Powered By Blogger

Friday, April 24, 2015

வேங்கையின் விஸ்வரூபம் !

நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு பால்யத்து தீபாவளியின் போதும் பண்டிகை சார்ந்த எதிர்பார்ப்போடு நாட்களைக் குஷியாய்க் கடத்துவதும்; வெடி வாங்குவது, துணி வாங்குவது என உற்சாக மீட்டரின் துள்ளலோடு திரிவதும், ஒவ்வொரு புது நாளின், புது அனுபவங்களையும் ஏகாந்தமாய் உணர்வதும் - ஒரு வழியாக D -DAY புலரும் சமயம் சந்தோஷத்தில் தலை கால் புரியாது ஆடுவதும் தவறாத jolly நிகழ்வுகள் !! ஆனால் மூக்குக்குக் கீழே கம்பிளிப்பூச்சி போலொரு ரோமக்கற்றை அரும்பத் தொடங்கிய நாள் முதலாய் - 'இதுலாம் பொடிப் பசங்களுக்கு..!' என்ற கித்தாய்ப்போடு அந்தப் பரபரப்புக்கு விடை கொடுத்ததே யதார்த்தம் ! சில பல யுகங்களாய்த் தோன்றும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னே, ஒரு கால இயந்திரத்தினில் ஏறிப் பின்னோக்கிச் சென்று, அந்நாட்களது அதே ஆனந்தத்தை ; உற்சாகத்தை, அனுபவிக்க கடந்த 75+ நாட்களொரு வாய்ப்பாக அமைந்தன என்றால் - எல்லாப் புகழும் - மின்னும் மரணத்துக்கும், அதன் நாயகனுக்கும், அதன் பின்னணிகளான உங்களுக்குமே !  !! 

நிறையப் பேசி விட்டோம் ; நிறைய எழுதியும் விட்டேன் - so இந்த முயற்சியின் பின்னணி பற்றியோ, அதன் பணிச்சுமைகள் பற்றியோ நிச்சயமாய் நான் மேற்கொண்டு எழுதப் போவதில்லை ! ஞாயிறன்று உங்கள் ஒவ்வொருவரின் முகங்களிலும் வியர்வைக்கு மத்தியில் மிளிர்ந்த அந்த ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் சொன்ன கதைகளும், இங்கே பதிவாகியுள்ள பாராட்டுப் பிரவாகங்களும், மின்னஞ்சலில் வந்துள்ள எண்ணச் சிதறல்களும் - "மின்னும் மரணம்" an absolute smash hit என்பதை சந்தேகமறப் பறைசாற்றியான பின்னே, பின்னணிக் கஷ்டங்கள் அத்தனையும், போன இடமே தெரியவில்லை !! இந்த அன்பையும், சந்தோஷங்களையும், பெருமிதங்களையும் தரிசிக்க ஏழு சமுத்திரங்களையும் கூடத் தாண்டலாம் என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது !

ஞாயிறின் உற்சாகப் பொழுதைப் பற்றி நண்பர்கள் இங்கும், இன்ன பிற தளங்களிலும் அமர்க்களமாய் பதிவு செய்திருக்கும் நிலையில் திரும்பவும் அதைப் பற்றி நான் வண்டி வண்டியாய் எழுதுவதை விட - இந்தவொரு விடுமுறைப் பொழுது எனக்குள் விதைத்துள்ள சிந்தனைகளைப் பற்றிப் பேசுவது இன்னமும் பொருத்தமாக  இருக்குமென்று தோன்றியது ! But before I ramble on, அன்றைய தினத்தை ஒரு குட்டித் திருவிழாவாக்கிய நண்பர்களைப் பற்றிக் குறிப்பிடாது நகர்வது நியாயமாகாது ! கிட்டேயும், தூரமுமான ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்திருந்த நமது நண்பர்களின் மத்தியில், சேந்தம்பட்டி கோஷ்டி அதிரடிப் பிரவேசம் செய்திட, இதுவொரு formal புத்தக வெளியீட்டு விழா என்ற தோரணை துளி கூட இல்லாது - ஜாலியான நண்பர்கள் சங்கமமாகவே காட்சி தந்தது ! சயனித்துக் கொண்டிருந்த புத்தக விழாவே நம் ரகளைகளில் லேசாக எழுந்து அமர்ந்தது என்று சொல்லலாம் ! NBS வெளியீட்டின் உச்சத்துக்குப் பின்பாக நண்பர்களின் ஜாலிக் கச்சேரிகளை ரசிக்கும் வாய்ப்பில்லாது போயிருந்த என் தந்தைக்கு - ஞாயிறின் உற்சாகம் வார்த்தைகளில் விவரிக்க இயலா ஒரு மிகப் பெரிய பூஸ்ட் ! முத்து காமிக்ஸின் துவக்க நாட்களில் இது போலெல்லாம் எந்தவொரு நிகழ்வுக்கோ; வாசகர்களுடனான குறைந்தபட்ச interaction-களுக்கோ துளி கூட வாய்ப்பில்லாத நிலையில் - இன்றைய அமளி-துமளிகள் அவருக்குக் கட்டுக்கடங்கா சந்தோஷம் தரும் தருணங்கள் ! 


இரண்டாயிரம் ரூபாய்க் கட்டணத்தில் ஒரு அழகான indoor அரங்கம் இரண்டு மணி நேர அவகாசத்துக்குக் கிடைக்கப் பெற்ற நிலையில் யாருக்கும் இடைஞ்சல்களின்றி, பக்கத்து ஸ்டால்களின் கோபப் பார்வைகளை சம்பாதிக்காது குப்பை கொட்ட முடிந்தது நமது நல்யோகமே ! பத்திரமாய்ப் பார்சலுக்குள் பதுங்கியிருந்த இதழினை வெளியீட்டு வேளையில் unveil செய்யும் வரைக்கும் அது வாசகர்களின் கண்களில் லேசாய்க் கூடச் சிக்காது இருந்துள்ளது இதுவே முதல் முறை எனும் போது எதிர்பார்ப்புகளின் அளவுகள் எப்போதையும் விட இம்முறை அதிகமிருப்பதை என்னால்   நன்றாகவே உணர முடிந்தது ! NBS இதழும் சரி ; LMS இதழும் சரி, நண்பர்கள் ஸ்டாலுக்கு வருகை தருவதற்கு முன்பாகவே கூரியரில் இல்லம் தேடிப் பயணித்திருந்ததால் அந்நேரங்களில் அந்த X-Factor மிஸ்ஸிங் என்று நினைத்தேன் ! ஆனால் இம்முறை வெளியீட்டு தினம் ஒரு ஞாயிறாய் அமைந்ததாலும்  சரி ; பணியின் கடுமையின் காரணமாய் தயாரிப்பை சீக்கிரமாய் முடிக்க இயலாது போனதாலும் சரி - இந்த surprise சாத்தியம் கண்டது !






படித்த கதை தான் எனும் போது இந்த இதழின் சுவாரஸ்யமே தயாரிப்பிலும், அட்டைப்படத்திலும் தான் மையல் கொண்டிருக்கும் என்பதைப் பச்சைக் குழந்தை கூட யூகித்திருக்கும் ! So ராப்பரை தரிசிக்கும் வரை நண்பர்கள் பலருக்கும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் டான்ஸ் அரங்கேற்றம் கண்டு கொண்டிருக்கும் என்பதையும் யூகிப்பதில் சிரமம் தான் எது ? பார்சலைப் பிரித்த கணம் நண்பர்களின் கண்களில் சந்தோஷம் வேகமாய்ப் பரவுவதைப் பார்க்கும் வரைக்கும் எனக்குள் ஒரு மௌனமான பயம் இருந்தது என்பதை சொல்லியாகணும் ! தினமும் பார்த்துக் கொண்டே இருக்கும் எனது கண்களுக்கு சுந்தரத் தோற்றம் தந்த நம் உடைந்த மூக்காரின் டிசைன் - உங்களுக்குப் பிடிக்காது போய் விட்டால் - மொத்தக் கதையும் கந்தலாகிப் போய் விடுமே என்ற பயத்தில் நியாயம் உண்டு தானே ? NBS-ன் ராப்பர் 'ஆகா-ஓகோ' ரகமாய் இல்லாது போனாலும், அன்றைய பொழுது நமது மறு வருகையின் ஆரம்ப காலகட்டம் என்பதாலும், அந்த இதழ் நமக்கு ஒரு மெகா path breaker என்பதாலும் பெரிதாய் உதை வாங்காது தலை தப்பியிருந்தது ! ஆனால் மின்னும் மரணமோ அத்தகைய சலுகையை எனக்குத் தரவல்லதல்ல என்பதும் ; பிழைகளுக்கு மன்னிப்பே இராது என்பதும் அப்பட்டமாய்த் தெரிந்தது ! "தளபதிக்குத் துரோகம் செய்து விட்டான் !" என்ற சாத்துக்கள் கிட்டும் வாய்ப்பு ஒருபக்கமெனில் - ஆயிரம் ரூபாய்க்கான இதழ் என்றான பின்னே 'பிம்பிலிக்கா பிலாக்கி' என்று அட்டைப்படம் பல்லை இளித்தால் ஆங்காங்கே உள்ள கொத்தவால் சாவடிகளில் அழுகிய தக்காளிகளுக்கு கடும் டிமாண்ட் எழுந்து விடாதா ? 

நம் அலுவலகத்துக்கு வந்திடும் காமிக்ஸுக்கு சம்பந்தம் இல்லா நபர்களிடம் ஓசையின்றி இந்த டிசைனைக் காட்டி அவர்களது feedback களைச் சேகரிக்கவும் செய்தேன் ; ஆனால் அதில் கிடைத்த தெளிவை விட குழப்பமே ஜாஸ்தி ! "ஷேவிங் பண்ணாம இருக்காரே அண்ணாச்சி.....இவரைப் போய் அட்டையிலேயா போட போறீங்க ?" என்று ஒருத்தர் கேட்டு வைக்க - இன்னொருவரோ - "அட..ஆயிரம் ரூபாய் புக்குங்குறீங்க ......நல்லா கலர் கலரா டிசைன் போடாம என் இப்டி லைட் கலர்லே டிசைன் ?" என்று புளியைக் கரைத்து விட்டார் ! இன்னொருத்தரோ..."இந்த பிள்ளைய அட்டைலே போடலாம்லே அண்ணாச்சி ? " என்று சில்க்கைக் குறிப்பிட்டுக் கேட்டார் ! 'அட போங்க சாமிகளா .....ஓவராய் யோசனை கேட்டால் ஆணியே பிடுங்க முடியாது !' என்ற தீர்மானத்தில் எங்கள் ரசனைகள் + பொன்னனின் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து இந்த டிசைனைக் கரை சேர்த்தோம் ! அது தவறல்ல என்பதை உங்கள் ஆரவாரங்கள் உணர்த்திய கணமே என் தோள்களின் மீதிருந்ததொரு சுமை விலகியது போல் உணர்ந்தேன் ! உட்பக்கங்களின்   அச்சு decent ஆக வந்திருந்ததாலும், ராப்பருக்கு ஏகப்பட்ட ஜிகினா வேலைகள் செய்திருந்ததாலும் - தளபதியின் ஆற்றலோடும், கதையின் வீரியத்தோடும் அவை கூட்டணி சேரும் போது என் சிரத்துக்கு சேதாரமிராது என்பது புரிந்தது ! 

நண்பர்களின் பிரதிகளை அவரவர் கைகளில் ஒப்படைக்க, அவர்களோ மைக்கைத் தூக்கி என் தந்தையிடமும், என்னிடமும் ஒப்படைத்து விட்டனர் ! என் தந்தை பிசியாக இருந்த நாட்களில் சிவகாசியின் அச்சுத் தொழில் சங்கத்தில் பதவிகள் வகித்தவர் என்ற முறையில் மேடைகளில் பேசியது உண்டு ; புரட்சித் தலைவர் M.G.R அவர்களைக் கொண்டு நடத்தியதொரு கூட்டமெல்லாம் கூட எனக்கு நினைவில் உள்ளது ! So அவர் ஜாலியாகப் பேச ஆரம்பிக்க, நானோ பின்னாடி ஒரு சேரைத் தேடிப் பிடித்துக் கொண்டு பதுங்கி விட்டேன் !

"நண்பர்களே" என்று பேனாவைப் பிடிப்பதோ - கீ-போர்டைத் தட்டுவதோ சுலபமான வேலைகள் எனும் போது மைக்குக்கு முன்னே 'பெபெபே ' படலம் நடத்துவானேன் என்ற முன்ஜாக்கிரதை தான் ! ஆனால் நண்பர்கள் விடாப்பிடியாய் கோர்த்து விட, அன்றைய தினமொரு அழகான நாள் என்பது புரிந்ததன் பலனாகவோ - என்னவோ  ஒரு சொற்பொழிவை எப்படியோ ஆற்றோ ஆற்றென்று ஆற்றித் தள்ளினேன் !






ஒரு மாதிரியாய் மைக்கின் முன்னே சொதப்பாது தப்பிய சந்தோஷமும், இதழ் பெற்ற பாராட்டுக்களும் ஒன்று சேர, மதிய உணவிற்கு அருகாமையிலிருந்த உணவகத்துக்கு மண்டையைப் பிளக்கும் வெயிலில் நடை போட்ட போது கூட 'ஜில்'லென்றதொரு உணர்வே மேலோங்கி நின்றது ! உடன் வந்த அத்தனை நண்பர்களின் கைகளிலும் ஒன்றரைக் கிலோ "மி.மி" தகதகக்க - கைக்குழந்தைகளைப் போல அவற்றைப் பத்திரமாய், பதவிசாய் அவர்கள் சுமந்து வந்ததே வீடியோப் பதிவுக்கு உகந்ததொரு காட்சி !! அரங்கில் இருக்கும் சமயமே, வண்டி வண்டியாய் க்ரூப் போட்டோக்கள் எடுத்துக் கொள்ளும் சமயமே   ; இதழைப் புரட்டிப் புரட்டி ரசிக்கும் சைக்கிள் கேப்பிற்குள் ஆன்லைன் சென்று பின்னூட்டங்கள் இட்டு வருவதும் நடந்து வந்ததால் - ஒரு லைவ் telecast பார்த்த உணர்வு சென்னைக்கு வந்திருக்கா நண்பர்களுக்குக் கிட்டியிருப்பது உறுதி !  



கிட்டத்தட்ட 45 பேர் அந்தக் குட்டியான ஹாலை நிரப்பிட, சந்தோஷமாய் சாப்பிடத் தொடங்கிய போது ரொம்பவே நிறைவாக இருந்தது ! சாப்பிட்டான பின்னே திரும்பவும் ஸ்டாலுக்குச் சென்றது ; அங்கே நண்பர்களோடு வழக்கம் போல கதை பேசியது ; வரக் காத்திருக்கும் திகில் இதழைப் பற்றியான கேள்விகளுக்கு மழுப்பலாய்ப் பதில் சொல்வது ; கார்ட்டூன் ஸ்பெஷல் பற்றி கிண்டிக் கிழங்கெடுக்க முயற்சித்த நண்பர்களுக்கு நம் பாணி பெவிகால் அல்வாவை பதிலாகத் தந்தது என எல்லாமே மதிய வெப்பத்தின் நடுவே அரங்கேறியது !


இரவு ரயிலைப் பிடித்து வந்திருந்த நண்பர்கள் தூக்கமின்மையால் தள்ளாட, உள்ளூர் நண்பர்கள் ஒவ்வொருவராய் விடை பெற, நானும், ஜூனியரும் என் தந்தை சகிதம் வீட்டுக்குப் புறப்பட்ட போது மணி நாலரையிருக்கும் ! ஜனவரியின் சென்னையைப் போலவோ ; ஈரோட்டின் பொழுதுகளைப் போலவோ நம் அரட்டைகள் இரவு வரைத் தொடர்ந்திட ஏப்ரலின் வெப்பம் இடம் தரவில்லை என்பதால் சீக்கிரமே கிளம்ப வேண்டியதாகிப் போனது ! அவகாசம் குறைவாக இருப்பினும், ஆனந்தம் நிறைவாக இருந்த திருப்தியோடு நாங்கள் வீடு திரும்பினோம் ! இன்னமும் கூடுதலாய் நண்பர்களை சந்திக்க வாய்ப்பிருந்திருக்கும் பட்சத்தில் அன்றைய தினம் இன்னமும் அட்டகாசமாய் அமைந்திருக்குமென்பதில் ஐயமேயில்லை ; ஆனால் இன்னும் கொஞ்சம் முன்கூட்டிய திட்டமிடலுக்கு நமது தயாரிப்பு schedule இடம் தந்திருக்கும் பட்சத்தில் - நமது பட்டாளத்தின் வலு கூடுதலாய் இருந்திருக்குமென்பது நிச்சயம் ! கடைசி வாரம் வரை 'இழுத்துக்கோ-பறிச்சுக்கோ' என்ற கதையாய் நாம் மல்லுக்கட்டி வந்ததில் தான் இரகசியம் எது ?! எது, எவ்விதம் இருப்பினும் துளியும் சந்தேகமின்றி இந்த ஞாயிறு நமக்கொரு 'அட்சய திரிதியை" தான் ! தெற்கத்தியர் தங்கத்தை ஒன்றரைக் கிலோப் பாளங்களாய் நாம் கையில் ஏந்த முடிந்துள்ள நாள் நமக்கு தங்கத் திருநாள் தானன்றோ ? Thanks ever so much for making that a sparkling sunday folks !! It was an absolute privilege catching up with you all ! 


Before I move on,  "முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தானா dust jacket ? போஸ்டர் ? ; கடைகளில் வாங்குவோருக்கும் அதைக் கொடுத்தால் என்ன ?" என்ற கேள்விகள் எதிர்பார்த்தபடியே எழுந்துள்ளன ! இதற்கான பதில்களை நாம் எல்லோரும் தான் அறிவோமே ? However much I try - எல்லாத் தருணங்களிலும் நானொரு எடிட்டராக மாத்திரமே தொடர்வது நடைமுறை சாத்தியமில்லா விஷயம் ! சில சமயங்களில் நானொரு பதிப்பாளராகவும் ; வியாபாரியாகவும் இருக்கும் அவசியங்கள் எழத் தான் செய்கின்றன ! அது போன்ற சமயங்களில் இந்த மாதிரியான சிற்சிறு நெருடல்கள் நேர்வதை நானும் உணர்கிறேன் ! முன்பதிவு செய்யும் நண்பர்களுக்கும், கடைகளில் வாங்கும் நண்பர்களுக்குமிடையே நம் கண்களில் எவ்வித வேற்றுமைகளும் கிடையாது தான் ! ஆனால், இடையினில் ஒன்றோ - இரண்டோ விற்பனை மையங்கள் ஏஜெண்ட்களின் ரூபத்தில் இணைந்து கொள்ளும் பொழுது அவர்களது இலாபங்களும் picture-க்குள் வருவது தவிர்க்க இயலாது போகின்றனவே ? Maybe இனி வரும் நாட்களில் இது போன்ற முன்பதிவு இதழ்களுக்கு இரண்டல்லது,  மூன்று தவணைகளாய் முன்பதிவு செய்திடும் வாய்ப்புகளையும் செய்து பார்க்கலாம் - வாசகர்களின் சுமையை மட்டுப்படுத்தும் விதமாக !

ஞாயிறின் மீதான சிந்தனைகளில் லயிக்கும் போது ஒருசில விஷயங்கள் என் தலைக்குள் தோன்றின ! முன்செல்லும் பாதைக்கு அவை ரொம்பவே பயன்தரக் கூடுமென்பதால் அதைப்பற்றியும் கொஞ்சம் உரக்க சிந்திப்பதில் தப்பில்லை என்று பட்டது ! நமது மறுவருகையைத் தொடர்ந்தான  காமிக்ஸ் பயணத்தில் ஏதேனும் ஒரே ஒரு standout feature பற்றிக்  குறிப்பிட்டுச் சொல்லுமொரு அவசியம் எழுந்தால், வாசகர்களிடையே நிலவும் ஜாலியான நட்பைப் பற்றிய சிலாகிப்பே எனது தேர்வாக இருக்கும் ! இன்டர்நெட் , ஸ்மார்ட் போன் ; வாட்சப் ; வலைப் பதிவுகள் ; முகநூல் என  கருத்துப் பரிமாற்றங்களுக்கு இன்று ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதால் "காமிக்ஸ் வாசிப்பு" எனும் ஒரு குடைக்குக் கீழே குழுமும் நண்பர்கள் அந்தப் பரிச்சயங்களை தம் வாழ்வுகளின் ஒரு சிறு அங்கமாக்கிக் கொள்வதைப் பார்க்கும் பொழுது  ரொம்பவே சந்தோஷமாக உள்ளது ! Of course - அவ்வப்போது சிற்சிறு உரசல்கள் ; கருத்து மோதல்கள் எழுவது சகஜமே - ஆனால், அவற்றைத் தாண்டிச் செல்லும் பக்குவங்களும் உங்களிடையே இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை ! எப்போதும் நமது ஸ்டால்களில்  அல்லது, ஏதோவொரு  மரத்தடியில் நடக்கும் நமது புத்தக விழாச் சந்திப்பை இம்முறை ஒரு அரங்கினில் அரங்கேற்றிப் பார்த்த போது - இதனை கொஞ்சம் அடுத்தபடிக்குக் கொண்டு செல்வது ஒரு பயனுள்ள அனுபவமாய் இருக்குமென்பது புரிகிறது ! பால்யங்களை மீட்டெடுக்கும் முயற்சிக்கு மறுபதிப்புகள் உதவிடுகின்றன எனும் பொழுது  ; இன்றைய நமது இயந்திரத்தனமான வாழ்க்கைகளின் ஒரு அயர்ச்சியை லேசாகவேணும் போக்கிட இது போன்ற நண்பர்கள் சந்திப்புகள் ; வெளியூர் பயணங்கள் ; காமிக்ஸ் கலந்துரையாடல்கள் உதவக் கூடுமோ ? ஆண்டின் பிரதானப் பெருநகரத்துப் புத்தக விழாக்கள் எவை என்று பட்டியலிட்டால் (ஜனவரியின்) சென்னை விழா ; நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி ; ஈரோட்டுத் திருவிழா மற்றும் சேலத்து விழாக்கள்  தான் முன்நிற்கும் ! ஆண்டுக்கு ஏதேனும் ஒரு ஊரைத் தேர்வு செய்து கொண்டு அந்தப் புத்தக விழாவின் சமயம் அங்குள்ள ஒரு நல்ல ஹோட்டலில் ஒரு அரங்கை காலை 11 to  மாலை 5 வரை எடுத்துக் கொண்டு நமது சந்திப்புகளை நடத்திப் பார்த்தால் என்ன என்று நினைத்தேன் ? நண்பர்களைப் பேசச் சொல்லிக் கேட்க இம்முறையே விருப்பம் கொண்டிருந்தேன் ; ஆனால் நேரமின்மையால் அது சாத்தியமாகவில்லை ! நமக்கே நமக்கென ஒரு அரங்கு கிட்டும் போது - பிறருக்குத் தொல்லை ; நம் கச்சேரிகளைக் கண்டு புகார் செய்யும் அக்கம்பக்கத்துக் கடைக்காரர்களின் கோபக்கணைகள் ; அடுத்த முறை ஸ்டால் கிடைக்காதோ என்ற பீதிகள் ஏதுமின்றி relaxed -ஆக இருக்க முடிவதை இம்முறை என்னால் உணர முடிந்தது ! மதிய உணவும் அங்கேயே என்ற ஏற்பாடோடு திட்டமிட்டால் - ஜாலி அரட்டைகள் ; காத்திருக்கும் புது வெளியீடுகள் பற்றிய முன்னோட்டங்கள் ; முன்செல்லும் பாதைக்கு உதவிடக்கூடிய நண்பர்களின் சிந்தனைகள் ; சில ஜாலியான மலரும் நினைவுகள் என்று நிறைய விஷயங்களுக்கு நேரம் கிட்டுமல்லவா ? Without overdoing it - ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டும் இப்படியொரு சந்திப்பை plan பண்ணினால் என்ன guys ? நமது பயண இலக்கு சுவாரஸ்யமே எனினும், அதன் பொருட்டு நாம் ஒன்றிணைந்து செய்யும் இந்தப் பயணமும் கூட அதே அளவுக்கு சுவாரஸ்யம் தான் என்பது நிதரிசனமாய்த் தெரியும் போது - why don't we give it a try ?

கனவாய்த் தோன்றி ; கனவு இதழாய் உருமாறி விட்டுள்ள மின்னும் மரணம் இப்போது history என்று ஆகி விட்ட நிலையில் - "அடுத்து என்ன ?" என்ற கேள்வி நீங்கள் எழுப்புவதற்கு முன்பாகவே என் தலைக்குள் நர்த்தனம் புரியத் தொடங்கி விட்டது ! "XIII ; இரத்தப் படலம் ; இரத்தக் கோட்டை" என்றெல்லாம் நண்பர்களின் வோட்டுக்கள் பதிவாகிடுவது எனக்குத் தெரிகிறது - ஆனால் நிஜத்தைச் சொல்வதானால் அவற்றுள் எனக்கொரு சுவாரஸ்யத்தை வளர்த்திடவே முடியவில்லை ! எப்போதாவது சாப்பிட்டால் தித்திக்கும் மைசூர்பாகை தினசரி டிபன் ஆக்கிப் பார்க்கும் தப்பைச் செய்ய வேண்டாமே என்ற எச்சரிக்கையுணர்வு + மின்னும் மரணம் அளவுக்கு மேற்சொன்ன கதைகளில் (at least எனக்கு மட்டுமாவது) ஈர்ப்பு குறைவே  என்பதும் காரணங்கள் ! (கோயம்புத்தூர் பக்கமாய் "பணால்" என்று ஏதோ வெடிக்கும் ஓசை கேட்பது எனக்கு மட்டும் தானா ??) தவிர, இறுக்கமான களங்களுக்குள் திரும்பவும் புகுந்திட நம் வண்டியில் தற்காலிகமாகவாவது 'தம்' இல்லை என்பதும் சாயம் பூசா நிஜம் ! ஏதேனும் ஒரு ஜாலியான சூப்பர்-ஹிட் கதைத் தொடர் - அது கார்ட்டூனாக இருந்தாலும் சரி ; சூப்பர்-ஹீரோ சப்ஜெக்டாக இருந்தாலும் சரி ; டிடெக்டிவ் ரகமாக இருந்தாலும் சரி - கண்ணில்படும் சமயம் அடுத்த மெகா திட்டமிடலை வைத்துக் கொள்வோமே ?! உங்களிடம் அதற்கான suggestions ஏதேனும் இருப்பின், I would be more than happy to lend my ears ! திரும்பவுமொரு மறுபதிப்புக் குதிரையில் ஏறி இந்த மெகா சவாரிகள் வேண்டாமே - ப்ளீஸ் !

"தில் இருந்தால் திகில் உண்டு"....என்ற tagline சகிதம் நாம் கட்டவிழ்த்துள்ள புதுக் கதைவரிசைகளும் ஒரு பொறுமையான காத்திருப்பின் பலனே ! பேய்-பிசாசுக் கதைகள் ; த்ரில்லர் கதைகளின் ரசிகர் என்ற முறையில் "திகில்" இதழை தட்டி எழுப்பிக் கொண்டு வரக் கோரி ஜூனியர் எடிட்டர் என்னிடம் நிறையவே கோரிக்கை வைத்திருந்தார் ! ஆனால் உருப்படியாய் கதைகளைத் தேடித் பிடிக்காது - உள்ளதைக் கொண்டே வடை சுட எனக்குப் பிரியம் இருக்கவில்லை என்பதால் அவனுக்கும் அல்வா கிண்டி வந்தேன் !   சமீபத்திய புதிய பதிப்பகத்தின் சந்திப்பைத் தொடர்ந்து இதற்கான சில கதவுகள் திறந்துள்ளதால் - திகில்-சீசன் 2 வரும் ஜனவரி முதல் அரங்கேறிடுகிறது ! 'முழு வண்ணத்தில்' என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன் ; மற்ற எல்லாமே - நவம்பரின் ட்ரைலர் படலத்தின் போது ! அதே போல இந்த சீசன் 2 - சரியாக ஜனவரி 2016-டிசம்பர் 2016 வரையிலுமான காலகட்டத்துக்கு மாத்திரமே ! புதுசாய் ஒரு கதைவரிசையைத் தொடங்கி விட்டு, அப்புறமாய் கதைப்பஞ்சத்தின் காரணமாய் அதனில் உப்மா கதைகளைப் போட்டு ரொப்பும் வேலைகள் நிச்சயமாய் இராது ! தற்போது 12 கதைகள் என் தேர்வில் உள்ளன - இம்முயற்சிக்கு  நியாயம் செய்யும் விதமாக ! So they will be the backbone of Season-2 ! தொடரும் நம் தேடல்கள் மேற்கொண்டு (நல்ல) கதைகளை கரைசேர்த்தால் - maybe  அதன்  ஆயுள் நீண்டிடலாம் !

And இறுதியாக - கார்ட்டூன் ஸ்பெஷல் பற்றி ! 'ஜனவரியின் சென்னை விழாவின் போது ஓட்டை வாய் உலகநாதனாய் அவதாரம் எடுத்ததொரு கணத்தின் வெளிப்பாடான இந்தக் கார்ட்டூன் ஸ்பெஷல் பற்றி அப்புறமாய் வாயே திறக்கக் காணோமே ?; - என்ற கேள்விகளோடு நண்பர்கள் என்னை இம்முறை சுற்றி வளைக்காத குறை தான் !  ஆனால் என் மௌனத்தின் காரணமே - இந்தாண்டின் நமது எகிறும் பட்ஜெட் தான் ! சந்தாவுக்கு நெருக்கி ரூ.4000 + மி.மி.யின் பொருட்டு இப்போது ரூ.1000 எனும் போது - உங்கள் பர்ஸ்களுக்கு இந்தாண்டின் சேதாரம் இதுவரையிலுமே ரூ.5000 என்ற நிலையில் - மேற்கொண்டு "துட்டு..துட்டு.." என்று நச்சரிக்க ரொம்பவே உறுத்தலாய் உள்ளது ! அனைவரது ஆர்வங்களும் ஒரே நிலையில் இருப்பினும், அனைவரது  வசதிகளும் அதே ஒற்றுமையோடு இருத்தல் சாத்தியமாகாது எனும் நிலையில் - தினுசு தினுசாய் இதழ்களை வெளியிட்டு சிரமங்களை உண்டு செய்யத் தயக்கமாக உள்ளது ! இப்போதே 'ஆயிரம் ரூபாய்க்கு பொம்மை புக்கா ???' என்று எத்தனை இல்லங்களில் பறக்கும் பூரிக்கட்டைகள் தென்பட்டனவோ ?! இந்த நிலையில் கார்ட்டூன் ஸ்பெஷலுக்கென ஒரு தொகை + முத்து காமிக்ஸ் இதழ் # 350-ன் பொருட்டு இன்னொரு தொகை என்ற அவசியங்களை உருவாக்குவது சரியாகுமா ? தவிர, இப்போது தான் வேங்கையின் விஸ்வரூபத்துடன் மின்னும் மரணம் வெளிவந்துள்ள  நிலையில், ரொம்பவே சீக்கிரமாய் "என் பெயர் டைகர்" collection -ஐயும் கொணர்வது ஒரு வித overkill ஆகிடாதா ? பற்றாக்குறைக்கு அடுத்த 45 நாட்களுக்குள் 'தல'யின் தாண்டவம் வேறு - ரூ.450-க்குக் காத்துள்ளதையும் மறந்திடக் கூடாதல்லவா ? So ஓரிரு மாத இடைவெளிகளுக்குள் ரூ.1000 ; ரூ.450 ; ரூ.400 என்று சரமாரியாய்ப் போட்டுத் தாக்குவது  ; அதுவும் கௌபாய் கதைகளாகவே துவைத்துத் தொங்கப் போடுவது ஒ.கே. தானா ? என்ற சந்தேகம் என்னை போட்டு உலுப்பி வருகிறது! 'பேசாமல் 2016-ன் திட்டமிடல்களோடு இவற்றை சேர்த்துக் கொண்டாலென்ன ?' என்ற சிந்தனை மெலிதாக எட்டிப் பார்க்கத் தான் செய்கிறது ! "பணம் பிரச்சனையல்ல" என்று நீங்கள் எண்ணினால் கூட - இந்த "கௌபாய் overkill " பற்றி சற்றே சிந்தித்துப் பாருங்களேன் ? 2015-ல் எஞ்சியிருக்கும் பட்டியலில் கௌபாய் கதைகள் இதோ :

டெக்ஸ் வில்லர்

  • 330 பக்கங்கள் + 220 பக்கங்கள் + 110 பக்கங்கள் (இதழ் # 250
  • 330 பக்கங்கள் (பனிமலையில் ஒரு புதையலைத் தேடி )
  • 220 பக்கங்கள் - "எமனின் எல்லையில்"

மேஜிக் விண்ட் : 96 பக்கங்கள்

பௌன்சர் : கறுப்பு விதவை - 112 பக்கங்கள்

கமான்சே
88 பக்கங்கள் (சாத்வீகமாய் ஒரு சிங்கம் + சீற்றத்தின் நிறம் சிகப்பு)

Maybe this can be an option : 2015-க்கு கார்டூன் ஸ்பெஷல் இதழினை மட்டும் திட்டமிட்டுக்  கொண்டு - "என் பெயர் டைகர்" collection -ஐ 2016-க்குக் கொண்டு சென்றாலென்ன ? நிதானமாய் சிந்தித்துச் சொல்லுங்களேன் guys - அதன் பின்னே ஒரு முடிவெடுப்போமே?!

புறப்படும் முன்பாய் துவங்கிய இடத்துக்கே மீண்டுமொருமுறை பயணிப்பதை தவிர்க்க இயலவில்லை ! மேஜையின் ஒரு ஓரத்தில் மினுமினுக்கும் THE COMPLETE SAGA-வைப் பார்க்கும் போது 'ஷப்பா..!!; என்றதொரு பெருமூச்சு எழுவதை உணர முடிகிறது ! அது பணி முடிந்ததன் நிம்மதிப் பெருமூச்சா..? பட்ட சிரமங்கள் வீண் போகவில்லையே என்ற சந்தோஷப் பெருமூச்சா ..? அந்தப் பரபரப்புகளை miss செய்திடும் ஆதங்கப் பெருமூச்சா..? அல்லது - இனியொரு சவால் இது போல் அமையத் தான் செய்யுமா ? என்ற ஏக்கப் பெருமூச்சா..?  தூக்கத்தில் விடை தேடிச் செல்கிறேன் !! மீண்டும் சந்திப்போம் !! Have a great weekend ! 

274 comments:

  1. Comedy spl கண்டிப்பாக இந்த ஆண்டே வேண்டும்.

    ReplyDelete
  2. ஆசை காட்டி மோசம் செய்து விடாதீர்கள் ஸார்
    comedy spl கண்டிப்பாக வேண்டும்

    ReplyDelete
  3. எப்போதும் பதிவுகளைப் படித்து விட்டு நகரும், எல்லோரும் மின்னும் மரணத்தை வாசித்து முடித்துவிட்டு கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நான் மட்டும் கலிபோர்னியாவில் அதற்காக இன்னுமொரு வாரம் காத்துக் கொண்டிருக்கும் ஒரு பாக்கியசாலி என்ற முறையில் இங்கு மேலே உள்ள கொண்டாட்டங்களைப் பார்க்கும் போது நாம் அங்கு இல்லையே என்ற வருத்தத்தை கொஞ்சம் கலையச் செய்தது
    மிக்க சந்தோசம்.
    நான் இங்கு ஆங்கிலத்தில் இளவரசி((மாடெஸ்டீ) பௌன்செர், லக்கி லூக் எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டதே பெரிய நிறைவு.
    நான் 'கார்ட்டூன் ஸ்பெஷல்'க்கு முழு ஆதரவு . இருந்தாலும் 'இரத்தப்படலம்' ......
    ஆசிரியர் அவர்களே , காமிக்ஸ் படிப்பவர்கள் பலரின் விருப்பம் அதுவே . தங்கள் விருப்பம் அதிலிருந்து மாறுபட்டு இருப்பது வியப்பாக இருந்தாலும் , இங்கு வாசகர்களாகிய எங்கள் விருப்பமே முதன்மை வாய்ந்தது என்பது என் தாழ்மையான கருத்து.
    வாழ்த்துக்கள்,
    சதிஸ் குமார்

    ReplyDelete
    Replies
    1. +++++++1 pls consider "irathapadalam " sir... its a dream book sir...

      Delete
    2. otraiiragu : //இங்கு வாசகர்களாகிய எங்கள் விருப்பமே முதன்மை வாய்ந்தது என்பது என் தாழ்மையான கருத்து.//

      சின்னதொரு திருத்தம் : "வாசகப் பெரும்பான்மையின் விருப்பமே பிரதானம்" என்று சொல்வது தான் முறையாக இருக்கும் !

      அதிலும் கூட இன்னுமொரு சிறு modification செய்யலாம் : "பதிப்பகத்தின் முதுகுக்கு சேதாரம் ஏற்படுத்தா வாசக விருப்பமே பிரதானம்" என்று !

      Delete
    3. சார் மின்னும் மரணம் போல மாபெரும் வெற்றி நிச்சயம் !
      மாபெரும் கனவுக்குள் மிதந்து கொண்டிருக்கிறோம் ...
      இந்த ஒரே இதழை எப்படியாவது எங்களோடு வாழ விடுங்கள் ......
      ஒரு இரண்டாயிரம் விலையில் ...சார்...சார் .....

      Delete
  4. எடிட்டர் சார்,

    நண்பர் சதீஷ் குமார் மேலே சொன்னது போல், நீங்கள் கொடுத்துள்ள கொண்டாட்ட படங்களை பார்கிறபோது நாம் அங்கு இல்லையே என்ற ஏக்கத்தை தவிர்க்க முடியவில்லை.

    மின்னும் மரணத்தின் smash hit சந்தோஷத்தை தருகிறது. இது நீங்களும் உங்கள் சிறு குழுவும் செய்த மகத்தான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. சீனியர் எடிட்டரிடமும் உங்களிடமும் ஆட்டோகிராப் வாங்கிய என் பிரதி சீக்கிரம் என்னிடம் வந்துவிடும் என்று நினைக்கிறன்.

    என் பெயர் டைகர் பற்றி என் கருத்து : தாராளமாக நீங்கள் இந்த தொடரை 2016 லேயே கொண்டு வரலாம். இந்த வருடத்து டைகர் கோட்டா மின்னும் மரணத்துடன் போதும் என்று நினைக்கிறன். காரணம் Mister Blueberry தொடர் ஒரு ஓகே ரகத்தை சார்ந்தது. டைகரின் இந்த வருட சூப்பர் சாகசத்துடன் இதுவும் வரவேண்டாம் என்று நினைக்கிறேன.

    ReplyDelete
    Replies
    1. Radja : //இந்த வருடத்து டைகர் கோட்டா மின்னும் மரணத்துடன் போதும் என்று நினைக்கிறன்.//

      சிந்திக்கச் செய்யும் சிந்தனை !

      Delete
    2. டைகர் கோட்டாவும் போதும்.அரைத்த மாவையே அரைக்கும் கோட்டாவும் போதும் சார்.புது கதைகள் நிறைய போடுங்கள் சார்.

      Delete
  5. அ..தி...கா.....லை வணக்கங்கள் எடிட்டர் சார் அன்ட் பிரண்ட்ஸ்...

    ReplyDelete
  6. 'கார்டூன் ஸ்பெஷல்'இந்த வருடமே வரட்டும்!

    ReplyDelete
  7. திகில் மீள்வரவு மிகவும் சந்தோசம் தரக்கூடிய. விஷயம். மி.ம கருப்பு வெள்ளையில் மிகவும் சிறிய எழுத்துகள் ஒன்றின்மேல் ஒன்றாக இரண்டு பிரிண்டிங் என்று வந்திருந்த பழைய புத்தகத்தை பார்த்திருந்த என் கண்கள் புதிய புத்தகத்தை பார்த்ததை நம்ப மறுத்தன. ஒறுவேளை பலநூறு பழைய காமிக் புத்தகப்புதையல் கிடைப்பதாக அடிக்கடி வரும் கனவைப்போல இதுவும் மிகநீண்டதொரு கனவோ? இன்னும் சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்து எழப்போகிறோமோ என்ற எண்ணத்துடனே என்னுடைய கடந்த இரு நாட்களும் கழிந்தன. இன்னும் நம்பமறுக்கும் மூளை இதோ இப்போது விழித்துக்கொள்ளப்போகிறாய். விழித்தவுடன் எப்போதும்போல் காணாமல் போகப்போகிறது உன் புதையல் அதனால் இன்னும் சிறிதுநேரம் உறங்கி இந்த சந்தோசத்தை இன்னும் சிறிதுநேரம் அனுபவித்துக்கொள் என்று சொல்கிறது. உண்மையில் நடப்பது என்ன.

    ReplyDelete
    Replies
    1. rajasekarvedeha : //உண்மையில் நடப்பது என்ன//

      இன்னும் கொஞ்ச நேரம் தூங்க அடிப்போடுகிறீர்கள் என்பது தானோ ? :-)

      புதையல் காணாமலே போய் விட்டாலும் அதைத் தேடித் தர நம் உடைந்த மூக்கார் தான் உள்ளாரே !

      Delete
    2. நான் சென்ற. திங்கள்கிழமையன்று உங்கள் Office வாசலிலேயே வேண்டிய அளவு புதையல் எடுத்துவிட்டேன் சார்

      Delete
    3. rajasekarvedeha : அய்யய்யோ !!!!!

      Delete
  8. நிறைவான பதிவு
    என் பெயர் டைகர் - தாராளமாக நீங்கள் இந்த தொடரை 2016 லேயே கொண்டு வரலாம்.

    அடுத்த ஸ்பெஷல் ஒரு கதம்பமாக பார்த்துக்கொள்ளுங்கள், ஏனெனில் என்னதான் மின்னனும் வந்தாலும் அது NBS or LMS ஈடாகாது என்பது என் கருத்து

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : //அடுத்த ஸ்பெஷல் ஒரு கதம்பமாக பார்த்துக்கொள்ளுங்கள்,//

      அட...கொஞ்சமாச்சும் மாறித் தான் பார்ப்போமே சார் !! ஆண்டாண்டு காலங்களது பழக்கங்களை உதறுவது சிரமம் தான் - but இந்த 'ஏக் தம்' அனுபவமும் சுகமானது தானே ?

      Delete
    2. என்னை போல் மி.ம படிக்கதவர்களை கனக்கில் கொல்ல மட்டீகல? உங்களூகுத்தான் இது மறுபதிப்பு. நன் முதல் முறையக படிக்கிரேன்...

      Delete
  9. நன்றி ஈரோடு விஜய் , ஆசிரியரின் பதிவை பற்றி தெரியப்படுத்தியதர்க்கு.

    ReplyDelete
  10. குண்டு புக் க்ளப் மெம்பர்களின் கூட்டமைப்பு 2016க்கு தள்ளி போடும் திட்டத்தை விரும்பவில்லை

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : குண்டு புக்கால் ஒல்லியாகிப் போன பர்சின் சொந்தக்காரர்கள் சங்கம் சார்பாக உங்களைத் தேடி ஆட்டோ ஒன்று புறப்படவுள்ளதாம் !

      Delete
  11. என் பெயர் டைகர் ஒன்றும் மறுபதிப்பு அல்லவே. மேலும் ஏற்கனவேே திட்டமிட்ட ஒரு விஷயத்தை மாற்ற வேண்டாமே. நிச்சயம் டைகர் ஓவர் டோஸ் இல்லை.

    ReplyDelete
  12. கார்ட்டூன் ஸ்பெஷல் மற்றும் என் பெயர் டைகர் இது இரண்டும் உங்கள் விருப்பப்படி மற்றும் வசதிப்படி செய்யலாம். இரத்தப்படலம் மற்றும் ரத்தக்கோட்டை இரண்டையும் முடிந்தால் 2020 க்குள் முயற்சி செய்யவும். என்னிடம் இரண்டு கதைகளின் தொகுப்பும் இருக்கிறது. வண்ணத்தில் உயர் தரத்தில் படிக்க வேண்டும் என்பதே ஆசை.

    கார்ட்டூன் கதைகளை தனித்தனியாக வெளியிட்டால் சிறுவர்கள் வாங்கிப் படிக்க வசதியாக இருக்குமே? அடுத்த தலைமுறையை எட்டிப் பிடிக்க வழி செய்யுமே?

    ReplyDelete
    Replies
    1. Mahendran Paramasivam : படலமா - கோட்டையா என்றால் கோட்டை தேவலாம் என்பேன்...அதுவும் 2020-ல் என்றால் ஒ.கே. ஒ.கே. தான் !!

      கார்ட்டூன் கதைகளை பொறுத்தவரை - லக்கி லூக் ; சிக் பில் என்ற ஜோடியைத் தாண்டி எல்லோருக்கும் பிடிக்கக்கூடியதொரு கதைவரிசை சிக்கட்டுமே..!

      Delete
  13. தங்களின் டூர் பேக்கேஜ் பயன் தரும்.திகிலின் வருகைக்கு நன்றி.காமிக்ஸ்.வாசிப்புக்கு வாசகர்களின் பங்களிப்பை கோரலாம்.உதவ நண்பர்கள் யாரும் மறுக்க போவதில்லை.

    ReplyDelete
  14. எவ்ளோஓஓ பெரிய்ய்ய பதிவு.!!!!

    ReplyDelete
    Replies
    1. @ FRIENDS : அட...வெளிலே டைப் அடிச்சா அதை இங்கே copy -paste பண்ண எதாச்சும் மார்க்கமுள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்களேன் !! டைப் அடித்தே என் சனிக்கிழமைகள் ஓய்ந்து போய் விடுகின்றன சாமியோவ் !

      Delete
    2. விஜயன் சார்,

      Google language tool bar தரவிறக்கம் செய்து உங்கள் கணினி / மடிக்கணினியில் ms word இல் எப்பொழுது வேண்டுமானலும் (offline) தமிழில் டைப் செய்து கொள்ளாலாம். அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து புதிய பதிவில் கொண்டு வர முடியும்.


      முயன்று பாருங்களேன் ...


      http://www.google.com/inputtools/windows/

      Google Input Tools for Windows is currently available for 22 different languages: Amharic, Arabic, Bengali, Persian, Greek, Gujarati, Hebrew, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Oriya, Punjabi, Russian, Sanskrit, Serbian, Sinhala, Tamil, Telugu, Tigrinya and Urdu.

      Offline Support - No internet connection is required.
      Word Completions - Dictionary-based word completions for prefixes.
      Personalized Choices - Remembers user corrections along with macro and canonical support.
      Easy Keyboard - Dictionary-enabled keyboard to enter rare and complex words.
      Quick Search - Single-click web search for highlighted words.
      Cool Customizations -Customize candidate window size, display fonts and more.

      Delete
    3. word இல் இருந்து நேரடியாகவும் blog போஸ்ட் செய்ய முடியும் சார்,

      முயன்று பாருங்களேன் ...

      http://www.howtogeek.com/169119/how-to-create-a-blog-post-using-microsoft-word-2013/

      Delete
    4. ஆன் லைனில் எங்கிருந்தும் எந்த கணினி அல்லது ஏதாவது டிவைஸிலிருந்தும் டைப் ரைட்டர் மெத்தட்டில் யுனிகோடில் டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்ய ஒரு சிம்பில் செயலியின் இணைப்பு இது: http://kandupidi.com/editor/

      Delete
  15. விஜயன் சார், பொதுவாக சொன்னால் நமது புத்தக budget அதிகமாகி கொண்டு வருகிறது; இணைய தளத்திற்கு உள்ள அப்பால் உள்ள நண்பர்களையும் மனதில் கொண்டு சொல்கிறேன்.

    முத்து 35௦ பதில் கார்ட்டூன் ஸ்பெஷல் வெளி இடலாம்; நீங்கள் சொன்ன மாதிரி கௌபாய்கதைகள் இந்த வருடம் அதிகம். நமது டைகர் ரசிகர்கள் இதனை புரிந்து கொண்டு ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும்.

    முத்து 35௦ அடுத்த வருடம் கொண்டு செல்வதால், தளபதி கதைகளை அடுத்த வருடமும் ரசிக்க வாய்ப்புகள் உள்ளது.

    மூத்த ஆசிரியர் அவர்களை முதல் முறையாக பார்க்க பேச முடிந்தது; ஆனால் அவர்களிடம் காமிக்ஸ் பற்றி கேட்க முடியவில்லை. அவர்களின் போன் மற்றும் மினஞ்சல் உள்ளதால் இனிவரும் காலம்களில் அதன் முலம் அவர்களிடம் உரையாடி கொள்ளலாம் என உள்ளேன்.

    இந்தவருடம் கண்டிப்பாக கார்ட்டூன் ஸ்பெஷல் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : //நமது புத்தக budget அதிகமாகி கொண்டு வருகிறது; இணைய தளத்திற்கு உள்ள அப்பால் உள்ள நண்பர்களையும் மனதில் கொண்டு சொல்கிறேன். //

      கவனம் செலுத்த வேண்டிய தருணமே இது ! 2016-ல் இந்தப் பிரச்சனை தொடர நிச்சயமாக அனுமதிக்க மாட்டோம் !

      Delete
    2. \\நீங்கள் சொன்ன மாதிரி கௌபாய்கதைகள் இந்த வருடம் அதிகம்\\
      +1

      Delete
    3. விஜயன் சார்,டெக்ஸ் கதையில் 330 பக்கத்தில் 2கதை,220 ஒரு கதை என்று சொல்லிட்டுதான் இருக்கிறங்ளே தவிர இன்னும் கண்ணுள காட்டமாட்டேன் என்கறீர்கள்.வருஷம் பொறந்து 5மாதங்கள் ஆகிவிட்டது.

      Delete
  16. வருடம் ஒரு முறை வாசகர் சந்திப்பு நல்ல விஷயம், நல்ல விஷயம். இதனை அடுத்தவருடம் முதல் செய்யலாம். என்னை பொருத்த வரை, இதனை நாம் ஈரோடு அல்லது சேலத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்; இங்கு இணைய தளத்திற்கு அப்பால் உள்ள வாசகர்கள் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : சென்னை அல்லது ஈரோடு - இவற்றில் ஏதேனும் ஒன்று என துவக்கப் புள்ளியை வைத்துக் கொள்ளலாம் !

      Delete
    2. சென்னையில் இப்பொழுது தான் முடிந்துள்ளதால் வரவிருக்கும் ஈரோடு புத்தக விழாவில் வைத்துக்கொள்வதே தொடக்கமாக இருக்கும் என்பதே என் பணிவான கருத்து.

      Delete
  17. //இன்னொருத்தரோ..."இந்த பிள்ளைய அட்டைலே போடலாம்லே அண்ணாச்சி ? " என்று சில்க்கைக் குறிப்பிட்டுக் கேட்டார் ! /

    அந்த நல்லமனிதர் யாருங்க சார்.??
    "என்னைப் போல் ஒருவர் " :-)

    ReplyDelete
  18. "காமிக்ஸ் காதலன்" என்ற தலைப்பில், நண்பர் புதுச்சேரி கலீல் அவர்களை பற்றிய கட்டுரை இன்றைய "தி இந்து " தமிழ் நாளிதழில்!!

    வாழ்த்துகள் கலீல்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் கலீல்!

      Delete
    2. அடடே! வாழ்த்துகள் கலீல்!! உங்களுக்கு மட்டுமன்றி இது எங்களுக்கும் ரொம்பவே பெருமையான விசயம்! :)

      Delete
    3. அடடே! வாழ்த்துகள் கலீல்!! உங்களுக்கு மட்டுமன்றி இது எங்களுக்கும் ரொம்பவே பெருமையான விசயம்! :)

      Delete
    4. அடடே! வாழ்த்துகள் கலீல்!! உங்களுக்கு மட்டுமன்றி இது எங்களுக்கும் ரொம்பவே பெருமையான விசயம்! :)

      Delete
  19. காலை வணக்கம் எடி சார் & நண்பர்களே.நேரமின்மையால் மாலை வருகிறேன்.

    ReplyDelete
  20. would like to see Muthu 350 as scheduled. "என் பெயர் டைகர் " is not a reprint, lets make another land mark(with your translation twists). I dont see cowboys as overdose at all, its part of comics life Edit sir, do go with Muthu 350 as scheduled for 2015.

    ReplyDelete
    Replies
    1. And not to forget, only around 1000+ fans got "மின்னும் மரணம்"(its not regular book), a new regular tiger book wont give hangover feel is my humble opinion Edit sir. do go for Muthu 350 as scheduled. "என் பெயர் டைகர் ".

      Delete
    2. Satishkumar S : பார்ப்போமே...பரவலான வாசக் அபிப்பிராயம் எவ்விதம் அமைகிறதென்று !

      Delete
  21. என்னைப் போன்ற புதிய வாசகர்கள் மின்னும் மரணம் கதையைப் படிப்போம் என்பதை நம்பவே முடியவில்லை. எப்படித்தான் நம்ப முடியும். ஆனால் நடந்து விட்டது.காரணம் அனைவர்க்கும் தெரியும்.
    அருமையான கற்பனை வளம், அற்புதமான சித்திரங்கள்.நல்ல மொழிபெயர்ப்புடன் கூடிய பக்கங்களை படிக்க படிக்க இச்சித்திர நெடுந்தொடரை ஒரே மூச்சில் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது.
    எனவே எங்களைப் போன்ற புதிய வாசகர்களின் விருப்பத்தையும் எடிட்டர் பரிசீலிக்க வேண்டுகிறேன்.(ரத்தக்கோட்டை மட்டும் இதே போன்ற கலக்டெர் எடிஷனாக வெளியிடுங்கள் ப்ளீஸ்)

    ReplyDelete
    Replies
    1. Thirumavalavan p : ரோம் ஒரே நாளில் கட்டுமானம் காணவில்லை தானே ? ; சில கனவுகளும் அதே போல ஏக் தம்மில் நிஜமாவதும் சுலபமல்ல தானே ? காத்திருப்போமே காலங்கள் அமையும்வரை !

      Delete
  22. டியர் விஜயன் சார்,

    மின்னும் மரணம் - சிறந்ததொரு கதைத் தொடர்; அதற்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது MMTCS! இதைச் செயல்படுத்திய உங்களுக்கும், தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ஹார்ட் கவர், தொடர் குறித்த தகவல்கள், பாகங்களின் துவக்கப் பக்கங்களாக அவற்றின் அட்டைச் சித்திரங்கள் என எதிர்பார்த்திருந்த அம்சங்கள் தவறாமல் இடம் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி! இருந்தாலும், நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, அதிக எதிர்ப்பார்ப்பு அட்டை மீது தான் இருந்தது! தயாரிப்புத் தரம் அட்டகாசம்; ஆனால், வடிவமைப்பு திருப்திகரமாக இல்லை!

    கதாநாயகர் & படைப்பாளிகளின் பெயர்கள் அட்டையில் இடம் பெறாதது மிகப் பெரிய குறை! முன்னட்டையில் ப்ளூபெர்ரியின் டூப்பையும், அவரை தொப்பி கழற்ற விடாமல் இடைஞ்சலாய் நிற்கும் மைல் கல்லையும்; ஸ்பைன் பகுதியில் அந்த சோஃபா குஷன் டிஸைனையும்; தலைப்புப் பகுதிகளில் சாதாரணமான Font-களையும் தவிர்த்திருக்கலாம். அதற்காக டஸ்ட் ஜாக்கெட்டை குப்புறப் போட்டு மறைக்கும் அளவுக்கு (உ.ம்:NBS) இம்முறை அட்டைச் சித்திரங்கள் கடுப்பேற்றவில்லை என்பது ஆறுதல்!

    புத்தகம் புதனன்று தான் கிடைத்தது! முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னரே கிடைக்காது, மூன்று நாட்கள் கழித்துக் கிடைப்பது இதுவே முதல் முறை! இருக்கட்டும் விடுங்கள், மேரே பாஸ் போஸ்டர், டஸ்ட் கவர் & பேக்கிங் டப்பா ஹை! :P கூடவே, ப்ளூபெர்ரியின் முழுப்பக்க ஸ்டிக்கர் ஒன்றையும் அனுப்பி இருந்திருக்கலாமோ?! ;)

    சென்னை புத்தக விழா படங்கள் சுவாரசியம். திகில் அறிவிப்பு திடுக்கிட வைக்கிறது :P வாசகர் சந்திப்பு நல்ல யோசனை, அடுத்தது பெங்களூரில் தானே? ;)

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக் கொஞ்சம் முயன்று வந்திருக்கலாம்..! நண்பர் கலீல்கூடவாய்ப்பு குறைவே என கூறியவரும் இன்ப அதிர்ச்சியாக வந்துவிட்டார்..! உங்கள் சந்திப்பது எப்போதோ..? ஆனால் உங்க ஊருக்குள்ள வர ஒன்றரை கிலோ தங்கத்தை கப்பமாக கட்டணும் நினைச்சாதான் பக்குன்னு இருக்கு..! :-)

      Delete
    2. Karthik Somalinga : பின்னட்டையில் கதாசிரியர் & ஓவியரின் போட்டோக்களோடு தான் ஆரம்பத்தில் டிசைன் செய்திருந்தோம் ; ஆனால் அதை படைப்பாளிகள் வேண்டாமென சொல்லி விட்டதால் உட்பக்கங்களுக்கு அவர்களைக் குடிமாறச் செய்தோம் !

      உங்கள் பிரதி புதன் வரையிலும் டெலிவரி ஆகவில்லையா ?? ஞாயிறும் புக்கிங் செய்த Proff Courier மறு தினமே பட்டுவாடா செய்வதாக வாக்குத் தந்திருந்தனரே !!

      And a note in general for all Bangalore readers : வரும் காலங்களில் 1 கிலோ எடையைத் தாண்டும் இதழ்களுக்கு Proff Courier ஒரு option ஆகக் கருதுவது சாத்தியமாகாது போல் தெரிகிறது ! ஏப்ரலில் அவர்கள் மாற்றியமைத்துள்ள கட்டனங்களின்படி மின்னும் மரணம் இதழுக்கு பெங்களூரு டெலிவரிக்கு ரூ.325 கோரியுள்ளனர் !!! DTDC கூரியரில் அதே பார்சலுக்கு ரூ.110 ; FIRST FLIGHT -ரூ.160 !

      Delete
    3. @ கார்த்திக்

      welcome priyamanitel! ;)

      'மி.ம'வை கண்ணில் பார்த்த பிறகாவது அந்த மனுசனுக்கு கமெண்ட் போடும் புத்தியை கொடு சாமி'னு நான் மாரியாத்தாகிட்ட வேண்டிக்கிட்டது வீண்போகலை! :)

      (உங்க கமெண்ட்டைப் பார்த்துட்டு நம்ம மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் ஒரு குத்தாட்டம் போடவும் நிறையவே வாய்ப்பிருக்கு)


      Delete
    4. @எடிட்டர்:
      ஆம், புதனன்று கிடைத்தது. தவிர, ஒரு சிறு குளறுபடியும் நேர்ந்துள்ளது - விவரங்களை மின்னஞ்சல் செய்துள்ளேன்.

      @mayavi.siva:
      விரைவில் சந்திப்போம் சிவா! சென்னை வர முயற்சிக்கவில்லை என்பது உண்மை தான்; வரும் ஜனவரியில் தவறாது வர எண்ணியுள்ளேன்! :)

      @Erode VIJAY:
      அந்த மாரியாத்தா உங்களுக்கும் சீக்கிரம் நல்ல புத்தி கொடுக்கட்டும்! ;) அது சரி, அதென்ன priyamanitel?! :) விவரங்களை தனியே கூறவும்! :P

      //நம்ம மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்//
      :) அவரிடம் கேட்க விரும்பும் கேள்வி:
      யாருமே இல்லாத ப்ளாக்ல யாருக்கு சார் கமெண்டு போடறீங்க! :P

      Delete
    5. //சரி, அதென்ன priyamanitel?! :) ///

      இதை நம்ம செல்வம் அபிராமி'ட்ட கேளுங்க. அவருதான் அடிக்கடி ஏதாச்சும் லேடீஸ் பேரோட tel சேர்த்துச் சொல்லுவார்!

      Delete
    6. அடடே!என்ன ஆச்சர்யம்! கார்த்திக் சோமலிங்கா சார்,உங்கள் வருகை எங்கள் பாக்கியம். முதன்முதலில் நான் உங்களை இங்கு சந்திக்கறேன். எனக்கு கம்ப்யூட்டர் அறிவு எல்கேஜி அளவுதான்.எதையோ பட்டனை அமுக்கியபோது,குழாயடி சண்டை பதிவை தற்போதுதான் படித்தேன்.உலகப்போரே நடந்தது போல் இருந்தது.உடனுக்குடன் பதில் பதிவு போடும் உங்கள் குணத்தை மனதில் கொண்டே பதிவிட்டேன்.

      Delete
  23. மை நேம் மாரியப்பன் (என் பெயர் டைகர்) ஷெட்யூல் படி இந்த வருடமே வரட்டும் சார்.
    மின்னும் மரணம் இந்த வருடம் வெளியாகி இருந்தாலும் அதற்கு நான் பணம் கட்டியது போன ஆகஸ்டில். எனவே இது கடந்த வருட அறிவிப்பாக இருந்துவிட்டு போகட்டுமே சார்.
    தவிரவும் இந்த வருடத்தில் இன்னும் எட்டுமாதங்கள் மீதமுள்ள நிலையில் எ.பெ.டைகருக்கு ஆண்டு இறுதியில் ஒரு ஸ்லாட் ஒதுக்கினால் கூட போதுமெ.!
    மேலும் மி.மரணம் மறுபதிப்பாக வந்தது. எ.பெ.டைகரோ முற்றிலும் புதியபாதை மற்றும் புதிய பாணி என்று தோன்றுகிறது.
    இந்த ஆண்டு "பிலி "யின் ஆண்டாக இருந்துவிட்டு போகட்டுமே சார்.

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : "மை நேம் மாரியப்பன்" - ஆண்டின் இறுதிக்குச் செல்ல வாய்ப்பில்லையே - இதழ் # 350 என்றதொரு மைல்கல்லை ஆகஸ்டில் எட்டிப் பிடித்து விடுகிறோமே..! தவிர, நண்பர் ராட்ஜாவின் பின்னூட்டமும் இங்கே கவனத்துக்குரியது ! கொஞ்சமாய் மேலே ஸ்க்ரோல் பண்ணிப் பாருங்களேன் ! அப்பாலிக்கா ஒரு தீர்மானத்துக்கு வருவோம் !

      Delete
    2. @ மாயாவி
      ஹாஹாஹா! :)))

      Delete
  24. Replies
    1. மேடையையும், மைக்கையும் நண்பர்களின் கரங்களில் ஒப்படைக்கும் நாள் தொலைவில் இல்லை என்பது உறுதி !

      Delete
    2. இவ்வளவு வேகமா 'இங்கே க்ளிக்'கை தயார் பண்ண உங்களுக்கு எப்படி சாத்தியமாகிறது மாயாவி அவர்களே!!!
      நம் நண்பர் ஒருவர் உரையாற்ற... அதை நம் சீனியர் எடிட்டர் பார்த்து ரசிக்கும் 'க்ளிக்' அருமை! அருமை!!

      Delete
  25. Dear VIJAYAN sir,

    Please publish cartoon special in 2015, Tiger stories can be published next year by extending his presence for one more year. Stories can't be overdose but pricing can be.

    ReplyDelete
  26. எடி சார்
    காலை வணக்கங்கள்

    மகிழ்ச்சியான உங்கள் இப்பதிவே உங்கள் வெற்றியை பறைசாற்றுகிறது
    நன்று

    மின்னும்மரணம் வெளியீட்டில் கலந்து கொள்ளமுடியாத ஏக்கத்தை நீங்கள் வெளியிட்டுள்ள போட்டோகளைப் பார்க்கும் போது இன்னும் அதிகமான ஏக்கத்தை தருகிறது

    உண்மையிலையே மின்னும்மரணம் ** மாஸ் வெற்றி ** வெற்றிதான்

    அப்புறம் கார்டுன் ஸ்பெஷல் கண்டிப்பாக வேண்டும்
    என் குழந்தைகளுக்கு இனி எதைக்காட்டி காமிக்ஸை வளர்ப்பது?
    கடந்த சில மாதங்களாக கார்டுன் கதைகளே வருவதில்லை
    எனது மகன்களிடம் இன்னும் எத்தனை நாள்தான் பாலைவனத்தில திரிகிற கௌபாய்ஸ்ஸவே காட்டி படிக்க வைப்பது?

    பல்லுபோகபோகிற கிழவன்களைவே பார்க்கிற நீங்கள்!
    பல் முளைத்த சிறார்களையும் கைக்குள்ள வைச்சுக்க ட்ரை பண்ணுங்க

    ReplyDelete
    Replies
    1. Jaya Sekhar : சித்திரமும் முக்கியம் ; சுவரும் முக்கியம் ! நீங்கள் குறிப்பிடும் "பல் போகக் காத்திருக்கும் கிழங்கள்" இல்லையேல் இன்றைக்கு நாமுமில்லை என்பது தான் யதார்த்தம் !

      Looking ahead என்பதற்கோ ; அடுத்த தலைமுறையின் வருகைக்கோ நானும் சரி ; நம் கிழங்களும் சரி தடைகளல்லவே ! கார்ட்டூன் தொடரை பெயரளுவுக்கு வெளியிடாது - நிஜமான தரமுள்ள ; அனைவருக்கும் ஏற்புடைய கதைகளாகக் கிடைக்கின்றனவா என்ற தேடலில் மும்முரமாகவே இருந்து வருகிறேன் ! அவை அமைந்த முதல் நாளில் கிழங்களும், குட்டிகளும் ஒன்றிணைந்து வாசிக்கும் நாளும் புலர்ந்திருக்கும் !

      Delete
    2. நன்றி சார்
      விரைவாக வெளியிடுங்க எடி சார்

      ஆனால் எப்பொழுது?

      Delete
    3. Jaya Sekhar : பொறுமை..!

      Delete
  27. எடிட்டர் சார்,

    * ஆண்டுக்கு ஒருமுறை நண்பர்களின் சந்திப்பு - அபாரம்! போக்குவரத்திற்கு பிரச்சினை இல்லாத முக்கிய நகரங்களில் ரயில் முன்பதிவுக்குத் தேவையான கால அளவுடன் இதைச் செயல்படுத்தலாம்!

    * 'என் பெயர் டைகர்' விவகாரத்தில் நான் Radjaவின் பாதையை தேர்வு செய்கிறேன். மி.ம போன்ற ஒரு அட்டகாசமான கதையைத் தொடர்ந்து , குறுகிய கால இடைவெளியில் 'எ.பெ.டை' போன்ற 'ஓகே ரக'க் கதைகள் வெளிவருமானால் அவை 'சொதப்பல் ரகமாக' முத்திரை குத்தப்பட்டுவிடும் அபாயமும் அதிகம்! தவிர, டைகர் ரசிகர்களை இன்னும் சில வருடங்களுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கவும் இந்தத் தள்ளிப்போடல் அவசியமாகிடும்!
    ஆனால் 'முத்து-350 ' என்ற மைல்-கல்லுக்கு வேறொரு தோதானதொரு (குண்டு) கதை அமையாவிட்டால் 'எ.பெ.டை'யை களமிறக்குவதும் நல்ல ஆப்சனாகவே இருந்திடும்!

    * 'திகில் - Season 2 'வை 2016க்கு மட்டுமே focus செய்திருப்பது ஒரு புத்திச்சாலித்தனமான move! விதவிதமாய் பீதியடையந்து கூக்குரலிட நாங்கள் தயாராகவே இருக்கிறோம் (அப்படியே நம்ம கருப்பு ஆயாவையும்... )

    * வாய்விட்டு சிரிச்சுப் பல மாதங்கள் ஆகிவிட்டதைப்போல ஒரு உணர்வு எழுவதால் 'கார்ட்டூன் ஸ்பெஷல்'ஐ ஆவலுடன் எதிர்பார்கிறேன்!

    ReplyDelete
  28. நண்பர்கள் , உங்களின் போட்டோகள் எல்லரம் பர்ர்தது ஒரு முறை நேரில் வரழ்ந்த அனுபவத்தை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் சொன்னாலும் தகும் ஸர்ர்.

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : நன்றிகள் எனக்குரியவை அல்ல சார்...!

      குனிந்தும், நிமிர்ந்தும், சர்க்கஸ் பண்ணியும், ஒற்றை முட்டியில் நடனம் ஆடியும் போட்டோக்களைச் சுட்டுத் தள்ளிய மாயாவி சிவா & பெங்களுரு பரணிக்கே அவை redirect ஆகிடல் அவசியம் !! Thanks a ton friends !

      Delete
    2. ஒற்றை முட்டியில் நடனம் ஆடியும்!!


      பலே பலே

      Delete
  29. /// அரங்கில் இருக்கும் சமயமே, வண்டி வண்டியாய் க்ரூப் போட்டோக்கள் எடுத்துக் கொள்ளும் சமயமே ; இதழைப் புரட்டிப் புரட்டி ரசிக்கும் சைக்கிள் கேப்பிற்குள் ஆன்லைன் சென்று பின்னூட்டங்கள் இட்டு வருவதும் நடந்து வந்ததால் - ஒரு லைவ் telecast பார்த்த உணர்வு சென்னைக்கு வந்திருக்கா நண்பர்களுக்குக் கிட்டியிருப்பது உறுதி ///


    உண்மைதான் எடி சார்

    சந்தோஷமான அத்தருணங்கள் எங்களுக்கு கிட்டவில்லை
    ஆனால்
    அந்த சந்தோஷ உணர்வுகளை உடனுக்குடன் ஏற்படுத்திக் கொடுத்த தோழர்கள்

    ** மாயாவி சிவா ** சார்
    ** டெக்ஸ் சம்பத் ** சார்
    ** பங்களுரூ பரணி ** சார்

    ஆகியோர்க்கு நன்றிகள் சில

    ReplyDelete
    Replies
    1. நாப்பது வருஷமா காமிக்ஸ் படிக்கற உங்களுக்கு என்ன வயசுல மகன் இருக்கான் ஜெய் சேகர்...?
      இவர்களை பார்த்தால் பல்லு போன கிழவானுங்க மாதிரி தெரியுதா...இங்கே'கிளிக்'

      Delete
    2. நல்லா கவனிக
      பல்லு போக போகிறன்னுதான் டைப் பண்ணீருக்கன்

      Delete
    3. "பல்லு போக போகிறவர்கள்" என்று சொன்னதற்கு வன்மையாக கண்டிக்கிறோம்.... என்னையும் சிறுவர்களுடன் சேர்த்ததற்கு நன்றி திரு குழந்தை சிவா அவர்களே.....

      Delete
  30. டியர் எடிட்டர் ஸர்ர்,
    கரும்பு தின்ன கூலியர? மறுபடி திகில் வரப்போவது குறித்து எனக்கு சந்தோஷத்தில் தலை கரல் புரியவில்லை என்பதுதரன் நிஜம். கண்ணர 3 லட்டு தின்ன ஆசையர?

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : "தில் இருந்தால் திகில் உண்டு !" என்றேன் நான்...!

      "லட்சியமிருந்தால் லட்டும் உண்டு " என்று பட்டையைக் கிளப்புகிறீர்கள் நீங்கள் ! :-)

      Delete
    2. ரைமிங் சூப்பர் ஸர்ர்!

      Delete
  31. திகில் ஒரு வருடம் மட்டுமே #

    சார் ...இதன் வெற்றிக்கு பிறகு அதன் ஆயுள் பல வருடங்கள் லயனை போலவே நீடித்து கொண்டு இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு பலமாகவே உள்ளது :)

    மீண்டும் ஒரு மறுபதிப்பு தொகுப்பு ...இனி வேண்டாமே ...#

    ஓகே சார் ..இனி உங்களை தொல்லை படுத்த மாட்டோம் ...:)

    என் பெயர் டைகர் அல்லது கார்ட்டூன் ஸ்பெஷல் ...ஏதாவது ஒன்று எனில் எனது சாய்ஸ் "கார்ட்டூன் ஸ்பெஷல் "சார் ...தாராளமாக டைகரை அடுத்த வருடம் கொண்டு வரலாம் ..படிபடியாக மேலே சென்றவர்கள் சிறிது காலம் கழித்து கீழே சறுக்கினால் தவறு அல்ல ....உடனே சறுக்கினால் அவருக்கு மட்டுமல்லாமல் அவர் ரசிகர்களுக்கும் வருத்தமாக இருக்கும் அல்லவா ...:)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவரே...ஆனாலும் உங்க மனவுறுதியைப் பாராட்டுகிறேன் ! கடந்த பதிவில் வாங்கியது மறப்பதற்குள் / மறைவதற்குள் அடுத்த கோலாட்டத்துக்கு தயாராகி விட்டீர்களே..!!

      Delete
    2. ஆசிரியர் சார் ...

      எங்கள் போராட்ட குழுவோ ...சேந்தம் பட்டி கரகாட்ட குழுவோ ....இரண்டிலும் குழாயடி பெண்கள் தலை முடியை பிடித்து ஆட்டி சண்டை போடுவது போல சண்டை போட்டாலும் ...அடுத்த நாள் ஒரே தட்டில் இரண்டு பேரும் இணைந்து சாப்பிடுவோம் சார் ... :-)

      Delete
  32. சார், அசாத்திய சித்திரங்கள் கொண்ட சினிபுக்கின் ஆல்பா தொடரை வெளியிட முடியுமா...

    ReplyDelete
    Replies
    1. ESS : இல்லை சார்...அந்தக் கதைத் தொடரில் ஏனோ பெரியதொரு மையல் எழவில்லை ! 10 ஆண்டுகளாய் நானும் அதனை அவ்வப்போது பரிசீலனை செய்வதுண்டு தான் ; அதன் பலனாகக் கிட்டியது நமது அந்நாளைய காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழுக்கொரு அட்டைப்படம் மட்டுமே !

      Delete
  33. வருடம் ஒரு முறை காமிக்ஸ் நண்பர்கள் மாநாடு ...#

    ஆஹா ...நினைத்தாலே இனிக்கிறது சார் ..இந்த முறையை எங்கள் சேந்தம்பட்டி குழுவினர் சென்னை பயணத்தை சொன்ன போதே இனிமையான தருணத்தை இழந்து விட்டது புரிந்தது...இப்போது நீங்கள் விவரித்தவுடன் காதில் புகை வருகிறது :)இனி எவ்வளவு சிக்கலான சூழல் என்றாலும் தவறாது கலந்து கொள்வேன் சார் ..

    அதுமட்டுமல்லாமல் எனது நண்பர்கள் முன் உரையாற்றுவதை எப்படி கேட்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் ..காரணம். ..

    எங்கள் போராட்ட குழுவும் ...சேந்தம்பட்டி குழிவினரும் அடிக்கடி சேலத்தில் மாநாடு போடுவோம் சார் ..அனைவரும் தலீவரே நீங்கள் தான் முதலில் பேச வேண்டும் ..என்று மறுக்க மறுக்க பேச வைப்பார்கள் ..சரி ...பயபுள்ளைக பாசமா பேச சொல்றாங்க அப்படின்னு சீரியசாக பேசி முடித்தால் ..

    எங்கள் செயலாளர் ..தலீவரே ...நீங்க பேசறப்ப தெரியாம தூங்கிட்டேன் ...திரும்ப போய் பேசுங்க அப்படிம்பாரு ...

    சரின்னு திரும்ப பேசிட்டு வந்தா ...

    ரவிகண்ணன் ன்னு ஒருத்தர் இருக்கார் ...சாரி தலீவரே ..மைக்கை ஆன் செய்ய மறந்துட்டேன் ...இப்போ பேசுங்க என்பார் ..

    அதையும் நம்பி திரும்பி பேசுறப்போ நம்ம மல்லூர் ரவியை பார்ப்பேன் ..அவர் ரொம்ப சீரியஸா கேமரா எல்லாம் வச்சுட்டு கன்னத்தில் கை வைத்து விட்டு என்னையே சீரியஸா பார்ப்பாரு ..என் பேச்சுக்கு கூட இவ்வளவு சிந்தனை வயப்படுறாறே அப்படின்னு சந்தோச பட்டு கீழே இறங்கினா ...

    அவரு ...பரணி ...நீங்க எப்படி பேசினாலும் எப்படி சிந்திக்கிறதுன்னு தெரியலை ...போய் இன்னொரு தடவ பேசுங்க அப்படிம்பாரு..

    அதையும் நம்பி திரும்ப பேசினா ..நம்ம டெக்ஸ் விஜய் ....காமிக்ஸ் என்றால் டெகஸ்...டெக்ஸ் என்றால் காமிக்ஸ் ...எனவே டெகஸ் பத்தி பேசிட்டு அப்புறமா கீழே இறங்குங்க அப்படின்னு மிரட்டுவாரு ...

    பயந்துட்டே திரும்ப பேசினா ...

    கடைசியாக வருவாரு பாருங்கள் நம்ம மாயாவிஜீ ....

    சூப்பர் தலீவரே ..அருமை ...பாராட்ட வார்த்தையே இல்லை ...கலக்கிட்டீஙக ...நான் எதிர்பார்க்கவே இல்லை ....அப்படின்னு பாராட்டுவாரு ...நானும் வெக்கத்தில சிரிச்சுட்டு தலையை குனிஞ்சா ...

    தலீவரே ...இப்படி பாராட்டுற அளவுக்கு போய் பேசினும் ..போய் பேசுங்க ...அப்படின்னு மிரட்டுவாரு ....

    என்னமோ போங்க .....

    ReplyDelete
    Replies
    1. //
      எங்கள் செயலாளர் ..தலீவரே ...நீங்க பேசறப்ப தெரியாம தூங்கிட்டேன் ...திரும்ப போய் பேசுங்க அப்படிம்பாரு ... ///

      தெரியாமயா?... தெரிஞ்சேதான் தூங்குறேன் தலீவரே! ஹிஹி ஹோ!

      Delete
    2. கிர்ர்ர்ர் .........

      Delete
    3. சூப்பர், மாநாட்டுக்கு எங்களுக்கு அழைப்பு உண்டா....

      Delete
    4. கண்டிப்பாக ஜி ......உங்கள் வருகை எங்கள் பெருமை .. :-)

      Delete
    5. மாயாவி ஜி வேற என்னோட போட்டோ எதுவும் கிடைக்கலையா ? என்ன ஜி இப்படி பண்றிங்களே ஜி.ஹி ஹி.

      Delete
  34. 'மின்னும் மரணம்' வெளியீட்டு விழா மறக்க முடியாத ஒரு சுகமான அனுபவம் சார்...என்னதான் 'ஜனவரி சென்னைப் புத்தகத் திருவிழா மாதிரியோ இல்லை ஈரோடு புத்தகத் திருவிழா மாதிரியோ ஜனங்களின் கூட்டம் குறைவு என்றாலும்...நமது 'காமிக்ஸ்' நண்பர்களுடன் கழிந்த அந்த ஒரு நாள் பொழுது மனதுக்கு என்றுமே உற்சாகம் தருபவையே!!!

    அன்று தெரிந்த நண்பர்களையும், Blog ல் மட்டுமே அறிமுகமாகி முகம் தெரியாத பல புதிய நண்பர்களையும் அன்றைய தினம் நேரில் சந்தித்தது அளவற்ற மகிழ்ச்சி சார்...
    அதுவும் ஒரு காமிக்ஸ் குடும்பத்தின் 'மூன்று தலைமுறை எடிட்டர்களையும்' ஒரு சேர சந்திப்பது நிஜமாலுமே ஒரு சுகமான அனுபவம்...
    முத்து காமிக்ஸின் பிதாமகர் கையால் 'மின்னும் மரணம்' போன்று ஒரு மைல்கல் இதழ் வெளியிட்டதும் அவரை நேரில் சந்திததுமே போதும் சார்...ஒரு மாமாங்கத்துக்கு இந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கும் :-):-):-)

    ReplyDelete
  35. ஹாய் எடிட்டர்
    தாராளமாக டைகர் special அடுத்த வருடமே வரட்டும்.
    ஆனால் cartoon special இந்த வருடமே வந்தால் நல்லம்.
    C.S வரும் பட்சதில் அதன் விலையும் 1000 ஆ? அதுவும் மி.மி போla limited edition ஆ?

    1000 பிரதி மட்டுமே (limited edition ) கொண்ட மி.மி தற்பொது கடைகளில் கிடைக்கிறதே..!! நாம் 1000 முன் பதிவுகளை எட்டவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. niru : ஆயிரம் முன்பதிவுகளா ? ஆஅவ்வ்வ்வ்வ் !!

      Delete
  36. வருடம் ஒரு முறை விழா என்பது நிபந்தனைக்கு உட்பட்டது...

    நிபந்தனை 1. ஒவ்வொரு விழாவிலும் ஒரு குண்டு புக் வெளியிட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ரம்மி ஜியின் கருத்தை வழிமொழிகிறேன் ,,,,

      Delete
    2. நானும் இதை வழிமொழிகிறேன்.

      Delete
  37. ஓ.கே.சார்.
    என்ற பேரு டைகருங் கதைக்கு கல்தா கொடுப்பதாக வைத்துக்கொள்வோம்.
    முத்து 350 எனும் மைல்கல்லாக வரப்போகும் இதழ் எது என்ற கேள்வி அடுத்து வருகிறதே சார்.,?

    என்னுடைய கருத்து,

    மறுபதிப்புகளில் மீதமுள்ள ஒரு நான்கைந்து கதைகளை (மாயாவி., லாரண்ஸ்., ஸ்டெல்லா (அதான் ஜானி நீரோ ஒப்புக்கு வருவாரே, அந்த கதை) இவற்றோடு ஹீரோ முக்கியத்துவம் இன்றி வெளிவந்து பட்டையைகிளப்பிய ஒன்றிரண்டு கதைகளையும் சேர்த்து) ஒரு குண்ண்ண்ட்டு புக்காக வெளியிட்டு முத்து 350க்கு நியாயம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா சார்.?
    ஏறகனவே சந்தா கட்டிவிட்டதால் கூடுதல் செலவுக்கு வாய்ப்பில்லை.
    கடைகளில் வாங்குவோரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
    இந்த மாற்றம் சரியாக வருமா சார்.?
    என்ன சொல்றிங்க மக்களே.???

    ReplyDelete
    Replies
    1. (((((( என்னாது... 'முத்து-350'க்கு மாயாவியும், லாரன்ஸுமா?? நோ.... ))))) (ஸ்டெல்லா கூட ஓகேதான் ஹிஹி) இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். பின்னே? முத்து-350'ன்னா படிக்கிறாமாதிரி இருக்கவாணாமா? ;)

      Delete
    2. என்னது ...முத்து 350 க்கு மாயாவி ...லாரன்ஸ் ஆஆ .....ஏன் ஜி இந்த கொலை வெறி ...அப்படியே அது மறுபதிப்பு கதையாக இருந்தாலும் இது வரை மறுபதிப்பில் வராத வேதாளர் ...டிடக்டிவ் ஸ்பெஷல் அப்படி கேளுங்க...அதை விட்டுட்டு .......

      Delete
    3. Paranitharan K24 April 2015 at 12:33:00 GMT+5:30
      என்னது ...முத்து 350 க்கு மாயாவி ...லாரன்ஸ் ஆஆ .....ஏன் ஜி இந்த கொலை வெறி ...அப்படியே அது மறுபதிப்பு கதையாக இருந்தாலும் இது வரை மறுபதிப்பில் வராத வேதாளர் ...டிடக்டிவ் ஸ்பெஷல் அப்படி கேளுங்க...அதை விட்டுட்டு .......


      +1

      Delete
    4. டிடக்டிவ் ஸ்பெசல்?????

      Delete
  38. மீண்டும் ஒரு மறுபதிப்பு தொகுப்பு ...இனி வேண்டாமே ...#

    ஓகே சார் ..இனி உங்களை தொல்லை படுத்த மாட்டோம் ...:)
    ஓகே சார்...நானும் தான் சார்...இன்னும் கொஞ்சம் நாளைக்கு 'இரத்தப்படலம் மறுபதிப்பு' பற்றி கேட்டுத் தொந்தரவு செய்யமாட்டேன்...:-)

    ஹி..ஹி...ஆனால் இந்த 'மறுபதிப்பு தொந்தரவு செய்யாமை' கொஞ்ச நாளைக்கு அல்லது கொஞ்ச வருடத்திற்கு (?!!) மட்டுமே தற்காலிமாக நிறுத்தி வைத்திருப்போம் சார்...

    அப்புறம், 'போராட்டக் குழுட் தலைவரே' வேண்டாம்னு சொன்னாலும் சரி 'இரத்தப்படலம்' முழுத்தொகுப்பு முழு வண்ணத்தில் வெளியிட்டுத்தான் ஆகனும்...என்ன ஆனாலும் சரி நான் விடமாட்டேன் சார் :D

    ஆண்டு 2020 என்ன 2025 ஆனாலும் கூட ஓ.கே., 'இரத்தப்படலம்' முழுத்தொகுப்பு முழு வண்ணத்தில் வந்தே ஆக வேண்டும் சார்...I'm waitinggggg....அல்லது இதை இப்படியும் சொல்லலாம் We r waitingggg.....:-)

    ReplyDelete
    Replies
    1. சத்யா ஜி ...வேணுமின்னா 3015 வரை உங்களால் காத்து கொண்டு இருக்க முடியுமா ... :-)

      நானும் அப்போது உங்களுக்காக குரல் கொடுக்கிறேன் ,, :-)

      Delete
  39. Hai.still im waiting for minnum maranam.. missed my pre booking details at office.
    Yesterday I called and confirmed my order.so sad..

    ReplyDelete
  40. //@ FRIENDS : அட...வெளிலே டைப் அடிச்சா அதை இங்கே copy -paste பண்ண எதாச்சும் மார்க்கமுள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்களேன் !! டைப் அடித்தே என் சனிக்கிழமைகள் ஓய்ந்து போய் விடுகின்றன சாமியோவ் ! //

    எடிட்டர் சார்...முடிந்தால் 'அழகி ப்ளஸ்' என்னும் இலவச சாஃப்ட்வேரைப் பயன்படுத்திப் பாருங்களேன்...இதை யஉபயோகிப்பது மிக மிக சுலபம்...இதை உபயொகித்து கண்ணியில் டைப் செய்து விட்டு பிறகு blog ல் copy,paste செய்துகொள்ளுங்கள்...

    ஒரு word document யோ அல்லது browser யோ open செய்துவிட்டு, பிறகு இந்த 'azhagi plus' அப்ளிகேஷனை open செய்துவிட்டு 'alt+3' கீயினை அழுத்தினால் போதும் நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் அனைத்தும் தானாவே தமிழுக்கு மாறிவிடும்...'தமிழ்.ஹிந்தி,தெலுங்கு etc.' என பல மொழிகளையும் support செய்யும்...

    http://www.azhagi.com/
    http://www.azhagi.com/plus.html

    ReplyDelete
    Replies
    1. அழகி.... இங்கய்யுமா
      அவ்வ்வ்...

      Delete
    2. @Jaya Sekhar:
      ஹா..ஹா..:-)
      நிறைய சாஃப்ட்வேர் இருந்தும் இதை உபயோகிப்பதற்கு இந்தப் பெயரும் ஒரு காரணமல்லவோ:D

      Delete
  41. அன்று 'மி.ம'ல் கசமுசா கொசமுசா கருப்பு-வெள்ளையில் ( கருப்பு-பழுப்பில்'னு சொன்னாத்தான் சரியா இருக்கும்) குத்துமதிப்பாய் பார்த்திட்ட ஓவியங்களை இன்று கலர்ஃபுல்லாய் கண்களில் வாங்கிடும் அனுபவம் இருக்கிறதே.... அம்மாடியோவ்!!!!!
    ஆனால், அன்றும் இன்றும் மாறாத ஒரே விதிவிலக்கு : மிஸ்டர் பரட்டையின் அழகு முகம்! :)

    ReplyDelete
  42. எடி சார்
    போஸ்டரில் புளூபெரி ஏன் மஞ்சள் சட்டை புளூ பேண்டில் வருகிறார்

    ?

    ReplyDelete
  43. //அன்றும் இன்றும் மாறாத ஒரே விதிவிலக்கு : மிஸ்டர் பரட்டையின் அழகு முகம்! :)//
    +1 :-)

    ReplyDelete
  44. டியர் எடிட்,

    மாதம் ஒரு காமிக்ஸ் புத்தகம் கூட வருவதில்லையா, என்று பெட்டி கடைகளுக்கு படையெடுத்த காலம், வருடத்திற்கு ஒன்றிரண்டு வண்ண புத்தகமாவது வெளிவராத என்று எண்ணிய சமயம் என்று ஒன்ற இருந்ததையே, தற்போதைய மாதம் பல இதழ்கள், பெரும்பான்மை வண்ணத்தில், அட்டகாச ஸ்பெஷல் இதழ்கள், என்று பலவகை விருந்தினை அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைத்து பெரிய பாக்கியமே.

    ஞாயிறன்று நண்பர்கள் பெரும்பாலானோரை நேரில் கண்டது, நீங்கள் மற்றும் தந்தையார் & ஜுனியர் சகிதம் அவர்களுடன் உணவருந்தியது, ஒரு நிறைவான நிகழ்வு.

    வருடம் ஒன்றிற்கு, ஒரு புதிய நகரத்தில், புத்தக கண்காட்சி ஒட்டி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதில் எனக்கும் சம்மதமே. கண்டிப்பாக ஆவண செய்யுங்கள்... ஆனால், முன்கூட்டியே அதற்கு அறிவிப்பு, அதுவும் ஒரு ஸ்பெஷல் வெளியீடிற்கு அருகாமையில் இருப்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

    மின்னும் மரணம் பற்றிய மேலோட்ட பார்வை : அட்டை ஒருவித கிளாசிக் லுக்கை கொண்டாலும், அந்த வண்ண சேர்ப்பு சற்றே டல்லடித்துள்ளது என்று நன்றாக தெரிகிறது. கூடவே, ப்ளுபெர்ரியின் ஷேவ் செய்யாத முகஅமைப்பை ஒரிஜினல் ஓவியத்தில் இருந்து, மாற்றம் செய்து அவரை ஆப்ரகாம் லிங்கன் போல ஆக்கியிருப்பது, கூடவே அவரின் உடைந்த மூக்கை மொத்தமாக சர்ஜரி செய்திருப்பது போன்றவை, அது ப்ளுபெர்ரி ஸ்பெஷல் தானா என்று கேட் வைத்து விட்டது. ஆனால் உள்ளே பக்கங்கள் அனைத்தும் அருமையாக அச்சடிக்கபட்டிருந்தது, ஒரு பெரிய ப்ளஸ் பாய்ண்ட். Truly a Collectors special. நேரம் கிடைத்ததும் ஒரு முழு வாசிப்பிற்கு தயார்படுத்தி வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருடத்திற்கு 1-2 கலெக்டர் எடிஷன் ஸ்பெஷல் இதழ் என்பதை கடைபிடிக்க வேண்டும் என்னுடைய எண்ணத்தில எந்த மாற்றமும் இல்லை. கொண்டாட்டங்கள் கோரிக்கைள் எல்லாம் ஒரு பக்கம் ஆராவாரம் செய்தாலும், மிகவும் முக்கியமான ஒன்று, என்னை பொறுத்த வரையில், மாதம் மாதம் தவறாமல் 3, 4 புத்தகங்கள் வெளிவருவதே.

      கோடை மலர், தீபாவளி அல்லது பொங்கல் ஸ்பெஷல்கள் என்று வரையறுப்பது.... அதுவும் 250,300,350 போன்ற மொத்த இலக்க இதழ்களின் சமயத்தில் அவற்றை வெளியிட வைப்பது என்று ஒரு Balancing Act எப்போதும் நாம் கடைபிடித்தலே நலம்.

      Delete
    2. ரபிக் ராஜா சார் ...கூற்றை வழிமொழிகிறேன் ....

      Delete
    3. ரஃபிக் அண்ணன் வாயால் ரணகளமில்லா வாழ்த்து... அடடே...

      Delete
    4. //ஒரு Balancing Act எப்போதும் நாம் கடைபிடித்தலே நலம்.//
      யெஸ். இல்லாவிட்டால் எல்லா இதழ்களும் (முன்பதிவு இதழ்களை குறிப்பிடவில்லை) சந்தாதாரர் தவிர்ந்த மற்றைய வாசகர்களுக்கு போய்ச்சேருவதில் குழப்பம் ஏற்படலாம். இதழ்களை அவர்கள் தவறவிட்டுவிட்டு தவிக்க நேரிடலாம். இல்லை, பட்ஜெட் நிலவரப்படி அதுவா - இதுவா என்று யோசித்து சில இதழ்களை அவர்களாகவே மனமின்றி கைவிடவும் நேரலாம். ரீ பிரிண்ட் இதழ்கள் வருவது போல ரூபா 35 - 50 இதழ்களை அன் லிமிடட் ஆக வெளியிட்டாலும் பெரிதாக பர்சை உறுத்துவது தெரியாது. 100 ரூபாவுக்கு மேற்பட்ட இதழ்களெனில் நண்பர் ரபிக் சொல்வதுபோல, இப்போது போல ஒரே சீராக வெளியிடுவது நலம் தரும்.

      Delete
    5. //வருடம் ஒன்றிற்கு, ஒரு புதிய நகரத்தில், புத்தக கண்காட்சி ஒட்டி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதில் எனக்கும் சம்மதமே. கண்டிப்பாக ஆவண செய்யுங்கள்... ஆனால், முன்கூட்டியே அதற்கு அறிவிப்பு, அதுவும் ஒரு ஸ்பெஷல் வெளியீடிற்கு அருகாமையில் இருப்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். ///

      +1
      நண்பர்களுடனான சந்திப்பு என்பதையும் தாண்டி ஏதாவதொரு சிறப்பு வெளியீடை நேரில் பெற்றுக்கொள்ளும் உத்வேகம் நிறைய நண்பர்களை குஷிப்படுத்திடும்!

      Delete
    6. Rafiq Raja : //ப்ளுபெர்ரியின் ஷேவ் செய்யாத முகஅமைப்பை ஒரிஜினல் ஓவியத்தில் இருந்து, மாற்றம் செய்து அவரை ஆப்ரகாம் லிங்கன் போல ஆக்கியிருப்பது, கூடவே அவரின் உடைந்த மூக்கை மொத்தமாக சர்ஜரி செய்திருப்பது போன்றவை, அது ப்ளுபெர்ரி ஸ்பெஷல் தானா என்று கேட் வைத்து விட்டது. //

      அட..தளபதி 'ஏக் தம்மில்' ஜனாதிபதியாகி விட்டாரென்று நம்மவர்கள் சந்தோஷப்பட ஒரு காரணம் கிடைத்தது போலாகி விட்டதே !!

      Annual Collector's Editions பற்றிய உங்கள் சிந்தனைக்கு நானும் கை தூக்குபவனே...! ஆனால் காமிக்ஸ் ஒரு காஸ்ட்லி hobby என்ற சிந்தை தலைதூக்கிடக் கூடாதே என்ற ஆதங்கம் தான் கைகளைக் கட்டிப் போடும் சமாச்சாரம் ! பார்ப்போமே..!

      Delete
  45. அட்டை படம் என்னை பொறுத்தவரை ஏமாற்றம் தான். எந்த வகையில் என்றால் அது டைகர் மாதிரியே தெரியவில்லை. ரோஸ் பவுடர் அடிச்சு நீங்க இறக்கிய ராசா யாருன்னு தான் நினைத்தேன். அது டைகரே இல்லையே சார். விழாவிலேயே உங்களிடம் சொல்லலாமா என்று நினைத்தேன். ஆனால் அந்த விழா மூடை ஏன் என் குறையால் கெடுக்க வேண்டும் என்று இருந்து விட்டேன். டைகருக்கு கம்பீரமாக எத்தனையோ ஓவியங்கள் இருக்கிரது. சரி உடுங்க போட்டது போட்டாச்சு.

    ஆனால் ஹார்ட் பௌண்ட் அட்டை சகிதம் கலக்கல். அட்டைப் படம் வண்ணக் கலவை சூப்பர். ஒவ்வொரு ஸ்பெஷல் இதழிலும் அட்டையில் ஒரு புதுமையை வைத்து விடுகிறீர்கள். இரவிலும் காலை எழுந்தவுடனும் அரை மணிநேரம் தளபதியாருடன் தான். பின்ன எப்ப முடிக்கிறது?

    வெயிலோடு விளையாடி என்ற பாட்டு TUNE இல் படிக்கவும்.

    "தளபதியோடு விளையாடி சில்க்கோடு உறவாடி
    மெக்சிகன்களோடு மல்லுக் கட்டி ஆட்டம்போட்டோமே "

    ஜானியிடம் ஒரு முறை கருப்பு வெள்ளையில் வந்த மின்னும் மரணம் குடுங்க என்று கேட்டபோது கலரில் வரப் போகுது அதையே படிங்க என்று சொல்லிவிட்டார். அப்போ ஏக்கம் இருந்தாலும் இப்போ கலரில் நேரடியாக படிப்பது அற்புதமாக இருக்கிறது. நண்பர்கள் குழாமோடு கரகாட்டம் ஆடியது மிக நன்றாக இருந்தது. அவ்வளவு நண்பர்களை சேர்க்க தெரியாத மக்குப் பிள்ளை நான். இப்போது இருக்கும் நண்பர்களில் பலர் காமிக்ஸ் மூலம் அறிமுகமானவர்களே. வாழ்க காமிக்ஸ் காதல்.

    வருடம் ஒரு முறை வாசகர் சந்திப்பு இப்போ நடந்தது போல முழு நாள் நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே இனிக்கிறது.

    கௌ கதைகள் எவ்வளவு போட்டாலும் படிப்போம் ஆனால் பட்ஜெட் இடிக்குமே என்பதற்காக அடுத்த வருடம் தள்ளி போடலாம்.

    ReplyDelete
    Replies
    1. Raj Muthu Kumar S : நம்புங்கள் சார்....தளபதியை நான் இத்தனை handsome ஆகப் பார்ப்பது இதுவே முதல் முறை - வான்சின் மார்ஷல் டைகர் அவதார் நீங்கலாக !! :-)

      Delete
  46. கௌ -பாய் கதைகள் அதிகம்மோ என்று தோன்றுகிறது ...#

    சார் ......மாதம் ஒரு கௌ பாய் காமிக்ஸ் வராதா என ஏங்கி கொண்டு இருக்கிறோம் .....இதில் அதிகமா என வினவுவது ......சரியாக தெரிய வில்லை ...

    ReplyDelete
  47. தங்களின் டூர் பேக்கேஜ் பயன் தரும்.திகிலின் வருகைக்கு நன்றி.காமிக்ஸ்.வாசிப்புக்கு வாசகர்களின் பங்களிப்பை கோரலாம்.உதவ நண்பர்கள் யாரும் மறுக்க போவதில்லை.

    ReplyDelete
  48. ஆசிரியர் சார் ...

    எங்கள் போராட்ட குழுவோ ...சேந்தம் பட்டி கரகாட்ட குழுவோ ....இரண்டிலும் குழாயடி பெண்கள் தலை முடியை பிடித்து ஆட்டி சண்டை போடுவது போல சண்டை போட்டாலும் ...அடுத்த நாள் ஒரே தட்டில் இரண்டு பேரும் இணைந்து சாப்பிடுவோம் சார் ... :-)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவரே...சங்கம் அபராதத்தில் ஓடுகிறது என்றாலும், கூடுதலாய் ரெண்டு தட்டுக்களை வாங்கிப் போடக் கூடாதா ?

      Delete
  49. சார் ...அப்போ தை பிறக்காதா ....?
    கார்டூன் ஸ்பெசல் போடுங்கள் ....!

    ReplyDelete
  50. Dear Vijayan Sir,
    It’s very heartening to see so many improvements in our comics (quality, price, in time delivery, so many specials) but still I feel there is something missing in long run, adding new readers to our comics family. 25 years back when I started reading it was not Lion, Muthu or mini lion it was Poonthalir and Rani Comics after that I started to buy whatever comics I see in shop. That time comics market was buzzing with variety of genres which encouraged young readers like me to read and submerge into this comics world. At this moment there is only one tamil comics publisher (that’s us). I don’t want you to just satisfy the old readers alone, please think about new readers also. I don’t see that many stories to encourage young readers in this year’s list. We are not going to get new readers in the age group of 30+. It would be better you revive Mini-Lion targeting young readers with fantasy stories and comedy stories. I would like to see Mini-Lion rather than Thigil or both in 2016.
    Regarding the Pricing, Mini-Lion should be around Rs.50 or less so that Kids can buy it out of their pocket money.

    Thanks& Regards.
    S.Mahesh

    ReplyDelete
    Replies
    1. // please think about new readers also. I don’t see that many stories to encourage young readers in this year’s list. We are not going to get new readers in the age group of 30+. It would be better you revive Mini-Lion targeting young readers with fantasy stories and comedy stories. I would like to see Mini-Lion rather than Thigil or both in 2016.///

      +1. Good suggestion!

      Delete
    2. I echo your ever words Mahesh..!

      +1

      Delete
    3. Mahesh & FRIENDS : இது பற்றி நான் நிறையவே பதிவிட்டுள்ள போதிலும், இதே கேள்வி மீண்டும் எழும் போது ஒரு சிறு அயர்ச்சி ஏற்படுகிறது நண்பரே !

      சின்னதாய் ஒரு விஷயத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமே முதலில்....! நமது மறுவருகை துவங்கி 3 ஆண்டுகள் ஆகியுள்ளன தான் ; அட்டகாசமான வாசகக் குடும்பம் நமக்குத் தோள் கொடுத்து வருவதும் நிஜமே ! ஆனால் அதற்காக நாம் இந்தத் துறையில் ஆழமாய் கால் பதித்து விட்டதாகவோ - அடுத்த நிலைகளைப் பற்றிச் சிந்திக்கும் வளர்ச்சிகளைப் பெற்று விட்டதாகவோ நான் இன்னமும் நினைக்கவில்லை ! விற்பனைகளைப் பெருக்குவதற்கு இன்னமும் நிறைய முயற்சிகள் அவசியம் ; விநியோக முறைகளில் உள்ள சிற்சிறு சிக்கல்களைக் களையும் அவசரம் - என நம்முன்னே காத்திருப்பவை நிறையவே ! So தற்போதைய target audience -ஐ நாம் பரிபூரணமாய் திருப்திப் படுத்திவிட்டதானதொரு எண்ணத்தில் - அடுத்த தலைமுறைக்கான கவனங்களைச் செலுத்தத் தயாராவது - சுவரைப் பராமரிக்க மறந்து , சித்திரங்களை மெருகூட்ட முனைவதற்குச் சமானமாகாதா ? இன்றைய பொழுதுக்கு நாம் தெளிவாய் நியாயம் செய்யும் முன்பே - நாளைய நாட்களுக்கான சிந்தனையில் லயிப்பது optimistic ஆக இருக்கலாம் - ஆனால் யதார்த்தமாய் இராதே !

      அடுத்த தலைமுறை நமக்கு அவசியமே என்பது சத்தியமான வார்த்தைகள் ! புது, இளம் வரவுகளின் அவசியத்தை நானும் நூறு சதவிகிதம் உணர்ந்தே உள்ளேன் ! அதே சமயம் அவர்களை ஈர்க்க அழகான கதைகளை / களங்களை தயார் செய்வதும் முக்கியமன்றோ ? கடந்த 15 ஆண்டுகளாகவே நாம் லக்கி லூக் & சிக் பில் ஜோடியைத் தாண்டி கார்ட்டூனில் வேறு எவரோடும் பெரியதொரு வெற்றியைக் கண்டதில்லை எனும் போதே - அந்த genre -ல் நமக்கு எட்டும் தூரத்திலுள்ள கதைகள் மிகக் குறைவே என்பதில் இரகசியங்கள் ஏதும் இல்லையே !

      நாம் முதலில் வளர்ந்தாக வேண்டும் நண்பரே ; அதன் பின்னே தான் நம் சிறார்களுக்கான popular கதைக்களங்களுக்குள் அடிவைக்கும் தகுதியே நமக்குக் கிடைத்திருக்கும் ! இது தான் ground reality எனும் போது நாம் அடுத்த தலைமுறை பற்றிய கவனம் செலுத்துவதில்லை என்பது ஒரு மேலோட்டமான பார்வையைத் தவிர வேறொன்றுமில்லை !

      Delete
  51. கார்ட்டூன் ஸ்பெஷல் இந்த வருடம் வெளியிட்டுவிட்டு என் பெயர் டைகர் 2016ல் வைத்து கொள்ளலாம் சார். உண்மையில் கடந்த ஒரு வருடமாகவே கௌபாய் கதைகள் கொஞ்சம் Overdoseதான் !

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : செய்தால் போச்சு நண்பரே !

      Delete
  52. சார் மேலே நிறைய நண்பர்கள் ரத்த படலம் கேட்டதால் நீங்கள் உங்கள் கருத்தினை மறுபரிசீலனை செய்வீர்கள் என நினைக்கிறேன் ,......தப்பி செல்லத்தானே சிறைச்சாலைகள் ; நண்பர்களால் மாற்ற படத்தானே தீர்மானங்கள் .
    இரத்த படலம் அடுத்த வருடம் வர உங்களுக்கு சிந்தையில் நுழைந்து வரமளிக்க எல்லாம் வல்ல வாஞ்சை வேண்டுகிறேன் நடமாடும் திவம் வான்ஹாம்மே முன்னிலையில் .......
    அடுத்த வருடம் ......தை மாதம்.....வழி பிறக்கும்.....
    இரத்தத் துளிகளா.....கண்ணீர்த் துளிகளா???????????????

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல் - என்னுடைய ஆதரவு என்றும் உண்டு. நாம் ஓரிரு ஆண்டு காத்திருப்போமே? 2020 -குல் வந்தால் போதுமே? ஆசிரியரை சிரமப்படுத்த வேண்டாமே?

      Delete
    2. // தப்பி செல்லத்தானே சிறைச்சாலைகள் ; நண்பர்களால் மாற்ற படத்தானே தீர்மானங்கள் .//
      வாவ்...ஸ்டீல் சான்ஸே இல்ல..அட்டகாசம்..! இந்த ஒரு வரியையே ஆயிரம் முன் பதிவுக்கு தாரக மந்திரமாக அமைப்போம்..! அடுத்தமுறை இதையே 'ஸ்டிக்கர்' ஆக நெற்றியில் ஒட்டிக்கொண்டு போராட்டத்தில் இறங்கலாம்..! என்ன சொல்கிறீர்கள்..!

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : 18 பாகங்கள் - 852 பக்கங்கள் - கிட்டத்தட்ட ரூ.2000 என்றதொரு விலைப்பட்டியல் : இது அத்தனையையும் வெறுமனே ஒரு சேகரிப்பின் பொருட்டு மாய்ந்து மாய்ந்து நீங்கள் கோருவதும் சரி ; அதற்கான உழைப்பை நாம் செலவிடுவதும் சரி - ஒரு உலகமகா விரயமாகாதா ?

      வாழ்க்கை அழகானது நண்பரே..! ஒவ்வொரு புதிய நாளும், ஒவ்வொரு புது அனுபவமும் நமக்கொரு புதுப் பரிமாணத்தைக் காட்டும் சக்தி கொண்டவை ! காமிக்ஸ் உலகினில் நமக்குக் காத்திருக்கும் களங்களும் அது போலவே ரம்மியமானவை ; சுகந்தமானவை ! என்றோ ஒரு சமயம் நிறைந்திருந்ததொரு பெருங்காய டப்பாவை இன்னமும் நுகர்ந்து கொண்டே சிலாகிப்பதை விட, நகர்ந்து சென்று அடுத்த ரசனைக்கு நேரம் கொடுத்துத் தான் பாருங்களேன் ? இரத்தப்படலத்துக்குத் தாத்தாவான கதைகள் எத்தனை காத்துள்ளனவோ - நமக்காக ?

      Delete
    4. அப்போ வேதாளர் வருகிறாரா எடி சார்

      Delete
  53. சார் ஒரு சின்ன விசயம் என்னடாது சின்னப்பிள்ளத்தனமா இருக்குன்னு நினைக்காதிங்க, முத்து 350ஸ்பெஷலில் என்பெயர் டைகருக்கு பதிலாக Lmsபோன்று கதம்பமாக Pocket சைசில் குண்டு குண்டுன்னு ஒரு book குடுங்களேன். அல்லது நி.ஒ.நரபலி சைசுக்காவது சுமாரா ஒரு 700பக்கங்களில் சாதா பேப்பரில் கலர்+கருப்பு வெள்ளையில் குறைந்தவிலையில்கொடுக்கலாமா சார்? எத்ததனை பேருடைய கனவு இது நண்பர்களே? நான் மட்டும்தானா?

    ReplyDelete
    Replies
    1. நிலவோளி சைஸ் என்னுடைய personal favourite. உங்க ஆசை சிறுபிள்ளைத்தனம்னு சொல்றீங்க. ஆன.. நான் சொல்றத கேளுங்க..
      லக்கிலூக் வண்ணத்தில் பெரிய சைஸில் படிக்கும் போது, ஒரு ஈர்ப்பு வரவேயில்லை. ஆனால் அதே நேரம் சிறிய சைஸில், வந்த லக்கிலூக் கலர் புத்தகங்கள் என் favourite. எனக்குத் தெரிந்த வரை, லக்கிலூக் பெரிய ஆர்ட்பேப்பர் பிரிண்ட்டை விட, சிறிய சைஸ் பிடிக்கிறது என்று சொல்லும் ஒரே நபர் நான் என்றே நினைக்கிறேன்.

      ஆசைகள்.. விருப்பங்கள்.. பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்.

      Delete
    2. // நி.ஒ.நரபலி சைசுக்காவது சுமாரா ஒரு 700பக்கங்களில் சாதா பேப்பரில் கலர்+கருப்பு வெள்ளையில் குறைந்தவிலையில்கொடுக்கலாமா சார்? //
      நல்ல யோசனை நண்பரே, எடி சார் கவனிப்பாரா ?
      என்னைப் பொறுத்தவரை கருப்பு & வெள்ளை வண்ணத்தை என்றும் விரும்புகிறேன், சில கதைகளை அந்த கலவையில் படிக்கும் சுகமே அலாதியானது.

      Delete
    3. @ FRIENDS : ஏற்கனவே "பல் போன பார்ட்டிகள்" இங்கு நிறைய என்றான பின்னே, இதழ்களின் அளவைக் குறைத்து "டொக்குக் கண்ணர்கள்" என்ற தகுதிக்கு வாசகர்களை ஆளாக்குவானேன் ? :-)

      Delete
  54. To: Edi,
    மே மற்றும் ஜூன் வெளியீடுகள் எவை சார்? அவை பற்றிய ப்ரிவ்யூ ஏதேனும் இந்த ஞாயிறு உண்டா?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : இந்த ஞாயிறுக்கு லீவு விட்டு விடுவோமே..! இடைப்பட்டதொரு நாளில் மே இதழ்களின் preview -ஐ வைத்துக் கொள்வோமா ?

      Delete
  55. மின்னும் மரணத்தின் முதல் அத்தியாயத்தை இப்போதுதான் முதல் முறையாக படிக்கிறேன் மற்ற பாகங்கள் கானலாய் காதல் தவிர படித்துளேன். வண்ணத்தில் படிப்பது அலாதியான அனுபவம் தான் .

    ReplyDelete
  56. அப்புறம்... 'பல் இல்லாமல் போகப்போகிற கிழம்கள்' என்கிற ரேஞ்சுக்கு இங்கே ஒருவர் நம்மைப் பற்றிப் பேசுவதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். நம் நண்பர்களில் பலரும் தூங்கப்போவதற்கு முன்புகூட பாதுகாப்பாக தங்களது பற்களைக் கழற்றிவைக்கும் பழக்கமுள்ளவர்களாயிற்றே... பிறகெப்படி 'பல் இல்லாமல் போகும்'னேன்? ;)

    ReplyDelete
  57. பரணியையும் மாயாவியையும் ஒன்னு சேர விடாதீங்கன்னா கேட்டாதானே .....பாருங்க சிவ்வ்வ்வ்வாவோட அபிநயத்த....மேலே ஏறி காளை தூக்கி ...அடடா ...பரணி இதுமாரி வித்தை செய்யும் பொது சிக்கலையோ !

    ReplyDelete
  58. ///(((((( என்னாது... 'முத்து-350'க்கு மாயாவியும், லாரன்ஸுமா?? நோ.... ))))) ////

    சரி சரி தலைவரும் குருநாயரும் ஜொள்ளிவிட்டால் மறுபேச்சு கிடையாது.
    அப்போ முத்து 350க்கு என்ன செய்யலாம்.
    1.Lms போல கதம்பமாக முற்றிலும் புதிய கதைகளுடன்.
    2. டிடெக்டிவ்ஸ் ஷ்பெசல் (ஏற்கனவே அறிவித்த கதைகள்)
    3.ஒரு பெரிய்ய கிராபிக் நாவல் (இ.இ.கொல்லாதே & தே.ர. தேடலுக்கல்ல இவற்றைப்போல)

    அல்லது விச்சு கிச்சு கலெக்ஷன். (கிர்ர்ர்ர்.………… வேற என்னெத்த சொல்ல.)

    ReplyDelete
    Replies
    1. பின்குறிப்பு :-
      த்ரிஷா இல்லேன்னா திவ்யா அப்படீங்குற பொன்மொழிக்கு ஏற்ற மாதிரி,
      LMS இல்லேன்னா ஒரு ANS மாதிரியாவது கண்டீப்பா வந்தே ஆகணும். ஆங்.!!!!!

      Delete
  59. It ll be good to postpone tiger special so that tiger can be enjoyed next year too .. But Comedy Special is a must Sir ..
    Yemathidathinga ....

    ReplyDelete
  60. //என் தந்தைக்கு - ஞாயிறின் உற்சாகம் வார்த்தைகளில் விவரிக்க இயலா ஒரு மிகப் பெரிய பூஸ்ட் ! //
    எடிட்டர் சார்,
    சென்னை சங்கமத்தில் சிறிது நேரம் தங்கள் தந்தையாருடன் நானும் ஸ்பைடர் ஸ்ரீதரும் பேசிக் கொண்டிருந்த போது., அவர் முத்து காமிக்ஸ் தொடங்கிய மற்றும் முதல் கதைக்கு ராயல்டி கட்டிய நிகழ்வுகளை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார்.
    லயனுக்கு நீங்கள் சிங்கத்தின் சிறு வயதில் எழுதுவது போல் ,
    அவரையும் முத்துவின் முதல் படியில் என்று ஒரு தொடரை எழுதச்சொல்லி கேட்டுக்கொள்கிறேன்.
    தந்தையார் அவர்களுக்கு எழுதுவதில் சிரமம் இருக்குமெனில் அவர் சொல்லசொல்ல வேறு யாரேனும் கூட எழுதலாமே.??
    ஆசைப்படுவது எங்கள் உரிமை. பட்டாயிற்று. இனி தங்கள் கரங்களில் எல்லாம்.!!!

    ReplyDelete
    Replies
    1. சி.சி போல் நீங்களும் எழதவேண்டும் என்று நானும் சீனியர் எடிட்டரிடம் கேட்டேன்.அதற்கு அவர் எடிட்டரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறி விட்டார்.

      Delete
    2. KiD ஆர்டின் KannaN & M.V : நானே VRS வாங்கும் வயதை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்க, இதில் என் தந்தையின் flashback -ஆ ? ஆத்தாட்டியோவ்...பூமி தாங்காது சாமி !!

      Delete
  61. ஆக அனைவரும் சேர்ந்து நம் டைகருக்கு இந்த வருடம் சுபம் போட்டது போல் தெரிகிறது. இதை ஜீரணிக்க முடியவில்லை. ஒருவேளை மிம விலை குறித்த சில விவாதங்களால் ஆசிரியர் இம்முடிவை எடுத்தாரா தெரியவில்லை. என் பெயர் டைகர் படிக்காமலே ஏன் அதை பற்றி விமர்சனம் செய்ய வேண்டும். அப்படி அதன் தரம் பற்றி மாற்று கருத்து இருந்தால் அதனை பிரசுரம் பண்ணாமலேயே விட்டு விடலாமே. ஏன் ஒரு கட்டாயத்திற்காக செய்ய. வேண்டும்.

    ReplyDelete
  62. அருமை நண்பர் கலீல் கட்டுரை பார்க்க...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாயாவி அவர்களே!
      அடக்கமான பேட்டி...
      ஹேன்ஸம் கலீல்...
      நமக்குப் பரிச்சயமான காமிக் ஹீரோக்களின் படம் எதுவும் இடம்பெறாதது ஒரு குறை!

      Delete
  63. கல்யாணத்தன்னைக்கு பொண்ணை காணாத மாப்பிள்ளை மாதிரி மின்னும் மரணம் நேத்து வரை தவிக்க வேண்டியதா போச்சு ....

    திங்கள் கிழமையில் இருந்து தினமும் ஆபிஸ் -க்கு போன் செய்தால் அனுப்பி விட்டோமே நாளை உங்களுக்கு கிடைத்து விடும் என்ற பதில் வரும் ..

    இனிமையான கனிவான பெண் குரல் என்பதால் ...(ஈரோடு விஜய் சகவாஷ தோஷத்தால் :-) }ட்ராக்கிங் நம்பர் கேட்க மனம் மறந்து விட்டது ...

    ஒருவழியாக புக்கை பார்த்த பின் நிம்மதி பெருமூச்சு

    அட்டை எனக்கு என்னவோ நிரம்ப பிடித்துதான் இருக்கிறது ....

    உள் பக்கங்கள் ...அற்புதம் ....

    இது மறுபதிப்பு என்பதை விட புதிய வாசிப்பு அனுபவம் என்ற வகையில் "புதிய கதை "என்றே எடுத்து கொள்ளலாம் ...

    சிறு சேர்ப்பு ...பக்கம் 547..ல் டைகர் மொழி பெயர்க்கதில் ஜப்பான் மொழியும் அடக்கம் ..

    சப்பான்லயும் டைகர கூப்பிட்டு இருக்காக ..:-)

    சிறு திருஷ்டி பரிகாரம் ..

    பக்கம் 543-ல் சார்லியர் காலகட்டம் (1942-1989)என தவறுதலாக கொடுக்க பட்டுள்ளது ..

    அது 1924-1989 என இருந்து இருக்க வேண்டும் ..

    கீழேயே 1947-ல் buck Danny சார்லியர் எழுதி இருப்பதாக இருப்பதால் 5வயதில் லாலி பாப் சாப்பிட்டு கொண்டே சார்லியர் அதை எழுதியிருப்பாரோ என சிலர் ஆச்சரியபட கூடும் ..

    சிறு திருஷ்டி கழிவாக நினைத்து கொள்ளலாம் ..

    ஒட்டு மொத்தமாக பார்த்தால் ....

    எடிட்டர் சார் &டீம் -க்கு தொப்பி தூக்குகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ///5வயதில் லாலி பாப் சாப்பிட்டு கொண்டே சார்லியர் அதை எழுதியிருப்பாரோ என சிலர் ஆச்சரியபட கூடும் ..///

      ஹாஹாஹா!

      Btw, நீங்க ஒரு ஹிஸ்ட்ரி வாத்தியார் தானே? ( எப்படிக் கண்டுபிடிச்சேன் பாத்தீங்களா? )

      Delete
    2. //Btw, நீங்க ஒரு ஹிஸ்ட்ரி வாத்தியார் தானே? ( எப்படிக் கண்டுபிடிச்சேன் பாத்தீங்களா? )//


      நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்.!

      Delete
    3. அட.. நான் கூட.. சார்லியர் 47 வயசுலேயே இறந்துட்டாரேன்னு ஃபீல் பண்ணுனேன்.

      Delete
    4. //எடிட்டர் சார் &டீம் -க்கு தொப்பி தூக்குகிறேன் //

      :D

      Delete
    5. selvam abirami : நல்ல வேளை சுட்டிக் கட்டினீர்கள் சார் ; படைப்பாளிகளுக்கு அனுப்பும் பிரதிகளில் ஸ்டிக்கர் போட்டு சரி செய்திடலாம் !! Phew !!

      Delete
  64. 1.கார்ட்டூன் ஸ்பெஷல் சற்றே முன் பின்னாக வந்தாலும் கண்டிப்பாக போட்டு விடுங்கள் சார் .

    2 புதிய .டைகர் கதைகள் ,திகில் ,டிடக்டிவ் ஸ்பெஷல் அடுத்த வருடம் எப்போது வேண்டுமானாலும் போடலாம் ..

    ReplyDelete
  65. Replies
    1. Madipakkam Venkateswaran : சந்தாதாரர்கள் மட்டுமே பங்கு பெறும் போட்டி எனில் - கடைகளில் வாங்கும் நண்பர்களின் கண்கள் சிவக்கும் சாரே ! இப்போது தான் ஒரு ரவுண்ட் வாங்கி முடித்திருக்கிறேன் - மி.மி. போஸ்டர்கள் & dust jacket விவகாரத்தில் !

      Delete
  66. ஸர்ர் ,
    லயன் கரமிக்ஸின் 350 இதழ். அடுத்த வருடம் வெளிவந்தாலும் , கொமெடி ஸ்பெஷல் மட்டுமாவது இந்த வருடமே வெளிவரட்டுமே ஸர்ர். லக்கி லூக்+ சிக் பில்லை அன்ட் கோ இனை விட புளு கோட் பட்டரளம் + பல புதிய கண்டு பிடிப்புகள் நம் எடிட்டர்ரல் முடியும்தரனே ஸர்ர் பிளீஸ்?

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : கார்டூன் ஸ்பெஷல் ஏகப்பட்ட வாக்குகளை வாங்கிக் குவித்துள்ள போது அதற்கு இசைவு சொல்லாது இருக்க முடியுமா சார் ?

      2015-ல் நிச்சயமாய் கா.ஸ்பெ உண்டு ! ஒ.கே. தானா ?

      Delete
  67. ஒவ்வொரு வருடமும் நண்பர்களை சந்தித்து உரையாடி மகிழ்தல். சூப்பர் ஐடியர ஸர்ர்.

    ReplyDelete
  68. நண்பர் கலீல் அவர்கட்கு என் வரழ்த்துக்கள்.

    ReplyDelete
  69. 1.கார்ட்டூன் ஸ்பெஷல் சற்றே முன் பின்னாக வந்தாலும் கண்டிப்பாக போட்டு விடுங்கள் சார் .

    2 புதிய .டைகர் கதைகள் ,திகில் ,டிடக்டிவ் ஸ்பெஷல் அடுத்த வருடம் எப்போது வேண்டுமானாலும் போடலாம் ..

    ReplyDelete
  70. ஆசிரியருக்கு போராட்ட குழுவின் சார்பாக ஒரு வேண்டுகோள் ...

    தாங்கள் வார நடுவில் இங்கே வந்து பணி புரிந்தாலும் (பதிவு இட்டாலும்) வழக்கம் போல ஞாயிறு பணிக்கு தாங்கள் விடுமுறை எடுக்க நினைக்க வேண்டாம் என்றும் அன்று பணிக்கு வந்தால் மகிழ்வோம் என்றும் அதன் பிறகு ஒரு வாரத்திற்கு நீங்கள் எப்போதும் போல விடுமுறை எடுக்கலாம் என்றும் வேண்டுகிறோம் ..:)

    ReplyDelete
    Replies
    1. அருமையா சொன்னிங்க பரணி.எடி சார் இதுக்காகவே லீவு போடாம வந்துருவாருன்னு நம்புவோம்.

      Delete
    2. Paranitharan K : தலீவரே...அளவுக்கு மீறினால் நண்டு ப்ரையும் ர(ரு )சிக்காதே !

      Delete
    3. இல்லவே இல்லை சார் . இது பொண்டாட்டி க்கு தெரியாமல் ஏதோவொரு வார நாளில் நண்பர்களுடன் சாப்பிடும் பிரியாணி மற்றும் தந்தூரிக்கு இணையானது . ஞாயிறு பதிவு - எப்போதும் போல குடும்பத்தாருடன் சாப்பிடும் கறி சோறு போன்றது. சோ அதை மாற்றினால் எப்படி சார் ? ??????

      Delete
  71. என்னைப் பொறுத்தவரை என் பெயர் டைகரை போடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை சார்,அறிவித்தபடி தளபதி வருவதையே நிறைய பேர் விரும்புவார்கள் என நினைக்கிறேன்.
    அடுத்த வருடத்தில் இருந்தாவது ஆண்டு தொடக்கத்திலேயே நிலையான ஒரு சந்தாவை தெளிவாக திட்டமிட்டு அறிவியுங்கள் சார்.
    A,B,C,D என எத்தனை பிரிவாயினும்,எவ்வளவு தொகையாகினும் முதலிலேயே அறிவித்தல் பலருக்கு நலம் பயக்கும்.
    இந்த ஆண்டு அறிவித்ததை மாற்ற வேண்டாம் என்பதே என் நிலைப்பாடு,நம் நண்பர்கள், வாசகர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.
    அப்படி என் பெயர் டைகரை இந்த ஆண்டு விட மாட்டேன் அடுத்த ஆண்டுதான் விடுவேன் என்று நீங்கள் அடம் பிடித்தால்,அடுத்த ஆண்டு அதனுடன் சேர்ந்து தல,தளபதி ஸ்பெஷல் (வண்ணத்தில்) ஆயிரம் விலைக்கு மி.ம சைஸ் க்கு வெளியிடவும்.
    ஆண்டு தோறும் வெளியிடுவதாக சொன்ன தல ஸ்பெஷல் தனி அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : லயனின் 250-வது இதழ் + மின்னும் மரணம் என இரு மெகா projects 2015-க்கு உண்டென்பதை இந்தாண்டுக்கான திட்டமிடலின் போதே கருத்தில் கொண்டிருந்த நான், முத்துவின் இதழ் # 350-ம் இந்தாண்டின் போக்கினில் புலர்வதைக் கவனிக்கத் தவறி விட்டேன் ! இல்லையேல் நிச்சயமாய் அதற்குமொரு ஏற்பாடு துவக்கத்திலேயே செய்திருப்பேன் !

      இன்றைய பிரச்சனையே எகிறும் பட்ஜெட்கள் தான் ; அதனைக் கட்டுக்குள் கொண்டு வரத் தான் மல்லுக் கட்ட வேண்டியுள்ளது !

      Delete
  72. மின்னும் மரணம் - இந்த ஒரு சொல் செய்த மாயம் தான் என்ன?.
    *இந்த மின்னும் மரணம் வெளியீட்டு விழாவுக்கு செல்ல நாங்கள் ப்ளான் போட்டது கடந்த வருட நவம்பர்லயே சார் . வழக்கமாக ஈரோடு விழா , ஜனவரியில் சென்னை விழாவுக்கு வர ஒப்புக்கொள்ளும் நண்பர்களில் சிலர் இறுதி நேரத்தில் கழண்டு கொள்வார்கள் . ஆனால் தளபதி யின் ராசியோ என்னவோ பெயர் கொடுத்த 15பேருமே முதல் நாள் ட்ரெயின் ஏற ,மாயாவி சார் ஆபீஸில் ஆஜர். ஆகாக காக ..... என கொஞ்சம் பொறாமை எனக்கு .
    *10மணி ஏற்காடு எக்ஸ்பிரஸ்ல வரிசையாக 15டிக்கெட் நமக்கு . அடுத்த 2மணி நேரத்துக்கு நாம் குடுத்த அலப்பறையில் நமக்கு இருபக்கமும் இருந்த மக்கள் இஞ்சி தின்ற மங்கீஸ் ஆயினர் . காலியான பால்கோவா மற்ற இனிப்பு வகைகள் மற்றும் காரவகைகள் பார்த்து, TTR தலை கையில் பஞ்ச் வாங்கிய வில்லன் ஆள் போல 3ஏ நொடியில் நழுவினார் .
    *இம்முறையும் இரவு ஆந்தை வேலையே நானும் பார்க்க சென்ட்ரல் வந்து , ராயப்பேட்டை க்கு டவுன் பஸ்சில் வந்து புத்தக விழா அரங்குக்கு எதிரில் இறங்கி ,சென்னை நண்பர் ப்ளூபெர்ரியின் சகாயத்தில் நாம் தங்க போகும் ரூமுக்கு ஒரு ஆட்டோகாரன்ட்ட வழிகேட்டா அந்த ஆளு ஆட்டோவுல ஏறாத ஆத்திரத்தில் ஆயிரம் விளக்கு பக்கம் கைய காண்பித்து விட்டான். ஒரு கி. மீ. நடந்த பிறகும் ப்ளூ ஜி சொன்ன ஒரு அடையாளத்தில் ஒரு தெருவும் இல்லை . பிறகு தான் விசயம் புரிந்தது , அவர் அனுப்பிய மேப்பை தூக்க கலக்கத்தில் தலைகீழாக பார்த்து உள்ளோம் என்று . ஒரு வழியாக ரூம் சென்று கொஞ்ச நேரம் தூங்கலாம்னா அங்கேயே தவில் வாசிக்க மீண்டும் கச்சேரி களைகட்டியது.
    * கச்சேரியின் முத்தாய்ப்பாக பாடகர்கள் விஜய் யும் ,கிட் ஆர்டின்னும் ஆளுக்கொரு பாடல் பாடி அசத்தி விட்டனர் . முன்னவர் ஒரு அருமையான மெலடி சாங்கு . பின்னவர் அவர் ஸ்டைலில் செப்புக்குடம் தூக்கி செல்லும் செல்லம்மா .......என்று ஒரு குத்து குத்த லைட்டா ஒரு உற்சாக ஆரவாரம் வெடித்தது . ஒரு ரவுண்ட் நாக் அவுட் போட கடைசி வரை போரடிய தளபதியின் தீவிர வாசகர் , டைகரை போலவே கடைசியாக 2அதிதீவிர டெக்ஸ் ரசிகர்களிடம் மண்ணை கவ்வி, மின்னும் மரணம் கடைசி பேனல் டைகரை போல குதிரையில் குளிக்க கிளம்பினார் . ஜெயித்த தங்கத்தை இருவரும் பங்கிட்டு கொண்ட பின் , அனைவரும் குசியாக வறுத்த கறி சாப்பிட கிளம்பினோம்.
    * காலை 10மணிக்கு அரங்கம் சென்று மரத்தடியில் ஒரு குரூப்பும் பந்தலடியில் ஒரு குரூப்பும் இருந்த நண்பர்கள் உடன் நாங்களும் ஐக்கியமானோம். விழா நிகழ்வுகளை நண்பர்கள் மற்றும் ஆசிரியர் ஏற்கனவே விவரித்து விட்டார்கள் . தனிப்பட்ட முறையில் இதழை பார்த்து ஆனந்த ஆச்சரியத்தில் மூழ்கி போனேன் . உண்மையாகவே டெக்ஸ் கதைகள் கையில் ஏந்திய போது கிடைத்த மகிழ்ச்சி யை விட பலமடங்கு அதிகம் திக்குமுக்காடிபோனேன். அன்றைய நாயகன் நிச்சயமாக டைகரா , விஜயன் சாரா என்று என்னால் பிரித்து உணர இயலவில்லை நண்பர்களே.
    * அய்யா திரு செளந்திரபாண்டியன் அவர்களுடன் ஒரு கால்மணி நேரம் உரையாடியது அன்றைய தினத்தில் ஹைலைட் ., அய்யா அவர்கள் இப்போது நாம் ஒவ்வொரு ஹீராவிடமும் காட்டும் ஈர்ப்பு கண்டு வியந்து போனதாக தெரிவித்தார்கள். ஆளாளுக்கு ஒன்னரை டன் தங்கத்தை சுமந்துகொண்டு சென்னையை விட்டு சிறகடித்தோம்.

    ReplyDelete
    Replies
    1. சேலம் TIGER விஜயராகவன் : அட....இது பெருந்தன்மையின் உச்சம் நண்பரே !! தலையின் ரசிகர்கள் தளபதிக்கும் தலை வணங்குவது awesome !!

      Delete
    2. சேலம் TIGER விஜயராகவன் ////-- உங்கள் எண்ணப்படியே லயனின் 250வது இதழ் தலையின் "ஆர்ப்பாட்ட ஸ்பெசல் "- கையில் வாங்கும் வரை இதற்கு ஓப்புக்கொள்கிறேன் சார் .

      Delete
  73. Replies
    1. Madipakkam Venkateswaran : சார்..இந்த ஆட்டைக்கே நான் வரலையாக்கும் !

      Delete
  74. நண்பர்களின் சந்தோசம் விஜயன் சாரையும் தொற்றிக்கொண்டு
    அவரை இம்மாம் பெரிய பதிவு போட வச்சிருக்குன்னா
    எந்தளவுக்கு நாம அவரோட மனசுல இடம் பிடித்திருக்கிறோம்
    என்பதை நினைக்கும் பொழுது நெஞ்சம் இனிக்கிறது

    நண்பர்களுடன் இருந்த அந்த 24 மணி நேரம்
    பயண களைப்போ
    அனைவருடன் எண்ணங்களை பகிர்ந்ததோ
    சுற்றி சுற்றி வந்ததோ
    ஒன்றுமே தெரியவில்லை

    காமிக்ஸ் எனும் மந்திரச்சொல்
    நம்மை எப்படியெல்லாம் இணைத்திருக்கிறது

    மிக்க நன்றி விஜயன் சார்

    (இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க நீங்கள் தானே காரண கர்த்தா )
    .

    ReplyDelete
  75. ஒரே நாளில் 200 :))
    .

    ReplyDelete
  76. எனது தந்தையார் கிரைம் & வரலாற்று நாவல்கள் விரும்பி படிப்பார்

    இதற்கு முன் ஒரு சில காமிக்ஸ் புத்தகங்களை கொடுத்ததுண்டு

    எழுத்துக்கள் சிறியதாக மற்றும்
    படிக்க சிரமமாக இருப்பதாக சொல்வார்



    இப்பொழுது " மின்னும் மரணம் "
    எனது தந்தை படித்துக்கொண்டு இருக்கிறார்

    அந்தவகையில் டைகர் கலக்கிட்டார் :)
    .

    ReplyDelete