நண்பர்களே,
வணக்கம்.பொதுவாய் அடியேனுக்கு பெரியதொரு Nostalgia மோகமெல்லாம் கிடையாது தான். ஒவ்வொரு காலகட்டமும் தனக்கென ஒரு அதிசயத்தை தன்னுள்ளே உள்ளடக்கி இருக்கும் என்ற நம்பிக்கையில், கடந்து சென்ற நாட்களை காதல் கசிந்துருக பின்னோக்குவது கிடையாது. But, if at all there was just one thing that I miss from the early days, அது இந்த கோடை விடுமுறைகள் சார்ந்த குதூகலங்களே. Oh yes, 40 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் இந்த ஏப்ரல் & மே கோடை விடுமுறைகள் தான் நமக்கு பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என சகலமும் ஒன்றாய் இணைந்த ஒட்டுமொத்த கோலாகல வேளையாகிடும். வேறொன்றுமில்லை folks.....
ஆண்டின் 10 மாதங்களுக்கு நம் பக்கமாய் தலை வைத்துப் படுக்கக் கூட எத்தனித்திராத பல முகவர்களும், புத்தக வியாபாரிகளும் இந்த இரு மாதங்களில் "அண்ணாச்சி சௌக்கியமா? காடு-கரை-கம்மா எல்லாம் சுபமா?" என்ற குசல விசாரிப்போடு நமது கையிருப்பில் உள்ள முந்தைய வெளியீடுகளுக்கு ஆர்டர்களை ஆர்வமாய் வழங்கிடுவது வாடிக்கை.'87 முதலாய் முத்து காமிக்ஸும் நம் பொறுப்பிற்கு வந்து சேர்ந்திருக்க, அங்கு கைவசம் இருந்த முந்தைய இதழ்களுமே நமது Stock List-ல் ஐக்கியமாகி இருந்தன. So, இந்த இரு கோடை மாதங்களில், பள்ளி விடுமுறைகளின் போது காமிக்ஸ் விற்பனை ஒரு உச்சத்தை தொடுவது அன்றைய நடைமுறை. And அட்சய திருதியைக்கு நகைக்கடைக்காரர்கள் தயாராவது போல், நாங்களும் கெத்தாக ரெடியாகிக்கொள்வதுண்டு. கைவசமுள்ள மொத்த இதழ்களின் லிஸ்டையும் புதுசாய் ஒரு circular-இல் அச்சிட்டு, அதன் உசக்கே "கோடை Discount 5% கூடுதல்...!!!!! ஆக மொத்தம் 30% கழிவு உண்டு" என்று நிறைய ஆச்சர்யக்குறிகளோடு ஒரு வரியினை முரட்டுத்தனமாய் அச்சிட்டிருப்போம். அன்றைய நாட்களில் அந்த 5% கூடுதல் தருவதெல்லாம் ஒரு மெடிக்கல் மிராக்கிளுக்கு ஈடானது. மதுரை, திருச்சி, சென்னை என பெருநகரங்கள் பலவற்றிலிருந்து wholesale வியாபாரிகளும் அந்நாட்களில் ஆர்டர் தந்து விடுவார்கள். So, காலையில் தபால்களை பிரித்துப் பார்க்கும் போதே நாளங்களிலெல்லாம் ஒரு குதூகலம் இழையோடுவதை உணர முடியும்.
இந்தக் கூத்து ஒரு பக்கம் எனில், மறுபக்கமோ "கோடை மலர்", "கோடை ஸ்பெஷல்", "Holiday Special" என்று இஷ்டத்துக்குப் போட்டுத் தாக்கும் நமது ரகளைகள். 40 ஆண்டுகளுக்கு முன்பான முதல் லயன் கோடை மலர் '86 இன்றளவும் ஒரு iconic இதழ் என்றால் மிகையாகாது. அது சார்ந்த நினைவுகளை நிறைய முறை பகிர்ந்து விட்டுள்ளேன் தான். இருந்தாலும் இந்த ஏப்ரல் பிறக்கும் ஒவ்வொரு வருஷமும், அந்த நினைவுகளுக்குள் ஒரு கணமேயாவது நடமாடாது நான் விடுவதில்லை. முதல் முறையாக முதுகினை அறுத்து, அதனில் ஃபெவிக்கால் தடவி, Perfect Binding என்ற முறையில் இயந்திரம் வாயிலாக பைண்டிங் செய்தது இந்த இதழுக்கே! நம்மிடம் அந்த மெஷின்கள் கிடையாது என்பதால் அந்நாட்களில் சிவகாசியில் கொடிகட்டிப் பறந்த நம்பர் 1 அச்சகத்தில் இந்தப் பணிகளை ஒப்படைத்திருந்தோம். மொத்தம் 10,000 இதழ்கள் !!!!! அட்டைப் படத்திற்கு அட்டகாசமாய் லேமினேஷனும் உண்டு.முன்னட்டையில் ஸ்பைடர் மற்றும் ஆர்ச்சி, பின்னட்டையில் ஈகிள் மேன், சி.ஐ.டி லாரன்ஸ் டேவிட் என்ற அசாத்தியக் கூட்டணி. மெஷினில் பைண்டிங் நடப்பதைப் பார்வையிட அனுமதி பெற்று அவர்களது ஃபேக்டரிக்குள் நுழைந்த நாட்களை சத்தியமாய் மறக்க இயலாது. ஒரு கோடியில் 10,000 இதழ்களும் அடுக்கப்பட்டு, மூன்று தரப்பிலும் கட்டிங் செய்திடுவதற்காக அவர்கள் பரபரப்பாய் பணியாற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது, மாயாவி விரல்விடும் அதே சாக்கெட்டுக்குள் நானும் விரலை நுழைத்தது போல் ஒரு ஜிலீர் உணர்வு.
மொத்தமாய் 10,000 இதழ்களை அங்கிருந்து ஏற்றி கொண்டு வந்து நம்மிடம் இறக்கிய போது நம் ஆபிசில் நேர்ந்த பரபரப்பு ஒரு தனி ரகம். அடுத்த இரண்டு நாட்களுக்கு விடிய விடிய packing நடந்தது. And தொடர்ந்த 10 நாட்களுமே ஒரு சீப்பு வாழைப்பழத்தை முழுசாய் ஆட்டையைப் போட்ட மந்தியின் இளிப்போடு திரிந்து கொண்டிருந்தேன், simply becos நமது அலுவலகத் தொலைபேசி ஓயாது அலறிக் கொண்டே இருந்தது - மறுக்கா மறுக்கா ஆர்டர் தந்து கொண்டிருந்த முகவர்களின் அவசர அழைப்புகளால் ! சொல்லி மாளா அனல் விற்பனையில் !! கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித முகவர்கள் ரிப்பீட் அரடர்களை முதல் வாரத்திலேயே தந்த முதல் இதழ் இதுவே ! நம்பினால் நம்புங்கள் folks - 10,000 பிரதிகள் அச்சான பத்தாவது நாளிலேயே காலியும் கூட. தொடர்ந்த ஆண்டுகளில் லயனுக்கு இணையாக திகிலில், முத்து காமிக்ஸில், மினி லைனில் என ஸ்பெஷல் வெளியீடுகளை இந்த சம்மர் நாட்களில் போட்டுத் தாக்கிய உச்சங்கள் இந்தப் பயணத்தின் மறக்க இயலா highlights என்று சொன்னால் மிகையாகாது.
Of course அந்நாட்களில் ₹ 5 என்பதே ஒரு முரட்டு தொகை தான். ஆனாலும் கதைகளின் கூட்டணியோடு பாக்கெட் சைஸில், கெத்தாக, குண்டாக இதழ்கள் வெளியான போது அவற்றை நீங்கள் அரவணைத்துக் கொண்ட வாஞ்சை நம்மை பரமபத ஏணியில் சில பல படிகள் மேலேற்றி விட்டன என்பதை இன்றும் நன்றியோடு நினைவு கூர்கிறேன். So கோடையின் கொடை நமக்கு கத்திரி வெயிலை நினைவூட்டுவதில்லை மாறாக காமிக்ஸ் தந்த குளிர்ச்சியான நாட்களே மனக்கண்ணில் நிழலாடுவதுண்டு.
இன்றைக்கு நம்மிடம் பால்யங்களும் இல்லை அந்த பரபரப்புகளும் இல்லை. ஆனாலும் இன்னமும் ஆண்டின் ஒரு இதழிலாவது கோடை மலர் என்ற அந்த எழுத்துருக்களை பொறித்துப் பார்க்கும் குஷி மட்டும் மட்டுப்படவே இல்லை. இதோ நடப்பாண்டும் ஒரு கூட்டணி கோடை மலருடன் இந்த மே காத்திருக்கிறது. பொதுவாகவே கூட்டாஞ்சோறுக்கு NO சொல்லி வரும் இந்நாட்களில், கையை காலை பிடித்து லோம்பா நிறுவனத்தில் மட்டும் இதற்கென அனுமதி பெற்றுள்ளோம். So நமது சிகாகோ கேரட் கேச அழகி ரூபின் plus லோன் ஸ்டார் டேங்கோ plus ரிப்போர்ட்டர் ஜானி ஆகிய மூவரின் அதிரடி கூட்டணியில் இந்த இதழ் தயாராகி வருகிறது. இந்த கதைக்களங்கள் நமக்கு எவ்விதத்திலும் புதிதே அல்ல தான் என்றாலும், இம்முறை ஒருவித freshness இங்கு விரவி இருப்பதை பணி செய்யும் போதே என்னால் உணர முடிந்தது.
டிடெக்டிவ் ரூபின் கதைகள் எப்போதுமே அழுத்தமானவையாக இருந்தாலும் அந்த கார்ட்டூன் பாணி சித்திரங்களில் லைட்டாக பயணிப்பது வாடிக்கை. And இம்முறையுமே அதனில் மாற்றமில்லை.சிகாகோவின் அழுத்தம் மிகுந்து கொண்டே செல்ல டிபார்ட்மென்ட்டிலிருந்தே அம்மணிக்கு ஒரு விடுமுறை தந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள். விடுமுறையில் ரூபின் இருந்தாலும் விதி அவரை ஓய்ந்திருக்க விட்டால் தானே? வெகு எதார்த்தமாய் மிகைகளின்றி, இந்தக் கதையின் plot மெது மெதுவாய் முடிச்சவிழ்வது அட்டகாசமான பாணியில் கதாசிரியர் படைத்திருப்பதாக எனக்குப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாகவே ரூபின் கதைகளுக்கு நமது டீமின் மகளிர் குழுவே பேனா பிடித்து வந்துள்ளது. அதன் நீட்சியாக இம்முறையும் மிஸ் P.சுகன்யா இங்கு மொழிபெயர்ப்பினை செய்துள்ளார். Of course புடைப்பான நம்ம மூக்கை உள்ளே நுழைக்காமல் இருக்க போவதில்லை தான். So கணிசமான இடங்களில் நம்ம குரங்குச் சேட்டைகளையும் பார்க்கத்தான் போகிறீர்கள். "விடுமுறையில் விதி முடிப்போம்" ரூபின் கதை வரிசையில் yet another classic-ஆக அமைந்திடப் போகிறது என்று பட்சி காதில் சொல்கிறது. அது அள்ளி விடும் பட்சியா? நிதர்சனத்தை உரைக்கும் எதார்த்தமா ? என்பதை இதழ் வந்த பின்பாக உங்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.
இந்த இதழின் action நாயகரான டேங்கோ இம்முறை ஒரு out and out த்ரில்லரில் களம் காண்கிறார். இந்தத் தொடரின் அடையாளமே விதவிதமான தென் அமெரிக்க நாடுகளில் கதையோடு travel செய்வதுதான் என்பதை நாம் அறிவோம். And இம்முறையும் பராகுவே எனும் தென் அமெரிக்கக் களம் இங்கு பின்னணி. மிக மிக லேட்டஸ்ட் உருவாக்கம் என்பதால், சித்திர பாணியிலும் சரி, டிஜிட்டல் கலரிங்கிலும் சரி, செம புத்துணர்வு தரும் feel சாத்தியப்படுகிறது. கதை நெடுக டேங்கோவிடம் ஒரு கோபமும், ரௌத்திரமும் தாண்டவமாடுவதை பேனா பிடிக்கும் போதே உணர முடிந்தது. Action Block என்பதால் செம ஜிலோவென்று மொழிபெயர்ப்பினை செய்திட முடிந்தது. லோன் ஸ்டார் இம்முறையும் அடித்திருப்பது சிக்சரா ? என்பதை உங்களிடமிருந்து அறிந்திடக் காத்திருப்பேன்.
And of course நமது சூப்பர் ரிப்போர்ட்டர் ஜானியார். இது தமிழில் நம் புன்னகை மன்னனுக்கு 40-வது ஆண்டு !!!! 1986 ஆகஸ்டில் ‘ரத்தக் காட்டேரி மர்மம்’ வாயிலாகத் தமிழ் பேசப் பழகிய ரிப்போர்ட்டர் ஜானி, ஆண்டுக்கு ஒற்றை ஸ்லாட்டிலாவது தொற்றிக் கொண்டே 40 ஆண்டுகளை நம்மோடு கடந்திருப்பது என்பதெல்லாம் சாமானியப்பட்ட சாகசமே அல்ல என்பேன். In fact, அவர் செய்துள்ள எண்ணற்ற சாகசங்களைக் காட்டிலும் தொங்கிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்திடும் இந்தச் சாகசம் ஒரு மெகா உச்சம் என்பேன். பொதுவாகவே ஜானி கதைகளுக்கு கருணையானந்தம் அங்கிள் அவர்கள்தான் பேனா பிடிப்பதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் கனமான களங்களைத் தந்து அவரை சிரமப்படுத்துவதில்லை என்பதால், நாலைந்து வருஷங்களாகவே ஜானி நம்ம டிபார்ட்மென்ட் என்றாகி விட்டார்.
ஜானி கதைகளுக்குள்ளே தலையை நுழைக்கும் போதே, லைட்டாக பேஸ்தடித்த முகரையோடுதான் புகுந்திடுவது வாடிக்கை. காத்திருப்பது இடியாப்பம் எனும் போது, சேதாரமின்றி வெளிப்பட்டாக வேண்டுமே என்ற கவலைதான் முகமெங்கும் விரவிக்கிடக்கும். ஆனால் இம்முறையோ இந்த ஆல்பம் செம welcome relief. கதையில் அப்படிப்பட்ட ஒரு வேகம், தெறிக்க விடும் speed !!!! பரபரபரவென கொலைகளும், கொலையாளியின் அதிரடிகளும் முத்திரைகளை விட்டுச் செல்ல, அந்தப் பரபரப்பு பேனா பிடித்த என்னையுமே தொற்றிக்கொண்டதுதான். In fact, ஜானி கதைகளின் க்ளைமாக்ஸுக்குள் பேனாவோடு புகுந்திட நினைத்தாலே குளிர் ஜுரம் வந்து விடும் எனக்கே இம்முறை கொலையாளி யார் ? அவனது நோக்கம் என்ன ? என்று அறிந்துகொள்ளும் உத்வேகத்தில் க்ளைமாக்ஸை நோக்கிப் படையெடுக்கும் அதிசயமே நிகழ்ந்தது. சமீப வருஷங்களில் வந்துள்ள ஜானி கதைகளில் one of the best என்று உறுதியாகச் சொல்லலாம். And சித்திரங்களும் சரி, அந்தப் பளிச் கலரிங்கும் சரி, இம்முறையும் துளிகூட ஏமாற்றியிருக்கவில்லை. அட்டகாசமான படைப்பு !!!
So, கதைகள் மூன்றுமே தயாராகி என் மேஜையில் எடிட்டிங்கின் பொருட்டு காத்துக் கிடக்கின்றன. அடுத்த ஓரிரு நாட்களில் மங்களம் பாடிவிட்டேன் எனில் அச்சுக்குப் புறப்பட்டு விடும். And ஏற்கனவே அட்டைப்படம் அச்சாகித் தயாராக உள்ளது. இதோ இந்த hardcover இதழுக்கான அட்டைப்பட பிரிவியூ. சகலமுமே ஒரிஜினல் சித்திரங்கள்தான் என்றாலும் நமது மெருகூட்டல் இங்கு கணிசம். மூன்று ராப்பர்களுமே தத்தம் பாணிகளில் பிரமாதமாய் இருந்தனதான். So, எதை முன்னட்டையில் போடுவது என்று இன்கி பிங்கி பாங்கி போடாத குறையாகத் தடுமாறிவிட்டோம். Anyways, ஜானியின் இந்த action pose அமர்க்களம் என்று நினைத்தேன்.
And here are the previews of the stories :
கூடிய விரைவில் இந்த அட்டகாசமான கூட்டணியை உங்களிடம் ஒப்படைக்கக் காத்திருப்போம். இதுவொரு செம ரகளையான இதழாய் அமையாது போனால் வியப்படைவேன் !!
மே மாதத்தின் மற்றொரு ஹைலைட் ஃபிராங்கோ-பெல்ஜிய பாணியில் வெளிவரக் காத்திருக்கும் நம்ம தல டெக்ஸ் சாகசம் தான். இந்தக் கதை வரிசைக்கு "டெக்ஸ் கிராஃபிக் நாவல்" என்று இத்தாலியில் பெயரிட்டுள்ளனர், ஆனால் கி.நா. பாணியில் அல்லாது, கதைகள் வழக்கமான டெக்ஸின் அனலுடன் பறக்கத்தான் செய்கின்றன. சித்திரபாணி அமைப்பினில் மாத்திரமே ஃபிராங்கோ-பெல்ஜிய தாக்கம் இங்கு கண்ணில்படுகிறது. "நித்திரை அறியா நித்தியன்" - பெயரைப் போலவே ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதைக்களம். ஒரு மெக்சிகத் திருவிழாவின் பின்னணியை துவக்கப் புள்ளியாய் எடுத்துக்கொண்டு, அதனூடே கதையினை புனைந்துள்ளனர் படைப்பாளிகள். இந்த ஆல்பம் வெளியானதே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் எனும்போது செம பிரெஷ்ஷாக உள்ளது.
கதை நெடுக ஒருவித மெல்லிய திகில் இழையோடுவது இந்த இதழின் ஹைலைட் என்பேன். டெக்ஸ் மற்றும் கார்சன் மெக்சிகோவிற்குள் புகும்போதெல்லாம் பட்டாசுகள் பறக்கத் தவறுவதே கிடையாது. இம்முறையும் no different, ஆனால் ஒரு அழகான கதையோட ஆக்சனும் கரம் கோர்த்திருப்பது செம !! So, திரும்பிய திக்கெல்லாம் தோட்டாக்களை மட்டும் பறக்க விடாது, தெளிவானதொரு கதைக்கு இங்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம். முழுக்கவே கலரில் உருவாக்கப்பட்ட ஆல்பம் என்பதால் இதோ ஒரிஜினல் அட்டைப்படம் பிளஸ் உட்பக்க பிரிவியூக்கள். சந்தேகமே இன்றி டெக்ஸ் பட்டியலில் மற்றொரு மறக்க இயலா கிளாசிக்காக இது இடம் பிடிக்கும் என்று இப்போதே எழுதி வைத்துக்கொள்ளலாம்.
மே மாதத்தின் இதழ் நம்பர் மூன்று நமது ஜென்-சி சந்தாவின் தாத்தா பேத்தி கதைதான். அது பற்றி அடுத்த பதிவில் !!
ரைட்டு - கோடை மலரின் இறுதிக்கட்டப் பணிகளுக்கும் புகுந்திடக் கிளம்புகிறேன் guys ! இங்கே சன்னமாய் ஒரு சலனும் உள்ளுக்குள் !! Maybe - just maybe : கனமான கதைகளெல்லாம் இனியும் வேலைக்கு ஆகாதென்று நீங்கள் சொல்லாது, சொல்லிடும் பட்சத்தில் - இந்த நாயக / நாயகியருக்கெல்லாம் டாட்டா காட்ட நேர்ந்திடுமோ ? என்ற பயமே அது !! பார்த்துப் பார்த்து தமிழில் உலவச் செய்த இந்த இரண்டாம் நிலை ஈரோக்கள் இனி நினைவுகளில் மாத்திரமே உலவிடப் போகிறார்களா ? பதில் தெரிலியே !!! Bye folks...see you around ! Have a great Sunday !!










காலை வணக்கம் சார்
ReplyDeleteவாழ்த்துகள் சகோ
DeleteFirst me🤩
ReplyDelete3rd
ReplyDelete10 kulla
ReplyDeleteGood morning all
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteகாலை வணக்கம் அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும்.
ReplyDelete🙏🙏🙏
பத்துக்குள்ள...
ReplyDeleteபத்துக்குள்ள...
ReplyDeleteகோடை மலர் அட்டைப்படம் டிசைன் சூப்பர்😍😍😍
ReplyDeleteஐ லவ் ரூபின் 😍😍😍
ReplyDelete10,000 இதழ்கள் பத்து நாட்களில் 😯😯😯....Awesome Sir
ReplyDeleteசார் ஜான் மாஸ்டர் ஏதாவது அப்டேட் இருக்கா
ReplyDeleteஊறுகாயை மெயின் டிஷ்ஷாகப் பார்க்க வேண்டாமே சார் ? பந்தியில் கம கமவென பிரியாணி காத்துள்ளது !!
Deleteகோடை வாழ்த்துகள் சார்
ReplyDeleteநன்றிகள் சார் ; நாங்களாவது வெயிலுக்கு அல்வா கொடுத்து விட்டு உள்ளே அமர்ந்து பணி செய்வோம்! உங்களது பாடு கோடையில் ரொம்பவே கஷ்டம் தான்
Delete@Edi Sir 💐💐😘💐
ReplyDeleteMe in😘😘💐💐
சார் 40 வருடங்களுக்கு முந்தைய கோடை மலர் போலவே, பாக்கெட் சைசில், ஸ்பைடர் ரோபோட் ஆர்ச்சி and இரும்புக்கை மாயாவி மூவரையும் ஒரே புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்குமே. பாக்கெட் சைஸ் மேல் இருக்கும் மோகம் இன்னும் எங்களை விட்டு போகவில்லை. ஒருமுறை ஒரு புத்தகம் மட்டும் வெளியிட்ட ட்ரையல் பார்க்கலாமே
ReplyDeleteநான் இருக்க நிலைக்கு மெய்யாலுமே அப்படி ஒண்ணை போட்டுப்புடுவேன் நண்பரே - அப்புறம் திண்டாடிப் போயிடாதீங்க 🥹
Deleteஆர்ச்சில்லாம் மெய்யாலுமே இப்போ படிக்க முடியும்னு நினைக்குறீங்களா?
Deleteசார் இந்த மூவர் கதையிலே உள்ள டாப் லிஸ்ட் தேர்ந்தெடுத்த, ஓர் கதையை போட்டு விடலாம்
Deleteடாப் / பாட்டம் எல்லாமே நாமாய் செய்து கொள்வது தான் நண்பரே.... காதில் எத்தனை கிலோ தாங்கும்? என்பதை நாம் தானே தீர்மானிக்க முடியும்?
Deleteகோடை மலர் எப்பொழுதும் சிறப்பானது இப்போதே பார்க்க வேண்டும் படிக்க வேண்டும் போல் உள்ளது.
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஅனல் பறக்கும் 💥கோடை வெய்யிலுக்கு 🔥இதமா 😄😘
ReplyDeleteஆரஞ்சி ஜூஸ் 😘
இளநீர் 😘😘
ஐஸ் மோர் 😘😘😘
செம்ம சார் 💐🙏👍
I am வெயிட்டிங் 👍💐
😊😊😊😁😁
Deleteதாத்தாஸ் ப்ரிவ்யூ அடுத்த வாராம, சார்?
ReplyDelete"என் சோக கதய கேளு தாய்க்குலமே 🎶🎶" அப்டின்னு ஒரு பாக்கியராஜ் பட பாட்டு டி -வி யிலே ஓடிக்கினு இருக்கு ரம்யா... வால்யூம் குறைச்சிட்டு வாரேன்!
Delete😞😞😞
Delete🥲🥲🥲🥲🥲
Deleteசார் . எனக்கு ஊறுகாய் தான் மெய்ன் டிஷ்
ReplyDeleteதப்பில்ல சார் - அடுத்த தபா பிரியாணி வைக்க வாணாம்பான்னு சொல்லிடுவோம் ; சோறும், ஊறுகாயும், கப்பிலே ஜெலூஸிலும் பரிமாற சொல்லிட்டா போச்சு 💪
Deleteவணக்கம்
ReplyDeleteகோடை மலர் அட்டைப்படமும், டெக்ஸ் கி. நா அட்டைப்படமும் - அமர்க்களம் சார்! 😍😍😍😍😍
ReplyDeleteகுறிப்பாய் டெக்ஸின் உள்பக்க சித்திரங்களும், வண்ணச்சேர்க்கைகளும் அபாரம்!!😍😍😍😍😍
இந்தக் கோடை கலக்கல் கதைகளுடன் காத்திருப்பதை உணர முடிகிறது!😍😍😍😍😍
ReplyDeleteகதம்ப இதழ்களுக்கு படைப்பாளிகள் தடை போட்டது கோடை காலத்தில் நமக்கொரு பின்னடைவே! இல்லாவிட்டால் ரூபின், ஜானி, டேங்கோ வோடு டெக்ஸ் கி. நா வையும், ஒரு லக்கி லூக்கையும் இணைத்து ஒரு சூப்பர் டூப்பர் மெகா கூட்டணியை உருவாக்கி அனைவருடைய வாயிலும் ஜலப் பிரவாகம் ஏற்படுத்தியிருக்கலாம்!!😍
ReplyDeleteஅந்த வருத்தத்தைப் போக்கிட இளவரசி + புரட்சித் திலகம் அமாயா கூட்டணியில் ஒரு கதம்ப இதழ் ?
Deleteசார்... இந்தக் கூட்டணி தமிழ் நாட்டையே ஆளும் சார்!!😍😍😍😍
Delete// அந்த வருத்தத்தைப் போக்கிட இளவரசி + புரட்சித் திலகம் அமாயா கூட்டணியில் ஒரு கதம்ப இதழ் ? //
Deleteஅந்த ஒரு அமாயா அம்மணி கதையே போதும் சார்! படிக்காமலேயே வீட்டை விட்டு வெளியே அனுப்பிய அனுபவம் போதும் சார்!
வணக்கம் நண்பர்களே.. 🙏🙏
ReplyDelete// ஆண்டின் 10 மாதங்களுக்கு நம் பக்கமாய் தலை வைத்துப் படுக்கக் கூட எத்தனித்திராத பல முகவர்களும், புத்தக வியாபாரிகளும் இந்த இரு மாதங்களில் "அண்ணாச்சி சௌக்கியமா? காடு-கரை-கம்மா எல்லாம் சுபமா?" என்ற குசல விசாரிப்போடு நமது கையிருப்பில் உள்ள முந்தைய வெளியீடுகளுக்கு ஆர்டர்களை ஆர்வமாய் வழங்கிடுவது வாடிக்கை. //
ReplyDeleteஇந்தனை படிக்க ரொம்ப மகிழ்ச்சி பொங்குது! இதுபோன்ற நமது புத்தக வியாபாரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், அருப்புக்கோட்டையில் உள்ள நமது காமிக்ஸ் முகவர் கடையை தாண்டி செல்லும்போது எல்லாம் என்னிடம் இல்லாத பழைய புத்தகங்கள் எல்லாம் இந்த விடுமுறை நாட்களில் தேடிப்பிடித்து வாங்கி செல்வேன்.
😊😊😊
Deleteஇரட்டை வேட்டையர்கள் & ஜான் மாஸ்டருக்காக வெயிட்டிங் ஆசிரியரே
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteரிப்போட்டர் ஜானி, ரத்தக்காட்டேரி மர்மம்.. அருமையான ஜிலு ஜிலு குளு குளு காற்று உள்வாங்கும் டவுசர் போட்ட காலகட்டம் எனக்கு. என்ன ஒரு அருமையான கதை. ஆரம்பகால ரசிகர்கள் இன்னும் ஜானியை கொண்டாடுவது ஏன் என அறிவதற்கு இதன் மறு பதிப்பு வந்தால் மட்டுமே புதிய வாசக நண்பர்கள் அறிய முடியும்.
ReplyDeleteஇனிய நினைவுகளுக்கு பழைய நினைவு, புதிய நினைவு என்ற வித்தியாசம் இருக்க முடியுமா என்ன? இனியவை என்றும் இனியவை தான்.
This comment has been removed by the author.
ReplyDeleteசமீப வருடங்களில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் மேடம் மிஸ்.சுகன்யாவும் ஒருவர். என்ன ஒரு திறமை..!!!மொழிபெயர்ப்பு அருமை..வாழ்த்துக்கள்.
ReplyDeleteடெக்ஸ் சித்திரங்கள் படு அழகு...
ReplyDeleteஆவலுடன் waiting !!!
Vàzhgha vàzhgha valamudan 🎉
ReplyDeleteRico Chet என்னோட ஆல்டைம் ஃபேவரைட் துப்பறியும் சிங்கம்...
ReplyDelete🙋🏻♂️
ReplyDelete🙋♀️
Delete// லயன் கோடை மலர் '86 //
ReplyDeleteஉங்களுடன் சேர்த்து நாங்களும் அந்த அனுபவத்தை உணர்ந்தது போல உள்ளது சார் நீங்கள் எழுதிய விதம்!
சூப்பர் சார்... சுவாரஸ்யமான ரூபின்....அருமை நண்பர் டேங்கோ ஈர்க்க....ஜானி அடடே போட வைக்க....டேங்கோ மட்டும் பதிய... கீழ இறக்குனா எல்லாரும் அந்த பக்கமா போங்கன்னு நீலக்கலரயே தெறிக்க விடும் கலரில்வித்தியாசமாய் டெக்ஸ் அட்டை ...லார்கோ அறிமுகத்தை நினைவுபடுத்தும் அந்த வண்ணமய பக்கம்...போடுறாஇன் வெடியன்னு அந்த மூன்று கூட்டணியையும் தூக்கி வீசி விட்டு புவிஇயாய் தன்னந்தனியாய் டெக்சார் நிர்வாகத்துக்கு கோடை மாத களத்தில் சூடு பிடிக்க வைத்து வாங்கினான் நம்மை குளிரச் செய்ய...தாத்தாவும் ஈர்க்க...கோடை மலர்னாலே 86 தானோ என்பதை 2026 தூக்கி சாப்பிட வாழ்த்துக்கள்...அருமை சார்
ReplyDelete💐💐💐
Deleteஇன்னும் நீங்க எத்தனை முறை 80s நினைவுகளை பகிர்ந்தாலும் அது ஒவ்வொரு முறையும் எங்களுக்கு உற்சாக டானிக்தான்.
ReplyDeleteஏனெனில் அப்ப எங்களுக்கு இந்த விபரமெல்லாம் துளியும் தெரிய வாய்ப்பில்லை, 10000 இதழ்கள் என்பது கேக்கறப்ப "அதில் ஒரு இதழ் எனக்கும் சொந்தம்" என்பது ஆச்சரியமான பெருமையான விசியம்.
பள்ளி விடுமுறை கால அந்த 1½ மாதங்களும் "திகில் கோடை மலர்,லயன் கோடை மலர், ராணி காமிக்ஸ் கோடை மலர்" என காமிக்ஸ்களையே சுற்றி சுற்றி வந்த காலமெல்லாம் அவ்வளவு எளிதில் மறக்கவே முடியாது.
வருடா வருடம் முத்து காமிக்ஸ்லேயே கோடை மலர் போடுவதற்கு பதில் ஒரு மாறுதலுக்காக,வாய்ப்பு இருந்தால்,
"ஒரு கதம்ப இதழாக லயன் காமிக்ஸ் ல் கோடை மலர்" போடலாமே சார். லயன் கோடை மலரை மீண்டும் காண ஆவலுடன்....
"ரூபின்க்கு சுகன்யா ப்ரோவின் மொழிபெயர்ப்பா?" அப்ப 100 100 தாராளமாக போடலாம்.
ஜானி எப்பவும் வழக்கம்போல என்றானபின்,
இந்த அமைதியை தேடும் ஆசாமி டேங்கோ "இந்த முறை என்ன மாதிரியான சதி வலையில் மாட்டப் போகிறாரோ?" என சின்ன பரபரப்பு இப்பவே.
கோடைமலரின் அட்டைப் படத்தை விட, டெக்ஸ் அட்டைப்படமும், அதன் ட்ரெய்லரும் தூக்கல் 👌🔥🔥🔥.
அனல் பறக்கும் கோடையில் இந்த இதழ்களும் இணைந்தால் இன்னும் உக்கிரமாக இருக்கும்.
Waiting for...🔥
// இன்னும் நீங்க எத்தனை முறை 80s நினைவுகளை பகிர்ந்தாலும் அது ஒவ்வொரு முறையும் எங்களுக்கு உற்சாக டானிக்தான். //
DeleteYes. True!
கோடை மலர் அட்டைப்படத்தில் "இலவச தாய விளையாட்டை கேட்டு வாங்குங்கள்" மிஸ்ஸிங் சார்!,😊 "கோடை மலர் " எனும் டைட்டில் கொடுக்கும் நோஸ்டால்ஜிக் உற்சாகத்தை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் போல் தோணுகிறது. டைட்டில் இன்னமும் கொஞ்சம் போல்ட்'டாக, ட்ராமாட்டிக்காக அமைத்திருக்கலாம்.
ReplyDeleteகதம்ப மலர் வாய்ப்பில்லை எனும்போது கோடை மலர் மாதத்தின் புத்தகங்களை ஒரே அளவில் அச்சிட்டு, அனைத்து கதாநாயகர்களும் இடம்பெயரும் படத்துடன் கோடை மலர் எனும் ஸ்லிப் கேஸ் சில் வெளிவந்தால் நோஸ்டால்ஜிக் ரசிகர்களின் ஆர்வத்துக்கு சிறிது சிறப்பு செய்தது போல் இருக்கும்.
முடித்தால் முயற்சி செய்யுங்கள் சார்!
கவுண்டரின் பட டயலாக் ஒன்று தான் நினைவுக்கு வருது சார் - but வாணாம் தான்... 🥴
Delete// தொடர்ந்த 10 நாட்களுமே ஒரு சீப்பு வாழைப்பழத்தை முழுசாய் ஆட்டையைப் போட்ட மந்தியின் இளிப்போடு திரிந்து கொண்டிருந்தேன் //
ReplyDeleteROFL :-)
// 10,000 பிரதிகள் அச்சான பத்தாவது நாளிலேயே காலியும் //
ReplyDeleteவாவ்! இந்த விற்பனை மீண்டும் நமக்கு சாத்தியமானால், இன்னும் நிறைய காமிக்ஸ் நமக்கு கிடைக்கும்! :-) கனவு மெய்பட வேண்டும்! விரைவில் மெய்பட வேண்டும்! அந்த காலம் மீண்டும் திரும்ப வேண்டும்! விரைவில் திரும்ப வேண்டும்!
வந்துட்டேன்...
ReplyDeleteவாங்க குமார். இன்று நீங்க ரொம்ப தாமதமாக வந்து இருக்கீங்க குமார்!
Delete// கோடையின் கொடை நமக்கு கத்திரி வெயிலை நினைவூட்டுவதில்லை மாறாக காமிக்ஸ் தந்த குளிர்ச்சியான நாட்களே மனக்கண்ணில் நிழலாடுவதுண்டு. //
ReplyDeleteமறுக்க முடியாத உண்மை. மொபைல், காட்ஜெட் இல்லாத எங்களில் சிறிய வயதில் கோடைமாதம் நமது காமிக்ஸ் எங்களை எல்லையில்லாத சந்தோசத்தை கொடுத்தது! அந்த மாதம் வந்த கதைகளை அதே மாதத்தில் பலமுறை படித்த நாட்கள் அது.
// இதோ இந்த hardcover இதழுக்கான அட்டைப்பட பிரிவியூ //
ReplyDeleteமகிழ்ச்சி சார்!!
கோடை மலர் அட்டைப்படம் நன்றாக உள்ளது! ஆனால் அதனை விட டெக்ஸ் அட்டைப்படம் மிரட்டலாக உள்ளது!
நீண்ட நாட்களுக்கு பிறகு மிக பெரிய பதிவு சார்! நன்றி! மகிழ்ச்சி!
ReplyDelete+1
Deleteபத்தாயிரம் பிரதிகளும் பத்தாவது நாளில் காலி...
ReplyDelete#####
மகிழ்வான வரிகள் சார்...அது போல் இப்பொழுது நடந்தால் நமது காமிக்ஸ் கொண்டாட்டத்தை எப்படி எல்லாம் நடைமுறை படுத்துவீர்கள் எண்ணி பார்க்கவே பரவசமாகிறது ஹீம்...
கோடை மலர் ,டெக்ஸ் இரண்டு அட்டைப்படங்களும் பட்டாஸாய் தெறிக்கிறது சார்...அருமை...உள்ளே சித்திரங்களும் வண்ணங்களும் சூப்பர...
ReplyDeleteஇன்று கிங் ஸ்பெஷல் மீதம் உள்ள கதைகளை வாசித்தே தீர வேண்டும் என்பதால் இன்று விடுமுறை எடுத்து விட்டேன்...முழுவதுமாக வாசித்து விட்டுதான் அடுத்த வேலை...:-)
ReplyDeleteவேலைக்கு போவாம இருக்க இப்புடியும் ஒரு காரணமா 🥴?
Deleteநீங்க கலக்குங்க தலீவரே 👍
Deleteஒருத்தரு லீவு போட்டு ஊட்டிலே கீறாரு....!
Deleteஇன்னொருத்தரு லீவு போட்டு ஆபீசிலே கீறாரு...!
//லீவு போட்டு ஆபீசிலே கீறாரு...!//
Delete😂😂😂😂😂
மெய்ன் டிஷ் ஊறுகாய்னாலும் பிரியாணியும் சோறும் கப்பிலே ஜெலுசிலும் சைட் டிஷ் ஷாக சாப்பிட எப்பவுமே ரெடிங்க சார்
ReplyDeleteபேஷ்.. பேஷ்... செலவு ரெம்ப சுருக்கமாகிடும் 💪
Delete// மெய்ன் டிஷ் ஊறுகாய்னாலும் //
Deleteஉடம்பு பஞ்சர் ஆகிடும் சார்! கவனம்!
தாத்தாக்களுக்காக. ஆவலுடன் வெய்ட்டிங்
ReplyDelete💪💪💪
Delete//மெஷினில் பைண்டிங் நடப்பதைப் பார்வையிட அனுமதி பெற்று அவர்களது ஃபேக்டரிக்குள் நுழைந்த நாட்களை சத்தியமாய் மறக்க இயலாது.//
ReplyDeleteஅருமையான அனுபவங்கள்
இதுவரை வந்த டிடெக்டிவ் ரூபின் கதைகள் எல்லாமே தரமானவை! இன்றைய காலகட்டதிற்கேர்ப்ப வேகமான கதை நகர்வும், நேர்த்தியான கதை சொல்லலும் - ரூபினை ஆவலுடன் எதிர் பார்க்க வைக்கின்றன!😍😍😍
ReplyDeleteவரயிருக்கிற கதையும் சூப்பர் ஹிட் என்றால் ரூபின் அம்மணிக்கு அடுத்த வருட ஸ்லாட்டில் ஒன்று கூடுதலாகத் தருவதைப் பற்றி யோசிக்குமாறு எடிட்டர் சமூகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்!🙏
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை 🎶🎶
Deleteஎன்னைச் சொல்லிக் குற்றமில்லை 🎶🎶...
காலம் செய்த கோலமடி 🎶
//வரயிருக்கிற கதையும் சூப்பர் ஹிட் என்றால் ரூபின் அம்மணிக்கு அடுத்த வருட ஸ்லாட்டில் ஒன்று கூடுதலாகத் தருவதைப் பற்றி யோசிக்குமாறு எடிட்டர் சமூகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்!🙏//
Deleteநானும்
மாடஸ்டி அடுத்த இவர்தான் கதாநாயகி என உள்ளார்
ஆக்ஷன், கதை, டிடெக்டிவ் என அசத்துகிறார்,
***ரூபின் டபுள் ஆல்பம் ப்ளீஸ், சார்***
நமது காமிக்ஸ் இதழ் எதோ ஒன்றுக்கு பாட்டு எழுதி கொண்டு உள்ளீர்களா, சார்
Deleteஇன்று பாட்டுகள் பொழிகின்றனவே
// இன்று பாட்டுகள் பொழிகின்றனவே //
Deleteஅந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் காமிக்ஸ் தெரிகிறது 🏃🏿♂️
ஆசிரியரே அந்த இரட்டை வேட்டையர் இன்னும் வரல கொஞ்சம் பாத்து பன்னுங்க
ReplyDelete
ReplyDeleteசிவகாசியில் ஒரு மரபணு விஞ்ஞானி
கோழியா முட்டையா முதலில் எது வந்தது என்ற கேள்வி கேட்டால் பரிணாம விதிகளின்படி முதலில் வந்தது முட்டைதான். ஏதோ ஒரு விலங்கினம் போட்ட முட்டை மரபணு மாற்றம் கண்டு கோழியாக உருவெடுத்தது.
இரும்புக்கை மாயாவி எனும் முட்டை முதலில் வந்தது. பின்னர் சிவகாசி எடிட்டர் சார் அவர்கள் ஜெனிடிக் குச்சியை வைத்து கிளற நாட்டுக்கோழிகள் பண்ணை கோழிகள் வான்கோழிகள் தீக் கோழிகள் அனைத்தும் வந்தன.
டெக்ஸ் டைகர் டியூராங்கோ லார்கோ ஷெல்டன் பயணம் சாம்பலின் சங்கீதம், குதிரை தூக்கில் தொங்கவிடப்பட்ட கதை, நீண்ட கழுத்துடைய ஒரு வேற்றுக்கிரகவாசியின் கதை டாங்கோ இத்தனையும் இரும்புக்கை மாயாவி எனும் முட்டையில் இருந்து வெளி வந்தவைதான்.
கால ஓட்டம் ரசனையை மாற்றியது என்பது உண்மைதான். அதற்குக் காரண கர்த்தா மரபணு விஞ்ஞானி எடிட்டர் சார் அவர்கள் தான்.
முதன் முதலில் கல்லால் சக்கரத்தை கண்டுபிடித்தவர் அதி புத்திசாலி என்பது உண்மைதான். டியூப்லெஸ் டயர் வந்த பிறகும் அந்த கற்ச்சக்கரத்தை மீண்டும் நாடுவானேன்?
ஜென் z சந்தா கதைகள்
தனித்துவம் பெற்று விளங்கும் இந்த கதைகள் கொண்டு வந்ததற்காக எடிட்டர் சாரை மிகவும் பாராட்ட வேண்டும்.
முதல் கதையில் பேய் வந்தாலும் அதை மறுத்து நகைச்சுவையான விளக்கம்.
இப்போது இந்த மாதம் வந்திருக்கும் ஜாக்கி போட்ட ஓநாய் அற்புதமான கதை. நகைச்சுவையில் மிகவும் கவர்ந்திழுத்தாலும் பெரியவர் குழந்தைகள் என பாகுபாடு இல்லாது
படிப்பினையும் தரவல்ல கதை.( இந்த கதை பற்றி ஒரு மிகப்பெரிய பதிவையே எழுத முடியும் )
மரணம் மறந்த மம்மி
தாங்கள் செய்த தவறுகளை எந்த மந்திரக்கோலும் இல்லாமல் தற்கால அரசியல்வாதிகள் மக்களை மறக்கச் செய்யும் மாயஜாலங்களை கண்ணுறும்போது டெக்ஸின் இந்த கதையில் வரும் மாய வித்தைகள் உறுத்தலாக இல்லை என்பதே உண்மை. கதையின் எந்த பக்கங்களிலும் அயர்வு ஏற்படவே இல்லை.
நமது மனதுக்கு மிகவும் நெருக்கமான நாயகர் மெக்சிகோ வெயிலில் விரையும் போது ஒரு அப்பாசே பைக் ஷாப்தி ஒன்றை உருவாக்கி அதிலிருந்து வெயில் தாக்காமல் இருக்க கருப்பு கண்ணாடி,
நீர்ச்சத்து குறையாமல் இருக்க இளநீர்,தர்பூஸ் மற்றும் மற்றும் கோலா பெப்சி பாட்டில்களை டெக்ஸ்சை நோக்கி வீச வேண்டும் என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை.
வாசலில் டெக்ஸ் வில்லரின் அபிமான துப்பாக்கிகளான கோல்ட் மற்றும் வின்செஸ்டரை வாசலில் வண்ணக்கோலமாக இடவேண்டும் என்ற வேட்கை அவர் சொல்லாமலே எழுகிறது.