Powered By Blogger

Friday, December 27, 2024

82..........

 நண்பர்களே,

வணக்கம். முன்னெல்லாம் ஆனை அசைந்தாடி வந்து கொண்டிருக்க, அதன் மணியோசை இங்கே ப்ளாக்கில் முன்கூட்டியே ஒலிப்பது வாடிக்கை. இப்போதோ நிலவரம் உல்ட்டா : அடிச்சு புடிச்சி ஆனையார் கூரியரில் தொற்றி வீட்டு வாசலை எட்டிய பிற்பாடே இங்கே மணி ஒலிக்கிறது !! ஆனால் சுணக்கம் தகவல் தெரிவிப்பதில் மாத்திரமே என்பதில் சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் - because இது டிசம்பரில் ஜனவரி !!  

பொதுவாகவே "அவையடக்கம்" ; "ஆட்டுக்குட்டி அடக்கம்" என்ற பெயரில் வாயை சுருக்கமாய் செலவிட முனைவதே எனது ஸ்டைல் ! ஆனால் இந்த டிசம்பரில் ரெண்டாம் தபாவாய் கூரை மேலேறி நின்று பீத்தல் பரமானந்தம் அவதாரில் "82 ......எண்பத்தி ரெண்டூஊஊ" என்று கூவிடணும் போலுள்ளது !! இன்னா மேட்டர் என்கிறீர்களா ? நடப்பாண்டின் வெளியீட்டு எண்ணிக்கை 67 என்று சில பதிவுகளுக்கு முன்னே நண்பர் அனுப்பிய லிஸ்ட் சொல்லியிருக்க, அதற்கு நமது டீமை எண்ணி இறுமாந்து காலரை தூக்கி விட்டுக் கொண்டிருந்தேன். இதோ - இந்த நொடியில் நம்மாட்கள் இன்னுமொரு படி உசக்கே எட்டு வைத்துள்ளனர் - ஒற்றை calendar ஆண்டினில் 82 இதழ்களை உருவாக்கிய பெருமையோடு !! Oh yes - ஜனவரியின் மூன்று புக்ஸ்களையுமே இந்த மாதத்துத் தயாரிப்புக் கோட்டாவினில் இணைத்துக் கொள்ளும் பட்சத்தில், இந்தக் கடைசி 10 நாட்களில் மட்டுமே நம்மாட்கள் உருவாக்கியுள்ளது மொத்தமாய் 15 இதழ்கள் !!!!!! So ஏற்கனவே இருந்த 67 + இந்த 15 = 82 இதழ்களாகிறது இந்த ஒற்றை ஆண்டின் பணி லிஸ்ட்டில் !! சர்வ நிச்சயமாய் இந்த நம்பரை இனியொரு தபா எட்டிப்பிடித்திட இயலுமென்று இந்த நொடியில் தோன்றவில்லை ; but you never know !!!! Phewwwwwww.........!!

ஒற்றை ஆள் கூட கூடுதல் இல்லை ; in fact மகப்பேறு காரணமாய் நமது டிசைனிங் டீமின் பெண்மணி ஒருவர் ஆண்டின் செப்டெம்பர்வாக்கிலேயே லீவில் போயாச்சு ! And நம்மள் கி  வண்டியுமே நடப்பாண்டின் ஒரு பாதிப் பொழுதுக்கு பட்டி-டிங்கரிங் பார்த்த படலத்திலேயே ஓடிக் கொண்டும் இருந்துள்ளது ! In fact - ஜூன் to நவம்பர் எந்தவொரு வாரயிறுதியிலும் வூட்டில் குப்பை கொட்டியதாகவே நினைவில்லை ; அம்புட்டுப் பொழுதுகளும், பயிற்சி, சிகிச்சை என்று கோவையில் ஓடிக்கொண்டிருந்தன ! So இந்தக் கூத்துக்களையும் தாண்டி இந்தாண்டில் இத்தனையை போட்டுத் தாக்கியுள்ளோம் என்றால் - அது அந்த மனிடோ தேவனின் மெர்சலூட்டும் சாகஸமே !! மனசு நிறைந்த மகிழ்வோடு நேற்றைக்கு உங்களின் புதுச் சந்தா கூரியர்களை நம்மவர்கள் பேக் பண்ணும் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் போது 2024 ஒரு அற்புத வாணவேடிக்கையாய் மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது ! பஜ்ஜி, சொஜ்ஜியெல்லாம் வாங்கித் தந்து நமக்கு VRS குடுத்து அனுப்பிய பின்னான ஒரு கொட்டாவிப் பொழுதில், இந்த 2024 சர்வ நிச்சயமாய் நினைவுகளில் குதூகலத்தை நல்கிடத் தவறாதென்று பட்டது !! This has been an year for the ages !!!

And இதோ - இன்னமும் நீங்கள் பார்த்திருக்கா சில உட்பக்கங்கள் !!


கதை சொல்லும் காமிக்ஸ் இனி : 






ENGLISH ஸ்க்ரிப்ட் : ஜூனியர் எடிட்டர்....



















So ஒரு தெறி டிசம்பரின் பலன்கள் உங்கள் கைவசம் !! குறிப்பாய் அந்த 3 + 3 ஜூனியர் வாசகர்களுக்கான புக்ஸ் செம கியூட்டாய் அமைந்திருப்பதாய் மனசுக்குப் பட்டது ! அவற்றை உங்கள் இல்லங்களிலுள்ள நமது அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தீர்களெனில் செம ஹேப்பி ஆகிடுவோம் !! Please give those books a shot folks !! 

சென்னை மேளா புக்ஸ் - திங்கள் முதல் டெஸ்பாட்ச் ஆகிடும் என்பது உபரித்தகவல் !! உங்கள் வீட்டு குட்டீஸ்களின் கைகளில் இந்த கதை சொல்லும் காமிக்ஸ் இதழ்களைத் தந்து ஒரு selfie அனுப்புங்களேன் ப்ளீஸ் ?

அப்புறம் இன்று முதல் சென்னையில் புத்தகத் திருவிழா துவங்குகிறது !! ஸ்டால் நம்பர் 93 & 94-ல் அத்தனை புது இதழ்களோடும் ; அத்தனை back issues சகிதமும் காத்திருப்போம் !! குடும்பத்தோடு வருகை தாருங்களேன் ஆல் ? Bye for now....see you around !!






175 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கள் . Just Miss

      Delete
    2. ஆமாங்க குமார் சகோ

      Delete
    3. வாழ்த்துக்கள் சகோதரி..

      Delete
    4. கலக்குறீங்க ரம்யா

      Delete
    5. யெஸ்ஸூ பரணி சகோ 😊😁

      Delete
    6. சூப்பர் சகோ🔥🥳

      Delete
    7. முதல் இரண்டு இடங்களையும் கைப்பற்றியதற்கு வாழ்த்துக்கள் sis 🙂👏👏👏

      Delete
  2. 82...செம
    பாராட்டுகள் + வாழ்த்துகள் ஆசிரியரே
    தங்கள் டீம்மின் எபெர்ட் செம

    ReplyDelete
  3. Sir,
    Will Magic Moments Special continuing parts be published in 2025 ? Seems the storyline is not concluded.

    Very good story sir pls try to finish quickly before forgetting the plot

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. "ஒரிஜினலாய் பல்லடம் - தற்சமயமாய் லடாக் சரவணகுமார் " - என்று பெயரை மாத்திக்க வேணாமா சார் - நம்ம கவிஞர் மெரி ?

      Delete
  6. குட்டீஸ்களை வரவேற்க சுட்டி லக்கி

    ReplyDelete
  7. ஸ்டால் சென்டரில் டைகர் போஸ்டர் தொங்க விடலாங்க ஆசிரியரே
    இது டைகர் மாதம் 😊😊😊

    ReplyDelete
    Replies
    1. சென்னையிலே மாயாவி சார் தான் என்றென்றும் ஸ்டார் 👍👍

      Delete
    2. ஆமாங்க ஆசிரியரே, நம்ம மாயாவியை ஜெயிக்க முடியாது

      Delete
    3. இரும்புக்கை மாயாவி... எல்லோருக்கும் பெரியண்ணன் sir... வாழ்த்துக்கள். நன்றி.. ❤️❤️❤️❤️🙏🙏👍👍...

      Delete
  8. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  9. இன்று பணி.. 👍😄

    நாளை சனி.. 😄😄😘

    எனவே நாளைதான் கை பிடித்தல்.. 😘😘

    கட்டி பிடித்தல்.. 🥰😘😘

    எல்லாமே.. 😘😘🫣🫣

    ReplyDelete
    Replies
    1. புதுசா கண்ணாலம் கட்டுனவக வார இறுதிக்கு காத்திருக்கா மாதிரி தோணுவது எனக்கு மட்டுமா??😉😉😉

      Delete
    2. 😄😄😄
      என்றன் காமிக்ஸ் காதலிய சொன்னேனுங்க... 😘😘😘😘

      Delete
  10. 82 - புதிய உட்சம்! நமது அலுவலக சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கு கோடி நன்றிகள்! உங்கள் பணி பாராட்டுதலுக்கு உரியது!

    ReplyDelete
  11. நமது ஸ்டால் செம மாஸாக உள்ளது! புத்தகங்கள் அடுக்கிவைத்துள்ள முறை பார்க்க மெர்சலூட்டுகிறது! அதுவும் முன் வரிசையில் குண்டு ஹார்ட் பௌண்ட் புத்தகங்கள் காமிக்ஸ் ரசிகர்களை குத்தாட்டம் போட்டு உள்ளே வரவைக்கும்!

    ReplyDelete
  12. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ஸ்டாலில் ஓவ்வொரு பக்கமும் உங்களின் மெனக்கெடல் தெரிகிறது, போஸ்டர் & வால்பேப்பர்! அனைத்து தரப்பு ரசனைக்கு ஏற்றார் போல போஸ்டர்கள் என கலக்கி உள்ளீர்கள் சார்; உங்களின் அனுபவம் இதில் நன்றாக தெரிகிறது சார்! விற்பனை சிறக்கட்டும். ஆண்டின் முதல் புத்தக திருவிழா அதுவும் தலைநகரில், சிறப்பான விற்பனையுடன் புதிய சாதனை படைக்கும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்!

      Delete
  13. புத்தகங்கள் இன்னும் வரவில்லை எசமான் ;-)

    ReplyDelete
  14. **இந்தக் கடைசி 10 நாட்களில் மட்டுமே நம்மாட்கள் உருவாக்கியுள்ளது மொத்தமாய் 15 இதழ்கள் !!!!!! So ஏற்கனவே இருந்த 67 + இந்த 15 = 82 இதழ்களாகிறது இந்த ஒற்றை ஆண்டின் பணி லிஸ்ட்டில் !!
    சர்வ நிச்சயமாய் இந்த நம்பரை இனியொரு தபா எட்டிப்பிடித்திட இயலுமென்று இந்த நொடியில் தோன்றவில்லை ; but you never know !!!! Phewwwwwww.........!!**

    இந்த ஆரோக்கியமான பணி என்றென்றும் தொடர,மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சார் ❤️.

    இந்த ஆண்டு
    படிக்காதவர்களை நீங்கி, படிக்க ஆர்வமுள்ள நண்பர்களுக்கு இந்த
    வெளியீட்டு எண்ணிக்கை மகிழ்ச்சியானது.
    இதில் வி காமிக்ஸ் தனித்தடம் என்கிறப்ப மாதம் 1 என 12 உறுதியாக கிடைத்தது.
    லயன் முத்து - 29.
    ஆக சந்தாவில் மட்டும் மொத்தம் 41 இதழ்கள்.
    41÷12= 3.41.
    கிட்டத்தட்ட, குறைந்தது மாதம் - 4 புக் என்பது, காமிக்ஸை விரும்பி படிப்பவர்களுக்கு நிறைவான விசியம்.
    இது போக மீதி 26 புக்ஸ் ஸ்பெஷல் வெளியீடுகள் என்கிறப்ப கூடுதல் மகிழ்ச்சி.

    ஆனால் இந்த முறை ஸ்பெஷல் வெளியீடுகள் அப்படியே வரும் என்பதுல டவுட் இல்லை.
    இந்த சந்தா இதழ்கள் மட்டும் 10 புக்ஸ் கமியாகும்.
    So, 2024 ம் ஆண்டின் இலக்கை, 2025 ம் ஆண்டு எட்டி பிடிப்பது சாத்தியமில்லை.
    இனி 26 ல் பார்ப்போம்.

    ReplyDelete
  15. புத்தகங்கள் வந்தாச்சு, இனி தான் பிரிக்கனும். Going

    ReplyDelete
  16. 2025 ல் செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. சென்னை புத்தக கண்காட்சி - 2025 நமது வெளியீடுகளின் விற்பனைகள் முந்தைய வருடங்களை மிஞ்ச வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. இம்முறை முதல் பார்வையிலேயே தெரிகிறது தளபதியை தல கிட்ட கூட நெருங்க முடியாது என்று. அப்படி ஒரு தரம். ஒவ்வொரு பக்கமும் பளபளக்கிறது. Muthu 500 ஆபார making. Thank you sir. கண்டிப்பாக ஒரு கண்திருஷ்டி பொம்மை வேண்டும்.

    ஆனால் அதை எங்கேயும் தேடி அலைய வேண்டாம் என்று உள்ளேயே இன்னொரு புத்தகத்தின் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு இருக்கிறது அதனுடைய making. நிறைய இடங்களில் ஓடுகிற தண்ணிரில் முகத்தை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அந்த கானக நாயகரின் முகம்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வெவ்வேறு ஓவியர்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நெடும் கதைத் தொடர் சார் - so சித்திரங்களின் தரம் ஒரே மாதிரி இருப்பது இயலாக் காரியம். And நமக்குத் தரப்பட்டுள்ள கத்தையில் அந்தக் கதை இருக்கும் போது நாம் செய்யக்கூடியது ஏதுமில்லை..

      Delete
    2. // நிறைய இடங்களில் ஓடுகிற தண்ணிரில் முகத்தை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது //

      +1

      Delete
  19. புத்தாண்டின் முதல் செட் இதழ்கள் வாழ்த்துக்களுடன் கிடைக்கப் பெற்றேன் சார்...😍😍😍😍😍

    மூன்று இதழ்களும் அட்டகாச தரம்....
    முதல்ல கையில் எடுத்தது,முத்து காமிக்ஸின் 500வது இதழ்.

    முத்துவின் 2வது ஒப்பற்ற நாயகனுக்கு பொருத்தமான ட்ரிபியூட்...மாஸான அட்டைப்படம்...

    சிவப்பு பின்னணியில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் எங்க ஊர் காரர் ஜெகத்தின் கை எழுத்தில்,

    """*ஒரு கொடூரனும் கடற்கண்ணியும்*"""

    தங்க தலைவனுக்கு பொருத்தமான பெயர்..

    """500வது லேண்ட்மார்க் இதழுக்கு சிறப்பு செய்கிறது...""

    *முத்து காமிக்ஸ் நிறுவனர் சீனியர் எடிட்டர் செளந்திரபாண்டியன் ஐயா அவர்களுக்கும், எடிட்டர் விஜயன் சாருக்கும் வாழ்த்துகள்*💐💐💐💐💐

    டைகர் 500அருமையான தயாரிப்பு..
    கெட்டி அட்டை சரியான திக்னஸ்ல கலக்குது...

    *ஓரு லேண்ட் மார்க் இதழ்னா எப்படி இருக்கணும்னு காட்டுது*🤩🤩🤩🤩

    இப்படி வந்திருக்கணுமே விஜயன் சாரின் ஆயிரமாவது இதழும் என்ற ஆதங்கத்தை தவிர்க்க முடியலங்க சார்...🤣🤣🤣🤣

    டெக்ஸ் கி.நா. அசத்துது...உள்பக்க கலரிங் செம...வேதாளன் இதழும் இம்முறை கலரிங் சற்றே மேம்படுத்தப்பட்டுள்ளது....குட் ஜாப் சார்.

    போட்டியில் டைகரே வெல்வார் இம்முறை...

    ReplyDelete
    Replies
    1. அந்த பாயாச பார்ட்டியை காணோமே இன்னமும் 🤔?

      Delete
    2. ///போட்டியில் டைகரே வெல்வார் இம்முறை...///

      டெக்ஸ் கதையின் genre அப்படி அமைந்து விட்டது சார்🙂,
      வழக்கம் போல் சரவெடியாக இல்லாமல் கி. நா வாக வந்து விட்டது...
      So not a fair contest sir...
      நெக்ஸ்ட் year ஜனவரியில், பட்டாசாக Tex கதை வரும் போது, contest செம்ம டஃப் ஆக இருக்கும்👍 (அப்போ யங் தளபதி கதை எப்படி இருக்குமோ 🤗)

      Delete
  20. சூப்பர் சார்...நம்மாளுகிட்ட கபீஷ் எப்ப வரும்னு அந்த முதல் கபீசின் பின்புற விளம்பரத்தை காட்டி கேட்டுக் கொண்டிருக்க...இதுக்குள்ள இருக்குது பிரின்னு வேலைல மூழ்க...கமீஸ் இல்லையேப்பான்ன குரல் உலுப்ப...பிளாக்கில் துழாவ திங்கள் என்றதும் அடுத்த வார்ப்பு சொல்ல...ப்ளாக்க பாக்கல நேர்ல பாப்போம்னு கட்டுப்படுத்திய தன் விளைவு...


    செம சார்

    ReplyDelete
  21. டைகர் என்னத்த சொல்ல இப்படியோரட்டை வாய்க்குமான்னு முத்து 500லோகோவில் லயிக்க மறுக்கா இதான் டாப்ன மனத அதட்டியபடி பாய புரட்டிய முதல் பக்க காட்சிகள் வெகு அழகாய் ஈர்க்க...அந்த மூன்று வழி சாலையும்...அந்த குடியிருப்புகளும் அதகளபடுத்த வண்ணத்தில் வந்தா கருப்பு வெள்ளை அழகுன்ன பட்டிமன்றத்த கடந்தா...சும்மா தகதகுக்குது வண்ணமும் சித்திரமும்...அச்சான அச்சுத் தரமும்..பாராட்ட வார்த்தைகளே இல்லை...டாப் க்ளாஸ் சார்

    ReplyDelete
    Replies
    1. உண்மைய சொன்னா அட்டையோட பளபளப்பு வேற லெவல் தாண்ட முடியல சார்...என்னா பளபளப்பு

      Delete
  22. இளமை எனும் பூங்காற்று நான் மட்டும் சும்மாவான்னு மிரட்ட நானா நீயான்னு அட்டைபட வாயிலாகவும் போட்டி தலயா தளபதியான்னு தோடர...தரமான அச்சு...


    வேதாளம் கைகாட்டி அட்டை வழக்கமாய் பார்ப்பது போல தென்பட...வண்ணங்களோ எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட...புத்தாண்டு அட்டையோட கபீசுக்கு காத்திருக்கேன்

    ReplyDelete
  23. வந்து விட்டது புத்தகங்கள். அருமை. மாதா மாதம் புத்தகங்கள் வந்தாலும் ஜனவரி மாத புத்தகங்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான் சார். இந்த மாதம் 3 கலர் புத்தகங்களும் மிக அருமை.

    ReplyDelete
  24. வீட்டுக்கு நான் வந்துட்டேன்.. 👍😘💐

    But.. Books தான் வரல.. 🧐😨👎

    ஓகே.. Wait for one more day.. 😄😘

    ReplyDelete
    Replies
    1. நான் ஒருவாரமாக வீட்டில் தான் இருக்கேன் இன்னமும் புத்தகம் வரவில்லை 😌

      Delete
  25. *இளமை எனும் பூங்காற்று*

    டெக்ஸ் சாகஸத்திற்கு இப்படி ஓர் அழகான மென்மையான தலைப்பா என்ற யோசிக்க வைத்த இந்த இதழ் அட்டைப்படத்திலும்...உட்பக்க சித்திரங்களிலும் அதே அழகை பறைசாற்றியது..

    அழகான அதே சமயம் மிக சுறுசுறுப்பான ,விறுவிறுப்பான கிராபிக் நாவல்...திரைப்படங்களில் கெளரவ வேடத்தில் பிரபல நாயகர்கள் கெஸ்ட் ரோலில் வந்து கலக்குவது போல இந்த இதழில் நமது டெக்ஸ் அன்ட் கார்ஸன் குழு.

    கதை ஆரம்பம் முதல் முடிவு வரை பரபரப்பாக சென்ற இதழ் பல இடங்களில் வசனங்கள் புன்னகையை சிந்த வைத்தன..இந்த இதழை பொறுத்தவரை இதன் நாயகர் கதையின் நாயகியே... கதையை வாசிக்கும் பொழுதும்..இறுதியில் நாயகி நிஜம் என அறியும்பொழுதும் நாயகியை ஓர் "வில்லியாக" நமக்கும் உணரவே முடியவில்லை டெக்ஸ்வில்லரை போலவே..

    மீண்டும் வாசிக்க தூண்டும் ஓர் அழகான தென்றலே

    "இளமை எனும் பூங்காற்று"

    ReplyDelete
    Replies
    1. Good review! புத்தகங்கள் இன்னும் வரவில்லை thala :-)

      Delete
    2. தலீவரே உங்களுக்கு பிடிச்சா.. ஊருக்கே புடிச்ச மாதிரி!!

      Delete
  26. *மாயாத்மா ஸ்பெஷல்*

    முதலில் நமது வி காமிக்ஸ் இதழின் இரண்டாம் ஆண்டு மலருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும்..பாராட்டுகளும்..அட்டைப்படம் முன் பின் இரண்டும் ஓகே ரகம்..அதே சமயம் வேதாளர் வண்ணத்தில் இரண்டு சாகஸங்கள் எனும் பொழுது அது அதிகமாக எல்லாம் கொண்டாட தூண்ட வில்லை தான்...காரணம் ஒன்று : வேதாளரை மொத்த கதம்பாக ஏற்கனவே சந்தித்து விட்ட காரணமாக ..

    இரண்டு : இதுவரை வந்த வேதாளர் வண்ணம் ஏனோ செயற்கையாக தென்பட்ட விதம்..

    எனவே அதிக ஆர்ப்பாட்டமோ ,எதிர்பார்ப்போ இல்லாமலே இந்த இதழை கைகளில் ஏந்தினேன்..ஆனால் முதல் சர்ப்ரைஸ் இது ஆரம்ப முத்துவின் மறுபதிப்பு கதையான கீழ்த்திசை சூனியம் என்பது..இந்த இதழை இதற்கு முன் கண்டதோ ,வாசித்ததோ இல்லை என்பதால் ஓர் அருமையான க்ளாசிக் இதழை கண்டதன் மகிழ்ச்சி..

    சர்ப்ரைஸ்...இரண்டு..

    வண்ணங்கள்..

    இப்பொழுது தான் ஒரிஜினாலாய் ஒரு வண்ண வேதாளரை கண்டதான மகிழ்ச்சி...அவ்வளவு அட்டகாசம்..வண்ணம் படைத்தவருக்கு மனமார்ந்த பாராட்டுகளும் ,வாழ்த்துகளும்..

    கதையை பற்றி சொல்ல தேவையில்லை தான் ...அன்றைய காலகட்ட கதை..கதையும் 200 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ,குற்றங்கள் வேறு ஆனாலும் ஏழாம் வேதாளர் அழித்த அதே கூட்டத்தை இந்த முறை நிகழ்கால வேதாளர் முறியடிப்பது தான் என்றாலும் கதை போரடிக்காமலே சென்றது ..

    இரண்டாம் வேதாளர் சாகஸம் மீண்டும் பழைய இதழ்களில் போல் வண்ணம் என்பதோடு சித்திரங்களும் சுமார் ரகமாக அமைந்து போனது சிறு குறைப்பாடு .

    ஆனாலும் வேதாளர் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான இதழை வி காமிக்ஸ் இரண்டாம் ஆண்டு மலர் தந்து உள்ளது என்பது உண்மை

    ReplyDelete
  27. DTDC கொரியர் டிரெக்கிங் நம்பர் மூலம் விசாரித்தால் புத்தகம் அத்திபள்ளி வந்துள்ளது எனவே திங்கள் கிழமை தான் புத்தகங்கள் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல் சகோ கிட்ட கதை கேளுங்க

      Delete
    2. வேண்டாம் அந்த விளையாட்டு மட்டும் 🤣

      Delete
  28. 😰😰😰

    எனக்கு இன்னைக்கும் ஜனவரி புக்ஸ் வரல..🤔🤔🤔

    ஒரு வேளை ..
    ஜனவரி in ஜனவரி தானோ.. 🫣🫣🫣

    ReplyDelete
  29. புத்தகம் வந்த உடன் படிக்கும் வரிசை 1. டைகர் 2. டெக்ஸ் 3. வேதாளர்

    ReplyDelete
    Replies
    1. வேதாளர் படிக்கும் ஆர்வம் கடந்த வருடம் வந்த இரண்டு கதைகளுக்கு பிறகு குறைந்து விட்டது; மும்மூர்த்தி கதைகள் மேல் உள்ள ஆர்வம் ஓரளவு அப்படியே உள்ளது.

      Delete
  30. சந்தா கட்டினாலும் + நமது அலுவலகத்தில் சொன்ன நாளில் புத்தகங்களை அனுப்பினாலும் கொரியர்காரர்கள் மனம் வைத்தால் தான் புத்தகங்கள் நமக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் 😉

    ReplyDelete
  31. உண்மைதான் பரணி சார். முந்தா நாளே நமது ஆபீசில் இருந்து புத்தகங்களை அனுப்பியும், எனது பார்சல் இன்று மதியம் வரை சிவகாசி DTDC ஆபீசிலேயே உள்ளது. நமது அலுவலகத்தில் இருந்து புக்கிங் நம்பர் வாங்கி ட்ராக்கிங் செய்து பார்த்தால் , in transit SIVAKASI branch என்று வருகிறது. நம் ஆபீசில் இருந்து , கொரியர் ஆபிசுக்கு போன் செய்து கேட்டதில் திங்கட்கிழமை வரும் என்று சொல்வதாக நமது அலுவலக பெண்மணி கூறினார்கள். இதற்கு என்ன செய்வது. காத்திருக்க வேண்டியது ஒன்றே நாம் செய்யக்கூடியது.

    ReplyDelete
  32. 😘😘😄💐💐💐🥰

    ஆஹா.. புக் பார்சல் கிடைச்சிடுச்சு.... 😘😘🥰🥰

    ReplyDelete
  33. எனக்கு காங்கேயத்துக்கு நேற்று புத்தகம் வந்தும் எப்போதும் வருபவர் விடுமுறையில் சென்றதால் அதற்கு மாற்றலாக வந்த நபர் எனக்கு கொடுக்காமல் சென்று இருக்கிறார். இன்று அதே நபர் வந்ததால் புத்தகம் என் கையில் கிடைத்து விட்டது. அவர்தான் மேற்கூறிய தகவலையும் எனக்கு கூறினார். இதற்கு என்ன செய்வது. எப்படியோ புத்தகப் புதையலை பிரித்து இளம் தளபதியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  34. இன்றைக்கு அதானே குமார் 😊

    ReplyDelete
  35. ஆமாம்... ஆமாம்.. 😘😘😄😄

    அதேதான்... 👍🙏😄

    ReplyDelete
  36. சென்னை புத்தக திருவிழா விற்பனை எப்படி சார்? எந்த வி ஐ பி எல்லாம் நம்ப ஸ்டாலுக்கு வந்தாங்க ? Update please

    ReplyDelete
  37. நிஜ கேரக்டருடனான கதை என்பதால் டெக்ஸின் ஹீரோயிசத்தை குறைத்து இயல்பாகவே கதையை கொண்டு செல்கின்றனர்.இருந்தாலும் கதை ரசிக்கும்படி உள்ளது.

    ReplyDelete
  38. 🎼🎵🎶 இளமை எனும் பூங்காற்று ****🎶🎵🎼

    பாடியதுவோர் பாட்டு..
    ஒரு பொழுது ஓர் ஆசை..
    சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்..🎶🎵

    கதையின் தலைப்பை வைத்தும்.. கடந்த வாரத்தில் எடிட்டர் வெளியிட்டிருந்த டீசரை வைத்தும் இதுவொரு மென்மையான கௌபாய் காதல் கதை என்று நம்பி இருந்தேன்..

    ஆனால் வித்தியாசமான வில்லங்கமான விறுவிறுப்பான வேடிக்கையான - வேற லெவல் கதை என்பது சில பக்கங்கள் படித்த பிறகுதான் புரிந்தது!!

    மையக் கதாபாத்திரமாக வரும் 'பெர்ல் ஹார்ட்' என்ற பெண் - ஒரு உண்மையான வரலாற்று கேரக்ட்டர் என்று கடைசி பக்கத்தில் தெரிந்து கொண்டபோது ஓய் உய் என்று விசிலடிக்கத் தோன்றியது!!

    டெக்ஸும், கார்சனும் ஸ்டார் வேல்யூவுக்காக கதையில் சில பக்கங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் கூட சுவாரசியதுக்கு பஞ்சமே இருந்திருக்காது.. அந்த அளவுக்கு பெர்ல் தனியாகவே அடித்து விளையாடியிருக்கிறாள்!! ( அட்டைப்படத்தில் அந்தப் பெண்ணை முன்னிறுத்தியும், டெக்ஸ் கார்சனை பின்புலத்தில் வைத்ததும் ஏனென்று இப்போது புரிகிறது!)

    சித்திரங்கள், வண்ணக் கலவைகள், வசனங்கள் எல்லாமே சிறப்பு!

    இந்த கி. நா எல்லோருக்கும் பிடிக்கும்!😍😍😍

    ReplyDelete
    Replies
    1. Nice E.V sir...👏👌
      நீங்கள் சொல்வதை பார்க்கும் போது, டெக்ஸ் guest appearance என தெரிகிறது...
      So, Real டெக்ஸ் அதிரடி அடுத்த மாதம் தான் போல...👍

      Delete
  39. ஒரு வருடத்தில் 82....❤️🙏👍..இந்த கடும் உழைப்புக்கு.. அளவற்ற ஆர்வமும்,நம்பிக்கையும் வேண்டும்... 👍.... வாழ்த்துக்கள் sir... நன்றி...❤️...

    ReplyDelete
  40. நேற்று எதிர்பார்க்கப்பட்ட கூரியர் இன்று தான் கிடைத்தது. முதல் பார்வையில் டைகர் இதழ் மிரட்டல் ரகம். தயாரிப்புத் தரம் அசத்தல். எனக்கென்னவோ இது மெஷின் பைண்டிங் போன்ற நேர்த்தி, outsourcing - ல கொடுத்ததுப் போன்ற அச்சுத் தரம், Blanc Dumont -ன் அட்டகாசமான சித்திரத்திற்கு அவரின் மறைந்த துணைவியார் Claudine dumont -ன் கண்ணில் ஒற்றிக் கொள்வதுப் போன்ற வர்ண சேர்கை என முத்துவின் 500 என்ற மேஜிக் நம்பர்க்கு நியாயம் செய்கிறது. இதழ் செம்ம அழகு. இந்த 2 பாகத்தோடு அடுத்த 2 பாகத்தை சேர்த்தே போட்டிருக்கலாம்.

    மாயாத்மாவின் முதல் கதை சித்திரம், கலரின் சூப்பராக உள்ளது. ஆனால் அதற்கு எதிர்மறையாக 2வது கதை சித்திரமும், அதன் சித்திர Frame Setting ம் கலரில் வேறொரு டெம்ப்ளெட்டில் இருக்குது. ஏன் இந்த வித்தியாசம் ஒன்றும் புரியலை.

    ReplyDelete



  41. *முத்துகாமிக்ஸ்...500*

    "ஒரு கொடூரனும் கடற்கன்னியும்"

    முத்து 500 இதழுக்கு சரியான சாய்ஸ் இந்த இதழ் என்பதோடு அட்டகாசமான தரத்தில் ..அருமையான அட்டைப்படத்தில்..தரமான கெட்டி அட்டை பைண்டிங்கில் என்பதோடு இல்லாமல் முதலில் உட்பக்கங்களை புரட்டும் பொழுது பார்த்த வண்ணசித்திர தரமும்...அச்சு தரமும் மிக மிக உயர்தரம் என்பது உண்மையே..


    ஆனால் தயாரிப்பில் அசத்திய இந்த இதழின் நாயகர் "இளம் டைகர் " எனும் பொழுது ( கவனிக்க : " இளம் " டைகர்..) மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு சிறிது ஏமாற்றமே ..காரணம் இது வரை வந்த இளம் டைகர் சாகஸங்கள் எதுவுமே என்னைக் கவரவில்லை ..காரணம் ஒன்று அந்த ( எனக்கு )புரிபடாத வடக்கு ,தெற்கு போர் சாகஸங்களே..அடுத்து எதிலும் முடிவுரை கிடையாத தோற்றம் எனும் பொழுது ஒரு முழுமையான சாகஸம் படித்த திருப்தி இளம் டைகர் கதையில் எனக்கு இதுவரை கிடைத்தது கிடையாது..அது போலவே இந்த இதழிலும் வாசிக்கும் முன்னரே கடைசி பக்கத்தை பார்த்து இறுதி பேனலில் "போர் தொடரும் " என்பதை கண்டதும் ஒட்டிக்கொண்டு இருந்த சிறிய ஆர்வமும் சரிந்து தான் போனது என்பதும் உண்மையே...

    ஆனால் எந்த இதழாக இருந்தாலும் வாங்கினால் வாசித்து முடிப்பதே எனது வழக்கம் என்பதால் எந்த ஆர்வமும் இல்லாமல் தான் இதழை புரட்டி வாசிக்க தொடங்கினேன்..

    வழக்கம் போல் வடக்கு ,தெற்கின் போர்க்களமே கதைக்களம் என்றாலும் முன்னர்போல் இல்லாமல் செம விறுவிறுப்பாய் என்று சொல்வதை விட எந்த குழப்பமும் இல்லாமல் மிக பரபரப்பாய் பட்டாஸாய் கதை நகர்ந்து சென்றதுடன் " போர் தொடரும் " என முடிவுரை அமைந்து இருந்தாலும் கதையின் சாரம்ஸம் " கேட்லிங் கன்னுக்கான தேடுதல் களம் என்பதால் இரு அத்தியாயங்களையும் வாசித்து முடித்தவுடன் பழைய டைகர் கதையை..அவரின் அதே பழைய சாதுர்ய டைகராய் பட்டைய கிளப்ப வைத்து விட்டது. வாசிக்க வாசிக்க வேறுபக்கம் கவனம் சிதறவில்லை..வாசித்து முடித்தவுடன் டைகரின் கதையை முழுவதுமாய் வாசித்து முடித்த உணர்வு இது போதுமே ..இதுவே இளம் டைகருக்கான வெற்றியாய் பார்க்கிறேன்..

    முத்து 500 தரத்தில் மட்டுமல்ல நாயக தேர்விலும்..கதை தேர்விலும் நான் நினைத்ததிற்கு மாற்றாய் கில்லியாய் சொல்லி அடித்து விட்டது...

    ஒரு கொடூரனும் கடற்கன்னியும் போல் தான் இனி வரும் இளம் டைகர் கதை எனில் டெக்ஸ் வில்லர் இதழை போல ஆவலுடன் இனி இளம் டைகர் சாகஸத்திற்கும் ஐயம் வெயிட்டிங்.

    ReplyDelete
  42. ஆசிரியர் சார்@

    முதல் சனி ஞாயிறு சென்னையில் வரவேற்பு எப்படிங் சார்?

    "மும்மூர்த்திகள் ஸ்பெசல்"- விற்பனை & வரவேற்பு நிலவரம் எப்படியுள்ளதுங் சார்?

    ReplyDelete
    Replies
    1. இந்த தகவல்கள் எல்லாம் நாளை இரவு வரவுள்ள புத்தாண்டு பதிவில் இருக்கும் என நினைக்கிறேன்.

      Delete
  43. ஜனவரி புத்தகங்கள் வந்தவர்கள் எல்லாம் படிச்சுட்டு விமர்சனம் போடுங்கப்பா. புத்தகங்கள் வராதவர்கள் எல்லாம் மோட்டுவளையை மொறச்சு பார்த்துகிட்டு இருங்க 😊

    ReplyDelete
  44. பல கதைகள் அதிரடி கிளப்பி நம்மை பரபரப்பாய் படிக்க வைக்கும்...சில கதைகள் தெளிந்த நீரோடை போல நமது மனசாட்சியை கூப்பிட்டு நகர்த்தும்...உலுக்கியெடுக்கும்...ஒரு எளிதில் காதல் வயப்படும் பெண் தன் காதலனோடு...நம்பிக்கைக்குரியவனோடு வாழ பல பாவங்களை செய்து வாழ்கிறாள்......முதலும் கடைசியுமான பெண் கௌபாயை வியந்து பாவமென மன்னித்துக்...அவளை புரிந்தும் பரிந்தும் பேசும் டெக்ஸோடு படிக்கும் நம்மையும் துணை சேர்த்து நகருமவளை ...அக்காதலன் பயத்தாலோ...நடத்தையாலோ கை விட அவளின் வாழ்க்கை ....????

    வாழனுமென உறுதி இருந்து விட்டால்...அதற்கான தகுதி வேறு வழியேது என சில வழிகள்...வலிகள்னு முடியுது கதை...சுயசரிதையை விறுவிறுப்பாய் கொண்டு சென்று வெற்றி பெறுது...அந்த ஓவியங்களும் ...வண்ணமும் கூடுதல் ப்ளஸ்

    ReplyDelete
  45. சார் வந்த மூன்று புத்தகங்களையும் படித்தாயிற்று. 2025 அமோகமாக ஆரம்பித்து உள்ளது.

    ஷோ ஸ்டீலர் கண்டிப்பாக கேப்டன் டைகர் தான். முத்து 500 ஆவது இதழ் அருமையான கதை தேர்வு. ஆரம்பம் முதலே புயல் வேகத்தில் கதை செல்கிறது.
    எனது மதிப்பெண் 10/10

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் கதை நிஜ மாந்தரை பற்றியது என்பதால் பெரியதாக ஹீரோயிசம் எதும் செய்ய வாய்ப்பு இல்லை. நன்றாக இருந்தது. கலரிங் மற்றும் ஓவியங்கள் அருமை.

      எனது மதிப்பெண் 9/10

      Delete
    2. கடைசியாக வேதாளர் முதல் கதை Sy Barry உடைய ஓவியங்கள் என்பதால் நன்றாக இருந்தது. இரண்டாவது கதையை பற்றி அப்படி சொல்ல முடியவில்லை.

      மொத்தத்தில் 8/10

      Delete
    3. 3 கதைகளின் விமர்சனங்களும் அருமை👌

      Delete
    4. நன்றி விக்ரம்

      Delete
    5. கலக்குங்க குமார் 👏🏻

      Delete
    6. எல்லா புத்தகத்தையும் ஒரே நாளில் படித்து விட்டு அடுத்த 30 நாட்கள எப்படி குமார் ஓட்ட போறீங்க 🤔

      Delete
  46. நமது ஆபீஸ் இருந்து 26ம் தேதி புக் செய்து அனுப்பிய கொரியர் 27ம் தேதிதான் சிவகாசி கொரியர் ஆஃபிஸில் இருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்து உள்ளது! இன்று புத்தகங்கள் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது! கொரியர்காரங்க நல்லா விளையாடுறாங்க.

    ReplyDelete
    Replies
    1. உனக்கு வாய்ப்பு காத்திருக்குல...காத்திருப்பதும் சுகமே வாங்கியிருந்தா படிச்சு முடிச்சிருப்ப...நீ ஆசப்படற மாதிரி ...நல்லா காஞ்சும் வரும்ல

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. புத்தகங்கள் வந்து விட்டது, நன்றாக காய்ந்து இருந்தது அதன் பக்கங்கள் மக்கா ☺️

      Delete
  47. #இளமை_எனும்_பூங்காற்று.....
    வரலாற்றின் உண்மைச் சம்பவத்தை கொண்ட எந்த கதைகளிலும் ஒரு போதை இருக்கவே செய்கிறது, "இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்" என்ற ஒவ்வொரு மனிதர்களின் குணமே இது போன்ற கதைகளின் வெற்றி.
    எதிர்நீச்சல் போட முடியாமல்,வாழ்க்கைச் சுழல் போன போக்கில் இழுத்துச் செல்லப்பட்ட ஒரு அப்பாவிப் பருவப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்த சில கறுப்பு பக்கங்களை டாக்குமெண்டரி மூவியாக பார்த்த ஃபீலிங் இந்த கதையை படிச்சு முடிச்சதும்.

    *யாருப்பா இந்த பியர்ல் ஹார்ட்?....*
    "எனக்காக காத்திரு இளவரசியே! திரும்பி வந்ததும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்" என கூறி சென்று, உயிரை விட்ட குற்றவாளியை காதலனாக பாவித்து ஏங்கும் அப்பாவி இளம்பெண்ணாக,
    தனக்கு துப்பாக்கி சுடும் திறமை இருப்பதாக நம்பி, கிராமத்தில் இருந்து வாழ வழி தேடி,
    சிட்டிக்கு சென்று, வேலை கிடைக்காத நிலையில், சந்தர்ப்பத்துக்காக தடம் மாறிய விலைமாதுவாக,
    "ஜெஸ்ஸி ஜேம்ஸ், ப்ளாக் ப்ராட் போன்ற பிரபலமான கொள்ளையர்களைப்போல தானும் வரவேண்டுமென" நப்பாசையில் , தன்னை பிடித்தவனுடன் கூட்டு சேர்ந்து, ஏமாந்த கொள்ளைக்காரியாக(!?),
    கதை நெடுகிலும் ஆதிக்கத்தை கொண்டிருப்பதுமில்லாமல்.....

    "விலைமாதுவாக மாறிய போது
    எப்படியெப்படியோ சொகுசாக வாழ சந்தர்ப்பம் கிடைத்தும் அதை விரும்பாமல்,
    தான் நம்பிய கொள்ளையன் தன்னை ஏமாற்றி சென்றபோதும், அவனை பழிவாங்காமல்,
    ஒரு கயவனுக்கு அடிமையாகி பிக்பாக்கெட் அடிக்கும் பெண்ணாக,
    கதையை படித்து முடிந்தும் நம்மையும் சற்று நேரம் ஆக்கிரமித்துக் கொள்கிறாள்.

    டெக்ஸ் பேனரில் வந்திருக்கும் இந்த கதையின் ஹீரோ/ஹீரோயின் என சகலமும் ஒரு லேடி என்பது இந்த கதைக்கு கூடுதல் பலம்.
    மேலும்,
    தான் நினைத்த காரியம் நடக்காத போது, ஏதேதோ "மனம் போன வழியில் போன"தை விட,
    ஒரு கொள்ளைக்காரியை இவ்வளவு சாஃப்ட்டாக,
    எந்த வன்முறைத்தனமும் இல்லாமல்,
    அந்த அப்பாவித் தன்மை கெடாமல்,
    அந்த கேரக்டரை சற்றும் சிதைக்காமல், கண்ணியமான பார்வையில்,
    கதை நெடுக சீராக கொண்டு போயிருப்பதில் கதாசிரியர் வெகு கவனமான இருந்துள்ளார் என்பது கதையின் + + + + பாய்ண்ட்.
    கடைசியில் இது நிஜமாகவே நடந்த ஒரு உண்மைச் சம்பவம் எனும் போது,
    இரண்டாம் முறை படிக்கறப்ப இன்னும் கதையின் தன்மையை உணர்ந்து படிக்க முடிகிறது.

    இந்த கதைக்கான பாராட்டுதலின் பாதியை தட்டிச்செல்கிறது இதன் அட்டகாசமான ஓவியங்களும், அதற்கு பூசப்பட்ட மேட்சிங்கான கலர்களும்.....
    கொலை, கொடூரங்கள் எதுமில்லாது, கொள்ளைகளை நடத்தியது ஒரு லேடி என்பது அந்நாளில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கக்கூடும் என்பதை படிக்கறப்ப,
    கொள்ளைகள் நடந்த அரிஸோனா கணவாயின் பகல் மற்றும் இரவு
    இரவு நேர காட்சிகளும், யுமா பிராந்திய சிறைச்சாலை பின்னணிகளும்,
    சாரட் வண்டி வரும் காட்சிகளும் உள்ள ஓவியங்களை நாள் முழுக்க பாத்துக் கொண்டே கற்பனை சிறகுகளை பறக்க விடலாம்.

    *டெக்ஸ்*
    சித்திரங்கள் எப்படி கதைக்கு சரியான பொருத்தமோ, அதே போல
    கதையின் முக்கியமான திருப்பங்களுக்கு மட்டும் டெக்ஸ் தலை காட்டியது கதைக்கு சரியான பொருத்தம்.
    இதற்கு வேறு யாரையாவது போட்டிருந்தாலும்,
    கதையின் அழுத்தத்தை உணர்ந்து,
    சற்றே யங் டெக்ஸ் நினைவுகளுடன்
    டெக்ஸ்ன் வருகையை சாமர்த்தியமாக, எவ்வித பந்தாவுமில்லாது கதையில் நுழைத்து, கதைக்கு மெருகேற்றியுள்ளார் கதாசிரியர்.

    "இந்த சம்பவங்களுக்கு பின் அந்த பெண்மணியின் வாழ்க்கை எவ்விதம் போனது?" என, கதையை படித்து முடித்ததும், பியர்ல் ஹார்ட் பற்றிய மேலும் தகவல்களை வாசகர்கள் தேட தோன்றினால் அது இந்த கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றி.
    இந்த தகவல்கள் - கூகுளிலும், யூடியூப்பிலும் உள்ளது.
    அதில் இந்த பெண்மணியின் வாழ்வியல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்த்து ரசிக்கலாம்.

    2025 - புத்தாண்டின் முதல் மாதத்தின் நறுமணம் வீசும் தென்றலாக இந்த பூங்காற்றை வெளியிட்டு,
    முதல் இதழிலேயே சிக்ஸர் அடித்த ஆசிரியருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் 💐❤️.

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹.

    ReplyDelete
    Replies
    1. அருமையாக எழுதி இருக்கீங்க சகோ

      Delete
    2. சூப்பர் சார் பாராட்டுகள்

      Delete
    3. ரசித்து ரசித்து படித்து.. அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் ஜி.. 💐👌👌

      Delete
  48. *அடிமையாய் தோர்கல்*

    சுதந்திரம் நாங்க உனக்கு குடுக்கிறோம், சந்தோசமா என ராஜா கேட்க தாங்கள் கூறும் அர்த்தமற்றது என்கிறான் தோர்கல். உண்மைதானே

    அடிமையாம் அடிமை, மயங்கி கிடந்தவங்களை கடத்தி கொண்டு வந்து அடிமைன்னு சொல்கின்றவங்க நாகரீகமானவங்க, சுய மரியாதையுடன் வாழனும்னு நினைக்கிற தோர்கல் காட்டுமிராண்டி, ஒரு வார்த்தை கேட்டாங்களா
    யாருங்க நீங்க எல்லாம், எப்படி பாலைவனத்தில் வந்தீங்க, எதாவது உதவி வேணுமா, அட அதுவும் வேண்டாம், ஊழியம் செய், சம்பளம் தரோம், இல்லை இல்லை தூக்கிட்டு வந்த ஆளுங்களுக்கு உடம்பு திடசாலியாக உள்ளது, கேட்கிறது யாருமில்லை, நீ என் அடிமை நம்மை போன்ற ஒரு மனிதன் என்று கூட மதிப்பில்லை.
    தோர்கல் புத்திசாலிதனமாக செயல்பட்டு ஒரு வேலையை வாங்கி கொள்கிறான், அவன் குடும்ப அவனுடன் இருக்க இவிங்க அனுமதி வேணுமாம், என்ன கொடுமையாட இது.

    பாவம் இலேனியா மற்றும் டியாகோ😭😭😭😭😭
    தன் குடும்பத்திற்காக பொறுமை காக்கிறான் தோர்கல், அதிமேதாவிகளாக வாழ்ந்து வந்த நட்சத்திர மண்டலத்தின் மக்களான இலேனியா மற்றும் டியாகோவிற்கு இந்த புதிய உலகம் கடினமே, பொறுமை காக்க முடியவில்லை, ஆனாலும் அவர்களை அமைதி காக்க சொல்வதும் தவறே, அண்டம் தாண்டி வந்மு பூமியல் வாழும் சக மனிதர்களிடம் அடிமையாய் கிடப்பதை எப்படி பொறுத்து கொள்ள முடியும்
    இருவரின் இறப்பும் துயரத்தை தருகிறது
    தோர்கல் போன்று கடவுளரின் விதியில் இல்லாததால் இவ்வளவு கஷ்டமா என்று நினைக்க தோன்றினாலும், அப்போ அங்கே இருக்கும் மற்ற அடிமைகள் என்ற கேள்வியும் தோன்றுகிறது.

    ஹெராக்குளிஸ்க்கு இறந்தாலும் பளிங்கு கற்களால் கல்லறை செய்யப்படும் என்று சொல்லும்போது கோபம் தான் வருகிறது,
    சக மனிதனை வந்திப்பதில் குரூரம் கண்ட அவனுக்கு அப்படியொரு கல்லறை, இலேனியாவுக்கு யார் இருக்கா, அல்லது ஒரு இடம் தான் உண்டா அவளுக்கு கல்லறை கட்ட?
    தனி மனித சுதந்திரம் இக்கதையில் ஒரு கேள்வி குறியாகிறது

    *கிறிஸ் ஆப் வல்நார்*

    ராஜா ஆரிசியாவிடம், உன்னை நல்லாதானே வைச்சு இருக்கேன், அடிமையாவே நல்லா வாழு என்கிறார், சுயமாக இருக்க விரும்பும்
    மனிதர்கள் மீது அடக்குமுறை செலுத்திவிட்டு தான் பெரியவன் என்று காமிப்பது பெயர் ராஜாவா?
    என் நிலை அதுவல்ல, நாற் ஏன் யோசிக்கனும் என்பது ராஜாவின் நிலைப்பாடு.

    கிறிஸ் பிடிக்காது, ஆனால் அவள் இறக்கும் போது கண்ணீர் வந்துவிட்டது 😭😭😭😭😭
    இப்படியொரு ராட்சசி கண்ணீரை வரவைக்க முடியுமா
    ஆரிஸியாவும், கிறிஸும் கட்டி பிடித்து விடை பெற்று கொள்ளும்போது, நெஞ்சு 😢😢😢😢😢, அங்கே நடந்த மௌன மொழியில் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் அடங்கும்
    போகாதே கிறிஸ் என் மனம் அழுதது ....வயசான உருவம் கொண்டபோது, அப்படியே அவ இருக்கட்டும், ஜோலனை கடத்திய போது பாலைவனத்தில் அவ இறந்த போகட்டும் என நினைத்த இந்த மனதுதான் அழுதது.
    அவள் வாழ்க்கையே ஒரு போராட்டமாக தான் அமைந்திருந்தது
    கிறிஸின் குழந்தை தோர்கலுடையது என புரிபடும் போது ஆரிசியாவின் மனதில் ஏற்படும் ரௌத்திர உணர்ச்சிகளை முகத்தில் அழுத்தமாக சித்திர படுத்தியுள்ளார்கள், எங்கே அந்த குழந்தையை பிராண்டி விடுவாளோ என்ற அளவுக்கு தோன்றிற்று.
    ஜோலனிடம் தோர்கலை போன்று இரக்க குணம் உள்ளது, ஆபத்தான சமயத்தில் கூட கிறிஸுக்கு உதவி செய்கிறான்.


    இயற்கை காட்சிகள் செம, தென்றல் வீசிடும் மலைகள், ஆர்பரித்து அமைதி காக்கும் கடல், பிரமாண்ட மாளிகைகள், கதைக்கு சித்திரங்கல் பக்கபலம்
    ஒவ்வொரு காட்சியிலும் வண்ண சேர்கைகள் அட்டகாசம்.

    வைக்கிங்ஸ் ஆக்ரோஷமான ஆட்கள் தான், சண்டையில் ஜெயித்தால் சக ஆளாக அவர்களிடம் வாழலாம், ஆனால் இங்குள்ள மக்கள் மனதில் அவர்களிடம் எத்தனை அடிமைகள் இருக்கோ அவ்வளவு பெருமை என்று நினைக்கும் நாகரீக மனிதர்கள். இவர்களிடம் லாஜிக்கோ, சண்டையிட்டு ஜெயிப்பதோ ஆகாத காரியம், சாமர்த்தியம் தான் உதவும்.
    ஆஸ்ட்ரிக்ஸ் & ஓபளீக்ஸ் கதையில் ரோம நகரில் அடிமை வியாபாரம் கதை ஞாபகம் வந்தது, இக்கதையில் வரும் மேல் மட்ட மக்கள் உடைகள், ராஜாவின் உடைகளும் நடவடிக்கைகளூம் , அடிமை முறையும், சிலைகள், கட்டிங்கள் விளையாட்டு போட்டிகளும் ரோம அரசாங்கத்தை நினைவூட்டவதாக இருந்தது, தோர்கல் உலகம் ரோம அரசாங்க பகுதியையும் கடந்து செல்வதாக கூறுகின்றனரா?


    இந்த இரு தோர்கல் அத்தியாங்கள் சோகம், மனதை கனமாக்கி விடுகின்றன

    ReplyDelete
  49. கீழ்திசை சூன்யம்- அட்டகாசமான சித்திரம், அருமையான கலரிங், கதைகான வசனங்கள் அழகாக பலூன்களில் மற்றும் கொஞ்சம் சுவாரசியமான கதை என்று அருமையான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது.

    இந்த கதைக்கு கலரிங் உதவி செய்த ரஃபிக் ஒரு special பாராட்டுகள்.

    ReplyDelete
  50. Replies
    1. மயாத்மா ஸ்பெஷல் கதை 2: இன்னும் படிக்கவில்லை, சித்திரங்கள் கோசா கோஷா வென்று , கலரிங் குழந்தை வரைந்து வண்ணம் தீட்டியது போல உள்ளது, வசனங்களுக்குகான பலூன் கண்ணா பின்னா என 30 வருடங்களுக்கு முன்னால் வந்த வேறு சில காமிக்ஸ் புத்தகத்தில் வந்தது போல உள்ளது; இதுவே எனது படிக்கும் ஆர்வத்தை தள்ளி போட்டுவிட்டது. 😌

      Delete
    2. Short and sweet sir👌
      So, வேதாளர் கதை 2 ஐ முதலில் படித்து விட்டு, கதை 1 ஐ ரெண்டாவதாக படிக்க முடிவு செய்து விட்டேன் சார்...
      ஏமாற்றமாக இருக்காது அல்லவா😀

      Delete
    3. ஹாலோவீன் கடத்தல்கள் - குழந்தைகள் கடத்தல் எப்படி வேதாளர் கண்டுபிடித்து குழந்தைகளை காப்பற்றுகிறார் என்று சொன்ன முறையும் கதை நகர்ந்த விதமும் சூப்பர். 10 நிமிடத்தில் கதையை படித்து விட்டேன். கீழ் திசை சூன்யம் போல நான் மேலே சொன்ன விஷயம்களும் இருந்தால் சிறப்பான v காமிக்ஸ் ஆண்டு மலராக அமைந்து இருக்கும். எனது மதிப்பெண் 7/10.

      Delete
    4. விக்ரம் சார் @ கதை என்று பார்த்தால் ரெண்டாவது கதை ஏமாற்றவில்லை, விறுவிறுவென்று கதை நகர்கிறது மிகப்பெரிய பிளஸ்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. ஜூனியர் எடிட்டர் விக்ரம் அவர்களுக்கு எனது வேண்டுகோள் - சித்திரம் + வண்ணம் + கதை சிறப்பாக உள்ள வேதாளர் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து இனி வரும் காலங்களில் வெளியிடுங்கள் சார் 🙏🏻

      Delete
  51. புத்தாண்டு பதிவுக்கு ரெடியா நண்பர்களே 😊

    ReplyDelete
    Replies
    1. நான் ரெண்டு நாளாக ரெடி. இன்று இரவு பதிவா இல்லை நாளை பகல் பதிவா?

      Delete
    2. அதே அதே குமார். நடுசாம பதிவாக இருக்கட்டும் 😊

      Delete
  52. மாயாத்மா ஸ்பெஷல்...
    முதல் கதை,கீழ்த் திசை சூன்யம்... பாராட்டுக்குரியது கதையும் வண்ணமும்.

    இரண்டாவது கதை, ஹாலோவீன் கடத்தல்கள்.. வேதாளரின் கதைகளுக்கு ஏற்ற பெருமையும்,தரமும் இல்லை. வாசகர்களை திருப்தி அடைய செய்யும் நிலையில் இல்லாதது மிகுந்த வருத்தம்.. இந்நிலை தொடர்வதற்கு முற்றும் போடுங்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. // வாசகர்களை திருப்தி அடைய செய்யும் நிலையில் இல்லாதது மிகுந்த வருத்தம்.. இந்நிலை தொடர்வதற்கு முற்றும் போடுங்கள் ஐயா //

      +1

      Delete
    2. அவர்கள் உருவாக்கும் கதைகளை, அவர்களே தரும் போது - "இல்லீங்க, வேணாம்" என்று சொன்னால் - "சரி, ரைட்டு.. டாட்டா.. குடுபை!" என்று வழியனுப்பி விடுவார்கள் சார்!

      டெக்ஸ் வில்லர் தொடரில் இல்லாத ஓவிய வேறுபாடுகளா? மாடஸ்டியில் நாம் பார்த்திரா நெவில் காலின்சின் ஓவியங்களா? And லக்கி லூக் தொடரில் கதைகளிலேயே நாம் பார்த்திரா ஏற்ற -இறக்கங்களா?

      ஒரு நெடும் தொடரில் கதாசிரியரும், ஓவியரும் மாற்றங்களே இன்றி வேணுமெனில் படைப்பளிகளுக்கு சிரஞ்சீவி வரம் கோரத் தான் வேணும்!

      Delete
    3. டெக்ஸ் மற்றும் மாடஸ்டி இந்த அளவு இல்லை சார், இது சுமாரிலும் சுமார் என்பதால் இந்த வேண்டுகோள் சார்.

      Delete
    4. //இது சுமாரிலும் சுமார் என்பதால் இந்த வேண்டுகோள் சார்.//
      +1

      Delete
    5. இன்னும் படிக்கவில்லை என்றாலும் நானுமே கவனித்தேன் - முதல் கதையில் வேற லெவல் கலரிங்கில் அசத்தலாக இருந்தாலும், இரண்டாவது கதையில் வண்ணங்கள் சுமாராகவே இருந்தது! ஒரே புத்தகத்தில் ஒரு சூப்பரும், ஒரு சுமாரும் சேர்ந்து வரும்போது ஒப்பீடுகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது!

      //
      அவர்கள் உருவாக்கும் கதைகளை, அவர்களே தரும் போது - "இல்லீங்க, வேணாம்" என்று சொன்னால் - "சரி, ரைட்டு.. டாட்டா.. குடுபை!" என்று வழியனுப்பி விடுவார்கள் சார்//

      படைப்பாளிகள் அடிக்கடி இதுபோல செய்தால் நாமே சொல்லுவோமே சார் 'குட் பை மாயாத்மா'ன்னு! தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்னு சொன்னா உலக அளவுல ஒரு பயம் வரணும்! 😎😇

      Delete
    6. இதில் கொடுமை என்னவெனில் அந்த இரண்டாவது கதை தான் தொடரில் பின்னாட்களில் வந்த கதை..... முதல் கதை ரொம்பவே பழசு 🤕🤕

      Delete
    7. சார், உங்களுக்கு தெரியும் எங்களின் எதிர்பார்பு, இதற்கு எல்லாம் மேலாக நீங்கள் செட் செய்த தரம் 😊 எனவே சித்திரம்கள் மற்றும் கலரிங் முக்கியம் வேதாளர் கதையில் 🙏🏻

      Delete
    8. வேதாளர் முதல் கதை கலரிங்கில் சூப்பர்ஸ்டார் என்றால், இரண்டாவது கதை கலரிங்கில் சுமார் மூஞ்சி குமாரு.

      Delete
  53. Replies
    1. பணம் அனுப்பி இருந்தால் இன்று கிளம்பி இருக்கும் மக்கா

      Delete
    2. Enjoy பண்ணுலே மக்கா 😊

      Delete
  54. ஜனவரி மாத புத்தகங்கள் நேற்று மாலை வந்து சேர்ந்தது. நேற்று காலை விழுப்புரத்தில் இருப்பதாக டிராக்கிங் காட்டியது. வராது என்று நினைத்தேன். ஆனால் வந்து சேர்ந்துவிட்டது. டைகர் கலரில் மின்னுகிறார்.

    ReplyDelete
  55. 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவர்க்கும் 😊

    ReplyDelete
  56. நண்பர்ஸ், எடிட்டர்ஸ், லயன் குழுமத்தை சார்ந்தவர்ஸ் மற்றும் அனைவரின் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  57. Wishing a very happy new year 2025 to everyone here.

    ReplyDelete
  58. மரியாதைக்குரிய சீனியர் எடிட்டர் ஐயா, அன்பின் ஆசிரியர் சார், ஜூனியர் எடிட்டர், உயிர் நண்பர்கள், அன்பு சொந்தங்கள் & அன்பு சகோதரிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂

    ReplyDelete
  59. புத்தாண்டு பரிசு...சாண்டாவை...சாண்டா கற்பனைய மிஞ்சி....என் மகனின் உற்சாகத்த ரசித்ததில் மெய்மறந்த என்னை கட்டிலில் கேட்பாரற்று கிடந்த இரும்புக் கரத்தால் மின்சாரத்தை மின்னலையாய் பாய்ச்சி ஈர்க்க...அட்டய கூட பாக்கல...என்னடா இவ்வளோ லைட்டா இருக்கே...பக்கத்தை புரட்ட மிரண்டே போனேன்...நம்ம ஆரம்ப கால புத்தகம் போல இல்லையென சிறு குறை இருக்கும் அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது மும்மூர்த்தி ஸ்பெசல்...அச்சின் தரமும்...தாளின் நிறமும் மஞ்சள் பூ...சாரி...சாரி...மஞ்சள் நிற மர்மம்... சாரி சார்....இப்பதா அட்டைய பாத்தேன்...அதுவும் எல்லா அட்டை படத்தையும் தூக்கி சாப்பிட்டாச்....மிச்சத்தை போறுமையா பாத்துட்டு வாரேன்...வேற லெவல் சார்...மெய்யாலுமே மெய்யாகவே மெய்மறப்போம் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. மூனு முத்துகளும் இப்பத்தான் வந்தது என இருந்த மனக்குறையை தீத்துருச்சு கெத்தாய்

      Delete
  60. கதை சொல்லும் காமிக்ஸ் வார்த்தைகளில் லை.....வேற லெவல் சார்...வெற்றி பெற செந்தூரான் அருளட்டும்

    ReplyDelete
  61. பாதாள நகரம் அட்டைப்படமும்...உள்ளே அந்த ஒரு ரூபாய் காமிக்ஸின் நிறமும் தரமும்...அதே காலத்தில்

    ReplyDelete
  62. மூன்றாம் தினம் உள்ள பக்கங்கள் இதுக்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரான்னு கூவ...கபீஸ் மூன்றாம் பாகம் ரொம்ப நாள் கழிச்சித்தான் வருமான்னு பின்னட்டைய காட்டி என் மவனும் என்னைப் போல் வினவ...அந்த முத்து குண்டு மலர முதல்ல படிப்பமா...இல்ல மூன்றாம் தினத்த படிப்பமா என யோசித்த என்னை இழுக்குது மகனாரின் குரல் கதை சொல்லிக் குடுப்பா ...கதை சொல்லி குடுப்பா என கபீச காட்டி

    ReplyDelete