நண்பர்களே,
தேர்தல் கமிஷனுக்கு அஞ்சாமல் வாக்குறுதிகளை வழங்கிடும் சுதந்திரம் தற்சமயம் யாருக்கு உள்ளதோ, இல்லையோ - நிச்சயம் நமக்கு உள்ளது என்று சொல்வேன் !
So - இதோ இன்றைய பதிவு எண் 2 - புதியதொரு அறிவிப்போடு !
எல்லைகள் தாண்டுவோமா ? என்ற கேள்வியினை கொஞ்ச நாட்களுக்கு முன்னே இங்கே நான் எழுப்பியதும் ; தொடர்ந்து சுவையான பல கருத்துக்கள் பதிவானதும் நினைவிருக்கலாம் ....!
அதன் ஆரம்பமாய் - நம் எல்லைகளை அகலமாக்கும் முயற்சியின் முதல் படியாய் - ஒரு Graphic Novel நம் லயனில் விரைவில் களம் காண்கிறது !
ஒரு மாமூலான ஹீரோவை மையம் கொண்டிடாமல்....வழக்கமான கதைக் களங்களை பின்பற்றிடாமல்.....மிகைப்படுத்தல் அதிகம் அல்லாத, நிஜ வாழ்க்கையின் பிம்பங்களாய் ; மாறுபட்ட ஓவியங்களுடன், சற்றே முதிர்ந்த ரசனைக்காக உருவாக்கப்பட்டவை graphic novel கள் ..!
நமது அபிமான எழுத்தாளரான Van Hamme -ன் கைவண்ணத்தில் நமக்கு நன்றாகவே பரிச்சயமான கௌபாய் உலகை மையமாகக் கொண்டு ; அன்றைய கரடுமுரடான, வாழ்க்கையினை சித்தரிக்கும் "Western " எனும் காமிக்ஸ்நாவல் நமது லயனில், முழு வண்ணத்தில் வரவிருக்கிறது !
நாம் இது வரை அடிவைக்காத கதைக்களம்... சோகம் இழையோடும் வித்தியாசமான சித்திரங்கள் ; அதை விட வெகு வித்தியாசமான வண்ணக் கலவை என்று இது ஒரு மாறுபட்ட அனுபவமாய் நமக்கு இருந்திடப் போவது உறுதி !
மாறுபட்ட வண்ணக் கலவையோடு ! |
"எமனின் திசை மேற்கு !" இந்தாண்டின் இரண்டாம் பாதியில் வரவிருக்கிறது!
வண்ணத்தில் இதழ்கள் தயாரிக்கும் தைரியம் வந்த பின்னர் நம்மை எதிர்நோக்கி இருக்கும் சவாலான பலதரப்பட்ட களங்கள், நமது இரண்டாவது இன்னிங்க்சை வேறு ஒரு பரிமாணத்துக்கு இட்டுச் செல்லுமென்ற நம்பிக்கை எனக்குள் ! Exciting times ahead folks ...!!
இது வாக்குறுதி நேரம் அல்லவா..? So 'இன்றைக்கு இன்னுமொரு blockbuster பதிவு காத்துள்ளது!' என்ற புதிய வாக்குறுதியோடு இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் ! Catch you soon !!
ஒரு வழியாக ........ மீ தி ஃபர்ஸ்ட்!
ReplyDeleteபதிவின் விஷயங்களை ஒருவாறு ஊகித்தே இருந்தாலும், எந்த கதை என்பதில் சிறிய சர்ப்பிரைஸ் இருக்கவே இருக்கிறது
//இது வாக்குறுதி நேரம் அல்லவா..? So 'இன்றைக்கு இன்னுமொரு blockbuster பதிவு காத்துள்ளது!' என்ற புதிய வாக்குறுதியோடு இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் ! Catch you soon !!//
ReplyDeleteஎங்கள் வோட்டு உங்களுக்கே என்பதை சொல்லவும் வேண்டுமா?
சூப்பர் நியூஸ்
ReplyDeleteYes its soooper
DeleteVijayan sir,
ReplyDeleteJust now downloaded French version (France) & looking good & waiting to see in Tamil & Colour
MSS VNR
நீங்கள் கடல் கடந்து போய் வந்து அட்டகாசமான செய்தி சொல்லியிருக்கிறீர்கள். கடல் கடந்தும் பல வாக்காளர்கள் உங்கள் வாக்குறுதிகளை நம்பி எப்போதும் வாக்களித்தும்; வாக்களிக்கவும் காத்துக்கொண்டுமிருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்கிறோம்.
ReplyDeleteவெஸ்டர்ன் போன்ற தொடர்களைக் கொண்டுவருவது மிக அற்புதமான செய்தி.
ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் இவைபோன்ற கதைகளை உங்கள் மொழிபெயர்ப்பில் தமிழில் படிப்பதற்குக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்! (சத்தியமாக ஐஸ் வைப்பதற்குச் சொல்லவில்லை. எல்லா நண்பர்களும் இதை ஒத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்).
காத்திருக்கிறோம் - இன்னும் பல புது வரவுகளுக்காக.
பி.கு: இன்று அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. உங்கள் அடுத்தடுத்த பதிவுகளைப் பதிவுகளின் எதிர்பார்ப்பில். வேலை முடிந்து வீடு வந்த பின்னர்தான் இரண்டாவது பதிவைப் படிக்கக் கிடைத்தது. அடுத்தது...?
Theeban (SL)
Thool kilappunka sir
ReplyDeletewelcom-western!!
ReplyDeleteஇது ஒரு சிறந்த செய்தி.... :)
ReplyDeleteRamesh
I think that it will be like Oru Veeranin Kathai... Am i right sir?
ReplyDeleteசார், கௌ பாய் கதைகள் மீது எனக்கு எப்போதும் தீராதக் கொலை வெறி! அதுவும் இப்போது புதிய பரிமாணத்தில் என்னும் போது, curiosity யும் சந்தோசமும் தறிக்கெட்டு பறக்கிறது!
ReplyDeleteமகிழ்ச்சியான தகவல் . நன்றி
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDeleteபுதுப் புது நற்செய்திகளாக அறிவித்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறீர்கள். Super news.
அன்புடன்,
ராஜா
//Robinson AbrahamMar 5, 2012 08:42 AM
ReplyDeleteI think that it will be like Oru Veeranin Kathai... Am i right sir?//
Not the same depth and intensity, but still much better story. It is the winning combination of rosinski and van hamme that does the trick.
Yes, it's a nice story (thanks to cinebook), it will reach everybody when you publish it in Tamil.
ReplyDeleteSir,
Like Tex Willer and Blueberry we are looking forward to get to be introduced to some other cowboy heroes too in Tamil.
Please share info about some other books, heroes you liked very much (படித்ததில் பிடித்தது).
It might not be possible to publish all the stories in Tamil, but your valuable input will help us to buy those books through Flipkart/Amazon.
Thanks in advance.
Mahesh
I think "Road to Perdition" in comic format is suitable for us(Tamil readers).
ReplyDeleteசிறப்பான தேர்வு. சென்ற மாதம் தான் இதன் ஆங்கில பிரதியை படிக்க முடிந்தது. அட்டகாசமான தொடர். மனித உணர்வுகள், பிண்ணி பெடலெடுத்திருப்பார்கள்... அதுவும் அந்த சஸ்பென்ஸ் எதிர்பாராத இறுதி கட்டம், இது வரை நமது தமிழ் காமிக்ஸ் தேர்வுகளில் அதிகம் நாம் கண்டிராத களமாக தான் இருக்கும்... கறுப்பு கிழவி கதைகள் தவிர, அது துக்கடவாக இருந்தாலும்.
ReplyDeleteதமிழில் இக்கதையை படிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
graphic novel saga begins
ReplyDeletePadichitten
ReplyDeleteSema story sir