நண்பர்களே,
வணக்கம். நெடும் விடுமுறை.....காத்திருக்கும் பண்டிகைப் பொழுதுகள்.... திரும்பிய திக்கெல்லாம் பரபரப்பு..! ஆனால் இவை அத்தனைக்கும் மத்தியில், ஓய்வு ஒளிச்சலே இன்றி, விடாப்பிடியாய் பணி செய்து கொண்டிருக்கும் நண்பர்களை இந்த நொடியில் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ஒற்றை நாளோ, நிமிடமோ கூட நில்லாது non-stop ஆக பஸ்கள் ஊரெல்லாம் வலம் வந்தாக வேண்டும். கடை கண்ணிகளில், ஹோட்டல்களில் maybe ஆயுத பூஜைக்கு ஒரு அரை நாள் லீவைத் தவிர்த்து, பாக்கிப் பொழுதுகளில் இரட்டிப்பான பணிச் சூழல். போலீசார், மருத்துவர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம் - காலண்டரில் சிகப்புத் தேதியைப் பார்த்தாலும், ஒரு மந்தகாசப் புன்னகையோடு தாண்டிச் செல்வோரை !! And லேட்டஸ்ட்டாக அந்த லிஸ்ட்டில் ஐக்கியமாகி இருக்கும் நம்மவர்களுக்குமே ஒரு ஹலோ சொல்லலாமே.
2026-ன் அட்டவணையை அறிவித்த போதே எனக்குத் தெரியும் 2026-ன் தீபாவளி மாதமானது குறுக்கைக் கழற்றி கையில் கொடுத்து விடும் என்று. ஒரிஜினலாய் அட்டவணையை அறிவிப்பதற்கு நாலு மணி நேரத்துக்கு முன்பு வரை 2026 தீபாவளி மலராய் இடம் பிடிக்கவிருந்த சாகசமோ "புனித பூமியில் ஒரு புதையல் வேட்டை" என்ற கலர் 224 பக்க டெக்ஸ் அதிரடியே. ஆனால் நம்மைத்தான் காதுவரை கிழியும் ஓட்டைவாயோடு பகவான் படைத்திருக்கிறாரே. போன வருடத்து ஈரோட்டுச் சந்திப்பின் போது "ஆங்... ரைட்டு ...மெபிஸ்டோ மச்சானுக்கு வரும் 2026-ல் ஸ்லாட் கொடுத்தே தீரலாம் ! நம்புங்க மக்கா..!" என்று சொந்தக் காசில் சூனியம் வைத்திருந்தது பகீரென்று உரைத்தது. So அவசரம் அவசரமாய், போனலியின் மெபிஸ்டோ சாகசங்களுக்குள் நுழைந்து ஆராய்ந்த போது, ஏற்கனவே 2024-ல் வெளிவந்திருந்த முப்பாக டெக்ஸ் & டீமின் அதிரடியின் நீட்சி இன்னமும் காத்திருப்பது புரிந்தது. நான்கு அத்தியாயம் கொண்ட 440 பக்க முழுநீள மெபிஸ்டோ அதகளம் என்று போனலியின் ப்ரிவ்யூ தகவல் சொல்ல, அரை நிமிட சிந்தனை கூட இன்றி அதனை அட்டவணைக்குள் இழுத்துப் போட்டிருந்தேன். ஏற்கனவே ஒரு ZAGOR கலர் ஸ்பெஷலும், ஒரு மர்ம மனிதன் மார்டின் கலர் ஸ்பெஷலும் தீபாவளிக்கென அறிவித்திருக்க, "440 பக்கங்கள்" என பகீர் பளுவைக் கூட்டிக் கொள்வது தீபாவளிக்கு முன்பான தருணத்தில் தண்ணீர்குடிக்கச் செய்யும் என்பது அன்றைக்கே தெரியும்தான். ஆனாலும் 'மேலே இருக்கவன் பாத்துக்குவான்' என்று எப்போதும் போலவே அசட்டு நம்பிக்கையோடு அறிவிப்பை கெத்தாய் செய்தாய் விட்டது. And கண்மூடி கண் திறப்பதற்குள், 2026-ன் பத்து மாதங்கள் அவசரமாய் ஓட்டம் எடுத்திருக்க, இதோ நவம்பரின் வாயிலில், வாய்க்குள் திணித்த பாதத்தோடு நொண்டியடித்துக் கொண்டிருக்கிறோம். பெயரளவிற்கு இன்று ஞாயிறு... ஆனால் நம் அலுவலகமோ working as normal. (Not the front office)
And இங்கே நமது தயாரிப்பு சார்ந்த துக்கனூண்டு டீம் பற்றி நான் மறுக்கா பேசிடவும் நினைக்கின்றேன். முன்பெல்லாம் DTP செக்ஷனில் இரண்டோ, மூன்றோ பெண்கள் பணியாற்றுவது வழக்கம் ஆனால் திருமணம் ; சொந்தக் காரியங்கள் என்று ஏதேதோ காரணங்களால் நடுவில் அந்த கூடுதல் womenpower கழன்று கொண்டு விட்டது. சிவகாசியிலோ இன்றைக்கு ஒரு டிசைனரை பணியமர்த்துவது என்பது, கார்சனிடமிருந்து சுக்கா ரோஸ்டை பிடுங்குவதற்கு சமானமான சிரமக் காரியம். இன்று சிவகாசியில் "ஆத்தா ஹை ஜாத்தா ஹை" என்று ஹிந்தி பேசத் தெரிந்திருந்தால் தவிர, அஸ்ஸாமிலிருந்தும், பீகாரிலிருந்தும், ஒரிசாவிலிருந்தும் பணியாற்ற வரும் சகோதரர்களை மேய்க்க வழியே கிடையாது. ஒவ்வொரு பெரும் குழுமத்திலும் பலநூறு அல்லது சில ஆயிரம் வட இந்தியப் பணியாளர்களே சக்கரங்கள் சுழல உதவி வருகின்றனர். So கூடுதலாய் ஒரு டிசைனரை பணியமர்த்த விடாப்பிடியாய் நானும் முயற்சித்துக் கொண்டே இருந்தாலும், நமது பணிச்சூழலுக்கும், நமது பட்ஜெட் நெருக்கடிகளுக்கும் ஏற்றாற்போல ஆள் கிடைப்பதென்பது குதிரைக்கொம்பாகவே இருந்து வருகின்றது. So one-woman army ஆக இவாஞ்சலின் நாம் அடிக்கும் அத்தனை குட்டிக்கரணங்களிலும் பங்கேற்று வருவதுதான் கடந்த ஓராண்டுக்கும் மேலான நடைமுறை. அதேபோல back end-ல் பிழைதிருத்தங்கள் ; ஸ்கிரிப்ட் சரிபார்த்தலில் உதவுவது ; கதைகளை வரிசைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருப்பது ; சில தருணங்களில் கூகுள் ஆண்டவரின் மொழிபெயர்ப்பு உதவியுடன் பிரெஞ்ச் மொழியில் இருந்து இங்கிலீஷுக்கு மொழிமாற்றம் செய்வது என்று ஆல்-இன்-ஆல் ஆக ஓசையின்றி செயல்பட்டு வரும் பாத்திமா நமக்கு தூண் நம்பர் இரண்டு. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பார்த்து வரும் இதழ்களின் பின்னால் இவர்கள் இருவரும் இருப்பின், நீங்கள் பார்த்திடும் இதழ்களின் முகப்பில் நமது டிசைனர் கோகிலா இருக்கிறாள். திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டாலும் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே நமது அட்டைப்படப் பணிகளில் பணியாற்றி வரும் கோகிலா நமது தூண் நம்பர் மூன்று. இந்த மூன்று தூண்களும் செம்மையாக செயல்பட நான்காவது தூணாக நிற்பது நமது ஆல் இன் ஆல் அழகுராஜா மைதீன். And yes of course -தயாரிப்புகளுக்குப் பிற்பாடு களம் காண்பது நமது front desk ஜோதியும், வெங்கடேஸ்வரியும், ரொம்பப் புது வரவான சரண்யாவும் ! Not forgetting the binding team too !! இவர்களோடு ஜூனியர் எடிட்டர் தனது டிரேட் மார்க் அமைதியுடன் ! And அம்புட்டுப் பேரையும் பின்தள்ளி விட்டு ராமராஜன் ஸ்டைலில் கரகாட்டம் ஆடுவது ஒன் முழியாங்கண்ணன் !! இதுவே - ஆண்டுக்கு பல்லாயிரம் பக்கங்களை போட்டுத் தாக்கி வரும் நம்ம டீம் !!
Of course மொழிபெயர்ப்பு டிபார்ட்மென்டில் ஒத்தாசை செய்திட, பின்னணியில் ஒரு சிறு டீமுக்கும் தயாரிப்பினில் பங்குள்ளது தான் ! ஆனால் இப்போதெல்லாம் அவர்களை எழுதச் சொல்லி வாங்கிய பிற்பாடு அதற்குள் தையத் தக்கா என்று நானூறுவாட்டி செப்பனிடும் பணியில் நாக்குத் தொங்க உழைக்கும் நேரத்திற்கு நேரடியாக நாமே எழுதிவிட்டால் நாலு காசாவது மிஞ்சுமே என்ற மகா ரோசனையில் நடப்பாண்டின் ஒரு வண்டிப் பக்கங்களை என் மேஜை நிறைய குவித்துப்போட்டு குப்பை கொட்டுவது உங்களுக்குமே தெரிந்திருக்கும். So இந்த சின்னஞ்சிறு யூனிட்டைக் கொண்டு ஆண்டுதோறும் நாம் churn out செய்யும் output சத்தியமாய் பெரும் குழுமங்களை திகைக்கச் செய்யும் ஒரு நம்பர். ஆனாலும் இந்த தீபாவளி மலர் போலான தருணங்களில் இந்தக் குட்டி டீம் கூட கொஞ்சமாய் தண்ணீர் குடிப்பது கண்கூடு - becos the sheer volume of the work is backbreaking.
தீபாவளியின் ரகளைகள் ஆரம்பிப்பது நமது மெபிஸ்டோ & டீம் களமிறங்கும் "அசுரர்கள் அடங்குவதில்லை" டபுள் ஆல்பத்தில்தான். Oh yes- அது டைப்பிங் பிழையே அல்ல ; இந்த ஆல்பம் "டெக்ஸ் & டீம்" என்பதைக் காட்டிலும் மெபிஸ்டோ & டீம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
ஜிலீரிட வைக்கும் குரூரப் பார்வையோடு, ஜடாமுடியோடு சுற்றிவரும் மெபிஸ்டோ "வாடா பிளாக்கி..... எழுந்து வாடா மகனே !" என்று குரல் கொடுக்க 'தோ வந்துட்டேன்' என்று மதன்பாபு பாணியில் யமா எழுந்து வருகின்றான். சரி ரைட்டு... அப்பனும் பிள்ளையும் ரவுசு கிளப்பப் போகிறார்கள் என்றிருந்தால், பணால் என்று ஆஜராவது இன்னொரு மெபிஸ்டோ ரத்த சொந்தம். லில்லி டிக்காட் என்ற மெபிஸ்டோவின் சகோதரி யமாவின் அத்தை கதைக்குள் புகுந்து விடுகிறார். சரி ரைட்டு குடும்பத்தோடு கும்மியடிக்கட்டும்... என்று விட்டால் 'பச்சக்'கென உட்புகுகிறார் பத்மா. "ஹை.... இது யார்டா - புதுசா ?" என்று பார்த்துக் கொண்டே இருந்தால், 'நானும் ஆட்டத்தில் உண்டுங்கோ' என்று இணைகிறார் நர்பாஸ். "என்னாங்கடா இது டவுன்பஸ்ஸில் கூட்டிப் போக வேண்டிய கூட்டம் போல் தெரிகிறதே ?" என்று யோசித்துக் கொண்டிருந்தால், இன்னொரு முரட்டு உருவமும் கண்ணில்படுகிறது. அது வேறு யாரும் இல்லை - நமது மாந்த்ரீக மோரிஸ்கோ தான். ஆக மெபிஸ்டோ, எமா, லில்லி, பத்மா, நர்பாஸ், மோரிஸ்கோ, யூசபியோ என்று ஒரு வண்டி ஜனம் கதை நெடுக குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருக்க - நமது ரேஞ்சர் டீமும் ஃபுல் ஸ்ட்ரென்த்தில் ஆஜர். So செம கலகலப்பான ஒரு மூடில் மௌரோ போஸலி சார் இருந்திருக்க. "கலகலப்பு" படத்தின் ஷூட்டிங்குக்குள் புகுந்தது போலான உணர்வு எனக்கு.
440 பக்கங்கள் எனும் போது மொழிபெயர்ப்பில் முழியெல்லாம் இடம்பெயர்ந்து வருவது மறுக்க இயலா உண்மை. ஆனால் நாக்குத் தொங்கச் செய்யும் இந்த பணிகளின் மத்தியில் ஒரு சில்வர் லைனிங் இல்லாமல் இல்லை. அது வேறு ஒன்றும் அல்ல - நமது சில்வர் முடியார் கார்சனுக்கு கதை நெடுக வரிகள் எழுதுவதில் கம்பு சுற்றக் கிட்டியுள்ள வாய்ப்பு தான் ! கதை முழுக்க முழுக்கவே மாந்த்ரீகம் ; அமானுஷ்யம் ; இருண்ட மேஜிக் என்றெல்லாம் பயணிக்க, பேந்தப் பேந்த முழித்தபடியே உலா வரும் கார்சனை அந்நாட்களது ஜெமினி கணேசனின் சாயலில் செம ஸ்டைலாக ஓவியர் சிவிடெல்லி சித்தரித்திருக்கிறார் ! நெடுக அவருக்கு வசனங்கள் எழுதுவது அட்டகாசமான அனுபவமாய் அமைந்து வருகிறது.
இன்னமும் பணிகள் முடிந்தபாடில்லை தான் ; ஆனால் இன்றும் வேலை... நாளையும் வேலை.... செவ்வாயன்றும் வேலை... என்றான திட்டமிடலுடன், எப்படியாவது வரும் வார இறுதிக்குள் சகலத்தையும் அச்சிட்டு பைண்டிங்கும் முடித்து வாங்க வேண்டியதொரு நெருக்கடி. ஏனெனில் தீபாவளி புலரவிருக்கும் நவம்பரின் முதல் வாரத்தில் கிட்டத்தட்ட ஊரே வேறொரு உச்சத்தில் தகித்துக் கொண்டிருக்கும். ஊரைச் சுற்றி கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் முளைக்கத் துவங்கியிருக்கும் இந்த வேளையில், தடுக்கி விழுந்தால் பட்டாசு வாங்க வந்தோர் மீதோ, பட்டாசு விற்க நினைப்போர் மீதோ தான் மல்லாந்திட வேண்டி வரும். So சரக்கை ஏத்தி ஊருக்குள் நகர்த்திடும் லோடு ஆட்டோக்களில் ஆரம்பித்து, பண்டல் போடும் பணியாளர்கள், கூரியர்ஸ் , லாரி ஷெட்கள் வரை அத்தனை பேருக்குமே விடிய விடிய பணி இருக்கும். ஆகையால் தலையை அடமானம் வைத்தாவது காத்திருக்கும் வார இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்தாக வேண்டியதொரு நெருக்கடி. இதில் slipcase வேறு ரெடியாகணும் !! எண்ட புனித மனிடோ !!
And இதற்கெல்லாம் மத்தியில் "2027-க்கான அட்டவணை அறிவிப்பு" என்றதொரு மெகா மெகா ப்ராஜெக்ட்டும் வெயிட்டிங். Oh yes, கேட்லாக் எல்லாம் ரெடி தான் ; அச்சிடவும் செய்தாகி விட்டது தான் ! ஆனால் ஒவ்வொரு ஆண்டும், இதழ்களின் அறிவிப்போடு, இங்கே "காயாத கானகத்தே நின்றுலாவும்.... என்று தியாகராஜபாகவதர் பாணியில் நான் நீட்டி முழக்கும் அந்தப் பதிவை எழுதி ரெடி செய்தாக வேண்டுமே. கண்முழி பிதுங்க இதழ்கள் சார்ந்த பணிகள் இன்னமும் குவிந்து கிடக்கும் போது, அட்டவணை பதிவுக்கென ஒரு நாளை முழுசாய் ஒதுக்க வாய்ப்பே கிட்ட மாட்டேன்கிறது என்பது தான் சிக்கலே. So மெபிஸ்டோ கொஞ்சம் மனது வைத்து, பாகம் மூன்றின் இறுதியில் இருக்கும் எனக்கு ஒரு கை கொடுத்தால் மட்டுமே காத்திருக்கும் அதகள வாரத்தை உருப்படியாய் ஒப்பேற்ற இயலும். இது "ஜெய் பாகுபலி" தருணம் மட்டுமே அல்ல....இது "ஜெய் ஜெயிலர்"..... "ஜெய் பேட்மேன்"..... "ஜெய் ஜுராசிக் பார்க்" என்று கூக்குரலிட வேண்டியதொரு தருணம் என்பேன்.
டெக்ஸ் சாகசத்தை பொறுத்தவரையிலும் ஏற்கனவே what to expect என்பது குறித்து whatsApp கம்யூனிட்டியில் தெளிவாகவே கோடிட்டுக் காட்டி இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். For those who are not in the community - மறுக்கா சொல்லி விடுகிறேன் மக்களே : LOGIC எனும் சமாச்சாரத்தை லாரியில் ஏற்றி ஏதேனும் ஒரு மலைப்பிரதேசத்துக்கு அனுப்பி விட்ட பிற்பாடு இந்தக் கதைக்குள் புகுந்தால் அட்டகாசமாக இருக்கும். ஓலாவில், ராபிடோவில் ஒரு வண்டியை அழைப்பது போல ; ஒரு டிரைவரை வரவழைப்பது போல, இங்கே செத்தவர்களை தட்டி எழுப்பி நடமாட அழைத்து வருகிறார்கள். ஒரு பக்கம் மெபிஸ்டோவின் மாயாஜாலம், ஒரு பக்கம் பத்மாவின் மாந்த்ரீகம், இன்னொரு பக்கம் மோரிஸ்கோவின் ஜகஜகா & இவற்றைச் சுற்றி நமது ரேஞ்சர்ஸ் டீம். திருவிழாவுக்கு ஏற்ற தெறி சாகசம் இது என்பதில் கிஞ்சித்தும் ஐயம் கிடையாது. தீபாவளிக்கு முந்தைய நாளில் முதல் அத்தியாயம் ; தீபாவளி அன்று இரண்டாவது & தொடரும் நாட்களில் மூன்று + நான்கு என்று படித்தாலும் நான்கு நாட்களுக்கு செமையோ செம fun waiting. And மக்களே புய்ப்ப சூட்டல்கள் சற்றே ஓவராக இருப்பின், தயவு செய்து முட்டுச் சந்துக்கு என்னை அழைக்காதீர்கள். From day one நமது ரேஞ்சரை இரண்டு கால்களும், இரண்டு கைகளும் கொண்ட இரத்தமும், சதையுமான மொள்ளமாரிகளோடு மோத விடலாம் என்பதுதான் எனது அவாவே. ஆனால் நான் மறுக்க மறுக்க, மறுக்கா மறுக்கா "மெபிஸ்டோ வேண்டும்" என்ற கோஷம் வலுப்பெற்றிருக்க, வேறு வழியின்றி அண்ணாத்தையை அழைச்சிட்டு வந்தாயிற்று. So இதை ஒரு திருவிழாப் படைப்பாக கருதி கொண்டாடுவதே சிறப்பு என்பேன்.
சாகோர் பற்றியும் மார்டின் பற்றியும் சொல்ல ஆசைதான் ஆனால் அவர்களெல்லாம் தலை ஊடுகட்டி அடித்து வரும் இந்த 440 பக்க மெகா விருந்தின் முன்னால் 'அப்டி ஓரமாய் விளையாடும் குட்டிப் பசங்க'ளாகத்தான் இந்த நொடியில் எனக்கு தென்படுகிறார்கள். கலரில் இரு இதழ்களுமே ஜொலிக்கின்றன. அவற்றைப் பற்றி books dispatch ஆகும் தருணத்தில் இன்னும் கொஞ்சம் விரிவான preview எழுதுகிறேன்.
இந்த நொடியில் இந்த பதிவுக்கு ஒரு சுபம் போட்டுவிட்டு ஆபிஸை நோக்கி ஓட்டம் எடுத்தால்தான் தீபாவளிக்கு இதழ்கள் உங்கள் கைகளில் இருக்கும். So Adios Amigos....முன்கூட்டிய ஆயுத பூஜை & விஜயதசமி நல்வாழ்த்துக்கள். இல்லங்கள்தோறும் மகிழ்வும், நலமும், கொண்டாட்டங்களும் களைகட்டட்டும். Bye all, see you around. Have a wonderful set of days !!
P.S : கிங்ஸ் ஸ்பெஷல் 4 - முன்பதிவுகள் தெறி ஸ்பீடு ! 175 தொட்டாகி விட்டது - ஆறே தினங்களில் !!




First
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
Delete🙏
Deleteஒரு காலத்துல 'me 257', 'me428' ன்னு போட்டுக்கிட்டிருந்தவர் இப்போல்லாம் அடிக்கடி ஐ பஸ்ட் போடறாரே!!🤔🤔
Deleteவாழ்த்துகள் சகோ
DeleteMe
ReplyDeleteஆஜர்
ReplyDeleteits me the first of the best of the rest of the guest!
ReplyDeleteநாம இங்கிலீசிலே டைப் அடிக்கிறதுக்குள்ளாற பிம்பிலிக்கி பிலாப்பி !!
Deleteசார்.. ஷேஸ்பியரின் தத்துவத்தை copy-past பண்ணியிருக்கேனுங்க சார்..
Delete:-)))
Delete🙏
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteநாங்களுந்தான்...
ReplyDeleteபத்துக்குள்ள...
ReplyDeleteSign in panni allow panrathukulla mudinjuruthu 😅
ReplyDelete😂😂😂
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteTex Diwali Malar waitinggg
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகாலை வணக்கம் நண்பர்களே 😍
ReplyDeletePresent sir
ReplyDeleteகாலை வணக்கம் தோழர்களே😍
ReplyDeleteவணக்கம் நண்பர்களே ..
ReplyDeleteபுத்தகம் அனுப்பும் வேலைகளை முடித்துவிட்டு ரிலாக்ஸாக தீபாவளி அன்று கூட அட்டவணை வெளியிடுங்கள் சார் பொறுமையாக இருக்கிறோம்!! ஒருக்கால் அட்டவணை புத்தகம் தீபாவளிக்கு முன்பே புத்தகங்களுடனேயே வந்துவிடுமோ?
ReplyDeleteஆமாமுங்கோ !!
Deleteஓய்வு உளைச்சலின்றி தீயாய் பணியாற்றும் நம் அலுவலக சகோஸ் அனைவரும் பாராட்டுங்களும், நன்றிகளும்!!💐💐💐👏👏👏👏
ReplyDelete+1
Deleteமெபிஸ்டோ & கோ வின் 3 அட்டைப்படங்களுமே மிரட்டல் சார்!!😍😍😍😍
ReplyDelete//கிங்ஸ் ஸ்பெஷல் 4 - முன்பதிவுகள் தெறி ஸ்பீடு ! 175 தொட்டாகி விட்டது - ஆறே தினங்களில் !!
ReplyDeleteSuper sir
அட்டைபடங்கள் 😍😍😍
ReplyDeleteடெக்ஸ்ன் தீபாவளி மலருக்கான மூன்று அட்டைகளுமே ஒன்றுக்கொன்று முந்துகிறது சார்...மூன்றுமே செம மாஸாக உள்ளன...
ReplyDeleteஇரண்டு நாட்கள் முன்பாக தான் மீண்டு(ம்) வந்த மாயனை அட்வான்ஸாக வாசித்து முடித்தேன்..எனவே காதில் எவ்வளவு பூ சுற்றினாலும் அதன் தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் சார்...:-)
இந்த தீபாவளிக்கு..
ReplyDeleteகுண்டான லயன் தீபாவளிமலர் ...
முத்தான முத்து தீபாவளி மலர்...
வெற்றியான வி காமிக்ஸ் தீபாவளிமலர்...
கிங் ஸ்பெஷல் ..க்ளாஸிக் நாயகர்கள் பலர்..
அன்ட் அட்டவணை புத்தகம்..
அட்டகாசமோ அட்டகாசம் சார்..
இந்த தீபாவளி உண்மையிலேயே சரவெடிதான்.
பின்னட்டையின் படங்கள் டெரராக இருக்கிறது, அப்போ உள்ளே இன்னும் டெரர்???
ReplyDelete//அம்புட்டுப் பேரையும் பின்தள்ளி விட்டு ராமராஜன் ஸ்டைலில் கரகாட்டம் ஆடுவது ஒன் முழியாங்கண்ணன்//
ReplyDelete😂😂😂
ம்ம்.. இவருக்கும் நமது புக்ளியூண்டு பாராட்டுங்களும்.. மானசீக மலர்கொத்தில் கால்வாசியும்! 👏👏
DeleteThis comment has been removed by the author.
Deleteஇந்த ராமராஜன் கரகம் ஆடவில்லை என்றால் தேர் கிளம்பாதே 😄
DeleteMe in😘💐👍
ReplyDeleteஎன்னது? 440 பக்கங்களா? செம fun moments waiting ன்னு சொல்லுங்க !!!
ReplyDeleteபாயாச அண்டாவுக்கு வேலை வந்துடுச்சு ரம்மி சார்.. தீபாவளிக்கு அண்டாவை கழுவுறோம், பாயாசத்தை ஊத்துறோம்
ReplyDeleteபார்த்து பக்குவமாக கிண்ட சொல்லுங்க சார் 😄
Delete😘💐 *King Special 4* 🫅🥰 300 தாண்ட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார் 💐🙏
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDeleteHi..
ReplyDeleteமெபிஸ்டோ ஆட்டத்தைக் காண ஆவலுடன்.. அவர் டீமே களமிறங்குகிறது என்றால்.. மாண்ட்ரேக்கை துணைக்கு அழைத்தால்தான் நன்றாக இருக்கும் போலிருக்கே..
ReplyDeleteதல வணக்கங்கள்💥💥💥
ReplyDeleteகையறு நிலையில் (காலறுநிலையில்) கார்சன் !. போராட்டத்தில் டெக்ஸ் பரபரப்பான ஆக்சன் சீக்குவல்!
ReplyDeleteஅட்டையிலேயே பரபரப்பு தெரிக்கவிடுது
அட்டகாசமான டெக்ஸ் தீபாவளி
லில்லி டிக்காட் ஏற்கனவே மெபிஸ்டோவுடன் இணைந்து இளம் டெக்ஸிடம் வில்லத்தனம் செய்த , மெபிஸ்டோவின்சகோதரி.மீண்டும் தலை காட்டுவது ஐஸிங் ஆன்! கேக்.
ReplyDeleteHi
ReplyDeleteசூப்பர் சார்....இது வரை வந்ததிலேயே டாப் இதானோ எனும் கேள்வி எழுகிறது. டப்பியும் வேற லெவலில் இருக்க ....கார்சனின் வசனங்களுக்காக....அதகள திபாவளி மலர் அடடா
ReplyDelete