நண்பர்களே,
வணக்கம். பனியடிக்கும் காலைகளில் சும்மாவே சோம்பல் தலைதூக்குகிறது ; இன்றைக்கு லாக்டௌன் வேறு சேர்ந்து கொள்ள - "உறக்கத்துக்கே உங்கள் வோட்டு !!" என்று கோஷமிடத் தோன்றுகிறது ! மாதத்தின் மூன்றாம் வாரங்கள் எங்களுக்கு என்றைக்குமே செம பிஸியான பொழுதுகள் & இந்தவாட்டி வழக்கத்தை விடவும் மும்மடங்கு பெண்டை நிமிர்த்தும் பொழுதுகளாகிப் போயுள்ளன என்பதால், ராவில் பணி முடித்து, காலையில் பனிக்கு ஹல்லோ சொல்ல கொஞ்சம் starting trouble !!
First things first ...! ஆன்லைன் புத்தக விழா !! ஒற்றை வரியில் சொல்வதானால் - தெறிக்க விட்டுள்ளீர்கள் இம்முறை(யும்) !! மெய்யாலுமே நம்மாட்கள் உங்களின் இந்த ரகளையான வரவேற்பிற்குத் தயாராக இருக்கவில்லை தான் - நேற்றைய மாலை வரையிலுமே அந்த 4 நாட்களின் ஆர்டர்களுக்கு பேக் செய்து கொண்டே இருந்தனர் ! ஆர்டர்கள் தேதிகளுக்கேற்பவே டெஸ்பாட்ச் செய்து வந்துள்ளனர் என்பதால், கடைசி நாட்களில் ஆர்டர் செய்த நண்பர்கள் சற்றே பொறுத்தருள்க - ப்ளீஸ் !! நேற்றைக்கு மாலையில் "எல்லாம் முடிச்சாச்சு" என்று சொல்லியிருந்தனர் ; so திங்களன்று பாக்கிகள் இராதென்று நம்புவோம் ! ஓராயிரம் நன்றிகள் guys - ரொம்பவே அத்தியாவசியமான இந்தத் தருணத்தில் நீங்கள் காட்டியுள்ள இந்த அன்புக்கு ! Simply staggering !! Maybe நடப்பாண்டின் ஏதேனுமொரு வாகான பொழுதினில், நம்மிடம் பின் சீட்டில் குந்த நேரிட்டிருக்கும் ஒரு வண்டி நாயக / நாயகியரை ஒட்டு மொத்தமாய்க் களமிறக்கி, முழுக்க முழுக்கவே ஒரு "புது புக்ஸ் மேளா"வை போட்டுத் தாக்கினாலென்ன ? என்ற கேள்வி மண்டைக்குள் ஓடி வருகின்றது ! பீரோவைத் திறந்தால் ஒரு கும்பலே உள்ளே குடியிருப்பது தெரியும் ! So 'ஏக் தம்மில்' அவர்களுக்கு விடியல்களைக் காட்டினாலென்ன ? என்று தோன்றியது ! புத்தக விழா circuit திரும்ப தொடங்கிடவும், சூடு பிடிக்கவும் தாமதமாகிடும் பட்சத்தில், இந்த மஹா சிந்தனை செயல்வடிவம் காண நேரிடலாம் !
"பழிக்குப் பழி" !! 'தல' புராணங்கள் ஏகமாய்ப் பாடியாச்சு தான் ; அவரது ஆளுமை என்னவென்பதைப் பார்த்தும் விட்டாச்சு தான் ! ஆனால் இன்னமுமே அவருக்கும், உங்களுக்கும் இடையிலான அந்த கெமிஸ்ட்ரி திகைக்கச் செய்யாது போவதே இல்லை ! ஆன்லைன் புத்தக விழாவின் நாயகரே 'லயன் லைப்ரரியின்' டெக்ஸ் தான் எனும் போது - உங்களின் கொள்முதல் பட்டியல்களில் அவர் இருந்ததில் வியப்பே இல்லை தான் ; ஆனால் முகவர்களுமே செம ஆர்வமாய் உட்புகுந்து போட்டுத் தாக்கியுள்ளனர் ! And எல்லா முகவர்களுக்குமே அந்த TEX போஸ்டர் அனுப்பியுள்ளோம் guys ; கடைகளில் வாங்கிடும் பட்சங்களில் அதனை மறக்காது கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் !
போஸ்டரோடு தயாராகி வரும் இன்னொரு ஜாம்பவான் தான், எனது கடந்த ஒரு வாரத்தை ஹோல்சேலாய் ஆக்கிரமித்து வருகின்றார் ; and அவர் நமது நடமாடும் மாயாத்மா - வேதாளரே !! நேர்கோட்டுக் கதைகள் தானே ; ஏற்கனவே பரிச்சயமான நாயகர் தானே ; black & white ஆல்பம் தானே ; சமாளித்து விடலாமென்று, இறுதிக்கட்டப் பணிகளைக் கையில் எடுப்பதில் கொஞ்சம் அசட்டையாய் இருந்து விட்டேன் ! 9 சாகசங்கள் கொண்ட ஆல்பத்தில் ஒன்றுக்கு மட்டும் நான் பேனா பிடிக்க, ஒரு 'நறுக்' template-ல் மீதக் கதைகளுக்கு நமது கருணையானந்தம் அவர்களை மொழிபெயர்ப்பு செய்திடக் கோரியிருந்தேன் - ஏகப்பட்ட வரையறைகளோடு ! இங்கே ஒவ்வொரு பக்கத்துக்கும் சுமார் 15 படங்கள் வரை ஒரிஜினல் அமைப்பிலேயே உள்ளதெனும் போது - டயலாக் மிகுந்து போகும் பட்சங்களில் வேதாளரின் அந்த முகமூடியணிந்த கண்கள் மாத்திரமே தெரிய இடம் இருந்திடும் ; அவரது திடகாத்திர உடம்பெல்லாம் நம்ம தமிழாக்கங்கள் தான் போஸ்டர்களாய்ப் போர்த்தியிருக்க நேரிடும் என்பது புரிந்தது ! அங்கிளும் அதனைப் புரிந்து கொண்டு பணியாற்றியிருக்க, எடிட்டிங்கில் மொத்தமாய் 200 பக்கங்களோடு பயணிப்பது தான் எனக்கான பணியாக இருந்தது ! ஆனால் தூக்கிக் கொண்டு அமர்ந்த போது தான் அந்தப் பணியின் sheer volume எத்தனை கனமானது என்பது புரிந்தது ! Phew !!!
வேதாளர் கதைகளுக்கு அங்கிள் பேனா பிடிப்பது இதுவே முதன்முறை என்பதால் அந்த கானக சமாச்சாரங்களில் நிறைய மாற்றங்கள் அவசியப்பட்டன ; எங்கெங்கு வேதாளருக்கு "மிஸ்டர் வாக்கர்" என்று பெயர் தரணும் ? எங்கே அவரை வேதாளராய் உலவிட விடணும் ? எங்கே அவரை "நடமாடும் மாயாத்மாவாக" மிளிர விட வேண்டும் என்பதைப் பார்த்து செப்பனிட்டத்தில் ஆரம்பித்த பணியானது, அந்தக் "கானகப் பழமொழிகள்" சமாச்சாரத்தினை முழுசுமாய் மாற்றி எழுதுவது ; வேதாளருக்கான பன்ச் வரிகளை மாற்றியமைப்பது - என்று தொடர்ந்தது ! மொத்தமாய் 9 கதைகளுக்கும் இதைச் செய்து முடிக்கும் போதே, கைத்தாங்கலாய்ப் பிடித்துக் கூட்டிப் போக யாராச்சும் சிக்குகிறார்களா ? என்று தேட வேண்டியிருந்தது ! அப்புறமாய் first correction ; அதன் பின்னே second correction - என மறுக்கா, மறுக்கா 200 பக்கங்களோடு உலா வர, பக்கத்து வீட்டு நாய் நிற்பதைப் பார்த்தால் கூட - "ஹை...டெவில் !!" என்று மனசுக்குள் ஒலிக்கிறது ! பக்கத்திலுள்ள பொட்டலில் மேயும் பசுக்களைப் பார்த்தால் "ஜூம்போக்கு சித்தப்பாருகளோ ?" என்று யோசிக்கத் தோன்றுகிறது ! மைதீனை 'குரன்' என்று கூப்பிடாத குறை தான் ! But பால்யத்தின் அத்தனை நினைவலைகளையும் ஒற்றை ஆல்பத்தில் மீட்டெடுக்க இந்த Smashing '70 s - புக் # 1 உதவியுள்ளதென்று சொன்னால் மிகையாகாது ! 2020-ன் அந்த BBC நேர்காணலின் போதுகூட நான் பேச ஆரம்பித்திருந்தது எனது முதல் ஹீரோவான வேதாளரிடமிருந்து தான் ! So அந்நாட்களது இந்திரஜால் காமிக்சிலும், அமெரிக்க காமிக்ஸ்களிலும் சுவாசித்திருந்த வேதாளரோடு திகட்ட திகட்ட இன்றைக்கு பவனி வரும் அனுபவமானது அசாத்தியமாய் இருந்துள்ளது ! என்ன - வேதாளர் அவர்பாட்டுக்கு ஆயிரம் அடி உசர வாக்கர் மேடையை விறு விறுவென்று ஏறிப்புடுறார் ; இங்கே நமக்கோ ஒரு டஜன் படிகளை ஏறுவதற்குள் முட்டிங்காலிலிருந்து ரெண்டு டஜன் 'கடக்-முடக்' கேட்கின்றது ! வேதாளர் பாட்டுக்கு கட்டாந்தரையில், தலைகாணியோ, மெத்தையோ, போர்வையோ இல்லாது உறங்கிப்புடறார் ; நாமளும் ஒருநாளிக்கி try பண்ணிப் பார்ப்போமே என்று முயற்சித்தால், காலையில் JCB-ஐ கூட்டி வர வேண்டிப் போகிறது நம்மைத் தூக்கி நிறுத்த ! நான் பாலகனாய் இருந்த யுகத்திலேயே ரகளை செய்து வந்த வேதாளர், இன்றைக்கும் அதே உத்வேகத்தோடு வில்லன்களை பின்னியெடுக்கும் போது - இந்த கொரோனா பஞ்சாயத்தெல்லாம் முடிஞ்சா பிற்பாடு - பெங்காலி காட்டுக்கு பஸ்ஸைப் புடிச்சுப்புடலாம் என்றே தோன்றுகிறது ! Maybe இயற்கையோடு ஒன்றிய அந்த வாழ்க்கைமுறையில் நாமும் ஒன்றிப் போய்விட்டால் - வேதாளரின் 6 பேக்ஸ் இல்லாங்காட்டியும் ஒரு மூணோ, ரெண்டோ பேக்கோடு குப்பை கொட்டி விடலாமில்லீங்களா ? கானக பஸ்ஸில் துண்டைப் போட்டு வைக்க விரும்பிடுவோர் எனக்குப் பின்னே லைனாக நிற்கலாம் guys !!
துண்டு போட்டு ஏற்கனவே காத்திருக்கும் Smashing '70s சந்தா நண்பர்களுக்கு இங்கொரு special mention ! ரெகுலர் சந்தாவின் நம்பர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது - இந்த க்ளாஸிக் நாயகர்களின் exclusive சந்தாவானது ! And உங்களின் ஆர்வங்களும், நம்பிக்கைகளும் நிச்சயமாய் வீண் போகிடாதென்பேன் - முதல் ஆல்பமே ரெடியாகி வரும் அந்தத் தயாரிப்பு template-ஐப் பார்க்கும் போது ! And இந்தச் சந்தாவினில் இணைந்துள்ள நண்பர்களுக்கு போஸ்டருடன், ஒரு 20 பக்க புக்லெட் கூட உண்டு நமது அன்புடன் !! அது பற்றி வாக்குத் தந்திருந்ததை ரொம்பச் சமீபம் வரை நான் மறந்து தொலைத்திருக்க, 'குய்யோ-முறையோ' என்று கூப்பாடு போட்டபடியே அந்தப் பக்கங்களுக்கான உரிமைகளை 2 நாட்களுக்கு முன்னே வாங்கிய கையோடு, பணிகளின் பட்டியலோடு அவற்றையும் இணைத்துள்ளேன் ! So இந்த ஒற்றை மாதம் மட்டும் ஜனவரியில் டிசம்பரா ? ஆகஸ்ட்டா ? என்ற வினவல்களின்றி, ரெண்டு, மூணு நாட்கள் கூடுதலாய் அவகாசம் கோரிடுவேன் guys ! வேதாளர் ஸ்பெஷல் + பிப்ரவரி புக்ஸ் இணைந்து ஒரே பார்சலாய் பிப்ரவரியின் துவக்க வாரத்தில் அனுப்பிடவுள்ளோம் ! உங்களுக்குமே FFS ; பழிக்குப் பழி - போன்ற heavyweight வாசிப்பிற்கு சற்றே கூடுதல் அவகாசம் கிட்டியது போலிருக்கும் ! இன்றைக்கு அவற்றின் மொழிபெயர்ப்பு ; அண்டர்டேக்கரின் எடிட்டிங் - என ஒரு லோடு நிறைய பணிகள் வெயிட்டிங் ! So கிளம்புகிறேன் guys - அவற்றைச் சமாளிக்க ! And yes - SMASHING '70s சந்தாக்களை இன்னமுமே செலுத்திடலாம் தான் ! இது வரையிலும் கட்டியிரா பட்சத்தில் - please do join in !
Bye all...see you around ! Have a relaxed Sunday !
P.S : புத்தக விழாவின் இறுதி நாளன்று கூடுதல் கொள்முதல் செய்து "இரத்தப் படலம்" + "கழுகுமலைக் கோட்டை" இதழ்களைத் தட்டிச் செல்பவர் : திரு.இளங்குமரன் ; போரூர், சென்னை ! வாழ்த்துக்கள் நண்பரே !
தொடர்வன - XIII அடுத்த பாகத்தின் artwork previews !! நம்மாளை ஆஸ்பத்திரியில் ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார்கள் போலும் !
1?
ReplyDeleteSuper
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteநான் 3
ReplyDeleteவணக்கம்
ReplyDelete6வது...பாஸ்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteEdi Sir..நானு 7th
ReplyDeleteவணக்கம் நண்பர்களே.
ReplyDeleteHi..
ReplyDelete// நம்மிடம் பின் சீட்டில் குந்த நேரிட்டிருக்கும் ஒரு வண்டி நாயக / நாயகியரை ஒட்டு மொத்தமாய்க் களமிறக்கி, முழுக்க முழுக்கவே ஒரு "புது புக்ஸ் மேளா"வை போட்டுத் தாக்கினாலென்ன ? //
ReplyDeleteபோடுங்கோ நல்லா போடுங்கோ. அப்படியே கார்டூன் ஸ்பெஷல்... ஸ்மர்ப், பென்னி,ரின் டின், லியார்டினோ ப்ளீஸ் :-)
35% டிஸ்கவுண்டுக்கு ஈயோட்டுகிறார்கள் சார் - மேற்படியார்கள் !
Deleteஇருக்கட்டும் சார். முன் பதிவுக்கு என முயற்சி செய்யலாமே சார் :-)
Delete12
ReplyDelete// Maybe நடப்பாண்டின் ஏதேனுமொரு வாகான பொழுதினில், நம்மிடம் பின் சீட்டில் குந்த நேரிட்டிருக்கும் ஒரு வண்டி நாயக / நாயகியரை ஒட்டு மொத்தமாய்க் களமிறக்கி, முழுக்க முழுக்கவே ஒரு "புது புக்ஸ் மேளா"வை போட்டுத் தாக்கினாலென்ன ? என்ற கேள்வி மண்டைக்குள் ஓடி வருகின்றது ! பீரோவைத் திறந்தால் ஒரு கும்பலே உள்ளே குடியிருப்பது தெரியும் ! So 'ஏக் தம்மில்' அவர்களுக்கு விடியல்களைக் காட்டினாலென்ன ? என்று தோன்றியது ! புத்தக விழா circuit திரும்ப தொடங்கிடவும், சூடு பிடிக்கவும் தாமதமாகிடும் பட்சத்தில், இந்த மஹா சிந்தனை செயல்வடிவம் காண நேரிடலாம் ! // இந்த பதிவை படிக்கும் போது பளிச் என்று கண்ணில் பட்டது இது தான். சீக்கிரமே போட்டு விடலாம் சார். +10000
ReplyDeleteவருக வேதாள மாயாத்மரே.
ReplyDelete// ரெகுலர் சந்தாவின் நம்பர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது - இந்த க்ளாஸிக் நாயகர்களின் exclusive சந்தாவானது ! //
ReplyDeleteஇது இது சூப்பர் நியூஸ். அப்படி போடு போடு போடு :-)
அதே,அதே...
Deleteசார் அப்படியே அந்த சாவதற்கு நேரமில்லை ?????
ReplyDeleteகுமார் @ என்னிடம் இந்த புத்தகம் உள்ளது. Its not worth for reprint. உங்களுக்கு வேண்டும் என்றால் தேடி எடுத்து அனுப்புகிறேன் :+)
Deleteவணக்கம் நண்பர்களே..!
ReplyDelete// "இரத்தப் படலம்" + "கழுகுமலைக் கோட்டை" இதழ்களைத் தட்டிச் செல்பவர் : திரு.இளங்குமரன் ; போரூர், சென்னை !//
ReplyDeleteவாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் நண்பரே !
Edi sir..
ReplyDeleteஅப்ப ஜனவரி வேதாளர் பிப்ரவரிலதான் வராரு. குதிரையில வரது நாள கொஞ்சம் லேட்டாதான் வருவாரு போலிருக்கு ..
பழிக்கு பழி : கதை மிகவும் சாதாரணமான கதை ஆனால் முதல் பக்கத்தில் இருந்து டெக்ஸ் மற்றும் கார்சன் நங் சத் குத் என போட்டு தாக்கி நம்மை சுறுசுறுப்பாக வைத்து ஓரு நிறைவான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தார்கள்.
ReplyDeleteப.ப இன்னும் படிக்காத இதழ்,ஆவலுடன் காத்திருக்கிறேன்...
Deleteவணக்கம் sir. விபரீத விதவை, மியாவ் மியாவ் மரணம், கடலோரக் கொலைகள் கதைகளில் வந்த டிடெக்டிவ் சார்லியின் கதைகள் நல்ல திரில்லர் வகையாக இருந்தது. ஆனால் இந்த மூன்று கதைகளோடு நம் காமிக்சில் காணாமல் போய் விட்டார். அவர் கதைகளே 3 தானா sir? அல்லது நிறைய இருப்பின் அவர் மீண்டும் வர வாய்ப்பு இருக்குமா? மேலும் டிடெக்டிவ் சார்லி குறித்து இணையத்தில் விபரங்கள் சேகரிக்க இயலவில்லை.
ReplyDeleteடிடெக்டிவ் சார்லஸ்.
DeleteThe stories u mentioned i think it's Detective Charles..Charlie aka Buzz Sawyer is the one featured in the below stories சிறை மீட்டிய சித்திரக்கதை, இஸ்தான்புல் சதி, பேய்த்தீவு ரகசியம், திக்குத் தெரியாத தீவில், வெடிக்க மறந்த வெடிகுண்டு, ஒருநாள் மாப்பிள்ளை, யார் அந்த அதிஷ்டசாலி, சார்லிக்கொரு சவால், இரத்த வாரிசு, ஒரு கைதியின் கதை, கடத்தல் ரகசியம், குரங்கு தேடிய கொள்ளையர் புதையல்
Deleteஇல்லை சார் நீங்கள் கூறும் சார்லி பற்றி அவர் கூறவில்லை. அவர் கூறிய கதைகளில் வரும் ஹீரோ சார்லஸ் வேறு ஒருவர்
DeleteThis comment has been removed by the author.
Deleteபுது நாயகர்கள் வரிசை கட்டி நிற்க, பழையவர்களை தொடர்நது தேடுவானேன் நண்பரே ? இதோ ஆல்பா சார்ந்த சில கேள்விகளை நண்பர் சரவணகுமார் நேற்றைக்கு என்னிடம் கேட்டிருந்தார் :
Delete1)திட்டப்படி பாரீஸ்ல அஸ்ஸியாவை போட்டுத் தள்ளியிருந்தா ஆல்பாக்கு என்ன வேலை?
2)அஸ்ஸியாவை தீர்த்துக் கட்ட பிளான் பண்ணிட்டு ஆல்பாவுக்கு எதுக்கு டிரெய்னிங் கொடுக்கனும் அவளை பாலோ பண்ண...?
3)பாரிஸ்ல பணத்தை அடிச்ச பின்னாடி ஆல்பாவை எதுக்கு மாஸ்கோ அனுப்பறாங்க...?
பதில்கள் தேடிடுவோமா guys ?
How's about an ALPHA Quiz sometime ?
Deleteசார் வினா விடை போல இல்லாமல் விடை தேடும் நிகழ்வாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அவர் அவருக்கு இருக்கும் புரிதல்கள் நமக்கு ஆச்சர்யம் மற்றும் புது கோணங்களை காட்டும் என்பது எனது கருத்து. 🙏🏼
Deleteஒரு podcast போட்டுத் தாக்குங்க கிருஷ்ணா - நண்பர் பல்லடம் சரவணகுமாரையும் இணைத்துக் கொண்டு !
Deleteரெடிங்க சார்...
Deleteகேள்விகளுக்கான பதில்களைத் தேடிடலாங்க சார்!
1. கொன்னிருந்தாலும் பழி வாங்க ஆல்ஃபா போவார்...அதுல இரு உளவுத் துறைய சமாளிப்பார் ....தனது காதலி இன்னொருவர் மனைவி என் அறிந்து அதிர்ச்சி அடைவார்....அந்த சோகம் அதனால் குறைய வாய்ப்பு...இப்ப போலவே வானத்த நோக்கி கையசைச்சு விடை பெறுவார்...
Deleteஒரு வேளை இவங்க முன் கூட்டி சொல்லி அனுப்புனா ஜேம்ஸ் பாண்டா மாறி இருப்பார்...
This comment has been removed by the author.
Deleteஅடிபட்ட அஸ்ஸியாவ கார்ல காப்பாத்தி கூட்டிட்டு வாரதே சிஐஏதான...கொலை பன்ன இவர்கள் முயலவில்லை
Deleteமுன்னரே சொல்றாரே...அவளது கணவன வேவு பார்க்க அஸ்ஸியா நெருக்கம் உதவலாம்னு
Deleteகேள்வி 1
Deleteஎனது பார்வை..
சிஐஏ பெருந்தலைகளின் - ரான் & கோவின் - முக்கிய நோக்கம் ஆல்பாவை பொறுத்தவரை ஒன்றுதான்.. அரைகுறை மனதோடு தனது மனைவியை கொலைக்களம் நோக்கி அனுப்பி வைத்திருக்கும் கணவன் கர்னல் ஓலெக்கின் குற்ற உணர்வை சமனப்படுத்துவது.
ஆல்பாவின் வேலை அஸ்ஸியாவோடு படுக்கையை பகிர்வது..
அஸ்ஸியா திருமணமானவள் என்ற விஷயமோ, அஸ்ஸியாவோடு உறவு கொள்வது வீடியோ பதிவாக்கப்படுகிறது என்ற விஷயமோ ஆல்பாவுக்கு தெரியாது.( நான் நேற்றிரவுதான் அவளோடு உறவு கொண்டேன் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என பக்கம் 58 - ல் கேட்கிறான் ஆல்பா)
அஸ்ஸியாவோடு பாலுறுவு கொள்வது மட்டுமே ஆல்பாவின் வேலை என்பதால் திட்டமிட்டபடி அஸ்ஸியா கொலையுண்டிருந்தால் ஆல்பாவின் வேலை ஏற்கனவே முடிந்தாகிவிட்டது..
ஆல்பாவின் மீதெழும் அஸ்ஸியாவின் மோகம் தான் திருமணமானவள் என்ற உண்மையை மறைக்க சொல்கிறது.
அஸ்ஸியாவின் infidelity பற்றிய ஆதாரம் அவள் கணவனின் அவள் மீதான
பற்றினை குறைக்கும் அதன் மூலம் சிஐஏ - கேஜிபி இருதரப்பு உறவில் பங்கம் எதிர்காலத்தில் வராது என ரான் தரப்பு நம்புகிறது..
இரண்டாவது கேள்விக்கும் பதில் இதுவே!
Deleteஅஸ்ஸியா உயிர் பிழைத்தது எதிர்பாராதது
Deleteஅஸ்ஸியாவை அவள் கணவன் சம்மதமுடன் கொல்வதே நோக்கம்.
ஆல்பா அஸ்ஸியாவுடன் உறவு கொண்ட வீடியோவை காட்டி ரஷ்யாவுக்கும் அவன் அவளோடு தொடர்பில் இருக்க வந்துள்ளான் அவளும் அதற்கு உடன்படுகிறாள் என சாட்சி அளித்து அவளையும் ஆல்பாவையும் கொல்வதே திட்டமாக இருக்க முடியும்..
அஸ்ஸியா ஒரு வீக் லிங்க்..பாரிஸ் பரிவர்த்தனை ,ஆல்பா பற்றி அறிந்த அத்தனை பேரையும் கேட்டியா உட்பட ரான் & கோ கொல்கிறது..அஸ்ஸியாவை கொல்ல ஆல்பா ஒரு கருவியாக மட்டுமே ஆல்பா மாஸ்கோ அனுப்பப்படுகிறான் .
திட்டப்படி அவனும் பலியாக வேண்டியவனே...
// வேதாளர் ஸ்பெஷல் + பிப்ரவரி புக்ஸ் இணைந்து ஒரே பார்சலாய் பிப்ரவரியின் துவக்க வாரத்தில் அனுப்பிடவுள்ளோம் ! //
ReplyDeleteபிப்ரவரியும் வாசிப்பில் பிஸி,பிஸி மாதம் தான்...
// தேதிகளுக்கேற்பவே டெஸ்பாட்ச் செய்து வந்துள்ளனர் என்பதால், கடைசி நாட்களில் ஆர்டர் செய்த நண்பர்கள் சற்றே பொறுத்தருள்க - ப்ளீஸ் //
ReplyDeleteஎனக்கும் இன்னும் வரலை,நாளை கிடைக்கும் என்று நம்புகிறேன்...
வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே
ReplyDeleteவானவில்லைத் தேடி :- சமீபத்தில் மறுவாசிப்பு செய்த கதை. அட்டகாசமான சைசில் படிப்பதற்கு அருமையாக இருந்தது. அட்டைப்படம் மற்றும் பின்புற படம் இரண்டும் சூப்பர்.
ReplyDeleteகுழந்தைகள் இந்த கதையை ஒரே இரவில் சொல்லி முடிக்க வேண்டும் என கலாட்டா :-) மூன்று நாட்களுக்குள் சொல்லிவிடுவேன் என்று நேற்று வரை 30 பக்கங்கள் ஒடி விட்டது மிகவும் ஆர்வமாக கேட்டார்கள் ஊர்வலமாக பல நாட்கள் பல ஊர்களில் டென்ட் அடித்து செல்லும் வாழ்க்கை அவர்களுக்கு புதியது. மிகவும் ரசித்தார்கள்... லக்கி லூக் உண்மையில் இருந்தால் நன்றாக இருக்கும்லப்பா என்பது எனது மகளின் சமீபத்திய கேள்வி. தினமும் சரியாக இரவு 9.30 மணிக்கு புத்தகத்துடன் ரெடியாகி விடுவார்கள். நமக்கு தான் இன்னும் கொஞ்சம் எனர்ஜி தேவை :-)
// பீரோவைத் திறந்தால் ஒரு கும்பலே உள்ளே குடியிருப்பது தெரியும் ! //
ReplyDeleteஒரு கும்பலா மஞ்சக் கொடியத் தூக்கிகிட்டு ஆரவாரமா வரப் போறாங்களோ...!!!
// Maybe இயற்கையோடு ஒன்றிய அந்த வாழ்க்கைமுறையில் நாமும் ஒன்றிப் போய்விட்டால் //
ReplyDeleteஉண்மையும் அதுதானே சார்...
Since I have subscribed from 2012 for everything, and saved everything in a separate cupboard, there is no need for me to visit regular or online book fair.
ReplyDeleteMe too have done that sir but we too have the reason to visit the fair or atleast order in the fairs because of fair exclusive books like lion library 😀
DeleteHowever Online Bookfair specials (Pazhikku Pazhi & Vanavillai thedi) has to be bought separately. They have to be ordered online.
Deleteoh. i didnt know that
DeleteUyirmai magazine has published a 4 page write up on 50th yr celebrations of mutual comics. Written by yuva krishna. I have shared the article photos via mail sir
ReplyDeleteYes sir, I read it ! Some facts could have been better presented though !
Deleteகுரன் டெவில் வேதாளர் வாக்கர் என்று ஆர்வத்தை அதிகப்படுத்துகிறீர்கள் சார் காத்திருக்கும் பொறுமையும் குறைகிறது ☹️
ReplyDeleteஆனால் அதன் பின் உள்ள பிரச்சனைகள் புரிகிறது காத்திருக்கிறோம் 🙏🏼
பஸ்ஸில் ஒன்றுக்கு இரண்டு துண்டு போட்டுள்ளேன், தவறாமல் கூட்டி போய்விடுங்கள் சார் 😀
இன்னும் இரண்டாம் வருகையையே இன்னும் படிக்கவில்லை ஆனால் அடுத்தது கிளம்புகிறார் xiii. டைகர் போன்று அவரது நற்பெயரும் கெடாமல் இருக்க வேண்டும். விற்பனை ஆகிறது என்று அவரை நீட்டுவது முறையாக இருக்காது என்பது எனது கருத்து.
ஒன்பது கதைக்கும் அதன் ஒரிஜினல் அட்டைப்படங்கள் இனைக்கும் எனது கோரிகை நிறைவேறும் சாத்தியம் உண்டா சார்.
இவை சகலமுமே தினசரிகளில் வந்த ஸ்ட்ரிப்ஸ் தொகுப்புகளே எனும் போது ஒரிஜினல் அட்டைப்படங்கள் என எதுவுமே கிடையாது கிருஷ்ணா ! ஆங்காங்கே வெளியிடும் பதிப்பகங்கள் அவரவராய் உருவாக்கிக் கொள்வதே ராப்பர்கள் !
Delete9 டிசைன்களை இதற்கென போட்டு வாங்கி , ஆர்ட்பேப்பரில் அச்சிட்டு உள்ளே நுழைப்பது நெருக்கி முக்கால் லட்சத்துக்கான செலவாகிடும் ! சான்ஸே கிடையாது நண்பரே !
// நெருக்கி முக்கால் லட்சத்துக்கான செலவாகிடும் ! சான்ஸே கிடையாது நண்பரே ! //
Deleteஅடேங்கப்பா ஆளை விடுங்க சாமி :-)
நன்றி சார் தெளிவான விளக்கங்களுக்கு.
Deleteஅப்போ வேதாளர் பார்த்தே திருப்தி கொள்கிறோம் 😀🙏🏼
வேதாளர் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருகிறார். வருக..வருக..வேதாள மாயாத்மா.
ReplyDelete42
ReplyDeleteவேதாள மாயாத்மாவே வருக!
ReplyDeleteசூப்பர் பதிவு சார்....சின்னதா போச்சு பதிவுதான்....வேதாளன் தூள் கிளப்புவது உறுதி...பிற நாயகர்களுக்கும் சந்தா தூள் கிளம்புவது மகிழ்ச்சி....மென்மெலும் விரிவடைய செந்தூரான் அருளை வேண்டுகிறேன்...
ReplyDeleteFFS படித்துவிட்டு விட்டேன்!சித்திரங்கள் உயிரூட்டி இருந்தன. கதைகளை பொருத்தவரை SISCOவைவிடAlpha and tango நன்றாக இருந்தன.
ReplyDeleteவேதாளருக்கும் Tex willer க்கும் நிறைய ஒற்றுமை உண்டு ...பழங்குடித்தலைவர்,துப்பாக்கி சுடும் வேகம் ...ரெண்டு பேருமே Dinosaurஐ நேர்ல பார்த்தவங்க ...இப்பிடி சொல்லிக்கிட்டே போகலாம்... Selective கதைகளை போட்டா நிச்சயமா Tex க்கு Tough Fight கொடுப்பார்
ReplyDeleteகானகக் கோட்டை - என்னா கதை என்னா கதை என்ன திருப்பங்கள் என்னா வில்லன்ஸ். செம விறுவிறுப்பு புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்கவே மனம் வரவில்லை. அதுவும் கடைசி இரண்டு அத்தியாயங்கள்..செவ்விந்தியர்கள் அனைவரும் இணைந்து போருக்கு தயாராகிறது ஜிவ் என்று இருந்தது. சூப்பர் எண்டர்டெயின்மெண்ட். ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு டெக்ஸ் கதை படித்து. வண்ணத்தில் படிக்க மனதுக்கு இதமாக உள்ளது.
ReplyDeleteAlpha Quiz ...ready sir
ReplyDeleteTEX QUIZZZZZ??
ReplyDeleteடேங்கோ வாசித்து விட்டேன். அழகிய சித்திரங்களோடு படபடக்க வைக்கும் கதை. அநேகமாக தென்னமெரிக்க பகுதியில் நிகழ்ந்திடும் கதைகள் நமக்கு புதிது, அதன் நிலப்பரப்பு, மக்கள் மற்றும் அவர்களின் வாழிடங்கள் என நிறைய கதைப் போக்கில் தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்குமுன் வேறெந்த கதைகளில் தென் அமெரிக்கா நம் காமிக்சில் வந்துள்ளதா நண்பர்களே? நானறிந்த வரை இரத்த வெறியர்கள் கதையில் டெக்ஸ் வில்லர் வில்லன்களை அர்ஜென்டினா வரை சென்று மடக்குவார், அது மட்டுமே நினைவுள்ளது. மற்றபடி மெக்சிகோ வரை மட்டுமே மற்ற கதைகளில் கண்டுள்ளோம் (கேப்டன் டைகர் கதைகளில் கூட.) என்று நினைக்கிறேன்.
ReplyDeleteZaroff !
Deleteஷெல்டன் நண்பரே
Deleteசீக்கிரம் வரட்டும் சார்
Delete// Zaroff ! //
Deleteநில்,கவனி,வேட்டையாடு...
ப்பா,வேற லெவல் கான்செப்ட்...
அதில் கானகம்தானே
Deleteடெக்ஸ்சின் "கொடூர வனத்தில் டெக்ஸ்" மற்றும் "துரோகியின் முகம்" கதைகள் தென் அமெரிக்காவின் வெனிசூலா, கொலம்பியா கடற்கரை பகுதிகளிலும், அதை ஒட்டியுள்ள அமேசான் காட்டுப் பகுதிகளிலும் நிகழும்.
Deleteவெயின் ஷெல்டனின் "ஒரு ஒப்பந்தத்தின் கதை" பிரேசில் நாட்டில் ஆரம்பிக்கும்.
"வரலாறும் ஒரு வல்லூறும்" இரண்டாம் அத்தியாயம் அர்ஜென்டினாவில் நிகழும்.
"ஒரு காகிதத்தை தேடி" முழுக்க அர்ஜென்டினாவில் நிகழும்.
மற்றும்
ஜரோஃப் கதை.
இரு வாரங்களுக்குப் பிறகு படிக்க நேரம் அமைந்ததால் FFS 1 - Alfa படித்துக்கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தை விட தமிழில்படிக்க சுவையாகவும் நெறியாகவும் இருக்கு. Intricate story but lives up to the milestone !
ReplyDeleteஎன்ன சில படங்கள் குறைச்சல் - ஏனெனில் அவற்றில் வேறு சிலவை குறைச்சலோ ?? ஒரிஜினல் பதிப்பாளர்களுக்கு தமிழில் 'எதையும்' நீக்கவோ மறைக்கவோ கறுப்படிக்கவோ கூடாது என்று விண்ணப்பித்து ஒரு கடுதாசி போடணும்பா !!
Awaiting Phantom eagerly !!
நம்மிடம் பின் சீட்டில் குந்த நேரிட்டிருக்கும் ஒரு வண்டி நாயக / நாயகியரை ஒட்டு மொத்தமாய்க் களமிறக்கி, முழுக்க முழுக்கவே ஒரு "புது புக்ஸ் மேளா"வை போட்டுத் தாக்கினாலென்ன ? என்ற கேள்வி மண்டைக்குள் ஓடி வருகின்றது ! பீரோவைத் ### திறந்தால் ஒரு கும்பலே உள்ளே குடியிருப்பது தெரியும் ! So 'ஏக் தம்மில்' அவர்களுக்கு விடியல்களைக் காட்டினாலென்ன ? ###
ReplyDeleteகுண்டு புக்ஸ் மேளாவா சார் ,🤔
உயிரை தேடி ன்னு ஒரு புக் வரும்னு விளம்பரம் செய்தீர்கள் அது எப்போ வரும் சார். வருமா சார்
ReplyDeleteMay End'22.
Deleteவாவ்...
Deleteசூப்பர்
Delete//Maybe நடப்பாண்டின் ஏதேனுமொரு வாகான பொழுதினில், நம்மிடம் பின் சீட்டில் குந்த நேரிட்டிருக்கும் ஒரு வண்டி நாயக / நாயகியரை ஒட்டு மொத்தமாய்க் களமிறக்கி, முழுக்க முழுக்கவே ஒரு "புது புக்ஸ் மேளா"வை போட்டுத் தாக்கினாலென்ன ? என்ற கேள்வி மண்டைக்குள் ஓடி வருகின்றது ! பீரோவைத் திறந்தால் ஒரு கும்பலே உள்ளே குடியிருப்பது தெரியும் ! So 'ஏக் தம்மில்' அவர்களுக்கு விடியல்களைக் காட்டினாலென்ன ? என்று தோன்றியது ! புத்தக விழா circuit திரும்ப தொடங்கிடவும், சூடு பிடிக்கவும் தாமதமாகிடும் பட்சத்தில், இந்த மஹா சிந்தனை செயல்வடிவம் காண நேரிடலாம் !//
ReplyDeleteஇந்த மாதிரி சந்தர்பங்களிலாவது இவர்களை களம் இறக்குங்கள்.
கமான்சே, lady S, இளம் டைகர், டயபாலிக், டைலன் டாக். மேஜிக் விண்ட், ஜூலியா, ராபின், போனெலியின் கறுப்பு வெள்ளை 110 பக்க கிராபிக் நாவல்கள் (இந்த வகை கிராபிக் நாவல்கள் நன்றாக தானே போய்கொண்டிருந்தது, மீண்டும் முயற்சிக்கலாமே)
உங்கள் பட்டியலில் உள்ள 90% பேர் கிட்டங்கிக் காதலர்கள் நண்பரே ; அடுத்த ஆன்லைன் விழாவில் 50% டிஸ்கவுண்ட் போட்டாலாவது அவர்களது இருப்புக்கள் குறைகிறதா ? என்று பார்க்க வேண்டும் !
Deleteலயன் லைப்ரரிக்காகவும், டெக்ஸ் போஸ்டருக்காகவும் waiting. சார், Pls do needfull sir
ReplyDeleteFFS முதல் புத்தகம் படித்தாகிவிட்டது. மூன்றுமே முத்துக்கள் தான். ஆல்பா பாசஞ்சர் ரயிலில் பயணித்த உணர்வைத் தந்தது. சிஸ்கோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த உணர்வு. டேங்கோ சூப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த உணர்வு தந்தன. சித்திரங்களும் அழகிய அழகிகளும் கச்சிதமான மொழிபெயர்ப்பும் குளுகுளுவென்ற வண்ணக்கலவைகளும் மேலும் ரசிக்க வைத்தன. இம்மூன்று நாயகர்களின் அடுத்த கதைகளை சாகசங்களைப் படிக்க ரசிக்க ஆவல். ஆக முத்துப் பொன்விழாச் சிறப்பிதழ்களை ரசித்துப் படித்து மகிழ்ந்தாச்சு. அடுத்தச் சிறப்பிதழ்களை எதிர்பார்த்து மனம் ஏங்கிக்கிடக்கிறது.
ReplyDeleteபின்சீட்டில் குந்திக்கிடப்பவர்கள் ஒரு வழியாய் கிட்டங்கியைக் காலி பண்ணிய பிறகு முயற்சிக்கலாம் என்பது என் கருத்து சார்.
ReplyDeleteஅப்படிக் காலியான பின் ஸ்மர்ப்ஸ் மற்றும் கமான்சே , மேஜிக் வின்ட் மற்றும் ஜில் ஜோர்டான் , லேடி S போன்றவர்களில் யார்க்காவது வாய்ப்புத் தரலாம் சார்.
அதுவரை மஞ்சச் சட்டை அணியும் இருவர்க்கு வாய்ப்புகள் தரலாம் என்பதும் என் கருத்து சார்.
அப்புறம் உங்கள் உசிதம் போல் எது தந்தாலும் செய்தாலும் அடியேனின் ஆதரவு உண்டுங்க சார்.நன்றிங்க சார்.
வேதாளரின் அட்டைப்படம் ஆஹா ரகம்... சீக்கிரமே கைக்கு கிடைக்க ஆண்டவனையும் அஞ்சலகத்தையும் வேண்டிக் கொள்கிறேன்...
ReplyDeleteஜனவரி+பிப்ரவரி+புக் ஃபேர் ஸ்பெஷல் புக்ஸ் புத்தகங்களுடன் வேதாளரையும் சேர்த்து UKவிற்கு அனுப்ப முடியுமா சார்?
அஞ்சலகத்தின் மூலம் அனுப்ப முடியாவிட்டால் கருடவேகா முயற்சிக்க முடியுமா என்று சொல்லுங்கள்.
நன்றி!
கருடவேகா சீப் அல்ல நண்பரே ; மூணாயிரம் வரக்கூடும் ஒரு பார்சலுக்கு !
Deleteபதிலளித்தமைக்கு நன்றி சார். அஞ்சலகத்தின் மூலமாக அனுப்புங்கள்.. நிலைமை சீக்கிரமே சீராகும் என காத்திருக்கிறேன்..
Deleteஆஹா வேதாளர் பற்றிய அறிவிப்பு ஆவலை கூட்டுகிறது சார்...பிப்ரவரியில் அனைத்து இதழ்களையும் அனுப்புவதை மிக மகிழ்வுடன் வரவேற்கிறேன்...சஸ்பென்ஸை அறிய சஸ்பென்சுடன் காத்து கொண்டிருப்பதும் சுகமே...:-)
ReplyDeleteமறுக்கா, மறுக்கா 200 பக்கங்களோடு உலா வர, பக்கத்து வீட்டு நாய் நிற்பதைப் பார்த்தால் கூட - "ஹை...டெவில் !!" என்று மனசுக்குள் ஒலிக்கிறது
ReplyDelete######
:-)))))
ரெகுலர் சந்தாவின் நம்பர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது - இந்த க்ளாஸிக் நாயகர்களின் exclusive சந்தாவானது !
ReplyDelete#####
அடேங்கப்பா...சூப்பர் சார்..:-)
புத்தக விழாவின் இறுதி நாளன்று கூடுதல் கொள்முதல் செய்து "இரத்தப் படலம்" + "கழுகுமலைக் கோட்டை" இதழ்களைத் தட்டிச் செல்பவர் : திரு.இளங்குமரன் ; போரூர், சென்னை ! வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDelete####
வாழ்த்துக்கள் நண்பரே...!
வேதாளர் பால்யத்தில் நமது மாஸ்ஹீரோ. தற்போதைய ரசனைக்கு ஏற்றபடி வருவாரா? கதைகள் ஹிட்டாகுமா? ஆசிரியரைவிடஅதிக எதிர்பார்ப்பில் நாங்கள். இதுவரை எந்தஹீரோவுக்காகவும் இப்படித்தவித்ததுமில்லை.ஏங்கியதுமில்லை.நாட்கள் நெருங்க நெருங்க இதயத்துடிப்பு எகிறுகிறது. கரூர் ராஜ சேகரன்
ReplyDeletePhantom, இரு வண்ணம் என்று வேறு சொல்லி இருக்கிறீர்கள், எனது எதிர்பார்ப்பு அதனாலேயே மிகுதியாக உள்ளது, இரு மணம் கொண்ட ஒரு பக்கம் மட்டும், ஒரு செம்பில் அப்லோட் செய்யுங்கள் என்று
ReplyDelete//நேர்கோட்டுக் கதைகள் தானே ; ஏற்கனவே பரிச்சயமான நாயகர் தானே ; black & white ஆல்பம் தானே ; சமாளித்து விடலாமென்று, இறுதிக்கட்டப் பணிகளைக் கையில் எடுப்பதில் கொஞ்சம் அசட்டையாய் இருந்து விட்டேன் !//
Deleteபதிவுகளுக்குள்ளும் கொஞ்சம் கவனங்களை ஓடச் செய்யுங்கள் நண்பரே !
82nd
ReplyDeleteFFS2.......
ReplyDeleteஆல்ஃபா....சிஸ்கோ...டேங்கோ...
மூன்று துடிப்பான இளம் நாயகர்கள்....
ஒவ்வொருவரும் ஓருவித பாணி.....
கதை சொல்லும் விதம் ஏறத்தாள ஒரே பாணி....ஃப்ளாஷ் பேக்கில் கதை சொல்லப்படுவது எப்போதும் ஹிட் அடிக்கும்...இம்முறையில் 3ம் சூப்பர்ஹிட்,மெகாஹிட்,ஸ்மாஸிங் ஹிட்...
எதுஎது எந்தெந்த ஹிட் என்பது நண்பர்களை பொறுத்து மாறுபடும்....
3கதைகளும் தடதடக்கும் அதிவேக பாணி.... சிங்கம் 1,2,3போல கடகடனு ஓடுது.....
ஆல்ஃபா....,
ரஷ்யாவின் உளவுத்துறை சாமார்த்தியமாக காய்நகர்த்தி மாஃபியாகளிடம் இருந்து டாலர்களை சுருட்ட பார்க்கிறது; வலுவிழந்த KGB-CIA தலைகள் சுயலாபம் ஈட்ட டபுள்கிராஸ் பண்ணபார்க்கின்றன...
இந்த ஆட்டத்துக்கு இடையில் அப்பாவியாக அலைக்கழிக்கப்படும் ஆல்ஃபா.... சில நேரங்களில் மனுசனை பார்த்தா பாவமாகூட இருக்கும்....
இடையில் ரஸ்ய டாப் மாஃபியா குடும்பத்தின் அதிகார ஆட்டங்கள்...
கதையை நகர்த்த ஆசிரியர் தேர்ந்தெடுத்த அழகு மங்கை அஸ்ஸியா டொன்கோவாவை மையப்படுத்தியே நிகழ்வுகள் புனையப்படுகின்றன....
டொன்கோவை விரும்பினாலும் அவளையும் பலி கொடுக்க விழையும் அவளது கணவன் ஒலெக், ஒருதலையாக அஸ்ஸியாவை விரும்பும் இகோர், அவளை கண்டதும் காதலில் விழும் ஆல்ஃபா என அஸ்ஸியாவின் கொடி பறக்குது....
இடையில் மாஃபியாவின் கோரமுகத்தில் சிக்கி சின்னாபின்னமாகும் காதல் ஜோடி...
இப்படி ஒரு அசாத்திய வலைப்பின்னல் கதையமைப்பில் ஏகப்பட்ட டவிஸ்ட்கள், அதிர்வுகள்....
சிஸ்கோ....
Deleteசரசரவென ஓடிய திரைக்கதை போன்ற காட்சியமைப்புகளில் இருபாகங்கள் சீட்டின் நுனியில் கட்டிபோடுகிறது.....
பிரெஞ்சு பிரெஸிடெண்டுக்காக ஆகாத நபர்களை களையெடுக்கும் அமைப்பில் நடக்கும் டபுள்கிராஸ், ட்ரிபிள்கிராஸ் தான் கதைக்களம்....
அதை கதையாக பின்னிய நேர்த்திதான் சபாஷ் போடவைக்கிறது...
ஒரு இடத்தில் கூட பல்ஸ்மீட்டர் ரீடிங் குறையாத கடகடவென நகரும் கதை...
களையெடுக்கும் காட்சியில் ஆரம்பித்து, அதை பார்த்து தொலைத்துவிடும் நபர் மரெட்டியை துறத்த ஆரம்பித்தது முதல் வெர்ராட்டுக்கு "சம்பளம்" தரும் வரை மூச்சு விட அவகாசம் தராமல் சிஸ்கோ கூடவே நாமும் ஓடுறோம், தாவுறோம், அடிபடறோம், சுகிக்கிறோம், தண்டனை தர்றோம்....
மெதுவாக ஆரம்பித்து வேகம் எடுக்கும் பழம்பாணி டிடெக்டிவ், 007களுக்கு மாற்றாக சடுதியில் வேகம், அதே வேகத்தோடு பயணம்.....!!!
ஒரு பாகத்தில் சொதப்பும் திட்டம், மர்ம முடிச்சி; 2வது பாகத்தில் தீர்வு.... கிட்டத்தட்ட ஒரு லார்கோ பாணி!
கதையின் ஹைவோல்டேஜ் கருதி கேரக்டர்கள் பேசும் வார்த்தைகள் பொருத்தமாக கையாளப்பட்டுள்ளன....!!
டேங்கோ.....
Deleteதானுண்டு தன் கடலோடும் படகுண்டுனு இருக்கும் டேங்கோவை போதை மருந்து மாஃபியாக்கள் உள்ளிழுத்து ஹைடெக் நாயகனாக ஆக்குது....
ஒழுவழியாக கிடைச்ச பணத்தோடு தலைமறைவாகிறார்...அங்கே கிடைக்கும் ஏகாந்த தனிமை, விதவையின் காமகாதல்னு மனுசன் ஜாலியாக இருக்க.... விதி சின்னபையன் ரூவத்தில் விளையாடி அவரை வெளிச்சத்துக்கு கொண்டுவருது...
சிறுவனின் பின்னணி, தொடரும் பழைய மாஃபியா+ முன்னாள் காதலி, துறத்தும் கூலிப்பட்டாளம், மிரட்டும் முன்னாள் போலீஸ் என கதை படுபயங்கர டிவிஸ்ட்களுடன் பயணிக்க.... அசாத்தியமான க்ளைமாக்ஸ் சபாஷ் போட வைக்கிறது....
ஒற்றை பாகம்னாலும் கொஞ்சம் நீண்டு செல்லும் பக்கங்கள் சிஸ்கோ, ஆல்ஃபா வுக்கு இணையான போட்டியை தருது..
டேங்கோவின் நிஜபலம் கதை நடக்கும் அர்ஜென்டீனா-பொலிவியா ஆண்டிஸ் மலைத்தொடர்...... அங்க ஓரு டூர் அடிச்ச எஃபெக்ட்ஸ்....
ஆல்ஃபா....
Deleteவண்டி வண்டியான டயலாக்குகள் என்றாலும் அசத்தும் அஸ்ஸியாவின் அழகு அதை ஈடுகட்டி வாசிப்பதில் சுவாரயஸ்த்தோடு பயணிக்கிறது 3பாகங்களில்....
சிஸ்கோ....
சடார்படார்னு ஓடும் திரைக்கதைக்கு இணையாக கதையோட்டத்திற்கு ஈடுசெய்யும் அற்புதமான வசனங்கள் சும்மா டாப்பில் நிறுத்துகிறது...
டேங்கோ...
ஒற்றை பாகம் என்ற குறையை அசத்தும் ஓவியங்கள், இயற்கை காட்சிகள் & டேங்கோவின் ஆளுமை ஈடுகட்டி இதையும் போட்டிகளத்தில் கடைசிவரை ஓடச்செய்கிறது...
மதிப்பெண்...
FFS2க்கு 100மார்க்குகளை பிரிச்சிபோட்டா...
ஆல்ஃபா....= 33
சிஸ்கோ....= 33
டேங்கோ...= 33
அந்த ஓரு மார்க்கு, பைண்டிங்கில் உள்பக்கங்கள் மேடுபள்ளமாக அலைஅலையாக மடங்கி வாசிப்பிற்கு இடையூறு செய்வதன் பொருட்டு மைனஸ் ஆகிறது....
FFS2..... மீள்வாசிப்பு லிஸ்ட்ல இணையும் ஒரு மாஸ் இதழ்....💞💞💞💞💞💞💞
நிச்சயமா டேங்கோ எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிடுது...முதலிடம் ஓவியங்கள்...காணக்கிடைக்காத காட்சிகள்...ப்ளஸ்...ஆசிரியர் நம்முடன் வருவது
DeleteSalem Tex - Tango + SISCO+ Alpha = FFS1
DeleteONOT - FFS 2
I would also rate FFS1 higher !!
ஆம் ராக் ஜி.... நீங்கள் சொல்வது மிகசரி....🙏👌
Deleteஆசிரியர் சார்@ & ப்ரெண்ட்ஸ்.... @
இந்த விமர்சனம் ஆரம்பத்தில் உள்ள தலைப்பை FFS1னு மாற்றிக்கொள்ளுங்கள்.....
அதில பாருங்க ராக் ஜி ONOT வை அழுத்தி சொல்லி சொல்லி அதான் 1னு பதிச்சிட்டது.....😉
" ரெகுலர் சந்தாவின் நம்பர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது - இந்த க்ளாஸிக் நாயகர்களின் exclusive சந்தாவானது !"
ReplyDeleteஇதைத்தான் Sir எப்போதும் சொல்கிறேன்,
தரமான காமிக்ஸ்களுக்கு பழமை புதுமை என்ற காலகட்டங்களே கிடையாது,
எனவே பழமை விரும்பிகள் என்று முத்திரை குத்தப்பட்டாலும் Golden oldies ஐ எப்பொழுதும் கோருவோம்
Good Evening Editor Sir,
ReplyDeleteLion Library books Pazhikkupazhi is excellent. Kanagakottai already read in jolly spl. Even though with color its nice.
When will you publish That 700+ page Tex (Mephisto) book sir ?
நண்பரே, ஆளாளுக்கு நெட்டில் இங்கொன்றும், அங்கொன்றுமாய் அள்ளி விடும் தகவல்களை முழுசுமாய் நிஜமென்று எடுத்துக் கொள்ளாதீர்கள் ! "டெக்ஸ் வில்லரது மிக நீண்ட கதைகள்" என்று நீங்களாகவே தேடிப் பாருங்களேன் - நிஜம் புரியும்.
DeleteJust in case, தேடச் சிரமமெனில் :
DeleteThis is the Top 10 list of Tex Willer's Longest Adventures:
1. Ritorno a Pilares, கதை-Nolitta, ஓவியர்-Letteri, வெ. எண்:387-392, 586-பக்கங்கள்.
2. Il Grande Intrigo கதை-GL Bonelli, ஓவியர்-Nicolo, வெ. எண் :141-145, 511-பக்கங்கள்.
3. L'uomo con la frusta, கதை- Nizzi, ஓவியர்கள்- Fusco & Civitelli, வெ. எண் : 365-369, 504-பக்கங்கள்.
4. La storage di Red Hill, கதை- Nolitta, ஓவியர்கள்- Giolitti & Ticci, வெ. எண் : 431 - 435, 461-பக்கங்கள்.
5. Athabasca Lake, கதை- Nizzi, ஓவியர்-Fusco வெ. எண் : 530 -533, 440-பக்கங்கள்.
6. L'ombra di Mefisto, கதை- GL Bonelli, ஓவியர்-Galep, வெ. எண்.265 - 268, 401-பக்கங்கள்.
7. El Supremo, கதை-Boselli, ஓவியர்-Dotti, வெ. எண்:637-640, 395-பக்கங்கள்.
8. Trapper, கதை- GL Bonelli., ஓவியர்-Nicolo, வெ. எண் : 193 - 196, 390-பக்கங்கள்.
9. Missione a Great Falls, கதை- Nolitta, ஓவியர்-Fusco, வெ. எண்:203-207, 381-பக்கங்கள்.
10. Terra Promessa (Promised Land) கதை- GL Bonelli, ஓவியர்-Ticci, வெ. எண் :146 - 149, 375-பக்கங்கள்.
6...
Delete🙏🙏🙏🙏🙏
DeleteThank you Editor for detailed reply.
F f s வெற்றியா? தோல்வியா? கேள்விகளுக்கு விடை தருகிறது stvrன் விமர்சனங்கள். நிச்சயமாக ffsமாஸ்ஹிட்தான்.. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஎனது மூத்த நண்பர் ஒருவருக்கு வேதாளன் கதைகள் மட்டும் தேவைப்படுகிறது. வேதாளன் கதைகள் மட்டும் வேண்டுமெனில் சந்தா தொகை எவ்வளவு?
ReplyDeleteஆன் லைன் புத்தக விழாவில் புதிதாக வெளியிடப்பட்ட இதழ்கள் மற்றும் மறுபதிப்பு இதழ்களின் பட்டியல் கிடைக்குமா சார்?
அவ்வபோது நீங்கள் அறிவிக்கும் இதழ்களுக்கு முன்பதிவுகளை செய்து விடுகிறேன். ஆனால் பட்டியல் என்னிடம் இல்லை. இது குறித்த பட்டடியலை ஒரு Permanent Link மூலம் நமது ஆன் லைன் ஸ்டோரில் வெளியிட்டால் நன்று.
Nopes,தனிப்பட்ட ஆல்பங்களாய் SMASHING 70's நாயகர்களின் புக்ஸ் நம்மிடம் 2023 வரையிலும் கிடைத்திடாது ! நான்கு ஆல்பங்களும் இணைந்தான முன்பதிவுகளே செய்திட வேண்டிவரும் சார் !
Deleteஏஜெண்ட்களுக்குமே இதே விதிமுறை பொருந்திடும் என்பதால் அதற்கு இசைவு சொல்லிடுவோரிடம் மட்டுமே இவை கிடைத்திடும். அவர்களிடம் நீங்கள் முயற்சிக்கலாம் !
104வது
ReplyDeleteAlpha album 3 is at runaway speed -even better than ONOT !
ReplyDeleteஎக்ஸாக்ட்லி ராக் ஜி..... FFS2 ரொம்ப ரொம்ப லீடிங்ல உள்ளது.... ஓ.நோ.ஒ.தோ.வுக்கு கேட்சிங் பண்ண வாய்ப்பு சொற்பமே.....
Deleteடெக்ஸ் FFS 2 வொண்டர் பால் தானே???
Deleteஎனது ஆர்டர்
Delete1. Wonder Ball
2. Tango
3. Sisco
4. Alpha
KS@ அட ஆமால்ல.... ஒ.நோ.ஒ.தோ.வை வெரி இம்பார்டன் கொடுத்திட்டு இருந்ததால் அதுதான் FFS1 னு பதிவாகிட்டு... ஆனா அஃபிஷியலாக நீங்க சொன்னதுதான் சரியான லிஸ்ட்....
Deletealpha, cisco, tango moondrum padithuvitten. political thriler alpha, french detective agent CISCO fisherman Tango.. but personally i prefer tango series..very different location of south america, landscapes intresting..
ReplyDeleteExotic South America....
Deleteடேங்கோ...ஒநொஒதோ....ஆல்ஃபா...ப்ளேக்....ஸ்பைடர்....சிஸ்கோ...என் வரிசைல
ReplyDeleteஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் :-
ReplyDeleteநீங்கள் ரெகுலராக நியூஸ் பார்ப்பவராகவோ.. கேட்பவராகவோ.. அல்லது வாசிப்பவராகவோ இருந்தால், நிச்சயம் இப்படிப்பட்ட செய்திகளை கேள்விப்பட்டிருப்பீர்கள்..
அதாகப்பட்டது.. அமெரிக்காவில்..
ஓடும் பேருந்தில் திடிரென வெறிபிடித்தார்போல் ஒரு நபர் துப்பாக்கியை எடுத்து சக பயணிகளை சுட்டுத்தள்ளினார்..
ஷாப்பிங் மாலில் நுழைந்த நபர் திடிரென துப்பாக்கியை எடுத்து வாடிக்கையாளர்களை சுட்டுக்கொன்றார்..
பள்ளி வளாகத்தில் நுழைந்த நபர் ஒருவர் பள்ளி மாணாக்கர்களை துப்பாக்கியால் சுட்டார்..
இதுமாதிரியான செய்திகளை கேள்விப்பட்டபோது எப்படி நார்மலான மனிதர்களுக்கு திடிரென இப்படி வெறிபிடிக்கிறது என்று வியந்ததுண்டு.!
அப்படி வெறி ஏற்படுவதன் பின்னனியில் இப்படியும் ஒரு காரணம் இருக்கலாமோ என்று நினைக்க வைக்கிறது இந்த ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்.!
உண்மை சம்பங்களுடன் கற்பனையும் பின்னிப்பிணைந்து செல்லும் கதையோட்டம் விறுவிறுப்பாக இருக்கிறது.. அத்தகைய விறுவிறுப்பான கதையை வேக வேகமாகப் படித்துச் செல்லவிடாமல் சித்திரங்கள் சிண்டைப்பிடித்து நிறுத்துகின்றன..!
இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால்..
ஜான் எஃப் கென்னடி.. ரொனால்ட் ரீகன் போன்ற முன்னாள் அதிபர்களையே பெண்பித்தர்கள் என்றும் தீவிரவாத அமைப்புதான் பதவிக்கு கொண்டு வந்தது என்றும் எப்படி இவ்வளவு தைரியமாக (புனைவுதான் என்றாலுமே) எழுத முடிகிறது அவர்களால்..!?
இந்த ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் போலவே இன்னும் ஓராயிரம் நொடிகளையும் ஒன்பதாயிரம் தோட்டாக்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் சார்.!
இனிமேதான் ஆல்பா பீட்டா காமா ல்லாம் படிக்கணும்..😭
Deleteபழிக்குப்பழி + கானகக்கோட்டை மற்றும் ஒரு வானவில்லைத் தேடி இரண்டும் அற்புதமான தயாரிப்பில் மிளிர்கின்றன.!
Deleteலக்கி லூக், டெக்ஸ் வில்லர் இவர்களோடு அவ்வபோது ஆர்டின் + டாக்புல்லையும் கொஞ்சம் கண்ணில் காட்டலாமே சார்...!
Deleteஏகப்பட்ட கதைகள் மறுபதிப்புக்கு தகுதியாக காத்திருக்கின்றனவே.!
(கதைகள் காத்திருக்கின்றனதாம்.. ஆனால் வாங்குவதற்கு வாசகர்கள் காத்திருக்கவில்லையே சார்னு தானே சொல்லப்போறிங்க.!😉)
இந்த ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் போலவே இன்னும் ஓராயிரம் நொடிகளையும் ஒன்பதாயிரம் தோட்டாக்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் சார்.!
Delete+1
//லக்கி லூக், டெக்ஸ் வில்லர் இவர்களோடு அவ்வபோது ஆர்டின் + டாக்புல்லையும் கொஞ்சம் கண்ணில் காட்டலாமே சார்...! //
Delete+1111
காமெடி கார்ட்டூன்னா அது டாக்புல் & கிட் ஆர்டின் தான் (லக்கி, ரின் டின் கேன், ப்ளூ கோட் இவர்களை விடவும்) என்னோட டாப் சாய்ஸ்.
Tex க்ளாகிக்ஸ் 1 : ஆர்ப்பாட்டமேயில்லாமல் வந்து சிக்ஸர் அடித்துள்ளது. 2 வண்ண டபுள் ஆல்பங்கள், அழகான கலரிங், அசர வைக்கும் பக்கங்கள் & மிரட்டலான தயாரிப்பு.
ReplyDeleteபழிக்குப் பழி டெக்ஸின் one of the all time hit. நெடு நாளாக வண்ணத்தில் எதிர்பார்த்த இதழ். கதை வழக்கம் போல அதிரடி சரவெடி தான். எனக்குக் தெரிந்து அப்பவே டெக்ஸின் பஞ்ச் வசனங்கள் தெறிக்க விட்ட இதழ்.
கானக்கோட்டை: டெக்ஸின் வெகு ஆரம்பத்தில் வெளிவந்ததொரு ஆக்கம். ஒவ்வொரு அத்தியாயமும் 32 Strip பாக வெளியிடப்பட்டதிலே தெரிகிறது. லயன் ஜாலி ஸ்பெடிலின் பெரிய சைஸ் இதழுக்காக வெட்டி, ஒட்டி, எடிட்டிங்கெல்லாம் செய்து வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரிஜினல் Format - ல் முழு வண்ணதில் ரொம்பவே Worthable மறுபதிப்பு.
உயிரைத் தேடி மே மாதம் வர்ணத்தில் வருவது மகிழச்சி. Jose ortiz கைவண்ணத்தில் சித்திரங்கள் Dark Shade-ல் இருப்பதால் என்னுடைய தேர்வு B/W தான். அதனால் ஒரு குறிப்பிட்டளவில் B/W ல் வெளியிட ஏதேனும் வாய்ப்புள்ளதா சார்.?
ReplyDeleteஅடுத்த டெக்ஸ் வில்லரின் கலர் மறுபதிப்பு ரத்த நகரம் சேர்த்துக்கொள்ளுங்கள் ஜி
ReplyDeleteஎடி ஜி,
ReplyDeleteஅப்புறம் ஒரு விண்ணப்பம் கோஸ்ட் ஸ்டோரீஸ் மற்றும் சயின்டிஃபிக் கதையை இடையே கொஞ்சம் சேர்த்து விட முயற்சி செய்யுங்கள் ஜி
Edi ji,
ReplyDeleteபேட்மேன் கதைகளை நமது லயன் காமிக்ஸ் க்கு கொண்டு வருவதாக இருந்தால், ஒரு புத்தகத்தின் விலை சுமாராக எவ்வளவு வரும். வாசகர்களாகிய நாங்கள் விலை அதிகமானாலும் கொடுத்து வாங்க தயாராக இருந்தால் நீங்கள் போட சம்மதிப்பார்களா. வெளியிடுவதற்கு வேறு ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா எடிட்டர் சார்.
one friend commented that Pazhikku Pazhi & Vanavillai thedi will not be available in regular subscription and must be purchased separately.
ReplyDeleteI Request editor to send these kind of messages as a newsletter via mail to regular subscribers. Some of us dont want to attend book fair and not wish to miss any issues.
Doctor,
DeleteUsually editor announces these 2-3 blogs ahead of the actual bookfair blog. Was done this time too. I also did not attend book fair - but transfered money last week, having known the release date and got the books.
sometimes these announcements gets lost in the air sir. better to streamline. A change in policy needed once in a while sir
Deleteஎனக்கு புத்தகங்கள் வந்தாச்சாம்....மாலை பகிர்கிறேன்
ReplyDeleteவணக்கம் ஆசிரியரே.முத்து காமிக்ஷின் அரை நூற்றாண்டு அனைத்து இதழ்களையும் படித்து முடித்தாயிற்று.என்ன ஒரு மகிழ்வான மன நிறைவு.என்ன ஒரு மகிழ்ச்சி. சொல்ல வார்த்தைகளே இல்லை.ஒவ்வொரு இதழும் வேறு வேறு கதைக்களம்.அனைத்து இதழ்களும் அதிரடியான ஆக்சன் கதைகள்.ஒற்றை நொடி ஒன்பது தோட்டா மெய்யாலுமே அதகள ஆக்சன் மேளா.ஆல்பாக்களே நாயகனும் வில்லனும் என்பதால் கதையும் சரி கதைமாந்தர்களும் சரி அதகளம் செய்துள்ளார்கள்.இந்த புத்தாண்டின் புது நாயகர்கள் அனைவருமே அதிரடியில் அட்டகாசம் செய்துள்ளனர்.ஆல்பா மென்மையான காதலனாகவும்,ஆக்சன் நாயகராகவும் வலம் வந்து கலக்கியுள்ளார்.சிஸ்கோ ஆரம்பம் முதல் இறுதிவரை ஆக்சன் அவதாரமெடுத்து அசத்தியுள்ளார்.மின்னலை ஒத்த கதை.ஜெட் போன்ற வேகம்.அதிரடி மற்றும் ஆக்சன் பிரியர்களுக்கு அருமையான தம் பிரியாணி இந்த சிஸ்கோ.இறுதி நாயகரான டேங்கோ தனிமை விரும்பி பாலை நிலப்பரப்பில் நிழல் நாடும் நாயகர்.ஒற்றை நொடிக்காக ஆக்சன் அவதாரமெடுத்து வன்முறை தலையெடுக்கும் போது அதன் தலையை சீவி விடுகிறார்.அருமையான கதை.உயிரோட்டமான சித்திரங்கள்.மொழிப்பெயர்ப்பு மிக மிக அருமை.அதில் குறிப்பாக ,மழைவிட்டாலும் தூறல் விடாத கதையாய் யாருக்கும் என்னைத் தெரியாத,யாரையும் நானறியாத உலகத்தின் இந்த மூலைக்கு வந்த பின்னரும் ஆற்ற வேண்டிய கடமைகளும்,காப்பாற்ற வேண்டிய சத்தியங்களும் என்னைத் தேடிப்பிடித்துத் தஞ்சம் கேட்கின்றன.எனது இதயத்தை தொட்ட வரிகள்.ஆபத்பாந்தவர்களுக்கு உரிய கதை.ஆழமான கதை.விறு விறுப்பு சற்றும் குறையாமல் ஆச்சன் அதகளம் இந்த டேங்கோ.இவருக்கு அதிக வாய்ப்புகள் தர வேண்டும் ஆசிரியரே...
ReplyDeleteசெம செம அழகாக எழுதியுள்ளீர்கள் விக்னேஷ்.
Deleteசார் என் மகன் பெயர் தாங்கிய முதல் பார்சல்....லயன் லைப்ரரியின் முதல் புத்தகமும் கூட ....முதன் முதல் இதழில் முதன் முதலாய் மகனுக்காய்...அப்படியே பாக்ஸ் பத்திரப்படுத்தியார்சு...முதல் பார்சலாச்சே....குழந்தைக் கதைகளிலிருந்துதான் அனுப்புவீர்கள் என நினைத்தேன்...மகிழ்ச்சி...முன் பின் இரண்டு அட்டைகளும் தூள் கிளப்ப முன்னட்டை பின்னிப் பெடலெடுக்குது...அட்டை புத்தகத்த விட பெருசா இருப்பது ஒரு பிரம்மாண்டத்தக் காட்ட ....உள் பக்கங்கள் அள்ளுது...கானகக் கோட்டை ஜாலி ஸ்பெசல் எனக் காட்ட அந்தப் பாத்து முன் பக்கத்தை திருப்ப....நம்ம லயனின்86 கோடை மலர் எனும் மந்திரவார்த்தை பழிக்கு பழில இருந்திருந்தா நல்லாருக்குமே என கேக்க வைக்க...அடடா அத மறக்கடிக்க உள் பக்கங்கள் எப்படி வேட்கையோடு டெக்சயே சுட்டுட்டானா என பதட்டத்தோடு படித்த நினைவு வந்து போக...சூப்பர் சார்...சாத்தியமில்லா அசாத்திய உலகு லயனர்களுக்கு மட்டுமே சாத்தியம் டெக்சின் சாத்தலால்
ReplyDeleteஆல்பா – துரோகம் ஒரு தொடர்கதை!
ReplyDeleteரஷ்ய - அமெரிக்க பனிப்போருக்கு பிந்தைய காலகட்டம். இதுவரை பிரம்மாண்டமாய் கோலொச்சி வந்த உளவுத் துறைகளின் முக்கியத்துவம் நீர்த்துப் போனதோர் சூழல். அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் குறைந்து போக சூடுபட்ட புலிகள் செய்யும் துரோகம் என்ன? அதற்கு பகடைக்காயாக்கப் படுவது யார்? கதையில் யாருடன் யாருக்குத் தொடர்பு? யாரை நம்புவது என்றே தெரியாமல் போகிறது!
களமென்னவோ காலம் காலமாய் கூடச் சுற்றிய உளவு அமைப்புகள் சார்ந்து இருந்தாலும் இதுவரை படித்திராத கதைக்கரு. ஜெர்மனியின் கலோன் நகரில் துவங்கி , பாரீஸ், மாஸ்கோ எனச் சுற்றிச் சுழலும் கதை. திரும்பிய பக்கமெல்லாம் திருப்பங்கள் என நல்ல தீனிதான். அதீத ஆனால் அவசியமான வசனங்கள் படங்களின் மேல் படர்ந்து கொண்டு கதையோட்டத்திற்கு பிரேக் போடுவதாகத் தோன்றினாலும் புரிதலுக்குத் தேவையானதாகவே உள்ளது. அப்புறம் எல்லாருடைய பெயர்களையும் தனியே எழுதிவைத்துக் கொண்டுதான் படிக்க வேண்டும் போல… மனதில் நிற்கவே மாட்டேன்கிறது… (அஸ்ஸியாவைத் தவிர… அதுவும் முழுப்பெயர் கேட்டால் அவ்வளவுதான்)
கிளைமாக்ஸ் திருப்பமானது மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தந்தாலும் எக்கச்சக்க வினாக்களை எழுப்பிவிடுகிறது.
//*** SPOILER ALERT *** START //
உதாரணமாக சில…
1. ஓலெக் (KGB) – ரான் (CIA) கூட்டணிதான் முழுக் கதையின் ஆணிவேர் எனும்போது ஆல்பாவை பயிற்றுவித்து அஸ்ஸிகா மூலம் ஓலெக்கையே உளவறியச் சொல்வது எதற்காக? ஒருவேளை அஸ்ஸிகாவை பாரிஸிலேயே கொல்லும் திட்டமிருந்தால் அவளை பின்தொடர்ந்து செல்ல ஆல்பாவை பயிற்றுவிப்பானேன்?
2. இரஷ்ய மாஃபியாவின் கூலிப்படையான ஃபிரிட்ஸ், ஃப்ரீட்மேன் குழுவினர் அவர்களின் முக்கிய நோக்கமான டாலர்கள் கைமாறும் முன்பாக (அதாவது அஸ்ஸிகா – ஹோரோவிட்ஸ் சந்திப்புக்கு முன்னரே) பார்க்கிங் மைதானத்தில் குறுக்கிட முயல்வது ஏன்? (பக்.33,34)
3. ஓலெக்கின் திட்டப்படி அஸ்ஸிகா ஜெர்மன் கூலிப்படையினரால் கொல்லப்பட்டு இருந்தால் ஆல்பாவுக்கு வேலையில்லாமல் போயிருக்குமல்லவா? ஓவியக் காலரி… சந்திப்பு … அதற்கான திட்டமிடல் etc… இதெல்லாம் தேவையிருக்காதே!
4. ஃபிரிட்ஸ்சிடமிருந்து டாலர்களையும் ரூபிள்களையும் வசமாக்கிய பின்னர் ஆல்பாவை மாஸ்கோவுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் CIA க்கு என்ன? ஒருவேளை ரஷ்யா மாஃபியா அர்காடி போக்டனோவை அடக்க ஓலக்குக்கு உதவி செய்ய அனுப்பி இருப்பார்களோ?
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது க்ளைமாக்ஸ் திருப்பம் நிறைய முரண்களையே உருவாக்கி விட்டதைப் போல தெரிகிறது. அந்த வெடிகுண்டு வைப்பவன் ஜெர்மானிய மாஃபியாவைச் சார்ந்தவனா இல்லை இகோரின் தந்தையுடைய விசுவாசியா என சந்தேகிக்கிறேன். வரும் பாகங்கள் விடை சொல்லும் என நினைக்கிறேன்.
கேத்தியாவிடமிருந்து திருடப்படும் அந்த லிஸ்ட் தான் அடுத்த பாகத்தின் அடிப்படையாக இருக்கும் போல…
//*** SPOILER ALERT *** END //
ஆக மொத்தத்தில் இந்த முரண்களை தவிர்த்துவிட்டு படித்தால் எதிர்பாரா திருப்பங்களுடன் நல்ல ஸ்பை த்ரில்லர் படிக்கும் அனுபவம் கிடைக்கும்.
ரேட்டிங்: 7.5/10
1. உளவுத் துறை தலைவர்கள் தானே....இவர்களுக்கு ஒருவர் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இல்லை என்பதனைக் காட்டுது ...நம்ம கேஜிபிகாரர் தனியா ஆட்டய போட முயலுகிறார்....சிஐஏ ரான் அஸ்ஸியா கணவர் ஏமாற்றி விட்டால் என சந்தேகப்பட்டு ஆல்ஃபாவ தொடர உருவாக்குகிறார்....ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...பணத்துக்கு பணமுமாச்சு....ருபிள்கள் கைமாற்றத்துக்கு காரணத்த ...அதுக்கான ஆணி வேர அறிய வாய்ப்பல்லவா...இதன் மூலம் மீண்டும் சிஐஏ தேவை அதிகரிப்பதாய் காட்டி அமெரிக்க அரசிடம் பழையபடி வலுவாக வாய்ப்பு
Delete2. பணம் கைக்கு வந்ததும் கடத்த வேண்டும் அவ்வளவே....காரில் பணமிருக்கா என உறுதியாக தெரியாது....இரண்டு கட்டப் பேச்சு வார்த்தை குறித்து முன்னரே தெரிவிக்கிறார்களே
Deleteசிஐஏவின் சந்தேக புத்தி....அரசையே கவிழ்க்க கூடியவர்களாச்சே
Deleteஇதற்குக் காரணம் இந்தத் தலைகள் தானே ஈடுபடுது....ஒட்டு மொத்த சிஐஏ கிடையாதல்லவா....பிறர் சந்தேகப்பட்டா பாருங்க நான் ஆல்ஃபாவ அனுப்பி வச்சிருக்கேன்னு காட்டலாமே...
Deleteபெயர்கள் பாக்க உறுதி செய்ய திருப்பி திருப்பி பாக்க வேண்டி இருக்கு...இதுக்கு ஆசிரியர் முன் பக்கத்ல முக்கியமான தலைகள போட்டா சிரமமில்லாம படிக்கலாம்
Deleteசரவணகுமார் சார்! இந்த அத்தனை கேள்விகளுக்குமான விடை புத்தகத்தில் உள்ளது..
Delete1. ஆல்பாவின் பணி அஸ்ஸியாவை மயக்கி அவளை படுக்கையில் வீழ்த்துவதே.மேலே விவரமாக எழுதியுள்ளேன்.ஓலெக்கின் பார்வையில் அவள் நம்பிக்கை துரோகம் இழைத்த மனைவியாக தெரியவேண்டும்
CIA -வின் பார்வையில் இதை பார்க்கிறீர்கள்..
Deleteஇதுமாதிரியான சந்திப்பு இரண்டு கட்டமாக நடக்கும் என்பது ரஷ்ய மாஃபியாவுக்கு தெரியாது..அவர்கள் நோக்கம் பரிவர்த்தனை நிகழுமுன்னே ரூபிள்களை கைப்பற்றுவது மட்டுமே...
3. இந்த கேள்விக்கான பதில் முதல் கேள்விக்கான பதிலே.
Deleteஅஸ்ஸியாவை ஓலெக்கின் பார்வையில் டிஸ்கிரெடிட் செய்வதே உண்மையான நோக்கம்
4. இதற்கான பதிலை மேலே எனக்கு பட்டதை எழுதியிருக்கிறேன்..அவற்றை இங்கே மறுபடி காப்பி பேஸ்ட் செய்கிறேன்
Deleteவெடிகுண்டு வைப்பவன் இகோர் தந்தையின் விசுவாசி..இதற்கான ஆதாரம்141 பக்கம் கடைசி பேனல்களிலும்
Delete150- ம் பக்கத்தில் உஸ் என உதட்டில் கைவைத்து செல்லும் வெடிகுண்டு வைப்பவனின் படம்
//கேள்வி 1
Deleteஎனது பார்வை..
சிஐஏ பெருந்தலைகளின் - ரான் & கோவின் - முக்கிய நோக்கம் ஆல்பாவை பொறுத்தவரை ஒன்றுதான்.. அரைகுறை மனதோடு தனது மனைவியை கொலைக்களம் நோக்கி அனுப்பி வைத்திருக்கும் கணவன் கர்னல் ஓலெக்கின் குற்ற உணர்வை சமனப்படுத்துவது.
ஆல்பாவின் வேலை அஸ்ஸியாவோடு படுக்கையை பகிர்வது..
அஸ்ஸியா திருமணமானவள் என்ற விஷயமோ, அஸ்ஸியாவோடு உறவு கொள்வது வீடியோ பதிவாக்கப்படுகிறது என்ற விஷயமோ ஆல்பாவுக்கு தெரியாது.( நான் நேற்றிரவுதான் அவளோடு உறவு கொண்டேன் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என பக்கம் 58 - ல் கேட்கிறான் ஆல்பா)
அஸ்ஸியாவோடு பாலுறுவு கொள்வது மட்டுமே ஆல்பாவின் வேலை என்பதால் திட்டமிட்டபடி அஸ்ஸியா கொலையுண்டிருந்தால் ஆல்பாவின் வேலை ஏற்கனவே முடிந்தாகிவிட்டது..
ஆல்பாவின் மீதெழும் அஸ்ஸியாவின் மோகம் தான் திருமணமானவள் என்ற உண்மையை மறைக்க சொல்கிறது.
அஸ்ஸியாவின் infidelity பற்றிய ஆதாரம் அவள் கணவனின் அவள் மீதான
பற்றினை குறைக்கும் அதன் மூலம் சிஐஏ - கேஜிபி இருதரப்பு உறவில் பங்கம் எதிர்காலத்தில் வராது என ரான் தரப்பு நம்புகிறது..
Delete
Lusettesofia23 January 2022 at 23:37:00 GMT+5:30
இரண்டாவது கேள்விக்கும் பதில் இதுவே!
Delete
Lusettesofia23 January 2022 at 23:46:00 GMT+5:30
அஸ்ஸியா உயிர் பிழைத்தது எதிர்பாராதது
அஸ்ஸியாவை அவள் கணவன் சம்மதமுடன் கொல்வதே நோக்கம்.
ஆல்பா அஸ்ஸியாவுடன் உறவு கொண்ட வீடியோவை காட்டி ரஷ்யாவுக்கும் அவன் அவளோடு தொடர்பில் இருக்க வந்துள்ளான் அவளும் அதற்கு உடன்படுகிறாள் என சாட்சி அளித்து அவளையும் ஆல்பாவையும் கொல்வதே திட்டமாக இருக்க முடியும்..
அஸ்ஸியா ஒரு வீக் லிங்க்..பாரிஸ் பரிவர்த்தனை ,ஆல்பா பற்றி அறிந்த அத்தனை பேரையும் கேட்டியா உட்பட ரான் & கோ கொல்கிறது..அஸ்ஸியாவை கொல்ல ஆல்பா ஒரு கருவியாக மட்டுமே ஆல்பா மாஸ்கோ அனுப்பப்படுகிறான் .
திட்டப்படி அவனும் பலியாக வேண்டியவனே...
Delete
Reply//
கதையில் எங்கும் நான் அறிந்தவரை முரண்கள் இல்லை..
Deleteஇக்கதை முற்றுப் பெற்றுவிட்டது..இது தொடர வாய்ப்பில்லை..
@Lusettesofia
Deleteபிரமாதம் சார்!
// அரைகுறை மனதோடு தனது மனைவியை கொலைக்களம் நோக்கி அனுப்பி வைத்திருக்கும் கணவன் கர்னல் ஓலெக்கின் குற்ற உணர்வை சமனப்படுத்துவது.
ஆல்பாவின் வேலை அஸ்ஸியாவோடு படுக்கையை பகிர்வது.. //
ரஷ்ய அரசாங்கத்தின் பார்வையிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள அஸ்ஸியாவை அரைகுறை மனதோடு பலிகொடுக்கும் ஓலெக்கை சமனப்படுத்தி சி.ஐ.ஏ - கே.ஜி.பி கூட்டணியை ஸ்திரப்படுத்திக் கொள்வதே ரான் & கோ வின் நோக்கம். அதற்காகவே ஆல்பாவைப் பயிற்றுவிக்கிறார்கள். எதிர்பாரா விதமாக அஸ்ஸியா பிழைத்துவிட ஆல்பா மாஸ்கோவுக்கு அனுப்பப்படுகிறான்.
சரியாகப் பொருந்துகிறது சார்.
ஆனால் ஆல்பாவை அதற்காக மட்டுமே பயிற்றுவித்தார்கள் என எண்ண முடியவில்லை.
காரணம் 1) 31ம் பக்கம் ஆல்பாவுடன் பேசும் சி.ஐ.ஏ வினர் மாஸ்கோவில் தன் ஓவியங்களைக் காட்சிப்படுத்த ஒப்பந்தம் மாதிரி ஏதாவது கையெழுத்து வாங்கச் சொல்கிறார்கள். எனவே ஆல்பா மாஸ்கோ செல்ல வேறு காரணமும் உள்ளதாகக் கொள்ளலாம்.
காரணம் 2) ரான் கேத்தியாவை சந்தித்து அந்த லிஸ்ட்டை வாங்கும்போது “இதற்கும் ஆல்பாவின் மிஷனுக்கும் ஏதேனும் சம்மந்தமுண்டா?” எனக் கேட்கிறாள். எனவே ஆல்பாவின் மிஷன் வேறு ஏதோ பெரிய ஒன்று. அதற்காகவே மாஸ்கோ அனுப்பப் பட்டான், ஆனால் அதிகப்படியாக அவன் தெரிந்து கொள்ள வேண்டாதவற்றை தெரிந்து கொண்டதால் அவனையும் பலியாக்க சி.ஐ.ஏ முயற்சிக்கிறது என்பது என் புரிதல்.
@Lusettesofia
Delete// CIA -வின் பார்வையில் இதை பார்க்கிறீர்கள்..
இதுமாதிரியான சந்திப்பு இரண்டு கட்டமாக நடக்கும் என்பது ரஷ்ய மாஃபியாவுக்கு தெரியாது..அவர்கள் நோக்கம் பரிவர்த்தனை நிகழுமுன்னே ரூபிள்களை கைப்பற்றுவது மட்டுமே... //
அப்படியா நினைக்கிறீர்கள்?
ரஷ்ய மாஃபியாவின் நோக்கம்
1) ரூபிள்களைக் கைப்பற்றி இந்த டீல் நடக்காமல் தவிர்ப்பதா?
2) டாலர்களைக் கைப்பற்றுவதா?
ஒருவேளை (1) என நீங்கள் கூறினால் இது தனக்குத் தானே வைத்துக் கொண்ட சூனியமாகி விடாதா கே.ஜி.பி.க்கு? இந்த டீல் நடக்கும் விஷயத்தை கசியவிட்டு அதை தடுக்கும் முயற்சிக்குத் தாமே காரணமாகி விட்டதாக ஆகிவிடுமல்லவா?
எனது புரிதல்:
ரஷ்ய மாஃபியா இந்த பரிமாற்றத்தில் இடையில் புகுந்து ரூபிள் மற்றும் டாலர்களை கைப்பற்றிய பின்னர் அவர்களிடமிருந்து கமுக்கமாக அதை மீட்டுக் கொள்வதே சி.ஐ.ஏ & கே.ஜி.பி. கூட்டணியின் திட்டம். அதில் அர்காடியை ஓரம் கட்டி ‘தலையை ஒடுக்கிய வீரனாவதே’ ஓலெக்கின் திட்டம். (பக் 146)
ஆக, ஒருவேளை ரூபிள்கள் மற்றும் கைப்பற்றப் பட்டு இந்த பாரீஸ் பரிமாற்றம் தடைபட்டிருக்குமேயானால் மொத்த திட்டமும் பணாலாயிருக்கும் அல்லவா?
// இக்கதை முற்றுப் பெற்றுவிட்டது..இது தொடர வாய்ப்பில்லை.. //
Delete@Lusettesofia
மிஷன் ஆல்பா வேறு ஏதோ பெரிய விஷயம்னு நினைக்கிறேன் சார்..! இது வெறும் ஆர்ஜின் கதை மட்டுமே... வரும் ஆல்பங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தே செல்லும் என நினைக்கிறேன். XIII மாதிரி...
பார்ப்போம் எதிர்வரும் ஆல்பங்கள் என்ன சொல்கிறதென்று?
@Lusettesofia
Delete//வெடிகுண்டு வைப்பவன் இகோர் தந்தையின் விசுவாசி..இதற்கான ஆதாரம்141 பக்கம் கடைசி பேனல்களிலும்
150- ம் பக்கத்தில் உஸ் என உதட்டில் கைவைத்து செல்லும் வெடிகுண்டு வைப்பவனின் படம்//
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் சார்...
ஆனால் அதற்கான சரியான ஆதாரம் இல்லையே...
நண்பர்களும் அதையே கூறுகின்றனர்...
@STVR
//காரணம் 1) 31ம் பக்கம் ஆல்பாவுடன் பேசும் சி.ஐ.ஏ வினர் மாஸ்கோவில் தன் ஓவியங்களைக் காட்சிப்படுத்த ஒப்பந்தம் மாதிரி ஏதாவது கையெழுத்து வாங்கச் சொல்கிறார்கள். எனவே ஆல்பா மாஸ்கோ செல்ல வேறு காரணமும் உள்ளதாகக் கொள்ளலாம்.//
Deleteஆல்பாவை அஸ்ஸியா ஓலெக் சார்பாக செயல்படும் மறைமுக கேஜிபி ஏஜன்ட் என நம்பவைக்க சொல்லப்படுவது. அஸ்ஸியா கொலைமுயற்சி நடைபெறும் முன் சொல்லப்படுவது என்பதால் அது முக்கியத்துவம் அற்றது..
//காரணம் 2) ரான் கேத்தியாவை சந்தித்து அந்த லிஸ்ட்டை வாங்கும்போது “இதற்கும் ஆல்பாவின் மிஷனுக்கும் ஏதேனும் சம்மந்தமுண்டா?” எனக் கேட்கிறாள். எனவே ஆல்பாவின் மிஷன் வேறு ஏதோ பெரிய ஒன்று. அதற்காகவே மாஸ்கோ அனுப்பப் பட்டான், ஆனால் அதிகப்படியாக அவன் தெரிந்து கொள்ள வேண்டாதவற்றை தெரிந்து கொண்டதால் அவனையும் பலியாக்க சி.ஐ.ஏ முயற்சிக்கிறது என்பது என் புரிதல்.//
Deleteகேட்டியாவுக்கும் பொய்யான காரணங்கள் சொல்லப்பட்டிருக்கவேண்டும்..
கேட்டியா கொல்லப்படுவதிலிருந்து அது தெளிவாகிறது..
பணியில் உள்ளதால் இரவு வருகிறேன்..
Delete//அஸ்ஸியாவின் infidelity பற்றிய ஆதாரம் அவள் கணவனின் அவள் மீதான
Deleteபற்றினை குறைக்கும்//
சூப்பர் செனா ...அனைத்திற்குமான பதில்
//ஆல்பாவின் பணி அஸ்ஸியாவை மயக்கி அவளை படுக்கையில் வீழ்த்துவதே.மேலே விவரமாக எழுதியுள்ளேன்.ஓலெக்கின் பார்வையில் அவள் நம்பிக்கை துரோகம் இழைத்த மனைவியாக தெரியவேண்டும்//
Deleteமிகச் சரியான சரியான விளக்கம்
சரவணரே மாலை வருகிறேன்...எனது சந்தேகத்தோடும்
Delete//ஆல்பா அஸ்ஸியாவுடன் உறவு கொண்ட வீடியோவை காட்டி ரஷ்யாவுக்கும் அவன் அவளோடு தொடர்பில் இருக்க வந்துள்ளான் அவளும் அதற்கு உடன்படுகிறாள் என சாட்சி அளித்து அவளையும் ஆல்பாவையும் கொல்வதே திட்டமாக இருக்க முடியும்.//செனா உனது ஆள் காதலில் விழுந்து விட்டான் என சிஐஏவினர் கவலையுடன் பேசும் போதே அவர்கள் ஓலக்கைத் துப்பறிய அனுப்புகிறார்கள் என்பது தெளிவு...எங்கே இவனை வைத்து அஸ்ஸியா தவறான தகவல் தந்து நம்மோடு விளையாடக் கூடும் எனும் கவலையும் அதில் தொனிப்பதைக் காண்கிறேன்
Delete//வெடிகுண்டு வைப்பவன் இகோர் தந்தையின் விசுவாசி..இதற்கான ஆதாரம்141 பக்கம் கடைசி பேனல்களிலும்
Delete150- ம் பக்கத்தில் உஸ் என உதட்டில் கைவைத்து செல்லும் வெடிகுண்டு வைப்பவனின் படம்//
137ம் பக்கம் பாருங்க...பக்கத்தின் மேல் வலது கோடியில்....அது யார்...? அவர்தான் குண்டு வைப்பவை அழைக்கிறார்...அவன் இகோரின் தந்தையின் விசுவாசி அல்ல...அவனை அதாவது குண்டு வைப்பவனை தயாராகும் படி கோருகிறார்
//இதுமாதிரியான சந்திப்பு இரண்டு கட்டமாக நடக்கும் என்பது ரஷ்ய மாஃபியாவுக்கு தெரியாது// முதலில் பேச்சு வார்த்தை...இரண்டாவது கட்டம் பணப் பரிமாற்றம் ...
Deleteதெரியும்...ஆனால் அஸ்ஸியாவ விட்டுச்செல்வோரை ஃபாலோ பன்னலைன்னுதான் கோபிக்கிறார்...ஆனால் ப்ளான் 2க்கு காத்திருக்கும் ஆசாமிக்கு ...தகவலை பெற்றவர் பக்கம் 35 ல் முதலிரண்டு பேனல்களில் தகவலை கடத்துவதை காணலாம்...ஆனால் அந்த நபர் அஸ்ஸியா முன் 44ல் கடைசி சேனலில் துப்பாக்கிய கேள்வியோடு நீட்ட...அஸ்ஸியா திகைக்க கொல்லப்படுகிறார்...அவர் அஸ்ஸியா பாது காவலரா...அல்லது இரண்டாம் பிளானிங் நடைமுறையாளரா என்பதே என் கேள்வி
ரஷ்ய மாஃபியாவின் நோக்கம்
Delete1) ரூபிள்களைக் கைப்பற்றி இந்த டீல் நடக்காமல் தவிர்ப்பதா?
2) டாலர்களைக் கைப்பற்றுவதா?
...மூன்று தலைகளின் ப்ளானும் ஆட்டய போடுவதே....
ரஷ்ய ராணுவம் நிதியமைச்சரை கொன்றோரை பழி வாங்கியாச்சு....அந்த பாம் வைப்பவர் யாரென தெரியலை ...கதை தொடரலாம் அதன் மூலம்
ஒவ்வோர் ஓநாய்க்கும் கூலி கிடைப்பதாக என கலைகிறார்
Delete// 137ம் பக்கம் பாருங்க...பக்கத்தின் மேல் வலது கோடியில்....அது யார்...? அவர்தான் குண்டு வைப்பவை அழைக்கிறார்...அவன் இகோரின் தந்தையின் விசுவாசி அல்ல...அவனை அதாவது குண்டு வைப்பவனை தயாராகும் படி கோருகிறார்//
Deleteஸ்டீலாரே... இன்னும் கொஞ்சம் முன்னால் போங்கள்... 123ம் பக்கம் கடைசி பேணல் மற்றும் 124 ஆம் பக்கம் முதலிரண்டு பேணல்களை கவனியுங்கள்.
வாடிம் யாருடைய கையாளாக பணிபுரிகிறான் எனத் தெரியவில்லை... சுத்தம் பண்ணும் பெரியவரின் வருகைக்காக காத்திருப்பதாகக் கூறுகிறான். இகோர் உடனே இருந்து அனைத்து தகவல்களையும் சொல்பவன் அவனே... 137ல் அஸ்ஸியா வருகை குறித்து தகவல் சொல்பவனும் அவனே... அது வ்ளாடிமிர் கோலிகோவ் என நினைக்கிறேன். அவர் அர்காடி போக்டனோவின் டெபுடி என்பதால் குண்டு வைப்பவன் இர்காடியின் விசுவாசி என நினைத்தேன்.
அதே சமயம் இதைப் போன்றதொரு குண்டுவெடிப்பு (பக் 112,113) நடக்கிறது. அதில் பயன்படுத்தப் படும் வெடிகுண்டும் (TNT) இதேபோல் இருப்பதால்தான் குழப்பமேற்படுகிறது.
//ஆனால் ப்ளான் 2க்கு காத்திருக்கும் ஆசாமிக்கு ...தகவலை பெற்றவர் பக்கம் 35 ல் முதலிரண்டு பேனல்களில் தகவலை கடத்துவதை காணலாம்...ஆனால் அந்த நபர் அஸ்ஸியா முன் 44ல் கடைசி சேனலில் துப்பாக்கிய கேள்வியோடு நீட்ட...அஸ்ஸியா திகைக்க கொல்லப்படுகிறார்...அவர் அஸ்ஸியா பாது காவலரா...அல்லது இரண்டாம் பிளானிங் நடைமுறையாளரா என்பதே என் கேள்வி//
Deleteஅது ஜெர்மனிய கூலிப்படை ஃபிரிட்ஸ்சின் கையாள்... ஆங்காங்கே இரு தரப்பினரும் ஆட்களை நிறுத்தியுள்ளனர் (பக் எண். 36 கடைசி இடதுபுற பேனல்). அவன் அஸ்ஸியாவை குறிவைக்க எதிரணியினரால் சுட்டுத்தள்ளப் படுகிறான்.
// பணியில் உள்ளதால் இரவு வருகிறேன்.. //
Delete@Lusettesofia
உங்கள் இடையறாத பணிக்கு இடையிலும் என் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றிகள் சார்...
உங்கள் காமிக்ஸ் ஆர்வத்துக்கு Hats Off!
Delete//அப்படியா நினைக்கிறீர்கள்?
ரஷ்ய மாஃபியாவின் நோக்கம்
1) ரூபிள்களைக் கைப்பற்றி இந்த டீல் நடக்காமல் தவிர்ப்பதா?
2) டாலர்களைக் கைப்பற்றுவதா?
ஒருவேளை (1) என நீங்கள் கூறினால் இது தனக்குத் தானே வைத்துக் கொண்ட சூனியமாகி விடாதா கே.ஜி.பி.க்கு? இந்த டீல் நடக்கும் விஷயத்தை கசியவிட்டு அதை தடுக்கும் முயற்சிக்குத் தாமே காரணமாகி விட்டதாக ஆகிவிடுமல்லவா?//
1 தான் உண்மை..
ரஷ்ய மாபியாவுக்கு இது தன்மான பிரச்சினை.
அவர்கள் வந்தது டாலர்களை கொள்ளையடிக்க அல்ல..பரிவர்த்தனை நிகழுமுன்னே ரூபிள்களை கைப்பற்றுவது மட்டுமே...
இப்படி நடந்திருந்தால் கேஜிபிக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கும்..இது மட்டுமே அவர்கள் நோக்கம்..
இதன் மூலம் ஹோரோவிட்ஸ் உடன் தொடர்புடைய பிற நாட்டு மாபியாக்களுக்கும் - ஹோரோவிட்ஸ் கொடுக்கும் பணம் கறுப்புபணம் & பிற நாட்டு மாபியா குழுக்களின் பணம்- எச்சரிக்கை விடப்பட்டிருக்கும்..
தனது நாட்டு ரஷ்ய ரூபிள்களை கைப்பற்றி தனது கௌரவத்தை காப்பாற்றுவது மட்டுமே
அர்காடியின் நோக்கம்
ஒருவேளை ரொக்க டாலர்கள் , டாலர்களுக்கான பாண்டுகள், செக்குகள் அர்காடி வசம் வந்திருப்பின் கடுமையான எச்சரிக்கைக்கு பின் அதனை பிற நாட்டு மாபியாக்களிடம் அர்காடி திருப்பி கொடுக்க முனைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை
ஏனெனில் மாபியாக்களின் modus operandi கொள்ளையடிப்பதல்ல...organised crime..
பணத்தை காட்டிலும் அவர்களுக்கு கௌரவமே பெரிது..
ரூபிள்களை கைப்பற்றுவது மட்டுமே அவர்கள் நோக்கம் என்பதை பக்கம் 35- ல் நடைபெறும் உரையாடல்கள் எடுத்துரைக்கின்றன..
ரூபிள்களுடன் சொற்ப ரொக்க டாலர்கள், டாலர்களுக்கான செக்குகளையும் ப்ளிட்ஸ் கைப்பற்றுவது பிளான் B ..வேறுவழியில்லாமல்
ஆனால் சதி செய்யும் சிஐஏ தலைகளுக்கு க்கு நடக்கப் போவது எல்லாமே தெரியும்.
பணத்தை எடுத்துக் கொண்டு ப்ளிட்ஸ் எங்கே விரைவான் என்பது முதல் கொண்டு..
( ஹில்டாவின் வீடு)
//மிஷன் ஆல்பா வேறு ஏதோ பெரிய விஷயம்னு நினைக்கிறேன் சார்..! இது வெறும் ஆர்ஜின் கதை மட்டுமே... வரும் ஆல்பங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தே செல்லும் என நினைக்கிறேன். XIII மாதிரி...
Deleteபார்ப்போம் எதிர்வரும் ஆல்பங்கள் என்ன சொல்கிறதென்று?//
கதையின் வரையறைக்குட்பட்டு மிஷன் ஆல்பா என என்ன இருக்கமுடியும்?
ரூபிள்கள், டாலர்கள் மறைவுக்கு பிண்ணனியில் ரஷ்ய அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என அறிய ஆல்பாவுக்கு உதவி செய்ய கேட்டியா வுக்கு ஆணை வந்திருப்பதாக கேட்டியாவே சொல்கிறாள் .. இது கட்டுக்கதை என நமக்கே தெரியும்..
பாரிஸ் பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஹோரோவிட்ஸ் குற்றுயிராக மருத்துவமனையில், அர்காடி, ஸ்டாஸ், இகோர், ஓலெக், ரான் & கோ என அனைத்து வில்லன்களும் மடிந்திருக்க இக்கதை தொடர வாய்ப்பில்லை..
வேறொரு சாகசத்தில் ஆல்பாவை நாம் சந்திக்க கூடும்
// ரஷ்ய மாபியாவுக்கு இது தன்மான பிரச்சினை.
Deleteஅவர்கள் வந்தது டாலர்களை கொள்ளையடிக்க அல்ல..பரிவர்த்தனை நிகழுமுன்னே ரூபிள்களை கைப்பற்றுவது மட்டுமே...//
இதையும் யோசித்தே இருந்தேன். இதற்கு 146 ஆம் பக்கத்தில் ரானின் பதில் மிகப்பொருத்தமாக உள்ளது.
அதாவது ரஷ்ய மண்ணில் வேறொரு மாபியா காலூன்ற இந்த டீல் ஒரு துவக்கப் புள்ளியாக அமைந்துவிடக் கூடாது என்பதால் அதைத் தடுக்க முயல்கிறான்.
//நானும் அப்படித்தான் நினைக்கிறேன் சார்...
Deleteஆனால் அதற்கான சரியான ஆதாரம் இல்லையே...//
இதில் எந்த சந்தேகமும் இல்லை..வெடிகுண்டு வைப்பவன் அர்காடி விசுவாசியே...
இது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் வசனங்கள் ஏதுமின்றி பூடகமாக படங்களின் மூலமாகவே சொல்லப்பட்டுள்ளன..
// பாரிஸ் பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஹோரோவிட்ஸ் குற்றுயிராக மருத்துவமனையில், அர்காடி, ஸ்டாஸ், இகோர், ஓலெக், ரான் & கோ என அனைத்து வில்லன்களும் மடிந்திருக்க இக்கதை தொடர வாய்ப்பில்லை..//
Deleteஆல்பாவின் தலையில் குடியிருக்கும் அந்த மாபியா கும்பல்களின் லிஸ்டை மறந்துவிட்டீர்களே...
// பணத்தை எடுத்துக் கொண்டு ப்ளிட்ஸ் எங்கே விரைவான் என்பது முதல் கொண்டு.. //
Deleteஒருவேளை பிளான் A வெற்றிபெற்று ரூபிள்களுடன் மட்டும் ஃபிரிட்ஸ் சென்றிருக்கும் பட்சத்தில் சி.ஐ.ஏ. பல்பு வாங்கியிருக்குமே...
இப்படி வைத்துக் கொள்ளலாம்.
Deleteரூபிள்களை கொள்ளையடிக்க வாய்ப்பே தராமல் இருக்கத்தான் அந்த டென்னிஸ் ஆசாமிகளை அஸ்ஸியாவுக்கு உதவ கே.ஜி.பி. பணிக்கிறது என்று.
எனவே ரூபிள்களை தனியே கொள்ளையடிக்க முடியாமல் வேறு வழியின்றி டாலர்களுடனே வேட்டையாட ஜெர்மானிய கூலிப்படையை கே.ஜி.பி. தூண்டுகிறது..
எக்ஸலண்ட் பிளான் அண்ட் எக்ஸ்கியூசன்.
//ரூபிள்களை கொள்ளையடிக்க வாய்ப்பே தராமல் இருக்கத்தான் அந்த டென்னிஸ் ஆசாமிகளை அஸ்ஸியாவுக்கு உதவ கே.ஜி.பி. பணிக்கிறது என்று.
Deleteஎனவே ரூபிள்களை தனியே கொள்ளையடிக்க முடியாமல் வேறு வழியின்றி டாலர்களுடனே வேட்டையாட ஜெர்மானிய கூலிப்படையை கே.ஜி.பி. தூண்டுகிறது..//
யெஸ்!!!
This comment has been removed by the author.
Delete//அது ஜெர்மனிய கூலிப்படை ஃபிரிட்ஸ்சின் கையாள்... ஆங்காங்கே இரு தரப்பினரும் ஆட்களை நிறுத்தியுள்ளனர் (பக் எண். 36 கடைசி இடதுபுற பேனல்). அவன் அஸ்ஸியாவை குறிவைக்க எதிரணியினரால் சுட்டுத்தள்ளப் படுகிறான்.//
Deleteஇல்லை நண்பரே...அஸ்ஸியா சிக்னல் வந்ததும் கிளம்ப...பச்சை சட்டை திகைக்க ...பின்னாலிருந்து சிக்னல் செய்கிறானே அவன்தான் அஸ்ஸியாவை நோக்கி துப்பாக்கி நீட்டுபவனுக்கும் ப்ளான் இரண்டை செயல்படுத்த உத்தரவு வந்ததும் சிக்னல் தருபவன்...நிச்சயமா இகோரின் தந்தையின் கையாள்தான்...
This comment has been removed by the author.
Deleteபக்கம் 124 ல்...அந்த குண்டு வைப்பவன் வாடிமுக்கே பணம் தருகிறேன் என்கிறான்...அது ஜெர்மானியர் கையாளாக வாய்ப்பதிகம்...பார்ப்போம்
Delete152ல் ஒவ்வோர் ஓநாய்க்கும் அதனதன் கூலி கிடைப்பதாக எனும் வரிகள் ...ஓநாய் சிஐஏ கேஜிபி ரஷ்ய மாஃபியா...இவர்களால் தூண்டப்பட்டு பணத்தை இழந்த ஹோரோவிட்ஸ் வார்த்தைகளால் படுது...பார்க்கலாம்
Deleteஒட்டுமொத்த FFS-1:
ReplyDeleteடேங்கோ, சிஸ்கோ, ஆல்பா!
கப்பலோட அடித்தளத்தில பேரல்களில் கட்டிவைக்கப்பட்டு உலகம் முழுக்க சுற்றி வந்ததன் மூலமாக பெர்மண்ட் ஆன விண்டேஜ் ஒயினை மெதுமெதுவாய் ருசித்த பின்னாடி…
தக்காளி பிரியாணி வித் ஹாட் ஸ்பைசி பெப்பர் சிக்கன் சாப்பிட்ட ஃபீல்.
எது ஒயின்? எது ஹாட் பெப்பர்? எது தக்காளி பிரியாணி?
SISCO was amazing - moved on at terrifc speed and the story ended as soon as it started - so breezy, so racy - waiting for more of SISCO !!
ReplyDeleteFFS1 is rocking overall !! Now salsa with Tango !!
// SISCO was amazing - moved on at terrifc speed and the story ended as soon as it started - so breezy, so racy - waiting for more of SISCO !! //
Delete+1
ஆல்ஃபா ல பேசுறாங்க பேசுறாங்க பேசிட்டே இருக்காங்க....
ReplyDeleteடேங்கோ,சிஸ்கோ பல மடங்கு மேல்...
ரெண்டாவது படிங்க ...திட்டமிடல்கள் ....சொதப்பாத மொழி பெயர்ப்பும் புல்லரிக்கும்
Delete***டாங்கோ*** 10/10
ReplyDeleteசூப்பர் சித்திரங்கள், தெளிவான கதையோட்டம், நேர்த்தியான கேரக்டர்கள் ஒவ்வொரு காரக்டருமே மனதில் நிற்கிறது. ஹீரோ ஒரு உளவாளியோ? , சட்ட பரிபாலன அதிகாரியோ? டிடக்டிவ் வோ? மாபியா டானோ அல்லாமல் இருப்பதே ப்ரஷ்ஷாக இருக்கு. ஜனவரி மட்டுமல்ல, சமீபத்தில் வந்ததில் THE BEST.
வரும் அத்யாயங்களில் ஒரு உள் கதையு டன், மாஃபியாவுடன் நடக்கும் பின்கதை தொடராக செல்லும் என நினைக்கிறேன்.
நல்லா ஊர் சுத்தி காட்டப் போகிறார் டாங்கோ, சூப்பர் படங்களின் துணையுடன்
// நல்லா ஊர் சுத்தி காட்டப் போகிறார் டாங்கோ, சூப்பர் படங்களின் துணையுடன் //
Deleteஅதே தான்... அடுத்த டேங்கோ ஆல்பம் “சிவந்த மண்”
யெஸ்...
Deleteமூன்று ஹீரோக்களில் முதலிடம் டேங்கோவுக்குதான்.
பழிக்குப்பழி :
ReplyDeleteஇரத்த நகரம் கதையின் மினி வெர்சன்.. ஆனால் அதில் இருக்கும் சுவாரஸ்யம் இதில் ஒரு(பல) மாற்று குறைவே.!
கானகக் கோட்டை : நன்றாக நினைவில் இருக்கும் கதைதான் என்றாலும் அக்மார்க் டெக்ஸ் சாகசம்.! கலரில் சும்மா பட்டையை கிளப்புகிறது.!
இரத்த நகரம்
நள்ளிரவு வேட்டை
இரத்த ஒப்பந்தம் + தணியாத தணல் + காலன் தீர்த்த கணக்கு
இரத்த தாகம் + ஓநாய் வேட்டை
கபால முத்திரை + சதுப்பில் ஒரு சதிகார கும்பல்
மற்றும்
கார்சனின் கடந்த காலம்
எப்போது வருமென்று ஆவலோடு......!
...காலமெல்லாம் காத்திருப்பேன்னு சொல்ல வர்றீங்க போல.:-)
Delete//இரத்த நகரம்
Deleteநள்ளிரவு வேட்டை
இரத்த ஒப்பந்தம் + தணியாத தணல் + காலன் தீர்த்த கணக்கு
இரத்த தாகம் + ஓநாய் வேட்டை
கபால முத்திரை + சதுப்பில் ஒரு சதிகார கும்பல்//
+1111
ReplyDeleteவேதாளர் கதைகள் வருமுன் வேதாளர் குறித்து நிறைய படித்து தமிழில் எழுத விரும்பினேன்..
படித்தது ஓரளவு..தமிழ்ப்படுத்த நேரமில்லாமல் போனது..
வேதாளர் ஆசிரியர் லீ பால்க்குக்கு
ஃபேண்டம் எழுத தூண்டுகோலாக இருந்தது எல் சிட், கிங் ஆர்தர், கிரேக்க , ஸ்காண்டிநேவிய கதைகள், டார்ஜான், ஜங்கிள் புக் போன்றவை..
முதல் வேதாளர் கதை அனைவரும் அறிவர் ..தொடர்ந்த வேதாளர்கள் பற்றிய தகவல்களும் சுவாரஸ்யமானவையே..
ஷேக்ஸ்பியர் நாடக குழுவில் இருந்த வேதாளர் துவங்கி ரோபோக்களுடன் போராடும் எதிர்கால வேதாளர் வரை மேலோட்டமாக படித்ததே களிப்பூட்டியது..
இரண்டாம் உலகப் போரில் சமயத்தில் பின்னாளில் கலிபோர்னியாவின் செனட்டராக மாறிய ஆலன் கிரான்ஸ்டன் ஹிட்லரின் எடிட் செய்யப்படாத Mein Kampf ( எனது போராட்டம்) என்ற சுயசரிதை மற்றும் பொலிட்டிக்கல் ஐடியாலஜி பற்றிய நூலை கடத்திவர லீ, க்ரான்ஸ்டன் இருவரும் இணைந்து இதை வெளியிட நேசநாடுகள் வதைமுகாம்கள் பற்றி அறிய இது பெரிதும் உதவி செய்தது.
ஹிட்லர் லீ மீது வழக்கு தொடுக்க முயன்றது உண்மை... ஆனால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை..
ஆல்பா - முரண்களும் முடிவுகளும்!
ReplyDelete//
1. ஓலெக் (KGB) – ரான் (CIA) கூட்டணிதான் முழுக் கதையின் ஆணிவேர் எனும்போது ஆல்பாவை பயிற்றுவித்து அஸ்ஸிகா மூலம் ஓலெக்கையே உளவறியச் சொல்வது எதற்காக? ஒருவேளை அஸ்ஸிகாவை பாரிஸிலேயே கொல்லும் திட்டமிருந்தால் அவளை பின்தொடர்ந்து செல்ல ஆல்பாவை பயிற்றுவிப்பானேன்?
2. இரஷ்ய மாஃபியாவின் கூலிப்படையான ஃபிரிட்ஸ், ஃப்ரீட்மேன் குழுவினர் அவர்களின் முக்கிய நோக்கமான டாலர்கள் கைமாறும் முன்பாக (அதாவது அஸ்ஸிகா – ஹோரோவிட்ஸ் சந்திப்புக்கு முன்னரே) பார்க்கிங் மைதானத்தில் குறுக்கிட முயல்வது ஏன்? (பக்.33,34)
3. ஓலெக்கின் திட்டப்படி அஸ்ஸிகா ஜெர்மன் கூலிப்படையினரால் கொல்லப்பட்டு இருந்தால் ஆல்பாவுக்கு வேலையில்லாமல் போயிருக்குமல்லவா? ஓவியக் காலரி… சந்திப்பு … அதற்கான திட்டமிடல் etc… இதெல்லாம் தேவையிருக்காதே!
4. ஃபிரிட்ஸ்சிடமிருந்து டாலர்களையும் ரூபிள்களையும் வசமாக்கிய பின்னர் ஆல்பாவை மாஸ்கோவுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் CIA க்கு என்ன? ஒருவேளை ரஷ்யா மாஃபியா அர்காடி போக்டனோவை அடக்க ஓலக்குக்கு உதவி செய்ய அனுப்பி இருப்பார்களோ?
//
1. ஆல்பாவின் முதன்மையான பணி அஸ்ஸியாவை தன் கணவனுக்குத் துரோகமிழைக்கச் செய்வதே. பாரிஸ் பரிவர்த்தனையின் மூலம் தன் மீது விழக்கூடிய ரஷ்ய அரசாங்கத்தின் சந்தேகப் பார்வையிலிருந்து தப்பிக்க தன் மனைவியையே பலிகொடுக்க அரைகுறை மனதோடு தயாராகும் ஓலக்கை அஸ்ஸியாவின் நம்பிக்கைத் துரோகம் மூலம் சமனப்படுத்தி எதிர்கால சி.ஐ.ஏ - கே.ஜி.பி கூட்டிணைப்பில் விரிசல் வராமல் பார்த்துக் கொள்ள சி.ஐ.ஏ வின் திட்டமிடல் இது.
அதே நேரத்தில் இப்பரிவர்த்தனை சார்ந்த அனைத்து தொடர்புகளையும் அழித்துவிடவும் திட்டமிடுகிறது. அஸ்ஸியா எதிர்பாரா விதமாக தப்பிவிட அவளை மாஸ்கோவிலேயே தீர்த்துக் கட்ட ஆல்பாவை அனுப்புகிறது. ஆனால் எதிர்பாராவிதமாக ஆல்பா அஸ்ஸியாவைக் காதலித்துத் தொலைத்துவிட ரான் & கோ தானே களத்தில் இறங்குகிறது. ஆல்பா மாஸ்கோவில் அஸ்ஸியாவை சந்திக்கச் செய்வதன் மூலமும், தான் ஏற்கனவே எடுத்திருக்கும் வீடியோ ஆதாரத்தை ஓலக்கிடம் காண்பிப்பதன் மூலமும் அவனுடைய முழு சம்மதத்துடன் இவ்விருவரின் கதையை முடிக்க தயாராகிறது. ஆனால் அதற்கான முயற்சியில் தோல்வியடைகிறது.
2. பாரீஸ் பரிவர்த்தனை குறித்த தகவலை ரஷ்யா மாபியாவின் காதில் விழுமாறு கசியச் செய்கிறது கே.ஜி.பி. ஒரு ஜெர்மானிய மாஃபியா இந்த பரிவர்த்தனையின் மூலம் ரஷ்யாவில் காலூன்ற இது நல்ல வாய்ப்பாக அமையும் என்று கொம்பு சீவியும் விடுகிறது. இதன்மூலம் கடுப்பான ரஷ்ய மாஃபியா நம்பர்-1 அர்காடி போக்டனோவ் ஒரு ஜெர்மானிய கூலிப்படையை (ஃப்ரீட்மேன் & ஃப்ரிட்ஸ்) ஏவி அந்த பரிவர்த்தனையை தடுத்து ரூபிள்களை கவர்ந்து வர பணிக்கிறது.
அதேசமயம் இதை ஏற்கனவே எதிபார்த்திருந்த கே.ஜி.பி யினர் பரிவர்த்தனைக்கு முன் எந்த விதத்திலும் ரூபிள்களை பறிகொடுக்க விரும்பாமல் அந்த ‘டென்னிஸ் ஜோடி’ பிளானை செட்-அப் செய்கிறது. வேறு வழியில்லாமல் பிளான்#2 ஐ செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஃபிரிட்சுக்கு ஏற்படுத்துகிறது. அதன்மூலம் பரிவர்த்தனைக்குப் பின்னர் டாலர்களுடனேயே ரூபிள் செக்குகளையும் கவர வேண்டிய நிலை. அதை எதிர்பார்த்து ஹில்டாவின் வீட்டில் காத்திருந்த ரான் & கோ டாலர்களைக் கைப்பற்றிவிட்டு ரூபிள் செக்குகளை எரித்து விடுகின்றனர்.
3.ஓலெக்கின் திட்டப்படி அஸ்ஸியா கொல்லப்பட்டு இருந்தால் ஆல்பாவின் பணி பாரீசிலேயே முடிந்திருக்கும். அவள் தப்பிவிடுவதாலேயே திட்டத்தை நீட்டி ஆல்பாவை மாஸ்கோவுக்கு அனுப்பி அஸ்ஸியாவைச் சந்திக்கச் செய்கிறது ரான்&கோ. பின் தாங்களே கிளம்பிச் சென்று கேட்டியாவின் கதையை முடித்த பின்னர் ஓலக்குடன் சேர்ந்து ஆல்பா-அஸ்ஸியாவை கதைமுடிக்க கிளம்புகிறது.
4.ஃபிரீட்ஸிடமிருந்து டாலர்களை வசப்படுத்திய பின்னர் ஃபிரிட்ஸ் & ஃப்ரீட்மேனைக் கொன்று அவர்களின் தலைகளைக் கொய்து அவற்றின் தொண்டைக்குள் ஷோபினின் மியூசிக் நோட்ஸ்களைத் திணித்து அர்காடிக்கு அனுப்புகிறது ரான் & கோ. இதன் மூலம் இகோர் மற்றும் அர்காடியின் இடையே நம்பிக்கையைக் குலைத்து உட்பூசலை வரச்செய்து அந்த மாபியாக் குடும்பத்தை காலியாக்குவதும் இவர்களின் திட்டத்தில் ஒரு பகுதியே. இதனால் ஆல்பாவை மாஸ்கோவுக்கு அனுப்புவதில் எந்த மாற்றமும் ஏற்படப் போவது இல்லை.
உண்மையிம் ஓலக் மற்றும் ரான்& கோ வின் திட்டம் மலைக்க வைக்கிறது. என்ன ஆல்பாவை வெறும் ரோமியோ வேஷம் போடத் தேர்வு செய்து விட்டார்களே என்பதுதான் மனவருத்தம்.
நன்றி @Lusettesofia சார்!
நன்றி ஆசிரியரே!
//என்ன ஆல்பாவை வெறும் ரோமியோ வேஷம் போடத் தேர்வு செய்து விட்டார்களே என்பதுதான் மனவருத்தம்.//
Deleteஎதிரிநாட்டு அரசியல்/ ராணுவத்தில் உயர்நிலையில் உள்ளவர்களை மயக்கி ரகசியம் கறக்க பெரும்பாலும் பெண்கள் / சிலசமயம் ஆண்களை உபயோகிப்பதை பல நாட்டு உளவு அமைப்புகள் வாடிக்கையாக வைத்துள்ளன..honeytrap என்றழைக்கப்படும் இது வழக்கமான ஒன்றுதான்..
Honeytrap ஆக செயல்படுவதற்கான வயது, வசீகரம் ஆல்பாவுக்கு உள்ளது..
சாக்லெட் பாயாக அறிமுகமான அஜித் இன்று ஆக்ஷன் ஹீரோவாக பரிமளிப்பது போல..
மேலே சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் சரவணகுமார் சார்!
Delete// எதிரிநாட்டு அரசியல்/ ராணுவத்தில் உயர்நிலையில் உள்ளவர்களை மயக்கி ரகசியம் கறக்க பெரும்பாலும் பெண்கள் / சிலசமயம் ஆண்களை உபயோகிப்பதை பல நாட்டு உளவு அமைப்புகள் வாடிக்கையாக வைத்துள்ளன..honeytrap என்றழைக்கப்படும் இது வழக்கமான ஒன்றுதான்..
Delete//
நம்ம ஜேம்ஸ்பாண்ட் ஒவ்வொரு கதையிலும் இதைத்தானே செய்வார்....
// மேலே சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் சரவணகுமார் சார்!//
Deleteநன்றிங்க சார்...