Powered By Blogger

Sunday, January 12, 2025

குட்டீஸ் புராணமும், ஒரு குட்டிப் பதிவும் !!

 நண்பர்களே,

வணக்கம். ஜனவரியும் பாதி முடியப் போகிறதென்பதை உணர்த்த வீதியெங்கும் இறைந்து கிடைக்கும் கரும்புக் கட்டுக்களும், மஞ்சள் கிழங்குகளும் போதாதா என்ன - ஒரு ரகளையான தைப்பொங்கலுக்கு இப்போதே வியாபாரிகள் டிரெய்லர் போட ஆரம்பித்து விட்டார்களே !! 

And சென்னைப் புத்தக விழாவும் இதோ, இன்றோடு (Sunday) நிறைவு காணவுள்ளது ! விழாவின் மூன்றாவது சனியான நேற்றைக்கெல்லாம் சும்மா தெறி சேல்ஸ் & ராத்திரிக்கு அவசரம்-அவசரமாய் மாயாவியாரும், தலயும், லக்கி லூக்கும் பார்சலுக்குள் ஐக்கியமாகி சென்னைக்குப் பறக்க வேண்டிப் போயுள்ளது !! விழா முடித்து நம்மாட்கள் பொங்கலன்று ஊர் திரும்பிய பிற்பாடு தான் actual sales நிகழ்ந்துள்ளது எவற்றிலெல்லாம் என்பது புரியும் ; ஆனால் இந்த நொடியில் ஒற்றை சமாச்சாரம் தெள்ளத்தெளிவுங்கோ and அது தான் "பாதாள நகரம்" (மாயாவி) அநேகமாய் இந்தாண்டின் bestseller பட்டியலில் முதலிடத்தில் இருக்குமென்ற சமாச்சாரம் ! இது வரைக்கும் "ஒன்ஸ் மோர் ; ஒன்ஸ் மோர்" என பந்தியில் மறுக்கா, மறுக்கா கோரப்படும் காலிபிளவர் ரோஸ்ட்டைப் போல இந்த மாயாவியார் சென்னைக்குப் புசுக்குப் புசுக்கென்று பயணமாகிக் கொண்டே இருந்துள்ளார் ! So செவ்வாயன்று சொல்கிறேன் - டுப்பாக்கி நீட்டி நிற்கும் மாயாவி மாம்ஸ் எம்புட்டுப் பெரிய மார்ஜினில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளாரென்பதை !! Phewwwwwww !! 

But இந்தப் புத்தக விழாவின் மெய்யான அதிரடிகள் - குட்டீஸ்களுக்கான அந்த 6 புக்ஸ் + கபிஷ் தான் என்று சொன்னால் அது மிகையல்ல ! நடு நடுவே அவகாசம் கிட்டும் சொற்ப சந்தர்ப்பங்களில், அந்த புக்ஸை செம அற்புதமான ஆர்வங்களோடு ரசித்திடும் குட்டீஸ்களின் போட்டோக்களை நம்மாட்கள் அனுப்பியிருந்ததை வாட்சப் கம்யூனிட்டியில் பகிர்ந்திருந்தேன் தான் ; ஆனால் வார்த்தைகளைத் தாண்டியதொரு தாக்கத்தினை இம்முறை உணர முடிந்துள்ளது ! Oh yes - நமது ஸ்டாலுக்கு வந்த ஒவ்வொரு குட்டியின் கையிலும் காசு மட்டும் இருந்திருப்பின், ஓராயிரம் "கதை சொல்லும் காமிக்ஸ்" செம ஈஸியாய் விற்றுத்தள்ளியிருக்கும் தான் ! ஆனால், யதார்த்தம் அதுவல்ல எனும் போது, அழைத்து வரும் பெற்றோரின் தயவினை நாடியே அவர்களிருப்பதை பார்க்க முடிந்தது ! "நீயெல்லாம் இதை படிக்க மாட்டே ; இதெல்லாம் உனக்குப் படிக்கத் தெரியாது !" என்றபடிக்கே கண்ணெல்லாம் ஏக்கம் நிறைந்த பிள்ளைகளை இழுத்துப் போன பெற்றோரை நிறையவே பார்க்க முடிந்தது ! அதே சமயம் பிள்ளைகளோடு சேர்ந்து தாமும் இந்தக் குட்டீஸ் புக்ஸைப் புரட்டி, ரசித்து, கணிசமாக வாங்கித் தந்த பெற்றோருமே எக்கச்சக்கம் ! 

கதை சொல்லும் காமிக்ஸ் : சந்தேகமின்றி, இது ஜூனியர் எடிட்டரின் முன்னெடுப்பே ! கதைத்தேர்விலிருந்து, திட்டமிடலிலிருந்து, ஆங்கில மொழியாக்கம் வரைக்கும் சகலமும் விக்ரம் தான் ! In fact இதனை "மொழியாக்கம்" என்று சொல்வது தான் மிகச் சரி - becos ஒரிஜினலில் ஒற்றைத் துளி வசனம் கூடக் கிடையாது ! படங்களாய் ; வெறும் படங்களாய் நகர்ந்து சென்றிடும் இந்த சித்திரக் கோர்வைக்கு வசனங்களை முழுசுமாய் தந்திட வேண்டியது நமது பொறுப்பே ! And அதனை இங்கிலீஷில் ஜூனியர் அமைத்துத் தர, தமிழில் மொழிமாற்றம் செய்திடும் எனது பணி செம சுலபமாகிப் போச்சு ! இதே பாணியில் "பீன்ஸ்கொடியில் ஜாக்" ; "எல்லாம் அழகே" ; "வெண்பனி இளவரசி" என்றெல்லாம் நாலைந்து புக்ஸ் நாம் முன்னேவே வெளியிட்டிருந்தோம் தான் ; but அவை இந்த அழகில் அமையவுமில்லை ; இந்தத் தாக்கத்தினை ஏற்படுத்தவுமில்லை ! அந்த மட்டுக்கு அதனை ஒட்டு மொத்தமாய் மூளை சேர்க்காது, reboot செய்திட முனைந்தோமே என்ற மகிழ்வு எனக்கு ! பார்க்கணும் - இங்கிலீஷில் விற்பனை எவ்விதம் இருந்துள்ளதென்பதை ; அதைப் பொறுத்தே இந்த ஆங்கிலப் பதிப்புகளின் தலையெழுத்தை நிர்ணயித்தாக வேண்டும் ! இந்த ஒற்றை விழாவில் மட்டுமே என்றில்லாது, தொடரவுள்ள திருப்பூர், திருநெல்வேலி - போன்ற Tier 2 நகர்களிலுமே ஆங்கில புக்ஸ் போணியாகின்றனவா ? என்று பார்த்த பிற்பாடு - we'll take a call - தமிழ் மட்டுமே போதுமா ? அல்லாங்காட்டி இதே போல இருமொழிக் கொள்கை தொடரலாமா ? என்பது குறித்து !! 

And சென்னையைப் பொறுத்தவரைக்கும் "அலிபாபா" தான் இந்த குட்டீஸ் புக்சில் முன்னணி !! 


இப்போதைக்கு இவற்றை வாங்கியிருக்கா நண்பர்கள் - பிறந்தநாள் பரிசுகளாய், நூலகங்களுக்கான அன்பளிப்புகளாய் ; உங்களது அபார்ட்மெண்ட்களில் உள்ள வாசிப்பு அறைக்கொரு அறிமுகமாய் இவற்றை பயன்படுத்திட விழைந்தால் ஒரு புதுத்தலைமுறைக்கான விதைகளை நட்டிடும் பெருமை உங்களதாகி விடும் ! இவற்றை ரசித்துப் பழகும் சிறார்கள்  பின்னாட்களில் ரொம்பவே சுலபமாய் ஒரு பொம்ம புக் உலகுக்குள் உலா போக தயாராகி விடுவார்கள் என்று நம்பிடலாம் ! So வீட்டுக்கொரு மரம் நடுவது போல, இயன்ற மட்டுக்கு இவற்றையோ, கபிஷையோ ஒரு சுட்டியின் கைகளுக்குச் சென்றடைய உதவிடலாமே folks - ப்ளீஸ் ?

To make it easier - கதை சொல்லும் காமிக்ஸ் - இங்கிலீஷ் + தமிழ் மட்டும் வாங்கிடும் நண்பர்களுக்கு கூரியர் கட்டணமின்றி அனுப்பிடலாம் !! Please note : கதை சொல்லும் காமிக்ஸ் இதழ்கள் மட்டுமே உள்ள ஆர்டர்களுக்கு தான் இந்த சலுகை !!

Moving on, இம்மாதத்து கி.நா. குறித்ததொரு ஒப்புதல் வாக்குமூலம் தந்தே தீரணும் ! நிறையவே கோக்கு மாக்கான கதைகளை முயற்சித்துள்ளோம் தான் ; ஏதேதோ இடியாப்பச் சிக்கல் கதைக்களங்களுக்குள் வண்டியை விட்டிருக்கிறோம் தான் ! And அவற்றின் பின்னணிகளை ; கதாசிரியரின் கற்பனைகளின் அடித்தளங்களை தக்கி முக்கியாவது கண்டு பிடித்திருப்போம் தான் ! ஆனால் முதன்முறையாக பெ பெ பெ என முழிப்பது  மட்டுமே சாத்தியமானது - "மூன்றாம் தினம்" ஆல்பத்தினை மொழிபெயர்த்த வேளையினில் ! Oh yes - இயன்றமட்டும் இணையத்தில் தேடினேன் தான் - இந்தக் கதைக்கான சிறு clue வாச்சும் கிடைக்கிறதா ? என்றபடிக்கு ! ஊஹூம் ....என் கண்ணில் எதுவும் தட்டுப்படவில்லை தான் ! காசிமேடு மீன்மார்க்கெட்டில் குவிந்து கிடக்கும் ஆக்டொபஸ்கள் போலான அந்தப் பாதாள ஜந்துக்கள் (???) இருதயங்களை பிய்த்தெடுப்பது போல் காட்டியுள்ளனர் ; அப்பாலிக்கா அந்த மனுஷர்கள் கைதிகளாகவும் பிணைக்கப்பட்டுக் கிடக்கின்றனர் ! யார் - யாரை போட்டுத் தள்ளுறாங்க ? யார்-யார் கட்சி ? ஊஹூம்....சுத்தமாய் புரியலை ! நம்ம கோவை கவிஞர் வசம் இதற்கான கோனார் நோட்ஸ் இருக்கிறது போல பின்னூட்டங்களில் போட்டுத் தாக்கி இருந்தார் ! ஏற்கனவே சிதறிக் கிடக்கும் மயிர்கற்றைகளுக்கு இன்னும் கொஞ்சம் சேதாரம் ஆனாலும் பரால்லே - என நாம் நினைக்கும் பட்சத்தில் செய்யுளாகவோ, உரைநடையிலோ, கவிதையிலோ நம்மாளிடம் பொழிப்புரை கேட்கலாம் தான் !! நேக்குலாம் கேசத்தினை எண்ணிப் பெருசா கவலைப்பட அவசியங்கள் நஹி என்பதால் தகிரியமாய் மார்கழி கச்சேரிகளைக் கேட்கும் வேகத்தில் ரெடியாகிடுவேன் !  மைதீன் - அந்த அங்கவஸ்திரத்தைப் பார்த்தியாப்பா ?

ஜனவரிக்கொரு டாட்டா சொல்லி விட்டு ஆண்டின் இரண்டாம் மாதத்தை நோக்கி அடியேனும், ஆபீசும் பயணம் பண்ணி வருகிறோம் ! And சில மாதங்களுக்கு முன்பாய் அறிமுகமாகி, செமத்தியாக score செய்திருந்த அந்த குட்டை-நெட்டை டிடெக்டிவ் ஜோடியான ஸ்பூன் & ஒயிட் பிப்ரவரியினை கலகலக்கச் செய்யக் காத்துள்ளனர் !! டின்டின் மொழிபெயர்ப்பினை முடித்த கையோடு இன்றைக்கு இந்தக் கூத்துக்குள் புகுந்திட வேணும் !!

Before I sign out - ஒன் கேள்வி ! மே மாத ஆன்லைன் விழாவினில் 1 டெக்ஸ் புத்தம் புது குண்டு புக் உறுதியாச்சு ! Next என்னவென்ற கேள்வி ! So நீங்கள் பார்க்க பெரிதும் விரும்பும் ஒற்றை புக் பற்றிச் சொல்லுங்களேன் folks - இயன்றதை அவசியம் பரிசீலிப்போம் !! 

முன்கூட்டிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் all - சென்னை விற்பனைத் தகவல்கள் கைக்கு வந்த பின்னே ஒரு பதிவோடு விடுமுறைகளில் போது ஆஜராகிடுகிறேன் !! And சென்னை விழாவின் கடைசி நாளான இன்றைக்கு செம ஆர்வத்தோடு காத்திருப்போம் - final sales number என்னவாக இருக்குமென்று அறிந்திட ! நேற்றைக்கு ஓடிய அதே அளவுக்கு இன்றைக்கும் விற்பனைகள் நிகழும் பட்சத்தில் ஒரு புத்தம் புதிய ரெக்கார்டை செட் பண்ணியிருப்போம் !! நமக்காக வேண்டிக்கொள்ளுங்கள் folks !!

Bye all....see you around ! Have a fun Sunday !!

P.S : சந்தா நினைவூட்டலுமே மக்களே !!

190 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
    Replies
    1. இத first comment ah போட்டு இருக்கலாம் சார் 😃

      Delete
  2. வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  3. வணக்கம் காமிக்ஸ் உறவுகளே 🙃😁🎉

    ReplyDelete
  4. // இந்தாண்டின் bestseller பட்டியலில் முதலிடத்தில் இருக்குமென்ற சமாச்சாரம் ! //
    சகாப்த நாயகர்...
    காமிக்ஸ் என்றாலே அந்த இரும்புக் கை மாயாவியார் கதை இன்னும் வருதா என்ற விசாரணையை பலரிடம் பலமுறை கேட்டுள்ளேன்...
    லாஜிக் தாண்டியவர் மேஜிக் இரும்புக் கையார்...

    ReplyDelete
  5. “ மே மாத ஆன்லைன் விழாவினில் 1 டெக்ஸ் புத்தம் புது குண்டு புக் உறுதியாச்சு ! Next என்னவென்ற கேள்வி ! So நீங்கள் பார்க்க பெரிதும் விரும்பும் ஒற்றை புக்” - since Tex gundu book confirmed and as you assured no oldies, another Gundu book with 3 graphic novels or Captain Tiger collection

    ReplyDelete
  6. //மே மாத ஆன்லைன் விழாவினில் 1 டெக்ஸ் புத்தம் புது குண்டு புக் உறுதியாச்சு ! Next என்னவென்ற கேள்வி ! So நீங்கள் பார்க்க பெரிதும் விரும்பும் ஒற்றை புக் பற்றிச் சொல்லுங்களேன் folks - இயன்றதை அவசியம் பரிசீலிப்போம் !//

    Myoms-ல வரவேண்டிய ஆல்பா கதைங்க ஆசிரியரே
    ப்ளீஸ்

    ReplyDelete
  7. நிச்சயம் இளம் டெக்ஸ் கார்சன் சாகசம் மற்றும் மெக்சிகோ மேஜிக் ஸ்பெஷல் இரண்டும் நான் மே மாதம் அதிகம் எதிர்பார்க்கும் புத்தகங்கள் அப்படியே அந்த பயணம் புக்கை இறக்கி விட்டால் கோடை விடுமுறை அட்டகாசமாய் அமைந்து விடும்

    ReplyDelete
  8. // நேற்றைக்கு ஓடிய அதே அளவுக்கு இன்றைக்கும் விற்பனைகள் நிகழும் பட்சத்தில் ஒரு புத்தம் புதிய ரெக்கார்டை செட் பண்ணியிருப்போம் !! //
    ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு சார்...
    இந்தாண்டின் தொடக்கமே நலமாய்,சிறப்பாய் அமைந்ததில் மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. சென்னையின் வாங்குதிறன் தொடர்ந்து நம்மை வியக்கச் செய்து வருகிறது சார் !!

      Delete
    2. மாநிலத்தின் தலைநகரமாச்சே சார்...

      Delete
  9. // So நீங்கள் பார்க்க பெரிதும் விரும்பும் ஒற்றை புக் பற்றிச் சொல்லுங்களேன் //
    The Bomb Graphic Novel பார்க்கனும்னு ஆவலா இருக்கு சார்,அதற்கு தற்போது வாய்ப்பும்,நேரமும் குறைவாக இருக்கலாம்,இருந்தாலும் ஆவலா இருக்கு...
    வேறு எது வந்தாலும் ஓகேதான்...

    ReplyDelete
    Replies
    1. அது documentary ரகம் சார் ; நம்ம கார்த்திகை பாண்டியன் சார் மொழிபெயர்க்க வேண்டிய சமாச்சாரம் ! And அதனை வாசிக்கும் பொறுமை நம்மில் எத்தனை பேருக்கு இருக்குமோ - ஞானறியேன் !!

      Delete
    2. வாய்ப்பும்,சூழலும் விரைவில் அமைய வேண்டுகிறேன் சார்...

      Delete
    3. டாக்குமெண்ட்ரி வகை என்றால் எனக்கு வேண்டாம் 😞

      Delete
    4. உங்க காப்பிய வாங்கி எனக்கு கொடுத்துரும்ல...🤩🤩🤩

      Delete
  10. அனைவருக்கும் இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  11. சார், கண்டிப்பாக இந்த இரண்டும் - மேற்கே போ மாவீரா & காலனின் கால் தடத்தில்..! - 2.

    ReplyDelete
    Replies
    1. நல்ல தேர்வுகள் சார்... யோசிப்போம்!

      Delete
  12. ஸ்பூன் & வொயிட் அட்டைப்படம் கலக்கல்

    ReplyDelete
  13. //"மூன்றாம் தினம்"//

    படிக்க நன்றாக இருந்ததுங்க ஆசிரியரே
    வித்தியமான பயணம்
    சித்திரங்கள் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. பொழிப்புரை கவித வேணாம்னு நாசூக்கா சொல்றீங்களோ?? 🤔🤔

      Delete
  14. //பாதாள நகரம்" (மாயாவி) அநேகமாய் இந்தாண்டின் bestseller பட்டியலில் முதலிடத்தில் இருக்குமென்ற சமாச்சாரம் ! இது வரைக்கும் "ஒன்ஸ் மோர் ; ஒன்ஸ் மோர்" என பந்தியில் மறுக்கா, மறுக்கா கோரப்படும் காலிபிளவர் ரோஸ்ட்டைப் போல இந்த மாயாவியார் சென்னைக்குப் புசுக்குப் புசுக்கென்று பயணமாகிக் கொண்டே இருந்துள்ளார் ! //


    சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. மாயாவி மாயாவி தான் 😍 ஒரு ஸ்பெஷல் கட் அவுட் ரெடி பண்ணுங்க சார், எல்லா புத்தக திருவிழாவிலும் நம்து ஸ்டாலில் வைக்கலாம் சார்.

      Delete
    2. அட்டாஹாச ஐடியா பரணி சகோ... இன்னமும் இரும்புக்கை மாயாவி... Excellent.. ❤️👍🙏..

      Delete
  15. சார் மேகி காரிசன் எஞ்சியுள்ள அந்த பாகம் பிளீஸ்....

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்.... குட் சாய்ஸ் தான் சார் ....! நம்ம மக்களின் அபிப்பிராயம்ஸ் என்னவாக இருக்குமோ என்றறிய curious 🤔🤔

      Delete
    2. எஞ்சியுள்ளதை கெஞ்சி (கொஞ்சி) கேட்கிறோம் போட்டு விடுங்கள் சார்

      Delete
    3. மேகி கேரிஸனுக்கு +9

      Delete
  16. இன்றைய சேல்ஸ் உச்சத்தை தொட வேண்டி வாழ்த்துகள்

    ReplyDelete
  17. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  18. மேகி கேரிசன்எஞ்சியுள்ள அந்த பாகம் .சார் ப்ளீஸ்

    ReplyDelete
  19. மேஜிக் விண்ட் பெண்டிங் இருந்தா அது

    ReplyDelete
    Replies
    1. பெண்டிங் இருந்தாவா?? அதிலே ஒரு லோடு கதைகள் உண்டு சார் 🤕🤕

      Delete
  20. கமான்சே (ரெட் டஸ்ட் )அதுவும்

    ReplyDelete
  21. )/ So நீங்கள் பார்க்க பெரிதும் விரும்பும் ஒற்றை புக் பற்றிச் சொல்லுங்களேன் //
    Sir, we need "பிரளயம்". இதுவே சரியான சமயம். கிடப்பில் இருந்தது போதும். எவ்வளவோ பார்த்தாச்சு, இதையும் பார்த்து விடலாம்

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே சொன்ன பதில் தான் சார் - மருத்துவர்களை தீரா காமுகராய் காட்டும் அந்த ஆல்பம் உள்ளேயே கிடக்கட்டும்!

      Delete
  22. சென்னை புத்தகவிழா இன்றும் விற்பனை பட்டாஸாய் பறக்க வாழ்த்துக்கள் சார்..மகிழ்ச்சி..!

    ReplyDelete
  23. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies

    1. ஒரு குண்டு கி.நா.
      (அதுவும் புரியற மாதிரி🤗 ஹாரர் ஜானர்ல)

      MYOMS ல் அறிவிக்கப்பட்ட புத்தகங்கள்!!

      Smurfs ரீபூட் செய்ய முடியுமான்னு பாருங்கள்... க.சொ.கா வுடன் இணைத்து குழந்தைகளுக்கும் தரலாம்...

      மேகி மிச்ச ஒன்னையும் போட்டு முடிச்சிடலாம்...

      ஆபுவிக்கு மினிமம் 10 புக்காச்சும் பிளான் பன்னுங்க சார்...

      (இதுவரை வந்ததெல்லாம் படிச்சிட்டீங்களாங்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது. முடிச்சிடறேன்... முடிச்சிடறேன்..)

      Delete
    2. //ஒரு குண்டு கி.நா.
      (அதுவும் புரியற மாதிரி🤗 ஹாரர் ஜானர்ல)//

      😂😂😂

      Delete
    3. // Smurfs ரீபூட் செய்ய முடியுமான்னு பாருங்கள்... க.சொ.கா வுடன் இணைத்து குழந்தைகளுக்கும் தரலாம்... //

      பிளஸ் ஒன் 😊

      Delete
    4. ஆமாம் சார். good idea.

      Delete
    5. ///Smurfs ரீபூட் செய்ய முடியுமான்னு பாருங்கள்... க.சொ.கா வுடன் இணைத்து குழந்தைகளுக்கும் தரலாம்...///

      சூப்பர் ஐடியா sir 👌😍
      அப்படியே சுஸ்கி விஸ்கி single album...

      Delete
    6. //இதுவரை வந்ததெல்லாம் படிச்சிட்டீங்களாங்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது. //

      அவ்ளோ சத்தமாவா கேக்குது 🤔🤔

      Delete
    7. சுட்டிப்புயல் பென்னியாச்சும் விற்றது சார் - worth another try!

      Delete
  24. எனது அலுவலக மேனேஜர் நேற்று இரவு நமது ஸ்டாலுக்கு சென்று புத்தகங்கள் வாங்கி வந்தார். அவரும் மாயாவி ரசிகர் என்பது கொசுறு செய்தி.

    ReplyDelete
    Replies
    1. அவரை நமது மற்ற காமிக்ஸ் கதைகள் பற்றி சொல்லிவருகிறேன் ஆனால் மாயாவியை மட்டும் வாங்கி வருகிறார். டெக்ஸ் அவருக்கு பிடிக்கும் ஆனால் தற்சமயம் வாங்குவதில்லை.

      Delete
  25. பிரளயம் கி. நா நீண்ட நாட்களாக காத்திருப்பில் உள்ளது. ஆன்லைன் புத்தக மேளாவிற்கு அதை பரிசீலிக்கலாமே சார்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே சொன்ன பதில் தான் சார் - மருத்துவர்களை தீரா காமுகராய் காட்டும் அந்த ஆல்பம் உள்ளேயே கிடக்கட்டும்!

      Delete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. மே மாதம் ஏதாவது ஒரு புதிய காமெடி கதை ட்ரை பண்ணிப்பார்களாமே சார்?

    ReplyDelete
  28. மாயாவியின் மறுபதிப்பு காணாத கதைகளை ஹார்டு பவுண்டில் ஒரே தொகுப்பாக ஆன்லைன் புத்தக மேளாவுக்கு வெளியிடலாமே சார்? மேளாவை தெறிக்க விடுமே...

    ReplyDelete
    Replies
    1. இந்த ஒரு தருணத்திலாவது கிரைண்டரில் அதே மாவை அரைக்க வேணாம் சார்!

      Delete
  29. Replies
    1. கேட்பது தான் கேட்கிற முழுவண்ணத்தில் கேளுலே, ஆசிரியர் உனக்கு கண்டிப்பாக செய்வார் மக்கா

      Delete
    2. அங்கிள் டெர்ரி அம்புட்டு பேரையும் வைச்சு செஞ்சருவார் 🤕🤕🤕

      Delete
  30. ///மே மாத ஆன்லைன் விழாவினில் 1 டெக்ஸ் புத்தம் புது குண்டு புக் உறுதியாச்சு ! Next என்னவென்ற கேள்வி ! So நீங்கள் பார்க்க பெரிதும் விரும்பும் ஒற்றை புக் பற்றிச் சொல்லுங்களேன் folks - இயன்றதை அவசியம் பரிசீலிப்போம் !! ///

    வனரேஞ்சர் ஜோ வின் இரண்டு கதைகளும் முழு வண்ணத்தில் ஒரே இதழாக....

    இல்லையெனில்....

    தலைவாங்கும் தேசம் + மிஸ்டர் மஹாராஜா + மலையோடு மல்யுத்தம் முழுவண்ண மறுபதிப்பு.!

    ReplyDelete
    Replies
    1. மேற்கூறியது விருப்பம்... மற்றபடி வந்ததை வரவில் வைப்போம்..😊

      Delete
    2. No மறுபதிப்ஸ் for மே என்பதே தாரக மந்திரம் சார்!

      Delete
    3. // No மறுபதிப்ஸ் for மே என்பதே தாரக மந்திரம் சார்! //

      வழுக்கு பாறை திருநாவுக்கரசு @ நோட் திஸ் பாயிண்ட்

      Delete
    4. காலம் கனிந்தது. Waiting, Eagarly waiting for may month online book festivel. இந்த அரைத்த மாவுகளை சென்னை புத்தக விழாவுக்கு மட்டும் வருடம் ஒருமுறை என்று fix செய்து விட்டு மீதம் இருக்கும்/கிடைக்கும் தருணங்களில் புதியவை மேல் நாம் கவனம் செலுத்தலாம்

      Delete
  31. Replies
    1. ஆசிரியர் இமயமலை பக்கம் போய்விடார் இதனை வாசித்த மறுநொடியில் 😉

      Delete
    2. ///ஆசிரியர் இமயமலை பக்கம் போய்விடார் இதனை வாசித்த மறுநொடியில் 😉///

      😂😂😂

      Delete
    3. சாம்பார் சாதமன்னா எப்போது கொத்து பரோட்டா சாப்பிட ஆரம்பிச்சாரு 😊

      Delete
  32. Replies
    1. முதல் கதையை இன்னும் நான் படிக்கவில்லை. வேற கேளுலே 😊

      Delete
  33. Sir... My choice for May ONline Fair Books
    1. காலனின் கால் தடத்தில் -2 & 3 part
    2.Mondo Reverso... (Long Time Request)..
    Hipe you will honor our request.

    ReplyDelete
    Replies
    1. Mondo Verso லாம் சத்தியமாய் படிக்க முடியாது சார்!

      Delete
  34. Replies
    1. இதற்கு முன்னால் வந்த காலனின் கால்தடத்தில் இன்னும் படிக்கவில்லை.

      Delete
  35. இரும்பு கையாரின் "ஒற்றை கண் மர்மம்"..😘😘😘😘
    முத்து காமிக்ஸ் வாரமலர்..
    அப்படியே வேண்டும்.. 😘🥰💐

    ReplyDelete
    Replies
    1. சத்தியமாய் படிக்க மாட்டீர்கள் சார் - மாயாவி + இன்ஸ்பெக்டர் கருடா + அதிமேதை அப்புவை தாண்டி அன்னிக்கே எதுவும் சோபிக்கவில்லை!

      Delete
  36. 1. கலாஷ்நிகோவ் காதல்-2 (சிஸ்கோ)

    2. ஆல்ஃபா

    3. சுஸ்கி விஸ்கி ( single album with normal cover )

    4. கபிஷ் -3 or க. சொ. காமிக்ஸ்

    5. Horror கிராஃபிக் நாவல்

    ReplyDelete
    Replies
    1. // சுஸ்கி விஸ்கி //

      சென்னையில் சுஸ்கி விஸ்கி-2 விற்பனை எப்படி சார்? இதன் கிட்டங்கி நிலவரம் எப்படி சார், இவர் இடத்தை காலி செய்து விட்டால் இவரின் அடுத்த கதைகளை வெளியிடுங்கள் சார்.

      Delete
    2. 🤝🙂👌 sir
      But நடப்பது கஷ்டம் nu நினைக்கிறேன் சார்😌

      Delete
  37. 6.கிரே தண்டர் 2nd ஆல்பம் விடலாம் சார்...

    (மினிமம் 2 கார்ட்டூன் கதைகளாவது வந்தால் ஹேப்பி சார்😍)

    ReplyDelete
    Replies
    1. கிரே தண்டர் - ரொம்ப சுமார் சார் அந்த முதல் கதை.

      Delete
    2. 🤕
      ரெண்டாவது தேறும்னு ஒரு ஆசை தான் சார் 🤗

      Delete
    3. முதல் வாய்ப்பில் ஜெயிக்கவில்லை என்றால் அடுத்த வாய்ப்பு கிடைப்பது கடினம் சார்.

      Delete
    4. அதன் target audience - 15 வயதுக்கு உட்பட்டோர் சார்! அந்த age group க்கு ரசிக்கும்!

      Delete
    5. எனக்கு கிரே தண்டர் ok தான் சார் 👍👍👍

      Delete
  38. என்னுடைய சாய்ஸ்
    1. மேற்கே போ மாவீரா
    2. விஷம்
    3.மேகி காரிசன்-3
    4.தோர்கல்

    ReplyDelete
    Replies
    1. லிஸ்டில் last name தான் ரெகுலர் தடத்தில் உள்ளதாச்சே சார்?!

      Delete
  39. நேற்று CBF சென்று இருந்தேன். 10, 15 கடைகளில் தான் கூட்டம் இருந்து. அதில் ஒன்று நம்ம காமிக்ஸ் அரங்கம்.

    ReplyDelete
    Replies
    1. நேற்றைக்கு அதகளம் நம்ம ஸ்டாலில் 🔥🔥

      Delete
    2. அதில் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது

      Delete
  40. " பாதாள நகரம்" (மாயாவி) அநேகமாய் இந்தாண்டின் bestseller பட்டியலில் முதலிடத்தில் இருக்குமென்ற சமாச்சாரம் "

    எத்தனை நாளைக்குதான் நம்ம காமிக்ஸ் ரசிகர்கள் சுத்துன மரத்தையே சுத்திட்டு இருப்பாங்களோ தெரியலை, தமிழில் வராத எத்தனையோ கிராபிக் நாவல்கள் உள்ளன அவையெல்லாம் ரசிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. கணேஷ் @ இதுதான் யதார்த்தம் 😊 30 வருடங்கள் கழித்து புதியவர்கள் ரசிப்பதை அப்போது நாம் ரசிக்க விரும்புவோமா அல்லது முயற்சி செய்வோமா என்பது மிக பெரிய கேள்வி 😉

      Delete
  41. ஒன்றைக் கண் மர்மம்+ சாகோர் முழு தொகுப்பு. ஏற்கனவே தாங்கள் சொன்னதாக நியாபகம் !!😍

    ReplyDelete
    Replies
    1. ஸாகோர் பரிசீலிக்கலாம் but மே ஆன்லைன் விழாவுக்கு absolutely no மறுபதிப்ஸ்!

      Delete
  42. வியஜன் சார், பிரளயம் கி. நா வெளியிடுங்கள் சார் மே மாத ஆன்லைன் மேளாவில்

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே சொன்ன பதில் தான் சார் - மருத்துவர்களை தீரா காமுகராய் காட்டும் அந்த ஆல்பம் உள்ளேயே கிடக்கட்டும்!

      நம் வட்டத்திலேயே கணிசமான, கண்ணியமான மருத்துவர்களை வைத்துக் கொண்டு, இதனை வெளியிடுவது குறித்து என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியலை!!

      Delete
    2. வேண்டாம் சார் இந்த கதை.

      Delete
    3. ஓகே விஜயன் சார், உங்கள் முடிவை மதிக்கிறேன்.

      Delete
  43. கரெக்டு தான் சார். பாவம்..அவங்க பாட்டுக்கு தேமேன்னு மீன் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. ஏன் அவங்க மனச கஷ்டப்படுத்தணும்.

    ReplyDelete
  44. இளமை என்னும் பூங்காற்று - ஒரு நிஜ கதாபாத்திரதை எடுத்து அதனை டெக்ஸ் என்ற கற்பனை நாயகருடன் காமிக்ஸ் கதையாக ரசிக்கும் படி கொடுத்துள்ளார்கள். ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் ஆனால் அடுத்து என்ன என்று சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. ஜோ பூட் மற்றும் பேர்ல் கதாபாத்திர அமைப்பு சிறப்பு; டெக்ஸ் மற்றும் கார்சனை இந்த கதையில் சரியாக பயன்படுத்தி உள்ளார்கள்.

    ReplyDelete
  45. // நேற்றைக்கு ஓடிய அதே அளவுக்கு இன்றைக்கும் விற்பனைகள் நிகழும் பட்சத்தில் ஒரு புத்தம் புதிய ரெக்கார்டை செட் பண்ணியிருப்போம் !! //

    அந்த சந்தோஷ செய்தியை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்.

    ReplyDelete
  46. ஜி , online mela, captain Prince போன வருடம் வரவேண்டியது இன்னும் உள்ளது அதனை போட்டு தாக்கி விடலாமே.
    மேலும் சமீபத்தில் மறு விற்பனையில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் போன robot ஆர்ச்சி in இரும்பு மனிதன்.
    ஜான் மாஸ்டர், இரட்டை வேட்டையர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் இன்று சொன்னது
      // No மறுபதிப்ஸ் for மே என்பதே தாரக மந்திரம் சார்! //

      Delete
  47. One more cartoon for May sir - ipdi nozhachaadhaan undu :(

    ReplyDelete
    Replies
    1. உண்மை.

      எனக்கு எல்லா வருடத்தின் முதல் மாதமும் வருடத்தின் கடைசி மாதமும் கார்ட்டூன் கதையுடன் இருக்க வேண்டும் என்று ஆசை, ஆசிரியர் வரும் காலங்களில் இதனை செய்வார் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

      Delete
    2. +1000

      எனக்கு எல்லா மாதமும் ஒரு கார்ட்டூன் கதை வந்தால் ஹேப்பி தான் சார்...
      கண்டிப்பாக ஆக்ஷன் + காமெடி + பேண்டசி nu வெவ்வேறு ஜானர் படிக்கும் மகிழ்ச்சி கார்ட்டூன் கதையும் வரும் போது தான் கிடைக்கும்😍

      Delete
    3. நம்ப கார்ட்டூன் இனம்ஐயா நீங்கள் 😊

      Delete
  48. பிரளயம் இப்போது முடியாது போல.
    "Route 666" - முயற்சிக்கலாமா சார்

    ReplyDelete
  49. மே மாதம் தங்கக் கல்லறை'க்கு வாய்ப்பு கிடைக்குமா சார் ? நீண்ட கால கோரிக்கை இது.

    ReplyDelete
    Replies
    1. No reprints he said. For Thangakkalarai we will wait for 1 more year - illEnna namakku therinja print pottupuduvom ;-) :-D :-)

      Delete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. டியூராங்கோ மாதிரி ஒரு கௌபாய் ஆல்பம் உள்ளதாக
    சொன்னீர்கள் சார், அதற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா சார் மே மாதத்தில்?

    ReplyDelete

    ReplyDelete
  52. மூன்றாம் தினம் கிராபிக் நாவல் படித்த போது வெகுநாளுக்குப் பின் ஒரு கதையை ரசித்து ரசித்து படித்தேன். இதுவரை மீண்டும் மீண்டும் மூன்று தடவை மறு வாசிக்கும் செய்து விட்டேன். இது போன்ற அட்டகாசமான கிராபிக் நாவல்களை தொடர்ந்து வெளியிடுங்கள். என் போன்ற தலையைச் சுற்றி மூக்கை தொடும் நாவல்களைப் படிக்க பிரியப்படுவோருக்கு இது நல்ல தலைவாழை விருந்து தான். இது போன்ற நாவல்கள் படிக்கும் போது கதையை ஆராயாமல் லாஜிக் பார்க்காமல் பேனல் பை பேனலாக சென்று கொண்டே இருந்தால் நமக்கு நல்ல அனுபவம் கிட்டும்.
    இரண்டு மூன்று முறைக்கு மேல் மறுவாசித்து செய்யும்போது கதையை நமக்கு புரிந்து விட்டுப் போகிறது. எனக்கு கதை பத்தி பிரச்சனை இல்லை. கதை நகர்வு போரடிக்காமல் இருந்தால் மட்டும் போதும். சிண்டு முடிச்சுகள் என்றால் எனக்கு இன்னும் நன்றாக இருக்கும். மூன்றாம் தினம் மூன்றாம் தினம் புத்தகத்தை புகழை எனக்கு வார்த்தைகளே இல்லை.
    சதாசிவம் காடையூர் காங்கேயம்

    ReplyDelete
  53. மேஜிக் விண்ட் . ஒரு லோடு பெண்டிங் உண்டு .அப்படினா அதுல ஒண்ணு தாங்க சார் ஓட்டெடுப்பு , ,முன்பதிவுக்கு பின்னால

    ReplyDelete
  54. நோ . மறுபதிப்ஸ்.ஸ்டேண்டிங்லயே சார் உறுதியாக இருக்கார்.தேங்க்ஸ் ஸார்

    ReplyDelete
  55. விஜயன் சார், யார் என்ன சொன்னாலும் நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள முடிவிலா மூடுபனி, என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம், கதை சொல்லும் கானகம், முடியா இரவு, நித்திரை மறந்த நியூயோர்க், பனியில் ஒரு குருதிப்புனல், விதி எழுதிய வெள்ளை வரிகள், நிஜங்களின் நிசப்தம், கனவுகளின் கதையிது, கோழைகளின் பூமி, பரகுடா என்று அனைத்துக் கி. நா ரகக் கதைகளும் வேற லெவல் சார். காமிக்ஸ் என்பதைத் தாண்டி சிந்திக்க வைத்த கதைகள் இவை. தொடர்ந்தும் இப்படியான கதைகளை வெளியிடுங்கள் சார் 🙏

    ReplyDelete
  56. மும்மூர்த்திகள் ஸ்பெஷல் குட் சாய்ஸ் சார்

    மும்மூர்த்திகள் ஸ்பெஷல் பார்ட் 2 பார்ட் 3 எதிர்பார்க்கிறோம்
    எப்போதுமே மாயாவிக்கு
    வரவேற்பிற்கு குறைவில்லை

    ReplyDelete
  57. டின் டின் சென்னை விற்பனை எப்படி உள்ளது சார்?

    ReplyDelete
  58. ஆன்லைன்‌ ஸ்பெஷலில் தேவை

    சுவிட்சர்லாந்தில் மாயாவி
    கண்ணீர்‌தீவில் மாயாவி
    ஒற்றைக்கண் மர்மம்

    இல்லாகாட்டி

    ஒரு மெபிஸ்டோ ஸ்பெஷல் போட்டு தாக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. // சுவிட்சர்லாந்தில் மாயாவி
      கண்ணீர்‌தீவில் மாயாவி //

      இதுவரை நான் படிக்காத கதைகள் இது.

      Delete
    2. படிக்க நேரம்இல்ல அதனால் நேர காலேஜ் போய்விட்டேன்ல 🤣

      Delete
  59. *டெக்ஸ் மறுபதிப்புக்கான கதைகளின் புதுப்பிக்கப்பட்ட விருப்பப் பட்டியல்2025:*

    *இரத்த முத்திரை*
    *எமனுடன் ஒரு யுத்தம்*
    *அதிரடி கணவாய்*
    *இரும்புக் குதிரையின் பாதையில்*
    *இரத்த நகரம்*
    *நள்ளிரவு வேட்டை*
    *மரண தூதர்கள்*
    *மெக்ஸிகோ படலம்*-
    *தனியே ஒரு வேங்கை,கொடூர வனத்தில் டெக்ஸ்&துரோகியின் முகம்*
    *இரத்த ஒப்பந்தம், தணியாத தணல்& காலன் தீர்த்த கணக்கு*
    *சாத்தான் வேட்டை*
    *எல்லையில் ஒரு யுத்தம்*
    *நள்ளிரவு வேட்டை*
    *மரணத்தின் முன்னோடி,காற்றில் கரைந்த கழுகு&எமனின் எல்லையில்*

    கதவு திறக்கும் வரை தட்டுவோம்

    ReplyDelete
  60. Tex book suggestion : "பணிமண்டல போராளிகள்". i have never read such an existing tex book before !!

    ReplyDelete
  61. குமாரு @ தை பொங்கல் பதிவு இன்று இரவா இல்ல நாளைக்கு காலையில் வருமா ?

    ReplyDelete
    Replies
    1. நான் இன்று காலையே எதிர்பார்த்தேன். எப்படியும் நாளைக்குள் பதிவு வந்து விடும்.

      Delete
  62. மஹி ஜி. புதிய லிஸ்ட்டிற்க்கு தேங்க்ஸ் .கோடை ஆன்லைன் மேளாவிற்க்கு நோ .மறுபதிப்ஸ் . அப்படின்னு நிற்க்கிறார்ஆசிரியர் . சார் ஆனால் அதற்க்கு முன்னாடியே வருகிற திருப்பூர் புத்தக விழாவிற்க்கு" தல" மறுபதிப்பு தரலாமேன்னுகேட்ப்போம் .கதவு திறக்கும் வரை தட்டுவோம் .

    ReplyDelete
  63. இரத்த முத்திரை+ அதிரடி கணவாய்!! திருப்பூர் புத்தக திருவிழாவிற்கு இதை இரண்டும் வந்தால்... தெறி மாஸ் 💥💥💥💥

    ReplyDelete
  64. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🌾🌾🌾🌾

    ReplyDelete
  65. பொங்கல் திருநாள் வந்து பொங்கலும் சாப்பிடாச்சு ஆனால் பொங்கல் பதிவு இன்னும் வரவில்லை ☺️

    ReplyDelete

  66. .1.மாயாத்மா ஸ்பெஷல்

    கீழ்த்திசை சூனியம் : எல்லா காலத்துக்கும் பொருத்தமான கதை தான். இயல்பாக வாசிக்க ஏற்ற கதை.

    ஹாலோவின் கடத்தல்: பரவாயில்லையே ரகம். விறுவிறுப்பாகவும் இருந்தது.

    2. அலிபாபா ஆங்கிலத்தில் வாசித்தேன். மூலக்கதை இதுதான் போலும். விடாமுயற்சி, பட்டாணி இளவரசி, அலிபாபா மூன்றுமே சிறுவர்களுக்கு ஏற்ற அற்புதமான இதழ்கள்

    3. சில எண்ணங்கள்:

    1970 -72 வாக்குகளில் சீனியர் எடிட்டர் சார் துவக்கி வைத்ததை இன்று வரை நமது எடிட்டர் சார் தொடர்ந்து வருகிறார். இப்போது விக்ரமும் கூட. உலகத்தரம் வாய்ந்தவை நமது கதைகள். படைப்புகளின் தரமும் உன்னத நிலையை எட்டி விட்டது. ஆயினும் நாம் மொழிமாற்று காமிக்ஸ் மாத்திரமே.

    சிறுவர்களை, சிறுமிகளை பிரதானமாக கொண்டு அவர்களுக்கு என்றே உள்ளூர் சார்ந்த படைப்புகளை வெளியிட முயற்சிக்க நம்மால் இயலுமா?

    முத்து காமிக்ஸ் தூங்குவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 1967இல் துவங்கப்பட்ட அமர்சித்திரகதா(ACK ) மிகப்பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இந்து புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள், இந்திய சரித்திர புருஷர்களின் கதைகள், நல்லொழுக்க கதைகள் இவைகளை பிரதானமாகக் கொண்டு ஏசிகே வெளியானது.

    ராஜ் காமிக்ஸ் இப்போது சரிவை சந்தித்து இருந்தாலும் மார்வெல் யுனிவர்ஸ் போல இந்திய சூப்பர் மேன் யுனிவர்சை உருவாக்கியது .

    தரமான உள்ளூர் படைப்பு படைப்பாளிகள், ஓவியர்கள் இவர்களைக் கொண்டு உள்ளூர் சார்ந்த கதை வரிசைகளை உருவாக்குவது நமக்கு சாத்தியப்படுமா?

    இந்த கதைகளை டிஜிட்டல் பிளாட்பார்மில் கொண்டு வருவது பற்றியும் தீவிரமாக யோசிக்கலாம் எதிர்காலம் இணையத்தை சுற்றியே இருக்கும்.

    2014இல் ACK டிஜிட்டல் பிளாட்பார்மை அறிமுகப்படுத்தியது. இரண்டு வருடங்களில் அதன் ஒட்டுமொத்த விற்பனை 30% அதிகரித்தது.

    ACK - வின் APP ல் அதன் ஒட்டுமொத்த புராண கதைகள் தொகுப்பு 19999₹. இதனுடன் ஆயுட்கால சந்தா சேர்த்துக்கொண்டால் 65,999₹.

    தேவாரப் பாடல்களை தொகுக்க வேண்டும் என சுந்தர சோழர் எண்ணியது அவர் மகன் ராஜராஜ சோழன் காலத்தில் நிறைவேறியது.

    பாண்டியனின் மணிமகுடத்தையும் ஹாரத்தையும் இலங்கையிலிருந்து மீட்டுக் கொண்டு வர வேண்டும் என சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் விரும்பியது அவர் மகன் ராஜேந்திர சோழன் காலத்தில் நிறைவேறியது.

    போலவே எடிட்டர் சார் இதை நடத்த விரும்பினால் ஜூனியர் எடிட்டர் விக்ரமினால் இதை சாதிக்க முடியும். இதில் உள்ள நடைமுறை சிக்கல்களைப் பற்றி நான் அறியேன்.

    கோடை காலத்தில் என்ன இதழை வெளியிடுவது என எடிட்டர் சார் கேட்டிருந்தார். குண்டு புத்தகம் ஆக டெக்ஸ் வெளியிடப்படுமாயின் கோடைகாலம் என்பதால் ஒரே ஒரு இதழாவது சிறார்களுக்கான கோடை சிறப்பு சிறுவர் மலர் காமிக்ஸ் ஆக வெளியிடலாம். இவை எப்படி இருந்தாலும் பெரிய புத்தக திருவிழாக்களில் விற்றுவிடும்.

    அயல்நாட்டு காமிக்ஸ் களை மொழிபெயர்ப்பதில் நாம் உச்சத்தில் இருக்கிறோம்.

    இந்த விஷயத்தில்பணம் என் பையில் இருந்து வரவில்லை என்பதால் தைரியமாக கீழ்க்கண்ட திருக்குறளை சொல்லுகிறேன்.

    கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது”
    காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது. வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.

    மொழி மாற்றத்தை குறைத்து மதிப்பிடவில்லை. ஆக்கம் என்பதற்காக சொல்லப்பட்டது.

    ReplyDelete
  67. கதவு திறக்கும் வரை தட்டுவோம்

    ReplyDelete