Powered By Blogger

Monday, March 05, 2012

ஒரு பீலா படலம் !


நண்பர்களே,

சென்ற வார ஊர் சுற்றலின் போது நமது படைப்பாளிகள் சிலரையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது !

மப்பும் மந்தாரமுமாய் இருந்திட்ட ஒரு ஐரோப்பியக் காலையினில் அவர்களது அலுவலகத்தினுள் நுழைந்த மறுகணமே என் கண்ணில் பட்டது நமது XIII - ன் "இரத்தப் படலம்" தொகுப்பு தான் ! உள்ளே போனவுடனேயே "இன்னும் குறைந்தது 3 பிரதிகளாவது உடனே அனுப்புங்கள் !" என்றார்கள் ; நான் மண்டையை ஆட்டிக் கொண்டே என்ன சமாச்சாரம் என்று விசாரித்தேன்...



ஆண்டுதோறும் ஜனவரி இறுதியினில் பிரான்சின் ஒரு சிறு நகரமான Angouleme -ல் ஒரு காமிக்ஸ் திருவிழா (!!) நடந்திடும். சின்னச் சின்ன கதாசிரியர்கள் ; வளர்ந்து வரும் ஓவியர்கள் அத்தனை பேரும் ; ஜாம்பவான்களில் ஒரு சிலரும் அங்கே காமிக்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் ஐக்கியமாகி இருப்பது வழக்கம். பதிப்பகங்கள் தத்தம் புது வெளியீடுகளை showcase செய்து அவற்றை promote செய்திடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்.

இந்த ஆண்டு நடந்த விழாவின் போது நமது "இரத்தப் படலம்" முழுத் தொகுப்பினை தங்களது ஸ்டாலில் வைத்திருந்தார்கள் போலும் ; அதனைப் பார்வையிட்ட பிரெஞ்சுக் காமிக்ஸ் ரசிகர்கள் ரொம்பவே சந்தோஷப்பட்டார்களாம்! தங்களது மொழியினில் வந்திட்டதொரு தொடரை அவர்களே இன்னும் முழுமையாக வெளியிடவில்லை எனும் போது எங்கோ தொலைதூரத்தில் உள்ளதொரு இந்திய மொழியில் இது போல ஒரு Complete Collection வந்திருப்பதைப் பார்த்த எல்லோருக்குமே பெருமிதமாம் !

அது மட்டும் அல்ல ....

William Vance


காமிக்ஸ் உலகின் all -time great  ஓவியரும் ; இந்தத் தொடரின் அசகாய வெற்றிக்குக் காரணமுமான வில்லியம் வான்ஸ் நமது இதழை பாராட்டினாராம் !  முதுமை காரணமாய் ஓய்வுக்குச் சென்று விட்ட வான்ஸ் தற்போது ஸ்பெயின் நாட்டில் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் அமைதியாகப் பொழுதைக் கழிக்கிறாராம் ! அவரது பிரத்யேக லைப்ரரி-க்கு ஒரு பிரதியும் ; கதாசிரியர் Van Hamme -க்கு ஒரு பிரதியும் அனுப்பிட வேண்டுமென்று அவர்கள் சொன்ன போது எனக்கு புல்லரித்துப் போனது ! எங்கோ ஒரு மூலையில் ; பீற்றிக் கொள்ளக் கூடிய circulation எதுவும் இல்லாத நமக்கு - இத்தனை பெரிய ஜாம்பவான்களிடமிருந்து கிடைத்த அங்கீகாரம்  ஒரு இமாலய சாதனையாய்த் தோன்றியது !

ஒரு தரமான படைப்பை அழகாய் ரசித்து அதனை இத்தனை தூரம் கொண்டு வந்திட்ட உங்கள் அத்தனை பேருக்கும் அந்தப் பாராட்டில் சம பங்குண்டு guys !!  Hats off !

சந்தோஷமாய் இருந்த அந்தத் தருணத்தை உங்களோடு அன்றே பங்கிட நினைத்தேன் ; ஆனால் எனது சாம்சங் Galaxy Tab-ல் தமிழில் டைப் செய்தால் தூர்தர்ஷனில் வரும் ஜுனூன் தமிழை தயாரித்துத் தந்து புண்ணியம் சேர்த்தது...so ஊர் திரும்பும் வரை பொறுமை காக்க வேண்டிய நிர்பந்தம் !


"பீலா படலம்" இன்னும் ஓயவில்லை ..இன்னும் கொஞ்சம் பாக்கி உள்ளது !

உலகின் வேற்று மொழிகளில் XIII தொடரின் கதைகள் மறுபதிப்பாகும் போது பெரும்பாலுமே ஒரிஜினலில் உள்ள அதே அட்டைப்பட டிசைன் தான் பயன்படுத்தப்படும். In fact புதிதாய் நாமாக ஒரு coverpage உருவாக்கிட நினைத்தால் கூட அதனை முன்கூட்டியே படைப்பாளிகளுக்கு அனுப்பி அவர்களது சம்மதத்தைப் பெற்றிட வேண்டும் என்பது தான் ஒப்பந்தம். ஆனால் ஆரம்பம் முதலே நமக்கு மட்டும் இதில் முழு சுதந்திரம் உண்டு...நமது அட்டைப்படங்கள் 'பளிச்' என்று வண்ணமயமாக இருப்பதால் நம்மை இந்த விதி கட்டுப்படுத்திடுவதில்லை ! இரத்தப் படலம் இதழுக்கான நமது அட்டைபடம், ஒரிஜினலின் சித்திரங்களை அப்படியே கொண்டு வண்ணக் கலவையில் மட்டும் சற்றே மாற்றம் செய்திருந்த ஒன்று !அது கூட ஒரிஜினலை விட 'பளிச்' என்று இருப்பதாய் அவர்கள் சொல்லக் கேட்ட போது எனது பல்வரிசையினை காட்சிப் பொருளாக்கினேன் !

ஒரிஜினலின் அட்டைபடம் 


Last but not the least, அடுத்த முறை ஸ்பெயின் நாட்டுக்குப் பயணமாகும் போது வில்லியம் வான்ஸ் அவர்களை சந்திக்க ஆசை என்று சொன்னேன்... !ஓய்வில் இருப்பதால் அவர் பெரும்பாலும் சந்திப்புகளை தவிர்ப்பதாகவும் ஒரே ஒரு முறை..சிறியதொரு சந்திப்புக்கு அவரிடம் பேசி ஏற்பாடு செய்து தருவதாக வாக்களித்துள்ளார்கள் !

சந்தடி சாக்கில் கதாசிரியர் Van  Hamme அவர்களையும் சந்திக்க முடியுமாவென கேட்டு இருக்கிறேன் !  Fingers Crossed !!

Jean Van Hamme

XIII புராணத்தில் இன்னும் ஒரே ஒரு சேதி !

இரத்தப் படலம் தொடர் மீண்டும் வரவிருப்பது பற்றி போன மாதம் பதிவு செய்திருந்தேன் அல்லவா ? புதியதொரு ஓவியர் ; கதாசிரியர் கூட்டணியில் தொடருக்கு புற்றுயிர் ஊட்டி உள்ளார்கள் ! ஆண்டுதோறும் ஒரு புது ஆல்பம் இனி வெளி வரும் என்று தகவல். ஐரோப்பாவில் இந்த இதழுக்கு மிக அருமையான வரவேற்பு கிட்டி உள்ளதாம் !

இரத்தப் படலம் - புது வெளியீடு !


So 2012 -ன் இறுதிக்குள் தமிழில் இந்த புதிய சாகசத்தை நீங்கள் படிக்கப் போகிறீர்கள் ! இதற்கான பணிகள் தொடங்கி விட்டன !

இந்தப் பதிவுக்கு இத்தோடு மங்களம் ; but இன்றைக்கு இன்னும் சில (!) பதிவுகள் தொடர உள்ளன ! உஷார் !



25 comments:

  1. சார் நெஜமாவே அருமை.படிக்கவே சந்தோசமாய் இருக்கிறது.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி. கடந்தவாரம் உங்கள் அலுவலகத்தை தொடர்புகொண்டபோது நீங்கள் அலுவலகப் பணி நிமித்தம் வெளிநாடு சென்றிருப்பதாகவும் திங்கள்தான் வருவீர்கள் என்றும் கூறினார்கள். அப்போதே இப்படியான 'ஆஹா' போடவைக்கும் செய்திகளை எதிர்பார்த்தேன். வாழ்த்துக்கள் திரு.விஜயன் அவர்களே. தொடரட்டும் உங்கள் பணி.
    -Theeban (SL)

    ReplyDelete
  3. Dear Mr. Vijayan,

    This is a very happy news about XIII! Do you still have any copies of this anthology left with you? If so, how much should I send to get a copy? Please let me know. As I am a late entrant, I could not get a copy of 'Rethappadalam' when it came out...

    Thanks in advance,

    Raja

    ReplyDelete
  4. Congrats Sir! This is a great honor for a Tamil Comics Publication!

    ReplyDelete
  5. >> ஒரு பீலா படலம் !
    No sir, you don't have to be so humble. Pl. change the title!

    ReplyDelete
  6. நேற்று முதலே மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த பதிவு இது. அந்த காத்திருப்பலின் பலன் இது போன்ற சூப்பர் நியூஸ்களே.

    தொடர்ந்து இதுபோன்ற பல பயணங்களை மேற்கொண்டு பல நல்ல விஷயங்களை அளியுங்கள்.

    ReplyDelete
  7. //இந்தப் பதிவுக்கு இத்தோடு மங்களம் ; but இன்றைக்கு இன்னும் சில (!) பதிவுகள் தொடர உள்ளன ! உஷார்//

    இந்த பதிவின் மற்றுமொரு ஹை லைட் இதுதான்.

    ReplyDelete
  8. Dear Editor & Staff,

    Great honour.you people are really deserved for this Recognition.
    congrats.

    Aldrin Ramesh from Oman.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள், இந்த அனுபவங்கள் கண்டிப்பாக உங்களின் இனிவரும் புது முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என் நம்புகிறேன்.

    ReplyDelete
  10. Excellent Sir.. I too got the goose flesh after reading this!!!

    ReplyDelete
  11. super o super kalakki varugireergal appuram enna ivlo decenta solringa?!! sir-ku oru balatha "O" Podungappa!!

    ReplyDelete
  12. மறுபடியும் ஒரு நீண்ட பயணமா.....? பாவம் XIII , அவரை கொஞ்சம் நிம்மதியாக விட மாடிங்களா?

    ReplyDelete
    Replies
    1. Erode M.STALIN : XIII-க்கும்,நிம்மதிக்கும் தான் ஏழாம் பொருத்தம் ஆயிற்றே !!

      Delete
    2. Nice comment, sir.

      -Theeban (SL)

      Delete
  13. நல்லது . எதுவாக இருந்தாலும் சரி மொத்தமாக வெளிஇடவும் . ஆவலாய் எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  14. விஜயன் சார்,

    இது பீலா படலம் இல்லை. உங்களது சாதனை படலம். எங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இன்னும் சாதனை செய்வோம்.

    அன்புடன்,
    ராஜா

    ReplyDelete
  15. sir, we are planning to visit to spain in the month of May-June. would love to meet him. can you please organise some way for us? we would love to get the book signed from him.

    ReplyDelete
  16. ஒலக காமிக்ஸ் ரசிகன் : Sorry, I know there are loads of readers who would love to meet Mr.Vance, but he has opted to stay out of the limelight now and doesn't even let out his whereabouts except to people he needs to interact with on business issues or personal ones.

    The publishers have not yet given out his address to me and have told me they will do so once Mr.Vance confirms to see me. So let us respect his wishes for privacy please !

    ReplyDelete
  17. xiii ஜம்போ ஸ்பெஷல் ஒரு பிரமிப்புக்குரிய சாதனை, அது எதிர்பார்த்த வரவேற்பை பெற்றிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. வெற்றிகள் தொடரட்டும்.

    ReplyDelete
  18. மிக்க சந்தோசம் தரும் செய்தி. உங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த பாராட்டு.

    ReplyDelete
  19. என்னமோ ஒரு குட்டி படம் எடுத்து ஆஸ்கார் அவார்ட் வாங்கின ஒரு சந்தோஷம் எனக்கு.விஜயன் சார்..Your happiness would have been unimaginable...

    ReplyDelete
    Replies
    1. அந்த சந்தோஷத்தை உங்களோடு பங்கிடுவதில் தான் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு ! இது போல் ஒரு dedicated ...loving ...passionate ...வாசகக் குடும்பம் லட்சங்களில் சர்குலேஷன் உள்ள இதழ்களுக்குக் கூட இருந்திடுமா என்பது ஐயமே ! தேங்க்ஸ் guys !

      Delete
  20. Wow, Wow, Wow. CONGRATS to the editor and the whole crew and to us (all the readers). I had the same feeling when i received the book because as the publishers had mentioned nobody attempted this (releasing in a single book).

    Karthikeyan

    ReplyDelete
  21. Sharing the joy makes it abundant. Thanks for your doubled up joy for this recognition shared here with us

    ReplyDelete