Powered By Blogger

Thursday, June 27, 2013

Almost New Special....

நண்பர்களே,

வணக்கம். வரவிருப்பது ALL NEW அல்ல - ALMOST NEW தான் என்பது தான் உங்களுக்கும் தெரியுமே ! So - மீண்டுமொருமுறை கதைத் தேர்வினில் அவசியமான மாற்றங்கள், இத்யாதிகளைச் சொல்லி போர் அடிக்கப் போவதில்லை ! 

நான்கு வெவ்வேறு கதைகள் இருப்பினும், இந்த ரூ.200 இதழுக்கு ஹீரோ என்று யாரும் கிடையாதென்பதே நிஜம் ! 

"கொலை செய்வீர் கனவான்களே" (GREEN MANOR ) ஒரு மாறுபட்ட பாணியிலான சிறுகதைகள் கூடிய தொகுப்பு ! இதில் நாயகரென்று எவரும் கிடையாது ! கார்ட்டூன் பாணியிலான சித்திரங்கள் ; ஆனால் மனிதனின் மறு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆழம் கொண்ட கதைகள் இந்தப் புது வருகையின் பலங்கள். இதோ ஓரிரண்டு பக்கங்கள் உங்கள் பார்வைக்கு :


இந்தக் கதைத் தொகுப்பினில் ஒரு 7 பக்க அத்தியாயத்தை மொழிபெயர்த்துள்ளது நம் நண்பர்களுள் ஒருவர் ! யாரென்பதை இதழ் வெளியாகும் வேளையில் அறிந்து கொள்வோமே ! 

தொடரும் கதை # 2 - பிரெஞ்சில் COMANCHE என்ற பெயரில் வெளியானதொரு 15 அத்தியாயத் தொடரின் ஆரம்பம் ! நாயகனின் பெயர் முன்னிறுத்தப்பட்டு ; வெளிச்சத்தின் வட்டம் அவர் மீதிருப்பதே வழக்கம் என்ற போதிலும், இத்தொடரோ - அதன் மையப் புள்ளியாக நிற்கும் ஒரு இளம் பெண்ணின் பெயரைத் தாங்கி வருகின்றது ! COMANCHE எனும் அந்த யுவதி - சின்னதாய் ஒரு பண்ணையின் சொந்தக்காரி...தனியாகச் சிக்கல்கள் பலவற்றை சந்திக்கும் இப்பெண்ணுக்குத் தோள் கொடுக்க வருபவரே நாயகர் ரெட் டஸ்ட் ! யதார்த்தமானதொரு கதையோட்டம் ...கேப்டன் பிரின்ஸ் கதைகளுக்கு சித்திரங்கள் போட்ட அதே ஓவியரின் கைவண்ணம் ; brilliant கலரிங் என்று செல்லும் தோட்டா தேசத்தின்  ஒரு சில பக்கங்கள் இதோ :


கதை எண் 3-ம் கிராபிக் நாவலுமான "பிரளயத்தின் பிள்ளைகள்" மற்றுமொரு ஹீரோ இல்லா அனுபவம் ! இரண்டாம் உலக யுத்தத்தின் போது வாழ்க்கையைத் தொலைத்த ஒரு நாடோடிக் கூட்டத்தின் வலி கலந்த வாழ்க்கையை ஒரு டாகுமெண்டரி திரைப்படத்தின் பாணியில் உருவாக்கியுள்ளனர் ! Sepia எனப்படும் ஒரு வித செந்நிற வண்ணச் சேர்க்கையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை போரின் காயங்களை மௌனமாய் வெளிப்படுத்த எத்தனிக்கும் ஒரு முயற்சி. இதன் ஆக்கத்தில் 4 ஆண்டுகளைச் செலவிட்டுள்ளார்  ஓவியர் பெடெண்ட் !  பாருங்களேன் :

இறுதியாய் வருவது "ஸ்டீல் பாடி ஷெர்லாக்கின் 21 பக்கக் கதைகள் (15+6). ஒரு சாராருக்கு ஒ.கே. வென்றும், பரவலாக 'not o .k ' என்றும் report card வாங்கி இருக்கும் இந்த சமீபத்திய வரவுகளின் ஆல்பம் # 1-ன் இறுதிப் பக்கங்கள் இவை ! Filler pages -க்கென வாங்கப்பட்ட இத்தொடரை இம்முறை படித்து விட்டு இறுதியாய் ஒரு தீர்மானம் செய்வோமே ? 

ALL NEW SPECIAL ஜூலை 8-ல் நம்மிடமிருந்து டெஸ்பாடச் செய்யப்படும். இம்முறை நேர்ந்துள்ள தாமதம் - GREEN MANOR கதைகளின் ஒரிஜினல் files நமக்குக் கிட்டிடுவதில் ஏற்ப்பட்ட சில பிரச்னைகளாலே ! முதல் பாகத்தின் 3 பக்கங்கள் விடுபட்டுப் போக ; அவற்றை மீண்டும் வரவழைக்க நாம் முயற்சிக்க,அந்தப் பொறுப்பிலிருந்தவர் விடுமுறையில் போய் விட்டதால் - தற்காலிகமாய் பணி செய்த புதியவர் தவறுதலாய் முதலில் அனுப்பிய அதே CD -ஐ இன்னொரு பிரதி எடுத்து திரும்பவும் அனுப்பிட,  மூன்றாம் முறையாய் DHL கூரியருக்குப் பணத்தை செலவழித்தே சிக்கலைத் தீர்த்திட இயன்றது !ஆனால் கதையை ஆர்ட் பேப்பரில் ; வண்ணத்தில் பார்க்கும் போது - பட்ட சிரமங்கள் மறந்து போயின ! நிச்சயமாய் GREEN MANOR ஒரு மாறுபட்ட அனுபவத்தை தரக் காத்துள்ளது !

Take care folks ! Bye or now !

313 comments:

  1. Replies
    1. சார் .99 வது பதிவு தானே இது .......ஜூலை 8......இன்னும் 10 நாள் காது இருக்கணுமா ...?

      Delete
  2. Trailerகளை பார்க்கும்போது வித்தியாசமான கதைகளாக இருக்கும் என நம்புகிறேன்! குறிப்பாக பிரளயத்தின் பிள்ளைகள் Graphic Novel வித்தியாசமான தேர்வு!

    ReplyDelete
  3. எடிட்டர் சார்,
    ஆல் நியூ ஸ்பெஷல் ன் முன்னோட்டம் அமர்க்களமாக உள்ளது. "Who Done it" type கதைகளை படித்து வெகுளாகிவிட்டது. அந்த ஆசையை "Green Manor" பூர்த்தி செய்யும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. Comanche, Green Manor & Bachelo - அருமையான தேர்வு

    Comanche - சித்திரங்கள் அட்டகாசமாக இருக்கும். அதுவும் இம்முறை முழு வண்ணத்தில்..
    Green Manor - திருப்பங்கள் நிறைந்த, வித்தியாசமான கதைகள்
    Bachelo - அருமையான ஓவியங்கள். கதையும் அவ்வாறே இருக்கும் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  5. August மாத வெளியிடில் மாற்றம் இருக்கும் போல் உள்ளதே!?

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : ஆமாம் ! GREEN MANOR - 2 & 3 ஆகஸ்டிலேயே வெளியாகின்றன !

      Delete
  6. ஆல் நியூ ஸ்பெஷல் இன் அட்டை பக்கங்களை வெளியிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்குமே சார்,

    எனக்கு இந்த நான்கு கதைகளிலுமே "பிரளயத்தின் பிள்ளைகள்" டாப் ஆக இருக்கும் ("எமனின் திசை மேற்கு" போலவே) என எண்ணுகிறேன், ஓவியங்கள் பேசுகின்றன ... அருமை



    ReplyDelete
  7. சிப்பாயின் சுவடுகள் (முழு நீள கிராபிக் நாவல் ) - எப்போது sir?

    ReplyDelete
  8. சூப்பர் சார்! ரெட் டஸ்ட் அசத்துவது நிச்சயம்! கமான்சேயின் தில் பேசப்படும்!

    ReplyDelete
  9. நான் சின்னப் பையனா இருக்கும்போது என் அப்பா அத்திப்பூத்தாற்போல் சிலசமயங்களில் 'வரும் ஞாயிறன்று சாயந்திரம் நாம எல்லோரும் சினிமாவுக்கு போகிறோம்' என்று டிக்களேர் செய்திடுவார். ஞாயிறு எப்போது வருமென்று காத்திருந்து, ஒருவழியாய் அந்த ஞாயிறு மாலைப்பொழுதை இழுத்துப்பிடித்து வரவைத்து, குடும்பத்தில் எல்லோரும் குஷியாகக் கிளம்பிடும் வேளையில் வானத்தின் கூரை திடீர்னு பொத்துக்கிட்ட மாதிரி மழை கொட்டும்! வருணபகவானை எவ்வளவு கெஞ்சினாலும்/கொஞ்சினாலும் மழை நிற்காது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அப்பாவிடமிருந்து மறுபடியும் அறிவிப்பு வரும்: "இனிமே மழை நின்னாலும் சினிமாவுக்கு போகவேண்டிய நேரம் தாண்டிருச்சு. அதனால, அடுத்த ஞாயிறு பார்க்கலாம்"

    புஸ்ஸ்ஸ்...

    இந்தக்கதையில் வரும் 'அடுத்த ஞாயிறு'க்கும், 'ஜூலை-8' க்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

    என்னமோ தோணிச்சு; சொல்லிட்டேன்! :)

    ReplyDelete
    Replies
    1. கச்சிதமாக கூறிவிட்டீர்கள்.

      Delete
  10. ----

    எமனின் திசை மேற்கு - மரண நகரம் மிசௌரி இதழை அடுத்து நான் பெரிது எதிர்ப்பார்ப்பது ALL NEW SPECIAL.

    காரணங்கள் - அருமையான கதைகள். கிராபிக் நாவல். க்ரீன் மேனார் மிகவும் வித்தியாசமான கதைக்களன் கொண்ட அருமையான கதை(கள்).

    ஷெர்லாக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இது பலரை கவரவில்லை என்பதால் இது தொடருமா எனத் தெரியவில்லை. தொடர்ந்தால் சந்தோஷமடைவேன்.


    தாமதம் ஆனாலும் தரமான ப்ரிண்டோடு படிக்க/பாதுகாக்கும் இதழாக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஜூலைக்காக வெயிட்டிங்....

    -----------

    ReplyDelete
    Replies
    1. RAMG75 : //ஷெர்லாக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இது பலரை கவரவில்லை என்பதால் இது தொடருமா எனத் தெரியவில்லை. தொடர்ந்தால் சந்தோஷமடைவேன்.//

      நானும் தான் :-)

      Delete
    2. ஸ்டீல்பாடி ஷெர்லக் மரண மொக்கை............ பக்கங்களை நிரப்ப வேறு ஏதாவது செய்யலாமே?

      Delete
  11. நான் எத்தனையாவதுங்க.......?

    ReplyDelete
  12. Dear sir,

    Thanks for your update on "almost all new special"
    After lucky luke special, we expect this special is going to be a sure hit.
    Please don't post cover design here, because the curiousity for seeing new cover design will be missing for everyone.

    I am very happy to see a graphic novel based on second world war. Day by day our comics looking more professional.
    Goodwork on baloon pagination. Going to be a nice collectors editon.

    Sir, kindly note, there are some people like me never mind delays in getting the best quality of work.
    Quality... that is the most expected thing in our comics. I can see that in this uploaded pages.
    Thanks for all your efforts!

    ReplyDelete
  13. I like steel body sherloc ,why we going to stop?

    ReplyDelete
    Replies
    1. kanagasundaram : Depends on what a majority of our readers feel !

      Delete
    2. ஸ்டீல்பாடி ஷெர்லக் மரண மொக்கை............ பக்கங்களை நிரப்ப வேறு ஏதாவது செய்யலாமே?

      Delete
  14. My expectation is as follows
    1. Green Manor
    2. new cowboy story

    Not a big fan of graphic novels, because you need to be in a particular mood to read the graphic novels. Its similar to watching an award winning movie :-) But after reading the graphic novel it will give a complete satisfaction.

    ReplyDelete
  15. எடிட்டரின் இப்பதிவை...
    * பின்னூட்டமிட்டு தெரியப்படுத்திய நண்பர் Radja அவர்களுக்கும்,
    * SMS அனுப்பித் தெரியப்படுத்திய நண்பர் 'டெக்ஸ்' விஜயராகவனுக்கும்

    நன்றிகள் பல!

    ReplyDelete
  16. வித்தியாசமான கதைகளை கொண்டு வருகிறது.
    ஆர்ட் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது..

    GREEN MANOR - மனித மனத்தின் வக்கிரங்களை 5 6 பக்கங்களில் பல திருபங்களுடன் எடுத்துக்கொரும் கதைதொடர். ஆங்கிலத்தில் படிக்கும் பொழுது என்னை மிகவும் கவர்ந்தது.

    COMANCHE - டைகர் கதைகள் அளவிற்கு இருக்குமா தெரியவில்லை.ஆனால் டைகருக்கு போட்டி என்று நீங்கள் கூறியதால்...:)

    பிரளயத்தின் பிள்ளைகள் - எமனின் திசை மேற்கு ஏற்படுத்திய ஒரு பாதிப்பை தொடர்ந்து இக்கதைக்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

    ஸ்டீல் பாடி ஷெர்லாக் - No Comments :(

    ReplyDelete
  17. எடிட்டர் சார்,

    'தோட்டா தேசம்' 15 பாகங்கள் கொண்ட கெளபாய் தொடர் எனும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது! அதிலும் ஒரு அழகாக யுவதியை சுற்றிப் பிணையப்பட்ட கதை எனும்போது நாக்கு குற்றாலமாவதைத் தடுக்க முடியவில்லை! ஹிஹி!

    ஒரே ஒரு வேண்டுகோள்! அந்த யுவதிக்கு(ம், எனக்கும்) வயதாவதற்குள் சட்டுபுட்டு தொடரை முடித்துவிடுங்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. 'பிரளயத்தின் பிள்ளைகளை' உருவாக்கிட அதன் ஓவியர் 4 ஆண்டுகளை விழுங்கியிருக்கிறார் எனும்போது கதையைக் கண்டுவிடும் ஆவல் இன்னும் அதிகரிக்கிறது! ஒரு உணர்வுப்பூர்வமான ஓவியத் தொகுப்பு தயாராகிவருகிறது என்று சொல்லுங்கள்! (ரசித்து ரசித்துப் பதிவுபோட நண்பர் ராஜ் முத்து குமார் ரெடியா?)

      Delete
    2. Erode VIJAY : குற்றாலத்தில் வெள்ளம் கரை புரண்டோடி வருகிறதாம் ! இந்த சேதிக்கும் , உங்கள் நாக்கிற்கும் எந்த சம்பந்தமும் நிச்சயம் இல்லை - believe me !

      பேப்பரில் பார்த்தேன் - சொல்லணும் என்று தோணுச்சு !

      Delete
    3. @ஈரோடு விஜய் : கரும்பு தின்ன கூலியா , நான் எப்போவோ ரெடி

      Delete
  18. Replies
    1. @ ஷல்லூம்

      'ஆல் நியூ ஸ்பெஷல்' பற்றி எடிட்டர் பதிவுபோட்டிருக்கார் - என்று நான் ஃபோனில் சொல்லி முடிப்பதற்குள் 'அப்படீன்னா நான் இப்பவே கொரியர் ஆபீசுக்குப் போறேன்'னு கத்திக்கிட்டே வேகமா ஓடிட்டார்! :)

      Delete
    2. //'அப்படீன்னா நான் இப்பவே கொரியர் ஆபீசுக்குப் போறேன்'னு கத்திக்கிட்டே வேகமா ஓடிட்டார்! :)//

      ஹா ஹா ஹா!

      Delete
    3. எல்லாம் நெட்டின் கைங்கரியம் ! இனி தொடர்ந்து வருவோம் ஆசிரியரின் பாதையில்....

      Delete
  19. @ friends : நண்பர்களே, இம்முறை வரவிருக்கும் புதுக் கதைகள் அனைத்துமே வழக்கமான டமால்-டுமீல் பாணிகளுக்கு அப்பாற்பட்ட ரகங்கள் !

    'தோட்டா தேசத்தில் ' டைகரின் பரபரப்பைத் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும் ;

    "பிரளயத்தின் பிள்ளைகள் " - "எமனின் திசை மேற்கில்" போலொரு ஆக்க்ஷன் கதை பாணியில் இருந்திடப் போவதில்லை ! மறந்து போனதொரு யுகத்தின், வலி நிறைந்த பக்கங்களை யதார்த்தமாய்ப் பார்த்திட நினைக்கும் மெள்ள நகரும் ஒரு முயற்சி - அசாத்தியச் சித்திரத் தரத்தோடு !

    "கொலை செய்வீர் கனவான்களே" முதல் பார்வையில் கார்டூன் போல் தோன்றுவது நிச்சயம் - ஆனால் அதன் ஆழம் படிக்கப் படிக்கவே புலனாகும் !

    ALL NEW SPECIAL -ஐ ஒரு வகையில் - ஒரு விஷப் பரீட்சை என்று கூட சொல்லிடலாம் - ஆனால் பரந்து, விரிந்த காமிக்ஸ் உலகின் புதிதான சில பரிமாணங்களை ரசிக்கும் ஆர்வத்தில், இம்முயற்சியிலுள்ள ரிஸ்க் பின் செல்லுகின்றது ! As always, fingers crossed !

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் விஷ பரீட்சைகளே விபரீத வெற்றிகளை குவிக்கும்... ஒரு புது விதமான கதைதேடல்களை நோக்கி பயணப்படும் பொழுது, இவ்விதமான முயற்சிகள் மிகவும் அவசியமான ஒன்றே....

      இவ்விதமான முயற்சிகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு... இன்னும் எவ்வளவு காலம் தான் அரிசோனா பாலைவனத்திலேயே உழன்று திரிவது .... ◄☼☼☼►

      Delete
    2. @Edi Vijayan

      no tension, we are not setting expectations

      i have strong feeling this book will be a super hit

      where is our second book for the month of July

      silenta irunda vitruvoma.....

      sollitu senja surprise venumnu solluvom
      sollama seiyyalamnu nenacha munadiyae teriyanumnu thonathonappom

      Delete
  20. ஆல் நியு ஸ்பெஷல் ட்ரைலர் எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது. புத்தகத்தை விரைவில் காண ஆவலாக உள்ளது!

    ReplyDelete
  21. ஆல் நியூ ஸ்பெஷலில் இடம் பெற்றுள்ள கமான்சே கதையை சில வருடங்களுக்கு முன் பிரென்ச் புத்தகத்தில்
    கண்ட போது இக்கதையை தமிழில் சரியான விகிதத்தில் பயன்படுத்தவில்லையே என்று ஆதங்கப்பட்டிருந்தேன். அந்தக் குறையை தற்போது தீர்த்து வைத்துள்ளார் நமது எடிட்டர். டேஞ்சர் டயபாலிக் போல கமான்சேவும் இரண்டாவது ரவுண்டில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  22. Good news sir! thanks for the update!

    ReplyDelete
  23. நண்பர் comic lover ராகவன் அவர்களுக்கு ,உங்களுடைய முந்தையப்பதிவில் நீங்கள் கூறியிருந்த கருத்துக்களை நானும் ஆமோதிக்கின்றேன் தான் .நமது முந்தைய வண்ண இதழ்களில் இருந்த தரம் சமீபத்திய இதழ்களில் குறைந்துபோனது உண்மை .அதற்காக நாம் ஆசிரியரிடம் முறையிடலாம் .ஆசிரியரும் கவனிக்க கடமைப்பட்டவர் தான் .மேலும் குறிப்பிட்ட ஒருவர் தான் பலபெயர்களில் ,குட்டையை குழப்புபவர் என்ற சந்தேகம் எனக்கும் உண்டு உங்களைப்போலவே .....ஆனால் நண்பரே ,இங்கு கேள்வி கேட்போர் எவராக இருப்பினும் ,கேட்கப்படும் விஷயம் ஆக்கப்பூர்வமாக இருந்திடும் பட்சத்தில் ஆசிரியரின் பதில் விளக்கம் இடம்பெறுகிறது .யாரிடமும் காட்டமாக நடந்துக்கொள்ளாமல் பெருந்தன்மையுடன் நடந்துக்கொள்ளும் ஆசிரியரை ,குறிப்பிட்ட ஒருவரின் ஜிங்குச்சாங்களுக்கு ஏன் பதில் அளிக்கிறீர்கள் நீங்கள் வினவி இருப்பது துரதிர்ஷ்டவசமானது .3G ,4G என்று புயல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த யுகத்தில் தமிழில் காமிக்ஸ் எனும் நோஞ்சான் குழந்தையுடன் லாபமற்ற இந்தப்பயணத்தை நமக்காக மேற்கொண்டிருக்கும் நமது ஆசிரியருக்கு நாம் பக்கபலமாக இருப்பது தான் நாம் அவருக்கு செலுத்தும் நன்றியாக இருக்க முடியும் ...நண்பரே ...விமர்சனம் செய்யுங்கள் ..எங்களுடனேயே இருங்கள் ...விலகிவிடாதீர்கள் ...

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : "நன்றி செலுத்துவது" என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள் ; வேண்டாமே ப்ளீஸ் ! இது நண்பர்களோடு சேர்ந்து செல்லும் பிக்னிக் போன்றதொரு அனுபவம் ! Let's just have fun !

      Delete
    2. அருமையாச் சொன்னீங்க அகமத் பாட்சா! (துவேசங்களை விடுத்து) காமிக் லவர் திரும்புவாரெனில் அவரை வரவேற்க நானும் காத்திருப்பேன்.

      வருவார். எனக்கு நம்பிக்கை உள்ளது!

      Delete
    3. @comic lover, I believe you were/are a Sincere fan of our comics. I don't know wat happened in FB, but whatever, the only person u shud consider is our editor and nvr heed to "anyone" else.
      நீங்கள் கோவப்பட்டு செல்வது எடிட்டர் மேல் உள்ள கோபத்தினால் அல்ல, உங்களிடம் எதிர் விவாதம் செய்தவர்களிடம்.விவாதங்களில் ஈடுபடும் போது , எதிர்வாதங்களில் சங்கதி இல்லாவிடில் வாதம் செய்பவரை அசிங்க படுத்தி பின்வாங்க செய்வது தான் எதிர்வாதி இன் ஆயுதம். அந்த ஆயுதத்திற்கு பலி ஆகிவிடதீர்.அதேபோல் யாரும் இங்கு அடிவருடிகளோ, ஜால்ராகளோ அல்ல, உங்களை போல் மற்றும் ஒரு comics Lover/கள் தான்.

      (ஒரு சிலர் அல்லது ஒருவரோ(பல பெயரில்), அவர்கள்/அவர் மன சிலேஷங்களை கொட்ட பலரை வம்புக்கு இழுக்கிறார்/கள் ) Let's ignore them and rock our own comics blog, which is the ONLY factor which keeps our editor going..

      Delete
    4. இப்படி ஒரு ஒருவராக ப்ளாகில் இருந்து கழண்டு கொண்டால் நாளை தரமான விமர்சனம், எழுச்சி (excitement) இல்லாமல் blog தோய்ந்து விட வாய்ப்புள்ளது, Which in-turn will affect Editor's interest. (With Due respect to Editor).

      Delete
    5. comic lover kobapatthuku ponarunngara karanam enakku puriyavillai marupadiyum previous blogs padichhupartaenn

      onnumae puriyalae inda ulagathilae......

      comics padinga jollya irunga
      pidikkalaiya freeya vidunga
      its a free world

      already that that man that that problem freeya vidunga

      reading about our interest is interesting then why why tension

      Delete
  24. ALMOST NEW SPECIAL வரும் 8 ஆம் .தேதி வரும் போது தனியாக வருகிறதா இல்லை எதையாவது துணைக்கு அழைத்து வருகிறதா

    ReplyDelete
  25. நண்பர்களே நான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் .தொலைதொடர்பு .பிரிவில் மீண்டும் பணிக்கு செல்லவுள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் ஃபெர்னாண்டஸ்!

      'இன்டர்வியூ ஊத்திக்கிச்சு'னு என்னிடம் சொன்னது பொய்யா?

      சட்டுபுட்டுனு ஈரோடு பக்கம் வந்து ஒரு ட்ரீட் கொடுத்துட்டு போய் (புது) வேலையை கவனிங்க! :)

      Delete
    2. இன்டர்வியு ok ஆயிடுச்சு என்றுதான் சொன்னேன் .உங்களுக்கு மாறி கேட்டிருக்கும் .வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

      Delete
    3. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ்) : All the very best !

      Delete
    4. வாழ்த்துக்கள் நண்பர் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ்... அப்படியே ஈரோடு பக்கம் வரும்பொழுது எங்களுக்கும் சொல்லி அனுப்புங்க ....

      Delete
    5. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ்) @
      All the very best and wish you good luck(luck) :-)

      Delete
    6. வாழ்த்திய, வாழ்த்த நினைத்த அனைவருக்கும் நன்றி

      Delete
    7. வாழ்த்துக்கள்!!

      Delete
    8. வாழ்த்துக்கள் நண்பா. Enjoy

      Delete
    9. வாழ்த்துக்கள்

      Delete
  26. புதிதாய் இணைக்கப்பட்டுள்ள ஸ்கேன்கள் அருமை! சமீபத்தில் உணர்ந்த விஷயம்: இத்தாலி, பிரான்ஸ் நாட்டவர்களுக்கு Western genre மீது இருக்கும் ஆர்வத்தில் துளி அளவு கூட இன்றைய தலைமுறை அமெரிக்கர்களுக்கு இருப்பதாய் தெரியவில்லை! ஆனால், இந்த விஷயத்தில் நம் தமிழ் காமிக்ஸ் வாசகர்களை அடித்துக்கொள்ள முடியாது! என்னதான் புதிய களங்களில் காமிக்ஸ் படித்தாலும் வெஸ்டர்ன் மீதான மோகம் குறைந்து தொலைய மாட்டேன் என்கிறது! :) தோட்டா தேசத்தின் துவக்கக் காட்சியே பிரமாதப் படுத்துகிறது (சித்திரங்கள்)!

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : தோட்டா தேசம் ஒரு முழு நீள visual treat !

      Delete
    2. "வெஸ்டர்ன் மீதான மோகம் குறைந்து தொலைய மாட்டேன் என்கிறது!" - totally agree

      yaarum ennai thittadeergal but tex mattum konjamai alukkiradu :-)

      Delete
  27. கருப்பு வெள்ளை கலக்கல் ஸ்பெஷல்
    1.டெக்ஸ் வில்லர்... பெரிய சாகசம்
    2. மாடஸ்டி பிளைஸி... வில்லி கார்வின்
    3.மர்ம மனிதன் மார்டின்
    4.விங் கமேண்டர் ஜார்ஜ்
    5.டிடக்டிவ் ஜெரோம்(b/w மீண்டும் ஒரு வாய்ப்பளிப்போம்)
    6. சி.ஐ.டி .ராபின்....
    7.காரிகன்
    8.கருப்பு கிழவி...நண்பர் ஜான் சைமனுக்காக
    +++++++ டேஞ்சர் டயபாலிக்.. தனி இதழாக (cowboy spl உடன் lucky luke தாயில்லாமல் டால்டன் இல்லை வந்தது போல

    ReplyDelete
  28. சமிப காலமாக, சிலவகை சிரமங்களால் என்னால் இங்கு குறிப்பிட்ட நேரத்திற்கோ அல்லது ஆசிரியர் பதிவு வந்தவுடனோ வர முடிவதில்லை. ஆனால் அதற்குள் இங்கு யாரவது குட்டையை குழப்பி விடுகிறார்கள். அதற்காக இந்த விடியலில் ஒரு அவசர பதிவு.

    ALL NEW SPECIAL ஜூலை 8-ல் டெஸ்பாட்ச் செய்யப்படும் என்று கூறியுள்ளீர்கள். இந்த மாதம் முழுவதிற்கும் இந்த ஒரு புத்தகம் தான் என்பதாலும், புத்தகம் கையில் கிடைத்தவுடன் நம்மில் பெரும்பான்மையானவர் அன்று இரவிற்குள் படித்து முடித்து விடுவோம் என்பதாலும், இங்கு ஒரு விஷயத்தில் ஆசிரியர் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் ;

    சார், குறிப்பிட்ட நாளுக்குள் அனுப்பிட வேண்டும் என்பதால் தாங்களும், தங்கள் அலுவலக பணியாளர்ளும் அதிகமாக சிரமப்பட வேண்டாம். ஏனெனில் கால அவகாசம் நமக்கு மன அமைதியையும், நேர்த்தியையும், வேலையில் உற்சாகத்தையும் கொடுக்க வல்லமை வாய்ந்தது என்பது தங்களும் அறிந்ததே. இரண்டு மூன்று நாட்கள் தாமதமாக எனக்கு புத்தகம் வந்தாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் புத்தகம் வந்தவுடனே நான் முழுவதுமாய் படித்து முடித்து விட்டு அடுத்த மாதத்திற்கு காத்திருப்பதையே ஒவ்வொரு மாதமும் வழக்கமாக கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த பதிவின் கருத்துகள் மிகவும் யதார்த்தமானவை என்பது தங்களுக்கும் தெரிந்திருக்கும்..!

    ReplyDelete
  29. @ மிஸ்டர் மரமண்டை

    தேதி காலாண்டர்களைத் தூக்கிக் கடாசிவிட்டு நாற்பது ஆண்டுகாலமாக பங்ச்சுவாலிட்டி-ன்னா என்னவென்றே தெரியாமல் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் இப்பத்தான் ஒருவழியா சரியான பாதைக்குத் திரும்பியிருக்காங்க (எந்த போதி மரத்தடியில் இளைப்பாறினாங்களோ தெரியலை!).

    அவங்களை இப்படியே விட்டுடுவதுதான் நல்லதுன்னு தோணுது!

    ReplyDelete
  30. கதை தெரிவுகள், அடுத்த வெளியீடு குறித்த அறிவிப்பு எல்லாம் அட்டகாசமாய் இருந்தாலும் ஒரு ஸ்பெஷல் இதழ் என்பதால் 3 கதைகளாவது இருக்கவேண்டும் என்று தீர்மானிக்காமல், 'கொலைசெய்வீர் கனவான்களே' கதையை உடைத்து அடுத்த இதழுக்கும் கொண்டுபோகாமல் ஒரே இதழில் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏன் இப்படியான உடைத்தல்கள் அவசியப்படுகின்றன என்பது புரியவில்லை. புதிய முயற்சி எடுப்பது என்று தீர்மானித்துவிட்டால், முழுமையாகவே இறங்கிடவேண்டியதுதான்! முழு பாகங்களும் ஒன்றாகவே வந்துவிட்டால் ஒரு முழுத் திருப்தியும் வந்திருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : கதைகளைப் படியுங்கள்....காரணம் புரியும்..!

      Delete
    2. நிச்சயமாக சார். ஆங்கிலத்தில் இதுவரை படிக்க கிடைக்காதது 'பிரளயத்தின் பிள்ளைகள்' தான். ஆயினும் தமிழில் படிப்பது தனி சுகம்! COMANCHE கதை நீங்கள் சொல்வதுபோல மிக வித்தியாசமானதே! பல தடவை மறுபடி மறுபடி ரசித்து வாசிக்க வைத்தது. நண்பர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்! புதிய ஃபில்லர் கதாநாயகர்கள் (கார்ஃபீல்ட்...) இந்த இதழில் தலை காட்டுகிறார்களா?

      Delete
    3. Podiyan : Garfield அடுத்த மாதம் துவக்கம் !

      Delete
    4. கார்ஃபீல்ட்????????
      இந்த வருட காமிக்ஸ் உலகின் அற்புதத் செய்தி

      Delete
  31. ஓடு மீன் ஓட உரு மீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு..

    ஹி ஹி ஹி "சிங்கம்" பொடனீல ஒரே போடா போட்டுருச்சு..

    ReplyDelete
  32. மதிப்பிற்குறிய ஆசிரியர் அவர்களுக்கு

    அவ்வப்போது அத்திபூத்தார்போல இங்கு உங்கள் பதிவுகளை வாசிப்பதுண்டு பல முறை விமர்சனம் எழுத முடியாமல் போனாலும் சமீபத்திய டெக்ஸ்வில்லரின் கதைகளை படித்த பின்னர் எழுதாமல் இருக்க முடியவில்லை.

    தகுந்த வாகன வசதிகள் இல்லாத காலகட்டத்தில் பவனிவரும் இந்த கெள பாய் கதைகளை படிக்கும்பொழுது ஏதோ நாமும் அதேபோல் பாலை வனத்தில் பரிதவிப்பதுபோலவும் , தேனீர் தயாரித்து பருகுவதுபோலவும் நினைவு வருவது கதையின் உயிரோட்தை பரைசாற்றுகிறது .

    சமீப வெளியீடுகளில் முதல் இடமாக நான் கருதுவது சிகப்பாய் ஒரு சொப்பனம், இரண்டாம் இடம் மற்ற இரு இதழ்களுக்கும். பூத வேட்டை கதை மெதுவாக நகர்ந்தாலும் ஒரு புலன் விசாரணை கதை போல் இருந்தது . வண்ண இதழில் தான் டெக்ஸ் சில இடங்களில் மிகவும் கிழத்தன்மையுடன் வரயப்பட்டுள்ளார்.மூன்று கதைகளும் தொடர்ந்து அமானுஷ கதைகளாக அமைந்ததும் ஒரு சிறப்புத்தான்.

    கார்சரை கிண்டலடிக்கும் இடங்கள் சூப்பர்


    டெக்ஸ் என்ற பெயர் சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டிப்போடும் . அதுவும் உங்களின் மொழி நடையில் அசாத்திய பலத்துடன் மிளிரும் என்பதனை சொல்லவும் வேண்டுமா?

    டெக்ஸின் அடுத்த கொண்டாடம் எப்பொழுது ?



    வாசக சகோதரி

    S.இசை சங்கரி

    ReplyDelete
    Replies
    1. Our TEX is an evergreen Super star. While reading his story, we would melt into his world!

      Delete
  33. நண்பர்களே, நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பது இங்கு அனைவருக்கும் தெரியும். ஆனால் நாணயத்திற்கு மூன்று பக்கம் என்று நான் கூறினால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்..? அந்த மூன்றாவது பக்கம் தான், பணத்தை நாம் எப்படி செலவு செய்கிறோம் என்பதாகும். கூரான கத்தியை வைத்து ஆப்பிளை வெட்டுகிறோமா ? அல்லது ஆட்டை வெட்டுகிறோமா ? அல்லது அடுத்தவரை பயமுறுத்துகிறோமா ? என்பதை போன்ற எளிதான சித்தாந்தம் தான் அந்த மூன்றாவது பக்கம்..!

    இந்த சிந்தனையின் வெளிப்பாடாக இங்கே ஒரு பதிவிட்டால் என்னவென்று தோன்றியது. பயம் வேண்டாம் நண்பர்களே, என் பதிவு முழுக்க முழுக்க ஆசிரியரின் இந்த பதிவு சம்பந்தமாகவேயன்றி வேறு யாதுமில்லை என இங்கு உறுதி கூறுகிறேன். ஒரே விஷயத்தை நாம் எப்படி மூன்று விதமாக, நம் அறிவுக்கும் நம் மனோநிலைக்கும் ஏற்றபடி உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதே இதன் உள்கருத்து என்பதால் இதில் உள்குத்து எதுவுமில்லை வாசகர்களே..!

    இதன் அடிப்படையில் வருவது 1.சகோதரத்துவம் 2.ஒற்றுமை 3.புரட்சி என்கின்ற தலைப்பில், எனக்கு நேரம் கிடைக்கும் நேரத்தில் பதிவிட விருப்பம் கொண்டுள்ளேன். தொடர்வது ஆசிரியரின் பதிவு சம்பந்தமாக என்னுடைய கருத்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. 1.சகோதரத்துவம் :

      பற்றி எரியும் பாலைவனம், நரகத்தின் எல்லையில் மனதில் மிருகம் வேண்டும் என வரம் வேண்டி தோட்டா தேசத்தில், பிரளயத்தின் பிள்ளைகளாக நாம் பிறக்காமல் இருக்க இறைவன் தந்திட்ட வரத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்து, ஒரு சிப்பாயின் சுவடுகள் போன்றதொரு சோகத்தை எதிர்கொள்ளாமல் மேற்கே ஒரு சுட்டிப் புயல் லக்கி லூக்கை போன்ற திறமையும், பரந்த மனப்பான்மையும், மற்றவர்களுக்கு உதவும் குணமும் கொண்டு நம்மிடம் உள்ள அறியாமை, பொறாமை, ஈகோ, சுயநலம், தற்பெருமை ஆகியவைகளை கொலை செய்வீர் கனவான்களே...!

      Delete
    2. மிஸ்டர் மரமண்டை : சூழ்ச்சி ...சுனாமி என்பன கனத்த வார்த்தைகள் ...நிச்சயமாய் காமிக்ஸ் காதலில் வாழும் நண்பர்களுக்கு அவை பொருந்தாது !

      இங்கிருப்பினும், பிறிதெங்கு இருப்பினும் , நாம் அனைவருமே ஒரே அடையாளத்தைச் சுமந்து நிற்கும் கூட்டம். Let's keep things simple !

      Delete
    3. மிஸ்டர் மரமண்டை : தவறாய் எடுத்துக் கொள்ளாதிருப்பின், சின்னதாய் ஒரு அபிப்ராயம் :

      உங்களது புலமைக்கும், விஷய ஞானத்திற்கும் நிறையவே சான்றுகள் ஆங்காங்கே பதிவு செய்துள்ளீர்கள் ! எனினும் (காமிக்ஸ் சம்பந்தப்பட்ட) சொல்ல வரும் கருத்தை சுலபமாய், சகஜமாய் பகிர்வதன் பலன் உங்களது complicated பாணியில் கிட்டிடுமா என்பதில் எனக்கு ஐயமே !

      யாரும் புரட்டாத அழகான புத்தகமாய் இருப்பதை விட, ஆர்வத்தைத் தூண்டும் சிநேகமான இதழாய் இருப்பது தேவலை என்றாகாதா ?

      தவிர,ஒரு பொதுத் தளத்தில் அபிப்ராயமாய் ஒரு விஷயத்தைப் பகிர்வதற்கும் ; அதனையே கருத்தாய் உரக்கச் சொல்வதற்கும் வேற்றுமைகள் உண்டு தானே ? நீங்கள் சொல்ல வரும் கருத்தில் உடன்பாடில்லாதோர்க்கு அவை நெருடலாய்த் தோன்ற வாய்ப்புகள் அதிகம் அல்லவா ?

      Delete
    4. தங்களின் பதில் என்னை மிகவும் சந்தோஷம் கொள்ளச் செய்கிறது. நன்றி சார்.

      //தவிர,ஒரு பொதுத் தளத்தில் அபிப்ராயமாய் ஒரு விஷயத்தைப் பகிர்வதற்கும் ; அதனையே கருத்தாய் உரக்கச் சொல்வதற்கும் வேற்றுமைகள் உண்டு தானே ? நீங்கள் சொல்ல வரும் கருத்தில் உடன்பாடில்லாதோர்க்கு அவை நெருடலாய்த் தோன்ற வாய்ப்புகள் அதிகம் அல்லவா// சத்தியமான வார்த்தைகள் சார். உங்களுக்கு நெருடலாகத் தெரியும் என் பதிவுகளை இனி நீங்கள் நீக்கி விடுங்கள்..!

      Delete
  34. "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வேண்டும் என்ற போராட்டதுடன் .......
    "ஆல் நியூ ஸ்பெஷல் "புத்தகத்திற்கு காத்திருக்கிறேன் .
    ஆனால் ...

    ஆசிரியர் போன பதிவிலே சொன்ன படி "மலர் " என்றால் "ஹீரோ "இருக்க வேண்டும் .இதில் அந்த "ஹீரோ " இல்லாததால் டெக்ஸ் ,லார்கோ.லக்கி புத்தகத்திற்கு போல ஒரு பரபரப்பும் ,எதிர் பார்ப்பும் இல்லை . ஆனால் ஒரு புது முகத்தின் திரை படம் வெளி வந்து "ஹிட் " ஆனவுடன் அந்த படத்தை பார்க்க ஆவல் வருமே ..அது போல "ஆல் நியூ ஸ்பெஷல் " என்னை திருப்தி படுத்துமா என்பதை காண இந்த "லோக்கல் " பரணி காத்து கொண்டு இருக்றேன் .

    ReplyDelete
  35. மறுபடி மறுபடி ஆசிரியரோட பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள ஏதோ சம்பந்தமிருக்கறாமாதிரியே கோர்த்து பின்னூட்டமிடுறது சில '' ''ங்களால மட்டுந்தான் முடியும்க! பிலீஸ், ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணுங்க!

    ReplyDelete
    Replies
    1. Bond2012 : கடுமை வேண்டாமே சார் !

      Delete
  36. E - Bay - ல் Top Rated seller என்ற அங்கீகாரம் நமது காமிக்ஸ் பெற்றுள்ளது நண்பர்களே ...
    எடிட்டர் மற்றும் நமது டீம்க்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. kanagasundaram : நீங்கள் சொல்லித் தான் எனக்கே சேதி தெரியும் ! நன்றிகள் உங்களுக்கும் , இதை சாத்தியமாக்கிய நண்பர்களுக்கும் !

      Delete

  37. எடிட்டருக்கு எனது வேண்டுகோள்-

    1. ஷெர்லாக் வோம்ஸ் கதை தொடரை நிறுத்தி விட வேண்டாம், எனக்கு மிகவும் பிடித்த கதை வரிசை
    (பல வருடங்களுக்கு முன்னால் லயன் காமிக்ஸில் வாரிசு வேட்டை என்ற கார்டுன் தொடரில் வந்தவர் தானே இவர்)

    2. ஜில் ஜோர்டன் மற்றும் ஜேரோம் கதை தொடர் தொடர வேண்டும்.

    3. டெக்ஸ் வில்லர் கதை தொடரில் வண்ணத்தில் மீண்டும் வெளிவந்தவைகளை மறுபதிப்பாக வெளியிடலாமே எ.க- கழூகு வேட்டை, டிராகன் நகரம், பவளச்சிலை மர்மம், வைகிங் தீவு மர்மம், கார்சனின் கடந்த காலம் etc....
    4. கறுப்பு வெள்ளையில் லயனில் வெளிவந்த கராத்தே டாக்டர் கதை தொடரை மீண்டும் தொடர முடியுமா?
    5. பேட்மேன், வேதாளன், சிஸ்கோ கிட்(ஜோஸ் லூயிஸ் சாலினாஸ்), ரிப் கிர்பி(அலெக்ஸ் ரேமன்ட்) மீண்டும் ஒர் சுற்று வருவார்களா?
    6. Asterix and TinTin என்ன ஆனார்கள்?
    7. தொர்கள் வருவாரா?

    ReplyDelete
    Replies
    1. Aslam Basha :

      1.அவர் ஹெர்லக் ஷோம்ஸ் ; இவரும் அவரும் ஒருவரல்ல !

      2.ஜில் ஜோர்டான் & ஜெரோமின் முடிவுரைகள் நிச்சயம் எழுதப்படவில்லை ! கவலை வேண்டாம் !

      3.631 புதுக் கதைகள் கொண்ட டெக்ஸ் வரிசையில் நாம் இது வரை முயன்றிருப்பது 50+ கதைகளையே ! பரந்த கடலாய்க் காத்திருக்கும் புது அனுபவங்களை பிரதானமாய் பார்த்திடுவோமே ?

      4.கராத்தே டாக்டர் அன்று போட்ட மொக்கையே ஓவர் ; அவருக்கு மீண்டுமொரு வாய்ப்பென்பது ரொம்பவே ஓவர் ஆகிப் போகும் !

      5.கேள்வி எண் 3-க்கான பதிலே இதற்கும் பொருந்துமென்று நினைக்கிறேன்.

      6.Asterix & Tintin -ஐ எட்டிப் பிடிக்க நமது தற்போதைய உயரம் போதவில்லை ! நிறையவே நாம் Complan பருக வேண்டியுள்ளது !

      7.இப்போதைக்காவது No !

      Delete
    2. // ஜில் ஜோர்டான் & ஜெரோமின் முடிவுரைகள் நிச்சயம் எழுதப்படவில்லை ! கவலை வேண்டாம் ! //

      ஜெரோம் ஐ விட ஜில் ஜோர்டான் அருமை. ஜில் ஜோர்டான் க்கு மீண்டும் வாய்ப்பு கண்டியப்பாக கொடுக்கலாம் சார் ...

      Delete
    3. சார் கராத்தே டாக்டர் குறித்த உங்கள் கருத்துக்களை வன்மையாய் எதிர்க்கிறேன்!

      Delete
    4. மொத்த டெக்ஸ் கதையும் தமிழில் வர எவ்வளவு வருடங்களாகும்... இப்பவே கண்ண கட்டுதே..
      பழைய கதைகளின் மறுபதிப்பில் இரண்டு டெக்ஸ்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

      Delete
    5. //டெக்ஸ் வில்லர் கதை தொடரில் வண்ணத்தில் மீண்டும் வெளிவந்தவைகளை மறுபதிப்பாக வெளியிடலாமே எ.க- கழூகு வேட்டை, டிராகன் நகரம், பவளச்சிலை மர்மம், வைகிங் தீவு மர்மம், கார்சனின் கடந்த காலம் etc....// Pleaseeeeeeeeee

      Delete
    6. Note this sir...I m sure this is better than captain tiger's recent torcher... ha...ha...

      Delete
  38. விஜயன் சார், ஸ்டீல் பாடி ஷெர்லாக் வோம்ஸ், ஜில் ஜோர்டன் மற்றும் ஜேரோம் கதைகள் நன்றாக உள்ளன!

    இவைகளை ஒரு சிலர் சரி இல்லை என கூறுவதை கொண்டு "voting" மூலம் முடிவு செய்வோம் என கூறுவது சரி இல்லை.

    இணைய தளத்திற்கு வராத வாசகர்களின் முடிவையும் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்!

    ஆனால் இது போன்று புதிய கதைகளுக்கு எங்களிடம் இப்போதே கருத்துகளை கேட்காமல், 2-3 கதை வெளி இட்ட பின் முடிவு செய்வதுதான் நன்று.

    ReplyDelete
  39. BP ஏறுவது எனக்கு மட்டும் தானா ?

    ReplyDelete
    Replies
    1. "BP" ஜாஸ்தி ஆகாம பார்த்துகோங்க விஜய், உடம்புக்கு நல்லது இல்ல :-) !

      Delete
    2. சூப்பர் விஜய் : Relax :-)

      Delete
    3. எங்களுக்கும்தான் நண்பரே!

      Delete
  40. விஜயன் சார், என்னை பொறுத்தவரை இது போன்ற முயற்சிகள் வருடம் ஒருமுறை கண்டிப்பாக தேவை!
    அது போல வருடம் ஒருமுறை B&W ஸ்பெஷல் தேவை.

    கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு ... டண்டனக்க டண்டனக்கா


    ReplyDelete
    Replies
    1. அதுல கருப்பு கிழவி கதைகள் கட்டாயம் வேண்டும். :D

      Delete
    2. Raj Muthu Kumar S @ கருப்புல நம்ப "கருப்பு" கதை இல்லாமலா :-) இல்லேன்னா நமக்கு சூனியம் வச்சிடும் :-)

      Delete
    3. +1

      வருடத்திற்கு இருமுறை கருப்பு வெள்ளை ஸ்பெஷல் வந்தால் இன்னும் சூப்பர்

      Delete
    4. நம்ப ஆசிரியர் வேற புளியோதரை பாயசம் இன்னு டயலாக் சொல்லிக்கிட்டு இருக்குற நேரத்துல, முதல்ல ஒன்னு வரட்டும், ஒன்னு வந்தாவே நமக்கு ஜாஸ்தி நண்பர்களே :-)

      Delete
  41. காலதாமதம் என்றவுடன், நண்பர் விஜய் சொன்ன மாதிரி புஸ்ஸ் என்ற ஏமாற்றம் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் தோட்டா தேசம் முதல் பக்கத்தை பார்த்தவுடன் ஏமாற்றம் பறந்து எதிர் பார்ப்பு வந்து விட்டது. கோச்சு வண்டி நம்மை நோக்கி ஓடி வரும் பிரம்மிப்பை ஏற்ப்படுத்தி விட்டது. பின்னால் தெரியும் குட்டை மரங்கள் ஆகா

    கிரீன் மனோர் கதை எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாக தெரிகிறதே ? இந்த ரெண்டு பக்கத்தை வைத்து யாரென்று கண்டு பிடித்து விட மாட்டார்களா? பிரளயத்தின் பிள்ளைகள் மனதை கனக்க வைக்கப் போவது உறுதி என்று நினைக்கிறேன்.

    மிஸ்டர் மரமண்டை சொன்ன ரிலாக்ஸ் ஆக காமிக்ஸ் கொடுக்கும் விஷயத்தை காதில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். நமக்கு வேலை நிறைய இருக்கு.

    ஆல் நியூ ஸ்பெஷல் இரு விஷப் பரீட்சை என்று சொனாலும், டெஸ்டிங் தி வாட்டர் என்ற முறையில் தேவை என்றே கருதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @ராஜ்,

      புத்தகம் வந்தவுடன் உங்களுக்கு நிறைய வேலை இருக்கும் போல இருக்கே ?

      Delete
  42. To: Editor,

    சரியாகச் சொன்னீர்கள் சார். இங்கே சில குழப்பமான பின்னூட்டமிடுபவர்களால்தான் வீண் சர்ச்சைகளும், பல நண்பர்களின் பங்களிப்பு இல்லாமல்போனதும் நடந்துள்ளது. இடையில் தளமும் சிக்கலுக்குள்ளானது. நீங்கள் இவ்வளவு தெளிவாக எடுத்துச்சொன்னபின்பாவது அவர்கள் புரிந்துகொள்கிறார்களா என்று பார்ப்போம்.

    எதற்காக இத்தகைய அதிகப்பிரசங்கித்தனமான மற்ற அனைவரையும் வெறுப்பேற்றத்தக்க பின்னூட்டங்கள் என்பது எனக்குப் புரியவில்லை. உங்களது இந்தப் பின்னூட்டத்தின்மூலம் ஒரு முற்றுப்புள்ளி விழட்டும்! இந்தத் தளமும் குழப்பங்களின்றி தெளிவாக காமிக்ஸ் மட்டும் பற்றி பேசுவதாக இருக்கும். இன்று இங்கே வராமல் விலகிப்போய்விட்ட நண்பர்கள் அனைவரும் மீண்டும் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் அது வழிவகுக்கும்.

    இதற்குப் பின்னரும் இது தொடருமாயின், மேலே Bond சொல்லியிருப்பதையே நானும் வழிமொழிய வேண்டிவரும்!

    (பல நாள் கடுப்பு இன்று வார்த்தைகளாய் வெளிவருகிறது உங்கள் பின்னூட்டம் கண்டதும்)

    ReplyDelete
  43. சார் தோட்டா தேசம் அருமை ! ஓவியங்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கின்றன!
    இருநூறு ரூபாய் வாங்கி வரும் ,இனிய கதைகளை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்!
    ஸ்டீல் பாடி மதியில்லா மந்திரியை விட தூக்கல், நகைச்சுவைக்கு பஞ்சமில்லை தொடருங்கள் வழக்கம் போல!

    ReplyDelete
    Replies
    1. பிரளயத்தின் பிள்ளைகள் கதைகளை படிக்கும் முன்னரே தலைப்பே கலங்க வைக்கிறது! அந்த சோக காவியம் வர எட்டு நாட்கள் அதிகரிப்பது அந்த சோகத்தின் வழியை இப்போதே உயர்த்தி விட்டது!

      Delete
    2. வாங்க நண்பரே !!! இன்டர்நெட் இணைப்பு சரியாகி விட்டதா ?

      Delete
    3. இப்போதுதான் சரியானது நண்பரே!
      உங்களுக்கு போட்டியாய் தோட்டா தேசம் தூள் கிளப்பும் போலுள்ளதே!

      Delete
    4. வரட்டும் நண்பரே, தனித்து நிற்பதை விட, ஆரோக்கியமான போட்டியில் ஒருவராக பங்கு பெறுவது சிறப்பு :)

      Delete
  44. எங்கள் அன்பிற்கினிய ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கு,

    இது தனியொருவனின் வாய்ஸ் மாத்திரம் அல்ல, ஏனைய வாசகர்களின் மைண்ட் வாய்ஸூம் கூட!

    இந்த வலைப்பூதனில் மிஸ்டர் மரமண்டை என்பவர் இடைவிடாமல் இன்னபிற வாசகர்கள் மேல் குற்றங்கள் சாட்டியும், சந்தேக கணைகளை தொடுத்தும், அர்த்தமற்று உளறிக்கொட்டியும், பிரித்தாளும் சூழ்ச்சிகள் பல செய்தும், நாட்டாமை செய்தும், பெரும் குழப்பங்கள் உண்டு பண்ணுகிறாரே? மீள்வருகை புரிந்த சில வாரங்களில் பலருடன் வம்பு வளர்த்துள்ளாரே? அன்னாரின் அட்டகாஷ் தாளாமல் நெடுநாளைய வாசகர்களின் வருகை அருகி வருவதையும், தவறி வருவோரும் ஏதும் பதியாமல் விலகி இருப்பதையும் தாங்கள் உணரவில்லையா?

    அகத்திலே நஞ்சை விதைத்து, புறத்திலே எங்கள் ஆசிரியரை புகழ்வது போல் நாடகமாடி, எஞ்சிய வாசகர்களை வலைப்பூ அண்டவிடாமல் இடைமறிக்கும் இந்த உள்நாட்டு அலிஸ்டரின் கொட்டத்தை தாங்களே தட்டிக் கேட்காவிடின் வேறு எவர்தாம் கேட்பர்?

    அநாகரீக பதிவுகளை தாண்டி செல்லல் வேண்டும் என்னும் உங்கள் விருப்ப வழி நாங்கள் நடந்து வருகிறோம். எனினும், தரங்குறைந்த பதிவுகளை நீக்கும் நீங்கள் குழப்பம் விளைவிக்கும் பதிவுகளை அப்படியே விட்டு வைக்கிறீர்களே? இவை வெளியாகி பெருங்குழப்பத்தையும், வன்மத்தையும் உண்டு பண்ணுவதை காட்டிலும் , அவற்றை உடனே நீக்க வேண்டும் என்பதே எங்கள் அவா!

    ஆனால் இதற்கு நேரெதிர் எண்ணம் கொண்ட மரமண்டையாரோ தமது குழப்பம் விளைவிக்கும் எண்ணம் அவர் எண்ணிய அளவில் ஈடேறாமல் இருப்பது கண்டு, சென்ற பதிவினிலே நம்மை உசுப்பேற்றும் வகையிலே 'கடல் நண்டு' , 'பயம்' , 'களங்கம்" என்று தூண்டில் போட்டதை கவனித்தீர்களா? எங்கள் ஆசிரியருக்கு ஆதரவாக கதைத்து கதாகாலட்சேபம் செய்வது போல வெளித்தோன்றினாலும், 'கூட இருந்தே குழி பறிக்கும்' செயல்களை மட்டுமே இவர் செய்து வருகின்றார்.

    அன்னாரின் ஒரு பானை புலம்பல்களில் இருந்து ஒரு சோற்றுப்பதமாக கீழுள்ள வரி அமைந்திருக்கின்றது.
    //"எங்களுக்காக" இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கும் உங்களின் ஆர்வம் தற்போது குறைந்துள்ளதா..?//

    இங்கே அமைதியை குலைத்து, ஆர்வத்தை குறைப்பதே அன்னாரின் எண்ணம்! உங்கள் ஆர்வம் எந்த அளவு குறைத்துள்ளது என்பதை அறிவதில் மரமண்டையாருக்கு அத்துனை ஆர்வம்!

    //பிரித்தாளும் சூழ்ச்சியை தயவு செய்து கொலை செய்வீர் கனவான்களே//
    சூழ்ச்சிகளின் பிறப்பிடமே அன்னாரின் மண்டைதானே? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் செயல் அன்றோ இது?

    // மிஸ்டர் மரமண்டை : தவறாய் எடுத்துக் கொள்ளாதிருப்பின், சின்னதாய் ஒரு அபிப்ராயம் ://
    இவரிடம் நீங்கள் இத்துனை குனிய, பணிய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை!

    இது போன்றவரை வரும் முன்னும், வரும் போதும், வந்த பின்னும் தவிர்க்க தயங்குகிறீர்களே என்ற ஆற்றமாட்டாமையால் கடந்த முறை எங்கள் வாய்ஸ் வெடுக்குத்தனமாய் வெளியேறி விட்டது. தவறெனில் பொறுத்தருளுங்கள். மிஸ்டர் மரமண்டையாரின் பரிகசிப்பில் அமுங்கி போன எங்கள் வாய்ஸ் இதோ.

    //Ramesh Kumar அவர்களுக்கு,

    //நமது இந்த இன்டெர்னெட் கலாசாரம் மக்களை சும்மாவாச்சம் forumஐ fill செய்ய பழக்கிவிட்டதா என்றும் ஒரு ஐயம்!//

    ஆமோதிக்கிறேன். வீடு மற்றும் அலுவல் மறந்து, யாரோ ஒரு நட்சத்திரத்தை கடவுளென பாவித்து அவருக்காய் கோமாளித்தனங்களில் ஈடுபடும் ஏமாளி ரசிகர்களின் நிலையை ஒத்தவர்களின் உறைவிடமாய் உருமாறி வருகிறது இவ்விடம். இது போன்ற செயல்களை ஒடுக்காமல் எமது ஆசிரியரே கண்டுகொள்ளாமல் விடுவது அவர் மேலான மதிப்பை சில படிகள் கீழாக்கவே செய்கின்றது. இந்த வலைப்பூதனின் நிர்வாகி என்னும் முறையில் Comment moderation செய்யும் முழு அதிகாரம் இருந்தும் அசிங்கமான வசைகளை, பொய்யான புகழுரைகளை, அருவருப்பான மோதல்களை அவை வெளியாகும் முன்னரே நீக்க முயற்சிகள் மேற்கொள்ளாமல், எத்தடையும் இன்றி அவற்றை பிரசுரிக்க வகை செய்து, அவ்வாறு வெளியானவற்றில் சிலவற்றை மட்டும் நீக்கி, சிலவற்றை அவ்வாறே விட்டு வைத்து, இதன் விளைவாய் வாசகர் இடையே காட்டுத்தீ என பரவும் பகைமைக்கு எண்ணெய் ஏன் ஊற்ற வேண்டும்? Prevention is better than cure!

    Forumஐ fill செய்ய வாசகர்கள் பழகியது தவறு எனின் அந்தத் தவறு முழுக்க முழுக்க அவர்களை மட்டும் சார்ந்தது அல்ல!//

    ReplyDelete
    Replies
    1. யார் நினைத்தாலும் உண்மையான ரசிகர்களை ,வாசகர்களை இங்கிருந்து பிரிக்க இயலாது ,ஒருவரை எதிர்க்க ஆசிரியரையே எதிர்க்க துணிந்த ஏதோ தெரிந்த,அறிவிலிகள் இங்கு தேவையும் இல்லை!நீங்கள் கூறும் நபர் அவ்வாறெனில் அவரை கண்டு கொள்ளாதீர்கள் நண்பரே!அவர் யார் தனி பட்ட நம்மை விமர்சிக்க .....அதற்க்கு செவி சாய்க்காதீர்கள் ,அவரே வெறுத்து பொய் ஒதுங்கி விடுவார் ...இங்கு உளறல்களை நிச்சயம் யாரும் பொருட் படுத்த மாட்டார்கள்! நான் என்ற எண்ணம் கொண்ட சிலரில் விலகல்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை!அவர்கள் இங்கு தேவையும் இல்லை! இங்கு யார் இருந்தாலும் ,இல்லாவிடினும் ஆசிரியர் கை ஓங்கியே இருக்கும் ! பசுந்தோல் போர்த்திய பூனைகள் சிங்கத்தின் முன்னே சீருவதர்கெல்லாம் சிங்கம் பதில் கூறி அசிங்க பட்டு கொள்ளாது....

      Delete
    2. நண்பர்களே,

      சர்ச்சைகளைப் பின்தள்ளி விட்டு, ரசிக்க ஓராயிரம் விஷயங்களைத் தன்னுள் கொண்டிருக்கும் காமிக்ஸ் எனும் சோலையை சிலாகிப்போமே ? எவரது எண்ணம் எதுவாக இருப்பினும், நமது கவனம் கலையாதிருத்தலே முக்கியமன்றோ ?

      புலரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புது சந்தோஷத்தை நமக்குக் கொண்டு வருமென்று நம்புவோம் !

      Delete
    3. நிச்சயம் புலரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புது சந்தோஷத்தை நமக்குக் கொண்டு வரும் !

      Delete
    4. Mr Steel Claw : லேட்டா வந்தாலும் சும்மா நச்சுனு சொன்னீங்க!

      ஆசிரியரும் எத்தனையோ முறை சொல்லிவிட்டார் : ஜாலியா வாங்க ! காமிக்ஸ்களை ரசிங்க என்று ஆனால் சிலர் வேண்டுமென்றே அடம் பிடித்தால் என்ன செய்வது ! Unnecessary/unwanted comments ஐ ignore செய்துவிட்டு அடுத்த comments க்கு தாவிவிட வேண்டியதுதான்!

      நிற்க :
      பூத வேட்டையில் டெக்ஸ் வில்லர் சொல்லும் வசனத்தை ("பட்சி சொல்லியது ") படிக்கும்போது உங்களுடைய பட்சி தான் ஞாபகம் வந்தது !

      Delete
    5. ஹ ஹ ஹ எனக்கும் அதே நினைவு ! ஆனால் அது விஜய்க்கு உரமாகி விட்டதே!

      Delete
    6. //ஆசிரியரும் எத்தனையோ முறை சொல்லிவிட்டார் : ஜாலியா வாங்க ! காமிக்ஸ்களை ரசிங்க என்று ஆனால் சிலர் வேண்டுமென்றே அடம் பிடித்தால் என்ன செய்வது ! //
      இதுதான் பிரச்சினையின் மூலமே!

      Delete
    7. @ ஸ்டீல்

      வெல்கம் பேக்! 3 மணி வெயில் மாதிரி ச்சும்மா 'சுள்'ளுனு அடிக்கிறீங்களே! (என்னா ஆக்ரோஷம்!)

      // விஜய்க்கு உரமாகிவிட்டதே //

      தப்பு! நான்தான் அதை உரமாக்கிட்டேன்! ;)

      Delete
    8. சண்டை சச்சரவ விட்டுபுட்டு, போங்கப்பா போய் பிள்ளை குட்டிகளை நல்லா படிக்க வையுங்க ... என்னை பொறுத்தவரை இங்க நாம ரொம்ப "Tension" ஆக தேவை இல்லை, அத (tension) பார்ப்பது ஆசிரியர் வேலைன்னு நெனைச்சிக்கிட்டு போவது நல்லது! தேவை இல்லாத குப்பைகளை அகற்றும் வேலைய ஆசிரியர் கிட்ட கொடுத்துவிட்டு அந்த குப்பைகளை நாம் "காணாமல்" செல்வோம்!

      Delete
    9. என்ன தைரியம் இருந்தால் குப்பைகள் கோபுரத்தின் மேல் அமர்ந்து கொண்டு, நான் கோபுரத்தை விட உயர்ந்தவன் என்று மார் தட்டி கொள்ளும் நண்பரே !

      Delete
    10. Steel @ இதுக்கு எல்லாம் கோபப்பட்டு என்ன கிடைக்கபோகுது? என்னை பொறுத்தவரை வாழும் நாட்களில் யார் மேலும் விரோதத்தை வளர்ப்பது எந்த வகையிலும் உதவாது, அப்படி வளர்பவர்களை மறந்து செல்வது மிக நன்று.

      Delete
    11. Steel @ "என்ன தைரியம் இருந்தால் குப்பைகள் கோபுரத்தின் மேல் அமர்ந்து கொண்டு, நான் கோபுரத்தை விட உயர்ந்தவன் என்று மார் தட்டி கொள்ளும் நண்பரே"

      அதனால் நாம் ஒன்றும் குறைந்து போவது கிடையாது என்பது தான் உண்மை!

      Delete
    12. Also I don't find any thing wrong with comics lover questions.

      Delete
    13. என்னயும்தானே அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம் என்றே!

      Delete
    14. இந்த கேஸ் எப்போதும் எப்படியும் திரும்பும் என்று நானும் அறியாததல்லவே நண்பரே !

      Delete
    15. //இந்த வருடம் மண்டையாரின் தொல்லைகள் தொட்டுத் தொடரும் போதிலும் அவருக்கு எதிராய் திறவ மறுக்கின்றதே?//
      சிலர் வருந்தி மாறியிருப்பார்கள் என்று எதிர் பார்த்தே......
      ஆனால் என்ன செய்தாலும் திருந்தாதவர்களை கண்டு கொள்ளாமல் விட்டிடுவோமே .....
      ஆடி அடங்கட்டும்!

      Delete
    16. இப்பவெல்லாம் இங்க வரவே பிடிப்பதில்லை

      Delete
  45. thumbs up for, jill jordan, jerome, steel body sherlock, looking forward for there stories, its been long time since you hav published Martin stories, plese publish a mega martin special (in colour if available)

    ReplyDelete
  46. முன்பு நரகத்தின் எல்லையில்(based on hiroshima bomb)..மற்றும் காலனொடு(forget the series name)... போன்ற தொடர் கதைகள் வந்த பொழுது.. அதனை படித்திட்டால்..யுத்த காலத்தில்.வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது புரியும்.அருமையான ...அத்தகைய தொடர்கள் இப்பொழுது வருவதில்லை..பிரளயத்தின் பிள்ளைகள் அதனை ஈடு செய்யும் என நம்புகிறென்.

    ReplyDelete
    Replies
    1. முன்பு நரகத்தின் எல்லையில்
      நரகத்தைப் பார்த்தேன்........ my favorite story also.

      Delete
  47. தோட்டா தேசம் கதையை துவக்கும் வரிகள் என்பதுகளுக்கே என்னை அழைத்துச் செல்லத் தவறவில்லை !

    ReplyDelete
  48. ஆசிரியரின் புது முயற்சியில் சில யுத்த காலத்து கதைகளுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டுமென கேட்டு கொள்கிறென்..

    ReplyDelete
  49. To: Editor,
    //சர்ச்சைகளைப் பின்தள்ளி விட்டு, ரசிக்க ஓராயிரம் விஷயங்களைத் தன்னுள் கொண்டிருக்கும் காமிக்ஸ் எனும் சோலையை சிலாகிப்போமே ? எவரது எண்ணம் எதுவாக இருப்பினும், நமது கவனம் கலையாதிருத்தலே முக்கியமன்றோ ? //

    நீங்கள் சொல்வது சரிதான் சார். ஆனால், ஒரு பதிவில் விவாதங்களும், பின்னூட்டங்களும் ஆரோக்கியமானதாக இருந்தாலே அது நிறைவாக இருக்கும். சார்பு நிலை, எதிர் நிலைக் கருத்துக்கள் இடம்பெறவேண்டும். அந்தக் கருத்துப் பரிமாறல்கள் பல புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கவேண்டும். ஆனால், சில பின்னூட்டங்கள் தங்களது குரூர எண்ணங்களை நாசூக்காக வசன நெளிவு சுளிவுகளோடு பகிர்வதற்காகவே பதியப்படுகின்றமை தெளிவாகப் புலனாகிறது.

    அதுமட்டுமல்லாமல், தங்களது காமிக்ஸ் தொடர்பில்லாத எண்ணங்களை அல்லது எங்கோ படித்தவற்றை பந்தி பந்தியாக பகிரவும் இதை ஒரு களமாகப் பயன்படுத்துகிறார்கள். இது, இங்கே வந்து தங்களது காமிக்ஸ் எண்ணங்களைப் பதியும் நண்பர்களை எரிச்சலூட்டி விரட்டும் நோக்கமாகவும் இருக்கலாம்.

    ஒரு கட்டுரைப் போட்டிக்காக ஒருவர் பனை மரம் பற்றி மனப்பாடம் செய்து கொண்டு சென்றாராம். கட்டுரையோ பசுவைப் பற்றியதாக வந்தது. தெரிந்த தமிழ் மொழி என்றால் சமாளித்து எழுதியிருப்பார். பரீட்சையோ ஆங்கிலம். எனவே, தான் மனப்பாடம் செய்த பனை மரம் பற்றி பந்தி பந்தியாக எழுதிவிட்டு, இத்தனை சிறப்புமிக்க பனை மரத்தில் பல சிறப்புக்கள் கொண்ட பசு கட்டப்பட்டிருந்தது என்று எழுதினாராம். இது புத்திசாலித்தனம்தான். ஆனால், அந்தப் பரீட்சை வினாவுக்கு அது சம்பந்தமில்லாதது. ஒரு தொடுப்பை கொடுத்துவிட்டால் காமிக்ஸ்இற்கும் நாம் பதியும் வேறு கருத்துக்களுக்கும் சம்பந்தம் வந்துவிடும் என்பது எவ்வளவு அபத்தம்?

    எனவே, நீங்கள் அவ்வப்போது அநாகரிக பின்னூட்டங்களை நீக்குவதுபோ இத்தகைய சம்பந்தமில்லாப் பதிவுகளையும் நீங்கள் நீக்கவேண்டும். இதன்மூலம் இந்தத் தளம் அநாவசியமாக 'லோட் மோர்' ஆவதையும் தவிர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Podiyan : புன்முறுவலைக் கொண்டு வரும் அழகான உவமை :-)

      கவலை வேண்டாம் - காமிக்ஸ் ஆர்வத்திற்குத் தீனி போடா பதிவுகளுக்கு நிச்சயமாய் எதிர்காலம் கிடையாது !

      Delete
    2. இதுவே எம் அனைவரதும் விருப்பம்!

      Delete
    3. @ பொடியன்

      உவமைக்காக சொன்ன கதை இந்த பிரச்சினைக்கு கனகச்சிதமாய் பொருந்துகிறது!

      நண்பர்களே! சொல்லவரும் விசயத்தை நேரடியாச் சொல்லுங்களேன் (இந்தக் கோரிக்கை குறிப்பாக மிஸ்டர் மரமண்டைக்கு!)

      ஏம்பா, நான் தெளிவாத்தானே எழுதிட்டிருக்கேன்??

      Delete
    4. எங்கள் அன்பிற்கினிய ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கு,

      நான் கூற விழைந்ததை பொடியரே தெள்ளத்தெளிவாக கூறி விட்டார்!!

      //ஒரு பதிவில் விவாதங்களும், பின்னூட்டங்களும் ஆரோக்கியமானதாக இருந்தாலே அது நிறைவாக இருக்கும். சார்பு நிலை, எதிர் நிலைக் கருத்துக்கள் இடம்பெறவேண்டும். அந்தக் கருத்துப் பரிமாறல்கள் பல புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கவேண்டும். ஆனால், சில பின்னூட்டங்கள் தங்களது குரூர எண்ணங்களை நாசூக்காக வசன நெளிவு சுளிவுகளோடு பகிர்வதற்காகவே பதியப்படுகின்றமை தெளிவாகப் புலனாகிறது.

      அதுமட்டுமல்லாமல், தங்களது காமிக்ஸ் தொடர்பில்லாத எண்ணங்களை அல்லது எங்கோ படித்தவற்றை பந்தி பந்தியாக பகிரவும் இதை ஒரு களமாகப் பயன்படுத்துகிறார்கள். இது, இங்கே வந்து தங்களது காமிக்ஸ் எண்ணங்களைப் பதியும் நண்பர்களை எரிச்சலூட்டி விரட்டும் நோக்கமாகவும் இருக்கலாம்//

      உங்களுடைய பதில் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது!

      //கவலை வேண்டாம் - காமிக்ஸ் ஆர்வத்திற்குத் தீனி போடா பதிவுகளுக்கு நிச்சயமாய் எதிர்காலம் கிடையாது !//

      உங்களுக்கு தமிழ் காமிக்ஸ் காதலர்களின் நன்றிகள் உரித்தாகுக!

      Delete
  50. "சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பு வர வேண்டும் என்ற போராட்டதுடன் ....
    மிஸ்டர் மரமண்டை ......தாங்கள் இங்கு அதிகம் வராத போது காணாமல் போன பலரும் வர வேண்டும் மரமண்டை உட் பட என நான் கமெண்ட்ஸ் இட்ட போது பலரும் பயந்தார்கள் ...இதை இப்பொழுது உண்மை ஆக்கி என்னையும் வெறுப்பு அடைய வைத்து விட்டீர் .அனைவரும் புரியும் படி எழுதுவதில் உங்களுக்கு என்ன சிரமம் என்பது புரிய வில்லை .தங்கள் கமெண்ட்ஸ்..... புத்தகத்தை விட நண்பர்களை பற்றியே வருவது ஏன் எனவும் புரிய வில்லை .டெக்ஸ் காகவும் .டைகர் காகவும் நண்பர்கள் சண்டை போடுவது ரசிக்கும் படி உள்ளது .ஆனால் நண்பர்களுக்குள் இங்கே அடிதடி நடப்பது வருத்தத்தை தான் ஏற்படுத்துகிறது .இங்கே பல "குரூப் "இருந்தால் ஆவது அவர்கள் இந்த குரூப் ..,இவர்கள் அந்த குரூப் எனவே அடித்து கொள்கிறார் என நினைக்கலாம் .ஆனால் இங்கு இருப்பதோ ஒரே குரூப் ..அது "விஜயன் சார் குரூப் ".நாம் அனைவருமே விஜயன் சாரின் குரூப் மட்டுமே .நண்பர்கள் நமக்குள் அடித்து கொள்வது நம்மை விட அவருக்கு தான் வருத்தத்தை தரும் என்பதை புரிந்து கொண்டால் நலம் .

    ReplyDelete
  51. Paranitharan K : சின்னதாய் ஒரு திருத்தம் : நாம் அனைவரும் "காமிக்ஸ் காதலர்கள்" எனும் கூட்டமே !

    நண்பர் ராஜ் குமாரும் நலமா ?

    ReplyDelete
    Replies
    1. "சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பு வர வேண்டும் என்ற போராட்டதுடன் ....
      சார் ..உண்மையான வார்தைகள் .நன்றி சார் .நண்பர் ராஜ் குமாரும் நலமே ..ஆண்டு மலருக்காக காத்து கொண்டே இருக்கிறார் .

      Delete
    2. நாம் அனைவரும் "காமிக்ஸ் காதலர்கள்" எனும் கூட்டமே !
      Well said, Sir!

      Delete
  52. "சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பு வர வேண்டும் என்ற போராட்டதுடன் ....
    சார் ...போன இரண்டு பதிவின் தொகுப்பு களின் மூலம் உங்கள் நிலையை அழகாக சொல்லி இருந்தீர்கள் .அதன் மூலம் உங்கள் சிரமங்கள் அனைத்தையும் சிறிது அறிந்து கொண்டோம் .அப்பொழுது கமெண்ட்ஸ் இடும் வசதி இல்லை யாதலால் என்னால் வர முடிய வில்லை .
    "அடுத்த 2014 காண சந்தா மொத்தமாக சொல்லி விடுங்கள் .திடீர் ,திடீர் என பணம் கட்ட சொல்லும் போது பணம் இருந்தாலும் பணம் கட்ட நேரம் கிடைபதில்லை "என வினவி இருந்தேன் .நண்பர்கள் பலரும் அதை ஆமோதித்து இருந்தாலும் போன உங்கள் இரண்டு பதிவை படித்தவுடன் உங்கள் நிலையில் இருந்து பார்க்கும் பொழுது அதன் கஷ்டம் இப்பொழுது புரிகிறது .திடீர் என பெங்களூர் "காமிக் கான்"..திடீர் "தீபாவளி மலர் " ...திடீர் "ஆண்டு மலர் " என வரும் பொழுது வேறு வழி இல்லை என்பதையும் புரிந்து கொண்டேன் . சாரி சார் ...

    இனி உங்களிடம் அந்த மறு பதிப்பு .இந்த மறு பதிப்பு ,அந்த யோசனை ,இந்த யோசனை என்று சொல்லி சங்கட படுத்த மாட் டேன் சார்.
    ஆனால் மேல உள்ள போராட்டம் மட்டும் வரும் வரை தொடரும் சார் .எங்களுக்கு வேறு வழி இல்லை ..

    ReplyDelete
    Replies
    1. "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வர வேண்டும் என்ற போராட்டதுடன் ....
      எங்களுக்கு மாதா மாதம் 3,4,5 என புத்தகங்கள் வந்தால் போதும் சார் .nandri

      Delete
    2. //"சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வர வேண்டும் என்ற போராட்டதுடன் ....//

      நண்பரே, உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடுச்சுஇருக்கு :)

      Delete
    3. @ பரணிதரன்

      உங்க போராட்டத்திற்கு என்னுடைய ஆதரவும் உண்டு! :)

      Delete
  53. எடிட்டர் சார்,

    ஜூன் மாத இதைகளில் லக்கி லுக் தவிர மீதி மூன்றையும் படித்துவிட்டேன்.

    என்னுடைய வரிசைப்படி :
    1. பூத வேட்டை : யூகிக்க கூடிய கதைதான் என்றாலும் டெக்ஸ் துப்பறியும் விதமும் படங்களும் அட்டகாசம் ! இந்த கதையா நீங்கள் இத்தனை ஆண்டுகள் பரணில் போட்டு வைத்திருந்தீர்கள்?

    2. டயபாலிக் : நீங்கள் ஏற்கனவே இந்தக் கதையில் ரொம்ப எதிர் பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டபடியால் சாதாரணமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன் அனால் படங்களும், கதை சொன்ன விதமும் மிகவும்(Editing) நன்றாக இருந்தது !

    3. நிலஒளியில் ஒரு நரபலி : கலரில் டெக்ஸ் அருமையாக இருந்தார் ! கதை ஓகே.

    4. ஸ்டீல் பாடி ஷெர்லக் இன்னும் படிக்கவில்லை, இன்று படித்துவிட்டு நாளை என் கருத்தை எழுதுகிறேன்

    ReplyDelete
  54. சண்டை சச்சரவ விட்டுபுட்டு, போங்கப்பா போய் பிள்ளை குட்டிகளை நல்லாபடிக்க வையுங்க ... என்னை பொறுத்தவரை இங்க நாம ரொம்ப "Tension" ஆக தேவை இல்லை, அத (tension) பார்ப்பது ஆசிரியர் வேலைன்னு நெனைச்சிக்கிட்டு போவது நல்லது! தேவை இல்லாத குப்பைகளை அகற்றும் வேலைய
    ஆசிரியர் கிட்ட கொடுத்துவிட்டு அந்த குப்பைகளை நாம் "காணாமல்" செல்வோம்!

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க பரணி!

      நானும் அதையேதான் வலியுறுத்துகிறேன். பல காமிக்ஸ்களைத் தயாரிப்பதன் மூலமா உண்மையில் டென்ஷனாக வேண்டியது நம் எடிட்டர்தானே அன்றி நாம் இல்லையே?

      ஜாலியாய் இருப்போம் நண்பர்களே! இந்த இடம் அதுக்குத்தான் சரிப்பட்டுவரும்! :)

      Delete
  55. மொழி பெயர்ப்பில் வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  56. இந்த வருடம் இன்னமும் வர வேண்டிய புத்தகங்கள் எத்தனை?

    ReplyDelete
  57. எங்கே புனித சாத்தனை காணவில்லை...டயாபலிக் ரசிகர் மன்றம் விசயமாக வெளிநாடு சென்றுள்ளாரா...

    ReplyDelete
  58. ஆகா... +6 aug ல இருந்து ஒவ்வொரு மாதமும் 1 ஆக வரும் போல தெரிகிறது (ஆக 5 இதழ்)..
    வண்ண மறு பதிப்புகளில் இது வரை இரண்டு வந்துள்ளன.(இரும்புக்கை எத்தன், லுக்கி ஸ்பெஷல்) (ஆக 3 இதழ்)..

    ReplyDelete
  59. கார்சனின் கடந்த காலம் மாதிரி.. டெக்ஸ் கடந்த காலம் புத்தகம் இருக்கிறதா
    சுட்டி லக்கி மாதிரி சுட்டி டெக்ஸ் இருக்கிறதா..
    அடுத்த டெக்ஸ் January 2014 வரும் வரை...
    டெக்ஸ்காக உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்...

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி மலர் texwiller இதழை மறந்துவிட்டீர்

      Delete
  60. ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு,

    எவர் வைத்த ஊடு சூனியமோ தெரியவில்லை சார், காலையில் உங்கள் பதிலை பார்த்து விட்டு உடனே பதில் அளிக்கலாம் என்று நினைத்து COMPUTER ஆன் செய்தால் ரிப்பேராகி விட்டது. அதற்குள் என் பெயரும் இங்கு மீண்டும் ஒரு முறை ரிப்பேராகி விட்டது. அவசரம் என்பதால் பல நூறுகளை கபளீகரம் செய்துக் கொண்டிருக்கிறது :)

    //தவிர,ஒரு பொதுத் தளத்தில் அபிப்ராயமாய் ஒரு விஷயத்தைப் பகிர்வதற்கும் ; அதனையே கருத்தாய் உரக்கச் சொல்வதற்கும் வேற்றுமைகள் உண்டு தானே// அருமையான கருத்தை மிக அழகாக கூறியுள்ளீர்கள். உண்மைதான் சார், நீங்கள் கூறியிருப்பது பிருந்தாபன், V.கார்த்திகேயன், அஹ்மத்பாஷா, பரணி போன்ற பல நண்பர்களுக்கு வேண்டுமானால் அப்படியே பொருந்தி வரலாம். ஆனால் தனிமனித விமர்சனத்தை ஆயுதமாகக் கொண்டு என்னை கேவலப்படுத்தும் நோக்கில் பதிவிட்ட, பதிவிடும் ராகவன், சூப்பர் விஜய், பொடியன், இவருக்கு இணையாக இலங்கையிலிருந்து பதிவிடும் வாசகர் வாய்ஸ், Che, BOND2012 இவர்களுக்கு எப்படி சார் பொருந்தி வரும்..?

    தனிப்பட்ட என்னை விமர்சிக்க, என் பெயரை களங்கப்படுத்த இந்த தளத்தை இவர்கள் பயன்படுத்தும் பட்சத்தில், அதை மறுத்து பதிவிடும் என் பதிவுகளுக்கும் வாய்ப்பு அளிப்பது தானே நியாயமாகும் ? கடந்த பதிவுகளில் ராகவன் மற்றும் BOND என்னை டேய் மரமண்டை, தாலிய அறுக்கலாம், VOMIT, சைக்கோ, லூசு, மெண்டல், புல்லுருவி, வா நீ போ வென தரம்குறைந்த பதிவுகள் என்னை மிகவும் வருத்தப் படுத்தியிருந்தாலும் நான் பதிலளிக்காமல் இருந்ததற்கு காரணமே, என் மூலம் உங்களுக்கு சங்கடம் நேரிடக்கூடாது என்பதால் தான்..!

    இவைகளுக்கு என் மறுப்பு பதிவு இல்லாத போது இங்கு பார்வையிட வரும் வாசகர்கள் என்னை கேவலமாக நினைக்கத்தானே செய்வார்கள்? ஆசிரியர் உங்களை களங்கப்படுத்தி வரும் பதிவுகளுக்கே பொங்கி எழும் நான், என் பெயர் களங்கப்படும் போது எப்படி சார் பார்த்துக்கொண்டிருக்க முடியும்..?

    தொடர்கிறது :(

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னவோ என் நிலைமை, புலி வாலைப் பிடித்த நாயர் கதையாக மாறிவிட்டதோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. இங்கு கமெண்ட் போட்டு இவர்களிடம் நித்தம் நித்தம் என் மரியாதையை கெடுத்துக்கொள்ள எனக்கும் ஆசை இல்லை தான். சரி, கமெண்ட் போடாமல் ஒதுங்கி இருக்கலாம் என்றிருந்த போது s.vijay என்பவர் சுமார் மூஞ்சி குமார் என்ற பெயரில், நான் தான் ரோபாட் ஆர்ச்சி என்று இங்கு பதிவிட்டார். அதை மறுக்காமல் நான் எப்படி இருக்க முடியும்..? சரி, கமெண்ட் அளவாக போடலாம் என்றால் அதற்குள் யாராவது இங்கு குழப்பி விடுகிறார்கள். இன்று கூட பல பதிவுகள் என்னை கெட்டவனாக சித்தரித்து பதிந்துள்ளதை நீங்கள் இங்கே பார்க்கலாம். இப்படி என்னை களங்கப்படுத்தி போடப்படும் பதிவுகளுக்கு என் சார்பு விளக்கம் பதியப்படா விட்டால், மீண்டும் வாசகர்கள் என்னை சதுரங்க எதிராளி என்று தானே நினைப்பார்கள்.?

      ஒரு பனி நாள் பதிவு 3.6.12 அன்றைய பதிவில் கூட பல வாசகர்கள் என்னை சதிகாரன் என்று கூறி பதிவிட்டது இன்றும் கூட அப்படித்தானே உள்ளது. அன்றே நான் பதிலளித்து இருந்தால் இது போல் இன்று வரை அவச்சொல்லுக்கும், வாசகர்களின் சந்தேகக் கண் பார்வைக்கும் ஆளாகியிருக்க மாட்டேன் தானே சார்..?

      அதுபோல் இன்றுவரை ஒவ்வொரு முறையும் நடக்கும் போது எப்படி சார் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்..? உங்களின் கரிசனமும், காருண்ணியமும், அன்பும் இங்கு வரும் அனைவருக்கும் பொருந்தும் என்றால், அது எனக்கும் சேர்த்து தானே இருக்க முடியும்..? என் பெயருக்கும் சுயமரியாதைக்கும் களங்கமும், அவமரியாதையும் இங்கு ஏற்படும்போது எனக்கும் வருத்தம் ஏற்படத்தானே செய்யும் சார்..?

      தொடர்கிறது :(

      Delete
    2. இன்றைய பதிவில் கூட நான் யாரையும் குறிப்பிட்டு இங்கு எழுதவில்லை என்பதே உண்மை. இது ஒரு வார்த்தை விளையாட்டாகவே கருதி பதிவிட்டேன். தங்களின் 8 கதைகளின் தலைப்புகளை சேர்த்து வெவ்வேறாக பதிவிட்டு உள்ளேன். அது வார்த்தை விளையாட்டின் ஒரு அங்கமாக யாராலேயுமே கவனிக்கப்படாதது என் கெட்ட நேரம் தான்..! ஏனெனில் எனக்கு யாருடைய பதிவையும் குறைகூறவோ, குற்றம் காணவோ நேரமோ மனதோ தற்போது இல்லை என்பதே உண்மையின் வார்த்தைகள். ஆனால் நான் பதிவிட வரும் போது மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் பதிவுகளை கடந்த 15 தினங்களாக நீங்கள் பார்த்திருப்பீர்கள்..!

      //தவிர,ஒரு பொதுத் தளத்தில் அபிப்ராயமாய் ஒரு விஷயத்தைப் பகிர்வதற்கும் ; அதனையே கருத்தாய் உரக்கச் சொல்வதற்கும் வேற்றுமைகள் உண்டு தானே ? நீங்கள் சொல்ல வரும் கருத்தில் உடன்பாடில்லாதோர்க்கு அவை நெருடலாய்த் தோன்ற வாய்ப்புகள் அதிகம் அல்லவா// சத்தியமான வார்த்தைகள் சார். உங்களுக்கு நெருடலாகத் தெரியும் என் பதிவுகளை இனி நீங்கள் நீக்கி விடுங்கள்..!

      நன்றி சார். மீண்டும் COMPUTER பிரச்சனை செய்கிறது :(

      Delete
    3. உங்கள் மீது தனி மனிதத் தாக்குதல் யார் செய்திருந்தாலும் தவறு தான். அவர்கள் பதிவுகளை நீங்கள் ஆசிரியரிடம் சொல்லி நீக்கச் சொல்லுங்கள். அதற்கு எம் அனைவரின் ஆதரவும் உண்டு. அதே போல் பொடியன் சொன்னது போல் சுற்றி வளைத்து சம்பந்தமே இல்லாமல் பதிவு போட்டு அதில் பல அர்த்தம் தொனிப்பது போல் அமைவதை (நீங்கள் தெரியாமல் செய்வதாயிருந்தாலும்) தவிர்த்து விடுங்களேன்? ப்ளீஸ்... உங்கள் தமிழ் நடை சரளமாக நன்றாக இருக்கிறது. அதை வைத்து நேரடியாக எழுதலாமே?

      Delete
    4. நட்பிற்கு இனிய நண்பர் பிருந்தாபன் அவர்களுக்கு, உங்களின் இந்த பதிவு தங்களின் சிறந்த எண்ணங்களை பிரதிபலிக்கின்றன. உங்களின் நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள். நிச்சயமாக நீங்கள் கூறியது போல் எழுத முயற்சிக்கிறேன். சில நேரங்களில் நம் மனதை மகிழ்விக்கும் இதுபோன்ற பதிவுகள் ஒன்றோ இரண்டோ இங்கு படிக்கும்படியான ஒரு இன்பமும் கிடைக்கத்தான் செய்கின்றன..! நீங்கள் நிலவொளியில் ஒரு நரபலி தற்போது படித்திருப்பீர்கள், அதில்..

      1. கிழட்டு சேவல்களின் மாமிசம் அத்தனை ருசிப்படாதாம்! அதனால் உனக்கு கிராக்கி இருக்காது கார்சன்!
      2. கார்சன் உனக்கு கிழ வயசாகிவிட்டது! உன்னை கொன்று தின்ன மாட்டார்கள்!

      இவ்விரண்டு வசனங்களில் நமக்கு ரசிக்க கிடைத்தது முதலில் இருப்பது தானே..? ஏனெனில் தமிழுக்கு அழகே ஒப்பனையும், அலங்காரமும் தான் என்பது தாங்கள் அறியாதது அல்ல. ஆனாலும் இடம், பொருள், ஏவல், எவர் என்ற காரணிகள் அதன் ஆட்சி பீடத்தில் கோலோச்சுகின்றன..!

      என் எழுத்து நடையை மாற்ற முயற்சிப்பதை விட சும்மா இருப்பது மிகவும் ஆனந்தமாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனாலும் காமிக்ஸ் மேலுள்ள என் காதலாலும், ஆசிரியர் பால் உள்ள மரியாதையாலும்,உங்களை போன்ற நண்பர்கள் மேல் உள்ள அன்பாலும் நீங்கள் கூறியப்படி பதிவிடவே விழைகிறேன்..!

      Delete
  61. தனி நபர்த் தாக்குதல்களையோ, வார்த்தைகளில் கடுமையினையோ இனி வரும் நாட்களில் நம் தளம் பார்த்திடாது - நிச்சயமாக !

    பரஸ்பர விரல் நீட்டல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி போட்டுவிட்டு, நம்மை சந்தோஷப்படுத்தும் காமிக்ஸ்களின் மீதே, சந்தோஷமாய், இனி கவனம் செலுத்துவோமே ! This dossier is closed - for good !

    ReplyDelete
    Replies
    1. // தனி நபர்த் தாக்குதல்களையோ, வார்த்தைகளில் கடுமையினையோ இனி வரும் நாட்களில் நம் தளம் பார்த்திடாது - நிச்சயமாக! //

      நல்ல முடிவு எடிட்டர் சார்!

      சம்பந்தப்பட்ட நண்பர்கள் அனைவரையும் திருந்தும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! நாகரீகமில்லாத கமெண்ட்டை delete செய்வது எடிட்டருக்கும் சங்கடமான விசயம், நம் கமெண்ட் எடிட்டரால் delete செய்யப்படுவது நமக்கும் அவமானம்! அப்படியொரு delete நிகழ்வு நடக்காமல் இருப்பது நம் எண்ணங்களில்தானே இருக்கிறது?

      (அச்சச்சோ! எடிட்டர் சார், இந்த கமெண்ட்டை delete செய்யமாட்டீங்கதானே?) :)

      Delete
    2. //தனி நபர்த் தாக்குதல்களையோ, வார்த்தைகளில் கடுமையினையோ இனி வரும் நாட்களில் நம் தளம் பார்த்திடாது - நிச்சயமாக !

      பரஸ்பர விரல் நீட்டல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி போட்டுவிட்டு, நம்மை சந்தோஷப்படுத்தும் காமிக்ஸ்களின் மீதே, சந்தோஷமாய், இனி கவனம் செலுத்துவோமே !//

      சூப்பர்...பாருங்க தலைவா என்னகூட வம்பிழுக்கிறாங்க....பாத்தீங்களா என்ன வம்பிழுத்ததுக்காக தலைவர் அட்ராசக்க அட்ராசக்கன்னு எனக்காக எடுத்த முடிவ....ட்ரலாலலலலா.........ட்ரலாலலலலா (பெருமிதத்துடன் சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டு நடக்கிறேனாக்கும்)

      Delete
  62. அன்புள்ள விஜயன் அவர்களுக்கு,
    "ஆல் நியூ ஸ்பெஷல்" கதைகளின் முன்னோட்டம் அனைத்தும் அருமை.கிராபிக் நாவலை மிகவும் எதிர்பார்கிறேன். நண்பர் பரணிதரன் அவர்களின் போராட்டமான "//"சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வர வேண்டும்// என்பதே என்னுடைய வேண்டுகோளும், பரிசீலனை செய்யுங்கள் சார்.

    ReplyDelete
  63. அன்புள்ள விஜயன் அவர்களுக்கு,

    டெக்ஸ் வில்லரின் கதைகளில் "கபால முத்திரை + சதுப்பில் ஒரு சதிகார கும்பல்" போலவே முழுக்க குதிரைகள் வராத கதை ஏதும் மறுபடியும் வர வாய்ப்பு உள்ளதா? (அதன் ஹாட் லைன் பகுதியில் குதிரை படம் இருந்தது பற்றி நீங்கள் சொல்லி இருந்தீர்கள்.)

    ReplyDelete
  64. "//"சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வர வேண்டும்// என்பதே என்னுடைய வேண்டுகோளும்.
    முடியாத பட்சத்தில் 2,3 பக்கங்களாவது (முடிந்தால் புகைப்படங்களை இணைத்து) ஒதுக்கலாமே?

    இந்தப் பகுதிக்கு புதிதாக என்ன பெயர் வைக்கலாம் என்ற போட்டி அறிவிப்புக்கு
    ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும்
    சேலம் அமர்நாத்.

    ReplyDelete
  65. Rip kirpy, wing commander George கதைகளில் வெளிப்படும் வெள்ளந்திதனம் இப்போது வெளிவரும் கதைகளில் missஆவதை உணர்கிறீர்களா நண்பர்களே? Tex willer கதைகள் தற்சமயம் ரொம்பவே அலுப்பூட்டுகிறது!:-o

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் அலுப்பா .....இவரை இத்தாலிக்கு நாடு கடத்தவேண்டியதுதான்!

      Delete
    2. கண்டிப்பா இத்தாலிக்கு நாடு கடத்துவீங்கன்னா நானும் டெக்ஸை வெறுக்கிறேன்!

      Delete
  66. To: Editor,

    //என்னை கேவலப்படுத்தும் நோக்கில் பதிவிட்ட, பதிவிடும் ராகவன், சூப்பர் விஜய், பொடியன், இவருக்கு இணையாக இலங்கையிலிருந்து பதிவிடும் வாசகர் வாய்ஸ், Che, BOND2012 இவர்களுக்கு எப்படி சார் பொருந்தி வரும்..?//

    நான் யாரையும் கேவலப்படுத்தும் நோக்கில் எந்தப் பதிவையும் இடவில்லை. எனது எழுத்தைப் படித்தவர்களுக்கு அது புரிந்திருக்கும். ஆசிரியரே பாராட்டியிருப்பதை கேவலம் என்று சொல்ல யாருக்கும் அருகதையில்லை. யாரையும் பெயர் குறிப்பிட்டு நான் எழுதவும் இல்லை. அத்தோடு பலரும் இங்கே பதிந்திருக்கும் கருத்தையே நானும் வழிமொழிந்திருக்கிறேன். எனவே, தன்னை அது தாக்குகிறது என்று ஒருவர் நினைத்தால்... ''அந்தத் தொப்பி அளவு தனக்கே - தானே அந்த ஆசிரியரும் வெறுக்கும் செயலைச் செய்தவன்'' என்பதை அந்த ஆசாமியே ஏற்றுக்கொள்வதாகும்.

    அவ்வாறு ஏற்றுக்கொண்டது பெரிய விடயம். அதே நேரம், நான் இங்கே பயன்படுத்தும் 'பொடியன்' என்ற பெயரைக் குறிப்பிட்டு கேவலப்படுத்தும் பதிவை இட்டதாக குறிப்பிட யாருக்கும் அதிகாரமில்லை. அது உண்மைக்கும் புறம்பானது. அத்தோடு இந்தப் பெயரானது இணைய வலையில் ஆசிரியரது இந்த வலைப்பதிவு ஆரம்பிக்க முன்னரே எனது அடையாளமாக இருந்துவருகிறது. என்னை ஆசிரியர் உட்பட பலருக்கும் தனிப்பட தெரியும் என்பதும், இங்கே பல பெயர்களோடு என்னை கோர்த்துவிட முயற்சிப்பதைக்கண்டு அந்தந்தப் பெயர்களில் எழுதுபவர்களே நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள் என்பதும் வெளிப்படையான உண்மைகள். சுயத்தை வெளிப்படுத்த பயந்து நடுங்குபவர்கள் மற்றவர்களை நோக்கி விரலை நீட்டக்கூடாது. எனவே, ஆசிரியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இதுபோல பின்னூட்டங்கள் பதிவதை வெறுப்பவன் நான். என்னையும் எழுதவைத்துவிட்டார்... சபாஷ்!

      Delete
  67. டியர் எடிட்டர் ,
    "கொலை செய்வீர் கனவான்களே" கதையின் சித்திரங்கள் துல்லிதம் . நிஜமாய் கதைகள் பல பேசுகின்றன . மற்றும் "தோட்டா தேசம் " கதையில் வரும் கதா பாத்திரங்கள் comanche மற்றும் ரெட் டஸ்ட் ஆகியோர் முன்பே எமது வாசகர்களுக்கு அறிமுகமானவர்களே ! சரிதானே சார்?"பிரளயத்தின் பிள்ளைகள் " கதை, நாசிகளின் சித்திரவதை கூடத்தில் நிகழ்ந்த ஒரு உண்மை கதையின் வெளிப்பாடா சார்? ஆகஸ்ட் இல் "மனதில் மிருகம் வேண்டும் ", "மேற்கே ஒரு சுட்டி புயல் " ஆகிய இரு வெளியீடுகள் மட்டும்தானா? அது என்ன சார் "மனதில் மிருகம் வேண்டும் " என்று ஒரு வித்தியாசமான தலைப்பு?

    ReplyDelete
  68. எடிட்டர் சார் ,
    2013 கான ஜூலை -டிசம்பர் சந்தா + சன் சைன் லைப்ரரி விபரம் வெளியிட்டு இருக்கிறீர்கள் . இந்த 2013 ம் ஆண்டுக்கான எல்லா சாந்தவுக்கும் எனது கணக்கில் உள்ள பணம் போதுமா என்று தயவு கூர்ந்து அறிய தருவீர்களா ? இல்லாது விடில் உடனடியாக பணத்தினை உங்களுக்கு அனுப்பி வைக்க உதவியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : கவலை வேண்டாம்...போதுமான வரவு உள்ளது உங்களின் கணக்கில் !

      Delete
  69. எடிட்டர் சார் ,
    மேலும் பிரான்ஸ் இலும் எமது வாசகர் வட்டத்தை பெருக்கும் நோக்குடன் , பிரான்ஸ்க்கான முகவராக விரும்புகிறேன் . இதற்கு என்ன நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தயவு கூர்ந்து அறிய தருவீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. கடந்த பதிவிலும் இதே விடயத்தை நீங்கள் கேட்டிருந்தீர்கள். இங்கே கேட்பதைவிட, லயன் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிடுங்கள். அல்லது நேரடியாக லயன் அலுவல தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள். அது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

      Delete
    2. Thiruchelvam Prapananth : ஆர்வத்திற்கு நன்றிகள் ! எத்தனை பிரதிகள் வேண்டுமென்பதைத் தெரிவித்தால் - தபால் கட்டணங்களை அறிந்து கொண்டு தகவல் தர உதவிடும்.

      முதல் முறை ஒரு சின்ன எண்ணிக்கையில் தருவித்து - வரவேற்பு எவ்விதம் உள்ளதென்பதை அறிந்து கொண்டு மேற்கொண்டு தொடரலாமே ?

      Delete
  70. "சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பு வர வேண்டும் என்ற போராட்டதுடன் ....
    இதற்கு ஆதரவு அளித்து கொண்டு இருக்கும் நண்பர்கள் திருப்பூர் நாகராஜன் ,சிவ சுப்ரமணியம் ,அமர்நாத் சேலம் .,ஈரோடு விஜய் மற்றும் மனதிலே மட்டும் போராடி கொண்டு வரும் பல நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளை கூறி கொண்டு ....
    ஈரோடு விஜய் :உங்கள் "சண்டே "கதையில் பொருள் குற்றம் உள்ளது என்பதை அறிவீர்களா ...8 ம் தேதி என்பது அடுத்த மாதம் திங்கள் கிழமை என்பதால் குற்றம் ஆசிரியர் இடம் இல்லை என்பதை பணிவுடன் கூறி கொள்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. @ பரணிதரன்

      கிர்... கர்... புர்...

      Delete
    2. "சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பு வர வேண்டும் என்ற போராட்டதுடன் ...
      "வினாக்களின் தருமி "இடம் பொருள் குற்றம் வருவது பெரும் பிழை அல்லவா நண்பரே ...

      Delete
  71. Hi Sir,
    expecting All New Spe cover page. im sure it gonna be hit special of the year

    &&&&&
    டெக்ஸ்
    மர்ம மனிதன் மார்டின்
    மாடஷ்தி
    CID ராபின்
    ரிப் கிர்பி
    மதி இல்லா மந்திரி
    கருப்பு கிழவி
    ஜெரோம்

    இவர்களை வைத்து ஒரு B & W ஸ்பெஷல் எதிர் பார்க்கலாமா ????

    ReplyDelete
  72. என்னுடைய PROFILE ல் இருந்த புத்தர் திடிரென காணாமல் போய்விட்டார். மீண்டும் எந்த PHOTO upload செய்தாலும் வருவதில்லை. யாராவது என் email id யை HACK செய்து விட்டார்களா என்றும் தெரியவில்லை. கம்ப்யூட்டர் பற்றிய விஷய ஞானம் உள்ளவர்கள் யாராவது இருந்தால் எனக்கு உதவலாமே..?

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தளத்தில் 'எழுத்து நடை' எப்படியிருக்கலாம் என்று உங்களுக்கு திடீர் ஞானம் பிறந்ததை அடுத்து தான் வந்த வேலை முடிஞ்சதுன்னு புத்தர் கிளம்பிப்போய்ட்டாரோ என்னவோ?!

      Delete
    2. அப்படி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் தனி மனித விருப்பு வெறுப்புகளும், கட்டுப்பாடுகளும் பிடிக்காமல் போனதாலோ..? அல்லது ஏதோ ஒரு சார்பு நிலைக்காக தன் நிலை மாற்றிக்கொள்ள துணிந்த என்னிடம் இருக்க வேண்டாம் என்றோ..?

      ஆசைகளற்ற புத்தர் காணாமல் போயிருக்கலாம் அல்லவா..?!

      Delete