனும் துறையிலோ ; நமது பிற தொழில்களிலோ அவர் கால் பதிக்க, ஆர்வத்தைத் தாண்டிய பல அவசிய அளவுகோல்கள் உள்ளதால், அவற்றை நிதானமாய்க் கற்றறிந்து வரட்டுமே என விட்டுள்ளேன். உயர் கல்விக்கான அவசியமும், அது வழங்கிடும் ஆற்றலும் எத்தனை முக்கியமென்பதை சராசரியான மனிதனை விட நான் நன்றாகவே அறிந்துள்ளது எனது நிதானத்தின் காரணம் ! 


30 ஆண்டுகளுக்கு முன்னே நானிருந்த சூழல் வேறு....! பள்ளிக் கல்வி முடித்த கையோடு - கல்லூரி சென்று மேற்கொண்டு படிக்கும் கலர் கலரான  கனவுகளோடு வரிசையில் நின்ற மாணவர்களுள் நானும் ஒருவனே ! ஆனால் தந்தையின் அன்றைய தொழில் நிலையும் சரி, குடும்பப் பொருளாதாரமும் சரி,  அதள பாதாளத்தில் இருந்ததால் - என்னைப் படிக்க வைக்கும் வசதி கூட அன்று ஒரு பகற்கனவாகவே போய் விட்டது !+2-வில் பள்ளிக்கு பீஸ் கட்ட நாக்குத் தள்ளிய நாட்கள் ஏராளம் ! So 17 வயதில் நான் பணியாற்ற வந்தது வேறு மார்க்கமின்றியே ! பெயருக்குப் பின்னே மூன்றெழுத்தாவது  இல்லாவிடின் தலையெழுத்தே நாறிடும் என்ற பயத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து நான் correspondence course-ல் B.Com படித்ததெல்லாம் இன்று விளையாட்டான நினைவுகளாய் மாத்திரமே என்னுள் இருப்பினும், நான் கற்றிட முடியாது போன உயர் கல்வி என் தனையனுக்காவது சீராய்க் கிடைக்கட்டுமே என்ற ஒரு ஆசை தான் அவனைக் களமிறக்க அவசரம் வேண்டாமே என்ற சிந்தனையின் பின்னுள்ள சிந்தனை :-) 
========================================================================

* வருடத்தின் பாதியைத் தொட்டுவிட்டிருக்கும் நிலையில் அடுத்தவருடத்திற்கான தோராயமாண அட்டவணை ரெடியாகிவிட்டதா?

இன்றைய நிலையில் நம் முன்னே இருப்பது - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னே இருக்கும் பிரச்னையை ஒத்தது : Problem of Plenty !! எதை ஒதுக்குவது ; எதை இணைப்பது என்பதே பிரதான சிக்கல் நமக்கிப்போது ! எனினும், yes - என்னுள் 2014-க்கான அட்டவணை தயார் !
========================================================================

*கிட் லக்கியை +6ன் முதல் இரண்டு வெளியீடுகளாகக் கொண்டுவர இருந்த திட்டத்தில் திடீர் மாற்றம் ஏன்?


அறிவிக்கப்பட்டதைத் தாண்டிய சின்னச் சின்ன surprises அவ்வப்போது நமக்கு அவசியங்களே ! டைம் டேபிள் போட்டு சீராய்ச் செல்வது நன்றாக உள்ளதென்ற போதிலும், எப்போதாவது ஒரு குட்டி பல்டி அடிப்பதன் சுகமே தனி தானே ! "நிலவொளியில் ஒரு நரபலி " அத்தகையது.


========================================================================

* ஆகஸ்டில் சென்னையில் நடைபெறவிருக்கும் ( உறுதியில்லாத தகவல்) காமிக்-கானில் நாமும் பங்கேற்கிறோமா?


'உறுதியில்லாத் தகவல்' என்று நின்றது ; 'நிறைவேறா ஆசை ' என்ற பட்டியலுக்குப் பயணமாகி விட்டது ! COMIC CON அமைப்பாளர்களுக்கு சென்னை மீது அத்தனை நம்பிக்கையில்லை என்பதே நிஜம் ! அடுத்த தென்னிந்திய COMIC CON ஹைதராபாத் செல்வதாக அமைப்பாளர்கள் சொல்லக் கேட்டேன் !
========================================================================

* சமீப நாட்களில், வாசகர்களின் எந்த வகையான கேள்விகள் உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தின?

சுவாரஸ்யமான கேள்வி ! 'விமர்சனங்கள் என்னைப் பாதிக்காது' ; 'என் வழி தனி வழி ' - என்றெல்லாம் எவரேனும் பீட்டர் விட்டால் அது உட்டாலக்கடிப் பட்டியலின் உச்ச இடங்களில் ஒன்றை ஆக்ரமிக்கும் என்பது திண்ணம் ! மாற்றுக் கருத்துக்களை எதிர்க்கொள்ளுவதென்பது எனக்கு மாத்திரமின்றி - இங்குள்ள ஒவ்வொரு நண்பருக்கும் சுலபக் காரியமல்ல என்பது நிதர்சனம் ! ஆனால் அவற்றை நாம் எவ்விதம் கையாள்கிறோம் என்பதில் தான் பொறுமைக்கும், அனுபவத்திற்கும் முக்கிய பங்கு செல்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது ! 

அடிப்படையில் நானொரு சந்தோஷ விரும்பி ! பிரச்னைகள் ; சிக்கல்கள் சூழ்ந்திருக்கும் சமயங்களிலும் கூட , நமக்கென ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் சிற்சிறு நல் விஷயங்களை முன்னிலைப்படுத்தி வாழ்க்கையின் பக்கங்களை வெளிச்சமாய்ப் பார்த்திடப் பிடிக்கும் எனக்கு ! எப்போதாவது இங்கே தெரிவிக்கப்படும் சில மாற்று சிந்தனைகள் ; அபிப்ராயங்கள் இரத்த ஓட்டத்தை வேகப்படுத்திடும் ரகத்தில் இருக்கும் பட்சத்தில், நானும் அதே வெப்பத்தோடு பதிலளிப்பது - இடியாப்பத்தை இன்னும் நாலு சுழி சுற்றி விட்டதுக்கு சமானமாகும் என்பதை அனுபவம் உணர்த்தியுள்ளது! So அவசியமென்று நான் கருதிடும் எனது பதில்களை ஆங்காங்கே பதிவு செய்வதோடு என் தலைக்குள் அந்த அத்தியாயத்திற்கு "சுபம்" போட்டு விடுவேன் ! நிறைய நேரங்களில் சங்கிலியாய்த் தொடரும் விவாதங்களில் நான் மேற்கொண்டு கலந்து கொள்ளாது செல்வதற்குக் காரணமும் இதுவே !அவசியமென என் சிந்தை ஏற்றுக் கொள்ளும் திருத்தங்களைத் தாண்டிய எந்தவொரு கருத்தையும் நான் இங்கிருந்து தலைச் சுமையாய்க் கொண்டு சென்றிடும்  பட்சத்தில் , என்னை வருத்திக் கொள்வதோடு மட்டுமல்லாது  - அது எனது பணியிலும் எதிரொலித்து  ; என்னைச் சார்ந்து / சூழ்ந்து நிற்போரையும் காயப்படுத்திடும் அபாயம் உண்டென்பதால் - சமீபமாய் என்றில்லை ; எப்போதுமே இங்கிருந்து நான் சந்தோஷங்களை மாத்திரமே எடுத்துச் செல்வேன் ! 

திரும்பவும் இங்கே கிரிக்கெட் உவமையோடு சின்னதாய் ஒரு கிளை : 

டி-வி. அம்பயர்கள் வந்த பின்னரும் கூட ஏதாவதொரு தெளிவற்ற சூழல் எழும் போது - சந்தேகத்தின் பலன் பாட்ஸ்மனுக்கு வழங்கப்படும் தானே ?! அதே சூழல் நமக்கும் கூடப் பொருந்துமென்றே நினைக்கிறேன் !   நண்பர்களின் கேள்விகள் ; அபிப்ராயங்கள் ; சிந்தனைகள் அனைத்துமே கூர்ந்த அறிவாற்றலின் பலன்களே என்பதில் ஐயமில்லை. வேற்று மொழி காமிக்ஸ்களைப் படிப்பது ; இன்டர்நெட்டில் ஆராய்ச்சி செய்வது ; சக வாசக நண்பர்களிடையே கலந்தாலோசிப்பது என்றெல்லாம் நிறைய thought process அவற்றின் பின்னே இருப்பதை நான் உணர்கிறேன். ஆனால் எத்தனை முயன்றாலும், எனது காலணிகளில் இருந்து எனது பக்கத்துப் பார்வையைப் பரிச்சயமாக்கிக் கொள்வது நிச்சயமாய் யாருக்கும் சாத்தியமற்றது என்பதும் நிஜமே ! இதனை இறுமாப்பின் பறைசாற்றலாய் நான் சொல்லிட வரவில்லை ; மாறாக யதார்த்தத்தின் வெளிப்பாடாய் மாத்திரமே பதிவிடுகிறேன் ! எனது நிஜமான  நிலை என்ன ? ; என்னை எதிர்நோக்கியுள்ள சங்கடங்கள்/ சந்தோஷங்கள் / சவால்கள் என்ன ?ஒவ்வொரு மாதமும் பணம் புரட்ட எனக்கு அவசியப்படும் பல்டிகள் என்ன ? தெரிவிக்கப்படும் ஒவ்வொரு அபிப்ராயங்களையும் செயலாக்கிடுவதில் உள்ள தடைகள் என்னவென்றெல்லாம்  நீங்கள் அறிந்திடுவது அசாத்தியம அன்றோ  ? So- உங்களுக்கு இயன்ற எல்லைக்குள்ளிருந்து கேள்விகளைத் தொடுக்கிறீர்கள் என்பதை நான் உணரும் போது -benefit of the doubt-சந்தேகத்தின் பலனை (மேஜர் சுந்தர்ராஜன் மன்னிப்பாராக !) உங்களுக்கு வழங்குவது தானே முறை ? இதில் நான் விசனப்படுவது முறையாகாதே ?! கூட்டிக்-கழித்துப் பார்த்தால் கணக்கு நேராகிடும் என்ற நம்பிக்கை என்னுள் நிறையவே உள்ளது ! So no worries !

விதண்டாவாதங்கள் ; காரமான மொழி நடையில் சொல்லப்படும் கருத்துகள் - சொல்லப்பட்ட விதங்களுக்காக அவ்வப்போது எரிச்சலை உண்டு செய்வது நிஜமே ! ஆனால்  அவை ஏதோ ஒரு வித ஆற்றமாட்டாமையின் வெளிப்பாடுகளே என்பதால் - அவற்றிற்கு மறு பார்வையைத் தந்திடாது நடையைக் கட்டுவதற்கு இப்போதெல்லாம் கற்று விட்டேன் ! 
========================================================================
* கேப்டன் டைகருக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் சிறு சறுக்கலை நேர் செய்ய ஏதேனும் அதிரடித்திட்டம் உருவாகிவருகிறதா?

கேப்டன் டைகருக்கானதொரு புதிய "அதிரடித் திட்டத்தை  " உருவாக்கக் கூடிய படைப்பாளர் சென்றாண்டே காலனிடம் சரணாகதி ஆகி விட்டதால், நாம் செய்யக் கூடியது பெரிதாய் என்ன இருந்திட முடியும் ?! 


டைகரின் ஒவ்வொரு கதையும் ஒரு "தங்கக் கல்லறை" யாக ; ஒரு "மின்னும் மரணமாக" அமைந்திட வேண்டுமென்ற நமது எதிர்பார்ப்புகள் - ஒவ்வொரு முறையும் சச்சின் சதம் அடிக்க வேண்டுமென்ற ஆசைக்கு சமமாகாதா ? நமது துவக்க காலத்து டைகர் கதைகளின் பதிப்புகளை பொறுத்த வரை - எந்தவொரு வரிசையையும் மதிக்காது - சூப்பரான கதைகளை மாத்திரமே பொருக்கி எடுத்து வெளியிட்டோம். ஆகையால் நீங்கள் படித்த கதைகளின் பெரும்பான்மை சூப்பர் ஹிட்களாய் அமைந்ததில் வியப்பில்லை ! ஆனால் இப்போது நாம் வரிசையாய் செல்ல நினைப்பதால் டைகரின் the good ; the bad & the ugly  -ஐ தரிசிப்பது தவிர்க்க இயலா விஷயமாகி விட்டது ! 'சறுக்குவது மீண்டும் எழுவதற்கே' என்ற நம்பிக்கையில் தொடர்வோமே !  
========================================================================

காலையில் சாப்பிட்ட டிபன் அதற்குள்ளாகவே செரித்து விட்டதால் - 'விஜயின் கேள்வித் தொகுப்பு -2' -க்கான பதில்களை இன்னொரு பதிவில் பார்த்துக் கொள்ளலாமென  பிறாண்டும்  எனது "மத்தியப் பிரதேசம்" எகமனதாய்த் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால் - இப்போதைக்குப் புறப்படுகிறேன் ! மீண்டும் அடுத்த வார இறுதியினில் சந்திக்கிறேன் folks ! Take care ! 

255 comments:

  1. yahoooo

    I couldn't believe ...... :)

    Super Vijayan sir
    .


    ReplyDelete
  2. // மறுபதிப்பு சமாச்சாரங்களையும் நான் கையில் எடுத்தால் - அது ஒட்டகத்தின் குறுக்கை ஒடித்த கதையாய்ப் போய் விடும் அபாயமுண்டு //

    Absolutely right sir but atleast keep it in your mind for next year schedule. Thanks.
    .

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் சிறந்த கதைகளுக்கான மறுபதிப்பு தொடரும் காலங்களில் நிறைவேற வேண்டுமென இறைவனை வேண்டி கொள்கிறேன்!

      Delete
  3. // எனது ராடாருக்கு அப்பாற்பட்ட படைப்புகளைத் தேடித் பிடித்துப் படிப்பது ; அவற்றில் 'தேவலை' என்ற தொடர்களை எனது பார்வைக்குக் கொணர்வது //

    இத இத இதைத்தான் எதிர் பார்க்கிறோம் சார் இப்போதைக்கு :-)
    .

    ReplyDelete
  4. //சமீப நாட்களில், வாசகர்களின் எந்த வகையான கேள்விகள் உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தின?//

    இந்த கேள்விக்கான பதிலில் மிகவும் யதார்த்தம். நான் மிகவும் ரசித்த பதில்.
    பரபரப்பான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்கள். ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கான யுக்தி!

    ReplyDelete
    Replies
    1. Radja from France : //பரபரப்பான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்கள். ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கான யுக்தி!//

      ஊஹும் ... பிறாண்டும் வயிற்றின் சக்தி அது :-)

      Delete
  5. கேள்விகளும் அதற்கு உங்களுடைய எதார்த்தமான பதில்களும் ஒரு வித்தியாச அனுபவத்தை அளித்தது.

    ReplyDelete
  6. // நான் கற்றிட முடியாது போன உயர் கல்வி என் தனையனுக்காவது சீராய்க் கிடைக்கட்டுமே என்ற ஒரு ஆசை தான் அவனைக் களமிறக்க அவசரம் வேண்டாமே என்ற சிந்தனையின் பின்னுள்ள சிந்தனை :-) //

    சத்தியமான வார்த்தைகள் விஜயன் சார்

    ஒரு தகப்பனாக இருக்கும் அனைவரின் மனதிலும் உள்ள வார்த்தை இது தான்

    கூடவே ஒரு சிறு வேண்டுகோள்

    இதனை முகஸ்துதி என கொள்ளவேண்டாம்

    உங்களின் பரந்த மனதினையும் அனைவரையும் அனுசரித்து செல்லும் பாங்கினையும் தவறாமல் அவருக்கு உணர்த்துங்கள் ஏனென்றால் இவை யாவும் அனுபவ அறிவே ஏட்டில் கிட்டாது நன்றி

    நண்பர்கள் அனைவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்

    மாற்றமே மனித தத்துவம், எல்லாமும் மாறும் தாண்டி செல்ல கற்றுக்கொள்ளுங்கள்

    மற்றவரின் மனம் புண்படும் வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாமே

    நாம் அனைவரும் காமிக்ஸ் மீதுள்ள காதலால் கூடி களிக்கிறோம் இதில் ஏன் பிணக்கு

    அவர்கள் அப்படித்தான் கடந்து செல்வோமே

    நாம் நாமாக இருப்போமே :))

    நன்றி நண்பர்களே :))
    .    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சரி .................
      இனிய உளவாக இன்னாத கூறல்
      கனிஇருப்ப காய் கவர்ந்தற்று..............
      டௌசெர் வாண்டுகள்........... பேண்டுகளாய் மாறிவிட்டது .........
      நாமெல்லாம் வளர்ந்து விட்டோம் ..............
      தானத்தில் சிறந்ததது நிதானம் ..........
      புரியுது புரியுது ............இத்தோட நிறுத்திக்கிறேன் ............

      Delete
  7. // , yes - என்னுள் 2014-க்கான அட்டவணை தயார் ! //

    அடுத்த பதிவில் இதற்கான மேலதிக தகவல்களை எதிர்பார்க்கலாமா சார் :))
    .

    ReplyDelete
    Replies
    1. Cibiசிபி : 2013-க்கு அழகாய் விடை கொடுப்போமே முதலில் !

      Delete
  8. அப்போ மாதம் இரண்டு இதழ்கள் ....இதற்க்குதானே காத்திருந்தாய் பாலகுமார என காதில் ஒலிக்க
    நான் கேட்டது நான்கு என ஸ்டீல் கிளா உரக்க ஒலிக்கிறார் மனதிற்குள்
    விரைவில் அடுத்த படிக்கு காலெடுத்து வைக்க வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. மாதம் இரண்டு நல்ல செய்தி.. ஆனால் மாதம் நான்கு will be சூப்பர் செய்தி! :)

      விரைவில் மாதம் நான்கு புத்தகம் வரும் நாளை எதிர்பார்க்கிறேன்.

      Delete
  9. கேள்விகளும் பதில்களும் அருமை! உங்களின் காமிக்ஸ் தொகுப்புக்களை கொரியரில் அனுப்பி வைக்க முடியுமா? அல்லது விபிபி மூலம் அனுப்ப முடியுமா? thalir.ssb@gmail.com.இந்த மின்னஞ்சலுக்கு விவரங்கள் அனுப்பினால் உங்களின் புத்தகங்களை வாங்க விருப்பமாய் உள்ளேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. s suresh : lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் தேவைகளைத் தெரிவித்து ஒரு மெயில் தட்டி விடுங்கள் !

      Delete
  10. Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : Attendance போடுவதைத் தாண்டி, எழுதவும் செய்வீர்களென்று நம் தளத்திற்குக் காட்டுங்கள் நண்பரே !

      Delete
  11. //விதண்டாவாதங்கள் ; காரமான மொழி நடையில் சொல்லப்படும் கருத்துகள் - சொல்லப்பட்ட விதங்களுக்காக அவ்வப்போது எரிச்சலை உண்டு செய்வது நிஜமே ! ஆனால் அவை ஏதோ ஒரு வித ஆற்றமாட்டாமையின் வெளிப்பாடுகளே என்பதால் - அவற்றிற்கு மறு பார்வையைத் தந்திடாது நடையைக் கட்டுவதற்கு இப்போதெல்லாம் கற்று விட்டேன் ! //

    உண்மையின் உண்மை !

    ReplyDelete
  12. அனைத்து விரிவான பதில்களுக்கும் நன்றிகள் சார்!
    இதனை வாங்கி தர உதவிய நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக!

    ReplyDelete
  13. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். என்னுடைய முதல் பதிவே மறுபதிப்புக்கு ஆதரவு தெரிவித்தும், வேண்டுகோள் விடுத்தும் பதியப்பட்டது என்றாலும், கருப்பு-வெள்ளை மறுபதிப்புகள் தற்போதைக்கு வராது என்பதை மனமார வரவேற்கிறேன். ஏனெனில் லாபமில்லாத எந்த தொழிலும் நீடித்து நிலைப்பதில் அனுதினமும் சிரமத்தை சந்தித்துக் கொண்டே இருக்கும் என்பது யாருமே அறிந்திடாத ரகசியமாக நான் கருதவில்லை !

    நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில், நடப்பு காலக்கட்டத்தின் தினம் தினம் உயரும் விலைவாசி நிலவரத்தில் புதிதாக மறு முதலீடு செய்வது என்பதே சிம்ம சொப்பனம், அதுவும் வலுவானதொரு மறு முதலீடு என்பது 'கொக்கு தலையில் வெண்ணையை வைத்து கொக்கை பிடிப்பது' போன்றதாகும். எனவே எங்களுக்கு அவசரமில்லை, இன்னும் ஐந்து வருடம் கூட காத்திருக்க தயாராகவே உள்ளோம் !

    ReplyDelete
  14. தொடரும் போட்டு ஆர்வத்தை அதிக படுத்தி விட்டீர்களே !
    நடப்பதெல்லாம் நன்மைக்கே!

    ReplyDelete
  15. 40 s &50 s PAZHANGAL......?(Nara...Nara...)

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : துணைக்குத் தான் இருக்கோமே நாங்களும் :-)

      Delete
  16. இந்தப் பதிவு நீளமாய் இருக்கும் என்று எதிர்பார்த்தால், அகலமாய் இருப்பதாய் ஒரு பிரமை. உண்மைதானா சார்?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : 'ஆழமாய் இல்லையே' என்ற ஆதங்கம் நேராத வரை - நீளமோ ; அகலமோ எனக்கு ஒ.கே. !

      Delete
    2. டே ஜால்ரா பாய் துண்டு கொண்டுவா ..........
      இந்த பதிவு நீளமாய் இருக்கு ஒரு ரௌண்டு நீந்தி வரலாம் ..........
      ''களக் களக்''
      அய்யய்யோ ரொம்ப பதிவுஆழமால்ல இருக்கு .......
      ''களக் களக்''

      Delete
  17. பதிவிற்கும் ,பதிலுக்கும் நன்றி சார் ...
    அப்படியானால் இனி மாதம் இரண்டு புத்தகங்கள் .அது போதும் சார் ..எங்களுக்கு ..
    2014 கு வரும் புத்தகங்கள் உங்கள் மனதில் ரெடி என்றாலும் லயன் ,முத்து,s .s .l ,+6 என அனைத்தும் இப்பொழுதே நன்கு திட்டமிட்டு 2014 காண சந்தா அறிவிக்கும் பொழுது ஒரே தொகை யாக அறிவித்து விடுங்கள் சார் ..காரணம் திடீர் ,திடீர் என புதிய புத்தகங்களுக்கு பணம் அனுப்ப சொல்லும் பொழுது பலருக்கு நேரம் கிடைபதில்லை என்பது உண்மை .இப்பொழுதும் பேங்க் .போஸ்ட் ஆபீஸ் என போக நேரம் இல்லாமல் நமது +6 சந்தா கட்டாமல் இருக்கும் நண்பர்களை நான் அறிவேன் .எனவே 2014 காண சந்தா அறிவிக்கும் பொழுது மொத்தமாக எவ்வளவு என அறிவித்து விடுங்கள் .சிலருக்கு அது பெரிய தொகை யாக தெரிந்தாலும் தாங்கள் அதை இரு முறையாக அனுப்பும் வசதி செய்து தருவிர்கள் என்பதை அறிவோம் .

    ReplyDelete
    Replies
    1. Note this sir...already I have an experience like that ..

      Delete
    2. Agree 100%, same here couldnt pay +6 subscription yet because of out of station.

      Delete
    3. கே.பரணிதரன் சொல்வது என் அனுபவமும் கூட.
      சரியாக ஒவ்வொரு மாதமும் வருவதை உறுதி செய்ததைப்போல் இந்த விஷயத்தையும் எடிட்டர் சார் கவனித்தால் தேவலை.

      Delete
    4. சூப்பரா சொல்லியிருக்கீங்க பரணிதரன்! எடிட்டர் என்ன சொல்கிறாரென்று பார்க்போம்!
      நண்பர் ராஜ்குமார் நலமா?

      Delete
  18. To: Editor,

    //நமது துவக்க காலத்து டைகர் கதைகளின் பதிப்புகளை பொறுத்த வரை - எந்தவொரு வரிசையையும் மதிக்காது - சூப்பரான கதைகளை மாத்திரமே பொருக்கி எடுத்து வெளியிட்டோம். ஆகையால் நீங்கள் படித்த கதைகளின் பெரும்பான்மை சூப்பர் ஹிட்களாய் அமைந்ததில் வியப்பில்லை ! ஆனால் இப்போது நாம் வரிசையாய் செல்ல நினைப்பதால் டைகரின் the good ; the bad & the ugly -ஐ தரிசிப்பது தவிர்க்க இயலா விஷயமாகி விட்டது ! 'சறுக்குவது மீண்டும் எழுவதற்கே' என்ற நம்பிக்கையில் தொடர்வோமே ! //

    எதற்கு வீணாய் சறுக்கவேண்டும்?

    நீங்கள் பணம் செலுத்தி டைகரின் சுமார் கதைகளை வாங்கியிராத பட்சத்தில், நீங்கள் முன்பு குறிப்பிட்டதுபோல மாற்று 'கௌபாய்' நாயகர்களை களமிறக்க முயலலாமே?

    தெரிந்தவர், அனைவரும் அறிந்த 'பிராண்ட்' - என்பதற்காக அவரது 'சுமார்' கதைகளை நம் இதழ்களில் கொண்டுவரவேண்டாமே!

    இது, வாசகர்களிடத்திலும் சலிப்பை ஏற்படுத்தி, 'டைகர்' சேர்த்துவைத்திருக்கும் பெயருக்கும் சேதத்தை உண்டுபண்ணிவிடுமே!

    ReplyDelete
  19. To: Editor,

    'கிட் லக்கி' எப்போது தனது வரவை பதியபோகிறார்?

    ReplyDelete
  20. ''நமது தற்சமய நாயகர் பட்டியலில் TOP என்று நீங்கள் கருதுவது யாரை ?''
    என்ற வோட்டளிக்கும் பகுதியில், கலர்களை மாற்றிவிடுங்கள் சார். டிஸ்பிளே சரியாக வருதில்லை. பார்க்கும்போது டெக்சுக்கு 284, லார்கோ வின்ச் 1, கேப்டன் டைகர் 1 என்பதுபோல தெரிகிறது. ஆனால் லார்கோவுக்கு 134, டைகருக்கு 145, வேய்ன் ஷெல்டன் 11, லக்கி லூக் 28, இவர்களில் யாருமில்லை!க்கு 5 - வாக்குகள் கிடைத்துள்ளன.

    ReplyDelete
  21. தொடரும் ஆறு மாதங்களில் வெவ்வேறு விலைகளில் வெளிவரவிற்கும் 15 இதழ்களின் அளவுகளை அறிய ஆவலாக இருக்கிறேன்...

    வண்ண இதழ்களுக்கு 'லக்கி ஸ்பெஷல்' அளவும் கருப்பு வெள்ளை கதைகளுக்கு 'பூத வேட்டை' அளவிலும் நிர்ணயம் செய்துக்கொள்வது தரத்தை விரும்புவர்கள் பெரிதும் வரவேற்க கூடிய ஒன்றாக அமையும் என்றே எண்ணுகிறேன் ! எனவே ஆசிரியர் அவர்கள் பெரும் மனது வைத்து, இனி வரும் வெளியீடுகளில் தற்போதைய பெரிய அளவிலும், உயர்ந்த தரத்திலும் மாற்றம் கொண்டு வர வேண்டாம் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன் !

    ReplyDelete
  22. //கேப்டன் டைகருக்கானதொரு புதிய "அதிரடித் திட்டத்தை " உருவாக்கக் கூடிய படைப்பாளர் சென்றாண்டே காலனிடம் சரணாகதி ஆகி விட்டதால், நாம் செய்யக் கூடியது பெரிதாய் என்ன இருந்திட முடியும் ?! டைகரின் ஒவ்வொரு கதையும் ஒரு "தங்கக் கல்லறை" யாக ; ஒரு "மின்னும் மரணமாக" அமைந்திட வேண்டுமென்ற நமது எதிர்பார்ப்புகள்...//

    மின்னும் மரணம் 11 பாகமும் முழுபதிப்பாக தற்போதைய தரத்தில், வண்ணத்தில், பெரிய SIZE ல் வெளியிட ஆசிரியருக்கு நான் அழுத்தமான கோரிக்கை வைக்கிறேன். ஏற்கனவே இரத்தப்படலம், NBS புத்தகங்களிற்கு முன்பதிவு தொடங்கியது போல், மின்னும் மரணத்திற்கும் தற்போது முன்பதிவை (CONDITION APPLY)ஆரம்பித்து வைத்தால், ஆசிரியர் ஒரு தெளிவான முடிவு எடுக்க வசதியாக இருக்கும் அல்லவா !

    ReplyDelete
    Replies
    1. Mr MaraMandai.. i m pleased to see you writing like this..... short &sweet. And nice request ....No more over doze please...

      Delete
    2. AHMEDBASHA TK :

      நன்றி நண்பரே, பதிவை உடனே தெரியப்படுத்திய நண்பர் விஜய் க்கு நன்றி, நண்பர் ஸ்டீல் க்கும் நன்றி !

      Delete
    3. //ஏற்கனவே இரத்தப்படலம், NBS புத்தகங்களிற்கு முன்பதிவு தொடங்கியது போல், மின்னும் மரணத்திற்கும் தற்போது முன்பதிவை (CONDITION APPLY)ஆரம்பித்து வைத்தால், ஆசிரியர் ஒரு தெளிவான முடிவு எடுக்க வசதியாக இருக்கும் அல்லவா !//
      Good Idea. I support this Sir!

      Delete
    4. மின்னும் மரணம் (11 பாகங்கள்) முன் பதிவுக்கு எனது வோட்டு

      Delete
    5. //மின்னும் மரணம் (11 பாகங்கள்) முன் பதிவுக்கு எனது வோட்டு// - அப்படி போட்டு தாக்கு(ங்க) பெரியார் :)

      அடுத்த பதிவில் ஆசிரியரின் positive பதிலை எதிர்பார்த்து :)

      Delete
  23. சார், இன்னொரு விஷயம் தவறாக இருந்தால் மன்னிக்கவும். கடந்த சில மாதங்களாக தாங்கள் புத்தகம் அனுப்பும் தேதியை ஒரு வாரம் முன்பே கூறி விடுகிறீர்கள். அதன் பிறகு கொடுத்த வாக்கை காப்பாற்ற நீங்களும் உங்கள் டீமும் புயலென வேலைசெய்து சொன்ன தேதியில் கூரியர் செய்து விடுகிறீர்கள். மிகவும் சந்தோஷம். ஆனால் கடந்த காலங்களிலும் தற்போதும் தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டால் கொடுத்த வாக்கை காப்பாற்ற அனைத்து பிரிவினரும் படாத பாடுபடுகின்றனர் என்பது தங்களின் கடந்த சில பதிவுகளின் மூலம் அனைவரும் அறிந்துக் கொண்டோம். இந்த முறை COMIC CON இருந்ததும் ஒரு காரணம். ஆனால்

    இது போன்று துரிதமாகவும், ஓவர்டைம் வேலைகளாலும் சில சமயம் புத்தகங்களில் சில சிறிய குறைகள் நேர்ந்து விடுகிறது. அனைத்திலும் இல்லாவிட்டாலும் குறிப்பாக பைண்டிங் வேலையில் நடந்து விடுகிறது. என்னிடம் உள்ள லக்கி ஸ்பெஷலில் வெளி அட்டையும் உள் அட்டையும் சரியாக ஒட்டாமல் பிரிந்து வருகிறது. அதுபோல் நிலவொளியில் ஒரு நரபலியின் அட்டை உள்பக்கத்தில் அதிகமாக ஒட்டப்பட்டுவிட்டது. அந்த புத்தகத்தில் பலபக்கங்கள் கோணலாக கட்டிங் செய்யப்பட்டுள்ளது.

    எனவே ஒரு வாரம் தாமதமானாலும் நாங்கள் காத்திருக்க தயாராக உள்ளோம். இதன் மூலம் தங்கள் அலுவலக நண்பர்களுக்கு சுமைகள் குறைவாகவும் எங்களுக்கு நிறைகளாகவும் தங்களுக்கும் மன அமைதியான சூழலும் ஏற்படும் அல்லவா ?

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவின் மிஸ்டர் மரமண்டையின் அனைத்து பதிவுகளுக்கும் எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்

      அதிலும் அந்த அளவு சார்ந்த பதிவிற்கு எனது டபுள் ஆதரவு.

      Delete
    2. மிஸ்டர் மரமண்டை : பைண்டிங்கில் கோளாறுகள் இருப்பின், உடனே நம் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டால், மாற்றுப் பிரதிகளைப் பெற்றிடலாம். அவை தொடராது இருக்கவும் கவனம் மேற்கொள்வோம் !

      Delete
    3. //பைண்டிங்கில் கோளாறுகள் இருப்பின், உடனே நம் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டால், மாற்றுப் பிரதிகளைப் பெற்றிடலாம். அவை தொடராது இருக்கவும் கவனம் மேற்கொள்வோம்//

      நன்றி விஜயன் சார்! தங்களின் பெருந்தன்மையும், விமர்சனங்களை அதன் நோக்கில் பார்க்கும் தெளிவும், அதை களைவதில் தாங்கள் கொண்டுள்ள உறுதியும் என்னை மட்டுமன்றி எவரையும் மகிழ்விக்க கூடியதாக தங்கள் பதில் உள்ளதை இங்கு கூறவும் வேண்டுமோ ?!

      Delete
  24. தங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி சார்...

    //அடிப்படையில் நானொரு சந்தோஷ விரும்பி ! நமக்கென ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் சிற்சிறு நல் விஷயங்களை முன்னிலைப்படுத்தி வாழ்க்கையின் பக்கங்களை வெளிச்சமாய்ப் பார்த்திடப் பிடிக்கும் எனக்கு !//

    பள்ளியில் படித்த காலத்தில் என்னைப்போல் காமிக்ஸ் படித்த நண்பர்கள் யாரும் இப்போது காமிக்ஸ் படிப்பதாய் நியாபகம் இல்லை. சந்தித்த சில நண்பர்களும் மீண்டும் படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. சென்னையில் பத்து வருடங்கள் இருந்திருந்தாலும் காமிக்ஸ் படிக்கும் ரசனை கொண்ட யாரையும் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியதில்லை. ஏதோ நான் மட்டுமே சிறுபிள்ளை போல் இன்னும் காமிக்ஸ் படித்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது. 6-7 மாதங்களுக்கு முன் வரை காமிக்ஸ் படித்தவர்களில் மிச்சமிருப்பவன் நான் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன்.

    பிறகு நண்பர் கலீலின் அறிமுகம் கிடைத்தது. முதலைப்பட்டாளத்தில் ஐக்கியமானேன். கடந்த வருட சென்னைப்புத்தகத்திருவிழாவில் ஆசிரியருடன் முதல் சந்திப்பு...மேலும் பல நண்பர்களின் அறிமுகம் என சந்தோஷம் அதிகரித்தது. குறிப்பாக பெங்களூர் காமிக்கானில் சந்தித்த சில நண்பர்கள்... முன்பின் சந்தித்ததில்லை... மூன்று வார்த்தைகள்தான் பேசியிருப்போம், ஆனால் முப்பது வருடங்கள் அவர்களோடு தோளோடு தோள் உரசி காமிக்ஸ் படித்தது போன்ற உணர்வு... இன்று காமிக்ஸ் எனக்கு தந்திருக்கும் நண்பர்கள் ஏராளம்.

    நமக்கென ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் (நம்ம லயன்-முத்து காமிக்ஸ்தான்!) நல் விஷயங்களை முன்னிலைப்படுத்தி வாழ்க்கையின் பக்கங்களை வெளிச்சமாய்ப் பார்த்திடுவோமே நண்பர்களே...

    ReplyDelete
  25. Sir in 2014. Shedule we will get " Thikil nagaril tex " and possible please consider " Kaval Kaluku".

    ReplyDelete
  26. நான்கு புத்தகங்களை ஒரே மாதத்தில் பார்த்தது பால்ய வயதில் பழைய புத்தகக்கடையை கொள்ளையடித்த நாட்களை நினைவுபடுத்துகிறது! இன்னும் 6 மாதத்தில் 15 புத்தகங்கள் என்ற செய்தி சமந்தகன் கண்ணில் பட்ட கொழுத்த முயலை நினைவுபடுத்துகிறது.

    நீண்டகால இடைவெளிக்குப்பின் (around 12-15 years) தற்போதுதான் நமது லயன் காமிக்ஸின் வெளியீடுகளை கண்டேன் - Could't resist buying all the available books on ebay! ஆசிரியரின் தொடர் முயற்சி மிக்க ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது - I can't go back to good old 80s but just reading our books satisfies the wishes!

    ReplyDelete
  27. Welcome back RAMESH sir...I m very pleased and overwhelmed to see an old friend like you, is back in family....

    ReplyDelete
  28. வணக்கம் ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு.. ஞாயிறு சுவை உங்கள் பதிவு அதிகப்படுத்துகிறது . கிடங்கினை நிரப்புவதும் பின்னர் அது தீரும் வரை உள் செலுத்தப்படும் முதலீடு சற்று அதிகம் தான். அதிலும் இந்த சமயங்களில் புத்தகத்தின் விலையை வைத்து பார்க்கும் பொழுது மேலும் அதிகரிக்கவே செய்திடும். அதற்கு புத்தக திருவிழா மட்டுமே நம்பி இருப்பது பெரிய பின்னடைவே. பிராந்திய மொழி என்ற பின்னடைவும் அதனுடன் சேர்ந்து விடுகிறது. இதற்கு ஒரு மாற்று வழிமுறை கண்டிப்பாக அவசியப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்னர் , பத்து ருபாய் புத்தகம் வாங்க, ஐம்பது ருபாய் வரை செலவு செய்ய கூட தயங்க மாட்டேன். ஆனால் அது சமயம் மனதில் எழுந்த எண்ணம்... இந்த பணம் முழுதும் உங்களிடம் சேர்ந்தால் , நமக்கு இன்னும் பல புத்தகங்கள் கிடைக்கும் என்பதே.. ஆக முதலீட்டை ஈர்ப்பதற்கும் தாங்கள் ஏதாவது வழிவகை காணலாம்.

    என்ன தான் தமிழ் , தமிழ் என கொண்டாடினாலும் , இங்கு தமிழில் பதிவதற்கு கூட கூகுளின் உதவியை நாட வேண்டி இருக்கிறது. ஆக நீங்கள் மீண்டும், எளிமையான ஆங்கிலத்தில் ஒரு பதிப்பினை முயற்சிக்கலாம். இதனை சொல்வது எளிது , ஆனால் நடைமுறைக்கு பல சிக்கல்கள் இருப்பது ஓரளவுக்கு தெரியும் என்றாலும் , முயற்சிக்க கூடிய ஒன்றே...

    ReplyDelete
    Replies
    1. விமர்சனங்கள் , மாற்றுக்கருத்துகள் , எதிர்ப்புகள் என்பது பற்றி முன்பொருமுறை இணையத்தில் பக்கம் உருவாகியவுடனே , நீங்கள் ஹாட் லைன் பகுதியில் எழுதினீர்கள். இங்கு அவ்வபோது தென்படும் கரும்புள்ளிகளை தவிர்த்து பார்த்தால் , பெரும்பாலான நமது நண்பர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் (நான் உட்பட) , நமது காமிக்ஸ் மீது உள்ள காதலும் சற்றே அதிகமான உரிமையும் தான்.

      புத்தகம் வாங்குவதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்றாலும் கூட ,எப்படியோ 23 வருடங்களாக உங்களுடன் பயனப்பட்டாகி விட்டது. எந்த ஒரு சிறு மாற்றம் எதில் நிகழ்ந்தாலும் உடனே தெரிவது அந்த பயணத்தின் மூலமாக தான். நான் சென்ற பதிவில் , தங்களின் எழுத்து நடையை பற்றி , எனது எண்ணத்தை முன்வைத்ததும் , சற்றே அதிகமாக எடுத்துக்கொண்ட உரிமையே காரணம்.

      மேலும் ஜூனியர் எடிட்டரின் பங்களிப்பு என நான் எதிர்பார்ப்பது , சில சில விஷயங்கள் தான். அவரின் படிப்புக்கு எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் , அங்கே இங்கே ஒரு சில முயற்சிகளை மட்டுமே. முழுவதுமாக கரண்டியை அவரிடம் கைமாற்ற சொல்லவில்லை. இளம் கன்று பயமறியாது என்பதைப்போல, அவர் எண்ணவோட்டத்தில் உதையமாகும் சில விஷயங்கள் ஒரு வகையில் வெற்றி பெற்றால் அது நமக்கே லாபம். ஆனால் அதனை பற்றி நீங்கள் மிக தெளிவாக எழுதிவிட்டபடியால் இனி no more arguments . :)

      Delete
    2. எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்பே , இன்று பல இயக்கங்களுக்கு காரணம்.

      சொல்லி விட்டு செய்யாமல் இருந்த காலங்கள் மாறி, இன்று , சொன்னதை கண்டிப்பாக செய்யும் செய்யும் நிலைக்கு மாற்றம் நிகழ்த்து விட்டது. ஆகையால் இப்பொழுது பல விசயங்களை நீங்கள் மிகுதியான முன் எச்சரிக்கையுடனே சொல்கிறீர்கள். அதனை சற்றே தளர்த்தி 500 அல்லது 1000 ரூபாய்க்கு ஒரு mega monster அறிவிப்பு ஏதேனும் செய்தால் , அடுத்த ஆறுமாதங்களுக்கு , ஆறுதல் அளிக்கும்

      இப்படிக்கு:

      பக்க விளைவுகள் எதுவானாலும் , அதை பற்றி கவலைபடாமல் , பத்தி பத்தியாக பதிவோர் சங்கம்.

      Delete
    3. சிம்பா : //"சொல்லி விட்டு செய்யாமல் இருந்த காலங்கள் மாறி, இன்று , சொன்னதை கண்டிப்பாக செய்யும் செய்யும் நிலைக்கு மாற்றம் நிகழ்த்து விட்டது" //

      உங்கள் பதிவிலேயே கேள்வியும் ; அதற்கான பதிலும் பொதிந்துள்ளன !

      சக்திக்கு மீறிய செயல்களில் ஆர்வ மிகுதியை மாத்திரமே மூலதனமாய்க் கொண்டு குதித்து வந்ததே முன்னாட்களின் நமது சொதப்பல்களுக்குப் பிரதான காரணி ! அதே தவற்றை மீண்டும் செய்ய வேண்டாமே ?!

      Mega Monster களுக்கென பொருத்தமான ஜுராசிக் பார்க் தயாராகும் போது அவற்றை உலவ விடுவோமே !

      Delete
    4. // mefa monsrer களுக்கென பொருத்தமான ஜுராசிக் பார்க் //

      ஆஹா! வார்த்தைகளின் விளையாட்டு! :)

      Delete
  29. Deasir, r please add phantom in your portfolio. I asked you the same in comic con. I checked in Facebook. Many likes to bring that back. We might get new readers if we add phantom.

    ReplyDelete
  30. விடாது கருப்பு சார்! உங்க சிறு வயது சிங்கம் எங்கள் தங்கம்! ப்ளாக் நண்பர்களே புறப்படுங்கள் அவரது வார்த்தை வலிமையை உலகுக்கு உணர்த்த!!!! ஹீ! ஹீ! ஹீ! தங்களின் ஷூ எனக்கு பொருந்தாது தலைவரே! நான் பன்னிரண்டாக்கும்! எஸ்கேப் ........................................

    ReplyDelete
  31. குட்டி சிங்கம் அழுத்தமாக தனது காலைப் பதிக்கட்டும் ஜி! அவருக்கு எங்கள் வாழ்த்துக்களும் கருப்பு கிழவியின் ஆசீரும் என்றும் உண்டு! ஹீ! ஹீ! ஹீ!

    ReplyDelete
  32. Mmhoooom..
    i want to share many things. Sloooow connection. This android version is not supporting for tamil typing.
    Letters are appearing after 3 seconds i finished typing.
    I m facing this much problems (!!?) Just for typing a small comment.
    Vijayan sir! I can understand every problems you are facing to stand in this comics field till now.
    I thank god for you. May God give you more strength and grace.

    ReplyDelete
  33. டியர் எடிட்டர் ,
    ஈரோடு விஜய் தொடுத்த பயனுள்ள கேள்விகளுக்கு தாங்கள் அளித்த விரிவான பதில்களுக்கு நன்றி. எப்போது சார் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இல் spider digest வெளி வரும் ? அறிவிப்பு வெளியிட்டு நீண்ட நாட்களாகி விட்டதே ? இன்னும் ஜூன் மாதஇதழ்கள் வந்து கிடைக்கவில்லை . வழி மேல் விழி வைத்து காத்துள்ளேன் .

    ReplyDelete
    Replies
    1. HI Thiru,
      Comics Classics is scrapped and we may never get those digests. We get color reprints in the label Sunshine Library".

      Delete
  34. இருப்பதிலே மிகவும் முக்கியமான கேள்வியைய் மட்டும் skip செய்தது விட்டர்கள் சார்


    "மின்னும் மரணம் 11volumes reprint @ Rs.500 & Arizona லவ் எப்போ வரும் "? Pls Start pre-order asap.

    போன பதிவுல நான் ஒரு கேள்வி கேட்டேன், அப்படியே அதுக்கும் ஒரு நியாயத்த சொன்னிங்கன்னா....

    //இதுக்கு நடுவுல
    டாடி எனக்கொரு டவுட்டு..
    ஆல் நியூ ஸ்பெசல் இல் எப்படி ஏற்கனவே இருகதை வெளியாகிய ஸ்டீல் பாடி ஐ சேர்க்கலாம்?
    அப்போ ஆது "ஆல் " நியூ spl இல்ல "கொஞ்சூண்டு" நியூ ஸ்பெசல் தானே
    சொல்லுங்க டாடி சொல்லுங்க, சொல்லுங்க டாடி சொல்லுங்க .. டிஷும்.. டிஷும்.. கும்.. கும்.. //

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விஜய் : //இருப்பதிலே மிகவும் முக்கியமான கேள்வியைய் மட்டும் skip செய்தது விட்டர்கள் சார்//

      கேள்விகள் இன்னமும் நிறையவே பாக்கியுள்ளன ; so பதில்களுமே !

      ALL NEW ஸ்பெஷல் -க்கு முன்பாக ஸ்டீல் பாடி ஷெர்லக்கை களம் இறக்குவதாகத் திட்டமில்லை துவக்கத்தில் ! ஆனால் filler pages திரும்பத் திரும்ப மதியில்லா மந்திரியாரின் இலாக்காவாய் தொடர்வது அயர்ச்சியைத் தரக் கூடுமென்பதால் இவரை அட்வான்சாக அறிமுகம் செய்ய நேரிட்டு விட்டது ! So ALMOST NEW ஸ்பெஷல் என்று சரிக் கட்டிக் கொள்ளுங்களேன் !

      Delete
    2. LOL!

      Supriseஆஹ ஏதேனும் புது கதை வருமென்று எதிர்பார்த்தேன்...

      Delete
  35. தந்தையர் தின நாளன்று, ஒரு தந்தையாக தங்கள் தனையனைப் பற்றிக் கூறியது முற்றிலும் நிஜம்.

    ReplyDelete
    Replies
    1. அருப்புக்கோட்டை சரவணன் : தந்தையர் தினப் பதிவில் நேர்ந்த தற்செயலானதொரு statement :-)

      Delete
  36. நல்ல போஸ்ட். அதுவும் மண வருத்தத்தை ஏற்படுத்தும் கமென்ட்ஸ் பற்றி நீங்கள் எழுதியது சிறப்பு. உங்களை போல் சகிப்புத்தண்மை நம் அணைவருக்கும் வந்து விட்டால் இங்கே இனியெல்லாம் சுகமே. அது இப்போ நடக்கக் கூடிய தொலைவில் இல்லை. அதற்காக காத்திருப்போம்

    ReplyDelete
    Replies
    1. Dr.Hariharan, Coimbatore : நாம் நாமாய் இருக்கும் நாள் புலரும் போது சீண்டல்களோ ; மாற்றுக் கருத்துக்களோ நம்மை சங்கடப்படுத்தும் வலிமையை இழக்கின்றன ! நண்பர்களிடையே தற்போது நிலவும் ஒருவித இறுக்கம் தளரும் நாளுக்குக் காத்திருப்போம் - நம்பிக்கையோடு !

      Delete
    2. பதிலுக்கு நன்றி சார். ஹைய்யா எடிட்டர் கிட்ட பேசிட்டேன்.

      Delete
  37. டியர் சார்...
    பல வாசகர்களின் கேள்விகளுக்கு, பதிவாய் ஒரு பதில் என தெள்ளத் தெளிவாய் எடுத்துரைத்த உங்களுக்கு
    எனது நன்றி. இனிமேல் மறுபதிப்புகளை பற்றி இங்கு யாரும் பேசப்போவதில்லை.மறுபதிப்பு புத்தகங்கள் வந்தால்?
    பழைய புத்தகங்களை பார்க்காதவர்களும், படிக்காதவர்களும் அது ஒரு சந்தோஷமாக இருக்குமே என்ற காரணத்தினால் தான் அதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால்? அதில் உள்ள சிரமங்களைப் பற்றி இப்ப தெரிந்து கொண்டதால் இனி அதைபற்றி வாயைத் திறக்க மாட்டோம். உங்களுக்கு எது சரினு படுதோ, அதை தொடர்ந்து செய்யுங்கள் எங்களுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு. குறிப்பாக திகில் நகரில் டெக்ஸ் அது ஒரு சாதாரண கதையாக இருக்கலாம். ஆனால் பல வருடங்களாக விளம்பரமாகவும், காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் என்னும் இலவச இணைப்பில் சில தொடர்களையும் போட்டு எங்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தி விட்டீர்கள். அதனால்தான் அதையும் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஒரு வழியாக 2014 ல் வெளிவரும் என்று தாங்கள் தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியே, இதில் மட்டும் சிறிய வேண்டுகோள். திகில் நகரில் டெக்ஸ் ஒரிஜினல் அட்டை படத்தில் விகாரமான கையைப் பார்த்து டெக்ஸ் வில்லர் துப்பாக்கியுடன், மிரட்சியுடன் நிற்பார், இந்த அட்டை படத்தையே உங்கள் வழக்கமான நகாசு வேலைப்பாடுடன் வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ப்ரூனோ ப்ரேசில் : செய்தால் போச்சு !

      Delete
    2. பதிலளித்தமைக்கு நன்றி சார்...

      Delete
  38. டியர் எடிட்டர்,

    வரிசையாக அடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அப்படியே போகிற போக்கில் இரண்டு அல்லது மூன்று வரிகளில் பதிலளிக்காமல், ஆழ்ந்து விரிவாக நீங்கள் அளித்திருக்கும் பதில்களுக்கு நன்றிகள் பல! இம்மாதிரியான கேள்விகளை கேட்கும்படி என்னை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் நன்றிகள் சில!

    2014 அட்டவணையில் 'திகில் நகரில் டெக்ஸ்' இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது! மீண்டும் நன்றிகள்!

    கிராஃபிக் நாவல்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த உங்களது நீண்ட விளக்கம் இதிலுள்ள சிரமங்களை ஓரளவுக்காவது எங்களுக்கும் விளக்கியிருக்கிறது. மீண்டும் நன்றிகள்!

    'சி.சிறு வலை' ஒரு தொகுப்பாக வெளிவர வாய்ப்பில்லை என்று நீங்கள் கூறிவிட்டாலும், நாங்கள் நம்பிக்கை இழந்துவிடமாட்டோம்! எங்கள் கனவுகளின் வலிமையைப்பற்றி நீங்கள் அறியாதவரல்லவே? ( உதாரணம்: வண்ணத்தில் டெக்ஸ்)

    மீதமுள்ள கேள்விகளுக்கான பதில்களுக்காக ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் விஜய்! // 'சி.சிறு வலை' ஒரு தொகுப்பாக வெளிவர வாய்ப்பில்லை என்று நீங்கள் கூறிவிட்டாலும், நாங்கள் நம்பிக்கை இழந்துவிடமாட்டோம்! எங்கள் கனவுகளின் வலிமையைப்பற்றி நீங்கள் அறியாதவரல்லவே? ( உதாரணம்: வண்ணத்தில் டெக்ஸ்)//
      உங்கள் கருத்தை முழுமையாக ஆமோதிக்கின்றேன்.'சி.சிறு வலை' தொகுப்பாக வேண்டும்.

      Delete
  39. டியர் விஜயன் சார்,

    கேள்வியின் நாயகன் என உங்களால் பட்டம் பெற்ற நண்பர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .. (விஜய் நேத்து ஒரு முப்பது கேள்வி ரெடி பண்ணி வச்சுருந்தீங்களே, என்னாச்சு ?)

    உங்களது கேள்வி-பதில் பார்ட் - 2 தான் எங்களது எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் (வேறென்ன மின்னும் மரணம் தான்)

    அதே போல, இதை பார்ட் 2 உடன் நிறுத்தி விடாமல், சிங்கத்தின் சிறு வயதில் போல தொடரலாமே ? நண்பர் விஜய் இருக்க கேள்விக்கு பஞ்சமென்ன :)


    திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. //புகழ், பணம், பதவி, பட்டம் நம்மை தேடி வரவேண்டும். நாம் தேடி செல்லக்கூடாது. அதற்கு பிறரை சிபாரிசு செய்வதும் தவறு. பெற்ற பட்டமோ, படித்த பட்டமோ நாம் போடுவதற்கு அல்ல. அவரை போல பிறரும் முன்னேற வேண்டும் என்ற ஊக்கத்திற்கு மட்டுமே. ஒரு சாதாரண செயலை சீரியஸ் ஆக எடுத்து கொள்வதில்தான் பிரச்சனைகள். பாராட்டுக்களை தனி நபர் துதியாகவோ, மாற்று கருத்துக்களை தனி நபர் தாக்குதலாக எடுத்துக்கொள்வதும் தவறுதான், வேறு என்ன சொல்ல முடியும்? கனவுகள், கற்பனைகள், கருத்துக்கள், புதிய எண்ணங்களுக்கு அணை போட கூடாது. மனிதன் பறப்பதற்கு கண்ட கனவுதான் விமானமாக வடிவெடுத்தது. தொலைதூரத்தில் நடப்பதை அறியவேண்டும் என்ற எண்ணம்தான் தொலைக்காட்சியை கண்டுபிடித்தது//

      எவ்வளவு அழுத்தமான வரிகள் ?! எவ்வளவு ஆழமான கருத்துக்கள் ?! இது ஒரு பெரிய எழுத்தாளரின் பொன்வரிகளோ என்று எண்ணி விடாதிர்கள். இந்த தளத்தில் ஒரு நண்பரால் இந்த பின்னூட்டம் சிலகாலம் முன்பு பதியப்பட்டது. இன்றும் எனக்கு பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துவிட்டது !

      நமது அன்பு எடிட்டர் விஜயன் அவர்களின் திருக்கரங்களால் 'கேள்விகளின் நாயகர்' என்ற உயரிய விருதை பெற்ற நம் நண்பர் ஈரோடு விஜய் யை வாழ்க வாழ்கவென மனதார வாழ்த்துகிறேன் !!

      Delete
    2. @ ப்ளூ

      'மின்னும் மரணம்' பற்றிய கேள்விக்கு மட்டும் ஒரே வரியில் 'பார்ப்போமே!' என்று எடிட்டர் பதிலளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்! அங்கேதான் ஒரு சூட்சுமம் ஒளிந்திருக்கும்! 'பார்ப்போமே' என்றால் ஆரம்பகட்ட வேலைகள் ஆயத்தமாகிவிட்டதாக அர்த்தம்! :)

      @ மிஸ்டர் மரமண்டை

      மனதார வாழ்த்தியதற்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே!

      Delete
    3. @ ஈரோடு விஜய் : அப்போ கண்டியப்பா எடிட்டர் 'பார்ப்போமே!' என்றுதான் பதிலளிப்பார் :)      Delete
  40. Sir, Diabolik story has a wonderful reading experience. The plot, and theme of the story is awesome. It is typically new to our comics. we have been missing like these stories. at least once a year you have to consider to give a new story of diabolik. Also Martyn mystere too be considered.

    and second thing, we are all love cowboy stories, like blueberry, texwiller... ok. But there are some wild west legends are there. Ex; WILD BILL HICOCKE... You know that he was great gunmen, and lawmen of american west. Are there any chances to get in tamil comics.. I think he will be best alternative hero for blue berry and tex.

    ReplyDelete
  41. //இந்நிலையில் மீண்டும் b&w மறுபதிப்பிற்கு உயிரூட்டுவது என்பது சிரமங்கள் நிறைந்த முயற்சியே//

    நல்ல முடிவு சார், பழைய கதைகளை அதுவும் பழைய முத்து இதழ்களை 4 பக்கம் கூட வாசிக்க முடியவில்லை (Even என்னால் Reporter Johnny கதைகளை கூட ரசிக்க முடியவில்லை) so புது வாசகர்களை மனதில் கொண்டு 2014 அட்டவனையை தயார் செய்வதே சால சிறந்தது.

    //'திகில் நகரில் டெக்ஸ்'

    தலைப்பைப் பார்த்தோ என்னவோ , நண்பர்களிடையே இக்கதைக்கு அதீத பில்டப் உருவாக்கி விட்டதால், அதனைக் கோரி எழும் குரல்களும் கூடி விட்டன //

    சார் உங்களுக்கு நிச்சயமாக தெரியும் எது வாசகர்களை சென்றடையும் என்று, இங்கே 10 பேர் எழுப்பும் ஓசை 1000 பேரின் மனதை நிச்சயமாக வெளிப்படுத்த போவதில்லை So decide as you wish. நீங்கள் பரணில் தூக்கி போட்ட கதைகள் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் :)

    Bluecoats, Dylon Dog என்று எல்லோரையும் கவரும் வண்ணம் கதைகளை வெளி இட முயற்சி எடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. also GROO, SPIROU வையும் தமிழில் வெளியிட வேண்டும்

      Delete
  42. என் நண்பர் AHMEDBASHA TK அவர்களுக்கு என் நன்றியை இங்கே தெரிவிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும். பழகியது சில நாட்கள்தான் ஆனால் பல வருடங்கள் பழகியது போல் தோன்றுவது சிலரிடம்தான், அந்த சில மனிதரில் AHMEDBASHA TK அவர்களும் ஒருவர். சென்ற வாரம் எனக்கு பழைய அரிய இதழ்களை பரிசாக அளித்தார். நன்றி AHMEDBASHA :). அதி தீவிர காமிக்ஸ் காதலர் இவர் .உங்களை போல் காமிக்ஸ் ரசிப்பவர்கள் இருப்பதுதான் நமது லயன் குழுமத்தின் பலமே. Hats off to you :)

    ReplyDelete
    Replies
    1. BIG WORDS... thanks for accepting me as your friend ...HEy...VIJAYAN sir.... i m not a PAZHAM any more.... ha...ha...

      Delete
  43. 'சிங்கத்தின் சிறு வயதில்' ஒரு தொகுப்பாக வெளியாகுமா?
    உங்கள் வாழ்கை எங்களுக்கு ஒரு பாடம்தான், 17 வயதில் எனக்கு ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு போக தெரியாது, ஆனால் நீங்களோ, நினைத்து பார்க்க முடியவில்லை :). உங்களின் போரட்ட குணம்தான் லயன், மினி மற்றும் ஜூனியர் லயன் என்று பலவித மாறுபட்ட சிந்தனைகளை தோற்றுவித்தது,எப்படி காமிக்ஸ் உலகின் சக்ரவர்த்தியாக 30 வருடங்கள் கோலோச்சுவது, எப்படி உங்களின் பலவித எழுத்து நடையால் அந்த அந்த character களுடன் ஒன்றி போக வைத்தது, எல்லாமே சாதனைதான் சார். மோசமான கால கட்டத்தில் கூட இந்த Industryயை விட்டு செல்லாமல் மறுபடி அதே நிலைக்கு கொண்டு வந்த உங்கள் போராட்டம் நிச்சயம் எங்களுக்கு பாடம்தான், தயவு செய்து 'சிங்கத்தின் சிறு வயதில்' ஒரு தொகுப்பாக வெளி இட முயற்சி எடுங்கள். நான் வாழ்கையை தைரியமாக எதிர் கொள்ள உதவியதில் பெரும் பங்கு லயனைதான் சாரும், சோ Please Reconsider your Decision !!!

    ReplyDelete
    Replies
    1. Sir,Please Reconsider your Decision !!!

      Delete
    2. Giridharan V : //17 வயதில் எனக்கு ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு போக தெரியாது//

      நம்மூரின் மாட்டுத் தாவணிகளையும் ; ஆரப்பாளயங்களையும் ; பெரியார்களையும் இனம் கண்டு பிடித்து சரியான பஸ்களில் பயணிக்கும் பரபரப்பை விட - ஜெர்மனியின் வீதிகள் சுலபமானவைகளாக இருந்தன என்பது தான் நிஜம் :-)

      Delete
    3. ஹாஹா உங்களிடம் பேசி ஜெயிக்க முடியாது சார் :). நீங்கள் என்னதான் சொன்னாலும் உங்கள் தைரியம் எங்களுக்கு ஓர் பாடம்தான், அதில் வேறு கருத்து இருக்க முடியாது என்பதுதான் உண்மை. ஆவன செய்யுங்கள் please ..

      Delete
    4. சிங்கத்தின் சிறு வயதில் ஒரு தொகுப்பாக வெளிவர வேண்டும், ஏனெனில் என்னைப்போல் பல வாசகர்கள் சமீபத்திய இதழ்கள் அனைத்தையும் பெற்ற பாக்கியசாலிகள் அல்ல.

      மேலும் இத்தொடர் ஒரு internal analysis ஆக நில்லாமல் நமது கடந்தகால வாசிக்கும் trendன் தன்மைகளையும் அவ்வபோது எதிரொளிப்பதால் more than useful. குறைந்தபட்சம் lion-muthucomics.com இல் ஒரு பகுதியை இதற்கு ஒதுக்குவது பொருத்தமாக இருக்கும்.

      Before reading this article, even as a old fan of lion-muthu comics, I didn't aware that some wonders were happened due to over curiosity of a teenager! :)

      Delete
    5. Great ....GIRIDHARAN...you have truly dedicated the credit to our EDITOR ...in 1986 I wrote a letter to him and asked a autograph...I m still keeping that as a treasure.... he is my role model..... and I believe many of us felt the same about him...

      Delete
    6. நீங்கள் சொல்வது மிகச்சரி நண்பர்களே!

      சிறுவயது முதல் என்னை ஈர்த்த எழுத்துக்கள் இருவருடையவை. முதலாவது, நமது ஆசிரியர் திரு.எஸ்.விஜயன் அவர்களுடையது. மற்றையது கோகுலம் ஆசிரியராகவிருந்த ரேவதி அவர்களுடையது. ஏதோ, நண்பர்களுக்கு தனிப்பட கடிதம் எழுதுவதுபோல எமது இதயத்துடன் பேசுவதுபோல இருக்கும் அவர்களது நடை. அதிலும் நமது ஆசிரியரது சின்னச்சின்ன வசனங்களால் கோர்த்த கடிதங்கள், எழுதுவது எப்படி என்பதை எனக்குக் கற்பித்தன.

      இன்று, நமது காமிக்ஸ்களின் நிறை, குறைகளை விமர்சிக்கும் எண்ணம் வந்துவிட்டாலும், அவர் எழுதும் வரிகளின் அழகுக்கு என்றென்றும் ரசிகனாக இருப்பதே பெருமையாக எண்ணுகிறேன். அவரை மானசீகமாக ஆசானாக ஏற்றுக்கொண்டவன் நான். அதனாலேயே அவரது எழுத்துக்களில் லயித்து நான் இடும் சில பின்னூட்டங்களால் சில நண்பர்கள் 'சொம்பு' களில் ஒன்றாக என்னையும் சேர்த்துள்ளதையும் 'பெருமை'யாகவே எண்ணுகிறேன்!!!

      Delete
  44. அன்புள்ள விஜயன் அவர்களுக்கு,
    // உங்களது கேள்வி-பதில் பார்ட் - 2 தான் எங்களது எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் (வேறென்ன மின்னும் மரணம் தான்) //

    சார், நான் "புயல் தேடிய புதையல்" மட்டுமே படித்து இருக்கிறேன். தொடர் முழுவதும் படிக்க ஆர்வமாக உள்ளேன்.

    ReplyDelete
  45. விஜயன் சார், கடந்த 6 மாதம்களில் அதிக முறை நமது காமிக்ஸ் சென்சார் பற்றி விவாதித் உள்ளோம், அவ்வாறு சென்சார் பிரச்னை வரும் எனும் கதைகளை அடுத்த ஆண்டு (2014) முதல் நமது 6+ இதழ்களின் வரிசையில் கொண்டு வந்தால் என்ன? முக்கியமாக ஷெல்டன் மற்றும் லார்கோ கதைகள்!

    ReplyDelete
  46. விஜயன் சார், காமிக்ஸ்-கான்-இல் பலர் நமது B&W கதைகளை ஆர்வமுடன் தேடிய போது என் மனதில் தோன்றியது, 2014 முதல் B&W மறுபதிப்புக்கு பதில் நமது B&W நாயகர்களின் புதிய சிறந்த கதைகளை Rs.200 ஸ்பெஷல் edition ஆக போட முடியுமா? இது என் போன்ற B&W ரசிகர்களுக்கு சந்தோசம் தரும் விஷயம்!

    ReplyDelete
    Replies
    1. நான் இதை வழிமொழிகிறேன்

      ஏற்கனவே டெக்ஸ்வில்லர் & டைகர் புதிய கதைகள் வந்தாலும், மற்ற கருப்பு வெள்ளை ஹீரோ & ஹீரோயின்-களையும் வெளியிடலாமே

      Delete
  47. விஜயன் சார்,'சி.சிறு வலை' ஒரு தொகுப்பாக வெளிவர வாய்ப்பில்லை -> Good decision! I like this Vijayan Sir

    ReplyDelete
    Replies
    1. ஆனால் அது ஒரு சிறந்த சுய முன்னேற்ற நூலாக இருக்கும்,......நம்மை போன்றவர்களுக்காவது என நினைக்கிறேன் நண்பரே ....

      Delete
    2. Steel @ there are many books for that,'சி.சிறு வலை' interesting one and like our editor writing but not impressed to be released as separate book. But it depends upon the people interest, please don't mistake me.

      Delete
    3. // please don't mistake me.//
      நண்பரே இதில் என்ன தவறு! நாம் அனைவரும் ரசிகர்கள்தானே! சிங்கத்தின் சிறு வயதில்....

      Delete
  48. விஜயன் சார்,

    இத்தருணத்தில் பாக்கியுள்ள 6 மாதங்களில் நாம் சந்திக்க / சாதிக்கக் காத்துள்ள இதழ்களின் பட்டியலைப் பார்ப்போமே :

    லயன் & முத்து காமிக்ஸ் - புது இதழ்கள் : 7 இதழ்கள்
    ( ரூ.200 ; ரூ.100 ; ரூ.50 ; ரூ.40 என வெவ்வேறு விலைகளில்)

    சன்ஷைன் லைப்ரரி - வண்ண மறுபதிப்புகள் : 3 இதழ்கள் (ரூ.100 வீதம்)

    +6 வரிசையில் - 5 இதழ்கள் (ரூ.50 வீதம்)

    @

    அப்ப அடுத்த 6 மாதம் நமக்கு காமிக்ஸ் விருந்துதான், அதான் 6 மாதத்துல 15 காமிக்ஸ் வெளிவரபோகுது :-) Super!!!

    ReplyDelete
  49. //Attendance போடுவதைத் தாண்டி, எழுதவும் செய்வீர்களென்று நம் தளத்திற்குக் காட்டுங்கள் நண்பரே !//

    எழுத வேண்டுமென்ற ஆசையில்லாமலில்லை, ஆனால் என் தொழில் அப்படி. அது மட்டுமல்ல நாம் கருத்து சொல்வதற்குள் நம் நண்பர்கள் நேர்மறை, எதிர்மறை, நடுமறை என எல்லா மறைகளிலும் கருத்து சொல்லிவிடுகிறார்கள்.

    இருந்தாலும் சொல்கிறேன் நமக்கு பிடிக்காத விதத்தில் கருத்துக்கள் பதிவிடும்போது அத்ற்கு பதில் கூறி நமது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் நமக்கு தோன்றிய கருத்துக்களை பதிந்தால் யாவருக்கும் நலமே.

    ReplyDelete
  50. விஜயன் சார்,
    காமிக்-கான் இல் Green Manor கதை காண அட்டைப்படத்தை பார்த்த போது தோன்றிய கேள்வி இது :-)

    தாங்கள் நமது காமிக்ஸ் கதைகளை தேர்வு செய்தது முதல் (Translation, cover design, cover print, review, final printing)
    அது வெளி வரும் வரை உள்ள process or working style பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம்; முடிந்தால் அதனை ஒரு பதிவாக போடவும். I am just curious to know about this, please don't mistake me.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : ஏற்கனவே திரும்பிய பக்கமெல்லாம் எனது ராமாயணங்கள் நம் இதழ்களையும் ; பதிவுகளையும் ஆக்கிரமித்து வருகின்றன ; இதில் புதிதாய் 'behind the scenes ' பற்றியும் எழுதப் புறப்பட்டால் கொட்டாவிகள் விட்டத்தை எட்டும் !

      Delete
    2. hmmm.. I wanted you to post a short and sweet article on this in our blog and not in our book :-)

      Delete
    3. உங்களது ஹாட்லைன் short and sweet ஆக இருப்பதினால் அது சுவாரசியமாக இருக்கிறது. அடுத்த ஹாட்லைன் எப்போ வரும்னு நினைக்க தோணுது. சில சமயம் பழய ஹாட்லைன் மட்டும் படிச்சிட்டு புக்க வச்சிருவேன். 90ஸ், 2000ல் நீங்கள் அதில் கொடுக்கும் பில்டப்புகள், ப்ரச்னைகள், எல்லாம் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். எப்போதும் அதுல ஆரம்பமே இதான் "தவிர்க்க இயலா காரணத்தினால் இந்த இதழ் கொஞ்சம் தாமதமானது". அது மட்டும் மனப்பாடம் ஆகிருச்சு. ஹாஹா. just kidding. short and sweet ஆக இருக்கட்டும் சார். பெரிசானால் சுவாரசியம் போய்டும்

      Delete
  51. அனைத்திந்திய டெக்ஸ் வில்லர் ரசிகர்மன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு வேண்டுகோள் ;

    டெக்ஸ் வில்லரின் பூதவேட்டை 15 வருடங்களுக்கு முன்பே விளம்பரமாக வந்த கதை !
    டெக்ஸ் வில்லரின் நிலவொளியில் ஒரு நரபலி டெக்ஸ் வில்லரின் கதை வரிசை 600 !
    அப்படியெனில் பூதவேட்டை கதையில்..

    *பக்கம் 63 ல் "நாம் சமிபமாய் பனி மூட்ட வேதாளங்களோடு மோதினோமே-அது ஞாபகம் இருக்கிறதல்லவா?

    *பக்கம் 65 ல் "அட போங்கப்பா! மனுஷனை ரோஸ்ட் போட்டுத் தின்னும் ஒரு கருங்காலிக் கூட்டத்திடமிருந்து தப்பி வந்து ஒரு மண்டலம் கூட ஆகவில்லை"

    *பக்கம் 231 ல் "நரமாமிசம் தின்னும் வேதாளங்கள்...பூதங்களாய் மாறும் மானிடர்கள்..இனி.. "

    இவைகளை குறிக்கும் கதை என்ன கதை ? அதன் பெயர் என்ன ?
    சரியான விடையை விளக்கத்தோடு பதிலளிக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. May be both the stories were translated at a same time.

      Delete
    2. கதைகள் ஒரிஜினலாய் வெளியானது வெவ்வேறு era -க்களில் ; ஆனால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் என்பதால் குறிப்பிட்ட அவ்வசனம் நமது சேர்க்கையே !

      Delete
    3. கனிவான பதிலுக்கு நன்றி சார்! இப்படித்தான் இருக்கும் என்று யூகம் கொண்டிருந்தாலும், "வெறும் யூகம் மட்டுமே உண்மையாகி விடாது" என்பதால் தான் பழைய டெக்ஸ் ரசிகர்களுக்கு கேள்வியாக முன் வைத்தேன் !

      தங்களின் இதுபோன்ற அருமையானதொரு வசனசேர்க்கையால், பூதவேட்டை கதையில் கதாப்பாத்திரங்களின் உண்மை தன்மையும் ஒரு வித அன்னியோன்யமும் ஒரு சேர மிளிர்கிறது. இதன் மூலம் மொழிபெயர்ப்பு என்பது உள்ளதை உள்ளபடி அர்த்தமாக்கி காட்டிடும் DICTIONARY அல்ல என்பதையும், நாம் படிக்கும் காலகட்டத்தில் கதையோடு ஒன்றி அதனோடு பயணமாகி கதையின் கற்பனையை நிஜமாக்கி மனம் லயித்து ரசிக்கவைக்கும் கலைதான் மொழிபெயர்ப்பு என்பதையும் எங்களுக்கு 40 ஆண்டுகாலமாக உணரவைத்து வருகிறிர்கள் !!

      Delete
  52. Dear Vijayan Sir,

    Thanks for giving us 4 comics in one shot. If we average 4 comics per month and one mega nbs style issue every year, then we will get satisfied.

    Thanks

    ReplyDelete
    Replies
    1. organicyanthiram : //If we average 4 comics per month and one mega nbs style issue every year, then we will get satisfied//

      Spare a thought for my hairline :-)

      Delete
    2. ஹா ஹா . செம்ம காமெடி punch சார் .
      It is already fantastic that for the next 6 months, we will be getting 15 books. I feel we are slowly but steadily on track to return to the conditions similar to the golden age of 80s.

      Delete
  53. Dear Vijayan Sir,

    just asking sir, i have seen ACK and other publications always maintain the list of all their comics right from the day they started to publish. Similarly is there any chance for us to get all comics from day 1 in colour!!!!.
    i know this may sound a dumb question considering that you will have very few orders and it may not be viable for you. But is possible if we bear the cost ?

    Thanks.

    ReplyDelete
    Replies
    1. organicyanthiram : // Is there any chance for us to get all comics from day 1 in colour!!!! is it possible if we bear the cost ?//

      நூறு ரூபாய் கொடுத்து நீங்கள் ஒரு இதழ் வாங்கும் போதே அந்தப் பணத்திற்கு நியாயம் செய்தாக வேண்டுமே என்ற ஆதங்கம் என்னுள் நிறைய இருக்கும். இந்நிலையில் முதலீட்டிலும் நண்பர்களைப் பங்கெடுக்கக் கோரினால் சத்தியமாய் என் தூக்கத்தைத் தொலைத்து விடுவேன் !

      காமிக்ஸ் வாசிப்பென்பது சுமையாக அல்லாது சுவையாக மாத்திரமே இருக்கட்டுமே sir !

      Delete
    2. சார் உண்மையிலேயே இது ஒரு கடினமான வேலை தான். The biggest challenge will be to get the sufficient no of orders and the investment to do this gigantic task. You can start this only after doing a test drive on how it is received among our friends and how much support and what kind of support will you require from us ? and keeping in mind it does not hurt you financially in any way.
      You are the better judge sir.
      by the way sir, do not think i'am making arrogant statement. Rs 100 per comics is a lot cheaper when compared to the english comics priced between Rs 400 to Rs 2000 in Landmark and i have seen people still buying it.

      Delete
  54. Dear Vijayan Sir,

    சிங்கத்தின் சிறு வயதில்:
    Sir, it is unbelievable that even before you turned 20 and during the 80s, you have undertaken such daring missions during the days when there were No phones, No internet and traveling is a nightmare and expensive.
    over the years, i have always gained inspiration from your writeups. if you publish it as a book, it is a inspiration for the current youngsters and it gives a perspective on how to be successful when he odds are staked high against you. Please publish it in both English and tamil for pan indian audience and it will become a best seller considering the unique experience you have had.

    Thanks.

    ReplyDelete
    Replies
    1. organicyanthiram : மீன்குஞ்சுகளுக்கு நீந்தக் கற்றுத் தர ஆசான்களுக்கு அவசியமேது சார் ? இன்றைய தலைமுறையின் ஆற்றலும் ; திறமையும் சரியான மார்க்கத்தில் செலுத்தப்பட்டால் வானமே எல்லை அவர்களுக்கு !

      எனது இள வயதுப் பணிகளும், பயணங்களும் அவசியங்களின் பிள்ளைகள் ! நீந்தா விட்டால் ஜல சமாதி தான் என்ற நிலை நேர்ந்தால் உயிர் பிழைக்கும் உத்வேகத்தில் ஒரு கடப்பாறை நீச்சலாவது போடுவோம் தானே ? அது தான் எனது அந்நாட்களின் பல்டிகளின் பின்னணி ! என் நல்லதிர்ஷ்டம் - ஆண்டவன் இருந்தார் என்னை கரை சேர்க்க !

      Delete
    2. //என் நல்லதிர்ஷ்டம் - ஆண்டவன் இருந்தார் என்னை கரை சேர்க்க ! //
      What an inspirational and humble statement sir !!.

      and thanks for your replies sir amongst your busy work.

      Delete
  55. டியர் விஜயன் சார்,

    //'விமர்சனங்கள் என்னைப் பாதிக்காது' ; 'என் வழி தனி வழி ' - என்றெல்லாம் எவரேனும் பீட்டர் விட்டால் அது உட்டாலக்கடிப் பட்டியலின் உச்ச இடங்களில் ஒன்றை ஆக்ரமிக்கும் என்பது திண்ணம்!//
    நிச்சயமாக!

    உங்கள் வேலையை நீங்கள் சரியாக செய்யவில்லை என்று கடுமையான வார்த்தைகளால் குற்றம் சாட்டி கேலி செய்பவர்கள், அத்தகைய கருத்துக்களை தத்தம் அலுவலக நேரத்தில்தான் மும்முரமாக பதிவு செய்கிறார்கள் என்பது வேடிக்கைதான் இல்லையா?! அலுவலக நேரத்தில் இணையத்தை நோண்டுபவர்களில் நானும் ஒருவனே! ;) யாருமே முழுமையானவர்கள் இல்லை, குற்றமற்றவர்களும் இல்லை. ஆனால், பிறரை மட்டம் தட்டி அதில் சந்தோஷம் காண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் செய்யப்படும் விமர்சனங்கள் நிச்சயம் ஆரோக்கியமானவை அல்ல!

    ஆனால் இவற்றிற்கான அளவுகோல்கள் பெங்களூர் பெட்ரோல் பங்க் மீட்டர்களைப் போல ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன என்பதால் சில மாதங்களாகவே இங்கேயும் சரி, மற்ற காமிக்ஸ் தளங்களிலும் சரி - பிறரின் கருத்துக்களுக்கு இடையே சென்று தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதில்லை! :)
    ***
    On a different note,
    //ஆனால் இப்போது நாம் வரிசையாய் செல்ல நினைப்பதால் டைகரின் the good ; the bad & the ugly -ஐ தரிசிப்பது தவிர்க்க இயலா விஷயமாகி விட்டது !//
    கதையின் க்ளைமேக்ஸ் பிடிக்கவில்லை என்று சொன்ன ஒரே காரணத்திற்காக டைகர் கதைகளே இனி வேண்டாம் என்ற அர்த்தம் இல்லையே! அப்படிப் பார்த்தால் பூத வேட்டையும்தான் பிடிக்கவில்லை - என்ன செய்வது?! டெக்ஸ் & டைகர் இருவரும் குதிரைகள் மேல் பயணிக்கும் ஆசாமிகள் என்பதால் சறுக்கினாலும் எழுத்து ஓடுவதில் அவ்வளவாக பிரச்சினை இருக்காது! :) ஆனால், 600-க்கும் அதிகமான டெக்ஸ் கதைகள் இருப்பதால் அவரின் சறுக்கல்களை கட்டுக்குள் வைக்க முயன்றிடலாம்!

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga :

      விமர்சனம் எங்கு முடிகிறது ; பரிகாசம் எங்கு துவங்குகிறது என்பதை சுட்டிக் காட்டும் மெல்லிய கோடுகளை மதிக்க மறப்பது எல்லாத் துறைகளுக்கும் பொதுவானதொரு சமீப காலத்து 'in thing ' ஆகி விட்டதே ! So - அதனை எண்ணி தூக்கத்தைத் தொலைப்பதை விட அதனோடு வாழக் கற்றுக் கொள்வதே இன்றைய அவசியம் என்பது எனது அபிப்ராயம் ! பயணிக்கும் பாதைகளில் உங்களைப் போலவே நானும் பாடங்கள் சில படித்து வருவதாலோ என்னவோ - கற்றறியும் அந்த சுவாரஸ்யத்தில், கசப்புகளை சுலபமாகவே பின்தள்ளிட முடிகின்றது !

      On a lighter note : டெக்ஸ் & கோ. தொடரில் 600+ கதைகள் இருப்பது இரு முனைக் கூரான கத்திக்கு சமானம் என்றே சொல்லத் தோன்றுகிறது !

      அதே டெக்சாசில் ; அதே 4 குதிரை வீரர்களை ; அதே செவ்விந்தியர்களின் மத்தியிலும், சலூனில் வம்படித்து உதைபடும் அதே உதவாக்கரைகளுக்கு மத்தியிலும் 600+ முறைகள் உலவ விடும் அவசியம் நேரும் போது பாவப்பட்ட அந்தக் கதாசிரியர்களும் எங்கே தான் போவார்கள் - inspiration தேடி ? ஒரு கட்டத்துக்குப் பின்னே அரைத்த மாவையே விடாப்பிடியாய் அரைப்பதற்கு மாற்றாக - பூத வேட்டைகளில் புறப்படுவது தேவலை என்று அந்த writer களுக்குத் தோன்றுவதில் தப்பு இல்லையே ?

      Delete
  56. விஜயன் சார், @ 'அடிக்கடி GN -களை வெளியிடுகிறேன் பேர்வழி' என்று நான் புறப்பட்டால் அந்த அளவுகோல்களில் ஆங்காங்கே சிற்சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டி வரும் ! So இப்போதைக்கு ஊறுகாயாய் பரிமாறப்படும் GN -கள் அவ்விதமே இருப்பது நமக்கும் நல்லதே !

    -> அருமை! உங்களின் நிலைப்பாடு பாராட்டுதலுக்கு உரியது!

    ReplyDelete
  57. ஆளாளுக்கு ஒரு ''கொச்ச்சின்'' கேக்குறீங்க ............?
    ஆனா எனக்கு ஒண்ணும் தோண மாட்டேங்குது .............
    ''கொச்ச்சின் பேங்க்''இருந்தால் கொடுத்து உதவுங்கள் ................கொச்ச்சின் ப்ளீஸ் கொச்ச்சின் ......! கொச்ச்சின் ப்ளீஸ் .......!
    யாராவது தருமம் பண்ணுங்க கொச்ச்சின் ப்ளீஸ் கொச்ச்சின் .......!

    ReplyDelete
    Replies
    1. சேம் பீலிங், மந்திரியரே?!!

      Delete
    2. கொச்ச்சின் இரவல்: பாக்கெட் சைசில் முழுவண்ண பதிப்புகளுக்கு வாய்ப்பு உள்ளதா?

      Delete
    3. //கொச்ச்சின் இரவல்: பாக்கெட் சைசில் முழுவண்ண பதிப்புகளுக்கு வாய்ப்பு உள்ளதா?//
      ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,விஜயன் ஸார் பாருங்க என் நிலைமையை...........................?
      ........................கொச்ச்சின் இரவலுக்கு நன்றி ரமேஷ் குமார்.........................!

      Delete
    4. என்ன மாதிரி நீங்களும் கடன உடன வாங்கி கொச்ச்சின் கேளுங்க சிவா சுப்ரமணியன் சார் .......!

      Delete
    5. கொச்சின் கேட்டா கேரளாச் சேட்டன்கள் விடுவார்களா மந்திரியாரே

      Delete
    6. கண்டிப்பாக ''விடுவார்கள்'' ...........செவுலோட சேத்து.....நாலு அரை விடுவார்கள் ........
      டியர் சேட்டான்ஸ் இந்த கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) பேச்சை கேக்காதீங்கோ ....
      எண்ட பீடி மலபார் பீடி ....
      எண்ட மோளம் சண்டி .........
      எண்ட உணவு ஆப்பம் கடலகறி...
      எண்ட வாகனம் பரிசல் .........
      ஆகா......... மலையாள மாந்திரீக ஓசை கேக்குதே .........
      வேண்டாம் எண்ட களிமண் பொம்மை .........
      ஐயோ எண்ட முடிய பிடுங்காதீங்கோ .......................

      Delete
    7. madhiyilla mandhiri : நான் தருகிறேன் உங்களுக்கொரு 'கொஸ்டின்' மந்திரியாரே !

      நம்மில் எத்தனை பேருக்கு 'மதியில்லா மந்திரி ' ரசிக்கக் கூடியவராக உள்ளார் ? (நம் இதழ்களில் வரும் மந்திரியாரைப் பற்றி மாத்திரமே கேள்வி!! இங்கே அதகளம் செய்யும் மீசைக்காரரைப் பற்றியல்ல :-)

      COMIC CON -ல் என்னிடம் பேசிக் கொண்டிருந்த நண்பரொருவர் ம.ம கதைகள் - செம மொக்கை என்று குறிப்பிட்டதால் கேட்கிறேன் ! நான் ம.ம.-வின் ரசிகன் என்பதால், ஒருக்கால் என் கண்களுக்கு மாத்திரம் அவர் பளிச் ரகமாகத் தெரிகிறாரோ என்றொரு சின்ன சந்தேகம் !

      Delete
    8. உண்மை தான் சார்.. எனக்கும் கூட அது கொஞ்சம் போர் என்று தான் தோன்றியது.. விழுந்து விழுந்து ஒரு காலத்தில் ரசித்த கபிஷ் & காக்கை காளி இப்போது மிண்டும் ஒரு நாள் படிக்கையில் ஏற்பட்ட அதே பீலிங் மம படிக்கும் போதும் ஏற்பட்டது மொத்தமாய் 4 மம படித்ததினாலா (Euro book) என்று தெரியவில்லை.

      Delete
    9. ஆசிரியர் விஜயன் அவர்கள் :

      உள்ளத்திலிருந்து கூற வேண்டுமானால் இதுவரை தாங்கள் வெளியிட்டுள்ள கதைகளில் இவைகள் எனக்கு பிடிக்காது என்று எதையுமே என்னால் பட்டியிலிட இயலாது. அதுமட்டுமல்ல, குள்ள ஏஜெண்ட் 327 ன் தூங்கிப் போன டைம்-பாம் கூட நான் சிலமுறை படித்த கதைகளில் ஒன்று !

      ஏனெனில் இங்குதான் 'அம்மாவின் கைப்பக்குவம்' என்ற உவமை உண்மையாகுகிறது. என் அம்மா செய்த எந்த சமையலும் எனக்கு இதுவரை திகட்டியதே இல்லை. ஏனெனில் நாம் அங்கு அம்மாவிடம் இருந்து சிறு துளியும் வேறுபட்டு நிற்பதில்லை. (கவனிக்கவும்:) அம்மா மட்டுமே, மனைவி அல்ல. இதற்கு விளக்கம் கொடுக்க முற்பட்டால் அது பல பத்திகளை கபளீகரம் செய்துவிடும் என்பதால்) இது நிற்க ;

      ஆனால் எனக்கு பிடித்தவை என்று பட்டியலிடும் போது தற்போது முதல் மூன்று இடம்..

      1. லார்கோ வின்ச் !
      2. வேய்ன் ஷெல்டன் !
      3. கேப்டன் டைகர் !

      Delete
    10. மதியில்ல மந்திரி ,ஸ்டீல் இரண்டுமே அருமை ! மாறி மாறி வெளியிடலாம்! அதிலும் ஸ்டீல்,வாட்சன் இருவரின் கிண்டல்களும் அட்டகாசம்!

      Delete
    11. @''காமிக்ஸ் ஆசானுக்கு'' (பேர் நல்லருக்குல்ல )................இப்பிடி எல்லாம் சந்தேகம் வரப்டாது ..................நீங்கள் ம .ம வின் ரசிகன் ....நான் வெறியன் ..................கடைசியில வர்ற twist எந்த கதயிலயுமே வராது .............இன்று கூட என் favourite புதிர் அரங்கம் ...................வாசகர்களை நேரில் மந்திரி பார்த்து அடிக்கும் கமெண்ட் உண்மையில் சூப்பர் .........6 பக்கம் போடுறீங்க அதுலயும் மண்ணு விழ நான் ஒத்துக்க மாட்டேன் ......................வேணாம் அழுதுருவேன் ..............

      Delete
    12. @சூப்பர் விஜய் ....ராஜா............ ராஜாதி ராஜா ...அருணாச்சலா.........தளபதி .......மன்னா.....எங்கள் அண்ணா............. குதுகலமா போய்கிட்டுருக்குற மந்திரிய ............பரண்ல போட வச்சுடாதீங்க ...............ஸ்பைடர் ,ஆர்ச்சி,லாரென்ஸ் , ,இரும்புகைய்னு ஒரு குறட்டை கும்பலின் நெருக்களுக்கு மத்தியில மதியிலா மந்திரிய உட்டுபிடாதீங்க......

      Delete
    13. ................................//இங்கே அதகளம் செய்யும் மீசைக்காரரைப் பற்றியல்ல//...............யார் சார் அது .......................? எங்க ''காமிக்ஸ் ஆசான்'' கிட்ட டபாய் கிறது.....சும்மா சொல்லுங்க ஆசான்............................... ஊடு கட்டிடலாம் ஊடு

      Delete
    14. Dear Editor,

      மதியில்லா மந்திரி ரசிக்கக் கூடியவராகவே உள்ளார். அதில் சந்தேகமே வேண்டாம். ஆனால், அனைத்து புத்தகத்திலும் அவரே filler pages யை ஆக்கிரமித்தால், overdose ஆகிவிடும்

      அதுவும் ஸ்டீல் பாடியை compare பண்ணினால் மதியில்லா மந்திரி Super!

      Delete
    15. madhiyilla mandhiri is the best, subtle, underlying hidden comedy neriya irukkum, if you get the vein - u never get tired of him, in comics i rate him number for fun..

      in my opinion madhiyilla mandhiri would be the most challenging - translation wise and hats off u do a great job:-)

      A big thank you to editor for introducing me to Iznogoud..

      Delete
  58. ஒரு சின்ன ஐடியா


    சார் காமிக்கான் மற்றும், புத்தக திருவிழாக்களில் நமது புத்தகங்கள் விற்கப்படும்போது, நமது வாசகரல்லாத புதியவர்களிடம் அவர்களது செல்பேசி மற்றும் email ID பெற்றுக்கொண்டால்., அவர்களுக்கும் நமது புதிய வெளியீடுகளைக் குறித்து அறிவிக்க அதன் மூலம் அவர்களும் நமது நிரந்தர வாசகராக வழிவகுக்குமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. இது கடந்த பதிவில் நான் போட்ட பின்னூட்டம் மீண்டும் பின்னூட்டமாக

      Delete
    2. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : முயற்சிப்போமே !

      Delete
  59. சிங்கத்தின் சிறுவயதில்
    -----------------------

    இதனை, இது வரை வந்த பாகங்களை ஸ்கேன் செய்து, இதே தளத்தில் வெளியிடலாம். ஒரே தொகுப்பாக படிப்பதற்கு நன்றாக இருக்கும். மேலும் இது நீங்களே உருவாக்கியது என்பதனால், ஸ்கேன் செய்து, வெளியிடுவதில் காப்பிரைட் பிரச்சினைகள் இராது (என நினைக்கிறேன்). ஒரு நண்பரின் வலைத்தளத்தில் சி.சிவயதில் தொகுப்பைப் பார்த்த நியாபகம் இருக்கின்றது.

    டயபாலிக்
    ---------
    கதை அருமை. மிகவும் ஸ்டைலிஷ்ஷாக, கருப்பு வெள்ளையில் லார்கோ கதையைப் படிப்பது போல மிகவும் வித்தியாசமாக இருந்தது. சித்திரங்களும், கதை சொல்லப்பட்ட விதமும், ஆங்கிலப் படங்களை நியாபகப்படுத்தியது.

    பூத வேட்டை
    -------------
    (இந்தக் கதையைப் பற்றி ...ம்ம்ம்.. வேண்டாம்.. டெக்ஸ்ரசிகர்களிடம் அடிவாங்க நான் விரும்பவில்லை :-) )

    மின்னும் மரணம்
    ----------------
    கலரில், ஒரே புத்தகமாக, கெட்டியான அட்டையுடன், பாதுகாக்கும் வகையில் வெளிவந்தால்.. அருமையாக இருக்கும். முன் பதிவுகளைத் தொடங்கி, அதற்குப் பெறும் வரவேற்பை வைத்து, இதனை வெளியிடலாமா என தீர்மானிக்கலாம்.
    ReplyDelete
  60. Vijayan sir,
    According to me this one is the best post, I have ever read.
    Thanks a lot for allowing us to read these wonderful comics (I am reading from 1985 on wards). We understand your passion towards these comics, which helped/helps you to publish real gems from the lot.
    We are always with you.
    By the way please consider to reprint some old Tex willer stories (Karsanin Kadantha kaalam etc) and
    Captain prince and Report Jhonny series too in 2014/15....(One digest per year is not enough)....

    ReplyDelete
  61. Mahesh Kumar S : 2013 still has a PRINCE Special ; REPORTER JOHNNY Special & a CHICK BILL Special on the agenda !

    ReplyDelete
    Replies
    1. Looking forward for all three specials (PRINCE Special ; REPORTER JOHNNY Special & a CHICK BILL Special), these 3 characters are one of my favorites.

      Delete
    2. Vijayan sir,

      Thanks a lot for your quick reply.
      I am eagerly waiting to get Prince Digest 1 (with 2 stories) and Reporter Johnny Digest 1 (with 2 stories) in 2013.
      Since we are bit old and hungrier than how we were 20 years back, 1 digest per year seems "யானைப் பசிக்கு சோளப் பொரி".
      Please do consider to have Prince Digest 2 and 3 (2+2 stories) and Reporter Johnny Digest 2 & 3 (2 + 2 stories) in 2014.

      With warm regards,
      Mahesh kumar Selvaraj

      Delete
    3. Dear Editor,

      Thanks for the confirmation about the pending Specials. Great news!

      Delete
  62. சுட சுட எடிட்டரின் பதிலை படிப்பதே ஒரு சுகம்தான்.

    Editor Sir - One follow up Question:
    Even though you had said a big No for B & W stories with proper reasoning behind it, still our mind/heart is looking for - particularly "Detective Digest". How can/should we console ourselves? Is there any other alternative... I am sure you miss the detective stories too :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வருஷம் ஒரு முறை தீபாவளிக்கு மட்டுமாவது ...........

      மறுபதிப்பாய் ,ஒரு டெக்ஸ்,ஒரு ஸ்பைடர் ,ஒரு லாரென்ஸ் ,ஒரு ஆர்ச்சி ,ஒரு இரட்டை வேட்டையர்,ஒரு அலிபாபா,ஒரு சிந்துபாத்,..................atleast வேண்டுவோர்க்கு மட்டும்.....

      வருஷம் ஒரு முறை தீபாவளிக்கு மட்டுமாவது ............
      அதற்கு மேல் தொந்திரவு செய்ய மாட்டோம்.........என்ன சொல்லுறீங்க boys .........................!!!!

      Delete
    2. i agree, announce panni order parthu, order kammiya irunda, price increase panni release pannalum i am ok. ana inda listulae tex mattum venamae eppadiyum avar gudirai odikittudan irukku, spider helicar dan gali, archie remote gali, iratti vettaiyar - marandae pocchu:-( so sad

      Delete
    3. dear vijayan sir , இந்த கருத்தை வாய்ப்பு இருந்தால் தாங்கள் பரிசீலனை செய்யலாமே ?

      Delete
  63. கேப்டன் டைகரின் 'மின்னும் மரணம்' collectors edition பற்றிய அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். விரைவில் முன்பதிவு விவரங்களை அறிவிக்கவும்

      Delete
  64. கனிவான பதிலுக்கு நன்றி சார்! இப்படித்தான் இருக்கும் என்று யூகம் கொண்டிருந்தாலும், "வெறும் யூகம் மட்டுமே உண்மையாகி விடாது" என்பதால் தான் பழைய டெக்ஸ் ரசிகர்களுக்கு கேள்வியாக முன் வைத்தேன் !

    தங்களின் இதுபோன்ற அருமையானதொரு வசனசேர்க்கையால், பூதவேட்டை கதையில் கதாப்பாத்திரங்களின் உண்மை தன்மையும் ஒரு வித அன்னியோன்யமும் ஒரு சேர மிளிர்கிறது. இதன் மூலம் மொழிபெயர்ப்பு என்பது உள்ளதை உள்ளபடி அர்த்தமாக்கி காட்டிடும் DICTIONARY அல்ல என்பதையும், நாம் படிக்கும் காலகட்டத்தில் கதையோடு ஒன்றி அதனோடு பயணமாகி கதையின் கற்பனையை நிஜமாக்கி மனம் லயித்து ரசிக்கவைக்கும் கலைதான் மொழிபெயர்ப்பு என்பதையும் எங்களுக்கு 40 ஆண்டுகாலமாக உணரவைத்து வருகிறிர்கள் !!

    ReplyDelete
  65. அன்புள்ள விஜயன் அவர்களுக்கு,
    எனக்கு மதியில்லா மந்திரி பிடித்து இருக்கிறது. "கண்ணா கலீபா தின்ன ஆசையா?"வின் பூதம் பேசும் வசனங்கள்,துரதிர்ஷ்ட வைரம் கதையும் பிடித்தது.

    ReplyDelete
    Replies
    1. "துரதிர்ஷ்ட வைரம்" கதையில் மந்திரி சொல்லும் வசனம் "நட்ட நடு பாலைவனத்துல சுவர் இடிஞ்சு தலையில் விழுறது எல்லாம், டூ மச்!!"

      Delete
    2. @ மந்திரி // என்ன மாதிரி நீங்களும் கடன உடன வாங்கி கொச்ச்சின் கேளுங்க சிவா சுப்ரமணியன் சார் .......!// ........ சார் எல்லாம் வேண்டாம்,மந்திரியாரே. சிவா மட்டும் போதுமே.

      Delete
  66. // மூலம் மொழிபெயர்ப்பு என்பது உள்ளதை உள்ளபடி அர்த்தமாக்கி காட்டிடும் DICTIONARY அல்ல என்பதையும், நாம் படிக்கும் காலகட்டத்தில் கதையோடு ஒன்றி அதனோடு பயணமாகி கதையின் கற்பனையை நிஜமாக்கி மனம் லயித்து ரசிக்கவைக்கும் கலைதான் மொழிபெயர்ப்பு என்பதையும் எங்களுக்கு 40 ஆண்டுகாலமாக உணரவைத்து வருகிறிர்கள் !!//
    யதார்த்தமான உண்மை!

    ReplyDelete
    Replies
    1. 'மதியில்லா மந்திரி' எனக்கும் பிடித்திருக்கிறார். வயிறுவலிக்க சிரிக்க வைக்கிறாரோ இல்லையோ, தனது கோமாளித்தனத்தால் நிறையவே புன்னகைக்க வைக்கிறார் என்பதால் ஃபில்லர் பேஜ்களில் இடம்பிடிக்க தகுதியானவர்களில் முதன்மையானவராக நினைக்கிறேன்! :)

      Delete
    2. நன்றி ''கொச்ச்சின் விஜய்''

      Delete
    3. உண்மை... எனக்கும் மதியில்ல மந்திரி பிடித்து இருக்கிறது. குறைவான பக்கங்கள் இதன் பிளஸ் பாயிண்ட் என எண்ணுகிறேன். இன்னும் சொல்லப்போனால் புத்தகத்தில் மதியில்லா மந்திரி இருந்தால் நான் முதலில் படிப்பது (பிடிப்பது) அவரைத்தான் :)

      திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

      Delete
  67. நான் எனக்கு தெரிந்த நகைச்சுவை கதைகளில் மிகவும் ரசித்தது Iznogoud, லக்கி லுக் & Bluecoats அதுவும் Iznogoudஐ frame by frameஆக ரசித்து வியந்து இருக்கிறேன். René Goscinny and Jean Tabary நிச்சயமாக இவர்கள் கடவுளின் அருள் பெற்ற தேவைதைகள். Iznogoud கதையை படிக்கும் போது அதன் Frameகளை கவனியுங்கள் சிரிப்பு பொத்து கொண்டு வரும். நான் இந்த அளவுக்கு எந்த ஒரு கதைகளுக்கும் சிரித்தது இல்லை. கதையை படிக்கும் போது எப்படி இவர்களால் இவ்வளவு அழகாக நகைச்சுவையாக இந்த பாத்திரங்களை வடிக்க முடிந்தது என்று வியந்து இருக்கிறேன். René Goscinny and Jean Tabary இருவரும் இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவர்கள் எல்லோர் இதயத்திலும் என்றன்றும் நிலைத்து இருப்பார்கள்.இவர்கள் வடிவமைத்த இந்த Iznogoud இந்த உலகம் உள்ள வரை நம் எல்லோர் மனதிலும் குடி கொண்டு இருப்பான்.

    **Bluecoatsம் இதே அளவுக்கு என்னை ரசிக்க வைத்தது :)

    ReplyDelete
    Replies
    1. GIRIDHARAN:@
      What about MINNUM MARANAM colour reprint Request SLOGAN...... lets start a rally.... VENDUM....VENDUM...

      Delete
  68. மதியில்லா மந்திரி rocks. He is in my top 5 list.

    ReplyDelete
    Replies
    1. The caliph also rocks as he is so innocent and never suspected மதியில்லா மந்திரி even once.

      Delete
  69. அன்புள்ள விஜயன் அவர்களுக்கு,
    // So 17 வயதில் நான் பணியாற்ற வந்தது வேறு மார்க்கமின்றியே ! பெயருக்குப் பின்னே மூன்றெழுத்தாவது இல்லாவிடின் தலையெழுத்தே நாறிடும் என்ற பயத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து நான் correspondence course-ல் B.Com படித்ததெல்லாம் இன்று விளையாட்டான நினைவுகளாய் மாத்திரமே என்னுள் இருப்பினும்,//

    நானும் தான் சார், 10வது முடித்தவுடன் வேலை,correspondence course-ல் B.Com (அண்ணாமலை பல்கலைகழகம்).ஆனாலும் நீங்கள் சொன்னது போலவே
    // என் நல்லதிர்ஷ்டம் - ஆண்டவன் இருந்தார் என்னை கரை சேர்க்க !// இன்றும் கூட.

    ReplyDelete
  70. என்னுடைய TOP 5 லிஸ்ட் ;

    1. லார்கோ வின்ச் !
    2. வேய்ன் ஷெல்டன் !
    3. கேப்டன் டைகர் !
    4. மர்ம மனிதன் மார்ட்டின் !
    5. வன ரேஞ்சர் ஜோ !

    ReplyDelete
  71. மதியில்லா மந்திரி கதைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது .

    ReplyDelete
  72. Hello... PRASANNA BHAI....where are you....?

    ReplyDelete
  73. என்ன இருந்தாலும் நம்ம மதியில்லா மந்திரி கில்லாடிப்பா. பாருங்களேன் ஒவ்வொரு கதையின் க்ளைமாக்ஸ்லையும் மகா சிக்கலில் மாட்டிப்பார். ஆனால் அடுத்த இதழ் வெளியாவதற்கு முன்னால் சைலன்டாக எஸ்கேப் ஆகி புது கதையின் முதல் கட்டத்தில் தெம்போடு வந்து ப்ளான் போடுவார்!

    ReplyDelete
    Replies
    1. //நான்கு புத்தகங்களை ஒரே மாதத்தில் பார்த்தது பால்ய வயதில் பழைய புத்தகக்கடையை கொள்ளையடித்த நாட்களை நினைவுபடுத்துகிறது! இன்னும் 6 மாதத்தில் 15 புத்தகங்கள் என்ற செய்தி சமந்தகன் கண்ணில் பட்ட கொழுத்த முயலை நினைவுபடுத்துகிறது//

      சமந்தகன் கண்ணில் படும் கொழு கொழு முயல்களும், கொழுத்த மான்களும் , ஒவ்வொரு முறையும் காக்கை காளியால் காப்பாற்றப்பட்டு விடுகின்றன. அப்படி காலகாலமாக நம் சிறுவயது முதல் நடந்துவரும் பட்சத்தில் சமந்தகன் நரியும், தூப் தூப் முதலையும் என்ன சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன ?

      இதன் ஸ்மைலி :)

      Delete
    2. ஹா ஹா ஹா... எனக்கும் அதே சந்தேகம்தான். பலபேர் இந்த கேள்வியை கேட்டிருப்பார்கள் போலும் ஒரு கதையின் முதல் கட்டத்தில் நரி இப்படி பேசுவது போல் ஆரம்பித்திருந்தார்கள்:

      "காய் கிழங்குகளை தின்னவேண்டியதாய் போச்சே!"

      Delete
    3. இதில எதாவது உ.கு, வெ. கு உண்டா.....................................................ஆ

      Delete
    4. //இதில எதாவது உ.கு, வெ. கு உண்டா//

      நோ நோ.. நானும் மதியில்லா மந்திரி ரசிகன்!

      Delete
    5. Ramesh Kumar : தாங்கள் மிக திறமையானவர் என்று ஆதாரத்தோடு நிருபித்து விட்டீர்கள். தங்களின் முதல் பதிவே காமிக்ஸ் ரசனையோடு எழுதப் பட்டிருந்ததால் தான் அதை மேற்கோள் காட்டி பதிவிட்டேன். வாழ்த்துக்கள் நண்பரே !

      Delete
  74. நண்பர்களே !

    ஆசிரியர் அவர்களின் பதிவு சம்பந்தமாக அலசி ஆராய்ந்து நம் அபிப்ராயங்களை நமது பதிவுகளாக கடந்த இரண்டரை நாட்களாக பதிவு செய்து முடித்து விட்டோம். இந்த பதிவிற்கு இடைச்செருகளாய் எழுந்த பல கேள்விகளுக்கும் நாம் பதிலளித்து ஓய்ந்து விட்டோம். பல நண்பர்களுக்கு சுருக்கமாகவும், ஓரிரு வார்த்தைகளிலும், நன்றிகளாகவும், SMILEY கள் மூலமாகவும் நாம் பதிலளித்து விட்டோம் !

    இனி நாளை புதன் கிழமை, அதன்பிறகு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என முழுதாய் ஐந்து தினங்கள் என்ன செய்வதாக அல்லது எப்படிப்பட்ட கமெண்ட் போடுவதாக உத்தேசம் நண்பர்களே ?

    இங்கே ஆசிரியரின் பதிவு ஒன்றையே நான் மேற்கோள் காட்ட விழைகிறேன். //நாம் நாமாய் இருக்கும் நாள் புலரும் போது சீண்டல்களோ ; மாற்றுக் கருத்துக்களோ நம்மை சங்கடப்படுத்தும் வலிமையை இழக்கின்றன // இதைத் தவிர வேறு என்னதான் நான் இங்கு எழுத முடியும் என்று தெரியவில்லை ?!

    ReplyDelete
    Replies
    1. //இனி நாளை புதன் கிழமை, அதன்பிறகு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என முழுதாய் ஐந்து தினங்கள் என்ன செய்வதாக அல்லது எப்படிப்பட்ட கமெண்ட் போடுவதாக உத்தேசம் நண்பர்களே ?//

      ஆ... இது என்ன கேள்வி நண்பரே, பகிர்வதற்கு விஷயமில்லாத சூழ்நிலை வரவேற்க தக்கதுதானே. எல்லோருக்கும் சொந்த அலுவல்கள் உள்ளதல்லவா?

      ஒருவேளை இங்கே புதுவரவாக உள்ளதால் எனக்கு இது அபூர்வமாக தோன்றுகிறதா அல்லது நமது இந்த இன்டெர்னெட் கலாசாரம் மக்களை சும்மாவாச்சம் forumஐ fill செய்ய பழக்கிவிட்டதா என்றும் ஒரு ஐயம்!

      No worries, I am one of the age old ones who couldn't grasp the norms of online social sharing trends! :) Especially amazed to see such a ocean of comments done in Tamil which isn't easy to type!

      Delete
    2. தமிழ் காமிக்ஸ் முன்னேற்ற கழகத்தின் சார்பாக விளக்க(ம்) அறிக்கை (தகமுக) ;

      உதாரணத்திற்கு,

      நாங்கள் ரஜினி ரசிகர்கள் போன்றவர்கள், அடுத்த படம் (பதிவு) வரும் வரை எந்திரன் பற்றியே பேசிக்கொண்டிருப்போம். நாங்கள் காமிக்ஸ் மாணவர்கள், அடுத்த தேர்வு (பதிவு) வரும் வரை குரூப் ஸ்டடிஸ் ல் ரிவிஷன் செய்துக் கொண்டே இருப்போம். நாங்கள் கொ.ப.செ.கள் அடுத்த தேர்தல் (பதிவு) வரும் வரை பொதுக் கூட்டம் போட்டு விவாதித்துக் கொண்டே இருப்போம் !

      ஆரம்பித்த 18 மாதங்களில் 4.61 இலட்சம் ஹிட்ஸ் என்றால், எங்கள் கட்சி உறுப்பினர்களின் ஆர்வத்தை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாத ஒரு வலைத்தளமாக இந்த தளம் இருப்பதே இதன் சிறப்பு. அதனால் தான் எங்கள் கட்சி சார்பாக இந்த காமிக்ஸ் வலைத் தளத்திற்கு "CHEVALIERE" விருதுக்கு பரிந்துரை செய்துள்ளோம் !

      பி.கு : ஹ்ம்ம்... என்னவொன்று இதெல்லாம் கடந்த காலமோ என்று தோன்றுகிறது :( மதியில்லா மந்திரியை சைலண்டாக கலாய்த்த உங்களுக்கு ஒரு எளிமையான கேள்வி உங்கள் பதிவில் காத்திருக்கிறது :)

      Delete
    3. (தகமுக) -வா?? தகாமுக-வா :

      நாங்களும் கண்டிபிடிப்போமுல்ல குறைய

      Delete
    4. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : அருமையான கண்டுபிடிப்பு, நாங்கள் கொடுத்த அறிக்கையில் தகாமுக என்று தான் அச்சடித்திருந்தோம். எதிர் கட்சி சதியாக இருக்குமோ..? உங்களை போன்ற திறமையானவர்களை எங்கள் கட்சி இருகரம் கூப்பி வரவேற்கிறது. தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, எங்களின் வசதிக்கு ஏற்ப பதவி வழங்கப்படும் :)

      Delete
    5. பதவி வேண்டாமே!! அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்

      Delete