நண்பர்களே,
வணக்கம். இன்னும் 50+ நாட்களில் "டைனமைட் ஸ்பெஷல்" எனும் ஒரு அதிரடி இதழ் மாத்திரம் முறைப்பாய் நின்று கொண்டிருக்கவில்லையெனில் - இந்நேரத்துக்கு ஒரு பூப்போட்ட சட்டையை மாட்டிக் கொண்டு "கொலம்பஸ்... கொலம்பஸ்... விட்டாச்சு லீவு !!" என்று நானும் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பேன் ! இந்தாண்டின் துவக்கம் முதலே "இரத்தப் படலம்" எனும் சிறு துடிப்பு உள்ளுக்குள் டிக் டிக்கென்று ஒடத் துவங்கியிருந்தது ! ஏப்ரல் முதலே அது 'டாங்...டாங்..' என்று கோவில் மணியாட்டம் தலைக்குள் ஒலிக்க ஆரம்பித்திருந்தது ! And கடைசி ஒரு மாதத்தில் தீயணைப்புத் துறையின் "டங்கா...டங்கா...டங்கா..." அவசர மணியாக உருமாறிப் போயிருந்தது ! அதிலும் 3 + 1 (பு.வி.) புத்தகங்களும் தயாராகி மூடாக்குக்குள் பதுங்கி கிடக்க, அந்த slipcase மாத்திரம் வெளிமாநிலத்திலிருந்து வர வேண்டியிருக்க, அதன் பொருட்டு நேர்ந்த நோவுகளே ஒரு கிளைக்கதை ரேஞ்சுக்கு இருந்தன !
முதலில் ஒரு மாதிரி போட்டுத் தந்து, அதற்கொரு ரேட்டும் சொல்லியிருந்தார்கள் & அது ஓ.கே என்று சொல்லி விட்டிருந்தோம் ! அதன் மத்தியில் நாம் இதழ்களின் முன் & பின் அட்டைகளின் பருமனை அதிகம் பண்ணத் தீர்மானித்திருக்க, 3 புக்குகளும் ஒன்றிணைந்த விஸ்தீரணம் அதிகமாகிப் போயிற்று ! பலன் ? அந்த சிகப்பு slipcase-ன் உள்ளளவும் இத்தனியூண்டு பெரிதாக்க வேண்டிப் போனது ! So மறுக்கா இன்னொரு சேம்பிள் போட்டு அனுப்பப் கோரினால் - இம்முறை வந்ததோ கொஞ்சம் மெலிசான தயாரிப்பு !! "என்ன கொடுமைடா சாமி....? உள்ளட்டையினை நாம புஷ்டியாக்கினால், வெளிப்பெட்டியை இவர்கள் இளைக்கச் செய்துவிட்டார்களே ?!!" என்று கடுப்பாகிப் போனது !! "என்னம்மா...இப்டி பண்ணுறீங்களேமா ?" என்று அவசரம் அவசரமாய் அவர்களிடம் கேட்டால் - "ஓ....கொஞ்சம் குளறுபடி ஆகிப்போச்சுங்க சார் ; அடுத்தவாட்டி இந்த மாதிரி பிராபளம் வர்ரானில்லே !!" என்றபடிக்கு இன்னொரு மாதிரி செய்து அனுப்பினார்கள் - சரியான அளவில் ; கனத்தில் !! ஆனால் இம்முறையோ கனத்தில் மாத்திரமன்றி விலையிலும் புஷ்டி ஏறிப் போயிருந்தது !! "அய்யா...சாமி..தெய்வமே... யோகராஜா....முதல்லே பேசுன ரேட்டே போட்டுக் கொடுங்கய்யா ; இதுக்கு மேலே தாங்காது !!" என்று கூத்தாடி சம்மதிக்க வைப்பதற்குள் நம் XIII புதுசாய் இன்னொரு அவதாரே எடுத்து முடித்திருக்கக்க்கூடும் ! வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டார்கள் ; ஆனால் பட்டுவாடா செய்ய அவர்கள் சொன்ன deadline கிறுகிறுக்கச் செய்தது !! "ஆகஸ்ட் 15 க்கு முன்னே நிச்சயம் ரெடி பண்ணிடலாம் !!" என்று சாவகாசமாய்ச் சொல்ல, மொத்தத்துக்குக் கடுப்பாகிப் போனது ! வேலையைத் தட்டிக் கழிக்கும் பொருட்டு புருடா விடுகிறார்கள் என்பது போல் எனக்கு மனதுக்குப்பட - "நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம் !!" என்றபடிக்கு ஆர்டரை கான்செல் செய்து விட்டு எங்கேனும் ஏதாவது மாற்று ஏற்பாடுகள் செய்திட வாய்ப்புள்ளதா ? என்று பாயைப் பிறாண்ட ஆரம்பித்தேன் !
"சரி...டப்பாவே வேண்டாம் ; அதற்குப் பதிலாய் மெகா போஸ்டர் ஒன்றை அச்சிட்டு இதழ்களோடு தந்துவிடலாம் ; ஏற்கனவே புலன்விசாரணையும் இலவசமாய் வழங்கும் சூழலும் உள்ளதே ; ஒரு மாதிரியாகச் சப்பைக் கட்டு கட்டிக் கொள்ளலாம்" என்றுபட்டது !! ஆனால் கனவுகளில் கலர் கலராய் ; ரகம் ரகமாய் ; தினுசு தினுசாய் துடைப்பங்கள் அணிவகுக்கத் துவங்க - பதட்டத்தில் இங்கும் அங்கும் வலை வீசத் துவங்கினேன் !! கொடுமையிலும் கொடுமை - அப்போது தான் உள்ளூரிலேயே, அதுவும் நமக்கு ரொம்பவே தெரிந்த ஒருவரே, கடந்த 6 மாதங்களாய் இது போன்ற முரட்டு டப்பிக்களை செய்யும் தொழிலில் இருப்பதாய்த் தெரிய வந்தது ! அதற்கான மிஷினை வாங்கிப் போட்டு - இந்த மாதிரியான ஆர்டர்களை எடுத்துச் செய்து வருவதாய்க் கேள்விப்பட்டேன் ! "ஆண்டவா..இது தெரியாமல் எங்கெங்கோ அலைந்து பல்ப் வாங்கித் திரிந்தோமே !!" என்று நொந்து கொண்டே, ஒரே பாய்ச்சலாய் அவர் மேலே விழுந்து பிடுங்கிப்.. பிறாண்டி... டப்பாக்களை செய்ய ஆர்டர் தந்தோம் !! கடைசி நிமிடத்துக் கூத்தென்றாலுமே, நம் அவசரத்தைப் புரிந்து கொண்டு - "இந்த வேலைக்கான சரக்கு என்கிட்டே ஸ்டாக் இல்லை ! அட்டைக்கு ஆர்டர் போட்டு விடுகிறேன் ; ஒரே வாரத்தில் வந்து விடும் ; வந்தவுடன் 2 தவணைகளில் செய்து கொடுத்துவிடுகிறேன் !" என்று வாக்குத் தந்தார் ! And சொன்னபடிக்கே வியாழன் மதியம் 200 பெட்டிகளும், வெள்ளி மாலையில் மீதியையும் சப்ளை செய்து விட்டார் !! இதில் கொடுமையின் உச்சம் - இங்கே உள்ளூரில் விலையும் சகாயம் !! தரமும் A -1 !!
வியாழன் மதியம் முதலே நம் ஆபீசே யுத்தகளம் போலாகி விட்டது !! பேக்கிங் பணிகளை இம்முறை நம் அலுவலக பெண்பிள்ளைகள் அத்தனை பேருமே ஒட்டுமொத்தமாய் இணைந்து செய்து தள்ளினார்கள் ! 2 நாட்களுக்கு டிசைனிங் ; DTP ; அக்கவுண்ட்ஸ் என சகலத்துக்கும் லீவு விட்டுவிட்டு, ஆளாளுக்கு கத்திரிக்கோல் & பிரவுண் டேப் என்று ஒரே பிசி !! இதற்கு மத்தியில் ஈரோட்டுக்குப் புறப்படும் என் அவசரத்தை வெளிக்காட்டி அவர்களை டென்க்ஷன் கொள்ளச் செய்ய வேண்டாமென்று ரொம்பவே கூலாக இருப்பது போல் நடித்துக் கொண்டு திரிய - உள்ளுக்குள்ளோ ஒரு டஜன் மிக்சிக்கள் ஒரே நேரத்தில் ஓடுவது போல் ஒரே கலக்கல் ! சீனியர் எடிட்டரும், கருணையானந்தம் அவர்களும் வெள்ளி காலையிலேயே வண்டியில் ஈரோட்டுக்கு கிளம்புவதாக திட்டம் ; ஆனால் இங்கே பேக்கிங் பணிகளை விரட்ட முடியவில்லை என்பதால் அவர்களை மதியம் வரை காத்திருக்கச் செய்தேன் !! இதற்கு மத்தியிலோ - "ஹல்லோவ்....இது பிரபா ஒயின்சா ? "இ.ப". கடை எப்போ திறப்பீங்க ?" என்ற நண்பர்களின் கேள்விகளோடு போன் கிணுகிணுத்துக் கொண்டே இருக்க - காலை முழுக்க எல்லோருக்குமே வியர்த்துக் கொட்டிவிட்டது !
ஒரு மாதிரியாய் வண்டியில் முன்பதிவு புக்குகளோடு சீனியர் எடிட்டர் கிளம்ப - லேசாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டோம் ! அதற்கு மத்தியில் ஈரோட்டுக்கு ஸ்டால் அமைக்கும் பொருட்டு கிளம்பிப் போயிருந்தவர்களோ - "இங்கே லாரியைக் காணோம் !! பண்டல்கள் இன்னும் வந்த பாட்டைக் காணோம் !!"என்று பாட்டுப் பாடிக் கொண்டேயிருந்தனர் ! "மைதீன்... இங்கேயிருக்கும் லாரி ஷெட்டுக்குப் போய்ப் பாரு !!" என்று நான் கூக்குரலிட - அந்தப் பஞ்சாயத்து அடுத்த 2 மணி நேரத்துக்கு பிராணனை வாங்கியது ! ஒரு மாதிரியாய் சிவகாசி புத்தக பண்டல்கள் அங்கே பட்டுவாடா ஆகிட - ஏழரை # 101 அடுத்தகணமே துவங்கியது !! கோவைப் புத்தக விழாவிலிருந்து நேரடியாய் ஈரோட்டுக்கு புக் செய்திருந்த புத்தக ரேக்குகள் 4 நாட்களாகியும் அங்கே சென்றடையக் காணோம் !! மேற்கொண்டு ஒரு 'காச்..மூச்" படலத்துக்குப் பிற்பாடு அதுவும் தீர்வு காண,ஒரு வழியாய் மாலை ரயிலைப் பிடிக்க நானும், ஜூனியரும் புறப்பட்ட தருணத்தில் எனது நாக்கு ரயில்வே பிளாட்பாரத்தைச் சுத்தம் செய்யாத குறை தான் ! நள்ளிரவுக்கு கிட்டே மஞ்சள் நகரில் இறங்கிய போது - பசி ஒரு பக்கம் ; பயம் இன்னொரு பக்கம் !
பொழுது விடிந்தால் ஒரு மெகா பரீட்சைக்கு மார்க் போடும் ஆற்றலாளர்கள் அதே ஹோட்டலின் அரங்கில் குழுமப் போவது நிச்சயம் எனும் போது ராவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை ! Oh yes - இதழ்களின் தயாரிப்பு ; அட்டைப்படங்கள் ; slipcase ; புலன் விசாரணை - என எல்லாமே பதம் பொருந்திய அதிரசங்களாய்க் காட்சி தந்தன தான் ; நிச்சயமாய் நீங்கள் ரசிப்பீர்களென்று நம்பிக்கை நிறையவே இருக்கவும் செய்தது தான் ! ஆனால் இருளில், தனிமையில், சலனமுற்றுக் கிடைக்கும் மண்டைக்கு - எதையேனும் கற்பனையாய் நினைத்து வைத்து - ஒரு லிட்டர் மனப் பிராந்தியை ஓடச் செய்வது ஓடச் செய்வது என்ன ரகத்து phobia-வோ தெரியலை ; (நிச்சயமாய் நம் பொருளாளர்ஜி அது பற்றி விளக்குவார் !!) ஆனால் அபத்தக் காரணங்களை தானாய் உற்பத்தி செய்து ; அவற்றின் பலனாய் நம்மையே பயமுறுத்தி, ஒரு வித இனம்புரியா த்ரில்லை நாளங்களில் ஓடச் செய்யும் வேலையை அன்றிரவு கச்சிதமாய் எனது தலை செய்து வந்தது !! சனி காலையில் வெளிச்சத்தை ; சகஜ உலகை ; நார்மலான சமாச்சாரங்களை ; அந்த இட்லிக்களை ; பூரிக்களைப் பார்த்த பின்னேயே ஒரு மாதிரியாய் நார்மலுக்குத் திரும்பியது !! And அரங்கில் உங்கள் ஒவ்வொருவரின் மலர்ந்த முகங்களையும் பார்த்த பின்னரே மெது மெதுவாய் பிராணன் கூட்டுக்குத் திரும்பியது !!
இப்போது யோசிக்கையில் - "லூஸுப் பயலே ! இத்தனை பதட்டம் என்னத்துக்காம் ?" என்று என்னையே என் தலை கேள்வி கேட்கிறது !! பதிலின்றி 'பே' என்று நின்றாலும் - பதிலென்னவென்று தெரியாதில்லை தானே ?! இப்போதெல்லாம் நம்மால் சஞ்சீவி மலையைக் கூட அலேக்காய்த் தூக்கிட முடியும் என்றும் ; கடலைக் கூட கடப்பாரை நீச்சலில் கடந்து விடமுடியுமென்றும், நம்பிக்கையை உள்ளுக்குள் நீங்கள் வளர்த்து வைத்துள்ளீர்கள் !! ஒவ்வொரு மெகா கோரிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் - "இதுவெல்லாம் இவனுக்குச் சாத்தியம் தானா ?" என்ற கேள்வி இப்போதெல்லாம் உங்களுள் துளியும் நஹி ! ஆனால் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ளூரில் ஒரு வாடகை சைக்கிளை எடுக்கும் அளவுக்கு கூட நம்பிக்கையை விதைத்திரா ஒரு முட்டைக் கண்ணன் தான் அடியேன் என்பதை நீங்கள் மறந்திருப்பினும், நான் மறந்திடவில்லை ! இன்றைய இந்த newfound எதிர்பார்ப்புகளின் பளுவைத் தூக்கித் திரியும் ஆற்றல் இந்த குருவிக்கு தொடர்ச்சியாய் வேண்டுமே தெய்வமே !! என்பதே தற்போதைய பயங்களின் முகாந்திரம் !!
இந்தப் போட்டியில் நாம் தாவித் தாண்ட வேண்டிய உயரத்தை சற்றே உசத்தி விட்டு, maybe அதனை வெற்றியோடு தாண்டியும் இருக்கலாம் தான் ! ஆனால் அதன் பொருட்டு மமதை கொள்வதை விடவும், உயர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு அங்குலமுமே இனி தொடரும் ஒவ்வொரு போட்டியிலுமே நாம் தாண்ட வேண்டிய குறைந்த பட்சமாகிப் போகுமே என்ற டரியலே மேலோங்குகிறது !! And இதோ - அடுத்த பணிக்குள்ளே தலை நுழைக்கத் துவங்கியாச்சு !! And முந்தய மேட்சில் சதமடித்திருந்தாலும் அடுத்ததைத் துவக்கும் போது எப்போதும் போல் பூஜ்யத்திலிருந்தே துவங்குகிறோம் என்ற புரிதலோடே !!
உங்கள் XIII-ன் வெற்றியை நீங்கள் சந்தோஷமாய்க் கொண்டாடுங்கள் guys ; உங்களின் அடுத்த சந்தோஷத் தருணத்துக்கான களம் தேடி நாங்கள் வழக்கம் போல் வலை வீசத் துவங்குகிறோம் !! Thank you for the awesomely uplifting days !! Bye for now !!