Powered By Blogger

Saturday, March 10, 2012

ஒரு சகாப்தம் ஓய்ந்தது !


நண்பர்களே,

இன்றைய பதிவுக்கு நான் தயார் செய்து கொண்டிருந்த பொது தான் பிரான்சிலிருந்து சோகமான சேதி தாங்கிய ஈ-மெயில் வந்திட்டது.....!

நமது கேப்டன் டைகர் கதைவரிசையின் பிரதான ஓவியரான ஷான் ஜிராட் புற்று நோயை எதிர்த்தான நீண்டதொரு போராட்டத்தைத் தொடர்ந்து நேற்றிரவு காலமடைந்து விட்டார் !  ரொம்ப நாட்களாகவே உடல் நலமின்றி இருந்து வந்த ஜிராட் அவர்களின் மறைவு காமிக்ஸ் உலகிற்கு ஒரு ஈடு செய்ய இயலா இழப்பு என்பதில் ஐயமே கிடையாது.

ஓவியர் ஜிராட்


1938 -ல் பாரிஸ் நகரின் அருகே பிறந்து ; ஓவியப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின் விளம்பரத் துறையிலும், பேஷன் துறையிலும் டிசைன் ஓவியராகப் பணியாற்றி விட்டு அப்புறமாய் காமிக்ஸ் துறை நோக்கி தனது பார்வையினை செலுத்தினார் !

மோபியஸ் என்ற புனைப்பெயரில் சில sci -fi கதைகளுக்கும் ; ஜப்பானிய மங்கா கதைகளுக்கும் சித்திரம் தீட்டியுள்ளார் என்ற போதிலும் இவரை வெற்றிக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது லெப்டினன்ட் ப்ளுபெர்ரி (நமது கேப்டன் டைகர்) தொடரே !



பிற்காலத்தில் திரைப்படங்களுக்கு storyboard தயார் செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு.

நம் டைகர் கதைகள் மட்டும் அல்லாது,  " XIII - இரத்தப் படலம்"  கதைத் தொடரின் பாகம் 17 -ஆன "அயர்லாந்துப் படலம்" கதைக்கான சித்திரங்கள் கூட ஜிராட் கைவண்ணமே !

2000 -2010 வரையில் "Inside Moebius " என்ற பெயரில் தன்னையே ஒரு காமிக்ஸ் பாத்திரமாக வடித்து, தனது இதர படைப்புகளோடு உலா வருவது போல் ஒரு கதைத் தொடரினை ஆறு ஆல்பங்களில் 700 பக்கங்களுக்கு உருவாக்கி இருந்தார் ! ஓவியங்களின் மூலையில் "Gir " என்ற சின்னதொரு கையெழுத்தே இவரின் அடையாளம் ! 

நேற்றிரவு அவரது 73 -வது வயதில், காலனின் கரங்களுக்குள் அமைதி தேடிட்டார் ! உலகம் முழுவதும் எண்ணற்ற காமிக்ஸ் ரசிகர்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து படைத்த ஒரு அற்புத மனிதருக்கு நமது கண்ணீரே அஞ்சலியாகட்டும்....! மனிதர் மறைந்திட்டாலும் அவரின் படைப்புகள் இன்றைக்கும்..என்றைக்கும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்து கொண்டே இருக்குமென்பது உறுதி !

Adieu Moebius ....! We will miss you ! 

36 comments:

  1. காமிக்ஸிற்கு ஜான் கிரார்ட் ஆற்றிய பணி அளவிட முடியாத ஒன்று. கவ்பாய் கதைகளை வித்தியாசனமான கோனத்தில் அணுக எனக்கு ஒரு வாய்ப்பு அவர் மூலம் தான் ஏற்பட்டது. ப்ளுபெர்ரியின் அறிமுகத்திற்கு நன்றிகள், எடிட்டர்.

    ReplyDelete
  2. ஜான் கிரார்ட் மறைவு, காமிக்ஸ் உலகத்திற்கு பெரும் இழப்பு.

    ReplyDelete
  3. In a complete departure from his gritty realistic art style, He created a different style of art for his sci-fi stories under the pseudonym Moebius..

    The art style were so radically different that no one can say they were done by the same man by just looking at the art. Such is the talent of this man.

    Giraud is a great visionary and a comics legend.

    RIP Jean Giraud/Moebius...

    Thanks to Vijayan sir for introducing Giraud to us.

    ReplyDelete
  4. மிகவும் வருத்தமான செய்தி.அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  5. உங்களின் மகத்தான அறிமுகம் என்று பார்த்தால் கண்டிப்பாக அது கேப்டன் டைகர் ஆகத்தான் இருக்க முடியும். இதுபோன்ற ஒரு கதைவரிசையை சுமார் பதினாறு வருடங்களுக்கு முன்பாகவே எங்களுக்கு அரிமுகப்படுதியமைக்கு நன்றி.

    காமிக்ஸ் ரசிகர்களுக்கு மார்ச் மாதம் பத்தாம் தேதி என்பது ஒரு மோசமான நாள் போலிருக்கிறது. குறிப்பாக கவ்பாய் ஹீரோக்களை பிரதானப்படுத்தி வரையும் ஓவியர்களுக்கு. இந்த தேதியில் தான் நம்முடைய டெக்ஸ் வில்லரின் ஆரம்பகால ஓவியர் அரேல்லியோ கல்லேப்பிணி (பிரியமாக காலேப்) பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இறைவனடி சேர்ந்தார். இதே தேதியில் இந்த ஆண்டு நம் தமிழ் காமிக்ஸ் உலகின் தற்போதைய சூப்பர் ஸ்டார் கேப்டன் டைகர் (ப்ளூபெர்ரி) கதைகளின் ஓவியர் ஆகிய ழான் ஜிராட் (புனைப்பெயர் மோபியஸ்) காலமானார்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    #RIP Moebius

    ReplyDelete
  6. மிக வருத்தத்திற்குரிய செய்தி.

    ReplyDelete
  7. மிகவும் வருந்தத்தக்க செய்தி , அன்னாருக்கு அஞ்சலி

    ReplyDelete
  8. கேப்டன் டைகர்! அந்த கதாநாயகனின் காமிக்ஸ் நீங்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்தும் வரை நான் பார்த்த செவ்விந்திய மக்கள் போராட்டம் வேறு, அது இரு மதத்தினரிடையே, இரு சாதிகள் இடையே, இரு நாடுகளிடையே ஏற்படும் ரத்தவெறி கொண்ட போர்கள் போன்றே என்று எண்ணிக்கொண்டிருந்தேன்! ஆனால் கேப்டன் டைகரின் கதைகள் எனது அந்த தவறான வரலாற்று பார்வையை மாற்றியது என்றால் மிகையல்ல!அதன்பிறகே உலகெங்கிலும் ஏற்பட்ட இனபடுகொலைகள் பற்றிய உண்மையான விஷயங்கள் பற்றி தேட ஆரம்பித்தேன், விவாதிக்கவும் செய்கின்றேன். அப்படி பட்ட கதைகளுக்குள் வாசகன் ஐக்கியமாக ஜிராட் டின் ஓவியங்களே உதவியது, நம் கண்முன் நாம் இதுவரை பார்த்திடாத அமெரிக்க கௌபாய், செவ்விந்திய மக்களின்
    உடைகள், நகரங்கள், வசிப்பிடங்கள், சிறைசாலைகள், காடு, மலைகள், வறண்ட பள்ளதாக்குகள் என்று எம்மை அந்த 17ஆம் நூற்றாண்டில் உலவவிட்ட கால இயந்திரமாக இருந்தது மொபியஸ்சின் ஓவியங்களே. அவரையும், அவரது காவியமான கேப்டன் டைகரையும் எங்களுக்கு அறிமுகப்படுத்திய ஆசிரியர் விஜயன் சாருக்கு நன்றிகள் பல! இப்போது தனது ஓவிய நாயகன் டைகருடன், ஜிம்மியின் போதை கலந்த தத்துவங்களுடன், ரெட் உல் லின் துணையோடு ஒரு அப்பலூஸா குதிரையில் கம்பீரமாக செவ்விந்திய கிராமங்கள் நோக்கி ஜீன் கிராட்சென்றுகொண்டிருக்கிறார்! :(

    ReplyDelete
  9. Jean Giraud ன் மறைவு காமிக்ஸ் உலகிற்கு ஒரு பேரிழப்பு. இன்று இதை பதிவிடலாம் என்று இங்கு வந்தேன். ஆனால் நீங்கள் அவருக்கு ஒரு பெரிய கட்டுரை வரைந்து அஞ்சலி செலுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  10. அவர் மறைந்தாலும், அவரது சித்திரங்கள் வரும் காலங்களில் நிலைத்து நின்று அவர் பெயர் சொல்லும். கலைஞனுக்கு அழிவில்லை.

    ReplyDelete
  11. thanga kallaraiyai en amma kitta irunthu kashtapattu pidungi chennaiku kondu vanthu athan chithira tharathil mey maranthu irukkumbothuthan ippadi oru thagaval vara venduma? Annarai miss pannum palaril nanum oruvan. en iruthi anjali_Kangalil Neerudan !!

    ReplyDelete
    Replies
    1. தங்க கல்லறையை என் அம்மா கிட்ட இருந்து கஷ்டப்பட்டு பிடுங்கி சென்னைக்கு கொண்டு வந்து அதன் சித்திர தரத்தில் மெய் மறந்து இருக்கும்போதுதான் இப்படி ஒரு தகவல் வர வேண்டுமா? அன்னாரை மிஸ் பண்ணும் பலரில் நானும் ஒருவன். என் இறுதி அஞ்சலி _ கண்களில் நீருடன் !!

      தேங்க்ஸ் டு :
      http://www.google.com/transliterate/indic/Tamil

      Delete
    2. btw, the above is the transliteration for John Simon's post! Not mine...

      Delete
    3. மிக்க நன்றி கார்த்திக் அவர்களே உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் அவசரத்தில் ஆங்கிலத்தில் சொல்லி விட்டேன்/ சுட்டி காட்டியமைக்கு மறுபடியும் எனது நன்றிகள் வாழ்க தமிழ்

      Delete
    4. "சுட்டி" (link) காட்டியமைக்கா அல்லது "சுட்டி காட்டியமைக்கா" ;)

      Delete
  12. அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  13. Very very Sad News for all comics lovers (specially Captain Tiger fans). அவர் மறைந்தாலும், அவரது சித்திரங்கள் வரும் காலங்களில் நிலைத்து நின்று அவர் பெயர் சொல்லும். கலைஞனுக்கு அழிவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  14. உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ......................மேற்கே மறைந்த மின்னல்...........................நாங்கள் இவரை உங்கள் கண்கள் மூலமாக தான் பார்த்துள்ளோம் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  15. Sorry to hear, RIP. Like the director of a movie not many know (remember) the artist of a comics. Lion comics 'sometimes' does highlight them. It would be appreciated if the credit is given with every Lion/Muthu issue!

    ReplyDelete
  16. அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

    NAGARAJAN S

    ReplyDelete
  17. இந்த பதிவுக்கு Non-Related ஆக ஒரு தகவல் கமென்ட்:

    எடிட்டர் பிளாக் ஆரம்பித்து இன்றுடன் 81வது நாள். இதில் மொத்தம் 26 பதிவுகள். கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு ஒரு பதிவு என்று சூப்பர் ஸ்பீடில் செல்லும் இவருக்கு உறுதுணையாக மொத்தம் நூற்றி ஐம்பது ஃபாலோயர்கள் (கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு ஒரு புது ஃபாலோயர்).

    இப்படியே தொடர்ந்து காமிக்ஸ் உலகில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தலைவாங்கிக் குரங்கு-நான் படித்த முதல் டெக்ஸ் வில்லர் கதை

    ReplyDelete
  18. மிக மிக வருத்தமான செய்தி :((
    .
    // மனிதர் மறைந்திட்டாலும் அவரின் படைப்புகள் இன்றைக்கும்..என்றைக்கும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்து கொண்டே இருக்குமென்பது உறுதி ! //

    மிக மிகச்சரியாக சொன்னீர்கள் ;-)
    .

    ReplyDelete
  19. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  20. Dear Editor Sir,

    Any update about "Thalaivangi kurangu"? As you said release date March 10th is already passed.

    ReplyDelete
  21. எடிட்டர் சார், இந்த நேரத்தில் இப்படி கேட்பதற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  22. Just sent money order to Thalaivangi kurangu. Dalton's moliyil solvathanal "muthal thirutai nadathia pothu erpatta utharalai inniku unergiren".

    ReplyDelete
  23. Just sent money order to Thalaivangi kurangu. Dalton's moliyil solvathanal "muthal thirutai nadathia pothu erpatta utharalai inniku unergiren".

    ReplyDelete
    Replies
    1. super pls subscribe to lion Ji there is a need for magic 1000. Take care friend.

      Delete
  24. எடிட்டர் சார்,

    new post and update March issues ப்ளீஸ்..

    ReplyDelete
  25. "ஒரு சகாப்தம் ஓய்ந்தது" சென்டிமென்டாக இந்த டைட்டில் சரி இல்லையோ
    பதிவு வந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது, பத்தாம் தேதி வரவேண்டிய "தலை வாங்கி குரங்கு"
    இன்னும் வரவில்லை....எடிட்டர் சார், தயவு செய்து வேற டைட்டில் ஒன்றில் பதிவு இடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. P.Karthikeyan : புதுப் பதிவும் தயார்...புத்தகமும் தயார்..! :-)

      Delete
  26. Sir ,
    I am new to forum! But a great lion comic lover! Sadly loss all my collection! Happy to see this up bringing of treasures! going to buy all old collections and subscribe to new ! But the said thing my favourite Kazhukumalai kottai of modesty is missing in old collection ! How can I get it sir! (It is all because of greediness...:D )Thank you once again.

    ReplyDelete
  27. Hi
    got all the books ! They reached me after the 3 rd day i sent money! The joy after receivig those 77 of them + come back specials I cannot explain it by words! A comic lover can understand ! Still i am greedy ! Waiting for next issue!
    Editor sir, I request you to reprint the kazhugumalaikottai of modesty blaise.
    Thank you sir.

    ReplyDelete
  28. this is a great loss to those who are loving comics now a days we dont see any comics books like we had read in our school days

    ReplyDelete
  29. The joy of getting tiger books back and facing the next blog with demise of the creator... Life... What else

    ReplyDelete