Powered By Blogger

Wednesday, March 21, 2012

ஒரு குரங்கு..ஒரு நாய்..ஒரு லயன் !


நண்பர்களே,

சந்தேகமின்றி விசித்திரமான தலைப்பு தான் .....! முழுவதும் படித்த பின்னர் காரணம் புரிந்திடும் !

சென்ற வாரம் சற்றே பிஸியான வாரமாய் அமைந்திட்டது...சில பர்சனல் வேலைகளால் ! So - தற்காலிகமாய் மாயாவி ஆக வேண்டியதாகிப் போச்சு ! Sorry people !

மீண்டும் ஒரு sorry ..! இம்முறை "தலைவாங்கியாரின்" தாமதத்துக்கு ! 

எவ்வளவோ முறைகள்..'ஹி..ஹி .." என்று அசடு வழிந்து அடியேன் அதில் நிறையவே தேர்ச்சி பெற்றிருந்தாலும் ...இம்முறை ஒரு legitimate காரணம் உள்ளது லேசான ஆறுதல்..!

மறுபதிப்பு என்பதால் தயாரிப்பில் பெரியதொரு பணி எனக்குக் கிடையாது ; so 'மட மட' வென உள் inner பக்கங்கள் அச்சாகி விட்டது.  அட்டைபடப் பணிகளில் தான் சோதனையே ....! துரதிர்ஷ்டவசமாக நமது ஓவியரை ஒரு தெரு நாய் கடித்து புண்ணியம் சம்பாதித்துக் கொண்டது !  (நம் ஓவியர் ஒரு மாற்றுத் திறனாளி என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் !) 

So - அட்டைபடப் பணி ரொம்பவே சோதித்து விட்டது ! வேறு வழி இல்லாமல் நம்மிடம் இருந்திட்ட இன்னொரு டெக்ஸ் டிசைனை மெருகூட்டி இந்த இதழுக்குப் பொருத்தமாக்கிட மண்டை காய்ந்து போய் விட்டது ! நாளொன்றுக்கு 10 மணி நேர மின்வெட்டும் சரி..வெள்ளிக்கிழமைகள் நிலவிடும் முழு நாள் மின்சார விடுமுறையும் சரி....சிவகாசியின் சுறுசுறுப்புக்கு சூப்பரான road block ஆக அமைந்து வருகின்றன ! 




ஒரு வழியாக அச்சுப் பணிகள் முடிந்து பைண்டிங் வேலைகள் துவங்கி உள்ளன....வரும் திங்கள் முதல் "தலைவாங்கிக் குரங்கு" உங்களைத் தேடிப் புறப்பட்டு வந்திடும் ! இந்த இதழில் "மறுபதிப்புப் பட்டியல்" இடம்பெறுகின்றது...Top 20 கதைகளின் பட்டியலோடு - என்பது கொசுறு சேதி ! நிச்சயம் எனது தேர்வுகளுக்கு பல மாதிரியான reactions இருந்திடுமென்பது உறுதி !

தாமதத்தை ஈடு செய்யும் வகையில் இன்னமும் கூட ஒரு நல்ல சேதி..! லயனின் புதிய வெளியீடான "எமனின் தூதன் டாக்டர் 7 " கூட தயாராகி வருகின்றது ! வரும் வாரத்தில் அதுவும் உங்கள் கைகளில் இருந்திடும் ! காரிகனின் action சாகசம் + ரிப் கிர்பியின் "கன்னித் தீவில் ஒரு காரிகை" இந்த இதழில் இடம்பெறுகின்றன ! இரு கதைகளுக்குமே அசாத்திய சித்திரங்கள் தான் highlight !  


அட்டைப்படங்கள் எப்படி வந்துள்ளன என்பது பற்றி உங்களின் அபிப்ராயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வமாய் காத்துள்ளேன்...! Please do write ! 

மீண்டும் இந்த சனிக்கிழமை ஒரு பதிவோடு உங்களை சந்திக்கிறேன் ! அதற்கு மத்தியில் ஆங்காங்கே பதிலுக்குக் காத்திருக்கும் சென்ற வாரத்து postings க்கு பதில் பதிவுகள் செய்திடுவேன் ! Take Care folks ! 

29 comments:

  1. ஹலோ விஜயன் சார்,

    மிகவும் மகிழ்ச்சி !!!!

    மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் ...

    தலைப்பு மிகவும் பொருத்தம் :)

    முதல் படம் (டெக்ஸ் வில்லர்) டிஸ்ப்ளே ஆகவில்லை. கவனிக்கவும்.

    ரூபாய் 1௦௦ (Special) புத்தகம் பற்றி ஏதேனும் அப்டேட் ?

    S. நாகராஜன்

    ReplyDelete
  2. // முதல் படம் (டெக்ஸ் வில்லர்) டிஸ்ப்ளே ஆகவில்லை. கவனிக்கவும். //

    சரியாகி விட்டது.

    நாகராஜன்

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி உங்க அலுவலகத்தில் மாற்று திறநாளியை பணிக்கு வைத்துள்ளது மிக மிக நல்ல விஷயம் ஆண்டவர் உங்களுக்கு நல்ல பலன்களை தருவார் நான் ஜெபிக்கிறேன்

    ReplyDelete
  4. Sir covers are good as look as old one, and what about irumbu kai ethan continues???

    ReplyDelete
  5. nan lioninin puthu rasigargalil oruvan. "Dragan nagaram appadi eppadi" endru thangal palamurai elluthi irukirirgal. Athanal,pleeeeeez......athai mattumavathu marupathipu seithidungalen. Ennai pondra ila vayathu vasagargallukagavathu.

    ReplyDelete
  6. All the very best - awaiting the Gifts ;-)

    - LAx

    ReplyDelete
  7. Vijayan sir,

    Thanks for the update..Was checking your site every day from 10th mar...

    next week we should be getting both the books i believe..

    any update on the super hero special book?

    Rgds
    Srini

    ReplyDelete
  8. எடிட்டர் சார், நீங்க அட்டை படமே இல்லமா இதழ்கள் வெளியிட்டால் கூட அதற்காக நாங்கள் கவலைபடப்போவதில்லை. ஆனால் இந்த டெக்ஸ் அட்டைபடம் இன்னமும் எனது மனதின் ஒரு ஓரத்தில் உள்ளது. தனது மகனை தேடி அலையும் டெக்ஸ் சாகசம் மட்டுமே நினைவில் உள்ளது. ஆனால் பெயர் மறந்து விட்டது.

    ஒரு ரசனையான இரவில் (ரூம் போட்டு தண்ணி அடிக்கும் போது தான்) ஒரு ரசனையான பதிவை படிக்கும் பொழுது கிடைக்கும் ஆனந்தமே தனி தான்.

    ReplyDelete
  9. Dear Vijayan sir

    Excellent cover pages. Nice to see that you have used old cover page partly in the new cover. I already red many times this book. But egarly waiting to read in color.

    Thanks a lot.
    With luv,
    Sankar C.

    ReplyDelete
  10. sir, When can we get these books by Airmail to USA? In a week or 10 days???I am eagerly waiting for it.

    ReplyDelete
  11. Dear Vijayan Sir, Can you pl. update my new address in your records? I want to renew the subscription but, just wanted to make sure the address is updated before I make the payment. Couple of issues went to my old address and I got them very late due to that.

    When you get a chance pl. check your mail for details (new address)

    thank you!
    -karthik

    ReplyDelete
  12. சார், அட்டைப்படங்கள் வழக்கம் போல் அசத்தல் ரகம்! அப்புறம், வரும் ஏப்ரலோடு மாயாவியின் "எந்திரப்படை" (ஏப்ரல் 1987 (முத்து வெ. எண்.167)) வெளி வந்து 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன! அதற்கு தோதாக ஏப்ரலில் வெளிவரயிருக்கும் சூப்பர் ஹீரோ சூப்பர் special - ல் அதன் தொடர்ச்சியாக "எட்டுக்கர எத்தன்" படிக்கும் முன் ஒரு 'recap ' பாக "எந்திரப்படை" ரீப்ரின்ட் போட்டு அசத்தினால் என்ன...? வாட் டூ யு செ யார் ? புது வாசகர்களுக்கு தலைக்கால் புரியும், பழைய வாசகர்களுக்கு ஒரு பரவச அனுபவம்.....ம்ம்ம்ம்ம்ம்?

    ReplyDelete
  13. Appadi romba nal kalithu unkalai parthathula romba santhosam
    M.SAKRATES

    ReplyDelete
  14. அட்டைப்படங்கள்; வடிவமைப்பு நன்றாக இருக்கின்றன. அச்சில் வரும்போது இன்னும் அசத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    உங்கள் ஓவியர் விரைவில் குணமடைந்துவர பிரார்த்திக்கிறோம்.

    -Theeban (SL)

    ReplyDelete
  15. XIII oru pulan visaranai...
    eppothu varum sir...?

    ReplyDelete
  16. முகப்பு படங்கள் அருமை, அதிலும் "டாக்டர் 7" அட்டைபடம் சூப்பர்.
    ஆவலுடன் காத்திருக்கிறேன். நம் மாற்று திறனாளி ஓவியர் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  17. சார்,
    நமது ஆர்டிஸ்ட் விரைவில் முழுமையான நலம் அடைய வேண்டிக்கொள்கிறேன். முதன் முதலாக upgrade quality யில் 25 விலையில் வரவிருக்கும் இதழை கைகளில் ஏந்த ஆவலுடன் உள்ளேன்.

    இதழில் இடம் பெறும் "மறுபதிப்புப் பட்டியல்" பார்க்க ஆவலுடன் உள்ளேன்.

    ReplyDelete
  18. டியர் எடிட்டர்,

    புதிய அட்டைபடத்திற்கு இத்தனை நேரத்தை செலவழித்ததை விட பழைய தலைவாங்கி குரங்கு அட்டையை மறுபதிப்பு செய்திருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம். அந்த அட்டை இன்றைய நமது கனமான அட்டை முறையில் இன்னும் அதீதமாக ஜொலித்திருக்கும். புதிய அட்டையில் டெக்ஸ் & கோவினர், ஏதோ 40 ஐ கடந்த மேக்கப் ஆசாமிகள் போல வீங்கி போன முகங்களோடு காட்சியளிக்கிறார்கள்.


    காயபட்ட நமது ஆஸ்தான ஓவியர் மீண்டும் இயங்கு நிலைக்கு திரும்பி வர பிரார்த்திக்கிறேன். டாக்டர் செவன் அட்டைபடம் போன்று அவ்வப்போது சில அட்டகாசமான கவர்களை வண்ணங்களின் சரியான கலவையுடன் படைக்கும் அவர் திறமை, அருமை.

    ReplyDelete
  19. விஜயன் சார்

    // நமது ஆர்டிஸ்ட் விரைவில் முழுமையான நலம் அடைய வேண்டிக்கொள்கிறேன். //

    Me too :))
    .

    ReplyDelete
  20. // வரும் திங்கள் முதல் "தலைவாங்கிக் குரங்கு" உங்களைத் தேடிப் புறப்பட்டு வந்திடும் ! இந்த இதழில் "மறுபதிப்புப் பட்டியல்" இடம்பெறுகின்றது...Top 20 கதைகளின் பட்டியலோடு - என்பது கொசுறு சேதி ! //

    மிக மிக மகிழ்ச்சியான செய்தி விஜயன் சார் :))

    மேலும் உங்களின் Top 20 கதை என்ன என்பதை தெரிந்து கொள்ள மிக்க ஆவலாக இருக்கிறது

    ஏனென்றால் அதுதானே அடுத்த கிளாசிக் வெளியீடு என்ன சார் நான் சொல்வது சரிதானே ;-)
    .

    ReplyDelete
  21. // அட்டைப்படங்கள் எப்படி வந்துள்ளன என்பது பற்றி உங்களின் அபிப்ராயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வமாய் காத்துள்ளேன்...! Please do write ! //

    அனைத்து அட்டைப் படங்களும் மிக மிக அருமையாக வந்துள்ளது விஜயன் சார் :))

    ReplyDelete
  22. அனைத்து வெளிநாட்டு ஓவியர்களையும் வெளிக்கொண்டுவரும் நீங்கள் ஏன் நமது ஆஸ்தான ஓவியரின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிடலாமே . அவருக்கும் உற்சாக டானிக்காக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இதை நான் வழி மொழிகின்றேன். :)

      Delete
  23. great. Eagerly waiting to get this book on hand.

    ReplyDelete
  24. Electricity problem even got worse in future..

    ReplyDelete