Powered By Blogger

Monday, January 06, 2025

The பதிவு !

  நண்பர்களே,

வணக்கம். ஏதோ ஒரு தூரத்துப் பொழுதாய் தோன்றுகிறது- ஜனவரியின் ரெகுலர் சந்தாத் தட இதழ்களை டெஸ்பாட்ச் செய்ததெல்லாமே! தொடர்ந்த பொழுதுகளில் ஒரு டஜன் சென்னை மேளா ஸ்பெஷல்கள் ; புத்தாண்டின் பதிவு ; சென்னைப் புத்தகவிழா விசிட்; விற்பனையிலும், சந்தாத் தொகை வசூ­லும் ஒரு புது உச்சம் கண்ட நாள் - என்று ஏதேதோ நிகழ்ந்திருக்க, ஜனவரியின் மெயின் பிக்சர்கள் தியேட்டரி­ருந்து நடையைக் கட்டி OTT-க்கு நகர்ந்துவிட்டது போல் மனசுக்குள் ஒரு பீலிங்கு! வாண வேடிக்கைகளும், கரகாட்ட, ஒயிலாட்டங்களும், கவனங்களை ஈர்த்தாலும், ஊர்வலம் வந்த "தல'; "தளபதி' & மாயாத்மாவை அத்தனை சுலபத்தில் லூசில் விட்டு விட முடியாதல்லவா? So இந்தத் (தாமதப்) பதிவின் மூலமாய், ஒளிவட்டத்தை தாமதமாகவேணும் ரெகுலர் தட ஜாம்பவான்கள் மீது பாய்ச்சலாமா? folks?

தி தளபதி!

சந்தேகமின்றி ஜனவரியின் உச்ச நாயகர் இவரே! And சென்னைப் புத்தகவிழாவின் விற்பனைகளிலும் இளம் தளபதியார் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறார் தான்! Yet - இதுவரையிலும் இந்த டபுள் ஆல்ப சாகஸத்திற்குள் புகுந்திட நம்மில் பலருக்கும் நேரம் வாய்த்திருக்கவில்லையோ என்னவோ- பெரிசாய் அலசல்கள் எதையும் காணோம்! அட, ""தங்கத் தலைவன்''என்று தோளில் தூக்கித் திரியும் சங்கத்தினர் கூட கும்பமேளாவிற்குப் புறப்படும் முஸ்தீபுகளில் பிஸியோ என்னவோ- பேச்சு மூச்சையே காணோம்! ஒரு வேளை பாயாச அண்டாவை கழுவும் மும்முரமாகவும் இருக்கலாம் தான்!

The கதை:

Of course இந்த வடக்கு vs தெற்கு உள்நாட்டு யுத்தமே இங்கேயும் தொடர்ந்திடும் கதைக்களம்! ஆனால், இந்தவாட்டி ஏழு கடல்களுக்கும், ஏழு ஏரிகளுக்கும் பின்னே போய் கதை மாந்தர்களை நினைவுபடுத்திக் கொள்ளும் அவசியங்களெல்லாம் இல்லை! "பரபர'வென ஓட்டமெடுக்கும் செம crisp storyline! So இதற்கென வாகாய் நேரத்தை ஒதுக்கிவிட்டுத் தான் படிக்க ஆரம்பிக்கணும் என்ற கட்டாயங்களுக்கு இங்கே அவசியமிராது!! பொம்ம பார்த்ததோடு புக்கை தலைமாட்டில் வைத்திருக்கும் சங்கத்தினரே : கிடைக்கும் முதல் வாய்ப்பினில் வாசிப்பைத் துவக்க மட்டும் செய்தீர்களேயானால்- இளம் தட்டைமூக்கார் உங்களைக் கையைப் பிடிச்சு இழுத்துச் சென்றுவிடுவார் அந்த யுத்த பூமிக்குள்! இரண்டே பாகங்கள் தான் என்பதும் ஒரு added advantage - முத்து காமிக்ஸின் இந்த மைல்கல் இதழுக்கு நியாயம் செய்திட!

மொத்தம் 21 ஆல்பங்கள் கொண்ட இந்த இளம் டைகர் தொடரினில் நாம் தற்சமயம் முடித்திருப்பது ஆல்பம் 15..! அடுத்துமே டபுள் அத்தியாய சாகஸம் காத்திருப்பதால்- 2026-ல் கூட இதே போலொரு ஆல்பத்தைப் போட்டால் # 16 & 17-ஐ பூர்த்தி செய்துவிடலாம்! அப்பாலிக்கா maybe- ஒரே நான்கு பாக ஆல்பத்தோடு 2027-ஐ சந்தித்தால் மொத்தமாய் டைகர் கதைகளுக்கு ஒரு சுபம் போட்டுவிடலாம்! அதன் பின்பாய் ஒற்றை ஆல்பத்தோடு ஐந்தாறு ஆண்டுகளாய் தொங்க­லில் நின்று வரும் புதியதொரு டைகர் சுற்றை படைப்பாளிகள் தொடர்ந்தால் தானுண்டு! So "ஒரு கொடூரனும், கடற்கன்னியும்'' இதழானது உங்கள் வாசிப்புப் பொழுதினை எடுத்துக் கொள்ள சீக்கிரமே அனுமதியுங்களேன் folks?

The சித்திரங்கள் & The கலரிங் & The அச்சு:

இந்த ஆல்பத்தைத் திறக்கும் நொடியிலேயே அதன் சித்திர ஜாலம் புலனாகிடும்- அந்த இரட்டைப் பக்கத்து கோட்டோவியத்தின் புண்ணியத்தில்! And உட்பக்கங்களுக்குள் புகுந்தால் சித்திர ஜாலங்கள் மூச்சிரைக்கச் செய்வது உறுதி! 

இங்கொரு கொசுறுத் தகவல் :

இந்த ஆல்பத்தினை அமர்க்களப்படுத்தியுள்ள ஓவியர் Michal Blanc-Dumont தான் ஜானதன் கார்ட்லேண்டின் ஜடாமுடி அவதாரின் ஓவியருமே! ("குளிர்காலக் குற்றங்கள்'' ஞாபகமிருக்குதா மக்களே? ஆத்தீ.. என்னாவொரு அடி!!!) And தனது 59-வது வயதிலேயே மரித்துப் போன இவரது மனைவி க்ளாடீன் தான் இந்த ஆல்பத்தின் வண்ணச் சேர்க்கைகளின் ஆற்றலாளர்! பளீரென்று அறையாத வண்ணங்களில் ஜாலம் செய்திருக்கிறார்! ஒரு உதாரணமாய் பக்கம் 95-ஐ சொல்லுவேன்! மழை கொட்டும் இருண்ட வானமும், குதிரையில் வரும் கர்லின­ன் கோட்டும் கிட்டத்தட்ட ஒரே வர்ணத்தில் இருந்தாலும் அழகாய் வேறுபடுத்திக் காட்டியிருப்பார்! அதே போல குதிரை, செம்மண் தரை- என சகலமும் ஒரே பிரவுண் என்றாலும் லாவகமான கலரிங்கில், காலுக்குள் ஓடும் மழை நீரை......குதிரையின் கால்களை அழகாய் highlight செய்திருப்பார்! தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் இந்த கலரிங் வித்தைகளில் நம்மவர்களால் படைப்பாளிகளை லேசு பாசாகக் கூட எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பது தான் யதார்த்தம் !

And இந்த இதழின் இன்னொரு highlight அச்சில் கிட்டியுள்ள துல்லியத்தைத் தான் சொல்வேன்! பொதுவாக லக்கி லூக், டெக்ஸ் போன்ற ஆல்பங்களில் பளீர்- பளீரென்ற வர்ணங்கள் மேலோங்கியிருப்பது வாடிக்கை! அவற்றை அச்சிடுவது செம சுலபமும் கூட! ஆனால், இந்த இளம் டைகர் ஆல்பத்திலுள்ள போலான pastel shades பிரதானமாய் கொண்ட சித்திரங்களை பிசிறின்றி ப்ரிண்ட் பண்ணுவது விளையாட்டுக் காரியமே லேது! கொஞ்சமாய் மசி கூடிவிட்டால் கூட கலரிங்ஓவியரின் அந்த நுணுக்கங்கள் காணாமல் போய்விடும் ஆபத்துண்டு! So இந்த இதழின் ரம்யத்துக்குப் பாடுபட்ட படைப்பாளிகள் அளவுக்கு இல்லாவிடினும், ஒரு 20 சகவிகிதமாவது ப்ரிண்டிங்குக்கு பாராட்டுக்களைத் தந்தால் தப்பில்லை என்பேன்!

இந்த racy டபுள் ஆல்பத்துக்கு நான் தரும் மார்க்குகள் 8/10. உங்களது ரேட்டிங்ஸ் ப்ளீஸ் லேடீஸ் & ஜென்டில்மேன் ? 

The 'தல' story - அதாவது அம்மணி பெர்ல் ஹார்ட்டின் ஸ்டோரி :

இம்மாத டெக்ஸ் சாகசமும் இன்னமும் பரவலாய் அலசப்படவில்லை தான் ! மூப்பின் தாக்கமோ என்னவோ - பாயாசப் பார்ட்டிகளுக்கு ஆயாசம் இப்போதெல்லாம் மேலோங்கிடுகிறது ! அடுப்பைப் பற்ற வைக்கக்கூட 'தம்' காணோம் சமீப மாதங்களில் ! மாறாக அந்நாட்களில் செம தம்மோடும், தில்லோடும் மெய்யாலுமே உலவி வந்ததொரு வன்மேற்கின் நிஜப் பெண்மணியின் வரலாறு கலந்த "இளமை எனும் பூங்காற்று" செம breezy read ! எப்போதுமே அந்தப் பரிச்சயமான இத்தாலிய b & w பாணியில் தான் டெக்ஸ் பயணிப்பது வழக்கம். ஆனால் ஐரோப்பிய ஜாம்பவான்களுள் ஒருவரான நாம் அந்த பிராங்கோ-பெல்ஜிய பாணிகளிலும் நம்மவரை உலவச் செய்தாலென்ன ? என்று போனெல்லி யோசித்ததன் பலனாய் உதித்ததே TEX கிராபிக் நாவல் தனித்தடம் ! ஆண்டுக்கு ஒன்றோ-இரண்டோ ஆல்பங்களை மட்டும் வித்தியாசமான சித்திர அமைப்பில் ; page setting-ல் ; மாறுபட்ட கதைக்களங்களோடு புதுப்புது ஓவியர்களின் கைவண்ணங்களில் இந்தத் தனித்தடத்தில் களமிறக்கி விடுகின்றனர் ! அதிலொன்று தான் PEARL என்ற பெயரில் அங்கு வெளியான இந்த ஆல்பம் ! சர்வ நிச்சயமாய் இது மாமூலான டெக்ஸ் பாணி அல்ல தான் ! So எப்போதுமான template இங்கு இராது ! மாறாக - டெக்சின் ஒட்டு மொத்த சரித்திரத்தையும் முற்றிலும் புது வார்ப்பில் படைக்கப் பிரயத்தனம் மேற்கொண்டு வரும் மௌரோ போசெல்லி அவர்களின் லாவகத்தில், ஒரு வரலாற்று ஆளுமையுடன் டெக்ஸ் & கார்சன் பயணிப்பது போலாக கதை படைக்கப்பட்டுள்ளது ! And அந்த அம்மணியை நல்லவர் - வல்லவர் என்றெல்லாம் சித்தரிக்க முனையாது, பாதை தவறிப் போனதொரு காரிகையாகவே காட்டியிருப்பது தான் போசெல்லியின் touch என்பேன் ! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஆல்பத்தை தேர்வு செய்த சமயத்தில் எனக்கு இதுவொரு வரலாற்றுச் சம்பவம் சார்ந்த கதை என்பது தெரியாது தான் ; கலாமிட்டி ஜேன் போலான ஆல்பமாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். But கதையினூடே பணியாற்றும் வேளையில் தான் சம்பவக்கோர்வைகள் இதுவொரு நிஜ சமாச்சாரமாய் இருக்குமோ ? என்ற கேள்வியினை உள்ளுக்குள் எழுப்பியது ! கூகுள் சாரிடம் விபரம் கேட்ட நொடியில் புட்டுப் புட்டு வைத்து விட்டார் ! இங்கே கதாசிரியருக்கு செம tough தந்து கொண்டிருப்பவர் ஓவியை லாரா சுக்கேரி தான் ! ஜூலியா தொடரில் பணியாற்றியுள்ள பெண்மணி இவர் ! Maybe ஒரு பெண் முன்னிலை வகிக்கும் இந்த ஆல்பத்துக்கு ஒரு பெண்ணே தூரிகை பிடித்தால் பொருத்தமாக இருக்குமென்று போனெல்லியும், போசெல்லியும் நினைத்தார்களோ - என்னவோ, வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது ! And கிட்டியுள்ள சந்தர்ப்பத்தை அற்புதமாய் பயன்படுத்தியுள்ளார் அம்மணி ! துவக்கத்தில் வரும் அந்த இரவுத் தேடல்கள், பாலைவனப் பின்னணிகள் ; நகர்ப்புற சித்திரங்கள் ; long shots என்று ஜமாய்த்திருக்கிறார் ! 

அவருக்கு நான் துளியும் சளைத்தவளில்லை என கலரிங்கில் வூடு கட்டி அடித்துள்ள ஆர்டிஸ்டுமே ஒரு பெண்மணி தான் ! இதோ இருக்கிறார் லியோனி அன்னலிசா !


So டெக்ஸ் தொடரின் பன்முகத்தன்மைக்கொரு உதாரணமாய் மினுமினுக்கும் இந்த "இளமை எனும் பூங்காற்று" ஆல்பத்துக்கு நான் கொடுப்பது 7/10. உங்களது ரேட்டிங்ஸ் மக்களே ?

The வேதாள மாயாத்மா !

இரண்டு கதைகள் கொண்ட V காமிக்சின் ஆண்டுமலர் ரெடியாகும் போதே எனக்குத் தெரியும் - முதல் கதை அழகாய் சிலாகிக்கப்படும் & இரண்டாவது கதை அற்புதமாய் மொத்து வாங்கித்தரும் என்பது ! முன்னது ஓவிய ஜாம்பவானான Sy Barry அவர்களின் கைவண்ணத்தில் ; பிதாமகர் Lee Falk-ன் கதையுடன் 1977-ல் உருவான கிளாசிக் சாகசம் ! நம்மில் பலருக்கும் 'இவர் தான் வேதாள மாயாத்மா' என்ற எண்ணத்தினை அழுந்தப் பதிவு செய்திட Sy Barry அவர்களின் சித்திரங்கள் ரொம்பவே உதவியிருப்பதால் இந்தக் கதை அனைவருக்குமே பிடித்திருக்கும் என்பது திண்ணம். "கீழ்த்திசை சூனியம்" என்ற பெயரில் முத்து காமிக்சில் black & white-ல் வெளியான இந்த ஆல்பத்துக்கு நிலஞ்சன் சைய்யத் என்ற டிஜிட்டல் ஓவியர் அழகாய் வர்ணங்கள் சேர்த்துள்ளார் !

அதே சமயம் இந்த ஆல்பத்தின் இரண்டாவது கதையாக வந்துள்ளதோ - பிதாமகர் Lee Falk-ன் மறைவுக்குப் பின்பாய் ஓவியப் பொறுப்புகளை கவனித்து வந்த ஜார்ஜ் ஓல்சன் + கீத் வில்லியம்ஸ் என்ற டீமின் கைவண்ணத்தில் உருவான சாகசம் !! 1999-ல் உருவான இந்தக்கதைக்கு King Features நிறுவனத்தினரே வர்ணங்களும் தீட்டியிருந்தனர் ! இம்மி பிசகினாலும் நெற்றிக்கண் திறக்கும் நக்கீரர்களான நமக்கு இந்த புதிய டீமின் படைப்புகள் சுர்ரென்று கடுப்பேற்றும் என்பது சித்திரங்களை பார்த்த போதே புரிந்தது ! But மலையாளத்தில், ஹிந்தியில், என்று வேதாளரை வெளியிடும் பதிப்பகங்கள் நம்மைப் போல Sy Barry தவிர்த்த கதைகளையும் ஜாலியாய் வெளியிட்டு வரும் நிலையில், இந்தக் கதை வந்து சேர்ந்த போது நம்மால் ஏதும் செய்திட இயலவில்லை ! But கதை decent ஆனதொன்று என்பதால் வண்டி ஓடி விடும் என்று நம்புவதைத் தவிர, வேறு வழி இருக்கவில்லை ! So கொஞ்சம் பார்த்து பண்ணுங்க மொதலாளீஸ் !!

இந்த டபுள் ஆல்பத்துக்கு நான் தரும் மார்க்குகள் 6.5/10. உங்களது ரேட்டிங்ஸ் ப்ளீஸ் லேடீஸ் & ஜென்டில்மேன் ? 

ஆக, ஜனவரியின் ரெகுலர் இதழ்களுக்கு உங்களின் அலசல்களை சீக்கிரமே தர முனைவீர்களெனில் நாங்க ஹேப்பி அண்ணாச்சி ! And இன்னமும் சந்தாவில் இணைந்திருக்கா நண்பர்களுக்கு உட்புகுந்திட உங்களின் அலசல்கள் பெரும் உந்துகோல்களாக இருக்கும் folks !! 

நடப்புச் சந்தாவில் மொத்தமே 11 LITE சந்தாக்கள் தவிர்த்து பாக்கி சகலமும் ரெகுலர் - முழு package க்கே 'ஜெ' போட்டுள்ளனர் ! And இம்முறை பரவலாய் புது நண்பர்களும் சந்தா எக்ஸ்பிரஸில் இணைந்திருப்பதை செம குஷியாய் ரசித்து வருகிறோம். இன்னமும் இடம்பிடித்திடவுள்ள அந்த 20% நண்பர்களும் சீக்கிரமே ஜோதியில் ஐக்கியமாகி விட்டால் இந்தாண்டின் கேக் மீதொரு  செர்ரி பழத்தைப் பதித்த திருப்தி கிட்டிடும் ! காத்திருப்போம் நண்பர்களே !!

The சென்னை புத்தக விழா நியூஸ்

எப்போதுமே சென்னை நம்மை "போடா வெண்ணெய் " என்று சொன்னதே கிடையாது & இந்தாண்டும் அதற்கொரு விதிவிலக்கல்ல ! In fact நான் சென்னையில் தலை காட்டிய ஜனவரி 4 தேதி - நமக்கொரு புதிய ரெகார்ட் அடித்த தினமும் கூட ! சந்தாத் தொகை + விற்பனை என அன்றிரவு சாத்தியமான நம்பர் புனித மனிடோவின் கொடையன்றி வேறெதுவும் அல்ல என்பேன் - was simply magnificient !! இதில் கூத்து என்னவென்றால், பிரித்து மேயும் கூட்டமோ, நிற்க முடியாத நெரிசல் என்றோ நாம் ஸ்டாலில் இருக்கவில்லை நான் பார்த்தவரையிலும் ! ஆனால் ஸ்டெடியாக வாசக வருகை + அற்புதமான புக்ஸ் அள்ளல் + நமது variety தந்திடும் வாய்ப்புகள் ஒன்றிணைந்து அன்றைய பொழுதினை இஸ்திரியில் ஒரு தினமாக்கி விட்டது !! Thanks a million all ....உங்களின் வாழ்த்துக்களும், அன்பும் நம்மை உந்திக் கொண்டு சொல்வதெல்லாம் நிச்சயமாய் ஒரு அற்புதக்கனவாகவே தொடர்ந்திடுகிறது !! இவ்வார இறுதியில் புத்தக விழா முற்றுப் பெற்ற பின்பாய் - மொத்தமாய் விற்பனை சார்ந்த தகவல்களை எப்போதும் போல் பகிர்ந்திடுவேன் folks !! இப்போதைக்கான கொசுறு நியூஸ் மூன்றே மூன்று தான் :

  1. பாதாள நகரம் & மும்மூர்த்தி ஸ்பெஷல் - அனல் பறக்கும் சேல்ஸ் !!
  2. வேதாளர் - தெறிக்க விட்டுக் கொண்டுள்ளார் !!
  3. TEX - 'தல' இன்றி தமிழ் காமிக்ஸ் இல்லை !!
And கதை சொல்லும் காமிக்ஸ் இதழ்கள் + கபிஷ் : குட்டீஸ்களை ஒட்டுமொத்தமாய் கட்டிப் போட்டு வருகின்றன !! அலிபாபாவையும், பட்டாணி இளவரசியையும், பன்றிக்குட்டிகளையும் அகல விரிந்த விழிகளோடு குட்டீஸ் ரசிக்கும் காட்சிகளே எனது இந்தாண்டு விழாவின் நீங்கா நினைவுகள் !! நம் மத்தியிலும் அவற்றை ரசித்தோர் இருப்பின், your அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ் !!  

Bye all...see you around ! Have a lovely week !!

86 comments:

  1. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  3. அனைவருக்கும் இரவு வணக்கம்

    ReplyDelete
  4. எப்படியோ முதல் 10 இடத்துக்குள் வந்தாச்சு.

    ReplyDelete
  5. அனைவருக்கும் வணக்கம்..

    ReplyDelete
  6. *ஒரு கொடூரனும் கடல் கன்னியும்*.
    முத்து காமிக்ஸ்ன் 52 வது ஆண்டு மலராக,
    #500_வது_இதழாக , இளம் டைகரின் சாகஸத்துடன் வந்திருக்கும் இதழ்.

    கதைக்கு போறதுக்கு முன்னாடி....
    "முத்துவின் 500 வது காமிக்ஸ் இதழ்" என, இதழைப் பார்த்ததும்....
    எத்தனை கதைகள், எத்தனை நாயகர்கள்,
    எவ்வளவு தடங்கல்கள், எத்தனை எத்தனை வாசகர்கள், இத்தனையும் தன்னுள் கொண்டு, "500 வது இதழ்"ழாக இரு தலைமுறையை கடந்து நம் கைகளில் தவழ்வதை நினைத்து பாக்கறப்ப,35 வருடங்களுக்கு முன்னால் முத்து காமிக்ஸ் முதல் முதலாக எனக்கு அறிமுகமான நாட்களை எண்ணி மனம் பூரிப்பால் நிறைந்து விடுகிறது.
    எங்களைப் போலவே இன்னும் பல தலைமுறைகளை மகிழ்விக்க முத்து காமிக்ஸ்க்கு அன்பும் ❤️ வாழ்த்தும்💐.

    *ஒரு கொடூரனும் கடல் கன்னியும்*...
    "தலைப்புக்கும் கதைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?" என, கதை படிக்கறப்ப புரியலை, கதையின் தலைப்பு எதை குறிக்கிறது என.
    நமக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக, சினிமாவிலும்,செய்தித் தாள்களிலும் கேள்விப்பட்ட, "இயந்திரத் துப்பாக்கி"(மிஷின் கன்)யின் பின்னால் இப்படி ஒரு வரலாறு உள்ளதா?" என சற்று வியப்பான
    இந்த கதையின் பின்னணி,
    இந்த மிஷின் கன்னின் அந்நாளைய கொடூரத்தை அழகாக புரிய வைக்கிறது.

    மனித நாகரீகம் தோன்றிய காலந்தொட்டே அவன் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பிலும் நல்லதும் கெட்டதும் சேர்ந்தேதான் உள்ளது, இதுக்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.
    1864 களில் அமெரிக்காவில் நடந்த வடக்கு- தெற்கு உள்நாட்டுப் போரின் போது, உயிர்ச்சேதங்களை குறைக்கும் பொருட்டு வடக்கு ஆய்வாளரான "ரிச்சார்ட் கேட்லிங்"னால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய ஆயுதமான மிஷின் கன், தெற்கில் பெரிய அளவு பயத்தை ஏற்படுத்தியதன் விளைவாக- அந்த ஆயுதம் தனக்கே சொந்தமாக வேண்டுமென, ஆய்வாளரை கடத்திய தெற்கு கிளர்ச்சியாளர்களின் நோக்கம் நிறைவேறியதா?.
    இதை வடக்கு லெப்டினன்ட் டைகர் முறியடித்தாரா?....

    அங்கங்கே வரலாற்று வசனங்கள்,
    முழுக்க ஆக்சன்,
    கொஞ்சம் காதல்,
    நிறைய பரபரப்பு,
    கண்ணுக்கு நிறைவான-
    குறையில்லா ஷார்ப் சித்திரங்கள் என்பதுடன்...
    1)"அந்த ஆய்வுக்கருவி
    எதிரிகள் கைகளில் போக கூடாதெ"
    கடத்தப்பட்ட ரிச்சர்டு கேட்லிங் ஆய்வாளரை மீட்கும் பொருட்டு,
    தனது சுறுசுறுப்பான முயற்சியால் - எதிரிகளின் தடயங்களை பின் தொடர்ந்து,
    4 பேர் கொண்ட குழுவாக, எதிரிகளை தேடி சாமர்த்தியமாக களமிறங்கும் டைகர்,
    அவ்வளவு ஜாக்கிரதையா கடத்தல்காரர்கள் இருந்தும்,
    அவர்களையே ஏமாற்றி, "இயந்திரத்தை உரிய இடத்தில் சேர்க்க எதிராளி கர்னல் நினைக்கவில்லை" என்ற உண்மைய வெகு எளிதாக புரிந்து காய் நகர்த்துவது "ஆஹா சபாஷ்". கடைசியில் அந்த கொலை இயந்திரம் யாரிடம் இருந்தால் பயன் என முடிவெடுக்கும் காட்சியில் "மனுசன் காதலுக்காக எதையும் செய்வார்" என நினைக்க வைத்து, சற்றே "சராசரி மனிதனாக
    அவர் எடுத்த முடிவு சரிதான்" என தோன்றுகிறது.
    டைகருக்கு டெக்ஸ் போல பெரிய அதிரடி
    ஆக்சன் காட்சிகளில் ஸ்கோப் இல்லைதான்,
    ஆனா மனுசன் ஒரு சாஃப்ட்டான ஆக்சன் ஹீரோவாக ஜொலிக்கிறார்.

    2)டைகருக்கு சரியான சவாலாக, ஆய்வாளரை கடத்திய குழுவின் தலைவனாக,
    அங்கங்கே எதிர்ப்புகளை போட்டுத்தள்ளி விட்டு, தனது இலக்கை நோக்கி பயணிக்கும்
    ஒற்றைக் கண் ஸ்நேக்,

    3)"யாரோ எக்கேடோ கெட்டு ஒழியட்டும்,இந்த போரே வேண்டாம்,ஒரு கணிசமான அளவு தங்கம் கெடச்சா போதும், லைஃப்ல செட்டிலாகிடலாம் " என,
    ஸ்நேக்கையும்,டைகரையும் ஏமாற்ற திட்டமிட்டு, கருவியுடன் தப்பியோட, க்ளைமாக்ஸ் வரை காத்திருக்கும்
    தெற்கு கர்னல்,
    இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் சளைக்காது, அங்கங்கே சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாது கதையை நகர்த்திச் செல்கிறார்கள்.
    இவ்வளவு போராட்டங்களுக்கு பின், "அந்த கொடூரன் எந்த கடல் கன்னி"க்கு கிடைத்தது என்பதே சுபமான க்ளைமாக்ஸ்.

    இந்த கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு யாரென தெரியவில்லை,
    கதை முழுக்க போர் பற்றிய சம்பாவனைகளை சற்றும் அயர்ச்சியடையதாவாறு, "ஒரு ஆயுதம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்" என்ற பார்வையில் அங்கங்கே சிந்திக்க தூண்டும் வசனங்களுடன் படிக்க வைத்துள்ளது.
    இந்த கதையின் தொடக்கமும், முடிவும், தெற்கு - வடக்கு என்ற இரு பிரிவினருக்கிடையே நடக்கும் உள்நாட்டு போரை மையப்படுத்தி புனையப்பட்டிருப்பதால் - சிலருக்கு குழப்பமாக இருக்கும். இது பற்றி, ஏற்கனவே டைகர் சீரிஸ் படித்தவர்கள் புரிந்து கொள்ளலாம், புரியாதவர்கள் "டைகர் வடக்கு பகுதியை சேர்ந்தவர்" என்ற கோணத்தில் கதைய படிக்கலாம்.

    2025ன் முதல் மாதத்திலேயே- டெக்ஸ் கதைக்கு நிகராக டைகரையும் களமிறக்கி வெற்றி கண்ட ஆசிரியருக்கு மகிழ்வான வாழ்த்துக்கள் 💐❤️.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் - மொழிபெயர்ப்பு சார்ந்த வாழ்த்துக்களுக்கும் !

      புதியவர் எழுதி அது சுகப்படவில்லை என நாக்குத் தொங்க கடைசி நிமிடத்தில் மாற்றி எழுத நேரிட்ட 730-வது ஜாகஜமாக இது இருக்கக்கூடும் !!

      Delete
    2. தாங்கள் சொன்னது போல இந்த கதையின் சித்திரங்கள் மெய்மறக்க செய்கின்றது. ஒவ்வொரு பிரேமையும் சும்மாவே பாத்து ரசிக்கலாம், சில இடங்களில் மிக நுணுக்கமாக பக்கவாட்டு காட்சிகள் வரையப்பட்டுள்ளது. இம்மாத இதழ்களில் சித்திரங்களுக்காகவும், ஜாலியான கதைக்காகவும் டைகருக்கு முதலிடம்.❤️

      Delete
    3. அருமை தமிழய்யா 💐💐💐💐💐

      Delete
    4. அருமையாக எழுதி உள்ளீர்கள் 👌

      Delete
  7. வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  8. Sir why only one day visit came in Sunday to see you but seems came only Saturday and there only 4 to 5 hrs...
    Missed this year meeting and taking photo

    ReplyDelete
  9. டியர் எடி...

    சென்னை புத்தகக் கண்காட்சிக்கு, சனிக்கிழமை மட்டும் தான் நீங்கள் வருகிறீர்கள் என்று தெரியாமல் அந்த நாளை மிஸ் பண்ணி விட்டேன்...

    மத்தபடி நண்பர்கள் பலரை ஞாயிறன்று சந்தித்ததில் மகிழ்ச்சியே. ❤️

    ReplyDelete
    Replies
    1. வூட்டில் மூணு பேருக்கு வைரஸ் காய்ச்சல் சார் ; so சீக்கிரமே திரும்ப வேண்டிய சூழல் !

      Delete
    2. Take Care EDI... இன்னொரு புத்தகத்தின் காட்சி சந்தித்து விடுவோம்.

      Delete
  10. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வெற்றி வெற்றி

    ReplyDelete
  12. *மூன்றாம் தினம்* @ ஜார்ஜ் எதிர்பாராத விதமாக ஒருவனை (யார் என தெரிய இன்னும் ஒருமுறை படிக்க) கார் ஆக்ஸிடென்ட்ல் கொலை செய்ய அதன் பின்னர் அதனை தனது வீட்டின் பின்புறம் உள்ள கிணத்தில் யாருக்கும் தெரியாமல் தள்ளி தனது கொலையை மறைத்து விடுகிறான். இங்கே பாதாளத்திற்கு கீழே உலகம் உள்ளது என்ற நம்பிகை, அங்கு உள்ளவர்கள் விடுதலை தேடி அலையும் கொடூரமானவர்கள் என்றும் அது அந்த கிணற்றில் இருந்து மனித வேட்டையாடுவதாக சொல்லி மிரட்டி உள்ளார்கள். இன்னும் சில விஷயங்களை இணைக்க முடியவில்லை, நேரம் கிடைக்கும் போது இன்னும் கொஞ்சம் நிதானமாக படிக்க வேண்டும். புரிந்து கொண்டு சில விஷயங்களை கூகுள் செய்து படித்தால் இன்னும் ரசிக்க அலச நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன் 😊

    ReplyDelete
  13. ///TEX - 'தல' இன்றி தமிழ் காமிக்ஸ் இல்லை !!///

    இன்னொரு முறை சொல்லுங்க சார்💪💪💪💪💪💪

    ReplyDelete
  14. @Edi Sir😘😄

    Me in.. 😘😘😘😘🥰🥰🥰🥰

    ReplyDelete
  15. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  16. மூன்றாம் தினம் படித்தாயிற்றுங்க, ஆசிரியரே
    சித்திரங்கள் அருமை, வித்தியாசமான த்ரில் அனுபவம், செம கி.நா

    ReplyDelete
    Replies
    1. ஏதாச்சும் புரிஞ்சது ?

      Delete
    2. அதுவந்துங்க, பல கேள்விகள் எழுந்துள்ளன, விடை தேடும் படலம் ஆரம்பித்துள்ளதுங்க, ஆசிரியரே

      Delete
  17. //In fact நான் சென்னையில் தலை காட்டிய ஜனவரி 4 தேதி - நமக்கொரு புதிய ரெகார்ட் அடித்த தினமும் கூட ! சந்தாத் தொகை + விற்பனை என அன்றிரவு சாத்தியமான நம்பர் புனித மனிடோவின் கொடையன்றி வேறெதுவும் அல்ல என்பேன் -//

    🥳🥳🥳🥳🥳💐💐💐💐

    ReplyDelete
  18. நம்ம ஜோதி அக்கா அவ்வளவு கூட்டத்திலும், மிக அருமையாக மேனேஜ் பண்றாங்க
    அவங்களுக்கு பாராட்டுகள் பல

    ReplyDelete
  19. வணக்கம் நண்பர்களே.. 🙏🏻🙏🏻

    ReplyDelete

  20. *ஜனவரி~2025*
    *ஒரு கொடூரனும், கடற்கன்னியும்..!*

    கதையின் தலைப்புப் படி, கொடூரன் யாரெனில் *ரிச்சர்ட் ஜோர்டன் கேட்லிங்!*

    போர்க்களங்களில் மனிதர்களை சிறு குருவிகளைப் போல சுட்டுத் தள்ளும் ஒரு படுபயங்கரக் கொலைக் கருவி..
    கேட்லிங் என்று இவர் பெயராலேயே அழைக்கப்படும் கொடூர மெஷின் கன்!

    மெக்சிகன் புரட்சிக் குழுவிலே ஒரு அழகானக் கன்னி..*கடற் கன்னி..!*

    கதையிலே கொஞ்ச நேரமே வந்தாலும், நம்ம டைகருக்கு ரெண்டு மூனு வாட்டி உம்மா குடுத்து, தலைப்பிலே மட்டுமல்லாது நம்ம மனசுலயும் இடம் பிடித்து விடுகிறாள் இந்த கன்னி!

    தொடர்ச்சியான தங்களின் தோல்விகளுக்கு நிரந்தர வெற்றியைத் தேடித் தர மெஷின் கன்னால் மட்டுமே முடியும் என முடிவெடுக்கும் தெற்கத்திய கிளர்ச்சியாளர்கள் கூட்டம் ஒன்று மெஷின் கன்னை கண்டு பிடித்த கேட்லிங்கை கடத்துகிறார்கள்.
    துப்பாக்கி தயாரிப்பாளரான ஜேம்ஸ் கூப்பருடன் இணைந்து புதிய மாடல் கன்னை உருவாக்கும் முயற்சியிலிருக்கும் சமயம் இந்தக் கிளர்ச்சியாளர்களால் கேட்லிங் கடத்தப்படும் சம்பவம் அரங்கேறுகிறது..!

    பிங்கர்டன் ஏஜென்சியின் வடக்கத்திய டிடெக்டிவ்கள் இது போன்ற தகவல்களை தலைமைக்குத் தெரியப்படுத்துகிறார்கள்..

    முதன்முதலாக சின்சினாட்டி சிட்டியில் இந்தக் கொலைக் கருவியைத் தயாரித்ததால் *சின்சினாட்டியின் கொடூரன்* என்ற அவப் பெயரை காலம் முழுக்கவே சுமக்கப் போகிற கேட்லிங்கை மீட்டு வர பிங்கர்டன் தலைமை டைகர் குழுவினரை அனுப்புகிறார்கள்!

    கேட்லிங்கை கடத்தியவர்கள் மஸ்கோகி ரிலே என்ற இடத்தில் உணவு விடுதி ஒன்றில் உணவருந்தும் பொழுது, அந்த விடுதி முதலாளி கடத்தல்காரர்களைப் பற்றிய தகவலை பிங்கர்டனுக்கு சொல்ல, புறா விடு தூது அனுப்புகிறார்..
    இதை மோப்பம் பிடிக்கும் கடத்தல்காரர்களில் ஒருவனான ஸ்நேக் என்ற கொடியவனால் அந்த உணவு விடுதி பணியாளர்கள் அனைவரும் படுகொலை செய்யப்படுகின்றனர்.. செய்தி கொண்டு போகவிருந்த புறா உட்பட...

    இந்தக் கொடூரன்களை தொடர்ந்து வரும் டைகர் மெக்சிகோவின் பியட்ராஸ் நெக்ராவில் பிரெஞ்சுப் படை வீரர்களால் கைது செய்யப்படுகிறார்..

    அங்கிருந்து தன்னை விடுவிக்க வேண்டுவதற்காக கொலைக் கருவியான மெஷின் கன்னைப் பற்றிச் சொல்லி, அதை கைப்பற்ற திட்டம் ஒன்றை வகுத்துக் கொடுக்கிறார்..
    அதை ஒப்புக் கொண்டு டைகர் விடுவிக்கப்பட..
    டைகரைப் பின் தொடர ரகசியமாக ஆட்கள் பணிக்கப்படுகிறார்கள்..

    ஆனால் டைகரின் திட்டமோ வேறொன்றாய் இருக்கிறது..

    வடக்கத்தி கிளர்ச்சியாளர்கள் ஒருபுறம்..

    டைகர் தலைமையிலான குழு ஒருபுறம்..

    பிரெஞ்சுப் படையினர் ஒருபுறம்..

    மெக்சிகோ கிளர்ச்சியாளர்கள் ஒருபுறம்..

    என பல்முனைத் தேடலில் கொலைக்கருவி கதையின் மையமாகிப் போகிறது..

    இறுதியில் யார் கையில் அகப்பட்டது அந்த மெஷின்கன் என்பதைக் கதையின் இறுதிப் பக்கங்கள் பரபர வெனச் சொல்லிச் செல்கிறது..

    கதையின் ஆரம்பப் பக்கங்கள் ஏதோ ஆவணப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், அந்த உணவு விடுதியின் படுகொலைக் களத்திலிருந்து பக்கங்கள் பட்டாசாய் வெடிக்கிறது..
    ஒவ்வோரு பேனலிலும் சித்திரங்கள் அதகள ஆளுமைகள் செய்து போகின்றன..
    அதே போல வண்ணக் கலவைகளும் தெறி ரகம்..
    உறுத்தாத, அடிக்காத விழிகளுக்கு விருந்தாய் ஓவிய வண்ணச் சேர்க்கைகள் அபாரம்.. 👌🏻👌🏻👌🏻👌🏻

    முத்து காமிக்சின் 500~வது இதழுக்கு நியாயம் சேர்க்கும் கதை இது என்றால் மிகையாகாது.. 🔥🔥🔥

    இதழின் உச்ச கட்ட சிறப்பு என்னவென்றால் அட்டகாச அட்டைப் படம்..

    ❤️❤️❤️❤️❤️

    அந்தக் கலரிங்கும், ஜொலிக்கும் எழுத்துருக்களும், அந்த ஹார்டு பவுண்ட் அட்டைகளும்... 💪🏻💪🏻💪🏻💪🏻

    அடுத்து கண்டிப்பாய்ச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம்..

    *பக்காவான மொழி பெயர்ப்பு..*
    கதையின் போக்கிலே இயல்பாய், அழகாய் வார்த்தைகளை வார்த்தெடுத்து கதையின் வேகத்திற்கு வலு சேர்த்துப் போகிறது.. 👌🏻👌🏻😍😍

    டைகர் கதைகளில் இன்னுமொரு மாஸ்டர் பீஸ் இந்தக் கொடூரனும், கடற் கன்னியும்.. 😍😍😍

    முத்து காமிக்சின் 53~வது ஆண்டு மலர்...

    52 ஆண்டுகளாய் தொடரும் ஒரு காதல் பயணம்..

    கட்டைக் காடு போய்ச் சேர்ந்த பின்னும் தொடர்ந்து கொண்டேஇருக்கும் இந்த பயணமும், பந்தமும்..!! 🙏🏻🙏🏻

    *லயன்~முத்து எங்கள் சொத்து!*

    ReplyDelete

  21. ஜனவரி~2025

    *இளமை எனும் பூங்காற்று!*

    ஒரு ஸ்டேஜ் கொள்ளைக்காரியாக..
    ஒரு பாடகியாக..
    ஒரு கவிஞராக..
    ஒரு பெண்ணியவாதியாக..
    ஒரு வேசியாக..
    ஒரு கௌ கேர்ளாக..



    வாழ்க்கையின் பல பரிமாணங்களைத் தொட்டு வன் மேற்கின் பிரபலங்களில் ஒருவளாக பயணத்தை மேற்க்கொண்ட, தான் உருவாக்கிய பாதையிலே மட்டுமே நடந்து தன் இறுதி மூச்சு வரை ஒரு எதிர் மறை பாத்திரமாகவே வாழ்ந்து மறைந்த ஒரு அபலையைப் பற்றிய கதை இந்த *இளமை எனும் பூங்காற்று!*

    𝗣𝗘𝗔𝗥𝗟 𝗛𝗔𝗥𝗧

    கிராபிக் நாவலில் நம்ம தல டெக்ஸ் வில்லர்..
    இந்தக் கதையிலே டெக்சும், கார்சனும் கௌரவ பாத்திரத்திலே தோன்றுகிறார்கள்..
    கதை முழுமையுமே பெர்ல் ஹார்ட்டைச் சுற்றியே நெய்யப்பட்டிருக்கிறது..

    ஜோ பூட் என்ற சில்லறைத் திருடனோடு சேர்ந்து அவளது முதல் ஸ்டேஜ் கோச் கொள்ளை தொடங்குகிறது..
    அடுத்தடுத்து இதுவே தொடர்கதையாகிப் போகிறது..

    காவலதிகாரிகளால் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளால் அறிவிக்கப்படுகிறார்கள்.. பிடிக்கப்படுபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என கோச் வண்டி முதலாளிகளும் தெரிவிக்க..

    வெறி கொண்டு வெகுமதி வேட்டையன்கள் இவர்களைத் தேடிக் கொண்டு கிளம்புகிறார்கள்..

    காதல் ரசம் சொட்டி முடிக்கும் ஒரு மந்தகாச ஏகாந்த வேளையில் இந்த ஜோடி பிடிபட்டு போகிறார்கள்..
    சிறையில் அடைபடுகிறார்கள்..

    பெர்ல் தனது கடைக்கண் சாகசத்தால் சிறையையே தனது சொகுசு மாளிகையாக்கி அங்கிருப்பவர்களை சொக்க வைக்கிறாள்..
    தோதான ஒரு சமயத்தில் தனது காதலன் ஜோவோடு சிறையிலிருந்து தப்பிக்கிறாள்..

    அன்றைய இரவுப் பொழுதின் பாலை வனப் பொட்டலில் பெர்லை நிர்கதியாக விட்டு விட்டு அங்கிருந்தும், அவளிடமிருந்தும் விலகிப் போகிறான் ஜோ..

    மெக்சிகோவில் தனது பெயரை மாற்றிக் கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறான் ஜோ பூட்..

    விதி வலியதுதானே..

    மெக்சிகோ வரை விடாது துரத்தி வந்த வெகுமதி வேட்டையன்களால் கொடூரமாகச் சுடப்பட்டு பரிதாபமாகச் செத்துப் போகிறான் ஜோ பூட்!

    அடுத்ததாக பெர்லை தேடி கேன்சஸ் சிட்டிக்கு விரைகிறார்கள் இந்த வேட்டையர்கள்..

    அங்கே பெர்லைக் கண்டு பிடித்தார்களா..?

    டெக்சும், கார்சனும் அவளைக் காப்பாற்றினார்களா..?

    அடுத்து அவளது நிலை என்ன?

    அட்டகாசமான சித்திர வித்தைகளில், எண்ணம் கொண்ட வண்ணம் தீட்டி, ஈட்டியாய் பதிந்து போகிறது தூரிகைத் தீற்றல்கள். !

    வழக்கமான டமால், டுமீல் அதிரடிகள் அதிகம் இல்லாத, அலட்டலில்லாத அழகான கதை..!!

    *இளமை எனும் பூங்காற்று!*

    𝗣𝗘𝗔𝗥𝗞 𝗛𝗔𝗥𝗧 -𝗧𝗛𝗘 𝗕𝗔𝗡𝗗𝗜𝗧 𝗤𝗨𝗘𝗘𝗡

    ReplyDelete


  22. *ஜனவரி~2025*

    *மாயாத்மா ஸ்பெஷல்*

    கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்னால் (1979) நமது முத்து காமிக்ஸில் வெளியான வேதாளரின் கீழ்த்திசை சூன்யம் கதையும், ஹாலோவீன் கடத்தல்கள் என்ற இதுவரை லயன் முத்துவில் வெளி வராத புதிய கதையும் இணைந்து 2025-ன் புதிய வருடத்தின் துவக்கத்தில் நம்மையெல்லாம் குதூகலத்தில் ஆழ்த்த வந்திருக்கும் 𝗩 𝗖𝗼𝗺𝗶𝗰𝘀 ன் மாயாத்மா ஸ்பெஷல்!

    இன்னுமொரு சிறப்பும் இந்த இதழுக்கு உண்டு..
    இது 𝗩 𝗖𝗢𝗠𝗜𝗖𝗦 ன் இரண்டாவது ஆண்டு மலர்..!
    நேற்றுதான் இந்தக் குழந்தை தவழ்ந்ததாக ஞாபகம்.. சடுதியில் ஆண்டுகள் ஓடி விடுகிறது..

    முதல் கதையான கீழ்த்திசை சூன்யம் அந்நாளைய ப்ளாக் பஸ்டர் கதை..
    அதை இன்று காண்பது அதுவும் முழு வண்ணத்தில் காண்பது என்பது றெக்கை கட்டி பறப்பது போன்றுள்ளது..
    குறிப்பாக டிஜிட்டல் வண்ணத்தில் நமது புதிய நண்பர் நிலஞ்சன் சையத் பட்டையைக் கிளப்பியுள்ளார்..
    ஒவ்வொரு பக்கமும் மிளிர்கிறது..
    அட்டகாச இதழ் தயாரிப்பு!

    ஆனால் இந்த இதழில் எனக்குத் தோன்றிய ஒரு விஷயம்..
    மொழி பெயர்ப்பு இந்த புதிய கதையை விட பழைய கதையின் மொழி பெயர்ப்பே ஆகச் சிறந்ததாகத் கருதத் தோன்றுகிறது..!

    அதே போல இரண்டாவது கதையான ஹாலோவீன் கடத்தல்கள் கதையின் மொழி பெயர்ப்பும் கொஞ்சம் சுமாராகவே இருக்கிறது.. (இது என்னுடைய கருத்து மட்டுமே..மொழி பெயர்ப்பாளரையோ மற்ற யாரையோ குறை சொல்லும் நோக்கமல்ல.. 🙏🏻🙏🏻)

    மேலும் இரண்டாவது கதையின் வண்ணச் சேர்க்கையும் சுமார் ரகமே..

    மற்றபடி ஒரு அற்புதமான மேக்கிங்கில் அழகான இரண்டு கதைகளைத் தாங்கிய மாயாத்மா சிறப்பிதழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முழுமையாக்கி இருக்கிறது என்றால் மிகையல்ல..!

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் இந்த இதழில் எனக்குத் தோன்றிய ஒரு விஷயம்..
      மொழி பெயர்ப்பு இந்த புதிய கதையை விட பழைய கதையின் மொழி பெயர்ப்பே ஆகச் சிறந்ததாகத் கருதத் தோன்றுகிறது..!

      அதே போல இரண்டாவது கதையான ஹாலோவீன் கடத்தல்கள் கதையின் மொழி பெயர்ப்பும் கொஞ்சம் சுமாராகவே இருக்கிறது.

      மேலும் இரண்டாவது கதையின் வண்ணச் சேர்க்கையும் சுமார் ரகமே //

      +1

      Delete
  23. //அவருக்கு நான் துளியும் சளைத்தவளில்லை என கலரிங்கில் வூடு கட்டி அடித்துள்ள ஆர்டிஸ்டுமே ஒரு பெண்மணி தான் ! இதோ இருக்கிறார் லியோனி அன்னலிசா !//

    சூப்பர், அட்டகாசம்

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் sir... ❤️🙏👍..

    ReplyDelete
  25. அப்பறம் என்ன…கால் கட்டை விரலுக்கு வேலை குடுக்கும் நேரம் வந்துடுச்சு

    ReplyDelete
    Replies
    1. பொஸ்தவங்கள படிக்க நேரத்தை தேடுங்கண்ணா...அப்பாலிக்கா கட்டை விரலை கடைவாய் நோக்கி அனுப்பிடலாம்!

      Delete
  26. நா இங்கே தா இருக்கேன்.எனது
    ஒளியை யாரும் மறைத்து விட முடியாது.
    அப்படி நீங்கள் எதுவும் இல்லை என்று நினைத்தால், நான் கடந்து சென்று கொண்டே இருப்பேன்.
    இதற்கு,
    எனக்கு ஓர் பதவியோ, எந்த ஒரு பின்புலமோ தேவை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. The மூன்றாம் தினம் effect!

      Delete
    2. //The மூன்றாம் தினம் effect!// :-))))))))))))))))

      Delete
  27. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  28. வணக்கம்
    இந்த தி ( The) பல மாற்றங்களை செய்து உள்ளது

    ReplyDelete
    Replies
    1. The மாற்றங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் சார்!

      Delete
  29. மூன்றாம் உலகம்...கவனம் சிதறினால் போச்சு...ஆனா நேர்கோட்டையே படிக்க நேரமில்லை...இதை ஆராய்ச்சி செஞ்சு படிக்கனுமா...படிச்சு பாருங்க அந்த அனுபவம் தரும் இன்பமே அலாதி...


    வாழ்க்கைல பல திகில் கதைகள் படிச்சிருப்போம்...அது போல ஓர் திரைப்படம் போல துவங்கும் காட்சிகள் கண்ணை விட்டகலாது...ஏற்கனவே மூன்று பேர் இதயங்களை எடுத்து விட்டார்கள்....காரில் வரும் இத்திருடர்கள் இதயத்திற்காக காத்திருக்கிறார்கள்...
    மழை பெய்து கொண்டே இருக்கிறது...கெட்ட சகுனத்தை பறை சாற்றும் காற்று சுழன்றடிக்கிறது பேய்க்காற்றாய்...அவர்கள் வந்து சேர நிலமே இருக்கக் கூடாது...பாதாளத்திலிருந்து அவர்கள் முழுவதுமாக வந்து சேர நீரால் நிறைந்திருக்க வேண்டும்...ஆக்டோபஸாய் உடலமைப்பு... கண்டு கொள்ளாமல் வளர்க்கும் பிள்ளைகள் எளிதாய் துஷ்ட சக்திகளுக்கு இறையாகி விடுகிறார்கள்...கதையினூடே பெற்றோர் கூறும் வரிகள் வலு சேர்க்க....அக்குழந்தையை தூண்டு கோலாய் வைத்து காத்திருக்கும் பாதாள உலகிற்கு இரையாய் கிடைக்கிறது ஒரு உடல்...தவறு செய்ய நம்மை தூண்டுவது ஆசையும்(திருடர்கள்)...பயமுமே(இடித்து கொன்று விட்டதை மறைக்க)...அலட்சியமமும் (குழந்தை வளர்ப்பு )...இம்மூன்று செய்யுமே துஷ்ட சந்திக்கு இறை/ரையாக... அக்குழந்தையை முழுமையாய் ஆக்கிரமிக்கும் இவர்கள் அதன் துணையுடன் வேட்டையாட பொங்கி வருகிறது நீர்...ஆசிரியர் கூறிய காஸ்மிக் கதிர்கள் ஆக்கிரமிப்பு குழந்தை சூனியக்காரியால் கொல்லப்பட்டதும் அது மேலே உறியப்படுவதும்...நீரின்...கடலின்...கிணற்றின் சீற்றம் குறைவதும்...உலகம் இயல்பு நிலையை நோக்கி போகிறது...இப்பொழுது உயரும் கடல்நீர் மட்டமும் அவற்றின் அகோரப் பசிக்கு நாம் தரும் சுற்றுச்சூழல் மாசு குளறுபடிகளுமிருந்தால் நம் பூமியும் கருந்துளைகளால் ஈர்க்கப்படுமோ...அந்த இதயம் சிக்காமல் இதயத்தோடு வாழும் காதலியின் கண்ணீரும் இந்த நிலையிலும் அழகாய் காதலிக்கிறாயெனும் வரிகளும் அழகு ஓவியமும் வரிகளும்...கண்ணதாசனும் குன்னக்குடி வைத்தியநாதனும் மருதமலை மாமனியேவ போட்டி போட்டு தந்தது போல்...

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே, நீர் மட்டும் தந்தி ஆபீஸ் பாணிக்கு விடை தந்து விட்டீரெனில் ஆகச் சிறந்த விமர்சகர் ஆகிப்புடுவீர்!

      பெங்களூருக்கு ஒரு போனை போட்டு கதையை உம்ம தோஸ்துக்கு விளக்கிச் சொல்லிரும் ஐயா 💪

      Delete
    2. வேண்டாம் சார்...ரெண்டாவது தடவ படிச்சா அவனுக்கே விளங்கிடும்....பய நேரா காலேஜுக்கு போனவன்

      Delete
    3. சார் நீங்க தேடித்தரும் அற்புதங்களுக்கு வேறு கைம்மாறு என்ன இருக்க முடியும்....முயற்ச்சிகள் கிரேட்...இதே மூனு நாளாக எழுத நினைச்சு...இன்னைக்கு காலைல லோடேத்தும் போது அவசரமா எழுதியது...இந்த எழுத்தும் கூட தங்கள் மெனக்கெடலின் விளைவே...ரொம்ப ரொம்ப நன்றிகள்...அதும் நீங்க தந்த பன்னிக்கதையும் கபீசும் அண்டாகாககமும் என் மகனோடு டவுசர் போட்டுத் திரிய வச்சதுன்னா மிகையில்லை...சிறுவயதில் சிறுவனுக்கு என்ன தேவையோ அதை அன்று தந்த தாங்கள்...அதையே ஓர் தந்தைக்கு என்ன தேவையோ அதை இப்பவும் தந்துள்ளீர்கள்...என் மகனை உறுதியாக்க விடாமுயற்ச்சி ஸ்கூட்டி உதவிச்சுன்னா மிகையாகாது

      Delete
    4. // பய நேரா காலேஜுக்கு போனவன் //
      சரிதாம்லே :-)

      Delete
  30. காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சன போட்டி - ஜனவரி 2025

    ஒரு கொடூரனும், கடற்கன்னியும்...!

    முத்துவின் 500வது இதழாகவும், ஆண்டு மலராகவும் இரட்டைப் பேறு பெற்று, இரண்டு பாக கதையாக வந்துள்ள தளபதியின் கதை!

    வடிவமைப்பு

    500வது இதழுக்கென பைண்டிங்கிலும், புத்தக வடிவமைப்பிலும் உயிரைக் கொடுத்து, சிறப்பு கவனம் செலுத்தி வேலை செய்திருக்கிறார்கள் ஆசிரியரும், சிவகாசி குழுவினரும் என்பது டாலடிக்கும் அந்த புத்தகத்தை கையில் ஏந்தும் போதே தெரிகிறது...!

    நான் கவனித்து உணர்ந்த இன்னொரு விஷயம், சமீப காலமாக இருந்த எழுத்துப் பிழைகள், அர்த்தப் பிழைகளை தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தான். தொடரட்டும் சிறப்பான நற்பணி ஐயா!

    கதைக்கு முன்:

    கதைக்குள் செல்லும் முன் சொல்ல வேண்டிய விஷயமாக இருப்பது, இந்த கதையை படிக்க வேறெந்த முன் கதையையும் படிக்கத் தேவையில்லை என்பதே...!

    பரிச்சயமான துணை பாத்திரமாக எனக்குத் தோன்றுவது சார்ஜன்ட் கிரேசன் மட்டுமே...!

    ஏற்கனவே பிளாக்கிலும், வாட்ஸ்அப் தளங்களிலும் இந்த கதை வடக்கு தெற்கு மோதல் என்ற அடித்தளத்தை கொண்டுள்ளது என பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், அந்த யுத்த களத்தை, மாறுபட்ட கோணங்களில், பரிமாணங்களில் காட்டுவது தளபதியாரின் கதைகளன்றி வேறில்லை.

    பின்னணி:

    அடிமைகள் என யாரும் இல்லை. கருப்பர்களும் மனிதர்களே என்ற வடக்கு வாழனும், வெள்ளைத் தோல் இல்லாத நீக்ரோக்கள் மற்றும் பிற இனத்தவர்கள் (சீனர்கள், ஆசியாவில் இருந்து சென்றவர்கள்) என்றால் அவர்கள் ஒரு படி கீழே என்ற தெற்கு தோற்கனும் இதுவே பின்னணி...!

    The கதை

    போரில் வெற்றி பெற வியூகங்களும், ஆட்களும் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானவை ஆயுதங்கள்...! 2ம் உலகப்போரை பேரழிவு போராக மாற்றிய அணு ஆயுதம் போன்றவை இதில் சிறந்த உதாரணம். அதே போல, இங்கே ஆட்டத்தின் மையமாக இருப்பது கேட்லிங் வகை மெஷின்கன் என்ற ஆயுதமே...!

    இந்த ஆயுதத்தை வைத்திருக்கும் அணிக்கு வெற்றி சர்வ நிச்சயம் என்ற நிலையில், இதனை கைப்பற்ற வட அமெரிக்கக் கண்டத்தின் அத்தனை முனைகளிலும் இருந்து போட்டி தொடங்குகிறது.

    கேட்லிங்கை கண்டுபிடித்த விஞ்ஞானி ரிச்சர்ட் கேட்லிங்கை சாதுரியமாக கடத்தி விடுகிறது தெற்கின் கர்னல் தலைமையிலான படை.

    ஆனால் அவர் விசுவாசமாக இருப்பது மெக்சிகோவை கைப்பற்றியுள்ள மேக்ஸ் மில்லியன் படையினருக்கு..!

    இவர்களுக்கு எதிராக இருக்கும் ஹுவாரிஸ்ட்களுக்கும் ஆயுத்ததின் வீரியம் தெரிந்து விட,, இந்த குழுவும் போட்டியில் ஆஜர்.

    தெற்கின் வெற்றி மட்டுமே முக்கியம், அதற்காக எதையும் செய்வேன் என்று சொல்லும் ஒற்றைக்கண் கொடூரன் நம்ம லிஸ்டில அடுத்த ஆள்...!

    இவர்கள் எல்லோரையும் சமாளித்து, கேட்லிங்கை வடக்குப் பக்கமாக திரும்ப சேர்க்க வேண்டியது மைக் எஸ் டோனவனின் (aka) தளபதியாரின் பணி! இந்த பணிக்கு டைகரை வரவேற்று பொறுப்பாளியாக ஆக்குவது பிங்கர்டன் நிறுவனத்தின் ஆலன் பிங்கர்டன் தான்!

    யாருப்பா அந்த கடற்கன்னி என்று கேட்கும் இளசுகளின் கண்களுக்கு விருந்தாக வந்து உறவாடிச் செல்கிறாள் அந்த மெக்சிகன் அழகி...! இச் இச் சம்பவங்களும் கதையில் உண்டு...! ஹி ஹி ஹி...

    வியூகம் வகுப்பதிலும், வழி நடத்துவதிலும், முடிவுகளை எடுப்பதிலும் இளம் தளபதிக்கு பக்க பலமாக பிங்கர்டன் ஏஜெண்டும் டஃப் கொடுக்கிறார். அதிலும், அந்த புறா விடு தூது ரகசியம் வேற லெவல்...!

    என்ன நடந்தாலும் நீதிக்கும், விடுதலைக்கும் மதிப்பு கொடுபவரான தளபதி டைகர் இந்த கதையிலும் அதை சிறப்பாக செய்கிறார். கடற்கன்னியை 2முறை காப்பாற்றுவதிலும், புரட்சிக்கு உதவும் வகையில் கடைசி பக்கத்தில் அவர் எடுக்கும் முடிவும் இதற்கான சாம்பிள்!


    ரேட்டிங்: 10/10

    ReplyDelete
  31. இளமை எனும் பூங்காற்று...!

    இந்த தலைப்பை படிக்கும் போதும், அட்டைப்படத்தில் துப்பாக்கி சகிதமாக ஒய்யாராமாக காட்சியளிக்கும் நாயகியைப் பார்த்த போதும் மென்மையான வாசிப்பு அனுபவம் வரப்போவதாக ஒரு உணர்வு...! கதையின் ஆரம்ப பக்கங்களில் மென்சோகமாகத் தொடங்கும் சம்பவங்கள், ஜோ பூட் உடன் பெர்ல் கைகோர்க்கும் போது ஜெட் வேகம் எடுக்கிறது. கொள்கைகளுடன் ஒரு கொள்ளைக்காரி அனைவருக்கும் வெள்ளையடிக்கத் துவங்கி விட்டாள் என்றும், அவளை அவன் என்று நினைத்து பிடிக்க ஒரு தொடைநடுங்கிப் பட்டாளம் கிளம்பி விட்டது என்ற தகவல்களும் நம்ம டெக்ஸ் ரூ கார்சன் ஜோடிக்குத் தெரிய வர, நல்ல திருடன்களை நாங்கள் ஏன் பிடிக்கோனும் என சொல்லிட்டு நடையை கட்டுறாங்க. ஆனாலும், நம்ம மஞ்சள் சட்டையாருக்கு ஒரு சின்ன உறுத்தல், நல்ல திருடனாக இருந்தாலும், இரக்கமில்லாதவர்களிடம் மாட்டிக் கொள்வானே என்பது தான் அது...! அம்புட்டுதேன், பெர்ல் மற்றும் ஜோ இருக்கும் திசையை நோக்கி திருப்புகிறார்கள் லகானை!

    ரேஞ்சர்கள் எதிர்பார்த்தபடியே, திருட்டு காதல் ஜோடி பிடிபட, அவர்களை கைப்பற்றியவர்கள் ஒரு பெண்தானே என அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் எல்லை மீறும் முன்பாக ரேஞ்சர்கள் சூழ்நிலையை கையில் எடுக்க, திருடா-திருடி இருவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தன்னுடைய வாதத்திறமையால் குறைந்தபட்ச ஆண்டுகளே சிறை தண்டனை பெற்ற பெர்ல், தன்னுடைய காதலனுடன் சில ஆண்டுகளிலேயே தப்பிச் செல்கிறார். ஆனால், நம்மல் இப்படியெல்லாம் ஓடி ஓடி ஒளிய முடியாது என்று என்னும் ஜோ, நாயகியை தனியே விட்டு விட்டு ஓடி விடுகிறார். இந்த சூழலில் தலைமறைவாக, சுய அடையாளத்தை மறைத்து வாழும பெர்ல்-ன் முதலாளி அவளை ப்ளாக் மெயில் செய்கிறான்.

    இதற்கிடையே பெர்ல் மற்றும் ஜோ பூட் ஜோடியை பிடிக்கும் போது தவறாக நடந்து கொண்டதற்காக சிறை தண்டனை பெற்ற வெகுமதி வேட்டையர் குழு, பழி வாங்குவதற்காக இன்னொரு பக்கம் கிளம்பி வருகிறார்கள். வாழ்வா-சாவா என்ற நிலையில், பெர்ல்-ஜோ இருவரும் தப்பிப் பிழைத்தார்களா? ரேஞ்சர்கள் பணி என்ன? என்பது க்ளைமாக்ஸ்...!

    இந்த கதையைப் பொறுத்த வரையில், நமது ரேஞ்சர்களுக்கான பணி வெகு குறைவே. பெர்ல் என்ற வன்மேற்கின் ஒரிஜினல் கொள்ளைக்காரியின் வாழ்க்கையில், ரேஞ்சர்களை உலவ விட்டிருக்கிறார்கள். ப்ரான்கோ-பெல்ஜிய பாணியிலான வடிவமைப்பும், வண்ணச் சேர்க்கையும் கதையின் சுவையை மேலும் கூட்டியது உண்மை!

    ReplyDelete
  32. என் போன்ற கிராபிக் நாவல் பிரியர்களுக்கு புத்தாண்டிலேயே நல்ல விருந்து சாப்பிட்ட திருப்தியை கொடுத்தது மூன்றாம் தினம் புத்தகம்.
    இது போன்ற கதைகளை அடிக்கடி வெளியிட வேண்டும்.
    நேர்கோட்டு கதைகளை விட இது போன்ற கதைகள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். கதையைப் படிக்கும் போது அப்படியே பைத்தியம் பிடிக்க வேண்டும் என்கிற அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் கதை படித்த ஒரு திருப்தி ஏற்படும்.
    மூன்றாம் தினம் நிச்சயம் அதுபோன்ற இதழ்தான். இந்த இதழை வெளியிட்டதிற்க்காக ஆசிரியருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது என்ன கதை என்று கேட்கக் கூடாது ஏனென்றால் எனக்கு படித்து புரிந்து கொள்ள மட்டுமே தெரியும். எனக்கு எந்த கதையையும் கோர்வையாக சொல்ல வராது. நச்சென்று ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் மூன்றாவது தினம்
    அட்டகாசமான தினம்
    சதாசிவம் காடையூர் காங்கயம்

    ReplyDelete
    Replies
    1. //இது போன்ற கதைகளை அடிக்கடி வெளியிட வேண்டும்.
      நேர்கோட்டு கதைகளை விட இது போன்ற கதைகள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.// + 1

      Delete
  33. Editor sir, our Saravanakumar returned safely from his TinTin Tour? Heard bout Earthquake today in Tibet Area !

    ReplyDelete