நண்பர்களே,
வணக்கம். சில நேரங்களில் மாங்கு மாங்கென்று எதையாச்சும் ரோசனை பண்ணி எழுதித் தள்ளி விட்டு - ''இன்னிக்கு பின்னூட்டம் அள்ளப் போகுதுடோய் ; ஓவர் நைட்டிலே ஒபாமா தான் !!" என்ற எதிர்பார்ப்பில் விட்டத்தைப் பார்த்துக் கிடந்தால், ஞாயிறு ராவுக்கு பின்னூட்ட எண்ணிக்கை "57" என நொண்டியடித்துக் கொண்டு நிற்கும் !! ஆனால் சில வேலைகளிலோ கேஷுவலாய் ; மண்டையில் உதிக்கும் முதல் சமாச்சாரத்தை டைப்பி விட்டு மதியமாய் கொட்டாவி விட்டபடிக்கே இங்கே எட்டிப் பார்த்தால் ரணகள வேகத்தில் பின்னூட்டங்கள் பதிவாகிக் கிடக்கும் - நேற்றைய பொழுதைப் போல !
நிஜத்தைச் சொல்வதானால் சனிக்கிழமை பதிவின் பொருட்டு சின்னதாயொரு கூத்து அரங்கேறியிருந்தது ! டைப்படிக்கச் சோம்பேறித்தனப்படுவதால், சமீபப் பொழுதுகளில் பேப்பரும், பேனாவுமாய், சனி பகலில் அமர்ந்து பதிவுக்கான மேட்டரை எழுதித் தந்து, அதனை நமக்கு DTP ஜாப்ஒர்க் செய்திடுபவரிடமோ ; அல்லது நமது DTP பெண்களிடமோ ஒப்படைத்து டைப்படித்து வாங்கி வருவேன் ! அதே routine இந்த சனியன்றும் தொடர்ந்தது & சனி மாலை வேலை முடித்துக் கிளம்பும் முன்பாகவே நமது பெண்கள் முடித்து எனக்கு மெயில் பண்ணியும் விட்டார்கள் !! சரி, இரவு கட்டையைக் கிடத்தும் முன்பாய் சாவகாசமாய் போஸ்ட் செய்து விடலாமென மெயிலை வாசிக்கத் தொடங்கும் போது, லைட்டாக ஒரு சந்தேகம் துளிர் விடத்துவங்கியது ! இதே மேட்டரை - சமீபமாய் எழுதினோமோ ? என்பது போலொரு பீதி குடியேற - அவசரம் அவசரமாய் இந்தாண்டின் பதிவுகள் முழுசையும் இழுத்துப் போட்டு வாசிக்க ஆரம்பித்தேன் !! 'ஆத்தாடியோவ் - வண்டி வண்டியாய் எத்தனை மொக்கை போட்டிருக்கிறேன் !' என்பதை உணர்ந்த போது எனக்கே மலைப்பாயிருந்தது !! ஒரு மாதிரியாய் மே மாதத்தின் பதிவுக்குள் புகுந்த போது 'பக்கோ' என்று ஆகிப் போனது - simply becos எனது பயம் மெய்யாகியிருந்தது !! They came ...They saw ...They left என்ற பதிவினில் அட்சர சுத்தமாய் அதே சங்கதிகளை எழுதியிருப்பதை படித்திட முடிந்தது !! (https://lion-muthucomics.blogspot.com/2019/05/they-camethey-sawthey-left.html )
எங்கள் ஊர்ப்பக்கம் ஓயாது பேசிக் கொண்டிருப்பவனைக் கிண்டலாய் - "ஓலைப்பாயில் நாய் மூச்சா போவது போல சள சளத்துக் கொண்டேயிருக்கிறான்" என்பார்கள் ! ஒற்றை ஆளாய் நான் இங்கே விடிய விடிய வருஷக்கணக்காய்ப் பெனாத்திக் கிடப்பதில் உள்ள flipside -களுள் இதுவும் ஒன்று ! எதை ஏற்கனவே பகிர்ந்து விட்டேன் ? - எதில் வாயைத் திறந்திருக்கவில்லை ? என்பது பல நேரங்களில் தோராயமாகவே நினைவிருக்கும் !! பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு இந்த சனியன்று எழுதத் துவங்கும் வேளையில், அரைத்த மாவையே மறுக்கா அரைக்கும் உணர்வு துளியும் எழாது போக - கடமைவீரன் கந்தசாமியாக செயலாற்றி விட்டிருந்தேன் ! எந்தச் சாமி புண்ணியமோ - அவசரமாய் அதை அன்றைக்கு post செய்து, செம குண்டு பல்புகளை சல்லிசாய் உங்களிடம் வாங்கிடும் கண்றாவியிலிருந்து தப்பித்தேன் !
ராவில் இந்த ரிப்பீட் லூசுத்தனத்தை தோண்டியெடுத்திருந்த போதே நள்ளிரவைத் தாண்டியிருந்தது ! இதுக்கு மேல் புதுசாய் என்னத்தை எழுதுவதென்று தெரியாது திரு திருவென முழிக்க - தூக்கமோ சுழற்றியடித்தது ! 'சரி...இப்போ படுத்துத் தூங்கலாம் ; காலையிலே எதுவும் தோணாங்காட்டி, இருக்கவே இருக்கு வாடகை சைக்கிள் ; இருக்கவே இருக்கு பிராங்பர்ட் !" என்றபடிக்கே அலாரத்தை செட் பண்ணிவிட்டுத் தூங்கிப் போனேன் ! காலையில் ஆறு மணிக்கு மலங்க மலங்க கண் முழித்த போது - மண்டையின் உட்புறமும், வெளிப்புறத்தைப் போலவே துடைத்து வைத்தாற்போல சூன்யமாய்த் தென்பட்டது ! 'சிவனே' என்று ஒரு கார்பீல்டு கார்டூனைப் போட்டு விட்டு ஏதாச்சும் சால்ஜாப்பு சொல்லிப் பார்க்கலாமா ? என்று கூட நினைக்கத் தோன்றியது ! அப்போது தான் நான் ரொம்ப காலமாய் சொல்ல நினைத்து; ஆனால் சொல்லாதே போன அந்த BBB ஸ்பெஷல் சமாச்சாரம் நினைவுக்கு வந்தது ! சரி, இன்னொரு "57 பின்னூட்ட ஞாயிறு" confirm என்றபடிக்கே மாங்கு மாங்கென்று டைப்படித்து, பதிவைப் போட்டு விட்டு, ஒரு தபா ஸ்பெல்லிங்குகளைச் சரி பார்த்து விட்டு பல்லைத் தேய்க்கக் கிளம்புவதற்குள்ளேயே பின்னூட்ட எண்ணிக்கை 30-ஐத் தொட்டிருக்க - 'பார்டா !!' என்று புருவங்கள் சன்னமாய் உசந்தன ! மதியத்துக்குள் 150 ; மாலைக்குள் 200 ; அப்பாலிக்கா இன்று நண்பர்களின் போங்கு ஆட்ட உபயத்தில் 300-ஐத் தாண்டி பின்னூட்ட எண்ணிக்கை நிற்பதைப் பார்க்கும் போது 'ஒண்ணுமே புரியலே.உலகத்திலே....!!' என்று சந்திரபாபு (??) பாட்டுத் தான் மண்டைக்குள் ஓடியது !! So வெகு காலமாய் தலைக்குள் தேமே என நின்றதொரு சமாச்சாரம் உங்களையும், என்னையும் நேற்றைக்குக் காப்பாற்றி விட்டது - பிராங்பர்ட் தக்காளிச் சட்னியிலிருந்து !! And இதோ - ஒரு உபபதிவுக்குமே மேட்டராகிப் போயுள்ளது !! வாழ்க BBB !!!
Bye folks !! Carry on with the September reviews please !!
உள்ளேன் ஐயா
ReplyDelete5
ReplyDeleteஸ்ரீ
Deleteவந்தாச்சி
ReplyDeleteவாங்க வாங்க
DeleteYes நானும் டாப் 10
ReplyDeleteOh God 007 I'm great
Delete// அப்பாலிக்கா இன்று நண்பர்களின் போங்கு ஆட்ட உபயத்தில் 300-ஐத் தாண்டி பின்னூட்ட எண்ணிக்கை நிற்பதைப் பார்க்கும் போது 'ஒண்ணுமே புரியலே.உலகத்திலே....!!' // bongu ஆட்டம் எல்லாம் இல்லை வாத்தியாரே இது
ReplyDeleteஆஹான்...!!!
Deleteடெக்ஸை நையாண்டி பண்ணி ஒரு 50;
மொய் வெச்சி ஒரு 50
இதெல்லாம் போங்கு இல்லாம பாங்கா????
சூப்பர் பாலன் சார். வாழ்த்துக்கள்
ReplyDelete//ரெண்டு நாளு லொங்கு லொங்குன்னு குதிரையில கோட்டைக்கு போறாப்பில.. இவரு போற நேரத்தில அந்த அதிகாரி ஒரு முக்கியமான கடிதாசி ஒன்னை எழுதிட்டு இருக்காப்பில.. அந்த நேரத்தில இவரு வந்த சோலிய விட்டுட்டு அந்த அதிகாரி கிட்டே தீப்பெட்டி கேட்க, அந்த அதிகாரி கடுப்பாயி தீப்பெட்டி இல்லீங்கிறாரு, உடனே இந்தாளு அந்த அதிகாரியை மீன் யேவாரம் பண்ணச் சொல்லறாப்பில..//
ReplyDeleteஅந்த கர்னலுடைய அறைக்குள் நுழையும் முன்பாக;வாசலில் நிற்கும் ஒரு சிப்பாயின் ""சிகரெட்"" ஒன்றை கைமாத்தாக டெக்ஸ் வாங்கியிருந்தார்.
அதன் பிறகுதான் கர்னலிடம் வத்தி பெட்டியை இரவல் கேட்பது.க்ராபிக் நாவல்களில் கதாசிரியர்கள் இதுமாதிரி தான் எழுதுவார்கள்.
டெக்ஸ் வில்லியம் "" தம் ""அடிக்கும் பழக்கம் மட்டும் தான் உள்ளது.""சிகரெட்""வத்திப் பெட்டி""இதெல்லாம் வச்சிக்கிர பழக்கம் இல்லை.
டெக்ஸை - கலாய்க்கிகிறீங்க? i
Deleteஇதெல்லாம் இன்று வருடம் 12 இதழ்கள் படித்ததால் வந்த ஆயாசமாய் இருக்கலாம்.
.ஆனால், அன்று "பழிவாங்கும் பாவை " வெளிவந்த புதிதில் - பாக்கெட்சைஸில் - (தலை வாங்கிக் குரங்கு -யில் வந்த டெக்ஸை விட இதில் ஓ வியர் டெக்ஸை அழகாக வரைந்து இருப்பார்). அழுத்தமான பிரிண்டிங்கில் நான் அந்த உரையாடலை மட்டும் எந்தனை முறை ரசித்து படித்திருப்பேன் என்பது கணக்கிட முடியாது.
இப்பவும் Maxi _ சைஸில் நான் அந்த கட்டத்தை மட்டும் ரசித்து படிதது விட்டு வைத்து விட்டேன். என்பதே உண்மை. ஹூரோயிசம் எனும் போது அது ஒரு அருமையான கட்டம். அதல்லாம் ஒரு ரசனை சார் ..
வெற்றி வெற்றி மகத்தான வெற்றி.
ReplyDelete🙏🙏🙏
ReplyDelete07.09.2019 அன்று மதுரையில் வாசகர் சந்திப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ReplyDeleteகாமிக்ஸ் கலந்துரையாடல் நடைபெற்றது.
பின் நமது ஸ்டால் சென்று புத்தகங்களை அள்ளினார்கள் நண்பர்கள்.
Super saravanan sir.
Deleteகோக்கு மாக்கு கனவுகள் நிஜமானால் சந்தோசமே!
ReplyDeleteசந்தோசமே
Deleteஉள்ளேன் சார்...:-)
ReplyDeleteரம்மி அவர்களுக்கு உங்கள் நகைச்சுவை விமர்சனம் சூப்பர்..சிரித்து சிரித்து கண்களில் நீர் வந்து விட்டது டெக்ஸ் ரசிகராகவே இருந்தாலும்..
ReplyDeleteபிரித்து பிரித்து போடாமல் ஒரே விமர்சனமாய் போடுங்கள் பார்க்கலாம்..:-))
போன பதிவில்..
Deleteடிடெக்டிவ் ஜேரோம் அட்டைப்படம் அருமை. லாந்தர் விளக்கின் ஒளியில் பின்புற காட்சிகளை அருமையாக வரைந்து உள்ளார்கள், வண்ணக்கலவை அட்டகாசம். விளக்கின் ஒளியில் மரத்தின் முன்பகுதியை கவனியுங்கள்.
ReplyDeleteஆமாம் இந்த கதை எப்போது வரும் 🤔
பரணி ஹிஹிஹி
DeleteHi..
ReplyDelete///அவசரம் அவசரமாய் இந்தாண்டின் பதிவுகள் முழுசையும் இழுத்துப் போட்டு வாசிக்க ஆரம்பித்தேன் !! 'ஆத்தாடியோவ் - வண்டி வண்டியாய் எத்தனை மொக்கை போட்டிருக்கிறேன் !' ////
ReplyDeleteசார் இதையே நீங்க மொக்கைன்னு சொன்னாக்க.. நாங்கல்லாம் பின்னூட்டம்ன்ற பேர்ல வண்டி வண்டியாய் எழுதித்தள்றோமே.. அதை என்னம்பீங்களாம்?!!
அதானே
Deleteபோலீஸ்.. போலீஸ்...
ReplyDeleteநான் நேத்திக்கு நைட்டு இங்கே போட்டு வச்சிருந்த கமெண்ட்டைக் காணலை!!
உங்களுடையது மட்டுமா ஈ.வி! செனா அனா அவர்களின் கமெண்டையும் சேர்த்துதான் காணவில்லை!!
Deleteகூடவே ஒரு Aதார்த்தமான கதையும் காணாமப்பூடுச்சுங்க ATR sir!! :)
Deleteகறை நல்லது ஈ.வி!
Deleteஆனால்
இந்த Aதார்த்தமான க(றை)தை நல்லதல்ல!
சில நேரங்களில் சில விஷ(ய)ங்கள் காணாமல் போவதும் நல்லதுதான்.
மேலே உள்ள கமெண்ட் என்னுடையதுதான் ஈ.வி. மொபைலில் கொஞ்சம் கோளாறு. இப்போது சரியாகிவிட்டது.
Deleteஎடிட்டர் மற்றும் சில நண்பர்கள் கையில் அகப்பட்டதை எடுத்து அடிக்க வந்தாலும் பரவாயில்லை!
ReplyDeleteஎடிட்டர் சார் BBB Special 2 ஆக காரிகன்,ரிப் கெர்பி, சார்லி, விங் கமாண்டர் ஜார்ஜ், ஸ்பைடர், ஆர்ச்சி இவர்களின் இதுவரை வெளிவராத கதைகளாக ஒரு குண்டு புத்தகம் வருவதாக எனக்கும் ஒரு கோக்கு மாக்கு கனவு வந்தது! எச்சூஸ்மீ சார்! முன்பதிவுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்!
(ஷெரீஃப் சார்! உங்களுக்கு தூக்க மாத்திரையாக பயன் படுத்திக் கொள்ள இது உதவும்!)
என்ன அதிசயம் ! எனக்கும் அதே கனவு !!எதுக்கும் ஒரு பிட்டு போட்டு வைப்போம்..
Deleteவெகு சில டெக்ஸ் கதைகளே படித்தவுடன் மீண்டும் படிக்கத் தூண்டும்.ரௌத்திர ரேஞ்சர் அந்த வகையைச் சேர்ந்ததே.
ReplyDeleteதிருக்குறள் மாதிரி 2 வரிகளில் நச்சுனு அடிச்சிட்டீங்க.
Delete👏👏👏👏👏👏👏👏
**** லக்கிலூக்கை சுட்டது யார் *****
ReplyDeleteமற்றவர்கள் செய்யும் கோணங்கித்தனங்களைக் கண்டு ஜாலிஜம்பருடன் சேர்ந்து கெக்கபிக்கே என்று சிரித்துக் கிடக்கும் - நாமறிந்த - லக்கிலூக் அல்ல இவர்!! சீரியஸ்.. ரொம்பவே சீரியஸ் ரகம்!! இப்படியொரு உம்மனாமூஞ்சி லக்கியைக் களமிறக்க முன்வந்த படைப்பாளிகளைப் பாராட்டியே ஆகவேண்டும்!! அந்த முயற்சியில் டமால் டுமீல் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள்!
ஒரு கோச்சு வண்டிக் கொள்ளை + கொலையின் பின்னணியை கண்டறிவதே லக்கியின் வேலை!! அம்சமாகக் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்!
லக்கிலூக் கதைகளில் வரும் உளவியல் சார்ந்த குற்றங்கள்/செய்கைகள் இதிலும் உண்டு! ஆனால் அதை கதையின் கடைசிப் பகுதியில் மட்டும் அழகாக விவரித்திருக்கிறார்கள்!
சித்திரங்களும், கலரிங் பாணியும் - நச் நச்!
வசனங்கள் - நறுக் நறுக்!
கடைசிவரை சிரிக்காத, பேசாத ஜாலிஜம்பரைப் பார்க்கும்போது மட்டும்தான் கொஞ்சம் பரிதாபமாக இருக்கிறது!
'லக்கியை வித்தியாசமா காட்டறேன் பேர்வழி என்று இந்தப் படைப்பாளிகள் ஏகத்தும் சொதப்பி வைக்கப் போறாங்கப்பு' என்ற என் எண்ணம் தவிடுபொடியாக்கப்பட்டிருக்கிறது!!
இயல்பான இந்த லக்கியையும் பிடித்தே இருக்கிறது! நொம்பப் பிடித்திருக்கிறது!
என்னுடைய ரேட்டிங் : 10/10
// கடைசிவரை சிரிக்காத, பேசாத ஜாலிஜம்பரைப் பார்க்கும்போது மட்டும்தான் கொஞ்சம் பரிதாபமாக இருக்கிறது! //
Deleteஆனால் தனது செயல்கள் மூலம் நம்மை சிரிக்க செய்தது சிறப்பு.
Enakkume romba pidithathu
DeleteWe want BBB
ReplyDeleteகாமிக்ஸ் ரசனை மாறி வருகிறது சார், பராகுடா, பி.பி.வி போன்ற நீண்ட பக்கங்கள் கொண்ட one shot கதைகளை அதிகம் வெளியிடுங்கள்.
ReplyDelete+10000.......
Deleteமொக்கை போட்ட பதிவை பற்றி மொக்கைப் போடும் பதிவு......
ReplyDeleteஇதையும் ஒரு சப்ஜெக்ட்டாக மாற்ற உங்கள் அனுபவம் மற்றும் திறனால் மட்டுமே முடியும் சார்......
Yes yes yes.
Delete//எடிட்டர் சார் BBB Special 2 ஆக காரிகன்,ரிப் கெர்பி, சார்லி, விங் கமாண்டர் ஜார்ஜ், ஸ்பைடர், ஆர்ச்சி இவர்களின் இதுவரை வெளிவராத கதைகளாக ஒரு குண்டு புத்தகம் வருவதாக எனக்கும் ஒரு கோக்கு மாக்கு கனவு வந்தது!//
ReplyDeleteஅது நனவாகும் என்றுதான் என் மனசும் சொல்லுகிறது
என்ன அதிசயம் ! எனக்கும் அதே கனவு !!
Deleteமரத்திலே கத்தி
ReplyDeleteடிடெக்டிவ் ஜெரோம் - எனக்கும் ரொம்ப பிடிக்கும்.ரிப்.ஜானி -யின் ஓவியர் என்றே நினைக்கிறேன் ..
ReplyDelete"நீரில்லை நிலமில்லை" என்றெல்லாம்
பரீட்சித்து பார்க்கும் போது ஜெரோம் ஒன்றும் சோடை போக மாட்டார் என்றே கருதுகிறேன்.
என்ன கதை அட்டை படம் சார் இது சும்மா கலக்குது. சீககீரம் வெ ளியிடுங்கள் சார்.
ReplyDeleteDear Edi, Nothing Doing. We aren't turning the face away, from a landmark issue :).
ReplyDeleteWE WANT, WE WANT Backbench Boys Special ! Start the Advance Booking, Please.
டிடெக்டிவ் ஜெரோம் - எனக்கும் ரொம்ப பிடிக்கும்.ரிப்.ஜானி -யின் ஓவியர் என்றே நினைக்கிறேன் ..
ReplyDelete"நீரில்லை நிலமில்லை" என்றெல்லாம்
பரீட்சித்து பார்க்கும் போது ஜெரோம் ஒன்றும் சோடை போக மாட்டார் என்றே கருதுகிறேன்.
எடிட்டர் சார்..
ReplyDeleteBBB வருதோ இல்லையோ பரவாயில்லை.! ஆனா இந்த மரத்தில் குத்தியிருக்கிற கத்தி மட்டுமாச்சும் வரட்டும் சார்.!
டிடெக்டிவ் ஜெரோமுக்கு மட்டுமாவது (ஜம்போவிலாச்சும்) ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே சார்.!
முழுவண்ணத்தில்.. (கறுப்பு வெள்ளையிலேயே சித்திரங்கள் அழகாக இருந்தன.)
ரிப் கிர்பி யைவிட அமைதியான அப்பாவி ஜென்டில்மேன் டிடெக்டிவ் ஜெரோம்..!
ஹீரோ என்றாலே வானத்துல நடப்பாரு மலையை புரட்டுவாரு வானவில்லை நிமிர்த்துவாரு போன்ற கதைத்தனங்கள் இல்லாத யதார்த்தமான ஹீரோ ஜெரோம்..!
ஜெரோமுடைய சிவப்புக்கன்னி மர்மம் + தற்செய்லாய் ஒரு தற்கொலை.. ஒரு அருமையான அமைதியான தெளிந்த நீரோடை போன்ற டிடெக்டிவ் சாகசம்.! எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது..!
Delete// ஹீரோ என்றாலே வானத்துல நடப்பாரு மலையை புரட்டுவாரு வானவில்லை நிமிர்த்துவாரு போன்ற கதைத்தனங்கள் இல்லாத யதார்த்தமான ஹீரோ ஜெரோம்..! // yaar andha Hero?????
DeleteNeenga Semma rendu booksum en kita illaye naan padikavum illaye
Delete// எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது..!//
Deleteஅப்படியா சொல்றிங்க கண்ணரே,அப்ப அதையும் ஒரு கை பார்த்துட வேண்டியதுதான்,புதுசா வர்ற களத்தையும் என்னா சேதின்னு கேட்டுடுவோம்.நீங்கள் சொன்ன இதழ்களை வெளியான புதிதில் வாசித்ததுதான் மீண்டுமொரு மீள் வாசிப்பில் ஆழ்த்துகிறேன் அவற்றை....
Nanbargal anaivarukkum happy muharam and onam.
ReplyDeleteKumar ! While onam is celebrated with joy as it indicates the annual visit of mahabali to Kerala the most righteous emperor Kerala had ever known " happy onam" is well and good..
DeleteWhereas muharram one of the four sacred months of Islamic brethren means forbidden and sinful..
This day indicates the sorrowful event
Of brutal killing of imam Hussein ,the grandson of prophet Mohammed and this day is to mourn the death of imam Hussein.. ( for India and shia i believe).
So i think saying "happy muharram" is not appropriate..
[ anyone wiser can correct this]
Now I know abirami Sir. It's not appropriate. I'll be careful hereafter. Thanks for the correction.
DeleteHello
ReplyDeleteHappy holiday
// "என் பெயர் டைகர்"---- விமர்சனங்கள், பெருமைகள் , எல்லாம் போட்டு 300கமெண்ட் கொண்டு வாங்க பார்ப்போம்! //
ReplyDeleteடெக்ஸ் கதையை டைகர் ரசிகர்கள் கலாய்த்து பலமுறை 200 கமென்ட் மேலே கொண்டு வந்து இருக்கிறார்கள். அதே போல டெக்ஸ் ரசிகர்கள் "என் பெயர் டைகர்" கதையை முடிந்தால் கலாய்த்து 200+ கமெண்ட் போடுங்க பார்கலாம் என்பதே சரியான சவாலாக இருக்கும். :-):-)
எண்ணம், செயல் எல்லோமே டெக்ஸ் ரசிகர்களுக்கு ஆக்கபூர்வம் மட்டுமே!
Deleteஎன் பெயர் டைகரை விமர்சித்தும், கதை நுணுக்கங்களை விவாதித்தும் வேண்டுமானால் 300கமெண்ட் போடுவாங்க,ஆக்கபூர்வமான வழியில்!
தவிர கலாய்த்து என்ற வகையில் ஒருக்காலும் ஒரு கதையை தரவிறக்கம் செய்ய மாட்டார்கள்!
நாளை அதுவே இளம் டைகர் புக்கிங்கில் பின்னடைவத் தரக்கூடும்.
மின்னும் மரணம்,
இரத்த கோட்டை,
என் பெயர் டைகர்...
என முன்பதிவுகள் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லும் வழியில் மட்டுமே விமர்சனம் இருக்கும்.
விமர்சிப்பது எல்லோருக்கும் உரிமை! கலாய்ப்பது ஒரு வகையில் தங்கள் பக்க வீக்னஸை சமன் செய்யும் ஒரு யுக்தி என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!
https://www.google.com/amp/s/www.history.com/.amp/news/bill-of-rights-constitution-first-10-amendments-james-madison
ReplyDeleteThis article was written on September 9,2019 and it says James Madison had been initially reluctant to the introduction of " bill of rights " to the American constitution and amendments before ratification..
DeleteInteresting...
இருளின் ராஜ்யத்தில் ..
ReplyDeleteலின் ....
டைபிங் ரிபெல்லியன் ...
இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபகுதி மக்களை –பெரும்பாலும் சிவிலியன்கள் - பேரை பலிவாங்கிய ( இரண்டாம் உலகப்போரில் சுமார் 85 மில்லியன்
டைபிங் ரிபெல்லியன் –ல் சுமார் 30 மில்லியன் ) இந்த சீனாவின் சிவில் வார் குறித்து இதுவரை கேள்விப்பட்டதில்லை ...
1850 முதல் 1864 வரை நடைபெற்ற இப்பெரும்போரை பற்றி இருளின் ராஜ்யத்தில் –ஆசியா கண்டத்தில் இருந்து அமெரிக்க கண்டத்துக்கு ஓடி வரவேண்டிய சூழல் குறித்து லின் குறிப்பிடும்போதுதான் தெரிய வந்தது.
ஸிங் பேரரசு( qing dynasty ) வம்சாவளி மஞ்சு ராஜவம்சத்துக்கும் ஹாங் ஸியுகுவான் (hong xiuquan) தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட டைபிங் ஹெவன்லி கிங்டம் புரட்சி அரசுக்கும் இடையே நடைபெற்ற இப்போர் பல விசித்திரங்களை உள்ளடக்கியது
டைபிங் கிறிஸ்துவ மதத்தை கையில் எடுத்து கொண்ட ஸியுகுவான் மதத்தை முன்னிறுத்தி –வழக்கமான மக்கள் பிரச்சினைகள் என்றல்லாது –
நடத்திய போர் ..
தன்னை கிறிஸ்துவின் சகோதரன் என பிரகனடப்படுத்திகொண்ட ஸியுகுவான் –க்கு அவருக்கு பைபிளை போதித்தவரே ஞானஸ்நானம் செய்ய மறுத்துவிட்டார் .. ஸியுகுவான் அரசியல் நோக்கத்துக்காக பைபிளை பயன்படுத்த முயல்கிறார் என்பதால் ..
டைபிங் ஹெவன்லி கிங்டத்தின் வீழ்ச்சி சீனாவில் எக்காலத்திலும் கிறிஸ்துவ மதம் வேரூன்றாமல் செய்துவிட்டது..
போரின் துவக்கம் -மத்திம நிகழ்வுகள் – முடிவு அனைத்தும் சுவாரஸ்யமானவை ....
அருமை பொருளர் ஜி!👏👏👏👏
Deleteகெளபாய் கதைகள் வரலாற்று பின்னணியோடு இழைந்திருப்பதை மீண்டும் ஒருமுறை தெளிவாக்கும் பதிவு.
என் பெயர் டைகர்
ReplyDeleteகாமிக்ஸ் காவியங்களில் ஒன்று. மிகைப்படுத்தாத வரலாற்று கதைக்களம்.
பொருமையாக படித்தால் கதையின் தாக்கம் புரியும். படித்தபின்பு 10 நாட்களுக்கு அதிலிருந்து மீளமுடியவில்லை என்பது நிஜம்.
டைகர், என் பெயர் டைகர்.
டெக்ஸை கலாய்த்து இன்புறும் டைகர் அபிமானிகளுக்கு நண்பரின் இப்பதிவும் இன்னும் இனிமேல் இந்த பதிவில் பதிவாகும் டெக்ஸ் ரசிகர்கள் கமெண்ட்களும் சமர்ப்பணம்!
Deleteசேலம் Tex விஜயராகவன்25 July 2017 at 18:15:00 GMT+5:30
ReplyDeleteஇரத்த கோட்டை:-
*"காமிக்ஸ்னா டெக்ஸ்; டெக்ஸ்னா காமிக்ஸ் "
----இதாங்க என் காமிக்ஸ் டெபனீசன். சின்ன குழந்தைல முறையாக காமிக்ஸ் படிக்கலாம் வர்லீங்க நானு. 15வயசில் திடீரென இந்த காமிக்ஸ் பக்கம் ஒதுங்கின ஆளு நானு. அப்படி டெக்ஸ்க்காக லயன் காமிக்ஸ்ஸை மட்டும் தேடி தேடி படித்து வந்த காலம் 1990களின் இறுதி. அப்ப நானு ஓசி வாங்கும் மூத்த நண்பர்கள் ஏன்டா தம்பி இதை பாரு முத்து நல்லா இருக்கும்டாம்பாங்க. டெக்ஸ்ம் வந்திருக்காண்ணே? என கேட்டா போதும், ஏதோ எக்ஸிபிசன்ல தொலைஞ்ச பய மாதிரி பார்ப்பாய்ங்க. அப்படியே எதையாவது சமாளித்து லயன் காமிக்ஸ்களை படிக்க அள்ளிட்டு வந்துடுவேன். அப்டியே போகைல, கடேசியா கடைல வாங்குற டைமும் வந்தது. அப்பத்தான் ஒரு தடவை முத்து காமிக்ஸ்ல கேப்டன் டைகர் தோன்றும் "தங்க கல்லறை" னு ஒரு புக் தொங்கிட்டு இருந்தது.
Delete*கேப்டன், மேஜர், கர்னல்(சுபாவின் ரானுவ நாவல் கதைகள் படிக்கும்போது மனசில ஒரு சிலிர்ப்பு ஓடும்) னா ஒரு மரியாதை மனசில். இந்த கேப்டன் டைகரும் படிக்காமலே ஒரு மதிப்பை பெற்றாரு என் மனசில். ஆனால் விலை ரூபாய் 7, எக்ஸ்ட்ராவா இரண்டு தபா மளிகை கடைக்கு போயிக்கலாம்னு சமாதானமாகி(எல்லோரும் மளிகை கடைக்கு போயிருப்பீங்க அதனால் அந்த ரகசியம் நாம அறிஞ்சது தானே), வாங்கிட்டு போனால் டெக்ஸ்க்கு சவால் உடுறாரு கேப்டனு. சும்மா மெரண்டு போயிட்டேன். ஆனால் வந்ததே உலக கடுப்பு "தொடரும்" னு போட்டா,.... (இப்பவா இருந்தா ஆசிரியர் சாரோட நிலைமை...ஹி..ஹி...). அடுத்த மாசமே இதன் க்ளைமாக்ஸ் படிக்கவும் இந்த கேப்டன் பய நம்ம செகண்ட் பேவரைட் ஆயிட்டாரு. பலமுறை படித்த புத்தகங்கள்ல அதுவும் ஒன்னு.
Delete*டைகரின் அடுத்த கதை இரும்புக்கை எத்தன்(முத்து250) வரவும் செம எதிர்பார்ப்பு. ஆனால் 2பாகத்தோட நிறுத்திபுட்டு மின்னும் மரணம்னு ஒன்ன கையில் எடுத்துபுட்டார் சார்.(குறுக்கால அந்த 2வது பாகத்தை ஆசிரியர் சார் "காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்"னு புரோட்டோ போடவும், பதிலுக்கு நம்ம ஆளுங்க அவரை கொத்து புரோட்டோ போட்டாங்க- அது தனி கதை). அட அதைத்தான் முழுசா போட்டாரா, அதுவும் இல்லை. அதை அந்தரத்தில் விட்டுட்டு அடுத்ததை ஆரம்பிச்சுட்டார். (இப்படி பிச்சி பிச்சி கொத்து புரோட்டா போடவும் அந்த டைகர் பயலால டெக்ஸ்க்கு சமமான சரியான போட்டியை தரமுடியல, அதில் எனக்கு ஒருவித குரூர திருப்தி)
Delete*டைகரின் அடுத்த கதை இரும்புக்கை எத்தன்(முத்து250) வரவும் செம எதிர்பார்ப்பு. ஆனால் 2பாகத்தோட நிறுத்திபுட்டு மின்னும் மரணம்னு ஒன்ன கையில் எடுத்துபுட்டார் சார்.(குறுக்கால அந்த 2வது பாகத்தை ஆசிரியர் சார் "காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்"னு புரோட்டோ போடவும், பதிலுக்கு நம்ம ஆளுங்க அவரை கொத்து புரோட்டோ போட்டாங்க- அது தனி கதை). அட அதைத்தான் முழுசா போட்டாரா, அதுவும் இல்லை. அதை அந்தரத்தில் விட்டுட்டு அடுத்ததை ஆரம்பிச்சுட்டார். (இப்படி பிச்சி பிச்சி கொத்து புரோட்டா போடவும் அந்த டைகர் பயலால டெக்ஸ்க்கு சமமான சரியான போட்டியை தரமுடியல, அதில் எனக்கு ஒருவித குரூர திருப்தி)
*அப்படி புதுசா ஆரம்பித்சதுதான் டன்ட ட ட டன் டட டைன் " இரத்த கோட்டை, இரத்த கோட்டை.... இரத்த கோட்டை ". முதல்லயே அறிவிச்சிட்டாரு, "மற்ற தொடர்கள் போல அந்தரத்தில் தொங்காது தொடர்ந்து போட்டு முடிக்கப்படும்னு". ஒருவித நிம்மதி கலந்த ஆர்வத்தோடு இந்த தொடரை நண்பர்கள் அனுகினார்கள். இதுவரை வந்த தொடர்களில் டைகரு கொஞ்சம் நல்லா பர்சனால்டியா இருப்பாரு. இதில் கொஞ்சம் இளவட்டம், ஆனா கதை பட்டாசு சரம்.
Delete*ஆட்டத்தின் மையம், அதான் பேர்லயே இருக்கே கோட்டைனு. இது அரிசோனாவில் உள்ள "நவஜோ கோட்டை" தான். ஆரம்பம் முதலே படு சுவாரஸ்சமான செம ஸ்பீடான கதையோட்டம். டைகர் அறிமுக காட்சியிலேயே பட்டையை கிளப்பிடுவாரு. சும்மா 5பாகத்திலும் மனுசன் ஓடு ஓடுனு ஓடி நினைச்சதை சாதிக்க துடியாய் துடிப்பாரு.
Delete
Delete*செவ்விந்தியர்களுக்கும் ரானுவத்துக்கும் நடக்கும் போராட்டாங்கள் எப்பவுமே கண்ணுக்கு செம விருந்து போடுபவை. இதில் இன்னும் ஒரு படி மேலே அடுத்து என்ன? அடுத்து என்ன? என எதிர்பார்ப்பு பக்கத்துக்கு பக்கம், பாகத்துக்கு பாகம் ஏகத்துக்கும் அதிகரித்து கொண்டே இருக்கும்.
* கேரக்டர்கள் ஒவ்வொன்றும் அப்டியே ரியாலிட்டில ஜொலிப்பாங்க. அட டா , கலர்ல இன்னும் அம்சமா இருப்பாளே அந்த கர்னலின் பொண்ணு, நேர்மையான தீர்வு காண துடிக்கும் கர்னல்; எப்படியாவது தான் பேர் வாங்கனும்னு ஆட்டத்தை மாற்றி தன்வசப்படுத்தும் பாஸ்கம்; பாஸ்கமை விஞ்சும் கொடூரன் ஒற்றைக் கண் குவானா; நேர்மையின் சிகரம் செவ்விந்திய குரோ; அந்த டெப்டேசன்ல வரும் லெப்டினன்ட் & டைகர் இருவரும் மாறி மாறி உயிரை பணயம் வைத்து செய்யும் சாகசங்கள் ஒவ்வொன்றும் லப்டப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்பவை.
Delete
Delete*டைகருக்கு உதவும் கிழட்டு ஜிம்மி, டைகரை நம்பும் கோஸைஸ்& டைகரின் முயற்சிகளை முறியடுக்க படாதபாடு படும் குவானாவின் நரித்தந்திரங்கள். டைகரின் சமயோசித உத்திகள்லாம் உச்சத்தில் இருக்கும் இந்த தொடர் முழுதும். இறுதி பாகத்தை முடிக்கும் வரை எந்த வேலையும் ஓடாது. அவ்வளவு ஆர்ப்பாட்டமான தொடர். நம்மை கட்டிப்போடும் மற்றொரு கேரக்டர் மெக்ஸிகன் பின்டோ!
Delete*இந்த இரத்த கோட்டை தொடருக்கு இடையேயும் ஊடால ஒரு மாதம் ஒரு கதையை விட்டு தன் வேலையை அப்போதும் செவ்வனே செய்தார் நம் அன்பின் ஆசிரியர் சார். இப்போது ஓரே மூச்சில் படிக்கவுள்ள நண்பர்கள் கூடுதல் அதிர்ஷ்டசாலிகள். இரத்த கோட்டை தொடரும், அதை அடுத்து வந்த மின்னும் மரணம் தொடரின் க்ளைமாக்ஸ் "புயல் தேடிய புதையலும்" சேர்த்து ஈட்டிய பிரம்மாண்டமான வெற்றிகள் தமிழ் காமிக்ஸின் டாப் கெளபாய் அந்தஸ்த்தை சிறிது காலம் டெக்ஸிடம் இருந்து பறித்து டைகரிடம் தந்தன. அத்தகைய புகழ் வாய்ந்த இரத்த கோட்டையை நீங்கள் படித்து விட்டீர்களா நண்பர்களே....!!!!
http://lioncomics.in/captain-tiger/336-rattha-kottai.html
Deleteஇதுவரையிலும் இரத்த கோட்டை வாங்காத நண்பர்கள் இந்த லிங்கில் இன்றே வாங்குங்க!
டைகரோடு வன்மேற்கில் ஒரு பயணம் போங்க!
புகழ்பெற்ற செவ்விந்திய தலைவர் கோசைஸை சந்திக்கலாம்!
அமெரிக்க ராணுவ கட்டுப்பாடுனா என்னானு தெறிந்து கொள்ளலாம்!
Irathakottai,thanga kalarai my all time favourites.
DeleteMinnum maranam,irumpukkai ethan,kaatril karaintha kuttam.Mass hit stories.
ReplyDeleteTest
ReplyDelete*** லக்கிலூக்கை சுட்டது யார் ***
ReplyDeleteரொம்பவே சுமாரான கதை. எப்படா முடியும் என்றாகிவிட்டது. என்னை பொறுத்த மட்டில் இந்தாண்டு எதிர்பார்த்து ஏமாற்றிய வரிசையில் இந்த சீரியஸ் லக்கி லூக் இனைந்து கொண்டார். மற்ற கேரக்டர்கள் "லூக் நீ ரொம்ப நல்லவரு, வல்லவரு" என்று ஆங்காங்கே புகழும்போதுதான், ஓ இவரு லக்கி லூக் ல, என்று ஞாபகம் வருகிறது. ஒரு வேளை எனக்குதான் ரசனை குறைந்து விட்டதோ என்னமோ. ☹️
என்னுடைய ரேட்டிங் 5.5/10
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ReplyDelete🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
மதிப்பிற்குரிய நண்பர்,
கோவை தங்கம்,
அமெரிக்க மாப்பிள்ளை,
மனங்கவரும் வர்ணனையாளர்,
நடுநிலையான விமர்சகர்,
நண்பர்களிடம் அன்பான,
பழகுவதில் எளிமையான,
பாசமிகு
ஷெரீப் எ மஹி எ
மகேந்திரன் பரமசிவம் அவர்களுக்கு,
இனிய இனிப்பான ❤️ கனிந்த
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
இன்றுபோல் என்றும் கைநிறைய
காமிக்ஸ் படித்து மகிழ்வுறவும்,
எல்லா நலங்களும் பெற்று இன்புறவும்
வாழ்த்துகள்!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
இனிய ,இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஷெரீப்...
DeleteXIII காதலரும் டைகர் வெறியருமான ரம்மி எ ரமேஷ் க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
Delete🎈🎈🎈🎈🎈🍫🍫🍫🍫🍫🎂🎂🎂🎂🎂💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ரம்மி XIII என்கிற ரமேஷுக்கும்
ReplyDeleteஷெரீப் என்கிற மஹிக்கும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!
கைநிறைய காமிக்ஸோடு பல்லாண்டு வாழ்க..!
டெக்ஸும் விற்பனையும் போல ரம்மியும் ஷெரீப் -ம் சந்தோஷத்துடன் என்றும் கைகோர்த்து வாழ வாழ்த்துகள்!!!
ReplyDeleteஆஹான். ஏதோ நயன்தாரா கீர்த்தி சுரேஷ் கட்டானரீனா கைப் கூட கைகோத்து வாழுன்னு வாழ்த்துனா அது வாழ்த்து. என் மேல உங்களுக்கு என்ன கோபம் செனா...😫😫😫😫
Deleteரம்மி+ சந்தோஷம்
Deleteஷெரீப்+ சந்தோஷம்
கைகோர்ப்பது சந்தோஷத்துடன் ம.ப.:-)
ஒரு வாழ்த்துக்கு பொழிப்புரை போடவேண்டியதா போச்சே..!!!
//டெக்ஸும் விற்பனையும் போல//
Deleteஎன்னா ஒரு வில்லத்தனம்..
ஒரு வாழ்த்துக்கு பொழிப்புரை போடவேண்டியதா போச்சே..!!!//
Deleteஇப்பத்தான் போன உசுரு திரும்ப வந்தாச்சு. 🤣🤣🤣
டெக்ஸ் வில்லரின் ஸ்லீப்பர் செல் ரம்மி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..:-)
ReplyDeleteகாலத்தை வென்றவன்.......
ReplyDelete*முத்து காமிக்ஸ் பட்டயை கிளப்பிய 1970களையும், 80களையும் சீனியர் நண்பர்கள் விவரிக்கையில் பொறாமையாக இருக்கும். அவர்களின் அந்த மகிழ்ச்சியான விவரிப்பில் பலசமயங்களில் நம்மையும் அந்த தருணங்களிற்கே அழைத்து சென்று விடுவார்கள்.
Delete*இரும்புக்கையாரோ, லாரன்ஸ் & டேவிட்டோ, ஜானி நீரோவோ ஏதாவது ஒரு நாயகரின் கதையொன்றை லைன் லைனா மாறி மாறி விவாதிப்பாங்க. அதிக முறை அவுங்க சிலாகிச்சது அந்த கொலைகாரக் கலைஞன் தான். தேமேனு அவுங்க பேசுவதை கண்டு விழித்துக் கொண்டே, நாம் காதுகளில் விடும் லேசான அல்ல, டார்க்கான புகைச்சலைக் கண்டு அவர்களின் கண்களில் சற்றே பெருமிதம் மிளிரும். அப்போதெல்லாம் நாமும் என்றாவது இதுபோல ஒரு நாயகனை காணுவோமா என்ற ஏக்க கனவு எழுந்து கலையும்.
*டெக்ஸ் ஏற்கெனவே 1980களில் எஸ்டாபிளிஸான நாயகர். நாம பார்த்து வளர்ந்து யாராவது ஹிட் அடிப்பாங்களா என்ற கனவு தொடர்ந்து கொண்டே இருந்தது.
Deleteஅப்பத்தான் முத்து காமிக்ஸ்ல கேப்டன் டைகர் தோன்றும் "தங்க கல்லறை" னு ஒரு விளம்பரம் வெளிவந்தது.
Delete*கேப்டன்னா நமக்கு தெரிஞ்சி மரடோனாதான்; பொறகு ரொம்ப காலத்துக்கு அசாருதீன் தான் கேப்டனுக்கான மரியாதை பெற்றவர் மனசில். சும்மா மெரண்டு போயிட்டேன், தங்க கல்லறை படிச்சிட்டு. அடுத்த மாசமே இதன் க்ளைமாக்ஸ் படிக்கவும் இந்த கேப்டன் பய உடனடியாக அந்த கனவு நாயகனுக்கு செட் ஆயிட்டாரு. பலமுறை படித்த புத்தகங்கள்ல அதுவும் ஒன்னு.
Delete*இன்ஸ்டன்ட் காபி மாதிரி, இன்ஸ்டன்டா ஹிட் அடிச்ச நாயகர் மேல் ஒரு அபிமானம் ஒட்டிக்கொண்டது. அந்த நாயகருக்கு அடுத்தடுத்து நிகழ்ந்தது தான் பரிதாபம். கதையிலும் அடிபட்டு, போராடி மீள்வாறே அதே மாதிரி நிஜத்திலும் ஆகிப்போச்சுது டைகரோட நிலைமை.
*தங்க கல்லறைக்கு அடுத்து, டைகரின் அடுத்த கதை இரும்புக்கை எத்தன்(முத்து250) வரவும் செம எதிர்பார்ப்பு. ஆனால் 2பாகத்தோட நிறுத்திபுட்டு மின்னும் மரணம்னு ஒன்ன கையில் எடுத்துபுட்டார் எடிட்டர் சார்.
Delete*அட மின்னும் மரணத்தைதான் முழுசா போட்டாரா, அதுவும் இல்லை. அதையும் அந்தரத்தில் விட்டுட்டு அடுத்ததை (இரத்தக்கோட்டை) ஆரம்பிச்சுட்டார்.
Deleteஅறிமுகம் ஆகிய நாட்களிலேயே இப்படி சோதனை மேல் சோதனை வைத்தாலும் கூட, அதையும் தாண்டி சாதித்து காட்டினார் டைகர்.
Deleteதோட்டா தலைநகரம்....
*இந்த பின்னணியில், இந்த புரோட்டாக்களுக்கு நடுவே ஒரே ஒரே சிங்கிள் ஷாட்டாக வந்து வாணவேடிக்கை காட்டியதுதான் "தோட்டா தலைநகரம்". டைகரின் கதைகளுக்கு என எப்போதும் தனித்த மாஸான கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கும். இம்முறை அதை உடைத்து, கெளபாய் கதைகளின் இலக்கணமான "தீம்" கடன் வாங்கப்பட்டு இருக்கும். ஒரு சிறிய நகரின் ஷரீப்பை போட்டுத்தள்ளிட்டு, பயத்தை கிளப்பி, ஜனங்களை ஏமாற்றி அனைவரது நிலங்களையும் ஆட்டயை போடும் ஆதிகால ஒற்றை லைன் கதை.
Delete*இந்த அரதப்பழசான(யோவ் கெளபாய் கதைகளே அரதப்பழசுதான்யானு நீங்கள் புலம்புவது சத்தமாகவே கேட்குது,நண்பர்களே) கதையை டைகரின் அத்துனை சமயோசித உத்திகளையும், வன்மேற்கின் வஞ்சக சூழ்ச்சிகளோடு மோதவிட்டு பரபரப்பாக நகர்த்தியதே இதன் வெற்றிக்கு முழு முதற்காரணம்.
Delete---ஏற்கெனவே ஸில்வர் க்ரீக்கின் முக்கால் பங்கு நிலங்களை ஆட்டையை போட்டுவிட்டு மீதியையும் சுருட்ட எத்தணிக்கும் ஸாம் பாஸ்
Delete---ஸாமையும் அவனது அல்லைக்கை போக்கிரிகளையும் நகருக்குள் வரக்கூடாது என உத்தரவிட்ட ஷெரீப் ஹாரீசனை முதுகில் சுட்டுத்தள்ளும் பெட்ரோ.
Delete---இந்த ஈனத்தனத்தை தட்டிக்கேட்காமல் கோழைத்தனமாக பிதற்றும் ஊர்ஜனங்கள்.
ReplyDelete---ஹாரீசனின் கொலையை கோர்டில் சொல்லத்துடிக்கும் அழகு மயில் மிஸ் கேத்தி மார்ஸ்.
---எதேச்சையாக இந்த களேபரத்தில் சிக்கி, ஊர்ஜனங்களுக்கு உதவ, அருகேயுள்ள நவஹோ கோட்டையில் இருந்து டைகரை அழைத்து வரும் ஜிம்மி.
Delete---கோட்டையில் டைகருக்கு பதில் வேறொரு ஆளை அனுப்ப முயலும் கர்னலின் முயற்சி.
Delete--கர்னலிடம் ஜிம்மியை தனக்கு துணையாக அனுப்ப உத்தரவிட கேட்கும் டைகர் வாயிலாக நமக்கு சொல்லப்படும் வன்மேற்கின் எமெர்ஜென்சி நடப்புகள்.
Delete--ஸில்வர் க்ரீக் நடப்புகளை ஜிம்மியிடம் இருந்து அறியும் டைகர், தங்களை கொல்ல வழியில் போக்கிரிகள் பதிங்கியிருக்கலாம் என யூகிப்பது.
Delete
Delete---ஜோவின் பாரில் தன்னை சுட்டுக்கொல்ல முயலும் ஸாமின் அடியாளை கண்ணாடியில் பார்த்து மடக்கும் டைகரின் சமயோசிதம்.
Delete----ஒவ்வொரு முறை மிஸ் மார்ஸ் உதவிக்கு வரும்போதும் , அதை நிராகரித்து அவளது கொதிப்பை அதிகரித்து ரசிக்கும் டைகரின் ஏளனம்.
Delete---ஹாரீசனை கொன்று விட்டு அசட்டுத்துணிச்சலோடு நகருக்குள் வரும் பெட்ரோவை கைது செய்யும் டைகரின் துணிகரம்.
ReplyDelete---நகரக்காவலில் இருக்கும் ஜிம்மியை பெளர்பான் விஸ்கியை கொடுத்து மட்டையாக்கி, அவனையே பயன்படுத்தி மிஸ் மார்சை கடத்தும் போக்கிரிகளின் நரித்தந்திரம்.
---தன்னுடைய கூட்டாளிகளுக்கு கண்ணாடி மூலம் சிக்னல் தரும் ஜோவின் யுக்தி
Delete
Delete---மிஸ் மார்ஸை கடத்தியவுடன் பொங்கியெழும் பொதுஜனம்.
Delete---மார்ஸை மீட்க வரும் டைகரை போட்டுத்தள்ள, வழியில் வலைவிரிக்கும் பட்டி பாஸின் தந்திரம். அதை யூகித்து உறுதி செய்ய டைகர் கையாளும் யுக்தி.
---ஆளில்லா குதிரையை ஓடவிட்டு, மார்ஸை காப்பாற்ற வரும் டைகரை மடக்கி எத்தனுக்கு எத்தனாக மிளிரும் பட் பாஸ்; பட் பாஸை ஏமாற்றி கவனத்தை திருப்ப ஜக்கை எடுத்து கண்ணாடி ஜன்னலை உடைக்கும் மார்ஸ்
Delete
Delete---சிறையை தகர்த்து தப்ப நினைக்கும் போக்கிரகளுக்கு, சாவியை உடைத்து கடுக்கா தரும் ஜிம்மி.
Delete*அடேங்கப்பா பரபரப்பான கதையோட்டம் முழுதும் நிரம்பி வழியும் வன்மேற்கின் தந்திரங்கள், அதை முறியடிக்கும் யுக்திகள் என ஒவ்வொரு ப்ரேமும் செதுக்கப்பட்டு இருக்கும்.
ஒவ்வொரு பேனலும் கதை சொல்லும் அசாத்திய சாகசம். தி பெஸ்ட் ஆஃப் த பெஸ்ட்ஸ் தான் இந்த தோட்டா தலைநகரம்
Delete*நம்மோடு தோளோடு தோள் கொடுத்து நின்ற நண்பன் செயித்தால் வரும் பெருமிதம், டைகரின் ஒட்டுமொத்த சாதனையைப் பார்த்தால் நமக்கும் கிட்டும்.
###இந்த மிஸ் மார்ஷ் -யை வண்ணத்தில் பார்க்க ஆயிரம் தடவை கேட்டு தான் வாங்க முடிந்தது.
Deleteமொத மொதல்ல ஆங்கில காமிக்ஸ் கிடைக்கும் என தெரிந்த போது இந்த கதையை தான் தேடி பார்த்து இருந்தேன். ஒரு நாள் கிடைத்தும் விட்டது. ஆனா பிரெஞ்சு மொழியில். மார்ஷை வண்ணத்தில் ரசித்த திருப்தி மாத்திரமே கிட்டியது.
வண்ணத்தில் இந்த ஒற்றை பாக சாகசத்தை இதுவரை ரசிக்காது நண்பர்கள் இந்த லிங்கில் வாங்கி ரசிக்கலாமே!
http://lioncomics.in/captain-tiger/486-thotta-thalainagaram.html
சும்மா பின்னி எடுகறிங்களே பாஸ் .
Deleteசும்மா எங்க டெக்ஸ் ரசிகர்கள் ஸ்டைலில் "கலாய்த்து" பார்த்தேன். இதான் எங்களோட கலாய்ப்பு பாணி!
Deleteஅவ்வப்போது தொடரும்.!😉😉😉😉
Salem tex in top form.
ReplyDeleteSupper
I love tex willer
ReplyDeleteI love tiger(blueberry)
Both are best comics series
///Both are best comics series///+1!
DeleteBeing tex fan,and adoring tiger,
ReplyDeleteSalem tex sir,u r class
High class.
Hats off.
நன்றிகள் நண்பரே!
Deleteஉங்கள் கனிவான வார்த்தைகளுக்கு!
பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே.
ReplyDeleteடெக்ஸ் கள்ளக்காதலர்கள் சங்கத் தலைவர் ரம்மிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteநீங்க என்ன தான் முயற்சி செய்து எங்கள் தலைவரை உங்கள் பக்கம் இழுக்க நினைத்தாலும் அது நடக்கவே நடக்காது என்று சொல்லி கொள்கிறேன்.
Deleteஅவருதான் அ.உ.டெ.ர.ம.த. ஆகி பலநாள் ஆவுதே!😉
Deleteகார்சனின் நண்பரை கலாய்ப்பது போல் ஆராதிக்கும் நண்பருக்கும் ; ட்ரௌசர்க்காரரைக் கலாய்ப்பது போல் ரசிக்கும் நண்பருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக !!
ReplyDeleteபி. கு :கல்லாப்பட்டி சிங்காரம் & காந்திமதி கூட்டணியைப் போல இந்தக் கூட்டணியும் கரம் கோர்த்து மகிழ நாமெல்லாம் வாழ்த்துவோம் !
Editor iyya ;-)
Deleteஇதுல கல்லா யாரு? காந்திமா யாருனு சொல்லிட்டீங்கனா நாங்களும் சிரிச்சி மகிழ்வோம் எடிட்டர் சார்!
DeleteThis comment has been removed by the author.
Delete
Deleteஎடிட்டர்சார் . 🤣🤣🤣🤣. காளியண்ணன் கண்ணன் ரவியை விட்டுட்டீங்க. 🤣🤣🤣🤣
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பர்கள் இருவருக்குமே என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
ReplyDeleteஎனக்கு பிடித்த கதாநாயகன் டிடக்ட்டிவ் ஜெரோம்.
ReplyDeleteகாமிக்ஸ் என்பது என்னை பொருத்தவரை கதையும் படமும் இணைந்து செல்ல வேண்டும்.
கதை தான் வேண்டும் என்பவர்கள் சாதாரண நாவலை படிக்கட்டும்.
படம் மட்டும் வேண்டுபவர்கள் மியாவ் படிக்கட்டும்.
அவரது “சிவப்பு கன்னி மர்மம்” மற்றும் “தற்செயலாய் ஒரு தற்கொலை” என்னை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டிய கதைகளில் ஒன்று.
இதில் வசனம் மிக குறைவு.
படங்களில் ஒரு தெளிவு & நேர்த்தி இருக்கும்.
இவரது கதை படிக்க ஆசை.
ஆனால் இவரின் அடுத்த கதைகள் எல்லாம் 18 + and Adult Content என்று ஒதுக்கப்பட்டது வருத்தம் தான்.
இந்த படத்தை பார்த்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது.
டிடக்ட்டிவ் ஜெரோமை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தமிழில் சிறார் கதை என்பது லக்கி லூக் மற்றும் பழைய காக்கா காளி பரட்டை டொனால்ட் டக் ஆகியவை மட்டுமே.
ReplyDeleteஇதர டைகர், டெக்ஸ், ஜேம்ஸ் பாண்ட், XIII, மாடஸ்டி எல்லாமே ADULT CONTENT.
பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி ஆசிரியர் அவர்களே & நண்பர்களே..
ReplyDeleteதிரு.ஷெரீஃப் அவர்களுக்கும்,
ReplyDeleteதிரு.ரம்மி அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மகேந்திரன் பரமசிவம் ஜி & ரம்மி இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteரம்மி and மகேந்திரன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!!!
ReplyDeleteஇந்த போங்கு ஆட்டம் எல்லாம் வேண்டாம், அண்ணா, BBB, சீக்கிரம் நிஜம், ஆக்கும், வழியே பாருங்க, நாங்கள், காத்திருக்கோம்
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே
ReplyDeleteபதிவு 145
ReplyDelete! பிறந்தநாள்வாழ்த்துக்கள் மகி. ஜீ ரம்மி13ஜி கரூர் ராஜசேகரன்
ReplyDeleteDear Editor,
ReplyDeleteIt's so boring without comics - so a bumper idea :-)
Send October books now .. Send November books 2nd Monday of October. Send December books by 4th Monday of October. Announce KENYA, AMERICA, series for November and December ... super-lE ? :-)
நான் அடுத்த வருடம் ஆவது இந்த புத்தகங்கள் வருமா என்று காத்து இருக்கிறேன். ஆனாலும் நீங்க ரொம்ப positive சார். Idea super தான் ஆனா execution?
Deleteஅகுடியா என்னவோ பம்ப்பர் தான் சார் ; "கென்யா" மொழிபெயர்ப்பெல்லாம் முடித்து ரெடியாகவும் கீது தான் ! ஆனா பாருங்க....இந்த பட்ஜெட் தான் சிக்கலே - சென்டருக்கு, ஸ்டேட்டுக்கு ;நமக்கு !!
Deleteநெஞ்சுக்கினிய நண்பர்கள் ஷெரீப்புக்கும், ரம்மிக்கும் ஈவியின் இனிய பிறந்தநாள் வாழ்ந்துகள்!!
ReplyDeleteஇந்த நேசம் பாசம் நாளும் வாழ்க!
பிறந்த நாள் தெரிவித்த ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள் பல.
ReplyDeleteஷெரீஃப் சார்
Deleteபிறந்த நாள் உங்களுக்கே தெரியுமே!
ஆசிரியரும் நண்பர்களும் உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தோம்.ஹி....ஹி...!
ரம்மி மற்றும் மகி இருவருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete///ஒரு சுவாரஸ்யமான காலையில் போஸ்ட்மன் கொண்டு வந்திருந்த மொக்கையான பார்சலில் இருந்த சில பல இத்தாலிய காமிக்ஸ் மாதிரிகளுக்குள் மூழ்கிய எனக்கு, கடவாயில் எச்சில் ஒழுகாத குறை தான் ! "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ? என்ற கேள்வியைக் கொஞ்சமாய் மாற்றியமைத்து "எத்தனை கோடி காமிக்ஸ் உருவாக்கினாய் இறைவா?' என்றே கேட்க வேண்டும் போல் தோன்றியது ! மொழி துளியும் புரியவில்லை என்ற போதிலும் அந்தப் படங்களைப் பார்த்து சிலாகிப்பதே பரம சந்தோஷம் தந்தது ! அந்தக் கத்தையில் ஒரு ஒடிசலான கறுப்புக் கோட் அணிந்த கப்பல் காப்டனின் கதைத் தொடரும் இருந்தது ! "கார்டோ மால்டிஸ்" என்ற பெயர் கொண்ட அந்த இதழை ஏனோ கீழே வைக்க எனக்கு மனதே வரவில்லை ! மாமூலான துப்பறியும் கதைகள் + நமது மாயாவி / ஸ்பைடர் / ஆர்ச்சி கூட்டணியைத் தாண்டிச் சிந்திப்பதே மாபாதகம் என்று பயணித்த அந்நாட்களில் ஒரு கப்பல் கேப்டனின் கதையைப் பரிசீலனை செய்வது கூட சிந்திக்க இயலா சங்கதியே !சித்திரங்கள் வேறு கீச்சல் பாணியில் இருந்து தொலைத்ததால் எனக்கு அந்தத் தொடரை முன்மொழிய தைரியம் திரட்ட இயலவில்லை ! கடற் கொள்ளையர்கள் ; தீவுகளுக்குப் பிரயாணம் ; வழியில் சாகசங்கள் என ஒரு புதுமையான பாணியாக நமக்கு அன்று தென்பட்ட அத்தொடர் இத்தாலியில் மாத்திரமன்றி, ஐரோப்பாவிலும் 'ஹிட்' என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது ! பெருமூச்சோடு அந்தப் படலத்தை பீரோவுக்குள் திணித்து விட்டு, டெக்ஸ் வில்லர் + டயபாலிக் வேட்டையை மாத்திரமே தொடரக் கோரி கடிதம் எழுதினேன். ///
ReplyDeleteஇந்த கேப்டன் கதைகள் இப்ப ட்ரை பண்ணலாமா
Aug 22, 2013
Deleteஆசிரியரின் புதிய பதிவு தயார் நண்பர்களே.....
ReplyDelete161st
ReplyDeleteHi,this is really very nice blog.I have learned a lot of good and informative stuff from your blog.Thank you so much for sharing this wonderful post. Keep posting such valuable contents.
ReplyDeleteJoycelin Leahy