Powered By Blogger

Friday, January 14, 2022

மாயாத்மாவின் முதற்பார்வை !

 நண்பர்களே,

வணக்கம் ! தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ! பொங்கலின் தித்திப்பும், கரும்புகளின் இனிமையும் காத்திருக்கும் ஒவ்வொரு நாளிலும் நம் இல்லங்களில் பெருக்கெடுக்கட்டும் ! And தையின் முதல் தினத்தில் இதோ உங்களுக்கு ஹலோ சொல்லிட அட்டைப்பட பிரிவியூவுடன் ஆஜராகிறார் வேதாள மாயாத்மா

ஏகமாய் நகாசு வேலைகளுடன் ரவுசு செய்யக் காத்திருக்கும் இந்த அட்டைப்படம், துருக்கியில் பிறந்து, ஜெர்மனியில் இன்று வசித்து வரும் பிரபல ஓவியரான எர்டுருல் எடியரன் அவர்களின் கைவண்ணம். துருக்கியிலிருந்து வெளியான வேதாளர் கதைகளுக்கு ஏகமாய் அட்டைப்பட சித்திரங்கள் போட்டவர் இவர் ! சொல்லப் போனால் வேதாளரின் அந்த ஒருவித நீல நிற உடுப்பினை பளீர் சிகப்புக்கு மாற்றியமைத்து அட்டைப்படங்களை தெறிக்க விட்டவர் எடியரன் ! அது மாத்திரமன்றி ஜெர்மனியிலிருந்து வெளியான ஒரு வண்டி கௌபாய் & த்ரில்லர் காமிக்ஸ் இதழ்களின் முகப்புகளையும் அலங்கரித்தவை இவரது அட்டைப்பட டிசைன்களே ! குவிந்து கிடக்கும் அவரது  பிரம்மாண்ட ஆர்ட்ஒர்க் கலெக்க்ஷனில்  இருந்து நமக்குத் தேவைப்படக்கூடிய வேதாளரின் அட்டைப்படங்களைக் கொஞ்சமாய்த் தேர்வு செய்து, அவற்றிற்கொரு சன்மானத்தினை அவருக்கு அனுப்பி வைத்து, தமிழில் நமக்கான ராப்பர்களாய் அவற்றை உருமாற்றம் செய்திட அனுமதி வாங்கினோம் ! So தொடரவுள்ள பொழுதுகளிலும் நமது (வேதாளன்) அட்டைப்படத்தினில் இவரது முத்திரை தொடர்ந்திடும் ! அதன் பின்பாய், நமது வர்ண மெருகூட்டல் ; நகாசு வேலைகள் என்று செய்த கையோடு படைப்பாளிகளிடம் காட்டினோம் - உடனடி ஓ.கே. கிட்டியது ! MAXI சைசிலான புக்கிற்கு இந்த அட்டைப்படம் செம மெருகூட்டும் என்ற நம்பிக்கையுடன் இதோ உங்களின் முதற்பார்வைக்கு submit செய்தாச்சு !

மாத இறுதியில் புக்காய் வேதாளரை ஒப்படைக்க இறுதிக்கட்டப் பணிகள் நடந்தேறி வருகின்றன ! And ஆன்லைன் புத்தக விழாவின் DAY 2 ஓடிக்கொண்டுள்ளது இன்றைக்கு ! நிலவரம் என்னவென்று அறிந்திட எனக்கே லைன் கிடைக்கவில்லை என்பதால், வேலை முடியும் தருவாயில் நம்மாட்களாய் போன் செய்து சொல்லட்டுமென்று காத்திருக்கிறேன் ! 

Meantime - நேற்றைய MAXIMUM BILL VALUE & MAXIMUM NUMBER OF BOOKS PURCHASED என்ற 2 அளவுகோல்களிலுமே முன்னணி கண்டு, "இ.ப" + "க.ம.கோ." புக்ஸை தட்டிச் செல்வது எங்கள் மண்ணின் மைந்தர் சௌந்தர் தான் ! 230 புக்ஸ் வாங்கியுள்ளார் நேற்றைக்கு மட்டும் !!! Awesome சௌந்தர் !!

அப்புறம் நாளைய QUIZ போட்டிக்கோசரம் சிஸ்கோ + டேங்கோவை நெட்டுரு போட்டுக் கொண்டிருக்கிறேன் ! பேசாது "எலியப்பாவிலிருந்து QUIZ" என்று அறிவித்து - "ஆனை பட்டாப்பட்டி போட்டிருக்கா ? ஜாக்கி ஜட்டி போட்டிருக்கா ? இல்லாங்காட்டி பப்பி ஷேமாக இருக்கிறதா ?' என்ற ரீதியில் கேள்விகளை அமைத்து, எனக்கும், உங்களுக்கும்  வேலையை சுலபமாக்கியிருக்கலாமோ ? என்ற கேள்வி எழாதில்லை !! 

நாளை மாலை J சார் ஏற்பாடு செய்திருக்கும் அந்த மீட்டிங்குக்கு 5-45 க்கு ஆஜராகிடுவேன் - கேள்விகளோடு !! கன்னத்தில் மருவோடு, ஜார்கண்ட் பக்கமாய் ரயிலேறும் எண்ணங்களை உதறித் தள்ளிவிட்டு, ஆளுக்கொரு வெள்ளைத்தாள் + பேனாவுடன் நீங்களும் வந்து விடுங்கள் guys !! 

மீட்டிங் விபரம்

To join the meeting on Google Meet, click this link: 

 
Or 

Open Meet and enter this code: vms-rebj-xyx

Date : சனிக் கிழமை...நாள் : 15/01/2022. Evening 6 to 6.30 p.m.

போட்டி கதைகள் :

சத்தமாய் ஒரு மௌனம். 

&

என் பெயர் டேங்கோ...

நேரம் : 30 நிமிடங்கள்.

வீடியோ மீட்டிங்கில் கொஞ்சம் அரட்டை + கொஞ்சம் கேள்விகள் !! 

உங்கள் பதில்களை A4 பேப்பரில் எழுதி 73737 19755 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப வேண்டும்...!

Bye all...see you around !! Enjoy a safe long weekend !




164 comments:

  1. முதல் முறையாக முதலாவதாக

    ReplyDelete
  2. பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்...
    பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே...

    ReplyDelete
  3. //கன்னத்தில் மருவோடு, ஜார்கண்ட் பக்கமாய் ரயிலேறும் எண்ணங்களை உதறித் தள்ளிவிட்டு, ஆளுக்கொரு வெள்ளைத்தாள் + பேனாவுடன் நீங்களும் வந்து விடுங்கள் guys !! //
    :-))) கண்டிப்பாக சார்...

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  5. எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க போல இருக்கு...

    ReplyDelete
  6. வேதாளன் சும்மா பச்சைப் பசேல் என்று சும்மா பச்சையில் தெறிக்கிறது.அற்புதம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
    Replies
    1. இது பொன்ராசு கமென்ட் மாதிரி தெரியுது ;-)

      Delete
  7. சார் உள்ளே ஒவ்வொரு கதைக்கும் ஒரு கலர் அட்டைப்படம்(முடிந்தால் ஒரிஜினல்) ஆர்ட் பேப்பரில் சேர்க்க இயலுமா.

    நன்றாக இருக்கும் சார் 🙏🏼

    ReplyDelete
  8. இனியதமிழர் திருநாள் -
    தைப் ெபாங்கல் நல்வாழ்த்த்துக்கள் சார்..

    ReplyDelete
  9. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. புதிய வேதாளர் கலர் சும்மா அள்ளுது.
    எல்லாரும் (விஜய் சேதுபதி ஸ்டைல்) ஹாப்பி அண்ணாச்சி 😃😃😇😇😊😊

    ReplyDelete
  11. நட்புகள், ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்💐💐💐💐💐

    ReplyDelete
  12. இன்னைக்கு சாயந்திரம்ன்னு நினைச்சு தீவிரமா prepare பண்ணலையேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்... இன்னுமொரு 24 hrs கிடைச்சிருக்கு...

    ReplyDelete
  13. நண்பர் செளந்தர் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  14. ஆசிரியருக்கும் சகவாசக வாசகியருக்கும் லயன் டீமிற்கும் ஹேப்பி பொங்கல்.. அந்த செக்கச்செவேல் வண்ணம் தெறிக்க மாயாவியாரின் வரவு புத்துணர்வூட்டும்.. பின்னணி தகவல்களுக்கும் நன்றிகள். கூகிள் மீட் தூள்பறக்கும் போலிருக்கிறது. எட்டியாவது பார்த்துடணும் சாமீய்ய்...

    ReplyDelete
  15. வேதாளன் சும்மா பட்டயக் கிளப்புதுங்கோ.

    பச்சை மாயாத்மா வாழ்க ...வாழ்க !!!

    ReplyDelete
  16. வாவ்... முகமூடி வேதாளனின் அட்டைப்படம் செம கலக்கல், அடர் சிகப்பு வண்ணத்தில ஜொலிக்கிறது.
    உள்ளுக்குள் ஆனந்த உற்சாகம் அலையடிக்கிறது.
    எத்தனை நீண்ட வருடங்களுக்குப் பின் வருகிறார்.
    தமிழ் காமிக்ஸ் உலகை கலக்க மீள் வருகை தரும் முகமூடி வேதாளனுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
    கையில ஏந்திப படிக்கும் நாளுக்காக ஆவலுடன காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  17. வேதாள மாயாத்மாவின் அட்டை ஓவியம் பச்சை மஞ்சள் கலந்து-பளிச்சென்று தெரியும்படி உள்ளது.
    ஒவ்வொரு கதைக்கும் ஒருமுகப்பு ஓவியம் இருக்குமா - என்பதே சஸ்பென்சாக உள்ளது. இல்லை எனில் பின்பக்கத்தை அந்த ஓவியங்கள் வைத்து
    வடிவமைத்து இருக்கலாமே என்ற எண்ணம்தான்..மாதக் கடைசியைே ரக்கி ஆவலுடன்...

    ReplyDelete
  18. அனைவரும் இனிய பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பர்களே..😍

    ReplyDelete
  20. மஞ்சள் என்றதும் நினைவிற்கு வருவது தலயும் ஒல்லிப்பிச்சானும்.


    இனி

    பச்சை என்றதும் நினைவிற்கு வருபவர் எங்கள் வேதாள மாயாத்மா.

    நகாசு வேலைகளின்றியே இவ்வளவு பிரமாதமாக இருக்கின்றதே அட்டை வண்ணப்படம்.

    நகாசு வேலைகள் அழகிற்கு அழகூட்டும்.

    Samashing 70s களைகட்ட ஆரம்பித்துவிட்டது.

    ReplyDelete
  21. ஆன்லைன் புத்தக விழா மிகச் சிறப்பான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துவிட்டது. லயன் முத்து குழுமம் தொடர்ந்து வாகை சூட வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. வாங்க வாங்க வேதாள மாயாத்மா.. காட்டுல எல்லாரும் சௌக்கியங்களா.!?

    ReplyDelete
  23. அள்ளுது வேதாளர் அட்டை....💞💞💞💞💞

    பிற போக்கை பார்த்தா தலயோடு டஃப் கொடுப்பாரோ????

    முதல் முறையாக வேதாளர் கதைகள் புத்தகமாக படிக்க போகிறேன்..... எப்படி இருக்கும்னு பார்த்துடுலாம்...!!!
    (வெள்ளை இளவரசி போனில் படிச்சது)

    ReplyDelete
    Replies
    1. //முதல் முறையாக வேதாளர் கதைகள் புத்தகமாக படிக்க போகிறேன்//

      நிஜம்மா தா சொல்லறீங்களா...
      நம்பவே முடியலங்க...

      Delete
  24. வேதாளர் னு இருந்திருக்கலாமோ..!?

    ReplyDelete
  25. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. வந்துட்டேன் வந்துட்டேன்

    ReplyDelete
  27. வேதாளம் எமது ஆதர்ஷ் நாயகர் இல்லை எனினும் அவரது வருகையை எதிர்நோக்கி இருக்கிறேன்..

    ReplyDelete
  28. வேதாள மாயாத்மா ஆகா பேஷ் பேஷ்.

    ReplyDelete
  29. கையில் பாட்டிலுடன்

    தள்ளாடி தள்ளாடி நடந்து

    தடுமாறி என்மேல் விழுந்தான்

    ...........................................................

    என் ஒரு வயது மகன்

    என்ற கவிஞர் நிலவனின் கவிதை வரிகளைப் போல் தளிர்நடையில் 2012-ல் துவங்கிய எடிட்டர் அவர்களின் இணைய எழுத்துக்கள் இன்றோ ஒரு ராணுவ ஜெனரலினைப் போல மிடுக்கு நடை பயில்வது பாராட்டுதலுக்கும் மகிழ்வுக்கும் உரியது..

    2012-ல் தலைக் காவேரி போல் சிறியதாக துவங்கிய எடிட்டரின் பைநாமர்ஸ் வடிவங்கள் ஆடு தாண்டும் காவேரியாக வளர்ந்து இன்றோ ஸ்ரீரங்கப்பட்டிண அகண்ட காவேரியாக பரிணமித்து பண்டைய காவேரியின் ஆடிப்புனலாய் நகைச்சுவை நுரை ததும்ப பெருக்கெடுத்து ஓடுவது நிறைய மகிழ்வையும் ஒருவகையில் ஆச்சர்யத்தையும் அளிக்கிறது..


    பத்தாண்டுகளாக தனது ஹாஸ்ய உணர்வினாலும் சொல் வளம் , நடையழகாலும் தொடர்ந்து வாசகர்கள் மனதில் தனது எழுத்துகளை கொண்டுபோய் சேர்த்து கொண்டிருக்கும் எடிட்டர் சார் அவர்களை இத்தருணத்தில் பாராட்டுவதிலும் வாழ்த்துவதிலும் பேருவகை கொள்கிறேன்..

    எடிட்டர் அவர்களின் இச்சாதனை சாமான்யமானதன்று....வேகமான இவ்வுலகத்தில் இச்செயலின் அருமையை அனைவரும் அறிவர்..

    பலஆண்டுகளாய் எடிட்டர் அவர்களின் எழுத்துகள் அளப்பரிய ஆனந்தத்தை அளிப்பதை அனுபவத்து வரும் பல நூறு வாசகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.


    வசீகர எழுத்துகளை எடிட்டர் சாரின்

    மடிக்கணினி வாரி இறைத்தபடி எப்போதும் இருக்க வான் நோக்கி முகம் உயர்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. கையில் பாட்டிலுடன்

      தள்ளாடி தள்ளாடி நடந்து

      தடுமாறி டைப் அடிச்ச மேரி கீதே Doc ?

      டைப் அடிச்ச மேரி கீதே Doc ?

      :-) No Offense to a front line warrior - !! இதெல்லாம் ஒரு flowல வந்து தொலைக்கிது :-(

      Delete
    2. No offence taken raghavan! Not at all.

      I am enjoying it...

      வண்ணத் திரவங்கள் எனக்கு பிடிக்கும் தான்... அவற்றுக்கு பெப்சி,கோலா,மிரிண்டா என்பது போன்ற பெயர்கள் இருக்கும்..:-)

      Delete
  30. நிழல்களின் பின்னேயான நிஜங்கள்

    சகோதரிகள் இவாஞ்சலின்,ஸ்டெல்லாமேரி,சங்கவி,வெங்கடேஸ்வரி,ஜெகஜோதி சகோதரர்கள் பரமசிவம், குமாரசாமி,செல்வம்,மைதீன், அண்ணாச்சி, கண்ணன் ஆகியோரின் புகைப்படங்கள் முதல் பக்கங்களை ஆக்கிரமித்தது மன நிறைவை தந்தது..

    இவர்கள் அனைவருமே அனுபவங்களை மட்டுமே ஆசானாக கொண்டவர்கள் என்பது இந்த நவீன யுகத்தில் வியப்பளித்தது..

    எடிசன் போல தமக்கு தாமே கற்பித்து கொண்டவர்கள் போலும்..

    ஐன்ஸ்டீன் கூட பேடண்ட் அலுவலகத்தில் பணியாற்றியபோது இயற்பியலில் ஒரு பாலிடெக்னிக் டிப்ளமா ஹோல்டர்தான்..1905-ல் ஃபோட்டோ எலக்ட்ரிக் எபஃக்ட் , ஸ்பெஷல் ரிலேட்டிவிட்டி, மாஸ் எனர்ஜி ஈக்வெலன்ஸ் பற்றிய கட்டுரைகள் வெளியிட்ட பின்னேதான் ஸவிஸ் பல்கலைக்கழகம் அவருக்கு பிஹெச்டி பட்டம் வழங்கியது்.


    எனினும் எடிசன் கூட டெலகிராப் பற்றிய விரிவான ஆய்வுக்கு கூப்பர் கல்வி நிறுவனத்தில் சேர வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.

    எனவே சகோதரி ஈவாஞ்சலினை மட்டுமாவது DTP மற்றும் டிசைனிங்கில் ஆன்லைன் டிகிரி முடிக்க ஊக்கப்படுத்தவும்..


    மொத்த டீமுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்...

    ReplyDelete
    Replies
    1. /* எனவே சகோதரி ஈவாஞ்சலினை மட்டுமாவது DTP மற்றும் டிசைனிங்கில் ஆன்லைன் டிகிரி முடிக்க ஊக்கப்படுத்தவும்.. */

      Second this strongly sir - considering the future world of competion is going to be tumultous - am ready to provide any scholarship assistance too !!

      Delete
    2. ஒரு பக்கம் நீண்ட வருடம் கழித்து வேதாளர்.
      மறுபக்கம் நீண்ட நாட்கள் கழித்து செனா அனா சார்.
      வணக்கம், செனாஜி.
      எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
    3. அப்புறம்.. எங்கே இந்த பக்கம்??

      Delete
  31. வேதாளன் அட்டைப்படத்தின் வண்ணம் + சித்திரங்கள் வேறு லெவல். அமர்க்களமாக உள்ளது. அட்டைப்பட ஓவியர் பற்றிய தகவல் சிறப்பு.

    ReplyDelete
  32. செளந்தர் அமேசிங். பாராட்டுக்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. // 230 புக்ஸ் வாங்கியுள்ளார் நேற்றைக்கு மட்டும் //

      கண்ணை கட்டுது. சூப்பர். இது காமிக்ஸ் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை என நினைக்கிறேன்.

      Delete
    2. என்னுடைய வாழ்த்துகளும்......

      Delete
  33. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் (Box 1 Checked :-))

    ReplyDelete
  34. செளந்தர் - பாராட்டுக்கள் நண்பரே.(Box 2 Checked ;-))

    ReplyDelete
  35. வேதாளன் அட்டைப்படத்தின் வண்ணம் + சித்திரங்கள் அடி தூள் (Box 3 Checked :-p))

    ReplyDelete
  36. நமது காமிக்ஸில் வர உள்ள வேதாளர் கதையை முதல் முறையாக படிக்க உள்ளேன். எனது குழந்தைகளுக்கு கதை சொல்ல மற்றும் ஒரு காமிக்ஸ் நாயகன் கிடைத்து விட்டார்.

    ReplyDelete
  37. அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  38. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்.

    இப்போதுதான் வாசித்து முடித்தேன்.
    கதாசிரியரின் கதை சொல்லும் யுக்தியே ஊக்க மருந்தாக மாறி என்னை வாசிப்பதில் ஒரு ஆல்ஃபா வாக மாற்ற இடைவெளி ஏதுமின்றி படித்து முடித்துவிட்டேன்..

    JFK ரிமோட் மூலம் இயங்கும் ரைபிளினால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என கதையோ படமோ இனி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..

    பீரியட் கதையென்பதால் நெடுக கதாசிரியரும் ஓவியரும் சிறப்பு கவனம் செலுத்தியிருப்பது தெளிபு.


    தெளிவான கதையம்சம்... சொல்லியிருக்கும் பாணி அருமை..

    9/10

    கதையின் தலைப்பு பற்றி பின்னர் எழுதுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் பேக் செனா அனா.

      Delete
    2. ஆஹா ...எட்டிப் பார்க்க நேரம் கிடைச்சாச்சா...மகிழ்ச்சி பொங்கலில் பொங்கலாய்

      Delete
  39. டியர் எடி,

    இனிய பொங்கல் வாழ்த்துகள், உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், நிறுவன பணியாளர்களுக்கும், தமதுவாசகர் வட்டத்மிற்கும்.

    வேதாளர் அட்டையமைப்பு அலாதி... டர்கிஷ் Kizilmaske அவதாரத்தை தமிழிற்கு கொண்டுவந்தற்கு நன்றிகள் பல... நமது வண்ண அமைப்பிற்கு ஒத்து போகுது.

    நாளை மாலை க்விஸ் போட்டிக்கு நேரத்தில் ஆஜராகி விடுவேன்.

    ReplyDelete
  40. சார் அட்டைப்படம் சான்சே இல்ல...இனி மேல் இத அடிக்க எந்த அட்டையும் வராது எனும் எனது அடிச்சு சொல்லும் வார்த்தைகளை அடிக்கடி அடிச்சி தவிடு பொடியாக்கிடுறதே உங்க வேளையாகிப் போச்சு...இதையும் உடைக்க வாழ்த்துக்கள்...மகிழ்ச்சி....சௌந்தர் தூள் கிளப்பிட்டீங்க...உங்க சாதனைய உடைக்கவும் ஆளிருக்காது

    ReplyDelete
  41. வேதாளர் ஆர்வத்துடன்...

    ReplyDelete
  42. தவிர்க்க இயலாத சில காரணங்களால் நாளை meeting join செய்வது கடினம் - நண்பர்கள் கொண்டாடித் தள்ளிட வாழ்த்துகள். சீனியர் எடிட்டர் உடனான ஒரு நேர்க்காணல் பிறிதொரு நாளில் வசதிப்படுமெனில் கண்டிப்பாக கலந்து கொள்வேன் !

    ReplyDelete
  43. அன்பு ஆசிரியருக்கு 🙏...
    போட்டியில் கலந்து கொள்பவர்கள் மட்டுமே ஆன்லைனில் வரனுமாங்க?.
    இல்லை உங்களுடன் சில நிமிடங்கள் உரையாட வரலாங்களா?.

    ReplyDelete
    Replies
    1. சும்மா ஜாலியா வாங்க சார் ; 10 + 10 கேள்விகள் மிஞ்சிப் போனால் பத்து நிமிடங்களோ, பதினைந்து நிமிடங்களோ தான் எடுக்கும். மீத நேரத்துக்கு அரட்டை தானே !

      Delete
  44. சத்தமாயொரு மௌனம் - சிஸ்கோ

    விறுவிறுப்பாக செல்லும் 100 பக்க கதை...

    ஹீரோ, ஸ்பைடர் போன்று வித்தியாசமான குணாதிசயம் கொண்ட அடாவடி அதிரடி ஆபீசர்...
    climaxல் கூட ஹீரோ அப்படியே 50 வருஷம் முன் வந்திட்ட தானைத் தலைவனின் கல்நெஞ்சன் ஸ்பைடர் யுக்தியை பயன்படுத்துவது கதையை வேறு லெவல் கொண்டு ஹீரோவை காப்பாத்துகிறது...

    ஆனாலும் ஆனாலும், அந்த ரிப்போர்ட்டர் பெண்ணை ஏன் ஈவு இரக்கமின்றி சாகடித்தார் கதாசிரியர்? | hate that part in this story... பஞ்ச் வசனங்களுக்கும், பிரம்மாத சித்திரத்தரத்திற்கும், துடிப்பான கதைக்களத்திற்காகவும் எனது ரேட்டிங் 3.8/5

    ReplyDelete
    Replies
    1. வேதாள மாயாத்மா !
      3ம்,4ம் வகுப்பு படிக்கையில் மாலைமலரில் தினசரி எழுத்து கூட்டி கூட்டி கொஞ்சநாள் படித்தது, பிற்பாடு ராணி காமிக்ஸில் ஆரம்பத்தில் வெளிவந்த கதைகளை ஆர்வமுடன் வாசித்தேன்... பின்னர் ராணி காமிக்ஸில் போரடித்துவிட்டது. (முத்து காமிக்ஸ் வேதாளர் படிக்கும் போன 2020 வருடம் வரை வாய்ப்பு கிடைக்கவில்லை)

      எனவே இந்த வேதாளர் கதைகளை உங்கள் மொழிபெயர்ப்பில் படித்திட ஆவலாய் உள்ளேன்.
      அட்டைப்படம் நன்று. கையில் பார்க்கும்போது இன்னும் நேர்த்தி தெரியும் என்று நினைக்கிறேன்.

      Delete
    2. Sorry to mention for Sisco: SPOILER ALERT!

      Delete
    3. ///ஆனாலும் ஆனாலும், அந்த ரிப்போர்ட்டர் பெண்ணை ஏன் ஈவு இரக்கமின்றி சாகடித்தார் கதாசிரியர்//--

      மீ டு... மறுவாசிப்பில தோணியது,

      Final destination மூவி சீரியஸ்ல அவர்கள் எப்படி சாகணும் என்பது மாறாதோ அதுபோல இவள் சாகவேண்டியவள்,மரெட்டியோடு... அதனால் கதையோட்டத்தில் வெர்ராட்டின் குண்டில் சாகடிச்சிட்டார் போல....

      என்னதான் அந்த வீடியோ செல்போன் அழிக்கப்பட்டாலும், செர்வானின் கொலையை அவள் அப்படியே விட்டுவிடமாட்டாள் தானே! அவள் அதை துருவி தோண்டி ஏதாவது செய்ய முடியுமா என பார்ப்பதற்கு வாய்ப்பு உண்டு... Hero Sisco ற்கு அந்த ரிஸ்க்கை கதாசிரியர் வைக்க விரும்பலபோல..

      லாக்செஸ் அடிக்கும் பல்டியையும் கூட ரிப்போர்ட்டராக அவள் நம்பிவிடமாட்டாள்னு நினைக்கிறேன்...

      நல்ல வேளை அந்த மிஸ் ஜோவெர்ட்டயாவது உசுரோட விட்டாரே!😉

      Delete
    4. Sorry, I Can't accept this kind of tragedy without any reason...

      Delete
    5. You may find a valid one in the next half dozan or more episodes.....

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  45. // 230 புக்ஸ் வாங்கியுள்ளார் நேற்றைக்கு மட்டும் !!! Awesome சௌந்தர் !! //
    யப்பா வேற லெவல் பர்ச்சேஸ் போல...

    ReplyDelete
  46. உடல் நிலை சரியில்லை ஆனாலும் போட்டியில் கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
  47. Edi sir..
    வேதாளர்,டயானா, கிட், ஹெலாய்ஸ், ரெக்ஸ்,ஹுரோ,டெவில்,ஜம்போ,முத்திரை மோதிரம்,கபால குகை,பேந்தர் இனத்தவர்கள்,கர்னல் ஓராபு..etc. எல்லோரையும் சந்திக்கவும், டெங்காலி காட்டில் பயணம் செய்யவும் ஆவலாய் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  48. புத்தக விழா புத்தகத்திற்கு எவ்வளவு செலுத்த வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. Parani - 500 only for Tex. There is also Vaanavillai Thedi - Lucky Luke !!

      Delete
    2. Including both is ₹500, editor sir please correct me if I am wrong.

      Delete
    3. டெக்ஸ்+லக்கி (450+90+70 குரியர்) இரண்டுக்கும் சேத்து 610.

      Delete
    4. Parani, I paid 1100 for books and courier charge 100 for two sets.

      Delete
  49. சந்தாதாரர்களுக்கும் அந்த போஸ்டர் கிடைக்குமா...

    ReplyDelete
  50. To join the meeting on Google Meet, click this link:
    https://meet.google.com/vms-rebj-xyx

    Or open Meet and enter this code: vms-rebj-xyx

    ReplyDelete
    Replies
    1. நாளை எடிட்டர் குயிஸ் போட்டி க்கான கூகுள் லிங்க்

      Delete
    2. நேரம் மாலை 5.30 மணிக்கு மீட்டிங் ஆரம்பம்.

      Delete
    3. எடிட்டர் 5 .45க்கு வருவார்

      Delete
    4. அன்பு சால் நண்பர்களே

      நாள் : 15/01/22

      சனிக்கிழமை

      நேரம் : மாலை 5.30 மணி முதல்

      Delete
    5. போட்டி : FFS சிஸ்கோ மற்றும் டேங்கோ

      Delete
    6. உங்கள் விடைகள் A4 பேப்பரில் எழுதி 7373719755 எண்ணுக்கு விடைகள் அனுப்புங்கள்.

      Delete
    7. பேப்பரில் உங்கள் பெயர், முழு முகவரி, செல்போன் - எண் தவறாது குறிப்பிடுங்கள்.

      Delete
    8. பெயர் விபரங்கள் இல்லாத பதில்கள் ஏற்கப்படாது.

      Delete
    9. போட்டி நேரம்: மாலை 6 - 6.30 மணி.

      அரை மணி நேரம் மட்டுமே.

      கூடுதல் நேரம் ஒதுக்க ப்படாது.

      போட்டி நேரம் தாண்டி அனுப்பப்படும் விடைகளை ஏற்க இயலாது

      Delete
    10. தம்பி ரொம்ப கண்டிஷன் போடுது நான் பயப்படுது (ஆல்ஃபா படித்தன் தாக்கம்) :-)

      Delete
  51. அற்புதம்...அழகு...மகிழ்ச்சி

    ReplyDelete
  52. Sir - It would be good to add two more price items.

    1) 2021 - No discount - all issues
    2) 2021 - No discount - all cartoons
    3) 2021 - No discuount - all available Tex

    ReplyDelete
  53. இன்றைய அதிர்ஷ்டசாலிகள் யாரோ ?

    ReplyDelete
    Replies
    1. சாருக்கு லைன் கிடச்சதோ என்னவோ?😉

      அடுத்த தபால இருந்து தினம் ஒரு அப்பாயிண்மெண்ட் போட்டுறுவாரோ???

      Delete
  54. என் பெயர் டேங்கோ அட்டகாசமான மாமூலான கதைன்னாலும் ...தெறிக்க விடும் ஓவியங்கள் அம்மண்ணின் மேல் ஆவலைத் கிளப்புது...கதையோடு வருடி வரும் வரிகளும் போட்டி போட விரையுது டெக்சின் பாலைவனக்காட்சிகளை ஓரங்கட்டி . சேகுவேரா மோட்டார் சைக்கிள் பயணங்களில் இப்பகுதிகளை பார்க்க ஆசைப்பட்டதுண்டு சிறுவயதில் ! அதை அப்பகுதிகளை காட்சிப் படுத்த ...டியாகோவின் சித்தப்பா வா கிளம்பலாம்னு அழைப்பு விடுத்து சேவின் நண்பரை நினைவு படுத்துகிறார்...நம்ம ஷெல்டன் இப்பகுதிகளை காட்டிய பின் அதனை விட அழகாய் காட்டுது இக்கதை...2012 க்கு பின் நம்மைப் புரட்டிப் போட்ட இருவர் லார்கோ ஷெல்டன்...அவர்கள் போன பின் கச்சிதமாய் லார்கோ இடத்த ஆல்ஃபாவும் சிஸ்கோவும் பிடித்துக் கொள்ள ஷெல்டன் இடத்த டேங்கோ பிடிக்கிறார் !
    தேமேன்னு விளம்பரத்தில் காட்சி தந்த லார்கோ...அன்று நீங்க காட்டிய ஒரு பக்கம் அள்ள , வந்து கொள்ளை கொண்டது நினைவில்...இவர்கள் நிச்சயமா டாப்னு நீங்க சொன்னத காட்டி விட்டார்கள்...அருமை

    ReplyDelete
  55. நீண்ட விடுமுறையற்ற நாட்களுக்கு பிறகு ஆசுவாசம் அளிக்கும் 4 நாட்கள் விடுமுறையில் டிசம்பர் மாத இதழ்களும் ஜனவரி இதழ்களும் சுற்றி விரவி கிடக்க வாசிக்க நிறைய நேரம் கிடைத்திருக்கிறது..

    கதையின் தலைப்பு கதையை படித்து முடித்தபின்னர் ஒரு உறுத்தலை ஏற்படுத்தியது..

    காரணம் கதையில் சொல்லப்பட்ட ரைபிள் மாடல் ..

    கார்கானோ ரைபிள்.

    இதில் உபயோகப்படுத்தப்படும் 6.5 x 52 வகை கார்ட்ரிஜ்கள்..

    இத்தாலிய வகை ரைபிளான இது ஆட்டோமேட்டிக் ரகமல்ல ..செமி ஆட்டோமெட்டிக் வகையுமல்ல..

    போல்ட் ஆக்‌ஷன் வகை

    அதாவது லீவர் போன்ற அமைப்பினை ஆன்ட்டி கிளாக் திசையில் திருப்பினால் ரைபிளின் ப்ரீச் அமைப்பு திறந்து காலி கார்ட்ரிஜ் வெளிவிழ கிளாக் வைஸ் திருப்ப அடுத்த கார்ட்ரிஜ் வந்து உட்காரும் .


    கார்கானோ ரைபிளின் பின்னாளில் வந்த அத்தனை வகை வேரியண்ட்களிலும் இந்த போல்ட் ஆக்‌ஷன் உண்டு ..

    கார்கானோ ரைபிளின் மேகஸின் ஆறு கார்ட்ரிஜ்கள் மட்டுமே கொள்ள கூடியது..

    கதையில் சொல்லப்பட்ட ரைபிள் 10 கார்ட்ரிஜ்கள் கொண்ட மேகஸின் உடையதாக மேம்படுத்தப் பட்டிருப்பினும் இவ்வகை ரைபிள்களில் விரைவான 6 ஷாட்களுக்கு பிறகு ஜாமிங் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் ..

    கென்னடியின் கொலைக்கு பிறகு CBS, BLR அமைப்புகள்( பாலிஸ்டிக் - துப்பாக்கி தடயவியல் அமைப்புகள்) நடத்திய பரிசோதனையில் கார்கானோ வகை ரைபிள்கள் தொடர்ந்து மூன்று ரவுண்டுகள் சுட 5.6 நொடிகள் டைம் ஸ்பேன் எடுத்து கொள்வதாக- கென்னடி சுடப்பட்ட 81 மீட்டர் தொலைவினை அடைய - முடிவு அளித்தனர்.

    கென்னடி கொலையை ஆராய நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனில் இடம் பெற்றிருந்த உறுப்பினர்கள் சிலர் கார்கானோ போல்ட் ஆக்‌ஷன் ரக ரைபிள் என்பதால் ஒரு ரவுண்டு சுட குறைந்தது 2.3 நொடிகள் தேவை என கருத்து தெரிவித்து இருந்தனர்

    ஆனால் CBS , BLR அமைப்புகளின் பரிசோதனை முடிவுகள் இதற்கு மாறாகவே இருந்தன..

    கென்னடி குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி கொலையை ஆராய நியமிக்கப்பட்ட லேட்டிமர் கென்னடி கொலையின் போது வீசிய காற்றின் வேகம் உட்பட அனைத்தையும் உருவாக்கி நடத்திய பரிசோதனையில் மூன்று ரவுண்டுகள் தொடர்ந்து சுட 8.3 நொடிகள் தேவைப்படுவதாக முடிவினை அறிவித்தார்..


    கென்னடி கொலையை பொறுத்தமட்டில் நகர்ந்து கொண்டிருக்கும் ஓரிலக்கு மட்டுமே.

    கதையிலோ ஒன்பது வெவ்வேறு இலக்குகள் என்பதால் 1 நொடிக்கு 1 இலக்கு என்பதே அதீதமாய் தெரிகிறது...

    ஊக்க மருந்து உட்கொண்டதால் அபரிமித செயலாற்றல் வாய்க்கப் பெற்றிருப்பினும் கூட ..

    ஒன்பது நொடிகள் ஒன்பது தோட்டாக்கள் என்பதே சந்தேகமான நிலையில் ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் என்பது முதல் ஒன்பது கொலைகளை பார்த்தவர்களின் மனோநிலையை பிரதிபலிப்பதாக எண்ணிக் கொள்ளவேண்டும்

    கதையில் சொல்லப்படுவது போல் ஒரேயொரு துப்பாக்கி முழக்கம் மட்டும் மற்ற பாதசாரிகள் கேட்டதாக
    உணர்வதாக சொல்லப்படுவதால் தலைப்பு அவ்வகையில் மட்டும் ஏற்றதே...

    ReplyDelete
    Replies
    1. அந்தத் தலைப்பு - "ஆயிரம் நிலவே வா !" ; "ஜிகர்தண்டா" என்ற சினிமா தலைப்புகளைப் போல, more figurative than literal சார் !

      அசாத்திய நிகழ்வொன்றைச் சுற்றிடும் கதையிது என்பது போலானதொரு pointer !

      Delete
    2. புரிகிறது சார்..

      Delete
  56. வேதாளரின் அட்டைப்படம் ஆஹா ரகம்... சீக்கிரமே கைக்கு கிடைக்க ஆண்டவனையும் அஞ்சலகத்தையும் வேண்டிக் கொள்கிறேன்...

    ஜனவரி புத்தகங்களுடன் வேதாளரையும் (சீக்கிரம் தயாராகிவிட்டால்) சேர்த்து அனுப்ப முடியுமா சார்?

    அஞ்சலகத்தின் மூலம் அனுப்ப முடியாவிட்டால் கருடவேகா முயற்சிக்க முடியுமா என்று சொல்லுங்கள்.

    நன்றி!

    ReplyDelete
  57. அடுத்த தலைமுறை காமிக்ஸசை தொடர என்ன செய்யலாம்...

    ReplyDelete
  58. சார்…எங்களுக்கு அந்த தல போஸ்டரை கண்ணுல காட்ட முடியுமா?

    ReplyDelete
  59. ஆமாங்கோ.வரட்டும் பதிவு. வருமா ?!

    ReplyDelete
  60. என் பெயர் டேங்கோ.

    அமைதியாக வாழ்க்கை நடத்தும் ஆனானப்பட்ட "மாணிக்க"மும்.."விஸ்வநாத்"துமே ஒரு அசந்தர்ப்ப சூழலில் தங்கள் உண்மை முகத்தைக் வெளிக்காட்டும் வேளை வந்தது.அந்த அடையாளம் காட்டும் படலமே மொத்த கதைக்கும் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

    அப்படியே...
    கிட்டத்தட்ட இதே போன்றே எங்கோ ஒரு மூலையில் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஊரில் ..உலகத்திலிருந்து ஒட்டுறவு ஏதுமின்றி இருக்கும் டேங்கோவுக்கு தன்பலத்தை காட்டும் தருணம் வருகிறது.அந்த சம்பவத்தால் சட்டென ஒரு தரப்பினருக்கு மூக்கு வேர்க்கிறது.அத்துவானக் காட்டிலிருக்கும் அந்த ஊருக்கு அத்தனை பேரும்..சகலவித ஏற்பாடுகளுடன் படையெடுக்க..ஆட்டம் சூடு பிடிக்கிறது.

    லார்கோ வின்ச் க்கு பிறகு..
    சிறப்பான, தெளிவான,அழகான ஓவியங்கள்.அற்புதமான கலரிங் ..என ரசிக்க மேலும் காரணங்கள் கூடுகின்றன.அதிலும் லாங் ஷாட் ஓவியங்களின் அவுட்புட் அருமை.

    டேங்கோவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதென பட்சி சொல்கிறது..

    ReplyDelete
  61. கிட்டத்தட்ட பாட்ஷா கதை, டேங்கோவுடன் ஒத்துப்போகிறது.

    ReplyDelete
  62. FFS முதல் பாகம் நேற்றிரவு எடுத்தேன்..முத்து இதழ்களின் படங்கள், காமிக்ஸ் டைம் பகுதியில் சீனியர் சார் , எடிட்டர் சார் ,மாதவன் சார், கருணையானந்தம் சார், பாலசுப்பிரமணியம் சார் ஆகியோரின் எழுத்துகளை படிக்க , பார்க்க வெகுநேரம் ஆனது.

    FFS இரண்டு இதழ்களை ஏந்தும்போது கர்வம் பீறிடுகிறது.
    அற்புதமான கலைப்படைப்புகள்..

    துரோகம் ஒரு தொடர்கதை முதல் அத்தியாயம் முடித்தாகிவிட்டது..

    வித்தியாசமான கருவுடன் விறுவிறுப்பும் கைகோர்க்க தாமதமாக எழுந்து சூடான இட்லி , மட்டன் குருமா சாப்பிட்ட கையோடு இதோ இரண்டாவது அத்தியாயத்தை துவக்குகிறேன்..

    மாலை நடக்கவிருக்கும் ஜூம் கலந்துரையாடலில் பங்கேற்கவிருக்கவிருக்கும் காமிரேடுகள் இன்புற வாழ்த்துகள்.

    போட்டியில் கலந்து பரிசினை தட்டிச் செல்ல அனைவருக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள்..!!!

    ReplyDelete
  63. ஊடாக

    குண்டு புத்தகங்கள் குறித்த நிலைப்பாட்டை எடிட்டர் சார் மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன்.

    இவை தரும் பரவச அனுபவங்கள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை..

    பிஸ்டலுக்கு பிரியாவிடை , ஒ.நொ.ஒ.தோட்டாக்கள் ( ஆரம்பித்தவுடன் இந்த இதழை நடுவில் வைக்கவே இயலவில்லை), இப்போது வாசித்து கொண்டிருக்கும் து.ஒ. தொடர்கதை போன்றவை கொணரும் மகிழ்வினை எங்களிடமிருந்து தட்டிப் பறிக்க நினைப்பதும் ஏனோ?

    குண்டு புத்தகங்கள் மீதான வாத்ஸல்யம் என்றும் மாறாது..

    சூழ்நிலை காரணமாய் சிலருக்கு படிக்க முன்பின் ஆனாலும் இவை அளிக்கும் குதூகலம் அலாதியான ஒன்று..

    இதோ துரோகத்தில் மீண்டும் குதிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. // குண்டு புத்தகங்கள் மீதான வாத்ஸல்யம் என்றும் மாறாது.. // மாறவே மாறாதது.

      Delete
    2. ///குண்டு புத்தகங்கள் மீதான வாத்ஸல்யம் என்றும் மாறாது..///

      ---என்றும் மாறாது இது மட்டுமே...

      "மாற்றம் ஒன்றே மாறாதது"----தோற்றுப் போவது இவ்விடத்தில் மட்டுமே!

      Delete
    3. செனாஜியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
      முதன்முதலாக NBS புத்தகத்தை கையில ஏந்திய போது, உள்ளுக்குள் பீறிட்டு எழுந்த உற்சாகம், அடுத்த LMS ல் கரைபுரண்டு ஓடியது. அதன் பின, இன்றுவரை ஒவ்வொரு குண்டு புத்தகம் வரும் போதும் அந்த சந்தோஷமீட்டர் எகிறிக் கொண்டேதான் போகிறது.
      So, dont spoil our happeness.

      Delete
  64. எடிட்டர் சாரின் சில தமிழ் மொழிபெயர்ப்பு சொற்கள் மனதை மயக்குவதுண்டு..

    து.ஒரு. தொடர்கதை பக்கம் 82 - ல் மேக்னடிக் பதாகை என இடம் பெற்றுள்ளது..

    சில காலம் முன்பாக, இப்போதும் சில, வங்கிகளின் ATM கார்டுகளில் ,உயர்தர ஹோட்டல்களில் கதவை திறக்க உபயோகிக்கப்படும் magnetic stripe பற்றியே இங்கு குறிப்பிடப்படுகிறது என கருதுகிறேன்.

    காந்தப் பட்டை என்பதே சரியான சொல்லாக இருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றுகிறது ( இப்பட்டைகளில் தகவல்கள் கோடிங், டீகோடிங் என்ற வகையில் சேகரிக்கப்பட்டும் , பரிமாறவும் பயன்படுகின்றன)

    சில செக்யூரிட்டி நோக்கங்களுக்காகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

    சிப்' கள் இவற்றை இப்போது ரீப்ளேஸ் செய்து வருகின்றன.

    பதாகை மிகவும் பழமையான சொல்

    பதாகை- கொடி என்னும் பொருளை தருவது..

    பரத நாட்டிய அபிநயத்தில் கட்டை விரலை சுண்டு விரல் கீழ் வைத்து நான்கு விரல்கள் மேல் நோக்கி நிற்பதும் பதாகைதான்.

    மோதிர விரலை வளைத்து கட்டை விரலை மடித்து மற்ற விரல்கள் மேல்நோக்கி நின்றால் திரிபதாகை அபிநயம்.

    வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் கவிஞர் தாமரையின்

    என் பதாகை தாங்கிய உன் முகம் உன்முகம் என்றும் மறவாதே

    வரிகள் அற்புதமானவை..


    Banner, placard போன்றவை விளம்பர பதாகைகள் என அழகுற மொழிபெயர்க்கப் படுகின்றன.

    பதாகைகள் குறித்து கீழே....

    ReplyDelete
  65. வரையாறு நாடு நகரூர் துரக மதகரியே

    விரையாரு மாலை முரசம் பதாகை மெய்யாணையென்னு

    முரையார் தசாங்கத்தினொவ்வொன்றை நாடியுற வகுத்தே

    தரையாளு மன்னர் முதலா யெவருக்கும் சாற்றுகவே



    –உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்



    படாகை நின்றன்று – பரி 9/78

    பலர் புகு மனை பலி புதவின்
    நறவு நொடை கொடியொடு
    பிறபிறவும் நனி விரைஇ
    பல் வேறு உருவின் பதாகை நீழல் – பட் 179-182


    (கள்ளுண்போர்)பலரும் செல்லும் மனைகளில் (தெய்வத்திற்குக் கொடுக்கும்)பலிகளுக்கான வாசலில்
    கள் விற்பனைக்காகக் கட்டிய கொடியுடன்,
    பல் வேறு குழூஉ கொடி பதாகை நிலைஇ - மது 373


    பல் வேறு உருவின் பதாகை நீழல் - பட் 182


    வல கை பதாகை கோட்டொடு சேர்த்தி - சிலப்.புகார் 8/27


    என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் ( படம் : வேட்டையாடு விளையாடு )

    பதாகை - கொடி ( ஒரு அரசனின் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும்.)

    என் மனமாகியிய பதாகையில் (கொடியில்) வைத்து நான் தாங்கிய உன் முகம் என்று பொருள் படும்.
    இங்கு அவளை ஒரு கொடியாகவும் ...
    அவள் இதயத்தில் உள்ள அவனது முகத்தினை ..கொடியில் உள்ள சின்னமாகவும் கொள்ளவும் .


    பரிபாடல், இத்தினச் சுருக்கம், பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் போன்றவற்றிலிருந்து பதாகை சொல் உபயோகம்.

    துரியோதனின் ராஜ பதாகையில் சர்ப்பம் உண்டென்பதால் அவனை உரகப்பதாகையான் என அழைப்பர்

    ReplyDelete
    Replies
    1. ரம்மி @ உங்க சின்னராசு புயல் வேகத்தில் அடித்து ஆடுகிறார். நீங்க எங்க போனீங்க:-)

      Delete
  66. இன்று நானும் ஆன்லைன் ஆர்டர் செய்தாயிற்று ...மிக்க மகிழ்ச்சி..


    பிறகு இன்று மாலை கூகுள் சந்திப்பில் ஆசிரியரையும் ,நண்பர்களையும் சந்திக்க மெளன பார்வையாளனாய் கலந்து கொள்ள காத்திருக்கிறேன்...


    ( சந்திப்பில் மாஸ்க் அணிய வேண்டுமா என்ற சந்தேகத்தை செயலரிடம் வினவி விட்டு கலந்து கொள்கிறேன் ..)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மொபைல் cameraவுக்கு மாஸ்க் போட்டு கலந்து கொள்ளுங்கள்.

      Delete

  67. குண்டு புத்தகங்கள் மீதான வாத்ஸல்யம் என்றும் மாறாது..

    சூழ்நிலை காரணமாய் சிலருக்கு படிக்க முன்பின் ஆனாலும் இவை அளிக்கும் குதூகலம் அலாதியான ஒன்று.


    ######


    ப்ளஸ் ஆயிரம் செனா அனா ஜீ..:-)

    ReplyDelete
  68. வாத்ஸல்யம்ன்னா பலூனை குறுக்கே போடுற மாதிரி வார்த்தை தானே...??

    ReplyDelete
  69. அன்பு சால் நண்பர்களே...

    அருமையாக நடந்து முடிந்த இந்த ஆன்லைன் லைவ் வீடியோ மீட்டிங்கில் மொத்தம் 67 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...

    நண்பர்கள் 5.30 மணி முதலே ஆர்வமாய் காத்திருந்தனர்.

    எடிட்டர் 5.45க்கே வந்திருந்தார்.

    வழமை போல் சுவாரஸ்யமாய் நல விசாரிப்புகளூக்கு பின் 6.00 மணிக்கு எடிட்டர் கேள்விகளை தொடுத்தார்.

    6.20 வரை நண்பர்கள் கேள்விகளை கேட்டு பதிவெழுதி அனுப்பினர்...சிலர் 7373719755 நம்பர் வாட்ஸ்அப் போகவில்லை என்று கூறினர்.

    6.25 வரை பதில்கள் பெறப்பட்டன.

    பிறகு ஆரம்பித்த நண்பர்கள் கேள்விக் கணைகளுக்கு எடிட்டர் அவரது நகைச்சுவை கலந்த பாணியில் பதிலளித்தார்.

    இந்த சந்திப்பு குறிப்பிட்ட 6.30 மணியையும் தாண்டி நீண்டது...

    பல நண்பர்கள் அவரவர்களது பால்ய கதைகளை கேட்டு பதில்களைப் பெற்றனர்.


    இப்படியாக தொடர்ந்த நீண்ட மீட்டிங்கானது இறுதியில் 8.15 மணிக்கு முடிவு பெற்றது...

    இந்த சின்ன வட்டத்திற்கு பிரயாசைப்படும் தன் முயற்சிகளை எடிட்டர் விளக்கினார்.

    கலந்து கொண்ட நண்பர்கள் முகங்களில் பொங்கிய சந்தோஷ் பிரதிபலிப்புகள் இந்த மீட்டிங்கை அர்த்தமுள்ளதாய் ஆக்கியதில் வியப்பில்லை...

    இறுதியில் பிரிய மனமில்லாத சின்ன குழந்தைகள் போல் மகிழ்ச்சியில் கனத்த நஒஞ்சத்துடன் விடை பெற்றோம்...

    எடிட்டர் அவர்களுக்கு நன்றி...

    கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி...

    இந்நாளை அர்த்தமுள்ள ஞாபகமாய் மாற்றிய காமிக்ஸ் என்னும் இனம் புரியாத ஞானத்திற்கு நன்றி...

    உங்களனைவருக்கும் இருகரம் கூப்பி நெஞ்சார்ந்த நன்றிகள் கூறி கொண்டு விடை பெறுகிறேன் நண்பர்களே...

    அன்பன்
    J

    ReplyDelete
    Replies
    1. கலந்து கொள்ள இயலவில்லை என்னால்.ஆசை தான்.ஆர்வம் உண்டு தான்.ஆனால் இங்கோ பொங்கல் வியாபாரம். விடுமுறை கிடைக்கவில்லை.என் போன்ற ஹோட்டல் தொழிலாளிக்கு தீபாவளி கிடையாது ; பொங்கல் கிடையாது.மன்னிக்க வேண்டுகின்றேன்.நல்லதொரு நல்வாய்ப்பை இழந்ததை நினைந்து வருந்துகின்றேன்.

      Delete
    2. இனிமையான சந்திப்பு மாதம் ஒரு முறை முயலலாம். நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

      Delete
    3. Krishna V V - it would be an overkill - we should do once in 3 or 6 months.

      Delete
    4. May be Pongal time (Muthu Aandu Malar) and July (Lion Aandu Malar time) would be great slots !

      Delete
    5. அடேயப்பா 67 பேர் ....சூப்பர்....ஆசிரியரின் விரிவான பதிவில் பாக்க வாய்ப்பிருக்குமா

      Delete
    6. நேற்று வீட்டில் சாமி கும்பிட்டு முடிக்க மணி 10, காலை முதல் அதற்க்கு தயார் செய்யும் வேலை. EBF எப்போதும் குலதெய்வ பூஜையோடு டாஷ் ஆகும். அடுத்த முறை கண்டிப்பாக சேர முயர்ச்சிக்கிறேன்.

      Delete
  70. J ji,

    Anyone recorded it?

    We can plan one more Lucky Luke 75 themed meet up for April 15th perhaps !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வேண்டும் அதுவும் புதிய லக்கி லூக் கதை வேண்டும்.

      Delete
  71. இன்று பதிவு உண்டா ?

    ReplyDelete

  72. து.ஒ.தொடர்கதை

    மாறுபட்ட கதைக்கரு + நியூரான்கள் தங்களுக்குள் சேதி கடத்துமளவு கதை வேகம் + அருமையான ரொமான்ஸ் + திகைக்க வைக்கும் சில ட்விஸ்ட்கள் = து.ஒ. தொடர்கதை

    9/10

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete
  75. எலியப்பா!

    சீனியர் எடிட்டரின் அந்தியும் அழகே முதல் கியரில் கிளம்பியுள்ளது..
    சுவாரஸ்யமான தகவல்கள்..

    ஒரு யூத்தின் கதை..பளாரென்று பொட்டில் அறைந்தாற் போல் மெஸேஜ்...செம..

    பிற பகுதிகள் வாண்டுகளுக்குரியவை..

    ReplyDelete
  76. இப்போதுதான் பொறிக்கப்பட்ட பட்டர் பாப்கார்ன் , தோல் நீக்கப்பட்ட ஆப்பிள் துண்டுகள், ஆரஞ்சு சுளைகள், வெதுவெதுப்பான ( வெறும் ) நீர், ஆவி பறக்கும் காபி ப்ளாஸ்க்கில் அப்புறம் டிசம்பர் இதழ்கள் ..

    வேறென்ன வேண்டும் பூலோக சுவர்க்கத்துக்கு?

    முதலில் காட்டான் கூட்டம்

    ReplyDelete

  77. சிஸ்கோ

    டயபாலிக்கை நினைவூட்டும் ஹீரோ...

    அதிகார வர்க்கத்தின் கைக்கூலி ..

    அப்பாவிகளையும் நேர்மையான ஆட்களையும் வேட்டையாடும் ஒருவனை கதாநாயக பிம்பத்தில் ஏற்றுக் கொள்வது கடினமே...

    7/10

    ReplyDelete
  78. என் பெயர் டேங்கோ

    ஹாரி பாட்டர் கதையில் வருகிற மாதிரி ஒரு animagus ஆக இருந்து ஒட்டகமாய் மாறி விடலாமா என எண்ணுமளவிற்கு வெப்பம் இதழின் வெளியே தெறிக்கிறது..ஓவியருக்கு எமது வந்தனங்கள்...

    கதை சில திருப்பங்களையும் மனதை கவரும் சாராம்சங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது..

    8.9/10

    ReplyDelete
  79. காட்டான் கூட்டம்

    பெர்கஸின் தாய் மேகி வந்தபின் துவங்கிய சிரிப்பு கதை முடிய இரண்டு பக்கங்கள் இருக்கும்வரை தொடர்ந்து கொண்டேயிருந்தது..
    கண்ணில் நீர் வருமளவிற்கு..

    சமீப காலங்களில் இப்படி வாய்விட்டு சிரித்ததில்லை...

    என்னவொரு பலமான கதாபாத்திரம்.

    ஜீன், ட்ரிஷ் - ம் மிக வித்தியாசமான கதாபாத்திரங்களே.....


    9.5/10

    ReplyDelete
    Replies
    1. அதுவும் அந்த குத்து சண்டை அரங்கில் டைனமைட்டோடு நிற்கும் போது நான் விழுந்து விழுந்து சிரித்தேன்

      Delete
    2. அருமையான கதை....நாமும் அதில் பாத்திரங்கள் தானே செனா....இப்படி எல்லாத்தையும் எடுத்து நேரம் கிடைக்கயில் ஆழ்ந்து படிப்பதில் உள்ள சுகமே தனி தான்....ஆசிரியர் தயக்கம் காட்டாது விற்பனையில் பாதிப்பில்லையெனில் தயாராக உள்ள கதைகளை வெளியிடலாம்.

      Delete
  80. Edi Sir..
    கதை சொல்லும் காமிக்ஸ் சந்தா இன்று (15.01.2022) கட்டியுள்ளேன்.

    ReplyDelete
  81. நினைவோ ஒரு பறவை


    ஜேஸனின்மூளையில் உள்ள நினைவுகளை அழிக்க கதாசிரியர் Y.SENTE - க்கு சாத்தியப்பட்டிருக்கலாம்

    உலக வாசகர்கள் அனைவருக்கும் அத்தகைய மாஸ் ஆபரேஷன் நடந்திருப்பதாக அவர் எண்ணிவிட்டாரா ? என வினா நெஞ்சில் எழுகிறது..


    முதல் சுற்றிலேயே இத்தகைய சம்பவங்கள் , தற்காலிக பிரஸிடண்ட் குழப்பங்கள், நெருக்கடி நிலை பிரகடனம் என பல நமது நினைவுப் பறவை சிறகடிக்கத்தான் செய்கிறது.

    கதையை நடத்தி செல்வதில் கற்பனை வறட்சியா?


    நினைவிழந்த தோர்கலுக்கு ஒரு க்றிஸ் ஆஃப் வல்நார் கணக்காய் இங்கும் ஜேஸனுக்கோர் ஜேனட்..

    சர்தான்..( பேசாமல் ஹாரி பாட்டர் கதை போல் லவ் போஷன் என்றாவது சொல்லியிருக்கலாம்)

    கதை விறுவிறுப்புதான் ..வழக்கமான Xiii - க்கே உரித்தான ஆழமில்லை.

    ட்ரோன்கள் மூலம் வெள்ளை மாளிகை மீதான தாக்குதல், நச்சு வாயு பிரயோகம் நம்ப சிரமமாக உள்ளது...

    Xiii கதைகளில் வசீகரிக்க தவறிய கதை இதுவே..

    8/10

    ReplyDelete
    Replies
    1. // .ஜேஸனின்மூளையில் உள்ள நினைவுகளை அழிக்க கதாசிரியர் Y.SENTE - க்கு சாத்தியப்பட்டிருக்கலாம்

      உலக வாசகர்கள் அனைவருக்கும் அத்தகைய மாஸ் ஆபரேஷன் நடந்திருப்பதாக அவர் எண்ணிவிட்டாரா ? //


      +1

      Delete
    2. தவறாக எண்ண வேண்டாம் ஒருவரின் நினைவுகளை முழுதும் அழிக்க வாய்ப்பே இல்லை என்கிறீர்களா

      Delete
  82. ஆசிரியரின் புதிய பதிவு தயார் நண்பர்களே...

    ReplyDelete