போற போக்கில் தினமும் ஒரு பதிவு செய்திடும் அளவுக்கு நான் முன்னேறி விடுவேன் போல் தெரியுது !!
ஆனால் இம்முறை இது ஒரு "விளக்கம் சொல்லும் பதிவு" என்பதால் - வேறு வழி இல்லாமலே இதை போஸ்ட் செய்கிறேன் என்றே சொல்லிட வேண்டும் !
2001 -ல் நாம் வெளியிட்ட சிக் பில் கதையினை நான் "சுட்டு விட்டதாக" நண்பர் பண்ருட்டிசெந்தில் பதிவு செய்ததோடு மட்டுமல்லாது எனக்கு அது பற்றி மெயில் அனுப்பி இருப்பதாகவும் இங்கே எழுதி இருந்தார். தனிப்பட்ட முறையில் சந்தேகம் எழுப்பி இருந்தால் அதற்கான பதிலை அவருக்கு மட்டும் எழுதி இருந்திருப்பேன்....ஆனால் public forum -ல் சர்ச்சையை கிளப்பி விட்டதால் எனது பதிலையும் பொதுப் பார்வைக்குக் கொண்டு வர வேண்டியதாகிறது ! Hence this post !
"நிஜம் ஒன்று, நிழல் 2" கதை தான் அந்த சர்ச்சைக்குரிய (!!) இதழ். ஒரிஜினல் ஓவியங்கள் சிறப்பாக இருக்கும் போது நான் லோக்கல் ஓவியர்களைக் கொண்டு சஸ்தாவாக ஒரு உல்டா செய்து விட்டதாக செந்திலின் குற்றச்சாட்டு.
இந்த உல்டா வேலையினை செய்தது நானல்ல...ஒரிஜினல் பெல்ஜியப் பதிப்பகத்தினரே என்று சொன்னால் செந்தில் நம்பிடப் போகிறாரா என்ன ?!! So - இதோ உங்கள் முன்னே facts :
பெல்ஜியத்தில் வெளிவந்து கொண்டிருந்த TinTin என்ற காமிக்ஸ் இதழில் July 18, 1957 -ல் தான் முதல் முறையாக "Le Deux Visages De Kid Ordinn" என்ற பெயரில் இந்தக் கதை வெளியானது. இதோ அந்த இதழின் அட்டைப்படமும் ; கதையின் முதல் பக்கமும் ! அதனைத் தொடர்ந்து இருப்பது நமது லயனில் வந்திட்ட இந்தக் கதையின் முதல் பக்கமும் கூட !
புராதன ஓவியப் பாணியில் வெளியான முந்தைய வெளியீடுகளில் சிலவற்றை - 1970 களில் மறுபதிப்பு செய்ய அந்த நிறுவனம் நினைத்த போது, சித்திரங்களை மெருகூட்டி ; கதைப் பாணியில் லேசு லேசாக improvements செய்து திரும்பவும் அதே தலைப்புடன் வெளியிட்டனர்.
இதோ புதிய அட்டைப்படம் ப்ளஸ் புதுப் பாணியிலான முதல் பக்கம் !
இந்தக் கதைக்கான ராயல்டி செலுத்தி artwork அனுப்பக் கோரிய போது, பதிப்பகத்தினர் நமக்கு அனுப்பியது ஒரிஜினலாக 1957 -ல் உருவாக்கப்பட்ட சித்திரங்களையே ! கடைசி நிமிஷத்தில் பணம் அனுப்பி விட்டு கதைக்காகக் காத்திருந்ததால் இந்தப் பழைய படங்களைத் திரும்ப அனுப்பிப் புதிய சித்திரங்களைப் பெற்றிட அவகாசம் இருக்கவில்லை. So அந்தப் பழைய பாணி ஓவியங்களோடு நமது இதழ் உருவானது !
நண்பர் செந்தில் பார்த்திருக்கும் புக் புதிய version மட்டுமே என்பதில் சந்தேகமில்லை. So அவருக்குள் சந்தேகம் கொழுந்து விட்டதிலும் ஆச்சர்யம் இல்லை தான் ! தொடர்ந்தது தான் நண்பரது enquiry படலம் ; 'ராயல்டி கட்டாமல் உல்டா' என்ற குற்றச்சாட்டு ; கொலைவெறி ஏன் ? என்ற கேள்வியோடு !!
எந்த ஒரு விஷயத்துக்கும் இரு பக்கங்கள் இருக்க வாய்ப்புண்டு என்ற consideration நண்பருக்கு இல்லாததும் ; என் தரப்பு நிஜங்களை முன்வைக்க சந்தர்ப்பம் தராமலே "உண்மை என்ன ?" என்று கேள்வி எழுப்புவதும் - தீர்ப்பை முதலிலேயே எழுதி முடித்து விட்டு சம்பிரதாயத்துக்காக வாதங்களைக் கேட்பது போல் உள்ளது ! இப்போதாவது என்னை முகமூடித் திருடன் range -க்குப் பார்த்திடாமல் இருந்தால் சந்தோஷமே !
நிஜமும் ஒன்றே..நிழலும் ஒன்றே..!
பதிவுக்கு நன்றி விஜயன் சார்.
ReplyDeleteKing Viswa : கடமையைச் செய்திட்டதற்கு நன்றி தேவை இல்லையே !:-)
DeleteDear Vijayan Sir,
ReplyDeleteThese kind of finger pointing and fighting is a common thing in the blog world. Pl. don't get hurt by such comments. We are with you and we trust you.
:)
>> நிழலும் ஒன்றே...நிஜமும் ஒன்றே...!
Deleteஆனா இந்த டைட்டில் ரொம்ப பிடிச்சு இருக்கு :)
அருமையான விளக்கம், ஆதாரங்களுடன். அந்த குற்றசாட்டு நம்பிக்கை புறம்பானது, என்பதை தெளிவாக விளக்கியாயிற்று. பழைய கதைகளை மெருகேற்றி புதிய ஓவியபாணியில் வெளியிடும் அவர்கள் காதல் வியக்கவைக்கிறது.
ReplyDeleteYa ! ரீ-மேக் செய்யப்பட்ட திரைப்படத்தை போல கதைகளை முழுவதுமாகப் புதுமெருகூட்டி விடுகிறார்கள் !! அசாத்தியத் திறமைசாலிகளே !!
DeleteThalaiva...... dhool ....singam siluthuruchula.....
ReplyDeleteபாஸ்..."anonymous " என்பதற்குப் பதிலாக உங்கள் பெயரை அழகாய் போட்டிடலாமே ?! :-)
Deleteபோற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும். தொடர்க உங்கள் பயணம்.
ReplyDeletelucky luke , tin tin super :)
ReplyDeleteVijayan Sir,
ReplyDeleteNot related to this post.
You mentioned that you would publish the list of available comics classics in this blog. Can you please publish it ASAP?
எனக்கு பழைய கதையின் சித்திரங்கள் தான் பிடித்துள்ளது.
ReplyDeleteVijayan Sir,
ReplyDeleteWe always trust you.
There is no need for this explanation.
I am visiting this blog everyday to see if there is any new post from you. I am a big fan of your writings.
Regards,
Radja, France.
Radja, France : Thank you ! Please do add / share your comments once in a while too !
DeleteSir We believe u.U no need to prove anything here sir...
ReplyDeleteThanks guys, for the kind words...and more !! You have all been truly wonderful and this blogging experience has been a revelation to me !
ReplyDeleteI'll do my very best to make sure your trust & affection aren't misplaced.
விளக்கமளிப்பதற்காக இடப்பட்ட பதிவு என்றாலும் சுவாரிஸ்யமான பதிவு சார்.
ReplyDeleteஆஹா, அப்ப ஒரு சர்ச்சையை கிளப்பினால் ஒரு பதிவு கிடைக்குமா?? நோட் பன்னுங்க நண்பர்களே... (just kidding)
மறுபடியுமா.....? முதல்-லே இருந்தா ? அவ்வ்வ்வ் !!
Deleteஉங்கள் விளக்கத்துக்கு நன்றி. இதை முதல் தடவை எ விளக்கி இருக்கலாம். அப்படி பார்த்தாலும் நான் தவறாக சொலவில்லை. அழகான படங்கள் கொண்ட கதை இருக்கும்போது ஏன் படு மட்டமான அந்தா காமிக்ஸ் போட்டர்கள். நீங்கள் இது வரை வந்த சிக் பில் ஸ்டோரி அனைத்தும் pudia பானியல் இருக்கும் போடு
ReplyDeleteஇந்த கதை மட்டும் ஏன் palaia பானியல் போட்டர்கள்.
தமிழ் காமிக்ஸ் ய் மட்டும் படித்து கிணத்து தவளை போல் இருக்கும் மனிதர்கள் இருக்கும் இந்த bloog naan சொல்றது புரியாது. ஆசிரியர் ய்க்கு சல்ல்ர போடும் மனிதர்கள் களுக்கு ஒரு கதை குறிக்கிறான். ஒரு 18 age அழகான ஒரு பெண்ணை விட்டு 68 age கிழவியி ஒருவன் திருமணம் செய்கிறான். அதை போர்ற்ற ஒரு கும்பல் இருக்கும்போது பாவம் அந்த மனிதன்(?????) enaaa செய்வான்.
செந்தில்பண்ருட்டி: ஒரே ஒரு வேண்டுகோள்..ஒன்று ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள்..அல்லது தமிழுக்கு வாருங்கள்..!இந்த ரெண்டும்கெட்டான் பாஷையைப் படிப்பது பல்வலி வந்திருக்கும் பொது சீடை சாப்பிட முயற்சிப்பது போல் உள்ளது.
Deleteஅப்புறம் இங்கே இருப்பவர்கள் எல்லாம் கிணற்றுத் தவளைகளா....? அல்லது உங்கள் அளவுக்கு ஆற்றல் படைத்தவர்களா ? - என்ற கேள்விக்கு பதில் சொல்லும் திறமையெல்லாம் எனக்குக் கிடையாது.அதுமட்டுமல்லாது இது நம் வாசகர்களின் அறிவுக் கூர்மையினைப் பரிசோதிக்கும் தளமும் அல்லவே....!
ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்...'பெண்ணின் திருமண வயது 21' என்று எங்கோ வாசித்ததாக ஞாபகம்..! நீங்கள் பாட்டுக்குப் 18 வயசுப் பெண்ணை திருமணம் செய்திட option கொடுத்து புண்ணியம் சேர்க்கிறீர்கள்...!
பழைய காமிக்ஸ் பற்றிய உங்கள் கருத்தில் உண்மை கொஞ்சம் இருந்தாலும், அதை மென்மையாக சொல்லலாமே?! ஏன் இந்த கொலை வெறி?! நீங்கள் பழைய பாடல்கள் கேட்டு ரசித்ததேயில்லையா? அதே போலதான் இதுவும்! ஆசிரியரை சப்போர்ட் செய்ததற்காக காமிக்ஸ் ரசிகர்களை ஜால்ராக்கள் என்ற ரீதியில் குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்!
Deleteசித்திரங்கள் புதிய மாதிரி இல்லை என்பது உண்மை தான். ஆனாலும் அவை மிகவும் ரசிக்கும்படியாக தான் இருந்தன.
ReplyDeleteகாமிக்ஸ் என்பது காலம் கடந்து நிற்கும் ஒரு காவியம். அதை ஒரு பெண்ணுடன் ஒப்பிடாதீர்கள்.
பிரகாஷ் : 'காமிக்ஸ் என்பது காலம் கடந்து நிற்கும் ஒரு காவியம்'. அழகானதொரு வரி !
DeleteNice Post Sir
ReplyDeleteதங்கள் பணி தொடரட்டும்.... தமிழ் காமிக்ஸில் மீண்டும் ஒரு Golden Age வரக காத்து கொண்டு இருக்கிறேன்... என்ன தான் ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் படிப்பது போல இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. Happy Valentine's Day
ReplyDeleteDear Sir,
ReplyDeletePls kindly consider my following request:
Some peoples Sale the our old Muthu Comics Mini Lion, Junior Lion & Thigil old issues for Rs. 500 to Rs. 5000 (Specially the books like Jumbo, Virus X, Kollaikara pisasu 1st issue, Korilla Samrajiam, also Danger Diobolik for 50,000). We can't buy those books now (For that much price). Mainly they have lot of copys of that kind of books (It is like black market). Pls reprint those books then only that kind of peoples will change.
Soundarss, Sivakasi
Idharku peyar dhaan Nethi adia,
ReplyDeleteWe are not jalra kosti, neengal dhaan blog maari vandhu viteergal panruti, mudindhaal neengal oru comics publication aarambithu blog arambiungal.
ReplyDeletenee jolna paiyan ilapa jalra paiyan. idu un vettu blog illapa. vara kudathunu nee aruda sola
Deletehi senthilpanruti sir! I am sakthi from panruti. I like to get ur friendship and sharing comic books. Pls send me your phone no or address to my id velansakthivel@gmail.com
DeleteOLD is GOLD. Please continue with your service. I am BIG FAN of your EXCELLENT translation. We are waiting for more TAMIL comics from you. But I felt that the recent Lucky Luke (Otrargal Orayiram) translations are not up to the mark. Have you tried with any new translator? Please publish Cartoon type books more (Lucky Luke, Chick Bill, Susky Wishky, Mathiyilla Mandiri, etc.). I hope that the translation issue will be addressed in our future books. I hope you will understand my thoughts.
ReplyDeleteFYI: I am long time reader of Lion and Muthu. I am reading since 1988.
Thank you in advance.
With luv,
Sankar C.
//Thalaiva...... dhool ....singam siluthuruchula.....
ReplyDeleteReply
Replies
VijayanFeb 13, 2012 07:09 PM
பாஸ்..."anonymous " என்பதற்குப் பதிலாக உங்கள் பெயரை அழகாய் போட்டிடலாமே ?! :-)//
டியர் சார் .......நான் டாக்டர் ஆவதற்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம்.........................................எப்பிடி ?ஆரம்ப காலம் முதலே ''லயன் காமிக்ஸ் ''படிக்க கற்ற பின்னால் மட்டுமே....'' பாட புத்தகங்களை'' வேகமாய் படிக்க முடிந்தது ...........என்னுடைய மருத்துவ புத்தகங்கள் தலையணையை விட பெரிதாக இருக்கும் .இன்றும் அவைகளை அனாயசமாக காமிக்ஸ் படிப்பது போல தான் படிக்கிறேன் .........அன்று லயன் படிக்காவிட்டால் இன்று என் புத்தகங்கள் மிக பெரிய்ய பாரமாக தான் இருக்கும் .......தமிழ் காமிக்ஸ் மீது ஆர்வமும் இன்னமும் குறைதபாடில்லை.கண்ணியம் தவறாத உங்கள் எழுத்து நடை மிகவும் பிடிக்கும் .லயன் சூப்பர் ஸ்பெசல் ஐம்பது காசு வாடகை கொடுத்து,கடையிலயே உட்கார்ந்து ஒரே நாளில் படித்து வீட்டில் அடிவாங்கிய நாட்கள் மறக்க முடியாதது ..........சிவாசி சிங்கமே .........தொடரட்டும் உன் நடை ........டாக்டர் சுரேஷ் கோவை
மேலைத்தேய ஓவியர்களுடைய பாணிக்கும் தமிழ் நாட்டு ஓவியர்களுடைய ஓவியப் பாணிக்கும் மிகுந்த வித்தியாசங்கள் உண்டு.
ReplyDeleteஅதனை வைத்தே இது தமிழ் நாட்டில் உல்ட்டா செய்யப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.
இரண்டிலுமே சித்திரங்கள் மேலைத்தேய பாணியில் அச்சு அசலாக இருக்கும்போது, உல்ட்டா பண்ணிவிட்டார் நம் எடிட்டர் என்று குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை.
எப்போதும் தரத்தை மெயின்டெய்ன் பண்ணும் நம் எடிட்டர், இப்படி உல்ட்டா வேலை பார்த்து பேரைக் கெடுத்துக்கொள்ள நினைப்பாரா என்ன?
நமக்காக மெனக்கெடும், நாம் நேசிக்கும் ஒருவரை முழுமையாக நம்பவேண்டியது அவசியம். நம்புவதை விட்டுவிட்டால் இருக்கும் ஈடுபாடும், விருப்பமும் அற்றுப்போய்விடும். சிறுவயதிலிருந்தே நம் காமிக்ஸ்களை வாசித்துவரும் ஒரு சாதாரண வாசகன் என்ற உரிமையில் சொல்கிறேன்.
-Theeban (SL)
Where can I get Tamil comics in chennai.
ReplyDelete- Vivek
vijaian sir please try to issue new drawn chick bill story nilal onru nijam 2.
ReplyDeletesir,
ReplyDeletenamathu lion-in meethu konda anbin velippadaka "antha kutrachattai" eduthu kondu editor sir mannikkalame!
-R.SARAVANAKUMAR, TIRUNELVELI.
R.Saravanakumar, Tirunelveli : நிச்சயம் எனக்கு அவர் மீது எந்த வருத்தமும் கிடையாது. என்னைப் பொருத்த வரை அது நேற்றைக்கோடு மங்களம் பாடப்பட்டதொரு சமாச்சாரம்!இங்கே நாம் கூடுவது காமிக்ஸ் எனும் ஒரு பிரத்யேகச் சுவைக்காக..!இதில் விவாதங்கள் இருக்கலாம்...வில்லங்கங்கள் நிச்சயம் இருந்திடாது !
DeleteHello Vijaian Sir,
ReplyDeleteI have mailed you about the subscription of comics. I would like to buy whet ever old copies you have with your publications. I am long time fan for your comics books. After long time I have bought the complete series of XIII and loved it. Then I am really surprised to know that that is story of famous movie "The Bourne Identity".
Please reply to my mail. I sent to lioncomics@yahoo.com
Thanks,
Krishna
Intha Arthamulla arokiyamana vivatham enrume nallathuthan!! intha vayppu amainthatharkaga Editorukkum Senthil, Panruttiyarukkum nan nanri koorikolgiren. oru kurai athai theerkka oru vilakkam! Super. Vijayan sir! Asathunga. Ungalai Miga nerukkamaga ninru parkira mathiri oru feel ithil kidaikkuthu. Plz Continue. With Love, John Simon
ReplyDeleteVijayan Sir,
ReplyDeleteWhy can't we try again to publish some comics in English?
If we print books in good quality papers in color, we may get new readers.
Forgot to tell in previous comment.
ReplyDeleteIt's an excellent explanation regarding the two different editions.
In fact it is very informative to comic fans.
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
ReplyDeleteஒரு குற்றச்சாட்டு, ஆசிரியர் தரும் அதற்கான விளக்கம். இதில் இடையில் புகுந்து வில்லங்கம் செய்திட விரும்பவில்லை. ;) ஆனால் இந்த பதிவில் வரும் விவாதங்கள் அதற்கான விளக்கங்கள் இதனை படித்திடும் பொழுது, எங்க விஜயன் அண்ணாவும் முழுநேர பிளாக்கர் ஆகிவிட்டார் என்று நினைத்து சந்தோசப்பட தான் தோணுது.
comment moderation la irukaa?
ReplyDeleteNopes...
Deletesir idu pola vera edavadhu chick bill story tintin comics old editionla irundu lionla vandu irukka
ReplyDeleteDear Sir,
ReplyDeleteWe Trust you and respect what you have been doing to Tamil Comics world.
Vivek : Many thanks for the kind words...! But I would like to think I'm just another comics lover who has been blessed enough to be doing this as a profession too !
DeleteThere are umpteen guys amongst you with a deeper ; wider knowledge of the world of comics and it has been my privilege to be interacting with each one of you !
me the 50th...
ReplyDeleteThanks for the detail explaination. I think sometimes explaination like this were necessary, eventhough all of us know that all the comics are legit -- seeing an explaination like this make us prod to say that we are reading lion/muthu comics....
ReplyDelete- Karthikeyan
டியர் விஜயன் சார், "நீங்க வெளியிடும் கதைகள் 'ராயல்டி' கட்டாமல் காப்பியடித்து பிரிண்ட் செய்யப்பட்டு வெளிவிடப்படுபவை" என்ற குற்றச்சாட்டு அடிப்படையில்லா ஒன்று என்பது கொஞ்சம் யோசிக்கத் தெரிந்த யாருக்கும் நன்கு புரியும்..! அதுவும் 'சுமார் மூஞ்சி குமார்'களைக் கொண்ட பழைய காமிக்ஸ்களே( இப்ப அந்த மாதிரி சுமார்கள் வருவதில்லை என்பதால் - "பழைய") "ஒன்று ராயல்டியுடன் அன்னியன்' அல்லது உள்ளூர் 'அம்பி' என்றிருந்த போது, தரமான கதைகள் கொடுத்த 'நம்' லயன் / முத்து காமிக்ஸ் அப்படிச் செய்வார்களா..? அப்புறம் இந்த எங்கும் நிறைந்துள்ள "கோள் மூட்டி கோவாலுகள் (குற்றமுள்ள மனசுகள் மட்டும் 'யாரைச் சொல்கிறாய்?" என சண்டைக்கு வரட்டும்..!)" போட்டுக்கொடுத்தாவது அந்த ஒரிஜினல் உரிமையாளர்கள் நம்மீது வழக்குத் தொடுப்பது முதல், நற்பெயருக்குக் களங்கம், புதிய உரிமைகள் தர மறுத்தல் வரை எத்தனையோ நடக்கலாம்..! அப்படியிருக்கும் போது, நம் நண்பர் இன்னும் சிறிது யோசித்திருக்கலாம்... போகட்டும் , நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும்.... நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்... இங்கே உங்களைக் குற்றம் சாட்டும் வாசகர்கள் யாரும் உங்களைத் தவறாக எண்ணுபவர்களல்ல..! அதிக பட்சம், எனக்கு பிரிண்ட் சரியில்லை, புத்தகங்கள் தாமதம், கதையில் 'சொற்குற்றம் / பொருட்குற்றம்' என்று தான் சொல்லுவோம்..! அதுபோல நம் நண்பரும் நான் மேற்சொன்னதுபோல யாராவது கோள் மூட்டி, நம் ஆசிரியருக்கு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று எண்ணியே அப்படி எழுதியிருக்கக்கூடும்..! ( மொழி கொஞ்சம் கடினமாக இருந்திருக்கலாம், அவ்வளவே..!) So, again...
ReplyDeleteநடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும்.... நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்..!
குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் படலம் ஆரம்பித்த போஸ்ட்-இது
ReplyDeleteஇந்த மூ.ச மூ.ச ன்னு அடிக்கடி சொல்வீங்களே. அது இது தானா
ReplyDelete