நண்பர்களே,
வணக்கம். மாதத்தின் ஆரம்ப வாரங்களில் வாழைப்பழம் வாங்கி வரப் போகும் செந்திலைப் போல முகம் பிரைட்டாக இருப்பதும் – மூன்றாம் வாரத்திலிருந்தே கடுப்பிலிருக்கும் கவுண்டரைப் போல முகரை கடுகடுவென்றிருப்பதும் சமீப வருடங்களாய்ப் பழகிப் போய்விட்டதொரு routine ! அந்தந்த மாதத்து இதழ்களைத் தயார் செய்து முடித்த கையோடு – 'ஹை… ஜாலி !' என்ற சன்னமான உற்சாகமும் ; இன்னுமொரு பத்து நாட்களுக்காச்சும் ராக்கூத்தடிக்காது தூங்கலாமே என்ற சந்தோஷமும் அலையடிக்கும் ! தேதிகளைக் கிழிக்கக் கிழிக்க – ‘வேலைகளுக்குள் நுழையற வழியைப் பாருலே… போன மாசம் மாதிரியே கடைசி வரைக்கும் ஜவ்வுமிட்டாய் இழுக்காதேலே !!‘ என்று ஒரு குரல் உள்ளாற ஒலிக்கத்தான் செய்யும் ! ஆனால் ‘இன்னும் 20 நாள் இருக்குல்லே… பார்த்துக்கலாம் !‘ என்றபடிக்கே மாடு மேய்த்துத் திரியும் routine-ல் தொடர்ந்திடுவது வாடிக்கை ! மாதத்தின் 15 தேதியைக் கடக்கும் போதே ஊசிப் போன உளுந்து வடையை உள்ளே தள்ளிய effect-க்கு வயிறு லேசாய்க் கலக்க ஆரம்பிக்கும் வேளையில், மைதீனும் மண்டையைச் சொறிந்தபடிக்கே நிற்பது தெரியும் – ‘ப்ரிண்டிங் ஆரம்பிக்க எப்போ ரெடியாகும் அண்ணாச்சி ?‘ என்ற கேள்வியோடே! அப்போது தான் மேஜையில் குவிந்து கிடக்கும் டெக்ஸின் 220 பக்க சாகஸம் அசுரத்தனமான எடை கொண்டிருப்பதாய்த் தோன்றத் துவங்கும் ; கிராபிக் நாவல்கள் சகலமும் தண்டுவடத்தின் உறுதியைப் பரிசோதிக்கக் காத்திருக்கும் பயிற்சிகளாயத் தோன்றத் துவங்கும் ; கார்ட்டூன்கள் நீங்கலாய், பாக்கி எல்லாமே மலைப்பைத் தரும் மலைச்சிகரங்களாய் தென்படும் ! And has been no different this month too!
‘ஹை... மாடஸ்டி மறுபதிப்புத் தான் !‘ என்ற ஜாலியில் அதனில் பெரிசாய் மெனக்கெட அவசியமின்றி அச்சுக்கு அனுப்பி விட்டிருந்தேன் ! “வஞ்சம் மறப்பதில்லை” தடதட ஆக்ஷன் + நேர்கோட்டுப் பயணம் என்றிருந்ததால் தஸ்ஸு-புஸ்ஸென்று மூச்சுவிட்டுக் கொண்டே அதனுள் புகுந்து முக்கால்வாசிப் பணிகளையும் முடித்தாச்சு ! ஒரு மாதிரியாய் வெள்ளியிரவு மீதமிருந்த மொழிபெயர்ப்பை முடித்துக் கொடுத்த கையோடு சுடச் சுட டைப்செட்டிங் & பிராசசிங் அரங்கேறிட - நேற்றைக்கு பிரிண்டிங்கும் துவங்கிவிட்டது ! I have said this before too - and I 'll repeat it too : முந்தைய ராப்பொழுது வரைக்கும் பேப்பரில் கோழி கீச்சலான மொழிபெயர்ப்பாய் நின்றிடும் சமாச்சாரத்தை ஒற்றை நாள் கழித்து அச்சில் பார்ப்பது என்பது இன்னமுமே ஒரு செம த்ரில்லான அனுபவமாய்த் தொடர்ந்திடுகிறது ! And அந்த washdrawing சித்திரப் பக்கங்கள் வண்ணத்தில் மிரட்டுவதையும் சேர்த்தே ரசிப்பது கூடுதல் fancy !!
பணி # 3 ஆக கையிலெடுத்தது நமது சிகப்புச் சட்டை நண்பர் ட்ரெண்டை ! நமது கருணையானந்தம் அவர்கள் இந்த ஆல்பத்திற்குப் பேனா பிடித்திருக்க – வழக்கம் போல கொஞ்சம் மாற்றங்கள் ; முன்னேற்றங்கள் என்று எடிட்டிங் செய்திட உட்புகுந்தேன் ! ஒன்றுக்கு இரண்டாய் ‘ஹிட்‘ மாதங்கள் ஆகஸ்டிலும், செப்டம்பரிலும் அமைந்திருக்க அந்த momentum-ஐத் தக்க வைத்துக் கொள்ள அக்டோபரின் ட்ரெண்டும் ஒத்துழைக்க வேண்டுமே என்ற படபடப்பு லேசாயிருந்தது ! சென்றாண்டின் பிற்பகுதியில் இதன் ஆங்கில Cinebook ஆல்பத்தைப் படித்தது நினைவிருந்தாலும் – கதையின் outline-ஐத் தாண்டி வேறெதுவும் ஞாபகத்தில் நஹி ! So வேக வேகமாய்க் கதைக்குள் புகுந்தேன் ! “சாலையெல்லாம் ஜுவாலைகளே” கதையினில் – காதலி ஆக்னெஸ் தரும் நயமான பல்பை வாங்கியிருந்த பாவப்பட்ட ட்ரெண்ட் இம்முறை என்ட்ரி தந்திட்டதே கணிசமான பக்கங்களுக்குப் பிற்பாடு தான் ! கதை நெடுக மெதுமெதுவாய் கதாசிரியர் செய்திட்ட ‘திகில்‘ பில்டப்பானது ட்ரெண்ட் களமிறங்கிய பிற்பாடு இன்னமும் வேகமெடுக்க, அந்த clean சித்திர பாணிகளோடு பயணிப்பது அத்தனை அட்டகாசமான அனுபவமாகயிருந்தது ! வசனங்களில் ஆங்காங்கே தென்பட்ட புராதனத்தை மட்டும் மாற்றியெழுதியபடியே தடதடத்ததால், க்ளைமேக்ஸைத் தொட்டு நின்றேன் – இரண்டே மணி நேரங்களில் ! And இம்முறையுமே கடைசி 2 பக்கங்களில் கதாசிரியர் நம்மை மெலிதான உணர்வுகளால் கட்டிப் போடும் பாணி தொடர்கிறது ! அந்த இறுதிப் பக்கங்கள் இரண்டையுமே மொத்தமாய் மாற்றி எழுதிவிட்டு, கதையை மீண்டுமொரு முறை படித்த போது இந்த டீமின் படைப்பாளிகளைப் பார்த்தொரு நமஸ்காரம் பண்ணிடத் தோன்றியது ! அதிர்ந்து பேசத் தெரியா ஒரு ஹீரோ ; அதிரடிகளை அடையாளமாய்க் கொண்டிரா ஒரு கதை பாணி ; இதன் மத்தியிலும் கொஞ்சம் வரலாறு ; கொஞ்சம் திகில் ; கொஞ்சம் ஆக்ஷன் ; கொஞ்சம் ட்விஸ்ட் ; கொஞ்சம் மெல்லிய உணர்வுகளென்று கலவையாய்த் தூவி, சுவையாய் ஒரு படைப்பை நேர்கோட்டில் உருவாக்குவதென்பது சாமான்யக் காரியமல்லவே !! Of course – நம்மிடையே உள்ள அதிரடிப் பிரியர்களுக்கு இந்த சிகப்புச் சட்டைக்காரர் கடைப்பிடிக்கும் மென்மையான பாணி மீது அத்தனை பிடித்தமிராது போகலாம் தான் ! "இந்த முழியாங்கண்ணன் பண்ற பில்டப் ரவுசுக்கு ஒரு வரைமுறையே இல்லாது போச்சுப்பா ! இன்னும் விச்சு & கிச்சுவுக்குத் தான் பதிவு போடாம இருக்கான் !!" என்று மனதுக்குள் உரக்கவே நினைத்தும் கொள்ளலாம் தான்! ஆனால் trust me guys – ஆர்ப்பரிக்கும் அருவிகள் ஒரு பிரம்மாண்டமெனில், விசையோடு ஓடும் தெளிந்த நீரோடையுமே ரசனைக்குரியதே ! மொத்தமுமே 8 ஆல்பங்கள் தான் ட்ரெண்ட் தொடரினில் ! நாமிப்போது தொடவிருப்பது ஆல்பம் # 4 ! So எஞ்சியிருப்பன அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு தாக்குப்பிடித்திடும் எனும் போது – இருக்கும் வரை சிலாகித்துக் கொள்வோமே ? இதோ ட்ரெண்டின் அட்டைப்பட முதல் பார்வை !
வழக்கம் போலவே ஒரிஜினல் டிசைன் தான் – கொஞ்சமாய் நமது நகாசு வேலைகளுடன்! And இதோ – உட்பக்கங்களின் preview-ம் !
இன்றைக்கு 79 வயதைத் தொட்டு நிற்கும் பிரேசிலிய ஓவியரான லூயி எடுவர்டோ டி ஒலிவியரா (Leo) தான் இந்தத் தொடருக்கு சித்திர ஜாலங்கள் செய்திடும் ஆற்றலாளர் !! மெக்கானிக்கல் எஞ்சினியரான மனுஷன் காமிக்ஸ் கரையிரமாய் ஒதுங்கியது நமது அதிர்ஷ்டம் எனலாம் ! இவரைப் பற்றி இன்னொரு சேதியுமே : GANDHI - The Pilgrim of Peace என்றதொரு நம் தேசப்பிதா பற்றியான பிரெஞ்சு கிராபிக் நாவலுக்கும் சித்திரங்கள் போட்டுள்ளார் !!
ஓவியர் செய்யும் அதகளம் ஒருபக்கமெனில், கலரிங் ஆர்டிஸ்டின் பங்களிப்பும் இங்கே கொஞ்சமும் சளைத்ததல்ல ! இதோ - அதற்கான பணியாற்றிய பெண்மணி இவர் தான் (Marie Paul Alluard) :
ஒரு நிசப்த மழையிரவில் இந்த ஆல்பத்தைப் படித்துப் பாருங்களேன் – செம ரம்யமாய் தென்படக்கூடும் ! Thus ends the பில்டப் பரமசிவம் அவதார் yet again for ட்ரெண்ட் !
அக்டொபரில் தொடர்வது பில்டப்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு அசகாயரின் ஆல்பமே (TEX - புதைந்து போன புதையல்) என்பதால் அவரை preview செய்திடும் படலத்தை அடுத்த ஞாயிறுக்கென வைத்துக் கொண்டு, இப்போதைக்கு வேறொரு திக்கில் வண்டியைத் திருப்பிட நினைத்தேன் ! அது தான் இந்தாண்டின் புத்தக விழா கேரவன் சார்ந்த சிலபல சேதிப் பகிர்வுகள் ! Nothing earth shattering, but still....!
எப்போதுமே ஆண்டின் துவக்கம் சென்னைப் புத்தக விழாவோடு டாப் கியர் போட்டாலுமே, தொடர்ந்திடும் பிப்ரவரி & மார்ச் மாதங்கள் புத்தக விழாக்களுக்கு உகந்த பொழுதுகளாய் எங்குமே அமைவதில்லை ! அப்பாலிக்கா ஏப்ரல் & மே மாதங்கள் கோடையின் உக்கிரத்தின் முன்பாக அத்தனை பேரும் தெறித்தடித்து ஓடி ஜகா வாங்கிடும் பொழுதுகளாகிப் போகின்றன ! ஜுன் மாதம் பள்ளி அட்மிஷன்களின் பொழுதெனும் போது, யார் பைக்குள் கை விட்டாலுமே கணிசமாய் காற்றை மட்டுமே துளாவிட முடிவது வாடிக்கை ! So ஒரு மாதிரியாய் ஜுலையில் துவங்கிடும் புத்தக விழாக்களின் சுற்றானது, நெய்வேலியில் துவங்கி, கோவையில் சூடு பிடித்து; ஈரோட்டில் சாகஸம் செய்து ; மதுரையில் சுப மங்களம் போடுவது வாடிக்கை! இம்முறை நடுவே தஞ்சாவூர் விழாவிலும் நமக்கு இடம் கிடைக்க, தொடர்ச்சியாய் 5 ஊர்கள் ; தொடர்ச்சியாய் சுமார் 75 நாட்கள் on the road என்றாகியிருந்தது !
சமீப ஆண்டுகளில் தமிழகமெங்கும் புதியதொரு trend நடைமுறையிலுள்ளது உங்கள் கவனத்திலிருந்து தப்பியிராது தான் ! சகல Tier 2 நகர்களிலும் இப்போதெல்லாம் ரெகுலராய் நடந்து வரும் புத்தக விழாக்கள் ஒரு வெகு சமீப நிகழ்வே ! வாசிப்பைப் பரவலாக்கிட ; மலையைத் தேடி முகமது செல்லா பட்சத்தில் முகமதைத் தேடி மலையே பயணமாகும் ஒரு முயற்சியிது ! பெரம்பலூர்; ராம்நாட்; காரைக்குடி; அரியலூர்; மேட்டுப்பாளையம்; புஞ்சைபுளியம்பட்டி; ஆரணி; ஹோசூர் ; கும்பகோணம் etc என்று ஆண்டின் புத்தகவிழாப் பட்டியல் இப்போதெல்லாம் எனது நீட்டி முழக்கும் பதிவுகளை விடவும் நீளமானதே ! On the flip side இவற்றின் தாக்கங்கள் பெருநகர விழாக்களின் விற்பனைகளில் ஓரளவு பிரதிபலிப்பதையுமே சமீபமாய்ப் பார்த்திட முடிகிறது ! எது எப்படியோ – விற்பனை; வருவாய் – என்ற நம்பர்களைத் தாண்டி, புதுப்புது ஊர்களிலுள்ள வாசகர்களை எட்டிப் பிடிக்க இயலும் வாய்ப்பானது, வரவு-செலவு கணக்குகளுக்கு அப்பாற்பட்டதே ! என்ன ஒரே சிக்கல், இந்த bookfair cycle கிட்டத்தட்ட தொடர்ச்சியாய் ; ஒன்றன்பின் ஒன்றாய் அமைந்து விடும் போது நம் பணியாட்களுக்கு ஓய்வானது குதிரைக்கொம்பாகிப் போகிறது ! So ஒரு கட்டத்தில் ஒரு சில விழாக்களிலிருந்து ஜகா வாங்கிட வேண்டிப் போகிறது ! Anyways – இதோ இந்த ஆண்டின் 5 ஊர் கேரவன் பயணத்தின் சிலபல highlights :
😄 கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலுமே இன்னமும் நமது ஸ்டீல்க்ளாவுக்கு மவுசு தொடர்கிறது! (கவிஞரல்ல நான் குறிப்பிடும் ஸ்டீல்க்ளா) இந்த மேம்பட்ட மறுபதிப்புகள் துவங்கிய 2015...2016-ன் craze இன்றைக்கு இல்லை என்றாலும் – இன்னமுமே – மாயாவியை நம்பினோர் கைவிடப்படேல் ! என்றே தொடர்ந்து வருகிறது ! ஆனால் ஒரே நெருடல் என்னவெனில் – மாயாவி ஆர்வலர்கள் மற்ற எந்த இதழ்களையும் சுட்டு விரலால் கூடத் தொட்டுப் பார்க்கவும் தயாரில்லை ! கண்டேன் மாயாவி மாமாவை !!" என்றபடிக்கு அவற்றுள் ஓரிரு பிக்குகளை வாங்கிய கையோடு நடையைக் கட்டிவிடுவது சகஜ நிகழ்வு ! So காமிக்ஸ் சார்ந்த nostalgia தான் இங்கே கோலோச்சுகிறதே தவிர – காமிக்ஸ் நேசமல்ல !
😄 மும்மூர்த்திகளின் பாக்கி இருவரும் சரி, நமது குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடரும் சரி – ஊர்ஊராய் போய் சாட்-பூட்-த்ரீ ஆடிவிட்டு பத்திரமாக ஊர் திரும்பியுள்ளனர் ! CID லாரன்ஸ் & டேவிட் ; ஜானி நீரோ என்ற பெயர்களை வாசிக்கும் சிலபல வதனங்களில் பிரகாசம் spark அடிப்பதோடு சரி ! கல்லாப்பெட்டி வரை அந்த மையல் தொடர்ந்திடுவதில்லை !
😄 சந்தேகமின்றி இந்தாண்டின் இந்த 5 புத்தக விழாக்களிலுமே flavor of the season டெக்ஸின் “டைனமைட் ஸ்பெஷல்” தான்! என் ஞாபகம் சரியெனில் போன அக்டோபரில் வெளியான இதழிது ! கடைசிப் பத்துப்-பதினைந்து இதழ்களே இப்போது கையிருப்பு என்ற நிலையைத் தொட்டுள்ளது ! அட்டைப்படத்தில் பச்சைபடர்ந்த டிசைன் ; அந்த 500+ பக்கக் கதையின் சினிமாத்தனம் என விமர்சனங்களைச் சந்தித்த போதிலும் – ‘தல‘ தாண்டவத்தைத் தடைபோட வழியில்லை ! So சமீப சமயங்களின் biggest success story "டைனமைட் ஸ்பெஷல்" தான் என்பேன்!
😄 அதே போல “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” இந்தாண்டின் ஈரோட்டிலும் சரி, தொடர்ந்த தஞ்சாவூர் & மதுரையிலும் சரி – runaway hit ! கதையின் வலு பற்றி ஆங்காங்கே நீங்கள் செய்துள்ள சிலாகிப்புகள் ; அலசல்களே இந்த வெற்றிக்கு உறுதுணை என்பது நிச்சயம் ! புத்தக விழாக்களில் மட்டுமன்றி சிலபல ஊர்களிலும் “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” இதழை மட்டுமே மறுக்கா ஆர்டர் செய்துள்ளனர் ஏஜெண்ட்கள் ! The power of positivity !!
😄 “இரத்தப் படலம்” வண்ணத் தொகுப்பு கிடைக்குமா ?" என்ற கேள்வியோடு கடந்த 75 நாட்களது வெவ்வேறு புத்தக விழாக்களிலும், குறைந்தது ஒரு 50 வாசகர்களாவது நடைபோட்டிருப்பார்கள் ! ஓராண்டுக்கும் அதிகமாய் முன்பதிவு செய்திட அவகாசம் இருந்த போதிலும் தவற விட்ட வாசகர்கள் தற்போது தர்மசங்கடமான இந்தக் கேள்வியோடு நம்மை அணுகிடும் போது – கையை விரிப்பதைத் தாண்டி வேறு மார்க்கமில்லை ! ‘மறுக்கா ஒரு முன்பதிவு – மறுக்கா ஒரு edition’ என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமிலா சமாச்சாரம் என்பதால் “இப்போதைக்கு வாய்ப்பில்லீங்க!” என்று தான் சொல்லிட வேண்டியுள்ளது ! Truly sad...!
😄 எப்போதும் போலவே லக்கி லூக் சகல தரப்பினரின் ஜிகிடி தோஸ்தாக தொடர்ந்திடுகிறார்! அதிலும் லக்கி க்ளாசிக்ஸ்; லக்கி ஆண்டுமலர் ஹார்ட்கவர் இதழ்கள் கண்ணில்படும் நொடியிலேயே புது வாசகர்களைக் கவர்ந்து விடுகின்றன!
😄 TEX அபிமாணிகள் தேடுவது பருமனான; வண்ணமயமான ஆல்பங்களையே ! சர்வமும் நானே; டைனமைட் ஸ்பெஷல்; சைத்தான் சாம்ராஜ்யம் etc...etc... முதல் பார்வைகளிலேயே மக்களை ஈர்த்து விடுகின்றன ! அதே போல Color Tex தொகுப்பான “புனிதப் பள்ளத்தாக்கு” கூட best seller தான்!
😄 பௌன்சர்; கமான்சே & ஜெரெமயா ”மறக்கப்பட்ட மாந்தர்கள்” பட்டியலில் தொடர்வது தான் வருத்தமே ! Extremely cold reception !!
😄 ஈரோடு, தஞ்சை & மதுரையில் MAXI லயனின் 2 இதழ்களுமே massive ஹிட்ஸ் ! அந்தப் பெரிய சைஸா ? அல்லது டெக்ஸ் & லக்கியை வண்ணத்தில் பார்த்த வாஞ்சையா ? - தெரியாது ; ஆனால் இரு மெகா மறுபதிப்புகளுமே best sellers!
😄 சிக் பில் & கோவின் “கொலைகாரக் காதலி” இம்முறை விரும்பி வாங்கப்பட்ட இதழ்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது ! பொதுவாகவே ஹார்ட்கவர் இதழ்களுக்கொரு fancy இருப்பது புத்தக விழாக்களில் தெரிகிறது!
😄 இந்தாண்டின் surprise package மதுரை விழா தான் ! பொதுவாய் இதுவரையிலான மதுரைப் புத்தக விழாக்களில் ‘எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போறார்‘ என்று பீற்றும் விதமாய் மட்டுமே இருந்திடும் நமது விற்பனைகள் ! நிறைய நாட்களில் நாம் காலிபிளவர் பஜ்ஜிக் கடைக்காரர்களை பொறாமையோடு லுக் விட்டிருக்கிறோம் தான் !! ஆனால் இம்முறை எல்லா நாட்களுமே மழைக்கு மத்தியிலும் செம decent ஆன விற்பனை ! Thanks மதுரை!
😄 இந்தாண்டின் கோவை விழாவிலுமே போன வருடத்தை விட better performance தான் ! ஆனால் “ஆண்டுக்கொருவாட்டி இந்த விழாவில் மாத்திரமே காமிக்ஸ் வாங்குவோம்!” என்று சொன்ன குடும்பங்கள் கணிசம்! இதர மாதங்களில் கோவையிலுள்ள நமது பல முகவர்களுள் யாரையேனும் நாடினால் சூப்பராகயிருக்கும் தான் ! ஹ்ம்ம்ம்...!!
😄 தஞ்சாவூருமே முதல் முயற்சிக்கு not bad என்ற அனுபவமே நமக்கு ! அந்தப் பகுதிகளில் நமக்கு முகவர் பலம் அத்தனை வலுவாய் கிடையாதெனும் போது – இத்தகைய வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொண்டால் தானுண்டு!
😄 என்ன தான் கிராபிக் நாவல்கள்; யுத்தகால அனுபவங்கள்; அமெரிக்க அரசியல் சாஸனத் திருத்தங்கள்; கடற்கொள்ளையர் கதைகள் என்று நாம் பயணித்தாலும் – ‘ஆங்... காமிக்ஸா?‘ என்ற எகத்தாளத்தோடு நகர்ந்திடும் ஜனத்துக்கு இன்னமுமே பஞ்சம் நஹி! ‘7 முதல் 77 வரை – அனைவருக்குமான காமிக்ஸ்‘ என்பது நனவாக இன்னும் நிறைய தூரம் போகனும் நாம் ! இயன்றமட்டிலும் உங்களது FB பதிவுகளில், காமிக்ஸ் சார்ந்த எண்ணங்களையும் சுற்றில் விட முயற்சியுங்களேன் guys?
Before I sign off - சன்னமாய் சில updates :
1.வரலாறு முக்கியம் அமைச்சரே !! அடிக்கடி நம் பேச்சுவழக்கில் இடம்பிடித்திடும் வாக்கியமிது !! அதை நடைமுறைக்கும் ஒத்துப் போகிடச் செய்தல் சாத்தியமாகிடுமா folks ? ஏன் கேட்கிறேன் என்றால் - வண்ணத்தில் ஒன்று ; black & white -ல் இன்னொன்று என வரலாற்றை அட்டகாசமான கற்பனையுடன் கலந்து பிரமாதமான கிராபிக் நாவல்களாக்கிடும் முயற்சிகள் சமீபத்தில் கண்ணில் பட்டன ! அவற்றுள் ஒன்று வன்மேற்கைச் சார்ந்தது ! இவை நமக்கு சுகப்படும் என்பீர்களா folks ?
2.இன்னொரு 2 பாக கௌபாய் அதிரடி சாகசமும் கண்ணில் பட்டூ !! எங்கேனும் அதற்கொரு சீட் போட்டு வைக்கலாமா ? இல்லாங்காட்டி காதுலாம் தக்காளிச் சட்னி கசியுதா - தோட்டாச் சத்தத்தில் ?
3.2020 அட்டவணையை கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்பே முடித்து விட்டதாய் நினைத்துக் கொண்டே திரிந்து வந்தேன் ! 'But இன்னும் கொஞ்சம் எமோஷன்ஸ் இருந்தாக்கா தேவலையோ ?' என்ற கேள்வி நாளாசரியாய் உள்ளுக்குள் குடையும் நேரமாய்ப் பார்த்து - புதுசு புதுசாய் சில அதகளங்களைப் படைப்பாளிகளும் கண்ணில் காட்டி வைக்க - கோட்டை அழிச்சுப்புட்டு முதல்லேர்ந்து மறுக்கா புரோட்டா சாப்பிட உத்தேசித்துள்ளேன் !! புரட்டாசி என்பதால் சைவக்குருமா வாளியை இக்கட park பண்ணுங்கப்பா !!
ரைட்டு...“புதைந்து போன புதையலின்” எடிட்டிங்கினுள் புகுந்திட நான் நடையைக் கட்டுகிறேன்! Have a Super Sunday all! Bye for now ! See you around !!
First?
ReplyDelete1 ஆஅ...
ReplyDelete4
ReplyDeleteHi
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான் அஞ்சான். அதாவது அஞ்சாவது.
ReplyDelete// ஹார்ட்கவர் இதழ்களுக்கொரு fancy இருப்பது புத்தக விழாக்களில் தெரிகிறது!
ReplyDelete//
கெட்டி அட்டை புத்தக ஆயுளுக்கும் நல்லது,விற்பனை ஆயுளுக்கும் நல்லது சார்.....
///கெட்டி அட்டை புத்தக ஆயுளுக்கும் நல்லது,விற்பனை ஆயுளுக்கும் நல்லது///---+1000!
Deleteஇதை பற்றி போன பதிவில் கேட்டதாக ஞாபகம்!
சுடச்சுட நல்ல பதில்! ஹார்டு கவர் இதழ் அப்ப ஆண்டுக்கு 6வது இருக்கும்!
ஆத்தாவுக்கு கூழ் ஊத்தணும்னு சொன்னதுமே பதிவு வந்திடுச்சு. ஆத்தா உன் மகிமையே மகிமை.
ReplyDeleteஇந்த வசனத்தோட சொந்தக்காரர் பூனையார் ஆச்சே......
Deleteநல்லது எங்கே இருந்தாலும் எடுத்துக்கணும்.
Deleteவசனம் நல்லது தான்;
Deleteஎன்னிக்காச்சும் கூழும் ஊத்துங்கப்பா!
வணக்கம்.
ReplyDelete10
ReplyDeleteஉள்ளேன் ஐயா!!
ReplyDeleteஅடுத்த வருட கோட்டாவில் மறக்காமல் அர்ஸ் மேக்னா மூன்று பாக கதைதளை போட முயற்சி செய்யுங்க சார். புதையலை தேடிப் போகும் செம த்ரில்லர். நிச்சயம் வாசகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும். அப்படியே பேண்டமோனியம் கதையையும் மறந்திடாதீங்க 😊
ReplyDeleteகலீல் ஜி சூப்பர் ஜி சூப்பர் ஜி இந்த மாதிரி நல்ல நல்ல suggestions குடுங்க ஜி
Deleteநல்லது ஜி தெறிக்க விடுவோம்
Deleteசந்தா A வில் இப்போது நிறைய இடம் காலியாக இருப்பதால் இந்த ஒன் ஷாட் எல்லாம் அதிலே இடம் பிடிக்க வேண்டும்.
Delete// சந்தா A வில் இப்போது நிறைய இடம் காலியாக இருப்பதால் //
Deleteஇதென்ன புதுப் புரளியா இருக்கு.......
சந்தா A
Delete1. Thorgal
2. Durango
3. Trent
இவர்களை தவிர வேறு யார் என்று சொல்லுங்களேன்.
4. Reporter Johnny
Delete5. Undertaker
ஜானதன் தாத்தா இருக்காரே குமார்.....
DeleteWhy this kolaveri?
Deleteஷெல்டன் இந்த வருட லிஸ்டில் இருக்காரு,அடுத்த வருஷம் வருவாரா? இல்லை V.R.S ஆ என்று தெரியலையே???
Delete13(XIII)
ReplyDeleteபுனித பள்ளதாக்கு மூன்று உள்ளது. விரட்டும் விதி கிடைக்கவில்லை.
ReplyDeleteகிடைக்குமா? கிடைத்தால் நலம்!
எனக்கும் கிடைக்க வில்லை அண்ணா
Deleteஉள்ளேன் ஐயா!!!
ReplyDeleteவாங்க ஐயா
Deleteவன் மேற்கை சார்ந்தது என்றால் அந்த வரலாறும் வேண்டும் அந்த 2 பாக கௌ பாய் தொடரும் வேண்டும்.
ReplyDelete+2
Delete+3
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteநன்றீ ஐயா...!!
Delete1ம் வேண்டும் 2ம் வேண்டும், அக்டோபரில் 2020ன் அட்டவணையும் வேண்டும் .
ReplyDeleteஅதே அதே. இந்த 2020 அட்டவணை இந்த வருட 2019 அட்டவணையை மிஞ்சுமா? எனக்கு தெரிந்து மிகச்சில குறைகள் கொண்ட வருடம் இதுவே.
Delete1ம் வேண்டும் 2ம் வேண்டும், அக்டோபரில் 2020ன் அட்டவணையும் வேண்டும் .
Delete#######
அட ஆமால்ல...நல்ல வேளை நினைவு படுத்தினீர்கள் நண்பரே..
சார் அட்டவணை வரும் மாதம் உண்டு தானே..!?
Hi..
ReplyDelete// இன்னொரு 2 பாக கௌபாய் அதிரடி சாகசமும் கண்ணில் பட்டூ !! எங்கேனும் அதற்கொரு சீட் போட்டு வைக்கலாமா. //
ReplyDeleteநல்ல கதையில் கெளபாய் இருந்தா என்ன,பிளேபாய் இருந்தா என்ன சார்?
அதுக்கும் ஒரு துண்டை போட்டு வைங்க......
ரவி அண்ணா ஹிஹிஹி
Deleteகுமார் தம்பி ஹா,ஹா,ஹா......
Deleteரெண்டு அண்ணாக்களுக்கும் சிரிப்பை பாரு..:-)
Deleteகெளகேர்ள் கதைகள் கூட இப்பாலம் நிறைய நிறைய ரிலீஸ் ஆகி இருக்காமே!
Delete// அட்டகாசமான கற்பனையுடன் கலந்து பிரமாதமான கிராபிக் நாவல்களாக்கிடும் முயற்சிகள் சமீபத்தில் கண்ணில் பட்டன. //
ReplyDeleteஇதையும் விடக்கூடாது லிஸ்டில் போட்டு வைங்க சார்........
எப்பவுமே வரிசையில் பத்து பேர் காத்துக் கொண்டிருந்தால் தான் நல்லது......
பற்றாக்குறை என்ற பேச்சே எழாது.......
ஆமா காத்திருப்போர் பட்டியல் நீளமாக இருப்பது நல்லது தான்
Delete1. சுவராஸ்யமான கதைகளாக இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக வரட்டும்.
ReplyDelete2. போட்டுத் தாக்குங்க.
3. 😍😍😍😍
1. சுவராஸ்யமான கதைகளாக இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக வரட்டும்.
Delete2. போட்டுத் தாக்குங்க.
3. 😍😍😍😍
1. சுவராஸ்யமான கதைகளாக இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக வரட்டும்.
Delete2. போட்டுத் தாக்குங்க.
3. 😍😍😍😍
அட்டவணை வெளியான பின்பும் நல்ல கதைகள் கண்ணில் பட்டால் ,கோட்ட அழிச்சுட்டு மறுக்கா கோடு போடுங்க சார். மாற்றம் ஒன்றே மாறாதது.
ReplyDelete+10000000
DeletePadmanaban சார் நல்லா சொன்னிங்க
Deleteவழிமொழிகிறேன்..:-)
Deleteகாலை வணக்கம் சார் மற்றும்
ReplyDeleteநண்பர்களே 🙏🏼
.
வணக்கம் நண்பரே
Deleteஇனிய மதிய வணக்கம் நண்பரே..:-)
Deleteசூப்பர் பதிவு......
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் மந்திரியாரே
Deleteநீங்கள் எடுக்கும் எந்த புது முயற்சிகளுக்கு எனது ஆதரவு உண்டு. நீங்கள் எடுத்த முயற்சிகள் மூலமாகவே எங்களுக்கு பலப்பல புதிய ரத்தினங்கள் கிடைத்தன.
ReplyDeleteஎனக்கு ஒரே ஒரு குறை என்னவென்றால் இந்த வருட ஈரோடு சர்ப்ரைஸ் போல அடுத்த வருடம் ஏதும் இல்லை என்பதே
ReplyDeleteஇந்த வருடம் கிராஃபிக் நாவல் பிரளயம் அடுத்த வருடம் இடம் பிடிக்குமா?
ReplyDeleteகிராபிக் நாவல் போடுறதுன்னு ஆச்சு.. அதுல ஒரு கதையாவது சயின்ஸ் பிக்சன் போடுங்களேன்.. தோர்கலில் ஒரேயொரு கதையில் மட்டும் டைம் டிராவல் வந்தது அதுவும் அட்டகாசமாய் இருந்தது. நம்மாட்களும் back to the future போன்ற டைம் ட்ராவல் கதைகளுக்கு பழக்க பட்டவர்கள் தானே.. ஒரேயொரு டைம் ட்ராவல் ஒன் ஷாட் கிடைச்சா இடையில சொருகி விட்றுங்களேன்..
ReplyDeleteஆமா அந்த sci-fi மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும். சந்தா A இருக்கே. லார்கோ ஷெல்டன் இடமும் காலியாக இருக்கே.
Deleteஅக்டோபர் மாதமும் அதகள மாதமாக அமையப்போகின்றது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ReplyDelete47th
ReplyDeleteவந்துட்டேங்கோ
ReplyDeleteதயவு செய்துஒன்றாம் தேதிக்குப் பிறகே புத்தகங்களை அனுப்புங்கள் சார். செப்டம்பர் மாதம் புத்தகமேவரவில்லை போலவே பீலிங். கரூர் ராஜசேகரன்
ReplyDeleteடிரெண்ட் - அட்டைப்படம் அட்டகாசமாய் வந்துள்ளது.. கண்களுக்கு குளிர்ச்சி!!
ReplyDeleteநம் தேசத்தந்தை பற்றிய காமிக்ஸ் விழிகளை விரியச் செய்கிறது!! சீக்கிரமே அதைக் களமிறக்குங்கள் எடிட்டர் சார்!! புத்தக விழாக்களில் மாணவர்கள் வாங்கிட ஏதுவாக முன்வரிசையில் வைத்திடவும் பயன்படும்!
உலக நாடுகள் குறித்த வரலாற்று கி.நா'க்களும் வருடத்திற்கு ஒன்றாவது போடலாம்!! எங்களுடைய நீண்டநாள் கோரிக்கைகளில் இதுவும் ஒன்றே என்பது தாங்கள் அறியாததல்ல!(சரி.. இப்ப அறிஞ்சுக்கங்க)
கெளபாய் கதைகள் என்றைக்குமே சளைக்காது எங்களுக்கு! நாங்க ரெடி!!
புத்தக விழாக்கள் குறித்த அப்டேட் - நிறைவாக இருக்கிறது!!
அடுத்த வருட அட்டவணைக்காண்டி ஆவலுடன் வெயிட்டிங்! (தீவாளி ரிலீஸ்?!!)
எங்கள் EV form ku வந்துட்டார். இது போல எழுத நீங்கள் வந்தால் தான் முடியும் செயலரே
Delete//
Deleteநம் தேசத்தந்தை பற்றிய காமிக்ஸ் விழிகளை விரியச் செய்கிறது!! சீக்கிரமே அதைக் களமிறக்குங்கள் எடிட்டர் சார்!! புத்தக விழாக்களில் மாணவர்கள் வாங்கிட ஏதுவாக முன்வரிசையில் வைத்திடவும் பயன்படும்! // நல்ல ஐடியா.
@ஈரோடு விஜய்:
Deleteஅந்த பிரெஞ்சுத் தயாரிப்பில், நமது தேசத் தந்தை பற்றி கொஞ்சம் இப்படி அப்படி இருந்து தொலைத்தால், இங்கே பத்திக்கிட்டு எரியும் (நமது குடோன் தான்), பராலியா?! :D
ஆமாமா அப்படி இப்படி எழுத நமது தேசம் பிதாவிடமும் நிறைய சரக்கு இருக்கு!! ஆனாக்க அசலூர்காரவுக அதையும் எழுத மாட்டாங்கனு நம்புவோம்!!
Delete// So சமீப சமயங்களின் biggest success story "டைனமைட் ஸ்பெஷல்" தான் என்பேன்! //
ReplyDeleteஉண்மைதான் சார்,ஒரு ஆகச்சிறந்த ஆக்ஷன் நாயகரை வைத்து வேறு பாணியில் கதையை நகர்த்தி வெற்றி பெற செய்வது சாதரண விஷயமல்ல,டைனமைட் ஸ்பெஷல் என்னைப் பொறுத்தவரை உண்மையிலேயெ டைனமைட் ஸ்பெஷல் தான்.....
இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால் டெக்ஸ் கதை பாணிகள் எல்லாமே ஒரே வகையறாக்கள்தான் என்பவர்கள்தான் முதலில் இது போன்ற கதைகளை வரவேற்கவும்,சிலாகிக்கவும் வேண்டும்......
அவர்கள் மனதிற்குள்ளேயே வரவேற்றும் ,சிலாகித்தும் ,கை தட்டி தான் ரசிக்கிறார்கள் ரவி சார்..
Deleteவெளியே மட்டுமே கொஞ்சமாய் முகத்தை திருப்பி கொள்வார்கள்..மத்தபடி அவர்களுக்கும் ஐ லவ் டெக்ஸ் தான்..:-)
Definitely டைனமைட் ஸ்பெஷல் சமீபத்திய டெக்ஸ் கதைகளில் "THE BEST"
Delete///அவர்கள் மனதிற்குள்ளேயே வரவேற்றும் ,சிலாகித்தும் ,கை தட்டி தான் ரசிக்கிறார்கள்///---Factu...factu...!!! நல்லா சொல்லுங்க தலைவரே!
Delete// TEX அபிமாணிகள் தேடுவது பருமனான; வண்ணமயமான ஆல்பங்களையே ! சர்வமும் நானே; டைனமைட் ஸ்பெஷல்; சைத்தான் சாம்ராஜ்யம் etc...etc...//
ReplyDeleteதீபாவளி சிறப்பிதழாக சர்வமும் நானே போல் டெக்ஸ் தனி சாகஸமாக ஒரு இதழ் வெளியிடலாமே சார்......
மறக்க முடியாதது சர்வமும் நானே ...
Deleteதீபாவளி அன்று ஒரு ஆக்சன் சினிமா பார்த்தது போன்று இருந்தது...
ப்ளஸ்ஸோ ப்ளஸ்...
Deleteதீபாவளிக்கு வாங்குன அணுகுண்டு வெடிக்கலைனாலும் பரவாயில்லை சார்..டெக்ஸ் குண்டு வெடிச்சா எங்களுக்கு போதும்..எனவே ...
ஆண்டுக்கு ஒரு டைனமைட் ஸ்பெசல் க்கு வழியில்லைனாலும், ஒராண்டு விட்டு ஓராண்டு செயல்படுத்தலாம் எடிட்டர் சார்!
Delete// 2.இன்னொரு 2 பாக கௌபாய் அதிரடி சாகசமும் கண்ணில் பட்டூ !! எங்கேனும் அதற்கொரு சீட் போட்டு வைக்கலாமா ? //
ReplyDelete+1
//
வண்ணத்தில் ஒன்று ; black & white -ல் இன்னொன்று என வரலாற்றை அட்டகாசமான கற்பனையுடன் கலந்து பிரமாதமான கிராபிக் நாவல்களாக்கிடும் முயற்சிகள் சமீபத்தில் கண்ணில் பட்டன ! அவற்றுள் ஒன்று வன்மேற்கைச் சார்ந்தது //
-1
2021 முயற்சி செய்யலாம்.
டிரெண்ட் - அடுத்த வருடம் இரண்டு அதற்கு அடுத்த வருடம் இரண்டு என அந்த தொடரை முழுமையாக போட்டு முடித்து விடுங்கள். கமான்சே போன்று தொங்க விட்டு விடாதீர்கள் சார். ப்ளீஸ்.
ReplyDelete+1
Deleteபட் கமான்சேவை நாம் தொங்க விட்டதால் தானே அவரும் தொங்க விட்டு விட்டார் நண்பரே..:-(
கமான்சே அநேகருக்கு ஏன் பிடிக்கவில்லை என தெரியவில்லை.
Deleteகமான்சே ஒவிய பாணியில் உள்ள பிரின்ஸ் கதைகளை ரசித்த நாம் இதனை ரசிக்காததன் காரணம் என்னவாக இருக்கும்? கமான்சேவில் ரெட் டஸ்ட் மற்றும் சாகசம் புரிவதாக? பிரின்ஸ் கதையில் அனைவரும் ஒருவகையில் சாகசங்கள் செய்வதாலா?
அல்லது இப்போது விமர்சனம் செய்வது போல் கமான்சே கதைகளுக்கு விமர்சனம் எழுதாததா?
அதுக்கு காரணம் வேற ஒண்ணும் இல்லிங்கோ. .கதை முழுக்க கஷ்டப்படறது பயபுள்ள ரெட்டஸ்ட்டு. கதைக்கு தலைப்பு கமான்சேன்னு பொம்புள புள்ள பேரு.ஆண்பாவம் பொல்லாதது இல்லீங்களா.. அதான்.
Deleteகமான்சே பிடித்து இருக்கு! இந்த விழாக்களில் கூட ஊர் சுற்றி பார்த்ததோடு சரி---னு போட்டு இருக்காரே! மீதி பாகங்கள் பற்றி சொல்றதுக்கு இனி ஒன்றும் இல்லை!
Deleteபோன வாரம் கமான்சே கதைகளை மீண்டும் வாசித்தேன். எல்லா கதைகளும் நன்றாகவே இருந்தன.
Deleteட்ரெண்ட் அட்டைப்படம் போன மாதம் போலவே இந்த மாதமும் மனதை கொள்ளையடிக்கிறது ..மிக அழகு.
ReplyDeleteகதையும் போன மாதம் போலவே இந்த மாதமும் அசரடிக்க போவது இப்பொழுதே மனக்கண்ணில் தெரிகிறது சார்..
காத்திருக்கிறேன்..
இதே நாயகரின் ஓவியர் தேச பிதா அவர்களுக்கு ஓவியம் படைத்திருப்பது வியப்பான செய்தியே..இந்த இதழ் வெளிவருமாயின் புத்தக விழாக்களில் வருகை தரும் பள்ளி மாணவர்களுக்குமே பயன்பெறும் இதழாக அமையும் என்பது உண்மை..
ReplyDeleteகெளபாய் கதையை பொறுத்த வரை திகட்டுவது கிடையாது பலருக்கு ..எனவே போட்டு தாக்குங்கள் சார்..
ReplyDelete( அந்த தாத்தா தான் கெளபாயான்னே தெரியாத அளவுக்கு திருஷ்டி வைத்து விட்டார்.:-)
மற்றபடி வேற எந்த பயமும் இல்லை சார்..ஐ லவ் கெளபாய்..(ஸ்)
சார்...போன முறை போல் மினி டெக்ஸ் தொகுப்பு பற்றிய அறீவிப்போ..ஈரோடு புத்தக காட்சி முதல் நாளிலோ தலை காட்டாத காரணத்தால் தல யின் அந்த தொகுப்பு பலருக்கும் தெரியவும் இல்லை..வாங்கவும் முடிய வில்லை..என்ன தான் தனி இதழாக இலவசமாக சந்தா நண்பர்களுக்கு கிடைத்து இருந்தாலும் அந்த தொகுப்பு இதழை வாங்க பலர் ஆர்வபட்டு இருந்தும் எந்த வெளிச்சமும் இல்லாத காரணத்தால் என்னால் கூட வாங்க முடியவில்லை..எனவே இனி இது போல் நடக்கா வண்ணம் பார்த்து கொள்ளுங்கள் சார்..ப்ளீஸ்..
ReplyDeleteஒரு நிசப்த மழையிரவில் இந்த ஆல்பத்தைப் படித்துப் பாருங்களேன் – செம ரம்யமாய் தென்படக்கூடும்
ReplyDelete########
இது தான் என்னுடைய ஆசையும் சார்...மழை பெய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை தான் ..ஆனா இப்ப எல்லாம் ஆறு மணிக்கு மேல..
டேய் ..தகப்பா ஆறு மணிக்கு மேல ஒரு கோடி கொடுத்தாலும் வேலை பாக்க மாட்டேன் ன்னு சொன்ன கவுண்டமணி தான் சார் நினைவுக்கு வாரார்...:-((
சிலபல ஊர்களிலும் “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” இதழை மட்டுமே மறுக்கா ஆர்டர் செய்துள்ளனர் ஏஜெண்ட்கள் ! The power of positivity
ReplyDelete#######
வாழ்த்துகள் சார்..:-)
வாழ்த்துக்கள் இங்கே அலசி ஆராய்ந்து தூள் கிளப்பிய நண்பர்களுக்குச் சொல்வதே பொருத்தம் தலீவரே !
Delete:-)
Deleteஅய்யா காமிக்ஸ் என்றாலே கௌபாய்ஸ் தானே இதுக்கெல்லாம் கேட்கனுமா? போட்டுத் தாக்குங்க
ReplyDeleteஹை !!
Deleteடியர் சார் i ,
ReplyDeleteமாட ஸ்டி - கதைக்கு பக்கம் அதிகம் இருக்கிறது தானே i, எனவே, Center P in அடிக்காமல் Side Pin அடித்து தயார் செய்யுங்களேன்.இதழ் - தனித்து காணப்படும்.. (அது வந்து - Center Pin அடித்த இதழ்கள் கோலம் புக் - போன்ற effect - யை தருகின்றன.)
இன்னமும் " இரும்புக்கை மாயாவிக்கு " இருக்கும் ஆதரவு பிரமிக்க வைக்கிறது.
இவரும் "டெக்ஸ் வில்லர்" மாதிரி தான், என்ன தான் கலாய்க்கத் தோன்றினாலும். மீண்டும் படிக்கத் தூண்டுபவராகத்தான் இருக்கிறார்.
நேற்று பழைய இதழ்களை உருட்டியதில் " மாயாவிக்கோர் மாயாவி "படித்து ரசிக்க முடிந்தது..
எனவே இரும்புக்கை மாயாவி என்பவர் உணர்வோடு கலந்தவர் என்பதே உண்மை.
எனவே , மீண்டும் எனது கோரிக்கை
மாயாவி , CID லாரன்ஸ் போன்றவர்களின் வெளிவராத (மறுபதிப்பு செய்யாத) இதழ்களை ரூ 10 சைஸில் தற்போதைய புதிய அட்டை வடிவமைப்பு, தரமான பேப்பரில் வெளியிட வேண்டும் என்பதே. (பெரிய சைஸில் படங்களில் ஒரு அழுத்தம் இல்லை. ஆரம்பத்தில் வெளியிட்ட பாக்கெட் சைஸ் என்றாலும் அருமைதான். ப்ளீஸ் சார் பரிசீலனை செய்யுங்கள்....
தற்போதைய விலைவாசிகளில் ரூ.10 விலைக்கு வெறும் அட்டைப்படத்தை மட்டும் தான் அச்சிட்டுக் கையில் தர இயலும் சார் !! அல்லது நமது சர்குலேஷன் எக்குத்தப்பாக இருந்திட வேண்டும் !! அல்லது சென்னை சில்க்சும் ; சரவணா ஸ்டோர்ஸும் ; லலிதா ஜுவெலெர்ஸும் நம்மிடம் விளம்பரம் செய்திட ஆவலாய் இருந்திட வேண்டும் !! இவை எதுவுமே நமக்கு நடைமுறையில் சாத்தியமில்லை எனும் போது சின்ன விலைகள் பற்றிய சிந்தைக்குக் கூட வாய்ப்பில்லை சார் ! செலவினங்கள் சகலமும் இன்றைக்கு வேறொரு லெவெலில் நிற்கின்றன !!
Deleteசார் ஒரு சின்ன திருத்தம் மேலே சொன்னவர் 10 ரூபாய் விலையில் போட சொல்லவில்லை! 10 ரூபாய் புத்தக சைஸில் மாயாவி & லாரன்ஸ் & டேவிட் ஸ்பைடரு வெளிவராத கதைகளை போடச் சொல்கிறார்!
Deleteகலீல் +1
Deleteவிஜயன் சார், ப்ளீஸ்.
கலீல்&இளங்கோ சார்+007.
Deleteவிஜயன் சார் மனம் வைப்பாரா?
+1
Deleteலவ் கவ்பாய் சார்
ReplyDelete:-)
Deleteதேசப்பிதாவை மகிழ்ச்சியுடன் வரவேற்க்கிறேன். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteOut of context ஒரு சின்ன உதாரணம் சார் : ஷா ருக் கானும், தீபிகா படுகோனும் நடித்ததொரு ஹிந்தி படத்தில் தமிழ் பேசும் கதாப்பாத்திரங்களை நுழைக்கிறேன் பேர்வழி என்று அவர்கள் தந்திருந்த டயலாக்களையும், அதை அவர்கள் பேசிய விதத்தையும் கேட்டிருக்கிறீர்களா ? எங்கோ அதைப் பார்க்க நேரிட்ட எனக்கு ஒரு வாரத்துக்கு உப்புத் தாளைக் கொண்டு மேலெல்லாம் தேய்த்துக் கொள்ளும் அரிப்பு எழுந்தது ! ஆனால் வடக்கே அந்தப் படம் ஹிட் !! அந்த தமிழ் பேசும் segment களில் அங்குள்ள மக்களுக்கு செம சிரிப்பு தோன்றியிருக்கக்கூடும் !! ஆனால் நமக்கு ?
Deleteஇதே கதை தான் சார் - பெரும்பான்மையான காமிக்ஸ் ஆக்கங்களிலுமே !! More often than not - இந்தியா சார்ந்த / இந்தியா பற்றிய மேற்கத்தியப் படைப்புகளில் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களே ஜாஸ்தியாய் இருப்பதாய் எனக்கொரு எண்ணம் !! இன்ன பிற தேசங்களில் இருப்போர் படிக்கும் போது அவை நெருடிடாது போகலாம் ; ஆனால் நமக்கு எரிச்சலாய் இருக்கக்கூடும் !
தேசப்பிதா சார்ந்த அந்த காமிக்ஸ் பற்றி சும்மா ஒரு தகவலாய்ச் சொல்வது மாத்திரமே எனது நோக்கம் சார் !
Delete//தேசப்பிதா சார்ந்த அந்த காமிக்ஸ் பற்றி சும்மா ஒரு தகவலாய்ச் சொல்வது மாத்திரமே எனது நோக்கம் சார் !//
What a relief...in print format ,it's good enough to see our father of nation in rose,green & blue shaded loose bills...:-) and please don't consider this comment as an arrogant one..it's not..reality is speaking itself..
//கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலுமே இன்னமும் நமது ஸ்டீல்க்ளாவுக்கு மவுசு தொடர்கிறது! (கவிஞரல்ல நான் குறிப்பிடும் ஸ்டீல்க்ளா) இந்த மேம்பட்ட மறுபதிப்புகள் துவங்கிய 2015...2016-ன் craze இன்றைக்கு இல்லை என்றாலும் – இன்னமுமே – மாயாவியை நம்பினோர் கைவிடப்படேல் !//
ReplyDeleteஅப்படியே நம் மாயாவி மாமாவுக்கும் அவ்வப்போது கொஞ்சம் இடம் கொடுக்கலாமே சார். விற்பனையில் உங்கள் கையை கடிக்க வாய்ப்பில்லையென்றால் தரலாமே!
மேம்பட்ட மறுபதிப்புகள் தரத்தில் வெளிவராத மாயாவியின் கதைகளை புத்தக விழாக்களின் சமயத்திலாவது வெளியிடலாமே சார்.
கல்லா கட்ட ஓரளவுக்கு உதவிடக்கூடும் சார் ; ஆனால் மாயாவியைத் தாண்டி வேறு எதையேனும் நீட்டினால் - போவியா நீ !! என்பதே அவரது ரசிகர்களின் ரியாக்ஷனாக உள்ளது !
Deleteஇப்போதைக்கு தங்கள் கடைக்கண் பார்வை மாயாவியார் மீது மட்டும் விழுந்தாலே போதும் சார். மும்மூர்த்திகளை தேடித்தேடி அலுத்து விட்டது சார். (உங்களை நஷ்டப் படுத்தாத) மாயாவியின் கதைகள் மட்டும் வெளிவந்தாலே போதும். ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு ஒன்று கிடைத்தால்கூட அது பெரிய விஷயம் தானே! இது ஒரு தாழ்மையான வேண்டுகோள் மட்டுமே சார்.
Deleteடிரெண்ட் அட்டைப்படம் simply super ரகம். கடந்த இரண்டு வருடங்களில் ட்ரெண்ட் அட்டைப்படம் மற்ற கதை அட்டைப்படங்களை விட தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ReplyDeleteஇந்த அட்டைப்பட மெருகூட்டல் நம் அலுவலகத்தின் கோகிலா !
Deleteவாசகர்களின் சார்பாக அவருக்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள் சார்..
Deleteவாசகர்களின் சார்பாக அவருக்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள் சார்!
Deleteடிரெண்ட் அட்டைப்படத்தை மட்டும் mat finishல் கொடுங்கள் சார்.
// ட்ரெண்ட் அட்டைப்படம் மற்ற கதை அட்டைப்படங்களை விட தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.//
Deleteஉண்மைதான்,சென்ற மாத டிரெண்ட் இதழை கையில் ஏந்தி பார்க்கும்போது மகிழ்வாய் இருந்தது.....
நமது காமிக்ஸ் விற்பனை மதுரை மற்றும் கோவை புத்தகத் திருவிழாக்களில் களைகட்ட ஆரம்பித்து விட்டது என்பது அட்டகாசமான செய்தி. இதனை இன்னும் அதிகப்படுத்த வரும் வருடங்களில் நீங்கள் இங்கு புத்தகத் திருவிழா நடக்கும் நாளில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteநான் வருகை தந்து விற்பனையில் ஆகப் போவதேதும் இராது சார் ! என்னைத் தெரிந்திருக்கும் நண்பர்கள்,ஏற்கனவே நம் இதழ்களை சந்தாக்களிலோ, கடைகளிலோ வாங்குபவர்களாய் இருப்பர் ! புதுசாய் எட்டிப் பார்ப்போருக்கு அண்ணாச்சியின் அசிஸ்டண்டாய் மாத்திரமே நான் தெரிவேன் ! So நான் தலைகாட்டியதற்காக விற்பனை எகிறப் போகும் வாய்ப்புகள் ரெம்போ கம்மி !
Deleteஎப்படி இருக்கும் என்று சொல்வதை விட நடைமுறைபடுத்திய பின்னர் முடிவெடுக்கலாமே?
Delete///புதுசாய் எட்டிப் பார்ப்போருக்கு அண்ணாச்சியின் அசிஸ்டண்டாய் மாத்திரமே நான் தெரிவேன் ! So நான் தலைகாட்டியதற்காக விற்பனை எகிறப் போகும் வாய்ப்புகள் ரெம்போ கம்மி !///
Deleteஹா ஹா ஹா!! நடூஊஊ ராத்திரியில கெக்கபிக்கேன்னு சிரிச்சுப்புட்டேன்!! அண்ணாச்சிக்கு அசிஸ்டண்டாய் - தம்பி செல்வனின் இடத்தில் உங்களை நினைத்துப் பார்த்தேன்.. புர்ர்ர்ர்ர்.. :):):):)
எங்களுக்கு (எங்களை போன்ற பல காமிக்ஸ் ரசிகர்களுக்கு) நீங்கள் தெரிந்தவர் தானே சார்! அதே போல் இங்கும் (மதுரையிலும் & கோவையிலும்) நீங்கள் தொடர்ந்து தலை காட்டினால் எல்லோருக்கும் நீங்கள் அண்ணாச்சியின் அசிஸ்டென்ட் இல்லை என்று எல்லோருக்கும் தெரிந்து விட போகிறது! :-)
Deleteஅடுத்த பதிவின் தலைப்பு
ReplyDelete"செப்டம்பரில் அக்டோபர்" அதானே?!
அதேதான்...
கொளுத்தி போட்டாச்சு. எப்படியோ அக்டோபர் புத்தகங்கள் செப்டம்பரிலேயே கைக்கு கிடைச்சா சரி... :)))
// செப்டம்பரில் அக்டோபர்" அதானே?!//
Deleteஅது மட்டுமா தலைவரே,அக்டோபரில் நவம்பர் கூட உண்டு.....
//கல்லா கட்ட ஓரளவுக்கு உதவிடக்கூடும்//சார் ; ஆனால் மாயாவியைத் தாண்டி வேறு எதையேனும் நீட்டினால் - போவியா நீ !! என்பதே அவரது ரசிகர்களின் ரியாக்ஷனாக உள்ளது !//
ReplyDeleteஅவர்கள் டைகர் ரசிகர்கள் மாதிரினு நினைக்கிறேன் சார்
டைகர் ரசிகர்கள் தங்கம் சார். உள்ளுக்குள் டெக்ஸை ரசித்து விடுறாங்க! வெளில வெறுப்பது போல நடிப்பாங்க!
Deleteஆனா இந்த இரும்புக்கை ரசிகர்கள் கொஞ்சம் அப்படிதான்; சேலத்தில் கூட இவுங்க இரும்புகையை தவிர மற்றதை தொடமாட்டாங்க! அவுங்க அப்படி ரசித்து பழகிட்டாங்க!
XIII இரத்தப்பலம் இப்போது தேவை அதிகமாக உள்ளது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அச்சிட்டால் சென்னைப்புத்தக திருவிழாவில் ஒரு கணிசமான விற்பனையை எதிர்பார்க்கலாம் சார் ஒரு சின்ன அறிவிப்பு போதும் ...மக்கள் ரெடியா இருக்காங்க....
ReplyDelete1 & 2
ReplyDeleteகேள்விகளுக்கு எனது பதில் முயற்ச்சிக்கலாம் என்பதே..
கூடவே சயின்ஸ் பிக்சன் கதை ஒன்றும் பரீட்சித்து பாருங்கள் சார்.
1&2 கண்டிப்பாக வரவேண்டும்.புதிய ஆக்கங்கள் என்றும் வரவேற்கப்பட வேண்டியதே,இதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.
ReplyDeleteLady s எனக்கு மிகப் பிடித்த தொடர்.மீண்டும் வரவாய்ப்புண்டா சார்?
ReplyDeleteஇத்தொடரில் இன்னும் எத்தனை ஆல்பங்கள் உள்ளன சார்?
டியர் சார்,
ReplyDeleteமுன்பு ரூ 10க்கு வெளியிட்ட சைஸ் _ என்றால் 10 ரூபாய்க்கு காமிக்ஸ் கேட்பதாக நினைத்து விட்டீர்களே சார்...ii
காமிக்ஸ் படிப்பதே ஒரு ரசனை என்னும் போது , நீங்கள் என்ன தான் MAXI - என்று படா-சைஸுக்கு கூட்டிச் சென்றாலும் , உங்களை பின்னோக்கி இழுப்பதிலும் ஒரு ரசனை + ஒரு வியா பாரம் இருந்தால் பரிசீலனை செய்யுங்களேன் சார். ii..
தல தொடர்ந்து விற்பனையில் மிக மகிழ்ச்சி தருகிறது.அதுவும் டைனமைட் ஸ்பெஷல் விற்றுத்தீரப்போவது மகிழ்ச்சி தருகிறது.
ReplyDeleteடியர் சார்,
ReplyDeleteமுன்பு ரூ 10க்கு வெளியிட்ட சைஸ் _ என்றால் 10 ரூபாய்க்கு காமிக்ஸ் கேட்பதாக நினைத்து விட்டீர்களே சார்...ii
காமிக்ஸ் படிப்பதே ஒரு ரசனை என்னும் போது , நீங்கள் என்ன தான் MAXI - என்று படா-சைஸுக்கு கூட்டிச் சென்றாலும் , உங்களை பின்னோக்கி இழுப்பதிலும் ஒரு ரசனை + ஒரு வியா பாரம் இருந்தால் பரிசீலனை செய்யுங்களேன் சார். ii..
டியர் சார்,
ReplyDeleteமுன்பு ரூ 10க்கு வெளியிட்ட சைஸ் _ என்றால் 10 ரூபாய்க்கு காமிக்ஸ் கேட்பதாக நினைத்து விட்டீர்களே சார்...ii
காமிக்ஸ் படிப்பதே ஒரு ரசனை என்னும் போது , நீங்கள் என்ன தான் MAXI - என்று படா-சைஸுக்கு கூட்டிச் சென்றாலும் , உங்களை பின்னோக்கி இழுப்பதிலும் ஒரு ரசனை + ஒரு வியா பாரம் இருந்தால் பரிசீலனை செய்யுங்களேன் சார். ii..
சார்,வணக்கம்
ReplyDeleteசார், அல்லது அண்ணா, எங்கள் தேவைகளை நீங்கள் இடை இடையே, எங்களுக்கு தந்தாளே போது, நாங்கள் கேட்பது, படித்து பல காலம், ஆன, ஆர்ச்சீ, ஸ்பைடர், மற்றும் லாரன்ஸ், இவர்கள் அனைவரும் கலந்து ஒரே புக்காக வருடம் ஒன்று விதம் தந்து கூடவே மாயாவி கதையும் ஒன்று சேர்ந்து ஒரு புக்கு, என்ன விலையை பற்றி நாங்கள் கவலைபடமாட்டோம், உங்களுக்காக நங்கள் இருக்கும் போது எங்களுக்காக நீங்கள், செய்யலாமே, எங்கள் தேவைகளை நிங்கள் இடை இடையே, எங்களுக்கு தந்தாளே போது, நாங்கள் கேட்பது,படிக்காத கதைகளை தானே, ஒரு தடவை ஒரே ஒரு முறை, முயற்சி செய்து பாருங்கள்,
ReplyDelete+007.
Deleteவெல்டன் வெங்கடேஷ் சார்.
நீங்கள் செய்வீர்களா ?
நீங்கள் செய்வீர்களா விஜயன் சார்?
+1
Deleteநான் வண்ணத்தில் X111 வாங்பவில்லை.
ReplyDeleteமீண்டும் வந்தால் வாங்கத் தயாராக உள்ளேன்.
///ஆர்ப்பரிக்கும் அருவிகள் ஒரு பிரம்மாண்டமெனில், விசையோடு ஓடும் தெளிந்த நீரோடையுமே ரசனைக்குரியதே///
ReplyDeleteகவித கவித 👏👏👏
+111
/// சந்தேகமின்றி இந்தாண்டின் இந்த 5 புத்தக விழாக்களிலுமே flavor of the season டெக்ஸின் “டைனமைட் ஸ்பெஷல்” தான்!///
ReplyDelete----லாலே லாலி லாலா....!!!!
//‘தல‘ தாண்டவத்தைத் தடைபோட வழியில்லை ! So சமீப சமயங்களின் biggest success story "டைனமைட் ஸ்பெஷல்" தான் என்பேன்!/////
---- லாலி லாலே லாலா...!!!
///Color Tex தொகுப்பான “புனிதப் பள்ளத்தாக்கு” கூட best seller தான்!///
---லாலி லாலே லாலா....!!!
தல ராக்ஸ் எகென்!!!!
மீண்டும் மீண்டும் கிங் ஆஃப் தமிழ் காமிக்ஸ் தலதான்னு உரக்கச் சொல்லும் ரிப்போர்ட்ஸ்!!!
தலை இருந்தா வெறென்ன வேண்டும்...!!!!!!
""பில்டப்புகளுக்கு அப்பாற்பட்ட அசகாயர்!""
---அருமையான டைடில் கார்டு எடிட்டர் சார்.
தலையின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் வரிகள்....!!!!
நானும் தான், கலர் ரத்த படலம் வாங்கவேயிலை, ஆனந்தன், சார், கொஞ்சம் எங்கள் மீது கருணை பார்வை, காட்டுங்கள்
ReplyDeleteரத்த படலத்தின்,வீரியம் இப்போதுதான் தெரிகிறது, பாருங்கள், பல,,,,,,, பல பேருக்கு, ரத்த படலம் தேவை படுகிறது , மீண்டும், ஒரு முன் பதிவுக்கு மட்டும், என்று, சொல்லிபாருங்கள், 800 "ஐ, தாண்டி, மீண்டும் ஒரு, 800" ஐ தொடும், முன்பதிவு, மீண்டும் போடலாமா,,,,, என்று சொல்லிபாருங்கள்,,,,,, மோதல சொல்லுங்கள், சார்,, ,,,,,,
ReplyDeleteநடப்புப் பணிகளை இரு மாதங்களுக்கு மூட்டைகட்டி ஓரம் வைக்காது மறுக்கா இரத்தப் படலம் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை நண்பரே !
Deleteசரி. ஒரு பேச்சுக்கே இன்னொரு முன்பதிவும் செய்து Re-reprint வெளியிட்டும் விடுகிறோமென்றே வைத்துக் கொள்ளுங்கள் ; அந்த முறையும் வாங்க தவறிடும் நண்பர்கள் மூன்றாவதாய் ஒரு எடிஷன் போடச் சொல்லிக் கேட்டால் நான் சொல்ல வேண்டிய பதில் என்னவாக இருக்கக்கூடும் நண்பரே ?
சார் உங்களால் முடிந்த பொழுது இரத்தப்படலம் அறிவிப்பை வெளியிடுங்கள் காத்திருக்கிறோம்
Deleteஎங்கள் பணி, உங்களிடம் கேட்டு பெறுவது, கொடுப்பது, உங்க கடமை, கொடுக்கலாமே சார், சார்,,,,,,,
ReplyDeleteநான் சூப்பர்மேனும் இல்லை ; வைத்துக் கொண்டு வஞ்சகம் செய்யப் போகும் ரகமும் இல்லை நண்பரே ! நடைமுறை சாத்தியங்களுக்கு உட்பட்ட எதையேனும் கேட்டால் நிச்சயம் முயற்சிப்பது என் கடமை !
Deleteஉடனே என கேட்கவில்லையே சார் ஜனவரி சென்னை அல்லது ஈரோடு போன்ற விழாக்களில் உறுதியாக இதுவே இறுதி வாய்ப்பு என்ற வசனத்தையும் சேத்துதுக்கலாம் சார்....
Deleteமூன்றாவது, மறுபதிவு, என்பது சாத்தியம் இல்லை கடைசி வாய்பை தவறவிட்டால், என்னால் எதையும் செய்யமுடியாது, என்று சொல்லிவிடுங்கள், சார் ப்ளீஸ்
ReplyDeleteஆம் அதேதான்..800 கூட வேண்டாம் சார் பாதி 400. அன்றாட பணியினுடே சிறிது சிறிதாக....நீங்க நினைத்தால் முடியும் நீங்கமட்டும்தான் நினைச்சா முடியும்...சார்...
Deleteகேள்விகள் 1 மற்றும் 2 மற்றும் 3
ReplyDeleteசார் !!!! ஒருத்தங்க அதிகம் இல்லாதப்பத்தான் அவங்க அருமை தெரியுது !!
கார்ட்டூன் அதிகம் கொண்டு வாங்க சார் !!!
புரட்டாசி சைவ மாசம் மாதிரி கார்ட்டூன் மாதம் அப்டின்னு கூட கொண்டு வரலாம்
வன்மேற்கு அதிகம்னு அர்த்தம் இல்ல....
கார்ட்டூன் படிச்சா ஒரு வாரமாவது மனசு ரொம்ப லேசா இருக்கு ..
விற்பனைக்கும் ஒத்துழைக்கிற மாதிரி , நண்பர்களுக்கும் புடிக்கிறமாதிரி எதுவேணாலும் கொண்டுவர முயற்சி செய்யுங்களேன் ..
வீராப்பா அது வேணாம் இது வேணாம்னு சொல்லியாச்சு ..
எதுவானாலும் பரவாயில்ல ....கார்ட்டூன் கொஞ்சம் அதிகம் வேணும்
வாங்க வாங்க செல்வம் அபிராமி சார். அப்படி சொல்லுங்க. கார்ட்டூன் இல்லா மாதம் வெறுமையே
Delete***** சாலையெல்லாம் ஜுவாலைகளே! ******
ReplyDelete"ட்ரெண்ட் ஒரு போலீஸ்காரர் - அவரது காதல் வாழ்க்கையில் தோல்வி" -இதை வைத்து ஒரு அழகான கதையை உருவாக்கி, படிப்பவர்களை உணர்வுப் பூர்வமாக அழைத்துச் சென்று, இறுதியில் ஒரு சாகஸதைத் நிகழ்த்திக் காட்ட முடியுமென்று அட்டகாசமாய் உணர்த்தியிருக்கிறார்கள் படைப்பாளிகள்!! யூகிக்க முடியாதபடிக்கு கதையை நகர்த்திச் சென்று பட்டென்று முடிச்சை அவிழ்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பது - படைப்பாளிகளின் தேர்ந்த திறமைக்குச் சான்று!!
முந்தைய சாகஸங்களைக்காட்டிலும் இன்னும் மனதுக்கு நெருக்கமாய் - அலங்கரிக்கப்பட்ட மேடையில் கிரீடம் தாங்கியக் கம்பீர உருவமாய் - ட்ரெண்ட்!!
என்னுடைய ரேட்டிங் : 10/10
'சாலையெல்லாம் ஜூவாலைகளே!' என்ற தலைப்பு மட்டும் சரியாகப் பொருந்தாததைப் போல இருக்கிறது!! 'ஜூவாலை' என்பதை கொளுந்துவிட்டு எரியும் தீ என்பதாக நாம் கற்பனை செய்துகொள்ளத் தோன்றுவதால் 'பற்றியெரியும் சாலை' என்பதுபோல தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது!!
Deleteசிம்பிளாக 'வீதியெங்கிலும் வெளிச்சங்களே!' என்பதைப்போல இருந்திருக்கலாம்!!
நல்ல விமர்சனம் EV. மனதுக்கு நெருக்கமாக டிரெண்ட் வந்தது உண்மை
Delete//சாலையெல்லாம் ஜூவாலைகளே!' என்ற தலைப்பு மட்டும் சரியாகப் பொருந்தாததைப் போல இருக்கிறது!! 'ஜூவாலை' என்பதை கொளுந்துவிட்டு எரியும் தீ என்பதாக நாம் கற்பனை செய்துகொள்ளத் தோன்றுவதால் 'பற்றியெரியும் சாலை' என்பதுபோல தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது!!
Delete///
நிஜம்தான்!!
அன்னாசி பழ முள்ளுக்கு உள்ளே
ஆரஞ்சு சுளைகள்.:-)
"When the lamps are lit" ----என ஆங்கிலத்தில் உள்ள டைட்டிலை எடிட்டர் சார் கொஞ்சம் கவித்துவமாக வழங்கி உள்ளார். கதைக்கு ஏற்றவாறு இன்னும் பொருத்தமான தலைப்பாக?????
Deleteகதை மாலையில் விளக்கேற்றும் வேளையில் வீட்டில் உள்ள மனைவி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் கணவனை எதிர்கொள்ளுகிறாள் என்பதில் துவங்கி அதிலேயே முடிகிறது )
Deleteகதை நாயகனின் காதலியை இழந்த நிலையை தனது ஜீவனாக கொண்டுள்ளது ...
அவனது தனிமை நிலையை கதை நெடுகிலும் காண முடிகிறது ..
ஈவி குறிப்பிட்டதுபோல் ஜ்வாலைகள் என்பது கனலை குறிப்பிடும் ..
இங்கு சோக ரசம் ததும்புவதால் அதிகம் பொருந்திவரவில்லை ..
கதையின் நாதம் நாயகனின் தனக்கென மனைவி குடும்பம் ஏதுமில்லை என வருந்தி இருப்பதாக உள்ளமனநிலையை கண்ணதாசனை கூட துணைக்கு அழைக்கலாம்...
மாலைப்பொழுதின் மயக்கத்திலே ...( என்ன ! ரமணி சந்திரன் நாவலின் காமிக்ஸ் வடிவம் என பெண்கள் வாங்கி விட வாய்ப்புண்டு :-) }
///விளக்கேற்றும் வேளையில் வீட்டில் உள்ள மனைவி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் கணவனை எதிர்கொள்ளுகிறாள் ///
Deleteபடிக்கும்போதே பீதி கிளம்புகிறது! என்னா ஒரு terrific situation - கணவன்களுக்கு!! :)
EV terrific situation a? Terrifying situation a?
Deleteசரிதான்! :)
Delete'எதிர்கொள்ளும்போது' - terrifying
வீட்டுக்குள்ளே போய் சாப்பாட்டுத் தட்டை கையில் ஏந்தும்போது - terrific
ஹாஹா...:-))))
Deleteலேட்டா இருந்தாலும் லேட்டஸ்ட் விமர்சனம் செயலரே..!
Delete150th success
ReplyDelete151 குமார் ஜி..
Deleteநீங்கள் சொன்னது சரி தான் பழனி
Deleteஇறுதி வாய்ப்பு இரத்தப்படலம்
ReplyDeleteNCS
Never Come Special
// சரி. ஒரு பேச்சுக்கே இன்னொரு முன்பதிவும் செய்து Re-reprint வெளியிட்டும் விடுகிறோமென்றே வைத்துக் கொள்ளுங்கள் //
ReplyDeleteஓகே சார் போதும் இந்த வார்த்தை போதும் எப்படியும் வர வச்சிடலாம்.... நண்பர்களே கேளுங்கள் யார்க்கிட்ட கேக்குறோம் நம்ம ஆசிரியரிடம் தானே நம்ம கேட்டாதான் கிடைக்கும்....
வழக்கம் போல ஓட்டெடுப்பு நடத்திப்புடலாம் சார்.....
ReplyDeleteஇரத்தப்படலம் மீண்டும் வரட்டும்.எனக்கு வேண்டும்.என் ஆதரவு உண்டு.இறுதி வாய்ப்பு இது என்று கூறி முன்பதிவை ஆரம்பிக்கலாம்.
ReplyDeleteஒரு பணியினைச் செய்யும் போது ஆத்மார்த்த ஈடுபாடும், முழுமையாய் முயற்சிகளும் அத்தியாவசியம் -அதனில் வெற்றி கண்டிட ! மறுக்கா மறுக்கா மறுக்கா ஒரே மாவை அறைப்பதில் சத்தியமாக மேற்சொன்ன இரண்டுமே சாத்தியமில்லை !
ReplyDeleteஒன்றல்ல ; இரண்டல்ல ; மூன்றல்ல - நான்கு இதழ்கள் ப்ளஸ் ஒரு ஸ்லிப் கேஸ் என்ற தயாரிப்புப் பணிகளைக் கடனே என்று செய்து கரைசேர வழி கிடையாது ! ஒரு ஆர்வக்கோளாறில் இங்கே தலையை ஆட்டி விட்டு அடுத்த இரு மாதங்களை இதனில் செலவிடும் அவகாசமோ, ஆற்றலோ சத்தியமாய் என்னிடமில்லை நண்பர்களே ! அந்த வயசையெல்லாம் தாண்டி நாளாச்சு !
:-)
Deleteபார்த்து செய்யுங்கள் சார். பய புள்ளைங்க enjoy பண்ணட்டும். அப்படியே எனக்கு ரெண்டு புக்கிங்.
Delete2020 வருடம் இல்லை என்றால் 2021. தற்போது அனைத்தும் digital முறையில் இருப்பதால், மீண்டும் மொழிபெயர்ப்பு மற்றும் எடிட்டிங் வேலை கிடையாது. மற்றவை வழக்கம் போல். அடுத்த வருடம் ஈரோடு புத்தகத் திருவிழாவில் இரத்த படலம்-2 முன்பதிவை ஆரம்பித்து வைக்கலாம் சார்.
Deleteஇரத்த படலம் கலர் புக்..500 பிரதிகள் மட்டும்.. கால அவகாசம் கொடுத்து புக்கிங் செய்து பார்க்கலாம் சார் .
ReplyDeleteசார் அந்த புது வெட்டியானுடய கிராபிக் நாவலும் 2020 அட்டவணையில் உண்டு தானே
ReplyDeleteகண்டிப்பாக உண்டு. இரண்டுமே ஹிட் தானே நம்மிடம்
Deleteகுமார் சார் நான் சொல்லவந்து அண்டர்டேக்கர் அல்ல
Delete//குமார் சார் நான் சொல்லவந்து அண்டர்டேக்கர்//
Delete??? Did i miss something??
Selvam abirami @ yes. You missed "அல்ல"
Deleteபரணி@ :-))))
Deleteமாதம் ஒரு முழுநீள கார்ட்டூன் (any hero),
ReplyDeleteமாதம் ஒரு க்ரைம்/டிடெக்டிவ் த்ரில்லர் (any hero),
மாதம் ஒரு கௌபாய் (தொங்கலில் இல்லாமல்),
சந்தா பி-க்கு டெக்ஸ் குண்டு புக் / promote to கலர் டெக்ஸ் மட்டும் (regular overdose),
ஒரு மாதம் கிராஃபிக் நாவல் மறுமாதம் ஜம்போ என தொடர்ச்சியாக - இரண்டும் ஒரே மாதத்தில் வேண்டாமே.
வருடத்திற்கு ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் மட்டுமாவது - என்று வழக்கப்படுத்திக் கொள்ளலாமே?
Including reprints & surprise issues
ஆக மொத்தம் மாதத்திற்கு 5 புத்தகங்கள். வருடத்திற்கு 60 . அருமை அருமை. கேட்க நன்றாக தான் இருக்கிறது. ஆனால்
Deleteநல்ல சிந்தனை வீரபாண்டியன்
DeleteSir! பிற ஹீரோக்களைப் பற்றி நீங்கள் சொல்வது வேண்டுமானால் “பில்ட் அப் “ஆக இருக்கலாம். ஆனால் ட்ரெண்டை ப் பற்றி நீங்கள் சொல்வது உண்மையே ஆகும்.
ReplyDeleteமேலும் விச்சுவும் கிச்சுவும் கூட குறைந்தவர்கள் அல்லர். விச்சுகிச்சு, பரட்டை த்தலை ராஜா, ஜோக்கர், குண்டன் பில்லி, Mr. காக்கா, Mr. மியாவ் போன்றோர் காணப்படாத காமிக்ஸின் கடைசி பக்கங்கள் முற்றுப்புள்ளி இல்லாமல் எழுதப்பட்ட வாக்கியத்தைப் போன்ற உணர்வை தோற்றுவிக்கின்றன.
ஸ்பைடரை பொறுத்தவரை Black & White என்றால் Pocket Sizeம், இருவண்ணம் அல்லது மூவண்ணம் என்றால் Maxi Sizeம் தான் அவருக்கு அழகு சேர்க்கும். விற்பனையும் ஆகும்.வேண்டுமானால் "விண்வெளி பிசாசி"னை கலரில், Maxi Size ல் வெளியிட்டுத்தான் பார்ப்போமே, Sir!? அப்படி செய்தால் இந்த உண்மை நிரூபணம் ஆகி விடும் என்பது எனது கருத்து Sir. Kindly don’t mistake me.
தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் .....
Delete“அக்டொபரில் தொடர்வது பில்டப்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு அசகாயரின் ஆல்பமே (TEX - புதைந்து போன புதையல்)”
Deleteஇந்த வரியைப்பற்றி அறியவந்த டெக்ஸ், டைகர் உள்ளிட்ட தன் நவஹோக்களிடம் “அருமை! எனக்காக தரப்பட்ட பில்ட் அப்களில் மிக சிறந்த மற்றும் புதுமையான பில்ட் அப் இதுதான். இதனை வழங்கிய சிவகாசி சிங்கத்திற்கு எனது புதிய 500 பக்க முழு வண்ண சாகசக் கதையை, ஒரு வரியை க் கூட விட்டு விடாமல் நமது பாரம்பரிய புகை சமிக்ஞை மூலம் அனுப்பி நன்கு கௌரவித்து விடுங்கள்”.
பின் குறிப்பு: Dear Sir, அடுத்த வருடம் டெக்ஸ் வில்லரின் "புயலுக்கொரு பிரளயம்” போன்ற மெகா சாகசத்தை எதிர் பார்க்கிறேன். (“Tex vs. Mafesto” ஆக இருந்தாலும் பரவாயில்லை. "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று உள்ள நிறைவு கொள்வேன். நன்றி.
+1 :):)
Deleteகொள்ளைக்கார பிசாசு, யார் அந்த மாயாவி, கொரில்லா சாம்ராஜ்யம் மூன்றும் சேர்ந்த வண்ண குண்டு புத்தகம் எடிட்டர் கண்டிப்பாக கொடுப்பாரென்றால் யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள்!
ReplyDeleteசெய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? எடிட்டர் சார்?
////செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? எடிட்டர் சார்?////
Deleteசெய்வாருங்க திரு.ATR sir.. எடிட்டர் கையில மாட்னீங்கங்கன்னா வச்சி செய்வார்! :)
ஈ.வி.சார் சிங்கம் 2 படத்தில் சந்தானம் மன்னிப்பு கேட்கும் டெக்னிக்கை!(ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன்) நானும் செய்து எஸ்கேப் ஆகிடுவேன்.
DeleteATR @ +1
Deleteஎனக்கு ஒரு கலர், ரத்த படலம்,
ReplyDeleteசார் ஜெரமியா செவ்விந்திய புக்கை எப்பொது வெளியிடுவிர்கள்
ReplyDelete+1
Delete+123
Deleteமறு, பதிப்பு போடத கதைகளை தானே கேட்கிறோம், ஆசிரியர்க்கு இளகிய மனசு, நம் குரல், கொடுப்போம், மறுபதிப்பு போடும், கதைகள், அத்தனையும், கலரில்,
ReplyDelete199
ReplyDelete200 th super
ReplyDeleteவேதாளனின் புத்தகம் ஒன்றும் மறுபதிப்பு செய்யப்படவில்லையா...?
ReplyDeleteசார்லி(திக்கு தெரியாத தீவில்),ரிப் கெர்பி(நாலுகால் திருடன்) பிலிப் காரிகன் இவர்களெல்லாம் எங்கே??