நண்பர்களே,
வணக்கம். டெக்னாலஜி தான் என்ன மாதிரியானதொரு அற்புத ஆஞ்சநேயர் ?!! ஈரோட்டின் புத்தக விழா அரங்கின் பின்னுள்ள அந்தப் பரிச்சயமான மரத்தடியை, அந்த இதமான காற்றோட்டத்துடனும், நாடி நரம்பெல்லாம் காமிக்ஸ் காதல் கொப்பளிக்கும் நண்பர்களின் வட்டத்தோடும், சஞ்சீவிமலையாட்டம் அலேக்காய் தூக்கியாந்து நமது கம்பியூட்டர்களுக்குள் நேற்று மாலை இறக்கித் தந்து விட்டதே ?!!
LIVE QUIZ என்று 45 நிமிட சந்திப்பாய் திட்டமிடப்பட்டு, நேற்றைக்கு மாலை ஐந்தேமுக்காலுக்கு ஆரம்பித்த அந்த virtual கச்சேரியானது, இரவு எட்டேகால் வரைக்கும் தெறிக்கும் உற்சாகங்களோடு தொடர்ந்தது ஒரு அட்டகாசமான அனுபவம் ! Oh yes - வாரா வாரம் பதிவுகளில் சந்தித்து வருகிறோம் தான் ; பனங்கிழங்கிற்குள் குருத்து எவ்விதம் நுழைந்தது ? பரோட்டாவுக்கு சால்னாவை ஜோடியாக்கிய மஹான் யார் ? என்ற ரேஞ்சுக்கு ஆராய்ச்சிகளெல்லாம் ரெகுலராய் செய்கிறோம் தான் - but still நேற்றைக்கு நான் பார்த்த அந்த high voltage உற்சாகத்தை நமது மாயாவிகாரு பார்த்திருந்தால், கபாலென்று அத்தனை பேரையும் ஒருவாட்டி தனது இரும்புக்கரத்தால் தொட்டு, அவரவரிடம் தெறித்துக் கொண்டிருந்த மின்சாரங்களை இழுத்து, தனது UPS-க்கு அடுத்த ஒரு வருஷத்துக்கான சார்ஜை ஓசியில் ஏற்றிக் கொண்டுவிட்டிருப்பார் என்று தோன்றியது ! Anyways மாயாவிகாரு செய்திருக்க வேண்டிய செயலை ஞான் செய்யத்தவறவில்லை ; குறைந்த பட்சமாய் அடுத்த 6 மாதங்களுக்காவது தேவையான உற்சாகங்களை நேற்று மாலை சேகரித்து ஒரு டப்பிக்குள் அடைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டேன் ! Oh wow ....எத்தனை பாசிட்டிவ் எனெர்ஜி ; எத்தனை ஆர்வம்; எத்தனை லூட்டிகள் & yes ...எத்தனை கேள்விகள் & எத்தனை பரிந்துரைகள் !! எலியப்பாவில் ஆரம்பித்து எடியூரப்பாவைத் தொடாத குறை தான் - காமிக்ஸ் சார்ந்த நேற்றைய அந்த அலசல்களில்!!
நிறைய புது நண்பர்களும் நேற்றைக்கான அந்த virtual ஆலமரத்தடியில் குழுமியிருக்க, QUIZ ஆரம்பித்த நேரத்தினில், அவசர அவசரமாய் கையோடு எடுத்து வந்திருந்த மருக்களை, தம் மூக்கிலோ ; பக்கத்திலிருந்தோரின் முதுகிலோ ஒட்டிக் கொண்டு ஜூட் விட்ட 'ஜார்கண்ட் சலோ' அணியினரையும் சேர்த்து - நேற்றைய அட்டெண்டன்ஸ் சுமார் 70 என்று மீட்டிங்கை முன்னின்று நடத்திய J சார் சொன்ன போது, மெத்து மெத்தென்றான ஒரு அங்குல உசர சுக்கா ரோஸ்ட்டைப் பார்க்கும் கார்சனைப் போல உணர்ந்தேன் ! Thanks a ton everyone !! ஒரு விடுமுறை தினத்தினில் வீட்டினரோடு ரிலாக்ஸ் செய்திருக்கக்கூடிய பொழுதினை - நமது பொம்ம புக் லூட்டிகளுக்கென ஒதுக்கிடுவது சுலபமே அல்ல தான் !! Much obliged all !! And QUIZ-ல் நான் கேட்ட கேள்விகளைக் கொண்டு அடுத்த நீட் தேர்வினை ஒப்பேற்றி, ஓவர்நைட்டில் ஒளஷத விற்பன்னர்களாய் யாரும் மாறிடப் போகும் அபாயங்கள் இராதென்றமட்டுக்கு உறுதி என்ற போதிலும், பங்கேற்ற 19 நண்பர்கள் காட்டிய உத்வேகம் அலாதி ரகம் !
But "சிஸ்கோவின் வீட்டினருகே சுடுவது சுசியமா ? ஆமை வடையா ?" என்ற ரேஞ்சுக்கு நான் SISCO கதையிலிருந்தும், TANGO கதையிலிருந்தும் கேட்டிருந்த 10 + 10 கேள்விகளுக்கு யாருமே முழு மதிப்பெண்களைப் பெற்றிருக்கவில்லை என்பது மட்டுமே நேற்றைய எனது ஆச்சர்யம் ! But still a creditable show all round ; பங்கேற்ற அனைவருமே வின்னர்ஸ் தான் எனது பார்வையில் !
20 மார்க்குகளுக்கு 18.5 வாங்கி முத்லிடத்தைப் பிடித்திருப்பது ஒன்றுக்கு இரண்டாய் நண்பர்கள் :
JOINT FIRST :
Mr.P.கார்த்திகேயன், அவிநாசி
&
Mr.சரவணகுமார், பல்லடம்
SECOND SPOT :
1 மார்க் குறைவாய் பெற்று, 17.5 என்ற டோட்டலுடன் இரண்டாமிடம் - வேலூரைச் சார்ந்த Mr.சத்ய சாய் நாதன் !
THIRD SPOT :
17 மார்க்குகளுடன் மூன்றாமிடம் திருவண்ணாமலையைச் சார்ந்த Mr.T.Sures !!
பாக்கி நண்பர்கள் points tally-ல் பின்தொடர்கிறார்கள் ! Congrats all folks !! ஒரு ஜாலியான முயற்சியினை செம ஜாலியாய்க் கையாண்டுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஒரு round of applause ! அதிலும் பரீட்சைக்கு ரெடியாவது போல் கதைகளிலிருந்து எடுத்திருந்த நோட்ஸையெல்லாம் அனுப்பி வைத்து திருப்பூர் சிவகுமார் ரகளை செய்திருந்தார் !
அவரவர் வாங்கியுள்ள ஒவ்வொரு மார்க்குக்கும் தலா ரூ.10 வீதம் points credit செய்கிறோம் ; so 18.5 மார்க்குகள் பெற்றிருக்கும் நண்பர்களுக்கு ரூ.185-க்கு பெறுமானமுள்ள points ; இரண்டாமிடத்துக்கு ரூ.175-க்குப் பெறுமானமுள்ள points என்ற ரீதியில் ! அவற்றைக் கொண்டு நாளை (திங்கள்) நமது ஆன்லைன் புத்தக விழாவினில் நீங்கள் வாங்கிடக்கூடிய புக்ஸ்களில் அந்த points-களை redeem செய்து கொள்ளலாம் ! மேலுள்ள மூன்று இடங்கள் தவிர்த்த பாக்கி இடங்களுக்கான நண்பர்களுக்கு அவரவர் பெற்றிருக்கும் marks list & points பற்றி மெசேஜ் அனுப்பிடுவோம் !
Maybe அடுத்தவாட்டி எலியப்பாவிலிருந்து LIVE QUIZ ஒன்றினை ரெடி செய்து, அவரவர் வீட்டு குட்டீஸ்களைக் கொண்டு பதில்கள் சொல்ல வைத்து, ஜூனியர்களுக்கான பொழுதாய் அதனை அமைத்திடலாமென்று பட்டது ! What say guys ? (மீசையை மழுங்கடித்த கையோடு - "அந்தக் குட்டியே நான் தான்" என்று ஆப்டிராயரோடு ஆரேனும் அதிரடி பண்ண மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்லி வைக்கிறேன் !!)
And before I sign out - நமது ஆன்லைன் புத்தக விழா updates !!
விற்பனைத் தொகைகள் + புக்ஸ் எண்ணிக்கை - என இரு அளவுகோல்களிலும் உச்சத்தைத் தொட்டு இ.ப. black & white தொகுப்பையும், "க.ம.கோ." வண்ண இதழையும் ஈட்டிடும் அடுத்த 2 நண்பர்கள் :
சேலம் ஆத்தூரைச் சார்ந்த திரு,மாதேஸ்வரன் - 130 புக்ஸ் !!
&
திரு,Safnas இலண்டன் - 270 புக்ஸ் !!
Simply Awesome !!!
நாளைய பொழுது நமது ஆன்லைன் புத்தக விழாவின் இறுதி நாள் என்பதை நினைவூட்டிய கையோடு நடையைக் கட்டுகிறேன் guys !! Bye all...see you around !! Have a relaxed Sunday !!
சரியான விடைகள் :
SISCO :
1 RF
2 Republique Francaise
3 போப்பாண்டவர்
4 ஜோஸ் மரெட்டி
5 படேல்
6 இத்தாலி ; வின்சென்ட் சிஸ்கோ காஸ்டிலியோனே
7 இளஞ்சிகப்பு ; ஆல்பா ரோமியோவின் மிடோ ரக இத்தாலிய கார்.
8 COUNTERSTRIKE
9 கேசியே
10 பால்
TANGO :
11 ஆன்செல்மோ
12 பெல்ஜியம்
13 TINA 'S BAR
14 ஜான் க்ரூஸ்
15 ஹேவியே
16 ஆர்ஜென்டினா
17 கார்மென் ; இளஞ்சிவப்பு
18 ஆண்டனியோ ஓர்டேகா
19 போர்டென்யோ
20 Hostal San Cristobal
First
ReplyDelete2nd ...
ReplyDelete3rd
ReplyDeleteCongrats to all winners, super initiative sir.
ReplyDeleteஉள்ளேன் ஐயா!!!
ReplyDeleteவாழ்த்துகள் நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼
ReplyDelete.
ஜல்லிக்கட்டு பொங்கல் வாழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் கோடைமலர் _ தீபாவளி மலர் போன்று புத்தாண்டு மற்றும் பொங்கல் மலர் வெளியீடு வந்தால் இனிய பொங்கல் மேலும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அருமை நண்பர்களே..
ReplyDeleteஇனிய காலை வணக்கம் நண்பர்களே
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDelete// LIVE QUIZ என்று 45 நிமிட சந்திப்பாய் திட்டமிடப்பட்டு, நேற்றைக்கு மாலை ஐந்தேமுக்காலுக்கு ஆரம்பித்த அந்த virtual கச்சேரியானது, இரவு எட்டேகால் வரைக்கும் தெறிக்கும் உற்சாகங்களோடு தொடர்ந்தது ஒரு அட்டகாசமான அனுபவம் ! //
ReplyDeleteஈரோட்டில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவில்
உங்களுடன் நண்பர்கள் அனைவருடனும்
குழுமி கும்மியடிக்க
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼🙏🏼🙏🏼
.
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteநன்றி சார். மீட்டிங்கும் செம, போட்டியும் செம, மூன்றாவது இடம் கிடைத்ததில் ஆனந்தமே.
ReplyDeleteமுதன்முறையாக ஒரு Live quiz அனுபவம் மிக த்ரில்லாக இருந்தது... ஆசிரியரது energy... Wowsome...ஐந்தேமுக்காலுக்கு ஆரம்பித்த போது இருந்த அதே உற்சாகத்துடன் எட்டேகால் வரை இருந்த ஆசிரியருக்கு ஈடு கொடுப்பது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயமாக இருந்தது... புதிய நண்பர்கள் பலரையும் onlineல் சந்திக்கும் வாய்ப்பு நேற்று கிட்டியது ஒரு பெரிய bonus... இந்த நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்திருந்த நண்பர் Jவுக்கு என் நன்றிகள்... முடிந்தால் ஒரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இவ்வித online சந்திப்புகளை நிகழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்...
ReplyDeleteநீண்ட நாட்கள் கழித்து ஆசரியரையும் ,நண்பர்களையும் கண்டதில் மகிழ்ச்சி...ஆரம்பத்தில் இருந்து ஒன்னரை மணி நேரம் தொடர்ந்து இருந்தாலும் அதன்பிறகு நெட் டேட்டா முடிந்த படியால் கழன்று கொள்ளுமாறு ஆகி விட்டது...
ReplyDeleteஅப்புறம் காதை கொடுங்கள் ஒரு சஸ்பென்ஸ் யார்கிட்டேயும் சொல்லாதீங்க ஆசிரியர் பேச்சில் ஒரு சஸ்பென்ஸ் வெளிவந்து விட்டது ..சுஸ்கி விஸ்கி இந்த வருடமே வரலாம்..
அப்புறம் மிக முக்கிய குறிப்பு எல்லோரும் அறிமுகமானவுடன் வணக்கம் சொன்னாங்க பேசுனாங்க பதில் சொன்னாங்க ஓகே ஆனா நான் நண்பர்களுக்கும் ,ஆசரியருக்கும் வணக்கம் சொல்லியும் பேசியும் யாரும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்ற வருத்தத்தில் இருந்தேன்..கடைசியா அப்புறம் தான் தெரிஞ்சது நான் கடைசி வரை மைக் பட்டனை ம்யூட்லியே வைத்து இருந்தது.. ( சரி அரசியலில் இதெல்லாம் சாதாரணம்ப்பா.. என்றபடியே நடையை கட்டியாயற்று..)
// ஆசிரியர் பேச்சில் ஒரு சஸ்பென்ஸ் வெளிவந்து விட்டது சுஸ்கி விஸ்கி இந்த வருடமே வரலாம் //
Deleteதலைவரே இது போன வருட நியூஸ் புதுசா வேற சொல்லுங்க :-)
உங்களுக்கு விவரமே பத்தமாட்டேங்கது பரணி சார்..ஆசிரியர் போன மாசம் அடுத்த வருசம் தான் சுஸ்கி விஸ்கி வரும்ன்னு சொன்னாரு மறந்துட்டீங்களா..
Deleteபோட்டியில் வென்ற நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்....
ReplyDeleteஎந்த வடையும் கிடைக்காது போல...
ReplyDeleteகவலை வேண்டாம் அறிவரசு :-) நம்ப தலைவர ஒரு போராட்டத்திற்கு எழுப்பி விடுங்க... அடுத்த அரைமணி நேரத்தில் வாழைப்பூ வடை சிவகாசியில் இருந்து பறந்து வரும் :-)
Deleteக்கும்
Deleteவொய் முக்கிங் தலைவரே...
Deleteபோராட்டத்திற்கு தலைப்பு தேடுகிறாராம் தலைவர்... வடை சாப்பிட :-)
Deleteஅருமை சார்..... உங்களுக்கு எனர்ஜி ஏறுவது எங்களுக்கு மே...புதிய நண்பர்கள் தாம் வெற்றி பெற்றுள்ளனர் போலும்....இங்கே வெளியே தென் படும் பகுதிகளை விட வேர்களும் அதிகமே...வாழ்த்துக்கள் நண்பர்களே
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே.
ReplyDelete/// சேலம் ஆத்தூரைச் சார்ந்த திரு,மாதேஸ்வரன் - 130 புக்ஸ் !! //
ReplyDeleteநன்றி. வாழ்த்துக்கள் நண்பரே.
// திரு,Safnas இலண்டன் - 270 புக்ஸ் !! //
இது வேற லெவல் சாதனை. நன்றி நண்பரே.
பாராட்டுக்கள்.
நன்றி நட்பே
Deleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteவாவ்...! நம்பவே முடியவில்லை...!!
Deleteநன்றி ஆசிரியரே!
நன்றி ஜே ஐயா!
நன்றி நண்பர்களே!!
Virtual ஆலமரத்தடியில் நடந்த நிகழ்வுகள் பற்றி எழுதியதற்கு நன்றி. மகிழ்ச்சி.
ReplyDelete//
ReplyDeleteMr.P.கார்த்திகேயன், அவிநாசி
&
Mr.சரவணகுமார், பல்லடம்
SECOND SPOT :
1 மார்க் குறைவாய் பெற்று, 17.5 என்ற டோட்டலுடன் இரண்டாமிடம் - வேலூரைச் சார்ந்த Mr.சத்ய சாய் நாதன் !
THIRD SPOT :
17 மார்க்குகளுடன் மூன்றாமிடம் திருவண்ணாமலையைச் சார்ந்த Mr.T.Sures !! //
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பர்களே.
ஜனா @ குட் ஜாப்
காமிக்ஸ் குடும்ப உறுப்பினர் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய கானும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவெற்றி பெற்ற அனைத்து நட்புகளுக்கும் 💐💐💐💐💐
ReplyDeleteஅதிக புத்தகங்கள் ....வாங்குவோர் மலைக்க வைக்கிறார்கள்... சூப்பர் நண்பர்களே
ReplyDeleteவெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசார் இது போல தொடர்ந்து மாதம் ஒரு முறை தொடர முயலலாம்.
என்னால் ஒரு மணி நேரம் தான் இருக்க முடிந்தது. அடுத்த முறை மேலும் தொடர முயல்கிறேன்.
வெற்றி பெற்றவர்களுக்கும்...
ReplyDeleteகலந்து கொண்டவர்களுக்கும்..
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
விஜயன் சார், சரியான விடைகளை சொல்லிட்டீங்க .. அப்புறம் அந்த சரியான கேள்விகளை எப்போது சொல்வீங்க :-)
ReplyDelete+1.... நீ கேள்விய கண்டுபிடியாம்ல
Deleteஅன்பு ஆசிரியருக்கு 🙏...
ReplyDeleteகிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன், கடிதம் எழுதலாமா?,வேண்டாமா?, கடிதம் எழுதி அவரும் பதில் கடிதம் அனுப்பினால்,
காமிக்ஸ் படிப்பது வீட்டிற்கு தெரிந்து விட்டால், பின்பு காமிக்ஸ் படிக்க நிரந்தர தடை விதித்து விடுவார்களோ என பயந்து, கடிதம் எழுதாமல், லயன் காமிக்ஸ்களில் வரும் வாசகர்கள் கடிதங்களையே படித்து ரசித்த நாட்கள் போய்,இன்று நேருக்கு நேர் சந்திக்கிறோம்.
எவ்வளவு பெரிய மாற்றம்.
போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் உங்களை காணும் ஆவலில் மட்டுமே கலந்து கொண்டேன்.
நண்பர்களிடம் தான் எத்தனை விதமான கேள்விகள்,ஆர்வங்கள், அனுபவங்கள்.
அதற்கு கொஞ்சமும் சளைக்காத உங்களின் பதில்கள், தகவல்கள்.
கலந்து கொண்டவர்கள் உடலளவில் தான் முதிர்ச்சியே தவிர,அனைவரும் மனதளவில் இன்னமும் அந்த 1986 பருவத்தினரே என்பதை நிருபித்து விட்டார்கள் என எண்ணும் போது பூரிக்கிறது மனது.
இணைய இணைப்பு தொந்தரவாலும்,கேட்பொலி தொந்தரவாலும் இடையிலேயே திரும்ப வேண்டியதாகும்.
மாதத்தில் 1 முறையாவது இந்த நிகழ்வு தொடர வேண்டும் சார்.
எங்களின் சிறிய மகிழ்ச்சிக்காக...
Edi Sir..
ReplyDeleteOnline meeting னை ஊக்கபடுத்திய உங்களுக்கும், ஆக்கப்படுத்திய நண்பர்களுக்கும் நன்றிகள் ..
NBS பெற்ற வெற்றியை FFS பெற்றிருக்கின்றதா சொல்லுங்கள் நண்பர்களே ?
ReplyDeleteநிச்சயமா....அங்க லார்கோ ஷெல்டன் டைகர் மட்டுந்தா ....இங்க ஆல்ஃபா....ஸ்பைடர்...செக்ஸ்டன்....ஸ்பாட்டாச்சி....சிஸ்கோவ ஹீரோவா ஏத்துக்க முடியலன்னாலுமே டாப் கியர் கதை....இது வரை வந்த கதை காட்டும் பகுதிகளில் அனல் கக்கி தூக்கிச் சாப்பிட்ட டேங்கோ....மாயாவி மட்டுந்தான சொதப்பல்...ஒநொஒதோ இரண்டாம் பாகம் போகுது....இக்கதையை அப்படியே கென்னடிய காட்டுவதோடு கென்னடிய சுட்டது ஆஸ்வால்டு கூட வேறோரு வரும் இருக்கலாம்னு சொன்னத பாத்தா....இரத்தப் படலத்ல மங்கூசும் சேத்து இருவர் ....அடடா ...ஆல்ஃபா க்ளப் அச்சுறுத்துகிறார்கள்....இங்கும் நடக்கும் அரசியல் கொலைகளை ஆராயச் சொல்லுது மனசு...நம்மையும் துப்பு துலக்க.....பீடா போட்டு வருவதல்ல ...அழைக்கிறார் ஸ்பாட்டாச்சி
Deleteஅலாவுதீனும் புலனாய்வு பூதமும்
ReplyDeleteரகளையான கார்ட்டூன்..
முதலாம் கதையை விட இரண்டாவது கதை அருமை..
டின்டின்னில் துவங்கி கார்ட்டூன்களில் இந்தியர்கள் மாந்தீரிகர்கள் என சித்தரிக்கப்படுவது ஓய்ந்தபாடில்லை போலும்..நோ கம்ப்ளைண்ட்ஸ் தேர்
சிரிக்க வைத்தால் போதும்...
முதல் கதை 8.5/10
இரண்டாம் கதை 9/10
செல்வம் அபிராமி @ படித்து முடித்த உடன் அதே வேகத்தில் விமர்சனம் எழுதும் உங்களை பார்த்தால் பொறாமையாக உள்ளது. உங்கள் கடமை உணர்வு பாராட்டுக்குரியது. சூப்பர்.
Deleteபோட்டியில் வென்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்!! பங்கு பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுகள்!! ஆன்லைன் மீட்டிங்கை சிறப்பாக அமைத்துக் கொடுத்த J ji அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாய் இருந்த மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுகள் & வாழ்த்துகள்!
ReplyDeleteநேற்றைய தினமும் ஓபீஷ் வேலையில் மூழ்கியிருந்தபடியால் ஆசையிருந்தும் ஆன்லைன் ஆலமரத்தடி மீட்டிங்கில் கலந்துகொள்ள இயலவில்லை! நல்லதொரு அரட்டைக் கச்சேரியை தவறவிட்டிருக்கேன் என்பது புரிகிறது!
ஆமாம் செயலரே நீங்கள் இல்லாத குறையும் தெரிந்தது
Deleteவணக்கம் நண்பர்களே.
ReplyDeleteபோட்டியில் கடைசி நிமிடத்தில் தான் கலந்து கொள்ள முடிவெடுத்தேன்.
டேங்கோ மட்டுமே படித்து இருந்தேன் & அதற்கு மட்டுமே பதில் எழுத முடிந்தது.
அதில் கலந்து கொண்டதே மகிழ்ச்சி.
ஆசிரியார் அனைவரது கேள்விக்கும் பொறுமையாகவும், சரியாகவும் பதிலளித்தது மன நிறைவாய் இருந்தது.
நான் ஆசிரியாருக்கு அறிமுகம் இல்லாவிட்டாலும் எனது கேள்விக்கும் அவர் பொறுமையாக பதில் அளித்தது அவரின் பெருந்தன்மையையும்,ஈடுபாட்டையும் காட்டுகிறது.
அருமை அண்ணன் J அவர்களின் முயற்ச்சிக்கும் உழைப்புக்கும் நன்றிகள் ஐயா.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உன்னி மேனன் , பாம்பே ஜெயஸ்ரீ பாடிய அப்பாடலை இரண்டே நாளில் மறுபடியும் கேட்க வேண்டிய சூழ்நிலை..
ReplyDeleteமைக்கேல் ஜாக்ஸன் கேட்டுக் கொண்டிருக்கையில் ரீதி கௌளை ராகம் செவியில் விழுந்து தலை தன்னிச்சையாக திரும்புவது போல் திக்கெட்டும் பகைவர்களில் பக்கம் 111- ல் வந்த வார்த்தை படிப்பதை ஷண நேரத்துக்கு நிறுத்திவிட்டது.
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே … நீங்களெல்லாம்
சொப்பனம் தானோ ? பல தோற்ற மயக்கங்களோ ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே … நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?
வானகமே இளவெயிலே மரச்செரிவே … நீங்களெல்லாம்
கானலின் நீரோ ? வெறும் காட்சிப் பிழை தானோ ?
போனதெல்லாம் கனவினைப் போல் புதைந் தொழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ ? இந்த ஞாலமும் பொய் தானோ ?
பாரதியாரின் தோற்ற மயக்கங்கள், மாயை, காட்சிப் பிழை, சொப்பனம் ஆகிய சொல்லாட்சிகளை கவனியுங்களேன்
படம் : வேட்டையாடு விளையாடு குரல் : ஜெயஸ்ரீ, உன்னி மேனன்
பாடல் : பார்த்த முதல்
இயற்றியவர் : தாமரை
பெண்
பார்த்த முதல்நாளே
உன்னை பார்த்த முதல்நாளே
காட்சிப் பிழை போலே
உணர்ந்தேன் காட்சிப் பிழை போல
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே!
கவிஞர் தாமரையின் காட்சிப் பிழை சொல்லாடல்
111 பக்கம் வந்த வார்த்தை " காட்சிப் பிழை " என்பதே..
சாளரம் என்ற வார்த்தையை உபயோகித்தார் எடிட்டர் சார் அதுவும் கதையின் தலைப்பிலேயே..
பின் பதாகை ( though under dispute in that place )
இப்போது காட்சிப் பிழை...
மெக்ஸிகோ வனாந்தரப் பகுதியில் படித்துக் கொண்டிருக்கையில் ஒரு அதிர்வு..
செம எடிட்டர் சார்.....
இரண்டு பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் டெக்ஸ் கதையில் சொல்ல வருவது புரியவில்லை.2-3 படித்து விட்டேன்.. மண்டையில் ஒன்றும் புரியவில்லை :-)
Deleteஅந்த இடத்தில் " உனக்கென்ன மாலைக்கண்ணா? "" அல்லது "உன் மனப்பிரம்மையாயிருக்கும்!" போன்ற எளிய சொற்றொடர் போதுமானது..பதிலாக இலக்கிய அந்தஸ்துள்ள " தோற்ற மயக்கம் என்ற பொருள் தரும் காட்சிப் பிழை " என்ற வார்த்தையை பயன்படுத்தியதை பாராட்டி எழுதியிருக்கிறேன்..
Deleteகாட்சிப் பிழை எனும் வார்த்தை நடைமுறையில் அவ்வளவாக புழங்காத வார்த்தை..பாரதியார் போன்ற பெருங்கவிஞர்கள் அவர்கள் அடியொற்றி தாமரை போன்ற கவிஞர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தை என்பது தெரிவிக்கும்பொருட்டு அவர்கள் பாடல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் உற்று கவனித்தால் சன்னமாய், ரம்மியமாய் , சாத்வீகம் , ரௌத்திரம் போன்றவை எடிட்டரின் சிக்னேச்சர் வார்த்தைகளாய் இருப்பதை அறியலாம்.
இவையும் , இவை போன்ற இன்னும் சில வார்த்தைகளும் எடிட்டர் சாரின் பதிவுகளிலும் , இதழ்களிலும் இடம் பெறுவதை உணரலாம்.
சாளரம் என்ற வார்த்தை கடைசியாக சாண்டில்யன் நாவல்களில் படித்ததாக நினைவு..அதன்பின் எடிட்டர் அதை உபயோகப்படுத்திய பின்னரே ஞாபகம் வந்தது...
ஓ சூப்பர். புரிந்து கொண்டேன். நன்றி செல்வம் அபிராமி.
Delete// சாளரம் என்ற வார்த்தையை உபயோகித்தார் எடிட்டர் சார் அதுவும் கதையின் தலைப்பிலேயே //
Deleteகதையின் தலைப்பு?
//MH Mohideen18 June 2020 at 18:58:00 GMT+5:30
Deleteசார்,
சாளரம், ஸ்பஷ்டமாய் போன்ற வார்த்தைகளை எங்கிருந்து சார் புடிச்சிட்டு வரீங்க..? ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தத்தை அறிய அகராதியை தேடியது போய் , இப்போது தமிழ் வார்த்தைக்கே அர்த்தம் பார்க்க ஒரு அகராதியை தேட வேண்டியதாயிருக்கிறது..! அட தேவுடா...!
Reply
Replies
Vijayan18 June 2020 at 21:12:00 GMT+5:30
அட...இந்தக்காலத்துப் பசங்க இந்த வார்த்தைகளைக் கண்டு மிரண்டாக்கா அதை என்னால் புரிஞ்சுக்க முடியும் ! நீங்களும் மிரட்சி காட்டி "யூத்" அணியில் ஒட்டிக் கொள்கிறீர்களே சார் ! "யூத்தோ" இல்லியோ - நீங்க நிச்சயமாய் என்னோட போதி தர்மர் செட் இல்லைங்கிறமட்டில் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுவதில் தப்பில்லை தான் !
மண்டைக்குள் உதிக்கும் முதல் வார்த்தைகள் தான் எப்போதுமே பயன்பாட்டுக்கு வந்திடும் சார் ! எடிட்டிங்கின் போது அவற்றை மாற்றுவோமா ? வேண்டாமா ? என்று தீர்மானிப்பேன் ! பதிவுகள் ; விளம்பரங்கள் போன்றவைகள் எடிட்டிங்குக்கு உட்படா சமாச்சாரங்கள் எனும் போது ஒரிஜினல் வார்த்தைப் பிரயோகம் தொடர்கிறது !
மற்றபடிக்கு 'புலமையைக் காட்டறேன் ; புலவைப் போடறேன் !' என்ற ரீதியில் நெவெர் !//
இது ஆதாரமாய் உள்ளது..தலைப்பு நினைவில் இல்லை
ஆசிரியருடனும் நண்பர்களுடனும் இரண்டரை மணி நேரம் இனிமையாக போனது இதனை ஏற்பாடு செய்த ஜனார்த்தனன் அவர்களுக்கும் கலந்து கொண்டு அனைவரின் கேள்விகளுக்கும் அசராமல் பதில் சொல்லி அசத்திய ஆசிரியருக்கும் நன்றிகள் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete//Maybe அடுத்தவாட்டி எலியப்பாவிலிருந்து LIVE QUIZ ஒன்றினை ரெடி செய்து, அவரவர் வீட்டு குட்டீஸ்களைக் கொண்டு பதில்கள் சொல்ல வைத்து, ஜூனியர்களுக்கான பொழுதாய் அதனை அமைத்திடலாமென்று பட்டது !//
ReplyDeletePlease proceed this wonderful idea sir!
I too enjoyed yesterday refreshing google meet. Thanks once again to organiser. Editor energy for 2plus hours is applaudable.
நண்பர் செந்தில் சத்யா நேற்றைக்கே blog பதிவு கேட்டபொழுது... ஆசிரியர் நாசுக்காக மறுக்க ரொம்பவே கஷ்டப்பட்டதை கவனிக்க முடிந்தது... தொடர்ந்து அடிக்கடி இதுபோல் நிகழ்ச்சி நடத்துங்கள்...
சுஸ்கி விஸ்கி மே மாதம் ரிலீஸ் என்று எடிட்டர் வாக்களித்துள்ளார். விச்சு கிச்சு ஸ்பெஷல், கொலைப்படை விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது. நண்பர்கள் விரும்பி ஏகமனதாக கோரினால் ஜான்மாஸ்டர், கருப்பு கிழவி கதைகள் தொகுப்பு வரவும் வாய்ப்புகள் உள்ளது. இன்னும் பல
ReplyDeleteஅடடே..
Deleteகதையில் வரும் அஸ்ஸியா டோன்கோவா பேசுவது போல... நான் இப்பதான் எடுக்குது ffs முதல் (துரோகம் ஒரு தொடர்கதை...!) புத்தகத்தை. பக்கம் 23 வரை வந்துடுச்சு.
ReplyDelete90 கள் ஆரம்பத்தில்.. பக்கத்து வீட்டு அண்ணன் ஜாக்கி சான் பற்றி நிறைய கூறுவார். அதை கேட்டு ஜாக்கி படம் காண ஆவல் எழுந்தது. அந்த சமயத்தில் உள்ளூர் தியேட்டரில் ஒரு ஜாக்கி படம் ஓடவே நான் போயிருந்தேன். நான் போகும்போதே 10 நிமிட படம் சென்று விட்டது.
படம் ஓடுகிறது.. படத்தில் மூன்று ஹீரோக்கள் என்று நினைவு... அதில் யார் ஜாக்கி சான் என்றே தெரியவில்லை. அருகாமையில் உள்ளோரிடம் கேட்கவும் கூச்சம். நாயகர்கள் அனைவருமே செமையாக சண்டை செய்தனர். இறுதியில் இவர்தான் ஜாக்கியாக இருக்க வேண்டும், அவர்தான் ஜாக்கியாக இருக்க வேண்டும் என்று தெரியாமலே வந்தேன்.
அதுபோல 23 பக்கம் வரை வந்தும் யார் ஹீரோ என்ற அதே பழைய குழப்பம் நினைவு வரவே இந்த குட்டி பதிவு. கதையை வாசித்தவரை.. கதையின் சித்திரங்கள் செமையான பாரிஸ் சுற்றுலா அனுபவத்தை தருகிறது, அம்மணி அஸ்ஸியா டோன்கோவாவும் அழகோ அழகு.. Ok.. மீண்டும் கதையில் டைவ் அடிக்க செல்கிறேன்.
(அந்த ஜாக்கி படத்தின் பெயர் தெரியவில்லை, அதில் ஜாக்கி தலைமுடியை ஃபங்க் விட்டது போல இருப்பார். மற்ற ஹீரோ பெயர்கள் கண்டுபிடித்து விட்டேன். Sammo hung மற்றும் Yuen Biao ஆகியோர். இவர்கள் ஜாக்கிக்கு இணையாக சண்டை செய்ததால் தான் என்னால் கண்டு பிடிக்க முடியாது போயிற்று போலிருக்கிறது.)
This comment has been removed by the author.
Deleteநகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள்.
Deleteஎனக்கு 31 பக்கம் வரை சஸ்பென்ஸ் ஆக போனது, பின்ன சும்மாவா ஆல்ஃபா யார் என கண்டுபிடிப்பது :-)
Deleteஅந்த படத்தின் பெயர் WHEELS ON MEALS. ஒரு மாளிகையிலிருந்து தப்பித்து வரும் (வாரிசு) நாயகி நகரத்தின் மையத்தில் வேன் மூலம் ரெஸ்டாரண்ட் நடத்தும் ஜாக்கி & கோ விடம் தஞ்சம் புகுவார்.
DeleteThis comment has been removed by the author.
Delete62வது
ReplyDeleteதிக்கெட்டும் பகைவர்கள்
ReplyDelete5 அத்தியாயங்கள் கொண்ட கதையான இது பழைய காவிரியின் ஆடிப் புனல் போல் ஆர்ப்பரித்து ஆரவாரமாய் செல்கிறது..
டெக்ஸ்-க்கு பெட்ரோ , மைக்கேல் என இரண்டு விசித்திர கூட்டாளிகள்..கதை நெடுக வரும் இவர்கள் கதையின் மேலான ஈர்ப்பை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றனர்.
டெக்ஸின் போக்கில் நிதானம் தெரியத் துவங்குகிறது..
டான் பிலிப்பின் முன் ஜாக்கிரதை உணர்வு, ஜெனரல் ஒர்டெகா பேராசையால் விவேகத்தை இழப்பது
சித்தரிக்கப்பட்ட விதம் அருமை..
தேஷா மறுபடியும் பிணைக்கைதியாய்....
இறுதிப் பக்கங்களில் மறுபடியும் ஜூவான் கார்டினோ...
இளம் டெக்ஸ் கதைகள் ரெகுலர் டெக்ஸ் கதைகளுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கம் செய்யப்படுகின்றன என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணமாக திக்கெட்டும் பகைவர்கள்..
9/10
எப்டி இருக்கீங்க செ.அ
Deleteநலம் ஜனா சார்!
Deleteலூஸெட்ஃபோபியான்னு படிச்சுட்டேன்.
Delete/!லூஸெட்ஃபோபியான்னு படிச்சுட்டேன்//
Delete:-)
லூஸிபர் எஃபெக்ட் ...!!!
Delete#####20 மார்க்குகளுக்கு 18.5 வாங்கி முத்லிடத்தைப் பிடித்திருப்பது ஒன்றுக்கு இரண்டாய் நண்பர்கள்###
ReplyDeleteபோட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் & வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் , போட்டியை சிறப்பாக நடத்திய ஆசிரியருக்கும், நேரலை சந்திப்பை ஒருங்கினைத்த அண்ணன் ஜே வுக்கும் வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள், நன்றிகள்..
###அதிலும் பரீட்சைக்கு ரெடியாவது போல் கதைகளிலிருந்து எடுத்திருந்த நோட்ஸையெல்லாம் அனுப்பி வைத்து திருப்பூர் சிவகுமார் ரகளை செய்திருந்தார் ! #####
ReplyDeleteபோட்டியில் ஜெயிப்பதோ, தோற்பதோ எதையும் முழு ஈடுபாட்டுடன் எப்பொழுதும் செய்வேன் ஆசானே..
அதிலும் போட்டியை நடத்துவது தாங்கள் எனும்போது சந்தோஷம் இரட்டிப்பு சார்..
மீண்டும் இதே போல போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்..
67th
ReplyDeleteகோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல்
ReplyDelete1. திகில் தீவு
சிஸ்கோ, டேங்கோ, ஆல்பா , ஒ.நொ.ஒ.தோட்டாக்கள் முடித்து கோ.ஹீ. ஸ்பெஷலில் நுழைந்தால் சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நுழைந்து வெளிவந்து அண்ணாச்சி கடையில் நுழைவது போல் ஒரு உணர்வு.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாலின் சில வசதிகளும் ஆடம்பரமும்,படாபடோமமும் அண்ணாச்சி கடையில் இல்லாது போகலாம்..ஆனால் வெகு இயல்பாக உணர்வது இங்குதானே...கனிவும் இங்குதான் அதிகம்.
அந்த வகையில் திகில் தீவு சட்டென்று மனதில் ஒட்டிக் கொண்டது..
1930-களில் நிகழும் கதைக்கே உரித்தான பழமை நெடி வீசினாலும் ஒரு வசீகரம் இருப்பதை உணர முடிந்தது..
செக்ஸ்டன் ப்ளேக் கதை படிப்பது இதுவே முதல்முறை...
8.7/10
இரண்டாம் கதை காலத்தினால் மகத்துவம் குறைந்து போய்விட்டது.
8/10
///////////////////##₹₹############
ஸ்பைடர்
எடுத்து படித்து முடிக்குமுன்னே
எரிந்த கடிதம் எதற்கு பெண்ணே
............
முதல் கனவு முடியுமுன்னமே
தூக்கம் கலைந்ததே..
ஈவி சொல்ற துக்ளியூண்டு இதுதானா? அட கிண்டல் பண்றதுக்காகவாவது கதை கொஞ்சம் பெரிசா இருக்க தாவலை?
//////////////…....….….....////////////////////###
மாயாவி
பரத நாட்டிய தாரகையை ஐட்டம் டான்ஸ் ஆட விட்ட கதயா போச்சு..
( தானமா கிடைச்ச மாடுதான் !! பல்ல பாக்காம இருக்க முடியல)
முழு வீச்சில் திரும்ப வந்த தங்களுக்கு வார்ம் வெல்கம் செனா அனா ஜி💐💐💐💐💐
DeleteThanks STV...
DeleteWelcome Back Sena... Ana...
Delete💐💐💐
/செக்ஸ்டன் ப்ளேக் கதை படிப்பது இதுவே முதல்முறை...//
DeleteFleetway-ன் முக்கிய நாயகர்களுள் இவருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு சார் ! 1980's களின் இறுதியில் இவரை முத்துவில் வெளியிட்டிருந்தோம் !
சார் தெரியாம ஒநொஒதோ வ எடுத்துட்டேன் படுத்தா தூக்கம் வரமாட்டங்குது...கடைசி பாகம் போகிறேன்...என்னா திருப்பம்
ReplyDeleteஎன் பெயர் டேங்கோ
ReplyDeleteஇந்த கதையை வாசித்து முடித்து ஏறத்தாழ பத்து நாட்கள் ஆகிறது. வாசித்தவுடன் எழுந்த உணர்வுகளை உடனடியாக விமர்சனம் எழுதிவிட வேண்டும் என்று பரபரப்பாக டைப்படிக்க ஆரம்பிக்க ஏனோ வார்த்தைகளே வந்துவிழவில்லை. வாசிப்பின் பரவசம் ஆட்கொண்டிருந்த காரணத்தினாலோ என்னவோ எதை எழுதினாலும் அது பிடிக்காமல் போக திரும்பத் திரும்ப அழித்து; ஒரு வழியாக இன்று முடித்து விட்டாலும் என் உணர்வுகளை முழுமையாக கடத்த முடிந்திருக்கிறதா என்ற கேள்வி இன்னும் பதிலின்றியே ஒலித்துக் கொண்டிருக்கிறது என் மனதில்.
விடலைப் பருவத்தில் பயணங்கள் மீதான அதீத ஆர்வம் எனக்கு இருந்து வந்தது. பள்ளி இறுதி ஆண்டுகளில் விடுமுறையின் போது எந்த விதமான முகாந்திரம் இல்லாத போதிலும் பேருந்தில் ஏறி இலக்கின்றி பயணித்து அது தரும் அனுபவங்களை ரசித்ததுண்டு. இதுவே கல்லூரி நாட்களில் ஒன்றிரண்டு புத்தகங்களை மட்டுமே துணைக்கு அழைத்துக் கொண்டு மாற்றுத்துணி கூட இல்லாமல் ரயிலேறி நாட்கணக்கில் ஊர்சுற்றித் திரிந்ததும் உண்டு. அப்படி எதைத்தேடி திரிந்தேன் என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுதந்த உற்சாகமும் களிப்பும் இன்றுவரையில் என் நெஞ்சில் பதிந்திருக்கிறது.
டேங்கோ விமர்சனம் என்று தலைப்பிட்டுவிட்டு என் சுயபுராணத்தை ஒப்பித்துக் கொண்டிருப்பதை நீங்கள் ரசிக்கவில்லை என்பது எனக்கும் புரிகிறது. ஆனால் ஒரு புத்தகத்தில் கதை தவிர்த்து அது தரும் உணர்வுகளை பகிர எனக்கு வேறு வழி புலப்படவில்லை. சிறுவயதில் டேனியல் டெஃபோவின் ராபின்சன் க்ரூசோவை வாசித்த பிற்பாடு; உடனே கப்பலேறி போய்; நானும் தனித்தீவு கண்டு குடியேறப் போகிறேன்; அங்கே நாய் வளர்க்கப் போகிறேன்; மீன் பிடிக்கப் போகிறேன்; தனி வீடு கட்டப் போகிறேன்; இத்யாதி… இத்யாதி…; என்ற உணர்வுகள் பீச்சியடித்ததற்கு இணையானதோர் அனுபவம் கிடைத்தது டேங்கோவை வாசிக்கும் போது எனக்கு.
இதற்குக் காரணம் அந்த ஏகாந்தம் விரும்பும் முன்னாள் தொழில்முறைக் கதாநாயகனின் ஆக்சன் கதையா… இல்லை; சுட்டெறிக்கும் பாலைவனத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் ஓவியங்களா… அல்லது இரண்டுமல்லாமல் வேறு எதாவது ஒன்றா? இந்த பாலைப்பரப்பையும் கணவாய்களையும் கள்ளிச் செடிகளையும் அடிக்கடி நமது ஆதர்ச கௌபாய் கதைகளில் கண்டு ரசித்து தொண்டை உலர்ந்து போனதெல்லாம் உண்டென்றபோது இதில் புதிதாக வேறென்ன இருக்கப் போகிறது? கதையும் ஆக்சனும் நன்றாகவே இருந்தாலும் இதுவரை படித்தே இராத புல்லரிக்க வைக்கும் சாகசம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ள முடியாது. அப்படியிருக்க இது தனிப்பட்டு தெரிவது எதனாலே?
அந்த கதை நகரும் விதம்… அது சொல்லப் படுகின்ற நேர்த்தி… அதுதான்… அதுதான்… நம்மை அந்த பாலைவனத்தினூடே இட்டுச்சென்று… அந்த ஏகாந்தத்தை நம் புலன்களுக்குள்ளே புகுத்தி… புத்தியை வசீகரித்து தள்ளாட்டம் போடச்செய்கிறது. அத்துடன் ஓவியங்களும் சேர்ந்துகொள்ள… அடடா… கள்ளுண்ட மந்தியாய் மதிமயங்கி கிறங்கிப்போய் திக்குமுக்காடச் செய்கிறது.
இதைத் தமிழில் மொழியாக்கம் செய்த அனுபவத்தை ஆசிரியரிடம் நிச்சயம் கேட்டுக் களிப்புற வேண்டும். இந்த வசனங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருந்து உருவானதா இல்லை இவர் அனுபவத்தில் இருந்து உருவானதா என்று. தளப் பதிவுகளிலேயே அவர் தனது பயண அனுபவங்களைச் எழுதும் போது நம்மையும் உடனழைத்துச் சென்ற உணர்வை வழங்க தவறுவதில்லை. இந்த முறை அவருக்கு செமத்தியாக ஒத்துப்போய் விட்டது போல… ரசித்து எழுதியிருக்கிறார். அட்டகாசம்!
”எல்லாவற்றிற்கும் மேலாய் நிம்மதி தரும் அந்தத் தனிமை… ஏகாந்தம்! ஆழ்கடலில் பயணிப்பது போலவே யாருமே இங்கே எதிர்ப்படப் போவதில்லை! இது வெறுமையின் சாம்ராஜ்ஜியம்!”
”சில நாட்களுக்குப் பின் மலைகளும், மணலும், காற்றும், காய்ந்த மரங்களும் கதைபேசும் அத்துவானத்தில் உலவிக் கொண்டிருந்தேன்!”
“இத்தனை நாட்களாய் கடல் அலைகளை அளந்தவன் விதியின் கைபிடித்து இந்தப் பாலையில் குடியேறிவிட்டேன்!”
“மழை விட்டாலும் தூறல் விடாத கதையாய், யாருக்கும் என்னைத் தெரியாத, யாரையும் நானறியாத உலகத்தின் இந்த மூலைக்கு வந்த பின்னருமே ஆற்ற வேண்டிய கடமைகளும், காப்பாற்ற வேண்டிய சத்தியங்களும் என்னைத் தேடிப் பிடித்துத் தஞ்சம் கேட்கின்றன!”
இவையெல்லாம் சில பருக்கைகளே… சாதம் முழுமையும் சாப்பிட்டு முடிக்கும்போது ஏற்படும் ஆனந்தத்தை, அந்த திவ்யத்தை அடைய நீங்கள் தயாரா?
நன்றி நண்பர்களே!
Super Saravanan
Deleteநீங்கள் எல்லாம் இத்தனை நாளாக எங்கே ஒளிந்து கொண்டிருந்தீர்கள் சார்..
Deleteடேங்கோ உங்களை கைபிடித்து இங்கே இழுத்து வந்துவிட்டார்.
சாப்பிட்டு முடித்தபின்பு உணவின் சுவையை பறை சாற்றுங்கள்.. அனைவரும் சுவைத்து ரசிக்கட்டும்.
அருமையான விமர்சனம் நண்பரே..வாழ்த்துக்கள்..
Deleteஅட்டகாசமான விமர்சனம் சரவணன் சார்.
Deleteடேங்கோ படித்து உங்க இளமைகாலத்தில் ஓரு ரவுண்ட் அடிச்சிட்டு வந்துட்டீக செமSK....
Deleteஇந்த ஏகாந்தந்தை ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனமும் ஏதோ ஒரு வகையில் விரும்புகிறது....
அருமையான விமர்சனம்...👌👌👌👌
// அந்த கதை நகரும் விதம்… அது சொல்லப் படுகின்ற நேர்த்தி… அதுதான் //
Deleteஅதே,அதே...
நிஜத்தைச் சொல்வதானால், FFS-ன் இந்த ஒற்றை ஆல்பத்தை மட்டும், நமது மொழிபெயர்ப்பு டீமில் (புதிதாய்) இடம்பிடிக்க விழைந்ததொரு சகோதரியிடம் ஒப்படைத்திருந்தேன் ! அவரும் தனது முனைவர் பட்டப்படிப்பின் ஊடே ஆர்வமாய் முயற்சித்து வந்தார் ! நான் சொல்லிய திருத்தங்களுக்கெல்லாம் அலுக்காமல் செவிசாய்த்து ஒரு மாதிரியாய் 64 பக்கங்களையும் முடித்தும் தந்திருந்தார் ; நானும் மேலோட்டமாய்ப் பார்த்து விட்டு அவருக்கான சன்மானத்தை அனுப்பிவிட்டு நம்மாட்களிடம் DTP செய்திட ஒப்படைத்து விட்டேன்.
Deleteஒரு இடைப்பட்ட ஒய்வு நாளில் கதையின் தமிழ் ஸ்கிரிப்ட் பக்கங்களை மட்டும் பிரிண்டவுட் எடுத்து வாசிக்க ஆரம்பித்த போது ரொம்பவே uneasy ஆக உணர்ந்தேன். பொறுமையாய் இடையிடையே திருத்தங்களை போட்டு சமாளித்து விடலாமென்று முயற்சித்த போது அது புதிதாய் எழுதுவதை விடவும் மொக்கையான task என்பது புரிந்தது ! தவிர, கதையின் அந்த monologue பாணி ; கொஞ்சமான தத்துவார்த்த வசனங்கள் ; மூக்கை மூணுவாட்டி சுற்றித் தொட்டாலும் சுகப்படக்கூடும் என்பது போலான கதாசிரியரின் அமைப்புகள் எல்லாமே எனக்கு tailormade என்பது போல் தோன்றியது ! ஒரிஜினலாகவே இதனை நானே கையாண்டிருக்க வேண்டுமென்பதும் புரிந்தது ! ரைட்டு...சுற்றி வளைத்து நம்மகிட்டேயே வந்துடுத்து - என்றபடிக்கே மறுக்கா எழுத ஆரம்பித்தேன் - ஒட்டு மொத்தமாய் ! அதன் பலனே "என் பெயர் டேங்கோ" !
சில கதைபாணிகள் நமக்கு சுலபமாய் set ஆகிவிடும் சார் ; சிலவற்றிற்கு set ஆகிக்கொள்ள நாம் பல்டியடிக்க வேண்டிப் போகும் ! இது முந்தைய ரகம் I guess !
ஆமாம் சார்...! இது உங்களுக்கான tailor-made தான்.
Deleteஅடுத்தடுத்த ஆல்பங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் சார்...
சரவனாரே சூப்பர்
Deletezoom மீட்டிங்கில், கலந்துகொண்ட, பரிசுகளை வென்ற நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பாக நடத்திய ஜனா சார், மற்றும் ஆசிரியருக்கும் என் பாராட்டுக்கள்.
Fb Post by shaan karuppasamy. Poet, blogger, screenwriter
ReplyDeleteயாரிடம் தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு நாள் இடைவெளியில் அடுத்தடுத்து மூவருக்குப் பரவியது அந்தக் காய்ச்சல். முதல் நாள் உடல் வலி, அதைத் தொடர்ந்து கடும் தலைவலி. இரவில் தூங்க முடியாத அளவுக்கு. பின்னர் தொண்டையில் எரிச்சல். 99 முதல் 101 டிகிரி வரை தொடர் காய்ச்சல். வீட்டில் ஒருவருக்கு வைரஸ் தொற்றினால் அடுத்தடுத்து அனைவருக்கும் நோய் வருவது வழக்கமானது என்றாலும் ஒரு சுற்று முடிய வாரக்கணக்கில் ஆகும். ஆனால் ஒரே வாரத்தில் மூன்று பேரையும் தொற்றி மீண்டும் நீங்கும் அளவுக்கு வேகத்தை இதுவரை கண்டதில்லை. வயதானவர்களும் தீவிர நோய்வாய்ப்பட்டவர்களும் இருக்கும் வீடுகளில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
இது சாதாரண காய்ச்சலாக முடிந்து போவதில் தடுப்பூசிக்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது. மூன்றாம் அலையின் வேகத்துக்கு இரண்டாம் அலையைப் போன்ற மரண விகிதம் இருந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது. பாராசிட்டமால் மூலம் காய்ச்சலை நிர்வகித்துக் கடந்தோம். வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளித்தல், ஆவி பிடித்தல் போன்ற நிவாரண முறைகள் உதவின. வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஒருவர் சுருண்டு படுத்திருக்கும் காட்சி குறைவான நேரம் என்றாலும் யாரையும் தளரச் செய்துவிடும்.
மூன்று நாட்களில் காய்ச்சல் நீங்கிவிட்டதால் கோவிட் சோதனை செய்யவில்லை. அடுத்த ஒரு வாரமும் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டு முடங்கிக் கிடப்பதுதான் திட்டம். இதனால் விளைந்த நன்மை என்னவென்றால் கடந்த மூன்று நாட்களில் முப்பது காமிக்ஸ் கதைகளை மீள் வாசிப்பு செய்திருக்கிறேன். இன்னும் ஒரு அடுக்கு வாசிக்கப்படாமல் இருப்பது ஒரு நிம்மதியைத் தருகிறது. பெரும்பாலானவை டெக்ஸ் வில்லர் கதைகள்தான். எந்த சூழலிலும் நம்பிக்கையை இழக்காத ஒரு ஹீரோவின் கதைதான் இதுபோன்ற நேரங்களில் தேவையானதாக இருக்கிறது.
https://www.facebook.com/528129545/posts/10161863381949546/
Netflix thangam movie he wrote screenplay. Many other good movies too. Forgot the names
DeleteRead comments in his fb post. Many interested in comics. Request him to share about our comics once in a while
DeleteGood to hear this.
DeleteInteresting sir...
Delete//பெரும்பாலானவை டெக்ஸ் வில்லர் கதைகள்தான். எந்த சூழலிலும் நம்பிக்கையை இழக்காத ஒரு ஹீரோவின் கதைதான் இதுபோன்ற நேரங்களில் தேவையானதாக இருக்கிறது.//
Deleteஉண்மையே... யதார்த்த உண்மைகள் தாண்டிய தோல்வியே கண்டறியாத ஹீரோயிசம் உள்ளது டெக்ஸ் கதைகள்.
ஒற்றை நொடி ஒன்பது தோட்டா, didnt live upto the expectations bcoz of the beaten out story line. Sexton was okay. Spider was refreshing. Rest to be read..
ReplyDeleteஇதே "beaten out story line " தானே சார் நம்மிடையே கொண்டாடப்படும் 28 பாகங்களது இரத்தப் படலத்தின் முதுகெலும்புமே ? அங்கே நிஜத்தை நாசூக்காய்ப் பின்னே தள்ளிவிட்டு, அதனிடத்தில் கற்பனைப் புனைவுகளை முன்னிறுத்தியிருந்தனர் ; இங்கேயோ நிஜத்தோடு இணைத்தடத்தில் ஓடிட முயற்சித்துள்ளனர் !
Deleteரசனைகளின் பல பரிமாணங்கள்#
I have finally read Alpha. Very nice thriller. Without any tickets it lead us to Paris and moscow during this lock-down period. Pics extraordinary
ReplyDelete:-)
Deleteஇன்றைய புத்தகத் திருவிழாவில் பரிசுகளை வெல்லப் போவது யார்? இன்றே ஆன்லைன் புத்தகத் திருவிழாவின் கடைசி நாள். பொன்னான வாய்ப்பை தவற விடாதீர்கள் நண்பர்களே.
ReplyDeleteநண்பர்களின் கனிவான கவனத்திற்கு
ReplyDeleteநீங்கள் அறிந்தவர்கள் , உறவினர்கள் RT PCR ( Reverse Transcriptase - Polymerase Chain Reaction) டெஸ்டில்
Positive (E, N, ORF)
என வந்திருக்குமேயானால்
E - Envelope
N-Nucleocapsid
ORF - Open Reading Frame
ஜீன்களை குறிக்கும்
S gene drop out அல்லது S gene not detected அல்லது SGTF ( S GENE TARGET FAILURE ) என வந்திருக்குமேயானால்
அது ஓமைக்ரான் வேரியண்ட் என பொருள்
S gene detected என வந்திருக்குமேயானால் பழைய டெல்டா அல்லது டெல்டா வகை வேரியண்டை குறிக்கும்
E, N, ORF ஆகியவை கோவிட் உண்டா இல்லையா என்பதை தீரமானிக்கும் அடிப்படை ஜீன்கள்
S Gene அது ஓமைக்ரானா அல்லது டெல்டா அல்லது வேறு வேரியண்ட்டா எனத் தீர்மானிக்கும்.
ஓமைக்ரான் மென்மையான போக்குடையது ஆனால் மறுபடி மறுபடி ஒரே ஆளை தாக்கும் வல்லமை ( Reinfection) உள்ளது என்பதாலும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவ வல்லது என்பதாலும் தடுப்பூசிகள் இது பரவுவதை தடை செய்யவில்லை என்பதாலும் கை சுத்தம், மாஸ்க் அணிவதை கைவிட வேண்டாம்.
தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா வகை வேரியண்ட்கள் தாக்கத்தான் செய்கின்றன..முதியவர்கள் கோமார்பிட் ( சர்க்கரை, சிறுநீரக , இதய பாதிப்புள்ளவர்கள்) கண்டிஷன் உள்ளவர்களுக்கு அதிக கவனம் தேவை..
தகவலுக்கு நன்றி.உபயோகமான தகவல்.
Deleteநல்ல உபயோகமுள்ள தகவல். உங்களின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி 🙏🤝
Deleteடயபாலிக்கை அந்த முகமூடி மேட்டரில் மட்டுமாவது copy அடிப்போம் guys !
DeleteHi..Have done subscription for four kids books and the book fair specials three days ago...but havent received any email regarding subscription number..and even the book-fair books...
ReplyDeleteDespatches commence only from Tuesday- once the Online Fair gets over ; this was a part of the announcement that I made last week.
DeletePlease do bear with us !
ok sir. Thanks
Deleteஒ நொ ஒ தோ நேற்று ஒரே மூச்சில் படிக்கும் வாய்ப்பு கிடைத்து முடிக்க முடிந்தது.வித்தியாசமான கதைக்களம். போரடிக்காத கதையை இன்னும் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கலாம் கதாசிரியர்.இன்னும் மீதமுள்ள ஆல்பாக்கள் ப்ராங்க் நீங்கலாக என்ன என்ன கொடூரங்களை நிகழ்த்த உள்ளார்களோ ? 249 ஆல்பாக்கள் (ஆவி) நீங்கலாக நம் அருகிலேயே எதிரிலேயே பக்கத்திலேயே இருக்கலாம்.வொண்டர்பாலை விட ஆவியே என்னை அதிகம் கவர்ந்தார். ஆல்பாக்கள் மற்றும் JFK கொலை இரண்டையும் இணைத்த கதையை துல்லியமாக நகர்த்திய விதம் பாராட்டத் தக்கது.இரத்தப்படலத்தை இதனுடன் ஒப்பிடுவதே தவறு. X111ல் வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் ஈர்க்கும் கதை உண்டு. ONOTலில் இவை இல்லை. இன்ஸ்பெக்டர் மேகி ஆஸ்டர்பெக் கவர்கின்றார். சம்பவங்கள் இன்னும் வலிமையாகப் பின்னப்பட்டிருக்கலாம்.சித்திரங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.வசனங்கள் அதிகம்.ஏதோ க்ரைம் நாவல் படித்த உணர்வு தலைதூக்குகிறது.அட்டைப்பட மேக்கிங் மற்றும் நகாசு வேலைகள் எப்போதும் போல் தெறிரகம்.நீரோடை போன்ற தெளிவான மொழிப்பெயர்ப்பு.வாசக நினைவலைகள் சும்மா பின்னோக்கி நினைவுகளை மலரச் செய்கின்றன.என் நினைவலைகளும் இடம் பெற்று மனதை மகிழ்ச்சி மழையால் நனைத்துவிட்டன. அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அச்சகப் பணியாளர்கள் என அனைவரையும் புகைப்படங்களுடன் வெளியிட்டு நெஞ்சை நெகிழச் செய்துவிட்டார் ஆசிரியர். முத்து என்ற மணி மகுடத்தில் FFS இதழ் மற்றொரு வைரக் கல்லாய் ஜொலிக்கிறது.
ReplyDeleteஆல்ஃபா..
ReplyDeleteதுரோகம் ஒரு தொடர்கதை..
ஒரு சாதாண நாட் 'ம் , ஒரு திறமையான கதாசிரியரின் கைபட்டு சிறப்பான முறையில் பரிமாண வளர்ச்சியடையும் வரிசையில் ஆல்ஃபாவும் சேர்ந்துள்ளது.
மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு உலகளாவிய கரன்சி பரிமாற்றமே மையப் புள்ளி.!ஆனால் அந்தப் புள்ளி புரியும்போது ஏறக்குறைய முதல் ஆல்பத்தின் க்ளைமாக்ஸே வந்துவிட்டது.அந்த க்ளைமாக்ஸை படித்த பின்... முன்பகுதிகள் இயல்பாக அந்தந்த இடத்தில் பொருந்தி வருவது கண்கூடு.துவக்கப் பகுதிகளின் ரசாயன மாற்றம் அடுத்து உண்டாகும் வேக விசைக்கு ஒரு வினையூக்கியாக செயல்படுகிறது.கதையை குழப்பமின்றி புரிந்துகொள்ள நல்லதொரு அடித்தளமாக விளங்குகிறது..
கதை மாந்தர்களும் ,அவர்களை இணைக்கிற சம்பவங்களும்,சம்பவங்களினூடான கதையோட்டமும் அது கொண்டு வரும் திருப்பங்களும் போகிற போக்கிலே நார்மலாக நடப்பட்டுள்ளதால் துருத்திக் கொண்டு ஏதுமில்லை. அதன்பின் எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச குழப்பங்களும் கிளைமாஸில் காணாமல் போக...ஒரு பெர்பெக்ட்டான ஃபீலிங்.
இறுதியில் வரும்...அந்த ஆரம்ப விதையிலிருந்து ,ஆணிவேர் வரையிலான அட்சய பாத்திரம் போலான விளக்கம் அட்சர சுத்தம். ஏகப்பட்ட தெளிவு (எடிட்டருக்கு ஜே.).அனுமார் வால் போல் நீளும் அந்த இடத்தில்..கதையானது அனுமார் பலம்பெற்று விட்டது..
உண்மையிலேயே முதல் ஆல்பம்..ஒரு பிள்ளையார் சுழியாகத்தான் உணர்கிறேன்.
இதோ...
ஆல்ஃபாவுடன் நானும் ஃ.ப்ளைட் ஏறுகிறேன்.
இந்த 139 பக்க சாகசத்துக்கு இன்னுமொரு பத்தோ, பன்னிரண்டோ பக்கங்கள் தந்திருந்தது, வசனங்களை இன்னும் கொஞ்சம் பரவலாக்கிட முயற்சித்திருந்தால் நண்பர்களின் சிலருக்கு நேர்ந்துள்ள நெருடல்களுக்கும் அவசியம் இல்லாது போயிருக்கும் சார் ! ஆனால் இங்கே படைப்பாளிகளை முழுசுமாய்க் குறை சொல்லிட இயலாது தான், becos -
Deleteஇந்தத் தொடரின் ஒரிஜினல் கதாசிரியர் இரண்டாம் பாகத்தின் பணிகள் பூர்த்தி காணும் சமயமே இறந்து போய்விட்டிருந்தார் - வெறும் 35 வயதே ஆகியிருந்த நிலையில் ! So இன்னொரு கதாசிரியரைக் கொண்டே பூர்த்தி செய்திட வேண்டிப் போனது !
//இந்தத் தொடரின் ஒரிஜினல் கதாசிரியர் இரண்டாம் பாகத்தின் பணிகள் பூர்த்தி காணும் சமயமே இறந்து போய்விட்டிருந்தார் - வெறும் 35 வயதே ஆகியிருந்த நிலையில் !//
DeleteSo sad to hear that news... He created different feel in this series...
சார் அருமை....சிறு வயதில் கென்னடி மேல் இனம் புரியாத ஈர்ப்பு....அது சம்பந்தமா ஆர்வமா தேடியது அதிகம்...இப்ப பெரிய ஆர்வமில்லனாலும் ஆவலுண்டு . நம்ம பதிமூன்று அத தொட்டு போனது ஒரு சந்தோசம் ஆனா கதை அதுவல்லவே . இங்க கென்னடிய கிழிச்சி தொங்க விட்டுறுக்காங்க ....அனைத்தும் உண்மைதானா ....தைரியம் அதிகம்தானோ கதாசிரியர்களுக்கு....என்பதுகளில் பேப்பர்ல ரீகன் பேர் அதிகம் பார்த்த நினைவு ! கதையோ மின்னல் தோற்கும் வேகம்....தங்கு தடையின்றி பயணிக்க வழக்கம் போல நீங்க அழகா போட்ட பாதைல நானும் பயணிக்க...ஹீரோ அலட்டலான ஸ்பாட்டாச்சியா அல்லது அந்த அலட்டலில்லா லேடி இன்ஸ்பெக்டரா என வியக்க வைக்க நடை போடுது . ஆல்ஃபாக்கள் மனரீதியா வலிமை பெறுகிறார்கள் ...ஊக்க மருந்துகள் மூலம் உடல் ரீதியாகவும் வலிமை பெற ...தங்கள் வசமிலந்து தங்கள் திறமையை தாங்களே மெச்சிக் கொள்ள ஆரம்பிக்க கலவர பூமியாகுது ...திடுமென மாணவன் சுட்டதில் பலி என படிச்ச அமெரிக்க செய்திகள் ஆராயச் சொல்லுது மனம் ....இந்த அதிகார வர்க்கம் மக்களாட்சி என முகமூடி போர்த்தி சர்வாதிகம் நடத்தி வருவத மேலும் அழுத்தமா காட்டுது . கடைசில தேனிவளர்ப்பாளன கொல்லலியா. ஆவி கேரக்டர் செம சூப்பர் ... அட்டகாசமான வரலாறு கலந்த கதை !
ReplyDelete//இங்க கென்னடிய கிழிச்சி தொங்க விட்டுறுக்காங்க//
DeleteSpoiler Alert என்று பதிவிற்கு முன் போட்டால் நலம் நண்பரே...
சரி செய்திடுவோம் நண்பரே
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteஆல்ஃபா முதல் பாகம் முடித்து விட்டு இரண்டாம் பாகத்தில் நுழைந்து விட்டேன். ஒரு காம்ப்ளெக்ஸ் ஆன கதை கரு மற்றும் உலக அளவில் நாடுகளுக்கு இடையே நடக்கும் அரசியலை இவ்வளவு தெளிவாக என்னைப் போன்றோருக்கு புரியும் வகையில் ஒரு அட்டகாசமான மொழிபெயர்ப்பு. சான்ஸே இல்லை சார், உண்மையில் ஒரு அட்டகாசமான அனுபவம் இந்த கதை என் போன்றோருக்கு.
50 ஆண்டு குண்டு புத்தகங்களுக்கு படிக்க போதுமான நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும் என்பதற்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் உங்களின் அசாத்திய மொழிபெயர்ப்பு இதனை நேர்கோட்டு கதைகள் போல் மேலோட்டமாக படித்தால் சுவை தெரியாது, அதனை முழு ஈடுபாட்டுடன் படிக்கும் போது கதை என்னை முழுமையாக ஆட்கொண்டு விடுகிறது. உங்களின் ஈடுபாடான உழைப்புக்கு நாங்கள் தரும் மரியாதை சார். நன்றி.
50 ஆண்டு மலர் தெறி ஹிட் என்பதில் இதுவரை படித்த மூன்று கதைகளும் சாட்சி. ஆண்டின் துவக்கம் மிகவும் சிறப்பு சார்.
நன்றிகள் சார் ! ஏற்கனவே சொன்னது தான் - மொழிபெயர்ப்பின் போது எங்கேனும் சின்னதாய் நான் கோட்டைவிட்டாலும், படிக்கும் நீங்கள் சட்டைகளைக் கிழித்துக் கொள்ள நேரிடும் என்பது FFS -ன் ஒவ்வொரு சாகசத்துக்குமே பொருந்தும் ! And Day 1 முதலே அது புரிந்தது !
DeleteSo எனது எழுத்துக்கள் ரசிக்கும் விதத்தில் அமைகின்றனவோ இல்லியோ - கதாசிரியர்கள் சொல்ல முனைவதை குழப்பங்களின்றி உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் சொதப்பி விடக்கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாய் இருந்தேன் ! அந்தமட்டில் வெற்றி என்பதில் ஹேப்பி அண்ணாச்சி !
விஜயன் சார், பேப்பர் குவாலிட்டி இன்னும் சிறப்பு சார் இந்த மாத புத்தகங்களுக்கு. மீண்டும் ஓரு நன்றி.
Deleteபுதுச்சேரி p.கார்த்திகேயன் நலம் நலமறிய ஆவல். நீண்ட நாட்கள் ஆகிவிட்டது உங்கள் பின்னூட்டத்தை பார்த்து.நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.
ReplyDeleteவேதாளரின் அட்டைப்படம் ஆஹா ரகம்... சீக்கிரமே கைக்கு கிடைக்க ஆண்டவனையும் அஞ்சலகத்தையும் வேண்டிக் கொள்கிறேன்...
ReplyDeleteஜனவரி புத்தகங்களுடன் வேதாளரையும் (சீக்கிரம் தயாராகிவிட்டால்) சேர்த்து UKவிற்கு அனுப்ப முடியுமா சார்?
அஞ்சலகத்தின் மூலம் அனுப்ப முடியாவிட்டால் கருடவேகா முயற்சிக்க முடியுமா என்று சொல்லுங்கள்.
நன்றி!
சார் இன்று ஒரு சிறு குறும் பதிவு??? ஆன்லைன் புத்தக விழா பற்றி???
ReplyDelete+1111
Deleteஆன்லைன் புத்தக விழா புக்ஸ் இன்று கிளம்பிடுமா?
ReplyDeleteஆல்ஃபா ...
ReplyDeleteரெண்டாவது ஆல்பம்..
வாயில் நுழைய தகராறு செய்யும் ரஷ்யன் பெயர்..ஒவ்வொரு பேனலையும் முக்கால்வாசியை ஆக்ரமிக்கும் எக்கச்சக்க வசனங்கள்..யார்...யார்..எந்தெந்த கும்பல் என்னென்ன பங்காளிச் சண்டை என தலைசுற்ற வைக்கும் நிகழ்வுகள் என நினைவில் வைக்கச் சிரமமாக இருந்தாலும்.ஏதோ ஒரு மேஜிக் கதை சோர்வடையாமல் நகர்த்தும் வல்லமையைக் கொண்டுள்ளது..
ஓவர் லோடா இருந்தாலும்... இன்சின் திறன் அநாயசமாக சமாளிக்கிறது..
இதுவரையில் கதையில் சும்மாவே வந்துகொண்டிருந்த ஆல்ஃபா ஒருவழியாக ஆக்சினில் இறங்கியது இன்னொரு ப்ளஸ் பாயிண்ட்.
இன்னும் Alpha ஆரம்பிக்கவில்லை, Tango முதல் பக்கத்தில் நிக்குது. Charlie படித்ததில்லை. Beta, Delta, Epsilon, Foxtrot எல்லம் எப்ப வரும்ன்னு தெரியலை?
ReplyDeleteBravo, Echo
ReplyDeleteஅப்புறம் நான்கு FFS நாயகர்களுமே (ஆல்ஃபா, சிஸ்கோ, டேங்கோ & ஸ்படாச்சினி) ஏதோ ஒருவகையில் மற்றவங்களால துரத்தப்படற மாதிரியே அமைஞ்சிருக்கே...
ReplyDelete???
நண்பரும் காமிக்ஸ் வாசகருமான கரூர் இராஜசேகர் அவர்களின் தாயார் இன்று மதியம் இயற்கை எய்தினார்.
ReplyDeleteஅவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல பரபிரம்மத்தின் மடியில் அமைதியுற பிரார்த்தனை செய்வோமாக...
Deleteஅன்னாரின் ஆன்மா அடையட்டும்.
நண்பரின் அன்னையார் ஆன்மா சாந்தியடைய செந்தூரான் அருளை வேண்டுகிறேன்
Deleteநண்பரின் அன்னையார் ஆன்மா சாந்தியடையட்டும்
Deleteஆழ்ந்த இரங்கல்.
Deleteஅன்னையின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்.
May her soul rest in peace
Deleteஉங்கள் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன் நண்பரே
Deleteஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே !!
Deleteஆழ்ந்த இரங்கல்கள் 😭😭
DeleteRIP
Deleteஆழ்ந்த இரங்கலகள் நண்பரின் தாயார் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..
Deleteஆழ்ந்த இரங்கல்கள் !
ReplyDeleteநண்பரின் அன்னையாரின் ஆன்மா இறைவனடி சேரட்டும்.
ReplyDeleteMy deepest condolences to him.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆன்லைன் ஸ்பெஷல் இதழ்கள் வந்துவிட்டது. டெக்ஸ் க்ளாசிக்ஸ் -2 (இரத்த வெறியர்கள் அண்ட் பனிக்கடல் படலம்) ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.
ReplyDelete@Shankar ji.. இங்கே இன்னும் டீ வர்ல..
Deleteகடை கடையா சின்ட்ரெல்லா புக்கு தேடி அலைஞ்சேன் பக்கத்துல எங்கேயும் கிடைக்கலை , இப்பவே புக் வேண்டுமாம்
ReplyDeleteஎடிட்டர் சார்
ReplyDeleteஅந்த 700 + பக்க மெபிஸ்டோ புக் ......
எப்போது வரும்?😊
- தல ரசிகர்கள்.
Deepavali?!
Deleteவந்தாச்சு புக் வந்தாச்சு. புக் fair புக்ஸ் சும்மா அட்டகாசமான தயாரிப்பு. லக்கியின் வானவில்லை தேடி படித்து முடித்து விட்டேன் அட்டகாசமான கிளாசிக் கதை 10/10.
ReplyDelete####150 ####
ReplyDeleteபழிக்கு பழி + கானகக்கோட்டை...
ReplyDeleteஇன்று அலுவலகம் முடிந்து மாலை இல்லம் நுழைந்துவுடன் எனது கண்ணில் தென்பட்டது நமது வழக்கமான பொக்கிஷ பெட்டி ..உடனே மனதில் அவ்வளவு குஷி ..பின்னே புத்தாண்டில் வந்த சிறப்பு இதழ்கள் அனைத்தையும் படித்து முடித்தாயிற்று ..அதற்கு பிறகு என்ன என ஏங்கி கொண்டு இருந்தேன் ..அந்த சமயம் பார்த்து வாட்ஸ் அப் குழுவில் நண்பர்களின் பெளன்சர் பற்றிய கருத்தாக்கங்கள் ..! பின் என்ன படிக்க புது இதழ்கள் மாத கடைசியில் தானே இந்த தொலைக்காட்சியையும் , செல்பேசியையும் கொஞ்சம் குறைத்து தான் பயன்படுத்துவோமே என இதுவரை வந்த பெளன்சரின் மூன்று தொகுதியையும் எடுத்து வைத்து ஒரே மூச்சில் மீண்டும் படித்து முடித்தாயிற்று..பிறகு ...!?
இன்னமும் வேறு இதழ்கள் வரவில்லையே என தேடிக்கொண்டு இருந்த பொழுது அசத்தலாய் அட்டகாசமாய் ,பட்டாசாய் "தி லயன் லைப்ரரி " சொல்லவும் வேண்டுமா ..ஏதாவது சாதாரண இதழ்களே திரும்ப கிடைத்தால் அது படித்த இதழாக இருந்தாலும் ,அது என்னிடம் இருப்பில் இருந்த இதழாகவே இருந்தாலும் வந்த இதழை மீண்டும் படித்து விட்டு வைப்பதே வழக்கம் எனும் பொழுது பழிக்குப்பபழி ,கானக கோட்டை என அசத்தலான மறுபதிப்பு பொக்கிஷம் கையில் சிக்கினால் மனம் துள்ளாதா என்ன..?இரு கதைகளுமே ஏற்கனவே படித்து இருந்தாலும் வண்ணத்திலும் ..சித்திரத்திலும் ...அட்டகாசமாய் மின்னலடித்து என்னை சுவைத்து பார் சுவைத்து பார் என்கிறது புரட்டும் பக்கங்கள் . இதழின் மற்றொரு சிறப்பு இரண்டாம் கதையான கானகக் கோட்டை இதழுக்கான அட்டைப்படமாக கதையின் ஆரம்பத்தில் கொடுத்தது.. சூப்பர் ..இதை விட மற்றொரு சிறப்பு லயன் லைப்ரரி இதழின் அடுத்த வெளியீடு அறிவிப்பில் ..இரத்த வெறியர்கள்.. வாவ் யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ..இதனுடன் பனிக்கடல் படலம் செம கொண்டாட்டம் தான் சார்..டெக்ஸ் மிக பழைமையான ஒரு மறுபதிப்பு கூடவே ஓர் பழைய மறுபதிப்பு அழகான திட்டமிடல் சார் .. விரைவில் தி லயன் லைப்ரரி மாதம் ஒன்று வந்தால் கூட திகட்டாத வெற்றிக்கனியாய் நடைபோடும் என்பது உறுதி ..பிறகு அட்டகாசமான டெக்ஸ் வால்போஸ்டரும் ,இரும்புக்கை மாயாவி யின் வால்போஸ்டரும் இலவச இணைப்பாக அளித்ததிற்கு மிக்க மிக்க நன்றி சார்..
என்ன ஒன்று இது போன்று பழைமையான கதைகள் மறுபதிப்பு ஆகும் சமயம் ... அந்த இதழ் வெளியான பொழுது அதனை பற்றிய தங்களின் நினைவுகள் ,அதன் வரவேற்புகள் ,வெற்றிகள் பற்றிய எண்ணங்களை கொண்ட பக்கங்கள் இருந்திருப்பின் லயன் லைப்ரியின் சுவை இன்னும் கூடி இருக்குமோ என்ற எண்ணமும் மனதில் உதிக்காமல் இல்லை...முடிந்தால் அடுத்த இதழில் இருந்து அதற்கென இரு பக்கங்களை ஒதுக்கினால் சிறப்பாக இருக்குமே சார்.. இந்த இதழில் வந்த கதைகளை பற்றி எந்த விமர்சனமும் தேவையேயில்லை என்பது உண்மை...ஆனால் டெக்ஸ் ரசிகர்கள் மட்டுமல்ல காமிக்ஸ் ரசிகர்களும் தவற விட கூடாத ஆன்லைன் இதழ் இந்த தி லயன் லைப்ரரி -ஒன்று என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ளலாம்...
இனி படித்து விட்டு.... வேதாளருக்காக காத்துக்கொண்டு இருப்பேன் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன...?!
காத்திருத்தலே ஒரு சுகம்தானே நண்பரே... இப்போது காமிக்ஸ்.. அப்போது..?
Deleteஉண்மை தான் நண்பரே..
Deleteஅப்பொழுது மட்டுமல்ல ..
எப்பொழுதும்...:-)
//அந்த இதழ் வெளியான பொழுது அதனை பற்றிய தங்களின் நினைவுகள் ,அதன் வரவேற்புகள் ,வெற்றிகள் பற்றிய எண்ணங்களை கொண்ட பக்கங்கள் இருந்திருப்பின் லயன் லைப்ரியின் சுவை இன்னும் கூடி இருக்குமோ என்ற எண்ணமும் மனதில் உதிக்காமல் இல்லை...முடிந்தால் அடுத்த இதழில் இருந்து அதற்கென இரு பக்கங்களை ஒதுக்கினால் சிறப்பாக இருக்குமே சார்//
Delete+1111
+1
Deleteதம்பி யுவா கண்ணன் அவர்களின் தந்தையார் சற்றுமுன் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த இரங்கல்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..😞
ReplyDeleteHeartfelt condolences to yuva
Deleteஆழ்ந்த இரங்கல்கள்.. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Deleteஆழ்ந்த இரங்கல்கள் யுவா...
Deleteஆழ்ந்த இரங்கல்கள் யுவா !
Deleteயுவாவின் தந்தையார் ஆன்மா சாந்தியடைய செந்தூரான் அருளை வேண்டுகிறேன்....
Deleteஆழ்ந்த இரங்கல்கள் யுவா
Deleteஆழ்ந்த இரங்கல்கள் யுவா அவர்களின் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..
Deleteஆழ்ந்த இரங்கல்கள் யுவா
Deleteயுவா கண்ணன் அவர்களின் தந்தையார் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ந்தேன். அன்னாரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும். தந்தையாரின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் யுவா...
ReplyDeleteஆழ்ந்த இரங்கல் நண்பர் யுவா அவர்களே ...
ReplyDeleteநமது காமிக்ஸ் நண்பர் சென்னையை சேர்ந்த வெற்றி அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார் அவரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம்
ReplyDelete//[02:27, 21/01/2022] Dr. AKK Raja: நமது நண்பர் வெற்றி, சென்னை, சற்று நேரம் முன் தவறி விட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்...//
Deleteஈடு செய்ய முடியாத இழப்பு...
சென்ற வாரம் நண்பர் வெற்றியிடம் பேசினேன்... இந்த வாரம் அவரை வீட்டில் சந்திக்கிறேன் என்று சொன்னேன்... 😢😢😢
அவர் துணைவியாருக்கும் பிள்ளை கௌசிக்குக்கும் என்ன ஆறுதல் சொல்ல போகிறோமோ...😢😢😢
கடவுளே..
Deleteஆழ்ந்த இரங்கல்கள்.!
ஆழ்ந்த இரங்கல்கள்... நண்பரின் ஆன்மா சாந்தியடைய செந்தூரான் அருளை வேண்டுகிறேன்...
Deleteஆண்டவனே! துயரமான செய்தி.... RIP...
Deleteஆழந்த இரங்கல்கள் நண்பரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
Deleteஆழ்ந்த இரங்கல்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis month uyirmai has 4 page article on muthi comics 50 yrs anniversary. Shared ro lioncomics mail and WhatsApp mumber
ReplyDeleteDoctor - can you share link here?
Deletei am a subscriber and recd hard copy sir. this blog doesnt support sharing of photos
Deleteடாக்டர் என் வாட்ஸாப் நெ.9629298300 அல்லது viji.comics@gmail.com ல ஷேர் பண்ணுங்க....🙏
Deleteவிஜயன் Sir.. ஆன்லைன் புத்தகங்கள் இன்று (21/01/2022) வந்தடைந்தது, நன்றி. அதில் நான் குறிப்பிட்டிருந்த டெக்ஸின் பழி வாங்கும் பாவை வர வில்லை. மொத்தம் 12 புக்ஸ் ஆர்டர் செய்திருந்தேன், மேற்குறிப்பிட்ட புத்தகம் தவிர்த்து 11 புக்ஸ் ப்ளஸ் 2 போஸ்டர் மட்டுமே வந்துள்ளது. லயன் ஆஃபிஸ் வாட்சப் எண்ணில் பார்சலை போட்டோ எடுத்து விவரங்கள் கூறியுள்ளேன்.
ReplyDeleteலயன் ஆஃபிஸில் இருந்து போனில் அழைத்தார்கள். பழிவாங்கும் பாவை அவுட் of ஸ்டாக்காம். ☹️
Deleteஆகையால் அந்த தொகை ₹150 அடுத்த லயன் லைப்ரரி அல்லது உயிரை தேடி வரும்போது உபயோக படுத்திக்கொள்கிறேன்.நன்றி.
சார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDelete+1
Delete190
ReplyDeleteசார் கொலைப்படையோட தகவல்கள திரட்டி அட்டகாசப்பதிவ போடுங்க
ReplyDelete//அந்த இதழ் வெளியான பொழுது அதனை பற்றிய தங்களின் நினைவுகள் ,அதன் வரவேற்புகள் ,வெற்றிகள் பற்றிய எண்ணங்களை கொண்ட பக்கங்கள் இருந்திருப்பின் லயன் லைப்ரியின் சுவை இன்னும் கூடி இருக்குமோ என்ற எண்ணமும் மனதில் உதிக்காமல் இல்லை...முடிந்தால் அடுத்த இதழில் இருந்து அதற்கென இரு பக்கங்களை ஒதுக்கினால் சிறப்பாக இருக்குமே சார்//
Delete+1111
Edi Sir..13,14,15&17- அதிக எண்ணிக்கை&அதிக தொகை வெற்றியாளர்கள் யார்?..யார்?.
ReplyDeleteஆசிரியரே பதிவு என்னாச்சி
ReplyDeleteஆசிரியர் சார் இன்று பதிவு உண்டுங்களா சார் ?
ReplyDeleteவேதாளன் பற்றிய தகவல்களுடன் வரும் பதிவிற்காகக் காத்துக் கிடக்கின்றோம்.
ReplyDeleteS70sன் முதல் இதழாக வெளிவரும் வேதாளரை இரு கரம் கூப்பி வரவேற்கத் தயாராக உள்ளோம்.
ReplyDeleteவேதாளர் கதைத் தலைப்புகள் , அட்டைப்படங்கள் + உள்பக்கங்கள் என போட்டுத் தாக்குங்கள் சார்.
ReplyDeleteஆன்லைன் புத்தகவிழாவில் விற்பனை நிலவரம் மற்றும் அதிகப் புத்தகங்கள் விற்ற பட்டியல்கள் புள்ளிவிவரங்கள் தாருங்கள் சார்.
ReplyDelete#### 200 ####
ReplyDeleteஇன்று பதிவு இல்லை போல. போவோம் போய் தூங்குவோம்.
ReplyDelete202வது
ReplyDeleteவேதாளர் 25 ம்தேதி கிளம்பறார்னு Edisir சொல்லி இருக்காரு.27/28 ல வேதாளர் நம்பகிட்ட வந்துருவாரு. பிப்ரவரி புக்ஸ் 27/28 ல கிளம்பினா 29 ல நம்பகிட்ட வந்துரும். அப்ப ஜனவரி ஹேப்பி ending தான்.
ReplyDeleteகுளிரான காலையில் ஆசையுடன் வந்தால் அல்வா தந்து விட்டீர்களே சார்...:-)
ReplyDelete