Powered By Blogger

Sunday, September 01, 2019

வாசிப்புக்கொரு வரிசை 😃

நண்பர்களே,

வணக்கம். திரும்பின திக்கெல்லாம் வாழைமரங்கள் கட்டிய மஹால்களின் முன்னே முரட்டு ப்ளெக்ஸ் பேனர்களில் பெண்ணும், மாப்பிள்ளையும் ஸ்டைலாய் போஸ் கொடுத்து நிற்க,  மாமன்மார்களும், சித்தப்பு-பெரியப்புமார்களும் டெரராய் இளித்து நிற்க, கல்யாண சீஸன் well & truly on என்பது தெரிகிறது ! நம்மையும் மதித்து, பத்திரிக்கைகளைத் தந்து போவது நடக்க – மொய் கவரும் கையுமாய்ப் போய் பந்தியில் சாம்பாரையும், சில்லி புரோட்டாவையும் பதம் பார்க்கும் முஸ்தீபுகள் ஆரம்பம்! உங்களுக்குமே இந்த ஞாயிறும், காத்திருக்கும் சதுர்த்தித் திருநாளும் பிஸியான விடுமுறை நாட்களாயிருக்குமென்பதால் மாமூலான ஞாயிறின் பதிவை crisp ஆக்கிடுவோமே ? தவிர ஒன்றுக்கு – நாலாய் செம breezy reads இம்மாதம் உங்கள் கைகளில் சுடச்சுடக் குடியிருப்பதால் அவற்றோடு இந்த வாரயிறுதியை நகற்றும் பொறுப்பும் உங்களதல்லவா ?

செப்டம்பரின் preview படலம் மூன்று இதழ்களோடு நின்றிருக்க – பிரிவ்யூ # 4 வெளியாகும் முன்னமே அந்த இதழே உங்களை எட்டிப் பிடித்து விட்டது ! So 'உலக பில்டப்களில் முதன் முறையாக' – preview க்குப் பதிலாய் postview என்று வைத்துக் கொள்வோமே ?! இம்மாதத்துக் கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் நால்வரில் – மூன்று டீம்களுக்குத் தொடரும் அட்டவணைகளில் இடம் பற்றிய கேள்வியே எழாது என்பதால் அவர்களெல்லாமே Super Safe Zone-ல் உள்ளவர்கள் ! ஆனால் மீசையில்லாத விஷாலைப் போலத் தோற்றம் தரும் செஞ்சட்டைக் காவலர் ட்ரெண்ட் - இரண்டு ஆல்பங்களோடு மாத்திரமே இதுவரைக்கும் நம்மிடையே பரிச்சயம் கண்டிருப்பவர் என்ற முறையில் அந்த Super Safe சொகுசுகளுக்கு ஆட்டோமேட்டிக்காகத் தகுதி பெற்றிடும் நிலையைத் தொட்டிருக்கவில்லை ! So இம்மாதம் ‘தல‘ TEX எவ்விதம் ரவுசு செய்கிறாரென்பதைக் கவனித்திடுவதை விடவும் ; ப்ளூகோட் பட்டாளத்துப் புண்ணியவான்களின் performance எப்படியென்று பரிசீலிப்பதை விடவும் ; லக்கியின் புது one-shot அவதாரை நீங்கள் எவ்விதம் அணுகுகிறீர்களென்பதை அலசுவதை விடவும் – ட்டிரண்டின் பாணிக்கு நீங்கள் தந்திடவுள்ள வரவேற்பு மீதே எனது கவனம் லயித்து நிற்கும் ! பெர்சனலாய் எனக்கு ரொம்பவே பிடித்தமான (சமீப) நாயகர்களுள் இவருக்கும் ஒரு இடமுண்டு ! ஆனால் எனக்குப் பிடித்தவர்கள், உங்களுக்கும் பிடித்தமானவர்களாய் இருந்தால் தானே ரயிலில் பெர்த் கிடைக்கும் ?! So தொடரும் ஆண்டின் ட்ரெண்டுக்கான slot அல்லது slots பற்றிய இறுதி முடிவெடுக்க இம்மாதத்து “சாலையெலாம் ஜுவாலைகளே” ஈட்டிடவுள்ள வரவேற்போ ; சாத்துக்களோ நிறையவே உதவிடும். இயன்றால் இம்மாதத்து வாசிப்புகளை இந்தக் கனடா காவலரிலிருந்து ஆரம்பித்துப் பாருங்களேன் folks ? 

கதையைப் பொறுத்த வரையிலும் செம ட்விஸ்ட்களோ ; செம அதிரடிகளோ இருந்திடப் போவதில்லை ! மாறாக யதார்த்தம் + மெல்லிய மனித உணர்வுகளுக்கு இங்கே முக்கியத்துவமிருக்கும் ! And maybe குடும்பத்தை விட்டுப் பிரிந்து, தொலைவில் பணியாற்றுவோருக்கு இந்தக் கதையின் பின்னணியில் இழையோடும் உணர்வுகளோடு அடையாளம் காண முடிந்திடலாம் ! லேசாய் நம்மூர் சினிமாக்களின் கதையைப் போல தோற்றம் தரும் இந்த ஆல்பத்தை தமிழாக்கம் செய்வது செம breezy அனுபவமாயிருந்தது போலவே – வாசிப்பதும் சுலபமாக அமையின், ட்ரெண்ட் நம்மிடையே டெண்ட் கொட்டாய் போட்டுத் தங்கத் தயாராகி விட்டார் என்று எடுத்துக் கொள்ளலாம் ! அடுத்த மாதமுமே இவரது சாகஸம் தொடரவுள்ளதால் all the more eager to know your ratings !! கனடாலேர்ந்து டெம்போலாம் வச்சுக் கூட்டி வந்திருக்கோமுங்க... சித்தே பார்த்து மார்க் போடுங்கோ – ப்ளீஸ் ?

இம்மாதத்தின் surprise package ஆக இருக்கப் போவது நமது காமெடி சூப்பர் ஸ்டார் லக்கி லூக் தான் என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது ! பொதுவாய் ஒரு நாயகருக்கானதொரு template நம் மனதில் பதிந்து விட்டால் அதனை அத்தனை சீக்கிரமாய் அகற்றிக் கொள்ள விரும்புவோரல்ல நாம் ! இதற்கு விதிவிலக்கென்று நான் சொல்லக் கூடியது நமது கூர்மண்டையைர் ஸ்பைடரை மட்டுமே ! ஆரவாரமான வில்லனாய் அறிமுகமாகி நம் மனதைக் கொள்ளை கொண்ட மனுஷன், அப்படியே U-turn அடித்து நீதிக்காவலனாய் மாறிப் போனதை நாம் வாஞ்சையோடு ஏற்றுக் கொண்டது ஒரு அதிசய நிகழ்வு என்பேன் ! அவர் நீங்கலாய் மற்ற கதாநாயக / நாயகியர் யாருமே அறிமுகமான பாணியிலிருந்து பெரிதாய் விலகியது போல் எனக்கு நினைவில்லை ! (Anybody at all folks ??) But இம்மாதத்து லக்கி லூக் ஒரு total makeover சகிதம் நம் முன்னே வலம் வருகிறார் ! சித்திர பாணிகள் ; கதை சொல்லும் பாங்கு ; நாயகருக்கென வழங்கப்படும் ட்ரீட்மெண்ட் – என்று சகலமுமே “லக்கி லூக்கை சுட்டது யார்?” ஆல்பத்தினில் வேறுபட்டு நிற்பதைக் கண்டிருப்பீர்கள் ! ஒரு ரீல் நாயகன், ரியல் நாயகனாகிடும் பட்சத்தில் நிகழக்கூடிய சம்பவங்களைச் சுவையாய்ச் சொல்ல முனைந்து; அதனில் முழுவெற்றியும் பெற்றிருக்கும் கதாசிரியரைத் தான் இங்கே தோளில் தூக்கிக் கொண்டு கொண்டாட வேண்டுமென்பேன் ! So செப்டம்பர் வாசிப்பினில் இயன்றால் – “லக்கி லூக்கைச் சுட்டது யார்?” ஆல்பத்தினை உங்களது வாசிப்பு # 2 ஆக வரிசைப்படுத்திடலாமே?

My choice of # 3 – டெக்ஸின் “ரௌத்திர ரேஞ்சர்” black & white சாகஸமாகத்தானிருக்கும். இது பற்றிப் போன வாரமே கணிசமாய் பில்டப் செய்திருப்பதால் மேற்கொண்டும் பீப்பீ ஸ்மர்ப்பாய் சுற்றித் திரிய வேண்டாமென்று நினைத்தேன் !

வாசிப்பு வரிசையின் இறுதி இடம் – நமது ப்ளூகோட் பட்டாளத்துக்கென்று சொல்லலாம் ! இந்த வரிசைக்கிரமமானது கதைகளின் தரங்கள் மீதான பிரதிபலிப்பல்ல ; சும்மாக்காச்சும் இம்மாத இதழ்களுள் பயணிக்க (நமக்கு) வசதியான ‘ஏக்-தோ-தீன்-சார்‘ என்பதால், “ஆ... ஸ்கூபி & ரூபியை மட்டம் தட்டிப்புட்டீகளே!!” என்று கண் சிவக்கத் தேவையில்லை ! As with all cartoons – இதுவுமே எனது ஆதர்ஷத் தொடர்களுள் ஒன்றே ! அதுவும் படைப்பாளிகள் தேர்வு செய்துள்ள களமானது – சிரிப்புக் கதைகளுக்கு ரொம்பவே வித்தியாசமானது என்ற வகையில், இந்தத் தொடர் வெற்றி காண வேண்டுமென ரொம்பவே விரும்புபவன் நான் ! இம்முறையும் கதைக்களமானது போரின் கோரங்களை ; தோல்விகளின் பாரங்களை காமெடி எனும் சர்க்கரைப் பூச்சோடு சொல்ல விழைகின்றது ! வரலாற்றில் ஏதோவொரு பக்கமே இது ; நாம் கண்ணிலேயே பார்த்திரா பூமியில் அரங்கேறிடும் யுத்தமிது என்றாலும் – சாவுகளை; இழப்பின் சங்கடங்களை உணர்ந்திட அவை தடைகளாய் இருக்காது தானே ? So சிந்தித்தபடியே சிரிக்க – இம்மாதத்து இறுதித் தேர்வாய் “கறுப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு!” அமைந்தால் பொருத்தமாகயிருக்குமென்பேன் !

இதெல்லாமே எனது ரோசனைகளே தவிர்த்து – அவரவரது ஆதர்ஷ வாசிப்பு வரிசைகளில் தவறிராது தான் ! So எதைப் படித்திட நேரம் கிட்டினாலுமே – அவை சார்ந்த உங்கள் பார்வைகளை இங்கே பதிவிட்டால் கச்சேரி களைகட்டிடும் !

Moving on, ஒரு மெகா ஹிட் மாதத்தைத் தொடரும் வேளைகளில் ஒருவிதமான மிதப்பு நம்மை அறியாமலே குடிகொள்வது வாடிக்கை ! வெயிட்டான விருந்துக்கு மறுநாள் ஆபீஸ் போனால் புளிச்ச ஏப்பமும், சோம்பலுமாய் ரவுண்டு கட்டியடிக்குமே – அதே மாதிரித் தான் இந்த மிதப்புமே ! ஆனால் இம்முறையோ அட்டவணையின் திட்டமிடலின் தருணத்திலேயே – ‘ஆகஸ்ட்‘ எனும் full meals மாதத்தின் மறுமாதத்தின் reading ரொம்பவே light-ஆக அமைந்திட வேண்டுமென்று நினைத்திருந்தேன் ! அது ஓரளவுக்கு நிறைவேறியுள்ளதில் ஹேப்பி அண்ணாச்சி!

ஆகஸ்டின் இதழ்களுள் முதலிடம் பிடித்திருந்த “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” ஏகப்பட்ட அலசல்களுக்கு உட்பட்டது மாத்திரமின்றி – ஏகோபித்த thumbs up பெற்றதில் மனம் நிறைகிறது ! கதாசிரியரின் வெற்றி ; ஓவிய பாணியின் வெற்றி ; மொழிநடையின் வெற்றி ; மேக்கிங்கில் வெற்றி என்றெல்லாம் நிறைய கனிவான சிந்தனைகளை ஆங்காங்கே படிக்க முடிந்த போதிலும், இதனை நான் உங்கள் “ரசனைகளின் வெற்றி” என்று தான் சொல்வேன் ! I have a reason to say this folks...! 

பொதுவாய் இதுவரையிலுமான மெகா இதழ்கள் எல்லாமே – யாரேனுமொரு ஸ்டார் நாயகரின் குடையில் இளைப்பாறியிருப்பது வழக்கம் ! கேப்டன் டைகர்; டெக்ஸ்; லக்கி லூக் ; XIII என்று big names பிரதானமாய் இருக்கும் போது மெகா இதழ்களின் சக்கரங்கள் கிறீச்சிடாமல் சுற்றி வந்திடுகின்றன ! ஆனால் இந்த தபா “ஈரோடு எக்ஸ்பிரஸ்” என நான் அறிவித்திருந்த 2 இதழ்களுமே total புதுவரவுகள் ! And எவ்வித முன் அறிமுகமோ ; அதிரடிகளுக்கான உத்தரவாதங்களோ இல்லாத இதழ்களெனும் போது எனது அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு ‘மின்னும் மரண‘ முன்பதிவு அதகளமோ ; ஒரு இரத்தப்படலத் தொகுப்பு முன்பதிவுகளின் ரணகளமோ அரங்கேறிடவில்லை ! ஓரளவுக்கு நானுமே இதை எதிர்பார்த்திருந்தேன் ; ஆனால் விடாது ஊதிடும் பில்டப் பீப்பியின்  புண்ணியத்தில் நமது மாமூலான முன்பதிவு இலக்கை (500) கொஞ்சமாச்சும் நெருங்கிடலாமென்று நான் நினைத்திருந்தேன் ! ஆனாக்கா ‘ஜடாமுடி ஜானதனுக்குமே பில்டப் தர்றவன் தானே நீ...? அப்டிக்கா ஓரமாய் போயி தனியாப் பேசிக்கோ !‘ என்று நிறைய நண்பர்கள் தீர்மானித்து விட்டனர் ! தஸ்ஸு... புஸ்சென்று முக்கியும் 345-ஐத் தாண்டவில்லை முன்பதிவு எண்ணிக்கையானது ! கொஞ்சம் ஜெர்க்கடிக்கத் தான் செய்தது என்றாலுமே – கதையின் வீரியம் நம்மைக் கரை சேர்த்து விடுமென்ற நம்பிக்கையோடே ஈரோட்டுக்குப் பொட்டலம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம் ! MAXI லயனின் TEX + லக்கி லூக் மெகா கூட்டணியும், ஈரோட்டின் சர்ப்பரைஸ் என்றிருக்க – அவர்களது ராட்சஸ presence-ஐ தாண்டி வேறு யாரும் மிளிர்வது சிரமமே என்பதும் புரியாதில்லை தான் ! ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சின்ன திட நம்பிக்கை – உங்கள் ரசனைகள் மீது லயித்துக் கிடந்ததால், ஈரோட்டு விழாவை நிறைவு செய்த கையோடு ஊர் திரும்பிய கணம் முதலாய் ‘பி.பி.வி.‘க்கு உங்களது ரெஸ்பான்ஸைக் கணிப்பதிலேயே மும்முரமாயிருந்தேன் ! And எனது நம்பிக்கை துளி கூட வீண் போகவில்லை ; அண்டர்டேக்கர் ; TEX ; லக்கி போன்ற பிஸ்தாக்களையே ‘அப்பாலிக்கா ஓரமாய்ப் போய் விளையாடுங்க தம்பிகளா!‘ என்று சொல்லி விட்டு ”பி.பி.வி‘ யை நீங்கள் தெறிக்க விட்டது செம landmark moment இந்தாண்டினில் ! உங்கள் மத்தியில் வெற்றிக்கு Star Power இனியும் ஒரு அத்தியாவசியமல்ல என்பதை ஆணித்தரமாய் நிரூபித்திருக்கும் தருணமாய் இதை நான் பார்த்திடுகிறேன் !!   சமீப மாதங்களில் நீளமான ஆல்பங்களை தவணை முறைகளில் படிக்கவே திணறி வந்த நண்பர்கள் இந்த 4 பாக ஆல்பத்தை ; ஒரு ஹீரோவே இல்லாத ஆல்பத்தை ; கோக்மாக்கான சித்திரபாணியிலான ஆல்பத்தை – சும்மா ஜெட் வேகத்தில் படித்து, முடித்து, சிலாகித்தது செமத்தியானதொரு சாதனை என்பதில் ஐயமே கிடையாது ! “ஹாாாவ்... ஹீரோவே இல்லியே ?.... அமெரிக்க அரசியல் சட்டமா....?? இது இன்னா மேரி கதைப்பா ? அய்யே..படமே சொகப்படலியே  ?” என்றெல்லாம் கொட்டாவிகள் விடாது இந்த இதழினை நீங்கள் ரசித்தது – நான் உங்கள் மீது வைத்த நம்பிக்கையின் வெற்றி !! தொடர்ந்த நாட்களில், ஈரோட்டுப் புத்தக விழாவில் ; கடைகளில்  ; ஆன்லைனில் என்று பரபரத்த விற்பனைகள் ஒற்றை விஷயத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன – என்னளவிற்கு : ரசனைகள் எனும் ஏணியில் நீங்கள் LIC கட்டிட உசரங்களையெலாம் தாண்டி நாட்கள் பலவாச்சுங்கோய் ! 'இந்தத் தொடர் நம்மாட்களுக்குப் புரியுமா ? ரசிக்குமா ?' என்ற கேள்விகளெல்லாம் இனிமேலும் கேட்டுத் தயங்குவது குடாக்குத்தனம் என்பதே அது ! மெய்யான தரமிருந்தால் – அது எத்தனை முரட்டுப் போர்வையின் பின்னணியிலிருந்தாலுமே நீங்கள் பிரித்து மேய்ந்து விடுவீர்கள் என்றாகி விட்டது ! Take a bow all !!

பிஸ்டலுக்குப் பிரியாவிடை... தாழிடப்பட்டிருந்த ரசனைக் கதவுகள் பலவற்றிற்கான பிரியாவிடையுமே !! 

 Before I sign out –  பற்றிய தாக்கல் ! வெள்ளி மாலை மதுரை தமுக்கம் மைதானத்தில் துவங்கியுள்ள புத்தக விழாவினில் நமது ஸ்டால் # 195 ! And முதலிரண்டு நாட்களில் அட்டகாச response !! புது இதழ்கள் சகலமுமே அங்கும் கிடைக்கும் என்பதால் – மதுரை மண்ணின் மைந்தர்கள் ஒரு விசிட் அடிக்கலாமே – ப்ளீஸ்!
Bye folks! Have a Super Sunday !! See you around ! முன்கூட்டிய பண்டிகை வாழ்த்துக்களும் !! 

257 comments:

  1. Replies
    1. பாண்டுக்கு கொடி பிடிக்கிறீங்களே; என்ன விசயம் GP சார்....🤔🤔🤔🤔

      Delete
    2. பாண்டுக்கு கொடி பிடிக்கிறீங்களே; என்ன விசயம் GP சார்....🤔🤔🤔🤔

      Delete
    3. 7ம் எண்ணை எப்படி வேற மாதிரி சொல்லலாம் என யோசித்தேன்.பாண்ட் ரசிகனான எனக்கு 007 என கமெண்ட் பண்ண கணநேரம் கூட ஆகவில்லை.

      'No Time To Die.'

      Delete
  2. அட பதிவு வந்தாச்சா.....🙏

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ..அதனால் தான் உங்கள் இந்த பதிவும்..:-)

      Delete
  3. ஆசிரியருக்கும் ,அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..

    ReplyDelete
  4. படிப்பதற்கு முன்...அன்று போல் இன்றும் அடுத்த வெளியீடு விளம்பரங்கள் எப்பொழுதும் மனதை கவர்பவை...இந்த முறை ஒரே பக்கத்திலியே தீபாவளி மலரின் விளம்பர அறிவிப்பு இருந்தாலும் அதனை கண்டவுடன் மனதில் கூதுகலம் ..600 பக்கங்களுக்கு மேலான குண்டு இதழ்..ஹார்ட் பைண்டிங் ,ஒரே இதழில் ஐந்து நாயகர்கள் ..ஆஹா இப்படி கதம்ப இதழை பார்த்து மாமாங்கம் ஆகி விட்டது போல ஒரு ஃபீலிங்...எக்காரணம் கொண்டும் தீயாவளி மலரை மட்டுமாவது எப்பொழுதும் இதே போல் கதம்ப குண்டாக கொண்டு வருவதை நிறுத்தி விடாதீர்கள் சார்.தீபாவளி பட்டாசு ,தீபாவளி இனிப்பை விட நமது தீபாவளி காமிக்ஸை தான் அதிகம் எதிர்பார்க்கிறோம் அன்றும் ,இன்றும்,என்றும்...

    ReplyDelete
  5. சாலையெல்லாம் ஜூவாலைகளே...

    டெக்ஸை படிக்கலாமா ,லக்கியை படிக்கலாமா ,ப்ளுகோட்டை படிக்கலாமா என இபிபா எல்லாம் போட செய்தாலும் ட்ரெண்ட் அட்டைப்படம் ஏனோ எந்த பிங்கியும் போடாமல் அந்த இதழையே முதலில் படிக்க தேர்தெடுக்க சொல்லியது ..அட்டைப்படத்தை போலவே கதையும் ஏதோ குடும்ப நாவல் படிக்கிறமோ என்ற எண்ணத்தை விதைத்து கொண்டு வரும் நேரத்தில் கொள்ளையர்களின் மூலம் மிதமான அதிரடியில் கதை ஓட தொடங்கியது மட்டுமல்லாமல் நகர மாந்தர்களை போலவே வாசிக்கும் நம்மையும் ஒரு சஸ்பென்ஸ் க்ளைமேக்ஸை கொண்டு இறுதியில் ஒரு சஸ்பென்ஸ் நாவலை படித்தது போல ஒரு திருப்தியை ஏற்படுத்தியது.
    ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய் ஒரே நேர்க்கோட்டில் அழகான ஒரு வாசிப்பை இந்த இதழ் ஏற்படுத்தியது .ஆரம்ப ட்ரெண்ட் பிடித்தது போலவும் ,பிடிக்காததது போலவும் ஒரு குழப்பமான முடிவை எனக்குள் ஏற்படுத்திய நாயகர் ட்ரெண்ட் இந்த முறை என்னை எல்லாம் பார்த்தால் பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்பதை போல இப்பொழுது மனதை கவர்ந்து விட்டார்.அடுத்த மாதமும் ட்ரெண்ட் என்ற அறிவிப்பு மனதில் மகிழ்ச்சியை விதைத்தது எனில் ட்ரெண்ட் சிறப்பு என்று தானே அர்த்தம்...


    சாலையெல்லாம் ஜீவாலைகள் சாலையெல்லாம் மலர்களில் பாதம் பதித்தது போல இதம்.

    ReplyDelete
    Replies
    1. //அடுத்த மாதமும் ட்ரெண்ட் என்ற அறிவிப்பு மனதில் மகிழ்ச்சியை விதைத்தது எனில் ட்ரெண்ட் சிறப்பு என்று தானே அர்த்தம்...//

      வர வர உங்க அலசல்கள் கூட கி.நா. பாணியிலே கீது தலீவரே !

      Delete
    2. // சாலையெல்லாம் ஜீவாலைகள் சாலையெல்லாம் மலர்களில் பாதம் பதித்தது போல இதம் //

      +1

      Delete
  6. தீபாவளி மலர் அறிவிப்பு.LMS, லயன்300 இதழ்களுக்குப் பின்பு மீண்டும் ஒரு கதம்ப மேளா. வருக. வருக என வரேவேற்கிறேன்.

    ReplyDelete
  7. ஆகஸ்டு மாத இறுதியில் வந்த கதைகள் அனைத்தும் அருமை..


    முதலில் படித்தது - லக்கி லூக்.. அவரின் புதிய பாணி ஒகே ரகம் மட்டுமே..

    இரண்டாவதாக படித்தது - ப்ளூ கோட்.. லக்கி லூக்கின் காமெடி குறையை நிவர்த்தி செய்து விட்டார்கள்.. பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டார்கள்..

    மூன்றாவதா டெக்ஸ்.. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அக்மார்க் டெக்ஸ் கதையை படித்த திருப்தி..

    நான்காவதாகப் படித்தது - ட்ரெண்ட்.. அருமையான அமைதியான கதைக்களம்.. ரசித்து படிக்க முடிந்தது.. படித்து முடித்ததும் மீண்டும் படிக்கத் தோன்றியது..

    மேற்சொன்னவை யாவும் படித்த வரிசையே..

    பிடித்த வரிசை..

    1. ப்ளுகோட் ( சிரிப்புக்காகவே முதலிடம் )
    2. ட்ரெண்ட் ( அமைதியான களத்திற்காக )
    3. டெக்ஸ் ( மேற்கண்ட இருகதைகளும் முதலிரண்டு இடங்களைப் பிடித்ததால் )
    4. லக்கி லூக் ( புதிய களத்திற்காக )



    அப்புறம் எடிட்டர் சார்.. செம்டம்பர் மாத புத்தகங்கள் எப்ப வரும்???



    ReplyDelete
    Replies
    1. என்னா ஒரு வேகம்....

      Delete
    2. இது ஒரு நல்ல கேள்வி.

      Delete
    3. ///அப்புறம் எடிட்டர் சார்.. செம்டம்பர் மாத புத்தகங்கள் எப்ப வரும்??? ///

      ஹா ஹா ஹா! :))))))

      Delete
    4. எனக்கு இந்த மாசம் முடிய இன்று ஒரு நாள் உள்ளது..:-)

      Delete
    5. செப்டெம்பரை ஆகஸ்டிலேயே சுபம் போட்டமைக்காக இன்று முதல் நீர் 'சூப்பர் ஸ்பீட் சரவணர்ர்ர் ' என்று அன்போடு அறியப்படுவீராக !

      Delete
  8. // So தொடரும் ஆண்டின் ட்ரெண்டுக்கான slot அல்லது slots பற்றிய இறுதி முடிவெடுக்க //
    ட்ரெண்ட் Trend ஐ மாற்றாவிடினும் நல்லாவே இருக்கு சார்......

    ReplyDelete
  9. ஒரு 220 பக்க ஜவ்வு மிட்டாயை மென்று முடித்த வாயோடு சாலையெல்லாம் ஜுவாலைகளே படிக்க ஆரம்பித்தேன்.. வாவ்.. அட்டகாசமான கதை.. வழக்கம் போலவே கலவையான உணர்வுகளை கிளறிவிட்டு விட்டது.ட்ரெண்ட் சூப்பர். அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்.

    மேலே இரண்டு கதைகளுக்கான விமர்சனங்கள் உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. // ஒரு 220 பக்க ஜவ்வு மிட்டாயை மென்று முடித்த வாயோடு //
      இஷ்டப்படாம இம்புட்டு தூரம் மெல்ல முடியாதே......

      Delete
    2. இஷ்டப்பட்டு இல்ல.. கஷ்டப்பட்டு தா..

      Delete
    3. ///இஷ்டப்பட்டு இல்ல.. கஷ்டப்பட்டு தா.///

      ஒவ்வொரு மாசமும் முதல்ல இஷ்டப்பட்டோ, கஷ்டப்பட்டோ முதல்லௌ கார்சனின் நண்பர் கதையை படிச்சிட்டுதான் அடுத்த புக்கை எடுக்குறிங்க.. அது ஏனோ ரம்மி..!?

      (அது இல்லை இது இல்லைன்னு புளுகக்கூடாது.. நீங்க கெணறு வெட்டுன (டெக்ஸை விரும்பி படிக்கிற) ரசீது எங்கிட்ட இருக்கு..!)

      Delete
    4. லக்கி புக்கு இருக்கும் போது தான் எதுக்கு கார்சனின் நண்பரை முதலில் படிக்க போறேன்..
      கழுவி கழுவி ஊத்தும் போது கதையையே படிக்காமே எழுதிட்டேன்னு நாக்கு மேல பல்லை போட்டுறக் கூடாது இல்லியா..

      Delete
    5. சரி சரி கஷ்டபட்டாவது படித்து முடீத்தீரே ..ஆனா மை நேம் இஸ் புலி எல்லாம் வேற லெவல் ..கஷ்டப்பட்டும் ...:-(

      Delete
  10. சாலையெலாம் ஜுவாலைகளே:
    நினைவலைகளை தொடர்ந்து கொண்டேயிருக்கும் ஒரு எளிய மனிதன்,
    காதலியைத் தேடி ஒரு இனிய பயணம்,எதிர்பார்ப்பை சிதறடிக்கும் இழப்பை ஈடுசெய்ய தண்ணி தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டியாக மாறுவதும்,தாடி வெச்ச கேடியாக ஆவதும்,ஊருக்குள் மர்மமாய் உலவும் கோல்மென் கும்பலுக்கு உளவுசொல்லும் பறவையாய் ஆவதும் இனிதே அரங்கேற...
    அடடே என்ற குட்டி திருப்புமுனையில் அழகாய் ஒரு சாகஸம்....
    கண்ணுக்கு குளிர்ச்சியான சித்திரங்கள்.....
    அழகான மென்சோகம் இழையோடும் கவிதை....
    ட்ரெண்ட் இரசனைக்குரியவர் தான் சார்.....
    எமது ரேட்டிங்-9/10

    ReplyDelete
    Replies
    1. //கண்ணுக்கு குளிர்ச்சியான சித்திரங்கள்.....//

      நீங்க மேரி லூவை சொல்றியளோ ?

      Delete
  11. ஒரு ரெளத்திர ரேஞ்சர்:

    இரண்டு நாட்களுக்கு முன்புதான்
    டெக்ஸின் சட்டத்திற்கொரு சவக்குழி சாகஸத்தை மீண்டுமொரு மீள் வாசிப்பில் ஆழ்த்தினேன்,கிரிகோரி ஸ்டார்க்கர் எனும் ஹூக்கின் அட்டகாசத்தையும்,கொட்டத்தையும் அடக்கும் டெக்ஸின் சாதுர்யத்தை வியந்து முடிக்கும் முன்னரே செப்டம்பர் இதழ்கள் கைகளில் தவழ ஆரம்பித்து விட்டது....
    அதே ஆர்வத்தில் முதல் வாசிப்பாக ஒரு ரெளத்திர ரேஞ்சர் அமைந்தார்...
    என்னதான் டெக்ஸின் பெரும்பாலான சாகஸங்கள் நேர்க்கோட்டு பாணிகளாக இருப்பினும் வில்லரின் பலமே கதைக்களம் விறுவிறுப்பாக அமைந்து விடுவதுதான்.கொஞ்ச நாட்களாக நீடித்த தலையின் வெற்றிடத்தை "ஒரு ரெளத்திர ரேஞ்சர்" முழுமையாக ஆக்ரமிக்கிறார்....
    உடன் வலுசேர்க்கும் கூட்டணியாக இரசிக்கும்படியான சித்திரங்களும்,கதையோட்டத்திற்கு வலுசேர்க்கும் வசனங்களும் அமையும்போது கேட்க வேண்டுமா என்ன....
    கண்ணா லட்டு திங்க ஆசையா?
    கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா?
    என்ற கணக்கில் போய்கிட்டே இருக்கு...
    நீண்டதொரு பயணத்தில் கிழக்கு அரிசோனாவின் கிலா நதியின் தெற்கு கரையோரத்தில் நம் ரேஞ்சர் கூட்டணி முகாம் அமைக்க நேரிட டெக்ஸின் முந்தைய நண்பரும்,திறன்மிக்க
    ரேஞ்சருமான ஜாக் லோமன் மற்றும் ஜாக்கின் இளவயது மகனும் ரேஞ்சருமான மைக்கேல் கூட்டணியை சந்திக்க நேரிடுகிறது,பேச்சினிடையே மெக்டார்மண்ட் எனும் வெறிபிடித்த கொள்ளையனின் தலைமையில் திரியும் கும்பலைத் தேடி ஜாக் குழுவினர் செல்வதை அறிய நேரிடும் டெக்ஸ் அவர்களுக்கு உதவ முன்வர,துடிப்பான ஒரு கூட்டணி அமைகிறது....
    தொடரும் வேட்டையில் சில அசம்பாவிதங்களால் ஜாக்கின் மகன் இறக்க நேரிட,வெறி கொண்டெழும் ஜாக் தப்பிச் செல்லும் கொள்ளைக் கும்பலை கருவறுக்க சூளுரைக்கிறார்....
    அடுத்தடுத்த நிகழ்வுகளில் ஜாக்கின் வெறிகொண்ட மனநிலையால் அப்பாவிகள் சிலர் கொல்லப்பட,டெக்ஸ் தலையிடும் சூழல் உருவாக,இடையில் ஜாக்கை சந்திக்கும் எதிர்பாரா சூழலில் கிட்வில்லர் தாக்கப்பட.....
    சில பல திருப்புமுனைகள்,இறுதியில் ஒரு ட்விஸ்ட் என இறக்கை கட்டி பறக்கும் கதை முடிகிறது....
    மைக்கேலின் இழப்பிற்கான பதில் என்ன?
    தாக்கப்பட்ட கிட்வில்லர் பிழைத்தாரா?
    தப்பிச்சென்ற கொள்ளைக் கூட்டணி என்னவானது?
    ஜாக்கின் வெறித்தனம் தணிந்ததா?
    விடைகள் அறிய வாசியுங்கள்...

    "என் அதிகாரத்தின் மீது கேள்வி எழுப்பினால் பின்விளைவுகள் மோசமாக இருக்குமென்று உனக்குத் தெரியாதா?"
    "குற்றவாளிகளையும் நம்மையும் ஒரேயொரு மெல்லிய கோடுதான் பிரித்துக் காட்டுகிறது! அதைக் கடந்து ஜாக் வெகுதூரம் சென்று விட்டார்!"
    "ஆமைகள்,முயல்களிடம் கெலிப்பதெல்லாம் கதைகளில் மட்டும்தான் டுர்ரம்."
    - சிறப்பான வசனங்கள் சார்...
    ஜாக்கின் பலிவேட்டையில் ஒரு இலக்கான டூ க்ரோஸ் இடர்ப்பாடானதொரு சூழலில் அவரை சந்திக்க நேரிட,தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு ஜாக்கிடம் கெஞ்சுவது வியப்பான காட்சியமைப்பு.
    இறுதியாக,
    ரேஞ்சர் ஜாக் லோமன் பாசத்தால் தடம் மாறிய மறக்கவியலாதொரு வில்லன்....

    நிறைவானதொரு சாகஸம்....

    எமது ரேட்டிங்-10/10.

    பின்குறிப்பு:
    மழையுடன் கூடிய மாலைபொழுதில் காரப்பொரி+ காபியுடன் சிறந்த ஒரு வாசிப்பு பொழுதாய் அமைந்தது......

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை விட பின் குறிப்பு அருமை. என்னை மிகவும் கவர்ந்து விட்டது.(காரப் பொரி)

      Delete
    2. மிகச்சிறந்த விமர்சனம். ஆசிரியர் பாணியிலே அசத்தி விட்டீர்கள். டெக்ஸ்
      கதை எப்போதும் வலுவாகவே இருக்கும். கதை சொல்லப்படும் விதம் விறுவிறுப்பாக இருக்கும். தலயின் வசனங்கள், ஸ்டைல்,ஆக்சன்,துப்பாக்கியை கையாளும் விதம்,நண்பர் கார்சனை கலாய்ப்பது (நமது தமிழ் சினிமாவின் கவுண்டமணி செந்திலை நினைவுபடுத்தும்).தேவையான முன்னெச்சரிக்கை. இக்கட்டான சூழலில் அவர் எடுக்கும் துரித நடவடிக்கை. பக்கபலமாக இருக்கும் கிட்கார்சன்,கிட்,டைகர் ஜாக் இவர்கள் நால்வரும் இணைந்து விட்டால் மலைபோன்ற எதிரியும் சிறு கடுகாகும்.இறுதியாக அவரது அதிர்டதேவதை என அவரது கதைகயின்
      சிற்ப்புகளை அடுக்கி கொண்டே செல்லலாம்.எனக்கு இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை.I AM WAITING...

      Delete
    3. //ஆமைகள்,முயல்களிடம் கெலிப்பதெல்லாம் கதைகளில் மட்டும்தான் டுர்ரம்."//

      Final எடிட்டிங்கின் போது எழுதத்
      தோன்றிய வரி சார் ; அந்த இடத்துக்குப் பொருத்தமாய் இருந்தது போலப்பட்டது !

      Delete
    4. // விமர்சனத்தை விட பின் குறிப்பு அருமை.//
      ஹா,ஹா,ஹா....

      Delete
    5. // Final எடிட்டிங்கின் போது எழுதத்
      தோன்றிய வரி சார் //
      பஞ்ச் டயலாக் பேச நம்ம தலை 100 % பொருத்தமானவர் சார்......

      Delete
  12. லக்கிலூக்கை சுட்டது யார்?

    தடம் மாறிய குதிரை......
    மாற்றுக் குறைவான தங்கம்.....
    பதம் தவறிய அல்வா....
    ஏனோ மாற்றுக் களத்தில் லக்கிலூக்கை என்னால் இரசிக்க இயலவில்லை....
    எனினும் வாசிக்கலாம் இரகமே.....

    ReplyDelete
    Replies
    1. தலீவரிடம் நீங்க டியூஷன் எடுத்துக்கிட்டா நலம் சார் ! மாற்றுக் கதைக்களங்களை அவர் இன்னாமா ஊதித் தள்றார் இப்போல்லாம் !!

      Delete
    2. தலைவரே,சொல்லவே இல்ல......

      Delete
  13. அடுத்து ப்ளுகோட் வெயிட்டிங்.....

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு பின் குறிப்பு கரம் மசாலா பாப்கார்ன் + மலாய் டீங்களா? நல்லாவே கடுப்பேத்துறீங்க சார்.

      Delete
    2. இன்னும் சாத்தூர் காரச்சேவும் , கோவில்பட்டி கடலைமிட்டாய் காம்பினேஷனையும் ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்களேன் சார் ?!

      Delete
    3. எந்த காம்பினேஷனும் இதற்கு ஈடாகவில்லை சார்........

      Delete
    4. அப்பாலிக்கா குச்சிமிட்டாய்+ குருவிெ ரொட்டி .

      Delete
  14. லக்கி லூக்கை சுட்டது யார்:

    லக்கி லூக் முதுகில் தோட்டா பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடக்க அங்கே உள்ள கூட்டத்தில் நான் தான் லக்கி லூக்கை சுட்டேன் என கூட்டத்தில் ஒரு சந்தோஷ கூச்சல். என்ன நடந்தது லக்கி லூக் என்னவார்? என்பதை அடுத்த அடுத்த பக்கங்களில் பரபரவென்று பறந்து சென்று முடிகிறது கதை.

    இது வரை காமெடி நாயகனாக வந்த லக்கியை சீரியஸான கதையில் அதே கார்டூன் பாணியில் கொடுத்து அனைவரும் ரசித்து ஏற்றுக் கொள்ளும் படி கொடுத்த கதாசிரியர் மற்றும் ஒவியருக்கு பாராட்டுக்கள்.

    லக்கி புகைப்பதை விட என்ன காரணம் அதற்கு அழகான கண்கலங்க வைக்கும் நட்புதான் என்பது செம.

    லக்கியின் நண்பனாக வரும் டாக் வெட்னஸ்டே மறக்க முடியாத கதாபாத்திரம். நண்பன் இறந்த இடத்தில் லக்கி ஆவேசமாக கிளம்பும் காட்சி பாட்ஷா படத்தில் தனது நண்பனை இழந்த உடன் ஆவேசமாக கிளம்பும் ரஜினி ஞாபகத்துக்கு வந்தார். இந்த இடத்தில் நமது காமெடி நாயகனை சீரியஸாக எந்த நெருடலும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடிவது கதாசிரியரின் வெற்றி.

    ஜாலி ஜம்பருக்கு வசனங்கள் கிடையாது ஆனால் அதன் குறும்புத்தன செயல்களால் சிரிக்க வைப்பது சிறப்பு.

    ஜேம்ஸ், ஸ்டீவ் மற்றும் ஆன்டன் சகோதரர்கள் வித்தியாசமானவர்கள். அருமையான பாசபிணைப்பு சென்டிமென்ட். அவர்களின் அப்பா விஷப்பாம்பு.

    அதிரடி திருப்பம். திகைக்க வைக்கும் சஸ்பென்ஸ். மொத்தத்தில் 7-100 வரை அனைவராலும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான வெற்றி கதை.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் லக்கியை காணாத காரணத்தினால் கண்டுவிட்டு இந்த விமர்சனத்தை காண்கிறேன் நண்பரே..:-)

      Delete
    2. //நமது காமெடி நாயகனை சீரியஸாக எந்த நெருடலும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடிவது கதாசிரியரின் வெற்றி.//

      Very True !!

      Delete
    3. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

      ஜாலிஜம்பரின் செயல்பாடு கம்மியானதால் சிரிப்பும் குறைந்து சீரியஸ் அதிகமாகிவிட்டது.

      Delete
    4. சிரிப்பு குறைவு என்றாலும் மிகவும் ரசிக்கும் படி இருந்தது உண்மை.

      Delete
    5. சார்ஸ் .இது சிரிப்புக் கதையே அல்ல எனும் போது அதனில் ஹ்யூமரைத் தேட முற்படுவானேன் ? ரீல் - ரியல் ஆகினால் என்னவாகும் ? என்ற கற்பனையே இங்கே கதாசிரியரின் canvas !!

      Delete
  15. ஒரு ரெளத்திர ரேஞ்சர்

    வழக்கமான கொடிய வில்லன்கள் வரும்பொழுதே டெக்ஸ் பட்டையை கிளப்பி கொண்டு வருவார் .இதிலோ அவரின் நண்பரே அதுவும் ரேஞ்சரே வில்லன் போல வருகிறார் எனும் பொழுது பரபரப்பிற்கும் ,விறுவிறுப்பிற்கும் சொல்ல வேண்டுமா என்ன ..? ஒரே மூச்சில் படித்து விட்டு தான் இதழை மூடி வைக்க முடிந்தது. ரேஞ்சரின் மகனை சுட்டு கொன்ற பலத்த வில்லன்களை ரேஞ்சர் பழிவாங்க துரத்துவதும் ,அந்த ரேஞ்சரை பிடிக்க டெக்ஸ் துரத்துவதும் என படபடவென பறக்கும் கதை ஓட்டம் இறுதியில் ட்ரெண்ட் கதை களம் போலவே ஒரு திடுக் திருப்பத்தை அளித்து எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது உண்மையிலேயே எதிர்பாராத ஒன்று.
    முன்பின் இரு அட்டைகளுமே கதையில் வரும் காட்சிகளாய் அமைந்தது சிறப்பு ..டெக்ஸின் பல முத்துகளில் இதுவும் ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை.சில நண்பர்கள் ஒரே கதைப்பாணி ,தலைப்பு தான் வேறு வேறு என்று என்னத்தான் ( பொய்) யுரைத்தாலும் எந்த ஒரு டெக்ஸ் கதையையும் படிக்கும் பொழுது வேறு எதுவும் நினைவில் வராது அந்த கள வன்மேற்கில் மட்டும் நாம் உலாவுவது தான் நிஜமான ஒன்று ..அதுவும் ஒரு ரெளத்திர ரேஞ்சர் போன்ற கதைகளை படித்து முடிக்கும் பொழுது தோன்றும் டெக்ஸ் டெக்ஸ் தான் என்ற எண்ணம் தோன்றி கொண்டு இருக்கும் வரை இந்த கெளபாய் சூப்பர் ஸ்டாரை அசைக்க முடியாது என்பது உண்மை.

    ஒரு ரெளத்திர ரேஞ்சர் - எக்ஸ்பிரஸ்

    ReplyDelete
    Replies
    1. நூற்றுக்கு நூறு உண்மை.தலயே காமிக்ஸின் பிராதன நாயகன்.

      Delete
    2. // ஒரு ரெளத்திர ரேஞ்சர் - எக்ஸ்பிரஸ் //
      தலையின் சிறப்பே வேகம்தானே தலைவரே.....

      Delete
    3. ///கெளபாய் சூப்பர் ஸ்டாரை அசைக்க முடியாது என்பது உண்மை///---பத்து நிமிடங்கள் பலத்த கைதட்டலை அளிக்கிறேன் தலைவரே!

      கெளபாய் காமிக்ஸ் உலகின் தலைமகன் டெக்ஸ் வில்லரே என உரத்து சொல்லிட்டீங்க! அருமை!👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
  16. எனக்கு கிடைத்த இந்த டெக்ஸ. இதழில் ஒரு குறை எனில் பைண்டிங் .இதழை படித்து முடித்த நேரத்தில் பல தாள்கள் தனித்தனியே வந்து விட்டது சார் ..எனவே சிறு தாமதமானாலும் பைண்டிங்கில் அடுத்த முறை இது போல் வராமல் பார்த்து கொள்ளுங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. ஒரு போட்டோ எடுத்து மெயில் பண்ணுங்க தலீவரே ; பைண்டிங்கில் புகார் செய்திட உதவும் !

      Delete
    2. எனக்கு வந்த டெக்ஸ் இதழிற்கும் அந்த பிரச்சினை உள்ளது சார்,எப்படி சொல்றதுன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன் நல்லவேளை தலைவர் முந்திகிட்டாரு....ஹி,ஹி....

      Delete
    3. // ஒரு போட்டோ எடுத்து மெயில் பண்ணுங்க தலீவரே //
      தலைவரு அதுக்கெல்லாம் அப்டேட் ஆயிட்டாரா என்ன????

      Delete
    4. Yes sir
      My book also binding issues

      Delete
  17. கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு:
    யுத்த களத்தில் நடக்கும் நிகழ்வுகளை படம்பிடித்து எதிர்கால சந்ததியினர் மற்றும் வெளியுலகிற்கு தெரிய வேண்டும் என நினைக்கும் பிரசிடென்ட் ஆசையை நிறைவேற்ற வரும் போட்டோகிராபர் ப்ராடியுன் ஆரம்பிக்கும் கதை.

    யுத்த களத்தில் நடக்கும் ரணகளத்தை வழக்கமான சிரிப்பு என்ற இனிப்பை தடவி நமது கவுண்டமணி செந்தில் கூட்டணி மூலம் கொடுத்து உள்ளார். ஆனால் யுத்த களத்தின் உண்மை மனதை ரொம்பவே சூடாக்கியது. அதுவும் பிரசிடென்ட் வீரர்களுக்கு மெடல் குத்திவிட்டு மனதிற்குள் பேசும் வசனம் நாட்டுக்காக போராடும் வீரர்களை நோக்கி கையெடுத்து வணக்கம் செலுத்த தோன்றியது.

    ப்ளூகோட் வழக்கமான வெற்றி பாதையில்.

    ReplyDelete
  18. சார் இம்மாத அட்டைவல்லயே பெஸ்ட் ட்ரெண்ட்தான்....நா படிக்க ஆரம்பிச்சாச்சு....பாதி வரை விழி முன் விரியும் ஜாலங்களும்...மனதை தடவிச் செல்லும் சோகங்களும் வார்த்தை தருவதில்லயே தரும் வார்த்தைகளும் போதவில்லயே...அட்டகாசம்....முழுதும் படிச்சி விரிவாய் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆங்.... இது திருச்செந்தூர் பதிவு வேல் ..வேல்.. !

      Delete
  19. வந்தாச்சு சார்

    ஞாயிறு காலை வணக்கம் சார் & நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  20. விடுமுறை நாள் வணக்கம்

    ReplyDelete
  21. இப்போ வரைக்கும் படிச்சதில் பிடிச்ச வரிசை..
    1. ட்ரெண்ட்..
    2. லக்கி
    3. கார்சனின் நண்பர்
    இன்னொன்னு இன்னும் படிக்கலை..

    ReplyDelete
    Replies
    1. கார்சனின் நண்பர் கதையை கலாய்க்கிற மாதிரி பீலா விடறதிலே இப்போல்லாம் நண்பர்கள் செமையா தேர்ச்சி பெற்றுட்டாங்கடோய் !!

      Delete
    2. நோ கமென்ட்ஸ்.. சிம்பிளி.....

      Delete
    3. ///கார்சனின் நண்பர் கதையை கலாய்க்கிற மாதிரி பீலா விடறதிலே இப்போல்லாம் நண்பர்கள் செமையா தேர்ச்சி பெற்றுட்டாங்கடோய் !!///--ஹா...ஹா...!!! உண்மையோ உண்மைங் சார்! இப்பலாம் டெக்ஸ் வில்லரோடு மறைமுகக்காதல் கொள்ளும் அளவு தேறிட்டாங்க! ஆனா வெளிய சொல்ல கூச்ச பட்டுகிட்டு பிடிக்காத மாதிரி ஆக்டு தர்றாங்க! எல்லாம் வில்லருக்கே வெளிச்சம்!

      Delete
  22. ட்ரெண்ட். மதன்முறையாகட்ரெண்டைசுற்றிகதை சுழல்கிறது. அழகான, அருமையான அசத்தலான, அற்புதமானசித்திரங்கள். புத்தகத்தை சும்மா புரட்டினாலே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மொத்தத்தில்ஒருகிராபிக்நாவல் படித்ததிருப்தி. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. //புத்தகத்தை சும்மா புரட்டினாலே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. //

      Super !!

      Delete
    2. //புத்தகத்தை சும்மா புரட்டினாலே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

      ###

      உண்மை...அழகான தெளிவான இதமான சித்திரங்கள் கண்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது..

      Delete
    3. அடேங்கப்பா பட்டாசாக எழுதறீங்க ராஜசேகரன் சார். சூப்பர்... தொடர்ந்து கலக்குங்க!!!

      Delete
  23. ///வாசிப்பதும் சுலபமாக அமையின், ட்ரெண்ட் நம்மிடையே டெண்ட் கொட்டாய் போட்டுத் தங்கத் தயாராகி விட்டார் என்று எடுத்துக் கொள்ளலாம்///---- இம்முறை நிச்சயமாக ட்ரெண்ட் ரசிகர்களை கவருவார் சார். அடுத்த ஆண்டும் இந்த கனடிய கெளபாய் நம்மோடு உலாவருவார்.

    ReplyDelete
  24. ///நாயகருக்கென வழங்கப்படும் ட்ரீட்மெண்ட் – என்று சகலமுமே “லக்கி லூக்கை சுட்டது யார்?” ஆல்பத்தினில் வேறுபட்டு நிற்பதைக் கண்டிருப்பீர்கள்!///
    ----ஆவலோடு வெயிட்டிங்! இம்முறை தலைக்கு பதில் லக்கிக்கே முதல் வாசிப்பு வாய்ப்பை தந்துடலாம்....!!

    ReplyDelete
  25. ///தோல்விகளின் பாரங்களை காமெடி எனும் சர்க்கரைப் பூச்சோடு சொல்ல விழைகின்றது//----

    இந்த டெக்னிக்(மருந்தை இனிப்போடு கலந்து "சிரப்"-பாக நம்ம வாயில் புகட்டித்தானே வளத்தாங்க) நம்மிடையே காலங்காலமாக இருப்பதால் இந்த கதைசொல்லும் பாணி நமக்கு ஏற்றது. ஸ்கூபியின் கலாட்டாக்கள் தான் இதில் எனக்கு பிடிச்ச அம்சம்.

    ReplyDelete
  26. லக்கியை சுட்டது யார்....

    பின் பக்க அட்டை....


    உலக வரலாற்றில் முதல் முறையாக...

    நிழலும் நிஜமும் ஒரே வேகத்தில்....உள்ளது...☺️☺️☺️☺️☺️

    ReplyDelete
    Replies
    1. நீங்களாச்சும் அதைக் குறிப்பிட்டீர்களே !!

      Delete
    2. உங்க மாணவராச்சே ......காமிக் ஆசான்

      Delete
    3. இதை நானும் கவனித்தேன்.. ஆனால் ஆறு வித்தியாங்கள் இருக்குமோன்னு தேடிட்டு இருந்தேன்...🤣🤣🤣

      Delete
  27. ///! MAXI லயனின் TEX + லக்கி லூக் மெகா கூட்டணியும், ஈரோட்டின் சர்ப்பரைஸ் என்றிருக்க – அவர்களது ராட்சஸ presence-ஐ தாண்டி வேறு யாரும் மிளிர்வது சிரமமே என்பதும் புரியாதில்லை///-----

    யெஸ்ஸூ... யெஸ்ஸூ.. தலையோட ஆளுமை அப்படி....!!!!

    இதைக்கொஞ்சம் தானைத்தலைவர் ஸ்பைடரின் தலைக்கணத்தை கடன்வாங்கி சொல்கிறேன்! ஹி...ஹி...!!!

    1980களில் இருந்த டிடெக்டிவ் & பேன்டசி காலங்களை உடைத்து கெளபாய் யுகத்துக்கு ரசனையை நகர்த்தியவர் தல!
    அஃப்கோர்ஸ் டைகரும் ஒரு காரணம்!


    இந்த கெளபாய் யுகத்தை உடைத்து அடுத்த மாற்றத்தை நம்முள் விதைக்கும் ஜானர் வரும்வரை தல தாண்டவம் தொடரும்!!!!

    எதுவாயினும் நமக்கு வன்மேற்கு வேணும்! கெளபாய் பின்னணியில் வந்த இரண்டு கி.நா.க்கள் எமனின் திசை மேற்கும், இப்போதைய பி.பி.வி.யும் பெற்ற அசாதாரண வரவேற்பே இதற்கு உதாரணம்.

    அப்படி ஒரு ஜானர் ஏதாவது தூரத்திலாவது தெரிகிறதா என கேட்டால் "சயின்ஸ் பிக்சன்" என நான் மென்மொழிகிறேன்.

    நிலத்தை வென்று விட்டோம்...
    நீரிலேயும் ஆர்ப்பரித்து விட்டோம்...

    இனி நமக்கு இருக்கும் இலக்கு வானம் தான்!

    அப்படி இருக்கும் தூர தூர கற்பனை கிரகங்களில் நிகழும் சயின்ஸ் ஃபிக்சன் கதைகளின் பால் கவனத்தை செலுத்துவோமா?????

    அதற்கான ஆரம்ப காலம் கனிந்து விட்டதாகவே நினைக்கிறேன்!
    என்ன சொல்றீங்க நண்பர்களே?????
    நாமும் விண்வெளி ஓடங்களில் பயணிப்போமா????

    ReplyDelete
  28. ///பிஸ்டலுக்குப் பிரியாவிடை... தாழிடப்பட்டிருந்த ரசனைக் கதவுகள் பலவற்றிற்கான பிரியாவிடையுமே !///---சூப்பர்... இனிமே பலப்பல கதவுகள் திறக்குமோ எடிட்டர் சார்???

    ReplyDelete
  29. நண்பர்களே...!!!!

    "கெளபாய் காமிக்ஸ் தலைமகன் டெக்ஸ் வில்லர்"

    முதன் முறையாக நம்ம காமிக்ஸ் ரசிகர்கள் தாண்டி பொதுவான ரசிகர்கள் இடையே எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

    நேற்று துவங்கப்பட்ட கனலி இலக்கிய இணைய இதழில் என்னுடைய எழுத்துக்கள் முதல் முறையாக பொதுவான ரசிகர்களை சென்று அடைந்து உள்ளது.

    டெக்ஸ் வில்லர் பற்றிய கட்டுரை எழுதி உள்ளேன்.

    நம்ம கலீல் ஜி, அவரோட காமிக்ஸ் சேகரிப்பு பற்றிய சிறுவயது நினைவுகளை "நினைவோ ஒரு பறவையாக" தொகுத்து உள்ளார்.

    இந்த நல்லவாய்ப்பை வழங்கிய நண்பர் க.விக்னேஷ்வரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பின்வரும் லிங்கில் நண்பர்கள் அந்த கட்டுரைகளை காணலாம்....

    http://kanali.in/category/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/

    டெக்ஸ் வில்லர் பற்றி வெளி உலக ரசிகர்களுக்கு சொல்லக் கிடைத்த இந்த நல்வாய்ப்பை என் பாக்கியமாக கருதுகிறேன்.

    பெரிய பெரிய எழுத்தாளர் பெருந்தகைகளுக்கு மத்தியில் எனக்கு ஒரு சின்ன இடம் கிடைக்கச்செய்த காமிக்ஸ்க்கும், எடிட்டர் சாருக்கும் உளம் கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் டெக்ஸ்..:-)

      Delete
    2. தலைவர் @
      எடிட்டர் சார்@
      நன்றிகள்🙏🙏🙏🙏🙏

      மனசுக்குள் வாழ்த்திய அன்பர்களுக்கும் நன்றிகள்!

      Delete
    3. @ சேலம் டெக்ஸ் விஜயராகவன்.

      மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.வன்மேற்கின் நிகரற்ற நாயகனுக்கு நீங்கள் அளித்துள்ள மதிப்பை உணர முடிகிறது.

      கலீல் ஜி அவர்களின் காமிக்ஸ் குறித்த கட்டுரையும்,அவரின் வற்றாத காமிக்ஸ் நேசமும் பெருமிதமாக உள்ளது.இந்த தளத்தில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      வாழ்த்துக்கள் இருவருக்கும்.

      Delete
    4. நன்றிகள் ஸ்ரீ! 🙏🙏🙏

      டெக்ஸ் வில்லரின் சிறப்புகளை சொல்ல கிடைத்த வாய்ப்பு என்னை பொறுத்து வரப்பிரசாதம்.

      ஒருவேளை இத்தாலி மொழியில் டெக்ஸ் வில்லர் படித்து இருந்தேன் எனில் டெக்ஸ் என்னுள் இந்தளவு ஆக்ரமித்து இருக்க மாட்டார்.

      எடிட்டர் சாரின் தனிகவனம் பெற்ற மொழி பெயர்ப்பும், டெக்ஸ்க்கு என அவர் தேர்வு செய்து உள்ள தனிபாணி எழுத்துக்களுமே காரணம்!

      எடிட்டர் சார் இத்தனை காலம் செதுக்கிய டெக்ஸ் எனும் ஆளுமையை கண்ணாடி பெட்டியில் வைத்து காட்சி படுத்தியது மட்டுமே என் பணி!

      Delete
    5. கலீல் & விஜயராகவனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

      Delete
  30. சாலைகளெல்லாம் ஜுவாலைகளே...
    இருள் மட்டும் என் பாதைதனில்!

    என்று முடிகிற கடேசி பிரேமினிலே
    ரம்மியமாய் விளக்கேத்தும் அந்த
    அம்மிணி தான் யாரென்று கொஞ்சம்
    யாருக்கேனும் தெரிஞ்சா தான் சொல்லுங்களேன்!!!

    ReplyDelete
    Replies
    1. அது டிரெண்டின் காதலி ஆனக்ஸ்

      Delete
    2. எஸ்...


      எனக்கு புரிந்தது மிதுன் சாருக்கே புரியவில்லையா ..

      எங்கேயோ போயிட்டேடா பரணி..:-)))

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. // ரம்மியமாய் விளக்கேத்தும் அந்த
      அம்மிணி தான் யாரென்று கொஞ்சம்
      யாருக்கேனும் தெரிஞ்சா தான் சொல்லுங்களேன்!!! //
      அதான் நீங்களே சொல்லிட்டிங்களே,விளக்கேத்தும் அம்மணி என்று......ஹி,ஹி,ஹி....

      Delete
    5. அது வேறொரு குடியானவள்.ஆக்னஸாக இருக்காது.

      Delete
    6. அடுத்த ஆல்பத்திலும் டிரெண்டின் காதலில் செம ட்விஸ்ட் காத்துள்ளது !

      Delete
  31. ப்ளூகோட்ஸ் பட்டாளத்தில் மொத்தம் எத்தனை கதைகள்? முடிந்தால் அடுத்த வருடம் இவர்களுக்கு இரண்டு கதைகள் கொடுக்க முடியுமா விஜயன் சார்?

    அதேநேரம் இந்த கதைக்கு உங்களின் மொழிபெயர்ப்பு செமையா உள்ளது. உங்களின் நகைச்சுவை உணர்வுக்கு இந்த கவுண்டமணி செந்தில் ஜோடி சரியான தீனி. இவர்களின் கதைக்கு உங்கள் மொழிபெயர்ப்பை தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. "ஆண்டுக்கொன்று"என இன்னமும் தொடர்ந்திடும் தொடரிது சார் ; 62 ஆல்பங்கள் இப்போதுவரை உள்ளன ! இதனை எட்டிப் பிடிப்பதாயின் ட்யுராங்கோ பாணியில் ; தோர்கல் பாணியில் ஆண்டொன்றுக்கு 4 / 5 என மொத்த மொத்தமாய் வெளியிட்டிட வேண்டி வரும் !

      Delete
    2. முடிந்தால் வருடத்திற்கு இரண்டு கதைகளை போடுங்கள் சார்.

      Delete
  32. இந்த மாத லக்கி கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பக்கம் பக்கமாக எழுதலாம்.

    அந்த கதையில் ஒரு கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. புகையிலை தட்டுப்பாடு ஏன்? அது அரசாங்கம் விற்பனை செய்யக் கூடாது என்று ஏதாவது சட்டம் போட்டு அதனால் கள்ள மார்கெட் மூலம் வருவதாலா?

    ப்ளூகோட் கதையில் யுத்த நிகழ்வுகள் மற்றும் அதிகாரிகள் அடுத்தவரின் உழைப்பை தங்களுக்கு சாதகமாக எப்படி உபயோகிக்கிறார்கள் என அழகாக சொல்லி உள்ளார்கள். இந்த சீரீயஸான கதையை ஸ்கூபி & ரூபி என்ற இரு கதாபாத்திரங்கள் நகைச்சுவை என்ற கயிறு மூலம் தேரை ஓவ்வொரு முறையும் வெற்றிகரமாக இழுத்து வருகிறார்கள். ஸ்சார்ர்ர்ஜ் :-)

    ReplyDelete
    Replies
    1. அந்த கதையில் ஒரு கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. புகையிலை தட்டுப்பாடு ஏன்? அது அரசாங்கம் விற்பனை செய்யக் கூடாது என்று ஏதாவது சட்டம் போட்டு அதனால் கள்ள மார்கெட் மூலம் வருவதாலா?

      #######


      வேறு பெரு நகரில் இருந்தே புகையிலை அங்கே வந்தடைகிறது இருக்கும் ஒரே கடைக்கு..மழைக்கால சூழலுக்கு வேகமாக இருக்கும் புகையிலை விரைவில் விற்பனையானதும்..வழக்கமாக வரும் வேகனிலும் மழையின் காரணமாக புகையிலை பாதிக்கப்பட்டு இம்முறை கொண்டு வரப்பட வில்லை என்பதை வேகனின் ஓட்டுனரும் தெரிவிக்கிறார்.எனவே தான் அந்த புகையிலை தட்டுப்பாடு..

      Delete
    2. ஆனால் அந்த விஷப்பாம்பு அப்பாவுக்கு மட்டும் எப்படி சுருட்டு கிடைத்தது?

      Delete
    3. கூடுதலாய்க் காசை வீசினால் கடைக்காரன் தருவதை பெருசு பறைசாற்றுகிறதே சார் !

      Delete
    4. அப்ப காசுதான் பிரச்சினை. இன்னும் கொஞ்சம் நிதானமாக கதையை நான் படிக்க வேண்டும் போல் தெரிகிறது.

      Delete
  33. டெக்ஸ் கதையை படிக்கலாம் என சில பக்கங்கள் படித்த பிறகு வழக்கமான கதை போல் தெரிகிறது என்பதால் கைகளில் இப்போது "சாலைகளெல்லாம் ஜுவாலைகளே" :-)

    ReplyDelete
    Replies
    1. இப்படி எல்லாம் சிரிக்கக் கூடாது. சில மாதங்கள் கார்ட்டூன் கதைகள் வராத போது அந்த மாத டெக்ஸ் கதைகளை படித்து சந்தோஷப்பட்டு கொள்வேன். நீங்கள் மனதில் நினைப்பது என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிகிறது, டெக்ஸ் கதை வராத மாதத்தில் என்ன செய்வீர்கள் என்று தானே, சத்தமா கேளுங்கள்; அந்த மாதம் வந்த கார்ட்டூன் கதையை படித்து சிரித்து கொள்வேன்.

      Delete
    2. சாருக்கு டெக்ஸ் கதை கார்ட்டூன் போல. கார்ட்டூன் கதை டெக்ஸ் போல. இதுக்கு பேர் தான் மாத்தி யோசிங்கிறதோ?

      Delete
    3. பத்மனாபன் @ இப்படி ஓப்பனா சொல்லக்கூடாது :-) அப்புறம் டெக்ஸ் ரசிகர்களுக்கு என்னை ரொம்ப "பிடிக்க ஆரம்பித்ததுவிடும்" :-)

      Delete
    4. பெரும்பாலான ரசிகர்களை கவராத ஜெரமையா உங்களுக்கு பிடிக்குது எனும்போது உங்களுடைய ரசனை சற்றே வித்தியாசமான ஒன்றுதானே பரணி!

      டெக்ஸ் வில்லரையும் அதே வித்தியாசமான அனுகுமுறையோடுதான் ரசிப்பீர்கள். எனவே அவர் கதை காமெடியாக உங்களுக்கு தெரிவதில் வியப்பொன்றும் இல்லையே நண்பரே!

      டெக்ஸ் இலகுரக வாசிப்பு எனும்போது அவரவர்க்கு எது பிடிக்குமோ அப்படி பார்க்கிறோம்.

      எல்லா வித ரசிகர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பொருந்திப் போவது தலயின் தனிச்சிறப்பு!
      எப்படியோ தலையை ரசிக்கிறீர்களே தலையின் ரசிகர்களாக எங்களுக்கும் மகிழ்ச்சியே!

      Delete
  34. இந்த மாத அட்டைப்படத்தில் மிகச்சிறந்தது "லக்கி லூக்கைச் சுட்டது யார்" அதுவும் அந்த ஊதா வண்ணம் மனதை வானத்தில் பறக்க விட்டு விட்டது. இரண்டாவது ப்ளூகோட் பட்டாளம். மூன்றாவது டிரெண்ட்.

    ReplyDelete
  35. ப்ளூகோட் பட்டாளம் கதைக்கு இன்னும் கொஞ்சம் பொருத்தமான தலைப்பாக வைத்து இருக்கலாம் என்பது எனது எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. Blues in black & white'என்பதே
      ஒரிஜினலின் தலைப்பு - கருப்பு வெள்ளையிலான போட்டோக்களைக்
      கதை நெடுகிலும் எடுப்பதைக் குறிப்பிடும் விதமாய் !

      அதைத் தழுவியே தமிழில் நமது தலைப்பு sir !

      Delete
    2. பட்டாளத்தில் படக்கூத்து :-)

      Delete
  36. டியர் எடிட்டர்

    நேற்று சற்றே தாமதமாக பார்சல் வந்த கையோடு வாசித்தது :

    - லக்கி லூக்
    - ட்ரெண்ட்

    இரு கதைகளும் நன்றாய் இருந்தன. உங்களின் ரீடிங் ஆர்டர் பார்த்தாலும், சென்ற மாதமும் இந்த மாதமும் சேர்ந்து வரிசையாய் பல சீரியஸ் கதைகளைப் படித்ததால் மூன்றாவதாக ப்ளூ கோட்ஸ் வாசிக்க இருக்கிறேன்.

    ட்ரெண்ட் சித்திரங்கள் அழகு - (சித்திரப் பாவைகளுமே ;-)). கதை என்னமோ ஒரு மாற்று குறைகிறது. என்னவென்று சொல்ல முடியவில்லை. லக்கி லூக்கின் புது அவதார் சூப்பர். சிகரெட் புல்லுக்கு மாறிய கதை - வெகு நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.

    அடுத்த மாத இதழ்களும் எதிர்பார்ப்பை உண்டு செய்கின்றன !

    ReplyDelete
    Replies
    1. //கதை என்னமோ ஒரு மாற்று குறைகிறது. என்னவென்று சொல்ல முடியவில்லை//


      கதை சொல்லும் பாணியில் தென்படும் அந்த சுலபத்தனங்களை outgrow செய்து விட்டதால் இருக்குமோ சார் ? அல்லது ஆக்ஷன் குறைவு என்பதால் ?

      Delete
  37. சார் இந்த மாதம் தல டெக்ஸ் சரவெடி வெடித்தது போல் தீபாவளிக்கும் தலையேட கதையும் அதே போல் இரு மடங்கு வெடித்தால் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி, தல தீபாவளி

    ReplyDelete
    Replies
    1. வெடிக்க விட்டாப் போச்சு சார் !

      Delete
    2. ஆமாம் சார் ஒரு 200 சரவெடி பாக்கெட் ஒன்றை அவருக்கு தீபாவளிமலருடன் சேர்த்து அனுப்பி வையுங்கள் :-)

      Delete
  38. சாலையெல்லாம் ஜூவாலைகளே.

    வழவழப்பான மெல்லிய ஊதா கலர் ரேப்பரில், தனியனாய் க்ளோஸ் அப்பில் ட்ரெண்டின் கொஞ்சம் வசீகரித்தது.விவரிக்க இயலா உணர்ச்சிகளோடு காட்சிதரும் ட்ரெண்டின் மேல் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும்.அந்த ஆர்வமே முதலில் சா.ஜூ வை படிக்கச் செய்தது.

    காலைப்பனி போல துல்லியமான தெளிவான கதையோட்டமே ட்ரெண்டின் ட்ரென்ட் .இம்முறை இதில் ஒரு மூடுபனியை படரவிட்டு, சிறிது சஸ்பென்ஸை கலந்து (அது சஸ்பென்ஸ் என்று யூகிக்க முடியவில்லை என்பது ப்ளஸ் பாயிண்ட்.) கொஞ்சம் திருப்பங்களோடு முடிகிறது.இந்த கதைவரிசையில் இது ஒரு நல்ல மாறுதல்.சிற்பம் போன்ற ஓவியங்கள் கோபுரமாக ஆச்சரியப்பட வைத்தன.இதனால் ஏற்பட்ட பின்விளைவு என்னவென்றால், அடுத்த 'ட்ரெண்டை 'ஆவலுடன் எதிர்பார்க்க வைத்ததே.

    ReplyDelete
    Replies
    1. தலைப்பு மட்டும் கதைக்கு ஒட்டவில்லை எனத் தோன்றுகிறது.

      Delete
    2. சிற்பம் போன்ற ஓவியங்கள் கோபுரமாக ஆச்சரியப்பட வைத்தன.இதனால் ஏற்பட்ட பின்விளைவு என்னவென்றால், அடுத்த 'ட்ரெண்டை 'ஆவலுடன் எதிர்பார்க்க வைத்ததே.

      ####

      உண்மை நண்பரே ..எனக்கும் அதே...

      Delete
    3. இந்த ஆல்பத்தின் ஒரிஜினல் தலைப்பு ' When the lamps are lit '.... 'விளக்கு வைக்கிற வேளையிலே' என்பது போலான அர்த்தத்தில் ! அதைக் கொஞ்சம் மிகையாய் சொல்ல முனைவதே நம் தலைப்பு !

      Delete
    4. கொஞ்சம் யோசிச்சு பார்க்கிறேன்.பாக்யராஜ் பாணியில் 'வெளக்கு வச்ச நேரத்தில 'னு டிரெண்டுக்கு வச்சிருந்தா என்னாவது?

      அய்யகோ.!

      Delete
    5. என்ன , அடுத்த மாத ட்ரெண்ட் கதையோடதலைப்பு தந்தான்னன்னான்னு இருந்திருக்கும்.

      Delete
    6. @Padmanaban.R @Govindaraj Perumal

      ஹா ஹா! :) :) :)

      Delete
  39. சாலைகளெல்லாம் ஜுவாலைகளே சிம்ளி சூப்பர். டிரெண்ட் மீண்டும் மனதை கனமாக்கி விட்டார்.

    ReplyDelete
  40. லக்கிலூக்கை சுட்டது யார்..?


    அட்டைப்படமே இந்த முறை லக்கியை காமெடியாக பார்க்க வேண்டாம் என்று தெரிவித்து விட்டதாலும் ,வழக்கமான லக்கியில் நகைச்சுவை மிளிர்ந்தாலும் அது லக்கியால் இல்லாமல் ஜாலி ஜம்பராலும் ,பிற கதாபாத்திரங்களாலும் ,ஏன் வில்லனாக தோன்றும் நபர்களாலும் தானே நடைமுறை வழக்கம் என்பதால் எந்த ஏமாற்றமும் இல்ல . லக்கியும் ஒரு ஆக்‌ஷன் ஸ்டார் தானே ..எனவே இந்த சீரியஸான லக்கியின் சாகஸம் என்னை பொறுத்தவரை மிக விறுவிறுப்பான ஒரு ஆக்‌ஷன் கெளபாய் சாகஸத்தை கண்முன் காட்டியது.லக்கியை விட ஜாலிஜம்பர் தண்ணீரின் மூலம் பதிலடி கொடுக்கும் காட்சி அட்டகாசமானது என்பதோடு அந்த காட்சி வழக்கமான ஜாலிஜம்பராகவும் அடையாளம் காட்டியது..,ஒரு சீரியஸான பதிலடியாகவும் அடையாளப்படுத்தியது.மேலும் புகையிலை புகைப்பிடிப்பதை விட்டு புல்லை பிடிக்கும் அந்த ஸ்டைலுக்கான காரணமும் கதையில் முக்கிய பங்காக வகிப்பது அருமை.மொத்தத்தில் சீரியஸ் லக்கியும் ஜம்போ காமிக்ஸ்ற்கு லக்கியே...


    இதுவரை படித்த சாலையெல்லாம் ஜூவாலைகள் ,ஒரு ரெளத்திர ரேஞ்சர் ,லக்கிலூக்கை சுட்டது யார் மூன்றுமே முக்கனிகளை போல மூன்று விதமாய் சுவைத்தது.


    கூடுதலாக காணப்படும் நீலக்கனி ( ப்ளூகோட் ) போனஸை போல கூதுகலபடுத்தும் என்ற நம்பிக்கை பலமாகவே இருப்பதால் ஆகஸ்ட்டும் ,செப்டம்பரும் ஒட்டுமொத்தமாய் வெற்றி கொடி கட்டி பறக்கிறது.

    ஆனாலும் ப்ளூகோட்டை படித்து விட்டு மீண்டும் வருவேன் என்பதை சொல்லி கொண்டு போருக்கு புறப்படுகிறேன்...

    # ஜார்ஜ் #

    ReplyDelete
    Replies
    1. தலீவரே...உங்கலுக்கு கேப்டன் ஸ்டார்க் தேவலாம் போலும் மனுஷன் "சார்ஜ்ஜ்ஜ்" ன்னு குரல் எழுப்புவார் !

      நீங்கபாட்டுக்கு 'ஜார்ஜ்' ன்னு கூவிட்டு இருக்கீங்க !!

      Delete
    2. ஹீஹீ...அது கூகுள் ஸ்பெல்லிங் மிஸ்டேக் சார்..:-)

      Delete
  41. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி கதையாக புத்தகம் வந்தும் கழுத்து வலி காரணமாக வாசிப்புக்கு வீட்டில் (மென்மையான) தடா. தூய தமிழில்,புக்கை பிடுங்கி வச்சிட்டாங்க அப்டின்னும் சொல்லலாம். நான்கு நாட்களாக கழுத்து வலிக்கு பிசியோதெரபி சிகிச்சை .அதனால் தான் தடா.

    ReplyDelete
    Replies
    1. ஆரோக்கியம் முக்கியம் அமைச்சரே ! தானாய் நேரும் நோவுகளுக்கும் சரி மனையாள் பறக்கவிடக்கூடிய பூரிக்கட்டைச் சந்திராயனால் நேரக்கூடிய நோவுகளுக்கும் சரி - முன்னுரிமை தருவது காலத்தின் கட்டாயம் !

      Delete
    2. எங்க வீட்டில் பூரிக்கட்டை பறக்க No Chance. (ஹி.ஹி. நானே இட்டுக் கொடுத்து விடுவேனாக்கும்). நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி .

      Delete
  42. 1) லக்கி

    2) டெக்ஸ்

    3) ப்ளூகோட்டட்

    4) .........

    ReplyDelete
  43. I read all the comics.
    My sister also read all the books.

    Our ratings this time.

    1. சாலையெலாம் ஜுவாலைகளே
    2. Tex willer Blue coat Lucky Luke All are equal.
    We want only comedy Lucky Luke.

    My Tex Willer book became individual papers.

    Worst binding.

    ReplyDelete
  44. பரவலாக வரும் சேதிகள் கதைகள் எல்லாம் அச்சா ஹை ன்னு சொலறதால நம்பள் பகுத் குஷி ஹை.

    2020 ல் இல்லன்னாலும் 2021 லோ அல்லது 2020 ஏப்ரலில் துவங்கும் ஜம்போவிலோ ஒரு Sci FI துவங்கும் என்ற கனவுகளுடன் பை..பை...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருட சந்தாவில் ஒரு ஸ்லாட் கொடுத்தால் நன்றாக இருக்கும்...

      Delete
  45. விஜயன் சார், இது போன்ற நீண்ட வார இறுதியில் 4 கதைகள் எல்லாம் படிக்க போதவில்லை. அடுத்த வருடம் கொஞ்சம் பார்த்து செய்யுங்கள் :-)

    ReplyDelete
    Replies
    1. இக்கட தொங்கும் நாக்கார் பற்றியும் சித்தே யோசிக்க வேண்டி வருதே சார் !

      Delete
    2. அட போங்க சார்.. இரண்டு கால் கட்டை விரல்களை ஒரே நேரத்தில் வாயில் வைத்து பலமுறை கின்னஸ் சாதனை செய்த நீங்கள் இதனைப் பற்றி கவலைப்படக் கூடாது :-)

      Delete
    3. weekend ஆ . நானெல்லாம் இப்ப ஆபீஸ்ல உட்கார்ந்து சாலரி ப்ரிபேர் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
      Tex மட்டும் தான் படிச்சு முடிச்சேன்.

      Delete
    4. நான் அட்டைப்படம் புரட்டி பார்த்ததோடு சரி.

      Delete
  46. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்😃😃😃

    ReplyDelete
  48. //சாலைகளெல்லாம் ஜுவாலைகளே...
    இருள் மட்டும் என் பாதைதனில்!

    என்று முடிகிற கடேசி பிரேமினிலே
    ரம்மியமாய் விளக்கேத்தும் அந்த
    அம்மிணி தான் யாரென்று கொஞ்சம்
    யாருக்கேனும் தெரிஞ்சா தான் சொல்லுங்களேன்!!!//

    பரணி சொல்வது போல் ட்ரெண்டின் காதலியா?

    அல்லது GP சொல்வது போல வேறு சாதாரண குடியானவளா?

    மூன்றாவதாக இன்னொரு நபராகவும் இருக்கலாம்?

    அந்த பெண் யார் என்று சரியாக யூகிக்கும் போது, கதையில் சொல்லப்படும் மறைமுக அர்த்தத்தையும் புரிந்து கொள்ளலாம்!

    ReplyDelete
    Replies
    1. சாண்டில்யன் பாணியில் யோசித்தால்.,.

      Delete
  49. முதல்
    ப்ளு கோட் யுத்த களத்திலே கிச்சு கிச்சு
    2 Tex வழக்கம் போல் ஆனா அதிரடி செம
    3 லக்கி லூக் ஜாலி நஹிஹி
    4. ட்ரெண்ட் இனிமே தான் படிக்கணும்

    ReplyDelete
  50. எடிட்டர் சார், அவரது பணியாளர்கள், நண்பர்கள், போராட்ட குழு தலைவர், மற்றும் உள்ள அனைத்து ஹீரோக்களின் அணித் தலைவர்கள் & உறுப்பினர்கள் & காமிக்ஸ் அன்பர்கள் அனைவருக்கும்,
    மானிடராய்ப் பிறந்த நமக்கு அறிவையும், அதனை பயன்படுத்தி சிந்திக்கும் திறன் எனும் ஞானத்தையும் வழங்கிய விநாயகரை வழிபடும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!


    காதில் கூடை கூடையாக பூ சுற்றும் நாயகர்களை ரசிக்க ஆரம்பித்து இன்று எத்தனை ஆழமான காமிக்ஸ் புனைவாக இருந்தாலும் எளிதில் புதிரை விடுவித்து ரசிக்கும் பன்முக ஆற்றலை வளர்த்துக் கொண்டு வருகிறோம். அந்த திறன் மென்மேலும் மெருகுறவும், புதிய புதிய சவால்களை ரசிக்கும் பேறும் பெற விநாயகரை இந்நன்நாளில் பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  51. அடுத்த வருடம் சயின்ஸ் பிக்சன் கதை வரும் என்றால் என் ஆதரவு ஒட்டு பதிவு செய்கிறேன் சார்

    ReplyDelete
    Replies
    1. சந்திராயனே இப்போத்தானே நிலவை எட்டவுள்ளது நண்பரே ? நாமோ இப்போது தான் தேஜஸ் ரயில் ஓட்டத் துவங்கியிருக்கிறோம் ! So இன்னும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்வோமே ?

      Delete
  52. சாலையெலாம் ஜுவாலைகளே” -part 2வருமா...
    ட்ரெண்ட் க்கு ஒரு தம்ஸ் அப்...

    ReplyDelete
    Replies
    1. வாவ் ! நம்பர் போடும் நண்பரையே பின்னூட்டமிடச் செய்து விட்டாரா டிரெண்ட் ? Awesome !!

      டிரெண்டின் அடுத்த மாத இதழ் கிட்டத்தட்ட இந்த ஆல்பத்தின் நீட்சி மாதிரி சார் !

      Delete
  53. யப்பா ட்ரெண்ட், என்னைய மன்னிச்சிடுப்பா. நீயி ரொம்ப படுத்துறனு நெக்‌ஸ்ட் இயர் உனக்கு ஒரே ஒரு ஸ்லாட் போதும்ன்னு ஈரோடு புத்தக விழா வாசகர் சந்திப்பில் கைய தூக்கிட்டம்பா. இப்படி ஜுவாலையா கொதித்து எழுவாய்னு தெரியாம போச்சுப்பா. ட்ரெண்ட் இனிமே நி என் பிரெண்ட்.

    'சாலையெல்லாம் ஜுவாலைகளே' மனசெல்லாம் சந்தோஷ அலைகளே !!

    ReplyDelete
    Replies
    1. //ட்ரெண்ட் இனிமே நி என் பிரெண்ட்//

      அடடே....கவிதை !! கவிதை சார் !!

      Delete
    2. கார்த்திகேயன் @ நமது ஆசிரியர் 2020 அட்டவணையில் டிரெண்ட்க்கு இரண்டு slot கொடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

      Delete
  54. ஒரு ரௌத்திர ரேஞ்சர்: முதல் சில பக்கங்களை படித்த பிறகு இது வழக்கமான பழிவாங்கும் கதை என நினைத்து தொடர்ந்து படித்த பிறகு கடைசி நான்கு பக்கங்களிலும் எதிர்பாராத ஒரு திருப்பம், மொத்த கதையை ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவமாக மாற்றி விட்டது. இரு ரேஞ்சர்களின் பிள்ளை பாசம் ஒரு குள்ள நரி வில்லன் மற்றும் அதிரடி க்ளைமாக்ஸ் என அட்டகாசமான கதை.

    ReplyDelete
  55. Replies
    1. ஹலோ லயன் முத்து காமிக்ஸ் ஆபீஸ்ஸா எப்ப சார் செப்டெம்பர் மாத புத்தகங்களை அனுப்புவீங்க? என்னது இந்த மாச கடைசி தான் அனுப்பி வைப்பீங்களா? அப்ப அடுத்த 28 நாட்கள் என்ன பண்ணுறது? பார்த்து செய்யுங்கள் சார். :-)

      Delete
  56. ஒரு நிறைவான காமிக்ஸ் மாதம் :-) நன்றி.

    ReplyDelete
  57. கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு :
    அமர்களமாய் அதகளமாய் காலையில் கிளம்பி அடிவாங்கி அரைஜீவனாய் மாலையில் திரும்பும் ப்ளூகோட் பட்டாளத்திற்கு வருகை புரிகிறார் ஒரு போட்டோகிராபர்.. போர்காட்சிகளை படம்பிடிக்க வேண்டி.!

    காமிரா, போட்டோ இவற்றைப் பற்றி பெரிதாக ஞானம் இல்லாத ப்ளூகோட்ஸ்., அந்த போட்டோகிராபரையும் காமிராவையும் வைத்துக்கொண்டு அடிக்கும் கூத்தே கதை.!

    போட்டோகிராபருக்கு துணையாக ஸ்கூபி & ரூபி நியமிக்கப்பட தொடர்கிறது காமெடி கலாட்டா.!
    வெறும் காமெடி மட்டுமல்லாது ஸ்கூபி ரூபி இடையே இருக்கும் அற்புதமான நட்புணர்வை மறைமுகமாக அழகாக கதையில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.!
    ப்ரசிடென்ட் லிங்கன் கூட கதையில் ஒரு பாத்திரம்.! கேப்டன் ஸ்டார்க்கும் அந்த ஜெனரலும் மாறிமாறி அடிக்கும் லூட்டிகள் செம்ம.!

    ஆகாயத்தில் அட்டகாசம், காதலிக்க குதிரையில்லை, நானும் சிப்பாய்தான் வரிசையில் இந்தக் கதையும் ப்ளோகோட் பட்டாளத்துக்கு பெருமை சேர்க்கும்.!
    ப்ளாக் ஹ்யூமர்.. லாஜிக் போன்றவற்றிற்கு லேஆஃப் கொடுத்துவிட்டு கதையினுள் நுழைந்தால் தாராளமாக வாய்விட்டு சிரிக்க பல சங்கதிகள் உள்ளன..!

    ரேட்டிங் 10/10

    கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு : சிரிப்புதான் எனக்கு புடிச்ச ஜானரு.

    ReplyDelete
    Replies
    1. Agreed .. I am at page 22 of this cartoon galaattaa ! Really funny .. Glad that I chose this as third in the order of reading. After a riotous laugh I can focus in a fiery Tex saga !!

      Just awesome to wind up the last 10 books - all of which - grab your nearest wooden table and hug it - are super hits in a row !!

      Delete
  58. லக்கி லூக்கை சுட்டது யாரு :

    தலைப்பையும் அட்டைப்படத்தில் லக்கி லூக் குப்புறக்கிடப்பதையும் பார்த்ததும் தோன்றியது...

    லக்கியை யாரால் சுடமுடியும்..!? ஒருவேளை நிழல் முந்திக் கொண்டிருக்குமோ., அல்லது துப்பாக்கி ரிப்பேர் ஆகி பின்னால் சுட்டிருக்குமோ என்றெல்லாம் குழம்பிப் போய் கதையினுள் நுழைந்தால் லக்கி லூக்கை யாராலும் சுடமுடியாதே என்ற என் நம்பிக்கை பொய்த்து போகவில்லை.!

    இது காமெடிக் கதை அல்ல என்று பலமுறை எடிட்டர் சாரால் எச்சரிக்கை கொடி காட்டப்பட்டுவிட்டதால் சிரிப்பை எதிர்பார்த்து படிக்கவில்லை.!

    கதையின் ஆரம்பமே நிமிர்ந்து உட்காரவைத்துவிட்டது.! நகரத்தையை கன்ட்ரோலில் வைத்திருக்கும் நகர ஷெரீப் உள்ளிட்ட மூன்று சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய முசுடு தகப்பனார் . அவர்களின் பார்வையில் லக்கி லூக்கின் வருகை மிக இடைஞ்சலான ஒன்றாகப் படுகிறது.!

    அத்தோடு ஒரு வண்டித் தங்கத்தை ஒரு செவ்விந்தியன் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக ஒரு வழக்கு...! அந்த வழக்கு ஊர்மக்களால் லக்கி வசம் ஒப்படைக்கப்படுகிறது.!

    ஷெரீப்பின் சகோதரர்கள் தொடர்ந்து லக்கிக்கு இம்சை கொடுக்க., டாக் வெட்னஸ்டே என்ற முள்னாள் சாகச வீரருடன் இணைந்து அந்த இம்சைகளை முறியடித்து வழக்கையும் முடிவுக்குக் கொண்டுவருகிறார் லக்கி லூக்.!

    (ரீல் ஹீரோ ரியல் ஹீரோவாக... ஆனால் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ இங்கே ரீல் ஹீரோவாக..!)

    ஒரு டெக்ஸ் வில்லர் பாணியிலான சீரியஸான கதையில் லக்கி லூக் தோன்றியிருக்கிறார்.!
    அதே போல லக்கிலூக் பாணியிலான ஒரு அக்மார்க் காமெடி கதையில் டெக்ஸ் & கோ தோன்றினால் சூப்பராக இருக்குமே என்றொரு விபரீத ஆசை எட்டிப்பார்க்கிறது.. ஹிஹி.!
    (ஏற்கனவே டெக்ஸ் கதைகள் காமெடிதானேன்னு சும்மா சும்மா வந்து காமெடி பண்றவங்க மேற்கண்ட வரிகளை லாங்ஜம்ப் செய்துவிடவும்.)

    லக்கி லூக்கை சுட்டது யார்- சூரியனை யாரால் சுடமுடியும்.?

    ரேட்டிங் 8/10

    ReplyDelete
  59. டியர் எடிட்டர்

    தமிழிலும் ஒரு முறை எழுதிவிடுகிறேனே .. வாசிப்பில் நான் மூன்றாவதாக தேர்வு செய்தது - The Bluecoats ! அருமையான சிரிப்புச் சிதறல் - 22ம் பக்கத்தில் உள்ளேன். அடுத்து வருவது ஒரு அக்மார்க் tex சாகசம் என்னும்பொழுது வரிசையாக நமது 10 இதழ்கள் - அண்டர்டேக்கர் துவங்கி ஒரு சூப்பர்ஹிட் என்றாகிறது !

    2-3 இதழ்கள் சூப்பர் ஹிட் என்பதே மகிழ்ச்சி கொள்ளச்செய்யும் ஒரு விஷயமே - நீங்கள் சொல்வது போல .. இங்கோ 10 இதழ்கள் ஒரு சேர நன்றாய் வந்திருப்பது அபாரம் ...


    தலைமுறை எதிரி
    தி அண்டர்டேக்கர்
    பிஸ்டலுக்கு பிரியாவிடை
    Democles
    Tex மாக்ஸி
    லக்கி மாக்ஸி
    லக்கி லூக் Graphic நாவல்
    Trent
    The Bluecoats
    Tex - ஒரு ரௌத்திர ரேஞ்சர்

    இத்தோடு பாரிசில் ஒரு கவ்பாய் + உத்தம புத்திரன் - Lion Annual-ம் சேர்த்தால் கடந்த இரண்டு மாதங்களில் Ben Stokes செய்த அதகளத்தைப் போலவே (CWC மற்றும் Third Ashes Test) போன்றே அடித்து ஆடியிருக்கிறீர்கள் ! மகிழ்ச்சி !!

    பின்குறிப்பு : இனி வரும் மாதங்களுக்கு மட்டுமன்றி வருடங்களுக்கே நமது altimeter -ஐ உயர்த்தி வைத்துவிட்டது, கடந்த இரண்டு மாத தடதடக்கும் பயணம் !! :-) எப்படி சமாளிக்கப் போறீங்க .. பாக்கத்தானே போறேன் .. அந்த காளியோட ஆட்டத்தை ;-) ;-)

    ReplyDelete
    Replies
    1. மாலையப்பர் போன்ற ஒரு முதியவரை விட்டு ஒன்றோ அல்லது இரண்டோ கூட - பெரிய்ய்யய்யய்ய பூசணிக்காயாய் வாங்கி, அனைவரையும் (உங்க டீம்தான்) நிற்க வைத்து சூடம் ஏற்றி (அட பூசணியில்தாங்க ..) பல சுற்றுக்கள் சுற்றி .. மடேல் என்று உங்கள் வழக்க திக்கைப் பார்த்து உடைக்கவும் ... அவசரமாக !!

      Delete
    2. ஒருவாட்டி...ரெண்டுவாட்டி ...மூன்றாவதுவாட்டி வாசிக்கிறேன் சார் உங்களது பின்னூட்டத்தை !! சில நேரங்களில் perspectives வேறாய் இருக்கும் போது தான் - உள்ளங்கையில் உள்ளதொரு வஸ்து கூட கண்ணுக்குப் புலப்படும் போலும் !

      ஈரோடு முடிந்த கையோடு செப்டெம்பர் combo வின் பணிகள் ; இதோ அதனைத் தொடர்ந்து அக்டொபரின் அடுத்த 4 இதழ் pack மீதான லயிப்பு ; அது இருக்கவே தீபாவளி மலர் மீதான கவனம் & not to forget 2020 -ன் அட்டவணைப் பணிகள் என பச்சைக்குதிரை தாண்டும் படலம் ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ந்திடுவதால் - நிதானித்துத் திரும்பிப் பார்க்கத் தோன்றிடவுமில்லை ; அதற்கான அவகாசமும் இருந்திடவில்லை ! So நமது சமீப ஹிட் இதழ்களின் பட்டியலை உங்கள் பின்னூட்டத்தில் வாசித்துப் பார்க்கும் போது ...'அட...ஆமாம்லே ?' என்ற புரிதலோடு வாயெல்லாம் பல்லாகிப் போனது !!

      பத்துப் பன்னிரண்டு இதழ்கள் ஒருசேர சுவாரஸ்யமாய் அமைவதெல்லாம் செம குதிரைக் கொம்பான விஷயம் எனும் போது லைட்டாய் உள்ளுக்குள் ஜெர்க்கடிக்கவும் செய்கிறது !! நீங்கள் சுட்டிக் காட்டுவது போல் உயரங்களைத் தொடுவது ஒரு கடின காரியமெனில், அந்த உயரங்களில் தொடர்வதும், மேற்கொண்டு உசக்கே ஆந்தை விழிகளைப் பதிப்பதும் அதை விடக் கடினமே என்பது புரிகிறது !! அதே போல இந்தத் தரத்தைத் தொடரும் பொருட்டு, நிச்சயமாய் நிறையவே மெனெக்கெட வேண்டியிருக்கும் என்பதும் strike ஆகிறது ! ஜெய் பாகுபலி !! ஜெய் மனிடோ !! சீக்கிரமே ஏதேனுமொரு உப்மாவை தேடிப் பிடித்துக் கொணராது, இதே டெம்போவைத் தொடர்ந்திட ஆசீர்வதிப்பீர்களாக !!

      P .S : Halfway into the October books : மாடஸ்டியின் மறுபதிப்பை ரசிப்பதில் மட்டும் சிரமமிராதெனில், உங்கள் பட்டியலுக்கொரு ஆஞ்சநேயர் வால் சீக்கிரமே அவசியப்படலாமென பட்சியொன்று சொல்கிறது சார் !! Fingers crossed !!!

      And thanks a ton for all the kind words !!

      Delete
    3. ரொம்பவே பேராசை போலத் தோன்றிடலாம் தான் சார் ; ஆனால் ஒவ்வொரு அட்டவணைத் தேர்வின் போதும் எனது ultimate கனவே இத்தகையதாகத் தானிருக்கும் :

      தொடர்ச்சியாய் ; ரகளையாய் ; அதகளமாய் ; சரமாரியாய் ஹிட்ஸ் ; ஹிட்ஸ் ; ஹிட்ஸ் என்று சகல ஜானர்களிலும் ஸ்கோர் செய்திட வேண்டும் !! ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு முழு மனநிறைவைத் தந்திட வேண்டும் !!

      But try as I can - இடையிடையே 'நீரில்லை நிலமில்லை' ; 'ஜானதன் கார்ட்லேண்ட்' போன்ற ஸ்பீட் பிரேக்கர்கள் தடுக்கி விடுகின்றன !! ஆனாலும் விக்ரமாதித்தனின் வேதாளப் பிடிவாதத்தோடு விடாது முயற்சிப்பேன் 2020-ஐ ஒரு கனவு ஆண்டாய் வடிவமைக்க !!

      Delete
  60. சாலையெலாம் ஜுவாலைகளே :

    மற்றதெல்லாம் கிடக்கட்டும் முதலில் அந்த ஓவியங்களுக்கும் கலரிங்கிற்கும் மட்டும் நூறு மார்க்குகளைப் பிடியுங்கள்.! ..ப்ப்பா.. சும்மா அள்ளுது..!

    கதை என்றொரு வஸ்து இல்லையென்றாலும் பரவாயில்லை.. ட்ரெண்டின் கதைகளை சித்திரங்களுக்காகவே தாராளமாக வரவேற்கலாம்.. என்ன நேர்த்தி என்ன அழகு... சொக்கவைக்கிறது.!

    மெல்லிய காதல் உணர்வுகள் உள்ளூர இழையோடும் அருமையான க்ரைம் கதை.! கதையை சொல்லியிருக்கும் விதமும் அட்டகாசம்.!

    காதல் தோல்வியால் துவண்டுபோய், கழுத்துவரையிலும் குடித்துக்கொண்டு திருடர் கும்பலுடன் கைகோர்த்துக்கொண்டு திரியும் ட்ரெண்டை.. அந்த திருப்புமுனை காட்சி வரும்வரை உண்மையாகவே விரக்தியில் குடிகாரன் ஆகிவிட்டார் என்றே நினைத்திருந்தேன்.!
    ஆனால் அந்த திருப்புமுனையும் அதைத்தொடரும் ப்ளாஷ்பேக்கும் அற்புதமானதொரு க்ரைம் கதைக்கான சான்றுகள்.!

    ஆக்னஸ், மேரி லூ போன்ற அழகுக்கிளிகள் நெஞ்சை அள்ளுகிறார்கள்.. அத்தனை புண்ணியங்களும் அந்த தெய்வப்பிறவி ஓவியருக்கே.!

    இதுவரை வெளியானவற்றுள் ஆகச்சிறந்த ட்ரெண்ட் சாகசம் இதுதான்.!

    சாலையெலாம் ஜுவாலைகளே - நெஞ்சத்திலும் ஜுவாலைகளே

    ரேட்டிங் 10/10

    ReplyDelete
    Replies
    1. //இதுவரை வெளியானவற்றுள் ஆகச்சிறந்த ட்ரெண்ட் சாகசம் இதுதான்.! //

      ஆரவாரங்களில்லா அழகான ஆல்பங்கள் இன்னமுமே காத்துள்ளன இந்தத் தொடரில் !!

      Delete
    2. ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்..

      Delete
  61. நான்கில் மூன்று முடிந்துவிட்டது. பாக்கி நிற்பது தல தாண்டவமாடும் ரௌத்திர ரேஞ்சர் மட்டுமே.! (எப்போதும் வில்லர் கதைகளை வைத்திருந்து பொறுமையாக கடைசியாக ரசித்து படிப்பதுதான் என் வழக்கம் )

    ரௌத்திர ரேஞ்சரை படித்துவிட்ட நண்பர்கள் செம்ம என்று சொல்லியிருப்பதால் இந்த மாதமும் நிறைவான மாதமாகவே அமைந்துவிட்டது.!

    ReplyDelete
    Replies
    1. //எப்போதும் வில்லர் கதைகளை வைத்திருந்து பொறுமையாக கடைசியாக ரசித்து படிப்பதுதான் என் வழக்கம்//

      ஒரு வேளை, இதுவும் கூட பெங்களூர் பரணி பாணியில் டெக்ஸை "ரசிப்பதோ" ? மோவாயைத் தடவியபடிக்கே ரோசிக்கிறேன் !!

      Delete
    2. டெக்ஸ் கதை எளிதான வாசிப்பு, பொதுவாக நேர்கோட்டில் பயணிக்கும் கதை, எனவே அதனை எப்போதும் கடைசியில் தான் வாசிப்பேன். சில நேரங்களில் பிற கதைகள் எல்லாம் கடினமான களம் என்றால் டெக்ஸை முதலில் படித்து விடுவேன்.

      டெக்ஸ் கதைகளுக்கு விரிவான விமர்சனம் எழுதுவதில்லை சில கதைகள் இதற்கு விதிவிலக்கு; 1. டெக்ஸ் கதைகளுக்கு பல நண்பர்கள் அட்டகாசமாக விமர்சனங்கள் எழுதுகிறீர்கள்.

      2. டெக்ஸ் விற்பனையில் நம்பர் ஒன்; நமது காமிக்ஸின் முக்கியமான தூண்.

      3. டெக்ஸ் தவிர மற்ற கதைகளுக்கு முடிந்த அளவு விமர்சனம் எழுத காரணம், சில/பல நண்பர்கள் சில கதைகளை நண்பர்களின் விமர்சனங்களை பார்த்து வாங்குவதால்.

      Delete
    3. டெக்ஸ் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் நண்பரே..:-)

      Delete
    4. தாரை பரணி @

      // டெக்ஸ் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் நண்பரே..:-) //

      உண்மை. அது கூட ஒரு காரணம்.

      Delete
    5. விற்பனையில் சற்று பின் தங்கி உள்ள கதைகளுக்கு நாம் தரும் விமர்சனம் மிகவும் முக்கியமானது.

      Delete
    6. அவரு நம்ம எம்ஜியாரு மாதிரிங்க. எவர்கிரீன்.

      Delete
  62. ப்ளூகோட்டையும் படித்து விட்டாயிற்று..மேலே நண்பர் ராகவன் அவர்கள் சொன்னது போல தொடர்ந்து அனைத்தும் ஹிட் என்ற வெற்றி இந்த மாதமும் ...


    அப்புறம் செப்டம்பர் மாத இதழ்களை கொஞ்சம் சீக்கிரமாய் இந்த மாதம் அனுப்பினால் பரவாயில்லை சார்..தேதி மூணாயிறுச்சு...

    ReplyDelete
  63. விஜயன் சார், டிரெண்ட்க்கு அடுத்த வருட அட்டவணையில் இரண்டு slot ஒதுக்க முடியுமா? எளிதான மற்றும் அட்டகாசமான சித்திரங்கள் மற்றும் மெல்லிய சென்டிமென்ட் கொண்ட தொடராக உள்ளது.

    ReplyDelete