நண்பர்களே,
வணக்கம். வருஷத்தின் ஒரு அழகான வேளையினில் பயணம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்!! டிசம்பர்களுக்கும், மார்கழிகளுக்கும் ஒரு விவரிக்க இயலா யௌவனம் உண்டென்பேன் - at least எனது கபாலத்துக்குள்! சிலுசிலுவென்ற அந்த அதிகாலைப் பொழுதுகள்; தொலைவில் கேட்கும் மார்கழி பஜனைகள்; மப்பும் மந்தாரமுமான பகல் பொழுதுகள்; ஓராண்டின் இதழ்களை வெற்றிகரமாய்ப் பணிமுடித்த திருப்தி; புதிதாய் அடுத்த 12 மாதங்களுக்கென காத்திருக்கும் சவால்கள் தரும் பரபரப்பு; கூப்பிடு தொலைவிலிருக்கக் கூடிய சென்னைப் புத்தக விழா ; அதற்கென நாம் அடிக்கும் பல்டிக்கள் - என கடந்த ஒரு டஜன் ஆண்டுகளாய் இந்த வேளைகளை ரசித்திட நிரம்பவே காரணங்கள் இருந்து வந்துள்ளன!
And இந்த முறையோ கூடுதலாய் இரண்டு காரணங்களும் கிட்டியுள்ளன - நமது நண்பர்களின் உபயங்களில்!
- மூன்று தினங்களுக்கு முன்பாய் நண்பர் ரஃபீக் ராஜா அனுப்பியிருந்த தகவல் இது!
1972 முதலாய் இது வரை நமது குழுமம் வெளியிட்டிருக்கும் இதழ்களின் மொத்த எண்ணிக்கை : 1304
- And அதன் மறுநாளே சேலத்திலிருந்து நண்பர் டெக்ஸ் விஜயராகவன் அனுப்பியிருந்த புள்ளி விபரம் இது!
*2012 கம்பேக் ஆனதில் இருந்து பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியீடுகள் ஆண்டுவாரியாக....*
2012---14
2013---24
2014---36
2015---48
2016---58
2017---52
2018---52
2019---52
2020---47
2021---46
2022---45
2023---61* (Record)
2024---67#(New Record)
ரெகார்டு பிரேக்கிங் இயர் மீண்டும்....🤩🤩🤩🤩🤩
நிறைய தபா கிரிக்கெட் போட்டிகளின் முடிவின் போது மைக்கை நீட்டி நிற்கும் ஊடகவியலாளர்களின் மாமூலான கேள்விக்கு வீரர்கள் மாமூலான ஒரு பதிலைச் சொல்லுவதைப் பார்த்திருப்போம்! “இல்லீங்க... பேட்டிங் பண்றச்சே ஸ்கோர்போர்ட்டை அடிக்கொரு தபால்லாம் பாக்குறது இல்லீங்க! சென்சுவரிக்குக் கிட்டே கீறேன் என்பது தெரியும் தான்; ஆனா எவ்ளோ நெருக்கத்திலே இருந்தேன்னு தெரியாது!" என்பது தானே அந்த டயலாக்? காது புளிக்க இதே வரியினை வெவ்வேறு ப்ளேயர்கள் ஒப்பிக்கும் போதெல்லாம் என் மூஞ்சில் சன்னமான ஒரு நக்கல் புன்னகை விரிந்திடுவதுண்டு! But இந்த நொடியில் லைட்டாக ஒரு கேள்வி தலைக்குள் ஓடுகிறது - அவுக சொன்னதுலாம் லுலாயிக்காக அல்ல ; மெய் தானோ?” என்று! Of course அந்த ஜாம்பவான்களோடு இந்த ஜாம் பஜார் ஜக்கு ஒப்பீட்டுப் போட்டிகளுக்குப் போகும் குடாக்குத்தனமான அபிப்பிராயங்களெல்லாம் கிஞ்சித்தும் நஹி; yet ஒரேயொரு சின்ன விஷயம் மட்டும் ஜாம்பவான்ஸ் & ஜா.ப.ஜ.வுக்கு மத்தியிலே ஒத்துப் போகிறதோ? என்ற எண்ணம் :
When in the midst of something engrossing - maybe we just tend to lose track of numbers! So மாதாமாதம் அடுத்தடுத்த பணிகளுக்குள் டைவ் அடிப்பது ஒரு தொடர்கதையாகவே கடந்த 144 மாதங்களும் இருந்து வந்திருக்க - நண்பர்கள் தோண்டியெடுத்திருப்பது போலான நம்பர்கள் சார்ந்த மைல்கற்களை இந்த ஆந்தைவிழிகள் கூட கோட்டை விட்டிருந்தன! Of course - 50வது ஆண்டுமலர்; 40வது ஆண்டுமலர்; இதழ் # 500; 400 போன்ற landmarks தாமாய் நம்மை எதிர்கொண்டு விடும்! So அவற்றை நினைவில் கொண்டிட பெரும் கம்பு சுத்தும் ஜாகஜங்களெல்லாம் அவசியமாவதில்லை! ஆனால் - ஒரு அரை நூற்றாண்டுப் பயணத்தினில் நமது குழுமம் தெறிக்க விட்டிருக்கும் மொத்த இதழ்களின் நம்பர்கள் பற்றியோ; ஒரு தெறி வேக ஆண்டின் ஒட்டுமொத்த output பற்றியோ track பண்ணிட தோன்றியதில்லை தான் ! So நண்பர்கள் தந்திருக்கும் நம்பர்களை பேந்தப் பேந்த முழித்தவாறே உள்வாங்கிட முனைந்து வருகிறேன்!!
- 1972 முதலாய் முத்து காமிக்ஸ் - 1987-ல் எனது பொறுப்பிற்கு வரும்வரை 166 இதழ்கள்
- 1982-ல் முத்து காமிக்ஸ் வாரமலர் - 21 இதழ்கள்
- நடுவே கொஞ்சமாய் முத்து மினி காமிக்ஸ் - maybe 7 இதழ்கள்
-இவை மூன்றுமாய் சேர்ந்து approx. 195 புக்ஸ்!
- So இவை நீங்கலாக பாக்கி 1110 நம்பள் கி கணக்கில்! நாற்பது ஆண்டுகளின் பணிக்கு இது அத்தனை அசுரத்தனமான நம்பராகத் தெரியாது போகலாம் தான்; பச்சே - நண்பர் STV தந்திருக்கும் புள்ளி விபரத்தின் ஒரு பகுதியைப் பாருங்களேன்!
- 2012 to 2024 வரை வெளியான மொத்த இதழ்கள் : 606
- Which means நமது மீள்வருகைக்குப் பின்பான கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகவே, ஆண்டொன்றுக்கு சராசரியாய் 50 புக்ஸ் தொடர்ச்சியாய் வெளியிட்டிருக்கிறோம்!
- Which again means - ஒற்றை மாதம் பாக்கியில்லாமல் கடந்த 12 ஆண்டுகளில் - வாரத்துக்கு ஒரு புக் வீதம் போட்டுத் தாக்கியிருக்கிறோம்!
- I agree - இந்த நம்பரில் மறுபதிப்புகளும் நிரம்பவே இடம்பிடித்திருக்கும். தான்; ஆனால் பழசோ - புதுசோ ஒரு புத்தகத் தயாரிப்பினில் உள்ள பணிகள் கிஞ்சித்தும் மாறிடப் போவதில்லை! So நான் ஃபோகஸ்லைட்களுக்கு முன்னே நின்று அபிநயம் பிடிக்கிறேனோ - இல்லையோ, திரைக்குப் பின்னிருந்து நம்மாட்கள் நில்லாது பம்பரமாய் சுழன்று கொண்டே தான் வந்திருக்கிறார்கள்!
- So இந்த பன்னிரண்டு ஆண்டுகளின் "606" is as much their record too - as it's mine !
- And not to forget - இந்த “606“ உங்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் சாகஸமுமே! நான் ஆடியது பரதமோ; பேட்டைக் குத்தோ - சகலத்தையும் ரஷ்ய பாலே டான்ஸர் ரேஞ்சுக்கு சிலாகித்து, ஊக்குவித்து, கரவொலி எழுப்பி நீங்கள் மட்டும் இல்லாது போயிருப்பின் - “ரா....ரா... சரசுக்கு ரா...ரா...” என்று சந்திரமுகி ஸ்டைலில் பூட்டியதொரு அறைக்குள் maybe ஒண்டியாய் ஆடிக் கொண்டிருந்திருப்பேன் தான்!
- Most importantly - “இது பூட்ட கேஸ் மாமூ..” என்று நம் காதுபடவே மக்கள் பேசியதொரு காலகட்டத்திற்குப் பின்பாகவும் நம்பிக்கை வைத்து, ஊக்குவித்து, வண்டியைத் தள்ளி விட்டு ஸ்டார்ட் எடுக்கச் செய்த பெருமையும் உங்களதல்லவா? அந்த முதல் ஆண்டைக் கடந்திருக்காவிட்டால், 606 என்ன - பப்பரமிட்டாய் கூட சாத்தியமாகியிராது! So நம்பர்கள் சொல்லும் சேதிகளின் பின்னணியில் நமது நாயக / நாயகியரின் முகங்கள் ஒரு பக்கம் தெரிகின்றதென்றால், உங்கள் அனைவரின் புன்னகை முகங்கள் மறுபாதியை வெளிச்சமாக்கி வருகிறது!
- Of course - இந்த "606" படலத்தினூடே ஏகமாய் மூ.ச. + மு.ச. விசிட்கள் விரவிக் கிடந்திருப்பதை மறுக்கவோ, மறக்கவோ மாட்டேன் தான்! ஆனால் ஒவ்வொரு மூ.ச./ மு.ச. விஜயத்துக்கும் பிற்பாடு, புத்துணர்ச்சியோடு நமது பயணம் தொடர்ந்திருப்பதற்கு இந்த நம்பர்களே சாட்சி! மோதிர விரல்கள் ஐயா உங்களது ; so நீவிர் டபுள் கொட்டு வச்சாலுமே, அவை வளர்ச்சிக்கான ரூட்டையே போட்டுத் தந்துள்ளன!
ரைட்டு...சென்டிமெண்ட்களைப் பிழிந்தது போதுமென்றால் நடப்பு ஆண்டின் மீதான ஒரு மீள்பார்வைக்குள் புகுந்திடலாமா folks ? இதோ - வரிசையாக 2024-ன் இதழ்களின் அணிவகுப்பு - நமது நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ள! கவனமாய் அவற்றை உள்வாங்கிக் கொண்டு தொடரவுள்ள கேள்விப் படலத்துக்கான பதில்களைப் பதிவு செய்திடுங்களேன் - ப்ளீஸ்?!
புதியவை : 53
மறுபதிப்புகள் : 14
நடப்பாண்டின் break-up இது! மறுபதிப்புகள் சகலமுமே புத்தக விழாக்களின் விற்பனைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதால் அது குறித்து நான் கேள்விகள் எதுவும் கேட்டிடப்போவதில்லை!
1. My question is - இந்தப் புதுசு 53-ல் நீங்கள் வாங்கியது எத்தனை? வாசித்தது எத்தனை?
2. நடப்பாண்டின் TOP 3 இதழ்களாக எவற்றைச் சொல்வீர்களோ?
3. நடப்பாண்டின் 'crisp வாசிப்பு” என்ற தீமுக்கு இந்த ஆண்டினில் ஓரளவுக்காவது நியாயம் செய்துள்ளோமா?
4. “அட்டைப்படம் of the year" என்ற பரிசைத் தருவதாயின் எந்த இதழுக்குப் பரிந்துரைப்பீர்கள்?
5. “அழுத்தமான கதைக்களம் of the year" என்ற தேர்வில் யாருக்கு முதல் மார்க் போடலாம் என்பீர்களோ?
6. 2024-ன் (புது) இதழ்களிலிருந்து மீள்வாசிப்புக்குத் தகுதி கொண்ட இதழ்களாய் எவற்றைப் பார்த்திடுகிறீர்கள்? Your Top 3 ப்ளீஸ்?
7. நடப்பாண்டின் 53 புது இதழ்களின் ஜான்ரா வாயிலான break up இது:
கௌபாய் கதைகள் : 12
அட்வென்சர் கதைகள் : 26
கார்டூன்ஸ் : 4
கிராபிக் நாவல்ஸ் : 6
டிடெக்டிவ் த்ரில்லர்ஸ் : 5
So ‘தல‘ டெக்ஸ் வில்லரோ; இன்ன பிற குருத பாய்ஸோ ஓவராய் இடங்களைக் கபளீகரம் செய்து வைத்திருப்பதான எண்ணங்கள் வெறும் பிரமைகளே என்றாகிறது!
My question is : இந்த ஸிஸ்டில் இன்னும் எதற்கு இடங்களைக் கூட்டலாம்? எதற்குக் குறைக்கலாம்? என்பதே ?
8. காமிக்ஸ் வாசிப்புலகிற்கு முற்றிலும் புதுசானதொரு நண்பருக்கு நடப்பாண்டின் ஏதேனும் ஒற்றை புக்கை மட்டும் வாசித்துப் பார்க்கக் கொடுக்க நினைத்தால் - எந்த புக்கை எடுத்து நீட்டுவீர்கள்?
9. நடப்பாண்டின் கிராபிக் நாவல்களை rate செய்வதாயின் எவ்விதம் பண்ணுவீர்களோ?
10. 2024: உயரத்திலிருந்து ஒரு கழுகுப் பார்வையில் இந்த ஆண்டின் நமது காமிக்ஸ் பயண அனுபவத்தினை எவ்விதம் வர்ணிப்பீர்கள் folks? In one word ?
ரைட்டு... கணிசமான கேள்விகளைப் போட்டுத் தாக்கிய கையோடு, ஜனவரியின் பணிகளுக்குள் ஐக்கியமாகிடப் புறப்படுகிறேன் folks!
And எப்போதும் போலவே - சந்தாவுக்கானதொரு நினைவூட்டலுமே! புத்தாண்டுக்கு மூன்றே வாரங்கள் எஞ்சியிருப்பதால், சந்தா எக்ஸ்பிரஸில் உங்களுக்கான சீட்டைப் போட்டு வைக்க கொஞ்சம் நேரம் ஒத்துக்கிடலாமே - ப்ளீஸ் ?
P.S : சேலம் புத்தக விழாவினில் விற்பனைகள் தூள் கிளப்பி வருகின்றன ! வரும் திங்களன்று நிறைவுற உள்ள விழாவில் already போன வருஷத்தின் விற்பனையை நெருங்கியாச்சு - சில பல செவிகளில் புகைப் படலங்கள் வெளிப்படுவதையும் மீறி !! காத்திருக்கும் இந்த வாரயிறுதியிலும் புனித மனிடோவின் ஆசிகள் + உங்களின் அன்பு தொடர்ந்திடும் பட்சத்தில், we just might be looking at a new sales record !!
போன ஞாயிறன்று ஸ்டாலில் நண்பர்களை சந்தித்தது மட்டுமன்றி, மதிய பிரியாணி விருந்திலும் கலந்து கொண்டது செம உற்சாக அனுபவமாய் அமைந்து போனது ! வழக்கமான அரட்டைகள் ; சந்தோஷங்கள் என்று அழகாய் பயணித்த தினம் அது !! And அன்றைய பொழுது அடைமழையின் மத்தியிலும் விற்பனையில் சாதித்த நம்பரானது - சேலத்தின் single day sales-க்கொரு புதிய உச்சமும் கூட !! இடையில் இரண்டோ, மூன்றோ தினங்கள் வருண பகவானின் அதீத கருணை மட்டும் கட்டையைப் போட்டிருக்காவிடின் - "சென்னைக்கு அடுத்தபடியான புத்தக விழா விற்பனை" என்ற இரண்டாமிடத்தினை இந்நேரத்துக்கே சேலம் தட்டிச் சென்றிருக்கும் !! இன்னமும் உள்ள 2 தினங்களில் ஈரோட்டைப் பின்னுக்குத் தள்ளி சாதனை செய்திட முடிகிறதாவென்று பார்ப்போமே ? God speed சேலம் !!!