நண்பர்களே,
வணக்கம். வருஷத்தின் ஒரு அழகான வேளையினில் பயணம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்!! டிசம்பர்களுக்கும், மார்கழிகளுக்கும் ஒரு விவரிக்க இயலா யௌவனம் உண்டென்பேன் - at least எனது கபாலத்துக்குள்! சிலுசிலுவென்ற அந்த அதிகாலைப் பொழுதுகள்; தொலைவில் கேட்கும் மார்கழி பஜனைகள்; மப்பும் மந்தாரமுமான பகல் பொழுதுகள்; ஓராண்டின் இதழ்களை வெற்றிகரமாய்ப் பணிமுடித்த திருப்தி; புதிதாய் அடுத்த 12 மாதங்களுக்கென காத்திருக்கும் சவால்கள் தரும் பரபரப்பு; கூப்பிடு தொலைவிலிருக்கக் கூடிய சென்னைப் புத்தக விழா ; அதற்கென நாம் அடிக்கும் பல்டிக்கள் - என கடந்த ஒரு டஜன் ஆண்டுகளாய் இந்த வேளைகளை ரசித்திட நிரம்பவே காரணங்கள் இருந்து வந்துள்ளன!
And இந்த முறையோ கூடுதலாய் இரண்டு காரணங்களும் கிட்டியுள்ளன - நமது நண்பர்களின் உபயங்களில்!
- மூன்று தினங்களுக்கு முன்பாய் நண்பர் ரஃபீக் ராஜா அனுப்பியிருந்த தகவல் இது!
1972 முதலாய் இது வரை நமது குழுமம் வெளியிட்டிருக்கும் இதழ்களின் மொத்த எண்ணிக்கை : 1304
- And அதன் மறுநாளே சேலத்திலிருந்து நண்பர் டெக்ஸ் விஜயராகவன் அனுப்பியிருந்த புள்ளி விபரம் இது!
*2012 கம்பேக் ஆனதில் இருந்து பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியீடுகள் ஆண்டுவாரியாக....*
2012---14
2013---24
2014---36
2015---48
2016---58
2017---52
2018---52
2019---52
2020---47
2021---46
2022---45
2023---61* (Record)
2024---67#(New Record)
ரெகார்டு பிரேக்கிங் இயர் மீண்டும்....🤩🤩🤩🤩🤩
நிறைய தபா கிரிக்கெட் போட்டிகளின் முடிவின் போது மைக்கை நீட்டி நிற்கும் ஊடகவியலாளர்களின் மாமூலான கேள்விக்கு வீரர்கள் மாமூலான ஒரு பதிலைச் சொல்லுவதைப் பார்த்திருப்போம்! “இல்லீங்க... பேட்டிங் பண்றச்சே ஸ்கோர்போர்ட்டை அடிக்கொரு தபால்லாம் பாக்குறது இல்லீங்க! சென்சுவரிக்குக் கிட்டே கீறேன் என்பது தெரியும் தான்; ஆனா எவ்ளோ நெருக்கத்திலே இருந்தேன்னு தெரியாது!" என்பது தானே அந்த டயலாக்? காது புளிக்க இதே வரியினை வெவ்வேறு ப்ளேயர்கள் ஒப்பிக்கும் போதெல்லாம் என் மூஞ்சில் சன்னமான ஒரு நக்கல் புன்னகை விரிந்திடுவதுண்டு! But இந்த நொடியில் லைட்டாக ஒரு கேள்வி தலைக்குள் ஓடுகிறது - அவுக சொன்னதுலாம் லுலாயிக்காக அல்ல ; மெய் தானோ?” என்று! Of course அந்த ஜாம்பவான்களோடு இந்த ஜாம் பஜார் ஜக்கு ஒப்பீட்டுப் போட்டிகளுக்குப் போகும் குடாக்குத்தனமான அபிப்பிராயங்களெல்லாம் கிஞ்சித்தும் நஹி; yet ஒரேயொரு சின்ன விஷயம் மட்டும் ஜாம்பவான்ஸ் & ஜா.ப.ஜ.வுக்கு மத்தியிலே ஒத்துப் போகிறதோ? என்ற எண்ணம் :
When in the midst of something engrossing - maybe we just tend to lose track of numbers! So மாதாமாதம் அடுத்தடுத்த பணிகளுக்குள் டைவ் அடிப்பது ஒரு தொடர்கதையாகவே கடந்த 144 மாதங்களும் இருந்து வந்திருக்க - நண்பர்கள் தோண்டியெடுத்திருப்பது போலான நம்பர்கள் சார்ந்த மைல்கற்களை இந்த ஆந்தைவிழிகள் கூட கோட்டை விட்டிருந்தன! Of course - 50வது ஆண்டுமலர்; 40வது ஆண்டுமலர்; இதழ் # 500; 400 போன்ற landmarks தாமாய் நம்மை எதிர்கொண்டு விடும்! So அவற்றை நினைவில் கொண்டிட பெரும் கம்பு சுத்தும் ஜாகஜங்களெல்லாம் அவசியமாவதில்லை! ஆனால் - ஒரு அரை நூற்றாண்டுப் பயணத்தினில் நமது குழுமம் தெறிக்க விட்டிருக்கும் மொத்த இதழ்களின் நம்பர்கள் பற்றியோ; ஒரு தெறி வேக ஆண்டின் ஒட்டுமொத்த output பற்றியோ track பண்ணிட தோன்றியதில்லை தான் ! So நண்பர்கள் தந்திருக்கும் நம்பர்களை பேந்தப் பேந்த முழித்தவாறே உள்வாங்கிட முனைந்து வருகிறேன்!!
- 1972 முதலாய் முத்து காமிக்ஸ் - 1987-ல் எனது பொறுப்பிற்கு வரும்வரை 166 இதழ்கள்
- 1982-ல் முத்து காமிக்ஸ் வாரமலர் - 21 இதழ்கள்
- நடுவே கொஞ்சமாய் முத்து மினி காமிக்ஸ் - maybe 7 இதழ்கள்
-இவை மூன்றுமாய் சேர்ந்து approx. 195 புக்ஸ்!
- So இவை நீங்கலாக பாக்கி 1110 நம்பள் கி கணக்கில்! நாற்பது ஆண்டுகளின் பணிக்கு இது அத்தனை அசுரத்தனமான நம்பராகத் தெரியாது போகலாம் தான்; பச்சே - நண்பர் STV தந்திருக்கும் புள்ளி விபரத்தின் ஒரு பகுதியைப் பாருங்களேன்!
- 2012 to 2024 வரை வெளியான மொத்த இதழ்கள் : 606
- Which means நமது மீள்வருகைக்குப் பின்பான கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகவே, ஆண்டொன்றுக்கு சராசரியாய் 50 புக்ஸ் தொடர்ச்சியாய் வெளியிட்டிருக்கிறோம்!
- Which again means - ஒற்றை மாதம் பாக்கியில்லாமல் கடந்த 12 ஆண்டுகளில் - வாரத்துக்கு ஒரு புக் வீதம் போட்டுத் தாக்கியிருக்கிறோம்!
- I agree - இந்த நம்பரில் மறுபதிப்புகளும் நிரம்பவே இடம்பிடித்திருக்கும். தான்; ஆனால் பழசோ - புதுசோ ஒரு புத்தகத் தயாரிப்பினில் உள்ள பணிகள் கிஞ்சித்தும் மாறிடப் போவதில்லை! So நான் ஃபோகஸ்லைட்களுக்கு முன்னே நின்று அபிநயம் பிடிக்கிறேனோ - இல்லையோ, திரைக்குப் பின்னிருந்து நம்மாட்கள் நில்லாது பம்பரமாய் சுழன்று கொண்டே தான் வந்திருக்கிறார்கள்!
- So இந்த பன்னிரண்டு ஆண்டுகளின் "606" is as much their record too - as it's mine !
- And not to forget - இந்த “606“ உங்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் சாகஸமுமே! நான் ஆடியது பரதமோ; பேட்டைக் குத்தோ - சகலத்தையும் ரஷ்ய பாலே டான்ஸர் ரேஞ்சுக்கு சிலாகித்து, ஊக்குவித்து, கரவொலி எழுப்பி நீங்கள் மட்டும் இல்லாது போயிருப்பின் - “ரா....ரா... சரசுக்கு ரா...ரா...” என்று சந்திரமுகி ஸ்டைலில் பூட்டியதொரு அறைக்குள் maybe ஒண்டியாய் ஆடிக் கொண்டிருந்திருப்பேன் தான்!
- Most importantly - “இது பூட்ட கேஸ் மாமூ..” என்று நம் காதுபடவே மக்கள் பேசியதொரு காலகட்டத்திற்குப் பின்பாகவும் நம்பிக்கை வைத்து, ஊக்குவித்து, வண்டியைத் தள்ளி விட்டு ஸ்டார்ட் எடுக்கச் செய்த பெருமையும் உங்களதல்லவா? அந்த முதல் ஆண்டைக் கடந்திருக்காவிட்டால், 606 என்ன - பப்பரமிட்டாய் கூட சாத்தியமாகியிராது! So நம்பர்கள் சொல்லும் சேதிகளின் பின்னணியில் நமது நாயக / நாயகியரின் முகங்கள் ஒரு பக்கம் தெரிகின்றதென்றால், உங்கள் அனைவரின் புன்னகை முகங்கள் மறுபாதியை வெளிச்சமாக்கி வருகிறது!
- Of course - இந்த "606" படலத்தினூடே ஏகமாய் மூ.ச. + மு.ச. விசிட்கள் விரவிக் கிடந்திருப்பதை மறுக்கவோ, மறக்கவோ மாட்டேன் தான்! ஆனால் ஒவ்வொரு மூ.ச./ மு.ச. விஜயத்துக்கும் பிற்பாடு, புத்துணர்ச்சியோடு நமது பயணம் தொடர்ந்திருப்பதற்கு இந்த நம்பர்களே சாட்சி! மோதிர விரல்கள் ஐயா உங்களது ; so நீவிர் டபுள் கொட்டு வச்சாலுமே, அவை வளர்ச்சிக்கான ரூட்டையே போட்டுத் தந்துள்ளன!
ரைட்டு...சென்டிமெண்ட்களைப் பிழிந்தது போதுமென்றால் நடப்பு ஆண்டின் மீதான ஒரு மீள்பார்வைக்குள் புகுந்திடலாமா folks ? இதோ - வரிசையாக 2024-ன் இதழ்களின் அணிவகுப்பு - நமது நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ள! கவனமாய் அவற்றை உள்வாங்கிக் கொண்டு தொடரவுள்ள கேள்விப் படலத்துக்கான பதில்களைப் பதிவு செய்திடுங்களேன் - ப்ளீஸ்?!
புதியவை : 53
மறுபதிப்புகள் : 14
நடப்பாண்டின் break-up இது! மறுபதிப்புகள் சகலமுமே புத்தக விழாக்களின் விற்பனைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதால் அது குறித்து நான் கேள்விகள் எதுவும் கேட்டிடப்போவதில்லை!
1. My question is - இந்தப் புதுசு 53-ல் நீங்கள் வாங்கியது எத்தனை? வாசித்தது எத்தனை?
2. நடப்பாண்டின் TOP 3 இதழ்களாக எவற்றைச் சொல்வீர்களோ?
3. நடப்பாண்டின் 'crisp வாசிப்பு” என்ற தீமுக்கு இந்த ஆண்டினில் ஓரளவுக்காவது நியாயம் செய்துள்ளோமா?
4. “அட்டைப்படம் of the year" என்ற பரிசைத் தருவதாயின் எந்த இதழுக்குப் பரிந்துரைப்பீர்கள்?
5. “அழுத்தமான கதைக்களம் of the year" என்ற தேர்வில் யாருக்கு முதல் மார்க் போடலாம் என்பீர்களோ?
6. 2024-ன் (புது) இதழ்களிலிருந்து மீள்வாசிப்புக்குத் தகுதி கொண்ட இதழ்களாய் எவற்றைப் பார்த்திடுகிறீர்கள்? Your Top 3 ப்ளீஸ்?
7. நடப்பாண்டின் 53 புது இதழ்களின் ஜான்ரா வாயிலான break up இது:
கௌபாய் கதைகள் : 12
அட்வென்சர் கதைகள் : 26
கார்டூன்ஸ் : 4
கிராபிக் நாவல்ஸ் : 6
டிடெக்டிவ் த்ரில்லர்ஸ் : 5
So ‘தல‘ டெக்ஸ் வில்லரோ; இன்ன பிற குருத பாய்ஸோ ஓவராய் இடங்களைக் கபளீகரம் செய்து வைத்திருப்பதான எண்ணங்கள் வெறும் பிரமைகளே என்றாகிறது!
My question is : இந்த ஸிஸ்டில் இன்னும் எதற்கு இடங்களைக் கூட்டலாம்? எதற்குக் குறைக்கலாம்? என்பதே ?
8. காமிக்ஸ் வாசிப்புலகிற்கு முற்றிலும் புதுசானதொரு நண்பருக்கு நடப்பாண்டின் ஏதேனும் ஒற்றை புக்கை மட்டும் வாசித்துப் பார்க்கக் கொடுக்க நினைத்தால் - எந்த புக்கை எடுத்து நீட்டுவீர்கள்?
9. நடப்பாண்டின் கிராபிக் நாவல்களை rate செய்வதாயின் எவ்விதம் பண்ணுவீர்களோ?
10. 2024: உயரத்திலிருந்து ஒரு கழுகுப் பார்வையில் இந்த ஆண்டின் நமது காமிக்ஸ் பயண அனுபவத்தினை எவ்விதம் வர்ணிப்பீர்கள் folks? In one word ?
ரைட்டு... கணிசமான கேள்விகளைப் போட்டுத் தாக்கிய கையோடு, ஜனவரியின் பணிகளுக்குள் ஐக்கியமாகிடப் புறப்படுகிறேன் folks!
And எப்போதும் போலவே - சந்தாவுக்கானதொரு நினைவூட்டலுமே! புத்தாண்டுக்கு மூன்றே வாரங்கள் எஞ்சியிருப்பதால், சந்தா எக்ஸ்பிரஸில் உங்களுக்கான சீட்டைப் போட்டு வைக்க கொஞ்சம் நேரம் ஒத்துக்கிடலாமே - ப்ளீஸ் ?
P.S : சேலம் புத்தக விழாவினில் விற்பனைகள் தூள் கிளப்பி வருகின்றன ! வரும் திங்களன்று நிறைவுற உள்ள விழாவில் already போன வருஷத்தின் விற்பனையை நெருங்கியாச்சு - சில பல செவிகளில் புகைப் படலங்கள் வெளிப்படுவதையும் மீறி !! காத்திருக்கும் இந்த வாரயிறுதியிலும் புனித மனிடோவின் ஆசிகள் + உங்களின் அன்பு தொடர்ந்திடும் பட்சத்தில், we just might be looking at a new sales record !!
போன ஞாயிறன்று ஸ்டாலில் நண்பர்களை சந்தித்தது மட்டுமன்றி, மதிய பிரியாணி விருந்திலும் கலந்து கொண்டது செம உற்சாக அனுபவமாய் அமைந்து போனது ! வழக்கமான அரட்டைகள் ; சந்தோஷங்கள் என்று அழகாய் பயணித்த தினம் அது !! And அன்றைய பொழுது அடைமழையின் மத்தியிலும் விற்பனையில் சாதித்த நம்பரானது - சேலத்தின் single day sales-க்கொரு புதிய உச்சமும் கூட !! இடையில் இரண்டோ, மூன்றோ தினங்கள் வருண பகவானின் அதீத கருணை மட்டும் கட்டையைப் போட்டிருக்காவிடின் - "சென்னைக்கு அடுத்தபடியான புத்தக விழா விற்பனை" என்ற இரண்டாமிடத்தினை இந்நேரத்துக்கே சேலம் தட்டிச் சென்றிருக்கும் !! இன்னமும் உள்ள 2 தினங்களில் ஈரோட்டைப் பின்னுக்குத் தள்ளி சாதனை செய்திட முடிகிறதாவென்று பார்ப்போமே ? God speed சேலம் !!!
ஹி
ReplyDeleteஎன்ன சிரிப்பு 😊
Deleteவாழ்த்துகள் தம்பி
Deleteஅவசரத்துல ஹி னு வந்திருச்சு அண்ணா
Deleteவாழ்த்துகள் தம்பி// நன்றி சகோ 😊
Deleteவாழ்த்துக்கள் தம்பி
Deleteநன்றி செந்தில் சத்யா அண்ணா😊
DeleteThank you
ReplyDeleteHello everyone
ReplyDeleteஎன்னடா இது அவசரத்துல ஹி னு வந்திருச்சு😂😂😂
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete1st 🤭😂
ReplyDeleteஆமாம் கார்த்திக்
Delete😊🥳
Deleteசேலம் புத்தக திருவிழா விற்பனை விபரம் மகிழ்ச்சியை தருகிறது சார் 😊
ReplyDeleteஆஹா
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteஅனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
ReplyDelete17th
ReplyDelete.இந்தப் புதுசு 53-ல் வாங்கியது 53! வாசித்தது 49!
ReplyDelete2. நடப்பாண்டின் TOP 3 Largo, Stern, தாத்தாஸ்.
Deadwood dick was also ver y close to this three
3. 'crisp வாசிப்பு” ofcourse
4. “அட்டைப்படம் of the year" Bruno brazil
5. “அழுத்தமான கதைக்களம் of the year" கண்ணீருக்கு நேரமில்லை
6. 2024-ன் (புது) இதழ்களிலிருந்து மீள்வாசிப்புக்குத் தகுதி கொண்ட இதழ்களாய் எவற்றைப் பார்த்திடுகிறீர்கள்? Your Top 3 ப்ளீஸ்? All young tex
7.My question is : இந்த ஸிஸ்டில் இன்னும் எதற்கு இடங்களைக் கூட்டலாம்? Graphic novels
எதற்குக் குறைக்கலாம்? Nothing
8. காமிக்ஸ் வாசிப்புலகிற்கு முற்றிலும் புதுசானதொரு நண்பருக்கு நடப்பாண்டின் ஏதேனும் ஒற்றை புக்கை மட்டும் வாசித்துப் பார்க்கக் கொடுக்க நினைத்தால் - எந்த புக்கை எடுத்து நீட்டுவீர்கள்? TeX of course
9. நடப்பாண்டின் கிராபிக் நாவல்களை rate செய்வதாயின் எவ்விதம் பண்ணுவீர்களோ? 100/10
10. 2024: உயரத்திலிருந்து ஒரு கழுகுப் பார்வையில் இந்த ஆண்டின் நமது காமிக்ஸ் பயண அனுபவத்தினை எவ்விதம் வர்ணிப்பீர்கள் folks? In one word ?
Gorgeous
நானும் ஆஜர்
ReplyDeleteHi..
ReplyDelete//இன்னமும் உள்ள 2 தினங்களில் ஈரோட்டைப் பின்னுக்குத் தள்ளி சாதனை செய்திட முடிகிறதாவென்று பார்ப்போமே ? // congrats Salem
ReplyDeleteMe in😘🥰💐
ReplyDelete🙏👍🙏👍
ReplyDelete//சேலம் புத்தக விழாவினில் விற்பனைகள் தூள் கிளப்பி வருகின்றன ! வரும் திங்களன்று நிறைவுற உள்ள விழாவில் already போன வருஷத்தின் விற்பனையை நெருங்கியாச்சு - சில பல செவிகளில் புகைப் படலங்கள் வெளிப்படுவதையும் மீறி !! காத்திருக்கும் இந்த வாரயிறுதியிலும் புனித மனிடோவின் ஆசிகள் + உங்களின் அன்பு தொடர்ந்திடும் பட்சத்தில், we just might be looking at a new sales record !!//
ReplyDeleteசூப்பருங்க ஆசிரியரே
இன்னும் அதிகமாக விற்பனையில் சாதிக்க வாழ்த்துகள்
This comment has been removed by the author.
ReplyDelete//2024---67#(New Record)//
ReplyDeleteசெம செம 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
1. My question is - இந்தப் புதுசு 53-ல் நீங்கள் வாங்கியது எத்தனை? வாசித்தது எத்தனை?
ReplyDeleteஎல்லாமே வாங்கியாச்சி சார்,ஜூலை இதழ்கள் மட்டும்,அக்டோபர் இதழ்கள் மட்டும் இன்னும் படிக்கலை,அப்புறம் கிராஃபிக் நாவல் துணைக்கு வந்த மாயாவி,ஆக 9 புக்ஸ் போக மீதி 44 புத்தகங்களை படிச்சாச்சி சார்...
2. நடப்பாண்டின் TOP 3 இதழ்களாக எவற்றைச் சொல்வீர்களோ?
படித்த வரைக்கும் பிடித்த இதழ்கள்னு தோணுவது,
1.பனி மண்டலப் போராளிகள்,
2.தோர்கல்,
3.வேங்கை என்றும் உறங்காது...
3. நடப்பாண்டின் 'crisp வாசிப்பு” என்ற தீமுக்கு இந்த ஆண்டினில் ஓரளவுக்காவது நியாயம் செய்துள்ளோமா?
கண்டிப்பாக பெரும்பாலான இதழ்கள் பிடித்தே இருந்தன...
4. “அட்டைப்படம் of the year" என்ற பரிசைத் தருவதாயின் எந்த இதழுக்குப் பரிந்துரைப்பீர்கள்?
பெருசா எதுவும் தோணலை,இருந்தாலும்,ஸ்டெர்ன்,ஜாரோப்,ப்ரூனோ பிரேஸில்,மிஸ்டர் நோவின் கானகத்தில் கருப்பு நிழல் போன்ற இதழ்களின் அட்டைப் படங்கள் ஏதோ ஒரு வகையில் ஈர்த்தது...
டெக்ஸின் பனி மண்டலப் போராளிகள் ஸ்லிப் கேஸ் ஐடியா ரொம்பவே பிடித்திருந்தது...
5. “அழுத்தமான கதைக்களம் of the year" என்ற தேர்வில் யாருக்கு முதல் மார்க் போடலாம் என்பீர்களோ?
படித்தவரை டெட்வுட் டிக்,பெளன்சரின் சாபம் சுமந்த தங்கம்,பனிமண்டலப் போராளிகள்-இவைகளில் முதல் இரண்டு கதைகள் கொஞ்சம் அழுத்தமாகவும்,இராவாகவும்...
பனிமண்டலப் போராளிகள் கதை கொஞ்சம் அழுத்தமாகவும் இருந்தது...
6. 2024-ன் (புது) இதழ்களிலிருந்து மீள்வாசிப்புக்குத் தகுதி கொண்ட இதழ்களாய் எவற்றைப் பார்த்திடுகிறீர்கள்? Your Top 3 ப்ளீஸ்?
1.வேங்கை என்றும் உறங்காது,
2.MMS,
3.லார்கோவின் இரவின் எல்லையில்...
7. நடப்பாண்டின் 53 புது இதழ்களின் ஜான்ரா வாயிலான break up இது:
கௌபாய் கதைகள் : 12
அட்வென்சர் கதைகள் : 26
கார்டூன்ஸ் : 4
கிராபிக் நாவல்ஸ் : 6
டிடெக்டிவ் த்ரில்லர்ஸ் : 5
So ‘தல‘ டெக்ஸ் வில்லரோ; இன்ன பிற குருத பாய்ஸோ ஓவராய் இடங்களைக் கபளீகரம் செய்து வைத்திருப்பதான எண்ணங்கள் வெறும் பிரமைகளே என்றாகிறது!
My question is : இந்த ஸிஸ்டில் இன்னும் எதற்கு இடங்களைக் கூட்டலாம்? எதற்குக் குறைக்கலாம்? என்பதே ?
இந்த கூட்டணிகள் விற்பனை அளவுகளை சிறப்பாய் நகர்த்தி செல்வாதாயின் இதே வெற்றிகரமான கூட்டணி கொஞ்ச காலங்களுக்குத் தொடர்வதில் தவறில்லை...
8. காமிக்ஸ் வாசிப்புலகிற்கு முற்றிலும் புதுசானதொரு நண்பருக்கு நடப்பாண்டின் ஏதேனும் ஒற்றை புக்கை மட்டும் வாசித்துப் பார்க்கக் கொடுக்க நினைத்தால் - எந்த புக்கை எடுத்து நீட்டுவீர்கள்?
முதன்முதலா வர்றவருக்கு அழுத்தமா ஏதாவது கொடுத்தா தெறிச்சி ஓடிடுவாரு,அதனால் சிம்பிளா டெக்ஸ் புக்கில் ஒன்றை கொடுத்து அழகான ஒரு ஆக்ஷன் பிளாக்கை வாசிச்சிட்டு வாங்கன்னு அனுப்பிட வேண்டியதுதான்...
9. நடப்பாண்டின் கிராபிக் நாவல்களை rate செய்வதாயின் எவ்விதம் பண்ணுவீர்களோ?
ஓகேவா இருந்தது சார்,எனினும் முந்தைய காலக்கட்டங்களை கூர்ந்து நோக்கும்போது அழுத்தம் ரொம்பவே குறைச்சல்தான்...
10. 2024: உயரத்திலிருந்து ஒரு கழுகுப் பார்வையில் இந்த ஆண்டின் நமது காமிக்ஸ் பயண அனுபவத்தினை எவ்விதம் வர்ணிப்பீர்கள் folks? In one word ?
ரொம்பவே சிறப்பான ஆண்டுதான் சார்,2023 ஆண்டு அளவுக்கு இல்லாம 2024 ரொம்பவே குறைச்சலான புக்ஸ்தானோன்னு ஆரம்பத்தில் தோணினாலும்,போகப் போக இடையில் வந்த ஸ்பெஷல் இதழ்களின் எண்ணிக்கையால் மகிழ்ச்சியின் அளவும் கூடியது...
இந்த மகிழ்ச்சி அடுத்த ஆண்டும் தொடரட்டும்...
// சேலம் புத்தக விழாவினில் விற்பனைகள் தூள் கிளப்பி வருகின்றன ! //
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி...
Chennai book fair special ennanga boss
ReplyDelete1. வாங்கிய புத்தகம்
ReplyDeleteஅனைத்தும் ,படித்தது கிட்டத்தட்ட 80% சதவீதம் புத்தகங்கள்
2. Top 3,
பனிமண்டல போராளிகள், comedy கடமையை கைவிடல்,
வேங்கை என்றும் உறங்காது
3. crisp வாசிப்பு- ஓகே என்று சொல்லலாம்.
4. அட்டைப்படம் of the year
பனிமண்டல போராளிகள்
5. அழுத்தமான கதை களம்-
அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
6. மீள் வாசிப்பது
வேங்கை என்றும் உறங்காத
பனிமலை போராளிகள்
பனிமலை முதலைகள்
7. கார்ட்டூன் கதைகளை ஏற்றலாம்
குறைப்பதற்கு ஏதுமில்லை
8. புதிய நண்பர்களுக்கு கொடுப்பதாயினால்.
அமானுஷ்யம் நிறைந்த திரில்லர் zagor in பனிமலை பலிகள்.
9.நடைபாண்டியன் கிராபிக்ஸ் நாவல்கள் rating 50/50
10. 2024 கழுகு பார்வையில்-
Good என்றை சொல்ல வேண்டும்.
My question is - இந்தப் புதுசு 53-ல் நீங்கள் வாங்கியது எத்தனை? வாசித்தது எத்தனை?
ReplyDeleteசென்னை புவி ஸ்பெஷலில் நான்கைந்து புத்தகங்கள் தவிர்த்து எல்லாவற்றையும் வாங்கியாச்சுங்க, 70% படிச்சாசுங்க ஆசிரயரே
அம்மா இந்த மாதம் புத்தகமும் மாண்ட்ரேக்கும் மட்டும் படிக்கனும்
2. நடப்பாண்டின் TOP 3 இதழ்களாக எவற்றைச் சொல்வீர்களோ?
பனிமண்டல போராளிகள்(டெக்ஸ்) தனி
இரவின் எல்லையில், சாபம் சுமந்த தங்கம், மாயமில்லை மந்திரமில்லை(தாத்தாஸ்)
3. நடப்பாண்டின் 'crisp வாசிப்பு”
கண்டிப்பாக ஆசிரியரே
4. “அட்டைப்படம் of the year"
ஸ்டெர்னின் மாயா எல்லாம் மாயா, சாபம் சுமந்த தங்கம், ப்ரூனோ பிரேசிலின் பனிக்கடலில் முதலைகள், தீபாவளி மலர்கள் அனைத்தும்
5. “அழுத்தமான கதைக்களம் of the year" என்ற தேர்வில் யாருக்கு முதல் மார்க் போடலாம் என்பீர்களோ?
மங்களமாய் மரணம்
6. மீள்வாசிப்புக்கு
இரவின் எல்லையில், மங்களமாய் மரணம், பனிமண்டல போராளிகள்
7.
கூட்டலாம்: கார்ட்டூன்ஸ் & கிநா
8. காமிக்ஸ் வாசிப்புலகிற்கு முற்றிலும் புதுசானதொரு நண்பருக்கு - எந்த புக்கை எடுத்து நீட்டுவீர்கள்?
அவர்களுக்கு எந்த வகை கதைக்களம் பிடிக்கும் என்பதை பொறுத்து
9. நடப்பாண்டின் கிராபிக் நாவல்களை rate செய்வதாயின் எவ்விதம் பண்ணுவீர்களோ?
அருமை, ஆர்வமூட்டின
10. 2024: In one word ?
அட்டகாசம்
606 kku oru special ithaz pls
ReplyDeleteவணக்கமுங்க
ReplyDelete1.all
ReplyDelete2.top 3. 1.இரவின் நிழலில். 2.வேங்கை என்றும் உறங்காது ., 3.மங்களமாய் மரணம்
ReplyDelete3.crispவாசிப்பு. yes
ReplyDeleteசென்னை புத்தக விழா reprint புத்தகங்கள் பற்றி சொல்லுங்கள் ஆர்வமாக இருக்கிறோம்
ReplyDelete4.அட்டைப்படம். பனிக்கடலில் முதலைகள்
ReplyDelete5.அழுத்தமான கதைக்களம். வேங்கை என்றும் உறங்காது
ReplyDelete6.மீள் வாசிப்பு. லயன் லக்கி 40வதுஆண்டுமலர்
ReplyDelete1 My question is - இந்தப் புதுசு 53-ல் நீங்கள் வாங்கியது எத்தனை? வாசித்தது எத்தனை?
ReplyDeleteவாங்கியது 48
வாசித்தது அத்தனையும்
10.திருப்தி.
ReplyDelete2. நடப்பாண்டின் டாப் 3 இதழ்கள்
ReplyDelete1.டின் டின்
2.பாலைவனப் போராளிகள்
3. வேங்கை என்றும் உறங்காது
3.நடப்பாண்டின் டாப் 3 அட்டை படங்கள்
ReplyDelete1.இரவின் எல்லையில்
2.கபீஷ் ஸ்பெஷல் 1
3.ஒரு பண்ட மாற்று படலம்
சூப்பர் தோழரே
Delete3. நடப்பாண்டின் 'crisp வாசிப்பு” என்ற தீமுக்கு இந்த ஆண்டினில் ஓரளவுக்காவது நியாயம் செய்துள்ளோமா?
ReplyDeleteமுழுவதுமாகவே நியாயம் செய்துள்ளீர்கள்
ஆமாம்.
Delete5. “அழுத்தமான கதைக்களம் of the year" என்ற தேர்வில் யாருக்கு முதல் மார்க் போடலாம் என்பீர்களோ?
ReplyDeleteதோர்கல் & பவுன்சர்
6. 2024-ன் (புது) இதழ்களிலிருந்து மீள்வாசிப்புக்குத் தகுதி கொண்ட இதழ்களாய் எவற்றைப் பார்த்திடுகிறீர்கள்? Your Top 3 ப்ளீஸ்
ReplyDelete1.யங் டெக்ஸ்
2.வேங்கை என்றும் உறங்காது
3.பனி மண்டல போராளிகள்
My question is : இந்த ஸிஸ்டில் இன்னும் எதற்கு இடங்களைக் கூட்டலாம்? எதற்குக் குறைக்கலாம்? என்பதே ?
ReplyDeleteடிடெக்டிவ் திரில்லர் கூட்டலாம்
கிராஃபிக் நாவல் குறைக்கலாம்
வந்துட்டேன்...
ReplyDelete8. காமிக்ஸ் வாசிப்புலகிற்கு முற்றிலும் புதுசானதொரு நண்பருக்கு நடப்பாண்டின் ஏதேனும் ஒற்றை புக்கை மட்டும் வாசித்துப் பார்க்கக் கொடுக்க நினைத்தால் - எந்த புக்கை எடுத்து நீட்டுவீர்கள்?
ReplyDeleteபனி மண்டல போராளிகள்
9. நடப்பாண்டின் கிராபிக் நாவல்களை rate செய்வதாயின் எவ்விதம் பண்ணுவீர்களோ?
ReplyDeleteபத்துக்கு
ஐந்து
10. 2024: உயரத்திலிருந்து ஒரு கழுகுப் பார்வையில் இந்த ஆண்டின் நமது காமிக்ஸ் பயண அனுபவத்தினை எவ்விதம் வர்ணிப்பீர்கள் folks? In one word ?
ReplyDeleteவழக்கம் போல் சிறப்பு மிகச் சிறப்பு
1)வாங்கியது All.
ReplyDeleteவாசித்தது - 44.
2) சாபம் சுமந்த தங்கம்,
வேங்கை என்றும் உறங்காது,
பனிமண்டலப் போராளிகள்.
3) கண்டிப்பாக,
நேரத்தையும்,சோம்பலையும் வெகுவாக குறைத்துள்ளது.
4)பனிக்கடலில் முதலைகள் (அ) மாயா எல்லாம் மாயா.
5)பனி மண்டலப் போராளிகள் (அ) தென்றல் வந்து என்னைக் கொல்லும்.
6) சாபம் சுமந்த தங்கம்,
வேங்கை என்றும் உறங்காது,
மாயா எல்லாம் மாயா.
7)அட்வென்ஜர் 26- இதில் கொஞ்சம் குறைத்து க்ராபிக் நாவல்களை கொஞ்சம் ஏற்றலாம்.
8) நோ டவுட்- வேங்கை என்றும் உறங்காது.
9)All- 9/10.
10)2023 ஐ விட, தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளோடு களமிறங்கியுள்ள காமிக்ஸ்களில் 99% அட்டகாசமான கதைகளே.
குண்டு புக் இல்லாத குறையை,
பெளன்சர்,டெட்டிவுட் டிக்,ஸ்டென்,
லார்கோ,ப்ரூனோ,ஜாரோப் என்ற பல தெறிக்கதைகள் நிறைவு செய்து விட்டது.
"குண்டு புக்" இல்லைனாலும் இப்படிப்பட்ட கதைகள் -அந்த இடத்தை சரி செய்துவிடும்.
"டெக்ஸ் கதைகள்தான் டாப்" என்ற மாயையையும் இந்த வருடம் தூளாகிப்போனது.
உதாரணம்:- பெளன்சர்& டெட்டிவுட் டிக், ஜாரோப்.
இது போன்ற தெறி கதைகளுக்கு இன்னும் கூட முன்னுரிமை ஸ்லாட் தரலாம்.
Quick Reading என வந்த அனைத்து இதழ்களும் வாசகர்களுக்கு நேரத்தையும்,படிக்கும் சோம்பலையும் வெகுவாக குறைத்துள்ளது.
எதிர்பார்ப்புகள்:-.
மேற்கே போ மாவீரா,
தி ரோட்,
ஜெரெமயா,
போன்ற புதிய நாயகர்கள் கதைகளை வெளியிட ஆவண செய்ய வேண்டும்.
சென்ற வார சேலம் வாசகர்கள் சந்திப்பு என்றும் இனிமையான அனுபவம்.
உங்களுடனான நீண்ட நெடு நேர அண்மை,
அன்பான நண்பர் சேலம் விஜய்யின் இனிமையான உபசரிப்பு,
இனிய நண்பர் மஹியின் அன்பான உணவு,
நண்பர்களின் சந்தோஷமான உரையாடல்கள் என மனம் முழுக்க மகிழ்வு இன்றும் பசுமையாய் மனதில்.
வாழ்க காமிக்ஸ்/காமிக்ஸ் நண்பர்கள்.
நன்றி.
சூப்பர் சார்...ஈரோட்டை மிஞ்ச வாழ்த்துக்கள்
ReplyDeleteகௌபாய் கதைகள் : 12
ReplyDeleteஅட்வென்சர் கதைகள் : 26
கார்டூன்ஸ் : 4
கிராபிக் நாவல்ஸ் : 6
டிடெக்டிவ் த்ரில்லர்ஸ் : 5//
கி நாவை நாலாக்கி அட்வெஞ்சரை 28 ஆக்கலாம் லக்கி சிக்பில் தாண்டி எனக்கு கார்ட்டூன்கள் சுகிப்பதில்லை. ஆனால் மேகி, சோடா, தாத்தாக்கள் மாதிரியான கதைகள் சிரிக்க வைக்கிறது. ஸ்டெர்ன் மாதிரியான கதைகள் ஜானி வகையறாக்களைவிட பிடிச்சிருக்கு. இதெல்லாமே இந்த வருடம் இல்லைன்னாலும் இருக்கறதைப் பாத்து சந்தோசப்பட்டுக்கற மனநிலை இருப்பதால் ஆல் இஸ் வெல்.
படிச்சீங்களான்னு நீங்க கேக்கும் போதெல்லாம் ஒரே கொல்ட்டி பீலிங்கா இருக்கு. இந்த தடவை ஊர்ல இருந்த வந்தப்பறம் பிரிக்கப்படாமல் இருப்பது என்னோட புத்தக சூட்கேஸ்கள் மட்டுமே. இந்த கிறிஸ்மஸ் விடுமுறையில் எல்லாம் சுத்தம் பண்ணி அடுக்கி வைச்சுட்டு ஒவ்வொண்ணா படிக்கனும்னு உறுதி எடுக்க ஆசையா இருக்கு. பாப்போம்.
மத்தபடி சந்தா கட்டியாச்சு. சேலம் புத்தக ஸ்பெசல் வாங்கியாச்சு. அடுத்தது சென்னை புத்தக விழா ஸ்பெசல்கள் வாங்க ரெடி.
சேலம் சூப்பர் ...:-)
ReplyDeleteடயலன் டாக்....முதலில் துரோகத்துக்கான தண்டனைதான் இக்கதை என ஓடிட....கடைசியில் அச்சிறுவனின் காதல்...தாய் தனக்கு மட்டுமே ...வயிற்றிலேயே எடுத்த முடிவோ என எண்ண வைக்க வலு சேர்க்கிறார் அந்த ஆண்டவர்....துரோகத்திற்கான பரிசாய் மரணத்தை தருகிறார் கதாசிரியர்....அசைய விடாமல் நகர்த்திச் செல்லும் ஓவியங்கள் ஒரு படி தூக்கலாக..நம்மை நகர விடா காட்சிகள் சட்டென முடிவது போல் உணர்வு கதையோடு ஒன்றிடச் செய்கிறது...சட்டைப் பையில் மரணம்....நமது துரோகங்களுக்கான பரிசு....நம்மகிட்டவே இருக்கு எனப் பொருத்தும் கச்சிதமான தலைப்பு...கடைசியில் தந்தையும் மகனும் இணைவது டச்சிங்...டயலனும் துரோகி என காட்டுவது கதையின் வீரியத்தையும்....ஆசிரியரின் தைரியத்தையும்...நமக்கான எச்சரிக்கையையும் தருகிறது...செம சார்...அந்த மரணம் நேர்ந்த பின் சதைகள் எலும்புகள் முடிகள் என உதிர்வது உருக்குலைவதை காட்டிய விதம் பக் பக்...டயலனும் காதலில் விழுந்தாரோ....வீழ்ந்தாரோ என கேள்விகளுடன்
ReplyDeleteஅருமை ஸ்டீல்....என்னுடைய சில கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது....நன்றிகள்
Delete// "606" // இதுக்கு ஒரு ஸ்பெஷல் இதழ் வெளியிடுங்கள் சார்.
ReplyDelete36± 4 இந்த மாத புத்தகங்கள்
ReplyDeleteஇந்த மாத புத்தகங்களில் டெக்ஸ் கதைகள் இரண்டை தவிர மற்ற கதைகள் அனைத்தையும் படித்துவிட்டேன். தற்போது வரை தோர்கல் முதல் இடம். டெக்ஸ் கதைகளை வரும் நாட்களில் படிக்க வேண்டும்.
ReplyDeleteஆசிரியரே சென்னை புத்தக விழாவை பற்றி எதாவது தகவல் சொல்வீர்கள் என எதிர் பார்த்தேன்
ReplyDeleteஅடிமையாய் தோர்கல்
ReplyDelete2 பாகங்கள் கொண்ட, புத்தகம், இன்றே இனிதே கை சேர்ந்ததும் ஏற்கனவே முடிவு செய்த படி, தோர்கலின் மாய வசீகர உலகினில் நுழைந்தேன்.
முதல் கதையில் கொஞ்சமே கொஞ்சமாக மாயாஜாலம், கதைக்கு தேவையான படி கட்டியிருந்தார்கள். அதுவும் கூட, மயிற்கூச்செரியும் பரிமாணங்களில்...!
ஜோலனும், ஓநாய்குட்டியும் தங்களுக்கான பாத்திரத்தை செவ்வனே செய்திருந்தார்கள்.
அடிமையாய் தோர்கல் கதையின் அடிநாதமாக இருப்பது, தோர்களின் மன உறுதியும், இணையற்ற வில் வித்தையுமே என்றால் மிகையில்லை...!
மற்றுமொரு பரிமாணமாக எனக்குத் தோன்றியது, மனிதர்களின் ஏறுக்கு மாறான சுயநல சிந்தனைகளையும், இரக்கமற்ற குணத்தையும், தோர்கல் மற்றும் ஹெராக்ளியசின் தந்தை வடிவத்தில் பாசத்தையும் நிதர்சனமாக வெளிப்படுத்தி இருந்த விதமே...!
கிளாடியேட்டர் படத்தை நினைவு படித்திய காட்சிகளும், பறவைகளை ஏன் கொல்ல முடியாது / முடியும் என்றும் தோர்கல் காரணம் சொல்லும் காட்சிகளும் அருமை..!
இந்த கதையின் முடிவில் டியாகோவும், இலனியாவும் விடை பெறுகிறார்கள் என்பதை மனம் நம்ப மறுக்கிறது...!
முதல் கதையின் முடிவு வரை தலைவி வரவில்லை. அடுத்த கதையில் தலைவியின் சவால்களை எதிர்கொண்டு தோர்கல் எப்படி சமாளிக்கிறார் என்பதை நாளை படிக்க வேண்டும்...!
நன்றி! 💐🙏🏽
கதை எண் 2 : க்றிஸ் ஆஃப் வல்நார்
ReplyDeleteஒரு புத்தகம் 2 கதைகள். 2க்கும் நூலிழை ஆனால் ஸ்பைடரின் வலை போன்ற உறுதியான தொடர்பு. தோர்கல் தொடரின் அடிப்படையான ஒரு விஷயமாக இருப்பது இதுவே!
கதையை தனியாக படிக்கும் போது சுறுசுறப்பாக செல்லும். அதுவே, கதையை தொடர்ந்து படித்தால் மெய் மறக்கச் செய்யும்...! தோர்கலின் மெய்யான மாயாஜாலம் இதுவே!
இந்த கதையின் துவக்கத்தில் தப்பிச் செல்லும் ஆரிசியாவை பிடிக்கும் இளவரசன், இனிமேல் தப்பிக்க மாட்டேன் அவளிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாலும், அவளை வெள்ளிச் சுரங்கத்திற்குள் வேலை செய்ய அனுப்புகிறான். அங்கே கங்காணியாக இருப்பது சாட்சாத் நம்ம தலைவி கிறிஸ் ஆஃப் வல்நார் தான். இந்த விஷயமும், கிரிஸ்ஸின் குணமும் தெரிந்தவர்கள், கதையின் போக்கினை ஏற்கனவே 90% யூகித்திருப்பீர்கள்.
இந்த கதையில் கிறிஸ் ஆப் வல்நார் தன்னுடைய இறுதி அத்தியாயத்தை அவளுடைய குணத்திற்கு மாறான வகையில் அவளாகவே எழுதிக் கொண்டு தலைவி என்பதை நிரூபிக்கிறாள்...!
மற்றும் ஒரு ஆச்சரியமான, சுவாரசியமான விஷயமாக இந்த கதை தெரிவிப்பது, சைகானாக இருந்த தோர்கலுக்கும், க்றிஸ் ஆப் வல்நாருக்கும் இடையே ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பதே...!
இந்த தொடரின் இறுதி அத்தியாயம் இந்த கதையை என்று ஆசிரியர் தெரிவித்திருந்த நினைவு. இதற்குப் பின் கதையிலும், நம்முடைய தமிழ் காமிக்ஸ் உலகிலும் தோர்கலின் நிலை என்ன என்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!
தோர்கல் கதை தொடரில் இன்னமும் பல கதைகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து வெளியிட ஆசிரியர் ஆவண செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளுடன் எனது விமர்சனத்தை நிறைவு செய்கிறேன் 🙏🏽🙏🏽💐
மாயாஜாலம் மட்டுமல்லாமல், தனி மனிதனின் மன உறுதி, நேர்மை, பாசம் மற்றும் நட்பு போன்ற உணர்வுகளை மாறுபட்ட பரிமாணங்களில் இந்த கதை தொடர் வெளிப்படுத்தியுள்ளது என்பதை உணரும் ஒவ்வொருவரும் இதை மேற்கொண்டும் படிக்க விரும்புவார்கள் மற்றும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்!
டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்*
ReplyDeleteஇந்த மாத டெக்ஸ் கதையில் ஒல்லியாக இருந்த புக் இதுவே! 66 பக்கம் தான் மொத்தமே, எப்படி இருக்குமோ என்று நினைத்து கையில் எடுத்தால், முந்தைய இரண்டு பட்டாசான கதைகளின் தொடர்ச்சியாக இந்த கதை இருக்கிறது.
டெக்ஸ் வில்லரின் தப்பி ஓடும் படலம் இந்த கதையிலும் தொடர்ந்து கொண்டே இருக்க, முடிச்சுகளை ஒவ்வொன்றாக நண்பர்களின் துணையுடன் அவிழ்க்கிறார் டெக்ஸ்.
எதிரிகளின் ஆட்களை சாதுரியமாக பிடித்து, அவர்கள் வழியாக தன்னை ஆயுதக் கடத்தல்காரன் இல்லை என்று நிரூபிக்க முயல்கிறார் டெக்ஸ். இந்த முயற்சியில் அவருக்கு உறுதியாக உறுதுணையாக பக் பேர்ரியும், டேன் பேன்னியனும் இருக்கிறார்கள். டெக்ஸை பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் டேன், டெக்ஸ் நிரபராதி என அசைக்க முடியாமல் நம்புகிறார்.
என்ன தான் இராணுவத்தினர் கம்பி கதை கட்டினாலும், அவர்கள் சொல்வதில் பிசிறடிப்பதை கண்டு உஷாராகி விடுகிறார்கள் டெக்சாஸ் ரேஞ்சர்கள்...!
திருஷ்டி பரிகாரம் போல இருப்பது - மெக்ஸிகோவுக்குள் நுழைந்து எதிரிகள் இருக்கும் இடத்திலேயே டெக்ஸ் தூங்கி விடுவதும், . அதை பார்த்த பின்பும் காஃபின் மற்றும் ராமிரெஸ் குழுவினர்கள் கோட்டை விடுகிறார்கள் என்பதே...!
அந்த சண்டையில் டெக்ஸ் காயம் படாமல் தப்பிக்கிறார், ஆனால், அவரைக் காப்பாற்ற வந்த ஜோன்ஸ் முதுகில் தோட்டாவை வாங்கி வர்ணிக்கிறார்!
அடுத்த பாகத்தில் வடக்கு நோக்கி செல்ல திட்டமிடும் டெக்ஸ், அங்கே ஏற்கனவே சென்று விட்டிருக்கும் கிட் கார் சனி சந்திப்பார் என்று எதிர்பார்க்கிறேன்...!
நன்றி!
My question is - இந்தப் புதுசு 53-ல் நீங்கள் வாங்கியது எத்தனை? வாசித்தது எத்தனை?
ReplyDeleteமறு பதிப்புகள் சேர்த்து அனைத்தும் வாங்கி விட்டேன்
ஆனால் படிச்சது மொத்தம் 18
இவற்றில் பெரும்பாலும் டெக்ஸ் இதழ்கள்
முதலில் புத்தகத்தை படிக்க நேரம் ஒதுக்கணும் போல இருக்கு
அதனால் மற்ற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை
1. My question is - இந்தப் புதுசு 53-ல் நீங்கள் வாங்கியது எத்தனை? வாசித்தது எத்தனை?
ReplyDeleteவாங்கியது = அனைத்தும்
வாசித்தது = அனைத்தும்
2. நடப்பாண்டின் TOP 3 இதழ்களாக எவற்றைச் சொல்வீர்களோ?
படித்த வரைக்கும் பிடித்த இதழ்கள்னு தோணுவது,
1. பனி மண்டலப் போராளிகள் - டெக்ஸ்
2. இரவின் எல்லையில் - லார்கோ
3. கியூபா படலம் - XIII
3. நடப்பாண்டின் 'crisp வாசிப்பு” என்ற தீமுக்கு இந்த ஆண்டினில் ஓரளவுக்காவது நியாயம் செய்துள்ளோமா?
இதில் எனக்கு உடன்பாடில்லை. பெரிய கதைகள் கொடுக்கும் தாக்கத்தை இவைகள் கொடுப்பதில்லை.
4. “அட்டைப்படம் of the year" என்ற பரிசைத் தருவதாயின் எந்த இதழுக்குப் பரிந்துரைப்பீர்கள்?
விண்வெளி பிசாசு
5. “அழுத்தமான கதைக்களம் of the year" என்ற தேர்வில் யாருக்கு முதல் மார்க் போடலாம் என்பீர்களோ?
பணிமண்டலப் போராளிகள்
6. 2024-ன் (புது) இதழ்களிலிருந்து மீள்வாசிப்புக்குத் தகுதி கொண்ட இதழ்களாய் எவற்றைப் பார்த்திடுகிறீர்கள்? Your Top 3 ப்ளீஸ்?
1. எகிப்தில் டின் டின்
2. லயன் லக்கி ஆண்டு மலர்
3. அடிமையாய் தோர்கல்
7. நடப்பாண்டின் 53 புது இதழ்களின் ஜான்ரா வாயிலான break up இது:
கௌபாய் கதைகள் : 12
அட்வென்சர் கதைகள் : 26
கார்டூன்ஸ் : 4
கிராபிக் நாவல்ஸ் : 6
டிடெக்டிவ் த்ரில்லர்ஸ் : 5
So ‘தல‘ டெக்ஸ் வில்லரோ; இன்ன பிற குருத பாய்ஸோ ஓவராய் இடங்களைக் கபளீகரம் செய்து வைத்திருப்பதான எண்ணங்கள் வெறும் பிரமைகளே என்றாகிறது!
My question is : இந்த ஸிஸ்டில் இன்னும் எதற்கு இடங்களைக் கூட்டலாம்? எதற்குக் குறைக்கலாம்? என்பதே ?
Increase graphic novel, decrease adventure
8. காமிக்ஸ் வாசிப்புலகிற்கு முற்றிலும் புதுசானதொரு நண்பருக்கு நடப்பாண்டின் ஏதேனும் ஒற்றை புக்கை மட்டும் வாசித்துப் பார்க்கக் கொடுக்க நினைத்தால் - எந்த புக்கை எடுத்து நீட்டுவீர்கள்?
டின் டின்
9. நடப்பாண்டின் கிராபிக் நாவல்களை rate செய்வதாயின் எவ்விதம் பண்ணுவீர்களோ?
துணைக்கு வந்த மாயாவி சுமார் ரகம். மற்றவை super. இது பற்றாது இன்னும் அழுத்தமான கதைகள் தேவை
10. 2024: உயரத்திலந்து ஒரு கழுகுப் பார்வையில் இந்த ஆண்டின் நமது காமிக்ஸ் பயண அனுபவத்தினை எவ்விதம் வர்ணிப்பீர்கள் folks? In one word ?
FAIR
👌👌👌
Delete1. My question is - இந்தப் புதுசு 53-ல் நீங்கள் வாங்கியது எத்தனை? வாசித்தது எத்தனை?
ReplyDeleteவாங்கியது = அனைத்தும்
வாசித்தது = அனைத்தும்
2. நடப்பாண்டின் TOP 3 இதழ்களாக எவற்றைச் சொல்வீர்களோ?
1. பனி மண்டலப் போராளிகள் - டெக்ஸ்
2. இரவின் எல்லையில் - லார்கோ
3. Thorgal , DEAD WOOD DICK
3. நடப்பாண்டின் 'crisp வாசிப்பு” என்ற தீமுக்கு இந்த ஆண்டினில் ஓரளவுக்காவது நியாயம் செய்துள்ளோமா?
YES ..
4. “அட்டைப்படம் of the year" என்ற பரிசைத் தருவதாயின் எந்த இதழுக்குப் பரிந்துரைப்பீர்கள்?
BRUNO BRAZIL
5. “அழுத்தமான கதைக்களம் of the year" என்ற தேர்வில் யாருக்கு முதல் மார்க் போடலாம் என்பீர்களோ?
பணிமண்டலப் போராளிகள், BOUNCER , DEADWOOD DICK
6. 2024-ன் (புது) இதழ்களிலிருந்து மீள்வாசிப்புக்குத் தகுதி கொண்ட இதழ்களாய் எவற்றைப் பார்த்திடுகிறீர்கள்? Your Top 3 ப்ளீஸ்?
1.ALL TEX
2.THORGAL
3.LARGO
My question is : இந்த ஸிஸ்டில் இன்னும் எதற்கு இடங்களைக் கூட்டலாம்? - GRAPHIC NOVEL , MONTHLY TEX ..
எதற்குக் குறைக்கலாம்? .. WHITE SPOON ..
8. காமிக்ஸ் வாசிப்புலகிற்கு முற்றிலும் புதுசானதொரு நண்பருக்கு நடப்பாண்டின் ஏதேனும் ஒற்றை புக்கை மட்டும் வாசித்துப் பார்க்கக் கொடுக்க நினைத்தால் - எந்த புக்கை எடுத்து நீட்டுவீர்கள்?
ANY TEX , MR.NO , ZAGOR
9. நடப்பாண்டின் கிராபிக் நாவல்களை rate செய்வதாயின் எவ்விதம் பண்ணுவீர்களோ?
OK ..
10. 2024: உயரத்திலந்து ஒரு கழுகுப் பார்வையில் இந்த ஆண்டின் நமது காமிக்ஸ் பயண அனுபவத்தினை எவ்விதம் வர்ணிப்பீர்கள் folks? In one word ?
GOOD ..
👌👌🤝🏽
Deleteவிஜயன் சார், ஸ்பைடர் ஸ்பெஷல்: கடந்த வருடம் வந்த பிக் பாய்ஸ் ஸ்பெஷல் புத்தக வடிவமைப்பு & அளவு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, படிக்க மிகவும் வசதியாக இருந்தது. ஹார்ட் பௌண்ட் மிகப்பெரிய் பிளஸ். என்னை பொறுத்தவரை சித்திரங்கள் அதற்கு ஏற்றார் போல இருந்து வண்ணம் அதற்கு கூடுதல் பலம் கொடுப்பதாக இருந்தால் மட்டும் மாக்ஸி அளவில் வெளியெடுவது நன்றாக இருக்கும்; மாக்ஸி அளவிற்கு டின் டின் இதற்கு மிகவும் போர்த்தமானவர்.
ReplyDeleteஸ்பைடர்/ஆர்ச்சி/மாடஸ்டி போன்ற கிளாசிக் கதைகளை பிக் பாய்ஸ் அளவில் கொண்டுங்கள் சார், ஹார்ட் பவுண்ட் கூட தேவைஇல்லை. சில காரணங்களுக்காக நீங்கள் இந்த அளவில் வெளியேடலாம் ஆனால் பிக் பாய்ஸ் ஸ்பெஷல் அளவு இன்னும் நன்றாக இருக்கும் சார்.
துளியளவு வாசகர்களை வைத்துக் கொண்டு, ஒரு காமிக்ஸ் பெருமழையைப் பொழிந்திருக்கிறீர்கள்! தமிழ் காமிக்ஸ் என்று சுருக்கி ஒதுக்கப்படாமல், அச்சு / பதிப்பு / பத்திரிக்கைத் துறைகளில் நீங்கள் செய்திருக்கும் சோதனை முயற்சிகள், எட்டியிருக்கும் உயரங்கள் மற்றும் ஈட்டியிருக்கும் வெற்றிகள், இச்சிறிய வட்டத்தைத் தாண்டி பரவலாக அறியப்பட வாழ்த்துகிறேன் சார்!
ReplyDeleteவெளியான 53 ல் வாங்கியது 53.
ReplyDeleteஇந்த மாதத்து புத்தகங்கள் தவிர நவம்பர் வரையிலான மற்ற அனைத்தும் படித்து விட்டேன். பார்சல் கைப்பற்றி 10 நாட்களுக்கு மேலானாலும் வேலை பளு காரணமாக இன்னும் பண்டலை உடைக்காமல் இருக்கிறேன். அடுத்த திங்கள் கிழமை வரை நேரம் கிடைப்பது கடினம் அதன் பின் தான் படிக்க வேண்டும்
MMS,
ReplyDeleteடைனமைட் ஸ்பெஷலில் டெக்ஸ் உள்ளே இருந்தாலும் திட்டங்களைத் தீட்டும் மாஸ்டர் மைண்ட் ஆக இருப்பார்...
MMS சாகஸத்தில் டெக்ஸ் உள்ளே இருக்க,திட்டங்களை கார்ஸன்,மாண்டலெஸ்,கிட் வில்லர்,டைகர் என நண்பர்கள் குழுவினர் கவனிக்க,கோப்ரா துணையும் கிட்ட,ஆடுபுலி ஆட்டம் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது...
என்னதான் டெக்ஸ் இறுதியில் தப்பித்து விடுவார் என்று நமக்குத் தெரிந்தாலும்,அதை விறுவிறுப்பான திரைக்கதையில் நகர்த்தி நம்மை வாசிப்பில் கட்டிவைப்பதில் வெற்றி காணுகிறார் கதாசிரியர்...
டெக்ஸ் ஹிட் லிஸ்டில் மற்றுமொரு சாகஸம் MMS...
இம்மாத தோர்கல் அருமையானதொரு வாசிப்பு,சிலபேர் எப்போது என்ன செய்வார்கள் என கணிக்கவே முடியாது,அப்படி ஒரு புதிரான கேரக்டர்தான் கிறிஸ்ஆப் வால்நார்...
ReplyDeleteதோர்கலும்,ஆரிஸியாவும்,தோர்கல் குடும்பம் படும் அவஸ்தைகளும் அப்பப்பா சொல்லி மாளவில்லை,எனக்கு தெரிந்து இவ்வளவு அவஸ்தைகளை,இன்னல்களை எந்தவொரு நாயகரும் சந்தித்ததாய் தெரியவில்லை...
இரக்கம் இல்லையா கதாசிரியருக்கு,சீக்கிரமா இதுக்கு போடச் சொல்லுங்க ஒரு End...
ஆசிரியர் சார் டெக்ஸ் வில்லரின்magic moments special இதழுக்கு ஏதேனும் பெயர் வைத்திருக்கலாமேங்க சார்.
ReplyDelete1. My question is - இந்தப் புதுசு 53-ல் நீங்கள் வாங்கியது எத்தனை? வாசித்தது எத்தனை?
ReplyDeleteவாங்கியது = அனைத்தும்
வாசித்தது = அனைத்தும்
2. நடப்பாண்டின் TOP 3 இதழ்களாக எவற்றைச் சொல்வீர்களோ?
1. டின்டின் 3 இதழ்களும்
2. இரவின் எல்லையில் - லார்கோ
3. Deadwood Dick
3. நடப்பாண்டின் 'crisp வாசிப்பு” என்ற தீமுக்கு இந்த ஆண்டினில் ஓரளவுக்காவது நியாயம் செய்துள்ளோமா?
Absolutely
4. “அட்டைப்படம் of the year" பரிசைத் தருவதாயின் எந்த இதழுக்குப் பரிந்துரைப்பீர்கள்?
வேதாளர் அதிர்ஷ்டத்தை தேடி
டேங்கோ
5. “அழுத்தமான கதைக்களம் of the year" என்ற தேர்வில் யாருக்கு முதல் மார்க் போடலாம் என்பீர்களோ?
பணிமண்டலப் போராளிகள், BOUNCER , DEADWOOD DICK
6. 2024-ன் (புது) இதழ்களிலிருந்து மீள்வாசிப்புக்குத் தகுதி கொண்ட இதழ்களாய் எவற்றைப் பார்த்திடுகிறீர்கள்? Your Top 3 ப்ளீஸ்?
1.Tintin
2.THORGAL
3.LARGO
My question is : இந்த ஸிஸ்டில் இன்னும் எதற்கு இடங்களைக் கூட்டலாம்? - GRAPHIC NOVEL , யங் டெக்ஸ்
எதற்குக் குறைக்கலாம்? ஸ்பூன் அண்ட் ஒயிட்
8. காமிக்ஸ் வாசிப்புலகிற்கு முற்றிலும் புதுசானதொரு நண்பருக்கு நடப்பாண்டின் ஏதேனும் ஒற்றை புக்கை மட்டும் வாசித்துப் பார்க்கக் கொடுக்க நினைத்தால் - எந்த புக்கை எடுத்து நீட்டுவீர்கள்?
டின்டின்
9. நடப்பாண்டின் கிராபிக் நாவல்களை rate செய்வதாயின் எவ்விதம் பண்ணுவீர்களோ?
Could have been better.
10. 2024: உயரத்திலந்து ஒரு கழுகுப் பார்வையில் இந்த ஆண்டின் நமது காமிக்ஸ் பயண அனுபவத்தினை எவ்விதம் வர்ணிப்பீர்கள் folks? In one word ?
Excellent
த சூப்பர் ஸ்பைடர் ஸ்பெசல்....
ReplyDeleteதலைப்புற்கேற்ப பிரம்மாண்ட மும் மாயாஜால சக்தியும்...வசீகரமான ஸ்பைடர் முகமும்...அச்சுத் தரமும்...கதையின் வேகமும் தூள் கிளப்ப....கடந்த பால்ய ஏக்கங்களை சளைக்காமல மீட்டெடுத்து தன் எதிரியை துவம்சம் செய்து நமையாள்கிறார் ஸ்பைடர்....
பக்கங்களில் கட்டங்கள் வெகு ஜோராய் அமர நெஞ்சையள்ளுது சித்திரங்கள்....ஸ்பைடரின் வணங்காமுடித்தனம் பூதத்திடம் ஈர்ப்பை ஏற்படுத்துவதும்....கொலைப் படை போல இங்கும் ஓர் பெண்ணிடம் வசியத்தால் கட்டுப்பட...தன் சகாக்களுக்கு ஆபத்து என்றதும் அதை மீறி வரும் ஸ்பைடரும்...ஐந்தாம் பரிமாணத்தில் வரும் ஸ்பைடரும் மெய்சிலிர்க்க ஈர்க்க....முக்கால் பக்கத்தில் நிறைந்த கட்டங்கள் பேரழகு....ஸ்பைடர் ரசிகர்களால் என் போன்றோர்க்கு ஆசிரியரின் அருட்கொடை...9ம் பக்கம் தப்பிச்சுட்டோமா மாட்டிக்கிட்டோமா என குழப்புது இல்லையா என ஆசிரியரின் மாந்த்ரீக பேனாவும் மந்திரித்து விட்டது போல ஆட.....ஸ்பைடரின் விஸ்வரூபம் தொடருது....நீதிக்காவலன் ஸ்பைடர் யாரந்த மினி ஸ்பைடருக்காக காத்திருக்கும் ஸ்பைடர் சாரி லயன் ரசிகன்
This comment has been removed by the author.
ReplyDeletequestion is - இந்தப் புதுசு 53-ல் நீங்கள் வாங்கியது எத்தனை? வாசித்தது எத்தனை?
ReplyDeleteவாங்கியது அத்தனையும்...படிச்சது படிச்சதும்
2. நடப்பாண்டின் TOP 3 இதழ்களாக எவற்றைச் சொல்வீர்களோ?
1. லார்கோ....2.மேஜிக் மொமண்ட்...வேட்டையன்
2. 3. த சூப்பர் ஸ்பைடர்
படித்ததில்
3. நடப்பாண்டின் 'crisp வாசிப்பு” என்ற தீமுக்கு இந்த ஆண்டினில் ஓரளவுக்காவது நியாயம் செய்துள்ளோமா?
சூப்பர்...ஆனா குண்டுக செய் சூப்பராருக்கும்...சிக்கலான கதைக இன்னும் பறக்கும்
4. “அட்டைப்படம் of the year" என்ற பரிசைத் தருவதாயின் எந்த இதழுக்குப் பரிந்துரைப்பீர்கள்?
சூப்பர் ஸ்பைடர்
5. “அழுத்தமான கதைக்களம் of the year" என்ற தேர்வில் யாருக்கு முதல் மார்க் போடலாம் என்பீர்களோ?
6. வேட்டையன்...டயலன்
6.
6.
6. 2024-ன் (புது) இதழ்களிலிருந்து மீள்வாசிப்புக்குத் தகுதி கொண்ட இதழ்களாய் எவற்றைப் பார்த்திடுகிறீர்கள்? Your Top 3 ப்ளீஸ்?
7. லார்கோ
8. பதிமூனு
9. டேங்கோ
7.
7. நடப்பாண்டின் 53 புது இதழ்களின் ஜான்ரா வாயிலான break up இது:
கௌபாய் கதைகள் : 12
அட்வென்சர் கதைகள் : 26
கார்டூன்ஸ் : 4
கிராபிக் நாவல்ஸ் : 6
டிடெக்டிவ் த்ரில்லர்ஸ் : 5
So ‘தல‘ டெக்ஸ் வில்லரோ; இன்ன பிற குருத பாய்ஸோ ஓவராய் இடங்களைக் கபளீகரம் செய்து வைத்திருப்பதான எண்ணங்கள் வெறும் பிரமைகளே என்றாகிறது!
My question is : இந்த ஸிஸ்டில் இன்னும் எதற்கு இடங்களைக் கூட்டலாம்? எதற்குக் குறைக்கலாம்? என்பதே ?
கிநாக்களை கூட்டலாம்...
எதையும் குறைக்கலாகாது
8. காமிக்ஸ் வாசிப்புலகிற்கு முற்றிலும் புதுசானதொரு நண்பருக்கு நடப்பாண்டின் ஏதேனும் ஒற்றை புக்கை மட்டும் வாசித்துப் பார்க்கக் கொடுக்க நினைத்தால் - எந்த புக்கை எடுத்து நீட்டுவீர்கள்?
வேட்டையன்
9. நடப்பாண்டின் கிராபிக் நாவல்களை rate செய்வதாயின் எவ்விதம் பண்ணுவீர்களோ?
10. 10
10. 2024: உயரத்திலிருந்து ஒரு கழுகுப் பார்வையில் இந்த ஆண்டின் நமது காமிக்ஸ் பயண அனுபவத்தினை எவ்விதம் வர்ணிப்பீர்கள் folks? In one word ?
ரெகார்ட் பிரேக்....அற்புதம்...படித்தவை நொட்டை போகா இதழ்கள் அனைத்தும்...வெகு சிறப்பு...ஸ்பூன் வொயிட்ட விட்டுட்டமே...அட அண்டர் டேக்கரெனும் புத்தக புழுவயுமே
1. சந்தா இதழ்கள் அனைத்தும் வாங்கியது..
ReplyDeleteஅனைத்தும் படித்தது விட்டேன்..
2. Top - 3 - யாக
(மனதுக்குள் சொல்லிக் கொள்வது)
1.காரிகன் ஸ்பெஷல் - 2
2. மாடஸ்டி .
3. பாலையில் ஒரு போராளி
வெளியில் சொல்ல விரும்புவது..
1. லார்கோ .
2. ப்ரூனோ
3. கானகத்தில் ஒரு கருப்பு நிழல்.
3. Crisp - வாசிப்பு.. நிச்சயமாக.
4. அட்டைப் படம்..
ReplyDelete1. ப்ரூனோ ப்ரேசில்
2. இறுதி ஆட்டம் - Tex
3.காரிகன்..
5. அழுத்தமான கதைக்களம்.
1. லார்கோ
2 .x 111
3. ப்ரூனோ ப்ரேசில்
@Edi Sir.. 😘😘
ReplyDeleteதி ஜூனியர் ரீடர்ஸ் பேக்'25 (தமிழ்) ஒரு செட்.. 😘😘 🙏💐
Gpay பண்ணியாச்சு Sir👍💐🙏😄
8. இறுதி ஆட்டம் - (Tex ) +
ReplyDeleteகானகத்தின் கருப்பு நிழல் ..
8.. இறுதி ஆட்டம்.
ReplyDeleteகானகத்தின் கருப்பு நிழல் ..
இதுவரை மூன்றுபேரை படிக்க வைத்து விட்டேன்..
சாப்பிடும் போது எப்போதும் Tex கதைகள் மட்டுமே...
ReplyDeleteகனவுலகம் விமர்சன போட்டி
ReplyDeleteஅடிமையாய் தோர்கல்
வழக்கமான தோர்கல் TEMPLATEடில் எந்த மாற்றமும் செய்யவில்லை. சென்ற இதழில் தப்பித்தோர் இந்த புத்தகத்தில் பைசான்டின் போன்ற ஒரு ராஜ்ஜியத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர். தோர்களுடன் தப்பித்த, தோர்கல் வம்சத்தினரான இலெனியாவும் டியோகோவையும் கதையில் இதற்கு மேல் கொண்டு செல்ல முடியாததால் அவர்களை பலி கொடுப்பதற்கென்றே அமைக்கப்பட்டுள்ளது போல் முதல் கதையை அமைத்துள்ளனர். அந்த மனித வேட்டையை தவிர்த்து தோர்கல் இந்த புத்தகத்தில் எதுவும் சாதிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். டியாகோவை அமைதியாய் இரு அமைதியாய் இரு என்று கூறியே காலத்தை கடத்துகிறார். முடிவில் இலெனியாவும் இறந்து விடுகிறார். சோகமான முடிவு இருந்தாலும் இந்த இடத்தில் தோர்கல் மீது எரிச்சல் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் தோர்கல் காணாமல் போக கதை கிரிஸ்ஸிடம் நகர்கிறது.
தோர்கலின் மீது எழும் எரிச்சலால், கிறிஸ் செய்வது நமக்கு பிடித்து போகிறது. ஒரு கட்டத்தில் தோர்கல்லை மறந்தே விட்டேன் நான். கிரிஸ்ஸும் ஆரிசியாவும் தோர்கலின் குழந்தைகளும் தப்பிப்பார்களா என்று படித்துக் கொண்டே செல்லுகையில் பரிதாப நிலையில் இருக்கும் தோர்கல் மீண்டும் கதைக்குள் நுழைகிறார். மீண்டும் ஓட்டம். கிறிஸ்சின் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாத அளவு தோர்கல் மீது எரிச்சலை ஏற்றி வைத்திருக்கிறார் ஆசிரியர்.
இந்த விமர்சனத்தை தொடங்கும் வரை, தோர்கல் மீது உள்ள எரிச்சலாலேயே படித்து பல நாட்கள் ஆகியும் விமர்சனம் எழுதாமல் காலம் கடத்தி வந்தேன். எனக்கு என்ன தோனியதோ அதையே எழுதி விடுவது என்று எழுத ஆரம்பித்த பின்பு தான் இரண்டாம் கதையை உயர்த்தி பிடிக்க முதல் கதையை அப்படி வடிவமைத்திருக்கிறார் ஆசிரியர் என்று புரிந்தது.
மீண்டும் படித்தால் தோர்கல் மீதான என் எண்ணம் மாறுமோ என்னமோ, ஆனால் இன்னும் தோர்கள் மீதிருக்கும் எரிச்சல் குறைந்த பின்பு தான் அது சாத்தியம் என்று தோன்றுகிறது.
கதை - 9/10
ஓவியம் - 10/10
மேக்கிங் - 10/10
Super ji
Deleteஅப்படியல்ல நண்பரே முதல் கதை தயவுதாட்சன்யமற்ற கொலைக்களம்....
Deleteஆளுபவர்களை தேர்ந்தெடுப்பது எப்படி என கொடூர மனத்தை விதைக்க....அங்க
தோர்கள் நல்லவராக செயல்பட ...இறுதி வரை மாறாதவன் கொல்லப்படுகிறான்....தன் மனைவி மக்களை பணயம் வைத்த நிலையில் அடிபணிந்து நிற்கிறார் வான்ஹாம்மேவின் கைகட்டால் சகோதர தியாகத்தை காட்ட...சகோதரனை பொறுத்து போக சொல்ல ...சகோதரிக்கு இழைக்கும் கொடுமையை சகிக்காமல் போராடி அவன் சாக...சாம்ராஜ்யத்தையே சரித்தபடி சாகிறாள் சகோதரி பெண்ணாலும் சாதிக்க முடியுமென ...சாமானியராய் நினைக்காதே என அதிகார வர்கத்துக்கு ஆப்படிக்க...சாம்ராஜ்யத்தயே சரித்தபடி தன் சகோதரன் சென்ற இடத்துக்கே செல்கிறார்...மகன் தவறு செய்வது தடுக்க இயலா பிரபு ...கடைசியில் மகனுக்காக தடுமாறுவது நல்லவரா மகன எதிர்ப்பதா காட்டினாலும்... பாசத்தால் தந்தையே என காட்டி விடுகிறார்....இங்க கதையில் பின்னிக் கிடக்கும் சுவாரஸ்யங்கள் ரசிக்கும்படி உள்ளது...அடிமைகளை...நோயுற்றவர்களை கொல் என இயற்கை வழியில் பாடமெடுத்தாலும்...ஆசிரியரையே கொல் என தந்தை ஆளுபவன் உறுதியாகனும்னு மகன கொலைக்களத் தில் இறக்க...மகனோ அரக்கனா மாற தந்தை தடுமாற ...மாற என குரங்கு மனதை காட்டி நகருது....தோர்களை விட கதய ரசிக்கப் பழக்குது....கிறிஸ் தரும் புது வரவால் இரண்டாம் பாகம் ஜோலன்..ஆரிசியா நல்லமனதால் நம்மை மேலும் கவறுது ...
ஆனால் கதை படிக்கும் உங்கள் கண்ணோட்டமும் ஓரழகே...ஆளுக்கோர் பாதையில் பயணித்தாலும் முடிவு வான்ஹாம்மே ஓவியர் நமது பலூனாசிரியரிடமே
நன்றி Friends
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகபிஷ் படித்து கொண்டிக்கிறேன், ஸீகல்(நரி) மற்றும் பீலு(புலி) செய்யும் அட்டகாசங்கள் நல்ல காமெடியாக உள்ளது.ஸீகல் கொஞ்சம் புத்திசாலி தான், ஆனால் பீலுவை பற்றி அப்படி சொல்ல முடியல, அது பண்ணும் கோமாளி தனத்நால் ஸீகலுக்கு தான் நல்ல அடி 😂😂😂
ReplyDeleteகபிஷ் சிறுபிள்ளை மனதாக படிக்க பிடிக்கவே செய்துள்ளது
எங்க அம்மாவும் கபிஷ் ரசிகை
கபிஷ் வெளியிட்டதற்கு நன்றிகள் ஆசிரியரே
:-) :-)
Deleteகபீச முதல் முறையா படிக்கிறீங்களா கடல்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசார் தூள் கிளம்பிட்டாங்க தோர்கள் அணியினர்....இந்த வருட டாப் த்ரீல நான் மேல சொன்னத அழிச்சிட்டு தோர்கள போடலாம்...அதோட கிறிஸ் ஆஃப் வல்நார சேர்க்கலாம்...என்னவோர் அட்டகாச மனச பிழிஞ்சு கசிய வைக்கும் முடிவு....தோர்களோட கதைகள்ல டாப் இக்கதைகள் தான்...புதிதாய் படிப்போரையும் கட்டிப் போடும்...முன்கதைகள் தேவையில்லை புது வாசகர்க்கு கூட...முன்னர் என்ன நடந்திருக்குமென யூகித்து விடலாம்...
ReplyDeleteநேற்று முதல்பாகத்தை முடித்ததுமே.... தோர்கள் நிலையறிந்து வீட்ல போனதும் படிக்கணும்னு பாஞ்சா மகன்களுக்கான கடனில் அக்கனவு கலைய ...இரவுக்கனவில் தோர்கள் ஏன் வரவில்லையென யூனிகார்னோடு ஜோலனுக்கு மட்டுமல்லாது எனக்கும் அழைப்பு விட...எழுந்து படிக்க வைத்ததுமில்லாம டைப்பவும் வச்சுட்டாங்க அதீத ஆர்வத்தால் தூங்க விடாம... சும்மா மனதை பிழிந்து விட்டார் நம்ம வான்ஹாம்மேவும் ஓவியரும்....காமிக்ஸ் ரசிகர்கள் தவறவிடக்கூடா இதழ்....
முதல் பாகம் மரண ஓட்டத்தில் வேகமெடுத்து மின்னல் வேகத்துல முடியுது கர்ணனை ரசித்த நமக்கு தோர்களின் வில்லாற்றல ரசிக்க இயலாது போகுமா...வேற லெவல்ல கதையும் காட்சிகளும் அழகிய ஓவியங்களால் வெளிச்சத்துல பாய முடிவு இருளாய் தோர்கள கிடத்த...
பரிதவிப்போடு. இருளில் துவங்குது இரண்டாம் பாகம்...கிறிஸ் ஆஃப் வல்நார் தலைப்பே ஆரிசியா மனதை விட என் மனதை பற்றி எறிய வைக்க...
அதன் பிறகு சாட்டையோடு பாக்கைல இன்னும் கோவத்த தூண்ட பக்கங்கள் கறுத்தத போல மனமும் கருத்து விட ...அவர்கள் தப்பியதும் 75ம் பக்கம் பச்சைப் பசேலென பாய...அழகை கொட்ட இருளில் தவித்த கண்கள ஆரியா முகத்தை காட்டி கவர்ந்திழுக்க...அந்தப் புது வரவு கிறிஸால் பற்றியெறிந்த நெருப்பை அணைக்க செய்ய இறுதியில் அத்தாயின் தவிப்பை அழகாய் நடத்துகிறார்கள் காட்சிகளால்....ஜோலனையும் ஆரிசியாவையும் வணங்கத் தோன்றினால் கிறிஸ் ஆஃப் வல்நாரை வணங்க வைத்து விடுகிறார் முடிவில்.....மிக மிக அற்புதமான உணர்வை கடத்தியதற்கு நன்றிகள் சார்....அந்த கிறிஸ் ஆஃப் வல்நார் தனிக்கதைக தடத்த விட்டுருவீங்களோ என பயந்த எனக்கு சீக்கிரமா அக்கதைகள பாக்கனும்னு தோனுது ...மீண்டுமோர் முறை பால்யத்துக்குள் அழைத்துச் செல்லுது தோர்களின் வழக்கம்தானே ....பின்வரும் கதைகள சீக்கிரமா ஒரே குண்டா போட்டுத் தாக்கலாமே...
வான் ஹாம்மே ஒரு மாதிரி விளையாடுனா நம்ம ஆசிரியர் பலூன்கள் வச்சி விளையாடுறார் ஆரிசியாவ கீர்த்தி சுரேஷாயும்...கிறிஸ சில்க்ஸ்மிதாவாயும் காட்டி
// வான் ஹாம்மே ஒரு மாதிரி விளையாடுனா நம்ம ஆசிரியர் பலூன்கள் வச்சி விளையாடுறார் ஆரிசியாவ கீர்த்தி சுரேஷாயும்...கிறிஸ சில்க்ஸ்மிதாவாயும் காட்டி
Delete//
ROFL 😂
100
ReplyDelete❤️❤️❤️👍👍🙏🙏... வாழ்த்துக்கள்
ReplyDeleteSir... நகை கடைக்காரர் வைரத்தை பார்வையிட்டு எடுப்பது போல.... நீங்கள் தேர்ந்தெடுத்து
Print க்கு அனுப்புவது போல எனக்கு தோன்றுகிறது... உங்கள் இஷ்ட்டம் sir... எல்லாமே வாங்கிட்டேன்... இனியும் வாங்குவேன்... ❤️👍...