Powered By Blogger

Tuesday, March 27, 2018

ஜம்போ !!

நண்பர்களே,

வணக்கம்.

சில மாதங்களாய் பில்டப்பிலேயே ஒட்டிய விமானத்தை - விண்ணில் பறக்க விடும் நேரம் நெருங்கிவிட்டது ! ஜூன் 2018 முதல் take off ஆகிடும் இந்தப் புது முயற்சியில் உங்களைச் சந்திக்கவிருக்கும் நாயகர்கள் இதோ : 
  • ஜேம்ஸ் பாண்ட் 007 
  • Young டெக்ஸ்
  • ஹெர்லக் ஷோம்ஸ்
  • ஜெரெமியா
  • ஒற்றைக் கண் ஜாக் 
  • மர்ம மண்டலம் (கம்பியூட்டர் மேக்ஸ் நினைவுள்ளதா ?)
  • மின்னல் மனிதன்
  • பன்முகப் பொடியன் !!
ஒவ்வொரு நாயகரின் விளம்பரத்திலும் அந்தந்தக் கதைகள் பற்றிய விபரங்கள் உள்ளதால் - நான் மேஜர் சுந்தர்ராஜன் ஆகி, சகலத்தையும் மறுக்கா repeat செய்திடத் தேவையிராதென்று நினைக்கிறேன்!! But ஒவ்வொரு நாயகர் பற்றியும் லேசாய் பின்னணிகள் !!

பிள்ளையார் சுழி போடவிருப்பதே நமது தலைமகன் TEX தான் எனும் போது - புதுசாய் நான் என்ன சொல்லப் போகிறேனென்று தோன்றலாம் தான் !! ஆனால் நாமிங்கு 'ஹலோ' சொல்லவிருப்பது துள்ளிப் பாயும் இளம் காளை டெக்சிடம் !! சட்டத்தால் தேடப்படும் ஒரு சூழல் இந்தச் சூறாவளியின் வாழ்விலும் நிலவியது ! டெக்சின் அந்தப் பரபரப்பான இளம் நாட்களை - கதாசிரியர் போசெலி தனது பிரத்யேக பாணியில் 240 பக்க நீளத்தில் சொல்லவிருப்பதே ஜம்போவின் முதல் flight ! ஒரு பனியிரவின் தீமூட்டத்தின் முன்னமர்ந்து, கார்சனுக்கும், கிட்டுக்கும் தனது flashback-ஐ டெக்ஸ் சொல்லும் அழகை மிஸ் பண்ணி விடாதீர்கள் folks !! ஒரு கொசுறுச் சேதியும் கூட : டெக்சின் அண்ணனையும் கூடிய விரைவில் ஜம்போவில் பார்த்திடப் போகிறீர்கள் !! 


Next on the list, Bond.....James Bond !!

007 என்ற நம்பரே ஓராயிரம் கதைகள் சொல்ல வல்லது எனும் போது அவரைப் பற்றிச் சொல்லும் அவசியமேது ? நான் சொல்ல விழைவதெல்லாமே - இந்த லேட்டஸ்ட் பாண்ட் கதையின் பாணியைப் பற்றியே ! தெறிக்கும் ஆக்ஷன் ; ஒரு திரைக்கதைக்கு கொஞ்சமும் சளைக்கா களம் ; அந்த ட்ரேட்மார்க் ஜேம்ஸ் பாண்ட் தெனாவட்டு என்று இதுவரையிலும் நாம் காமிக்ஸ்களில் பார்த்திரா ஒரு hi tech அவதாரை இங்கே நாம் பார்த்திடவுள்ளோம் ! அமெரிக்க உருவாக்கம் என்பதால் - நமது இத்தாலிய / பிரான்க்கோ-பெல்ஜியப் பாணிகளிலிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு நிற்கும் கதையிது ! தற்போது நான் உலவி வருவது இவருடனே - ஹெல்ஸின்கியிலும், பெர்லினின் வீதிகளில் !! Bond is back !! And with a bang !!

ஒரு சீரியஸ் டிடெக்டிவ் பற்றிப் பேசிய கையோடு - ஒரு ஜாலி டிடெக்டிவ் பற்றியும் பேசிடுவோமே ? நமக்கு ஹெர்லக் ஷோம்ஸ் புதியவரல்ல தான் ; ஆனால் இதுவரையிலும் அவரை black & white-ல் ; சுமாரான தாளில், மாத்திரமே பார்த்திருப்போம் ! இப்போதோ மிரட்டலான முழு வண்ணத்தில், ஆர்ட்பேப்பரில் அழகாய் ரசித்திடவுள்ளோம் ! ஜாலியான 2 சாகசங்கள் - ஹெர்லக் ஷோம்ஸ் ,& டாக்டர் வேஸ்ட்சன்அடிக்கும் கூத்துக்களோடு பயணிக்கின்றன ! And ஒரு மாதத்துக்கு முன்பாகவே மொழிபெயர்ப்பை முடித்து வைத்திருக்கிறேன் - சீக்கிரமே களமிறக்கி விடும் ஆர்வத்தோடு ! But சின்னதொரு குறிப்பு guys : இது கார்ட்டூன் ரசிகர்களுக்கு மாத்திரமே சுகப்படும் இதழ் !! So கார்டூனைக் கண்டால் தெறித்து ஓடுபவராக நீங்களிருப்பின் - பை-பாஸைப் பிடித்து விடுங்களேன்- please !

ஜெரெமியா ! 

பெயரைக் கேட்டாலே சிலருக்கு அதிரும் ; சிலருக்கு மிரளும் என்பது புரிகிறது தான் ! ஆனால் ஒரு ஜாம்பவானுக்கு ஒரே ஆல்பமே பரீட்சைக் களமென்று தீர்மானிக்க மனம் ஒப்பவில்லை ! So உதை வாங்கினாலும் சரி, ஒரு புது துவக்கத்துக்கு வழி வகுக்கும் உத்தியாக இது அமைந்தாலும் சரி - "ஹெர்மன்" என்ற ஒற்றைப் பெயருக்காக இந்த ஆல்பத்தைத் திட்டமிட்டுள்ளேன் ! Again - பிரியப்பட்டோர் வாங்கிடலாம் ; "no thanks" என்போருக்கு அந்த நிராகரிக்கும் சுதந்திரம் கேள்விகளேயின்றி உண்டு ! 
Last in the list - காத்திருப்பது ஒரு பிரிட்டிஷ் காமிக்ஸ் மறுவருகை - The ACTION ஸ்பெஷல் ரூபத்தில் ! இங்கிலாந்தில் 1990-களின் இறுதிகள் வரைக்கும் இந்த நேர்கோட்டு ; black & white காமிக்ஸ்களின் ஆதிக்கம் அட்டகாசமாய் இருந்து வந்தது ! ஆனால் அப்புறமாய் ஒரு தொய்வு தலைகாட்டத் துவங்க - கொஞ்சம் கொஞ்சமாய் மார்க்கெட் காற்றாடத் துவங்கியது. போன வருஷம் லண்டன் சென்றிருந்த சமயமெல்லாம் - புத்தகக் கடைகளுக்குள் நுழையும் போது கண்ணீர் வராத குறை தான் ! காலமாய் நாம் பார்த்துப் பழகியிருந்த அத்தனை Fleetway சமாச்சாரங்களும் போயே போயிருந்தன ! ஆனால் ஒரு மறு வருகைக்கு அங்கொரு பதிப்பகம் தயாராகி வருவதை அறிந்த போது - 'அட' என்று சொல்லத் தோன்றியது ! நாம் அந்நாட்களில் திகிலில் வெளியிட்ட MISTY காமிக்ஸ் வாரயிதழில் தொடராய் ஓடிய கதைகளைத் தொகுத்து சில பல ஆல்பங்கள் ; அப்புறம் VALIANT வார இதழில் தலைகாட்டிய நாயகர்களின் சிறுகதைத் தொகுப்புகள் என்றெல்லாம் போட்டுத் தாக்கத் துவங்கி விட்டார்கள் ! அட்ரா சக்கை என்றபடிக்கே - நமது தேர்வுகளைச் செய்த கையோடு - "இவற்றை ஒருங்கிணைத்து ஒரே இதழாய்ப் போடலாமா ?" என்று கேட்டு வைத்தோம் ! "Why not ?" என்று அவர்களும் பச்சைக் கொடி காட்ட - ACTION SPECIAL தயார் ! நண்பர்கள் சில நாட்களுக்கு முன்பாய் "மர்ம மண்டலம்" மறுக்கா போடுவோமே ? எனக் கேட்ட போது நான் லேசாய்ப் புன்னகைத்துக் கொண்டது இதனாலே தான் ! ஒற்றைக் கண் ஜாக் ; மர்ம மண்டலம் ; மின்னல் மனிதன் ஆகியோரின் ஆக்ஷன் கதைகளின் தொகுப்புகள் + Faceache என்ற கார்ட்டூன் filler pages இந்த இதழினை நிறைவு செய்திடும் ! So அந்நாட்களது சுலப கதை பணிகளை மறுபடியும் சுவாசிக்க ஒரு வாய்ப்பு நம் பக்கம் ! 

So இதுவே ஜம்போவின் முதல் சுற்றின் 6 இதழ்கள் ! இவை வழக்கம் போல குறைவான பிரிண்ட்--ரன் ; சந்தாக்களுக்கு முன்னுரிமை என்ற template -ல் பயணித்திடும் ! இஷ்டப்பட்டதை வாங்கி கொள்ளும் சுதந்திரம் இங்கொரு plus ! ஆனால் நீங்கள் சந்தாவில் இணைந்திடும் போது முழுத் தொகையான ரூ.999 கட்டிடம் அவசியம் ! உங்கள் கணக்கில் முதல் சுற்றின் இறுதியில் எஞ்சியிருக்கும் தொகையினை  - அடுத்த சுற்றுக்கு முன் எடுத்துச் சென்றிடலாம் ! And ஜூன் முதல் பறக்கத் துவங்கும் ஜம்போ - நமது மாதாந்திரக் கூரியர் டப்பாக்களுக்குள் இடம்பிடித்திடும் !

ஜம்போவுக்கென இன்னும் சில திட்டமிடல்கள் நம்மிடம் உள்ளன ; ஆனால் இந்தாண்டின் ஆகஸ்ட் நெருக்கடியின் பொருட்டு ரொம்பவும் இழுத்து விட்டுக் கொள்ள வேண்டாமென முதல் சுற்றினை 6 இதழ்களோடு முடித்துக் கொண்டுள்ளோம் ! இந்த ஆறு இதழ்களுமே கிட்டத்தட்ட சென்றாண்டே நம் வசமுள்ளவை என்பதால் இவற்றை நடைமுறைப்படுத்த அப்போதிருந்தே பணிகளைத் துவக்கிவிட்டதால் - இப்போது அதிக மெனக்கெடத் தேவையின்றிப் போய் விட்டது !"பு.வி.மொழிபெயர்க்க நேரமில்லை உனக்கு  ; ஆனாக்கா இதை இப்போ எழுதியச்சாக்கும் ?" என்ற விசனங்கள் ; கச்சேரிகள் நிச்சயமாய் சில பல வாட்சப் க்ரூப்களில் இன்றே பறக்கும் என்பது நிச்சயம் ! But - சிரியா யுத்தத்தைத் தவிர பூலோகத்தின் பாக்கி சகல சங்கடங்களுக்கும் நானே சூத்ரதாரி என்ற எண்ணம் தீர்க்கமாய் சிலபல நட்புக்களின் மனதில் வேரூன்றி இருக்கும் போது - அதை மாற்றிட நமக்கேது ஆற்றல் ?

So இதுவே ஜம்போவின் துவக்கத் திட்டமிடல் ! "அது சரி - வழக்கமான பாணிக்கு புதுசாய் லேபில் ஏனாம் ?" என்ற கேள்வி எழக்கூடும் தான் ! போகப் போகச் சொல்கிறேன் folks - இதனில் இன்னும் என்ன திட்டமிட்டு வருகிறோமென்று !

அப்புறம் F & F சந்தா என்னாச்சு ? என்ற கேள்விக்கும் பதில் சொல்லி விடுகிறேன் ! பு.வி. பணிகளும் சேர்ந்து கொள்ளுமா ? இரத்தப் படலம் & டைனமைட் ஸ்பெஷல் இதழ்களின் பணிகள் எப்போது நிறைவுறும் ? என்ற தெளிவின்றி - இந்த கிராபிக் நாவல் சந்தாவையும் இழுத்து விட்டு அல்லல்பட தைரியம் எழவில்லை ! So ஒருமட்டாய் ஆகஸ்ட் schedule-களை முடித்து விட்டால் - ஆகஸ்டிலேயே F & F சந்தாவை அறிவித்து விடுவேன் ! அது ரொம்பவே பொறுமையோடு  செய்தாக வேண்டிய முயற்சி என்பதால் - இந்தத் தெளிவற்ற சூழலில் அதனையும் உட்புகுத்திட மனம் ஒப்பவில்லை ! எனது சூழலைப் புரிந்து கொண்டால் மகிழ்வேன் ! இல்லே...இதுக்குமே சாத்து தானென்றால் - அதிரட்டும் வாட்சப் க்ரூப்கள் !!

ஏப்ரல் கூரியர்கள் சகலமும் on the way ! ஆன்லைன் லிஸ்டிங்கும் ரெடி! http://lioncomics.in/monthly-packs/493-april-2018-pack.html

So நாளைய பொழுதை நம் இதழ்களோடு துவங்கிடலாம் ! Happy Reading ! Bye now ! 

307 comments:

  1. Replies
    1. 999..தோ..இப்ப அனுப்ப போறேன்..? பர்ஸ்ட் ஜம்போ சந்தா..

      Delete
    2. அனுப்பியாச் ...முதல் ஜம்போ..சிவ சம்போ...

      Delete
    3. ஹும்ம்.. என்ன ஒரு சுயநலம்...

      Delete
    4. செனா அனா ஜி சூப்பர்
      இது காமிக்ஸ் வரலாற்றில் கண்டிப்பாக இடம் பிடிக்கும்

      Delete
    5. ரம்மி...:-))

      செந்தில் சத்யா.. :)

      Delete
    6. பிள்ளையார் சுழி !

      Delete
  2. வேஸ்ட்சன்...ஹா..ஹா..ஹா..

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் மன்னிச்சூ !

      Delete
  3. ஜம்போ வந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. இம்மாத புத்தகங்களும் வந்து சேர்ந்து விட்டது wow wow

      Delete
  4. சூப்பர். ஜம்போ அனைத்து கதைகளும் நாயகர்களும் எனக்கு டபுள் ஓகே. எனது சந்தா தோகையை நாளை செலுத்தி விடுகிறேன் சார். சந்தோசம் பரமசந்தோஷம்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் பழைய முறையில் மூன்று நான்கு நாயகர்கள் இணைந்து வர உள்ள குண்டு புத்தகத்திற்கு சிகப்பு கம்பள வரவேற்பு.

      Delete
    2. // அதுவும் பழைய முறையில் மூன்று நான்கு நாயகர்கள் இணைந்து வர உள்ள குண்டு புத்தகத்திற்கு சிகப்பு கம்பள வரவேற்பு.//

      அதே அதே +1

      Delete
  5. அருமை ஆசிரியரே ஜம்போ தூள்

    ReplyDelete
  6. வந்தாச்சு. வணக்கம்.

    ReplyDelete
  7. ஹேப்ப்ப்ப்ப்ப்பீபீபீபீபீபீபீபீபீபீ

    ReplyDelete
  8. எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.
    ஆனாலும் எதையும் தவிர்க்க மாட்டேன். அத்தனையையும் அள்ளிக் கொள்வேன்.

    ReplyDelete
  9. உஷ்ஷப்பா.. மூச்சிறைக்கிறது.. நான் இன்னமும் ரத்தப் படலத்திற்கே முன் பதிவு செய்யலை,. ஆனாலும் ஜம்போவிற்க்கு நான் மொத ஆளா ரெடி..

    ReplyDelete
    Replies
    1. அவகாசம் இருக்கிறது சார் ! அவசரமில்லை !

      Delete
  10. ஜம்போக்கு சந்தா கட்டியாச்சு...🕺🕺🕺🕺

    ReplyDelete
  11. சார் கோடை மலர். போல ஈர்க்கும் அட்டகாசபதிவு . கிிள்ளிப் பார்க்கிறேன். . என்பதுகளில். அல்ல. என் நினைவாற்றல் குறயல . பார்த்ததும் ஒற்றைக் கண் ஜாக் என மூளை கூவியத உறுதி படுத்த கேக்கலாம்னு பாத்்தா , அதுக்கு வேலையே தராம பண்ணிட்டீங்க . கார்சன் கடந்தகாலத்த மமிஞ்சப் போவதுறுதி .ஜேமஂஸ் ஜோ அடடா ...செம

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல். ஆகஸ்ட்ல ஈரோட்டுக்கு வரீங்களா?

      Delete
    2. இந்த முறை நிச்சயமாக....உங்களை சந்்திக்்கவாகவே நண்பரே

      Delete
    3. மகி ஜி நல்லா கேட்டிங்க போன வருஷமே டிக்கெட் போட்டார் ஸ்டீலு..

      Delete
    4. மகி ஜி நல்லா கேட்டிங்க போன வருஷமே டிக்கெட் போட்டார் ஸ்டீலு..

      Delete
    5. இந்த தடவை வரலைன்னா கோயமுத்தூர்ல தேடிக் கண்டுபிடிச்சு ஆளத் தூக்கிட்டு வந்துடலாம்.

      Delete
    6. திருச்செந்தூர் லாலா கடை அல்வா இப்போது கோவையிலும் கிடைக்கிறது சார் !

      Delete
    7. பல்க் ஆர்டர்னா நேர்ல டோர் டெலிவரி தான

      Delete
  12. ///But - சிரியா யுத்தத்தைத் தவிர பூலோகத்தின் பாக்கி சகல சங்கடங்களுக்கும் நானே சூத்ரதாரி///

    அப்ப அதுக்கு நீங்க காரணமில்லையா...

    ஜோக்ஸ் அபார்ட்ஸ்..
    ஜம்போவுக்கு ஜே..

    ReplyDelete
    Replies
    1. எனக்கே தெரியவில்லை சார் - ஒருக்கால் சிரியா பிரச்னைக்குமே நான் ஏதோவொரு விதத்தில் காரணமாக இருந்திருக்கக்கூடும் !! யார் கண்டது ?

      Delete
  13. சார் மெய்யாலுமே அமர்க்களம்...யப்பா ஏக்கங்கள் எப்பவுமே நம்மை இளமையாக வைக்கத்தவறுவதே இல்லை...சந்தோசம் ஜாஸ்திிதான்

    ReplyDelete
  14. விஜயன் சார், ஜம்போ பெயர் காரணம் பற்றி சொல்ல முடியுமா?

    ReplyDelete
  15. சந்தா கட்டியாகிவிட்டது.


    ராமையா? ....ம்.. பார்ப்போம்.

    ReplyDelete
  16. ஜிம்பலக்கடி ஜம்போ
    உட்டாலக்கடி ஜம்போ
    ஜிகிடி ஜிகிடி ஜம்போ

    சம்போ சிவ சம்போ ஜம்போ

    ReplyDelete
  17. ஜம்போ...

    ஜம்போ...


    ஜம்போ...



    ஜம்போ....



    ஜம்போ...

    ReplyDelete
  18. ஆசிரியரே மின்னல் மனிதன் மானிக்ஸ் தானே

    ReplyDelete
  19. ஜிம்பாக்கோ ஜிம்பாலோ ஜிம்பல ஜம்போ

    ஜிம்பாக்கோ ஜிம்பாலோ ஜிம்பல ஜம்போ


    ஜிம்பாக்கோ ஜிம்பாலோ ஜிம்பல ஜம்போ

    ReplyDelete
  20. எடிட்டர் சார்,

    சூப்பரான அறிவிப்பு : ஜம்போ ஸ்பெஷல்! ஜேம்ஸ் பாண்ட், ஷெர்லாக் என அட்டகாசமான கதைகள்!
    சூப்பர்!!! சூப்பர் !!!

    ஒரே ஒரு விஷயம் : நீங்கள் எவ்வளவு காமிக்ஸ் கொடுத்தாலும் நாங்கள் படிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் இதற்காக தங்கள் உடல் நலத்தை வருத்திக்கொண்டு நிறைய காமிக்ஸ் வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
    பார்த்து செய்யுங்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. சார்....நிஜத்தைச் சொல்வதானால் பணிகளில் பல்டியடிப்பது இந்த ஏழு கழுதை வயசில் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை ! Of course ஒரு புலி வால் மாற்றி-இன்னொரு புலிவாலாய்ப் பிடித்துத் திரிவது எப்போதாவது லேசாக நோகச் செய்யும் தான் ; ஆனால் இன்றைக்கு எந்தவொரு துறையிலும் மேல் நோகாது தொழில் நடத்தல் சாத்தியமல்ல என்பதால் சிரமங்களை சீக்கிரமே மறந்து விடுவேன் !

      ஆனால் அவ்வப்போது இங்கே எழும் ''கைய புடிச்சி இழுத்தியா ?' பஞ்சாயத்துக்கள் தான் செம மொக்கை ! அவற்றை நேர் செய்ய முயற்சிப்பதில் செலவிடும் நேரத்தில் இன்னும் ஒரு டஜன் சிங்கம் ; புலி ; யானை ; கரடி காமிக்ஸ் எல்லாமே போட்டு விடலாம் !

      Delete
    2. என்ன சார் செய்வது...!!!

      கைய புடிச்சி இழுப்பதே வீரம்னு சிலர் நினைக்கிறாங்க!
      மெத்தப் படித்தவர்களே தாங்கள் புடிச்ச முயலுக்கு 3கால் தான் என நிரூபிக்க,முயலின் ஒரு காலை உடைக்கின்றனர்.

      அவுங்களே திருந்தினாத்தான் உண்டு...ஹூம்!

      பின்னாடி இருந்து உசுப்பேற்றி விடும் நல்ல மனசுக்காரங்களாவது புரிச்சிப்பாங்களானும் தெரியல...!!!

      Delete
    3. அட...காமிக்ஸ் வாசிப்பில் பலருக்கு சுகமெனில், 'கைய புடிச்சி இழுத்தியா' தான் சுகமே சிலருக்கு ! அது என்றைக்கும் மாறிடப் போவதில்லையே !

      Delete
  21. Thank you editor sir😃😃🙌🙌👧👧🎅🎅👌👌👏👏💐💐🚀🚀

    ReplyDelete
  22. ஜம்போவிலும் தல டெக்ஸ் அதகளம் தான் துவக்கமாஆஆஆஆஆஆஆ....செம சார்...

    ReplyDelete
    Replies
    1. ஓரம் போ ஓரம் போ டெக்ஸ் வில்லர் வண்டி வருது
      கொண்டடுவோம் டெக்ஸின் பேரச்சொல்லி.
      ஜி fbல் உங்கள் போஸ்ட் பார்த்து இங்கே வந்தா ஆரம்ப மே அதிரடி யா இருக்குது.

      Delete
    2. அதிரடி சரவெடினா டெக்ஸைத் தவிர யாருன்னேன்....😉😉😉😉😉

      Delete
  23. // பு.வி.மொழிபெயர்க்க நேரமில்லை உனக்கு ; ஆனாக்கா இதை இப்போ எழுதியச்சாக்கும் ?" என்ற விசனங்கள் ; கச்சேரிகள் நிச்சயமாய் சில பல வாட்சப் க்ரூப்களில் இன்றே பறக்கும் என்பது நிச்சயம் !//

    வணக்கம் சார்..அதான் வரப்போகுதே சார் என்ன கவலை எங்களுக்கு...!

    ReplyDelete
    Replies
    1. கவலைகள் என்றைக்கு உங்களதாக இருந்துள்ளன பழனிவேல் ?

      Delete
    2. வார்த்தைக்கு கூட அப்படி சொல்லாதீர்கள்.
      சுமை தாங்கி கல்லைப்பற்றியும்
      ஏற்றிவிட்ட ஏணியைப்பற்றியும்
      ஆழமான தண்ணீரைக்கடக்க படகைப்பற்றியும்

      சிந்தித்திடாதிருக்க முடியவில்லை.
      நாங்கள் பெரும்பாலானோர் மணமாகி கவலைகளை அன்றாடம் எதிர் நோக்கும் அற்ப ஜீவன்கள் தான் சார்

      ஆனால் பக்குவ முடையவர்கள்
      காமிக்ஸ் என்ற இந்த மழலைகளை ஈன்று வளர்த்தெடுக்க நீங்கள் அனுபவிக்கும் அவஸ்த்தைகளை நாங்கள் நன்கறிந்தவர்களே.

      உங்கள் வார்த்தைகள் எம்மை மிகவும் வருத்துகின்றன ஐயா.

      Delete
    3. // கவலைகள் என்றைக்கு உங்களதாக இருந்துள்ளன பழனிவேல் ?//

      என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க..

      Delete
  24. ஹெர்லக் ஏற்கனவே படித்த மாதிரி உள்ளது.


    மின்னல் மனிதன் மற்றும் ஒற்றைக்கண் ஜாக்...... படித்தபின் கருத்து கூறுவோம்.

    ReplyDelete
  25. Dear Edi,

    Not so excited about Jumbo separate line of Comics... All of these titles announced could still be part of Lion or Muthu brands, but be out of regular subscription.

    Also, adding more titles in monthly count, when you yourself complain about stocks piling up, makes no sense.

    But then again, maybe subscription only line of Comics, might be the sure shot to sell them out. Hope your call works out.

    As for me, I will still subscribe to these comics, but only hope that these many titles and heavy investment, doesn't break the camels' back from continuing the run of Lion-Muthu releases.

    ReplyDelete
    Replies
    1. These are going to be limited editions with priority to subscriptions sir.... Am in no way going to dump these around in book stores on credit ; nor print in excess and keep them idle in stock !

      Delete
  26. // சில மாதங்களாய் பில்டப்பிலேயே ஒட்டிய விமானத்தை - விண்ணில் பறக்க விடும் நேரம் நெருங்கிவிட்டது !//
    சார்,எல்லா முன்கணிப்புகளையும் தவிடு பொடி ஆக்கிட்டிங்களே,இப்ப உங்க முன்னாடி இருந்தால் சந்தோசத்தில் உங்களை தூக்கி தட்டமாலை சுற்றி இருப்பேன் சார்,ச
    அருமை சார் அருமை.
    அய்யோ,சந்தோஷத்தில் என்ன பண்றதுண்ணே தெரியலையே.

    ReplyDelete
  27. ஜம்போ அருமை புதுமைக்கு வரவேற்ப்பு எப்போதும் உண்டுசார்...
    திருச்சியில் உள்ள வயதான பஸ்அதிபர் ஜெராமயா வரவைக்க்கொண்டாடுவார்...!

    ReplyDelete
  28. மிக்க மகிழ்ச்சி ஆசிரியர் அவர்களை.
    என்னால் அனுப்ப முடியக்கூடிய தொகை.
    நன்றி நன்றி thank you sir,thank you very much sir.

    ReplyDelete
    Replies
    1. 500 + 500 என இரு தவனைகளென்றாலுமே ஓ.கே. தான் சார் !

      Delete
  29. ஜம்போவில் என்னைக் கவர்ந்த முதல் சமாச்சாரம் பாண்ட் ஜேம்ஸ் பாண்ட்.!
    அதுவும் 132 பக்கங்களில் (யூகம்) ரெண்டு புத்தகங்கள்!

    அடுத்து ஹேர்லாக் ஷோம்ஸ் வேஸ்ட்சன் ஹாஹாஹா ..!! (ஏனோ Csk வின் வாட்சன் ஞாபகத்துக்கு வருகிறார்!)

    அடுத்து இளம் டெக்ஸ்.!

    அடுத்து ஆக்ஷன் ஷ்பெசல்!

    அடுத்து ஜெரெமயா ....போனமுறை விட்டதை இந்தமுறை பிடித்திடுவார்னு நம்புவோம்.!

    ReplyDelete
    Replies
    1. பார்டா ....டெக்ஸ் மூன்றாம் இடத்தில் தானா ?

      Delete
    2. ஐம்போ அறிவிப்பில் என்னைக் கவர்ந்த அம்சங்களில் மட்டுமே டெக்ஸ் மூன்றாமிடம் சார்.!

      கார்ட்டூனும் டெக்ஸ் வில்லரும் தானே எனக்கு இரு கண்கள் இரு காதுகள் இரு கைகள் எல்லாமே.!

      தவிரவும் ஜேம்ஸ்பாண்டின் புதுப்பாணி சித்திரங்களும் ஓரிரு பக்க டீசர்களும் வெகுவாக என்னைக் கவர்ந்திழுத்து இருந்தன.!

      எனவேதான் பாண்ட் முதலிடம் பிடித்தார்! 😍😍😍

      Delete
    3. டெக்ஸ் கடைசிக்கு முந்தைய இடம் என்னைப் பொறுத்தவரை ஜம்போவில்.

      Delete
    4. பாண்ட் ரொம்பவே வித்தியாசமானவர் இம்முறை !

      Delete
    5. ஏஞ்சாமி அவரே வம்புக்கு இழுக்கிறீக; பாவம் செவனேனு புள்ள தான் உண்டு தன் "வேலை" உண்டுனு இருக்கு...


      நீங்கள் எத்தினியாவது இடம் வேணா போடுங்க, இந்த சாகசம் விற்பனையில் டாப் வருவது உறுதி; கதை சுருக்கம் மாஸ்...

      Delete
    6. ///இந்த சாகசம் விற்பனையில் டாப் வருவது உறுதி; கதை சுருக்கம் மாஸ்...///

      அதில் மாற்றுக்கருத்தே கிடையாது மாம்ஸ்.!
      புது நண்பரை (பாண்ட்) கொஞ்சம் உற்சாகமாக ஆரவாமாக வரவேற்கிறோம் ..அம்புட்டுதேன்.!

      Delete
    7. James Bond advertisement looks dashing, looks like another largo winch

      Delete
  30. சார் டெக்ஸ் அங்கே வந்தது வண்ணமா.? BW ? சார் வண்ணம் என்றால் வண்ணத்திலேயே வரலாமே சார். .!

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸின் ப்ளாஷ் பேக் bwல் வருவது சிறப்பாக இருக்கும் நண்பரே.

      Delete
    2. இருப்பதை ரசிக்க முயலுவோமே - இல்லாததைத் தேடி ஒடும் நேரத்தில் ?

      Delete
  31. வாழ்த்துக்கள் சார்... ஜம்போ மாபெரும் வெற்றி பெற என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தவறாமல் சந்தா செலுத்தி விடுங்கள் ஜி

      Delete
  32. ஜம்போவில் வரவிருக்கும் கதைகள் அனைத்தும் நல்ல தேர்வுதான் சார்.
    என்ன ஜம்போ காமிக்ஸ் விளம்பரத்தை பார்த்தது முத்துமினி மாதிரி சிறுவர்களுக்கான இதழ்களாக அறிவிக்க போகிறீர்களோன்னு நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சார் ...யதார்த்தத்தைச் சொல்வதானால், இன்றைக்கு இங்கிலீஷில் காமிக்ஸ் வெளியிட்டால் பெற்றோர்கள் வாங்கித் தந்திட ஆர்வம காட்டக் கூடும் ! "தமிழ் தானா ?" என்றபடிக்கே நடையைக் கட்டுவோர் தான் பெரும்பான்மை !

      Delete
    2. ////.யதார்த்தத்தைச் சொல்வதானால், இன்றைக்கு இங்கிலீஷில் காமிக்ஸ் வெளியிட்டால் பெற்றோர்கள் வாங்கித் தந்திட ஆர்வம காட்டக் கூடும்///

      100 % உண்மைங்க சாா்!!

      குறைந்தபட்சம் காா்ட்டூன்களாவது ஆங்கிலத்தில் முயற்சிக்கலாமேங்க சாா்!!

      Delete
    3. ///குறைந்தபட்சம் காா்ட்டூன்களாவது ஆங்கிலத்தில் முயற்சிக்கலாமேங்க சாா்!!///

      +1

      Delete
    4. விளம்பர வருவாய் என்றதொரு பெருங்கதவு திறக்காத வரையிலும் - சில விஷயங்கள் நமக்குக் கனவுகளாகவே தொடர்ந்திடத் தான் செய்யும் சார் !

      Delete
  33. "ஜம்போ" நமக்கெதுக்கு வம்போ...

    வழக்கம்போல சந்தா கட்டினமா சாந்தமா இருந்தோமான்னு...

    ஆங் கட்டியாச்...

    ReplyDelete
  34. Very impressive introduction about jumbo comics, i am going to subscribe,

    ReplyDelete
  35. //அது ரொம்பவே பொறுமையோடு செய்தாக வேண்டிய முயற்சி என்பதால் - இந்தத் தெளிவற்ற சூழலில் அதனையும் உட்புகுத்திட மனம் ஒப்பவில்லை ! எனது சூழலைப் புரிந்து கொண்டால் மகிழ்வேன்.//
    உங்கள் உழைப்பையும்,ஈடுபாட்டையும் மதிக்கிறோம் சார்,பொறுமையாக காத்திருப்போம் சார்.

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றிகள் சார் ! ஆகஸ்டின் பணிச்சுமை நிறைவுற்றாலே கண்கள் மச மச வென்றில்லாது - வெளிச்சமாகிடும் !

      Delete
    2. கண்டிப்பாக

      Delete
  36. ஜம்போ வெற்றிபெற வாழ்த்துக்கள் சார்...👏👏👏👏👏

    ReplyDelete
    Replies
    1. ஜி டெக்ஸ் இருக்கும் பக்கம் எப்போதும் வெற்றி தான்.

      Delete
  37. Very happy to see the announcement sir. Sending amount soon.One small doubt. How is it different from Lion and Muthu? When are going to publish books like Muthu Vara malar to impress children?

    ReplyDelete
    Replies
    1. Whenever parents are keen to encourage their kids to read in Tamil sir...!

      Delete
  38. /// F & F சந்தாவை அறிவித்து விடுவேன் ! அது ரொம்பவே பொறுமையோடு செய்தாக வேண்டிய முயற்சி என்பதால் - இந்தத் தெளிவற்ற சூழலில் அதனையும் உட்புகுத்திட மனம் ஒப்பவில்லை ! ///

    F & F க்காக எத்தனை நாட்களானாலும் காத்திருக்கத் தயாராய் இருக்கிறோம் சார்.!


    (ரொம்ப நாட்களாகுமா சார். 😓..!!) :-)

    ReplyDelete
    Replies
    1. அங்கேயுமே அட்டவணையெல்லாம் ரெடி தான் ! கதைகள் சகலமும் வந்தாச்சு !

      பணி செய்ய 'தம்' மட்டுமே தேவை இப்போதைக்கு !

      Delete
    2. ப்ளீஸ் டேக் கேர் யுவர் ஹெல்த் ஃபர்ஸ்ட் சார்...

      Delete
    3. ///பணி செய்ய 'தம்' மட்டுமே தேவை இப்போதைக்கு !///

      என்ன brand சார்.? :-)

      Delete
    4. ///ப்ளீஸ் டேக் கேர் யுவர் ஹெல்த் ஃபர்ஸ்ட் சார்...///

      +1

      அநேகமாக ஜம்போ ஜூ.எடிட்டரின் மேற்பார்வையில் வரக்கூடும் என்று நினைக்கிறேன்.! சரியா சார்.?

      Delete
    5. துடைப்பக்கட்டைகளின் ஸ்பரிசக் குத்தகை ஒட்டு மொத்தமாய் என்னோடே போகட்டுமே சார் !

      Delete
    6. உங்கள் உடல் நலத்தையும் கவனித்து கொள்ளுங்கள் சார்.

      Delete
  39. மிக சந்தோசமாய் இருக்கிறது

    சிறுவர் மலரில் வெளிவந்த
    பலமுக மன்னன் " ஜோ " கதைகளை மறுபடியும் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வம் கட்டுக்குள் அடங்காமல் எட்டிப்பார்க்கிறது

    தேங்க் யூ விஜயன் சார்

    சார் அப்படியே
    1985 களில் சிறுவர் மலரில் வெளிவந்த
    ** உயிரைத்தேடி ** தொடரை வெளியிடும் வாய்ப்பு உண்டுங்களா சார் ????????

    என் போன்ற பால்ய காலத்து சிறுவர்கள் இப்போதும் தேடிக்கொண்டிருக்கும் ஒரு காவியம் இது...

    ReplyDelete
    Replies
    1. அது என்ன கதையென்றே தெரியாதே சார் எனக்கு ? அதன் மூலப் பெயரின்றி முயற்சிப்பது கடினம் !

      Delete
  40. எனக்கு ஒரு டவுட்டு நியாயமாரே?!

    கடந்த இரண்டு மூன்று பதிவுகளாக 2019 க்குன்னு கேட்ட கேள்வி எல்லாம் இந்த ஜம்போவுக்குதானா?!: (

    ReplyDelete
    Replies
    1. No....இந்த அட்டவணை டிசம்பரிலேயே தயார் ! And இவற்றைத் தாங்கியுள்ள ஏப்ரல் இதழ்களும் அச்சாகி ௧ மாதமிருக்கும் !

      Moreover நான் கேட்ட கேள்விகளுக்கும் இங்குள்ள இதழ்களுக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாதே sir ?

      Delete
    2. Dear editor sir
      Working with adequate time preparations ,it seems?

      Delete
    3. நம்மவர்கள் ரோடு போடுவதில் தேர்ச்சி பெற்றுவிட்டார்கள் சார் ; அழகாயொரு கோடு போடும் வேலை மட்டுமே எனக்கு !

      Delete
  41. ஜம்போ காமிக்ஸ்க்கு நல்வரவு !

    ReplyDelete
  42. சந்தா கட்டியாச்சுங்க எடி சார்
    🎶 📲 📩 📝 ☎ 🎶 📢📣

    ReplyDelete
    Replies
    1. 4 வது சந்தா

      ஆனால் எனக்கு ஆறாமிடம் கொடுத்தால் மகிழ்ச்சியாய் இருக்கும்
      :)

      Delete
    2. கொடுத்தால் போச்சு !

      Delete
  43. சந்தோசத்தில் என்ன சொல்வதென்றே புரியவில்லை சார்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் ! உங்கள் புன்னகைகள் தான் எங்களது முயற்சிகளின் ultimate லட்சியமே !

      Delete
  44. பல முக மன்னன் ஜோ
    டேஞ்ஜர் டயபாலிக்

    6 வித்தியாசங்கள் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. நம்மால்
      டயபாலிக்
      நிராகரிக்க பட்டுள்ளார்

      Delete
    2. ஆறு வித்தியாசம் இல்லை. ஒரே வித்தியாசம்தான். பலவேசம்கட்டி ஜோ அடிவாங்குவான்..டேஞ்சர்டயபாலிக் பலவேசம் கட்டி அடி பிரித்தெடுப்பான். :-)

      Delete
    3. வேஷம் போட புதுசாயொரு ஆசாமி சேர்ந்துக்கிறார் சாமியோவ் ! டாக்டர் வேஸ்ட்சன்னின் தோஸ்த் !

      Delete
    4. அட்றா சக்க
      அட்றா சக்க

      Delete
  45. சார் ஒரு சந்தேகம்,ஜம்போ சந்தா எந்த மாதம்,தேதிக்குள் கட்டனும்னு சொன்னிங்கன்னா நிறைய பேருக்கு வசதியா இருக்கும்னு தோணுது.

    ReplyDelete
    Replies
    1. மே மத்திக்குள் கட்டினாலுமே ஓ.கே தான் sir !

      Delete
  46. விஜயன் சார், முத்து & லயன் காமிக்ஸ்ஸில் வந்த பழைய சூப்பர் ஹிட் கதைகளை தொகுப்பாக ஜம்போ காமிக்ஸ்ஸில் வரும் காலங்களில் வெளியீட முடியுமா?

    ஜம்போ கண்டிப்பாக எல்லோருக்கும் பிடித்து வெற்றி பெறும் நம்பிக்கையில் எழுந்த கேள்வி இது.

    ReplyDelete
  47. பறக்கத் துவங்கட்டும் சார் ஜம்போ.....போகும் வழியில் அபிமான வழித்தடங்களை இணைத்துக் கொள்ள முயற்சிப்போம் !

    ReplyDelete
  48. 1) வர வர வருடாந்திர சந்தா மற்றும் காமிக்ஸ்களுக்கான செலவு எகிறிக் கொண்டே போகிறது. இதில் உங்களைக் குறை கூற ஏதுமில்லை, வேண்டியவர்கள் வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம் என்ற வகையில் தான் வெளியிட்டு வருகிறீர்கள். படிக்கிறோமோ இல்லையோ, வெளிவரும் காமிக்ஸை எல்லாம் வாங்கி அடுக்க வேண்டும் என்ற என்னுடைய வினோத மனநிலையை நான் மாற்றிக் கொள்ளும் சமயம் இது ஒரு பிரச்சினையாகத் தெரியாது.

    2) காரணங்கள் என்னவாக இருப்பினும், ஜம்போ என்ற பெயர் சற்றும் பிடிக்கவில்லை. அந்தப் பெயரும், பறக்கும் யானைப் படமும், குழந்தைகளுக்கான பல்சுவை பத்திரிக்கைகளுக்கு வேண்டுமான பொருத்தமாக இருக்கலாம்; ஆனால், டெக்ஸ் மற்றும் ஜேம்ஸ் வகையறாக்களுக்கு... ஹ்ம்!

    3) புதிய தலைமுறை சிறுவர்களுக்காக, எளிய தமிழில், சிறிய அளவில், ஒரு புதிய காமிக்ஸ் இதழை எதிர்பார்த்திருந்தேன், வந்திருப்பது என்னவோ லயன் மற்றும் முத்துவின் மற்றுமொரு அவதாரம்.

    4) F&F எப்போது வரப்போகிறது என கேட்கப் போவதில்லை, பார்க்க 1)

    5) எது எப்படி இருப்பினும், புதிய இதழுக்கு வாழ்த்துகள்!

    6) Filler comment

    007) மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் - மகிழ்ச்சி! அதிலும், புதுக்கதைகள் என்பதில் பெரும் மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. //புதிய தலைமுறை சிறுவர்களுக்காக, எளிய தமிழில், சிறிய அளவில், ஒரு புதிய காமிக்ஸ் இதழை எதிர்பார்த்திருந்தேன்//

      Smurfs ; பென்னி கதைகளே தண்ணீர் குடிக்கின்ற கார்த்திக் ! பிள்ளைகளுக்கு வாசிப்பை அறிமுகம் செய்திட ; அதுவும் தமிழில் - இன்றைக்கு யாருக்கும் நேரம் இருப்பதாகவே தெரியக் காணோமே ?

      ஆங்கிலத்தில் ஏதேனும் வெளியிட்டால் அதற்கு நிச்சயமாய் better prospects என்பேன் !

      Delete
    2. ஆங்கிலத்தில் தான் வெளியிடலாமே சாா்!!

      மிகுந்த உபயோகமாய் இருக்கக் கூடும்!

      Delete
    3. ஆங்கில காா்ட்டூன் மற்றும் காமிக்ஸெல்லாம் படு காஸ்டிலியான சமாச்சாரங்களாகவே உள்ளன!

      Delete
    4. புதிய தலைமுறை, எளிய தமிழ், சிறிய அளவு - பென்னி & ஸ்மர்ப்ஃஸ் இந்த வகையில் அடங்குவதாக தற்போது எனக்கு சத்தியமாகத் தோன்றவில்லை (எனது மகனைப் பொறுத்த வரை).

      //வாசிப்பை அறிமுகம் செய்திட ; அதுவும் தமிழில் - இன்றைக்கு யாருக்கும் நேரம் இருப்பதாகவே தெரியக் காணோமே ? //
      வாசிப்பைத் தொடர்ந்து வரும் ஒரு மிகச் சிறிய (மூத்த) வாசக வட்டத்திற்காக, லிமிடட் சந்தாக்கள் வெளியிடும் நீங்கள், அப்படி ஒரு விபரீத முயற்சியை மேற்கொள்ளக் கூடும் என நினைத்திருந்தேன். சும்மா ஒரு அசட்டு ஆசை தான், வேறொன்றுமில்லை! Pls. ignore :)

      Delete
    5. ==புதிய தலைமுறை சிறுவர்களுக்காக, எளிய தமிழில், சிறிய அளவில், ஒரு புதிய காமிக்ஸ் இதழை எதிர்பார்த்திருந்தேன், வந்திருப்பது என்னவோ லயன் மற்றும் முத்துவின் மற்றுமொரு அவதாரம்.==

      நானும் இதையேதான் நினைத்திருந்தேன்.

      Delete
    6. ==பிள்ளைகளுக்கு வாசிப்பை அறிமுகம் செய்திட ; அதுவும் தமிழில்==

      அப்படிப்பட்ட இதழ் இன்று எதுவுமே இல்லையே சார். ஒரு தீர்வாக ஜம்போ இருக்குமென்று நினைத்திருந்தேன். பரவாயில்லை சார், என்றேனும் ஒருநாள் நம் லயன்-முத்து குழுமத்திலிருந்து சிறார்களுக்கென்று ஒரு இதழ் வருமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

      Delete
    7. ௭ கோடி ஜனமுள்ள ஒரு மாநிலத்தில் வெறும் ௧௦௦௦ பிரதிகளோடு ஒரு திட்டமிடலில் இறங்குவதன் காரணத்தை யூகிப்பது அத்தனை சிரமம் இல்லை தானே செந்தில் ? புரட்சிகளுக்கு இது காலமல்ல ; களமுமல்ல என்பது தான் நிஜங்களின் சேதி !

      Delete
  49. WOW - I like these titles and have paid up for JUMBO. This should have been your A list this year. Somehow the Imprint JUMBO does not ring a bell though. Could have been Mini Lion?

    I do share the same concern as Rafiq about your piling up stock (overall) but you are the best to know your numbers. Surely for me this is a bigger treat than XIII.

    PS: All the best for "Pulan Visaaranai" ;-) :-p He He He !!

    ReplyDelete
    Replies
    1. அந்த 'ஹி..ஹி..ஹி..வில் தான் எத்தனை குஷி !!!

      No worries sir ; this is strictly a limited numbers imprint !

      Delete
    2. ரொம்ப நல்லா வருவீங்கப்பா.ஆவ்வ்வ்...

      Delete
  50. ஜம்போவில் எனக்கு பிடித்த கதையில் முதல் இடம் ஜெரெமியா.

    ReplyDelete
  51. விஜயன் சார், இன்று கிளம்பிய கொரியர் பார்சலில் ஜம்போ பற்றிய விளம்பரங்கள் உள்ளதா? இணையதளத்திற்கு அப்பால் உள்ள நண்பர்களை இந்த அறிவிப்பு சென்றடைய வேண்டும் என்ற ஆவலில் எழுந்த கேள்வி.

    ReplyDelete
    Replies
    1. yes....2 இதழ்களிலும் முதலிரண்டு பக்கங்கள் ஜம்போ தான் !

      Delete
    2. சூப்பர். பாராட்டுக்கள். அருமையான திட்டமிடல்.

      Delete
  52. கதை ok சார் ..ஜம்போ.. nameதான் புடிக்கல எ.சார்

    ReplyDelete
    Replies
    1. என்ன இப்டி சொல்லிட்டீங்க...ஆசிரியர் கூறுவத போல இந்தக்கால குழந்தைகளதான் கவர ஏலல....அந்தக்கால குழந்தைகளுக்கு ஜம்போன்னாலே வண்ணக்கனவுகதான்...அந்த அப்பு யானை பிளாஸ்டிக் பதக்கங்கள மறக்க ஏலுமா

      Delete
  53. 134வது. சூப்பர் சார்.

    ReplyDelete
  54. ஜம்போவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. வரவேற்கிறேன்.. நன்றி முழுமையாக உள்ளது.. வருக வருக ..யாணையாரே வருக

    ReplyDelete
  55. ஜெய் ஜக்கம்மா ஜெய் ஜம்போ

    ReplyDelete
  56. ஜம்போ னா என்ன?

    கொஞ்சம் விவரமா யாராவது சொல்லுங்க!

    🤔🤔🤔

    ReplyDelete
    Replies
    1. gigantic,
      colossal,
      cyclopean,
      elephantine,
      giant,
      huge,
      immense,
      large,
      mammoth,
      mighty,
      oversized,
      prodigious
      அப்புறம் அனில் கும்ளேவோட நிக் நேம்...

      லயன்ல ஜம்போனா இரத்தப்படலம் "காம்போ" கருப்பு & வெள்ளை-2010ல் வந்தது...

      Delete
    2. ஏங்க இந்த 1000 ரூபாய் சமாச்சாரம், அடுத்த சந்தால சோ்கறது, கழிக்கறது பத்தி கேட்டா வாா்த்தைக்கு விளக்கம் சொல்லறீங்க டெக்ஸ்!!

      Delete
    3. உச்சரிக்க எளிதான ஒன்று.

      Delete
    4. ஓ அதுவா என் கணிப்பு...
      999ஐ கட்டி ஒரு ஜம்போ சந்தா எண் வாங்கிட வேண்டியது. உங்களுக்கு அது பெர்மனட் நம்பர்.
      இதில் வேணும்கிற கதையை முன்கூட்டியே சொல்லிடனும்...
      அதை மட்டுமே உங்களுக்கு அனுப்புவாங்க,
      மீதி பணம் இருந்தா அடுத்த ஜம்போவுக்கு கேரி ஆகும்...

      Delete
    5. நம் மனசு இத் தருணத்தில் சந்தோஷத்தில் ஜம்ப் பன்னி துள்ளிக் குதிக்கிறதல்லவா அதனால்தான் ஜம்போ

      Delete
    6. // ஓ அதுவா என் கணிப்பு...
      999ஐ கட்டி ஒரு ஜம்போ சந்தா எண் வாங்கிட வேண்டியது. உங்களுக்கு அது பெர்மனட் நம்பர்.
      இதில் வேணும்கிற கதையை முன்கூட்டியே சொல்லிடனும்...
      அதை மட்டுமே உங்களுக்கு அனுப்புவாங்க,
      மீதி பணம் இருந்தா அடுத்த ஜம்போவுக்கு கேரி ஆகும்...//

      Even I had same doubt, Good explanation 👍

      Delete
    7. அன்றய சிறாரின் உற்சாக மாதமான மே மாதத்தை கலர்கலராய் களிப்பூட்டிய ஜம்போ சர்கஸ் போல...நம் வாழ்விலும் காமிக்ஸ் ஜம்போ சந்தோசமாய்

      Delete
  57. தேவ மானிடன் கிருபையால் ஜம்போவில் முதல் கதை" தல " டெக்ஸ் .....
    டண்டண்ணக்கா .....
    பாண்ட் ....ஜேம்ஸ்பாண்ட் ....
    007 ஜேம்ஸ்பாண்ட் திரும்பி வந்துடேன் சொல்லு ....
    அடடா என்ன ஒரு அட்டகாசமான தேர்வு வாழ்த்துக்கள் சார் ....
    விரைவில் சந்தா கட்டிவிட்டு வருகிறேன்....

    ReplyDelete
  58. அனைவருக்கும் வணக்கம். உறக்கத்தை விரட்டும் பதிவு இது. குமுதா ஹேப்பி அண்ணாச்சி.பர்ஸ்ட் ரவுண்டே பின்னுது செகண்ட் ரவுண்ட் வேறயா. எடிட்டர் சார் இன்னும் எதிர்பார்கிறோம்.

    ReplyDelete
  59. இந்த பதிவை எத்தனை தடவை படிச்சேன்னு கணக்கே இல்லை. 🤣. சந்தோசமா இருந்தாலும் உங்களுடய சன்னமான சில ஆதங்கங்களும் புரிகிறது. எங்களின் ஆதரவு என்றும் தொடரும் என்று சொல்வதைத் தவிர வேறு தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சார் ...ஆயுசுக்கும் "on trial" என்பது தான் நான் வாங்கி வந்த வரமெனும் போது - யாரை நோவானேன் ? அந்த சன்ன ஆற்றமாட்டாமைகளின் வெளிப்பாட்டை maybe தவிர்த்திருக்கலாம் தான் !

      Delete
    2. // சன்னமானசில ஆதங்கங்களும் புரிகிறது. எங்களின் ஆதரவு என்றும் தொடரும் என்று சொல்வதைத் தவிர வேறு தெரியவில்லை.//
      +1

      Delete
    3. நீங்கள் தவிர்த்திருக்க வேண்டிதில்லை சார். சிலவற்றை சொன்னாலே புரிவதில்லை. சொல்லாவிட்டால் இன்னும் சுத்தம்.

      எங்களின் பொருட்டு அதிக ரிஸ்க் எடுக்காதீர்கள் என்பது மட்டுமே என் வேண்டுகோள். உடல்நிலையும் முக்கியம். பெரும்பாலான வாசகர்களின் ஆதரவு என்றும் உங்கள் பக்கமே.

      Delete
    4. ///சிலவற்றை சொன்னாலே புரிவதில்லை. சொல்லாவிட்டால் இன்னும் சுத்தம்.///---இன்னொரு தடவை சொல்லுங்க

      Delete
  60. அனைவரையும் திருப்தி படுத்துவது கடினம் தான். எனக்கு இந்த தொகுப்பு சற்றே ஏமாற்றமாகவே உள்ளது.

    டெக்ஸ், ஜெராமயா போன்ற கதைகள் இத்தொடருக்கு சரி தானா தெரியவில்லை.
    ஏற்கனவே டெக்ஸ் அதிகம் என்ற கம்பளைன்ட் ஏற்கனவே உள்ளது.

    வேண்டும் என்றால் புத்தக கண்காட்சிகளுக்கு வெளியிட்டிருக்கலாம். இத்தொடருக்கு வேறுநல்ல கதைகளை தேர்வு செய்துருக்கலாம் என்பது எனது கருத்து.

    ReplyDelete
    Replies
    1. நான் சந்தா செலுத்திவிட்டேன் என்பது கொசுறு செய்தி ☺️

      Delete
    2. இரண்டுக்குமே வலுவான காரணங்கள் உள்ளன சார் ; யோசித்துப் பாருங்களேன் - பிடிபடும் !

      Delete
  61. ஜம்போ காமிக்ஸ் - மிகுந்த ஏமாற்றம்! லயன் - முத்துவில் வரவேண்டிய இதழ்களே இங்கேயும். நான் எதிர்பார்த்தது சிறுவர்களுக்கான ஒரு இதழ். அந்த யானைப்படமும் பெயரும் அப்படித்தான் நினைக்கத்தோன்றியது. குழந்தைகள் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய கதையமைப்பில், இலகுவான தமிழில், வேறுபட்ட கதைக்களங்களில் (கார்ட்டூன் மட்டும்தான் என்றில்லாமல்) ஒரு இதழை எதிர்பார்த்திருந்தேன். ஒரே ஆறுதல் Action Special.

    விஜயன் சார், தவறாக நினைக்க வேண்டாம் நமது இப்போதைய கார்ட்டூன் கதைகளில் பென்னியைத் தவிர வேறு எதுவும் சிறார்களுக்கு உகந்தது என்று எனக்குத்தோன்ற வில்லை.

    ReplyDelete
    Replies
    1. செந்தில், இன்றைய சூழலில் சிறுவர் இதழ் என்று எதுவுமே ஏனில்லை ? என்று யோசிக்க கொஞ்சம் அவகாசம் எடுத்துத் தான் பாருங்களேன் ? அட...நம்மை விட்டுத் தள்ளுங்கள் - ஊருக்குள் எத்தணை அனுபவமும், ஆற்றலும் வாய்ந்த பதிப்பகங்கள் உள்ளன ? அவர்களுக்கு அந்த வெற்றிடத்தை நிரப்பத் தெரியாமலா போயிருக்கும் ? அப்புறமும் யாருமே அதனுள் நுழைந்திடத் தயாரில்லை என்பதிலேயே ஒரு சேதி பொதிந்துள்ளதே ?

      இது ஸ்மார்ட் தலைமுறை ; இங்கே பெற்றோருக்கு வாசிப்பை ஊக்குவிக்க நேரம் நஹி ; பசங்களுக்கு இன்டர்நெட்டைத் தாண்டி பார்வைகளை ஓடச் செய்ய ஆர்வங்களும் நஹி ! சகலத்தையும் நேர் செய்திடும் ஆற்றல் இங்கு பதிப்பகங்களுக்கு நஹி ! இது தான் யதார்த்தம் !

      Delete
  62. Jumbo combinations are super.pl add some old stories too,sir.

    ReplyDelete
  63. தமிழில் புதிதாய் காமிக்ஸ் வருவதில்
    அதை ஆசிரியரே தருவதில் எக்கச்சக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  64. First of all congratulations 🤝.

    James Bond is a master stroke, lot of expectations hope he satisfies it.

    All the titles that were announced looks interesting.

    Expecting more #5 (kadamba 😛 special) in future.

    I like the name as it resembles “kundu book”, logo could have been better.

    ReplyDelete
  65. லயன் காமிக்ஸ் என்னும் தடத்தில் டெக்ஸ் பயணிக்கும்போது ஜம்போவிலும் டெக்ஸ் என்பதை தவிர்த்து வேறு நாயகருக்கு இடம் தந்திருக்கலாம்.மேலும் சூப்பர் சிக்ஸ் என்பது ஜம்போ காமிக்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது என நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் லயன் நிறுவனத்தில் இருந்து புதிய பேனர்களில் காமிக்ஸ் வெளியீடுகள் வருவது வரவேற்கத்தக்கது.(best seller tex எனும்போது அவருக்கு ஒரு slot தந்திருப்பதொள் வியப்பேதும் இல்லை.)

    ReplyDelete
    Replies
    1. யங் டெக்ஸ் தீபாவளி மலர்ல வாங்கிய உதையை கணக்கில் எடுத்து கொண்டா, இங்கே அவருக்கும் இது அக்னி பரிட்சையே சார்.

      இந்த சீரியஸ் செம சக்சஸ் அங்கே; இது மாஸ் ஹிட் ஆகப் போவது உறுதி. கதைக்களன் அதுமாதிரி.

      ஜெராமியாவும் "நவ் ஆர் நெவர்"-என்ற கட்டாயத்தில் உள்ளார். அவரும் இந்த இறுதி வாய்ப்பில் சாதிக்கனும்.

      007- பேரே பாதி வெற்றி உறுதி..

      Delete
  66. ஆனாலும் jamboவுக்கும் என்னுடைய சந்தா உண்டு.MGR படத்திற்கு title என்னவாக இருந்தால் என்ன.

    ReplyDelete
    Replies
    1. ///MGR படத்திற்கு title என்னவாக இருந்தால் என்ன.///----டெக்ஸ் வந்து வெளுக்கும்போது, நம்ம புரட்சி தலைவர் அப்டியே அந்த சவுக்கால ஒரு வெளு வெளுத்து,
      "நான் ஆணையிட்டால்....!!!" னு ஆரம்பிப்பாரே,சாட்சாத் அதான் தோணும்....

      திரைக்கு MGR
      கதைக்கு TEX

      Delete
  67. இம்மாத புத்தகங்கள் வந்து சேர்ந்து விட்டது வாவ்

    ReplyDelete

  68. புதிதாக வரும் ஜம்போ சாதனை படைக்க வாழ்த்துகள்.. சந்தா செலுத்தபட்டுவிட்டது.

    ReplyDelete
  69. விஜயன் சார், நான் புரிந்து கொண்ட விஷயம் ஜம்போ என்பது இந்த a b c d போல் ஒரு சந்தா. இதில் வரும் புத்தகங்களில் எந்த லோகோ தாங்கி வரும்? லயன்/முத்து/மினி லயன்? நம்மிடம் ஏற்கனவே உள்ள லோகோவை உபயோகபடுத்த முடியுமா?

    ReplyDelete
  70. விருப்பமில்லாத புத்தகங்களை ஒரு பெரிய O போட்டு Jump பண்ண வாய்ப்பிருப்பதால்தான் இது JUMBOவோ என்னவோ....

    ReplyDelete
  71. லார்கோ வண்ணக் கலவையா யாரது ...சார் நிச்சயம் நீங்க புரிஞ்சிருப்பீங்க ....

    ReplyDelete
  72. Bring best thing in jumbo.we expect more different stories.varieties are important.we celebrate jumbo.

    ReplyDelete