Powered By Blogger

Sunday, April 05, 2015

கொஞ்சம் சிந்திங்க பாஸ் !!

நண்பர்களே,

வணக்கம். உஷார் - இதனையொரு ஜாலியான சீரியஸ் பதிவாகவும் பார்க்கலாம் - சீரியசான ஜாலிப் பதிவாகவும் பார்க்கலாம் !! டைப் அடிக்க தம் இல்லாத காரணத்தால் நம்மாட்களைக் கொண்டு இதனை டைப் செய்து jpeg -ல் பதிவிட்டுள்ளேன்....so  இதனிலுள்ள பிழைகளைத் திருத்தம் செய்யும் வழிமுறை எனக்குப் பரிச்சயமில்லை என்பதால் அதற்கான ஆட்கள் வந்து உதவும் வரையிலும் பிழைகளை மன்னிக்கக் கோருகிறேன் ! Here goes this sunday's ramble...!!



"இராட்சஸக் குள்ளன்"  படிக்கும் சமயம் எனது reactions ; 
அட...கதை புதுசா தோணுதே...!  
அடங்கப்பா...
என்ன விட்டிருங்க அண்ணாத்தே..! 
Oh my good God !!
என்னாலே முடிலே..! 
எல்லாம் divine design !!


P.S : மின்னும் மரணம் நம் தரப்புப் பணிகள் 80% நிறைவடைந்து விட்டன...இனி பாக்கி வேலைகளை இந்தப் பொங்கல் விடுமுறைகளுக்குப் பின்னே பார்த்து விட்டு, நம் பைண்டரின் தலை மேல் நர்த்தனம் ஆட வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ள பணி  ! So, getting closer to the April 19th deadline !! 

அனைவருக்கும் ஈஸ்டர் நன்னாள் வாழ்த்துக்கள் ! 

308 comments:

  1. இனிய காலை வணக்கம் விஜயன் Sir :)

    ReplyDelete
    Replies
    1. SeaGuitar9 : கடந்த சில வாரங்களாய் உங்களைக் காணோமே ரம்யா ! இம்மாத இதழ்களைப் படிக்க முடிந்ததா ?

      Delete
    2. @ Vijayan Sir
      Sorry Sir
      கொஞ்சம் mood off-il இருந்தேன் due to some personal issues
      அனால் நமது blogs-யை விடமால் படித்து கொண்டு தான் இருந்தேன்
      இம்மாத இதழ்கள் திங்கள் கிடைக்கும் என்று புத்தக கடைகாரர் சொன்னார்
      படித்து விட்டு comments போடுகிறேன் Sir :)

      போன மாதத்து இதழ்கள் இன்னும் படிக்க வில்லை Sir
      அம்மா தான் எல்லாம் புத்தகங்கள் படித்து விட்டு இம்மாத இதழ்கள் எப்போ வரும் என்று கேட்க ஆரம்பித்து விட்டார் :)

      How are you doing Sir?

      Delete
    3. SeaGuitar9 : நானும், எங்கள் அணியும் நலம் ரம்யா ! அம்மாவிடம் புதிய இதழ்கள் திங்கள் காலை கோவையில் இருக்குமென்பதைச் சொல்லி விடுங்கள் - எங்கள் அன்போடு !

      Delete
  2. காலை வணக்கம் சார் . படித்து விட்டு வருகிறேன் சார்

    ReplyDelete
  3. @ FRIENDS : காலை வணக்கம் all !

    ReplyDelete
  4. வணக்கம் சார் ..படித்து விட்டு மீண்டும் வருகிறேன் சார் ...

    ReplyDelete
  5. எட்டாத தூரத்தில் இருந்தும் எட்டாவதாய்.

    ReplyDelete
  6. காலை வணக்கம் எடி சார் & நண்பர்களே.
    பதிவை படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  7. மர்ம மனிதன் மார்டின் கதைகள் ரொம்ப பிடிக்கும் :D
    மார்டினின் படைப்பாளி தாங்கிய இதழ்கள் கிடைக்கும் என்றால் டாப் 3 கட்டுரைக்கு எனது முயற்சியை அதிக படுத்த வேண்டும் :)

    Thank You Sir for such an announcent Sir :)

    ReplyDelete
    Replies
    1. SeaGuitar9 : போட்டுத் தாக்குங்கள் !!

      Delete
  8. காலை வணக்கம் எடிட்டா் சாா் நண்பா்கள் அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  9. 10 ஆண்டுகள் கழிந்த பிற்பாடும் குதிரை மீது பவனி வரும் குளிக்காத கும்பலை தலை மீது தூக்கி வைத்து கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது ! Super Heroes மிதான நாட்டம் அதிகரிக்கும் !

    ReplyDelete
    Replies
    1. //10 ஆண்டுகள் கழிந்த பிற்பாடும் குதிரை மீது பவனி வரும் குளிக்காத கும்பலை தலை மீது தூக்கி வைத்து கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது ! Super Heroes மிதான நாட்டம் அதிகரிக்கும் !//
      +1

      Delete
  10. சொக்கா... அது நமக்கு இல்லே.. நமக்கு இல்லே.....

    ReplyDelete
    Replies
    1. கருவூர் சரவணன் : அட..முயற்சித்துத் தான் பாருங்களேன் சார் !

      அட, அது தான் ஒர்க் அவுட் ஆகாமல் போனாலும் குறைந்த பட்சமாய் மண்டபத்தில் பாட்டெழுதித் தரவாச்சும் புலவர் யாரேனும் சிக்காமலா போய் விடும் ?

      Delete
    2. சற்றே அதிகபிரசங்கத்திற்கு மன்னிக்கவும்.

      "புலவர்" யாரேனும் சிக்காமலா போய் "விடும்" .

      திணை வழு...

      "வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்
      பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்
      மயங்கல் கூடா தம்மர பினவே"
      (தொல்காப்பியம். சொல். 11)

      Delete
    3. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே "

      மேற்கே ஒரு நக்கீரர் :-)

      Delete
    4. @ KiD ஆர்டின் KannaN -- சில வருடங்களுக்கு முன், நான் படித்த கல்லூரியில் பணிபுரிந்த ஒரு மலையாளி அக்கறையுடன் "ராஜவேல் எப்போது வந்தது" என்றே விசாரிப்பார். இந்த விசாரிப்பின் பின்னணியில், தமிழின் இலக்கணப் புத்தகங்களை புரட்டியதன் விளைவே...மற்றபடி என் இலக்கண மதிப்பெண்ணின் எல்லை, இன்றைய வயதே.

      Delete
  11. கிரீன் மேனர் கதைகள் நன்றாக தான் இருந்தன
    சிப்பாயின் சுவடுகள் எனக்கு பிடித்த கதையும் கூட
    இந்த கதைகளை தாங்கள் தேர்ந்தெடுத்ததில் தவறு இல்லை Vijayan Sir :)

    சிறு வயதில் படித்த Spider கதைகள் அவ்வளவுவாக நினைவில் இருந்ததில்லை ,
    இப்போது படிக்கும் பொது பூமாலைகள் காதில் வளர்ந்து கொண்டே போகிறது கடைசி பக்கம் வரை, தடுத்து நிறுத்த முடியவில்லை

    ஆனாலும் Spider பிடித்திருகிறது

    ReplyDelete
    Replies
    1. SeaGuitar9 : //பூமாலைகள் காதில் வளர்ந்து கொண்டே போகிறது கடைசி பக்கம் வரை, தடுத்து நிறுத்த முடியவில்லை .ஆனாலும் Spider பிடித்திருகிறது //

      ஆனால் உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு !

      Delete
    2. ///பூமாலைகள் காதில் வளர்ந்து கொண்டே போகிறது கடைசி பக்கம் வரை, தடுத்து நிறுத்த முடியவில்லை .ஆனாலும் Spider பிடித்திருகிறது //
      +1

      Delete
    3. ஆழ் மன விகாரங்கள் எக்காலத்திலும் இருக்கும் . அதனால் கிரீன் மனோர் மற்றும் பௌன்செர் எக்காலத்திலும் பாராட்டப்படும்

      Delete
  12. Vijayan Sir...... Wild West Special??????
    Just want to know when the book will be available

    ReplyDelete
    Replies
    1. SeaGuitar9 : ஹி..ஹி..ஹி.. கொஞ்சமாய் டைம் எடுக்கும் ரம்யா...!

      "மின்னும் மரணம்" + ஜூனில் தொடரவிருக்கும் லயன் # 250 இதழ்களின் முதலீடுகளின் பொருட்டு டப்பா லைட்டாக டான்ஸ் ஆடி வருகிறது ! So WWS ஓரிரு மாதங்களில்..!

      Delete
    2. no problem Sir

      let it take time
      I wish every hard work and smart work of Yours go good and best Sir

      Delete
  13. டியர் விஜயன்சார்,உங்க எழுத்து வன்மையின் கூர்முனை மழுங்கவில்லை,என்பதை,பதிவின் ஆரம்பவரிகளை படித்தாலே புரிந்துகொள்ளமுடிகிறது.முன்பு காமிக்ஸ் வாங்கூம்போதும்,சரி,இப்போது வாங்கும்போதும் முதலில் படிப்பது,பெரும்பாலானரை போன்று முதலில் படிப்பது,உங்களின் ஹாட்லைன்தான் சார்.உங்களின் மொழிபெயர்ப்பு திறமைக்கு யாரும் சான்றிதழ் கொடுக்க தேவையில்லைதான்,
    இருப்பினும்,சமீப காலமாக எனக்கு சிறிய நெருடலாக தோன்றுவது,புராதான,வழக்கத்தில் அதிகம் புழங்காத தமிழ்வார்த்தைகள்தான்சார்.தவராக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்சார்.Olxல் சமீப காலம்வரை கையிருப்பில் இருந்த பத்து ரூபாய் இதழ்களே,முன்னூறு,ஐநூறு,என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள்.பழைய காமிக்சுகளுக்கு மவுசு இருக்கும்வரை அந்த காமிக்ஸ் தரகர்கள் காட்டில் அடைமழைதான்.டியர்சார்,பலரும் பலவிதமாக,கேட்டு,நீங்களும் பலமுறை பதிலளித்துவிட்டீர்கள்.அந்த கேள்வியை,மீண்டும் பல நண்பர்கள் சார்பாக எழுப்புவதில் தவறில்லை,என்றே நீனைக்கிறேன்.மறுபதிப்புகதைகள்,பழையமூம்மூர்த்திகள்,அதுவும்,கிளாசிக்கில் வந்ததையே,ரீபிரிண்டுகிறீர்கள்,அதில்,மூன்று,கதைகளை,காவுகொடுத்துவிட்டு,டிடெக்டிவ் ஸ்பெசலாக அறிவித்த கதைகளை,ரீபிரிண்டலாமே சார்.வரிசையாக,ரீபிரிண்ட் போடுகிறோம்,என்று,டிடெக்டிவ் ஸ்பெசல்,நீங்கள் போடுவதற்கு,ஒரிரு,ஆண்டுகள்,கடந்துவிடும்,அபாயம் இருப்பதால்,நல்ல முடிவாக சொல்லுங்கள்,சார்,எல்லோரும் சந்தோசபடுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar,Salem. : இல்லாததைத் தேடி ஓடுவது தானே மனித மனத்தின் இயல்பு நண்பரே ? "டிடெக்டிவ் ஸ்பெஷல்" வந்து விட்டால் அதன் பின்னே புதிதாய் எதையேனும் நோக்கிய ஓட்டம் துவங்கும் !

      நிதானமாய் அணுகுவோமே இந்த மறுபதிப்புத் தண்டவாளத்தை !

      Delete
    2. முடிந்த அளவு கடந்த சில ஆண்டுகள் வரை ஸ

      Delete
  14. டாலர் ராஜ்ஜியம் - 10000வாலா கிரேக்கர் சார் . பட. பட சர் சர் ன்னு எடுத்து படித்து விட்டு தான் வைக்க முடிந்தது சார் . இப்படி யே பிசினஸ் தகவல் தந்து இம்ப்ரூவ் செய்தீர்கள் என்றால் எங்கள் ஆடிட்டருக்கே பல பல டெக்னிக்கல் நாங்கள் சொல்லி தருவோம் சார் . காமிக்ஸ் உளவியல் -நண்பர்கள் ஸ்பைடர் ஶ்ரீதரும் ,மாயாவி சாரும் உரையாற்ற உள்ள பாலம் மீட்டுக்கு கிளம்புகிறேன் சார் . மாலை வருகிறேன் சார் . பை நவ் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. இன்று பாலம் புத்தக நிலைய நிகழ்ச்சியில் "காமிக்ஸ் உளவியல் " என்ற தலைப்பில் இன்னும் சில நிமிடங்களில் பேருரை ஆற்ற இருக்கும் வலைமன்னர் (வாய் மன்னர்னு கூட சொல்லலாம்) ஸ்பைடர் ஸ்ரீதர் அவர்களுக்கும்., அருமை நண்பர் "காமிக்ஸ் களஞ்சியம் " மாயாவி சிவா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
      All the very best my dearmost friends.

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் : /இப்படி யே பிசினஸ் தகவல் தந்து இம்ப்ரூவ் செய்தீர்கள் என்றால் எங்கள் ஆடிட்டருக்கே பல பல டெக்னிக்கல் நாங்கள் சொல்லி தருவோம்//

      ஏற்கனவே நம் அணியில் ஒரு (ஈரோட்டு) ஆடிட்டரும் உண்டல்லவா ? So அவரும் படித்து இந்நேரத்துக்கு நம்மைவிட ரெண்டு படி கூடுதலாய் சிந்திக்கத் தொடங்கியிருப்பார் !

      Delete
  15. ஆசிரியர் அதிஷ்டசாலி, கனவுகள் கலரில்? ஆயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம்.எங்கேயோ படித்தது.


    ReplyDelete
    Replies
    1. salemkelamaran@gmail.com : பெல்ஹாமை க்ளோஸ்-அப்பில் மெகா சைசில் பார்த்தால் உங்கள் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளுவீர்கள் சார் ! அதுவும் நான் கத்திரிக்காய் உயரமே இருக்கும் தருணத்தில் !

      Delete
  16. ஸ்பைடரை கலிய்த்து விமர்சனம் எழுதுவதெல்லாம் சும்மா லுலுலாய்க்குத்தான் சார்.
    அந்த ஹெலிகார்., வலைதுப்பாக்கி ஆர்டினி பெல்ஹாம் என அந்த வயதில் ரசித்த அனைத்தையும் இன்றும் அதே ஆர்வத்தோடுதான் ரசிக்கிறேன்.
    சூப்பர் ஹீரோக்கள் சாகாவரம் பெற்றவர்கள். (என்ன அன்றைய வசனங்கள் மட்டும் சற்றே நெருடல்.)
    அன்றைக்கு சரியாக இருந்திருக்கலாம். சற்றே வசனங்களை சர்வீஸ் செய்வது உத்தமம்.

    ReplyDelete
  17. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஹாப்பி.. ஈஸ்டர்....!!!
    ஞாயிறு அதிகாலையிலேயே (5 மணிக்கெல்லாம்) ஆபீஸ் கிளம்பும் 'அதிர்ஷ்ட சாலி'களில் நானும் ஒருவன். பதிவை வீடு நோக்கி பயணமாகும்போது படித்துவிட்டு வருகிறேன் பின்னூட்டமிட.

    ReplyDelete
  18. கடந்த சில நாட்களாய் சில உடல் மனப் பிரச்சினைகளால் அவதியுற்று கிடந்த எனக்கு நேற்று இம்மாத இதழ்கள் கிடைத்தன.
    முதலில் ஆலாய் பறந்து ஆவலோடு பிரித்தது என்னுடைய எவர்க்ரீன் ஹீரோ லாரண்ஸின் ப்ளைட் 731ஐத்தான்.

    கதையில்,
    "யார் அந்த எதிரி.?
    "சி ஐ டி லாரண்ஸ் "

    என்று கூறி அ.கொ.தீ. கழக உறுப்பினர் கம்ப்யூட்டரை க்ளிக்க., திரையில் லாரண்ஸின் படம் தெரிந்த போது, கைதட்டி., விசிலடித்தேன். (ஹீரோ இன்ட்ரொடக்ஷன்)
    மனதை அரித்துக் கொண்டிருந்த மற்ற விசயங்கள் பின்னுக்கு போக., ப்ளைட் 731 ல் மீண்டும் ஒரு பயணம் கிளம்பினேன்.
    கவலைகளை மறக்கச் செய்யும் ஆற்றல் காமிக்ஸ் க்கு உண்டென்பதை மற்றொருமுறை நேற்று உணர்ந்தேன்.
    மனமும் உடலும் தெம்பாக தோன்றுகிறது.
    வாழ்க காமிக்ஸ் காதல்.

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : FLIGHT 731-ன் ஒரிஜினல் வசனங்களே ஓரளவுக்கு ஒ.கே.யாகத் தோன்றியதால் மிதமான பட்டி-டிங்கரிங்கில் வண்டி ஓடி விட்டதை பட்டது எனக்கு . படிக்கும் போது அவ்வளவாய் நெருடல் தோன்றியதா நண்பரே ?

      Delete

    2. சார்.,
      ப்ளைட் 731ல் உறுத்தல் இருந்ததாக சொல்லவில்லை.
      பொதுவாக மறுபதிப்புகளில் (முத்து காமிக்ஸ்) பட்டி டிங்கரிங் இருந்தால் தேவலை என்றே கூறினேன்.
      லாரண்ஸ் டேவிட்டை பொருத்தவரை அப்படியே வந்தாலும் சுகமே.!!!!

      Delete

    3. சார்.,
      ப்ளைட் 731ல் உறுத்தல் இருந்ததாக சொல்லவில்லை.
      பொதுவாக மறுபதிப்புகளில் (முத்து காமிக்ஸ்) பட்டி டிங்கரிங் இருந்தால் தேவலை என்றே கூறினேன்.
      லாரண்ஸ் டேவிட்டை பொருத்தவரை அப்படியே வந்தாலும் சுகமே.!!!!

      Delete

    4. "ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை "

      "யானைப் பசிக்கு சோளப்பொறி "

      இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சார்.
      இவையெல்லாம் கட்டுபடியாகாது சார்.
      வீ வாண்ட் மோர் எமோஷன்.

      Delete
  19. விஜயன் சார், மி,ம வெளி ஈடும் நேரம் காலையா இல்லை மாலையா என குறிப்பிட்டால் இன்னும் வசதியாக இருக்கும்! மீண்டும் மீண்டும் இதனை கேட்பதற்கு மனிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : மன்னிப்பெல்லாம் தேவையா - என்ன நண்பரே ? சென்னையில் இப்போதே கண்ணைக் கட்டும் வெயில் போட்டுச் சாத்துகிறது ! ஏப்ரலின் மத்தியில் சொல்லவும் வேண்டுமா ? பகலில் நிச்சயம் மண்டை காய்ந்து போய்விடும் !

      Delete
    2. அப்படி என்றால் மாலைதான் என தெரிகிறது! நன்றி! இங்கிருந்து காலையில் கிளம்பும் ரயில பிடிக்க முடியுமான்னு பார்க்க வேண்டியதுதான்!

      Delete
    3. நண்பரே ,சென்னையில் ,திருமணத்திற்கு கூட காலையில் செல்லமாட்டோம்.மாலையில்தான் செல்வோம்.

      Delete
    4. Venkateswaran @ அப்ப சந்தோசம்தான்!

      Delete
  20. நண்பர்களே நமது நீ.......ள் கனவு இந்த மாதம் நிறைவேறப் போகிறது. அடுத்து நமது நீண்ட நாள் கோரிக்கையான இரத்தப்படலம Full set கலரில் 2016 ஈரோடு புத்தக திருவிழாவில் எதிர் பார்க்கலாமா?????
    ஒரே குண்டு புத்தகமாக.
    மூன்று பாகங்களாக,
    கிளைக்கதைகள் அணைத்தும் சேர்ந்த
    ஒ.........ரே குண்டு புத்தகமாக
    உங்கள் கருத்தை சொல்லுங்க நண்பர்களே.
    எது எப்படியோ நமக்கு Full Colour Set தான் முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. If it doesn't exceed Rs.1000, it would be great.

      Delete
    2. எனக்கு வேண்டாம்!

      Delete
    3. இதெல்லாம் நடக்குற காரியமா.???

      இருந்தாலும் ஸ்ரீ ஜி யோட ஆசைக்கு +1

      Delete
    4. ஸ்ரீதரின் ஆசை

      நடந்தால் இரத்தப் படலத்த வித்து வீடு கட்ற என்னோட பிளான் என்ன ஆவுறது

      Delete
    5. Srithar Chockkappa : ஜல்லிக்கட்டுக் காளையாய் முன்னே ஓட ஒரு வாய்ப்பு...செக்கு மாடாய் ஆலையை அலங்காரமாய் சுற்றி வரவும் ஒரு வாய்ப்பு..! எதைத் தேர்வு செய்வோம் நண்பரே ?

      பழசுக்கு ஜிகினா பூசிப் பத்திரப்படுத்திக் கொள்ளும் இந்தப் பழக்கம் தொடரவும் தேவையா ?

      Delete
    6. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : 30 நாட்களில் வீடு கட்டுவது எப்படி ? OLX -ல் அது கூட விற்பதாய்க் கேள்வி !!

      Delete
    7. இரத்தக்கோட்டையாவது கலரில் வருமா (Full Set).???????

      Delete
    8. சில வருடங்களுக்கு முன் மலைபோல் விற்பனையாகமல் குவிந்துஇருக்கும் ,அதைப்பார்க்கும்போது என் மனம் பாரமாக ,இருக்கும்..நல்லவேளை பீனிக்ஸ் பறவை போல் தமிழ்காமிக்ஸ் உயிர் பெற்றது.

      Delete
    9. சார் இரத்த படலம் மீண்டும் வந்து அதம் மூலமாய் புத்துயிர் பெறட்டுமே கிளைக்கதைகளும் !

      Delete
    10. @ Srithar chokkappa

      எடிட்டர் இப்படிச் சொல்லிட்டாரேன்னு கவலை வேண்டாம் நண்பரே!

      மும்மூர்த்திகளின் மறுபதிப்புக் கேட்டபோது இப்படித்தான் சொன்னார்...
      'மி.ம' மறுபதிப்புக் கேட்டபோதும் இப்படித்தான் சொன்னார்...

      ஆகவே, இரத்தப்படலம் மறுபதிப்பும் நிச்சயமாய் உண்டு! ;)

      Delete
  21. நேற்று புத்தகம் கிடைத்தது சார் ...வழக்கம் போல முதல் நாள் இரவு புத்தகத்தை அட்டை டூ அட்டை ரசிப்பதில் மட்டுமே கழிந்து விட்டது .தங்கள் ஹாட் லைன் ..பரட்டை தலை ராஜா ..விச்சு கிச்சு ..ஜோக்கர் ..என அடிசனல் பக்கங்கள் படித்தாகி விட்டது ..இன்று லார்கோ வுடன் பயணமாக போகிறேன் மகிழ்ச்சி உடன் .

    லார்கோ அட்டைப்படம் ..உள்ளே சித்திர தரம் ..மறுபதிப்பின் சித்திரதரம் ...தாள் என அனைத்தும் அசத்தல் ரகம் சார் ..ஆனால் ஏனோ இம்முறை மறுபதிப்பின் இரு அட்டைபடங்களும் மனதை கவர தவறி விட்டது ..

    லயன் 250 வது இதழ் ஜூன் என்றவுடன் மனதில் கூதுகலம் .(மாயாஜீ உங்கள் வாக்கு தவறி விட்டதே :) )இந்த மாதமும் குண்டு ..அடுத்த மாதமும் குண்டு ..இப்படி ..ஒவ்வொரு மாதமும் "குண்டாக "இருப்பின் மனதிற்கு நலம் என பெரியவர்கள் சொல்லி இருக்கறார்கள் (அப்படியா ! ) அதை அடிக்கடி தாங்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறேன் .அதே சமயம் டெக்ஸ் வில்லரின் மூன்று சாகசங்களில் முதல் சாகசத்தின் தலைப்பு நன்றாக இல்லை சார் .நீங்கள் முதன் முறை விளம்பரம் கொடுத்தபோதே இதை சொல்ல நினைத்தேன் .ஆனால் அது தலைப்பாக இருக்காது ..இத்தாலி மொழியில் ஏதோ கத்துகிறார்கள் என இருந்தேன் .ஆனால் இப்போது பார்த்தால் இது தான் தலைப்பாக இருக்கறது .

    "ஓக்லஹோமா " ம்ஹூம் ...வேண்டாம் சார் ..பயமாக இருக்கிறது ...(ஆனால் இப்பவும் சந்தேகம் ..இது தலைப்பு தானா ...)

    ReplyDelete
    Replies
    1. தலிவரே.!!! கிர்ர்ர்ர்ர்ர்....
      அது கதை நடக்கும் நகரத்தோட பெயராக இருக்கலாம். நம்ம தமிழ் சினிமாக்களுக்கு ஹீரோ கேரக்டர் பெயர்களையே டைட்டிலாக வைப்பதில்லையா அதைப்போல. (லிங்கா., படையப்பா. இப்படி சொன்னா உங்களுக்கு பிடிக்கும் புரியும்.)
      ஓக்லஹோமா என்பது ஒரு சிட்டி. நம்ம சுட்டி லக்கியோட மூணாவது சாகசத்தோட ஒரிஜினல் பேரு ஓக்லஹோமா ஜிம். (சரின்னு நினைக்கிறேன்.)

      Delete
    2. Paranitharan K : தலீவரே...அது ஒரு அமெரிக்க மாநிலத்தின் பெயர்! அதன் தலைநகருக்கும் ஒக்லஹோமா என்ற பெயரே ! இந்தக் கதைக் களம் முழுக்க முழுக்க அம்மாநிலத்தில் குடிபுக எண்ணிய முன்னோடி ஜனங்களின் வாழ்க்கையைப் பற்றியது என்பதாலேயே ஒரிஜினலுக்கும் இதே பெயர் ! கதையைப் படிக்கும் பொது புரிந்து கொள்வீர்கள் !

      Delete
    3. நோ.......

      இதுக்கு முன்னாடியே நாம ரிப்போர்ட்டர் ஜானி, கேப்டன் டைகர், ம.இ.மந்திரி இவங்களுக்கெல்லாம் நியூமராலஜி பார்த்து பேரு வச்சவங்கதானே?

      எங்க தலீவரு சொன்னமாதிரி ஓக்லஹோமா'ன்ற பேருக்குப் பதிலா அத்திப்பட்டி'னு வையுங்க. வேணுமின்னா 'மேற்கே ஒரு அத்திப்பட்டி' னு வையுங்க... செமையா இருக்கும்!

      ஏனுங் தலீவரே, நாஞ்சொல்றது சரிதானுங்களே?

      Delete
    4. திரு விஜயன் அவர்களுக்கு,

      நான் முதல் முதலில் ஈரோடு புத்தககண்காட்சியில் 'ஓக்லஹோமா' பார்க்கும்போதே இந்த தலைப்பில் கோளாறு உள்ளது என பட்டது. அன்றைய நாளில் நான் முற்றிலும் இந்த உலகிற்கு புதியவன், சேலம் புத்தககண்காட்சியில் இந்த தலைப்பு படித்த திருவிழாவுக்கு வந்த ஒரு பார்வையாளர் "என்னங்க இப்படியும் ஒரு தலைப்பா ? ..ம்...ரொம்பவும் தைரியம்தான் காமிக்ஸ் புக் அடிப்பவருக்கு..!" என்றார்.
      காரணம் 'மா' என்ற எழுத்தை 'லி' போட்டு படித்தால் அது சொல்லும் அர்த்தம் வெளிப்படும் என்பதே! இது குறித்து அப்போதே சிவகாசி பிரிண்டிங் ஸ்பெசலிஸ்டு குமாரிடம் உங்கள் காதில் போட குறிப்பிட்டேன்.
      வம்பை விலைகொடுத்து வாங்கும் இந்த 'தலைப்பை தவிர்க்கலாமே சார்..!

      Delete
    5. சரிதான் .ஈரோடு விஜய் அவர்களே!!

      Delete
    6. எனக்கு "ஓக்லஹோமா" என்ற இந்த தலைப்பு ரொம்ப பிடித்து இருக்கு!

      Delete
    7. //இந்தக் கதைக் களம் முழுக்க முழுக்க அம்மாநிலத்தில் குடிபுக எண்ணிய முன்னோடி ஜனங்களின் வாழ்க்கையைப் பற்றியது//
      சூப்பர்

      //எனக்கு "ஓக்லஹோமா" என்ற இந்த தலைப்பு ரொம்ப பிடித்து இருக்கு!//
      பரணி எனக்கும் ...

      Delete
  22. ஆசிரியருக்கு.....

    OLX/ல் பழைய காமிக்ஸ் புத்தகங்களின் விற்பனை விளம்பரம் பார்த்தேன். விலைகளை பார்த்தவுடன் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.

    அதில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இதழ்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதனால்தான் இவ்வளவு விலை நிர்ணயித்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    இப்பொழுது வெளியாகும் மறுபதிப்புகளுடன், விளம்பரப்படுத்தப்பட்ட இதழ்கள் அனைத்தையும் ஒன்றாக LMS போல் 1000 ரூபாய்க்கு (விலை உங்கள் கையில்) ஒரு இதழ் வெளியிட்டால் பழைய புத்தகங்களை விரும்பும் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே.

    இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் தெரியாது. ஆனால் இரும்புக்கை மாயாவி கதைகளைவிட அதிகம் விற்பனையாகும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Sundar Raj : சமீபப் பதிவில் எங்கோ ஒரு மூலையில் நான் சொன்னதைத் திரும்பவும் இங்கே கொணர்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன் ! இந்த "பழசைத்" தேடும் மோகமெல்லாமே சோப் முட்டையினைத் தேடி ஓடுவது போலவே என்பது எனது அபிப்பிராயம் ! கிட்டே சென்று தொட்டு விட்டால் தேடலும் முடிந்து விடும் ; குமிழும் உடைந்து விடும் !

      நமது இதழ்கள் இப்படியும்-அப்படியுமாய் நிலையற்று வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் வேண்டுமெனில் முந்தைய இதழ்களுக்கு ஒரு மவுசு இருந்திருக்கலாம் - ஆனால் படிக்கத் திணறும் அளவுக்கு இதழ்கள் மாதாமாதம் வெளிவரும் தருணத்தில், அந்நாட்களது புராதனங்களை சேகரிப்பதில் வாசிப்பு அனுபவங்களின் தேடல்களை விடவும், சேகரிப்பின் வேட்கையே பிரதானமாய் இருக்க முடியும் ! நாளாசரியாய் அதுவும் சற்றே மட்டுப்படும் தருணங்களில் இந்த unrealistic விலைகள் தரையிறங்குவது தவிர்க்க இயலாது போகலாம்!

      Delete
  23. லக்கி லூக்., சிக்பில் ,
    மறுபதிப்புகளெல்லாம்
    மலையேறிப் போயாச்சு.!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : நிழல் 1..நிஜம் 2 வருகிறது...!

      Delete
    2. "ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை "

      "யானைப் பசிக்கு சோளப்பொறி "

      இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சார்.
      இவையெல்லாம் கட்டுபடியாகாது சார்.
      வீ வாண்ட் மோர் எமோஷன்.

      Delete
  24. According to me namma kulikadha muraatu paasanga dhan appovum top sir.... idhu wild guess.... this is forecast based on our current trend sir.... இவர்களை அடிச்சுக்க அப்போது ஆட்கள் இருந்தால் அவர்களும் குளிக்காத குதிரை ஏறி கும்பலாகவே இருப்பர்....
    But apoo Largo will be on his peak if he stays on this pattern and action mode...

    Sorry to say sir... apoovum marupadhippu marru marru paadhippu nu எக்கச்சக்கமாய் கோரிக்கைகள் இருக்கும் ..... ஹிஹீஹீஹிஹீயாயாயாயாயாயா..... அதுலமட்டும் மாறவவேமாட்டோமுல.....

    But in order to get some new generation young kids to read our comics super heros like batman superman spidey can be introduced.... cartoon and animation are now our competition too...

    If we are targeting new markets.... we have to give new heros those who are known already to the kids.... all our flagship heros can be introduced later to them.... if such an initiative takes place we will be looking at a completely different lion and muthu family with a lot more young groups in the future...

    ஆசிரியர் சார் ஏதோ மனதில் பட்டதை சொல்லிட்டேன்..... தவறாக இருப்பின் மன்னித்தருள்க..... yeppa surrender aagi thapichtomla...!!!

    ReplyDelete
    Replies
    1. Tex willer rasigan!!! : //But apoo Largo will be on his peak if he stays on this pattern and action mode..//

      25 ஆண்டுகளுக்குப் பின்னே லார்கோவா ? ஆஹா.....2016-லேயே ஒரிஜினல் லார்கோ வெளியீட்டு அட்டவணையோடு நாமும் sync ஆகியிருப்போம் ! அவர்கள் புதிதாய் கதைகள் உருவாக்குமதே தருணங்களில் நாமும் வெளியிடும் நிலை 2017-ல் புலர்ந்திருக்கும். So இந்தத் தொடரில் பெரியதொரு backlog கிடையாது நாம் தொடர்ச்சியாய் வெளியிட்டிட !

      கதாசிரியர் வான் ஹாம்மேவிற்கு இப்போதே வயது 76 எனும் போது - அவரது இடத்தை அதே ஆற்றலோடு இன்னொருவர் பிடிக்க முடிந்தால் தவிர லார்கோ தொடரின் ஆயுட்காலம் அதிகமிராது என்பது தான் யதார்த்தம் !

      Delete
    2. Ahaaaa... apooo லயன் & முத்து வில் அடுத்த Generation hero nu pudhusa yaaravadhu varalaam???

      அய்யா அப்போ 2025- ல யாரு???

      Any plans??

      டெக்ஸ் & டைகரே சரணம் னு சொல்லிடலாமோ???

      ஸ்வாமி....... ஏதேனும் உபாயம்??

      Hey.... wait a minute.... vijiyan sir...??? என்னமோ திட்டம் இருக்கு????

      Delete
    3. டெக்ஸ் , ஸ்பைடர் , ஆர்ச்சி , இரட்டை வேட்டையர் அடுத்து யாரெனக் கூவிக் கொண்டிருந்த பொது டைகர் வந்தார் ..இப்போ லார்கோ, ஷெல்டன் ......என வந்தனர் ...ஆசிரியர் அற்புதமான கதைகளை அடுத்த வருடம் அறிமுக படுத்தும் பொது இதே அற்புதங்கள் தொடரலாம் நண்பரே

      Delete
  25. விஜயன் சார்,நெரியே வின்ச் ஒரு சில பக்கங்கள் வந்தாலும் அவருடைய ஆளுமை ரெம்ப பிடித்து இருந்தது.அவரைப்பற்றி கதைகள் ஏதும் உண்டா?அவர்தான் உண்மையான ஹீரோ!

    ReplyDelete
  26. டியர் எடிட்டர் சார்,
    ஒரு புதிய பதிப்பகத்தை பற்றி கோடிட்டு இருந்தீர்களே... விவரங்கள் எப்போது?

    ReplyDelete
  27. ஸ்பைடர் பற்றி
    -----------------------
    என்னைப் பொறுத்தவரை, மம்மூர்த்திகளில், என் ஆல் டைம் ஃபவரைட் என்றால் அது ஸ்பைடர் தான்.
    யோசித்துப் பார்த்தால், இரும்புக் கை மாயாவியுடன் ஒரு நெருக்கம் எனக்கு ஏற்படவேயில்லை. என்ன காரணம் ?. ஒரு வேளை, கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்த வீட்டு அங்கிள் போல, குறும்பு இல்லாமல் இருப்பதினால், மாயாவிடம் ஒரு அந்நியத்தன்மை இருக்கிறது. மேலும் அவர் கூட இருப்பவர்கள் எல்லாரும் ரொம்ப நேர்மை, நாணயம் கொண்டவர்கள். சில நேரங்களில், சரியாக மாட்டிக்கொண்டு புலம்புவார் (!!!???)..

    ஆனால் ஸ்பைடர்....
    அந்த உருவமும்
    கிண்டலும்
    கேலி
    தன்னம்பிக்கை (தலைக் கனம் (???) )
    எந்தப் பிரச்சினையிலும் கலக்கம் அடையாத குணம்..
    கூட இருப்பவர்களின் கேரக்டரைஸ்ஷேஷன்... ஆர்டினி, பெல்ஹாம், ஹெலிகார், வலைத்துப்பாக்கி,
    நிஜ வாழ்க்கையில் நேரில் பார்த்தால் நான் பயப்படும் போலீஸை ஜஸ்ட் லைக் தட்... ஓட ஓட விரட்டுவது...
    ஒரு வகையில்.. கிண்டலும், கேலியும் நிறைந்த ஒரு தாய்மாமன் கதாப்பாத்திரம் ஸ்பைடர்...


    என்னதான் காதில் பூ என்றாலும், ஒரு சாஃப்ட் கார்னர் ஸ்படைரிடம் எனக்கு என்றும் உண்டு....
    ஸ்படைர் ROCKS !! ALWAYS !!!

    ReplyDelete
    Replies
    1. //கிண்டலும், கேலியும் நிறைந்த ஒரு தாய்மாமன் கதாப்பாத்திரம் ஸ்பைடர்...//

      சரியான ஒப்பீடு !

      Delete
    2. //இரும்புக் கை மாயாவியுடன் ஒரு நெருக்கம் எனக்கு ஏற்படவேயில்லை. என்ன காரணம் ?.//

      +1

      என்னை பொருத்தவரை மாயாவி முத்து காமிக்ஸ் ஹீரோ. நான் லயன் ரசிகன் என்பதால் சிறு வயதில் முத்து காமிக்ஸூம் , அதன் கதானாயகர்கள் மீதும் பெரிய ஈர்ப்பு இல்லை. விதி விலக்கு லாரன்ஸ், டேவிட்.

      Delete
    3. ஸ்பைடர் தான் எங்கள் சூப்பர் ஸ்டார் என்றும் எப்பொழுதும்.

      Delete
    4. உண்மை. எனக்கு முதலில் அறிமுகமாகியது லயன். அந்த லோகோ ஒன்று போதும்.. அந்த குட்டி சிங்கத்தின் ரசிகன்.

      Delete
  28. 25 வருடங்களில் கழித்து மறுபதிப்பு
    ------------------------------------------------------
    சிறுவயதில் என்ன படித்தேனோ அதுவே இன்று மறுபதிப்பாக வரும் போதுஅந்த சிறு வயது நியாபங்கள் வருகின்றது. அதே மாதிரி, 25 வருடங்கள் கழித்து என் பையன் இன்று படிக்கும், டின் டின், லக்கிலூக், மதியில்லா மந்திரி, ரின் டின் கேன் போன்ற புத்தகங்களை அவன் உங்களிடம் மறுபதிப்பு கேட்க வாய்ப்பு இருக்கிறது.

    லக்கிலூக்கு என்றும் அழிவில்லை என்றே நினைக்கிறேன். இன்னும் பல தலை முறைகளைத் தாண்டியும் ரசிப்பார்கள்.

    கௌபாய் -- ? சற்று சந்தேகமாக இருக்கிறது. நான் சிறு வயதில் மாட்டு வண்டி பார்த்திருக்கிறேன்.. குதிரை, கரி கக்கும் புகை வண்டி பார்த்திருக்கிறேன். அதனால், கௌபாய் கதைகளில் இவைகள் வரும்போது எனக்கு அன்னியமாக படவில்லை.. ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு... தெரியவில்லை...

    எந்த மாதிரி கதைகள் ரசிக்கப்படும் ?... சூப்பர் ஹீரோ ?... டிஜிட்டல் காமிக்ஸ் மாத்திரமே வருமோ ... பிரிண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள் வழக்கொழிந்து போய்விடுமோ ..... சென்சார் செய்தால் 10 பக்கம் மட்டுமே மிஞ்சும் அளவுக்கு வந்திடுமோ ???...

    எதிர்காலம் எப்படி இருக்கும் என்று வாத்தியார் சுஜாதா இருந்திருந்தால் சொல்லியிருப்பார்...

    நன்றாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  29. அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் நண்பர்களே!!!
    இனிய மாலை வணக்கம் எடிட்டர் சார்!!!

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Tensports chanel ல் wrestling பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
    'Undertaker' is back....:):):)

    ReplyDelete
  32. Wrestling ஒரு பக்கா entertainment சங்கதி என்றாலும் கூட, நான் சின்ன (பள்ளி) வயதில் ரசித்த, வியந்த (இப்பொழுது அவர்களுக்கு வயதாகி விட்டாலும்) Undertaker,Hulk Hogan,Rock,Stone cold,Shawn Michaels,DX etc. போன்றவர்களை திரும்பவும் பார்க்கும்பொழுது மனதில் இனம் புரியா சந்தோஷம் :-):-):-)

    அதேபோல தான் நமது காமிக்ஸ் Evergreen Heroes களான 'இரும்புக்கை மாயாவி',ஸ்பைடர்,ஜானி நீரோ,லாரன்ஸ் & டேவிட்' கதைகளை Re-print ல் படிக்கும்போதெல்லாம் மனம் உற்சாகத்தில் துள்ளும் :-) :-):-)
    (அதில் அவர்கள் நம் காதில் எவ்வளவு பூ சுத்தினாலும் பரவாயில்லை..I just love them...)

    ReplyDelete
  33. இன்று பாலம் the book meet ல் காலை நடந்த 'காமிக்ஸ் உளவியல்' கலந்துரையாடல் துவக்கமும் முடிவும்..!

    "தலைப்பு ஆழமா இருக்கு ஆனா...சித்திரக்கதைகள் சின்னபசங்க சமாச்சாரம்..! இதபத்தி முப்பதஞ்சி,நாப்பது வயசுல இருக்கறவங்க என்னத்த பேசப்போறாங்க ? இதுல என்ன உளவியல் இருக்கு? பேசுங்க பாப்போம் ! "

    இது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த இலக்கியம்,சித்தாந்தம் கரைத்து குடித்த இருபதுக்கு மேற்ப்பட்டவர்களின் மனதிலிருந்து மேற்கண்டவாறு எதிரொலித்துக்கொண்டிருந்த கேள்வி..!

    நண்பர் ஸ்ரீதர் உரை மற்றும் நண்பர்களின் கலந்துரையாடலுக்கு பின் கீழ்க்கண்ட எண்ணங்களாக மாறி இனிதே முடிந்தது..!

    "உங்களை எல்லாம் பாக்குறதுக்கு முன்னாடிவரைக்கும் சின்னபுளைங்க விஷயம்ன்னு இத்தனை நாள் நினைச்சிட்டிருந்தேன், காமிக்ஸ் ஹீரோக்களை பற்றி நீங்க பேசணும்னு மனசுல நினைக்கிறப்போவே உங்க முகத்தில வர்ற சிரிப்பு, சந்தோஷம், அவ்வளவு ரசிச்சிபேசிறிங்க... இங்க இருக்கிறவாங்க 'நான் சின்னவயசுல
    படிச்சா மந்திரவாதி மான்ரேக் வருதா? அந்த டேஞ்சர் டயாபலிக், ஜானிநிரோ எனக்கு நினைவிருக்கு...' ன்னு ஒவ்வொருத்தரும் கேக்க கேக்க உங்க ஒவ்வொருத்தர் முகத்துலயும் அப்படி மின்னல் வெட்டுது..! படைப்பை
    ரசிச்சி சொல்லற எவ்வளவோ வாசகர்கள் பேச கேட்டிருக்கேன். ஆனா..ஆனா.. கொஞ்சங்கூட வெக்கமேபடாம, சிரிப்பும்,சந்தோசமுமா ஒவ்வொரு கதாபாத்திரம் பத்தியும் நீங்க பேசறது பாக்க ஆச்சரியமா இருக்குங்க..! 'உங்க காமிக்ஸ் உலகம்' வெரி இன்ரஸ்டிங்..! உங்களை அந்த உலகம் 'ஈகோ' ங்கிற பெரிய பாரங்கல் தலைக்கு மேல அழுத்தாம, 'வெட்கம்' ங்கிற மாயதிரை உங்க சந்தோசத்தை தடுக்காம, எவ்வளவு இளமையா வெச்சிருக்குன்னு நினைக்கறப்போ ஆச்சரியபடாம இருக்கமுடியலை..!"

    முடிந்தால் நாளை அசத்தல் உரைபற்றிய சின்ன விரிவுரை எழுதுகிறேன்..! லார்கோ பார்ட் 'டூ' படிக்கபோகிறேன்..!

    நட்புடன்,
    மாயாவி.சிவா

    ReplyDelete
    Replies
    1. நிகழ்ச்சி போட்டோக்கள் பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
    2. ஆஹா...அருமை அருமை....

      Delete
    3. நன்றி சிவா! சிறுவயதில் புதிய சிந்தனைகளை எனக்குள் விதைத்த சில காரணிகளில் நமது காமிக்ஸும் ஒன்று! இந்த முயற்சி நமக்கு பழைய மற்றும் புதிய வாசகர்களை கொடுக்கும் என்று நம்புகிறேன்!

      இதன் வீடியோ இருந்தால் இங்கு கிளிக் ஆக இணைக்கவும்!

      Delete
    4. @ பரணி
      நான் வீடியோ எதுவும் எடுக்கவில்லை. ஆடியோ மட்டும் எடுத்தேன். மேலும் இது துவக்கமே, அசத்தலான சில உளவியல் காரணங்கள் கிடைத்தன.

      ஒரு உதாரணம்:

      "சார் இப்ப நாம பேசிட்டு இருக்கோம், ஒகே. ரோட்டுல யானையோட மணி சத்தம் கேக்குதுங்க...நீங்க என்ன பண்ணுவீங்க? எந்திரிச்சி போய் பாப்பீங்களா இல்லையா..?"
      "நீங்க பாப்பீங்களோ இல்லையோ, நான் கட்டாயம் ஓடிபோய் பாப்பேன். என்னோட சின்ன வயசுல அதை பாக்குறப்போ எப்படி இருந்ததோ, இப்பவும் யானை பாக்குறப்போ அதே மனநிலை இருக்கு. உங்களால யானை ரசிக்க முடியுதுன்னா... காமிக்ஸையும் ரசிக்க முடியும்..! என்னத்த யானைய பாத்து..ன்னு நீங்க சலிச்சுகிட்ட.. ஸாரி உங்களுக்குள்ள ஒரு துள்ளும் துடிப்பு சாககிடக்குது, அதை மீட்டெடுக்கும் வழியை பாருங்க..!"


      Delete
    5. நிகழ்ச்சியில் ஒரு சம்பவம்:

      "வழக்கமா முகத்துல முடி முளைக்க ஆரம்பிச்சுட்டா... வீட்ல பெரியவங்க போடுற கண்டிஷன் பயங்கர டென்ஷன் போங்க. இந்த மாதிரி சமயத்துல நம்ம தமிழ் சினிமாவுல ஹீரோவுக்கு 'டென்ஷன்' வந்த சிகரெட் குடிப்பாரு, ஓஓஒ...நாமளும் சிகரெட் குடிச்சா நம்ம 'டென்ஷனும் குறையும் போலன்னு பெட்டிகடைக்கு போனேன்..!"

      "அங்க மாலையாட்டம் புத்தகமா தொங்கிட்டிருந்திச்சி, 'டங்'ன்னு குண்டா தலையில ஒரு புக்கு இடிக்க... அத நிமிந்து பாத்தேன். அசத்தலான அட்டையில் பின்னாடி இரண்டு சிலிண்டர் கட்டிட்டு கூர் காதோட பறக்கற மாதிரி படத்தோட இருந்த அந்த புக்கு பேரு 'கோடை மலர்'..!"

      அஞ்சி ரூபா கொடுத்து வாங்கி, அங்கியே பொரட்டி பாத்து, பாத்தமயக்கத்துலேயே அப்படியே ரோட்லயே உக்கந்து.. பொய் இல்லிங்க.. ரோட்லயே உக்கந்து படிச்சேன்..! அன்னையில இருந்து காமிக்ஸ் படிக்கிறேன். அன்னிக்கு என்னோட மசுல எடம் பிடிச்ச ஹீரோ 'வலை மன்னன் ஸ்பைடர்'..! அந்த புக்கு நான் படிக்கிலைனா... சத்தியமா சொல்றேன், வெறிய சிகரெட் குடிச்சி இன்னிக்கு சீரளிஞ்சி போயிருப்பேன், இது உண்மைங்க. அந்த காமிக்ஸ் மோகத்துகப்புறம் என்னை நான் அறிமுகம் செஞ்சிகிறது எப்படி தெரியுமா... வணக்கங்க என்னோட பேர் 'வலை மன்னன் ஸ்ரீதர்' ..!"

      இந்த சம்பவத்தை நண்பர் சொன்னதும் வந்த கைதட்டல் உங்களுக்கு கேக்குதா நண்பர்களே...!
      நண்பரை மயக்கிய அந்த அட்டைபடம் பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete


    6. சூப்பர்.!
      அட்டகாசம் ஸ்பைடர் ஸ்ரீதர்.

      Delete
    7. Thanks @Mayavi Siva for the updates

      Delete
  34. எடிட்டர் சார்...'லயன் 250 & முத்து 350' ஸ்பெஷலுக்கு 'முன்பதிவு' ஏதேனும் செய்ய வேண்டுமா? இல்லை ரெகுலர் இதழ்களாகவே வருகிறதா?!
    வெளியீட்டிற்கு 3 மாதங்கள் முன்பிருந்து இதழ்களுக்கான 'முன்பதிவு' தொடங்கும் என்று பழைய பதிவு ஒன்றினில் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம்....!!!

    ReplyDelete
  35. இன்று வரை நான் எதிர்காலத்தை பற்றி ஒரு நாளும் நினைத்து பார்த்தது கிடையாது. இதில் நமது காமிக்ஸ் இரசனைகள் எதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, உங்களை போல் வரும் நாட்களில் எனக்கு ஏதாவது கனவு வந்தால் அதனை பற்றி எழுத வசதியாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் காமிக்ஸின் வளர்ச்சியும்,ஆயுளும் ,விஜயன் சாரின் கைகளிலே உள்ளது.அவருக்கு தீராத காமிக்ஸ் மீது காதலும்,நீண்ட ஆயுளையும் கடவுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டுவதை தவிர ஏதுவும் யோசிப்பதில்லை.

      Delete
    2. தமிழ் நாட்டில் மிகப்பெரிய பத்திரிகைகள் கூட ,அரசியல்,ஆன்மீகம்,மகளிர்,வேளாண்மை,வணிகம்,ஏன் ஜோதிடத்திற்கு கூட புத்தகம் வருகிறது.ஆனால் காமிக்ஸிற்கு கிடையாது.வாசகர்கள் மற்றும் இலாபம் குறைந்த இத் தொழிலில் வேறுயாரும் வரப்போவதில்லை.காமிக்ஸ் என்றால் விஜயன் சார்தான்.

      Delete

    3. உண்மை உண்மை

      +999999999999999999

      Delete
    4. //தமிழ் காமிக்ஸின் வளர்ச்சியும்,ஆயுளும் ,விஜயன் சாரின் கைகளிலே உள்ளது.அவருக்கு தீராத காமிக்ஸ் மீது காதலும்,நீண்ட ஆயுளையும் கடவுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டுவதை தவிர ஏதுவும் யோசிப்பதில்லை.//
      //காமிக்ஸ் என்றால் விஜயன் சார்தான்.//
      +1

      Delete
    5. ஆனால் .....
      காமிக்ஸ் என்றால் என்றும் என் நினைவில் இருப்பது.....
      உங்களின் (பிரகாஷ் பப்ளிஷர்ஸ்) காமிக்ஸ் குடும்பம் மட்டுமே!
      இது மட்டும் என்றும் தொடரவேண்டும்... கண்டிப்பாக தொடரும்.

      Delete
    6. @ FRIENDS : அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் என்றும் எங்களது நன்றிகள் ! ஆனால் சின்னதாய் சில திருத்தங்களைச் சுட்டிக் காட்டுகிறேனே...!

      தமிழ் காமிக்ஸின் ஆயுளோ ; வளர்ச்சியோ எனது கைகளில் என்பதெல்லாம் ஒரு மாயை ! மாறாக எனது வளர்ச்சிகள் சார்ந்திருப்பது தமிழ் காமிக்ஸை என்பதே நிஜம் ! காமிக்ஸ் எனும் ஒரு பின்னணியின்றி நான் ஓசையின்றி வேறேனும் தொழிலில் பெரிதாய் சாதித்து / சம்பாதித்து வந்திருந்தால் கூட - அடுத்த தெருவிலிருப்பவருக்குக் கூட நானொரு முட்டைகண் XYZ மட்டுமே ! (அதற்காக நான் இப்போதொரு VIP என்றெல்லாம் சொல்லவரவில்லை !)

      சிறிதோ - பெரிதோ இன்று எனக்கொரு அடையாளம் இருப்பின், அது காமிக்ஸ் எனும் ஆலமரத்தின் விழுதுகள் தரும் அடைக்கலமே ! என் தந்தை போட்டு வைத்த கோட்டில் நான் ரோடு போட்டு வருகிறேன் ; இதனை இன்னமும் அழகாய், நயமாய் செய்திட வேறு பலரும் களம் இறங்கிடலாம் ! So காமிக்ஸைத் தூக்கி நிறுத்துபவன் நானல்ல ; என்னைச் சுமந்து நிற்பதே அந்த காமிக்ஸ் தான் !

      தவிர, பெரிய நிறுவனங்களுக்கு இந்தத் தொழில் தெரியாது என்பதான சிந்தனையும் கூட கற்பனை மட்டுமே ! ஓசியாய் கொடுத்தாலும் காமிக்ஸ் படிக்கும் ஜனங்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே என்பதை நாங்கள் அனுபவரீதியில் உணர்ந்து வருகிறோம் ! நிறைய ஊர்களில், பிரதானமான புத்தகக்கடைகளில் நமது இதழ்களை வலுக்கட்டாயமாய் சப்ளை செய்து விட்டு 30 நாட்கள் கழித்துச் சென்று பார்த்தால் அத்தனையும் அரை இன்ச் தூசியோடு பத்திரமாய் இருப்பதைப் பார்க்க முடிகிறது ! "வர்றாங்க சார் ; புரட்டிப் பார்த்திட்டு இங்கிலீஷ் காமிக்ஸ் இல்லியா ?"ன்னு கேட்டுட்டு கிளம்பிடுறாங்க சார் " என்ற பாடலை சுதி சுத்தமாய்க் கேட்டு வருகிறோம் ஏகப்பட்ட ஊர்களில் ! காமிக்ஸ் காதலர்களான நமக்கு இதைக் கேட்கும் போது பற்களை நற நற வெனக் கடிக்கத் தோன்றும்தான் ; ஆனால் தமிழ் கூறும் நல்லுலகின் ரேடாரில் காமிக்ஸ் ரொம்ப ரொம்ப தணிவானதொரு இடத்தைப் பிடித்து நிற்பதே நிஜம் ! அதனை உணர்ந்தே பதிப்புலகினுள் நுழையும் புதியவர்களும் சரி ; பழம் தின்று கொட்டை போட்ட ஜாம்பவான்களும் சரி இந்தத் துறையை ஓரம் கட்டுவது நிகழ்கிறது ! சங்கடமான உண்மை ; ஆனால் முகத்தில் அறைந்து அனுபவம் உணர்த்தும் உண்மை !

      Delete
    7. (இப்போதைக்கு) இது உண்மைதான் சார்! ஆனால் எதிர்காலத்தில் மேஜிக் மாதிரியான ஏதோ ஒன்று நடக்கப்போகும் நாளுக்காக நம்பிக்கையோடு காத்திருப்போம்.....

      Delete
  36. சார்,

    எனக்கு கொஞ்சம் ஏமாற்றமான பதிவு. மி. ம. கொண்டாட்டத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அதனைப் பற்றிய ஏதாவது முன்னோட்டப்ப் பதிவாகயிருக்கும் என்று எதிர்பார்த்தேன்! ஒரு மெகா இதழ் வெளிவரும் வேளையில், அதொரு மறுபதிப்பென்பதால் ஒரு பெரிய பில்ட் அப் இல்லாமல் ஏதோவொன்று குறைவதாகப்படுகிறது. சீக்கிரம் மி. ம. பற்றிய விரிவானப் பதிவைப் போட்டுத் தாக்குங்கள் சார். (இதே LMS கடந்தாண்டு வெளிவருவதற்கு 2 மாதங்கள் முன்பாகவே அதனைப் பற்றிய கதைகளும், டீசர்களும் தூள் கிளப்பின, தங்கள் பதிவில்)

    கூர்மண்டையர், மும்மூர்த்திகளின் பூசுற்றல்கள் கதைகளைப் பற்றி ஏற்கனவே நாம் பலமுறை பேசியவை, பார்த்தவைகள் தான், ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பதுப்போல் மீண்டும் மீண்டும் அவைகளைப பற்றி பேசி ஆவப்போவதென்னவோ..? அப்போது இந்த பூசுற்றல் கதைகள் நாம் ரசித்தோம் எனில் அது ஒரு அறியா பருவம், இப்போது நம் ரசனைகள் பல திசைகளில் விரிந்திருப்பதற்கு காரணம், இது நாலுமறிந்த பருவம் தானே.
    இந்த இதழ்களை மீண்டும் பெறுபவர்களுக்கு ஒரு பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு வாய்ப்பாகவும், புதிதாக வாசிப்பவர்களுக்கொரு புதியதொரு அனுபவமாக அமையும் போது மறுபதிப்புகளை வெளியிட முடிவானபின் கதைகளில் யதார்த்தமிருந்தாலென்ன பூசுற்றலாயிருந்தாலென்ன...?

    ReplyDelete
    Replies
    1. 'மின்னும் மரணம்'கூட ரீ பிரிண்ட்தானே? அப்போ அதுவும் ஆறிய கஞ்சி,புளிச்ச கஞ்சிதானே? கூர் மண்டையர், ஆர்ச்சி, மாயாவி கதைகளாவது சில மாமாங்கங்களுக்கு முன் வந்தவை. டைகரின் கதைகளோ சில ஆண்டுகளுக்குள் வந்தவை. பெரும்பாலான கதைகள் பல வாசகர்களிடம் இருக்கின்றன. இப்படியிருக்க அதில் இருக்கக்கூடிய சுவாரஸ்யம்தான் என்ன? புத்தகம் வந்தபின்தான் நிறை குறைகளை அலசவேண்டியிருக்குமே தவிர அதில் என்ன விசேச முன்னோட்டம் தேவைப்படுமென்று புரியவில்லை. நிழல் 1 நிஜம் 2 கூட கலரில் வருகிறது. உங்களுக்கு இந்தப் பதிவு ஏமாற்றம் தந்ததுதான் ஆச்சரியம். 'மின்னும் மரணம்' ஜஸ்ட் ஒரு ரீப்பிரிண்ட்தான். அதை உருவாக்க எடுக்கும் உழைப்பை மட்டுமே போற்றலாம்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. மி. ம. ஜஸ்ட் ஒரு மறுபதிப்பா...?

      ஒரு 11 பாக சாகசம் முழுமையாக இணைந்து வருவதே அசாதாரணம். அதற்கொரு கெத்து வேண்டும்.
      நான் ஆறிய கஞ்சி என்றது பூசுற்றல் கதைகளைத்தான், மறுபதிப்புகளையல்ல. ஆகையால் மி. ம. பழையகஞ்சி வகையறாக்களில் அடங்கா. மறுபதிப்புகள் எப்போது வருகிறதென்பதை விட, ஏன் வருகிறது என்பதை தான் ஆராய வேண்டும்.

      மி. ம. பல வாசகர்களிடமிருந்தாலும், அதை இப்போது வண்ணத்தில், பெரியளவில் வெளியிடவேண்டிய அவசியமென்ன...?
      B/W மறுபதிப்பு ஒன் ஷாட் கதையும், 11 பாக மி. ம. –ம் ஒன்றாகுமா..?
      (நாம் சாதாரணமாக சொல்லக்கூடிய ஜஸ்ட் 11 பாகங்கள் படைக்க, படைப்பாளிகள் ஜஸ்ட் எடுத்துக்கொண்டது 18 ஆண்டுகள் தான். (1973-1990)
      புத்தக திருவிழாவில் வாசகர்கள் மத்தியில் மி. ம. வெளியாக போவதன் ரகசியம்தான் என்ன..? (1௦௦௦/-ரூ. இதழ் என்பதால் மட்டுமா..?)

      மி. ம. அப்போது vs இப்போது வித்தியாசங்கள்:

      நியூஸ் பிரிண்ட் தாள் / ஆர்ட் பேப்பர்
      B/W – முழுவண்ணம்
      பல இதழ்களாக – ஒரே இதழாக
      வெவ்வேறான அளவில் – பெரிய அளவில்
      இந்த வித்தியாசங்கள் இப்போது சாதாரணமாக தெரிந்தாலும், மி. ம. மறுபதிப்பு வெளியான பின் பழைய இதழ்களுடன் மேற்கண்டவைகளை ஒப்பிட்டு பார்த்து, இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை நீங்கள் உணர்ந்து சந்தோசமடைந்தால், அதுதான் புதிய ‘மின்னும் மரணத்தின்’ உண்மையான வெற்றி!

      ஏன் என்றால், மி. ம. ஜஸ்ட் ஒரு மறுபதிப்புதான்?

      Delete
    4. ஆரோக்கியமான விவாதம் சந்தோசமாக நடக்கட்டும் நண்பர்களே!

      Delete
    5. நண்பரே! எங்கள் சிறுவயதுகளை ஆகாயத்தில் மிதக்க வைத்த கதைகள்தான் இன்று நீங்கள் ஜஸ்ட் லைக் தட் - கறுப்பு வெள்ளை - என்று மட்டந்தட்டும் கதைகள்.

      அவைகள் மறுபடியும் வெளிவருவதற்கு எத்தனை வருடமாக நம் வாசக நண்பர்கள் ஆசிரியர் முன் தவங்கிடதந்து வரம் கேட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

      "வர்ணத்தில் வந்தாற்போல அது மேம்பட்டது" என்ற உங்கள் கருத்தை அடியோடு மறுக்கிறேன். முழுக்க முழுக்க விற்பனையை நோக்காக கொண்டதொரு சிறிய (அதுவும் முன்பதிவை நம்பி) எண்ணிக்கையில் அச்சிடப்படும் மின்னும் மரணம் எந்தவகையில் உசத்தி என்பது புரியவில்லை.

      இதே அளவில் இதே வர்ணத்தில் ஒரு டெக்ஸ் கலெக்ஷன் வரட்டும். அப்போது தெரியும் உண்மையான வரவேற்பு என்றால் என்ன என்பது!

      வேறு வேறு காலகட்டத்தில் வந்த கோல்டன் ஏஜ் கதைகளை ஒரே மாதிரியான ஸ்டோரி ப்ளட்டைக் கொண்ட கதைகளோடு ஒப்பிடுவதே தவறு. மேக்கப் போட்டு அலங்கரித்துக்கொண்டுவந்தால் மட்டும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்கிற உங்கள் கருத்து உங்களுக்கு சரியாக இருக்கலாம். அதற்கு மறுப்புத் தெரிவிக்க மற்றவராகிய எமக்கு அனுமதி கிடையாது. ஆனால், கோல்டன் ஏஜ் கதைகளை உங்கள் முதல் பதிவு மட்டந்தட்டியதால்தான் இந்தப் பின்னூட்டமே எழுத நேர்ந்தது. 'அவைக்கு எதற்கு இத்தனை முக்கியத்துவம்' என்ற உங்கள் கேள்விக்கு அந்தக் கதைகளின் ஹார்ட் கோர் வாசகனாக பதில் அளிக்க விரும்பினேன். இறுதியில் 'மி. ம. மறுபதிப்பு வெளியான பின் பழைய இதழ்களுடன் மேற்கண்டவைகளை ஒப்பிட்டு பார்த்து, இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை நீங்கள் உணர்ந்து சந்தோசமடைந்தால், அதுதான் புதிய ‘மின்னும் மரணத்தின்’ உண்மையான வெற்றி! ' என்று நான் தெரிவித்த கருத்துக்கே நீங்களும் வந்துவிட்டதால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

      'மி.ம. வரட்டும். அதில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் வாங்கக் காத்திருப்போரில் நானும் ஒருவன். இப்படியான மைல்கல் இதழ்கள் வருவது அரிது. ஆனால், இதற்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்பது ஏற்கத்தக்கதல்ல. புத்தகத்தை எடுத்துப் புரட்டும்போது பல கதைகள் மறுபடி மறுபடி பத்து மனதில் நல்ல ஞாபக நிலையில் உள்ளன. எனவே 'ஜஸ்ட் லைக் தட்' புரட்டிப் பார்ப்பதோடு அது கப் போர்டுக்குள் போய்விடும். எனவே, இதற்கு எதற்கு ஓவர் பில்ட் அப்?

      Delete
    6. நண்பரே! மி.ம கலரில் அற்புதமான கதை ம.ப.வருவது சந்தோஷம்தான்.சில வருடங்களுக்கு முன் புயல்,மழை கொட்டிதீர்த்தது.த.நா.வறண்ட சூழ்நிலை ஏற்பட்டது.இங்குள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து விட்டது.மி.ம சூழ்நிலை இதுதான்.2மாதம் வறட்சி.டெக்ஸ் வர 7 மாதம் தாமதம்.எடிட்டர் கூறிய சோப்நீர் குமிழி உணர்கிறேன்

      Delete
    7. (ஒரிஸாவில் பெய்த மழை).டைப்பில் விடுபட்டுவிட்டது.

      Delete
    8. MH Mohideen : கொஞ்சம் லேட்டாக இந்த விவாதத்தினுள் நான் தலை நுழைப்பதால் - இரு பக்கத்து பிளஸ் & மைனஸ் பற்றி புதிதாக நான் இணைத்திட ஏதுமில்லை தான் ! NBS ; LMS போன்ற மெகா இதழ்களை விட அளவில் /உழைப்பில் / விலையில் "மின்னும் மரணம்" ஒரு படி முன்னே என்பதில் ஐயமில்லை ! ஆனால் நண்பர் பொடியன் சுட்டிக்காட்டியுள்ளது போல - இதனில் பாகம் 11-ஐத் தவிர நான் புதிதாய் சிலாகிக்கவோ, அறிமுகம் செய்திடவோ விஷயங்கள் ஏதும் இல்லை என்பது தானே யதார்த்தம் ?

      அட்டைப்படத்தைப் பார்த்திடவொரு ஆர்வம் இருக்கலாம்; but அதனை இதழின் ரிலீஸ் வரையிலும் கண்ணில் காட்டாது வைத்திருப்பது நமது நடைமுறை என்பதால் மூச் காட்டவில்லை !

      LMS -ஐப் பொறுத்தவரை 9 கதைகளுமே புதியவை என்பதால் அதனில் நிலவிய ஆர்வமும், வேகமும் வேறொரு லெவல் அல்லவா ? அதேவிதமான ஆர்வங்களை நான் மின்னும் மரணத்துக்கும் கொண்டு வரவேண்டுமெனில் செயற்கையான ஸ்டண்ட் ஏதாச்சும் அடித்தால் தான் உண்டு !! அது போல் நான் ஏதாவது முயற்சித்தால் ஒற்றை நொடியில் குமட்டில் குத்து விழுந்திடாதா என்ன ?

      மின்னும் மரணம் is more a celebration of our readers than the book in itself !! இது டைகரையோ ; இந்த அசாத்திய சாகசத்தையோ ஒரு கணம் கூட மட்டம் தட்டும் தொனியில் நான் சொல்லவில்லை ! யதார்த்தத்தின் வெளிப்பாடு சார் !

      மற்றபடிக்கு இதுவொரு மைல்கல் தருணம் என்பதிலும் ஒற்றை நொடி கூட சந்தேகம் கிடையாது !

      Delete
    9. @Editor,
      It will be interesting read to know your view on the below questions that @M.H.Mohideen had listed.

      // மி. ம. பல வாசகர்களிடமிருந்தாலும், அதை இப்போது வண்ணத்தில், பெரியளவில் வெளியிடவேண்டிய அவசியமென்ன...?
      புத்தக திருவிழாவில் வாசகர்கள் மத்தியில் மி. ம. வெளியாக போவதன் ரகசியம்தான் என்ன..? (1௦௦௦/-ரூ. இதழ் என்பதால் மட்டுமா..?)

      மி. ம. அப்போது vs இப்போது வித்தியாசங்கள்:

      நியூஸ் பிரிண்ட் தாள் / ஆர்ட் பேப்பர்
      B/W – முழுவண்ணம்
      பல இதழ்களாக – ஒரே இதழாக
      வெவ்வேறான அளவில் – பெரிய அளவில்

      Delete
    10. //அட்டைப்படத்தைப் பார்த்திடவொரு ஆர்வம் இருக்கலாம்; but அதனை இதழின் ரிலீஸ் வரையிலும் கண்ணில் காட்டாது வைத்திருப்பது நமது நடைமுறை என்பதால் மூச் காட்டவில்லை ! ///

      சஸ்பென்ஸ் மெயின்டெய்ன் பண்றதெல்லாம் சரிதான் எடிட்டர் சார்! ஆனால், டைகரின் முகத்தை க்ளோஸ்அப்'ல் போடும் ஐடியா இருந்தால் பேசாம எனக்குமட்டும் அட்டையில்லாத புத்தகமாவே அனுப்பிச்சுடுங்களேன்? ;)

      Delete
    11. Native India Leader Cosas (கொசஸ்) deserves a place in the cover art.

      Delete
  37. ஆர்ச்சி கதை வெளியிடவும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மாரியப்பன்! இன்னும் நிறைய எழுதவும்!

      Delete
    2. பரணி நண்பர்தான் வெயிட்டா எழுதிட்டாரே ...அர்ச்சி...அடடா

      Delete
    3. வேதாளர் கதைகள் வருமா.

      Delete
    4. Anandappane Mariappan : இப்போதைக்கு உடனடியாய் டென்காலி வனத்துக்குள் புகுந்திடும் திட்டங்கள் நம்மிடமில்லை...! இன்னும் கொஞ்ச காலம் செல்லட்டும் ; தற்போதைய பிரதான நாயகர்களின் கதைகள் தீர்ந்து போகும் நிலையில் இது போன்ற கதைவரிசைகளைப் பரிசீலனை செய்வோம் !

      Delete
  38. டாலர் ராஜ்யம் ......

    கதை சொல்லும் கரன்சி ...முதல் பாகம் சொல்லப்பட்ட விதம் அற்புதம் ...

    ஸ்டாக் ஆப்ஷன்ஸ் பற்றி எடிட்டர் முன் பக்கமே போட்டு இருப்பது நைஸ் மூவ் ...

    உண்மை ,பொய் எதை சொன்னாலும் லார்கோவுக்கு சிக்கல் ......

    ப்ரெடி பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது ..

    லார்கோ எதை செய்தாலும் ப்ரெடி ,சைமன் உடனே ஒப்பு கொள்ளும் ரகத்தை சேர்ந்த நண்பர்கள் அல்ல என படித்த போது வியப்பு ..

    ஆக்‌ஷன் சீக்வென்ஷஸ் தேவையின்றி திணிக்கப்படவில்லை .அளவுக்கு அதிகமின்றி யதார்த்தமானவை ...

    தன்னை சிக்கல்களில் இருந்து விடுவித்து கொள்ள லார்கோ கையாளும் வழிமுறைகள் நடைமுறைக்கு முழுவதும் பொருந்துகிறது ..

    லார்கோவை நான் மிகவும் விரும்ப அதன் ஆக்‌ஷன் என்பதை விட சமகாலத்தியது என்பதை விட அதன் கதை ஆழம் என்பதே ..

    அந்த வகையில் டா .ரா .இதுவரை நான் படித்த கதைகளில் பெஸ்ட் ..(இப்போது எல்லா லார்கோ கதைகளும் படித்தாகி விட்டது ) எனது பார்வையில் மட்டும் ...

    கதையின் கடைசி பக்கம் வரை சின்ன சின்ன ட்விஸ்ட் ....

    சூப்பர்ப் ......


    ReplyDelete
    Replies
    1. selvam abirami : எனக்குமே லார்கோவின் டாப் கதைகளுள் ஒன்றாகத் தோன்றிய டா.ரா. ஒரு சாராருக்கு கஷ்டமான அனுபவமாய் அமைந்திருப்பதில் வியப்பே !!

      Different strokes for different folks I guess !

      Delete
  39. LMS ஐயும் மின்னும் மரணத்தையும் ஒப்பிடுவது......... அட... ஆசிரியருக்கே பொறுக்காது! கதைத் தேர்வு தொடக்கம் கடைசி நேர ஹார்ட் பவுண்ட் அட்டைத் திட்டம் வரை அது ஒரு சூப்பர் பொக்கிஷம். மின்னும் மரணமும் ஒரு சாதாரண ரீ பிரிண்ட்தானே? இதில் என்ன பில்ட் அப் இருக்க முடியும்? பள பள தாள்... ஓகே... கலர்... ஓகே... ஹார்ட் பவுண்ட் அட்டை... ஓகே ஓகே... 1000 ரூபா... ம்.. சரி... அப்புறம்... வேணாம் பாவம் டைகர்...

    ReplyDelete
    Replies
    1. என்னை பொருத்தவரை நமது புத்தகம்கள் ஒன்றோடு ஒன்று ஒப்பிடுவது என்பது தேவை இல்லாத விஷயம்.. அப்படி செய்தால் அவைகளை நாம் சரியாக ரசிக்க முடியாது!

      Delete
    2. மின்னும் மரணம் ஒரு காவியம் என்பதில் மறுப்பேதும் இருக்க முடியாது ........வண்ணத்தில் அழகை விரிக்கும் தொகை மயில் அது என்பதில் தாங்களும் மறுக்க மாட்டீர்கள்....அது ஒரு தனி சுகம் என்பது ...
      ஸ்பைடரும் ஆர்ச்சியும் அது போல இணையற்றவர்களே .....அனைவரும் வந்து வளம் தர வேண்டும் ...

      Delete
  40. வழக்கத்தை விட இந்த ஆண்டு பல மெகா குண்டு புத்தகம்கள் வரு வது சந்தோசமாக உள்ளது; அதுவும் ஒன்று இல்ல நான்கு! காமிக்ஸின் காதலர்களின் வருடம் என்றே இதனை நாம் கொண்டாட வேண்டும்! அந்த நான்கு குண்டு புத்தகம்கள்...
    1. மின்னும் மரணம்
    2. லைன் 250 நாட்-அவுட் (டெக்ஸ்)
    3. முத்து 350 (டைகர் என்று ஞாபகம்)
    4. கார்ட்டூன் ஸ்பெஷல் (இதனை பலர் மறந்து விட்டார்கள் என நினைக்கிறன்)

    ரவி கண்ணன் @ உங்களை போல் மற்றும் என்னை போல் பலரும் எதிர் பார்க்கும் கார்ட்டூன் ஸ்பெஷல்!

    என்னை பொருத்தவரை இந்த வருடம் ஆசிரியர் நம் அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்ற உள்ளார், அதாவது, டெக்ஸ் ரசிகர்களுக்கு என்று தனி புத்தகம், டைகர் ரசிகர்களுக்கு, கார்ட்டூன் (குழந்தை) ரசிகர்களுக்கு, மேலும் பழையதை விரும்பும் நண்பர்களுக்கு மறுபதிப்பு முலம்!

    நன்றி விஜயன் சார், இது உங்களின் தீராத காமிக்ஸ் காதலால் மட்டுமே சாத்தியம்!

    ReplyDelete
    Replies
    1. ஆதலால் சிந்தியுங்கள் நண்பர்களே....
      நமது ஆசை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும்...
      அது வரை நமக்கு தேவை பொறுமை!

      Delete
    2. எடிட்டர் சார் ...கொள்ளை கார மாயாவி பற்றி நான் எழுதியதில் பிழை உள்ளது ..நண்பர் யுவா கண்ணன் சுட்டி காட்டினார் ....எனது கருத்தை வாபஸ் பெற்று கொள்கிறேன் ..

      Delete
    3. பரணிஜி ...உங்கள் முழு கமெண்ட்டுக்கும் +1

      Delete
    4. Parani from Bangalore : நான் முகம் பார்க்கும் கண்ணாடிகள் நீங்கள் தானே! So இங்கு அரங்கேறுவது சகலமும் நண்பர்களின் அவாக்களின் பிரதிபலிப்புகள் மட்டுமே!

      Delete
    5. பரணி எப்புடி இப்பிடியெல்லாம் ....அருமை போங்கள்

      Delete
  41. Glad to see the competition announcement. இந்த முறையாவது அறிவிக்கப்பட்ட போட்டிக்கு சம்பந்தப்பட்ட படைப்புகள மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறேன். எங்கள் நேரமும் வீணாக கூடாது அல்லவா! நன்றி.

    ReplyDelete
  42. Just finished bouncer (3,4 and 5), story went in jet speed. Lots and lots of action, violence, revenge, etc..
    @Editor
    Hats off to your guts to release bouncer, this title is 200 times more violent, dark theme, very different story line compared to our normal Stories.

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : Just wait for Parts 6 & 7 ....phew!!

      Delete
    2. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : 8 & 9 ன் உரிமைகள் இருப்பது வேறொரு நிறுவனத்திடம். அவர்களிடம் புதிதாய் ஆரம்பிக்க வேண்டும் நம் காவடிகளை !

      10 ஆண்டுகளுக்கு முன்னே வேறொரு நிறுவனத்தில் பணியாற்றிய சமயம் எனக்குப் பரிச்சயமானதொரு நபர் அங்கே தற்போது உயர்பொறுப்பில் இருப்பதால் - maybe முயற்சிகள் வெற்றி ஈட்டக்கூடும் !

      Delete
    3. oooh, i thought bouncer ends at 7. So how many are released until now ?

      Delete
    4. @V.karthikeyan

      பௌன்சரை குறித்த எடிட்டரின் முதல் பதிவில் இதுவரை ஒன்பது என குறிப்பிட்டிருந்தார்

      Delete
  43. எதிர் காலத்தில் காமிக்ஸ் எப்பிடி இருக்கும் என்று யோசிப்பது உண்டு , அந்த கற்பனைக்கு ஒரு எதிர்கால கணிப்பு கட்டுரை கண்டிப்பாக எழுத முடியும் விஜயன் Sir :)

    OLX- பழைய பொருட்கள் செய்ய ஏற்படுத்தப்பட்ட தளத்தில், நமது 5 ரூபாய் காமிக்ஸ், 50 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை விற்க படும் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை
    நாம் 80s, 90s-இல் படித்த காமிக்ஸ்யை இப்போது ஆசிரியரிடம் reprints போட
    சொல்லி கேட்டு அடம் பிடிப்போம் என்றுதான் நினைத்தோமா
    சிறு வயதில் காமிக்ஸ் வாங்கும்போது நினைத்து இருப்போமா இப்பிடியெல்லாம் நடக்கும் என்று

    எதிர் காலத்தை பற்றி நமது கற்பனையை பயன்படுத்தி கட்டுரைகள் எழுதுவதில் சுவாரசியமும் ரசனையும் மிக்க ஒன்றாக இருக்க முடியும் :)

    ReplyDelete
    Replies
    1. SeaGuitar9 : //எதிர் காலத்தை பற்றி நமது கற்பனையை பயன்படுத்தி கட்டுரைகள் எழுதுவதில் சுவாரசியமும் ரசனையும் மிக்க ஒன்றாக இருக்க முடியும் :)//

      For sure !! எழுதத் தான் தொடங்கலாமே ?!

      Delete
    2. @Vijayan Sir
      கற்பனைகள் ஆரம்பித்துவிட்டன Sir :)
      Office time முடித்த பிறகு
      அவற்றை எல்லாம் இரவில் அல்லது அதிகாலையில் கோர்வை படுத்தி எழுத வேண்டும்
      சிக்கிரமே கட்டுரை தயாராகிவிடும் Sir :)

      Delete
  44. லார்கோ..................
    கிட்டத்தட்ட 15 பக்கம் முடியலடா சாமி ..............
    MBA....படிச்ச மாதிரி ............
    வசனத்தில் இத்தனை நீளமான ஷேர் மார்கெட் பற்றிய விளக்கம் தேவையா சார் ............

    STARTED SKIPPING PAGES ...........

    ReplyDelete
    Replies
    1. மதியில்லா மந்திரி : விளக்கங்களை விழுங்கி விட்டால் சுத்தமாய் எதுவும் புரியாது போய் விடுமல்லவா ?

      Delete
  45. மாயாவி சார் ....காமிக்ஸ் கருத்தரங்கம் நிகழ்ச்சி அருமை ..முழுவதும் தொகுத்து போடுங்கள் ....

    லார்கோ....படித்து விட்டேன் சார் ....என்ன சொல்வது ...ம்ம் .....சுமார் என சொல்வதா ...பரவாயில்லை என சொல்வதா......தெரிய வில்லை ...எதற்கும் "ஷெல்டன் "அவர்களை விரைவில் களம் இருக்குங்கள் சார் ,,,

    "ஓக்ல ஹோமா " ...ஒரு நகரத்தின் பெயர்....

    அப்படியானால் "ட்ராகன் நகரம் "போல ...ஓக்ல ஹோமா நகரம் .... ஆனாலும்.......

    ReplyDelete
  46. இதுவரை வந்த எல்லா லார்கோ கதைகளுமே இரண்டாவது முறை படித்தால் மட்டுமே புரியும் ..ஆனால்
    டாலர் ராஜ்ஜியம் அமர்க்களமாகத் தொடக்கி அருமையாகப்போ ய் அட்டகாசமாக முடிந்தது முதல் முறை
    படிக்கும்போதே ...காரணம் நான்காம் பக்கத்தில் ஸ்டாக் ஆப்சன்ஸ் பற்றிய உங்கள் விளக்கம் ..வெல்டன் சார்.
    ஏப்ரலின் ஆரம்பமே சூப்பர் ..அடுத்து மின்னும் மரணம் வேறு ..முழுதாக வண்ணத்தில்...காத்திருக்கிறோம் சார்..

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் கைகளில் சுற்றிக்கொண்டு இருக்கின்றது என்று நினைக்கிறேன்

      Delete
    2. BAMBAM BIGELOW : நான்காம் பக்கத்து ஸ்டாக் options பற்றிய சிறுகுறிப்பு - ஒரிஜினல்களின் பாணியைப் பின்பற்றியே நண்பரே ! ஷேர் மார்கெட்டுக்குப் பரிச்சயம் கொண்டவர்களுக்குக் கூட இந்த நடைமுறை தெரிந்திருக்கும் வாய்ப்புகள் கம்மி என்பதால் படைப்பாளிகள் செய்த ஏற்பாடு தான் ! அதைத் தமிழ்படுத்தியது மட்டுமே நான் !

      Delete
  47. இருபத்தைந்து வருடம் கழித்து எங்கள் மகள் காமிக்ஸ்ல ஈடுபாடுள்ள ஒரு பையனா பாருங்கப்பா என்று கேட்பது போல் கற்பனை செய்து சந்தோஷிப்பது உண்டு ;)

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : அடடே...25 ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள நாட்களில் பெற்றோர்களிடம் மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பெல்லாம் இருக்கும் என்ற கனவா ?

      ஆனாலும் உங்க ஆசை எனக்குப் பிடிச்சிருக்கு ! :-)

      Delete
    2. என்னிடம் அதிகமாக உள்ள மி.ம புத்தகங்களை ஆர்வமுடைய வாசகர்களுக்கு படிக்க இரவல் கொடுக்க ஆசைதான். ஆனால் 99%புத்தகங்கள் திரும்ப கிடைப்பதில்லை.அன்பளிப்பாக கொடுப்பது வேறு .படித்துவிட்டுதருகிறேன் என்றுகூறிவிட்டு ஆட்டையை போட்டவர்களை (சிறு வயதில் நடந்தது கூட)மறக்கமுடியவில்லை.

      Delete
    3. @ கி.கி. ஷல்லூம்

      //இருபத்தைந்து வருடம் கழித்து எங்கள் மகள் காமிக்ஸ்ல ஈடுபாடுள்ள ஒரு பையனா பாருங்கப்பா என்று கேட்பது போல் கற்பனை செய்து சந்தோஷிப்பது உண்டு ;) ///

      காமிக்ஸ் படிக்கும் நீங்கள் உங்கள் மனைவியிடம் காட்டும் பவ்யத்தை குழந்தையிலிருந்தே கவனிக்கும் உங்கள் மகள் அப்படிக் கேட்டால் ஆச்சர்யமில்லைதான்! ;)

      Delete
    4. ஈசேலி விஜய்

      பக்கத்தில் இருந்து பார்த்ததை போல சொல்றீங்ங்.,...,....

      Delete
  48. டாலர் ராஜ்யம்..! முதல் & இரண்டு பாகம் விமர்சனம்..!

    புகைவண்டி போல விடாமல் சிகரெட் புகைவிட்டே பரலோகம் போய் சேர்ந்தவர்களில் ஒருவன் மனைவி "அதெப்படிங்க சிகரெட் குடிச்சா சின்ன வயசுல சாவு வரும் ? இத நான் ஒத்துக்க மாட்டேன், வித்தா வாங்கி குடிக்காத்தான் செய்வாங்க..! சாவு சீக்கிரமா வருன்னு கம்பெனிகாரங்க சொல்லாதது பெரிய தப்பு. அந்த எச்சரிக்கை பாத்திருந்தா என்னோட வீட்டுகாரர் சிகரெட் குடிச்சிருக்கவே மாட்டாருங்க" ன்னு வாதாடி சிகரெட் கம்பெனிகாரங்க கிட்ட பெரிய நஷ்டஈடு (ஒரு வில்லங்கமான வக்கீல் மூலமா) வாங்கினா ஒருத்திங்கிற தகவல் வித்தியாசமா இருக்கில்லே..! இதுக்கப்புறம் தான் 'புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது' என்ற வாசகம் பிரசுரிக்கபட்டது.

    இந்த மாதிரி வக்கீல் பரம்பரையில வந்த இன்னொரு வக்கீல்தான் நம்ம லார்கோ கதையில வர்றார்.அவரு எப்படின்னா...

    "ஈரமானதை உலர்த்தக்கூட எங்க மைக்ரோ ஓவன் உபயோகிக்கலாம்ன்னு செஞ்ச விளம்பரத்தை பார்த்துதான் என்னோட கட்சிக்காரர், ஈரமான தன்னோட பூனையை உலர்த்த முற்பட்டார். ஆசையாசையா வளர்த்த பூனை செத்துடுச்சி...மேனுவல் புக்குல இதுபத்தி குறிப்பு இருந்திருந்தா இந்த இழப்பு என்னோட கட்சிகாரருக்கு ஏற்ப்பட்டிருக்காது" ன்னு வில்லங்கமா வாதாடி அஞ்சி மில்லியன் டாலர் வாங்கிகொடுத்த வக்கீல், ஒரு மேனேஜர் தற்கொலை செஞ்சிகிட்டதுக்காக நம்ம லார்கோ மேல 50 லட்சம் டாலர் கேட்டு கேஸ்போடுறார்.

    நாகப்பன்-புகழேந்தி, சோமவள்ளியப்பன் துவங்கி ஷேர் மார்கெட் சிங்கம் 'வாரன் பட்' வரை ஷேர் மார்கெட்டிங் பற்றி அலசும் என்னை போன்றவர்களிடம் லார்கோ கதை எப்போதுமே கைதட்டல் வாங்கும். இந்த கதைக்கும் கைத்தட்டல் அள்ளுகிறது..! பணம் பண்ண 'வால்ஸ்ட்ரீட்' கிரிமினல் கில்லாடிகள் கையாலும் புதுபுது யுக்திகள், கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ், யூகிக்கவே முடியாத திருப்பம் ( லார்கோ கைது..ஹீ..ஹீ ) என முதல் பாகம் அட்டகாசம். விறுவிறுப்புக்கு பஞ்சமேயில்லை, இரண்டாம் பாகம் ஒருநாள்விட்டு படிச்சேன். காரணம்....

    முதல் பாகம் வெளியிட்டு இரண்டு மாதங்கள் இடைவெளிவிட்டே அடுத்த பாகம் வந்ததால், அவர்களுக்கு அந்த இடைவெளி தந்த ஆர்வத்தை நானும் அனுபவித்து பார்க்க, நானும் ஆர்வத்தை அடக்கிக்கொண்டு ஒருநாள் விட்டுபடிச்சேன்..! இங்க ஒரு நண்பரின் கருத்து...

    "விமர்சனங்கிற பேர்ல நீங்க கதைய சொல்லிட்டா, புக்கு எங்க கைக்கு வர ஒருவாரம் ஆவுது. அதுவரை நாம தவிக்கிறதா..? இந்த வேலையை நிறுத்துங்க...புக்கு வந்து ஒரு வாரம் வரை கதை சொல்லாகக்கூடாது,ஆமா...சொல்லிட்டேன்..!" என்ற நண்பரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப...சுருக்கமா விமர்சனம்..!

    இரண்டாம் பாகமும் அதே விறுவிறுப்போட இருக்குங்க..!

    அந்த வக்கீல் மேட்டர் கதையில வருதுங்க, என்னோட கற்பனையில்லை. சீரியசுக்கு சொன்னாங்களோ, காமெடிக்கு சொன்னங்களோ...
    இரண்டுக்கும் என்னோட பதில்: "நாங்க கொடுத்த வாக்குபடி ஈரமா இருந்த பூனை உலர்ந்திடிச்சில்ல, மத்தபடி எங்க ஓவன் உயிர்கொடுக்கும், எடுக்கும்ன்னு நாங்க சொல்லலையே..! வேணுன்னா உங்க தலையை வெச்சு முடியை கூட உலர்த்திபாக்கலாம், கண்டிப்பா ஈரப்பசை இருக்காது. ஆனா முடி அதுக்கப்புறம் அதிக வளர்றதோ,வளராம போறதோ உங்க அதிஷ்டம்...ஹாஹா...!"

    ReplyDelete
    Replies
    1. // நண்பரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப...சுருக்கமா விமர்சனம்..!

      இரண்டாம் பாகமும் அதே விறுவிறுப்போட இருக்குங்க..! ///

      :D

      Delete
  49. சார் முதலில் மாயாவியை முடித்தேன் சனிக்கிழமை .இந்த கதை முழுதும் அதே பரபரப்புடன் ரசித்தேன். தெளிவான சித்திரங்கள்,கட்டம் போட்ட சட்டை போட்ட மாயாவி ,தரமான தாள் மின்னொளியில் பளபளக்க வெகுவாய் ரசித்தேன். அடுத்த நாள் லாரெண்சுடன்தான். அருமை அற்புதமாய் செல்லும் கதை என இரு கதைகளும் விறுவிறுப்பை முன் வைக்க சுருசுருப்ப்ப்பாய் படித்து முடித்தேன்...

    நமது லார்கோவை இப்போதுதான் கையில் எடுத்தேன் ...முதல் பாகம் படித்தவுடன் எழுதுகிறேன்....அடடா எவ்வளவு அற்புதமாய் கதை நகர்கிறது...ப்ரெடியை, சைமனை இழந்து தனியே தவிக்கும் லார்கோ மனதை ஏதோ செய்கிறார்....ப்றேடியின் கதையும் ,மீண்டும் விஞ்சும் என ஒரு கதை விறுவிறுப்பாய் தனியே செல்ல ....சைமனும் தவிக்க விடுவது ஏதோ ப்ளேன் செய்கிறாரோ என்றே எண்ணம் எனக்கு ....சைமன் துரோகம் செய்வாரா முந்தய கதைக்கு பின்னர் என்ற எண்ணமே வியாபிக்க மீண்டும் உள்ளே நுழைகிறேன் ....அற்புதமான கதையை தந்த அனைவருக்கும் நன்றிகள் ......இம்மாதம் மூன்றுமே சூப்பர் இதழ்கள் என்பது தவிர ஏதுமில்லை.......பழக்கமான நாயகர்கள் இருந்தாலே லயிக்கக வைக்கும் திரை படம் போல லார்கோ நமக்கு கதைகளில்.....

    ஸ்பைடர் இந்த கேள்வி ??????? ...எப்போதும் ஸ்பைடர் தூள் ...அதிலும் தரமான தாளில் யாரந்த மினி ஸ்பைடர், நீதிக்காவலன் ஸ்பைடர் போன்ற கதைகளைதரிசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...விரைந்து ஆவன செய்யுங்கள் சினாரே ..

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : லார்கோவை ரசிக்கும் அதே மூச்சில் மும்மூர்த்திகளையும் ரசிக்கும் உங்களின் mindset நிஜமாகவே ரொம்ப ஸ்பெஷல் நண்பரே !

      Delete
  50. சார் அட்டை படங்கள் மூன்றும் அருமை ! மாயாவியின் பின்னட்டை ரோஜர் மூர் போல உள்ளது ! எப்போதோ பார்த்தது போல உள்ளது !

    ReplyDelete
  51. லார்கோ மாற்றம் துள்ள வைக்க.....அப்புறம் உங்கள் புத்தக அறிமுக வரிகளால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விடுதலையே உன் விலை என்ன அடுத்த மாதமே என்று பெரிய துள்ளலை ஏற்படுத்தினால் ..அடுத்த சில பக்கங்களுக்கு பின் டெக்ஸ் ஜூனில் அடடா எத்தனை கோடி இன்பம் படைத்தாய் இறைவா ஆறு மாதங்களுக்குள் என இந்த வருடத்தை போற்றி கொண்டாட தோன்றுகிறது சார் ...நன்றி என்ற சின்ன வார்த்தை போதாதே !

    ReplyDelete
  52. இம்மாத புத்தங்கள் இன்று மாலை வாங்கி விட்டேன் Sir :)
    முதலில் லார்கோ படிக்க போகிறேன்
    Comments நாளை Sir :)

    ReplyDelete
  53. ஈரோடு விஜய் எங்கே?அவரைக்காணோம்.?

    ReplyDelete
    Replies
    1. திடீர்னு ஆபீஸுல வேலை செய்யச் சொல்லிட்டாங்க நண்பரே! ரொம்ப ஆசைப்பட்டு கேட்டதால என்னால் மறுக்க முடியாமப்போச்சு! ;)

      Delete
    2. @Erode Vijay - LOL.
      எங்க ஆபீஸுல தினம் தினம் இதேதான் கேக்குறாங்க :)

      Delete
    3. //
      எங்க ஆபீஸுல தினம் தினம் இதேதான் கேக்குறாங்க //

      நான்சென்ஸ்! இதுக்குத்தான் அமெரிக்காலேர்ந்து வேலைக்குக் கூப்பிட்டப்போ நான் போகலை! ஆனால் என் அளவுக்கு நீங்க விவரம் இல்லை போலிருக்கு! ;)

      Delete
    4. ha ha ha -
      எனக்கு தெரியாம போச்சே :(
      உங்க கம்பனில ஒரு வேலை வாங்கீக்கொடுங்க sir.

      அப்றம் Whatsapp குரூப்புள நாங்களும் வரலாமா, ஏதாச்சும் நுழைவு தேர்வு இருக்கா ? :)

      Delete
    5. நான் எந்த வாட்ஸ்அப் குரூப்பிலும் இல்லை நண்பரே! உண்மையில், காமிக்ஸ் சார்ந்த வாட்ஸ்அப் குரூப்புகளுக்கு நான் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறேன்!

      Delete
  54. எண்ணத்தை ஏட்டில் வடித்திட எழுதுகோல் என்னிடம்
    வண்ணத்தில் கதைகள் வழங்கிட வாய்ப்புகளோ உங்களிடம்
    சின்னப்புறாவாம் வண்ணப்புறா வை சிகரத்தில் ஏற்ற
    எ ன் சிந்தையோ உங்கள் பெருந்தன்மையைப் போற்ற
    சொன்னவண்ணம் புத்தகமோ கைகளில்..ஆகா..சொர்க்கம்
    சொக்கியது மனம் பக்கத்துக்குப் பக்கம்..
    இத்தாலியின் அசல் இதழ் டெக்ஸ்எ ன் கையில்
    இல்லையே இத்தாலி விஜய் எ ன் அருகில்
    முழி பிதுங்கி நிற்கின்றேன் முடவனின் கொம்புத் தேனா
    மொழி பெயர்க்க வழியில்லை..முடங்கியது என் பேனா

    ReplyDelete
    Replies
    1. vannappuraa : மூன்று தினங்களைக் கடத்தியேனும் கூரியர் பத்திரமாய் ஒப்படைத்ததில் சந்தோஷம் !!

      Delete
    2. சார் எனக்குமட்டும் இங்கே (சென்னை) நீங்கள் அனுப்பிய மறுநாள் காலையிலே புத்தகம் கிடைத்து விடுகிறது.அதுவும் முனைகூட சிறிதும் மடங்காமல்.(முன்பு அனுப்பியகவரில்கூட)

      Delete
    3. @ வண்ணப்புறா

      அதாவது... இத்தாலிய மொழியில் உங்களுக்கு ஒரு புக்கை அனுப்பி வச்சு பேந்தப் பேந்த முழிக்க வச்சுட்டாரு நம்ம எடிட்டரு! அதானே? அடடா, அதைக்கூட எவ்வளவு நளினமா கவிதை நடையில வெளிப்படுத்தியிருக்கீங்க!! :)

      Delete
    4. @vannappuraa - If possible give some "Click Here" links with book cover page.

      Delete
  55. ஆசிரியரே ...
    23 ந்தேதிக்குள் மின்னும் மரணம் கிடைத்து விடும் தானே..?
    பல வேலைகளை முன்னுக்கு பின்னாக்கி பல்டி அடித்து 19முதல் 26 வரை திருப்பத்தூரில் டேரா போடப்போகிறேன்.
    புத்தகம் நேரத்திற்கு கிடைத்து விடணும் ..
    சொல்லிபுட்டேன் ....

    ReplyDelete
    Replies
    1. திருப்பத்தூரில் டேரா போட்டா எப்படி

      சென்னைக்கு வாங்க

      Delete
  56. After 25 years

    * Tamil Comics will get released in batches and available in big book / fancy stores.
    * Tamil Comics will be available in digital format
    * Lion - Muthu Comics will still remain #1 in Comics industry but other players will also be there.
    * More than one reprints will be issued monthly (we are almost there, as we are getting 12 reprints this year itself but in batches)
    * More adults will start reading comics (particularly ones which are based on history) as i can see already lot of youngsters started reading kalki novels.
    * More cartoon comics will be released to cater kids.
    * Science Fiction will be still a big No No
    * Subscription may not increase much, hopefully we all subscribe/read then.

    My Personal Wish List
    * Monthly Detective comics (Reporter Johnny, Martin, Robin, etc..)
    * Smaller size (similar to Tex "Nalliravil oru naraballi") color/BW issues to read during travel.
    * Lots of Kundu special issues, similar to NBS, LMS. Minnum Maranum, XIII are not considered kundu books :)
    * My wife will be reading all the comics :) - currently she reads only Tex willer and lucky luke
    * Getting courier tracking number in email. So that i can track the parcel, while waiting for the books as it takes anywhere from 10 to 30 days to get the books here. :)
    * Less sentimental/அழுகாச்சி grahic novels - Editor will be thinking "these guys will never change" :)


    ReplyDelete
    Replies
    1. என்னுடய பதிவை மீண்டும் படிக்கும் பொழுது, கிளி ஜோசியம் போல் உள்ளது :)

      Delete
    2. அடடே! நல்லாயிருக்கே!!

      Delete