நண்பர்களே,
வணக்கம். குட்டிக் குட்டி ராட்டினங்கள் ; கலர் கலரான பானங்கள் ; காற்றில் கலக்கும் குலவைச் சத்தங்கள் ; ஓசையில்லா பிரார்த்தனைகள் என ஒரு வாரமாய் திருவிழாக் கோலத்தில் உருமாறிப் போயிருந்த எங்கள் சாலைகள் தகிக்கும் வெயிலில் இப்போது நிசப்தமாய் காட்சி தருகின்றன ! இன்னுமொரு பங்குனித் திருவிழா அழகாய் நிறைவு பெற்ற திருப்தியில் ஊரே லயித்திருக்க - நமக்கோ பரபரப்பு ஓய்ந்தபாடில்லை ! நமது "வேங்கையின் திருவிழாவுக்கு" இன்னும் ஏழு தினங்கள் மட்டும்மே எஞ்சியிருக்க, இங்கே 'லப்-டப்'கள் overdrive -ல் உள்ளன என்பது தான் நிஜம் ! மெகா பணிகள் நமக்குப் புதியவைகளல்ல ; குறுகலான காலக்கெடுவுக்குள் காரியம் சாதிக்க நமது டீம் சமீபமாய் பழகியும் உள்ளது தான் ! ஆனால் ஒவ்வொரு project -ம் முந்தையதுக்குத் துளியும் தொடர்பின்றி முற்றிலும் புதியதொரு அனுபவம் தர வல்லதாய் இருப்பது தானே நமது பிழைப்பின் தனித்தன்மையே !! So NBS தயாரித்த அனுபவங்களோ ; LMS தந்த பாடங்களோ கைகொடுக்குமென்ற உத்தரவாதங்கள் துளி கூட இல்லாதொரு நிலையில் தான் இம்முறையும் பிள்ளையார் சுழி போட்டு வைத்தோம் !
தொட்ட மாத்திரத்திலேயே அத்தனையும் பொன்னாகும் ஒரு யோக வேளையில் NBS -ன் திட்டமிடல் துவங்கியிருக்குமோ என்னவோ - அதன் பணிகள் சகலமும் செம வழுக்களை நடந்தேறின ! இத்தனைக்கும் வண்ணப் பாணிகளுக்கு ; ராட்சஸ இதழ்களுக்கு நாம் பரிச்சயம் செய்து கொண்டிருந்த துவக்க நாட்களவை ! Yes, of course குட்டிக்கரணங்கள் எக்கச்சக்கமாய் போடத் தேவைப்பட்டது தான் ; ஆனால் பெரியதொரு டென்ஷன் இன்றி பணிகளை நிறைவேற்றுவது அன்றைக்கு எப்படியோ சாத்தியமானது ! Maybe அதற்கு முந்தைய 2 மாதங்களின் நமது ரெகுலர் அட்டவணை ரொம்பவே நோஞ்சானாக அமைந்திருந்தது - NBS -ன் பொருட்டு முழுக் கவனமும் தர உதவியதோ - என்னவோ ?!
LMS-ஐப் பொறுத்தவரை தயாரிப்பினில் ஏகப்பட்ட படபடப்பு 60 முழு நாட்களுக்கு எனக்குள் குடியிருந்தது ! நாட்காட்டியின் ஒவ்வொரு சருகையும் கிழிக்கும் ஒவ்வொரு காலையிலும் வயிறு கலங்காது இருக்காது - ஆகாரத்தில் துளியும் கோளாறு இலாத போதிலுமே ! ஆனால் jigsaw puzzle -ன் பல முகங்கள் 'பட பட'வென்று ஒன்று சேர்வது போல கதைகளின் பணிகள் ; அச்சு ; பைண்டிங் என எல்லாமே ஒரு திடீர் வேகம் பெற்று deadline -க்கு வெகு முன்கூட்டியே இதழ் தயாராகியிருந்தது !

ஆனால் - மின்னும் மரணமோ முற்றிலும் மாறுபட்டதொரு அனுபவம் ! பாகம் 11 நீங்கலாக மற்ற அத்தியாயங்கள் எதற்கும் மாங்கு-மாங்கென்று மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு இங்கே அவசியமில்லை எனும் போது இந்தப் பணி cakewalk ஆக இருந்திடவேண்டுமென்ற மிதப்பு எனக்குள் நிறையவே இருந்தது - துவக்க நாட்களில் ! தவிரவும், முன்பதிவுகளின் ஆரம்பத்து மந்தகதி எனக்குள்ளும் ஒரு சூட்டிகையைக் கொண்டு வரவில்லை என்பதும் நிஜமே ! "ஆஹ்...மாதம் 50 முன்பதிவுகள் என்ற வேகத்தில் தான் புக்கிங் நடக்கிறது ; 500-ஐ எட்டிட எப்படியும் எட்டுப் பத்து மாதங்கள் ஆகிதேனும் போது எக்கச்சக்கமாய் அவகாசம் தான் உள்ளதே ! " என்ற கொழுப்பு குடி கொண்டிருந்தது ! பிளஸ் ஒரு குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதியோ-மாதமோ நிர்ணயம் செய்திராத நிலையில், அவ்வப்போது முன்னின்ற மாதாந்திர ரெகுலர் இதழ்களுக்குள் மூழ்கிடுவதில் மும்முரமாகிப் போனோம் ! ஜனவரியில் "சென்னைப் புத்தக விழா " ; "பௌன்சர் அறிமுகம்" என இரு முக்கிய நிகழ்வுகள் காத்திருந்ததால் டிசெம்பரின் பெரும் பகுதி அந்த முனைப்பிலேயே செலவாகிப் போயிருந்தது ! சொல்லப் போனால் பௌன்சரின் முதல் ஆல்பம் + சென்ற மாதத்து ஆல்பம் # 2-ன் பொருட்டு நான் எடுத்துக் கொண்ட தயாரிப்பு அவகாசம் மாமூலை விட 50% ஜாஸ்தி !
ஜனவரியின் பரபரப்புகளின் மீது லேசாகத் தூசு படியத் தொடங்கிய வேளைகளில் தான் "மின்னும் மரணம்" எனது focus-க்குள் சீரியசாகப் புகுந்திடத் தொடங்கியது ! 11 பாகங்கள் ; நம்மிடம் பணியாற்றி வரும் 5 DTP டீம்களிடம் ஆளுக்கு இரண்டாய்ப் பகிர்ந்து தந்து விட்டால் - மேகி நூடுல்ஸ் பாணியில் பதார்த்தம் தயாராகிடுமே என்று யதார்த்தமாய் நான் சிந்தித்து - தைப் பொங்கல் முடிந்த பின்னொரு சுபயோக சுபதினத்தில் மி.மி. வேலைகளை முடுக்கி விடத் தொடங்கினேன் ! அப்போது தான் காதோடு சேர்த்து 'பொளேர் ..பொளேர்' என சாத்துக்கள் விழுந்தன நமது அன்றைய DTP டீமின் புண்ணியத்தில் ! ஏற்கனவே அது பற்றி இங்கு நான் லேசாக எழுதியிருந்தது கூட நினைவிருக்கலாம் ! வெளியூரில் வேலையென ஒருத்தர் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட ; தாய்மைப் பேற்றின் காரணமாய் அடுத்தவர் விடைகொடுக்க ; திருமண ஏற்பாட்டின் காரணமாய் மூன்றாமவர் bye -bye சொல்ல, நானும் மைதீனும் ginger உண்ட monkeys பாணியில் ஒருத்தர் முகத்தை அடுத்தவர் பார்த்துக் கொண்டோம் ! எஞ்சியிருந்த 2 பணியாளர்களும் கூட பகுதி நேரத்து ஊழியர்கள் மாத்திரமே எனும் போது - அந்தந்த மாதங்களது கதைகளைக் களமிறக்குவதற்குள்ளாகவே குடல் வாய்க்கு வரத் தொடங்கி விட்டது ! "விடாதே ...பிடி...வேலைக்குப் புதியவர்களை எப்படியேனும் அமர்த்து.." என்று வலைபோட்டு நகரைச் சுற்றி வர - "டிசைனிங் தெரியும் ; Coreldraw தெரியும் ; ஆனால் டமில்..டமில் டைப்பிங் நஹி மாலும் !" என்ற டயலாக்குகளுக்கு எங்களது காதார்கள் நிறையவே பரிச்சயமாகிப் போனார்கள் ! தமிழ் அச்சுக்கோர்ப்பறியாது - வண்டி வண்டியை வசனங்கள் கொண்ட நமது கதைகளைக் கரை சேர்ப்பது எவ்விதமோ ? என்ற பீதியில் நியூஸ் பேப்பர்களில் விளம்பரங்கள் ; வெளியூர் பதிப்புகளிலும் விளம்பரங்கள் என சத்தமின்றிச் செய்தோம் ! விண்ணப்பங்களும் வந்தன தான் - ஆனால் அவர்கள் எதிர்பார்த்த கட்டணங்களுக்கு நமது கோவணங்களையும் சேர்த்து விற்றால் கூட கட்டுபடியாகாது என்ற நிலை ! திரும்பவும் துவக்கத்துப் புள்ளிக்கே செல்வோமென்ற தீர்மானத்தில் உள்ளூரிலேயே தேடலைத் தொடர்ந்தோம் ! ஆண்டவனும் நிச்சயமாய் ஒரு காமிக்ஸ் பிரியர் என்பதாலோ - என்னவோ நம் உளைச்சலுக்கு மருந்திட்டார் - புதிதாய் ஒரு அணியை அறிமுகம் செய்து வைத்ததன் மூலமாய் ! புதுவரவுகளை ஒரேடியாகப் பிழிந்து எடுத்து அவர்களும் பேஸ்த்தடித்துப் போய் விடக்கூடாதே என்ற பயம் ஒரு பக்கம் ; நாட்கள் நழுவிச் செல்கின்றனவே என்ற நடுக்கம் இன்னொரு பக்கம் - எப்படியோ பணிகள் ஒரு மாதிரியாக அரங்கேறத் தொடங்கின !
பாகம், பாகமாய் கதை என் மேஜைக்கு வரத் துவங்கிய போது அடுத்தகட்ட அந்தர்பல்டிகள் ஆரம்பித்தன ! "பார்ட் பார்ட்டாய் டைப்செட் செய்யப்பட்டு வருது ....அன்னிக்கு விடிய விடிய முழித்திருந்து அண்ணாத்தே வேலை பாக்குது ...இரண்டே வாரத்திலே எல்லா வேலையும் முடிக்குது !" என்ற மௌன சபதத்தோடு முதல் அத்தியாயத்துக்குள் புகுந்தால் - 'கட கட' வென ஓசை மேஜைக்கு மேலிருந்தும், கீழிருந்தும் கேட்கத் தொடங்கியிருந்தது ! "அரே..பேஸ்மென்ட் வீக்கா இருந்தாக்கா முட்டிங்கால்களின் நடனக் கச்சேரி சகஜம் தான் ; ஆனால் ஊப்பர் கதக்களி ஏனோ ?" என்ற குழப்பத்தோடு தந்தியடிக்கும் என் பற்களை உற்றுப் பார்த்தேன் ! ஒரு மூட்டை வசனங்கள் ...மத்தியிலே தம்மாத்துண்டாய் ஆங்காங்கே ஒரு சப்பை மூக்கரின் சித்திரங்கள் என என் மேஜையிலிருந்த பக்கங்கள் காற்றில் படபடப்பதோடு - எனக்குள்ளும் பீதியை உருவாக்கிக் கொண்டிருந்தன ! அந்நாட்களில் "மின்னும் மரணம்" கதையின் 10 பாகங்களையும் டிசைன் டிசைனாய் நாம் பிரித்துப் போட்டிருந்த சமயங்களில் நமது ஆர்டிஸ்ட்களின் சகாயத்தால் படங்களை வெட்டியும், ஒட்டியும் வசன மழைகளை லாவகமாக இங்குமங்கும் திணித்திருந்தோம் என்பதும், இன்றைய standard format-ல் அந்த பல்டிகளுக்கெல்லாம் இடமில்லை எனும் போது - சிக்கிய சந்திலெல்லாம் நமது (புது) DTP அணி சிந்து பாடியுள்ளது என்பதையும் உணர முடிந்தது ! கோனார் உரைக்குள் கொஞ்சமாய் நம் டைகரை நடமாட அனுமத்தித்த உணர்வைத் தவிர்க்க இயலவில்லை ! To be fair to them - அனுபவசாலிகளே தண்ணி குடிக்கக் கூடிய இந்தக் கதையை எடுத்த எடுப்பிலேயே புதியவர்களிடம் ஒப்படைத்தது பெரியதொரு சவாலே ! Sincere ஆக முயற்சித்திருந்த அவர்களது பணிகளையும் குறை சொல்வதற்கில்லை ! ஆனால் பட்டி-டின்கெரிங்க் அவசியமோ அவசியம் என்றான நிலை ! மதுரையில் கொத்து புரோட்டா போடுவதைப் பார்த்திருப்போர்க்குத் தெரியும் - அந்த தோசைக் கல்லின் மீது புரோட்டா படும் பாடு ! தொடர்ந்த நாட்களில் அதே பாடு தான் பட்டனர் நமது DTP அணியினரும் என் கைகளில் ! "இதை அங்கே நகற்றுங்கள் ; இதைக் குட்டியாக்குங்கள் ; அதை அந்த இடைவெளியில் பொருத்துங்கள் " என்று ஓராயிரம் மாற்றங்களைச் செய்யச் சொல்லி அவர்களது பிராணன்களில் ஒரு பகுதியை வாங்கினேன் என்றால் - பிழை திருத்தப் படலத்திலும், எடிட்டிங் efforts லும் மிச்சம் மீதியை கரைந்தே போகச் செய்திருப்பேன் !
எழுத்துப் பிழைகளைத் தேடிக் கொண்டு மேலோட்டமாய் ஒரு வாசிப்பைப் போட்டு விட்டு - proofreading-க்கு தள்ளி விட்டு விடலாமென்ற வேகத்தில் திரும்பவும் உள்ளே நுழைந்த எனக்கு முட்டிங்கால்கள் இன்னுமொரு ஜலதரங்கக் கச்சேரி வாசிக்கத் தொடங்கின ! ஒரு பக்கத்துக்கு சராசரியாய் 10-12 frames ; ஒவ்வொரு frame குள்ளும் குறைந்த பட்சம் 3-4 டயலாக் பலூன்கள் ; ஒவ்வொருவரும் கிடைக்கும் முதல் வாய்ப்பில் ஏகமாய் வசனங்கள் பேசுவது என்ற பாணியைக் கடைப்பிடித்து வந்ததால் - ஒரு நேரத்திற்கு 10-12 பக்கங்களைத் திருத்தி கரைசேர்ப்பதே பெரும்பாடாகிப் போனது ! "இத்தனை பெரியதொரு முயற்சி எனும் போது - முடிந்தளவுக்கு சிற்சில பிழைகளையும் சரி செய்து விடலாமே ?" என கடல்கடந்த நண்பரொருவவரோடு சமீபமாய் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் கருத்துச் சொல்லியிருந்தது தலைக்குள் தொட்டுப் பிடித்து விளையாட - பரணிலிருந்து ஒரிஜினல் ஆங்கிலப் பதிப்புகளையும் எடுத்துக் கொண்டு - திரும்பவும் பக்கம் 1-க்குப் பயணமானேன் ! ஷப்பா...குட்டிக் குட்டியாய் ஆங்காங்கே அந்நாட்களில் நிகழ்ந்திருந்த மொழிமாற்றப் பிழைகள் ; அடிக்கொருதரம் தலைகாட்டிய "சாக்கடைப் புழுக்களே" ; " தெரு நாய்க்குப் பிறந்த நீசனே " டயலாக்குகள் ; செய்திடக்கூடிய மெல்லிய நகாசு வேலைகள் என என்னென்னவோ கண்ணில்படத் துவங்க, "மாற்றங்கள் / திருத்தங்கள் செய்யாது ஆணியே பிடுங்கப் போவதில்லை !" என்ற வைராக்கியம் குடி கொண்டது ! So சிக்கிய அவகாசங்களிலெல்லாம் - மி.மி. ஆங்கிலப் பதிப்புகள் ; நமது அந்நாட்களது இதழ்கள் + தற்போதைய printouts என குட்டி போட்ட குரங்கு ஜாடையில் தூக்கிக் கொண்டு திரிய ஆரம்பித்தேன் - அன்று முதலாய் ! தாம்பரம் ரயில் நிலையத்து ஆறாம் நம்பர் பிளாட்பார்மில் கூட "மின்னும் மரணம்" தொடர்பான அதிகாலை நினைவுகள் எனது souvenirs பட்டியலில் உண்டு !
ஒரு மாதிரியாய் இந்தக் கூத்துக்களும் நிறைவு பெற்று அச்சுக்குத் தயாராகும் சமயம் "வைட்டமின் ப" பற்றாக்குறை ஜிங்கு ஜிங்கென்று தலைவிரித்தாடத் தொடங்கியிருந்தது ! ஒரு மொத்தமாய் பணம் கைக்குக் கிட்டுவதற்கும் - ஒன்பது மாத அவகாசத்தினில் பிரித்துப் பிரித்து வசூலாவதற்கும் தான் ஏகப்பட்ட வித்தியாசமுள்ளதே ?! அவ்வப்போது வரும் சில ஆயிரங்கள் அவ்வப்போதைய அவசியச் செலவுகளுக்கு ஸ்வாஹா ஆகிப் போயிருக்க - ஒட்டு மொத்தமாய் ராயல்டிக்கும், பேப்பர் கொள்முதலுக்கும் பணம் புரட்ட உள்ளூர் பேங்குகளின் கஜானாக்களை டால்டன்கள் பாணியில் துவாரம் போட்டால் என்னவென்ற அளவிற்கு மகா சிந்தனைகள் கிளைவிட்டிருந்தன ! நிறைய சர்க்கஸ் ; எக்கச்சக்க அந்தர் பல்டிகள் ; நிறைய "ஹி..ஹி..ஹி.."களுக்குப் பின்பாய் அந்தக் கிணற்றையும் தாண்டிவிட - அச்சுப் பணிகளை ஆரம்பிக்கும் வேலை புலர்ந்திருந்த போது மார்ச்சின் மூன்றாம் வாரம் துவங்கும் வேளையில் இருந்தோம் ! நம்மவர்களை விடிய விடிய விழித்திருக்கச் செய்து அச்சு வேலைகளை நடத்தினாலும் கூட இது சுமார் 2 வாரத்து job என்பது தான் யதார்த்தம் ! பற்றாக்குறைக்கு, நான் இல்லாத் தருணங்களில் பிரிண்டிங் செய்திட வேண்டாமென்ற ஊரடங்கு உத்தரவை சமீபமாய் நாமே அமல்படுத்தியிருக்க, எனது ஊர்சுற்றல் படலங்கள் நிகழும் சமயமெல்லாம் அச்சு வேலைகளையும் ஆறப் போடவும் தேவையாகிப் போனது ! நான் உடனிருந்து பெரிதாய் கிழிக்கப் போவது எதுவும் கிடையாதென்ற போதிலும், பகலோ ; ராத்திரியோ - அச்சின் தருணங்களில் நானும் அங்கேயே குடியிருக்கிறேன் என்றால் செய்யும் பணிகளின் முக்கியத்துவம் பற்றி நம்மவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பழக்கம் தொடர்கிறது !

இதெல்லாம் ஒரு பக்கத்துப் பிரயத்தனங்கள் எனில் - "அட்டைப்படம்" என்ற அந்த அஸ்திரம் எனக்கு அஸ்தியில் ஜூரம் வரச் செய்து கொண்டிருந்தது ! LMS -க்கெல்லாம் படக்கென ஒரிஜினல் டிசைனின் மாதிரி செட் ஆகிட ; அதனை மாலையப்பன் அழகாய் வரைந்து தர ; நமது டிசைனர் மேம்படுத்தித் தர துளியும் சிரமமின்றி அட்டைப்படம் தேறியிருந்தது ! ஆனால் மி.மி மெகா முயற்சிக்கோ என்ன முட்டு முட்டினாலும் திருப்தியாக ஒரிஜினல் சிக்கவேயில்லை ! எங்கோ - எதையோ உருட்டி 2 மாதிரிகளைத் தேடிப்பிடித்து நமது ஓவியரை வரவழைத்து படம் போட்டால் - உஹும் ...எனக்குத் துளி கூடத் திருப்தியில்லை ! இன்னொருபக்கமோ நமது டிசைனர் பொன்னனிடம் சில பல மாதிரிகளைக் காட்டி, அவரது கைவண்ணத்தில் எதையேனும் தயார் செய்திடவும் சொல்லியிருந்தேன் ! அவரும் ரெடி செய்து காட்டிய முதல் டிசைன் சற்றே வித்தியாசமாய் இருப்பினும், என் உற்சாக மீட்டரில் துள்ளல் ஏதும் பதிவாகவில்லை ! உதட்டைப் பிதுக்கி விட்டு - "I want more emotions" என்று சொல்லிவிட்டு 'உர்ர்' ரென்ற முகத்தோடு 10 நாட்கள் சுற்றி வந்தேன் ! நெட்டில் எங்கெங்கோ உருட்டி, ஏதேதோ கௌபாய் டிசைங்களைத் தேடித் பிடித்தாலும், ஜிரௌவின் அமர கதாப்பாத்திரத்துக்கு நியாயம் செய்யும் விதமாய் எனக்கு உருப்படியாய் எதுவும் கிடைத்தபாடில்லை ! நாட்கள் நெருங்கிட - எனது பய மீட்டர் படபடக்கத் தொடங்க, டைகரின் சில பல அத்தியாயங்களின் ஒரிஜினல் ராப்பர் டிசைன்களில் எதையாச்சும் தத்து எடுத்துக் கொள்ளலாமா ? என்ற ரீதிக்கு சென்று விட்டேன் ! ஆனால் அத்தனையுமே ஏற்கனவே பற்பல தருணங்களில் நாம் சுட்ட ஊத்தப்பங்கள் தான் எனும் போது அவற்றில் ஒன்றை இப்போது திரும்பவும் சூடு பண்ண மனசு கேட்கவில்லை ! அப்போது தான் நமது டிசைனர் புதிதாய் 2 டிசைன்களின் first looks அனுப்பி வைக்க என் மண்டைக்குள் பலப் பிரகாசம் பெற்றதை உணர முடிந்தது ! அவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்து - அதனில் மாற்றங்கள் / திருத்தங்கள் என கிட்டத்தட்ட 10 நாட்களாக கபடி ஆடத் தொடங்கினோம் ! "இதை பச்சையாக்கிப் பார்ப்போமே ; இல்லை..இல்லை..ப்ளூ...!! இதை சின்னதாக்குவோம் ...முன்னட்டையில் சில்க் புள்ளை வரட்டும் - நோ-நோ..பின்னட்டையில் அம்மணி---நோ-நோ..டைகர் தான்...எழுத்தை வேற ஸ்டைலில் போட்டுப் பார்ப்போமே!" என தினமும் ஒரு correction சொல்லி பொன்னனின் தூக்கத்தை அம்பேலாக்கிய புண்ணியத்தையும் ஈட்டிக் கொண்டேன் ! டிசைனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் - இது நமது மாமூலான "மஞ்சக்கலரு ஜிங்குச்சா..பச்சைக்கலரு ஜிங்குச்சா.." ஸ்டைலில் சுத்தமாய் இராது ! ரொம்பவே offbeat பாணியில் இதனை உருவாக்க வேண்டுமென்று நானும், பொன்னனும் முனைப்பாக இருக்க, மாற்றங்கள் டிசைன் பாணியில் மட்டுமன்றி ; பிராசசிங் முறையில் ; அச்சுக் காகிதத்தில் ; அச்சிடும் முறையில் என்று ஏகமாய் இருக்கட்டுமே என்று பொன்னன் கோரிக்கை வைத்தார் ! செலவு டிரௌசரைக் கழற்றும் விதமாய் இருந்த போதிலும் மந்திரித்த ஆடு போல மண்டையை ஆட்டி வைத்தேன் ! இறுதி நிமிட நகாசு வேலைகளையும் முடித்து, ராப்பர் அச்சுக்குச் சென்றது 6 மணி நேரங்களுக்கு முன்பு தான் என்றால் எங்கள் லூட்டிகளின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டிருக்கலாமே ?! ராப்பரை நேரில் பார்க்கும் வரை அதன் feel என்னவென்பதைப் புரிந்திடுவது சிரமம் என்பதால் இப்போதைக்கு let's leave it under wraps ?! 19-ஆம் தேதிக்கு இதழை நீங்கள் பார்த்திடும் போது எங்களின் இந்த முயற்சிகள் ஈட்டும் மதிப்பெண்களை அறிந்திடும் ஆவல் இப்போதே ! But please be warned guys - இது நமது மாமூலான பாணியில் இருக்கப் போகுமொரு அட்டைப்படமல்ல !
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் உட்பக்கத்தில் இரு இடங்களில் சற்றே சொதப்பலான எழுத்துப் பிழைகள் தலைதூக்கியிருப்பதை லேட்டாகக் கவனிக்க - விடாதே...ஸ்டிக்கர் செய்து அது தலையில் போட்டு அமுக்கு ! என்று நம்மவர்கள் இப்போதும் கூட பணி செய்து வருகிறார்கள் ! Phew !!
இந்த ரணகளங்கள் ஒரு பக்கமெனில் - நான் பெரிதாய் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாது சுற்றி வர முயற்சித்துக் கொண்டிருந்த போதிலும் - மின்னஞ்சல்களில் அர்ச்சனைகளுக்கும், அறிவுரைகளுக்கும் பஞ்சமே இருந்திடவில்லை ! "டெக்ஸ் வில்லர் கதைக்கு தாம் - தூம் ஏற்பாடுகளும், முன்னறிவிப்புகளும் களை கட்டுகிறது ; டைகர் என்றால் இளப்பமா ? " என்ற காரசார மெயில்கள் ஒருபக்கமெனில் ; "மின்னும் மரணம் வெளியீட்டு விழாவின் திட்டமிடல் இப்போது வரை ஏனில்லை ? என்று பத்தி பத்தியாய் பதைபதைப்பு இன்னொரு பக்கம் ! இதன் நடுவே, கவிதைகளைப் பதிவில் பகிர்ந்திடப் பிரியம் கொள்ளா நண்பர்கள் மின்னஞ்சல்களில் திறமைகளைக் காட்டியிருக்க நமது inbox-ல் திருவிழாக்கோலம் தான் ! ஆத்திரங்களும், ஆதங்கங்களும் , அறிவுரைகளும் பகிரப்படுவது காமிக்ஸ் மீதான நேசத்தின் பொருட்டே என்பதைப் புரிந்து கொள்ள நானொரு ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க அவசியமே இல்லை தான் ! ஆனால் இங்கே என்பக்கத்து நடைமுறைப் பிரச்சனைகளைச் சமாளிக்க சற்றே working space எனக்குத் தேவையென்பதை நண்பர்கள் உணரும் நாள் புலரும் போது எனது சுவாசம் சற்றே இலகுவாகிடும் ! ஒவ்வொரு கட்டத்திலும் நேர்ந்திடும் சிற்சிறு சிக்கல்களை ; தாமதங்களை நான் டமாரம் அடித்துக் கொண்டே போனால் அந்த அயர்ச்சி உங்களையும் தொற்றிக் கொண்டு விடக்கூடும் என்பதால் அதனை நான் செய்ய முனைவதில்லை ! அத்தியாவசியம் என்ற நிலை ஏற்படும் வரை என் தலைவலிகள் எனதாக மட்டுமே இருந்து விட்டுப் போகட்டுமே ?! So எனது மௌனங்கள் மெத்தனத்தின் அடையாளமாய்ப் பார்க்கப்பட்டு, அதன் பொருட்டும் சஞ்சலம் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ?!
பைண்டிங்கில் இன்னொரு பக்கம் பணிகள் வேகமாய் அரங்கேறி வர, 19-ம் தேதியின் காலைக்குள் நம் கைகளில் "மின்னும் மரணம்" தகதகப்பது இப்போது உறுதி ! (இன்னமும் அந்த போஸ்டர் வேலை பாக்கியுள்ளது ! phew again !!!)
பெரியாள் யாரையாவது வைத்து இந்த மெகா இதழை வெளியிடலாமே ? என்ற ரீதியிலும் நண்பர்களின் கோரிக்கைகள் வந்துள்ளன ! என்னைப் பொறுத்தவரை இந்த இதாலே நமது வாசக வட்டத்தின் ஒரு கொண்டாட்டமே எனும் போது உங்களை விட இத்தருணத்தில் பெரியாட்கள் வேறு யாரிருக்க முடியும் ? என்ற எண்ணம் தான் ! This is truly a celebration of the spirit of the tamil comics fans !! So இதற்கென ஒரு VIP -ஐத் தேடுவானேன் ? காலை 11 மணிக்குத் துவங்கும் புத்தக விழாவில் நமது ஸ்டால் எண் : 128-ல் எப்போதும் போலவே மின்னும் மரணத்தை unveil செய்திடுவோமா ? அல்லது அருகாமையில் ஏதேனும் ஹோட்டலில் AC அரங்கம் கிடைக்கும் பட்சத்தில் buffet lunch சகிதம் அங்கே நம் சந்திப்பை அரங்கேற்றிடுவோமா ? புத்தக சங்கமத்தின் வெளியரங்கில் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் மாலைகளில் உண்டென்று சொன்னார்கள் ! ஆனால் சாயந்திரம் வரையிலும் இதழை உங்கள் கண்களில் காட்டாது வைத்திருப்பது என் மண்டையின் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்பதால் அந்த சிந்தனை சுகப்படவில்லை ! தவிர, பஸ் / ரயில் பிடித்து ஊர் திரும்பக்கூடிய நண்பர்களை மாலை நேரத்து நிகழ்வுகள் தாமதப்படுத்தவும் கூடுமே என்று நினைக்கத் தோன்றியது ! So - "காலை எழுந்தவுடன் மின்னும் மரணம் " என்ற slogan தேவலை என்று தோன்றியது ! எங்கே ? என்ற தேர்வு உங்களது folks ! "வெளியீட்டு விழா" என்ற சிந்தனைக்கு நான் எதிரியல்ல ; its just that I am totally drained at the moment that I don't have it in me to plan ! உங்களிடம் அது பற்றி திட்டமிடல்(கள்) ஏதேனும் இருப்பினும் காதுகளை இரவல் தர நான் தயார்! என் தந்தையையும் அழைத்து வர முயற்சிப்பேன் ; அதனையும் கருத்தில் கொண்டு பிளான் பண்ணிடலாமே ?! பந்து உங்களது தரப்பில் உள்ளது guys - ஆடும் விதம் இனி உங்களது ! எல்லோருக்கும் எற்புடையதொரு திட்டமிடலுக்கு நாங்கள் ஒ.கே. ! Start music !
Before I wind up - "மூட்டை சுமந்தது போலான இந்த நீட்டல்-முழக்கல் அவசியம் தானா ? இத்தனை பில்டப் ஓவர் !" என்ற சிந்தனை கொண்டிருக்கக்கூடிய நண்பர்களின் பொருட்டு : இது என் ஒருவனது பீற்றலின் நோக்கில் எழுதப்பட piece அல்ல ! ஒரு மெகா முயற்சியை வழக்கமான, பிசியான அட்டவணைக்கு மத்தியினில் செயல்படுத்திப் பார்க்க எத்தனிக்கும் சமயங்களில் நமது சின்ன டீமுக்கு நேர்ந்திடும் overload-ன் மீதான ஒரு பார்வையே இது ! அப்புறம், இத்தனை எழுதி விட்டு - கதையின் நாயகரைப் பற்றி எழுதவில்லையே - என்ற விசனத்துக்குச் சொந்தம் கொண்ட நண்பர்களின் பொருட்டு : இது "the making of மின்னும் மரணம்" போன்றதொரு ஆக்கம் மட்டுமே ; "தளபதி" பற்றி வரும் வாரத்தினில் !
கிட்டத்தட்ட 2 மாதங்களாய் ஒவ்வொரு சனியிரவும் ஒரு வண்டிப் பக்கங்களை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டு அவற்றையே முறைத்துப் பார்த்துப் பழகியான நிலையில் இன்றைக்குக் காலியாகக் காட்சி தரும் என் மேஜையைப் பார்க்கும் போது எப்படியோ உள்ளது ! இரு மாதம் என்னோடிருந்த அந்த வேங்கை இன்று வெளியே வலம் வரத் தயாராகி விட்டதால் - இனி அந்த மேஜையினில் அடுத்த தொப்பிக்காரருக்கு இடம் ஒதுக்க ஆரம்பித்து விட்டேன் !! சில பயணங்கள் முடியாதிருப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே உள்ளதோ ?! சில சுமைகளும் சுகமாய்த் தெரிவதன் மாயம் தான் என்னவோ ? விடை தேடுகிறேன்! Bye guys & good night !