Powered By Blogger

Friday, February 24, 2012

சிங்கத்தின் சிறுவயதில் - 18!


நண்பர்களே,

ஒரு சரியான கால இடைவேளையில் நமது காமிக்ஸ்கள் வந்திடுவதில்லை என்பதால்.."சிங்கத்தின் சிறுவயதில்" தொடரினை கொஞ்சமாச்சும் முன்னே கொண்டு செல்லுவதற்குள் எனக்குப் பல்செட் மாட்ட வேண்டிய பருவம் வந்திடுமோ என்று தோன்றியது..! ("அதை முன்னே கொண்டு சென்று என்னத்தை சாதிக்க உத்தேசம் ?" என்று கேள்வி கேட்பவர்களுக்கு அடியேனின் பதில் "ஒரு ஞே" முழி தான் )! 

18  பாகங்களை எழுதியும் நமது ஆரம்ப காலத்து அனுபவங்கள் - முதல் வருடத்தைத் தாண்டிய பாடைக் காணோம் என்பதால், இந்த வலைப்பதிவு மூலமாகவாது வண்டியை கொஞ்சம் கொஞ்சமாய் நகற்றிடலாமே என்று நினைத்தேன்...!

வரவிருக்கும் லயன் வெளியீடான "எமனின் தூதன் Dr.7 " இதழில் இடம்பெற்றிடும் "சிங்கத்தின் சிறுவயதில்"-பாகம் 18 -ன் அட்வான்ஸ் copy இதோ..!






வழக்கமாய் சொல்லிடும் "Happy Reading Folks" என்று இந்தப் பகுதியினை முடிக்க மாட்டேன்...படித்துப் பார்த்தால் ஏன் என்று புரியும் !


45 comments:

  1. நிச்சயமாக கவலையான விடயம் தான் சார் .இது போல் எனக்கும் ஓர் மோசமான அனுபவம் உண்டு.2 வருட காலத்தில் நண்பர்களிடம்,பழைய புத்தக கடையில் என கடினபட்டு சேர்த்த 200 வரையான அரிய golden age காமிக்ஸ்களை ஒட்டுமொத்தமாக 1995 ஆண்டு யாழ்ப்பான யுத்தத்தால் இழந்தேன்.முக்கியமாக எனது அந்நாளைய கனவு புத்தகங்கள் top10 ஸ்பெஷல்,செஞ்சுரி ஸ்பெஷல் மற்றும் பல.இன்று முடிந்தவரை பல பழைய பதிப்புகளை சேகரித்து விட்டாலும் அந்த அரிய பொக்கிசங்கள் கிடைக்கவில்லை.இன்றும் நினைவில் பசுமையாக உள்ள, காமிக்ஸில் காதல் வர காரணமான அக்கதைகளை தொலைத்த சோகம்இன்றும் என்னிடம் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. to abisheg,

      My regrets to u! the same happend to me also! I hav lost my book collection in my school days!

      Delete
  2. Anonymouse la eluthuravanka NAME pottu eluthunka!
    M.SAKRATES

    ReplyDelete
  3. Super sir. we want to read all your experience. Please try to tell as soon as possible. Its very very very interesting. Fleetway ke helpna... apppappa ..... asathunga ji!

    ReplyDelete
  4. Ellarum COMMENT vidunka intha thadavai 100 i thandanum

    ReplyDelete
  5. Tamil la eluthura vasathi irukkiravanka TAMIL la eluthunka...

    ReplyDelete
  6. Unka varutham puriyuthu VIJAYAN sir...

    ReplyDelete
  7. ச்சே, என்ன ஒரு அனுபவம். எந்த ஒரு புத்தக ஆர்வலருக்கும் இந்த நிலை வரவே கூடாது.

    எனக்கும் இது போன்ற சூழ்நிலைகள் வைத்ததுண்டு (இந்தியாவுக்குள் மட்டுமே). இன்றுகூட மும்பையில் ஒரு பெட்டிநிறைய புத்தகங்களுடன் என செய்வதென்று தெரியாமல் காத்திருக்கிறேன்
    . அனைத்துமே பழைய புத்தகங்கள் - அவற்றில் காமிக்ஸ் கதைகள் ஓரிரு பக்கங்கள் மட்டுமே. சுமார் முப்பது கிலோ. ஆகையால் அவற்றை வானூர்தியில் கொண்டு செல்லவும் தயக்கம்.

    பேசாமல் இங்கேயே நண்பனின் அறையில் அவற்றை விட்டு வரலாம் என்று நினைத்தாலும் அதிலும் பல சிரமங்கள். என்னுடைய அலுவலகத்திலும் இந்த பெட்டிகளை வைத்துவிட்டு வர முடியாது. பார்க்கலாம், இரவு வரை டைம் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. Simple, send them by parcel service or courier :)

      Delete
    2. இப்போதுதான் இந்த புத்தகங்களுடன் சென்னைக்கு திரும்பினேன். விடுவோமா என்ன?

      Delete
    3. thalai enakku mattum ragasiyamaga antha books list pathi e mail anuppunga please!!!( enna oru suya nalam???!!!) Athane! ingeye Pathividungalen?

      Delete
    4. புத்தக பார்சல் இப்போது சென்னையில் நண்பரின் அலுவலகத்தில் இருக்கிறது.

      பின்னே, இரவு பனிரெண்டு மணிக்கு மும்பையில் இருந்து வரும்போது முப்பது கிலோ புத்தகங்களுடன் வந்தால் எங்கள் வீட்டில் வரவேற்ப்பு எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாதா என்ன? ஆகையால் நாளைக்கோ அல்லது மறுநாளோ அவற்றை வீட்டிற்க்கு சிறிய பெட்டிகளில் கடத்த வேண்டியது தான்.

      கண்டிப்பாக இந்த புத்தகங்களைப்பற்றிய ஒரு பதிவு அடுத்த வார இறுதியில் வரும்.

      Delete
  8. //18 பாகங்களை எழுதியும் நமது ஆரம்ப காலத்து அனுபவங்கள் - முதல் வருடத்தைத் தாண்டிய பாடைக் காணோம் என்பதால், இந்த வலைப்பதிவு மூலமாகவாது வண்டியை கொஞ்சம் கொஞ்சமாய் நகற்றிடலாமே என்று நினைத்தேன்...!

    வரவிருக்கும் லயன் வெளியீடான "எமனின் தூதன் Dr.7 " இதழில் இடம்பெற்றிடும் "சிங்கத்தின் சிறுவயதில்"-பாகம் 18 -ன் அட்வான்ஸ் copy இதோ..!//

    தொடர்ந்து இங்கேயே எழுதுங்கள் சார். பின்னர் வரும் இதழ்களில் அவற்றை தொகுத்து, இணைய வசதி இல்லாதவர்களுக்காக வெளியிடலாம். ஒரு இதழில் இரண்டு பகுதி வந்தாலும் பரவாயில்லை.

    சிங்கம் சீக்கிரம் வளரும்.

    ReplyDelete
  9. புத்தகங்களின் இழப்பு என்பது இதயம் வலிக்கும் செயல்தான்.

    இங்கே நண்பர் அபிஷேக் சொல்லியிருப்பதுபோல...

    யாழ்ப்பாணத்தில் பழைய புத்தகக் கடைகளிலும், சில பெரிய அண்ணன்மார்களிடமும் அதிக பணம் கொடுத்து சேமித்து வைத்திருந்த நூற்றுக்கணக்கான காமிக்ஸ்கள் உள்ளிட்ட புத்தகங்களை இழந்த துக்ககரமான அனுபவம் எனக்கும் இருக்கிறது.

    என்ன, என் புத்தகங்கள் களவு போகவில்லை, மாறாக... 1995 இடப் பெயர்வுக்குப் பிறகு மாறுபடியும் 1996இல் ஊர் திரும்பியபோது, வீட்டின் கூரை எறிகணை விழுந்து பிரிந்துபோயிருக்க... என் புத்தக இறாக்கை கீழே விழுந்து பெய்த அடை மழையிலும் அள்ளுப்பட்டு வந்திருந்த சகதியிலும் நனைந்து - காய்ந்து இறுகிப்போய்க் கிடந்தன.

    தூக்கிப் பார்த்தபோது பக்கங்களைப் பிரிக்க முடியவில்லை. மண் அப்பி, பயனில்லாமல் போயிருந்தன. ஆனால், அவற்றைக்கூட வீசுவதற்கு மனமில்லாமல் சேகரித்து வைத்திருந்தேன்.

    பாடப் புத்தகங்கள் நாசமாகியதுகூட அந்தளவுக்கு வருத்தமளிக்கவில்லை என்பது நிஜம்.

    பொக்கிஷ சேமிப்புக்களை இழந்து நிற்கும் என்னைப் போன்றவர்களுக்கு ஆசிரியரின் மீள் பதிப்பு அறிவிப்புகளே ஆறுதல்.....!

    "Happy Reading Folks" என்று ஆசிரியர் சொல்லாமல் விட்டது நியாயமே!

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. we are sorry!! nanbargale! Illam ilanthu kanavugalai tholaithu... evlo sonnalum athai feelo allathu ezhuthilo kondu vara mudiyatha vethanai enruthan solven. aruthal solla varthaigal illai. kaalamthan ungalai atrum aru marunthu. we pray for you. comicskaga tiruvannamalai, Pondicherry ena nayaay alainthu thirinthu sertha semippugal pala en veetilum mazhaiyal nanainthu azhinthu kanneer varavazhaithu vittana. athil Minnum Maranamum adakkam.

      Delete
    2. இழப்புக்கள் ஏராளம் நண்பர்களே. அவைபற்றிப் பேச இது சரியான இடம் அல்ல. புத்தகங்கள் அவற்றிலும் காமிக்ஸ்களின் இழப்புக்கள் பற்றி மட்டுமே இங்கே கதைப்பது நியாயமாகும்.

      மனக்காயங்களை ஆற்றும் அரிய மருந்தாக காமிக்ஸ்களையும் சொல்லலாம். இங்கிருப்போருக்கும் நம் லயன், முத்து காமிக்ஸ்களைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் இருக்கிறோம். அதற்கு ஆசிரியரும் மனம் வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

      உங்களது அன்பான, கனிவான வார்த்தைகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் எமக்கு இருக்குமென்று நம்புகிறோம்.

      -Theeban (SL)

      Delete
  10. ஹாட் லயன் வரும் முன்னே .................லயன் காமிக்ஸ் வரும் பின்னே ................

    ReplyDelete
  11. Hmm me too lose so many of my collection

    ReplyDelete
  12. நிச்சயமாக கவலையான விடயம் தான் சார். We can understand the feeling. Nice post sir.

    ReplyDelete
  13. King viswa sir courier moolam BOOKS kondu varalamea!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, புத்தகங்களுடன் சென்னைக்கு திரும்பி விட்டேன். நாளைக்கோ அல்லது பிறகோ அந்த புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

      Delete
  14. வாவ், நம்ம சென்சார் போர்டை விட பெரிய கத்தரியாய் போட்டு இருக்கிறீர்கள் ;)

    ReplyDelete
  15. nice to see the post in advance! but sry abt that experience!

    ReplyDelete
  16. வியாபார நோக்கத்தில் பார்க்கும் பொழுது இது ஒரு சரியான செயலே. ஆனாலும் அந்த நிமிடம் நமது மனதில் ஏற்படும் சஞ்சலம் எழுத்தில் வடிக்க முடியாது. இன்று வரை நமது காமிக்ஸ் இதழ்களை சில பெட்டிகளில் போட்டு பராமரித்து வருகிறேன். இந்த நிமிடம் வரை அதனை எங்கு கொண்டு சென்றாலும் ஒரு சுகமான சுமையாகத்தான் தெரிகிறது.

    ReplyDelete
  17. Anna one small request. Please remove word verification from our blog and also make 3 post per page in setting section, so that the loading of page will be easy.

    If possible try to create a group in facebook also, so that reaching to our folks would be much more easier.

    ReplyDelete
  18. unga feelingai naan mandrek in Mayakannadi engira book (daily thanthi) sunday mattum varum kastapattu collect pannumbothu koncham feel panni irukkiren. miga kodumaiyana anubavamthan sir.

    ReplyDelete
  19. என்னுடைய அனுபவம்: எனக்கு நடுநீசி கள்வன் மூலம் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் உருவெடுத்தது. 1996 கோவில் கொண்ட மாநகரில் காமிக்ஸ் தேடி கடைகடையாய் அலைந்த போது கிடைத்த நண்பர்கள், இஸ்ம...ல், பிர..., கணே..... , ராஜா..... நாங்கள் காமிக்ஸ் செகரிப்புக்கென்று டார்கெட் வைத்திருந்தோம். தினமும் ஒரு பழைய காமிக்ஸ் எப்படியாவது வாங்கிவிடுவதேன்பது, அது எப்படி என்றால் யாரையாவது ஏமாற்றியாவது ஒரு காமிக்ஸ் தினமும் சேர்த்து விட வேண்டும், அந்த நேரம் பொற்காலம் என்று சொல்லலாம், சிறிது முயற்சி செய்து தினமும் அலைந்தால் பழைய புத்தக கடையில் காமிக்ஸ் அள்ளிவிடலாம்(திகில், முத்து , மேத்தா, லைன், மிநிலியன் .. etc ), பிரபு ஸ்கூல் முடிந்தவுடன் நேராக பழைய புத்தக கடை சென்று காமிக்ஸ் அள்ளிக்கொண்டு வந்து விடுவான், அதை பார்த்து நாங்களும் வெறியாய் வெயிலில் அலைவோம்.
    ஒரு முறை கணே... வீட்டில் காமிக்ஸ் கலேக்ஸியன் திருடு போய் விட்டது, ஆனால் பணம் நூறு ருபாய் அப்படியே இருந்தது, இதை வைத்து ஆராய்ந்ததில் ராஜா தான் கணே... வீட்டின் கதவை உடைத்து காமிக்ஸ் திருடினான் என்பது தெரிந்து, மாசாக சென்று ராஜா... அடித்தும் அவன் நிஜத்தை கூறவில்லை, எப்போதும் என் நண்பர்களுக்கே காமிக்ஸ் கிடைக்கும், எனக்கோ ம்ம்.. .

    நானும் விடாமல் முயற்சி செய்வேன், ஒரு முறை ஏகப்பட்ட பழைய காமிக்ஸ் கலேக்ஸியன் சுமார் 200 புக்ஸ், வைரஸ் க்ஸ், கொரில்லா சாம்ராஜ்யம்..போன்று வைத்துகொண்டு ஒரு முதியவர் விற்றிருந்தார், என்னிடமோ வெறும் பத்து ருபாய், அவரிடம் பேரம் பேசி ஒரு புத்தகம் 8 ருபாய் என்று முடித்தேன், ஒருவழியாக பணம் தேற்றி வந்து அவரிடம் விசாரித்தால் யாரோ ஒரு வெளி ஊருகாரர் வந்து வாங்கிசென்றதாக கூறிவிட்டார், எனக்கோ ......... அதன் பிறகு காமிக்ஸ் மீது இருந்த ஆசை வெறியாய் மாறியது, அதன் பிறகு வெற்றி தான். யாராவது ஒரு நண்பன் காமிக்ஸ் இந்த ஊரில் கிடைகின்றது என்று சொன்னால் உடனே கிளம்பிவிடுவது- National Treasure படம் போல, அதை தொடர்ந்து காமிக்ஸ் conversions தான். நண்பன் பிர...,விடம் நெடுநாளாக பேரம் பேசி 140 காமிக்ஸ் புக்ஸ் பெற்றது, மீனா... பெயர் கொண்ட பழைய புக் ஸ்டாலில் சுமார் 100 புக்ஸ் பெற்றது, இன்சூரன்ஸ் யஜெண்டின் மனம் மாற்றி மினிலைன் collections பெற்றது, காமாட்சி புக் ஸ்டாலில் மொத்தமாக இந்த்ரஜால் மற்றும் லைன் காமிக்ஸ் 160 புக்ஸ் லாட்டரி அடித்தது, நண்பன் ராஜா....விற்கு தெரியாமல் காமிக்ஸ் இடுப்பில் சொருகியது, ஆனால் இன்றும் இஸ்ம...ல் மட்டும் காமிக்ஸ் வைத்துகொண்டு தராமல் என்றாவது ஒருநாள் அது பெரும் அறியபொகிசம் என்று சொல்லுவான்... இப்போதைக்கு விடைபெறுகிறேன், மீண்டும் விரைவில் வருவேன்.

    ReplyDelete
  20. டியர் விஜயன்,
    நேரில் பார்க்காமலேயே பெயரை மட்டும் கொண்டு மனதளவில் நட்பை உருவாக்கி,பல லட்சக்கனக்கான நெஞ்ஜங்களை கொள்ளையடித்துவளைத்துப் போட்ட பெருமை உங்களுக்கு உண்டு.
    அதில் சந்தோஷமாக சிக்கிக்கொண்ட பெருமையும் எங்களுக்குண்டு.

    ReplyDelete
  21. டியர் ஜோல்னா பையா இத்தனை புக் சேர்ர்க்க குறைந்தது இருபது ஆண்டுகளாவது தேவை படுமே ................

    ReplyDelete
    Replies
    1. ஆம், சுமார் 15 வருடங்கள்.

      Delete
  22. Vijayan Sir,

    Time for next Post.... waiting

    ReplyDelete
  23. Hi everybody,

    Been traveling since the last weekend ; haven't been able to login much ! Will make it up this Sunday ; have some very interesting news !

    ReplyDelete
  24. என் மகன் +2 படிக்கிறான். Lion comeback Special ல் கலர் மற்றும் உயர்தர தாளில் வெளியான கதைகளை மட்டும் புத்தகம் கிடைத்த அன்றே படித்து விட்டான். மற்ற புத்தகங்களை படிக்கவில்லை. இன்றைய தலைமுறையின் ரசனைக்கு ஒரு துளி.

    ReplyDelete
  25. Dear Editor&Staff,

    For long i have been a "Lurker"in this community.but always follows any thing related to our comics.All my comics collection were lost during 90's back in Srilanka.but for last 12 years i buy every single book and start all over again.I feel more excited to see the latest resurgent Lion & Muthu.
    Dear Vijayan,
    As a ardent comics lover i am greatfull to you & your team.please publish more & more books.
    PS:how you manage to interpret Italian Texwiller to Tamil in such a nice way?

    Aldrin Ramesh from Oman

    ReplyDelete
    Replies
    1. Aldrin Ramesh : Thanks for the kind words! தமிழில் வாசிப்பதையும் ,எழுதுவதையும் ரசித்துச் செய்திடும் பட்சத்தில் எல்லாமே சுலபம் தானே !

      Delete
    2. Dear Vijayan,
      Thanks for your time.still waiting for the "Good News" post!

      Cheers,
      Aldrin Ramesh from Muscat

      Delete
    3. Dear Mr.Aldrin Ramesh,
      The latest "Thalaivangi kurangu" is available in Sri Lanka.

      For More Details: http://lion-muthucomics.blogspot.com/2012/02/for-our-sri-lankan-friends.html

      If you have friends in Sri Lanka, Please pass this news to them. Thanks.

      Delete
  26. திரு எஸ்.விஜயன் அவர்களுக்கு,
    இதுவரை வந்த சிங்கத்தின் சிறுவயதில் இங்கே பதிப்பிட்டால் நலம். நான் விரும்பி படிப்பதில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  27. Sir, What is the procedure to read the previous 17 singathin siru vayathil articles

    ReplyDelete