Powered By Blogger

Sunday, June 23, 2013

பதில்கள் முடிவதில்லை !

நண்பர்களே,

மீண்டுமொரு ஞாயிறு வணக்கம் ! பொழுது விடியும் போதே "தொடரும்" போடப்பட்டு அந்தரத்தில் தொங்கும் "கேள்வி-பதில்" தொகுப்பின் மிச்சப் பாதியை இன்று கவனித்தாக வேண்டுமென்ற அலாரம் தலைக்குள் ஒலித்தது ! ALL NEW SPECIAL -ன் இறுதிக்கட்டப் பணிகள் நடந்தேறும் tight ஆன நேரமிது என்றாலும், இங்கு வருகை பதிவிடுவதும் முக்கியமே என்பதால் "உள்ளேன் அய்யா !". 

இதோ ஈரோடு விஜயின் கேள்விகள் தொகுப்பின் இறுதிப் பாகமும் ; அவற்றிற்கான எனது பதில்களும் :
========================================================================

* கிட்-லக்கியின் வரவேற்பைப் பொறுத்து சிறுவர்களுக்கான சிறப்பு இதழ் தொடங்கப்படுமா?


நல்ல கேள்வி தான் ; இங்கு நம் நண்பர்களும் ஆங்காங்கே, அவ்வப்போது இதே பாணியிலான வினாக்களை எழுப்பி உள்ளதும் கூட நினைவில் நிற்கிறது ! 

காமிக்ஸ் எனும் அறிமுக சுவையை இன்றைய தலைமுறை தானாய் தேடி, நாடிச் சென்று அடைந்திடும் சாத்தியங்கள் சொற்பமே ! For starters ,நமது இன்றைய பாணி / விலையிலான இதழ்கள் தெரு முனையில் உள்ள பெட்டிக் கடைகளில் கிட்டப் போவதில்லை. ஊருக்கு ஒன்றோ, இரண்டோ சற்றே பெரிய புத்தகக் கடைகளில் மாத்திரம் நம் இதழ்கள் கிடைத்தாலே அது பெரிய சமாச்சாரம் என்ற சூழ்நிலையில், நமது பால்ய காலத்து "அம்மாவிடம் பாக்கெட் money - பெட்டிக்கடையில் காமிக்ஸ்  " என்ற பார்முலா இன்றைக்கு வொர்க் அவுட் ஆகாது ! வீட்டின் பெரியவர்கள் initiative  எடுத்து சந்தா செலுத்தினாலோ ; வெளியே செல்லும் போது வாங்கிக் கொணர்ந்தாலோ தவிர, சிறுவர்களை நாம் எட்டிப் பிடித்திட வாய்ப்பேது ? இன்று நம் இதழ்களை ஆர்வமாய்ப் படித்து வரும் நண்பர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுமே நாமொரு சிறார் பத்திரிகை வெளியிடும் பட்சத்தில் துணை நிற்பர் என்பதில் சந்தேகமில்லை ; ஆனால் அந்த எண்ணிக்கை நமது தற்போதைய சந்தா பலத்தைத் தாண்டாது தானே ? மீண்டுமொரு இதழ் இதே சின்ன circulation சகிதம் வலம் வருவதில் வளமான எதிர்காலம் இருத்தல் மிகச் சிரமமே ! 

சந்தாக்களைப் பன்மடங்கு கூட்டுவது அல்லது மீண்டுமொருமுறை விற்பனையாளர்களைத் தேடிச் சென்று (கடன் தந்தாவது) விற்பனைக்கு முயல்வது என்பதே அச்சமயம் நமக்கிருக்கும் வழிமுறைகளாக இருக்கும். இந்தியாவின் ஒரு தலைசிறந்த குழுமம் நடத்திடும் புத்தக விற்பனை முனைக்கு நமது இதழ்களை supply செய்து விட்டு ; தூரத்தில்...ரொம்ப தூரத்திலாவது ...அதற்கான பணம் கிட்டிடும் வாய்ப்பு உள்ளதா ? என்று தன் கடந்த காலத்தைத் தேடிக் கொண்டிருக்கும் XIII -ஐப் போல நானும் "பே" என்ற முழியோடு நின்று வருகிறேன், கடந்த 4 மாதங்களாய் ! விற்பனையாளர்களைப் பொறுத்த வரை குமுதம், ஆனந்த விகடன் போன்ற பெரும் குழுமங்களைத் தாண்டிய சிறு பதிப்பகங்களுக்கு "விற்றால் காசு" என்பதே பரவலான நடைமுறை ! காமிக்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம் !  நாம் கடன் தரத் தயாரே ஆனால் கூட unsold copies வாபஸ் எடுப்பதென்பது நடைமுறை சாத்தியமாகாதே !     நமது தற்போதைய ஆர்ட் பேப்பர் காமிக்ஸ் இதழ்களில் ஒரு பொட்டு தண்ணீர் பட்டால் கூட கோவிந்தா தான் - புத்தகம் மொத்தமாய் ஒட்டிக் கொள்ளும் ! So - இந்த 'விற்காத பிரதிகளை வாபஸ் வாங்கிக் கொள்ளுகிறோம் '  பார்முலா நமக்கானது அல்ல எனும் போது - வெகுஜன புழக்கத்திற்கு ஒத்து வரும் விற்பனை முனைகளும் நமக்கானவையல்ல என்றே ஆகிடுகிறது !     

அடுத்த மாதம் துவக்கம் வேறு பத்திரிகைகளில் தொடர்ச்சியாய் விளம்பரம் செய்து இன்னும் நமது இரண்டாம் வருகையை அறிந்திரா காமிக்ஸ் பிரியர்களை சுவாரஸ்யப்படுத்திட முடிகிறதா என்று பார்த்திட உத்தேசம் ! அதன் புண்ணியத்தில் நமது தற்போதைய சந்தா base அதிகமானால் நமது தற்போதைய பயணப் பாதை கொஞ்சம் சுலபமாகும். யதார்த்தம் இப்படியிருக்க இன்னொரு புது முயற்சியில் 'தொபுக்'கென குதிப்பது விவேகமாகாதே !

கொசுறாய் ஒரு சேதியும் கூட : கொஞ்ச காலம் முன்னே ஒரு சர்வதேச காமிக்ஸ் ஜாம்பவானின் ஆசியப் பிரதிநிதிகள் நம்மைத் தொடர்பு கொண்டார்கள் - அவர்களது படைப்புகளை நாம் தமிழில் வெளியிட ஆர்வமாய் இருப்போமா என்ற கேள்வியுடன் ! தொடர்பு கொண்ட நிறுவனத்தின் ஆற்றலும், ஆளுமையும் ; படைப்புகளும் அசாத்தியமானவை என்பதால் -  பிரத்யேகமாய் ஒரு மாதாந்திரக் கார்ட்டூன் இதழ் ; ரூ.30 விலையில் என்ற பார்முலாவோடு அவர்களை 15 நாட்கள் இடைவெளிக்குப் பின்னதாக சந்தித்தேன் ! தரம், விலை, பாணி, எல்லாமே ஒ.கே. ஆகி விட்டது ; ஆனால் 'மாத இதழ்' என்பதிலும், எதிர்பார்க்கப்படும் விற்பனை எண்ணிக்கை : 10,000 பிரதிகள் என்பதிலும் அவர்களது முகத்திலிருந்த பிரகாசம் குறைந்து போனது ! 'மாதம் குறைந்த பட்சம் மூன்றோ, நான்கோ இதழ்கள் வெளியிடுங்களேன்' என்றும் ; "வெறும்" 10,000 பிரதிகள் தானா ? என்ற புருவ உயர்த்தலும் தலை காட்டிய போதே 'இது தேறாது' என்று என் மண்டைக்குள் ஒலித்தது. நாசூக்காய்ப் பேசி விட்டு விடை பெற்று வந்தேன் ! நம் மார்கெட்டுக்கென உள்ள பல limitations களை உணர்ந்து, புரிந்து பரிவு காட்டும் படைபாளிகளாய் இருந்தால் தவிர,நமது தற்சமய விற்பனை எண்ணிக்கையோடு குடும்பம் நடத்துவது இயலாக் காரியமே என்பது நான் கற்ற பாடம் !  
========================================================================

* கேப்டன் டைகரின் 'Arizona love' அடுத்தவருடமாவது வெளியாகுமா?

Arizona Love நிச்சயம் வெளியாகும் ; ஆனால் 2014-ல் அல்ல ! இந்த பாகத்தில் சித்திரங்கள் சென்சாரைத் தூண்டும் வகையில் உள்ளன என்பது நிஜம் தான் - but அதனை handle பண்ணிக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை உள்ளது ! 


========================================================================

*சென்ற வருடத்தைக் காட்டிலும் வாசகர் வட்டம் விரிவடைந்திருக்கிறதா? தோராயமாக எவ்வளவு சதவீதம்?

நிச்சயமாய் கூடியுள்ளது - 15% வரை ! ஆனால் துவக்க எண்ணிக்கையே பெரிதல்ல எனும் போது அதில் 15% என்பது ஒரு giant leap ஆகாது தானே ? But - முன்பணம் கொடுத்து பிரதிகளை வாங்கிடும் விற்பனையாளர்களின் எண்ணிக்கை மெதுவாக - ஆனால் உறுதியாக முன்னேறி வருவது ஒரு ஆறுதலான அம்சம் !

========================================================================

* வாசகர்வட்டத்தையும், விற்பனையையும் அதிகரிக்கச் செய்ய ஏதேனும் புதிய முயற்சிகள் யோசிக்கப்பட்டிருக்கிறதா?

பள்ளிகளுக்கு சந்தாக்கள் விற்பனை செய்ய நண்பரொருவர் உதவ முன்வந்துள்ளார் ; ஆங்காங்கே நடைபெறும் குட்டியான புத்தகத் திருவிழாக்களிலும் பங்கேற்க உத்தேசித்துள்ளோம் ! உங்கள் நகரில் ஓரளவேனும் ஒ.கே. ரகத்திலான புத்தகக் கண்காட்சிகள் நடந்தேறும் பட்சத்தில் அவை பற்றித் தகவல்கள் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ? ஈரோடு விழாவிற்கு இயன்ற முயற்சிகளை நம் நண்பர்கள் செய்து வருகிறார்கள் ! நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் :-)

========================================================================
*நம்முடன் வியாபாரத் தொடர்பிலிருக்கும் பதிப்பகத்தார் யாராவது 3Dயில் காமிக்ஸ் வெளியிட்டிருக்கிறார்களா? பதில் 'ஆமாம்' எனில் நாமும் களமிறங்கிடும் வாய்ப்புள்ளதா?  ('ரத்தத்தடம்' ஏற்படுத்திய எண்ணங்கள்... )

3 D -க்கான தொழில் நுட்பமே வேறு ! பைசா கூடுதல் செலவின்றி அதனை   உங்களுக்கும், எனக்கும் சாத்தியமாக்கிக் காட்டி இருக்கும் நம் பணியாளர்கள் அவ்விதத்தில் பாராட்டுக்குரியவர்களே :-)

========================================================================

* நமது ஜூனியர் எடிட்டர் ஃப்ரெஞ்சு மொழி கற்றுக்கொண்டாரெனில் எதிர்கால மொழிபெயர்ப்புக்கு உதவுமே?

தற்சமயக் கல்லூரிக் கல்வியின் மத்தியினில் இதற்கென நேரமும், ஆர்வமும் கண்டு பிடித்தல் ஜூ. எ-க்கு சாத்தியமாகுமா என்பதற்கு விடை சொல்லத் தெரியவில்லை எனக்கு ! தவிரவும், ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதோடு அதில் புலமை வந்திடாது என்பதில் ரகசியம் ஏதும் இல்லையே ! தொடர்ச்சியாய் அதனில் உரையாடுவது ;அம்மொழியினில் நிறையப் படிப்பது என்பன அத்தியாவசியமன்றோ ? 

அது மட்டுமல்லாது - எழுதுவது என்பதொரு intense task ! அயர்ச்சி ஆட்கொள்ள அனுமதிக்காமல் தொடர்ச்சியாய் பேனா பிடிப்பதும் எத்தனை சிரமம் என்பதை எங்களது மொழியாக்க ஸ்கிரிப்ட்களைப் பார்த்தால் புலனாகும் ! 'காமிக்ஸ் பரிச்சயமே இல்லாத இல்லத்தரசி' என்ற அடையாளத்தோடு நமக்காகப் பணியாற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் அனுப்பிடும் ஒவ்வொரு மாதக் கூரியரிலும் பரீட்சைப் பேப்பர் சைசில் 50-60 பக்க text இருக்கும் ! பணமெனும் ஒரு உந்துதலுக்கு அப்பாற்பட்ட அர்ப்பணிப்பு அவசியம் இப்பணிகளுக்கு ! So குருவி தலையில் இந்தப் பனங்காயை ஏற்றுவது இப்போதைக்கு சரியாகாது !

தவிரவும், அவன் பாதை எதுவென்பதை அவனே தீர்மானிக்கட்டுமே ? 'இதைச் செய் - அதைச் செய் ' என ஒரு போதும் என் தந்தை என்னை நிர்பந்தித்ததில்லை ! அந்நாட்களிலேயே எனக்கே சாத்தியமான சுதந்திரம் இன்றைய தலைமுறைக்கு  சுவாசத்தைப் போல் அத்தியாவசியமாகும் அல்லவா ?  
========================================================================

*நாற்பதாண்டு பாரம்பரிய கொள்கையைத் தகர்த்தெறிந்துவிட்டு 'குறித்தநேரத்தில் காமிக்ஸ் வெளியிடும்' வரலாறு காணாத நமது இந்த புதிய பாணி உங்களுக்கு எதை உணர்த்தியிருப்பதாக நினைக்கிறீர்கள்?

40 ஆண்டுகளாய் வாழைப்பழச் சோம்பேறிகளாய் இருந்து வந்துள்ளோம் என்பதையும் ; இத்தனை காலமாய் அத்தனையையும் சகித்து வந்துள்ள நண்பர்களுக்கு பதில் மரியாதை செய்திட இதைத் தாண்டியதொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதையும் உணர்த்தியுள்ளது ! பல முறை சொல்லியுள்ளேன் - ஆனால் திரும்பவும் சொல்லிடும் அவசியங்கள் குன்றிடவில்லை என்பதால் - மீண்டுமொருமுறை சொல்கிறேன் :  thanks a ton guys !

========================================================================
* வண்ணப்புத்தகங்களின் அணிவகுப்பால் உள்ளே வர இடம்கிடைக்காமல் தவிக்கும் மாடஸ்டியின் மார்கெட் பணால் ஆகிவிடும்போல் தெரிகிறதே?

எனக்கும் அதில் வருத்தமே ! ஆனால் மாடஸ்டி கதைகளுக்கு அத்தனை சீக்கிரம் மங்களம் பாடிடுவதாக நானில்லை ! உரிய நேரத்தில் மேற்கொண்டு பேசுவோம் (நம் ) இளவரசியைப் பற்றி !
========================================================================

*இனிவரவிருக்கும் (NBS போன்ற) சிறப்புவெளியீடுகளில் 'அந்தரத்தில் ஊசலாடும் கதைகளைச் சேர்க்கவேண்டாம்' என்ற நண்பர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

டைகரின் கதை இம்முறை NBS -ல் ஊசலாடக் காரணமென்ன என்பதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் ! So - அது போன்ற தவறுகள் தொடராது !இன்னும் சில நண்பர்கள், லார்கோ ; ஷெல்டன் போன்ற prime series களின் அங்கங்களை தனித் தனி வெளியீடுகளாக மாத்திரமே வெளியிடுங்கள் ; இது போன்ற combo இதழ்களில் இடம் பெறச் செய்ய வேண்டாமென கோரியிருந்தனர் ! ஒரு மெகா இதழைத் திட்டமிடும் போது அவசியமாகும் முதல் காரியமே அதன் நட்சத்திர அங்கத்தினர்களைத் தேர்வு செய்வதே ! பிரதான நாயகர்களை ஒதுக்கி விட்டால், அந்த ஸ்பெஷல் உப்பு சப்பு இல்லாத உணர்வைத் தோற்றுவிக்கும் !

======================================================================= 

* ஜில்ஜோர்டான் 2014 ல் தலைகாட்டுவாரா?


சிரமமான கேள்வியே ! ஒரு தொடரை ஒரே கதையின் மூலம் தீர்மானிப்பதென்பது - ஒரேயொரு மாட்சில் களம் இறக்கி விட்டு,  'நீ செஞ்சுரி அடித்தால் மாத்திரமே தப்பித்தாய் கண்ணா ' என்று சொல்வதைப் போலாகும் ! முதல் முயற்சியில் ஜில் ஜோர்டான் decent ஆனதொரு ஆட்டத்தைத் தான் நமக்குக் காட்டினார் என்ற போதிலும், கதையில் வியாபித்திருக்கும் புராதனம் சற்றே நெருடலாய் உள்ளது எனக்கு ! லியர்ஸ் ஜெட்டில் ஏறி சுவிட்சர்லாந்திலிருந்து இரவு உணவுக்கு நியூயார்க் திரும்பும் லார்கோவை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு, ட்ரன்க் கால் போட்டுப் பேசி விட்டு, ரயில் டிக்கட் எடுத்து பாரிசுக்கு 4 மணி நேரம் 'லொடக் லொடக்' எனப் பயணிக்கும் ஜில் ஜோர்டானையும் அதே களத்தில் நிற்கச் செய்வது கொஞ்சம் கஷ்டமாகவே தோன்றுகிறது ! ஆனால் இது ஜோர்டானின் கதைகளைக் குறை சொல்லும் முயற்சியல்லவே ; அவற்றின் தரம் உலகறிந்ததே ! இங்கு நண்பர்களின் opinion எனக்கொரு தீர்மானமெடுக்க உதவும் !  What say guys ?
========================================================================

* சமீபத்தில் எல்லா வாசகர்களின் வயிறையும் பதம் பார்த்திட்ட கிட் ஆர்ட்டின்-ஷெரீப் ஜோடிக்கு அதிக வாய்ப்பளிக்கப்படுமா?

எதிர்பார்ப்புகளை மாத்திரமின்றி - ஒவ்வொரு முறையும் அதே சிரிப்புக் quotient சகிதம் ஒரு கதை அமைவதும், சரளமான வசன நடை அமைவதும் சாத்தியமாக வேண்டுமே என்ற கூடுதல் பொறுப்பையும் வுட் சிட்டி கோமாளிகள் இப்போது ஏற்படுத்தி விட்டனர் எனக்கு ! முயற்சிப்போமே நிச்சயம் 2014-ன் காலெண்டரில் இவர்களுக்கு ஒரு நல்ல இடமுண்டு ! 

 ========================================================================

*ஒரு மாற்றத்திற்காகவாவது திகில்/அமானுஷ்ய கதைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுமா?


ஜூனியர் எடிட்டரின் சமீப காலக் கோரிக்கையும் கூட இதுவே  ! பிரச்சனை என்னவெனில் - அமானுஷ்யக் கதை வரிசைகளில் இரு வெவ்வேறு பாணிகள் உள்ளன ! ஒன்று : நமது முந்தைய கறுப்புக் கிழவி ரக சிறுகதைகள் கொண்ட 4-6 பக்கத் தொகுப்புகள் ; மற்றொன்று - அமானுஷ்யக் கதை ரசிகர்களுக்கென உருவாக்கப்பட்ட hardcore த்ரில்லர்கள் ! இரத்தக் காட்டேரிகள் ; ட்ராகுலாக்கள் ; பிணம் தின்னிகள் ; zombies என்று கதை முழுக்க இவர்கள் (இவைகள் ??) உலவுவது இந்த வரிசையில் சகஜம் ! முதல் ரகம் இன்றைக்கு filler pages -க்குப் பிரயோஜனப்படுவதைத் தாண்டி அதிக பலனளிக்குமா தெரியவில்லை (நண்பர் ஜான் சைமன் மன்னிப்பாராக !) ; இரண்டாம் ரகம் நிச்சயமாய் ஒரு no - no ! நிஜமான த்ரில்லர் கதைகளுக்கு நானுமே வலை போட்டு வருகிறேன்...!

========================================================================

* மிக அவசியப்பட்டால்தவிர முத்தக்காட்சிகள் கூட வேண்டாமே என்ற வாசகர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கப்படுமா? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தயக்கமின்றி நம் காமிக்ஸ்களை வாங்கிக்கொடுத்திட இந்த 'விரசமில்லா' நிலைப்பாடு நிச்சயம் உதவுமில்லையா?

இது பற்றி நாம் நிறையவே பேசி இருக்கிறோம் தானே ? எனினும், நம் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த மீண்டுமொருமுறை நேரம் செலவிடுவதில் தவறில்லை தானே  ! 


முத்தக் காட்சிகளோ ; இன்ன பிற வகை விரசங்களோ ஒரு ஆக்கத்தினுள் (காமிக்ஸ்களுக்கு மாத்திரமின்றிப் பொதுவாகவே) புகுத்தப்படுவதற்கு 2 மாறுபட்ட காரணங்கள் இருக்கலாம் !  ஒன்று - வாசகர்களிடையே சற்றே கிளர்ச்சியைக் கொணரும் வியாபர நோக்காய் இருத்தல் சாத்தியமே  ! காரணம் # 2 :  கதையின் போக்கிற்கு ; கதாப்பாத்திரங்களிடையே நிலவும் உறவின் தன்மைகளைச் சித்தரிப்பதற்கு ஒரு கருவியாய் அதனை படைப்பாளிகள் அமைத்திருக்கலாம் ! 

லார்கோ கதைகளில் பட்டாம் பூச்சிகளாய் வந்து போகும் அழகான யுவதிகள் - கண்ணுக்குக் குளிர்ச்சியூட்டுவதைத் தாண்டி லார்கோவின் playboy கேரக்டரை பதிவு செய்திடும் யுக்திகளாகவும் படைப்பாளிகள் பார்த்திடுகிறார்கள் ! ஷெல்டன் கதைகளில், உலகையே தரிசித்து முடித்து விட்டதொரு 50 வயதான ஆண்மகனின் பயணங்களையும், வழியில் அவன் சந்திக்கும் சிற்சில வசந்தங்களையும் வெளிச்சம் போடுவதே கதாசிரியரின் நோக்கம்.அது போன்ற சூழலில் நான் 'கத்திரி போடுகிறேன் பேர்வழி '  என்று இறங்குவது ஒரு ஆக்கத்தின் ஆத்மாவை ஆபரேஷன் செய்வதைப் போன்றது ! அங்கே நான் செய்திடக் கூடியது, ஆடைகளில் ; சம்பாஷணைகளில் கண்ணியம் தவறிடாமல் பார்த்துக் கொள்ளக் கூடியது மாத்திரமே ! இங்கு இன்னுமொரு குட்டி snippet : 

நாம் முன்பு சாணித் தாளில், ஒரு கலரில்,சொற்ப விலைகளில் கதைகளை வெளியிட்டு வந்த வரையிலும் 'எக்கேடோ கெட்டொழி ' என்று படைப்பாளிகள் நம் பாணிக்குள் அதிகமாய் மூக்கை நுழைப்பதில்லை ! ஆனால் இன்றோ - வண்ணத்திலும், தரத்திலும் அவர்களது அளவுகோல்களுக்கு நெருங்கி நாம் நிற்கும் வேளையில், கதைகளை நாம் கையாளும் பாணிகளிலும் நமக்கு restricted சுதந்திரம் மாத்திரமே உண்டு ! So - நானே நினைத்தால் கூட கண்ட இடத்தில்   கத்திரி போடுவதென்பது எனக்கும் சாத்தியமல்ல !  Cinebooks வெளியிடும் லார்கோ புக்குகளில் கூட முதல் பக்கத்தில் சின்னதாய் ஒரு வாசகம் இருக்கும் : "படைப்பாளிகளின் சம்மதத்தோடு, நமது மிதரசனை வாசகர்களின் பொருட்டு சித்திரங்களில் சின்ன அளவில் மாற்றம் செய்துள்ளோம் " என்று !  Cinebooks போன்றதொரு ஜாம்பவானுக்கே இந்தக் கட்டுப்பாடுகள் apply ஆகுமெனும் போது, சிவகாசியில் குந்தி இருக்கும் இந்த ஸ்பைடர் மண்டையனுக்கு மட்டும்  விதிவிலக்கு கிட்டுமா என்ன ? 

'காலங்கள் மாறி வருகின்றன ; உலகையே நம் வீட்டுக் கூடத்திற்குக் கொணரும் ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து விட்டது ; ஆகையால் இவ்விஷயங்களில் நமது சகிப்புத்தன்மைகளும் மாறிடல் அவசியம் என்றெல்லாம் நான் போதிக்கப் போவதில்லை ! ரசனை சார்ந்த விஷயங்களில் ஒவ்வொருவரின் நிலைப்பாடும் அவரது பிரத்யேகம் என்பதையும் ; தம் குழந்தைக்கு எதை ஊட்டுவது ; எதை ஒதுக்குவது என்பதும் ஒவ்வொருவரது தனிப்பட்ட தேர்வுகளே என்பதிலும் எனக்கு முழு உடன்பாடே ! ஆனால் நான் சொல்ல விழைவது ஒன்றே : நம் இதழ்களில் இந்த சங்கதிகள் தலைகாட்டுகின்றன எனில் - அது நான் முதலில் குறிப்பிட்ட  காரணம் # 2 -ன் பொருட்டு மாத்திரமே ! கிளர்ச்சியூட்டித் தான் வியாபாரம் செய்ய வேண்டுமென்றொரு அவசியம் தாங்கிய நாள் புலருமெனின், புளிய மரத்தடியில் வடை போட்டு விற்பேனே தவிர, விரசத்தை வியாபாரம் ஆக்க உடன்பட மாட்டேன் ! 

ALL NEW ஸ்பெஷலில் வரவிருக்கும் "பிரளயத்தின் பிள்ளைகள்" ஓரிரு இடங்களில் நிர்வாணக் காட்சிகளைக் கொண்டதொரு கதையே ! ஆனால் உலக யுத்தப் பேரழிவின் போது அரங்கேறிய அவலங்களை சித்தரிக்குமொரு ஆக்கத்தில் அந்தக் காட்சிகள் இடம் பெறுவது விரசத்தையோ; கிளர்ச்சியையோ உண்டு செய்யவல்ல ! அதனை உணராது, 'கத்திரி எடுத்தவன் கில்லாடி எடிட்டர்' என நான் செயல்படும் பட்சத்தில், ஆர்டினுக்குத் துணைக்குத் தான் நான் லாயக்காக இருக்க முடியும் ! 

நம் கதைகளை முதலில் கையாள்வது ஒரு இல்லத்தரசியே ! அதற்கு டைப்செட் செய்வதும் ஒரு மணமாகா பெண்மணியே ; இதழ்களை அனுப்பிடும் பணியில் ஈடுபட்டிருப்பதும் 2 பெண்களே ! So முகம் சுளிக்கச் செய்யும் பாங்கு எங்கேனும் எட்டிப் பார்த்திடவே கூடாதென்ற எச்சரிக்கை உணர்வு சதா காலமும் நம்மில் குடி கொண்டிருக்கும் ! Rest assured ! 
========================================================================

*  முன்கூட்டியே பணம் செலுத்திப் புத்தகம் வாங்கிடும் முகவர்கள்/விற்பனையாளர்களின் எண்ணிக்கையிலும் ஏற்றம் கண்டிருக்கிறோமா?

Yes :-) 
========================================================================
ஒரு வழியாய் எனக்குத் தெரிந்த பதில்களைப் பதிவு செய்து விட்ட திருப்தியில் கிளம்புகிறேன் !எங்கேனும் 'கருத்து கந்தசாமி' ரேஞ்சில் ஏதேனும் சொல்லப்பட்டிருந்தால், அது முழுக்க முழுக்க எனது சொந்த அபிப்ராயங்களே என்ற disclaimer இங்கு நிச்சயம் அவசியம் ! உலகுக்கு சேதி சொல்ல நானோ ; இந்தத்  தளமோ ஒரு நாளும் முயற்சித்ததில்லை ; முயற்சிக்கப் போவதுமில்லை - என்பதை சமீபமாய் ஒன்றிரண்டாய் இங்கு ஒலித்துள்ள சலிப்புக் குரல்  நண்பர்களுக்கு நினைவூட்டும் கடமை எனக்குள்ளது ! 'இந்திரன்-சந்திரன்- அசகாய மொழிபெயர்ப்பாளன் ' என்ற பட்டயங்களை யாரும் இங்கிருந்து சுமந்து செல்லப் போவதில்லை என்பதை நன்றாகவே அறிவேன் ; 'காமிக்ஸ் நேசன் ; சகஜமானதொரு சக மனிதன் ' என்ற அடையாளம் கிட்டினாலே பாக்கியசாலி ஆக மாட்டேனா ? !  Enjoy the sunday folks ! 

194 comments:

  1. //அடுத்த மாதம் துவக்கம் வேறு பத்திரிகைகளில் தொடர்ச்சியாய் விளம்பரம் செய்து இன்னும் நமது இரண்டாம் வருகையை அறிந்திரா காமிக்ஸ் பிரியர்களை சுவாரஸ்யப்படுத்திட முடிகிறதா என்று பார்த்திட உத்தேசம்!//
    Super! :)

    ReplyDelete
    Replies
    1. டியர் விஜயன் சார்,

      //ஜில் ஜோர்டான் - நண்பர்களின் opinion எனக்கொரு தீர்மானமெடுக்க உதவும்//
      ஜெரோம் (ஞாபகம் இருக்கிறதா?) & ஜில் ஜோர்டான் இவர்கள் இருவரையும் வைத்து ஒரு 'டிடெக்டிவ் ஸ்பெஷல்' போட்டு இன்னொரு வாய்ப்பு கொடுத்தால் என்ன?! அடுத்த மாதம் மூன்றாம் முறையாக தலைகாட்டப் போகும் ஸ்டீல் பாடி ஷெர்லாக்கை விட இவர்கள் எவ்வளவோ பெட்டர் (எனது பார்வையில்!).

      //ஒரு சர்வதேச காமிக்ஸ் ஜாம்பவானின் ஆசியப் பிரதிநிதிகள்//
      யார் அந்த ஜாம்பவான்?!

      //நிஜமான த்ரில்லர் கதைகளுக்கு நானுமே வலை போட்டு வருகிறேன்...!//
      அதாவது இரத்தக் காட்டேரிகள், ட்ராகுலாக்கள், பிணம் தின்னிகள், zombies இவை இல்லாத அமானுஷ்ய கதைகளை தேடுகிறீர்களா?! இருக்கவே இருக்கார் நம்ம டெக்ஸ் வில்லர்! ;)

      Btw, இந்த தொடர் (Severed) உங்கள் ரசனைக்கு ஒத்து வருமா என்று பாருங்களேன்! அற்புதமான சித்திரங்களுடன் ஓரளவு மிதமான(!) டெர்ரர் கதையாக தெரிகிறது.
      http://www.imagecomics.com/comics/4706/Severed-HC

      இதனுடைய முதல் பகுதியை இங்கே இலவசமாக படிக்கலாம்!
      http://www.comixology.com/comic-reader?id=12542&sid=6436

      Delete
    2. //ஜெரோம் (ஞாபகம் இருக்கிறதா?) & ஜில் ஜோர்டான்//

      என்னுடைய கருத்தும் அதே ஸ்டீல் பாடி என்னையும் அவ்வளவு ஈர்க்கவில்லை.
      மற்ற இருவருக்கும் இன்னொரு வாய்ப்பு அளிக்கலாம்.

      //இருக்கவே இருக்கார் நம்ம டெக்ஸ் வில்லர்! ;)//
      இதனை கண்டிப்பாக மிக கடுமையாக எதிர்க்கிறேன் டெக்ஸின் தீவிர ரசிகன் என்ற முறையில்.

      Delete
    3. Karthik Somalinga : வித்தியாசமான தொடராகத் தான் தெரிகிறது - படித்துப் பார்த்தாக வேண்டும் !

      தவிர - இவற்றை வெளியிடும் நிறுவனம் சற்றே மாறுபட்டது - வெளியிடும் கதைகளின் copyright உரிமைகள் பெரும்பாலும் அவர்களிடத்தில் இருப்பதில்லை ! ஓவியர்களும், எழுத்தாளர்களும் தத்தம் படைப்புகளை showcase செய்திட இப்பதிப்பகம் ஒரு மேடை அமைத்துத் தருவதோடு சரி ! தேவையெனில், நேரடியாய் அதன் ஓவியரையும், கதாசிரியரையும் நாம் தொடர்பு கொண்டாக வேண்டும் ! Anyways, something worth consideration !

      Delete
  2. ம்... பல கேள்விகளுக்கான விடைகளோடு மீண்டும் ஒரு 'அகலமான' பதிவு! இதுவரை வெளிவராத பல சங்கதிகளை பகிர்ந்தமைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  3. //நாம் கடன் தரத் தயாரே//

    நிஜமாவா? சொல்லவே இல்லையே? :-)

    ReplyDelete
  4. //நமது தற்போதைய ஆர்ட் பேப்பர் காமிக்ஸ் இதழ்களில் ஒரு பொட்டு தண்ணீர் பட்டால் கூட கோவிந்தா தான் - புத்தகம் மொத்தமாய் ஒட்டிக் கொள்ளும் !//

    நெசந்தான்!!!

    ReplyDelete
  5. //Arizona Love நிச்சயம் வெளியாகும் ; ஆனால் 2014-ல் அல்ல ! இந்த பாகத்தில் சித்திரங்கள் சென்சாரைத் தூண்டும் வகையில் உள்ளன என்பது நிஜம் தான் - but அதனை handle பண்ணிக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை உள்ளது !
    //

    தயவுசெய்து ஒரு ஆர்ட்டிஸ்டை பயன்படுத்துங்கள். பேஜ் டிசைனரிடம் கொடுத்தால், அவர் ஒரு இடத்திலிருந்து அப்படியே ஸ்பான்ச் டூலினால் ஒற்றியெடுத்து நிரப்புவார் அல்லது லைன் அடித்துவிடுவார். ஒரு ஆர்ட்டிஸ்டை வைத்துக்கொண்டு அவர் வழிகாட்டலில் சென்சார் டிசைன் செய்தால் சொதப்பலாக துருத்திக்கொண்டு தெரியாது என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  6. //3 D -க்கான தொழில் நுட்பமே வேறு ! பைசா கூடுதல் செலவின்றி அதனை உங்களுக்கும், எனக்கும் சாத்தியமாக்கிக் காட்டி இருக்கும் நம் பணியாளர்கள் அவ்விதத்தில் பாராட்டுக்குரியவர்களே :-)//

    ஆனாலும், அந்த அனுபவத்தை 'அனுபவிக்க' நாங்கள் இன்னும் தயாராகவில்லை என்றே எங்கள் கண்கள் சொல்கின்றன. எனவே, இப்போதைக்கு அந்த 'நுட்பத்தை' தொடரவேண்டாமே, ப்ளீஸ்!

    ReplyDelete
  7. //* நமது ஜூனியர் எடிட்டர் ஃப்ரெஞ்சு மொழி கற்றுக்கொண்டாரெனில் எதிர்கால மொழிபெயர்ப்புக்கு உதவுமே?//

    எடிட்டரை மட்டுமே 'விமர்சனங்களால்' போட்டுத்தாக்கி சலித்துவிட்டதால்தான் புதிதாக ஒருவரை இழுத்துவரத் தேடுகிறார்கள் நம் நண்பர்கள் என்று தோன்றுகிறது. அவரை அவர்பாட்டில் விடுங்கள். உங்கள் தாக்குதல்களுக்கான இலக்கு, இப்போதைக்கு நம் 'எடிட்'டாக மட்டுமே இருக்கட்டும், பாவம்!

    ReplyDelete
  8. //எனக்கும் அதில் வருத்தமே ! ஆனால் மாடஸ்டி கதைகளுக்கு அத்தனை சீக்கிரம் மங்களம் பாடிடுவதாக நானில்லை ! உரிய நேரத்தில் மேற்கொண்டு பேசுவோம் (நம் ) இளவரசியைப் பற்றி !//

    அதிரடியான முழு நீளக் கதையை தாருங்கள் சார். அதுவரை அவர்களது சின்னச்சின்ன 'மினி' கதைகள் வேண்டவே வேண்டாம். அது அவர்கள்மீதான விருப்பைக் குறைத்துச்செல்கிறது. எனவே, 'மணந்தால் மகாதேவி...' என்ற எண்ணமே இருக்கட்டும்!

    ReplyDelete
  9. //லியர்ஸ் ஜெட்டில் ஏறி சுவிட்சர்லாந்திலிருந்து இரவு உணவுக்கு நியூயார்க் திரும்பும் லார்கோவை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு, ட்ரன்க் கால் போட்டுப் பேசி விட்டு, ரயில் டிக்கட் எடுத்து பாரிசுக்கு 4 மணி நேரம் 'லொடக் லொடக்' எனப் பயணிக்கும் ஜில் ஜோர்டானையும் அதே களத்தில் நிற்கச் செய்வது கொஞ்சம் கஷ்டமாகவே தோன்றுகிறது ! ஆனால் இது ஜோர்டானின் கதைகளைக் குறை சொல்லும் முயற்சியல்லவே ; அவற்றின் தரம் உலகறிந்ததே ! இங்கு நண்பர்களின் opinion எனக்கொரு தீர்மானமெடுக்க உதவும் ! What say guys ?//

    உண்மைதான், ஆனால் - தற்போதைய சன் ஷைன் லைப்ரரியில் ஜோர்டனுக்கு வாய்ப்பை கொடுக்கலாம். 6 போன்று, விரும்பியவர்கள் தேர்வுசெய்யும் வகையில் வெளியிடலாம். நிச்சயம் வரவேற்பு இருக்கும் (தப்பு கண்டுபிடித்துச் சாத்துவதற்கே இதழை வாங்குவார்கள் சார்.. நம்புங்கள்!)

    ReplyDelete
  10. இந்த முறை நானும் 10-க்குள்ள வந்துட்டேன்!

    ReplyDelete
  11. Sir what about all new special? Updates please...

    ReplyDelete
  12. //முதல் ரகம் இன்றைக்கு filler pages -க்குப் பிரயோஜனப்படுவதைத் தாண்டி அதிக பலனளிக்குமா தெரியவில்லை//

    முதலில் கலரில், திகில் கதைகள் ஃபில்லர் பக்கங்களாக வெளியிட்டு பரீட்சித்துப் பார்க்கலாமே? மதியில்லா மந்திரி, ஸ்டீல்பாடி ஆகியோருக்கு ஒரு மாற்றாக இருக்கும். லயன், முத்து, சன்ஷைன் லைப்ரரி - ஏதாவது ஒரு ப்ராண்டில் மட்டும் ஓரிரு புத்தகங்களில் முயற்சிக்கலாம். முழுநீள கதைகளுக்கு, டைலான் டாக் - பயன்படுவாரே? பதிப்பகத்தாரும் உங்களுக்கு அறிமுகமானவர்கள்தானே?

    ReplyDelete
    Replies
    1. Editor sir, I also recommend டைலான் டாக் stories. Please do consider

      Delete
  13. அட! கமெண்ட் நம்பர் 10... வாசகர் நம்பர் 2!

    ReplyDelete
  14. ///மாடஸ்டி கதைகளுக்கு அத்தனை சீக்கிரம் மங்களம் பாடிடுவதாக நானில்லை !///

    இந்த பதிவின் மிகச்சிறந்த கருத்தாக இதனை தேர்வு செய்யுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டு கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

    ReplyDelete
  15. Sir what about all new special? Updates please...

    ReplyDelete
  16. ==ஒரு சர்வதேச காமிக்ஸ் ஜாம்பவானின் ஆசியப் பிரதிநிதிகள் நம்மைத் தொடர்பு கொண்டார்கள் - அவர்களது படைப்புகளை நாம் தமிழில் வெளியிட ஆர்வமாய் இருப்போமா என்ற கேள்வியுடன் ! தொடர்பு கொண்ட நிறுவனத்தின் ஆற்றலும், ஆளுமையும் ; படைப்புகளும் அசாத்தியமானவை என்பதால் - பிரத்யேகமாய் ஒரு மாதாந்திரக் கார்ட்டூன் இதழ் ; ரூ.30 விலையில் என்ற பார்முலாவோடு==

    அடடா... மிகவும் வருத்தமளிக்கிறது சார்...

    ReplyDelete
  17. //இங்கு நண்பர்களின் opinion எனக்கொரு தீர்மானமெடுக்க உதவும் ! What say guys ?//
    ஜில் ஜோர்டனுக்கு என் vote-ஐ பதிவு செய்கிறேன்

    ReplyDelete
  18. //மாடஸ்டி கதைகளுக்கு அத்தனை சீக்கிரம் மங்களம் பாடிடுவதாக நானில்லை ! உரிய நேரத்தில் மேற்கொண்டு பேசுவோம் (நம் ) இளவரசியைப் பற்றி !//
    Good news. Somehow please make modesty to fit into our format.

    ReplyDelete
  19. ஹீ ஹீ ஹீ கருப்பு கிழவிக்கும் காலம் வரும்! கண்ணுங்களா ! நம்ம ஆசிரியரே சொல்லிட்டார்! மத்த மொக்கை பேய் கதைகள் மத்தியில ஆயாவை மதிச்சு இத்தனை வாய்ப்புக்களை கொடுத்து தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் மனதில் பாட்டி வடை சுட மட்டும் லாயக்கல்ல பேய் கதைகளை அள்ளி விடுவதிலும் கில்லாடிக் கிழவிதான் என்ற மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்து தமிழ் மண்ணில் நீங்கா இடம் பெற வாய்ப்பு தந்தமைக்கு நாலு மண்டை ஓடுகள், நாலு கால் எலும்புகள், நாலு நல்லி எலும்புகள் (பின்ன பஜ்ஜி கொடுக்க நான் சாதா ஆயாவா? ) சிவகாசி சிங்கங்களுக்கும் ரசிகப் பெருமக்கள் உங்களுக்கும் பார்சல் கட்டி கனவுலகில் அனுப்பி வைத்து கிளம்புறேன்! ஆனா ஒண்ணு "ஆவிகளுக்கு அழிவில்லை" வாங்க கண்ணுகளா பழகலாம் வழக்கம் போல! எதாச்சும் சுடுகாட்டு பக்கம் போனிங்கன்னா நம்மளை கூப்டுங்க கதை கதையா கொல்றேன் ஹீ ஹீ ஹீ சொல்றேன்! வரட்டா? அன்பு பேராண்டிகளா உங்க மனசுல மகிழ்ச்சியை மட்டும் ஏத்தி கவலைகளை மாத்தி நல்லா நாலு நண்பர்களை தேத்தி கஷ்டங்களை கடல்ல ஊத்தி ---என்னது? அய்யயோ ஆயா தத்துவ முத்துக்களை கொத்தி கூறு போடுராங்கடோய் ஓடிடுங்க ஆயா விரட்டி வருது வேகமாவா? ---ஆயா ஆல்வேஸ் ராக்ஸ்! விடுங்க சார் புது முயற்சிகள் மலர்ந்து மணம் வீசட்டும்! பழசா இருந்தாலும் ஆயாவை மறக்கவே மாட்டோம்! அப்பப்போ ரசிகர்களின் மனதில் மையம் கொல்வாள் ஹீ ஹீ ஹீ கொள்வாள் இந்த பழம் வாள்வீச்சு வார்த்தைக்காரி எங்கள் தங்க ஆயா! இவள் தயவில் என் பாட்டி திருமதி.தாயார் அமிர்தம் அவர்களின் நினைவுகளுக்கு பர்சனலாக இடம் கொடுத்திருக்கிறேன்! வாழ்க எங்கள் அன்பு கருப்பாயி!

    ReplyDelete
  20. Franco-Belgium காமிக்ஸ் TOP 10 வரிசையில் ஜில் ஜோர்டானும் ஒருவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மீண்டும் வாய்ப்பு கொடுத்துப்பார்க்கலாம் சார்...

    ReplyDelete
  21. Black & White கதை வரிசைகளில் மாடஸ்டி தவிர CID ராபின் மற்றும் மார்டின் கதைகளையும் முயற்சி செய்யலாமே...

    ReplyDelete
    Replies
    1. CID ராபின் மற்றும் மார்டின் கதைகள் மாடஸ்டி கதைகளை விட மாறுபட்ட கதை களம் தரவல்லது.ஆகவே தயவு செய்து அவைகளை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

      Delete
  22. வலை மன்னன் ஸ்பைடரின் பனி பிரபு கதையை ஸ்பைடரின் படங்கள் உள்ள இடத்தில் பேட் மேன் படத்தை ஓட்ட வைத்து ஒரு ஆங்கில இதழின் சில பக்கங்களை இணையத்தில் பார்த்தேன் .

    ரஜினியின் தில்லு முல்லுவில் சிவா நடித்ததை போல் அல்லாமல் ,ரஜினியின் பழைய தில்லு முள்ளு படத்தில் ரஜினியின் படத்தை நீக்கி சிவாவின் படத்தை ஓட்ட வைத்த கணக்காக மிக நேர்த்தியாக ஸ்பைடரை பேட் மேன் ஆக்கியுள்ளனர் .

    டார்ஜான் சினிமாவை வன ரேஞ்சர் ஜோ கதையாக உருமாற்ற தெரிந்த அயல் தேசத்து பதிப்பகங்களுக்கு இது போன்ற மோடி மஸ்தான் வேலைகள் சுலபம்தான் .

    பிரச்சனை என்னவெனில் ,
    காமிக்ஸை ரசிக்காமல் ,காமிக்ஸ் வியாபாரத்தின் மீது ஆர்வம் காட்டும் சிலரால் இது நேர் எதிர் கோணத்தில் புரிந்து கொள்ளப்படும் .

    ReplyDelete
    Replies
    1. Dear friend Meeran (and Facebook friends too.)

      Our editor has included that modified and reformatted original batman story to spider story in our century special. All the best spider stories over by that time, so our editor added that story, as a small compliment (supplementary)justification for the diehard spider fans. No one can accuse vijayan sir, for publishing that story..it was properly reformatted with the help of our artists those day. It won't raise any issue in dc comics also as the main character(batman) has been totally modified indifferent format, with different person and tone. It's not a copyright issue at all!

      And I know people will call me with a different for this reply, but I don't care, as I beleive a person did a right justification at that time.

      Ok, Come on what's going to be the next complaint to blame on our editor!

      Delete
    2. இது சுத்த பைத்தியக்காரத்தனமான பதிவாருக்கே!
      டிசி யோட பேட்மேன் கதைய ஸ்பைடர் கதையா உட்டாலக்கடி பண்ணா, அது காப்பிரைட் பிரச்சனை இல்லியா? சொம்பு தூக்கதான் வோணும். அதுக்காக இப்படியா?
      முழு டினோசரையே சொத்துல மறைக்க ட்ரை பண்றேளே? இதுக்கு ஆசிரியரே ஒரு முடிவ சொல்லட்டும். இப்படி முந்திரிகொட்ட மாதிரி கௌம்பவேணாம்...

      Delete
    3. மிஸ்டர் உதய்..!

      நீங்கள் பொதுவாக காட்சிக்கு வைத்த பல தொப்பிகளில், மண்வெட்டி பாண்டு ஒரு தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டது. இது சம்பந்தமாக தீர்க்க தரிசனத்தில் கண்ட ஒரு கதையை கூறுகிறேன் கேளுங்கள் :)

      வேறொரு இடத்தில் சண்டை வந்தபோது மண்வெட்டி இவ்வாறு கூறியது, மண்வெட்டியே மண்ணை கவ்வுது இதில் பாண்டுக்கு மணல் அள்ளனுமாம் மணல் ! ஹா ஹா ஹா, ஹோ ஹோ ஹோ என்று மண்வெட்டியால் துரத்தப்பட்ட பாண்டு, அன்றிலிருந்து வெரைட்டியாக அள்ளவேண்டும் என்று வெவரமே இல்லாமல் மாட்டு வெரட்டியை அல்ல ஆரம்பித்தது. என்ன கொடும பாண்டு இது..?

      DC - க்கும் பாண்டுக்கும் என்ன சம்பந்தம், ஏஜெண்ட் டா..? ஒருவேளை முந்திரிகொட்டையை அள்ள ஆரம்பித்து விட்டதா மண்வெட்டி பாண்டு..?!

      Delete
    4. பேட்மேன்? அல்லது ஸ்பைடர் மேன்? இது எங்களுக்கு தேவையில்லாத விஷயம். ஏனெனில் வாங்கி படித்து பல வருடங்கள் கடந்தோடி விட்டன, நாம் DC யின் ஏஜெண்ட் களும் அல்ல. தற்போது அது நம் பிரச்சனையும் அல்ல. நாம் இங்கு புதைப்பொருள் ஆராய்ச்சி செய்ய வரவில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து பதில் சொல்ல எடிட்டர் ஒன்றும் நம் வேலைக்காரர் அல்ல. நமக்குரிய எல்லை எதுவென்பது தெரியாதவரை , தெரியாத அனைவருமே மரமண்டைகள் தான்..!

      Delete
    5. Please don't bring the face book fight here.
      Particularly this problem about the comics that was released long long ago is a big deviation from the nice conversation that's going on here about this blog post (i.e. Q and A from the editor).

      If you want to convey some issue which is not related to the current post please send a personal email to the editor.

      Delete
    6. bond :-
      இணையத்தில் இருக்கும் சில பக்கங்களை வைத்து உங்களால் ஒரு சார்பு நிலை முடிவு எடுக்க முடியுமென்றால் ?, அதைப்போன்றே என்னாலும் வேறு விதமான முடிவு எடுக்க முடியுமென்பதை உணராமல் நீங்கள் மேலே இட்டிருக்கும் பின்னூட்டம் பைத்தியக்கரமானதா அல்லது என்னுடைய பின்னூட்டமா ?

      இவர்களிடம் காமிக்ஸ் விற்பதற்காக ஆசிரியர் ஒவ்வொரு முறையும் தீ குளிக்க வேண்டுமென்கிறார்களா ?

      பால்யத்திலிருந்து என்னுடன் இணைந்து இருக்கும் சக நண்பனுக்காக நான் சொம்பு தூக்குகின்றேன் ,ஆனால் தன் சதையை தானே உண்ணும் வெறுப்பினால் பிற மொழி பதிப்பகங்களுக்கு சொம்பு தூக்குபவர்களை என்ன வென்பது ?

      இங்கு என்ன நடந்தாலும் தட்டி கேட்பதில்லை என்கிறார்கள் , இங்கு என்ன கள்ள சாராயம் காச்சுகின்றார்களா ? அல்லது அரசியல் இயக்கம் நடத்துகின்றார்களா ?

      இந்த இந்தியன் தாத்தாக்கள் தங்கள் நிஜ வாழ்வில் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை தரிசிக்க மிகவும் ஆவலாக உள்ளது ?

      என் சக மனிதனிடம் நான் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன் , எனக்கு சந்தேகம் என்று ஒன்று ஏற்பட்டால் அது முதலில் எதிர்பக்கமே ஏற்படும் .

      Delete
    7. மீரான், உங்ளோட தவறான புரிதலுக்கு நான் காரணமாய்டேன்கற வருத்தத்தோட இத எழுதுறேன்.
      நான் மேலே பின்னூட்டம் போட்டது மிஸ்டர் udhay ஓட கமெண்ட்டுக்கு. அத நான் அங்கே மென்ஷன் பண்ணாம வுட்டது தப்புதான். நீங்க போட்டுருக்கறது அயல் நாட்டு பதிப்பகங்களோட வேலை பத்தி. நீங்க காப்பிரைட் பத்தி எதுவும் பேசலை.

      ஆனா, இப்படி ஆளை மாத்துறதுக்கு காப்பிரைட் சிக்கல் வராதுனு // t was properly reformatted with the help of our artists those day. It won't raise any issue in dc comics also as the main character(batman) has been totally modified indifferent format, with different person and tone. It's not a copyright issue at all! // சின்னபுள்ளதனமா எழுதுனதுக்கே நான் அப்டி எழுதவேண்டியதாபோச்சு.

      இதுல யாரும் சூடாகவேண்டியதில்ல. காப்பிரைட் பிரச்சனைய இந்த ஆள்மாத்து வேலை கொண்டுவராதுன்னா, நாளைக்கே டைகரோட நல்ல கதை கெடைக்கலன்னு டெக்ஸ் கதைல கேப்டன் டைகரை மாத்தி ஒட்டி பப்ளிஷ் பண்ணா, ஏத்துக்கலாமா? சொல்லுங்க ..டாடி... சொல்லுங்க...

      Delete
    8. இதுல இந்த கமெண்ட்ட இங்லிபீசுல வேற போட்டுருக்காரா, டிசி காரனுக்கு எவனாவது போட்டுகுடுத்தா, அவ்வளவுதான். அப்படி ஏதாவது ஆயிதான் இப்ப டிசி கதைகள் நம்ம காமிக்ஸ்ல வர்றதில்லையோனு ஒரு டவுட்டு... சொல்லுங்க டாடி சொல்லுங்க.....

      Delete
    9. My comment give no harm to anyone.

      People know who wanted to broadcast this as a BBBBBIIIIIIIIIIIIGGGGGGGGG problem as already done something very harm to our comics in facebook. (MR.BOND,why you are portraiting me as a problem maker? It is the unveiled truth, 'their' intension is to hurt Mr.Vijayan at any cost. Very well wisher of this blog know whats happening in facebook. (Only few friends like Karthikeyean maintaining their nuetrality wherever they are!)

      I will stand for issue as I beleive i have the sufficient experience in advertising and media.
      I shared my knowledge to my friends. Will write detail about this in my blog...

      Delete
  23. ஜில் ஜோர்டான் அவ்வளவாக என்னை கவரவில்லை .

    ReplyDelete
  24. விஜயன் சார், ஜில் ஜோர்டான்:- My favorite! Looking for more stories of him!

    ReplyDelete
  25. Dear Vijayan Sir,

    What about MINNUM MARANAM color re-print ?

    I hope our friend Erode Vijay asked this question also.

    We hope, you will announce some good news about MINNUM MARANAM soon :)

    Happy Sunday !!!!

    Regards
    Tirupur Bluberry (A) Nagarajan

    ReplyDelete
  26. விஜயன் சார், இன்றைய machine வாழ்க்கை-ல் மாட்டிக்கொண்டுள்ள எனக்கு/நமது நண்பர்கள் பலருக்கு நமது காமிக்ஸ்தான் இன்றும் சந்தோஷம் தருகிறது; மேலும் கடந்த கால சந்தோஷ தருணம்களை மீட்டு கொடுக்கிறது. வரும் காலம்களில் (காமிக்ஸ் அல்லா) வாசகர்கள் மற்றும் புத்தக பதிப்பாளர்கள் அனைவரும் இதனை புரிந்து "காமிக்ஸ் தான் உலகம்" என்று கொண்டாடும் தருணம் விரைவில் வரும் என உறுதியுடன் நம்புகிறேன்.

    ReplyDelete
  27. சார்,
    முழுக்கமுழுக்க வண்ணத்தில் வரும் நம் கதைகளுக்கு விடைகொடுத்து வரும் 'தீபாவளி' மலரை முழுக்கமுழுக்க கருப்பு/வெள்ளையில் (கதைகளைப்) போட்டுத் தாக்கினாலென்ன?

    மாடஸ்டி (நாங்களும் விடமாட்டோம்ல), மார்டின், C I D ராபின் (இவர்களை ரேடாரில் வைக்க எப்படியெல்லாம் சீன் போடவேண்டியிருக்கு?, முடியல) மூவரையும் இணைத்து Rs.100/- ல் / 500 பக்கங்களில் அசத்தலான ஸ்பெஷல் சாத்தியம்தானே..?

    விரல்விட்டு எண்ணக்கூடிய நம்மிடமுள்ள கார்டூன் நாயகர்களில் எல்லோருக்கும் வாய்ப்பு தராமல் ட்ரன்க் கால் போட்டுப் பேசுறாரு? train ல நாலு நாள் போறாருன்னு இப்படியே ஆளை ஒதுக்கினால் என்னைப் போன்ற பழமைவாதியெல்லாம் இந்த மாதிரி கதைகளை எப்படி ரசிக்கிறது? சின்னப் பையன் பார்த்து எதாவது வாய்ப்புக் கொடுங்களேன்? ஜோர்டான் வாழ்வான்!

    ReplyDelete
  28. Editor sir please tell abt minnum maranam jumbo spl

    ReplyDelete
  29. //... முன்கூட்டியே பணம் செலுத்திப் புத்தகம் வாங்கிடும் முகவர்கள்/விற்பனையாளர்களின் எண்ணிக்கையிலும் ஏற்றம் கண்டிருக்கிறோமா?
    Yes :-) ..// மிக நல்ல செய்தி

    //... மாடஸ்டி கதைகளுக்கு அத்தனை சீக்கிரம் மங்களம் பாடிடுவதாக நானில்லை ! ..// Great News

    சென்சார் பற்றிய விளக்கம் அருமை ... Hope you will maintain the same..

    // ... Arizona Love நிச்சயம் வெளியாகும் ; ஆனால் 2014-ல் அல்ல ! ..// அப்ப 2013 லேயே வெளியாகுமா? :)


    // கிட் ஆர்ட்டின்-ஷெரீப் ஜோடிக்கு அதிக வாய்ப்பளிக்கப்படுமா? .... நிச்சயம் 2014-ன் காலெண்டரில் இவர்களுக்கு ஒரு நல்ல இடமுண்டு ! ..// Again Great news!

    ReplyDelete
  30. டியர் எடிட்டர்,

    சற்றே மசமசவென்றிருந்த சில விசயங்களை உங்களது விளக்கமான பதில்கள் தெளிவுபடுத்தியிருக்கிறது. நன்றிகள் பல!

    அதே சமயம், இரண்டு முக்கிய கேள்விகளுக்கு உங்கள் பதில் இல்லாததால் இப்பதிவு இன்னும் நிறைவடையாமல் இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    (1) நண்பர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 'மின்னும் மரணம் ஜம்போ ஸ்பெஷல்' பற்றிய (அடுத்த வருடம்தான், அடுத்த வருடம்தான்) அறிவிப்பு...

    (2) அடுத்தவருடக் காமிக் விருந்துக்கான 'மெனு' ரெடி என்று நீங்கள் சென்ற பதிவிலேயே அறிவித்திருப்பதால், அதில் முக்கிய ஐட்டமான 'லயன் 30வது ஆண்டுமலருக்கான' ஐடியாவும் ஏறத்தாழ உருவாகிவிட்டதை மறைமுகமாக உணர்த்துகிறதே? அதைப்பற்றி ஓரிரு வரிகளிலாவது கோடிட்டுக் காட்டலாமே, ப்ளீஸ்?

    ReplyDelete
    Replies
    1. மற்ற பத்திரிக்கைகளில் தொடர் விளம்பரம் செய்து பழைய வாசகர்களை மீட்டெடுக்கும் முயற்சி பெரு வெற்றியடையவும், பல புதிய வாசகர்கள் நம் காமிக்ஸ் குடும்பத்தில் இணையவும் இவ்வுலகின் எல்லா சக்திகளையும் வேண்டிக்கொள்கிறேன்.

      Delete
    2. Please tell something about minnum maranam colour reprint sirji....

      Delete
  31. ஜில் ஜோர்டானுக்காக இல்லையென்றாலும், 'எகத்தாளமான' அவருடைய உதவியாளருக்காகவாவது நானும் ஆதரவு தெரிவிக்கிறேன்! :)

    ReplyDelete
  32. இப்பதிவைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி Radja அவர்களே!

    ReplyDelete
  33. // Cinebooks போன்றதொரு ஜாம்பவானுக்கே இந்தக் கட்டுப்பாடுகள் apply ஆகுமெனும் போது, சிவகாசியில் குந்தி இருக்கும் இந்த "ஸ்பைடர் மண்டையனுக்கு" மட்டும் விதிவிலக்கு கிட்டுமா என்ன?//

    Ha ha ha :-)

    ReplyDelete
  34. @ friends :

    "மின்னும் மரணம் " பற்றி துரிதமாய் ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கும் உங்கள் ஆவல் எனக்குப் புரியாமல் இல்லை ! ஆனால் ரூ.500 விலையில் ஒரு இதழை பிளான் பண்ணுவதோ ; செயலாக்குவதோ அத்தனை சுலபம் அல்லவே !

    அடுத்தாண்டு தானே - அறிவிப்பதில் என்ன கஷ்டமிருக்குமென்று எண்ணத் தோன்றலாம் ; ஆனால் - என்றைக்காக இருப்பினும், அதன் சுமையை உணரப் போவது எனது முதுகே எனும் போது ஏராளமான விஷயங்களை நான் கணக்கில் கொள்ளல் அவசியம்.

    10 நாட்களுக்கு முன்பாக வரை அமெரிக்க டாலரின் மதிப்பு தோராயமாய் ரூ.52 ! ஆனால் இன்றோ ரூ.60 க்கு கொஞ்சம் குறைவு ! நாம் உபயோகிக்கும் ஆர்ட் பேப்பர் முழுவதுமே இறக்குமதி செய்யப்படும் ரகம் என்பதால் டாலரின் இந்த படீர் ; திடீர் உயர்வுகள் தொடரும் மாதம் முதல் கொள்முதல்களின் போது நம் குறுக்கைப் பதம் பார்க்கப் போவது உறுதி ! 'வெளி நாட்டு ஆர்ட் பேப்பர் யார் கேட்டது ? உள்நாட்டிலேயே வாங்கலாமே ? ' என உடனே முன்னெழும் கேள்விக்கும் பதில் சுலபமே ! உயர் ரக ஆர்ட் பேப்பர் தயாரிப்புக்கான மூலப் பொருட்களும் இறக்குமதியாகும் அவசியம் நம் நாட்டுக்கு உள்ளதால், டாலரின் விலையேற்றம் இங்கு தயாராகும் சரக்குகளின் விலைகளையும் விட்டு வைப்பதில்லை !

    அப்புறம் நமது கதைகளுக்கான ராயல்டி கட்டணங்கள் அனைத்தும் செலுத்தப்படுவது யூரோக்களிலும் ; டாலர்களிலும் எனும் போது தலைநோவு அதிகரிப்பின் தன்மை புரியும் உங்களுக்கு ! 10 நாட்களுக்குள்ளேயே சந்தையில் இத்தனை விஷயங்கள் திடு திடுப்பென மாறிடும் போது, தோராயமாய் 400 நாட்களுக்கு அப்பால் உள்ளதொரு சூழலை நான் வெற்றிகரமாய் ; சரியாய்க் கணித்து இன்றே ஓர் mega அறிவிப்பை வெளியிடல் எத்தனை தூரத்துக்கு நடைமுறை சாத்தியம் கொண்டதாக இருந்திட முடியும் ?

    தவிர 'லயனின் 30-வது ஆண்டுமலர் ; NBS போன்றதொரு மெகா இதழ்' என்றெல்லாம் நாம் கதைத்து வரும் வேளையினில் - ஒரு மறுபதிப்பு மெகா பளுவையும் சுமப்பது சூப்பர்மேனுக்கே சவால் விடும் முயற்சியாகாதா ?
    ஒரு பேச்சுக்கு லயன் 30-வது ஆண்டுமலரின் விலை ரூ.500 என்றே வைத்துக் கொண்டு, மின்னும் மரணத்தையும் அதே ஆண்டில் இன்னொரு ரூ.500 விலையில் திட்டமிட்டால் - இந்த இரு இதழ்களுக்காக மட்டுமே 2014-ல் நாம் தயார் செய்திட வேண்டிய முதலீடு கால் கோடியைத் தாண்டி விடும் !! இது தவிர மாமூலான மாதாந்திர இதழ்கள் ; +6 இத்யாதி ! எழுதிப் பார்க்கும் போதே கிறுகிறுப்பைக் கொணரும் இந்த முயற்சியை - செயலாக்கிப் பார்ப்பது mission impossible !

    'முன்பதிவைக் கொண்டு வாருங்கள் - உங்களின் முதலீட்டுச் சுமை குறையுமே ' என்ற உங்களின் mind voice எனக்கும் கேட்காதில்லை ! ஆனால் எத்தனை சுறுசுறுப்பாய் முன்பதிவுகள் நடந்தேறினாலும் இந்த விலைகளில், ஒவ்வொரு மெகா இதழுக்கும் 750 புக்க்கிங்குகள் கிட்டினாலே அது உச்ச பட்சம் ! 2500 இதழ்களாவது தயாரித்து விற்பனையும் செய்தாலன்றி இந்த project சாத்தியமாகாது என்பதும் நீங்கள் அறிந்தது தானே ?

    நம்புங்கள் நண்பர்களே - தமிழ் காமிக்ஸ் மார்கெட்டும் சரி ; நாமும் சரி - இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிரம்பக் காத்துள்ளது ! 'ஆகாயக் கோட்டைகள்' நம் இதழ்களின் பெயர்களாக அமையும் போது சிரமம் ஏதுமில்லை ; ஆனால் அவற்றை நிஜமாய் கட்டிப் பார்க்க முனைந்தால், கொத்தனார்களுக்குப் பதிலாக supermen அவசியமென்பது புலனாகும் !

    Sorry to sound dismal guys, but let's take one step at a time...!

    ReplyDelete
    Replies
    1. // ... ஒரு பேச்சுக்கு லயன் 30-வது ஆண்டுமலரின் விலை ரூ.500 ...//

      பேச்சுக்கா?

      Actually, நான் 30-வது ஆண்டு மலர் குறைந்தது ரூ.500 என்று நினைத்துக்/எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். அது ரூ.500 தான் என்று கோடிட்டுக் காட்டியதற்கு நன்றி!

      அதற்கு முன்பதிவு எப்போது தொடங்குகிறது என்பதை விரைவில் அறிவிக்கவும் :)

      Delete
    2. //நம்புங்கள் நண்பர்களே - தமிழ் காமிக்ஸ் மார்கெட்டும் சரி ; நாமும் சரி - இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிரம்பக் காத்துள்ளது! 'ஆகாயக் கோட்டைகள்' நம் இதழ்களின் பெயர்களாக அமையும் போது சிரமம் ஏதுமில்லை ; ஆனால் அவற்றை நிஜமாய் கட்டிப் பார்க்க முனைந்தால், கொத்தனார்களுக்குப் பதிலாக supermen அவசியமென்பது புலனாகும்!//

      Easily understandable!

      It would be nice if we can see more number of sweet surprises like "Nilavoliyil Oru Narabali" (Full color + low price). I think this kind of attempts will open door for new readers (who considers cost) without much financial risks. :)

      Delete
    3. நடைமுறைச் சிக்கல்களில் பொருளாதாரம் பெரும்பங்கு வகித்திடும்போது, மின்னும் மரணத்திற்காகவும், லயன் 30வது ஆண்டுமலருக்காகவும் நீங்களே அறிவிக்கும் காலம் கனியும்வரை நாங்களும் காத்திருப்போம்!

      Delete
    4. Why can't Lion-30 be Minnum Maranam?

      Delete
    5. நமக்கு தான் ''மின்னும் மரணம்'' .....
      காமிக்ஸ் ஆசானுக்கு ''பிண்ணும்'' மரணம்.

      Delete
    6. // நடைமுறைச் சிக்கல்களில் பொருளாதாரம் பெரும்பங்கு வகித்திடும்போது, மின்னும் மரணத்திற்காகவும், லயன் 30வது ஆண்டுமலருக்காகவும் நீங்களே அறிவிக்கும் காலம் கனியும்வரை நாங்களும் காத்திருப்போம்!//
      ஆனால் "சிங்கத்தின் சிறுவயதில்" தொகுப்பு வெளியிடவாவது முயற்சி எடுக்கலாமே சார்?

      Delete
    7. திரு விஜயன் சார்,

      உங்களது நடை முறை சிக்கல்கள் புரிகிறது சார், மின்னும் மரணத்திற்காக காத்திருக்க நாங்கள் தயார்.

      மின்னும் மரணம் வெளியிட வேறு ஏதேனும் மார்க்கம் உள்ளதா என்பதையும் தாங்கள் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

      ஒரு பேச்சுக்கு என்பது வேணாம் சார், 30 ஆவது லயன் ஆண்டு மலரை 500 விலையில் தாரளமாக நீங்கள் வெளியிடலாம்.

      திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

      Delete
    8. // but let's take one step at a time...! //

      Yes Sir, I agree ... Smooth riding is better than speed racing ...

      But I request you to keep MINNUM MARANAM (project) in your pipeline ...

      Hope to expect your announcements soon (in 'x' months / 'x' years)

      :)


      Thanks
      Tiruppur Blueberry (A) Nagarajan

      Delete
    9. // Hope to expect your announcements soon (in 'x' months / 'x' years) // I agree with you, Nagarajan.

      Delete
    10. What ever it may be,we are always with you sir.Thanks a lot for a practical clarification...

      Delete
  35. டியர் எடிட்டர் சார்,
    பிரான்ஸ் இலும் நமது காமிக்ஸ் இனை விநியோகம் செய்யும் முகவராக விரும்புகிறேன் . இதன் மூலம் நமது வாசகர் வட்டத்தை இங்கும் பெருக்க ஆவல் . இதற்கு ஆலோசனை கூறுவீர்களா ?

    ReplyDelete
  36. Dear sir,
    thanks for all the replies to our (erode vijay) questions.

    It was so sad, that global comics publication didn't consider your experience. When they want to have a stand in Indian market, they shouldn't think about the initial numbers. Oneday it will possible for us publishing a children monthly magazine. ( one generation missed this beautiful comics habit already). We hope for the better future.

    ReplyDelete
  37. And this is my personal opinion, this blog has lost best of its regular subscribers from the beginning, I wish this shouldn't continue. Lets respect and encourage each other instead of making unhealthy arguments. We may differ in opinion, but we are all one in the passion for comics. All are human beings, pleeeeaaaaaaassssssseeeeee don't use abusive language to scold others. They are all the members of this comics family. Our comics character won't come and talk to you, but our friends do. I found only this comics friends are more sweet to stay in touch and they are one minded like us.

    Also post ur comments with your original email id. You may have your nickname, but don't hide your identity. If you don't trust us, how you expect people to show respect to you. As for me the nameless letter without identity fully eligible to go the dustbin. If you post any goodthought also, without the author name, we could not listen as you are a faceless.You will not be considered as one amongst us. I don't want to hurt anyone, if the cap suits, take it.

    ReplyDelete
  38. ஹும்ம்ம்....யோசிக்க வேண்டிய விஷயம்தான் தலைவா....வந்து....ம்ம்ம்....'மின்னும் மரணத்திற்கும் மரணம் வந்துவிட்டதே....ஊம்ம்ம்.....ம்ம்ம்ம்.....சர்ர்ர்ர்ர்ர்ர் (அழுது மூக்கை சிந்துகிறேனாக்கும்) யாராவது ஆறுதல் சொல்ல வாங்கப்பா....ம்ம்ம்ம்ம்ம் ......

    ReplyDelete
    Replies
    1. இந்தாங்க பறக்கும் கம்பளம் ............நான் கர்ச்சீப் வச்சுகறது இல்லை.

      Delete
    2. நல்லவேளை அரிசி மூட்டை சாக்கை கொடுக்காமல் போனாரு நம்ம மதியில்லா மந்திரி.....ஆமா பறக்கும் கம்பளம் எதுக்கு ?....ஒ ஒ ஒ ....அப்படியே கபால்ன்னு கம்பளத்தில் தள்ளி பறக்கவிடலம்ன்னு ஐடியாவா....நான்தான் சூப்பர் மேனாச்சே திரும்பவும் அட்ராசக்க அட்ராசக்கன்னு பறந்து வந்துடுவேனே ......

      Delete
    3. சூப்பர் அண்ணே ...!கம்பளம் பெருசு..............தடிமன் ஜாஸ்தி ...ரொம்ப நேரம் அழலாம்........துடச்சுக்கலாம் ........அழலாம்........துடச்சுக்கலாம் .................அழலாம்........துடச்சுக்கலாம் ........

      Delete
  39. அழாதீங்க ரவிகிருஷ்ணன்! கண்ணீரைத் துடைச்சுக்கோங்க! யாருக்கும் தெரியாம அழ கக்துக்கங்க (என்னைமாதிரியே); நாமெல்லாம் வளர்ந்துட்டோமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஹேய்....உண்மை வந்துவிட்டது விஜயிடமிருந்து ......ஆனால் எதற்கு அழுகிறீர்கள் என்று சொல்லவில்லையே ஹும்ம் ....பரவாயில்லை...பார்த்தீர்களா விஜய் இந்த மரமண்டையை! வருடத்திற்க்கு "மின்னும் மரணம்" 2 பாகம் என்றால் 5 வருடம் காத்திருப்பதற்கு வழி சொல்கிறார் இது அதவிட கொடுமை......பூவ் ....விசுக் ....விசுக் ......(டால்டன் சகோதரர்கள் போல் கீழே கமுந்து படுத்துக்கொண்டு நிலத்தை இரண்டு கைகளாலும் மாறி மாறி குத்திக்கொண்டு அழுகிறேன்)......பூவ்வ் ......

      Delete
  40. //ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதோடு அதில் புலமை வந்திடாது என்பதில் ரகசியம் ஏதும் இல்லையே! தொடர்ச்சியாய் அதனில் உரையாடுவது ;அம்மொழியினில் நிறையப் படிப்பது என்பன அத்தியாவசியமன்றோ?//
    -சத்தியமான வார்த்தைகள்.

    //எழுதுவது என்பதொரு intense task ! அயர்ச்சி ஆட்கொள்ள அனுமதிக்காமல் தொடர்ச்சியாய் பேனா பிடிப்பதும் எத்தனை சிரமம் என்பதை எங்களது மொழியாக்க ஸ்கிரிப்ட்களைப் பார்த்தால் புலனாகும்!//
    -மறுபடியும் அதே.

    //அவன் பாதை எதுவென்பதை அவனே தீர்மானிக்கட்டுமே ? 'இதைச் செய் - அதைச் செய் ' என ஒரு போதும் என் தந்தை என்னை நிர்பந்தித்ததில்லை ! அந்நாட்களிலேயே எனக்கே சாத்தியமான சுதந்திரம் இன்றைய தலைமுறைக்கு சுவாசத்தைப் போல் அத்தியாவசியமாகும் அல்லவா?//
    -மறுபடியும் மறுபடியும் ச.வா.

    //அமானுஷ்யக் கதை வரிசைகளில் இரு வெவ்வேறு பாணிகள் உள்ளன ! ஒன்று : நமது முந்தைய கறுப்புக் கிழவி ரக சிறுகதைகள் கொண்ட 4-6 பக்கத் தொகுப்புகள் ; மற்றொன்று - அமானுஷ்யக் கதை ரசிகர்களுக்கென உருவாக்கப்பட்ட hardcore த்ரில்லர்கள் ! இரத்தக் காட்டேரிகள் ; ட்ராகுலாக்கள் ; பிணம் தின்னிகள் ; zombies என்று கதை முழுக்க இவர்கள் (இவைகள் ??) உலவுவது இந்த வரிசையில் சகஜம் ! இரண்டாம் ரகம் நிச்சயமாய் ஒரு no - no!//

    -hardcore த்ரில்லர்களுக்கு ஒரு no - no என ஏன் இந்த ஓர வஞ்சனை? பயந்து பயந்து படிப்பதின் அலாதி இன்பமது... பீட்சா டைப் படங்களும் இங்கு ஹிட் அடிக்கத்தானே செய்கின்றன... முதல் மற்றும் இரண்டாம் ரக புத்தகங்களையும் நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்...

    ReplyDelete
  41. //////////நானே நினைத்தால் கூட கண்ட இடத்தில் கத்திரி போடுவதென்பது எனக்கும் சாத்தியமல்ல !//////////////
    பரவாயில்ல ஆசான்......... நான் அந்த மாதிரி படங்கள் வரும் போது துணி வச்சு கண்ணை கட்டி கொண்டு படிக்க பழகி கொள்ளகிறேன்..........

    ReplyDelete
  42. மின்னும் மரணம் B&Wல், ரத்தபடலம் jumbo special style போல வெளியிட முயற்சிக்கலாமே!

    ReplyDelete
  43. பதில்கள் முடிவதில்லை !

    1. வரவு எட்டணா செலவு பத்தணா என்பதை போல வரவுக்கு மிஞ்சிய செலவினத்தை விளம்பரங்கள் நமக்கு ஏற்படுத்தும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விளம்பரங்கள் மூலம் வரும்காலத்தில் வெகுவிரைவாக நம் சந்தா எண்ணம் 2000 எண்ணிக்கையை தாண்டி விடும் என்பதால் விளம்பரங்களை முழு மனதாக வரவேற்கிறேன்..!

    2. சிறுவர்களுக்கான சிறப்பு இதழ் சாத்தியமில்லை என்ற தங்களின் உறுதியான முடிவை வரவேற்கிறேன். ஏனெனில் நாம் தற்போது நிற்பது 108 வது படியில். மீண்டும் இதுபோன்ற புது முயற்சி என்பது மேலிருந்து கீழிறங்கி மறுபடியும் முதல் படியிலிருந்து மேலே ஏறுவதை போன்றது..!

    3. //எனவே ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள். சன்ஷைன் லைப்ரரி - வண்ண மறுபதிப்புகள் : ரூ.100 வரிசையில் வருடத்திற்கு ஒன்றாக டைகர் ஸ்பெஷல் - 2,3,4,5 என இரும்புக்கை எத்தன்-பரலோகப் பாதை! போல் எங்களுக்கு அளிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படியாவது தாங்கள் எங்களின் மின்னும் மரணம் மறுபதிப்பு ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும்//

    4. //பெங்களூரு, சென்னை ஆகிய இரண்டு பெருநகரங்களையும் இனி தவிர்த்து விட்டு(செலவு மிக அதிகம்), தமிழ்நாட்டின் ஏனைய ஊர்களில் நடைப்பெறக்கூடிய புத்தகக் கண்காட்சியில் நாம் எவருடனாவது ஸ்டால் ஐ பகிர்ந்துக் கொண்டோ அல்லது அவர்களுக்கு ஏஜென்ட் கமிஷன் கொடுத்தோ நம் புத்தககங்களையும், நம் பேனர்களையும் ஒரு பக்கமாக வைத்தால், நமக்கு மிகப்பெரிய விளம்பரமாக அமையும் அல்லவா..? சுத்துபத்து பதினெட்டு பட்டியிலும் விஷயம் தெரியாவிட்டாலும், அந்நகரத்திலும், அதை சுற்றியுள்ள சிறு ஊர்களில் இருக்கும் நம் பழைய வாசகர்களுக்கு நம் காமிக்ஸ் ன் இரண்டாவது இன்னிங்க்ஸ் பற்றிய ஞானமும், புதிய வெளியீடுகளை பற்றிய விவரமும் வாய்வழி பிரச்சாரமாகவாவது தெரியவரும் வாய்ப்பு இருக்கும் என்றே நினைக்கிறேன்//

    5. LAND MARK உடன் நாம் முதலில் செய்துக்கொண்ட ஒப்பந்தம் கூட காரணமாக இருக்கலாம் அல்லவா..? எனவே அடுத்த முறை PAYMENT SETTLEMENT மினிமம் 60 நாட்கள் எனவும், இல்லையெனில் தற்காலிகமாக SUPPLY நிறுத்திக் கொள்வது போன்ற ஒப்பந்த சரத்துகள் மிக நன்மை பயப்பதாக அமையும் அல்லவா..?

    6. நமக்கு காலம் கனிந்து வரும்போது நாம் வளைத்தால் வலிய இரும்பும் நமக்கு வளைந்து கொடுக்கும் தானே..?

    ReplyDelete
  44. பதில்கள் முடிவதில்லை !

    ஆசிரியர் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி ! சில சமயங்களில் தங்களின் சுயமரியாதையை களங்கப்படுத்தி, உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி மிகவும் காட்டமாகவும், தரக்குறைவாகவும், வீண் பழி சுமத்தியும் வரும் பதிவுகள் தங்களை நிச்சயமாக காயப்படுத்தியிருக்கும். உதாரணத்திற்கு வெகுசமிபமாய் இங்கு பதிவிடப்பட்ட நவீன வள்ளுவன், வாசகர் வாய்ஸ், சுந்தரமூர்த்தி போன்றவர்களின் பதிவுகள்...

    இது போன்ற முகம் தெரியாத பதிவுகள் வரும்போது "நாங்கள்" அனைவரும், கிடைத்த வலையில் பதுங்கிக் கொள்ளும் கடல் நண்டுகளைப் போல் பதுங்கி விடுகிறோம். ஏனெனில் 'எங்களின்' சுயமரியாதைக்கும், நற்பெயருக்கும் சிறிதும் களங்கம் வந்து விடக் கூடாது என்பது மட்டுமல்ல, நாங்கள் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்கின்ற தீராத ஆசையும் கூட..!?

    முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல் யாராவது அந்த முகம் தெரியாத நபரின் எழுத்து நடை அல்லது அவரின் கருத்துகளுக்கு ஏற்ப கார்பன் காப்பி போல் பதிவிட்டால் அவர் இங்கு ஒரு குழப்பவாதி என்கின்ற முத்திரை குத்தப் படுகின்றனர்..? ஏனெனில் 'எங்களுக்கு' அவ்வளவு பயம், எங்கே எங்களுடைய நல்லவன் என்ற பெயருக்கும், நடுநிலைவாதி என்கின்ற ஸ்தானத்திற்கும் களங்கம் வந்து விடுமோ என்று..! ஏனெனில் எந்த இடமாக இருந்தாலும் விழுகின்ற மாலையும் கிடைக்கின்ற முதல் மரியாதையும் 'எங்களுக்கு' மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற என்றும் வீழாத எங்களின் எண்ணங்கள்..!

    இந்நிலையில் நீங்கள் எப்பொழுதாவது இதை நினைத்து வருந்தியதுண்டா..?

    நடப்பு ஆண்டு 2013 ல் தாங்கள் எங்களை போன்ற வாசகர்களுக்காவே புதிய கதைகளை தேடித்தேடி பிடித்து, சிரமப்பட்டு, "எங்களுக்காக" இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கும் உங்களின் ஆர்வம் தற்போது குறைந்துள்ளதா..?

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மரமண்டை : இங்கு பகைமை பாராட்டும் அளவுக்கு ; மனதில் துவேஷத்தைக் கொணர நமக்குள்ளே சொத்துப் பிரச்சனைகளோ ; வாய்க்கால் வரப்புத் தகராறுகளோ கிடையாது தானே ? 'கலாய்த்தல்' ; 'காரசாரமான விமர்சனங்கள் ' எனும் கலைகள் (!!) இன்றைய சமூக வலைத்தளங்களின் பிரிக்க இயலா அங்கங்கள் என்றான பின்னே, இவற்றை எண்ணி தூக்கத்தைத் தொலைப்பதில் பெரியதொரு பிரயோஜனம் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை ! So அவசியங்களுக்கு அப்பாற்பட்ட மாற்றுக் கருத்துக்களுக்கு நான் ஒருப் போதும் பெரிதாய் சிந்தனையைச் செலவு செய்வதில்லை !

      எழுத்தென்பது ஆண்டவன் தந்த வரம் ; அதனை பிரியமானதொரு துறையில் செயல்படுத்தக் கிடைத்த வாய்ப்பும் அரியதே ! அவசியமற்ற ஆராய்ச்சிகளில் நான் இறங்கிடும் பட்சத்தில், கிடைத்த சந்தோஷங்களைக் கொண்டாடத் தவறிய முட்டாள் ஆவேன் ! எனது பார்வை பயணத்தின் பாதையினில் தான் - எப்போதும் போலவே !

      Delete
    2. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, தங்களின் பதிலில் கூறப்பட்டுள்ள கருத்துகள் எனக்கு மிகுந்த மன திருப்தியை அளித்து விட்டது. என் சந்தோஷத்தை அளவிட்டு கூறவேண்டுமானால் கீழ்வருமாறு கூறுவதே அந்த அளவின் சரியான அளவுகோலாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!

      *இரத்தப் படலம் இரண்டிரண்டு கதைகளாய் வண்ண மறுபதிப்பு விலை 200/- 10 புத்தகங்கள்.!
      *மின்னும் மரணம் இரண்டிரண்டு கதைகளாய் வண்ண மறுபதிப்பு விலை 200/- 5 புத்தகங்கள்.!

      ஒருங்கே கூரியர் பார்சல் மூலம் கிடைத்ததை போன்ற அளவில்லாத ஆனந்தத்தை ஏற்படுத்தி விட்டது. பிரிண்ட் ON DEMAND எனும் வசதி நமக்கும் ஓர்நாள் வாய்க்கும் போது அதன் நம்பர் 1 வாசகனாய் நான் இருந்திடுவேன்..!

      அதுவரை கனவுகளை தலையணையாகவும், கற்பனைகளை போர்வையாகவும், நினைவுகளை எதிர்காலமாகவும், சின்ன சின்ன சந்தோஷங்களை தூக்கமாகவும் கொண்டு ஒவ்வொரு விடியலையும் எதிர்நோக்கி காத்திருப்பேன்..!!

      Delete
  45. அயல்நாட்டில் இருந்தாலும், எங்களுக்கு சிறிதும் குறையாத காமிக்ஸ் ஆர்வத்திலும், எமது ஆசிரியர் மீது அளவில்லாத மதிப்பும், மரியாதையும் கொண்டிருக்கும் Radja from France அவர்கள், புதிய பதிவை உடனே தெரியப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!

    மிஸ்டர் ஸ்டீல், நீங்கள் இதுவரை பதிவு எதையும் இடவில்லை. என்ன காரணம்? ஊரில் இல்லையா அல்லது உடம்பு ஏதும் சரியில்லையா ? உங்களை போன்ற நண்பர்களின் ஆதரவே இந்த வலைத்தளத்தின் பலம் என்பதை இங்கு சொல்லவும் வேண்டுமோ..?!

    ReplyDelete
  46. உண்மையாகவே, ஈரோடு விஜய், கேள்வியின் நாயகன் தான். நல்ல கேள்விகள். பதில்கள் வழக்கம் போல சமாளிப்பு ரகம் தான்.udhay அந்த பேட்மேன், ஸ்பைடர் குழப்பத்திற்கு நல்ல பதில் கூறியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் அதைப் பற்றி கிடா வெட்டு நடந்து கொண்டிக்கிறது.

    ReplyDelete
  47. லயன் 30 வது ஆண்டு மலர் - மின்னும் மரணம் மெகா ஸ்பெஷல் ரெண்டும் வேற வேறயா.......? நான் ரெண்டும் ஒன்னுன்னுல்ல நெனச்சுக்கிட்டிருக்கேன்..... தலைக்கு ஒரு சீப்பு ...தாடிக்கு ஒரு சீப்பா? நமது முப்பதாம் ஆண்டு விழாவைக்கொண்டாட ''மின்னும் மரணத்தை '' [ தலைப்பு ஆன்டி செண்டிமென்ட்டா இருந்தா , புயல் தேடிய புதையல்னு மாத்திக்கிட்டாப்போச்சு......] விட வேறு கதை வேண்டுமா என்ன? பொங்கி எழுங்கள் நண்பர்களே........


    அப்புறம் சார்.....திருப்பூரில் ஆண்டுதோறும் ஜனவரிமாதம் நடைபெறும் புத்தக்கக்கண்காட்சியில் நாம் பங்கேற்கலாமே?[அதை ஒரு சாக்கா வச்சு உங்களயும் இதர நண்பர்களையும் சந்திக்கலாமே? ]

    ReplyDelete
  48. Fleetway publications, Vulcan publications படைப்புக்களை நாம் மறந்து விட்ட காரணம் என்ன? மீண்டும் இவர்கள் படைப்புகளை நாம் பயன்படுத்தி கொண்டால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : மறுபடியுமா ? முதல்லே இருந்தா ?

      Delete
    2. இப்பதிப்பகங்களில் இருந்து புதிய படைப்புகள் எதுவும் வருவதில்லையா?

      Delete
  49. WOWWW! LION 30TH YEAR SPECIAL IS GOING TO ROCK NEXT YEAR WITH THE PRICE OF RS.500. SO MORE THAN 500 PAGES OF SURESHOT HIT IS GETTING READY FRIENDS..!

    ReplyDelete
  50. So MINNUM MARANAM is also in the pipeline after LION 30th YEAR SPECIAL. Editor discloses that both the special books can't be released at a same year. But MINNUM MARANAM will be released by the next following year! Be happy guys!

    ReplyDelete
  51. 30வது ஆண்டு மலர் பற்றிய என்னுடைய கருத்துக்கள்:

    1. Rs.500 என்று ஒரே புத்தகமாக வெளியிடுவதற்கு பதிலாக Rs.250 X 2 என்று இரண்டு புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
    2. B / W ஸ்பெஷல், நமது நெடுநாளைய டாப் 10 ஹீரோக்களின் கதைகள் (புதிய கதைகள்) = Rs.250/-
    3. Color ஸ்பெஷல், டாப் 5 ஹீரோக்களின் கதைகள் (புதிய கதைகள்) = Rs.250/-

    10 + 5 கதைகள் ஒரே மாதத்தில் நினைத்து பருக்கும் போதே தேனாய் இனிக்கின்றது. இது ஒரு மறக்கமுடியாத Landmark இதழ்களாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஐடியா! Wow.... பதினைந்து கதைகள்!

      Delete
    2. @ Mahesh

      உங்கள் ஐடியாவைச் செயலாக்குவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றி சரிவரப் புரியாவிடினும், அட்டகாசமான ஐடியா என்பதில் நானும் உடன்படுகிறேன்!

      பிஸியான வேலைகளுக்கு நடுவே எடிட்டர் உங்களது ஐடியாவை கவனிக்கிறாரோ இல்லையோ; அதனால் உங்கள் ஐடியாவை எடிட்டருக்கு மின்னஞ்சலாகவும் தட்டிவிடுங்களேன்!

      நல்ல ஆலோசனைகள் கவனிக்கப்படாமல் போகக்கூடாதில்லையா? :)

      Delete
    3. நல்ல ஐடியா, எடிட்டர் சார் தயவு செய்து இதை யோசித்தி பாருங்கள்.
      விலை முன்ன பின்ன இருந்தல்லும் பரவ இல்லை.

      E.g.
      B & W special - 250 to 350
      Color special - 250 to 500

      எப்படியோ நெறைய நல்ல கதைகள் கிடைத்தால் நல்லது.

      Delete
    4. @ friends : நல்ல சிந்தனையே - ஆனால் அதனை சற்றே முன் எடுத்துச் சிந்தித்துப் பார்த்தால் :

      250 விலைக்கு தடிமனானதொரு இதழில் black & white நாயகர்களின் சாகசங்கள் என்றால், மாடஸ்டி & மர்ம மனிதன் மார்டினைத் தாண்டி எஞ்சி நிற்பது நமது டெக்ஸ் வில்லர் & டயபாலிக் மாத்திரமே ! டயபாலிக் கதைகள் பிரத்யேகமாய் ; எவ்விதக் கூட்டணிகளும் இல்லாதே வெளியாக வேண்டிய நிர்பந்தம் உள்ளதால் - அவர் இந்தக் கணக்கில் அடைபட மாட்டார் !

      So பக்கங்களை நிரப்ப, மீண்டும் மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி & ரிப் கிர்பி கதைகளுக்குத் தான் கதவைத் திறந்தாக வேண்டும் !

      இது உதை வாங்க உத்தரவாதமான வழியாகாதா ? :-)

      Delete
    5. லயன் 30 ஐயே "மின்னும் மரணம்" ஆஹ வெளியிட்டால் என்ன ?

      Delete
    6. மார்டின் பழிவாங்கும் ரா கதை போல இருந்தால் ரசிக்க தடை எதுவும் இல்லை சார் , மாடஸ்டி யுடன்
      மேலும் தடிமனானதொரு இதழில் டெக்ஸ் இன் ட்ராகன் நகரம் கதையை இணைத்து வெளியிட்டால் என்ன? நிறைய நண்பர்கள் படிக்காத ஒரு கதை அது நீங்கள் நினைத்தால் முயற்சி செய்யலாம்.

      Delete
    7. @ Editor:

      உங்களுடைய இந்த பதிலின் மூலம், லயன் 30 ஆவது ஆண்டு மலர் 500 விலையில் என்பது உறுதி ஆகிறது (250 X 2 or 500 X 1).

      மிகுந்த சந்தோசம் சார், நண்பர்களே -

      லயன் 30 ஆவது ஆண்டு மலர் 500 விலையில்
      லயன் 30 ஆவது ஆண்டு மலர் 500 விலையில்
      லயன் 30 ஆவது ஆண்டு மலர் 500 விலையில்
      லயன் 30 ஆவது ஆண்டு மலர் 500 விலையில்
      லயன் 30 ஆவது ஆண்டு மலர் 500 விலையில்
      லயன் 30 ஆவது ஆண்டு மலர் 500 விலையில்

      ஹுர்ரே ... ஹுர்ரே ....

      எடிட்டர் கால் கட்டை விரலை எடுத்து வாயில் வைக்க போகிறார் ,,,

      Delete
    8. @ எடிட்டர்

      நண்பர்கள் தங்கள் கற்பனைக் குதிரைகளை மூச்சு வாங்க ஓட வைப்பதை தடுக்க...

      நீங்களே உங்கள் மனதிலிருப்பதை அவிழ்த்துவிடலாமில்லையா? ஹிஹி!

      Delete
    9. சூப்பர் விஜய் : //லயன் 30 ஐயே "மின்னும் மரணம்" ஆஹ வெளியிட்டால் என்ன ?//

      ஒரு பயணத்தின் மைல்கல்லுக்கு பாயசத்தோடு விருந்தளிப்போமே - பழைய புளியோதரையை சூடு செய்து பரிமாறுவதற்குப் பதிலாய் ?

      Delete
    10. @ ப்ளூ

      இதுக்குப் பெயர்தான் 'போட்டு வாங்குவதா'? :)

      Delete
    11. @விஜயன் சார்,

      // ஒரு பயணத்தின் மைல்கல்லுக்கு பாயசத்தோடு விருந்தளிப்போமே //

      நாங்க ரெடி சார் ...

      Delete
    12. Erode VIJAY : நாளைய பண்டிகையை ரசிக்கும் ஆர்வத்தில் இன்றைய சிற்சிறு சந்தோஷங்களிலிருந்து கவனத்தை அகற்றுவதும் முறையாகாதே ! காத்திருப்போமே 2013-க்கு விடை தரும் வேளை வரை !

      Delete
    13. //... So பக்கங்களை நிரப்ப, மீண்டும் மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி & ரிப் கிர்பி கதைகளுக்குத் தான் கதவைத் திறந்தாக வேண்டும் ! ...//

      இது நல்ல idea.

      மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி, லாரன்ஸ் & டேவிட், காரிகன் & ரிப் கிர்பி கதவைத் திறந்தால் நன்றே!

      Delete
    14. Vijayan Sir @ பக்கங்களை நிரப்ப, மீண்டும் மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி & ரிப் கிர்பி கதைகளுக்குத் தான் கதவைத் திறந்தாக வேண்டும்!

      PLEASE DO THAT SIR! I WOULD LIKE TO SEE OUR FAV HEROs NEW STORIES AGAIN AGAIN AGAIN.

      Delete
    15. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் @ எடிட்டர் கால் கட்டை விரலை எடுத்து வாயில் வைக்க போகிறார் ,,,
      கொஞ்ச நாளா, இப்ப எல்லாம் நாம்தான் எடிடருக்கு கால் கட்டை விரலை எடுத்து வாயில் வைத்து விடுகிறோம் :-)

      Delete
    16. டியர் காமிக்ஸ் ஆசான் ........
      கால் கட்டை விரலின் இன்னொரு உபயோகம் ....
      கால் கட்டை விரலை ஊன்றி ....பரண் மேல உள்ள மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி, லாரன்ஸ் & டேவிட், காரிகன் & ரிப் கிர்பி கதையை எடுத்தால் நன்றே!
      புளியோதரை கேட்டு போகாது .....ஆனா பாயசம் .....?

      Delete
    17. @Parani from Bangalore

      எடிட்டர் எப்போ கால் கட்டை விரலை எடுத்து வாயில (இல்ல நாம எடுத்து) வைத்தாலும் நமக்கு சந்தோசம் தானே :)

      Delete
  52. ஸ்டீல் க்ளாவை கடந்த சில நாட்களாகக் காணவில்லையே?! மீண்டும் நிழற்படைக்காக பணியாற்றப் போய்விட்டாரா?

    ReplyDelete
    Replies
    1. புதிய சாகசம் நிகழ்த்த சென்று உள்ளார் நண்பரே. லயன் 30 ஆவது ஆண்டு மலருக்கு ஒரு சூப்பர் கதை ரெடி ஆகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்

      (இரும்பு கையும் ஒரு மரண சவாரியும் - தலைப்பு நல்லா இருக்கா ? )

      :)

      Delete
  53. Dear Sri Vijayan, Modesty, Rip acceptable but g=for god sake no Spider and Mayavi definit no no. Their hero days are over and today the stories looks drab.

    gopalakrishnan

    ReplyDelete
  54. To: Editor,

    ரூ.500க்கு மிகப் பெரிய இதழ், அதில் பல கதைகள் என்பதில் இப்போது எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

    காரணம், 10 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவற்றில் இரண்டு கதைகள் ஒரு சில பக்கங்களோடு பொசுக் கென்று முடிந்து கவலையளிக்கும். 2கதைகள் பக்கங்களை நிரப்பவேண்டுமே என்பதற்காக வந்து உப்புச் சப்பில்லாதவையாக சலிப்பை ஏற்படுத்தும். 2கதைகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் திடீரென வேறு கதைகளாக சில இறுதிநேர (!!) காரணங்களுக்காக வேறு இரு கதைகளாக மாறிவிடும். ஆக, 10 கதைகளில் அதிகபட்சமாக 4 கதைகளே சிறப்பானவையாகத் தேர்வுபெறும். (இதை எடிட்டரும், இங்கிருக்கும் நண்பர்கள் பலரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்)

    அத்தகைய 4 சிறந்த கதைகளை ஒரு புத்தகமாக ரூ.200 இல் வெளியிட்டால், தயாரிப்புச் செலவும் கட்டுக்குள் நிற்கும், முன்பதிவு தலைவலியும் இராது, விற்பனையும் அதிகமாகும், ஆண்டுமலரில் தொகுக்கப்பட்ட அந்த 4 கதைகளுக்காகவும் லயன் 30ஆவது ஆண்டுமலர் எப்போதும் 'வியந்து' பேசப்படும் இதமாகவும் இருக்கும்.

    லயனின் முன்னைய தீபாவளி மலர்கள், ஆண்டு மலர்கள், ஏன் இரத்தப்படலம் மெகா கலெக்ஷன் பேசப்பட்ட அளவுகளில் சிறிதளவேனும் 'நெவர் பிஃபோர் ஸ்பெஷல்' பேசப்படுகிறதா என்று சிந்தித்தால்.... நான் சொல்வதில் ஏதோ இருப்பது புரியும்...
    Over to you sir....

    ReplyDelete
    Replies
    1. Spelling mistake...

      //'வியந்து' பேசப்படும் இதமாகவும் இருக்கும். //

      'வியந்து' பேசப்படும் இதழாகவும் இருக்கும்.

      Delete
  55. //... So பக்கங்களை நிரப்ப, மீண்டும் மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி & ரிப் கிர்பி கதைகளுக்குத் தான் கதவைத் திறந்தாக வேண்டும் ! ...//

    இது நல்ல idea.

    மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி, லாரன்ஸ் & டேவிட், காரிகன் & ரிப் கிர்பி கதவைத் திறந்தால் நன்றே!

    ReplyDelete
  56. விஜயன் சார், @ ஒரு பயணத்தின் மைல்கல்லுக்கு பாயசத்தோடு விருந்தளிப்போமே - பழைய புளியோதரையை சூடு செய்து பரிமாறுவதற்குப் பதிலாய் ?

    புளியோதரை 2 நாள் ஆனாலும் சுவைக்க நன்றாகத்தான் இருக்கும்! எனவே நமது கருப்பு வெள்ளை ஹீரோக்களின் கதைகள் வருடம் ஒரு முறையாவது ஒரு ஸ்பெஷல் இதழாக வரவேண்டும்!

    சென்டிமேட்டா ஒரு விஷயம்: ஏற்றி விட்ட ஏணிய(கருப்பு வெள்ளை ஹீரோக்கள) மறக்கலாமா :-)
    ===========================

    ReplyDelete
  57. Guys, i heard that Ambulimama has ceased publishing. Can somebody tell me if this is true. i went out and asked few shops that used to sell it few months back. all of them told that it is not available.

    This leaves us with only lion-muthu and gokulam which are still publishing and Lion Muthu in spite of all odds and low circulation. i seriously doubt whether our editor is able to make a profit at all or a reasonable profit even if he makes a profit. i could judge from his posts and replies he never clearly tells us bad news that demoralizes us. i suspect he is running this business more for passion more than the money part

    i rarely go to facebook, but today when i went there, i'am sad to see some vitriolic comments and posts in facebook group and could not believe it as they have come from guys whom i thought were good gentlemen.
    Guys, i request those to give feedback in a positive manner. Minor Mistakes are bound to happen . please give the feedback in right way. It is for our selfishness of getting regular comics, We need to look at things positively and come up with suggestions and ideas to sustain it

    ReplyDelete
    Replies
    1. @ organicyanthiram

      நிலைமையை உணர்ந்து அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் நண்பரே!

      அம்புலிமாமா உட்பட பல ஜாம்பவான்களும் மண்ணைக் கவ்வியிருக்கும் இவ்வேளையில் சில நூறு தமிழ் வாசகர்களின் ஆதரவையும், அன்பையும் மட்டுமே பிரதான முதலீடாகக் கொண்டு ஓரிரு முறை விழுந்தாலும் தன்னம்பிக்கையோடு எழுந்து முன்பைவிடவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நம் காமிக்ஸுக்கு நாம்தானே ஓரமாய் நின்றாவது உற்சாகப்படுத்திடவேண்டும்?

      ரெண்டுபட்டுக்கிடப்பது நமக்குத்தானே இழப்பாகும்?

      ஊர்கூடித் தேர் இழுத்தால் நகராமல் போய்விடுமா என்ன?

      Delete
    2. @Erode Vijay

      ///ஊர்கூடித் தேர் இழுத்தால் நகராமல் போய்விடுமா என்ன?///
      Well said.

      ///நம் காமிக்ஸுக்கு நாம்தானே ஓரமாய் நின்றாவது உற்சாகப்படுத்திடவேண்டும்? ///
      I believe we are in the right path. Hope more subscribers come into our lion-muthu club thereby making the editor to take up more challenges and benefiting us.

      Delete
    3. தங்க தேர் என்றால் என் வீட்டுக்கே............ இழுத்துட்டு போகவும் தயார்

      Delete
    4. // i suspect he is running this business more for passion more than the money part//

      No doubts, without having passion and love, these kind of works can't be continued more than 3-4 issues. Glad to see we got at least one person with such interests and right balance and skills to keep things going again. The toughest part I see is tiresome multi-tasking which costs peace of mind worse than facing financial stress.

      Today I just bought Tinkle and Gokulam (after a long gap) to check how things are going. Immediately realized that we miss the good old story tellers, illustrators and connection with reader's soul - even though everything is shiny, colorful and precise in printing. Involvement of right people is the precious thing than technology.

      Delete
  58. Some suggestions to make our comics more vibrant.
    1. Where are the 1000s of lion-muthu fans. I believe 90% is still in Tamilnadu. We need to reach them . How to reach them is a million dollar question. This costs money but could be tried.

    2. Lion-muthu comics and Vijayan sir should definitely have facebook and twitter accounts officially. This is free

    3. Lion-muthu official website should become vibrant and this blog, twitter-facebook (official) integrated.

    4. we should explore small and big towns instead of only targeting big cities.

    5. We should display the comics books in right places. Definitely if we place the comics in landmark and odyssey may not get necessary audience as the kids who come here have lost the ability to read tamil. Instead we should display it in permananent government book stalls like the one inside the egmore museum campus inc chennai.

    6. we can place some widgets in the blog/ website and some small space in the books, where people can give donations and sponsor money for giving out comics books to underpriveleged / school libraries etc.

    7. Editor can give some commission (even if it is less) to people who bring in new subscriptions

    More will follow as it comes to my mind.....

    ReplyDelete
  59. Podiyan அவர்கள் சொன்னது மிகவும் சரி.

    அதை தவிர பொதுவாக பலகதைகள் கொண்ட பெரிய புத்தகங்கள் நமது வாசகர் வட்டத்தில் வரவேற்பைப் பெற்றிருந்தாலூம் இந்த special formats புதிய வாசகர்களை சென்று சேராது என்பதும் ஒரு உண்மை - முக்கியமாக வாங்கும் சக்தி குறைந்த சிறுவர் மற்றும் teenage readers. குறிப்பாக எந்த ஒரு பெற்றோரும் தனது teenage பிள்ளைகளின் கையில் மெகா சைஸ் காமிக்ஸ் தவழ்வதை ஒரு negative aspect ஆக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இது மாதம் ஒருமுறை சிறிய கதைகளை படிக்கும் வாய்ப்புக்கும் வேட்டுவைக்கக்கூடும் (No surprise exactly this happened to me :D ).

    மேலும் தற்போதய வேகமான generationஐ பொறுத்தவரையில் single story + short & sweet வகையரா புத்தகங்கள் தரும் attractionஐ ஜம்போ சைஸ் புத்தகங்கள் நீர்த்து போக செய்யும் அபாயமும் உள்ளது. தற்போது நமது Lion & Muthu காமிக்ஸ் முன்பைவிட consistent ஆன மாத இதழாக தனது identityஐ establish செய்யும் பட்சத்தில் விலையும் சைசும் consistent ஆக தொடர்வது நிச்சயம் எல்லோராலும் ஒரு plus point ஆக கருதப்படும் - காமிக்ஸ் தீவிரவாதிகளைத்தவிர! :D

    ReplyDelete
  60. Fleetway publications, Vulcan publications இருந்து புதிய படைப்புகள் எதுவும் வருவதில்லையா?

    ReplyDelete
  61. விஜயன் சார், நியூ லுக் ஸ்பெஷல் சனிக்கிழமை எங்கள் கையில் தவழும் என கனவுகளுடன் காத்திருக்கிறோம்!

    ReplyDelete
  62. காமிக்ஸ் நண்பர்களே, நமக்கு பிடித்தமான கருப்பு & வெள்ளை நாயகி மற்றும் நாயகர்களின் புதிய கதைகள் வருடம் ஒருமுறை ஸ்பெஷல் இதழாக வெளி இட வேண்டும் என வலியுறுத்தி நமது ஆசிரியருக்கு மின் அஞ்சல் மட்டும் "தந்தி" (நமது தமிழக அரசியல்வாதிகளின் ஸ்டைல்) உடன் அனுப்பும்மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. பெங்களூரு பரணிசார் ,ஸ்பைடர் ; ஆர்ச்சி, லாரன்ஸ் & டேவிட், இரட்டை வேட்டையர் எல்லாரும் கனவில் வந்து ஒரே அழுகாச்சி ...........அதாம்பா கலாம் கனவு காண சொன்னாராமே .........

      Delete
    2. Parani from Bangalore : தந்தி இலாக்காவுக்கே மங்களம் பாடியாச்சு ! So அந்த செலவும், சிரமமும் மிச்சம் உங்களுக்கு !

      Delete
  63. நான் அதை ஆமோதிக்கிறேன்

    ReplyDelete
  64. தீபாவளி மலராக குட்டி தலையணை size tex willer or diabolik இதழை வெளியிட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  65. Jason Brice மூன்று பாகம் ஆங்கிலத்தில் படித்தேன்.
    ஒவ்வொரு பாகத்திலும் ஒரு ட்விஸ்ட் இருந்தது.

    வில்லன் சற்றே அமானுஷ்யமாக இருந்தாலும் முயற்சி செய்து பார்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    மாடஸ்தியை பொருத்தவரை மறுபதிப்புகளுக்கு எனது ஆதரவு உண்டு.புதிய கதைகளுக்கு இல்லை.

    சார் அடுத்த வருடமாவது ஒரு கருப்பு வெள்ளை மறுபதிப்பு ஸ்பெசல் முயற்சி செய்து பாருங்கள் (மும் மூர்த்திகள் தவிர)

    கிட் லக்கி போல யகாரி யும் முயற்சி செய்து பாருங்கள் அதில் ஒருவித குழந்தைத்தனமான ஈர்ப்பு இருக்கிறது. I Love that kid.

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ணா வ வெ : //Jason Brice மூன்று பாகம் ஆங்கிலத்தில் படித்தேன்.
      ஒவ்வொரு பாகத்திலும் ஒரு ட்விஸ்ட் இருந்தது.//

      சொந்த மாமனே சிறு பெண்ணையும், பையனையும் சீரழிக்கும் கதைக் களத்தை நியாயப்படுத்துவது சாத்தியமாகுமா ? முதல் பாகத்தை திரும்பவும் படித்துப் பாருங்களேன் !

      Delete
    2. உண்மை நீங்கள் குறிப்பிட்டு கூறும் வரை நான் அதனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
      இன்றைய நிலையில் அது சற்று கஷ்டம் தான்.

      கொஞ்சம் யகாரி முயற்சி செய்து பாருங்கள் சார்.
      எனக்கு என்னவோ கிட் லக்கியை விட இது பிடித்திருந்தது.

      Delete
  66. டியர் சார்..
    பல நண்பர்கள் கூறுவது போல் கருப்பு, வெள்ளை நாயகர்களை ஒருங்கிணைத்து ஒரு ஸ்பெஷல் மலர் போடலாமே பத்து கதைகளை திணிப்பதை விட ஐந்து, ஆறு சிறந்த கதைகளாக தேர்ந்தெடுத்து ஸ்பெஷல் மலர் போடலாம். டெக்ஸ் வில்லர் இத்தாலிய கதைகளில் 423,424,425 வெளியிடாக வெளிவந்துள்ள ஒரு மூன்று பாக கதைகள், கதைக்களமும், சித்திரங்களும் அற்புதமாக உள்ளது, இந்த கதையை தேர்ந்தெடுத்து தாங்கள் வெளியிட்டால் நிச்சயம் 2014 ல் ஹிட் கதையாக வர வாய்ப்புள்ளது. அதன் தலைப்புக்கள் l'uomo senza passato -1 , nella terra degli utes - 2 , sfida infernale - 3 அப்புறம் மார்ட்டீன், சி.ஐ.டி ராபின், லாரன்ஸ் & டேவிட் ( பனியில் ஒரு அசுரன்), ஸ்பைடர், இதற்கு முன்பு வெளிவந்த ஸ்பைடர் கதை பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம், அதற்கு காரணம் ஒரு சூப்பர் ஹீரோ தனது சகாவிடம் அடிமேல் அடி வாங்குவதை யாரும் அவ்வளவாக ரசிக்க வில்லை, ஆனால் விற்பனையில் சறுக்க வில்லை. அதனால் இன்னுமொறு வாய்ப்பு வழங்கி பார்க்கலாமே? மாடஸ்டி கதைகள் ஆரம்ப காலத்தில் வந்த ஒரு சில கதைகள் மட்டும் தான் சற்று நன்றாக இருந்தது. அதன் பிறகு வெளிவந்த பல கதைகள் மரண மொக்கைதான். கடைசியாக nbs-ல் வெளிவந்த கதையை நான்கு பக்கம் கூட படிக்க முடியவில்லை. இந்த மாதிரியான கதைக்கெல்லாம் தாங்கள் மல்லுக்கட்டி நிற்பது தான் சற்று வியப்பாக உள்ளது. அதே போல் ஜில் ஜோர்டான், ஜெரோம் போன்ற நாயகர்களை ஒரே கதையில் முடிவெடுக்காமல் இன்னும் ஒரு சில வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கிப் பார்க்கலாம் . ஸ்டீல் பாடி ஷெர்லக் ஹோம்ஸை விட இவர்கள் கதை எவ்வளவோ தேவலாம். அதே போல் ஜெஸ்லாங் கதையான நண்டுக் குகை மர்மம் என்ற ஒரு கதை சரியில்லை என்ற காரணத்தினால் இவருக்கு வாய்ப்பு வழங்காமல் இருப்பது சரியா சார்?

    ReplyDelete
    Replies
    1. பொங்கி எழுந்த ப்ரூனோ பிரேசில் :-) சூப்பர்.

      //மாடஸ்டி கதைகள் ஆரம்ப காலத்தில் வந்த ஒரு சில கதைகள் மட்டும் தான் சற்று நன்றாக இருந்தது. அதன் பிறகு வெளிவந்த பல கதைகள் மரண மொக்கைதான். கடைசியாக nbs-ல் வெளிவந்த கதையை நான்கு பக்கம் கூட படிக்க முடியவில்லை. இந்த மாதிரியான கதைக்கெல்லாம் தாங்கள் மல்லுக்கட்டி நிற்பது தான் சற்று வியப்பாக உள்ளது. அதே போல் ஜில் ஜோர்டான், ஜெரோம் போன்ற நாயகர்களை ஒரே கதையில் முடிவெடுக்காமல் இன்னும் ஒரு சில வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கிப் பார்க்கலாம் . ஸ்டீல் பாடி ஷெர்லக் ஹோம்ஸை விட இவர்கள் கதை எவ்வளவோ தேவலாம்.//

      என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிட்டிங்க. நன்றி.

      Delete
    2. @ friends : ஒரு கதவை அடைத்தாலன்றி பாதையினில் குழப்பத்தை தவிர்ப்பது சாத்தியமாகாது !

      ஸ்பைடர் ; ஆர்ச்சி ; மாயாவி போன்றோரின் கதைகளில் எஞ்சி இருப்பவை மஹா மொக்கைப் படலங்கள் ! ஒரு யுகத்து சூப்பர் ஸ்டார்களின் best days இருந்திடுவது நமக்குப் பின்னே மாத்திரமே ; முன்னல்ல என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும் ! So - 'கறுப்பு வெள்ளை ஸ்பெஷல்' என்ற சிந்தனை ஒ.கே. தான் - ஆனால் அதற்காக திரும்பவும் பரம பதத்தின் முதல் கட்டத்திற்கு பயண டிக்கெட் வேண்டாமே !

      'ஏற்றி விட்ட ஏணியை மறந்த துரோகி' ; 'மும்மூர்த்திகளை புறக்கணித்த பாவி ' என்றெல்லாம் பெயர் பலகைகள் தயாராகும் வாய்ப்பு உண்டென்ற போதிலும், there are times when we just need to move on !

      Delete
    3. லயன் 30 க்கு புளியோதரையா பாயாசமானு ஒரு கருத்து கணிப்பு நடத்தலாமே சார் ?

      Desperate about "மின்னும் மரணம்". Pls..

      Delete
    4. @ சூப்பர் விஜய்

      கிளறிவச்ச புளியோதரையை வழிச்சு வழிச்சு சாப்பிட்டுவிட்டு, அப்படியே சூடா ஒரு கப் பாயாசத்தையும் உள்ளே இறக்கினா சுகமாயிருக்குமில்லையா?

      Delete
    5. மாடஸ்டி, ரிப் கிர்பி, காரிகன் இவர்கள் கதைகள் எல்லாம் வேண்டவே வேண்டாம் சார்.

      //மாடஸ்டி கதைகள் ஆரம்ப காலத்தில் வந்த ஒரு சில கதைகள் மட்டும் தான் சற்று நன்றாக இருந்தது. அதன் பிறகு வெளிவந்த பல கதைகள் மரண மொக்கைதான்// very True!!

      Delete
    6. மாடஸ்டி கதைகளை மீண்டும் படிக்குமாறு நண்பர் ப்ருனோ பிரேசிலுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன் :-). ஒவ்ஒன்றும் சூப்பர் கதைகள்.

      ஒரு வேளை கருப்பு வெள்ளை ஸ்பெஷல் போட்டால் எனது விருப்பம் : மாடஸ்டி, ரிப் கிர்பி, காரிகன் விங் கமான்டர் ஜார்ஜ், ராபின் ஆகியோரின் புதிய கதைகள். No reprints!

      Delete
  67. டெக்ஸ் வில்லர் படம் .......நல்ல்லா இருந்துச்ச்சு
    டெக்ஸ்:தா தித் தை தா தை .....................கார்சன் :தி தா தி தொ தி ட
    http://www.youtube.com/watch?v=piW7-HpSd9M

    ReplyDelete
  68. டியர் விஜயன் சார்,

    // ALL NEW SPECIAL -ன் இறுதிக்கட்டப் பணிகள் நடந்தேறும் tight ஆன நேரமிது //

    'ஆல் நியூ ஸ்பெஷல்' பற்றி தாங்கள் எதுவுமே கூறவில்லையே ?

    எங்களுக்காக ஒரு சிறு முன்னோட்டம் அளிக்க கூடாதா ?


    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : நாளைக்குப் போட்டால் போச்சு !

      Delete
  69. கடைசியாய் சில கேள்விகள் - PART 1

    நான் Facebook-ல் கேட்ட சில கேள்விகள் இங்கே ஏன் பதிவிடவில்லை என்று கேட்ட என் நண்பர்களுக்காக இந்த கடைசி பதிவு.

    1. இந்தப் பதிவினில் மிக முக்கியமான சில கேள்விகள் கெட்டவர்கள்: பொடியன், ப்ருனோ பிரேசில் கலீல், கார்த்திக் சொமலிங்கா, கிருஷ்ணா வ.வே.

    இவைகளுக்கு பதிலகள் வேண்டும்.

    2. NBS வெளியீடு நடந்திட்ட பொது கலவரமாய் கும்மியடித்த மரமண்டை அவர்களை 'முகம் தெரியா சதுரங்க எதிராளி' என்று விளித்து விட்டு தற்சமயம் அவரது 'ஜிங்குச்சா' கேள்விகளுக்கு பதிலளித்தல் ஏனோ?

    3. நமது எல்லாக் கனவுகளையும் மெய்யாக்க கடினமாய் உழைப்பவர் நமது தொழிலாளிகள் தான்.

    நான் கிண்டல் அடித்தால் தரவிறக்கம் என்று சொல்பவர்கள், ஆசிரியரே தொழிலாளிகள் தூங்குவதால் 3-D effect என்று 'smilie' பொட்டிடுவது சரி எனக் கொள்கிறார்களோ?

    அடிக்கிற கை தான் அணைக்கும் என்று பழமொழி கூறும் பசலிகள் விலகுங்கள் please!

    4. ஸ்கேன் செய்வது தவறு, scanlation தவறு என்று சொல்லுபவர்கள் பதிமூன்று வருடங்களுக்கு முன்னம் ஒரு batman கதையினை spider-ஆக வடித்தது ஏனோ? [Meeran, nothing against you or your stand].

    5. சென்ற வருடம் wild west special முதலிய புத்தகங்களின் அச்சு மற்றும் வண்ணத்தரத்தினை இவ்வருட லக்கி ஸ்பெஷல், Blueberry உடன் ஒப்பிட்டு பார்த்தீர்களா?

    6. இந்த வருட முதல் மூன்று புத்தகங்களுடன் மே மற்றும் ஜூன் மாத இதழ்களை ஒப்பிட்டு பார்த்தீர்களா (அந்தந்த விலை உடைய புத்தகங்களை)?

    ReplyDelete
    Replies
    1. PART - II ... and FINAL

      7. cinebook ஆங்கில translation நாம் உபயோகிக்கும் பொழுது அவர்களுக்கு copyright கொடுத்திட வேண்டும் என்பது UK copyright act விதி. இதை ரபிக் கேட்டால் அவரை 'cinebook ஒற்றன்' என்று முகமறியா துதிபாடிகள் பட்டம் கட்டுதல் ஆசிரியரால் கவனிக்கப்பெற்றதா?

      இந்த கேள்வி கேட்கப்பட்டது அந்நிய நாட்டின் பொருள் பால் உள்ள மோகத்தில் மட்டுமன்றி நம்மை நோக்கி நாளை யாரும் கை நீட்டிடக் கூடாதே என்ற நோக்கமும் இருக்கலாம் அல்லவா.

      சுயமரியாதைக்கு இரு பக்கங்கள் உண்டென்பது நாம் அறிந்தது அன்றோ?

      8. நேசமாய் வரும் வினாக்கள் ஆற்றமாட்டாமை என்று ஒரே சொல்லில் அடிபட்டுப் போவதேனோ?

      9. காமிக்ஸ் நேசத்தாலும் மட்டுமன்றி தம் யோசிக்கும் திறனாலும் அலங்கரித்து நம் உடன் வந்த சில பழைய நண்பர்கள் இப்போது மௌனமாகி, வெளியேறிட அவர்கள் ஆணவம் மட்டுமே காரணமா?

      [கனவுகளின் காதலன், BN USA, ரபிக் ராஜா, Thanigai Selvan - இந்த வரிசையினில் இன்னும் எத்தனை இழந்திட ஆசை?]

      10. கேள்விகள் கேட்கப்படுவதை 'காமிக்ஸ் உலகின் கடைசி டைனாசர் வேட்டையாடப்படுகிறது' என்று சொல்லும் பத்தாம் பசலிகளுக்கு ஒரு விளக்கம்:

      டைனாசர்கள் அழிந்தது வேட்டையாடப்பட்டதால் அல்ல. தம் நிலையிலிருந்து மாறி adapt செய்து கொள்ளாமையினால் தானே ?

      11. நாம் பயன் படுத்தும் இவ்வலைத்தளம் அந்நிய நாட்டு கண்டுபிடிப்பு. நம் லயன் பயன்படுத்தும் e-mail அந்நிய நாட்டு கண்டுபிடிப்பு. இவைகளை நாம் பயன்படுத்துவதில்லையா?

      அப்போ அயல் நாட்டு காமிக்ஸ் படித்தால் என்ன தவறு? ஒப்பு நோக்கினால் என்ன தவறு? நம்மை விட சிறந்த படைப்புக்கள் அன்னியத்தில் இருக்கலாகாதா? அவற்றை நாம் பார்த்து தெளிந்திடல் ஆகாதா?

      இந்தக் கேள்விகளுக்கும் விடை வராது. ஆனால் இதனால் ஒரு black and white ஸ்பெஷல் நண்பர்களுக்கு கிட்டிடலாம் :-)

      விடைபெறும் முன்:

      எதிராய்க் கேள்வி எழுப்புபவர்களும், எள்ளி நகையாடுபவர்களும் எதிரிகள் அல்ல! அன்புக்கு பணிவு மட்டுமே அங்கி அல்ல - சில சமயம் சீற்றமும், சீண்டலும் தான்!

      ஆளுமைத்திறன் பற்றி வந்திட்ட கருத்துகளுக்கு:

      Again, ஆளுமைக்கும் இரு பக்கங்கள் உண்டு. ஒரு செயல் ஆரம்பிக்கப் படும்போது உற்சாகத்துடன் முனைவது positive thinking எனில் அந்தச்செயல் முடியும் தறுவாயில், வாசகர்களை அடையும் முன் செய்ய வேண்டியது 'playing devil's advocate'.

      தகுந்த நேரத்திற்கு தட்டி கொடுப்பதும், தவறும் நேரங்களில் கடிந்துரைப்பதும் நல்ல ஆளுமை கொண்டவர்களின் அடையாளம். புரியுமா போலி அடிவருடிகளுக்கு?

      அன்பும், பண்பும் நாணயத்தின் ஒரு புறம் எனின் சீற்றமும் அதனால் அடையும் செறிவும் மறுபுறமே ஆகிடும். தெளியுமா தம்பட்டக் கண்மணிகள் ??

      சிறு வயது நேசங்கள் நினைவுகளாய் வாழலாம் அன்றி மீள்வாழ்க்கை ஆவது முடியாது!

      நாம் தொலைத்த பால்யத்தின் ஒரு பகுதியையாவது மீட்டெடுத்து விட முடியுமா என்ற நாம் உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் இருப்பினும், வளரும் போது நாம் கற்கும் பாடங்களை மறுக்காமல் மறுமுயற்சிகளில் உட்படுத்த முயற்சித்தால் அது தவறாகி விடுகிறது!

      இதுவே இந்த தளத்தினில் நான் கற்ற பாடம்.

      கர்ஜிக்கும் சிங்கமே - சீறும் சிங்கமே காடாளும். சிணுங்கும் சிங்கம் 'சைமன்' போல circus-ல் ஒய்வு பெற்றிடும்.

      எனினும் காமிக்ஸ் எனும் கனவுலகில் பிரத்யோகமாய் ஒரு தளமிட்டு அதில் தனக்கென ஒரு பாணி அமைத்து இரு தலைமுறைக்கு கற்பனை செய்யக் கற்றுக்கொடுத்த - pre-cable TV era வினில் உற்சாகமாய் எங்களை கார்ட்டூன் உலகினில் உலாவ விட்டமைக்கு - எடிட்டர் விஜயன் அவர்களுக்கு கடைசியாய் ஒரு நன்றி.

      ஆறுவது சினம் .. எனினும் மாறிவிட்டது மனம் !

      விடைபெறுகிறேன். Goodbye. (மேஜரின் ஆன்மா மன்னிக்குமாக !)

      Note: This post is intended for Lion-Muthu blog for the attention of the editor. A copy of this will be in facebook groups and in my blog.

      Delete
    2. Comic Lover :

      சூழ்நிலைகள் மாறிடலாம் ; சூழ்நிலைகளால் மனிதர்களின் சிந்தனைகள் மாறிடலாம் - ஆனால் அடிப்படையில் மனிதர்கள் மாறுவதில்லை என்பதில் எனக்கு திட நம்பிக்கை உண்டு ! Comic Lover என சிநேகமாய் எனக்கு அறிமுகமான நண்பர் - கருத்து வேற்றுமைகள் நேர்ந்திடும் போதும் கூட என்னுள் மாற்றங்களைக் கொணரப் போவதில்லை !

      உணர்ச்சிபூர்வமாய் நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் என்று நான் கிளம்பி - ஒரு நட்பை சிரமத்திற்கு ஆளாக்குவதற்கோ ; ஏற்கனவே ரெண்டுபட்டுக் கிடக்கும் வாசகர்களுக்குள்ளே மேற்கொண்டு கசப்புகளை உருவாக்குவதிலோ எனக்கு உடன்பாடில்லை ! தவிரவும் தீர்ப்பெழுதி விட்டு வாதங்களுக்கு செவி சாய்க்கும் படலத்திற்குப் பதிலாய் - சரியோ, தவறோ எழுதப்பட்ட தீர்ப்பு எழுதியதாகவே நின்று விட்டுப் போகட்டுமே !

      முன்செல்லும் பாதைக்கு விமர்சனங்களே தெரு விளக்குகள் என்பதால் - இவையும் நிச்சயம் உதவிடும் நம் பயணத்திற்கு !

      Delete
    3. Comic Lover : அவசியமோ, இல்லையோ - சின்னதாய் ஒரு பின்குறிப்பும் கூட : ஆங்கில மொழிபெயர்ப்புகள் கொண்ட பிரதிகளை நமக்கு வழங்குவதே படைப்பாளிகள் தான் ! தவிரவும் நிறைய நேரங்களில் TEX WILLER : MARTIN MYSTERE போன்ற கதைகளுக்கு இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு நாம் மொழி மாற்றம் செய்துள்ள script களை - போனெல்லி நிறுவனத்தோடு நாம் பகிர்ந்துள்ளோம் !

      இத்தாலிய ஆக்கங்களிலிருந்து மொழிபெயர்ப்பது சிரமமெனக் கருதிடும் இதர மொழி வெளியீட்டாளர்களுக்கு அவை பயனாகிடும் !

      Delete
  70. 30வது ஆண்டு மலர் குறித்து நண்பர்கள் பல கருத்துக்கள் கூறியிருக்கிறார்கள்:

    ஆதலால் மீண்டும் ஒரு கருத்து

    B /W புத்தகத்தை இரண்டாக பிரித்து

    ஸ்பெஷல் -1 மறுபதிப்பு கதைகள் (spider, Archie, மாயாவி, lawrence & டேவிட், Johnny nero) Tribute towards 30 ஆண்டு காலத்து தலை சிறந்த ஹீரோக்கள்.- 5 stories

    ஸ்பெஷல் - 2 புதிய கதைகள் (மெகா size டெக்ஸ் வில்லர், Diabolik, Modesty Blaise, ரிப் கிர்பி, பிலிப் காரிகன்) - 5 stories

    Color Book

    ஸ்பெஷல் -3 புதிய கதைகள் (லக்கி லுக், சிக் பில், கேப்டன் டைகர், Reporter Johnny, டெக்ஸ் வில்லர்) - 5 stories

    டெக்ஸ் வில்லர் மட்டும் B / W மற்றும் கலரில், ஏனென்றால் அவர் தான் 600 கதைகள் கண்டவர்

    Note: விலை ஆசிரியரின் வசிதிகேற்ப (it will be nice if all the books come inside Rs.500)

    ReplyDelete
    Replies
    1. Mahesh : 29-ஐ தாண்டிக் கொள்வோமே முதலில் :-)

      Delete
  71. நான் இங்கு எழுதிய பதிவுக்கு facebook ல் கொந்தளிக்கும் நண்பர்களே!
    நான் ஏதோவொரு ஆங்கில பதிப்பகத்தை குறை கூறினால் உங்களுக்கு ஏன் கோபம் வருகின்றது ?
    உங்களுக்கு மட்டும்தான் சந்தேகப்பட ,குறை கூற உரிமை உண்டா?
    ஆங்கில பதிப்பகங்கள் எல்லாம் அப்பழுக்கு அட்டரவைகளா?
    நான் கூறிய டார்ஜான் செய்தி புரியவில்லையா?

    நீங்கள் கூறும் எதையும் அப்படியே ஏற்று கொள்ள இங்கு யாரும் மூளை செயல் இழந்தவர்கள் இல்லை .

    பொருள் ஏதாவது காணாமல் போகும் இடத்தில் சக நண்பனும் ,முகம் தெரியாத அறிமுகமில்லாத மற்றொரு அந்நியரும் இருந்தால் உங்களின் முதல் சந்தேகம் சக நண்பனை நோக்கி பாயுமா? அல்லது அறிமுகமில்லாத அன்னியரை நோக்கியா ?

    நான் , சிலரைப்போல் இயந்திரமாக செய்யப்படாமல் மனிதனாக பெற்றெடுக்கப் பட்டிருப்பதால் என்னால் சக நண்பனை சந்தேக கண்கொண்டு நோக்க இயலாது .

    இந்த பிரச்னையில் மூன்று பதிப்பகங்கள் சம்பந்தப் பட்டிருக்கும் போது ஒரே ஒரு பதிப்பகத்தை மட்டும் வாருவது பொறாமையில் தானன்றி வேறு எதனால் ?
    (பொறாமையின் காரணம் , அதற்காக இவர்கள் செய்யும் குழப்பங்கள் அனைத்தும் விரைவில் பதிவாக )
    இந்த கதையின் உருவாக்கத்தின் போது இவர்கள் யாராவது சம்பந்த பட்டவர்களுடன் அருகிலிருந்தார்களா ? பின்னர் திட்டவட்டமாக குற்றம் சாட்டுவது காழ்ப்புணர்ச்சியில் தானன்றி வேறு எதனால்?

    இவர்களை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை?!
    தங்களை புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டு மற்றவர்களை முட்டாள்களாக சித்தரிக்க நினைக்கும் இவர்களை நினைத்தால் பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் முழுவதும் இருண்டு விட்டது என்று நினைக்குமாம் என்ற கதைதான் ஞாபகம் வருகிறது !

    நாங்கள் தமிழ் காமிக்ஸுக்கு விசில் அடித்தால் நீங்கள் ஆங்கில காமிக்ஸ்க்கு விசில் அடிக்கின்றீர்கள் அவ்வளவுதான் ., எனக்காவது விசில் அடிப்பதற்கு வாழ்வியல் ரீதியான அடிப்படை காரணம் இருக்கின்றது ., நீங்கள் ஆங்கில காமிக்ஸ்க்கு விசில் அடிப்பது தமிழ் காமிக்ஸ் மீதான வெறுப்பினால் தானன்றி வேறு எதனால் ?

    நீங்கள் வழி நடத்தித்தான் தமிழ் காமிக்ஸ் வளரவேண்டுமென்று இருந்தால் அதை விடவும் கேடு காலம் தமிழ் காமிக்ஸ்க்கு கிடையாது .

    ReplyDelete
  72. பகுதி 2:-

    இறக்குமதி செய்யப்படும் எதுவாக இருந்தாலும் அதன் உரையின் மீது எழுதப்பட்டிருக்கும் வாக்குறுதிகளை நம்பி எதைவேண்டுமானாலும் உண்பீர்கள் .,ஆனால் எங்களூரில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாயைக்கூட உங்கள் முன்னாள் நேரில் செய்து காட்டி ஆயிரம் சத்தியம் செய்தால்தான் வாங்கி உண்பீர்கள் . வாழ்க உங்கள் கொள்கை !

    வசதிகளிலும், வாய்ப்புகளிலும், விற்பனையிலும், 100 மடங்கு மேலேயுள்ள அயல் நாட்டு பதிப்பகங்கள் 1000, 2000 என்று விலை வைத்து விற்கும் காமிக்ஸை அதற்கு அச்சு செலவு,அந்த செலவு,இந்த செலவு என்று அவ்வளவு வலிமை மிக்க நாடுகளில் இருக்கும் வலிமை மிக்க பதிப்பகங்கள் நொண்டி சாக்குகள் சொல்லி விலையை தாறுமாறாக ஏற்றி விற்கும் போது ., எங்கோ சிவகாசி என்னும் பட்டிக்காட்டில் இருந்து கொண்டு அதே சரக்கை 100 விலையில் தருவது உங்கள் கண்களை உறுதுக்கின்றதோ ?

    எங்கோ உள்ள பதிப்பகங்களோடு அனைத்திலும் ஒப்பிடும் நீங்கள் விலையிலும் ஒப்பிட வேண்டியது தானே ?

    தமிழ் காமிக்ஸை சவக்குழிக்குள் அனுப்பும் வேலையை மிக நேர்த்தியாக செய்து வருகின்றீர்கள் .

    என் மனதில் எந்த வித மாய பிம்பங்களும் இல்லாததால் என்னால் விசிலடிக்கவும், சந்தோசத்தை கொண்டாடவும், ரசிக்கவும், லயிக்கவும் முடியும்.

    ஆனால் , நீங்கள் தமிழ் காமிக்ஸை காக்க வந்த கடவுளாக உங்களை பற்றி உங்கள் மனதில் பிம்பங்களை கற்பனை செய்து கொண்டுள்ளீர்கள் .
    அதுவே உங்களுக்கு வெறுப்பையும், குற்றம்,குறைகளையும், சூழ்ச்சியையும் , கும்பல் சேர்க்கவும் கற்று தந்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. Meeran : வாதங்கள் வளர, வளர, சந்தோஷம் தர வேண்டியதொரு சங்கதி பயனற்றுப் போய் விடுமே ! வேண்டாமே இத்தனை மன உளைச்சல் !

      Delete
    2. என்மீது நீங்கள் காட்டும் அக்கறைக்கு மிகவும் நன்றி சார் !

      Delete
    3. Meeran : உங்களுக்கு மட்டுமல்ல...இங்கு வருகை தந்து ஏதோ ஒரு காரணத்திற்காக வருந்த நேரிடும் நண்பர்கள் அனைவருக்குமே நான் சொல்லிட விரும்புவது ஒன்றே : இத்தனை ஆதங்கங்கள், உளைச்சல்களுக்கு எந்தவொரு பொழுதுபோக்கும் உரித்தானது அல்லவே !

      மனதறிந்து எவரையும் காயப்படுத்திட எண்ணியதில்லை என்ற போதிலும், ஏதோ ஒரு விதத்தினில் என்னால் உருவாகி இருக்கக் கூடிய ரணங்களுக்கு மன்னிப்புக் கோருவதில் எனக்குத் தயக்கமில்லை !

      Delete
  73. அவங்கவங்க levelக்கு அவங்கவங்க problem பெரியதாக உள்ளது. இதோ என் ஆதங்கம்:

    @vijayan, சார் பரட்டைத்தலை ராஜா மாதிரியான கதைகள் இன்னமும் stock இருந்தால் filler page ஆக வெளியிடுங்கள். முழுவண்ணத்தில் முன்பைவிட நன்றாக இருக்குமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை அனைத்து பரட்டைத்தலை ராஜா கதைளையும் சேர்த்து ஒரு Rs 50 கோடை Digest போட்டால் 10-15 years old சிறுவர்ளை attract பண்ணுவதும் சாத்தியம்.

      Delete
    2. Ramesh Kumar ://அவங்கவங்க levelக்கு அவங்கவங்க problem பெரியதாக உள்ளது. இதோ என் ஆதங்கம்: //

      :-)கவலை வேண்டாம் ! filler pages -க்கென GARFIELD & HEATHCLIFF வண்ணப் பக்கங்கள் விரைவில் வரவிருக்கின்றன !

      Delete
    3. Wow, Nice :)

      ஆனாலும் நமது cute ஆன பரட்டையை வண்ணத்தில் பார்க்க இயன்றால் இரட்டிப்பு சந்தோஷம்!

      Delete
  74. To: Editor,

    வரப்போகும் All new Special இதழ் தொடர்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்கு ஒரு பதில் மின்னஞ்சல் தட்டிவிடுங்களேன், ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : துல்லியமாகச் சொல்வதெனில் அடுத்த வாரமே சாத்தியமாகும் ! உத்தேச number போதுமெனில் இப்போது ஒ.கே.

      Delete
    2. நண்பர் பொடியன் அவர்களின் கேள்வி என்ன என்பது தெரியாததால், உங்களது பதிலும் புரியாமலே உள்ளது.

      உத்தேசமாக பார்த்தால், அடுத்த வாரம் All new Special எங்களது கைகளில் ?

      Delete
    3. @ ப்ளூ

      எடிட்டரின் பதிலை வைத்து நண்பர் பொடியனின் கேள்வி என்னவாக இருக்குமென்று (ச்சும்மா விளையாட்டாக) யோசித்ததில்...

      பொடியன்: சார், 'ஆல் நியூ ஸ்பெஷலில்' ஹாட்-லைன் எத்தனை பக்கங்கள்?

      (இப்போது எடிட்டரின் பதிலைப் படித்துப்பாருங்களேன். ஹிஹி!)

      Delete
    4. Erode VIJAY:

      ஹிஹ்ஹி....ஹி... :-P

      Delete
    5. To: Editor,

      உத்தேசமாகவே ஒரு பதில் அனுப்புங்கள் சார்.... (எப்பிடி பத்திக்கிச்சு பாத்தீங்களா.. 'அந்த' மேட்டர். யார் கேட்டாலும் சொல்லிடாதீங்க... அடிச்சும் கேட்பாங்க... சொல்லிடாதீங்க...!)

      Delete
  75. Sir, i have sent subscription through net transfer to ur a/c for +6... I also sent an email to you following that... Pls confirm the receipt asap... my email id is dravudai@gmail.com

    ReplyDelete
  76. லயன் 30 ஆவது ஆண்டு மலரில் கருப்பு கிழவி, பரட்டைத்தலை ராஜா வண்ணத்தில் பார்க்க இயன்றால் சந்தோஷம்!

    ReplyDelete
  77. காணாமல்போன ஸ்டீல் க்ளாவைப் பற்றி விசாரித்தபோது - இன்டெர்நெட் இணைப்பில் ஏற்பட்ட பழுதால் இத்தனை நாளும் இணையத்தின் பக்கம் எட்டிப்பார்க்க முடியவில்லையாம்! விரைவில் பின்னூட்ட மழையை ஆரம்பிக்கவிருக்கிறாராம்!


    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைபெய்யுமென்ற வானிலை அறிக்கை சரிதான் போலிருக்கிறது! :)

    ReplyDelete
  78. So TOMORROW there will be a New Article Friends!

    ReplyDelete
  79. Erode VIJAY:

    // விரைவில் பின்னூட்ட மழையை ஆரம்பிக்கவிருக்கிறாராம்! //

    மழையும் தூவானமாக இருந்தால்தான் ரசிக்க அழகு இல்லையா?

    ReplyDelete
  80. Comic lover Ragavan sir,I respect your thoughts.but ,don't you think it is bit harsh...to say gudbye...please be with us...our Tamil comic family need you...

    ReplyDelete
  81. மாடஸ்டி கதைகளை மீண்டும் படிக்குமாறு நண்பர் ப்ருனோ பிரேசிலுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன் :-). ஒவ்ஒன்றும் சூப்பர் கதைகள்.

    ஒரு வேளை கருப்பு வெள்ளை ஸ்பெஷல் போட்டால் எனது விருப்பம் : மாடஸ்டி, ரிப் கிர்பி, காரிகன் விங் கமான்டர் ஜார்ஜ், ராபின் ஆகியோரின் புதிய கதைகள். No reprints!

    ReplyDelete

  82. Blog Archive

    ▼ 2013 (27)
    ▼ June (3)
    பதில்கள் முடிவதில்லை !
    பல கேள்விகளும் ; சில சிந்தனைகளும்...!
    காசு...பணம்...துட்டு...money..money !!
    ► May (5)
    ► April (4)
    ► March (5)
    ► February (5)
    ► January (5)

    ► 2012 (66)

    ► 2011 (5)
    யுரேக்கா ..............இது காமிக்ஸ் ஆசானின் 98 பதிவு குட்டீஸ்..........!
    கலக்குங்க ஆசான் .......!

    ReplyDelete
    Replies
    1. 5+66+27=98 கணக்கு சரி தானே ஆசான் !

      Delete
    2. 100 வது பதிவிலே யார் முதலில் துண்ட போட போறீங்க பாஸ் .........!
      துண்டு போடலியோ சாமி துண்டு ..........
      துண்டு போடலியோ சாமி துண்டு ..........
      துண்டு போடலியோ சாமி துண்டு ..........
      இந்த யுகத்தின் ஒரு பிரமாண்ட துண்டு போடும் விழா..!
      துண்டு பட்டு கிடக்கும் நண்பர்களே ............
      ஒன்று கூடுங்கள்
      அட வாங்க ஸார் காமிக்ஸ் படிக்கறதே சந்தோசமா என்ஜாய் பண்ண தானே ....!

      சிகப்பு துண்டு போடுறவங்களுக்கு முதல் பரிசு
      பச்சை துண்டு போடுறவங்களுக்கு இரண்டாம் பரிசு
      மஞ்சள் துண்டு போடுறவங்களுக்கு மூன்றாம் பரிசு
      வெற்றிபெற்றவர்களுக்கு மந்திரியின் கம்பளத்தில குஜாலா ஒரு ஜவாரி உண்டு!
      (குறிப்பு) மந்திரிக்கு மற்றவர்கள் வெற்றி பெற்றால் பிடிக்காது எனபது தெரியும் தானே !

      Delete
  83. madhiyilla mandhiri @ வெற்றிபெற்றவர்களுக்கு மந்திரியின் கம்பளத்தில குஜாலா ஒரு ஜவாரி உண்டு!
    குப்புற தள்ளிவிடதான ;-) நான் ஆட்டத்துக்கு வரல சாமி!

    ReplyDelete
    Replies
    1. நான் என்னைக்கு கெட்டதை செய்து நல்லதை சம்பாதிச்சு இருக்கேன்................குப்புற விழப்போறது நான் தானன்றி வேறு யார் ...........................யார் அறிவார் ?

      Delete
  84. எடிட்டர் சார்,

    "Comic Con Hyderabad" அறிவிக்கப்பட்டு உள்ளது. செப் 21, 22 தேதிகளில். Lion Comics Stall உண்டு தானே?

    ReplyDelete
    Replies
    1. krisamar : இல்லையே...! நமக்கு பிரயோஜனப்படக்கூடியது சென்னை மாத்திரமே ; ஆனால் COMIC CON தமிழகத் தலைநகரை இன்னமும் தேர்வு செய்திடத் தயங்குகிறார்கள் !

      Delete
    2. தங்கள் முடிவு ஏமாற்றம் அளித்தாலும் காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

      Delete
  85. தயாரகுங்கள் நண்பர்களே ஆசிரியர் பதிவு இன்னும் சற்று நேரத்தில் வரலாம்.

    ReplyDelete
  86. @Vijayan sir \\Mahesh : 29-ஐ தாண்டிக் கொள்வோமே முதலில் :-)\\

    சார், அப்போ 29 வது ஆண்டு மலர் ஸ்பெஷல் இதழ் தயாராகுதா, ரொம்ப சந்தோசம் சார்

    ReplyDelete
  87. அனைவருக்கும் வணக்கம் ,

    எடிட்டரின் புதிய பதிவு "Almost New Special" வந்து விட்டது !

    ReplyDelete
  88. Vijayan: //இத்தனை ஆதங்கங்கள், உளைச்சல்களுக்கு எந்தவொரு பொழுதுபோக்கும் உரித்தானது அல்லவே !//

    +1

    பொழுதுபோக்கு addiction ஆக மாறும்போது இந்த விபரீதம் நிகழ்கிறது. இந்த cycle gap இல் ஒரு பழையகால வாசகனாக/ரசிகனாக என்னுடைய நீண்டநாளைய observation ஐ பகிர விரும்புகிறேன்:

    எப்போதாவது காமிக்ஸ் படிப்பவர்களின் எதிர்பார்ப்பிற்கும் அதையே ஒரு உத்வேகத்துடன் சேகரிக்கும் additionஇல் வாழ்பவர்களுக்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது. உங்களுடைய target audienceஇல் நிச்சயம் பாதிபேர் எப்பொழுதுமே திருப்தியாக முடியாத அளவுக்கு தங்களுடைய expectation of standardsஐ உயர்த்தியிருப்பது நிஜம். So you become victim of their higher expectations! :) Sadly we are living in the era of consumerism!

    ஒருவேளை over criticize பண்ணும் வாசகர்கள் உண்மையில் வாழ்க்கையின் மற்ற அனைத்து விஷயங்களும் கண்ணியமானவர்களாக இருக்கக்கூடும் - ஆனால் addition இட்டுச்செல்லும் பாதை யாரையாவது தொல்லைப்படுத்தாமல் செல்லுமா என்பது சந்தேகம்தான்.

    ஒரு புதிய வாசகர் (அல்லது வாசகராக வாய்ப்புள்ளவர்கள்) இந்த தளத்தை எட்டிப்பார்க்கும்பட்சத்தில் ஒன்றை இப்படி உணர வாய்ப்புள்ளது: காமிக்ஸ் படிப்பவர்கள் அனைவரும் அதற்கு addict ஆகி விடுவார்கள். இந்த தவரான புரிதலுடன் இருக்கும் ஒரு பெற்றோர் தன் குழந்தைகளை சினிமா பார்க்க அனுமதிப்பார்களே தவிர காமிக்ஸ் subscriptionஐ பண்ணவே மாட்டார்கள். So think about potential "normal people" who just stays in the fence of this precious art.

    So my humble suggestion - everyone please spare your light-hearted views towards comics! மிதவாதமும் அஹிம்சையும் தூய்மையானது, தீவிரவாதம் நாட்டுக்கு, வீட்டுக்கு மற்றும் காமிக்ஸ்ஸுக்கு கேடு!

    LOL :D

    ReplyDelete