ஞாயிறின் மதிய வணக்கங்கள் நண்பர்களே,
"தோல்வி பயத்தை விட, வெற்றி மீதான நாட்டம் அதிகம் !"
"உன்னையொரு சாம்பியனாய் உலகம் கொண்டாடினால் மகிழ்ச்சி ; அதே சமயம் உன்னை ஒரு அற்புத மனிதனாய் இந்த உலகம் சிலாகித்தால் அதை விடப் பேருவகை வேறு எதுவும் இருக்க இயலாது !!"
"சுற்றியுள்ளோர் என்னைப் பற்றி நெகடிவாக பேசும் போதும் அது என்னைப் பெரிதாய் பாதிப்பதில்லை ; எனது ஆகப் பெரிய critic நானே தான் !"
"பணம் அல்ல - இதனில் நான் கால்பதித்ததன் காரணம் ! இந்த கேமின் மீதான தீராக் காதலே என்னை இயக்கி வருகிறது !!"
என்னடா - ஒரே பொன்மொழிப் பிரவாகமாக கீதே ; புள்ளையாண்டான் மதியத்துக்கு என்ன சாப்ட்ருப்பானோ ? என்ற கேள்வியா உள்ளுக்குள் ? வேறொண்ணுமில்லீங்க - பாடாய்ப் படுத்தி வரும் முதுகுவலியும், தோள்பட்டை நோவும் மனுஷனைக் கிடத்திப் போட்டிருந்த வேளைதனில், உலகின் லேட்டஸ்ட் & ஆகச் சின்ன வயது செஸ் சாம்பியனுமான நம்ம குகேஷின் YouTube பேட்டியினைக் கேட்டுக் கொண்டிருந்ததன் பிரதிபலிப்பே மேற்படி வரிகள் !! 4 நாட்களுக்கு முன்னே சிங்கப்பூரில் நடைபெற்று வந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெறும் 18 வயசே ஆன குகேஷ் கெலித்தது தான் நடப்பாண்டின் top moment என்று எண்ணியிருந்தேன் - இன்று காலை தம்பியின் YouTube பேட்டியினைப் பார்க்கும் வரை !! ஆனால் இன்னமும் டீன்ஏஜை கடந்திரா இந்த இளம் வயதிலும், குகேஷ் தந்த ஒவ்வொரு பதிலிலும் மிளிர்ந்த நிதானம், பக்குவம், தன்னடக்கம், இயல்பு, விவேகம் - மொத்தமாய் சாய்த்து விட்டது !! அந்தப் போட்டியினை வென்றதை விடவும் இந்தப் பேட்டி அசாத்திய உச்சமாய் தென்பட்டது எனக்கு ! பொதுவாய் இங்கே நாம உண்டு, நம்ம காமிக்ஸ் உண்டு, நம்ம மூ.சந்து உண்டு என்று குப்பை கொட்டி வருபவன் நான் ! வந்தோமா - எதையாச்சும் சொல்லிப்புட்டு மூ.ச.வுக்கு ஒரு நடை போயிட்டு வந்தோமா ; அடுத்த வேலையைப் பார்த்தோமா என்றிருப்பவன் - ஒரு நாளும் உலகத்துக்கு சேதி சொல்ல முனைந்ததில்லை ! But இந்த செஸ் ஆட்டத்தின் மீது இளம் வயது முதலே ஒரு கிறுக்கு கொண்டதாலோ - என்னவோ, இந்தப் பாலகனின் அசாத்திய சாதனை பற்றி எழுதாது இருக்க முடியவில்லை ! நேரம் கிடைக்கும் போது இந்த யூடியூப் பேட்டியினை பாருங்களேன் மக்களே : https://www.youtube.com/watch?v=IASejdBmHoU
ரைட்டு....உலகத்துக்கு உபந்நியாசம் முடிஞ்சதுங்கிறப்போ நம்ம பிழைப்பை பாக்க ஆரம்பிக்கலாமா ? வியாழனும், வெள்ளியும் வெளியே தலைகாட்டவே முடியாத அளவிற்கு மழை பெய்து கொண்டே இருக்க, கடுப்பாய் பொழுதுகளை ஒட்டிக்கொண்டிருந்தோம் - simply becos சீக்கிரமே துவங்கிடவுள்ள சென்னை புத்தக விழாவிற்கான மறுபதிப்ஸ் ; சிறார் காமிக்ஸ் ; நம்மள் கி காமிக்ஸ் போன்றவற்றின் பணிகள் ஒரு அம்பாரம் குவிந்து கிடக்கின்றன ! இன்னமும் இரண்டே வாரங்கள் கூட இல்லையெனும் போது ஒவ்வொரு தினமும் பொன்னுக்கு நிகராய் தென்பட்டு வரும் நிலையில், 2 working days அம்பேல் ஆகிப் போனதில் சொல்லி மாளா கவலை ! Anyways அந்த அவகாசத்தினில் நம்ம இளம் தளபதியாரை ஜல்தியாய் ரெடி செய்திடல் சாத்தியமாகி விட்டதால் மொத்தத்துக்கும் நஷ்டம் அல்ல தான் !!
இளம் தளபதி !! சமீபத்தில் மறுவருகை புரிந்த கையோடு, விற்பனையிலும் ஒரு காட்டு காட்டி விட்டு ஸ்டாக் அவுட் ஆகிச் சென்ற இந்த ஜாம்பவானின் டபுள் ஆல்ப சாகசம் - அடுத்த ஓரிரு நாட்களில் அச்சுக்குச் செல்கிறது ! இங்கே ஒரிஜினலாய் பேனா பிடித்திருந்த ஒரு புது வரவு, சமீபங்களது வாடிக்கையின்படி செமத்தியாகவே சொதப்பியிருக்க,முழுசையும் மாற்றி எழுதும் நோவு தொடர்கதையாகிப் போனது ! ஆனால் இதைச் சாக்காக்கி கதைக்குள் ஆழமாய் புகுந்திட இயன்றதில் மகிழ்ச்சியே - becos கதையின் knot அட்டகாசம் !! And இம்முறை ஓவராய் அந்த உள்நாட்டு கலக அரசியல் பற்றியெல்லாம் போட்டுத் தாக்கிடாது பரபர ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர் ! என்ன - டைகர் என்றாலே ஆராச்சும் ஒரு அழகுப் பாப்பா மேலே விழுந்து ஈஷிக்கணும் என்ற template கதாசிரியருக்கு நிரம்பப் பிடித்திருக்கும் போலும் ; ஒரு அழகியை கொணர்ந்து நம்ம யூத் புலிக்கு கணிசமாய் உம்மாவாய் குடுக்கச் செய்திருக்கிறார் !! And எப்போதும் போல இங்கே வரலாறும் பின்னிக் கிடக்க, கதை கணிசமான யதார்த்தத்துடனும் பயணிக்கிறது ! சித்திரங்களும், கலரிங்கும் இந்த ஆல்பத்துக்கொரு செம ப்ளஸ் என்பேன் !! இதோ - ஒரிஜினல் ராப்பர் in preview :
உட்பக்க file கையில் லேது என்பதால் நாளை மறக்காது upload செய்கிறேன் ! And இது hardcover இதழ் என்பதால் அட்டைப்படத்தில் ஜிகினா effect ஜொலிக்கவும் செய்கிறது ! அப்புறம் அந்தத் தலைப்பு எழுத்துரு நம்ம ஜகத்தின் கைவண்ணமே !! "இப்புடி வேணும் ஜகத் ; அப்பிடி வேணும் !" என நான் குடலை உருவியதை கிஞ்சித்தும் பொருட்படுத்தாது பணி செய்து தந்த நண்பருக்கு இங்கொரு 'O' போட்டால் தப்பில்லை என்பேன் ! Thanks a ton ஜகத் !
ஜனவரியில் காத்துள்ள புது இதழ்கள் அனைத்துமே கலர் மேளாக்கள் என்பதால், இதோ - நம்ம V காமிக்சின் 2-வது ஆண்டுமலர் !! அட்டைப்படத்தில் துருக்கிய ஓவியரின் ஒரிஜினல் சித்திரம் இம்மி மாற்றமும் இன்றி மிளிர்ந்திட, இதோ - உட்பக்கத்தில் கலரில் வேதாளர் செய்திடும் அதிரடிகளைப் பாருங்களேன் :
இந்த வர்ணக்கலவைகளை பார்க்கும் போதே புரிந்திடும் - பின்னணியில் பணியாற்றும் நபர் இந்தக் கலையில் ஒரு கில்லாடி என்பது ! வடக்கே வசிக்கும் மனுஷன், தீவிர Phantom ரசிகர் & கலரிங் செய்வது இவருக்கொரு ஹாபி !! கொஞ்ச காலம் முன்பே தொடர்பு கொள்ள முயன்று, சரி வர பதில் கிட்டாத காரணத்தால் மும்பையில் இருந்த இன்னொரு ஆர்டிஸ்ட்டிடம் பணிகளைத் தந்திருந்தோம். அகஸ்மாத்தாய் நண்பர் ரபீக்கிடம் இது பற்றிக் குறிப்பிட, அவர் வரிந்து கட்டிக்க கொண்டு தொடர்பு எல்லைக்கு அப்பாலிக்கா இருந்த மனுஷனுடன் தொடர்பினை ஏற்படுத்தித் தந்து விட்டார் ! அதைத் தொடர்ந்து நிரம்ப அவகாசம் எடுத்துக் கொண்டு, நிதானமாய் கலரிங் செய்து தந்திருக்கிறார் - மிக நியாயமான ஊதியத்திற்கு !! "வேதாளருக்கு கலர் செய்வதே ஒரு சந்தோஷ அனுபவம். பணம் இங்கு இரண்டாம் பட்சமே !!" என்கிறார் இந்த ஆற்றலாளர் !! அவருக்கும், நண்பர் ரபீக்குக்கும் இங்கு ஒரு பெரிய தேங்க்ஸ் !!
இங்கே கொடுமை என்னவெனில், இந்த amateur கலரிங் விற்பன்னரின் பணிக்கு முன்னே, ஒரிஜினல் King Features கலரிங் இரண்டாம் இடத்தினையே பிடிக்கின்றது !! ஜனவரியில் பார்க்கும் போது உங்களுக்கே புரியும் !
Moving on to சென்னை புத்தக விழா - இம்முறை டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை அதே YMCA நந்தனம் மைதானத்தில் நடந்திடவுள்ளது ! பொங்கலுக்கு முன்பாகவே விழா நிறைவுற இருப்பதால் இந்தவாட்டி புத்தாண்டினில் நம்ம கேரவன் சென்னையில் நிலைகொண்டிருக்க வேணும் !! And ஏற்கனவே அறிவித்தது போல "கதை சொல்லும் காமிக்ஸ்" - தமிழிலும், இங்கிலீஷிலும் புதுப் பொலிவுடன் களமிறங்கவுள்ளது ! தமிழ் ஸ்கிரிப்ட் ஆந்தையன் கைவண்ணம் & இங்கிலீஷ் script - ஜூனியர் எடிட்டரின் உபயம். In fact - ஆங்கிலப் பதிப்புகளை Lion Books என்ற வரிசையில் முன்நகர்த்திச் செல்ல ஜூனியர் வசம் கணிசமாய் திட்டங்கள் உள்ளன !
So அந்த வரிசையில் எனது பணியானது - ஒரு மொக்கை மொழிபெயர்ப்பாளனாய் வலம் வருவது மாத்திரமே !! And இக்கட ஒரு சிறு குறிப்புமே : இவை நம்ம குட்டீஸ்களுக்கு மட்டுமென்றில்லை ; நமக்குமே ரசிக்கும் போலுள்ளது ! அதிலும் "பட்டாணி இளவரசி" கதை சூப்பராகத் தெரிகிறது !! ஜனவரியில் ப.இ. ஒரு செம சுவாரஸ்ய பேசுபொருளாகிட்டால் நான் ஆச்சர்யம் கொள்ள மாட்டேன் ! அடுத்த பதிவினில் previews folks !!
சென்னை புத்தக விழா எனும் போது மாயாவிகாரு இல்லாமல் நந்தனம் திசையில் போகவாச்சும் முடியுமா ? So இம்முறையும் மறுபதிப்புகள் உண்டு தான் - சற்றே வித்தியாசமான பாணியில் !! மாயாவி மாத்திரமன்றி - க்ளாஸிக் நாயகப் பெருமக்களான CID லாரன்ஸ் & டேவிட் ; ஜானி நீரோவுமே சென்னை பயணிக்கவுள்ளனர் ! இந்த மும்மூர்த்திகளை முதலில் தயார் பண்ணி பேக் பண்ணினாலன்றி சென்னை நிச்சயம் களை கட்டாது !!
And yes - இம்முறையும் 2 லக்கி லூக் மறுபதிப்புகள் உள்ளன தான் - புத்தம் புது அட்டைப்படங்களுடன் !! போன சென்னை புத்தக விழாவிலேயே லக்கியின் "தலைக்கு ஒரு விலை" was amongst the top sellers !! ஆகையால் இம்முறையும் நமது ஒல்லி கௌபாய் ரகளை செய்திடக் காத்துள்ளார் !
அப்புறம் புத்தக விழாக்கள்தோறும் "ஹாரர்" கதைகள் கேட்டு வரும் இளம் வாசகர்களுக்கென ஒரு தெறிக்கும் புது கி.நா. கூட ரெடியாகி வருகிறது !! இந்த நொடியில் அதற்குத் தான் பேனா பிடித்து வருகிறேன் ! அல்லாத்தையும் முடிச்ச கையோடு அடுத்த பதிவினில் சென்னை ஸ்பெஷல்ஸ் பற்றி முழுத் தகவல்களையும் போட்டுத் தாக்குகிறேன் folks ! இந்த நொடியில் எதையெல்லாம் பூர்த்தி செய்திட இயலுமென்பது எனக்கே தெரிந்திருக்கா நிலையில் எதையாச்சும் உளறி வைக்க பயம்மா கீது ! அது மட்டுமன்றி இன்னொரு செம சுவாரஸ்ய அறிவிப்புமே செய்திட கொஞ்சமே கொஞ்சமாய் பணிகள் வெயிட்டிங் ! அதனையும் முடித்து விட்டு, அடுத்த சனியன்று மொத்தமாய் கச்சேரியினை அரங்கேற்றிடலாமா guys ?
Before I sign out, நமது சந்தா 2025 பற்றி !! செம வேகத்தில் சந்தா சேர்க்கை தடதடத்து வருகிறது ! And இதனில் icing on the cake - இதுவரையிலுமான 97% நண்பர்கள் ரெகுலர் சந்தாவிற்கே டிக் அடித்துள்ளனர் ! அந்த சந்தா LITE பக்கமாய் மிக, மிக சொற்ப எண்ணிக்கை மட்டுமே உள்ளனர் !! நமது கதைத் தேர்வுகளுக்கான அங்கீகாரமாகவும், நம் மீதான உங்கள் அக்கறைகளின் வெளிப்பாடாகவும் இதனைப் பார்த்திடத் தோன்றுகிறது ! Thanks a ton all !! தொடரும் நாட்களில் சந்தா எக்ஸ்பிரஸ் இன்னமும் வேகமெடுக்கும் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன் - பூமியின் பாதாளத்திலிருந்து புறப்பட்டு வருவோருடன் கைகுலுக்க !! தெறிக்க விட்டு வருகிறது கி.நா. !!
Bye all...see you around ! Have a lovely week ahead !!
ஆஜர்
ReplyDeleteசூப்பர் தோழரே
Deleteகுட்
Deleteவாழ்த்துக்கள் அண்ணா
Deleteநன்றிகள் நட்புக்களே
Deleteவாழ்த்துக்கள் ஜீ...
Deleteவாழ்த்துக்கள் சத்யா
Deleteநன்றி நண்பரே
Deleteவணக்கங்கள்
ReplyDeleteநமஸ்காரம் தோழி
Deleteமீ
ReplyDeleteHi
ReplyDeleteவந்தாச்சு
ReplyDeleteHi
ReplyDeleteவணக்கம் நண்பர்களே…..
ReplyDeleteHi
ReplyDeletePresent sir
ReplyDeleteபல ஞாயிறுகள் கழித்து ஒரு ஞாயிறு பதிவு
ReplyDeleteதங்களின் சென்னை விசிட் எந்த நாட்களில் இருந்திடும் ஆசிரியரே
ReplyDeleteஜனவரி முதல் வாரத்தின் சனி & ஞாயிறு என்று இப்போதைக்கு நினைத்திருக்கிறேன் ரம்யா...
Deleteஅதுவே உறுதி ஆகட்டுங்க ஆசிரியரே
Deleteஎனக்கு டிக்கெட் அன்றுதான் உள்ளன 😁😁😁
@yaazh : சகோ, அதான் எடிட்டர் கன்ஃபார்ம் பண்ணிட்டாரே...
Deleteஇப்பவே டிக்கெட் புக் பண்ணிடுவோமா... ?!ஜனவரியில், நண்பர்கள் மற்றும் எடிட்டருடன் சந்திப்பை நேரில் பார்க்க, கலந்துக்க. ❣️
4th or 5th January
DeletePlan பண்ணிடுவோம்
Jan 4th 😊😁
Deleteஎன்ஜாய் மக்களே ☺️
Deleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDelete@Edi Sir.. 😘🫣
ReplyDeleteMe in.. 💐🥰😘😄🙏
16th
ReplyDelete2025 வருடத்தின் முதல் அட்டைப்படம் செமயாக உள்ளதுங்க ஆசிரியரே
ReplyDeleteமுத்து 500 டிசைன் சூப்பர்
Tiger Book.... Front Wrapper... 😍💥💐💐🍫🥰
ReplyDeleteவாழ்த்துக்கள் சென்னை...
ReplyDeleteமாயாவியோடு லாரண்ஸ் டேவிட் & ஜானி நீரோ லக்கி லூக் என் கலக்கும் காம்போவோடு சென்னை களை கட்ட போகிறது
ReplyDeleteA Warm Welcome to#LionBooks 👏😍
ReplyDeleteகூடவே, டியர் எடி, வடக்கத்திய நண்பரின் கலரிங் சேவை, நம் காமிக்ஸ் இதழ்களில் வெளிவர ஒரு காரணமாக இருந்தேன், என்பதில் எனக்கு மிகவும் பெருமையே.
ReplyDeleteமனிதன் ஒரு மாயாவி ரசிகன் என்பதை அவர் அந்த வேதாள கதை தொடருக்கு அடித்திருக்கும் வண்ணமே, பக்கம் பக்கமாக பல கதைகள் சொல்லும். 😍
வாரம் ஒரு முறை, ஒவ்வொரு பக்கத்தையும் கலரிங் பண்ணிய பிறகு, நமக்கு அனுப்பி வைத்து நன்றாக இருக்கிறதா, என்று கேட்டு கேட்டு, அத்தனை உயிர்ப்புடன் வேலை செய்தார்.
அந்த நண்பருக்கு வாழ்த்துக்கள் பல. ஆவலன் காத்திருக்கேன் அந்தப் படைப்பை புத்தகமாக ரசிக்க. ❤️
நன்றிகள் ரபீக் சகோ💐💐💐💐💐
Deleteதங்கள் நண்பருக்கும் எங்கள் நன்றிகள்
கபீஷ் வெளிவர உதவியத்தோடு இப்போது வேதாளருக்கு வண்ணம் தீட்டுவதிலும் துணையிருக்கும் உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் ரஃபிக்! 💐💐🤝
Deleteகபிஷ்
Deleteவேதாளர்
அடுத்து காக்கை காளி தானே சார்
அருமை ரபீக்....தூள் கிளப்புறீங்க...அப்படியே வான் ஹாம்மேன்னு ஒருத்தர் ஒளிச்சு கிடக்கிறார்...அவரையும் தேடி பிடித்து லார்கோக்கோ...ஷெல்டனுக்கோ கதை வாங்கித் தந்தா....
Deleteலார்கோக்கோ இல்லேன்னா லார்பெப்ஸியாவது கிடைக்குமான்னு பாருங்க...
Deleteரபீக் அண்ணனுக்கு நன்றிகள் பல❣️💐
Deleteபதிவு சட்டென்று முடிந்தது போல ஒரு உணர்வு 😊
ReplyDeleteவாட்சப்ப படிச்சிட்டு இங்க பதில் போடுறியோ
Deleteஅனைவருக்கும் இனிய ஞாயிறு மாலை வணக்கம்.
ReplyDeleteபுத்தாண்டை வேதாள மாயாத்மா உடன் வரவேற்க நாங்க ரெடி.. 🥰😘💐😄🙏
ReplyDelete@டியர் ஜூனியர்.. 🥰😘
ReplyDelete"V" காமிக்ஸ் ல் வெற்றி 👍முத்திரை பதித்தது போலவே "Lion Books" லும் வெற்றி பெற்றிட என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும்.. 💐💐👍
3+3 ஜூனியர் + மும்மூர்த்திகள் 3 + டெரர் கி நா 1 + லக்கி லூக் 3 = 13 + ரெகுலர் இதழ்கள் 🥰 இன்னும் சில சர்ப்ரைஸ் 😍😍😍😍 காத்திருக்கிறோம் மிகுந்த ஆவலுடன்.
ReplyDeleteபுத்தக திருவிழா நேரத்தில் சென்னையில் மழை பெய்யாமல் இருக்க வேண்டும் இறைவா 🙏🏻
கபிஷ் மறந்துட்டீங்களே
Deleteஆமாம் சோ 14 + 3 ரெகுலர் இதழ்கள் 😊
Deleteநீயால.....சூப்பர்ல மக்கா....கேட்டுத்தாக்கு
Deleteஆசிரியர் சொன்னது. கூட்டி பார்லே 😊
Deleteநண்பர் ரபீக் @ தங்கள் காமிக்ஸ் செயல் பாராட்டுதலுக்கு உரியது. அடுத்தமுறை நாம் நேரில் சந்திக்கும் போது பிரியாணியுடன் கலக்குவோம்.
ReplyDeleteஎன்னத்தை வெங்காயத்தயா
Deleteவெங்காயத சாம்பாரில் போட்டு சாப்பிடுல 😉
Deleteஜகத் பாராட்டுகள். விஜயன் சார், இவர் படத்தை ஷேர் செய்தால் நன்றாக இருக்கும். இவரை இதுவரை நேரில் பார்ததாக ஞாபகம் இல்லை.
ReplyDeleteHi Parani, please see the photo shared by Editor in Lion-Muthu Comics Lovers WhatsApp group on 30th Nov, 2024.
DeleteSure. Thanks.
Deleteஇவரை பலமுறை போட்டோவில் பார்த்து இருகிறேன். சேலத்தில் வேலை பார்கிறார் என நினைக்கிறேன். மேலும் அவரிடம் இருமுறை ஃபோனில் பேசி இருக்கிறேன். நான் வேறு ஒரு ஜெகத் என நினைத்தேன். தகவலுக்கு நன்றி.
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவேதாளர் கலரிங் அட்டகாசம். இதுவரை நாம் பார்த்த அனைத்து மொழி, வேதாளரின் கதைகளைவிட இதுவே டாப்கலரிங் என அடித்து சொல்லலாம் . சார் இந்த ஆர்ட்டிஸ்ட் சாரைஅப்படியே நம்ப டீமுக்கு அழைச்சுகிட்டு வந்திருங்க.கொண்டாடப்படவேண்டியவர்
ReplyDeleteநமது இதழ்களின் தயாரிப்பு பணிகளில் தொடர்ந்து நமக்கு உதவி வரும் ஜகத் சார்,ரபீக் சார் இருவருக்கும் நன்றிகள்
ReplyDeleteஞாயிறு மாலை- இதமான மழைக் காற்றில், காரப்பொரியுடன்,கையில் காஃபியோடு பதிவை படிப்பது எவ்வளவு ஆனந்தம்.ஆஹா...
ReplyDeleteஉடல்நிலை தேவலைங்களா? சார்,
இந்த மழை ஈரத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள் சார்.
18 வயது குகேஷின் வெற்றியை படிக்கறப்ப தங்களின் 17 வயதில் லயன் காமிக்ஸ்க்கு பொறுப்பேற்று வெற்றி கண்டதும் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
டைகரின் ரொமான்ஸோடு-2025 ம் வருடத்தின் முதல் ப்ரிவ்யூ 👌.
&
வேதாளரின் உட்பக்க ப்ரிவ்யூஸ் கலரிங் பாக்கறப்பவே படிக்க தூண்டுகிறது.
இந்த கலர் பிரிண்டிங்கில் சற்றும் (டார்க்னெஸ் இல்லாது) மாற்றமில்லாமல் வரும் பட்சத்தில் பட்டைய கிளப்பும்.
"மாயாவி மாத்திரமின்றி - CID லாரன்ஸ் & டேவிட்டுமே" welcome welcome welcome 🎇🔥🎇🔥 + ஒரு தெறிக்கும் கி.நா.
டபுள் கொண்டாட்டத்துடன்
ஆவலுடன் வெய்ட்டிங்....
சென்னை புத்தகக் திருவிழா தெறிக்கவிடப் போகிறது.....
ஹேப்பியான மாலையில் ஹேப்பியான பதிவு ❤️.
சூப்பர் நண்பரே.....ஆசிரியரும் அப்ப துவக்கிய சாதனைதான....காரப்பொறின்னதும் நாவு துடிக்குதே
Deleteசார் 2025ல் சதம் அடிக்கிறோம் . இப்பவே அதற்கான பிளானிங் படி முதல் மாதத்திலிருந்தேபுத்தகங்களை ரெடி பண்ண ஆரம்பிச்சிடுச்சு . நாங்களும் ரெடி யாகிடுறோம
ReplyDeleteஆஹா சூப்பர்
Deleteசார்...மாசம் 8 புக்ஸ் ஓடணும் சதமடிப்பதென்றால் !! அதாவது வாரம் ரெண்டு பொஸ்தவம் !!
Deleteஅடுத்த வருஷம் சீனியர் சிட்டிசன் ஆகப் போகிறவனாண்ட வைக்கும் கோரிக்கையா சார் இது ?
சீனியர் சிட்டிசன் என்றால் இப்போது எல்லாம் ஸ்பெசல் concession கிடையாது சார்! எனவே நீங்கள் யூத் தான் என்றும் சார்!
Deleteகாமிக்ஸ் வாசகர்களுக்காக வேதாளரை சிறப்பாக கொண்டு வர முயற்சி செய்து வெற்றி கண்ட நண்பர் @ரஃபீக் கிற்கு மீண்டுமொரு ஸ்பெஷல் தேங்க்ஸ் ❤️.
ReplyDeleteகபீஷை போலவே வேதாளரின் கலரை பார்த்து மகிழும் ஒவ்வொரு வாசகரின் உற்சாகத்திலுயம் உங்களுக்கும் பங்குண்டு.
வாழ்த்துக்கள் நண்பரே 💐❤️👏👏
Congrats rafiq and jagath. Expecting saturday sir.
ReplyDeleteசூப்பர் சார்....நல்லா ஓய்வெடுங்க.....டைகர் அட்டை தெறிக்க விடுது....அந்த தலைப்பில் காலும் வாலும் வண்ணமும் ஜாலம் புரியுது....சூப்பர் ஜெகத்....
ReplyDeleteவேதாளர் அருமை...ரபீக் பட்டய கிளப்புறார்...
சிறுவர் காமிக்ஸ்...ஜனவரிக்கேவா....அருமை சார்...வாழ்த்துக்கள் விக்ரம்....
மாயாவியோட லாரன்சு மா கதைகள் சொல்லையே....
லக்கிலூக்குமா. ...அதுமிரண்டா...
ஹாரர் ஸ்பெசலா.....ஆஹா....காலனின் கால் தடம் என்னாச்சு சார்
என்ன ஒன்னு மிஸ்ஸிங்....போர் கண்ட சிங்கம்....இதழ்கள் குறைவான தெரிவது எனக்கு மட்டுந்தானா
வேதாளம் அட்டய பார்த்ததுமே அந்த பெரிய சைஸ்ல புக்கோன்னே நெனச்சுட்டேன்...அட்டை அதகளமா வசீகரிக்குது....
Deleteஉங்க பஞ்ச் டயலாக்க பார்த்ததுமே லார்கோவுக்கான வரிகள்னே நெனச்சு துள்ளிக் குதிக்க....அந்த பேட்டிய பாக்குமார்வத்த கிளறிட்டீங்க வெகுவா என் கவனத்தை ஈர்க்காத மாபெரும் வெற்றியை....இத கொண்டாட அந்த விளையாட்டு வீரர்கள் ( தந்தா கால்பந்தாட்ட நாயகனாக்க ஆசைப்பட மகன் டென்னிஸ்ல தூள்கிளப்புவாரே இரு வண்ணத்ல அதை மறுபதிப்பா தரலாமே)கதை வரிசைல செஸ் சாம்பியன் கதைக இருந்தா போடலாமே...
வேதாளரின் கதை நம் முத்து காமிக்ஸ் இல் வந்த கீழ்த்திசை சூனியம் பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்
ReplyDeleteஆஹா அருமை.....ரொம்ப நாளாக ஏங்கிய கதை...80 களிலிருந்தே
Deleteஎந்தக் கதைன்னே தெரியாம ஏங்குனீங்களா கவிஞரே ?!
Deleteஆமா சார்
Deleteவேதாளர் கலரிங் அமர்க்களம் சார். ரபீக்கின் விடா முயற்சிக்கு ஒரு சல்யூட்.
ReplyDeleteAwaiting for tiger.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவந்துட்டேன்....:-)
ReplyDelete2025 நமக்கு அட்டகாசம் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கப் போவதில்லை 🔥☺️.....நீண்ட நாட்களுக்கு பிறகு இளம் டைகர் சாகசம் , வேதாளர் புதிய கலரிங், குழந்தைகளுக்கு இதழ்கள், லாரன்ஸ் டேவிட்,லக்கி லூக் மறுபதிப்பு +மிரட்டலான கிநா இன்னும் சர்ப்பிரைஸ்கள்🥳😍....அனைத்தும் சூப்பரோ சூப்பர் 🫣
ReplyDeleteமறு பதிப்பில் பாதாள நகரம் சூப்பர் சார்.அப்படியே ப்ளாக் மெயில் மற்றும் பறக்கும் பிசாசு போடுங்க சார்
ReplyDelete+9
Deleteஇரு வண்ணத்ல அப்டியே
Deleteஒவ்வொன்றாய் சார்...!
Delete// "வேதாளருக்கு கலர் செய்வதே ஒரு சந்தோஷ அனுபவம். பணம் இங்கு இரண்டாம் பட்சமே !!" என்கிறார் இந்த ஆற்றலார் //
ReplyDeleteபாராட்டுகள் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
வாழ்த்துக்கள் sir... 17 வயதிலேயே பதிப்பக துறையில்
ReplyDeleteகால் பதித்து, இந்த 5 g... உலகில்
வெற்றிக்கொடி நாட்டியதற்கு...
சாதனையாளர்கள் எங்கும் உள்ளார்கள் sir... ❤️👍🙏
அட, நாமெல்லாம் தெருக்கோடியில் கோலி ஆடிய புள்ளீங்க சார் ! இந்தப் பிள்ளை இன்றைக்கு சாதித்திருப்பதோ விண்ணைத் தொடும் ஒரு அசாத்தியத்தை !!
Deleteகீழ்திசை சூனியம்...... Returns in COLOUR...... மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் (றோம் )😍🥰👍
ReplyDeleteஞானும்...!
Deleteதலைப்பின் எழுத்துருவம் அருமையா இருக்குங்க ஜெகத் சகோ👏👏👏👏👏
ReplyDeleteஅடுத்த சனிக்கிழமைக்கு ஆவலுடன் வெயிட்டிங் சார்!! புதுசா ஒரு பத்து புத்தகங்களை கொடுங்களேன் சார்...
ReplyDeleteசார், இது முழுக்க முழுக்கவே விற்பனைக் கண்ணோட்டத்தில் செயல்பட வேண்டிய தருணம் ; சென்னை புத்தக விழா சிறப்பாய் ஓடிடும் பட்சத்தில் - ஆண்டின் மீதப் பொழுதுகளின் சுமை சற்றே குறைச்சலாகிப் போகும்!
DeleteSo மே வரை பொறுத்துக் கொள்ளுங்கள் ; ஆன்லைன் மேளாவில் வாண வேடிக்கைகளை அரங்கேற்றி விடலாம்!
// சென்னை புத்தக விழா சிறப்பாய் ஓடிடும் பட்சத்தில் -//
Deleteசென்னையில் விற்பனை கண்டிப்பாக் சிறப்பாக இருக்கும் சார்.
பெங்களூருவுக்கு ஒரு கிலோ சர்க்கரை பார்சல்லல்லல்ல !!
Deleteப்ளம் கேக் பிளீஸ் 😆 சர்க்கரை எல்லாம் சாப்பிடுவது இல்லை சார் 🙂
Deleteஉப்பு போட்டா மக்கா...சார் பட்டய கிளப்புறோம்
Deleteசோத்துக்கு போட்டு சாப்பிடுல 😉
Deleteவணக்கமுங்க. மீதி ஸ்பெசல் புத்தகங்களையும் அறிவிச்ச பின்னாடி ஒட்டுக்கா ஆர்டர் பண்ணிடறோங்.
ReplyDeleteகரெக்ட்
Deleteசனிக்கிழமைக்கு தாண்டாதுங்க !
Delete// சனிக்கிழமைக்கு தாண்டாதுங்க ! //
Deleteஅருமை அருமை..!
எடிட்டர் சார்! மேஜிக் மொமண்ட் ஸ்பெஷலில் வந்த டெக்ஸ் கதை முதல் பாகம் மட்டுமே.... இன்னும் ஒரு 250 பக்கங்கள் கொண்ட கதை மீதம் உள்ளது (ஓவியர் Civitelli).
ReplyDeleteமுடிந்தால் 2025-ல் ஏதாவது ஒரு ஸ்பெஷல் வெளியீடாக வெளியிடவும்! ப்ளீஸ்...
அடேடே...முடிஞ்சதுன்னுல நெனச்சேன்
Delete+1
Deleteபொறுமை சார்...!
Deleteவணக்கம் நண்பர்களே.. 🙏🏻
ReplyDeleteஅடேங்கப்பா ஜனவரி..
ReplyDeleteவெய்ட்டான பண்டலுக்காக வெய்ட்டிங்... 🔥🔥🔥🔥🔥
ஆத்தீ...நான் எப்போ மஞ்ச சொக்காயிலே உங்களோட போஸ் குடுத்தேன் நண்பரே ?
DeleteExcuse me அடுத்த சனிக்கிழமை எப்போ வரும். சென்னை புத்தக விழாவில் என்ன ஸ்பெஷல் புத்தகங்கள் என்ற அறிவிப்பு எப்போ வரும்?
ReplyDelete// Excuse me அடுத்த சனிக்கிழமை எப்போ வரும் //
Deleteவெள்ளிக்கிழமை முடிந்தவுடன் 24:00 மணிக்கு சனிக்கிழமை வந்துவிடும்.
// சென்னை புத்தக விழாவில் என்ன ஸ்பெஷல் புத்தகங்கள் என்ற அறிவிப்பு எப்போ வரும்? //
அடுத்த வாரம் சனிக்கிழமை பதிவிற்கு பிறகு , சென்னை புத்தக விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவில் அறிவிப்பு வரும்.
இது மாதிரி கடினமான கேள்விகளை தொடர்ந்து கேளுங்கள் என் திறமைக்கு தீனி போடுங்கள் நண்பரே
😆
Deleteஅட, நீங்க வேற சார் !! புக்ஸ் அம்புட்டையும் ரெடி பண்ணுவதற்குள் நாட்கள் இந்த வேகத்தில் ஓட்டமாய் ஓடுகின்றனவே என்ற டர் இங்கே எனக்கு !!
Deleteவேலையெல்லாம் முடிந்த பிறகு சென்னை புத்தக விழாவில் ரிலாக்ஸாக டொரினோ குடிக்கும் காட்சியை நினைத்துக் கொள்ளுங்கள் சார். செம தித்திப்பாக..
Deleteடொரினோல்லாம் பேப்பரில் எழுதி வேணா பாத்துக்கலாம் சார் !! டாடியார் சொத்து எழுதிக் கொடுத்தாரோ இல்லியோ - மிகச் சரியாய் டயாபடீஸை நம்மளுக்கு பார்சல் பண்ணித் தந்துட்டாரே !!
Delete// டொரினோல்லாம் பேப்பரில் எழுதி வேணா பாத்துக்கலாம் சார் ! //
Deleteசுக்கு காஃபி குடிப்பதாக மாற்றி கொள்ளுங்கள் சார் 😉
சிறுவாணித் தண்ணி
Deleteவேதாளர் கலரிங் செய்த வடஇந்திய நண்பருக்கும், செய்ய வைத்ததில் பேருதவியாக இருந்த ரஃபிக் சாருக்கும்,Title Font style லில் அசத்தும் ஜெகத் சாருக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள் பல😍🤝👌
ReplyDeleteMMS - இந்த ஆண்டின் மிக சிறந்த டெக்ஸ் கதை. ஒரே நாளில் படித்து விட்டேன். பெரிய ஆக்சன் இல்லை என்றாலும் ஏதோ ஒன்று என்னை கதையோடு கட்டி போட்டது, கதை விறுவிறுப்பாக சென்றது மற்றும் ஒரு பிளஸ்.
ReplyDeleteMMS என்ற மைல் கல் இதழுக்கு மிக சரியான தேர்வு 😍
நல்லா கண்ண தொறந்து பாருல...வீட்ல யாராவது கட்டிபோட்ருப்பாங்க
DeleteGood joke la makka!
Delete😂😂😂😂😂
Deleteஆனாலும் கவிஞருக்கு குசும்பு பன்மடங்கு பெருகி விட்டது !!
Deleteவீட்டுல அவனுக்கு சாம்பார் சாப்பாட்ட குறைக்க சொல்ல வேண்டும் 😄
Deleteஎல் தம்பி சாம்பார்ல கிடாக்கறில....சார் எல்லாம் தாங்கள் ஊட்டிய...
Deleteயானைப் பாலா கவிஞரே?
Deleteகுசும்பால் சார்
Deleteமுதல் முதலாக சந்தாவில் சேர்ந்து விட்டேன்...1219
ReplyDeleteSuper!!!!!
Deleteஅருமை நண்பரே
Deleteசூப்பர்
DeleteWelcome sir 👍
Deleteஎடி ji
ReplyDeleteபுத்தக திருவிழாக்களில் கிளாசிக் 007 ஜேம்ஸ் பாண்ட் கதைகள் இன்றைய இளைய தலைமுறைகளை கவனிக்க வைக்கும் அல்லவா. 007 அட்டை படங்களே கவர்ந்திழுக்குமே.
The Everest of Tamil Comics---""The Magic Moment Special""--- எடிட்டர் விஜயனின் ஆயிரமாவது இதழ்.....
ReplyDeleteநண்பர்களே@
லயன்-முத்து எடிட்டர் திரு.விஜயன் Vijayan S சார், 16வயது இளைஞராக லயன் காமிக்ஸ் ஆரம்பித்ததில் இருந்தே பலவிதமான சாதனைகள் & பரவலான சோதனை முயற்சிகளோடு தனது காமிக்ஸ் பயணத்தை 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றிகரமாக செய்து வருகிறார். அவரது பயணத்தில் எத்தனையோ சாதனை மைல்கற்கள், அசாத்திய சிகரங்கள், கத்தி மீது நடக்கும் நுட்பங்கள், அந்தர்பல்டிகள்...என பல்வேறு அசகாயங்களை அசால்டாக செய்து வருவதை நாம பார்த்து வியந்துள்ளோம்...!
இந்த 40ஆண்டு பயணத்தில் பல்வேறு ஸ்பெசல் இதழ்களை வெளியிட்டு நம்மை மகிழ்த்து வர்றார்...முந்தைய க/வெ யுகத்தில் வெளியான ஸ்பெசல்கள் பலதும் இன்றும் காமிக்ஸ் சேகரிப்பாளர்கள் இடையே பிரசித்தமானவை.......
#ரூ2க்கு காமிக்ஸ் பரவலாக இருந்த 1984-85ல ரூ4விலையில் வெளியான அதிரடிகள் இரும்புமனிதன், சதிவலை & கொலைப்படை...
#ஆர்ப்பாட்டமாக அறிமுகமே ஸ்பெசல் இதழில் கண்ட அரிசோனா அதிகாரி டெக்ஸ் வில்லரின் கோடைமலர்கள், தீபாவளி மலர்கள்....
#அசத்தலான சலபன் அட்டைப்படங்கள், அரை டஜன் சூப்பர் ஹீரோக்களின் கதைகளோடு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த ரூ5 விலையிலான பாக்கெட் சைஸ் லயன் & திகில் கோடைமலர்கள் & லயன் தீபாவளிமலர்கள்......
#கனவல்ல நிஜம்தான் நம்புங்கள் என சொன்னாலும் கிள்ளிப் பார்த்துத்தான் இது நிஜம் என உணர வைத்த- தி பாக்கெட் டைனமைட் ரூ10க்கு வெளியான தி கிரேட் பாக்கெட் சைஸ் இதழ், "லயன் சூப்பர் ஸ்பெசல் ".....
#பெயரிலேயே அதிரச்செய்த தி லயன் 50, "டிராகன் நகரம்"....
#மீண்டும் விலையில் புரட்சி, கதைகளில் ரசிகர்களை கட்டிப்போட்ட-லயன் சென்சுரி ஸ்பெசல் & Top 10 ஸ்பெசல்.....
#ரூ100க்கு ஒரு காமிக்ஸ் இதழா என விலையில் மட்டுமல்லாமல்- தரத்தில், அளவில், கதைத்தேர்வுகளில் என சகலத்திலும் விழிகளை அகல விரியச் செய்த பிரமாண்டங்கள் மெகா ட்ரீம் ஸ்பெசல், ஜாலி ஸ்பெஷல் & கெளபாய் ஸ்பெசல்.....
#15வருட கனவை நனவாக்கி- விலையிலும், கதை நீளத்திலும் புதிய சரித்திரம் படைத்த ரூ200க்கு வெளியான லயன் ஜம்போ கலெக்டர்ஸ் ஸ்பெசல்-"இரத்தப்படலம்....." என பல்வேறு ஸ்பசல்கள் முதல் 27ஆண்டுகளில்..!!!!
2012 கம்பேக்கிற்கு பிறகு.....
#லயன் கம்பேக் ஸ்பெசல்
#முத்து நெவர் பிஃபோர் ஸ்பெசல்-_NBS
#லயன் மேக்னம் ஸ்பெசல்
#தங்க தலைவனின் "மின்னும் மரணம்"
#தல டெக்ஸின் தி லயன்250
#தமிழ் காமிக்ஸ் சிம்மாசனத்தின் உச்சியில் தல டெக்ஸை அமர்த்திய "சர்வமும் நானே!"
#தன்னிகர் அற்ற வெற்றிகோட்டை "இரத்தக்கோட்டை"
#காமிக்ஸ் உலகை புரட்டிபோட்ட மறுபதிப்பு வண்ணத்தில் "இரத்தப்படலம்1.0" முழு தொகுப்பு...
#சத்தமின்றி யுத்தம் தொடங்கி, மெளன இடியாய் முழங்கிய "டியூராங்கோ"
#அரிசோனா புயலுக்கே பிரளயமாகிய டைனமைட் ஸ்பெசல்
#கதை விவாதங்களில் உச்சமான சிகரங்களின் "சாம்ராட்" தோர்கல்...
# மயக்கும் "மார்கோ‘ எனும் மதனமோகன ரூப சுந்தரியின்
"பிஸ்டலுக்கு பிரியா விடை
#மிக நீண்ட கதைக்கு சொந்தக்காரர் நம்ம மறதிக்கார நண்பர் ஜேசன் ப்ளையின் இன்னொரு அத்தியாயம் "இரத்தப்படலம்2.0..
#டெக்ஸ் 75----"சுப்ரீமோ ஸ்பெசல்"
#தல-தளபதி தீபாவளி ஸ்பெசல்ஸ்2023
#லக்கியின் ஆண்டுமலர் காமெடி தோரணங்கள்...
#முத்து காமிக்ஸின் 50ஆம் ஆண்டு இரட்டை சிறப்பிதழ்கள்...
#கார்சனின் கடந்த காலம் என்ற காவியம் பிரமாண்ட அளவில்...
---இந்த ஸ்பெசல் இதழ்களுக்கு மகுடம் வைத்தது போலான எடிட்டர் விஜயன் தயாரிப்பில் ஆயிரமாவது இதழ்"---வெளியானதை கொண்டாடும் செலிபரேசன் ஸ்பெசலாக இம்மாதம் வெளியாகிள்ளது டெக்ஸின்,,,,,
"""""The Magic Moment Special"""""
வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வரும் இந்த MMS எடிட்டருக்கு மட்டுமல்லாமல் நமக்குமே வெரி வெரி ஸ்பெசல் மொமென்ட் தான்....!!!!
Super super தகவல்கள். Good job @விஜயராகவன்
Deleteஇத்தனை சாகசங்கள் புரிந்த நம் நிஜ நாயகருக்கு நாமெல்லாம் சேர்ந்து ஒரு விழா எடுத்தால் என்ன?
Deleteமுழுக்க முழுக்க வாசகர்கள் மட்டுமே இணைந்து நடத்தும் ஒரு பாராட்டு விழா!
ஓகே விஜய். விரைவில் செய்து விடுவோம்
Deleteநல்ல ஐடியா
Deleteசெம டெக்ஸ் பரகுடா மிஸ்ஸிங்
Delete"விலாவை" வைச்சுக்க நமக்கு இடப் பிரச்சனையே வராதுங்கோ - முக்குக்கு மூக்கு மூ. ச. இருக்கிமில்லியா? 💪
DeleteJokes apart, இன்னும் நெடும் தூரப் பயணம் காத்துள்ளது சார்! இப்போவே பஜ்ஜி - சொஜ்ஜி வாங்கிக்கொடுத்து, மாலை, கீலை போட்டு அனுப்பிட்டா ரிட்டயர்மென்ட் எபெக்ட் வந்திடும்!அதுக்கான வயசும் பொருந்திப் போகுது! So யூத்தா தொடருவோம் - கரணங்களை அடித்தபடிக்கே!
Deleteஎன்ன காரணம் சொன்னாலும் நீங்கள் யூத் தான் மாலை போட்டாலும். கண்டிப்பாக விழா உண்டு சார்.
Deleteக்ளா@ அட ஆமால்ல... கம்பேக்ல அது ஓரு லேண்ட்மார்க் கதை.. லிஸ்ட்ல சேர்த்திடலாம்..
Deleteஆசிரியர் சாரின் 1500வது புக் வரும்போது...
எடி ஜி,
ReplyDeleteகோடை மலர் 86 ,87 பற்றி பேசி இருந்தீர்கள் , இப்போது மறு பதிப்பு செய்வதாக இருந்தால் எதை கேட்பீர்கள் என்று உங்கள் ஆலோசனை என்ன வென்ற.
ஒரு நினைவூட்டல் தான்
பொங்கலுக்கு வரலாங்குது பட்சி
DeleteThe சூப்பர் ஸ்பைடர் ஸ்பெஷல்!
ReplyDeleteதானைத் தலைவனின் ஒரு முழு நீளக் கதையையும், இரண்டு குட்டிக் கதைகளையும் தாங்கி வந்திருக்கும் மறு பதிப்பு ஸ்பெஷல் இதழ்!
#1.பாட்டில் பூதம்
#2.சிகப்புத் தளபதி
#3.வீனஸ் கல் மர்மம்
நீதிக் காவலன் ஸ்பைடரின் மூன்று அதிரடி, சரவெடி, காதில் பூச்செண்டுகளையே தொங்க விடும் லாஜிக் இல்லா மேஜிக் சித்திரக் கதைகள்..
மூன்று கதைகளிலுமே சிடுமூஞ்சி ஸ்பைடர் அழகு மூஞ்சி ஸ்பைடராக காட்சி தருகிறான்.
1990-களில் ஹாலி டே சூப்பர் ஸ்பெஷல் இதழில் அச்சேறிய ஆறு சித்திரக்கதைகளில் பிரதானமான கதையாக இந்த பாட்டில் பூதம் வெளியாகியருந்தது..
அன்றைய நாளில் இதை எப்படிக் கொண்டாடினேனோ, இப்போதும் அதே உணர்வு மேலோங்குகிறது..
அதுவும் இப்போது மேக்சி சைசில், பெரிய பேனல்களில், பக்காவான அச்சுக் கோர்ப்பில், தெளிவான சித்திரங்களில், முழு நீளக் கதையாக இதை வாசிக்கும் போது எழும் பேருவகையை மட்டுப்படுத்த இயலவில்லை..
வழக்கம் போலவே காதில் பூச்சுற்றும் கதைக்கு இத்தனை பில்டப்பா என்ற கேள்விகள் சில நண்பர்களிடத்தில் எழலாம்..
காதலையும், காமத்தையும் அனுபவித்தாலே ஒழிய அதன் பூரணத்துவத்தை அடைய முடியாது..
அது போலவே தான் நம் குற்றச் சக்ரவர்த்தியின் கதைகளும்..
வாசிக்கும் பொழுது ஓர் ஆர்ப்பரிப்பு எழுவது இயல்பாய் நடந்து போகிறது..
ஆசிரியர் முழு நீளக் கதையாகக் கொடுத்தது மட்டுமல்லாமல் வசனங்களிலும் நிறைய இடங்களில் மாற்றி எழுதியுள்ளார்..
குறிப்பாக..
"குறட்டை வரமாலிருக்க எங்க மாமா உத்தரவாதமான ஒரு வழி சொல்லிக் கொடுத்தார்!
மூச்சை வேளியே விடவே கூடாதுங்கறது தான் அது!
அட.. சரிதான் போடா.. குரங்கு மூஞ்சிப் பயலே.. "
என்று பழைய பதிப்பில் ஸ்பைடரை நோக்கிய ஆர்டினியின் மனவோட்டமாக இந்த வசனம் அமைக்கப்பட்டிருந்தது..
ஆனால் தற்போது இந்த மின்சார 80'ல் அந்த வசனம்..
"குறட்டை வராமலிருக்க எங்க மாமா உத்தரவாதமான ஒரு வழி சொல்லிக் கொடுத்தார்!
மூச்சை வெளியே விடவே கூடாதுங்கறது தான் அது!
அதையே முயற்ச்சிக்கட்டா பாஸ்!"
இவ்வாறு எழுதப்பட்டுள்ளது..
ஸ்பைடரின் ரசிகர்கள் மனம் கோணக் கூடாது என்ற ஆசிரியரின் மனப் போக்கு இதிலே வெளிப்பட்டிருக்கிறது..!!
இந்த மூன்று கதைகளையும் ஏக் தம்மிலேயே வாசித்து முடித்தேன்.. சித்திரங்களை ரசித்தவாறே..!!
இரண்டாவது கதையான சிவப்புத் தளபதி!
லயன் காமிக்ஸின் 36-வது வெளியீடாக ஏப்ரல் மாதம் 1987ஆம் வருடம் வெளி வந்த கோடைமலரில் ஆறு கதைகளில் ஒரு கதையாக வெளி வந்திருந்தது..லயன் காமிக்ஸின் ட்ரேட் மார்க் சைஸான
பாக்கெட் சைஸில் குண்டு புத்தகமாக வந்திருந்தது..
முதல் கதையே சிவப்புத் தளபதிதான்..
புத்தகத்தை திறந்தவுடனேயை தலைவனின் தரிசனம்தானே கிட்ட வேண்டும்..
இந்த மின்சார எண்பது இதழின் மூன்றாவது கதையாக இடம் பெற்றிருக்கும் வீனஸ் கல் மர்மம் லயன் காமிக்ஸின் 50-வது மறக்கவியலா இதழான டெக்ஸ் வில்லரின் ட்ராகன் நகரம் (1988) கதை அடங்கிய இதழில் இடம் பெற்றிருந்த குட்டிக் கதை..!
தல யும், தானைத் தலைவனும் ஒரே இதழில்.. 🔥🔥🔥🔥🔥🔥
மூன்று ஸ்பெஷல் இதழ்களில் அதிரடி காட்டிய மூன்று ஸ்பைடர் கதைகளையும் இணைத்து சூப்பர் ஸ்பைடர் ஸ்பெஷலாகக் கொடுத்த எங்கள் ஆசான் திரு. விஜயன் அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகளும், வந்தனங்களும் ஒருங்கே. !!
க்ளாசிக் மறு பதிப்புகளில் மீண்டும் ஒரு வைரம் இந்த..
𝗧𝗛𝗘 𝗦𝗨𝗣𝗘𝗥 𝗦𝗣𝗜𝗗𝗘𝗥 𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟!
புத்தக வடிவமைப்பு பக்கங்கள்..கட்டங்க வேற லெவல்
Deleteபொம்ம பார்த்ததோட சரி.... இல்லியா கவிஞரே?
Deleteசார் பின்னூட்டம் போட்டேனே....ஸ்பைடரின் டாப் கதைன்னு....ஒரே தம்ல படிச்சாச்
Deleteசுட்டிக் குரங்கு கபீஷ்!
ReplyDeleteபால்யத்தின் அந்நாட்களை கொண்டாட்டத்தோடு வைத்திருந்த சித்திரக் கதைப் புத்தகங்களில் இந்த சுட்டிப் பயல் கபீஷிற்கு எப்போதுமே தனி இடம் உண்டு..
அதுவும் குறிப்பாய் இது போன்ற கானக விலங்குகளை மையப்படுத்தி வந்த கதைத் தொடர்கள் என்றால் அவ்வளவு கொள்ளைப் பிரியம்..!
நீண்ண்ட நெடு வருடங்களுக்குப் பிறகு, இதோ நமது லயன் குழுமத்திலிருந்து இதோ வந்தே விட்டது கபீஷ் தொடர்.. ❤️❤️❤️❤️
அதுவும் முழு வண்ணத்தில்.. 😍😍😍
என்றோ, பூந்தளிரிலும்,பைகோ பிரசுரத்திலும், பார்வதி சித்திரக் கதைகளிலும் வாசித்து மகிழ்ந்த கபிஷ் கதம்பம் இப்போது நமது கைகளில் தவழ்கிறது..
நம்ப முடியவில்லை..
எத்தனை வருடத் தவம் இது..
வாழ்வின் மறக்கவியலா ஆனந்தத் தருணமிது..
வரும் 2025- ம் வருடத்தின் இறுதிகளில் 50 அகவையைத் தொடவிருக்கும் நான் இபபோது மீண்டும் 8 வயது பாலகனாக மாறிப் போயிருக்கிறேன்.. 😍😍
இந்த உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க முடியாது..
இது ஆத்மபூர்வமான, அழகான அனுபவம்..
குதூகலித்துப் போய் கிடக்கிறேன்..
இதே போன்று காக்கை காளி, வேட்டைக்கார வேம்பு போன்ற தொடர்களும் வந்து விட்டால்...
ஆகா..
ஆகா..
மரணிக்கும் வயதிலும் இவைகளை வாசித்து, நேசித்து சிறு பிள்ளைகளாகவே செத்துப் போவோம்.. 😍😍😍😍
இந்த கபிஷ் & கோ வை கரம் பிடித்து வலுக்கட்டாயமாக கூட்டி வந்ததில் நம் அருமை நண்பர் ரபீக் அவர்களின் பங்கு அளப்பறியது..
அவருக்கு நமது நன்றிகளும், வணக்கங்களும் எப்போதும் உண்டு!!!
வரும் 27-12-2024 ம் தேதியன்று சென்னையில் நடக்கவிருக்கும் புத்தக விழாவில் கபிஷ் ஸ்பெஷல் -02 வெளியாக உள்ளது..
அந்நாளை வெகு வெகு ஆவலுடன் நோக்கி....
❤❤❤
DeleteSuper Guna
Deleteநன்றி சகோ.. 🙏🏻🙏🏻
Deleteகாக்கை காளி....வாண்டு மாமா கதைகள்
Deleteரொம்பவே எமோஷனல் ஆகியிருப்பது புரிகிறது சார்! ஏதோ ஒரு சிறு வடிவில், இந்தச் சின்ன வட்டத்திற்கு மகிழ்வுகளை கொண்டு வர நமக்கு சாத்தியமாவது புனித மனிடோவின் கருணையே!
Delete// மரணிக்கும் வயதிலும் இவைகளை வாசித்து, நேசித்து சிறு பிள்ளைகளாகவே செத்துப் போவோம்.. 😍😍😍😍 //
Delete🪸🪸🪸🪸🪸🪸🪸❤️ ❤️❤️❤️❤️❤️
ReplyDeleteடிசம்பர் -2024
𝗠𝗔𝗚𝗜𝗖 𝗠𝗢𝗠𝗘𝗡𝗧𝗦 𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟
நமது ஆசான் விஜயன் அவர்களின் ஆயிரத்துச் சொச்சம் இதழ்களைத் தாண்டிய,தமிழ் காமிக்ஸ் உலகத்தின் இமாலய சாதனையைக் கொண்டாடிடும் ஓர் இதழ்..!!
255-பக்க 𝗡𝗢𝗡-𝗦𝗧𝗢𝗣 அதிரடி, சரவெடி இதழ்..
முதல் பக்கத்தில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி பக்கம் வரை தீயாய் அனல் பறக்கிறது..
*"ஒரு தலைப்பில்லா தல யின் கதை!"*
என்று தலைப்பு வைத்திருக்கலாம் போல.. 😄😄😍😍
அதே போல டெக்ஸ் தோன்றும் கதை மட்டும் தான் இது..
என்ன தல.. பொடனியிலேயே போட்டுட்டாங்களா.. என்பது போல,
பொடனி அடி படலமும், பிட்டத்தில் சாத்து வாங்கும் படலமும் அமோகமாய் நடக்கிறது..
(எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே.. 😄😄)
ஒரு பயங்கச் சதிச் செயலின் விளைவாக டெக்ஸ் கைதியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்..
அவரது நண்பர் மொண்டாலஸ் டெக்சை விடுவிக்க அவரது நண்பரான ஜனாதிபதியைச் சந்தித்து டெக்சின் மரண தண்டனையை ஆயுள் தண்டணையாக குறைக்கிறார்..
தனிமைப் படுத்தப்பட்ட கொடூர சிறை ஒன்றிற்கு டெக்சை மாற்ற ஆயத்தங்கள் நடக்க..
தற்போதிருக்கும் சிறையிலிருந்து டெக்சை விடுவிக்க, நண்பர்கள் குழு முயற்சிக்க..
அடுத்தடுத்து தொடரும் பக்கங்கள் பட்டாசாய் வெடிக்கின்றன..
இக் கதையின் தொடரச்சி அடுத்த பாகமாக வரவிருக்கிறது..
அந்த பாகத்தையும் சேர்த்து ஒரே குண்ண்டு இதழாக ஹார்டு பவுண்டில் கொடுத்திருந்தால்.. கண்டிப்பாய் ஆசிரியரின் 1000+ இதழ்களின் தயாரிப்புகளுக்கு நியாயம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும்..!!
ஒரே மூச்சில் படித்து முடித்த இன்னொரு டெக்ஸ் கதை இது..
அடுத்த பாகத்திற்காக மரண வெய்ட்டிங்..
ஒலிவரோ,ஸோரோ,ஸமோரோ இவர்களின் முகத்தில் தல விடும் வெறித்தனமான முஷ்டிப் பிரயோகங்கள் மனக் கண் முன்னே நிழலாடுகின்றன..!!
Good review 👏🏻
Delete𝗧𝗵𝗮𝗻𝗸𝘀 𝗷𝗶 🙏🏻
Deleteசூப்பர் நண்பரே....ஜனவரிக்கு ரெண்டாம் பாகம் வந்தா செமயாருக்கும்
Delete
ReplyDeleteடிசம்பர் 2024
டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்.
இந்த கதையின் முந்தைய பாகங்களான கண்ணீருக்கு நேரமில்லை & பகைவருக்குப் பஞ்சமேது கதைகளை ஒரு முறை மேலோட்டமாகப் புரட்டி விட்டு இந்த டெக்சாஸ் ரேஞ்சர்ஸை வாசிப்பது நலம்!
அதற்காகப் பெரிய குழப்பவாத கதை என்றெல்லாம் எண்ணி விடாதீர்கள்..
அதே மாமூலான டெக்ஸின் நேர் கோட்டுக் கதைதான்..
கதை மாந்தர்கள் இன்னாரென்று மற்றுமொரு முறை தெரிந்து கொண்டால் கதை சுவாரஷ்யமாக இருக்கும்.
இந்தக் கதையும் அடுத்து தொடர்வது போலத்தான் தெரிகிறது..
ஏக் தம்மில் டெக்ஸ் கதைகளை வாசித்து விட்டு இது போன்ற தொடர் டெக்ஸ் வாசிப்பிற்கு பொசுக்கென்று தெரிகிறது.
கொஞ்ச நேரம் அசந்து போய்த் தூங்கி விட்டேன்.. அது ஒரு குத்தமா? என்பது போல டெக்ஸ் எதிரிகளின் இடத்திலேயே ஹாயாக ஒரு குட்டித் தூக்கம் போட..
சுதாரித்துக் கொண்ட வில்லன் கோஷ்டி டெக்ஸை போட்டுத் தள்ள ரெடியாக..
சட்டென்று டெக்சின் ஒன்பதாம்(?) அறிவு விழித்துக் கொள்ள..
படுத்திருந்த நிலையிலேயே பாய்ந்தெழுந்து டைனமைட்டின் மீதேறி பிஸடல்களை முழக்கிக் கொண்டே அருவிப் பாய்ச்சலில் அங்கிருந்து தப்பி ஓடுகிறார்.. (குதிரையோடுதான்..)
செம்ம மாஸ் சீன்..
(ஆனாக்கா.. அத்தன தோட்டாக்கள்லயும் ஒன்னு கூட எங்க தல மேல படல..
எப்பூடி எங்க தலயோட தில்லு.. 😄)
அப்பறம் என்னங்க.. தோஸ்த்களோட உதவியோட வில்லன்ஸ்ஸ புடிசசு நீதிய நெல நாட்டிட்டு இன்னொரு ஜிகிரி தோஸ்த்த பாக்க கெளம்பிடறாரு..
அதோட வணக்கம் போட்டுட்டாங்க..
ஜாலியாக எடுத்தவுடன் படித்திட வேண்டுமா..?
இதோ இந்த டெக்ஸாஸ் ரேஞ்சர்கள் அதற்கு உத்தரவாதம் கொடுக்கிறார்கள்!!
// அத்தன தோட்டாக்கள்லயும் ஒன்னு கூட எங்க தல மேல படல..
Deleteஎப்பூடி எங்க தலயோட தில்லு //
அவர்களுக்கு தல அளவுக்கு சரியா குறி பார்த்து சுட தெரியல என சொல்லுங்க 😀
டிசம்பர் -2024
ReplyDeleteசட்டைப் பையில் சாவு!
98 பக்க ஒரு மிரட்டலான திகில் திரில்லர்...
அமானுஷ்யங்கள் நிறைந்த ஒரு வீடு..
கணவனை இழந்த பெண்ணொருத்தி..
அவளின் அன்பு மகன்..
கதை தொடங்கிய இரண்டாவது பக்கத்திலேயே மிரட்டும் ஓவியங்கள் தெறிக்க விடுகின்றன..
(இது மட்டும் வண்ணத்தில் வ்ந்திருந்தால் அள்ளு விட்டிருக்கும்!!)
குளிர் சாதனப் பெட்டியில் தோன்றும் துண்டிக்கப்பட்ட குருதிக் களரி தலை..
சிறுவனின் மணல் வீட்டிலிருந்து கிளம்பும் அந்த விசித்திர உருவம்..
அதிலும் அந்த பையனின் தந்தை தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுக்கும் வழி முறை இது வரை நாம் காணாதது..
அதுவும் சருக்கை கழுத்தில் மாட்டிக் கொண்டு, கொடூர சிரிப்போடு தலையைத் துண்டித்துக் கொள்ளும் காட்சிகள் முதுகுத் தண்டை சில்லிட வைக்கின்றன..
கழுத்து அறுபடுவது ஒரு பேனலில்..
குரூர சிரிப்பொன்று இதழோரம் இழையோட..அடுத்த பேனலில்
கடைவாய் ஓரம் இரத்தத் துளிகள் கசிந்தோட..
மறு பேனலில் விழிகள் பிதுங்கி தெறித்து விழ தயாராயிருக்க..
சரேலென சுருக்குக் கயிறு இழுபட..
துண்டாய் வெட்டிப் போய் விழும் அந்தத் தலை.....
ஓவியர் தூரிகைக்குப் பதிலாக கத்தி முனையைப் பயன்படுத்தி வரைந்திருக்கிறார் போல....
ரண களம்..!! இதழ் முழுதுமே ஓவியங்களே கதை சொல்கின்றன..
அந்த அமானுஷ்ய பிரம்மைத் தோற்றங்களும், கொடூரக் கனவுகளும் சட்டென்று நிஜத்தில் நிகழ்ந்து போக..
நாமோ மிரண்டு போகிறோம்..
கதையின் இறுதிப் பக்கத்திற்கு முன்பு எல்லாம் முடிந்து போனது என்று நாம் என்னும் வேளையில் அமானுஷ்யங்கள் முடிவுறா கடைசிப் பக்கம் தொடர்கிறது...
புத்தகத்தை வாசித்து முடித்து மூடி வைக்கும் வேளையில்...
"எதுவுமே இன்னும் முடியல.."
என்ற அந்த சின்னப் பையன் டேன்னியின் வார்த்தைகளை யாரோ காதோரம் கிசுகிசுப்பது போன்ற உணர்வு..!!!
அருமை சகோ
Deleteசெம 😊
Deleteநன்றி கடல்.. 🙏🏻
DeleteThanks பரணி.. 🙏🏻🙏🏻
Deleteசூப்பர்
Delete
ReplyDeleteஅடிமையாய் தோர்கல்!
டிசம்பர்-2024
பயமுறுத்தும் கருங்கடலும், அத்துவான வனாந்திரங்களும், சுட்டெரிக்கும் பாலைவனக்களும், அதன் புழுதிப் படலங்களுமே தோர்கல் தொடரின் முத்திரைகள்..
இந்த இதழிலும் அவைகளே பிரதானமாகிப் போகின்றன..
அடிமைகளின் வியாபாரக் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் தோர்கலும் அவன் குடும்பமும் படும் முடிவுறா இன்னல்களைச் சொல்லும் ஒரு கதை, அல்லது சோக காவியம்..
வழக்கம் போலவே புதிரான மாந்தர்களிடமும், புதிரான பிராந்ததியங்களிலுமே மாட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க நடத்தும் ஜீவ, மரணப் போராட்டமே தோர்கல் தொடரின் அடிநாதம்!
இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் இரு கதைகளுமே அதையே படு சுவாரஷ்யமாகச் சொல்லிச் செல்கிறது..
மனித வேட்டை ஒன்று ஆரம்பமாகிறது..
பலவீனமடைந்த ஜனங்களை ஓடவிட்டு புறமுதுகில் அம்பெய்து கொள்ளும் மூர்க்கத்தனம்..
வழி தெரியாமல் விழி பிதுங்கி ஓடுபவர்கள் அம்பு துளைத்து வீழ்ந்து போக..
தோர்கலின் மதிநுட்பம் தன் வேலையைக் காட்டுகிறது..
வேட்டையர்களே வேட்டையாடப்படும் விசித்திரம் அங்கே நிகழ்ந்து போகிறது..
வேட்டை நிறுத்தப்படுகிறது..
அதன் பரிசாக தோர்கலும் அவன் குடும்பமும் விடுவிக்கப்படுகிறார்கள்..
அதற்கு முன்பாக..
பருந்துப் பார்வையில் விரியும் அந்த மனித வேட்டைக் களம்..
சமுத்திர அலைகளால் அடிக்கொரு தரம் அறையப்படும் அந்த திரிசூல வடிவ பாறை முகடுகள்..
ஆகா..
அதிர வைக்கும் ஓவிய மாயம்..
தப்பி ஓடும் கிழவனின் மெலிந்த தேகம்..
என்னருமைக் குழந்தாய்.. என்னைத் தெரியவில்லையா..
நான்தான் மெலாஸ் தாத்தா..
என்று கெஞ்சும் அந்தக் கிழவனில் விழிகளில்தான் எத்தனை எத்தனை மிரட்சி..
அதை இழகழ்ச்சியாகப் பார்க்கும் இளவரசனின் முக பாவம்..
அடுத்த பேனலில் 'சத்' என்று அம்பு தாக்க, 'சொத்' என்று கிழவன் செத்துப் போக..
ஓவியனின் தூரிகைப் பேரிகை!!
அடுத்தடுத்தப் பக்கங்களிலும், தொடரும் கடைசி பக்கங்கள் வரையிலும் வர்ணக் கலவை ஜாலங்கள் வாகை சூடுகின்றன..
இந்தக் கதையின் அடுத்த அத்தியாயமாக கிரிஸ் ஆப் வல்நார் கதை துவங்குகிறது..
உதிரிப் பூக்கள் திரைப்படத்திலே ஒரு எதிர்மறை கதாபாத்திரம்..
படம் நெடுகிலுமே அமைதியான ஆனால் அழுத்தமான வில்லத்தனமான ஒரு பாத்திரம்..
இப்படியும் ஒரு மனிதனா என்று வெறுப்புமிழச் செய்யும் அந்த பாத்திரம்..
ஆனால்..
படத்தின் இறுதிக் காட்சியிலே ஒட்டு மொத்த ஊரும் சேர்ந்து அந்த பாத்திரத்தை அடித்துக் கொல்ல முற்பட...
அந்த பாத்திரம் ஆதுரவோடு தன் குழந்தைகளைப் பார்க்கிறது..
மண்டியிட்டு குழந்தைகளை அள்ளி அணைத்துக் கொள்கிறது..
துளிர்க்கும் விழி நீரை மறைத்தவாறே வேக நடை நடந்து ஆற்றில் விழுந்து செத்துப் போகிறது..
ஒரு பேரமைதி..
படம் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்குமே அந்த பாத்திரத்தின் அனைத்து கெட்டவைகளும் மறந்து போய் ஒரு பச்சாதாபம் வந்து தொற்றிக் கொள்கிறது..
அதான் திருந்துன மாதிரி தெரியுதே..
உசுரோட இருந்திருக்கலாமே..
என முணு முணுக்கச் செய்கிறது..
இந்த கிரிஸ் ஆப் வல்நாரும் கிட்டத்தட்ட இதே பாத்திரமாய் மனதில் பதிந்து போகிறாள்..
தோர்கலும், ஆரிசியாவும், கதை மாந்தர்கள் யாவரும் ஓரம் கட்டி நிற்க..
கிரிஸ் ஆப் வல்நார் மொத்தக் கதையின் மையமாய் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறாள்.......
கதையின் கடைசி அரை பக்க பேனல்..
பரந்து விரிந்த பச்சைப் புல்வெளிப் பரப்பில் ஒரு தூரப் பார்வையில் தோர்கலும், ஆரிசியாவும் குழந்தைகளோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
மேகக் கூட்டத்தின் வெண் பஞ்சுப் பொதிகளாய் வல்நார் நம்மையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்..
சோகம் ததும்பும் அந்த மாய விழிகள் சொல்ல வருவது என்னவோ..?
ரொம்ப ரசித்து படித்து இருக்கீங்க 😊 நேரம் எடுத்து விரிவான விமர்சனம் எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻
Delete𝗧𝗵𝗮𝗻𝗸𝘀 𝗽𝗮𝗿𝗮𝗻𝗶.. 😍😍
Deleteசெம சூப்பர் நண்பரே
Delete//பயமுறுத்தும் கருங்கடலும், அத்துவான வனாந்திரங்களும், சுட்டெரிக்கும் பாலைவனக்களும், அதன் புழுதிப் படலங்களுமே தோர்கல் தொடரின் முத்திரைகள்..
Deleteஇந்த இதழிலும் அவைகளே பிரதானமாகிப் போகின்றன..//
அருமையா சொல்லி இருக்கீங்க சகோ
நன்றி.. ஸ்டீல் & கடல் ❤️❤️🙏🏻🙏🏻
Delete//மேகக் கூட்டத்தின் வெண் பஞ்சுப் பொதிகளாய் வல்நார் நம்மையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்..
Deleteசோகம் ததும்பும் அந்த மாய விழிகள் சொல்ல வருவது என்னவோ..?//
😥😥😥
குணா ஜி .என்ன ஒரு அட்டகாசமான விமர்சனம்!. பெரிய விமர்சனங்களைமுதலில் விமர்சனம் எழுதியவர் பெயரை படிக்காமல்
ReplyDeleteகடைசியில் இருந்து ஒவ்வொரு பேராவாகப் படித்துவிட்டு எழுதியவர் யார் என்று யோசிப்பேன்.இந்த விமர்சனம் அனேகமாக g.p.சார் அல்லது அறிவரசு ரவி சார் என்று நினைத்தேன்.ஆனால், அடடே .ஆச்சர்யக் குறி ! தோர்கலைமறுபடியும் படிக்க தோன்றுகிறது.
𝗧𝗵𝗮𝗻𝗸𝘀 𝗿𝗮𝗷𝗮𝘀𝗲𝗸𝗮𝗿𝗮𝗻..
Deleteசார் .சதம் அடிக்கும் உழைப்பு உங்களது மற்றும் நமது டீமுடையது . ஆனால் எங்க லயன் இந்த வருடம் 100 என்று சட்டை காலரை தூக்கி விட்டு திரியும் தெனாவெட்டான பெருமை எங்களுடையது.அதை இழக்க மனமில்லைங்க சார் .நம்மால் முடியும் .முயற்ச்சிப்போம். சார்
ReplyDeleteஜனவரியில் இங்கிலீஷ் புக்சையும் சேர்த்தால் 15 சார் ; அநேகமாய் அதுவே ஒரு ரெகார்டு தான் 💪
DeleteThis comment has been removed by the author.
Deleteஇது சந்தா புத்தகங்களை சேர்தா இல்லை சேர்காமலா சார்?
Deleteஎப்டில திருந்துன மக்கா
Deleteஒன்ன மாதிரியாலே 🤔
Delete//ஜனவரியில் இங்கிலீஷ் புக்கையும் சேர்த்தால்15.அநேகமாய் அதுவே ஒரு ரெக்கார்டு தான்//.சூப்பர்ங்க சார்.இந்த 2025 .நமக்கு புது புது உயரங்களை தொடும் ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன் சார்
ReplyDeleteகபீஷ் பாகம் 2 - 1; லக்கி லூக் மறுபதிப்பு - 2; மும்மூர்த்திகள் (மாயாவி, லாரன்ஸ் டேவிட், டிரவுசர் பாண்டி) - 3; கருப்பு வெள்ளை கிராஃபிக் நாவல் - 1; லயன் புக்ஸ் ஆங்கிலம் - 3 + தமிழ் - 3; ரெகுலர் சந்தா இதழ்கள் 3 = மொத்தம் 16 வருகிறது சார் 😊
Deleteடவுசர் பாண்டி..!!!
Deleteபரணி.. 😂😂😂😂😂😂
😂😂😂😂😂
Delete😀😃😄😆😅
ReplyDelete2025 year begins with a BANG 🔥
ReplyDeleteWhat a combo😳
தல🏇 - தளபதி🐯 - வேதாளர்🥷🐎🦮
3 சூப்பர் ஸ்டார்ஸ் இன் ஒன் month 🥰
அதிலும் ஒரு வருடத்திற்கு பிறகான தளபதியின் வருகைக்கு செம்ம வெயிட்டிங்⏰
(தலைப்பு தான் கொஞ்சம் ஒரு மாதிரி உள்ளது... கதையை படிக்கும் போது சரியாக இருக்குமோ 😊)
Ini ஒவ்வொரு வருட ஜனவரியிலும் இந்த combo அமைந்தால் மாஸ் தான்💥💥💥
🔥🔥🔥
DeleteThe Butcher of Cincinatti
DeleteThe Siren of Vera Cruz
ஒரிஜினல் ஆல்பங்களின் பெயர்கள் நண்பரே...
//ஒவ்வொரு வருட ஜனவரியிலும் இந்த combo அமைந்தால் மாஸ் தான்💥💥💥//
Deleteஅடுத்த மூன்றாண்டுகளுக்காவது சாத்தியம் சார் - காத்துள்ள 6 இளம் டைகர் கதைகளும் டபுள்ஸ் தான் என்பதால்!
தோர்கலின் இந்த பிரயாணத்துக்கு முன் அட்டைப்படத்தில் கிறிஸ் ஆப் வல்நார் இருப்பதே சரி, மனதில் இடம் பிடித்து செல்கிறாள், அடிமையாய் தோர்கல் தலைப்பு சரியாக பொருந்தியுள்ளது, சூழ்நிலை கைதியாய் வலம் வரும் தோர்கல்.
ReplyDeleteகிறிஸும், ஆரிசியாவும் கட்டி அனைத்து கொண்டு விடை பெறும் போது மனது கனக்கிறது.
உண்மை 😊
Deleteவிஜயன் சார், அடுத்த 10 நாட்கள் விடுமுறை. படிக்க நமது காமிக்ஸ் புத்தகங்கள் எதும் இல்லை. ஜனவரி புத்தகங்களை விரைவில் அனுப்பி வைக்க முடியுமா சார்?
ReplyDeleteகடைகளில் (டிசம்பர் இதழ்கள்) விற்க அவகாசம் அவசியமன்றோ சார்?!
DeleteThis comment has been removed by the author.
Deleteகடந்த மாதம் முதல் காமிக்ஸ் புரட்சி ஏற்பட்டு வருகிறது சார்; சேலம் புத்தக திருவிழா இதற்கு ஒரு ஆரம்பம்! கடைகளிலும் அடுத்த புத்தகம் எப்போது என்ற கேள்வி விரைவில் ஏற்பட தொடங்கும்! எனவே விரைவில் புத்தகங்களை அனுப்பிவையுங்கள் சார்!
Deleteசார், கபீஷ் பற்றி நமது விற்பனை முகவர்கள் என்ன சொல்ல்கிறார்கள் சார்?
ReplyDelete